கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1983.05-06

Page 1

ההעg. תחaפוףהה.
ஸ்லி சுவாம்பிள்ளே
டுநகர் ஆயர்

Page 2
திருமலை - மட்டுநகர்ப் புதிய ஆயர்
ta
ஏழாவது ஆண்டு
Apocryff S88
வைகாசி - ஆணி 1983
தொகுப்பு:
கரவையூர்ச் செல்வம்
விநியோகம்
பிரான்சிஸ் டானியல்
Gausius(S
இங்ஸ்லி கவாம்பிள்ளே
தொடர்பு
புதிய உலகம்”* தொடர்பகம் 657, மருத்துவ மனைச் சாலே யாழ்ப்பாணம்.
PUTHIYA ULAKAM"
THODARPAHAM 657, Hospital Road,
AFFNA
(Guສົະ 23798
விலே ரூபா 2-50
சந்தா, ஆண்டுக்கு 15/-
aaaaaaaaaaaaaaaa
நிறை மகிழ்வொடு நீடூழி வாழ்க
** --wa-l-Mesa. as
சிந்தனையூட்டும் சஞ்சிகை
புதிய உலகிலே.
6 Tudogout tirrifa ibau
அஞ்சலித்தேன் 4 |ஆயர் கிங்ஸிலி
மன்னிப்பு a 6 | சிறுவர் உலகு
பூக்கள் ... 10 கவரிமான் ... ll
சமுகத்துக்கு. ... 16
பாரதியாரின். ... If
அம்மா அம்மா 9 கருத்துமோதல்
பெண்களை வாழவிடுங்கள், 28 இரட்சணிய யாத்திரிகம் . 30
அர்ச்சனைக்கு வராத. . 35 எண்ணியதை எண்ணி. . குறுக்கெழுத்துப் போட்டி 46 வெளியேவா . . 84 புதுமைப் பதில் ... 49 உங்கள் பார்வை ... 60
*P.
aaaaaa-n1
படைப்புகளுக்குப் பொறுப்பு படைத்தவர்களே: கருத்துகளுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே - ஆர்.
(FOR PRIVATE CIRCULATION ONLY)

ஒருங்கிணைந்த தலைமைத்துவம்
கடந் ஏழு ஆண்டுகளாக முப்பத்துஏழு மலர்களிலுரடாக * புதிய உலக*த்தை வெளியிட்டு வந்தவர், அருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள்.
எமது முதல் இதழிலேயே நாம் எமது சஞ்சிகையின் இலட்சி யத்தைத் தெளிவாக்கியிருந்தோம். அந்த இலட்சியப் பாதையில் நாம் மெதுவாகவே நடந்தாலும், உறுதியான நடையாக நடந் தோம். வேகமில்லாத அந்நடையில் தளர்ச்சியிருக்கவில்லை.
அன்றுதொட்டு இன்றுவரை நாம் எந்த ஒரு சமயத்தையோ, சாதியையோ - ஏன் இனத்தையோ சார்ந்து கருத்துக்களைத் தெரி வித்தது கிடையாது. உண்மையைக் கூறுவது சார்பாகாது. பெரிய பத் தி ரிகை கள் சொல்லத் தயங்கியவற்றை நாம் துணிந்து சொன்னேம். ஆயினும், நாட்டின் எந்தஒரு சட்டத்தையும் மீறி நாம் எதையும் பிரசுரித்தது கிடையாது. எந்தவொரு சலுகையையும் நாம் கேட்டதும் இல்லை, அதேவேளை தரப்பட்ட சுதந்திரத்தைத் துர்ப்பிர யோகம் செய்யவுமில்லை. எமது முப்பத்துஎட்டு மலர்களுமே இவற் றிற்குச் சான்று. •
பொதுமக்கள் நலன்கருதி, அவர்களின் முழுமையான சுதந் திரவாழ்வு (integrateal human freedom) கருதியே நாம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். இன்றைய காலகட்டத்தில் இதை ஒரு சாதனையாகவே நாம் கருதுகிருேம்.
இவ்வாறு எம்மை வளரவிட்ட சிறப்பும் பெருமையும் எமது அன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய வெளியீட்டாளருக்கே உரியன வாகும். எந்தஒரு காலகட்டத்திலும் எமக்குத் தரப்பட்ட பொறுப் பில் அவர் தலையிட்டது கிடையாது. அதேவேளை அப்பொறுப்ல்ே இருந்து தாம் தவறிச்செல்ல அவரது அன்பும் பண்பும் இடந்தர

Page 3
s
வில்லை. அவர் தமது பொறுப்பையும் அதிகாரத்தையும் நடைமுறைப் படுத்தும் பண்பான முறைக்கு இது ஒரு சிறிய உதாரணம். சின்ன வற்றில் அவர் பொறுப்பாகவும், பண்பாகவும், தலைமைத்துவச் சிறப் புடனும் பணிபுரிந்து வெற்றிமேல் வெற்றி ஈட்டியமையிஞல் மேலும் மேலும் பொறுப்புகள் அவரிடம் கொடுக்கப்படுவதை நாம் கண்டு மகிழ்கிருேம், பெருமைப்படுகிருேம்.
இன்று அவர் திருமலை-மட்டுநகர் ஆயராகக் கிழக்குமாகாணம் சென்றமைகண்டு துன்பத்தினூடாக இன்பம் காணுகிருேம். எம்மை விட்டு அவர் பிரிந்து செல்வது எமக்குப் பெருந்துன்பம். அவரின் அன்பை, ஆதரவை ஊக்குவித்தலை, ஆலோசனைகளை அருகில் இருந்து பெறமுடியாதென்று நாம் உண்மையிலேயே மனம் வருந்து கின்ருேம்.
ஆயினும், அவர் பொறுப்பான பெரிய பதவியில் எமது சகோ தர மறைமாவட்டத்துக்கு ஆயராகச் செல்லுகின்முர் என்று எண்ணி மகிழ்கின்ருேம்.
யாழ் - மன்னர்- திருமலை/ மட்டுநகர் மறைமாவட்டங்கள் இன்று பல அவசரப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றன. இம்மூன்று மறை மாவட்டங்களுக்கும் ஒரு தனிப்பட்ட மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, பிரச்சனைகள் பொதுவாக உண்டு. ஆகவே தேசிய ரீதியில் ஆயர்கள் ஒன்றுகூடும் அதேவேளை, திண நிலப்பகுதிக்குரிய முறையி லும் (regional) சம்பந்தப்பட்ட ஆயர்கள் அடிக்கடி ஒன்றுகூடி இம் மறைமாவட்டங்களில் வாழும் மக்களின் இன்றைய தேவைகளை ஆய்ந்து உணர்ந்து, அத்தேவைகளுக்கேற்ப பணிசளை உருவாக்கி வளர்க்க வேண்டும். ஏனைய மறைமாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் தேவைகளையும் இவர்கள் கணக்கெடுக்க வேண்டியது அவசியம்.
கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமே என்று செயற்படாது, பரந்த அளவில் சிந்தனை செய்து மறைமாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்குமெனச் சேவைசெய்ய ஆயர்கள் மூவரும் ஒருங்கிணைந்து வரவேண்டும்.
திறமையும், ஆற்றலும், ஆர்வமும், உண்மையான மக்கள் அன்பும் கொண்ட ஆயர்களின் தலைமைத்துவத்தில் புதிய திட்டங் களை எதிர்பார்க்கிருேம். அத்திட்டங்களை அமுல்படுத்தும் உறுதியை
பும், துடிப்பையும் எதிர்பார்க்கிருேம்.

3.
இம்மறைமாவட்டங்கள் தோறும் வெவ்வேறு துறைகளில் அறி வும் அனுபவமும் பெற்றவர்கள் இல்லறத்திலும், துறவறத்திலும், குருத்துவத்திலும் இருக்கிருரர்கள். அவர்களையும் மாவட்ட ஆட்சி மன்றத்தில் (regional council) இணைத்துக் கொள்வது பேருதவி யாக அமையும். W
முழுமையான விடுதலை (intervated freedom) பெற்று, மகிழ் வுடன் நிறைவாக வாழ ஒரு சமூகம் வழிமேல் விழிவைத்து ஓரளவு விழிப்புணர்ச்சியும் பெற்று ஒரு பொறுப்பான தலைமைத்துவத்தைக் காத்து நிற்கின்றது. அத் தலைமைத்துவத்தை, ஏனைய துறைத் தலை மைத்துவத்துடன் இணைந்து கொடுக்க ஆயர்கள் முன்வரவேண்டும்,
புதிய ஆயர் இம்மாவட்ட ஆட்சிமன்றத்து உயிரூட்டுபவ ராக விளங்குவாரென்பது எமது நம்பிக்கை.
ஒளிமயமான எதிர்காலமொன்று புதிய உலகமொன்று கூ தூரத்தே தெரிகின்றது. ஏனைய ஆயர்களை ஏற்றதுபோல, புதிய ஆயரையும் ஏற்போம். மதமென்றும், சாதியென்றும் பாராது ஒருங் கிணைவோம். ஆர்வத்தையும் ஆற்றலையும் வளத்தையும் ஒன்று சேர்ப்போம். இலட்சியம் நோக்கி நடைபோடுவோம். “புதிய உல கம்" படைப்போம்.
எங்கள் சஞ்சிகையின் வெளியீட்டாளரும்,
இன்றைய திருமலை -மட்டுநகர் ஆயருமான பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களுக்கு அன்புடனும் பண்புடனும் இம்மலரை
அர்ப்பணிக்கின்ருேம்.

Page 4
அஞ்சலித்தேன்
வாய் உளம் காயம் தன்னில்
வரையிலாப் பிழைகள் செய்தேன் ஆயினும் பெ:றுத்தாட் கொண்டாய்
அருளினுக் கரசே அன்பே தாயினும் இனியாய் உன்றன்
தண்ணளிப் பெருக்கை இந்த நாயினேன் நினைந்துன் பாத
நறுமலர் இணைமேல் வீழ்ந்தேன்.
女
இரும்பினில் வார்த்த நெஞ்சன்
இரக்கமே அறியாப் பாவி துரும்பிலும் துரும்பன் எ னைத்
துடித்திட வருத்தி டா து அருந்துணைக் கரத்தில் ஏந்தி
அரவணைத் திட்ட தந்தாய் கரும்பினும் மதுரம் வாய்ந்த
கழலடி தொழுது வாழ்வேன்.
★
கரைதுறை காணுப் பாவக்
கடலெனே அலேயால் மூடி இரைகொள வந்த போது
இரங்கியே கரங்கள் ஈந்த வரையிலாக் கருண யூற்றே
வாழ்வொளி வழியே என்றும் உரைதனுக் கடங்காத் தூயோய்
உயிர்ப்பதம் அஞ்ச லித்தேன்.

ஆண்டகை வாழக
. . . . . #
திருகோண மலைமட்டு நகர்செய்த தவமே
தெய்வீக மறைமக்கள் தமையாளும் வரனே
அருள்ஞான நிறைவோடு பணிசெய்சற் குணனே,
ஆயரெம் திலகமே அன்பேரீ வாழ்க
大
அலைமேவு கடலூடு படகேற்றி எம்மை
ஆனந்தக் கரையேற்ற ஆவியின் துணயால்
மலைமேவு திருமன்ற மரபோடு , செங்கோல்
மழைக்கரந் தாங்கிடும் மன்னவா வாழ்க
ܬܳܐ : 1 :
தோழமை விசுவாசத் தோடுவிண் பணியே a 1.
துலங்கிடத் தொடங்கிடுந் துய்யமா ம ணிையே
ஏழைகள் தோழனும் இறைமகன் வடிவே
இனியகிங் ஸிலிநாம ஏந்தலே வாழ்க.
半
ஏற்றமும் தாழ்வுமே இல்லாத நீதி
எங்குமே சமரசம் பொங்கிடும் சோதித் தோற்றமும் காணவே தொண்டாற்றி வாழ்க
தூயநல் லாயனே நீடூழி வாழ்க.

Page 5
மன்னிப்பு
பொன்னலைகள் பொங்கிவருங் கடலோ மஞ்சட்
பொடிதோய்ந்த குங்குமச்செங் குழம்போ வானக் கன்னியவள் மேனியிலே தங்கப் போர்வை 3. கட்டிவரும் பேரழகோ? குருதியாருே? மின்னலது வெம்படையோ? பவளக் காடோர்
மிகுபிரபைக் கதிரெறிந்து காலைவேளை மன்னனென மாணிக்க மகுடஞ் சூட்டி
மலைத்தவிசின் மீதேறிக் கதிரோன் வந்தான்.
★ அண்ணலவர் யேசுபரஞ் சுதனுர் ஞான
அமுதமழை பொழிகின்ருர் என்றேகூடி எண்ணரிய நகர்மாந்தர் திசைக ளெங்கும்
இருந்தெழுந்து மனமகிழ்ந்து பள்ளம் நாடும் தண்ணருவி போற்பாய்ந்தே அவர்தம் பாதம்
தலைவணங்கி நினைறிருந்து தாகங் கூரப் புண்ணிய நற் போதகத்தை நுகர்ந்தா ரந்தப்
போதினிலே சிலர் வந்து புகுந்தா ராங்கு
" வாசமெழு மலர்க்கூந்தல் மங்கை யின்ப
வலைவீசி ஆடவரை மயக்கி வாழ்ந்தாள் காசுதனை இறைப்போரைக் கட்டிச் சேரும் கருநீல விடநாகம் மாதர்க் கெல்லாம் மாசுதரும் தாசியிவள் கொடியாள் தன்னை
மலரமளி மீதிருந்து பிடித்தே வந்தோம் தேசொளிருங் கொற்றவனே காண்பீரெ"ன்றே
திருமகனுர் சந்நிதிக்கண் நிறுத்தி நின்றர்
 

சொல்லிழந்து சோர்விகந்து கண்ணீர் பொங்கச்
சோகத்தின் பிரதியென நாணங் கூரப் புல்லவொரு கொம்பறியாக் கொடியைப் போலும் பூரணுர் தாள்பார்த்து நின்ருள் மங்கை * கல்லெறிந்து கொல்லுதலே மோயீ சன்தன்
கட்டளையாம் நாமறிவோம் நுமது தீர்ப்பைச் சொல்லு"மென யேசுபரன் முன்னே வேகச்
கடுசரங்கள் வீசியவர் குதித்தா ரந்தோ
★。 புனிதபரன், அமைதியுரு, பொறையின் வேந்தன் பூமுகத்தின் காரிருளைப் போக்க வந்த இனியநிலா, அன்பினுெளி, கருணை யூற்று ܗܝ
எழுதியபொற் சித்திரமாய் இருந்தார் பின்னர் தனிமையிலே தரையினிலே விரலால் ஏதோ
தானெழுதிக் கொண்டிருந்தார் இருள்ம னத்தார் நனிபொழிந்த மழைமேகம் ஊமை யாகி
நாவடைத்த நிலைகண்டு நச்சரித்தார்
女 விழியருவி நீர்பெருக விம்மி யேங்கும்
விலைமகளைத் திருமகளுர் கனிந்து நோக்கி மொழியினிலே நஞ்சூட்டும் புலையர் தங்கள்
முகங்கவிழ எச்சரிப்பார் போலப் பார்த்து "பழியெதுவும் அறியாதான் முன்னே வந்து பாவையிவள் மீதுமுதற் கல்வி’சென்று ஒளிவழியும் உயிருமென உலகோர் போற்றும்
உத்தமனர் தாமுரைத்து மெளனங் காத்தார்
மீண்டுமவர் தரைதனிலே எழுத லானுர்
மிருகவெறி யுடனுழன்று வந்து நீசர் நீண்டதொரு கைநீட்டிக் கல்லைத் தூக்கும்
நினைவறியா நிலையினிலே கல்லாய் நின்ருர் ஆண்டிருந்த மன்பதையின் பழிபா வங்கள்
அத்தனையுங் கண்முன்னே தோன்றி யச்சம் தூண்டிடவே நடுநடுங்கி வாய்பே சாராய்
தூயபரன் பின்னகன்று தொலைந்தே போன
★

Page 6
கறைமிகுந்தார் சென்றிட்டார் கன்ன்ரிப்ப்ாவி −
காலடியில் நின்றிட்டாள்; கரு) மூர்த்தி சிறையொடிந்த பறவைமுகம் மலர்ந்து நோக்கிச் செம்பவள வாய் திறந்து *எவரே னும்கல் எறிந்தனரோ" எனக்கேட்டார்; இல்ல்ை" என்ருள்
இனிப்பாவம் செய்யாதே போய்வர்” என்ருர் இறைமகனர் நிறையருளிற் பாவம் நீங்கி
இதயபரி சுத்தமொடு பறந்து சென்ருள்.
Uu Tf. olgu
தமிழரின் பண்பு
அறத்தின்வழி நிற்றல் ஆண்மையில் உயர்தல் இன்சொற் பேசுதல் ஈகையிற் சிறத்தல் உண்மை உரைத்தல் ஊக்கம் வளர்த்தல் எவரையும் நேசித்தல் ஏர்பிடித்துச் சீரடைதல் ஐயந்திரிபறக் 'கற்றல் ஒழுக்கம் பேணல் M ஒரம் சாராது நிற்றல் ஒளவியம் அகற்றல் செவ்விய தமிழரின் பண்பு.

செல்வச் சிறுவர்களே,
உலகம் புகழும் உத்தமர் காந்தி
மகானை நீங்கள் கேள்விப்பட்
டிருப்பீர்கள் அல்லவா? "ஆ%னக்
கும் அடிசறுக்கும்" என்பதுபோல
அவரும் சிறுவயதில் பிழைசெய்
தார்.
இளைஞர்கள் சிலர் அவருக்குக் கெட்ட நண்பர்களாக வந்து கூடினர்கள். புகைபிடிக்கும் தீய பழக்கத்தைப் பழக்கி விட்டார் கள், · .· k ‰፧
காந்திக்கு எப்போதும் சிகரெட் புகைக்கப் பணம் கிடைக்கவில்லை. திருட ஆரம்பித்தார். முதலில்
வேலைக்காரனுடைய பணத்திற்
களவாடிஞர். தரனின் தங்கக்காப்பில் தங்கத் தை வெட்டிஎடுத்து விற்கவும் துணிந்துவிட்டார்.
பன்றியோடு சேர்ந்த கன்று போலக் கெட்ட நண்பர்களின் கூட்டுறவால் அவர்மனம் அழுக் குப் படிந்துவிட்டது. புகைபிடிக் கும் ஆசைக்கு அடிமையாகினர்.
சில தினங்களுக்குப்பின் புகை பிடிப்பது தீமையை விளைக்கும்
பின்பு தன் சகோ
கொடிய பழக்கம் என்பதை உணர்ந்தார். அந்தப் பழக்கத் தைக் கைவிட்டார். திருந்திவிட் தான் அறியாமற் செய்த குற்றத்துக்கு மனம் வருந்தினுர், தான்செய்த குற்றத்திை ஒளியா மல் ஒப்புக்கொண்டு இனிமேல் குற்றத் தைச் செய்வதில்லை என்று வாக் குப்பண்ணித் தன்னை மன்னிக்கு மாறு தகப்பணுருக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தார்.
டார்.
தான் அப்படிப்பட்ட
அன்றுமுதல் மிக நல்லவராக வாழ்ந்து வந்தார்,
தவறு செய்வது மனித இயற் கை. ஆணுல், தவறை உணர்ந்து திருந்துவது சிறந்த குணமாகும்.
ஆகவே, சிறுவர்களாகிய நீங் களும் ஏதாவது தீயசெயல்களைச் செய்துவிட்டால் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுத் திருந்த வேண்டும். அப்பொழுது எல் லோரும் உங்களை நேசிப்பார்கள்
இருப்பார்.

Page 7
பூக்கள்
வானகத்துச் சோலைதனில் மலர்கள் பூக்கும்
வாடாத செம்மலர்கள் ஓடிப்போகும்
கானகத்தில் எண்ணரிய பூக்கள் தோன்றும்
காட்சிதனை அநுபவிப்பார் மிகவும் சொற்பம்
o பூமுகத்துச் சோலைகளிற் பூத்துப் பூத்துப்
புன்னகையைச் சிந்துவன வாடிப்போகும்
தாமரையும் அல்லிகளும் நீரில்வந்து
தம்முகத்தைக் காட்டியபின் தலையைச்சாய்க்கும்
O உயர்மலையிற் குறிஞ்சிமலர் உருவங்காட்டும்
உவர்க்கடலின் கரைகளிலே நெய்தல் தோன்றும் வயலருகே செங்கழுநீர் வரிசை காண்போம்
வனப்பளிக்கும் கணப்பொழுதில் வாடிச்சோரும்
O இதயமதில் உதயமுறும் எழிலைத்தேக்கும் இன்பப்பூ அன்புப்பூ எக்காலத்தும் புதியமலர் நறுமணமும் தேனும் டொங்கும்
பொன்மலராம் நன்மலரைத் தேடிப்போற்று.
. - ஜெயசீலி வத்தளை,
大
தங்கக் கடலின் ஒளிமுத்து - தமிழ் சத்தியம் தந்த முதுசொத்து இன்பம் நிறைக்கும் அமுதூற்று - தமிழ் இனிய இசையின் இளங்காற்று. பொதியில் வார்த்த பூங்கன்னல் - தமிழ் பொங்குந் தங்கப் புதுச் செந்நெல். இளமை இழியா எழில்மாது - தமிழ் எல்லாமொழிக்கும் முதல் தூது, கவிதைக் கனியின் ப்ொற்சோலை - தமிழ்
கருத்தைக் கவரும் பூஞ்சோலை.
—

சிறு கதை கவரிமான் பிரான்சிஸ்கா பெனடிகற்.
12/3, 2-ம் குறுக்குத் தெரு,
யாழ்ப்பாணம்.
சே!. இந்த அலங்காரமெல் லாம் எதுக்கு ? கண்ணுடியில் தெரிந்த தன் உருவத்தைக் கண்டு
முகம் சுளித்தாள் ஜோசப்பின். தலையைச் சுற்றி DIT DIT IS போட்டிருந்தகொண்டை,அவளை இன்னும் உயரமாகக் காட்டியது. ஐ-ப்ரோ கொண்டு தீட்டிய புரு வங்கள் லிப்ஸ்டிக்கினுல் ஈரம் ததும்பும் உதடுகள் : சிவந்த கன்னங்கள்,
காதிலிருந்து நீண்டு தொங் கும் காதணி; மெல்லிய ஷிபான் ஸாரி உடலைத் தழுவ ரவிக்கை அவள் எழிலை அதிகமாகக் காட் டியது. கையில் குலுங்கும் தங்க வளையல்கள், ஒரு கையில் வாட்ச், கழுத்தில் மெல்லிய செயினில் ஊசலாடும் அமெரிக்கன் டாலர், நாதருகே கலை உணர்வுடன் செருகிய ரோஜா. , ... --
இன்னும் சில நிமிஷங்களில் தவளை அழைத்துப்போக அவள் க்ணவன் நெப்போலியன் வந்து விடுவான்.
யிருந்தான். மினசுக்குப் பிடிக்
ரூஜிஞல்
ஒரு பார்ட்டிக்குப் போகவேண்டுமென்று சொல்லி ,
காத இந்த அலங்காரமெல்லாம் நெப்போலியனுக்காகத் தான். நீண்ட கூந்தலை அள்ளிப் பின்னி. அதில் ஒரு பந்து மல்லிகையைச் சுற்றிவிட்டு, மஞ்சள் மின்னும் முகத்தில் குங்குமம் பளிச்சிட உலவிவந்த ஜோசபினைத்தானே நெப்போலியன் காதலித்தான். ஆனல் இபபொழுது கண்ணுக்கு மைதீட்டிக்கொண்டால் "கன்ட்ரி. என்று கேலி செய்கிறன். அவன் விருப்பப்படி அவள் தன்னை மாற்
றிக்கொண்டாள்.
கல்யாணம் முடிந்த மறுநாளே,
அவளைத் தன்னுடன் கொழும்
புக்கு அழைத்து வந்துவிட்டான். வீட்டில் பாட்டியைத்தவிர வேறு
யாருமில்லை, அவள் பிரிந்துபோவ
தற்காக வருத்தப்படி! அங்கு வந்த சில மாதங்களில் பாட்டி யும் காலமாகிவிட்டாள். அதற் குக்கூட ஊருக்குப்போக முடிய வில்லையே என்ற கவலை ஜோசபி
லுக்கு, என்ன செய்வது ? நெப்
போலியனின் வேலை அப்படி !
அவன் இல்லாவிட்டால் ஆபி ஸில் ஒன்றுமே தடக்காதாம், அவனை ஆபிஸுக்குக் கொண்டு போகத் தினம் ஒரு கார் வரும், மாலையில் விதம்விதமான வெளி நாட்டுக் கார்களில் நெப்போலி
யனுடன், கொழும்பைச் சுற்றிப்
பவனி வரும்போது, தன் சொந்த ஊரையே ஜோசபின் மறந்ததில் ஆச்சரியமில்லையல்லவா ?

Page 8
வெகு நாகரிகமான கறுவாத்
தோட்டத்தில் (Cinnamon Gardens) சகல வசதிகளுடன் ஒரு பிளாட் முதல் வேலையாக அவளை நாகரிகமாக்குவதில் முயன்றன் நெப்போலியன்.
அவள் சிணுங்கினல், " என் பிரண்ட்ஸின் மனைவிமாரெல் லாம் எப்படி வருகிருர்கள் பார். உன் அழகுக்கு நீ டிரஸ் செய்து கொண்டால் எப்படியிருக்கும் தெரியுமா ? " என்று வற்புறுத்து வான். தான் போகும் இடங் களில் மற்றப் பெண்களின் அலங் கார்த்தை பார்த்த பிறகுதான் நெப்போலி
(அலங்கோலத்தை
யன் சொல்வது புரிந்தது. அவர் கள் மேனிதெரிய உடுத்தியிருப் பதும், ஆண்பெண் பேதமின்றித் தொட்டுப் பேசுவதும், அவளுக்கு
போலியனுக்காகப் பொறுத்துக்
கொண்டாள். அவ னு க் காக
அவள் அதை ஏன் செய்யக் அவன் அவளை வாழ
கூடாது ? வைத்த தெய்வமல்லவா ?
அவள் தாய் முகத்தையே பார்த்ததில்லை. தந்தை தான் பாட்டியின் உதவியுடன் வளர்த் தார். தந்தையும் சிலநாட்களால்
காலமாகிவிட்டார். வசதி குறை Gig குடும்பம்தான், என்ருலும் ஜோசபின் செழிப்பாகவே வளர்ந் தாள். இயற்கை அவள்மீது பரு
வத்தின் செழிப்பையெல்லாம் அள்ளிச் சொரிந்திருந்தது.
புனித சூசையப்பர்மேல் வைத் த பக்தியினுல், தன் அருமை மக ளுக்கு அந்தப் புனிதரின் பெய ரையே வைத்தார் அவள் தந்தை
தமிழும் வேதமும் ஒருங்கே வளர்த்த நல்லையம்பதியிலே பிறந் தவள்தான் ஜோசபின்,
FootT
வீட்டில் இரு க் கப் பிடிக்காத ஜோசபின் நல்லூர் ருே. கத். மகாவித்தியாலம் ஒன்றில் டீச்ச
ராகச் சேர்ந்தாள்.
நல்லூர் சுவாமி ஞானப்பிர காசரின் ஞாபகார்த்த விழாவைக்
ஜோசபின் பெருமளவு பங்கேற்று நடத்தினள். தனது தூரத்து உற வினர் வீட்டுக்கு வந்திருந்த செல் வந்தன் நெப்போலியன் விழா வுக்குத் தலைமைதாங்கி, ஜோசபி னுடைய முயற்சியைப் பாராட்டி
கொண்டாடினர்கள்.
அருவருப்பாக இருந்தாலும் நெப் னன். பாட்டிக்குக் கால்காசு கூட
செலவில்லாமல் அவளைக் கல்யா ணம் செய்து, கையோடு கொழும் புக்கு அழைத்து வந்துவிட்டான்.
வாசலில் ஹார்ன். சத்தம் கேட்கிறது. ஓ !. அவர் வத் தாச்சு ’’
** ரெடியா ? ' என்று கேட்ட படி வந்தவன், அவளின் தோற் றத்தைக்கண்டு பிரமித்துப்போய் *ஓ-ஜோசபின், யூ லுக் ரியலி
ஒண்டர்ப்புல் ' என்று சொன்
னன்.
* இறங்கு ஜோசபின் ! என்ன
யோசனை ? ? என்று நெப்போலி
பன் கேட்டதும் தன் சிந்தனையி

லிருந்து விடுபட்டாள். ** முகத் தைச் சீரியசாக வெச்சுக்தாதே' என்று அவள் இடையில் கையைக் கொடுத்து அழைத்துப் போனன். ஜோசபினின் உடல் சிலிர்த்தது. பொது இடத்தில் அதுவும் அத் தனைபேருக்கும் முன்னல். இதில்
வெட்கம் என்ன ? அவர் என்
கணவர்தானே என்று சமாளித்
கொண்டாள்.
அது ஒரு “ வெட்” பார்ட்டி.
மது அங்கு வெள்ளமாய் ஓடியது.
அவளுக்குப் பெரிய தர்ம சங்கட மாய் விட்டது. இது போன்ற பார்ட்டிகளுக்கு நெப்போலியன் இதுவரை அவளை அழைத்த
அவள் முன் ஒரு கோப்பை நீட் டப்பட்டதும், அவள் தாகரிகமாக
மறுத்தாள். அங்குள்ள பெண் கள் சிரித்தனர். நெப்போலிபன் முறைத்தான். முள்மேல் உட்
கார்ந்திருப்பதுபோல் இருந்தது ஜோசபினுக்கு.
நெப்போலியன் யாரோ ஒரு
மனிதருடன் ரசித்துக் குடித்த
lig- பேசிக்கொண்டிருந்தான்.
திகைத்துப்போனுள் ஜோசபின். * ஓ !. இவருக்கு இந்தப்பழக் கம்கூட உண்டா ? ? எல்லோரும் நல்ல போதையில் இருந்தார் கள்.
திடீரென்று மேடையில் ஆர்க்
கெஸ்டிரா முழங்க ஆரம்பித்தது. -
டிரம்பெட்டின் ஒலி, உச்சஸ்தா யியில் வீறிட்டபோது, மங்க ஸாக இருந்த ஒளியும் அணேந்து
2றாண்ட் - பேக் கைச்
3
ஒரே இருள் ! ஜோசபின் பதறிப் போய் எமுந்தாள், ! கடவுளே! இது என்ன சோதனை ? குடிவெறி யில் புலன்கள் மங்கி இருக்கும் இந்த மிருகங்களிடமிருந்து எப் படித் தப்புவது ? இருளும்கூட துணயாய்ச் சேர்ந்து கொண் டதே ? ?? m
கு பீரென்று ஒளிவெள்ளம் பெருகியது. ஜோசபினுக்கு மூச்சு வந்தது. * எங்கே நெப்போலியன்? இந்த இடத்தைவிட்டு உடனே கிளம்பவேண்டும். ஆனல் நெப் போலியனுே ஒரு பெண்ணுடன் கொண்டு ஓர் அறைக்குள் நுழைவதைக் கண்டு திடுக்குற்ருள்.
நெப்போலியனுடன்
கைகோத்துக்
பேசிக் கொண்டிருந்தவர் பெரிய மனு ஷர் உருவில் ஜோசபினிடம் வந் தார்.
? யூஃபீல் லோன்லி • . . . . . ” ه$؟ டோன்ட் வொர்ரி பேபி " என்று அவள் கைகளைப் பற்றி இழுத் தார். ஜோசபினின் உடல் பற்றி எரிந்தது.
* நோ.லீவ்மீ.யூ.யூ" என்று அலறியபடி கையை உதறினள். * நெப்போலியன் ' என்று கூவி ஞள்.
* வாட் நான்சென்ஸ் ? ஒ ! . உனக்கு இதெல்லாம் புதுசுதான் இங்கு வரமாட்டாங்க ? என்று மீண்டும் இழுத்தார். கயிைலிருந்த பெரிய 亭p应剑
கூப்பிட்டாலும் யாரும்

Page 9
யடித்தாள். ஏற்கெனவே ஆக இருந்த அவர், தடுமாறிக் கீழே விழுந்தார். ஒரு நொடியில் வெளியே வந்தாள் ஜோசபின். அங்கிருந்து எப்படித் தப்பி ஓடு வது என்று பிரமித்து நின்ற போது, டாக்ஸி ஒன்று பக்கத்தில் வந்து நின்றது.
டிரைவர் தெரிந்தவன்தான். ஆனல் இவனே நம்பிப் போகலா மா என்று தயங்கியபடி நின்ற ഖT
* ஏறுங்கம்மா ! என்னே உங்க அண்ணன் மாதிரி நினையுங்க, நானும் தமிழன்தான், உங்களைப் போல அக்கா, தங்கச்சிகளோட பிறந்தவன்தான். பார்க்கும் போதே
ஐ. ல் க ளே ட்
பெண்ணுயிருக்கே ! இங்கே வந்து மாட்டிக்கிட்டுதென்று நிக்னச் சேன். இன்னிக்கு நான் இங்கே வந்ததும் நல்லாப்போச்சு பெண் மதிக்கத் படுடாவிங்கம்மா! நாகரிகம் நாக ரிகம்னு சொல்லிக்கிட்டு பழைய காட்டுமிராண்டி நாகரிகத்துக்கே
ணுங்களை தெரியாத
வந்துட்டாங்க."
" விளக்கணஞ்ச நேரத்தில இருட்டில, மேஜைமேல் கிடக்கிற கார் சாவியில, யாருக்கு எது கிடைக்கிறதோ, அந்தக் காசில வந்தவரோடு அன்றையப் பொழு தைக் கழிக்கலாமாம். சொல் லிக் கேட்டிருக்கேன். என்னநம்பி ஏறுங்கம்மா, வீட்டிலே கொண்டு விடறேன் நல்ல வேளை, இன்னிக் குத் தப்பினிங்க, இனிமே இது
ஃபுல் w
அப்பாவிப்
மாதிரி இடத்துக்கு வராதீங்கம் மா " என்று ஆறுதல் சொல்வி cֆ լ". டி ல் கொண்டு விட்டுப் போனன்.
ஆபத்தைத் தவிர்த்து விட்டா யிற்று. என்ருலும் இதுவரை அவளிடம் குடிகொண்டிருந்த மீறிக் கொண்டுவரும் அழுகையைக் கட் டுப்படுத்த முடியவில்லை அவ ளால்.
தைரியம் விலகிவிட்டது.
** ஜோசபீன்!. ஜோசபீன்!. என்று அலறியபடி கதவைத்தட் டினுன் நெப்போலியன். பிறகு சுய நினைவுக்கு வந்தவனுகப் பட் அமுக்கி பெல்லை அடித் கதவு திறக்கவில்லை. மறு
—йг தான். படியும் கதவை ஓங்கித் தட்டி னன், மடாரென்று கதவுதிறந்து கொள்ளத் தடுமாறி விழுந்தவன் எழு ந் தான். அப்படியானல் கதவு திறந்துதான் இருந்ததோ ? * ஒ1. ராத்திரி நடனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிருளோ ? நான் பாரென்று காட்டுகிறேன்.
* ஏப் ஜோசபீன் ! என்ன ராத்திரி அப்படி நடந்துவிட்டே ? அந்த மனுஷன் பெரிய பிலிம் ப்ரொடியூஸர் தெரியுமா ? அவர் படத்தில் நடிக்க எனக்கு லட்ஷ ரூபாயை அள்ளி வீசியிருக்கிழுர், தெரியுமா ? ஏதோ கொஞ்சம் ஜாலியா இருக்கணும்னு கூப்பிட் டா, அடிச்சிட்டு வந்தியாமே ! வாட் நான்சென்ஸ் !

பூனை ஒன்று பாய்ந்து ஓடியது, அங்கு யாரையும் காணுேம் !
வீட்டைஇப்படித் திறந்துபோட்டு
எங்கே போயிருப்பா ?
மேசைமேல் ஒரு கடிதம் இருப்
பதைப் பார்த்து எடுத்துப் பிரித் தான்.
' உங்களை எப்ப்டி அழைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. நேற்றுவரை உங்களை, வாழ்விக்க வந்த தெய்வம் என்றே எண்ணினேன். உங்களை என் மனக் கோயிலில் தெய்வமாக ஏற்றி வைத்தேன். நீங்கள் அந் தக் கோயிலைத் தகர்த்துவிட்டீர் கள், அந்த இடிபாடுகளில் செத்து விட்டது என் தெய்வம்.
Tధrడిr
நான் போகிறேன், என்னைத் தேடவேண்டாம் ! நீங்கள் கொ டுத்த நகையோ, புடவையோ எதுவும் எடுத்துப் போகவில்லே, நீங்கள் கடடிய தாலியைக்கூடக் கழ ற் றி வைத்துவிட்டுத்தான் போகிறேன்.
கல்யாணம் என்ற புனித பந் தனத்தின் அர்த்தம் புரியாமல்
j
அதி நாகரிகம் என்ற பெயரால், காட்டுமிராண்டி வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஒன்று சொல் கிறேன். கணவனுக்காக மனைவி எதையும், ஏன் உயிரைக்கூடக் கொடுப்பாள், ஆணுல் அந்தக் கணவனுக்காகவேயாயினும் தன் மானத்தை இழக்கத் துணிய மாட்டாள்.
எளிதில் பிரிக்கமுடியாத பந் தம் ஒன்று இன்னும் மிஞ்சி இருக் கிறது, அதை நினைக்கும் போது என் உடல் அவமானத்தால் குறு கிப்போகிறது. அதற்கும் ஒருவழி கண்டுபிடித்துவிட்டேன். பக்கத் திலேயே ஸ்டேஷன் இருக்கிறது. அங்கு அடிக்கடி ட்ரெயின்கள் வந்துகொண்டிருக்கின்றன. -'
6. ஜோசபீன் 1. என்று அல றியபடி அவன் வெளியே ஒடிய Gt frg/,
** பாவம் வ ய சு ப் பொண்ணு, என்ன கஷ்டமோ தெரியாது, டிரெயினுக்கு முன்
ணுல பாஞ்சிடுத்து ' என்று பேசிய படி சிலர் எதிரே வந்தனர். மேலே அவர்கள் பேசியது எதுவும் அவன் காதில் விழவில்லை.
கட்டடங்களிற் புதுமை
எதிர்காலத்தில் கட்டடம் கட்டுவதற்குச் சீமெந், செங்
கல், சுண்ணும்பு எதுவும் தேவையில்லை. மாதிரிக் கட்டடத்தையும் கட்டிக்கொள்ளலாம்.
பிளாஸ்டிக்கால் எந்த அத்திவாரம்
போடுவதற்கு வளையாத, ஒடியாத இரும்பை உபயோகிக்கிருர்
கள்.
தில்லையாம்.
இந்தப் பிளாஸ்டிக் வீடுகள்
பூசும்பத்தாலும் விழுவ

Page 10
சமூகத்துக்கு .
அறிஞர் கொடை
. மேலானது -
கடவுளைக் குறித்துத் தியானஞ்செய்வது மேலானது. மக்களைக் கடவுளாகக் கருதி அவர்களுக்குப் பணிவிடை செய்வது அதனிலும்
மேலானது. - விவேகானந்தர்
கண்டுபிடி '. - .
உ&னது நண்பர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்
பதைக் கண்டுபிடிக்க முயல்வதைவிட * நீ யார் ? " என்பதைக்
கண்டுபிடிக்க முயல்வது நல்லது. - கி. ஆ. பெ. விசுவநாதம் துணிபு
எல்னெருவன் துணிந்து செயலில் இறங்குகிருணுே அவனை
வெற்றி தானகவே வந்து சூழும். - நேரு கோயில்
தன்னலமற்ற தொண்டுகள் எவ்விடங்களில் நிகழினும் எவ் வமைப்புக்களில் நிகழினும் அவை யாவும் வழிபாட்டுக்குரிய கோயில்
களேயாகும். - திரு. வி. க.
பசி - உ&ழைப்பவன் வீட்டிற்குள் பசி எட்டிப்பார்க்குமே தவிர உள்ளே நுழைந்துவிட்டத் துணியாது. - பிராங்கிளின் மன்னிப்பு
எவ்வளவு பெரிய குற்றத்தையும் நான் மன்னித்துவிடுவேன். ஆனல், துரோகத்தைமட்டும் என்னல் ஒருபோதும் மன்னிக்கவே
முடியாது. - ரூசோ
w வெற்றி வழி
மSEதனுடைய பண்பு. உழைப்பு, இயற்கை, ஆற்றல் இவைகளே வெற்றிக்கு வழி கோலுவன. எடுத்துக்கொண்ட வேலை எவ்வளவு றிேதாஷ் இருந்தாலும் அதனை உண்மையோடு செய்யவேண்டும்.
- ஜே. எஸ். பிரை அவனே . Prசுபடிவதும், தூய்மை பெறுவதும் அவனவன் செயலைட் பொறுத்தது. எவனும் இன்னெருவனைப் புனிதமாக்க முடியாது.
- புத்தர் முன்னேற்றம் சொல்லும் வண்ணம் செயல்புரியும் மக்கள்தொகை பெருகின லன்றி உண்மையில் முன்னேற்றமில்லை, -N. ஜபதிராய் செல்வம்
அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது. அன்பின் சிதற்பாடம் செல்வத்தை அனைவருக்கும் உதவி வாழ்வது.
- ரஸ்கின்
தொகுப்பு : அமரன்

JIT Jġju IT fil வாழ்க்கையிலே.
தொகுப்பு : பி. பெ.
யாழ்ப்பாணம் ,
கவி பாரதியின் வாழ்க்கையிலே பல ருசிகரமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. பாரதி எட் டயபுரத்தில் இருந்த சமயம் பலர் அவரைச் சந்திக்க வருவார்கள். சிலர் தங்கள் வாழ்க்கையில் நடந்துள்ள மறக்கமுடியாத சம் பவங்கள் சிலவற்றைப் பாரதி யிடம் எடுத்துக்கூறி ஆறுதலடை வார்கள். அப்படி நடந்தவற்றுள் ஒன்றுதான் இது :
அன்று ஒரு பெண் பாரதியா ரைப் பார்க்க வந்திருந்தாள். a தந்தையே! நான் ஒரு பெரிய ஆபத்தில் இருந்து தப்பினேன்; தங்களுடைய பாடல்தான் எனக் குத் தக்கசமயத்தில் உதவியது ** என்ருள்.
' se... . . . அப்படியா ! மிகவும் சந்தோஷம், எங்கே உன் கதை யைச் சொல் ?? 676ზrლyfr.
"தந்தையே! என் தாயாருக்கு நானும் என் தங்கையுமாக இரண்டு பெண்கள்தான். நான் இன்னமும் திருமணம் செய்ய வில்லை, என் தங்கைக்குத் திரு
t۰ - ۰ -- 2
மனமாகி ஒரு குழந்தையும் உண்டு ' என்ருள்.
G)
மாதங்களின் பின்னர்,
அன்று என் தங்கை, அவள் கன
எங்கள் சிஸ்
வர், குழந்தையுமாக வீட்டிற்கு வந்திருந்தனர்
நாட்கள் தங்கிப் போவதற்காக.
எங்கள் வீட்டில் வெகு நாட்க
ளாகவே சிறு குழந்தைகள்
இல்லை, இதனல் என் தங்கையின் குழந்தைமீது நான் அளவற்ற பாசம் வைத்திருந்தேன்.
மறுநாள் ஊருக்குப் புறப்பட்ட வேண்டியிருந்ததால், முதல்நாள் என் தங்கை அம்மாவுடன் பக்கத் திலுள்ள கோவிலுக்குப் போயி ருந்தார்கள்.
நான்மட்டும் வீட்டில் இருந் தேன், குழந்தை நாளை போய் விடப்போகிறதே என்ற ஆர்வத் தினுல், குழந்தையை வைத்துத் தாலாட்டுப் பாடிக்கொண்டிருந் தேன் :
கொஞ்சும் மழலையிலே
------55ain Goorth Llofr துன்பங்கள் தீர்த்திடுவாய் என்ற அடி யைப் பாடினேன். அடுத்த அறையிலிருந்து வந்தது, பாடலின் மற்ற அடி
முல்லைச் சிரிப்பாலே-எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய் திடுக்கிட்டேன்; மின்னல் வேகத் தில் அடுத்த அறையிலிருந்த என் தங்கையின் கணவன் சுகுமார்,
என்முன் தோன்றி என் கைகளை

Page 11
8
இறுகப்பற்றினன். அப்டொழுது தங்களின் பாடல்தான் என் ஞாப கத்திற்கு வந்தது. பாதகம் செய்பவரைக் கண்டால்
ப்யங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்ற பாடல்தான்.
பக்கத்தில் மேசைமேல் பாக்கு நறுக்கும் கத்தி இருந்தது. எடுத்து அவனைக் குத்தலாம் என எண்ணி னேன். ஆனல் பின்னர் என் தங் கையல்லவோ விதவையாகிவிடு வாள் என எண்ணிப் பீன்வாங்
கினேன்.
சட்டென அவன் பிடியிலிருந்த என் கைகளை இழுத்தேன்; என்ன காரியம் செய்தாய் ? . “சீ. கீழ்மகனே என்று அவனைப்
பலவாழுக ஏசிவிட்டு, அவ ன் முகத்தில் காறித் துப்பினேன்.
அந்தக் கணமே, அவன் அறி யாமையிஞல் செய்த தவறை உணர்ந்து ' தங்கையே என்னை ஒன்னித்துக்கொள்’ என என்னி ம் மன்னிப்புக் கேட்டுக்கொண்
igi
பின்னர் அந்தப் பெண் பாரதி யாரைப் பார்த்து, 'நான் செய் 5து சரிதானே பாரதியாரே ’ என்ருள். * 3
பாரதியார் மிகுந்த சந்தோ ஷத்தோடு " ஆகா.நீதானம்மா * நான் கண்ட புதுமைப்பெண்", உன்போன்ற பெண்கள்தான் நம் நாட்டுக்குத் தேவை’, எனப் பல வாருகப் புகழ்ந்து, அவளது முது கில் தட்டிக்கொடுத்து மகிழ்ந்
!" (பாரதியும் கவிதையும்)" என்ற நூலிலிருந்து.
புலவர் தோளின் பசுங்கிள்ளை-தமிழ் புரவலர் வளர்த்த சிறுபிள்ளை
மாசில்லாத பாலன்னம் - தமிழ்
மானத்துக்கோர்
தனிச் சின்னம்
காவியம் நிறைந்த கவிக்கூடம் - தமிழ்
கலைஞர்கள் வாழும்
கலைமாடம்
இயல் இசை நாடகத்தோர் மன்றம் - தமிழ் ஈடிலாப் புகழின் உயர் குன்றம்.

அம்மா! அம்மா..!
அன்னையவள் வயிற்றுக்குள்ளே !
அன்பென்னும் ஊற்றுக்குள்ளே !
ஐயிரண்டு திங்கள் பிள்ளை ! என்னேயவள் அடைத்து வைத்தாள் சிறையிலே : பின்னர்-அலையென்று இறக்கிவிட்டாள் உலகிலே!
பாலமுதம் ஊட்டி வைத்து !
பாசத்தை ஊற்றி வைத்து !
பக்குவமாய்த் தூங்க வைத்தே ! காலமெல்லாம் களித்திருந்தாள் கனவிலே 1 என்னைக்-கண்ணென்று போற்றிநின்ருள் நினைவிலே !
தூங்கவைத்து விழித்திருந்து
தூசினையும் விலக்கி வைத்து !
தாலாட்டுப் பாடி வைத்தே ! தாயவளும் வளர்த்துவிட்டாள் ! உலகிலே! இன்று-தான்மறந்து ஒடிவிட்டாள் உலகையே!
நல்லுணர்வை ஊட்டி வைத்து !
நல்லவனப் ஆக்கி வைத்து !
நான் தமிழைப் பாடவைத்தே !
அன்னையவள் இன்பமுற்ருள் நெஞ்சிலே ! W
இன்று-அவளோடி மறைந்துவிட்டாள் மண்ணிலே 1
மடிமீது தலையை வைத்து !
மனம் நிறைய அன்பைவைத்து ! மகனே! நீ வாழ்கவென்றே ! நெஞ்சார வாழ்த்திவைத்தாள் அன்னையே இன்று-நெஞ்சுருகி அழவைத்தாள் என்னையே
அப்பனைப்போல் பிள்ளையென்று !
அழகுமகன் முல்லையென்று
அணைத்தணைத்து முத்தமிட்டே ! அகம் நிறைந்து பூரித்தாள் மகிழ்விலே ! இன்று-அழவிட்டு ஒடிவிட்டாள் மறைவிலே !

Page 12
eO
பள்ளியிலே படிக்க வைத்து !
பல்லறிவும் காண வைத்து
பாரிலெனை நிமிர வைத்தே ! பார்த்தவளும் நிதமடைந்தாள் இன்பமே ! இன்று-பாவியென்னைச் சூழவைத்தாள் துன்பமே !
தசையூட்டி முள்ளையுண்டு !
தனக்குயிரே ! பிள்ளையென்று !
தனத்தேய்த்து என வளர்த்தே ! வாழ்மகனே 1 என்று விட்டாள் உலகிலே ! இன்று-பாழ்நிலையில் வாடவைத்தாள் அபலையாய்!
நிலவுமுகக் காரனென்று ! ܗܝ
நீலவிழி யழகனென்று !
நிதம் புகழ்ந்து போற்றிநின்றே ! உலகினையே மறந்திருந்தாள் மகிழ்விலே ! இன்று-அழுதுமகன் தோயவிட்டாள் துயரிலே !
தாயவளும் போனவழி 1
தாளாத அமைதி வழி !
தனயன் நான் வருவதற்கே நாளை யெண்ணிக் காத்திருப்பேன் நிதமுமே ! அந்த-நாளெனக்கு வாழ்க்கையிலே அமுதமே !
- நிலாதமிழின்தாசன் நிலாவெளி-3.
wx werwewees

துறவிகள் அரசியலில் ஈடுபடலாம்
இ. ட. ஜெயநாதன் கடுத்தளானை, இளவாலை.
Dனிதன் என்பவன் சமுதாயத்
தினுலும், கலாச்சாரத்தினுலும் உருவாக்கப் படுகின்றன். அவன் தனிமனிதன் அல்ல சமூகப் பிராணி என்கின்றனர் சமூகவிய லாளர். நம் வாழ்விலே எம்மை ஆட்டிப்படைக்கும் அரசியல், பொருளாதாரம், மறை, கலாச் சாரம் என்பன வெவ்வேழுனவை அல்ல. அவை அனைத்தும் ஒன்றை யொன்று மருவிய நிலையிலேயே காணப்படுகின்றன. இவ்வாறு ஒன்றையொன்று மருவிய நிலை யில் காணப்படும் அரசியல் பொரு ளாதார மறை கலாச்சாரம் என்ப வற்றல் ஏற்படும் பாதிப்புக்கள் அனேத்தும் நாட்டுமக்கள் அரை வரையும் பாதிக்கின்றது. சமூ கத்திலே வாழ்ந்துவரும் துறவிகள் இதற்கு விதிவிலக்கானவர்களல்
லர். ஆகையால் அரசியல்ரீதியாக ஏற்படும் பாதிப்புக்களுக்கு எதி ராக குரல்கொடுக்க மக்கள் சேவைக்கென தம்மை அர்ப்ப னித்த துறவிகள் அரசியலில் ஈடு படுவது இன்றியமையாததாகும்.
வேதாகமத்திலே Iலுரக். 4:18, -19 கிறிஸ்து இவ்வுலகிற்கு எளி யோர்க்கு நற்செய்தி சொல்லவும் சிறைப்பட்டோர் விடுதலையடை வர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட் டோர்க்கு உரிமைவாழ்வு வழங் கவும் வந்தார்என கூறப்படுகின் றது. இவ்வாறு உலகிற்கு வந்த கிறிஸ்து தம்வாழ்விலே அநீதி களைக் கண்டித்தார். உரிமைக் காகக் குரல்கொடுத்தார். ஆகை யால் அவரை அவரது போதனை யைப் பின்பற்றிவரும் துறவிக ளும் நாட்டில் நடக்கும் அநீதி களைக் கண்டிக்க, உரிமைக்குரல்
கொடுக்க அரசியலில் ஈடுபட
வேண்டும்.
நாட்டின் பொருளாதார
வளர்ச்சியில் முதுகெலும்பாக
நின்று உழைத்து நாட்டிற்கு அன்' னிய செலாவணியைப் பெற்றுக்

Page 13
22
கொடுத்த மலையமக்களின் நிலை என்ன? அடிப்படைத் தேவை களைக்கூட பூர்த்திசெய்ய முடி aufT5 நிலையில் வறுமையின் கோரப்பிடியில் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வில் முன்னேற் றத்தை ஏற்படுத்த ஏற்றவழிகள் மறைக்கப்படுவது மட்டுமன்றி மறுக்கப்பட்டும் வருகின்றன. அதோடு நின்றுவிடாது அரசின் சட்டத்தின் கோரப்பிடியில் சிக் குண்டு தமது உறவினரை, பிள்ளை களை இங்கே விட்டுவிட்டு மூதா தையரின் நாட்டிற்கு அனுப்பப் படுகின்றனர். இத்தகைய நீதி அற்ற, மனிதத்தன்மை அற்ற செயல்கள் இடம்பெறுவதைக் கண்டு கண்ணைமூடாது அவற் றிற்கு குரல்கொடுக்க துறவிகள் அரசியலில் ஈடுபடுவது இன்றி யமையாததாகும்.
வாக்களிக்கும் உரிமை நாட்
டின் பிரஜைகள் என்றமட்டில் சகலருக்கும் அளிக்கப்பட்டிருக் கின்றது. துறவிகளும் நாட்டின் பிரஜைகள்தான். அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப் பட்டிருக்கின்றது. வாக்களிக்கும் உரிமை துறவிகளுக்கு இருக்கு மென்ருல் அவர்கள் ஏன் அரசி யலில் ஈடுபடக்கூடாது. அரசின் சமூக பொருளாதார நிலமைக ளினுல் துறவிகளும் பாதிக்கப் படுகின்றர்கள். இவ்வாறு அவர் கள் பாதிப்புற்ருலும் மக்களுக் காகத் தம்மை அர்ப்பணித்தவர் கள் தமது பொறுப்பை உணர்ந்
始 களுக்கு,
தவர்களாய் அடிப்படை உரிமை நீதிக்கு, உரிமைவாழ் வுக்கு குரல்கொடுக்க அரசியலில் ஈடுபடத்தான் வேண்டும்.
இலங்கையிலே நடைபெறும் தர்மிஷ்ட ஆட்சி என்று சொல் லப்படும் ஆட்சி இன்று தம்இஷ்ட ஆட்சியாக செயல்படுவதை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக இலங்கையிலே ஏறக் குறைய 35 இலட்சத்துக்கு மதிக மான தமிழ் மக்கள் இருந்தும் அரசு தமக்குள்ள பெரும்பான் மையினல் அரசமொழியாக சிங் களத்தை மாற்றி அமைத்துள்
உள்ளது.
ளது. இதனுல் எத்தனையோ தமிழ் மக்கள் வேலையின்மையா லும், வேலைக்கு விண்ணப்பிக்க
முடியாமலும் அவதியுறுகின்ருர் கள். இவ்வாருக மனிதஇனம் பாதிப்புக் கள்ளாகுமிடத்து மக்க ளின் சேவைக்கு தம்மை அர்ப் பணித்த துறவிகள், மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க அரசியலில் ஈடுபடுவது இன்றி யமையாததாகும். இன்றைய அரசு தனக்கிருக்கும் பெரும்பான் மையினல் தான் விரும்பிய நேரத் தில், விரும்பிய செயல்களுக்கு மனித உரிமைகளுக்கு முரணுன நடைமுறைகளைக்கூட சட்ட ம் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தி மக்களை அடிமைப்படுத்துகின்றது: (உ+ம்: பயங்கரவாத தடைச் சட்டம் துறவிகள் இதற்கு விதி விலக்கல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், துறவி

கள் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அரசின் சர்வாதிகாரப் போக்கினை கண்டிக்க முடியும்.
நாட்டிலே தார்மீக ஆட்சி நடைபெறுகின்றது, மொழி, இன, மத வேறுபாடின்றி எல்லா ரும் சமஉரிமை பெற்றுத் திகழ் கின்றர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆட்சியா ளர்கள், போலித்தலைவர்கள் வா ழும் இலங்கை மண்ணிலே இன்று நடப்பது என்ன? தார்மீகம் சிங் கள மக்களுக்கு மட்டுந்தானு அது தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த வனுக்கு இல்லையா என்பது எல் லாத் தமிழ் மக்களின் உள்ளங் களிலும் கேள்விக்குறியாக எரி யும் நெருப்பாக எழுந்து நிற் பதை நாம் காணக்கூடியதாக
உள்ளது. இவ்வாறு தார்மீக ஆட்சியில் இடம்பெறும் ஒடுக்கு
முறைகளை, சிறுபான்மை இன மான தமிழ் இனத்தை தனது அடக்குமுறைகளினல் ஆட்டிப் படைத்து வருவதை, அவர்க ளுக்கு உரிமைகள் மறுக்கப்படு வதை எதிர்த்து குரல் கொடுக்க மக்களுக்காக, மக்கள் பணிசெய்ய தம்மையே அர்ப்பணித்த துறவி கள் அரசியலில் ஈடுபடத்தான் வேண்டும். W
இறுதியாக நாம் அனைவரும் ஒரு பாரதூரமான விடயத்தை யிட்டு சிந்திக்கவேண்டியவர்களா யிருக்கின்முேம், அன்று சமுதா
女
னில்
23
தாயத்திலே தோன்றிய கிறிஸ்து இன்று இலங்கை மண்ணிலே தோன்றுவாரானல் உரிமைக்காக நீதிக்காக, அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்திற்காக குரல் கொடுக்காமல் இருப்பாரா p ஆகையால் அவர் வழிவரும் துற விகளும், மக்கள் உரிமைகள் மறுக் கப்படும்போது அவர்கள் அடக்கி ஒடுக்கப்படும்போது நீதிக்காக குரல்கொடுக்க கடமைகொண் டுள்ளார்கள். இலங்கையிலே துற விகள் அரசியலில் ஈடுபடுவது, கைதுசெய்யப்படுவது இதுதான் ஆரம்பமாகும். அது இனிமேல் தொடர்ந்து நடை பெற்றலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெ உல்கநாடுகளான பிலிப் பைன்ஸ், உகண்டா, எல்சல்வ டோர், போலாந்து, போன்ற நாடுகளில் மக்களின் விடிவுக்காக துறவிகள் அரசியல் களத்திலே இறங்கி உயிர்கொடுத்து விட்டார் கள். இன்னும்பலர் நீதிக்காக போராடியமையால் சிறையில் சித்திரவதைக்குள்ளாகிற ர், கள். ஆகையால் இன்றைய எம்நாட் டுத் துறவிகளும் அடிப்படை மனிதஉரிமை மறுக்கப்படும் நாட் டில், நீதி மறைந்திருக்கும் நாட் டில் சுதந்திரமாக செயல்பட முடியாத நாட்டில் வாழ்பவர்கள் நீதிக்காக சுதந்திரத்திற் கா க, அடிப்படை மனித உரிமைகளுக் காக குரல்கொடுக்க அரசியலில்? ஈடுபடத்தான் வேண்டு.

Page 14
துறவிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது
ரஞ்சன் செல்வரத்தினம் இளைஞர் விஞ்ஞானக் கழகம்,
பருத்தித்துறை.
Dக்களுக்கு ஆன்மீகத் துறையில் பணியாற்றவேண்டும் என்பதற் காகத் தம்மை அர்ப்பணித்து: அவ்வாறு பணிபுரிவதற்கான அடிப்படை அறிவையும் செயன் முறை அறிவையும் முயன்று பெற் றவர்களே துறவிகள். இத்தகைய துறவிகள், அரசியலில் ஈடுபடு வது-அவர்களின் இலட்சியவாழ் வை அலட்சியம் செய்வதாகவே முடியும்.
அரசியலில் ஈடுபடுவதற்காகவா துறவிகள், தமது காலத்தையும் மற்றும் விடயங்களையும் துறந்து -ஆன்மீக நெறியைக் கற்றனர். பட்டங்கள் பெற்றனர், ஆன்மீ கப் பணிக்கான ப த வி களைக் கொண்டனர்?
துறவிகள் அரசியலில் ஈடுபடும் போது, ஆன்மீகத் தேவைகளைக் கொண்டுள்ள தமது மக்களை அவர்கள் புறக்கணிக்கிருர்கள். அவர்களின் உரிமை மறுக்கப்படு கிறது. அவர்களின் ஆன்மீகத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவ தில்லை. இந்நிலை நியாயமா?
தம் நாட்டில் இறைமகன்-உலக மீட்பர்-நம்பெருமான் இயேசு
கிறிஸ்துவை அறியாத மக்கள் எத்தனைபேர்? இயேசு கழுமரத் தில் செய்த தியாகச் செயலை உண ராதார் எத்தனைபேர்? அன்ருட வாழ்வில் ஒளியின் வழிபட்டு இனிது வாழும் முறை புரியாது ஆன்மீகக் குருடராக வாழும் மக் கள் தான் எத்தனை? 8
இவர்களுக்கு அறிவுக் கண் கொடுக்கும் முதன்மைப்பணி மலை போல் விரிந்து கிடக்கத், துறவி கள் தமது கவனத்தை வேறு விடயங்களில் செலுத்து வ து நன்மையானதல்லவே. மக்களின் பாரிய ஆன்மீகப் பசிக்குத் தீனி போடும் பணியாளர்கள், துறவி
'கள் சொற்பமான எண்ணிக்கை
யினராக இருக்கும் இக்கால கட் டத்தில் இருக்கும் துறவிகளும் அரசியல் களத்தில் குதிப்பாரா யின் எப்படி?
ஆன்மீகப் பணிக்கென இறை யழ்ைப்பைப் பெற்ற துறவிகள், தமது கடமையை உதாசீனம் செய்வது போலா கும் அவர்கள் அரசியலில் ஈடுபடுவது.
அரசியல் ஒரு சூதாட்டக்களம்.
பொய், புரட்டு நிறைந்த உலகம்.
இச்சாக்கடையில் நற்பண்பினராக மக்கள் ஆராதிக்கும் துறவிகள் விழுந்து, சேற்றைப் பூசுவது கவ லேக்குரியதாகும். துறவிகள் அர சியலில் புகுந்து ஆழமாக ஈடு படத் தொடங்குகையில், மக்கள் தமது ஆன்மீகத் தேவைகளை யாரி டம் சென்று நிறைவேற்றுவது?

மக்கள்
'அரசியலில் யார்வே ண் டு 07இலும் ஈடுபடலாம்? எனத் கூறுவது கேட்பதற்கு நன்ருகவும் நாகரிகமானதாகவும் வேண்டு மிானுல் இருக்கலாம். தடை முறைக்கு இது சற்றேனும் ஒத்து வராது. எடுத்துக்காட்டாக (5 குடும்பப்பெண் தனது குடும்பத் தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யாது; சமூக சேவைக்கென வெளியில் கிளமபிவிட்டாள் என் றல் எப்படி? சமுகசேவை நல் லதுதான். அதற்காக அப்பெண் மணியின் செயலை உண்மை மன முள்ளவர்கள் பாராட்டுவார்களா? இல்லவே இல்?ல
துறவிகள் அரசியலில் ஈடுபடு வதானது அவர்தம் தனிப்பண் புக்கே சோதனையும் வேதனையு மாக அமையுமென்பதில் ஐய மில்லை. அரசியல் கருத்து வேறு பாடுகளால் துறவிகள் தாம் சார்ந்த மதத்தினுள் பிரிவினை களை ஏற்படுத்தக் காரணராகலாம். மதங்கள்-மதப்பிரிவுகள் அரசி யல் கருத்துகளுக்காக ஒன்று. விண் ஒன்று மோதிக்கொள்ள நேரிடும். மயக்கமான நிலையில் குழப்பமடைவர். விளைவு வன் முறையாகவும் ஒழுங்கீனமாகவும்
25
தான் இருக்கும். இவை எமக்கு ஒரு பாடமாக பிறநாடுகளில் நடந்துள்ளமையை - நடப்பதை அன்ருடச் செய்திகள் சுட்டுகின் கின்றன.
ஆகவே முடிவாக-துறவிகள் அரசியலிலும் ஆன்மீகத் துறை யிலும் ஏககாலத்தில் ஈடுபடுவது நல்லதல்ல; கிறிஸ்துவே "ஒருவ
னும் இரண்டு எஜமானுக்கு பணி
புரிய முடியாது’ என இயம்பி யுள்ளார். இரு தோணியில் கால்களே வைக்கும் நிலை துறவி களுக்கு வேண்டாம் ஐயா.
எண்ணற்ற முழுநேர அரசியல் வாதிகள் இன்று எமக்கு உள்ள னர். அவர்கள் அரசியல் களத் தில் தகுந்த சமநிலையைப் பேணி வருவார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாது போனுலும் பரவா யில்லை. அவர்களுடன் துறவி களும் இணைந்து அரசியல் மேடை யில் செயற்படாவிட்டால் ஒன்றும் குறைந்துவிடாது.
துறவிகள் அரசியலில் ஈடுபடக்
கூடாது. ஏனெனில் அவர்கள்
மக்களுக்கு ஆன்மீகப் பணிபுரியத்
தம்மை ஏற்கெனவே அர்ப்பணித் தவர்கள்.
★

Page 15
கதை :
“பெண்களை வாழவிடுங்கள்”
(எஸ். அந்தோனி கருத்தப்பிள்ளையூர், நெல்லை).
சென் ஆன மாநகரின் வடகோடி
யில் சுந்தரம் என்பவர் சுதந் தர பறவையாக வாழ்ந்து வந் தார். இவர் பொதுப் பணித் துறையில் எழுத்தாளராகப் பணி செய்பவர். " கருமமே கண்ணு யிஞர்" என்ற பழமொழிக்கேற்ப தம் பணிகளைக் குறித்த நேரத் தில் செய்து முடிக்கும் உத்தம மனிதர். அலுவலகத்திலும் மேல் மட்டத்திலும் உண்மை ஊழியன் என்று சான்றிதழ் பெற்றவர். அன்பைக் கவசமாக அணிந்து கொண்டவர். ஊழல், லஞ்சம் இவரின் விரோதிகள். தன் குடும் பம் வறுமையில் வாடிஞலும், இதயமானது வாய்க்கால் ஒரத் தில் நடப்பட்ட மரம்போன்று செழுமையாக இருந்தது என்ரு?ல் மிகையாகாது.
இவர் வழக்கம்போல் காலை ஒன்பது மணியளவில் தனக்கே உரிய கட.கட. மிதிவண்டியில் அலுவலகம் புறப்பட்டார். அலு வலகத்தை நெருங்கும் வேளையில்
மரணம் என்ற விதியும் நெருங்க எதிரே வந்த ஊர்திக்குப் பலியா ஞர். மருத்துவ மனையிலும் தீவிர சிகிச்சை பலன் கிட்டாமல் அமை தியின் இறைபாதம் அடைந்தார். மரணம் என்னும் கொடுமை இந்த நல்ல குடும்பத்தைப் பரித விக்க வைத்தது.
ஏழ்மைநிலை இந்தக் குடும்பத் தை வாட்டி வதைத்தது. வனிதா என்ற பெரிய பெண்ணும், இன் னும் இரண்டு சிறிய குழந்தைகளு மே சுந் தர ம் விட்டுச்சென்ற சொத்துக்கள். வனிதாவின் நிலை கண்டு தாய் கலங்கினுள். திரு மணம் என்ருலே ஒவ்வொரு குடும் பத்தையும் திகைக்க வைக்கின் றது. வரதட்சனைக் கொடுமை வனிதாவின் தாய் கண்முன் நின் றது. ஏற்கனவே இரண்டுமுறை பெண்ணை (வனிதாவை)ப் பார்த் துவிட்டு வரதட்சணைப் பல்லவி யை ஒழுங்காகப் பாடிச் சென்ருர் கள். ' பணத்திற்கு இருக்கும் மதிப்பு குணத்திற்கு இல்லையே " என்று அடிக்கடி தாய் நினைப்ப துண்டு. வனிதாவிற்கோ தனக் கொரு வாழ்வு உண்டுஎன்ற நம் பிக்கை நாளுக்குநாள் இழக்கத் தொடங்கினுள்.
வனிதா தன் கல்லூரி வாழ்வை நினைத்துப் பார்த்தாள். * வர தட்சணையை ஒழிக்க எவ்வளவு கூட்டங்கள் நடத்தியும், கொடி

பிடித்தும் அதை ஒழிக்க முயல வில்லையே. மேடையேறி வாய் கிழியக் கத்தியவர்களும், கை கடுக்கப் பத்திரிகையில் எழுதிய வர்களும் பேச்சளவில்தான் " என்று தன க் குள் சொல்லிக் கொண்டாள். 6 இந்த வரதட் சணை என்னும் கொடும் வியாதி என்னை மட்டும் அல்ல, இன்னும் எத்தனை எத்தனையோ பெண்களை பழிவாங்குகின்றது " எ ன் பது அவள் கண்முன் நின்றது. இதற்கு ஒரு தீர்க்கமான முடிவைக காண வேண்டும் என்பது அவளது உள் ளத் துடிப்பு. ஆனல், ' என் தாயோ தடையாக இருக்கிருள்" என்பதை நினைத்து மனதைச் சமாதானப் படுத்தினள்.
ஒருநாள் தன் உறவினர் கோ யம்புத்தூரிலிருந்து பெண்பார்க்க வருவதாகக் கடிதம் வந்தது. வணி தாவிற்கோ வரதட்சணையின் கொடுமைதான் கண்முன் நின் றது. எதிர்பார்த்த நாளும் வந் தது. எழுதியவர்களும் வந்தார் கள். தடல்புடலாக வரவேற்பும், உபசரணையும் நடந்தது. திரு மணத்தைப்பற்றிப் பேசிவிட்டு இறுதியில் வழக்கமான பல்லவி யையே பாடினர்கள். ‘யோசனை செய்து கடிதம் எழுதுகின்ருேம் ' என்று கூறிச் சென்ருர்கள்.
வனிதாவிற்கு இருந்த கடுகளவு நம்பிக்கையை இழந்தாள். திரு மணம் என்ற நல்ல வார்த்தை களைக் கூறிப் பணம் சம்பாதிக்க
27
ஆரம்பித்து விட்டார்கள். இனி மேல் நான் வரதட்சணைக்கு அடி மையாக வாழ்வதைவிட வரதட் சண்ை என்ற கொடிய நோயை ஒழிக்க என்னையே தியாகம் செய் து போராட்டம் நடத்துவதுதான் நல்லது " எ ன்று உறுதி பூண் டாள்.
பெண் பார்த்துச் சென்றவர் கள் இல்லம் சென்றதும் ஆவ. லோடு எதிர்பார்த்த அன்புமகன் ரவி கேட்ட் கேள்விக்குப் பெற். ருேர்கள், ' நாம் எதிர்பார்த்த வரதட்சணை இல்லை. வேறு இடம் பார்ப்போம் ' என்று கூறக்கேட் டதும், மகன் ரவி ** வரதட்சணை என்ற போர்வையைக் காட்டிக் காட்டி என் வாழ்வைக் கெடுதது விடாதீர்கள். எனக்குப் பணம் என்ற வரதட்சணை வேண்டாம். குணம் என்ற வரதட்சணை தான் பெரிது. பணம் என்றும் மகிழ்ச்சி யான வாழ்வைத்தர இயலாது. நல்ல குணங்கள் வாய்ந்த பெண் ணே நல்ல வாழ்வைத்தரமுடியும். இன்று எத்தனையோ குடும்பங் களில் பணவெறி பிடித்து வரதட் சணை கேட்பதால், எத்தனையோ
பெண்கள் தங்கன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலை
நாளுக்கு நாள் பெருகி வருகின் றது. திருமணம் வாழ்வதற்குத் தானேயொழிய பணத்தைச் சம்
பாதிப்பதற்கோ, வீடுகளைக் கட் டுவதற்கோ, ஸ்கூட்டர் வாங்கி உல்லாசமாகச் செல்வதற்கோ
அல்ல.

Page 16
28
உங்களை ப் போன்றவர்கள்
இன்று இருப்பதனுல்தான் அன்று பாரதி, "சொல்லுவது எல்லோ ருக்கும் சுலபமாகும். சொன்ன படி செய்பவர்கள் மிகவும் சொற் பம்’ என்று சொல்லி வைத்துள் ளான். அன்று நீங்கள் மேடை யில் வரதட்சணையை ஒழிக்க எண் னம் கொண்டவர்களாய், மார்பு தட்டி, வீராவேசத்துடன் “பெண் களை வாழவிடுங்கள்’ என்று வாய்கிழியப் பேசினீர்களே இன் று உங்கள் பிள்ளையின் வாழ்க்கை என்று வரும்போது, அன்றுபேசிய
5 fry FrT fb fT (ar எங்கேயப்பா போனது. ஊருக்கு . ஒரு நீதி, உங்களுக்கு ஒரு நீதியா? அன்று பேசிய நாவுதானே இன் றும் இருக்கின்றது. ஓர் ஊற்றி
விருந்து தன்னிரும், உவர்நீரும்
கரக்குமா ? அ ன்று தாங்கள் பேசிய மேடைப் பேச்சை உறுதிப் படுத்த இன்று நான் வரதட்சணை இன்றி திருமணம் செய்யத்தான் போகி றே ன். இனிமேலாவது
இதற்குத் தடையாக இருக்க மாட்
டிர்கள் என்று என்றன்"
நம்புகிறேன்"
பெற்றேர்கள் பெண்பார்க்கச் சென்றநாளில் அவன் கண்முன் வனிதாவின் நல்ல குணங்கள் தோன்றித் தோன்றி மறையத் தொடங்கின. எப்பொழுது ம் சிரித்த முகம், அன்புகலந்த பார் வை, கபடற்ற உள்ளம், விவேகத் தன்மை, தளதள மேனி, அன்பு மொழிகள் இன்னும் எத்தனை
வார்த்தைகள்
எத்தனையோ குணங்கள் கண்முன்
வந்தன. அதனல்தான் எப்படி யும் வனிதாவைத் தன் வாழ்க்
கைத் துணைவியாகக் கைப்பிடிக்க
வேண்டுமென்று தீர்மா னித் தான்.
தன் மகனின் பிடிவாத குணத் தாலும், தன் மானத்தைக் காப் பாற்றுவதற்காகவும் உடனடி யாகச் சென்னைக்குக் கடிதம் எழு தி * வனிதாவை என் மகனுக் குத் திருமணம்செய்து வைக்கின் றேன் ; வரதட்சணை ஏதும் வேண் டாம் ' என்று எழுதினர்.
இந்தக் கடிதம் வனிதாவின் அம்மாவின் கைக்குக் கிடைத்தது. அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்து வி ட் டு இறைவனுக்கு
நன்றி கூறிஞள். தன் மகளை * வணி த ரா, வனிதா " என்று அழைக்க, தாய் குரல்கேட்டுத்
தன் வேலையை விட்டுவிட்டு ஓடி வந்தாள். "இந்தா வனிதா இந்தக் கடிதத்தை வாசித்துப் பார் ' என்றுகூற வனிதா படித் துவிட்டு சோக கீதத்திலே பாட ஆரம்பித்தாள். "அம்மா என்ன மன்னித்து விடுங்கள் ; உங்கள் நினைவை நான்பூர்த்திசெய்ய முடி யாமைக்கு வருந்துகிறேன் ' என் றுகூற, தாய்க்கு ஒன்றும் புரிய வில்லை, 1* என்ன வனிதா சொல்
கின்ருய் ' என்றுகேட்க, வனிதா
* அம்மா, இனிமேல் நான் திரு மணம் - செய்துகொள்வதில் லை என்று முடிவுசெய்து விட்டேன்.

பணத் தை விரும்புகிறவர்கள் குணத்தை விரும்புவது இல்லை. பணத்தை மதிப்பவர்கள் மனைவி யை மதிப்பதில்லை. இன்றுமுதல் நான் வர்தட்சணையை ஒழிக்க
ஒரு தீவிரவாதியாக tDITgólahil -
டேன் நான் மட்டுமல்ல, என் னைப்போன்ற எல்லாப் பெண்க ளும் போராடி வரதட்சணை என்ற கொடிய சமூக விரோதியை ஒழித் துக்கட்டத்தான் போகின்ருேம். என்றுவது ஒருநாள் ந்ம் சமுதா யம் விழித்தெழத்தான் போகின் றது. என்னைப்போன்ற பெண்க ளுக்கு வாழ்வு கிடைக்கா விட்டா லும், இனி வளரும் இளம் தலை முறைகளாவது வரதட்சணைக் கொடுமையின்றி வாழவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்' என்ருள்.
எப்படி நடந்துகொள்வது ?
29
இதைக் கேட்ட தா யோ, போதும் போதும் நிறுத்து வார்த் தையை அளந்து பேசு , இந்தத் திருமணத்திற்கு நீ சம்மதிக்கப்
போகின்ருயா ? இல்லையா ?”
வனிதா ?? இல்லையம்மா தயவு செய்து என்னை மன்னித்து விடுங் கள். என்னைப் போன்றவர்கள் அனைவரும் சேர்ந்து " பெண்களை வாழ விடுங்கள் " என்ற ஒரு சங் கமும் ஆரம்பித்து புதிய உலகம் ஒன்றை உண்டாக்
கப் போகின்ருேம்.
விட்டோர்ம்.
உங்கள் மக
ளாகிய நானே அந்தச் சங்கத்திற்
குத் தலைவி. இன்று போராட்டக் கூட்டம் நடத்தப் போகின்ருேம். உடனே நான் செல்லவேண்டியுள் ளது. வருகின்றேன் அம்மா " என்று கூறியவளாய் நடந்தாள். தாயோ கண்ணீர் சொட்ட மக ளைப் பார்த்து நின்ருள்.
கணவனை மகிழ்விக்க மனைவி எப்படி நடந்து கொள்ள வேண் டும் ? கணவனுக்கு விருப்பமான உணவுவகைகளை அடிக்கடி சமைத்
துப் போடவேண்டும். கணவனைப் புகழ்ந்து,
பாய் இருக்கவேண்டும். வேண்டும்.
கணவனது சணவன் வீட்டைவிட்டு வெளியே போகும்போதும் வீட் டுக்கு வரும்போதும் மனைவி வீட்டிலேயே இருத்தல்
சிரிப்பூட்டிக் கலகலப் முயற்சிகளிற் கைகொடுக்க
வேண்டும்.
மனைவியின் முக மலர்ச்சி கணவனது களைப்பை நீக்கிக் களிப்பூட்டும்
சஞ்சீவி என்பதை மறக்கக்கூட்ாது.

Page 17
இரட்சணிய யாத்திரிகம்
--ஒரு பார்வை
எஸ். சிவலிங்கராஜா விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
باب ||
திமிழ் இலக்கிய வரலாற்றில்
19-ம் நூற்ருண்டு குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு வகைப்பட்ட மாற்றங் களும், வளர்ச்சியும் இக்காலப்பகு தியிலே நிகழ்ந்துள்ளன. ஐரோப் பியர் வருகையையொட்டி ஏற் பட்ட அரசியல், சமூக, பொரு ளாதார மாற்றங்கள் இலக்கியங் களின் பொருளிலும், வடிவத்தி லும் பாதிப்பை ஏற்படுத்தின. பலவகையான புதுமைகள் நிகழ்ந் தபோதும் பழமையும் பேணப் பட்டும், மதிக்கப்பட்டும் வந்தது.
இரட்சணிய யாத்திரிக ஆசிரி uu କt&#. (1827-1900) 1868-ல் கத்தோ விக்க மதத்தில் ஞானஸ்நானம் பெற்று, இவரது வாழ்க்கையில் ஏறத்தாழ அரைவா சிப்பகுதிவை திக நெறி வழியே கழிந்திருக்கி றது. மரபு வழிக் கல்வியில் வளர்ந்த கிருஷ்ணபிள்ளையிடம் வைதிகக்கோட்பாடுகள்வேரூன்றி நின்றதில் ஆச்சரியமில்லை.
ஏ. கிருஷ்ணபிள்ளை
(αγff.
இரட்சணிய யாத்திரிகம் முதற் பதிப்பு 1894-ல் வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு 1927இல் (முதல் இரண்டு பருவங்களும்) 1931-ல் (அடுத்த மூன்று பருவங் களும்) மூன்ரும் பதிப்பு 1958-ல் ,
(முதற்பகுதி பட்டும்) வெளிவந்
தது. மொத்தம் 3800 பாடல் களைக் கொண்ட இந்நூலே இன்று ஒரே தொகுப்பில் தரிசிப்பது மிகக் கடினமாக இருக்கிறது. உலகளா விய கிறிஸ்தவ மதம் இந்நூலை
ஒரே பதிப்பாக (முழு? :) தமிழ்
கூறும் நல்லுலகில் : : களிக்க
வேண்டுலென அ1:வு:ே }ம்.
பழந்தமிழ் இலக்கியப் பாரம் பரி யச் * சுமை "யோடுதான் கிருஷ்ணபிள்ளை இரட்சணிய யாத் திரிகத்தை மேற்கொள்ளுகிா?ர். கிருஷ்ணபிள்ளை நேரடியாக மூல பர்த்தியைத் தரிசித்தார் என்று கூறமுடியாது. ஜோன் பனியனின் மோட்சத் திருப்பயணம் பில்கி stubai) L3al6apsi) (Pilgrims Progress) என்னும் நூலின் தமிழ் உரைநடைமொழிபெயர்ப்பையே தழுவியுள்ளார். முதற்பதிப்பின் முகவுரையில் இக்கருத்தை அவரே வெளியிட்டுள்ளார். முதற்பதிப் பின் முகவுரையில் அவரின் சத் திய ே நர் மை புலப்படுகிறது. பெருங்காப்பிய நிலைக்கு இரட்ச னிய யாத்திரிகத்தை உயர்த்த அரிதின் முயன்று பார்த்திருக்கி முயற்சி எ வ் வள வுக்கு வெற்றியளித்ததென்பது ஆராய் வுக்குரியதே.

இரட்சணிய யாத்திரிகம் ஐந்து பருவங்களைக் சொண்டது. அவை ஆதி பருவம், குமாரபருவம்,
நிதான பருவம், ஆரணியபருவம், இரட்சணிய பருவம் என்பனவா
கும். இப்பருவங்களை அமைத்தது முதல் படலங்கள் பாடல்கள், (யாப்பு) உவமைகள், தொடர் கள் யாவற்றினுமே பழந்தமிழ் மரபு கல ந் திருப்பதைக் காண
ல்ாம். பழைய இலக்கியங்களின்
செல்வா க்கு கதைதவிர்ந்த அனைத் தினுமே மேலோங்கி நிற்கிறது.
f
திருக்குறள், சிலப்பதிகாரம்,
தேவாரங்கள், திவ்விய பிரபந் தங்கள், கலிங்கத்துப்பரணி, தேம் பாவணி என்பவற்றின் செல்வாக் கை இடையிடையேயும் கம்ப ராமாயணத்தின் செல்வாக்கை நூலடங்கலும் காணக்கூடியதாக இருக்கிறது. பனியன் கடுக்கொடுக் கக் கம் ப ன் உடுக்கொடுக்கக் கிருஷ்ணபிள்ளை இரட்சணிய யாத் திரிகத்தைப் பெற்றி ருக்கிருர், கிருஷ்ணபிள்ளை முதற்பதிப்பின் முகவுரையில் தன்னை நன்கு இனங் காட்டியுள்ளார். மூடி மறைத்து , வேஷம் "போட அவர் விரும்ப
"இந்நூலின் செய்யுள்நடை பெரும்பாலும் பூரீமத் கம்ப ராமாயணச் செய்யுள் நடை யையும், அதன் போக்கையும் அனுசரித்தே இயன்ற மாத்தி
ரம் அமைக்கப்பட்டது. * I Զ பர் திருவள்ளுவநாயர்ை முத
3.
லிய சில மகா கவிகளின் கருத் தும், பொருளும், சிறு சிறு சொற்றெடர்களும் இந்நூல கத்து ‘அரதனகசிதம்"போலப் பொரு ந் த ப் பதிக்கப்பட்
ol.""
கிருஷ்ணபிள்ளையைக் "கிறிஸ் தவக் கம்பன்' என்று அழைப்பது இன்று வழக்காருகிவிட்டது. தமி ழிலக்கியப் பரப்பில் கவித்துவத் தின் பேரெல்லையாகத் திகழும் கம்பனுடன் கிருஷ்ணபிள்ளையை ஒப்பிடுவது அல்லது சார்த்திக் கூறுவது ஆய்வறிவியல் நிலையில் அங்கீகரிக்கக் கூடியதல்ல. எனி
னும் கிருஷ்ணபிள்ளை ஒரு "கம்ப
தாசனுக' வாழ்ந்திருக்கிருர் என்
பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
தமிழ்க் காப்பியங்களில் ‘* சர மாரியாக " இடம்பெறும் பெண் களின் வருணனைகள் அல்லது பாசக்கருத்துக்கள் இரட்சணிய யாத்திரிகத்தில் இடம்பெறவில்லை. ஆசிரியரின் மார்க்க பக்தியும், தூயவாழ்வு முறைமையும் இதற் குக் காரணமாக அமைந்திருக்க GRID,
இரட்சணிய யாத்திரிக முக வுரையில தன் நோக்கம்பற்றி மிக விரிவாகக் கிருஷ்ணபிள்ளை குறிப் பிட்டுள்ளார். >ペ
* இந்நூல் வாசிக்கிறவர் மனஸைச் சன்மார்க்கத்தில் முயற்சிப்படுத்துவது, தேவ பயத்தில் வளர்க்கத்தக்கது.

Page 18
@2
துப்புரவான போதனையுள்ளது. இயல்புக்கு விரோதமான அபா ரகற்பனைகளேனும் அபத்தா பாசங்களையுள்ளிட்ட வர்ணனைக ளேனும் இந்நூலில் யாண்டுங் கிட்டாது. கிரமமான கற்பன லங்காரங்களும் உதாகரித்துப் பேசத்தக்க சமயேசிதங்களும் படிப்பினைகளுமுள்ளன என் பதை நடுநிலை வில கா து வர சிப் போரெலாம்
sfrrł.”
இக்கூற்றிலிருந்து கிருஷ்ண பிள்ளைக்கும், இடைவெளியை நாம் கொள்ளலாம்.
கண்டு
விண்ணக அரசை விரும்பிய உண்மைக் கிறிஸ்தவனுெருவன்
இவ்வுலக ஆசாபாச நெறிகளில்
இருந்து விலகித் தன் வாழ்க்கை
யை அமைத்துக்கொள்ள விரும்பு
கிருன். தனது பாவங்களெல் லாம் தன் முதுகின்மேலிருந்து அழுத்துவதாக உணர்கிறன். தனது இம்மைப்பழி யாவும் மர ணத்தின்பின் விசாரிக்கப்படும் என்னும், அந்த விசாரணைக்குத் தன்ஞல் முகம்கொடுக்க முடியா தென்றும் எண்ணுகிருன். அவ னது சிந்தனைகள் உலக வாழ்வி விருந்து முற்ருக விடுபடுகின்றன. மோட்ச பிரயாணத்திற்கான சிந் த%னகள் புதிய தெய்வீக யாத் திரை ஒன்றைத் தூண்டி அவ்வழி யிலே அவனை இட்டுச் செல்லு கின்றன.
மறுக்
கம்பனுக்குமுள்ள
மோட்சவழி ஓர் ஒடுக்கமான இடுக்கமான நெறி. அவன் எத் தனையோ இடர்களையும், தடை க3ளயும், ஆக்கினைகளையும் தாண்டி
அவ்வழியிலே இட்டுச் செல்கின்
றது சத்திய வேதநெறி. அந்த நெறியால் ஆத்துமவிகாரி இரட் சிப்படைகிருன்.
ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு சிர மங்களுக்கு மத்தியிலும் மனந்தள ராமல் சத்தியவேத நெறியில் வாழ்ந்தால் அவனுக்கு இரட்சிப்பு நிச்சயம் என்பதையே “குறியீட் டு "ப் பாங்கில் இரட்சணிய யாத் திரிகம் குறியீட்டுக் காவியங்களில் கந்தபுராணத்திற்கு அடுத்தபடி யாக இரட்சணிய யாத்திரிகத் தைக் கொள்ளலாம்.
இரட்சணிய யாத்திரிகத்தின் கதைப்போக்கிற்கேற்பப் பாத்தி ரங்கள் படைக்கப்படுவதும் அறி முகப் படுத்தப்படுவதும் முக்கிய மான சிறப்பம்சமாகும். பக்தி விசு வாசம் நிகழும் கதையோட்டத் திற்கு உயிரூட்டமாக அமைவன வன பாத்திரங்களே. இரட்சணிய யாத்திரிகத்தில் இட ம் பெறும் பாத்திரங்கள் குறியீட்டு முறை யில் அமைந்துள்ளன. பனியனின் பாத்திர வார்ப்புகளை ஒ ட் டி க் கிருஷ்ணபிள்ளை படைத்த போதி லும் சில இடங்களில் ' தனித்து வம் ” பேணியும் சென்றுள்ளமை அவதானிக்கக்கூடியது. விளக்கப் பாத்திரங்கள் விளக்கப் பாத்திரங்கள்
நன்மை தீமை
என்று

இரட்சணிய யாத்திரிகப் பாத்தி
ரங்கள் அனைத்தையும் பாகுபாடு செய்யலாம்.
பாத்திர வார்ப்பில், பில் சத்தியவேத நெறிக்கு எவ் வித பங்கமும் ஏற்படாமல் மிகக் கூர்மையான அவதானத்தோடு கிருஷ்ணபிள்ளை செயற்பட்டிருக் Scipii.
பழந்தமிழ் இலக்கிய ஊற்று களிலிருந்து கிளம்புகின்ற காவி யத்தன்மை, அமைப்பு, செய்யுள் களின் அமைப்பு என்பவற்றிற்கு ஓரிரு உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். அவை, "ஒரு சோறு பதம்’ என்ற வகையிலேயே அமை պւն.
கம்ப ராமாயணத்திலே ஆர னிய காண்டம் (கிருஷ்ணபிள்ளை) இரட்சணிய யாத்திரிகத்திலே =塾エ ணிய பருவம் - கம்பராமாயணம் - பாலகாண்டத்தில் அரசியற்பட லம் - இரட்சணிய யாத்திரிகத் தில் ஆதிபருவத்தில் - அரசியற் படலம் - இராமாயண நாட்டு, நகர ஆற்றுப் படலங்கள்--இரட் சணிய யாத்திரிகத்தில் பரமராச் சியப் படலம் என்பன போன்ற வற்றை அமைப்பு ரீதிக்கு உதார ணங்களாகச் சுட்டிக்காட்டலாம்.
66Till
39 ஆனல், கிருஷ்ணபிள்ளையில் ஒரு தனித்துவமும், சிறப்பியல் பும் இருந்ததென்பதை மறக்க
முடியாது. செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில் உலகிய
லுக்கு ஆபாசத்திற்கு பயன்படுத் தப்பட்ட கடைத்திறப்பு என்ற அம்சத்தை - உயர்ந்த தத்துவ மான, "தட்டுங்கள் திறக்கப் படும்" என்ற வேதவாக்கிய வரம் புக்குள் கொண்டுவந்து மிகச்சிறப் பாகப் பக்தி நெறியைப் பாடியுள்
ளார். கிருஷ்ணபிள்ளையின் கவித்
துவ முத்திரைகள் சில இக்கடைத் நிறப்புப் படலத்திலே பளிச்சிடு வதைக் காணலாம்.
* பாவம் மீறிவளர் காடுதுற்றி
шäu பட்டழுங்கி யயர் பாவி
unr 6ăr ஜீவமாரதியின் நீரடுத்த அதி தேட்டமுண்டு கடைத்
திறமினே." அழகான ஒசை, ஆத்தும விகாரி யின் " அந்தரத்தை " இங்கே புலப்படுத்துகிறது.
பாடல் அமைப்பு முறைக்கும்,
பொருள் அமைப்பு முறைக்கும் சில உதாரணங்களைச் சுட்டலாம்.
" ஆவா வரசன் அருளிலனே யாமென்பார் காவா வறத்தையினிக் கைவிடுவோம் யாமென்பார் தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந் தேகினர் மாவாதஞ் சாய்த்த மராமரமே போல்கினர்."
கம்பராமாயணம் நகர் நீங்கு படலம்-99

Page 19
* ஆவா விதென்ன அறவு மணியாயமென்பார்
தாவா வறமோ தலைசாய்த்தறுவ தென்பார்
மூவா முதல்வன் முனியாத தென்னென்பார் ஒவாது உழவெம் முயிர்க்கு ஒழிவின் ருேவென்பார்."
இரட்சணிய சரிதப்படலம்-320
** நாளென ஒன்றுபோற் காட்டி யுயிரியும்
வாள் துணர்வார்ப் பெறின்
குறள்-334
* நாளென வரம்புகாட்டி நரலைவாரிதி சூழ் வைப்பிற் கேருறு முயிருக்கெல்லாம் நன்றுபோற் கேடுகுழ்ந்து வாளெனப் பிளந்து தள்ளி மாயமாக் குறைக்கும் வாணுட் கோருறு காலத்தோடு கூட்டுற்வாமித் நீத்தம்.”*
இரட்சணிய யாத்திரிகம்-இகபரசந்திப்படலம்
இவ்வாறு நூலடங்கலும் உதார ணங்களைச் சுட்டிக் காட்டலாம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மொழியைச் சமயங்கள் வளர்த்துள்ளன. சமணம், சை வம், பெளத்தம், வைஷ்ணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதம் சார்ந்த இலக்கியங்கள்
குறை கூறலாம P
மதம் என்ற எல்லைக் கோட்டிற்கு அப்பாலும் தமிழ் மொழியை வளம்படுத்தியுள்ளன. இந்தவகை யில் தமிழ் இலக்கிய வரலாற்றில் கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகத்திற்கும் குறிப்பிடத் தக்க ஒரு முக்கியத்துவம் உண்டு எனல்ாம். ベ
எப்போதும் மனைவியைத் தாழ்த்தி ஏதாவதொரு குறை கூறிக்கொண்டிருப்பது கணவனுக்கு அழகன்று. சிலர் மனைவியின் குறைகளைப் பிறரிடமும் கூறுகின்றனர். மனைவியிடமுள்ள குறைகளை மனைவியிடம் 'மாத்திரமே
கூறவேண்டும். கூடாது.
மற்றவர்களிடம் அதனல் மனைவியின் உள்ளம் பெரிதும் புண்
ஒருபோதும்
கூறக்
படும். அதை ஆற்ற வெகுநாள் செல்லும்.

அர்ச்சனைக்கு வராத அடுக்குமல்லிகை
பறப்பாங்கண்டல்
ருத்யா
தொ ஒலித் துக்
كالا... كاL... تانا...الا டர்ந்து விடாமல் கொண்டிருக்கும் GooJ LI GootT L LGrm"G போராடிக்கொண்டிருந் தாள் அஜி. அநாயாசமான கை வேகத்தை விட,அவள் மன வேகம் கொன்கோட் விமானத்தைவிட வேகமாகச் சென்று கொண்டி ருந்தது. மனம் நேற்று நடந்த சம்பவத்தை இரைமீட்கத் தொ டங்கியது.
வழக்கம் போல் சாயந்திரம் ஐந்து மணிக்கு தனது வேலையை முடித்துக்கொண்டு தான் தங்கி யிருக்கும ஹொஸ்டலுக்குப் போ வதற்காக வேகமாக நடந்து கொண்டிருந்தாள். மெ ல் லிய தென்றல் காற்றில் அவளது உட லோடு 6ւ գպմ, ஒட்டாமலும் இரு ந் த அந்த மெல்லிய மேக வண்ண ஷிபான் புடவை காற் றிலசைந்தாட,ஹாண்ட்பார்க்கை கையிலிறுகப் பிடித்தபடி அந்த சனநடமாட்டம் குறைந்த வீதி வழியாக ஒயிலாக நடந்துகொண்
டிருந்தாள் அஜி. அவளது ஹாஸ் டலுக்கும், அவள் பணிபுரியும்
அந்த தனியார் நிறுவனத்திற்கு மிடையே சுமார் ஒரு மைல் தூர மிருக்கும். ஆனல் அவள் தின மும், வேலைக்குச் சென்றுவருவது நடையில்தான். வீட்டு நிலைமை யைப் பற்றி இன்று பாட்டி கடி தம் போட்டிருப்பாள், அக்கா, தங்கை, தம்பிமார் என்ன ஆனர் களோ! படிக்கிருர்களோ அல் லது வழக்கம்போல் குடும்ப கஷ் டத்தால் விறகு காட்டிற்கு விறகு எடுக்கச் சென்று விட் டார் களோ.இந்த மாத சம்ப ளத்துக்கு இன்னும் இரு நாட்கள்
தான் பாக்கி இருக்கிறது. அகற்
குள் பாட்டி மளிகைக்கடைக்கு கடன்பாக்கி கொடுக்கவேண்டும். மதனகோபால் முதலாளியிட்ட போனமாசம் வாங்கின கடன்
கொடுக்க வேண்டும் என்று
சொல்லி கடிதம் போட்டிடுவாள்.
அவளுக்கு எழுத படிக்க தெரி யாது. ஆனல் அவள் கூறும் விஷ யங்களை விட இன்னும் ஒருபடி கூட்டி எழுதுவாள் கடை சித் தங்கை அனு. மனம் பலவாழுக சஞ்சலப்பட சாலையோரமாக நடந்துகொண்டிருந்தாள் அஜி. திடீரென அவள்பக்கமாக ஒர் பியட் கார் ஒன்று கிறீச்சிட்டு
நின்றது. வெடவெடத்த அஜி
சாறித்தலைப்பை இன்னும் இறுக போர்த்திக் கொண்டு நடையின் வேகத்தைக் கூட்ட முயன்முள்.
* * . h
மிஸ் அஜி.உங்களுக்கு ஆட்சே

Page 20
பனையில்லையேல் உங்கள் ஹாஸ் டல் வரைக்கும் லிப்ட் கொடுக் கலாம்: அவள் கம்பனி மனே ஜர் ஜனுர்த்தணுவின் குரல் கேட்டு நின்ருள் அஜி. "ஒ.நோ.சேர் தாங்யூ. உங்களுக்கு’ Փ999}} முணுத்தாள் அஜி "நோ ப்ராப் ளம் அஜி.வாங்க, ஹா யா க ட்ரைவர் சீ ட் டி ல் சாய்ந்தபடி அழைத்தான் ஜஞர்த்தனன். இல்லை சேர்.நான் லைப்ரரிக்கு போயாக வேண்டும்' த ட் டி க் சுழிக்க முயன்ருள் அஜி. 'அதற் கென்ன போறவழியில்தானே இடையிலேயே இறக்கிவிடறே னே" இன்னும் முரண்டு பிடிப் பது அணுகரீகமாகப் பட்ட து, அஜிக்கு. வேறுவழியின்றி காரின் பின் சீற்றில் ஏறி அமர்ந்து கொண்டாள். காஸெட் டில் பொனியம் இசைத்துக்கொண்டி ருந்தது. காற்றில் கலந்தாடும்
சுருள் சுருளான கேசத்தை ஒரு
கையால் பின்னுக்கு தள்ளிவிட் டுக்கொண்டே
காரையோட்டி"
ஞன் ஜன. அவனது அ ப் பா'
தான் அந்தக் கம்பனியின் மனே
ஜராக தொடக்க காலம்வரை இருந்துவந்தார். ஆஞ ல் திடீ
ரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது அத்தியாயம் முடிய, அவரது ஒரே குமாரன் ஜனுர்த்தனன் அப்பதவியை ஏற்
ருன். எடுத்த எடுப்பிலேயே எல்.
லோரையும் கவரக்கூடிய தோற்.
றமுடையவன் ஜன. அவ ன் பணக்கார சூழ்நிலையில் வாழ்ந்து
பழக்கப்பட்டவன். கல்கத்தாவில் மனேஜ்மன்ட் படித்துக்கொண்டி ருந்தவன் அப்பாவின் மறைவுக்
குப்பின் பொறுப்புள்ள ஒரு மனே
ஜராகிவிட்டான். பதவியேற்று மூன்றுமாத காலம்தான் ஆகியி ருந்தன. அதனல் அவனது குண நலன்களை இன்னும் முழுதாக அறிந்துகொள்ளவில்லை அஜி. அவள் அந்தக் கம்பனியில் ஸ்டே னேவாக சேர்ந்து இரு மாதங் கள்தான் ஆகியிருந்தன. இரு வருக்குமே பரஸ்பரம் ஒரு வ ரைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ள நியாயமில்லைத்தானே.
நாலைந்துதடவை ஆபீஸ் விஷய
மாக அழைப்பான். சில கடிதங் களைக் குறிப்பிட்டு டைப் செய் யச் செய்வான். அவளும் தன் வேலையை செய்து முடிப்பாள். இப்படியேதான் எந்தவித சிக்க லுமில்லாமல் இரண்டு மாதங்க ளைப் போக்கிவிட்டாள். என்ன. மிஸ்.அஜி.பலமா G8 u I mr s 3sor பண்ணுறிங்க . உங்களுக்கு யாரு டைய நாவல் பிடிக்கும் ஜன தான் பேசினன். "ஒன்றுமில்லை எனக்கு ஜெயகாந்த்தான் இஷ் டம்" என்ருள் அஜி. லைப்ரரி வாசலில்இறக்கிவிட்டான்ஜனன். வந்துவிட்டோமே இனி ஏ தர் வது புத்தகத்தையாவது எடுத் துக்கொண்டு செல்வோம் என்ற எண்ணத்தோடு கையில் தட்டுப் பட்டதை வாங்கிக்கொண்டாள். ஜனவிடமிருந்து தப் பியதே போதும் என்றிருந்தது அவர் ளுக்கு. அவளது குடும்ப நிலைமை களைத் தெரிந்துகொண்ட யாரா வது இந்த கார் சுவாமியைக் கண்டிருப்பது ஏதாவது கட்டுக் கதை ஒன்று கஷ்டப்பட்டு பிறத் திருக்கும்.

அஜி சுமாராகப் படித்தவள். அவளது படிப்புக்கான முழுப் பொறுப்பும் அந்த கான்வெட் டின் சுப்பீரியர்தான். அவளுக்கு உடன்பிறப்புக்கள் என்று இரண்டு அக்காமாரும், மூன்று தங்கை களும், இரண்டுதம்பிமாரும் இருந் தனர். அவளுடைய அப்பா அம்மா குழந்தைச் செல்வங்களைத்தான் விட்டுவிட்டுப் போயிருந்தார்களே யொழிய,எந்தவித ஆஸ்திகளையுமே தேடி வைத்திருக்கவில்லை. அப்பா இருந்த சொத்து, சுகங்களையெல் லாம் விற்று, விற்றுக் குடித் தார். இதன் முடிவு வாழவைக்க வேண்டியவர் எட்டுக் குழந்தை களையும் தாயின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு எமலோகம் சென்று விட்டார். மதுவின் உக்கிரத்தால் அவரது ஈரலின் ஒரு பகுதி அழிந்து விட்டதாம். அப் பாவின் மறைவுக்குப் பின் Syuhupfr சில காலம் ஈடுகொடுத்தாள். அவள் எத்தனை நாளுக்குத்தான் எட்டுப்பேரையும் தாக்குப் பிடிப் பாள். வெளி நாட்டில் தாதி வேலை என்று சொல்லி ஏதோ
ஓர் ஏஜென்சிக்கு கிடந்த இரண்டு.
பரப்புக் காணியையும் அடகு வைத்து வெளி நாடு சென்ருள். அம்மா ஏதோ வெளிநாடு சென்று எங்களையெல்லாம் நல்ல நிலையில் வாழ வைப்பாள் என்று
சிறுமியாய் இருந்த போது பகற்
கனவு காண்பாள் அஜி. அவ ளுக்கு இயற்கையாகவே வய அக்கு மீறிய அறிவுண்டு. அம்
மாவும் வெளிநாடு சென்ற புதி தில் ஏதோ ஒன்றிரண்டு டொலர் கள் அனுப்பினள். நாளடைவில்
தார்கள்.
37
அதுவும் குறைந்து கடைசியில் ஒன்றுமே சுவடு தெரியாமல் மறைந்து விட்டது. அவளுக்கும் என்ன நேர்ந்ததோ தெரியாது. கடிதப் போக்குவரத்தும் மங்கி விட்டது. ஏன் என்ன ஆஞள் என்று கூட விசாரிப்பதற்கு நாதி இல்லை. இவ்வளவு கால் மும் இரண்டு அக்காமாரும் ஏதோ தங்களாவியன்ற அளவு தங்கை, தம்பிமாரைக் கவனித் அத்தோடு ஒண்டிக் கட்டையாய் தனித்து வாழ்ந்த பாட்டியும் இவர்களோடு ஒட்டிக் கொண்டாள். அஜியும், அவள் தங்கைளும், தம்பிமாரும் அருகி லுள்ள விறகுக் காட்டிற்குச் சென்று விறகு பொறுக்கி வீடு வீடாக விற்று வந்தார்கள். இந்த நேரத்தில்தான் ଅଭାଗ୍ଦ୭ டைய ஊருக்கு வந்த மதபோது கர்கள் இவர்களது குடும்ப நிலை யைக் கண்டு அவளையும், அவளது இரு தங்கைகளையும் தங்கள் பொறுப்பில் எடுத்துச் சென்ருர் கள், அஜியை நகரத்திலுள்ள ஹாஸ்டலில் தங்க வைத்து படிப்பித்தார்கள். தங்கைமாரை மலையகத்திலுள்ள ஓர் சிறுமியர் விடுதிக்கு அழைத்துச் சென்ருர் கள். புத்திக் கூர்மையும், துருதுருப்பும் கொண்ட அஜி வேக் மிாகப் படித்துமுன்னேறினுள்
இந்த நிலையில் அவளது மூத்த அக்கா யாரோ ஒர், ஊர், பேர் தெரியா த வனுடன் ஊரை விட்டே ஓடிவிட்டாள். என்ற செய்தி அஜிக்கு கிட்டியது. ஏற் கனவே சமுதாயத்தில் நிமிர்ந்து

Page 21
38
நடக்கமுடியாமல் இருக்கும் அவர் களது குடும்பம் இந்த நிலைமை யின் பின் மேலும் மோசமா னது. இதை இரண்டும் கெட் டான் பருவத்திலிருந்த அஜி உணர்ந்தாள்.அனலிடைபுழுவாய் நெளிந்தாள். ஏற்கனவே வெளி நாடு சென்று திரும்பாத அம்மா வைப் பற்றி அ சிங்கமாகக் கதைக்கும் ஊர் உலகம் இனி மேல் வீதியிலேயே நடக்க முடி
முடியாது தூற்றும் என்று அவ
ளுக்குத் தெரியும் இதை அவள் அக்கா அறியவில்லையே. அந்தப் பதினெட்டு வயதிற்குள்ளேயே சொல்ல முடியாத வேதனைகளை யெல்லாம் அனுபவித்து விட் டாள் அஜி. அடுத்த நாளில் அவளின் சிறிய அக்காவிடம்
இருந்து வந்த சோகக் கடிதம்
அவளின் வேதனையை இரு மடங் காக்கியது. அவள் தன் ஆற்ரு மையை சொற்களில் வடித்திருந் தாள். அஜி எமக்கு இன்னுமோர் வாழ்வு வரும் என்று கனவிலும்
அதுகளுக்குச் தேடி வைத்து முறைப்படி முடிச் சுக் கொடுக்கா
兹
நினையாதே. இங்கு வீதியில் கூட
நடமாடமுடியாதபடி சொல்லம்
புகளால் எங்களைக் கொல்கிருர்,
கள். வீடுகளுக்குச் சென்று வேலை செய்து பிழைக்க முடியாமற் போய்விட்டது. அதுவும் ஆண்
கள் உள்ள வீடுகளுக்குச் சென்
ரு. கேட்கவும் வேண்டுமா. ஏன் நமக்கு இந்தச் சோதனையை
ஆண்டவன் வைத்தான். பாட்டி
படுத்த பாயை விட்டு எழுகி
முள் இல்லை. ஊரில் தலை நிமிர்ந்து
வுாழ முடியாத நிலை. பாவம் .
குது.
கண்டதும் ஒவ்வொரு விதமாகக்
அவள் தலையில். காலவரை படிப்பித்து ஆளாக்கிய
அவள் சாக வேண்டிய வயதில்
எம்மைத் தலையில் கட்டிக் கொண்டு படாத பாடுபடுகிரு ளடி. எமது கடைசித் தங்கை அனுவுக்கும், அவளோடு படிக் கிற யாரோ ஒரு பொடியனுக்கம் ஏதோவாம். ஊரில் கதை அடிப்டு எல்லாம் நமக்குப் பாதக மாய்த்தான் இருக்குது. அவளைக் கேட்டால் இல்லை என்று அடித்து சொல்கிருள். நீயும் அப்படி ஏதும் செய்து போடாதை. பொம்பிளை களைப் பெத்துப் போட்டு காலா காலத்தலை அதுகளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால் சொத்து சுகம்
விட்டால் இப் பிடித்தானே அதுகள் கண்டவன் நிண்டவனுேட ஒடும். இப்பிடி ஒவ்வொருத்தனுேட கலைச்சு விட் டால் செலவு குறைவுதானே என்று ஊர்ச் சனங்கள் என்னைக் ஒவ்வொருத்தியும் கதைக்கி முர்கள். நீ தான். இந்தப் பிரச் சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க
வேண்டும். படித்து நல்ல நிலைக்கு வந்து
விட்டாயானல் நாங்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ முடியும். என்று அவள் - அக்கா போட்ட கடிதத்திலிருந்தே அவ ளது சமநிலை குலைந்து விட்டது. குடும்பத்தின் முழுப்பொறுப்பும் அவளை இது
அதே ஹாஸ்டல் சுப்பிரியருக்கு அவளது குடும்ப நிலை தெரிகின்ற விஷயம்.

இந்த நேர த்தில்தான் அவளது
ஸ்டெனே வேலை கிடைத்தது.
எந்த பொறுப்புமில்லாம பறந்து
திரியவேண்டிய வயதில் பல பொறுப்புக்களையும் சுமந்து தனக் கென்று ஓர் வட்டத்தை உரு வாக்கி அதனுள் வாழ்ந்துகொண் டிருக்கிருள். பள்ளிப் படிப்பை முடித்தும், முடி க் கா மலும் பொறுப்புள்ள ஓர் பெண்ணுக மாறிவிட்டாள் அஜி. அவளுக்கு செல்வந்தான் குறைவேயொழிய அழகை அள்ளி வாரி இறைத்தி ருந்தான் இறைவன். பரக்க,பரக் -கக் காலையில் கம் பெனிக்குச் செல்வாள். சாயந்தர வேளைக *ளில் ஹாஸ்டல் வந்ததும் சாப் பாட்டை முடித்துக்கொண்டு அங் குள்ள சிறு பிள்ளைகளுக்குடியீசன் சொல்லிக் கொடுபபான். இந்த ஒவர்டைம் வேலையால் அவளது வருமானம் ஒரளவுக்குஉயர்ந்தது, எத்தனையோ அவள் யொத்த இளம் பெண்கள் ஹயா கப் பறந்துதிரிந்து கொண்டிருக் கும் இவ்வேளையில் அஜி மட்டும் அதற்கு விதிவிலக்கானுள் இந் தச் செல்வம்தான் எத்தனைபேருக்
கான இடைவெளியை வேறுப
கம்பெனி, யில் வேலைசெய்யும் ஏனைய பெண்
டுத்திக் காட்டுகிறது.
கள் இடைவேளை நேரத்தில் கன் டீனில் கூடிவிட்டார்களானுல்
பெருத்த சத்தமும், கூக்குரலும்
எழும்பும். ஆனல் அஜி மட்டும்
ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில்
அமர்ந்து தான் கொண்டுவந்த
கூட்டாளிகளோடு வருவான் உட்கார்வான். சிகரெட் பிடிப் பான்.
ஹஸ்டலையடைந்த கை, கால் புரியாத நிலை. ஏன்
இதை ,
39.
சிறு பொட்டலத்தைப் பிரித்து.
உண்பாள். அதனுள் ஏதாவது சிறிய அளவில் இருக்கும். சில: வேளைகளில் ஜன தனது ஏனைய
ஏனைய நண்பர்களோடு அரட்டையடிப்பான். எழுந்து
போவான். அவனும் சிறிய வய
தில் பல பொறுப்புக்களை ஏற்ற வன்தான். அவனுக்கும் பொழுது போக்குகளும், ஆசாபாச எண் ணங்களும் இருப்பது இயற்கை தானே. இந்த வேளையில்தான் கார் சுவாமி மூலம் ஜனவுக்கும் அஜிக்கும்இடையில் நெருக்கமான பரிச்சய உறவு ஏற்பட்டுள்ளது.
அஜிக்கு
ஜன இப்படி நடந்துகொள்ள,
வேண்டும். இது தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பா, அல்லது திட்
டமிட்டு நிகழ்ந்த சந்திப்பா என்று அவளுக்குப் புரியவில்லை. அல்லது நானகத்தான் வீண் கற் பனைகளிலீடுபடுகின்றேனே . ச்சி. இதுஎன்ன வீண் கற்பனை. என் நிலைமை என்ன. ஜனுவின் நிலமை என்ன. கு ப் பைக் கிடங்கு கோபுரமாக மாற ஆசைப் படலாமா என்று தன்னையே நொந்து கொண்டாள். அக்கா வின் கடிதம் அவள் கண்முன்னே விழுந்து கிடப்பது போன்ற பிரே மையேற்பட்டது.
அடுத்த நாள் வழமைபோல் கம்பெனிக்குச் சென்ருள். தன்

Page 22
40
கடமையைத் தொடர்ந்தாள். கை தானக ஆட்டோமெட்டிக்
காக இயங்க, மனம் வீட்டு நிலை
மைகளில் ஆழ்ந்தத் தொடங்கி யது. அவளோடு ஒன்ருகப் பணி புரியும் அகல்யா வந்தாள். அவள் ஒரு நியூஸ் மகசின், அஜியோடு அவள் மட்டும்தான் கொஞ்சம் அந்நியோன்யமாகப் பழகுவாள். அஜியின் குடும்ப நிலமைகள் அவ ளுக்கு அத்துப்படி. வந்தவள் * உன்னை சேர் கூப்பிடுகிருர்’ என்று கூறி கண்ணைச் சிமிட்டி விட்டு வழமையைவிட மாருகனது வுமே பேசாமல் நகர்ந்தாள். அஜி எந்தவித படபடப்போ ஒன்று மில்லாமல் ஜனவி ன் ஆபீஸ்
அறைக்குள் நுழைந்தாள். மேசை
மீது விரிந்துகிடந்த பெரிய பைல் ஒன்றில் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தான் ஜன. அஜியைக் கண்டதும் அவளை எதிர்பார்த்திருந்தவன் நிமிர்ந்து உட் கார்ந்துகொண் டான். மிஸ் "அஜி நான் இவ்வ ளவுநாளும் உங்களை எமது ஆபீஸ் ஷயமாகக் கூ ப் பிடுவ துண்டு" e2G9. . . . . . இன்று. எனது பர்ஷ
னல் விஷயமாகக் கூப்பிட்டிருக்கி றேன். உங்களுக்கு ஏதும் ஆட்
சேபனையில்லையே." அங்க லாய்த்தான் ஜன. "இல்லை சேர் நீங்கள். எனக்கு உங்களது அந் தரங்க விஷயங்களைக் கூறுவதற்கு அப்படியொன்றும் நான் உங்களு டன் அதிக நாள் பழகியதில்லை யே'. 'இல்லை அஜி இதன் கதாநாயகியே நீதான். நான்.
ஏற்றுக்கொள்வீரா"
G3 ால்,
மூச்சு
நான். உன்னை விரும்புகிறேன். கையைப் பிசைந்தான் ஜன."சேர். என்னை மன்னிச்சிடுங்க சேர். உங்களது நிலை என்ன? எனது நிலை என்ன" மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற் றுமைதான் எம் இருவருக்கும். எங்கள் குடும்ப விவகாரங்களைப் புற்றி உங்களுக்குத் தெரியாது. உங்களைப்போன்ற பண க் கார ருக்கு என்னைப்போன்ற ஏழைகளை வஞ்சிக்கும் எண்ணம்தான் குறிக் கோள். உங்கள் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதற் காக என்னை எப்படியும் ஏமாற்ற லாம் என்று எண்ணுகிறீர்களா? முதலில் காதல் என்று சொல்லி நாயாக அலையவைப்பீர்கள். அப் புறம் எங்களுக்கு இழு க் காண பெயரை வாங்கித் தந்துவிட்டு உங்கள் அந்தஸ்துக்கு ஏற்றபடி உங்கள் ஆஸ்திக்கேற்றபடி இன்
ஞெருவருக்குத் தாலியேற்றுவீர்
கள். உங்களைப் போன்ற வரு டைய பொழுதுபோக்குக் காத லுக்கு என்னைப் போன்றவர்கள் தான் ஏற்றவர்கள்என்று எண்ணு கிறீர்களா? நோ சேர் நான் அப் படிப்பட்ட பெண்ணில்லை. உங் கள் காதலை ஏற்றுக்கொள்ள என் ஞல் முடியாது. காரணம் தகுதி: ஆத்திரத்தில் பொழிந்து தள்ளி விட்டு கதறியழுதாள். மேல் கீழ்மூச்சு வாங்கியது அஜிக்கு. ஜனு பரபரத்தான். அஜி. அஜி. எதற்கு இப்படி அழுகிறீர்கள். இப்ப என்ன நடத் தது. பொம்பளைகளை விளையாட்

டுப் பொம்மையாக நினைக்கிறவன்'
இல்லை அஜி நான். என்னை நம் புங்கள் பிளிஸ் ??
அஜி ஆத்திரத்துடன் அறை யைவிட்டு வெளியேறினுள், கம் பனியின் அத்தனை பேருடைய கண்களும் தன்னை மொய்ப்பதாக எண்ணினள். தன் இருக்கையில் அமர்ந்து விசும்பி, விசும்பி அழு தாள். அவளைத் தேற்ற எவருமே வரவில்லை. அவள் நண்பி அகல்யா கூட ஏதோஒர் அசிங்கமான பிரா ணியைப் பார்ப்பது போல ப் பார்த்தாள். ஜனவின் ஆபீஸ் படார் என இறுகப் பூட்டப்படும் சத்தம் கேட்டது. சிறிதுநேரத்தில் ஸ்கூட்டர் ஒன்று பலத்த சத்தத் தோடு வேகமாகப் புறப்படும் ஒலியும் தொடர்ந்து கேட்டது.
சக ஊழியர்கள் மூலைக்குமூலை யாக அமர்ந்து வாய்க்குக் கிடைத் தஅவலே வெவ்வேறு வித உருவ கக் கதைகளையும் இணைத்து மெல் லத் தொடங்கினூர்கள். அஜி ரைப்ரைட்டர் மேல் முகத்தை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள். அவளது கம்பனியின் பெண்கள் எல்லோருக்குமே தலை வியான சரஸ்வதியம்மா புறு புறுப்பது
அவளுக்கு அருகாமையில் கேட்
டது. “அவளுடைய சகோதரங் கள்தான் அப்பிடியெண்டு பார்த் தால், ச்சி. பூனைபோல் இருத் தாள். திமிரா நல்ல புளியங்கொம்பாகப் பிடிக்கப்பார்த் தாள். ஆளுல்
பாவம் வழுக்கி விழுந்திட்டாள்.
ஹாண்ட்பேக்கை
இவளுக்கு இவ்வளவு
4 I
நேற்று வந்தவளுக்கு இருக்கிற
திமிரைப் பாருங்கடி. எல்லோ ரையும்போல எங்க முதலாளியை யும் ஏமாத்தலாம் எண்டு பார்த் தாளாக்கும். பாவம். அழு. அழுடி' அஜிக்கு அழுகை பெரத் துக் கொண்டு வந்தது. முகத்தை கையால் மூடிக்கொண்டு கன்டீனை நோக்கி ஓடினள். உடனடியாக றிசைன் லெட்டர் எழுதினுள். ஜனவின் ஸ்கூட்டர் திரும்பி வரும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் அமர்ந்து யோசித்தாள். அவளுக்கு உலகமே இருண்டு விட்டது போன்றிருந்தது. உல கில் உள்ள ஒவ்வொருவரும் அரக்கர்களாகத் தோன்றினர் கள். முக்கியமாக கம்பனியி லுள்ள அத்தனை பேருடைய முகமும் ஆரூபிகளாகத் தோற்ற மளித்தன,
தி டீ ரெரை எழுந்தாள். சரி செய்து கொண்டாள். ஜஞவின் ஆபிசை நோக்கி நடந்தாள். ஒசைப்படா
மல் கதவைத் திறந்தாள். ஜன
சிகரெட் புகை மண்டலத்தின் மத்தியில் ஏதோ ஆபிஸ் சிந்த னையில் இருந்தான். அஜி ராஜி ஞமாக் கடிதத்தை சமர்ப்பித்து விட்டு எதிர்காலமே இருண்ட நிலையில் பஸ்டாண்டை நோக்கி நடந்தாள். ஜஞ*அஜி. என்று அலறுவது கேட்டது. நடை முறைக்கு மாழுன முறையில் அன்று அவள் பஸ்வில் ஹஸ்டல்
போகத் தீர்மானித்து பஸ்ஸைப்
(தொடர்ச்சி 45-ம் பக்கம்) :

Page 23
வணக்கம்.
Dக்கள் தொடர்பு சாதனங்களை இட்டு ' புதிய உலகம் " இவ் வாண்டு கூடியளவுசிந்தனை செய்யு மென ஏற்கனவே (தை-மாசி, 1983) அறிவித்திருந்தார்கள். நல்ல கருத்து. வரவேற்க வேண் டியதும் கூட.
இன்றைய உலகில் மக்கள் தொடர்பு சாதனங்கள் (Mass Media) பொதுமக்களிடையே பெரும் பாதிப்பை (நல்லவை+
கெட்டவை) ஏற்படுத்தி வருகின்
றன என்பது தொடர்பியலாளர், உளவியலாளர், சமூகவியலாள ரின் ஏகோபித்த முடிவு. துறைகளில் மேல்நாட்டு நிபுணர் கள் பலர்-குறிப்பாக வடஅமெ ரிக்காவில் - நிறைய ஆய்வுகள் செய்துள்ளார்கள், செய்துவருகி ருர்கள். பொழுது அவர்களுடைய கருத்து களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைவேன்.
தமிழ்நாட்டு நாள்/வார ஏடுகள்
தமிழ் நாட்டில் உள்ள வீதி
யோரக் கடைகளிலும், பெட்டிக்
கின்றன. வரும் நாளேடுகள் வேறு.
கிட்டத்தட்ட விழுக்காடு படிப்பறிவற்றவர்கள் என்பது நான் தமிழ்நாட்டுத் தமிழர்களைப்
இத்
வாய்ப்புக் கிடைக்கும்
அன்பின் வாசக அன்பர்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த
கடைகளிலும் வண்ண வண்ணப் படங்களை முகப்பில் கொண்ட
துரங்கு
வெளி
பல்வேறு சஞ்சிகைகள்
நாள்தோறும்
ஐந்நூறு இலட்சம் மக்களுக்கு மேலாக வாழும் தமிழ்மக்களுள் ஐம்பத்துநாலு
ஒரு கணிப்பு. இங்கு
பற்றியே கூறுகின்றேன்.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வெளிவரும் ஒரு தினசரியான * தினத்தந்தி’யே இந்தியாவிலே யே மிகப் பெரிய தொகையாக வெளிவருகின்றது. அதாவது நாள் தோறும் வெளியிடப்படும் நாளேடுகளுள் எண்ணிக்கைவாரி யாக முதலிடம் வகிப்பது 'தினத் தந்தி*யே. பெரும்பான்மையான நாளேடுகள் - அவை காலையில் வெளிவந்தால் என்ன, மாலையில்
பிரசுரமானுல் என்ன, அவை ஆர்சியல் கட்சிகளைச் சார்ந்தன வையாகவே அமைந்துவிடுகின்
றன. 'தினமணி','திண்மகள்"
 
 
 

போன்ற நாளேடுகள் இதற்கு
விதிவிலக்கானவை.
இதேபோன்றுதான் பெரும் பாலான வார ஏடுகளும் அரசியல் கட்சி சார்புகொண்டே பிரசுர மாகி வெளிவருகின்றன. ஒரு பொதுப்படையான மதிப்பீடு செய்வதானல், நாளேடுகள் ஏற் படுத்தும் பாதிப்பைவிட இச் சஞ்சிகைகள் ஏற்படுத்தும் பாதிப் புகள் கூடியவை, ஆழமானவை, உறுதியுமானவை-என்று குறிப் பிடலாம். இது ஒரு விஞ்ஞான ரீதியான முடிபு அல்ல. ஆனல், மேலெழுந்தவாரியான காட்சி
sy say (Observation only).
குப்பையாகக் குவிந்திருக்கும்
சஞ்சிகைகள் ஏராளம், குமுதம், திகளை வாரந்தோறும் விற்றுவிடு
கின்றது. குங்குமம் 72 பக்கங்க
ராணி, ஆனந்தவிகடன், குங்குமம், இதயம், சாவி, கல்கி, தினமணிக் கதிர், தேவி, அலிபாபா, முத்தா ரம், மூக்குத்தி, மெட்டி, சினிமா, எக்ஸ்பிரஸ், ஜானியர் விகடன், ஜெமினி எக்ஸ்பிரஸ், பொம்மை என்று சஞ்சிகைகள் பலப்பல.
பெரும்பாலும் பெண்களுடை ய படங்களையே சஞ்சிகை முகப் பில் வண்ணப்படமாக வெளியிடு
கிறர்கள். அவ்வார சஞ்சிகையின்
கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாம
லேயே இம்முகப்புப் படங்கள்
அமையும். பான்மையும்
அவற்றுள் பெரும் சினிமா நடிகை
களின் படங்களாகவே அமையும்.
இந்தியாவிலேயே வெளிவரும்
கின்றன.
43
ஆங்கில வார ஏடுகளைப் பார்க்
கும்பொழுது இந்நிலை இல்லை. a situalDrts (India Today,The Illustrated weekly.The Sunday) போன்ற சஞ்சிகைகளைக் குறிப்
பிடலாம்.
வாரந்தோறும் குவிகின்றன
எண்பது பக்கங்களைக்கொண்ட குமுதம் வாரந்தோறும் 5,80000 பிரதிகளைவிற்பனைக்குவிடுகின்றது.
இரண்டாவது இடத்தைப்பெறும்
ராணி, 34 பக்கங்களைக்கொண்டு, 4,70,000 பிரதிகளை விற்பனை
செய்கின்றது. ஆனந்த விகடன்
80 பக்கங்களுடன் 2,60,000 பிர
ளுடன் 1,00,000 பிரதிகளை அச் சேற்றுகின்றது. இதயமும், சாவி
யும் முறையே 72 பக்கங்களுடன்
தொகுக்கப்பெற்று, ஒவ்வொன் றும் 80,000 பிரதிகளை வெளியிடு 64 பக்கங்களைக் கொண்ட கல்கி, 70,000 பிரதி களே வெளியிடும்பொழுது, அதே அளவு பக்கங்களைக் கொண்ட தினமணிக் கதிர் 65,000 பிரதி களை விற்பனை செய்கின்றது. 34 பக்கங்களுடன் தேவி 60,000
Ա. பிரதிகளை விற்பனை செய்கின் றன
வென்றல், 42 பக்கங்களைக்
கொண்ட அலிபாபா 50,000
பிரதிகளை வாரந்தோறும் தள்ளி விடுகின்றது. W

Page 24
盛艇
நீங்கள் இவற்றை வரிசைப் படுத்திப் பார்த்தால் பிரமித்து விடுவீர்கள். உண்மையிலேயே நான் அதிசயப்பட்டேன்! இவ் வளவு பிரதிகள்-இல்லை, இல்லை இன்னும் ஆயிரக்கணக்கான பிர திகள் (இன்னும் சில சஞ்சிகை களின் விற்பனைத் தொகையை நான் குறிப்பிடவில்லையே!) வாரந் தோறும் விற்பனையாகின்றனவே! பெரும்பான்மையான தமிழ் மக் கள் படிப் பறிவற்றிருந்தும் கோடிக்கணக்கான நாளேடுகளும் வாரச் சஞ்சிகைகளும் விற்பனை யாகின்றனவே !
** ஆபீசு”க்குப் போகும் பல
ருடையகைகளில் ஒன்ருே இரண்டு சஞ்சிகைகள் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். பாடசாலை,
கல்லூரி செல்லும் மாணவ மாண
விகளிடமும் இச் சஞ்சிகைகள் தவழ்வதை நான் பார்த் திருக் கின்றேன்.
தாக்கம் மறைமுகமானது
வாரந்தோறும் வெளிவரும் கோடிக்கணக்கான இச்சஞ்சிகை கள் மக்களிடையே ஒரு தாக்கத் தை ஏற்படுத்தாமல் இருக்க முடி
யாது. ',
ஒரு நிறுவனமே இரண்டு மூன்று சஞ்சிகைகளை அதுவும் வாரந்தோறும் வெளியிடுகின்றது. உதாரண மாக, குங்குமத்தை வெளியிடுவோர்தான் முத்தாரத் தையும் வெளியிடுகிருர்கள். ஆனந்த விகடனின் உரிமையாள
ரும் ஜானிய்ர் விகடனின் உரிமை யாளரும் ஒருவரே. தினமணிக் கதிர் ஆசிரியர் குழுவினர்தான் கினிமா எக்ஸ்பிரசின் ஆசிரியர் குழுவினரும். -
ஒரே நிறுவனம் ஒரே வாரத் தில் வேறுபட்ட பெயர்களுடன் சஞ்சிகைகளை வெளியிடும் அள விற்கு இவர்களிடம் விடயதானம் பெருகிவிட்டதா? அன்றேல் வேகமாக வளரும் உலகுடன் ஈடு கொடுத்து வளர முனையும் தமிழ் சஞ்சிகைகளின் Ֆւգւնւմn ?
என்னைப் பொறுத்தமட்டில் வியாபார நோக்கோடுதான் இச் சஞ்சிகைகள் பெருகியுள்ளன
என்பேன். பெரும்பான்மையான சஞ்சிகைகளின் பெரும் பகுதி சினிமா மயமாகவும் எஞ்சிய சிறு பகுதி அர்த்தமற்ற கட்சி அரசிய லும், உப்புச்சப்பில்லாத அறுத்த
சிறு கதைகளையும் கொண்டவை
யாகவே தோன்றுகின்றன.
ஒரு சமூக த்தை வளர்க்க வேண்டுமென்ற ஆசை இச் சஞ் சிகைகளிடம் இருப்பதாகத் தோன்றவில்லை. முரணுக ஒரு சமூகத்தின் சிந்தனையை மழுங்கச் செய்து, ஒர் ஆழமில்லாத் தன்மை யை உரு .ாக்கி, மந்தைக் கூட்ட மாக மக்களை வாழவே வழி வகுக் கின்றன. வார சஞ்சிகைக்குரிய ஆழமும், கனமும், பொறுப்பும், கடமையும் இச் சஞ்சிகைகளில்
காணப்படவில்லே.

மீண்டும் பெருகிக் குவியும் மசாலாத் திரைப் படங்களின் எதிரொலியாகவே இச்சஞ்சிகை களும் தோன்றுகின்றன.
தமிழ்மக்கள் நிறையப் படிக் கிருர்கள். ஆனல் பயன் தரக் கூடியவை அவற்றுள் மிக மிகச் சொற்பம். போலித்தனமும் உள் ளும் புறமும் உண்டு. சஞ்சிகை களின் பெயர்களிலேயே ஆங்கிலச் சொற்களைப் புகுத்திவிடுமளவிற்கு ஒரு போலித்தனமான நாகரிக வளர்ச்சி உருவாகிவிட்டது. இந் நிலையைத் தமிழ்த் திரைப்படங் களிலும், நாடகங்களிலும், கதை களிலும் நிறையப் பார்க்கின் ருேம். தாழ்வு மனப்பான்மை யுடன் வாழும் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பென்றே இ ைத க் கணிக்கவேண்டியுள்ளது.
மக்களின் பலவீனங்களைப்
பயன்படுத்தி வியாபாரம் செய் கிறர்கள் சஞ்சிகையாளர்கள். இதையே இன்றைய
கிய வரலாற்றில் இக்கால கட் டத்தை மிகவும் ஒர் இருண்ட காலமாக, மிகத் தாழ்ந்த கால மாகவே கருதவேண்டும். (நாவல்
இலக்கிய மாகக்கொண்டால், தமிழ் இலக்
A 5
களையும், கட்டுரை நூல்களையும், ஏனைய இலக்கியங்களையும் நான் இம்மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லையென்பதை வாசக அன்பர்களுக்கு இவ்விடத்தே ஞாபகப்படுத்துகிறேன்.)
தமிழ் நாட்டின் தமிழ் வார ஏடுகளை மட்டுமே கணக் கில் கொண்டு, அவை தமிழ்ச் சமூகத் தைப் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றன என்ற குறையை மிகுந்த மனவருத்தத்துடன் உங் களுடன் பகிர்ந்து கொள்ளுகின் றேன்
இந்தக் குப்பையையே ஈழத் துத் தமிழர்களும் இரட்டிப்புப் பணம் கொடுத்து வாங்கித் தம் மையே தாம் குறைத்துக்கொள்ளு கிருர்களே ? இவை எமக்கு வேண்டுமா ? அதுவும், இன்றைய எமது சூழலில் இவை உண்யிை யிலேயே எமக்கு வேண்டுமா ?
உங்களைச் சிந்திக்கவிட்டு, மீண் டும் எனது எண்ணங்களுடன் சந்திக்குமட்டும் அன்பு வணக்கம் கூறி விடைபெறுவது,
உங்கள் அன்பின் சகோதரன் கரவையூர்ச் செல்வம்
(41-ம் பக். தொடர்ச்சி) பிடித்து விட்டாள். பஸ்புறப்ப டவும் ஜணுவின் ஸ்கூட்டர் அந்த இடத்திற்கு வரவும் சரியாய் இருந்தது. பொத்துக் கொண்டு வந்தது. தன்னையே நம்பியிருக்கும் தனது குடும்பம், தங்கைமார், தம்பி மார் அக்கா. ராக வந்து போஞர்கள். பஸ் ஸில் உள்ள அத்தனை பேருக்
அஜிக்கு அழுகை
ஒவ்வொருவ
தான், !
கும் ஓர் காட்சிப்பொருளாக அஜி இருந்தாள். தனது அன்பு அக்கா .தங்கைமாரின் எதிர் காலம் இனி என்றுமே மலரப் போவ தில்லை. எமக்கென்று ஓர் நல் வாழ்வா! இந்த இகழும் சமு
தாயத்தில் இனியும் தலை நிமிர
முடியுமா? அஜி உட்பட அவர் கள் அனைவருமே இனி அர்ச்ச னைக்கு வராத அடுக்கு மல்லிகள்
(யாவும் கற்பனை)

Page 25
சென்ற இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டியின்
சரியான விடைகள்
敷
os
*
?y
i
o
f
(Op
畿
9Hے
6?
էվ
MWh
பலர் சரியான விடைகள் அனுப்பியுள்ளனர்
பரிசுக்குத் தெரியப்பட்டவர்:
S. விமால் விஜயராஜ் குவாடலூப் அன்னை ஆலயம் சின்னக்கடை, திருக்கோணமலை
 
 

(35 றுக்கெழு த்துப் போட்டி
2 ※※ 3 66 : " يده
| | |ଝୁଣୁଁ 一(※迷隘
戍然 .ה Ary
Aklli
முடிவு தேதி 14-7-1983
மேலிருந்து கீழ்
l.
1.
விடியற்காலை
. நளன் நாடு நகரிழந்து - புகுந்தான்
விலங்கரசன் மறைந்துள்ளான் திருக்குறளின் வேருெரு பெயர் இராமன் தன். மனைவியை ஏழை வேடன் குகனுக்கு - என்ருன் வெகுண்டெழுந்த மக்கள் தலைவர் அளித்த வாக்குறுதியைக் கேட்டு - ந்து சென்றனர்
இடமிருந்து வலம்
l.
:
9. 10.
2.
வானரசியின் வணக்கத்துக்குரிய சிறப்பு மாதம் மணமக்களின் - பார்த்துத் திருமணத்தை ஒழுங்கு செய்வர்
அன்னமிட்ட வீட்டிற் - இடலாமா ? ஆன்மா
இதற்குப் பூமியை உவமை கூறுவர் புலவோர் இது வேதனை செய்யும் - இல்லாத வாழ்வு அரிது
குற்றம்
அவதானிக்குக: புதிய உலகம் இதழ்ப் போட்டிக் கூப்பனில் மாத்
திரம் நிரப்பியனுப்புக. மற்றவை நிராகரிக்கப்படும்

Page 26
வெளியே
(கவியரசர் தாகூரின் கவிதை
யொன்றின் தழுவல்)
യ്ല.
- லெஸ்லி - கொழும்பு-6
Dலரும் தீபமும் மந்திரங்களும், பூசைகளும் மாத்திரம் போது
மென ஆலயத்தின் உள்ளே
இருந்தே விடாதே. A.
வெளியே வா. கடவுள் உன் முன்னுல் இருக்கிருர்,
விழித்துச் சிந்தனை செய்து பார்.
நிலத்திற்
நிலத்தைப் உழவ
நெற்றி வியர்வை சிந்தி, வரண்ட பிளந்து பண்படுத்தும் னின் பக்கத்திலே பார்.
பாறைகளைக் குடைந்து பாதை
களை அமைக்கும் பாட்டாளியின்
துன்பத்திலே தோள் கொடுத்த வண்ணம் அதோ தோற்றுகிருர்,
தூசி படிந் து வெயிலிலே நடுங்கி நிற்கும் மக்களோடு அவர் கூடவே இருக்கிருர்,
வெளியே வா,
உன் ஆடைகளைக் களைந்தெறி. துன்பங்களுக்குப் பயந்து மறையாதே. ஒடி ஒளி யாதே. மண்ணிலும் சேற்றி லும் நடந்து வெளியே வா.
துரிய
துயரங்களின் நடுவிலும் கண் aரின் மத்தியிலும் ஏழ்மையின் இடையிலும் கைதாங்கி நிற்கும் இறைவனைக் காண்பாய்.
உலகின் அன்ருட வாழ்வில் நீ கலந்து கொள்வதே கடவுளு டன் கலந்ததாகிறது.
இறைவன் சருவ வியாபி. வாழ் வில் எங்கும் அவர் பிரசன்னமா யிருக்கிருர்,
உழைப்பும் உண்மையும் எளி மையும் எங்கிருக்கின்றன வோ அங்கெல்லாம் அவர் பிரகாசித்த வண்ணமிருக்கிருர் .
அவரைக் காணவிரும்பினுல், பொதுவாழ்விற் கலந்து கொள் . பொதுத் தொண்டு வாழ்விற் புகுந்து துணி வுடன்பாடுபடு, சுத்தமாய் நட. துன்ப துயரங்களில் ஈடுபடு. கண்ணிரைத் துடை. ஏழைக ளின் தோழமை கொள். அப் போது அவரைக் கண்டறிந்து அநுபவிப்பாய்.

1. ம லை ய கத் தமிழ்மக்களின் வாழ்வில் விடிவே வராதா ?
உலகநாதன், கோவுஸ்ஸ எல்ல.
விடிவைக் கொடுக்க வேண்டிய வர்கள் மனந்திரும்பும்வரை அது இலகுவானதல்ல.
2. அரசியல் தலைவர்கள் சிலர் தேர்தல் வந்தவுடன் மக்களைச் சந்திக்கிருர்கள். பின்னர் மறந்து விடுகிருர்களே.
ம. பிறின்ஸ்லி டயஸ்,
வங்காலை.
பிணமிருக்குமிடத்தில் கழுகு கள் வருவது இயல்பு. பதவியென் பது ஒரு பசி, அந்தப் பசியைத் தீர்ப்பதற்குப் பிறரைப் பிணமா கக் கருதுவதும் அரசியல் தந்திர மாகிவிட்டது.
3. கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்க ளுக்கிடையே தொடர்பு உண்டு என்கிருர்கள். உங்கள் கருத்து என்ன ?
அ. றஞ்சிற் பிள்ளைநாயகம், யாழ்ப்பாணம்.
" கிறிஸ்தவர்கள் - மு ஸ் லி ம்
களின் பெயர்கள் பல தொடர் புள்ளவையாக இருக்கின்றன.
உ + ம் - மிரியம் = மரியாள் இஸ்ராயேல் மக்களிடமிருந்து தோன்றியதொரு இனமாக முஸ் லிம்களைக் கணிக்கின்றர்கள் பிள் அடிப்படையில்.
6)
4. மத குருமாரைக் கைது GoJFuin
செய்தமைபற்றித் தங்கள் அபிப்
பிராயம் என்ன ?
விக்ரர் குமார், நாரந்தன. இயேசுக்கிறிஸ்து கூறிய வார்த் தைகளை நினைவில் கொள்வோம். " என் பெயரின்பொருட்டு உங்க ளைப் பிடித்துச் செபக்கூடங்களுக் கும், சிறைச்சாலைகளுக்கும் இழுத் துச் சென்று அரசர்களுக்கும் தலை வர்களுக்கும் உங்களைக் கையளித் துத் துன்புறுத்துவர். எனக்கு நீங்கள் சாட்சியாய் இருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பளிக் கும்."
(லூக், நற்செய்தி 21 : 12-13)

Page 27
புத்துலகு எதுவும் பழசாகி எல்லாம் கசப்பாகி முதியபல சிந்தனையில் மூழ்கிக் கிடக்கையிலே புதிய உலகத்தில் போனதுவே என்பார்வை !
அதிகம் உரைப்பானேன்?
ஆச்சரியம்! ஆச்சரியம் !
நல்ல விலையுந்தான்! நல்ல தரமுந்தான்!
எல்லாம் அளவோடு இருக்கும் உலகமிது!
பல்லோரும் இவ்வுலகில் பங்குபெறமுடியும்
இல்லாவிடில் யாம்ை எழுதமுயல்வேஞ?
கதையா கவிதைகளா? கட்டுரையா சிற்றுரையா?
எதையான் முதலென்பேன்? இறுதி எதுவென்பேன்? அதையான் வரியாக்கி அடுக்க முயலாமல் இதையே எழுதுகின்றேன் எழுதுகின்ற ஆர்வத்தால்!
இரவைப் பகலாக்கி எழுதிப் பழகியநம்
கரவையூர்ச் செல்வத்தின் கைக்கோலே கோலாகும்! அரவங்கள் இல்லாமல் அமைதிவழிச் சென்றே பரவட்டும் புத்துலகால் பைந்தமிழும் LuaioTuTGluh !
இருதிங்கள் இவ்வுலகம் இனிமேல் எதிர்காலம்
ஒருதிங்கள் என்கின்ற உலகாய் உலவட்டும் உருவாக்கி இப்புதிய உலகம் பலபேரை வருமென்று நம்புகிறேன்! வாழ்த்தவிழைகின்றேன்!
O சித்திரைப் புத்தாண்டில் புது மையுடன் மலர்த்திட்ட புதிய G) கமே நீண்ட நாளுக்குப்பின் சிறு வர் உலகு இடம்பெற்றது கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.
*சபாஷ் ஆனந்த்' சிறுகதை கொழுத்த சீதனம் வாங்கித் திரு மணத்தை வியாபார மா க் கும்
" தாமரைத்தீவான் "
3зғпт. இராசேந்திரம், ஈச்சந்தீவு, கிண்ணியா.
தாய்மாருக்கு ஒ சவாலாக அமைந்துள்ளது. அணிசேரா மா நாட்டின் உண்மைகளை அப்பட்ட மாக்கி பூரீலங்கா ஜனதிபதி வெளி
வேடத்தை மிகத்தெளிவாக எடுத்
துக்கூறிய கரவையூர் அண்ணு
விற்கு எனது பாராட்டுக்கள். ஆ நிர்மலன், மாரீசன்கூடல்,
 

"புதியதோர் உலகம்" காணப்
புவிIசை உழைத்த செம்மல்! பதிந்தபேர் உளத்தி லென்றும் பாரதி கவிஞன் வாழ்வில், உதிர்ந்தவோர் கோடிப் பாடல்
உலகினை மாற்றி வைத்த, கதையினை அறிந்தோம்! நீயும்; காசினி தன்னை மாற்று!"
புதுப்பொலிவோடு புத்தாண்டு மலராக வெளிவந்த "புதிய உல கம்" கண்டேன்! எண்ணியதை எண்ணியபடி எழுதுகிறேன்" அருமை. "சுதத்திரத்தின் காவல் நாய்" நடுவு நிலையினின்றும் நற் சிந்தனை தருகிறது. " கவிஞர் யாழ். ஜெயம்" எழுதிய கவிதை மிகமிக நன்று. இலக்கிய கர்த் தாக்கள் தீட்டிய ஏனைய அம்சங் களும் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தது. புதிய உலகமே! இடுக்கண் ஏதேனும் இன்றித் தொடர்க நீடு
அ. கெளரிதாசன் வள்ளுவன் வீதி, ஆலங்கேணி கிழக்கு, கிண்ணியா.
O
பங்குனி-சித்திரை இதழ் மிக
நன்ருக இருந்தது. “சிறுகதை' சிந்தித்துச் சீர்திருத்தத்தை ஏற்
படுத்தியது. " குறுக்கெழுத்துப் போட்டி" முன்பிலும் இலகுவாக இருந்தது பாராட்டற்குரியது.
"இளமை போகுமுன்" இனிமை итд. (9)(Ђjigy. “o-fiiiiah итri வை"யும் "எண்ணியதை எண்
"ணியபடி எழுதுகிறேன்"
பகுதி யும் புதுமெருகுடன் திகழ்கின் றன. "புதுமைப்பதில்’’ புதுமை யாக இருந்தது. மொத்தத்தில் பங்குனி-சித்திரை இதழில் எந்த விதக் குறையுமே இருந்ததாகத் தோன்றவில்லை.
விக்ரர் குமார்,
நாரந்தனை,
O
இது நான் புதிய உலகத்திற்கு வரையும் முதல்மடல். சென்ற புதியஉலக மலர் பார்த்தேன். அதில் உள்ள நிகழ்ச்சிகள் யாவும் பொருளும் சுவையும் கொண்ட தாய்க் காணப்பட்டது. இதனைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண் டேன். இதேபோன்று Lisair
மேலும் புதிய உலகம் எனது ஆசிகள்.
சிறப்பாய்
அ. மெலானி அல்பேட், ** பியோஸ்டன் ** கரம்பொன், ஊர்காவற்றுரை.
O
சென்ற புதிய உலக புத்தாண்டு சிறப்பு மலர் மிகவும் சிறப்பாய் இருந்தது. இதில் இருந்த ஆக் கங்கள் அனைத்தும் மிகவும் நன்று. மேலும் தொடர்ந்து புதிய உல கம் சிறப்புடன் மலர எனது நல் லாசிகள்.
அ றஞ்ஜிற் பிள்ளைநாயகம்.
யாழ்ப்பாணம்.

Page 28
சந்தாதாரர் 8
உங்களது ஆண்டுச் ச புதுப்பியுங்கள்
சந்தாப் பணத்தை :ெ கம், نئیے۔ = பெ. TGIF முகவரிக்கு அனுப்பில
உங்கள் முகவரியில் மr முகவரியை எமக்கு அ
எங்களேர்டு தொடர்பு கள் சந்தா இலக்கத் தீர்கள்.
மனியோர் மூலம் பண செய்து உங்கள் ப்ெபுரை குத் தெரிவிக்க மறக்கே
புதிய உலகம் தனிப் ரூபாய் 2-50,
ஆண்டுச் சந்தா ரூபா வில்வைத்திருங்கள்.
புனித வளன் கத்தோலிக்க

கவனத்துக்கு
ந்தாப் பணத்தைப்
வளியீட்டாளர், புதிய உல 2. யாழ்ப்பாணம் எனும் வையுங்கள்.
"ற்றம் ஏற்பட்டால் புதிய னுப்பிவையுங்கள்.
கொள்ளும்பொழுது உங் தைக் குறிப்பிடத் தவரு
த்தை அனுப்புவோர் தயவு "யும், விலாசத்டிையும் எமக் வண்டாம் .
பிரதியின் விலே
ப் 15-00 என்பதை நினே
- வெளி யீட்டாளர்
அச்சகம், யாழ்ப்பாணம்