கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவமலர்: விஜயதசமி 2005

Page 1
JB6).
、摩 ܬ4 ܬܧܼܝ UIIgLIIGOOTID
இந்து இளைஞர்
விஜயதசமி
வாணி கலைத்தெய்வம் மணிவ ஆணிமுத்தைப் போலே அறில் காணுகின்ற காட்சியாய்க் காண்ட மானுயர்ந்து நிற்பாள் மலரடியே
பார்த்திப வருட 1Ο Ο
 
 
 
 

கழக வருடாந்த
ജെഴ്സു
ாக் குதவிடுவாள் புமுத்து மாலையிnைள் தெல்லாங் காட்டுவதாய்
சூழ்வோமே.
passil in SljLogofu UIUSumii.
ம் ஐப்பசி மாதம் 2OO5

Page 2
-
ܝ
| |
 
 
 
 
 
 
 
 

"கற்க கசடறக் கற்பவை கற்
੭. ਸੰਤ "Acquire throughly the knowledge that is worth acquiring, an after acquiring it walk thou in accourdance there with"

Page 3

இந்துஇளைஞர் கழக 2005 ஆம் ஆண்டு நீர்வாகக் குழு
புரவலர்:- திரு.அ. சிறிக்குமாரன் (அதிபர்) அவர்கள் துணைப்புரவலர்கள்:- திரு.பொ.மகேஸ்வரன்,
திரு.இ.ஒங்காரமூர்த்தி శ్లో பெரும் தலைவர்:- திரு.ந.தங்கவேல் பெருஞ்செயலாளர்- திரு.மு.பா.முத்துக்குமாரு
திரு பா. சற்குணராஜா
பரீட்சைப் பொறுப்பாசிரியர் திரு.வ.நிசாந்தன் பெரும் பொருளாளர்- திரு.சி.ரகுபதி
தலைவர்:- செல்வன் விபூரீவித்தகன்
GlaruGOT6Tit:- செல்வன் மயூரப்பிரியன் பொருளாளர்:- செல்வன் யோ. பவனிதன் உபதலைவர்: செல்வன் ந. நவசாந்தன்
s) LIGeFuGOT6Ti:- செல்வன் இ.கஜானன் LugjößUTIgßuñi:- செல்வன் ப. இந்திரகுமார்
ஆலோசனைக் குழு
திரு.கி. கிருஷ்ணகுமார் திரு.வ. தவகுலசிங்கம் திரு.பொ. ஞானதேசிகன் திரு.ஆ.நவநீதகிருஷ்ணன் திரு.வா.சிவராசா திருது துஸ்யந்தன் திரு.ஐ. கமலநாதன் திரு.மா.சி. சிவதாசன் திரு.அ.குணசிங்கம் திரு. சி.ஜெயபாலன் திருமதி.ர. கதிர்காமநாதன் திருமதி.சா. அருந்தவபாலன் திருமதி.ந.உதயகுமாரன் திரு.வ. நிசாந்தன் செல்வி, ஞா. தமிழினி செல்வி. ச. கவிதா
திரு.நா.விமலநாதன்

Page 4
ஏனைய உறுப்பினர்கள்
அ. திருமருகன், அ ஆராஅமுதன், கி. சுபாங்கன், ப. மகிதனன், ந.வேஸதனுஜன், தி ஆதரலோஷன், இ. பார்த்தியன், செ. சேயோன், சதர்சிகன், தி ஜனிதன், பி. நந்திகரன், ந. கோகுல்ராசா, வி. ஆரூரன், சி.சிவமனோகரன், கதுவாரகன், க.விலியன், இபிரணவநாத், மய நொசாநதன், யோ, நிரோசன், சி. மேகனாதன், இ. சுரேன், த அர்ஜின், மதனகோபி, அ. மனோசன், த ஏகவரதன், அ. தனஞ்செயன், பா. ஆகிசன், மு. பானகோபன், இ. தீபன், வை.வைகுந்தன், த. திருக்குமரன்,
சு. செந்தூரன், அசோக், ப, பகீரதன், வி. பிரசாந்தன், வி. விதுசன், க. யதுர்ஷன், வி. வாமணன், ச. கிரிபுரன், யோ, சதுர்சன், யோ. நிரோசன், சிமேகனாதன், வேணுகானன், தே. கோசிலாந், இ. கயந்தன், இ.
கஜானன், க. வினோதன், ம. ஆதித்தயன், பா.சாரங்கன், சி. ராஜிவன், செ. இந்துசன், கு வகசன், சு. கஜரதன், கு. பகிரதன், ச. அசோக், க. நிரோசன், சி. டினேஸ், க.நிசாந், பு, பிரகாஸ், செ. ஆதித்தன், சிந்துஜன், பூரீ விஜயன்,
இ. கேகுமார், கி. சுகந்தன், ந. பிரபு, சு. தனுராஜ் இ. இந்திரகுமார் இ.
திவ்வன், இ. விக்கினராஜன், க, லதிகரன், ச. பரணிதரன், ச.நிமலன்
 

அதிபர் அவர்களின் அருளாசி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி இந்து இளைஞர் கழகம் நவமலர் என்னும் மலரை நவராத்திரிக் காலத்தில் வருடந் தோறும் வெளியிட்டு வருவது கண்டு கழிபேருவகை எய்துகின்றேன். பூவின் மணம் உள்ளிருந்து வெளிவருவது போல "நவமலர்" புரட்டாதித் திங்களில் பூத்துக் குலுங்கி பத்திச்சுவையுடன் நறுமணத்தைப் பரப்புகின்றது. இம்மலரில் வெளியிடப்படும் முத்தான பத்திப்பதிகங்களும் ஆக்கங்களும் மாணவர்களது அறவாழ்க்கைக்கு நெறிகாட்டும். உண்மை, நேர்மை, வாய்மை, தூய்மை, பரந்த மனப்பான்மை ஆகிய பண்பை பைந்தமிழால் விருத்தி செய்வதுடன் அறிவியல் ஊட்டலுக்கும் உறுதுணையாக அமைகின்றது. ஓங்கி உயர்ந்த கலைக்கூடமாக விளங்குகின்ற இந்துக்கல்லூரியில் கற்றோரும் கற்போரும் ஆற்றுகின்ற சமயப் பணிகளுக்கு இம்மலரே அடிப்படை ஆதாரமாகவும் முன் மாதிரியாகவும் அமைகின்றது.
எமது சமூகத்தினரிடையே அன்பு, சமாதானம், சாந்தி
என்பனவற்றின் இருப்பிடமாகவும் கசப்புணர்வுகளற்ற
நிலையான உண்மையான மகிழ்ச்சியைப் பெறும் சூழலை
உருவாக்கவும் யாவரும் தோள் கொடுத்து உதவவேண்டும் என்று
இன்றைய நவராத்திரிக் காலத்தில் எல்லாம் வல்ல இறைசக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.
அ. சிறிக்குமாரன் (அதிபர்)
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்.
நவம்லர்/2005 Ο 1

Page 5
U (658FULLUTTEGOOT Lib i
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
தலம்:- திருப்புகலியும் திருவிழிமிழலையும் தாளம்:- ஆதி (திஸ்ரநடை) அருளியவர்: திருஞானசம்பந்தர் இராகம்:- கம்பீரநாட்டை பண்:- நட்டபாடை
மைம்மரு பூங்குழற் கற்றைதுற்ற வாணுதல்
மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி
நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண் ஈச என்
நேச இதென் கொல்சொல்லாய்
மெய்ம் மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே
நவமலர்/2005 O2
 
 

திருவாசகம் தலம் திருப்பெருந்துறை SDJ Ta5 Lib :- G3 - அருளியவர்: மாணிக்கவாசர் JITEBLD :- G5LDIT856OTLD
திருமுறை 08
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால்
பற்று நான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறை உறைசிவனே எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண்
என்றிவை நின்கனே வைத்து மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்று அருள்புரியாயே.
திருவிசைப்பா
தலம்: கோயில் இ - அருளியவர்: திருமாளிகைத்தேவர் JITESLD :- Lisba LDLD திருமுறை : O9
வண்டார் குழல்உமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின் கண்டார் கவலவில் லாடி வேடர்
கடி நாயுடன்கை வளைந்தாய் என்னும் பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலைபல் பசுங்கண் கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை யம்மலக் கூத்தனையே.
நவம்லர்/2005 O3

Page 6
திருப்பல்லாண்டு தலம்: கோயில் இ - அருளியவர்: சேந்தனார் ராகம் - ஆனந்தபைரவி
g5d 5(Up60p : O9
மன்னுகதில்லை 1 வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போய் அகல
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே
LUT០០Th அருளியவர்: சேக்கிழார்
இராகம் - மத்தியமாவதி திருமுறை 12
பண்ணின் பயனாம் நல்லிசையும்
பாலின் பயனாம் இன்சுவையும் கண்ணின் பயனாம் பெருகொளியும்
கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும் விண்ணின் பயனாம் பொழிமழையும்
வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப்பதியின்
வளத்தின் பெருமை வரம்புடைத்தோ?
நவம்லர்/2005 O4

- - - திருப்புகழ் தலம் திருத்தணி அருளியவர். அருணகிரிநாதர்
நினைத்த தெத்தனையிற் றவறாமல் நிலைத்தடத்திதனைப் பிரியாமற் கனத்த தத்துவமுற் றழியாமற்
கதித்த நித்தியசித் தருள்வாறே, மனித்தர் பத்தர்தமக் 6856f(SuTG36OT
மதித்த முத்தமிழிற் 6LurfGSu III (360T செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத் தணிப்பதியிற் பெருமானே.
O அபிராமி அந்தாதி
நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை யென்றும் வணங்குவதுன் மலர்த்தா ளெழுதாமறையி னொன்று மரும்பொரு ளேயருளேயுமையே யிமயத் தன்றும் பிறந்தவளேயழி யாமுத்தி யானந்தமே
சொல்லும் பொருளு மெனநடமாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தா ளல்லும் பகலுந் தொழுமவர்க் கேயழி யாவரசுஞ் செல்லுந் தவநெறி யுஞ்சிவ லோகமுஞ் சித்திக்குமே
ஆத்தாளை யெங்க ளபிராம வல்லியை யண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவியடங்கக் காத்தாளை யங்குச பாசாங் குசமுங் கரும்பு மங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க் கொருதீங்கில்லையே
நவம்லர்/2005 O5

Page 7
சக்தி தோத்திரம்
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய். - BIT6TCBLD5Lib.
ஆயகலைகள் அறுபத்து நான் கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தினுள்ளே
இருப்பாள் இங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரைப்போற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி.
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத்தேவி செஞ்சொற்றார்
தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதியும் போருசுத்தாளை வணங்குதுமே-கம்பர்
நவம்லர்/2005 - O6

JFGBGGuo JGGIUDIT GJEGüDGÚSlLDITEGOOGluo
5d. bajafiosol DL60LD
1. உள்ளத்தில் எழுந்தருள வேண்டுதல்.
வெண்டாமரைக்கன்றிநின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத்தகாதுகொ
லோசகமேழுமளித் துண்டானுறங்கவொழித்தான் பித் தாகவுண்டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
2. நாற்கவிபாடும் திறம் அருள வேண்டுதல்.
நாடும் பொருட்சுவை சொற் சுவை தோய்தரநாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்கயாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைப்பாற் காடுஞ்சுமக்கும் கரும்பே ! சகல கலாவல்லியே. நவம்லர்/2005 O7

Page 8
3. தமிழாகிய அமுதை சுவைக்கும் திறன் வேண்டுதல்.
அளிக்குஞ்செந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக் கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே!
356 56,one soa5(3u.
4. சொற்சோர்வுபடாமற் பேசும்நாவன்மை வேண்டுதல்.
தூக்கும் பனுவற் றுறை தோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற் கடலும் தேக்குஞ்செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.
5. நெஞ்சத்தாமரையின் எழுந்தருள வேண்டும்.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத்தடத்தல ராததென்
னேநெடுந்தாட்கமலத் தஞ்சத்துவசமுயர்ந்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
நவம்லர்/2005 O8

6. முத்தமிழிலும் முழுமையான பயிற்சி வேண்டுதல்.
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற்பனுவனும்யான்
எண்ணும் பொழுதெளிதெய்தநல் காயெழுதாமரையும்
விண்ணும் புவியும் புனலுங்
கனனும் வெங்காலுமன்பர்
கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
afssoa56DTG) 6065Gu.
7. சொல்லியமாட்டின் பொருள் உரை வேண்டுதல்.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங்கொண்டுதொண்டர்
தீட்டுங்கலைத்தமிழ்த்தீம்பா
லமுதந்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ளோதிமப்பேடே af356D66D6).j665Gu.
8. அட்டாவதானம் முதலியன அருளும்பழவேண்டுதல்.
சொல்லிற்பனமுமவதான
முங்கவிசொல்லவல்ல நல்வித்தையுந்தந்தடிமைகொள்
வாய்நளி னாசனஞ் சேர் செல்விக்களிதன்றொருகால்
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகலகலாவல்லியே.
O
9
நவநமலர்/2005

Page 9
9. சொல்லுக்கும் பொருளுக்கும் உயிர் உண்மை அறிவு. உண்மை அறிவின் உருவே கலைமகள் எனல். சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்றநின்னை நினைப்பவர்
யார் நிலந் தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோ
டரசன்ன நானநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலாவல்லியே.
10. மன்னர்களும் மதிக்கத்தக்க அறிவுப்பெருக்கம் வேண்டல்
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச் செய்
வாய்படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும்விளம்பி லுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ
a 560 856DIT6) 66.5Guj.
சுபம்
நவம்லர்/2005 - 16
 

"கல்லூரி எனக்கு என்ன செய்தது என்பதல்ல கல்லூரிக்கு நான் என்ன செய்தேன்?
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 278,2005இல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்திரைாகச் சிறப்பித்த வைத்திய நிபுணர்தி சிறீ ஜெயராஜா அவர்கள் ஆற்றிய உரை
பரிசளிப்பு விழா என்பது ஒரு பாடசாலையின் மாணவர்களின் திறமையைக் காட்டும் ஒரு நிறைவான நிகழ்ச்சி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அக்கறை மாணவர்களின் ஊக்கமுள்ள முயற்சி என்பனவற்றுடன் முன்னேறி வெற்றி காணும் ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம்.
இத்தகைய ஒரு விழாவில், அதுவும் நான் கல்வி கற்ற ஒரு பாடசாலையில், என்னையும் எனது பாரியாரையும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்குமுகமாக அழைத்ததற்குக் கல்லூரித் தலைவருக்கும்.இவ்விழா அமைப்பாளர்களுக்கும் முதற்கண் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் எங்களுக்கு மிகமிக ஆர்வமும் ஊக்கமும் கொடுத்தவர் போன வருட விழாவில் இங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட Dr.S.Jothingam ஆவார். அவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நாட்டில் எத்தனையோ இந்துக்கல்லூரிகள் இருந்தாலும் யாராவது "இந்துக்கல்லூரி" என்று கூறினால், அது யாழ்ப்பான இந்துக்கல்லூரியையே குறிக்கும். இதை ஏன் நான் சொல்கிறேனெ ன்றால், யாழ் இந்துக்கல்லூரி பல சைவப்பெரியார்களின் தாராள மனப்பான்மையாலும், பெருமுயற்சியினாலும் உருவாக்கப்பட்ட ஒரு
ஸ்தாபனமாகும். அத்தோடு இந்துக்கல்லூரி பல பெரியார்களைக்
நவம்லர்/2005 *1

Page 10
கண்டது. பல பெரியார்களைத் தோற்றுவித்தது. இங்கு நல்லமுறையில் கல்வி கற்பித்தல் மட்டுமல்லாது சிறந்த முறையில் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தார்கள். இது தவிர இறை வழிபாடு, சங்கீதம், நாடகம் என்பனவும் சிறந்த முறையில் கற்றுத் தரப்பட்டது. விஞ்ஞானப் பாடங்களைக் கற்பிப்பதற்காக சிறந்த ஆய்வு கூடங்களும் ஆரம்ப காலத்திலிருந்தே அமைக்கப்பட்டிருந்தன. இதனால் இக்கல்லூரி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்துக் கல்லூரி என்றாலும் இங்கு எல்லா மதத்தினரும் கல்வி கற்றனர். இந்துக்கல்லூரியில் கற்பதற்கு மட்டுமல்ல, அதிபராகவும், ஆசிரியராகவும் பணி புரிவதையும் பெருமையாகக் கொண்டனர் பலர் இற்றைக்கு 53 வருடங்களுக்கு முன் நான் இந்துக்கல்லூரியில் 4ஆம் வகுப்பில் சேர்ந்தேன். 1952லிருந்து 1965வரை இங்கு கல்வி கற்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் இங்கு கல்வி கற்ற காலத்தை இன்று நினைத்தாலும் உள்ளம் பூரிப்படையும். ஏனெனில் இந்துக்கல்லூரி எனக்குப் பல விதத்திலும் உற்சாகத்தை ஏற்படுத்தி என்னை ஒரு நல்ல மாணவனாக்கியது. ஆரம்ப வகுப்புகளிலே நான் சரியான குழப்படியும் குறும்பும். எனது குறும்புகளையும் குழப்படிகளையும் ஆசிரியர்கள் எவ்வளவு தூரம் பொறுத்துக்கொண்டார்கள் என்பதை நான் இன்று தான் உணர்கிறேன். இருந்தும் எனக்குப் பிரம்பாலையோ அல்லது கையாலேயோ அடிக்காத ஆசிரியர்கள் யாருமில்லை. உதாரணமாகக் காலம் சென்ற திருவாளர் வரதராஜப்பெருமாள் மாஸ்டர் மிகவும் சாதுவான மனிதர் அவர் வழக்கமாக ஒருவருக்கும் அடிப்பதேயில்லை. ஆனால் அவர் கையால்கூட அடி வேண்டிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அடியின் அகோரமோ என்னவோ தெரியவில்லை, காலம் போகப்போக நான் ஒரு சாதுவான மாணவனாக மாறிவிட்டேன். குயவனொருவன் எவ்வாறு களி மண்ணைக் கொண்டு கருணை மிகு தெய்வத்தின் வடிவத்தைக் கடைந்தெடுக்கின்றானோ அதுபோன்றுதான் யாழ் இந்துக்கல்லூரி என் வாழ்க்கையையும் செம்மைப்படுத்தி என்னை ஆளாக்கியது என்பதைப் பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.
நவம்லர்/2005 72

எனது தந்தையாரும் யாழ் இந்துக்கல்லூரியின் ஒரு பழைய மாணவராவர். அவர் இந்துக்கல்லூரியின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். இந்துக்கல்லூரி 100 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய போது, அவர் அதன் சிறப்பியல்புகளை அப்போது ஈழநாடு பத்திரிகையிலும் இந்துசாதனம் பத்திரிகையிலும் வெளியிட்டார். எனது அண்ணன்மார்கள் நால்வரும் தம்பி ஒருவரும் இங்குதான் முழுமையாகக் கல்வி கற்றனர். எனது மூத்த அண்ணன் திரு பூரீனிவாசனும் மற்றுமொரு அண்ணன் திரு பூரீவிசாகரஜாவும் இந்துக் கல்லூரியில் பல வருடங்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றினார்கள். இதனால் யாழ்ப்பாண இந்துக்கல்லூரிக்கு எமது முழுக் குடும்பமுமே என்றென்றும் கடமைப்பட்டுள்ளதென்பதைப் பெருமையுடன்
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் கல்வி கற்ற காலத்திலிருந்த யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கென்று ஒரு தனித்து வமான செயற்ப்பாடு இருந்தது. அதாவது அவர்கள் எப்பொழுதும் மாணவர்களுடைய முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்துவார்கள்.
உதாரணமாகதிருவாளர்கள் செல்லத்துரை மாஸ்ரர், கார்த்திகேசு மாஸ்ரர். சுப்பிரமணியம் மாஸ்ரர், பொன்னம்பலம் மாஸ்ரர் வரதராஜப் பெருமாள் மாஸ்ரர், கருணாகரன் மாஸ்ரர், சிவராமலிங்கம் மாஸ்ரர், ஏரம்பமூர்த்தி மாஸ்ரர் Francis மாஸ்ரர், ராமக்கிருஷ்ணன் மாஸ்ரர், மயில்வாகனம் மாஸ்ரர் போன்றவர்கள் கற்பிப்பதிலேயே எப்பொழுதும் கவனம்
செலுத்தினார்கள்.
ஆசிரியர்கள் மேற்கத்தேய உடைகளானாலும், தேசிய உடைகளானாலும் மிகவும் ஆடம்பரமாக அணிந்து வருவார்கள். மாணவர்கள் இவர்களைக்காணும் போதெல்லாம் ஒரு பக்தி கலந்த மரியாதை ஏற்படும். தாங்களும் அவர்களைப் போல் வரவேண்டு மென்ற உற்சாகம் ஏற்படும்.
நவம்லர்/2005 13

Page 11
பட்டதாரியான திருவாளர் காத்திகேசு மாஸ்ரர் எங்களுக்கு 8 ஆம் வகுப்பில் ஆங்கிலம் கற்பித்தார். ஒரு நாள் ஆங்கிலம் படிக்க விருப்பமில்லாமல் நான் கடைசி வாங்கிலில் போய் இருந்தேன். இதைக் கண்ட காத்திகேசு மாஸ்ரர், "என்ன இருந்தாப் போல் கடைசி வாங்கில் போய்க் குடியேறியிருக்கிறீர்?" என்று கேட்டார். 'Sir, எனக்கு இங்கிலீஷ் படிக்க விருப்பமில்லை, நான் தமிழில் Arts பாடங்கள் படிக்கப் போகிறேன்." என்று விடையளித்தேன். அன்று வகுப்பு முடிந்தபின் என்னைத் தனியாக அழைத்து, "நீ என்ன பாடங்கள் படித்தாலும் பரவாயில்லை. ஆனால் ஆங்கிலம் படித்தே ஆகவேண்டும்" என்றார். அத்துடன் என்னைக் கல்லூரி நூலகத்துக்கு அனுப்பி, ALBight Story Reader என்ற ஒரு சின்ன ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து, வாசித்து முடித்து அந்தப் புத்தகத்தின் கதையைச் சுருக்கி எழுதச் சொன்னார். வேண்டா வெறுப்பாக மிகவும் சிரமப்பட்டு நானும் அப்படியே செய்து முடித்தேன். ஆனால் அடுத்த நாள் அதே போல இன்னுமொரு புத்தகம் கொடுத்தார். மூன்றாம் நாள் மூன்றாவது புத்தகம் கொடுத்தார்.
இந்த ASSignments எனக்கு சரியான கஷ்டத்தையும் மனவருத்தத்தையும் கொடுத்தன. அவர் கொடுத்த ஆங்கிலப் புத்தகங்கள் எனக்கு வேப்பங்காயாய்க் கசத்தது. இந்தக் கஷ்டத்தையும் காத்திகேசு மாஸ்ரர் கொடுக்கும் "தண்டனைகளையும்" அம்மாவிடம் போய் முறையிட்டேன். அம்மா என் சார்பாகப் பேசி, நான் ஆங்கிலம் படிக்கத் தேவையில்லை என்று சொல்லுவார் என்ற எண்ணம் எனக்கு ஆனால் அம்மாவோ முழுவதையும் கேட்டு விட்டு என்னைப்பார்த்து, "எடை மோனை, அந்தமனுஷன் பஞ்சியைப் பாராமல் உனக்கு இங்கிலீஷ் படிப்பிக்க வெளிக்கிட்டிருக்குது. நீ சத்தம் போடாமல் போய்ப் படியன்" என்றார். மிகவும் மனஸ்தாபத்துடன் பழையபடி ஆங்கிலம் படிக்கத்தொடங்கினேன். காலம் போகப்போக மிக ஆர்வத்துடன் ஆங்கிலம் படித்தேன். கார்த்திகேசு மாஸ்ரர்
நவம்லர்/2005 14

விடாப்பிடியாக எனக்கு ஊக்கம் கொடுத்தார். புதுப்புது ஆங்கிலப் புத்தகங்கள் மேலும் மேலும் கொடுத்தார். யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அங்கத்தவராகச் சேர்ந்து அங்குள்ள சில புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் எடுத்து வாசிக்கச் சொன்னார். இப்படியே மூன்று வருடங்களுக்குப் பின்னர் இந்துக்கல்லூரியின் வருடாந்த சஞ்சிகை uTGT "Young Hindu" gig, gaffluff (5(g GTGT6060T English Editor ஆக நியமித்தது.
அன்று நான் மேலதிக செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதற்கும் மருத்துவக் கல்லூரி செல்ல வாய்ப்புக் கிடைத்ததற்கும் முக்கிய காரணம் காத்திகேசு மாஸ்ரர் என்றே சொல்ல விரும்புகிறேன். அன்று அவர் செய்த உதவிகளும் அவர் சொன்ன அறிவுரைகளும் கல்மேல் பொறித்த காவியங்கள் போல் என் மனதில் பதிந்துள்ளன.
பொதுவுடமைக் கொள்கைகளைக் கொண்டிருந்தால் இவரைக் "கொம்யூனிஸ்ட் காத்திகேசு" என்று அழைப்பார்கள். இவரிடம் மாணவர்கள் கூசாமல் எதையும் எப்பவும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வசதி குறைந்த மாணவரிடம் மிகுந்த அக்கறை கொண்டி ருப்பார். பொருளாதாரக் கஷ்டமென்று படிப்பை நிறுத்துபவர்களுக்கு அறிவுரை சொல்லித்தடுத்துவிடுவார்.
திருவாளர் காத்திகேசு மாஸ்டர் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமாஷான பல கதைகளைச் சொல்லிப் பாடங்களை விளக்குவார். சிலவேளைகளில் சில தமிழ்ச் சொல்லுகளோ அல்லது ஆங்கிலச் சொல்லுகளோ எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று தன் சொந்த முறையில் விளக்குவார். உதாரணமாக, "Research" என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ஆராய்ச்சி என்று அழைப்பார்கள். எங்கள் பையன்கள் ஏதாவது ஒரு பாடத்தில் Research செய்ய வேண்டுமென்றால், அந்தக்காலத்தில் அதற்கேற்ற புத்தகங்களோ அல்லது அறிஞர்களுடைய அறிமுகமோ உடனே இருந்ததில்லை. நவம்லர்/2005 15

Page 12
ஆகவே குடும்பத்தில் மிக முதிர்ந்தவரான ஆச்சியிடம் போய், "அந்த விஷயத்தை ஆராய்ச்சி கண்டுபிடித்தவன்?" என்று கேட்பார்களாம். இதனால்த்தான் Research என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ஆராய்ச்சி என்ற பெயர் கொடுக்கப்பட்டதென்று தமாஷாகக் காத்திகேசு
மாஸ்ரர் விளங்கப்படுத்துவார்.
அந்தக்காலத்தில் சில மாணவர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு வருவார்கள். அப்படித்தான் ஒரு மாணவன் மாட்டு வண்டியில் வரும்போது வண்டிக்காரர் அருகிலிருந்து தானும் கயிற்றைப் பிடித்து ஒட்டி வந்தான். இதைக் கண்டுவிட்ட காத்திகேசு மாஸ்ரர் வகுப்பில் அந்த மாணவனை ABCD என்றழைத்தார். "ABCD என்றால் என்ன Si? என்று அந்த மாணவன் கேட்டான், Assistant
Bullock CartDriver என்று பதில் அளித்தார் காத்திகேசு மாஸ்ரர்.
உயர் வகுப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தவர்களுள் திரு சுப்பிரமணியமும் ஒருவராவார். இவர் தாவரவியலில் விஷேசமாகப் பட்டம் பெற்றிருந்தார். கற்பிக்கும் போது மிகவும் நிதானமாகச் செயற்ப் படுவார். எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பார். படங்கள் வரையும்போது மிகவும் துல்லியமாகவும் துப்பரவாகவும் இருக்கவேண்டும். ஒரு சிறு பிழை விட்டாலும் கண் மண் தெரியாமல் அடி விழும். முக்கியமாகப் படிப்பில் நல்ல அக்கறை காட்டித் திறமையாகச் செயற்ப்படுபவர்கள் பிழை விட்டால் சொல்லத் தேவையில்லை. அடி அகோரமாயிருக்கும். இருந்தும் இவரிடம் கற்றவர்களில் பலபேர் பல்கலைக்கழகம் சென்று முன்னேறி யிருக்கிறார்கள். இதனால் வேறு கல்லூரிகளிடமிருந்தும் இங்கு வந்து இவரிடம் கல்வி கற்றவர்கள் பலர்
விளையாட்டுத்துறைக்குத் திரு தியாகராஜா மாஸ்ரர் பொறுப்பாக இருந்தார். இவர் மிகவும் சிரமத்துடன் மாணவர்களுக்குப்
நவம்லர்/2005 16

பயிற்சி கொடுத்து கல்லூரியின் பெயரைக் காப்பாற்றி விடுவார். அந்தக்காலத்தில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி உதை பந்தாட்டத்தில் மிகவும் பெயர் பெற்றிருந்தது. அனைத்துப் பாடசாலைப் போட்டியிலும் யாழ் இந்துக்கல்லூரிக்கே எப்பொழுதும் வெற்றி கிடைக்கும்.
கணிதத்துறையில் திருவாளர் வரதராஜப்பெருமாள் மாஸ்ரர் மிகக் கவனமெடுத்துக் கற்பிப்பார். அவர் கற்பித்த வகுப்புகளில் இருந்த முழு மாணவர்க்குழுவும் அதே வருடம் பல்கலைக்கழகம் சென்றிருந்தார்கள். இதனால் இந்துக்கல்லூரி இத்துறையில் முதன்மையான இடத்தில் எப்பொழுதும் இருந்ததென்பதைப் பெருமையுடன் கூற விரும்புகிறேன்.
இந்தப் பெரியார்களில் பலர் இன்று எம்மிடையே இல்லா விட்டாலும் அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகளும் அனுபவங்களும் இந்தப் பாடசாலையைத் தொடர்ந்தும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லுமென்பதில் ஐயமில்லை.
நான் படித்த காலத்தில் இருந்த கல்லூரி அதிபர்களைச் QEFITçãoGJg5TGOTITção, ĝSCUDGJ TGITf5GT:— A.Kumaraswamy, V.M. Asaipillai, C. Sabaratnam, N.Sabaratnam GT6õTUGJfg60GTä: GFT6)6)GoTLb. இவர்கள் இந்துக் கல்லூரியில் சேவையாற்றுவதைப் பெருமையாகக் கொண்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பாட்டார்கள். முக்கியமாக இவர்கள் மாணவர்களிடையே சிறந்த ஒழுக்கத்தைப் பேணிப்
பாதுக்காத்தார்கள்.
இந்துக்கல்லூரியின் சிறப்பைச் சொல்ல வேண்டுமானால் இங்கு பயின்று பல துறைகளிலும் வெற்றி கண்டவர்களைச் சொல்லலாம். முழுக்கச் சொல்வதானால் ஒரு பாரிய பட்டியலே வரும்.
ஒரு சிலரைச் சொல்வதானால், திருவாளர் A.M.A.Azeez (சிவில்
நவம்லர்/2005 17

Page 13
சேவை சிவா பசுபதி (சட்டமா அதிபர்), C.K.துரைரட்ணம் (வைத்திய கலாநிதி), Sதனஞ்ஜெயராஜசிங்கம் (விரிவுரையாளர் பே.ப.க) வெ.சபாநாயகம் (கல்வி அதிகாரி) முன்னாள் உப அதிபரும் பிரபல எழுத்தாளருமான வண்ணை சிவா. என்று சொல்லிக்கொண்டே GELJITSGOTTLò.
இன்று மாணவர்களாக இருக்கின்ற நீங்கள் அறியவேண்டியது இதுதான்
உங்களுடைய இளமைக்காலம் பொன்னானதென்பதையும் அது ஒரு குறுகிய கால எல்லைக்குட்பட்டது என்பதையும் மறந்து விடாதீர்கள். இந்தக் காலம் போனால் மீண்டும் வராது. இதை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டியது உங்கள் கடமை.
அமெரிக்காவில் எத்தனையோ மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்திவிட்டுப் போதைப்பொருள், மது, காமவெறியாட்டம் (Drugs, Sex alcohol) என்று குறுக்கு வழியில் சென்று பாழடைந்து போயிருக் கின்றார்கள். இவர்கள் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது. சித்தப்பிரமை பிடித்தவர்கள், நீண்டகாலம் ஜெயிலில் வாடுவோர், வேறு சிலர் இள வயதிலேயே இறந்தும் விடுகிறார்கள். இவர்களில் பலர் இன்று ஜெயிலில் சீவிக்கின்றார்கள். சிலர் பைத்தியமடைந்து இருக்கின்றார்கள் சிலர் இளம் வயதிலே இறந்து இருக்கின்றார்கள்.
கல்வி கற்பதிலோ அல்லது வாழ்க்கையில் எந்த விதத்திலோ முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது விடாமுயற்சியும் நேர்மையும்தான். grijálagsdo Gld Tág)6. Triggit, "Success is 95% preparationand 5% inspiration என்று. "கற்றுத்தேறினாலன்றி வேறு வழி இல்லை", "முயற்சி திருவினை யாக்கும்" என்ற குறிக்கோள்களுக்கு இணங்கிச் செயற்படுங்கள்.
நவம்லர்/2005 18

இன்று உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள். அன்று நாங்கள் கல்வி கற்ற பாடத்திட்டங்கள் இன்று நூறு மடங்காக அதிகரித்துள்ளது. விஞ்ஞான முன்னேற்றங்கள், மருத்துவம், பொறியியல், கணக்கியல் என்று பல துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே இதற்குக் காரணம். இது மட்டுமல்லாது கணனித் துறை சார்ந்த மென் பொருளியல், தகவல் தொழில்நுட்பம் என்றெல்லாம் புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர். இவற்றிற்கெல்லாம் முகம் கொடுத்து முன்னேறவேண்டிய கடப்பாடு மாணவர்களாகிய
உங்களிடம் இருக்கின்றது.
கல்வியில் முன்னேறி வெற்றி காண்பதற்கு இளைஞர்களாகிய உங்களுக்கு ஒரு பத்து புள்ளி அறிவுரையைத்தர விரும்புகிறேன். புள்ளி ஒவ்வொரு நாளும் பின்னேரம் 6 மணி தொடக்கம் 9 மணி
வரை படிப்பு மேசையருகில் அமர்ந்திருங்கள். நீங்கள் பாடப் புத்தகங்களைப் படித்தாலென்ன, சஞ்சிகைகளை வாசித்தா லென்ன இந்த 3மணி நேரமும் கண்டிப்பாகப் படிப்பு மேசையில் கழிக்கவேண்டும். புள்ளி2 ஒரு பாடத்தைப்படித்த பின் அது விளங்காவிட்டால் அதை
மீண்டும்மீண்டும் படியுங்கள். "அடிக்குமேல் அடி போட அம்மியும் அசையுமாம்" என்று சொல்வார்கள். புள்ளி3 பாடசாலையில் ஆசிரியர்கள் சொல்வதைக் கூர்ந்துசெவி
மடுங்கள். புள்ளி4 பெற்றோர் சொற்களை மதித்து நடவுங்கள். புள்ளி5 கல்வி பொறுத்த வீட்டு வேலைகளை அன்றாடம்
செய்துவாருங்கள். புள்ளி 6, உங்கள் எதிர்காலத்து முன்னேற்றத்தையே நோக்கிப் படியுங்கள். கடந்தகாலத்தில் நீங்கள் விட்ட தவறுகள்,
தோல்விகளை எண்ணி வருந்தாதீர்கள்.
நவம்லர்/2005 19

Page 14
புள்ளி7. "காயமே இது மெய்யடா. இதில் கண்ணும் கருத்தும் வையடா"
என்றபடி உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். புள்ளி 8 போதைப்பொருள், மது, புகைத்தல் என்பவற்றிலிருந்து விலகி
(3)(Briggit. Be abstain from drugs, alcohol and smoking. புள்ளி 9 என்றென்றும் உண்மையையே பேசுங்கள். புள்ளி10. Television இல் நாட்டம் வேண்டாம். Television படிப்புக்கு Tele விஷமாகும். ஆங்கிலத்தில் சுருக்கிச் சொன்னால், my simple formula for success at school is "listen to your teachers listen to your parents and do your home work. இன்று பரிசு பெறும் எல்லா மாணவர்களையும் மனப்பூர்வமாகப் பாராட்டுவதுடன் அவர்கள் மென்மேலும் பரிசுகளைப் பெற்றுக் கல்வியில் உயரவேண்டுமென்று எனது நல்லாசிகளை வழங்கி வாழ்த்துகிறேன். பரிசு பெறாத மாணவர்கள், "அடுத்த வருடம் நான்
"
இதே மேடையில் பரிசு பெறுவேன். என்னால் முடியும்" என்ற
குறிக்கோளுடன் இன்றே தொடர்ந்து செயற்படுங்கள். வெற்றி நிச்சயம்.
இன்று இங்கு கல்வி பெறும் பாக்கியசாலிகளான நீங்கள் அறியவேண்டியது இதுதான்.
யாழ் இந்துக்கல்லூரி ஒரு சாதாரணக் கல்லூரி அல்ல. இது நம்முன்னோர் அளித்த ஓர் அருஞ்செல்வம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை மனிதகுல மாணிக்கங்களாக மாற்றிய புண்ணிய ஸ்தாபனம். இத்தகைய கல்லூரியைக் காப்பாற்றுவதும் அதை மென்மேலும் வளர்ச்சியடையச் செய்வதும் எங்கள் எல்லோருடைய
கடமையாகும்.
இந்த விஷயத்தில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு பழைய நவம்லர்/2005 2O

மாணவனும் சிந்திக்கவேண்டியது யாழ் இந்துக்கல்லூரி எனக்கு என்ன செய்தது என்பதல்ல; நான் பழைய மாணவனாக இந்துக்கல்லூரிக்கு
என்ன செய்தேன் என்பதாகும்.
இத்துடன் யாழ் இந்துக்கல்லூரி என்றென்றும் மாணவர்களுடைய கல்விக்கும், அவர்களுடைய முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து உதவி புரிய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு
எனது சிற்றுரையை முடிக்கின்றேன்.
நவம்லர்/2005 2背

Page 15
புள்ளி 7.
புள்ளி 8
புள்ளி 9 புள்ளி10
LUTUTITL
கல்விய
வாழ்த்து இதே
குறிக்ே
அறிய
LLUIT நம்முன்
LOT 600T
ஸ்தா மென்ே
கடமை
ஒன்று
[556D Profilo
நன்றியுரை எமது கல்லூரி சமய செயற்பாடுகளுக்கு பிரதம குருவ அர்ச்சகராக விளங்குகின்ற சிவபூரீ. ந. சதான அவர்களுக்கும் இம்மலரை வெளியிட ஆக்கமும் அளிக்கும் அனைவருக்கும், தைப்பொங்கல் திருநாள் முதல் மார்கழித் திருவாதி வரையுள்ள பெருநாள்களை சிறப்பாக அனுட்டிப்ப வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிக் கொண் அனைவருக்கும், சிவஞான வைரவர் ஆலய சங்காபிஷேக விழாவிற்கு உ இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும் அபிவிருத்திச் சங்கத்தினருக்கும், நாள்தோறும் காலைப் பிராத்தனையை நெறிப்படுத்தும் களுக்கும் திருமுறைகளை ஒத பயிற்றுவிக்கும் இை களுக்கும் நாவண்மைப் போட்டிகளுக்கு மத்தியஸ்தர யாற்றிய நடுவர்களுக்கும், நாவண்மைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாண6 தங்கப்பதக்கங்களை வழங்கிய யாழ் இந்துக் கல்லூ மாணவர் சங்கத்தினருக்கும், சமய விசேட தினங்களில் சொற்பொழிவாற்றிய சான்றோர்களுக்கும் இம் மலரை வெளியிட ஆக்கமும் ஊக்கமும் அளித்து வழங்கிய கல்லூரி முதல்வர் அ.சிறிக்குமாரன் அவர்களு வழிகளிலும் தோளோடு தோள் நின்று உதவிய கல்லூரி குழாத்தினருக்கும் மாணவர்களுக்கும்,
எமது உளம் ஆணிந்த நன்றிகள்.
யாழ்ப்பாணம் இந்: இந்து இளைஞர்கழகம்
நவம்லர்/2005

|T35 esgyb, GlouLU ந்த சர்மா
ஊக்கமும்
திரை நாள் தற்கு பல டிருக்கும்
தவிய யாழ்
]ᎱᎢl 8ᎦITᎶᏡᎶu0
ஆசிரியர் சயாசிரியர்
F55 35L66) LD
வர்களுக்கு ரி பழைய
|60)6ਲੰ
ஆசியுரை க்கும் சகல
ஆசிரியர்
துக்கல்லூரி யாழ்பாணம்
22

Page 16
H
இ6 கல்லுட்
வாழிய யாழ்நகர் இ வையகம் புகழ்ந்திட
இலங்கை மணித்தி இந்து மதத்தவர் உ6 இலங்கிடும் ஒருபெரு இளைஞர்கள் உள1
கலைபயில் கழகமு கலைமலி கழகமும் தலைநிமிர் கழகமுட
எவ்விடமேகினும் எ எம்மன்னை நின்ன என்றுமே என்றுபே இன்புற வாழிய நன் இறைவன்தருள்8ெ
ஆங்கிலம் அருந்தமி ©ങ്ങഖLuിങ്) ങ്കpങ്കധ്രു ஓங்குநல்லறிஞர்கள் ஒருபெருங் கழகமுL ஒளிர்மிகு கழகமும் உயர்வுறு கழகமும் உயிரென கழகமும்
தமிழரெம் வாழ்வின் தனிப் பெருங் கலை
வாழ்க 1வாழ்க 1வா தன்னிகர் இன்றியே தரணியில் வாழியர்
பதிப்பு:கரிகன்ை பிறி

Hmmmmmmmmm
92 MLADULLD
விக் கீதம்
ந்துக்கல்லூரி
என்றும் (வாழி)
ருநாட்டினில் எங்கு iTGITLib நங்கலையகம் இதுவே மகிழ்ந் தென்றும்.
b6gsC&6) - LIGO இதுவே - தமிழர் b6gsC&6)
த்துயர் நேரினும் லம் மறவோம் D என்றும்
றே!
5ாடுநன்றே
மிழ் ஆரியம் சிங்களம் ம் இதுவே! i உவப்பொடு காத்திடும் ம் இதுவே!
இதுவே!
இதுவே!
இதுவே!
fற்தாயென மிளிரும் u85LD6hTup85
փ& ! நீடு நீடு.
ண்டேர்ஸ், யாழ்ப்பாணம், தொபே021222277,4590123