கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1992 (14)

Page 1
| | 巽、|M
脏、|
பரிபடம் l தேயிச
GLITim, Iri
உங்களை இரட்சிக்க இரை பாக் கொடுமை երրոIII LIւլ
தேயிலைக் சண்டையி கயவாத்து அடிமை வி அறுத்தே உங்களால்
 
 
 

டிய மண்ணில் 亡笛1
禹
மண்ணிக் தர்களோ -
வந்தவர்களே குவதனால்
LITT IGIT LI ாது உள்ளது.
கொழுந்துகளுடன் ட்டுக் கொள்ளும் கி கத்திகளாக லங்குகளையும் பிய முடியுமென்பதனை
உறுதிப்படுத்த முடியாதா?
བ།-།།།།aIt ff; f
56 ༧, 1992
திவர் ரேல்ை 5வண்டு

Page 2
}
70ith 3eer compliments fro an
MANOJ ENTERPRISES
WHOLESALE & RETAL DEAL RES N ELECTRONIC, FANCY GOODS ELECTRICAL & READYMADE GARMENTS ETC.
FAVOURTE SHOPPING CENTER
128, 111, 16 Q KEYZER STREET, COLOMBO 1.
T'Phone : 431 86 2 4 4 6 39 7
மத்திய மலை நாட்டின் தலைநகர் கண்டி மாநகரில் நூல் கொள்வனவுகளுக்கு விஜயம் செய்யவேண்டிய ஒரே ஒரு இடம்
கலைவாணி புத்தக நிலையம்
பாடசாலை நூல்கள் முதல், பல்கலைக்கழக பட்டப் படிப்பு நூல் வரை ஒரே இடத்தில் கொள்வனவு செய் யக்கூடிய நம்பிக்கை பெற்ற நிறுவனம். கலைவாணி புத்தக நிலையம்
130, டி. எஸ். எஸ். வீதி, கண்டி,
தொலைபேசி: 08-23196

ଽଝୁ ஆசிரியர் பீடம் 濠
※※※※※※※※※※※※※※※※※
மலையகத் தோட்டங்களை தனியார்மயப்படுத்தும் நடவடிக் கைகளை உசார்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் மலைய கப் பகுதிகளில் நடந்தேறும் அவசரக் கைதுகள், சித்திரவதைகள் யாவும் சர்வதிகார ஆட்சிக்குத் தேவையான அடக்கு முறைகளா (351,0.
மலையகப் பகுதிகளின் தொடர்ச்சியான அநீதியான அடக்கு முறைகளை நாம் திட்டவட்டமாக இப்பகுதி மூலம் தெளிவாக்கி யுள்ளோம். மலையக மக்கள் இலங்கை மண்ணில் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்பட்டுவந்தாலும் இலங்கையின் உயர்வில் அவர்களது தியாகபூர்வமான பங்களிப்பை எந்தவொரு பேரினவாதி யாலும் நிமிாந்து நின்று நிராகரிக்கமுடியாது. அத்தகைய உன்னத மிக்க மக்கள் குழுக்கள் மீது தொடரும் திடீர்க்கைதுகள் சந்தோஷ மான எதிர்காலத்துக்கு எதிர்வுகூறாது.
மலையகமக்களது சகல அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் இன் றைய அரச நிர்வாகத் தலைமைத்துவமே தன்னிகரற்ற தீர்வுகளைத் தரும் என்பதில் எமது தனிப்பெரும் தலைமைகள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றன. அத்தலைமைகளாலும் மலையகத்தின் இன் றைய பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை பெறமுடியாதுள் ளது என்பது மிகவும் வேடிக்கையாள அரசியல் அனுபவமாகும். அதே வேளை சந்தா வினை பெறுவதில் மட்டுமே கடும் ஆர்வத்தைக் காட் டும் ஏனைய அரசசார்பற்ற தொழிற்சங்கங்களும் மலையகக் கைது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கா திருப்பது அவற்றின் கோழைத்தனத்தையும், ஒட்டுண்ணித் தனத்தையுமே காட்டுகின்றன.
மலையக மக்கள் இந்நாட்டின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் உழைக் கும் பாட்டாளி மக்கள். இழப்பதற்கு எதுவுமற்றுள்ள இவர்களது வாழ்வில் தொடர்ச்சியாக சோதனைகள் தொடருவதனை நேர்மை யாக சிந்திப்போர் எவரும் ஏற்கமாட்டார்கள். ஆகவே, குற்ற மற்றவர்களை உடனுக்குடன் விடுவிப்பதும், அநாகரீகமான சித்திர வதைகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதும் மனிதாபிமான கடமை
søft eers Curt D.
- 1 -

Page 3
L00S0LOLSLLLLS0LLCLSOrLsOkeOeOOeOOOOOOOOOO0OsOsOsOsOaOOLOOrOOOssOOsrLrBrrs srrMr
தோட்டங்கள் தனியார் மயமாக்கல்.
한
용 3. O 용 மலையக எதிர்காலம்
vසහනශගශඤඤඥාගූගෘශ: 333333333333333333,
ஆர். எம். இம்தியாஸ்
( பேராதனைப் பல்கலைக்கழகம் )
பெருந் தோட்டத் துறையினை தனியார் மயமாக்கும் திட்டம் தற்போது முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது, 92 ம் ஆண்டின் முக்கியமான சமூகபொருளாதார அரசியல் பிரச்சனையாக இது சிவனத்தைத் தரும் என்பதற்கு கட்டியம் கூறும் விதத்தில் பல சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெறுகின்றன.
1977 களுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்த இலங்கை ஜனநாயக சோஷலிச அரசாங்கத்தின் திட்டவட்டமான கொள்கையாக தனியார் மயம் அமுல் நடாத்தப்பட்டு வருகிறது. இலங்கை போக்குவரத்து சபையின்ை "மக்கள்மயம்" படுத்தியமை முதல் வங்கிகளை "வர்த் தகமய"மாக்சவிருக்கும் செளகரியமான நடவடிக்கைகள்வரை இத் தனியார்மயமே முக்கியத்துவம் பெறுகிறது என்றால் தவறான கருத்தாகாது. இவ்வாறு நீண்டு செல்லும் பட்டியலில்தான் மலையக பெருந்தோட்டங்களும் இடம் பிடித்துள்ளன. ஆனால் இங்கு மக்கள் மயமாக்களுக்குப்பதிலாக தனியார் மயம் என்று வசதியாக உப யோகப்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தனியார் மயத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 215,00 ஹேக்ரெயர் பெரும் தோட்டங்கள் இரண்டு கட்டங்களில் தனியார் துறையிடம் ஒப்படைக்கப் படவிருக்கிறது. உள்ளூர் கம்பணிகளான ஜோன் கீல்ஸ், ஹெயிலிஸ் மகாராஜா அயிற்கென் ஸ்பென்சி மேர் கண்டைல் கிறடிட்போன்றனவும் ஒரு சில பிரித்தானியக் கம்பெனி கள் ஏ. முருகப்பா கம்பனி மற்றும் சில தொழிற்சங்கங்களும் இத் தனி யார் மயத்தின் கீழ் பயன்பெற உள்ளதாக சில தகவல்கள் சொல் குன்றன. இத்திட்டத்தின் கீழ் முழுப் பெருந்தோட்டப் பகுதியும் 12 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு 12 தனியார் துறையினரிடம் ஒப் படைக்கப்படும். தனியார் நிருவாகம் பெருந்தோட்டத்தை இலா!

மீட்டும் வகையில் உருவாக்கிய பிறகு, அடுத்தகட்டமாக வரையறுக் கப்பட்ட பொதுக் கம்பணிகளாக மாற்றப்படும் என்று நம்பகமாக தெரிகிறது.
பெருந்தோட்டங்களை தனியார்மயப்படுத்துவதன் மூலம் சமூகத் தில் ஏற்படும் புறவியல் விளைவுகளை அணுகமுன் அரசு இவ்வாறு அவசர அவசரமாக தனியார் மயமாக்கல் முறைக்கு உட்பட காரணங்களை அறிவதும் பொருத்தமாகும். இதுவரை தனியார் மயமாக்கிய சகலதுக்கும் அரசாங்கத்தால் நியாயப்படுத்தப்பட்ட வாதம் சபைகளின் நட்டப்போக்காகும். அதனையே இங்கும் அர சாங்கம் மலையக பெரும் தலைமைகளின் ஆகிர்வாதத்துடன் பிர கடனப்படுத்தியது. அரசுக்கு சொந்தமான தோட்டங்களினால் இலங் கைக்கு மாதம் ஒன்றுக்கு 40-50 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக கொள்கை திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் அமைச்சின் செயலா ளர் ஆர். பாஸ்கரலிங்கம் அண்மையில் கூறியது தகுந்த சான்றா கும். அத்துடன் ஒரு கிலோ தேயிலை, கொழும் புச் சந்தைப்படுத் தலில் 80 ரூபாய் பெறுகிறது. தனியார்மயத்தின் கீழ் அது 80 ரூபா வாக உயரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது (ஒரு கிலோ தேயிலையின் உற்பத்திச் செலவு 50 ரூபாய் என்பதனையும் கருத்தில் கொள்க) மேலும் தன்சானியா , சிம்பாப்வே போன்ற நாடுகள் ஒரு ஹெக்கரயர் பரப்பில் 3000, 2000 கிலோ கிராம் தேயிலையை உற் பத்தி செய்கிறபோது இலங்கை 1200 கிலோ கிராம் தேயிலையையே ஒரு ஹெக்ரெயரில் உற்பத்திசெய்கிறது. இதற்கு நவினத்துவமின்மை அக்கறையின்மைபோன்ற காரணிகளே துணைபோகின்றன எனவும் தனியார் மயப்படுத்தலே இறுதிவழிஎன்றும் இவர்கள் காரணம் கற்பிக் கிறார்கள்.
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக மிக நீண்டகாலமாக கூறப்பட்டுவந்தாலும் அரசாங்கத்தரப்பில் இக்குறைபாடுகளை போக்க எந்த ஆரோக்கியமான வழிமுறையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசாங்கத்தின் கைகளை பலப்படுத்தும் பெருத் தோட்டத் தொழிற்சங்கங்களும் திருப்தியான அக்கறையைக் காட் டியதாகவில்லை என்பதும் கவலைதரும் விடயமே. தேரட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கத்தரப்பில் கூறப்பட்டாலும் அவற்றுக்கு மூலகாரனம் அரசாங்க நிர்வாகம் என்பதே பொருத்த மாகும். இதனையே தோட்ட அபிவிருத்தி பற்றி செய்த சிபார்சு களும் ஊர்ஜிதப்படுத்துகின்றன. தோட்ட நிர்வாகிகளுக்கு மிக ஆடம் பரமாக செலவு செய்யப்படுகிறது; தோட்டத்துரைமார் மிக ஆடம்

Page 4
பரமான சம்பளம் பெறுகிறார்கள். ஜீப்கள், பஜரோக்கள் என்று குட்டிராஜ வாழ்வினை இவர்கள் அனுபவிக்கிறார்கள். குறைந்தபட் சம் விவசாய டிப்புளோமா சான்றிதழினையும் பெறாத இவர்களது சொகுசான வாழ்வு, ஆடம்பர சம்பளம் யாவுமே எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகவே உள்ளது.
அடுத்த முக்கியமான காரணமாக பெருந்தோட்டம் தொடர் பான பொது நிர்வாகத்தின் நிலையாகும். அரசியல் சகாயத்தின் மூலம் ஆட்கள் திரட்டப்பட்டு நிர்வாகம் திறமையின்மையாக இயங்கு கிறது, இதனால் அங்குள்ள பொதுத்துறை நிர்வாகம் மிக மோச மான மட்டத்துக்கு அடைந்து தோட்டத்துறை நட்டத்துக்கு வழிவகுத் துள்ளதுஎன்பதும் நிராகரிக்க முடியாதஉண்மையாகும். அடுத்துதோட் டத்துறை நட்டத்தில் இயங்க இன்னொரு காரணம் தோட்டத்துறை யில் காணப்படும் ஊழல்கள் ஆகும். அதிகமான துரைமார்கள் பொருட்களை கள்ளமாக விற்கிறார்கள். இதனால் தோட்டத்துரை மார்கள் தலைநகரில் உல்லாசப் பயனத்துறை ஹோட்டல்களில் பங்குதாரர்களாகவும் சிலவேளை சொந்தக்காரராகவும் விளங்குகிறார்
so
ஒருதுறையானது இலாபத்தில் இயங்க வேண்டுமானால் அத் துறையினை விரிவுபடுத்துவது அவசியமாகும். இது உற்பத்தி பெருக் கத்துக்கு உதவும். தோட்ட நிலங்களைப் பொறுத்த மட்டில் 72 ம் ஆண்டு நிலச்சீர்த்திருத்தத்தின் பின் திட்டமிடப்பட்ட குடியேற்றங் களுக்காகவும், தோட்டப் பொருளாதார பன்முகமாக்கல் என்ற பெயரில் தோட்ட நிலங்கள் பிரிக்கப்பட்டன. இதனால் நிலப்பரப்பு குறைக்கப்பட்டது. வருமானமும் குறைந்தது. இன்னும் உரபாவிப்பு குறைவு. நவின முறைகளின் அறிமுகமின்மை யாவுமே தோட்டத் துறையின் நட்டத்துக்கு உடந்தையாகியுள்ளன என்றால் தவறில்லை சுருக்கமாகக் கூறின் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்கள் நட்டத்தில் இருந்து மீள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே துணிந்துக் கூறலாம்.
இது இவ்வாறிருக்க பெருந்தோட்டத்துறை நட்டத்தில் இயங்க வில்லையென்றும் அது இலாபத்தில் இயங்குவதனர்ல் தனியார் துறைக்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது. கடந்தவருடம் 215 கோடி கி. கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அரச கட்டுப்பாட்டில் இருந்த தோட் டங்கள் இலாபத்தில் இயங்கியதாகவும் கூறப்படும் கருத்துக்கள் பூரணமாக நிராகரிப்பதற்கில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
- 4 -

தனியார்துறைஇலாபநோக்கையே அடிப்படையாகக் கொள்வதால் தொடர்ந்து நட்டமடையும் துறையினை அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த அடிப்படைவிதி சாதாரண பொருளாதார உண்மையாகும்.
தனியார்மயமாக்கல் பொருளாதார ரீதியில் அரசுக்கு அதிக சாதகத்தை வழங்கினாலும் இந்நாட்டுக்கு உழைத்து செத்துக் கொண்டிருக்கும் மலையகபாட்டாளிகளுக்கு எந்த விமோசனமும் "தனியார்மயத்தின்" மூலம் உறுதியடையாகாது என்பதே அடிப் படையான உண்மையாகும். எட்டு இலட்சம் ஜனத்தைக்கொண்ட ஒரு சிறுபான்மை தேசிய இனத்தின் அடிப்படைப் பிரச்சனை இது. அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும்போதே தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் உள்ளன. தனியார் மயமாக்கலினால் இவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அரசாங்கத்தின் கீழ் சமூக நலத்திட்டங்களை பல்வேறு சர்வ G5F ay6DuDLülyášs6iT (UNICEF, IRDP, NORAD) - iš 357 kg அமுல்படுத்தின இதில் ஒருதொகைப்பணம் "ஒருசிலரின்" வங்கி கணக்குகளுக்கு மறைமுகமாக அனுப்பப்பட்டாலும் ‘ஓரளவாவது" இவ்வுதவிகள் தொடர்ந்தன. ஆனால் தனியார் மயத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுவது சந்தேகமே. மற்றும் தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் நிலை, அநீதிகளுக்கு எதிராக வேலை நிறுத்தங்களுக்கான அடிப்படை உரிமைகள் சர்த்தியமாகுமா என்பதும் நீண்ட சந்தேகமே. இது தொடர்பாக அரசசார்பற்ற தொழிற்சங்கங்களும் "உருப்படியாக'எதையும் செய்யாதது இவற்றி னது "வங்குரோத்துத்தனத்தையே" படம்பிடித்துக்காட்டுகிறது.
தனியார் மயத்தின் பிரதிபலனாக மலையக மக்களின் வாழ்வில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுமென பெரும் தொழிற் சங்கங்கள் பிரச்சாரம் செய்தாலும் இந்நிலைமையினால் பாதகமான விளைவு களே அதிகரிக்கும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.80%தமிழ் பேசும் தமிழ்த்தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கையினை வெறுமனே இலாபகரமான முயற்சியின் திட்டத்துடன் இணைத்து பலியாக்க முயல்வது எதிர்காலத்தில் பலத்த சமூக விளைவுகளை ஏற்படுத்தலாம். சம்பந்தப்பட்டவர்கள் "தேசியவிடயங்களில்" காட்டும் நுட்பமான ஆர்வத்தினை தங்களது சொந்தமக்கள் விட யத்திலும் அனுமதிப்பார்களாயின் ஓரளவாவது egy 5606vát கொடுக்கும்.

Page 5
1çougosłys@gasun o quo
4907909 HQ14)g ș@ø@msa ( 49ījātreg) ao us asoovi, apo qisorița-Norgeg s@rn.go)dogolj oso) @șigos as as apgyntī içeế3@Ựoreg) zigi Igo ugi ĝis ugi on urmuraças 'toqoqosya@luru guitoRīgs uno q9 usĩ gine sm uan-ı dî) o sfiễs puso , owốigens legeç -smljno u-to geri qo@@@@fn m biljoo @) ugi in uș gQーsgsg」Tg) nego uogo founder gifnegoso qah-geofi 49-7@u-ig) ose uoo)En un ow uolo) qasmdeses, qnaeaeği 2&FreSD니745 *fr니% sąoreos@le –ige–augis onsuș
• Loi o uceæỤ quối) tegi ©iego o seg @@@re e uolo đ74egi eyoqj , po sąsē, 1998) uo 19șiņi u uoff= aƯqsam go głę>quasq9oto)o qo bırı saj qe ngoologon o noss &&
1991,0úshqi@@j
@ugi muș șas 19 og suoi o udosos gourno ogofio) «șØgni, o soucnog ulos) is gyorgio uogo” đặgonq; @ s’assı Çotgoffisies, 19 @googollee) sąšonėjğą woo o sono rau o sooqfață (0 ureg) yno w qi@ęgua gā) 1,9% sự voi o uqeqeső, qıfle, 19 *gD道ted sbggミggう ரசெரெ99ழுது
@ș no-a “NogoșothossgeG e」も5 (eg)urn ogoo ?@?fiso oqire bố 1994 woș-ızı vog) șđì uno af og 1,9 ugl£$%)rne) șwek, 河哈gā自 07491707 use) qiớirīqī un șşđÐra Igoog)g's lo sợ reges@o so@@lo aj se go was oję ø ©(soos y un o «saj qeg ș sostno solgog gøgeus, ocoșđìnqī un Ģąją) şșđÐri qo@@ dan uga og Øējș@ae sẽ đī) urag) ruta-1197 491. g! osoofmređìDro tingo uș saf? 1,9 ugi Ø& IỮ igoro o uga qaae
ரீஜெகுெ
199*0: spunség 1çoŲngsris umlyg

$ଽ
f
漆 சொத்துச் சரம்
f
الأمم
ဖို့ဖ်တွေရောင္လ္ယ္ဟအိဒ်
வெளிநாட்டு ஒருவர் இலங்கையரிடம் கூறினார். இலங்கையின் தொலைக்காட்சியின் தமிழ் நிகழ்ச்சிகள் நன்றாக முன்னேறியுள்ளன. இலங்கையர் ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்றார். உங்கள் முத்துச் கரம் என்னும் மப்பட்சோ muffet show நன்றாக இருக்கிறது என்றார்வெளிநாட்டினர்.
இதில் நம்நாட்டு கலைஞர் என அடிக்கடி ஒருவரே வருகிறார். இவரைப் பார்க்கும் பொழுது இந்திய கிராமங்களில் கும்மி ஆட் டத்தின் பொழுது, ஆட்டக்காரியின் கோமாளியான பபுனின் (buffoon) ஆட்டமே நினைவுக்கு வருகிறது. பேதமற்று செயல்பட் டாலே கலை உயர்வடையும். அது குடும்பச் சொத்தல்ல.
அஞ்சலிக் கூட்டங்கள்
அண்மையில் மறைந்த கலைஞர் ராஜ பாண்டியனின் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசியமானா பேர்வழி ஒருவர் தனது வீரப்பிரதாபங்களையே கொட்டித்தீர்த்தார். தனது நல்ல மனைவியி லிருந்து மதினியாரின் உயர் தொழில் வரை கூறினார். மேலும் பத்திரிகை ஸ்தாபனமொன்றில் தனக்கிருக்கும் பலம் பற்றி பரப்பி னார். தனக்கு அரசியலில் இருக்கும் செல்வாக்கு பற்றியும் ஓய்வூ தியம் பற்றியுமே பேசினார்.
இன்னுமொருவர் தன்னை எல்லோரும் கவிஞர் என்றே அழைப் பார்கள் என்று கூறினார். கலைஞன் ஒருவனுக்கு மனத்தூய்மை யுடன் கெளரவம் செலுத்தவந்தவர்களுக்கு இப்பேச்சாளர்கள் பெரிதும் அதிருப்தியையே ஏற்படுத்தினர்.
மலையக சங்கங்களின் நிலைமைகள்
மலையகத்தில் பல அநீதிகளும் உரிமை மீறல்களும் நடக்க சங்கங்கள் மெளனம் சாதிக்கின்றன. சில சங்கங்களின் தலைவர்கள்
- 7 -

Page 6
யாரேனும் பூனைக்கு மணிகட்டி விடுவார்கள் நாம் பதவியை காத்துக்கொண்டால் போதுமென்று இருக்கின்றனர். இவர் செயல்கள் படாதபோதும் தமக்கு பெயர் பண்ணிக் கொண்டால் போதும் என்று இருக்கிறார்கள்.
முஸ்லிம் எழுத்தாளர் கெளரவிப்பு
முஸ்லிம் சமய ராஜாங்க அமைச்சு இரண்டாவது முறையாக இருபததொன்பது முஸ்லிம் எழுத்தாளர்களினை கெளரவித்தமை சந்தேகமின்றி பாராட்டப்படவேண்டியது ஆகும். கலைஞர்கள் வாழும்போதே கெளரவிக்கப்படல் வேண்டும் என்பதில் எமக்குள் இரண்டு கருத்துக்கே இடமில்லை எனலாம். முதலாம் கெளரவிடபில் தவிர்க்கப்பட்டு, எம்மால் குறித்துக்காட்டப்பட்டவர்கள் இம்முறை கெளரவிக்கப்பட்டது ஆறுதலுக குரிய விடயமே. இருப்பினும் கெளர விபபுக்கு உட்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் "பட்டங்கள்" என்னவோ பெருத தமற்றதாகவுள்ளதாக உள்ளது என்ற கருத் தும், கெளரவிப்புககு அரசியல் அவசிய நிலை என்ற கருத்தும் முழுமையான பொய்யல்ல. அதேவேளை பல்கலைக்கழக மட்டங்களில் உள்ள அறிஞர்களை கவனத்தில் கொள்வதும் அவசிய மாகும். "பொறுப்புவாய்ந்த" அதிகாரிகளுக்கு பம்மாத்துக்காட்டி பரிசு பெறமுயலும் கபட கலைஞர்கள் குறித்து அமைச்சு திடமான அக்கறை எடுக்காமல் இருப்பது கெளரவிப்பின் பெறுமதியை குறைத்துவிடும் என்பதனை அக்கறையுடன் அறிவிக்கிறோம்.
உருவ வழி
சில சிறு சங்கங்ளின் தலைமை செயல்படாது தொண்டர்களை வைத்து காலத்தை ஒட்டுகின்றன.
இத் தலைமைகள் எவ்வாறெனின், இல்லாத தெய்வங்களை மனத்தில் கற்பனை செய்து கொண்டு அவை குறைகளை தீர்க்கும் என்ற மூட நம்பிக்கையில் வாழ்வது போன்றதே, இயங்காத தலைமையை நம்பி தொண்டர்கள் பாடு படுவது ஆகும்.

மலையகத் தமிழ்க் கவிதை ஒரு நோக்கு
- கலாநிதி துரை மனோகரன் -
Tழுபதுகளில் தேயிலைத் தோட்டங்கள் தேசிய மயமாகிய தைத் தொடர்ந்து, பெருந் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படத் தொடங்கிய இன்னல்களும், சோகங்களும், ஏமாற்றங்களும் இலக்கியவாதிகளையும் பாதித்தன. எண்பதுகளில் இலங்கை முழு வதையும் பாதிக்கத் தொடங்கிய பேரினவாதப் பிரச்சினைகள், ! மலையகத்தையும் மிக மோசமாகத் தாக்கின. சில இலக்கியவாதி கள் தமது சொந்த மண்ணை விட்டே தமிழகத்துக்கு இடம்பெயர வேண்டியவராயினர். அவர்களில் ஒருவரான வண்ணச் சிறகு (அரு சிவானந்தன்) வேதனையோடு தமது அனுபவங்களைக் கவிதை வாயிலாக வெளியிட்டுள்ளார். ‘சென்று வருகிறேன் ஜென்ம பூமியே என்ற தலைப்பிலான தமது கவிதையில், "நான் பிறந்த நாட்டினிலே, நான் இருக்க வழியில்லை, என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமை யில்லை"எனத் தனது மனவுணர்வினை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்திலிருந்துகொண்டு, மலையகத்தின் படைப்பாற்றலையும் புலப்படுத்தி வருகின்றார்.
மலையகக் கவிதை என்றதும் இன்றைய நிலையில் மனக்கண்முன் வருபவர் இருவர். ஒருவர் தோட்டத் தொழிலாளியாக வாழ்ந்து கொண்டு, மரபுக் க்விதைகள் மூலம் மலையகத்துக்குத் தமது பங் களிப்பைச் செய்துவரும் குறிஞ்சித் தென்னவன்; இன்னொருவர் நவீன கல்வியைப் பெற்றுப் பட்டம் பெற்று, புதுக் கவிதை மூலம் தமது திறமையை வெளிப்படுத்திவரும் சு. முரளிதரன். ஐம்பது களிலிருந்து இன்றுவரை எழுதிவரும் தென்னவன், பெருந்தோட்டத் தொழிலாளரின் வேதனைகளையும் அவலங்களையும் ஏக்கங்களையும் வாழ்வியலாகவே அமைந்துவிட்ட வறுமை நிலையினையும் தொழிற் சங்கங்களால் ஏமாற்றப்படும் நிலையினையும் சோகவுணர்வு ததும்பத்
രു 9 =

Page 7
தமது கவிதைகளிற் புலப்படுத்தி வருகின்றார். பின்வரும் கவிதை அவரது கவித்துவப் போக்கின் ஒரு சோற்றுப் பதம்
"வறுமை என்னும் சேற்றில் புதைந்து
வாழ்வதற் கேதும் மார்க்க மின்றியே சிறுமை யுற்றுடல் தேய்ந்து நலிந்து
தேயிலைக் காக யாவு மிழந்து அருமை உயிரையும் அர்ப்பணிக் கின்ற
அந்தோ! என்னரும் மலையகத் தோழா உரமும் திறமும் உள்ளவனாய் தீ
உரிமைகள் யாவும் பெறுவதெந் நாளோ?"
- குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்.
அதே வேளை, நம்பிக்கையுணர்வினையும் அவரது கவிதைகள் அவ்வப்போது ஊட்டத் தவறுவதில்லை.
மலையகத்தின் ஆற்றலுள்ள இளம் படைப்பாளருள் ஒருவரான சு. முரளிதரனின் கவிதைகளில் முற்போக்குணர்வும் சமுதாய நோக் கும் கவித்துவமும் இணைந்து காணப்படுகின்றன. "சகோதரியே! உன் முதுகு கூடையை மட்டுமா சுமக்கிறது? இந்த தேசத்தையும் தான்!" எனத் தியாக யந்திரங்கள் என்ற கவிதைத் தொகுதி யில் இடம்பெற்ற கவிதையொன்றிற் குறிப்பிடும் - முரளி தரன் அதை அடியொற்றியே தமது அடுத்த கவிதை நூலின் தலைப் பையும் (கூடைக்குள் தேசம்) இட்டுள்ளார். இவரது தீவகத்து ஊமை கள், மெளனத்தின் வயது 160 போன்ற கவிதைகள் முரளிதரனை நன்கு இனங்காட்டுகின்றன:
இத்தகைய கவிஞர்களோடு, க. ப. லிங்கதாசன், எம். எச். எம். ஹலீமதீன், மலைத்தம்பி, வெள்ளைச்சாமி, தமிழோவியன், ஏ. வி. பி. கோமஸ், எம். ராமச்சந்திரன், பூரணி, எஸ். பி. தங்கவேல், சண், சி. எஸ். காந்தி, பண்ணாமத்துக் கவிராயர், பானா. தங்கம், மல்லிகை சி. குமார், முத்து சம்பந்தர், எஸ். கிருஷ்ணன் போன் றோர் தொடர்ந்தும் இடையிட்டும் எழுதி வருகின்றனர்.
அதே வேளை, மலையகத்தைச் சார்ந்த முஸ்லிம் கவிஞர்களும் மலையக மக்களது வாழ்வியற் பிரச்சினைகளை அனுதாபத்தோடும், மனிதாபிமானத்தோடும், ஆவேசத்தோடும் எழுதிவருகின்றனர். அவர்களுள் உஸ்மான் மரிக்கார், இஸ்மாலிகா, அல் அஸ"மத் (Մ05 லானோர் குறிப்பிடத்தக்கவர்கள். உஸ்மான் மரிக்காரின் "கல்வாரி யின் கதாநாயகர்கள்" என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:
- 10 m

சுரண்டல் சிலுவையில் அறையப் பட்டிருக்கும் இளைய கிறிஸ்துகளே!
உங்களை
அழுத்தியிருக்கும் ஆணிகளைப் பெயர்த்துக் கொண்டு நீங்கள் -
உயிர்த்தெழுவது எப்போது? தேயிலையைப் போலவே உங்கள் சிந்தனையும் என்று சிவக்குமோ அப்போது!’
- புதிய மெட்டுகள்.
மலையகத்தைச் சாராதோரும் பெருந்தோட்டத் தொழிலாள ரது பிரச்சினைகள் பற்றிய அனுபவ உணர்வுடனும், மனிதாபி மானத்துடனும் கவிதைகள் படைத்துள்ளனர். அவர்களுள் வ. ஐ.ச. ஜெயபாலன் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். அவரது "எழில்முடி புனைக!" (தீர்த்தகரை) என்ற கவிதை, இவ்வகையில் விதந்து குறிப் பிடத்தக்கது.
அதோ!
தேயிலையாலே தாவணி போட்டு முகில்களைப் பறித்து முடிமயிர்கட்டி கண்முன் விரியும் உன் அட்டன் மேடு இதுவே, இதுவே வரலாறுனக்கு வாக்களித்த தாய்த் திருநாடு அலட்சியப்படுத்தி உன்னை ஒடுக்குவோரி இருள் மறைந்த மலை முகடுகளில் தாழப் பறக்குமோர் விமானியைப் போல திடீரெனத் தமது அழிவையே காணுவர் இதுவரை நீண்டது உன் வனவாசம் இனி நீ
எழில்முடி புனைக, இது உன் தேசம்."
ஈழத்துத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரையில், மரபுக்கவிதை, புதுக் கவிதை என்ற வேறுபாடின்றி, ஆரோக்கியமான ஒரு வளர்ச்சி நிலை காணப்படுகின்றது. ஆற்றலுள்ள கவிஞர்கள் தத்தமக்குக் கைஎநித வடிவங்களைக் கையாளுகின்றனர். அந்த வகையில், ஈழத்
سم۔ 11 س۔

Page 8
தின் பிரதேச இலக்கியத்துறையான மலையகத் தமிழ்க் கவிதையில் வடிவம் பற்றிய பிரச்சினையின்றி, மலையகப் பெருந்தோட்டத் தொழி லாளரை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு அம்சங்களும் உணர்வு பூர்வமாகப் பிரதிபலிக்கப்பட்டு வந்துள்ளன. மலையகத் தமிழ்க் "கவிதை, ஈழத்தின் கவிதைத்துறைக்கு வளம் சேர்த்து வருவதோடு, சர்வதேச ரீதியில் ஒப்புநோக்குவதற்கும் தகுதி வாய்ந்ததாக வளர்ச்சி பெற்று வருகின்றது. அதேவேளை, மொழி பெயர்ப்புத் துறையிலும் மலையகக் கவிஞர் சிலர் சிறந்து விளங்குவதைக் காணலாம். கே. கணேஷ், சக்தீ அ. பாலையா, பண்ணாமத்துக் கவிராயர், கு. இரா மச்சந்திரன் முதலானோர் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது மொழிபெயர்ப்புத் திறமை, ஈழத்தினதும் தமிழ்கூறு நல் அலுலகத்தினதும் தமிழ்க் கவிதைத்துறைக்கு வளமூட்டி வந்துள்ளது.
மலையகத் தமிழ்க் கவிதையினது வளர்ச்சியில் தமிழ்த் தேசியத் தினசரிகளும், பாரதி, மலைமுரசு, செய்தி, கலைக்குயில், மலைக் குருவி, ஆக்கம், குன்றின் குரல், விடிவு, கொழுந்து, தீர்த்தக்கரை, ப்ரிய நிலா போன்ற மலையக இதழ்களும், மல்லிகை போன்ற தேசிய இதழ்களும் பங்களிப்புச் செலுத்தி வந்துள்ளன. கவிதைத் தொகுதி களைப் பொறுத்தவரையில், விரல்விட்டு எண்ணத்தக்கவைகளே வெளிவந்துள்ளன மேலும் பல தொகுதிகள் வெளிவருவது, மலை யகத் தமிழ்க் கவிதை பற்றிய மதிப்பீட்டுக்கு மிக அவசியமான தாகும்.
AMMMNMNMMMWV
மனிதனின் உள்மூச்சுக்காற்றில்
இரத்தமும்தான்
இங்குகருகிப்போனது சமாதானம் இவர்கள்
நிலங்கள் மட்டுமல்ல ஆடையிலே குடியிருக்கும்
நலல நியாயங்களும். ஆனாலும்
ஏன் சென்ற • ܀ ܘ ܐ உள் மூச்சுக்காற்றில்
மழையில் கழுவப்பட்டது புழுதிகள் மட்டுமல்ல கொலை வெறி மனிதனின் இரத்தமும்தான். கலந்திருக்கும்.
- நிஸாஹமீட் எஸ். வை. பூஜீதர்
அம்ப ஹென்வெவ (பேராதனைப் பல்கலைக்கழகம்)

மனித உடல் பற்றி நீங்களும் | தெரிந்து கொள்ளுங்கள் !
மனித உடல் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்களால் ஆனது.
எல்லா உயிரினங்களின் உடல்களும் உயிரணுக்களினாலேயே
உண்டாகி இருக்கின்றன.
கோடான கோடி உயிரினங்களுள் மனித இனமும் ஒன்று மனித
இனத்துக்கு தான் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும், பகுத்தறி வும் உண்டு. இவை ஒவ்வொன்றையும் நடத்திவைப்பது மூளையே.
எல்லா உறுப்புக்களும் மூளைக்கு கட்டுப்பட்டே நடக்கிறது.
மனித உடலில் முக்கியமானது நரம்பு மண்டலமாகும். அதன்
மூலமாகத்தான் மனிதனின் செயல்கள், நடமாட்டம், அறிவது,
வெளியிடுவது போன்றயாவுமே முழுத்தன்மை பெறுகின்றது.
குருதி உடலின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்
கிறது. சமிபாடடைந்த உணவையும் ஒட்சிசனையும் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லுகின்றது. அத்துடன் வேண்டாத
கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகின்றது.
* உடலின் எல்லா உறுப்புக்களிலும் குருதி பாய வேண்டும் இல்லை யென்றால், குருதி இல்லாத உறுப்புக்கள் மரத்துப் போய்
விடும், அதாவது செயலற்றுவிடும்.
故 குருதி பார்ப்பதற்கு திரவமாக இருந்தாலும் அதிலும் பல பொருட்
கள் கலந்துள்ளன 54% பிளாஸ்மா என்னும் திரவமும் 46% திடப் பொருட்களும் உள்ளன. திடப்பொருட்கள் என்பது செங் குருதிச் சிறுதுணிக்கைகள், வெண்குருதிச் சிறுதுணிக்கைகள், சிறு
தட்டுக்கள் என்பனவாகும்.
குருதிச் சிறுதுணிக்கைகள் உள்ளன.
۔ سے 13 سس۔
ஒரு மனிதனின் உடலில் ஒடும் குருதியில் 2500,000 கோடி செங்

Page 9
* உடலில் காயம் ஏற்பட்டால் குருதி கசிகின்றது. தடுக்காவிட் டால் உடம்பிலுள்ள இரத்தம் முழுவதும் வடிந்துவிடுமே இவ் வாறு வடியாமல் தடுப்பதுதான் குருதிச்சிறுதட்டுக்கள்.
* இதயத்தின் நுனி மார்புக் கூட்டைத் தொட்டுக் கொண்டிருப்பத னால் தான் அது வேலை செய்வதைக் கேட்க முடிகின்றது. இதயம் வேலை செய்வதால் ஏற்படும் அசைவுகளும் கீழ்நுனிக்கு மேலுள்ள மார்புப்புறத்தில் தெளிவாகக் கேட்கலாம் சிலருக்கு இந் நுனி விலா எலும்புகளின் நடுவில் அமைந்திருக்காது விலா எலும்புக்கு நேராக இருக்கும் இவ்வாறு இருந்தால் அசைவும் சத்தமும் தெளிவாகக் கேட்காது.
* உடலிலுள்ள எல்லா எலும்புகளிலும் இரத்தப்புரைகள் ஓடிக்கொண் டிருக்கிறது. அதன் வழியே இரத்தம் பாய்கின்றது, இதனால்தான் எலும்புகள் முறிந்து விட்டாலும் மீண்டும் ஒன்று சேர முடி கிறது இரத்த ஓட்டம் குறைந்திருந்தால் சேருவது கடினமாகிவிடும் இரத்த ஓட்டம் முழுவதும் தடைப்பட்டிருந்தால் அந்த எலும்பே பழுதடைந்து விடும். - ஆ. யோகராஜா LLLLLeeeLLeLeLeeLLLLLLeeLeLLLLLLeLLLLLLeLLLLLLLLLLeLeeLeeekLLLLLeeeLLLLLLLSLLLLLLLS
“ருஷ்யாவில் சோஷலிசம் தோற்று போய்விட்டது என்றெல்லாம் உற்சாகமாக தம்பட்டம் ஆடியவர்களுக்கு அண்மையில் ருஷ்ய மக் களது தனியார் மயமாக்கலுக்கு எதிரான சமதர்மத்துக்கு சார்பான போராட்டம் பெரும் கவலையைக் கொடுத்திருக்கலாம் என நம் பப்படுகிறது. உண்மையிலேயே சோஷலிச நாடுகளில் பலத்த பல பிரச்சனைகள் தோன் றி யிருந் த ன இதற்கு மூல காரணம் அந்நாட்டு ஆளும் வர்க்கத் தலைவர்களேயன்றி சோஷலிச மல்ல என்பதனை எங்களில் பெரும்பாலான புத்திசாலிகளும் உணராதது தான் விசேடமான வேடிக்கை அதுசரி முதலாளித்துவம் எங்காவது வெற்றி கண்டுள்ளதா? அமெரிக்காவே இன்று பிச்சைக்கார பாத்திரம் ஏற்றுள்ளது. மாபெரும் அறிஞர் மார்க்சின் வார்த்தைகள் என்றுமே பொய்யாகாது. உலகத்தொழிலாளர்களின் போர் வேதம் அது!
தகவல் : பாத்திமா சீனியா ரஸாக்
-- 14 ܚܘܗܝ

ஈழக்கவியின் பக்கம்
1. பலஸ்தீன கவிதைகள்
உலகக் கவிதைகளிலேயே நான் மிக விருப்பத்துடன் வாசிப்பது பலஸ்தீன கவிதைகளையாகும். அவர்களது கவிதைகளில் அந்த மண் ணின் ஆன்மா, ஈரம், நெருப்பு என்பவையே பிரக்ஞை பூர்வமாய் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும். ஈழத்துக்கு பலஸ்தீன கவிதைகளை சரியாக அறிமுகப்படுத்தியவர் கவிஞர் எம். ஏ. நுஃமான் என்றால் அது பிழையாகாது. கவிஞர் நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்து தொகுத்துத் தந்த " பலஸ்தீன கவிதைகள் ' (கவிஞர் முருகையன் அவர்களும் இத்தொகுப்பில் சில கவிதைகளை மொழிபெயர்த்திருக் கிறார்) என்ற நூலிலிருந்து, பலஸ்தீன கவிஞர் மஹ்மூட் தர்வீஷ் அவர்களின் கவிதையொன்றைத் தருகின்றேன்.
புதுடில்லியில் 1970ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நான்காவது ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் மகாநாட்டில்" தாமரை விருது பெற்ற மஹ்மூட் தர்வீஷ் ஒரு புகழ்பெற்ற பலஸ்தீனக் கவி ஞர். இஸ்ரவேலர்களின் பயங்கரவாதத்தின் கீழ் அவர்களால் கைப் பற்றப்பட்ட பிரதேசத்தில் வளர்ந்தவர். 1960ம் ஆண்டில் இருந்து பலஸ்தீனப் போராட்ட இலக்கியத்தின் முக்கிய கவிஞராக இவர் திகழ்ந்து வருகிறார். இவரது கவிதைகள் தனித்துவமானவை. இவ ரது கவிதை நடையும், மொழியும், படிமங்களும் உண்மை உலகில் இருந்து, இவரது சொந்த சமூகத்தில் இருந்து வருபவை.
நம்பிக்கை
உனது பாத்திரத்தில் இன்னமும் சிறிது தேன் எஞ்சி உள்ளது ஈக்களைத் துரத்து
தேனைப் பேணு ,
இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு இன்னமும் கூட
سے 15 سس

Page 10
உனது வீட்டிலோர் பாய் உண்டு கதவை மூடு குளிர்காற்றில் இருந்தும் உன் குழந்தைகளைப் பேணு.
மிக மிக மோசம் இக் குளிர் காற்று குழந்தைகள் நன்கு தூங்குதல் வேண்டும் நெருப் பெரிக்க சிறிது விறகு கொஞ்சம் கோப்பி
நெருப்புச் சுவாலை இன்னமும் கூட உன்னிடம் உண்டு.
2. ஒரு கவிஞனின் கண்ணிர் கதை
வைகறை வெண்பனியால் போர்த்தப்பட்ட வார் விக் தோட் டத்துக்கூடாக தினமும் போகும் பொழுது, அமரர் சி. வி. வேலுப் 96în GM67r , Syariř3; Gfesör “ In Ceylon‘s Tea Garden ” 67 Gör gp 35 Gao 3560au என் மனவாய் முணுமுணுக்கும். அதற்கு சலசலக்கும் நீரோடைகள் மெட்டமைக்கும் இந்தக் கவிதையை"நிஜமாக" காட்டிக்கொண்டிருக்கும் வார்விக்" தேயிலைத் தோட்டம். ஏனென்றால், மலையக யதார்த்த த்தை தான் அப்படியே கலைகளில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.சி.வி. லேலுப்பிள்ளை அவர்கள். மலையகத்தின் மாமனிதர் அவர் சி. வியின்,
"புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை"
என்ற நாவல்கள் இன்று என் உள ஊஞ்சலில் உட்காரும் போது, கவிஞர் குறிஞ்சி - தென்னவனின் "ஒரு கவிஞனின் கண்ணிர்க் கதை" என்ற கவிதையும் கூடவே அசையத் தொடங்கியது.
சி. வி. அவர்கள் போல, உயர்ந்த கவிஞர் என்றளவில் இல்லா விட்டாலும் மலையகத்தின் நல்லதோர் கவிஞன். அந்த ஏழ்மைக் கவிஞனின் நிழல் இன்னும் எனக்குள் நிற்கிறது. கவிஞர் தனது கானல் வாழ்க்கையையே " ஒரு கவிஞனின் கண்ணீர்க் கதை " என்ற கவிதையில் ஒவியமாக்கியிருககிறார்.
مم 16 -س-

"சிறந்தகவிஞன், எனப் புகழ்ந்திடுவார்.
தீஞ்சுவைக் கவித் திலகமென் றிடுவாய், பிரிந்து எந்தன் கவிதைகளைப் பலர்,
பந்து போலெறிந் தாடிக் களிப்பார், இறந்து கொண்டிருக்கும் எனக் குதவ யாருளர்?."
என்று தன் யதார்த்த நிலைச்சொல்லும் கவிஞனுக்கு இந்த, "மணிவிழா' காலத்தில் உதவுதல் வேண்டும். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரன் அவர்கள், தென்னவனின் 'மணிவிழா"வின் போது பெருந்தொகை நிதி சேர்த்து வழங்க வேண்டும் எனறும் குறிப்பிட் (Schennif.
எனவே, நாம் மலையகத்தின் தலைநகரில் அமைந்துள்ள பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் மலையக கலைஞன் குறிஞ்சித்தென்ன வணின் 'மணிவிழா"வை சிறப்பாக கொண்டாடி, கலைஞருக்கு உத வுதல் வேண்டும். -
3. அமெரிக்க முகத்திரை கிழிகிறது.
அமெரிக்க தேசத்தின் முகவிலாசம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஒருபொழுதும் அது தனது நிர்மலமான உண்மை முகத்தைக் காட்டியதே இல்லை. அதன் முகத்திரையை பல முறை பல சந்தர்ப் பங்களில், உலகின் பல்வேறு ராஜதந்திரிகளும், அறிஞர்களும், கலை ரூர்களும் கிழித்து எறிந்தது உண்டு. எனினும் அர்தத் திரை கிணற் றுப் பாசி ஒதுக்கி ஒதுக்கி விட்டாலும் மீண்டும் மீண்டும் கூடிக் கொள்வதைப்போல, புதிய போர்வையைப் போர்த்துக் கொள்ளும்.
ஜனநாயகத்தின் உண்மையான காவலர்கள் என்று தம்பட்டம் போட்டுக் கொள்ளும் அமெரிக்காவைப் பார்த்து, மனிதகுலமே ர கணித் தலைகவிழ்ந்து நிற்கிறது. உலக ராஜிய விவகாரங்களில் ஒரு "மாபியத் தலைவனை'ப் போல நடந்து கொள்ளும் அமெரிக்கா, உலகிற்கு என்றும் நீங்காததொரு சீரழிவாகவே இருந்து வந்திருக்கி றது அமைதியை விரும்பும் சர்வஜனங்களுக்கும் அது எதிரியாகவே இ , ந்து வந்திருக்கின்றது. எங்கெல்லாம் போர்விரிவு நடக்கிறதோ அங்கெல்லாம் அமெரிக்காவின் கைவண்ணம்பிரயோகமாகி இருக்கிறது
— 17 „suspe

Page 11
எங்கெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிராகச் சூழ்ச்சி, சதி, கவிழ்ப்பு வேலை நடந்திருக்கின்றதோ அங்கெல்லாம் ‘பென்ட்டகன்'(அமெரிக்க ராணுவத்துறை) திருவிளையாடல்க புரிந்திருக்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் வளர்ச்சியையே விரும்பும் மனித குலம், அதன் தீய முயற்சி +ளுக்கு உரிய முறையில் பதில் அளித்து வந்துள் ளது. 1864ல் மெக்ஸிகோ போரிலும், 1861ல் உள்நாட்டுப் போரிலும் 1868ல் அமெரிக்க ஸ்பானியப் போரிலும், 1950ல் கொரியப் போரி லும் அவர்கள் முகத்தில் கரிபூசப்பட்டே அனுப்பப்பட்டது. இரு உலகப் போர்களிலும் அவர்கள் தங்கள் தலையில் மண்னை வாரிப் போட்டுக்கொண்டார்கள். வியட்நாமில் முதலை வாய்ப்பட்ட காலாக, அது கால் நூற்றாண்டுகளாகத் தடுமாறியது. வீரப் புதல்வர்கள் விளைநிலம் வியட்நாம் என்பதை மட்டும் அல்ல, அவர்களிடத்தில், நட்சத்திரக் கெ" டியின் சலசலப்பு செல்லுபடியா காது என்பதையும் காட்டுகிறது. ஈராக் விவகாரத்தில், அமெரிக்கா வாங்கிக் கொண்டுள்ள பேரடி, கள்ள உறவு கொள்ள விழையும் காமக்கழக்கர்கள் அனைவருக்கும் கிடைக்கிற, ஒரு வீரபுருசனின் உதை, ன்று லிபியா' மீது தனது நாய்முகத்தைக் காட்டுகிறது.
இத்தகைய அமெரிக்க வேடங்களை, அதன் இருமனத் தன்மை களை இலிக்கியவாதிகள் பலர் இறவா இலக்கியங்கள் ஆக்கி இருக் கின்றனர். சின மிக்க கவிஞர்கள், தமது ஆத்மநேயம் கொந்த ளிக்க அவ்வேடம் கலையுமாறு கவிதைச் சூடு போட்டிருக்கின்றனர். அப்படியான கவிதை ஒன்றை Shit Fang என்ற கவிருர் எழுதியிருக் கிறார். கவித்துவம் மிக்க அந்த கவிதை,
அமைதிக்கு என
ஓ! அமெரிக்கா! உங்கள் ஜெபர்சன் எங்கே? உங்கள் விங்கன் எங்கே? உங் ஸ், சுதந்திரப் பிரகடனத்தை மார்க்ட்டிைன் கதைகளை வால்ட் விட்மன் கவிதைகளை உலகம் படித்திருக்கிறது.
۔۔۔ 18 سیس۔

ஆனால்,
கிழட்டு அமெரிக்காவே புல்லின் இதழ்களுக்கருகில் "பின் அப்"கள் வைத்திருக்கிறாயே, உனது விடுதலைச் சிலை முற்றிலும் சூன்யம் ஆனது உனது பசும் சமவெளிகளில் சாத்தா னின் காலடிகள் தோன்றுகின்றன.
உனது மருந்தகங்கள் மனிதரைக் கொல்லும் உயிரிகளை உற்பத்தி செய்கின்றன உனது மனிதப்பூங்கா மனிதரை வேட்டையாடும்
நாய்களை பிரசவித்துக் கொண்டுள்ளது.
ஓ கிழட்டு அமெரிக்கா! உனது எரிமலை சாம்பல் மேட்டு விட்டது புதிய போர்களை உண்டாக்கலாம் நீ?
கிழட்டு அமெரிக்கா உனது மக்களே, வெள்ளை மாளிகையையும் பென்ட்டகனையும் முதலுலகப் போரின் போது ரஷ்ய தேசத்தின் தொழிலாளர்கள் ஜாரின் குளிர்கால அரண்மனையை நொறுக்கியது போல நொறுக்கி விடப் போகிறார்கள்!
கவிஞர் சேலம் தமிழ்நாடன்
( நன்றி தாமரை 1973 ஜனவரி )
ബ് 19 -

Page 12
நிர்வாணத்தில் தேடும் நிம்மதி!
தேசம் கொழுந்து கூடைக்குள்ளே சுழல்கிறது கூடைக்கு தெரியாமலேயே
அரும்புகளை கிள்ளும் போது கரத்தில் வெடித்து வரும் ஊண் நீரில் கண்ணிரும் கசிவதுண்டு பசி வாட்டும் போது.
சிலர் - இந்த மனிதர்களை நிர் வர னமாக்கி நிம்மதியை தேடுகின்றார்கள்,
இன்னும் பல்லாக்கினை சுமந்தபடி - தெரு வோரங்களில் கையேந்தி - இம் மானிடங்கள் மர்ணிக்கின்றன.
கால விவேகம் காற்றில் மிதக்கும் போது - இம்
மலைமுகடுகளில் மிரிர்கின்ற மின் மினிகள் தக்கச்சான்றிதழை
வழங்கும். -ச, பன்னிர்
பாகு பாடு
குருதியின் நிறம் ஒன்று தான் மா ற்ற மில்லை இதயத்தின் அமைப்பும் ஒன்றுதான் மாற்றமில்லை சமூக அமைப்பில் மட்டும் ஏன் இந்த சாதி பாகு பாடு அது தாழ்ந்த மனிதன் ஆக்கிக் கொண்ட I st G Lin G
- நிம்லா, மாவனல்லை
எங்கள் வாப்பா
நாடே அறிந்த பெரிய மனிதர் எங்கள் வாப்பா மந்திரத் தாயத்து மாயா ஜாலங்கள் அனைத்தும் செய்து அழியாப் புகழை அணைத்துக் கொண்டவர் ஒருநாள்
yesi 6oTnT tî நீரிலும் நடந்தார்
jāš5 Gšasfrņi ar "பறக்கத்" பெற்றிட வாப்பாவின் பாத பங்கயந் தன்னைக் கழுவித் தலையில் தடவிக் கொண்டார்.
- சார்ணாகையூம்
- 20 -

புத்தக வெளியீடும் | புது வடிவில் கதைகளும்
புத்தகங்கள் வாங்குவதற்கு அண்மையில் ஒரு துணை அமைச்சு மீத்ரம்ப வைபவத்தை ஆரம்பித்தது மூன்று நான்கு வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட கதையின ஆரம்ப அத்தியாயமாகவே அது இருந்தது.
வாசகர்வட்டம் சேர்க்கப்பட்டு அங்கத்தவர்களுக்கு புத்தகம் விற்பது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. பண்டம் விற்கப்படும் பொழுது, மொத்தவரி, வருமான வரி ஆகியவற்றை நுகர்பவனிடமிருந்து அறவிட்டுக் கொள்ளும் அரசின் ஒரு கூறான துணை அமைச்சு புத்த கம் வாங்குவதற்கு தயாராக இல்லை. ஆனால் அது வரியினால் முதலாளித்துவ இடைத்தரகினால் பாதிக்கப்படும் வாசகனை விலை கொடுத்து வாங்கச் செய்வது நியாயமற்ற செயலாகும்.
கரடிக்கும், புலிக்கும், சிங்கத்திற்கும் பாம்புக்கும் பாதுகாப் பணிந்து, வனப்பாதுகாப்புத் திட்டத்தை அமுல் நடத்தும் அரசாங் கம் தமிழ் இலக்கிய வெளியீடுகளை அரவணைப்பது ஒரு அவசிய மாகும். .
தமிழ் புத்தகங்களை சில நூலகங்கள் வாங்காது பட்ச பாதகம் புரிவது பிரஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு பதிலாக அமைச்சா பேசும் பொழுது எங்கள் அமைச்சின் புத்தகங்களையே குறிப்பிட்ட நூலக சேவைகள் சபை வாங்குவதில்லை என குறிப்பிட்டு சுய அனுதாபம் Gastr 67 Lestrř.
எங்கேனும் ஒரு மொழி பேசுபவர்களுக்கு பாரபட்சம் காட்டப் படுமானால் அது பற்றி பாராளுமன்றத்தில் அவர் குறிப்பிடுவது ஒரு மொழிசார்ந்த இனப்பிரதிநிதியான அவரின் கடமை என்பதை நினைவுறுத்த விரும்புகிறோம்,
இது ஒருபுறமிருக்க கூட்டத்துக்கு வருகை தந்த ஒருசில தராதர மற்ற அன்பர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள, விரிவுரையாளர் களை வாசகர் வட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இயலர் மையுடன் கூறினாரிகள், பல்கலைக் கழகத்துக்கு நுழைபவர்கள்
m 21 -

Page 13
சாராயக் கடையில் இருந்து கொண்டு நுழைபவர்கள் அல்ல என் பதனை இவர்கள் மறந்து விடக்கூடாது.
மொத்தத்தில் வாசகர் வட்டம் என்பது எழுத்தாளர்களுக்கு வழமைப் போல எதிர்பார்ப்டை ஏற்படுத்திய பூச்சியமாகும் ஒரு வட் டமே இக் கூட்டத்தில் கலந்துவிட்டு வெளியேறும் பொழுது பாரதி யின் பாடலடிகளில் சில மனதில் பதிந்தன.
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி 藏”,
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே
நாளில் மறப்பாரடி.
அமெரிக்காவில் அதிக செழிப்பு - அதிக வறுமை
இந்த தசாப்தசதில் உள்நாடடின் வறுமையும் பசிக் கொடுமையை யும் மக்களின் துன்பத்தையும் அனைவரும் அறிவர். போஷ" க்கின்மைக் கும் நோய்க்கும் இடையிலுள்ள உறவு தெளிவானது என ஆய்வுகள் கூறுகின்றன. அண்மைய பொருளாதார மீட்சி, பசிப் பிணியிலுள்ள இரண்டு கோடி மக்களின் துன்பத்தைப் போக்குவதாக இல்லை. 1980ன் பின்னர் ஏற்பட்ட தொழில் வாய்ப்புகள் குடும்பங்களின் வறுமையை துடைப்பதாக இல்லை. கூலி உழைப்பின் வீழ்ச்சி வெள்ளை நிறத்த வரை மட்டுமல்ல அனைவரையும பாதித்துள்ளது. சாதாரண வறிய குடும்பத்தவரின் வருமானத்தில் 78% வாடகையில் செலவாகிறது. மத்திய அரசு வீட்டு வசதிக்காக வழங்கிய மானியத்தை நிறுத்தியதே காரணமாகும். இந்த தசாப்தத்தில் வீட்டு மானியம் 3000 கோடி யிலிருந்து 1800 கோடிக்கு குறைக்கப்பட்டது. 25-2-89 நியூ யோர்க் ரைம்ஸ் தாளிதழ் லாரி பிறவுன், அமெரிக்க பசிப்பிணி மருத்துவர் ஹா வேட - பல்கலைக்கழகம்.
றிகன் தந்த வறுமைச் சாசனம்
ஏழை பணக்காரரிடையே ஏற்பட்டுவரும் பாரிய இடைவெளியால் குற்றச் செயல்கள், போதை மருந்து உட்கொள்ளல் அதிகரிப்பது உட்பட சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய நிலைக்கு தள்ளக்கூடியது மாகும். உங்கள கதவுகளுக்குப் போதிய பூட்டுகள் இல்லாது போக லாம்; இன்றைய பொதுவாழ்வில் இல்லாத புதிய பரம்பரை மக்களிட மிருந்து தெருபபெ? லிசார் உங்களைக் காப்பாற்ற முடியாதும் போக லாம. டொனா ல் றீ3 ன் எழுதித்தந்த சானம இது.
- அமெரிக்க மனிதவள துணைக் கமிட்டித் தலைவர்.
سيس- 22 --

உருவகக் கதை :
வீணாக கொல்லவில்லை
நாள் முழுவதும் கடமையில் விறுவிறுப்பாக இயங்கிவிட்டு, பின் சக்தியை இழந்து அமைதியா கும் தொழிலாளியைப் போன்று சூரிய னும் தனது கிரணங்களை ஒடுக்கி, தன்னை கடல் நீருக்குள் அமிழ்த் திக் கொள்கிறது. சூரியனின் மறைவுக்கு காத் கிருந்ததைப் போன்று கருக்கல் தனது அகன்ற கரங்களால் பூமியைப் பற்றிக் கொள்கிறது.
இருவர் பாதையில் பேசிக்கொண்டு செல்கிறார்கள். அப்பொழுது அவர்கள் முன் மின்னலைப் போல் ஒரு ஒளிக்கீற்று பாய்ந்து மறை கிறது. அதனைத்தொடர்ந்து ஒரு நூதனமான குவிந்த தட்டொன்று சுழன்று கொண்டு வந்து தரை தட்டி நிற்கிறது.
அதிலிருந்து இரு சிறிய உருவங்கள்வெளியேறுகின்றன. அவ்வுரு வங்கள் மனிதனைப் போன்று அவயவங்களைக் கொண்டிருந்த பொழு தும் மனிதனைவிட சற்று வித்தியாசமாக உருவத்தில் சிறியதாகக் காணப்பட்டன. r
அவ்வுருவங்கள் கீழே இறங்கி, பாதையில் நடந்து சென்ற இரு
மனிதர்களை நோக்கி, தமது  ை7 களில் இருந்த கருவியால் ஒளி யைப் பாய்ச்சின. அவ்வொளிப் பட்டதும் மனிதர்கள் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். பின் அவர்கள் தானாக இயங்கும் உப கரணங்களைக் கொண்டு மயங்கி விழுந்த மனிதா களை பறக்கும் தட்டில் ஏற்றிக் கொண்டனர்.
அம்மனிதர்கள் விழித்துப் பார்க்கும் பொழுது புதிய சூழலில் கிடத்தப்பட்டிருந்தனர். இவர்களைச் சுற்றி குள்ள மனிதர்கள் சுறு கறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏதோ ஒரு நிகழ் வுக்கு ஆயுத்தம் செய்வதாக இருந்தது.
இவர்களை மயங்கச் செய்து தூக்கி வந்த குள்ள மனிதர்களில் ஒருவன் பேசினான். நாங்கள் உங்களை விட வளர்ச்சி பெற்ற உயி ரினங்கள். எங்கள் ஆண்டவரோ மிக உயர்ந்தவர். அவருக்கு சமனா கவோ உயர்வாகவோ பிரபஞ்சத்தில் யாருமில்லை, நாங்கள் இப் பொழுது உங்களை கொன்று உண்ணப் போகிறோம்.
ܚܕ 23 --

Page 14
எங்களை கொல்வது பெரும்பாவம்! அது மனிதக் கொலை யாகும் என்று மயக்கம் தெளிந்த மனிதர்களில் ஒருவன் கூறினான்.
நாங்கள் உங்களை மதத்தின் பேரால் ஜாதியின் பேரால், நாட் டில் பேரால் வீணாக கொல்ல வில்லைg
எங்கள் புனித உணவுக்காகவே கொல்கிறோம். நீங்கள் படைக் கப் பட்டிருப்பது எங்கள் உணவுக்காகவே. இது எங்கள் எல்லாம் வல்ல ஆண்டவரின் கட்டளை.
மேலும் உங்களை கொல்லும் பொழுது எங்கள் புனித மறையை உச்சாடனம் செய்து விட்டே கொல்லுகிறோம். எனவே எங்களை பாவம் அணுகுவதில்லை என்றது.
அடுத்து அம்மனிதர்களின் தலைவெட்டப்பட்ட முண்டங்கள் இரத்தத்தைப் பீச்சுக் கொண்டிருந்தன.
-எம். பாலகிருஷ்ணன்
数ご義冬ご章冬ご参ぎご義きご義冬て
உயர்தர மாணவர்களுக்கோர் நற்செய்தி
பிரபல ஆசிரியர்களின் கைவண்ணத்தில்
அளவையியல் * ஆங்கிலம் அரசறிவியல் * பொருளியல்
விஞ்ஞானம் * உளவியல்
SOAS
மற்றும் பல்சுவை அம்சங்களுடன்
* மாணவன் '
விபரங்களுக்கு:- ஆசிரியர்,
* மாணவன்", A 2 / 57, esgyll Dif 6576) Gogfr Liff Lloegr) arwr, கொழும்பு-12.
 
 
 

V I D'I V U
130, D.S. SENANAYAKE VEEDIYA, KANDY.
, ,விதாசன் [: எம். இம்தியாஸ்)
N, inihurt g5(p:- கண்டி எம். ராமச்சந்திரன் வாஸ் ஏ. ஹமீட்
. பாலகிருஷ்ணன் டி. யோகராஜா
முகவரி;-
30, டி. எஸ். எஸ். வீதி,
ர, லைபேசி: 08 - 23196
நீதா 6îJ júo: -
ாறுமாதச் சந்தா - ரூ. 30-00
பால் செலவு உட்பட 1
சந்தா அனுப்ப விரும்புவோ , தனிப் பிரதிகளைக் கொள்
, M. MTTIYAZ GTesekrespub, gumr லகமாக Kandy எனவும் இட ab.
°ጵr ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பேயன்றி ஆசிரியரல்ல.
வருடச் சந்தா - ரூ. 60.00 .
ம.க.இ.பே கிளைச் செய்திகள்
ம. க இ பே. கண்டிக் கிளை
பாரதிபற்றிய கருத்தரங்கு, கவியரங்கு விவாத அரங்கு நிசழ்ச்சிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. பங்கு பற்ற விரும்புபவர்கள் கீழ் வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
அமைப்புச் செயலாளர், ம. க. இ. பே 130, டி. எஸ். எஸ். வீதி, கண்டி.
ம. க. இ பே; கொழும்புக் கிளை எழுத்தாளர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. ஆர்வமு டையவர்கள் கொழும்புக் கிளை முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டப்படுகின் 617, له اتي
செயலாளர்,
uD. 8s. G2). Ge. i.
(கொழும்புக்கிளை)
3ே8, சிறிதம்மா மாவத்தை,
கொழும்பு - 10,
விரசுக்கு எதிரான பொது எதிர்க்கட்சிகள் பாதயாத் திரைக்கு ம. க. இ. பே. மத் திய குழு ஆதரவினை வழங்கி யுள்ளது இத்தகவலை தலை வர் மு. சம்பந்தர் தெரிவித் 45 it rit.

Page 15
L. p. 686 சமூக, கலை எழுச்சி Lị95ỉ sé!
அலஸ்
மலையகத்தில் இயல், இ துறைகளில் செயற்பாடுகை பதக்கங்களை வாரி வழங் மன்றம் ஏழைகளின் தியா
உங்களுக்குள் உள்ள ஆர்த்ெ சம் காட்ட நாடுங்கள்.
Colc
குமரன் அச்சகம், டாம்
 

மக்களின்
பாளம் பாடும்
மன்றம்
இசை, நாடகம் ஆகிய
ளை நடாத்தி வெற்றிப் கும் விளமர்ன ஆவலீஸ்
கத்தோழன்.
தழு திறமைகளை வெளிச்
IZ FOUNDATION
New Moor Street, ombo - 12.
வீதி, கொழும்பு-12.