கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1971

Page 1
யாழ்ப்பாணம்
JAFFNA F
பிரதம திரு. என். ஏ. வய
(2)
N. A. VAT
 

N
/?洋八
.ெ இந்துக் கல்லூரி HINDU COLLEGE
| DAY
விருந்தினர் பித்தியலிங்கம் அவர்கள்
tef Saussé
HIALINGAM. Esq.
11-7 III

Page 2
VS V
 
 
 

, , , ,
நிகழ்ச்சி நிரல்
தேவாரம்
வரவேற்புப்பா செல்வன், இ. சுதாகரன்
செல்வன் க, ஞானகாந்தன் செல்வன் மா, யோகேஸ்வரன்
அறிக்கை அதிபர்
பரிசளித்தல் திருமதி என். ஏ, வைத்திலிங்கம் தலைமையுரை திரு. என். ஏ, வைத்திலிங்கம் நன்றியுரை திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன்
(செயலாளர் யா, இ. க. பழைய மாணவர் சங்கம்)
செல்வன் ரி. கே. யோகநாதன் (சிரேஷ்ட மாணவமுதல்வர்) நாடகம்
(அகில இலங்கைத் தமிழ்த்தின விழாவில் முதலிடம் பெற்றது) கல்லூரிக் கிதம்
தேசிய கீதம்

Page 3

1.
அதிபரின் அறிக்கை
1971.
திரு. வைத்திலிங்கம், திருமதி வைத்திலிங்கம் அவர்களே, சகோதர சகோதரிகளே,
பெற்றேர்கள், பழைய மாணவர்கள், அபிமானிகள் ஆகிய உங்கள் அனைவரையும் எங்கள் வருடாந்த பரிசுத் தினத்துக்கு வரவேற்பதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்ள நாங் கள் பெருமைப்படுகிருேம்,
எங்கள் மரபுக்கமைய இன்று எங்கள் பழைய மாணவர்களில் ஒருவரான திரு. என். ஏ. வைத்திலிங்கம் அவர்களைப் பிரதம விருந்தினராகப் பெற்றிருப்பதில் களிப்புறுகிருேம்.
ஐய, உங்களைப் பிரபலமான பழைய மாணவர் என்று மட்டு மல்லாமல் எங்கள் நாட்டின் பொருளாதார சமூக அபிவிருத் திக்கு பெருந்தொண்டாற்றிய, திறமை வாய்ந்த பொறியியல் வல்லுநர் என்ற முறையிலும் வரவேற்கிருேம். தொழில் துறை யிலும், கல்வித் துறையிலும் தங்கள் வியத்தகு முன்னேற்றத்தை மகிழ்ச்சிப் பெருக்குடன் அவதானித்து வந்திருக்கிருேம், யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியிலும், இலங்கைப் பல்கலைக் கழகத்தி லும் தாங்கள் ஈட்டிய சாதனைகள் நன்கு தெரிந்தவை. நான் குறிப்பிட வேண்டியவையல்ல. தொழிலில் நீங்கள் சாதித்தவை தலே சிறந்தவை குறுகிய காலத்தில் இலங்கைப் புகையிரத தேவையில் பிரதம பொறியியலாளராக உயர்ந்து, உங்கள் மேற்பார்வையிலிருந்த பிரிவை விசாலிக்க அரும்பாடுபட்டீர்கள். திராவிடக் கட்டடக்கலைப் பாணி பேணி நிர்மாணிக்கப்பட்ட புதிய யாழ்ப்பாணம் புகையிரத நிலையமும் வேறுபல புகையிரத கட்டடங்களும் இதற்கு அழியாத சான்றுகளாகும். சிங்கப்பூர் பலதொழில் நுட்பக் கல்லூரி சில ஆண்டுகளுக்கு முன் தங்களை சிரேஷ்ட பொறியியல் விரிவுரையாளராய் நியமனம் செய்தது தங்கள் திறமையையும் செய்திறனையும் கணித்தேயாகும் என்பதில் எமக்கு ஐயமில்லை. அங்கு தொடர்ந்து விரிவுரையாளராகப் பணி யாற்ருமல் நாட்டுக்குச் சேவை செய்ய புதிய பாதைகளைத் தேடி இலங்கைக்குத் திரும்பும்படி தூண்டியது தங்கள் தீவிர தேசப்

Page 4
ويجسد 2 سبيسي
பற்றுத்தான் என்பதை நாம் நிச்சயமாய் அறிவோம். எங்கள் அர சாங்கமும் உங்கள் திறமையை விரைவில் உணர்ந்துகொண்டது. இல்லாவிடின் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபன ஆலோ சகரில் ஒருவராகப் பொறுப்பான பதவியை வழங்கியிருக்காது.
திருமதி வைத்திலிங்கம் அவர்களே, உங்களுக்கு விசேஷமாக வரவேற்புக் கூறவும் இன்று பரிசுகளை வழங்க ஒப்புக்கொண்ட மைக்கு நன்றி கூறவும் நாம் விரும்புகிருேம். நீங்கள் எங்கள் கல்லூரியுடன் நெருக்கமாக தொடர்புகொண்ட ஒரு பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சுதந்திரம் பெற்ற பின்னர், கல்வியின் பல்வேறு அம்சங்க &ளப் பல குழுக்களும், விசாரணை சபைகளும் ஆராய்ந்து முடிவு களே சமர்ப்பித்தன. பல மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டன வெனினும் அங்குமிங்குமாக ஒரு சில மாற்றங்கள் புகுத்தப்பட் டன. சொந்த நலங்காப்போரின் தலையீட்டால் சில நல்ல திட் உங்கள் செயற்படுத்தப்படவில்லை, கிரேஷ்ட, கனிஷ்ட, ஆரம்ப பாடசாலைகளென வகுக்கப்படுவதும், 6-ம் தர பாடவிதானங்க ளில் மாற்றங்களும் அதன் விளைவாக 9-ம் தரத்தில் தேசிய கல்விப் பத்திரப் பரீட்சை நடாத்தப்படுவதும் பாடசாலை அனு மதி வயது உயர்த்தப்படுவதுமான போன்ற சரியான வழியில் பல மாற்றங்கள் கல்வியமைச்சினல் ஆலோசிக்கப்படுகின்றன. இவற்றை வரவேற்கும் அதே வேளையில் எச்சரிக்கையாக ஒரு வார்த்தையும் அவசியமாகிறது. வயது 5ல் இருந்து 6 ஆக்கப் பட்ட பின்னர், பொருத்தமான பாடசாலைகளின்றி பாலர் அவதிப்படக்கூடாது. பாலர் கல்விக்காக இலங்கை முழுவதும் ஏராளமான பாடசாலைகளே அரசாங்கம் நிறுவவேண்டும்.
எங்களைப்பற்றி
பெற்ருேர் ஆசிரிய சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்க் கலவன் பாடசாலை எங்கள் கல்லூரியுடன் இணைக்கப்பட்டு இரண்டும் ஒரு நிறுவன மாக இயங்குகின்றன. தரம் ஒன்றிலிருந்து ஆறுவரை கனிஷ்ட :டசாலையில் இடம் பெற்றுள்ளன. அங்குள்ள மாணவிகள் வேறிடங்களுக்குச் செல்ல, கனிஷ்ட பகுதியிலுள்ள இட நெருக் கடி படிப்படியாகக் குறையும். இவ்வருடம் புதிதாக அனுமதிக் கப்பட்டோர் தொகை 649 எங்கள் இடாப்புகளிலுள்ளோர் தொகை தரம் ஒன்றிலிருந்து ஆறுவரை 564 ஆண்களும், 228 பெண்களுமாக மொத்தம் 792 ஏழாந்தரத்திலும் எட்டாந் தரத்திலும் 445 ஆண்களும், 15 பெண்களுமாக மொத்தம் 460
 

ܘܐܬܚܲܝ 8 ܘܚܙܝ
ஒன்பதிலும் பத்திலும் 878 ஆண்கள். பதினென்றிலும் பன்னி ரண்டிலும் 328 ஆண்கள். எல்லாமாக மொத்தம் 2258 மாணவர்.
இப்போதுள்ள மாணவர் எண்ணிக்கையும் வகுப்பறைகளின் தொகையும் காரணமாக திருப்தியீனமான நிலையில் நாம் கடமை யாற்றுகிருேம். வசதியீனமான வகுப்பறைகள் கட்டுப் பாட்டுக் குறைவுக்கு இடமளிக்கும். திறமைக் குறைவுக்கு வழி கோலும், எங்கள் அவசர தேவை மேலதிக வகுப்பு அறைகளா கும். முன்னுள் முகாமையாளர்களால் 1960 இல் 38,000 ரூபா செலவில் அத்திவார மிடப்பட்ட மூன்று 1ாடிக் கட்டடமொன்று பூர்த்தியாகாமலே யிருக்கிறது. நல்ல கல்லூரியாக நிலைக்க வேண்டுமானுல் இக்கட்டடத்தைப் பூரணமாக்க வேண்டும் , பெற்rேரையும், பழைய மாணவரையும் இதற்குத் துணைபுரியு மாறு வேண்டுகிருேம்.
ஆசிரியர்
உதவி அதிபராகவும் அதன்பின் ஆருண்டுகளுக்கு மேல் அதிபராகவும் பட பக்தியுடன் பணியாற்றிய திரு ந. சபாரத் தினம் ஒய்வுபெற்றர். ஆருண்டுகள் பதில் அதிபராகக் கடமை யாற்றிய திரு. க. சுப்பையாவும் 1970 டிசம்பரில் ஒய்வு பெற்ருர், விசுவாசமாகப் பாடசாலைக்கு உழைத்த இருவருக்கும் குது கல மான ஒய்வுகால வாழ்க்கை கிடைக்க வாழ்த்துகிருேம், சென்ற ஆண்டு முடிவில் இரு அநுபவசாலிகளான ஆசிரியர்களும் ஒய்வு பெற்றனர். கல்லூரியின் முன்னேற்றத்தில் அயரா அக்கறை கொண்டவரும் உயர்தர வகுப்புகளில் திறமையுடன் பெளதிகம் போதித்தவருமான திரு. அ. சரவணமுத்து இங்கு 30 ஆண்டு களுக்குமேல் ஆசிரியரா யிருந்திருக்கிருர், பெளதிகத்துறைத் தலைவர் என்ற முறையில் அவர் சேவை குறிப்பிடத்தக்கது. 33 ஆண்டுகள் பயன்தருசேவையாற்றி வெற்றியீட்டிய பலகோஷ்டி களை உருவாக்கிய, கவர்ச்சிமிக்க உடற்பயிற்சிப் போதசிைரியர் திரு. பொ. தியாகராசாவும் ஒய்வுபெற்ருர் 45 ஆண்டுகள் விசு Di Ggóat புரிந்த உதவியாளர் திரு. இ. கந்தையா ஜனவரியில் ஒய்வுபெற்ருர் பாடசாலைக்கு அவர்கள் செய்த யாவற்றிற்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிருேம். அவர்கள் ஒய்வுகால வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகத் திகழ வாழ்த்துகிருேம்.
இவ்வாண்டு ஆசிரியர்கள் பலர் இடமாற்றங்கள் பெற்றுள் ளனர்,

Page 5
ܒܚ ܲ4 ܚܚܘ
ஜனவரியிலிருந்து அதிபராகக் கடமையாற்றிய திரு.மு. கார்த்தி கேசன் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபராக இட மாற்றம் பெற்ருர், ஆங்கிலப் பிரிவின் தலைவராக இருந்ததுடன் ஆங்கிலமும், கணிதமும் போதிப்பதில் மிகவும் திறமைசாவியாக விளங்கினர். அவர் 25 ஆண்டுகள் ஆசிரியராகச் சேவையாற்றி யுள்ளார். அவருடைய புதிய பாடசாலையில் நலம்பெற வாழ்த் துகிருேம்.
திரு. தி. பூரீநிவாசன் தற்காலிகமாகக் கனிஷ்ட தொழில் நுட்பக் கல்லூரிக்குச் சென்றுள்ளார். இது தற்காலிக இடமாற் றம்போல் தோன்றுகிறது. விரைவில் திரும்பவும் இங்கு வருவா ரென்று நம்புகிருேம். கணிதத்தில் விசேட பயிற்சிபெற்ற திரு. பி. ஞானசீலனும், இசையாசிரியர் திரு. க. மாணிக்கவாசக ரும், திரு. க. மகாலிங்கசிவமும் இவ்வாண்டு இடமாற்றம் பெற் றனர். திருவாளர்கள் மு. திருநீலகண்டசிவமும், க், ஆர். திருச் செல்வமும், ஆர். துரைசிங்கமும், பி. முத்துக்குமாரசாமியும், எங்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளார்கள். அவர்கள் எல்லோரையும் வரவேற்கிருேம்.
1971 ஜனவரியில் அதிபரும் பதில் அதிபரும் ஒய்வுபெற இரு மு. கார்த்திகேசன் அதிபராகவும், திரு. எஸ். கனகநாயகம் பதில் அதிபராகவும் நியமனம் பெற்றனர். பதில் அதிபராகப் பதவி ஏற்க முன்னரே, இவர் கல்லூரியுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக உறவு கொண்டிருந்தவர். நல்லெண்ணத்துடனும் ஆர்வத் துடனும் தம் பணிகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். என்னுடைய பொறுப்புகளில், அவர் பெரிதும் பங்குகொள்வதனலும் முழு மனத்துடன் ஒத்துழைப்பு நல்குவதனலும் என்கடமை இலகுவா கின்றது5
கனிஷ்டபிரிவு தமிழ்ப்பயிற்சி பெற்ற பட்டதாரியான திரு. ஏ. தர்மலிங்கத்தைத் தலைமையாசிரியராகப் பெற்றுள்ளது. அவர் ஆகஸ்ட் முதலாந் திகதி பதவி யேற்றர். அவருக்கு நல்வரவு கூறுகிருேம்,
திரு. எஸ். கந்தையா ஜனவரியிலிருந்து அப்பதவியை வகித் தார். பாடசாலையை அவர் திறம்பட நடத்தினர். கனிஷ்ட பாடசாலையைச் சேர்ந்த திரு. ஏ. குருசாமி தலைமை யாசிரியராக பதவியுயர்வு பெற்று ஆகஸ்டில் விலகினர். புதிய பாடசாலையில் அவர் நலம்பெற வாழ்த்துகிருேம்.

سلس-bسس
சாதனைகள்
வழமைபோலவே எங்கள் மாணர் வடமாகாண ஆசிரியர் சங்கம் நடாத்தும் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி பின் வருவோர் பரிசுகள் பெற்றனர்.
தமிழ் பேச்சுப் போட்டி
சிரேஷ்டபிரிவு முதலிடம் தி. சிவதெட்சணுமூர்த்தி (தமிழ்ப் பேச்சுக்குரிய முத்துக்குமாரு சுற்றுக் கிண்ணம் வழங்கப்பட்டது)
மத்தியபிரிவு முதலிடம் பொ. ரகுபதி கனிட்ட பிரிவு மூன்ருமிடம் சி. ஞானசம்பந்தன்
ஆங்கில பேச்சுப் போட்டி
மத்தியபிரிவு இரண்டாமிடம் நை, ஜீவநாதன்
எங்கள் மாணவர் யாழ் நகர மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கியநாடுகள் சபையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களில் பங்குபற்றி, பின்வருவோர் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளில் பரிசு இள் பெற்றனர்.
சிரேஷ்டபிரிவு முதலிடம் தி. சிவதெட்சணுமுர்த்தி
கனிஷ்டபிரிவு முதலிடம் என். விக்னேஸ்வரன்
தமிழ்த்தின விழாவில் பங்குபற்றிய எங்கள் மாணவர் வட் டார ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் பல வெற்றிகளை யீட்டி னர். எங்கள் 8ம் வகுப்பு மாணவர் நாடகத்தில் அகில இலங் கையிலும் முதற் பரிசைப் பெற்றனர். அவர்கள் மேடையேற் றிய நாடகம் ‘கவரி வீசிய காவலன்' நாடகத்துக்கான அகில இலங்கை முதற் பரிசை ஈட்டியமைக்காக திரு. க. சொக்கலிங் கமும், மாணவரும் எங்கள் மனமார்ந்த பாராட்டுதல்களுக்கு உரியவர்கள். இதற்காக திரு. க. செனக்கலிங்கம் பல நாட்க களாகப் பெரும்பாடுபட்டார். திருவாளர்கள் திரு. பி. முத்துக் குமாரசாமி, கே. சோமசுந்தரம், எம். சோமசுந்தரம் ஆகியோ ரும் இந்த நாடகத் தயாரிப்பில் பங்கு கொண்டிருந்தனர், அவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. ມສລາ விடுதி
சென்ற டிசெம்பரில் உதவி விடுதி அதிபராயிருந்த
திரு. கே. நமசிவாயத்தின் மறைவு குறித்து வருந்தினுேம், விசு வாசமான சளே யாத உழைப்பாளி அவர் 1970 டிசெம்பரில்

Page 6
ܢܩܝܡ 6 ܒܩܠܐ ܀
திரு. கே. எஸ். சுப்பிரமணியம் விடுதி அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ருர், 57 ஆண்டுகளாக அவர் கல்லூரியுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு முடிவுற்றது. திரு. கே. எஸ். சுப்பிரமணி மும், காலஞ்சென்ற திரு. கே. நமசிவாயமும் விடுதியுடன் உற வைத் துண்டித்ததும், அதிபர், பதில் அதிபர் ஆகியோர் ஒய்வு பெற்றதும் ஏக காலத்தில் நிகழ்ந்தமையால் விடுதி நிர்வாகத்தில் பிரச்சினையெழுந்தது. திரு. பி. யோசப்பும், பி. மகேந்திரனும் எங் களுக்கு உதவி செய்ய முன்வந்து ஜூலை 1-ம் திகதி வரை வெற்றிகர மாக பொறுப்புகளைத் தாங்கினர். அவர்களிருவருக்கும் எங்கள் மனமுவந்த நன்றி உரியது. பழைய மாணவரும் முன்னர் விடுதி மாணவருமான திரு. கே. சிதம்பரநாதன் உதவி விடுதி அதிப ராக நியமிக்கப்பட்டுள்ளார். விடுதியின் தரம் குன்று மல் பேணு வதில் அவர் நல்கும் உறுதுணைக்கு நாம் நன்றியுடையோம். விடுதி மாணவரின் இலக்கிய முயற்சிகளில் திரு. பி. மகேந்திர னும், திரு. கே. சோமசுந்தரமும் உதவுகின்றனர். அண்மை யில் “விடுதிச்சாலேத் தினம்' கொண்டாடத் திட்டமிட்டுள் (36mTIT"Líb,
Laburiċi Lugreifassir
திரு. கே. சிவராமலிங்கத்தின் தலைமையில் பல ஆசிரியர்க எளின் துணையுடன் இந்து இளைஞர் கழகம் திறமையுடன் செய லாற்றி வருகிறது. இவ்வருடம் பெருமளவில் விஜய தசமியைக் கொண்டாடிஞர்கள், விவேகானந்த சபை சமயப் பரீட்சைக ளுக்குத் தோற்றிய பல மாணவர் A, B தரங்களில் சித்தியடைந் தனர். திருக்கேதீஸ்வர ஆலய சங்க நிதிக்கு ஒரு பாடசாலையி விருந்து மிகக் கூடுதலான பணம் சேகரிக்கிற அளவுக்கு எங்கள் மாணவர் நன்கு பிராசரம் செய்தனர். கல்லூரியில் விழாக்களே நடாத்துகின்ற சேக்கிழார் மன்றத்துக்கும், இதர சமய நிறுவ னங்களுக்கும் இந்து இளைஞர் கழகம் உதவி புரிந்தது;
சங்கங்களும் கழகங்களும்
சரித்திரம் குடிமையியற் சங்கம், புவியியற் கழகம், உயர்தர விஞ்ஞான மாணவர் மன்றம், உயர்தர மாணவர் சங்கம் வழமைபோல் செயல்பட்டன. பிரதம கல்வி ஆலோசகர் திரு. ஏ. சந்திரசேகரம்பிள்ளை அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு உயர்தர மாணவர் சங்க வருடாந்த இராப் போசன விருந்து நடைபெற்றது.

ܚ 7 ܚܢ
சாரணர்
எங்கள் சாரணர் மிகவும் திறமையாக இயங்கியுள்ளனர். திறமை வாய்ந்த சாரணர் குழு ஆசிரியர் திரு. என். நல்லையா வுக்கு, திருவாளர்கள் ரி, துரைராசா, வி. எஸ். சுப்பிரமணியம், வி. சுந்தரதாஸ் ஆகியோர் உதவி புரிகின்றனர். சென்ற வருடாந்த சாரணர் விழாவில் வடபகுதியில் முதலிடம் பெற்று “ருேட்டரி" வெற்றிக் கேடயத்தைப் பெற்ருேம் வருடாந்த சாரணர் விழா வில் பங்குகொள்ள முன்னர் இரு பயிற்சிப் பாசறைகளே கல்லூரி யில் நடாத்தினுேம், கூலிக்குவேலை, நிலைக்கண்காட்சி, அதிகப்படி இராணி சாரணர் ஆகியவற்றில் முதலிடம் பெற்ருேம். இப் போது சாரணர் தொகை 56. அவர்களுள் 15 பேர் ராணி சாரணர், 7 பேர் சாரணர் வடம் பெற்றவர்கள். இவ்வெற்றி களே யிட்ட சலியாமல் உழைத்த உதவிச் சாரண ஆசிரியர் செல் வன் பி. தில்லைநாதனை விசேடமாக குறிப்பிடவேண்டும்.
கனிஷ்ட பாடசாலை இணைந்ததிலிருந்து ஒநாய்க் குருளைகள் குழு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. திரு. கே. குமாரசிங்கம், செல்வன் என். விவேகானந்தன் ஆகியோரின் உதவியுடன் திருமதி ச. ஆறுமுகம் வழி காட்ட இக் குழு இரு சந்தர்ப்பங் களில் சுற்றுலாப் போயினர். இக் குழு நன்கு செயல்படும் அறிகுறிகள் உள்ளன.
(35ԱՔ
கனிஷ்ட படை பயில் குழுவினர் தியத்தலாவையில் நடை பெறும் பாசறையில் பங்குபற்றினர். சிரேஷ்ட படை பயில் பயிற்சிப் பாசறை சமீப காலத்தில் நடைபெற்ற குழப்பங்களி னுல் கால வரையறை யின்றிப் பின் போடப்பட்டுள்ளது.
மாணவ முதல்வர் சபை
அதிக வேலை காரணமாக மாணவர் முதல்வர் தொகையை 20 ஆக அதிகரிக்க நேர்ந்தது. பழைய முறையைக் கைவிட்டு மாணவ முதல்வரைத் தெரிவு செய்யும் உரிமையை மேல்வகுப்பு மாணவருக்கு வழங்கியுள்ளோம். ஆசிரிய ஆலோ ச கர் திரு. த. சேணுதிராசாவின் ஆற்றுப்படுத்தலுடன் மாணவ முதல்வர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாகத் திகழ்கிருர்கள், அவருடைய ஒத்துழைப்புக்கு நாம் மதிப்பளிப்பதோடு மாணவ முதல்வர் தலைவர் செல்வன் ரி. கே. யோகநாதனுக்கும் அவரு டைய சகாக்களுக்கும் அலர்கள் நிர்வாகத்துக்கு உதவி புரியும் வகையில் ஆற்றும் பணிகளுக்காகப் பாராட்டுகிருேம்,

Page 7
8
நூல் நிலையம்
வழக்கம்போல, இடையிடையே நூல் நிலையத்துக்கு மேல திக நூல்கள் வாங்கப்பட்டன. விஞ்ஞான நூல்கள் அவற்றுள் சிறப்பிடம் பெற்றன. பிரிட்டிஷ், இந்திய தூதராலயங்கள் எங் களுக்கு வழங்கியமையை சிறப்பாக குறிப்பிடுவதுடன் அவர்க ளுக்கு என்றென்றும் நன்றியுடையோம்,
பரீட்சை முடிவுகள் வடமாகாண ஆசிரியர் சங்க கனிஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சை 1970
பரீட்சைக்கு தோற்றியோர் 158, முதற் பிரிவில் சித்திபெற் ருேர் 15, இரண்டாம் பிரிவில் சித்திபெற்றேர்: 127
செல்வன் இ. யோகேஸ்வரன் திறமைச் சான்றிதழ் பெற்ருர்,
க. பொ.த. ப. சா/த. டிசெம்பர் 1970
6 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றியோர் 315, 5 பாடங்களில் சித்தியடைந்தோர் 50, 6 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் சித்தியடைந்தோர் &4。 உயர்தர வகுப்பில் அனுமதிக்க தகுதி பெற்றேர்: 78, அதி விசேட சித்தி 77, சிறப்புச் சித்தி 558.
செல்வன் என். நடேஸ்வரன் 6 அதிவிசேட சித்திகள் பெற் ருர், அவருக்கு எம் பாராட்டுதல்கள்.
க. பொ: த. ப. உ/த, டிசெம்பர் 1970
பரீட்சைக்குத் தோற்றியோர் 128 (விஞ்ஞானம் மட்டும்) 4 பாடங்களில் சித்தியடைந்தோர் 38, 3 பாடங்களில் சித்தி யடைந்தோர் 20, அதிவிசேட சித்தி 24, விசேட சித்தி 48, சிறப் புச் சித்தி 77.
உயர்தர கலேப் பிரிவு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
பல்கலைக் கழகத்துக்கும் தொழில் நுட்பக் கல்லூரிக்கும் அனு மதி விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. முடிபுகள் வெளிவரு வதில் தாமத மேற்படுவதால் மாணவர்கள் விரக்தியடைந் துள்ளார்கள். இவ்வாண்டு பிரதேச ரீதியாக அனுமதி வழங்கப் படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையானல், திறமையும் பல்கழகக் கல்விக்குத் தகுதியும் உள்ள மாணவரை இடம் தவ றிப் பிறந்தமையால் நிராகரிப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும், இப்புதிய அனுமதித் திட்டத்தில் திறமைக்கு

ܚܣܝܡ 9 ܒܩܚ
ஏதாவது இடமளிப்பதே நீதியாகும். சில பிரதேசங்களில் உயர் கல்விக்கு வசதிகளில்லையாயின், உடனடியாக குறைகள் நிவிர்த்தி செய்யப்பட்டு அம் மாணவருக்கு உயர்கல்விக்கான வசதிகள் அளிக்க வேண்டுமேயன்றி பல்கலைக் கழகத்தில் இடம்பெறத் தகுதியுள்ள மாணவரை நிராகரிக்கக்கூடாது.
இப்போது கொழும்பு மருத்துவப் பிரிவிலிருப்பவரும், டிசெம் பர் 1969ல் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகளிலிருந்து மருத்துவப் பிரிவில் அனுமதியளிக்கப்பட்டோர் பட்டியலில் இலங் கையில் இரண்டாவது இடம்பெற்றவருமான செல்வன் பெ. சிவ னேசராசாவைப் பாராட்டுகிருேம்,
விளையாட்டுகள்
உதைபந்தாட்டம்: சமீபகாலத்தில் எங்கள் புகழ்பெற்ற தரத்தை நிலைநாட்ட முடியவில்லையாயினும், யாழ்ப்பாணக் கல் லூரிகள் விளையாட்டுச் சங்கம் நடாத்தும் போட்டிகளில் எங்கள் முதலாம், இரண்டாம் பிரிவுக் கோஷ்டிகள் அரை இறுதிப் போட்டிவரை முன்னேறியது நம்பிக்கை யூட்டுவதாயுள்ளது. முதற் பிரிவு ஆடிய 9 ஆட்டங்களில் 3 வெற்றியிலும் 3 வெற்றி தோல்வி யின்றியும் 3 தோல்வியிலும் முடிவடைந்தன. இரண் டாம் பிரிவு 7 ஆட்டங்களில் 4 ஐ வென்றனர். 2 வெற்றி தோல்வி யின்றி முடிந்தது. 1 ஐத் தோற்றனர். மூன்றும் பிரிவு 5 ஆட்டங்களில் 2 வெற்றியிலும் 2 வெற்றி தோல்வியின்றி யும் 1 தோல்வியிலும் முடிவடைந்தன. கம்பளையில் ஆடப்பட்ட மாவட்ட உதை பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணப் பாட சாலைகள் கோஷ்டியில் எங்கள் ஆட்ட வீரர் இருவர் கே. ராஜ குமாரும் பி. கலாசேகரமும் இடம்பெற்றனர்.
இவ்வாண்டு எமக்கு நல்ல காலம். முதற் பிரிவு ஆடிய 8 ஆட்டங்களில் 5 வெற்றியும் 2 தோல்வியுமடைந்த ந்தனர். நாட்டு நிலைமை காரணமாக இரண்டாம் பிரிவு ஆட் டங்களை ஆட முடியாமல் போனமை துரதிர்ஷ்டமாகும்.
விளையாட்டுகள்: அகில இலங்கைப் பாடசாலைகள் போட் டிக்கு நடைபெற்ற யாழ்ப்பாண மத்திய பிரதேச தெரிவுப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்குகொண்டு மூன்று நிகழ்ச்சிகளிலும் எங்கள் விளையாட்டு வீரர் ஏ. எச். எம். ஜபாருல்லா புதிய சாதனைகளை நாட்டினர். சிரேஷ்ட போட்டி யில் எங்கள் விளையாட்டு வீரர் வெற்றிகள் ஈட்டினர். கொழும் பில் நடைபெறும் இலங்கைப் பாடசாலைகள் போட்டியில் பங்கு கொள்ள எங்கள் கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட

Page 8
வி. பாஸ்கரன், ஜி. ஜெகன் மோகன், எஸ். ரவீந்திரன், என். அசோகன், வை. நரேந்திரன் வெவ்வேறு வயதுப் பிரிவு களில் தனித் திறமை காட்டினர். பிரதேசப் போட்டியில் எல் லோரும் முதலிடம் பெற்றனர். வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சபாபதி இல்லம் முதலிடம் பெற்றது. முன்னைநாள் அதிபரும், பிரசித்தி பெற்ற பழைய மாணவரும் விளையாட்டு வீரருமான திரு. ஸி. சபாரத்தினமும் திருபதி சபாரத்தின மும் பி ர த ம விருந்தினராகக் கலந்து கொண் டனர். திரு. பொ. தியாகராஜாவின் ஒய்வின் பின் திரு. பொ. மகேந் திரன் விளையாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.
பெற்றேர் ஆசிரிய சங்கம், பழைய மாணவர் சங்கம்
பெற்ருேர் ஆசிரிய சங்கம் தங்கள் வருடாந்தக் கூட்டத்தை நடாத்தியது. கல்லூரியின் கனிஷ்ட மத்தியபிரிவு அனுமதிகளை மக்கள் குழுக்கள் பொறுப்பேற்றது. இச்சங்கத்தினூடாக கல் லுசரிக்கும் பெற்ருேருக்குமிடையில் பலன்தரும் ஒத்துழைப்பு ஏற்படுமென எதிர்பார்க்கிருேம்,
முன்னைப் போலவே, பல்வேறு துறைகளிலும் எங்கள் பழைய மாணவர் பிரபலம்பெற்று தங்கள் கல்லூரிக்கு புகழும் பெருமையும் தேடிக் கொடுத்துள்ளனர். பழைய மாணவர் சாத னைகள் பற்றிய விவரம் எங்கள் கல்லூரிச் சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளது. பழைய மாணவர் சங்கத் தலைவராக எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி. அருளம்பலம் இருப்பது எங் கள் அதிஷ்டமாகும். இச் சங்கம் எங்கள் முன்னைநாள் அதிபர் திரு. ந. சபாரத்தினத்துக்கும் அவரது பாரியாருக்கும் பிரியா விடை வைத்தது. கொஞ்சக் காலமாக தூங்கிக்கிடந்த கொழும்புக் கிளை விரைவில் புத்துயிர்பெற இருக்கிறது.
நியாயதுரந்தரர் திரு. ஆ. தனபாசிங்கம் ஜூலையில் கால மானுர், கல்லூரிக்கு அளவிறந்த பணியாற்றிய பிரபல பழைய மாணவர் அவர். பழைய மாணவர் சங்கப் பொருளாளராகவும், இந்துக் கல்லூரி முகாமைக் குழுவின் பொருளாளராகவும், சாரணர் ஆலோசனைக் குழுத் தலைவராகவும் மேலும் பல வழிகளி லும் கல்லூரிக்கு அருந்துணை புரிந்துள்ளார். தமிழினதும் சைவத் தினதும் உயர்வுக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அவர் மறைவு ஒரு வெற்றிடத்தை உண்டுபண்ணி விட்டது. இயற்கை யில் வெற்றிடமொன்றிருக்க முடியாது என்ற நியதியே எமக்கு நிம்மதியைத் தருகிறது. அவரை என்றென்றும் நன்றியுடன் நினைவு கூருவோம்.
 
 

ܘܚܗ 11 ܘܚܗ
ஆசிரியர் கழகம்
எங்கள் ஆசிரியர்கள் ஆசிரிய கழக உறுப்பினராவர். ஆசிரியர் களுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் இக்கழக ஊழியர்கள் எனக்கு உதவி புரிகின்றனர். கூட்டுறவுக் கடன் சிக்கனச் சங்கம் ஒழுங்காக இயங்குகிறது. கழகத்தோடு மட்டும் எங்கள் உறுப்பினர்கள் நின்று விடவில்லை. திரு. எம். திருநீலகண்ட Gaith வடமாகாண ஆசிரியர் சங்கப் பரீட்சைச் சபையின் செயலாளராக உள்ளார். திரு. வி. சிவசுப்பிரமணியமும், திரு. எஸ். பரமானந்தமும் முறையே வட மாகாண ஆசிரியர் சங்க சகாய நிதிக்குப் பொருளாளராகவும், செயலாளராக வும் உள்ளனர். திரு. அ. கருணுகரர் யாழ்ப்பாணப் பட்டின ஆசிரியர் சங்கத் தலைவராவார். ஆசிரியர் நிறுவனங்களுக்கு இவர்கள் ஆற்றும் சேவைகளைக்கண்டு மகிழும் வேளையில் ஆசிரிய சேவைக்கு தலைவர்களைத் தொடர்ந்து வழங்கும் என எதிர் பார்க்கிருேம்.
( P
என் அறிக்கையை முடிக்க முன்னர் ஆசிரியர், எழுது வினை ஞர், சிற்றுாழியர் ஆகியோர் எனக்களித்த பரிபூரண ஒத்து ழைப்புக்கு நன்றிகூற விரும்புகிறேன். வடமாநிலக் கல்வியதிபதி டபிள்யூ. டி. சி. மகாதந்திலவும் கல்வித் திணைக்கள உத்தியோ கத்தர்களும் என் கடமைகளை யாற்றுவதற்கு அளித்த ஆலோசனை களுக்கும் ஆதரவுக்கும் விசுவாசமான நன்றியுடையேன்.
அன்போடு வருகைதந்த உங்களுக்கும், நன்றியுரை நிகழ்த்த சம்மதம் தெரிவித்த பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதனுக்கும், சிறப்பு விருந்தின ருக்கும், திரு. வைத்திலிங்கத்துக்கும் பாரியாருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுவது என் கடமையாகிறது.
வணக்கம்,

Page 9
ܚܕ 12 ܚܢܢܝ
PRIZE DONORS-97
Mr. N. S. Sabaretnam Mr. K. Vela uthan Mr. V. Shanmuganathan Mr. P. Nadarajapillai Mr. C. Rajalingam Mr. A. Mookiah Mr. N. V., Kanagasabai Mr. V. Senathirajah Mr. A. T. Muthupillai Mr. K. Satchidanandan Mr. S. R. Duraisamy Mr. K. Shanmugarajah Mr. T. Gunanayagam Mr. R. S. Sivanesarajah
MEMORAL PRIZES
Pasupathy Chettiar Memorial Fund in memory of
Sri la Sri Arumuga Navalar Sinnathamby Nagalingam Thamodarampillai Chellapapillai William Nevins Childarmbara pillai N. S. Ponnampala Pillai Kathirgama Chettiar Sithampara Suppiah Chettiar
Sithampara Suppiah Chettiar Muttukumaran Chettiar Visuvanathair Casipillai
R. H. Leembruggen
P. Kumarasany
P. Arunasalam
Tamboo Kailasapillai
Arunasalam Sabapa thypillai Vairavanathair Arulambalam Multitucumaru Chettiar Pasupathy Chettiar
Mrs. V. Arulambalam In memory of her husband
A. A rulambalam
Mr. S. R. Kumaresan In memory of his father
A. R. Shanmukha Ratnam
In memory of his brother S. R. Sundaresan
Mr, V. Kailasapillai In memory of Arunasalam
Chellappah J. P.
 
 

س 13 سي.
Mr. K. B. Kathirgamalingam
Dr. P. Sivasothy
Mr. V. Subrama niam
His Children
Mr. E., Maha devan
J. H. C. Co-op. Thrift and Credit Society
Mr. K. C. Thangarajah
Sivagamithai Prize
Dr. S, Rajah Mr. M., P. Selva ratnam
Mrs. K. C. Shanmugaretnam
In memory of his cousin C. Vanniasingam M. P.
In memory of his father-in-law Sivanerikavalar T. Muttusamy
pillai In memory of his father Marimuthu Paramanather
In memory of his mother Valliam mai Paramanather
In memory of his uncle Dr. Subramaniam J. P., O. B. E.
In memory of their father S. Ponna mbalam
In memory of his father Appacuttiar Elaiyappa
In memory of his mother Visaladchi Elaiyappa
In memory of K. Arunasalam
In memory of Sri la Sri Muttukumara Thambirarin Swamigal
In memory of his father Kanda pillai Chitambalam
In memory of his mother Thaiyalinayaky Chittambalam In memory of Sri la Sri Muttu kumara Thambiran Swamigal
In memory of V. Nagalingam In memory of his father
|Mappanar Ponniah
In memory of his mother Sithamparam Ponniah In memory of her husband Dr. K. C., Shanmugaretnam

Page 10
Mr. S. Sivagurunathan
Mr. S. C. Somas underam
Miss Thanaled chumy
Sabaratnam
Mr. C. K. Elangarajah
Mr. T Poopalan
Mrs. K. Sathasivam
Mr. W. Maha de Van
Mr. S. Kanagarayagam
Mr. M. Sivagnanaratnam
Mr. N. Nadarajah
IDr, V. Yoganathan
Mr. E. Sabalingam An Old Boy
Mr. V, Sivasupra maniam
Mr. M. Vythillingam
In memory of their father ST. M. P. Sithamparanatha
Chettiar
hiruvengada valli Sithamparana tha Chettiar
In memory of their brother S. Thiruchittampalam
In memory of her father S. Sabaratnam
In memory of his father
Chellappah Sothy Kandiah In memory of his brother T. Sivapalan B. A. (Lond.)
In memory of her husband M. Sathasivam
In memory of his father M. R. Vaithilingam
In memory his uncle Dr. M. Waithilingam (Malaysia)
In memory of his uncle N. Sangarapillai
In memory of his father C. K. Murugesu
In memsary of his uncle Veerakathy
In memory of his mother Manikam Veluppillai
In memory of A. Cumaraswamy
In memory of A. Thanabalasin
gam
In memory of his father
Arunasalam Vijaratnam
In memory of his mother Annammah Vijaratnam
In memory of his son V. Kamalakkannan.
சைவப் பிரகாச அச்சியந்திர சாவே, யாழ்ப்பாணம், 161-71


Page 11