கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2002.09-10

Page 1


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
Q ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE BATTICALOA. ノ ܢܠ .
 

Burg
போது - 1 இதழ் - 27
புரட்டாதி - ஐப்பசி 2002 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி
போல் சற்குணநாயகம், யேச.
Sforfuusĩ: (Editor) வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
U600ftp60607: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி: O65-23822, O65-22983
E-mail ppccG2diamond.lanka.net
ஒரு சமூகம் உயிர்த்துடிப்போடு இருக்கின்றமையை அதன் எண்ணங்களும் செயற்பாடுகளும் வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்த அளவு கோலுக்குள் மட்டக்களப்புத் தமிழ்ச் சமூகத்தை நாம் உட்படுத்துவோமாயினர் அது எங்கே நிற்கினர்றது என்று தெளிவாகவே தெரிந்துவிடும்.
UP6lofóg5stjóou psT6)JUU Lsjátõ6f6ů upućĖ களப்பும் ஒன்று என்று பிரகடனப்படுத்தப் Uட்டு ஆண்டுகள் பலவாகின்றன. ஆயினும் அது இனினும் முனர்னோக்கி அடி வைத்ததாகத் தெரியவில்லை. இதனை- இந்த மண்ணில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பற்றிய புள்ளி விபரங்கள். பத்திரிகைச் செய்திகள். பாடசாலை மாணவர்களினர் உயர்தரப் பரீட்சை முடிவுகள். விளையாட்டு உட்பட வெவ்வேறு துறைகளில் நடத்தப்படும் போட்டி முடிவுகள் என்Uன உறுதி செய்யும்.
ஏன் இந்த நிலை? இந்த மண்ணினர் கல்விமானர்கள். கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள். ஆசிரியப் பெருமக்கள். சமூக நலனில் பெரிதும் அக்கறை உடைய g stoof (8Dstria,6t.... at upuu 6Usfusifiab6i.... சிந்தித்துச் செயற்படவேண்டாமா?
போதுமான கல்வி அறிவும் சுய சிந்தனையும் ஒரு சமூகத்தில் இல்லை யெனிறால் அதனர் எதிர்காலம் எப்படி ஒளிமயமாக இருக்க முடியும்?

Page 3
ரேக்கம் சிறியதொரு தேசம்தானி. ஆனால், அதன் கீர்த்தி இன்றும் பேசப்படுகின்றதென்றால் அதற்குக் காரணம் (ரிகா அலக்சாந்தரா? இல்லை. சோக்கிரட்டிஸ். பரிளோட்டோ. அரிஸ்ரோட்டில். எனினும் அற்புதமான சிந்தனையாளர்கள் தான்.உரோமைப் பேரரசில் கிரேக்கத்தின் கொடியை ஏற்றி வைத்தவர்கள்.
உரோமைப் பேரரசுக்கு ஒரு பெரும் தோற்றத்தை (Image) உருவாக்கித் தந்தவன்யூலியஸ் சீசரா? நிச்சயமாக இல்லை! சீசரையே எதிர்த்துநின்றபெரும் சிந்தனையாளன் நாவலன் சீசரோ (CICERO) உரோமைப் பேரரசின் ஒளி விளக்கு அவன்தான்!
பாலஸ்தீனப் பூமியினர் அருமை பெருமைகளைப் பறையறைந்தவர்கள் யார்? மாமனினன் தாவீதும் அவனி மைந்தனர் சலமோனுமா? இல்லை. அந்த மண்ணின் ஞான நாக்குப் பெற்றிருந்த அன்றையத் தீர்க்கதரிசிகளே.
இந்தியாவுக்கு இன்றும் ஒரு பெயர் இருக்கின்றது என்றால் அதற்கு எவர் காரணம்? சந்திரகுப்த மெளரியனா? சாம்ராட் அசோகனா? மராட்டிய வீர சிவாஜியா? இல்லவே இல்லை. அறிவு எனினும் ஆயுதம் ஏந்தி அந்த மண்ணில் வலம் வந்த புத்தர், மகாவீரர், குருநானக், விவேகானந்தர் எனினும் அவதார புருஷர்களே.
சர்க்கரவர்த்தி நெப்போலியனை Uரெனி சுப் புரட்சியினி குழந்தை எணர்றே சரித்திரம் பேசுகிறது. அப்பழயாயினர் அந்தப் Uரளயத்தை உருவாக்கிவிட்ட ‘Uரமணர்" யார்? ரூசோ! ‘(ROUSSEA) அரும் பெரும் சிந்தனையாளனர் அவனர்'
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும் போது ‘யின்தங்கிய” எனும் பெருமையைத் தூக்கி எறிந்துவிட்டு மட்டக்களப்பு மணி அறிவு எனினும் ஆயுதத்தை எப்போது ஏந்திக்கொள்ளப் போகிறது?
அல்லது - சுவாமி விபுலாநந்தரையும் பாடும் மீனையும் தானி காலம் முழுவதும் சொல்லிச் சொல்லி சுகம் காணப் போகிறதா? இந்தக் கேள்விகளே நம் மனத்தில் இப்போது எழுந்து நிற்கின்றன!
அணிUனி வாகரைவாணன்

அன்னை திரேசா
ஓர் அபூர்வ பிறவி
இன்னும் வாழ்கின்றார்
இறக்கவே இல்லை.
கல்கத்தா ஏழைகளின்
காவல் தெய்வம்
கொல்கொத்தா யேசுவின் கூட்டாளி
அன்பு என்னும் சொல்லின்
அர்த்தம்
என்பு தானு' எளியோர்க்கு
ஈந்தவர்.
அந்நிய நாடென்றாலும்
அதனைப்
புண்ணிய தேசமாய்
போற்றியவர்.
தன்னலம் கருதாச்
சந்நியாசி தாமரை இலைத் தண்ணிருக்கு
தக்க உதாரணம்
எந்தப் பரிசு பெற்றாலும்
ஏழைகளுக்கே
தந்து மகிழ்ந்தவர்
தனிப்பெரும் துறவி.
முற்றும் துறந்த
முனிவம்சம்
பற்று என்பதே இல்லாத பரிசுத்தர்.
மனிதாபிமானம் என்பதன் மறுபெயர்
தனி ஒருவராகத்
தண்ணிழல் தந்தவர்.

Page 4
l றுவர் களு
கவிஞர் ச. அருளானந்தம்
அழகான கிராமம் கள்ளிமேடு. அது தம்பலகாமத்தில் உள்ளது. அந்த அழகிய கிராமத்தைக் கல்விமேடு என்றும் அழைப்பார்கள். கந்தளாய்க் குளத்தின் நீர் வயல்களை நிரப்பும். நெல் வயல்கள் செழித்து விளையும். மா, பலா, வாழை, தென்னை நிறைந்து இருக்கும். ஆதிகோணநாதர் கோயில் அருளைக் கொடுக்கும். பெரிய கோயில் வீதி விரிந்து கிடக்கும். அங்கு ஊர்ப் பெரியவர்கள் மாலை நேரங்களில் கூடுவார்கள். ஊர் விடயங்களைப் பேசுவார்கள். ஒரு புறத்தில் சிறுவர்கள் கூடி விளையாடி மகிழ்வார்கள். தென்னைகளில் மைனாக்கள் குதுகலிக்கும். மக்கள் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்தனர்.
ஒரு நாள் சிறுவர் வழமைபோல் கூடினார்கள். கிளித்தட்டு விளையாட விரும்பினார்கள். இரு குழுவாகப் பிரிந்தனர். தங்கன் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினான். சண்முகன் மற்றக் குழுவின் தலைமையை ஏற்றான். ஆட்டம் தொடங்கியது, ஆட்டம் சூடு பிடித்துவிட்டது. தங்களை மறந்து விளையாடினர். விளையாட்டில் பிழை நடந்துவிட்டது. தங்கன் அணியினர் ஆட்டம் பிழை என்றனர். சண்முகன் அணி அதை மறுத்தது. வாய்த்தர்க்கம் முரண்பாடாக உருவெடுத்தது. ஆட்டம் குழம்பியது. முரண்பாடு சண்டையாகியது.
ஊர்ப் பெரியவர்கள் ஓடி வந்தனர். சிறுவர்களுக்கு அறிவுரை கூறினர். அவர்கள் எவர் சொல்லையும் கேட்கவில்லை. குறும்புக்காரச் சிறுவர்கள் குழப்படி செய்தனர். சூரியன் இவர்கள் செயலைக் கண்டது. க்ோபம் கொண்டு சிவந்தது. இரவு வந்தது. சூரியன் மறைந்து விட்டது. கிழக்குச் சிவந்து கொண்டு விடிந்தது. சூரியன் வெப்பத்தை வாரி இறைத்தது. சில நாட்களாக வெப்பம் கடுமையாக வீசியது. காற்றும் சூரியனோடு சேர்ந்து கொண்டது. மரஞ்செடி கொடிகள் வாடின. இலை தளிர் கருகி வீழ்ந்தன. நீர்நிலைகள் வற்றி வரண்டன. எங்கும்
வரட்சி ஏற்பட்டது. நீர் பற்றாக்குறையும் பஞ்சமும் தலைதுாக்கியது. 4
 
 

பார்ப்பெரியவர்கள் கோயிலில் கூடினர். ஆதிகோணநாதனைத் தொழுதனர். கொடுமையான வரட்சிக்கான காரணத்தை ஆராய்ந்தனர். சிறுவர்களின் குறும்புதான் காரணம் என்பதை அறிந்து கொண்டனர். சிறுவர்களும் மெதுவாக அங்கு வந்தனர். தங்கள் பிழையை ஏற்றுக்கொண்டனர். மன்னிப்புக் கோரினர். பெரியவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. கோணநாதப் பெருமானுக்குப் பட்டுச் சாத்தி வழிபட்டனர். ஊரே திரண்டு வந்திருந்தது. இறைவன் அருள் கிட்டியது. சூரியன் மனம் கனிந்தது. காற்றும் சந்தோசப்பட்டது.
அதிகாலையிலேயே கோயில் வீதியில் ஊர் மக்கள் கூடி விட்டனர். மெல்ல இருள் விலகியது. கோழிகள் கூவின. குயில்கள் பாடின. புது மலர்கள் பூத்தன. கிழக்கில் வண்ணக் காட்சிகள் தெரிந்தன. சூரியன் மகழ்ச்சியோடு வெளி வந்தது. வானவீதியில் தங்க முலாம் பூசிய மேகக் கூட்டங்கள். வெள்ளித் தீவுகள். வண்ணக் காட்சிகள். சூரியன் மெல்ல மெல்ல மேலெழுந்தது. ஊரவர்களுடன் சிறுவர்களும் கைகூப்பி வணங்கினர். சிறுவர்கள் மனம் திருந்தியதைச் சூரியன் கண்டது. மகிழ்ந்து தன் வெப்பச் சக்தியை கடல்மேல் செலுத்தியது.
கடல்நீர் நீராவியாகி மெலெழுந்தது. மெல்ல முகிலாகத் திரண்டது. பின் கருமுகிலாகி திரண்டு வந்தது. சூரியன் காற்றை அழைத்தது. கருமுகில்களைக் கலைந்து வருமாறு கூறியது. காற்று விரைந்து எழுந்தது. கருமுகில்களைச் சேர்த்துத் துரத்தி வந்தது. மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டது. அப்போது மின்னல் தோன்றியது. கூடவே முழங்கி இடித்தது. மரஞ்செடி கொடிகள் மகிழ்ந்து ஆடின. மழை சோவெனப் பொழிந்தது. வரண்ட நிலம் நீரை உறிஞ்சிக் கொண்டது. மழை நீர் வெள்ளமாக ஓடியது. நீர் நிலைகள் நிரம்பின. மரஞ்செடிகள் செழித்தன. பயிர்கள் விளைந்தன. பஞ்சம் நீங்கியது. மக்கள் எல்லோரும் மகிழ்ந்தனர். சூரியனுக்கு நன்றி கூறினர். சிறுவர்கள் பெரியவர்களை மதித்தனர். இப்போது அவர்கள் குழப்படி செய்வதில்லை. பிள்ளைகளின் செயல்களைச் சூரியன் தினமும் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

Page 5
சி. திருமலர்ப்Uாக்கியப்
வஞ்சம் பொறாமையொரு வாட்டு நிட்ரூரமென நெஞ்சம் பதைக்கும் நிலையெல்லாம் - துஞ்சியுடன் பஞ்சாய்ய் பறந்துவிடப்பாரில் தொழில் சிறக்க அஞ்சா துழைய்போம் அறி
நாட்டு மொழிய்பற்றும் நலமாம் இனய்பற்றும் கூட்டும்படி யெண்ணிக் கொண்டுளத்தில் - மீட்டும் நாட்டுக்கு நல்லவைகள் நாம் நிதமும் செய்து விட்டால் போட்டிக்குய் பொன்னோ புகல்!
பொன்னுலகு போற்றப் புகழுடலை விட்டகன்ற மின்னு புகழேந்தி மிளிர்கம்பன் - நன்னகரில் வள்ளு வரும் பாரதியும் வண்ண இளங்கோவழியும் தெள்ளு தமிழ் வளர்த்தார் தேர்.
அஞ்சாதுழைத்து வந்தால் அன்னங் கிடைத்திருமே பஞ்சமெனும் பேயும் பறந்திருமே - கஞ்சிமட்டும் கால்வயிறே யானாலும் கண் மூழத் தூங்கிடலாம் வால் பிழக்கும் வாழ்வை ஒழி
கற்ற கலைஞானம் காசினியில் கனியுதிர்த்தப் பற்றிய் பகிர்ந்து பயனடைவோம் - வெற்றியென்றும் அன்னவர்க்கே உண்டென்று ஆழக் குதித்தெழுந்து பொன்னுலகு நோக்கிய் புகல்.
 

தமிழில்விமரிசன போக்கும்
GUEOg šiupio
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
புதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை. என்னும் மகாகவியின் வாக்கு, இன்றும் தமிழ் மொழிக்குப் பொருந்தவே செய்கிறது. தமிழ் அதன் அடிப்படையிலேயே ஓர் இலக்கிய மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளாக அது இலக்கிய மொழியாக இருந்தே வருகிறது என்றால், அதற்குத் தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தன் சொல்வது போல பொறிகள் வழிநின்று வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த தமிழன் அறிவு வழி நின்று எதனையும் ஆராயத் தவறி விட்டமையே (இலக்கியக் கலை - பக். 50) காரணம் என்பதனை நாம் அப்படியே தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.
தமிழன் உணர்ச்சியின் அடிமை. அதனால்தான் உணர்ச்சியை உயிராகக் கொண்ட இலக்கியங்களை உருவாக்கி இன்புற்றான். தமிழில் தோன்றிய தலைக் காப்பியமான சிலப்பதிகாரத்தின் கதை நிகழ்வுகள் உணர்ச்சியை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. மாதவியின் கானல் வரிப்பாடல் கோவலனின் மனதில் அப்படியொரு உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்காவிட்டால் மதுரை நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து வஞ்சியில் இடம்பெற்ற சம்பவங்களும் அரங்கேறியிருக்கமாட்டா.
தமிழை, தனிநாயகம் அடிகள் பக்தியின் மொழியாகப் பார்த்தமைக்கும் இதுதான் காரணம். உணர்ச்சியினால் தானே பக்தி உருவாகின்றது. ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய F Tத்தியரசம் இதுதான். தமிழ் உணர்ச்சியின் மொழி. ஆங்கிலம் அறிவின் மொழி. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஆங்கிலம் ஆகாயமாகவே வியாபித்து நிற்க தமிழை வெறுமனே உணர்ச்சியின் மொழியாக்கிக் கம்பன் புகழ்பாடி இன்றும் கன்னித்தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். கன்னித் தமிழ் என்னும் வார்த்தைப் பிரயோகம், தமிழ் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத் தானே காட்டுகிறது. தனித் தமிழ் இயக்கம் தலைதுாக்கியமைக்கும் இந்த உணர்ச்சியன்றி வேறு எதுதான் ஏதுவாக இருக்கமுடியும்?
7

Page 6
உணர்ச்சியினால் உந்தப்பட்ட கவிஞன் தான் மகாகவி பாரதி. ஆனாலும் அவன் உண்மையாகவே சிந்தித்தான். எனவேதான் அவன் பாடினான்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இது எழுத்தாளர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் விடுக்கப்பட்ட அறைகூவல். எனினும் இவ்வறைகூவலை பாரதி விடுக்குமுன்பே அவன் காலத்தில் வாழ்ந்த வ. வே. சு. ஐயர் பிறநாட்டுச் சாத்திரங்களான சிறுகதையையும், கம்பராமாயண ரசனை’ என்னும் நூல் வடிவில் திறனாய்வு இலக்கியத்தையும் தமிழுக்குத் தந்து மகிழ்ந்தார். ஐயரைப் போலவே பாரதியும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்த்துத் தான் சொன்னதைச் செயலிலும் காட்டினான். ஆனால் பழமை பாடுதலையே தமது பண்பாகக் கொண்ட அறிஞர் சிலர், எல்லாம் தமிழில் இருக்கிறது என்னும் இறுமாப்போடு தம் கூற்றினை அரண் செய்திட எங்கிருந்தாவது காரணங்களை வலிந்தெடுத்துக் காட்டிடும் வழக்கம் இன்றும் எம் மத்தியிலேயே இருந்து வருகின்றது. இத்தகைய பண்பினரே திறனாய்வு இலக்கியம் பற்றிப் பேசுகையில் "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ எனும் பழம்பாடல் ஒன்றைச் சுட்டிக்காட்டி அதனைப் பரம்பொருளாகிய சிவபெருமான் பாடிட, அப்பாடலில் சொற்குற்றம் இல்லையேனும், பொருட் குற்றம் உண்டு என்று புலவர் நக்கீரர் எதிர்த்து வாதாடிய புராணக் கதையைக் கூறி நக்கிரன் மிகச்சிறந்த திறனாய்வாளன் என்று பெருமைப்படுவர். இதனைப் போன்றே அந்த நாள் உரை ஆசிரியர்களான பேராசிரியர், நச்சினார்க்கினியர் பரிமேலழகர் ஆகியோரின் விரிவுரைகளையும் எடுத்துக்காட்டி அன்றே நாம் விமரிசனத் துறையில் கொடிகட்டிப் பறந்தோம் என்று கொக்கரிப்பர். ஆனால் இவையெல்லாம் அர்த்தமற்ற வெறும் சோடிப்புக்கள் என்றே பிறமொழி இலக்கியங்களில் பெரிதும் தோய்ந்த அறிஞர் ஒதுக்கிவிடுவர்.
ஆங்கிலத்தில் CRTICISM என்பதனைக் குறிக்க விமரிசனம் என்னும் வடமொழிச் சொல்லையே நாம் பயன்படுத்தினோம். இன்றும் இச்சொல் வழக்கில் இருந்தாலும், இதற்குப் பதிலாகத் திறனாய்வு என்னும் சொல்லே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு நவீன C “ால் போலத் தோன்றினும் இதில் இணைந்துள்ள திறன், ஆய்வு எனும் இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும்.
விமரிசனம் அல்லது திறனாய்வுத்துறை தமிழில் இரு பெரும் பிரிவாகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஒரு பிரிவு பழந்தமிழ் இலக்கியம். மற்றப் பிரிவு நவீன இலக்கியங்களான சிறுகதை, நாவல், புதுக்கவிதை
எனும் வகை.
8

இவ்விரு பிரிவுகளையும் சேர்ங்கவர்களில் பெரும்பாலோர் தம்தம் துறைகளில போதிய அளவு அறிவும் பயிற்சிபும் அற்றவர்களாக இருப்பதால் ஒருவரை ஒருவர் ஒருவித துவேச உணர்வோடு நோக்குவதாகவே தெரிகின்றது. பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியம் பெற்றவர்களை ஏதோ பத்தாம்பசலிகள் என்று நவீன இலக்கியக்காரர் கருதுவதும் 7 நவீன இலக்கியக்காரரை தமிழே தெரியாதவர் என்று பழந்தமிழ் அறிஞர்கள் மட்டந் தட்டுவதும் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றது. இத்தகைய கண்ணோட்டத்தோடு செய்யப்படும் திறனாய்வு எந்த வகையிலும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை.
ஏனைய நவீன தமிழ் இலக்கியங்களைப் போலவே திறனாய்வும் தமிழில் இந்நூற்றாண்டில் பிறந்து வளர்ந்து வரும் ஒரு துறையாகும். தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் வ. வே. சு. ஐயர் அவர்களே தமது கம்பராமாயண ரசனை என்னும் நூலின் மூலம் தமிழில் திறனாய்வுத் துறைக்கு வித்திட்டவர் என்பர். ஆயினும் ஐயருக்கு முன்பே, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, கம்பன் என்னும் கட்டுரைத்தொடர் ஆகியவற்றை முறையே, மறைமலை அடிகள், தி. செல்வகேசவராய முதலியார் என்போர் எழுதினர் என்பார் பேராசிரியர் கைலாசபதி அவர்கள். (இலக்கியத் திறனாய்வு பக்.
138) ബ്ര7ബീ
மேலே குறிப்பிடப்பட்டவர்கள் திறனாய்வுத் துறையைத் தமிழில் ஆரம்பித்து வைத்திருந்தாலும் இத்துறையில் அதிக ஆர்வம் காட்டிய டி. கே. சிதம்பரநாத முதலியாரை அவ்வளவு எளிதில் மறந்து விடுவதற்கில்லை. முதலியாரின் திறனாய்வு முறையைக் கைலாசபதி அமைச்சூர் முறை (இலக்கியமும் திறனாய்வும் பக். 129) என்று கிண்டல் செய்தபோதும் திறனாய்வுத் துறையில் ஏதோ ஒரு வகையில் அவர் ஆழமாக ஈடுபட்டிருந்தார் என்பதும், அவரைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் ஓர் "இரசிகமணி' உருவானார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
திறனாய்வு பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட போதும் இலங்கையில் ஒரு குழுவினரால் இவ்வாய்வுமுறை மாக்ஸிசச் சிந்தனைகளையும் அச்சிந்தனைகளைச் சிரணிக்க முடியாத யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பையும் நிலைக்களனாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டது. இத்தகைய ஆய்வுமுறைக்கு வழிகோலியவர்களில் கைலாசபதியும், சிவத்தம்பியும் முக்கியமானவர்கள். இவ்விரு பேராசிரியர்களும் இவ்வாய்வுத் துறையில் முன்னின்று உழைத்தமையால்தான் டானியல், டொமினிக் ஜிவா, கணேசலிங்கன் முதலானோர் இலக்கிய மேதைகளாக வலம்வர முடிந்தது. 9

Page 7
یا را
, கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு முறை ாழ்ப்பாணத்துச் சாதி, நிலவுடைமைச் சமூகலய அமைப்பையும், அவற்றுக் கெதிராக எழுதிய குறிப்பிட்ட வர்க்க எழுத்தாளர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த அதேவேளை, இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இலக்கிய முயற்சிகளை அப்படியே இருட்டுக்குள் தள்ளிவிட்டது என்னும் உண்மையை யாரும் இருட்டடிப்புச் செய்திடமுடியாது.
இவ்வாய்வுமுறை, வாழ்க்கையில் தோன்றும் பல்வேறு அம்சங்களை இலக்கியமாக்கிய எழுத்தாளர்கட்குப் பெரும் அநீதி விளைவித்ததென்றே சொல்ல வேண்டும். அதாவது - இலக்கியம் என்பது மாக்ஸியச் சிந்தனைகளைத் தழுவிய வர்க்கப் போராட்டங்களையே கொண்டிருக்க வேண்டுமென்ற வரைவிலக்கணம் மேற்படி எழுத்தாளர்களை ஒரம்கட்டவே செய்தது.
இன்றைய தமிழ் இலக்கியத் திறனாய்வில் - மண்வாசனை, இழிசனர் வழக்கு, முற்போக்கு என்பன போன்ற வார்த்தைகள் அடிபடுவதையும் நாம் கவனிக்கலாம். தமிழ் இலக்கியத்தில் மண்வாசனை ஏதோ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் விசத்தொடங்கியது என்பது போன்று ஒரு மாயையை உருவாக்குவதில் சில முற்போக்காளர்கள் இன்றும் ஈடுபட்டிருக்கின்றமை பெரிய வேடிக்கையே. தமிழ் இலக்கிய வரலாறு தெரிந்தவர்கள் இந்த மண்வாசனையும், தலித் இலக்கியமும் நாயக்கர் காலப் பிற்பகுதியில் வேர்விடத் தொடங்கிவிட்டமையை நன்கு அறிவர். இழிசனர் வழக்கு என்றோ தமிழ் இலக்கியத்தில் புகுந்து விட்டமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், தமிழை ஒழுங்கு முறையாகக் கற்காத சில எழுத்தாளர்கள் இழிசனர் வழக்கில் எழுதுவதுதான் இலக்கியம் என்று பிரசங்கம் செய்வதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இலங்கையில் தமிழில் விமரிசனம் அல்லது திறனாய்வு தொடர்பான இந்த வரலாற்றுப் பின்னினியிலேயே சிறுகதை பற்றிச் சில கருத்துக்கள் இங்கே தொட்டுக்காட்டப்படுகின்றன.
கதை தமிழருக்கு புதியதன்று. கர்ண பரம்பரைக் கதை என்னும் தொடர்மொழியே இதனை எடுத்துக்காட்டும். கர்ணம் என்றால் காது. எனவே, கர்ண பரம்பரைக் கதை என்பது காது வழி கேட்கப்பட்ட கதை என்ற பொருளையே தரும். இராமாயண பாரதக் கதைகள் எல்லாம் இப்படித்தான் சொல்லப்பட்டு வந்தன. ஆனால், இந்தக் கதைகளுக்கும் நாம் இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதைக்குமிடையே மிகப் பெரிய வேறுபாடு 10

இருக்கிறது. எனவேதான் சிறுகதை என்றால் என்னவென்ற கேள்வி பிறக்கிறது.
எத்தனையோ நிகழ்வுகள் நம் சொந்த வாழ்க்கையிலேயே இடம்பெறுகின்றன. இதைப் போன்றே பிறர் வாழ்க்கையிலும் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம். அத்தகைய நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று நம் மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அவ்விதம் தாக்கத்திற்குள்ளாகுபவன் ஒரு நல்ல எழுத்தாளனாக இருப்பானேயானால் நிச்சயம் அதற்கு ஓர் இலக்கிய வடிவத்தை அவன் கொடுத்துவிடுவான். எழுத்தாளர்களும் கவிஞர்களும் மற்றவர்களைவிட, தன் வாழ்க்கையில் மட்டுமல்ல - அடுத்தவர் வாழ்க்கையிலும் ஏற்படும் நிகழ்வுகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். அதனால்தான் அந்நிகழ்வுகள் அவர்களால் இலக்கிய அந்தஸ்தை அடைகின்றன.
வாழ்க்கையில் ஏற்படும் ஓர் நிகழ்வு அல்லது அதனோடு பின்னிப் பிணைந்த வேறு நிகழ்வுகள் மட்டுமல்ல மனத்தை இழுத்துப் பிடிக்கக்கூடிய ஒரு காட்சிகூட ஒரு நல்ல சிறுகதையின் உரிப்பொருளாகலாம்.
சிறுகதை என்பதே ஒரு சின்னஞ்சிறிய காட்சிதான். அந்தக் காட்சியை ஒரு எழுத்தாளனின் உள்ளம் உடனடியாகவே படம் பிடித்து விடுகின்றது. அதன் பின்பே அவனது கற்பனையும் மொழியும் அதற்கு அழகிய இலக்கிய வடிவம் கொடுக்கின்றன.
உரிப்பொருள் ஒரு சிறுகதையின் ஆணிவேராக அமையுமானால் அந்த வேரில் உருவாகிச் செழித்து நிற்கும் மரமாக அதனை ஆக்கிவிடும் துணைக்கருவிகளாக இருப்பவை ஓர் எழத்தாளனின் செழுமையான மொழி நடையும் கற்பனையுமாகும்.
மொழிச்சிக்கனம் சிறுகதைக்குச் சோபை தரும். இந்த வகையில் நல்லதொரு சிறுகதையை ஓர் உரைநடைக் கவிதை என்று குறிப்பிடலாம். மொழியைப் பற்றிப் பேசுங்கால் ஓர் எழுத்தாளன் அடிப்படை இலக்கண அறிவினைக் கொண்டித்தல் அவசியம். எழுத்தாளனின் எண் எங்களை - சிந்தனைகளை - வாசகன் சுலபமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒழுங்கான மொழிநடை தவிர்க்க முடியாதது. இழிசனர் வழக்கு குறிப்பிட்டதொரு வட்டத்திற்குள்ளேயே நிற்கும். அது இயல் தமிழாகாது. நல்ல தமிழில் எழுதப்படும் கதைகள் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதற்கு கு. அழகிரிசாமியின் கதைகளே நல்ல சான்று.
மொழியோடு தொடர்புடையது ஒரு எழுத்தாளனின் நடை. ஒருவரின்
II

Page 8
நடை அவரை அடையாளம் காட்டும் என்று சொல்லுவார்கள். அது போல ஒரு எழுத்தாளனையும் அவனது மொழிநடை அல்லது பாணியே இனங்காட்டும். புதுமைப்பித்தனுக்கு புகழ் சேர்த்தது அவர் தம் கதைகளின் உரிப் பொருள் மட்டுமல்ல - அவர் கையாண்ட நடையும் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஆனால் இந்நடை 'கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ ஆகிவிடக்கூடாது.
விருத்தப்பாவிலே மிகச் சிறந்த காவியத்தைத் தமிழ் உலகிற்குத் தந்த முதற் கவிஞன் திருத்தக்கதேவர் தான். இந்தப் புலவர் பெருமானை ஒட்டியே கம்பன் தன் காவியத்தைப் படைத்தான். ஆனால் முனிவரை ஒட்டிக் கம்பன் பாடினாலும் தனக்கு என்று ஒரு நடையை அவன் ஏற்படுத்திக் கொண்டமையே அவன் மேதாவிலாசத்திற்குத் தக்க சான்றானது. இது எழுத்தாளர்களுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.
கறிக்குப் பயன்பத்தப்படும் கறிவேப்பிலை போலவே சிறுகதையில் கற்பனையும் கமகமக்க வேண்டும். கறிவேப்பிலை மட்டும் கறி ஆகாது. அது போல வெறும் கற்பனை வாழ்க்கை இலக்கியம் ஆகாது. கவிதையில்கூட, அளவு கடந்த கற்பனை வளம், உயர்வு நவிற்சி அணி என்றே குறிக்கப்படுகின்றது. இவ்வணி சில சமயம் கவிதைகளுக்குச் சுமையாகவே இருப்பதைப் பார்க்கலாம். கவிதைக்கே சுமையாய் இருக்கும் இவ்வணியைக் கதையால் எப்படிச் சுமக்க முடியும்?
எந்த ஒரு சிறுகதை இலக்கியமும் மனித வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்த மகாகவி தாகூர், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, புதுமைப்பித்தன் முதலானவர்கள், எந்த ஒரு எழுத்தாளனையும் உடனடியாகப் பாதிக்கக்கூடிய சுதந்திரப் போராட்டத்தில் இருந்து பெருமளவு ஒதுங்கி இருந்தபோதும் அவர்கள் மனித வாழ்க்கையை - அதில் எழும் சிக்கல்களைத் தங்கள் எழுத்துக்களில் எதிரொலிக்கத் தவறவில்லை. ஏனென்றால் மனித வாழ்க்கைதான் ஒரு நல்ல இலக்கியத்தின் மையப் பொருள் என்பதை அவர்கள் நன்கறிந் Tருந்தார்கள். 影
சிறுகதை - ஒரு நிகழ்வின் விவரணக் கோவையல்ல. வாசகர்களை அத்தகைய கதைகள் வசீகரிப்பதே இல்லை. சிறுகதை, வாசிப்பவர்களால் சினேகிக்கப்பட வேண்டுமானால் அதில் நிச்சயம் கலைத்துவம் இருக்க வேண்டும். கலைத்துவமே எழுத்துக்குக் கவர்ச்சியை - அழகைத் தருகிறது. சிலப்பதிகாரம் மணிமேகலையைவிட நம் சிந்தனைக்கினியதாக இருக்கின்றது என்றால் அதற்கான ஒரே ஒரு காரணம் இளங்கோவின் கலை நெஞ்சம் 12

தான். கலைநெஞசம் இல்லாத எழத்தாளர்களினால் எழுதபடும் ன்த்தனையோ படைப்புக்கள் காணாமல் போவதற்கு இதுதான் காரணம்.
இலக்கியத்தில் பிரச்சாரமா? இந்தக் கேள்வி பழையதுதான். எந்த ஒரு படைப்பாளியும் - தன் படைப்புக்களில் ஏதோ ஒரு கருத்தை முதன்மைப்படுத்தவே செய்கின்றான். அந்த முதன்மைப்படுத்தலில் அளவு கடக்கும் போது அது பிரசாரமாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக பழைய இலக்கியங்களில் மணிமேகலையையும், நவீன இலக்கியங்களில் டாக்டர் மு. வ. வின் நாவல்களையும் இங்கே கொள்ளலாம். காவியங்களிலும் நாவல்களிலும் வேண்டுமானால் பிரச்சாரத்திற்குக் களம் அமைக்கப் பெரும் வாய்ப்புண்டு. ஆனால் சிறுகதையில் இதனைச் சீரணிப்பது மிகவும் கஸ்ரம்.
இவற்றில் இருந்து ஒரு சிறுகதையின் முக்கிய கூறுகள் எவை என்பதை நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒரு நல்ல சிறுகதை விமர்சனம் இந்த அம்சங்களை வைத்தே நிகழ்த்தப்பட வேண்டும். ஆனால் ஒன்று - புதுமைப்பித்தன் சொல்வது போல ஒரு விமரிசகனின் பார்வையில் பூ விழுந்தால் அது விமரிசனமாகவே இருக்காது. இன்றைய இலக்கிய விமரிசனங்கள் பல எங்கேயோ போய் நிற்பதற்கு இது தான் ஏது.
--
பாராட்டப்படாத தாகூர்
1913ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் விருது ரவீந்திரநாத் தாகூருக்கு கொடுக்கப்பட்டபோது ஐரோப்பியர் பலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். “கீதாஞ்சலி’ என்ற அவரின் கவிதைத் தொகுப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது என்றாலும் தாகூரின் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய ஆங்கிலக் கவிஞர் டபிள்யூ பி. மீட்ஸ் அவருக்கு வாழ்த்துக்கூட சொல்லவில்லை.
தாகூருக்குக் கிடைத்த பரிசுத் தொகை பற்றிய செய்தி இன்னும் மோசமானது. அவர் தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை கல்கத்தாவிலிருந்த ஒரு வங்கியில் போட, சில மாதங்களில் அந்த வங்கியே திவாலாகிப் போனது ஒரு பரிதாபமான கிளைமாக்ஸ்!
காற்றும் வெளிச்சமும் வர ஜன்னலைத் திறந்தால் கூடவே ஈக்களும் கொசுக்களும் வீட்டுக்குள் வருவது இயற்கைதான். அதற்காக ஜன்னலையே திறக்காமல் இருக்கமுடியாது.
-டெங் ஜியோ பிங் -
(சீனத் தலைவர்)
13

Page 9
f ४ 等襲家。芸
பலஸ்தீன தேசம் உரோமைப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலம் (கி. பி. 27-30) அது எருசலேம் அந்தத் தேசத்தின் எழில்மிகு நகரம். மன்னன் தாவீதும், அவன் மைந்தன் சலமோன் ஞானியும் மணிமுடி சூடி ஆட்சி செய்த அந்த மாபெரும் நகரம், பாஸ்கா எனும் புளிப்பற்ற அப்ப விழாவுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் அற்புதமான இந்த விழாவைக் கண்டு களிக்க மக்கள் வெள்ளம் அலை மோதுகின்றது.
விழாவிலும் வேடிக்கை சம்பவங்களிலும் மக்கள் திளைத்துக் கொண்டிருந்த அதே நேரம், எருசலேமின் ஒரு பகுதியில் அமைந்திருந்த தலைமைக்குரு கைப்பாஸின் மாளிகையில் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடுகின்றனர். தீவிரமான ஆலோசனையில் ஆழ்ந்திருக்கும் அவர்களின் முகங்களில் தீப்பற்றி எரிவதுபோல வெறுப்பும் வெறித்தனமும் கோரத் தாண்டவம் புரிகின்றன. அவர்களின் இந்த மன உணர்வைப்போல அங்கு இடம்பெறும் உரையாடல்களிலும் விஷம் கொப்பளிக்கின்றது.
ഴ്വരങ്ങമ{6/ޖ حقوقيضة مصرعة ريمكه
ஏழைத் தச்சன் சூசையின் மகன் தன்னை இறைமகன் என்று சொல்கிறான். இது அப்பட்டமான தேவதூஷணம்.
இது மட்டுமல்ல. இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுவேன் என்று பிரசங்கம் செய்கின்றான். மக்களை முழுமடையர்கள் என்றாக இந்த நசரேத்தூரான் நினைக்கின்றான்?
நமக்கும், நமது அதிகார பீடத்திற்கும் இவன்தான் பெரிய சவால். இந்தச் சவாலை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
நமக்கு எதிராக மட்டுமல்ல. உரோமைப் பேரரசிற்கும் எதிராகப் புரட்சிகளை ஊக்குவிக்கிறான். இனியும் இவனை விட்டுவைக்கக்கூடாது. 14
 

இந்தப் பாஸ்கா விழாவின்போதே யேசு என்னும் அந்த மகா பொய்யனைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும். அதுதான் சரி.
முடிவை அங்கு குழுமியிருந்த அனைவரும் ஏற்றுக்கொள்வதைக் காட்டும் விதத்தில் அந்த மாளிகையே அதிரும் வண்ணம் சிரிப்பொலி எழுகின்றது. அதைத் தொடர்ந்து சதியாலோசனைச் சபை கலைகிறது.
எருசலேம் நகரின் ஒரு பகுதியில் இந்தச் சூதர்கள் சூழ்ச்சிவலை பின்னிக்கொண்டிருக்கையில் நகரில் இருந்து சற்றுத்தொலைவில் சீயோன் குன்றில் அமைந்துள்ள "சேநாக்குளும்’ எனும் இடத்தில் யேசுவும் சீடர்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர்.
யேசுவின் செங்கமல முகத்தில் என்றும் இல்லாதவாறு கலவர இருள் கவிந்திருக்கின்றது. மூன்று ஆண்டுகளாகத் தன்னை முன் பின்னாகத் தொடர்ந்த சீடர்களை விட்டுப் பிரியும் வேளை நெருங்கி விட்டதை உணர்ந்த யேசுவின் மனித சுபாவம், பெரும் கலக்கமும் குழப்பமும் அடைவதை அவரது சீடர்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. மாறாகத் தமக்குள்ளே யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் இறங்குகின்றனர்.
இனிய மாலைப்பூ இதழ் விரிக்கும் நேரம். எருசலேமுக்குக் கிழக்கில் உள்ள ஒலிவமலையில் பிறந்து அதன் அருகில் சலசலத்தோடும் அருவியில் விழுந்து விளையாடிடும் மாலைக்காற்று சீயோன் குன்று எங்கும் மெல்லென வீசுகின்றது. காற்றின் ஸ்பரிசத்தில் சீடர்கள் அனைவரும் மெய்மறந்து போகின்றனர்.
சீடர்களின் பலவீனத்தை நன்கு தெரிந்து கொண்ட யேசு, தமது இறுதி இரவு உணவை நிறைவு செய்யும் பொருட்டு அப்பத்தைக் கையில் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அதைப் பகிர்ந்து தன் சீடர்களுக்குக் கொடுத்து, இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல், என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்று வேண்டுகிறார். அது போன்றே கிண்ணத்தை எடுத்து, அதில் உள்ளதை அனைவரும் அருந்துங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம் என்கிறார்.
யேசுவின் இறுதி இரவு உணவு முடிவடையும் வேளை. அவரின் 15

Page 10
பார்வை சீடர்களில் ஒருவனை ஊடுருவுகின்றது. பார்வையின் தீட்சணியத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத அந்தச் சீடன் யூதாஸ்கரியோத்தின் தலை கவிழ்கின்றது. அதைக் கவனித்த யேசு அமைதியாகச் சொல்லுகின்றார்.
இன்று உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.
யேசுவின் வார்த்தை அங்கிருந்த சீடர்களின் இதயங்களில் ஈட்டியாகப் பாய்கின்றது. நிலைமையைப் புரிந்துகொண்ட யூதாஸ், தந்திரமாக அவ்விடத்தை விட்டு நழுவுகின்றான். யேசுவிடமிருந்து விரக்தி தோய்ந்த புன்னகை ஒன்று வெளிவருகின்றது.
எருசலேமில் கெதரோன் அருவியின் குளிர்ச்சியைச் சுகித்தபடி எழுந்து நிற்கிறது ஒலிவ மலை. ஓங்கி வளர்ந்து நிற்கும் ஒலிவ மரங்களால் சூழப்பட்ட அம்மலையின் ஒரு பக்கம் யூதேயாப் பாலைவனமும், இன்னும் ஒரு பக்கம் யோர்தான் பள்ளத்தாக்கும், மோவாப் மலைத்தொடர்களும் அந்தச் சூழலின் அழகை இன்னும் அதிகமாக்குகின்றன.
எருசலேமுக்கு வரும்போதெல்லாம் இந்த இயற்கைக் காட்சியில், கிறங்கிப்போகும் யேசு, பகலெல்லாம் ஆலயத்தில் போதித்துவிட்டு இரவுப்போதை, அமைதியாகக் கழிக்க, ஒலிவ மலைக்குப் போய்விடுவார். ஆனால், இன்று அந்த மனநிலையில் அவர் இல்லை என்பது தெரிகின்றது.
இறுதி இரவு உணவை நிறைவுசெய்து கொண்ட யேசுவும் சீடர்களும் இறைவனுக்கு நன்றி கூறி புகழ்க்கீதம் இசைத்ததும் ஒலிவ மலையை நோக்கி புறப்படுகின்றனர். யேசுவின் மனம் உண்மையில் தளர்ந்து போகின்றது.
அது ஒரு அழகிய நிலாக்காலம். ஒலிவ மலையும், சூழ உள்ள மரம் செடி கொடிகளும் வெள்ளி ஆபரணம் பூண்டு ஒளி வீசுகின்றன. பகல் போன்ற இந்த வெளிச்சத்தில் மலைக்காற்று தன் விருப்பம் போல எங்கும் ஏறி விளையாடித் திரிகின்றது. இவ்வியற்கை இன்பத்தை ஏறெடுத்துப் பார்க்காத யேசு, ஒலிவந்தோப்பில் ஒரு பாறையின் ஓரமாக முழந்தாள் இட்டு தந்தையை நோக்கி மனம் கசந்து பிரார்த்திக்கின்றார். அவர் மனக் கண்முன், இந்த உலகம். அதன் வஞ்சகம். பொறாமை. ஏமாற்று. அனைத்தும் ஒன்று திரண்டு அவரைப் பயமுறுத்துகின்றன. அதனாலோ என்னவோ அவர் உடல் எல்லாம் அந்த இரவில் வியர்த்துக் 16

கொட்டுகின்றது. வாதை தாங்க முடியாத யேசு, வாய்விட்டரற்றுகின்றார்.
“என் தந்தையே. முடிந்தால் இந்தத் துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உன் விருப்பப்படி நிகழட்டும்.”
ஒலிவந்தோப்பில் யேசு ஒரு பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கையில் அவரது சீடர்களில் ஒருவனான யூதாஸ், அவருக்கெதிராக பெரியகுரு கைப்பாஸ், மூப்பர்களோடு அமர்ந்து சதியாலோசனையில் ஈடுபடுகின்றான். அந்த ஆலோசனையின்போது யூதாஸ், எடுத்த எடுப்பிலேயே கேட்கின்றான்.
“யேசுவை நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?’
யூதாஸின் இந்தக் கேள்விக்குக் கைப்பாஸிடமிருந்து பட்டெனப் பதில் வருகின்றது.
“முப்பது வெள்ளிக் காசுகள்’.
காசு கைமாறுகிறது. யூதாஸின் முகம் குரூரமாகச் சிவக்கின்றது. அதைக் கண்ணுற்ற பெரிய குரு கைப்பாஸ் அட்டகாசமாகச் சிரிக்கின்றான். அந்தச் சிரிப்பில் அவனது ஆணவம், குரோதம். கொலைவெறி அத்தனையுமே நன்றாகவே பளிச்சிடுகின்றன. அதற்குள் குருக்கள் மூப்பர்களோடு ஒரு பெரும் கும்பலும் கூடி விடுகின்றது. அவர்களின் கைகளில் கத்தி. பொல்லுகள். வாள்கள். அந்த நிலவு வெளிச்சத்தில் நன்றாகவே தெரிகின்றன.
உறுதியான தீர்மானத்தோடு யூதாஸ் காலடி எடுத்து வைக்கின்றான். அவனை அந்தக் கும்பல் பின்தொடர்கின்றது.
ஒலிவந்தோப்பிச் சோர்ந்து முகம் குப்புற விழுந்து கிடக்கும் யேசுவுக்கு எல்லாம் புரிகின்றது. பக்கத்தில் நின்ற தமது சீடர்களிடம் பக்குவமாகச் சொல்லுகிறார். ‘எழுந்திருங்கள், போவோம் என்னைக் காட்டிக் கொடுப்பவன் இதோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறான்.”
ஆம். யேசு தமது சிலுவைப் பயணத்திற்கு ஆயத்தமாகின்றார்.
17

Page 11
அறிய வேண்டிய அரிய மனிதர் - 7.
மகாகவிபாரதி
'ഉq விளையாடு பாப்பா’ என்ற பாடலை எழுதியவர் யார் என்றால் மகாகவி பாரதியார் என்று சிறுவர்களும் சொல்வார்கள். விடுதலைப் போராட்ட வீரர்களில் தலை சிறந்தவர். வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடியவர். பாரதியார் 1882 டிசம்பர் 11ம் நாள் சிதம்பரனார் மாவட்டத்தில் உள்ள எட்டையபுரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் சின்னசாமி - லட்சுமி தம்பதியினர். பெற்றோர் சூட்டிய பெயர் சுப்பிரமணியன். பதினோராவது வயதிலேயே அரசவைப் புலவர்கள் கொடுத்த பாடல் அடிகளைக் கொண்டு அதிக விரைவாக பாடல் புனைந்து ‘பாரதி பட்டம் பெற்றவர். 1897ல் செல்லம்மாவை மணந்தார்.
சிறுவயதில் தாயை இழந்தார். தந்தை இறந்த போது வறுமையால் வாடிய பாரதி தன் அத்தையின் ஆதரவில் காசிக்குச் சென்று படித்தார். எட்டையபுரம் சமஸ்தானத்திலும், பின்பு மதுரையில் சில காலம் தமிழாசிரியாராகவும் பணியாற்றிய பிறகு 1904ல் சென்னை வந்து 'சுதேச மித்திரன்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். 1905ல் அவர் எழுதிய ‘வங்கமே வாழிய என்ற பாடல்தான் பாரதியின் வாழ்க்கையை திருப்பு முனையாக்கியது. தேச விடுதலைக்காக திலகரின் திவிரவாதத் தலைமையை 6JgBBTs.
சென்னையில் சென்ரல் ரயில் நிலையம் மூர் மார்க்கட்டில் தான் பாரதியின் தேசிய எழுச்சிப்பாடல்கள் அரங்கேற்றப்படும். 1908ல் 'என்று தணியும் இந்த சுதந்திரதாகம்’ என்ற பாடல் அங்கு அரங்கேற்றப்பட்டது. இது ‘இந்தியா’ பத்திரிகையில் வந்தது. அப்பாடலுக்காக அரசு பாரதிக்கு தந்த பரிசு ஐந்து வருடக் கடுங்காவல் தண்டனை. பாரதியார் கைதானால் அவருக்காகவே ஆரம்பிக்கப்பட்ட ‘இந்தியா’ பத்திரிகை வெளிவராது என்ற நண்பர்களின் ஆலோசனையை ஏற்று பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் இருந்து ‘இந்தியாவை' நடத்தத் திடடமிட்டார். அதற்காகவே புதுவைக்கு வந்தார். “இந்தியா’ பத்திரிகை பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டது.
1908ல் புதுவையில் பல சிரமங்களுக்கிடையே “இந்தியா’ இதழை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் போராடிய போது, வெள்ளையர் அரசு அவரை சிறை செய்ததை முதன்முதலாக வெளியிட்டு, காந்தியை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் பாரதி. இப்படிப்பட்ட பாரதியை 1919ல் காந்தியடிகள் சந்திக்க நேர்ந்த 18

சூழ்நிலையில், "இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி’ ஏதன்றுமட்டும் கூறி, அவரின் தேச பக்தியை திரையிட்டு மறைத்தார்கள் சில அரசியல்வாதிகள். தமிழகத்தில் ‘இந்தியா’ பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்டது. புதுவையிலிருந்து வந்த இந்தியா’ 12-03-1910ல் நின்று போனது. இற்தியா தவிர சுதேசமித்திரன், விஜயா, கர்மயோகி, பால பாரதம், சூரியோதயம் போன்ற பத்திரிகைகளையும் பாரதியார் பொறுப்பேற்று நடத்தினார். பாரதியாரின் எழுத்தைக் கண்டு அஞ்சிய அரசால் பத்திரிகைகள் பாதிக்கப்பட்டதால், உருப்படியாக நடக்கும் பத்திரிகைகளில் எழுதி அவற்றுக்கு இடையூறு செய்ய மாட்டேன் என பல பத்திரிகைகளுக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு வறுமையில் வாட ஆரம்பித்தார்.
பாரதியார் பெரும்பாலும் பேசிக்கொண்டே இருப்பார். பேச்சை நிறுத்தினால் பாட்டு பிறக்கும். கண் உறங்கினால்தான் மவுனத்துக்கு இடம் உண்டு. புதுவையில் வாழ்ந்த பத்தாண்டுகளில் தான் ஏராளமான கவிதைகளை எழுதினார். ‘பாரத ஜன சபை' என்ற பெயரில் இந்திய தேசிய காங்கிரசின் வரலாற்றை ஐம்பது அத்தியாயங்கள் கொண்ட ஒரு பெரிய நூலாக எழுதி சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பினார். விஞ்ஞானியான ஜெகதிச சந்திரபோஸ் எழுதிய ‘ஜிவவாக்கு’ என்ற நூ6ை0யும், தாகூரின் சில சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் பாரதி வல்லவர்.
அவர் புலமையின் பால் கட்டுப்பட்டே பாரதிதாசன், குவளைக் கண்ணன், வ. ராமசாமி (வ.ரா.) போன்றவர்கள் அவரையே சுற்றிச்சுற்றி வந்தனர். பாரதியாரின் கவிதைகளுக்காகவே விட்டு வாடகை வசூலிக்காமல் இருந்தவர் அவருக்கு வீடு வாடகை தந்த ‘விளக்கெண்ணை’ செட்டியார். படிப்பு வாசனையே தெரியாதவர்கள் தான் அவர் பட்டினி கிடப்பதை பார்க்க முடியாமல் அவரை ஆதரித்தவர்கள். பாரதியார் மிகப்பெரிய வள்ளல். தான் அணிந்திருக்கும் ஆடைகளைக்கூட கழற்றிக் கொடுத்துவிட்டு வந்து விடுவார். பட்டினியிலும் சிட்டுக்குருவிக்கு உணவு அளித்தவர். பெண்கள் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்தவர் பாரதி. பெண்ணை தெய்வமாகவும், தாயாகவும், நாடாகவும் எண்ணிப் போற்றியவர். தேச விடுதலைக்குப் முன்பு பெண் விடுதலையை வற்புறுத்தியவர்.
சாதி அமைப்புகளில் பாரதிக்கு விருப்பம் கிடையாது. பிராமணர் குலத்தில் பிறந்த அவர் பூணுரல் போடுவது கிடையாது. ஆனால் பிற சாதியினருக்கு பூணுால் போடச் செய்து சமத்துவம் பாராட்டியிருக்கிறார்.
புதுச்சேரியிலும் பாரதி போன்ற தேச பக்தர்களுக்கு வெள்ளையர் அரசாங்கம் அதிக கொடுமைகள் செய்தது. மற்றவர்கள் புத்திசாலித்தனமாய் பிழைத்துக் கொண்டார்கள். ஆனால் பாரதியோ சேமிக்கும் பழக்கம் இல்லாததால் வறுமையால் வாடினார். விட்டு வாடகை பாக்கி, பால்காரன் 19

Page 12
பாக்கி, குழந்தைக்கு மலேரியாக் கய்ச்சல், வீட்டில் வறுமை - இந்த நிலையிலும் 'தொல்லைகளில இருந்து விடுதன்ல செய். இல்லாவிடடால் நான் நாத்திகனாகிவிடுவேன். என்று கடவுளிடம் கெஞ்சியிருக்கிறாரே தவிர, பிறரிடம் கையேந்தி நிற்காத சுயமரியாதைக்காரர் பாரதி. பத்து வருடங்கள் புதுவையில் வாழ்ந்துவிட்டு வறுமையோடு வாழ்க்கையைத் தொடர முடியாமல் மனைவி, குடும்பத்தார் வற்புறுத்தலால் மீண்டும் பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் 20-11-1918ல் காலடி எடுத்து கைதானார்.
அவரை விடுதலை செய்ய உதவியவர் சுதேசமித்திரன் உரிமையாளர் எ. ரங்கசாமி மற்றும் சி. ஆர். சீனிவாசன். இவர்கள் தான் பாரதியாரின் வாழ்நாள் முழுக்க உதவி செய்தவர்கள்.
பாரதியாரை வ. உ. சிதம்பரம்பிள்ளை ‘மாமா என்றும், வ.உ.சி.யை பாரதியார் ‘மாப்பிள்ளை’ என்றும் அழைத்துக் கொள்வார்கள். சுப்பிரமணிய சிவா, வ.உ.சி, பாரதி ஆகியோர் மூவரும் சேர்ந்தே செயல்படுவார்கள். அரவிந்தரும் புதுவையில் பாரதியாருக்கு அறிமுகமானார்.
14-12-1918ல் விடுதலை செய்யப்பட்ட பின்பு நெல்லையில் உள்ள கடையம் சென்றார். பிறகு தேசியம் வளர்க்க சென்னை திருவல்லிக்கேணியில் குடிவந்தார். அங்கிருந்தபடியே தான் இறக்கும் வரை விடுதலைக்காக பnடுபட்டார். திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் யானைக்கு ‘மதம் பிடித்ததை அறியாமல் அதற்குத் தேங்காய், பழம் கொடுக்கச் சென்றார் பாரதி. மதம் கொண்ட யானை பாரதியை தூக்கி விசியது. குவளைக் கண்ணன் அவரைக் காப்பாற்றினார். அதன்பின்பு ஏற்பட்ட வயிற்றுக்கடுப்பு நோய் திவிரமாகியது. மருத்துவம்.பார்க்க மறுத்து 1921ல் செப்டம்பர் 11ம் திகதி பாரதி அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்திற்குக் கூட யாரும் வராத நிலையில் குவளைக் கண்ணன் போன்ற சிலரே அவரின் உடலை மயானம் சுமந்து சென்றனர். பாரதியின் இறப்புக்குப் பிறகு அவருக்கு புகழும் பெருமையும் வந்தது. அவரை தெய்வீகப் பிறவியாகப் போற்றுகிறார்கள். அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. வாழ்ந்த காலத்தில் “தேசத்திற்கு உழைப்பதையே தொழிலாகக் கொண்ட பிறவிக் கவிஞரை ஆதரிக்க ஆளில்லை பார்க்கும் இடங்களில் எல்லாம் பாரதி நகர், பாரதி தெரு, பாரதி மணிமண்டபம், பாரதியார் பிறந்தநாள் விழாக்கள், தேசியகவி என்று அவருக்குப் பட்டம். பாரதியார் பெயரில் பல்கலைக்கழகம், அவர் பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்திருக்கிறார் பாரதியார். "இந்தத் தேசத்தை மட்டும் ஒரு நாளும் மறக்காதே’ என்று சொன்னவர் பாரதி. அவர் சொற்படி நடப்பதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடன். ("வசந்தம்' - தினகரன் ஞாயிறுமலர் 2 யூலை 1996)
20

சோவியத் யூனியனின் உடைவு இயல்பாகவே சர்வதேச சக்திகளின் சமநிலையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள், குறிப்பாக மூன்றாம் உலகைச் சார்ந்தவர்கள் இப்போது ஒரே ஒரு வல்லரசே நிலைபெற்றிருப்பதையிட்டுப் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் தனி ஆதிக்கத்துக்குட்பட்ட ஒருமுகப்பட்ட உலகைப் பற்றி அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி இச்சிறிய பின்னுரையில் போதிய அளவு ஆராய்வதற்கு இடமில்லை என்னும் எனது கருத்தை இங்கு கூறிவைக்க வேண்டும். இப்போதைக்கு அமெரிக்க அதிக்கம் அதை எதிர்த்து நிற்கக்கூடிய எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே தோன்றுகிறது. ஆயினும் இந்த நிலைமை நெடுங்காலத்துக்கு நீடிக்காது. 1992ல் நிகழ இருக்கிற ஐரோப்பிய சமூகத்தின் நெருக்கமான ஒன்றிணைப்பு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் அதி சக்தி வாய்ந்த பொருளாதார அமைப்பை உருவாக்கப்போகிறது. மேலும் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் அதனை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. காலப்போக்கில் ரஷ்யா, உக்ரைன், பைலோ ரஷ்யா ஆகியனவும் இதே திசையில் செல்லக்கூடிய சாத்தியம் உண்டு.
சோவியத் அணுவாயுத அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு பொருளாதார ரீதியில் பலம் பெற்ற ஐரோப்பா அமொக்க மேலாதிக்கத்துக்கு பணிந்திருக்கக் கடமைப்பட்டுள்ளதாக இனி ஒருபோதும் கருதாது. சர்வதேச விவகாரங்களில் சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டையே அது பெரிதும் மேற்கொள்ளும். மறுபுறத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஜப்பான் பொருளாதாரத் துறையில் அமெரிக்காவின் சம போட்டியாளனாக மாறியுள்ளது. உற்பத்தி வளர்ச்சியைப் பொறுத்தவரை அமெரிக்க பொருளாதாரம் 21

Page 13
ஜப்பான். ஜெர்மனி ஆகிய நாடுகளையும்விட யின்தங்கியுள்ளது. இவ்விரு நாடுகளும் அமெரிக்காவைப்போல் பெருமளவு ராணுவச் செலவினச் சுமைகளால் பாதிக்கப்படாதது இதற்கு ஒரு காரணமாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கான காரணிகளுள் ஒன்று இரண்டாவது உலக யுத்த காலத்திலிருந்து அதன் பொருளாதார வளங்களில் பெரும் பகுதி ராணுவப் பலத்தையும் அணுவாயுதங்களைக் கட்டி எழுப்புவதில் செலவிடப்பட்டமையாகும். அமெரிக்கப் பொருளாதாரம் அதே அளவு நெருக்கடிக்கு உள்ளாகாமைக்கு அது அதிக செல்வம் உடையதாக இருப்பதே காரணமாகும். ஆயினும் அமெரிக்கா சர்வதேச பொலிஸ் காரனாகச் செயற்படுவதனால் அதன் அதிகாரமும் அத்துமீறி விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் பாதுகாப்புச் செலவினங் களால் அதன் சமூக நல ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. இதன் விளைவாக நகரங்களில் வீழ்ச்சி நிலை காணப்படுகின்றது. குறிப்பாக நகர்ப்புற வறியவர்களில் பெரும்பான்மையினரான கறுப்பின மக்கள் மத்தியிலும் ஸ்பானிய மக்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வகையில் அமெரிக்காவில்கூட ஆழ வேரூன்றியுள்ள சமூக நெருக்கடி முதிர்ச்சியடைந்து வருகிறது.
இவ்வகையில் சர்வதேச அதிகார உறவுகளைப் பொறுத்தவரை 21ம் நூற்றாண்டில் 1945க்கும் 1991க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இருந்தது போல் இருமுகப்பட்ட ஒரு உலகமோ அல்லது ஒருமுகப்பட்ட உலகமோ இருக்கமாட்டாது. பதிலாக பன்முகப்பட்ட ஒரு உலகமே சாத்தியமானது. குறைந்த பட்சம் மூன்று அதிகார மையங்களாவது இருக்கும். ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா என்பன அவை இவ்விசயத்தில் ரஷ்யாவை நாம் கவனத்தில் இருந்து ஒதுக்கிவிட முடியாது. தற்போதைய பிரச்சினைகளில் இருந்து அது விடுபடுமாயின் அடுத்த நூற்றாண்டில் அதுவும் ஒரு பெரிய சக்தியாகவே அமையும். அதன் பாரிய நிலப்பரப்பும், பெருமளவான இயற்கை மற்றும் பொருளாதார மூல வளங்களும் தம்மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்கை உடைத்தெறியப்போகிற வளம்ான கலாசார மரபுகளைக் கொண்ட பரந்த மக்கள் தொகையும் இதனைச் காத்தியமாக்கும்.
(றெஜி சிநிவர்த்தனாவின் "சோவியத் யூனியன் உடைவு” எனும் நூலில் இருந்து)
22

திதுறி பரணி
அதிகாரம் - 2.
பிற்காலச் சோழப் பேரரசர்களில் ஒருவனான இரண்டாம் இராசேந்திரன் தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியின்பின் தலைசாய்த்த செய்தி ஈழம் எங்கும் மகிழ்ச்சி அலையை எழுப்பியது போலவே, அவனது இளவல் வீரராசேந்திரனின் முடிசூட்டு வைபவமும் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.
ஈழம் முழுவதையும் சோழப் பேரரசின் ஓர் மண்டலமாக்கி, அதனைச் சோழ மயமாக்கவும் வங்காள விரிகுடாவை சோழவாவியாக்கவும் முனைந்து செயலாற்றிய முதலாம் இராசேந்திரனின் இன்னுமொரு மகனான இரண்டாம் இராசேந்திரனும் தனது ஆட்சிக்காலத்தில் ஈழத்தைத் தொடர்ந்து சோழரின் பிடிக்குள் வைத்திருக்கப் பெரிதும் முயன்றவன் என்ற வகையிலேயே அத்தேச மக்களின் வெறுப்புக்கும், பகைமைக்கும் அவன் ஆளாகியமை ஒன்றும் அதிசயமல் ல . இதன் காரணமாகவே முதலாம் விஜயபாகு இராசேந்திரசோழனின் மரணத்தை மாபெரும் விழாவாகவே ரோகணை முழுவதும் நடத்திக்காட்டியிருந்தான்.
(விடுதலை வீரன் விஜயபாகு)
இரண்டாம் இராசேந்திரனுக்கு முன்பு - பத்து ஆண்டுகளாகச் சோழ சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து - அப்பெரும் சாம்ராஜ்ஜியத்தைத் தனது ஆட்சித்திறனால் கட்டிக்காத்த அவன் சகோதரன் முதலாம் ராஜாதிராஜன் கொப்பம் போரில் மேலைச் சாளுக்கியரால் கொல்லப்பட்ட வேளையிலும் ஈழத்தில் சந்தோசப் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியமையைத் தனது சிறுவயதிலேயே அனுபவரீதியாக விஜயபாகு உணர்ந்திருந்தான்.
முதலாம் இராசேந்திரனின் ஈழப்படை எடுப்பின்போது இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் கைதாகி சோழர் சிறையில் அடைக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகளின் பின் அங்கு மரணம் எய்தியமையும், அதன்பின் அவன் மகன் காசிபன் - விக்கிரமபாகு என்னும் பெயரில் சோழனுக்கெதிராக மேற் கொணி ட கிளர்ச்சியின் போது சோழப் படையினாலே கொல்லப்பட்டமையும், அவனைத் தொடர்ந்து மகாலான கித்தி எனும் அரசன்
23

Page 14
சோழரோடு போரிட்டுத் தோற்றகால் ஏற்பட்ட அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொண்டமையம் விஜயபாகுவின் மனத்தில் சோழருக்கெதிரான குரோதத்தையும் கோபாக்கினியையும் மூட்டியிருந்தன. அதேபோன்று அம்மரணங்கள், ஈழத்தைச் சோழரிடமிருந்து எப்பாடுபட்டேனும் விடுவித்தாக வேண்டும் என்ற வெறித்தனத்தையும் அவனுள் உசுப்பிவிட்டிருந்தன.
இரண்டாம் இராசேந்திரனை அடுத்து அவனின் சகோதரன் வீரராசேந்திரன் முடி புனைந்ததைக் கேள்வியுற்ற விஜயபாகு, இவனும் தன் தந்தை, தமையன்மாரைப் போலவே ஈழத்தைத் தன் கைக்குள் வைத்திருக்கவே தலைப்படுவான் என்று நம்பினான். இதனால், சோழருக்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியைத் துரிதப்படுத்துவதே விடுதலைக்கான ஒரே வழி என எண்ணி அந்த எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் ஆரம்பித்தான்.
இருபத்தைந்தாண்டு இளைஞன் விஜயபாகு! ஆண்மையும் அழகும் ஒன்றிணைந்த அவனின் எடுப்பான தோற்றம் இளம் பெண்களின் மனத்தில் ஒருவித சலனத்தையும் சோழப்படைத் தளபதிகளிடையே அச்சத்தையும் தோற்றுவித்திருந்தன.
அது ஒரு மாலைக்காலம். வானம் எங்கும் சூரியன் பலவண்ணக் கோலங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு வண்ணமும் - அந்த வண்ணத்தைக் கொண்டு சூரியனால் வரையப்படும் சித்திரங்களும் விஜயபாகுவின் உள்ளத்தில் உணர்ச்சி அலைகளை உருவாக்கவே ரோகணையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து தனது உச்சந்தலையைக் காட்டிக்கொண்டிருக்கும் ‘பலட்டுப்பாண’ என்னும் குன்றின் மீது ஏறி நிற்கின்றான். இயற்கையின் வனப்பை எல்லாம் அவன் இரண்டு கண்களும் ஏந்திக் கொள்கின்றன.
சூரியனின் மாயாஜால விளையாட்டில் மனம் மகிழ்ந்திருந்த விஜயபாகு - தனக்கு முன் பல குன்றுகள் நடந்து வருவது போன்ற பிரமையை ரோகணையின் களிறுகள் ஏற்படுத்தவே அவன் உண்மையிலேயே பரவசத்தில் ஆழ்ந்து போகின்றான். ஈழத்தின் செல்வங்கள் இரத்தினமும், முத்தும் மட்டுமல்ல இந்த வேழங்களும் தான் என்று நினைத்த அவன், சோழப்புலிகளை எதிர்த்துப் போரிட இந்த ஈழத்து வேழங்களே போதும் என்று எண்ணியபோது அவன் உணர்ச்சிகள் விம்மி எழுந்தன.
களிறுகளிலிருந்து தன் கண்களைத் திருப்பிய விஜயபாகு குன்று 24

உஒன்றில் இருந்து குதித் தோடிவரும் அருவியைக் கண் டு ஒரு குழந்தையைப்போல் துள்ளிக்குதித்தான். அந்தச் சமயம் அருவியைவிட குளிர்ச்சி நிறைந்த கைவிரல்களினால் தனது கண்கள் பொத்தப்படுவதை உணர்ந்து கிளுகிளுப்படைந்த விஜயபாகு, அந்தப் பட்டுவிரல்களை மெல்லப் பற்றி விலக்கிக் கொண்டே
“லிலாவதி, நீ எப்போது இங்கே வந்தாய்?’ என்று கேட்டவாறு தன் பட்டத்து ராணியைப் பரிவோடு அணைத்துக்கொண்டான்.
கணவனின் அணைப்புக்குள் கட்டுண்ட லிலாவதி “நீங்கள் தான் ஒரு புலவனைப்போல கற்பனைக் கடலில் நீந்திக் கொண்டிருந்திர்கள். அப்படியிருக்க, நான் வந்தது எப்படி உங்களுக்கு தெரிந்திருக்க முடியும்.?”
என்று தன் கணவனின் கேள்விக்குக் குறும்பாகவே பதில் அளித்த
" angogarter
“அது சரி, இங்கே ஏன் தனிமையில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள்? சோழர் மீது படை எடுக்கும் திட்டம் பற்றி யோசிக்கத் தானே?’ என்று ஒரு கேள்வியையும் கேட்டு வைத்தாள்.
சோழர் என்ற சொல்லைக்கேட்டதும் சினத்தின் உச்சிக்குச் சென்றுவிட்ட விஜயபாகு “சோழரை - இந்த நாட்டிலிருந்து தொலைத்துக் கட்டுவதற்காகத் தான் நான் இந்தக் குன்றை ஒரு பாசறையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன் என்பதை நி நன்கு அறிவாய். ஆனால் இந்தக் குன்றின்மீது இன்று நான் வந்தமர்ந்தது அதற்காக அல்ல”, என்ற விஜயபாகு அந்த வானத்தின் அழகுக் கோலத்தை அவளுக்குச் சுட்டிக்காட்டினான்.
அரசன் சுட்டிக்காட்டிய திசையில் ஆகாயத்தை ஆவலோடு நோக்கிய லிலாவதி. "ஒ எவ்வளவு அழகாக இருக்கிறது” என்றவாறு அவளும் ஒரு குழந்தைபோலத் துள்ளிக் குதித்த ஸ்.
இயற்கையின் இனிமையிலும் இன்ப அணைப்பிலும் இந்த உலகத்தையே மறந்திருந்த அந்த இளசுகளின் எண்ணங்கள் இப்போது சோழர்பக்கம் திரும்பின. விஜயபாகு தன் ஒற்றன் மூலம் அறிந்த சோழநாட்டுச் செய்திகளை லிலாவதிக்குச் சொல்லத் தொடங்கினான்.
இரண்டாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோழ சிம்மாசனத்தில் ஏறி 25

Page 15
அமர்ந்திருக்கும் வீரரசேந்திரன் சாதாரணமானவனல்ல. வீரத்திலும் இராத தந்திரத்திலும் தனது தமையன்மாரையே விழுங்கிவிடக்கூடியலின். இராசதந்திரத்தை ஒரு பெரும் கலையாகவே அவன் பயின்றிருக்கிறான்.
(வரலாற்றுக்குறுநாவல்)
இந்தச் சமயத்தில் விஜயபாகுவை இடைமறித்த லிலாவதி, “இராஜதந்திரம் என்று சொல்கிறிாகளே அது என்ன என்று எனக்குச் சொல்லவேண்டாமா?’ என்றாள் தனது மழலை மொழியில்!
அயோத்தி இராசபரம்பரையைச் சோந்த தனது பட்டத்துராணியின் கேள்வியினால் சற்று ஆச்சரியம் அடைந்த விஜயபாகு -
இராசதந்திரத்தில் சிறந்த'சாணக்கியன் பிறந்த வட இந்தியாவைச் சேர்ந்தவள் நி. அது மட்டுமன்றி உன் தந்தை ஓர் அரசனும் கூட. என்ற விஜயபாகு -
“ஆயுதங்களின்றி அறிவின் துணையினால் தன் காரியங்களைச் சாதிப்பதற்குப் பெயர்தான் இராஜதந்திரம்..” என்று அவன் ஒரு வரைவிலக்கணத்தையே சொன்னபோது லிலாவதியின் கண்கள் அகல விரிந்தன.
அழகிய குவளை மலர்களாக அகல விரிந்த தன் ராணியின்
கண்களின் எழிலையும், அவற்றின் அமைப்பையும் தனக்குள்ளே ரசித்தவாறு
விஜயபாகு, வீரராசேந்திரன் பற்றிய தனது விமர்சனத்தைத் தொடர்ந்தான்.
V `
இரண்டாம் ராசேந்திரனுக்கு மதுராந்தகி என்னும் பெயரில் ஒரு மகள். இவள் மேலைச் சாளுக்கிய மன்னன் விஜயாதித்தனின் எதிரியாக இருக்கும் விவர்ணுவர்த்தனின் மனைவி. அதாவது உறவுமுறையில் விஷணுவர்த்தன் வீரராஜேந்திரனின் மருமகன். ஆனால், சொந்த பந்தங்களைவிட சோழ சாம் ராஜ்ஜியத்தின் எதிர்காலமே பெரிது னக் கருதிய வீரராஜேந்திரன் வேங்கி மன்னன் ராஜ ராஜ நரேந்திரன் இறந்த பிறகு, தான் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி விஜயாதித்தனை அந்நாட்டின் அரசனாக்கினான்.
அப்படியா. இந்த ஏற்பாடு விஜயாலயன் வம்சத்தில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்குமே.
26

இருக்கலாம். அடனால் ந்ைதப் பிளவுகளையும் சமாளிக்கும் பேராற்றல் படைத்தவன் விர ராஜேந்திான், என்றாலும், வீரராஜேந்திரனின் செயலால, உள்ளுர வெறுப்படைந்த விஸ்ணுவர்த்தன் சோழ சிம்மாசனத்தின் மீதே ஒரு கண் வைத்திருப்பதாகக் கேள்வி.
“சோழ சிம்மாசனத்தின் மீதா.”
"ஆமாம்.”
“அதற்குத் தான் அதிராஜேந்திரன் இருக்கிறானே.”
“உண்மைதான். ஆனாலும் வீரராஜேந்திரனின் மரணத்தின் பின் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகின்றனவோ எவருக்குத் தெரியும்?
சோழர்கள் பற்றிய விபரங்களையெல்லாம் உங்கள் விரல் நுனியிலேயே வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. வீர ராஜேந்திரனைப்பற்றி இன்னும் என்ன அறிந்து வைத்திருக்கிறீர்கள்?
அயோத்தி நாட்டின் இளவரசியின் இந்தக் கேள்விக்கு விஜயபாகு உடனடியாகவே பதில் சொன்னான்.
வீரராஜேந்திரன் வீரத்திலும் இராஜதந்திரத்திலும் மட்டுமல்ல, தமிழ்ப் புலமையிலும் தன்னிகரற்று விளங்குகிறானாம்.
“அப்படியா?”
“ஆமாம். சோறுடைத்த சோழநாடு என்று சொல்வார்கள். ஆனால் விராஜேந்திரனின் தமிழ் அறிவு பற்றிக் கேள்விப்படும்போது தமிழுடையது தஞ்சை நாடு என்றல்லவா கூற வேண்டியிருக்கிறது.”
விஜயபாகுவும் லிலவதியும் உரையாடிக் கொண்டிருந்த வேளையில் சோழ நாட்டிலிருந்து திரும்பிய ஈழநாட்டுத் தூதுவன் ஒருவன் அவனைக் காண வந்திருக்கும் செய்தி கிடைக்கவே அரசன் அவனை அவசர அவசரமாக அந்தக் குன்றுக்கே அழைக்கிறான். ஒற்றன் சொன்ன சேதியைக் கேட்ட விஜயபாகுவின் முகம் அந்த இருளிலும் பயங்கரமாகக் காட்சி அளித்தது.
(இன்னும் வரும்)
27

Page 16
ஆலைகள் கக்கும் இரசாயனக் கழிவுகள். 'டீசல் இயந்திரங்கள் பெருமூச்சாய் விட்டொழிக்கும் காபன் துணிக்கைகள்.
எந்தத் தேவைகட்கும் பாவித்து விட்டெறியும்
‘சொப்பிங் பாக்குகள்.
யுத்த அரக்கனின் கொஞரக் கசிவுகளாய் காற்றினிலே கலந்த நச்சு விதைப்புகள்.
இத்யாதி. இத்யாதி இருப்புகள் இருக்கையில் சூழல் மாசுறுதலைத் தருத்திடல் சாத்தியமோ..?
uD. Hösø5/r,
ஆண்டு 11R மட்/புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை.
 

米 உலகம் 1900ம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்தது. அப்போதே அச்சு இயந்திரத்திற்கு வயது 400 என்பதால் அவை ே உலகின் பெரிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டன. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கணிசமான அளவுக்கு
புழக்கத்துக்கு வந்துவிட்டது. மோட்டார் கார்கள்கூட வீதிகளுக்கு வந்துவிட்டன. என்றாலும் உலகில் பெரும்பாலான நாடுகளில் குதிரை வண்டிகளும், மாட்டு வண்டிகளுமே வீதிகளில் தென்பட்டன. ரேடியோ, டீ.வி. என்ரி எல்லாமே ஆராய்ச்சிக் கட்டத்திலேயே இருந்ததால் மக்களுக்கு நாடகத்தையும், இசையையும் விட்டால் வேறு பொழுதுபோக்குகள் கிடையாது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிக்மன்ட் ஃப்ராய்டு என்ற மனோதத்துவ நிபுணரின் கண்டுபிடிப்பு, தாக்கத்தில் தோன்றும் கனவுகள் பற்றிமனிதனுக்கு இருந்த பல சந்தேகங்களுக்குவிடை சொன்னது. மூட நம்பிக்கைக்கும் தேவையில்லாத பயத்திற்கும் S. முற்றுப்புள்ளிவைத்தது. மனிதனின் ஆசை அல்லது பயம் - இவை தான் அவன் தூங்கும்போது கனவாக வெளிப்படுகிறது என்பது இவரின் கண்டுபிடிப்பு. இதுதான் மனோதத்துவ இயல்பற்றிப்பிறகு N (s ஏற்படவிருந்த அத்தனை உண்மைகளுக்கும் முன்னுரை.
N அடிப்படை. ஆணிவேர் எல்லாம் じリ。
米 பார்சலோனாவைச் சேர்ந்த 19வயது இளைஞன் ஒருவன் t முதன் முதலாக தான் வரைந்த ஓவியங்களை பொதுமக்களின் 7% பார்வைக்க வைத்தான். என்ன கன்றாவி இது? என்று பலர் முகம் இ சுளித்தார்கள். சுலபத்தில் புரியாத அந்த ஒவியங்களை வரைந்தது S) இளைஞனின் பெயர் . பிக்காஸோ. 悠
NQAMN 滋 Šඹිෂඳීමේදී ඉණිමිෂ්ණබිෂ

Page 17
தாய்லாந்து விெ
தருமா வெற்றி தாய்லாந்து இல்லை. வருட0ா பபிண்ைடும் புத்தம்?
திடம்பு போல் இதுவும் தி.ை இல்லை. நம்பும் மக்களுக்கு நல்லது
சிங்கடம் புலி சினேகடம் தெ இல்லை. பங்கடம் உண்டாக்கும் பயா
சந்திரிகா - ஜே. வி. பி. "அ இல்லை. சந்தரத் தடயிழுக்குச் சுதந்
வட - கிழக்கு தபலிழர் வச இல்லை. இடமளித நாமும் இழந்து
தெற்கினர் அரசியல் திவில் இல்லை. சொர்க்கமாக்கச் சோதரன்
இனங்களர் பாவும் இனைந் இல்லை. பமனாங்களிர் கெட்டு மல்யுத்த
பேச்சுவார்த்தை பெருவெ இல்லை. மூச்சிழந்து இடையில் முப
நோர்வேயும் ஏமாற்றத்தா இல்லை. - ஆர்வம் பபிகுதியால் ஆன

பற்றி தருமா?
ச மாறுமா?
து செய்யுமா?
ாடர்ந்திடுமா?
ங்கரங்களர் தோன்றுமா?
=ானக்கியம்' வெல்லுமா?
திரம் கிடைக்குமா?
LDTTESLDFr?
போவோமா?
னை அழிக்குமா?
ள் ஆகுமா?
ந்து வாழுமா?
நம் செய்யுமா?
ற்றி அளிக்குமா?
டிந்து போகுமா?
ஸ் நொடிந்து போகுமா?
தெலாம் செய்யுமா?