கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1994.02

Page 1
· “ BLESSED ARE TH
 
 

. ." "ܕ ܒ ܝܬܐ LÉ| –
திட்டி '

Page 2
நுகர்வோரின் வசதிக்காக.
சுதந்திர தினம் - அது என்ன ? anninn 2 ஏனோக்கு - ஏ - நோக்கு e- 5 கவிதைக் களம் sam 9 ஆத்தும நேசரின் அங்க மகத்துவம் , 11 கர்த்தர் தந்த புத்தாண்டுப் பரிசு ’’ 13 جسے வேதாகமப் புதிர் - இல. 007 MWV 17 ரசித்ததும் ருசித்ததும் - - 18 இயேசுவிள் ஜெப ஜீவியத்தில் nnnnn 20 யார் குற்றவாளி? ஏவாளே குற்றவாளி1 YWh 22 காலடிச் சுவடுகள் - ஒரு கனவு Mww* 24 கொக்ரக்கோ? a 5 மன்னிப்பு - இயேசு காவியத்தில் ஒரு காட்சி -- 30
அன்பார்ந்த வாசகர்களே,
:
大
சஞ்சிகையை வாசித்த பின் சகலருக்கும் அறிமுகம் செய்யுங்கள். ஆர்வமுள்ளோரின் விலாசங்களை எமக்கு அனுப்பி வையுங்கள். உரிய வேளையில் சஞ்சிகை வெளிவர ஊக்கமாய் ஜெபியுங்கள். கடிதத் தொடர்புகள் - கட்டுரை கவிதை ஆகியன The Editor, Thodarpu, Dason's, 90 Kandy Road, Kengalla என்ற விலாசத்துக்கும், Fjö35(t - 557 G5IT GOL 5 Gir Mrs. B. K. Thurairajah, Director, “Biblecor - Lanka”. 6, Bala henamulla Lane, Colombo-6, GT Gör sp விலாசத்துக்கும் அனுப்பப்படல் வேண்டும். ஆண்டுச் சந்தா அறுபது ரூபா: தபாற் செலவு பத்து ரூபா. காசோலை/காசுக் கட்டளை/முத்திரைகள் மூலமாக இதை அனுப்பலாம். காசுக் கட்டளையாயின் காசு பெறும் தபாற் கந்தோர் "வெள்ள வத்தை" எனக் குறிப்பிட மறவாதீர்கள்.
Thodarpu - Christian Tamil Magazine for the whole family. Director - Mrs. B. K. Thurairajah Editor - Bro. Devadason Jeyasingh
Letterpress - Kumaran Press,
201, Dam Street, Colombo- 12. Phone : 4 2. 1 388
4th issue r THODARPU (st February 1994
 

அன்பார்ந்த வாசகர்களே,
எல்லாம் வல்ல இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனை வருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
இப் பதினாலாவது இதழை உரிய வேளையில் வெளியிட கிருபை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இவ் வருட ஆரம்பத்திலிருந்து தொடர்பு வெளியீட்டில் மாற்றமொன்று செய்யப்படுகின்றது. பெப்ருவரி மாதம் மட்டும் தனியொரு இதழ் வெளிவருகின்றது. இதனைத்தொடர்ந்து மார்ச் ஏப்றில், மே/ஜ"ன், ஜூலை/ஆகஸ்ட் என இதழ்கள் தொடரும் .
பெப்ருவரி 4ஆம் நாள் நமது நாடு அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட தினமாகையினால் எமக்குத் தேவையான சுதந்திரம், சமாதானம் இவற்றுக்காக இறைவனைப் பிரார்த்திக்க வேண்டியது அவசியமாகின்றது. சுதந்திர தினத்தையொட்டி பணிப்பாளரின் விசேட கட்டுரையொன்று இவ் விதழில் பிரசுரமாகின்றது.
மேலும் தொடர்பின் ஆரம்ப கர்த்தாவான அருள் திரு' R. துரைராஜா அவர்கள் கர்த்தருக்குள் நித்தியடைந்து மார்ச் 13 உடன் ஆண்டு ஒன்று நிறைவாகின்றது. அதையொட்டி அடுத்த மார்ச்/ஏப்றில் இதழ் விசேட வெளியீடாக வெளிவர இருக்கின்றது. அதற்காக ஜெபிக்கும்படி கேட்கிறேன்.
தொடர்பு சந்தாவை ஜனுவரி - டிசெம்பர் என்ற ஒழுங்கில் நியமித்துக் கொள்ளுவது வசதியாக இருக்குமாதலால் அதற்கேற்ற படி ஒத்துழைப்பு நல்கும்படி வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
தொடரட்டும் உங்கள் தொடர்பு. ஆக்கங்களை அனுப்புங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
- கிறிஸ்துவின் பணியில்,
தேவதாசன் ஹெயசிங்.

Page 3
சுதந்திர தினம். அது என்ன ?
- திருமதி B. K. துரைராஜா -
X 1948ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் நாள்.
அன்றுதான் எமது நாடு ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடு பட்டு சுதந்திரத்தைப் பெற்றது. மக்கள் மகிழவேண்டிய ஒரு தினம் இது. எல்லாச் சுதந்திர நாடுகளையும் போலவே நாமும் "இலங்கையர்களாக இத் தினத்தைக் கொண்டாடுகிறோம். அதி லும் கிறிஸ்தவர்கள் -ஒரு கொடியின்கீழ்- கூடிய கரு த் தோ டு கொண்டாட வேண்டிய நாள் இது.
ஏனையோர் எத்தனையோ காரியங்களுக்காக இத் தினத்தைக் கொண்டாடி மகிழும்போது கிறிஸ்தவர்கள் மட்டும் கூ டி ய கரு த் தோடு கொண்டாட வேண்டியதேன்?
X இது மகிழ் கொண்டாடும் நாள்
இந் நாட்டின் பிறப்புரிமை எமக்கு உண்டு. இந் நாட்டின் பிர ஜைகள் நாம். எனவே தாயைச் சேய் நேசிப்பது போல நமது தாய கத்தைச் சேயர்களாகிய நாமும் நிறை மனத்துடன் நேசித்து மகிழ்ந்து களி கூருவோம்.
* இது நன்றி செலுத்தும் நாள்
400 ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட்டை ஆண்டு வந்த மேனாட்டார் உரிய காலகட்டத்தில் எமது அரசியல் அ றிவு க் கு மெருகூட்டிச் சென்றனர் என்றால் மிகையாகாது. போர்த்துக்கேய ரும். ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் ஒருவர் பின் ஒரு வ ராய் வந்து சண்டையிட்டபோது நாமும் பற்பல மாறுதல்களுக்குட்பட்டு அவற் றின் மூலம் பலவற்றை அறிந்தோம், பயின்றோம் பா ர ம் பரி யம் நாகரிகம், சமயம். கலாச்சாரம் போன்ற துறை களி லெ ல் லா ம் போதிய மாற்றங்கள் ஏற்பட்டன. இவற்றுள் கிறிஸ்தவர், களு க்கு சமயம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இதற்காக நாம் இந்நா ளில் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இறை வனின் திட்டமும், சித்தமும் இன்றி எதுவுமே நடைபெறுவதில்லை.
தேவனுக்கென்று கனி கொடுங்கள் - ரோமர் 7 : 4
---- 2 س--

அடுத்து சம உரிமைகள் பெற்றமைக்காக சுதந்திரமாக இறை வழிபாடு செய்யக் கிடைத்திருக்கும் உரிமைக்காக ந ன் றி செலுத்து வோம். இன்று எத்தனையோ நாடுகளில் பேச்சு/எழுத்துச் சு த ந் தி ரம் இல்லை. எனினும் எங்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் சுதந் திர தன்மையினால் நாம் சுதந்திரத்தின் அருமையை உணராதிருக் கிறோம். சுதந்திரமே அற்ற ஏனையோருடன் ஒப்பிடும்போது இறை வனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
* நினைவுகூரும் நாள்
நாட்டின் சுதந்திரத்திற்காக அயராதுழைத்தோர் அ நே க ர், அதற்காக உயிர்விட்டோர் அநேகமாயிரம். அத் த கை ய நிகழ் வு களும் நாட்டுப்பற்றும் நம்மவரில் இல்லாதிருந்திருந்தால் இன்ன முமே அடிமைச் சீவியத்தில்தான் இருந்திருப்போம். எனவே சுதந் திரப் போரில் உயிர் நீத்த ஒவ்வொருவரையும் இன, மத, மொழி வேறுபாடற்று நினைவு கூர வேண்டியது நம் கடன் இரு வித மா ன விடுதலையை இங்கு நோக்க வேண்டும்.
1" அறியாமையிலிருந்து அறிவு, 2. பாவத்திலி ரு ந் து இறை வன் அளித்த விடுதலை. (யோவான் 8: 36) *குமாரன் உ ங் களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவிர்கள்.
大 பொருத்தனையின் நாள்
நாம் இலங்கைப் பிரஜைகள். ஆகையால் இந் நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் “எந்த மனிதனும் மேலான அதி காரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக் கடவன்" என்கிறது தி ரு மறை" எனவே இந் நியமங்கள் எல்லாமே இறைவனால் ஏற்படுத்தப்பட் t-606 it intub.
"அழிவுள்ள வித்தினாலே அல்ல; என்றென்றைக்கும் நிற்கிறதும், ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடி யும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே" (1 பேதுரு 2:23) இதன்படி நாம் இந் நாட்டில் இறைவாைலேயே ஜெநிப்பிக்கப்பட்டுள்ளோம்.
“நியாயப் பிரமாணத்தைக் குறித்து மேன்மை பாராட்டுகிற நீ நியா யப் பிரமாணத்தை மீறி நடந்து தேவனைக் கணவீனம் பண்ணலாமா?" (ரோமர்2: 23). இதன்படி ஆளுபவர்கள், வழிகாட்டிகள், தலைவர் கள் அனைவரோடும் ஒத்துழைத்து நாட்டின் நலனுக்காக பொரு ளாதார அபிவிருத்திக்காக அவர்களை உற்சாகப்படுத்தி உழைக்க வேண்டியவர்களாயும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள் - எபிரேயர் 13 : 2
একেকািট টি ==

Page 4
* ஜெப நாள்
"எல்லா மனிதருக்காகவும் ஜெபங்களையும் விண்ணப்பங்களை யும் ஏறெடுக்க வேண்டும்" எனப் போதிக்கின்றது திருமறை. நாட் டின் சமாதானம், இன ஐக்கியம், இவையனைத்துக்குமாக இச் சுதந் திர தினத்தில் ஜெபிக்க வேண்டிய கடப்பாடும் நமக்கு உண்டு. இன்றைய காலகட்டம் , எங்கும், எதிலும் சண்டை சச்சரவு. கொலை, கொள்ளை. அமைதியும், சமாதானமும் எங்குமே அரும் பொருட்கள் ஆகிவிட்டன. எனவே ஜெபம் மிக மிக அத்தியாவசிய மாகின்றது.
யோசு வாவின் நாட்களில் போல கர்த்தர் இன்றும் தீமைகளை அகற்றி நன்மையான பாதையில் நடத்தக் காத்து நிற்கிறார். எனவே, அவரை நோக்கி ஜெபிக்க வேண்டியது மிக மிக அவசியமும் அவசரமுமானது.
இன்று எந்த வழியில் யாருக்கு சமாதானம் இருக்கிறது? அன்று தாவீது பெரும் பாவத்துக்கு அடிமையானான். அற்ப ஆசையொன்றின் காரணமாக பாவச் சிறைக்குள்ளானான். ஆனால் "என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்" (சங் 50:15) என்ற திருமறை வசனத்திற்கேற்ப தேவனை நோக்கி, விண்ணப்பித்தபோது அவனுக்கு அப் பாவச் சிறையிலிருந்து விடு தலை கிடைத்தது.
யோசேப்பு தான் செய்யாத தவறுக்காக உலகச் சிறையிலடை பட்டான். ஆனால் அங்கும் அவன் இறைவனுக்குகந்த ஜீவியம் செய்த படியால் விடுவிக்கப்பட்டான்.
இன்றுகூட நோயினின்றும் துர்ப் பழக்கங்களிலிருந்தும். விடுதலை வேண்டுமென துடியாய்த் துடிக்கும் கோடிக் கணக்கான மக்கள் உள் ளனர். அனைத்துக்கும் விடுதலை அளிக்க அந்தச் சமாதான கர்த்த ரால் மட்டுமே இயலும். மற்றபடி எந்தவொரு மனிதனாலும் மெய்ச் சமாதானத்தை/விடுதலையை அளிக்கவே முடியாது.
*சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம், சமாதானம் என்று சொல்லி என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்கு கிறார்கள்" (எரேமியா 6:14) என்று கர்த்தர் உரைக்கிறார்.
எனவே, விடுதலைக்காக விண்ணப்பம் செய்வோம்; சமாதானத் துக்காக ஜெபிப்போம். ()
சுத்த இருதயத்தோடே P. to o J9H6örL கூருங்கள் 1 பேதுரு 1 : 22
- .. 4 -

ஏனோக்கு - ஏ ம நோக்கு
* J. சாம் ஜெபத்துரை-தமிழ்நாடு
4. நடப்ே பாம் வாரீர்
* அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். (1 யோ. 1:7) * அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண் வஸ்திரம் தரித்து என்னோடு கூட நடப்பார்கள்: (வெளி. 3:4)
ஏனோக்கு தேவனோடு நடந்தார் - சஞ்சரித்தார் என்றெல் லாம் வேதத்தில் வாசிக்கும் பொழுது நம்மை அறியாமலே நம் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும்புகிறது. "மனிதன் தேவனோடு சஞ்சரிக்க முடியும்" என்பதை யார் ஏனோக்குக்கு அறிவித்திருக்க முடியும்? யாருடைய முன் மாதிரியை ஏனோக்கு பின்பற்றினார்? முன்னூறு ஆண்டுகள் கர்த்தரோடு நடக்க அவரால் எப்படி முடிந்தது?
ஏனோக்கின் காலத்திலும், ஆதாம் உயிரோடிருந்தான் என்ப தற்கு ஆதியாகம் 5 ஆம் அதிகாரம் சான்றுபகருகின்றது. ஏனோக்கு ஆதாமின் ஏழாம் தலைமுறையானவன். ஆதாம் மொத்தமாக வாழ்ந்த ஆண்டுகள் 930 என்பதை ஆதி. 5:5 இல் பார்க்கலாம். ஆதாமுக்கு மகனாக சேம் பிறக்கும்போது ஆதாமுக்கு வயது 140. பேரனாக ஏனாஸ் பிறக்கும் போது வயது 235, கொள்ளுப் பேரனாக கேனான் பிறக்கும் போது 325, எள்ளுப் பேரனாக மகலாயெலேல் பிறக்கும்போது 395, ஆதாமுக்கு ஆறாம் தலைமுறையான யாரேத் பிறக்கும் போது ஆதாமுக்கு 460 வயது, ஏழாம் தலைமுறையான ஏனோக்கு பிறந்தபோது 622 வயது. எனவே ஏனோக்கு பிறந்த பின்னர் ஆதாம் 308 ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கின்றான். ஆகவே, மனிதன் தேவனோடு கூட சரி சமானமாய் நடக்க முடியும் என்ற உண்மையை ஆதாம்தான் ஏனோக்குக்குக் கற்றுக் கொடுத் திருக்கவேண்டும் என்பது எனது கருத்து, அதை எனது கற்பனைக் கண்களில் பார்க்கிறேன். கேளுங்கள்.
ஆயிரக் கணக்கான சிறு பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஆதாம் தனது சரித்திரத்தைக் கூறினார். 'ஆதியிலே ஆண்டவர் என்னையும்
உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் - யோசுவா 3 : 5
- ി അ

Page 5
ரவாளையும் உருவாக்கி ஏதேன் தோட்டத்திலே வைத்தார். என்னை மண்ணினாலும், ஏவாளை எலும்பினாலும் உருவாக்கினார்" என அவர் கூறிய போது "தாத்தா பொய் சொல்லுகிறார்" என்று பிள்ளைகள் கேலி செய்திருப்பார்கள்; நம்ப மறுத்திருப்பார்கள். ஆனால் ஏனோக்கோ அதைக் கவனமாய்க் கேட்டார்.
"அந்த அழகிய தோட்டத்திலே ஆண்டவர் எல்லா வகை பழ வர்க்கங்களையும் வைத்திருந்தார். ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஜீவ விருட்சம் அங்கு இருந்தது. ஒவ்வொரு நாளும் பகலின் குளிர்ச்சி யான வேளையில் எங்களோடே பேசி உறவாட கர்த்தர் இறங்கி வருவார். அருமையான நண்பனாக அவர் எங்களோடு பேசுவார். எங்களோடு உலாவுவார். அவர் பரலோகத்திலிருந்து இறங்கி வரும் போது எங்கள் உள்ளம் பொங்கும்."
ஆதாம் சொல்லச் சொல்ல ஏனோக்கின் உள்ளமும் பொங்க ஆரம்பித்தது. கண்கள் கண்ணிரைச் சொரிந்து கொண்டேயிருந்தன. ஆதாம் தொடர்ந்து . ஆனால், ஒரு நாள் சாத்தான் எங்களை வஞ்சித்துப் போட்டான். நாங்கள் பாவம் செய்துவிட்டோம். கர்த் தருடைய கோபத்திற்கு ஆளானோம். அவர் எங்களைத் தோட் டத்தை விட்டே துரத்திவிட்டார். சாபங்கள் - நோய்கள் -மரணம் எங்களை பின் தொடர்ந்தன. அதைவிட வேதனையான காரியம் என்னவென்றால், கர்த்தர் எங்களோடு பேச - உாைவ வரவில்லை. அவரோடு இருந்த ஐக்கியமே அறுபட்டுப் போய் விட்டது. ஆதா மின் குரல் கம்மியது. கண்ணிர் கொட்டியது.
ஏனோக்கு கேட்டார். "தாத்தா, உங்கள் பாவத்திற்காக நீங்கள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் அவரோடு நடக்க முயற்சித்திருக் கலாமே, ஏன் நீங்கள் அதைச் செய்யவில்லை?" ஆதாம் சொன் னார். "ஆனால், சாத்தான் அதற்குள் ஆயிரமாயிரம் பாவ இச்சை களைக் காண்பித்து இன்னும் அதிகமான பாவத்துக்குள் எங்களைக் கொண்டுபோய் விட்டான்"
ஏனோக்கு இவ் வார்த்தைகளைப் பரிபூரணமாய் நம்பினார். அவ ரூடைய உள்ளம் சிந்திக்க ஆரம்பித்தது. பாவம் தேவனை விட் டு மனிதனைப் பிரிக்குமானால் பாவமற்ற ஜி வி யம் நிச்சயமாக மனி தனை தேவனிடம் நடத்தும். அந்த நாள் முதல் ஏனோக்கு பாவத்தை மகா வெறுப்பாய் வெறுத்தார். தான் முன்பு செய்த பாவங்களுக் காக மனம் கசந்து அழுது பாவ மன்னிப்புக்காகக் கதறினார். பரி சுத்தமுள்ள தேவ சமுகத்துக்காகவும், பிரசன்னத்திற்காகவும் ஏங்கி மன்றாடினார். மான்கள் நீரோடையை வாஞ்சித்துக் கதறு
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள் - ஏசாயா 26 : 4
- 6 -

வதைப் போல அவரது ஆத்மா கர்த்தருக்காக ஏங்கிக் க த ஹிய து அவருடைய உள்ளம் தேவ அன்பினால் நிரப்பப்பட்டுக் கொண்டே யிருந்தது.
அந்த வாஞ்சையைக் கர்த்தர் பார்த்தார். அந்த அன்பு ஸ் ள இதயத்தைக் கண்டு அவர் இறங்கி வந்தார், ஏனோக்கோடே பேச ஆரம்பித்தார். நடக்க ஆரம்பித்தார். உலாவ ஆரம்பித்தார். ஆதா மின் பாவத்தால் வந்த வீழ்ச்சியை அறிந்த ஏனோக்கு த ன் னி ல் எந்தவித பாவமும் வந்துவிடாதபடிக்கு தன்னைச் சுத் தவானாகக் காத்துக்கொண்டான். ஒரு நாள் அல்ல; இரண்டு நாட்கள் அல்ல, முன்னுரறு வருடங்கள் தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந் தா ர். அந்த அன்பின் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியவில்லை. அந்த அன்பு தெவிட்டிப் போகவில்லை! அனலின்றி குளிர்ந்து போகவு மில்லை.
திரளான தண்ணிர்கள் நேசத்தை அவிக்க மா ட்டாது. வெள் ளங்களும் அதைத் தணிக்க மாட்டாது. ஒரு வ ன் தன் வீ ட் டி லுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும் அது முற்றிலும் அசட்டை பண்ணப்படும்." (உன் 8:7) ஆம் கர்த்தரின் நேசம் அத்தனை இன்பமானது, அத்தனை ஆழமானது. தேவ பிள்ளையே! அந்த நேசத்தினால் உன் இருதயத்தை நிர ப் பி வி டு. மகிமையான தேவனாகிய கர்த்தர் உன்னோடு வாசம் செய்ய விரும் புகிறார். அவரை வருந்தியழைப்பாயாக.
எம்மாவூருக்குப் போன சீஷர்கள் அவரை வருந்தி அழைத்தார் கள். "அப்பொழுது இயேசு அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்" (லூக் 24: 29) அவர்களுடைய இருதயம் அவர்க ளு க் குள்ளே கொழுந்துவிட்டு எரிந்தது. இயேசு அவர்களோடு நடந்தார். போஜனம் புசித்தார். அவர்களோடு தங்கினார்.
தேவ பிள்ளையே! கர்த்தரோடு நடக்கத் தீர்மானம் செய். உன் னைக் காணும் உலக மக்கள் "தன் நேசர் மேல் சாய்ந்து கொண் டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவன் யார்? என்று கேட்கட்டும். தேவனோடு சஞ்சரிக்கிற சுபாவம் பழைய ஏற்பாட்டுப் பரிசு த்தவா னாகிய ஏனோக்கினால் கூடுமானால் நம்மால் ஏன் முடியா து? இயேசுவோடு நடந்த ஆயிரமாயிரம் அனுபவங்கள், சா ட் சி க ள் வேதத்தில் உண்டே கர்த்தர் பட்சபாதம் உள்ளவரல்ல. அவர் என் னோடும் நடப்பார். உன்னோடும் நடப்பார். அல்லேலூயா.
தேவ பிள்ளையே! உன் எண்ணங்களும் யோசனைகளும் எப்பொ ழுதும் கர்த்தர் மேலேயே இருக்கட்டும். இருதயத்தின் ஆழம் இயேசு, இயேசு என்று ஏங்கிக்கொண்டே இருக்கட்டும். இனிவரும்
தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள் - லூக்கா 12: 31
܂ܚ 7 ܣܩ

Page 6
காலம் குறுகினதாய் இருக்கின்றபடியால் கர்த்தரோடு நடக்கத் தீர் மானம் செய். உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒழிந்து போ ம். இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே. (1 கெர்ரி 7: 29 - 31). கர்த்தருக்கும் உனக்கும் எந்தச் சிறு பிரிவி  ைன யும் வ ரா த ப டி பார்த்துக்கொள். அவ்வப்போது உன்னைத் தேவ சமூகத்தில் நிறு த்தி பரிசுத்தாவியானவரின் வெளிச்சத்தில் தேவனுக்குப் பிரியமில் லாத எல்லாவற்றையும் உன்ணைவிட்டு அப்புறப்படுத்து.
தேவனோடு சஞ்சரித்து தேவ சமூகத்தை ருசித்தவர்கள் தேவ பிரசன்னம் தங்களோடு இராவிட்டால் தண்ணீரிலிருந்து வெளியே போடப்படும் மீனைப் போல் துடிதுடித்துப் போய் வி டு வார் க ள். மீண்டும் மீனைத் தண்ணிரில் போட்டால் அது ஆனந்தமாய்த் தண் ணிருக்குள்ளேயே நீந்திச் செல்லும் அல்லவா? பின்பு ஒரு போதும் தண்ணீரைவிட்டு வெளியே வர விரும்பவே விரும்பாது.
தேவ பிள்ளையே! தேவனோடு நடக்கத் தீர்மானம் செய். அது முட்கள் உள்ள பாதையானாலும், பாடுகள் நிறைந்த பாதையா ன்ாலும் கலங்காதே. கர்த்தர் உன் கரங்களைப் பிடித்திருக்கிறார். *"முட்களுக்குள்ளே லீலி புஷ்பம் எப்படி இருக்கிறதோ, அப்படியே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்' (உன் 2:2) என்று கர்த் தர் உன்னைப் புகழுவார்.
அக்கினி ஜாவாலையானாலும் பரவாயில்லை! கர்த்தரோடு நட சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ தேவனுக்குப் பிரியமில் லா த தைச் செய்ய ராஜாவுக்குக் கீழ்ப்படிவதைப் பார் க் கி லும் கர்த்த ரோடு அக்கினி சூளையில் நடப்பதைத் தெரிந்துகொ ண் டா ர் க ள். மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் என்கிறாரே தாவீது.
கொடிய சிறைவாசமான பத்மு தீவா? கலங்காதே! ஆவி யி ல் நட. "கர்த்தருடைய நாளில் நான் ஆவிக்குள் ளா னே ன்" என்கி றார் யோவான். கர்த்தர் உனக்குப் பரலோக த ரிசனங்களைத் தந்து உன்னதங்களிலே உன்னோடு உலாவுவார்.
* ஒளியில் நட. (யோ.1:7) * வெண் வஸ்திரத்தோடு நட (வெளி. 3:7)
ஜீவ ஊற்றண்டைக்கு நட (வெளி. 7:17) உன் கரங்களைப் பிடித்து கர்த்தர் உன்னை நடத்துகிறார். உன் உள்ளம் துதியாலும் ஸ்தோத்திரத்தாலும் மகிழ்ந்து களிகூரட்டும்.
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங் களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி உன் எலும்புகளை நிண முள்ளதாக்குவார். நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய். (ஏசா. 58:11) அல் லேலூயா! X
அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள் - 1 சாமு. 7 : 3
-س- 8 مست.

கவிதைக் களம்
* யார் கிறிஸ்தவன்?
-T. ரட்னதேவி
கிறிஸ்துவை அறியாதோர்க்கு கிறிஸ்துவின் அன்பைப் பேசி "கிறிஸ்தவன் என்ற பேரைப் பெற்றிடு விரைவிலென்று கிறிஸ்துவின் நாமம் கூறி சிரசினில் கரங்கள் வைத்து கிறிஸ்துவின் ஸ்நானமீந்தால் கிறிஸ்தவ னாகுவானோ?
பிறர்பலர் புகழ-தன்னைப் பூமியில் பகட்டாய்க் காட்டி கிறிஸ்துவின் வாழ்க்கை வாழா-கிறிஸ்துவை வாயால் காட்டி கிறிஸ்துவைப் பின்னேவைத்து சுயமதை முன்னாலிட்டு புகழ்பெற விழைந்து நின்றால் கிறிஸ்தவனாகுவானோ?
ஆலயம் செல்லவேண்டின் வெண்ணிற ஆடைவேண்டும்! ஆலயம் புகுந்த பின்னே ஆசனம் முன்னே வேண்டும் ஆலயம் என்பதெங்கள் சரீரமே என்றெண்ணா (து) ஆலயம் புகுந்து வந்தால் கிறிஸ்தவ னாகுவானோ?
பலமணி நேரம்போக்கி பகட்டுடன் ஜெபிக்கவேண்டும் பக்தியின் வேஷமிட்டுப் பலரை ஏமாற்றவேண்டும் மேடையில் திறம் பேச்சாளன்; வீட்டிலோ பெருஞ்சண்டாளன் இவ்விதம் இருந்துவிட்டால் கிறிஸ்தவ னாகுவானோ' கள்ளமாய் இயங்குமிந்த கயமைகள் போக்கியிங்கு உள்ளத்தில் தூய்மைபெற்றே கிறிஸ்தவன் ஆதல் வேண்டும்
* நிம்மதி தந்தாய்
கிறேஸ்லின் கிறிஸ்டோபர்
கவலைத் தீயில் கருகிய வேளை கருணைக் கடலே கரைசேர்த்து - மெய்க் காதலும் கொண்டீர் என்னிடத்தில் காலமெ லாம் உம் பணி செய்வேன்.
இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் - 1 தெச. 5 : 7
= 9 ബ്

Page 7
நிலையற்ற வாழ்வில் நிம்மதி யற்றுநான் நீசனாய் நின்ற வேளை-எனை நிழலாய்த் தொடர்ந்து நின்னருள் ஈந்து நிழலாய் உதித்தாய் நிறைந்ததென் வாழ்க்கை.
* சிந்திப்போம்! செயற்படுவோம்!
-விக்ரோறியா ஞானராஜ்
பாவத்தி னிமித்தம் பரிசுத்தம் கெட்டு உளையமிழ் பன்றியாய் உருக்குலைந்தாலும் காயத்தின் குருதியால் கழுவியே பாவத் தளையினின் றெமக்கு மீட்பளித் தாரே!
எம்மிளம் பாவம் இலையென் போமெனில் எம்மையே ஏமாற்றி நலிந்திடு வோமே பாவத்தில் சிறியதும் பெரியதும் இல்லை ஜென்மத்தி லேநாம் பாவிக ளானோம்! கிருபையின் காலம் நிறைவுறும் விரைவில் வருகையின் குறிகள் வந்திட்ட தாலே
இதயத்தின் வாயிலைத் தட்டியே நிற்கும் இயேசுவுக் குள்ளம் திறந்திடு வோமே!
* இங்கும் அங்கும்
A, K. assiff Gaushi
பொய்கள் மலிந்த உலகமிது -இதில்
வெற்றிப் படிகள் ஏதுமில-எனினும் இயேசுவின் உலகில் தோல்வியில்லை
அவிசு வாசிகள் உலகமிது-இதில் ஏற்றத் தாழ்வு நிறையவுண்டு-எனினும் இயேசுவின் உலகில் இவைகளில்லை
தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள் - உபா. 32 : 3
- 10 -

ஆத்தும நேசரின் அங்க மகத்துவம்
1882ஆம் ஆண்டு வரையப்பட்ட "ஒரு பாவியின் தியானக் காட்சி" (12ஆம் இதழின் தொடர்ச்சி)
2. இயேசுவின் பாதம் - II
* விசுவாசி வண்ங்கும் தெய்வீக சொரூபம்
யவிரு, பேய் பிடித்த பெண்ணின் தாய், குஷ்டரோகி, லாச ருவின் சகோதரி மரியாள் இவர்கள் எல்லாருமே இயேசுவின் பாதங் களில் வீழ்ந்து அதை வணங்கும் சொரூபமாக்கி விட்டிருக் கிறார்கள். கீழ்த்திசை சாஸ்திரிகளும் அவர் பாதத்தில் விழுந்து தான் பணிந்திருக்க வேண்டும். பாவ மன்னிப்பாகிய பாக்கியத் தைப் பெற நாமும் அப்பாதங்களில் வீழ்ந்துதான் ஆக வேண்டும்:
* பாவி முகரும் புஷ்பக் கொத்து
கேடு செய்யும்படி முத்தமிட்ட யோவாபுக்கும் (2 சாமு 20:9) யூதாசுக்கும் (லூக். 22:47) கனமுள்ள கன்னம் புஷ்பம் போல் இருந்தது. மட்டற்ற உலக அன்பு கழுத்தைப் பிடித்துக் கொண்டு (லூக் 15:20) முத்தமிட ஏவுகிறது. இரட்சண்ய அன்போ இயேசு வின் பாதத்தையே புஷ்பமாய் வைத்து முத்தமிடுகிறது,
* சராசரம் அனைத்துமே அவர் பாதத்துள்
அவரே எல்லாவற்றுக்கும் மேலான ஏக சக்கராதிபதியாய் இருக்கிறார். பரலோகத்தில் உள்ளவைகளும் பூலோகத்தில் உள்ள வைகளுமாகிய காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களா னாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும் சகல
அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள் - 1 நாளா. 16 : 8
i !! -

Page 8
மும் ஆத்தும நேசரின் பாதங்களுள் இருக்கின்றன. இதன் பூரண காட்சி இரட்சகர் சீயோன்மலையில் வந்து நிற்கும் போது (வெளி. 14:1) வெளிப்படும்.
* தியானத்திற்கு
ஆத்துமாவே! கொல்கொதா மலையின் மேல் நான் பார்க்கும் பாதங்கள் பாவியாகிய எனக்குச் சமாதானத்தைக் கூறும் பொற் பாதங்களாய் விளங்குகின்றன. யவிரு தன் மகனின் மரண அவஸ்தை நீங்க வேண்டும் என்று விழுந்தான். நானோ, பாவத் தால் சாகிற நிலைமையில் இருக்கிற என் ஆத்துமாவாகிய மக னுக்கு நித்திய ஜீவன் வேண்டுமென்று விழுவேனாக ஒரு தாய் தன் மகனைப் பிடித்த பேயைத் துரத்தும்படி விழுந்தாள். நானோ, என் ஆத்துமாவில் பலவந்தமாய்க் குடி கொண்டிருக்கிற கூட்டமான லேகியோன்களை அவர் துரத்தும்படி விழுவேனாக! சமாரிய குஷ்ட ரோகி தான் பெற்ற நன்மைக்காக ஸ்தோத்திரித்து இயேசுவின் பாதத்தில் விழுந்தான். நானோ, என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, என் நோய்களையெல்லாம் குணமாக்கி, என் பிரா ணனை அழிவுக்கு விலக்கி மீட்டு என்னைக் கிருபையாலும் இரக்கங் களினாலும் முடிசூட்டும்படி இதோ! விழுகிறேன்.
இரட்சகா! உமது பாதத்தண்டை ரட்சண்யம் உண்டு. பாவத் துக்காக நான் சிந்தப் போகும் கண்ணிரே என் இரட்சகருக்கு நான் பூசப்போகும் பரிமள தைலம், என் உயர்ந்த கிரியைகள், சுய நீதி என்பவை அவர் பாதங்களைத் துடைக்ரும் கந்தைகளாகும். என் னைச் சேதப்படுத்தும் எல்லாவற்றையும் இரட்சகர் தமது பாதங் களுக்குள் வைத்து மிதித்துக் கொண்டிருக்கிறார். கல்லறையைப் பார்க்கப் போன ஸ்திரீகள் இாட்சகரின் பாதங்களைத் தழுவினது போல நானும் தழுவுகிறேன். பாவியான ஸ்திரியைப் போலவே சாஷ்டாங்கமாய் விழுந்து அவருடைய பரிசுத்த பாதங்களை முத்த மிடப் போகிறேன்.
- (தொடரும்)
கர்த்தர் நிமித்தம் யாவற்றுக்கும் கீழ்ப்படியுங்கள் - 1 பேதுரு 2 - 13
- 12 -

(ుణ6@g5
கர்த்தர் தந்த புத்தாண்டுப் பரிசு
- தமிழ்ச்செல்வன் மாசிலாமணி -
"எழுந்திருங்க a நல்ல நாளும் பெரிய நாளுமா. இன்னும் படுத்திருக்கீங்க! அன்பு மேலிட ஆதரவோடு தட்டியெழுப்பினாள் திரேஸா,
வேண்டாவெறுப்பாக எழுந்து படுக்கையில் அமர்ந்து கொண்ட கிருபைராஜ் முகத்தில் கட்டை கட்டையாக வளர்ந்திருக்கும் தாடியை பரட் பரட்டென்று சொரிந்தபடியே ஏதோ ஒரு வேத னையில் திரேஸாவை உச்சி முதல் உள்ளங்கால் வரை நோக்கி GÖTT 6T ,
அப் பார்வையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அமைதியாக நிலம் நோக்கி நின்றாள். 'ஏன் திரேஸ் அப்படிச் செய்தாய்?. எனக்கிருக்கும் இரண்டு சேட்களும் போதாதா?. எனக்கெதற்கு புது சேட்? வெளியில் போகும்போது போட்டுக் கொள்ளவாவது உனக்கு ஒரு சோடி செருப்பு இல்லையே. அதை வாங்காம. வார்த்தையை இறப்பராய் இழுத்தான், "பிறகு எடுப்பம். கர்த்தர் தருவார்." என்ற போதே அவளது கண்கள் குளமாக அதை அவன் காணுமுன்னமே முந்தானையால் துடைத் துக் கொண்டாள் இருக்கின்ற இரண்டு சேர்ட்டிலும் ஆங்காங்கே ஒட்டைகள் என்பதை அவள் அறிவாள். இந்த நிலையிலும் கணவன் தன் மீது கொண்டுள்ள அன்பை எண்ணிப் பூரித்துப்
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் - 1 தெச. 5 : 18

Page 9
போனாள். அதேவேளை தனக்கொரு நல்ல சாரியோ, ஒரு சோடி செருப்போ இல்லாததால் ஆராதனைக்குக் கூட போகாமல் அவள் ஊனமாக அழுவதை அவளால் உணர முடிந்தது. ஆயினும் என்ன செய்வது.? வறுமைதான் அவர்களைக் கசக்கிப் பிழிகின்றதே.
நல்ல உத்தியோகத்தில், கெளரவத்தோடு வாழ்ந்தவன். அலு வலகத்தில் மேலதிகாரியின் திருட்டுக்கு ஒத்துழைக்காமல் போகவே அவர் செய்த சதியால் வேலையும் பறிபோய்விட்டது. உண்மை ஒடி ஒளிந்து கொள்ள - நேர்மையின் எலும்புகள் முறிய - கர்த் தரின் மீதுள்ள விசுவாசத்தில் சிலுவையைச் சுமந்து கொண்டான். பின்பு படாத பாடு பட்டதில் ஓர் அரிசி ஆலையில் ஆயிரத்து இரு நூறு சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. அந்தத் தொகையில் நான்கு ஜீவன்களைக் கொண்ட குடும்பத்தை எவ்வாறுதான் ஒட்டுவது? ஒரே றோ லிங்தான்.
புத்தாண்டுச் செலவுகளுக்காக முதலாளியிடம் கெஞ்சிக் கூத் தாடி வாங்கிய ஆயிரம் மனைவியின் கரங்களில் கொடுக்கப்பட்ட போதுதான் அவள் அவனுக்கு ஒரு சேர்ட்டையும். ஆணும். பெண்ணுமான இரு பிள்ளைகளுக்கும் ஏதோ புத்தாடை என்ற பெயரில் உடைகள். எல்லாமே மிகக் குறைந்த விலையில் வாங் கியவை. ஆயினும், அவளுக்கென்று எதையும் வாங்கவில்லை. பணமும் வேண்டுமே. அவன் தந்ததில் இருநூறை மிச்சம் பிடித் திருந்தாள் புத்தாண்டுச் செலவுகளுக்காக:
*" என்னங்க. எழுந்திருங்க. சின்ன பிள்ளைப்போல."
இன்னமும் படுக்கையிலே சாய்ந்துகொண்டு கண்களை அயர விட்டபடி பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன் கண்களைத் திறந்தபோது. புன்னகைத் தபடியே அவனது தலையைக் கோதி விட்டால் திரேஸா, துன்பத்திலும் வறுமையிலும் இவளால் எப்படித் தான் சிரிக்க முடிகிறதோ? அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பும் அவளது கணிரென்ற குரலுமல்லோ அன்று அவனைக் கவர்ந்தவை.
ஆமாம். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆலய பாடகர் குழுவில் அவனும் அவளும் இணைந்து எக்காள ஒசையாய் இசை பாடி இறை வனை வாழ்த்திய போதுதான் அவளின் போக்கு அவனது இத யத்தை ஈர்த்தது. அன்பில் ஆரம்பம். பக்தி, பாடல். பழக்க வழக்கம், இவற்றில் தொடர்பு. காதல். அது திருமணத்தில் சங் கமம். சங்கமத்திற்கு முன்னர் சில பங்கங்கள் ஏற்படத்தான் செய்
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும்
விட்டு விலகுங்கள் - 2 தெச, 5 : 22
حسسة 4 - مسمسة .

தன. அதாவது கிருபைராஜின் வீட்டார் ஏழ்மையான திரேஸாவை ஏற்க விரும்பவில்லை. சபைக் குருவானவரின் பலநாட் பிரயாசையே அவர்களை இணைத்தது எனலாம். வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்ட போதிலும் நாளடைவில் அவனுடனான உறவுகளை அவர்கள் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்கள்.
எல்லாமே இறைவனின் திட்டம் என்ற நம்பிக்கையில் இறை விசுவாசத்துடன் வாழ்ந்த அவர்களுக்கு ஆண் ஒன்று. பெண் ஒன்று இரண்டே குழந்தைகள். இறை விசுவாசத்திலும் பணிவு - கீழ்ப் படிதலிலும் முறையாய்ப் பிள்ளைகளை வளர்த்தாள் திரேஸ், அவளை மனைவியாகப் பெற்றதில் பெரும் மேன்மை கொண் டான் கிருபைராஜ். கணவனின் கருத்தறிந்து, போலி வாழ்வை வெறுத்து, கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வதில் திரேஸ் பெருமை கொண்டாள்.
பொதுப்பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவள் திரு மணத்திற்குப் பின் வேத வாசிப்பு, ஜெபம், தியானம் என்று தன்னை மாற்றிக் கொண்டாள். கிருபைராஜ"ம் அப்படியே தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழத் தலைப்பட்டான். ஆயினும் அவர்களுக்குச் சோதனை மேல் சோதனை ஏற்படத்தான் செய்தது. அதற்காக அவர்கள் துவண்டு போய் விடவில்லை. எல் லாமே இறைவனின் சித்தம் என்று இறைநம்பிக்கையில் திளைத்த வர்களாய் இருவரும் வாழ்ந்தனர்.
இப்பழக்கமே அன்று மேலதிகாரியுடன் இணைந்து அப்பாவச் செயலைச் செய்வதற்கு அவனை அனுமதிக்கவில்லை. அத் திருட்டுக்கு ஒத்துழைத்து நிறையச் சம்பாதிக்கும் வாய்ப்பிருந்தும் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரும் விதத்தில் அவன் வேலையை இழக்க நேரிட்டது. அதைத் திரேஸாவும் பெருமையுடனே ஏற்றுக்கொள்ள வறுமையிலும் செம்மையாக வாழ அது சக்தியைக் கொடுத்ததென் றால் மிகையாகாது.
கிருபைராஜ் எழுந்து படுக்கையிலிருந்து இறங்கி முழந் தாளிட்டு ஜெபித்தான். அதற்குள் திரேஸா சமயலறைக்குச் சென்று ஒரு கையில் தேநீரும் மறுகையில் வாய் கொப்பளிக்கத் தண்ணிரும் கொண்டு வந்தாள். தண்ணிரை வாயில் ஊற்றியவண்ணமே சமய லறையை எட்டிப் பார்த்தான். நள்ளிரவு ஆராதனைக்குச் சென்று வந்திருந்த இரு பிள்ளைகளும் புத்தாண்டுக் குதூகலத்தில் இருந் தார்கள். வாயைக் கொப்பளித்தவன் தேநீரைப் பருகியவாறே கடிகாரத்தைப் பார்த்தான்.
'எட்டரை மணிக்கு ஆராதனைக்குப் போய். நம்ம துன்பம் எல்லாவற்றையும் கர்த்தருக்குக் காணிக்கையாக்கி வேண்டுங்க.."
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் - பிலிப், 4 : 4
ത്ത 15 അ

Page 10
என்றாள் திரேஸா. 'அப்போ நீ. ** தேநீர்க் கோப்பையை மேசை மீது வைத்தவாறே கேட்டான் கிருபைராஜ். 'பரவாயில் வீங்க. நீங்க மட்டும் போய் வாங்க. கர்த்தர் இப்படியேவா நம் மளை வச்சிடப் போறாரு?ஆகாயத்துப் பட்சிகளையும், காட்டுப் புஷ்பங்களையும் கனிவோடு காக்கும் கர்த்தர் நம்மைக் கைவிடவே மாட்டார். அதனாலே கவலைப்படாம போய் வாங்க . “ என்று அவள் கூறியபோது கூட அவளது முகத்தில் அதே புன்னகை.
கனத்த உள்ளத்தோடு நடந்தான் கிருபைராஜ். வழியில் அவனது பெற்றோரது கப்பல் போன்ற வீடு, உற்றார் உறவினரு டைய வருகையினாலும். புத்தாண்டு ஜோடனைகளாலும் களை கட்டிக் குதூகலிக்கின்றது அம மாளிகை. இவனது பெற்றோரோ உற்றார் உறவினரோ இவனைச் சட்டை செய்வதில்லை. ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்ததற்குத் தண்டனை.
ஆராதனையில் நொறுங்கிய உள்ளத்தினைக் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து விசேஷமாக வேண்டிக் கொண்டான். அப்போதே கர்த்தருடைய அருள் கிடைத்துவிட்ட உணர்வு. ஆராதனை முடிய சபையோரிடமும், நண்பர்களிடமும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு நேரே வீட்டுக்கு வந்தான். அங்கே அவனுக்கு ஆச்சரிய மொன்று காத்திருந்தது. -
அவன் பணியாற்றிய அலுவலகத்தின் பிரதம லிகிதர் சிவ நாயகம் கதிரையில் இருந்தபடி அவனது பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். கிருபைராஜைக் கண்டதுமே அவர் துள்ளி வந்து அவனுக்கு வாழ்த்துக் கூறி **கிருபா! நீ அதிஷ்டசாலியப்பா. உனக்குப் புத்தாண்டுப் பரிசு கொண்டு வந்திருக்கிறேன் பார்.' என்றார். அவரது கரங்களிலே அவனது கண்கள் எதையோ தேடிய போது ** கிருபா. நாளைய தபாலைப் பார். உன்னுடைய வேலை மீண்டும் உனக்கு வழங்கப்பட்டுவிட்டது. கிருபைராஜி னால் தன் கண்களை மட்டுமல்ல; தன் காதுகளையுமே நம்ப முடியவில்லை. அங்கு தேநீரோடு வந்த திரேஸாவுக்கும் அதிர்ச்சி ; யாகவே இருந்தது. இருவரும் ஒரே நேரத்தில் 'ஐயா. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. என்றார்கள். ஆம் , திருட்டுத்தனம் செய்துகொண்டு வந்த நம்ம மனேஜர் வசமா மாட்டிக்கிட்டு பத்து வருஷம் கம்பி எண்ணப் போயிட்டாரு. விசாரணையில் உங் களுக்கும் அந்தத் திருட்டுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்று முடிவாகிடுச்சி. அதனாலே உங்களுக்கு இரண்டு வருட சம்பளத் தோடே வேலை கொடுக்கும்படி உத்தரவாகிடுச்சி: ஜனவரி முதலாம் தேதி தொடக்கம் உங்களுக்கு வேலை போட்டு கடிதம் டைப் பண்ணிட்டேன். எப்படி இந்தப் புத்தாண்டுப் பரிசு?*
"ஆண்டவரே! என் இயேசுவே! உமக்கு நன்றி ஐயா. ' கிருபைராஜூம் திரேஸும் அந்த இடத்திலேயே முழந்தாளிட் பார்கள். கர்த்தர் தந்த புத்தாண்டுப் பரிசுக்காக கர்த்தரைத் துதித்தார்கள்.
எல்லரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள் - 1 தெச, 5 : 14
نسیم 16 .سسے

வேதாகமப் புதிர் - இல. 007
డి--
大
★
1
★
சகல வினாக்களுக்கும் சரியான விடை எழுதியவர்களுள் தேர்ந் தெடுக்கப்படும் முதல் மூவருக்கும் 'பொக்கட் சைஸ் புதிய ஏற்பாடு வழங்கப்படும். ஏனையோரின் பெயர்கள் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும். விடைகள் தபால் அட்டையில் எழுதப்பட்டு உங்கள் விலாசத் துடன் ஆசிரியருக்கு அனுப்பப்படல் வேண்டும். முடிவு திகதி 25.02.94.
விடைகளுடன் கட்டாயமாக உங்களுடைய தொடர்பு அங் கத்துவ எண் குறிக்கப்படல் வேண்டும். அங்கத்துவ எண் இல்லாத விடைகள் பரிசீலிக்கப்படமாட்டா. - பின்வரும் கேள்விகள் யாரிடம் கேட்கப்பட்டவை? நீ என்னை நேசிக்கிறாயா?
. நான் பரிதபியாமல் இருப்பேனோ ?
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்? நீ எங்கே இருக்கிறாய்?
நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?
உன் சகோதரன் எங்கே? நீ எங்கேயிருந்து வருகிறாய்? சர்வ வல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்
கிறவன் யார்? . நீ ஏன் அழுகிறாய்? 10.
நீ என்னத்தைக் காண்கிறாய்?
நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? 12. 13. 14.
15.
உன் கையில் இருக்கிறது என்ன? இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ? மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? புதிர் இல. 006 சரியான விடை அக்டோபர் - நவம்பருக்காக வெளியிடப்பட்ட 12ஆவது இதழின் பின்புற அட்டையில் 25.10.93 என்பதற்குப் பதிலாக 25.09.93 என அச்சிடப்பட்டுள்ளது. இதற்குரிய சரியான விடையை எவருமே கண்டு பிடிக்க வில்லை.
காலத்தைப் பிரயோசனப்படுத்திக் கொள்ளுங்கள் - கொலோ, 4 : 5

Page 11
ரசித்ததும் ருசித்ததும்
* தேனி
* சிறந்த தேவ ஊழியன்(12, 13ஆம் இதழ்களின் தொடர்)
3. பவுலின் ஜீவியம். பாடுகள் உள்ள ஜீவியம்
"யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடு நான் கர்த்தரைச் சேவித்தேன்" (அப். 20 : 19) என்கிறார். இன்னோர் இடத்தில் "நான் அதிகமாய் அடிபட்டவன்; அதிகமாய்க் காவலில் வைக்கப்பட்டவன். அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்று குறைய நாற்பது அடிகளாக ஐம்பது தரம் அடிபட்டேன். மூன்று தரம் மிலாறுகளால் அடிபட்டேன். ஒரு தரம் கல்லெறியுண்டேன். மூன்று தரம் கப்பற் சேதத்தில் இருந்தேன்" (2 கொரி. 11 : 23-27) என்பதாக தாம்பட்ட பாடுகளையெல்லாம் விபரிக்கிறார். கிறிஸ்துவுக்கென்று அவர் செய்த வேலையில் சரீரப் பிரகாரமாக அவருக்குச் சுகம் கிடைக்க வில்லை. சங்கடமும், துன்பமும், கஷ்டமும், அடியுமே சரீரத்தில் அவருக்குக் கிடைத்த லாபம். என்றாலும் இவைகளிலே சந்தோஷப் பட்டார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இவைகளால் அவருக்கு வந்தபடியால் இவைகளிலேயே பிரியப்பட்டார்.
"நான் பலவீனமாய் இருக்கும்போதே பலமுள்ளவனாய் இருக் கிறேன். ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங் களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்' (2 கொரி. 12 : 10) என்றார். துன்பங்கள் தேவனுடைய கோபத்தினால் நமக்கு வருகின்றன என்று ஜனங்கள் தப்பிதமாய் எண்ணுகிறார்கள் வீட்டில் வியாதி, துன்பம், வெளியில் சங்கடம், வருத்தம் நேரிடும் போது ‘இதெல்லாம் நம்முடைய பாவந்தான்" எனக் கூறுகிறார்கள் ஆனால், "துக்கங்களும் துன்பங்களும் எப்பொழுதும் தண்டனை யாக அல்ல; ஆசீர்வாதங்களாகவும் நமக்கு வருகின்றன" என்று காண்கிறோம். சில வேளைகளில் நமது மதியீனத்தின் பயனாய் சில வருத்தங்கள் நேரிடலாம். இன்னும் சில வேளைகளில் சில
உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் - ஆகாய் 1 : 5
- 18 -

பாவங்களின் இயற்கையான பலன்களாகவும் வியாதிகள் வரலாம்: ஆனால், "துன்பங்கள் நமது பாவங்களினிமித்தம் தேவன் அனுப்பும் தண்டனை' என்று எண்ணுவதற்கு யாதொரு நியாயமும் இல்லை. யோபின் புத்தகம் போதிப்பது இதுவே. பேதுருவின் நிருபங்களிலும் இதே சத்தியம் காட்டப்படுகிறது. 'அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப்பார்க்கிலும் அதிக விலை யேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு இயேசுகிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும். "" (1 பேதுரு, 1 : 7)
துன்பம் நம்மைச் சுத்திகரிக்கும் அக்கினி, தேவனுக்குச் சமீபமாய் நம்மை இழுக்கும் கருவி. 'தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்திற் காகவே நம்மைச் சிட்சிக்கிறார். "" (எபி. 12 : 10)
"பரிசுத்தத்திற்காக நாம் தேவனை நோக்கி ஜெபிக்கிறோம். ஆனால், பரிசுத்தத்தை அவர் நமக்கு அருளத்தக்கதாக நம்மை ஆயத்தப்படுத்தும்படி துன்பங்கள் வர அவர் இடம் கொடுக்கும் போது "இது வேண்டாம்" என்று சொல்லி ஓடிப்போய் விடுகி றோம்’ என்பதாக "ஜெனரல் கார்டன்" என்பவர் கூறினார் அது
முற்றிலும் உண்மையே.
இயேசு கிறிஸ்துவும் உபத்திரவங்களினாலே பூரணப்படுத்தப் பட்டார். (எபி. 2 : 10) நமக்கும் அதுவே வழி. ஆகையால் துன்பங் களும் பாடுகளும் நமக்கு நேரிடும்போது "இது நமது விதி வழி' என்று அதைரியத்துக்கும் சோர்வுக்கும் இடம் கொடாமல், "இதன் மூலமாக தேவன் எனக்கு அருளும்படி சித்தங் கொண்டிருக்கிற ஆசீர்வாதம் எது" என்று கண்டு பிடிக்கும்படி பார்ப்போமாக. பவுலைப்போல சங்கடங்கள் உபத்திரவங்களின் நடுவிலிருந்தாலும் சந்தோஷத்தோடு கர்த்தரைச் சேவிப்போமாக.
தேவ ஊழியனே! உன்னுடைய ஜீவியம் பவுலின் மாதிரிப்படி இருக்கிறதா? குற்றமற்ற பரிசுத்த ஜீவியமா? மனத்தாழ்மையுள்ள ஜீவியமா? பாடுகளைச் சகிக்கும் ஜீவியமா? தேவ சமுகத்தில்
ஆராய்ந்து பாரும்.
1992 செப்டெம்பர் 'தூதன்' சஞ்சிகையிலிருந்து.
- முற்றும் -
நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள் - 1 தீமோ. 3 13
- 19 -

Page 12
இயேசுவின் ஜெப ஜீவியத்தில்.
大
- புளோரன்ஸ் ஜேசன் -
ஜெபித்த நேரம்.
** அதிகாலையில் இருட்டோடே எழுந்து வனாந்தரமான ஓர் இடத்துக்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார் " -(மாற்.1:35)
இச்சம்பவம் நடப்பதற்கு முந்தின நாள் ஒய்வு நாள். அன்று கப்பர் நகூமிலுள்ள ஆலயத்திலே போதகம் பண்ணினார். அங்கே அசுத்த ஆவியுள்ளவனைச் சுகப்படுத்தினார். சாயங் காலத்தில் அநேக அசுத்த ஆவிகளைத் துரத்தி ஏராளமான பிணிகளையும் சுகப்படுத்தினார்.
ஆயினும் அதிகாலையில் இருட்டோடே வனாந்தரமான இடத்திற்குப் போய் ஜெபித்தார். எமக்கென்றால் தடித்த கம்பளியும் மேலதிக ஓய்வு வேளையும் தான் தேவைப் பட்டிருக்கும்.
ஜெபித்த இடங்கள்.
மூன்றரை வருட ஊழிய பயணத்தில் நிரந்தர தரிப்பிடம் ஒன்றை அவர் கொண்டிருக்கவில்லை. ஒலிவமலைச் சாரலே அதி கமாக அவர் ஜெபித்த இடம். 'வனாந்தரத்தில் - தனித்துப் போய் - ஜெபித்துக் கொண்டிருந்தார்' (லூக், 5 - 16). ஆனால் எம்மை அவ்வாறு கஷ்டப்படுத்த அவர் விரும்பவில்லை.
நீயோ, ஜெபம் பண்ணும் போது உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு' (மத் 6:6) என்றார்.
அதையாவது ஒழுங்காகச் செய்யும் வழக்கம் எம்மிடம் உண்டா?
எப்பொழுதும் ஜெபிக்க ஆயத்தம்.
இடைவிடாமல் ஜெபிக்கும் உண்ர்வுள்ள ஆவியோடு இருந்தவர் இயேசு. எழுபது பேரை தமக்குமுன் செல்ல அவர் நியமித்த போது அவர்கள் சந்தோஷமான செய்திகளுடன் திரும்பிவந்தார்
மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள் - லூக், 8 ;s
حسے 20 جیس۔

கள். அவ்வேளையில் தனது துதியை ஏறெடுத்தார். ஆவியிலே களி கூர்த்தார். (லூக், 10:21)
வெற்றிக் களிப்பில் ஆழ்ந்திருக்கும் போது சில வேளைகளில் நாம் ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து போகி றோம் இல்லையா?
* ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்னும் ஜெபம்.
பரிசுத்த ஆவி தம்மேல் இறங்குமுன் ஜெபித்தார். (லூக். 3:21) பன்னிருவரைத் தெரிந்தெடுப்பதற்கு முந்திய நாளிலே இரவு முழுவதும் ஜெபித்தார். (லூக் 6:12). கெத்செமனேயில் தான் கைது செய்யப்படுமுன் வியாகுலத்தோாட ஜெபித்தார் (லூக். 9:29).
大 பிறருக்காக ஜெபம்.
பேதுருவுக்காக ஜெபித்தார். "சீமோனே! சீமோனே! இதோ கோதுமையைச் சுளகினாலே புடைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ, உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்" (லூக், 22:31-32). தற்போதும் நம் ஒவ்வொருவருக்காகவும் பரிந்து மன்றாடுகின்றார்.
* முழங்காற்படியிட்டு ஜெபம்.
கெத் செமனே தோட்டத்தில், முழங்காற்படியிட்டு ஜெபித்தது மன்றி தன்னோடிருந்தவர்களையும் "விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்" எனக்கூறி ஜெபத்தின் வல்லமையை உறுதிப் படுத்தினார். அன்றைய ஜெபம் அவருடைய எதிரிகளின் முன் முகங்கொடுக்கும் வல்லமையை அவருக்கு அளித்தது.
* மன்னிக்கும் ஜெபம்.
போர்ச் சேவகர் அவரைச் சிலுவையில் அறையும் போது "பிதாவே! இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே!" (லூக், 23:34) என ஜெபித்தார். மட்டுமல்ல; ஜெபிக்கவும் எமக்குக் கற்றுத்
தந்தார். (மத் 6:9-12)
* ஆண்டவரே, ஜெபம்பண்ண எங்களுக்குப்
போதிக்க வேண்டும்” (லூக், 11 : 1) ★
பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் - மத். 6 : 20
حض-21 --۔

Page 13
விவாத அரங்கு
யார் குற்றவாளி ?
ஏவாளே குற்றவாளி !
ஏவாளே குற்றவாளி 1 ஏ. பி. வி. கோமஸ் &
புளோரன்ஸ் ஜேசன்
* ஆதாம்தான் குற்றவாளி - ரூபராணி ஜோசப்
* இல்லவே இல்லை . ஏவாளே குற்றவாளி
1 ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்தீரீயானவளே வஞ்சிக் கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்" (1 தீமோ 2:14) என்கிறார் பவுலடியார். இதைவிட வேறு சாட்சி தேவையா? ஏவாள் சிறு குழந்தையல்ல; உயிரற்ற பொம்மையுமல்ல. கடவுளால் படைக்கப் பட்ட ஆறறிவு படைத்த பெண்.
சர்ப்பம் அவளிடம் கனியைப் பற்றிக் கூறியதும் பறித்ததும் அவளே. புசித்தவளும் அவளே, புரூஷனுக்குக் கொடுத்தவளும் அவளேதான். அப்படியானால் யார் குற்றவாளி? −
ஏவாள் குற்றவாளியாய் இல்லாதிருந்தால் தேவ சாபத்தைப்
பெற்றிருக்கவும் மாட்டாள். ஏதேனிலிருந்து துரத்தப்பட்டிருக்கவும் மாட்டாள்.
- Dr. D. Devaraj, Katugastotta
2. பரிசுத்த பவுலடியார் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபம் ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள் என்றும் அவளே மீறுதலுக்கு உட்பட் டாள் எனவும் தெளிவாகக் கூறுவதால் ஏவாளே குற்றவாளி என்பது தெட்டத் தெளிவாகிறது.
- A. வேதபாலகன் - மட்டக்களப்பு
எல்லாரையும் கனம் பண்ணுங்கள் - 1 பேதுரு 2 : 17
سس 22 -س

* ஆதாம் குற்றவாளியல்ல
3. "மனைவியானவள் பெலவீன பாண்டம் (1 பேதுரு 3.7) என்பதாகப் பவுலடியார் குறிப்பிடுகின்றார். ஏவாள் தவறு செய்து விட்டாள். ஆனால் அவள் தன்னிடம் தரும் அக்கணியைத் தான் புசிக்கலாமா? என்று சிந்திக்கும் சிந்தனா சக்தி ஆதாமுக்கு இருக்க வில்லை. அதாவது நன்மை தீமை பற்றி அறியும் ஆற்றல் அவனுக்கு இல்லை. தன்னிடம் பாசத்தோடு பழகும் மனைவியின் பேச்சை மறுக்கும் மனோதிடமும் அவனுக்கு இல்லை. அவன் பச்சைக் குழந்தையல்ல; எனினும் கனியைப் புசித்த பின்னரே கண் திறக்கப் பட்டு மனிதனாகிறான் (ஆதி. 3:22)
ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட சாபத்திலிருந்து இன்று ஆண் வர்க்கம் மீட்புப் பெற்று 'எயர் கண்டிஷன்' அறைகளில் இருந்து பணிபுரியும் அதேவேளை ஏவாளுக்கிட்ட சாபம் இன்றுவரை பெண்ணினத்தைத் தொடர்கிறதே .
ஆதாமுக்கே அதி பெரிய தண்டனை அதாவது பிறந்த மண்ணை விட்டே துரத்தப்பட்டான் என்றார்கள். கனியைப் புசித்த ஆதாம் நன்மை தீமை அறிந்தவனாகி மனிதனாக மாறியதால் தேவன் துரத்தியிராவிட்டாலும் அவன் திரை கடலோடியும் திரவியம் தேட முற்பட்டிருப்பான். எனவே ஆதாம் குற்றவாளி அல்ல. அப்படி யானால். யார் குற்றவாளி எனக் கூறவும் வேண்டுமா?
-- T. தேவ அருள். கல்முனை.
- x .
* “மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார், ஆட் டுக் குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்’ கஏசா,4011
* ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்து கொண்டுபோவது போல .நீங்கள் நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண் டீர்களே! -sell irr. I: 31
* 'கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி தன் செட்டைகளை விரித்து அவைகளை எடுத்து தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகிறது போல கர்த்தர் ஒருவரே அவர்களை வழி நடத்தினார். —gp LurT. 32: II, I2
எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் - 1 பேதுரு 2 : 18
- 23 -

Page 14
காலடிச் சுவடுகள் - ஒரு கனவு
大 அந்தக் கனவில்.
(வழி நெடுக இரு சோடிக் காலடிச் சுவடுகள் பதிந்திருந்த ஒரு மணற் பரப்பிலே திடீரென ஒரு சோடிப் பாதப் பதிவே காணப்பட் டது. அது எப்படி? படித்துப் பாருங்கள்)
கடவுளோடு கடற்கரையில் நடப்பது போல் ஒரு கனவு. எனது வாழ்வின் செயற்பாடுகள் வானத்தில் பிரதிபலித்தன. காணப்பட்ட ஒவ்வொரு காட்சிகளிலும் இரு சோடிக் காலடிச் சுவடுகள் அம் மணற் பரப்பில் இருப்பதை நான் கவனித்தேன். அவற்றுள் ஒன்று எனக்குரியது. மற்றையது கடவுளுடையது.
என் வாழ்வின் இறுதி அங்கம் எனக்கு முன்னர் பிரதிபலித்த வேளை மணலின்மீது தொடர்ந்து பதிந்திருந்த அக் காலடிச் சுவடு களைக் கவனித்தேன்.
அப்பொழுதுதான். சில சந்தர்ப்பங்களில் என் வாழ்க்கைப் பாதையில் ஒரு சோடிப் பாதப் பதிவு மட்டுமே காணப்பட்டதை அவதானித்தேன். அதுவும் என் ஜீவியத்தில் சோதனையும் வேத னையும் மிகுந்த கால கட்டங்களிலேயே அவ்வாறு நடந்திருந் ததை அவதானித்தேன். இது என்னை வெகுவாக வேதனைப்படுத் தியமையால் கடவுளிடம் இது பற்றிக் கேட்டேன்.
“கர்த்தாவே, உம்மைப் பின்பற்றிவர நான் முடிவு செய்தபோது காலமெல்லாம் என்னோடு நடப்பதாக வாக்களித்தீரே! எனினும் என் வாழ்வின் இக்கட்டான வேளைகளில் ஒரு சோடிப் பாதப் பதி வையே என்னால் காண முடிகின்றது. உமது பிரசன்னம் எனக்கு அதிகமாகத் தேவைப்பட்ட வேளைகளில் நீர் ஏன் என்னைத் தனியே விட்டீர்? என்பது எனக்கு விளங்கவில்லையே?
கர்த்தர் பதிலளித்தார்,
"என் அருமைப் பிள்ளையே! நீ இப்பொழுது காணும் அப் பாதங்கள் உன்னுடையவைகளல்ல. அவைகள் என்னுடைய பாதங் களே. உன் வாழ்க்கையிலே நீ மிகவும் துன்பத்தை அனுபவித்து நடந்து செல்ல முடியாதபடி சோர்ந்துபோன வேளையெல்லாம் நானே உன்னைத் தூக்கிச் சுமந்து வந்தேன் என்பதைத் தெரிந்து கொள்." X
வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள் - எபே. 5 : 8
a 24 at

கொக்ரக்கோ!
அருள்திரு. ராஜ்பகதூர் அடிகளார்
O இவ்வாக்கத்தை
எமது சஞ்சிகையில் வெளியிட அனுமதித்த ஆக்கியோனுக்கு தொடர்பின் நன்றிகள்.
அத்தியாயம் - 6 விமானம் புறப்பட்டது
"உண்மைதான் கனகம், தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்தான். ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில் நாம் பயப்படத் தேவையில்லை, இங்கே பிர சங்கத்தைக் கேட்கிறவர்களின் எண்ணிக்கையைவிட பிரசங்கம் பண்ணுகிறவர்களின் எண்ணிக்கைதான் வேகமாகப் பெருகிக்கொண்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் பிரசங்கியாரே?? என வேத மாணிக்கம் வெகு கரிசனையாய்க் கேட்டான்.
சட்டென்று பதில் கொடுத்தார் கொக்ரக்கோ. "நம்முடைய பிரசங்கிமார்கள் எல்லாம் றொபட் புரூஸ், கஜனி முகம்மது போன்றவர்கள். கிறிஸ்தவ வீடுகளையும், கிறிஸ்தவ ஆலயங்களை யும் விடாப்பிடியாகப் படையெடுத்துத் தாக்கி நொறுக்கிக் கொண்டேயிருப்பார்கள். கிறிஸ்துவைப் பற்றிக் கொஞ்சமும் அறி. யாத மற்ற மக்களிடம் போகவே மாட்டார்கள்!"
இந்த நேரத்தில் தபால்காரர் "டாக்டர் கொக்ரக்கோ!' என்று சத்தமாய் விலாசத்தை வாசித்தபடி வேதமாணிக்கத்தின் கையில் நீளக் கவர் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றார். கவரை உடைத்துக் கடிதத்தைக் கொக்ரக்கோவின் பார்வைக்கு விரித்து வைத்தான் வேதமாணிக்கம். கடிதத்தோடு இணைக்கப்பட்டிருந்த
கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள் - யோ, 2 : 23
-- . 225 سے

Page 15
,செக் கில் இடப்பட்டிருந்த தொகை எவ்வளவு என்பதை அறியத் துடித்துக் கொண்டிருந்தாள் கனகம்.
கொக்ரக்கோவின் கண்கள் படபடத்தன. "வேதமாணிக்கம், என்ன சோதனை இது! "பிரசங்கமே செய்வதில்லை" என நான் தீர்மானம் பண்ணியிருக்கிற இந்தச் சமயத்தில் "அமெரிக்காவில் பிரசங்கம் செய்ய வரவேண்டும்" என அமெரிக்கத் திருச்சபைகளின் ஐக்கியத்திலிருந்து ஒரு பெரிய அழைப்பும், அதைவிடப் பெரிய "செக்கும் வந்திருக்கிறதே! இயேசுவே! இது உமது சித்தமா?" என்றார் கொக்ரக்கோ.
வேதமாணிக்கம் பதிலேதும் பேசு முன்னரே கனகம் பேச ஆரம்பித்தாள். "கொக்ரக்கோ ஐயா, இது கடவுளின் சித்தமே தான். இந்தியாவிலேதானே பிரசங்கம் செய்வதில்லை என்று நினைச் சீங்க. அமெரிக்காவுக்குப் போய் பிரசங்கம் செய்வதில் தப்Hே இல்லை. அமெரிக்காவிலே மக்கள் அக்கிரமத்திலும், பாவத்திலும் மரிச்சுக்கிட்டு இருக்காங்களாம்."
"மரிக்கட்டுமே! அமெரிக்காவில் பெரிய பெரிய பிரசங்கிமார்கள் உண்டே அவர்களுமா மரித்துவிட்டார்கள் ? அப்படியே மரித் தாலும், மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்" நான் போகமாட்டேன். நான் இயேசுவைப் பற்றிய தியானத்தி லேயே இருக்கப் போகிறேன்."
"கொக்ரக்கோவின் இப் பிடிவாதத்திற்கு மருந்தே இல்லையோ' என திகைத்தார்கள் வேதமாணிக்கமும் கனகமும். வேதமாணிக்கம் மெதுவாகப் பேச ஆரம்பித்தான், 'ஐயாவின் பேச்சைப் பார்த் தால் பேதுருவின் பேச்சைப்போல் இருக்கிறது. தியானத்தில் மூழ்கி மறுரூப மலை அனுபவித்திலேயே இருந்துவிடப் போகிறீர்களா? அங்கே அமெரிக்காவில் ஆடுகள் அனைத்தும் சரியான மேய்ப்பர்கள் இல்லாமல் மேய்ச்சல் கிடைக்காமல் தொய்ந்து போகின்றன" என்றான்.
அடுத்த இரு வாரங்களுக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக் கப் பட்டணங்களிலிருந்து கடிதங்களும், காசோலைகளும் வந்து குவியவே என்ன செய்வதென்றறியாது திகைத்தார் கொக்ரக்கோ. இறுதியாக ஏப்றில் முதலாம் தேதி டாக்டர் கொக்ரக்கோ புறப் படுவதென தீர்மானமாகிவிட்டது. விமானப் பயணத்திற்கான ஏற் பாடுகள் விரைவாகப் பூர்த்தியாகின.
நீங்கள் அன்பிலே நடந்து கொள்ளுங்கள் - எபே. 5 : 2
-س * 2,63 -

முதல் தேதி காலை ஏழு மணி. குப்பாஞ்சேரி மக்கள் "வழி யனுப்பு விழா"வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் முன்னால் அலங்காரப் பந்தல் ஒன்று அமைத்து அங்கே கொக்ரக்கோவின் சேவைகளைப் பாராட்டிப் பேசினார்கள். சாமியாடி சாத்தப்பன் கதர்த்துண்டைப் போர்த்தியபடி எழுந்து நின்று ஒரு நிமிஷம் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம் பித்தார். "டாக்டர் கொக்ரக்கோவை நம்ப ஊர் வாசியாகக் கொண்டது நம்பளோட பாக்கியமே. இயேசுநாதரோட புகழை நம்ப தமிழ் நாட்டிலே பரப்பி மகத்தான சேவை செஞ்சி வந்த இவரு இப்போ அமெரிக்கா போறார் என்பதை நெனக்கிறப்போ சந்தோஷப்படாம இருக்க முடியல. காந்தீயவாதியான நான் அவ ராலேதான் கிறிஸ்டியவாதியானேன் என்று இச்சந்தர்ப்பத்தில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளுகிறேன்.""
அடுத்து, தலையில் குல்லாவுடன் கறுப்புக்கண்ணாடி அணிந்து கண்ட்ரக்டர் கண்ணாயிரம் பேச எழுந்தார். " "கூட்டத்தின் ஒளி விளக்கென, குப்பாஞ்சேரியின் குலவிளக்கென, நாட்டின் நல் விளக் கென, அமர்ந்திருக்கும் டாக்டர் கொக்ரக்கோ அவர்களே! குப்பாஞ் சேரி வாசிகளே!.
கைதட்டலும் விசிலும் வானைப் பிளந்தன.
''. . . . . . அறிஞர் கொக்ரக்கோவின் பிரிவு தற்காலிகமானாலும், ஏனோ என் உள்ளம் துக்கத்தால் நிறைந்து, வெட்கத்தால் துவண்டு, விசனத்தால் வாடி வதங்குகிறது. இது ஒரு புறமிருக்க நான் டாக் டர் கொக்ரக்கோவைக் கேட்டுக்கொள்வதெல்லாம் அவர்கள் அமெ ரிக்காவில் உலவி, அங்குள்ள மக்களோடு குலவி நிற்கையில் "கிறிஸ்டியிஸத்தோடு எனது கொள்கையான கண்ணாயிஸத்தையும்" பரப்பிவிட்டு, முடியுமானால் தமிழ் நாட்டில் மழையில்லை என் பதை அமெரிக்கர்களிடம் சொல்லி, நம்முடைய லேட்டஸ்ட் கொள்கையான * மழையிசத்தையும்" அங்கு பரப்பிவிட்டு வர வேண்டுமென்று கேட்டு விடை பெறுகின்றேன்.""
கரகோஷமும், விசில் ஒலியும் : வெடித்துச் சிதறின. இதன் பிறகு தலைமை தாங்கிய பிரெசிடென்ற் பெரியதனம், தமிழ் ஆர்வத்தோடு "தூய தமிழில்" பேசினார். "இதுவரை பேசிய தோலர்கள் நம்ப கொக்ரக்கோ ஐயாவைக் குலப்பிட்டாங்க. அவரு பாவம். ஒர் ஏலைப் பிரசங்கியாரு. என்னமோ ஏஸ் ஏஸ் னனு சொல்லிக்கினு இருப்பாரு. அந்த ஏஸ் பகவான் அருல்ல, இப்ப அமேரிக்கா போறாரு, அவுரு கிட்டப் போயி நீங்க பெரிய பெரிய
நன்மை, தானதர்மம் செய்ய மறவாதிருங்கள் - எபே. 13 : 16
مس- 27 مست.

Page 16
ஐ டியாவா காந்தீஸம் கன்னாய்சம் பேசிறீங்க. நீங்க அங்க பேசச்சே அவுரு இங்க 'பிரசிடென்று, கன்னாய்சமுன்னா என்னாய் சாமின்னு" ஏங்கிட்ட கேக்கிறாரு, அவுரு கிறிஸ்தவரு. அரசியலுக்கெல்லாம் வரமாட்டாரு. அவர உட்டுடுங்க. அமேரிக்காவில போயி நம்ப - குப்பாஞ்சேரி புகல பரப்பனுமுன்னு கேட்டுகிட்டு முடிச்சிக்கிறேன். <42, Dr. ’ ”
கடைசியாக டாக்டர் கொக்ரக்கோ எழுந்தார். "கிறிஸ்துவுக் குள் அன்பான குப்பாஞ்சேரி மக்களே! நான் அமெரிக்கா போவ தால் ஒண்ணும் சிறப்பில்லை. மூட்டைப் பூச்சி கூடத்தான் டில்லிக்கோ பாம்பேக்கோ ரெயிலில் போய் வருகிறது. நானோ ஒரு குப்பை மேட்டுச் சேவல். ஆனால் இயேசுவின் ஊழியனாக, இயேசு ராஜாவின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவிலே போய்ச் சொல்லப்போகிறேன். அதை ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக் கிறேன். இந்தப் பூமியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவாதிதேவன் மனுஷனாகப் பிறந்து, மனுஷர்களின் பாவங் களுக்காக மரித்து, அவர்களுக்குப் பாவ விமோசனம் தேடித்தந்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து மனுஷர்களுக்காக பிதாவோடே மன்றாடிக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவிலே போய் இதைத்தான் நான் சொல்லப்போகிறேன், வேதமாணிக்கமும் என்னோடே வருகி றார். அமெரிக்கா போகத்தான் பாஸ்போட் வேண்டும். இயேசு விடம் வர எந்தவித பாஸ்போட்டும் எடுக்க வேண்டியதில்லை. யாரும் எப்பொழுதும் வரலாம்."
அன்று மாலை சரியாக நாலு மணிக்கெல்லாம் வேதமாணிக்கம் லேட்டஸ்ட் குளோஸ் குறொப் வெட்டி, கோட் சூட் அணிந்து கழுத்தில் டையை இறுக்கி கொக்ரக்கோவை மார்போடு அணைத்த வண்ணம் மீனம் பாக்கம் விமான நிலையத்தை அடைந்தான்.
* கொக்ரக்கோ பிரசங்கியாரின் அமெரிக்க விஜயம்' ,
"அமெரிக்காவுக்குப் பறக்கிறது சேவல்' 'Dr. Kokrako Leaves for America" என்று ஆங்கில/தமிழ் தினசரிகள் பெரிய எழுத்துக் களில் செய்திகளை வெளியிடவே தமிழ் நாட்டில் உள்ள பிரபல கிறிஸ்தவர்கள் எல்லாரும் இரண்டு மணிக்கே விமான நிலையத்தில் கூடிவிட்டார்கள். குப்பாஞ்சேரி மக்கள் குறிப்பாக பெண்கள் கண்ணிரும் கம்பலையுமாக வந்து நின்றார்கள்.
திடீரென ஓர் அறிவிப்பு. 'தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்று மாலை எல்லா விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்
உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள் - ஏபே. 6 1
- 28 -

டுள்ளன." எல்லாருமே அதிர்ச்சியடைந்தார்கள். எப்பொழுதும் சாத்தான் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே கிரியை செய்கிறான்' " என்று ஒவ்வொருவரும். சொல்லத் தொடங்கினார்கள். விமான நிலையம் அல்லோலகல்லோலப்பட்டது. இதோ! மீண்டும் ஓர் அறிவிப்பு. ”
*Dear april fools! இன்று ஏப்பிரல் முதலாம் தேதி என்பதை மறந்து விட்டீர்களா? இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் சென்னையை விட்டுப் புறப்பட இருக்கிறது. பயணிகள் தயாரா கவும்”*
எடுத்ததற்கெல்லாம் சாத்தான்மேல் பழிபோடும் கிறிஸ்தவர்கள் எல்லோருடைய முகத்திலும் அசடு வழிந்தது. கொக்ரக்கோவுக்கும் வேதமாணிக்கத்திற்கும் மாலைகள் விழுந்தன. அனைத்தையும் கழற்றி கனகத்தின் கையிலே கொடுத்துவிட்டு 'கனகம் உடம்பைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்' என்று தமிழ் நாட்டுப் பாணியில் தன் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டான் வேதமாணிக்கம். இது கொக்ரக்கோவின் காதில் விழவே, ‘* கனகம், வேத மாணிக் கத்தின் பேச்சைக் கேட்காதே! அழிந்துபோகிற சரீரத்துக்காக அல்ல; அழியாத நித்திய ஜீவனுக்காக நாம் எப்பொழுதும் கவலையுள்ள வர்களாய் இருக்க வேண்டும்' என்றார்.
வேதமாணிக்கம் முழங்கினான். அமெரிக்கா புறப்படுமுன் டாக்டர் கொக்ரக்கோ உங்களுக்குக் கொடுக்கும் முக்கியமான செய்தி:
*அழிந்து போகிற சரீரத்துக்காக அல்ல; அழியாத நித்திய ஜீவனுக்காகவே கவலையுள்ளவர்களாயிருங்கள்"
பெரிய இரைச்சலோடு விமானம் புறப்பட்டது. அந்நேரத்தில், அவசரமாக வந்து நின்ற டாக்சியிலிருந்து ஓடிவந்த ஒருவர் "ஐயோ; பிளேன் போயிடுச்சா? இந்த "லட்டு பார்சலை நியூயோர்க்கில் இருக்கும் மகள் நிம்மிக்காக கொக்ரக்கோவிடம் கொடுக்கும்படி aris Sopli gigulil Saorirgu ! What a pity! I am late.'" 6tairpitif.
.தொடரும் - 7 - ܐܡ݂ܬ
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் - சங், 34 : 8
aus 29. -

Page 17
r- O O
ம |ன்|ணி|ப் | பு
- இயேசு காவியத்தில் ஒரு காட்சி - ( தேவதாசன் ஜெயசிங் )
பூக்களினால் நெய்த பொன்னெழில் மேணி. நோக்கும் விழிகளிலோ. நோய் தரும் பாவை.
தாக்குண்ட பலரால் அவள் தவறிழைத்தவள்’ எனப் பழி
சுமத்தப்படுகின்றாள். தனியளாக்கப்படுகின்றாள். காக்கின்ற கரங்கள் எதுவுமே இல்லையங்கு. எல்லாவற்றிலுமே கற்கள். மோசே சொன்னாராம். இப்படிப்பட்டவளை இவ்வுலகத்திலேயே
விட்டு வைக்கலாகா தென்று.
கற்களை எடுத்தவர்கள் பற்களைக் கடிக்கின்றனர். "மாசு நிறை மங்கை" யென மகான்கள் சிலரால் குற்றம் சாட்டப்பட்டவள் இயேசுவின் எதிரிலே விடப்படுகின்றாள்.
'ஐய, இவள் அறங் கெட்ட மகள்;
கையும் மெய்யுமாய்ப் பிடிபட்ட காமாந்தகி மோயீசன் கூற்றுப்படி, முறை பிறழ்ந்த இவளைத் தரை மீது வாழவிடல் தவறு" எனக் கூவிக் கொண்டு அவளைக் கல்லெறிந்து கொன்றொழிக்க வல்லவர் கூட்டமொன்று அங்கே வட்டமிடுகின்றது.
இயேசுவோ எதுவுமே பேசுகின்றாரில்லை. அவரது பார்வைகூட அவர்கள் மீது படவில்லை. மாறாக மண்ணை நோக்கியவர் குனிந்து நின்ற வண்ணமாக தம் விரல்களினால் தரையில் ஏதோ எழுது கின்றார்.
**கைவிரல்கள் மண்ணிடைக் கீறின
கால்கள் மெல்லத் தாளம் இசைத்தன பொய்நிறைந்த மனத்தினர் சொல்வதில் ஐயன் உள்ளம் அலைந்து நெகிழ்ந்ததே' கல்லை ஏந்தி நிற்கும் கொல்வோர் கூட்டம் வில் போல் தம் புருவம் வளைத்து, "கொல்வதே நல்லது" எனக் குசுகுசுத்து, தாம் சொல்வதே சரியென்ற பிடிவாதத்தில் பெருமிதமடைந்து நிற் கின்றது.
இடைவெளியாக இருந்த சில நிமிட அமைதியைக் குலைப்பது போல் இயேசுகிறிஸ்து தலை நிமிர்கின்றார். ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் அவரைச் சூழ்ந்திருப்போர் அனைவரது விழி களையும்கடந்து செல்கின்றன. அந்த நீண்ட இடைவெளிக்கு அவரு டையவார்த்தைகள் முற்றுப்புள்ளி இடுகின்றன.
ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள் - கொலோ, 4 : 2
". 30 AMMYA

"யாவர் கைகள் பாவமி லாததோ!
யாவர் உள்ளம் பாவமி லாததோ! நீவிர் அந்த முதற்பெருங் கல்லையே பாவை மீதிற் படிய எறிவீரே!
(என்னிதயத்தில் எவ்வித மாசுமில்லை; இக்கரங்களினால் கடுக ளவு தவறும் நான் செய்ததில்லையென யாரொருவர் கூறக் கூடுமோ அவரே முதலில் தன் கரத்திலுள்ள கல்லை இவள் மீது எறியட்டும்)
ஈண்டு கூறிய இயேசு மீண்டும் குனிந்து தன் விரல்களைத் தரையிலே பதிக்கின்றார். சுற்றிலும் நிற்கும் சுயநலமிகளின் பார் வைகளெல்லாம் ஒன்றையொன்று சந்தித்து மீள்கின்றன. மீண்டும் அவை ஒரு நேர் நோக்குக்கு அஞ்சியவையாக நிலம் நோக்குகின் றன. இமைகள் படபடக்கின்றன. அதரங்களோ அப்படியும் இப் படியும் நெளிகின்றன. முடிவு. விரல்கள் விரிகின்றன. அவற்றுள் கைதிகளாக இருந்த கற்கள் விடுதலை பெறுகின்றன. பாதங்கள் திரும்புகின்றன. அமைதியாக அவை அனைத்துமே அவ்விடத்தை விட்டு அகலுகின்றன.
இயேசு கிறிஸ்து தலை நிமிர்ந்து நோக்கிய போது. அங்கே தனது குற்றத்தை உணர்ந்தவளாகக் கண்ணிர் விட்டபடி தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் அவளைத் தவிர வேறு யாருமே அங்கில்லை. இயேசு பேசுகின்றார்.
யாரும் உன்னைத் தீர்ப்பிட விலையோ? சேரும் பாவம் இலாதவர் இலையோ? நேரில் நானும் தீர்ப்பிட விலைகாண் ஊரில் நீயும் ஒழுங்குற வாழ்வையே
(இவ்வுலகில் பாவம் இல்லாதவர் எவருமே இல்லை. எனவே தான் உன்னைக் கல்லெறிவாரும் இல்லை. ஆகவே, நானும் உன் னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லை; இனிப் பாவம் செய்யாமல் வாழ்வாயாக) என்கின்றார்.
யேசு காட்டிய அன்பு இது. மாற்றானை மனிதனாக மதிக்கும் பண்பு இது. இன்றைய காலகட்டத்திலே பிறன் குற்றத்தை மட் டும் பெரிதுபடுத்தி தன் குற்றத்தை மறைத்து வாழும் பழக்கம் சகல சமூகங்களிலும் புரையோடிப் போய் நிற்கின்றது. 'மற்றவர் களைக் குற்றவாளியெனத் தீர்க்கிறவனே! நீ யாரானாலும் சரி போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை. அவர்கள் செய்கிற அதே குற்றத்தை நீயும் செய்கின்ற படியினால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவாய்' என்பதாக எச்சரிக்கின்றது வேதாகமம்.
உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் - ரோ. 12 : 12
- 31 -

Page 18
எவரைப் பற்றி எந்த நேரத்திலும் குற்றம் பேசிக் குறைசொல் லாதீர்! அப்படிச் சொன்னால் அடுத்த நாள் உமக்கும் சட்டம் அதுவே தாக்குதல் திரும்பும் கண்டனம் செய்தால் கண்டிக்கப் படுவீர்! உமது கண்ணில் உத்தரம் கிடக்க ܝ சோதரன் கண்ணில் துரும்பைப் பார்ப்பதா? சொந்தக் கண்ணைத் துடைப்பீர் முன்னே அந்தக் கண்ணை அப்புறம் பார்க்கலாம் என்கிறது இயேசு காவியம். இன்றைய உலகில் அநேகர் மற்ற வர் மீது அன்பு செலுத்தாமல் தனக்கு இறைவன் ஈந்த தாலந்து களைப் பிறர் தேவைக்குப் பகிர்ந்தளியாமல் தனக்கு மட்டும்-தான் மட்டும் என்ற குறுகிய வட்டத்துள் வாழ்வதையும் காணலாம்.
மனிதர்பால் பகைகொண்டு இறைவனுக்கு மடிநிறையக் காணிக்கை செலுத்தியென்ன? புனிதனெனப் பகைவனையும் உறவாய்ச்செய்து புண்ணியத்தைச் செலுத்திக்கொள் பிறகே கோயில் இனியவர்கள் அனைவரோடும் உறவு கொண்டு எதனை நீ கொடுத்தாலும் இறைவன் ஏற்பான் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு வரங்களுண்டு. ஐந்து விரல்களுக்கும் ஒரே வகையான ஆற்றல் இல்லை. அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் உருப்படியாக ஏதும் நடக்கும். உதாரண மாகப் போர் வீரன் ஒருவனுக்கு. கல்விக்கு ஆசான், -உடைக்கு நெய்பவனும் தைப்பவனும், -உணவுக்கு விவசாயியும் சமைப்பவனும்,- ஆயுதத்திற்கு கொல்லன்,-இருப்பிடத்திற்கு, மேசன்,-தச்சன், குய வன்,வைத்தியத்துக்கு வைத்தியன், -மற்றும் அம்பட்டன், வண்ணான் இவ்வாறாக அநேகருடைய ஆற்றல்களின் ஒருங்கிணைப்பு தேவை. எனவே மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். ஒருவனது பணத் தையல்ல; அவனது மனத்தை - அதில் உள்ள குணத்தை மதிக்க வேண்டும். மற்றவனின் பதவி அல்ல; அவன் செய்யும் உதவியே முக்கியம்.
கொல்கொதா மேட்டில் கொலைக்கள ஆடாக நிர்ண்யம் பெற்ற போது கூட இயேசு "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்?" என்றுதான் வேண்டினார். எனவே,
அன்பு செய்தார்க்கு அன்பு - என்றால் ஆனந்தம் அதிலென்ன உண்டு? அன்பற்ற பேர்க்கு அன்பு - செய்தால் அதுவன்றோ மானிடப் பண்பு! - என்ற கருத்துக் கியைய வாழப்பழகுதல் வரவேற்கத்தக்கதாகும். *
உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள் - ரோ. 12 : 16
mwww. 32 ബ

அன்னை என்பவள் யார்?
மலரதின் நறுமணம்; மரமதின் மாட்சி மென்பனியின் மிருது; ஆழ்கடலின் அமைதி அந்திப்பொழுதின் அழகு தாரகையின் தனியெழில் ஓடிவரும் அருவியின் ஒய்யாரச் சிரிப்பு பறந்திடும் பறவையின் பண்பான கருணை தேவ தூதுவனின் திடமான பராமரிப்பு கடுகு விதையின் கருத்துள்ள விசுவாசம் நித்தியத்தின் பொறுமை : குடும்பத் தேவையின் ஆழம் இவற்றை இணைத்து எடுத்தார் இறைவன் இவைகளிலிருந்து. என்றும், எங்கும், எவரும் அறியா உருவமொன்றினை உருவகித்தார் அந்த உருவை ஆக்கிய பின்னே அதற்குப் பெயரிட்டார் "அன்னை" என்று.
大 + 大
() ஒரு நல்ல தாய் தனது பிள்ளைகளுக்கு உறுதியும் நம்பிக் கையுமுள்ள ஓர் உணர்வினை ஊட்டுகிறாள். அவர்களுடைய உலகமே அவள்தான். அதிகமாக அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்களை அவர்கள் எதிர்பார்ப்பதும் அவளிடம்தான். அவர்களது படுக்கை, உணவு எல்லாமே அவள்தான். ஏன்? அதிக குளிரில் அவர்களது போர்வையும் அவளேதான். அவர்களது சுகம் , உறைவிடம், அனலூட்டி எல்லாமே அவள் தான். அவர்களது அழுகையில் அவளே தேவை. முழு உலகி லும், முழு வாழ்விலும் அவர்களுக்கு அவள் மட்டுமே இவை எல்லாமாக இருக்க முடியும். அவளுக்கு ஈடாக அவர்களுக்கு எதுவும் இருக்கவே முடியாது.
எப்படியுமே சில சந்தர்ப்பங்களில் ஏனையோரின் உடைகளை விட அன்னையின் உடைகள் அவர்களது கரங்களுக்கு வித்தி யாசமான உணர்வையே கொடுக்கும். ஆம், கலக்கமுற்ற ஒரு குழந்தையை, அன்னையின் உடையின் ஒரத்தைத் தொடும் பொழுது ஏற்படும் ஸ்பரிச உணர்வே ஆறுதல் படுத்தி விடக்
கூடும்.
நீங்கள் வீடு மாறினால்.
ރަހ
இன்றே உங்களது
புதிய முகவரியை
எமக்கு எழுதுங்கள் !
O பழைய முகவரியையும் இணைக்க
மறவாதீர்கள்.

Page 19
யாரோ எழுதிய
大 பசியாய் இருந்தேன் நான் பசியைப் போக் பரோபகாரிகளில்
* சிறைப்பட்டிருந்தேன் நா us விடுதலைக்காக விலகிச் சென்று
* நிர்வாணியாக நின்றேன்
எந்தன் நிலையை எடையிட் டளந்
* நோயாய் இருந்தேன் நா முழுமையாய் கிை முழந்தாளிட்டே
* வீடற் றிருந்தேன் நான். அன்பின் இறைவ அடிக்கடி கூறி பி
大 தனியனாய் இருந்தேன் நா தனியனாய் என்ன 'தனி ஜெபம் ெ
நீர் பக்தன்; பரிசுத்தன் இறைவன் அருகிலேயே இ
تنمية
பசியினால் பரித தனியனாய் தத்த அனலற்றவனாய்
-எவ
Printed by Meenambal Ganeshallingam !Colombo-12. and Published by Bro 90, Kandy Road, Kengalla for BIBLEC
Lane, Colombo 6. on i2.94.

பது
ër......... நீரேர் கும் வழியை ஆராய ன் குழுவைக் கூட்டினிர்!
ன். நீரோ ஜெபிப்பேன் என்று ஆலயம் புகுந்தீர்!
தான். ßGurr ப இதயத்துள்ளே தீர் ஏனோ அறியேன்
ன். fỂ Gurmr டைத்த உம் சுகத்துக்காக
நன்றி செலுத்தினீர்!
si a e நீரோ ானின் ஆன்மீக இல்லத்தை ரசங்கம் செய்தீர்!
ான். நீரோ னை விட்டுத் W
சய்யும்' என்றீர்
ருக்கிறவர். - ஆனால் நானோ, இன்னமும் விக்கிறேன்! ளிக்கின்றேன்! அழுகின்றேன்!
se K * : ' Y 参看 . மீரா சுவைததது
Kumaran Press, 201, Dam Street,
. Devadasor Jeyasingh of Dason COR - LANKA’, No. 6. Balahenamulia