கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நேர் முகம்

Page 1


Page 2

நேர்முகம்
வெளியீடு வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப் பிரிவு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

Page 3
நூல் நேர்முகம்
35T6)b 2009 யூன்
தொகுப்பாசிரியர் திரு.நா.கு.மகிழ்ச்சிகரன்
வெளியீடு வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப் பிரிவு
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
அச்சுப் பதிப்பு அரங்க செயற்பாட்டுக் குழு
யாழ்ப்பாணம்
முகத்தில்.
பயன் தருபணிதொடர. திரு வி. கணேசராசா.(அதிபர்) பொறுப்பாசிரியர் கருத்து. திரு ல. நிசாந்தன். நம்பிக்கை கொள்ள. திரு நா.கு.மகிழ்ச்சிகரன். (p656)60)... 9D மாணவர்கள்.
செல்வி. தங்கலஷசுமி செல்லத்துரை ஆசிரியையுடனான நேர்முகம்.
திரு. நடராசா சிவஞானசுந்தரம்பிள்ளை ஆசிரியருடனான நேர்முகம்
திரு இராசா பாலச்சந்திரன் ஆசிரியருடனான நேர்முகம்
திரு.பொன்னம்பலம் சிறீஸ்கந்தராஜா உபஅதிபருடனான நேர்முகம்
திரு செல்லையா தவராஜா ஆசிரியருடனான நேர்முகம்
திரு.கிறிஸ்ணசாமி பத்மநாதன் ஆசிரியருடனான நேர்முகம்
திரு.பொன்னம்பலம் ஞானதேசிகன் ஆசிரியருடனான நேர்முகம்
திரு.வயிரவன் தவகுலசிங்கம் ஆசிரியருடனான நேர்முகம்
நேர்முகம்- திரு நா.கு.மகிழ்ச்சிகரன்
நன்றிகள் ஆயிரம் உங்களுக்கு
 
 

பயன் தரு பணிதொடர.
கற்றல், போதனைகளாக அமைவதைவிட நேர்முக அனுப வங்களினூடாக அனுபவித்து உணர்ந்து கொள்ளும் ஒன்றாக இருப்பின், அது பிள்ளைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.
இந்நேர்முகங்காணலானது தமிழ்ப் பாடப்பரப்புக்குள்ளும், விடய அறிவைத்தேடும் கள ஆய்வு அனுபவத்திற்குள்ளும் மாணவர்களை இட்டுச் செல்கிறது.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேடலுக்கு வழிகாட்டிய ஆசிரியர் திரு. ல. நிசாந்தன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்.
இவ்வனுபவங்கள் மற்றய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சென்றடைய வேண்டும். அவர்களது ஆற்றல்மிகு திறன்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புக்கொண்ட வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் திரு. நா.கு.மகிழ்ச்சிகரன் அவர்கள் அதில் நேர்முகம் பற்றிய குறிப்புக்களையும் இணைத்து நேர்முகத்தினை புத்தகவடிவமாக்கி எல்லோரினது கைகளிலும் தவழச் செய்திருக்கிறார்.
இது போன்ற இன்னும் பல படைப்புக் கள் வெளிவரின் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் ஆளுமை விருத்தியடையும் என்பது யதார்த்தம்.
பணி செய்து பயன்பெற வழி செய்யுங்கள் என்பதை உளம் நிறுத்தித் தொடருங்கள். என வாழ்த்துகிறேன்.
திரு.வீ.கணேசராஜா
அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்

Page 4
பொறுப்பாசிரியர் கருத்து
“ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது’ என்பார்கள். உண்மையில் கல்வி என்பது பரீட்சைப் புள்ளிகளுடன் முற்றுப்பெற்றுவிடக்கூடாது. பிள்ளை பெற்ற கல்வி அவனது வளமான வாழ்க்கை அனுபவங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியதாக அமையவேண்டும். அந்த வகையில் “நேர்முகம்” என்ற இந்நூல்த் தொகுப்பு வகுப்பறையில் செவ்வி காணுதல் தொடர்பாகக் கற்ற விடயங்களைப் பிரயோகித்துப் பார்க்கும் ஒரு முயற்சியே ஆகும். இம்மாணவர்களின் கள அனுபவங்களுக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமுவந்த நன்றிகள்.
திரு.ல.நிசாந்தன்.
பொறுப்பாசிரியர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி "
 
 
 
 
 

நம்பிக்கை கொள்ள. எமது கல்லூரி, அனுபவச் செழிப்பு நிறைந்த முதுபெரும் ஆசிரியர்களையும், செயல் முனைப்பு வேகஞ்செறிந்த இளஞ்சுடர் ஆசிரியர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்கள் நுண்ணறிவும், வலுத்திறனும் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்புமிகு கல்லூரிச் சமூகத்தின் ஆற்றல்களையும், சாதனைகளையும் வெளிக்கொணரும் பல முயற்சிகளில் இந்த நேர்முகமும் ஒன்று. கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப் பிரிவு இம்முயற்சிகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும் நல்ல நோக்குடையது.
2008ம் ஆண்டு தரம் 9D வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் இந்த நேர்முகம், வகுப்பறைக் கணிப்பீடு என்ற வட்டத்துக்குள் மட்டும் நின்று, களையிழந்து போகாமல், மற்றவர்களாலும் இரசிக்ககூடிய விதத்தில் அமையப் பெறவேண்டும் என்பதும் இவ்வெளியீட்டின் நோக்கமாகும்.
இந்த நேர்முகத்தினை வழிப்படுத்திய-நெறிப்படுத்திய ஆசிரியர் திரு.ல.நிசாந்தன் அவர்களின் பண்புப்பான்மையை நாம் போற்றாமலிருக்க
(UDIÇUTEBl. இப்படிப்பட்ட நிலமைக்கு களம் அமைத்துக் கொடுத்ததோடு, ஆலோசனையும் ஆதரவும் கொடுத்து இச்செயற்பாடு முழுமைபெற இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும் வழங்கிய உயர் திரு.வீ.கணேசராஜா அதிபர் அவர்களை ‘நேர்முகம் தன் இதயத்தில் பதித்து வைத்திருக்கிறது. முதிர்ந்த அனுபவமும் ஆற்றலுமுடைய ஆசிரியர்களின் நேர்முகங்கள் ஒவ்வொன்றும் முத்தான முத்துக்கள். ஆகவே இத்தகைய முத்துக்களை முகங்காணும் மாணவர்கள் அம்முத்துக்களில் புதைந்திருக்கும் அறிவு, அனுபவம், ஆலோசனை, பண்பு, ஒழுக்கமுறை ஆகியவற்றுள் பொதிந்துள்ள சிறப்பம்சங்களை, தம்முள் ஏற்று தம்மை உயர்வாக வளர்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் உடையவர்கள். இவ்வாக்கம் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தால், நம்பி(க்)கைக்கொள்ளக் கூடியதாக அமைந்தால் அதுவே இந் நேர்முகத்தின் மகிழ்ச்சியாகும்.
திரு.நா.கு.மகிழ்ச்சிகரன் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப் பிரிவு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

Page 5
(p856.60).J.
வணக்கம் !
தரம் ஒன்பது (D) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களாகிய எங்கள் எல்லோரினதும் பங்களிப்போடு, எமது கன்னி முயற்சியாக இந் நேர்முகத்தினை, கள அனுபவங்களோடு தயாரித்திருக்கிறோம். அடைக்கப்பட்ட அறைகளுக்குள் இருக்கும் நாற்காலிகளுக்கும், வாங்குகளுக்கும் இடையே சிறைப்பிடிக்கப்பட்டிருந்து எழுதும் கவிதைபோல் அல்லாமல், கதையைப்போல் அல்லாமல் கவிந்தவானில் பவனிவரும் காற்றையும், சிட்டுக்குருவிகளின் இசையினையும், மலையருவிகளின் ஓசைகளையும் சுதந்திரமாக அனுபவிக்கும் ஆசையோடும் ஆர்வத்தோடும் இம்முயற்சியை கனியச் செய்திருக்கிறோம். உண்மையில் இக்கருமம் எமக்கு மனநிறைவைத் தந்துள்ளது.
எமது இந்த முயற்சிக்கு நாம் வெறும் துலங்கல் மாத்திரமே. தூண்டல்கள் அனைத்தும் எமது தமிழ் ஆசான் திரு.ல.நிஷாந்தன் ஐயாவையும், எமது யாழ் இந்துக்கல்லூரியின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் பொறுப்பாக உள்ள திரு.கு.மகிழ்ச்சிகரன் ஐயாவையுமே சாரும்.
மேலும் இந்நேர்முகத்தினை கல்லுாரியின் வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப்பிரிவு வெளியிடுவதையிட்டுப்பெருமைப்படுகிறோம்.
எமது இம்முயற்சிக்கு ஆதிமுதல் அந்தம்வரை உதவிய ஆசிரியர்களுக்கும், எமது வகுப்பு மாணவர்களுக்கும், செவ்விகளை சுவையாகத் தந்துதவிய புகழ் பூத்த எம்கல்லூரி முதுபெரும் ஆசான்களுக்கும், அனுமதியினைத் தந்துதவிய அதிபர், உபஅதிபர், பகுதித்தலைவர் ஆகியோருக்கும் மனந்திறந்து, எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தவறுகள் இருப்பின் எம்மிடம் கூறி எம்மை வழிப்படுத்துங்கள்.
தரம் 9D (2008) மாணவர்கள்
*தொட்டஅனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றஅனைத்து ஊாறும் அறிவு”

செல்வி. தங்கலஷசுமி செல்லத்துரை
ஆசிரியையுடனான நேர்முகம்.
முகம் கண்டவர்கள் சோ.திரியம்பக சர்மா ச.சந்தோசன் வெ.பிருந்தன் அ.ஒஸ்ரின்
சி.துவடிாந்
:' செல்வி.தங்கலஷசுமி செல்லத்துரை
சங்கீதபூசணம்
பிருந்தன்: காலை வணக்கம் Teacher. நீங்கள் எமது இந்துக் கல்லூரியின் மூத்த ஆசிரியை என்ற வகையில் எமது தமிழ்ப்பாடச் செயற்திட்டத்திற்காக உங்களைச் செவ்வி காண்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆசிரியை, வணக்கம்.
ஒஸ்ரின்: நீங்கள் எத்தனை ஆண்டுகளாக ஆசிரியராகக்
கடமையாற்றுகிறீர்கள் என்பதை எமக்கு.?
ஆசிரியை சுமார் முப் பத் தரினான் கு ஆணி டுகளாக கடமையாற்றுகிறேன்,1974ம் ஆண்டு இச்சேவையில் நுழைந்தேன்.
சர்மா: உங்களை ஆசிரியத் தொழிலுக்கு வரத்துண்டிய காரணிகள்
ஏதாவது இருந்தால்..?
ஆசிரியை. எனது தாயாரின் விருப்பத்திற்கிணங்கவே இத்தொழிலை
ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருந்து LD60TLj6).jLDIT85 இச்சேவையைச் செய்து வருகிறேன்.
1

Page 6
துஷாந்: நீங்கள் இந்தத் தொழிலுக்கு வருமுன் வேறு ஏதேனும் தொழில் புரிந்திருந்தால் எமக்குக் கூறுவீர்களா?
ஆசிரியை: பல இசை மன்றங்களில் மாணவர்களுக்கு இசை
கற்பித்தேன்.
சந்தோசன். நீங்கள் கல்வி கற்பித்த வேறு பாடசாலைகள் இருப்பின்
அது பற்றி எமக்கு சொல்ல முடியுமா?
ஆசிரியை: வேறு பாடசாலைகள் இல்லை. 1974 முதல் இன்று
வரை இங்கேயே பணிபுரிகிறேன்.
ஒஸ்ரின்: நீங்கள் கல்வி கற்ற பாடசாலைகளைக் கூற முடியுமா?
ஆசிரியை ஆரம்பக்கல்வியை காலியிலும், உயர்கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், இசைத்துறையை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் கற்றேன்.
சர்மா: உங்களுக்கு இசையில் அதிக விருப்பம் ஏற்பட ஏதாவது
காரணம்.?
ஆசிரியை. பாடசாலையில் நான் கற்ற காலத்தில் இசைக்காகப் பல பரிசில்கள் பெற்றேன். பல வைபவங்களில் மேடைகளில் பாடினேன். இதனால் ஆர்வம் அதிகரித்தது.
சந்தோசன்: சங்கீதத்தை எல்லோராலும் பாடிவிட முடியாதாம், அவற்றிற்கெல்லாம் சிறந்த குரல் வளமும், தெய்வ அனுக்கிரகமும் வேண்டுமாம், இது பற்றிய உங்கள் கருத்து..?
ஆசிரியை: எல்லோரும் இசையைக் கற்கலாம். சாரீரம் குறைவாக
உள்ளவர்களும் இசையைக் கற்கலாம். சங்கீதத்தில்_ வி b, (3 (ର hசி b.
ருப்பமும், கற்கவேண்டுமென்ற முயற்சியூழ் ண்டும்
பிருந்தன். உங்கள் குலதெய்வம் பற்றிச் சொல்ல முடியுமா?
ஆசிரியை. முருகன் (சிரித்தவாறு)
துஷாந்: உங்கள் சகோதரர்கள்.?
 

ஆசிரியை: 3 ஆண்களும், 3 பெண்களும்.
ஒஸ்ரின்: நீங்கள் இப்போது எங்கே வசிக்கிறீர்கள்?
ஆசிரியை. கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
துஷாந்: பல அதிபர்களை இக்கல்லூரியில் நீங்கள் கண்டதாக கேள்விப்பட்டோம், அவர்களின் பெயர்களை ஞாபகம் இருந்தால் சொல்வீர்களா?
ஆசிரியை சந்தோஷமாகக் கூறுவேன் திரு.சபாலிங்கம், திரு.P.S.குமாரசுவாமி, திரு.குகதாசன், திரு.அருளானந்தம், திரு.பொன்னம்பலம், திரு.பஞ்சலிங்கம், திரு.சிறீகுமரன், திரு.கண்ேசராஜா.
சந்தோசன்: இரண்டாம் உலக யுத்த காலத்தில் நீங்கள்
வாழ்ந்ததாக கேள்விப்பட்டோம். அது பற்றிய அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஆசிரியை. அப்போது காலியில் இருந்தேன், 1945 என்று நம்புகின்றேன். “சைரன்’ ஊதும் போது தடியை கயிற்றில் கட்டி கழுத்தில் மாட்டுவோம். குண்டுச்சத்தம் கேட்கும் போது மேசைக்கு கீழே சென்று அத் தடியை பலி லால் இறுக் கமாகக் கடித்துக்கொள்வோம். காரணம் பயத்தால் நாக்கு கடிபடாமல் இருக்க வேண்டுமென்பதுதான்.
சர்மா: உங்களுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் இருந்திருந்தால்
எமக்கு அது பற்றிக் கூறுவீர்களா?
saffgou: b6f)6) Juqi UT35 g(bibb60)LDuT6t) "netball”, “throwball', “race” போன்றவற்றில் பங்கு பற்றி பரிசில்கள் பெற்றேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பல பரிசில்களைப் பெற்றுக்கொண்டேன்.
பிருந்தன்: நீங்கள் சில முக்கியமான பெரியார்களை நேரிலே கண்டுள்ளிர்களென அறிந்தோம். அவர்களின் பெயர்களை எமக்குக் கூறமுடியுமா?

Page 7
I
ஆசிரியை: "பழநெடுமாறன், அறிஞர் அண்ணாத்துரை ஆகியோரை நேரில் கண்டுள்ளேன். துர்க்கா துரந்தரி செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டியுடனும் பழகியுள்ளேன். அத்துடன் ருக்மணி அருண்டேர் கலாஷேத்ரா அவர்களிடமும் சிலகாலம் கற்றுக்கொண்டேன்.
சர்மா: உங்களுடைய காலச் சங்கீதத்திற்கும், இன்றைய காலச் சங்கீதத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆசிரியை. முன்பு இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பரீட்சைக்காக அதாவது செய்முறை நடாத்துவதற்காக பேராசிரியர் சாம்பமூர்த்தி அவர்கள் வருகை தருவார்கள். செய்முறை முடிந்தபின் சாஸ்திரப் பரீட்சை நடாத்தி வினாத்தாள்களை அவர்களே இந்தியாவிற்குக் கொண்டு சென்று, திருத்திப் பெறுபேறுகளை அனுப்புவார்கள். முன்பு பரீட்சையில் தேறுவது சிரமம். நானும் ஒருமுறை தவறிவிட்டேன். அநேகமாக பரீட்சை மூன்று நாட்கள் நடைபெறும்.
சந்தோசன். நீங்கள் பலகாலமாக கல்வி கற்பிக்கிறீர்கள். அன்று இசை பயின்றோர், இன்று இசை பயில்வோர் இவர்கள் பற்றி நீங்கள் என்ன கூறுவீர்கள்.
ஆசிரியை: அக்கால மாணவர்கள் ஆர்வத்தோடு இசை பயின்றனர். ஏதாவதொரு வாத்தியத்தையும் வாசிக்கப் பழகியிருந்தனர். இப்போதைய மாணவர்கள் இசையை விருப்புடன் கற்பதில்லை. கல்வி நிலையங்களுக்குச் செல்வதால் இசை பயில நேரமும் கிடைப்பதில்லை. 1974ல் இசை கட்டாய பாடமாகக் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை.
ஒஸ்ரின்: இந்துவின் மைந்தர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஆசிரியை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போரை இந்துவின் மைந்தர்கள் மதிப்பதுடன் வணங்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். குருவின் ஆசிதான் வாழ்வுக்கு உகந்தது. குருவின் ஆசி இல்லாதவன், வாழ்வில் சிரமப்படுவான். எல்லோரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து இந்துவின் புகழைப் பாதுகாப்பதுடன் வளர்க்கவும் வேண்டும்.
4
 
 

துஷாந்: நீங்கள் ஒரு மூத்த ஆசிரியர் என்ற வகையில் ஏனைய ஆசிரியர்களுக்கு ஏதாவது அறிவுரைகள் கூறவிருந்தால் கூறுவீர்களா?
ஆசிரியை. தற்போதுள்ள ஆசிரியர்கள் ஒரு சிலர் நான் கூறுவதை எடுத்துக்கொள்வார்கள். சிலர் உதாசீனம் செய்வார்கள். இருந்தாலும் மாணவர்களைக் கட்டுப்பாடுடனும் , ஒழுக்கத்துடனும் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்வகுப்புகளுக்கு உரிய நேரத்திற்குச் செல்லவேண்டும்மாணவர்களைச் சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டும் என்ற அறிவுரைகளையே கூறுவேன்.
பிருந்தன். நீங்கள் இசைத்துறையில் செய்த சேவைகளை எம்முடன்
பகிர்ந்து கொள்வீர்களா?
ஆசிரியை பல போட்டிகளில் நானும் பங்கு பற்றி, மாணவர்களையும் பங்குபெற வைத்தேன். கோலாட்ட நிகழ்வொன்றை நடாத்துவதற்குக் கொழும்பிற்குச் சென்றேன். தமிழ்த்தின போட்டிகள் நடாத்தி உதவினேன். இலவசமாகவும் இசை பயிற்றுவித்தேன். நான் இந்து மகளிர்கல்லூரியின் “சக்தி” சஞ்சிகைக்கு சில ஆக்கங்கள் எழுதியுள்ளேன்.
சர்மா: இறுதியாக. உங்களுக்குப்பிடித்த பாடல் ஒன்றைப்
பாடுவீர்களா?
ஆசிரியை: பிள்ளைகளே, உங்களுக்காக இந்தியாவின் தேசிய கீதத்தைப்பாடிக்காட்டுகிறேன். அத்துடன் தமிழ்த் தாய் வாழ்த்தையும் பாடிக்காட்டுகிறேன். (இந்தியாவின் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைப் பாடிக்காட்டினார்)
சர்மா: உங்கள் பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக்கி, ஓர்
அருமையான செவ்வியை வழங்கியமைக்கும், அருமையான பாடல்கள் பாடியமைக்கும் நன்றி. தாங்கள் இன்னும் பலகாலம் நலமுடன் வாழ எலி லாம் வலி ல கடவுளைப் பிரார்த்திக்கிறோம்.
ஆசிரியை. நன்றி மாணவர்களே.

Page 8
フ
"ހ
தமிழ்மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
-பாரதியார்
 

திரு. நடராசா சிவஞானசுந்தரம்பிள்ளை ஆசிரியருடனான நேர்முகம்
முகம் கண்டவர்கள்
செ.புவிந்தன்
ஞா.பிரசாந்தன்
சி.யதுசன்
U.6856 to D6öT
திரு.நடராசா சிவஞானசுந்தரம்பிள்ளை B.Com(sp)Dip in Ed.
மாணவர்கள்: வணக்கம் சேர்,
ஆசிரியர்: வணக்கம்
புவிந்தன். எங்கள் பாடசாலையின் 9P வகுப்புத் தமிழ்ப் பாடப் பரப்பில் முகம் காணல் எனும் ஒரு அலகு உள்ளது. அதன் அடிப்படையில் எமது தமிழ் ஆசிரியரான ல.நிசாந்தன் அவர்களின் அறிவுரைக்கு இணங்க உங்களைச் செவ்வி காண்பதற்காக வந்துள்ளோம். உங்கள் அனுபவங்களையும் உங்களுக்குத் தெரிந்த சில விடயங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளும்படி தயவாக வேண்டுகிறோம்.
ஆசிரியர்: கேளுங்கள்.
பிரசாந்தன். உங்கள் பெற்றோர் பெயர், நீங்கள் பிறந்த ஊர்,
ஆண்டு என்பவற்றைக் கூற முடியுமா?

Page 9
ח
ஆசிரியர்: எனது அப்பாவின் பெயர் சண்முகம் நடராசா. எனது அம்மாவின் பெயர் பஞ்சரட்ணம்மா. நான் 1949ம் ஆண்டு பங்குனி மாதம் 30 திகதி அராலி கிழக்கு வட்டுக்கோட்டை எனும் இடத்தில் பிறந்தேன்.
யதுசன்: நீங்கள் கல்வி கற்ற பாடசாலைகள்.?
ஆசிரியர்: நான் 1-6 வரை அராலி இந்துக் கல்லூரியிலும், 7-13 வரை யாழ் மத்திய கல்லூரியிலும் படித்தேன். மேலும் எனது பட்டப் படிப்பை பூரீ ஜயவர்த்தன பல்கலைக் கழகத்திலும், பட்டப்பின் படிப்பை யாழ் பல்கலைக் கழகத்திலும் கற்றேன்.
லக்ஸ்மன்: படித்து முடித்ததும் எத்தனையாம் ஆண்டு எங்கெங்கே
வேலை செய்தீர்கள்?
ஆசிரியர்: 1970-1972 வரை “ஜவார்ஜி பிறதேர்ஸ்’ எனும் நிறுவனத்தில் கணக்குப் பதிவாளராக வேலை செய்தேன். பின் 1977ம் ஆண்டு தொடக்கம் 1981ம் ஆண்டு வரை இளவாலை புனித ஹென்றியரசர் கல் லுTரியிலும் , அதன் பின் னர் அரசாங்க வேலையாக 1981 இல் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினேன். பின் 1989 திலிருந்து யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.
புவிந்தன். உங்களுடைய திருமண வாழ்க்கை மற்றும் மனைவியின்
பெயர் பிள்ளைகளின் விபரங்கள் பற்றிக் கூற முடியுமா?
ஆசிரியர்: எனது மனைவியின் பெயர் கலைதேவி. அவர் 1959ம்
ஆண்டு ஜூன் மாதம் 17ம் திகதி பிறந்தார். அவர் என் தாய்மாமன் மகள். அவர் திறந்த பல்கலைக் கழக “டிப்ளோமா” (Diploma) பட்டம் பெற்றவர். எனக்கு நான்கு பிள்ளைகள். இரு பெண்கள். இரு ஆண்கள். சிவரூபன், சிவசெளம்யா, சிவசெளகார்த்திகா, சிவபாஸ்கர்.
பிரசாந்தன்; படிக்கின்ற காலத்தில் அல்லது வேலை செய்கின்ற காலத்தில் ஏதாவது சாதனைகள் நிலை நாட்டியுள்ளிர்களா அதாவது கல்வி, கலை, விளையாட்டு என்பவற்றில்?
 
 
 

ஆசிரியர்: அப்படி எதுவும் இல்லை. (சிரிப்பு)
யதுசன். நீங்கள் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்குக் கூற
நினைப்பது யாது?
ஆசிரியர்: ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். கல்வியில் சிறப்புப்பெற்று விளங்க வேண்டும். சாதனைகளை நிகழ்த்தக் கூடியவர்களாய் இருத்தல் வேண்டுமென்பதே.
லக்ஸ்மன்: நீண்ட காலமாக நீங்கள் யாழ்/ இந்துக் கல்லூரியில் சேவையாற்றி வருகின்றீர்கள். முன்பிருந்த மாணவர்களுடனும், தற்போதிருக்கும் மாணவர்களுடனும் பழகியுள்ளிர்கள். முன்பிருந்த மாணவர்களுக்கும், தற்போதிருக்கும் மாணவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டா? உண்டாயின் கூறுங்கள்.
ஆசிரியர்: நிச்சயமாக உண்டு. முன்பிருந்த மாணவர்கள்
பாடசாலையின் விழுமியங்களையும், சட்டதிட்டங்களையும் பேணி வந்தனர். ஆசிரியர்களுக்கு மதிப்புக் கொடுத்தனர். ஆனால் இன்று அவ்வாறில்லை. தற்போதிருக்கும் மாணவர்கள் நாம் கொடுக்கும் வீட்டு வேலைகளைக்கூடச் செய்வதில்லை. வகுப் பறையில் கட்டுப்பாட்டுடன் இருப்பதில்லை. இவை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
புவிந்தன்: இந்துக் கல்லூரியில் மூத்த ஆசிரியராக இருக்கும் நீங்கள் இளைய ஆசிரியர்களுக்கு என்ன கூற வேண்டுமென நினைக்கிறீர்கள்?
ஆசிரியர்: மீத்திறன் உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும். நாளாந்தம் கற்று, கற்றவற்றைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். -
பிரசாந்தன். தற்போதைய மாணவர்களில், அதிக குற்றச் சாட்டுக்கள்
வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எனவே மாணவர்களுக்கு நீங்கள் என்ன கூற நினைக்கிறீர்கள்?

Page 10
ஆசிரியர்: வகுப்பறையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். “ரியூசன் ரியூசன்” என்று நிற்காமல் தாமாக்க் கற்க வேண்டும். சிந்திக்கத்தக்கவராகவும் -செயற்திறன் மிக்கவராகவும்-புத்தாக்கத்தைச் செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
யதுசன்: இவ்வளவு நேரமும் நல்ல கருத்துக்களை எமக்கு வழங்கி, எங்கள் கேள்விக்கெல்லாம் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி.
ஆசிரியர்: நன்றி
ஆக்க பூர்வ பிரச்சனைக்கு சிந்தனைத் திறன்
தீர்வு காணல்
ஆராய்ந்தறிதல்
திறன்
நேர்த்தியான தொடர்பாடல் திறன்
புறநிலை நின்று உணர்தல் திறன்
தனிநபரிடைத் சுய விழிப்புணர்வு தொடர்புத் திறன்
தனனுணாவு
10
 
 

திரு இராசா பாலச்சந்திரன்
ஆசிரியருடனான நேர்முகம்
முகம் கண்டவர்கள் ம.கிரியன் வி.மகாசேனன் க.ஜசீவன் இ.பிரணவநாத் ந.லவலோஜன்
திரு.இ.பாலச்சந்திரன் பகுதித்தலைவர் (பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர்)
மகாசேனன்: வணக்கம் sir. தரம் 9P மாணவர்களாகிய நாம் எமது களமுறைச் செயற்பாட்டைப் பூர்த்தி செய்யும் முகமாக பாடசாலையின் மூத்த ஆசிரியராகிய தங்களை செவ்வி காணவுள்ளோம். எனவே தங்களின் பொன்னான நேரத்தின் சில பகுதிகளை ஒதுக்கி எமது வினாக் களிற்கு மனங்கோணாது விடையளிப்பீர்கள் என நம்புகிறோம்.
ஆசிரியர்: வணக்கம். தங்கள் நம்பிக்கை வீண் போகாது என்று
நம்புகிறேன்.
மகாசேனன்: நீங்கள் எத்தனை ஆண்டுகளாக கல்விச் சேவை
செய்து வருகின்றீர்கள்
ஆசிரியர்: ஏறத்தாழ 29 வருடங்களாகச் சேவையாற்றி வருகின்றேன்.
~്
`-_്
11

Page 11
கிரிஜன்: நீங்கள் முதன் முதலாக நியமனம் பெற்ற பாடசாலை?
ஆசிரியர்: நான் முதன் முதலாக 1979ம் ஆண்டு “யூலை’ மாதம்
- 27ம் திகதி திரு மூதூர் அல்லை இடதுகரை 3 தமிழ்க் கலவன் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராகப் பதவியேற்றேன்.
ஜசீவன்: மூதூர் பாடசாலை மாணவர்களிற்கும் இப் பாடசாலை மாணவர்களிற்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமை பற்றி கூறுவீர்களா?
ஆசிரியர்: அப்பாடசாலை மாணவர்கள் எழுத்தறிவு, எண்ணறிவு குறைந்தவர்கள். பெரும்பாலானவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள். குருவை நன்கு மதித்து சொற்கேட்டு நடக்கக் கூடியவர்கள். அவர்களுக்குக் கற்பித்தல் சிரமம். இதை மனதிற்கொண்டு அவர்களுக்காக மாலை நேர வகுப்புகளை நடாத்துவேன். இந்துக்கல்லூரி மாணவர்கள் மீத்திறன் கூடியவர்கள். ஆசிரியரை நன்கு மதித்து சொற்கேட்டு நடக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு கற்பித்தல் இலகு.
லவலோஜன். நீங்கள் கல்வி கற்ற பாடசாலை பற்றியும், அங்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?
ஆசிரியர்: நான் கல்வி கற்ற பாடசாலை கொக்குவில் இந்துக் கல்லூரி. நியமிப்புப் பரிசோதனைகளின்போது வெவ்வேறு இரசாயனப் பொருட்களைச் சேர்த்து பலதரப்பட்ட நிறக் கரைசல்களை உருவாக்குவதிலும், அவற்றை இரசிப்பதிலும் சுவாரஸ்யமாக ஈடுபட்டேன்.
மகாசேனன். நீங்கள் கல்வி கற்கும் காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏதுமிருப்பின் அவை பற்றிச் சிறிது கூறுவீர்களானால் எமக்குப் பயனாக இருக்கும்.
ஆசிரியர்: “A/L” வகுப்பில் கற்கும் போது ஒருமுறை “பெளதீகவியல்” ஆசிரியரிடம் செய்யாத குற்றத்திற்கு அடி வாங்கியமை.
12
 
 

கிரிஜன்: தங்கள் இளமைக் காலம் பற்றி எம்முடன் நீங்கள் பகிர்ந்து
கொண்டால் மகிழ்ச்சியாயிருக்கும்.
ஆசிரியர்: நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1949 ம் ஆண்டு பிறந்தேன். எனது தந்தையார் அம்பலவாணர் இராசா. தாயார் இளையதம்பி இரத்தினம். நான் பிறந்த ஊர் இணுவில். எனக்கு மூத்தவர்களாக இரு சகோதரிகளும் இளையவர்களாக ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் உள்ளனர். இளமைக் காலத்தில் கல்வி கற்கும் போது காலை, மாலை வேளைகளில் தோட்டத்திற்குச் சென்று தந்தையாருக்கு உதவியாகத் தொழிலாற்றுவேன். இரவில் படிப்பதற்கு ஒரு விளக்கை நடுவில் வைத்து அனைவரும் சுற்றியிருந்து படிப்போம். எமது குடும்பம் நடுத்தர வருமானமுடையதால் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம்.
ஜசீவன்: சேமிப்பை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதன்
அவசியம் பற்றிக் கூறுவீர்களா?
ஆசிரியர்: எதிர்காலத்தில் நல்ல பிரஜையாக உருவாகுவதற்கும்நல்ல வாழ்வுக்கும் சிறுவயதிலிருந்தே சேமிப்பைக் கடைப்பிடித்தல் அவசியம்.
கிரிஜன் தாங்கள் கல்வி கற்ற காலத்தில் விரும்பிப் படித்த பாடங்கள்
பற்றி.?
ஆசிரியர்: நான் எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படித்தேன். அதிலும் விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றையே அதிகமாக விரும்பினேன்.
பிரணவநாத் தாங்கள் உயர்தர வகுப்பில் தேர்வு செய்த
துறையையும், அத்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தையும் குறிப்பிடுவீர்களா?
ஆசிரியர்: விஞ்ஞானத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். காரணம்
எதிர் காலத்தில் “Doctor’ ஆக வர வேண்டும் என்ற குறிக்கோள் என் மனதில் பதிந்திருந்ததால்
மகாசேனன்: வைத்தியராக விரும்பிய தாங்கள் ஆசிரியர் சேவையை
செய்ய வேண்டி வந்ததன் காரணம்?
13

Page 12
ஆசிரியர்: வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே எனதும் என் தாயாரதும் விருப்பம். மேற்படிப்பு வசதியற்றுப் போகவே ஆசிரியர் சேவையைத் தேர்ந்தெடுத்தேன்.
கிரிஜன்: ஆசிரியத் துறையில் தாங்கள் பெற்றுக் கொண்ட கல்வித் தராதரங்கள் பட்டங்கள், பதவிகள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?
ஆசிரியர்: பயிற்றப்பட்ட ஆசிரியர் (விஞ்ஞானம்). இந்தக் கல்வித் தராதரத்தை பலாலி ஆசிரியர் கலாசாலையில் பெற்றுக் கொண்டேன். மேலும் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பகுதித் தலைவர், விஞ்ஞான பாட இணைப்பாளர், ஆசிரியர் கழகத் தலைவர், ஆசிரியர் சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத் தலைவர், சென் ஜோன் ஸ் அம்புலன் ஸ் பொறுப்பாசிரியர், இல்லப் பொறுப்பாசிரியர் ஆகிய பதவிகளை வகித்துள்ளேன்.
ஜசீவன் தங்களுக்குக் கலைத் துறையில் ஈடுபாடுண்டா?
ஈடுபாடிருப்பின் அவை பற்றிக் கூறுவீர்களா?
ஆசிரியர்: அதிகமான ஈடுபாடில்லை. ஆனாலும் நாட்டியம், நாடகம்,
சங்கீதம் போன்றவற்றை இரசிப்பேன்.
லவலோஜன். தாங்கள் கல்வி கற்ற காலத்தில் ஈடுபாடு கொண்ட
புறச்செயற்பாடுகள் இருப்பின்.?
ஆசிரியர்: பாடசாலையின் கட்டட நிதிக்காக வீடு வீடாக - ஊர் ஊராகச் சென்று பணம் சேர்த்தேன். மேலும் கற்கும் காலத் தரில் “foot Ball” “cricket” (3LT6of B விளையாட்டுக்களிலும் ஈடுபட்டேன்.
பிரணவநாத்: இப்போர்ச் சூழ்நிலையில் மாணவர்கள் எம்முறையில்
கல்வி பயில வேண்டும் என எண்ணுகிறீர்கள்
ஆசிரியர்: மாணவர்கள் கூடிய அளவு கல்வியில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர பிற விடயங்களில் ஈடுபடாது இருத்தல் நல்லது என்றும் ஆசிரியர்,தாய்,தந்தை ஆகியோரின் சொல்கேட்டு வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் கற்க வேண்டும் என்றும் எண்ணுகிறேன்.
14
 
 

மகாசேனன்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஒழுங்கு கட்டுப்பாடு இவை போதுமானவையா? இல்லையெனின் செயற்படுத்த வேண்டிய நடை முறை இன்னும் பல உண்டா?
ஆசிரியர்: தற்போதைய மாணவர்கள் சிலர் ஒழுக்கத்தை மீறி நடப்பதுண்டு. அவர்கள் பாதிப்படையக் கூடாது. அவர்களையும் நல்வழிப்படுத்தி நடத்த வேண்டும். பாடசாலையில் சிறிது காலம் குழப்படி செய்யும் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகியதும் ஒழுக்க சீலர்களாகவும் சிறந்த குடிமக்களாகவும் இருப்பதுண்டு.
கிரியன் இறுதியாக நீங்கள் மாணவர்களிற்குக் கூற விரும்புவது
யாது?
ஆசிரியர்: மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான துறைகளைத் தேர்ந்தெடுத்து அத்துறையில் தேர்ச்சி மிக்கவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் வர வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் அந்நிலையை அடைய எல்லாம் வல்ல ஞான வைரவப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்.
எல்லோரும்; இவ்வளவு நேரமும் தங்களது பொன்னான நேரத்தை
எங்களுக்காக ஒதுக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஆசியர்: என்னை முகம் கண்ட உங்களுக்கும் எனது நன்றிகள்.
۔۔۔۔
15

Page 13
திரு.பொன்னம்பலம் சிறீஸ்கந்தராஜா
உபஅதிபருடனான நேர்முகம்
முகம் கண்டவர்கள் சி.இரங்கதீபிகன் தி.சிவஜீவன் ர.ரவிக்குமார் சி.மதுவடிாந்
திரு.சிறிஸ்கந்தராஜா
உப அதிபர் B.A.B.Phil(Hons) Dip.in. Ed
Dip.SC.man (N.I.E)
&##^^^ ԺՀ) Qv *h ~yoj,Qe,
) سہرسمسمارک
இரங்கதீபிகன்: எமது தமிழ்ப்பாடப்பரப்பில் “முகம் காணல்” "
பாடஅலகின் கீழ் செய்யப்படும் ஒப்படைமுறைக்காக மூத்த ஆசானும், உபஅதிபரும் என்ற வகையில், தங்களைச் செவ்வி காண வந்துள்ளோம்.
ஆசிரியர்: மிக்க மகிழ்ச்சி என்ன விடயமானாலும் தாராளமாகக்
கேளுங்கள்.
சிவஜீவன்: உங்களது பிறப்பைப்பற்றி அறியத்தாருங்கள்.
ஆசிரியர்: நான் பூநகரியில் 19.12.1949 இல் பிறந்தேன். எனது தந்தை பெயர் பொன் னம் பலம் . அவர் ஆயுள்வேதவைத்தியர். தாயார் பெயர் இராசம்மா. எனது தாயின் இடம் பூநகரியில் ஞானிமடம். (நாகதேவன் துறைக்கு அருகாமை)
16
 
 
 
 
 

ரவிக்குமார்: உங்கள் பாடசாலைக் காலம் பற்றிக் கூறமுடியுமா?
ஆசிரியர் : நான் முதலில் பயின்ற பாடசாலை பூநகரி
K
மகாவித்தியாலயம் மற்றும் அ.த. கலவன் பாடசாலை. மேற்படிப்பை யாழ் இந்துக்கல்லூரியின் விடுதியில் இருந்து கற்றேன். நான் சாரணனாகவும் இருந்தேன். ஆசிரியரானபோது Wood badge holder ஆனேன். அப்போது நான் ஒரு ஒட்ட வீரன். “1500m,1800m” போன்றவற்றில் 1ம் இடம் பெறுவேன்.
விவாதங்களிலும் பங்குகொள்வேன். உயர்தரக் கலைப்பிரிவினர்க்கான மன்றத் தலைவர் பதவி சுற்றுமுறையில் கிடைத்தல் வேண்டும் - 59|5|
மறுக்கப்பட்டபோது உரிமையைக்கோரி வாதாடினேன். நான் இப்போது உப அதிபராக Aஅமர்ந்திருக்கும் அறையே அப்போது அதிபர் ரீடு: அவர்களது அமர்விடமாகும். இந்த அறையிலையே பிரம்பால் தணி டிக் கப் பட் டு-இடைநிறுத் தப் பட் டு-விட் டுக் கு அனுப்பப்பட்டேன். பின்னர் தந்தையாருடன் வந்த போது மீண்டும் பாடசாலை என்னை அனுமதித்தது.
மதுஷாந்: உங்களால் மறக்க முடியாத ஆசிரியர் பற்றிக்
கூறுவீர்களா?
ஆசிரியர்: அக்கால ஆசிரியர்கள் எல்லோரும் ஓர் வகையில்
மறக்கமுடியாதவர்கள்தான். K.S.சுப்பிரமணியம்(விடுதி ஆசிரியர்)உணவு விநியோகக் கவனிப்பில் தாயாகவும் கட்டுப்பாட்டில் தந்தையாகவும் மிளிர்ந்தார். பல்வேறு விடயங்களைத் தானே தேடிக் கற்பித்த ஒருவர். கற்பித்து முடிந்த பின்பு குறிப்பிட்ட பகுதியில் வினா தந்து-விடை எழுதுவித்து- புள்ளி வழங்கி அதனைப் பதிந்து வைத்துகணிப்பீடு செய்த ஒரு மகான். Mr.V.மகாதேவன் - புவியல் ஆசிரியர். இப்போது தெகிவளையில் இருக்கின்றார். நிர்வாகத்துடன் முன்னின்று உழைத்தவர். திட்டமிட்டுச் செயற்பட்டவர். நேர்மை தவறாத - ஒரு நாளும் லீவு எடுக்காத ஆசான். ஆசிரியர் செல்லத்துரை (தமிழ்) “சூசியம்” என்பது மாணவர்கள் அவருக்குக் கொடுத்த பட்டம். அவரது மாமியார் இறந்த போதும் பாடசாலைக்குச் சமூகம் தந்தவர்.
17

Page 14
கம்யூனிஸ்ட் M.கார்த்திகேசன் ஆங்கில ஆசான். (பகடி மன்னன்) A/LDinner வைபவத்துக்கு ஆங்கிலத்தில் பேச்சு எழுதிக் கொடுப்பார். கல்லூரியின் விடுதி மலசலகூடம் வாளிக் குளியலறையாக இருந்த போது அதிபாராக வந்த இவர்,அதை குழி மலசலகூடமாக மாற்றி தொழிலாளர்களின் அந்தஸ்தையும் சுகாதாரமுறைமையையும் உயர்த்தியவர். நிர்வாக சேவை வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு இங்கு வந்து கற்பித்தார். அமரர்.கணேசரட்ணம், Mr. பூரீநிவாசன், அமரர் மகாலிங்கசிவம், ஆகியோர் மாணவர்களோடு தோழமை பூண்டு கற்பித்தவர்கள். அமரர் V.மகாதேவா சகலதுறை வல்லுநர். அவருக்குப் பிறகு நாடகத்துறையைத் தக்க வைக்கத் தவறிவருகிறோம். அமெரிக்க ஜனாதிபதி கெனடியைப்போல் உடுத்து வரும் பொன்னம்பலம் அவர்கள், வருவதற்கு முன் சென்ற்(t) பூசியபடி வருவார். அவர் வருகையை அந்த சென்ற் மணம் எமக்கு முன்கூட்டியே தெரிவிக்கும். இதமாகச் சிரிப்பவர். .
இரங்கதீபிகன்: உங்களது குடும்ப வாழ்க்கை பற்றிக் கூற முடியுமா
G于前?
ஆசிரியர்: 1982 ஆண்டு சத்தியதேவி என்பவரை பேச்சுத் திருமணத்தின் மூலம் உற்ற துணையாக்கிக் கொண்டேன். மூன்று பிள்ளைகள். மூத்தமகன் சீனாவில் மருத்துவத்துறை மாணவனாக இருக்கிறான். இரண்டாவது மகள் க.பொ.த (உயர்தரம்) வர்த்தகபிரிவில் படிக்கிறாள்.
சிவஜீவன்: உங்களது ஆசிரியர் தொழில்பற்றி என்ன கூற
விரும்புகிறீர்கள்?
ஆசிரியர்: எனது தொழில் மிகவும் இன்பகரமானது. முதலில் கற்ற பாடசாலையிலேயே கற்பிக்க வாய்ப்புக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது. நான் படிப்பித்தலில் ஈடுபடும் போது மாணவரது கேள்விக்கு விடையளிக்கும் நிலைக்கு என்னைத் தயார்படுத்திக்கொள்வேன். துணிச்சலுடனும் உற்சாகத்துடனும் ஈடுபடுவேன். வகுப்பறைக் கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பது எனது விருப்பம். விடுதிப் பொறுப்பாசிரியராக இருந்தமையினால் இப்பழக்கம் என்னில் ஒட்டிக் கொண்டது.
18
 

1976ல் நான் கற்பிக்க வந்தபோது எனக்கு கற்பித்த ஆசிரியர்களும் இங்கிருந்தார்கள். அவர்கள்முன் ஆசிரியர் அறையில் கதிரையில் சமமாக இருக்கமாட்டேன்.
ரவிக்குமார்: நீங்கள் கல்லூரிக்கு என்ன செய்திருக்கின்றீர்கள்?
ஆசிரியர்: நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பொருளியல்
சமூகக்கல்வி கற்பித்த போது உயர்வான பெறுபேறுகளைப்
பெற்றுக் கொடுத்துள்ளேன். பெருமை கிடைத்தது.
சமூகக்கல்விப் பாடத்தில் அதிக Dக்கள் பெறுவதன் மூலம்
நான் கற்பித்த வகுப்புக்கள் முன்நிலை வகித்தன. எனது பெறுபேறு பற்றி அப்போதைய அதிபர்களால் குறிப்பாகக் கூறப்பட்டது. ஒருமுறை 100வது ஆண்டு பூர்த்தியாகி இருந்தவேளை கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க நிர்வாகம் முனைந்தபோது நான் SDS பொருளாளராக இருந்தேன். அந்த நேரம் அவ்வமைப்பின் மூலம் கிறிஸ்தவ கற்பித்தலைத் தடுத்தேன். நான் கிறிஸ்தவ சமயத்திற்கு முரணானவன் அல்ல. நீண்ட பாரம்பரியமும், தனித்துவமும் பேண்ப்பட்டு வருகின்ற நிலமைகளை உடைத்தெறிய அனுமதிக்ககூடாது என்பதற்காகத்தான் கிறிஸ்தவம் கற்பித்தலைத் தடுத்தேன். இவ்விடயத்தில் நான் வெற்றி பெற்றேன் என்பது முக்கியமல்ல. தமிழர் பண்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதே என் ஆவல். எனவே அதைத்தான் குறிப்பிடுகிறேன். என் உறுதி கைவிடப்பட்டிருந்தால் கிறிஸ்தவமும், இஸ்லாமும் கற்பிக்கின்ற நிலை தொடர்ந்திருக்கும்.
மதுவடிாந்: நீங்கள் மாணவர்களாகிய எமக்கும் ஆசிரியர்களுக்கும்
கூறவிரும்புகின்ற விடயங்கள் எவை?
ஆசிரியர்: நான் இதுவரை கூறியதில் இருந்து நீங்கள் எனது உணர்வுகளை விளங்கியிருக்கவேண்டும். இருந்தும் நீங்கள் கேட்பதால் கூறுகின்றேன். தவறாது ஆசிரியரிடம் பாடங்களைக் கேட்டுக் கற்றுக்கொள்ளுங்கள். தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வதைக் குறைத்து இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். அவை கற்றலுக்கு உற்சாகமளிப்பதுடன் திறமையையும் உருவாக்கும்.
19

Page 15
பாடசாலையிலும் வெளியிலும் ஒழுக்கமானவர்களாக வாழப்பழகிக் கொள்ளுங்கள். ஆசிரியர்களை மதித்தல் வேண்டும். 1330 திருக்குறளையும் சா.த வகுப்பு கற்றுமுடிப்பதற்கு முன்பு வாசித்துக் கருத்துக்களை விளங்கி வாழப்பழகுங்கள்.
எல்லா மாணவர்களும் நல்ல மாணவர்களே. பெரிய இடத்துப் பிள்ளைகள் சாதாரணமானவர்கள் என்ற வேறுபாடு காட்டக் கூடாது. குறைந்துவரும் ஒழுக்கத்தினை மேம்படுத்த ஆசிரியர்களின் வழிகாட்டல் அவசியம். இங்குள்ள
ஆறு-மிகளுக அதனை அறிந்து தொழிற்பட F6D.
1996க்கு முன்பு தரமான ஆசிரியர்களே மாணவர்களைப் பொறுப்பேற்றிருந்தனர். தகுதியானவர்களே அக்கால அதிபர்களால் உள்வாங்கப்பட்டார்கள். தற்போது பெண் ஆசிரியர்கள் அதிகம். 8ம் தரத்திற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் கற்பிப்பது விரும்பத்தக்கது. இங்கு ஒரு தடவை கற்பித்தால் மட்டும் போதும். தரமான மாணவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களை குழுச் செயற்பாட்டின் மூலம் வென்றெடுத்தல் வேண்டும், என்பவை ஆசிரியர்களுக்கான எனது அறிவுரையாகும்.
இரங்கதிபிகன்: எங்களுடன் இவ்வளவு நேரமும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி 3uJIT.
ஆசிரியர்: என்னைச் முகம் கண்டமைக்காக மகிழ்ச்சி-நன்றி.
20
 
 

திரு செல்லையா தவராஜா
ஆசிரியருடனான நேர்முகம்
முகம் கண்டவர்கள் பா.ஜெயராம் மு.வினோயன் த.துவேதன் சி.கெளரிசங்கள்
திரு.செல்லையா தவராஜா
பகுதித்தலைவர்
S.L.T.S.
விசேட கணிதம்(பயிற்றப்பட்ட)
மாணவர்கள்: வணக்கம் ஐயா
ஆசிரியர்: வணக்கம்
8سمي
ஜெயராம்; எங்கள் பாடசாலையின் மூத்த ஆசான் என்ற வகையில்
உங்களைச் முகம் காண வந்துள்ளோம். தயவு செய்து முகம் காணலுக்கு உதவ முடியுமா?
ஆசிரியர்: உதவமுடியும், கேளுங்கள்.
வினோயன். நீங்கள் பல வருடங்களைக் கடந்து வந்துள்ளிர்கள். - உங்கள் இளமைக் காலம் பற்றி அறிய விரும்புகின்றோம்.?
ஆசிரியர்: கொக்குவில் எனது பிறந்த ஊர். இளமைக் காலக்கல்வியைக் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்றேன். எனது 10ம் வயதில் தந்தை இயற்கை எய்திவிட்டார். எனது சொந்த முயற்சியில் மிகவும் கடினமான சூழலில் உழைத்துப் படித்தேன். பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு தவறிவிட்டது.
21

Page 16
மொறட்டுவ தொழில்நுட்பக் கல்லூரியில் படவரைஞர் பயிற்சி
விரும்பாமல் ஆசிரியத் தொழிலுக்கு வந்தேன்.
துவேதன். நீங்கள் படிக்கும் போது செய்த சாதனைகள் பற்றி.?
ஆசிரியர் A/L இல் 100 புள்ளிகள் எடுப்பது 1970களில் மிகக்
கடினம். ஆயினும் நான் கணித பாடத்தில் அழுள்ளிகள்
பெற்றேன்.
கௌரிசங்கள். நீங்கள் ஆசிரியத் தொழிலிற்கு வருமுன் வேறு தொழில்
செய்திருந்தால் அது பற்றிக் கூறுவீர்களா?
ஆசிரியர்: அப்போது பிரபல்யமாக இருந்த சுருட்டுக் (புகையிலை)
கைத்தொழிலை மேற்கொண்டேன்.
ஜெயராம்: ஆசிரிய சேவையின் போது நீங்கள் செய்த பணிகள்
பற்றிக் கூறுவீர்களா?
ஆசிரியர்: ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரியர் சங்கம் அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் என்பவற்றில் முக்கிய பங்கு வகித்தேன்.
வினோயன்; உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஏதும்
உண்டா?
ஆசிரியர்: ஆம். அண்மையில் எனது வீட்டில் நான் தனிமையில் இருந்த போது திருடர் பிடியில் சிக்கி உயிர் தப்பினேன். இதுவே வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாகும்.
துவேதன்: கல்லூரியில் உள்ள மாணவரை எவ்வாறு வழிப்படுத்த
வேண்டுமென நினைக்கிறீர்கள்?
ஆசிரியர்: அவர்களை அன்போடும், கருணையோடும், கண்டிப்புடனும்
வழிநடத்த வேண்டும். -
கெளரிசங்கள்: முன் னைய காலங் களைவிட தற்போது மாணவர்களின் ஒழுக்கச் செயற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது?
ஆசிரியர்: முன்னைய காலங்களைவிட தற்காலத்தில், பெரியவர்களை மதிக்கும் பண்பு குறைவு. காரணம் விஞ்ஞான தொழில்நுட்பப்
22
 
 

வளர்ச்சியென நம்புகிறேன்.
ஜெயராம் : மூத்த ஆசிரியர் என்ற வகையில் இனிவரும்
ஆசிரியர்களுக்கு -என்னசுற விரும்புகிறீர்கள்? .
ஆசிரியர்: ஆசிரியர்கள் தமது கடமையில் இதயசுத்தியுடன்
ஈடுபட்டால் கெளரவமான இடத்தை வகிக்கலாம்.
வினோயன்; உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்ன? அது எட்டப்பட்டதா அல்லது முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா?
சிரியர்: சமூகத்தில் மதிக்கத்தக்க ஒருவராக வாழ்தலே எனது
இலட்சியமாக இருந்தது. அது எட்டப்பட்டது.
துவேதன்: இப்போர்ச் சூழலில் மாணவர்களுக்கு என்ன கூற
விரும்புகிறீர்கள்?
ஆசிரியர்: இப்போர்ச் சூழலுக்கு முகங்கொடுத்து தங்கள்
கருமத்தை வெற்றியுடன் செய்ய வேண்டும்.
கெளரிசங்கள்: பயனுள்ள கருத்துக்களை எம்மோடு பகிர்ந்தீர்கள். அத்தோடு இவ்வளவு நேரமும் தங்களது நேரத்தை எமக்காகச் செலவு செய்து எமக்கு ஒத்துழைப்பும் வழங்கினீர்கள். நன்றி.
ஆசிரியர்: நன்றி.
23

Page 17
திரு.கிறிஸ்ணசாமி பத்மநாதன் ஆசிரியருடனான நேர்முகம்
முகம் கண்டவர்கள் ந.அபிசாந்
ச.குருபரன் வி.கஜானந்தா வி.விபுலானந்தன்
திரு.கிறிஸ்ணசாமி பத்மநாதன் விசேட பயிற்சி கர்நாடக சங்கீதம்.
குருபரன் : வணக்கம் Sir, எமது தமிழ்ப்பாடப்பரப்பில் ‘முகம் காணல்’ எனும் பாடஅலகின் கீழ் செய்யப்படும் ஒப்படைச் செயன்முறைக்காக மூத்த ஆசான் என்ற வகையில் தங்களை முகம் காண வந்துள்ளோம்.
ஆசிரியர்: நன்றி.
அபிசாந்: நீங்கள் இளமைக்காலத்தில் கல்விகற்ற பாடசாலைகள்
பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஆசிரியர்: நான் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன். அங்குதான் எனது பாடசாலைக் கல்வியைக் கற்றுமுடித்தேன்.
கஜானந்தா: தங்களது பெற்றோர் பற்றிச் சிறிது கூறமுடியுமா?
ஆசிரியர்: எனது தந்தையார் திரு.தாமோதரம்பிள்ளை கிருஸ்ணசாமி.
எனது தாயார் திருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி
24
 
 

விபுலானந்தன்: உங்களுடைய கல்வித்தகைமைகள் பற்றிக்
கூறமுடியுமா?
ஆசிரியர்: க.பொ.த உயர் தரம் வரை பயின்ற காலகட்டத்தில் சங்கீதத்தையும் பிரத்தியேகமாகக் கற்றேன். பன்னிரண்டாவது வயதில் வயலின் கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தைக் கற்பித்தவர் திரு கணேசன் ஆசிரியர். சிறிது காலத்தின் பின் அவர் இந்தியாவிற்குச் சென்று விட்டார். இதன்பின் பிரம்மறி எஸ்.சர்வேஸ்வரசர்மா அவர்களிடம் பயின்றேன். தொடர்ந்து அவரிடமே இசை நுணுக்கங்களைக் கற்றேன். வட இலங்கைச் சங்கீத சபை ஆசிரியர் தரப் பரீட்சையில் தோற்றி கலாவித்தகள் பட்டத்துடன் ஆசிரிய நியமனம் பெற்றேன். 1972ம் ஆண்டு ஆவணி மாதம் 27ம் நாள் வீரசிங்கம் மண்டபத்தில் எனது வயலின் இசை அரங்கேற்றம் நிகழ்ந்தது.
விபுலானந்தன்: நீங்கள் கல்வி கற்கும்போது உங்களுடைய
இலட்சியம் என்னவாக இருந்தது?
ஆசிரியர்: இசைத்துறையில் ஒரு மகத்தான மனிதனாக வர வேண்டும் என்பதே எனது இலட்சியமாக இருந்தது.
அபிசாந்: நீங்கள் இக்கல்லூரியில்தான் முதன் முதலில்
கற்பித்தீர்களா?
ஆசிரியர்: இல்லை. 1977ம் ஆண்டு யூன் 2ம் தேதி நுவரெலியா பரிதிரித்துவக் கல்லூரியில் கடமையாற்றி, ஆசிரியர் பயிற்சிக் E6) Taft gogouo) பயிற்சி பெற்று மீளவும் அதே பாடசாலைக்குச் சென்று கடமை புரிந்தேன். பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் பெற்று யாழ்.சன்மார்க்க வித்தியாசாலையில் 1 மாதமும், யாழ்/ இணுவில் சைவ மகாஜனா வித்தியாசாலையில் 3 வருடங்களும், அதன் பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் 1989 ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இன்றுவரையும் கற்பித்து வருகிறேன்.
கஜானந்தா: தங்களது ஓய்வு நேரங்களை எப்படிக் கழிக்கின்றீர்கள்?
ஆசிரியர்: இசை கற்பித்தல் மூலம்.
25

Page 18
T
கஜானந்தா! உங்களது கசப்பான, சந்தோசமான அனுபவங்கள்
சிலவற்றைக் கூறுவீர்களா?
ஆசிரியர்: 2005ம் ஆண்டு தீம் தீம் ஒலி இறுவட்டு வெளியிடப்பட்டமை எனக்கு மகிழ்ச்சி தந்த - மறக்க முடியாத அனுபவமாகும். கவின் கலை மன்றம் ஆரம்பித்து தற்போதுவரை நடைமுறைப்படுத்தப்படுவது மற்றுமொரு சந்தோசமான விடயமாகும்.
அபிசாந்: தாங்கள் வரும்போது இருந்த யாழ் இந்துக் கல்லூரிக்கும், தற்போதுள்ள இந்துக் கல்லூரிக்கும் இடையில் ஏதாவது LDMgi3gBLib.
ஆசிரியர்: கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒழுக்கம் சீர்குலைந்துள்ளது. காலச்சூழ்நிலை மாணவர்களைப் பாதித்துள்ளது.
அபிசாந்: யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் கூறும்
அறிவுரைகள் ஏதாவது?
ஆசிரியர்: பாடசாலையின் மதிப்பைக் காக்கும் வகையிலும், பாடசாலையைப் போற்றும் வகையிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்.
குருபரன்: பாடசாலைக்குப் புதிதாக வரும் ஆசிரியர்களுக்கு மூத்த
ஆசான் என்ற வகையில் ஏதாவது கூறுவீர்களா?
ஆசிரியர்: நடைமுறையிலுள்ள விடயங்களை பாடசாலை நடைமுறைக்கு ஏற்ற ஒழுங்கில் கடைப்பிடித்து பிள்ளைகளை வழிநடத்துதல் - பாடசாலை விழாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியவற்றில் அதீத கவனம் செலுத்துதல். இந்நிலை புதிய ஆசிரியருக்கும் பாடசாலைக்கும் மதிப்புத்தரும். இதை அவர்களுக்குக் கூறுவேன். பாடசாலை விழாக்கள் நடைபெறும்போது அவ்விழாக்களுக்கேற்ப மாணவர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதும் எனது அறிவுரை
26
 

தினமும் நடைபெறும் பாடசாலை ஆரம்பப் பிரார்த்தனையிலும், நிறைவில் நடைபெறும் பாடசாலை கீதத்திலும் மாணவர்களைத் தயார்படுத்தி, பாடுவோரை நியமித்தல் வேண்டும். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற உதவிகளைச் செய்யும்படியும் அவர்களுக்குக் கூறுவேன்.
குருபரன்: இவ்வளவு நேரமும் நல்ல கருத்துக்களை வழங்கி, தங்களது நேரத்தை எமக்காகச் செலவு செய்து ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி.
ஆசிரியர்: நன்றி.
27

Page 19
திரு. பொன்னம்பலம் ஞானதேசிகன்
ஆசிரியருடனான நேர்முகம்
முகம் கண்டவர்கள் ர.மதுராந்தன் ம.நிரோசன் வ.புருஷோர்த் த.துவழிகரன்
திரு.பொன்னம்பலம் ஞானதேசிகன்
பகுதித்தலைவர் B.A. Dip.in.Ed. M.Ed
மாணவர்கள்: வணக்கம் ஐயா
ஆசிரியர்: வணக்கம் (புன்முறுவலுடன்)
நிரோசன்: நீங்கள் எத்தனை ஆண்டுகளாக ஆசிரியத்தொழில்
புரிகின்றீர்கள் ?
ஆசிரியர்: இருபத்துநான்கு ஆண்டுகளாக.
புருஷோர்த்; வியக்கத்தக்கதுதான். நீங்கள் பிறந்த இடம், ஆண்டு,
பெற்றோர், சகோதரர்கள் பற்றிக்கூறமுடியுமா?
ஆசிரியர்: எனது தாயார் கண்ணகை அம்மா, இவர் அளவெட்டியைச் சேர்ந்தவர். எனது தந்தையார் பொன்னம்பலம். கந்தரோடையைச் சேர்ந்தவர். எனக்கு இரு ஆண்சகோதரர்களும், ஒரு பெண் சகோதரியும் உண்டு. இவர்கள் மூவரும் எனக்கு மூத்தவர்கள். நான் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு கார்த்திகை பதினேழாம் திகதி பிறந்தேன்.
28
 
 
 

துஷிகரன். நீங்கள் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலைகளையும் சந்தித்த
மறக்க முடியாத ஆசிரியர்களையும் கூறுவீர்களா?
ஆசிரியர்: ஆரம்பக்கல்வியை யா/அளவெட்டி அருணோதயாக் கல்லுாரியிலும் இடைநிலை உயர்தரக் கல்வியை யா/ ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கற்றேன். எனக்கு புவியியல் கற்பித்த திருமதி ஜெயதேவி கிருஸ்ணசுவாமி,வரலாறு கற்பித்த திருஞானச்சந்திர மூர்த்தி என்போர் இன்றும் மறக்க முடியாத ஆசான்கள்.
மதுராந்தன். நீங்கள் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர் தரம் ஆகியவற்றில் தேர்ந்தெடுத்த பாடங்கள் பற்றிக் கூறமுடியுமா? -
ஆசிரியர்: க.பொ.த சாதாரண தரத்தில் கணிதம், புவியியல், பெளதீகவியல், சித்திரம், தமிழ், உயிரியல், இரசாயனவியல், சைவசமயம், ஆங்கிலம் ஆகிய பாடங்களையும் உயர்தரத்தில் தமிழ், புவியியல், பொருளியல், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் தெரிவு செய்தேன்.
புருஷோர்த்! நீங்கள் ஆசிரியத்தொழில் செய்யுமுன் வேறு
ஏதாவது தொழில்கள் செய்தீர்களா?
ஆசிரியர்: சகோதரர் ஒருவரின் உதவியுடன் விவசாயம் செய்தேன்.
நிரோசன். நீங்கள் இந்துக்கல்லூரிக்கு வந்த பின்னரும் வரு முன்னரும் சந்தித்த கசப்பான அல்லது சுவையான அனுபவங்களைக் கூறமுடியுமா?
ஆசிரியர்: பாடசாலை செல்லுங்காலத்தில் சாலை விபத்தொன்றைச் சந்தித்தமை கசப்பான அனுபவம். சுவையான அனுபவம். திருமணம் செய்தமை - புதல் வன் கிடைத்தமை - இந்துக்கல்லூரிக்கு வந்தமை.
துவழிகரன்: கலை,கல்வி,விளையாட்டுத்துறை என்பவற்றில் நீங்கள்
கொண்டுள்ள ஈடுபாடு பற்றிக் கூறமுடியுமா?
ஆசிரியர் சித்திரம் வரைதல், பாடல்கள் இயற்றல், இசையோடு பாடுதல் ஆகிய கலைத்துறைகளிலும், ஐந்து,ஆறு வருடங்கள் “ஜிம்னாஸ்டிக்’துறையிலும், அணிநடையிலும் பங்குபற்றினேன்.
29

Page 20
சிற்பக்கலைகளிலும் ஈடுபாடு உண்டு. கல்வித்துறை எனின் தொழில் சார்ந்த டிப்ளோமா, முதுகல்விமாணி ஆகிய பட்டங்களையும் பெற்றேன்.
மதுராந்தன்: ஓர் மூத்த ஆசான் என்ற வகையில் இளம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நீங்கள் கூறவிரும்புவது யாது?
ஆசிரியர்: “செய்யுந் தொழிலே தெய்வம்” என எண்ணிக் கற்பிக்க வேண்டுமென்று இளம் ஆசிரியர்களுக்கும், கசடறக்கற்று கற்றபடி நடக்க வேண்டுமென்று மாணவர்களுக்கும் கூறவிரும்புகிறேன்.
மாணவர்கள்: இவ்வளவு நேரத்தையும் எமக்காகச் செலவிட்டு அரிய செவ்வி ஒன்றைத் தந்தமைக்கு ஆசிரியப் பெருந்தகையாகிய தங்களுக்கு எமது நன்றி.
ஆசிரியர்: முகம் கண்டமைக்கு மிக்க நன்றி.
வாழ்க்கைத் தேர்ச்சிகள்
அன்றாட வாழ்வில் நாம் எதிர்நோக்கும் அறைகூவல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக, எம்மிடத்தே விருத்திசெய்து கொள்ள வேண்டிய பல வாழ்க்கைத் தேர்ச்சிகள் உள்ளவெனினும் அவற்றுன் முக்கியமானவை என இனங்காணப்பட்டுள்ள பத்து வாழ்க்கைத் தேர்ச்சிகள் கீழே பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.
தீர்மானமெடுத்தல். பிரச்சினை தீர்த்தல். ஆக்கப்பூர்வச் சிந்தனை. பகுத்தறி சிந்தனை. பயனுறுதிமிக்க தொடர்பாடல். உகந்த ஆளிடைத் தொடர்புகள். தன்னைப் புரிந்து கொள்ளல். பரிவுணர்வு மனவெழுச்சிகளை எதிர்கொள்ளல். உள நெருக்கிடைகளை எதிர்கொள்ளல்.
1
O
30
 
 

திரு.வயிரவன் தவகுலசிங்கம்
ஆசிரியருடனான நேர்முகம்
முகம் கண்டவர்கள் செ.கயானன் ம.றொசாந்தன் ஜி.சஜீவன்
சி.குருபரன்
திரு.வயிரவன் தவகுலசிங்கம்
BA (Hon)Dip-in-Ed
எல்லோரும்: வணக்கம் ஐயா!
ஆசிரியர்: வணக்கம்
(எம்பெயர்களை அறிமுகஞ்செய்து நேர்முகத்துக்கான
தேவைப்பாட்டினை எடுத்துக்கூறினோம். )
குருபரன்: நாங்கள் முதலில் உங்களுடைய இளமைப் பருவத்திலிருந்து ஆரம்பிப்போம். உங்களுடைய பிறப்பு பற்றிக் கூற முடியுமா? பிறந்த ஊர், பிறந்த திகதி, தாய் தந்தை பெயர், சகோதர சகோதரிகள் பற்றி.?
ஆசிரியர்: எனது இடம் தென்மராட்சி , தென்மராட்சியில் மந்துவில் எனும் இடத்தில் பிறந்தேன். இளமையில் கல்வி கற்றது மட்டுவில் மகா வித்தியாலயம். பின்பு சாவகச்சேரி இந்துக்கல்லுரியில் உயர்தரவகுப்பில் படித்தேன். என்னுடைய பிறந்ததிகதி 16.04.1956. எனது தாயின் பெயர் அன்னம்மா, தந்தையின் பெயர் வயிரவன்.
31

Page 21
| சஜீவன்: ஐயா! நீங்கள் எங்களுடைய கல்லுரிக்கு ஆசிரியராக வருமுன்னர் வேறு துறையில் பணிபுரிந்த அனுபவம் உண்டென | அறிந்தோம். அதனை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஆசிரியர்: நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன்னர் இளைஞர்
சேவை அதிகாரியாய் எட்டு வருடங்கள் கடமை புரிந்தேன்.
றொசாந்தன்: ஐயா! நீங்கள் எங்களுடைய கல்லூரி ஆசிரியராக வருமுன்னர் நீங்கள் பெற்ற பட்டங்கள், பதவிகள் பற்றி.
gyflfflu lly: BA (Hon) Diplin.Ed.
இளைஞர் சேவை அதிகாரி(1982-1989)
கயானன்: ஐயா! தாங்கள் கற்கும் காலத்தில் உங்களுக்குப் பல நண்பர்கள் இருந்திருப்பார்கள். அவ்வாறான நண்பர்கள் இற்றை வரை உள்ளனரா? அவர்கள் பற்றிக் கூறுங்கள்.
ஆசிரியர்: என் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருக்கமான ஒரு நண்பர்
K.குலவீரசிங்கம். வெளிநாடு சென்றவர். 1995ம் ஆண்டு மரணம்
அடைந்து விட்டார். அவரை இழந்தது எனக்குப்பேரிழப்பாகும். அவர்தான் என்னுடைய ஒரே நண்பர் ஆவார்.
குருபரன்: நீங்கள் கல்வி, கலை,விளையாட்டு போன்றவற்றில்
செய்தசாதனைகள் பற்றி எமக்குக் கூறமுடியுமா?
ஆசிரியர்: எனக்கு விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் இல்லை. ஆனால் 100m, தட்டெறிதல் போன்ற விளையாட்டுகளில் 1ம்3ம் இடங்களைப்பெற்றுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு காற்பந்தாட்டம் ஆகும். பாடங்களைப் பொறுத்த வரையில் படிக்கும் காலங்களில் ஒரு சாதனையும் நான் செய்யவில்லை.
ஆசிரியராகி இந்துக்கல்லூரிக்கு வந்த பின்னர் .مة கலைத்துறையில் அகில இலங்கையில் மூன்றாவது இடத்தை | பெற்ற குமரவடிவேல் குருபரனுக்கு கற்பித்த ஆசிரியர் என்ற
ரீதியில் C.WW கன்னங்கராவின் சிறந்த பெறுபேற்றிற்கான
ஜனாதிபதி விருது எனக் குக் கிடைத்தது. மற்றும்
அரசறிவியல்துறையில் 2004ம் ஆண்டு சிறந்த பெறுபேறு பெற்றமைக்கான விருதும் கிடைத்தது.
32
 
 

சஜீவன்: ஆசிரியர் தொழிலுக்கு எப்பாடசாலையில் முதன்முதலில்
கல்வி கற்பித்தீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்.
ஆசிரியர் : நான் ஆசிரியராக முதன் முதலில் இந்தப் பாடசாலையில்த்தான் கடமை புரிந்தேன். இன்றோடு 14 ஆண்டுகள் முடிவடைகிறது.
றொசாந்தன்: ஐயா! உங்களுடைய சமுகப்பணிபற்றி .?
ஆசிரியர்: நான் சனசமூக நிலையத் தலைவராக இருந்து சமுகப் பணிகளை மேற் கொண் டிருக் களிறேன் . அச் சனசமூகநிலையத்தின் பெயர் “சன்மார்க்க முற்போக்கு வாலிபர் சங்கம்” என்பதாகும். மற்றும் இளைஞர் சேவை அதிகாரியாகப் பணிபுரியும் காலத்திலும் பல வேலைத்திட்டங்களை, பலபகுதிகளில் செயப் துள்ளேன் . உதாரணமாக திருகோணமலையில் தம்பலகாமம் பிரதேசத்திலும், மற்றும் முல்லைத்தீவில் துணுக்காய், பாண்டியன்குளம் போன்ற பிரதேசங்களிலும், யாழ்பாணத்தில் தென்மராட்சியிலும் எனது பணிகளை மேற்கொண்டுள்ளேன். அப்பணிகள் ஆவன வீதிகளை புனரமைத்தல், விளையாட்டு மைதானங்களைச் சீர்படுத்தல், கைத்தொழிற் பயிற்சி போன்றவையாகும்.
கயானன்: ஆசிரியராகப் பணிபுரியும் காலத்தில் நீங்கள் கண்ட சுவையான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டால் எப்படி?
ஆசிரியர்: குருபரன் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்றது எனக்கு மிகவும் சந்தோசம். மற்றும் 2002,2001,காலப்பகுதியில் என்னிடம் கற்ற 27 மாணவர்களில் 24பேர் உயர்தரத்திற்குத் தெரிவாகியமை எனக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.
குருபரன்: இப்படியான சுவையான அனுபவங்களை விட கசப்பான
அனுபவங்கள் இருந்ததுண்டா?
ஆசிரியர்: மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள் எடுக்காத
சந்தரப்பங்கள் கசப்பான அனுபவங்களாக இருந்ததுண்டு.
22

Page 22
குருபரன்: இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதைக் கசப்பான
அனுபவங்களாகக் கருதினிர்களா?
ஆசிரியர்: கசப்பான அனுபவம் என்று கூறுவதை விட வருத்தம்
அடைந்தேன் என்று கூறுவதே பொருத்தம்.
சஜிவன்: எமது கல்லூரி பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து
வருகின்றது. அதைப் பற்றி உங்களுடைய கருத்து..?
ஆசிரியர். இக் கல்லூரியின் வளர்ச்சி மாணவர்களிலே தங்கியுள்ளது. மாணவர்கள் ஒழுக்கம்,கல்வி சிறந்து பாடசாலையை நேசித்தால் பாடசாலை தானாக வளரும். “உன்னைத்திருத்து சமூகம் தானாக வளரும்” என்பதை ஒவ்வொருமாணவனும் உணர்ந்தால் சமூகம் தானே வளரும்.
றொசாந்தன்: ஐயா! ஆசிரியர் தொழிலைவிட வேறு ஏதாவது
வேலைகள் செய்கிறீர்களா?
ஆசிரியர்: நான் எடிசன் என்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றில்
கற்பிக்கிறேன்.
சஜிவன்: எமது மாணவர்களுடைய செயற்பாடு பற்றி உங்களுடைய
கருத்தை அறிய விரும்புகிறோம்.
ஆசிரியர்: முன்பு மாணவர்கள் வெற்றி என்னும் இலக்கைக் காட்டுவதற்காகக் கைகளைப் பயன்படுத்தினர். இப்போது தமது கைகளை, “CD,DVD’ தட்டுக்களை காவுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். இது மன வருத்தமாக உள்ளது.
சஜிவன்: எமது மாணவர்களுடைய மனோநிலை பற்றி யாது
நினைக்கிறீர்கள்?
ஆசிரியர்: மாணவர்கள் மனதில் கல்வியை விட "காதல்" எனும் ஒரு மாயை வளர்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் அதை மாயை என்றே கூறுவேன். மாணவர்கள் அதில் விழாமல் தூர நோக்கோடு செயற்படுவதே சிறந்தது. இது என் அபிப்பிராயம் மட்டுமல்ல மாணவர்களுக்குக் கூறும் ஒரு அறிவுரையுமாகும்.
34
 

கயானன்: மாணவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத
சம்பவங்களைப் பற்றிச் சிறிது கூறுங்கள்?
ஆசிரியர் : ஒரு நாள் என்னுடைய வகுப்பில் மாணவர் ஒருவருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் சண்டை. அப்போது நான் அங்கு தற்செயலாகச் சென்றேன். அந்த மாணவன் வகுப்பறை மூலையில் வெண்கட்டியால் கீறி, கதிரையின் காலின் ஒரு கம்பியை எடுத்து வைத்துக்கொண்டு “இந்தக்கோட்டுக்கு இங்கால வந்தா மண்டை உடைப்பேன்’ எனக் கூறினார். அவரை நான் சமாதானப்படுத்தியது என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று. அவ்வாறு கம்பியை துாக்கி நின்றவர் தற்போது தொழிற் பொறியியலாளராக வெளிநாட்டில் இருக்கிறார்.
குருபரன்: சிறுவயதிலிருந்து நீங்கள் விரும்பிய கொள்கை யாது?
ஆசிரியர்: பிறர் உழைப்பில் நான் வாழக்கூடாது என்ற கொள்கை
சஜிவன்: ஐயா நீங்கள் விரும்பிய தொழில்?
ஆசிரியர்: ஆசிரியத் தொழில்.
எல்லோரும்: எமது கல்விச்செயற்பாட்டிற்காகவும், எம்முடைய அறிவுவிருத்திக்காகவும் உதவிய தங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
ஆசிரியர்: நன்றி

Page 23
ஆக்கத்திறன் விருத்தியை ஊக்குவிப்பதற்கான வகுப்பறைச் செயற்பாடுகள்
1 வினாக்களை ஆசிரியர்களிடம் கேட்பதற்கு மாணவர்களை
ஊக்குவிக்கலாம் R
2 மாணவர் புதிய கருத்துக்களை முன்வைக்கும் பொழுது ஆசிரியர் அவற்றைக் கலந்துரையாடி ஏற்றுக்கொள்ளல்.
3 விரிசிந்தனையை ஊக்குவித்தல்.
4. செயற்திட்டங்கள், ஒப்படைகள் ஆகிய சுயகற்றல்
செயற்பாடுகளை ஊக்குவித்தல்.
5 . பலவகையான நூல்களை வாசிப்பதற்கு ஊக்கமளித்தல்.
6 சிந்தனைக் கிளறல் தனிமையாகவும் குழுவாகவும்
நடைமுறைப்படுத்தல்.
7 வழமையான பாடங்களுக்கு மேலதிகமாக ஆர்வத்தையூட்டி
விடயங்களை கலந்துரையாடல்.
8 மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாடுகளுக்கு உரிய
கவனிப்பைக் கொடுத்தல்.
9 இவர்களை வளமாக பாடசாலைகளில் அனுமதித்தல்.
10 புலமைப்பரிசு வழங்கல்
11 விரைவான வகுப்பேற்றம்.
36
 
 

நேர்முகம்
- நா.கு.மகிழ்ச்சிகரன் வழிகாட்டல் - ஆலோசனை ஆசிரியர்
மனிதர்களின் நடத்தையைத் திட்டமிட்டு ஒழுங்கு முறையாக ஆராய்வது உளவியலின் ஒரு நோக்கமாகும். உளவியலாளர் தங்களது நோக்கங்களையும் குறிக்கோள்களையும் வெற்றியடையச் செய்வதற்கு சில அறிவியல் முறைகளையும் நுட்பத்திறமைகளையும் வளர்த்துக் கொண்டுள்ளனர். அந்த முறைகளுள் முக்கியமானதொன்றாகக் கருதப்படுவது நேர்முகமாகும்.
ஒருவரைப்பற்றி அறிய விரும்பினால் அதற்கு ஏற்றமுறையில் அவரைக் கேள்விகள் கேட்டு அவர் தரும் விடைகளை மதிப்பிடவேண்டும். அத்தகைய விசாரணை (கண்டு பேசல்), பேட்டி, நேர்காணல், நேர்முகம், செவ்விகாணல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. குறித்ததோர் பிரச்சினை தொடர்பாக அல்லது விடயம் தொடர்பாக, தகவல் தெரிவிப்பவரை நேரடியாகக் கண்டு உரையாடுதலே நேர்முகம் எனப்படுகின்றது.
நேர்காணல் பற்றி ஸ்ப்ரெட்லி (Spradley,1979)என்பார். பின்வருமாறு குறிப்பிட்டார். " உங்களது பார்வையில் நான் உலகத்தை விளங்கிக் கொள்ளவிரும்புகின்றேன். நீங்கள் எதனை தெரிந்து வைத்திருக்கின்றீர்களோ அவற்றை நீங்கள் தெரிந்து கொண்ட முறையிலேயே நானும் தெரிந்து கொள்ள அவாவுகின்றேன். உங்களது அனுபவத் தரின் அர்த் தத் தை நான் புரிந்து கொள்ளவேண்டும். உங்களது காலணிகளை மாட்டிக் கொண்டு நடந்துதிரிய வேண்டும். நீங்கள் விளக்குவதைப் போல நானும் விளக்கவேண்டும். எனது ஆசிரியராக இருந்து (உலகத்தை) நான் விளங்கிக் கொள்ள நீங்கள் உதவுவீர்களா?
மேற்படி கூற்றானது நேர்முகங்காணலின் அடிப்படைகளைத் தொட்டுக்காட்டுகின்றது. எனவே நேர்முகங்காணல் என்பது நேர்காணப்படும் நபர் தேவையான தகவல்களை நேருக்கு நேராக, வாய்மொழி மூலமாகத் தருகின்ற ஒரு தொடர்பாடல் செயன்முறை அல்லது இடைவினை என வரைவிலக்கணப்படுத்தலாம்.
37

Page 24
இன்று நேரடியாக மட்டுமன்றி தொலைபேசிகளினுாடாகவும், இணையத்தளங்களினுாடாகவும் நேர் முகங் காணலானது மேற்கொள்ளப்படுகிறது
நேர் முகம் என்பது பரிச்சயமான ஒரு ஆய்வுக்கருவியாகும். இது அரசியல், பொருளாதாரம், மருத்துவம், இயற்கை அனர்த்தங்கள், கல்வி, உளவியல, சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் இடம்பெறுகிறது.
ஒருவரின் சொந்த அகவாழ்க்கையை ஆராய்வதற்கும், நடத்தையை முன்கணித்துக் கூறுவதற்கும், தொழிலத் துறைகளுக்கும், அலுவலகங்களில் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் நேர்முகம் காணல் மிகவும் பயன்படும் என்று உளவியலாளரும் பிற துறையினரும் நம்புகின்றனர்.
நூல்களில் இருந்தோ பிற ஆவணங்களிலிருந்தோ கிடைக்கப்பெறாத பல தகவல்கள் அனுபவங்கள் நேர்முகங்காணலின் வழியாக கிடைக் கப் பெறலாம் . அபிப் பிராயங்கள் ,சிந்தனைப் போக்குகள்,மனப்பாங்குகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நேர்முகங்காணல் மிகவும் உதவியாக இருக்கும்.
அறிவுசார் தகவல்கள் மட்டுமின்றி உணர்ச்சி சாார்ந்த தகவல்களையும் இதன் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
நேர்முகங்காணலின் போது குறிப்பெடுத்தல், ஒலிப்பதிவு ஒளிப்பதிவு செய்தல் என்பன நேர்காண்பவரைச் சலிப்படையச் செய்யாதும் இடையூறு ஏற்படாதவகையிலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தல் வேண்டும்.
ஒருவர் பேட்டியளிப்பவரைக் காணும் விதம் அவரின் பேச்சுத்திறன், உணர்ச்சி வேறுபாடுகள், நன்றாக விடையளிக்கும் போதும் விடையளிக்காத போதும் பெறுகின்ற முகபாவனைகள், உடலசைவுகள் முதலியவவற்றை உற்றுநோக்கல் வேண்டும்.
38
 
 

நேர்முகங்காணலுக்கான வினாக்களைத் தயாரிக்கும் போது நேர்காணலுக்கான நோக்கத்தின் அடிப்படையில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். - நேர்காணல் வினாக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- அறிமுக வினாக்கள்.
- தொடரும் வினாக்கள்.
- ஆராய்ந்து அறியும் வினாக்கள்.
- குறிப்பான, சுட்டிப்பான வினாக்கள்.
- நேரடி வினாக்கள்.
- மறைமுக வினாக்கள்.
- அமைப்பாக்கும் வினாக்கள்.
- விமர்சன, வியாக்கியான வினாக்கள்.
- மெளனம். நேர்முகங்காணல் நான்கு முக்கியமான சூழ்நிலைகளில் பெரிதும் பயன்பட்டு வருகின்றது அவை. வாழ்க்கைத் தொழிலுக்கு வழிகாட்டும் சூழ்நிலை ஆளுமையை அளவிடும் சூழ்நிலை தனிமனிதனுக்கு அறிவுரைகூறல் சூழ்நிலை வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை என்பனவாகும். இந்த நான்கு சூழ்நிலைகளிலும் தனிமனிதனின் நடத்தையின் பல்வேறு பண்புக்கூறுகள் ஆராயப்பட்டு கணிக்கப்படுகின்றன.
நேர்முகங்காண்பதென்பது ஒரு தனிமுறையான தொழில்நுட்பமாகும்.
நேர்முகங்காணலில் ஈடுபடுபவர் நேர்முகமளிப்பவரை வெற்றிகரமாகக் கையாளுவதற்குத் தனித்திறமை அல்லது பயிற்சி பெற்றவராக இருத்தல்வேண்டும்
பேட்டியளிப்போரிடமிருந்து உண்மையான அனுபவங்களை, விடயங்களைப் பெற்றுக்கொள்ள உகந்த சூழ்நிலைகளையும் பெற்றுக் கொடுக்கவேண்டும். எனவே நேர் முகங் காண் பவர் விசேடகுணப்பண்புகளைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
39

Page 25
நேர்முகங்காணலில் ஈடுபடுபவர் கொண்டிருக்கவேண்டிய பண்புகள்:-
தன்னை அறிமுகஞ் செய்தல். நேர்காணலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தல். அந்தரங்கம் பேணலை உறுதிப்படுத்தல். சூழலைச் சாதகமாக்குதல். இறுக்கநிலையைத் தளர்த்துதல். நேர்காணல் செய்யும் துறையில் ஆழ்ந்த அறிவு. சகிப்புத் தன்மை.
அர்ப்பணிப்புத் தன்மை.
கூச்ச சுபாவம் அற்றதன்மை. பயந்த சுபாவம் அற்றதன்மை. விடையளிப்போனைப் பாதிக்காத வினாக்களை கேட்கக்கூடியவனாக இருத்தல். விடையளிப்போனைத் தூண்டக்கூடிய வினாக்களைக் கேட்கக்கூடிய திறன். தெளிவான மொழிநடை கவர்பாடற்ற சொற்கள் வினாக்கள் வினாவும் திறன். நுணுக்கமான கேள்விகளைக் கேட்கும் மதி. ஒருநேரத்தில் ஒரு வினாவை மட்டும் கேட்டல். வினா, விளங்கிக் கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் பாங்கு. விடையளிப்பவருக்குப் போதுமான நேரத்தை வழங்குதல். கவனமாகச் செவிமடுத்தல். பதில் கூறுபவரின் முகபாவம், உடலசைவு,குரல் ஒலியைக் கவனித்தல். ஞாபகப்படுத்திக்கொள்ள உதவுதல். தனது மனவெழுச்சிகளைக் காட்டாதிருத்தல்/மறைத்தல். தனது அபிப்பிராயங்களைத் தவிர்த்தல். குறிப்பான துலங்கலுக்கு வழிப்படுத்தலைத் தவிர்த்தல். குறிப்பெடுத்தல் நேர்காணலின் ஓட்டத்துக்குத் தடையாக இல்லாது பார்த்துக் கொள்ளல்.
40
 
 
 

O நேர்காண்பவரின் இயல்பான சுபாவம், மற்றும் சமூக
இயல்புகள் பற்றி நேர்காண்பவர் முன்கூட்டியே அறிந்து வைத்திருத்தல் அவசியம். இது நேர்காணலுக்கு ஒரு சாதகமான நிலமையைத்தோற்றுவிக்கும்.
O எவ்வகை நேர்காணலாயினும் நேர்காண்பவன் தன்னைத்
தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்.
O நேர்காண்பவரை எளிதில் உணர்ச்சிவசப்படத் தூண்டிவிடும்
வினாக்களைத் தவிர்த்தல்.
O அசெளகரியமான, அல்லது எரிச்சலூட்டுகின்ற வினாக்களைத்
தவிர்ததல்.
O குறிப்பிட்ட நேரத்தில் நேர்காணலை முடித்துக்
கொள்ளல்.
O ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தல்.
நேர்முகங்காணலைப் பல்வேறு அடிப்படைகளில்
வகைப்படுத்தலாம்.
எண்ணிக்கையின் அடிப்படையில்:- 1. தனிநபர் நேர்காணல் 2. குழுமுறை நேர்காணல்
நோக்கத்தின் அடிப்படையில்:-
1. சிகிச்சைக்கான நேர்காணல் 2. ஆய்வுக்கான நேர்காணல் காலத்தின் அடிப்படையில்:-
1. குறுங்கால நேர்காணல் 2. நீண்டகால நேர்காணல் வடிவமைப்பு அடிப்படையில்:-
1. முறைசார்ந்த அல்லது அமைக்கப்பட்ட நேர்காணல். 2. முறையில் அல்லது அமைப்பாக்கப்படாத நேர்காணல். பொருள் அடிப்படையில்:-
1. அளவுசார் நேர்காணல் 2. பண்புசார் நேர்காணல் 3. கலப்பான நேர்காணல்
41

Page 26
நன்றிகள் ஆயிரம் உங்களுக்கு
நேர்முகத்தின்ன வெளியீடு செய்வதற்கு அனுமதியும் ஆலோசனையும் வழங்கி, பயன்தரு பணிதொடர. என்ற ஆசிச் செய்தியையும் தந்துதவிய கல்லூரி முதல்வர் திரு.வி.கணேசராஜா அவர்களுக்கும்,
பிள்ளைகளை வழிப்படுத்தி நேர்முகம் காண ஊக்குவித்த திரு.ல.நிசாந்தன் ஆசிரியர் அவர்களுக்கும்,
மிகுந்த உற்சாகத்துடன் நேர்முகங் கண்ட மாணவச் செல்வங்களுக்கும்,
நேர்முகத்தினைத் தந்துதவிய முதுபெரும் ஆசிரியர்களுக்கும்,
நேர்த்தியான முறையில் புகைப்படங்களுடன் அச்சுப் பதிவினை மேற்கொண்ட அரங்க செயற்பாட்டுக் குழுவினருக்கும்,
"நேர்முகத்தில் நம்பிக்கை கொள்ள. என்னும் குறிப்பினையும்,
நேர்முகம் என்ற தொகுப்பினையும் தந்துதவிய வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் நா.கு.மகிழ்ச்சிகரன் அவர்களுக்கும்,
மற்றும் இம் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் ஆயிரம்.
வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப் பிரிவு
42
 
 
 


Page 27
LITLTGo6Ousso GLI
éFrufuěř 6