கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1998.05

Page 1


Page 2


Page 3
சிவ
GITC 56T 355 D :
1.
10.
11.
12.
தெய்வமென்பதோர் சித்தம்
ஆசிரியர்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
திருமுறைச் செல்
தோடுடைய செவியன்
சைவப்புலவர் அ
பூம்பாவையின் சாம்பலையும் எலும்மையு வித்துவான் வ. ே
திருஞானசம்பந்தர் நோக்கில் திருவைந்தெழு பூரீமதி குமாரசாய
சிம்மாந்து சிம்புளித்து
முருக வே. பரம
திருத்தொண்டர் சிறப்பியல்புகள்
ஞானேஸ்வரி சே
அறநெறி ஆரம்
செல்லையா நவ
திருவாசகச் சிந்தனைகள்: போற்றித்திருவக பண்டிதர் சி. அட
ஆலய வழிபாடு
திருமதி. இ. சத்
யாக்கை நிலையாமை
பூரீலறுரீ ஆறுமுக,
திருமுருக கிருபர்

OMLJfio
வர் சிவசண்முக வடிவேல்
4. இரத்தினம்
ம் பெண்ணுருவாக்கியது
gG) 60 GLIT
ழத்து 6)
நாதன்
ாமசுந்தரம்
நீதகுமார்
ப்புத்துரை
நியசீலன்
நாவலர்
னந்த வாரியார்
12
15
17
20
22
23
24

Page 4
P_. 46) ILI "மேன்மைகொள் சைவநீதி !
மலர் 2 வெகுதானிய வைகாசி சைவசமய வ6
கெளரவ ஆசிரியர் தெய்
சைவப்புலவர்
வித்து வான எமது "ஆன்மா எத திரு. வ. செல்லையா தப்பினால் எப்பிறவி வ கண்டுங் கேட்டு முள்ளே விளங்கியோ அன்றிவிள எதனையும் உணரக்கூ அங்ங்னமான மானிடவா மற்றவர்களும் பயன்படத்
இன்றைய சிந்தை உள்ளம் என்பது பொரு வைத்தவர்களே சித்தர்
சிந்தனையில் அசையாத
சித்தம் நமக்கு உண்ட
நிர்வாக ஆசிரியர் வரவேண்டும். இதனை
சிவபூரீ பால அகவலிற் கூறுகிறார். இ ரவிசங்கரக் குருக்கள்
திரு. செ. நவநீதகுமார் "யானைமுதல் எ
பிறவிகளில் பிழைத்து அடைந்தவக் காலை 7 தப்பவேண்டும். காலை ம முதலாம் பிழைப்புகளின் மாதர் தம் கூர்த்த நயன: மத்தக்களிறென்ற அவ துறைப்பிழைப்புக்குமே முனிவிலாததோர் பொரு நாம் ஈடுபடமுடியுமா?"
மேலும் திசைதிருப்பும் எ
42, டிவாஸ் ஒழுங்கை,
கிராண்ட் பாஸ், நமக்குத் தெய் கொழும்பு - 14. பலபிழைப்புக்களைக் க
தொலைபேசி : 423895 அது தவறுதலுங்கூடும். மனவுறுதியைப்பெற 6ே
அப்பொழுதே தெய்வம்
Goué65 garaðflutu Goovas ráf
 
 

Lub
* 列 விளங்குக உலகமெல்லாம்"
பநிதி
ார்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 2
வம் என்பதோர் சித்தம்
ந்தனையோ பிறவிகளை எடுத்து அலைகிறது. இப்பிறவி ாய்க்குமோ” என்று ஏங்கிவருந்திய பெரியோரையுங் ாம் நாமோ இதைச்சிந்தியாது வாழாவிருக்கின்றோம். ங்காமலோ எம் வாழ்க்கையை வீணாக்கிக் கழிக்கிறோம். டிய வாழ்க்கையைப் பெற்றவர்கள் மானிடர்கள். ாழ்க்கையைப் பெற்ற நாம் நல்ல சிந்தனைகளை வளர்த்து ந்தக்க தொண்டினைச் செய்தல் வேண்டும்.
ன சித்தம் என்பது பற்றியதாகும் சித்தம் என்றால் ள், சிந்தனை உடையது சித்தம் சித்தத்தைச் சிவன்பால் கள். சிவமிருக்கப்பயமேது குறையேது. அந்தச் நம்பிக்கையுடையவர்கள் சித்தர் தெய்வம் என்பதோர் டாக நாம் எத்தனையோ பிறப்புக்களைத்தாண்டி நான் கூறவில்லை. மாணிக்கவாசகரே போற்றித்திரு தனைமனங்கொண்டு படித்தாற் புரிந்து விடும்.
rறும்பீறாய' உயிர்களின் யோனிவாய்ப் பட்டுப் பல மானிடத்தில் நுழையவேண்டும். ஆண்டுதோறும் ஈண்டியும் இருத்தியும் எனப்பல பிழைத்தும் நாம் ாலை மலசலவாதையும் கடும் பகலிலே பசியும் நித்திரை ன்றும் நாம் விடுபட வேண்டியவர்கள் ஆகின்றோம். க் கொள்ளையிலும் பிழைப்பு நேரும் அதன் பின்னர் ாவிடைப்பிழைப்புண்டாகும். இங்ங்னமாயபல ற்றான் நமக்குத் தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி நளது கருதல் கூடும். அங்ங்ணமாய நல்லசிந்தனையில் அதுகூடவே ஆறுகோடிமாயாசக்திகள் தோன்றி நம்மை ன்று மாணிக்கவாசகர் கூறும் திறம் சிந்திக்கத்தக்கது.
வ மென்பதோர் சித்தமுண்டாக வேண்டிற் டக்கவேண்டும். அங்ங்னமொருநிலை வாய்ப்பினும் ஆகவே நாம் சித்தத்தைச் சிவன் பால் வைக்கும் வண்டும். அப்பொழுது தெய்வ நினைவு நிலைக்கும். என்பதோர் சித்தம் உண்டாகும்.

Page 5
திருச்சிற்றம்பலம் காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே
(3ம் திருமுறை)
சீர்காழி நகர் பன்னிரு திருப்பெயர் உடையது. சிவபாத விருதயர் அப்பதியில் வாழ்ந்தவர். அந்தணர் குலத்தினர் கவுணியர் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிவபாதவிருதயர் இப்புவி வாழத் தவம் செய்யும் இயல்புடையவர்.
பகவதியார் அவருடைய மனைவியார். ஆளுடையாளுடன் தோணியில் அமர்ந்த பிரான் அருள் கணவரின் கருத்திற் கிசையக் கைகூட நாளும் வழிபட்டு வந்தார்.
கருத்து ஒருமித்த காதலர் இருவர் கனவு நனவாகியது. தாவில் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரஞ் செய்தார்.
LSN6ÍT606ITILITÍ மூன்றாம் ஆண்டில் தந்தையாருடன் திருத்தோணிபுரத் திருக்கோவிலுக்குச் சென்றார். உலகுய்யச் சிவபெருமான் திருவருள் பாலித்தார் ஆரணமும் உல கேழும் ஈன்றருளி அனைத்தினுக்கும் காரணமாய் வளம் பெருகு கருணைத் திருவடிவான சீரணங்கு திருமுலைப்பாலோடு, எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி உண்ணடிசில் உமையம்மை ஊட்டினார். சிவஞானவாரமுதம் உண்ட பிள்ளையார் சிவஞான சம்பந்தரானார்.
செம்மை பெற எடுத்ததிருத் தோடுடைய செவியன் எனும் மெய்ம்மை மொழித் திருப்பதிகம் எடுத்தார். எழுது மறை மல்லல்நெடுந் தமிழால் இம் மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப இசைத்தார். தொல்லைவினை தீர்தல் எளிதாம் வண்ணம்
 
 

வகாசி மூலம்.
ரச் செல்வர் Dகவடிவேல்
திருநெறிய தமிழ் வல்லவர்க்குத் திருக்கடைக்காப்பும் சாத்தி அருளினார், வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மது மலர்க் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தர்.
கவுணியர் கோன் திருக் கோலக்காத் திருப்பதியிற் கலைப்பதிகம் கைந்நிறைந்த ஒற்றறுத்துப் பாடினர். சிவ பிரான் திருவருளால் வையமெல்லாம் உய்ய, அஞ்செழுத்து எழுதிய செம்பொற்றாளம் மறைச்சிறுவர் கைத்தலத்தில் வந்திருந்தது.
திருநனிபள்ளித் தலத்தில் சீரியற் பதிகம் பாடினார். திருக்கடைக் காப்புத் தன்னில் பேரிடர் கெடுதற் கானை நமதே எனும் பெருமை வைத்தார்.
திருநீல கண்டத்துப் பெரும்பாணர் தெள்ளமுதின் வருநீர்மை இசைப்பாட்டு மதங்கசூ ளாமணியாருடன் சண்பையிலே வந்தணைந்தார். பிள்ளையார் மகிழ்ந்து எதிர் கொண்டார். பாணனாரும் திருப்பதிக இசையாழிலிட்டுச் சேவித்து அகலா நண்பாயினார்.
அரத்துறை வள்ளலார் நித்திலச் சிவிகை,
முத்துக்குடை முத்து ஊதுசின்னங்கள் அருளப் பெற்றார்.
பிள்ளையார் ஒல்லை உபநயனப் பருவம் வந்து எய்த தொல்லைமறை விதிச் சடங்கின்வழி தோலொடு நூல் தாங்கினார். அந்தணர்க்கு அஞ்செழுத்துத் திருப்பதிகம் அருளிச்செய்தார்.
வாக்கின் பெருவிறல் மன்னவர் பூக்கமழ் வாசத் தடஞ்சூழ் புகலிப் பெருந்தகையார் பெருமை அறிந்தார். வணங்க வந்தார். திருநாவுக்கரசரைக் கவுணியக் கன்று கண்டமாத்திரத்தில் தாம் கருத்தில் பரவும் மெய்க் காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதார்.

Page 6
" சிந்தை யிடையறா வன்புந் திருமேனிதன்னி லசைவுங் கந்தை மிகையாங் கருத்துங் கையுழி வாரப் படையும் வந்திழி கண்ணிர் மழையும் வடிவிற் பொலிதிருநீறும் அந்தமி லாத்திரு வேடத் தரசு மெதிர்வந் தணைய."
பிள்ளையார் பேரிசை நாவுக் கரசருடன் திருத்தோணிப் பொற்கோயி லுட் சென்று கும்பிட்டார். அருளால் திருமாளிகைக்கு அழைத்து வந்தார். இணையில் திருவமுது ஆக்குவித்தார், அணையும் தொண்டருடன் இயல்பால் அமுது செய்வித்தார். சிலநாள் மகிழ்ந்து உறைந்தார்.
நலம்மிகு ஞானசம்பந்தர் திருவாவடுதுறைத் திருத்தலத்தில் விலையுடை அருந்தமிழ் மாலை 666th60Ts. நச்சி இன்தமிழ் LITT 19. ULI ஞானசம்பந்தருக்குப் பச்சையாகப் பசும்பொன் ஆயிரக்கிழி அருளினர் ஆவடுதுறை ஆதியார். உளம் மகிழ்ந்து பெற்ற உலவாக்கிழியைத் தந்தையாரிடத்தில் தந்தார் முத்தமிழ் விரகர், அக்கிழி கொண்டு இத்தலம் வாழச் சிவயாகம் செய்தார் சிவபாத விருதயர்.
நாலுங்கு லைக்கமு கோங்குகாழி ஞான சம்பந்தர் திருமருகலில், "சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை உடையானே தகுமோ இவள் உண் மெலிவே” என வினாவினைப் பாடினார். நாகம் தீண்டி உயிரிழந்த வணிகன் பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான். அவனை நயந்த நங்கையவள் தன்னை நம்பியோடு நாநிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் புகலி வேந்தர் மணம் புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்டார்.
திருநிலைநாயகி அம்பாள் சமேத பிரமபுரீசுவரப் பெருமான் தோணியில் தாமங்கு இருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள் சேணுயர் விண்ணின்றிழிந்த சீர்கொள் விமானத்துக் காட்டி அருளினர். நான்மறை ஞான சம்பந்தர் தோணி மேன்முன் வணங்கும்படி கண்டு மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம், மைம்மரு பூங்குழல்' என்று எடுத்து ஏத்தினார்.
திருவிழிமிழலையிற் பெற்ற படிக்காசு உடன் உதவ வாசி தீர் காசு நல்குவீர் எனப் பதிக வாயிலாகப் பாடி நற்காக பெற்றார்காழி மாநகர் வாழி சம்பந்தர் வீழிமிழலைப் பெருமான் அருள் செய்யச் சிறப்பின் மிக்க பெருஞ்சோற்றுப் பிறங்கல் ஈந்தார் எம் பெரு மக்கள் இருவரும்.
 

தி ரு ப் புக லூ ரி ல் , கா ழி நா ட ர் திருமுருகநாயனார் மனையிலே தங்கினர். திருநாவுக்கரசு நாயனார், சிறுத்தொண்ட நாயனார் திருநீலநக்கடிகள் நாயனார், ஒன்று சேர்ந்து அளவளாவிக் கலந்திருந்தார்கள்.
அயவந்தி அங்கணரை வணங்கிய பின் திருநீல நக்கர் மனையில் எழுந்தருளினர். அவர் அன்பால் ஆற்றும் விருந்தமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் வேதம் தமிழால் விரித்த அருள்ஞானப்பிள்ளையார். குங்குலியக் கலயனார் குறைவறுப்ப அவர் அன்பிற் குலாவினார் திருக்கடவூரில்.
திருமறைக் காட்டில் வேதங்கள் அருச்சித்துக் காப்புச் செய்த பைம்பொன் மணித் திருவாயிற் பாங்கு வந்த பிள்ளையார்,
"அப்பரே, அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த திருக்காப்பு நீங்குமாறு மெய்ப்பொருள் வண்தமிழ் பாடியருளும்” என அருளிச்செய்தார். “இப்பரிசு நீரருளிச் செய்தீராகில் இது செய்வேன்’ என்று பதிகம் எடுத்துப் பாடினார் அப்பர். திருக்காப்பு நீக்கங் காட்டியது. கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்குப் போற்றினர் புவியுள்ளோர். புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி, திறந்தவாறு அடைக்கப் பாடி அருளும் நீர்” என்றார். காழிந் நகரான் கலை ஞான சம்பந்தன் ஏழின்னிசை மாலை ஈரைந்து இசைத்தார். இரண்டு பாலும் நின்றவக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது.
ஆங்கிருந்தும் பிள்ளையார் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளத் திருவுளங் கொண்டார். அது கேட்ட அரசர் அருளிச் செய்கின்றார்.
'பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஒர் அவதிஇல்லை. உரைசெய்வ துளது. உறுகோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது.”
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால் பழுதணையாது' என ஆணையிட்டு, பிரமாபுரத்து மறை ஞானஞான முனிவன்,' வேயுறு தோளிபங்க”னை எடுத்து விளம்பினார். வாக்கின் காவலரும் தொழுது அரிதாங் கருத்தில் கொண்டார். மாதவத்து வாகீசர் மறாது வணங்கி விடை கொடுத்தனர்.

Page 7
திருஞானசம்பந்தர் பெருநாமச் சிவிகையின் மீது ஏறி அருளினர். பாண்டிநாட்டு யாத்திரை புறப்பட்டது. திருத்தொண்டர் போற்றெடுத்தார். மங்கல தூரியம் தழங்கியது. மறை முழங்கியது. சங்க படகம் எழுந்தது. விசும்பு கொடி தூர்த்தது. மலர்மாரி பொழிந்தது. மங்கல வாழ்த்து இசைத்தது. பாண்டிநாட்டில் பாய கேள்வி ஞானசம்பந்தர் சமணர்களோடு மூன்று வாதங்களில் முகம் அளித்தார்.
பாண்டியமன்னனுடைய வெப்பு நோயை ஆலவாய் பெருமானுடைய திருநீறே மந்திரமும் மருந்துமாகத் தீர்த்து வெற்றிபெற்றார், வெய்ய தீயினில் இட்ட ஏடு பச்சையாய் விளங்கியதால்
வெற்றி பெற்றார். திருவுடைப் பிள்ளையார் திருக் .
கையாலிட்ட ஏடு பொருபுனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துச் சென்றதால் வென்றவரானார். பாண்டிமாதேவி பரவசப்பட்டார். குலச்சிறையார் குதூகலித்தார். தம்பிரா னருளால் வேந்தன் தன்னைமுன் ஒங்கப்பாடச் செம்பியன் செங்கோல் போலத் தென்னன் கூனும் நிமிர்ந்தது.
பாண்டிநாட்டுப் பண்பாளர் சிவநெறியைச் செம்மை செய்து சோழநாடு மீள்வார் சிவநெறி வளர்க்க வந்தார். பூந்துருத்தியில் பொய்யிலாரைப் போற்றிய பின் செய்ய சடையார் கோயில் திருவாயிலின் முன்னாக மகிழ்ந்திருந்தார். வாக்கின் தனி மன்னருக்கு வண்புகலி வேந்தர் பாண்டி நாட்டுப் போக்கும் வரவும் புகுந்ததும் அருள் செய்தார். 'வாழிதிருத் தொண்டென்னும் வான்பயிர்தான் ஓங்குதற்குச் சூழும் பெருவேலி யானீர்” எனத்தொழுதார் சொல்லரசர்.
மயிலைமா நகரில் ஞானசம்பந்தரின் நல்வரவை அறிந்தார் சிவநேசர் ஆவண வீதி எங்கும் காவண மிட்டுப் பூமணம் கமழச் செய்தார். அருமையாற் பெறுமகள் என்பு நிறைத்தவக் குடத்தைப் பெருங்கோயில் திருமதிற் புற வாய்தலில் கொணர்வித்தார் ஞானசம்பந்த நாயனார். மன்னுவார் சடையாரை முன் தொழுதார். மட்டிட்ட என்னும் திருப்பதிகத்தைப்பாடியருளினார். பூம்பாவை கோற்றொடிச் செங்கை தோற்றியிடக் குட முடைந்து எழுந்தாள். ஞாலமும் விசும்பு மெல்லாம் அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாகின்றாள்.
பிள்ளையாரின் திருமணம் சிவ்ன் அமர்ந்துறையும் திருப்பெருமணத்தில் நிகழ்ந்தது.
 

மந்திர முறையால் உய்த்த எரிவலமாக மாதர் தந் திருக்கையைப் பற்றினார் ஞான போனகர். இந்த இல்லொழக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும். அந்தமில் சிவன்தாள் சேர்வன் என்னும் ஆதரவு எழுந்தது அவருள்ளத்தில். பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈதென்று பதிகம் பாடினார்.
தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்தார். மூவுல கொளியால் விம்ம முழுச்சுடர் தூணேயானார். வாயிலினை வகுத்துக் காட்டினர்.
ஞானசம்பந்தர், ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொல்லா மென்று ஆனசிர் நமச்சிவாயத் திருப்பதிகத்தைத் திருவாய்மலர்ந் தருளினர். 'இம்மணத்தில் வந்தோர் ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக’ என்றனர். நாயனார்கள், அறுவகைச் சமயத்து அருந்தவர்கள், அடியவர்கள் அந்தணர்கள் கும்பிட வந்தணைந்தார்கள், திருவருளால் வீடு பெற வந்தார்கள், பரிசனர்கள் முதலான யாபேரும் சுற்றஞ் சூழச் சோதியினுள் புகுந்தார்கள். எல்லோரும் புக்கதற் பின், காதலியைக் கைப்பற்றிக் கொண்டு வலஞ் செய்தருளித் தீத கற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் நாதன் எழில் வளர் சோதியினுள் புக்கார் சிவத்தோடு ஒன்றுபட்டு உடனானார். பின்னர் சுடர் வடிவாக விளங்கிய நிலை மறைந்தது. முன்னையது போலச் சிவன் அமர்ந்துறையும் திருப்பெருமனக் கோயில் துலங்கியது.
பின் இணைப்பு 1 - நாயனார் காலத்தில் நடமாடிய திருத்தொண்டத்தொகை போற்றும் சிவனடியார்கள் - திரு முருகநாயனார் திருநீலநக்க நாயனார். திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனார்- இவர்கள் திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடன் சோதியில் கலந்தவர்கள். ஏனையவர்கள் :- திருநாவுக்கரசு நாயனார். அப்பூதியடிகள் நாயனார் சிறுத்தொண்டநாயனார், குங்குலியக்கலய நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் முதலானவர்கள் .
பின் இணைப்பு 2 - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருப்பதிகங்கள்
முதலாம் திருமுறை 136 இரண்டாம் திருமுறை 122 மூன்றாம் திருமுறை 125
பாடல் பெற்ற சிவதலங்கள்: 219.

Page 8
சைவப்புலவர் ஆ
மூன்றாம் வயதில் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய முதலாவது தேவாரம் தோடுடைய செவியன், என்று தொடங்குகின்றது. நீராடச் சென்ற அப்பாவுடன் சென்ற பிள்ளையைக் குளக்கரையிலே இருத்திவிட்டு அப்பா குளத்திலிறங்கி நீராடினார். அப்பாவைக் காணாத குழந்தை தோனியப்பர் கோயிற் கோபுரத்தைப் பார்த்து 'அம்மே அப்பா' என்று அழுகின்றது. அம்மையப்பர் இடபாரூடராய்க் குழந்தை முன் தோன்றினர். குழந்தைக்கு ஞானப் பாலூட்டி மறைந்தனர். நீராடி வந்த தந்தை பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கண்டார். ஏதோ பிழை நடந்து விட்டதென்று வெகுண்டார். உனக்குப் பால் தந்தவர் யார் என்று வினவினார். அந்தவேளை ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிய குழந்தை பாடிய தேவாரந்தான் தோடுடைய செவியன் என்பது.
அப்பாவிற்குச் சுட்டிக் GTLÜLJL ஆகாயத்தில், அதுவும் அண்மையாகக், குழந்தை யாரையோ காணுகிறது. பீடுடைய பிரம்மாபுரம் மேவிய GLDD6 இவனன்றே என்று வரலாறுங் கூறுகிறது. அங்கே காட்சி தருபவரது தோற்றத்தை விளக்கம் செய்யும் போது, இவன் என்று அண்மையில் - பக்கலில் - நிற்பவனாகக் காட்டுகின்றது. அல்லாமலும், தோடுடைய செவியன் என்று அடையாளமும் சொல்லுகின்றது. குழந்தையின் பார்வையில் அம்மையப்பர் காட்சி தந்தனர் என்று இந்தத் தொடர் கொண்டு அறிய முடிகின்றது. அவர்கள் அம்மையும் அப்பருமாகக் காட்சி தரவில்லை. இருவரும் ஒன்றாகவே தோன்றியுள்ளனர். சம்பந்தப் பிள்ளையாரின் தேவாரத் திருப்பாடல் அமைதிகூட அந்த வகையிலுள்ளது. அதுவும் அவரது முதலாவது
Gഖക്ര0ിu് തഖബ
 
 
 
 

அ. இரத்தினம்.
தேவாரத்தின் முதல் தொடரே அப்படி அமைந்தமை அற்புதமானது.
தோடுடைய செவியன் என்னுந் தொடரிலுள்ள தோடு பெண்கள் அணிவதொரு காதணி. பாலூட்டிய அன்னையாகவே பார்த்த காரணத்தால், தோடணிந்த செவி மிகத் துல்லியமாகக் குழந்தைக்குப் பட்டிருக்கிறது. அந்த வடிவே ஆகாயத்திற் காட்சிதரும் வடிவு ஆன காரணத்தாற் பெண்மையை முதன்மைப்படுத்தி வார்த்தை வந்தது. அவர் எண்ணத்தினிக்கும் இறை சிவன். எனவேதான் தோடுடைய என்று எடுத்துக் கொண்டவர் செவியன் என ஆண்பாலை உறுதி செய்யும் அன் விகுதிச் சொல் கொண்டு நிறைவு செய்கின்றார். குழந்தை காண்பது பெண்ணாகவும் ஆணாகவும் தோன்றுவதொரு வடிவு. மாணிக்கவாசக சுவாமிகள் காட்டிய பாகம் பெண்ணுரு வானாய் போற்றி என்னுமிடத்துச் சிந்திக்கப்பட்ட வடிவமைதி என்று அமைதி காண முடியவில்லை. ஞானசம்பந்தப் பெருமானது ஞானப் பாலுண்ட வாயிலிருந்து வந்த தொடர் தோடுடைய செவியன் என்பது ஒரேயிடத்து ஆண் பெண் பாற் பகுதிகளைக் காட்டும் அழகு நினைந்து நினைந்து சுவைக்கத்தக்கது. தோடு அணிந்த செவி பெண்மைக்குரியது அதாவது அம்மைக்குரியது செவியன் என்னுமிடத்துள்ள செவி அப்பனுக்குரியது. ஒரேயிடத்தில் இரண்டு இயல்புகளையும் காணுகின்றார்.
வேயுறு தோளிபங்கன் என்று தொடங்குங் கோளறு பதிகத்தில் வருந் திருப்பாடல்களில் பாகம் பெண்ணுருவாய் அமைந்த காட்சிகளையே காண முடிகின்றது. வேயுறு

Page 9
தோளிபங்கன், செப்பிள முலைநன் மங்கை ஒருபாக மாக, பல பல வேடமாகும் பரநாரி L1 fT56öT, என்றிந்தவகையிலமைந்த திருப்பாடற் பகுதிகளை அங்கே காணுகின்றோம்.
நிரைகழ வரவம் சிலம்பொலி யலம்பும் நிமலர் நீறணி திருமேனி வரைகெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
என்று தொடங்கும் திருப்பாடலைக் கொண்ட
திருகோணமலைப் பதிகத்தேவாரத்தில் கழல் சிலம்பு
ஆய இரண்டு காலணிகளும் சப்திப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. கழல், ஆண்கள் அணிவது. சிலம்பு, பெண்கள் அணிவது. எனவே இங்கு நாம் காணும் நிமலர் பாதி பெண்ணுருவானவர் என்று புலப்படுத்தப்படுகின்றது. அதே திருப்பாடலில், வரைகெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த வடிவினர், என்று காட்டப்படுவது மூலம் மேலே கண்ட கருத்துச் சரியானது என்று உறுதி செய்யப்படுகின்றது. பந்தனை விரற்பாவை தன்னையோர் பாகம் வைத்தவனை என்பது தம்பிரான் தோழராய சுந்தரர் கூற்று.
தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நிறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய் கோத்தும்பீ
என்பது திருவாசகத்துள்ளதொரு திருப்பாடல். தோல், குழை நீறு, சூலம் என்பன சிவன் சார்பாக அமைந்தவை. துகில், தோடு, சாந்து, கிளி, வளை என்பன அம்மை சார்பாக அமைந்தவை. இவ்வண்ணமாகிச் சிவம் சக்தி ப்ாகம்
பெற்றுள்ளமை அநாதியானது. இதனாலேதான், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான், என்ற கருத்துத் தாபிதமாகி இருக்க வேண்டும். இந்த வடிவமே அர்த்தநாரீஸ்வரர் என்று குறிப்பிடப்பட்டது.
 

எங்கனும் 6Sluijst U35 LOT Lij நிற்கும் இறைவடிவை பெண்ணாகிப் பெண்ணுக் கோராணுமாகி எனச் சத்தியும் சிவமுமாய்க் பார்க்கும் முறைமையில் தாச மார்க்கத்தில் வாழ்ந்து பழுத்த பழமாய்க் கனிந்த அப்பர் சுவாமிகள் இறைவன் வண்ண வடிவைத் தம் திருப்பாடலில் வடித்துக் காட்டுகின்றார். அர்த்தநாரீசுவரர் வடிவை இப்பாடல் காட்டும் முறைமையே அற்புதமானது.
புதுவிரி பொன்செயோலை யொருகா தொர்காது
சுரிசங்க நின்று புரள விதிவிதி வேதகித மொருபாக மோத
ஒருபாக மெல்ல நகுமால் மதுவிரிகொன்றை துன்று சடையாக மாதர் குழல் பாகமாக வருவார் இதுவிவர் வண்ண வண்ணம் இவள்வண்ண வண்ணம்
எழில்வண்ண வண்ணமியல்வே
திருவருட் சக்தியோடு கூடிய ஆடல்வல்லானின் அருமந்தவடிவம் இப்பாடலிற் சுடர்கின்றது. இது இவர் வண்ண வண்ணம், இவள் வண்ண வண்ணம் என்று குறிப்பிடும் போது உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி என்னுந் திருவாசகப்பகுதி நினைவிற்கு வருகிறது. புதுவிரி பொன் செய்யோலை ஒரு காது; விதி விதி வேதகீதம் ஒரு பாகமோதும்; மது விரி கொன்றை துன்று சடைபாகம் - இறைவனைச் சார்ந்தவை. ஒரு காது சுரி சங்க நின்று புரள ஒரு பாக மெல்ல நகுமால்; மாதர் குழல் பாகம் - இறைவியைச் சார்ந்தவை. இது இவர் வண்ணம் என்றும் இது இவள் வண்ணம் என்றும் கூறித் திருப்பாடலையும் செம்பாதி வடிவில் அமைத்துள்ளமை கருத்திற் கொள்ளப்பட வேண்டியது.
புவனம் பதினான்கையும் பூத்தவள்
பூத்தவண்ணம் காத்தவள் ஆகிய அவளது திருவடிவு ஒளிர நின்றாடும் பரம் பொருளைப் பரவுவோம்.

Page 10
( வித்துவான் வ
திருமயிலாப்பூரிலே வைசிய குலத்திலே பெரும் செல்வந்தராய்ச் சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தன் பெயருக்கேற்ற சிவபக்தி அடியார் பக்திகளிற் சிறந்து விளங்கினார். அந்நாட்களிற் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஞானப்பால் உண்டு தேவாரம் பாடியமையும் சமண, சாக்கிய மதத்தாரை வாதிட்டு வென்று வருவதையும் உலகம் உய்யப் பல அற்புதங்களையும் இறைவன் அருளால் புரிந்து வருவதையும் சிவனடியார் சொல்லக்கேட்டுச் சிவநேசர் அன்னார் பால் பேரன்பு பூண்டார். அன்னார் திறம் கேட்டலுமே தொழலானார். சிவநேசர் பெருஞ் செல்வமும் பெருங் கீர்த்தியும் உடையவராயினும் L$l6iT 60) 6MT LILJIT ĝ5 ĉ$LLUL) இன்மையால் மிகக் கவலையுற்றார். சிவபூசை, மகேஸ்வர பூசை இரண்டினையும் பக்தி பூர்வமாய்ச் செய்து வந்த சிவநேசருக்கு இறைவன் அருளால் ஒரு சற்புத்திரி
கிடைக்கப் பெற்றாள்.அக்குழந்தை இலக்குமி
போன்ற அழகுடையதாக இருந்தமையால் அதற்குப் பூம்பாவை யென்று பெயரிட்டனர். பிள்ளையை வணிகர்குல அந்தஸ்துக் கேற்றபடி வளர்த்து வந்ததோடு, சிவநெறியில் பற்று வைத்து ஒழுகவும் பயிற்றிவந்தார்.
பூம்பாவை பெதும்பைப் பருவம் அடைந்தாள். தந்தையார் அவளுடைய குணாதிசயங்களைக் கண்டு வியப்புற்று, மனம் மகிழ்ந்தார். மகிழ்ந்தவர் இவளை மணஞ்செய்பவரே தனது அளவிறந்த செல்வங்களுக்கு o flլլյ6)յft என்றார்.
 
 

அந்நாட்களிலே திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் மதுரை சென்று பாண்டியனது வெப்புநோயினை நீறுசாத்தி 'மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் பாடலை முதலாகக் கொண்ட திருநீற்றுப் பதிகம் பாடித் தீர்த்ததும், சமணர்களுடன் அனல்வாதம் புனல் வாதம்
புரிந்ததும், சமணர்களைக் கழுவேற்றியதும் அறிந்து சிவநேசருக்குச் சொன்னார்கள். இவ்வருட்டிறம் கூறினார்க்கெலாம் பொன்னும் பொருளுங் கொடுத்தார். அத்துடன் பிள்ளையார் இருக்குந் திசை நோக்கி நிலத்தில் வீழ்ந்து வணங்கி, எழுந்திருந்து யாவருங் கேட்க, ‘அடியேன் என்னுடைய புத்திரியாகிய பூம்பாவையையும், எனது அளவில்லாத தி ர வி ய ங் க  ைள யு ம் அ டி யே  ைன யு ம் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்குக் கொடுத்துவிட்டேன்’ என்று சொல்லிப் பேரானந்தமடைந்தார்.
ஒருநாள் பூம்பாவை தோழியரோடும் கன்னிமாடத்துக்கு மருங்கில் உள்ள பூஞ்சோலை சென்று பூக்கொய்தாள். அச்சமயம் மல்லிகைப் பந்தரிலே மறைந்திருந்த பாம்பு, அவளுடைய விரலிலே காளி, காயத்திரி, யமன், யமதூதி என்னும் நான்கு பற்களாலும் எலும்பிலே தாவிக் கடித்தது. மேலும், அது நஞ்சை உகுத்து மேலே படத்தை விரித்து நின்றாடி அடங்கிற்று, பூம்பாவையானவள் கொடிய நஞ்சானது எங்கும் செறிந்து பரவ, மயங்கி விழுந்தாள். சேடியர்கள் செய்வதறியாது

Page 11
கவலையுற்றுப் பயந்தனர். உடனே பூம்பாவையைத் தாங்கியெடுத்துக் கன்னிமாடத்துக்குக் கொண்டு போனார்கள். சிவநேசர் அதனைக் கண்டு உள்ளமும் உரையுந் தடுமாறத்துயர் கொண்டார். சுற்றத்தார் மனமழிந்து வருந்தினர். விஷவைத்தியர் அநேகர் கொண்டுவரப் பட்டனர். அவர்கள் தனித்தனி மந்திர தியான பாவங்கள் செய்தனர். எண்ணிறந்த ஒளடதங்களைப் பிரயோகித்தனர். எவ்விதபலனும் கிட்டவில்லை. பூம்பாவைக்கு விஷம் வேகங்கொண்டு தலைக்கேறி உயிர்தங்குவதற்குரிய குறிகளே இல்லாமற் போய்விட்டன. வைத்தியர்களும் ஆற்றாது அகன்றனர். சுற்றத்தார் கவலையுற்று வீழ்ந்தனர். சிவநேசர் ஒருவாறு தெளிந்து, இந்த விஷத்தை நீக்குபவர்களுக்கு 6T60Tg, அளவிறந்த
திரவியங்களைக் கொடுப்பேன் என்று பறையறிவித்தார். மூன்று தினங்களாக அரசரிடத்துள்ளோர் முதலாகப் Լ160
மந்திரவாதிகளும் தமஸ்தர்களும் வந்து தங்கள் செய்கையினால் விஷம் தீராமையாற் கைவிட்டு அகன்றுவிட்டனர். பூம்பாவையும் விஷந் தாங்காது இறந்து விட்டார்.
சிவநேசர் அதுகண்டு சிந்தை நொந்து மயங்கிப் பின்பு தெளிந்து, 'இவளைப் பிள்ளையாருக்கு என்று சொல்லியதனால் நான் துன்புறவேண்டுவதில்லை’ என்று கூறிப் பிள்ளையார் வருமளவும், இவள் உடலைத் தகனஞ் செய்து எலும்பையும் சாம்பரையும் சேமித்து வைப்பேன் என்று துணிந்து, அங்ங்னமே தகனமும் செய்தார். பின்பு பூம்பாவையினுடைய எலும்பையும் சாம்பரையும் ஒரு குடத்திலே சேகரித்துக் கன்னிமாடத்திலே வஸ்திர ஆபரணங்கள் சாத்தி அணிசெய்து, பஞ்சணைமேல் வைத்தார். நாள் தோறும் மஞ்சனம், மாலை, சந்தனம், அன்னம், விளக்கு, முதலியன அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட அனைவரும் வியப்பெய்தினர்.
இங்ங்ணம் நிகழுங் காலத்தில் 'பிள்ளையார் திருக்கூட்டத்தோடு, திருவொற்றியூரில் சுவாமி
வெகுதானிய வைக
 

தரிசனஞ் செய்து கொண்டிருக்கிறார்' என்று அவ்வூரவர் பலரும் சிவநேசருக்குச் சொன்னார்கள். சிவநேசரும் நற்செய்தி சொன்னர்ர்க்கு வேண்டியன உபகரித்துப் பெருங்களிப்புடையரானார். பிள்ளையாரை அழைத்து வருவதற்கான ஏற்பாட்டினைச் சிவநேசர் செய்யலானார். திருவொற்றியூர் வரையில் நடைப்பந்தலிட்டு வஸ்திரங்களால் விதானித்தார். தோரணங்கள் மாலைகளால் அலங்கரிப்பித்தார். வாழை, கமுகு நாட்டி அழகு பண்ணினார். பின்னர் திருவொற்றியூருக்குச் சிவனடியார்களும் உடன் செல்லச் சென்று, அவ்வூரைச் சமீபித்தார். அப்பொழுது பிள்ளையாரும் திருவொற்றியூரை விட்டகன்று அடியார் கூட்டத்தோடும் திருமயிலாப்பூரை நோக்கி எழுந்தருளி வந்தார். அவர் வருகையைத் தரிசித்து வணங்கச் சிவநேசர் எதிர் கொண்டார். பிள்ளையார் முத்துச் சிலிகையினின்றும் இறங்கி அவர்களெதிரே தொழுது எழுந்தருளினார். சிவநேசருடைய செய்கைகளை அடியார் கூறக்கேட்டுத் திருமயிலாப்பூரை அடைந்தார்.
ஆளுடைய பிள்ளையார் சிவநேசருக்கு நிகழ்ந்ததைத் திருவுளத்திற் கொண்டு, அன்னாரின் கருத்தை முற்று விக்க விரும்பினார். அதற்காகக் கபாலிச்சரம் என்னும் ஆலயத்தில் சென்று வலஞ்செய்து சிவபெருமானைத் தோத்திரஞ் செய்து வணங்கினார். பின்பு சிவநேசரைப் பார்த்து 'உம் முடைய மகளினது எலும்பு நிறைந்த குடத்தைத் திருக்கோயில் புறமதில் திருவாயிலிலே கொண்டு வாரும்” என்று திருவாய் மலர்ந்தருளினார். சிவநேசர் பெருமகிழ்ச்சியடைந்து விழுந்து வணங்கிக் கொண்டு, கன்னிமாடத்துக்குச் சென்று வெந்த சாம்பரும் எலும்பும் நிறைந்த குடத்தை எடுத்தார். அதனை இரத்தினச் சிவிகையில் வைத்துச் சேடியர் புடைசூழ்ந்துவர உரிய இடத்திற்குக் கொண்டு வந்தார். அதனைச் சிவலிங்கப் பெருமான் திருமுன்னிலையில் வைத்து நமஸ்காரம் செய்தார். திருமயிலாப்பூரில் உள்ளவரும், சமண் முதலாம் புறச் சமயத்தவர்களும் இதனைப் பார்க்கும் விருப்போடு

Page 12
அங்குவந்து சேர்ந்தனர். தேவர்களும் விண்ணை நிறைத்து நின்றனர். பசுகரணமின்றிச்சிவகரணமுடைய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கூட்டஞ் சூழ்ந்து வரக் கோபுரவாயிலை அடைந்தார். பூம்பாவையினுடைய அஸ்தியிருக்கிற மட்குடத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளின் பெருமையைச் சிந்தித்தார். இப்பூமியிலே இறந்தவர்களுடைய எலும்பைப் பின்னும் நன்னெறிப்படுத்தி அந்நன்மை அவ்வெலும்போடு தொடர்ச்சியாகும் என்று அருள் நோக்கத்தில் கண்டார். “பூம்பாவை’ என்று விளித்து,
மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிகுடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர்நல்விழாப் பொலிவு கண்டார்த்தல் உண்மையாமெனில் உலகர்முன் வரு'கென உரைப்பார்
திருத்தொண்டர் L/60tih
இது சத்தியமாயின், நீ, இவ்வுலகர் முன் வருவாய் என்று "மட்டிட்ட புன்னை." என்று தொடங்குந்திருப்பதிகத்தை எடுத்தருளினார். அதில் அருளிச் செய்யப்பட்ட போதியோ என்னும் திருவாக்காகிய அமுதம் அவ்வங்கத்திலே பொருந்த அது குடத்திலே சரீரமாக உருவெடுத்தது. பூம்பாவை முதற் பாட்டில் வடிவு பெற்று மற்றெட்டுப் பாட்டுக்களிலே பன்னிரண்டு வயதடைந்து அடங்கியிருந்தனள். பத்தாவது பாட்டிலே பூம்பாவை தன்கையை வெளியே தோன்றச் செய்ய குடமுடைந் தெழுந்தாள். அதுகண்ட பிள்ளையார் திருக்கடைக்காப்பை அருளிச் செய்தார். பூம்பாவையைக் கண்டவர்கள் எல்லாம் அதிசயம் எய்தினார்கள். சிவனடியார்களெல்லாரும் அரகர என்று சொல்லும் ஒசை விண்ணை நிறைத்தது. இதனைக் கண்ட தேவரும் முனிவரும் பூமாரி சொரிந்தனர். எங்கும் ஒரே ஆரவாரம். ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. மண்ணில் உள்ளோர் இக்கருணை நிறைந்த சம்பவத்தை நினைந்து கைகூப்பித் தொழுதனர். சமண் முதலாம் சமயத்தவர் ஏங்கித் தள்ளாடி வீழ்ந்தனர். திருஞான சம்பந்தரோ
வெகுதானிய வைகாசி)
 
 

பூம்பாவையினிடத்தே பரமசிவனது பெருங்கருணை வெள்ளத்தை ஆயிரமுகத்தினாலே கண்டார். பூம்பாவை முன்னிலும் பன்மடங்கு அழகுடன் தோற்றமளித்தார். பூம்பாவையைக் கண்ட தந்தையாராகிய சிவநேசர் ເດrດrumfiດກ திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினார். பூம்பாவை சிவபெருமானை வணங்கிப் பின்பு பிள்ளையாரை நமஸ்கரித்து எழுந்தாள்.
பிள்ளையார் சிவநேசரை நோக்கி, 'இனி உம்முடைய புதல்வியை அழைத்துக் கொண்டு வீடு செல்லும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். சிவநேசர் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கி, சுவாமி அடியேன் அருமையாகப் பெற்றெடுத்த இப்புத்திரியைத் திருமணஞ் செய்தருள்க’ என்று பிரார்த்தித்து நின்றார். பிள்ளையார் சிவநேசரை நோக்கி “நீர் பெற்ற பிள்ளை விஷத்தினால் இறந்து விட்டது; நாம் சர்வான்மாக்களும் உய்யும் பொருட்டும் அவர்களுக்கு சிவபெருமானது திருவருளின் மகிமை விளங்கும் பொருட்டும் உற்பவித்தோம். ஆகையால் நீர் இங்ங்னம் கேட்டல் தகாது’ என்று மறுத்தருளினார். சிவநேசரும் சுற்றத்தவரும் துயர் கொண்டு வருந்தினர். பிள்ளையாரும் அவர்களுடைய பெருந்துயரம் தணியும் பொருட்டு உண்மைகளை எடுத்துக் கூறியருளினார். பூம்பாவையுடன் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துப் பிள்ளையார் திருக்கோயிலினுள்ளே எழுந்தருளினார். சிவநேசர் பூம்பாவையைக் . கன்னிமாடத்துள் சேர்த்து, வேறொருவருக்கும் மணஞ்செய்து கொடுப்பதில்லையென்று உறுதி பூண்டிருந்தார். பூம்பாவை சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்து சிவத்தை அடைந்தாள்.
திருச்சிற்றம்பலம் 'மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம மர்ந்தான் ஒட்டிட்ட பண்பிலுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்"
திருச்சிற்றம்பலம்

Page 13
பூனரீமதி கு
ஏழாம் நூற்றாண்டில் சைவமதம் சீர்குலைந்து பிறமதங்களின் செல்வாக்கு ஓங்கியிருந்த போது சைவசமயத்தை மீண்டும் புத்துயிர் கொடுக்க ஒரு
சற்புத்திரன் வேண்டுமென சிவபாதவிருதயரும் "
பகவதியாரும் இறைவனை வேண்டித் தவம் இருந்து பெற்ற குழந்தையே திருஞானசம்பந்தர். இவர் தவக்குழந்தை, இறைவன் அருள் மிகுந்த செல்வக் குழந்தை, அரியதோர் கைங்கர்யத்தை ஆற்ற வந்த அற்புதக் குழந்தை. இதனால் மற்றவர்களிடம் காணமுடியாத ஒரு திறைமை - தன்னம்பிக்கை, ஆளுமை, கவர்ச்சி, தீர்க்கதரிசனம், தான் சொல்வதில் அசையாத அழியாத உறுதிப்பாடு ஆகிய சிறப்பியல்புகளைக் காண்கின்றோம். இதனால் இவர் தருவது, கூறுவது, அனைத்தும் ஒரு கொள்கையை வரையறுத்து உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. சம்பந்தப்பெருமான் முருகப் பெருமானின் ஒரு அம்சமானவர் என்று கருதும் போது அதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. முருகனாக இருந்து பிரணவத்தை விளக்கினார், சம்பந்தராக இருந்து 'நமசிவாயத்தை விளக்கினார்.
இவர் சம்பந்தராக வந்த நோக்கம் உலகில் சைவம் அழியாது காப்பதற்காகும். அங்கலாய்க்கும் மக்கள் மனதில் ஒரு திடப்பாட்டை நிலைநாட்டுவதற்கு சைவம் என்றால் என்ன? சைவனாகப்பிறந்தவன் எப்படி வாழவேண்டும்? எத்தகைய குறிக்கோளை பின்பற்றவேண்டும்? எதனை அடைய வேண்டும்? என்ற சில கொள்கைகளை மக்களிடையே நிலை
 
 

i LOITJáFTLól
நாட்டுவதற்குமாகும். ஆகவே மக்களை நல்வழிப்படுத்துவதற்கு அவர் பக்தி நிலையை ஒரு ஊடகமாகக் கைக் கொள்ளுமிடத்துமக்களுக்கு நாம உச்சாடணத்தை’ ஒரு ஆரம்பப் பயிற்சியாக மேற்கொள்கிறார். இதன்படி அவரது கருத்தில் 'நமசிவாய' எனும் திருவைந்தெழுத்து முதற்கண் இறைவனது நாமமாக விளங்குகின்றது. இக்கால மக்களுக்கு தத்துவக் கருத்துக்களைப் போதிப்பதில் எவ்வித நயமும் ஏற்படாது என அவர் எண்ணினார் போலும் அல்லது அவர் காலத்தில் நமசிவாயத்தின் ஒவ்வொரு அட்சரத்திற்கும் ஒவ்வொரு ஒரு பொருள் என்ற பேதம் நிலைக்கவில்லைப்போலும் ஏனெனில் சைவசித்தாந்த சாஸ்திரங்கள் தோன்றியது சற்றுப்பிற்பட்ட காலத்திலாகும். எனவே நமசிவாய' என்பது இறைவனின் நாமம் என்று மக்களுக்கு உரைக்கின்றார். நமசிவாய நாதன் நாமம், நம்பன் நாமம், நெற்றி நயனன் நாமம், நல்லார் நாமம், நந்தி நாமம், வரதன் நாமம், நஞ்சுண்டகண்டன் நாமம், என்று மக்களுக்கு அறிமுகம் செய்கிறார்.
மக்கள் ஈடேற வேண்டுமென்பதே இவரது நோக்கம் ஆகும். துன்பத்தினால்தான் மக்கள் உள்ளத்தை அலைய விட்டு,கதிதேடி, மதிகெட்டு நிற்கின்றார்கள். மக்களுக்குக் கஷ்டம், துன்பம் நோய் எல்லாம் வருவது அவரவர் செய்த பாவச் செயல்களால் தான் என்பது அவர் தெரிந்ததே, அதற்குப் பரிகாரம் தேடுவதானால், அதன் தாற்பரியத்தை வெல்ல வேண்டுமானால், அதன் தீய சக்தியை நீக்க

Page 14
வேண்டுமானால் அதற்கு ஒரு உபாயம் உண்டு என அறியவைக்கின்றார் அதுவே 'ஒரு மந்திரம்” நமசிவாய என்ற மந்திரம். அவரது நோக்கில் 'நமசிவாய' ஒரு மந்திரமாக விளங்குகிறது. அந்த மந்திரத்தின் பெருமையை விளக்க இரு பதிகங்கள் பாடியுள்ளார். அதில் பல கதைகளை உதாரணங்களாகக் கையாண்டுள்ளார். மார்க்கண்டேய வரலாறு, திருமால் பிரமன் அடிமுடி தேடிய வரலாறு இராவணன் வரலாறு ஆகியன. மார்க்கண்டேயரது உயிரை கவர்ந்து போக யமன் வந்தபோது மார்க்கண்டேயர் பஞ்சாட்சர உச்சாடனம் செய்தபடி இருந்தார். அவர் வஞ்சகமறியாத நெஞ்சை உடையவர், அவரது பக்தியை மெச்சிய இறைவன் தனது காலால் யமனை உதைத்து அவருக்கு நீடிய ஆயுள் வழங்கினார்.
திருவைந்தெழுத்தானது வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாய் நிற்பதாகும் பக்தியுள்ளவர்கள் தம் நாவால் உச்சரிக்கும் போது புத்தம்புதுமலரிலே காணப்படுகின்ற தேனை ஒத்திருக்கிறது. மூச்சை ஒடுக்கி ஞானவிளக்கிலே, சுடரை ஏற்றி நன்புலத்தேனை வழிதிறந்து ஒத்தும் யாவருக்கும் இடர்களைவதோடு இந்த உலகிற்கெல்லாம் செம்மையான தங்கத்தாலே செய்யப்பட்ட ஒரு
பொட்டுப் போன்றது என்கிறார்.
திருவைந்தெழுத்து நான்மறையாகி தேவர்களது சிந்தையில் நின்ற அவர்களை ஈடேற்றுவதுடன் எரியோம்பி வழிபாடியற்றும் வேதியர்களுக்கும் மூல மந்திரமாக அமைகிறது என்கிறார். தான் வந்த காரியத்தை நிறைவேற்ற உளரீதியான ஒரு சிகிச்சை முறையைக்  ைக யா ஞ கி ன் றார் . வெ று மை  ைய யே எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுக்க அவர் நமசிவாயத்தை ஒரு மருந்தாக அறிமுகப்படுத்துகிறார். தும்மலானாலென்ன
ിഖക്ര1തിu് തഖക1്)
 

இருமலானாலென்ன ஒருவரை வாட்டும் போதும், கொடிய நரகம்தான் கதி என்ற போதும் கூட இதனை ஒதிவரின் இப்பிறப்புத் தீவினையை அறுப்பது மட்டுமல்லாது மறுபிறப்பிலும் துணையாகவரும் அருமருந்து என்கிறார்.
மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் செல்வம்மிக்கவராகவும் இருக்க விரும்புவர். அத்தகையவருக்கு அவர் கூறுவதாவது, உங்கள் பிறவியைக் கெடுக்கவல்லது. அதனை விரும்பி ஒதியவருக்குச் செல்வத்தை நல்குவதும் இறைவனின் அரிய பெரியதாண்டவத்தின் தன்மையைக் கொடுத்து அவரை மகிழ்விப்பது இவ்வைந்தெழுத்தாகும்.
மனிதன் என்றும் மரணத்திற்குப் பயப்படுகிறவன். காரணம் அறிந்தும் அறியாமலும் பல பிழைகளைச் செய்வதால் மரணம் துன்பம் மிக்கதானது - தான் செய்ததுதவறு என்று இறுதி வேளைதான் நினைத்துக் கவலைப்படுகிறான். கெட்டவனான தன்னை யமதூதர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சம் இறுதியில் தான் தோன்றும். இவ்வாறு உளத்தாக்கம் உறுபவர்களுக்கு சம்பந்தர் அழகாகப் புத்தி புகட்டுகிறார். யமதூதர்கள் ஒருவரை இட்டுச் செல்லலாம் அவ்வேளை பலதுன்பங்கள் நேரிடலாம் ஆனால் நல்லவர், தீயவர் என்றிலாது நமசிவாயத்தை உச்சரிப்பவர்களுக்கு அது நிச்சயம் நல்ல கதியைக்கொடுக்கும்.தீயவனையும் நல்லவனாக்கிவிடுகின்ற தன்மை அதற்கு உண்டு.
தீயவன் இதைச்சொல்வதற்கு வாய் கூசும் நினைக்க
நெஞ்சு குறுகும். இவ்விரண்டும் அற்றுப்போக
அவனைத் தூண்டும் சக்தி அந்த மந்திரத்திற்கு உண்டு - என்று தெளிவுபடுத்திக் கூறுகிறார். அது ஒரு கவசமாக அமைகிறது.
சம்பந்தப் பெருமான் தன்னம்பிக்கை
கொண்டவர் அவர் பாடும் பதிகங்களில் அவரது

Page 15
ஆளுமையைக் காட்டத் தவறவில்லை. தான் கூறுவது முற்றிலும் உண்மை, உறுதிவாய்ந்ததென்பதை ஆணித்தரமாகக் கூறி மக்கள் மனதில் நம்பிப்கையையும் பக்தியையும் திடப்படுத்துகிறார்.
நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமின் மாலையிரைந்தும் அஞ்செழுத் துற்றன வல்லவரும்பராவரே!
திருவைந் தெழுத்தை விளக்கியபின் அதனைக் கையாளும் முறையைக் கூறுகிறார். நி த் தி  ைர யி லா னா லெ ன் ன விழி ப் பு நிலையிலானாலென்ன எவ்வேளையும் இதனைச் சொல்லுங்கள் என்கிறார். ஒரு கவர்ச்சியான எல்லையைக் குறிக்கோளாகக் கொண்டால் தான் வெற்றி கிட்டும் என்று அவர் அறிவார். ஆதலால் திருவைந்தெழுத்து ஒரு "தகுதியைக் கொடுக்கிறது என்று விளக்குகிறார். அதனை மக்களுக்கு உணர்த்தும்போது அது ஒரு அளவுகோலாக அமைகிறது- அன்பு உள்ளங்கள் அக்கு மாலைகொண்டு அல்லது தம்விரல்களினால்
எண்ணிக் கொண்டு நமசிவாயத்தை உள்ளம் உருகி,
(γ-
496 (t
“சிறுமையிற் கல்வி சிலையிலெ நன்றே பிச்சைபுகினுங்கற்கை ந கல்வி', 'அறிவுடை யொருவ என்னும் பெரியோர் வாக்குகளை சிந்தித்தல் வேண்டும்.
-ܓܠܠ
옐.
(வெகுதானிய வைகாசி)

தெளிந்த சிந்தையராய் ஒதுவாரானால் "தேவராகுவதற்குத் தகுதி பெற்றவராவார். தேவராக விரும்புபவர்கள் இதனைச் செய்யுங்களென வழிநடத்துகிறார். இங்கு அவர் முத்தி நிலை பேசவில்லை. ஏன்? மக்களுக்கு முத்தி நிலைபற்றிய ஞானம் உடனடியாக ஊட்டமுடியாதென்று. எனவே கவர்ச்சியைக் கொடுக்கக் கூடியதான 'தேவலோக வாழ்வையே ஒரு எல்லையாகக் காடுட்கிறார். அவர் சாதாரண மக்களை பத்தியுற வைக்கின்றார். அவரது
நடைமுறை மனோதத்துவ முறையாக இருக்கின்றது.
சம்பந்தப்பெருமான் of eup 5 IB60 நோக்குடையவரானபடியால் 'நமசிவாய' என்றால் என்ன, அது எத்தகையது, அதை எவ்வாறு நடைமுறையில் மேற்கொள்வது, அதன் பலாபலன் என்ன என்பதை அறிவுறுத்துதல் அவர் குறிக்கோளாகிறது. மக்களை வழிநடத்தலும் அவர் பணியாகின்றது. அவரது நோக்கில் திருவைந் தெழுத்தானது இறைநாமமாக, மந்திரமாக, மருந்தாக, கவசமாக வழிகாட்டல் ஊடகமாக தகுதி கொடுக்கும் மதிப்பீடாக உளரீதியான நடத்தை மாற்றங்களை
விளைவிக்கக் கூடிய தொன்றாகத் தெரிகின்றது.
ழுத்து', 'கற்கை நன்றே கற்கை ன்றே','கேடில் விழுச் செல்வம் பனை அரசனும் விரும்பும்', மாணாக்கர்கள் எப்பொழுதும்
SN
* 蚤
Isbist62/6/i.

Page 16
அவன் புகழ்பேசா நாளெல்லாம் பிறவா நாளே
என்பர் அப்பர் சுவாமிகள். மனித உதயம் சிறப்பானதென்றே பேசுவர் சான்றோர். வெறுமனே உண்டு, உடுத்து, இணைவிழைச்சுக்கொண்டு சுகபோக வாழ்வு அனுபவிப்பது அன்று மானிடநோக்கு. வாழ்வியலை நுணுகி, அணுகும்போது மனித வளமும் வல்லமையும், விழுமியமும், கடந்து ஏதோ ஒர்புனிதம் இழையோடி நிற்கக் காண்கிறோம் வாழ்வின் உச்சவரம்பு காணத்துடிக்கிறோம் எய்தாதபோது, எய்தி அனுபவியாதபோது மனம் கவல்கிறோம், அங்கலாய்க்கிறோம். இந்த எண்ணப் பின்னல் எல்லாம் இன்றைய தொலைத் தொடர்பு சாதனப் பின்னல் போன்றது. சுட்டிப்பாகச் சொன்னாற் பிரபஞ்ச வாழ்வோடுமட்டும் கொஞ்சிக்குலாவும் நிலையது. நீர்க்கோலவாழ்வை நச்சி, மெச்சும் இன்ப நாட்டமே இதன் கருதுகோள். இதையெல்லாம் கடந்து ஒருவாழ்வியலும் மனிதனுக்கு உண்டு என அருளாளர்கள் அநுபூதி நிலைகண்டு எடுத்துக் கூறினர்.அப்பெருங்குடிமகான்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர்களின் அருள்வாக்கு இனிவரும் பாடலில் எம் நெஞ்சை உதைக்கின்றது. உணர்ந்து நட என்கின்றது.
இறையோடு இசைந்த இன்பம்
இன்பத்தோடு இசைந்த வாழ்வு பறைகிழித்து அனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத் திறை கொணர்ந்து ஈண்டித் தேவர் செம்பொனும் மணியும் தூவி அறை கழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே"
 
 

ராமநாதன்
இவ்வுலக இன்பம் வானவில்லின் வர்ண ஜாலம் போன்றது. அனுபவ ரசனையை மட்டும் மனதுக்கும், ஐம்புலனுக்கும் அளித்துக் கணப்பொழுதில் அழிந்து போம். தொடுவானம் போகப்போக எட்டாது அகலுமாறு போன்று, எமது எல்லையற்ற எண்ணங்களும் ஈடிலாத கோட்பாடுகளும் எண்ணியபடி நிறைவேறுவதில்லை எனவே நினையாத தொன்று எதிர் வந்து நிற்கும் எனையாளும் ஈசன்செயல்' என்றாள் அவ்வை, சமகால நோக்கிலே எட்டாதபோதுதான் இறைவனை நாடுகிறோம். இந்த இருவேறு உலகத்து இயற்கையை எண்ணிய நம்பியாரூரர் எடுத்த எடுப்பிலேயே "இறையோடிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு' எனச்சொற் சுருக்கமாகப் பொருட் பெருக்கமாகப் பாடினார். உலகநாட்டங்கள் சிற்றின்பம் சிறுநேர ஆனந்தம், நிறைவு, மகிழ்ச்சி மட்டும் அவற்றின் கணிப்புக்கோல், மற்றது பேரின்பம் கலந்த மனிதவாழ்வியல்; இது தெய்வீகம் செறிந்தது. அழியாதது. பிற்பயக்கும் பீடை இல்லாதது, அந்தமில் இன்பம் அளிப்பது, அழிவில்லாதது, நம்மைக்காப்பது, நாமே தேடிச் சேமிக்க வேண்டியது, எய்ப்பில் வைப்பாயமைவது; இதுவே நல்ல சேம வைப்பு, சேமநிதி. இதைச்சுட்டிக்காட்டிய நாவலூரர் பறைகிழித்தனைய போர்வை என்றார். இந்த உடம்பான சட்டை எப்போ கிழியுமோ யாரறிவார். மரணக்கபாடம் எந்தநேரமும் 960)L-lLIT நெடுங்கதவாய் அமைந்திருப்பதை LUIT fi சிந்திக்கிறார்கள், எனவே ஒட்டைச் சரீரம் இது. பறையின் தோல் கிழிந்தாற் பயன்படாதவாறு போல

Page 17
உடம்பு அழியின் உயிர் நிலை? ஆதலின் உடம்போடொன்றிய உயிர் வாழ்வில் நம்மை நன்னெறிப்படுத்தி மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம் என்ற இத்திருப்பாடலைத்தினமும் ஒதிப்பார்ப்போம். -
இறையோடியைந்த இன்பம் - சிவபெருமானோடு ஒன்றிய பேரின்பம், பறைகிழித்தனைய போர்வை - பறை கிழித்தால் அதன் தோல் பயன்படாதவாறு போல, இறந்து பட்டால் பயன்படாத உடம்பு எனவே 'மடந்தையர் மதிக்கும் இந்தமானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர். வாழ்வு வேண்டேன்’ என்றார் சுந்தரர்.
ஆக, மனமே, கல்லுந்தன், (கடினத்), தன்மைமாறி உருகும்படி, மனம் இளகித் தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லார்க்கு எத்தகைய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர். அவ்வகையில் நாம் நம்மை இயமனது தூதர்கள் பலகாலும் ஆட்டக் க ரு தி ச் செ க் கி லி ட மு ய லு ம் போ து , அ த  ைன த் த டு த் து ஆட் கொ ள் கி ன் ற விடையேறுபவனாகிய பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளி இருக்கின்ற நம் பெருமானை அடைந்து விட்டோம்; இனி நாம் வேண்டுவது எதுவும் இல்லை, எனத் தொடரும் பாடல் இது.
"கற்றானும் குழையுமாறு அன்றியே
கருதுமா கருத கிற்றார்க்கு எற்றாலும் குறைவில்லை என்பர்காண் உள்ளமே நம்மை நாளும் செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான் பெற்றேறி புலியூர்ச்சிற் றம்பலத்து எம்
பெருமானைப் பெற்றாம் அன்றே"
 

கற்றானும் - கல்தானும், தருமனார் - இயமன், குழையுமாறு - உருகுமாறு, இளகிக்குமையும் படி,
இன்று சமய நெறியாளர் பலர் Meditation - என்னும் தியான நிலைபற்றிப் பேசுகிறார்கள். மேற்கிலும் கிழக்கிலும் மகேஸ்வர ஸ்வாமிகளின் ஒசைவழித்தியானம் பிரம்மகுமாரி சமாச விழித்திருப்பு நிலைத்தியானம் மேலும் ஆழ் நிலைத்தியானம் இன்றைய அறிமுகங்களாகும். இந்த யோகநிலை பற்றிச் சுந்தரர் பேசுகின்றார்.
"சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தை தனில்
வைத்துகந்து திறம்பா வண்ணம் கைம்மாவின்உரிவைபோர்த்து உமைவெருவக் கண்டானைக் கருப்பறியலூர்க் கொய்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயில் ஆடுங் கோகுடிக் கோயில் எம்மானை மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே"
கொய்மா - தளிர்த்த மாமரம் சிம்மாந்து - உடலை நேரே நிறுத்தி (பத்மாசனத்திருந்து) சிம்புளித்து - கண்களைச்சிறிது மூடி, சிந்தையினில் வைத்துகந்து - உள்ளத்தில் அன்புடன் நிலை பெயராது இருத்தி
கோகுடி - முல்லைக் கொடிகளுள் ஒருவகை இரத்த அழுத்தம், மனநோய், விரக்தி, அமைதியீனம் போன்றவற்றிற்குத் தியானம் சிறந்த ஒளஷதமாகும் என மனோதத்துவ நிபுணர்கள், வைத்திய வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இப்பாடலில் வரும் சிம்மாந்து சிம்புளித்து என்பன கருத்திற் கொள்ள வேண்டும், இஃதே போன்று நெண்டிக் கொண்டும் காலாய்ப்பேன் என்றோர் பிரயோகம் ஏழாந்திரு
முறையில் அமைந்துள்ளது.

Page 18
"நெண்டிக் கொண்டேயும் காலாய்ப்பன்
நிச்சய மேஇது திண்ணம் மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப் பொருளன்றி உணரேன் பண்டங்கு இலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட அண்டன் இருப்பதும் ஆரூர்.அவர்
**
சம்பந்தரும், அப்பரும் பதிகந்தோறும் இராவணனைப் பாடியுள்ளனர். சுந்தரரும் மிகக்குறைந்த பாடல்களிலே இராவணனை ஆண்டுள்ளார். ஒன்று இப்பாடல்.
வைகாசி 01 15.05.98 வெள்ளி மாதப்பிறப்பு
08 22.05.98 வெள்ளி ஏகாதசி விரதம் 09 23.05.98 சனி சனி பிரதோசம் 10 24.05.98 ஞாயிறு கழற்சிங்கர் குருபூசை 1 25.05.98 திங்கள் அமாவாசை விரதம்,
-கார்த்திகை விரதம் 14 28,0598 வியாழன் அக்கினி நாள் நிறைவு 15 29.05.98 வெள்ளி சதுர்த்தி விரதம்
6 30,0598 Goof நமிநந்தியடிகள்குருபூசை
சேக்கிழார் குருபூசை 17 310598 ஞாயிறு சோமசிமாறர்குருபூசை 21 04.06.98 வியாழன் பாபஹர தசமி 22 05.06.98 வெள்ளி ஏகாதசி விரதம் 24 07.06.98 ஞாயிறு பிரதோச விரதம் 25 08:06,98 திங்கள் வைகாசி விசாகம் 26 09.06.98 செவ்வாய் பூரணை விரதம் 28 10698 வியாழன் திருஞானசம்பந்தர்குருபூசை
திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூ முருக நாயனார் குருபூசை, திருநீலநக்கர் குருபூசை
 
 

மெய்ப்பொருளன்றி உனரேன் - மெய்ப்பொருளையன்றி பொய்ப் பொருளை ஒரு பொருளாகக் கருதேன் மிண்டர்க்கு மிண்டலாற்பேசேன் - அதனால் அம்மெய்ப் பொருளை உணராதவர்க்கு நல்ல சொற்களைச்
GFIT66lolost GL6ft.
நெண்டிக் கொண்டேயும் காலாய்ப்பன் - வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன்.
சீறுவோர்ச்சிறு - பாரதி
குருதேவர் திருவடிகளே சரணாலயம்.
ബ്
1 15.06.98 திங்கள் மாதப்பிறப்பு 6 2006.98 சனி ஏகாதசி விரதம் 7 21.06.98 ஞாயிறு பிரதோஷ விரதம் 9 23.06.98 செவ்வாய் அமாவாசை விரதம் 13 27.06.93 சனி சதுர்த்தி விரதம் 4, 28.06.98 ஞாயிறு மாணிக்கவாசகர் குருபூசை
ஆனி
ஸ்கந்த பஞ்சமி 15 29.06.98 திங்கள் குமார ஷஷ்டி விரதம் 16 30.06.98 செவ்வாய் இரவு-நடேசரபிஷேகம் 17 01.07.98 புதன் உதயம்-நடேசர் ஆனி
-உத்தர தரிசனம் 21 05.07.98 ஞாயிறு சயன ஏகாதசி விரதம் 23 07:07,98 செவ்வாய் பிரதோஷ விரதம் 25 09.07.98 வியாழன் பூரணை விரதம் 29 13,0798 திங்கள் சங்கட்ஹர சதுர்த்தி விரதம் 32 60798 வியாழன் கலிக்காமநாயனார்குருபூசை

Page 19
ஞானேஸ்வ
இறைவனுடைய மெய்யடியார் இயல்புகள் இயம்புதற்கரியன. 'தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் விதந்துரைத்துள்ளமையும் ஈங்கு நினைவு கூரத் தக்கது. இத்தகைய பெருமைக்குரிய தொண்டர்கள் வரலாற்றை விரித்துரைக்கும் சிறப்பு வாய்ந்தது சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம். திருத்தொண்டர் பெருமை நோக்கியே இந்நூல் GLIf LL புராணம் 66ਲੈ சிறப்பித்துப் போற்றப்படுகின்றது. இந்நூலுக்கு அடிப்படையாக விளங்கியது சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய திருத்தொண்டத் தொகை என்னும் பதிகம். இப்பதிகத்தில் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” எனத் தொடங்கித் தனி அடியாரையும் தொகை அடியாரையும் குறிப்பிட்டு அவர் ஒவ்வொருவருக்கும் தாம் அடியவர் என்று கூறுகின்றனர். இதனை விரித்துத் திருமுறைகளைத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பி என்பார் திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடினார். இது பதினோராந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவை இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு , தாமும் ஆராய்ச்சி பல செய்து இவ்வடியார் வரலாறுகளைத் தமது நூலில் சேக்கிழார் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இந்நூல் புராணம் என்ற பெயரைப் பெற்றிருப்பினும் காவிய முறையிலே சுந்தரரைத் தன்னிகரில்லாத் தலைவனாக அமைத்துப் பக்திச் சுவையும் காவிய நலனும் மிளிரச் சிறந்தவொரு சைவத் தமிழ்க் காப்பியம் என அனைவரும் போற்றும் வண்ணம் சேக்கிழார் இதனை இயற்றியுள்ளார்.
நூலின் ஆரம்பத்திலே வருகின்ற திருக்கூட்டச் சிறப்பு என்ற பகுதியிலே மெய்த்தொண்டர் இயல்புகள் விளக்கமாகக்
 
 
 

ரி சோமசுந்தரம்
கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனடியார் வேடம் புனைந்தவர் பலர் இருக்கலாம். ஆனால் அவர்களிற் பலரின் புறத்தோற்றத்திற்கும் அகத்திற்குமிடையே எவ்வளவோ வேறுபாடு இருக்கும். மனத்தின் கண் LOT 5 குடிகொண்டிருக்கப், புறத்தேயுள்ள மாண்புமிகு தோற்றத்தினால் என்ன பயன்? உண்மையான இறையடியார்களெனில் தம் அணிந்துள்ள வெண்ணிறு போலவே மனமும் தூய்மையுடையராக இருப்பர். இதனைச் சேக்கிழார் 'பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள்' என அவர்களின் மனத் தூய்மையைச் சிறப்பித்துக் கூறுகின்றார். புறத்தூய்மையோடு அகத்தூய்மையும் பெற்றவர்களாய் இவர்கள் விளங்குவதற்குரிய காரணம், இறைவன் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பதற்கு ஏற்ற வண்ணம் இறைவன்பால் அவர்கள் கொண்ட பக்தியினாலே அவர்கள் உள்ளம் தூய்மை பெற்று இருப்பதேயாகும்.
இறைவன் பால் மெய்யடியார் கொண்டுள்ள பக்தி தான் எத்தகையது? சாதாரணமாக மக்கள் தம் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறவேண்டும் என்ற நோக்குடனேயே இறைவனை வழிபட்டு வருவதைக் காண்கிறோம். உலக இன்பங்களை நாடி அவற்றைப் பெறுவதற்கும் அன்றேல் தங்களுக்குற்ற இன்னல் துன்பம் ஆபத்து முதலியனவற்றிலிருந்து நீங்குவதற்காகவுமே அவர்கள் இறைவழிபாடு இயற்றுகின்றனர். இச் சாதாரண மக்களிலும் மேம்பட்ட ஆத்மீக நிலையிலுள்ளோர் உலக இன்பமாகிய நிலையற்ற சிற்றின்ப ஆசையை நீக்கிப் பேரின்பமாகிய வீட்டின்பத்தையே நாடி நிற்பர். ஆனால் இம் மெய்யடியா ரோவெனில் வீட்டின்பத்தையும் துச்சமாகக் கருதும் இயல்பினர்.

Page 20
"கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி விடும் வேண்டா விறலினர்'
என இவர்களுடைய இத்தன்மையைச் சேக்கிழார் எடுத்துரைக்கின்றார். அன்பு மிகுதியினாலே, இறைவனை வணங்குகின்ற அவ்வின்பத்தையே விரும்பினார்களேயன்றி வீடு பேற்றினைக் கூட வேண்டும் என்று கருதா இயல்பினர் இவர்கள்.
"தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று"
கண்களில் ஆனந்தநீர் பெருகத் கைகளை உச்சிமேற் குவித்து இறைவன் மீது பண் சுமந்த பதிகம் பாடிப் பரவிப் பணிந்தார் எனச் சுந்தரரின் இத்தகைய மன நிலையைச் சேக்கிழார் புலப்படுத்துகின்றார்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணறும் இனித்தமுடையனடுத்தபொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்ற அப்பர் சுவாமிகள் பாடலும் இறைவனுடைய திருக்கோலத்தைத் தரிசிப்பதால் அடையும் இன்பத்தையே கிடைத்தற் கரிய இன்பமாக அவர் கருதினார் என்பதை உணர்த்துகின்றது.
பெரிய புராணம் காட்டும் அடியார்கள் பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களாயும், சமூக அடிப்படையிலே பல்வேறு நிலைகளில்
உள்ளவர்களாயும் காணப்பட்ட போதிலும்
இறைவனடியார் என்ற வகையிலே உயர்வு தாழ்வின்றிச் சமமாகப் போற்றப்படுகின்றனர். சம்பந்தப்பெருமான் அந்தண குலத்தினர்; நாவுக்கரசர் வேளாள குலத்தவர். அந்தனச் சிறுவனாகிய சம்பந்தர் நாவுக்கரசரை அப்பரே! என அன்புடன் அழைக்கின்றார். பாணர் குலத்தினரான திருநீலகண்டப் பெரும்பாணர்
 

சம்பந்தருடன் பல தலங்களுக்குஞ் சென்று அவருடைய பாடல்களைத் தம் யாழில் இட்டு வாசித்து வந்ததாகவும் அறிகிறோம். காரைக்காலம்மையார் வணிக குலத்தினர், திருநீலகண்டர் குயவர், நந்தனாரோ புலையர் இவர்களைத் தவிர அரசகுலத்தவரும், நெசவாளரும் போர் வீரரும் எனப் பல்வேறு குலத்தவரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தம் இறையன் பின் மேன்மையினாலே பேரின்பப் பெருவாழ்வு எய்தினர்.
இறைவனுக்குத் தொண்டாற்றியது போன்று இறையடியார்க்கும் இவர்கள் பணி புரிந்தனர். அத்துடன் அருள் உள்ளம் கொண்டவர்களாய், மக்கள் துயர் களைந்து அவர்களுக்கு ஆறுதல் அளித்தும் வந்தனர். நாயன்மார் புரிந்த அற்புதச் செயல்கள் பலவும் மக்களின் துயர் துடைக்கும் நோக்குடனேயே செய்யப்பட்டமையைக் காணலாம். சுந்தரர் முதலை வாய்ப் பிள்ளையை மீட்டமை, சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தமை, முயலகன் என்னும் நோயால் துன்புற்ற கொல்லி மழவன் மகளின் நோயை நீக்கியமை, பாம்பு தீண்டி இறந்த அப்பூதி அடிகளாரின் மகனை உயிர் பெறச் செய்தமை போன்ற அருட் செயல்கள் அவர்களுடைய இவ்வியல்பினை விளக்கும் சில எடுத்துக் காட்டுகளாகும்.
பெரிய புராணத்தில் நாம் காணும் அடியார்கள் பலர் இல்லறத்தைச் செவ்வனே நடாத்திக் கொண்டே தம் பக்திச் சிறப்பினாலே பெரும் பேறு பெற்றவர்கள். வீடுபேற்றிற்குத் துறவறம் மாத்திரமே உரியதன்று என்பது இவர்கள் வாழ்க்கை மூலம் உணர்த்தப்படுகின்றது. சுந்தரர், திருநீலகண்ட நாயனார் சிறுத்தொண்டர், இளையான்குடி மாறர் என நாயன்மார் பலர் இல்லறத்தை மேற் கொண்டவர்களே. இவர்கள் வீடு பேற்றை அடைவதற்குப் பக்தியே கருவியாக அமைகின்றது.
இத்தகைய இயல்புகள் அமைந்த திருத்தொண்டர்கள் என்றும் போற்றுதற் குரியவர்களே.

Page 21
Gg-caps)
எல்லோருடனும் நாம் அன்பாகப் பழகுதல் வேண்டும். சினம் கொள்ளக் கூடாது. ஒளவைப் பிராட்டி"ஆறுவது சினம்" என்றாள். சினம் கொள்ளக் கூடியதாக ஒருவன் நடந்தாலும் சினம் கொள்ளாது இருத்தலே சிறந்தது. வாக்கினாலே செய்யும் குற்றம் பொய் பேசுதல், மனத்தினாலே செய்யும் குற்றம் சினம் கொள்ளுதல்.
செல்விடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக் காக்கினென் கரவாத் தாலென்
தன்னுடைய சினம் பலிக்குமிடத்து, அதாவது தம்மிலும் வலிமை குறைந்த வரிடத்துச் சினம் கொள்ளலாகாது அதைத் தடுப்பவனே உயர்ந்தவன். ஏனைய தன்னிலும் வலிமை கூடியவர்களிடத்து அச்சினத்தை தடுத்தால் என்? தடுக்காது ஒழித்தால் என்?
சினம் கொள்ளும் போது மனத்திலே பாபத்தை விளைவிக்கும் எண்ணங்கள் பல தோன்றும். கரையளவிற் பொங்கித் தன்னுள்ளே அடங்கு மியல் பின தாகிய பெருநீரையே ஊழி என்று வழங்குதல்போல, தன்னுள்ளே பொங்கியெழுந்து பின்னர் ஆறும் இயல்பினது கோபம் என்றும், அவ்வாறு ஆறாது துன்புறுத்தல், வருத்தல், குடிகோள், கொலை போன்றன செய்தல் பாபம் என்றும் வழங்கப் பெறும். இதுவே "ஆறுவது கோபம் ஆறாதது பாபம்" என்ற மொழியினாற் குறிக்கப்படுகிறது.
நெருப்பானது ஒருபொருளைப் பற்றிய விடத்து அதை எரித்து அழித்துவிடும். அதுபோல உள்ளத்திலே எழுகின்ற சினமாகிய நெருப்பும் சினத்தோடுசம்பந்த முடையவரைத் தகிக்கும். இதுபோன்ற உட்பகை வேறு என்ன உண்டு.
வெகுதானிய வைகாசி)
 
 

பா நவநீதகுமார்
மூங்கிற்பிறந்து முழங்குதீ மூங்கில் முதலறமுருக்கு மாபோலத் தாங்கருஞ் சினத்தித் தன்னுள்ளே பிறந்து தன்னுறு கிளை யெலாம் தகிக்கும் அங்கதன் வெம்மை அறிந்தவர்க் கமையால்
அதனையுள்ளடக்கவும் அடங்காது ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும்
உட்பகை உலகில் வேறுண்டோ
தீயானது சிறிது எஞ்சி நின்றாலும் அது பெரிதாகி வளர்ந்து கெடுதல் விளைவிக்கும். அதைச்சிறிதும் எஞ்சாதவாறு அவியச் செய்தல் வேண்டும். அது போலச்சினமும் சிறிதும் எஞ்சி இராதவாறு நீக்கிவிட வேண்டும். இதைத் தீயெச்சம் போலத்தெறும் என்பார் வள்ளுவர். பிரகாசித்து எரிகின்ற நெருப்பிலே போடுவதை ஒத்த பொல்லாங்கைச் செய்தாலும் அவ்விடத்தில் கோபம்
கொள்ளாது இருத்தலே சாலச் சிறந்தது.
தண்டகவனத்தில் தவம் செய்கின்ற முனிவர்கள் விரும்பியவர்களுக்கு விரும்பியவற்றைக் கொடுக்கும் உண்மையான தவத்தை மேற்கொண்டு இருந்தனர். எனினும் பொறுமையின் திறத்தால் தம் மனத்து மூண்டு எழுகின்ற கோபத்தினை வேரோடு களைந்தவர்கள்
என்கிறார் கம்பர்.
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம் பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால் மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் ஆண்டுஉறை அரக்கரால் அலைப்புண்டார் அரோ

Page 22
சித்தராமர் என்பவர் சொன்ன லாபுரம் என்னும் ஊரில் வாழ்ந்திருந்தார். அவர் பல அறங்களைச் செய்து கொண்டிருந்தார். இவரை இத்தொழிலில் இருந்து விடுவித்து வீடு பேற்று வழியில் செலுத்த வேண்டுமென்று அல்லம தேவர் எண்ணினார். சித்தராமரிடம் சென்று அறிவுரைகள் பலவற்றைக் கூறினர். அல்லம தேவர் கூறிய உரைகளைக் கேட்டுச் சினங்கொண்டார் சித்தராமர் தமது நெற்றிக் கண்ணால் அல்லம தேவரை எரித்து விட நினைத்தார் சித்தராமர். அக்கண்ணைத் திறந்து பார்த்தார். அக்கண் அல்லம தேவரை ஒன்றும் செய்ய முடியாது. ஒளி மழுங்கியது. இதனைக் கண்ட சித்தராமர் ஆணவம் அடங்கியவராகி அல்லம தேவரைப் பணிந்து நல்லவரானார்.
சித்தரா மன்வெகுளி மூண்டிழந்தான் றிக்கண்ணை முத்தனல்ல மன்பால் முருகேசா - நித்தம் மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய பிறத்த லதனான் வரும்
- எத்தகையோராக இருந்தாலும் சினம் கொள்ளாது இருத்தலே மேலானது. இல்லையேல் அந்தச் சினத்தினாற் பல தீமைகள் விளையும்.
நிமிச் சக்கரவர்த்தி உடலோடு தேவலோகம் போக எண்ணினான். இதற்காக யாகம் ஒன்று GleFilu வேண்டி வசிட்டரிடத்தில் அனுமதி பெற்று யாகத்தை ஆரம்பித்தான். அவ்வேளை வசிட்டர் தேவலோகத்தில் ஒரு வேலையாக அங்கு தங்க வேண்டிய தாயிற்று. நிமி வசிட்டர் இல்லாது வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான். வசிட்டர் திரும்பி வந்து பார்த்தபோது வேள்வி நடந்து கொண்டு இருந்தது. வசிட்டர் தாம் யாகம் நடத்த உடன் பட்டதை மறந்து நிமி என் உத்தரவு இன்றி யாகம் செய்தபடியால் நீ உடலைவிட்டு நீங்கக் கடவை என்றார். இதனாற் சினம் கொண்ட நிமி’ நீர் உத்தரவு வழங்கியும் அதை மறந்து வசவுரை
வெகுதானிய வைகாசி)
 
 

வழங் சியதால் நீரும் என்னைப் போல ஆகுக என்றான். இருவரும் உடல் இல்லாது அந்தரத்தில் அலைந்து திரிந்தனர். பல துன்பங்களை அனுபவித்தனர். சினம் செல்லிடம் செல்லாவிடம் என்னும் இரண்டிடங்களிலும் அல்லலை உண்டாக்கும் என்பது இதனால் அறியக் கிடக்கிறது.
தாங்கிய நிமிவதிட்டர் சாபத்தாற்றம்முடல்விட் டேக்கமுற்றாரன்றோ இரங்கேசா - நோக்கினால் செல்லாவிடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதணிற் றிய பிற
தன்சினம் பலிக்காத விடத்து 의 தனக்குக்கெடுதலைச் செய்யும். அது பலிக்கும் இடத்தில் அதைவிடத்திய விளைவுகள் வேறில்லை.
கூர்த்துநாய் கெளவிக் கொளக் கண்டும் தம்வாயாற் போர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை-நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு
சினம் கொண்டு நாயானது கடிக்கும்போது இந்த நாயைத் தமது வாயினால் கடிப்பவர்கள் எவரும் இல்லை. அதுபோலத் தகுதியில்லாத தரமற்ற சொற்களாற் கீழ்மக்கள் வைதாலும் உயர்ந்தவர்கள் அதைக்கருத்திற் கொள்வதில்லை. அவர்கள் கூறிய வார்த்தைகளைத் திரும்பக் கூறவும் மாட்டார்கள்.
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம்.
கல் லா ன து உ ைட ந் தால் மீ ண் டு ம் பழையநிலைக்கு வராது; ஒட்டிக் கொள்ளாது. ஆனால் தங்கம் உடைந்தால் அது மீண்டும் ஒட்டிக் கொண்டு பழைய நிலைக்கு வரும்.

Page 23
உயர்ந்த மக்கள் கோபம் கொண்டாலும் பின்னர் பழைய நிலைக்கு மாறிச் சினத்தை மறந்து விடுவர். ஏனையோர் LI 600 Up LLI நிலைக்குத் திரும்பார். அறிஞர்களுடைய கோபமானது உடனடியாகத் தணிந்துவிடும். நீரிலே அம்பு எய்தால் அந்நீர் தழும்பு எதுவும் இன்றி உடனடியாகவே பழைய நிலைக்கு
மாறிவிடும். அதுபோன்றதே சான்றோர் சினம்.
"சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்
என்னும்ஏமப்புணையைச் சுடும்."
சினம் என்னும் நெருப்பானது தன்னுடன் சேர்ந்தவர்களை மாத்திரம் அன்றி அவருக்குத் துன்பம் வரும் காலத்து ஏமப்படகு போல் உதவும் இனத்தாரையும் சுட்டழிக்கும். தனக்கு மேன் மேலும் துன்பம் செய்பவரை மன்னித்து விடுதல் உயர்ந்த
பண்பாகும்.
திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூரிலே புகழனாருக்கும் மாதினியாருக்கும் புதல்வராக மருள்நீக்கியார் அவதரித்தார். இவரின் தமக்கையார் திலகவதியார். இளமையிலே பெற்றோரை இழந்த மருள் நீக்கியார் திலகவதியாரின் துணையுடன் வாழ்ந்து வந்தார். பலகலைகளையும் கற்று பாண்டித்தியம் பெற்றார் மருள் நீக்கியார். இவர் மனம் துறவுநிலையை நாடிற்று. பாடலிபுரம் என்ற திருப்பாதிரிப் புலியூரில் உள்ள சமண சமயப் பள்ளியிற் சேர்ந்து, சமணத்துறவியாய்த் தருமசேனர் என்னும் நாமம்
பூண்டு விளங்கினார்.
மருள்நீக்கியார் சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகுவதைக்கண்டு கலங்கினார் திலகவதியார். தம்பி மீண்டும் சைவநெறியிற் சேர்ந்து சிவப்பணிபுரிய அருளுமாறு இறைவனை
 

வேண்டினார். இறை அருளால் தருமசேனருக்குச் சூலைநோய் உண்டாயிற்று. சமணரது மந்திரம் மருந்து ஆகியவற்றிற்கு இந்நோய் நீங்காது வருத்தியது. சமணராற் கைவிடப்பட்ட தரும சேனர்
தமக்கையாரிடம் வந்து தன்பிணி பற்றிக் கூறினார்.
திலகவதியார் விபூதி கொடுத்து அதை அணியச்செய்து தீரா நோய் தீர்த்தருளும் வைத்திய நாதனான சிவபெருமானை வணங்குமாறு பணித்தார். திருவதிகை வீரட்டானப் பெருமானைத் தொழுது கூற்றாயினவாறு என்னும் பதிகத்தைப் பாடினார் மருள் நீக்கியார். இறைவன் திருவருளாற் சூலை நோய் நீங்கிற்று. இறைவன் திருநாவுக்கரசு’ என்ற நாமத்தை அவருக்குச் சூட்டினார்.
தருமசேனர் சைவசமயத்தைச் சார்ந்தமை கண்டு வெகுண்டனர் சமணர்கள். திருநாவுக் கரசரைத் தண்டிக்க நினைத்தனர். மகேந்திரப்பல்லவ மன்னன் உடன் பாட்டோடு நாவுக்கரசரைச் சுண்ணாம்பு அறையில் 7 நாட்கள் அடைத்து வைத்தனர் நஞ்சுகலந்த உணவைக் கொடுத்தனர். மதம் கொண்டயானையை ஏவிவிட்டனர். இத்துன்பம் யாவும் நாவுக்கரசரை வருத்தவில்லை. கல்லோடு கட்டிக் கடலில் விட்டனர். அவ்வேளை இறைவனை நினைந்து பதிகம் பாட அக்கல் தெப்பமாக மிதந்து திருப்பாதிரிப்புலியூரை அடைந்தது. இவ்வளவு துன்பங்களைச் செய்த சமணர்கள் மீதோ அன்றி மன்னவன் மீதோ திருநாவுக்கரசர் சினம் கொள்ளவில்லை இத்தன்மை கண்ட பல்லவமன்னன் சைவ சமயத்தவனாகித் திருநாவுக்கரசரைப் பணிந்தான்.
பல்லவர் கோன்வந்து பணியக் கருணை செய்தார் தொல்லை நெறிவாகீசர் சோமேசா - கொல்ல இணர் எரி தோய்வு அன்ன இன்னாசெயினும்
புணரின் வெகுளாமை நன்று.
19)

Page 24
போற்றித் திருவகவல் என்னும் பதிகம் இறைவனது பலவகையான திருப்புகழ்களை எடுத்துச் சொல்வதாக அமைந்தது. வணக்கம், என்பதனை அறிவுறுத்தும் போற்றி என்னும் பதத்தினைப் பெருவரவிற்றாகப் பெற்றிருக்கும்
நிலைமண்டில ஆசிரியப்பாவான மைந்த பாடலாதலின் இது போற்றித் திருவகவல் எனப்பட்டது. சகத்தின் உற்பத்தி என்பது
இப்பதிகத்தின் உள்ளார்ந்த பொருள் எனக் கொள்ளும் வகை சான்றோர் யாரோ குறித்து வைத்த திருவாசகத் திருவுள்ளக்கிடை குறிப்பிடும். இங்கே சகம் என்பது உலகத்திலுள்ள உயிர்களை. உயிர்கள் உடம்புகளைச் சார்ந்து பிறப்பினைப் பெறுபவை. அத்தோற்றமே இங்கு உற்பத்தி என்பதாற் பெறப்படுவது. எனவே சகத்தின் உற்பத்தி என்பது உயிர்கள் உடம்புகளுடனாகித் தோன்றும் தோற்றமென்பது புலப்படும்.
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து'
என்று தொடங்கும் இப்பாடலின் ஆரம்ப பகுதி,
இறைவன் திருவடிகளது அருமை, பெருமை,
எளிமை என்பவற்றைத் தெரிவிக்கின்றது. திருமால் பன்றி வடிவாகி ஏழுலகங்களையும் அகழ்ந்து இளைத்தும் பின் வழுத்தியும் கண்டு கொள்ள முடியாதனவாயின அத்திருவடிகள். திருவடிகளது அருமையை இங்கு உணர்கின்றோம். அந்தத் திருவடிகள் இரண்டு கொண்டு மூவுலகங்களையும் அளந்தான் என்பது கொண்டு திருவடிகளது பெருமை புலப்படுத்தப்படுகின்றது. இறைவனிடந் தம்மை இழந்த அடியவர்களது நிகழ்வுகளில்
 
 

அவனே எளிவந்து கலந்து கொண்ட விடத்துத்
திருவடிகளது எளிமை காட்டப்படுகின்றது.
நான்முகன் முதலா 6 T6ā 6) தொழுதெ ழ' என்பது முதல் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி என்பது வரை இவ்வண்ணமாய அருமை பெருமை எளிமைக் கோலங்களைப் பார்க்க முடிகின்றது. இந்தப் பகுதியினுள் 'யானை முதலா எறும்
பீறாய ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்' என்பது தொடக்கமாக, புல்வரம் பாகிய பல்துறை பிழைத்தும் என்பது வரை உயிர் உடம்புபெற்று மாதா உதரத்து வளரும் நிலை, அவ்விடமிருந்து உலகிற்கு வந்த பின்படுந் துன்பங்கள் காட்டப்படுகின்றன. தாயின் கருப்பையை இடமாகக் கொண்டிருந்து வெளிவந்து உயிர் அநுபவிக்கும் இடர்கள் காட்டப்படுகின்றன. மனைவியை அடைந்து, குடும்பச் சுமையை ஏற்று, அன்பு வழி காட்ட இல் வாழ்வினூடாக இறை சிந்தனை பெற்று, மெய்ப்பொருள் கண்டு துணியும்
நிலை தொடரும். அடுத்து வரும் இரண்டு
அடிகளிலும் இந்த இறை சிந்தனை குறிப்பிடப்படுகின்றது. பின்னர் மயக்க நிலைகள், அயலவர் பேசும் நாத்திகக் கருத்துக்கள், சுற்றத்தவர் ஆரத்தழுவல், விரதங்கள் பொருத்தமானவை என்பாரது உரை, சமய வாதிகளது வாதம், பொய் வாதப் போக்குகள் என்று பற்பல போக்குகளையும் கண்டு அநுபவித்து இறைவன்பால் அன்பு கொண்டவர்கள் நெறிதான் உண்மையானது என்று உறுதி பூணல் பேசப்படுகின்றது.

Page 25
மெய்தரு வேதியன் ஆகி வினை கெடக் கைதர வல்ல கடவுள் போற்றி என்பது தொடக்கம் போற்றி போற்றி 3. u.13. u. G. Li Tib gól என்பது இறுதியாக இறைவனைப் போற்றுவதாக அமைந்துள்ளது. தளராத பேரன்பினை வளர்ப்பவர்களுக்குத் தாயாகி அவர்களை வளர்ப்பவன் மெய்யுணர்வைத் தரக்கூடிய மறையவனாகி வினைகளை நீக்குபவன், மதுரை அரசே, கூடற் குருமணியே தில்லையில் ஆடுவோனே எனக்கு அமிர்தம் ஆனவனே 6600T 55th. கெடுதலில்லாத நான்கு வேதங்களுக்கும் தலைவனே வெற்றிக் கொடியையுடைய சிவனே வணக்கம். மின்னல் ஒளியின் வெவ்வேறு உருவானவனே வணக்கம். கல்லில் நார் உரித்தது போன்று என் நெஞ்சை இளகச் செய்தவனே வணக்கம். பொன்மலை போன்றவனே வணக்கம். படைத்தல், காத்தல், துடைத்தல் என்பவற்றைச் செய்யும் ஐயனே வணக்கம். துன்பத்தை நீக்கி அருள்புரியும் எந்தையே வணக்கம். இறைவ வணக்கம். பளிங்கு போன்றவனே வணக்கம். தேவர்க்கும் அரிய மருந்து போன்றவனே வணக்கம். சொல்லை அறிவைக் கடந்தவனே வணக்கம். என்னையும் ஒருவனாக ஏற்றுப் பெருமை பொருந்திய உன் திருவடிகளை என் தலை மீது வைத்தவனே வணக்கம், வணங்கிய கையினரின் துன்பத்தை நீக்குபனே வணக்கம். தோற்ற ஒடுக்கங்களைக் கடந்தவனே வணக்கம். பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தவனே வணக்கம், நஞ்சை அமுதாய் ஏற்றவனே வணக்கம். சரி பிழை அறியாத நாயினேன் குழைத்துச் சொன்ன இந்த T60) 606) ஏற்றுக் கொள்ளவேண்டும். பாம்பை அணிந்தவனே வணக்கம். எல்லாவற்றுக்கும் மூலமானவனே வணக்கம். பழமையானவனே வணக்கம். என்று மணிவாசக சுவாமிகள் பணிந்து நிற்கின்றார்கள்.
 

உயிர்த் தோற்றத்திலேற்படுந் துன்பம், பிறந்து வளர்வதில் இடையே தொடருந் துன்பம், காளைப் பருவத்துக் கட்டழகு தருந் துன்பம், மனைவாழ்வுத் துன்பம், உண்மை உணர்வு கண்டபின் சூழலினால் ஏற்படுந் துன்பம், என்று இவற்றையெல்லாங் கடந்தபின் தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகும். அநுபவ முதிர்ச்சி அந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். அதன் பின்னரும் குறுக்கே இருக்கும் ஒரு சூழல் தன் பக்கம் ஈர்க்க முயலும் இடர்பாடுகளுட் படுத்த முயலும்.
கடவுளர்களிலே உயர்ந்தவராகக் எண்ணப்படும் திருமாலினாற் கூடக் காணப்படாத திருவடிகள் மெய்யடியார்கள் காண வேண்டி இந்நிலவுலகிற்கு எளிவந்தது. இந்த அகவலின் முற்பகுதி இதனைத் தெளிவுபடுத்துகின்றது. பின்னர் உயிர்கள் முதலானவற்றின் தோற்றம் குறிப்பிடப்படுகின்றது. அவைபடும் இடர்ப்பாடுகள் காட்டப்படுகின்றன. இந்த இடர்ப்பாட்டு மோதல் தெய்வ உண்மையை உணர வைக்கின்றது. இந்த அகவலிலே இந்தச் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. பின்னர், மாயை மாறுபாடுகள் செய்வன, வெவ்வேறு கொள்கையுடையோர் தலையீடு முதலியன காட்டப்படுகின்றன. மாற்றத்திற்குட்படாத அடியவர்கள் தயேயாகி வளர்த்த தலைவனை வணங்குகின்றார்கள். வனக்கங் கூறுவதற்காகவே எடுத்துக் கொள்ளப்பட்ட பதிகம் இது. எண்பத் தேழாவது அடியிலிருந்து வணக்கம் சொல்லிவந்த அடிகள் பல வகையில் அதனைக் கையாண்டார்கள். ஆராமை மீதுார இறுதி மூன்றடிகளிலும் பல தடவை அடுக்கிக் கூற முயன்றுள்ளார்கள். இது அடிகளின் பணிவு நிலையை, தம்மை இழந்துள்ள நிலையைக்
காட்டுவதாக அமையும்.

Page 26
(திருமதி. இ.
சைவசமயிகளாகிய நாம் ஏன் ஆலயத்திற்குச் சென்று வணங்க வேண்டும். ஆலய வழிபாடு எப்படி அமைய வேண்டும் என்று இன்றைய சிறார்களுக்குத் தெளிவான கருத்துக்கள் இல்லாமல் உள்ளது.
ஆலயம் ஆ+லயம் என்று பிரிபடும். இங்கு ஆ. ஆன்மா என்றும் லயம் ஒடுங்குதல் சேர்தல் என்றும் பொருள்படும். அதாவது ஆன்மா கடவுளுடைய திருவடியில் ஒடுங்குதற்குரிய இடம் எனப்படும். இதனை மற்றுமொருவகையாகக் கூறுவர். ஆ+லயம் என்பதை ஆஆண்வம் என்றும் லயம்-ஒடுங்குதல் என்றும் பொருள் தந்து ஆணவம் ஒடுங்கும் இடம் என்றும் கூறுவர்.
இந்த ஆலயங்கள் அமைப்பு விதிகளைக் கொண்டே அமைக்கப்படுகின்றன. ஆலயத்தின் அமைப்பை மண்டபங்கள் தொடக்கம் கருவறை வரை நோக்கினால் ஒவ்வொன்றும் படிப்படியாக குறைந்து கருவறை மிகவும் ஒடுங்கிக் காணப்படும். இது ஆன்மாவின் மன ஒடுக்கத்தை விளக்குகின்றது. பரந்த ஆசைகளையுடைய ஆன்மா படிப்படியாக ஆசைகளைக் குறைத்து இறைவன் மேல்மட்டும் பற்றினை உடையதாக வருகின்றது.
இவ்வாறு பல சிறப்பம்சங்களை உடைய ஆலயங்களை ஏன் வணங்க வேண்டும்? ஆலய வழிபாடு அவசியமா? என வினாவும் போது அதற்கான விடை பகர வேண்டிய அவசியம் இருக்கின்றது. உலகத்திலே பரந்து காணப்படும் இறைவனைப் பக்குவ நிலை பெற்ற ஆன்மாக்கள் அதாவது மெஞ்ஞானிகள் கண்டு களிக்கின்றனர். பக்குவநிலை பெறாத ஆன்மாக்கள் அவ் விறைவனை உருவ வணக்கத்தின் மூலம் வழிபடும் இடம்தான் ஆலயம் ஆகும். பசுவின் உடம்பிற் செறிந்த பாலை அதன் மடியில் இருந்து பெறுவதுபோல இறைவனின் அருளைப் பெறும் இடமே ஆலயம் ஆகும். அதனாலேதான் சான்றோர்கள் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் திருக் கோயிலில்லாத் திருவிலூர் ஊரல்ல அடவிகாடு என்றும் கூறுகின்றார்கள்
ஆலய வழிபாடு எப்படி அமைய வேண்டும் என்று நோக்குவோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று ஒளவைப்பிராட்டியும் கூறியுள்ளார். கோயிலுக்கு செல்வோர் குளித்துத் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து சிவ சின்னங்களைத் தரித்துக் கடவுளை மனதில் வைத்து ஐந்தெழுத்தோதிச் செல்ல வேண்டும். கோயிலுக்குச்
 
 

ஈத்திய சீலன்
செல்லும் போது கையுறை கொண்டு செல்ல வேண்டும். ஆலயங்களுக்குச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லல் ஆகாது. எம்மால் இயன்ற ஒரு பச்சிலையோ அல்லது பூவோ அல்லது கற்பூரமோ, தேங்காயோ ஏதாவது ஒன்றைக் கொண்டு செல்லலாம்.
கோயில் வீதியிற் பிரவேசித்தவுடன் கால்களைக் கழுவிக் கொண்டு தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசிக்க வேண்டும். அடுத்துக் கோயிலினுள் நுழைவதற்கு நந்தியெம் பெருமானிடம் சிவனை தரிசிக்க அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் உள்ளே சென்று பலிபீடத்துக்கு இப்பால் நின்று நமஸ்கரிக்க வேண்டும். நமஸ்காரம் பண்ணும் போது ஏகாங்கம், திரியாங்கம், பஞ்சாங்கம் ஆகிய முறைகளிலே வணங்கலாம். மார்பில் கைகளை வைத்து வணங்கல் ஏகாங்கம் என்றும், தலையில் கைகளை வைத்தல் திரியாங்கம் என்றும் ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் பட வணங்குதல் பஞ்சாங்கம் என்றும் எட்டு உறுப்புக்கள் நிலத்தில் பட வணங்குதல் அட்டாங்கம் என்று அழைக்கப்படும்.
அடுத்துக் கோயிலைப் பிரதட்சணம் பண்ணல் வேண்டும். கோயிலைச் சுற்றிவரும்போது மூன்றுமுறையாக பிரதட்சணம் செய்யலாம் சாதாரணமாக, அங்கப் பிரதட்சணமாக, அடிஅழித்துப் பிரதட்சணமாக வரலாம். இவ்வாறு கோயிலை வலம் வரும் போது வீதிகளில் உள்ள மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும். திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தால் வணங்குதல் ஆகாது. இவ்வாறு வீதி வலம் வருதல் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு என்று அமையலாம். ஒருதரம் இரண்டு தரம் செய்தல் ஆகாது.
மூல மூர்த்திகளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் பூசைகள் நடைபெறும் போது தரிசித்துக்கொள்ள வேண்டும். இங்கு காட்டப்படும் கற்பூரதீபம் ஆன்மாவின் மலத்தைப் போக்கி ஞானத்தை விளக்கி மெஞ்ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்வது ஆகும். இவ்வாறாக வணங்கி இறுதியாக சண்டேசுரரை வணங்க வேண்டும். நாம் வழிபட்டதன் பயனை எம்பெருமானிடம் பெற்றுத் தருமாறு கேட்டு அவரது தியானம் கலையாமல் மூன்று முறை கைதட்டிச் சென்ற திசையிலேயே திரும்புதல் வேண்டும்.
அதன் பின் விபூதி, தீர்த்தம், சந்தனம், பூ, பத்திரம் என்பவற்றைப் பிர்சாதமாகப் பெறலாம். அதன் பின் சிறிது நேரம் இருந்து பஞ்சாட்சர செபத்தினைச் செபித்து விட்டு வீடு செல்லலாம்.

Page 27
பூணுரீலபூனி ஆறு
ஆன்மாக்களாகிய நமக்கு இந்த மனித சரீரம் எதன் பொருட்டுக் கடவுளாற் கொடுக்கப்பட்டது என்பதையும், இது எவ்வியல்பு உள்ளது என்பதையும் நாம் யோசித்தல் வேண்டும். நாம் கல்விகற்றுத் தரும நெறியினாலே பொருளைத் தேடிவறியவர்களுக்குக் கொடுத்து நாமும் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்களோடு உண்டுடுத்து வாழ்தற்கும், புகழ் புண்ணியங்களைச் செய்தற்கும், எவ்வுயிர்களிடத்தும் அன்புடையர்களாய் மனம் வாக்குக் காயங்களினாலே தம்மை வழிபட்டு நல்ல கதியை அடைதற்கும், ஆகவே கடவுள் மனித சரீரத்தை நமக்குத் தந்தருளினார்.
கடவுளையும், புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுகதுக்கங்களையும் பகுத்தறியும் அறிவு மனிதர்களிடத்து இருத்தலால், அஃதில்லாத விலங்கு பறவை முதலிய பிறப்புக்களிலும் மனிதப்பிறப்பு மிக உயர்ந்தது. நாம் கீழுள்ள பிறவிகளையெல்லாங் கடந்து இம்மனிதப் பிறப்பை அடைவது மிகுந்த அருமை. இந்த அருமையாகிய மனித சரீரமோ அழிவுள்ளது. ஆதலினால், இது உள்ள பொழுதே இதனாலே தேடற் பாலனவாகிய கல்விசெல்வங்களையும் புகழ் புண்ணியங்களையுந் தேடிக்கொள்ள வேண்டியது அத்தியாவசியகமாம்.
பலவித செல்வங்களையும் பெற்று அநுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மனிதர்களுக்கு மூப்பும் மரண வேதனையும் வருகின்றன. இவைகளோடு நோயும் வந்து சேர்ந்தால் இவர்கள் படும்பாட்டைச் சொல்லவும் வேண்டுமா! அப்பொழுது, பகுத்தறிவுள்ள மனிதர்கள் செய்வன இவை தவிர்வன இவை என்று
குதானிய வைகாசி)
 
 

JØDGRADU J/TGØD AD
முகநாவலர்.
அறியாது, பிறருடைய சகாயத்தை விரும்பி, மிகுந்த வருத்தப்படுகின்றார்களே! மனைவி மைந்தர் முதலாயினோர் செய்யுஞ் சகாயங்கள் தாமும் அத்துயரத்தைத் தாங்கவல்லனவா இல்லை இல்லை. இவ்வுடம்பின் நிலையாமையை நினைக்கும் பொழுதே நமக்கு ஏக்கம் உண்டாகின்றது. ‘நேற்றைக்கு இருந்தான் இன்றைக்கு இறந்தான்' என்று கேட்டவுடன் மனம் நடுங்குகின்றது. நேற்று மணமகன் இன்று பிணமகன் ஆதலையும் எங்கள் கண்களே காண்கின்றன. எத்தனையோ பெரிய அரசர்களுடைய சரித்திரங்களைக் கேட்டிருக்கின்றோம்; எத்தனையோ பெரிய வித்துவான்களுடைய நூல்களைப் படிக்கின்றோம். இவர்கள் எல்லாரும் இறந்தவர்களேயன்றி உயிரோடிருந்தவர் ஒருவரும் இலர்.
இப்படி இந்த உடம்பு அநித்தியமும் துக்கமயமுமாயிருத்தலாலும், இதனாலன்றி வேறொன்றினாலும், நமக்கு ஈடேற்றம் இல்லாமையினாலும், யாவரும் இவ்வுடம்பு உள்ள பொழுதே கல்வி செல்வங்களையும், அவற்றினாலே புகழ் புண்ணியங்களையும், சம்பாதித்தல் வேண்டும். செல் வங்க  ைள ச் சம் பா தி க் கும் போது , இறப்பில்லாதவர்கள் போலவும், தருமத்தைச் செய்யும்போது யமன் கையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போலவும், எண்ணுதல் வேண்டும். இந்த நினைவிருந்தால் வாழ்நாள் வீணாகமாட்டாது; நிலையில்லாத மனித சரீரத்தாற் பயனை அடைந்தவரும் இவரேயாவர்.
நன்றி நாவலர் பாலபாடம் மூன்றாம் புத்தகம்.

Page 28
| திருமுருக. கிரு
நினைக்கும் தன்மையுடையவன் மனிதன் நினைவை வெளிப்படுத்துங் கருவி வாய்: உணவுகளை அருந்துகின்ற வாய்க்குப் பெருமை கிடையாது. வாயிருந்தும் விலங்குகளை வாயில்லாத பிராணிகள் என்று கூறுகின்றோம். கருத்துக்களை வெளிப்படுத்தி வசனிக்கும் வாயை உடையவன் மனிதன்.
இந்த உடம்பையும், வாக்கையும், நமக்குத் தந்தவன் இறைவன். இவைகள் தாமே வந்து அமைவதில்லை. நாமேயும் எடுத்துக் கொள்வதில்லை.
"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்" என்கிறார் அப்பர்.
எனவே, நினைக்க நெஞ்சையும், வசனிக்க வாயையும், இந்த இரண்டையும் தாங்கி நின்று தொழிற்படுகின்ற உடம்பையும் தந்த இறைவனை நாம் ஒவ்வொருவரும் நன்றி மறவாமையின் பொருட்டுப் பூவும் நீரும் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
பூ-பூர்த்தி, ஜா-உண்டாக்குவது. மலமாயா கன்மாக்களைப் பூர்த்தி செய்து, சிவஞானத்தை யுண்டாக்கும் புனிதமான செயல் பூஜா எனப்படும்; பூஜா என்ற சொல் பூஜை என வந்தது.
பூஜைக்கு முக்கியமான சாதனங்கள் பூவும் நீருமாகும்.
"புண்ணியஞ் செய்வார்க்குப்பூவுண்டு நீருண்டு
அண்ணலு மதுகண்டு அருள்செய்யா நிற்கும்"
 
 

பானந்தவாரியார்
நல்ல மலர்களைக் கொண்டு இறைவனை நாள்தோறும் அர்ச்சனை செய்யவேண்டும். அதுவே மெய்யும் கையும் பெற்றதற்குப் பயனாகும்.
உலகில் செல்வமும் சீரும் படைத்துச் சிறப்பாக வாழ்கின்ற ஒருவனைக் கண்டபோது, " இவர் முற்பிறப்பில் நல்ல பூ வெடுத்துப் பூஜை செய்தவர்'என்று இன்றும் கூறுவார்கள். தண்ணிரையே சிவலிங்கமாகத் திரட்டி அம்பிகை
பூசித்த திருத்தலம் திருவானைக்கா
விநாயகர் சிவபூஜை செய்த திருத்தலம்
திருச்செங்காட்டங்குடி, அதனால் அது கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது.
சூ ர ச ங் கா ர த் தி ன் பெ ா ரு ட் டு முருகவேள் படைகள் சூழப்போகும் வழியில் மண்ணியாற்றங் கரையில் சிவ பூஜை செய்த இடம் திருச்சேய்ஞலூர், சூர சங்காரம் புரிந்து திரும்பியபோது தென் கடற்கரையில் ஐந்து சிவலிங்கங்கள் வைத்து, முருகவேள் பூசித்தனர். அர்ச்சனை செய்யும்போது அமரர் வேண்ட, கையில் உள்ள மலருடன் திரும்பிக் காட்சி கொடுத்த கோலந்தான் திருச்செந்தூர் முருகன் திருவுருவம்; இன்றும் செந்திலாண்டவன் பின்புறம் ஐந்து சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஆராதனை செய்யும்போது பின்புறம் கொண்டுபோய் ஆராதிக்கின்றதை இன்றும் திருச்செந்தூரில் g5 IT 6ŬOT 6) ITL). இப்படி முருகன் வழிபட்ட திருத்தலங்கள் திருமுருகன் பூண்டி, வயலூர் முதலியன.
சக்கரம் பெறும்பொருட்டுத் திருமால் நாள்தோறும் ஆயிரந்தாமரை மலர்களால் அரனை

Page 29
அர்ச்சித்தார். அதுவே திருவிழிமிழலை; பிரமதேவர் பூசித்த திருத்தலம் பிரமபுரம், இந்திரன் பூசித்த திருத்தலம் கண்ணார் கோயில்.
நண்டு பூசித்தது; சிலந்தி பூசித்தது; பாம்பு பூசித்தது; குரங்கு பூசித்தது; அணில் பூசித்தது; காகம் பூசித்தது; (குரங்கணிமுட்டம்)
பெரிய உருவமுள்ளது யானை, சிறிய உருவமுள்ளது எறும்பு. எறும்பு முதல் யானை யீறாக என்று கூறுவர். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திரு எறும்பூர் எறும்பு பூசித்த திருத்தலம். யானை பூசித்த திருத்தலம்,
திருவானைக்கா.
எறும்பும் யானையும் பூசித்த இத் தலங்களைக் கண் கூடாகக் கண்டும் மனிதர்கள் இறைவனைப் பூசிக்காமல் உண்டு உடுத்து உலாவி வினே Sir Huså கழித்துக் காலன் வாய்ப்படுகின்றனர்.
இவைகளைக் கண்டு வருந்தி அதிவீரராம பாண்டியர் பாடுகிறார்.
சிவகருமஞ் செய்யார் திருநீறு சாத்தார் தவநிலையாஞ் சைவநெறிசாரார் - அவனிதனில் கான்பரந்த பச்சைக் களாநிழலைக் கைதொழார்
ஏன்பிறந்தார் மானிடராய் இன்று
இறைவனைப் பூசிக்காத புல்லர்களை மனிதர்கள் என்று கூறக்கூடாது. அவன் தந்த கையால் அவனை வழிபட மறுத்தால் நன்றிகொன்ற பாவம் விடாதுதானே!
எறும்புகடை யானைதலை ஈசனைப் பூசித்துப் பெறுங்கதிகண்டும்தேறார் பேய்கள் - அறிந்த உலகத்தார் உண்டென்பதில்லென்பான் வையத் தலகையார் வைக்கப் படும்
-முதுமொழிமேல் வைப்பு.
(வெகுதானிய வைகாசி
 
 

கண்ணபிரான் மகப்பேறு வேண்டி சிவபூஜை செய்தார். அதனால் பிறந்த மகனுக்குச் சாம்பவான் என்று பெயரிட்டனர்.
அர்ச்சுனன் சதா சிவபூஜை செய்தனன். சிலர் கேட்கின்றார்கள், “எங்கள் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் அப்போது பூஜை செய்யலாமா?” என்பார்கள். அர்ச்சுனன் தன் மகன் அபிமன்யு மாண்ட அன்றிரவு சிவபூஜை செய்தான் என்று மகாபாரதம் பேசுகின்றது.
முன்னே செய்த பூஜையின் பயன் இப்போது வந்து உதவுகின்றது. இப்போது பூஜை செய்தால் மறுமைக்கு வந்து உதவும். முன்னே செய்தவிளைவு இப்போது உணவுக்கு வருவதுபோல் எனவுணர்க. 'தொலினே ஜே ஸின பூஜா பலமு' என்று தியாகையர் பாடுகின்றார்.
பழங்காலத்தில் வசிட்டர் பராசரர் முதலிய மகரிஷிகள் அனைவரும் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார்கள். அந்த ஆலயங்கள் ஆங்காங்கு இன்றுங் காட்சி தருகின்றன.
அரசர்கள் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார்கள் "இறைவனைப் பூவும் நீரும் கொண்டு பூசிப்பர். திருக்கைலாய மலைக்குத் தடையின்றிச் செல்வார்கள். அவர்கள் பின்னே மெல்ல நானும் போய் விடுவேன்’ என்கிறார் அப்பமூர்த்திகள்.
'போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்"
பிறவியில் இழிந்தது நாய்ப்பிறவி யென்பார்கள். நாயிற் கடையேன் என்பார்கள். இத்தகைய இழிந்த நாய்ப்பிறவி எனக்கு வேண்டும் என்று விரும்புகின்றார் ஒரு அன்பர். அந்த நாய்ப்பிறவி எப்படி யமையவேண்டும்? கடைவீதி சுற்றும் அங்காடி நாய்ப் பிறவியன்று.

Page 30
"தினந்தோறும் சிவபூசை செய்து உணவு அருந்தும் அடியார்கள் உண்ட எச்சிலையில் உள்ள சேடத்தை யுண்ணும் நாயாய்ப் பிறக்கவேண்டும்” என்கிறார். இது எதனைக் குறிக்கின்றது? சிவஜையின் சிறப்பைத் தெரிவிக்கின்றது.
ஈயாப் பெரும்புல்லர்க்கே இதஞ்சொல்லியிரந்துழல்வேன் மாயாப் பிறவியறுக்கும் சிவபெரு மான்பதம் என்று ஓயாமல் பூஜைசெய்துண்ணன்பர் சேடத்தை உண்ணும்ஒரு நாயாய்ப் பிறந்திலனே அருணாபுரி நாட்டினிலே,
அன்பர்கள் மறவாமல் மனத்தில் அமைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டு, உயர்ந்த உண்மையானவை. அவையெவை? அறவழியில் செலவழித்த பொருள் நம்முடையவை. பூஜையில் செலவழித்த நேரம் நம்முடைய நேரம்.
எல்லா நலன்களும் சிவபூஜையால் ஒருவனுக்குக் கைகூடும். எண்ணிய எண்ணங்கள் யாவும் ஒருங்கு எய்தும். அரிய கருமங்களையும் செய்து முடிக்கலாம். உடல் நலம் உள நலன் உணர்வு நலம் ஆகிய அரிய நலன்களும் விளையும்.
உமாதேவியார் இடப்பாகம் பெறுவதன் பொருட்டு இறைவனைக் கச்சியம்பதியில் வந்து சிவபூஜை செய்தார் என்ற இனிய வரலாற்றை ஈண்டு சிந்தியுங்கள்.
எண்ணில ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும் உண்மை யாவது பூசனை யெனவுரைத் தருள அண்ண லார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து
மார்க்கண்டேய முனிவர் மறலியை வெல்ல வேண்டித் திருக்கடவூரில் சிவபூஜை செய்தார் என்பது உலகறிந்த உண்மை. சிவமூர்த்தி அவர் செய்த சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு மறலியை யுதைத்து என்றும் பதினாறு ஆண்டாக
 

வாழுமாறு மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்தார். இதைவிடச் சிவபூஜைக்கு மேலான சான்று என்ன வேண்டும்?
திருமால் வைகுந்தபதியாகத் திருமகளுடன் வாழ்கின்ற பெருவாழ்வும் பிரமதேவர் படைப்புத் தலைவராக நாமகளுடன் சத்தியவுலகில் தாமரைத் தவிசில் வீற்றிருக்கும் அரும் வாழ்வும், பொன்னுலகில் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ, ஐராவதம், உச்சைச்ரவம், காமதேனு, கற்பகமரம், சிந்தாமணி, சசிதேவி, அரம்பையர்கள் ஆகிய வைகளுடன் வாழும் உயர்நலமும் சிவபூஜையால் கிடைத்தன என்பதை உணர்தல் வேண்டும்.
வண்டுளறுந் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும் புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும் அண்டர்தொழி வாழுன் இறுமாப்பும் ஆலாலம் உண்டவனைப் பூசித்த பேறென்றுணர்ந்திலையால்
ஆ க வே ம னி த ப் பிற ப் பெ டு த் த ஒவ்வொருவரும் இறைவனுடைய திருவடிவைத் தங்கள் தகுதிக்குத் தக்க அளவில் அமைத்து நல்ல மலர்களை அன்புடன் இட்டு உள்ளங் குழைந்து உருகித் துதிசெய்து நாள்தோறும் பூசிக்க வேண்டும்.
பூஜைக்கு இரு சிறகுகள் வேண்டும். ஒன்று அன்பு: ஒன்று ஆசாரம்.
g In fíggirønb/II6 f;GDIBÓ:DT6JIÍ6) னே நரேநரே ஒண்டொடி மோகா நமோநமோ எனநாளும் உன்புகழே பாடிநாணினிஅன்புடன் ஆசார பூஜை செய் துய்ந்திட வீணாள்படாதருள் புரிவாயே"
கொம்பனையார் திருப்புகழ்
நன்றி வாரியார் விரிவுரை விருந்து.

Page 31
r
ஒரு சிறிய
ஓராண்டைப் பூர்த்தி செய்துள்ள
நிமிர்ந்து பார்ப்பதைப் புன்னகை அடைகிறீர்கள் என்பதை யாம் உணர் செலவும் பெருகும் என்பதை நீங்கள் தான். ஒவ்வொருவரும் சந்தாதாரரா? எமக்குத் தெரியும்.
10 GกงC:
அனுப்ப வேை C. NAVANEET Gnanavairavar 42, Deva Grandpass, ( Sri L.
இலங்கையில் வருடச்சந்தா ரூபா 2 ஏனைய நாடுகளில் 15 USS
வெகுதானிய வைகாசி)
 
 

ப தகவல்
சைவநீதி உங்களைப் பெருமிதத்துடன் புடன் வரவேற்கிறீர்கள் பெருமை கிறோம். வளர வளரப் பராமரிப்புச் அறிவீர்கள் என்பதும் யாம் அறிந்தது கி உதவ விரும்புகின்றீர்கள் என்பதும்
200/-
அல்லது ரலிங் பவுண்
ண்டிய முகவரி THAKUMLAR Thevasthanam is Lane, Dolombo-14. anka
7)

Page 32
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை தெய்வத்தின் மேற்தெய்வம் இல்லெ மைவைத்த சீர்திருத் தேவாரமும் திரு
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்
(வெகுதானிய வைகாசி)

யதிற் சார்சிவமாம் னுநான்மறைச் செம்பொருள்வாய்
நவாசகமும்
றாளெம் உயிர்த்துணையே

Page 33


Page 34
48B, புளூமன்டோல் விதி கொ 量、GL@
Printed by Unie Ait CPV
 
 
 

இதழ் சைவதி நிறுவனத்தினரால் ழும்பு - 3 என்னும் முகவரியிலுள்ள
■28-0cm-15@cm ○cm_cm--夢」
Ltd. Colonel 395