கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகந்தம் 1988.08-11

Page 1
இனமத பேத கலே கலாசார
நான்கு மாத கலே கலா
செண்டு - 1
 

988 ஆவணி - கார்த்திகை
ம் எமக்கில்லை மே எமதெல்ல
சார மறுமலர்ச்சி மலர்
விலே ரூபா 6.

Page 2
இலங்கைத் திருநாட்டின் இன்றைய நாகரீகத்தை எமது தைத்த ஆடைகளே வெளிப்படுத்துகின்றன.
அதனல் தான் நாடு முழுக்க. எமது தைத்த ஆடைகள் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரிடமும் அமோக வரவேற்பைப் பெற்றுவிட்டன
மெக்சிக்கன் இன்டஸ்ற்றீஸ் 368, கஹட்டபிட்டிய, கம்பளை, தொலைபேசி: 08 - 52525
 

சுகந்தத்தின் வினவும்
சுதந்திரமான விளக்கங்களும்
தற்போது நாட்டில் ஆன்மீக நாட்டம் அதிகரித்து வருகின்ற அதே வேளையில், அமைதியும் அருகிக்கொண்டு வருவதையும் அவதானிக்கமுடி கின்றதல்லவா? எனவே, நாட்டின் தற்போதைய அமைதியின்மைக்குச் சமயரீதியான விளக்கங்களை நாம் பெறமுனைந்தோம். அதன் பெறுபேறு களை உங்கள் வசம் தருகின்ருேம்.
1. இந்து சமயரீதியான விளக்கம்:
அளிப்பவர்: "சைவமாமணி, பண்டிதர். வி. விசுவலிங்கம் அவர்கள்
மனிதன், தான் முற்பிறப்புக்களிற் செய்த வினைப்பயனை நுகர்வதற் காகவே மண்ணிற் பிறக்கிருன் என்பது சைவசமயக் கோட்பாடு, இந்த வினை, சஞ்சிதம், பிராரத்துவம், ஆகா மியம் என மூவகைப்படும். இவற் றுள் சஞ்சிதம் என்பது, முந்திய பிறப்புக்களிற் செய்து அவற்றின் பயனை அனுபவியாது எஞ்சிநிற்கும் வினைத்தொகுப்பாகும். இப்பிறப்பில் அவற் றின் பயனை நுகரும்போது அது பிராரத்துவ வினை எனப்படும். இந்தப் பிராரத்துவ வினையை அனுபவிக்கும் போது, மேலும் இப்பிறப்பிற் செய்யப்படும் வினை ஆகாமியம் எனப்படும். இவற்றின் பயனை, இப் பிறப்பிலும், அடுத்த அடுத்த பிறவிகளிலும் அனுபவிக்க வேண்டும் என் பது நியதி. ஆகவே, மக்களின் தற்போதைய அமைதி இன்மைக்குக் காரணம் தற்போது அனுபவிக்கும் மேற்கூறப்பட்ட பிராரத்துவ வினை யேயாம். இது, முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்யப்பட்ட வினைப் பயன்களே. இவற்றில் எஞ்சியுள்ள வினைகளை மறு பிறப்புக்களில் அனுப விக்க வேண்டும்.
ஆன்மா, நால்வகைப் பிறப்பு, ஏழுவகைத் தோற்றம், எண்பத்து நான்கு நூருயிர யோனிபேதங்களிற் பிறந்து, இறந்து, உழன்று, படிப் படியாகச் செய்த நல்வினைப் பயஞல் மானுடப் பிறவி எடுக்கின்றது. இது, அறம் மறம், அன்பு வன்பு, நன்மை தீமை, பாவம் புண்ணியம் முதலியவற்றைப் பகுத்தறியும் தன்மை வாய்ந்தது.
"உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் எவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே’
என்று கம்பநாடர் கூறுவதுபோல், பகுத்தறிவு படைத்த மனிதன் எம்மதத்தவனயினும், அறநெறியில் வாழ்ந்து இறைபக்தி பூண்டு அவனைச் சரணடையவேண்டும். அஃதின்றேல் தான்செய்த வினைப்பயனை
01

Page 3
அனுபவித்தே தீரவேண்டும். கடவுளருளால் ஒளிமுன் இருள் போல் தீவினை அகலும், இறைவழிபாடு செய்வதால் வினைப்பயன் இலகுவாகும். மலைபோல் வரும் தீமை பணிபோல் மாறும். இந்த வினையை நம்மவர் ஊழ்வினை என்றும், விதி என்றும் கூறுவர்.
"வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை"
என்று நீதிநூல் கூறுகின்றது. நிரபராதியான பட்டினத்தடிகள் தான் துன்புறுங் காரணத்தை உணர்ந்து பின்வருமாறு பாடுகிருர்,
என்செயலாவது யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன்செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினையே இங்ங்னே வந்து மூண்டதுவே"
தெய்வமே! யான் இப்பிறப்பில் எவ்வித தீயசெயலும் செய்யவில்லை. இது, முற்பிறப்பில் யான் செய்த வினையின் பயனுகவே கிடைத்துள்ளது என்று இறைவனிடம் மனங்கசிந்து உருகுகின்றர். இதன்மூலம், பழவினைப் பயன் காரணமாகவே தற்போதைய அமைதியின்மை ஏற்பட்டுள்ளது என நிச்சயிக்கலாம்.
'ஊழிற் பெருவலி யாவுள' மற்றென்று
சூழினும் தான்முந் துறும்"
என வள்ளுவப் பெருமான் கூறுவதை நோக்குவோம். ஊழை விலக் குவற்கு ஏதாவது உபாயத்தைச் செய்தாலும், அவ்வுபாயத்தால், அல்லது வேருெரு வழியால் அந்த ஊழே முற்பட்டு நிற்கும். ஆகவே, ஊழின் வலியது யாதுமில்லை. நாம் இன்று அனுபவிக்கும் இன்ப துன்பங் களுக்கு நாமே காரணர். செய்த தீவினை செய்வதற்கே என வையஞ் சொல்லும் வழக்கு மற்றுண்மையே. இன்றைய துன்பநிலையிலிருந்து விடுபட இறைவனருளே துணைச் செய்ய வேண்டும். அடுத்த பிறவியிலா வது இன்பவாழ்வெய்த இறைபக்தி, அன்புநெறி, அறவாழ்வு முதலிய நன்னெறிகளைக் கடைப்பிடித்துச் சன்மார்க்க சீலராய் வாழ்வோமாக.
2. கிறிஸ்தவ சமய ரீதியான விளக்கம்:
அளிப்பவர்: பாஸ்ரர் வண தயா. இராசையா அவர்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மால் தெரிந்து கொள்ளப் பட்ட, தம்முடைய நாமத்தை தரித்த சபையை (உலகெங்கும் உள்ள இயேசுவை விசுவாசிப்பவர்கள்) குறித்து பேசுபவர்கள் நீங்களே இப் பூமிக்கு உப்பாயும், வெளிச்சமாயும் இருக்கின்றீர்கள் என்று கூறினர்.
02

மத் (5, 13, 14) வெளிச்சம் என்பது பல அம்சங்களுடன் ஆவிக்குரிய உணர்வையும், சபையில் நல் முன்மாதிரியான வாழ்க்கையும் குறிக் கின்றது. உப்பு என்பது அதன் பண்புகளில் ஒன்ருகிய பழுதடையா மல் பாதுகாக்கும் தன்மையை உணர்த்துகிறது. இவற்றின் மூலம் கிறிஸ்துவின் சபை இவ்வுலக மக்களுக்கு ஒரு நோக்கமுள்ள, அர்த்த முள்ள வாழ்க்கையையும் மனிதன் தன்மேல் தானே உருவாக்கும் அமை தியின்மையில் இருந்தும் அழிவு ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பையும் உருவாக்கவேண்டும் என்று அதன் தலையாகிய கிறிஸ்து எதிர்பார்க்கின் றர் என்பது புலனுகிறது.
ஆகவே இன்றைய அமைதியின்மையினுல் புண்பட்டிருக்கும் மனித இதயங்களை குணப்படுத்தி அமைதியை நிலைநாட்ட சபைக்கு சொடுக் கப்பட்டிருக்கும் பொறுப்பில் இருந்து அது தவறியிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. கிறிஸ்தவர்கள் இந்நிலையில் சமாதானத்தையும், அமைதியையும் மனித உள்ளங்களிலும், நாட்டிலும் உருவாக்க பொறுப் புடன் செய்யவேண்டியதை என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங் களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினுல் அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன் (நாகை 7 : 14) என்று தெளி வாகக் கூறுகின்றது.
3. இஸ்லாமிய ரீதியான விளக்கம்: அளிப்பவர்; அல்ஹாஜ். மெளலவி. என். இஸ்மத் அவர்கள்
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி 'உங்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் உங்களின் வாலிபர்கள் பாபத்திலீடு படுவார்கள், உங்களது பெண்கள் நெறி தவறி வாழ்வார்கள் "மக்கள் அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதை விட்டுவிடுவார்கள்" என ருர் கள். அப்போது நபித்தோழர்கள் "இப்படியும் மக்கள் நடப்பார்களா? நாயகமே' என்றனர். தொடர்ந்து நாயகம் அவர்கள் "ஆம், நடப் பார்கள். அப்படி நடக்கும் காலம் வந்துவிட்டால், அதற்குப் பின் ஒரு காலம் வரும், அதில் மக்கள் நன்மையை ஏவுவதை விட்டு விடு வார்கள், தீமையைத் தடுப்பதையும் விட்டுவிடுவார்கள்' என்ருர். அப்போது நாயகத் தோழர்கள் "இப்படி நன்மையை ஏவாமலும், தீமையைத் தடுக்காமலும் மக்கள் இருப்பார்களா?' என்று மீண்டும் நபித்தோழர்கள் கேட்டபோது "ஆம், இந்நிலை ஏற்பட்டால் அதற்குப் பின்னும் ஒரு காலம் வரும், அதில் நன்மையைத் தீமையென்று மக்கள் கருதுவார்கள், தீமையை நன்மையென்று மக்கள் கருதுவார்கள்" என ருர் நபி(ஸல்) அவர்கள். "இப்படியும் மனிதர்கள் செய்வார்களா? நாய
03

Page 4
கமே" என்று ஸஹாபாக்கள் கேட்டபோது "ஆம், இதற்குப்பின்னும் ஒரு காலம் வரும், அதில் வாழும் மக்கள் தீமையை மக்களுக்கு ஏவு வார்கள். நன்மை செய்வதைத் தடுப்பார்கள். இந்நிலை மக்கள் மத்தி யில் ஏற்பட்டுவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மத்தியில் கடும் பிரச்சனைகளை, குழப்பத்தை உருவாக்குவான் அதனை நிவர்த்தி செய்ய எத்தனிக்கும் புத்திசாலிகள் அனைவருமே தடுமாறிக்கொண்டிருப் பார்கள்" என்ருர்கள்.
(அல்-ஹதீஸ்)
ஆகவே தற்கால அன மதியின்மைக்கான சகல விளக்கங்களும் மேற் கூறப்பட்ட மணிமொழியில் அடங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. எனவே மனித சமூகமானது இவ்விடயங்களை நன்கு ஆராய்ந்தறிந்து இஸ்லாம் கூறும் நல்வழியில் நடக்க முற்பட்டால் சகல பிரச்சனைகளை யும் எல்லாம் வல்ல அல்லாஹ் சீராக்கி விடுவான்.
புத்த சமயம், வன்முறைகளையோ, மனிதக்கொலைகளையோ அனுமதிக்கவில்லை. சாந்தி, சமாதானம், ஜீவகாருண்யம் முதலிய அரும்பண்புகளையே போதித்துள்ளது. மக்கள் சமயங்கள் காட்டி யுளள வழிகளில் ஒழுகினல் விரைவிலே நம் தாய்நாடடில் சமயப் பண்பாடுகளைப் பின்னணியாகக் கொண்ட ஒரு தார்மீக சமுதா யத்தை உருவாக்கமும யும்.
இளம் சந்ததியினருக்கு சமயக் கல்வியைச் சரியான முறையில் புகட்டவேண்டும். புத்த சமயத்தவர்கள் புத்தமதக் கோட் பாடுகளையும், கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதற்கு முன்வருதல் அவசியம். சமயச் சூழ்நிலையில் வாழ்க்கை அமையும்போது, மனி தன் வழிதவறிச் செல்வதற்கு இடமில்லாது போய்விடும்.
வென்னப்புவ சமய விழாவில், வடமேல் மாகாண ஆளுநர்
திரு. டி. பி. வியதுங்க,
-நன்றி தினகரன்--
எண்ணும் - எதிர்காலமும் எமது பிரபல எண்சோதிட நிபுணர் எண்சோதிட ரீதியாக உங்கள் கால பலன்களை கணித்துக் கூறுவார்.
04

கோழியைக்
காணுமல்
கொம்புகிறள்
நாகம்மா
செ. குணரத்தினம்
(1) கோழியைக் காணுமல்
கொம்புகிருள் நாகம்மா
'காளிக்கு நேர்ந்துவிட்ட
கரும்புள்ளிச் சாவலிது!
வேலிக்கு மேல் தங்கும்
வேறெங்கும் போகாது!
பாவியர்கள் யார் பிடித்து
பதைபதைக்கக் கொன்
ருரோ!
x
() பாழ்பட்டுப் போவாரே! பறவை தின்ருேர் வாழ்
Goloudivovnrub
பாழ்பட்டுப் போகாதோ
பதைக்குதடி என்மனது!
(3) வெள்ளிக் கிழமைவரை
விரதம் இருந்துநான் கள்ளிகளைக் காட்டுஎன்று
காளித்தாய் சூலத்தில் அள்ளி முழுகியொரு
ஐம்பது சதமெடுத்து வெள்ளி முளைக்குமுன்னுல்
வரிந்து கட்டப் போறேன்
நான்
இப்படியே நாகம்மா
இளைத்திளைத்துக் கொம்
புகிருள் தப்பறியாக் கீரியொன்று
தள்ளியொரு பற்றைக்குள்
காளித்தாய் பொறுப்பாளா? ஒப்பரிய சேவலதை
உருசிபார்க்கும் சங்கதியை
எப்போது இவளறிந்து
இளைப்பாறப் போகிருளோ?
கண்டிப்பாய் அவளெந்தன் கோழியைத் தின்றவரைக்
கொல்லாமல் விடமாட்டாள்!
OS

Page 5
கல்முனை - கொழும்பு
கொழும்பு - கல்முனை
குறுகிய நேரம்! குறைந்த கட்டணம்!! குதுகலப் பயணம்!!!
Gଗ மற்றே ரவல்ஸ் METRO TRAVELS
ஆசனப் பதிவு,
நிவா? எலக்றேண்ஸ் பெரிய கல்லாறு = 1. கல்லாறு.
யூனிக் கட்டிங் 150, செட்டியார் தெரு, கொழும்பு
மேடை நிகழ்ச்சிகள் எதுவாயினும் சிறந்த
ஒலி ஒளி அமைப்பிற்கு அனுபவசாலிகளான எம்மை நம்பிக்கையோடு நாடுங்கள் :
நிவா எலக்றேண்ஸ் பெரிய கல்லாறு - 1 கல்லாறு,
06

றேசால * r , 30 40 19అu్న." Goğrı"nur"... ་་༠ཀྱ༧ཀ་སr”.... உள்ளத்தின் ஊற்று (பிரபா)
பரந்த அளவில் பல கழகங்கள் ஸ்தாபனங்கள் உருவாகியிருக்கின்றன. உருவாகிக்கொண்டு வருகின்றன. ஆனல் ஒரு சில கழகங்களே தோன்றி தனது நோக்கங்களை செவ்வனே நிறைவேற்றி நிலைத்து நிற்கின்றன. இந்த வரிசையில் 1977 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1978 ம் ஆண்டு மட்டக்களப்பு கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட எமது றோசாலயா கலை கலாசார பொது சேவை நிலையம், பத்து வருடங் களுக்கும் மேலாக தனது சேவையில் தனித்துவமாக இயங்கி இன்றும் நிலை நிற்கின்றதென்பதைக் கூறிக்கொள்வதில் பெருமையடைசின்றோம்.
இக்கழகம் எவ்வாறு தோன்றியதென்பது எமது கிராமத்தின் வழ மையான நடைமுறைக்குப் புறம்பானதும் புதிதானதுமாகும். 'சாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலே இனம். மதம் என்பவற்றை ஒரு புறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு எல்லோரும் ஓரினம் என்ற பொது நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இக் கழகம். இவ் வாறான ஒரு நன் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதனாற்றனோ என் னவோ இக் கழகம் தொடர்ந்தும் தனதுசேவையை விஸ்தரித்துக் கொண் டிருக்கின்றது என்றுகூறினல் அது மிகையாகாது.
மற்றய கழகங்களைப் போல இதுவும் இடையில் தூர்ந்துபோகக் கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இதன் ஆரம்ப கால உறுப்பினர்கள் புது உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதில் சில கட்டுப்பாடுகளையும், அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் மட்டுப்படுத்த லையும் மேற்கொண்டிருந்தனர்.
இக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் இதன் ஆரம்ப நட வடிக்கையாக கலை, கலாசாரத்திலேயே தனது பங்களிப்பைக் கொடுத் தது, தமிழரின் பாரம்பரியக் கலைகள் வளர்ச்சிபெற வேண்டுமென்ற நோக்கத்தில் சில நாடகங்களை மேடையேற்றியது. பலரின் பாராட் டைப் பெற்ற சில நாடகங்கள் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் எமது பகுதியிலுள்ள சிறுமியருக்கான பரத நாட்டிய வகுப்பொன்றை ஆரம்பித்து அதன்மூலம் எமது சிறுமியர் பரதநாட்டியத்தைக் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
07

Page 6
முழுக்க முழுக்க கலையின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டிருந்த வேளையில், சில அங்கத்தவர்களினால் மாணவர்களின் கல்வியறிவு விருத் தியிலும் நாம் பங்கு கொண்டாலென்ன என்ற வின எழுப்பப்பட்டு அது வரவேற்கப்பட்டது. இதன் ஆரம்பம் செயற்பாட்டில் 1977 ம் ஆண்டு மார்கழி மாதத்தில் க. பொ. த. (சாதாரணதரப்) பரீட்சைக்குத் தோற்ற விருந்த மாணவர்கட்கு இலவச மீட்டற்பயிற்சி வகுப்பொன்றை பெரிய கல்லாறு மகா வித்தியாலயத்தில் நடாத்தியபோது இவ்வூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது அயற்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்க ளும் இவ்வகுப்புக்கள் மூலம் பயனடைந்தனர். சகல வகுப்புக்களும் "ருே சாலயா” அங்கத்தவர்களினலேயே நடாத்தப்பட்டதென்பது மறக்க முடியாத உண்மையாகும்.
-செயலாளர் ருே சாலயா
(தொடரும்)
நுகர்ச்சி *விஷோ ஸ்ரோசின் கேவைகளை விசேட தயாரிப்பு த ர்ச்சிே *விஷோ ஐஸ் பழம்' முகமலாச uTG
முழுமையாக விருப்பப போல் குளிர் மேற்கொள்ள பானங்களையும், ஏனைய நாடுங்கள்
நுகர்ச்சிப்பொருட் களையும், தெரிவு செய் லெட்சுமி
6 O
விஷோ ஸ்ரோஸ் ஸ்ரோர்ஸ்’ பிரதான வீதி,
பெரியகல்லாறு - 1 ஊர் வீதி, உரிமையாளர்:- பெரியகல்லாறு. திரு. இ. பாக்கியராஜா.
08

தாரகை ஆசிரியர் தரும் சிறுகதை
எல்லை
வேம்பு
கண. மகேஸ்வரன்
இரு லொறிகளில் வந்திறங் வீட்டுத் தள பாடங்களைப் இவன் பிரமித்துப்
கிய பார்த்ததும் போனன்.
இவ்வளவு பொருட்களோடு இவர் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறிவிடுவாரோ என்ற அச்சம் இவன் மனதை மெல்ல உராய்ந்தது. அக்கம் பக்கத்திலுள்ள தன் னேச் சார்ந்தவர்களுடன் இவன் கதை கொடுத்துப் பார்த்தான். ஒரு மித்த அபிப்பிராயமே அவர்களி டத்திலும் இருப்பதை உணர்ந்த போது அடிமனதில் ஆத்திரம் புகை யத் தொடங்கியது.
இதுபற்றிக் கதைப்பதற்கு இவனே பொருத்தமானவனென் றும், இப்பொழுதே இதற்கொரு முடிவு கட்டவேண்டுமென்றும் அய லவர் ஒதியதில் இவன் சற்றுத் துணிச்சல் பெற்றன்.
அந்த வீட்டின் உரிமையாள ராகிய மேல்வர்க்கப் பிரமுகரான அவரிடம், தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பின் பிரதிநிதியாகிய இவன் கேட்டான்.
'guur, சொல்லிறனென்று கோபிக்கக்கூடாது . இவற்றை பார்வையும் போக்கும் அவ்வளவு
நல்லதாய்ப் படேல்லை . ஆளை இதிலை . எங்கடை பரம் பரிய பூமியிலே இருக்கவிடிறதாலை இக்கணம் பெரிய கரைச்சலுகள் வரப்பார்க்கும். கொஞ்ச நாள் பொறுத்தாவது ஆளை எழுப்பிறது தான் நல்லது .'"
இந்த
"" ஏன்? உங்களுக்கென்ன கரைச்சலாம்? அந்தாள் உம்மடை பெண்டு பிள்ளையளைக் கையிலே பிடிச்சிழுத்தவரோ..? உங்களாலை
அவருக்கேதும் கரைச்சல் வந்தால்
பிறகு நான் என்ன செய்வனென்று எனக்கே தெரியாது. ஒ . " என்று கறுவினர் அவர்.
"எங்களாலை என்னையா கரைச் சல் வரப்போ குது? இப்ப இல்லாட் டாலும் உவராலைதான் எங்களுக் கும் உங்களுக்கும் கூட ஏதும் வில் லங்கம் வரப்பார்க்கும்.’ இவன் அமைதியாகச் சொன்னன்.
"என்ரை அலுவல் எனக்குத் தெரியும். உம்மடை அலுவல jšíř பாரும். என்ரை வீட்டை அவருக் குக் குடுத்திட்டு அவற்றை வீட்டிலை நான் இருக்கிறன். கொழும்பிலை எனக்கொரு வீ டெடுத்துத்தர உம் மாலை ஏலுமோ-?' பெரியதொரு உண்மையைப் புகட்டிவிட்ட திருப் தியில் அவர் மெல்ல நகர்ந்தார்.
09

Page 7
இவன் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும் பினன்.
அதன் அவர்கள் எதையோ பேசிக்கொண்டது இவ
னுக்குத் தெளிவாய்க் கேட்டது: ஆனல் புரியவில்லை.
அந்த வீட்டுக்குப் புதிதாகக்
குடிவந்தவர் வன இலாகா அதி என்பதையும் , பெரும் பான்மை இனத்தவரான அவருச் குப் பல பெரியகைகளோடு தொடர் பிருப்பதாகவும் அறிந்தபோது, அவருடன் வீண் வம்புக்குப் போகக் கூடாதென்று இவன் ஒதுங்கிக் (as ir arfer fra Göt.
இவன் எவ்வளவு தூரம் ஒதுங்கி ஒதுங்கிப் போனலும், இவனது சமூ கத்தவர் இவனை விடுவதாயில்லை.
இவனது சமூகத்தில் இவன் நடுத்தர வயதினன் ஆஞலும், ஒர ளவு படித்து, முதியோரிடையேயும் பெரு மதிப்புப் பெற்றவனுயிருப்ப தால், அவர்கள் வேண்டுதலை இவ னல் புறத்தொதுக்கவும் முடிய வில்லை. .
எதை எப்படிச் செய்வது, எதை விட்டொழிப்பது என்று, இந்த இரண்டுங்கெட்டான் மன நிலையில் இவன் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
இவனது வளவையும் அடுத்த வீட்டுப் பிரமுகரின் வளவையும் வேறுபடுத்திப் பிரிக்கும் அந்த வேலியின் நடுவே, ஒரு காலத்தில் எல்லை பிரித்துப் போடப்பட்ட அந்த வேம்பின் தாழப்பதிந்த கிளை
(9
யொன்று சடைத்துக் குழை பரப் பியிருந்தது. இவனது எல்லைக்கப் பால் அந்த வளவுக்குள் தலை சாய்த் திருந்த ஒரு கிளையில் இவனது ஆடொன்று எட்டிக் குழை பறித் துத்தின்றது.
அடுத்த வீட்டில் புதிதாகக் குடிவந்திருக்கும் அந்த அதிகா? யால் அதைப் பார்த்துக் காண்டு சும்மா இருக்கமுடியாமல் போகவே, காடு வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டை நோக்கி ஓடி வர, விருத்த வயதில் வளர்ந்து கொண்டிருக்கும் இவனது மகன் அதைக் கண்டு கொதித்துத் துள்ள ஒரே அமர்க்களமாகிவிட்டது
'வாடா இஞ்சாலை. உன்னை ஒரு கை பார்க்கிறன் . " கான்று இவன் மகன் சத்தம் போட, கத் தியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந் தவர் சிறிது பின்வாங்கியதில் இவ னுக்குக் கொஞ்சம் ஆறுதலாகவி ருந்தது.
சமாதானப் பிரியனை இவன், 'ஐயா , அவன் சின்னப்பிள்ளை. அறியாமல் சத்தம் போடுகிறன்' என்று மகனுக்காக வக்காலத்து வாங்கிய அதே வேளை, மகனையும் இரண்டு திட்டுத் திட்டி அமைதி யாக்கிளுன் இவன்.
அவ்வளவில் அந்த விசயம் முற்றுப் பெரு தென்று இவனுக்குச் சர்வ நிச்சயமாகத் தெரியும். ஏனெ னில் மொழி தெரியாத அவருக்கு இவன் என்ன சொல்லியிருப்பா னென்று புரிந்துகொள்ள முடியா
தென்பதையும் இவன் அறிவான்.
நெருப்பு வெளியே தெரியவில் லையென்றலும், இரு பகுதியிலும்

உள்ளே இருந்தது.
இது முடிந்து இரண்டு தினங் களாகவில்லை; வீட்டுச் சொந்தக்கா ரர் வந்துவிட்டார்.
கனன்றுகொண்டுதான்
இங்சிருந்து செய்தி போய்த் தான் வந்தாரா. அல்லது தற்செ யல் நிகழ்வா என்பது இவனுக்குத் தெரியாது. ஆனல் ஒன்றமட்டும் புரிந்தது, இது இவ்வளவோடு முடி யாமல் ஏதேதோ பின் விளைவுக ளைக் கொண்டுவரத்தான் போகிற தென்று.
இவன் நினைத்தது வீண்போக வில்லை. அவர் வந்து எல்லை வேம் பருகே நின்று இவனைக் கூவி அழைத்தார்.
இவன் சமாதானப் பிரியனுக, அவர் கூப்பிட்ட குரலுக்குச் செவி கொடுத்தான்.
'இந்தா வேலு, உன்ர முகத்
துக்காகப் பார்க்கிறன். இல்லா விட்டால் இஞ்சை நடக்கிறதே வேறை."" அதிகார தோரணை
யில் அவர் இவனை வெருட்டிஞர்.
'ஐயா, நானென்ன உங்கடை வளவுக்கை குழை ஒடிச்சேன? அறி யாத சீவன் வாய் வைச்சதுக்கு நான் என்னையா செய்ய*?" இவன் வினயமாகக் குழைந்தான்.
இவன் குழைந்து போனதில் அவர் தொனி சற்று விகாரமாகத் தொடங்கியது 'மடையா, விசர்க் கதை கதைக்கிறியே. ஆடுதான் அறியாதென்றல், அறிவுள்ள நீ எங்கை போனுப்-? ஆட்டை வேலி யிலை ஏருமல் பார்த்திருக்கலா மெல்லே.?"
இவனுக்கு அழுகையாகவும் ஆத்திரமாகவும் இருந்தது.
ஆட்டை நான் என்ன மடியிலை கட்டிக்கொண்டா திரியிறன் என்று கேட்க வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டான்.
இவன் அடக்கினனே இல் லையோ, இவன் மகன் அதைக் கேட்டு சீறிக் கொண்டு வந்தான். *" என்ன காணும். அறப்படிச்ச முட்டாளாட்டம் கதைக்கிறீர்? நீர் மரத்துக்குச் சொல்லியிருக்கலாமே,
ஆட்டுக்கெட்டாத உயரத்திலை போய்த் தழைக்கச்சொல்லி .." அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"டேய் ராஸ்கல் , நீ என் இனப்பற்றி என்னடா நினைச்சுக்
கொண்டிருக்கிருய். எளிய சாதிப் uu(86)...”
இப்படிச் சொல்லக் கேட்ட தும், மின்சாரம் பாயும் வேகத்து டன் இவன் மகன் கல்லை எடுத்து அவர்மீது வீச, அதுவும் சரியாக அவரது நெற்றிப்பொட்டைப் பதம் பார்த்தது.
இது நடந்து சிறிது நேரத்திற் கெல்லாம் பொலிஸ் ஜீப்பொன்று வந்து இவர்கள் இருவரையும் ஏற் றிச் சென்றது.
பலத்த காயங்களுடன் இவ னும் மகனும் வீடு வந்து சேர்ந்த போது, வீட்டாரோடு சேர்ந்து அயலும் அவரைத் திட்டி புராணம் பாடத் தொடங்கியது.
es
"எல்லாம் இந்த வந்தேறுகு
டியாலை வந்த வினைதான். அதுகளே

Page 8
அடிச்சுக் கலைச்சால் இதின்ர கொட் டம் தன்ர பாட்டிலை அடங்கும்.' என்று வெளிப்படையாகவே தம் முள் பேசிக்கொண்டார்கள்.
இவனது மகனின் இளரத்தம் சற்று வேகமாகவே கொதித்தது. வேம்பில் ஏறி, இந்தப் பக்கம் உள்ள கிளைகளையெல்லாம் மளமள வென்று வெட்டிச் சாய்த்தான்.
அவர் வந்து உறுமிப் பார்த்
தார். அட்டகாசம் போட்டார். ஒன்றுமே சரிவரவில்லை. அவன் தனது சருமத்தைக் கச்சிதமாக
முடித்துவிட்டுத்தான் கீழே இறங் கினன்.
அவன் கீழே இறங்கியதுதான் தாமதம், அவர் உள்ளே ஓடி ஒளிந் துகொண்டார்.
*எனது பக்கத்துக் கிளைகளை நான் வெட்டி வீழ்த்தினுல் மற்ற வர்சளுக்கு எங்கே நோகப்பே கி
றது" என்ற கோதாவில் தனது காரியத்தை முடித்துவிட்டு, ஒன் றுமே நடவாததுபோல் அவன்
வந்து அமைதியாகப் படுத்துவிட் டான்.
அன்றைய பொழுது, இன் னென்றின் ஆரம்பமாக முற்றுப்பெ ற்றது.
அடுக்த நாள் காலையில் பார்த் தால், இவன் வீட்டு ஆடுகள் இரண்டையும் அங்கேகாணவில்லை. மெல்ல நோட்டம் விட்டுப் பார்த் ததில், பக்கத்து வீட்டுப் பின் வள வில் அவையிரண்டும் இறைச்சியாக மாறிக் கொண்டிருந்ததைக் கண் டபோது இவனுக்கே ரத்தம் கொதித்தது. மகனுக்குச் சொல்
12
வோமென்ருல், அவன் முதல் நாள் பொலிசில் வாங்கிய அடி உதைக ளின் வேக்காடு தாங்கமுடியாமல் இரவிரவாக அலறித் துடித்துவிட்டு இப்போதான் கொஞ்சம் கண்ண யர்ந்திருக்கிருன். அவனை எழுப்பி இதைச் சொன்னல் அந்த இடத் தில் ஒரு கொலையே விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே, இப்பொழுது என்ன செய்யலாம் என்பதே இவன் முன் எழுத்துள்ள பூதாகாரமான பிரச் g&07.
அவசரப்பட்டு எடுக்கும் முடிவை விட, முள்ளால் எடுப்பதுதான் சரியான வழி என இவனுக்குத் தோன்றியது.
"டப்' பென்று இவனுக்கு ஓர் 'ஐடியா" தோன்றியது. அதை மனதுள் நெட்டுருப்போட்டவாறே, இவன் தனது தொழிலுக்குக் கிளம்பி விட்டான்.
மத்தியானம் errúum L'.tg-f) கெனத் திரும்பி வந்தபோது, பக் கந்து வீட்டிலிருந்து வந்த இறைச்சி யின் வாசனை இவனை என்னென் னவோ மாதிரியெல்லாம் துவட்டி யெடுத்தது. மெளனமாக மனதுக் குள் அழுது தீர்த்தான். பசி போன விடம் தெரியவில்லை. மறுபடியும் தொழிக்குப் போய்த் திரும்பியதும் சோர்வுடன் படுத்துவிட்டான். உடல் உழைப்பின் களைப்பால் இவன் குடும்பம் என்றைக்குமே சோம்பிப்படுத்ததில்லை. ஆளுல் இப்
போது ஏற்பட்ட மன உளைச்சல்
இவனை வெகுவாகப்பாதித்தன.
இரவு மனைவியோடு தன் துய ரத்தை பகிர்ந்துகொண்டான். இது

பற்றி மகனுக்கு எதுவும் தெரிய வேண்டாமென்றும், ஆட்டுக் கள் வரைத தான் வெகு சுலபத்தில் பிடிததுவிடுவேனெ லறும் அவளுக் குத் தெம்பூட்டினன். உண்மையில் நடந்த கதையையோ அல்லது தான் போட்டிருக்கும் திட்டத்தையோ அவளுக்குக்கூட அவன் வெளிபடுத் தவில்லை.
விடிய விடியக் கோழித் தூக் கம் போட்டு, விடிந்தது விடியமு ன னரே எழுந்து, தான் வகுத்த திட் டத்தை அமுல்படுத்துவதில் மும்மர மானன். தான் செய்வது சரியா பிழையா என்று சீர் தூக்கிச் சித் தித்துப் பார்ப்பதற்கெல்லாம் அப் போது அவனுக்கு அவகாசமிருக்க வில்லை.
விடிந்தது:
வழமைபோல் காரியங்கள் அங் கும் இங்கும் ஆரம்பமாகின.
இவன் ஒன்றுமறியாதவன் போல், வேப்பங்குச்சால் பல் துலக் கியவாறு முற்றத்துக்கு வந்தான்"
அப்போதுதான் அந்தப் பக்க மிருந்து ஆரவாரமெழுந்தது.
அவர் வீட்டில் குடியிருக்கும் அந்த அதிகாரியின் மனைவிதான் முதலில் கூச்சல் போட்டாள். தொடர்ந்து பிள்ளைகள். கணவன் என்று எல்லோருமே சேர்ந்து, இவன் வீட்டைப் பார்த்துச் சத்தம் போட்டார்கள்.
இவன் எதையுமே காதில்
போட்டுக்கொள்ளாதவனக கிணற் றடிப்பக்கம் போளுன்.
"கோழி போச்சு. கோழி போச்சு..." என்று அந்தப் பக்க மிருந்து வந்த கூச்சல் கேட்டு. இவன் மகன் எழுந்துபோய்க் குடில் பக்கம் பார்த்தன். நெஞ்சு "பக்' றது. ஆடுகள் இரண்டையும் காண வில்லை.
*அப்பு-அப்பு. எங்கடை ஆடு களைக் காணவில்லை." என்ற இவன் மகனும் சேர்ந்து கூச்சல் போட் டான்.
"அங்கை கோழிகளைக் காண யில்லையாம். இஞ்சை ஆடுகளைக் காணயில்லை."
-இவன் மகன் இப்படி உரக் கக் கத்தவும், இவன் சற்றுத் தாழ்ந்த குரலில் வெகு நிதான மாகச் சொன்னன்.
*காணயில்லை என்ருல் தேடிப் பார்க்கிறது.அதுக்கேன் கத்து வான் - ?
அடுத்த கணமே தேடுதல் பட லத்தில் இறங்கிவிட்ட தன் மகனை மெதுவாக அழைத்து இவன் சொன் (696irr
"ஆடுகள் நேற்றே காணுமல் போச்சு! "
"அப்பேன் எனக்குச் சொல் Gaudio3%)--?”
"சொல்லி என்ன பிரயோச
னம்? அவை செத்துப் போச்சு.
-இவன் பெருமூச்சுவிட்டான். "செத்துப்போச்சா..? --மகன் அதிர்ச்சி கலந்த ஆச்
சரியத்தில் கேட்டான்.
1.ம். சாகேல்லை.
டிப்போட்டான்கள்."
சாக்காட்
கென்

Page 9
".ஆரது..? "கோழி பறிகொடுத்தவன் கள்."
இவன் மகன் குழப்பத்தில் விழித்தான்.
யோசிக்காதை. அதுக்குப் பழி வாங்கியாச்சு. அவங்கடை கோழியளையெல்லாம் பிடிச்சு வித் துப்போட்டு வந்திட்டன்."
"நீயா..?? *.ம்..?
a-LD55 air பேசத்தோன்ருமல்
米 冰 இப்பொழுதெல்லாம் அயல் வீட்டுக்காரர் அடிக்கடி வீவில்
வந்து போவதும் வருகின்ற நேரங் களிலெல்லாம் அவரும் குடியிருப் பாளரும் அடிக்கடி சர்ச்சைகளில் ஈடுபட்டு வருவதும் சகஜமாகிவிட் டிருந்தன. அவர்கள் ஆங்கிலத்தி லும் சிங்ளகத்திலுமே பேசி வாக்கு வாதப்பட்டுக் கொண்டாலும். தொணியின் ஏற்றத் தாழ்வுகளிலி ருந்து ஏதோ சிக்கலான ஒரு விச யத்தில் மாட்டிக்கொண்டிருக்கிருர் கள் என்பதை இவன் தெட்டத் தெளிவாக உணர்ந்துகொண்டான். இடையிடையே தமிழில் கேட்கும் தூசண் வார்த்தைகள் அதை உறு திப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, முன்பெல்லாம் முகத்தை 'உம்' என்று வைத்துக்கொண்டு தன்பாட்டில் வழி நடக்கும் அயல் வீட்டுக்காரர் அவ்வப்போது இவ னைப் பார்த்துப் புன்முறுவல் பூப்ப தும் வியப்பாகத்தானிருந்தது" அவர் தன்னுடன் ஏதோ ஒரு வகையில்
l4
நட்புப் பாராட்ட விரும்புகிருர் என்பது மட்டும் இவனுக்கு நன்ரு கவே புரிந்தது. அதுபோன்றவோர் நட்புறவைத் தானும் பகிர்ந்து கொள்ள வேண்டும்போல் இவன் மனதுக்குப் பட்டாலும்,பழையகசப்
புணர்வுகள் ஏனுேதானேவென்று பின்னடித்தன.
"அவர்கள் பிரச்சனையில்
நாமாக ஏன் தலை கொடுப்பான்? நமது உதவியை நாடினல் அப் போது ஏதாவது ஆலோசனை சொல் லலாம்" என்ற மனதை அடக்கிக் கொண்டான். அயலவன் என்ற சரிவும், தன்னினத்வன் என்ற உருக்
கமும் மெல்ல வாட்டத்தான் செய்தது. பொறுத்துக் கொண் டான்.
இப்படியே கொஞ்ச நாட்கள் விலகிப்போயின,
வழமைபோல் பொழுது விடிந்த போது ஒரு நாள்--
அன்றைய பத்திரிகைச் செய்தி யைப் பார்த்ததும் இவனுக்கே நெஞ்சம் துணுக்குற்றது.
இன்ன முகவரியைச் சேர்ந்த இன்னரது வீடும் வளவும் இன்ன சட்டத்தின் கீழ் இனி இன்னுரைச் சேரும் என்ற விபரம் தான் அதற் குக் காரணம்.
யாழ்ப்பாணத்து நடைமுறையி லுள்ள தேசவழமைச் சட்டமெல் லாம் பின் தள்ளப்பட்டு. அவரது பாரம்பரியச் சொத்தான அந்தக் காணியும் வீடும் தென்னிலங்கை யைச் சேர்ந்த அந்த வன இலாகா அதிகாரிக்குச் சொந்தமாகிவிட்ட தென்ற கோர்டாரின் உத்தரவைப்

பார்த்ததும் அவனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
"பாவம் மனிதர்! என்னமாய் ஏமாந்துவிட்டார். சொந்த வீட்டை அந்நியனுக்கு வாடகைக் குக் கொடுத்துத் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுவிட் டாரே, என்று அனுதாபப்பட மட்
டுமே அவனுல் முடிந்தது.
இப்படி ஒரு ஊடுருவல் இந்த மண்ணில் தொடர்ந்து நிகழு மானுல் எப்படியிருக்கும் என்று நினைத்தபோது மனம் பாருங்கல் லாய்க் கனத்தது.
தமிழனின் அளவு கடந்த சுய நலத்திற்காக இது ஒரு கடுமையான தண்டனை என நினைத்துக் கொண் டான். கூடவே, பழைய சம்பவ மொன்றும் பளிரென மனதில் திரையிட்டன.
கொழும்பில் வர்த்தகராக இருக்கும் உறவினர் ஒருவரைத் தேடி இவன் ரெயிலேற வேண்டி யிருந்தது. காங்கேசன்துறையிலி ருந்து யாழ்ப்பாணம் வரும் பொழுதே வண்டி நிரம்பி வழிந் தாற் போலிருந்தது.
அப்போது அவனுக்குப் பதி ஞறே வயதுதான். ஆனலும் ஏழைத் தொழிலாளியின் மகளுகிய அவன் அதற்குமுன் ரயிலேறிப் பழகியிருக்கவுமில்லை. அதனல் இந் தப் பெரிய ரயிலிலும் இவ்வளவு சனமா என்று ஆச்சரியப்பட்டான், வண்டி நின்றதுமே பாய்ந்தேற அவனுக்குப் பயம் பழக்கமுமில்லை. நின்றதும் ஆறுதலாக ஏறி பெட்டி பெட்டியாக இருக்க இடம் தேடி
னன், ஏறமு ன் நினைத்த அளவிற்கு அங்கே ஒன்றும் பெரிய சனநெருக் கடியில்லை. ஆனல், ஆரம்பத்தி லேயே ஏறியவர்களெல்லாம் இஷ் டப்படி இடம் பிடித்து நீட்டி நிமிர்ந்து ஆசனங்களில் படுத்திருந் தார்கள் ஒருவராவது நிமிர்ந்து மற்றவருக்கு இடம் தருவதாய்க் காணுேம். எதேச்சையாக அயல் வீட்டுப் பிரமுகரான இவரைக் காண நேர்ந்தது. இவர் எப்படி அதில் இடம் பிடித்தாரென்று அவனுக்குப் புரியவில்லை என்ருலும் அவருக்குப் பக்கத்திலாவது இடம் தரமாட்டாரா என்ற ஏக்கப் பெரு மூச்சுடன் இவன் அவரைப் பார்த தான். இவனைப் பார்த்ததும் பாரா தவர்போல் கண்களை மெதுவாக மூடிக்கொண்டார். ரெயில் புறப் tull-gil.
குழந்தையைப் போன்றதொரு குதூகலத்துடன் இவன் வெளியே எட்டிப் பார்த்தவாறு ஜன்னல ருகே நின்றன். மிக நீண்ட நேரம் நின்று நின்று ரெயில் வெகு தொலை விற்கு ஓடிக்கொண்டேயிருந்தது.
திடீரென்று ஒரு பரபரப்புடன் 'அநுராதபுரம் அநுராதபுரம் , என்று சொல்லிக்கொண்டே, படுத் திருந்தவர்களில் பலர் துள்ளிக் குதித்து எழுந்தார்கள். இவர்க ளெல்லாம் இங்கே இறங்கப்போகி ருர்களாக்கும் என்று நினைத்துக்
கொண்டே இவன் ஒடி ஒரிடத்தில்
உட்கார்ந்தான். ஆனல் எழுந்த திருந்த எவருமே அங்கே இறங்க விலலை. புதிதாகப் பலர் ஏறிக் கொண்டார்கள். மளமளவென்று
இடம் பிடித்து அமர்ந்துகொண்
I5

Page 10
டார்கள். அப்போதும் அசையாமல் படுத்திருந்த சிலர் அசைந்து கொடுத்து நெருங்கிக் கஸ்டப்பட் டார்கள். இதெல்லாம் ஏனெனறு அவன் முதனமுறையாகச் சிந்தித் தான்.
அவர்கள் ஏறியதும் உயிருக்கு பயந்து இவர்களெல்லாம் ஒடுங்கிக் கொள்கிருர்கள்." புரிந்தது.
அட, இவங்களெல்லாம் தமிழ ராயிருந்து என்ன பிரயோசனம்? யாழ்ப்பாணத்திலிருந்து நின்று கொண்டே வரும் எங்களைப் பார்த் துக் கொஞ்சம்கூட இரக்கம் காட் டாதவன்கள் அடிக்குப் பயந்து தானே இப்படி இடம் கொடுக்கி முன்கள். இவங்களுக்கெல்லாம் அவன்ர அடி கானது. இன்னும் கொடுக்கணும். எ ன் று மனதுள் கறுவிக் கொண்டான். அப்போது நடந்த அந்தச் சம்பவம், மனதில் அடியாழத்தில் எங்கோ புதைந்தி ருந்து இப்போது மீளத் தோன்றி யதும்தான் உண்மையின் பலம் நன் முகப் புரிந்தது.
"... b. . . இவருக்கிதுவும் வேனும்தான். ஆனல் இப்படியே போனல் இந்த மண். பாரம்பரி யப் பூமி.’ என்று நினைத்தபோது தான் மனது எரிந்தது.
அந்த வீட்டை காலி செய்து, அயல் வீட்டுக்காரரான அவர் பிரிந்து செல்லும்போதுதான் மீண் டும் அவனிடம் பேச்சுக்கொடுத் தார்.
16
அவனுக்குப்
"...நீ சொன்னது சரியாப் போச்சு" அந்த நேரம நான் விட்ட பிழை . ம். சரி போட்டுவாறன்.
அவர் கண்கள் கலங்கியதை அவதானித்த இவன் கண்களும் கலங்கி, மெளனமாக தலை மட்டும் கவிந்து விடை கொடுத்தது.
ரத்த உறவொன்றின் உயிர் பிரிந்தாற் போன்ற சோகத்தில் இவன் மனது வெம்பியது. முதன் முறையாக விகசித்து அழுது விடை கொடுத்தான்.
கிறீஸ்துவுக்குப் பின் 1974. .
இப்போதெல்லாம் இவன் மண் ணில் அமைதி தவழும் பால் நில வின் குளிர்ச்சியும். தென்றல் தரும் இனிய மென்மையும் எங்கோ ஓடி மறைந்தது.
டுமீல் . டுமீல் சத்தங்களும் , காதைப்பிளக்கும் நிலக்கண்ணியின் பயங்கர ஒலியும், கடலோரப் பீரங் கிகளின் அனல் கக்கும் தாக்குதல் களுமாக, செமுமை குன்றி, யுத்த மேகங்களின் வரவு மிகுதியாகத் தொடங்கிற்று.
1977 ல் அந்த நாட்டில் ஆங் காங்கே குடியிருந்த பெரும்பான் மைச் சகோதரரெல்லாம் நட்பை யும் , சகோதர தத்துவத்தையும் மறந்து, பாதுகாப்பாக" ஆனல் வலுக்கட்டாயமாக பண்டைய நாக ரீகத்தின் யுத்த காலத்தில் ஆநிரை, பெண்கள், சிறுவர், முதியோர்; பிணியாளர் என்போர் யுத்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தப் படும். முன்னெச்சரிக்கை போல் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து

இந்த அனர்த்தங்கள் மிகைபட
லாயின.
மனித உயிர்கள் கருகி மாள் வதும், அசையாச் சொத்துக்கள் அழிக்கப்படுவதுமான அல்லோ ல கல்லோலங்கள் தொடரலாயின. கார்மேகம் கூடி வான்முறை பொழி தல் நின்று, விமானக்குண்டு வீச்சு களின் வேகம் அதிகரித்தது.
எல்லை பிரிக்கும் வேலைகளே
மக்கள் நடமாட்டமே இல்லாத இடங்களில் எல்லை வேம்புகளுக்கு மட்டும் அங்கு என்ன வேலை.
இந்த அமளிகளில் மகனையும், மற்றும் உடைமைகளையும் பறி கொடுத்து சொந்த மண்ணிலேயே அனுதைவ1ாய்-அகதிகளாய்ப் போன இவன், மீண்டும் அமைதியாய் . நட்பும் சகோதரத்துவமும் மிளிர ஒரு துண்டுக்காணியிலேனும் நிம்
மதியாய் வாழவே துடித்துக் இல்லாமல் காணிகள் பல வெறிச் கொண்டிருக்கிருன்’ சோடிப்போய்க்கிடந்தன. (யாவும் கற்பனை)
பல வருடங்களாக திருக்குறளையும் நல்ல பெறுபேற்றைத் தந்து நீதி நூல்களையும்
மாணவர்களின்
படியுங்கள
நன்மதிப்பைப் பெற்றுள்ள
கல்வி நிறுவனம்
*றியோ" RO
பல வருட அனுபவத்துடன் சிறப்புப் பட்டதாரிகளைக் கொண்டு G. C. E. (OIL), G. C. E. (A/L) கலை, வர்த்தகம், விஞ்ஞானம் G. A. Q., B. A. வகுப்புகள் நடைபெறுகின்றன. றியோ கல்வி நிறுவனம் க ல் மு ன. 6T : நேரு கல்வி நிலையம்
மட்டக்களப்பு.
100 மில்க்வைற் நீல சோப்பின் மேலுறைகளில் உள்ள திருக்குறளை வெட்டி அனுப்பி, திருவள்ளுவர் படத்தகயுைம், திருக்குறள் ஸ்ரிக்கரையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
மில்க்வைற்-யாழ்ப்பாணம்
மில்க்வைற் சவாககாரத தொழிலகம்
525/2, காங்கேசன்துறை வீதி, த. பெ. இல, 77,
யாழ்ப்பாணம், தொலைபேசி ; 23233
7

Page 11
புதுக்கவிதை
அழிந்துபோன கோலம் பூச்சூடப் பூவை காத்திருந்தாள் ! "மண வாழ்வு? என்ற பூவுக்குள்
சீதனம்’ என்ற நாகம்" புகுந்திருந்து பூவை தீண்டியது ! பூமஞ்சம் தேடியவள் இறுதிப் பயணம் போகின்ருள் இன்று கல்யாணம் என்ற Lorraflopéh இங்கே *சீதனம்" என்ற அஸ்திவாரத்தில்தான் ஆரம்பமாகின்றதா ?
கல்வியூர் - விஜயபாரதி காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை : g? பழைய மனிதர்களே ! வழி விடுங்கள் இந்த தேசத்தை வாலிபப் புயல்கள் வலம் வரட்டும் புறப்படும் அந்தப் புயல்களின் வழியில் நீங்கள்
18
வணக்கத்தை எதிர்பார்த்து வர வேண்டாம் பாரதியின் கவிதைக்கு வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் உரை வரைவோம் சுதந்திரத்தை இன்றும் நாம் தேதியில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டாம் அதை சூரியனைப் போல் எல்லோருக்கும் சொந்தமாக்கி விடுவோம் -கவிஞர் வைரமுத்து. நன்றி - கவிராஜன் கதை றேசின் ஏகாந்தம் இரு மனங்கள் இணைவதற்கு மேளத்தின் ஓசை நீயும் மலர்வதற்கு பீரங்கியின் பரிபாஷை நீ ! அழுத கண்ணிர் நீர் திவலையாக
unTrif இதழோரம் பனித்திருக்கின்றனவே ஏனிந்தக் கோலம் - உன் ஏகாந்தம் எண்ணித்தானே ?
(அறிமுகம்) சண். தங்கா.

நகைச் சுவை நறுக்கு
நீண்ட நாட்களின் பின் மகளைக் காணவருகின்ருர் தந்தை. வீட்டில் மருமகன் நிற்கும் கோலத்தைக் கண்டு பேயறைந்த வர் போல நிற்கின்ருர்,
தந்தை: இதென்ன மகளே.மாப்பிள்ளைக்கு என்ன நடந்தது?
மகள் : அதேன் அப்பா கேக்கிறீங்க. எல்லா நிறுவனங்களிலும் பதவியெல்லாம் இவருக்குத்தான் வேணுமாம் எண்ட வெறி இவருக்கு. இப்ப மனநோயாளர் சங்கத் தலைவர் பதவி காலி யாக இருக்காம். அதையும் கைப்பற்றத்தான் இப்பிடிப் பயிற்சி 6TGdó5 Tri......
தந்தை அப்பிடியெண்டா பரவாயில்லை பிள்ளை. எங்கயும் குடும்பத் தலைவர் பதவி காலியாக இருந்தால் உன் கதியென்ன மகளே?
X, X, X
கடுகதிப் புகைவண்டிக்காக மூவர் புகையிரத நிலை யத்தில் காத்திருக்கின்றனர். புகையிரதம் வருகிறது. இருவர் புகையிரதத்தில் ஏற, புகையிரதம் அசையத் தொடங்க. மூன்ருமவர் புகையிரதத்தைத் துரத்து வதுபோல ஒடி ஒய்வுபெறுகிருர், ஸ்ரேசன் மாஸ்ட்ர்: (அவரை நோக்கி). நீங்கள் புகையிரதத்தில் ஏற
6ớdiv&auvu unr? மூன்றமவர்: எனக்கு சீற்பிடிக்க ஏறின ரெண்டுபேரும் றெயினில போருனுகள். எனக்கு நாளைக்குபிளைற் றெயினையும் விட்டு, பிளேனையும் விட்ட கதையாப் போச்சு.
(பெருமூச்சு)
சூர்யா
9

Page 12
ஜெகன் : என்ன மச்சான் இப்ப நீர் நாலுமைல் நடந்தே வேலைக்குப்
Gu pöprit Lb? ரமணன் வாகனத்தில ஏறின. மூன்றரை மைல் இறங்கி நடக்க வேண்டியிருக்கு. அதோட வாகனத்தில நாலஞ்சி இடத்தில ஏறி இறங்கிறதில நேரத்துக்கு வேலைக்கு வரவும்.முடியல்ல. 25་ தாய் ! நீ பள்ளியில ஒரு பெடியனேட தொடர்பு வைச்சிருக்கிறயாம் எண்டு கேள்விப்பட்டன். அநியாயம் பிடிப்பாளே. கடைசி ஏ. எல். பாஸ்பண்ண முதல் என்னடி ஆட்டம்.?
மகள்: ஏ. எல். பாஸ்பண்ணின. 'கம்பஸ்" கிடைக்கும். ஆன கண்டி
மழையையும், "கம்பஸ்" காதலையும் ந பக்கூடாதாம் எண்டு சொல்ருங்க. அதாலதானம்மா கல்லூரியிலயே காதலிக்கத் தொடங்கிற்றன்.
V Mk V.
(ຕົuຕໍ: ராமன் சீதையைச் சோதித்தது சரியா?
மாணவன் தப்பு.
gàstului” : ஏன்?
மணாவன் ; ராமன் பரம்பரையில வந்தவங்கதானே நம்ம பெண்களை
யும் தெருவில சோதிக்கத் தொடங்கிட்டாங்க.
Mk A Mk பல் டாக்டர் : உங்க பல் எல்லாம் நன்ருகத்தானே இருக்கு. ஏன் வந்
தீங்க..? யுவதி : முன் பல்லில பாதியை வெட்டிடுங்க சார். பல் டாக்டர் ; ஏன். உங்களுக்கு பைத்தியமா?
யுவதி : இல்ல சார் . அதுதான் இப்ப "பஷன்". எங்கட அபிமான நடிகைக்கும் ஒரு பல் அரைவாசியாக இருப்பதால்தானே அழகா இருக்கு.
翠 举 பார்த்திபன் : என்ன மச்சான். உன்னிட்ட தேத்தண்ணி ஒண்டு குடிப் பம் எண்டு வந்தன். ஒருமணித்தியாலத்துக்கும் மேல கதைச்சிற்றம், ஒண்டையும் க: ணல்ல. நவரெட்ணம்: நான் மத்தியானச் சாப்பாடும் இல்லாம இருக்கன் மச்
சான். காலையில சாறி ஒண்டு எடுக்கவாம் எண்டு கடைக்குப் போனள். நாலுமணியாகுது. இன்னும் ஆளக் 85IT 6250T6ö)6h). . . .
பார்த்திபன் சரியாப் போச் சு. எண்ட மனிசியும் சாறிக்கு பிளவுஸ் பார்க்கவாம் எண்டு காலையிலதான் போனுள். இன்னும் ஆள் இல்ல .
வள்ளி மைந்தன்
20

எண்திசை நோக்கில் எதிர்ப்பட்டவை
தமிழிலிருந்து ஆங்கிலம்
1ல்கலைக்கழக வட்டாரங்களில் நீண்ட காலமாக நிலைத்துநிற் கும் சொற்கள் "கொண்’ (Con), " சல்* (Sal). இவையிரண்டு சொற் களின் ஆரம்பமே தமிழ்தானம்.
ஒரே பாலார் உரையாடும்போது கொண்டாட்டமாம். "கொண்" டாட்டம் என்ற சொல்லின் ஆரம்பமே ' கொண்". எதிர்ப் பாலார் உரையாடும்போது சல்லாபமாம். "சல் லாபம் என்ற சொல்லின் ஆரம்பமே "சல்" . சுருங்கிய தமிழிலிருந்து சுதியான பொதுமொழி?
பிரேத வண்டி - பிரமை
பொதுமக்களின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும், சமத்து வத்துக்கும் சான்றுபகர்வதுபோல் ருே சாலயாவால் ஒரு பிரேதவண்டி உருவாக்கப்பட்டது. குறுகியமனமும், குள்ளப் போக்கும் கொண்ட சிலர் பிரே தவண்டி பற்றி விஷமப் பிரச்சாரங்களை விதைத்திருக்கின்றர்கள்.
1. பிரேத வண்டி உபயோகிக்கப்பட்டால், தொடர்ந்து பிரேதங்கள்
விழுகின்றனவாம்.
2. பிரேத வண்டிக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். (எவ்வித
கட்டணமும் நாம் அறவிடுவதில்லை)
3. ஒரு (தாழ்ந்த) சமூகத்தவரின் பிரேதம் கொண்டுசெல்லப் பட்ட அதே வண்டியில் எமது (உயர்ந்த) சமூகத்தவரின் பிரே தம் செல்வதா?
பொதுமக்களே சிந்தியுங்கள்! முஸ்லிம் மக்களின் எளிமையான பிரேத அடக்கத்தை அவதானியுங்கள். செலவைக் குறையுங்கள். நாமி ருக்கும் நிலையில் நமக்குள் இன்னும் ஏற்றத் தாழ்வுகளா?
குட்டையர் என்ற குறை இனி வேண்டாம்.
குள்ளமான மனிதர்களுக்கு, மனித வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒருவகை ஹோமோன் அவர்களது உடலில் குறைவாகவுள்ளதே கார ணமாகும். கலிபோர்னியாவிலுள்ள ஒரு ஸ்தாபனம் வளர்ச்சியைச் தூண் டிவிடும் ஒருவகைச் செயற்கை ஹோமோனக் கண்டுபிடித்துள்ளது. பல அறிஞர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி இவ்வகை ஹோ மோன்கள் குள்ளமானவர்களின் உடலில் ஏற்றப்படும்போது அவரது
2.

Page 13
உடல் வளரத்தொடங்கும். இந்த ஆய்வு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெற்றியளிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் உல கம் நெட்டையரே வாழும் உலகமாக மாறலாம்.
"உதயத்'தின் கதவு திறந்தே இருக்கட்டும்
கிழக்கின் இலக்கியச் சோலைக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்துவரும் "உதயம்' வெளியீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண் டியவர்கள். "நாவல் வெளியீடுகளுக்காக திறக்கப்பட்ட அவர்களின் கதவுகள் மூடாதிருக்க . ஆயுட்கால சந்தாதாரராகுங்கள். சந்தா 101/- மட்டுமே. "சுகந்தம் இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டுகின்றது.
குண்டோதரன் பசி பக்ரீரியாக்கள்
பெற்ருேலியப் பொருட்களின் பாவனையால் சூழல் மாசடைதல் தவிர்க்க முடியாததொன்ற கவிட்ட இந்த விஞ்ஞானயுகத்தில், பெற்ருே லிய அசுத்தங்களை உண்டு உயிர்வாழும் பக்ரீரியாக்களை ஜெர்மனிய பெற்றேலிய சுத்திகரிப்பு நிலைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப் பக்ரீரியாக்கள் குண்டோதரன் போல அடங்காத பசி கொண்டவை. பரிசோதனைக்காக இவை 1200 கன மீற்றர் பெற்ருேலிய அசுத்தமுள்ள பகுதியில் விடப்பட்டபோது ஒரு வருடத்தில் அரைவாசி அதாவது 600 கன மீற்றர் பெற்ருேலியக் கழிவுகளைச் சுத்திகரித்துவிட்டது. இவை மட்டுமன்றி இப்பக்ரீரியாக்கள் இவ்வசுத்தங்களை நீராகவும், காபனீ ரொட்சைட்டாகவும் மாற்றி விடுவது மற்றுமோர் விந்தையாகும். அதா வது பெற்றேலிய ஐதரோக் காபன்களை இவை ஒட்சியேற்றம் செய்து நீராகவும், காபனீரொட்சைட்டாகவும் மாற்றிவிடுகின்றன.
"சும்மாரி'
"சும்மாரி" என்பது அழகிய கிராமியத் தமிழ். தினமும் ரூபவா ஹினி ஆங்கிலச் செய்தியறிக்கையை அவதானிக்கும்போது சாராம்சத் திற்காகப் போடப்படும் ஆங்கிலப் பதமான "Summary ஐ "சும்மாரி" எனவும் உச்சரிக்கலாம் தானே?
பலாங்கொ.ை மனிதன்
"பொசில் சயன்ஸ்" எனப்படும் பாறைப்பதிவுகள் ஆய்வுமூலம், பண்டைக்காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் உயிரினங்கள் பற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் அறிவதுண்டு. மிக அண்மைக் காலத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட இவ்வகை ஆய்வுகளில் சுமார் 10 கோடி வருடங்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்ததாகக் கருதப்படும் "பலாங் கொடை மனிதன்' எனப்படும் பூர்வீகக் குடிகள் பற்றிய தகவல்கள்
22

வெளியிடப்பட்டுள்ளன. இப்பதிவுகள் பெறப்பட்ட பகுதிகளுக்கு அண் மையில் நொருங்கிய, கடித்துக் குதறப்பட்ட மனித எலும்புப் பகுதி கள் கண்டெடுக்கப்பட்டமையிலிருந்து, இப் பூர்வீகக் குடிகள் நரமாமிச பட்சணிகளாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒருத்தி மட்டும் விதிவழியே
கவியரசு கண்ணதாசன், தான் எழுதிமுடித்த பாடல்களில் கை வைப்பதேயில்லை எனினும், "ஒடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரை யினிலே" என்ற பாடல் வெளிவந்தபின், "ஒடம் விதிவழியே" என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமென அங்கலாய்த் தாராம் .
‘சுப்பர் கண்டக்டிவிட்டி
1911ல் 'கம்மர்லிங் ஒன்னஸ் என்ற டச்சு விஞ்ஞானி, வாயுக் களைக் குளிரூட்டித் திரவமாக்கும் முயற்சியை மேற்கொண்டார். தொடர் பான இப்பரிசோதனையில் குளிர்நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட இர சமானது ஒரு நிலையில் மின் எதிர்ப்புச் சக்தியை முற்ருக இழப்பதை அவதானித்தார். இது "சுப்பர் கண்டக்டிவிட்டி (Super Conductivity) எனப்பட்டது. அத்துடன் இந்நிலையை அடையும் ஒரு பதார்த்தம் காந்த எதிர்ப்புச் சக்தியை இழப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் உலகில் பாரிய மாற்றங்கள் நிகழத்தொடங்கியுள்ளன. ஆம்? சுப்பர் கண்டக்டிவிட்டி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பானி யரின் பரீட்சார்த்த ரயில் மணிக்கு 350 கி. மீ முதல் 500 கி. மீ வரை யிலான வேகத்துடன் இயங்குவது மட்டுமன்றி, இயந்திரத் தேய்மானம், வெப்பமாகும் தன்மை, எரிபொருள் விரயம் என்பவற்றைத் தவிர்த்த நிலையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நின்றுவிடாது ஜப்பா னியர்கள், சுப்பர் கண்டக்டிவிட்டி மூலம் கப்பலை உருவாக்கவும் ஆய் வுகளை நடாத்துகின்றனர். இதன்மூலம் ஒரு நவீன போக்குவரத்து யுகம் ஏற்பட இடமுண்டு.
உமா வரதராஜன்
உமா வரதராஜனின் படைப்புக்கள் வெளிப்படுத்தும் சமூக
யதார்த்தமும் அவை ஏற்படுத்தும் கலைப் பாதிப்பும் ஆழமானது.
சமூகத்தில் ஊடுருவியுள்ள பொய்மையை, போலித்தனங்களை, முரண்
களை அவை அம்பலப் படுத்துகின்றன. அவற்றேடு ஒத்தோட மறுக்கும்
அவற்றுக்கிடையே அகப்பட்டு நசுங்கும் மனித உள்ளத்தின் அவஸ்
தையை உணர்த்துகின்றன. அந்த அவஸ்தையை வாசகர் மனதிலும் தொற்றவைக்கின்றன. இதுவே இவரது கலையின் வெற்றியாகும். நன்றி - உள்மன யாத்திரை.
23

Page 14
வீடு:
ஒரு பெண் வீடு கட்டுவதில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மைய மாக வைத்து, மிகவும் யதார்த்தமாகவும், நளினமாகவும், அழகாகவும் பாலு மகேந்திராவால் உருவாக்கப்பட்டதுதான் வீடு - திரைப்படம். பாத்திரப்படைப்புக்கள் இறுக்கமாகவும், இதமாகவும் பின்னப்பட்டுள் ளன. அவை தலைப்பைவிட்டு எந்நேரமும் விலகாமல் இருப்பது தனிச் சிறப்பு. அருமையாக இடம்பெறும் அளவான, ஆழமான உரையாடல் களும், கமரா கையாள்கையும் நெஞ்சைத் தொடுகின்றன. பல பரிசு களைத் தட்டிக்கொண்ட "வீடு” தரமான ஒரு படைப்பு என தைரிய மாகச் சொல்லலாம். பாலு மகேந்திரா எமது மண்ணின் மைந்தர் என் பதால் "வீடு" முழு மனநிறைவைத் தருவதுமட்டுமன்றி, அண்மைக் காலப் படைப்புக்களில் மனதில் நிற்கும் படமாகவும் அமைந்து விடுகிறது.
தொகுப்பு: பிரபா, பிரணவம், பிரியன்
'பளிச்" என்ற தெளிவான ஒளிப்பதிவினுல் பாங்கான இதமான ஒலிப்பதிவினுல், வீட்டுக்கு வீடு விரும்பப் படும் ஒரே ஸ்தாபனம், ‘வீடியோ எடிசன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, வீடியோ பிரதிகளை உங்கள் விருப்பம் போல், விரும்பிய நேரம் வந்து தெரிவு செய்து கொள்ளவும். முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். உங்களின் நீண்டநாள் நண்பனுன எங்களைத்தானே நினைவு கூர்வீர்கள்,
வீடியோ எடிசன், பெரியகல்லாறு : 1.
எமது கூட்டுறவுச் சங்க வங்கியில் முதலீடு செய்யப்படும் உங்கள் பணத்துக்கு, வேறெந்த வங்கிகளும் வழங்காத, கவர்ச்சிகரமான
வட்டிவீதங்களை நாம் வழங்குகின்ருேம். * சாதாரண சேமிப்பு வைப்புக்கள் - 24 % * சிறுவர் சேமிப்பு வைப்புக்கள் - 30 % வரைவற்ற கல்லாறு பூரீ முருகன் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கம் பதிவெண் 297 01, 12. 86 2ம் வட்டாரம், பெரியகல்லாறு, கல்லாறு .
24

சிறுகதை
O 6ìgụ6uữ
- மாஸ்டர் சிவலிங்கம்
3. காட்டிலே நான்கு திரு டர்கள் வாழ்ந்து வந்தனர். அக் காட்டு வழியால் வருவோரிடம் கொள்ளையடிப்பதே அவர்களுடைய தொழில்.
அத்திருடர்கள் ஆளுக்கொரு சங்கு வைத்திருந்தனர். தொலைவில் இருக்கும்போது அச் சங்குகளின் மூலம் ஒலி எழுப்பி ஒருவரோ டெ ஈருவர் தொடர்பை ஏற்படுத் திக்கொள்வார்கள்.
அக் காட்டின் நான்கு திக்கு களிலும்ஒவ்வொருவராகப்பதுங்கிக் கொள்வார்கள். காட்டு வழியே u un TT6Nugi வந்தால் பக்கத்துப் பற்றைக்குள் பதுங்கியிருக்கும் திரு டன் தனது சங்கை எடுத்து பல மாக ஊதுவான்.
சங்கொலி கேட்டதும் மற்றப் பகுதிகளிலே பதுங்கி இருக்கும் மூன்று திருடர்களும் ஒலியெழுந்த இடத்துக்கு ஓடிவருவார்கள்.
நால்வரும் ஒன்ருகச் சேர்ந்து வழிப்போக்கர்களின் பொருட்களைக் கொள்ளை ய டி த் துக் கொண்டு ஓடிவிடுவார்கள். அந்தக் காட்டுப் பகுதியிலே இச் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது.
சும்மா கிடந்த
சங்கு
வழக்கம் போல ஒரு நாள் நான்கு திருடர்கள் ஒவ்வோரு திசையிலே பதுங்கிக்கொண்டனர். அப்போது அக் காட்டு வழிப்பா தையிலே ஆண்டி ஒருவன் பொருட்
கள் நிறைந்த பெரிய மூடை யொன்றைச் சுமந்தபடி வந்து கொண்டிருந்தான்.
அந்த ஆண்டி ஆலயம் ஒன் றிலே சங்கு ஊ துவ து, மணி அடிப்பது போன்ற
செய்பவன். வருடாந்தத் திருவிழா வைபவம் முடிவடைந்ததும் தனது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, ஆலையத்தில் அவனுக்குக் கிடைத்த அன்பளிப்புப் பொருட்களை ஒரு சாக்கிலே கட்டிச் சுமந்துகொண்டு தனது ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
ஆண்டி வரும் பாதையோரத் திலே உள்ள மரம் ஒன்றிலே பதுங் கியிருந்த ஒரு திருடன் பொருள் மூட்டையுடன் ஆண்டி தன்னந் தனியாக வருவதைக் கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தான்.
தனது சங்கை ஊதி மற்றத் திருடர்களையும் அவ் விடத்துக்கு அழைக்க விரும்பிய அத்திருடன் தனது சங்கை எடுத்து வாயிலே
25

Page 15
வைத்து ஊத முயற்சித்தான். அப்போது கையிலிருந்த சங்கு தவறிக் கீழே விழுந்துவிட்டது.
முற்றிலும் எதிர்பாராத விதத் திலே தனது கையிலிருந்த சங்கு தவறிக் கீழே விழுந்ததும் அத் திருடன் செய்வதறியாது திகைத்து விட்டான். சங்கு இல்லாமல் மற் றத் திருடர்களை எப்படி அழைப் பது என்று திணறிக்கொண்டிருந்
தான், அந்தத் திருடன், அதே நேரத்தில்.
ஆண்டி அந்த மரத்தடிக்கு
வந்து சேர்ந்தான். திருடன் ஆண் டியின் கண்களில் படாதபடி நன் ருகப் பதுங்கிக்கொண்டான்.
மரத்தின் கீழே கிடந்த சங் கைக் கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான் ஆண்டி. பொருள் மூட்டையைக் கீழே வைத்
துவிட்டு ஓடிச்சென்று அந்தச் சங்கை எடுத்துக்கொண்டான்.
ஆண்டிக்குச் சங்கைக் கண்ட தும் உற்சாகம் கரைபுரண்டது. அவனையும் அறியாது அந்தச்சங்கை பலமாக ஊதினன்.
சங்கொலி கேட்டதும் காட் டின் வேறு பகுதிகளில் பதுங்கியி ருந்த மூன்று திருடர்களும் அங்கு விரைந்து வந்தனர். மரத்தில் பதுங்கியிருந்த திருடனும் கீழே குதித்தான்.
நால்வருமாகச் சேர்ந்து அடி யடியென்று அ டி த் து வி ட் டு பொருட்கள் நிறைந்த அவனுடைய மூடை, அவனிடம் இருந்த பணம் , சங்கு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தனர்.
"சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானம் ஆண்டி'
ELALALMALALALLLALALAMALAMLMLALALALA AMMAMA AMMLALALAMALMLMLLALALALALALALALALALMLL
26
அடுத்த சுகந்தத்தில்
வாசகர் - வாசனை
இப்பகுதியை அலங்கரிக்கும் பொறுப்பு எமது அபிமான வாசகர்களுடையதே. சுருக்கமான சுவையான உங்கள்
கருத்துக்கள் இப்பகுதியில் பிரசுரமாகும்.
TLqLALLMLMLMLMLLqLALLMLLALAL MqLM LSMMLLSLALAALLLLLASALALTLMLqLM MLqLALALALqLA LAM MqLALALALSLMLT LMLMLSMMLMeiMA TLiALMLSSLLLAqLMLS
Mwi

மாபெரும் கலைஞருடன்
ஒரு மாலைப் பொழுது
"வாழ்க்கை வாழ்வதற்கே அணையா விளக்கு' 'குந்தி பெற்ற வரம்' ஆகிய பரிசுபெற்ற நாடகங்களை எழுதி, இயக்கிய பெரிய கல்லாறு உதயபுரத்தைச் சேர்ந்த திரு. தி. வீரசிங்கம் அவர்களை "சுகந்தத்திற்காகச்' சந்திக்கினருேம்.
மனங்கவரும் மாலை வேளையில், இயற்கையன்னையின் இங்கித மான சூழலில், அவர் இல்லத்து முற்றத்தில், இன்முகத்துடன் அவர் எங்களை வரவேற்கின்றர்.
நாற்பதைக் கடந்தும் கதாநாயகன் தோற்றத்துடன் - கர்வமே இல்லாத கலகலப்பான சுபாவத்துடன் எம்மை, எதிர்ர்ெண்ட அவரு டன், எதிர்பார்த்ததைவிட மிகுந்த உற்சாகத்துடன் உரையாடல் ஆரம்பமாகின்றது.
கேள்வி: உங்கள் கலைப்பயணம் எப்படி ஆரம்பித்தது?
பதில்: 1959ல் நான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியின் புலமைப் பரிசில் பெற்ற மாணவன். கல்லூரிக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து "பெனடிக்ற் என்ற அறிஞர் ஒருவர் கல்லூரிக்கு வருகை தந் தார். அவருக்கு மாலையிட்ட காட்சியை கண்ணிமைப் பெழு தில் அவரே படமாக வரைந்து காட்டினுர். அவர் ஆற்றிய உரையும், விளக்கங்களும் எனக்குக் கலையார்வத்தை தோற் றுவித்தது. அங்கிருந்தே சிறு நாடகங்களை எழுத ஆரம்பித்தேள்.
கேள்வி: எப்போ உங்கள் நாடகத்தை அரங்கேற்றினீர்கள்?
பதில்: நான் 1959ல் க. பொ. த (சா. த) பரீட்சை எழுதியதும் வீடு வந்து சேர்ந்தேன். தொழிலாளர் வர்க்கத்தின் மீது எனக்கு அக்கறை அதிகம். அவர்களைக்கொண்டே நாடகம் ஒன்றை அரங்கேற்ற வேண்டும் என்ற ஆர்வம். பெரியகல்லாறு தொழிலாளர் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. "அண்ணன் காட்டிய வழியம்மா" என்ற நாடகம் - 1961ல் எனது கைவண்ணத்தில் உருவானது. கழகத் தயாரிப்பி லேயே அது அரங்கேற்றப்பட்டது. அமோக வரவேற்பைப் பெற்றதால். தொடர்ந்து நாடகம் எழுதும் ஆர்வமும், அரங்கேற்றும் துணிச்சலும் எனக்குள் வளர்ந்தது. . --
፵7

Page 16
கேள்வி:
Gastrofi:
பதில்:
கேள்வி:
பதில்:
கேள்வி;
பதில்:
Gatsiran:
பதில்:
28
கல்த்துறையில் ஒரு பெரிய தாக்கத்தை உங்களது எந்த நாடகம் ஏற்படுத்தியது? என்னைப் பொறுத்தவரையில் எனது முதல் நாடகமான "அண்ணன் காட்டிய வழியம்மா" தான் எனக்கு முழுத் திருப்தியை அளித்தது. "அடிமை விலங்கு" நமது பிரச்சனை களை மையமாக வைத்து எழுதப்பட்டதால் என்னை மிகவும் கவர்ந்தது. மின்னல் தயாரிப்பன (7 நாட்கள்) "அன்று சிந்திய கண்ணிர்’ என்ற எனது நாடகம் எனக்கே திருப்தி யளிக்கவில்லை. குறித்த மூன்று நாடகங்களும் மூவகைத் தாக் கத்தை ஏற்படுத்தியது.
உங்கள் நாடகங்கள் அனைத்தும் சினிமாப் பாணியாகவே இருக்கின்றது. தரமான நாடகங்களில் இருந்துதான் நல்ல சினிமாக்கள் உருவாகின்றன. அப்படியிருக்க நீங்கள் சினிமாப் பாணியில் நாடகங்களை உருவாக்கியது ஆரோக்கியமானதா? ரசிகர்கள் சினிமாப் பாணியையே விரும்புகின்ருர்கள். நானும் ரசிகர்களிடம் வரவேற்புப் பெறுவதற்காகவே சினிமாப் பாணியைப் பின்பற்றுகின்றேன்.
அவர்களின் ரசனையை நீங்கள் மாற்ற முடியாதா? முடியும் முயற்சிக்கிறேன். சினிமாப் பாணியில் அமையாத நாடகம் ஒன்று எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
உங்கள் நாடகங்களில் அரங்க அமைப்புக்கள் இயற்கையா னதாகவும், பிரமாண்டமானதாகவும் அமைக்கப்படுவது சிறப்பம்சமெனலாம். அரங்க அமைப்பில் நீங்கள் காட்டும் ஆர்வம், பாத்திர அமைப்பில் காட்டப்படவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும். உங்கள் கருத்து? உங்கள் கருத்தை ஒத்துக்கொள்கிறேன். உதிரிப் பாத்திரங் கள் அதிகம் உருவாக்க வேண்டிய அவசியம் எனக்கிருந்தது. ஏனெனின் ஆர்வமுடன் மேடையேற வருபவனை ஆதரிக்க வேண்டும். அவனும் மேடைப்பயிற்சி பெறவேண்டும் என்ற நல்லெண்ணம்தான் காரணம். அதனல் பாத்திரக் கட்டமைப் பின் கவர்ச்சி குறைந்தது உண்மைதான்.
உங்கள் நாடகங்களில் நீங்கள் குணச்சித்திர வேடங்களை அலங்கரிக்கின்றீர்கள். ஆனல் நீங்கள் மிகை நடிப்பையே வெளிப்படுத்துகின்றீர்களே..?
நானே எழுதி. நானே நடிக்கும்போது நான் எழுதும் வசனங்கள் உயிர்பெற வேண்டும் என்பதால். சற்று மிகை

யான நடிப்பு வெளிப்படத்தான் செய்கிறது. அது என்னைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாததுதான். (நீண்ட நாடக வசனம் ஒன்றை பேசிக்காட்டுகின்றர். எமக்கு மெய்சிலிர்க் கின்றது)
கேள்வி: உங்கள் நடிப்பில் சிவாஜியின் பாதிப்பு பளிச்சிடுகின்றதே? பதில்: இருக்கலாம். ஆனல் நான் ஜெமினி ரசிகன்.
கேள்வி: சிவாஜிக்கும், கமலுக்கும் நடிப்பில் நல்லதொரு வேறுபாடு
தெரிகிறதே - அவதானித்தீர்களா?
பதில்: சிவாஜியைப் போல் யாரும் நடிக்க முடியாது!
- தொடரும் - சந்திப்பு: வைகரன், உதவி: பாலா, மகான்.
சந்ததிச் சுவடுகள்
மண்முனை தென் எருவில் கலாசார பேரவை தனது இரண்டாவது நூலை வெளியிட்டுள்ளது. இளஞ் சட்டத்தரணி "பூரீ யின் "சந்ததிச் சுவடுகள்" என்ற ஓரங்க நாடகங்கள் ஆறு அடங்கிய நூல் வெளியீட்டு வைபவம் அண்மையில் களுவாஞ்சிக்குடியில் "அன்புமணி' அவர்களின் தலைமையில் இடம் வெற்றது.
வெளியீட்டுவிழா .மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது நூல் விமர்சனம் தெளிவாகவும், ஆழமாகவும், எழுத்துப் பிழைகளைக் கூடஎடுத்துக் காட்டுவதாகவும் அமைந்தது. ஆர்ப்பாட்டமும் அலட்ட லுமின்றியும், விழாவின் நோக்கத்தை விட்டு விலகாமலும் நடைபெற்ற இவ்வைபவம் இலக்கிய நெஞ்சங்களுக்கு நிறைவான ஒன்ருகும்.
இவ்வாருணி வெளியீடுகளும், வெளியீட்டு வைபவங்களும் தொடர வேண்டுமென்பதே சுகந்தத்தின் எதிர்பார்ப்பு. நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள். வெளியீட்டாளர்களுக்குப் பாராட்டுக்கள். நூலின் விலை பதினைந்து மட்டுமே.
சந்ததிச் சுவடுகள்" பற்றிய வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படு கின்றன. ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு "சுகந்தம்' களம் தரக் காத்திருக்கின்றது.
29

Page 17
கருத்துக் கணிப்பு . ‘ராக்கிங்’ ‘RAGGING"
பேராதக்ள, மொறட்டுவ, யாழ்ப்பாணம், கிழக்கு ஆகிய பல்கலைக்
கழகங்களில் கல்விபயிலும் மட்டக்களப்பு மாவட்ட பல்கலைக்கழக மாண வர்களிடம் ராக்கிங் பற்றிய கருத்துக்கணிப்பை நடாத்தினுேம்,
ராக்கிங்கிற்கு ஆதரவு தெரிவித்தோர் R 0 0 ... 88・53% எதிர்ப்புத் தெரிவித்தோர் . . . ... ... 11 . 47% கடினமான ராக்கிங்கை விரும்பியோர் U - O ) 19.67% சாதாரண ராக்கிங்கை விரும்பியோர் 0 p. e ... 68. 85% கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட ஆண்கள் to K 59. 0.2% கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்கள் ... 40.98%
புரிந்துணர்வை ஏற்படுத்துதல், கூச்சத்தைப் போக்குதல், என்ற
அடிப்படைக் காரணங்களில் இருந்து வழுவாத ராக்கிங்கை வரவேற்கி ருேம்.
கடினமான அநாகரீகமான ராக்கிங்கள் மனித நாகரீகத்திற்கு உகத்
-தீவை அல்ல என உறுதியாகக் கூறுகின்ருேம்.
கடினமான ராக்கிங்களை ஆதரிப்பவர்கள் தங்கள் மனநிலையை மாற்
*றக் கூடாதா? நாடும் நாமும் இருக்கும் நலையில் இத்தகைய ராக்கிங்குகள்
அவசியம்தான?
முடிந்தவரை புதிய மாணவர்களுக்கு உதவுங்கள். உபத்திரவம்
அளிக்காதீர்கள். உற்சாகம் ஊட்டுங்கள்.
0
கருத்துக்கணிப்பு உதவி - வரதன்'
அட்டைப் படம் - மணுே
மலர்களின் இளவரசியும் மங்கையரில் எழிலரசியும் மகிழ்ந்து மலந்திருப்பது "மனே" என்ற ஓவியரின் மகிமை உணர்ந்தோ? மணங் கவரும் மகத்தான சஞ்சிகை காணவோ?

மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான
சிறுகதைப் போட்டி தலைப்பு: "காலம் ஒரு நாள் மாற்றும்
கதை ஆரம்பம்:
குளிரூட்டப்பட்ட அந்த வீடு இன்று எரியூட்டப்பட்டது "கும்" இருட் டில், வயிறு குமட்ட அந்த இடத்திற்கு அவள் வந்து சேர்ந்தாள். "கொலோனில் குளிப்பவள் அவள். "சோடாவில்" வாய் கொப்ப ளிப்பவள். அவளுக்கு அங்கு வீசிய வாடைகள் வாந்தியை வரவழைத் தது. "பிறேக் டான்ஸ்" பாடல்களே அவள் விருப்பம். இங்கே முருகன் பாடல்களும் இயேசு நாதர் பாடல்களும், நபிநாதரின் பாடல்களும் மாறி மாறி ஒலிப்பது அவளுக்கு - அவள் மனதுக்கு சாந்தியளிக்காமல், மாருக சஞ்சலத்ததயே அளித்துக்கொண்டிருந்தன. போட்டி நிபந்தனைகள்: 1. மேற் குறிப்பிட்டவாறு கதை ஆரம்பிக்கப்பட்டு, 600 சொற்களுக்கு மேற்படாதவாறும், சமத்துவத்தை வலியுறித்தியும் கதை எழுதி முடிக் கப்பட வேன்டும். (எழுதும்போது "புள்ஸ்கேப்" தாளின் ஒரு பக்கத்தை மட்டுமே உபயோகிக்கவும்) 2. மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகளிற் பயிலும் க-பொ த (சாத) க்கு மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே பங்குபற்றலாம். வயதெல்லை இல்லை 3. எழுதப்பட்ட சிறுகதை, விண்ணப்பம் என்பன அவ்வப் பாடசாலை அதிபர்களால் உறுதிசெய்யப்பட்டு, அவர்களுடாகவே 31, 10. 1988க்கு முன்னர் கிடைக்ககூடியதாக "ஆசிரியர். சுகந்தம், கல்லாறு" என முகவரி யிடப்பட்டு அனுப்பப்படவேண்டும். அனுப்பும் காகிதவுறையின் இடது பக்க மேல் மூலையில் "சிறுகதைப் போட்டி" என எழுதப்படவேண்டும். 4. சிறுகதை எழுதப்படும் தாளில் பெயர், முகவரி எதுவும் எழுதப் படக்கூடாது. 5. முதல் மூன்று பரிசுக்குரிய சிறுகதைகளும் வரிசைப்படி எமது அடுத்த இதழிலிருந்து வெளியாகும். அத்துடன் தரமானவையென நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளும் தொடர்ந்து பிரசுரமாகும். 6. பரிசுபெறும் போட்டியாளர்களுக்கு, எமது ‘ருேசாலயா" நிறுவனம் தமது வருடாந்தப் பரிசளிப்பு விழாவின்போது கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கிக் கெளரவிக்கும் 7. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதாகக் கொள்ளப்படும். 8. எழுதப்படும் சிறுகதைகள் முன்பு பிரசுரமானவையாகவோ, வேறு கதைகளின் தழுவல்களாகவோ இருக்கக்கூடாது.
எமது இச் சிறுகதைப் போட்டி சிறப்புற அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் மேலான ஒத்துழைப்பை நாடிநிற்கின்ருேம்.
-- சுகந்தம் சஞ்சிகைக் குழு --

Page 18
நாட்டார் பாடல்
(கிராமியக் கவிதை )
நையாண்டிப் பாடல்: கிராமப்பெண் ஒருத்தி, நித்திரை கொள்ளும் தனது மச்சான நையாண்டி பண்ணுகிருள்:
l,
வெள்ள வெள்ள வெத்திலையாம் வெள்ள மச்சான் நித்திரையாம் சிவத்தச் சிவத்த வெத்திலையாம் செவத்த மச்சான் நித்திரையாம் -வெள்ள
ஒட்டறையால மேஞ்சிருக்கு ஒட்டக்கதவு போட்டிருக்கு கட்டிலப்போல திட்டியிருக்குது வாகா மச்சான் சோறுதின்ன.
கரப்பத்தன் பூச்சி சுண்டியிருக்கு கட்டறும் பூச்சி காச்சியிருக்கு மட்டத்தேளு ஆக்கியிருக்குது
வாகா மச்சான் சோறுதின்ன.
பறட்டப்பத்தக் காட்டுக்குள்ள
குறட்டஉடும் மச்சானே
இருட்டுவரப் பாக்குதுகா வாகா மச்சான் சோறுதின்ன.
பொழுதுமங்கிப் போகுதுகா போட்டசோறும் ஆறுதுகா பழுதுவரப் பாக்குதுகா வாகா மச்சான் சோறுதின்ன -வெள்ள
தொகுத்தவர்: எஸ். இளையதம்பி

கிழக்கின் சஞ்சிகை முன்னுேடி *அன்புமணி’ அவர்கள் தரும் கட்டுரை இது
தமிழின் கதை
மொழி ஒரு இனத்தின் வரலாற்றுக்கு வழிகாட்டி நாகரீகத் துக்கு நற்சான்றிதழ்; பண்பாட்டுக்கு ஒரு பாராட்டுப்பத்திரம். தமிழ் மொழி இன்று தமிழர்களின் வரலாறு, நாகரீகம், பண்பாடு ஆகியவற் றுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், தமிழினத்தின் தொன்மைக்கு ஓர் ஆணித்தரமான அகச்சான்ருகவும் வரலாற்றசிரியர்களால் ஏற்றுக்கொள் ளப்படுகிறது.
தொன்மை வாய்ந்த மொழிகளில், இன்றும் உலகில் உள்ள ஒரு சில மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானது. என்பது மொழி வல்லுநர்களின் ஆராய்ச்சியின் முடிவாகும். தமிழ் இலக்கியங்களிலும், இலக்கண நூல்களிலும் முழ்கி, தமிழின் சிறப்பைப் பற்றியும், அதன் தொன்மை பற்றியும், தமிழறிஞர்களால் சொல்லப்பட்ட கூற்றுக்ளை" மேல்நாட்டறிஞர்களின் ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்துள்ளமை, ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. தமிழறிஞர்களால் தமிழுக்கு ஏற்றிவைக்கப்பட்ட தெய் வத்தன்மைக்கு அதன் தொன்மையே மூலகாரணம் என்பதை இவ்வா ராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ், இறைவனல் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது; அகத் தியர் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார் என்ற கர்ண பரம்பரைக் கதைகளுக்கு இதுவே காரணம் எனலாம்.
எவ்வாருயினும், தமிழில் அகத்தியம், தொல்காப்பியம் முதலிய தொன்மை வாய்ந்த இலக்கண நூல்களும், அதன் பின்பு தோன்றிய நிகண்டு, சூடாமணி முதலிய பல்வேறு வகைத்தான இலக்கண நூல் களும், தமிழின் தொன்மைக்கு ஆதாரமானவை. ஒரு மொழியில் இலக் கணம் தோன்றுவதென்றல், அதற்குப் பலநூறு வருடங்களுக்கு முன்பே அம்மொழியில் இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். ஒரு மொழி யில் இலக்கியங்கள் தோன்றுவதென்றல், அதற்குப் பலநூறு வருடங் களுக்கு முன்பே அம்மொழி வழக்கில் இருந்திருக்க வேண்டும். ஒரு மொழி நீண்டகாலம் வழக்கில் இருந்ததென்றல், அதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, அம்மொழியைப் பேசிய மக்கள நாகரீகம் அடைந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகவே தமிழ் மக்கள் உலகின் மூத்த குடியினர். இதையே தமிழ்ப் புலவர்கள், கவித்துவ நடையில், ‘கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே முன்தோன்றி மூத் தகுடித் தமிழ் மக்கள்" என்று கூறினர்கள்.
3

Page 19
இக்கூற்று உண்மைதான் என்பதை மொஹஞ்சதாரோ, ஹரப்பா முதலிய புதையுண்ட நகரங்களில் ஆய்வுசெய்த மேல்நாட்டறி ஞர்கள் ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளனர். டொக்டர் கன்னிங்காம் போன்றவர்கள் இவ்வாராய்ச்சியில் முக்கியமானவர்கள். இத்தொன் மையை "சிந்துவெளி நாகரீகம்" என்றும் "இந்து நாகரீகம்" என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில் தமிழ் மொழி வளர்ந்த கதையை ஆதாரபூர்வமாக நாம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
கிறிஸ்துவுக்கு முன்பே, தமிழகத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கதையைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அச்சங்கம் மூன்று காலகட்டங்களில் வளர்ந்துள்ளது. முதற் சங்கம் கி. மு. 4000 ஆண்டளவில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர் கருதுகின்றனர். இக் காலகட்டத்தில் ஆக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. கடல்கொண்ட குமரிக்கண்டம் (லெமூரியாக்கண்டம்) அழிந்தபோது, அந்த இலக்கியக் கருவூலங்களும் அழிந்து போயிருக்க வேண்டும். -
இரண்டாவது தமிழ்ச் சங்கம் கி. மு. 200ம் ஆண்டளவில் இருந் ததென்றும், மூன்ருவது தமிழ்ச் சங்கம், கி. பி. 300ம் ஆண்டுகள் வரை இருந்ததென்றும் கொள்ளப்படுகிறது. இச் சங்கங்கள், முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என அழைக்கப்படுவது தமிழ் வழக்கு. இக்காலங்களில் தோன்றிய இலக்கியங்களை "சங்ககால இலக்கியம்" என்று குறிப்பிடுவதுடன், கிடைத்த ஏடுகளைக் கொண்டு இக்காலகட் டத்தில் ஆக்கப்பட்ட இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல் முத்தொளா யிரம் முதலிய 36 நூல் வகைகள் இதிலடங்கும்.
சங்க காலத்துக்கு அடுத்ததாக "சங்க மருவிய காலம்" என வர லாற்ருசிரியர்களால் குறிப்பிடப்படும் காலம் கி. பி. 4ம் நூற்ருண்டு முதல் கி. பி. 6ம் நூற்ருண்டுவரை உள்ள காலமாகும். இக் காலகட்டத் தில் அறநூல்கள் பல தோன்றின. இவை தமிழ்ப் புலவர்களின் ஆத் மீக ஈடுபாட்டுக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும் எடுத்துக்காட்டாக விளங் குகின்றன.
அதன்பின் கி. பி. 8ம் நூற்ருண்டுவரை உள்ள காலம் 'களப்பிரர் ஆட்சிக்காலம்’ ஆகும். இக் காலத்தில் இலக்கியங்கள் தோன்ருததால், இக்கால இலக்கியங்கள் என்று சொல்லக்கூடிய இலக்கிய நூல்கள் எது வும் கிடைக்கவில்லையாதலால், இக் காலத்தை "இருண்ட காலம்" என வரலாற்ருசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
34

அதன்பின் கி. பி. 8ம் நூற்றண்டு முதல் நாயக்கர் ஆட்சிக் காலம் வரை பல்லவர், சோழர் முதலியோரின் ஆட்சிக் காலம் "தமிழகத்தின் பொற்காலம்" எனக் குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் தோன்றின. தமிழ் மன்னர்கள் புலவர்களைப் பெரி தும் ஊக்குவித்தனர்.
நமது காலமான இன்றைய காலகட்டத்தில், மகாகவி பாரதியும், அவரது வழித் தோன்றல்களும், தமிழ் மொழியை எளிமைப்படுத்தி யுள்ளனர். இலகு தமிழில் இனிய வசன நூல்கள் தோன்றியுள்ளன. இலங்கையில் ஆறுமுக நாவலர், சுவாமி விபுலாநந்தர் போன்ருேர் தமிழுக்கு அளப்பரிய சேவை புரிந்துள்ளனர். தனிநாயக அடிகளின் முயற்சியால் 'உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்' நிறுவப்பட்டு, 'தேம துரத் தமிழோசை உலகயெலாம் பரவும் வகை' செய்யப்பட்டுள்ளது.
இம்மலரில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் அடுத்த இதழில் இடம்பெறும்.
அடுத்த இதழ் நத்தார் - பொங்கல் சிறப்பிதழாக உங்கள் சிந்தை கவரும்.
தரமான ஆக்கங்கள் எதுவாயினும் தைரியமாக அனுப்புங்கள். "சுகந்தம்" அவைகளை சுவீகரித்து சுத்தமா கவே வெளியிடும்.
ஆண்டுச் சந்தா 15/- செலுத்தி உடன் உங்கள் பிரதி களை உறுதி செய்யுங்கள். "சுகந்தத்தின் சிறுகதைகளை சிரத்தையுடன் வாசியுங்கள். சிறப்புப் பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டலாம். விபரம் வெகுவிரைவில் வெளியாகும்.
LLLLLL LLLLLLLAALLLLLLL LALLALLSLLLAAAAALL LLLAALLLLLLL LALAL LAALMLALLALLALALALA LALALALALALALALA LALLALALLSE
ட நன்றி ட
"சுகந்தம்" முதற் பிரசவம் சுகமானதாக அமையச் சுறுசுறுப் புடன் எல்லாவகையிலும் ஒத்துழைப்பு நல்கிய நண்பர் ச. பிர ணவசோதிக்கும். அட்டைப்படத்தையும், "சுகந்தம்’ பெயரை யும் வடிவமைத்து தந்த இளங்கலைஞர் 'மனே அவர்கட்கும் ஆக்கங்களை அளித்துதவிய எழுத்தாளர்களுக்கும், மூதறிஞர்க ளுக்கும், விளம்பரங்கள் தந்துதவிய விளம்பரதாரர் சளையும், அச்சகத்தாரையும் "சுகந்தம்' நன்றியுடன் நினைவு கூர்கின்றது.
qqSLLLLLLL0 LLLSL0LSLLqLASTLTLALALA LALLALALALTLqLMSLS LALALMLLLAALLLLLAATLALASLLALALqSqLALALALALALALALLAM
3.

Page 20
இனமத பேதம் எமக்கில்லை - கலை கலாச்சாரமே எம்தெல்லை.
சுகந்தம்:
ஆவணி - கார்த்திகை - 1988 செண்டு: 1
ஏடு+இட்டோர்+இயல் = ஏடிட்டோரியல் = EDITORA.
மக்கள் எழுச்சி
அதிக ஒப்பனைகளுடன் ஒப்புவிக்கப்பட்ட ஒப்பந்தம் இன்னும் ஒப்பேறவேயில்லை.
ஒப்பாரிகளும் ஓயவில்லை - ஆனால்
ஒற்றுமையும் ஓங்கவில்லை.
திலீபன், அன்னை பூபதி போல் தியாகிகள் தோன்றியும்
திருப்தியான தீர்வில்லை. ஒட்டாண்டி நிலையில் மக்கள்
எனினும், சுயநலவாதிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதையும் ஒப்புநோக்கி மக்கள் இலகுவாக இனங்காணக்கூடிய சம்பவங்கள் நடந்தேறிவிட்டன மக்கள் சக்தி மகத்தானது! அது நன்கு ஒழுங்குபடுத்தப்பட அதன் எழுச்சியே இப்போ மாமருந்தாகும். தூய தியாகச் சுடர்களின் ஆத்ம சாந்திக்கு "சுகந்தத்தின் அடிமனது அர்ச்சனைகள்.
வேண்டும்.
-ஏடிட்டோர்

இது உங்கள் பார்வைக்கு!
*சிங்கம்ஸ்" படப்பிடிப்பாளர்கள் |
கல்முனை.

Page 21
உள்ளூர் உற்பத்திகளே ஊக்குவிக்கும் உள்ளங்களே உண்மையான எமது மூலத என்பதை
நாம் உறுதிப்படுத்துகின்ருேம்.
TLDEN ஆரம்ப தயாரிப்பான துர்க்கா கற்பூரம் அமோக விற்பனையாகிறது
உற்பத்தி விநியோகம் துர்க்கா இன்ட செங்கலடி.
ஆக்கங்களுக்குப் பொறுப்பு அச் அமைக்கும் உரிமை ஆசிரியருக்கு GuTFTಐVu கஃ சிலாசார டெ குழுவினரால் மட்டக்களப்பு அச்சிடப்பட்டு 25 - 09 - 88ல் ெ

தூய்மை நீண்ட நேர உபயோகம்
உயர்ந்த தரம்
குறைந்த விலே என்ற தனித்துவங்களோடு எமது தயாரிப்பில் வருவது துர்க்கா கற்பூரம்
ஸ்ற்றீஸ்,
னித்தவர்களே. ஆக்கங்களே திருத்தி
;ண்டு. இச்சஞ்சிகை பெரிய கல்லாறு பாதுச் சேவை நிலையத்தின் சஞ்சிகைக் புனித. செபஸ்தியார் அச்சகத்தில்
வளிப்பிடப்பட்டது.