கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1991 (12)

Page 1
-
சுதந்திரமாக 8 அது உனது அடிப்படை உரி
அஞ்சி வாழ்வ நீதிக்காக மரண தேசியக் கடபை
மக்கள் கலை, இலக்கியப்
 
 
 
 

ஆண்டு நிறைவு இதழ் இதழ் 12 பளிப்பு:பருபா 6
பேரவை வெளி

Page 2
With the Best Compliments from
MANOJ ENTERPRISES
Wholesale & Retail Dealers in Electronic, Fancy Goods Electrical & Readymade Garments Etc.
FAVOURITE SHOPPING CENTRE 128, 111, 16 Q KEYZER STREET.
COLOMBO-11.
T'phone : 431862 546397
Our Best Wishes
Estd ; 1967 Phone : 548742
MANTEX TRADERS
Importers, Exporters, Wholesalers, Retailers of Textiles & Garments
46/8, THIRD CROSS STREET, COLOMBO. 11, SRI LANKA.
Grams : " "Om nammo'

ஆசி i?u i uft Lub 羲 况 ※※※※※※芯况
மக்கள் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான விடிவு சஞ் சிகையின் மூன்றாம் ஆண்டு நிறைவு இதழினை சமர்ப்பிப்பதில் நிறைவான மகிழ்ச்சி அடைகிறோம்.
囊
இலங்கையின் இன்றைய எதார்த்த நிலையில் காலாண்டு சஞ்சி கையினை தொடர்ச்சியாக நடாத்துவதன் சிரமத்தை நாம் நன்றாக அறிந்து வைத்துள்ளோம். இச் சூழ்நிலையில் மலையகத்தின் தலை நகரில் இருந்து மலையக மக்களின் சமூகவாழ்வு இருப்பை அடிப் படையாகக் கொண்டு தேசிய ரீதியில் விடிவு சஞ்சிகையினை வெற்றி கரமாகக்கொண்டு நடாத்துகிறோம்.
இந்த சுகமான செயற்பாட்டுக்கு மத்தியில் பேரவையின் ஏனைய கலை, இலக்கிய, சமூக, கல்வி செயற்பாடுகளும் இடைவிடாது நடைபெற்றுள்ளதை எமது ஆதரவாளர்கள், வாசகர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்
கவியரங்கு, கருத்தரங்கு, இலவச வகுப்புக்கள், புத்தக அன்பளிப் புக்கள் போன்ற முக்கிய எமது செயற்பாடுகள் மூலம் கஷ்டப்படும் மானுடத்தின் உயர்வுக்கும், மலையக மக்களது சமூகவாழ்வு உயர் வுக்கும் உழைத்து வந்துள்ளோம்.
எமது வேலைத் திட்டங்கள் மீது திட்டமிட்டு பழி சுமத்தவும், எமது செயற்பாடுகளை மறைத்துப் பேசவும் எடுக்கப்பட்ட நயவஞ்சக மான முயற்சிகளை நாம் நுட்பமாக அறிந்து வைத்துள்ளோம். முது கெலும்பற்றவர்களின் இத் துரோகச் செயற்பாடுகளுக்குப் பதிலாக நாம் எமது மக்களின் எழுச்சிக்கும், விழிப்புக்கும் தொடர்ந்து இழப் புக்கள் மத்தியில் பணியாற்றுவோம்,
தேசிய பத்திரிகைகளில், விழா மலர்களில் எம் பணிகளைப்பற்றி எழுத வேண்டும் என்பதோ - மேடைகளில் எம்மை போற்றி பேச வேண்டும் என்பதோ எமது நோக்கங்களல்ல. அத்தகைய நோக்குக்காக எம் மத்தியில் உள்ள கலை, இலக்கிய அன்பர்களை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவோம் என்பதனை உறுதிப்படுத்துகிறோம். எம் மைப்பற்றி, எமது வேலைத் திட்டங்கள் பற்றி எமது ஆதரவாளர் கள், அனுதாபிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையே எமது எதிர்கால செயற்பாட்டின் அடித்தளமாகும்.

Page 3
எமது செயற்பாடுகள் வெற்றியடைய உதவிய நெஞ்சுக்கு நெருக்க மாணவர்களுக்கு இப் பகுதி மூலம் நாம் நமது நன்றிகளை உரித் தாக்க உரிமையடைகின்றோம்,
எமது கருத்தரங்கு, கவியரங்கு, வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்ட சிறப்புரையாளர்களுக்கும், விமர்சர்களுக்கும், பார்வை யாளர்கட்கும்,
பேரவையின் வெளியீட்டு முயற்சிகள் தொடர மறுப்பின்றி விளம்பரம் தந்து உதவிய நிறுவன உரிமையாளர்களுக்கும்,
எமது வெளியீட்டு முயற்சிகளுக்கு அன்பளிப்பு அனுப்பி ஊக்கு வித்தவர்களுக்கும், ஆக்கங்கள் அனுப்பி ஒத்துழைப்புத் தந்த படைப் பாளர்களுக்கும்,
எமது வேலைத் திட்டங்கள்பற்றிய செய்திகளை தேசியப் பத்தி ரிகைகளில் பிரசுரித்து உதவிய பிரதம ஆசிரியர்களுக்கும், நிகழ்ச்சித் தகவல்களை ஒலிபரப்பி உதவிய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ப் பிரிவு பொறுப்பாளருக்கும், 'ஊர்க்கோலம்" கலாச் சார நிகழ்ச்சி மூலம் எமது வெளியீடுகள் அறிமுகம் செய்துவைத்த இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவு பொறுப்பாளர் களுக்கும்,
விடிவு சஞ்சிகையினை அழகாகவும், உரிய காலத்துக்குள்ளும், சிரமமின்றியும் அச்சாக்கித் தரும் குமரன் அச்சக உரிமையாளர், ஊழி யர்களுக்கும்,
எமது பேரவை செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு எமக்கு எதிராக செயற்படுவோர்களுக்கும், எமது வெளியீட்டு முயற்சிகளைத் திட்டமிட்டு நிராகரிக்கும் தேசிய பத்திரிகைப் பகுதித் தயாரிப்பா ளர்களுக்கும், விமர்சகர்களுக்கும், எம்மை சுயவிமர்சனத்துக்கு உட் படுத்தும் நேச விமர்சர்களுக்கும் இதய பூர்வமான இனிய நன்றி களை நவில்கின்றோம்.
தேச விமோசனத்துக்கான எமது பயணம் எத்தகைய எதிர்ப்பு, இருட்டடிப்புகளுக்குள் சரணடையாது. மலையகத்தில் கல்வி கற்ற பல இளைஞர்கள் எம்முடன் இணைலதில் காட்டும் துடிப்பான ஆர்வம் எம்மை உற்சாகப்படுத்துகிறது. தேசப் பற்றுள் ள வர் க ள் எம்மை ஆதரிப்பதும் , எமக்கு உதவுவதும் தார்மிகக் கடமையாகும்.
மக்கள் கலை, இலக்கியத்துக்கான எம் பணி தொடர்ந்து தொட ரும் என்ற நல்ல செய்தியுடன் உங்களிடம் இருந்து விடைபெறு கின்றோம்.
எங்கள் எழுது கோல்கள் ஏழைகளின் எழுச்சிகளை ஏந்திவரட்டும்
مسیه 2. سسسس

மலையக அவலங்கள்
O மலைச்செல்வன் ()
தமது நாட்டிலே பதினையாயிரம் வீடமைப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்துவிட்டு, இன்னுமொரு இருபத்தையாயிரம் வீடமைப் புத் திட்டத்தை நோக்கியே காலடி எடுத்துவைக்கப்போகிறார்க ளாம்.
இன்னும் சுவர்ண பூமி உரிமை உயில், சனசக்தி உதவி, கிராம உதயம், காணியற்றோருக்குக் காணி பகிர்ந்தளிப்பு, சுயதொழில் ஆரம்பிக்க வங்கிக்கடன் வசதி என்றெல்லாம் விரிவடைவதை காண் கின்றோம்.
ஆனால், இவைகளெல்லாம் மலையகத்தோட்டத் தமிழ் மக் களை ஒரங்கட்டியே வருகின்றன. கடந்த பொதுத்தேர்தல் காலத்திலே ஒட்டை லயன் அறைகளை எல்லாம் உங்களுக்கே உரிமையாக்கித் தருவேன் என ஒலித்த குரலைக் கேட்டு ஒட்டுப் போட்டே கோட்டை விட்டுவிட்டோம் என்றே இம் மக்கள் உணராமலுமில்லை.
போதாக் குறைக்கு இவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்க ளுக்குள்ளே புதுப்புது காணிப்பகிர்வு, வெளியார் குடியேற்றம் என் பனவும் இவர்களை அச்சுறுத்தி வருகின்றன.
"2000 ஆண்டளவிலே எல்லோருக்கும் புகலிடம்" என்ற கலோ கத்துக்குள்ளேயாகிலும் தமக்கும் இடங்கிடைக்காதா என்ற ஏக்க மும் பெருமூச்சும் இருக்கத்தான் செய்கிறது.
வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்தும் இவர்களுக்கு மாத் திரம் சம்பள உயர்வு கிடையாது.
சூழல் சுத்தம், சுகாதார, மருத்துவ வசதிகள் இவர்களை இது வரையிலே திருப்பியும் பாராவிட்டாலும் பரவாயில்லை. குடியிருக் கும் இருட்டறைகளையாகிலும் புனரமைத்துத்தரும் எண்ணம் கூட எவருக்குமே எழவில்லையே என்ற ஏக்கமும் இம் மக்களை வாட்டி வதைக்கிறதே.
ஒரே ஒரு விடயத்தில் மாத்திரமே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கத்துவ மாத சந்தா இருபத்தைந்து, ஐம்பது சத
- S -

Page 4
மாக இருந்தது இன்று பதினைந்து இருபது ரூபாவுக்கு உயர்ந்து சென்றுள்ளது. .-
கள்ளு, சாராய, சுரண்டல் அதிர்ஷ்டச் சீட்டு விற்பனைக் கடை கள் காளான்களைப் போல, தொழிற்சங்கத் தலைவர்களின் அனு சரணையுடன் தோட்டங்களைச் சூழ்ந்து முளைத்துக் கிடக்கின்றன.
ஆண்டு ஆறுக்கு மேல் அடிமேல் அடிவைத்தாலும் அம்மியும் நகராத ஒற்றைப் பிரப்பின் ஆட்சியிலே இன்னும் ஒரு மாற்றமுமே இல்லை. பாடசாலைகளுக்குள்ளேயும், தொழிற்சங்கப் போட்டி பூசல் கள் புகுந்து அரைகுறை கல்விக்கும் ஆப்பு வைப்பதைப் பார்க்கும் போது இம் மலையகத் தமிழ் மக்களின் வாழ்விலே மறுமலர்ச்சியே ஏற்படக்கூடாது என்றே செயற்படுவோரின் ஆதிக்கமே ஓங்கியிருப்ப தாகத் தெரிகிறதே!
நாற்றமடிக்கும் அமைப்பு முறையிலே ஒரு மாற்றம் ஏற்படுவது 67 "Gu urt:?
பாரதிதாசனின் பிறந்த நூற்றாண்டு விழாக் கொண்டாடும் 1991ம் ஆண்டிலே ஜாதிச் சங்கங்களும் வேறு தோட்டத்துக்குள்ளே புகுந்து ஒட்டுக் கேட்பதாகவும் ஒரு அவலக் குரல் கேட்குதே!
பிரிதல்
Dffd0) 6), சரிவான பாதை என்முன்னால் நேற்றுத்தான், "என்னை மறவாதே" என காதலோடு அவன் வேண்டினான் இன்று வெறுங்காற்றும், இடையனின் அழுகுரலும் மட்டும்
தூய ஊற்றினருகில்,
"செடார்" மரங்கள் அலைப்புறுகின்றன:
ரஷ்ய மொழியில்: அன்னா அஹ்மத்தோவா. ஆங்கிலம் வழியாக தமிழில் அ. யேசுராசா
( நன்றி அலை - 11)
- 4 അ

சூர்யப்பூக்கள் சூர்யப்பூக்கள் சூர்யப்பூக்கள சூர்யப்பூக்கள் சூர் யப் பூ க்க ள்
உண்மைத் தேடவே வாழ்க்கையின் மிக முக்கிய பணியென நான் கருதுகின்றேன். எமது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சமூக அந்தஸ்து யாவும் கணிப்பிட முடியாதபடி எம்மைப்பக்கச்சார்பு கொண்டோராக ஆக்கியுள்ளன. யதார்த்தத்தை ஸ்பரிக்க முடியாமல் அவை எம்மைத் தடுக்கின்றன. உண்மை எளிமையானது. எமக்கு மிகவும் அண்மை யிலிருப்பது. எனினும், எமது சாதாரண அன்றாட விவகாரங்களில் அதனை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம், ஒரு எழுத் தாளன் விளைவுகளை எண்ணிப்பாராமல், தன் படைப்பு தனது வாழ்நாளில் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்ற கவலையேது மின்றி, தன் அனுபவத்தின் உண்மையை வெளியிடக் கடமைப்பட் டுள்ளான். அதேவேளை தேவைப்படின் தன் பார்வைகளை மறு பரிசீலனை செய்து மாறுபட்ட அபிப்பிராயங்களின் மதிப்பீடுகளைக் காண்பதற்கு அவன் ஆயத்தமாயிருத்தல் வேண்டும். அவற்றைத் தழுவித் தனதாக்கிக் கொள்ளும் அகலிய பார்வை அவருக்கிருக்க வேண்டும். ஓர் எழுத்தாளன் வாழ்வோடும் மனிதத்தோடும் தீவிர ஈடுபாடு வைத்திராவிடின் அவன் உயர்ந்த உண்மைகளைக் கான அடிப்படையிலேயே இயலாதவனாகின்றான்.
-- சுந்தர ராமசாமி
கேள்வி:- செ. யோகநாதன்,
தமிழிலே சாகித்திய மண்டல விருது, ஏனைய இலக்கிய பரிசு களை அங்கத்தவர்கள் முதலிலே தங்களுக்குள் பங்கீட்டுக் கொண் டார்கள். பின்னர் அரசியல்வாதிகளின் பிரியம் யாருக்குப் பரிசு என் பதைத் தீர்மானித்து வருகின்றது. கட்சி, ஜாதி என்பன சிறந்த படைப்பாளியைத் தேர்வு செய்கிறது. பணம் கொடுத்தும் பரிசு
களைப் பெறுகின்றோம். உங்கள் பக்கத்தில் எப்படி?
பதில்:- மராட்டிய எழுத்தாளர்.
இவ்வளவு மோசமில்லை. ஆனால் அரசியல் குறுக்கீடுகளும், எழுத்தாளர் யுக்திகளும் தாராளமாக இடம் பெறுகின்றன. கண வன் பரிசுக் குழுவில் இருந்தால் எழுத்தாள மனைவிக்கு பல முறை பரிசு. விருதுகளுக்கும் இலக்கியத்துக்கும் எந்தவிதத் தொடர்பு மில்லை என்பதே என் கருத்து. இதுவே மராட்டிய எழுத்தாளர் அநேகரின் முடிந்த முடிவு. நன்றி அரும்பு.
- 5 -

Page 5
இலங்கையில் தமிழ் பேசும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அண்மையில் கெளரவிக்கப்பட்டது நீண்டகாலக் குறைபாட்டுக்கு ஆறுதலாக அமைந்தது. ஆனாலும் கெளரவிப்பு, பரிசளிப்பில் ஏற் பட்ட பலவீனங்கள், குறைபாடுகள் நீண்ட நாட்களுக்கு பின்னான இம்முயற்சியை சந்தேகிக்க வாய்ப்பைத் தந்தது.
முஸ்லிம் எழுத்தாளர் கெளரவிப்பில் எஸ். எம். கமாலுதீன், இளங்கீரன், சுபைர் போன்ற முக்கியமானவர்கன் முழுமையாக மறக்கப்பட்டமையும், தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாத, இளம் எழுத்தாளர் வளர்ச்சியை அங்கீகரிக்க மனோவலிமையற்றவர்கள் கெளரவிக்கப்பட்டமையும், சத்தியத்துக்கு அப்பாற்பட்டவர்களுக்கு சாஹித்திய விழாவில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விலக் கி வைத்தமை வருந்தத்தக்கது. கலைஞர்கள் சுதந்திரமானவர்கள். இத் 560&stu கட்டுப்பாடுகள் அவர்களது கைகளுக்கு மறைமுகமாக விலங்கை அணிவதற்கு சமனாகும். அதேவேளை ஒரு தலைப்பட்ச மாக கண்காட்சிக்கு புத்தகங்கள் தெரிவு செய்யப்பட்டமை, அமைப்பு நடவடிக்கை மலையகப் பெரும் தலைவரின் பேச்சு யாவும் ஆரோக்கியமானதல்ல.
மொத்தமாக ஒரே மொழியை பேசும் கலைஞர்கள் இரு பிரி வாக பரிசளிக்கப்படுவதும், கெளரவிக்கப்படுவதும் அரசியல் முக்கிய பங்கு வகிப்பதும் முன்னேற்ற கலை, இலக்கிய, வளர்வுக்கு வசதி செய்யாது.
சாஹித்திய விழா, எழுத்தாளர் கெளரவிப்பு போன்றவற்றில் நாம் சகோதர சிங்கள மொழி விழாக்களுடன் பரிச்சயப்படுத்தி எம் பலவீனத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு தலைவர்களும் தமிழ் மொழி பேசும் கலைஞர்களை சிங்கள மொழிக் கலைஞர்களுடன் சரி சமமாக கெளரவிக்க இனியாவது முயற்சி எடுக்க வேண்டும்.
- அபீதா
தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஜனரஞ்சக பாரம் பரியம் உண்டு. ஏழைக் கதாநாயகன் பணக்கார கதாநாயகியை காதலிப்பதும் பின்னர் கடும் பிரச்சினைக்குப் பிறகு மணமுடிப்ப தும் அல்லது தோல்வியடைந்து பெரிய மலைகளின் உ ச் சி யில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்வதும் - இவற்றுடன் ஒரு கோழையாக சித்திரிக்கப்படும் கதாநாயகன் வழுக்கை மண்டை, கம் பீர மீசை வில்லன்களுடன் அகோரத்தனமாக போரிடுவதும், மோட்
جسے 6 ہے۔

டார் சைக்கிளில் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக்கொண்டு எவ்வித இரத்தக் காயமுமில்லாது பாய்ந்து செல்வதும், கதாநாயகி யைக் காப்பாற்றுவதும், வர்ண உடைகளுடன் ஆபாசமாக உருளுவ தும் பொருத்தமற்ற நகைச்சுவை, ஆபாச பாடல்கள் இவ்வாறு நீண்டு கொண்டே செல்லும். இந்த துரதிஷ்ட நிலையான, நமது நாட்டு தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களும் வித்தியாசமாக பிரதிபலிக்கிறது. ஸ்டூடியோ படக் காட்சி, உப்புச்சப்பற்ற கதை யமைப்பு, சுறுசுறுப்பற்ற நடிப்பு, வசனங்களிலாவது ஒழுங்காக உச் சரிக்க சக்தியற்ற நடிகர்கள் இவ்வாறு நீட்டிக்கொண்டே செல்ல லாம். அயல் மொழி சிங்கள நாடகங்களுடன் ஒப்பிடுமிடத்து நாம் இன்னும் சிறு குழந்தைப் பருவத்தில் உள்ளதை நம்மில் யாவரும் ஏற்பர். இத்தகைய தலைவிதி நிலைக்கு மூல காரணம் புதிய நடிகர் களின் அறிமுகமின்மை, போதிய மூலதனம், தொழில்நுட்ப பிரச் சினை இவற்றுடன் தமிழ் நாடகங்களை ஒளிபரப்ப வர்த்தக ஸ்தா பணம் பின்வாங்கும் நிலை எனலாம். இருப்பினும் தமிழ்த்தொலைக் காட்சி நாடகங்களை யதார்த்தமாக தயாரிப்பதில் ரொம்பவும் பின் நிற்கும் நம் தயாரிப்பாளர்களின் நாடகங்களை, வர்த்தக நிலையங் கள் ஒளிபரப்புவதற்கு உதவி செய்ய மறுப்பதும் சாதாரண நியாய மாகும். தமிழ்த் தொலைக்காட்சி நாடகக் குறைபாடுகளை நீக்கி, நவீன நாடக அமைப்புகளுடன் எம்மை பரிச்சயப்படுத்துவது நல்ல தொரு எதிர்காலத்துக்கு கட்டியம் கூறும்.
எஸ். வை. பூரீதர் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
OOOeeLeLLLLL0OOOOLOLOOLOL0OO
தாளில் எழுதிய சொல்லை அழித்து விடுவதுபோல் என்னை உன்னால் அழித்து விட முடியுமா ? நான் ஓர் ஊற்று தக்க இடத்தில் இருந்தே பெருகி வருகின்றேன். நீ என்னைத் தடுத்துவிட விரும்புகிறாயா ? நான் உலகின் அடியெங்கும் ஓடிப் பெருகிப் பரவுவேன் ; வேறோர் திக்கிலிருந்து ஊற்றெடுப்பேன்.
மூலம் : ஒன்றா ஹோர்க்கி (செக்கோஸ்லாவாக்கியா) தமிழில் : மு. பொ. (நன்றி அலை - 1)
سیسہ 7 سے

Page 6
இலக்கிய அரசும் தெருவோரச் சாதனைகளும்
முரசறை முனியாண்டி:
வாழ்க நம் ராஜ கம்பீர ராஜ ராஜ தேவன் அவர்கள்!
சிற்றரசே, நீங்கள் கூறியபடி ஊர் மக்கள் யாவருக்கும் தண் டோரா போட்டு கூறி விட்டேன். குடிசையற்று இருக்கும் குடி யான கலைஞர்கள் யாவருக்கும் மாடி வீடு கிடைக்கப் போவ தாக.
prarrř.: S LLTTTLS LLtTT TTLS LLLLL TTLLLSS S LLLTT LLLLLTTTTTTTTTT ELLL LLLLT
தியம்.
Cup. (p.
ஆனால் அரசே ஒரு அபச்சாரம் நடந்து விட்டது. தண் டோரா போட்டுக் கொண்டிருக்கும் பொழுது என் மீது ஒரு கல் வந்து விழுந்தது. யாரோ ஒரு சிறு வன் வீசியிருப்பான் என்று நினைத்தேன். பின் சரமாரியாக கற்கள் வந்து விழுந் தன JoyudfáFnt prb... . . . அபச்சாரம்.ராஜ நிந்தனை
(P (UP •
அரசே நான் உங்களது பச்சைப்பொய்களை அவிழ்த்து விடும் புழுகனாம். என்னால் இனி ஊருக்குள் போக முடியாது.
ஆரம்பத்தில் அண்டை நாட்டுடன் இலக்கிய பரிமாற்றம் ஒன்றை ஆரம்பித்து உள்நாட்டு எழுத்தாளர்களின் ஆக்கங் களை சந்தைப்படுத்தலுக்கு ஆராயப்படும் என்றீர்கள். ஒன் றும் நடக்கவில்லையாம். பின் தேசிய ஏடுகள் சேவைகள் சபையுடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட ஏடுகளை வாங்குவதற்கும் ஆராய்வு தான் நடத்தி னார்களாம்.
பின்பு வாசகர் வட்ட புழுகை அவிழ்த்து விட்டீர்களாம். மொத்தத்தில் ஆராய்வும், ஆலோசனையும் செய்து கொண்டே இருக்கும் அரசர் தானாம். இன்னும் குழு அமைத்து தேசிய மொழி பெயர்ப்புக்கு வழி செய்வதாக ஜல்தா விட்டீர்களாம்.
- 8 -

உங்கள் பேச்சைக் கேட்டு, எழுத்தாளர்கள், புலவர்களின் ஏடு கள் 100 வாங்குவதாக முரசறைந்தேன். ஆனால் இங்கு போயும் போயும் 25 தான் வாங்கப்படுகிறதாம். அதிலும் சம் பந்தப்பட்ட அதிகாரியின் பந்தா அதிகமாம். அவர் தனது மத புத்தகம் 50 வாங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.
இப்பொழுது கலைஞர்களுக்கு வீடு கொடுக்கப்போவதாக புழுகி யிருக்கிறார்களாம். அதில் மழுப்பலாக கலைஞரே நகரத்தில் எங்கு இடம் இருக்கிறது என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறீர்கள். கலைஞர்களுக்கு என்ன அதிகாரம் இருக் கிறது கண்டு பிடிக்க. உங்கள் அதிகாரிகள் எதற்கு இருக்கிறார் கள் என்று கேட்கிறார்கள்.
மேலும் ஏட்டுக்கு வராத எழுத்துக்களை அச்சில் கொண்டு வருவதாக மலைச்சாரலில் போய் டூப் விட்டிருக்கிறீர்களாம்.
அரசர் ஏனடா 28 வருடங்களாக நடைபெறாது இருந்த சாகித்
திய விழாவுக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறேனே.
மு.மு. மாஜி அரசரும் ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் இலக்கிய விழா
வைத்து 50க்கும் மேற்பட்ட கலை, இலக்கிய கர்த்தாக்களுக்கு பொற்கிழி வழங்கி பட்டம் அளித்தாராம். ஆனால் நீங்கள் கொஞ்சம் நளினமாக சாகித்திய விழாவென பெயரிட்டு புத்த கங்களை தெரிந்தெடுத்து நடத்தினிர்களாம். அதிலும் பல
ஒட்டைகளாம்.
இரா. செந்தில், கண்டி.
M
இருளடையச் செய்கின்றது
வாழ்க்கை வசந்த காலத் தென்றலாகச் சிறப்புறவேண்டுமென எண்ணுகின்றேன் ஆனால். எங்களது உழைப்போ வசந்த வாழ்வின் அத்திவாரமல்ல. முதலாளிகளின் ஏணிப்படிகள் வாழ்க்கையில் வசந்தம் வீசாதா
என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் சிந்திக்கையிலே வசந்த வாழ்க்கைக்குப்
ufas Troms வறுமையென்னும் இருளரக்கன் வாழ்க்கையை இருளடையச் செய்கின்றது
நிம்லா LDraverdijapey

Page 7
காதலும் தொலைவும்
நினைக்க நினைக்க நெருப்பு நெருப்பாய் வருகின்றது.
வானத்து அக்கினிக் குடத்தைத் தூக்கி என்னிதய இடுப்பில் வைத்தது யார்?
மனப்பூவை மண்ணாங்கட்டியாக மாற்றிய "மெக்கணிக்கல்" தலை யாருடையது?
என்ன சொல்ல என்னில் எல்லாமே அவள்.!!
வெண்ணிலா அவளாக, அந்த நிலா தெறித்து நிலத்தில் நெளியும் இலை நிழல்
அவள் அசைவாக,
வைகறை வெண்பனி அவள் தாவணியாக,
அதிகாலையில் குயில் கூவுவது அவள் பாடலாக, புத்தக எழுத்துக்கள் எல்லாம் அவள் கண்ணாக,
காகம் கூட அவள் தலைமயிரை ஞாபகப் படுத்துவதாக,
என்ன சொல்ல என்னில் எல்லாமே அவள்1.
அவள் ஏன் என்னை "அவளாக" மாற்றிப் போனாள்?
என் மென்மையான மனசை சிலுவையாக்கி அதில் ஏன் சோக ஆணிகளை அடித்துப் போனாள்?
கூடாதம்மா காதல் சிலுவையாதல் கூடவே கூடாதம்மா!
ஈழக்கவி (பேராதனைப் பல்கலைக்கழகம்)
பொற்காலம்
இளைஞர்களே
is Q5rQ6)Lourrsa ருளில் இன்னும் வாழ்வது முறையா?
பாட்டாளிகளின் வாழ்வை வசீகரமற்றதாக்கும்
வர்க்கபேத அமைப்புக்கு விடிவு எப்போது?
எல்லோரும் . எல்லாம் பெறும் வரலாற்று அரசாட்சிக்கு நாம்
நடைபயில்வோம்;
ஹம்சுல் இணயா
பிலிமதலாவ
حس 0 : سه

ஒரு கேள்வி
பூமியின்
புள்ளினங்கள் குதூகலித்து நடனமாடும் சுகமான இசை
மனிதர்களின்
மனசுக்கும் மரங்களின் வேர்களுக்கும் ராஜ சுகத்தைக் கற்றுக் கொடுக்கும் ←ወ!፱bሣ፰j தடவல்கள்
இனிமையான கனவுகளின் மேனியில் இருந்துகொள்ளும்
(5 அழகான கவிதை!
இந்த மண்ணின் மனிதர்களின் விசுவாசங்களை விட
வசீகரமான பூ-விரல்கள்!
பூந்தாலாட்டுப் t_jחQub பூங்காற்றே எங்கள் எல்லோரினதும் மனசுக்குள்ளும் உன்னால் விடிவுச் செய்தியை உணர்த்த முடியுமா?
நிதானிதாசன்
(பேராதனைப் பல்க லைக்கழகம்)
蠶ܐܶ.. ܬ݁.ܶ
"மெழுகுதிரிகள்”
பூகோள வரைபடத்தில் ஒரு புள்ளியாய் நமது நாடு நம் நாட்டு வரைபடத்தின் மத்தியிலே மலைநாடு. synš(S6
ஒரு கூட்டம்
J53 மலை நாட்டான் கைகளில்தான் இந்த மண்ணின் வளம் வாழ்கிறது உரமேறிப்போன sold இந்த மண்ணுக்கு அதுவே வரம் படிப்பில்லை, பணமில்லை பதவியில்லை, உதவியில்லை தன் கரத்தால் தாயகத்தை தாங்கியே நின்றபோதும் ஒன்றுமில்லை கண்டபலன்
Lunt Ghuh... ---- வாயுள்ள ஊமைகள் கண்ணுள்ள குருடர்கள் இவரிகள் பிழைக்கத் தெரியாத மெழுகுதிரிகள்,
செல்வி நாகபூஷணி கருப்பையா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 8
நிலா ஒளியும் தாயும்
னெது வாலிபப் பருவம் முடிவடையும் தறுவாயிலுள்ளது. வாழ்க் கையில் மிகவும் சந்தோஷமாகக் கழிக்க வேண்டிய ஒரு காலகட்டம் பிரச்சினைகள் நிறைந்ததாகவே நடந்து முடிந்தது. நடந்தவைகளைப் பற்றி அவ்வளவு வேதனை என்மனதில் இல்லாவிட்டாலும் சிறு வடைக்கு ஆயத்தமாக இருந்த ஒரு சேனை காட்டுத் தீயினால் அழிந்து போன துக்கம் இதயத்தில் ஒரு மூலையில் இருந்து என்னைத் தொந்தரவுபடுத்துகின்றது. அதனோடு வற்றாத ஒரு எதிர்கான நம்பிக்கையும் என் மனதில் ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடக்கின்றது. எப்போதாவது ஒரு நாள் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழைத் துளிகளின் உதவியோடு காட்டுத்தீக்கு அகப்படாத விதைகள் கற்பமாகி, காட்டுத்தீயினால் அழிந்து போன பூமியில் எஞ்சி புள்ள ஜீவகாற்றோடு சேர்ந்து செழிப்பான ஒரு செடியைப்பிரச் விக்கும் என்ற நம்பிக்கை என்னை மேலும் வாழத்தூண்டுகிறது.
எதுவானாலும் கடந்த காலங்களில் நடந்து முடிந்த சம்பவங் களைப்பற்றி மீண்டும் நினைக்கும் போது மனதில் ஏற்படுவது விவ ரிக்க முடியாத ஒரு சலனமாகும். சமுதாய அனுபவங்களாக எல்லா வற்றையும் பொறுமையாகத் தாங்கிக் கொள்ள முடிந்தாலும் தாயைப் பற்றிய நினைவுகள் மனதில் வேதனையைக் கொண்டு வந்து நிறைக் கின்றது. எனது தாய் என்னால் கட்டியெழுப்பப்பட்ட பெளதிக மான உலகுக்கு உரித்தானவரல்ல. அவள் அந்த உலகத்தின் பெளதி கத் தன்மையிலிருந்தும் தூரமான மிக விரிந்த ஆகாயம் பூராவும் நிறைந்தவள். அதனைப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி இல்லாததி னால்தானோ என்னவோ எனக்கு இந்த வேதனை.
எண்பது முடிவடைய அறுபத்திநான்கு நாட்கள் இருக்கும் போது எனது தாய் மரணித்தாள். மிகவும் பிரச்சினைக்குள்ளான வனாக இருந்த நிலையிலேயே இச் செய்தி எனக்குக் கிடைத்தது. எனது தாயின் மரணத்துக்குக் காரணம் நான் தான் என்று உன ரும் அளவுக்கு எனது மனநிலை அப்போது இருக்கவில்லை. அன்று அது இன்னுமொரு மரணம் மட்டும்தான். ஆனால் இப்போது அந்த மரணத்தின் கொடூரத்தையும் வேதனையையும் உணர்கிறேன்.
- 12 m

தாயின் மரணம் எனது மனதில் இவ்வளவு வேதனையையும் உண்டு பண்ணியது அவள் எனது தாய்என்பதினாலல்ல. எமது மண்ணில்பிறந்த எல்லாக் குழந்தைகளினதும் தாய் அவளாக இருக்க வேண்டும் என் பதினால்தான். "அம்மா" என்ற சொல்லுக்கு அவள் ஒரு வரைவிலக் аковуub
எனது குழந்தைப் பருவத்தில் எனது தாய் நான் பிறந்த பூமி யைப்பற்றிக் கற்றுத் தந்த கதைகள் எவ்வளவு இனிமையானது என் றாள் தாயை நேசிக்குமளவுக்கு பிறந்த மண்ணிலும் அன்புவைக்கத் தூண்டப்பட்டேன். பிறந்த மண்ணுக்காக உயிர் கொடுக்குமளவுக்கு எனது ஆத்ம சக்தியை வளர்த்தாள். துட்டுகைமுனுவைப் பற்றி அவள் சொல்லித்தந்த கதைகள் பாடப்புத்தகத்தைப் போன்று மட்ட மாக இருக்கவில்லை. துட்டுகைமுனுவை விட தூர நோக்குடைய காவன்திஸ்ஸாவுக்கு மதிப்புக் கொடுத்த எனது தாய் நடைமுறை கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையாகத் தோன்றும். உண் மையைத் தேடி அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும் சைகை காட்டினாள். எமது சரித்திரத்தை நான் முதலாவதாக விரும்பியது எனது தாயினால்தான். என்னைப் போன்று விரும்பியவர்கள் ஆயிர மாயிரம் பேரோடு அவளும் மடிந்தாள். இவ்வளவு தாங்க முடியாத அனுபவங்களையும் பெற நான் மட்டும் ஏன் உயிர் வாழ்கிறேன் என்னுமளவுக்கு எனது மனம் இப்போது சக்தி இழந்துள்ளது.
இந்தச் சக்தியிழந்த உள்ளம் என்னை மீண்டும் பிறந்த கிராமத் துக்குச் செல்ல வற்புறுத்துகின்றது. எவருடைய கண்களினுட்படா மல் அங்கு செல்வதற்கு இரவைப் பொருத்தமானதாகத் தேர்ந் தெடுத்துக் கொள்கிறேன். எனது உயிர்த்துடிப்புள்ள இந்திரியங்கள் இரவில்தான் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறது. கண்களினால் இரு ளைத் தெளிவாகப் பார்க்க முடியும். காதுகளினால் ஓசையைக் சிக்க லின்றிக் கேட்க முடியும். காலந்தொட்டு இருளோடு எனக்கிருந்த உறவு என்னை இராப் பூச்சிகளாகப் பரிணாமம் செய்துள்ளது.
மிக நீண்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமான ஒருவர் இடையில் எதிர் பாராத விதமாக தனது நோக்கத்தை கைவிட்டது போன்று கிராமம் அப்படியே நிற்கின்றது. குழந்தைப் பருவத்தில் ஒடியாடித் திரிந்த மேடுபள்ளங்களும் வயல்களும் புல் வெளியும் எதுவுமே நடக்காதது போன்று காட்சியளிக்கின்றது. இருந்தாலும் அங்கு வாழும் எல்லோரி னதும் மன நிலையும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. சென்ற காலங்களில் நாட்டில் நடந்த யுத்தம் எல்லாவற்றையுமே வித்தியாசப்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் என் றுமே அனுபவிக்காத மிருகத்தனமான அனுபவங்கள் மக்களின் ஆத்
- S -

Page 9
மீகத்தை சுக்கு நூறாக்கியுள்ளது. நடந்தது என்ன என்று விளங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் மலைத்துப் போய் உள்ளனர். காலம் அதற்கு விரும்பியவாறு செல்கிறது. அங்கு சூரியன் உதிப்பதும் மறை வதும் இயற்கை நியதிப்படி மட்டுமே போன்று நம்பிக்கை இழந்த மக்களின் வாழ்க்கை ஆடி அசைகிறது:
கிராமத்தவர்களிடையே எனது தாய் மிகவும் பிரபல்லியமான பாத்திரம். கிராமத்தவர்களின் எல்லாக் காரியங்களிலும் மிகவும் ஆர் வத்தோடு பங்கு கொண்ட அவள் எல்லோரினதும் தாயாக இருந் தாள். நான் ஒரு பட்டதாரியாகையால் கிராமத்தவர்களிடம் என் னைப்பற்றி இருந்த கெளரவபூர்வமான மதிப்பாகும். நாட்டில் எழுந்த சிவில் யுத்தம் கிராமத்தவர்களுக்கு ஆரம்பத்தில் புதுமை யானதாகவே இருந்தது. நானும் தெரிந்த படித்த இளைஞர்களின் அன்றாட சம்பாஷணைகள் பலரிடத்தில் அவர்களை வீரர்களாக்கி யது. எனினும் யுத்தம் தமது வீட்டுக்கு முன் எறியும்போது எல்லாம் தலை கீழாக மாறியது. அவைகளும் மாறாத ஒரே பாத்திரம் எனது தாய் மட்டும்தான் பிற்காலத்தில் யுத்தம் எனது தாயைப் பலி கொண்டபோது மரணத்தின் எல்லாப் பொறுப்பையும் என்மேல் சுமத்துமளவுக்கு கிராமவாசிகள் தூரச்சிந்திப்பவர்களாக இருக்க வில்லை. அது யுத்தத்தின் இயல்பாகும். யுத்தத்திற்கு இடைப்படு பவர்களின் சுபாவமாகும்.
நான் எனது குடிசை இருந்த இடத்தை "சேபாலிகா” மலர்ச் செடியின் உதவியோடு கண்டுபிடித்தேன். கிழக்கிற்கு நேராக இருந்த வீட்டின் முன்புற வாசலின் முன் முற்றத்தில் அந்த "சேபாலிகா" செடி செழிப்பாக நிற்கிறது. இருந்தாலும் எனது தாயும் குடிசை யும் அவ்விடத்திலில்லை. இடிந்த மண் சுவரொன்றின் பாதியும், கரிந்த சில காம்புகளும் வீட்டுக்குப்பதிலாகத் தெரிகின்றது.
நான் "சேபாலிகா செடியருகில் அமர்ந்து கொண்டேன். பாதிச் சந்திரனில் மங்கலான ஒளி "சேபாலிகா” கொத்துக் சளினூடே எனது முன் முற்றத்தில் ஒவியம் வரைகிறது. அந்த ஒவியத்தில் தாய் எனது கண்களில் படும்போது எனது மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. தாயின் முகத்திலிருந்து தாய்மை பொங்கி வடிகிறது. அம்மா என தருகில் அமர்ந்து கொண்டாள்.
"என்னைக் கண்டதும் அம்மாவுக்கு அழுகை வருமென நினைத் தேன்.?" முதலில் நான் அமைதியைக் கலைத்தேன்.
- 4 -

"நான் உனக்கு அழக்கற்றுக்கொடுக்கவில்லை மகனே! இந்தப்
பூமி கரையும் வரை அழுவதற்குக் காரணங்கள் இருந்தாலும் நாங்கள் அழுதென்று ஆகப்போவது என்ன?”
எனது தாய் இன்னும் அன்றுபோலவேதான் அவள் ஒரு கரும் புப் பெண். அகால மரணமான எனது தந்தையின் ஆண்மையும் விகாரமகா - தேவியின் தியாகம் அவளை ஒரு அசாதாரணமான பெண்ணாக்கியது.
"உங்களது சாவுக்காவது எனக்கு வரக்கிடைக்கவில்லை. சில நேரங்களில் நினைக்கின்றேன் நான் ஒரு அபாக்கியசாலியென்று. "எனது சாவுக்கு வருவதில் அவ்வளவு ஒன்றும் பெறுமதியில்லை மகனே! நான் உன்னை மனிதனாக்கியது எனது சடலத்தின் மூன் கதறி அழவல்ல. அவள் இன்னும் எனது தாய்தான்.
"கிராமத்தவர்களின் கதை உங்களது சாவுக்குக் காரணம் தானென்று.?" தாயின் உதடுகளின் புன்னகை தவழ்கிறது. அது தணிந்த சாந்தமான சிரிப்பாகும். அதில் நான் வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண்கின்றேன்.
"உன்னைக் காணாமல் நான் வேதனைகளை அனுபவித்தது உண்மை. பிள்ளைகளின் பாதுகாப்புத் தேவையான காலத்தில் யாரு டைய உதவியுமில்லாமல் காலத்தைக் கழித்ததும் உண்மை. அந்தக் கஷ்டங்களையும் தனிமையையும் தாங்கிக்கொள்ளுமளவுக்கு எனது மனதுக்கு தைரியமிருந்தாலும் அந்தப் பாழாய்ப்போன வயது போன உடம்புக்குச் சக்தி இருக்கவில்லை மகனே. நான் மரணித்தது எனது தேவைக்காகவல்ல. இயற்கையின் தேவைக்கு இல்லாவிட்டால் பசிக்கு உணவில்லாமல், அணியத் துணியில்லாமல் நாதியற்றுத் திரியும் உனக்கு ஒரு சொட்டுக்கஞ்சி சமைத்துத்தர உயிரோடு வாழ்த்திருப் பேன். இந்த மனிதர்கள் அப்பாவிகளடா, அவர்கள் பேச்சுக்களை அவ்வளவு நினைக்காதே."
நிலா ஒளி இவ்வளவு அழகாக எனது தாயின் முகத்தை வரை வது அபூர்வமானது. நான் இப்போது கதைப்பது எனது தாயுடன் தான் என்று நினைக்க முடியாத அளவுக்கு இயற்கையானது அவ ளோடு இன்னும் எவ்வளவு நேரமானாலும் கதைக்கலாம் போன்று எனது தாயோடு கழியும் இந்த இரவு என்னை மேலும் புதியவ னாக்கிறது. பாழாய்ப்போன அந்தப் பகலுக்கு இடம் கொடுத்து போகவிடாமல் இந்தக் கருண்ட இரவை இறுக அனைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். இருந்தாலும் விரல்களினூடே

Page 10
இந்த இரவு நலிந்து செல்லுமென்றும் அதன் பின் உதயமாகும் பகல் நிம்மதியில்லாதது என்றும் எனக்குத் தெரியும். பகல் நேரத்தில் நக ரத்தில் அலையும் ஆயிரமாயிரம் ஜனங்களிடையே எனது மனம் தாங்கமுடியாத தனிமையில் தவிப்பதும் எனக்குத் தெரியும். எனது முன் இப்போது அமர்ந்திருப்பது எனது தாய்தான் என்று உங்க ளுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். அது ஒரு கலைஞனின் அதி சிரேஷ்ட படைப்பாகும். நான் மீண்டும் பேசுகிறேன்.
"அம்மா, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் எங்களது மனிதர் கள் அப்பாவிகள் என்று.?"
"ஒருவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் எதுவும் இல்லாமல் போகலாம். உதவிக்கு எவரும் இல்லாமல் இருக்கலாம். அவனுக்குத் தனது நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அதற்கான காரணத்தை உணர்ந்து கொள்ள முடியாவிட்டால் அவன் அப்பாவிதான். இன்னும் ஒருவனுக்கு சாகாமல் வாழ சொற்பம் இருக்கலாம். அந்த அளவுக்கு இதுதான் வாழ்க்கை என்று அவன் நினைப்பா னென்றால் அவனும் அப்பாவிதான். நான் ஏன் அப்ப டிச் சொல்கிறேன் என்றால் இவர்கள் எப்போதும் இந்த நிலையில் இருந்தும் விடுபடவேண்டிய அறிவைப் பெறமாட்டார்கள். இவர்கள் போன்ற அப்பாவிகள் அதிகமாக இருக்கும் நாடு எவ்வளவு அப்பா வித்தனமானது என்று இன்னும் விளங்கவைக்க வேண்டுமா மகனே..?
"இருந்தாலும் அம்மா இவர்கள் எப்போதாவது தமது அப்பா வித்தனத்தைப் புரிந்து கொள்வார்கள்தானே?"
"ஆமாம் மகனே! அதற்காகத்தான் நான் உனக்கு நீண்ட ஆயு ளைப் பிரார்த்திக்கிறேன். அப்போது நீ அவர்களுக்குத் தேவைப்படு வாய். அந்த நாளைக்கு தமக்காகச் சாவதற்கு ஒருவன் அவர்களுக் குத் தேவைப்படும்."
எனது தாயின் கருண்ட கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர்த் துளிகள் கன்னம் வழியாக வடிகிறது. அக்கண்ணிர்த்துளி களினால் சூழ்ந்து செல்லும் நிலாக் கதிர்கள் கண்ணிர்த்துளிகளி னுள்ளே அடங்கியுள்ள அத்தனையோடும் மீண்டும் வெளியே வரு கிறது. அதனுள் அடங்கியிருப்பது அவ்வளவும் பிரார்த்தனைகளாகும் மிகவும் உன்னதமான ஓர் உலகுக்காக வேண்டிய பிரார்த்தனையா கும். இந்த உலகத்தில் இனி எப்போதுமே தான் மீண்டும் பிறப்ப தில்லை என்று அவளுக்கு தெரியும், இதைத் தெரிந்தும் உன்னத மான ஒரு சமுதாயத்துக்காகப் பிரார்த்திக்கிறாள். உயர்ந்த மனிதத்
- 16 as

தன்மை மரணத்தின் முன் மலைப்பதில்லை. மரணத்தின் பின்பு மறைவதுமில்லை. சரித்திரத்தினுள் பாதுகாப்பாக நிலைத்து நிற் கும் மரணித்த எனது தாய் வாழும் எமக்கு உண்மையான ஒரு உலகைப் பிரார்த்திக்கிறார்கள். அந்தஉலகுக்காக எனது மரணத்தை யும் எதிர்பார்க்கிறார்கள். அதாவது பிரார்த்தனை அவளது பிள்ளை யான எனக்கு மற்றுமோர் அழகான உலகல்ல. அப்படியானால் என்ன? தாயும் நானும் பிறந்த இந்த மண்ணில் நாளை பிறக்கும் இந்தப் பாக்கியம் எப்படிக்கிடைத்ததென்று எனக்கு இன்னும் விளங்கு வதில்லை.
எனது தாய் உயிரோடு இருக்கும்போது பல குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும் என விரும்பினாள். இருந்தாலும் அவளது வயிற் றில் ஒரே மகனாகப் பிறக்கும் அதிஷ்டம் எனக்கு மட்டும்தான் கிடைத்தது. எனக்கு வயது ஒன்று ஆகுமுன் எனது தந்தை இறந்த தாக தாயிடமிருந்து தெரிந்து கொண்டேன். எமது நாட்டில் ஏற் பட்ட முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரத்தின்போது ஒரு தமிழ் டாக்டரின் பாதுகாப்பிற்காக எனது தந்தை எடுத்த முயற்சி அவ ருக்கு மரணத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. எவ்வளவு வேதனை யுடனானாலும் தந்தையின் மரணத்தை எனது தாய் ஞாபகப்படுத்து வது மிகவும் ஆடம்பரத்துடன்தான். அந்த ஆடம்பரமான உணர்வை எமது உடம்பின் ஒவ்வொரு நரம்புகளினும் உட்புகுத்த அவளுக்குத் தேவைப்பட்டது. அவள் எனக்கு ஊற்றிய ஒவ்வொரு பால் துளிகளிலும் அந்த உணர்வின் சாறு நிறைந்திருந்தது. பேசக் கற்றுக் கொண்ட நாள் தொட்டு மனித சமுதாயத்தின் மீது அள விட முடியாது ஒரு பற்று வளரத்தொடங்கியது. அதனால்தான் என நினைக்கிறேன். எனக்கு மனிதனாக வாழத் கற்றுத் தந்த தாய் எனது பாதுகாப்பும் உதவியும் அவசியமான காலகட்டத்தில் மிகவும் பரிதாபமாக மரணித்தாள். அமைதியாக மரணித்தாள். சந்தோஷமாக மரணித்தாள்.
யுத்தம் கொடூரமானது நாடுகளிடையே நடந்தாலும் நாட்டி னுள் நடந்தாலும் அதனது தன்மை அவ்வளவு வித்தியாசமாகாது. யுத்தம் மனித ஆத்மீகத்தினுள் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத் தக்கூடிய அளவுக்குச் சக்தி வாய்ந்தது. யுத்தத்தின் போது ஆயிர மாயிரம் பேர் மடிவர். அதற்கு சிறுவர்கள், வயோதிபர்கள், பெண் கள் என்று வித்தியாசமில்லை. அது எல்லோருக்கும் சமமாக உ சரிக்கும். யுத்தத்தின் இறுதியில் ஆயிரம் பேர் மரணித்தாலும் மனி தத் தன்மை மரணிக்காது. அது எங்கோ ஒரு மூலையில் நிசப்தமாக
پس 17 بدست

Page 11
ஒதுங்கி இருந்தாலும் அவசியம் ஏற்படும் போது எழுந்து நிற்கும். யுத்தம் விழுங்கிக்கொள்வது அதற்குச் சம்பந்தப்பட்டவர்களை மட்டு மல்ல. அதிகமான சந்தர்பங்களில் அதற்குச் சம்பந்தப்படாமல் ஒதுங்கி வாழ முயற்சிப்பவர்களையும் விட்டு விடாது. காரணம் யுத்தங்கள்ஏற் படுவது முழு மனித சமுதாயத்தையும் இரண்டு கூறுகளாகப் பிரித் ததின் பின்பே.
யுத்தத்தை முன்னிட்டுக் கொண்டு மரணம் எனது குடிசைக்கு என்னைத்தேடி பலமுறை வந்ததாக அறிந்தேன். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மரணத்தை திருப்பி அனுப்பக்கூடிய அளவுக்கு எனது தாய் சக்தியுள்ளவளாக இருந்தாள். எனினும் மரணத்திட மிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளமுயற்சித்த ஒவ்வொரு சந் தர்ப்பங்களிலும் மரணத்தின் குளிர்ந்த கைகள் எனது தாயைஅனைத் துக் கொண்டிருக்க வேண்டும். தாயின் நிலைமையைத் தேடியறியக் கூடியசந்தர்ப்பங்களை அப்போது யுத்தம் எனக்குத்தந்திருக்க வில்லை. "சேயலிகா" மலர்கள் ஒவ்வொன்றாக விழுந்து தாயின் கழுத்தில் மாலை கோர்ப்பதை நிலா ஒளியில் காண்கிறேன். அவனது உதடு களின் புன்னகை தவழ்கிறது.
"நீ இப்போது எங்கு போகிறாய் மகனே..?
*" போக வேண்டிய இடங்கள் எனக்கு எவ்வளவோ உண்டு அம்மா ஆனால் தங்குவதற்குத்தான் இடமில்லை."
'மகனே நீ மிகவும் கவனமாக இரு. மரணம் மிகவும் கொடி யது. எந்த நேரமும் அது தொடர்ந்து வாழவேண்டியவர்கள் பின்னே தான். ஆனால் சரித்திரம் என்பது அதுபோன்றவர்கள் மரணத் தோடு செய்த போராட்டங்களையே. அந்த முயற்சிகளின் போது பலர் மரணித்தனர். இருந்தாலும் மரணத்தை அவர்கள் வென்றனர். இன்று நீ பாடங்கள் படிப்பது அந்தமாதிரி மரணத்தை வென்றவர் களிடம்தான். அதனால் உனக்குத் தவறாது மகனே, நம்பிக்கை களைத் தவறாமல் பாதுகாத்துக் கொள். ஒருவனை வாழவைக்க ஒரு சிறிய நம்பிக்கை மட்டும் போதும்.'
*சேபலிகா” மலர்க் கொத்துக்களுடே நிலா ஒளி பரவுவது எதிர் பாராமல் நின்றது, பாதிச் சந்திரன் ஒரு பெரிய மேகத்தினுள் ஒளிந்து கொண்டது. நிலா ஒளி படர்ந்த தாயின் ஓவியம் மங்கிச் சென்றது. "சேபலிகா” மலர்கள் முற்றம் பூராவும் சிதறிக் கிடந்தன. தூரத்தில் நாய் 3 ஸ்ரின் அவல ஒலம் ஒலிக்கின்றது. மனிதனை வாழ வைக்க ஒரு சிறிய நம்பிக்கை மட்டும் போதுமென்றால் எனது உள்ளத்திலுள்ள நம்பிக்கைகள் என்னை நீண்டகாலம் வாழவைக்கும். உயிரில்லாத தனது உடம்புக்கு மீண்டும் உயிர் கிடைத்துள்ளது. நான் கால்களை ஊன்றி எழுந்து நிற்கிறேன். ஒரு நேரத்தில் எங் கேயோ ஓரிடத்தில் யாராவது ஒருவர் அதனை ஆரம்பித்து வைப் பார். அது அப்படி ஆகாவிட்டால் நான் அதனை ஆரம்பித்துவைப் பேன். எனது வாலிபம் அவசரமாக என்னைவிட்டுப் பிரியாமலிருக்க நான் பிரார்த்திக்கிறேன். \
சிங்களத்தில்- அசோக ஹந்தகம, மொழிபெயர்ப்பு- மொஹமட் றாசூக்
- 18 -

长大大大大大大大大大大大大大大大大大大k米 மனித விடிவு எங்கே?
EELYS0AS0 SKSKSKL 0L S0AKSLK0LKS0LS0LSK0LS0LSKYYK
மனிதன் சமூக சூழலில் வளர்கின்றான். அதில் அவன் ஓர் ஆபாச அழுக்கு மிக்க இயங்கும் பண்டமா? இல்லை மனசாட்சிக்கு பயந்து மனச்சாட்சிக்கு ஏற்ற வடிக்கட்டிய உண்மைகளை பிரதிபலிக்கும் காட்சிப் பொருளா? இல்லை என்றால் உண்மை நிலையை அறிந்து
சமூகத்தை மாற்றும் கருவியா? இதனைப் பற்றி சற்று ஆராய் Gauntuh.
சமுதாயத்தில் எல்லோருமே சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவ தில்லை. சில சமுதாயங்களில் சூழல், அப்போது அடிக்கின்ற வேக மான அலைகளைக் கொண்டு பெரும்பான்மையானோர் ஒரு சமு தாயத்தின் மேன்மைக்கோ தாழ்வுக்கோ உடன்பாடாக இருக்கின் றார்கள். இந்த நவீன மனித சமூகத்தின் பெரும்பான்மையானோர் வசதியாக, தங்கள் சுய நலன் கருதியே இயங்குகின்றார்கள்.
இப்படியான ஒரு நிலை நவீன முதலாளித்துவ சமூக அமைப்பில் உருவாகி உள்ளது. அது மட்டுமல்ல இந்த போக்கு மித மிஞ்சிப் பரவி வருவதால், மனித உணர்வுக்கு இடம் கொடுக்குமா? என்ற வினா பலர் மத்தியில் சர்ச்சை செய்கின்றது. விடுதலை என்ற பதம் "மிக ஆழமான கருத்தைக் கொண்டதாகும். சமூக பொருளா தார அரசியல் விடுதலை என்பது வெறும் சொற்கோவைகள் என்றால் நாம் நன்மை ஏமாற்றிக் கொள்கின்றோம் என்பதாகும்.
இன்று மார்க்ஸிய சித்தாந்தமே முதலாளித்துவ சமுதாய அமைப் பில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஒர் இலட்சியம், குறிக் கோள் கொடுத்தது எனலாம். அதைப் போன்று மதங்களும் தந்தி ருக்கின்றன. இதனை சமூக, அரசியல் ரீதியாக பார்க்க வேண்டு மென்றால் மார்க்ஸிய தந்தைகளின் முக்கியத்தவரான தோழர் ஏன்ஜல்சின் மிக முக்கிய தோழரான கார்ல் கவுட்ஸ்கியின் நூலான Foundation of Christiannity9) w Ur i ś56)rt b. geofi AB (Tub Guofbg/dl பிடப்பட்ட மூன்று விதமான மனிதர்களைப் பார்ப்போம்.
ஆபாச மனிதன்
உயிர் வாழ்கின்ற பிறவிகளில் மனிதப்பிறவி தான், உயர்ந்தது என்பதற்கான சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் சிலர் சொல்
དང་རས་ལྷམ་གཡ- 79 - ས་ཁམས་

Page 12
வார்கள் சில மிருகங்கள் மனிதர்களை விட மேலானதாக உள்ளதே என்று. இதனைப்பற்றிய விவகாரம் நமக்கு அவசியமற்றது. மனிதன் தோன்றி பல இலட்சக்கணக்கான வருடங்கள் ஆகின்றன. மனிதனின் பரிணாமம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. என்றாலும், மனிதனின் ஆத்மீக சக்தி நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளதா? மனிதன் பல சாதனைகள் செய்யலாம். எனினும் அவன் தன் உயிரைப் போன்று பிற உயிரின் பால், அன்பு கொண்டுள்ளானா? தன் உயிரை அர்ப் பணித்தாவது பெரும்பான்மையான மக்கள் பிறர் உயிரை காப் பாற்றுகின்றார்களா?
இந்த நிலையில் இன்று பணத்திற்காக இன்னொரு உயிரை கொலை செய்கின்ற மனிதர்கள் உள்ளனர். இவர்கள் மத்தியிலும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒடுக்கிப்பட்ட மக்களான கொலை, கொள்ளை இன்னும் பல தவறுகள் பணத்திற்காக செய்கின்றார்கள். இதில் இரண்டாவது தரத்தினர்.
முதலாளி ஒருவர் தருகின்ற பணத்தில் பாதியோ கால் பங்கோ, அந்த கீழ்தரப்பட்ட மனிதர்களுக்குக் கொடுத்து, அந்த முதல்தர மனிதர்களின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுகின்றவர்கள் ஆனால், இந்த முதல் தர மனிதனோ தான் ஒரு பெரும் தர்மகர்த்தா என தான் கொள்ளை, சுரண்டல் செய்கின்ற பணத்தில் தாராளமாக கொடுத்து கொடை வள்ளலாக நிகழ்கின்றவர்கள். இவர் கொடுக் கின்ற பணமோ அத்தனையும் கறுப்புப் பணங்கள், புத்தகங்களில் பதியாதவை.
மனச்சாட்சி மனிதன்
மனச்சாட்சிக்கு முக்கியம் கொடுத்து தர்மத்தை பிரதிபலிக்கின்ற வர்கள் இருக்கின்றார்கள். எனினும் நீதிமன்றம், பொலிஸ் போன்ற இடங்களுக்கு நீதிக்காகச் சென்று செயல்படப் பயப்படுவார்கள். ஆனால் மறைமுகமாக அநீதியை எதிர்க்க உதவி செய்வார்கள். சில அவசியமான முக்கியமான கட்டத்தில் காலைவாரி விடுவதுமுண்டு. மனதில் பல கருத்துக்கள் அலை மோதினாலும் சமூக மாற்றத்திற்கு இவர்கள் பயன்படாவிட்டால் மனச்சாட்சி மட்டுமிருந்து இவர்களால் என்ன பயன்?
சமூகத்தை மாற்றும் மனிதன்
இன்று சமூகத்திற்காக ஏதாவது செய்ய முற்பட்டால் பெருபா லானோர் கேட்கும் கேள்வி தான் இது. இதில் உங்களுக்கு என்ன இலாபம் இருக்கிறது? இதில் உங்களுக்கு ஏதாவது கிடைக்கின்றதா? இப்படி எல்லோருமே சுய தேவையை சுய இலாபத்தை தேடிச் சென் றால் இவ்வலகம் இப்படியா இருக்கும் அதர்மத்தின் வாசலாக அல்லவா இருக்கும்?
مس۔ 20 ہیبس

1986 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸிலிருந்து திரு. மொண்டேஜரி என்ற ஒரு நண்பர் இலங்கைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு சுவை பான கதை ஒன்றை சொன்னார்.
ஒருவன் திடீரென்று இறந்து விடுகின்றான். அவன் நகரத்திை பார்வையிடுகின்றான். அங்கே மனிதர்களுக்கு நீண்ட கைகள், ஆனால் உணவு நிறைய உண்டு. ஆனால் அவர்களால் உண்ணமுடியவில்லை; கைகள் அவ்வளவு நீளமாக இருப்பதால், அந்தக் கை வாயைத் தொட முடியாமல் இருப்பதால் அந்த உணவு வீசப்படுகின்றது. உணவுகள் விரயமாக்கப்படுகின்றன.
அடுத்து அந்த இறந்த உடலின் ஆவி சொர்க்கத்தை பார்வை இடுகின்றது. அங்கேயும், நீண்ட கைகளைக் கொண்ட மனிதர்கள் நிறைய உணவுகள், மிக சந்தோசமாக பழகிக்கொண்டிருந்தார்கள். உணவுகள் விரயமாகவில்லை. எப்படி? அந்த நீண்ட கைகளால் அடுத்தவனுக்கு உணவை ஊட்டினான் அந்த நண்பன். அவனுடைய நீண்ட கைகளால் இவனுக்கு உணவை ஊட்டினான். அதன் மூலம் அன்பு சகோதரத்துவம் வளர்கின்றது.
அப்படியான அன்பும் சகோதரத்துவமும் இப்பூமியிலும் வாய்ந் தால், பற்றாக்குறை, வீண்விரயம் போன்றன இருக்காது. அதற்கு முக்கியமாக தேவைப்படுவது அகங்காரமும் மமங்காரமும் இல்லாத பக்குவம் பெற்ற உள்ளங்கள் தான். இவ்விரண்டும் எவை? என்பதை Lumri GSlumr b.
மனித விடுதலைக்கு வள்ளுவன் தருகின்ற கருத்து சாலச் சிறந்த தாகும். 'யான் எனது எனும் செறுக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்." என்கின்றான்: இங்கே யான் என்றால் அகங்காரம் தமிழின் உடல் பற்று. என்றால் மமங்காரம். தமிழில் சொல்வதென்றால் உடமைப்பற்று இந்த இரண்டு செறுக்கினையும் எவன் ஒழிக்கின்றானோ அவன் உயர்ந்த உலகத்தை அடைவான் என்கின்றான்.
இங்கே உடல்பற்று உடமைப் பற்று அற்றவன். சமுதாயத்தை மாற்றும் கருவியாக தோன்றுவான். அப்படிப்பட்ட மனித கருவிகள் மூலம் தான் மனித விடுதலைக்கு வித்திட முடியும்.
ஆம். கம்பன் கண்ட சமுதாயமான, "எல்லோரும் எல்லா பெருஞ் செல்வம் எய்தலாமே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை" என்ற மனித சமுதாயத்தைப் படைக்க முடியும், v
- வி எல் பெரைரா
- 31 -

Page 13
ஒடிப்போனவன் . . .
-பிரெஞ்சுக் கவிஞர் போரிஸ்வியான்.
குடியரசுத் தலைவர் அவர்களே இதோ உங்களுக்கு ஒரு கடிதம் நீங்கள் ஒருவேளை அதைப் படிக்கலாம் உங்களுக்கு நேரம் இருந்தால்
இப்போதுதான் கிடைத்தன எனக்கு ராணுவத்திலிருந்து உத்தரவுக் காகிதங்கள் புதன்பொழுது சாய்வதற்குமுன் போருக்குப் புறப்படச் சொல்லி
குடியரசுத் தலைவர் அவர்களே நான் அப்படிச் செய்யப்போவதில்லை இந்த பூமியில் நான் பிறந்தது ஒன்றுமறியா மக்களைக் கொல்வதற்கல்ல
உங்களுக்குக் கோபமூட்ட வேண்டுமென்றல்ல ஆனாலும் நான் சொல்லத்தான் வேண்டும் என் முடிவு எடுக்கப்பட்டு விட்டது நான் ஓடிப் போகப் போகிறேன்
பிறந்ததுமுதல் இன்றுவரை பார்த்துவிட்டேன் எல்லாம் தந்தையின் சாவு; சகோதரர்களின் பிரிவு என் குழந்தைகளின் அழுகை
இன்று கல்லறைக்குள்ளிருக்கும் என் அன்னை எவ்வளவு துன்புற்றிருக்கிறாள் இன்று அவளுக்குத் துக்கமாகிவிட்டன குண்டுகளும் கவிதை வரிகளும்
நான் கைதியாக இருந்தபோது என்னிடமிருந்து பறிக்கப்பட்டன என் மனைவி என் ஆத்மா இனிய என் கடந்தகாலம் முழுவதும்
நாளை அதிகாலையில் இறந்த ஆண்டுகளின் முகத்தில் அறைந்து சாற்றுவேன் என் கதவை புறப்பட்டுச் செல்வேன் என் பாதையில்!
ー 22ー

பிச்சையெடுத்து வாழ்வேன் பிரான்ஸ் நாட்டு வீதிகளில் வடமேற்கிலிருந்து தென் திசைவரை மக்களிடம் எடுத்துச் செல்வேன்
மறுங்கள் அடிபணிய மறுங்கள் போர் புரிய போகாதீர்கள் போருக்கு புறப்பட மறுங்கள் நாட்டுக்கு இரத்தம் தேவையென்றால் நீங்கள் போய்த் தாருங்கள் தெய்வ தூதராயிற்றே நீங்கள் குடியரசுத் தலைவர்அவர்களே என்னை பின்தொடர்வதானால் சேவகர்களிடம் சொல்லிவிடுங்கள் ஆயுதமிருக்காது என்னிடம் தைரியமாகச் சுடலாம்!
தமிழில்: வெ. பூரீராம் நன்றி: இனி
மலையக இலக்கிய அவை என்ற பெயரால் அப்பாவி மலை யக எழுத்தாளர்கள் சுரண்டப்படும் கொடுமை அண்மையில் தெரியவந்துள்ளது.
கண்டியில் வாழும் படைப்பாளி ஒருவரது படைப்பு நூல் :
ஒன்றின் 100 பிரதிகளை கொழும்புவாசி ஒருவர் கலாச்சார : அமைச்சில் ஒப்படைத்து ரூபா 5000/- பெற்றுள்ளார்.
படைப்பாளி பணம் கேட்டதற்கு கொழும்புவாசி இன்னும் அமைச்சில் இருந்து பணம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். படைப்பாளி அமைச்சிடம் மீண்டும் 100 புத் தகங்களை ஒப்படைத்து, 5000/- ஊக்குவிப்புப் பணம் பெற முயன்றுள் ளார். பணம் வழங்க அமைச்சர் அங்கீகாரம் வழங்கி பணம்' வழங்கும் பட்டியலை அதிகாரிகள் பார்வையிட்ட போது ஏற் கனவே இந் நூலுக்கு ரூபா 5000/- வழங்கியது தெரியவந்துள் ளது. கொழும்பு வாசியை இன்னும் தேடுகின்றார் மலையக படைப்பாளி.
இது போல எத்தனையோ மலையகப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் கொழும்பு வாசியால் சுரண்டப்பட்டதாக இப்போது தான் தெரியவந்துள்ளது.
மலையகப் படைப்பாளிகள் தொழிற்சங்கவாதிகளால் சுரண் டப்படுவது நாம் அறிந்த உண்மை.
மலையக படைப்பாளிகளும் சுரண்டப்படுவது நாம் அறியாத 6600,
தகவல்: வி. என். சுப்ரமணியம் மஸ்கெலியா
- 23 m

Page 14
V I D) I V U
130, D. s. SENANAYAKE VEEDIYA, KANDY:
பிரதம ஆசிரியர்:- நிதானிதாசன் (ஆர். எம். இம்தியாஸ்) ஆசிரியர் குழு:- கண்டி எம். ராமச்சந்திரன் நவாஸ் ஏ ஹமீட் கலாநெஞ்சன் ஷாஜஹான் எஸ். பி. செல்வராஜ் எம். பாலகிருஷ்ணன்
大 முகவரி;-
130, டி. எஸ். எஸ். வீதி, கண்டி. தொலைபேசி: 08 - 23196
大 சந்தா விபரம்:-
ஆறுமாதச் சந்த" - ரூ. 30-00 ஒருவருடச் சந்தா - ரூ. 60-00
தபால் செலவு உட்பட
சந்தா அனுப்ப விரும்புவோ ரும், தனிப் பிரதிகளைக் கொள் வனவு செய்ய விரும்புவோரும்.
பெறுநராக
R., M. TMITIYAZ 6T6aT 6yuib, g5 umr லகமாக Kandy எனவும் இட
வும்.
t ஆக்கங்களுக்கு பொறுப்பேயன்றி ஆசிரியரல்ல.
ஆக்கியோரே
மக்கள் கலை,
ம. க. இ. பே கிளைச் செய்திகள்
ம. க. இ. பே கொழும்புக் கிளை புத்தக, ஒவியக் கண் காட்சியினை ஒழுங்குசெய்து வுள்ளது. நூலாசிரியர்கள், சஞ்சிகையாசிரியர்கள், ஓவி யர்கள் கீழ்வரும் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். எம். பாலகிருஷ்ணன் (செயலாளர்) 33 "பீ"பூரீதம்மாமாவத்தை கொழும்பு-10,
இலக்கியப் பேரவையில் புதி தாக இணைய விரும்புவோரிகள் கீழ்வரும் முகவரியுடன் தொட்ர்புகொண்டு விண் ணப்பப் படிவங்களை பெறு மாறு வேண்டப் படுகின் றார்கள்.
நிதானிதாசன், 130, டி.எஸ்.எஸ். வீதி, கண்டி
O ம. க. இ. பே, கண்டி கலை
மகள் வித்தியாலயத்துக்கு 500/- ரூபா பெறுமதியான புத்தகங்களை அன்பளிப்புச் செய்தது.
O ம. க. இ. பே. கொழும்புக்
கிளை விரைவில் திறந்த வெளிக் s ać u Dr i 35 h ஒன்றை நடாத்தத் திட்ட மிட்டுள்ளது.
سسسس - 24 سسسس

With the Best Compliments
from
E. G. ADAMALY & CO., LTD.
136, 4th CROSS STREET, COLOMBO-11. COMMISSION DEPT.
T. Phones : 24170 T. Grams : MALDIVA
With Best Compliments
-Sathiga
JEWELLERYS
Dealers in Jewellerys & Goldsmith tools
No. 201, SEA STREET, COLOMBO-1. Te: 4 2 3 O 9 7 SRI LANKA.

Page 15
மக்கள் கலை, இல
வெளி
பாட்டாளிக்குப் பரிசு (se - முத்துசம்பந்தர் இரு வேறு எஃகுப் பூக்க
- எம். பாலகிருஷ்ணன்
மெட்டுச்சரம் (இஸ்லாமிய - கலா நெஞ்சன் சாஜஹ
உன் நினைவுதீரா வசந்த விடிவு (சஞ்சிகை)
தொடர்புகள் :
130, D. S. S. E
With the Best (
N. M. S. BUKHA
Dealers in Textiles.
17 A, SECOND COLOM
Phonc : 2 5 8 5 7
Printed BY THE KUMARAN PR

க்கியப் பேரவையின்
பீடுகள் :
தைகள்)
ec. 10.00
ள் (கவிதைகள்)
e5. 10.00
பாடல்கள்) Drt ଙr es. 10.00
ம் (கவிதைகள்) ec. 12.00
நிதானிதாசன் ধঢ়, 6.00
ROAD, KANDY.
Compliments from
RI HADJIAR & CO.
нозiery"& Umbrella
CROSS STREET BO-1 1,
Grams : BAABUNA
ESS 20 DA STREET COLOMBO 2