கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1998.06

Page 1


Page 2
சிவமய
6O ප්‍රේණ6′′ ′′
பொருளடக்கம் :
10.
குறிக்கோளிலாது கெட்டேன்
ஆசிரியர்
திருவாதவூரடிகள்
சிவ சண்முகவடி
திருவடித் தீட்சையும் ஞானாபதேசமும் பெற்றது
வித்துவான் வ. ெ ܡ
திருவாசகத்திற் கிடைக்கும் மணிவாசகர் பற்றிய வரலாற்றுச் செய்திக திருமதி. ஞானே
திருவாசகத்தில் உவமை
சைவப்புலவர் தி
திருவாசகத் தமிழ்
முருக வே. பரம
திருவாசகச் சிந்தனைகள்
திருச்சதகம்
பண்டிதர் சி. அட்
அறநெறி நட்பு
செ. நவநீதகுமார்
திருவிளையாடற் புராணம் இந்திரன் பழி தீர்த்தமை
கூடலான்
சிராத்தம்
பூரீலபூரீ ஆறுமுக!

நீதி
ਯ667
6i ஸ்வரி சோமசுந்தரம்
ருமதி. இரத்தினம் அப்புத்துரை
நாதன்
ப்புத்துரை
நாவலர்
12
15
18
22
25
28

Page 3
胡
ce
மேன்மைகொள் சைவரி
6ն ՄՀ:
மலர் 2 வெகுதானிய ஆனி சைவசமய வள
கெளரவ ஆசிரியர் சைவப்புலவர்மணி வித்துவான் திரு. வ. செல்லையா
நிர்வாக ஆசிரியர் சிவபூஞரீ பால ரவிசங்கரக் குருக்கள்
திரு.செ. நவநீதகுமார்
42, டிவாஸ் ஒழுங்கை, கிராண்ட் பாஸ், கொழும்பு 14
தொலைபேசி: 423895
ஒவ்வொரு செயலு
சித்தியடைவதற்கு, தொழ செயற்படுகின்றோமோ அ6
நாம் மண்ணிற் பிற இம் மண்ணுலகிற் பிறவ ஏங்குகின்றனர். இந்தப் கொள்கின்ற ஆறு' என்ட பெறுவதற்கு ஏற்ற இடம் பூ
எண்ணரிய பிறவி மானிடராதல் அரிது’ என் கிடைத்தது இறைவனை நாவலர் பெருமான் கூறியு உடுப்பது உறங்குவது தா வழிபாடு என்பன பற்றிச் சி கொண்டு இருக்கிறோம்.
பாலனாகக் கழிகிற ஆகியவற்றுடன் நிறைவுற வாழ்வில் மூழ்கிப் பல துன் அணைக்கிறது. நோய் ெ வாழ்க்கை, குறிக்கோள் இ ýITáváOTTIůe
Glosaarinities
கோலனTப் என்கின்றார். ஆதலால் இ இறைவனைத் தியானித்து
 
 

9
FILOLULò தி விளங்குக உலகமெல்லாம்
வநீதி
ார்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 3
க்கும் ஒரு குறிக்கோள் உண்டு. பரீட்சை எழுதுவது பில் செய்வது பொருளிட்டுதற்கு நாம் எதை நினைத்துச் தை அடைவது தான் குறிக்கோள்.
ந்துள்ளோம். பிரமன், திருமால் போன்ற தேவர்கள் தாமும் ாது நாட்களை வீணாகப் போக்குகின்றோம் என்று பூமியின் சிறப்புத்தான் என்ன? "இநதப் பூமி சிவனுய்யப் Iர் மணிவாசகசுவாமிகள் வழிபாடு செய்து முத்திப் பேறு மிதான்.
களில் மானிடப்பிறவி எடுத்துள்ளோம். "அரிது அரிது பது ஒளவைப்பிராட்டியின் வாக்கு "இந்தச் சரீரம் நமக்குக் வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாகும்” என்று வள்ளார். பூமியிலே மானுட ஜென்ம மெடுத்த நாம் உண்பது ன் வாழ்க்கை என்று எண்ணுகிறோம். இந்தச் சிந்தனை, ந்திக்காது, இறைவனைப் போற்றாதே ஆற்ற நாட்போக்கிக்
து ஒருபருவம், சிறுவன் என்ற அப்பருவம் கல்வி விளையாட்டு வாலிபக் கோலம் வருகிறது. இது இல்லறம் என்னும் குடும்ப பமுளன்று கலங்கிடும் வேளை மூப்பு என்னும் வயோதிபம் ாடர்கிறது. வேதனை கவலையுடன் நாள்கள் கழிகின்றன. ல்லாது கெடுகின்றது. இதை அப்பர் சுவாமிகள் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மாதம் கழிந்த நாளும் பிணியொடு மூப்பு வந்து * கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன்” ாமை, வாலிபம், முதுமை என்ற வேறுபாடு இன்றி எப்போதும்
வழிபாடு செய்ய வேண்டும்.

Page 4
சிவ சண்முக
திருச்சிற்றம்பலம்
உரியேன் அல்லேன் உனக்கடிமை
உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும் தரியேன் நாயேன் இன்னதென்று
அறியேன் சங்கரா கருணையினால் பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப் பிரியேன் என்றென் றருளியவருளும் பொய்யோ எங்கள் பெருமானே.
(திருவாசகம் எண்ணப் பதிகம் 2)
சிவபெருமானுக்கு நஞ்சைக் கொடுத்த தன்மையால் தன் நாயகனாகிய கடலோடு கலக்கும் வாழ்வையே நீத்தது வைகை. பாண்டி நாடு பலவளம் பெருகப் பாய்வது வைகைநதி, பாண்டி நாட்டில் பலவளம் செறிந்த ஊர் திருவாதவூர். ஆங்கு சைவநெறித் தலைவராக விளங்கியவர் சம்புபாதாசிரியர். அவருடைய ஒப்பற்ற மனைவியார் சிவஞானவதியார். அவர்களிடத்தில் எம்மை யாளுடையான் அன்பு இதய தாமரைகள் எல்லாம் செம்மையாய் மலர ஞான தினகரர் உதயஞ் செய்தார். திருவாதவூரர் என்று பெயரிட்டார்கள். சிவபிரானின் நல்லருளால் திருவாதவூரர் தமது பதினாறு வயதினுள்ளளே சிவ கலை முதலாக அனைத்துக் கலைகளையும் கற்றுணர்ந்தார்.
அரிமர்த்தன பாண்டிய மன்னன் அவர் பெருமையை ஆப்தர்கள் சொல்லக் கேட்டான். திருவாதவூரரைத் தன் மாளிகைக்கு அழைத்தான்.
அகலா நண்பாயினான்.
அரசன் திருவாதவூரரின் தகுதியை அறிந்து கொண்டான். செங்கோலை முறை செலுத்தும் முதன் மந்திரிப் பதவியை வழங்கினான். மற்றைய
 
 
 

வடிவேல்
மன்னர்களும் மந்திரியாரை நன்கு மதிக்கத் ‘தென்னவன் GTLDTITULUI GÖT” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தான்.
திருவாதவூரர் 9-6085 வாழ்விலோ அரசவாழ்விலோ பயனிலை என்று தேர்ந்தார். ஆன்ம விசாரம் கொண்டார். சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டார். ஞான குருபரன் திருத்தாள் சென்று கூடுதல் வேண்டும் என்று எண்ணங் கொண்டிருந்தார். அதற்குப் பொருத்தமாகப் பக்குவான்மாவைப் பரகதிக்குச் செலுத்தும் பிரேரக சத்தி போலப் பாண்டியன் திருவாதவூரருக்குத் தானாகவே உதவ முன்வந்தான். நாற்பத்தொன்பது கோடி பொன்னினை அவர் கையில் அள்ளிக் கொடுத்தான், சோழ நாட்டுக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தான். ஒரு மங்கல தினத்தில் திருவாதவூரர் பயணத்தை மேற்கொண்டார். குதிரைக்கொள்வனவிற்கு வாதவூரர் செல்லவில்லை என்பதை
"என்றுமுள பொன்றுமுட லென்னுநகர் தோறுஞ் சென்றவழி மாறியொரு தெய்வவழி செல்வார்"
என்று கடவுள் மாமுனிவர் உய்த்து உணர வைத்துப் பாடுவார்.
குருபரன் திருத்தாள் சென்று கூடலே குறிக்கோளாகக் கொண்ட வாதவூரருக்குத் திருப்பெருந்துறை நல்ல வாய்ப்பாக வாய்த்திருந்தது. குருந்த மர நீழலில் தேவர் பரவும் பரமர் தெய்வ சபையைக் கண்டார். காதல் கொண்டார். "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே "என்னும் இலக்கணத்திற்குத் திருவாதவூரர் இலக்கியமானார்.
பரமாசாரியர் பக்குவான்மாவின் மீது பரிந்து அருட் பார்வை செய்தார்.

Page 5
-
"தண்டமிழ்பாடும் அன்பர் செவிப்புலன் வழியே
சிந்தை உற மெய்ஞ் ஞானமாம் அஞ்செழுத்தைத் திருவாய் மலர்ந்தார்.
மருவு மிங்கிவர் சென்னியி லிருதாள் மகிழ வைத்தனர் மதி நதி முடிப்பார்."
திருவாதவூராரிடத்தில் முன்னுள பசுகரணங்கள் மாய்ந்தன. சிவகரணங்கள் தோன்றப் பெற்றவரானார். அத்தனார் அறிவரும் ஆகமப் பொருளைத் திருவாய் மலர்ந்தருளினர். அமல வாசகம் கேட்டு அகமகிழும் பத்தரானார் வாதவூரர். ஆவியும்உடலும் உடைமை எல்லர்ம் ஆட்கொண்ட வரிடத்தில் ஒப்புக் கொடுத்தார். ஞான நல்லறிவே கண்ட வித்தகர் முத்தரானார்.
தமிழ் வளர்க்கும் பாண்டிய மன்னன் சேனாவீரர்கள் சொல்லக் கேட்டான், முதலமைச்சர் குதிரைகள் கொள்வனவு செய்யவில்லை. திருப்பெருந்துறையில் கோவணங் கொண்டார். பொங்கொளிப் பூனாடை பொருள் எல்லாம் தொலைத்து விட்டார். "கொற்றவன் கடுங்கோபங் கொண்டான். "வல்ல குதிரைகள் வாங்கக் கொடுத்த பொருளைக் கவரும் பொருட்டுக் கெடுமதியார் சொல் கேட்டு மயங்கிப் போய் விட்டார். இந்த ஒலையைக் கொடுத்துக் கைக்கொடு வம்மின்” என்று கடுநடைத் தூதருக்குக் கட்டளையிட்டான் காவலன்.
முதலமைச்சர் காவலன் முன்பு வந்து காட்சி கொடுத்தார். வாதவூரரின் மந்திரிப் பான்மையைப் பார்த்து மன்னன் மனம் மகிழ்ந்தான். மந்திரியார் கொடுத்த மாணிக்கமும் அவன் மனத்தை மயக்கி விட்டது. கோபம் ஆறிய கொற்றவன்; “குதிரை கொள்ளச் சென்ற இடத்தில் நிகழ்ந்த செய்தி என்ன? செப்பும்.” என்றான். “அரசே ஆவணி மாத மூல நற்றினத்தில் அசுவங்கள் அணிதிகழ் மதுரைக்கு ஏகும். 'என்றார். அமைச்சரைப் பாராட்டிய அரிமர்த்தன பாண்டியன் அரண்மனைக்குச் செல்ல அனுமதி வழங்கினான். தம்பெரு மனையிற் சென்று தாபதர் தங்கி இருந்தார்.
ஆவணி மூலம் வந்தது. அன்று அழகிய
குதிரைகளும் வந்தன. எங்கும் திருநீறும் திருவைந்தெழுத்தும் தழைத்து ஓங்கின. தேவர்கள்
 

குதிரை வீரர்களாக வந்தார்கள். சோமசுந்தரப் பெருமான் ஆரிய தேசத்துக் குதிரை வாணிகத் தலைவராகக் குதிரைக் கூட்டங்களை நடாத்தி வந்தனர்.
அரிமர்த்தன மன்னன் அனைத்தையும் பார்த்தான். குதிரை வணிகர் தலைவரைப் பார்த்து இப்படியும் ஒர் அழகன் இந்தப் பூமியில் இருப்பானா என்று எண்ணங் கொண்டான். குதிரை வீரர்களின் எக்களிப்புக் கொற்றவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. குதிரைகளின் அணிவகுப்பும் நாட்டிய நடையும் அரசனை ஆனந்தத்தில் ஆழ்த்தின.
கயிறுமாறி அரசன் குதிரையைப் பெற்றான். கொண்டலைப் பொருவு கண்டர் வந்திடும்
திசைவழியாகச் சென்றார். அருவத் திருமேனியரானார். விண்ணவர்கள் சூழத் தமது திருக்கோவிலினுள் எழுந்தருளினர்.
புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட குதிரைகள் பகல் பொழுதில் பரிகளாகவே நின்றன. இராக்காலம் ஆனதும் சிவபிரான் திருவருளால் நகரிகளாக மாறின. நகரம் கலங்க ஊளைச் சத்தமும், சண்டையும், ஒட்டமும் ஆக நரிக் கூத்தானது. மாக்கள் ஓசை, வாம்பரி ஒசை கூக்குலாவும் குறுநரி ஓசை, எல்லாம் ஒன்று சேர்ந்து மீனவனுடைய செவிக்குள் காய்ச்சிய வேலைச் செருகியது போலானது.
மன்னன் மந்திரியாரை அழைத்தான். "நாட்டுள நகரிக ளெல்லாம் நற்பரியாக்கி நம்முன் மாயம் காட்டிய இவரைப் பிடித்துச் செல்லுங்கள். நம்பால் இவர் கொண்ட பொருளைக் குறைவற வாங்குங்கள் " என்று தண்டலாளருக்கு உத்தரவு பிறப்பித்தான் அரசன். தண்தமிழ் வாதவூரர் தண்டிக்கப்பட்டார். அருந்தவம் அகலா அன்பர் படும் அருந்துயர் அகற்ற அங்கணர் கங்கையை விடுத்தார். வைகை கடும் பெருக்கு எடுத்துப் பொங்கலைப்புனலா யெங்கும் புணரி போல் புரண்டது.
அரசன்,'அன்னே!"என்று விழித்தான்" மிக்க
நின் கோபம் ஆறல் வேண்டும் என்று

Page 6
இறைஞ்சினன். தொக்க பொன் மலரும் முத்தும் துகில் மணிப் பணியும் நல்கினான். வைகை தன்முனிவு ஒழியாத் தன்மை கண்டு அரசன் மனதில் ஆராய்ந்தான். மற்றைய மந்திரிமாரை வினவினான்.
"ஆதியாங் கடவு ளெந்தை யாலவா யமலன் மங்கை பாதியான்சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண்டோ நிதியாற் தவத்தின் மிக்கார் நெஞ்சகம் புழுங்க மண்மேற்
தீதியாஞ் செய்ததுண்டோ செப்புமினமைச்சரென்றான்."
“மன்னவ! வாதவூரர் வருந்தும் தண்டனையைத் தவிர்த்தால் உறுபுனல் ஊர்கொளாது என்று அளந்து அறி அமைச்சர் அறிந்து சொன்னார்.
மலர்ந்து இது மொழிவான். "பாம்பணி செய்ய வேனிப் பரம்பர னடியார் கையி லாம்பொருணமதேயானா லறம் பிறர்க் காவதுண்டோ"
தகுதி இல்லாத தண்டனை தந்தேன். குற்றம் எனதே; நற்றவத் தலைவ நீரே குறைகொளாது வைகை அணையை அடைப்பியும் " என்று
பணித்தான்.
"கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை, மண்சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு "செம்மனச் செல்வி என்னும் பேருடை நரைமூதாட்டியின் பங்கு அடைத்தனர்.
அரசன் அற்புதங்கள் அனைத்தையும் அறிந்தான். வாதவூரரின் தன்னிலை கடந்து தகுதியை உற்றுணர்ந்தான்.
'நான் அமைச்சராக இவ்வுலகம் தாம் ஆள வேண்டும்" என்று இரந்தான். பின்திகழ்சடையான் மன்னும் பெருந்துறை நகரில் ஏக இன்று எனை விடுப்பதே இவ்வுலகளிப்பது என்றார் வாதவூரடிகளார்.
விடை நல்கினான் வேந்தன். எழிற் பெருந்துறையை எய்தினார் எம் அடிகளார். பரமாசாரியர் பாதங்களைப் பணிந்தார்.
G.)
 

'தீண்டுதற் கரிய மார்பிற் சேயிழை தனத்தி னாலு, மீனடொரு மாற்றி னாலு மெய்திய தழும்ப போற்றி: வேண்டிய வடிவ மாகி வெம்பரி மேல்கொண் டெம்மை
ஆண்டருள் செய்ய வந்த வண்ணலே போற்றி போற்றி"
'அண்டருக் 35rfurtui போற்றி யடியவர்க் கெளியாய் போற்றி வண்டமிழ்ப் பாண்டி நாடு வாழமண் சுமந்தாய் போற்றி" என்று பரவிப் பணிந்தார்.
“வந்துள கருமம் எல்லாம் மகிழ்ச்சி கூர முடித்தனம்’ என்று எழுந்தனர். சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிச் செழுந்திருக் கயிலை நாடிச் சென்றனர் தில்லைநாதர்.
குருமொழிப்படி சிவதலங்களை வணங்கி, திருவாசகச் செழும்பதிகங்கள் பாடித் தில்லையை அடைந்தார் திருவாதவூரர்.
நாடிவந்த புத்தமதத்தவருடன் வாதம் செய்து சிவசமயத்தை நிலை நிறுத்தினார். சமயவாதக் கருத்துக்களை உள்ளடக்கித் திருச்சாழல் திருப்பதிகம் அருளிச் செய்தனர். ஊமைப்பெண்ணை உரையாடச் செய்தனர்.
தில்லைநாதர் வேதியர் வடிவத்தில் வெளிப்பட்டு வந்தார். திருக்கரத்தில் ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுத திருவாசகம் திருக்கோவையார் பாடிக் கொடுத்தனர்.
"மெய்த்தவ வாத வூரன் விளம்பிட எழுது மிந்தப் புத்தக மன்று ளாடல் புரிந்தவ னெழுத்தா மென்று முத்தியை உதவும் கோவை முடிவிடத்து எழுதி மைப்காப்புஞ் செய்து பஞ்சாக்கரப்படி மீது வைத்தார் பரஞ்சோதியார்.
பொருள் உணர்ந்து சொல்லுவார்; செம்பொனினம் பலமெய்தி யொன்றியவித் தமிழ்மாலைப் பொருளிவரென்' றுரை செய்தார். அங்கவர் காண மன்றதனிற் கடிதேகி மறைந்தனர். பூதநாட்டியம் தொடங்கியதும். கனநாதர்கள் துதித்தார்கள் தும்புரு நாரதர் இசை கொண்டார்கள். ஆகாயத்தில், வேதம் ஒலித்தது. துந்துபி எழுந்தது. தவமுனிவர்களும் இந்திராதி தேவர்களும் ஐந்தரு மாமலர் சிந்தினர். வணங்கினார்கள்.

Page 7
வித்துவான்
பTண்டி நாட்டிலுள்ள திருவாதவூரிலே திருவாதவூரர் திருவவதாரஞ் செய்தார். இவரின் தந்தையார் பெயர் சம்புபாதாசிரியர், தாயார் பெயர் சிவஞானவதி. இவருடைய குலம் ஆமாத்தியப் பிராமண குலம். இவருக்குத் தங்களது ஊர்ப்பெயரையே திருநாமமாகச் சூட்டி அழைத்து வந்தனர். நாமகரணஞ் சூட்டு விழாமுதல் வித்தியாரம்ப விழாவனைத்தனையும் விழாவெடுத்துக் கோலாகலமாகக் கொண்டாடி இவரைச் சிறப்பித்தனர். திருவாதவூரரும் வேதாகமப் பயிற்சியோடு சகல கல்வியையுங் கற்றுத் தேர்ந்து யாவுராலும் பாராட்டப்பட்டார். எக்கலையுங் கற்றுணர்ந்தார் ஈரெட்டாண்டெல்லை தனில்' என்று கட்வுள்மாமுனிவருந் திருவாதவூரடிகள் புராணத்திற் குறிப்பிட்டுள்ளார்.
அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும் என்பதற் கமையத் திருவாதவூரரின் கல்வி, கேள்வி, ஒழுக்கச் சிறப்பினை அந்நாட்டையாளும் அரிமர்த்தன பாண்டிய ராசன், தக்கோர் கூறக் கேட்டறிந்து, அவரைத் தம்மாட்டு அழைப்பித்தான். மரியாதைகள் பல செய்து உரிமைத்திறம் நல்கி அகலாத நட்பு ஆயினான். இவ்வுரிமை முறைக் கொண்டாட்டத்தில் "தென்னவன் பிரமராயன்' என்ற சிறப்புநாமத்தையும் வழங்கி, முதன் மந்திரிப் பதவியையுங் கொடுத்து, அவர் வழி அரசும் செல்ல வழிவகுத்தான். அரசைக் கொண்டு, நடத்தும் பொறுப்பினை ஏற்றிருந்தாலும் திருவாதவூரருக்கு நாட்டம் முழுவதும் சற்குரு ஒருவரைத் தேடுதலிலேயே இருந்தது. இவர் பெற்றிருந்த ஞானம் உலக நிலையாமையை உணரச்
செய்தது. பிறந்து இறந்து உழலும் வாழ்க்கையிற்
 
 

G. G36)60 Glourt
பயனில்லை என்று கண்டார். தற்பரன் ஒருவனின் பாதமே துணை எனக் கொண்டார். கூத்தாடுபவர் கோலம் புனைந்து ஆடுவது போலத் திருவாதவூரரும் மந்திரி உத்தியோகத்தை ஏற்று வழுதியின் நீதியை நடத்திக் கொண்டு மனத்தில் எவ்வித பற்றுமின்றி வாழ்ந்து வந்தார். அவர் தனக்கு ஞானோபதேசம் செய்யத்தக்க சற்குரு ஒருவரைத் தேடுவதிலேயே கருத்தாயிருந்தார்.
இங்ங்ணமாய வேளையில் அரிமர்த்தன பாண்டிய அரசன் தன்னுடைய படைகளை விஸ்தரிப்பதிலே கண்ணாயிருந்தான். தனக்கமைந்த சதுரங்க சேனையிற் குதிரைப்படையைச் சீரமைக்க எண்ணினான். அப்பொழுது சில தூதுவர் அரசனை அணுகிச் சோழநாட்டுக் கடற்கரையிலே ஆரிய தேசத்து வாணிபர்கள் படைக்கேற்ற நல்ல குதிரைகளை இறக்கி வைத்திருக்கிறார்கள். அதனை நேரே கண்டு வந்திருக்கிறோம் என்று விண்ணப்பஞ் செய்தனர். பாண்டிய அரசனும் மனம் மகிழ்ந்து திருவாதவூரரை அழைத்து, நம்மில் மிக அன்புடையவர்
இவரே என்று கருத்திற் கொண்டு, தூதுவருடன் சென்று குதிரைகளை வாங்கி வரும்படி பணித்தான். திருவாதவூரரும் வாசி வாணிபம் செய்யத் தயாரானார். வாசி என்றால் குதிரை என்பது பொருள். அன்றியும் இன்னொரு கருத்தும் உண்டு. திருவருட்பயனில் வாசியிடை நிற்றல் வழக்கு என்று கூறப்பட்டிருக்கிறது. வா என்ற திருவருளுக்கும் 'சி' என்ற சிவத்துக்கும் இடையில 'யா' என்ற ஆன்மா நிற்க வேண்டும். அப்பொழுது நமக்கள் என்கின்ற மலபந்தங்கள் ஆன்மாவைப் பீடிக்கமாட்டா என்பது சைவ சித்தாந்த விளக்கம். இங்கு குதிரை

Page 8
வாணிபத்தால் இன்னொன்று கைகூடுகிறது. திருவருள் திருவாதவூரடிகளை அழைத்துச் சென்று சிவத்தோடு சம்பந்ததப்படுத்துகிறது. இது ஒரு நல்லசம்பந்தம். அதுமட்டுமன்று. இதனால் வாசி வாணிபங் கைகூடுகிறது.
அரசன் ஆணையை ஏற்றுத் திருவாதவூரரும் திருவாலவாயில் எழுந்தருளி அருளாட்சி செய்யும் சோமசுந்தரப் பெருமானையும் 560TT's யம்மையாரையும் உளங்கசிந்துருகி வழிபட்டார். திரவியசாலையிற் புகுந்து, தன்னால் தீதிலாத வழியில் ஈட்டப்பட்ட நாற்பத்தொன்பது கோடி பொன்னையும் எடுத்துக் கொண்டு வந்து பாண்டிய அரசன் நல்ல இனக் குதிரைகளை வாங்கும்படி திருவாதவூரரின் கையில் கொடுத்தான். அதனை ஏற்றுக் கொண்டு வாசி வாணிபத்துக்குச் சோழதேசத்தை நோக்கித் தூதுவர்களுடன் புறப்பட்டார். செல்லும் போது வழியிலேயுள்ள திருப்பெருந்துறை என்னுந்தலத்திலே தங்கினார்.
திருவாதவூரர் வந்திருக்கும் பதி' மாதவர் மிகுதியாகவுள்ள பதி. அவர் தங்கியிருக்குந் தலத்துக்குப் பக்கத்திலே ஓர் அழகிய பூஞ்சோலை அமைந்திருந்தது. அச் சோலையிலிருந்து, தொண்டர்கள் சூழ்திருந்து ஒதுகின்ற சிவாகம ஒலி திருவாதவூரரின் செவிகளிற் கேட்டது. உடனே அவர் இவ்வொலியாது என அறிந்து சொல்லுங்கள் என்று ஏவலாளர்களைப் பணித்தார். ஏவலர்களும் சோலையின் நடுவே குருந்தமர நீழலிலே சிவனடியார்கள் பலர் சேவிக்கக் கொன்றை மாலையைத் திருமுடியிற் சூடிய சிவபெருமானை ஒத்த ஒரு சிவயோகியார் இருக்கிறார், என்றும் அங்கு ஒதப்படும் சிவாகம ஒலியே அவ்வொலியென்றும் கூறினார்கள். திருவாதவூரர் இச்செய்தியைக் கேட்டதும் இறைவனை அடையும் ஆசையுடையவராய் விரைந்து அப்பரமாச்சாரியார் வீற்றிருந்தருளுங் காவினைச் சென்று சேர்ந்தார். அத்தெய்வ சபையை உள்ளங்குளிரக்கண்டார். அச்சபையில் வீற்றிருக்கும்
 

பரமாச்சாரியாரின் திருக்கோலம் அவரைக் கவர்ந்து இழுத்தது. அவரின் திருக்கரங்கள் ஒரு புத்தகத்தைத் தாங்கியிருப்பதைக் கண்டு, ஏதையா புத்தகம் என்றார். பரமாச்சாரியாரும் பொய்மையிலாச் சிவஞானபோதம் என்று விடை பகர்ந்ததார். உடனே திருவாதவூரரும் சிவம் ஏது? ஞானம ஏது? இங்கு இலங்கியிடும் போதமேது? என்பனவாகிய வினாக்களை வினாவினார். இதனை எனக்கு விளக்கிக் கூறினால் அன்று கல்லாலமர நீழலில் எழுந்தருளியிந்து நால்வர்க்கும் அறம் உரைத்தவர் நீரே என்று மனங் கொள்ளுவேன். நானும் உமக்கு அடிமையாகுவேன் என்று கூறிப் பக்தியோடு நின்றார். சிவம் என்பது ஏகவஸ்துவாகிய பரம்பொருள். அவ்வஸ்துவைச் சந்தேக விபரீதக் காட்சியின்றி உள்ளவாறு அறிதல் ஞானம். போதமாவது இங்ங்ணம் அறிந்ததனை நிச்சயம் செய்தலேயாம். அவ்வாக்கியங்களின் பயனைக் கேட்டறிந்த மாத்திரத்தே திருவாதவூரர் மனம் நெக்குருகி நின்றார். -
இந்நிலையில் அடிகளாரும் இத்திருமேனி தாங்கி எழுந்தருளி வந்தவர் உத்தமராகிய சிவபெருமானே ஆவார், அவர் என்னை அடிமை கொள்வார் என்று மனங்கொண்டார். நிலையில்லாத இப்பிரபஞ்சப் பொருட்களில் இனிமேல் ஆசை வைக்கமாட்டேன் என்னுடைய பிறவியை நீக்குவதற்கு உமது திருப்பாதங்களை அடைதலே ஒரேயொரு வழியாகும். எம்முயிர்க்கிறைவா என்று பரமாச்சாரியாரின் திருப்பாதங்களைக் கண்ணிர் சொரிந்து நீராட்டிச் சாட்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். பின்பு எம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். எம்பெருமானும் திருவாதவூரரை ஆட்கொள்ளத் திருவுளங்கொண்டு அடியார்களிற் சிரேட்டரை அழைத்து அதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்யும்படி பணித்தார். அச்சிரேட்டரும் மற்றும் அடியார்களும் சேர்ந்து அக்காவினிடையே அழகான கோயில் அமைத்து அதன் நடுவே சிறந்த ஆசனமும் ஆக்கி வைத்தனர். இந்தளவில் இரவும் வந்தடுத்தது. இராக்காலத்தில்

Page 9
உயிர்களெல்லாம் அமைதியாகத் துயில் கொள்ளத் திருவாதவூரருக்கு மாயாமலம் சக்திகுன்றுதற்குரிய காலம் வந்து சம்பவிக்கிறது. அன்று அதிகாலையாகப் பரமாசாரியாராக எழுந்தருளியிருக்கும் எம்பெருமானும் இவ்வன்பனை ஆட்கொள்ளும் காலம் இதுவாகும் என்று திருவுளங் கொண்டார். ஸ்நான மண்டபம் அடைந்தார். வாசனை பொருந்திய பனிநீரினால் ஸ்நானம் செய்தார். அங்கு நிறைவேற்றுவன செய்து முடித்துச் சந்தனம் யாவும் அணிந்து பட்டுப் பீதாம்பரத்தினைத் தரித்தார். அடியார் திருக்கூட்டம் சூழ எழுந்தருளி வந்து தெற்குத் திசை நோக்கிப் பொற்தவிசின் மீது அழகுற அமர்ந்தார்.
திருவாதவூரரும் காலைக்கடனை முடித்து ஸ்நானாதிகளை நிறைவு செய்து வேண்டியன அணிந்தும் புனைந்தும் தானும் ஒர் அடியான் போல மனமும் வேடமும் தாங்கிப் பரமாச்சாரியார் திருமுன்னிலையில் வந்து பணிந்து முதலிற் பரமாச்சாரியாரின் திருவடிகளை அபிடேகம் செய்து அர்ச்சித்து நறுஞ்சந்தனம் திருமேனி எங்கும் சாத்தி, வண்ணமென் கழுநீர் மாலை அணிந்து கொண்டார். பின்னர் முக்காலியின் மேல் உள்ள பொற்கலத்தில் நல்லமுதினைப் படைத்து, நெய்யும் முக்கனியும் அதன்மீது விநியோகித்தார். தேவர்கள் வேண்ட முன்னாளில் ஆலத்தை உண்டு அவர்களுக்கு அமுதத்தை அளித்த பெருமானே, இப்போது எமது திருவாமுதை உண்டருள வேண்டும் என்று திருக்கரங்களை மென்பனிநீராற் கழுவி விட்டார். பின்னர் தாம்பூலத்தைச் சமர்ப்பித்துச் சுகந்த தூபத்தினையும் தீபங்களையும் எடுத்து ஆராதித்துக் கொடி, குடை, ஆலவட்டம், சாமரை என்கின்ற சோடசோபசாரங்களையும் செய்து பரமாச்சாரியாரின் சந்நிதியிலே தாழ்ந்து பணிந்து பரிசுத்தமான ஆசனத்திற் திருவாதவூரடிகள் அமர்ந்தார். அப்பொழுது பரமாச்சாரியார் பரிந்தருட் பார்வை நல்கித் திருவாதவூரருக்கு வாசிகதீட்சை செய்யத் திருவுளங் கொண்டு ‘சிவ என்பதை
 

முன்னிற்கும்படியாக பூரீ பஞ்சாட்சரத்தை உபதேசித்தார் . இங்ங்ணம் சிவமூல மந்திரத்தை உபதேசித்ததும் திருவாதவூரடிகள் பரமாச்சாரியாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். தம் பாதங்களின் கீழ்க் கிடந்து வணங்கும் அடியாரின் சென்னியில் தம் இருதிருவடிகளையும் வைத்துத் திருவடித் தீட்சையும் வைத்தருளினார். அந்நிலையில் திருவாதவூரடி களுக்குப் பசு கரணங்கள் நீங்கித் திருவருளினாற் சிவகரணங்கள் தோன்றிச் சிவஞானம் உதிக்கப் பெற்றது. திருவாதவூரிரும் தன் சென்னியில் வைத்த திருவடிகளைத் தம்கரணங்களாற் பற்றிப்பிடித்து மீளண்டுத்துக் கண்களில் ஒற்றிப்பின் மார்பில் கூப்பிய கரத்தராய் உவகை கூர்ந்து மெஞ்ஞானங் கைவந்தவராய் எழுந்து நின்றார்.
அப்பொழுது இந்திரன் முதலிய தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். பூதகணநாதர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அடியார்களும் தவசி ரோட்டர்களும் எம்பெருமான் திருவடிகளைத் துதித்து நின்றனர். திருவாதவூரடிகளும்,
ஐயனே யெனை யாண்டருள் புரியு
மாதியே யுழை யணிமரு விருக்குங் கையனே கொடுங் காலனை முனியுங்
காலனேயிரு கண்ணினுண் மணியே செய்யனே யடி போற்றி யென் பெரிய
செல்வ மேயடி போற்றிபொய் யினர்தம் பொய்யனேயடி போற்றியெவ் வுயிர்க்கும்
போதனேயடி போற்றியென் றழுதார்.
திருவாதவூரடிகள் புராணம்
என்று பாடிப் புலம்புவாராயினர். பின்னர் தம் பாதங்களைத் துதித்து வழிபட்டு நிற்கும் மெய்யடியாரைப் பரமாச்சாரியார் தனியிடத்திருத்தித் தாம் ஆக்கியருளிய ஆகமங்களிலே உள்ள

Page 10
அறிதற்கரிய பொருள்களைத் தெளிவுபடுத்தி உபதேசித்துச் சாத்திர தீட்சையும் செய்தருளினார். இங்ங்னமாகப் பதி, பசு, பாசம் என்கின்ற முப்பொருள் விளக்கமும் சரியை, கிரியை யோகம், ஞானம் என்கின்ற நான்கு நெறிகளும் அதனாற் கைகூடும் சாலோக, சாமீப, சாரூப, சாயூச்சிய முத்திப் பேறுகளையும் விளக்கியருளினார்.
இங்ங்ணம் மெய்ஞ்ஞானங் கைவரப்பெற்ற அடிகள் சிவபெருமானிடத்து அன்பு மிகுதியால் ஞானவாணியின் அருள்பெற்று அருட் பாக்களைப் பொழிவாராயினார். அவற்றைக் கேட்டருளிய எம்பெருமான், களிகூர்ந்து திருவாதவூரடிகளது திருவாயிலிருந்து பிறந்த வாசங்கள் விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் போன்றிருந்ததால் அவருக்கு
7
வெள்ளி மாதப்பிற 17.06.98 1 واولونى 2. 18.06.98 சனி கார்த்தின்
3. 19.06.98 ஞாயிறு ஏகாதசி
5 21.06.98 செவ்வாய் பிரதோச
7. 23.06.98 வியாழன் 呜呼号" 11. 27.06.98 திங்கள் நாக சது
12. 28.06.98 செவ்வாய் கருட பஞ் 13, 29.06.98 புதன் ஷஷ்டி வி 14. 30.06.98 வியாழன் பெருமிழ 15. 31.06.98 வெள்ளி சுந்தரர் கு 18. O3.07.98 திங்கள் கலியர் ந 19. O4.07.98 செவ்வாய் ஏகாதசி 20. 05.07.98 புதன் பிரதோச 22. O7.07.98 வெள்ளி பூரனை 26. 11.07.98 செவ்வாய் சங்கடஹ 30. 15.07.98 சனி கார்ததில்
சோழர் கு
 
 

மாணிக்கவாசகர் என்ற திருப்பெயரளித்து மறைந்தருளினார். -
திருச்சிற்றம்பலம் தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னைச்
சங்கரா ஆர்கொலோசதுரர் அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்ற தொன்று என்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யானிதற்கு இலன் ஒர் கைம்மாறே
திருச்சிற்றம்பலம்
(மாணிக்கவாசக சுவாமிகள்)
Nה
ப்பு கை விரதம்
விரதம்
விரதம்
T660) விரதம் ர்த்தி விரதம், ஆடிப்பூரம்
நசமி
ரதம்
லைக் குறும்பர் குருபூசை தருபூசை சேரமான் பெருமாள் நாயனார் குருபூசை ாயனார் குருபூசை, கோட் புலியார் குருபூசை
விரதம், வரலட்சுமிவிரதம்
) கணபதி விரதம் கை விரதம், மூர்த்தி நாயனார் குருபூசை புகழ்ச்
திருபூசை
(
6
விரதம்
விரதம்

Page 11
திருவாசகத்திற் கிடைக்கும்
திருமதி ஞானே?
ைெசவ சமயகுரவர் எனப் போற்றப்படும் நால்வருள்ளும் தனிப்பட்டு விளங்குபவர் மணி வாசகப் பெருமான். சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகிய சமய குரவர் மூவரும் இறைவன்மேற் பூண்ட பக்திப் பெருக்கினால் அவரை ஏத்தியும் புகழ்ந்தும் பாடிய பாடல்கள் தேவாரம் என வழங்கி வருகின்றன. மணிவாசகர் பக்தியினால் மனமுருகிப் பாடிய பாடல்கள் திருவாசகம் எனும் பெயராற் போற்றப்படுகின்றன. சிவபெருமான்பாற் பக்தி பூண்ட அடியார்கள் நாயன்மார் என அழைக்கப்படுவர். இதற்கமையத் தேவாரம் பாடிய மூவரும் நாயன்மார் வரிசையில் அடங்குவர். ஆனால் மணிவாசகர் நாயன்மாருள் ஒருவராகக் கூறப்பட்டிலர். ஏனைய சமய குரவர் சம்பந்தர் அப்பர், சுந்தரர் ஆகியோர் வரலாற்றை நாம் அறிவதற்கு உதவுவது திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணமாகும். மாணிக்கவாசகர் வரலாற்றை நாம் அறிவதற்குத் துணையாக இருப்பது திருவாதவூரடியகள் புராணம் என்னும் நூல். இத்துடன் மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை எடுத்துக் கூறும் திருவிளையாடற் புராணம் என்னும் நூல் வாயிலாகவும் மணிக்கவாசகர் பற்றிய சில செய்திகளை அறியக் கூடியதாயுள்ளது.
மணிவாசகர் பாடல்களிலேயே அவருடைய வரலாற்றை அறிந்து கொள்வதற்கான அகச்சான்றுகள் பல உள. இவ்வகச் சான்றுகளை
ஆதாரமாகக் கொண்டே திருவாதவூரடிகள் புராணம் இயற்றப்பட்டிருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. மணிவாசகர் வரலாற்றிலே நிகழ்ந்தனவாகக் கூறப்படும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவர்தம் பாடல்களிலேகாணப்படும் செய்திகள் சான்றுகளாகின்றன.
 
 

ஸ்வரி சோமசுந்தரம்
திருவாதவூரிலே பிறந்து கல்விகேள்விகளிலே சிறப்புற்றுப் பாண்டிய மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியனுக்கு முதன் மந்திரியாகித் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கிய மணிவாசகர் வாழ்க்கையிலே அரசன் பொருட்டுத் குதிரை வாங்கச் சென்ற விடத்துத் திருப்பெருந்துறை என்னும் தலத்திலே ஒரு முக்கிய திருப்பம் ஏற்படுகின்றது. அதுவே அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கக் காரணமாயிற்று. திருப்பெருந்துறையிலே ஒரு குருந்த மரநிழலிலே இறைவன் குருவடிவில் வந்து மணிவாசகரை ஆட்கொண்டதாகத் திருவாதவூரடிகள் புராணம் கூறும். இந்நிகழ்ச்சிக்கு மணிவாசகரின் திருவாசகப்
பாடல்களிலே பல இடங்களில் ஆதாரம் உண்டு.
"செந்தழல் புரை திரு மேனியுங் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலுங் காட்டி
அந்தணனாவதுங் காட்டி வந்தாண்டாய்"
எனத்திருப்பள்ளியெழுச்சியிலும்,
திருப்பெருந்துறையில் நிறைமலர்க்
குருந்த மேவிய சீர் ஆதியே என அருட்பத்திலும் அவர் குறிப்பிடுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். அச்சோப்பத்து, சென்னிப்பத்து, அற்புதப்பத்து, அதிசயப்பத்து, என்பவற்றிலும் தேவராலும் காண்பதற்கரியனாய இறைவன் தமக்கு எளியனாய் வந்து ஆட்கொண்டு அருளியமையை வியந்து போற்றுகின்றார்.
9)

Page 12
குருந்த மர நீழலிற் பரமாசாரியத் திருக்கோலத்தில் வீற்றிருந்தவர் இறைவனே என்ற உண்மை பரிபக்குவநிலை அடைந்த மணிவாசகருக்குப் புலனாயிற்று. அவருடன் சென்ற ஏனையோர் அதனை உணர்ந்திலர். பூமியில் பக்குவநிலை அடைந்த ஆன்மாக்களை வசப்டுத்துவதற்கு இறைவன் மானிட வடிவத்திலே எழுந்தருளுவார் என்ற சைவ சித்தாந்த உண்மையினையும் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுவதாக உள்ளது. " அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையை' என்ற அடிகள் இதனை
உணர்த்துகின்றமையைக் காணலாம்.
இறைவன் தம்மைக் குரு வடிவில் வந்து வலிய ஆட்கொண்ட தன்மையை, "அரி அயன் இந்திரன்
@isrGGðIII frá; g; flu இவன் ଘ}} |T ଘ}] fT
வென்றென்னையும் பூதலத்தே வலிந் தாண்டு கொண்டான்' என்று கூறுவதும் நோக்கற்பாலது. "இணையார் திருவடி என் தலைமேல் வைத்தார் என்று திருப்பூவல்லியிலும், இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி எனப் போற்றித் திருவகவலிலும் கூறுவதிலிருந்து அடிகள் இறைவனிடமிருந்து திருவடி தீட்சை பெற்றார். என்பதை அறியலாம்.
இறைவன் திருப்பெருந்துறையிலே, இவ்வாறு மணிவாசகரை ஆட்கொண்டபின்னர், அவரைத் தில்லைக்கு வருமாறு பணித்து விட்டு ஏனைய அடியார்களுடன் மறைந்து விடுகிறார்.
நாயினேனை நலமலி தில்லையுட்
கோல மார் தரு பொதுவினில் வருகென
ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி
அன்றுடன் சென்ற அருள் பெறும் அடியவர்
 

ஒன்ற ஒன்ற உடன் கலந்தருளியும் ?
என்ற கீர்த்தித் திருவகவல் அடிகள் மூலம் இதனை மணிவாசகர் எடுத்துரைக்கின்றனர்.
இவ்வாறு இறைவன் திருப்பெருந்துறையில் இவரை ஆட்கொண்டு பிரிந்த பின்னர் அவரை மீண்டும் அடைய வேண்டும் என்றும் ஆர்வம் மிகுந்தவராய் அவரையே நினைந்து நினைந்து ஏங்குகின்றார்.
"கோலங் காட்டி ஆண்டானை கொடியேன்
என்று கூடுவதே"
முகந்தான் தராவிடின் முடிவேன் எந்தன் முழுமுதலே."
என்றெல்லாம் இறைவனை நினைந்து உருகுகின்றார்.
தேனூறும் வாசகங்க ளறுநூறுந் திருக்கோவை
நானூறு மமுதூற மொழிந்தருளு நாயகனை
வானூறுங் கங்கைநிகர் மாணிக்க வாசகனை
யானூறு படாதவகை யிருபோது மிறைஞ்சிடுவேன்.
- நாவலர் மூன்றாம் பாலபாடம்.
இறைவன் பணித்தவாறு தொடர்ந்தும் பாண்டிய மன்னனிடம் அமைச்சராகக் கடமையாற்றுங் கால் அவர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றியும் திருவாசகத்திற் காணக்கூடியதாயுள்ளது.
குதிரைச் சேவகனாய் மதுரைக்கு இறைவன் எழுந்தருளியமை.
குதிரையைக் கொண்டு குடா நாடதன் மிசைச் சதுர்படச் சாத்தாயத் தானெழுந்தருளியும் என்ற அடிகளால் அறியப்படும்.

Page 13
நரியையே குதிரையாக்கிக் கொண்டு வந்தார் என்பதற்கு,
'நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்சதேற்றும் பெருந்துறையாய்”
என ஆனந்தமாலையில் வரும் அடிகளும், 'நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கிய வாறன்றே உன் பேரருளே எனும் திருவேசறவில் வரும் அடியும் சான்றாக உள்ளன.
செம்மனச்செல்வியின் பொருட்டுப் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பற்றிய குறிப்பையும்
திருவாசத்தில் காணலாம்.
'அடியவட்காகப் பTங்காய் மண்சுமந்தருளிய பரிசும்’ என்ற கீர்த்தித் திருவகவல் அடியும்.
"கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை மண்சுமந்த கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்து பொன்மேனி எனத் திருவம்மானையில் வரும் அடிகளும் இதனை வெளிப்படுத்துகின்றன. பாண்டிய மன்னனுக்கு வீடு பேறருளிய செய்தி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி என்னும் அடிகளாற் பெறப்படும்.
இறைவனால் தாம் ஆட்கொள்ளப்பட்ட போது தம்மை முற்றிலும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்த பூரண சரணாகதி நிலையை 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமையெல்லாம்
குன்றேயனையாய் எனை ஆட்கொண்ட
 

போதே கொண்டிலையோ என்ற அடிகள் விளக்குகின்றன.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையால் தாம் பெற்ற பேரின்ப அனுபவத்தைப் பல பாடல்களிலும் வெளியிடுகின்றனர்.
தந்ததுன்தன்னைக் கொண்டதென்தன்னைச்
சங்கரா ஆர் கொலோ சதுரர்
அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் எனவும், அன்பினால் அடியேன் ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய், எனவும் தம் CFL f/f75ðirL அனுபவத்தை எடுத்துரைக்கின்றனர்.
இறைவனோடு இரண்டறக் கலந்த நிலையில் பேரின்பத்தில் திளைக்குங்காற் பிறநினைவுகளின்
இன்மையைத் திருப்படையாட்சியில் விளம்புகின்றார்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் அருள் நோக்கோடு 'இறைவனுக்கு அன்பராய் ஆட்பட்டவர்களை விளித்து வந்து அனைவரும் ஒருங்கு சேருங்கள், இறைவனுடைய திருவடியை அடைதற்குப் போவோமாக அதற்குரிய காலம் வந்து விட்டது என யாத்திரைப் பத்தில் கூவி அழைக்கின்றார். திருப்பாண்டிப் பதிகத்தில் வரும் எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியவுர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்ற அடிகளும் இவ்வருள் நோக்கை வெளிப்படுத்து மாற்றைக் காணலாம்.
இவ்வாறு திருவாசகப் பாடல்களிலிருந்து அவர் வாழ்க்கை பற்றியும் அவருடைய ஆத்மீக அனுபவம் பற்றியும் அறியக் கூடியதாயுள்ளது.

Page 14
திருவாசகத்தி
சைவப்புலவர் திருமதி இர
பொருளை எளிதாக விளங்கிக் கொள்வதற்கு உவமைகள் உதவுகின்றன. விளங்கப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் பொருள் உவமேயம் என்றும், அதனை விளங்க வைப்பதற்காக எடுத்தாளப்படுவது உவமானம் என்றும் இலக்கண நூலார் சொல்வர். உவமானம் எளிதான, விளக்கம் பெற்ற தொன்றாக இருக்கும். அப்போதுதான் அது கொண்டு விளக்கப்படும் செய்தி எளிமையடையும்.
தாஞ்சொல்ல வந்த விடயங்களைக் கனிவான மொழியிலே, இனிமை தருஞ் சொற்றொடர்களைப் பயன்படுத்தி மணிவாசக சுவாமிகள் சொல்லியுள்ள முறைமை நினைந்து நினைந்து சுவைக்கத்தக்கது.
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
என்பது சிவபுராணம் என்னும் பதிகத்துக் காணப்படுவதோரிடம். இறைவன் அடியவர்களது சிந்தையில் இனியவனாய் நின்று பிறவியை இல்லாமற் செய்வான் என்பது பொருள். அடியார் சிந்தனையுள் தேனுாறி நிற்றல் விளக்கம் பெறவேண்டும். அந்த உணர்வை ஊட்டுவதற்காகவே, கறக்கப்பட்ட உடன் பாலில் சருக்கரை, தேன் கலந்து சுவைப்பதனாற் பெறப்படும் நிலையைக் காட்டுகின்றார். இது எல்லோராலும் உணர்ந்து கொள்ளக்கூடியது. இதைப்போன்றதுதான் இறைவன் மெய்யடியார்கள் உள்ளத்தில் நின்று இனிமை செய்தலாம்.
திருவண்டப்பகுதி என்பது மற்றொரு பதிகம். அங்கே அண்டங்களின் அளவு, எண்ணிக்கை என்பவற்றை உவமை மூலம் உணரவைக்கின்றார்கள்.
 

50 52 616ОID
த்தினம் அப்புத்துரை
"அண்ட்ப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறியவாகப் பெரியோன் தெரியின்'
ஆகாய வெளியிலே ஒன்றுக் கொன்று எழுச்சி உடையனவாக நிற்கும் அண்டங்களின் எல்லை யில்லாத அளவையும், வளங்கள் பொருந்திய பெருமையும், அவற்றின் எல்லையற்ற இயல்புகளும் நூற்றொரு கோடிக்கு அதிகமாகப் பெருகியுள்ளன எனலாம். இங்கு நூற்றொரு கோடி என்பதும் அளவில்லாததாகிய எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இந்த எண்ணிக்கை அளவினையோ, அல்லது பெரியதாந் தன்மையினையோ, அல்லது இயல்பு மாற்றங்களையோ எம் மனத்தினாற் சிந்திப்பது அரிது. அதனாலேதான் அடிகள் ஒரு உவமை கொண்டு எளிதாக்கி இருக்கின்றார்கள். இன்னுழை கதிரில் துன்னணுப் புரைவன என்கின்றார்கள் ஒட்டைக் கூரையினூடாக வரும் சூரியக் கதிரின் அசைந்தாடும் சிறிய அணுக்களை ஒப்பன என்கின்றார்கள். அணுக்களின் எண்ணிக்கையையோ, அளவினையோ இயல்பினையோபற்றி எதுவுங் கூறமுடியாது. ஆனால் இல் நுழை கதிரையும், அக்கதிரினூடு அசைந்தாடும் அணுக்களையும் எல்லோருங் கண்டுள்ளனர். மேலதிகமாக எதையும் அறிந்துகொள்ள முடியா தென்றும் உணர்வர். அஃதே போன்று இந்த ஆகாய வெளியிலுள்ள அண்டங்களின் எண்ணிக்கை, அளவு, இயல்பு என்பன எதுவுந் தெரியாது. கண்டு கொள்ளவும் முடியாது என்பதை இல் நுழைக்கதிர் நிகழ்வு புலப்படுத்துகின்றது.

Page 15
திருச்சதகம் என்று நூறு திருப்பாடல்களைக் கொண்ட தொரு பதிகம். அங்கே உள்ளதொரு
திருப்பாடல் சுட்டறுத்தல் என்னும் பகுதிக்கனுளது.
தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் நின்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை முன்னவனே முதலந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
என்னுந் திருப்பாடலிற் பல உவமைகள் கொண்டு செய்திகள் எளிதாக விளக்கம் செய்யப்பட்டுள்ளன. திருக்குறளிற் பிறவிப் பெருங்கடல் என்று
பார்கின்றோம். புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய்மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ப் பிறக்க வேண்டிய பிறப்புக்களுக்கு எல்லையில்லை எனச் சிவபுராணத்திற் கண்டோம். இங்கே பிறவியினைப் பெளவம் என்கின்றார்கள். பெளவம் - கடல்; பெளவம், பெரும் பிறவிப் பெளவம்; அளவு கண்டு கொள்ள முடியாதது; கரை கண்டு கொள்ள முடியாதது. பிறவிப் பெருங் கடலில் வீழ்ந்தவர் கரை யேறுதல் கடினம், என்ற காரணத்தாலும் பெரும் பிறவிப் பெளவம் என்று சொல்லியிருக்காலம். எவ்வத்தடந் திரைகளால் எற்றுண்டு, இன்பம் எனும் அலைகளால் அணைக்கப்பட்டு வாழ்வு தொடரும் தீவினைப் பயன் துன்பம் நல்வினைப் பயன் இன்பம். இரண்டுமே மீண்டும் பிறப்பதற்குக் காரணமாகிப் பேரின்பத்திற்குத் தடை ஆவன. ஆக, இரண்டுமே துன்பம் தருவனதான். கனியை நேர் துவர்வாயர் என்னுங் காலாற் கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு என்பதொரு துன்ப நிலையும் பேசப்படுகின்றது. கொவ்வைப் பழம் போன்ற வாயையுடைய பெண்களென்னும் காற்றினால் அலைப்புண்டு, அவர்கள் பால் இச்சை கொண்டு, காமத்தால் விழுங்கப்படும் நிலை பேசப்படுகின்றது.
 

இனி உய்யுமாறெங்ங்ணம் என்று நினைந்து நினைந்து துன்புற்று ஐந்தெழுத்தாகிய தெப்பத்தை என்னுடையதாக்கிக் கொண்டேன்; தோற்றக் கேடு இல்லாத வளமான முத்திக் கரையைக் காட்டி ஆட்கொண்டாய் என்கிறார்கள்.
நீத்தல் விண்ணப்பமென்னும் பகுதியிலே ஐம்புல இன்பத்திற்கு ஆற்றங்கரையையும் ஆற்றங்கரை மரமாய்த் தன்னையும் காட்டு கின்றார்கள். ஆற்றங்கரை மண்ணில் மரத்தினது ஆரம்ப வளர்ச்சி மிக வேகமானதாக இருக்கும். போகப் போக வளர்ச்சி வேகங் குறையும். பெரிய மரமாகியதும் நீரலைகளால் வேர் வெளிப்படும். வெள்ளப் பெருக்கு நிகழும் போது விழுந்து விடக் கூடிய சாந்திய முண்டு.
"காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண்டாய்."
நித்தல் விண் 3)
ஆரம்ப வளர்ச்சிக்கு இதமானது. நாளும் பொழுதும் அலையினால் அலைப்புண்டு வெள்ளம் புயல் என்பவற்றால் தாக்கப்படும் போது வீழ்ந்துபட நேரும், ஐம்புல இன்ப வாழ்வும் ஆரம்பத்தில் இனிமை பயப்பது போன்றிருக்கும். பின்னர் துன்பந் தருவதாக மாறும். அந்த வேளை என்னை விட்டுவிடாதே என்று இறைஞ்சுகின்றார்கள்.
'செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற் பன்னாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய்."
நித்தல் விண்ண 5)
என இறையின்பத்தை மறக்கச் செய்யும் பெண்ணின்பத்தின் கொடுமை குறிப்பிடப்படுகின்றது. தீயில் விழ விட்டிற் பூச்சி ஆசைப்படுவது போன்று பெண்ணின்பதின்பால் யான் பெரிதும் விழைவுற்றேன். இப்பொழுது
இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதி கண்டாய்."
நித்தல் விண். 9
அந்தப்புறமும் வெளிப்பட முடியாத, இந்தப் புறமும் வெளிப்படமுடியாத இக்கட்டான நிலைக்குள்ளாகி

Page 16
யுள்ளேன். ஒருபுறம் உலக இச்சை வெளியே விடுவதாயில்லை; மறுபுறம் உன்னை அடையக் கூடிய நிலைமை இல்லை.
கடலினுள்தாய்நக்கி யாங்குன் கருனைக் கடலினுள்ளம் விடலரியேனை விடுதி கண்டாய்."
நீத்தல் விண் 13)
வெள்ளம் எவ்வளவு பெருகினும் நாய் நக்கி நக்கித்தான் நீரைப் பருகும். உன் கருணை எவ்வளவு பெரிதாக இருந்த போதும் குறுகிய அறவாகத்தான் ஏற்றக்கொள்ள முடிகின்றது. உன் கருணையுள என்னை அழுதிச் செலுத்த முடியவில்லை.
வெள்ளத்துள்நாவற்றிஆ ங்குன்அருள்பெற்றுத்துன்பத்தினின்றும் விள்ளக்கி வேனை விடுதி கண்டாய்."
நித்தல் விண். 74
நீர்ப் பெருக்கின் நடுவே இருந்தும் தாகத்தினால் நாவரட்சியுடன் இருப்பவனைப் போல உன் அருள் வெள்ளத்தின் நடுவே இருந்தும் அதனைப் பயன் கொள்ள முடியாது தவிக்கின்றேன்.
கொம்பரில் வாக்கொடி போலலமந்தனன்கோ மளமே வெம்புகின்றேனை விடுதி கண்டாய்."
நித்தல் விண். 20)
கொம்பு - கொடி தாவிப் படர வேண்டுவதோர் தடி அது இல்லையேல் கொடி பந்தரிற் படர்தல் தடைப்படும். அக்கொடிபோல் யான் துன்ப மடைகின்றேன்.
ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல னாலலைபுண் டேனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை யேன்மனத்துத் தேனையும் பாலையும் கன்னலை யும்மமு தத்தையு மொத் தூணையு மென்பினை யும்முருக் காநின்ற ஒண்மையனே
நித்தல் விண் 2)
யானைப் போரொன்று நடக்கும்போது அந்த யானைகளின காலில் அகப்படும் சிறு பற்றைகள் அழிந்துபடும் யானைப் (LH f பெருந்
 

தாக்கத்திற்குரியது. அவற்றின் உரம் பொருந்திய காலில் அகப்பட்டவை அழியும். ஜம்புல இன்பம் அதைவிடக் கொடியது. வினையேன் மனத்திலே தேனை, பாலை சருக்கரையை அமுதத்தை ஒத்து இனிமை செய்து ஊனை, என்பையுருகச் செய்யும் ஒளி பொருந்திய வனே,
“. புலன்நின்கட் போத லொட்டா
மெள்ளவே மொய்கும் நெய்குடந்தன்னை எறும் பெனவே"
நித்தல் விண் 24)
நெய், அதனை வைத்தவர்களுக்குப் பயன்பட வேண்டும். இங்கு எறும்புகள் தமக்கு உணவாக்கிக் கொள்கின்றன. அறிவு இறைவனை நுகரப் பயன்பட வேண்டியது. இங்கு ஐம்புலன்கள் அறிவைத் தம்பக்கல் ஈர்த்து விடுகின்றன.
"எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலந்த
வெறுந்தமியேனை விடுதிகன் டாப்
நித்தல் விண். 25)
எறும்புகள் பலவற்றினிடையே அகப்பட்டு, அரிக்கப்பட்டுத் துன்புறும் நாங்கூழ் போன்று, யான் ஐம்புலன்களால் துன்புறுத்தப்படுகின்றேன்.
பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன்தீக்கதுவ வெதும்புறு வேனை விடுதி கண்டாம்."
நித்தல் விண் 36)
மரங்கள் அடர்ந்துள்ளவிடத்துப் பற்றிய தீ மெல்லப் புகைந்து பெரிதாக வளர்வது போல, ஐம்புலனாகிய தீ என்னைப் பற்றியுள்ளது என்று அதன் வளர்ச்சித் தாக்கத்தைப் புலப்படுத்துகின்றார்.
இவ்வண்ணமாக, இடத்திற்கேற்ற உவமை கொடுத்துக் குறிப்பிட்ட பொருளை விளங்கிக் கொள்ளக் கூடியதாக்கி வழிப்படுத்தியுள்ள திறன் திருவாசகம் போன்று இனிமைதருவது.

Page 17
முருகவே
உலக மொழிகள் பல வளமானவையாய் அமைந்துள்ளன. அவற்றுள் தமிழும் உயர்தனிச் செம்மொழியாய்த் திகழ்கிறது. பிற நாட்டவரால் மதிக்கப்படுகிறது. இதற்கு இருவித இலக்கணவரம்பு உண்டு. எழுத்து சொல்பொருள்யாப்பு அணி என்பவை ஒன்று. இன்னொன்று அன்பின் ஐந்திணைகள். குறைந்தது ஐயாயிரமாண்டுத் தொன்மை வாய்ந்த இத்தமிழ் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் கட்டிளடமைத்திறம் குறையாது, இளமையோடு இருக்கிறது. இந்தச் சதாப்தத்தில் ஆங்கிலம் கற்போர் பெருகித் தமிழ்மீது நாட்டமற்றிருந்த கால கட்டத்தில் ஒரு மறுமலர்ச்சியும், நவீனத்துவமும் ஏற்பட்டுத் தமிழின் இனிமையை வேறு மதத்தினரும் நாட்டி வந்தனர், நம்மவரும் ஈடுபட்டனர். இதனாலே பலதுறைகளில் தமிழ் வீறுநடைபோடுகிறது. இக்கண்ணோட்டத்தில் தமிழ்மொழி இயக்கம் பக்தி இலக்கிய நெறியாக இடைக்காலத்திற் செழித்துக் கொளித்தது. வட இந்தியாவிற்குப்தர் காலத்தைப் பொற்காலம் என்பர். தமிழ் நாட்டிலும் சோழர்காலம் பொற்காலமென இலக்கிய வரலாற்று வல்லுநர்களாற் சொல்லப் படுகிறது. பக்தி நெறி பல்லவர் காலம் தொடங்கிச் சோழர் காலத்துவலுப் பெற்றது. பாண்டியர், நாயக்கர் காலத்தில் எழுச்சி பெற்று, பின்னர் மேலை நாட்டார் காலத்தையும் வென்று புதிய வீச்சுடன் திகழ்கிறது. வரலாறு படைத்த மொழி, வரலாற்றில் இடம் பெற்ற மொழி தமிழ். இந்த மொழி நடை பக்தி இலக்கியகாரர்களின் நாவண்ணம் கைவண்ணத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கம்பன் பாடிய வண்ணம் சான்றோர்கவி யென்னும் ஆறாகப் பாய்கிறது. இது
 
 

பரமநாதன்
மாணிக்கவாசகரிடம் இருந்து தேனாய்ப் பாய்ந்து ஒடுகிறது. எனவே தான் இதை தேன் எனப் பேசுகின்றனர். இனிப்புச் சுவை பற்றி எழுத பேசமுடியுமெனினும், சீனியை வெல்லத்தை, கற்கண்டை, தேனை, பாகை நாவிலே போட்டுச் சுவைத்தாற்றான் அனுபவிக்கலாம். இவ்வண்ணமே திருவாசகத்தை அனுபவித்தாற்றான் தெரியும். செட்டியார் விட்டாலும் கம்பளி மூடையவரை விடாதது போல, திருவாசகம், படிப்போரை விழுங்கிவிடும். மகட்குத்தாய் தன் மணாளனொடாடிய சுகத்தைச் சொல்லெனச் சொல்லுறுமாறோ என திருமூலர் கூறியபடிதான். அந்த அனுபவம் உருக்கமான அனுபவம். இது எதனால் வந்தது, தமிழ் மொழி நடையால் வந்தது இக்கவர்ச்சி; எனவே திருவாசகம் எல்லா இலக்கியகாரரையும் விஞ்சி நிற்பதாலேயே அதற்கென்றோர் தனித்துவம் பிரகாசிக்கிறது. இறைவனைத் தமிழ்ச் செய்தல் என்றோர் தொடரை எழுதியவர் திருமூலர். அதன் பொருள் அன்பு செய்தல்
И மானிக்கவாசக சுவாமிகள் சைவ சமயசாரியர் הN நால்வருள் ஒருவர். இவர் அருளிச் செய்த திருவாசகம் திருக்கோவையார் என்னும் அருட்பாக்கள் ஒதுபவர்களுக்குச் சிவபக்தி வைராக்கிய ஞானங்களைக் கொடுத்தலின் உயர் வொப்பில்லாதன. இவர் செய்த அற்புதங்கள் சைவசமயத்தின் உண்மையை
விளக்குவன.
- நாவலர் மூன்றாம் பால பாடம்.
N ノ

Page 18
என்பது தான். முந்து தமிழ் மாலை கோடி கோடி சந்த மொடு பாடிப்பாடி எனப் பேசிய அருணகிரி முத்தமிழால் வைத்தாரையும் வாழ வைப்போன் என முருகனைப் போற்றினார். இந்த இறை மொழித் தத்துவம் புரிந்த திருவாதவூரடிகள் தந்த திருவாசகம் தேனினும் இனியதமிழான படியாற்றான் இறை அனுபவிப்பை ஆனந்தத்தேன் என்கிறார்.
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடை யானுக்கே சென்றுரதாய் கோத்தும் பீ"
திருக்கோத்தும்பி 3
தொட்டாலும், பட்டாலும், கண்டாலும்,
சுவைத்தாலும், பட்டாலேசூழ்ந்தாலும் தமிழ் மணக்கும்
தீந்தமிழ்ப் பனுவலே திருவாசகம், மொழியாலே
விழிபேசும் திருவாசத்தின் உருக்கம் ஒரு வித பாவம்.
"இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவை எனக்குக் காட்டினையுன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே’
திருவேசறவு:7
இந்த இரும்புதான் உருகும். மேலே கல்லும் உருகும். மரத்தையும் உருக்கும் என்பர் சுவாமிகள்.
'கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லைநகர்புக்குச் சிற்றம்பலமன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காணம்மானாய்"
திருவம்மானை:5
 

6T 660T GELO பண்சுமந்த பாடல்கள். தண்ணார் தமிழனிக்கும் தண் பாண்டி நாட்டானைப் பாடிய பாடல்களவை. இதையே அப்பர் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்றார். தலைவனின் தோள் மெலிவுக்கு ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ எழிசைச் சூழல் புக்கோ எனத்தலைவி- கேட்பதாயமைந்த திருக்கோவையார் பேசும் பாவம், தமிழுக்குக் கிடைத்த நோயற் பரிசன்றோ
இவ்வண்ணம், பலவண்ணங்கள் நிறைந்த திருவாசகத்திற் சில இடங்களை மட்டும் தேன் சொட்டாக இங்கே பார்ப்போம். தேன் சிட்டாகச்
சுவைஞர்கள் அனுபவிக்கட்டும்.
இறைவன் மீதுள்ள முதிர்ந்த அன்பையும், அந்த ஈடுபாடு இறைவனோடும் தனக்குமுள்ள நெருக்கம் எவ்வாறமைந்த தென்பதையும்
சொல்லோவியமாய்த் தீட்டுகிறார் சுவாமிகள்.
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும்
அன்ப போற்றி"
திருச்சதகம் 69
நான்தனக்கு அன்பின்மை நானுந் தானும் அறிவோம் தானென்னை ஆட் கொண்டது எல்லாருந்தாமறிவார்
திருக்கோத்தும்பி 13
அன்பிற்கு எல்லை இல்லை, அன்பே சிவம் என்பர் மூலமுனிவர். இந்தத் தீர்ந்த அன்பு பற்றிப் பேசிய சுவாமிகள். கண்ணப்பன் அன்பையே உரைகல்லாக வைத்துத் தன்னை எடை போட்டார்கள். நானெங்கே கண்ணப்பன் எங்கே தீர்ந்த அன்புமுதிர்ந்த அன்பு எனவே அன்பே வடிவான அடியார் இடத்தே அவரைப் பார்க்கிலும் மிக்க அன்புடையவன்

Page 19
இறைவன் என்பதை விளக்கும் இத்தொடர் காத்திரமானது கனதியானது. கள்ளம் கபடமற்றது. அன்பே வடிவானவர் கண்ணப்பர். அடியார்களுக்காக இறைவன் செய்த அருட்பாடுகளை அன்பர்க்கு அவரினும் அன்பன்' என்று பேசுகிறது இத்தொடர். தொண்டு செய்து நாளாறிற் கண்ணிடந்தப்பவல் லேனல்லன் என்பது பட்டினத்தார் வாக்கு. அரசவண்டை விழித்துப் பேசிய பாடலில் இறைவனுக்கும் தனக்குமுள்ள அன்புரிமை அன்புநிலை எத்தன்மைய தென்பதை "நான் தனக்கு அன்பின்மை நானும் தானும் மறிவோம் 'என்ற தொடரால் வெளிப்படுத்தப் படுகிறது. காதலன் காதலிக் கிடையேயுள்ள அன்பு நெருக்கம், நண்பர்கட்கான அன்பின் பெருக்கம், கணவன் மனைவியின் அன்பு மீக் கூர்தலை அவர்களின் நடைமுறைகள் ஓரளவு வெளிப்படுதினும், அவரவர் உள்ளங்கட்குத்தான் தெரியும். இது சாதாரண வாழ்வியலின் நடைமுறை. அதே நேரம் உண்மை. இதையும் கடந்து இறைவன் மாட்டு உள்ள உறைப்பான அன்பு, எல்லையற்ற அன்பு நிலையான அன்பு பற்றிய விளக்கத்தின் உரைகல்லாக அவரவரே உளர். இங்கே நான் என்பது மணிவாசகர். தான் என்பது இறைவன். இதை நம்மோடு ஒட்டி நம்மை நாமே அளந்து பார்க்க முடிகிறது அல்லவா? நாமெங்கே. மணிவாசகர் எங்கே இறைவனோடு பேசும் உரிமையுடன் பேசுகிறார். நாம் யாருடன் பேசுவது. ஆக நமது பக்தி நெறியின் அன்பு நிலை பற்றி நாமே தீர்மானிக்கலாம். ஒரு உயர்ந்த அன்பு நிலையே இப்பாடலிற் தொனிக்கிறது. முதல் அமைந்த நெடும் பாடல்கள் நான்கும் கூறும் சில இனிய தொடர்கள் வருமாறு.
'நீராய் உருக்கி என் ஆருயிராப் நின்றானே" சிவபுராணம் 69
"பல் உயிரெல்லாம் பயின்றனன் ஆகி கீர்த்தித்திரு அகவல் 2
 

இல்நுழை கதிரின் துண்னணுப்புரையச்
சிறிய ஆகப் பெரியோன். திருவண்டப்பகுதி 3-6
அருமையில் எளிய அழகே போற்றி -
போற்றித் திருஅகவல் 26
முதன் மந்திரியாய் இருந்த திருவாதவூரடிகளுக்குக் குருந்த மரநீழலிலே - திருப்பெருந்துறையில் உபதேசம் செய்யப்பட்டது. அதனாலேற்பட்ட மனமாற்றம் சுவாமிகளை உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது. எனவே அந்தக் காட்சியைப் பல பாடல்களிலே அழகொழுகும் தமிழிற் பாடியுள்ளார்.
'சிறை பெறாநிர்போல் சிந்தை வாய்ப்பாயுந்
திருப்பெருதுறையுறை சிவனே
கோயில் திருப்பதிகம் 5
சீதவார் புனல் நிலவிய வயல்சூழ்
திருப் பெருந்துறை மேவிய சிவனே
செத்திலாப்பத்து 8
திருத்தமாம் பொய்கைத் திரும் பெருந்துறையில்
செழுமலர்க்குருந்த மேவியசீர்
அருத்தனே'
திருவாசக மேன்மையும், கவர்ச்சியும் தமிழோடு கலந்த பக்தியும் ஞானமும் விரவி மிளிர்வதைக்காணலாம். மொழி வளமும் அருள் வளமும் திருவாசத்தில் இழையோடி இருப்பதாற் படிப்போர் உள்ளத்தை நையவைத்துப் புத்தொளிபெறச் செய்கிறது. இந்தக் காந்த சக்திக்கு மொழி நிறையக் கை கொடுத்து உள்ளது எனலாம். மாணிக்கப் பரல்களாயமைந்த சொற்களை நிரைப்படுத்திய இப்பாமாலையின் உயரிய பண்பு
உருக்கமே.

Page 20
திருவாசகச் சிந்தனைகள்
திருச்ச
பண்டிதர் சி. அ
சிதம் - நூறு. சதகம் - நூறு பாடல்களைக் கொண்டதொரு பகுதி. திருச்சதகம் தெய்வீகம் வாய்ந்த நூறு திருப்பாடல்களைத் தன்னகத்துக் கொண்டதொரு பகுதி. மணிவாசகர் தந்த திருவாசகத்தின் ஐந்தாவது பதிகம் திருச்சதகம் என்பது ஒருபாடலின் இறுதியிலுள்ள சொற்றொடர், சொல், எழுத்து என்பவற்றுள் ஒன்றை அடுத்து வரும் பாடல் முதலாகக் கொண்டு அமைவது அந்தாதித் தொடை எனப்படும். இந்த அமைப்பிலுள்ள இறுதிப் பாடலின் இறுதிச் சீர், சொல் அல்லது எழுத்து என்பவற்றுள் ஒன்று முதற் பாடலின் தொடக்கமாக அமையும். திருவாசத்தில் திருச்சதகம் என்னும் இப்பதிகத்திலுள்ள நூறு திருப்பாடல்களும் அந்தாதித் தொடையால் இயன்றுள்ளன. இப்பதிகத்தின் இறுதித் திருப்பாடலின் இறுதிப் பகுதி மெய்யர் மெய்யனே என்று நிறைவுறுவதையும், பதிக முதற்றிருப்பாடல் மெய்தானரும்பி என்று தொடங்குவதையும் அவதானிக்கலாம்.
திருவாசகப் பதிகங்களின் திரண்ட பொருட் பிழிவைப் பண்டைப் பெரியார் யாரோ ஒருவர் எழுதி வைத்துள்ளார். அது திருவாசகத் திருவுள்ளக்கிடை என்று குறிப்பிடப்படும். இத்திருச்சதகம் என்னும் பகுதியின் திரண்ட பொருளாகப் பக்தி வைராக்கிய ( விசித்திரம் என்று திருவாசகத் திருவுள்ளக்கிடை குறிப்பிடும். மெய்யடியார்களின் இறைவனிடத்திலான ( பேரன்பு பக்தி எனப்படும். வைராக்கியம் மனவுறுதி; ( விசித்திரம் - வியக்கத்தக்க பலவிதமான இயல்பு. ( பேரன்பு காரணமான உறுதிப்பாட்டான் உண்டாகக்
கூடிய வியக்கத்தக்க பலவிதத் தன்மை என்பது இதன்
பொருள் என்று சொல்லாம்.
 

525i)
மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆன்ம சுத்தி, கைம்மாறு கொடுத்தல், அனுபோக சுத்தி, காருணியத்திரங்கல், ஆனந்தந்தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம் என்னும் பத்துத் தலைப்புகளின் கீழ் இத்திருப்பாடல்கள் பத்துப் பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொரு தலைப்பின் கீழும் வரும் செய்யுள்கள் முறையே கட்டளைக் கலித்துறை, தரவு கொச்சகக் கலிப்பா, எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம், கலிவிருத்தம், அறுசீர் விருத்தம், அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், கலிநிலைத்துறை, எண்சீர் விருத்தம் என்னும் பாவின வகையால் ஆனவை.
பத்துப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ள திருச்சதகம் மெய்யுணர்தலை முதலாவது பகுதியாகக் கொண்டுள்ளது. உண்மையை உணர்தல் என்பது இதன் பொருள். உண்மைப் பொருள் இறைவன். எனவே இறைவனை உணர்தல் என்று கொள்ள வேண்டும். உலகியலோடு சம்பந்தப்பட்டனவான இந்த உடல் முதலியவற்றுடனாகி நின்று, இவற்றின் நிலையாமையை உணர்ந்து, அவற்றினின்றும் விலகி, அவற்றினூடு பெறவேண்டியவற்றைப் பெற்று, கடவுள்தான் உண்மைப் பொருள் என்று அறிந்து அவனை அடைய முயலுதல், மெய்யுணர்தலின் தெளிவாகலாம். உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே, என்பது கொண்டு பதியை அவாவும் நிலையும், ஏனையவை பொய் என்று காணும் நிலையும் உணர்விற் குரியனவாகின்றன.
தவமே புரிந்திலன்தண்மலரிட்டுமுட்டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேனுனக் கன்பருள்ளாஞ்

Page 21
சிவமே பெறுந்திருவெய்திற்றிலேன்நின்திருவடிக்காம் பவமேயருளுகண்டாயடி யேற்கெம்பரம்பரனே
என்னுந் திருப்பாடலில் வீணாகப் பிறந்து விட்டேன் என்று வேதனைப்படுகின்றார்கள். தவஞ் செய்வில்லை; குளிர்ந்த மலர்கள் கொண்டு உன்னை அர்ச்சிக்க வில்லை; என்று துன்பப்படுகின்றார்கள். அதாவது, புலன்களைப் பொறிவழிச் செல்லவிட்டுப் பொருத்தமற்ற வாழ்வு வாழ்ந்து விட்டேன், என்பதைத் தெளிய வைக்கின்றார்கள். பேரானந்தப் பெருவாழ்விற்குரிய சிவச் செல்வத்தை யான் அடைய - நின் திருவடிக்கு ஆளாகக் கூடிய பிறப்பை இனியாவது எனக்குத் தந்துவிடு என்கின்றார்கள். அதுவும் உனக்கன்பருள்ளாஞ் சிவச் செல்வத்தையான் அடைய வில்லை; அது கிடைக்க வேண்டும் என்பது அடிகள் அவா. அடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய் என்கின்றார் மற்றோரிடத்தும்.
ஆளுடைய அடிகள் அமைச்சராகப் பணி புரிந்தவர். அதிகாரங்களைப் பெற்றிருந்தவர். அந்த அதிகாரங்களைப் பணி நிறைவிற்காகவே பயன் படுத்தினார். கருத்து முழுவதுஞ் சிவவாழ்விலேயே தங்கி இருந்தது. அமைச்சு வாழ்வின் பொய்மையை நன்றாக உணர்ந்திருந்தார். அதனால் அதிற் பட்டுக் கொள்ளாமலே வாழ்ந்தார். பொய் எனறு கண்டதால் தேவையற்ற கட்டு என்பதை உணர்ந்து விலகி வாழ்ந்தவர். பதி, பசு, பாச உண்மையை உணர்தலும் மெய்யுணர்தல்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது பகுதி அறிவுறுத்தல் என்பது. அஃதாவது வழிதவறும் மனத்தை நெறிப்படுத்த வேண்டி உண்மைப் பொருளை அறிய வேண்டுமென்றும் அதனையே நாடவேண்டும் மென்றும் சொல்லுதலாம். நாடகத்தால் உன்னைடியார் போல் நடித்து . -வீடகத்தே புகுந்திடுவான். விரைகின்றேன், என்று முதலாவது திருப்பாடலிலேயே குறிப்பிடுகின்ற
 

அடிகள் தம்மை வேடமாத்திரம் உடையவன் என்கின்றார்கள். நெஞ்சக் குழைவில்லாதவன்; அன்பில்லாதவன்; பூமாலை அணிவித்து வாழ்த்தாதவன்; புகழாதவன்; பாராட்டாதவன் உன் திருக்கோயிலைக் கூட்டித் தூய்மை செய்யாதவன்; மெழுகாதவன்; மகிழ்வு கொண்டு கூத்தாடாதவன்; சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன், என்று இரங்கி ஏங்குகின்றார்கள். உனக்கு அடிமைத்திறம் பூணாமல் இந்த உலகில் யான் வாழ மாட்டேன் என்கின்றார்கள். பின்னும் தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே என்று சொல்லும் அடிகளது சிந்தனை, கண்ட வெறுப்பினால் வந்ததென்று கொள்ள முடியாது. இந்தப் பிறவி பொருத்தமாக அமையவில்லை. இந்தப் பிறவி போக, வரும் அடுத்த பிறவியிலாவது கை கூடலாம் என்ற விருப்புக்காரணமாகலாம். சாவேன் நான் சாவேனே என்று அடுக்கிக் கூறியது விரைவை நோக்கிய தாகலாம். பயனற்று வாழ்வதினும் செத்துப் பிறப்பது மேல் என்னு நிலை பிரதிபலிக்கின்றது. வானுளான் காணாய் நீ மாளாவாழ் நின்றாயே, பாழ் நெஞ்சே! தொலைந்து போகாமல் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றயே என்று இடித்துக் கூறுவது வெறுப்பின் மிகுதியைக் காட்டுகின்றது.
N அடிகள் அருளிச் செய்த அமிழ்தனைய
திருப்பாட்டுகளைப் பற்றி: அடிகள் தம் மெய் யுணர்விற் பொங்கி எழுந்த கனிந்த பேரன்பில் ஆண்டவனைக் கண்டும், அநுபவித்தும் உணர்ந்த உண்மைகளைப் புலப்படுத்தி அவ்வப்போது கல்லுங் கரையும்படி உருகிப் பாடிய திருப்பாட்டுக்களே திருவாசகம் ஆகும்.
- மு. கதிரேசச் செட்டியார்.
மூன்றாவது பகுதி சுட்டறுதல் என்பது. சுட்டியறியும் முயற்சியை விடுதல் என்று கொள்ள வேண்டும். உலகிலுள்ளவற்றறை எமது உடலுறுப்புக்களின் துணைக் கொண்டு சுட்டியறியலாம். அங்கே உள்ளது குடை, அருகே

Page 22
இருப்பது கூடை என்று அறிவது சுட்டறிவு. எவ்விடத்தும் வியாபகமாயுள்ள மெய்ப் பொருளை பொறி முதலியவற்றின் தொடர்பின்றி மெய்யுணர்வு கொண்டு அறிய வேண்டும்.
வண்ணந்தான் சேயதன்று வெளிதேயன் றனேகன் ஏகன் அணுவணுவில் இறந்தாய்; செம்மை வெண்மையுமன்று; பலவுயிருமாவாய், தனி முதல்வனுமாவாய்; அணுவுமாவாய், அணுவுக்குள் அணுவுமாகி நுண்ணியல் பாந் தன்மை பொருந்தியவன் என்கின்றார்.
சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கி ஐம் புலன்க ளார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாவமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.
தமது ஐம்புலன்களும் இறைவனிடத்து ஈடுபாடுடையனவாக இருத்தலை அடிகள்
7
திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசகர்.
N
ஒரு மொழிக்கு மிக்க சிறப்பைத் தருவன இறை இ
மொழியிற் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பண்டே இரு இறைவனேயான பெரியார் ஒருவராலோ பலராலோ ப6
இல்லை. இக்குறையை முதற்கண் நிரப்பியவர் அறிவ
இத்திருப்பாடவிற் குறிப்பிடுகின்றார்கள். அநுபவ உணர்வோ கல்வியறிவோ இல்லாத எனக்கு உன்னை நீ தந்திருக்கின்றாய், என்று இறைவன் கருணையை
 

வெளிப்படையாகக் சொல்லுகின்றார். யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோம்
என்று அச்சம் நீங்கிய நிலை உணர்த்தப்படுகின்றது.
நான்காவது பகுதி ஆத்மசுத்தி என்பது. அதுதான் யான் எனதென்னும் அகப் புறப்பற்று நீங்கிய - உயிரின் புனிதநிலை பற்றிக் கூறும் பகுதி மன மொழி மெய் என்னும் முக்கரணங்களும் இறைபணியில் இடையறாது ஈடுபடுதல் முதலான முயற்சி பற்றியும், இறைவனுடன் கிடைத்த தொடர்பு குறைந்த விடத்து உண்டான ஆற்றாமையையுங் கூறுவது இப்பகுதி. தாயில் ஆகிய இன்னருள் புரிந்தவென் தலைவனை நனிகாணேன்; தீயில் வீழ்கிலேன், திண்வரை யுருள்கிலேன்; தாயினும் நல்ல தலைவராகக் கண்ட இறைவனைச் சரியாகப் பார்க்கவில்லை; இந்தத் துன்ப நிலையின் பின்னும் என்னை அழித்துக் கொள்ளாமல் யான் இருக்கின்றேன், என்று இரங்குகின்றார்.
ஐந்தாவது பகுதி கைமாறு கொடுத்தல் என்பது உதவி செய்தவர்களுக்கு உதவுதல் கைமாறு
ཡོད།༽
இலக்கியங்களாகிய அருட்டிருப்பாடல்களே. தமிழ்
நந்தன எனினும் இறையருளை நிரம்பப் பெற்று
Uபடப் பாடப்பட்ட பாடற் பெருந் தொகுதி பண்டு
ாற் சிவனேயானவர் எனப் போற்றிப் புகழப்படும்
- சி. அருணை வடிவேல் முதலியார்.
レ
கொடுத்தலாம். எல்லையில்லாத இன்பத்தைத் தந்த ஞானாசிரியனாகிய இறைவனுக்குத் தன்னைக் கொடுத்தலாம் நிலை. '.யாவுளும் எள்ளு

Page 23
மெண்ணெயும் போல் நின்ற எந்தையே, கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி கொள்ளும்; அன்பு காரணமாக அழைக்கக் கூடிய தகுதியில்லாத என்னை உண்மையான அன்பரை அழைப்பது போல அழைத்து அருளுவானோ? என்று அகங் குழைந்து நிற்கின்றார்.
ஆறாவது பகுதி அநுபோக சுத்தி என்பது. சிவானுபவத்தால் ஆன்மா தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ளல் என்பதாக இதனைக் கொள்ளலாம். பல்வேறு நிலைகளில் சிவனுடனாகி நின்ற பயன் கொள்வதாற் கிடைப்பது சிவானுபவம். பொறிகள் மூலம் கிடைக்கும் ஐம்புல அறிவு உலகியல் பற்றியது. அழிந்து படக்கூடியது. இறையனுபவம் நிலையானது. "ஆட் கொண்ட தேனே, அமுதே கரும்பின் தெளிவே சிவனே, தென்தில்லைக் கோனே, உன்றன் திருக் குறிப்புக் கூடுவார்நின் கழல்கூட ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன்.” என் நிலை இந்தப் புழுக் கூட்டைக் காத்து இருக்க வேண்டியதுதானா? கடைத்தேறும் வழியுண்டா? என்று ஏங்கும் நிலை தெரிகின்றது.
ஏழாவது பகுதி காருண்யத்திரங்கல் என்பது. இறைவன் கருணையை நினைந்திரங்கல் என்று சிந்திக்கலாம். கருணை - இறையருள். அதனையே அடிகள் வேண்டுகின்றார்கள். "தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கார போற்றி வான விருத்தனே போற்றி' என்று மீண்டும் மீண்டும் வணக்கம் செலுத்துவது கொண்டு இரக்கக் குறிப்பை அறியலாம். போற்றியோம் கமச்சிவாய புயங்கனே மயங்கு கின்றேன். புகலிட்ம் பிறி தொன்றில்லை. புற மெனைப் போக்கல் கண்டாய். உன் திருவடிகளிலேயே என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், என்று வேண்டுதல்
அருளை யாசிப்பதாகும்.
 

எட்டாவது பகுதி ஆனந்தத் தழுந்தல் என்பது. பேரின்பத்தில் அழுந்தி நிற்றல் ஆனந்தத் தழுந்தலாம். ஐம்பொறிகளினூடு அனுபவிக்கப்படும் இன்பம் நிலையில்லாதது. அடிகள் இங்கு குறிப்பிடுவது அழிவில்லாத சிவானந்த இன்பத்தையாம். "ஐய நின்னதல்ல தில்லை மற்றொர் பற்று.மை கலந்த கண்ணி பங்க வந்து நின்கழற்கனே மெய்கலந்த அன்ப ரன்பெனக்கும் ஆக வேண்டுமே. என்று பேரன்பை அவாவி நிற்கும்
நிலையைப் புலப்படுத்துகின்றார்கள்.
- ஒன்பதாவது பகுதி ஆனந்த பரவசம் என்பது
தன்னை மறந்தனுபவிக்கும் பேரானந்த நிலையாம். பக்குவம் நிறைந்த ஆன்மா நுகரும் பேரின்ப நிலை என்பது அது.
யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவேதித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்துறுமாறே
பத்தாவது பகுதி ஆனந்தாதீதம் என்பது. தன்னை மறந்த, தானென்பதொரு நிலையினை இழந்த நிலை என்று சிந்திக்கலாம். ஆனந்தத்தின் அதீத நிலை என்றுங் கொள்ளலாம். சிவஞானத்தினால் உண்டாம் உண்மை உணர்வு காரணமான அழியாத, ஈறில்லாத இன்பம் என்பதும் ஒன்று. வான நாடரும் அறியொ னாதநீ மறையி லீறுமுன் தொடரொ ணாதநீ ஏனை நாடரும் தெரியொ னாதநீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா என்று நெஞ்சார நினைந்து, வாயாரப் புகழ்ந்து, பாராட்டி நிற்கின்றார் அடிகள்.

Page 24
அறநெறி
செ. நவநீதகு
ஒருவரை நாம் நட்புக் கொள்வதாயின் அவரின் குண இயல்புகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்னரே அவரை நண்பராக ஏற்க வேண்டும். நட்புப்பூண்டு இருப்பவரிடத்தில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒருவரைப் பற்றி நன்றாக அறியமுன் நண்பராகக் கொள்ளலும், நண்பரிடத்தில் சந்தேகம் கொள்வதும் துன்பத்தைத் தரும்.
கன்னற் றெளிந்தாசான் காதலனை யைய முற்றான் இன்னற் பொலிந்தாளிரங்கேசா - முன்னமே
தேரான் தெளிவுந் தெளிந்தான் கண்ணையுறவும் திரவிடும்மை தரும் (
திருவாசகம் என்பது இன்பத்தேன். ஆதிசிர் பரவும் வா தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அ இராமலிங்க சுவாமிகளும் இத்தேனைப் பருகித் தம் அனு
பாய்பரியோன் தந்த பரமானந் தூயதிரு வாய்மலராற் சொற்.ெ கருவாதை யாமறியா வாறுசெ
திருவாதவூராளுந் தேன். (திரு என்று உய்யவந்ததேவனார் போற்றிப் புகழ்ந்த தேன்.
துரியோதனன் துரோணர் மகனான அஸ்வத்தாமனின் வீரத்தையும், ஆற்றலையும் நன்கு அறிந்திருந்தான் கண்ணபிரானின் மாய வேலை ஒன்றினால் துரியோதனன் அஸ்வத்தாமனிடம் சந்தேகம் கொண்டான் அதனால் கன்னனைப் படைத் தலைவனாக்கினான். போரில் துரியோதனன் தோல்வியைத் தழுவி ஒழிந்தான்.
உடலில் இருந்து ஆடை நழுவும் போது கைகள் L தாமாகவே விரைந்து செயற்படுவது போல், உத்தம
 

நட்பு
மார்
நண்பர்கள் தமது நண்பருக்கு துன்பங்கள் ஏற்படும் போது தாமகவே முன்வந்து உதவுவர்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்பர்திருவள்ளுவர்
நண்பன் தீயவழியில் சென்றால் தடுத்து நல்வழியிற் செல்ல வைப்பது உயரிய நட்பு அன்றியும் நண்பனுக்குத் துன்பம் ஏற்படும் போது அதிற்பங்கேற்று அதனைத் தானும் அனுபவித்துக் கொள்வது நண்பனுக்குரிய நற்குணமாகும்.
தவூரண்ணல் மலர் வாய்ப் பிறந்த வசகத்தேன். றுத்து ஆனந்தமாக்குந் தேன். சிவப்பிரகாசரும் பவத்தால் வியந்து கூறுஞ் செந்தமிழ் தேன்.
த தப்பயனை சய்து - மாயக் ய்தான் கண்டாய் க்களிற் 73)
-திருவாசகம் ஆராய்ச்சிப் பேருரை)
வாசவன் தட்சன மகம் புகா வாறுற்றான் ஈச னயன்போற் றிரங் கேசா - நேசன் அழிவினவை நீக்கி யாறுயத் தழிவினகண்
அல்ல லுழப்பதா நட்பு
சனமேசய மன்னன் உதங்க முனிவரின் துணையுடன் யாகம் ஒன்று செய்தான். வ்யாகத்தில் பாம்புகளை எல்லாம் பலிகொடுத்தனர். ாகத் தீயில் பாம்புகள் விழுந்து அழிந்தன. இதனைக் 1ண்டு பயந்த தட்சன் என்ற பாம்புத் தலைவன் தன்

Page 25
நண்பனான தேவேந்திரனிடம் தஞ்சமடைந்தான் தட்சன் இந்திரனின் சிம்மாசனத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான். பாம்புகள் யாவும் யாக க்கினியில் வீழ்ந்து மடிந்தன தட்சன் மாத்திரம் எஞ்சியிருந்தான். இதனை உதங்கமுனிவர் அறிந்தார். யாகப் பலங் கொண்டு தட்சனையும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தேவேந்திரனையும் வேள்வித் தீயில் தள்ளி ஆகுதி பண்ணத் தயாராயினர். அகத்திய முனிவர் இவற்றையெல்லாம் அறிந்து யாக சாலைக்கு வந்து தட்சனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு சனமேசயனிடம் வேண்டி இந்திரனையும், தட்சனையும் விடுவித்தார். தேவேந்திரன் நண்பனுக்காக அவரின் துன்பத்திற் பங்கேற்றான்.
குடிப்பிறந்து தன் கட் பழி நானுவானைக் கொடுத்துங் கொளல் வேண்டு நட்பு
தன்னிடத்தில் இருக்கும் குறைகளைக் குற்றங்களைக் கண்டு அஞ்சுபவனாகிய நற்குலத்திற் பிறந்தவனுடன் பொருள் கொடுத்தாயினும் நட்புக் கொள்ள வேண்டும்.
அறிவிலா மூட்ர்களின் நட்பை விட அறிஞரின் பகை மேலானது.
வசிட்ட முனிவர் சிறந்த அறிஞர். அவரைப் பகைத்தார் விசுமாமித்திரர். அப்பகையினால் விசுமாமித்திரர் தவஞ்செய்து முனிவர்களுக்குள் உயர்ந்தவராகத் திகழ்ந்தார்.
அறிவன் பகையேனும் அன்புசேர்நட்பாம் சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய வென்றிவனசரன்றான் வேதியனைக் காத்தான்முன் கொன்றதொரு வேந்தைக் குரங்கு
அந்தணன் ஒருவன் அரசனிடம் ஒரு மாணிக்க
மணியை அன்பளிப்பாகப் பெற்றான். அம்மணியைக்
கையிற் கொண்டு போனால் திருடர்கள் பறிப்பார்கள்
என்று எண்ணிய அந்தணர் அதை வாயிற் போட்டு
விழுங்கி விட்டான். பின்பு அம்மணியைக் கக்கி
எடுக்கலாம் என்ற எண்ணத்தில் தன் இருப்பிடம் நோக்கிச் சென்றான்.
 
 

இவற்றை அறிந்த ஒரு வேடன் மாணிக்கத்தைப் பறிக்க எண்ணி அவ்வந்தணன் பின்சென்றான். நடுக் காட்டில் அந்தணனை மடக்கி "உன்னிடத்து இருக்கும் மாணிக்கத்தைக் கொடு” என்றான் வேடன். அந்தணன் என்னிடம் மாணிக்கம் இல்லை உன்னிடத்தில் தான் உண்டு என்றான்.
இவ்வண்ணம் இருவரும் சண்டையிடும் போது திருடர்கள் வந்து அந்தணனை மாணிக்கத்தைக் கக்கித்தரும்படி கேட்டார்கள். வேடன் அறிவு டையவன். அந்தணனிடத்து பகை பாராட்டாது அவன் மாட்டு அன்பும் இரக்கமும் கொண்டு, எம்மிடம் மாணிக்கம் இல்லை. நாம் வேடிக்கையாகப் பேசினோம். உமக்கு சந்தேகம் இருப்பின் என் வயிற்றைக் கிழித்துப்பாரும் என்றான். திருடர்கள் வேடனைக் கொன்று வாயிற்றைக் கீறிப் பார்த்தனர் அங்கு மாணிக்கம் இருக்கவில்லை.
திருடர், வேடனை வீணாகக் கொன்று விட்டோம், அந்தணனாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுச் சென்றனர்.
வேடன் அறிவுள்ளவன் ஆனபடியால் பகைவனான அந்தணனிடம் 'அன்பு சேர் நட்பு' கொண்டான்.
ஓர் அரசன் குரங்கு ஒன்றை வளர்த்தான். அதைத்தனது மெய்ப்பாதுகாவலனாக்கினான். குரங்கின் கையில் வாள் ஒன்றினைக் கொடுத்து "இங்கு யாரையும் வரவிடாது பார்த்துக் கொள்" என்று கூறிவிட்டு அரசன் அங்கு துயின்றான். அவ்வேளை அரசன் உடலில் ஓர் ஈ வந்து இருந்தது. மூடக் குரங்கு ஈயைக் கொல்லும் நோக்குடன் வாளை ஈயின் மேல் வீசியது ஈ பறந்து சென்றது. அவ்வாளுக்கு இரையாகி அரசன் மாண்டான். அறிவிலியான குரங்கின் நட்பு அரசனுக்கு பகைவனைப் போல்
ஆனது.
பேதை பெருங்கெழிஇ நட்பி னறிவுடையார் ஏதின்மை கோடி யுறும்

Page 26
பெயோரைச் சேர்வதால் அவர்களுடன் நட்புக் கொள்வதால் பயன்கள் அதிகமாகும்.
கங்கை நதி பாவம் சசிதாபம் கற்பகந்தான்
மங்கலுறும் வறுமை மாற்றுமே - துங்க மிகும்
இக்குண மோர் மூன்றும் பெரியோரிட ஞசேரில்
அக்கணமே போமென்றறி என்பது நீதி வெண்பா.
இமய மலையில் இருந்து ஒடுவது கங்கை நதி அது அம்மலை மீதுள்ள மூலிகைக் செடிகள் பலவற்றில் தோய்ந்து வருவதால் கங்கை நதி மூலிகைச் செடிகளின் தன்மையைப் பெறுகிறது. இதனால் கங்கையிலே நீராடுபவர்கள் உடற் பிணியும் உளப் பிணியும் நீங்கிப் புனிதமடைவர். அவர்களின் வினைகள் விலகும். சூரியனால் ஏற்படும் வெப்பமானது சந்திரனின் அமிர்தகிரணத்தால் நீங்கும். நன்மைகள் பலவற்றையும் மங்கும் படிசெய்யும் வறுமை, கற்பக மரத்தை அடைந்த மாத்திரத்திலே நீங்கும். உயர்வுடைய பெரியவர்களைச் சார்ந்து அவர்களை நட்புக் கொண்டால் வறுமை. வெப்பம், தீவினை போன்றன அவர்களை அடைந்த அக்கணமே நீங்கும்.
யானையானது பாகன் உணவளித்துப் பல நன்மைகள் செய்தாலும் அவன் விடும் சிறு தவறை நினைவிலே வைத்துச் சந்தர்ப்பம் பார்ததிருந்து பாகனைக் கொல்லும்,
நாய், எசமானன் தன்னை கொல்லுவதற்கு FFL-g. எறிந்தாலும் அவ்வேதனையைப் பொருட்படுத்தாது பழைய நன்மையை எண்ணி வாலைக் குழைக்கும்.
யானையனையர் நண்பொரிஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லுமெறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு நாய்.
 

மணியைக் கழுவி அறியலாம். குதிரையை அதன்மீதேறிச் சவாரி செய்து அறியலாம். தங்கத்தை நெருப்பில இட்டுச் சுட்டு அறியலாம். நல்ல நண்பர்களை வறுமையுற்ற போது அறியலாம்.
குளத்திலே நீர் நிரம்பி இருக்கும் போது அக்குளத்தில் வாழும் மீன் முதலிய சிற்றுயிர்களை உண்பதற்காகப் பறவைகள் குளக் கரையில் இருக்கும் குளத்தில் நீர்வற்றினால் பறவைகள் அக்குளத்தை விட்டு நீங்கும். ஆனால் அந்தக் குளத்திலே கொட்டி, ஆம்பல், நெய்தல் என்பன எக்காலத்தும் குளத்தில் நீங்காது இருக்கும்.
நீரற்ற வேளை குளத்தை விட்டு நீங்கும் பறவைகள் போல் வறுமை வந்த இடத்து, துன்பம் வந்தவிடத்து விலகுபவர்கள் உறவு அல்லது நட்பு உடையவர்கள் அல்லர். துன்பம் வந்த வேளையிற் கூட இருந்து அத்துன்பத்தில் தாமும் பங்கேற்பவர்களே நண்பர்கள்.
அற்றகுளத்தில் அறுநீர்ப் பறவை போல் உற்றுபூமித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு
எவ்வளவு காலம் பழகினாலும் கீழோர் நட்பு உறுதி பெறாது. நீரினுள் பாசிவேர் கொள்ளாது இருப்பது போல் இருக்கும் அந்நட்பு நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேழ்மை நீர்க்குள் பாசி போல் வேர்க் கொள்ளாதே.
ஆனால் பெரியோர் நட்பு ஒருநாள் பழகிலும் 1லம் பொருந்திய நட்பாக மலரும்.
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே.

Page 27
திருவிளையாடற் புராணம்.
இந்திரன் 1
கிரேதா யுகத்திலே சுவர்க்க லோகத்தில் மந்தார மர நிழலில் சுதர்மை என்னுந் தேவசபையில் இந்திரன் தேவலோக மங்கையரின் நடனத்தையுங் கீதத்தையுஞ் சுவைத்துக் கொண்டிருந்தான். மன்னவனுக்காய தேவ சேவைகளும் நடை பெற்றுக் கொண்டிருந்தன. அந்தவேளை தேவகுருவாகிய வியாழ பகவான் அவ்விடம் வந்தார். கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து இலயிந்திருந்த இந்திரன், தேவகுரு வியாழ பகவானாகிய பிருகஸ்பதி அவ்விடம் வந்ததைப் பார்த்திருந்தும் அவரை மதிக்கவில்லை. அதனால் ஒன்றுமே பேசாது தேவகுரு திருப்பி விட்டார். அந்த நிகழ்வு இந்திரன் செல்வங்குறைவதற்குக் காரணமாயது. அக் குறைபாடு இந்திரனுக்கும் விளங்கியது. தேவகுருவாகிய வியாழ பகவானை மதியாது விட்டமையாலேயே இந்த நிலை வந்ததென்பதையும் இந்திரன் தெரிந்து கொண்டான். குருவைத் தேடத் தொடங்கினான். ஆனால் அவரை அவன் எங்குங் கண்டிலன். கடைசியாகச் சத்தியலோகத்தை அடைந்து பிரமதேவரை வணங்கி நடந்த வற்றையெல்லாம் சொன்னான். விடயங்களையும் முழுமையாகக் கேட்றிந்த பிரம்மதேவர் பின்னிகழப்போகின்றவற்றையும் எதிருணர்வினால் அறிந்து, இந்திரனை நோக்கி “நீ உன் குருவாகிய வியாழ பகவானைக் காணும் வரை அசுர குலத்திற் பிறந்து, அறிவொழுக்கங்களாலே சிறந்த துவட்டா என்பவனுடைய மூன்றுதலையுடைய
 

ழி தீர்த்தமை
புத்திரன் விசுவரூபனை உனக்குக் குருவாகக் கொளவாயாக’ என்றனர். பிரமதேவரின் சூழ்ச்சியை அறியாத இந்திரன் அவர் பணிப்பை ஏற்று விசுவரூபனைக் குருவாகக் கொண்டனன்.
இந்திரன் வேண்டு கோட்படி, ஒரு யாகஞ் செய்ய, விசுவரூபன் சம்மதித்தான். அசுரர்களுக்கு உய்யுந்திறம் உண்டாகுக' என்று மனதார வேண்டிக் கொண்டு, ‘தேவர்களுக்குச் செல்வம் பெருகுக', என்று எல்லோருக்குங் கேட்கும்படியாகச் சொல்லி குறிப்பிட்ட யாகத்தை நடாத்தினான். இந்த வஞ்சகத்தை இந்திரன் ஞானதிருஷ்டியால் உணர்ந்தான். உடனுந் தன் குல்சாயுதத்தை எடுத்து விசுவரூபனுடைய தலைகள் மூன்றையும் வெட்டினான். அவை மூன்றும் காடை, ஊர்க்குருவி, சிச்சிலி என்னும் பறவைகளாய்ப் பறந்தன. இந்தக் கொலை காரணமான பிரமகத்தி பற்றியமையால் இநதிரன் பெரிதுத் துன்பம் அனுபவித்தான். அப்பாவத்தை எல்லோரும் அநுபவிக்கும் வகை தேவர்கள் வழி செய்தார்கள. இதனால் அழுக்கு நீங்கப்பெற்ற இரத்தினம் போல இந்திரன் பிரகாசித்தான். பிரமகத்தியும் நீங்கியது.
விசுவருபனின் தந்தை துவட்டா, தன் மைந்தனை இந்திரன் கொன்றானென்பது அறிந்து கோபமுற்றான். இந்திரனைப் பழிவாங்க நினைந்து ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்தினின்றும்

Page 28
விருத்தாசுரன் என்றொரு அசுரன் தோன்றினான். இந்திரனைக் கொல்லும்படி விருத்தாசுரனை ஏவினான் துவட்டா. வடமுகாக்கினி யெனக் கோபித்தெழுந்த விருத்தாசுரன் இந்திரனுடன் போர் தொடுத்தான். இந்திரன் வெள்ளை யானைமீது அமர்ந்து எதிர்த்தான். தன் குலிசாயுத்தை விருத்தாசுரன் மீது ஏவினான். விருத்தாசுரன் ஓர் இரும்புலக்கையாற் புயத்தில் அடிக்க இந்திரன் மயக்கமடைந்தான். மயக்கந் தெளிந்த இந்திரன் இவனோடு போர் செய்ய முடியாது என்பதுணர்ந்து சத்தியலோகத்திற்கு விரைந்தான். அங்கு பிரமவேதவரைக் கண்டு வணங்கி நடந்த சம்பவங்களை விபரமாகச் சொன்னான். உடனடியாக இந்திரனையும் அழைத்துக் கொண்டு வைகுண்டஞ் சென்ற பிரம தேவர் மகா விஷ்ணுவை வணங்கி நிகழ்ந்தவற்றைச் சொன்னார்.
செய்திகளனைத்தையுங் கேட்டறிந்த மகாவிஷ்ணு, இந்திரனை நோக்கி, உன் கையிலுள்ள குலிசம் மிகப் பழைமையானது. உடன் தேவையை நிறைவு செய்யக் கூடிய வல்லமையை அது இழந்து விட்டது. இப்போது புதியதொரு குலிசம் வேண்டும், என்று கூறிப் புதிய ஒன்றைப் பெறுவதற்கான வழியையும் சொல்லி வைத்தார். திருப்பாற் கடலைக் கடைந்த நேரத்தில், அதிற் பங்கு கொண்ட தேவர்களும் அசுரர்களும் தத்தம் ஆயுதங்களைக் கொண்டு செல்ல முடியாதவர் ஆயினர். அதனால் அவர்கள் தாம் வைத்திருந்த ஆயுதங்களைத் ததிசி முனிவரிடம் ஒப்படைத்துச் சென்றனர். நீண்டகாலமாக அவர்களுள் யாருந் திரும்பி வந்து ஆயுங்களைக் கேட்காத காரணத்தால் முனிவர் அவற்றையெல்லாம் விழுங்கிவிட்டார். அவையெலாம் ஒன்று திரண்டு முனிவரின் முதுகுத்தண்டைப்
 

பொருந்தியுள்ளன. அதுவே குலிசாயுதமாம். அந்த முனிவர் ஜீவகாருண்யமே வடிவானவர். நீ அவரிடஞ் சென்று விபரங்களைச் சொல்லி அதனை உதவும்படி கேட்டாற் பெருமகிழ்வடைவார். நிச்சயமாக அதனை அவர் தருவார், என்னும் விபரங்களை யெல்லாஞ் சொல்லி வழிப்படுத்தினார். செய்திகள் எல்லாவற்றையுங் கேட்டுக் கொண்ட இந்திரன் விஷ்ணுவை வணங்கி விடைபெற்றான். நேரே முனிவருடைய ஆச்சிரமத்தை அடைந்து வழிபட்டான். ததிசி முனிவர் இந்திரன் முதலியோரை இனிதாக வரவேற்று, வந்த சமாசாரத்தை வினாவினார். நடைபெற்றவற்றை, அசுரர்களால் தாம் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கும் தொல்லைகளை எல்லாம் விபரமாகச் சொல்லிய இந்திரன் முனிவரிடம் உதவிகோரி வந்திருப்பதாகவும் தெரிவித்தான். தேவரீருடைய உடம்பின் முக்கிய பகுதியொன்றை எமது போருக்குரிய ஆயுதமாக யாசிக்கின்றோம் என்றும் விண்ணப்பிததான். செய்தியைக் (385 L முனிவரின் முகம் புதிய சோபையுடன பிரகாசித்தது. "நாயும் பேயும் உரிமை கொண்டாடுவதற்குரிய இந்த இழிவான உடம்பு நல்லதொரு தேவைக்குப் பயன்படுத்தப்பட வேண்டி நீங்கள் கேட்கிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி; பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிய முனிவர் சமாதி கூடிச் சுவர்க்கத்தை அடைந்தார். தேவருலகைச் சேர்ந்த தச்சன் முனிவரின் முதுகெலும்பைக் குலிச அமைப்பினை தாக்கிக் கொடுத்தான்.
மீண்டு வந்த இந்திரன்விருந்தாசுரனை எதிர்க்கத் தொடங்கினான். இருபகுதியிலும் பலர் இறந்தொழிந்தனர். இன்னமும் பொறுப்பது நியாயமல்லவென்று உணர்ந்த இந்திரன் குலிசாயுதத்தை ஏவினான். அதற்கஞ்சிய அசுரன்

Page 29
அவனைக் கண்டு கொள்ள முயற்சித்த இந்திரன் இறுதியில் ஒரு மலையுச்சியின் இடமாகித் தவஞ் செய்து கொண்டிருப்பதை அவதானித்தான். இந்திரன்தன் குலிசத்தை ஏவி அவன் தலையை அறுத்துக் கொண்டான். பிரமகத்தி தோஷம் இந்திரனைத் தொடர்ந்தது.
தேவர்கள் தமக்கு மன்னனில்லாத நிலையைத் துன்பத்தோடு எதிர் கொண்டுபிருகஸ்பதியை வணங்கி நின்றனர். இந்திரன், தன் குருதேவர் பிருகஸ்பதியுடன் பூவுலகுக்கு வந்து திருக்கைலையை வணங்கித் தென்திசை சென்று கங்கை முதலிய தீர்த்தங்களில் நீராடித் திருக்கேதாரம், காசி காஞ்சி முதலிய புண்ணிய தலங்களை வணங்கிக் கடம்ப வனத்து எல்லையைச் சமீபிக்க இந்திரனது கொலைப்பழி நீங்கியது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை இந்திரன் வியாழ பகவானுக்கு விண்ணப்பஞ் செய்ய, அவர், “இங்கேபுண்ணிய தலம், புண்ணிய தீர்த்தம் என்பன உண்டு. இந்தத் தீர்த்தத்திலே நீராடினால் பாவங்கள் எல்லாம் நீங்கும்.
விரும்பியன சித்திக்கும். பொற்றாமரை வாவியைப் பார்த்தாலே பாவங்கள் நீங்கும் என்றுஞ் சொல்வர். கடம்ப வனத்துள்ள சிவலிங்கம் முதலிலே தோன்றிய மூலலிங்கம். கடம்ப வனம் என்பது திரு ஆலவாய். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று விசேடங்களையும் ஒருங்கே பெற்ற பெருமைக்குரியது கடம்ப வனம் எனும் திருவாலவாய். அதனாலேதான் அந்த எல்லையைச் சமீபித்ததும் உன் பாவம் நீங்கியது என்பதை அறிந்து கொள்வாயாக’ என்றார்
வியாழபகவான். அக்கணமே அப்பெருமானிடத்துப்
 

பதிந்த பேரன்புடன் பொற்றாமரை வாவியில் நீராடிக் BLúbu வனத்துள் நுழைந்து அங்கே
உண்மையறிவானந்த வடிவாய் உயிர்க்குயிராய்
இயங்கியற் பொருள் நிலையியற் பொருள் என்னும்
பொருள்களனைத்துந் தன்னிடத்தே தோன்றவும்,
ஒடுங்கவும் நின்றசிவக் கொழுந்தைத் தன் ஆயிரங்
கண்களாற் கண்டு, சிவசின்னங்களாகிய விபூதி
உருத்திராக்கம் என்பவற்றைத் தரித்தான். தேவர்கள்
கொண்டு வந்த திருவமுது முதலியவற்றை நிவேதித்து
சிவலிங்கப் பெருமானைத் துதித்தான். அவன்
அன்பிற் கட்டுண்ட சோமசுந்தரக் கடவுள் வெளிப்பட்டு
வேண்டியவற்றைக் கேட்குமாறு பணித்தார்.
கருணைக் கடலாகிய சுவாமிகளுடைய திருவடிகளை
என்றும் இவ்வண்ணம் பூசிக்க அடியேன்
விரும்புகின்றேன் என்றான் இந்திரன். இருதுகளுள் சிறந்தது வசந்தருது மாதங்களுட் சிறந்தது சித்திரை.
நட்சத்திரங்களுட் சிறந்தது சித்திரை. திதிகளுட்
சிறந்தது பெளர்ணமி. வசந்த ருதுவில் ஏனைய
மூன்றும் சேர்ந்து வரும் நாளில் - வருடத்தில்
ஒருமுறை நீ வந்து பூசை செய்வாயாக. வருடம்
முழுமையும் பூசை செய்வதாற் பெறும் பயனை அந்த ஒரு நாள் பூசை செய்வது மூலம் பெறமுடியும், என்று
சோமசுந்தரக் கடவுள் விபரமாகச் சொல்லி மறைந்தருளினார். சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளை என்றும் நினைந்தவனாக இந்திரன்
முன்போலத் தன் அரச பரிபாலனத்தைத்
தொடர்ந்தான்.
(ஆதாரம்:நாவலர் திருவிளையாடற் புராண வசனம்)

Page 30
ຫົmຫຼື
பூனிலழறீ ஆறுமு
சிராத்த முதலியதான மெல்லாம் சற்பாத்திரப் C பிராமணருக்கே கொடுத்தல் வேண்டும். அசற்பாத்திரப் பிரமணருக்குக் கொடுத்தவர் தானபலத்தை இழந்து, நரகத்தில் விழுந்து வருந்துவர்.
(
C
குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், ஊமை, உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், சொத்தை நகத்தன், சொத்தைப்பல்லன் பித்தரோகி, குட்டிரோகி, கயரோகி, காசரோகி, மேகரோகி, குன்மரோகி, மகோதரரோகி, அலி, கணவன் இருக்கக் g கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், 望 கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு 望 விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், I விதவையை விவாகஞ் செய்தவன், பிறனால் விவாகஞ் செய்யப்பட்டவளை விவாகஞ் செயதவன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், வைத்தியப் Ls பிராமணன், வாணிகப் பிராமணன், வேளாண்மைப்பிராமணன், சிற்பப் பிராமணன், இராச ( சேவை செய்யும் பிராமணன், வட்டியாற் பிழைக்கும் L பிராமணன் என்னும் 2= இவர்களைக் கொண்டு கடவுள்மாமுனிவா  ேத வ க |ா ரி ய குருமூர்த்திய பி தி ர் கா ரி யங் க  ைள ச் இப்பொய்கையிற் செய்வித்தலும், இவர்களைச் மூழ்குவர். நீ மட்டு சிராத்தத்தில் வரித்துப் சென்று அட்டமா பூசித்தலும் ஆகாவாம். இறுதியிற் சிதம்பர
6ör G)(I56). La GFf பிராமணர் முதலிய என் திருவடி சேர்வ
மூன்று வருணத்தாரும் அன்ன சிராத்தஞ் செய்தல்
 

öJD
கநாவலர்
வண்டும். ஆபத்துக்காலத்தும், அக்கினி பில்லாவிடத்தும், கிரகணகாலத்தும், தீர்த்த யாத்திரை செல்லுமிடத்தும், ஆமசிராத்தஞ் செய்யலாம் சூத்திரர் ழதலானோர் என்றும் ஆம சிரார்த்தமே செய்தல் வண்டும். ஆமசிராத்தஞ் செய்தற்கு இயலாதவிடத்து, இரணிய சிராத்தஞ் செய்யலாம்.
சனனா செளச மரணாசெளசத்திலே சிராத்ததினம் வந்தால், ஆசௌச நிவர்த்தியாகுந் தினத்திலே சிராத்தஞ் செய்தல் வேண்டும். விதவை நான் வீட்டுக்கு விலக்காய் இருக்கும் போது தன்னாயகனுடைய சிராத்த தினம் வந்தால், ஐந்தாம்
ாள் சிராத்தஞ் செய்யக் கடவள்.
பிராதக்காலமும் சங்கவகாலமும் த்தியானமும், அபராணமும், சாயான்னமும் எனப் கற்காலம் ஐந்து கூறாக வகுக்கப்படும். சூரியோதய ழதல் ஆறு நாழிகையளவினதாகிய காலம் ராதக்காலம்; அதற்குமேல் பன்னிரண்டு நாழிகை
s སྟེ། கூறறு:
பார், "நீ இங்கேயே இருப்பாயாக. சோதி தோன்றும். அதில் ஏனைய சீடர்கள் ம் இங்கேயிருந்து பிறகு உத்தரகோசமங்கை சித்திகள் பெற்றுப் பல தலங்கள் சென்று ம் சேர்ந்து புத்தரை வாதில் வென்று அங்கே
ாய், என்று கட்டளையிட்டு மறைந்தார்.
-ம. பாலசுப்பிரமணிய முதலியார்.

Page 31
வரையும் உள்ள காலம் சங்ககாலம்; அதற்குமேற் பதினெட்டு நாழிகை வரையும் உள்ள காலம் சங்கவகாலம்; அதற்குமேற் பதினெட்டு நாழிகை வரையும் உள்ள காலம் மத்தியானம்; அதற்குமேல் இருபத்துநான்கு நாழிகை வரையும் உள்ள காலம் அபராணம், அதற்கு மேல் முப்பது நாழிகை வரையும்
உள்ள காலம் சாயான்னம்.
சிராத்தம், இராத்திரி காலத்திலும், இரண்டு சந்தியா காலத்திலும், பிராதக்காலத்திலும் செய்ய லாகாது. அன்ன சிராத்தம் அபராணத்திலே செய்தல் வேண்டும் ஆமசிராத்தம் சங்கவ காலத்திற் செய்து, போசனம் அபராணத்திற் செய்தல் வேண்டும். சந்தியா காலங்கள் இரண்டாவன இராக்காலத்தின் இறுதி முகூர்த்தமும் பகற்காலத்தின் இறுதி முகூர்த்தமுமாம். முகூர்த்தம் இரண்டு நாழிகை.
சிராத்தத்துக்கு ஆகுந் திரவியங்களாவன நெல்லரிசி, கோதுமை, யவம், சிறுபயிறு, உழுந்து, எள்ளு, சக்கரை, வெல்லம், தேன், நல்லெண்ணெய், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், சிகைக்காய், மிளகு, சீரகம், மஞ்சள், கடுகு, லவணம், புளி, வாழையிலை, வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், மாங்காய், மாம்பழம், பலாக்காய், பலாப்பழம், தேங்காய், இளநீர், பாகற்காய், முள்ளிக்காய், கக்கரிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், அவரைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், சிறுகிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு, இஞ்சிக்கிழங்கு, கீரை, கீரைத்தண்டு, முன்னையிலை, முசுட்டையிலை, காரையிலை, பிரண்டை, சேப்பந்தண்டு, சேப்பங்கீரை, சேப்பங்கிழங்கு, கருவேப்பிலை, வெற்றிலை பாக்கு, ஏலம், சுக்கு கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி
என்பவைகளாம்.
சிராத்தத்துக்கு ஆகாத திரவியங்களாவன கடலை, துவரை, வெண்கடுகு, பெரும்பயற்றங்காய்,
 

பீர்க்கங்காய், அத்திக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், சுரைக்காய், வாழைப்பூ முள்ளங்கி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, எருமைப்பால், எருமைத்தயிர், எருமைநெய்,
ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், ஆட்டுநெய்
முதலியவைகளாம்.
சிராத்ததுக்கு ஆகும் பத்திர புஷ்பங்களாவன வில்வம், துளசி, அறுகு, சம்பகப்பூ, தாமரைப்பூ, புன்னைப்பூ, முல்லைப்பூ, நந்தியாவர்த்தப்பூ மருக்கொழுந்து, வெட்டிவேர், எட்பூ முதலியவைகளாம். சிராத்துத்துக்கு ஆகாத புஷ்பங்களாவன மகிழம்பூ அலரிப்பூ சிறுசண்பகப்பூ
என்பனவைகளாம்.
தன் வீட்டிலாயினும், மலையின் மேலாயினும், புண்ணிய தீர்த்தக் கரையிலாயினும், திருக் கோயிலிலாயினும், கோமயத்தினாலே சுத்தி செய்ப்பட்ட தானத்திலே சிராத்தஞ் செய்தல் வேண்டும்.
சிராத்த தினத்தில் வீட்டிலே தயிர் கடைதலும், நெற்குத்துதலும் பிச்சை போடலும், எண்ணெய்நெல் முதலிய பொருள்களைக் கொடுத்தல் வாங்கல்களும்
ஆகாவாம்.
சிராத்த தினத்திலே திருக்கோயிலிலே கடவுளுக்குத் தன்னால் இயன்ற மட்டும் அபிஷேகம் பூசை திருவிளக்கேற்றுதல் முதலியவை செய்வித்தல் வேண்டும்; பசுக்களுக்குப் புல்லுப் போடல் வேண்டும்.
சிராத்தததின் பொருட்டு முதனாளி லாயினும், அன்றைக் காயினும், சிராத்தயோக்கியராகிய பிராமணரைப் பிரார்த்தித்து வரித்தல் வேண்டும். விசுவதேவர்கள் இருவர் பொருட்டும் இருவரையும், பிதிர்கள் மூவர் பொருட்டும் மூவரையும் வரித்தல்

Page 32
வேண்டும். சிராத்தயோக்கியர் ஐவர் கிடையாதபோது விசுவதேவர்கள் பொருட்டு ஒருவரையும் பிதிர்கள் பொருட்டு ஒருவரையும் வரித்தல் வேண்டும். இருவருங் கிடையாத போது விசுவதேவர்கள் பொருட்டும் பிதிர்கள் பொருட்டும் ஒருவரையே 6. f6,356,orth. ஒருவருங் கிடையாதபோது விசுவதேவர்களையும் பிதிர்களையுங்கூர்ச் சங்களிலே விதிப்படி பூசித்துப் பிண்டம் இட்டு இயன்ற தகூழினையை வேறு தலத்திலுள்ள சிராத்தயோக்கியரைச் சுட்டி உதகத்தோடு தத்தஞ் செய்தல் வேண்டும். அந்தத் தக்ஷணையைச் சேமித்து வைத்து அதற்குரியவரிடத்தே தப்பாமற் கொண்டு போய்க் கொடுத்தல் வேண்டும். அவர் இறந்தாராயின், அவர் புத்திரருக்குக் கொடுத்தல் வேண்டும். அவரும் இறந்தாராயின், தேவாலயத்துக்குக் கொடுத்தல் வேண்டும்
சிராத்த கருத்தாவும், சிராத்தத்தின் பொருட்டு வரிக்கப்பட்டவரும், சிராத்த தினத்திலும், முதற்றினத்திலும், மற்றைத் தினத்திலும், க்ஷெளரஞ் செய்து கொள்ளல், மீண்டு புசித்தல், வழிநடத்தல், பாரஞ் சுமத்தல், கோபம், பொய், காமம் இவைகளைத் தவிர்ந்து, விரதநியம முடையவராய் இருத்தல் வேண்டும், விரத நியமம் தப்பிப் புணர்ச்சி முதலியவற்றைச் செய்தவர் நரகத்தில் விழுந்து வருந்துவர். சிராத்த கருத்தா இம்மூன்று தினத்திலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலும், பாரன்னம் புசித்தலும், வெற்றிலை பாக்குண்ணலும்,
மருந்துண்ணலும் ஆகாவாம்.
ஸ்நானஞ்செய்யாது வந்தவருக்கும், போசனஞ் செய்து கொண்டு வந்தவருக்கும், வேறிடத்திலே சிராத்தம் வாங்கிக் கொண்டு வந்தவருக்கும், சிராத்தத்தில் வாங்கிய பதார்த்தங்களைத் தாம் அநுபவியாது விக்கிரய முதலியன செய்வோருக்கும்
சிராத்தங் கொடுக்க லாகாது.
 

ஒருவனுடைய சிராத்தத்தில் வரிக்கப்பட்டவன் அந்தச் சிராத்தத்தை ஏற்றுக்கொள்ளாது விலகுதலும், ஒருவனைச் சிராத்தத்தின் பொருட்டு வரித்தவன் அவனுக்குக் கொடா தொழிதலும் பாவம்.
சிராத்தஞ் செய்விப்பவராகிய புரோகிதரைச் சிராத்தத்தில் வரிக்க லாகாது. அவருக்குச் சிராத்தத்தில் வரிக்கப்பட்டவருக்குக் கொடுத்தபடியே குறைவின்றிச் சமமாகத் தக்ஷணையோடு கொடுத்து, அவரை உபசரித்து அனுப்பல் வேண்டும்.
சிராத்தம் நடக்கும்போது, வேதத்தையும், தமிழ் வேதத்தையும், புராணத்தையும், இதிகாசத்தையும், தரும சாத்திரத்தையும், சிராத்தம் வாங்குவோருக்குக் கேட்கும்படி படிப்பித்தல் வேண்டும். இது பிதிர்களுக்கு மிகப் பிரியமாகும்.
சிராத்தத்திலே கண்ணிர் விடுதலும், கோபித்தலும், பொய் சொல்லலும், துரிதஞ் செய்தலும், சிந்திய அன்னத்தைக் காலாலே மிதித்தலும், இலையில் அன்னத்தைத் தூவிப் பரிமாறலும் ஆகாவாம். சிராத்த மேற்பவர் நன்று தீது என்று பேசாது திருப்தியோடும் ஏற்றல் வேண்டும்.
சிராத்த முடிந்த பின்பு, சிராத்த மேற்றவர்களை வலமாகப் பின்றொடர்ந்து புறத்தே அனுப்பி விட்டு, சிராத்தஞ் செய்த இடத்தைச் சுத்திபண்ணித் தன் கால்கைகளைச் சுத்தி செய்து ஆசமனஞ் செய்து கொண்டு, கடவுளுடைய அடியார்களோடும், அதிதிகளோடும், தன் சுற்றத்தார் முதலியவர்களோடும் இருந்து, போசனஞ் செய்தல் வேண்டும்.
சிராத்தத்துக்குப் பொருளில்லாதவன், காய், கனி, கிழங்கு, எள் இவைகளையேனுஞ் சற்பிராமணருக்குக் கொடுத்து நமஸ்காரஞ் செய்து, திலதர்ப்பணம் பண்ணிக் கொண்டு தான் திருத்தியாகப் போசனம் பண்ணல் வேண்டும்.
நன்றி நாவலர் நான்காம் பாலபாடம்

Page 33


Page 34
Re NO. OD166 News 98. g. 48B, புளூமன்டோல் வீதி, கொழு யுனி ஆர்ட்ஸ் இல் அச்சிட்டு 199
Printed by Unie Arts (Pvt) Ltd., 48
 

வ் விதழ் சைவநிதி நிறுவனத்தினரால் ம்பு - 13 என்னும் முகவரியிலுள்ள 8-07-15 இல் வெளியிட்டப்பட்டது.
| B. Bloemendhal Road. Colombo - 13.