கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1974

Page 1
HON JUS
 

@ই-
ப்பாணம் இந்துக் கல்லூரி JAFFINA HINDU COLLEGE
பரிசுத்தினம் PRIZE DAY
பிரத0 விருந்தினர்: மாண்புமிகு நீதியரசர்
செ. சர்வானந்தா அவர்கள்
Chief Guest: *ICE. S. SHARVANANDA
25 - 9 - 1974.

Page 2

நிகழ்ச்சி நிரல்
ෂික්‍රිෂ්ණුව{ග්‍රීඞා සසඳා
தேவாரம் செல்வன் இ. சுதாகரன்
வரவேற்புரை செல்வன் சி. இராசேந்திரன்
அறிக்கை 215 LIñ
பரிசுவழங்கல் திருமதி செ சர்வானந்தா அவர்கள்
மிருதங்க இசை LDPT 6007 6.Tf366ïT
கோஷடி கானம்
பிரதமவிருந்தினர் உரை மாண்புமிகு நீதியரசர் செ. சர்வானந்தா
. அவர்கள்
நன்றியுரை திரு. இ. மகேந்திரன் அவர்கள்
செயலாளர், பழைய மாணவர் சங்கம்
செல்வன் க, இராஜகுலசிங்கம் சிரேஷ்ட மாணவ முதல்வர்
நாடகம்
கல்லூரிக்கிதம்
தேசியகீதம்

Page 3

அதிபரின் அறிக்கை (1974)
மதிப்பிற்குரிய பிரதம விதந்தினர் மாண்புமித திேயரசர் சர்வானந்தா அவர்களே, திருவாட்டி சர்வானந்தா அவர்களே, சகோதர சகோதரிகளே,
பெற்றேர்கள், பழைய மாணவர்கள், அபிமானிகளாகிய உங்களை எமது வருடாந்தப் பரிசளிப்பு விழாவிற்கு, மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கின்ருேம்:
ரீதியரசர் சர்வானந்த அவர்களே,
நீங்கள் எமது கல்லூரியின் சிறந்த பழைய மாணவர்களுள் ஒருவர் இலங்கையின் சட்டத்துறையிலே புகழ்பூத்த வழக்கறிஞர் களிற் குறிப்பிடத்தக்கவர்; மேன்முறையீட்டு நீதிமன்றத்திலே உங்களின் வாதத் திறமையினலும், சட்ட ஞானத்தினுலும் வெற்றியின்மேல் வெற்றியீட்டியவர்: இன்று இவ்வைபவத்திலே பிரதம விருந்தினராக உங்களை வரவேற்கின்ற வேளையிலே, இந் நினைவுகள் என்உள்ளத்திலே நிறைந்து பெருமிதத்தினை ஏற்படுத்து கின்றன.

Page 4
கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்க கற்றபின் கற்றுங்கு ஒழுகுக' என்னும் வள்ளுவனரின் பொருள் பொதிந்த பொன் மொழியே எமது கல்லூரியின் தாரக மந்திரமாகும் கற்றதன் பயன் கடவுளை வழிபடலே என்னும் நல்லுரையினையும் இக் கல்லூரி பொன் எனப் போற்றித் தன் நன்மாணுக்கரை நெறிப் படுத்துவதையும் அனைவரும் அறிவர். இவ்வீரிலட்சியங்களையும், லண்டன் பல்கலைக்கழகக் கலைப் பட்டமும், சட்டத்துறைப் பட்ட மும் பெற்ற தாங்கள் என்றும் மறவாது செம்மையான வாழ்க் கையை நடத்தி வருவதை நாம் நன்கறிவோம். இத்தகைய செவ்விய வாழ்க்கையே, தங்களை எடுத்த எடுப்பிலேயே நீதியரச ராம் தகுதிக்கு உயர்த்தியது என்பதையும் நாம் உணர்கின்ருேம்: உள்ளத்தாற் பொய்யாதொழுகும் பெருந்தகையாளராம் தாங்கள் எம் உள்ளமெல்லாம் நிறைந்து மேலும் பல உயர்வுகளைப்பெறும் வண்ணம் வாழ்த்தி எம்மிடையே உளங்கனிந்த அன்போடு வர வேற்கின்ருேம்.
நீதித் துறையிலே பணியாற்றுதல் உங்கள் குடும்பத்திற்குப் புதியதன்று ஏற்கெனவே தங்கள் மைத்துனர் திரு என். நட ராஜா கியூ சி, அசைஸ் கமிஷனராய் விளங்கியவர் என்பது நாம் அறிந்த உண்மையேயாகும். எனினும் அதிக வருவாய்தந்த வழக்கறிஞர்த் தொழிலினைக் கைவிட்டு, நீதியரசர் பதவியினைத் தாங்கள் ஏற்றுள்ளமை ஒரு வகையிலே தியாகம் என்றே கூறல் வேண்டும். பத் திரிகைக் குத் தாங்கள் அளித்த பேட் டியும் (6-1-1974) இதனையே உறுதிசெய்கின்றது. நாட்டின் நீதி பரிபாலனத்துறைக்குச் சேவை செய்வதனை நான் எனது கடமை யாகக் கருதுவதாலேயே எல்லாவற்றையும் உதறிவிட்டுப் புதிய பதவியை ஏற்றுள்ளேன்' என்னும் தங்களின் கூற்றிலிருந்து தங் களின் தியாக உளப்பாங்கு நன்கு புலனுகின்றதன்ருே ?
திருவாட்டி சர்வானந்தர அவர்களே,
ஆற்றலும், அறிவும், உயர்பண்பு நலன்களும் வாய்க்கப்பெற்ற பெருமகளுரின் பாரியார் என்ற வகையில் மாத்திரமல்லாமல் தலை சிறந்த வைத்திய நிபுணரான டாக்டர் சம்பந்தனதும், எம் கல்லூரி யின் உயிரியல் துறையின் முன்னுள் ஆசிரியரான திரு. ஜெயசீலனதும் சகோதரி என்ற வகையிலும் உரிமைகலந்த அன்புடன் தங்களை வர வேற்கின்ருேம். பர்த்தாவிற் கேற்ற பதிவிரதையாகிய உங்களால், உங்கள் கணவர் மேலும் மேலும் உயர்வுகளே அடைவர் என்ற நம்பிக்கை எமக்கு மிகுதியும் உண்டு. அந்த நம்பிக்கையின் பேரா லும் தங்களை உணங்கனிந்து வரவேற்கின்ருேம்,

நடைமுறைக் கல்வித் திட்டமும் மாணவரின் எதிர்காலமும்
1972 ஆம் ஆண்டில் ஆரும் வகுப்பிலே தொடங்கப் பெற்ற கல்வித்திட்டம் பற்றி எனது சென்ற ஆண்டு அறிக்கையிலே குறிப் பிட்டிருந்தேன். இம் மாணவர்கள் 1975 இல் முதன்முறையாக நிகழவிருக்கும். (N. C. G. B.) தேசிய பொதுக் கல்வித் தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றுவர். இப்பரீட்சை, மாணவர்க ளின் சாதனைகளைப் புலப்படுத்தும் ஒன்ருக அமைவதால், ஒவ் வொரு பரீட்சை நாடியும் தான் தோற்றும் பத்துப் பாடங்களிலும் அவரவர் சாதனைக்கமைய தரத்தினைப் பெறுவார். இவ்வாறு நான் காண்டுகள் கற்றுத் தேர்வுபெறும் கனிஷ்ட இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கும், இதன் பின்னர் கற்கவேண்டிய சிரேஷ்ட இடை நிலைக் கல்வித் திட்டத்திற்கும் குறிப்பிடத்தக்க இருவகை வேறு பாடுகள் உள்ளன. முழுநேரக் கல்வியிலே ஈடுபடுவோரின் தொகை யின் அளவிலும், அளிக்கப்படவிருக்கும் பாடங்களின் பயிற்சித் தன்மையிலும் இவ்வேறுபாடுகள் துலாம்பரமாக வெளியாகும் தேசிய கல்வி உயர் தராதரப் பத்திரப் பரீட்சை இரு பிரிவுகள் கொண்டதாகவிருக்கும் முதற்பிரிவில் யாவர்க்கும் போதுவானதும் கட்டாயமானதும், பாடநேரத்தில் 25% இனை உள்ளடக்கிய ଶ୍ରେLOTଜଯୀ ஒன்றிணைந்த பாடவிதானம் அடங்கும் இரண்டாவது பிரிவில் மாணவரின் சிறப்பாற்றலுக்கிசையத் தெரிந்து கொள்வதும் பாட நேரத்தில் 75% இனே உள்ளடக்கியதுமான பாடவிதானம் அடங் கும். இப்புதிய கல்வியமைப்பில், சிரேஷ்ட இடைநிலைக் கல்விக்குத் தகுதியடைந்தோர் தொடர்ந்து பத்தரம் வகுப்பிலே கற்றுத் தேசிய கல்வி உயர் தராதரப் பரீட்சைக்குத் தோற்றுவர்.
மாணவர்கள் தேசிய பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சைக்கு பாடசாலேயிலிருந்து இருமுறையே தோற்றலாம். இரு முறையும் தோற்றிச் சித்தி பெருதவரின் எதிர்காலம் என்ன? தனியார் வாட சாலைகளிலே தொடர்ந்து கற்று உயர் பரீட்சையை எடுக்கலாம்; இவர்களுக்கு பல்கலைக்கழகக் கல்வி பெறும் தகுதி இல்ஜ டு, பெருந்தொகையான மாணவர்கள் தொழில்களையே நாடிச் செல்ல வேண்டியதாகும் தொழில் முன்னிலைப் பாடல்களைக் கற்றுப் பெற்ற அறிவையும், திறமையையும் கொண்டு இம் மாணவர் தமக்கு உகந்த தொழில்களைத் தாமே மேற்கொள்வது சாத்தியமாகுமா எனவே தொழில்களிலே மேலதிக பயிற்சிபெற வே ண் டு மா யி ன் அவர்களுக்கான வர்த்தக, விவசாய, தொழிற் பாடசாலைகள் அரசினரால் தொடக்கப்படல் வே ண் டு ம். அப்பொழுதுதான் கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகளிலே இவர்கள் தொழில் முன் னிலைப் பாடநெறியிற் பெற்ற அறிவினை வளர்த்து ஏதோ ஒரு தொழிலுக்குத் தகுதியுடையவராவர்.

Page 5
குறிப்பிட்ட கால எ ல் லே க் கு மு ன் ன ரே, 1973 ஆம் ஆண் டி ற் கா ன க. பொ, த, (சாதாரண தரம்) பரீட்சை முடிவுகளைச் சிறந்த முறையிலே வெளிப்படுத்திய பரீட்சை ஆணை யாளர் எமது நன்றிக்கு உரியர் பரீட்சைப் பெறுபேறுகளே வெளி யிடும் பாரிய வேலையைக் குறுகிய காலத்திற் சாதிப்பதற்கு, அத னுேடு தொடர்புகொண்ட ஆசிரியர்களின் இடைவிடா ஒத்து ழைப்பே காரணமாகும். பரீட்சை நாடிகளான LDIT 60076)Jj 35 cir பலமாதங்கள் தங்கள் பெறுபேற்றுக்காக காத்திருக்கும் அவல நிலையும் தீர்ந்து இப் பரீட்சைக்கு மீளத்தோற்றுவோர்க்கான வகுப்புக்களையும் - 11 ஆம் வகுப்புக்களையும் - உரியகாலத்தில் எம் மால் தொடங்குவதும் எளிதாயிற்று பாடசாலைகளில் ஒழுங்கை யும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவும் வகை உண்டாயிற்று. பரீட்சையாணையாளரின் அர்த்தபூர்வமான இந்நடவடிக்கை வர வேற்கத்தக்கதும், நன்றியுடன் பாராட்டவேண்டியதுமாகும்
பரீட்சைப் பெறுபேறுகளுக்காக நீண்டகாலம் காத்திருக்கும் துரதிருஷ்டம் ஒருபுறமாக, பல்கலைக்கழக மேலாளர்கள் பல்கலைக் கழக நுழைவனுமதிக்குத் தகுதியானுேரைத் தெரிவதற்கு நீண்ட காலத்தை விரயமாக்குவதும், அவ்வாறு தெரிந்தோர்க்கு அனுமதி வழங்குவதற்குத் தாமதிப்பதும் வேருெகு வகையில் கவலேதருகின் றனது கட்டப்பெத்த வளாகத்தில் பெளதிக விஞ்ஞானப் படிப் பிற்குத் தெரியப்பட்ட 114 மா ன வ ர்களுள், 16 பேர் எமது மா ன வ ர் க ள், இன்னமும் நுழைவனுமதி கிடைக்காமை யால் வீடுகளிலிருந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றனர் பரீட்சைக்கு இவர்கள் தோற்றிப் 16 மாதங் களாய்விட்டன
கடந்த ஆண்டு எங்கள் கல்லூரியிலிருந்து 60 மாணவர்கள் விஞ்ஞானப் பகுதிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியிருந்துக் இவர்களுள் 27 பேர்களே பல்கலைக்கழக நுழைவனுமதிபெற்றுள் னனர். பல்கலைக் கழக நுழைவனுமதி பெற்றேரின் பட்டியல்க ளேப் பல்கலைக்கழக மேலாளர்கள் குறித்த பாடசாலைகளுக்கு இது வரை அனுப்பாமை பெரும்வியப்பாக உள்ளது. இவ்வாண்டில் எங்கள் கல்லூரியிலிருந்து 73 மாணவர் விஞ்ஞானப் பாடங்களில் பல்கலைக் கழக நுழைவுத் தகுதிபெற்றிருந்தும், இவர்களுள் எத் தனைபேர் தெரியப்படுவர் என்று எம்மால் ஊகிக்கமுடியாத நிலை இருக்கிறது: இவ்வாண்டு மாவட்ட விகிதாசார அடிப்படையி லேயே தெரிவு நிகழும் என அறிகின்முேம்; ஆனந்தாக் கல்லூரி அதிபர் அவர்களின் கல்லூரிப் பரிசளிப்பு வைபவத்தின் போது, இவ்விகிதாசாரம் பற்றி வெளியிட்ட கருத்தை நாம் மனப்பூர்வ மாக ஏற்றுக் கொள்ளுகின்ருேம்

யாழ்ப்பாணத்திலே பல்கலைக்கழக வளாகம் ஒன்று அமைக்கப் பட்டதையும், அதன் மாண்புமிகு பிரதம மந்திரியவர்கள் திறந்து வைக்கவிருப்பதையும் முழுமனத்தோடு வரவேற்பதோடு, இத் தகைய அன்புப் பணிக்காக அரசுக்கு நாம் நன்றி செலுத்தவும் வேண்டியவராகின்ருேம். எமது கல்லூரியின் பெருமைமிக்க பழைய மாணவர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள் இவ் வளா கத்தின் தலைவரானமை குறித்து மிகவும் மகிழ்கின்ருேம்,
ஆசிரிய மாற்றங்கள்:-
1. திரு. சி. செ. சோமசுந்தரம் (புலவர்), எமது கல்லூரி யிலே நடுத்தர, சாதாரண வகுப்புக்களிலே நீண்ட காலமாகத் தமிழும் சமயமும் கற்பித்து வந்தார். இவர் வவுனியாவிற்கு மாற்றலாகிச் சென்றுள்ளார். கல்லூரியின் சமய, கலாசாரப் பணி களிலே இவர் முன்னின்றுழைத்தவர். தமது புதிய பாடசாலை யில் இவர் சிறந்த பணியாற்ற வாழ்த்துகின்ருேம்,
2. திரு இS சகாதேவன் B. Sc. (Madras) 1972 ஜனவரி மாதத்தில் இங்கு பணியாற்றத் தொடங்கி இப்பொழுது கோப் T கிறிஸ்தவ கல்லூரியிலே ஆசிரியப் பணிபுரிகிருர் தமது ஆசிரிய கடமையோடு "கிறிக்கெற் விளையாட்டிலும் இவர் உதவிபுரிந்து வந்தவர்.
3. திரு தி, தியாகராசா B, A, (Madras Dip-in-Eல், எம்
முடன் ஒராண்டிருந்தார்; இப்பொழுது கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திற்கு மாற்றம்பெற்றுச் சென்றுள்ளார்;
4. திரு ப. முத்துக்குமாரசுவாமி ( சங்கீத பூஷணம் ) பலாலி ஆசிரிய கலாசாலைக்குப் பயிற்சி பெறச் சென்ருர்,
5. திருவாட்டி ஐ இராஜநாதன் தமது ஆசிரிய பயிற்சியைப் பூர்த்தி செய்யப் பலாலி ஆசிரிய கலாசாலைக்கு மீண்டும் சென் றுள்ளார்.
6 திரு. ஏ. சிவஞானம் நீண்ட காலம் கனிஷ்ட பகுதியில் பணியாற்றிய சிறந்த ஆங்கில ஆசிரியரான இவர் தமது விருப்பத்தின் பேரில், தம் வீட்டிருகிலுள்ள பாடசாலை ஒன் றிற்கு மாறிஞர்.
7. திரு ஏத இராஜகோபால் B, A ( Cey, ) இவ்வாண்டுத் தொடக்கத்தில் இங்கு வந்து டிப்புளோமாப் பயிற்சி பெறுவ தற்காய் ஒரு மாத காலத்தில் நீங்கிச் சென்ருர்,

Page 6
பின் வரும் ஆசிரியர்கள் புதியராய் வந்துள்ளனர் :
திரு. கே. எஸ். குகதாசன் ME Se.
பொ, மகேஸ்வரன் B Se. Cey (விசேடம்) கணிதம் Gas. Garsi) 6 J59,607 to B. A. Madras ) திருமதி கே. இராஜரத்தினம் ஆசிரியப்பயிற்சித் தராதரம் ( தமிழ் ) திரு. ச. கந்தசாமி வித்துவான் பயிற்றப்பட்ட ஆசிரியர் வே. சண்முகலிங்கம் பயிற்றப்பட்ட ஆசிரியர் மாடு புவனேந்திரன் (வர்த்தக விசேடப் பயிற்சித் தராதரம்) , ஏ. தங்கராசா B, A, (Cey) Dip in Ed, , க, மாணிக்கவாசகர் - இசை மணி
இவர்களை வரவேற்கும் இவ் வேளையில் இவர்கள் இங்கு நீண்ட காலம் சேவை செய்வர் என்ற எம் நம்பிக்கையையும் தெரிவிக்கின் ருேம்,
இரசாயன ஆய்வுகூட உதவியாளராய் நீண்டகாலம் இங்கு பணியாற்றி வந்த திரு. க. இராசரத்தினம், பொது எழுதுவினை ஞர் தேர்விலே சித்தியடைந்து கண்டியிலே பணியாற்றுகின்றர். மனச் சாட்சிக்கு முரணின்றி அர்ப்பண சேவை புரிந்து வந்தவர் இவர் இவருக்கு எமது நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்ருேம் இவரின் இடத்திற்கு நியமனமான திரு. மு சிவலோகநாதன் தமது பணியில் அக்கறை காட்டி வருகின்ருர்,
திருவாளர்கள் எம். புவனேஸ்வரன் B, A ( Ceylon) புவி tTTTTT S S S S t L L LLLLLSS TSSS T T O TTT TTT 0S SSS SssLLLLLLL S LS சாலே வசதிக் கட்டணத்திலிருந்து வேதனம் பெறும் ஆசிரியர்களா கப் பணியாற்றுகின்றனர்,
LDPE 1506) is :
தரங்கள் 1 - 5 4 67 6 - 9 57露 : 74 0 21 سبي. 9 夏翼一夏器 龛07
மொத்தம் 189 புதியராய்ச் சேர்ந்தோர் 1974
5prւն 80 6 25 9 72
27
 
 
 
 
 
 
 

சேர்த்தல் = தரம் 1 பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் பின் ளேகளுக்குக் கூடிய வாய்ப்பு அளிக்கப்படும்,
தரம் 6 - கல்வியமைச்சு புலமைப் பரிசில் வழங்கி அனுப்பும் பிள்ளைகளும் கல்வித் திணைக்களம் நடத்தும் சேர்வுப் பரீட்சை யில் தெரிவு பெறுவோரும் அனுமதிக்கப்படுவர்,
தரம் 9 - புலமைப் பரிசில் பெறுவோரும் சேர்வுப் பரீட்சை யிலே தெரிவு பெறுவோரும் அநுமதிக்கப்படுவர். இவ்வாண்டே இத் தரத்திற்கு மாணவரை அநுமதிக்கும் இறுதியாண்டாயிருக்கும். எதிர் காலத்தில் முதலாந் தரத்திலே சூழல் அடிப்படையிலும், 6-ஆந் தரத்தில் சேர்வுப் பரீட்சை அடிப்படையிலும் மாணவர் அநுமதி பெறுவர், மற்றும் வகுப்புக்களிலே மாணவர்க்கான காலி இடங்கள், ஏற்படும் வேளையில் கல்வியமைச்சின் அறிவுறுத்த லுக்கிணங்க நிரப்பப்படும்.
Lifi að Fi பெறுபேறு 56i
க. பொ.த. (சாதாரண தரம்) - டிசம்பர் 1973
சித்தியடைந்தோர் விஞ்ஞானம் கலே, வர்த்தகம் பாடங்களிலும்கூடியபாடங்களிலும் 82 蠶2 5 பாடங்கள் 69 @ உயர்தரவகுப்பிற் பயிலத்தகுதிபெற்றேர் 155 2 து. பொ.த. (உயர்தரம்) գյլնth6ն-1973 orւնilaն- 1974 விஞ்ஞானம் விஞ்ஞானம் 4 பாடங்கள் 4雳 霹6 3 LitLiଛିis git 2盟 27
και βου မ္ဘ2āto) 4 LIr五_屋、鼩 9 5 3 IIT Liig, Gir 5 7
1973 டிசம்பரில் நடைபெற்ற க பொ. த. (சாதாரண தரம்) பரீட்சைப் பெறுபேருக 155 விஞ்ஞான மாணவர் உயர்தர வகுப் பிற் பயிலத் தகுதியடைந்தனர். இதன் காரணமாக மேலதிக வகுப் பொன்றினைக் கல்வித் திணைக்கள அனுமதியோடு தொடங்கவேண் டியதாயிற்று. இதனுல் விஞ்ஞான மாணவரைப் புதியராய்ச் சேர்க்க முடியாத நிலையில் உள்ளோம்.
வடமாகாண ஆசிரியர் சங்கப் போட்டிகளில் எமது மாணவர், கடந்த காலங்களிற் போலவே கலந்துகொண்டு பின்வரும் பரிசில்
களைப் பெற்றுள்ளனர்.

Page 7
L)
கீழ்ப்பிரிவு - எஸ். இராசேந்திரம் - முதற்பரிசு அதிமேற்பிரிவு - பி. செல்வவடிவேல் - மூன்ரும் பரிசு
ஆங்கிலப் பேச்சு
மத்திய பிரிவு - எஸ். அரவிந்தமோகனசங்கர்- முதற்பரிசு மேற்பிரிவு ா எஸ். ஞானப்பிரதீபன் - மூன்ரும் பரிசு
தனிப்பாடல்
மேற்பிரிவு ா இது சுதாகரன் - மூன்ரும் பரிசு
உணவுற்பத்தியில் எமது பங்கு
பிரதம மந்திரியவர்கள் நாட்டிற்கு விடுத்த வேண்டுகோளின் முக்கியத்தினை உணர்ந்து உணவுற்பத்தி முயற்சிகளில் எமது மான வரை ஈடுபடுத்தினுேம் பிரதமரின் உணவுற்பத்திப் போர் அறை கூவலுக்கு எமது மாணவரின் உற்பத்திச் சாதன தக்க பதிலா யுள்ளது என்பதை உற்பத்தி ஆண்டு விழாவின் இறுதிநாளாகிய இன்று தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடை கின்றேன்.
மாணவதலேவர் சபை
கல்லூரிக்கு இச் சபை அரும்பணி ஆற்றிவருகிறது. மாணவர்கி கும், நிருவாகத்திற்குமிடையே இது ஒர் இணைப்புப் பாலமாய் விளங்கி வருகிறது. கல்லூரி வைபவங்களில் மாணவ தலைவர் சபை ஒழுங்கினையும் கட்டுப்பாட்டினையும் பேணிக்காத்து வருகிறது. திரு. ஐ. கருளுறகரர் இதன் ஆசிரிய ஆலோசகராகத் தொடர்ந்து பணி யாற்றி வருகின்ருர் செல்வன் க, இராஜகுலசிங்கம் சிரேஷ்ட மாணவ முதல்வராவர். இவர்களின் பணிக்கு எமது நன்றி உரியது,
நூலகம்
செல்வி T3 அப்புக்குட்டி மாறிச் சென்றதும் திரு இராது ரத்தினம் நூலகராய் கடமையேற்றுள்ளார். நூலகப் பயிற்சி பெற்ற இவர் நூலக விடயத்தில் ஆர்வம் காட்டி உழைத்து வருகிருர்; நூல்களை மேலதிகமாகச் சேர்த்துள்ளோம். இவற்றுள் 478 நூல் கள் கல்வித் திணைக்களம் தந்தவையாகும்.
விடுதிச்சாலே
திரு ஏகாம்பரநாதன் விடுதிச்சாலை உதவியாளராய் 1974 ஜனவரியில் நியமிக்கப்பட்டார். மாணவரின் படிப்பைத் திரு. எஸ். சந்தியாப்பிள்ளையும், மற்றைய நடவடிக்கைகளை விடுதி மேற்பார் வையாளரான திருரு கே சிதம்பரநாதனும் திரு ஏகாம்பரநாதனும்
O
 
 
 

கவனித்து வருகின்றனர் 210 பிள்ளைகளைக்கொண்ட இவ்விடுதியினை நன்முறையில் மிகுந்த கஷ்டத்தினிடையே நாம் நடத்துகின்ருேம்: எங்கும் பற்ருக்குறை நிலவும் இவ்வேளேயில் விடுதி மாணவரின் பெற்ருேருடன் நெருங்கிய தொடர்பு பூண்டு மாணவர்களுக்கு எம் மால் இயன்ற அளவு வசதிகளைக் கொடுத்து வருகின்ருேம்,
சமய கலாசார செயற்றிட்டங்கள்
வழமைபோல் குருபூஜைகளையும் சமய விழாக்களேயும் கொண்
டாடி வருகின்ருேம். இவ்வருடம் திருக்கேதீச்சரத்துக்குப் பெருந்
தொகையான மாணவர்கள் யாத்திரை வந்து பயன்பெற்றனர்.
சைவ பரிபாலன சபையாரால் நடாத்தப்பட்ட சமயப் பரீட் சைகளில் மாணவர்கள் பெருமளவில் பங்குகொண்டு ஒரு தங்கப் பதக்கத்தையும் பல பாடசாலைப் பரிசுகளையும் பெற்றிருக்கிருர்கள் சேக்கிழார் விழாவின் வெற்றிக்கு னங்கள் இந்து இளைஞர் சங்கம் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சி. இராமலிங்கம் அவர்கள், அண்ணுமலைப் பல் கலைக் கழகம், 9 பொருள் ' என்ற தலைப்பில் சொற்பொழி வாற்றினர்.
வெள்ளிக்கிழமைகள் தோறும் பிரார்த்தனே மண்டபத்தில் நடக் கும் பூசையை ஒவ்வொரு வகுப்பும் முறையாகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செய்யத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது
க. பொ. த. (உயர்தர) மாணவர் ஒன்றியம்
வாரந்தோறும் இவ்வொன்றியம் கூடிச் செயல் புரிகின்றது.
உணவு நெருக்கடி காரணமாக வருடாந்த இராப்போசன விருந்
தினை நாம் கைவிட வேண்டியதாயிற்று.
பிற சங்கங்கள்
விஞ்ஞானச் சங்கம், புவியியற் சங்கம், சரித்திர குடிமையியற்
சங்கம், வர்த்தக சங்கம், க. பொ.த. (சாதாரண தரம்) மாணவர்
சங்கம் ஆகியன வாரந்தோறும் இயங்கி வருகின்றன.
கட்புல செவிப்புலக் கழகம்
திரு. இ. மகாதேவாவின் அறிவுரையோடும் வழிகாட்டலோடும் இக்கழகம் நன்முறையிலே செயற்படுகின்றது. இதன் தலைவர்: இளங்கோ செயலாளர்: சோ. சுந்தரராஜன், இக்கழகம் காலை, மாலைப் பிரார்த்தனேகளின் போதும், பிற வைபவங்களின்போதும் உதவி வருகின்றது)

Page 8
ரீலங்கா பயிற்சிக் குழு
அதிகாரிகள்:
திரு. வி. சுந்தரதாஸ் - பிரதேச பொலிஸ் பரிசோதகர்
திரு. ஏ. மரியதாஸ் - பிரதேச பொலிஸ் உதவிப் பரிசோதகர்
ரி திருநந்தகுமார் - சார்ஜன் கே. இராஜகுலசிங்கம் - சிரேஷ்ட கோப்பறல் ஏ. எச். எம். ஜபருல்லா - கோப்பறல் ஆர் லி. இராமநாதன் - லெப்டினன்ட் கோப்பறல் எம். தங்கராசா - கோப்பறல்
மேலும் 85 பேர் குழுவில் உள்ள ன ர் தலைமை நிலையத் திலிருந்து பயிற்சியளிப்போரிருவர் இக் குழுவினர்க்கு உடற் பயிற்சியளித்து வருகின்றனர். மாவட்டக் கல்விப் பொருட்காட்சி யின்போது பணியாற்றினர் விடுமுறைப் பரிவர்த்தனைத் திட்டத் திலே கலந்துகொண்ட எமது குழுவினரை, அதிகெளரவ பிரதம மந்திரியும் பொலிஸ் மா அதிபரும் பாராட்டியுள்ளனர். இத்திட்டம் பெருவெற்றியீட்டியது. பயிற்சிக் குழுவினர் நால்வர் பொலிசாரின் வருடாந்த விளையாட்டுப் போட்டியிற் கலந்துகொண்டு அஞ்சலோட் டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். பலாவி விமான நிலை யத்தில் மாண்புமிகு கல்வியமைச்சருக்கு மரியாதை அணிவகுப்பு ஒன்றினை அளித்தனர் முதலுதவிப் பயிற்சியிலும், களுத்துறையில் நடைபெற்ற இரண்டாவது வருடாந்தப் பொலிஸ் பயிற்சிக் குழு வினரின் பாடி வாசத்திலும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சென். யோன் முதலுதவிப் படையினரின் அணிவகுப்பிலும் பரிசோதனை யிலும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
சதுரங்க விளையாட்டுக் குழு
இக்குழுவில் இருபத்தொரு அங்கத்தினர் உள்ளனர்; இவ்வாண் டுப் போட்டியிலே கலந்துகொண்டவர் தொகை பதினெட்டு வெற்றிவாகை குடியோர் விபரம் வருமாறு:
கீழ்ப்பிரிவு - முதலிடம்: எஸ் உதயணன்
இரண்டாமிடம் பி. பிரபாகரன்
மேற்பிரிவு - முதலிடம்! ஸி பூரீ நந்தகுமார்
இரண்டாமிடம்: எஸ். பாஸ்கரன்
படைபயில் குழு
இவ்வாண்டு எமது படையின் குழுவின் சிரேஷ்ட, கனிஷ்ட
பிரிவினர் வருடாந்த பயிற்சியிலே கலந்து கொண்டனர். கனிஷ்ட
படையின் குழுவினர்க்கான பயிற்சி அநுராதபுரத்தில் நிகழ்ந்தது.
2
 

இவர்கள் தேகப் பயிற்சியிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், குடிசைப் பரிசோதனையிலும் தம் திறமையை நன்கு வெளிப்படுத் தினர். வழமைபோலச் சிரேஷ்ட படைபயில் குழுவினரின் பாடி வாசம் தீயத்தலாவையில் நிகழ்ந்தது. இவர்களின் போட்டிச் சாதனைகள் இவ்வாண்டில் குறிப்பிடத்தக்கதாயில்லை. வாறென்ற் அதிகாரி 11 ஏ. ரூபன் ஐந்தாவது படையின் ஒரு பிரிவுக்கு அணித் தலைவராய் நியமனமானுர். இவருக்கு எம்வாழ்த்துக்கள்.
பயிற்சி நிலை அதிகாரியான திருது எஸ். சந்தியாப்பிள்ளையும் இரண்டாவது லெப்டினன்ட் ஆன திரு. என் சோமசுந்தரமும் முறையே கனிஷ்ட சிரேஷ்ட படைபயில் குழுக்களின் பொறுப் பதிகாரிகளாயுள்ளனர்.
சிரேஷ்ட வகுப்பு மாணவர், படைப்பயிற்சி கடினமானது என்று கருதி படையில் குழுவிலே சேரத் தயங்குகின்றனர். உண்மை யிலே இப்பயிற்சி கடினமானதுதான். எனினும் இராணுவத்தில் படைபயில் குழு இன்றியமையாத இடத்தை வகிக்கின்றமையால் அதற்கான பயிற்சிகளும் ஒழுங்குகளும் உயர்தரத்தில் அமைதல் வேண்டும். இதற்காக அரசு எவ்வளவோ செலவு செய்கின்றது. எமது படைபயில் குழு, பத்துநாள் பாடிவாசம் மேற்கொள்ளும் போது எமக்கு மட்டும் 500/- வரை செலவழிக்கப்பட்டது. இதன் நோக்கம் இன்றைய இளைஞர் சமூகத்தினைக் கட்டுப்பாடும், ஒழுங்கும் கொண்ட நாட்டின் நன்மக்களாய் உருவாக்குதே. எனவே சிரேஷ்ட வகுப்பு மாணவர் இப்பயிற்சியின் முதன்மையையுணர்ந்து படைபயில் குழுவிலே சேர்ந்து பயிற்சி பெறுமாறு வேண்டுகிருேம்,
சாரணர் குழு
திரு. நா நல்லையா குழுச் சாரணர் தலைவராகவும் திருவாளர் கள் T. துரைராசா, V. S. சுப்பிரமணியம், M. ஆறுமுகசாமி. R. அருளானந்தம் சாரணத் தலைவர்களாகவும். திருமதி. ச. ஆறு முகம். K. குமாரசிங்கம், செல்வன் N. விவேகானந்தன் குருளைச் சாரணர் தலைவர்களாகவும் பணிபுரிகின்றனர்.
சென்ற வருடம் யாழ் மாவட்டச் சிறந்த குழுவிற்கான ருேட் டரிக் கேடயத்தைத் தொடர்ந்து மூன்ருவது முறையாகப் பெற்றது.
பதின்மூவர் இராணிச் சின்னத்தையும் பதின்மர் ஜனதிபதிச் சின்னத்தையும் பெற்றனர் யாழ் மாவட்டத் திரிசாரணர் கருத் தரங்கில் பங்குபற்றிய செல்வன் N. விவேகானந்தன் அகில இலங் கைத் திரிசாரணர் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாவட்டக் குழு தலைவராகத் தெரியப்பட்டார்.
3

Page 9
எமது குழுவின் 58 ஆவது வருடாந்த விழா திரு P சோமசுந் தரம் (பழைய மாணவர், அதிபர் நடேஸ்வராக் கல்லூரி) அவர் களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு நடந்ததோடு ஒரு மலரும் வெளியிட்டது.
பயிற்சிப் பாசறை வாசங்கள் மூன்று பாடசாலையிலும் காங் கேசன்துறையிலும் நடந்தன. தலைவர் நா. நல்லேயா, யாழ் மாவட் டச் சாரணர் சபைச் செயலாளராகவும் யாழ் சாரணர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.
சாரணர் தொகை - திரிசாரணர்: 4 இராணி சாரணர்: 2 ஜனுதிபதி சாரணர் 5 சிரேஷ்ட சாரணர்: 14 2盛 குருளேயர் ; f:
sa?iru Ti Gšasit
விளையாட்டு மேலாளர்கள் திரு. என். சோமசந்தரம்
திரு ஆர் துரைசிங்கம்
பின்வரும் ஆசிரியர்கள் வெவ்வேறு விளையாட்டுக் குழுக்களின் தலைவர்களாய் உள்ளனர்.
உதைபந்தாட்ட முதற்குழு திரு. ஆர். துரைசிங்கம்
இரண்டாங்குழு: திரு. ஐ. கருணுகரர் ခြုံ ၅ மூன்ரும் குழு திரு. எஸ். புண்ணியலிங்கம் கிறிக்கெற் முதற்குழு: திரு: என். சோமசுந்தரம்
ே 16 வயதிற்குக் கீழ்ப்பட்டோர்: திரு என். சோமசுந்தரம் மெய்வல்லுநர் பயிற்சி திரு ஆர். துரைசிங்கம் கொக்கி முதற்குழு திரு. என். சோமசுந்தரம்
. இரண்டாங்குழு திரு. எஸ். சந்தியாப்பிள்ளை கூடைப்பந்தாட்டம்: திரு ரி. துரைராசா சதுரங்கம்: திரு. ரி. துரைராசா
மெய்வல்லுநர் பயிற்சியில் திரு. A இரத்தினசிங்கமும், உதை வந்தாட்டப் பயிற்சியில் (மூன்ருங்குழு) திரு. K. தர்மகுலசிங்கமும், கிறிக்கெற் பயிற்சியில் (முதலாங்குழு) திரு எஸ். சூரியகுமாரும் திரு. யோ, நரேனும் எமக்கு உதவிபுரிகின்றனர். பழைய மாண வர்களாகிய இவர்களுக்கு எம் நன்றி.
14.
 

鼬
உதைபந்தாட்டம்
யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கத்தால் நடாத்தப்படும் வருடாந்த உதைபந்தாட்ட போட்டியில் வழமை போலக் கலந்துகொண்டோம்,
முதற்குழு பாராட்டிடத்தையும் இரண்டாங் குழு வெற்றி முதன்மையில் மகாஜனுவோடு சமநிலையையும் மூன்ருங் குழு அரைவட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் தகைமையும் அடைந்தன:
எமது முதற் குழு ஆறு ஆட்டங்களில் பங்கு கொண்டு ஐந் தில் வெற்றியீட்டியது. எமது இரண்டாவது குழு விளையா டிய எட்டு ஆட்டங்களில் ஏழில் வெற்றியீட்டியது. மூன்ருங்குழு விளையாடிய ஏழு ஆட்டங்களில் ஆறில் வெற்றியீட்டியது கோல் விபரம் வருமாறு:-
முதற் குழு பெற்றகோல் 24 இழந்த கோல் - 13
இரண்டாங் குழு , 證。密 6 ܠܐ ܬܐܬܐ ܗܝܕܝ
மூன்றுங் குழு 37 ** و لا سياسية
கிறிக்கெற்:
எமது முதற்குழு இம்முறை நன்கு விளையாடிய எட்டுக் கிறிக்கெற் ஆட்டங்களில் நான்கில் வெற்றியும் ஒன்றிற் சமநிலை யும்பெற்றது. பதினுறு வயதிற்குட்பட்டோர் குழுவின் சாதனை போற்றத்தக்க வகையில் அமைந்தது. இலங்கைக் கிறிக்கெற் விளை பாட்டுச் சங்கச் சுற்றுப்போட்டியிலே கலந்துகொண்ட இக் குழு கால் இறுதிப் போட்டிவரை தெரிவுபெற்று நாளாந்தாக் கல்லூரி யுடன் விளையாடிய ஆட்டத்தில் தோல்வியடைந்தது;
ஹொக்கி
ஹொக்கி விளையாட்டில் நாம் கலந்துகொள்ளும் இரண்டாவ தாண்டாகிய இவ்வாண்டில் யாழ்ப்பான ஹொக்கி விளையாட் டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட விளையாட்டுக்களின்போது எமது சிரேஷ்ட குழு மூன்று ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியை யும் ஒன்றில் சமநிலையையும் எய்தியது. கனிஷ்ட குழு விளையா L9-L1 மூன்று ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி யை யும் ஒன்றில் சமநிலையையும் அடைந்தது. எமது விளேயாட்டு வீரர்களில் ஆர். ஸி. இராமநாதனும், எஸ் ஜெயப்பிரகாசமும் யாழ்ப்பாணப் பாடசாலைகளின் ஹொக்கி விளையாட்டுச் சங்கத்தி னரால் தெரியப்பட்டு, இலங்கைப் பாடசாலைகளின் ஹொக்கி
翼5

Page 10
விளையாட்டுச் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலைகளில் வருடாந்த தேசிய ஹொக்கி விளையாட்டுப் போட்டியிலே பங்கு பற்றினர்.
மெய்வல்லுநர் போட்டி:
எமது இரண்டாவது ஐந்து கிலோமீட்டர் வீதி யோட்டப் போட்டி வெற்றிகரமாய் நிகழ்ந்தது. 458 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பந்தைய ஒட்டத்தில் உதவிபுரிந்து இதன் வெற் றிக்குதவிய அபிமானிகளுக்கு நன்றி கூறுகின்முேம், ଔ[olunt && யாழ்ப்பாணப் பொலிசாரும், பொலிஸ் பரிசோதகர் திரு T. சேனுதிராசாவும் எமது நன்றிக்குரியர்.
இவ்வாண்டு நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் சபாபதியில்லம் வெற்றிவாகை சூடியது எமது போட்டிக்குப் பிரதம விருந்தினராகக் கல்லூரியின் பழைய மாணவரும் நீதி பதியுமான திரு. கே. வி. நவரத்தினமும் பாரியாரும் வருகைபுரிந் தனர். கனிஷ்ட பிரிவு மாணவரின் இல்ல வருடாந்த விளையாட் டுப் போட்டியில் நாகலிங்கம் இல்லம் முதலிடம் பெற்றது. ன்மது பழைய மாணவரும் அரச செயலக பொதுசனத் தொடர்பதிகாரி யும் மாவட்ட சாரண ஆணையாளருமாகிய திரு எஸ். நாகராசா வும் பாரியாரும் பிரதம விருந்தினர்களாய்க் கலந்துசிறப்பித்தனர்;
கூடைப் பந்தாட்டம்
இவ்வாண்டு எமது மாணவருக்குப் புதியதொரு விளையாட்டை அறிமுகம் செய்தமையை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின் றேன்: யாழ்ப்பாணப் பாடசாலைகளின் கூடைப் பந்தாட்டச் சங் கத்தினர் நடத்திய சுற்றுப் போட்டியில் நாம் இரண்டாவது பாராட்டுக்குரியவராகும் தகுதியை அடைந்தோம் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றியீட்டினுேம், இலங்கைப் பாடசாலைகளின் கூடைப் பந்து விளையாட்டுப் பயிற்சியாளராகிய திரு. ஆர். கந்தரலிங்கம் எமது விளையாட்டு விரர்களுக்குப் பயிற் சியளித்தமைக்கும், உதவி கோரப்பட்டபொழுதெல்லாம் முன் வந்து உதவியமைக்கும் நன்றி செலுத்துகின்ருேம்,
எமது மெய்வல்லுநர் வெற்றி காணத் தயார் நிலையிலிருந்த னர். இவ்வாண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகளின் மெய்வல்லுனர் போட்டிச் சங்கத்தினர் வருடாந்த விளையாட்டுப் போட்டியை நடாத் தியிருந்தால் நாம் வெற்றிவாகை குடியிருப்போம் எனபதற்கு ஐய மில்லை. எனினும் இலங்கைப் பாடசாலைகளின் மெய்வல்லுநர் போட் டிக்கும், கனிஷ்ட அமைச்சூர் விளையாட்டுச் சங்கப் போட்டிக்கும் எமது வீரர்களை அனுப்புகின்ருேம்.
6
 
 
 

எமது கட்டிடங்கள்
எமது பிரதான மண்டபம் கீலமடைந்து விழும் நிலையிலுள்ளது: இதனேக் கல்வித் திணைக்களத்தினரின் கவனந்திற்குக் கொண்டுவந்த பின்னரும், திருத்துவதற்கான நிதியுதவி இன்றுவரை கிடைக்கவில்லை. எமது வைரவிழா நினைவு மண்டபமும் பூர்த்தியடையாதிருக்கிறது. வகுப்பறை நெருக்கடி எமக்கு மிகுதியாயுள்ளது. ஐந்து வகுப்புகளை நாம் மண்டபத்திலே நடாத்தவேண்டிய நிலையிலிருக்கிருேம் நன் முறைக் கற்பித்தலுக்கு இவ்வொழுங்கு இடையூருயுள்ளது.
மாண்புமிகு கல்வியமைச்சரின் வருகை
அண்மையில் கல்வியமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தபொழுது எமது கல்லூரி நுழைவாயிலில் பொலிஸ் பயிற்சிக் குழுவினர் மரியாதை அணிவகுப்பு நடாத்திக் கெளரவித்தனர். அவ்வேளையில் எமது பிரதான மண்டபத்தின் கீலமடைந்த நிலை யைக் கவனித்த அவர் கரிசனையுடன் விசாரித்துச் சென்ருர்
ஆசிரியர் கழகம்
இக் கழகத்திலே ஆசிரியர்கள் அனேவரும் உறுப்பினர்களாய் உள்ளனர். திரு இ. மகாதேவா இதன் தலைவராவர். திரு. யோசவ் செயலாளர். இக் கழகத்தினர் இன்றியமையாத பயனுள்ள பணி யினை ஆற்றுகின்றனர். செயலாளர் ஆசிரியர்களுக்கான சம்பளப் பங்கீட்டில் உதவி புரிகின்றனர் கல்லூரியின் சிக்கன கடனுதவிச் சங்கம் சிறந்த முறையில் இயங்குகின்றது. அதே வேளையில் தமது வட்டத்தினுள்ளேயே இயங்கித் தம் நலன்களை மாத்திரம் கருதாது வெளிப் பணிகளிலும் எமது ஆசிரிய கழக உறுப்பினர்கள் ஈடுபட்டு உழைக்கின்றனர்
திரு. எஸ் பொன்னம்பலம் விசேட தர ஆசிரிய சங்கச் ଗgful!! ଈd intତାtit.
திரு சி. பரமானந்தம், பொருளாளர் N. C, T, A, B : தலைவர். இலங்கை ஆசிரியர் சங்க நல்லூர் வட்டாரக் கிளை உப தலைவர் N P. T. A பரீட்சைச் சபை
திரு. நா. நல்லையா செயலாளர் இலங்கை ஆசிரியர் சங்க நல்லூர் வட்டாரம்3
திரு, நா. சோமசுந்தரம் செயலாளர் J. R. R. A
உப தலைவர் , F, A
夏*

Page 11
திரு பொ, வில்வராசா, (2) Lurragoritorii இலங்கை ஆசிரியர் சங்க நல்லூர் வட்டாரக் கிளை செயலாளர், வட மாகாண ஆகி ரிய வர்த்தக ஆசிரியர் சங்கம்.
திரு. சே, சிவசுப்பிரமணிய சர்மா, செயலாளர் NPTABF இலங்கை ஆசிரியர் சங்க உப செயலாளர்.
திரு. சி. சந்தியாப்பிள்ளை அமைப்புச்செயலாளர், வடமாகாண ஆசிரியர் சங்கம்.
திரு. இ. துரைசிங்கம் உப செயலாளர் யா, பா. விளையாட் டுச் சங்கம்
திரு மா புவனேந்திரன், செயலாளர், அகில இலங்கை ஆசிரிய வர்த்தக மன்றம்
திரு. வி. சுந்தரதாஸ், உப தலைவர், சிறிலங்கா கல்விச் சேவையாளர் சங்கம்
பெற்றர் ஆசிரியர் சங்கம்
நாம் கல்லூரித் தொழிற் கூடத்தை யடுத்து ஒரு கட்டடம் அமைத்துள்ளோம் திரு. ஐ. கருணுகரர் செயலாள்ராகவும் திரு. தா. அருணுசலம் பொருளாளராவும் உள்ளனர்,
பழைய மாணர் சங்கம்:
இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் எமது பழைய மாணவர் சங்க வருடாந்தக் கூட்டத்தினைக் கூட்டினுேம், தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் திரு. சி. அருளம்பலம், தலைவராகவும், ஆசிரியர் திரு ஆர். மகேந்திரன் செயலாளராகவும் தெரிவுசெய்யப் பெற்றனர்;
பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட்டத்தில் டாக்டர் எஸ் வேலாயுதபிள்ளை செயலாளராகத் தெரியப் பெற்ருர்,
பல்லாண்டுகளாக கொழும்பு பழைய மாணவர் சங்கச் செய லாளராக பணிபுரிந்து கல்லூரிக்குப் பல சேவைகளைச் செய்த சட்டத்தரணி திருவாளர் இ துரைசிங்கம் அவர்கள் சிவபதம் டைந்ததையிட்டு நமது கவலையையும் அநுதாபத்தையும் அவர் கள் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கின்ருேம் அன்னுரின் ஆத்மா சாந்தியடைவதாக,

நன்றி
எமது துணையதிபரான திரு. எஸ். கனகநாயகம் எனது பொறுப்புக்களிலே பங்குகொண்டு, தமது இதயபூர்வமான ஒத்து ழைப்பினை வழங்குகிருர், கனிஷ்ட பிரிவின் அதிபர் திரு. கே. கணக ரத்தினமும் என் நன்றிக்கு உரியர் ஆசிரியர்கள், அலுவலக எழுது
வினைஞர் உதவியாளர், சிறுபணியாளர் யாவரும் எப்பொழுதும்
தங்கள் ஒத்துழைப்பினை பூரணமாக அளித்தனர்.
வடமாநிலக் கல்வியதிபதி, நல்லூர் வட்டாரக் கல்வியதிகாரி சிவபூரீ எஸ். மகேஸ்வர ஐயர் அவர்களுக்கும் மற்றும் கல்வித் திணைக்கள அலுவலர் யாவர்க்கும், கல்லூரி நிருவாகம் நன்கமை யத் தந்த ஒத்துழைப்பிற்கும் உதவிகளுக்கும் என் நன்றி உரித்தாகுக !
கல்லூரிப் பரிசளிப்பு நிதிக்கு உதவிய யாவருக்கும், இவ்வைப வத்திற்குத் திரளாக வருகை புரிந்த உங்களுக்கும் என் நன்றி.
மீண்டும் ஒருமுறை எமது அழைப்பை ஏற்றுப் பிரதம விருந்
தினராய் வருகை புரிந்து சிறப்பித்த பிரதம விருந்தினருக்கும் பாரி யாருக்கும் எனது மனமுவந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்
జత్రిక్స్టిక్రైస్టీరి==

Page 12
பரிசில்கள் வழங்கியோர் 1974
இரு S சிவா செல்லயா 7 வைத்திய கலாநிதி
2 வைத்திய கலாநிதி க. பூபாலசிங்கம்
யோகு பசுபதி 8. திரு S சின்னத்தம்பி 3. திரு. க, சின்னேயா 4. திரு. செ. யோகரத்தினம் 10. திரு. மு. காளிமுத்து 5. திரு. சிவா பசுபதி 11. K. V. நவரத்தினம் 6. திரு. த. சண்முகலிங்கம் 12 திருமதி. க இந்துமதி
ஞாபகார்த்தப் பரிசில்கள் சித மு. பசுபதிச் செட்டியார் ஞாபகார்த்த நிதி பூரீலறுரீ ஆறுமுக நாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம்பிள்ளை செல்லப்பா வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என். எஸ். பொன்னம்பலபிள்ளை கதிர்காமுக் செட்டியார் செட்டியார் சிதம்பர சுப்பையாக் செட்டியார் முத்துக்குமாரச் செட்டியார் விகவநாதர் காசிப்பிள்ளை ஆர். எச், லீம்பெக்கன் பி. குமாரசாமி பி, அருணுசலம் தம்பு கயிலாசபிள்ளே அருணுசலம் சபாபதிப்பிள்ளை முத்துக்குமாருச் செட்டியார் பசுபதிச் செட்டியார்
திருமதி வ. அருளம்பலம் தன் கணவர்
அ. அருளம்பலம் ஞாபகார்த்தமாக
திரு. ஷண்முக குமரேசன் தன் தந்தையார்
A. R. சண்முகரத்தினம் (GUITL கார்த்தமாக,
தன் சகோதரன் 2. S. R3 அந்தரேசன் ஞாபகார்த்த
20

திரு க. இ. கதிர்காமலிங்கம்
திரு. வ. சுப்பிரமணியம்
யா, இ. க. ஐக்கிய கூட்டுறவுச் சிக்கனக் கடன் உதவிச் சங்கம்
திரு. C. K. இலங்கராசா
திருமதி K சதாசிவம்
செல்வி ச தனலெட்சுமி
திரு. வ. மகாதேவன்
திரு. த. சேணுதிராசா
அருணுசலம் செல்லப்பா ஞா கார்த்தமாக
1. தன் மைத்துனர் கு, வன்னியசிங்கம் ( கோப்பாய்
பிரதிநிதி) ஞாபகார்த்தமாக,
2. தன் மாமனுர்
நெறிக் காவலர் த5 முத்து சாமிப்பிள்ளை ஞாபகார்த்தமாக,
தன் மாமனுர் வைத்திய கலாநிதி கி. சுப்பிர மகனியம் ஞாபகார்த்தமாக,
திரு K அருணுசலம் ஞாபகார்த்த
ಓದಿ:17 ಟಿ.
தன் தந்தையார் செல்லப்பா சோதி ) கந்தையா ஞாபகார்த்தமாக,
தன் கணவர் M, சதாசிவம் ஞாபகார்த்தமாக
தன் தந்தையார் ச. சபாரத்தினம் ஞாபகார்த்தமாக
தன் தந்தையார் M, R, வைத்திலிங்கம் ஞாபகார்த்த
தன் சிறிய தந்தையார் வைத்திய கலாநிதி M வைத்திலிங் கம் (மலேசியா) ஞாபகார்த்தமாக,
A தனபாலசிங்கம் ஞாபகார்த்த LA)ff"5.
2.

Page 13
வைத்திய கலாநிதி
வே, யோகநாதன்
திரு செ சத்தியமூர்த்தி
தன் தந்தையார் கந்தையா வேலுப்பிள்ளை ஞாப கார்த்தமாக,
தன் தாயார் வேலுப்பிள்னே மாணிக்கம் ஞாப கார்த்தமாக,
தன் பெரிய தந்தையார் க. சில நடராசா ஞாபகார்த்தமாக, தன் தந்தையார் க. சி. செல்லத்துரை ஞாபகார்த்த Lf}HYቇ58
திரு. ப. கதிரவேலு J. P. U, M. தன் தந்தையார்
திரு. க. சீவரத்தினம்
திருமதி க சீவரத்தினம்
திரு k C, தங்கராசா
புங்குடுதீவு வ: பசுபதிப்பிள்ஜா ஞாபகார்த்தமாக
தன் தாயார் ஞாபகார்த்தமாக
தன் தாயார் ஞாபகார்த்தமாக,
பூரீலபூரீ முத்துக்குமார சுவாமித் தம்பிரான் (இலக்கண சுவாமிகள்) ஞாபகார்த்தமாக
தின் தந்தையார் கந்தப்பிள்ளை சிற்றம்பலம் இத71 கார்த்தமாக,
தன் தாயார் தையல்நாயகி சிற்றம்பலம் ஞாப கார்த்தமாக,
56ăr f Irrligurii வேலுப்பிள்ளை சிவகாமித்தாய் ஞாபகார்த்தமாக
திருமதி K.C. சண்முகரத்தினம் தன் கணவர்
வைத்திய கலாநிதி K. C2 சண்முக ரத்தினம் ஞாபகார்த்தமாக,

திரு இ. சபாலிங்கம் அதிபர் A குமாரசுவாமி ஞர்
கார்த்தமாக,
திரு. க சிவராமலிங்கம் தன் மாமனுர்
புங்குடுதீவுக, செல்லத்துரை ஞாப கார்த்தமாக,
திரு. ச. கனகநாயகம் தன் சிறிய தந்தையார்
ந: சங்கரப்பிள்ளை ஞாபகார்த்த
LDITS,
திரு. இ. மகாதேவா 1. தன் தந்தையாரி
அப்புக்குட்டி இளையப்பா ஞாப கார்த்தமாக,
இது தன் தாயார்
விசாலாட்சி இளையப்பா ஞாப கார்த்தமாக,
திரு, ச, பொன்னம்பலம் தின் தந்தையார்
பொ. சரவணமுத்து ஞாபகார்த்த
Af). TS
திரு. அ. கருணுகரர் தன் தாயார்
மாரிமுத்துப்பிள்ளை அப்பாத்துரை ஞாபகார்த்தமாக,
திருத வே, யோசவ் தன் தாயார்
வேளூட் ஞாபகார்த் 5 LρΠέ53
திரு, மூ, சிவஞானரத்தினம் தன் தந்தையார்
C K முருகேசு ஞாபகார்த்தமாகg
திரு.சே கிவசுப்பிரமணிய சர்மா N இராசரத்தினம் (முன்னைநாள் அதிபர், தொழில் நுட்பக் கல்லூரி மிருதானே ஞாபகார்த்தமான
:

Page 14
திரு. வி. சிவசுப்பிரணிையம்
திரு. V. சுப்பையா J. P.
வைத்திய கலாநிதி
க, சிவஞானரத்தினம்
அகில இலங்கை வர்த்தகக் கலைமன்றம்
தன் தந்தையார் அருணுசலம் விசயரத்தினம் ஞாப கார்த்தமாக,
தன் தாயார் விசயரத்தினம் அன்னம்மா ஞாப கார்த்தமாக,
தன் மனைவி காந்திமதி சுப்பையா ஞாபகார்த்த
LBIT5,
1. க பொது த. ( சாதாரண தரம்) மார்கழி. 1973 பரீட்சை யில் மிகத் திறமையாகசி சித்தி யடைந்த மாணவனுக்கும்,
23 க. பொ: த (சாதாரண தரம் ) பொதுத் திறன் பரிசு பெற்ற மாணவனுக்கும்)
தன் தந்தையார் வைத்திய கலாநிதி C கனகரத்தினம் ஞாபகார்த்த LR) IT"é#5. பண்ணிசையில் கிறந்த மாணவனுக்கு
க3 பொ, த (வர்த்தகம்) பிரிவில் பொதுத்திறன் பரிசுபெற்ற மான வனுக்கு வழங்கப்பட்டது.
சைவப்பிரகாச அச்சியந்திரசாலே, யாழ்ப்பாணம்
β, 4.


Page 15
கல்லூரிக் கீ
வாழிய யாழ்நகர் இந்துக் வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித்திரு நாட்டி இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலை இளைஞர்கள் உளம் மகிழ்ந்
கலைபயில் கழகமும் இதுவே கலேமலி கழகமும் இதுவே தலைநிமிர் கழகமும் இதுவே
எவ்விட மேகினும் எத்துயர் GTLDLD50) ösöT ÉGöI GOTGoi LopG என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு கன்
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரி அவைபயில கழகமும் இது ஓங்குகல் லறிஞர்கள் உவ. ஒருபெருங் கழகமும் இதுே ஒளிர்மிகு கழகமும் இதுவே உயர்வுறு கழகமும் இதுவே உயிரண கழகமும் இதுவே
தமிழம்ெ வாழ்வினிற் தாடு தனிப் பெருங் கலேயகம்
sւյոլի 3, 6)յն կմ, 6սմած தன்னிகர் இன்றியே நீடு தானியில் வாழிய நீடு
 

னில் எங்கும்
யகம் இதுவே
தென்றும்
| was L6} - தமிழர்
நேரினும்
8ഖ
பொடு காத்திடும் ఇ!
աóÙÏ մcifiվելի வாழ்க