கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1992.04-05

Page 1


Page 2
நுகர்வோரின் வசதிக்காக . . . . .
விடயம் பக்கம்
米 இயேசு எம்மோடிருக்கிறார். 2
* யூதாஸின் கதை ஓர் எச்சரிப்பு. m. 6
* சிலுவை சுமந்த போது. m 9
* கவிதைக் களம். r 12
* பெரிய வெள்ளிக்கிழமை Hwa 15
* வாசகர் பார்வையில். linnap 19
* உங்கள் வினாக்கள். 20
* இயேசுகிறிஸ்து எத்தகைய இராஜா? ama 22 * வேதாகமம் பயில்வோம். nnnnn 25
* அன்பளிப்பு. m 28
() அடுத்த இதழுக்கான தலைப்பு ‘குடும்பம்." பொருத்தமான ஆக்கங்
களை அனுப்பிவையுங்கள். ஏற்றவை பிரசுரிக்கப்படும்.
( ) சஞ்சிகை சம்பந்தமான சகல கடிதத் தொடர்புகளையும் பின்வரும்
விலாசத்திற்கு அனுப்புங்கள்.
THE EDITOR, 'THODAR PU DASON'S - 90, KANDY ROAD, KENGALLA.
() ஆண்டுச் சந்தாவைச் செலுத்தி ஓர் அங்கத்தவராகி கிறிஸ்துவுக்கும் மக்களுக்குமான தொடர்பை வலுப்படுத்துவதில் பங்கேற்க வருமாறு
உங்களை அன்புடன் அழைக்கின்றோம். - ஆசிரியர்
Thodarpu (magazine) - Christian Communication Director – Rev. R. Thurairajah Editor - Bro. Devadason Jeyasingh Printers - New Ferrine Printers, Dehivela, Te: 727204
3rd issue Rs... 10- 25th April 1992

இதழ் 3
அன்பார்ந்த வாசகர்களே!
பெத்லகேமிலே (இயேசுவின் பிறப்பில்) பிறந்த இத் தொடர்பு? கெத்செமனேக்கூடாக கல்வாரியையும் கடந்து வந்து உங்களைச் சந்திக் கின்றது. கடந்த இரு இதழ்களும் எமது கரங்களில் வந்தவேளை எம் கண்கள் எதைக் கவனித்தன? அவற்றின் புறத் தோற்றத்தையா? அல்லது பொருளடக்கத்தையா? இதயம் என்ன கூறியது?
‘இவர்களுக்கு வேறு வேலையில்லையாக்கும் - இவையெல்லாம் நாம் அறிந்தவைதானே - இன்றைய காலகட்டத்தில் இது அவசியம்தானா? பிழைக்க ஒரு வழி தேடிவிட்டார்கள் போலும் - இது ஒரு தொல்லை" என்பதாகவா? ... அல்லது .
"கர்த்தாவே, உமக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு நீடு நிலைக்க இத் தொடர்பு ஒர் உறுதியான பாலமாக அமையட்டும் நீர் எனக்கு அளித்திருக்கும் அளப்பரிய ஈவுகளுக்கேற்ப என்னாலான ஒத் துழைப்பை இதற்கு அளிக்க என்னைப் பலப்படுத்தியருளும்" என ஜெபித் 高点5m。
தனது வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்காகக் கொண்டு வந்திருந்த ஐந்து அப்பங்களையும், அன்று பசியோடு இருந்த ஆயிரக்கணக் கான மக்களுக்காக மனப்பூர்வமாகப் பகிர்ந்தளிக்க முன்வந்த அந்தப் பால கனை எண்ணிப் பார்ப்போம். ஐயாயிரம் பேருக்கு மேல் அவனுடைய அன்பளிப்பு மூலம் தம் சரீரப் பசி தீர்ந்தார்களே.
இன்று, ஆன்மப் பசியோடிருக்கும் லட்சோப லட்சம் மக்களுக் காக நாம் செய்வதென்ன? நம்மையே வினவிக்கொள்வோம். நமக்குக் கர்த்தர் தந்த தாலந்துகளை நன்கு பயன்படுத்துகிறோமா? ۔۔
இத் தொடர்பு" மூலம் பகிரப்படும் நற்செய்திகள் நற்பலன் அளிக்க ஊக்கமான உங்கள் ஜெபத்தினாலும், உளமுவந்த உதவிகளி னாலும் இப்பணியைத் தாங்க முன்வருமாறு இயேசு இரட்சகரின் பேரா? நேசகரம் நீட்டுகிறேன்.
ஜெயமே ஜெயம்,
கிறிஸ்துவின் பணியில், தேவதாசன் ஜெய சிங்

Page 3
இயேசு எம்மோடிருக்கிறார்
அருள் திரு. ஆர். துரைராஜா
கிறிஸ்தவ பஞ்சாங்கத்திலே ‘உயிர்த்தெழுந்த திருநாள் மிக மிக முக் கியமானதொரு தினமாகும். ஆதிக்கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில் முழு வருடத்திற்குமே இது ஒரு முக்கியமான நாளாக மிளிர்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையில் ஒவ்வொரு ஞாயிறும் அவர்களுக்கு உயிர்த்த ஞாயிறாகவே இருந்தது. யூதருடைய முறைப்படி நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சனிக்கிழமை வழிபாட்டை படிப்படியாக ஞாயிறு வழிபாடாக - அதாவது கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் தின வழி பாடாக மாற்றியமைத்தார்கள். உயிர்த்த தினம் ஒவ்வொன்றும் கர்த்த ருடைய நாளாகவே இருந்தது.
விவேக புத்தியுடைய நாகரீக மனிதருக்கு "உயிர்த்தெழுதல்" என்பது நம்பத்தகுந்த ஒரு செயலன்று; அது எவ்வளவுக்கெவ்வளவு நம்பத்தகாத விதமாகத் தோன்றினாலும், புதிய ஏற்பாட்டின் முக்கிய பொருள் அதுவே யாகும். அப்புதிய ஏற்பாட்டில் அமைந்துள்ள 27 புத்தகங்களிலும் 23 புத் தகங்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலைப்பற்றியே கூறுகின்றன.
புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் அனைவரும் அச் சம்பவத்தை நேரடி யாகக் குறிப்பிடாவிடினும், உயிர்த்தெழுந்த இயேசுவை சிலர் கண்டதாக மூன்று நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளார்கள்.
2
 

அப்போஸ்தலருடைய நடபடிகளில் பெற்றுள்ள ஒவ்வொரு போதனை யிலும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. * கிறிஸ்து எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்’ (1 கொரி. 15:17) என்ப தாக பவுல் அப்போஸ்தலன் எழுதும்போது தனது சொந்த அபிப்பிராயத் திற்கும் மேலாகவே உயிர்த்த இயேசுவைப் பற்றிக் கூறுகிறார். உயிர்த் தெழுதல் இல்லாவிட்டால் போதனை - விசுவாசம் இரண்டுமே வீணான தாகும். இயேசு மரணத்தினின்றும் உயிர்த்தெழுந்தார் எனப் பிரஸ்தாபிப் பதைத் தவிர வேறு எந்தவிதமான ஒரு செய்தியும் ஆதித் திருச்சபை யினருக்கு முக்கியமானதாக இருக்கவில்லை.
உயிர்த்தெழுந்த சம்பவம் பற்றி ஆதிநாட்கள் தொட்டே வினாக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இயேசு அடக்கம்பண்ணப்பட்ட கல்லறை வெறுமையாகிவிட்ட காரணத்தால் எவருமே வெளிப்படையாகச் சந்தே கப்படவில்லை. கல்லறை வெறுமையாகக் காணப்பட்டமை வரலாற்று உண்மையாகும். அதற்கான காரணிகள் வெவ்வேறு விதமான கருத்துக் களால் விபரிக்கப்பட்டன. இயேசுவின் சீஷர்கள் அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டதாக சில யூதர்கள் பறை சாற்றித் திரிந்ததோடு உயிர்த் தெழுதல் பற்றிப் பல புதிய கதைகளையும் கூட உருவகித்தார்கள்.
கிறிஸ்தவர்களோ பயங்கரமான சூழ்நிலைகளின் மத்தியிலும், கர்த்தர் உயிரோடு எழுந்தார்; உயிர்த்தெழுந்த கர்த்தரைக் கண்டோம் என, துணிச் சலாகப் பிரசித்தப்படுத்தினார்கள்,
புதிய ஏற்பாட்டை எழுதிய செய்தியாளர்கள் இந்த உயிர்த்தெழு தலைப் பிரசித்தப்படுத்துவதில் அவசரமாகக் காணப்பட்டார்களே ஒழிய அதை நிரூபிப்பதற்கான பிரயத்தனங்களை எடுத்ததாகத் தெரியவில்லை. வெறுமையாக இருந்த கல்லறையைப் பெண்கள் சிலர் பார்த்ததாகவும், இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அவர்களே அறிக்கையிட்டார்கள் எனவும் எழுதியுள்ளார்கள். இயேசுவின் சீஷர்களும் ஏனைய கிறிஸ்தவர் களும் கர்த்தர் உயிர்த்தெழுந்தமை குறித்துச் சாட்சி பகர்ந்தார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டவர்களுக்கு அத்தாட்சிகள் அவசியப் படவில்லை. அவரைக் காணாதவர்களுக்கோ அவர்கள் நம்பத்தக்க வகை யில் நிரூபிக்கப்படக்கூடிய ஆதாரங்களும் இருக்கவில்லை.
ஆனாலும் அவருடைய மரணமே இறுதியானது என எண்ணியிருந்த சீசர்கள் கூட அவசரமாக எருசலேமுக்குப் போய் அங்கே இயேசுவின் உயிர்த் தெழுதலைப் பிரசித்தப்ப்டுத்தினார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்று கள் உண்டு.
கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக மனிதன் பிறக்கின்றான்; இறக்கின் றான். எனினும், "இயேசுக் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்’ என்ற அவர் களுடைய நம்பிக்கை இன்னமும் அற்றுப்போகவில்லை. வாழ்ந்து கொண்டே யிருக்கின்றது.

Page 4
முடிவாகக் கூறப்போனால், விசுவாசமே உயிர்த்தெழுதலை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது. விசுவாசம் என்பது ஒரு பகுத்தறிவற்ற தன்மை யல்ல. விசுவாசத்தைவிட மேலானது எதுவுமே இல்லை என்று கூறலாம். ஒருவருடைய ஜீவியத்தில் "இயேசு ஜீவிக்கிறார்’ என ஏற்றுக் கொள்ளும் தன்மையே உயிர்த்த இயேசுவைப்பற்றிய விசுவாசத்தை உறுதிப்படுத்து கின்றது.
திருச்சபையின் வாழ்வில் இயேசு இன்னமும் பிரசன்னமாயிருக்கிறார் என்பதைப் பெந்தெகொஸ்தே தினம் ஆதி விசுவாசிகளுக்கு உறுதிப்படுத். தியது. அந்த பிரசன்னத்தின் பெறுபேறாகவே ஆதிக் கிறிஸ்தவர்கள் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்த - அறிக்கையிட முன்வந் தார்கள். உலகத்தில் வாழ்ந்த இயேசுவை மனதிற் கொண்டு அவர்கள் பிரசங்கிக்கவில்லை. தம் நாளாந்த ஜீவியத்தில் அவரைத் தரிசித்தவர் களாகவே அவர்கள் பேசி வந்தார்கள்.
இயேசுவின் பிரசன்னம் உண்மையானதாகவே இருந்தது. அத்தோடு ஒவ்வொரு ஞாயிறும் "அவர் ஜீவிக்கிறார்" என்ற உயிர்த்தெழுந்த செய்தி யைப் பிரசித்தப்படுத்தும் தினமாகவும் அமைந்து விட்டது. மத்தேயு தனது நற்செய்தியை உயிர்த்தெழுதலைக் கொண்டே எழுதுகிறான். இயேசு இன்னமும் ஜீவிக்கிறார் என்பதை அவன் நம்பினான். ஆகவே அவன் நற் செய்தியின் அங்கங்கள் ஒவ்வொன்றும் உயிர்த்தெழுதலைப் பிரஸ்தாபிக் கின்றன. உலகில் வாழ்ந்த இயேசுவைப்பற்றி அவன் எழுதும்போது அனைத்து விசுவாசிகளுடனே கூட அவர் ஜீவித்துக்கொண்டிருக்கிறார் என்ற உறுதிப்பாட்டுடனேயே எழுதுகிறான். "அவருக்கு இம்மானுவேல் எனப் பேரிடுவார்கள்" (மத். 1:23) "இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோ டிருக்கிறார்’’ என்பதாக மத்தேயு குறிப்பிடுகிறான். இது தேவன் மனு வுருக்கொள்வதையும் இயேசுக்கிறிஸ்துவே தேவன் என்பதையும் வெளிப் படையாகப் பிரதிபலிக்கின்றது. இதன் அர்த்ததுத்துக்கு எல்லையேயில்லை. தேவன் இயேசுக்கிறிஸ்து மூலமாக இன்னும் எம்முடனே இருக்கிறார் என் பதே இதன் தாற்பரியமாகும்.
மேலும் மத்தேயு, "இருவராவது மூவராவது என் நாமத்தினாலே கூடி வரும்போது அங்கே அவர்கள் மத்தியில் நான் இருக்கிறேன்." (மத். 18:20) எனக் குறிப்பிடுகின்றான். எனவே, எங்கெல்லாம் விசுவாசிகள் இருக்கின் றார்களோ அங்கெல்லாம் இயேசுக்கிறிஸ்து அவர்களுடனே கூட இருக்கின் றார். இது இன்றும் உண்மையாகவே உள்ளது.
"இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங் களுட்னே கூட இருக்கிறேன்’ (மத். 28:20) இதன்படி இயேசு தம் சீடர் களை அனாதைகளாக விட்டுவிடவில்லை. அவர் எப்பொழுதுமே அவர்
4.

களுடனே இருக்கிறார். அவர்கள் ஒருபொழுதும் தனித்து விடப்படுவதில்லை. இதுவே உயிர்த்தெழுதலின் முக்கியத்துவமும் திருச்சபை ஸ்தாபிக்கப்பட்ட தின் அடிப்படையுமாகும்.
"அவர் மரிக்கவில்லை; சற்று அப்பாலே இருக்கிறார்' என்ற அனு
தாப அட்டைகளும் உண்டு. அப்படியல்ல; அவர் மரிக்கவில்லை; எனது
இன்றைய வாழ்வில் பிரசன்னமாயிருக்கிறார்’ என்றே நாம் எப்பொழு தும் கூற வேண்டும்.
அவ்வாறெனின், உயிர்த்த ஞாயிறின் செய்திதான் என்ன?
"இயேசு இன்றும் எம்மோடிருக்கிறார்?
அதை நிரூபிக்க யாராலும் முடியாதிருக்கலாம்; ஆனால் விசுவாசத் திற்கூடாக அதை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்க முடியும். தேவன் இன்று ஜீவனுள்ள கிறிஸ்துவாக எம்முடனே கூட இருக்கிறார்.
ஆம், “இயேசு எம்முடனே கூட இருக்கிறார்" என்று ஒவ்வொரு ஞாயிறும் பிரஸ்தாபித்த ஆதி விசுவாசிகளின் நம்பிக்கைக்குள் திருச்சபை திரும்ப வேண்டும்.
அவர் முடிவு பரியந்தம் நம்முடனே கூட இருப்பார்.
* நூல்கள்! ஆம், அவைதான் அறிவுச் சுரங்கத்தின் திறவுகோல்கள். இன் பத் தோட்டத்தின் நுழைவாயில்கள். முற்போக்கு வழிநடத்தற்கு வழி காட்டிகள். வாருங்கள் நூல்களைப் படிப்போம்.
- எமிலி பவுல்சன்
一●一
* நல்ல் நண்பர்களுக்கு அடுத்தபடியான இடத்தை வகிப்பவை நல்ல நூல் களே. W - கோல்ட்ன்
-O-
* காலமென்னும் பெருங்கடலில் எழுப்பப்பட்டிருக்கும் ஒரு கலங்கரை விளக்கு நூல். V - இ. பி. வில்ப்ஸ்
,一●一
* ஒரு நூல் அதை எழுதியவருடைய இதயத்திலிருந்து வந்ததெனில் அது உறுதியாய் கற்பவரின் இதயத்தைத் தொடும். - கார்லைல்

Page 5
லெந்துகால சிந்தனை . . .
யூதாவின் கதை ஒர் எச்சரிப்பு
'பாவிகளின் இரட்சிப்புக்கென பரத்திலிருந்து அருளப்பட்ட ஜீவ அப்பமாகிய இயேசுக்கிறிஸ்து அவரால் அழைக்கப்பட்ட, தெரிந்துகொள் ளப்பட்ட பன்னிருவருள் ஒருவனான யூதா ஸ்காரியோத்து என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டார்’ என்பது வரலாற்று உண்மையாகும்.
ஆண்டு மூன்றரையாக அவரோடிருந்த அப் பன்னிருவரிலும் பல தரப்பட்டவர்கள் இருந்தனர். அவசரக்காரன், ஆத்திரக்காரன், (f) as விக்கிறவன், சந்தேகிக்கிறவன், கணக்குப் பார்ப்பவன், பதவி மோகம் கொண்டவன் இப்படிப்பட்டவர்கள் எல்லாரிலுமே முன்னணி வகித்தவன் அவரைக் காட்டிக்கொடுத்த யூதா ஸ்காரியோத் என்று குறிப்பிடலாம்.
'பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ்"க்குள் சாத்தான் புகுந் தான்" (லூக், 22:3) என்பதாக புனித லூக்கா எழுதுகிறான். "நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன்; நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?" என்கிறான். அவர்கள் அவனுக்குக் கூலியாக 30 வெள் ளிக் காசைக் கொடுக்க உடன்படுகிறார்கள்.
இயேசுவானவர் தமக்கெனத் தெரிந்துகொண்டதில், தம்முடைய தாக இருக்க வேண்டும் எனச் சுவீகரித்துக் கொண்டதில், தம்முடையதாக அழைத்துக் கொண்ட அந்தப் பன்னிரு பங்கில் ஒரு பங்கை சாத்தான் தெரிந்தெடுக்கிறான். அக்கால கட்டத்தில் யூதேயா, சமாரியா பிரதேசங் களில் வாழ்ந்த ஆசாரியர், வேதபாரகர், சேனாவீரர் இவர்கள் அனை வரிலும் சாத்தான் தெரிந்தெடுக்க வல்ல ஒரே குடிமகன் இந்த யூதாஸா கவே இருந்திருக்கிறான் போலும்.
"யூதா" என்ற பதத்திற்கு "தேவதுதி” என்ற ஒரு பொருள் உண்டு. தேவனுக்குத் துதியாக இருக்க வேண்டிய யூதா, ஜீவாதிபதியைத் தூவிக் கும் எண்ணமுடையவனாகவே இருந்து வந்திருக்கின்றான். யாக்கோபின் குமாரனாகிய யூதா தன் சகோதரனாகிய யோசேப்பை 20 வெள்ளிக் காசுக்கு இஸ்மவேலரிடத்தில் விற்றான். ஸ்காரியோத் எனப்படும் இந்த யூதாவோ தன்னை உருவாக்கினவரும், தன் குருவுமாகிய இயேசுவையே 30 வெள்ளிக்காசுக்கு விற்றான்.
முதலில் யூதாஸ் சாத்தானுக்குள் புகுந்தான். அதாவது, இயேசு வுக்கு எதிராக சதியாலோசனை செய்த கூட்டத்திற்குள் அவன் புகுந்து கொள்கிறான். அதனால் இயேசு அவமானப்பட்டு மரிக்க வேண்டியதா
6

யிற்று பின்னர், சாத்தான் யூதாஸ-ஸுக்குள் புகுந்த காரணத்தால், அவனே நான்றுகொண்டு சாகவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எமக்காக மரித்த கிறிஸ்து எமக்குள்ளும், நாம் அவருக்குள்ளும் வாசம்பண்ணுகி றோமா? அந்த ஜீவ அப்பத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் இவ்வினா வினால் தம்மைத் தற்பரிசோதனை செய்வது அவசியமாகிறது. -
மகதலேனா மரியாளை 7 பிசாசுகள் பிடித்திருந்தன. அந்த ஏழும் துரத்தப்பட்டன. ஏன்? கதரேனர் நாட்டானாகிய லேகியோன் 6000 பிசாசுகளைக் கொண்டவன். அவை அனைத்துமே அகற்றப்பட்டன. ஆயி னும், இந்த யூதாஸ"க்குள் புகுந்த ஒரே ஒரு சாத்தான் அப்புறப்படுத்தப் படவில்லை. காரணம் முன்னவர்களுடைய இதயங்கள் திறக்கப்பட்டு இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவனுடைய இதயமோ கல்லாகி அடைபட்டிருந்தது.
இன்றைய நிலையில் எமது இதயம் எப்படிப்பட்ட நிலையில் உள் ளது என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாகும். இருந்தபோதிலும் இயேசு அவனை எச்சரித்தார்.
I "என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிங்காலைத்
தூக்கினான்’ என்பதாகப் பகிரங்கமாக பன்னிருவர் மத்தியிலும் குறிப்பிட்டார். 2 'உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ என்றார்.
** என்னுடனேசுட தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்
கொடுப்பான்" என்றார். 4 “என்னைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு ஐயோ; அவன் பிறவா
திருந்தானானால் நலமாய் இருக்கும்" என்றார். 5 அப்பத் துணிக்கையை அவனிடமே கொடுத்து "நீயேதான் குற்ற
வாளி' என்பதை சூசகமாகத் தெரிவித்தார். 6 “நானோ?" என யூதாஸ் கேட்டபொழுது "நீ சொல்லுகிறபடி
தான்" என உறுதிப்படுத்தினான். V 7 *நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்" என்றார்.
இந்த எச்சரிப்பின் தொனிகள் ஏழுக்கும் அவன் இதயம் இளக வில்லை. மனம் மாறவில்லை.
இது போலவே, ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் எச்சரிக்கப் படுகிறோம். அவ்வேளைகளிலெல்லாம் எமது எண்ண அலைகள் எவ்வாறு செயற்படுகின்றன?
பின்வரும் வினாக்களினால் எம்மை நாமே வினவிக்கொள்வோம்.
1. அவரோடுகூட (அவருடைய சரீரமாகிய) அப்பத்தைப் புசித்து அவருக்கு
விரோதமான பணிகளுக்கு இடமளிக்கிறோமா?

Page 6
2. அவருடனே கூட அவருடையத்ாலத்தில் கைகளை வைத்துக் Glasmedia Gu
அவரை அறிக்கை செய்ய மறுக்கிறோமா?
3. நானோ? நானோ?" எனக் கேட்டு நமது தவறுகளை நமக்குள்ளேயே
மழுப்புகிறோமா?
4. அவருடைய மரணத்துக்குப் பாத்திரவான்களாக இருக்கிறோமா?
அல்லது, அவருடைய உயிர்த்தெழுதலில் அவரோடிணைந்தவர்க ளாய் இருக்கும்படி செயற்படுகிறோமா?
சிந்திப்போம்! ஜெபிப்போம்! செயற்படுவோம்!
தொட ர்பு
திருமண சேவை
திருமண சேவையொன்றின் மூலமாக குடும்பங்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்த 'தொடர்பு" விரும்புகிறது. குடும்பங்களில் எதிர்பார்க்கப்படும் மணமகன் மணமகள் தேவைக்கு தன்னாலியன்ற பங் களிப்பினைச் செய்ய "தொடர்பு முன்வந்துள்ளமையால் உங்கள் தேவை களை சகல விபரங்களுடனும் தபாலட்டை அளவிலான புகைப்படத்துட னும் 25/- ரூபாவுக்கான காசுக்கட்டளையை இணைத்து பின்வரும் விலா சத்துக்கு அனுப்பி வையுங்கள்.
THE DIRECTOR, BIBLECoR 6, BALAHENAMULE LANE, COLOMBO 6.
* குறிப்பு: உங்கள் தேவைகள் விளம்பரப்படுத்தப்படமாட்டா. சகல விபரங்களும் இரகசியமாக வைக்கப்பட்டு பொருத்தமான விபரங்கள் புக்ைப் படங்களுடன் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
 

சிலுவை சுமந்த போது
கண் கலங்காத இயேசு
கழுதை மீது பவனிசெல்கையில் கண்ணிர் விட்டது ஏன்?
வளங்கள் நிறைந்த குளங்கள். வானுற உயர்ந்த மரங்கள். வண்ணம் பல கூறும் மலர்கள். அனைத்தும் மலிந்த அந்த எழில் ஊரான எருச லேமை நோக்கி ஊர்வலம் வர எண்ணுகிறார் இயேசு.
அவ்வூருக்குக் கிழக்கே ஒர் அழகிய குன்றம். 'ஒலிவேத்' என்பது அதற்குரிய பெயர். அதை "ஒலிவமலை? யென எம்மவர் அழைப்பார்கள். அக்குன்றத்தின் மீது ஒரு சிறு மன்றுபோல் அமைந்திருக்கும் அச்சிற்றுா ருக்குப் பெயர் “பெத்பாஜே’. அதைப் "பெத்பகே’’ எனவும் குறிப்பிடுவர். பொதி சுமக்கும் கழுதைகளை அதிகமாய்ச் சுமத்திருந்தது அவ்வூர்.
அருகிலுள்ள பெத்தானியா, எருசலேம் போன்ற இடங்களுக்குப் பொதிகளை ஏற்றிச் செல்வதற்காக "பெத்பாஜே கிராம மக்கள் கழுதை களையே அன்றைய வாகனமாகக் கொண்டு அவற்றைக் கண்ணும் கருத்து மாக வளர்த்து வந்தனர்,
அன்று இயேசுவுக்கு எருசலேமுக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுவும், நடந்து போக அல்ல; கழுதையொன்றில் அமர்ந்து செல்லவேண்டும் என விரும்புகிறார். தம் சீஷர்களில் இருவரை அழைக் கின்றார். "எதிரே இருக்கும் கிராமத்துக்குப் போங்கள்; அங்கே மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியொன்றை கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்து வாருங்கள். எவனாகிலும், ஏதாகிலும் கேட்டால் இது ஆண்டவருக்கு வேண்டும் எனச் சொல்லுங்கள்" எனக் கூறி அவர்களை அனுப்புகிறார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அக் கழுதைக்குட்டி அவர் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறது. அவரது எண்ணத்தை உணர்ந்திருந்த சீஷர்கள் தங்களது மேலாடைகளைச் சேணமாக அமைத்து அதன் மீது அவரை ஏற்றுகிறார் கள். அதை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே குழுமி விடுகிறார் கள் வழி நெடுகிலும் ஆடைகளை விரித்து அவரை வழியனுப்புகிறார்கள்
மரக்கிளைகளைத் தறித்து மாதரெல்லாம் ஆலவட்டம் வீசுகிறார்கள் குருத்தோலைகளைப் பிடித்தவர்கள் 'ஒசன்னா’ கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர்; உன்னதத்திலே ஓசன்னா" என ஆர்ப்பரிக்கின்றார்கள்.
"தாகத்திற்கு உபயோகிக்க முடியாத உப்பு நீரைக் கொண்ட ஒரு ஊரில் அதை நல்ல நீராக்கிவிட்டால் மக்கள் கூட்டம் எப்படி மகிழுமோ அப்படி
9

Page 7
இருந்தது அன்றைய மகிழ்ச்சி" என்கிறது இயேசு காவியம்.
ஐந்து அப்பங்களினால் போஷிக்கப்பட்ட ஐயாயிரவர்களில் அநேகர்
அங்கு இருந்திருக்க வேண்டும். இக்காட்சியை இயேசு காவியத்தின் இனிய
கவிதைகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன.
உப்பு நீரை நல்ல நீர் ஆக்கினால்
ஊரில் காணும் மகிழ்ச்சியைப் போல செப்பமிக்க திறமையார் வந்ததும்
தேவமன்றில் நன்றி ஒலித்தது அப்பம்ஒன்றில் பலர்பசி தீர்த்தபோல்
ஐயன்தனைக் கண்டு மகிழ்ந்தனர் ஒப்பிலாத உவமையான் நகரிலே
ஊர்வலத்தில் வருகிறார் மெல்லவே
காதலாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
கைவளைத்துக் கொழுந்தினை ஆட்டுவார்
மாதரார்தம் மாபெரும் பெருமையை
மைந்தருக்கு வழங்கினார் அய்ங்னே
வேதநூறு விளம்பிய ஆண்டவர்
வேண்டிநின்ற அரசினை அமைத்திட
வாதிலாத மனுமகன் வந்தனன்
வாழ்கவென்று வாழ்த்தினர் ஆரரோ,
தொலைவிலே எருசலேம் நகர் தெரிகின்றது. நகரைக் கண்டதுமே நாதர் இயேசுவின் கண்கள் பனிக்கின்றன. அக்காட்சி, இயேசு காவியத் தில் இவ்வாறு வருணிக்கப்படுகிறது.
மலையிலேறி மறுபுறம் சென்றதும்
வானிடிக்கும் எருசலேம் காணலாம்
கலைமிகுந்த அந்நகர் தன்னையே
கண்டஇயேசு கண்மணி சிந்தினார்
"நிலையிலாத எருசலேம் நகரமே,
நின்னைத்தேடி ஆண்டவர் வந்தனர்
விலையிலாத அவரை நீ ஏற்றிலை
வேதனைக்கு முதல்வினை தூவினை ஒன்றுபட்டு வாழ்ந்தும் இருக்கலாம்
ஓங்குகின்ற வரங்களைக் காணலாம் நன்றுசெய்ய மறந்த எருசலேம்
நாளைடின்னைப் பகைவர்கள் சூழ்வார் தின்றெறிந்த தோலென ஆக்குவார்
சேர்ந்திருக்கும் கல்லொடு கல்லினை ஒன்றைவிட்டு ஒன்றினை நீக்குவார்
உனைநெருக்கி முன்நிலை மாற்றுவார்.”
O

குன்றின் மீது நின்றபடியே கூறி முடித்த இயேசு "உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளைச் சிந்தித்தா பானால் நலமாயிருக்கும்" எனக் கண்ணீர் மல்கச் சொன்னவற்றின் கருத்தை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வது கிறப் unroof arre, b.
மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக மரணிக்கப் புறப்பட்ட இயேசு எம் அனைவரது ஆத்தும மீட்புக்காகவும் கண்ணீர் விடுகிறார். சுத்த இதயத் தோடு இதைச் சிந்திப்போமாக,
இயேசு உயிர்த்தெழுந்தபடியினால் . . . .
முதலாவதாக - புது யுகமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவதாக - தேவனுடைய வல்லமை தெளிவாகியது. மூன்றாவதாக - அவருடைய கிருபை பிரபல்யமாகியது. தாலாவதாக - துக்கம் - அழுகை மாற்றப்பட்டன. ஐந்தாவதாக - தெய்வீக - மறுரூப வல்லமை வெளிப்படுத்தப்
List." ஆறாவதாக - மனித சாட்சி - தேவனுடைய பொறுப்பு. ஏழாவதாக - தேவ வாக்குத்தத்தம் வெளிப்படுத்தப்பட்டது.
"நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட் களிலும் உங்களுடனே கூட இருக்கிறேன்.""
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து.

Page 8
கவிதைக் களம்
உயிர்த்த ஞாயிறு --தேவதாசன் ஜெயசிங் -
வாரத்தின் முதல்நாள் வழமையில் அதிக நேரத் துடனே நித்திரை நீங்கி பாரத் துடனே பாவையர் பலரும் பரிமள தைலம்; சுகந்த வர்க்கம் பலது மங்கே பவிசாய் எடுத் து இயேசுவின் கல்லறைக் கேகினர் அன்று;
வெள்ளென திறந்த கல்லறை வாயில் வெறிச்சிட் டர்ங்கு கிடந்தது கண்டு உளைந்திட் டார்மனம் புழுங்கிட் டாரவர் இயேசெம் நேசர் எங்கோ? என்று பேசிட் டார்பெரும் மூச்சிட் டார்
அன்னவர் அன்ன அயர்ந்திடும் போழ்தில் மின்னொளி தோற்கும் மிக்கொளி பூண்ட உன்னத தேவ சன்னதித் தூதர் தம்மெதிர் தோன்ற தயங்கினர் கண்டே
என்ன நீவிர்? இயேசுவும் அன்று சொன்னதை மறந்தோ சோர்ந்து போனீர்? அண்ணலை யெண்ணி அவஸ்தை யடைந்தீர்! "இல்லை யிங்கே எழுந்தார் உயிர்த்தே என்றார் தூதர்; ஏற்றனர் மாதர்.
நித்திரைக் கலக்கம்நீத்தார் நேயனின் செய்திகேட்டு பத்திரம் பண்ணிவந்த பரிமள தைலம்நீத்தார். சுத்தமாய்ச் சேர்த்துவந்த சுகர்ந்தவர்க் கங்கள் நீத்தார் "செத்தவர் பிழைத்தபின்னர் சேர்த்துத்தான் பயனென்' என்றார்
சூளையின் புழுவைப்போல வேளையில் வந்தமாதர் காலையில் கதிரவன்முன் பாளையின் முறுவல்பூத்து *நவ்வியைப் போலநாலு பாய்ச்சலில் நகருள் பொந்து *செவ்வியைக் கூறிக்கூறி சிட்டெனப் பறந்துநின்றார்.
அன்ன - அவ்வாறு பாளையின் முறுவல் - பாளைபோன்ற சிரிப்பு நவ்வி - மான் செவ்வி - செய்தி. -
2
 

E
நோக்கி . . . .
கல்வாரியை -
- இயேசு காவியம் -
அவமானம் மிக்கவர்கள் அவர்மானம் தனைப்பறிக்க
அவரின் தோளில்
அவமானச் சின்னமதை அனைத்தேற்றி வைத்தார்கள்
ஆன போதும்
புவிமானம் காப்பதற்குச் சிலுவைதனை முத்தமிட்டுப்
புனித அண்ணல்
உவமான மாகவரும் எதிர்காலந் தனையெண்ணி
உடன்சு மந்தார்
எத்தனையோ பாவிகளின் பாவத்தை தன்தோளில்
ஏற்றுக் கொள்ள உத்தமனார் சிலுவையினை உடல்வைத்து அதன்மீது
உள்ளம் வைத்தார் கத்திமுனை பின்தொடரப் புத்தியுள்ளோர் கண்கலங்கக்
கால்ந டந்து சத்தியத்தின் திருக்குமரன் தள்ளாடும் உடலோடும்
தவழ்ந்து சென்றார் W
ஊனுடலம் தள்ளாட உதிரமெல்லாம் ஆறாக
உலக நாதன்
வானுமிழும் மழைபோலத் தேகமெலாம் வியர்வைவர
மண்ணில் வீழ்வார்
ஆனவரை சாட்டையடி கொடுப்பார்கள் மறுபடியும்;
ஐயன் நிற்பார்
வானவரின் திருக்குமரன் முகங்காண மாந்தரெல்லாம்
வந்தார் ஆங்கே
13

Page 9
அன்பிற்கோர் ஆண்டவர்
(பி. தமிழ்ச்செல்வன் மாசிலாமணி)
மண்ணவர் செய்த பாவம்
மாபெரும் சிலுவை யாகி விண்மகன் யேசு தோளில்
விரும்பியே வந்த மர்ந்து தன்பெரும் மகிமை விட்டு
தனிமையாய் சிலுவை தன்னை மன்பதை உய்வ தற்காய்
மாபரன் சுமந்து சென்றார்!
மும்முறை தரையில் வீழ்ந்தார்
முள்முடி அழுத்த நொந்தார் நம்பெரும் பாவத்தாலே
நாயகன் அடியு மேற்றார் இம்மக மாந்த ருக்கு
எண்ணிலா நன்மை செய்தும் வெம்பகை கொண்ட மாந்தர்
விளங்கிட வில்லை அன்பை
செங்குருதி ஆறாய்ப் பெருக
சிலுவையும் ரத்தம் தோய தாங்கொணாத் துயரம் மேவ
தன்பணி நிறைவு செய்ய பொங்கிடும் கண்ணீர் கொட்ட
புவிமகன் கல்வா ரிக்கு ஏங்கிடும் உள்ளத் தோடு
குற்றுயி ராக் வந்தார்
நீண்டஇருப் பாணி மூன்றை
நீட்டிய கைகால் களிலே
அன்பிலா நெஞ்சத் தோடே
அறைந்தனர் மரத்தோ டிணைத்து
நீண்டம ரத்தை நிமிர்த்தி
நெஞ்சிலே குத்திப் பார்க்க
ஆண்டவ! மன்னி யென்று
அப்போதும் அன்பை ஈந்தார்
14

பெரிய வெள்ளிக்கிழமை
GOOD FRIDAY
பெரிய வெள்ளிக்கிழமை கிறிஸ்தவ மதத்தினர் அனுஷ்டிக்கும் மிக முக்கிய தினங்களில் ஒன்று. கிறிஸ்தவர்களை மட்டுமன்றி உலகம் முழுவதையும் சிந்திக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தும் ஒரு நாள.
Lorri 19 நூற்றாண்டுகளுக்கு முன்பு உரோம இராஜ்யம் பெரும் சாம்ராஜ்யமாக உலகின் பல பாகங்களிலும் பரந்திருந்தது. அப்போது யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளைக் கொண்ட பாலஸ்தீன நாடும் உரோமரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பலஸ்தீனாவின் எருசலேம் நகரின் புறத்தே கொல்கெதா மேட்டில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் மனதை உருக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஒரு சாம்ராஜ்யத்தில் எத் தனையோ சம்பவங்களுக்கு இடமுண்டு அரசியற் சாணக்கியங்கள், இராஜ ரீக கெடுபிடிகள்; வெற்றிகள்; தோல்விகள்; சதிகள்; புரட்சிகள்; எதிர்ப்பு கள்: கிளர்ச்சிகள்; சமூக பொருளாதார மாற்றங்கள். இவைகள் எல்லாம் இன்று பழம் சரித்திர நிகழ்வுகளாக ஏடுகளில் மடங்கி மங்கிவிட்டன. ஆனால் பெரிய வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு சிலுவை மரணம் மறையாத, மறவாத நிகழ்வாக, அகில உலகின் கவனத்தையும் தொடர் ந்து ஈர்க்கும் செயலாக, சிந்தனையை மீண்டும் மீண்டும் தூண்டும் சம்ப வமாக அமைந்துவிட்டது.
/ சிலுவை மரணம் மிகக் கொடூரமானது: பயங்கரமானது. Ásů பொல்லாத அரசியற் குற்றவாளிகளுக்கும் கடுங்குற்றவாளிகளுக்கும்; அது வும் உரோமர் அல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதனைமிக்க மரண தண்டனை. ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் ஒரேபேறான நல்ல குமாரனை சாதனையாலும் போதனையாலும் மனுக்குலத்தின் இரட்சிப்பிற்கு வழிகாட்டிய அருள் வள்ளலை, மனித குமாரனாக அவ தரித்த இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு உட்படுத்திய தினமே பெரிய வெள்ளிக்கிழமை.
பெரிய வெள்ளிக்கிழமைக்கு முதல் வரும் ஞாயிறு குருத்தோலை ஞாயிறு. பெரிய வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும் ஞாயிறு உயிர்த் தெழுந்த ஞாயிறு. இவை இரண்டையும் அடக்கிய வாரம் பரிசுத்தவாரம் பரிசுத்த வாரத்தின் நிகழ்ச்சிகள் பல. அவற்றுட் சில்வற்றை நோக்கு வோம். குருத்தோலை ஞாயிறன்று குரு இயேசுநாதர் எருசலேம் நகரினுள்
15

Page 10
பவனி வந்தார். அவர் மண்ணரசின் வேந்தனுமல்ல, யுத்த வீரனுமல்ல என்பதை விளக்கக் கழுதை மேலே பவனிசென்றார். செங்கம்பள வர வேற்புக்குப் பதிலாக பசுங்கிளைகளை வெட்டி வீதிகளில் பரப்பி பசுமை யான வரவேற்பு நடைபெற்றது. அவருக்கு முன்நடப்பாரும் பின்நடப்பாரும் குருத்தோலைகள் பிடித்து “கர்த்தரின் நாமத்தில் வருகிறவருக்கு ஒசன்னா" என்று கோஷித்தார்கள்.
வியாழன் இரவு இயேசு தமது சீஷர்களைக் கூட்டித் தனது இறுதி இரவு விருந்தை நடத்தினார். தனக்குச் சம்ப்விக்கப் போகும் சம்பவங் களை (காட்டிக்கொடுக்கப்படுவது தொடக்கம் சிலுவை மரணம் உட்பட உயிர்த்தெழுதல் வரை நடைபெற இருப்பவற்றை) வெளியரங்கமாகக் கூறினார். அப்பத்தைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து இது பாவ மன் னிப்பிற்காக நான் கொடுக்கும் சரீரமாயிருக்கிறது என்றார். அப்படியே பானத்தையும் எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி இது பாவ மன்னிப்பு உண் டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தமாயிருக்கிறது என்றார். இவ்வைபவம் கிறிஸ்தவ வழிபாட்டில் திருவிருந்து என இடம் பெறுகிறது.
இறுதி போஜன விருந்தின் பின்பு கெத் செமனே தோட்டத்தில் கிறிஸ்து தனித்திருந்து ஜெபித்தார். கசப்பான பாடுகளை எண்ணிக் கண் ணிர் விட்டார் எனினும் 'என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்தப்படியே’ என்று பாடுகளைத் தாங்கும் சக்தியை இறைவனிடம் பெற்றுக்கொண்
டார்.
ஒரு சீடன் துரோகியானான். பிரதான சீடன் அவரை அறியேன் என்று மும்முறை மறுதலித்தான். மாறி மாறி ஆறு விசாரணைகள். மத குருவும், ஆலோசனைச் சங்கமும், ஏரோதும், ரோம அதிபதி பிலாத்து வும் விசாரித்தார்கள். தூண்டிவிடப்பட்ட பொது ஜனம் "அவரை சிலுவை யில் அறையும்" என்று கூக்குரலிட்டது. பிலாத்து இரத்தப்பழி உங்கள்மேல் என்று கூறி, கை கழுவி இயேசுவை கெடுமதியாளரிடம் ஒப்படைத்தார். அவர்கள் குற்றமற்ற இயேசுவைக் குற்றவாளியாக்கி அவமதித்து, சித்திர வதை செய்து, முள் முடிசூட்டி, சிலுவையில் வைத்து ஆணிகளால் அறைந் தனர்.
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் . . . .
அன்பை (யோ. 3:16), நித்திய நோக்கத்தை (வெளி. 13:8) பாடுகளை (வெளி. 5:9), மனிதனுக்கு மாற்று நிவாரணத்தை (1யோ. 1:29), மீட்பை (கொலோ, 1:14), சுத்தமாக்குதலை (1யோ. 1:7), விடுதலையை (எபி. 10:19), சமாதானத்தை (கொலோ. 1:20) பரலோகத்தை (வெளி. 7:14,15)
குறித்துப் பேசுகின்றது.
6

சிலுவையில் அறையுண்ட வேதனையின் உச்ச நிலையில், செங் குருதி வழிந்தோடும் வேளையில், சிந்துகின்ற சிதறுகின்ற இரத்தம் கண் களை மூடும் தறுவாயில் தன்னை இந்நிலைக்கு உள்ளாக்கியவர்களை மன்னியும் என்று இயேசு கடவுளை வேண்டினார். "பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் • என்பது சிலுவையிலிருந்து அவர் திருவாய் மலர்ந்தருளிய முதல் வார்த்தை இந்த மன்றாட்டும் மனித இயல்பிற்கு அப்பாற்பட்டது. அது தெய்வீக இயல்பு. ஆம் அவர் தெய்வமே,
சிலுவையில் அறையப்படுவோர் இரத்தப் பெருக்கில் மயங்கி, தாகத்தாற் தவித்து, பசியால் பரிதவித்து, பனியில் நனைந்து, வெய்யிலில் உலர்ந்து 2, 3 நாட்கள் சென்றே மரிப்பார்கள். ஆனால் இயேசு மூன்று மணித்தியாலங்களில் மரித்தார். பி. ப. 3.00 மணிக்கு மரித்தார் எனலாம். அப்பொழுது சூரியன் மறைந்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. பூமி அதிர்ந் தது. தேவாலயத் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. அவருடைய கடைசி வார்த்தையும் ஒரு ஜெபமே. "பிதாவே என் ஆவியை உமது கை களில் ஒப்படைக்கிறேன்' என்று உயிர்நீத்தார். சிலுவையண்டையிற் கட மை"பிலிருந்த நூற்றுக்கதிபதி இவற்றைக் கண்டு "மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்’ என்றான் (மாற்கு 15:39)
இறைமகன் இயேசு சிலுவையில் மரித்ததனால், தன்னைப் பாவ பலியாக ஒப்புக்கொடுத்ததனால், சிலுவையானது, இரட்சிப்பின் அத்தாட்சி யாக தியாகத்தின் அடையாளமாக - தேவ அன்பின் வெளிப்பாடாக புனித சின்னமாக மாறிவிட்டது.
வெள்ளிக்கிழமை மாலை, இயேசுவின் உயிரற்ற உடலை காவல் செய்த போர் வீரர் சிலுவையிலிருந்து இறக்கினர். கன்மலையில் வெட்டப் பட்ட ஒரு புதுக் கல்லறையில் உடல் வைக்கப்பட்டு கல்லறை வாசல் பாரிய கல்லால் மூடி முத்திரையிடப்பட்டது. கல்லறைக்குக் காவலும் போடப்பட்டது. இத்துடன் இயேசுவின் கதை முடிந்துவிட்டது என்று எண்ணினார்கள். ஆனால் கடவுளின் திட்டம் அத்துடன் முடியவில்லை. சனிக்கிழமை அமைதியின் நாள். ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று பெண் கள் இயேசுவின் கல்லறைக்கு வழமைப் பிரகாரம் சுகந்தவர்க்கத் திட்டும் வாசனைத் தைலமும் கொண்டு சென்றனர். என்ன ஆச்சரியம் கல்லறை யின் கல் புரட்டப்பட்டிருந்தது. இயேசுவின் உடல் அங்கில்லை. வெள் ளங்கி தரித்த இரு தூதர்கள் தோன்றி, இயேசு இங்கில்லை; அவர் உயிர்த் தெழுந்தார் என்ற அதிசய செய்தியைக் கூறினர். இயேசுகிறிஸ்து உயிர்த் தெழுந்த ஞாயிறு தினமே ஈஸ்டர் (Easter) பெருநாள்
உயிர்த்தெழுதல் இயற்கைக்கு அப்பாற்பட்டது. அது முன்னும் நடைபெறவில்லை, பின்னும் நடைபெறவில்லை; எனினும் கடவுளின் வல் மைக்கு அப்பாற்பட்டது ஒன்றுமில்லை. உயிர்த்தெழுதல் இயேசுவின்
17

Page 11
தெய்வீகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. கிறிஸ்தவ சமயம் ஜீவனுள்ள கிறிஸ்துவின் சமயமாக உலகெங்கும் பரம்ப உயிர்த்தெழுதலின் சத்திய மும் நம்பிக்கையும் முக்கிய காரணங்கள். மரணம் - மரித்ததனால் வெல் லப்பட்டது. பாடுகள் - பாடுகளை அனுபவித்ததனால் வெல்லப்பட்டன. "மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?’ என்று பவுல் அப்போஸ்தலன் இவற்றைக் குறித்து-மேன்மை பாராட்டினான். இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்குச் சான்றுகள் பல. வெறுமையாயிருந்த கல் லறை முதற்சான்று. பயந்து மறுதலித்து ஓடி ஒளித்த சீஷர்கள் நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசு உயிர்த்தெழுந்தார் என்று பகிரங்கமாகத் துணிந்து பிரசங்கித்ததற்குக் காரணம் உயிர்த்தெழுந்த இயேசு அவர் களைச் சந்தித்தமையே, சந்தேகச் சீடன் தோமா உயிர்த்தெழுந்த இயேசு வின் காயங்களிற் கைவைத்து நிச்சயப்படுத்திக் கொண்டான். உயிர்த் தெழுந்து 40 நாட்கள் பலருக்கும் காட்சியளித்தபின் பலரின் பார்வையில் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். காலத்திற்குக் காலம் விசுவாசி களுக்கும் அடியார்களுக்கும் காட்சியளித்து ஆட்கொண்டு வருகிறார். "வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத் தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28) என்று எல்லோரையும் அழைக்கிறார் உயிருள்ள கிறிஸ்து.
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு அதிசயம். வாழ்வும் தொண்டும் அற்புதம். சாதனைகளும் போதனைகளும் ஆச்சரியம். அவர் உயிர்த் தெழுந்ததும் ஆச்சரியமான உண்மையே. -
என். எஸ். இரத்தினசிங்கம் (முன்னாள் அதிபர், யாழ். மத்திய கல்லூரி) பேர்த், மேற்கு அவுஸ்திரேலியா.
* தீயவனுக்குத் தான் தீயவன் என்று தெரிவதில்லை. எனவே அவன் ம
னிப்புக்கு உகத்தவன். அவனை நாம் தேசிக்கவேண்டும். ஏனெனில் அவ னிடம் கூட அவனை அறியாமல் சில நன்மைகள் ஒட்டிக் கொண்டிருக் கும். அதேபோல நல்லவர்களிடம் கூடச் சில தீமைகள் அவர்களை அறியாமல் இருக்கலாம். அவனில் நம்மையும், நம்மில் அவனையும் கண்டால் அவனுமே நல்லவனாகத் தெரிவான். - வில்லியம் ஸொராயரா
* பிறர் எழுதியுள்ள நூல்களைக் கொண்டு உங்களைத் திருத்திக்கொள்வ தில் நேரத்தைச் செலவிடுங்கள். - சோக்கிரட்டீஸ்
* எந்த ஒரு இல்லத்தில் நூலகம் இருக்கிறதோ, அந்த இல்லத்தில்தான் ஆத்மா இருக்கிறது. - பிளாட்ட்ோ
18

A. சமூக, கலை, கலாசார இதழ்கள் காலத்துக்குக் காலம் தோன்று வதும் மறைவதுமான ஒரு "மாயை' பத்திரிகை உலகில் நிலவும் இவ் வேளையில் சில மத வெளியீடுகள் தொடர்ந்து வெளிவருவது என்பது சாதனையே. அந்தவகையிலே வடக்கிலே "தொடுவானம்' கிழக்கிலே ‘தொண்டன்' மேற்கிலே 'தூதன்' 'மன்றாடல்" "சத்திய வசனம் ஆவிக் குரிய உணவு" போன்ற சஞ்சிகைகள் வரிசையிலே புதிய சிந்தனையோடு பூத்து இதழ் இரண்டை விரித்திருப்பது "தொடர்பு' சஞ்சிகை. சிக்கன அமைப்புடன் வந்திருக்கும் இவ்விதழின் ஆசிரியர் இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயமானவர். ஏலவே 'யெளவனம் படைத்தவர். பாடசாலை அதிபர். போதகர். நல்ல உரைஞர். அவர்தான் தேவதாசன் ஜெயசிங்.
இந்த இதழ் ஜெபத்துக்கு முக்கிய இடம் கொடுத்து முகிழ்ந்துள்ளது. கிறிஸ்தவ தொடர்புகள் நிலைய இயக்குனர் வண. பிதா ஆர். துரைராஜா வின் இரண்டு ஆக்கங்கள் காணப்படுகின்றன. அவரது முதலாவது கட்டுரை யின் சில வரிகள் இதயத்தை ஈர்க்கின்றன. மனிதர்களின் மேதாவித் தனத்தை ச் சுட்டுகின்றன. "எமது ஜீவியத்திலே தேவனின் செயற்பாடு களுக்கு "ஆமென்" சொல்வதைப் பார்க்கிலும், எமது திட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் "ஆமென்" என அவரே சொல்ல வேண்டுமென நாம் அடிக்கடி எதிர்பார்ப்பதுண்டு. நாம் அவருடைய வழி நடத்துதலை எதிர் நோக்காமல் அவருக்கு அறிவுறுத்தல் வழங்குகிறவர்களாகவே காணப்படு கிறோம்." w
இந்த வரிகள் நாம் ஆண்டவரை விட எம்மை மேலானவர்களாகவே எண்ணும் மாய உணர்வினை இடித்துக் காட்டுகின்றன. இது எம் மதத் தைச் சார்ந்தவருக்கும் பொருந்தும். வேதாகமப் பாடப் பயிற்சியும் வண. பிதாவால் எழுதப்பட்டுள்ளது. இரு கவிதைகள் களம் காண்கின் றன. அநுபக் கவிஞர் தமிழ்ச்செல்வன் மாசிலாமணி ஒன்றை ஆக்கியுள் ளார். செல்வி. சாந்தா ஜோனின் கவிதையின் சில வரிகள் நயத்துக்குரி யவை. 18 பக்கங்களில் மலர்ந்துள்ள இவ்விதழில் கிறிஸ்தவத்துடன் தொடர்பு கொள்ளத் தூண்டும் விடயங்கள் இருக்கின்றன. வாசகர் கருத் துக்கு இடந்தருவது வரவேற்கக் கூடியது. ஆசிரியர் கைதேர்ந்த இலக்கிய வாதி. எனவே வரும் இதழ்கள் இன்னும் வளமான ஆக்கங்களை சுவை
பட தரும் என நம்பலாம்.
- Usör. Luntsvir
19

Page 12
பத்திரிகையை வாசிக்கும் ஒவ்வொருவருடனும் கர்த்தர் நிச்சயமாகப் பேசு கிறார் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். "சந்திப்பு’ என்ற விதை என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு கவிதை
- மலர் கிங்ஸ்றன், பதுளை C தொடர்பு சஞ்சிகையின் ஆக்கங்கள் அனைத்தும் நலமே. போட்டிகள் நடத்திப் பரிசில் வழங்கினால் நல்லது. இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கைச் சரிதத்தை சித்திரப் படக்கதையாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். - மகாலிங்கம் முரளி, நுவரெலியா D "தொடர்பு' சஞ்சிகையின் மூலம் நான் அநேக படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டேன்.
-V. ஜெயதேவினி, கோமாரி. E "தொடர்பு' சஞ்சிகையை வாசித்து முடித்த போது தரமான ஒரு சஞ் சிகையை வாசித்த மனநிறைவைப் பெற்றேன். இதன் மூலம் தேவனுக் கும் மனித சமுதாயத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பை வலுப் படுத்த விரும்பும் உங்களின் பாரிய நோக்கம் நிறைவேறப் பிரார்த்திக் கிறேன்.
- திருமதி. V. ஞானராஜ், கலபொட
t உங்கள் ட? வினாக்கள்
வினா : பாவிகளின் மன்றாட்டை கர்த்தர் கேட்கிறாரா?
-உஷா செல்வரட்ணம், கல்லாறு விடை : அனைவருமே பாவம் செய்து (ரோமர் 3:23) ஆண்டவரிட மிருந்து தம்மை விலக்கிக் கொண்டார்கள். "உங்கள் அக்கிரமங் களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக் கிறது" என்பதாக ஏசாயா 59:2 கூறுகிறது, “பாவிகளுக்கு தேவன், செவிகொடுக்கிறதில்லை. ஒருவன் தேவ பக்தியுள்ளவனா யிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார்" (யோவான் 9:31)
ஆனாலும், பாவிகள் தேவனிடத்தில் சேருவதற்கு ஒரு வழியுண்டு. “கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். து ஐ. மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளை யும் விட்டு கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். அவர் அவன்மேல் மனதுருகுவார். நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன். அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” (ஏசாயா 55:6,7)
20

பாவியானவன் கர்த்தருடைய கற்பனைகளை மீறி நடந்தமைக் காக மனம் வருந்தி பாவத்தின் தண்டனையாகிய மரணத் திலிருந்து இரட்சிப்பவராக இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய வழிகளை விட்டு விலகி கர்த்தருடைய வழிக்குத் திரும்ப வேண்டும். அப்பொழுது அவர் உங்கள் வேண்டுதலைக் கேட்பார்.
வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் நான் அதிகமான நேரத்தைச் செல்விடுவதாகவும், தன்னோடு கூடிய நேரத்தைச் செலவிடுவதில் லையெனவும் என் கணவர் குறைப்பட்டுக்கொள்கிறார். அதிக மான வேதவாசிப்பும் ஜெபமும் சாத்தியமானதா?
- திருமதி T. றெராபட், பதுளை
நேரத்தைச் சரியானபடி செலவிடுதல் எவ்வாறு? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும். குடும்ப ஜீவியத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் தன் மனைவியின் மேல் அன்பு கூறுதலும்
கணவனது கடமை. அதேபோல் மனைவியரும் அவர்களுக்குக்
கீழ்ப்படிந்து தத்தமது குடும்ப சாரியங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்துக்கும் நேரம் தேவை. ஒவ்வொரு
காரியத்தைச் செய்வதற்கும் ஒவ்வொரு நேரமுண்டு. ஜெபிக்க ஒரு
நேரம். படிக்க ஒரு நேரம். சரியான நேரத்தை நாமேதான் கண்டு பிடிக்க வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஏனைய அங்கத்தவர் கடமைகளில் இருக்கும்போது, அல்லது வீட்டில் இல்லாதபோது ஜெபிக்க, வேதம் படிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். அதிகாலையில் (ஏனையோர் எழும்புமுன்னர்) இதை நடைமுறையில் கொள்வது மிகவும் நல்லது. குடும்ப அங்கத்தினர் அனைவரும் இல்லத்தில் இருக்கும் வேளைகளில் நம் அன்பை அவர்களிடம் பகிர்ந்து நல்ல தொரு கிறிஸ்தவ இல்லத்திற்கு உதாரணமாக நாம் ஜீவிக்க வேண்டும். எல்லோருமே வீட்டில் இருக்கும் வேளைகளில் நாம் புற (நடையாக) வேத வாசிப்பிலும் ஜெபத்திலுமே ஈடுபட்டிருப் போமாயின் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைக் கர்த்தரிடத்தி லிருந்து அப்புறப்படுத்துபவர்களாகவே நாம் காணப்படுவோம்.
y
ஊக்கமான ஜெபத்தில் தேவையான நேரத்தை3 செலவிடு வோம். வேத வாசிப்பும் ஜெபமும் விசுவாச வளர்ச்சிக்கும், கர்த் தரண்டை கிட்டிச்சேர்வதற்கும் அத்தியாவசியமாக இருக்கின்றது" குடும்ப அங்கத்தவர்கள் சிரமப்படாத வகையிலும் அவர்கள் அதில் கவனம் செலுத்தாத விதத்திலும் பொருத்தமான வேளை களை உங்கள் ஜெபதேவைகளுக்காகத் தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை வாசித்துப் பார்க்கவும். தீமோத்தேயு 5:8 எபேசியர், 5:22 நீதிமொழிகள், 31:27 பிரசங்கி 3:1
2.

Page 13
இயேசுகிறிஸ்து
எத்தகைய இராஜா?
- எம்.எஸ். வசந்தகுமார் -
" var ar இயேசு கிறிஸ்து தன்னுடைய சிலுவை மரணத்துக்கு முன்பதாக
எருசலேம் நகருக்குச் சென்ற போது, யூத மக்கள் அவரைத் தங்களுடைவ இராஜாவாக்கும் நோக்குடன், "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போகும்படி புறப்பட்டு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் இராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்" (யோவா 12:13)
இயேசுகிறிஸ்துவை இஸ்ரவேலின் இராஜா எனப் போற்றிப் புகழ்ந் தவர்கள், ‘பஸ்கா’ எனும் பண்டிகைக்காக, பல இடங்களில் இருந்தும் எருசலேமுக்கு வந்திருந்த யூத மக்களாவர். (யோவா 12:12 பார்க்க) இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது, தேவன் எவ் விதமாக அவர்களை விடுவித்தார் என்பதை நினைவு கூர்ந்து ஆசரிக்கப் படுவதே பஸ்கா பண்டிகையாகும். எனினும் இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தைய யூதர்கள் சுயாதீனர்களாக இருக்கவில்லை. அவர்கள் ரோம சாம்ராட்சியத்தின் ஆளுகையின் கீழேயே இருந்தனர். இதனால் அவர்கள் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கும்போது தம் மூதாதையரைத் தேவன் விடு வித்ததை நினைவு கூருவதோடு தம்மையும் அதேபோல தேவன் ரோம அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் எனும் நம்பிக்கையுடனும் எதிர் பார்ப்புடனுமே கொண்டாடினர்.
ரோம ஆளுகையின் கீழ் இருந்த யூதர்கள், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் எப்படி மோசேயின் மூலமாகத் தம் மூதாதையரை அற்புதமான முறையில் விடுவித்தாரோ, அதேபோல, மோசேயைப் போன்ற ஒரு மேசியாவை ("மேசியா" எனும் எபிரேய பதத்தின் அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும்) அனுப்பி, பலத்த அற்புத அடையாளங்களைச் செய்து, ரோம இராணுவத்தைத் தம் தேசத்திலிருந்து துரத்தி தமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பார் என நம்பினர். இத னால்தான் இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்தபோது, அவர்தான் தம்மை ரோம அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் இரட்சகரோ எனும் சந்தேகம் யூதர்களுக்கு ஏற்பட்டது. இயேசுகிறிஸ்து எருசலேமுக்குப் பவனி சென்ற போது மக்கள் அவரை இஸ்ரவேலின் இராஜா என வாழ்த்தியதற்கு இதுவே காரணம்.
22
 

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் யூதர்கள் மத்தியில் ஏற்படுத்திய சந்தேகத்தை நற்செய்தி நூல்களில் பல இடங்களில் அவதானிக்கலாம். உதாரணமாக இயேசுகிறிஸ்து தேவாலயத்தைச் சுத்திகரித்த போது யூதர் கள் அதற்காக அவரைக் கடிந்து கொள்ளாமல், "நீர் இவைகளைச் செய்கிறீரே இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர்?" என்றே கேட்டார்கள் (யோவா 2:18) இதற்குக் காரணம் தேவன் அனுப் பும் மேசியா ஆலயத்தைச் சுத்திகரிப்பார் என அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமையேயாகும். (மல். 3:1-4 பார்க்க) இதனாலேயே அவர்கள் மேசியாவுக்கான அடையாளத்தை அவரிடம் கேட்டனர்.
இயேசு கிறிஸ்து ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த போது மக்கள் அவரை ராஜா வாக்கும்படி பிடித்துக்கொண்டு போக மனதாயிருந்தார்கள் என வோவான் 6:15 இல் வாசிக்கலாம். இதற்குக் காரணம், இயேசு கிறிஸ்துவினுடைய செயல் அவர்களுக்குத் தம் மூதாதையர் மோசேயின் காலத்தில் வனாந்த ரத்தில் வானத்து ஆகாரமான மன்னாவினால் போஷிக்கப்பட்டது நினை வுக்கு வந்தமையேயாகும் (யோவா 6:31 பார்க்க) இதனால் மோசேயைப் போன்ற மேசியா இவர்தான் என எண்ணி, அவரைத் தம் இராஜாவாக்க எண்ணினர். அத்தோடு இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவரிடம் அடையாளமொன்றையும் கேட்டனர் (யோவா 6:30 பார்க்க)
இயேசு கிறிஸ்து உண்மையிலேயே தேவனால் அபிஷேகிக்கப்பட்டு அனுப்பப்பட்ட இரட்சகர் என்பதை ஏற்றுக்கொள்ள யூதர்களுக்கு அடை யாளங்கள் அவசியமாயிருந்தன. இதனால் அவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் பல தடவைகள் அதற்கான அடையாளத்தைக் கேட்டனர். (மத். 12:38, 16:1) இயேசு கிறிஸ்துவோ தேவனுடைய பாடு, மரணம், உயிர்த்தெழுதல் என்பவற்றையே அவர்களுக்கான அடையாளமாகச் சொன்னார் (யோவா 2:19-20, மத். 12:39-40 ஒப்பிடுக) அவர்கள் எதிர்பார்த்தவிதமாக மோசே செய்ததைப் போன்ற அடையாளங்களை இயேசு கிறிஸ்து செய்து காட்ட வில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்பார்த் தவிதமான இராஜாவாக இயேசு கிறிஸ்து அச்சமயம் உலகுக்கு வந்திருக்கவில்லை.
யூதர்கள் தானியேல் 7:13-14ஐ அடிப்படையாய்க் கொண்டு, மேகியா இராஜாவாக வந்து தன்னுடைய இராட்சியத்தை எருசலேமில் ஸ்தாபிப்பார் என எண்ணினர். இயேசு கிறிஸ்து தேவனுடைய இராட்சி யத்தைப் பற்றியே பிரசங்கித்த போதிலும் (மாற். 1:14, லூக் 4:43, 8:1) அது யூதர்கள் எதிர்பார்த்திருந்தது போன்ற ஒரு உலக இராட்சியமாக, ரோம ஆதிக்கத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தரும் ஒரு தேசிய இராட் சியமாக இருக்கவில்லை. இயேசுவே ஒருதடவை, 'என் இராட்சியம் இவ் வுலகுக்குரியதல்ல. அது இவ்விடத்துக்குரியதல்ல" என தெரிவித்துள்ளார் (யோவா 18:36 பார்க்க) அது ஒரு ஆவிக்குரிய ஆளுகை முறையாக இருந் ததே தவிர, ஒரு அரசியல் அமைப்பு முறையாக இருக்கவில்லை.
23

Page 14
இயேசுகிறிஸ்துவை மேசியாவாகக் கருதி, அவர் ரோம ஆதிக்கத்தி லிருந்து தம்மை விடுவித்து தமக்கு ஒரு சுயாதீன இராட்சியத்தைப் பெற் றுத் தருவார் எனும் நம்பிக்கையோடிருந்த யூதர்களுக்கு, அவர் கொடுத்த 4ாடு, மரணம் பற்றிய அடையாளம், அவர்களுக்கு அவரை ஒரு இராஜா வாகக் காட்டவில்லை. ஏனென்றால் யூதர்கள், மேசியா பாடுகளையும் மர ணத்தையும் அனுபவிக்காமல் வெற்றிடமிகு இராஜாவாக வருவாரி என்றே நம்பினர். இதனால் அவர் சிலுவையில் மரிக்கும் போது, இராஜாவாக அவரைப் போற்றிப் புகழ்ந்தவர்கள் அவரை இகழ்ந்தார்கள். “இவன் இஸ்ர வேலின் இராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும் அப்பொழுது இவனை விசிவாசிப்போம்" என்றார்கள் (மத். 27:42) உண் மையில், சிலுவையில் இயேசுகிறிஸ்து பெரிய அற்புதமொன்றைச் செய்து கீழே இறங்கி வந்திருந்தால் அவரை யூதர்கள் இராஜாவாக ஏற்றுக்கொண் டிருப்பார்கள். ஆனால் அவர் சிலுவையில் மரித்தது, அவர் தேவனால் அபி ஷேகம் பண்ணப்பட்டவர் அல்ல; மாறாக, அவர் தேவனால் சபிக்கப்பட் வர் எனும் எண்ணத்தையே அவர்களுக்கு ஏற்படுத்தியது (உபா. 21:23 ஒப்பிடுக).
யூதர்கள் இயேசு கிறிஸ்துவை தமது எண்ணத்தின்படியான, ஒரு உலகப்பிரகாரமான இராஜாவாகவும், ரோம ஆதிக்கத்திலிருந்து விடுத லையைப் பெற்றுத்தரும் இரட்சகராகவுமே எண்ணியமையினாலேயே, அவரது சிலுவை மரணத்தின் அர்த்தத்தை அறியாதவர்களாக இருந்தனர். இவர்கள் தங்களுடைய நோக்கங்களுக்காக இயேசுகிறிஸ்துவை உபயோ கிப்பதற்காகவே அவரை இராஜாவாக்க முயன்றனர். ரோம ஆதிக்கத்தி லிருந்து எப்படியாவது விடுதலை பெறவேண்டும் என்பதே அவர்களது வாழ்வின் இலட்சியமாயிருந்தது. அவர்கள் இயேசுகிறிஸ்து உண்மையிலேயே எத்தகைய இராஜா என்பதை அறியாதிருந்தமையினாலேயே அவருடைய மரணம், அவர்களுக்கு இரட்சிப்பாயிராமல், இடறலாயிருந்தது. (1கொரி. 1:22-23 ஒப்பிடுக). அவர்களால் இயேசுகிறிஸ்துவை தங்கள் நாட்டின் இராஜாவாக்க முடியாமல் போனது மட்டுமல்ல, அவர்களால், இயேசு கிறிஸ்துவின் இராட்சியத்தின் குடிமக்களாக இருக்கவும் முடியாமல் போய்விட்டது.
யூதர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள்கூட இயேசுகிறிஸ்துவை தங்களுக்கு விருப்பமான ஒரு இராஜாவாக்க முயல் கின்றனர். அவரைத் தம் சுயநல நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு கருவி யாக உபயோகிக்கின்றனர். எனவே, இயேசுகிறிஸ்து எதற்காக இவ்வுல குக்கு வந்தார்? நமக்கு எதைத் தருவதாக வாக்களித்திருக்கின்றார்? அவர் எத்தகைய இரர் ஜாவாயிருக்கின்றார்? என்பதை அறிந்து, அவரை நம் முடைய வாழ்வின் இராஜாவாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாவி களான நம்மை இரட்சிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகுக்கு வந் தார். (1 தீமோ. 1:15) பாவ அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்பதற் காகவே அவர் தன்னுடைய உயிரையே சிலுவையில் கொடுத்தார். (எபே.1:7) அவருடைய ஆளுகையின் கீழ் நம்மைக் கொணர்வோமாக.
24

வேதாகமம்"
அருள் திரு. ஆர். துரைராஜா.
(கர்த்தருடைய வார்த்தைகளைப் பரிபூரணமாய்ப் பயில்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம். விறுவிறுப்பூட்டும் வேதாகம பாத்திரம் ஒன்றை ஒவ்வொரு வெளியீட்டிலும் நீங்கள் சந்திக்கலாம்)
பாடம் 2 ரூத் - ஒரு வாக்களிப்பின் வரலாறு
O ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்து ஆதரவு பெற்றவள்
இந்த ரூத். -
1 ஆம் வாரம் ரூத்தின் தீர்மானம் - நகோமியுடின் திரும்புதல்
* மனன வசனம்
"நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து என்னோடே பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" ரூத், 1:16
இது எதைக் குறிப்பிடுகின்றது?
இஸ்ரவேலின் வரலாற்றில் 'நியாபாதிபதிகளின் ஆட்சியிலே" அவ னவன் தன்தன் வழியிலே நடந்தார்கள்" என்ற வாக்கியங்களெல்லாம் ரூத்தின் புத்தகத்திலே காணக்கூடியதாக இருக்கின்றது. அக் காலகட்டத் திலே "கர்த்தருக்குப் பிரியமான ஒரு குடும்பம் பற்பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கர்த்தர்மேல் நம்பிக்கையுள்ளதாக வாழ்ந்து கொண்டிருந்தது. அதன் வரலாறு நான்கு அங்கங்களாக நான்கு அதிகாரங்களில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
25

Page 15
முதலாவதாக இஸ்ரவேலில் ஏற்பட்ட பஞ்சமானது யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இருந்து மோவாபியரின் தேசத்திற்கு உணவு தேடும் பொருட்டாக அக் குடும்பத்தை அனுப்ப நிர்ப்பந்திக்கிறது. பஞ்சத்தின் கொடுமை சுமார் பத்து ஆண்டுகள் வரை அவர்களை அங்கு தங்கவைக் கிறது.
"கர்த்தரே என்னை ஆளுகிறவர்” எனக் கருதும் எலிமலேக்குக்கும் ‘ரம்மியமானவள்” என வருணிக்கப்படும் அவனது மனைவியான. நகோமிக் கும் இரு ஆண் மக்கள் பிறக்கின்றனர். தந்தை எலிமலேக்கின் மறைவுக்கு பின்னர் அவர்கள் இருவரும் ஒர்பாள் - ரூதி எனப்படும் இரு மோவாபிய பெண்களை மணக்கின்றனர். நகோமி தனது கணவனை இழந்ததுடன், தனது வம்சப் பெயரை வளர்த்துக்கொள்ளுமுன்னர் தன்னுடைய இ குமாரர்களையும் இழந்து விடுகிறாள்.
தம் சொந்தவூரிலே கர்த்தர் தம் ஜனங்களுக்கு உணவளிக்கிறார் என் பதை நகோமி அறிந்தபோது தன் இரு மருமக்களோடும்கூட மோவா பிலிருந்து யூதேய்ாவுக்குத் திரும்ப முற்படுகிறாள். அதேவேளை, தன் மருமக்களுக்குக் கொடுக்க தன்னிடம் எதுவுமில்லையென உணர்ந்தவளாக அவர்கள் தங்களுடைய பிறந்தகத்துக்குத் திரும்பிப் போவதே கிறந்தது எனக் குறிப்பிடுகின்றாள். அவ்வாறு அவர்கள் தன்னைப் பிரிந்துவிட வேண்டும் என அவள் தீர்மானித்தமை கர்த்தர் மேல் அவள் கொண் டிருந்த விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வதாய் அமைகின்றது. தனது கிருபையினாலும் அன்பினாலும் அவர்களை வழிநடத்தி வேறொரு கன வன் மூலமாக அவர்களுக்கு இல்லற சமாதானத்தைக் கர்த்தர் காண்டி பார் என்ற விசுவாசத்தோடு அவள் ஜெபிக்கிறாள்.
ஒர்பாள் தனது மாமியாரை முத்தமிட்டு விடைபெற்றுச் சென்றுவிடு இாள் . ஆனால், ரூத் தனது மாமியாரை விடாமல் பற்றிக் கொள் கிறாள். அச்சந்தர்ப்பத்தில் ரூத்தின் வாயிலிருந்து அழகிய தீர்மானம் ஒன்று வெளிப்படுத்தப்படுகின்றது. நகோமியின் ஜனங்களையும், அவ ளுடைய தேவனையும் தம் சொந்த ஜனமாக ரூத் ஏற்றுக் கொள்கிறாள். வாற்கோதுமை அறுவடையின் ஆரம்பத்திலே இருவரும் பெத்லகேமுக்குத் திரும்புகிறார்கள். பஞ்சத்திலிருந்து அறுவடைக்கு இடையிலான மாற்றங் களை நகோமி அறிவதோடு உள்ளச் சோர்வு நீங்கி நம்பிக்கை பிறப்பதை யும் உணர்கின்றாள்.
2 ஆம் வாரம் ரூத்தின் புகலிடம் " சர்வ வல்லவரின் செட்டைகள்
மனன வாக்கியம்
Gir செய்கைக்குத் தக்க பலனை அர்த்தர் உனக்குக் கட்டளையிடுدھ ““ வாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ்
26

அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்ப தாக.“ ( ரூத் 2:12 )
இதன் பொருள் யாது?
நகோமி ரூத் இருவரும் பெத்லகேமை நாடி வரும்போது அவர்களு டைய தனிப்பட்ட பிரச்சினைகளே தேவனின் உன்னதமான உடன்படிக் கைக்கு அவர்களை இட்டுச் செல்கின்றன. இஸ்ரேலிய சமூகத்தினின்று மோவாபியர் வேறுபடுத்தப்பட்டிருந்த போதிலும் ரூத்தினுடைய நம்பிக்கை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திலேயே இருந்தபடியினால் அங்கே அவள் கிருபை பெற்றவளாக வாழ்கின்றாள்.
மரித்துப்போன எலிமலேக்கின் நெருங்கிய உறவினனும், செல்வந்தனும் பலசாலியுமான ஒரு புதிய பாத்திரம்-போவாஸ் இங்கு அறிமுகமாகின்றான: இந்த இரு விதவைகளின் வாழ்விலும் கர்த்தருடைய ஆசீர் வாதங்களைக் கொண்டுவரும் ஒரு கருவியாக இந்த போவாஸ் திகழ்கின்றான்: வயலிலே அறுக்கிறவர்களின் பின்னால் சிதறி விழும் கோதுமை மணிகளைப் பொறுக் கிக் கொள்ள நகோமியிடம் அனுமதி பெறுகிறாள் ரூத். இது மோசேயின் சட்டத்திலே அநாதைகள், விதவைகள், தேசத்தார் ஆகியோருக்காக அமைக் கப்பட்ட தேவனுடைய முன்னேற்பாடாக இருந்தது. ரூத் கோதுமை மனி களை போவாஸின் வயல்களிலே பொறுக்க நேர்ந்தமை தற்செயலா" நேர்ந்த ஒன்றல்ல; அதுவும் தேவனின் முன்னேற்பாடேயாகும். போவாஸ் ரூத் மேல் மிக தயயுள்ளவனாக இருக்கிறான். "பொறுக்கிக் கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும் இங்கே என் ஊழியக் காரப் பெண்களோடு கூடவே இரு" என்கிறான். அவளை யாரும் தொடா திருக்கவும், வேலை செய்யும் சந்தர்ப்பங்களில் அவளுக்கு விசேஷ சலுகை கள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தனது பணியாட்களுக்குக் கட்டளை யிடுகிறான்.
போவாஸின் அன்பின் நடவடிக்கைகளினால் கவரப்பட்ட அவள் தரை மட்டும் குனிந்து அவனை வணங்குகிறாள். தான் ஒரு அந்நிய நாட்டவ ளாய் இருந்தும், இந்நில உரிமையாளனிடம் இவ்வளவு சலுகைகள் தனக் குக் கிடைப்பதையிட்டு ஆச்சரியமடைகிறாள்; போவாஸோ ரூத்தின் தியா கம், துணிவு, விசுவாசம் மாமியார் மேல் கொண்டிருந்த பக்தி அனைக் தையும் அறிந்திருந்தான்.
ரூத் 2:12ல் குறிப்பிட்டுள்ள போவாஸின் ஜெபமானது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் செட்டைகளின் கீழ் அவள் அடைக்கலம் புகுந் தமை, அவனது மனத்தில் ஆழப்பதிந்துவிட்டது என்பதை எடுத்துக் காட்டு கிறது. இவ்விண்ணப்பம் தேவன் தம் மக்கள்மேல் கொண்டிருக்கும் அன்பைப் பிரதிபலிக்கின்றது. ஒரு தாய்ப்பறவை தனது செட்டைகளிள் கீழே தன் குஞ்சுகளுக்கு அடைக்கலம் அளிப்பதைப் போல், தேவன் திதி பிள்ளைகளைப் பராமரித்து, அவர்களுக்குப் புகலிடமும், பாதுகாப்பும் அளிக் கிறார். (அடுத்த இதழில் தொடரும்)
27

Page 16
அன்பளிப்பு செய்ய வேண்டுமா?
அப்படியானால் இதோ உங்களுக்கு ஒரு !
“தொடர்பு அன்பளிப்புத் திட்டம்”
米
பிறந்த நாள் * திருமண நாள் * கிறிஸ்மஸ்
荣
ஞானஸ்நானம் * இரட்சிப்பின் தினம் * திடப்படுத்தல் | பகிரங்க விசுவாச அறிக்கை போன்ற தினங்களின் ஞாபகார்த்தமாக தொடர்புகளுக்கான அன்பளிப்புச்
சந்தா ரூ 40/-ஐ உங்களுடைய:-
பிள்ளைகளுக்காக * நண்பர்களுக்காக பெற்றோருக்காக * ஆசிரியர்களுக்காக போதகருக்காக * மாணவருக்காக சபை அங்கத்தவருக்காக புதிய விசுவாசிகளுக்காக
அல்லது
W
நீங்கள் விரும்பும் எவருக்காகவும் செலுத்தி அவர்கள் "தொடர்பு பெற வழி செய்யுங்கள்.
உங்களுடைய சந்தா கிடைத்ததும் "உங்கள் பெயரால் கொடுக்கப்படும் அன்பளிப்பு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அழகிய "காட்’ ஒன்று உரி
யவருக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு ஆண்டுக்குரிய சஞ்கிகை அவருக்குத்
தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
* சாதாரண ஆண்டுச் சந்தா ரூ. 50/- அன்பளிப்பு " 蟒 默 ლნ. , 401
என்பதை கருத்திற் கொள்ளவும்
28

தொடர்பு சஞ்சிகை
அங்கத்துவ விண்ணப்பம்
ஆசிரியர் அவர்களுக்கு காரியாலய பாவனை
"தொடர்பு" -
3 AT ,
மேற்படி சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்து கொள்ள விரும்பு கிறன். 199 . ஆம் ஆண்டுச் சந்தாவான. ரூபாவை ..இலக்க காசோலையாக I காசுக்கட்டளையாக
முத்திரைகளாக அனுப்பி வைக்கிறேன்.
சஞ்சிகையை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ADDRESS IN ENGLISH
SLLLLLLLL LLL LLL LLL LLLLLL 0L0LLLL0L LL00 LLLLLSLLSSL S SL S C L S CLLLL CLLLLCS CCLC S SL L L L q 0LLS S LL 0L L
* a * y) * R * * * * * * *
கையொப்பம்
THODARPU i -60 - A, KANDY ROAD
KEN GALLA
திரு / திருமதி / செல்வி .
உங்களது தொடர்பு பதிவெண்
ஒவ்வொரு சஞ்சிகையும் ஒழுங்காக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றவர்ளுக்கும் இதை அறிமுகப்படுத்தி இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே தொடர்பு ஏற்பட வழி செய்யுங்கள்.
கரித்தரி உங்களை ஆசீர்வதிப்பாராக.
நன்றி.
- ஆசிரியர் -

Page 17

இத் தொடர்பு . . . .
இயேசு கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும்.
இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டவர்கள் விசுவாசத்தில் வளர்ச்சி பெறுவதோடு, அவருடைய சாட்சிகளாக விளங்கு வதற்கும்
இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டு அவரைப் பின்பற்றி சமூகத் திற்குப் பயன்படும் நற்பிரஜைகளாகப் புறப்படுவதற்கும்,
எமது இலவச வேதாகம அஞ்சல் வழிக்கல்வி நிலைய' - BIBLECOR
- மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பை" ஏற்படுத்திக்கொள் வதற்குமாகும்.
* தொடர்பு - சந்தா விபரம்
தபாற்செலவுடன் உள்ளூரில் இந்தியாவில் வெளியூரில் ஆண்டுச் சந்தா (6 பிரதி) ரூ. 50/- ரூபா 100/- US$ 251
தனிப் பிரதி ரூ. 10- இலங்கை ரூபா இலங்கை ரூபா
2001- 1000/-
அன்பார்ந்த நேயர்களே,
筠
சஞ்சிகையை வாசித்து விட்டீர்களா?
பலருக்கு இதை அறிமுகப்படுத்துவதன் மூலம் இவ்வூழியத்துக்கு உதவி புரியுங்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்களின் விலாசங்களை அனுப்பிவையுங்கள்.
சஞ்சிகை பற்றிய கருத்துக்களோடு ஆசிரியருடன் தொடர்பு
கொள்ளுங்கள்.
- நன்றி

Page 18
“பைபிள்ெ
எமது பைபிள்கொர் லங்கா குடும் இணைந்து கொள்ள விரும்பினா எமக்கு எழுதுங்கள்.
இதற்கு அங்கத்துவக் கட்டணட
நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்ட
罗
ஒர் அங்கத்தவ அட்டையும், "ே கூடிய இலச்சினையும் (Badge) :
தை
"புதுவாழ்வு உமக்கு’ என்னும் செய்திருக்க வேண்டும்.
63).' Llunrll- நெறியில் சேரக்கூடிய சங்களை (அவர்களுடைய அனு
Gh.
தொடர்பு சஞ்சிகையின் சந்தா, கடவுளுக்குச் சாட்சியாகயும், ம தவராகவும் ஜீவிக்கிறார்.
குறைந்தபட்சம் ஐந்து சந்தாதா முயலுங்கள்.
விண்ணப்பிக்க
“BE
6, Bala he
Tel 01-554009 Colo
Printed and Published by Bro. Devadas
Kengalla for Rev. R. Thurairajah, No. 6, B New Ferrine Printers 694, Kadawatha Rc

கார் - லங்கா’
பத்தில் நீங்களும் ஓர் அங்கத்தவராக ல் 1992 - ஜூலை மாதத்திற்கு முன்
ம் அறவிடப்பட மாட்டாது.
-வராய் இருத்தல் அவசியம்.
ஷட்’ அல்லது "பிளவுஸில்" அணியக் உங்களுக்கு வழங்கப்படும்.
கமைகள்
எமது பாடநெறியை நீங்கள் பூர்த்தி
புதிய மாணவர்களின் பெயரி , விலா மதியுடன்) எமக்கு அனுப்புதல் வேண்
தாரராக இணையும் ஒவ்வொருவரும் றுபடியும் பிறந்த ஒரு திருச்சபை அங்கத்
ரரையேனும் "தொடர்பு”டன் இணைக்க
s வேண்டிய முகவரி:
LECOR"
namulla Lane, mbo - 6.
any Jeyasing, of Dason's - 90, Kandy Road, alahenamulla Lane, Colombo 6 and Printed at bad, Dehiwela, on 25, 4, 1992,