கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகந்தம் 1989.08-11

Page 1
நான்கு மாத கலே கல
பக்கத்தில் குண்டொன்று ெ "படாரென வாத்தியங்களை வ பாதுகாப்பு தேடி ஒடும் இசை பார்த்ததும் தூரிகையால் 'றவு
 
 
 
 

ل____f
) NI D) ஆவணி - 1989
கார்த்திகை - 1989
ாசார மறுமலர்ச்சி மலர்
வடிக்க ாரிக்கொண்டு
கலேஞரை ண்ட் அப்' பண்ணினுரோ "மனுே’

Page 2
WITH BEST COMPLIMENTS OF:
''MUMMY DADDY SWEETS'
FOR CAKES, BISCUITS, CHOCOLATES. (ALL IMPORTED)
PRIMA BREAD AND FRUITS ETC.
M U M M Y D A D D Y S W E ETS,
2, MAIN STREET, BATTICALOA.
எமது பிரதேச தேவையை, நாமே முழுமையாகப் பூர்த்தி செய்ய முழு மூச்சாக முயற்சிக்கின்ருேம்!
'ப் (ா டு ம் மீ ன் ஒட்டுத் தொழிற்சாலை,
Lo 6ñor G. f. விநியோகஸ்தர் :-
கல்லாறு துறைநீலாவண ப. கோ. சு. சங்கம், கல் லா று.
*
MASTERS TOUCH OF ORIGINALITY IN DESIGN:
“GAYA JEWELLERS”
163, GALLE ROAD, BAMBALAPITIYA.
T. PHONE - 01 - 584626.
JEWELLERS FOR GENERATIONS.

சிரிக்க. சிந்திக்க.
நாட்டு வலம் வருகின்றர் நரியர்
நரி:- குட் மோர்னிங் கழுகு.
என்ன உம்ம «5#5 @ÖT3#5 fT @) LDIT காணவேயில்லை? கழுகு:- "நமஸ்தே ஜி! பக்கத்து
நாட்டுக்கு போயிருந்தன். நரி:- என்ன விஷேசம்? கழுகு:- இஞ்ச மனிச இறைச்சி திண்டு, திண்டு அலுத்துப் போச்சு. அதால ஒரு "சேன்ஜ்க்காக” போனன். திரும்ப ஆசை வந்திற்றுப் போல. கழுகு:- இல்ல. இல்ல. யுத்த நிறுத்தமாம் எண்டு கேள்விப் பட்டுத்தான் வந்த நான். (நரியர் சிரிக்கிருர்) - நீ சிரிக்கிற எனக்கு புரி யுது நரியாரே. அதுதான் நான் 'றிற்றேன் ரிக்கற்றில வந்திருக்கன். சபாஸ்! நீ புத்திசாலி.
கழுகு:
ஹலோ மை டியர் கழுதை! என்ன கழு த் தி ல தங்க "மெடல்" ஒண்டு போட்டி ருக்கா?
கழுதை:- ஒரு சினிமாப்பாட்டுக்கு
கதாநாயகனுேட போட்டி
போட்டு வா ய  ைச ச் சன்.
எனக்குத்தான் கடந்த ஆண்டு சிறந்த நடிகனுக்கான பரிசு கிடைச்சிருக்கு.
சி. ஆர்.
கழுதை:-
நரி:- இசையமைப்பாளர்கள் பாடு றதவிட நான் திறமாட!ாடு வன். அடுத்த ஆண்டு சிறந்த Lunt 85(5äisintaðir பரிசை நானே பெறுவன்.
எல்லாம் வரட்டும் !
நமக்குள்ளே
நரி:- என்ன மச்சான் நீ உச்ச தொனியில பாடுரு: நாய்: ஒரு பிச்சைக்காரன் வந்தி
ருக்கான். நரி:- உன்ர ரசிகரா? நாய்: இல்ல. நான் பாடி இவன ஒட வைக்காட்டி என்னவிட உச்சதொனியில எங்கட எச மானி பிச்சக்காரன பார்த்து பாடுவா. அதை என்னு லேயே சகிக்க முடியாது. நரி:- பொதுவா இப்ப நாம பர
வாயில்லதான்.
நீரி: ஹலோ முதலையாரே என்ன இப்ப கங்கையிலிருந்து காலி யாகி தனிமண்ணில நீச்சல் அடிக்கிரு?
முதலே. கங்கையில பிணவாடை சகிக்க முடியல. மூச்செடுக்க நீர் மட்டத்திற்கு வந்தா. மூக்கிலேயே முண்டங்கள் முட்டுது. சுதந்திரமா நீச் சலும் அடிக்க முடியல.
நரி:- இதால நான் கூட இப்ப
சாமிக்கோலம்தான்.

Page 3
e
சிந்தனை சிதறல்
ஒரு சதம் ஒலமிடுகிறது!
1. ஒருகாலம் மதிப்புடனே
ஒன்ருகவே வாழ்ந்தோம்; ஊராரின் கைகளெல்லாம்
உருண்டோடி வலம் வந்தோம்;
பருவத்து மங்கையரின்
பைகளிலும் கைகளிலும்,
பகட்டாகப் பவனிவந்தோம்
பழையநாள் அதுவேதான்!
2. உருவத்தில் சிறிதாக
எனைமாற்றிப் பிற்பாடு
ஒன்றுக்கும் உதவாமல்
உதறிவிட்டார் "கனவான்கள்";
“தருமம் தா” என்று வரும்
தள்ளாத தாத்தாவும்
தள்ளிவிட்டார் "ஒரு சதமா,
தரவேண்டாம்" என்று எம்மை.
3. சில்லறைக்கு எனக்கொடுத்தால்
சீறுகின்ருர் கடைக்காரர்; "தொல்லை இது; இதையெல்லாம்
தொலைக்கத் தான் முடியாதா கல்லறைக்குள் போடும் இந்தக்
காசை, இது செல்லாது; நல்ல நோட்டை எடுத்தெறியும்;
நமக்கு வேண்டாம் இது' என்பார். " 4. நல்ல பெரியோர்களை நான்
நயமுடனே கேட்கின்றேன்; பல்லிமிட்டாய் வாங்கவேனும்
பாவிக்கவே முடியாதா? பல்விழுந்து போனலும்
பவிசற்றுக் கிடந்தாலும், செல்லாத காசல்ல, - நூறு
சேர்ந்தால் நாம் ஒருரூபாய்!

மினிக் கதை:
கொழுவல்
*லேற்பில்’ கட்டாமல் பல மாதங்கள் ஓடி விட்டன. முன்பெல் லாம் மாதாமாதம் சம்பளம் எடுத் ததும் முதல்வேலையாக அதைக் கட்டிவிடும் சம்பந்தன் இப்படி "லைற் பில்" ஒரு தொகைப் பணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதும், அசந்தே போனன்.
நா ட் டு ப் பிரச்சனைக்குள்ளும்,
வீ ட்டு ப் பிரச்சனைக்குள்ளும் லைற்
பில்லை உடனுக்குடன் கட்டாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது தான் அவன் மண்டையில் உறைத்தது.
என்ன செய்வது? வருகின்ற மாதச்சம்பளத்தில் "லைற்பில்' பணத் தைக்கட்டினல் வீட்டில் பட்டினி தான்! பட்டினி கிடந்தாலும் கிடக் கலாம். ஏற்கனவே கடையில் பட்ட கடன்? பிள்ளைகளின் சீசன்ரிக்கட்! ம ன வி பிடிக்கும் சீட்டுக்காக !
சம்பந்தனுக்கு பைத்தியமே பிடித்து
விடும் போலிருந்தது.
சிந்தித்துச்சித்தித்து நாட்களைக் கடத் தி க் கொண்டிருந்தபோது. *றெட்நோட்டீசு’ம் வந்து சேர்ந்து அவனை உலுப்பியெடுத்தது.
தங்கநகை
செ. குணரத்தினம்
பல இடங்களில் "கைமாத்தா? கக் கடன் கேட்டுப் பார்த்தான். இல்லாமல் எவரிடமும் கடன் பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. வங்கிக்காரர்கள் அவன் நகைகளை சும்மாதருவார்களா?
முனிஸிப்பால்டியினர் ஓடிவந்து கரன்டை முற்ருகத் துண்டிப்பதாக ஒவ்வொரு இரவுசளிலும் அவன் காணும் கனவுகளும் சம்பந்தனைப் போட்டு வாட்டியெடுத்தது.
சம் பந்தனை அவதானித்த அவன் மனைவி பூரணம் பக்கத்தில் வந்து சொன்னுள்!
"லைற்பில் பணத்தைப்பற்றி சதா நினைத்து நினைத்து ஏன் மண் டையைப் போட்டு உடைக்கிறீர் கள்? கவலையை விட்டுத்தள்ளுங்கள்! லைற்றை முற்ருக வெட்டிவிட்டா லும் நாம் லைற் றைப் பாவிக்கலாம். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்க ளெல்லாம் கொழுவல் மூலம் லைற் போடுகிருர்கள்! நாமும் அப்படிச் செய்ய வேண்டியதுதானே?"
மனைவியின் துணிச்சல் மொழி கள் சம்பந்தனை கொஞ்சம் உசார்
3

Page 4
படுத்தினலும் முற்ருக அதை அவ ஞல் ஆமோதிக்க முடியவில்லை. "இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துப் பார்ப்போம்! அப்படி அதற்கிடையில் கரன்டைத்துண்டித் தால் பழையபடி குப்பிலாம்புச் சீவி யம்தான்!” என்று தனக்குள்ளேயே முடிவெடுத்துக்கொண்ட சம்பந்தன் வழக்கம் போல வேலைக்குப் போய் வந்தான்.
பலநாட்களின் பின் அவன் வேலைவிட்டு வரும்போது வீட்டுலைற்
துண்டிக்கப்பட்டிருப்பதை ஒருநாள்
கண்டான். அவனுல தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொப் பென்று சாய்வு நாற்காலியில்
விழுந்து அவன் இயலாமையை நினைத்து விம்மிவிம்மி வெடித்தான்! வீட்டில் இருள் சூழத் தொடங்கியது. அவ்வளவு தான் பளிச்சென்று எங் கும் ஒரே ஒளி வெள்ளம், திடுக்குற்று திரும்பிப்பார்த்தான், மனைவி பூர ணம் வயறைக் கொழுவிய சொக் குத்தடியுடன் முன்னுல் வந்தாள் !
நன்றி!
யூனி சிவசுப்பிரமணியர் தேவஸ்தாபனத்திற்காக
எம்மால் அமைக்கப்பட்டு வரும் பூங்காவனத்திற்கு
தாமாக முன்வந்து பல வகையிலும்
உதவி வரும்
அன்பு நெஞ்சங்களுக்கு
நன்றி!!
வரைவற்ற கல்லாறு பூணி முருகன்
சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கம் 2ம் வட்டாரம், பெரியகல்லாறு, கல்லாறு.
நன்றி!

* ஒரு த ந்  ைத யி ன் க  ைத ” கருத்துக் கணிப்பு
விண்மையில் உதயம் வெளியீடாக பிரபல எழுத்தாளர் அன்புமணி அவர்களின் "ஒரு தந்தையின் கதை" வெளிவந்கது. அறிமுக விழாவில் வெளிவந்த கருத்துக்களை இங்கு கருத்துக் கணிப்பிற்காகத் தொகுத்து தருகின்றேம்.
திரு. ஆ. அரசரெத்தினம் B. A.
ஒரு தந்தையின் கதை - ஓர் தந்தையின் கதை எது சரி என்பதில் தலைப்பே சர்ச்சைக்குரியதாகலாம். நடைமுறையில் "ஒரு தந்தையின் கதை’ என்பதை சரியென ஒத்துக் கொள்ளலாம். முன்னேற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் இருந்தால் அடுத்த பரம்பரையிலேனும் அவர்கள் ஆசை நிறைவேறும் என்பதை அழுத்தமாக கூறும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாவல் இது. நல்ல கரு. பூரணமான நாவல.
திரு. நா. நடராசா B. A.
மனித எண்ணங்களும், உணர்வுகளும், போராட்டங்களும் சமூதாய நோக்கமும், சிறந்த இலட்சியமும் தொழிலின் மகத்துவமும் இந் நாவல் முழுக்க யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது இந்நாவலின் தனிச் சிறப்பு. திரு. வி. இராசலிங்கம் B. A.
சமூதாய அமைப்பிலிருந்து வேறுபட்ட எண்ணங்கள் கொண்ட கதாநாயகனை இந் நாவலில் நாம் காண்கின்ருேம். ஆசிரியர் சொல்ல நினைப்பதை கதாநாயகனே சொல்லிவிடுவது யதார்த்தமான இந்த நாவ இக்கு மேலும் மெருகூட்டுகின்றது. நாவலின் ஒவ்வொரு அத்தியாயத் திலும் கதாநாயகனை நாம் காணமுடிகின்றது. பரிசுகள் பல பெற தகுதி யான நாவல் இது. திரு. சி சின்னையா (மாநகர ஆணையாளர்)
*தும்பு தட்டுதல்" - போன்ற ஆரையம்பதிக்கே உரிய மண்வாசனைச் சொற்கள் இந் நாவலில் ஆங்காங்கே காணப்படுவது இந் நாவலின் தனிச் சிறப்பாகும்.
இந்நாவலின் விலை ரூபா 20/- அட்டைப்படம் பவான்.

Page 5
சென்ற இதழ் தொடர்ச்சி.
சுகந்தத்தின் வினவும் சுதந்திரமான விளக்கங்களும் மனையடி சாத்திரம் அவசியமா? கா - நீதிநாத குருக்கள்
நினைத்தபோது நினைத்தபடி தாறுமாருக வீடுகளைக் கட்டி, பொருட் களை இழந்து, நிம்மதியின்மை, பிணி, துன்பங்கள், கட்டியமனையில் இருந்து அனுபவிக்காமல் மரணம் போன்ற இன்னல்களை அடைந்து அந்த மனைகளையும் இழந்து போகின்ருர்கள், என்ற அனுபவத்தின் அடிப்படை யில் தான் இத்தகைய மனையடி சாத்திரங்கள் தோன்றியுள்ளன.
"மனை' என்பது வீடு கட்டவேண்டிய பூமியைக் குறிக்கும். அதில் கட்டப்படும் வீட்டையும் குறிக்கும். வீடு கட்டுவதற்குரிய மனைகள் இயற் கையின் சுற்றுப்புற சூழ்நிலைகள் சிறப்பாக அமையப் பெற்றதாகவும், சாத்திர விதியான அதிஸ்டமும் சுகமும் அளிக்கக் கூடியதாகவும் அமைந் திருக்க வேண்டும்.
பொன்னைவிட மண்ணின் மதிப்பு அதிகரித்து வருகின்றது. இப் புவிக்கு அதிபதியாகிய வாஸ்து தேவனை கவனித்தல் அவசியமாகும்.
நாங்கள் சுவாசிக்கும் காற்றுக்கு அதிபதி வாயு தேவன். நாங்கள் பருகும் தண்ணீருக்கு அதிபதி வருணன். எங்களுக்கு வெளிச்சம்தரும் நெருப்புக்கு அதிபதி அக்கினி பகவான். அதுபோல் இந்த மண்ணுக்கு வாஸ்து புருஷன்தான் அதிபதியாகும்.
இந்த வாஸ்து புருஷன் புவியில் படுக்கையிலேயே சஞ்சரிப்பவன் ஆகாயவீதியில் 12ராசிகளும், 9கிரகமும், 30 திதிகளும் 27, நட்சத்திரங் களும் வானத்தில் கால் அளவு பிரமாணப்படி உதயமாகி சஞ்சரித்து வருகின்றன.
இந்த உலகத்தில் மனைகளை உயர்த்தவேண்டுமானுல் அவரது படுக் கையில் கால், தலை, முதுகு, எனும் மூன்று பாகங்களை விலக்கி, வயிற் றுப்பாகத்திற்குரிய சுகமாதத்தினைக் கண்டு மனைகட்கு வாசற்கால்கள் அமைக்க வேண்டும் என்று மனையடி சாத்திரம் கூறுகின்றது.
6

இந்த வ்ாஸ்து புருஷன் என்பது ஒரு கற்பனை வடிவம்தான் ஆனல் அந்தக் கற்பனையும் அறிவியல் தொடர்புடையதே ஆகும். மாதங்கள் அனைத்தும் சூரியகிரகத்தின் சஞ்சாரத்தால் உண்டாகின்றன.
பூமியும் ஒரு கிரகம் சூரியனும் ஒரு கிரகம். ஆனலும் பூமியானது அதன் ஆகஷ்சன நிலையின் சூழற்சியாலும் சிறப்பாக அமையும். கால கணக்கிற்குத்தான் இந்த வாஸ்து புருஷனின் எழுச்சி, படுக்கை உணவு உடை தரித்தல் போன்ற அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
இவற்றை அறியாமல் மனைகளில் கட்டிடம் எழுப்புவதற்கு முனைந் தால் கட்டிடத்தில் அஸ்திவாரம் போடப்பட்டவுடனேயே நின்று விடலாம்.
அல்லது அரைகுறையாகக் கட்டப்பட்டவுடன் நின்றுவிடலாம்"
இதற்காகவே மனையடி சாஸ்திரப்படி வாஸ்து புருஷனை அவ தானித்து நிலையம் வகுத்து வீடு அமைத்து கிரகப்பிரவேசத்தில் வாஸ்து சாந்தி பரிகாரங்கள் செய்து இன்புற்றிருக்க பெரியோர்கள் குறிப் பிட்டுள்ளார்கள்.
வாஸ்து புருஷன் ஒரு கொடிய சொறுபி வாஸ்து தேவனின்படுக் கையே வயிறு அந்தப் பாகத்தில் வாசல்கள் அமைப்பது என்பது புவியீர்ப்பு சிறப்பாக உள்ள இடத்தில் வாசல் அமைப்பதைக் குறிப்பதாகும்.
உலகம் எங்கும் உள்ள மக்கள் இடையே மதவேற்றுமைகள் இருந் தாலும் விடுகளைக் சட்டிக் கொள்ளவேண்டும் என்ற அவசியம் எந்த மதத்தினராலும் அவர்களுக்கு ஏற்புடையதாகவே இருப்பதால் சர்வ மதத்தினரும் இத்த வேற்றுமையைப் பாராட்டாமல் யாவரும் மனையடி சாத்திரத்தில் கூறப்படும் விடயங்களை நன்ருகக் கவனித்து நூல்முறை தவருமல் மனைகளைத் தெரிந்தெடுத்து காலக் கணக்கையும் இதர நன்மை பயக்கும் குறிப்புக்களையும் அனுசரித்து வீடுகளைக் கட்டிக்கொண்டு அவ ரவர் மதத்தின் கருத்துப்படியே சர்வகாரியங்களையும் செய்வார்களே யாயின் அஸ்ட ஐஸ்வரியங்களைப் பெற்று வாழ்வார்கள்.
ஆசிரியர்: தொலைபேசி" என்ற பெயர் ஏன் வந்தது?
மாணவன்: ‘பேசி தொலை' என்பது மாறி வந்ததால் சார்.
பிரணவம்

Page 6
i
8
i
ལྷོ་
ஒரு மார்கழி இரவு
Lo sö 36sì ene
காற்று பலமாய் வீச, மழை ஊன்றிப் பெய்ய,
மின் விளக்கு அணைய,
குப்பி விளக்குகளை மூலை முடுக்கெல்லாம் தேடுவாங்க உம்மா.
மூலை ஒன்றுக்குள் ஒரு விளக்கு எரிய நாங்கள் ஒன்பது பேரும் கூதலைத் தாங்கி சுவர் ஒரமாய் கொடுகிப் போய் இருப்போம். மூத்திரம் முட்டிய சின்னத் தம்பி இருந்த இடத்திலேயே பெய்வான் ஒரு சிறு நதி ஓடி மழை நீரில் சங்கமிக்கும் நான் என்ன செய்வேன் மெல்ல நழுவி மற்றவர்க்குத் தெரியாமல், தாழ் வாரத்தில் நின்ற படி . . வான முழக்கத்தில் ஒரு கணம் அதிர வைக்கும் ஆண்டவன் மின் வெளிச்சத்தில் உலக அனர்த்தங்களைப் புகைப்படம் எடுப்பான். ஏழு மணிக்கெல்லாம் எதையாவது தின்று விட்டு துயிலடையும் வரைநினைவெல்லாம் . . பெரும் குலை போட்டு நிற்கும் கோழிச் சூடன் வாழையிலும் அலுக்குலுத்துப் போய்க்கிடக்கும் ருேட்டு வேலியிலும் தான். விடியத் தெரியும் விளக்கம்.

மாபெரும் கலைஞருடன் ஒரு மாலைப் பொழுது
கவிதை துறையில் வெள்ளிவிழாவைக் கடந்து இப்போதும் கம்பீரமாக காட்சி தரும் கவிஞர் மு. கணபதிப்பிள்ளை அவர் களைச் "சுகந்தத்திற்காகச்' சந்திக்கச் சென்ருேம். 1.
அவரின் சொந்தக் கிராமமான இயற்கை எழில் கொஞ்சும் கோட்டைக் கல்லாற்றில், தென்னைகள் சூழ்ந்திருந்த மாஞ்சோலை ஒன்றில் மனதுக்கு இதம் தரும் சூழலில் சந்திக்கின்ருேம், பழக இனியவர், அமைதியானவர், அழகான புன்னகையை அளவாகச் சிந்தியபடியே எமக்குப் பேட்டி யளித்தார்.
கேள்வி:- கவிதை எழுத எப்போது ஆரம்பித்தீர்கள்?
பதில்:- 1961ம் ஆண்டில் இருந்து.
கேள்வி: தங்கள் கவிதைகள் எப்போது வெளிவர ஆரம்பித்தன?
பதில்:- 1963ம் ஆண்டில் இருந்து ‘சிவாயவாசி' சமய சஞ்சிகை
elp apli.
கேள்வி- கவிதைத்துறை தவிர்ந்த ஏதாவது கலை முயற்சிகளில் ஈடுபட் டுள்ளிர்களா? அதுபற்றிய விபரங்களைச் சுருக்கமாக "சுகந்தம்” வாசகர்களுக்குக் கூறுவீர்களா?
பதில்:- ஆம். வில்லுப்பாட்டுகள், நாடகங்கள், கும்மி கோலாட்டங் களை ஆக்கி, மரபுவழி தவருமல் நவீன முறைகளையும் புகுத் திப் பாடசாலைகளிலும் பல மேடைகளிலும் நடிக்க வைத்துப் பல பரிசில்களும் புகழும் பெற்றுள்ளேன். கவிதை எழுதுவ திலும், கூடிய ஆர்வம் இவைகளிலேயே உண்டு.

Page 7
Gasdraf: -
பதில்:-
கேள்வி:-
பதில்:-
GaGraf: -
பதில்:
கேள்வி:-
10
உங்கள் கரக நடனங்களை நான் பார்த்து வெகுவாக ரசித் திருக்கின்றேன். எமது பகுதிகளில் உங்கள் கரக நடனங்களுக்கு ஒரு தனித்துவமான மதிப்பு இருப்பதை நானறிவேன். கோயில் திருவிழாக்களில் உங்கள் கரக நடனங்கள் இடம் பெற்ருல் அது பக்தர்களுச்கு *" போனஸ் " கிடைத்தமாதிரி.
(புன்முறுவல் பூத்துவிட்டு, சுருட்டைப் புகைக்கின்றர்)
தாங்கள் கவிதைத் துறையில், கண்ணதாசன் பைபிளுக்கு கவிதை வடிவம் கொடுத்ததுபோல் ஏதாவது சாதனை நிலை நாட்டியிருக்கின்றீர்களா?
ஆம். கண்ணதாசனுடைய ஆற்றல் இல்லாவிட்டாலும், சக்தி வழிபாடு பற்றிய "பராசக்தி பாமாலை" என்னும் ஒரு நூலை எழுதி அண்மையில் வெளியிட்டுள்ளேன். இதன் மதிப்பீடு மக்க ளின் முடிவைப் பொறுத்ததாகும்.
(கோட்டைக்கல்லாறு சதுராலயம் ஆதரவில் இவருடைய
'பராசக்தி பாமாலை” நூல் வெளியீட்டு விழா பிரமாதமான முறையில் 19 - 08 - 89 நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.)
கலைத்துறையில் தங்களின் எதிர்கால இலட்சியம் என்ன? அது எப்போ சாத்தியமாகும்?
குழந்தைகளுக்கான ஒரு கவிதை நூலை வெளியிடும் ஆசை உண்டு. கூடிய கெதியில் வெளியிடத் தெண்டிக்கின்றேன். (வாசகர்கள் பதம் பார்க்க இவ் விதழில் "தாய்" என்ற இவ ரின் கவிதை இடம் பெறுகின்றது.)
நல்ல முயற்சி, அவசியமான முயற்சி, எங்கள் வாழ்த்துக்கள் சினிமாப் பாடல்களுக்கே இலக்கிய அந்தஸ்து கொடுத்தவர் கவியரசு, தற்போதைய சினிமாப் பாடல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவருடைய வழி முறையையும் சிறிதாவது கடைப்பிடிப்பதே
நல்லது என்பது என் எண்ணம் !
அகராதிச் சொற்களால் கவிதை வடித்து பாண்டித்துவத்தை
வெளிக்காட்டுவதை விட அன்ருட வழக்குச் சொற்களால் கவிதை வடிப்பதாலேயே குறித்த பயனை. அதாவது மக்கள் மனதில் உயர்ந்த கருத்துக்களைப் பதிய வைக்க முடியும் என நான் கருதுகின்றேன். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்
56TIT?

பதில்:-
பதில்:-
கேள்வி:
பதில்:-
கேள்வி:
பதில்:-
கேள்வி:
பதில்:-
கேள்வி:
பதில்:-
கேள்வி:- பதில்:-
தங்களது உயர்ந்த கருத்தை தான் வரவேற்கின்றேன். ஏறக்
குறைய இதே முறையைத்தான் நானும் கையாளுகின்றேன்.
தற்போதைய புதுக்கவிதைகள் பற்றி உங்களின் கருத்தென்ன? சிறிதளவேனும் கவிதைக் கட்டுப்பாடுக்களை கையாண்டால் மேலும் பொலிவுறும் என்பது எனது எண்ணம்.
இலங்கை வானெலியில் ஒலிபரப்டாகும் மெல்லிசைப் பாடல் கள் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன?
பாடலைப் பாடும் சில பாடகர்கள் லகர ளகர, ழகர, றகர, ரகரங்களை முறையாக உச்சரித்தால் மேலும் சிறப்புறும்.
எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை நண்பர் சவிஞர் செ. குணரெத்தினம் மட்டுமே நிறைய கவிதைகள் எழுது கிருர். அவர் கவிதைகள் பற்றி என்ன நினைச் கிறீர்கள்? நாளேடுகளில் அவர் கவிதைகளைத்தேடி ஆர்வத்தோடு படிப் பேன். ஆனல் அவரை நேரில் கண்டிலேன். காணமுயற்சிக் கிறேன். எமது மாவட்டத்திற்கு அழியாப் புகழ் சேர்த்த அமரர் புலவர் மணி அவர்களின் கவிதைகள் பற்றி உங்கள் கருத்து?
நோய் தீர்க்கும் மருந்து காரமாகத்தான் இருக்கும். பிழைக்க வேண்டுமானல் சாப்பிட்டுத்தான் முடிக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டு அவரது "பகவத் கீதை வெண்பா.
இலங்கையில் சஞ்சிகைகள், ரூபவாஹினி வானெலி, பத்திரிகை கள் கவிதைத்துறைக்கு அளிக்கும் பங்களிப்பு போதுமானதா? சவிதைத்துறை வளர்ச்சிக்கு இவை மேலும் ஏதாவது செய்ய வேண்டுமா? ஆம். கிராமியப் பாடல்சளுக்கு கட்டுப்பாடானதும். மரபு வழியானதுமான அமைவும் இராகங்களுமுண்டு. இதைக் கிராம மக்களே அதிகம் அறிவர். ஆகவே அவர்களையும் தொடர்பு கொண்டு அம்மானை, சிந்து, தாலாட்டு, ஊஞ்சல் பாட்டு, பள்ளு முதலிய பாடல்களை வெளியிடுவது நல்லதாகும். "சுசந்தம்’. சஞ்சிகை பற்றி. கிழக்கிலுதித்த விடிவெள்ளி. இது துருவநட்சத்திரமாக வளர்ந்து புகழ்பெற வேண்டும் என்பது என் பேரவா. (துருவநட்சத்திரமாக அவர் முகம் பிரகாசித்தது. அவர் இதைக் கூறும் போது. அவர் வாழ்த்துக்களுடன் விடை பெற்ருேம்.)
பேட்டி : வைகரன் உதவி : சுந்தரி

Page 8
qqqqqLMLMALAMLA MLAL AA AAALLALAMLALAM LALA LALALALAY C qLALA LALALA LALALA LALALMLTiALALSLALASLLMLSLqeY
வீட்டுக்கொரு அங்கத்தவரேனும் விருப்புடன் சேர்த்தே விஸ்தரிப்போம் கூட்டுறவு சேவையை,
(பங்குப் பணம் 10/- ரூபாய் மட்டுமே)
உங்கள் தேவையுணர்ந்து
மாஜரின் பட்டர் வகைகளையும் குளிர்பானங்களையும் நாம் விநியோகிக்கின்றேம்,
கல்லாறு - துறைநீலாவணை ப. நோ. கூ. சங்கம், பெரியகல்லாறு-கல்லாறு தொலைபேசி இல - 067 - 2 198
LALLALALLAMLMLA LAMLALTMMLSSLMLALATLALALTLLALAL L YALSLAL LLLSLA LALSLALSLA LALSLALSLALASLLALALL qSLLSMA ASLLLLSLLASL0L
 

சிறு கதை
'தவிக்கின்ற
இளந்தளிர் அறிமுகம்
(s
உள்ளங்கள்”
கல்வியூர் விஜயபாரதி
M
விரித்த கூந்தலுடன், வெள் ளைச் சேலையுடன், வெற்று நெற்றி யுடன் வி டி  ைவ எதிர்பார்த்த வண்ணம், சுவரோடு சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் தாயின் முகத்தை ஏறிட்டு நோக்குகிருள் 6Éggurr. அவள் விழிகளில் கண் ணி ர் நிறைந்து கன் ன ங் களினூ டே. கோடுகிழிக்கிறது. ம். எப்படி இருந்த அம்மா இப்போது இப்படி மாறிப்போய் விட்டார்’ வித்தியா விடம் இருந்து நீண்டதொரு பெருமூச்சு வெளிப்படுகிறது. அவள் சிந்தனைகள் சிறகு கட்டிப் பறக்கி Dg列·
வித்தியாவுக்கு இரண்டு வரு டத்துக்குப் பிறகு வே னு கா பிறந்தாள். இரண்டு பெண்களையும் தன்னிரு கண்களெனப் போற்றிச் செல்லமாய் வளர்த்தார் சிவரா மன். தான் எடுக்கும் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குள் குடும் பத்தைக் கஷ்டமின்றி நடத்தினர். ஆனல் கஸ்தூரி மட்டும் அடிக்கடி 'இரண்டும் பெண் ணு யிற்று து இது களோட எதிர்கால வாழ்வுக்கு
என்ன செய்யிறது” என்று கண வனிடம் கேட்பாள். "இங்க பார் கஸ்தூரி என் பிள்ளைகள் இரண்டும், அழகில, அறிவில, குணத்தில.
பண்பில ஒன்றும் குறைஞ்சதுகள்
இல்ல - சீதனமில்லாம அதுகளக் கூட்டிக் கொண்டு ப்ோக எத்தனை பேர் போட்டி போடப் போருங்கள் நீயும் இருந்துதான் பாரேன் ." என்று கவலையில்லாமல் சிரித்துக் கொண்டே கூறுவார்.
வேணுகாவுச்கு இரண்டு வரு டங்களுக்குப் பின் ஒரு குழந்தை பிறந்தது. அதுகூட பெண்ணுப் பிறந்தபோது தான் உறுதியுடன் இருந்த சிவராமனின் மனமும் ஆட்டம் காணத் தொடங்கியது. சதா கலகலப்புடன் இருக்கும் அவர் அமைதியாஞர், தினமும் பெரும்பகுதி நேரத்தை மெளன மாய் கழிப்பதில் செலவிட்டார், பிள்ளைகள் மூன்றையும் பதிலும் அவர்களுக்குக் கல்வியூட் டுவதிலும் மும்முரமாய் ஈடுபட் டார். கவலையின் மொத் தவடிவாய்
abu6atrii
மாறிவிட்ட கஸ்தூரியை வேதனை யுடன் நோக்குவார். தன் வேத னையை மனத்துக்குள் புதைத்துக்
கொண்டு 'இங்க பார் கஸ்தூரி எதுக்காகக் க வலை ப் படு றே, இப்போ பெண்பிள்ளைகள், ஆண் பிள்ளைகளுக்குச் சரி நிகரா நின்று எந்தத் துறையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிற காலம். நம் ம கடமை பிள்ளைகளை நல்லபடியா வளர்த்துக் கல்வியைப் பெற்றுக் கொடுக்கிறதுதான். சீதனம், ஆத
l

Page 9
னம் பற்றி எல்லாம் பிறகு யோசிக் கலாம், ஒரு வேளை அதுகள் கல் யாண வயதை எட்டுகின்ற நேரம், ஆண்களிட்ட அதுகள் சீதனம் வாங்குகின்ற நிலையும் வரலாம்" என்று அவளைத் தேற்றிச் சிரிக்கச் செய்வார். மனைவியின் மக்களின் முகத்தில் மலர்ச்சியைக் காண்பதில் தான் அவருக்கு எத்தனை மகிழ்ச்சி.
அன்று விடுமுறை நாள். தங் கைகள் இருவரும் லைப்றறிக்குப் போய்விட்டனர். வித் தி யா வும் பெற்றேரிடம் கூறிவிட்டுக் குறிப்புக் கொப்பிகள் வாங்கத் தோழி வீட் டுக்குச் சென்ருள், நிமிடங்கள் மணித் தி யா ல மா கி க் கடந்து கொண்டிருந்தன. மாலை நான்கு மணியிருக்கும். தோழி வீட்டிலி ருந்து வித்தியா தாள். கதவுகள் பூட்டப்பட்டிருந் தன. 'அம்மாவும், அப்பாவும் எங்கே" என்று சிந்தித்த படி வாச லில் அமர்ந்தாள். உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டன. "வேண்டாங்க, ஏற்கனவே மூன்று பெண்களைப் பெற்றுவிட்டன். அது களோ ட வாழ்வே சூனியமாத் தெரியும் போது இன்னென்று வேண்டாங்க அம்மாவின் பரிதாபமான குரல் ஒலித்தது. "கஸ்தூரி ப்ளீஸ் இது தான் கடைசி முயற்சி மறுக்காத இந்த ஒரு தடவை றை பண் ணிப் பார்ப்பம் பிறகு உன் பக்கமே தான் தலைவைத்துப் படுக்கமாட் டேன்." அப்பாவின் எதிர்பார்ப் புக் குரல் ஏக்கத்துடன் ஒலித்தது. எனக்கென்னவோ பயமாயிருக் குங்க. பருவமடைஞ்ச பெண்ண வீட்டுக்குள்ள வச்சிட்டு இப்படி நடக் கி றது கேவலமாயில்ல."
14
வீட்டுக்கு வந்
அச்சத்துடன் கஸ்தூரியின் குரல்
ஒலித்தது. மேலும் அந்தப் புனித மான உறவின் ஒட்டத்தை, அந் தரங்கங்களை அறிவது அநாகரிக மானது என எண்ணியவளாய் வித்தியா எழுந்து வீதிக்கு வந் தாள். அவள் பாதங்கள் ஆண்ட வன் சந்நிதியை நோக்கி நடை போட்டன.
ஆலயத்தின் வாசலில் நின்ற வித்தியாவின் விழிகள் ஆருகப் பெருகியது. "இறைவா அப்பா வோட எதிர்பார்ப்பை இ ந் த த் தடவையாவது நிறைவேற்றி அவ ரோட ஏக்கத்தைப் போக்கிவிடு. கடவுளே எனக்கொரு தம்பியைக் கொடுத்து அம்மாவோட மன சைக் குளிரப் பண்ணு." நெஞ் சுருகிப் பிரார்த்தித்து விட்டு வீட் டுக்கு வந்தாள் வித்தியா.
கஸ்தூரியும் தெய்வங்களிடம் சரணடைந்து ஆண்பிள்ளை வேண்டி விரதமிருந்தாள். அவளதும், வித்தி யாவினதும் பிரார்த்தனை பலித்து விட்டது. பவித்திரா பிறந்து பத்து வருடங்களுக்குப் பின் நாலாவது குழந்தையாக அவர்களுக்கு சிஷே ரியன் ஒபரேசன் மூலம் சரவணன் பிறந்தான்.
ஆயிரம் ரூபா வருமானத்துக்
குள் ஆறு ஜீவன்களின் வாழ்க்கைப்
போராட்டம் நிகழ்ந்து கொண்டி ருந்தது. பிள்ளைகளின் கல்விச் செலவு ஒருபுறம், இதரவாழ்க் கைச் செலவுகள் மறபுறம் சிவ ராமனின் தலைமேல் சுமையாய் ஏறி உட்கார்ந்தன. கணவனின் கரத்தோடு கரம் சேர்க்க முனைந் தாள் கஸ்தூரி. சிவராமன் எவ்வ

ளவோ தடுத்தும்கேளாமல் முதன் முதலாகக் கணவனின் சொல்லை மீறிக் கடையப்பம் சுடுவதில் ஈடு பட்டாள் கஸ்தூரி.
அவளுக்கு நாளா ந் த ம் குறைந்தது இருபத்தைந்து ரூபாவா வது வருமானம் கிடைத்து வந்தது. அதனைக் கொண்டு அன்ருட வீட் டுச்செலவை ஒட்டினுள் கஸ்தூரி. ஒரு வழியாக அவர்களின் பிரச் சினை மெல்ல மெல்லக் குறையத்
தொடங்கியது. வித்தியா உயர்
தரப் பரீட்சையில் சித்தி பெற்றுப்
பல்கலைக் கழகம் சென்ருள். மீண்டும் பொருளாதார ஆட்டம் காணத் தொடங்கியது. அவர்களது ஒரே மகன் சரவணனும் மூன் ரு ம் வகுப்பில் காலடி பதித் தான். எப்படியாவது பிள்ளைகளுக்குக் கல்விச் செல்வத்தையாவது நிறை வோடு அளித்துவிட வேண்டும் என்ற சிந்தனையோடு நடந்து கொண்டிருந்த சிவராமனை வேக மாக வந்த லொறி மோதித் தள்ளிமிதித்தது. ஒ டி ந் து விட்ட அவரது உடலைச் சிலர் மருத்துவ மனையில் கொண்டு போட்டார்கள், ஆனல், அவர் மீண்டும் கண்களைத் திறக்கவோ வாய்திறந்து பேசவோ இல்லை.
கஸ்தூரி கதறினள் துடித்தாள் ஆனல் பலன்...? எந்த நேரமும் குங்குமத் திலகத்துடனும், புன்ன  ைக யு ட னு ம் காட்சியளிக்கும் தாயை விதவைக் கோலத்தில் கண்டு வேதனை நெருப்பில் கருகிப் போனுள் வித்தியா, தன் தாயை அந்த நிலையில் தவிக்க விட்டு விட்டு பல்கலைக்கழகக் கல்வி யைத்
தொடர அவள் மனம் விரும்ப வில்லை. பட்டதாரி என்ற பெயரை விட பத்துமாசம் சுமந்து பெற் றவளின் வாழ்வே அவளுக்குப் பெரிதாகத் தோன்றியது. பல்கலைக் கழகம் செல்ல மறுத்த மகளைக் கஸ்தூரி வற்புறுத்தித் தோல்வி
கண்டாள். 'அம்மா நான் பட்ட
தாரியாகாட்டா எ ன் ன ம் மா. வேணுகா, பவித்திரா சரவணன் மூன்று பேரும் நல்ல நிலைக்கு வருவாங்கம்மா. அவங்கள உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர நான் பாடுபடப் போறேம்மா. என்ன வற்புறுத்தாதீங்கம்மா." கெஞ்சு தலாய் அழுதபடி வித்தியா கூறிய போது கஸ்தூரி மெளனமாகி விட்டாள்.
வித்தியாவுக்கு மூன்றே மாதத் தில் ஆசிரிய நியமனம் தனது ஊர்ப்பாடசாலை ஒன்றி லே யே கிடைத்து விட்டது. தாயைநெருப் பில் காய்வதிலிருந்து மீட்டாள். தந்தையின் மொத்தப் பென்ஷன் பணத்தை வங்கியில் தாயின் பெயரில்  ைவ ப் புச் செய்து, மாதாமாதம் கிடைத்த வட்டி தொகையையும், சம்பளப் பணத் தையும் கொண்டு கு டு ம் ப ச் செலவை ஈடு செய்தாள்.
காலச்சக்கரம் சுழன்று கொண் டிருந்தது. வேணுகா ஒரு விஞ்ஞா னப் பட்டதாரி ஆசிரியையானுள். ப வித் தி ரா வணிகத்துறையில் பயின்று அரச கூட்டுத்தாபனம் ஒன் றில் கணக்காளராகப் பதவி ஏற் ருள். அதேவேளை அவர் க ள து அன்புத்தம்பி சரவணன் மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகி பேராதனை
15

Page 10
வளாகம் சென்ருன். ஒருநாளும் பிரிந்திராத மகனைப் பிரியமுடியா மல் அவனைக் கட்டிக்கொண்டு கஸ் தூரி அழுதாள். அப்போது சரவ ணன் 'அம்மா அழாதீங்கம்மா, நீங்க அழக்கூடாது. இன்னும் ஐந்து வருடத்தில நான் டொக்டராகி வந்து அக்காமார் மூன்று பேருக்கும் நல்வாழ்வை அமைச்சுக் கொடுப் பேனம்மா. அதுச்குப் பிறகு, மேற் படிப்புக்காக நான் லண்டன் போகக் குள்ள உங்களையும் கூட்டிக்கொண்டு போவன். ஒ. கே நீங்க அழக்கூடாது எங்க பார்ப்பம் சிரிச்சுக் கொண்டு எனக்கு விடைகொடுங்கோ" என்று தனது இலட்சியத் திட்டத்தைக் கூறித் தாயின் மனத்துக்கு தேறுதல் அளித்தான் சரவணன். அவனது நெற்றியில் முத்தமிட்டு விடை கொடுத்தாள் கஸ்தூரி.
என் பிள்ளை டொக்கருக்குப் படிக்கான் செல்லம். இனி எப்பி டியோ என்ர நாலு பிள்ளையஞம் நல்ல நிலைக்கு வந்திட்டுதுகள். இனி அதுகளுக்கு வீடு, வளவு, சீதனம் என்று கொடுத்து ஒரு வாழ்க்கை யை அமைச்சுக் கொடுத்திட்டா நானும் நிம்மதியாய் போயிடுவன்" பக்கத்து விட்டுச் செல்லம் மாமி யிடம் அடிக்கடி கஸ்தூரி இப்படித் தான் கூறுவாள்.
மாலை ஆறுமணிக்கு வானெலிச் செய்தியைச் செவிமடுத்த வித்தியா அதிர்ந்து போனுள். "அம்மா பேரா தனை, கொழும்பில எல்லாம் பிரச் சினையாம். தம்பி எங்கயோ தெரி யல்ல." என்று அழு த ப டி யே சொன்னஸ். "கடவுளே என்ர பிள்ளையைக் காப்பாற்று. தன் கரங்களைத் தலைமீது குவித்தாள்
6
சஸ்தூரி. எங்குமே பீதியும், பயமும் தலைவிரித்தாடியது. வித் தி யா, வேணுகா, பவித்திரா மூவரும் தாய்க்கு ஆறுதல் கூறுயபடி தங்கள் வேதனைகளை மறைத்துக் கொண்டி ருந்தனர்.
அன்றைய பொழுது அமைதி யின்றிக் கழிந்தது. காலையில் தபாற் கந்தோரிலிருந்து வந்த அழைப் பைக் கேட்டு அங்கு விரைந்த வித்தியா பேராத்னை வளாக விடுதி யிலிருந்து, சரவணனின் நண்பன் குமார் சொன்ன சேதிகேட்டுச் சிலை யாகி, நடைப்பிணமாகிக் கண்ணி ருடன் வீட்டுக்கு வந்தாள். ஆம் அவளது அன்புத்தம்பி, ஆருயிர்ச் சகோதரன் கொலைவெறி பிடித்த மிருகங்களின் துப்பாக்கி வேட்டுக் குப் பலியாகி விட்டான்.
பெற்றவளிடம் சேதியைக்கூற முடியாமல் தவித்தாள். கதறினள். ஆனல்: ஊரெல்லாம் அந்தச் செய்தி தபாற்கந்தோர் மூலமாகப் பரவிவிட்டது.
மகனின் மரணச் சேதி கேட்டு மனம் பித்தாகிய கஸ்தூரி மீண்டும் சுய உணர்வுக்குத் திரும்பவேயில்லை" அன்று அவள் எப்படியெல்லாம் கதீறினள். 'பத்து வருசம் கழித்து பத்தியம் பலகாத்து நேராத கோயி லெல்லாம் நேந்து தவமிருந்து உன்னைப் பெற்றனே மகனே - பாதி யில உன்பால் முகத்தப் பார்க்க முடியாமல் பறிகொடுக்கவா உன் னைப் பெற்றெடுத்தன். சரவணு உன் விழிகளைத் திறந்து ஒருமுறை உன் தாய் முகத்தைப் பாரடா மகனே. "அம்மா அக்காமாருக் கெல்லாம் வாழ்வு கொடுத்திட்டு

உங்களை லண்டனுக்குக் கூட்டிப் போவன் என்றெல்லாம் ஆசை யோட கூறிப்போனயே. உன் கன வையெல்லாம் சி  ைத ச் ச வங் க யாரடா மகனே. வெறிபிடிச்ச மிரு கங்களின் வேட்டைக்காகவா உன் னைக் கண்போலக் காத்து வழிய னுப்பி வச்சன். சுமந்த வயிறு எரி யுதடா என் செல்வமே. என்னை விட்டு எப்படி நீ த னித் துப் போனுய் சொல்லடா மகனே." அந்தத் தாயின் ஒலம் அரக்சமனங் களுக்குத்தான் கேட்டிருக்குமா?
"அக்கா. அக்கா. என்ற பவித்திராவின் குரல் வித்தியாவை சுயநினைவுக்கு மீட்டு வருகிறது. தங்கையை நிமிர்ந்து பார்க்கிருள். "அக்கா, அம்மாவுக்கு இன்னமும் சாப்பாடு கொடுக்கவில்லையே, இந் தாங்கோ இதை ஊட்டிவிடுங்கோ. லண்டனில இருந்து ஒரு மனநோய் டொக்டர் வந்திருக்கிருரர். அவ ரிட்ட அம்மாவ அழைச்சுப்போய்க் காட்டுவம் அக்கா. உணவுக் கோப்பையையும், தண்ணிர் கிண் ணத்தையும் வித் தி யா விட ம் கொடுத்தபடியே கூறுகிருள் பவித் திரா.
*gef சாப்பிடு,
பவித்திரா,
நான்
நீ போய்
அம்மாவைக்
多
கவனிக்கிறன்.” என்று பதிலளித்து விட்டு அம்மாவின் அருகில் டோய் அமர்கிருள் வித்தியா. அவள் மனம் 'தம்பி நீ டொக்டராகி வரும் நாளை எதிர்பார்த்திருந்த அம்மாவின்ர கோலத்தைப்பாரடா. இப்போ இந்தத் தாய்பையின் அவல நிலை போக்க இன்னுெரு டொக்டரை நாடவேண்டிய சொடு மையைப் பாரடா.” கூறிக் கொள்ள விழிசள் நீரைச்சொரிகின் றன. 'அம்மா." என்று தாயை அழைக்கிருள் வித்தியா. “சரவணு நீ வந்திட்டியே, எங்க உன் சழுத் தில குழலைக் கானல்ல. ம். உன் னுேட அம்மாவை ஆச்சரியப் படுத்த வேணுமெண்டு ஒழிச்சு வச்சிட்டியே டேய் உன்னச் சுமந்தவடா நான் என்ன உன்னுல ஏமாற்றமுடி என்ற தாயின் வார்த்தை கள் வித்தியாவைத் துடிக்கச் செய் கின்றன. 'அம்மா உங்க மகன் நிரந் தரமாகவே உங்களை ஏமாற்றிட்டுப் டோயிட்டாம்மா." மனதுக்குள் புலம்புகிருள் வித்தியா.
பித்தாகிப் போன தாய்மைக் காக, மூன்று கன்னிக் குயில்கள் காவலிருக்கின்றன. அந்த ஜீவன் களுக்கு விடிவுகாலம் பிறக்குமா..? (யாவும் கற்பனையே)
யாது .'
அம்மாஞ்சி:- என்ன பிள்ள கையை கிளப்பிற்று வாழு?
கனகி:- அம்மாஞ்சி:-
வாறதா?
"ஊசி" போட்டுத்துவாறன் அம்மாஞ்சி,
"ஊசி"யை கண்ட கண்ட இடத்தில எல்லாம் போட்டுத்து
ஆற்றையும் கால்ல கையில போட்ட இடத்தில எடுத்திற்று ஓடி வா.
ஏறப்போகுது. உதவிக்கு
வேணுமெண்டா நானும் வாறன்.
፤ 7

Page 11
“நேரத்தை
நேசிப்போம்”
0 வள்ளிமைந்தன்
"நேரமில்லை" - என்பது எமது நாட்டில் உள்ள எல்லா வர்க்கத் தினரின் வாயிலும் சுதந்திரமாக வாசம் செய்யும் வார்த்தையமாகும்.
இலங்கையில் எட்டு மணித்தியாலங்கள் வேலே என்பது பொது
வான நடைமுறையாக இருக்கின்றது. இருந்தும் ஒன்பது நிமிடங்கள் கூட தங்களது கடமைகளை முழுமையாக மேற் கொள்பவர்கள் எத்தனை பேர் என்பது எமக்கே வெளிச்சம்.
வஸ் நேரத்திற்கு வரவில்லை. அதனல் காரியாலயத்திற்கு நேரத் திற்கு வரமுடியவில்லை என்பதை வாடிக்கையான வார்த்தைகளாக்கி காரியாலய நேரத்தை விழுங்கி விடுவோர் ஏராளம்.
பல மணித்தியாலங்களை விரயமாக்கி காத்துநின்று அவர்களிடம் அலுவல்களை முடிக்க அணுகும் பொதுமகனை நேரமில்லை" அல்லது "இன்றுபோய் நாளை"-என விரட்டி விடும் ஊழியர்கள் அதிலும் ஏராளம்.
ஒரு தனி நபரின் அசிரத்தையால், தாமதத்தால், "நேரமில்லை" என்ற நேர்மையற்ற வார்த்தையால் பல மனிதர்களின் பொன்னன நேரம் மண்ணுகிவிடுகின்றது.
நல்ல சொள்கைகளின், அபிவிருத்தியின் அமுலாக்கம், மந்திரி" செயலாளர் மட்டத்தில் இருந்தாலும் அது உண்மையில் சாதாரண விகிதராலேயே நேரடியாக அமுல் செய்யப்படுகின்றது. அவரின் தாமதம் எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது. இதனலேயே எமது நாட்டின் அபிவிருத்தி அஸ்தமனபாதையாகவே அமைந்துவிடுகின்றது.
அண்மையில் பிரபல வங்கியொன்றில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக மக்கள் மாக்கள் போல் நான்கு நாடகள் வெயிலில் நீண்ட கியூவில் நிற்க வேண்டியதாயிற்று.
பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் அந்த வங்கியில், ஒரு சில நிமி டங்களைச் செலவு செய்து, பொருத்தமான அறிவித்தல் ஒன்றைத் தொங்க விட்டிருந்தாலே பலர் அதைப் புரிந்து கொண்டு வீடு சேர்ந்திருப்பார்கள் வீணுக கியூவில் நிற்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. பல மணி தர்களின் பல மணி நேரங்களை நாடு சேமித்திருக்கும்.
8
 

யப்பான் உலகம் வியக்கும் வண்ணம் வளர்ந்துவிட்ட நாடு, அங்கே நேரத்தை மதிக்கிருர்கள். நேர விரயத்தை தவிர்க்கின்றர்கள். இதுவே அந்த நாட்டின் வளர்ச்சியின் அடிப்படை. இதுதான் யப்பான் சென்று வந்த நண்பரின் அனுபவமாக இருந்தது.
காரில் செல்லும்போதே,பாதையில் "சிக்னலுக்காகக் காத்திருக்கும் போதே, முகச்சவரம் செய்துவிடுவார்சளாம். காலை உணவுக்கே நேரம் ஒதுக்காமல் காலை உணவைக்கூட எடுக்கின்றர்களாம்.
ஆனல் நமது நாட்டில் முகச்சவரம் எடுப்பதற்கே சலூனுக்குச் சென்று அங்கு எவ்வளவு நேரத்தை விரயமாக்குகின்ருேம். முகச்சவரம் எடுப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து எத்தனை முக்கிய வேலைகளைக் கூட "நேரமில்லை’ என்று ஒதுக்கி விடுகின்ருேம்.
அதேபோல் காலை உணவு தயாரிப்பதற்கே எமது குடும்பத் தலைவி கள் எவ்வளவு நேரத்தை விரயமாக்குகின்ருர்கள். காலை உணவை அருந்து வதற்கே எவ்வளவு நேரத்தை வீணடிக்கின்ருேம்.
திரையரங்கில் படம்பார்ப்பதென்றல் குறிப்பிட்டநேரத்திற்கு முந் தியே அங்கு எப்படியோ சென்றுவிடுகின்ருேம். காரியாலயமென்றதும் செல்லலாம் என்ற மனுேபாவம் எமக்குள் வளர்ந்திருக்கின்றது.
காலை 7.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 3.00 மணிவரை வேலை செய்த நபரொருடர் மறுநாள் காலை தனது கடமைக்கு 10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதற்காக சவூதி அரேபியாவில் அவருக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டதாம். இவ்வாறுதான் அங்கு வேலை வாங்குகின்ருர் கள். நமது நாட்டில்..?
இளம் சட்டத்தரணி ஒருவர் கூறினர்; தனது குரு காரில் நீதி மன்றம் செல்லும்போது சில "கேசு’களை காரிலேயே படித்து கிரகித்து, வெற்றியும் பெற்றுவிடுவாராம். ܥ ܀
எமது உயர் வகுப்பு மாணவர்கள் பஸ்சில் பாடசாலைக்குச் செல்லும் போதோ வரும்போதோ வசதியான சீற்றில் அமர்ந்திருந்தால்கூட தங்கள் புத்தகங்களைத் திறப்பதே அபூர்வம். அவ்வேளையில் தரமற்ற சேட்டைகளை பும், பிரயாணிகளுக்கு இடைஞ்சல்களையும் விளைவிப்பதிலேயே அவர் களுக்கு ஆர்வம்.
அரிசியை உலையில் போட்டுவிட்டு அதற்கு காவல் நிற்காமல் உலை
கொதிப்பதற்குள் கறிகளுக்குரிய ஆயத்தங்களைச் செய்துவிடும் ஒரு சாதா ரண சமையல்காரியிடமே நேரவிரயத்தைத் தவிர்ப்பது எப்படியென்று படித்துக் கொள்ளலாம்.
மூன்று கறிகள் சமைக்க முற்படும் பெண் ஒருத்தி மூன்று சறி?ளுக் குரிய ஆயத்தங்களையும் முழுமையாகச் செய்யாமல், முதல் அடுப்பில் வைக்கும் கறிக்குரிய ஆயத்தங்களைச் செய்து அடுப்பில் வைத்துவிட்டு,
19,

Page 12
அதே நேரத்தில் மற்ற கறிகளுக்குரிய ஆயத்தங்களைச் செய்து நேரத்தை எவ்வாறு சேமிக்கின்றுள் என்பதை நாம் அவதானிக்கலாம்.
நாம் எடுத்ததற்கெல்லாம் "நேரமில்லை" என்ற போர்வைக்குள் மறைந்துவிடுகின்ருேம்.
முன்னேற வேண்டுமென்ற ஒரு வியாபாரியிடம் எப்பொருளைக் கேட்டாலும் 'இல்லை" என்று சொல்ல மாட்டான். இல்லாத பொருளைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல எண்ணமாட்டான்.
ஆனல் நேரத்தை என்னசெய்வதென்று தெரியாத நிலையில் கூட, உதவிக்கு யாரும் அழைத்தால் "நேரமில்லை" என்று நழுவிவிடுகின்ருேம். எதிர்மறையான சொற்களைத் தொடர்ந்து பாவித்தால் அதன் பாதிப்பு விரைவில் தோன்றக் கூடுமாம் என்று மனேதத்துவரீதியாக அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே இனிமேல் நீங்கள் "நேரமில்லை’ என்ற சொல்லை நேரமில்லாவிட்டாலும் கூட உபயோகிக்காதீர்கள். காலம் உங்களுக்காகக் காத்திருக்காது.
நாம் இப்போ புதியதொரு யுகத்தில் அடியெடுத்து வைப்போம். அந்த யுகத்தின் ஆரம்டமே நேரத்தை நேசிப்பதாக இருக்கட்டும். ஒழுங்கீனத்தினதும் நேர்மையீனத்தினதும் எதிரியாக நேரத்தை நிலை நிறுத்துவோம்.
நாம் ஒவ்வொருவரும் காலத்தைக் கவனமாகப் பங்கீடு செய்து கொள்வோம். எவ்வளவுதான் வேலைப்பழு என்ருலும் நாளை நடைமுறைப் படுத்த வேண்டிய செயல்களை முக்கியத்துவ அடிப்படையில் நிரல்படுத்தி அதற்கான நேர ஒதுக்கீட்டையும் வகைப்படுத்திய பின்னரே உறங்கு வோம். இதயத்தில் பதித்துவிட்ட நேர அட்டவணைப்படியே அதி சாலை யில் இருந்தே சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிப்போம். இதனுல் வீட்டுப் பிரச்சனைகளும் விலகிவிடும். நாட்டுப் பிரச்சனையும் நீங்கிவிடும்.
தேடியும் தென்படவில்லை
நானிலம் போற்றும் நாயகனை
நாற்றிசையில் ஒரு திசையிலாவது நான் காணவில்லை - ஒ அதனுல் தான் இன்று
நானே பேணுவின் நாவினுல் பதிலைக் கேட்கிறேன்.
பொத்துவில் - சாந்தி
20

头
பத்து மாதம் பல பாடுபட்டே எனப் பாரினில் ஈன்ற என் தாய் சித்தம் மகிழ்ந்தெனைச் சேர்த்தணைத்துக் கொஞ்சித் தேவைகள் செய்பவள் தாய் பாலூட்டித் தாலாட்டிப், படுக்கவைத்தெனைப் பக்கத்திலே இருந்து மேலான சேவைகள் செய்தெந்த நாளுமே விரும்பிக் காத்திடும் தாய்
தத்தி நடக்கையில் தானும் கூடநின்று
தாவி அணைத்திடுவாள் எத்தி, எத்தி என முன்னே அழைத்துமே இன்பமும் கண்டவள் தாய் ஈயெறும்பு கிட்டி என்னை அணுகாது என்றுமே காத்திடுவாள் தூய உடைதந்து, சுத்த உணவையும் சுவைக்க ஊட்டிடும் தாய் பந்து விளையாடப், படிக்கப்புத்தகம் தந்து மகிழ்ந்திடுவாள் பக்கத்திருந்தவள் பாடம் சொல்லித்தந்து பண்பாய் வளர்த்தவள் தாய் அன்னை வளர்த்தெமை நல்வராய்வாழ ஆசைக்கனவு காண்பாள் அன்னவர் ஆசையை எந்நாளும் போற்றியே நல்மக்களாக வாழ்வோம்
சிறுவர்களே! சிறுவர்களே! அட்டைப் படத்தைப் பாருங்கள் அதிலுள்ள வாத்தியங்களை கணக்கிடுங்கள்! எத்தனை என்பதை எமக்கெழுதுங்கள் சுகந்தம் தரும் பரிசுக்காக காததிருங்கள், போட்டி முடிவு திகதி - 15 - 12 - 1989
2.

Page 13
அட்டைப்படப் பிழையும் பரிசும்
சிட்டைப்படப் பிழையைக் கண்டுபிடிக்கும் போட்டிக்கு நூற்றுக் கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. ஒவியர் திட்டமிட்டு விட்ட பிழையுடன் மேலும் பல பிழைகளே வாசகர்கள் கண்டுபிடித்து எமது ஒவியரைத் திணறடித்து விட்டனர். திட்டமிட்டு விட்ட பிழை:- தைமகளின் வலது கை, 84 விண்ணப்பங்களில் மேற் படி பிழை சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. பரிசுக்குரிய அதிஸ்டசாலி, K . ஜெயானந்தி. மே / பா S. கிருஷ்ணபிள்ளை R. D, O பாண் டிருப்பு - 1 கல்முனை.
பிழையை ஆழமான காலத்திற்குப் பொருத்தமான கவிதை மூலம் வெளிப்படுத்திய பின்வரும் எமது வாசகருக்கு எமது பாராட்டுப் பரிசை உரித்தாக்குகின்ருேம். S(5. g. solops, a Lycausi கலாயராஜன். பிரதான வீதி, சளுவாஞ்சிக்குடி. வாசகர்கள் சுட்டிக்காட்டிய ஏனைய பிழைகள் பின்வருமாறு:- திலகம், அடுப்பு.
ஆர்வமுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி
Pாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியை நீடித்தும் முன்னேற்றம் ஏதும் இல்லை. ஏற்கனவே எமக்கு வந்து சேர்ந்த நான்கு சிறுகதைகளையே போட்டிக்காகப் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்பட்டது. •م
நான்கு சிறுகதைகளுமே தலைப்பையும், ஆரம்ப பந்தியை யும் நழுவவிட்டுச் செல்கின்றன. சிறுகதைக்கான கரு இல்லாமலே கதை நகர்த்தப்பட்டிருந்தது. எனவே பரிசுக்கான சிறுகதையை எம்மால் தெரிவு செய்ய முடியவில்லை.
எனினும் போட்டியில் கலந்து கொண்ட மூவரின் எழுத்து நடை மிகவும் நன்ரு?க இருக்கின்றது. இவர்கள் தரமான சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்துவந்தால். இவர்கள் நிச்சயம் சிறந்த எழுத்தாளர்களாக வருவார்கள் என்பது எமது நம்பிக்கை. h−
சோர்ந்துவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள். சுகந்தத்திற்கும் எழுதுங்கள். செல்வி. சீ. விஜிதாகுமாரி, திரு. S. K. குணசீலன் திரு. ம. வேதோதயன் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்கள்.
22

சிறுகதை
நீ தி யி ன் ப ா ர்  ைவ
9 அன்புமணி
இருதலைக் கொள்ளி எறும்பு என்ருல் என்ன என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது.
ஒரு பக்கம் அவ னு  ைட ய "பொஸ்", மறுபக்கம் அவனுடைய கண்மணி. ஒ%லக் குடிசையில் கிடந்த வனுக்கு உத்தியோகம் எடுத்துக் கொடுத்ததுடன் உயர் பதவிகளுக் கும் வழிவகுத்துக் கொடுத்த போது "பொஸ் ஸுக்கு இப்படி ஒரு எண் ணம் இருக்கும் என்று அவன் கன விலும் நினைக்கவில்லை. பணத்தில் புரளும் மனேஜர் தன்னையும் அதில் இழுத்துப்போட விரும்பியது அவ னுக்குப் புரியாத புதிராக இருந்தால் நா க ரீ க த் தி ல் தவழும் நந்தினி இதற்கு எப்படிச் சம்மதித்தாள் என்பது அ  ைத.வி டப் புதிராக இருந்தது. -
நந்தினி அழகி எ ன் ப தி ல் சந்தேகமில்லை. ஆனல் சண்மணிக்கு முன் அவள் மின்மினிதான்.
மனேஜர் மகாதேவன், சிவலிங் கத்தை வேலை காரணமாக வீட்டுச்கு அழைத்துப் போவதும் ந ந் தி னி அவர்களுடன் வந்து கலப்பதும், தற்செயல் நிசழ்ச்சிகள் அல்ல, என் பதை ஒரு வாரத்திற்குள் சிவலிங்
கம் புரிந்து கொண்டான். இந்தப் பொறியில் இருந்து எப்படித் தப்பு வது?
சண்மணியிடமிருந்து அன்று அவனுக்கு வந்த கடிதம் அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அம் பாரையில் நடக்கும் விஷயம் மட்டக் க ள ப் புக் கு அதற்குள் போனது எப்படி?
அன்று முழுக்க வங் கி யில் அவனது வேலைசளில் தவறுகள் ஏற் பட்டன. மத்தியானச் சாப்பாட்டுக் காக அவன் புற ப் பட்ட போது மனேஜரிடம் சொல்லி அரைநாள் லீவு வாங்கிக் கொண்டு வந்து அறைக்குள் முடங்கிக் கொண்டான். அறையின் ஜன்னலூடாகத் தெரி யும் அம்பாரைக் குளமும், அதன் அடிவானத்தில் தெரியும் மலைத் தொடர்களும் மனதை இதமாகத் தடவிக் கொடுக்கும் மனேரம்மிய மான காட்சி. ஆனல் இன்று அவ னுக்கு அக்காட்சி அப்படி இதம் தரவில்லை.
கண்மணியின் கடிதம், மனேஜர் மகாதேவனின் வியூகம் - எப்படித் தீர்ப்பது இச் சிக்கலை? " என்ன, சிறப்பரையா?, எந்தக் போட்டை யைப் பி டி ப் ப த ந்கு @应西
33

Page 14
யோசனை? கிள்ளை மொழியைத் தொடர்ந்து, ஒருவித சுகந்தம் பரவ தேவயோகக் கன்னிபோல அங்கே வருகை தந்தாள் நந்தினி. பணச் செழிப்பின் மெருகு அவள் உடை யிலும், நடையிலும், ஏன் பேச்சிலும் கூடப் பளிச்சிட்டது.
திக்குமுக்காடிப் போனன் சிவ லிங்கம்.
அவன் விடுதி அறை அத்தகைய பெண்கள் காலடி வைப்பதற்கு ஏற் றதாக இருக்கவில்லை. அதனல் மிக வும் சங்கடப்பட்டான். உடைகளும். புத்தகங்களும் இறைந்து கிடந்தன, கதிரை மேசைகள் தாறும்ாருகக் கிடந்தன. அவைகளை மேய்ந்த நந் திணியின் கண்களிலும் ஒரு சுழிப்புத் தெரிந்தது.
**வேலை நெருக்கடியில் அறை  ையக் கூட ஒழுங்குபடுத்தவில்லை. இதோ, ஒரு நிமிஷம்.’’ என்று அவசரமாக எழு ந் த சிவலிங்கத் தைத் தடுத்து நிறுத்தினள் நந்தினி. *பரவாயில்லை. நமச்குள் எதற்கு இந்த சம்பிரதாயமெல்லாம்".?
‘என்ன இருந்தாலும் எனது மேலதிகாரியின் மகள் அல்லவா? ** கிண்டலா?’’
**சேச்சே! இந்த ஏ  ைழ யி ன் குடிசைக்கு நீங்கள் வருவது. p
'போதும் போதும். விடுமுறை யைக் கழிக்கலாம் என்று ஊரிலி ருந்து வந்தால் இந்த அம்பாரைக் காட்டில் பார்க்க என்ன இருக்கிறது? வீட்டுக்குள் அடைந்து கிடந்து ஒரே போரடிக்கிறது. அதனல் சும்மா
இந்தப் பக்கம் வந்தேன். இப்போது
உங்களுக்கு ஒய்வுதானே?”
24
“9... . . . . . . ஒய்வுதான்'
"அப்படியானல் ஏன் நீங்களும் அறையில் அடைந்து கிடக்கின்றீர் கள் வாங்களேன் கடைத்தெருப் பக்கம் போய்வரலாம்”
சிவலிங்கம் விழித்துக் கொண் டான். சர்வ ஜா க் கி ர தை யாக இருக்க வேண்டும். பிடி கொடுத்து விடக் கூடாது.
*இந்த வெயிலுக்குள்ள நடந்து போனல் . "
'நான் ஒன்றும் உருகிப் போய் விட மாட்டேன்’
"சரிதான் சரிதான்”.
'இப்படி ஒரு வெக்கடையை நான் பார்த்ததே இல்லை "
சேச்சே வெட்கம் ஒன்று மில்லை. நாம் இருவரும் சேர்ந்து போனல் என்னை உங்கள் வேலைக் காரன் என்று தான் மத்தவங்க நினைப்பாங்க',
'அடேயப்பா, அம் பாறை பாங்க் ஒவ் சிலோன் சி ரு ப் பர் ஐயாவுக்கு இவ்வளவு தன்னடக் கமா? சரிசரி உங்களுக்கு இஷ்ட மில்லா விட்டால் விடுங்க”.
"நோ நோ! நான் வாறன்’
பேசிக்கொண்டே கிளப் அருகில் வந்த போது அம்பாரைக் குளத் தின் அக்கரையில் பிள் ளை யார் கோயில் தெரிந்த து. அதைப் பார்த்த நந்தினி "இந்தப் பிள்ளை
யார் கோயில் எவ்வளவு அழகாக
இருக்கிறது. கோ யி லு க் கு ப் போயிற்று வருவோமா?” என்று கேட்டாள்.

''g @g s" என்ருன் சிவலிங்கம். * 'தனியே உட்கார்ந்து பேசுவதற்கும் அது வசதியான இடம்” நந்தினி அவனை ஆழமாகப் பார்த்தாள். சிவலிங்கம் த லை யைக் குனிந்து கொண்டான்.
கிளப் ஒரமாகச் சென்று அம் பாரைக் குளக்சட்டில் ஏறினர்கள். அந்தப் பாதை நேரே பிள்ளையார் கோயிலுக்குச் செல்கிறது. அணைக் கட்டின் இரு மருங்கிலும் ஆண் களும், பெண்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பிற் பகல் வேளை ஆகையால் கிளப்பில் கொட்டம் அடிப்பவர்களின் உற் சாக ஒலிகள் அலை அலையாகக் கேட்டுக் கொண்டிருந்தன.
அணை க் கட்டி ன் குறுக்கே குளத்து நீரை நகருக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள், அருகில் உள்ள பம்ப் ஹவுஸில் சன்ன பின் னலாகி இரைந்து கொண்டிருந்தன. குளக்கரையில் வெள்ளைக் கொக்கு களின் தவம். ஆகாயத்தில் பூமா லையை அறுத்து வீசியதைப் போல் கடல் காகங்களின் விமானசாகசம். புசுபுசுவென்ற காற்று.
சிவலிங்கத்துக்கு அலுத்துப் போன இந்தக் காட்சிகள் ஒவ் வொன்றும் நந்திணிக்குப் புதுமை யாக இருந்தன. அகலக் கண்சளு டன் ஒவ்வொன்றையும் ரசித்துப் பரவசப்பட்டாள். சிவலிங்கம் சர்வ ஜாக்கிரதையுடன் அவள் உற்சா கத்திற்கு ஈடுகொடுத்துப் பேசினன். பிள்ளையார் கோயிலை அடைந்த
போது அங்கு பக்த கோடிகள் இல்லை. உள்ளே ஐயரும், உதவி
யாளும் ஏதோதோ காரியங்களைக்
கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
சிவலிங்கமும், நந் தி னி யும் கோயிலே ஒரு சுற்றுச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கி விட்டு, வெளியே வந்து கோயில் பிரகாரத் தில் குளத்துப் பக்கமாக உள்ள பொன்றை மணலில் "அப்படா" என்று உட்கார்ந்தார்கள்.
சிவலிங்சம் மனதுக்குள் எல் லாம் ஒத்திகை பார்த்துக் கொண் டான். நந்தினியின் மனதில் உள் ளது வெளிவருமுன் தனது மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விட வேண்டும்.
சுற்றியுள்ள காட்சிகளைப் பற் றிய ரசனைப் பேச்சுகள் முடிந்து "டப் பென்ற அமைதி ஏற்பட்டது. அந்த மெளனத்தின் வாயிலில் நின்று சிவலிங்கம் தொண்டையைச் செருமிக் கொண்டான்.
"நந்தினி உங்கள் அப்பா எங்கள் குடும்பத்துக்குச் செய்திருக் கிற நன்மைகள் ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கிறபோது எத்தனை ஜன்மம் எடுத்தாலும் எங்களால்
அந்த நன்றிக் கடனை இறுக்க முடியாது’
நந்தினி மு று வலித் துக்
கொண்டே தலை குனிந்தாள்.
"எப்படி நான் அவருக்கு நன்றி செலுத்துவது என்று தெரியாமல் தவிக்கின்றேன்"
"சொல்லுங்க!” ஊக்குவித் தாள் நந்தினி.
"அவருக்குப் பிரதி செய்ய
எனக்கு ஒரு வாய்ப்பும் இல்லை. இந்த நிலையில் அவரிடம் இன்னும்
25

Page 15
உதவிதான் கேட்க வேண்டியிருக் கிறது.
*அதுக்கென்ன தாராளமாகக் கேளுங்க. நீங்க கேட்டா இல்லை யென்ரு சொல்லப்போ கிருர்?
"ஆனல். இது நான் அவரிடம் நேரடியாகக் கேட்கக்கூடிய விஷயம் இல்லை. இன்னெருவர் மூலம் தான் கேட்கவேணும்.
"என்மூலம் கேட்கலாமா? "அ.அ. அதுதான் சொல்ல வந்த நான்’
"பூ! இதுக்கு ஏன் இப்படிப் பயந்து சாகிறீங்க. சொல்லுங்க. நானே கேட்கிறேன். சொல்லுங்க” என்ன கேட்கவேணும்?
"இதோ, இந்தக் கடிதத்தில,
நான் கேட்க வேண்டிய விஷயம் இருக்கிறது’
காற்சட்டைப் பையிலிருந்து மகாலிங்கம் எடுத்துக் கொடுத்த அந்தக் கடிதத்தை நந்தினி ஒருவித உற்சாகத்துடன் விரித்தாள்.
கடிதத்தின் ஆரம்பமே அவள் எதிர்பார்த்த விடயத்திற்கு நேர் மாருக இருந்தது. அதிர்ச்சியுடன் கடிதம் முழுவதையும் படித்தாள்.
"அன்பு அத்தான்,
இத்தனை வருஷங்களாக, உங்களுக்குக் கிடைத்தளத்தனையோ உயர்ச்சிகளுக்கு மத்தியிலும் இந்த அபலையை மறக்காமல் இருப்பதற்கு என் நன்றி. எத்தனை அழகிகள் வந்தாலும் என் உள்ளம் கவர்ந்த வரின் உள்ளத்தை அசைக்க முடி யாது என்று இதுவரை நம்பியிருந் தேன். ஆனல் அம்பாரையிலிருந்து வந்து கொண்டிருக்கும் கதையைக்
26
வில்லை.
கேட்ட பிறகு என் நம்பிக்கை தளர்ந்து விட்டது.உங்கள் தகுதிக்கு இந்த இடம் ஏற்றதாக இருக்க லாம். நந்தினியும் ஏற்றவளாக இருக்கலாம். ஆனல் நீங்கள் என் சொத்து. ஒரு ஏழையின் சொத்தை ஒரு பணக்காரர் பிடுங்கிக் கொள் வதில் நியாயம் உண்டா? உங்கள் மகாதேவன் ஐயா ஏழைகளுக்கு உதவும் தர்மசீலர் என்ருல், இந்த அநீதியை அவர் செய்யலாமா? அதற்கு நீங்களும் உடந்தையாக இருக்கலாமா? தெ ய் வத் தி ன் டே ரால் உங்களிடம் நீதி டேட்கி றேன். நீதி செத்து விட்டால் இந்த அபலைக்கும் அதே சாவுதான்.
உங்கள்,
கண்மணி.
கடிதத்தைப் படித்து முடித்து வெகு நேரமாகியும் நந்தினி தலை நிமிரவில்லை. கைக்குட்டையால் மூக்கை அடிக்கடி துடைத்துக் சொண்டிருந்தாள். அந்த மெளனத் தில் குறுக்கிட மகாலிங்கம் விரும்ப வில்லை.
தலை நிமிர்ந்த நந்தினி கடி தத்தை மகாலிங்கத்திடம் நீட்டி ஞள். அவள் முகம் சலனமற்றிருந் தது. ஆனல் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வெளிவர யார் முதலில் பேசுவது என்ற நிலையில் மெளனம் மேலும் நீடித்தது. கடைசியில் நந்தினியே அந்த மெளனத்தைக் கலைத்தாள்.
"நீங்கள் பாக்கியசாலி தான் சிவலிங்கம். ஆனல் உங்கள் கண் மணி உங்களை விடப் பாக்கியசாலி.
"அப்படியானல் என் வேண்டு

கோளை நிறைவேற்றி வைப்பீர் களா நந்தினி?’
*கண்டிப்பாக!"
"என் மீது உங்க ளு க் குக் கோபம் இல்லையா?
கோபம் இருந்தால் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றி வைக்க முடியுமா?நல்லவேளை இதை நீங்கள் இப்போதாவது வெளிப் படுத்தினீர்கள். இல்லாவிட்டால் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கும்.
*பிள்ளையார் பிடிக்கக் காக முடிந்த கதை போல!"
கலகலவென்று சிரித்தாள் நந் திணி. ஆனல் அதில் வழமையான கலகலப்பு இருக்கவில்லை, "பிள்ளை யாரைப் பிடித்ததினுல்தான் குரங்கு ஆகாமல் தப்பியிருக்கின்ருேம்" என்ருள் சாவதானமாக,
குரங்
"அப்பாடா! கவலை விட்டது.
"இனி கடைத் தெருவுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை, வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்." என்ருள் நந்தினி.
-
எங்கள் பெயர்ப் பலகை
*லெட்சுமி
உங்கள் இதயங்களில் மட்டும் தான்.
என்றும் உங்கள் சேவைக்கு
பிரதான வீதி, பெரியகல்லாறு - 1, கல்லாறு.
ஸ்ரோர்ஸ்’
27

Page 16
ቆ8
எண்திசை நோக்கில் எதிர்ப்பட்டவை
கண்கள் கவனம்:- அனேகமாக ஆற்றங்கரைகளை அண்டி நிற்கும் தில்லை மரங்கள் பற்றி நீங்கள் அ வ் வள வாக அக்கறை எடுத்திருக்கமாட்டீர்கள். அந்த மரத்தின் பால் கண்களில் பட்டால் கண் பார்வையே கெட்டுவிடும். எனவே என்ன மரம் என்பதை இனம்
காணுமல் எந்த மரத்தையும் வெட்ட முயலாதீர்கள். நீங்கள் வெட்
டும் மரம் தில்லையாக இருந்தால். அதன் பால் தெறித்து உங்கள் பார்வை கெட்டு விடும்.
அதே போல் கூழ்முட்டை வெடித்து அதன் உள்ளடக்கம் கண்களில் பட்டால் சண்பார்வை இழந்து விடுவீர்கள். எனவே கூழ் முட்டை தானே என்று அதை அலட்சியமாக கையாள வேண்டாம்.
நாலாயிரம்:- எங்கு திரும்பினலும் நாலாயிரம் பற்றியே பேச்சு. சுய தொழில் வாய்புக்காக (உபகரணங்கள் கொள்வனவு) அரசால் வழங் கப்பட்ட நாலாயிரம் ரூபா எடுக்காத இளைஞர்கள், தொழிலாளர் கள் இல்லை. ஆனல் அந்த நாலாயிரம் ஆடம்பரப்பொருட்கள், புடவை வகைகள், மதுபானங்கள் கொள்வனவிற்காகவே அனேகமானேரால் பயன்படுத்தப்பட்டன. பல இலட்சம் ரூபாய்கள் இவ்வாறு வழங்கப் பட்டுள்ளன. இந்த பல லட்சங்களையும் ஒன்றுசேர்த்து பல தொழிற் சாலைகளை அமைத்து அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு கொடுத்திருந்தால். என்று பிரதேச பற்றுள்ள பல உள்ளங் கள் ஏங்குகின்றன.
நோர்வேயில் தமிழ்நூல்நிலையம்:- 'பதித்த சுவடுகளில் பாடமதை நாமுணர்ந்து பதிக்கும் சுவடுகட்கு பாதையினை நாம் வகுப்போம்” எனும் எழுச்சியோடு நோர்வேயில் இலங்கைத் தமிழர் ஒன்று சேர்ந்து **சுவடுகள்” என்னும் மாதாந்த சஞ்சிகையை வெளியிடுவதுடன், நோர்வேயில் வாழும் இலங்கைத் தமிழர் மத்தியில் கலை, கலாசார
இலக்கியங்களை பேணும் முகமாக கலாசார மையத்தை ஏற்படுத்தி
செயற்படுகின்றர்கள். அத்துடன் தமிழ் நூல் நிலையம் ஒன்றையும் நிறுவ முனைத்துள்ளனர்.
ருஷ்தியின் "த சேட்ட்னிக் வேசஸ்' - நாவல் பற்றிய கருத்துக்கள்: நாவலில் உள்ள அம்சங்களை நான் வாசித்தேன். இறைதூதர் முகம் மதை ருஷ்தி நிந்தித்திருக்கின்றர் என்பதை அவை காட்டுகின்றன. ஆனல் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை விடுக்காமல் அவரது கருத்

துக்களை மறுதலிக்கும் படைப்புக்களை முஸ்லிங்கள் எழுத வேண்டும் ஜோர்தானிய மத விவகார அமைச்சர் ஷேய்க் அப்துல் அஸிஸ் அல் காயத்
அந்த நாவலில் எங்களது பிரசைகள் மத்தியில் ஆவேசத்தை தாண்டக்கூடிய, பகுதிகள் அடங்கியிருக்கின்றன. மரபுவாதிகள் தங் களது சொற்கள் மூலமாக ருஷ்தி செய்த தெய்வ நிந்தனையை திரும்பத் திரும்பச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் ஒரு தெய்வ நிந்தனை செய்யப்படுகின்றது. அதை அலட்சியம் செய்வதே உகந்தது. -பாக் பிரதமர் பெணுசிர் பூட்டோ.
* திருமணப் பொருத்தம் பற்றிய சோதிடப் பதங்களின் உண்மைப் பொருள்:- திருமணம் என்றதும் சோதிடர் திருமணப் பொருத்தத் தைக் கணிக்கின்ருர், 14 வகைப் பொருத்தங்களையும் அவர் குறிக் கும் சொற9ள் எமக்குப் புரிவதில்லை. இனிமேல் அந்தக் கவலை உங் களுக்கு வேண்டாம். எமது 'சுகந்தம்' சோதிட நிபுணர் மா. பேரா னந்தம் அச் சொற்களுக்கான உண்மைப் பொருட்களை இதோ
உணர்த்துகின்றர்.
1. நட்சத்திரம் - ஆயுள் விருத்தி 2. கணம் -சரீரசுகம் 3. மாகேந்திரம் - புத்தர பெளத்திரம் 4 ஸ்திரிதர்க்கம் - அனுபவசுகம் 5. யோனி - அன்பு 6. ராசி - குலவிருத்தி
7. இராசி அதிபதி - சினேகம் 8. வசியம் - சந்தோஷம் 9. இரச்சு - மாங்கல்ய விருத்தி 10. வேதை - உறவு 11. விருட்சம் - புத்திர விருத்தி 12. ஆயுள் - வயது நிறைவு. 13. நாடி - சுகம் 14. கிரகப்பொருத்தம் - தர்மாற்ற மோட்சம்
* தொ?லக்காட்சி, வானுெலியில் (1. C) ஐ. சியின் பங்கு:- பழுதடைந்த தொலைக்காட்சி அல்லது வானெலியை நாம் திருத்துனரிடம் கொண்டு சென்றதும் அவர் முதலில் பரிசீலிப்பது 1. C என்று அழைக்கப்படும் இன்டிகிறேரட் சேர்க்கியூட் (INTEGRATED CIRCUIT) டைத்தான். அந்தளவு அதி முக்கியமான பகுதி அதுவாகும். அதைப் பற்றி நாமும் கொஞ்சம் அறிந்து வைத்திருப்பது நல்லதல்லவா?
prirsör6F6ňvrř 5 6ir (TRANSISTOR) 56ởior G.Görgerig, Gir (CON DENSER) g6) Laigit (RESISTOR) L. Gurt G.55, gir (DIODE) போன்ற பாகங்களை ஒன்று சேர்த்து அமைக்கப்பட்ட அளவில் மிகச் சிறிதான, தனியான, சிக்கலான மின்சுற்றே சாதாரண ஐ. சி. ஆகும்.
29

Page 17
30
நடை முறையில் தனித்தனியாகப் பாவிக்கப்படும் அளவில். பெரிதான ரான்சிஸ்டர்கள், கப்பசிற்றர்கள் ரெசிஸ்டர்கள் போன்ற பாகங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு பெரிய சிக்கலான மின் சுற்றுக்குப் பதிலாக அதே பாகங்களைக் கொண்டு அளவில் மிகச் சிறிதாக உருவாக்கப்பட்டுள்ள "ஐ. சி ஐ பிரதியிடக் கூடியதாக இருப்பதால் இலத்திரனியல் துறையின் துரித வளர்ச்சிக்கு ஐ. சியின் கண்டு பிடிப்பு ஒரு வரப்பிரசாதமாகும்.
கைக்கடக்கமாக வானெலி, தொலைக்காட்சி மைக்கிருே கொம்பியூட்டர் தயாரிப்பதற்கு வழிவகுத்ததும் ஐ. சி. தான்.
"அல்சரால்" இனி அவதிப்பட வேண்டாம் :- இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆராய்ச்சியின் பயனக சுவீடன் நாட்டில் அமிலம் தொடர் பான நோய்களுக்கு ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய மருந்து LOSEC "லொசெக்" தற்போது குடல் அல்சரை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது. இம்மருந்து வயிற்றில் உரு வாகும் ஐதரோக்குளோரிக்கமிலத்தின் அளவைத் தற்போது பாவ னையில் உள்ள மற்ற மருந்துகளை விட மிகத் துரிதமாக கட்டுப்படுத்து கின்றது. "Capsule" வடிவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மருந்தி ஞல் பக்கவிளைவுகள் ஏற்படாது.
இலக்கியபணியிலும் கூட்டுறவு: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் கன்னி வெளியீடாசவும், ரவிப்ரியாவின் 3வது நாவலாகவும் "ஒரு வானவில் ருேஜாவாகிறது” வெளிவந்திருக்கிறது. இதன் வெளியீட்டுவிழா 26 - 08 - 89 மட்டக்களப்பிலும் அறிமுக விழா 1 - 10 - 89 பெரியகல்லாற்றிலும் நடைபெற்றது. கூட்டுற வைப் பின்னணியாகக் கொண்டு வெளிவரும் முதலாவது முழு நாவல்
என்பது, ஒரு கூட்டுறவுச் சங்கமே இதனை வெளியிடுகின்றது என்
பதும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும்.விவாதிக்கத்தக்க முடிவை நாவல் கொண்டுள்ளது விசேட அம்சமாகும். இதன் விலை ரூபா 25/- அட்டைப்படம் - பவான். •
தொகுப்பு: பிரியன் - வரதன்.

Tsiv autors avTio:
-- J 6 il fi uum 6. Gör
ஒரு வானவில் றேஜாவாகிறது .
(நாவல் )
மு ன் னு ரை
கூ. குகையாகவே இருப்பது கண்கூடு. ட்டுறவுத் துறையை கதைக் இதற்கான காரணங்கள் என்ன? களமாகக் கொண்டு இதற்குமுன்
ஏதாவது முழுநாவல், புனைகதை வந்துள்ளதா என நினைவுக்கெட்டிய தூரம் பார்க்கிறேன் எதுவும் தட்
டுப்படவில்லை. எனவே அவ்வகை யில் இந்நாவல் ஒரு முன்னேடி 6T66FG
கதைப்பின்னல் (plot) உரு வாக்கியுள்ள விதமும் அதனுள் கதைக்கருவை (theme) பொதிந்
துள்ள நேர்த்தியும் பாராட்டத்தக் கவை. "அருள் - அர்ச்சஞ - நேர்த் திகா ஆகிய மூவருக்குமிடையில் இழையோடும் காதல் உணர்வின் முரண்பாடுகளாகக் கதை அமைக் கப்பட்டாலும், அதன் பின்னணி யில் 'கூட்டுறவுத்துறை மிக அழுத்த மாகத் தீட்டப்பட்டுள்ளதை ஒவ் வொரு அத்தியாயத்திலும் காண லாம்.
கூட்டுறவுத்துறை ஒரு கற்பக தரு - நல்லவர்கள் கையில். ஆனல் அதுவே சுயநலமிகளின் கையில் ஒரு திருடர்குகை ஆகும். நடை முறையில் அது பெரும்பாலும் கற் பகதருவாக இல்லாமல் திருடர்
குறைகளை எவ்வாறு களையலாம்? சரியான முறையில் கட்டமைத்து நிர்வகித்து நடாத்தினல் சேவை தொழில்வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி முதலிய துறைகளில் எவ் வளவோ சாதனைகளைப் புரியலாம். பால்பண்ணை, மிதக்கும்ஹோட்டல், ஜீப், கார் வசதிகள் முதலியன, கனவு அல்ல நடைமுறை சாத்திய மான விஷயங்களே என்பதைக் கதையைப் படி க் கும் எவரும் உணர்ந்து கொள்ளலாம்.
(உ- ம்: பன்கோப் ஆடைத்
தொழிற்சாலை etc)
எந்த ஒரு நல்ல முயற்சிக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்ப்பும் எதிர்க் கோஷ்டியும் இரு க் கும். இது இயற்கை நியதி. நமது முயற்சி களுக்கு எதிராக ஒரு கோஷ்டி தோன்றினல், நமது முயற்சிநன்மை பயக்கக்கூடியது என்பது பொருள். இந்த எதிர்ப்பை சாமர்த்தியமாக முறியடிக்க வேண்டும். இல்லாவிடில் எதிரிகள் நல்லவர்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள். இதை
3.

Page 18
எப்படிச் சாதிக்கலாம், மக்கள் ஆதரவு ஒன்றே இதைச் செய்ய முடியும். தர்மராஜன், வேணு காந் தன் கோஷ்டியினரின் சூழ்ச்சியை இவ்வாறு முறியடிப்பதன் மூலம் நடைமுறையில் ஏற்படும் எதிர்ப்பு
களை ப. நோ. கூ. சங்கங்கள் சாமர்த்தியமாக முறியடிக்கலாம் எனக் கோடி காட்டப்படுகிறது.
எனவே இது ஒரு சமுதாய ப் பிரக்ஞை உள்ள சமுதாயப்பெறு மானம் உள்ள சமூகத்துக்கு நல்ல தொரு செய்தியை (message) சொல்லுகின்ற நாவலாகக் கொள்ள
முடியும்.
நாவல் அமைப்பு: கதை எவ்வளவு சிறப்புள்ளதாக இருந்தாலும், சொல்லும் முறை விறுவிறுப்பாக இல்லாவிட்டால், வாசகர்கள் சோர்வடைவார்கள். இந்த நாவல் படுவேகமாக நகர்வதால், கதை யைப்படித்து முடிக்கும்வரை சுற்றுப்
புறத்தை மறந்து கதையோடு ஒன்றிவிடும் நிலை ஏற்படுகிறது. அடுத்து என்ன? என்ற பரபரப்
புடன் சஸ்பென்சுடன், சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்ருக நிகழ்வதால், ஒரு சிறுகதை படிக்கும் உணர்வு டன் கதை மனதில் பதிகிறது. ஒரு கூட்டுறவுச் சங்கத்தைச் சுற்றியே சம்பவங்கள் நிகழ்வதாலும், ஒரு குறுகிய காலவட்டத்தள் கதை சுழல்வதாலும் நாவலின் இறுக்க மும் கட்டுக் கோப்பும் விறுவிறுப் புக்குத் துணை செய்கிறது.
இந்நாவல் சுவையானதாக அமைவதற்கு, பின்வரும் சிறப்பு களும் காரணமாகும்.
32
1) நவீன நடை - புதுமையான
உவமைகள் - உத்திகள்
ii) சுவாராஸ்யமான உரையா
Lldi) (Witty dialogue)
ii) சஸ்பென்ஸ் உத்தி - அருளுக் கும் அர்ச்சணுவுக்கும் மனக் கசப்பு ஏன்? பனிப்போர் தொடர்வதன் காரணம் என்ன எ ன் ப  ைத சட்டென்று சொல்லாமல் தொட்டுத் தொட்டுச்செல் வது ('சுஜாதா பாணி") iv) சம்பவங்களின் இயல்பான கோர்வை - கூட்டுறவுக் கடையில் ஒடுகளைப் பிரித்து க ள வு நடைபெறவில்லை என்பதை ஒட்டடை கலை யாமல் இருப்பதன் மூலம் நிரூபிப்பது போன்றவை.
V) பாத்திரங்களின் நற்பண்பு - ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையும் பா ச உணர்வும், நட்புறவும் மிக சுகமாக - இனிமையாக - லளிதமாக இழையோடுவது அதனுல் ஏற்படும் ஊடல் மோதல்.
wi) நமக்கு மிகவும் பரிச்சயமான
கூட்டுறவுக்கடை மனிதர் கள், சம்பவங்கள்.
2 கதையின் சிறப்பு: கூட்டுறவுத்
துறையினுல்தான் தந்தை குடிகாரர் ஆகித் தற்கொலை செய்து கொண் டார் என்ற கசப்பான எண்ணத் தால், கூட்டுறவுத் துறையையும் அதோடு சம்பந்தப்பட்டவர்களையும் முழுமூச்சாக வெறுக்கும் ஒருவர் கூட்டுறவின் உள்ளார்ந்த நோக்கி ஞல், மனம் மாறியது மட்டுமன்றி
ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் தலை
வராகவே மாறிக் கூட்டுறவுக் கடை

யின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவ தாகக் கதை அமைந்திருப்பது கதையின் சிறப்பு.
பொதுவாகவே மக்கள் மிகவும் தூரத்திலிருந்து பார்ப்பதால் கூட் டுறவுத் துறைபற்றி அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. எந்த ஒரு துறையிலும் நல்லதும் செட்ட
தும் கலந்தே இருக்கும் நல்லன வற்றை இனம் கண்டு அல்லன வற்றை ஒதுக்குவ்தே விவேகம்
என்று இக்கதை சொல்கிறது. 3 நாவலின் லட்சியத்தன்மை: தற் போது நடப்பதாக உள்ளவாறு ஒரு கதையைச் சொல் வ ைத யதார்த்தமுறை (Realistic) என்றும் அவ்வாறு நடைபெறுவதை எப்படி மாறவேண்டும் என்று சொல்வதை
லட்சிய நோக்கு (Idealistic) என்றும்.
சொல்வார்கள். அதாவது இப்படி நடைபெறுகிறது என்பது யதார்த்த அணுகு முறை. அது எப்படி நடை பெறவேண்டும் என்ற ரீதியில் அணுகுவது லட்சியநோக்கு.
அகிலன், நா. பார்த்தசாரதி, மு. வரதராசன் போன்றவர்களு டைய நாவல்கள் லட்சிய நோக்குக் கொண்டவையாக இருக்கும் (அகி லனின் பாவை விளக்கு, சித்திரப் பாவை, வாழ்வு எங்கே போன்ற நாவல்களும், நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்) குறிஞ்சி மலர், நீல நயனங்கள், மு. வ. வின் கரித் துண்டு, கள்ளோ கா வி ய மோ போன்றவை லட்சிய நோக்குக் கொண்ட நாவல்கள். இவற்றில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் லட்சியப்பாத்திரங்கள். இவர்கள் எழுத்தாளனின் நெஞ்சின் அலைகளை எதிரொலிப்பவர்களாக இருப்பார் கள்)
தி. ஜானகிராமன், ஜெயகாந் தன், நீல பத்மநாபன் போன்றவர் களுடைய நாவல்கள் uu 5 Tri ši g i போக்குடையவை(Realistic)ஜானகி ராமனின், அம்மா வந்தாள், புளிய மரத்தின் கதை முதலியனவும் ஜெயகாந்தனின் "சில நேரத்தில் சில மனிதர்கள்" முதலியனவும் நீல. பத்மநாபனின் *ւ յ an 6th சொண்டபுரம்" முதலியனவும் இப் படிப்பட்டவை. இவற்றில் வரும் பாத்திரங்கள் - இப்படித் தான் எங் கள் வாழ்க்கை என்பது போல் சித்தரிக்கப்படுவார்கள். அ த ன் மூலம் "இதை மாற்றவேண்டும்" என்ற எண்ணம் - சிந்தனை - வாச கன் மனதில் மறைமுகமாகப் பதி யும்)
இந்த இருவகையான நாவல் களில், இந்த நாவல் முந்தியவகை யைச் சேர்ந்தது. லட்சிய நோக்குக் கொண்டது. அருள், அர்ச்சன, நேர்த்திகா, சுமந்தன் போன்ருேர் அத்தகையவர்களே. கூட்டுறவுத் துறையில் ஒரு மறுமலர்ச்சி காணத் துடிக்கும் அவர்களது லட்சியம் கதையில் வெளிப்படுகிறது. நாம் ரற்கனவே குறிப்பிட்டது போல் நூலாசிரியன் நெஞ்சின் அலைகளே அந்த லட்சியங்கள் எ ன் பதும்
கருத்தில் கொள்ளத்தக்கவை.
இருவகையான நாவல்.ஈளுக் கும் நிறைந்த வாசகர்கள் இருக் கிருர்கள். கூட்டுறவுத்துறையின் மகத்துவத்தை, மகோன்னதத்தைச் சித்தரிக்க முயல்வதால் இந்நாவல் லட்சிய நா வ லா க இருப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல; தேவையானதும் கூட.
- அன்புமணி S

Page 19
With Best Complime nts
from
MAHESWARY JEWELLERS
(MANUFACTURERŞ) (Machine Cutting & Hand Cutting Centre)
No. 192, SEA STREET,
COLOMEBO 1
"சுகந்தம்” விமர்சனப் போட்டி உங்கள் “சுகந்தத்தை' இந்த இதழை நீங்களே விமர்சியுங்கள். இலக்கிய வளர்ச்சிக்கு விமர்சனம் இன்றியமையாதது. உங்கள் மதிப்பீட்டைக் கவர்ச்சியாக கருத்தோடு பத்து பதினைந்து வரிகளில் மட்டும் எமக்கு 15 - 11 - 89க்கு முன்னர் அனுப்பி வையுங்கள். சிறந்த விமர்சனத்திற்குச் சிறப்புப் பரிசு ரொக்கமாகக் காத்திருக்கிறது.
சு க ந் த ம் அடுத்த இதழ் "ஆண்டு மலராக வெளிவர இருக்கின்றது. உடன் ஆக்கங்களை அனுப்பிவையுங்கள்.

வாசகர் வாசனை
அல்லலுறுb இவ்வேளையிலும் ஆறுதலளிக்கிறது சுகந்தம்.
தன்னம்பிக்கை பற்றிய வள்ளிமைந் தனது தத்துவக் கட்டுரை இக் காலகட்டத்தில் அதுவும் நம் மக்கள் அனைத்தும் இழந்து அவநம்பிக் கையில் அல்லலுறும் இவ்வேளையில் ஆறுதல் அழிப்பதாகவும் புத் துணர்ச்சி ஊட்டுவதாயும் அமைந்துள்ளது குறித்த எழுத்தாளருக்கு எம் பாராட்டுக்கள். தங்கா - திராணியின் "இழப்பு" மினிக்கதையே என்ரு லும் அதில் ஆழ்ந்த சில நல்ல கருத்துக்கள் இழையோடிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
"வாக்கு வாசம்”, நகைச் சுவைத் துணுக்குகள் வாசகர்கள் கிறிஸ்மஸ் கேக்சையும் பொங்கலையும் ஒருங்கே சுவைத்தமாதிரி ஆனந்தம் அளிக்கு மென்பதில் ஐயமில்லை. செங்கதிரோனின் பொங்கற் கவிதையும் இதழுக்கு மெருகூட்டுவதாய் அமைகிறது.
திரு. ரீ. பாக்கியநாயகம், 82, திருமலை வீதி, மட்டக்களப்பு.
*(உங்களின் நீண்ட விமர்சனத்தை முழுமையாக பிரசுரிக்க நாம் பெரிதும் விரும்பினுேம் இடவசதி தங்களின் முத்தான கருத்துக்களை பொறுக்கி எடுக்க வைத்தது. தங்கள் ஆலோசனைகள் சுகந்தத்தின் அடிமனதில் அப்படியே பதிந்திருக்கிறது.)
நோர்வேக்கும் வேண்டும் சுகந்தம்
வீரகேசரி வார மலரில் வெளிவந்த இலக்கியச் சாளரம் பகுதியில் தங்களது "ருே சாலயா” நிலையத்தின் இலக்கியச் செயற்பாட்டைப் பற்றிப் பார்த்தோம். எமது அமைப்பானது தங்களது வெளியீடுகளை கிரமமாகப் பெறவிரும்புகின்றது.
நிர்வாகி "சுவடுகள் * 0578 ஒஸ்லோ, நோர்வே.
(தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. அனுப்புகின்ருேம் சுகந்தம்)
திலகமிட்ாத தமிழ் மாதாவா?
அட்டைப்படத்தில் தமிழ்மாதாவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள பெண் ணின் நெற்றியில் பொட்டு இடவில்லையே?
திரு. மா. சபாபதி இலங்கை வங்கி, களுவாஞ்சிக்குடி.
* (சீனிவிலே நாளுக்கு நாள் உயர்வதுபோல் பொட்டு வி2லயும் உயர்ந்து விட்டதோ? யாரறிவார். சிலவேளை சேலை நிறத்திற்குப் பொருத்தமான பொட்டுக் கிடைக்காமல் விட்டிருக்கலாம் அல்லவா?)
55

Page 20
இன மத பேதம் எமக்கில்லை - கலை கலாசாரமே எமதெல்ல. ஆவணி, கார்த்திகை - 1989
fುಶiD
ஏடு + இட்டோர் + இயல் = ஏடிட்டோரியல்= EDITORIAL
செண்டு - 3.
ஆணிவேர் ஆரோக்கியமானதாக அமைய எமது பிரதேசத்தில்
நாவல்கள்
வெளியீட்டு விழா
அறிமுக விழா என்றெல்லாம் நடைபெறுமளவிற்கு இலக்கியப் புத்துணர்ச்சி பிறந்திருப்பது பிரகாசமான ஒரு திருப்பமாகும் - அத்துடன் மாகாண அரசின் நாவல்கள் கொள்வனவு சாகித்திய மண்டலப் பரிசு ஆகிய திட்டங்கள் மற்றுமொரு திருப்புமுனையாகும் - எனினும் எழுத்தாளர்களை உருவாக்கிவிடும் சிறு சஞ்சிகைகளைப் பற்றி மாகாண அரசு - அக்கறை கொள்ளவில்லையா? சஞ்சிகைகள் கொள்வனவு சிறந்த சஞ்சிகை தெரிவு குறைந்த செலவிலான அச்சக வசதி பொருளாதார ரீதியிலான ஊக்குவிப்பு போன்ற விடயங்கள் குறித்தும் மாகாண அரசு மனப்பூர்வமான கவனமெடுத்து இலக்கிய விருட்சத்திற்கே ஆணிவேராக விளங்கும் சிறு சஞ்சிகைகளின் ஆயுளை என்றும் பதினறு மார்க்கண்டேயர் ஆயுளாக்க வரமளிக்கக் கூடாதா?
ஏடிட்டோர்
 

நவீனமாக
நாசூக்காக
நாகரீகமாக ஆடையணிவோர் தெரிவு செய்வது எமது தைத்த ஆடைகளையே! உங்கள் தீபாவளித் தெரிவுகளை இன்றே
நம்பிக்கையுடன் filulum uuunnit GOT 67ðavu G6iv பின்வரும் எமது முகவர்களிடம் மேற்கொள்ளுங்கள்:
* மண்முனை தென்எருவில் ப. நோ 3. சங்கம்,
பிரதான வீதி, களுவாஞ்சிகுடி,
* கல்லாறு துறைநீலாவணை ப.நோ. கூ. சங்கம், பிரதான வீதி, பெரியகல்லாறு, கல்லாறு,
மெக்சிக்கன் இன்டஸ்றிஸ்,
368, கஹட்ட பிட்டிய, கம் பளை, தொலைபேசி - 08 - 52525.

Page 21
2
TLqALALSST LALSLTLLLLSLLLLLAALTLALALALAT LMSLALTLLSqLALA LqLLASLLL
இலங்கை வங்கி
சேமிப்புச் சான்றிதழ்கள் இப்ே அதிகரித்த வட்டியை அளிக்கின்
வைப்பாகச் செலுத்தும் தெ
6 மாதங்களுக்கு 12 மாதங்
- Ա - 186|- 1
465/- 43 大 930/- 86 大 2325/- 215 女 4650/- 大 9300
Air 23250Il- 2
உங்கள் குழந்தைகளின் எதிர்கால சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம் தாதீர்கள். உங்கள் பணத்தை ே கிளைகளில் (மட்டக்களப்பு கிளைய வெளிநாட்டு நாணயக் கணக்கொ Make More Money Thro BA NK OF C E Y L. C Non - Residence Foreign ( (Only at Batticaloa Branch)
மேலதிக தகவல்களுக்கு எம்மோ களுடன் தொடர்பு கொள்ளுங்க
BANK OF CEYLON
District Office, Batticaloa.
v. S. O65
qSLLLLLAALLLLLAALLLLLALATqLALS LSL LLLqqALALAqAALqLT
ஆக்கங்களுக்குப் பொறுப்பு அளித் கல்லாறு, ருேசாலயா கலை கலாசார ெ குழுவினரால், மட்டக்களப்பு, புனித பட்டு 10-10-1989ல் வெளியிடப்பட்ட
 

S AAALLLLLLLASLLAqLLLL LLLLLLLLSqLA ALALA LALALA LLALAL0LLTTLLLLLLLL0S
பின் 16:28/.
பாது உங்கள் பணத்திற்கு றது. விபரம் இதோ :
'f}፫6õ) Š
மீளப்பெறும்
களுக்கு தொகை
21- 200/-
0|- 500/- 0- 1000/- 0/- 2500/- )0/- 5000/-
)0/- 10000/- 0|- 25000/-
பம் - பிரகாசமானதாக அமைய பிக்க இன்னமும் காலம் தாழ்த் 'மலும் அதிகரிக்க எமது வங்கிக் பில் மாத்திரம்) வதியாதோர் ான்றை உடன் ஆரம்பியுங்கள். ugh The
) N
currency Accounts.
டு அல்லது எமது கிளை நிலையங்
ள்.
இ\ இலங்கை வங்கி
மாவட்டக் காரியாலயம் タ மட்டக்களப்பு.
2456。
~~~~~/Mwr N/ww.eu/ww.se/Nawr uwNWr w^Mr.
வர்களே, இச்சஞ்சிகை பெரிய பாது சேவை நிலையத்தின் சஞ்சிகை செபஸ்தியார் அச்சகத்தில் அச்சிடப் து. f SP 047