கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பன்னிரு திருமுறைத் தொகுப்பு 1989

Page 1
.ெ gall D.
IT st sili I GM i 3
IITIT
M M
பன்னிரு திருமுை
 
 

ந்துக் கல்லூரி GOOTD
ருர் கழகம்
M
(\\\'
ஏறத் தொகுப்பு

Page 2
.
 

-
ତ_ சிவமயம்
LLIT jūIIT NOT i Aji JI Š 5 Â T f UITÜÜTLITTGJOT)
இந்து இளைஞர் கழகம்
பன்னிரு திருமுறைத் தொகுப்பு
உதயன் வெளியீடு
22-05-1989

Page 3
-
 
 
 
 
 
 
 


Page 4

அதிபரின் செய்தி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்து இளைஞர் கழகம் சமயப் பணி புரிவதில் முதன்மையானது. இன்று வெளியிடப்படும் பன்னிரு திருமுறைத் தொகுப்பு என்னும் இந்நூல். கழகத்தின் பணிகளில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைகிறது.
இந்நூல் எமது இளம் சமூகத்தினருக்கும் சைவ அபிமானி ளுக்கும் பெரும் பேருக அமையும் என்பது எமது நம்பிக்கை.
எமது கல்லூரியின் ஆக்கவேலைகளுக்கு பல வழிகளிலும் உதவி வரும் உதயன் நிறுவத்தினர் இந்நூலினை வெளியிடுவதிலும் தமது மனநிறைவான பங்களிப்பினைச் செய்துள்ளனர். அவர்களுக்கு எமது உள நிறை நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்ருேம்.
இந்நூல் வெளியீடும் அதனுடன் இணைந்த திருமுறை மாநாடும் சிறப்புற இறைவனை வேண்டுகின்ருேம்.
gF. GILT Gör 65 DL6M)b 22 - 05 - 1989 அதிபர்
(யா. இ. க)

Page 5
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்து இளைஞர் கழகம்
அதிகாரசபை :
புரவலர் :
பெருந்தலைவர் :
பெரும் பொருளர் :
செயலதிபர் :
ஆலோசனைக்குழு:
தலைவர் :
உதவித் தலைவர் :
இணைச்செயலர்கள் :
பொருளர் :
திரு. ச. பொன்னம்பலம் அதிபர்
திரு. சி. சு. புண்ணியலிங்கம்
திரு. வே. சண்முகலிங்கம்
திரு. க. குமாரசிங்கம்
திரு. சே. சிவராஜா திரு. சிவ. மகாலிங்கம் திரு. சி. செ. சோமசுந்தரம் திரு. ச. வே. பஞ்சாட்சரம் திரு. த அம்பிகைபாகன் திரு. ந. தங்கவேல்
يمية .
செல்வன் s-விவேகானந்தா
செல்வன் நடகிருபாகரன் Ό *F్న -ဉါQu်လဲလဇံ၊ . செல்வன் ஐடகந்திரகுமார்ட
செல்வன் வை. அருள்தாசன்
செல்வன் த நகுலேஸ்வரன்

6)
திருமுறை மாநாடு
அந்நியர்களுடைய ஆட்சியின் கீழ் நமது மொழியும் மதமும் பண் பாடும் நலிவுற்றிருந்த வேளையில் நமக்கெல்லாம் வழிகாட்டும் க ல ங் கரை விளக்காக, திசைகாட்டியாகத் திகழ்ந்தவர் ஆறுமுகநாவலர் ஆவார். சைவப் பிள்ளைகள் சைவசமயச் சூழலிலே கல்வி கற்க வேண் டும் என்று பெருவிருப்பம் கொண்டு ஆறுமுகநாவலர் விடுத்த அறை கூவலை ஏற்ற நமது பெரியார்களின் பெரு முயற்சியினுல் நூருண்டு களுக்கு முன்பு உருவாக்கப்பெற்ற கல்லூரியே யாழ் இந்துக் கல்லூரி ஆகும். எங்கள் கல்லூரி வளவின் உள்ளே இருந்து ஞான ஆட்சி புரியும் ஞான வயிரவப் பெருமானுக்கு சென்ற மாதம் (10, 04. 89 ) இல் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடை பெற்றது. தொடர்ந்து வரும் மண்டலாபிஷேக விழாவின் இறுதி நான்கு நாட்களும் கல்லூரி இந்து இளைஞர் மன்றம் திருமுறை மகாநாடு ஒன்றை மிகவும் சிறப்பாக நடாத்துகிறது.
சைவ சமயத்தின் உயர்நிலையை விளக்குவன சைவத் திருமுறை கள் ஆகும். இறைவனுடைய திருவருளைப் பூரணமாக நமக்குத் தந்த அருளாளர்களால் அருளப்பட்ட அருள் வாசகங்களே திருமுறைகள் ஆகும். பக்தி ரசம் ததும்பும் இந்தத் திருமுறைகள் நமது தெ ய் வீ க வாழ்விற்கு வழிகாட்டும் ஞானக் களஞ்சியங்களாகும்.
இறைவனது வடிவங்களில் மந்திரருபமும் ஒன்று. சைவத் தி ரு முறை சிவபெருமானது மந்திர வடிவமாகும். இறைவனுக்கு நாம் செய்கின்ற அர்ச்சனை தமிழிலே திருமுறை பாடுதல் ஆகும்.
'மற்று நீ வன்மை பேசி வன்ருெண்டன் என்னும் நாமம் பெற்றன; நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்: ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்ருர் தூமறை பாடும் வாயார். இவ்வாறு சுந்தரரின் வாயால் தமிழிலே திருமுறையைக் கேட்க இறைவன் விரும்பினுர் எனப் பெரிய புராணத்திலே சேக்கிழார் பெருமான் காட்டுகிறர். திருமுறையைக் கோயிலிலே எழுந்தருளுவித் துப்பூசனை இயற்றுதலும், திருவிழா எடுத்தலும் சிறந்த புண்ணியம் என அனுபூதிமான்கள் கூறுகின்றனர்.

Page 6
7 - 4 ܚ
இலங்கையின் தேசியப் பாடசாலைகளில் ஒன்ருகவும், தமிழ் பேசும் இந்துக்களின் தலைநிமிர் கழகமாகவும் மிளிர்கின்ற யாழ் இந்துக் கல்லூரியில் எடுக்கப்படும் திருமுறை விழா மிகவும் சிறப்பாக நடை பெற வேண்டுமெனப் பலரும் விரும்பினர். இந்த விருப்பத்தின் விளை வாக எங்கள் கல்லூரியில் நடைபெறும் திருமுறை மகாநாட்டில் திரு முறைத் தொகுப்பு நூல் ஒன்றை இலவசமாக வெளியிடுவதற்கு எமது கல்லூரியின் பழைய மாணவனும், சமயப் பற்று மிகு ந் த வ ரும் உதயன் - ஷப்ரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமாகிய திரு. ஈ. சர வணபவன் அவர்கள் முன்வந்தார்கள்,
* ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு '
என்ற வள்ளுவர் வாக்கிற்கு அமைய அவர்களுடைய செல்வம் இப்படியான "" நின்று நிலைக்கின்ற தர்மகாரியங்களுக்கும் பயன்படு வதையிட்டு நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிருேம்
சிவ. மகாலிங்கம் ( ஆசிரியர் - யாழ் இந்துக் கல்லூரி )

L gloj LDLJIŽ
தோத்திரப் பாக்கள்
\^\^مح^مح^مح^Z
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் தேவாரம்
முதலாந் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தோடுடையசெவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
அங்கமும் வேதமு மோதுநாவர் அந்தணர் நாளு மடிபரவ மங்குன் மதிதவழ் மாடவீதி மருக னரிலாவிய மைந்தச் சொல்லாய் செங்கயலார் புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணப தீச்சரங் காமுறவே.
சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனுேடுபால் முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றேணி புரத்தீசன் றுளங்குமிளம் பிறையாளன் றிருநாம மெனக்கொருகாற் பேசாயே.
செல்வ நெடுமாடஞ் சென்று சேணுேங்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே,
புலனந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக வஞ்சேலென்
றருள் செய்வா னமருங்கோயில் வலம்வந்த மடவார்க ணடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே.

Page 7
- 6 =
இரண்டாந் திருமுறை
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனுல்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
என்னபுண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னம்நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித்தரளங்கள் மன்னுகாவிரி சூழ்திருவலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னியாதரித் தேத்தியும் பாடியும் வழிபடுமதனுலே.
விருது குன்றமா மேருவி னுணர
வாவனலெரி பம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
துறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலனி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே,
மூன்றந் திருமுறை
இடரினுந் தளரினும் எனது றுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழு வேன் கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் எதுவோநினதின் னருள் ஆவடுதுறை அரனே.

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவில்லைக் கண்ணினல் லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந் தகை யிருந்ததே.
மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலனிங்கிவ னென்றுநீபரி வெய்திடேல் ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல் சேர் ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மாணி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூததா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னெடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே. -
தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பா னிக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
திருநாவுக்கரசு நாயனுர் தேவாரம் நான்காந் திருமுறை
கூற்ருயினவாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தனன் நானறியேன் ஏற்ருயடிக் கேயிர வும்பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேனதி கைக்கெடில
வீரட்டா னத்துறை யம்மானே.

Page 8
- 8 =
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போ தொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேனவர் திருப் பாதங் கண்டறியாதன கண்டேன்
பத்தணுய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினுற் பத்தி செய்கே னென்னை நீ யிகழவேண்டா முத்தனே முதல்வாதில்லை யம்பலத் தாடுகின்ற அத்தாவுன் னுடல் காண்பா னடியனேன் வந்தவாறே.
மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும்
வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையைவாங்கிப் பொறையெனும்
நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக்கண்டு தகவெனும்
வேலியிட்டுச் செம்மையு னிற்பராகிற் சிவகதி
விளையுமன்ருே
கருவுற்ற நாண்முத லாகவுன்
பாதமே காண்பதற்கு உருகுற்றெ னுள்ளமும் நானும்
கிடந்தலந் தெய்த்தொழிந்தேன் திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா ஒரு பற்றி லாமையுங் கண்டிரங்
காய்கச்சி பேகம்பனே.
ஐந்தாந் திருமுறை
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன் அடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே

ܚܙܝܢ ܠܐ 9 ܚܙܝܼ
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் செத்த போது செறியார் பிரிவதே நித்த நீலக் குடியர னநினை சித்த மாகிற் சிவகதி சேர்தீரே
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன் ஞர்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினல் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே,
ஆருந் திருமுறை
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானுேர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்டு நனந்தனைய திருவடி யென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானுர் நல்ல வாறே.
வாயான மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளை யேற்ருன் தன்னைச்
சுடர்திங்கட் சடையானத் தொடர்ந்து நின்றென் தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
திருவே என்செல்வமே தேனே வானுேர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உளமே உள்ளத்தி னுள்ளே நின்ற

Page 9
سبب 10 سس
கருவேஎன் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமரரேறே.
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்ருல்
அல்லகண்டம் கொண்டடியேன் என்செய் கேனே.
அப்பன் நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒருரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ இப்பொன்றி இம்மணிநீ இம்முத்தும்நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
சுந்தரமூர்த்திநாயனுர் தேவாரம்
ஏழாந் திருமுறை பித்தாபிறை குடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே.
தம்மை யேயுகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்கி னுந்தொண்டர்த் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்த லாமிடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே.
 
 
 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனுர்க் கடியேன் இல்லையே என்னுத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொன்னும் மெய்ப்பொரு ஞந்தரு வானப் போக மும்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணு
எம்மா னனளி வந்தபி ரானை அன்னம்வை கும்வ பற்பழ னத்தணி
ஆரூ ரான மறக்கலு மாமே.
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.

Page 10
மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
எட்டாந் திருமுறை ஆடு கின்றிலை கூத்துடை யான் கழற் கன்பிஐ) என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலே பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வு தொன்றறியேனே
சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்.தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் கார்டு வந்தனையும் அமலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஜம் புலன்க 6ÎTTT{T வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டஜனய மேனித்
தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே.
அருளா தொழிந்தால் அடியேனே அஞ்சேல்
என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே
பொன்னம்பலக்கூத்தா
மருளளர் மனத்தோடு உனப்பிரிந்து வருந்து
வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே
போனுற் சிரியார.
பாரொடு விண்ணுய்ப் பரந்தனம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாப் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு தோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானுல் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கன் ,
வருகனன் றருள்புரி யாயே வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட
முழுதுத் தருவோய்நீ வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ வேண்டி
என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே.

திருமாளிகைத்தேவர் அருளியது ஒன்பதாந் திருமுறை - திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே ! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காகத் தெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே !
சேந்தனுர் அருளியது
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றனஞ் சிவனைத்
திருவீழி மிழலைவிற் றிருந்த சொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரளன் கண்குளிர்ந் தனவே.
பூத்துருத்தி நம்பிகாட நம்பி அருளியது
பத்தியாய் உணர்வோர் அருளேவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா இருக்கும் தேவர் காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் விதி
விடங்கராய் நடம் குலா வினரே,

Page 11
சேந்தனுர் அருளியது
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட் செய்மின்
குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள் அள வில்லதோர் ஆனந்த
வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே
சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெருத அறிவு பெற்றேன்; பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.
திருமூலர் அருளியது
பத்தாந்திருமுறை - திருமந்திரம்
நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம் பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானுர்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவார் சிவசிவ என்னச் சிவகதி தானே
பதினுேராந் திருமுறை காரைக்காலம்மையார் அருளியது அன்றுந் திவுருவங் காணுதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக் கேன் எவ்வுருவோ நின் உருவம் ஏது
நக்கீர தேவ நாயனுர் அருளியது உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வானுேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில்வாழ் வே
அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகாஎன் ருேதுவார் முன்
கபிலதேவ நாயனுர் அருளியது திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானேரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தங் கை.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினுல் கண்ணிற் பணிமின் கனிந்து

Page 12
சேக்கிழார் பெருமான் அருளியது பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம்
மற்று நீ வன்மை பேசி வன்ருெண்டன் என்ற நாமம் பெற்றன ; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்ருர் தூமறை பாடும் வாயார்.
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பம் ஆம் என்று கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினுல் நீடி அறிவரும் பதிகம்
பாடினரி பரவினுர் பணிந்தார். மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாருந்
திருவடிவும் மதுர வாக்கில் சோர்வாகும் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளும் செம்பொற் ருளே சார்வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் சேல்வார். மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லார் அடி யார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி னுல் அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகர்முன் வருமென உரைப்பார்.
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள் பிரான் சண்பையர்வோன் அருளி னுலே
இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள் பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னுரைப்
போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே.
மங்களம் சீகாழித் தேவருக்கு மங்களம் திருநாவுக்கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம்.

.ெ
கல்லூரிக் கீதம்
士士*士士
வாழிய யாழ்நகர் இந்துக்கல் லூரி வையகம் புகழ்ந்திட என்றும்
- வாழிய
இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்
கலைபயில் கழகமும் இதுவே - பல கஜலமலி கழகமும் இதுவே - தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே!
எவ்விட மேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு நன்றே
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் அவைபயில் கழகமும் இதுவே! ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும் ஒருபெருங் கழகமும் இதுவே! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரண கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப்பெருங் கலையகம் வாழ்க
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! தன்னிகர் இன்றியே [%(ତ) தரணியில் வாழிய நீடு.

Page 13
உதயன் அச்சகம், யாழ்ப்பாணம்.


Page 14