கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1972

Page 1
M. & Mrs. YoаE
யாழ்ப்பாணம்
JAFFNA HI
பரிசளிப்பும் - ட
படத் திரை,
மாண்பு
திரு. T. S. பெர்ணு PRIl
AND UNVEL
SIR. W.
Hon. Justice T. S
- பிரதம யோகேந்திரா து
C%;
16.
 
 

1 ዓ ? 2 -
டெ
இந்துக்கல்லூரி
NDU COLLEGE
படத்திரை நீக்கமும் W
நீக்கம் செய்பவர் மிகு நீதியரசர் ண்டோ, O, C, அவர்கள்
GWING
NG THE PORTRAIT
DURAISWAMY .."
"fBy . FERNANDO, Q. C.
விருந்தினர் - ரைசாமி அவர்களும் ரியாரும்
升 ع میں تقسیمtک:
NDRA

Page 2
A un SCSuSuSuS
SS
, **ай і .
-
... | :: ), ' ' ' ' '
ീ. േർപ്പ് ി
" SA IKI ,
,
', '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவாரம்
வரவேற்புரை
அறிக்கை
படத்திரை நீக்கமும் நினைவுச் சொற்பொழிவும்
பரிசு வழங்கல்
கோஷ்டி கானம்
மிருதங்க இசை
பிரதம விருந்தினர் உரை
நன்றியுரை
கல்லூரிக்கீதம்
தேசீய கீதம்
.ே
நிகழ்ச்சி நிரல்
--క్రైజ్ఞాశస్త్రాత్రన్దేక్రాస్త్రాశూట్ల--
}-
செல்வன் க. ஸ்கந்தமூர்த்தி
செல்வன் ப. ஜெயக்குமார்
அதிபர்
மாண்புமிகு நீதியரசர் ரி. எஸ். பெர்ணுண்டோ அவர்கள்
திருமதி யோகேந்திரா துரைசாமி
திரு. யோகேந்திரா துரைசாமி
திரு. இ. மகேந்திரன் அவர்கள்
(செயலாளர், பழைய மாணவர் சங்கம்)
செல்வன் வே. லவனேஸ்வரன்
(சிரேஷ்ட மாணவ முதல்வர்)
და 2+...A"

Page 3

அதிபரின் அறிக்கை ܚ ܲ 1972 ܚ
மாண்புமிகு நீதியரசர் ரி. எஸ். பெர்னுண்டோ அவர்களே, திரு. யோகேந்திரா துரைசாமி அவர்களே, திருமதி துரைசாமி அவர்களே,
சகோதர சகோதரிகளே,
பெற்ருேர்கள், பழைய மாணவர்கள் அபிமானிகள் ஆகிய உங்களை எமது வருடாந்தப் பரிசளிப்பு வைபவத்திற்கு வரவேற் பதில் மகிழ்ச்சியடைகின்ருேம். உயர்திரு. பெர்ணுண்டோ அவர்களே,
மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசரான தாங்கள் சமூக, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பெரியார் என்பதை நாம் நன்கறிவோம். எமது கல்லூரியின் முகாமையாள ராய்ப் பதினன்காண்டுகள் பணியாற்றி, கல்லூரி அதிகார சபைத் தலைவராய் ஈராண்டுகள் விளங்கி எமது மதிப்புக்கும், நன்றிக்கும் பாத்திரரானவரும், முன்னுள் அரசாங்க சபைச் சபாநாயகருமான சேர் வைத்திலிங்கம் துரைசாமி அவர்கள்பற்றி, நீங்கள் ஆற்றிய வானெலிச் சொற்பொழிவையும், பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை யையும் கேட்டும், படித்தும் மகிழ்ந்த நாம், அப்பெரியாரின் உருவப்படத்தினைத் திரைநீக்கம் செய்யப் பொருத்தமானவராய் உங்களையே தெரிந்தோம். எமது அன்பான அழைப்பினை ஏற்று வருகை புரிந்தீர்கள்; இலங்கையர் யாவருமே பெருமை கொள்ள வேண்டிய தேசீயப் பெருமகனின் உருவப் படத்தினைத் திரைநீக்கம் செய்துவைத்து, நினைவுச் சொற்பொழிவும் ஆற்ற இருக்கிறீர்கள். இவ்வரும்பணியினை எம் நெஞ்சங்களிலே நன்றியோடு பதித்த வண்ணம் தங்களை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் வரவேற் கின்ருேம். திரு. யோகேந்திரா துரைசாமி அவர்களே,
புகழ்பூத்த பெரியார் ஒருவரின் புகழ் விளங்கும் புதல்வர் என்ற வகையில் மாத்திரம், உங்கள் வருகை எமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இலங்கையின் வெளிநாட்டுச் சேவையிலே அமர்ந்து தாங்கள் ஆற்றிய சேவைகளைக்கருதி அத்தகைய ஆற்றல்சால்

Page 4
--سس۔ 4 ۔
ஒருவர் எமது அழைப்பினை ஏற்றமைக்காக மாத்திரம் நாம் பெருமை அடையவில்லை. பூரீலங்காவின் இராசதந்திரியாய், அதன் மாண்புமிகு பிரதிநிதியாய், உயர் அதிகாரியாய், தூதுக் குழுவின ராய், தூதரக மேலாளராய், வெளிநாட்டுத் தொடர்பதிபதியாய் உலகின் பல பாகங்களுக்கும் சென்று புகழையும், சிறப்பையும், தாயகத்திற்கும், தமிழினத்திற்கும் தந்தமைக்காக மாத்திரம் நாம் பூரிக்கவில்லை. இவை யாவிலும் மேலாக நீங்கள் இந்துக் கல்லூரிப் பழைய மாணவர், எமது கல்லூரி அன்னையை ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க வைத்த நன்மைந்தருள் ஒருவர் என்ற வகையிலேயே தங்கள் வருகையால் நாங்கள் மகிழ்கிருேம், பெருமையடைகின் ருேம், பூரிக்கின்றுேம்.
உங்கள் வாழ்வின் சாதனைகள் யாவும் இந்துக் கல்லூரி விளை யாட்டு மைதானத்திலும், சரித்திர குடியியற் சங்க விவாத அரங்கி லுமே ஈட்டப்பட்டன; இந்துக் கல்லூரியின் இந்து இளைஞன் பத் திரிகைக்கு ஆசிரியராயிருந்து நீங்கள் பெற்ற அநுபவம், உங்கள் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டது. கிறிக்கெற் கோஷ்டியில் ஒருவ ராகிய அநுபவம், கட்டுப்பாட்டிற்கும் வீரத்தகைமைக்கும் (sportsmanship) தூண்டுகோலாயிற்று. இங்கு நீங்கள் வளர்த்துக்கொண்ட பேச்சுத் திறமை, பல்கலைக்கழக விவாதக் குழுவினைத் தலைமை தாங்கி அலகபாத் செல்லவும், இந்தியப் பல்கலைக்கழக மாணவரின் விவாதப் போட்டியில் இலங்கைக் குழுவிற்கு இரண்டாம் இடத் தைப் பெற்றுத்தரவும், கலந்துகொண்ட மாணவருள் இரண்டாம் இடத்தினைத் தாங்கள் பெறவும் உதவின. நீங்கள் முதலிடம் பெற்ற மாணவரிலும் மூன்று புள்ளிகளே குறைவாகப் பெற்றீர்கள் என் னும் பொழுது, தங்களின் திறமை எத்தகையது என்பது நன்கு புலனுகின்றது.
இத்தகைய பெருமைசால் பழைய மாணவர் ஒருவரை, அவ ரின் தந்தையாரின் நூற்ருண்டின்போது, அன்னர் முகாமையாள ராயும், தலைவராயும், வழிநடாத்திச் சென்ற கல்லூரி, அழைத்து, பரிசளிப்பு வைபவத்திலே கலந்துகொள்ள வைத்தமை மிகப் பொருத்தமானதே.
திருமதி யோகேந்திரா துரைசாமி அவர்களே,
* தாரமும் குருவும் தலைவிதிப்படி ' என்பது தமிழிலுள்ள முதுமொழி. எமது பிரதம விருந்தினரின் தலைவிதி மிகவும் வலி வுள்ளது, உயர்ந்தது என்பதை அவரின் குடிப்பிறப்பும், பெற்ற பதவிகளும் மாத்திரமன்றி அவரின் பாரியாராகிய தாங்களும் நன்கு

- 5 -
நிரூபிக்கின்றீர்கள். உங்கள் கணவர் மாத்திரமன்றி நீங்களும் இக் கல்லூரியோடு நெருங்கிய தொடர்புடைய பரம்பரையினரே என் னும் பொழுது எமது மகிழ்ச்சி இரட்டிக்கின்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தாபகத் தலைவராகிய திரு. செல்லப்பா நாக லிங்கம் அவர்களின் வழித்தோன்றலாகிய தாங்கள், முன்னுள் முகாமையாளராகிய முத்துசாமிப்பிள்ளையின் தமையனருக்கு மக
GTTT Go?ri:956ŷr.
இவ்வாறு குலந்தரு புகழும், திருவும் பொருந்தியதோடு மாத்திரமன்றி இயற்கையாகவே அறிவாற்றல்களும், கலாரசனையும், அழகுணர்ச்சியும் உங்களிடம் நிரம்பியுள்ளமையையும் பத்திரிகை கள் வாயிலாக நாம் அடிக்கடி அறிந்து மகிழ்ந்து வந்திருக்கிருேம். * Daily Mirror' பத்திரிசையில், பெண்கள் பகுதிக்காக உங்களைப் பேட்டி கண்ட பெண்மணி, தங்களைப் பற்றிக் கூறியது, சிறப்பாக எம் கவனத்தை ஈர்த்தது. ' அண்மையில் நான் திருமதி யோகேந் திரா துரைசாமியைச் சந்தித்து உரையாடியபோது, அவர், தம் கணவரோடு சென்று வசித்த நாடுகளின் கலாசாரம், சரித்திரம், கலைவடிவங்கள் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபாடு கொண்டுள்ள மையை அறிய முடிந்தது ' என்று அவர் எழுதியுள்ளார். உலகி லேயே அழகு வாய்ந்த, சிறப்புப் பொருந்திய, செல்வ வளமிக்க நாடுகளிலெல்லாம் பயணம் செய்தும், சில ஆண்டுகளாவது அங் கெல்லாம் வாழ்ந்தும் அநுபவம் பெற்ற தாங்கள், திரு யோகேந் திரா துரைசாமி அவர்களின் நீண்டுசெல்லவிருக்கும் வாழ்க்கைப் பயணத்திற்கு உற்ற நல்ல துணையே என்று மகிழ்ச்சியுடன் கூறித் தங்களை அன்புடன் வரவேற்கின்ருேம்.
எமது கல்லூரியைப் பொறுத்த வரையில் இவ்வாண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1936ஆம் ஆண்டில் அந்நாட் கல்வியமைச்சர் சி. டயிள்யூ. டயிள்யூ. கன்னங்கரா அவர்கள் இக் கல்லூரிக்கு வருகை தந்ததன் பின்னர், இவ்வாண்டுதான் இன்றைய கல்வியமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ் பதியுத்தீன் மகமூத் அவர்கள் உத்தியோகபூர்வமாக வருகைபுரிந்தார். கல்லூரியின் எதிர்கால சுபீட்சத்திற்கு இவரின் வருகையானது உதவியாகும் என நம்பு கின்ருேம்.
இன்று, கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றுவரும் இளைஞர்களே இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப் பவர்கள் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. எனினும் இவர்கள் மன அமைதி அற்றவர்களாயும், கவலை நிறைந்தவர்களாயும், வல் லுணர்ச்சி மிகுந்தவர்களாயும் காட்சி தருவது, தேசாபிமானமும்,

Page 5
سیا۔ 6 --س
பொறுப்புணர்ச்சியும் கொண்ட பலருக்கும் பெருங் கவலையை அளிக் கின்றது; இந்நிலை ஏற்படக் காரணம் யாது என்ற கேள்விக்குறி யும் அத்தகைய நெஞ்சங்களில் விழுந்துகொண்டிருக்கிறது. கேள் விக்கு விடை காண முயல்கையில், இளைஞர்களின் இன்றைய போக் கிற்கு அவர்களேயே முழுக் காரணராக்குதல் பொருந்தாது என்ப தும் புலனுகும். பெற்ருேர், ஆசிரியர், சமுதாயம் ஆகிய மூன்று பிரிவினரும் தமது கடமைகளைச் சரிவரச் செய்திருந்தால் இந் நிலைமை உருவாகியிருக்காது.
இறந்தகால உத்தியோக வாய்ப்புக்கள் இன்றும், நாளையும் தொடர்ந்திருக்கும் என்று கனவு காணும் பெற்ருேர் தம் மக்களின் போக்கிற்கும், விருப்பிற்கும் ஏற்ற கல்வியை அவர்களுக்கு அளிக்காது தாம் விரும்பும் கல்வியையே அவர்கள் கற்றல் வேண்டும் என்று வற்பு றுத்துகின்றனர். பெற்றேர் என்ற முறையிலே தாம், தம் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைத் தியாகங்கள் என்று மெருகிட்டுக் காட்டித் தம் பிள்ளைகளின் பொறுப்புணர்ச்சியைப் பெரும் பார மாக ஆக்கிவிடுகின்றனர். பெற்றேரின் அபிலாட்சைகளைப் பூர்த்தி செய்ய முயன்று அதிலே தோல்வி அடையும் பொழுதோ, அல்லது அந்தத் தோல்வியாற் பெற்ருேர் அடையும் கவலையைக் கான நேரும் பொழுதோ இளைஞரின் உள்ளங்கள் துவண்டுபோகின்றன. துவண்ட நெஞ்சங்களிலே காலப்போக்கில் வல்லுணர்ச்சிகள் உற் பத்தியாகி இளைஞர்களை எங்கும் எவற்றிலும் வெறுப்பையும், குரோ தத்தையுமே காண வைக்கின்றன. கவலைகள் அரிக்கும் உள்ளங்க ளில் நம்பிக்கை ஒளிவிடுவது எங்ங்ணம் ?
பெற்றேர்கள் தமது கடமையின் பெரும்பகுதியை ஆசிரியர் களிடமே ஒப்புவித்துவிடும்பொழுது, ஆசிரியர்களின் பொறுப்பு மிகப் பெரிதாகிவிடுகிறது, வகுப்பறைகளிலே தமது நேர சூசியிற் குறிக்கப்பட்டிருக்கும் பாடத்தினைத் தமக்குத் தெரிந்த அளவிலே கற்பித்துவிடுவதோடு ஆசிரியரின் கடமை முடிந்துவிடுவ தில்லை. அவர் வெறும் சடப்பொருள்களுடன் ஊடாடுபவரல்லர். உயிருள்ள, தனித்தன்மை வாய்ந்த இளம் உள்ளங்களின் போக் கினை ஆராய்ந்து, பழகி அவற்றினைச் செம்மை செய்திடும் பொறுப் பும் அவருக்கு உண்டு. ஆனல், துரதிருஷ்டவசமாக முற்காலங்கள் போலன்றி, ஒரு வகுப்பறையிலே நாற்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை வைத்துக் கொண்டு கற்பிக்கும் பொழுது தனித் தனியாகக் கவனிப்புச் செலுத்த அவருக்கு வாய்ப்புக் கிடைப்ப தில்லை. எனவே, ஆசிரியர், பரீட்சைக்கு மாணவரை ஆயத்தம் செய்துவிடுஷ் ஒரு ய்ந்திரமாகவே மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்

ܢܚ 7 ܚܢܢ
படுகிறது. இந்நிலையில் நாட்டிற்கேற்ற நல்ல குடிமக்களே அவர் தயாரித்தல் எளிதன்று. -
இளைஞர்களின் நம்பிக்கை வரட்சிக்குச் சென்ற தலைமுறையி னரும் ஒரளவு காரணரே. அவர்களின் காலத்தில் உத்தியோக வாய்ப்புக்கள் வேண்டிய அளவு இருந்தன. கற்ற கல்வியின் அள விற்கேற்ப ஏதாவது ஒரு தொழிலைப் பெறத்தக்க சூழ்நிலையும் அமைந்திருந்தது. எனவே சமுதாயத்திலே, படித்த வர்க்கம் தன் னைப் பொறுத்தவரையில், திருப்தியுடனே வாழ்ந்தது. எதிர்காலத் தில், தமது பரம்பரையினருக்கு வேண்டிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த இவர்கள் தவறிவிட்டனர். இதனல், இவர்களுக்கும், படித்தும் தொழில் வாய்ப்பின்றி அல்லற்படும் இன்றைய பரம்பரை பினர்க்குமிடையே பெரியதொரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இவ்விடைவெளியை இல்லாமற் செய்வதற்கு முயற்சி மேற்கொள் ளப்படுதல் அவசியமாகும். வரையறையின்றிப் பெருகிக்கொண் டிருக்கும் சனத்தொகைக்கேற்பப் புதிய புதிய பிரச்சினைகள் கிளர்ந் தெழுவதனைத் தடுப்பது சுலபமன்று என்பதை நாம் உணர்ந்து தான் உள்ளோம். எனினும் மேலே கூறிய முத்திறத்தினரும் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்க ளேப் பெருக்குவது இன்றைய நிலையில் அவசர அவசியமாகும். இதற் கேற்ற கல்விமுறை, சமுதாயச் சீரமைப்பு, நாட்டுப்பற்று என்பன உருவாக்கப்படுதற்கு ஏற்ற சூழ்நிலை இன்று அமைகின்றது. இது வரவேற்கத்தக்க சுபசூசகமாகும்.
கல்விமுறைபற்றிக் குறிப்பிடும் பொழுது, ஆரும் வகுப்பிலே புகுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் நினைவுக்கு வருகின்றன. அவை முழுமனத்தோடு செயற்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலத் திட்டத்தில், பொதுக்கல்வி ஒன்பதாம் வகுப்புவரை இல வசமானதும், கட்டாயமானதுமாய் அமைகின்றது. இக்கல்வி படிப் பறிவினைக் கட்டாயமாக்குவதோடு, சமூகத்தை விளங்கிக்கொள்ள அவசியமான சமூகத் திறன்களையும் அளிப்பதாகும். இன்றுவரை சில பாடசாலைகளில் மாத்திரம் விஞ்ஞானமும், கணிதமும் கற்பிக் கப்பட்டு வருகின்றன. புதிய சீர்திருத்தங்களுக்கிசைய எல்லாப் பாடசாலைகளிலும் விஞ்ஞானமும், கணிதமும் கற்பிக்கப்படும். ஒவ் வொரு பிள்ளையும் தாம் வாழுகின்ற சூழலைப்பற்றிய அறிவைப் பெறுவார். அவர் தமது கைகளேப் பயன்படுத்தவும், தொழிலின் மகத்துவத்தை நயக்கவும் ஏதாவது ஒரு தொழில்பற்றிச் சிறிது அறியவும் உதவ வல்ல பயிற்சியைப் பெறுவார்.

Page 6
8 --
எங்களப்பற்றி .
முதலாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை நாம் இன்று ஒரே கல்லூரியாய் இயங்கிவருகின்ருேம் கனிஷ்ட பாடசா லேப் பிரிவில் 2ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரையுள்ள வகுப் புக்கள் நடாத்தப்படுகின்றன. 6ஆம் வகுப்புத் தொடக்கம் 12ஆம் வகுப்பு வரையுள்ளவை கல்லூரிப் பிரிவில் நடக்கின்றன. இவ் வாண்டு முதலாம் வகுப்பிற்கு நாம் மாணவரைச் சேர்க்காமைக் குக் காரணம், பிரவேசகால வயது 6 ஆக இருப்பதே.
6 ஆம் வகுப்பிற்கு, கல்வித் திணைக்களத்தினர் நடாத்தும் பிரவேசப் போட்டிப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையிலேயே மாணவரைச் சேர்க்கின்ருேம்
8 ஆம் வகுப்புப் பிரவேசம் எம்மால் நடத்தப்படும் போட் டிப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின் 10 gil.
9 ஆம் வகுப்புப் பிரவேசத்திற்கான புலமைப் பரிசிற் பரீட் சையைக் கல்வித் திணைக்களம் நடாத்துகின்றது. அப்பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையிலேயே 9 ஆம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்கின்ருேம்,
இன்றுள்ள மாணவர் தொகை
வகுப்பு 10 fróðIT 5) lfrasir
535 I 5 1 38.4 5 سبب 1 、56岛 --- 5份 8 ܚ- 6 710 - 0 II 7 {0 . سيسكس 9 340 --- 340 2 1 سي 1 1
மொத்தம் 2148
கனிஷ்ட பாடசாலையில் மாணவிகளைச் சேர்ப்பதைப் படிப்படி யாக நிறுத்தி வருகின்ருேம்.
சென்ற ஆண்டு நான் குறித்துள்ளதுபோன்று எமக்குப் போதிய வகுப்பறைகள் இல்லாமலிருக்கின்றன. எனவே மேலதிக தேவை வகுப்பறைகளே. இத்தேவையைப் பூர்த்தி செய்யப் பெற் முர் ஆசிரியர் சங்கம், நிதியுதவி விண்ணப்பத்தை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது. இவ்விண்ணப்பத்தினேத் தாராள மனத்தோடு

ܣܚ 9 --
ஏற்றுக்கொண்டு, போதிய நிதியுதவி செய்து, 1959 இல் அத்தி வாரமிடப்பட்டு, பூர்த்தியடையாத நிலையிலுள்ள கட்டடத்தைப் பூர்த்திசெய்ய உதவும் வண்ணம் பெற்ருேர் அனைவரையும் வேண் டுகின்ருேம். தொழிற்பயிற்சிக் கூடத்திற்கு அருகில் நான்கு வகுப் பறைகளேக் கட்டி இடநெருக்கடியைக் குறைக்க நடவடிக்கை எடுத் துள்ளோம். வர்த்தக பாடங்களை இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஒன்பதாம் வகுப்பில் (கலைப்பிரிவில்) அறிமுகம் செய்துள்ளோம், வர்த்தகப் பிரிவிற்குத் திரு. பி. வில்வராஜா பொறுப்பாசிரியராவார்.
ஆசிரியர்கள் :
தமது இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலான ஆசிரிய சேவை யைப் பூர்த் தி செய்து , சென்ற தவணைத் தொடக்கத்தில், திரு. வை. சுப்பிரமணியம் B.Sc. (Lond.), P. G. T. ஒய்வு பெற்ருர், இரசாயனவியல், தாவரவியல் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதிலே வெற்றி நிறைந்த நல்லாசிரியராய் விளங்கிய அவரின் நற்பணிகள் அவரின் மாணவர்களால் என்றும் நினைவு கூரப்படும்.
திரு. த. சேனுதிராசா B. Sc (Lond.) மே மாத முடிவில் குறித்த காலத்திற்கு முன்னர், தாமாகவே ஒய்வு பெற்ருர், சாதா ரணதர, உயர்தர வகுப்புகளிலே புவியியலையும், சாதாரணதர வகுப்புகளிலே பெளதிகவியலையும் அவர் மிகத் திறமையுடன் கற்பித்தவர். தமது ஆசிரியப் பணியோடு, இல்ல ஆசிரியர், மாணவ தலைவர் சபையின் ஆசிரிய ஆலோசகர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர், கல்லூரி ஒழுங்குக் குழு உறுப்பினர் ஆகிய கல்லூரி சார்ந்த பிற பதவிகளிலும் தமது முழுத்திறமையுடன் செயற்பட்டு ஒத்துழைத்தவர். கல்லூரியின் பழைய மாணவராகிய இவர், வெளி நாட்டிலே வாய்ப்பான உத்தியோகம் பெறுதற்காக ஒய்வு பெற் றுள்ளார். அன்னுருக்கு எம் வாழ்த்துக்கள் உரியனவாகுக.
5)CU). 3). LC 5TG3.56) 651 B. A. (Ceylon) Dip, in Ed., G.L. டாரக் கல்வியதிகாரியாக மட்டக்களப்பில், இவ்வாண்டு ஜூலை மாதம் நியமனம் பெற்றுச் சென்றுள்ளார். இருபது ஆண்டுகளாய்க் கடமையுணர்வோடு, தன்னலமின்றிப் பணியாற்றிய சிறந்த ஆசிரி யர் ஒருவரைக் கல்லூரி இழந்து விட்டது. மிக்குயர்ந்த கடமை புணர்வும், சேவைக்கே தம்மை முற்ருக ஒப்புக்கொடுக்கும் பான்மை யுமே அவரின் வெற்றிக்குத் தூண்கள் எனலாம். க ல் லூ ரியின் சென்றகால, நிகழ்கால சம்பவங்களைப் பொறுத்தவரையில் அவர் Ib LLD ITGB) Lib 55ðanoj, 35 GMT (65 GRAALILDĪT 55 (Moving Encyclopaedia) Gólair iš G.) குனூர், கல்லூரிச் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகப் பல்லாண்டு பணி யாற்றிய அவர் தமது புதிய உத்தியோகத்திலே சிறப்படைய எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்ருேம்.
2.

Page 7
திருவாளர்கள் க. அரிராசசிங்கம். சி. ஆ. பொன்னம்பலம் ஆகியோர் இவ்வாண்டுத் தொடக்கத்தில் மாற்றலாகினர். திரு வாளர்கள் எஸ். கந்தையாவும், வி. குலசேகரமும் இரண்டாந்தரத் தலைமையாசிரியர்களாய் நியமனம் பெற்றதால் வேறு பாடசாலை களுக்கு மாறிச் சென்றனர். இவர்களிருவரும், கல்லூரிப் பிரிவிற் சில காலமே கடமை புரிந்தாலும், மிகுந்த கடமையுணர்வோடு சேவையாற்றினர். திரு. மு. திருநீலகண்டசிவம் B, A (Madras) 1971 இல் எமது கல்லூரிக்கு வந்து இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மாற்றம் பெற்றர்.
கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த திருவாளர்கள் கே. பினகபாணி, ரி. தருமலிங்கம் ஆகிய ஆசிரியர்கள் இவ்வாண்டுத் தொடக்கத்தில் பரமேசுவரக் கல்லூரிக்கு மாற்றலாகினர் திரு பினு கபா னி தலைமையாசிரியராய் நியமனம் பெற்றுள்ளார். திரு. சி. எஸ். நம சிவாயம் தலைமையாசிரியராகப் பதவியுயர்வோடு மாற்றம் பெற்ருர், இவர்கள் தத்தமது புதிய இடங்களில் சிறப்புடன் சேவை செய்ய வேண்டுமென்று வாழ்த்துகிருேம்.
திரு. மு. சோமசுந்தரம் கடந்த வருட முடிவில் ஒய்வு பெற் றுள்ளார். கனிஷ்ட வகுப்புக்களில் அவர் சிறந்த ஆசிரியராய்ப் பணி புரிந்ததோடு இசை, நாடக நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வத்தோடு ஒத்துழைப்புத் தந்தவராவார். அவரது ஒய்வுக்காலம் மகிழ்ச்சி நிறைந்ததாய் அமைதல் வேண்டும் என்று அவரை வாழ்த்துகின் ருேம். திருமதி கே. குணசிங்கம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் பயிற்சிபெறச் சென்றுள்ளார். திரு. வி. சிவசுப்பிரமணியம் கல்வித் துறை டிப்ளோமாப் பயிற்சிபெற இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்திற் சேர்ந்துள்ளார். பல துறைகளிலும் திறம் படத் தமது கல்லூரிக்கு பணியாற்றி வந்தவரான இவர் தமது பயிற்சியை முடித்துக் கொண்டு மீண்டும் எங்கள் கல்லூரிக்கே வரு வாரென்ற நம்பிக்கையோடு இருக்கின்ருேம்,
இவ்வாண்டில், பின்வரும் ஆசிரியர்கள் எமது கல்லூரியிற் பணிபுரியச் சேர்ந்திருக்கின்றனர்.
திரு. கே. கந்தப்பிள்ளை - B, A, (Lond), Dip-in-Ed. திரு. எஸ். புண்ணியலிங்கம் - Science Special Trained திரு. ஆர். சகாதேவன் - B. Sc. ( Madras) 6)(5, 19), 676ja TT gir - Commerce Trained 1505, gy, LDifus Tid air - Maths, Sp, Trained
 

ܒܚ 11 -ܚ
திரு. எஸ். இராஜநாயகம் - B. A. (Lond.) ")(I), fi. (51-TT2ạT - Tamil Trained, B. A. ( Ceylon ) {0}{0, . Gol. LIg LDITGöTib,5ĩ - Tamil Trained 9) (Ib), GT Gör. G3 SFITLDs, jis 55 UTILħ — English Sp. Trained திரு. கே. சுந்தரலிங்கம் - B, A, (Madras) O)(1), G. (Birg, Göring, Li - Tamil Trained திருமதி எஸ். இரத்தினசபாபதி - Tamil Trained திருமதி எஸ். யோகரத்தினம் - G C E, O/L) 915. g. if. Gougy Lib LDLo) Lh - B.Sc. (Special-Chemistry) (Ceylon) 9) (lb. GT6iv. 3, C3 GODT AF Góliši 5 Lib — B. Sc. ( Special- Maths. ) ( Ceylon )
இவர்களை வரவேற்பதோடு இவர்கள் இங்கு பல ஆண்டுகள் நற்பணி புரிவார்களென்று எதிர்பார்க்கிருேம்.
விஞ்ஞானப் பட்டதாரிகளான திரு. எஸ். முருகையா, திரு ஏ மகாதேவன். திரு. சி. ஹயாசின்த், கல்லூரி நியமன விஞ்ஞான ஆசிரியர்களாகப் பணி புரிந்து நிரந்தரமான ஆசிரிய சேவையைப்பெற்று மாற்றலாகிச் சென்றுள்ளார்கள். திரு. சி. சொர்ணலிங்கம் சில மாதங்களாக இரசாயன ஆசிரியராகக் கடமை புரிந்தார். இவர்களெல்லோருக்கும் எமது நன்றியையும் நல்வாழ்த் துக்களையும் கூறக் கடமைப்பட்டுள்ளேன். திரு. ரி. அருளானந் தன் - புவியியற் சிறப்புப் பட்டதாரி, திரு. ஏ. சிறீகுமார் - புவி யியற் பட்டதாரி, திரு. பி. கணேசதாஸ், ஆகியோர் மேலதிக ஆசிரியர்களாகப் பணி புரிகின்றர்கள்.
சாதனைகள்
அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியின் வட்டார, மாவட்ட நிலைப் போட்டிகளிலும், வடமாகாண ஆசிரியர் சங்கப் போட்டிகளிலும் வழக்கம் போல எமது மாணவர் கலந்துகொண்டு சில பரிசுகளைச் சுவீகரித்துக்கொண்டனர். இவற்றிற்கான பயிற்சி களை அளித்த ஆசிரியர்களுக்கும், கலந்துகொண்டு தமது திறமை யினைக் காட்டிய மாணவர்க்கும் எமது பாராட்டுக்கள் உரியன.
விடுதிச்சாலை
இன்று 205 விடுதி மாணவர்கள் உள்ளனர். திருவாளர்கள் கே. சிதம்பரநாதனும், ஏ. பூரீகுமாரும் இவர்களின் மேற்பார்வை யாளராகப் பணியாற்றுகின்றனர். உணவு, விடுதிக் கட்டுப்பாடு, கல்வியாகிய யாவும் உயர்ந்த தரத்திலுள்ளன. பொதுப் பரீட்சை

Page 8
سپس 12 سیس
களிலே விடுதி மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேறுகள் உற்சாகம் தருவனவாயுள்ளன. விடுதிச்சாலை வெள்ளையடிக்கப்பட்டும், வர் ணம் ஊட்டப்பட்டும் அழகாகக் காட்சி தருகின்றது; மேலதிக தண்ணீர்க் குழாய்கள் பூட்டப்பட்டுப் புதுக்கோலம் பெற்றுள்ளது. விடுதியின் சிரேஷ்ட பிரிவு மாணவர் கழகத்திற்குத் திரு. பொ. மகேந்திரனும், கனிஷ்ட பிரிவு மாணவர் கழகத்திற்குத் திரு. ஏ. பூரீகுமாரும் மேற்பார்வையாளராயுள்ளனர்.
gild un'ILISfG5ir
கல்லூரியின் சமயப்பணிகளை, இந்து இளைஞர் மன்றம் பய
பக்தியோடும், கடமை உணர்ச்சியோடும் இயற்றி வருகின்றது.
திரு. க. சிவராமலிங்கம் மன்ற ப் பொறுப்பாளராக வும் திரு. வை. ஏரம்பமூர்த்தி பொருளாளராகவும் விளங்குகின்றனர். சென்ற ஆண்டு விவேகானந்த சபைச் சமயப் பரீட்சையில் வழக்கம் போல மாணவர் பலர் கலந்து கொண்டு, முதலாம், இரண்டாம் பிரிவுகளிலே சித்தியடைந்திருக்கின்றனர். திருக்கேதீச்சர ஆலய இராசகோபுர நிதிக்கு மன்றம் நிதி சேகரித்துக் கொடுத்தது. இவ்வாண்டும் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத்தின் சேக்கிழார் விழாச் சிறப்புற நிகழச் சிறப்பாக இந்து இளைஞர் மன்றச் செயற் குழு உறுப்பினரும், பொதுவாக விடுதி மாணவரும் பேருதவி புரிந் தனர். அவர்களுக்கு எம் நன்றிகள் உரியன.
சங்கங்களும் - கழகங்களும் -
க, பொ. த, (உயர்தர) மாணவர் ஒன்றியம், சரித்திர குடி மையியற் சங்கம், புவியியற் சங்கம், விஞ்ஞான மாணவர் மன்றம் என்பன வழக்கம்போலச் சிறப்பாகச் செயற்பட்டன. மாணவரி டையே பல கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டன. ஆசிரியர் களும் அவ்வப்போது சொற்பொழிவாளராய்க் கலந்து கொண்டு மாணவருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர். மாணவரின் தொகை அதிகரித்த காரணத்தினுல் உயர்தர மாணவர் ஒன்றியம் கனிஷ்ட பிரிவு (உயர்தர வகுப்பு முதலாம் வருடத்தினர்) சிரேஷ்ட பிரிவு (இரண்டாம் வருடத்தினர்) என இரு பிரிவுகளாக எம்மாற் பிரிக்கப்பட்டுச் செயற்படுகின்றது. சாரணர் இயக்கம்
1. ஒநாய்க் குருளேயர் (Cubs)
குருளைச் சாரணத் தலைவர்கள்
1. திருமதி எஸ். ஆறுமுகம்
2. திரு. கே. குமாரசிங்கம்
3. செல்வன் என் விவேகானந்தன்

ܡܪܩܘܣ 13 ܚܚܲܝ
ஒநாய்க்குருளேயரின் வருடாந்த மைதான தினத்திலே field-day) எமது குருளேயர், பரிசிற் கழி (Totem Pole) யினைப் பெற்று, யாழ்ப் பாண மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையை அடைய உழைத்த ஆசிரியர்க்கும் சாரணர்க்கும் எம் நன்றி.
I சாரணர்
குழுச் சாரண ஆசிரியராகிய திரு எ ன் ந ல் லை யா
மிரிகமையில் நடந்த தரிசின்னப் பயிற்சியிற் கலந்து கொண்டார். இரு பாசறை வாசங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று கல்லூரி யிலேயே நடைபெற்ற பயிற்சிப்பாசறை வாசம் மற்றது அல்லைப்பிட் டியில் நடைபெற்ற பாசறை வாசம், இன்று 13 திரி சாரணர்களும் 20 பிரேஷ்ட சாரணர்களும், 35 சாரணர்களும், 32 குருளையர் களும் கல்லூரிச் சாரணர் இயக்கத்திலே அங்கம் வகிக்கின்றனர்.
திருவாளர்கள் என். நல்லையா, வி. எஸ் சுப்பிரமணியம், ரி, துரைராஜா, வி. சுந்தரதாஸ், பி. தில்லைநாதன் ஆகியோ ரைச் சாரண ஆசிரியர்களாய்க் கொண்டிருந்த கல்லூரிச் சாரணர் குழுவில் திரு. வி. சுந்தரதாஸ் விலக அவரின் இடத்திலே திரு வாளர்கள் எம். ஆறுமுகசாமி, ஆர். சகாதேவன் என்போர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாண்டு அகில இலங்கைத் திரிசாரணர் இயக் கத்தின் 24 ஆவது மகாநாடு கண்டியிலுள்ள பிலிமத்தலாவை என்ற இடத்திலே நிகழ்ந்த பொழுது, சாரண ஆசிரியர் இருவரும், திரி சாரணர் எண்மரும் அங்குச் சென்று கலந்து கொண்டனர். படைபயில் குழு
படைபயில் குழுவின் சிரேஷ்ட, கனிஷ்ட பிரிவுகள் இரண் டும் இவ்வாண்டு தியத்தலாவையில் நடைபெற்ற பயிற்சிப் பாசறை வாசத்திற் கலந்து கொண்டன. கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த படை பயில் குழுவினர், இருபது பாடசாலைகள் கலந்து கொண்ட பயிற் வியிலே திறமை காட்டி ஐந்தாவது இடத்தைப் பெற்றனர். பதவி உயர்வு பெற்றுள்ள (C. Q. M. S.) செல்வர்கள் பி. சிவானந்தன், கே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு எமது பாராட்டுகளைத் தெரி விக்கின்ருேம். மீண்டும் எம்மிடை வந்துள்ள சிரேட்ட படை பயில் குழுவின் லெப்ரினன்ற் திரு. என். சோமசுந்தரத்தை வர வேற்கின்ருேம்.
பொலிஸ் பயிற்சிக் குழு
பொலிஸ் பயிற்சிக் குழு அமைப்பைக் கல்லூரிகளிலே முதன் முதல் ஆரம்பித்த பொழுது அந்தப் பயிற்சிக்கென முழு இலங்கை

Page 9
سس.14 سس
யிலும் தெரிவுபெற்ற கல்லூரிகளில் ஒன்முகவும், வடமாகாணத் திலே தெரிவு பெற்ற ஒரே கல்லூரியாகவும் எமது கல்லூரி அமைந்தது. இப்பயிற்சிக் குழுப் பிரிவொன்றினை எமது கல்லூரியில் நியமித்தமைக்காக மாண்புமிகு கல்வியமைச்சருக்கும், கல்வியமைச் சின் காரியதரிசிக்கும், பொலிஸ் மா அதிபர்க்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
பரிசோதகர்கள் (Inspectors)
திரு. வி. சுந்தர தாஸ் திரு. ஏ. மரியதாஸ் இவர்கள் ஜூலை மாதம் முழுவதும், கொழும்பில் இதற்கான பயிற்சியைப் பெற்றனர்.
மாணவ தலைவர்கள்
திரு. த. சேணுதிராசா ஒய்வு பெற்றதைத் தொடர்ந்து திரு. வை. ஏரம்பமூர்த்தி மாணவ தலைவர் குழுவின் ஆலோசகர்ப் பொறுப்பினை ஏற்றுள்ளார். அன்னுரின் வழிகாட்டலிற் சிரேட்ட மாணவ தலைவர் செல்வன் வே. லவனேஸ்வரன் கடமை புரிகின் முர். இவருக்கு உதவியாளர்களாக இருபது மாணவ தலைவர்கள் உள்ளனர்; மிகச் சிறந்த பணியாற்றிப் பாடசாலை ஒழுங்கினையும் கட்டுப்பாட்டையும் பேணி வருகின்றனர்.
நூல் நிலையம்
இவ்வாண்டு நூல்நிலையம் பல வகையிலே திருத்தம் பெற் றுள்ளது. மேலதிகமாக நூல்கள் பல வாங்கிச் சேர்க்கப்பட்டுள் ளன. நூல்நிலைய அலமாரிகளைக் கம்பி வலைகளால் மறைத்து அறை களாக்கி நூல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய தூதரகம் இவ்வாண்டும் நூல்களை எமக்கு வழங்கியுள்ள மைக்காக நன்றி உடையோம். செல்வி எஸ் , தம்பையா நூலகராக நியமிக்கப்பட்டுள்ளார். நூல்நிலையத்துறைப் பயிற்சி பெற்ற இவர் மிகவும் பயனுடையவராயிருப்பார் என்று நம்புகிருேம். பரீட்சைப் பெறுபேறுகள்: வடமாகாண ஆசிரியர் சங்கம் நடாத்திய 8ஆம் வகுப்புப் பரீட்சை-1971.
தோற்றியோர் தொகை =ബ 202 சித்தியடைந்தோர் தொகை - - 79 இவர்களில் முதற் பிரிவில் சித்தியடைந்தோர் 貂0 திறமைச் சான்றிதழ் பெற்றவர் - செல்வன் எஸ். சந்திரமோகன், இன்னும் கே. பிரேமச்சந்திரா, ரி. கஜேந்திரா, எஸ். சந்திரமோகன் ஆகிய மூன்று மாணவர்கள் மேற்படி பரீட்சையில் முறையே தமிழ்,

15--
புவியியல், இந்துசமயம் ஆகிய பாடங்களில் மாகாணத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிருேம்.
பொ. த. ப. (சாதாரண தரம்) மார்கழி 1971
ஆறு பாடங்களுக்கும், அவற்றிலும் கூடிய தொகைப் பாடங்களுக்கும் தோற்றியோர் தொகை 409 6 பாடங்களிலே சித்தியடைந்தோர் தொகை 17
** 47
இவர்களில் உயர்தர வகுப்பிற் பயிலும் தகுதிபெற்ருேர் 104
செல்வன் என். நடேஸ்வரன் 1970 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் க. பொ. த. ப. சா/த பரீட்சையில் 6 அதிவிசேட சித்தி பெற்றவர். இந்திய அரசினல் இவ்வாண்டு வழங்கப்பட்ட புலைமைப் பரிசில் பெற்று பொறியியல் துறையில் கல்விகற்பதற்காக சென்னை சென்றிருக்கிருர், அவருக்கு எமது பாராட்டுக்கள். க. பொ. த. ப. (உயர்தரம்) மே 1972
இப் பெறுபேறுகள் இதுவரை வெளியாகவில்லை,
மாணவர் வரவொழுங்கு:
பெற்றேர்கள், தம் பி ள் ளை க ளி ன் வரவொழுங்குபற்றிக் கூடிய கவனம் செலுத்துமாறு வேண்டுகிருேம், சாதாரணதர, உயர்தர வகுப்புக்களிலே, பரீட்சைக்கு மீண்டும் ஆயத்தம் செய்வோ பின் வரவு திருப்தியற்றதாய் உள்ளது. மாணவர் சிலர் தம் மைப் பொறுத்தவரையில் வரவொழுங்கு கட்டாயமற்றது என்று கருதுகின்றனர் போலும்!
விளயாட்டுக்கள் :
விளையாட்டு மேற்பார்வையாளர்: திரு. பொ. மகேந்திரன்
றிெக்கற் : ஆசிரியப் பொறுப்பாளர் பழக்குபவர்
-ஆம் கோஷ்டி, திரு. பொ. மகேந்திரன் திரு. பி. ஏ. சில்வா 2-ஆம் திரு. ஆர். சகாதேவன்
9- ), Lib ** திரு. எஸ். உதயலிங்கம்
டதை பந்தாட்டம்: 1-ஆம் கோஷ்டி திரு. ஆர். துரைசிங்கம்
2-ஆம் திரு. எஸ் சந்தியாப்பிள்ளை திரு. எஸ். உதயலிங்கம் 3 ஆம் , திரு. வி. சுந்தரதாஸ் திரு, கே. தருமகுலசிங்கம்

Page 10
سيسا 16 سم
மெய்வல்லுநர் பயிற்சி: திரு. ஆர். துரைசிங்கம்.
சென்ற ஆண்டிலும் பார்க்க இவ்வாண்டில் எமது கல்லூரி சகல விளையாட்டுக்களிலும் முன்னேறியுள்ளது.
உதைபந்தாட்டம்
சென்ற சில ஆண்டுகளாக நாம் எமது பழைய புகழ் பெற்ற தரத்தை அடையவில்லை எனப் பலர் கவலையடைந்தனர். ஆணுல் 1971 -இல் எமது விளையாட்டு வீரர்கள் 'நாம் எமது பழைய புக ழைப் பெற்று விட்டோம்' என்பதனை நிலைநாட்டியுள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாட்டுச் சங்கம் நடாத்தும் போட்டி களில் எங்கள் முதலாம், இரண்டாம் பிரிவுக் கோஷ்டிகள் மிகத் திறமையாக ஆடி அரையிறுதிப் போட்டி வரையும், மூன்றும் பிரி வினர் கால் இறுதிப் போட்டி வரையும் முன்னேறினர். முதற்பிரி வில் ஆடிய 7 ஆட்டங்களில் 5 வெற்றியாகவும் ஒன்று சமமாகவும் 1 தோல்வியாகவும் முடிவடைந்தன. இரண்டாம் பிரிவில் ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றியிலும் 2 சமத்திலும் 2 தோல்வியிலும் முடி வடைந்தன. எமது வீரர்களில் ஒருவராகிய க. விமலதாசன் யாழ்ப்பாண மாவட்டக் கோஷ்டியில் விளையாடிப் புகழைப் பெற்றி ருக்கிருர்,
இரிக்கட்
இவ்வாண்டில் எமது மூன்று பிரிவுகளிலும் சிறந்த வீரர்கள் இருந்த போதிலும், நாம் எதிர்பார்த்த அளவு எமது வீரர்கள் விளையாடவில்லை. முதற் பிரிவு ஆடிய 8 ஆட்டங்களில் 4 வெற்றி யிலும், 4 தோல்வியிலும் முடிவடைந்தன. இரண்டாம் பிரிவு ஆடிய 2 ஆட்டங்களிலும் 1 சமத்திலும் 1 தோல்வியிலும் முடிவடைந் தன. மூன்ரும் பிரிவு ஆடிய 6 ஆட்டங்களில் 4 வெற்றியிலும் 2 தோல்வியிலும் முடிவடைந்தன. மூன்ரும் பிரிவு என்னும் பொழுது பதினறு வயதிற்கு உட்பட்டோர் பங்குபற்றினர். இவர்கள் அகில இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கத்தினர் நடத்திய அகில இலங்கைப் போட்டியிற் பங்குபற்றி மிகச் சிறப் பாக ஆடி எல்லோருடைய மதிப்பையும் பெற்றனர். யாழ்ப்பா ணப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் இரண் டாம் இடத்தைப் பெற்ற இவர்கள், கொழும்புப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற ருேயல் கல்லூரியுடன் மோதினர்கள். கொழும் பில் இந்த ஆட்டத்தைப் பார்த்த ஒவ்வொருவரும் நமது வீரர்க ளுக்குப் புகழ் மாலை சூட்டினர். -

س.17--
யாழ்ப்பாணத்தில் அவுஸ்திரேலிய மாணவ கிரிக்கெட் கோஷ் டிக்கும், யாழ் மாணவ கிரிக்கெட் கோஷ்டிக்கும் இடையில் நடை பெற்ற விளையாட்டில், எமது மாணவர்களாகிய ச. சூரியகுமாரன், வே சிவனேந்திரன், ச. விக்கினேஸ்வரராஜா ஆகியோர் கலந்து
d) ni in L GOTTF .
மெய்வல்லுநர்ப் போட்டிகள்
அகில இலங்கைப் பாடசாலைகள் போட்டிக்கு நடைபெற்ற யாழ்ப்பாண மத்திய பிரதேச தெரிவுப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ப்ங்கு கொண்டு முன்று நிகழ்ச்சிகளிலும் ாங்கள் விளையாட்டு வீரர் ஏ. எச். எம். ஜபருல்லா புதிய சாதனை களே நிலை நாட்டினுர் இவர் மேலும் மட்டுநகரில் நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலைகள் போட்டியிற் பங்குபற்றி 100 மீற்றர் உயரம் பாய்தல், நீளம் பாய்தல் ஆகிய மூன்றிலும் முத லாவது இடத்தைப் பெற்றதுமல்லாமல், இவை மூன்றிலும் புதிய சாதனைகளை நாட்டினுர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப் பாணப் பாடசாலை விளையாட்டுச் சங்கத்தினரால் ஒரு மெய்வல்லுநர் போட்டி நடாத்தப்பட்டது. இதில் பங்கு பற்றிய எமது வீரர்கள் முன்மும் இடத்தைப் பெற்றனர். இப்போட்டியில் 16 வயதிற்குட் பட்டோர் பிரிவில் ஏ. எச். எம். ஜபருல்லா சிறந்த வீரராகவும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ச. சண்முகராஜா சிறந்த வீரராக வும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் இ. விஜய கு மா ர் , யோ ந ரே ன் ஆகியோர் தத்தம் பிரிவுகளில் தனித்திறமை காட்டினர். -
வருடாந்த இல்லப் போட்டியில் சபாபதி இல்லம் இவ்வருட மும் முதல் இடத்தைப் பெற்றது.முன்னே நாள் அதிபரும், பழைய மாணவருமான திரு. ந. சபாரத்தினமும், திருமதி சபாரத்தின மும் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கனிஷ்ட பிரிவு மெய்வல்லுநர்ப் போட்டியில் நாகலிங்கம் இல்லம் முதல் இடத்தைப் பெற்றது. எமது பழைய மாணவரும் யாழ் மாவட் டக் கல்வியதிகாரியுமாகிய திரு. க. கனகசபாபதியும், திருமதி, கனகசபாபதியும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
முதன்முறையாக இவ்வாண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியுடன் இணை மெய்வல்லுநர்ப் போட்டி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு, வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. யாழ்ப்பாணக் கல்லூரி அதி
3.

Page 11
- 18 سس
பருக்கு எங்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள் கிருேம்,
இவ்வாண்டில் நாம் எமது கல்லூரியில் இரு புதிய விளையாட் டுக்களைப் புகுத்த இருக்கிருேம். அவை கொக்கி விளையாட்டும், கூடைப் பந்தாட்டமுமாகும்.
பழைய மாணவர் சங்கம்
இதன் கொழும்புக் கிளை புனரமைப்புப் பெற்றுள்ளது. மே மாதத்தில் நடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் டா க் டர் கே. இந்திரகுமார் செயலாளராகத் தெரியப்பட்டதோடு, மிகவும் வல்லமை பொருந்திய செயற்குழு ஒன்றும் தெரிவாகியிருக்கிறது.
ஜனவரி மாதத்தில், வழக்கம் போல யாழ்ப்பாணத்தில், இந் துக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நடாத்தியது வருடாந்த வைபவம் இருநாள்கள் நடைபெற்றது. நல்லூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. அருளம்பலம் மீண்டும் தலைவராகத் தெரியப்பெற்ருர், திரு. ஆர். மகேந்திரன் செயலாளரானுர்,
கடந்த காலங்களிற்போலவே பழைய மாணவர்கள் தமது பல துறைகளிலும் சிறப்புக்களை அடைந்து கல்லூரிக்குக் கெளர வத்தைத் தேடித் தந்துள்ளனர். இவர்களில் ஒருவரைத் தனித் துப் பாராட்டுதல் புத்திசாலித்தனமன்று. எனினும் நீதியரசர் உயர்திரு. வி. சிவசுப்பிரமணியம், உயர்நீதிமன்ற நீதியரசருள் ஒருவராய் உயர்வு பெற்றுள்ளமையை மிகவும் பெருமையுடன் குறிக்க விரும்புகின்ருேம். அன்னருக்கு எமது உளங்கனிந்த பாராட்டுக்களையும், மகிழ்வையும் தெரிவிக்கின்ருேம். எமது பழைய மாணவரின் சாதனைகளைக் கல்லூரிச் சஞ்சிகையிலே வெளியிடுவ தற்கு அவர்கள் தங்களின் தற்போதைய பதவிகளையும், விலாசங் களையும் தெரிவிக்கும் வண்ணம் வேண்டுகின்ருேம்.
பெற்றேர் ஆசிரியர் சங்கம்
இதன் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்தது. இக் கூட்டத்திலே திரு. க. சிவராமலிங்கத்தைச் செயலாளராகவும், திரு மகாலிங்கத்தைத் தனுதிகாரியாகவும் கொண்ட நிருவாகசபை ஒன்று தெரியப் பெற்றது இந்த மண்ட பத்தோடு இணைந்ததும், பூர்த்தியாக்கப்படாத நிலையில் உள்ளது

ܚ 19 ܚ
ா கட்டடத்தைப் பூர்த்தி செய்ய இந்த நிருவாகசபை நிதிச்
ாப்பியக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
பெற்றேர்களைக் குழுக்களாகச் சந்தித்து அவர்களின் பிாள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கலந்தாராய்வதற்குத் ட்ெடமிட்டிருக்கின்முேம் பெற்றேர் ஒவ்வொருவரும் இவ் வாய்ப் பிளப் பயன்படுத்தித் தத்தம் பிள்ளைகளைக் கற்பிக்கும் ஆசிரியர் ார் சந்தித்து இருபகுதியாரின் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து முடிவு செய்வார்கள் என நம்புகின்ருேம். இதன் மூலம் மாணவர் ா நேர்வழி நடாத்தி அவர்களுக்கு உதவி புரிய எமக்குச் சந் ாப்பம் ட்ெடும்.
விரியர் கழகம்
atin கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரிய கழகத்தில் அங்கத்தவராயுள்ளனர். கழகம் ஒழுங்காகத் தன் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. இதன் மூலம் அங்கத்தவர்கள் தமது அறி աո) ու պth, சமூக நலன்களையும் வளர்க்கின்றனர். ஆசிரியர்களின் DNA. VI, ao கடனுதவிச் சங்கம் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. அதே வேளையில் தமது வட்டத்தினுள்ளேயே இயங்கித் தம் நலங் கள மாத்திரம் கருதாது வெளிப் பணிகளிலும் எமது ஆசிரிய மறுப்பினர்கள் ஈடுபட்டு உழைக்கின்றனர். திரு. ஐ. கருணுகரர், யாழ்ப்பாணப் பட்டின ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. எஸ். பர ானந்தம் வ. மா ஆ ச சகாயநிதிச் சங்கப் பொருளாளர். திரு. பொ. மகேந்திரன் யாழ்ப்பாணக் கிறிக்கற் சங்கத் துணைச் செய திரு. என். சோமசுந்தரம், யாழ்ப்பாண உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் செயலாளர். திரு. க. சொக்கலிங்கம் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத் துணைச் செயலாளர். இவ்வாறு பல நிறுவனங்களுக்கும் மகிழ்வோடு எமது சேவைகளை அளித்து வருகின்ருேம் அதனேடு ஆசிரிய தொழிலுக்கேற்ற நல்ல தலைவர் களத் தொடர்ந்து ஆசிரியர் கழகம் அளிக்கும் என எதிர்பார்க் ன்ெருேம், அண்மையில் திருமணம் புரிந்த திரு. எம். ஆறுமுக ாமிக்கு எம் நல்வாழ்த்துக்கள் உரியனவாகுக.
நிறைவுரை
எனது அறிக்கையை நிறைவு செய்யமுன் ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர், சிறு பணியாளர் அனைவர்க்கும், அவர்

Page 12
--20 سے
களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பிற்கு எனது நன்றியினைத் தெரி விக்க விரும்புகின்றேன். துணை அதிபர் திரு. எஸ். கனகநாயகத்திற் கும், தலைமையாசிரியர் திரு. ஏ. தருமலிங்கத்திற்கும் அவர்கள் மாணவர்க்காற்றிய பெறுமதிவாய்ந்த பணிகளுக்கு என் நன்றி உரியது. எனது கடமைகளை நான் நன்முறையில் கொண்டு நடாத்த வழிகாட்டியும், உதவியும் வந்த வடமாநில வித்தியாதி பதி திரு. விஜிதா அபயசேகராவிற்கும், தலைமைக் கல்வியதிகாரி திரு. க. கனகசபாபதிக்கும், மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகின்றேன்.
மீண்டும் ஒருமுறை பிரதம விருந்தினர்களுக்கு நன்றி கூறு கின்றேன். எமது பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு. ஆர். மகேந்திரன், கல்லூரிச் சார்பில் நன்றிகூற இசைந்தமைக்காக அவருக்கும் என் நன்றி.
இறுதியாகப் பரிசில்களை மனப்பூர்வமாக வழங்கிய பெரி யார்க்கும், எமது அழைப்பினை ஏற்று அன்புடன் வருகை புரிந்த யாவர்க்கும் நன்றி உரியதாகுக.

Mr.
Mr.
Mr.
Mr.
Dr.
Dr.
Dr.
PRIZE DONORS-1972
Shiva Pasupati Dr. R. Kulanthalivadivel R, Srikanthan Dr. K., M., Abul Cassim P. Balla Sunderam Dr. S. Jothillingam S. Senathirajah Dr. S. Yoganathan K. Palani Vel Dr. V., Pasupati R. Jeyarajasingham Dr. Yogu Pasupati S. Muthulingam Mr. S. Nagarajah
MIE MORAL EPERI ZEHES
Pasupathy Chettiar Memorial Fund
in memory of Sri la Sri Arumuga Navalar Sinna hamby Nagalingam Thamodarampillai Chellapapiilai William Nevins Chidambara pillai N. S. Ponnampala Pillai Kathirgama Chettiar Sithampara Suppiah Chettiyar Sithampara Suppiah Chettiar Muttucumaran Chettiar Visuvanathair Casipiilai R. H. Leembruggen P. Kumara samy P, Arunasalam Tamboo Kailasapilai Arunasalam Sabapathypillai Vairavanathar Arula mbalam Multitucumaru Chettiar Pasupathy Chettiyar
In memory of her husband
A. Arü lambalanın

Page 13
Mr. S. R. Kumaresan
Mr. V. Kailasapillai
Mr. K. E. Kathirgamalingam
Mr. V. Subramaniam
Mr. P. Mahendran, his I brothers and sisters
Mr. E., Maha devan
ܘܚܚܲ ܲ22
In memory of his father A. R., Shanmukha Ratnam
In memory of his brother S. R. Sundaresan
In memory of Aruna salam Chellappah J. P.
In memory of his cousin C. Vanniasingam M. P.
In memory of his father-in-law T. Muttusamy pillai, Crown Ads V O Catte.
In memory of his uncle Dr. S. Subramaniam J. P., O.B.E.
In memory of their father S. Ponna mbalam
In memory of his father Appucuttiar Elaiyappa
In memory of his mother
J. H. C. Co-op. Thrift and Credit Society
Mr. K. C. Thangarajah
Sivagamithai Prize
Dr. S. Rajah
Visaladchy Elaiyappa
In memory of K. Arunasalam
In memory of Sri la Sri Muttukumara Thambiran Swamigal
In memory of his father Kandapillai Chittambalam
In memory of his mother Thaiyalinayaky Chittambalam
in memory of Sri la Sri Muttukumara Thambiran Swamigal
n memory of V. Nagalingam

V
Miss Thanaled chumy
تاس 23 است.
Mrs. K. C. Shanmugaretnam
Mr. S. C. Somas underam
Sabaratnam
Mrs. K. Sathasivam
Mr. V. Maha de van
Mr. M. Sivagnanaratnam
Dr, V. Yoganathan
Mr. E. Sabalingam
An Old Boy
Mr. V. Sivasupramaniam
In memory of her husband Dr. K. C. Shanmuga retnam
In memory of his father ST, M. P. Sithamparanatha
Chettiar
In memory of his mother Thiruvengadavalli Sithambaranatha Chettiar ° 、 In memory of his brother S. Thiruchittambalam
In memory of her father
S. Sabaratnam
in memory of her husband
M. Sathasivam
In memory of his father M. R. Vaithilingam
In memory of his uncle Dr. M. Vaithilingam (Malaysia)
In memory of his father C, K Murugesu
In memory of his mother Manikam Veluppillai
in memory of Principal A, Cumaraswamy
In memory of A. Thanabalasins gam
In memory of his father Arunasalam Vijaratnam
In memory of his mother Annamma. Vijaratnam

Page 14
Mr. M. Vythilingam
Dr.
Mr.
K. Sivagnanaratnim
V. Suppiah J. P.
Dr. K. Indrakumar
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
S
Sarvendiram
P., Shanmuganathan
S. Ponnampalam
A, Karunakarar
B. Joseph
Yogendra Duraisamy
کی۔ 24
In memory of his som V. Kamalakkannan
In memory of his father Dr. C, Kanaga ratnam
In memory of his late wife Kanthimathy Suppiah
In memory of the Soviet Cosmonauts of the World's first Space Station.
Georgi Doborovsky Wicktor Patsayev Vladislav Volkov who attained martyrdom in the Service of mankind.
In memory of his father Ponna mbalam Saravana muttu
In memory of N, Sangarappiliai, Late Teacher, Jaffna Hindu College
In memory of his father P. Sarawana muttu
In memory of his mother Mrs. K. Appathurai
In memory of his mother Mariappillai Bernard
In memory of his father Sir Wythillingam, Duraisam y

" . ീൻ
it
ി ിപ്പു ിർ
।
,
,
' ' ' ' ' ' },

Page 15
கல்லூ ரிச்
வாழிய யாழ்நகர் இந்துக்கல் வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கை மணித்திரு நாட்டின
இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கலேயக இளைஞர்கள் உளம் மகிழ்ந் ெ
கலேபயில் கழகமும் இதுவே - கலைமலி கழகமும் இதுவே - தலைநிமிர் கழகமும் இதுவே!
எவ்விட மேகினும் எத்துயர் எம்மன்னே நின்னலம் மறவே என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு நன்றே
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் அவை பயில் கழகமும் இதுவே ஓங்குநல் லறிஞர்கள் உவப்பெ ஒருபெருங் கழகமும் இதுவே ஒளிர்மிகு கழகமும் இதுவே ! உயர்வுறு கழகமும் இதுவே ! உயிரண கழகமும் இதுவே !
தமிழரெம் வாழ்வினிற் தாபுெ தனிப்பெருங் கலேயகம் வாழ்க
வாழ்க! வாழ்க வாழ்க தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.
சைவப்பிரகாச அச்சியந்திர சாலை

(வாழிய)
1ல் எங்கும்
D இதுவே தன்றும்
l. 3)
தமிழர்
நேரினும்
@齒蝠俞Tü
ாடு காத்திடும்
بية
யாழ்ப்பாணம். . 179 - 72