கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2000.01-02

Page 1
溶響 燮% 響
Ē 國 亚 $ ± CD
$2 游 §.
*
 

சைவ வளர்ச்சி கருதிய செய்தி தரும் மாத இதழ் Von Hilly MAGAZINE OF
SAVASM ANUARY - FEBRUARY - 2000
பிரமாதி தை

Page 2
βΟ β - 6
உள்ளே.
1. காமியத்தழுந்தி இளையாதே.
- ஆசிரியர் .
2. 3) Si 66, 4, o
– D LDTLS) (FG) i Tå FT fu (T.
3. தேவாலய தரிசனம் ,
- பூரீலபூரீ ஆறுமுகநாவலர்
4. மிகவும் அவசரம்.
- திருமுருக கிருபானந்தவ
5. பிரசன்ன வதனம்.
- மு. தியாகராச ஐயர் .
6. வீரவாகு தேவர் தூதும் - வேலவன் பரத்துவமும் - பண்டிதர் ச. சுப்பிரமணி
7. இயற்பகை நாயனார்.
- சிவ. சண்முகவடிவேல்
- பரீலறுரீ ஆறுமுகநாவலர்
9. அடைக்கலப்பத்து.
- பண்டிதர் சி. அப்புத்து
10. உலகெங்குமேவிய தேவாலயந் தொறு பெருமா
- முருகவே பரமநாதன்
11. நடகம் ஒர் ஊடகம்,
- எம். எஸ். பூரீ தயாளன் 12. SHAIVAISM.
— S. Shivapada Sundaran
13. சைவசமய அறிவுப் போட்டி .
சிறுவர் சிந்தனையில்
- பின் பக்க அட்டையின் உட்புற
SSMSSSMSSSLS S SLSMSMSMSMSMS SMLSSSMSSSLS SSLSSSMSSSMSSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முள்ள கருத்துக்களுக்குக் கட்டுரை
- ജിബ്ര ിബ് ക്ലിക് ار

Page 3
@上
சிவப
"மேன்மைகொள் சைவநீதி
GDEFOR
பிரமாதி தை சைவசமய வளர்ச்சி க
LDG) 3
கெளரவ ஆசிரியர்
ஞானசிரோமணி 45/76 சைவப்புலவர்மணி வித்துவான் திரு. வ. செல்லையா
Mr. W. Chellaiah -
5Tமியம் என்
நிர்வாக ஆசிரியர்
திரு. செ. நவநீதகுமார் Mr. C. Navaneethakumar
பதிப்பாசிரியர் திரு. பொ. விமலேந்திரன் Mr. P. Vimalendran Unie Arts (Pvt) Ltd. Tel.: 330195, 478133 E-mail uniearts (0slflk
மதியுரைஞர் பண்டிதர் ச. சுப்பிரமணியம் Pandit S. Subramaniyam
திரு. பொ. பாலசுந்தரம் Mr. P. Balasundaram
Trustee Sri Waratharaja Vinayagar Temple, Kotahena
திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா சட்டத்தரணி Mr. Rajarajeswaran Thangaraja Attorney-at-Law
திரு. கு. மகாலிங்கம் Mr. K. Mahalingam
Sivayogaswami Trust Fund
திரு. அ. கந்தசாமி Mr. A. Kandasamy Chairman, U. P.S.
42, Janaki Lane, Colombo 4.
என்பனவாம். எமக்கு வேண்டுதல் செய்து ெ குழந்தைப் பேறு போன் விரதம் அனுட்டித்தல் தேவையானவற்றை இ அறிந்த இறைவன் தாய்
எப்போது கொடுக்க 6ே
வேண்டத்தக்கது வேண்டும் பரிசொன் மணிவாசகர்.
இன்றைய நிை புதிதான தெய்வங்கள், எமது மார்க்கத்திற்கு ஆலயத்திற்குச் சென் நம்பிக்கையின்மைதான் ஒருமைப்பட்ட மனத்துட இந்த உடம்பு எ1 ஆதலால் எமக்கு வரும் உயிர்க்கு உறுதி பயக்கு பலனைக்கூட இறைவு இறைவனிடம் வேண் விரும்பவில்லை என் காமியத்தைவிட நிஷ்க தானம், தருமம், உதவி செய்வதுதான் சிறந்தது பயன்து ஞாலத்தி

யம் விளங்குக உலகமெல்லாம்”
பாரீதி
நதி வெளிவரும் மாத இதழ் இதழ் 10
யத்தழுந்தி இளையாதே
பது பயன் கருதிச் செய்யும் வழிபாடு, பூசை, விரதம் வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள இறைவனிடம் பற்றுக் கொள்கிறோம். கல்வி, தொழில், திருமணம், ாறவை கிடைக்க வேண்டும் என்று வழிபாடு செய்தல், பொதுவாக எல்லோரும் கடைப்பிடிப்பர். எமக்குத் றைவனிடம் கேட்டுத்தான் பெறவேண்டுமா? எல்லாம் பிலும் சாலப்பரிவு உடையவன். எவருக்கு என்ன தேவை, பண்டும் என்பன அவனுக்குத் தெரியும். து அறிபவன் அவன் வேண்ட முழுதும் தருபவன் அவன். று உண்டெனில் அதுவும் உந்தன் விருப்பு என்பார்
லயில் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று புதிது வழிபாடுகள், விரதங்கள் என விரிவடைகின்றன. இவை ஏற்றவையா? இவற்றைச் சிந்திக்கிறோமா? புற மத று வழிபடும் நிலையும் உள்ளது. ஏன் இந்தநிலை? இவற்றிக்குக் காரணம். மனத்தில் நம்பிக்கை வைத்து ன் வழிபட்டால் இறைவன் தானே வந்து அருள்புரிவான். மக்குக் கிடைத்தது வினையை அனுபவிப்பதற்கு ஆகும். துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் தன்மை வேண்டும். நம் வழிபாட்டைச் செய்ய வேண்டும். வழிபாட்டால் வரும் னிடமே சமர்ப்பிக்க வேண்டும். எமக்காக எதையும் டக் கூடாது. அடியவர்கள் முத்தியின்பத்தைக்கூட பார் சேக்கிழார். 'வீடும் வேண்டா விறலினர். மியமே சிறந்தது. நிஷ்காமியம் பயன் கருதாது செய்வது. பி போன்றவைகூடப் பயன் கருதாது நிஷ்காமியமாய்ச்
ார்க்கார் செய்த உதவி நயன்தூக்கின் ன் மாளப் பெரிது"

Page 4
2 Lull G
- உமாபதி சில
உயிர் விளக்கம் என்பது உயிரது விளக்கம் என விரியும். உயிர் என்பது இங்கு மேலைச் சூத்ரத்தில் கூறப்பட்டவாறு ஆன்ம சுத்தியும் சிவதரிசனமும் பெற்ற ஆன்மாவைக் குறிக்கின்றது. விளக்கம் என்பது மலப்பிணிப்பினால் உளதாகிய அறியாமையினுன்றும் நீங்கி அருள் ஒளியோடு விளங்கி நிற்றல். உயிர் விளக்கம் என்பது ஆன்ம சுத்தியையும் சிவதரிசனத்தையும் அடைந்த உயிர் அருளொளியோடு விளங்கி அருளில் அடங்கி, யான் எனது என்னுஞ் செருக்கறுதலாகும். இவ்வதிகாரம், சிவஞானபோதம் பத்தாம் சூத்திரத்தில் கூறப்பட்ட நிராதார சிவயோக நிலையைக் கூறுகின்றது. மலப்பிணிப்பு நீங்கி அறிவுவிளக்கம் பெறுதல் ஒவ்வொரு மாந்தருக்கும் அவரவர் பக்குவத்துக்குத் தக்கவாறு வெவ்வேறாய் இருத்தலின் இவ்வதிகாரத்தின் தலைப்பை ஆசிரியர் 'உயிரவை விளக்கம் என்று கூறாது உயிர் விளக்கம் என்று கூறினார்.
ஆசிரியர், மேலை அதிகாரத்தில் மாந்தர் ஆன்ம சுத்தியும் அதனுடன் நிகழும் சிவதரிசனமும் ஒருவாறு அடையும் வகையைக் கூறி, இந்தச் ரூத்திரத்தில் மாந்தர் அருளில் அடங்கி யான், எனது என்னுஞ் செருக்கற்று அந்த ஆன்ம சுத்தியும், சிவதரிசனமும் முற்றுப் பெற்று விளங்குதலைக் கூறுகின்றார். இதனால் ஆதிகார இயைபும் இனிது விளங்கும்.
1, 2, 3 பாட்டுக்கள், இறைவனை சிவயோகத்தால் ஒன்றிநின்று உணரும் மாந்தர், அவனை விட்டு எப்பொழுதும் பிரியாதிருக்கும் உணர்வினை உடையவர் என்று கூறுகின்றனர் 4, 5, 7 பாட்டுக்கள், அங்ங்னம் இறைவனைப் பிரியாதிருக்கிற உணர்வினை உடைய மாந்தர் தங்களுக்கு இறைவன் சிவயோக இன்பமாகிய துரிய இன்பம் அளித்தலை உணர்வார்கள் என்று கூறுகின்றன. 6, 11 பாட்டுக்கள் இறைவனையே அன்பினால் உருகி நினைந்து வழுத்தும் மாந்தர். அவனை நினைப்பு மறப்புமின்றி யான், எனது என்னுஞ் செருக்கற்று, எப்பொழுதும் நினைந்து
C

IITj3:Tflu TIT -
கொண்டிருப்பார்கள் என்று கூறுகின்றன. 8வது பாட்டு, அங்ங்ணம் யான், எனது என்னும் செருக்கற்று நினைந்து கொண்டிருக்கும் மாந்தர், தாங்கள் செய்யும் பணியெல்லாம் இறைவனது பணியாளாகச் செய்யும், பணியாகக் கருதுவார்கள் என்று கூறுகின்றது. 9ஆவது பாட்டு, யான், எனது என்னுஞ் செருக்கற்று இறைவனோடு கலந்திருக்கும் மாந்தர் இறைவனது அருளாலன்றி ஒன்றையும் சிந்தையில் நினையாமல் எவ்வுயிருக்கும் இன்ப நலனையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகின்றது. 10வது பாட்டு, யான், எனது என்னுஞ் செருக்கற்று இறைவனையே எப்பொழுதும் நினைந்து
கொண்டிருக்கும் மாந்தருக்குப் பிறவித்துன்பம்
இல்லை என்று உறுகின்றது. 12வது பாட்டு அங்ங்னம் யான் எனது என்னுஞ் செருக்கற்றது, இறைவனையே நினைந்து கொண்டிருக்கும் மாந்தர் இறைவன் முத்தொழில் செய்தலையும் உணர்வார்கள் என்று கூறுகின்றது.
இவ்வதிகாரப் பாட்டுக்களில் மாந்தர், இறைவனோடு சிவயோகத்தால் ஒன்றி நின்று தங்கள் உள்ளத்தில் அவனை விட்டுப் பிரியாதிருக்கும் உணர்வுடையராதல் அங்ங்ணம் பிரியாதிருக்கும் மாந்தர், தங்களுக்கு இறைவன் சிவயோக இன்பம் அளித்தலை உணரும் மாந்தர், யான், எனது என்னும்
செருக்கற்று இறைவனை எப்பொழுதும் நினைந்து கொண்டிருத்தல்; அங்ங்னம் நினைந்து
கொண்டிருக்கும் மாந்தர் தங்கள் பணியெல்லாம் இறைவன் பணியாகச் செய்தல்; அங்ங்ணம் தங்கள் பணியெல்லாம் இறைவன் பணியாகச் செய்யும் மாந்தர்
அருள்வயப்பட்ட தங்கள் சிந்தையில் எவ்வுயிரும்
இன்பம் அடைய நினைத்தல்; அங்ங்ணம் நினைந்து கொண்டிருக்கும் மாந்தருக்குப் பிறவித் துன்பம் இலதாதல்; அங்ங்ணம் பிறவித் துன்பமற்ற மாந்தர், இறைவனோடு அத்துவிதமாய்ச் சேர்ந்து அவன் முத்தொழில் செய்தலை உணர்தல் ஆகிய இக்கருத்துக்கள் முறையே ஒன்றுக்கொன்று ஏற்றமாய்க் கூறப்பெற்றன.

Page 5
BijGuITEDU - பூணூரிலழறீ ஆ
யாவரும் நாடோறும் திருக்கோயிலிற் சென்று, சிரத்தையோடு விதிப்படி தரிசனஞ் செய்தல் வேண்டும். தேவாலய தரிசனம் நாடோறுஞ் செய்தற்கு இயலாதாயின், புண்ணிய காலங்களிலேனும் தவறாமற் செய்தல் வேண்டும்.
ஆலய தரிசனஞ் செய்ய விரும்புவோர் ஆலயத்துக்குச் சமீபத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்து, அநுட்டானம் முடித்துக் கொண்டு ஆலயத்துக்குப் போதல் வேண்டும்.
ஆலயத்துக்குப் போம்பொழுது, ஒரு பாத்திரத்திலே தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை முதலியவை வைத்து, அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக்கொண்டு போதல் வேண்டும். இவைகளுக்குப் பொருளில்லாதவர் பத்திர புஷ்பங்களேனும் கொண்டு போய்க் கொடுத்து வணங்கல் வேண்டும். அதுவுங் கூடாதவர் சந்நிதி யிலுள்ள செத்தை முதலியவற்றைப் போக்கியேனும் வணங்கல் வேண்டும். -
திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே, திருக்கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துக் கொண்டு, உள்ளே பிரவேசித்து, பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் பண்ணல் வேண்டும். திரயாங்க நமஸ்காரம் இவ்விருவருக்கும் பொது.
அட்டாங்க நமஸ்காரமாவது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டுறுப்பும் நிலத்திலே தோயும்படி வணங்குதல், பஞ்சாங்க நமஸ்காரமாவது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்துறுப்பும் நிலத்திலே தோயும்படி வணங்குதல். திரயாங்க நமஸ்காரமாவது சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்.
(

றுமுகநாவலர் -
நமஸ்காரம் மூன்றுதர மாயினும், ஐந்து தரமாயினும், எழுதரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும்; ஒரு தரம் இரு தரம் பண்ணுதல் குற்றம்
நமஸ்காரம் பண்ணுமிடத்து, மேற்கே யாயினும் தெற்கே யாயினும் கால் நீட்டல் வேண்டும்; கிழக்கே யாயினும் வடக்கே யாயினும் கால் நீட்டலாகாது.
கிழக்கே யாயினும் வடக்கே யாயினும் சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை
முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின்
அம்முறையே மடக்கி, வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, கடவுளை மறவாத சிந்தையோடு இரண்டு கைகளையும் இருதயத்திலே குவித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதசுஷிணம் பண்ணல் வேண்டும். சிவபெருமானை மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், எழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பதினைந்து தரமாயினும், இருப்பத்தொரு தரமாயினும் பிரதசுஷிணம் பண்ணல் வேண்டும்.
விநாயகரை ஒரு தரமும், சூரியனை இரண்டு தரமும், பார்வதிதேவியாரையும் விட்டுணுவையும் நந்நான்கு தரமும் பிரதசுஷிணம் பண்ணல் வேண்டும். பிரதசுஷிணம் பண்ணும் ஆவரணத்திலே தூபி நிழலேனும் துசத்தம்ப நிழலேனும் இருந்தால், அந்த நிழலில் மூன்று கூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூற்றினுள்ளே செல்லல் வேண்டும். கடவுள் உற்சவங் கொண்டருளும் பொழுது அந்த நிழல் இருப்பினும், நீக்காது செல்லலாம்.
அபிஷேக காலத்தில் உட்பிரகாரத்திலே பிரதசுஷிணம் நமஸ்கார முதலானவை பண்ணலாகாது. பிரதசுஷிணம் பண்ணிச் சந்நிதானத்திலே நமஸ்காரஞ் செய்து, எழுந்து கும்பிட்டுக்கொண்டு

Page 6
உள்ளே போய், கடவுளைத் தரிசித்து, மனசிலே தியானித்து, சிரசிலும் இருதயத்திலும் அஞ்சலி செய்து, மனங் கசிந்துருக, உரோமஞ் சிலிர்ப்ப, ஆனந்தவருவி @gTifiយ, இராகத்துடனே தோத்திரங்களைச் சொல்லல் வேண்டும்.
அருச்சகரைக் கொண்டு கடவுளுக்கு
அருச்சனை செய்வித்து, தேங்காய், பழம் முதலியவற்றை நிவேதிப்பித்து, கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப் பண்ணுவித்து, அருச்சகருக்கு இயன்ற தக்ஷணை கொடுத்தல் வேண்டும்.
கடவுளைத் தரிசனஞ் செய்து கொண்டு, அவருக்குப் புறங் காட்டாது பலிபீடத்துக்கு இப்பால் வந்து மூன்று தரம் நமஸ்கரித்து, எழுந்து வடக்கு நோக்கி இருந்து, கடவுளைத் தியானித்துக் கொண்டு, அவருடைய மந்திரத்தில் இயன்ற உருச் செபித்து, எழுந்து வீட்டுக்குப் போதல் வேண்டும்.
திருக்கோயிலிலே செய்யலாகாத குற்றங் களாவன: ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், சனனா செளச மரணா செளசத்தோடு போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், அபாணவாயு விடுதல், பாக்கு வெற்றிலை யுண்டல், தம்பலமுமிழ்தல், போசன பானம் பண்ணுதல், நித்திரை செய்தல், மயிரைக் கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வேட்டி கட்டிக் கொள்ளுதல், தோளிலே உத்தரிய மிட்டுக் கொள்ளுதல், போர்த்துக் கொள்ளுதல், சட்டை யிட்டுக்கொள்ளுதல் வாகன மேறிச் செல்லுதல், குடை பிடித்துக் கொள்ளுதல், பாதரகூைடி யிட்டுக் கொள்ளுதல், உயர்ந்த தானத் திருத்தல், ஆசனத் திருத்தல், தூபி துசத்தம்பம் பலி பீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் சாயையை மிதித்தல், விக்கிரகத்தையும் நிர்மாலியத்தையும் தீண்டுதல், பெண்களைத் தீண்டல், பெண்களை இச்சித்துப் பார்த்தல், ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல், ஒரு தரம் இருதரம் வலம் வருதல், ஒடி வலம் வருதல், கடவுளுக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல், அகாலத்திலே தரிசித்தல், வீண் வார்த்தை பேசுதல், சிரித்தல், வீண்கீதம் பாடல், வீண்கீதம் கேட்டல், திருவிளக்கவியக் கண்டும் தூண்டா தொழிதல், திருவிளக் கில்லாத போது வணங்குதல், உற்சவங் கொண்டருளும் பொழுது அங்கே யன்றி உள்ளே போய் வணங்குதல் முதலானவைகளாம். இக்குற்றங்களுள் ஒன்றை

அறியாது செய்தவர் கடவுளுடைய மந்திரத்தைச் செபிக்கின், அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் விழுந்து வருந்துவர்கள். அவருக்குப் பிராயச்சித்த மில்லை.
திருக்கோயிலினுள்ளே போதற்கு யோக்கியர்களால்லாதோர் திருக்கோயிற் புறத்திலே பிரதசுஷிணம் பண்ணித் திருக்கோபுரத்தை நமஸ்கரித்துக் கடவுளைத் தோத்திரஞ் செய்யக் 5_ff55.
SY g 翌影 あ|応 পাত্ত
சிவபெருமானுக்குச் செய்யும்
உபசாரங்கள் எல்லாம் ஐம்பெரும் பூதங்களின் சம்பந்தமுள்ளவைகளாய் ஐந்துவித மாயிருக்கும். e9l ᎶᏛ Ꭷ !
6) JCD5LDITOJ :
பிருதிவி சம்பந்தமான உப சாரங்கள் சந்தனம், புஷ்பம், கிழங்கு, வேர், பழம், அன்னம் முதலானவைகளாம்.
அப்பு சம்பந்தமான உப சாரங்கள் சலம், பால், தயிர், வஸ்திரம் முதலி
LUGOGJ35.GITITLD.
அக்கினி சம்பந்தமான உபசாரங்கள்: பொன், இரத்தினம், தீபம், கர்ப்பூரதீபம், ஆபரணம் முதலியவைகளாம்.
- வாயு சம்பந்தமான உப சாரங்கள்: தூபம், சாமரை, விசிறிமுதலானவைகளாம்.
ஆகாசசம்பந்தமான உபசாரங்கள் : மணி, வாத்தியம், தோத்திரம்
முதலானவைகளாம்.
மகோற்சவ விளக்கம்
S2
麦
影
2
S
தலையே நீ வணங்காய் - தலை
மாலைதலைக் கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய்
- திருநாவுக்கரச்

Page 7
ba52ni
- திருமுருக கிரு
நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? செய்ய வேண்டிய கருமங்களுள் முக்கியமும் முதன்மையும் ஆனது எது? முந்திச் செய்ய வேண்டியது எது ? சற்றுப் பிந்திச் செய்ய வேண்டியது எது ? என்ற சிந்தனை அறிவு படைத்தவன் உள்ளத்தில் தோன்றாமலிருக்க
முடியாது.
ஒருவனுக்குத் தலைமயிர் தீப்பற்றிக் கொண்டது. உணவும் உறக்கமும் மனித
வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்றாலும் அவற்றை அவன் அப்போது விரும்பமாட்டான் அல்லவா ? தலைமயிர் எரியும் தருணத்தில் அவசரமாகத் தேட வேண்டியது தண்ணிர் ஒன்றுதானே ?
நாம் இந்த வகையில் மிகவும் கவனக் குறைவாக இருக்கிறோம். முந்திச் செய்ய வேண்டியதைப் பிந்திச் செய்கிறோம்; செய்ய வேண்டியதைச் செய்யாமலும் இருக்கின்றோம். செய்ய வேண்டாததையும் செய்து கொண்டிருக்கிறோம்.
மரண பயம் தலைக்கு மேல் இருக்கின்றது. எந்தக் கணத்திலும் அது வரும். மேலே எறிந்த கல் கீழே விழாமற் போகாது. அது போல் உடம்பெடுத்த நாம் மரணமடைந்து தீருவோம். சில சாதனைகள் செய்து பன்னெடுங்காலம் இருந்தோரும் முடிவில் மடிவர். தேவரும் மூவரும் சித்தரும் முத்தரும் மடிவர் என்றால், அற்பர்களான நாம் மடிவதில் என்ன ஐயப்பாடு? அதை மறந்து மெத்தனமாக இருக்கிறோம்.
மரணபயம் விரைந்து நம்மை வெருட்டுகிற இந்தத் தருணத்தில் நாம் அவசரமாகச் செய்ய வேண்டியது எது?
நெடுங்காலம் இருக்க வேண்டும் என்று விரும்புவது சரியன்று. இந்த உடம்பு மிகவும் கனமானது. மலம் சோரும் ஒன்பது ஒட்டைகளுக்கும் பல நோய்களுக்கும் இருப்பிடம் ஆனது; நாம் இதைச் சுமக்கவில்லையானால் நான்கு பேர் சுமக்க வேண்டும் ஆகவே, இந்த உடம்புடன் இருக்க ஆசைப்படக் கூடாது. இந்த உடம்புடன் கூடியிருக்கும் நாம்
(

92 jõgib
பானந்தவாரியார் -
அவசரமாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்.
நமக்கு மூன்று உறுப்புகள் இருக்கின்றன.
9,606) LLJT6) 60T : 1. சாங்கம் (பிரிக்க முடியாத உறுப்பு),
கரசரணங்கள்; 2. உபாங்கம் (பிரிக்கத் தக்க உறுப்பு) ஆடை,
அணிகலன்கள்; 3. பிரத்தியங்கம் (பிரிந்தே இருக்கும் உறுப்பு) -நாம்
வைத்திருக்கும் பாத்திரம் பண்டங்கள்.
நமக்கு ஒரு பெரிய ஆபத்து வருங்கால் நாம் எதனை அவசரமாகக் காக்க வேண்டும் என்பதைச் சிந்தியுங்கள். ஒரு யானை விரட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். சாங்கமாகிய கை கால்களுக்கு வரும் ஆபத்தைத் தவிர்ப்பதா? உபாங்மாகிய ஆடை அணிகலன்களுக்கு வரும் ஆபத்தைத் தவிர்ப்பதா? பிரத்தியங்கமாகிய பாத்திரம் பண்டங்களுக்கு வரும் ஆபத்தைத் தவிர்ப்பதா? பாத்திரம் பண்டத்திலும், ஆடை அணியிலும், கரசரணங்கள் முக்கியம். அவற்றை அவசரமாகக் காப்பாற்ற வேண்டும். கைகால் ஒடிந்தாலும் கவலையில்லை; பாத்திரம் பண்டங்கள் பழுதுபடக் கூடாது என்று எண்ணுபவனது அறிவை நாம் என்ன என்று எண்ணுவது?
இனி, நாம் என்பது இந்த உடம்பு அன்று; உடம்பு நாம் குடியிருக்கும் வீடு; நாம் என்பது ஆன்மா. ஆன்மாவுக்குச் சாங்கம் எது? உபாங்கம் எது? பிரத்தியங்கம் எது ? என்று சிந்திக்க வேண்டும். ஆன்மாவுக்குச் சாங்கம் அறிவு
உடம்புக்குக் கரசரணங்கள் அந்நியமாகாதவை போல் ஆன்மாவுக்கு அறிவு அந்நியமன்று; ஆன்மாவுடன் அறிவு பிரிவற நிற்பது. அரிசிக்கு வெண்ணிறம் இயல்பு. ஆனால் தவிடு மூடி யிருக்கிறது. தவிடு போக அரிசியைக் குற்றினால் அரிசிக்கு இயல்பாகிய வெண்மை நிறம் தானே வெளிப்படுகிறது.
அதுபோல் ஆன்மாவுக்கு அறிவு (ஞானம்) இயல்பானது. அந்த அறிவை ஆணவமாகிய தவிடு

Page 8
மூடியிருக்கிறது. ஆணவ அழுக்கு நீங்கினால் ஆன்மாவுக்கு இயல்பாக உள்ள அறிவு விளங்கித் தோன்றும்.
ஆன்மாவுக்கு உபாங்கம் - மனைவி, மக்கள், வீடு, நிலம், பொன் முதலியன.
இப்பொழுது சிந்தியுங்கள், ஆன்மாவுக்குச் சாங்கமாகிய அறிவு விளக்கமுற வேண்டுமென்று நாம் முயல்கிறோமா ? இல்லை.
உபாங்கமாகிய உடம்புக்காகச் சிறிது பாடுபடுகிறோம். இனி, பிரத்தியங்கமாகிய மனைவி, மக்களுக்காகவும், வீடு, நிலங்களுக்காகவும், பொன் பொருள்களுக்காகவும் தான் முழு நேரம் செல
வழிக்கின்றோம்.
நிலம், பொன் இவைகளுக்கு இடர் வருமாயின்
அவற்றை நீக்குவதற்காக வழக்கறிஞர்களுக்கு ஆயிரக்கணக்கான பொருள் வழங்குகிறோம்.
நினைவிற் ெ
| ഞ9, 01 15.01.2000 || .gf Gof தைப்ெ O2 16.01.2000 | ஞாயிறு கார்த்தி O3 17.01.2000 திங்கள் ஏகாதி
O4. 18. OI. 2OOO || GF6ội GDI ITU பிரதே O5 19.01.2000 | புதன் கண்ண O6 20.01.2000 வியாழன் [[Jഞങ്ങ O7 2I.01.2000 | G 616TGrf தைப்பூ 10 124.01.2000 திங்கள் gira, 12 26.01.2000 | புதன் சண்டே I6 30.01.2000 | ஞாயிறு திருநீல 18 OI.O2.2OOO | Golge 66) Tuů ஏகாதசி I9 02.02.2000 | புதன் பிரதோ 22 05.02.2000 || .gf Gof 9440П6) 24 07.02.2000 திங்கள் அப்பூதி 26 09.02.2000 | புதன் சதுர்த
27 10.02.2000 வியாழன் கலிக்க
28 III. 02.2000 || GINGIGTIGf ஷஷ்டி L -----------------
(6)

உபாங்கமான உடல் நலம் குன்றுவதைக்கூடப் பொருட்படுத்தாமல் பொன் தேடுகிறோம்.
உபாங்கமான உடம்பை ஒரே ஒரு சமயத்திலே கவனிக்கிறோம். அதற்கு நோய் வந்தால் மருத்துவருக்கு நூறு இருநூறு தந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளுகிறோம்.
சாங்கமாகிய அறிவின் வளர்ச்சியைப் பற்றிய சிந்தனை சிறிதேனுமில்லை. அதனை வளர்க்கும் குருதேவரைத் தேடுவதுமில்லை. வறிதே வாழ்நாள் கழிந்தால் பின்னர் மரணம் என்ற வெள்ளம் வந்து விடுமே. அந்த வெள்ளம் வருமுன் அணைபோட (36) J5jTLTLOIT? ஆகவே அவசரமாக நாம் ஒவ்வொருவரும் அறிவின் வளர்ச்சிக்காக அறிவு நூல்களைக் கற்றும், அறிவின் சிகரமாகிய ஆன்றோரை அடுத்தும், அறிவின் வடிவமாகிய ஆண்டவணை வேண்டியும் உயர்வு பெறுவோமாக.
பாங்கல் உத்தராயன புண்ணியகாலம் கை விரதம்
விரதம்
ஷ விரதம் தைச் செவ்வாய் வைரவ விரதம் ாப்பர் குருபூசை ன விரதம் அரிவாட்டாயர் குருபூசை
சம்
டசுரர் குருபூசை
கண்டர் குருபூசை விரதம்
ஷ விரதம் ாசை விரதம் நியடிகள் குருபூசை விரதம் ம்பர் குருபூசை
ஹற்ரசதுர்த்தி
விரகம்
ரதம

Page 9
ögsaia
-மு. தியா குருப்பிரவேசம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்! ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபஸாந்தயே!
சர்வவிக்நோப சாந்தயே! 6T66) இடையூறுகளும் நீங்கி சாந்தியுண்டாகட்டும். சாந்தி, துன்பமொன்றில்லா அமைதி, மக்கள் எல்லோருமே அமைதிக்காக ஏங்குகின்றனர். அது கிடைக்குமா? கிடைக்கும், எங்கே? இங்கேயே, எப்போழுது? இப்பொழுதே, எப்படி? தடைகளை எல்லாம் தகர்த்தெறிய வல்லவன் அருளினால், அந்த அருள் எவ்வாறு கிடைக்கும்? தியானத்தினால், கிடைத்துவிடும்.
அவன், வெவ்வினையை வேரறுக்கவல்லான். வெண்ணிற ஆடையினன், எங்கும் நிறைந்தவன், நிலவொளி நிறத்தினனன், நான்கு கைகளை யுடையவன், ஒளிவீசும் பிரகாசமான முகப்பொலிவினருமாகிய எல்லா இடையூறுகளும் நீங்கி, என்மனம் சாந்தியடைவதற்காக அவனைத் தியானிக்கிறேன்.
எல்லாச் சடங்குகளிலும் முதலில் விக்னேஸ்வர பூஜை இடம்பெறுகிறது. எல்லோரும் தத்தமது தெய்வ வழிபாடுகளிலும் முதலில் பூர்வாங்கமாக விக்னேஸ்வரபூசை செய்கிறார்கள். மேற்படி'சுக்லாம் . தியானத்தைச் சொல்லி, தமது தலையில் ஐந்து தடவை குட்டி, மனமொன்றிப் பிரார்த்திப்பது, மரபு. வழக்காறு, அநுபவத்தினால், பழக்கமாக, ஒழுக்கமாக நடைமுறைப்படுகிறது.
விநாயகர்க்கு, கண், மூக்கு, கால், கை ஒன்றும் அமைக்க வேண்டியதில்லை. மஞ்சள் அல்லது சாணத்தை உருட்டிவைத்தால் போதும், விநாயகரை, பிள்ளையார் பிடித்துவைத்துப் பூசை செய்யலாம். அறுகம்புல் எடுத்துச் சாத்தினால் அருள்புரிவார் அவர் சுக்லாம் பரதரம், என்பது வெண்ணிற ஆடை சுத்தசாத்வீக சித்தப்பெருவெளி உலகம் பல
(

喹 வதனம்
கராசஐயர்
ர் உடப்பு சிலாபம்
என்பது உலவு அம்பலம் காற்று என்றாகிறது. வாணவெளியிடை உலாவும் ஒலியின் சக்தியே, பிரபஞ்ச உற்பத்திக்கும் அதன் இயக்கத்துக்கும் மூலகாரணம். ஒலி வானிடைப்பிறந்து பரா, பச்யந்தி, மத்யமா என இறங்கி வருகின்றது. ஒலி, பரா, பச்யந்தி நிலைகளில் இச்சாசக்தி, ஞானாசக்திகளாக விளங்குகிறது. மத்யமா, கிரியாசக்தியாக விரிகிறது. இந்நிலை ரிஷிகளால் மட்டுமே உணரப்படக்கூடிய ஆற்றல்மிக்க, மந்திர ஓசை மந்திரச் சொல், எழுதாக்கிளவி "மந்திராதரம் அந்தணர் மறைத்தே.” என்கிறது, தொல்காப்பியம். மத்யமானது அடுத்து “வைகளி' வெளிப்படுகிறது. "வைகரி” “வாக்"ஆக வாயினால் உச்சரிக்கக்கூடியதும் காதினால் கேட்டு உணரக்கூடியதுமான ஓசை நாதவிந்து கலாதீ நாமோநம" என்று விநாயகரைப் போற்றுகின்றது. திருப்புகழ் ஒலியும் நீயே ஒளியும் நீயே தேவாரம் ஒலி வட்டம் “O”; ஒளி, கோடு- ஒலியும் ஒளியும் சேர்ந்த வடிவம், உ பிள்ளையார் சுழி. தமிழர் தாம் எதனையும் எழுதத்தொடங்கும் முன் விநாயகரை நினைத்துப் போடும் சுழி. 'அகர உகர மகரங்கள் நம்மால் பகரும் ஒரு முதல் பிரணவம், "ஓம்" எனும் நாதப்பிரமம்; பிள்ளையார், சுக்கிலம் - விந்து; மூலமுதல். பரம் - பரிபூரணம். சுக்லாம் பரதரம் - மூலமுழுமுதல்நிலை.
விஷ்ணும், எங்கும் நிறைந்த அகண்டபரிபூரணம், பரப்பிரமம், விநாயகர் அனைத்து அண்டசராசரங்களையும் தன்னுள் அடக்கி, அனைத்துக் கணங்களின் அரசனாக விளங்குகிறார். அவரே, மனிதன், மிருகம், பூதம் என எல்லா உயிர்களாகவும் காணப்படுகின்றார்.
சதுர்ப்புஜம்; நான்கு கைகள், அவற்றில் அங்குசம் பாசம், ஒற்றைக் கொம்பு, மோதகம் ஆகியவற்றினைத் தாங்கியவராகக் காட்சி

Page 10
யளிக்கின்றார். கடும்பகை கடிந்து அடக்கியவர். பாசத்தினால் உயிர்களைத் தன்வயப்படுத்தவல்லவர். அங்குசத்தினால் ஆன்மாக்களை நல் வழிப்படுத்துவார். உயிர்க்குறுதியான, போஷாக்கான இன்சுவைப் பூரண உணவு மோதகம்.
பிரசன்னவதனம். உள்ளத்தில் உண்மையொளி உண்டாகில் முகத்தினிலே ஒளியுண்டாகும். விநாயகரின் முகத்தில் ஞானஒளி, அறிவொளி வீசுகின்றது. பிரசன்னவதனம் என்பதை என்றும் முன்னிற்கும் முகம் என்றும் கொள்ளலாம். முந்தி விநாயகா முத்தியின் நாயகா என்றும் முன்னவனே யானை முகத்தவனே என்றும் துதிக்கப்படுகின்றான். ஆயினும் தியானதில் தெய்வவடிவம் தெளிவுபெறவில்லை. இவ்விலக்கணங்கள் யாவும் ஏனைய தெய் வங்களுக்குப் பொருந்துவனவாகவே உள்ளன. எத்தெய்வங் கண்டீர் அங்கே அத் தெய்வமாகத்தானேயாகி நிற்கின்றான். ஆதலால் ஏனைய தெய்வங்களுக்குரிய பூசனைகளிலும் விக்கினேஸ்வர பூசையே பூர்வாங்கமாக அமைகிறது என்று கொள்ளமுடியாது. ஏனெனில் பூர்வாங்க பூசையின் பிரார்த்தனை
வக்ரதுண்ட மகாகாய ஸாதுர்யகோடி ஸ்மப்ரபர் அவிக்நம் குருமே தேவஸர்வ கார்யேஷ9 - ஸர்வதா! என்று குறிப்பாக விநாயகரையே விளக்கிக் காட்டுகிறது. இந்தத்தியானத்தில் விநாயகரின் வடிவம் ஏன் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை? என்று சிந்திக்கவேண்டியுள்ளது. இந்த இடத்தில் அமரகோசம், வடமொழிநிகண்டு துணைசெய்கிறது. அதில் “பிரசன்னம்’ என்பதற்கு யானை என்ற பொருள் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே பிரசன்ன வதனம் என்பதற்கு யானைமுகம் என்ற பொருள் கிடைக்கிறது.
தியானம் - மனம் கெட்டால் மாநிலம்கெடும்” என்பது ஞானவாக்கு இருபதாம் நூற்றாண்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அறிவியல் விஞ்ஞான - தொழில் நுட்பங்கள் வேகங்கண்டுள்ளன. ஆனால்

மனிதனிடமிருந்து நிம்மதி, அச்சமின்மை, ஆனந்தம் காணாமல் போய்விட்டன. இது ஏன்?
மனிதனிடம் இயல்பாகத் தெய்வீகக் குணங்கள் உள்ளன. அதேவேளை மிருகக்குணமும் இருக்கிறது. இவற்றுள் எதனை அவன் வளர்க்கிறான்? எதனை அழிக்கிறான்? என்பது அவன் வாழும் காலம், சூழ்நிலைகளால் கணிக்கப்படுகிறது. மனிதனின் குண இயல்பு அறிவினால் தீர்மானிக்கப்படுகிறது. பெளதீக அறிவு வளர்ச்சி வேகத்திற்கு ஈடாக ஆன்மீக அறிவு வளர்க்கப்படுவதில்லை. மனிதனைப் பெளதீகம் ஆட்சிசெய்கிறது. மனிதனின் ஆளுமையைதோற்றம், உணர்வு, விவேகம், அன்பு ஆன்மீகம் ஆகிய ஐந்து தன்மைகள் உருவாக்குகின்றன. நன்னடத்தை, நல்லொழுக்கம், தோற்றத்தில் ஒரு கம்பீரத்தைத் தோற்றுவிக்கிறது. தியானத்தினால் உணர்வுகள் ஒழுங்காகி மனம் அமைதியடைகிறது. உண்மை, சத்தியம், விவேகத்தை வளர்க்கும். மனநெருக்கம் அன்பை உண்டாக்குகிறது. அகிம்சை, ஆன்மீகத்தை வளர்க்கிறது. -
சாந்தி 'சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின் பால் உய்ப்பது அறிவு'
மனிதன் தன் அறிவுக்கு முதன்மை கொடுத்து உணர்வுகளை வழிப்படுத்தலே சாந்தியை அடைவதற்கான வழியாகும். இயல்பாக உள்ள மன அமைதியை உணர்வுகள் பிடித்தாட்டுகின்றன. காமக் குரோத மத லோப மார்ச்சரியங்கள், உணர்வுகளின் வெளிப்பாடு, இவை புனிதமான அமைதியை, மனச்சாந்தியைக் கொல்லும். மனச்சாந்தியைப் புறக்காரணிகள் பாதிக்கின்றன. -தியானம் ஒழுங்கான பயிற்சியினால் மனதில் அமைதியை வளர்த்தெடுக்க உதவும்.
ஒன்றே தானாய், தானே அனைத்துமாய் நின்றான் காண். "அல்லல் போம் வல்லினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம்; - நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
3) கணபதியைக் கைதொழுதக் கால்.

Page 11
வீரபாகுதேவர் தூதும்
- இயற்றமிழ் வித்தகர் பணி
திருமால் முதலான தேவரனைவரும் சேர்ந்து வந்து திருக்கயிலாய நாதனை வணங்கி, சூரன் முதலான அசுரராலே தாமடையும் அல்லலை எடுத்தியம்பினர். தங்குறைதீர்க்க வேண்டினர். கருணாநிதியான பெருமான் தமது திருக்கண்ணிலே தோன்றிய ஆறு தீப்பொறிகளிலிருந்து உருவான ஆறுமுகப்பிள்ளையான முருகனிடம் பூதரும் வீரருமான படையோடு வேலையும் கொடுத்து, சூராதி அவுனரை அழித்து, தேவரைச் சிறைமீட்டு அவர்களுக்கு முன்னைய நல்வாழ்வு நல்குதி எனப்பணித்தருளினார்.
கந்தசுவாமியார் இராயிரம் வெள்ளம் பூதரும் இலட்சத்தொன்பது வீரரும் உடன்வர, கயிலையி லிருந்து பூமியில் வந்து சேர்ந்தார். முதலிலே கிரவுஞ்சமலையரனோடு மாயமாபுரத்திலிருந்த தாரகனை மலையோடு வேல்விடுத்து அழித்தார். பின் செந்திலம் பதிசேர்ந்திருந்தார். அங்கு காசிபமுனிபர் மூலம் மாயை சூர்கிளையைத் தோற்றுவித்ததும் அவர்கள் பல்லாண்டு வீரவேள்வி செய்து, சிவபிரானிடம் 1008 அண்டங்களை 108யுகம் ஆண்டிருக்கும் வரம் பெற்று வீரமகேந்திர நகரிலிருந்து கொடுங்கோலாட்சி செலுத்துவதும் தேவர்குலத்தை அலைப்பதுமாகிய செய்திகளை வியாழபகவானிடம் கேட்டறிந்தார்.
அதன் மேல் அரசர்க்குரிய நால்வகை உபாயங்களில் முதலான சமாதான வழியில் ஒரு தூதனை அனுப்பித் தேவர் சிறையை விடும்படி சொல்விப்போம், மறுத்தால் இறுதியான தண்டத்தைச் செய்வோம் எனக்கூறி, எம்பெருமான் வீரபாகு தேவரைத் தூதனுப்பினார். அவர் கடலைத்தாவிக் கடந்து வீரமகேந்திரத்தை அடைந்தார். அணுவிலும் சிறிதாகத் தம்முருவை மாற்றிக் கொண்டு எவர் கண்ணிலும் படாமலே நகர்வளம் நோக்கினார். சூரனுக்குரிய மக்கள் மந்திரி பிரதானியருக்குள்ள இருக்கைகளையும் பார்த்தார். அமரர் சிறைக் கூடத்தையும் அவர்கள் படும் சித்திரவதைகளையும் கண்டிரங்கினார் சோர்ந்து மயங்கிய தேவர் கனவிலே குமரன் தோன்றி அருளிய வண்ணம் வீராபாகுவாகிய
 

BGAI GUGLIEŤ LITTšgalugupið
ண்டிதர் ச. சுப்பிரமணியம் -
தூதரும் தோன்றித் தேவர்களுக்குத் தேறுதல் கூறினார்.
அப்பால் சூரன் அரசிருக்கும் அவைக்குள் புகுந்தார். அண்ட சக்கராதிபதியான சூரன், ஆயிரம் இந்திரர்களது திருவிலும் மிக்க மகோன்னத நிலையில் வீற்றிருந்தான். அமரரும் அசுரரும் பலவகைப் பணிசெய்யவும் மக்களும் மந்திரி பிரதானிகளும் சூழ்ந்திருக்கவும், அணிந்திருந்த நவரத்தினாபரணங்களின் ஒளியால் உதித்துவரும் சூரியன் போலும் பிரகாசத்தோடு காணப்பட்டான் இவற்றை நோக்கி வியந்த வீரபாகு தேவர் "கூட்டிலே இருளை ஒட்டத் தூக்கணாங்குருவி, மின்மினி என்றெண்ணித் தீப்பொறியைக் கொண்டு போய் வைத்துக் கூட்டோடு அழிந்த வகை போலச் சூரனும் தேவரைச் சிறைவைத்த பாவத்தாலே நாளை சுற்றத்தோடு அழியப் போகிறானே' என இரங்கினார். அடுத்துத் தம்முடைய உருத்தோன்றும்படி அவையிலே சூரன் முன் சேர்ந்தார். ஆறுமுகன் தூதாக வந்த அடியவனான தான் அரியணையில் வீற்றிருக்கும் அசுரராசன் எதிரில் இவ்வாறு நிற்க நேர்வது எம்பிரான் பெருமைக்கு அழகாமோ என நினைத்தார். அப்போதே ஆறுமுகனருளால் ஒரு தெய்வீகச் சிம்மாசனம் அவையில் வந்தது. அவ்வாசனத்தில் வீரபாகு தேவர் முருகன் திருவடிதொழுது வீற்றிருந்தார். ஆசனத்தின் ஒளியும் தேவரின் ஒளியும் பரந்ததால் அச்சபையிலே முன்பு பிரகாசித்த ஒளியெல்லாம் பகலவன் வரவால் மறைந்த நட்சத்திரங்கள் போல ஒளிமங்கி மறைந்தன.
வீரரும் ஆசனமும் அவையினுள் வந்தவாறு அறியாது அவையிலுள்ளோர் திகைத்தனர். தனது அநுமதியின்றிச்சபையுள் அன்னியன் ஒருவனை வரவிட்டதற்கு அரசன் என்ன தண்டனை செய்வானோ என்று அஞ்சினர். வந்தவன் மாயமும் வீரமும் வல்லவனாயிருக்கிறான். அரசனின் நட்புநாடி வந்தானோ? பகைவர் பக்கத்தவனோ? நேற்று இறந்த தாரகனின் மாயமான மறுதோற்றமோ? சூரனின் மாயமோ? எனப்பலவாறு எண்ணி எண்ணி மருண்டனர்.

Page 12
சூரனோ கடுங்கோபாவேசமுற்றவனாயினும் நிதானத்தோடு வீரரைப்பார்த்து, இறுமாப்போடு பற்களைக் கறித்தான், கறுவினான், நகைத்தான், உரப்பினான், கண்களில் கோபத்தி சிதற நோக்கிச் சொல்கிறான்.
அனைத்தையும் துறந்து வனத்தில் விலங்குகள் போல அலைந்து வாழும் சிற்றறிவுடைய முனிவரும் சித்தரும் செய்யவல்ல சிறுதொழில் நின்செயல். சிறியவனே! இந்நகரத்துப் பெண்களும் சிறுவரும் கருவிலிருப்பனவும் விலங்குகளும் செய்யும் சிறுசெயலை நீ அருஞ்செயலாக நினைந்து எம்முன் செய்து காட்டினை முனிவரேயன்றித் தேவரும் இச்சிறு செயல் செய்வராயினும் எம்முன்னே செய்யார். அரிபிரமாதிதேவர் வண்ங்கி நின்று என்னேவல் செய்கின்றனர். எதிரிலே மதியாது ஏற்றத்தோடு இருக்கின்றாய் இச்செயலுக்கே உன் தலையை வெட்டிவிடலாம். ஆயினும் நீயாவன்? வந்த செயல் ஏதென்று தெரிந்து கொண்டு GEFLÜELL எண்ணியிருக்கிறேன். நீ அறிந்தவித்தையை எம்முன் காட்டினாய்; கண்டோம்; அதற்கான பரிசையும் முன்னமே தந்துவிட்டோம்; அது இத்தனை நேரமும் உன்னுயிரைப் போக்காது உன் வசத்தில் இருக்கவிட்டதேயாம். சிவனும் என்முன்னே வர மாட்டார்; நீ யார் சொல்லுதி” என்றான்.
சூரன் கூற்றைக் கேட்ட வீரருக்கும் சினம் மூண்டது. சூரனுக்குச் சொல்வார்.
"மாயங்களைச் செய்துழலும் ஏழைமாந்தர் போல எம்மையும் நினைத்தாய்; இனி அந்த எண்ணத்தை விடு; நாம் சொல்லும் அறிவுரையைக் கேள்; தேவர் சிறையையும் குறையையும் தீர்க்கவும், அவர்களுக்கு முன்னைய நல்ல வாழ்வை அருளவும் எழுந்தருளி வந்து திருச்செந்தூரில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணியப் பெருமானின் அடியவன் நான். அவருடைய சேனையின் தலைவன், நந்தி கணத்தவன்; பகைவரும் புகழும் வீரபாகு என்பது என்பெயர்; உன் தம்பி தாரகனைக் கிரவுஞ்சத்தோடு கணத்திலே அழித்த ஒப்பில்லாத வேற்படையுடைய பெருமான், சூரன் எனப்படும் உன்னிடம் வைத்த பெருங்கருணையால் தமதியேனைத் தூதாக அனுப்பினார்' என்றார். அது கேட்ட சூரன், தூதாக அனுப்பிய காரணத்தைக் கூறுவாய் என்றான் தேவர் பதில் பகர்வார்:-
"இந்திரனோடு இந்திராணியைத் துரத்தினாய், பொன்னுலகைத் தீயூட்டிப் பொடியாக்கினாய்
( பிரமாதி தை )
G

அவர்கள் மகன் சயந்தனையும் எண்ணில்லாத விண்ணவரையும் பலயகமாகச் சிறையிலே இருத்தினாய் என்பதை அறிந்த பெருமான், அவர்கள் குறைதீர்க்க நினைத்தருளினார்; அதனாலே வீரரும் பூதரும் புடைசூழவந்து தாரகனைக் கிரவுஞ்சத்தோடு அழித்துச் செந்தூரில் வந்து வீற்றிருக்கிறார்; உன்னையும் விரைந்து வந்து சங்கரிக்கவுள்ளார்; உன்மீது கொண்ட பேரருளாலே சில அறிவுரை கூறி உன் கருத்தை அறிந்து வருமாறு என்னைத் தூதனுப்பினார். சுவாமி கூறியவற்றைச் சொல்லுவேன் கேள்:- சுவாமியாற் சொல்லப்பட்ட அறிவுரை:-
“நிறைமதியை இராகு விழுங்கியது போலத் தேவர்களை விலங்கிட்டுச் சிறைவைத்தாய்; அவர்களின் ஆசார ஒழுங்கங்களைக் கெடுத்தாய் சித்திரவதை செய்விக்கின்றாய்; இவை அரசருக்கும் வீரருக்கும் அடாத செயலாகும்; அறமுமாகா, தேவரோடு நீயும் காசிபமுனிவரின் புத்திரனேயாம்; வைதீக ஆசாரத்தைக் கைவிட்டாய்; இழி தொழிலையே விரும்பினாய்; நீதி தவறாது செங்கோலாட்சி செய்வதே அரசதர்மமாம்; சலந்தரன், அந்தகாசுரன், முப்புரத்தசுரர் முதலியோர் தேவர்களை வருத்தியதால் விரைவில் அழிந்தனர்; தீயவனே தூயவராகிய தேவரை வருத்துதல் உனக்கு அழகோ இவ்வாறான பாதகங்கள் செய்யும் பாவிகள் பழிபாவம் சுமந்து சுற்றத்தோடு விரைந்தழிவர்; மேலும் நரகத்திலழுந்துவர்; ஏழ்பிறப்பினும் துயருற்றுத் தாழ்வர்; அவருக்கு உய்யும் வழி உளதோ, நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து பிறர்க்கு அவற்றை முற்பகலில் செய்வாராயின் பிற்பகலில் அவர்க்கு அவை வந்து சேரும் தம் வினைகள் தம்மையே சாரும்; தேவர்களைச் சிறையிட்ட பாவத்தினால் நீ பெருந்துன்பமேயடைவாய் அன்றியும் இறுதியும் வரும்; தாரகனைக் கொன்ற வேல் சுவாமியின் கையிலுளது; அதனை விடுத்தால் உன்னையும் கண்ட துண்டமாக்கும்; அறத்தை எண்ணி எம்பிரான் இவ்வளவும் பொறுத்தார்; பலயுகங்களாகச் சிறையிலே வாடுகின்ற தேவரை விடுதலை செய்வாய்; இதுவே உய்வதற்கு வழி; மறுத்தாயாயின் உனக்கு இறுதியே உறுவதாகும்; அரும்பெரும் வேள்வியைப் பல்லாண்டு செய்து பரமசிவனிடம் பெற்ற வளங்களோடும் மற்றும் சுற்றத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்வதற்கு உகந்த வழி தேவர் சிறையை விடுதலே; மறுத்தால்

Page 13
பெருமான் இங்கு எழுந்தருளி வந்து உன்னைக் கிளையோடு சங்கரிப்பார்; நிச்சயம்; உய்யநினைத்தால் சுவாமியின் இவ்வருளுரையைக் கேட்டுநட இவை சுவாமி சொல்லிய செய்தி; இதனை உணர்ந்து கொள்; உய்வழியை நாடி, அறத்தைப் பேணுதி, நீடுவாழ்குதி" என வீரபாகு தேவர் கூறினார். இவ்வுரை கேட்ட சூரன் கண்களிலே கோபத் தீ எழ, சுவாசத்தில் புகைபரவ கையோடு கையைப்பிடித்து, பெருநகை செய்து மிக்க கோபத்தோடு பேசுவான்;-
"1008 அண்டங்களையும் வென்று அண்ட சக்கராதிபதியாய் 108 யுகம் அரசாளும் எனக்கு, இன்னமும் பல்முளையாத பாலகனாம் அரசியல் நீதிகள் சொல்வான்; மிகவலியவர்களான அசுரராம் மெலியார், அஞ்சி அடிமை செய்துழலும் தேவராம்
வலியார், குதலை மொழிபேசும் குழந்தையாம்
மாமன்னருக்கு மனுநீதி சொல்வார்; உலகியல் நன்று நன்று நமக்குக் குலப்பகைவர் தேவர்; அவர்கள் எம்மினத்தவரான அசுரரை அடக்கி ஒடுக்கி அழித்துப் பற்பல சிறுமைகள் செய்தனர். அதனால் நான் தேவர்களின் செல்வத்தை அழித்தேன்; குற்றவேல் செய்வித்தேன். ஒழுக்கத்தையும் கெடுத்தேன்; சிறையிலும் இடுவித்தேன்; நம்குலத்தோர் தருமத்தையே செய்தேன்; பிரளய வெள்ளத்தில் உலகம் அழியினும் தேவர் சிறைவிடேன்; அவர்களை அண்ட முகட்டில் சிறைவைப்பேன். தப்பி ஓடிய எஞ்சிய தேவரையும் தேடிப்பிடித்துச் சிறையிடுவேன்; அகப்பட்ட சிறையை விடுவேனோ? அழியாத வச்சிரயாக்கையையும் வேறு பல வரங்களையும் தன் தந்தையே முன்பு எனக்குத் தந்தான்; அதை மைந்தனோ மாற்றுவான்? போரிலே என்னை வெல்ல வல்லவர் யார்? தம்பி தாரகனைக் கொன்றதை நேற்றே அறிந்தேன்; போருக்குப் புறப்பட்டேன்; பாலகனோடு போய்ப் போரிடுதல் பழுதென்று பாங்கிருந்தோர் தடுத்தனர்; விடுத்தேன்; ஆனால் என் பக்கத்தில் உள்ள ஒரு வீரனை அனுப்பிப் பழிவாங்குவேன்; பார்; 1008 அண்டத்திலும் வாழும் விஷ்ணு பிரமா முதலிய தேவர் யாவரும் என்னை எதிர்க்க மாட்டாதவராய் வணங்கி ஏவல் செய்கின்றனர்; அப்படியிருக்க, சிவன் கண்ணிலே தோன்றிய நேற்றைய பாலகனோ என்னை எதிர்த்துப் போரிட வல்லான்; அறிவில்லாத சிறு குழந்தையின் சொல்லைக் கேட்டுத் தூதனாக வந்தனை, அதனாலே உன் உயிரைத் தந்தேன்; உயிர் பிழைத்துப் போகுதி" என்றான் சூரன்.

இவ்வுரை கேட்டதேவருக்குச் சினம் மூண்டது; கண்கள் தீப்பிழம்பாயின; புகையோடு மூச்சுக்காற்று வந்தது; உரோமஞ் சிலிர்த்தது; அட்டகாசம் செய்து பின்வருமாறு கூறுவார்
"உய்யும் வழி அறியாத பித்தனே கேள்; அரவும் பிறையும் அணிந்த சடையினராகிய சிவனின் நெற்றிக்கண்ணிலே திருவவதாரம் செய்தருளிய நம் தலைவராகிய சண்முகப் பெருமானது பெருமையை நீ சிறிதும் அறிந்திலை; பாலன் என்று இழிவாகப் பேசினாய்; மனிதரிலே சிலரைத் தேவர் என்றும், தேவர்களை மும் மூர்த்திகள் என்றும்; மும் மூர்த்திகளை முழுமுதற் கடவுளென்றும் அறிவிலார் கூறுவர். இது வெறும் முகமன் உரையே;
உண்மையாகாது- ஞானிகளாலே தியானிக் கப்படுவதும், எவர்க்கும் எட்டாததும் தெளிந்தவர்க்கு முத்தி தருவதும், உபநிடதம் கூறும்
உண்மையாயுள்ளதுமாகிய பெருமான் பெருமையைக் கேள்; என்று சுப்பிரமணிய பரத்துவம் சொல்வார்:-
'குமரப்பெருமான் தம்திருவுள்ளத்தில் அரும்பிய பேரருளினாலே அரிபிரமரால் அறிவரிய அவரே தமது நெற்றிக் கண்ணிலிருந்து பரஞ்சோதி வடிவான குழந்தையாகத் திருவவதாரம் செய்தார்; முன்னவர்க்கு முன்னதாயும், ஒப்புயர்வற்றதாயும், உயிர்க்குயிராயும் அருவுருவாயும், எவர்க்கும் தாய் தந்தையருமாயும் உள்ள பரமேஸ்வரரே அப்பாலகர், சிவனே ஒரு திருவிளையாட்டாகக் குமரனானார்; சூரனே அவருடைய ஆறுமுகங்களால் உண்மையை அறிவாய், மணியும் ஒளியும் போல இருவரும் ஒருவரே, வெறல்லர் அறிவினனே! தத்துவம் 36 இலும் கீழ்நிலையிலுள்ள பிருதுவியின் ஆயிரகோடி அண்டத்தில் 1008 அண்டங்களையும் வளங்களையும் படைகளையும் உனக்குத் தந்த பரமசிவனே இப்பாலகன்; ஆதலால் அந்தவரங்களை மாற்றுவது அரிதோ? பிருதுவி அண்டத்திலுள்ளவற்றிலும் மிகச்சிலவே பெற்றனை; அதனைப் பெரிதென
எண்ணுகிறாய்; ஏனைய ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவங்களிலும் உள்ள எண்ணில் கோடி அண்டங்களுக்கும்,
ஆறுமுகப்பெருமான் அருள் சிறிது பெற்றோர் தலைவராய் ஆட்சிபுரிவர்; வேதாகமங்களும் எண்ணெண்கலையும் அவற்றை ஒதி உணர்ந்த ஞானமும் முருகனின் திருமேனியாம்; எங்கும் நிறைந்து நின்றருள்புரியும் பெருமானுக்கு, எங்கும்

Page 14
முகம் எங்கும் கண் எங்கும் செவி எங்கும் கை எங்கும் பாதம் எங்கும் எல்லாம் அவரின் திருமேனியாயுள தேவர்களாலும் பொருள் அறியப்படாததும், வேதங்களுக்கெல்லாம் முதன்மை பெற்றதுமான பிரணவமே பெருமானின் திருமுகங்களில் ஒன்றாகும் எனின் அவர் பெருமை யார் அறிவார்; முனிவரும் தேவரும் திக்குப் பாலகரும் முச்சுடரும் மும்மூர்த்திகளும் சிவபெருமானும் அவரே; அவர்களுக்கு மேலானவரும் அவரே; வினை ஈட்டும் உயிர்களுக்குப் பயன் ஊட்டுபவரும் அவர்; இருவினை ஒத்த உயிர்களுக்கு முத்தியளிப்பவரும் அவர் காண்பவன் காட்டுவோன் காட்சி கானும் பொருள் யாவும் அவர்; பாலனுமாவர்; விருத்தனுமாவர்; அணுவிலும் சிறியராயும் அளப்பரிய பெரியராயும் பல்வேறு திருவுருவங்களைக் கொண்டு தோன்றுவர்; ஞானிகளும் அறிவரிய பிரானின் இயல்பை யாவர் அறிவார் சிவனின் திருவருள் வடிவாயுள்ளவரே குமரப்பெருமான்; அவர் ஆணையின்றி அணுவும் அசையாது; அவர் ஆற்றலைக் கடந்தவர் யார்? சூரணே நீ அவருடைய மாயையிலே அகப்பட்டு மயங்கினாய் தத்துவங்களை எவற்றிலுமுள்ள அண்டகோடிகள் யாவும் உயிர்களும் ஆகிய எல்லாம் சிருட்டியில் குமாரப் பெருமானின் ஓர் உரோம நுனியிலே தோன்றும் சங்காரத்தில் அழிந்து மீண்டும் அவ்வாறே ஒடுங்கும்; கோடி அண்டங்கள் ஒர் உரோம நுனியிலே கோவை பட்டு தோன்றும் படி பெருமான் கொண்ட விசுவரூபத்தை மேருமலையிலே தேவர்கள் காணுமாறு முன்பு காட்டினார்; அளவிறந்த பாவங்களையே செய்யும் கொடியவனாதலால் நீ காணப்பெற்றிலை நீ பெற்ற அண்டங்கள் குமாரசுவாமியின் ஒரு மயிர் நுனியில் அடங்கிய அண்டங்களுக்குச் சிறிதும் போதாதவை
சூரணே உன்னுடைய வரமும் வலியும் வாழ்வும் சுற்றமும் யாவும் () நொடியில் பெருமானது வேலால்; சூறாவளியிலக்கப்பட்ட தூசி மலை போல அழிந்தொழியும்; நீ இவைகளை அறியாதவனாய், குமரனைப் பாலன் என்று இகழ்ந்தாய்; இதற்குத் தண்டனையாக உனது நாவை வெட்டி உயிரையும் வாங்குவேன்; பேதையே உன் பிழை பொறுத்தோம் போ, போ பெருமானின் ஆணை அல்ல ஆதலால் செய்திலேன்; அவற்றைத் தந்தோம்; அறிவற்ற சிறியவனே வேற்படைக்கு g) 60OT 6 JT 35 வேண்டியவனாதலால் இன்னொருநாள் உயிர் பிழைத்திரு நீயும் உனது சுற்றமும் உய்ய

வேண்டுமாயின் தேவர் சிறை விடுவது நன்று போரைத் தவிர்க்குதி குமரப் பெருமானின் திருவடித் தாமரைகளை வணங்கிச் சரணடைகுதி, மீட்டும் கூறுகிறேன் உறுதி இதுவே என வீரர் உரைத்தார்.
புல்லனாகிய சூரன் அவ்வுரை கேட்டுப் பொறாதவனாய் மிகச் சீற்றங் கொண்டு சில சொன்னான்:-
"சிறு பாலகனின் தூதனென்று உன்னுயிர் விடுத்தேன்; இவ்விடத்தை விட்டுப் போகாமல் மேலும் பாலன் பெருமையையே பேசுகிறாய்; உன்னுடைய வீரத்தையும் உரைக்கின்றாய்; எனது கொடிய சினத்தையும் வீரத்தையும் நினைக்கிறாயில்லை; ഥgഞ ബ (BLJdilo அப்பாலகன் அழிவற்ற பரம்பொருளேயானாலும் ஆகட்டும்; Lj60 அண்டங்களிலுமுள்ள தேவர் அனைவரையும் வென்றயான் அவனுக்கு அஞ்சுவேனோ! கனவிலும்
தேவர்சிறைவிட நினையேன் என் எதிரிலே இருந்து
செருக்கோடு பல பேசினை; அவற்றை ஒரு கணத்திலே காண்பேன்; என்றான்.
பின் அயலில் நின்ற அசுர வீரரைப் பார்த்து "தூதனைக் கொல்வது தகாது; சிவனையும் பிடித்துத் தேவர்களோடு சிறையிடுங்கள்' என்றான்.
அரசன் ஆணைப்படி ஆயிரம் அசுரவீரரும் வீரபாகு தேவரைப் பிடிக்கச் சூழ்ந்து நெருங்கினர். தேவரும் விரைந்தெழுந்து ஒரு கையால் ஆயிரவரின் குடுமியையும் சேரப் பிடித்துச் சூரனவையில் நிலத்திலே அறைந்து கொன்றார். அவர்கள் உடலைச் சூரன்முன் எறிந்தார்; சூரனுக்கு இறுதியாக ஒன்று கூறினார்; 'சூரனே! சுவாமியின் வேல் இனி உன்னைச் சங்கரிப்பது திண்ணம். நீ இறப்பதன் முன்
ஜம்புலன்களும் ஆசைப்படும் போகங்களை விரைந்து
மிகவும் அனுபவித்து மனத்தெளிவோடு இறுதிநாளை எதிர்பார்த்திரு நான் போய் வருகிறேன்; என்றுரைத்து அவையை விட்டு வெளியே சென்றார்; அவர் வீற்றிருந்த சிம்மாசனமும் சேணில் எழுந்து மாயமாக மறைந்து விட்டது.
இப்பகுதி 'அஞ்சாமை துணிவு ஊக்கம் சொல்வன்மை முதலிய தூதருக்குச் சொல்லிய இலக்கணமெல்லாம் நிரம்பிய தூதுவர் வீரபாகுதேவர் என்பதைக் காட்டுகிறது. அன்றியும் கந்தசுவாமியார் பரம்பொருளாகிய சிவனே என்பதையும் அவரது பேராற்றல் பேரருளுடைமை முதலிய பரத்துவ இலட்சணங்களையும் 6] fi6T கூற்றால் விளக்குகின்றார்.

Page 15
G2Pu Jibu JGOD4
- சிவ. சண்மு
சோழர் குலப் புகழ் பெருக்கிய சிறப்பின் மிக்கது சோழநாடு. சோழநாடு நீர், நில வளம் நிறைந்தது. அதற்குத் துணைபோவது காவிரிநதி. புகார் என்னும் பொன்னகரம் கடலையும் தூய்மையாக்குவதோர் தீர்த்தச் சிறப்புக் கொண்டது. புகார் பூம்புகார் என்று போற்றப்படுவது.
இயற்பகையார் பூம்புகாரில் விளங்கியவர். வணிகர் குலத்தவர். சிவபிரானுக்குச் செய்யும் அடிமைத் தொண்டில் வல்லவர். அடியார் வேண்டும் யாவையும் இல்லையே என்னாது ஈபவர்.
சிவபிரான் இயற்பகையார் இல்லை என்னாது ஈயும் இயல்பினை உலகவர்க்கு உணர்த்தத் திருவுளங் கொண்டார். ஒரு வேதியர் வேடம் தாங்கினார்.
தமது நாயகியாரான சிவகாமசுந்தரி அம்பாள் தாம் கோலம் கொண்ட செயலை அறியும் படியாகத் தானோ? அல்லது அம்மையார் அறியாத வகையினால் தானேனோ? அது நாம் அறியோம்.
தாங்கிய வேதியர் வேடத்தினோடு வணிகர் தெருவில் வந்தார். இயற்பகையார் திருமனையில் புகுந்தார்.
“எந்தை வந்தார், எம்பிரான் அன்பர் எழுந்தருளினார்' என்று இன்பமொழி பகர்ந்து இனிது வரவேற்றார் இயற்பகையார்.
"நாம் ஒன்று உம்மிடத்தில் குறித்து வந்தோம். "பெருமான் வேண்டுவது என்னிடம் இருப்பின் அது அடியார் உடைமை' என்றார் இயற்பகையார்
"அன்பனே! அன்பு நீங்காத உன் மனைவியை விரும்பி இங்கு அணைந்தோம், என்றார் வேதியர்
'என்னிடம் உள்ளதையே கேட்டீர்கள்’ என்றுரைத்தார் தூய தொண்டர் மனையினுள்ளே மகிழ்ந்து சென்றார். காதலிலும் கற்பிலும் சிறந்த தமது காதலியாரைப்பார்த்தார்!"விதிப்படி மணம் செய்த என் குலமடந்தையே! இன்று உன்னை நான் மெய்யடியாருக்குக் கொடுத்தேன்’ என்று இயற்பகையார் இயம்பினார்.
மணம் நாறும் கூந்தலையுடைய மனைவியார் முன் மனம் கலங்கினார். பின் "என் பிராண நாதரே உங்கள் வார்த்தையின் படி ஒழுகுவதல்லால் உரிமை

25/7 U.60777/7
கவடிவேல் -
வேறு ஒன்று உளதோ'என்றுரைத்துக் கணவரை 6600Trifoot Tri.
இயற்பகையார் மனைவியாரை அழைத்து வந்தார். மனைவியார் சிவனடியார் திருவடிகளைத் தொழுது நின்றார்.
"தையல் தன்னை யான் தனியாக அழைத்துச் செல்ல ஒண்ணாது. வழித்துணையாக நீ வர வேண்டும்' என்றார் வேதியர்.
இயற்பகையார் வழிவிடும் துணையாகப் பின்னே சென்றார். அடியார் அம்மையாரை அழைத்துக் கொண்டு முன்னே சென்றார்.
இயற்பகையார் சுற்றத்தாரும் வந்தார்கள். மனைவியார் சுற்றத்தாரும் வந்தார்கள் தங்களுக்கு வந்த பழியைத் தடுக்க முனைந்தார்கள்.
"துன்மார்க்கனே நில்! எங்கள் அருங்குலக் கொடியை விடு வந்த பழி நீங்க நீ சென்று விடு” என்றார்கள்.
இயற்பகையார் அவமானப்பட்டு வந்த பெருஞ் சுற்றத்தாரைப் பார்த்தார். 'ஒருவரும் என் முன் நில்லாதீர்கள். ஒடிச் சென்று உயிர் தப்பிப் பிழையுங்கள். இல்லையேல் வாளுக்கு இரையாகத் துடிக்கப் போகின்றீர்கள்’ என்று கோபமாகக் கூறினார்.
်ကြီrL! நீ என்ன செய்தாய்? வரும்வழி வாராது பார்க்கின்றாய் இல்லை. பகைவர் பழிப்பிற்குப் பரிபவப்படுகின்றாய் இல்லை. இன்று மனைவியை அடியாருக்குக் கொடுத்துத் தானே உன் புகழ் பாடுகின்றாய். "நாங்கள் ஒன்றாக மடிந்தாலும் வேதியனுக்கு L០ភាសា តាយាយចំ கொடுக்க விடமாட்டோம்” என்று கோபித்து எழுந்தார்கள்.
“முன் உங்கள் உயிரை எல்லாம் விசும்பில் ஏற்றுவேன். பின் அடியவரை அல்லல் இன்றி அனுப்பி வைப்பேன். என்றார் இயற்பகையார்.
இயற்பகையார் கோபாவேசமாக வாளை உருவினார். வட்டணையாக வாளைச் சுழற்றினார்.
தடுத்தவரை எல்லாம் தரையில் வீழ்த்தினார்.
போர்க்களத்தை விட்டு ஒடிச்சென்றவர்கள்
உயிர் பிழைத்தார்கள். நின்றவர் எல்லாம் மடிந்து
கிடந்தார்கள்.

Page 16
"அடிகள் அஞ்ச வேண்டாம். ஒப்பற்ற கானகம் நீங்க உடன் வருவேன்' என்றார் இயற்பகையார்
மூவரும் கானகத்தைக் கடந்தார்கள். சாய்க்காடு சென்று சேர்ந்தார்கள்.
"நீ இனித் திரும்பிச் செல்லலாம். என்றார் தவமுனிவர்.
இப்பெரியவர் திருவருள் கிடைக்கப் பெற்றேன். "இயற்பகையார் மீண்டார். மறையவர் மகிழ்ந்து மொழிந்தார்; 'பொய் சேர்ந்த உள்ளம் பொருந்தாதவன். பார்க்கிலன் போனான் தொடர்ந்து அழைப்பார்.
இயற்பகை முனிவா ஒலம், நீ இங்கு வருவாய், மறப்பில்லாதவனே வருவாய் அன்பனே வருவாய் செயற்கரும் செய்கை செய்த தீரனே வருவாய் ஒலம். ஒலம் என்று மெய்யறிவை உணர்த்தும் வேதம் ஒலம் இடும். பிரம விட்டுணுக்கள் தேட நின்ற பெருமான் அழைத்தார்.
அத்திருவருள் நிகழ்வு தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரிவாக்கினாற் சொல்ல வல்ல பிரான் வாக்கில் இவ்வாறு வரும்: "இயற்பகை முனிவா வோல மீண்டுநீ வருவா யோலம் அயர்ப்பிலா தவனே யோல மன்பனே யோல மோலம் செயற்கருஞ் செய்கை செய்த தீரனே யோலம் என்றான் மயக்கறு மறையோ லிட்டு மாலயன் தேட நின்றான் (29) “அடியனேன் வந்தேன். வந்தேன்' என்று உரைத்த வண்ணம் ஓடி வந்தார் இயற்பகையார்.
வந்தவர் முனிவரைக் காணார். மனைவியார் தம்மைக் கண்டார்.
வானில் பொன்மலை ஒன்று பொலிவுடன்
காலின்நீர் நீங்காமை : ஈரம் புலராமை ஏறற்க பேரறிவாளர் துணிவு.
கால், கை கழுவிய ஈரம் காயும் முன்பாக கழுவிய ஈரம் காயும் முன்பாக படுக்கையில் எ விடவேண்டும். ஈரக் காலோடு படுக்கப் போகக் சொன்ன முடிவாகும். ஈரக் காலால் படுக்கை
சேர்ந்து விடும் என்பது கருத்து.
 

வெள்ளிமலை மீது விளங்குவது போலக் கண்டார். உமையம்மையாருடன் வீற்றிருந்த உமைபாகரை இடபவாகனத்தின் மீது தரிசிக்கப் பெற்றார். நிலத்தில் வீழ்ந்து தொழுதார். எழுந்து நின்று துதிப்பார்.
"தேவரீரைத் துதித்துச் சொல்லுவது அறியேன். திருவருள் வாழ்க எனக்குத் தோற்றிய திருவடிவம் வாழ்க விரைந்து வந்து அடியேனைத் தொண்டு கொண்ட திருவருள் சிறக்க முடிவில்லாத பேரின்பம் எனக்கு அளித்த அருள் விளங்குவதாக, தில்லையில் அம்பலத்துள் ஆடும் அருட் கழல் வாழ்க. "சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி வல்லைவந் தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி எல்லையி லின்ப வெள்ள மெனக்கருள் செய்தாய் போற்றி தில்லையம் பலத்து ளாடுஞ் சேவடி போற்றி என்ன"
என்பது செல்வமலி குன்றத்துச் சேக்கிழார் செஞ்சொற் செய்யுள்.
'பொருந்திய மனைவியோடு நம்முடன் வருவாய்' என்று விண்ணிடை நின்ற வேத முதல்வர் அருளிச் செய்தார். புரிபுன்சடையார் பொன்னம்பலம் புக்கனர்.
இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே துன்புறாது உதவும் தொண்டர் சிவலோக வாழ்வு சிந்திக்கப் பெற்றார். ஏனைய சுற்றத்தார்கள் வீரசுவர்க்க இன்பம் உற்றார். தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். பெருவேதங்கள் பேரொலி செய்தன. ஞானமாமுனிவர் நலம் பல பாராட்டினார்கள்.
உண்டிடுக பள்ளியும்
என்பதே
வே, உணவு உட்கொண்டு விட வேண்டும். கால் றக் கூடாது. கை ஈரம் காயும் முன்பு சாப்பிட்டு கூடாது. இதுவே அறிவுடைய பெரியோர் அறிந்து அழுக்காகி விடும். ஈரக்கை உலர்ந்தால் அழுக்கு
-ஆசாரக்கோவை

Page 17
fJó6
1. LITag-LDTGIGOT U I TGO) GI?
ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். (பந்தித்தல் 2. பாசம் எத்தனை வகைப்படும்?
ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும். இம் மூ6 ஐந்து என்று கொள்வதும் உண்டு. 3. ஆணவமாவது யாது?
செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களின் அநாதியே உ வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையுந் தொழிலைய சக்திகளை யுடையதாய்ச், சடமாய் இருப்பது. 4. gGGöILDLIDITGI GOT UITGÒN) GI?
ஆன்மாக்கள் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றின் செய்யப்பட்டபொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும் புத்திதத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கு கன்மங்களுள்ளே பக்குவப்பட்டவை, மேல் எ( இன்பதுன்பங்களையுந் தந்து பயன்படும் பொழுது, பிரா 5. மாயை எத்தனை வகைப்படும்?
சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மூன் இரண்டும் நித்தியம்; பிரகிருதி மாயை, அசுத்தமாயை 6. சுத்தமாயையாவது யாது?
நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச் சடமாய்ச் ெ முதற்காரணமாய் மயக்கஞ் செய்யாததாய் இருப்பது. 7. அசுத்தமாயையாவது யாது?
நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ப் உறைவிடமாய், ஆன்மாக்களுக்குச் சுத்தா சுத்தமும் ஆ முதற்காரணமாய், மயக்கஞ் செய்வதாய் இருப்பது. 8. DTCuuLDTG) 60T untigo) G.2
மாயையால் ஆகிய தத்துவங்களும், அவைகளால் ஆச் திரோதாயியாவது யாது? ஆணவங்கன்மம் மாயை என்னும் மும்மலங்களையுந் ெ செலுத்துதலினாலே, மலம் என உபசரிக்கப்பட்டது. 10. மாயாகாரியமாகிய தனு கரண புவன பே
கொடுப்பது எதன் பொருட்டு? ஆன்மாக்களைப் பந்தித்த ஆணவமலமுங் கன்ம மலரு கொடுக்கும் பொருட்டு. 11. தனு கரண முதலியவைகளும் மல மன்றே அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினால் வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவ முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக் செய்வன்; அது போலேவே சிவபெருமான் ஆன்ம ஆணவமலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மல: பெருவாழ்வுடையதாகச் செய்வார்.
9.

IT 66OL
frust)
- ஆறுமுகநாவலர்
= கட்டுதல், பாசம், மலம் என்பவை ஒரு பொருட் சொற்கள்)
ன்றோடு, மாயேயம், திரோதாயி என இரண்டுங் கூட்டிப் பாசம்
டன் கலந்து நிற்பதாய், ஒன்றேயாய் ஆன்மாக்கள் தோறும் |ம் மறைத்து நின்று தத்தங் கால வெல்லையிலே நீங்கும் அநேக
ாலே செய்த புண்ணிய பாவங்கள், இவை எடுத்த பிறப்பிலே 1. பிறவிதோறும் இப்படி ஈட்டப்பட்டுப் பக்குவப்படும் வரையும் தம் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இச்சஞ்சித டுக்கும் உடம்பையும் அதுகொண்டு அநுபவிக்கப்படும் ரத்தம் எனப் பெயர் பெறும்.
ாறு வகைப்படும். இவைகளுள்ளே, சுத்தமாயை அசுத்தமாயை பினின்றுந் தோன்றியதாதலால், அநித்தியம்.
சால் வடிவமுஞ் சுத்தமாகிய பொருள் வடிவுந் தோன்றுதற்கு
பிரளய காலத்திலே ஆன்மாக்களுடைய கன்மங்களுக்கு அசுத்தமுமாகிய தனு கரண புவன போகங்கள் தோன்றுதற்கு
ய தனு கரண புவன போகங்களுமாம்.
தாழிற்படுத்திப் பாகம் வருவிக்குஞ் சிவசக்தி. இது, மலத்தைச்
ாகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக்
மாகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும்பேற்றைக்
ா? மலமென்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய எப்படிப் போக்கலாம்? ர் மண்ணையும் பிசறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, கையும் போக்கி, அப்புடைவையை மிக வெண்மையுடையதாகச்
வினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாந்தன்மைப்
15)

Page 18
திருவாசகச் சிந்தனை
SHEOLá B5
- பண்டிதர் சி.
அடைக்கலம் - தன்னை மற்றொருவரிடம் ஒப்புவித்துத் தன் சொந்த விருப்பு வெறுப் புக்களையெல்லாம் இழந்திருத்தல். எதுவுஞ் செய்ய முடியாத நிலையில், தமது வல்லமையால் எதுவும் நிகழமுடியாது என்பதுணர்ந்த மணிவாசக சுவாமிகள் தம்மை இறைவனிடம் ஒப்புவித்துத் தம் வலிமையெலாம் இழந்து "இறைவனே, யான் உன்னை அடைக்கலமானேன்' என்று கூறுந் திருப்பாடல்களைக் கொண்டது இப்பதிகம். அடைக்கலமாதற்கு வேண்டிய கருத்துக்களைப் பொதிந்துள்ள பத்துத் திருப்பாடல்களை அடக்கியது என்ற காரணத்தால் அடைக்கலப்பத்து என இப்பதிகம் குறிப்பிடப்பட்டது.
அடைக்கலம் மிக மிக எளிதான காரியமன்று. அதற்கும் மன வலிமை வேண்டும். தமதுயிரைத் தாமே போக்கிக் கொள்பவரை நாமறிவோம். அது கோழைத்தனம் என்பதை நாமெல்லாம் உணர்வோம். ஆனால் அதற்கும் மனோபெலம் வேண்டும். மனிதக் குண்டு என்னும் தற்கொலைப் படைப்பிரிவினர் பற்றி இன்று பேசப்படுகின்றது. ஒரு சிந்தனைய்ைச் செயலாக்குவதற்காகத் தன் உயிரையே அர்ப்பணித்து மாதக்கணக்காக, வருடக்கணக்காகத் தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். இத்தகைய தியாகச் செயல்களுக்கு எந்த அளவிலான மனவுறுதி வேண்டும் மனோபெலத்தின் உயர்ந்த நிலையை இங்கே உணர்கின்றோம். "வீடும் வேண்டா விறல்” என்று சேக்கிழார் சுவாமிகள் பேசியது இதனிலும் உயர்ந்தது. எதையும் இழக்கத் தயார் என்ற
நிலையிலேதான் அது கைவரப் பெறும். 'என் செயலாலாவதொன்றில்லை இனித் தெய்வமே, உன்செயலதே என்று உணரப் பெற்றேன்'
என்ற உணர்வு கைவரப் பெறவேண்டும்.

BJLILI5j அப்புத்துரை -
ஐம்புலப் பொறிகளின் வழிச் சென்று உலகியலில் உழலும் வரை விமோசனம் இல்லை என்பதுணர்ந்து இறைவனிடம் அடைக்கலமாதல் என்பதை உணர்த்துவதாக 'பக்குவ நிண்ணயம்’ என்னுந் தொடரால் இப்பதிகப் பொருட் டிரட்சி திருவாசகத் திருவுள்ளக்கிடையிற் குறிப்பிடப்படும். இப்பதிகமுந் திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பர்.
திருச்சிற்றம்பலம்
செழுக்கமலத் திரளணநின் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கனுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமணத் தடியேன் உடையாயுன் அடைக்கலமே.
என்னை உடையவனே, செழுமையான தாமரைமலர்த் தொகுதி போன்ற உன் செவ்விய திருவடிகளை அடைந்து அமைதி கண்ட கனிந்த மனத்தையுடைய அடியர் உன்னுடனாகி விட்டனர். பாவியாகிய யான் புழுக்கள் தமது வாழ்விடமாகக் கொண்ட இழிந்தததாகிய இந்த உடம்பையும், தீயதும் கல்வியோ அறிவோ இல்லாததும், பொல்லாத அழுக்கை உடையதும் ஆயமனத்தையும் உடையவனாகிய யான் நின் அடைக்கலமானேன் என்பது. வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே யராப்பூண் பவனேபொங்கு கங்கைசடைச் செறுப்பவனே நின்திருவரு ளாலென் பிறவியை வேர் அறுப்பவனே உடையாய் அடியேனுன் அடைக்கலமே.
வெறுப்பிற்குரியவற்றையே செய்யும் என் இழிந்த தன்மையை நின் பெருந் தன்மையினாற் பொறுத்தருள்பவனே, பாம்பை அணிபவனே, பெருகுகின்ற கங்காநதியைச் சடையிடை அடக்குபவனே, நின் திருவருளால் என் பிறவித் துன்பத்தை மூலத்தொடுங் களைபவனே, என்னை
உடையவனே யான் நின் அடைக்கலமானேன் என்பது.

Page 19
பெரும்பெருமானென் பிறவியை வேரறுத்துப்பெரும்பிச்சுத் தரும்பெரு மான்சதுரப்பெரு மானென் மனத்தினுள்ளே
வரும்பெருமான்மல ரோன்நெடு மாலறி யாமல்நின்ற
அரும்பெரு மானுடையாயடியேனுன் அடைக்கலமே.
மாதேவனே, என் பிறவித்துன்பத்தின் மூலத்தை இல்லாமலாக்கிப் பேரன்பினைச் செய்பவனே, சர்வ சக்திகளுக்கும் இடமானவனே, என் மனத்திலே தோற்றுபவனே, பிரமாவும் திருமாலும் தேடிக் கண்டுகொள்ள முடியாது நின்ற அருமைப்பாடுடைய பெருமானே, என்னை உடையவனே அடியேன் நின் அடைக்கலமானேன் என்பது.
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில் நின் கழற்புணைகொண் டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்ற னனுடையாயடியேனுன் அடைக்கலமே.
வினையெனும் மேகம் பொழிகின்ற மழை வெள்ளத்தில் நின் வீரக்கழலணிந்த திருவடிகளைத் தெப்பமாகக் கொண்டு, பூவுலகிற்கு இறங்கி வந்த அன்பர்கள் மேலான இடத்தைச் சென்றடைந்துள்ளனர். அடியேன் துன்பக் கடலுள் சுழியிலகப்பட்டு பெண்களெனும் அலைகள் மோத, ஆசையெனுஞ் சுறவு கதுவ வேதனை அடைகின்றேன். என்னை உடையவனே,
அடியேன் நின் அடைக்கலமாயினேன் என்பது.
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறமறந்திங் கிருள்புரி யாக்கையிலேகிடந்தெய்த்தனன்மைத்தடங்கண் வெருள்புரிமானன்னநோக்கிதன்பங்கவிண்ணோர்பெருமான் அருள்புரி யாயுடையாயடியேனுன் அடைக்கலமே.
அஞ்சனம் எழுதப் பெற்ற விசாலமான கண்களையும், வெருளும் இயல்புடைய மான்போன்ற நோக்கினையுமுடைய உமையம்மையை இடப்பாகத் துடையவனே, தேவர் தம் பெருமானே, சுருளுதலைச் செய்யும் கூந்தலையுடைய மாதர்களது கூட்டத்திடை அகப்பட்டு, நின் கருணைத் திறத்தை மறந்து, இங்கு அஞ்ஞானத்தைத் தருவதாகிய உடம்புடனாகி இளைத்து விட்டேன். என்னை உடையவனே,
அடியேன் நின் அடைக்கலமானேன்' என்பது.

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழியெப்போதுவந்தெந்நாள்வணங்குவன்வல்வினையேன்
ஆழியப் பாவுடையாயடியேனுன் அடைக்கலமே,
கருணைக் கடலாகிய அப்பனே, என்னை உடையவனே, மாம்பிஞ்சின் பிளவை ஒத்த மை தீட்டப் பெற்ற கண்களையுடைய மாதரென்னும் வலிமை மிக்குடைய மத்தை உபயோகித்தமையால் தயிர்க்கட்டியுடைந்து பானையின் பக்கமெல்லாம் தெறித்துத் சிதறும் தயிர்போல் மனம் நலிவுற்றுத் தளர்ச்சி அடைந்தேன். பெருமை பொருந்திய தாமரை மலர் போன்ற நின் திருவடிகள் வாழ்வனவாகுக.
வினையுடயவனாகிய யான் எப்போது, அவற்றை
எக்காலத்து வணங்குவேன்; அடியேன் நின் அடைக்கலமாயினேன். என்பது.
மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளிவலையி லகப்பட்டுப் புன்கணனாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணிலே யமுதுநூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கணனே உடையாய் அடியேனுன் அடைக்கலமே.
கவர்ச்சிக்குரியனவாய் ஒளிர்கின்ற கண்களை
உடையவர்களும், அசையும் இடையினருமாய
மாதர்களது ஊடல் எனும் பொய்க்கோப
வலையிலக்கப்பட்டு இழிந்த செயல்களுடனாகி உழல்கின்ற என்னை அவ்வகை உழலாது இருக்கும்வகை, எளியவனாகி வந்து காத்தருளி என்னிடமாகி அமுதெனத் தித்தித்து என் குற்றங்களுக்காக இரங்குகின்ற அருளாளனே, என்னை உடையவனே அடியேன் நின் அடைக்கலமானேன் என்பது.
மாவடு வகிரன்ன கண்ணிபங் கர்நின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன் பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம் ஆகெடு வேனுடையாயடி யேனுன் அடைக்கலமே.
மாம்பிஞ்சின் பிளவு போன்ற கண்களையுடைய உமையம்மையை ஒருபால் உடையயவனே, நின் மலர்
போன்றனவாகிய திருவடிகளை அணையும்வகை என்னை அழைத்தருள்வாயாக அல்லது என்னை நரகிலே

Page 20
தள்ளினுந் தள்ளுக. உன் குறிப்பு என்ன என்பதை யானறியேன். துணி நெய்யுமிடத்துக் குறுக்காகச் செல்லும் பரவினைக் கொண்டு செல்லும் குழல்போலத் துன்பத்தில் மூழ்கி உள்ளம் உழல்கின்றது. ஐயோ! கெட்டொழிந்து விடுவேன், என்னை உடையவனே! அடியேன் நின் அடைக்கலமானேன் என்பது
பிறிவறி யாவன்பர் நின்னருட் பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச்செல்வம் வந்துபெற்றார்உன்னை வந்திப்பதோர் நெறியறியேன்நின்னையேயறி அறிவறி யேனுடை யாயடி யேனுன் அடைக்கலமே.
நின்னை என்றும் நீங்கியறியாத அன்பர்கள். அருளைப் பொழியும் நின் திருப்பாதங்களின் கீழ் வந்து, பிறவித் துன்பத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டாத வீடு பேற்றினை அடைந்துள்ளனர்.
உன்னை வழிபடும் முறைமையை யானறியேன்.
1947ලිංඛ)
கற்பகத் தருவைச்
காகமும் அ
விற்பனை விவேக
- வேந்தரைச்
இப்புவி தன்னில்
இலவு காத்
அற்பரைச் சேர்ந்ே
அரிதரிது அ வான் உலகத்தில் உள்ள இந்திர காக்கையும் அந்த வுலகத்தில் உள்ள அ கல்வியறிவுடைய மன்னரை அடைந்த வாழ்க்கையைப் பெறுவர். கிளியானது பழுக்கும் ഉത്സു' ഞെക് காத்த பறந்ததும் ஏமாற்றம் அடைந்ததை நல்வாழ்வடைவது மிகவும் அரியதாகும்
ーく
లైక
G
 
 

உன்னை அறியக் கூடிய வாய்ப்பும் எனக்கில்லை. உன்னை அறிய வேண்டுவதாகிய ஞான போதமும் எனக்கில்லை. என்னை உடையவனே, அடியேன் நின் அடைக்கலமானேன் என்பது.
வழங்குகின்றாய்க்குன் அருளார்.அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்விக்கினேன்வினையேனும் விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணீர்பருகத்தந்துய்யக்கொள்ளாய் அழுங்குகின்றேனுடையாயடியேனுன் அடைக்கலமே.
வழங்குகின்ற உன்னிடத்திலிருந்து திருவருள முதத்தை வாரி அள்ளி விழுங்குகின்றவனாகிய தீவினையேன் நல்ல விதியில்லாமையார் தொண்டையில் தடையேற்பட்டு விக்கலு டையவனானேன். ஒலிக்கின்ற அருளாகிய தேன் போன்ற குளிர்ந்த நீரைப்பருகத் தந்து என்னை ஏற்று உய்தி தருவாய் வருந்துகின்றேன். என்னை
உடையாய், அடியேன் நின் அடைக்கலமானேன் என்பது
சார்ந்த முதம் உண்ணும்; Sld P_GTGIT
சேர்ந்தோர் வாழ்வார்; என்றும் திடும் கிளிபோல் தோர் வாழ்வது ஆகும் அம்மா.
னின் கற்பக மரத்தைச் சேர்ந்திருக்கும் முதத்தை உண்ணும். அதைப்போன்று வர், அற்பராய் இருந்தாலும் உயர்ந்த இலவ மரத்தை-அதில் உள்ள காய்கள் திருந்து, அவை வெடித்துப் பஞ்சாகப் ப் போல, அற்பரை அடைந்தவர்
விவேகசிந்தாமணி இல் @رkتاچا

Page 21
உலகெங்குமேவிய தேவ
- முருகவே ட
“பூ உலகில் வளர் அருணகிரியே, மற்றைப்
புண்ணியர்காள் ஒஎன்மேன் புரைஒன்றும் இல்லா ஒவியம்போல் அரவு அறவும் தானே நிற்பேன்
ஒதரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே"
ஆதாரபுவனம் - சிதம்பர ரகசியம் - 31 "ஐயா! அருணகிரி அப்பா உனைப்போல மெய் ஆக ஓர் சொல் விளம்பினர் யார் - வையகத்தோர் சற்றரிது என்று ஏசற்றார் தன் அனையாய் முக்கண் எந்தை நாற்றிசைக்கும் கைகாட்டி னான்."
உடல்பொய் உறவு -25 தாயுமானர்.
சாற்றரிது என்று ஏசற்றார் - சொல்ல முடியாது என்று இளைத்துப் போனார்கள். தன் அணையாய் - தனக்கு ஒப்பாக இருப்பவனே, கைகாட்டினான் - சின்முத் திரையைக் காட்டினன்.
கடவுட் தத்துவம் பற்றிக் கரைகண்டு சொல்லமுயன்ற பலருள் அருணகிரியாரும் ஒருவர். அவர் சிறப்பாக முருகனையே பாடினார். பல்லாயிரக் கணக்கான பாடல்களினால் திருப்புகழ் (16000 - இவற்றிற் கிடைத்தன 1304) கந்தர் அலங்காரம் (100+7), கந்தர் அந்தாதி (100), திருவகுப்பு (25 வகை), கந்தர் அனுபூதி (51), வேல்விருத்தம் (10), மயில்விருத்தம் (10), சேவல்விருத்தம் (10) திருவெழு கூற்றிருக்கை என்பன அவரது அருளிச் செயல்களாகும். இதனாலவர் திறத்தைத் தாயுமானார் மேலே காட்டிய பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழுக்கு எல்லையில்லை என்பர். எல்லையற்ற பழம் பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் - தமிழும் தன்நிலையிற் தகைமை யெழிலுடன் மிளிர்வதை மனோன்மணிய ஆசான் வரையறை செய்துள்ளார். இறைவனைத் தமிழ் செய்தார் பலர் அவர்களுள் ஒருவர் அருணகிரியார். முருகனையே பாடிய பாடல்கள் எம்முது சொம். சொல்லுகைக்கு இல்லாத பரம்பொருளை வார்த்தையுட்படுத்த முயன்ற தாயுமானார் "அங்கிங் கெனாதபடி. என்றோர் முதற் பாடலை முன் நிறுத்தித் தொடர்ந்தார். பார்க்குமிட மெங்கணும், நீக்கமற நிறைகின்ற பரிபூரணா னந்தமே என ஒரு முத்தாய்ப்பும்
(1

1லயந்தொறு பெருமாளே
பரமநாதன் -
வைக்கிறார். மணிவாசகம் தந்த பெருமகனார் -
வாதபுரீசர் -"ஈசனே நீயல்லதில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஒர் பேதம் இன்மை பேதையேன். (திருச்சதகம் 78) ஒன்றும் நீயல்லை அன்றி ஒன்றில்லை யாருன்னை அறியநிற்பார் (கோயிற்றிருப் பதிகம் 7) எனப் பாடியிருக்கிறார். இதை "எல்லாப் பொருள்களிலும் நான் இருக்கிறேன். எல்லாப் பொருள்களும் என்னிடம் உள்ளன, என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நான் ஒரு பொருளும் இல்லை’ என்ற கண்ணனின் திருவாக்குடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் சாலப் பொருத்தமே.
இறைவனோடு பேசும் பெரியோர் சொன்ன சுருதிப் பொருளை உணர்ந்து இறை இன்பம் கண்டனர். குணம், குணமின்மை போன்ற நெறியை சகுணம், நிர்க்குணம், சகுணநிர்க்குணம் என்றனர். உருவம், அருவம், உருவருவம் என்றனர். வைணவம் இதைப் பரத்துவம், வியூஹம், விபஷம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என ஐந்தாகப் பேசும்.
இன்றைய நிலையில் மக்கள், சிறப்பாகச் சைவத்தினர்
இறைவனின் நிலையையும் கடந்து, விஞ்ஞான நோட்டத்தில் பார்க்கவும் செய்வர். எப்படியாயினும் எங்கும் நிறைந்த பரம் பொருளை இறை இல்லங்களிலே கண்டு பிரார்த்திக்கின்றனர். இதுவே வைணவம் கூறும் அர்ச்சை நிலை எனவே அங்கே தான் இறைவன் இருக்கிறான் என்ற ஆழமான நினைப்பு, நம்பிக்கை. இந்நிலை எம் மதத்துக்கும் சம்மதமே. இதுவே சமயப் பொதுமை. இன்னொரு வாய்பாட்டிற் கூறின் வேற்றுமையில் ஒற்றுமை எனலாம். இப் புனித தலங்களை நால்வரும் பாடல் செய்தனர். அத்தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்பர். மற்றவற்றுட் சில வைப்புத் தலமெனக் குறிப்பிடுவர். ஆழ்வார்கள் 108 திருப்பதிகளை மங்களா சாஸனம் செய்துள்ளனர். மங்களா சாஸனம் என்பதும் திருமுறைகள் பாடியதும் ஒன்றே சைவம் சார்ந்தவை தேவார, திருவாசகம், திருவிசைப்பா என அமையும். ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் திருநாலாயிரம், திவ்வியப் பிரபந்தம் என

Page 22
அழைக்கப்படும். இம்மரபு நெறியில் அருணகிரியார் பாடிய பக்திப் பனுவல்களிற் திருப்புகழ் பல முருகத்தலங்களைப் பாடக் காணலாம். நம் நாட்டுக் கதிர்காமமும் அவற்றுள் ஒன்று. அருணகிரிப் பெருமான் தந்த திருப்புகழ்த் தொகையில் ஒர் பாடல் இப்படியமைந்து இருப்பதை ஊன்றிப் படிப்பவர் காண்பர்.
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு
சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜை செய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி வேங்கடம் வாழ் சோலை யங்கிரி தென்றன் மாதிரி நாடாள வந்தவ செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் ஹரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில்
வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர - GJug}IUT கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாமு மேயா யகம்படு கண்ட வூர்வரு சாமி கடம்பணி மணிமார்பா எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே
LJTI Go GIGj51 1304. இத்திருப்பாடல் கூேடித்திரக் கோவை அமைப்பில் எழுந்தது. சுந்தரர், அப்பர், சம்பந்தர் தந்த தேவாரத் திருமுறை மரபு திருப்புகழ் வழி, பிற்காலத் தெழுந்த முருகன் பிள்ளைத் தமிழ்களிலும் தொடர்வதைக் காணலாம். இதில் இருபத்தொன்பது சேத்திரங்கள் வருகின்றன. இதிலோர் சிறப்பம்சம், ஆரூர் தில்லையம்பலம் வல்ல நல்லம் என ஆரம்பமாகிறது சம்பந்தர் கோயிற்றிறம். அப்பரும் தில்லைச்
 

சிற்றம்பலமுஞ் செம் பொன்பள்ளி எனத் துவங்குகிறார். அருணகிரியார் வாக்கிலும் “கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்” என அமைந்துளது. சைவம் தில்லையையே கோயிலெனப் பேசி தலமேன்மை காட்டும். திருமுறைகள் ஒத முன்னரும் ஒதிய பின்னரும் திருச்சிற்றம்பலம் எனக் கூறும், ஒதும் மரபு, கட்டுப்பாடு மிதமிக்க தொன்மையானது. இம்மரபு திருக்ஷேத்திரக் கோவையிலும் இடம் பெறுவதுபோற் தோணுகின்றமை கருத்திற் பதித்தற்குரியது. இத்திருப்புகழின் இறுதித் தொடர் "உலகெங்கு மேவிய தேவாலயந் தொறு பெருமாளே” என அருணகிரியின் அருள்வாக்கின் திரு நோக்குப் படிந்து, சுவறியுள்ளது. இதற்கு “உலகில் உள்ள எல்லா மதத்துத் தேவாலயங்களிலும் உள்ள கடவுள் முருகனே என்பது அருணகிரியார் கொள்கையெனக் குறிப்பிட்டுள்ளனர்.
முருகவேள் பன்னிருதிருமுறை தொகுதி 3, பக்கம். 682
ஒன்றாகக் காண்பதே காட்சி, இன்று மேற்கைரோப்பர,
வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற இடங்களில் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருணகிரியின் ஒருமையும், பொதுமையும், சிறப்பும் நம்மைக் கிளுகிளுக்கச் செய்கின்றன.
இம்மரபிலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு
பாடலிலே உலகத்தில் உள்ள எந்த ஊரிலும்
இறைவனைப் பாடி, வணங்க வல்லவர், அவனுக்கு அடியராகிய முத்தி பெறுவர் என்ற பொருளமைவரக் கவி செய்துள்ளமை ஒப்பிடற்பாற்று. -
பேரோர் ஆயிர மும்உடை யானைப்
பேசி னாற் பெரிதும்இனி யானை நீரூர் வார்சடை நின்மலன் தன்னை
நீடூர் நின்று உகந்து இட்ட பிரானை ஆரூ ரன்அடி காண்பதற்கு அன்பாய்
ஆத ரித்து அழைத் திட்டஇம் மாலை பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம் பெறுவாரே. இப்பதிகப் பலன் பேசும் சுந்தரர் வாக்கும், சொற்கு அருணகிரியெனப் பேசப்படுபவர் தந்த நோக்கும், தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி யென்னும் திருவாக்கும் சிந்திப்பார் சிந்தையுளானைப் பற்றிப் பேசும் பாமாலைகளின் ஒருமித்த திருவாய் மொழிகளாம்.
20)

Page 23
I5IIL50 g,
- எம். எஸ். (பண்பாட்டலுவல்கள் செயற்
கல்வி உதவிப் பணி
girl' ga - 1 பாத்திரங்கள் 1. முத்திநாதன் (சிற்றரசன்) 2. மந்திரி (சூழ்ச்சிக்காரன்) (மூத்திநாதன் அவைக்களம், முத்திநாதன் மந்திரியாரிடம் தான் பல முறை சேதி நாட்டானோடு போர் செய்து தோல்வி அடைந்ததைக் கூறி மனச்சஞ்சலப்பட அதற்கு மந்திரி ஆலோசனை கூறுகிறான்.)
முத்திநாதன்:
ஒரு முறையா? இருமுறையா? மும்முறையா? எத்தனை தடவை அந்த சேதி நாட்டான் மீது படையெடுத்தேன். அழகும், வனப்பும், செழிப்பும் மிக்க அந்த நாட்டை என் குடைக்கீழ் கொண்டு வந்து விடலாம் என்று எத்தனை கங்கணம் கட்டினேன். ஆ. என் எண்ண மெல்லாம் தவிடு பொடியாகிவிட்டதே! மந்திரியாரே தோல்வி மேல் தோல்விகண்ட எனக்கு எத்தனை அவமானம் . 5F........... என் செய்வேன்.
மந்திரி
மனச்சோர்வு அடைய வேண்டாம் மன்னர் பிரானே! மார்க்கம் ஒன்று என்னிடம் இருக்கிறது; சிவனடியே தஞ்சம் என்றும் திருநீறும் கண்டிகையும் சிவனடியார் கோலமுமே மெய்ப்பொருள் என்றும் நம்பி வாழும் அந்தச் சேதிநாட்டு மன்னவனை என் மதியால் மயக்க மார்க்கம் வைத்திருக்கிறேன். மன்னவரே! முத்திநாதன்
என்ன சொன்னீர் மந்திரியாரே? மதியையும் விதியையும் தன் மட்டற்ற வீரத்தால் மாய்த்து விடும் சேதி நாட்டு மன்னனை மாயத்தால் மயக்குவதா? முடியாது மந்திரியாரே முடியாது மந்திரி:
மன்னவா! மன்னித்துக் கொள்ளுங்கள். அந்தச் சேதி மன்னனின் சிவனடியார் பக்தியையும்,
(
 

ர் இளடகம்
பூஞரீதயாளன் - மிட்ட அலுவலர் யாழ்ப்பாணம் 1) பாளர் (மொழித்துறை)
திருநீற்றில் அவன் கொண்டிருக்கும் அளவிறந்த அன்பையும் லாவகமாகப் பயன்படுத்தி அவனை நம் மாயச் சூழ்ச்சியால் மயங்கச் செய்து மாய்த்து விடலாம். முத்திநாதன்:
அமைச்சரே! நீர் என்ன சொல்லுகிறீர்? நீர் கூறுவது ஒன்றும் எனக்குப் புரியவில்லையே!
மந்திரி:
சொல்லுகிறேன் மன்னா மன்னன் சேதிபன், சிவனடியார் திருக்கோலத்தையும் திருநீற்றையும் சிவனெனவே நம்பி நேசிப்பவன் கடவுளின் நாமத்தைச் சொல்லி யாசிக்கும் பிச்சைக்காரர்களை எல்லாம் தன் அருள்மனைக்கே அழைத்துச் சென்று ஆதரித்து தலை வணங்கும் நிறைந்த
முத்திநாதன்
ஆமாம் அமைச்சரே அதனாலே தானே அவனை மற்றவர்களெல்லாம் "மெய்ப்பொருள் மன்னன்' என்று அழைக்கிறார்கள் என்பதனையும் நான் அறிவேன். ஆமாம். அதை இப்போது ஏன் கூறுகிறீர்?
மந்திரி:
மன்னர் பிரானே அங்கே தான் இருக்கிறது எமது சூழ்ச்சி நேருக்கு நேர் நின்று போர் புரிவதனாலும் படைப் பலத்தினாலும் பெற முடியாத வெற்றியைத் திருநீறு சண்ணித்த சிவனடியார் கோலத்தில் சென்று சாதித்து விடலாம் அல்லவா?
முத்திநாதன்:
மந்திரியாரே நீர் கூறுவது.
மந்திரி:
பொறுத்திருங்கள்! முடிகவித்து முத்தாரம் முழுநீறு அணிந்து பீதாம்பரமும் சூடி, மன்னராய் இறுமாந்திருக்கும் உங்கள் கோலத்தை தற்காலிகமாக மாற்றிவிடுங்கள். ஆ. ஆண்டிப் பண்டாரமாய்

Page 24
உடல்முழுவதும் திருநீற்றினை அள்ளிப்
பூசிக்கொண்டு, சடாமுடி தரித்து காவியுடையோடு
சேதி மன்னனுடைய அரண்மனையில் புகுந்து கொண்டால். அவனை தருணம் பார்த்து உங்கள் கட்டை உடை வாளுக்கு இரையாக்கி விடலாம் மன்னவரே (மன்னவரின் காதுக்குள் மந்திரியார் இரகசியம் பேசுகிறார், இருவரும் சிரிக்கிறார்கள் பெரிய சத்தத்துடன்) முத்திநாதன்:
இந்த விடயம் யாருடைய காதிலும் எட்டிவிடக் கூடாது. பரம இரகசியமாக இருக்கட்டும் "உஸ்." யாரோ வரும் அரவம் கேட்கிறது நீ விலகிக்கொள்.
(இருவரும் நீங்குகிறார்கள்) «Х» «Х», «Х» «Х» «Х• «Х•
gift' g - 2 பாத்திரங்கள் : 1) அரசமாதேவி 2) மெய்ப்பொருள் மன்னன் (சேதி நாட்டரசன்)
(சேதி நாட்டரசன் மெய்ப்பொருளின் அரண்மனை, மன்னனும் தேவியும் வணங்கிக் கொண்டி ருக்கிறார்கள்). ஒரு கால் பாரையா / கருணைத் தெய்வமே கற்பகமே கற்பகமே இருவரும் கடவுளுக்கு முன்னின்று பாடுதல் பக்தியிசைகளிற்கு பாடல்.
மெய்ப்பொருள்:
அண்டசராசரம், அகிலமெல்லாம் அருள் சுரந்து காக்கும் ஆடல் தெய்வமே ஐயா! ஆனந்தக் கூத்தனே! மண்ணும், விண்ணும் போற்றும் மகிபனே! அம்பலத்தரசே, ஐயா, இந்த ஏழை சேதிபனுக்கு அருள்தாராய், மந்திரமும் தந்திரமுமாகி, சுந்தரமாய் தெய்வத் திருநீற்றின் பெருமையை உலகெல்லாம் அறியச் செய்ய என்றனுக்கு அருள் தாராய் அப்பனே அப்பனே! சிவபெருமானே! சிந்தையில் உன்னைச் சுமந்தவராய் மந்திரநீறு அணிந்து வாழும் உன் அடியார்க்கு அமுதளித்து ஆதரிக்கும் என் கடமையை
என்றும்போல் நிறைவேற்ற அருள்தாராய் அப்பனே
சரணம் சரணம் சரணம் .
மாதேவி:
(பக்கத்தில் இருக்கும் தன் மன்னவனைப் பார்த்து) மன்னவரே வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்கப் - புனிதவாய் மலர்ந்தழுத நம் பிள்ளைப் பெருமானும் ஆடும் கயிலை நாதனின் அருள் பெற்றன்றிப் பாழும் இவ்வுடல் கொண்டு

மீளேன் என்று பரவிய நம் அப்பனும் போற்றிய திருநீற்றின் ஒளிவிளங்கத் தாங்கள் ஆற்றும் தொண்டுக்குக் கிடைத்த ஆத்மீக பலத்தினாலன்றோ தங்கள் வீரத்தின் பெருமை விண்ணுலகத்யைம் எட்டியிருக்கிறது. பகையரசரெல்லாம் அஞ்சி நடுநடுங்க சேதி நாட்டின் வெற்றிக்கொடி பட்டொளிவீசப் பறக்கிறது. எல்லாம் தங்களின் இடையறாத பக்தியின் பெருமையினாலன்றோ அரசே!
மெய்ப்பொருள்:
மன்னனுக்கு மெய்ப்பொருள் வேந்தன் என்று என்னை உலக மெல்லாம் ஏத்தி நிற்க என்னருகிருந்து அன்பு சொரியும் உன்னை மெச்சினேன் தேவி தேடிய மாடு நீடு செல்வமும்? தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க் காவன ஆகுமன்றோ? நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவறக் கொடுக்கும் என் சீர்மைக்கு உதவிடும் தேவி வா, அந்தப்புரம் சென்று அளவளாவுவோம். (இருவரும் செல்கிறார்கள்)
●、_●、伞、伞、伞
•o o o o o o
3, T'S - 3 பாத்திரங்கள் : 1) முத்திநாதன் (சிவனடியார் வேடத்தில்) 2) மந்திரியார். (முத்திநாதன் சிவனடியார்போல் பொய்த்தவ வேடம் தாங்கி சேதிநாட்டுக்குப் புறப்படுகிறான். வழியில்) தத்தன் - தடுக்கிறான்.
முத்திநாதன்:
சம்போ மகாதேவா சம்போ மகாதேவா! ச. 守.ü. ($urt.......... மகாதேவா!
"உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவனே! நிலவுலாவிய நீர்மலிவேணியனே! அலகில் சோதியானவனே அம்பலத்தாடும் எம் ஐயா ஒருமுறையா இருமுறையா ஐந்துமுறை என் காரீயத்தில் தோற்ற எனக்கு எள்ளளவும் பிசகாமல் இம்முறை நான் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைப்பாய் என் அப்பனே! சம்போ மகாதேவா!
(வழியில் அம்மந்திரி வர. ) மந்திரி:
வாருங்கள் சுவாமி! LLUT 600 TJ J5 FT12.
வந்திருக்கின்றீர்கள்? உங்களுக்கு என்னால் ஆகக்கூடிய காரியம் தான் என்னவோ இயம்புங்கள்

Page 25
முத்திநாதன்
எங்கே அந்த முத்திநாதன்? எத்தனைமுறை எத்தனித்தாலும் சித்திதனைப் பெறாத அவனுக்குச் சித்தமான காரியத்தோடு வருகிறேன். பூவுலகிலும் மேலுலகிலும் மட்டுமல்ல இந்த அறுபத்து நான்கு உலகங்களிலும் காணமுடியாத ஆகமநுால் ஒன்றை அடக்கமாக என்னுடன் வைத்திருக்கிறேன். மந்திரி (யோசனையுடன்)
சுவாமி பெரியவரே நாம் கூற நினைத்து
வைத்திருக்கும் காரியத்தை அப்படியே கூறி நிற்கும் நீங்கள் யாரோ? சித்தனோ? அன்றி நம்
முத்தனோ?. இதோ அழைத்து வருகிறேன் சுவாமி. (மீசை, தாடியைக் கழற்றிக் கொண்டு) முத்திநாதன்
ஆமாம். முத்தர் தான். அதே
முத்திநாதன் ஹ. நானே தான் மந்திரியாரே. என்னைத் தெரியவில்லையா? (இருவரும் பலத்துச் சிரிக்கிறார்கள்) மந்திரி:
அரசே! அருமையான வேடம் உங்களைக் கொஞ்சமும் அடையாளமே காணமுடியவில்லை. பொருத்தமான காவியுடை நிறைந்த விபூதிப்பூச்சு, "அசல் சிவனடியார்தான், வெற்றி, இம்முறை அந்த சேதிய மன்னன் தங்களிடம் இருந்து நழுவி விட முடியாது. (சிரிப்பு. )
மன்னரே உங்கள் வேடம் மாத்திரம் அல்ல. உண்மை சிவனடியார்போல் நடிக்கும் திறனும் நன்று. என்னையுமே ஏமாற்றி விட்டீர்களே? விசயம் கச்சிதமாக நடக்க வேண்டும். அரசே! தங்களை இன்னார் என்று மற்றவர்கள் அறியாமல் இன்று நள்ளிரவு ஆவதற்குள், அந்த ஏமாளி மெய்ப் பொருளை விண்ணுலகு அனுப்பிவிடுங்கள். நேரம் ஆகிறது; சேதிப மன்னனின் பலத்த கட்டுக்காவலைக் கடந்து அவனது அரண்மனைக்குள் அரசனை தனியாகச் சந்திக்கும் வரை யாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் உங்களுக்கே சென்று வாருங்கள்.
முத்திநாதன்:
சம்போ மகா தேவா! சம்போ மகா தேவா! F.L........... ($ult .......... மகா தேவா!

gGIFT” GA — 4 பாத்திரங்கள் : 1) தத்தன் (மெய்ப்பாதுகாவலன்) 2) மாதேவி 3) மெய்ப்பொருள் மன்னர். முத்திநாதன்:
(முத்திநாதன் சேதிமன்னன் வாயிலில் பொய்த் தவ வேடதாரியாக மேடையில் தோற்றுகின்றான்.)
"மெய்யெல்லாம் நீறு பூசி
மேனிகள் முடித்துக்கட்டி கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே யன்ன
மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்திநாதன்."
தத்தன்
சிவனடியாரே. சிவனடியாரே. சற்று. முத்திநாதன்
சம்போ மகாதேவா, சம்போமகாதேவா. மெய்ப்பொருள் வேந்தனாம் சேதிபனை மாலாடர் கோமானை, அவசியமாக அவசரமாகச் சந்திக்க வேண்டும். என்னைத் தடுக்காதையப்பா.
தத்தன் (தடுத்து. )
சுவாமி சுவாமி அரசர் பிரான் அந்தப்புரத்தில் அரசியோடு மஞ்சத்திலிருக்கிறார். தருணம் அறிய வேண்டும். முத்திநாதன்:
வாயிற் காவலனே! என்ன பேசுகிறாய். அண்டர் பிரானின் மெய்த் தொண்டனாகிய சேதிப மன்னனுக்கு ஞான நூல் துணியை உபதேசம் செய்ய வந்திருக்கிறேன். அதள, விதள பாதாள லோகங்களிலும் அமரருலகிலும் எங்குமே காணமுடியாத அரிய ஆகமதுால் ஒன்று கொண்டு வந்திருக்கிறேன் அப்பனே. அதனை யான் மன்னருக்கு உரிய காலத்தில் உபதேசம் செய்தாக வேண்டும் என்னைத் தடுக்காதே! . ஆ.
சிவனடியாரே! தங்கள் மெய்யாம். திருவடி எம் அந்தப்புரம் நாடிவர என்ன புண்ணியம் செய்தோம்

Page 26
முத்திநாதன்:
அகாலமான இந்த நேரத்தில் அரசனை நோக்கி வந்திருக்கும் யாம் அவருக்கு ஆகமப் பொருளை உபதேசிக்க சித்தம் கொண்டோம் (ஆம். மன்னன் எங்கே. அவனை உடனே என்னிடம். (இதற்கிடையில் மன்னனே வந்து பாதங்களில் விழுந்து வணங்குகின்றான்) மெய்ப்பொருள்:
அண்டர் பிரானுந் தொழும் தொண்டர் பெருமானே! சுவாமி . வரவேண்டும் வரவேண்டும். எனக்கு மங்கலம் பெருகும்படி பெருவாழ்வு இன்று வந்து என்னிடம் அணைந்ததே யான் பாக்கியசாலி. தாங்கள் இந்த ஏழை அடியவன் குடிலை நாடி வந்தது யான்பெற்ற பாக்கியம். சுவாமி சொல்லி அனுப்பியிருந்தால் யானே உங்களிடம் ஓடோடி வந்திருக்கமாட்டேனா? தொண்டர் பிரானே இந்த நேரத்தில் இங்கு தாங்கள் எழுந்தருளிய நோக்கம்தான் யாது. தங்களுக்கு என்னால் செய்யக்கூடிய பணிவிடைதான் என்ன ஐயா! முத்திநாதன்:
LGLG Lta0LL S S SSY SSS0TTLLLLLTTTBLL STTTS TtLLSS S YTT TTm நாயகனார் முன்னம் உரைத்த ஆகமம் மண்மேல் எங்குமில்லாததொன்று கொண்டு வந்தேன் இயம்ப; ஆமாம். தேவலோகத்திலும் மூவேமூ உலகங்களிலும் காணமுடியாத இந்த அரிய நூலை உனக்கு வாசித்து அருள் செய்யவே உன்னிடம்
வந்திருக்கிறேன். ஆயின். UTLDUT85ğFALLULDITüb இந்த நூலை உனக்கு உபதேசம் செய்யும்போது மன்னவா.ஆ. உன்னைத்தவிர இவ்விடத்தில் யாருமே இருத்தல் கூடாது. மாதேவியை. மாதேவி:
என்ன சொல்கிறீர்கள் சுவாமி முத்திநாதன்:
ஆமாம் உன் தேவி கூட இங்கு இருக்கக்கூடாது. (தேவி தன் கணவனை நோக்குகிறாள்.) மெய்ப்பொருள்:
தேவி. என்ன அப்படிப்பார்க்கின்றாய்.
வந்திருப்பவர் என்னை விண்ணுலகிற்கு அனுப்ப விழையும் நாதராயிற்றே! எங்கே நீ சற்றுவேளை என் இருப்பிடம் போய்வா!

(பிரிய மனமில்லாது பிரிபவள் போலப் போகிறாள் - மன்னன் வேடதாரியை மேலே உட்கார வைத்து தான் கீழே அமருகிறான்)
மெய்ப்பொருள்:
சுவாமி என் வினையறுத்து ஆட்கொள்ள வந்திருக்கும் தெய்வமே தொண்டர்பிரானே! அடியேனுய்திபெற எங்கே இந்த ஏழைக்கு தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஆகம நூலினை உபதேசியுங்கள் சி. வா.ய.ந.ம!
முத்திநாதன்:
சேதிபா!. எல்லாம் சரி உன்னை அந்த ஆண்டவனிடத்திற்கே அனுப்புகின்றேன். நீ கூப்பிய கரத்தோடு சிரம்தாழ்த்தி அமர்ந்து கொள்வாய் அப்பனே! (புத்தகப்பையை அவிழ்ப்பவன் போலப் பாசாங்கு செய்து கட்டை உடை வாளை மெல்ல எடுத்து அரசன் முதுகில் குத்திவிடுகிறான்.) (பாடல் இசைக்கிறது)
"கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப் புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில் பத்திரம் வாங்கித் தான் - முன்
நினைத்த அப்பரிசே செய்ய "மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள்
எனத் தொழுது வென்றார்"
ஆ. சிவனே.சி வ.னே (தத்தன் ஒடி வருகின்றான்.)
தத்தன்
ஆ. கொடியவனே என்ன காரியம் செய்தாய் பாதகனே உன்னை இதோ என் உடைவாளினால். (வாளை ஒங்குகிறான்.) மெய்ப்பொருள்:
பொறுதத்தா தத்தா! தத்தா! இவர் நம்மவர் இவரை ஒன்றும் செய்து விடாதே திருநீறு சண்ணித்த நம் தொண்டர் நம்மவரப்பா.
தத்தன்
ஐயோ! அரசே என்ன கொடுமை என்ன கொடுமை..? திருநீற்றையே மெய்யென நம்பும் உங்களுக்கு பாதகம் செய்த கொடியவனை மன்னிக்கும் உங்களுக்கு இந்த நேரத்தில் உங்கள் அடிமை - யான் செய் வேண்டும் தொண்டு தான் யாது? கட்டளைகளை இடுங்கள் ஐயனே!
4.

Page 27
மெய்ப்பொருள்:
சொல்லுகிறேன் தத்தா.
சொல்லுகிறேன்.ஆ. எனக்கு இவ்விதம் செய்த
இந்த அடியவரை - யாரும் இடைமறித்து துயர்புரியாத
வகை நீ இவரை நம் சேதி நாட்டின் எல்லையில்
கொண்டு போய் விட்டு வரவேண்டும்.
செய்வாயா தத்தர்!
தத்தன்
மன்னர் பிரானே! தாங்கள் காலால் இட்ட
கட்டளையை என் தலையால் செய்வதே பாக்கிமாகக்
கொண்ட ஏழை நான். இந்த வேளையில் தங்களுக்கு செய்யக்கூடிய கைமாறு வேறெது உள்ளது.? ஐயா. உங்கள் ஆணையை இதோ
நிறைவேற்றி வருகின்றேன். 9|g|ബി. மெய்ப்பொருள்:
சென்று வாருங்கள் எங்கள் அடியவரே தத்தா இந்த அடியவர் பக்குவமாக தம் இருப்பிடம் சேர்ந்தார் என்ற வார்த்தையை நான் கேட்கும் வரையில் என் உயிர் இவ்வுடலில் இருக்கும். அதற்கு முன். (தத்தன் முனிவரை முன்னேவிட்டு தான் ஏந்திய வாளுடன் அவரைத் தொடர்கிறான். மேடையின் முன் படிகளால் இறங்கி இருவரும் வெளியேற - கொல்லுங்கள் - குத்துங்கள்-வெட்டுங்கள் என்ற குரல்கள் வருகின்றன.) (குற்றுயிரில் கிடந்து இரத் வெள்ளத்தில் புரண்டு வருந்துகிறான். − (பின்னணியில் - பாடல் - சுகபந்துவராளி ராகம்)
"எங்கெல்லாம் தேடுவதோ இறைவா
எழில் கூரும் உயர்வாம் உன் இதமான பாதம் காண)//
அனுபல்லவி திருநீற்றின் பெருமையெல்லாம்
திக்கெல்லாம் பரவ திருவே உன் பணி செய்தேன்
அருளே உன் விளையாட்டோ// சரணம் முத்திநாத னென்பான் முழுநீறு வேடமிட்டான்
முன்னேதும் அறியன் யான் முனிவனென்றும் வழிபட்டேன்
குறையேதும் இழைத்தேனோ கும்பிட்டேன் குரை கழல் தான்
முறையோ, என் நிலைகானாய்

முதலே உன் கழல் தாராய்
என் நிலை பாராய்//
(தத்தன் மீண்டு வருகிறான்)
தத்தன்
அரசே! வஞ்சனையால் புனைந்த தவவேடம் கொண்டு வந்து இன்று வென்றவற்கு ஏதும் இடையூறுமின்றி கொண்டு சென்று விட்டு வந்திருக்கிறேன். மெய்ப்பொருள்:
வந்தாயா தத்தா. சிவனடியாரை சேமமாக விட்டு வந்தாயா தத்தா ஆ.ஆ.தத்தா. இன்று நீ எனக்கு செய்த காரியத்தை வேறுயார் செய்யவல்லார் எங்கே என் அன்பனே இங்கே வா. (அனைத்தல்)
தத்தன்
ஐயா! அரசே. மாலா மடர் குலத்து மகிபரே. உங்களை இழந்து இந்த நாடு தவிக்கப் போகிறதே. வேந்தரே! இந்த நேரத்தில்
மெய்ப்பொருள்:
சொல்லுகிறேன் அப்பா சொல்லுகிறேன்! யாம் இது காறும் போற்றித்துதித்து வந்த திருநீற்றின் அன்பு பழுதுறாது சிறந்திட நீவிரேபாதுகாத்து எமது அரசியலை நடத்துங்கள். மந்திரமும் மருந்துமாகிய சுந்தரமாய் துதிக்கப்படும் விபூதி எம்மை உய்விக்கவல்லதென்பதை அரசியலாயத்தாரும் நம் மக்களும் போற்ற வழி செய்யுங்கள். எம்பிரான் மன்றுளாடும் எம்பிரான் அதோ குஞ்சித பாதம் காட்டி குணம் காட்டி விஞ்சிய தன் திருக்கரத்தால் என்னை 6) IIT........... வா என்று அழைப்பது தெரிகிறது. அன்பனே நான் வருகின்றேன்! நான் வருகின்றேன்! நான் வருகின்றேன்! Ln6T60TT. அரசே. மெய்ப்பொருளே. "ஐயுந் தொடர்ந்து விழியும் சொருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகிவிடுகின்றபோதொன்றுவேண்டுவன்யான் செய்யும் திருவாற்றியூருடையான் திருநீறுமிட்டு
கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஒதவும் கற்பியுமே (மன்னன் இறந்து விடுகிறான் மக்கள் கூடி நிற்கின்றனர்) திரை விழுகிறது "நாடகம் என்பதோர் ஊடகம் ஐயா நல்லது கெட்டது நவின்றிட ஐயா" "ஆடலும் பாடலும் இணைந்தது ஐயா அறிவூட்டும் ஒரு விளையாட்டு ஐயா"

Page 28
SHAV
- S. Shivapadas
SHAIVAISM is the religion of those who accept the authority of the Vedas and the Shivagamas and regard them as having been revealed by God.
The Vedas are intended for all; but the Shivagamas are meant only for the spiritually minded. All the four Vedas are still in existence. But most of the Shivagamas have disappeared they were in the existence in the time of Arulnandi Shivam, who had studied all of them and was hence called Sakalagama Panditer Fortunately for us, he has included in his magnum opus, the Shivagnana Siddhiar, the essence of the most of the Agamas. The commentators of this book mention seventeen Shivagamas, which contain teachings identical with the more important teachings in Siddhiar. This shows that those Agamas existed in the times of these commentators. Besides Siddhiar, we have the Shivagnana Bodham, which is a portion of the Rourava Shivagama and is believed to be its essence. This was rendered into Tamil with a short commentary by Meikandar. These two Tamil books give us the philosophical portion (the Gnana Padam) of the Agamas. There are twelve other works in Tamil which supplement these and form with them what are called the fourteen Siddhanta Shastras. Of these, Irupa Irupathu was written by Arulinandi Shivam himself seven or eight others were written by his disciple's disciple, Umapathi Shivam. Thirumantram of Tirumular, believed to have been written more than two thousand years ago, also contains Shaiva philosophy. These fifteen works seem to be able to take the place of the philosophical portion of the Shivagamas.
Shaiva philosophy posits a God and only one God. Besides positing God, it also gives reasons in support of it.
 

ASM
undaram, B.A =
The Universe as a whole undergoes change. For every change there must be a cause. Therefore, there must be a cause for the change in the Universe. This cause must be something different from the Universe. That which causes this is called God.
But it may be argued that it is the nature of the Universe to undergo change and that an outside cause is not necessary. But change cannot be the nature of a thing; for first of all, we do not find anything which is changed by itself. Everything remains as it is unless it is subjected to an outside agency. Water remains Water and does not become ice unless it is cooled by Something else. Secondly, if it is the nature of a thing to change, We must find everything changing continually, and at random, and without reference to anything else. We should not even be surprised if a man suddenly changes into a pillar. Thirdly, if changing should be the nature of a thing, it loses its identity and is no longer that thing but a different one. So change cannot be said to be the quality of a thing. For example, if one of the right angles of a Square changes into an acute angle it is no longer a square but a rhombus, and We never find a square becoming a rhombus by itself. Therefore, change cannot be the nature of a thing; the change in the Universe as a whole cannot be due to its nature. It must be caused by something which is not the Universe, and that which causes this is God.
Changes take place not only in the inorganic Universe. At one time, this earth had been part of the sun. It must have been a burning mass at the time of separation. Life was impossible in that burning mass. But we see life now and this is a change; not merely life, but life of such marvelluos development as man; not merely man, but men of such wonderful intelligence as Einstein and Ramanujam. It is a

Page 29
tremendous change from lifelessness to the intelligence of Einstein, and the change must have been caused by something which is all knowing and which Shaivaism calls God.
A reason for the belief in the existence of
God comes from the need for protecting Ourselves
and our belongings. Everyone wants to be safe, and everyone wants his belongings also to be safe. Nobody wishes to be murdered or robbed. If he and his properties are to be safe, people must know what is right and be bound to do the right. The science of ethics has miserably failed in its attempt to discover basis for discriminating right from wrong. Every ethical theory put forward by ethics has been found to be slippery. Tell an atheist that just as he has the right to
claim the safety of his person and property others
also have the right to claim the safety of their
persons and properties and that he ought to respect their claim, he can say "There is no such thing as right. I have no such thing as right. I have no claim for my personal Safety. What counts is might. If I do not have the might to protect my property, I must lose it. If I have the might to take another man's property, I take it. By might
I mean the might of myself and of those who help
me, including the State, if it happens to be on my side. I will stab or murder, stel or rob, breaka a house or set fire to it, if these were my interests, provided my safety is ensured. Even highly civilised countries like England and America, France and Germany, regard might as the Supreme arbiter and have, on this basis, fought the two great World Wars of the present century. No sensible man will accept your dictum Do unto others what you wish that they should do unto you". This is the dictum of Weaklings and imbeciles. According to your line of reasoning, a lamb has as much right to live as yourself. But
you slaughter it and eat it because you have the
might to do so. An atheist is not bound to have
any regard for morals.
 

The existence of God and of His revelation must be postulated for the acceptance of moral laws. Siddhiar says "The true dharma is Shiva's Law". It may be observed in this connection that it is only Shaivaism which prohibits all kinds of Wrongs, including killing, meat - eating and drinking.
But there are those who very comfortably say "I have no need for God. I have a conscience, which tells me what is right and what is Wrong. I will endeavour to obey it." But, conscience is a myth. What a man calls conscience is nothing other than the decision of his intellect, based on his ideals, knowledge etc. There have been persons who at one time hated bribery, but later became ardent Votaries of it. So putting in terms of conscience, at One time their conscience disapproved bribery, and at another time approved it. Orthodox meat-eaters have become orthodox vegetarians i.e. at one time their conscience approved meat eating and at another time condemned it. Again we see the conscience of one man approving murder for political purposes and the conscience of another man abhorring it. We thus see that conscience differs in the same man from time to time and in different persons at the same time, Conscience is therefore altogether undependable.
Morality can depend only on religion, and the existence of God has to be admitted for the maintenance of moral life.
Having thus demonstrated the need for the belief in the existence of God, our philosophy says that there can be only one God. We first arrived at the existence of God in our attempt to explain the change the Universe undergoes. God is thus the wielder of the Universe. There cannot be two beings each independently controlling the Universe. So the Veda says, "There is only one God- but sages call Him by different names."
The next teaching of Shaivaism is that we are all Souls and that are realities. A reality cannot

Page 30
come Out of nothing, and a reality which is not composite is eternal. The Soul is not composite and is therefore eternal.
But there are those who deny the existence of the soul and regard the body as the individual. They hold that thinking is done by the nervous system in the brain. But nerves are mere chemical products and are therefore nonintelligent. If a man frequently repeats" 7 times 12 is 84" this truth Will come to him whenever he wishes to
know What 7 times 12 is.
But intricate mathematical problems cannot be solved by such habit formations. There must, therefore, be something other than the body to do work of this kind. Shaiva philosophy says that which does this is the Soul.
Bit another class of philosophers say that the solution of problems can be done by the mind and that the existence of the Soul does not follow from this. In answer to this, Shaiva philosophy says that the mind is only a tool and not the agent.
衢” ২২ S$১৯১২
சிவமூர்த்திகளுக்கு எண்ணெய் பால், தயிர்
அபிஷேகம் பண்ணுதல் புண்ணியமென்று சைவாக சந்தனாதித் தைலாபிஷேகம் சுகத்தையு ரோகநாசத்தையும், மஞ்சட் காப்பு இராசவசிய இரசபஞ்சாமிர்தம் வெற்றியையும், பலபஞ்சாமிர்தம் பால் ஆயுள் விருத்தியையும், தயிர் பிரஜா வி சங்கீதவன்மையையும், கருப்பஞ்சாறு நித்தியசுகத்ை பயிர் விருத்தியையும், பலாப்பழம் லோக வசியத்தைய லாபத்தையும், மாதுளம்பழம் பகை நீக்கத்தையும் மிருத்துநிவாரணத்தையும், தேங்காய்த்துருவல் பூ கோரோனை தீர்க்காயுளையும், பச்சைக்கர்ப்பூரம் சாலோக்கியத்தையும், சந்தனக்குழம்பு சாயுச் சி ஜன்மசாபல்யத்தையும் சாரூப்பியத்தையுந் தரும். ஆயுள் ஆரோக்கியம் அரசு தேசம் என்பவற்றின் வி
உண்மை நூல்கள் கூறுகின்றன.
C
 
 
 
 
 
 

We control our minds in several ways. When the mind is prone to be idle, we sometimes press it to do the work in hand. When it starts a wrong act as a refleX, we mend it. The mind is thus only a tool and not the agent. The agent is what our philosophy calls soul. Mind and body are its tools. We also see that our knowledge is very limited. There are phenomena which even the greatest scientist is still unable to explain. We are therefore not ominiscient. But, when we see men possessing varying amounts of knowledge, the jungle - dweller having a drop of knowledge, and ordinary graduate a well of knowledge, a professor a Sea of knowledge and a Raman an ocean of knowledge we have a right to infer that the Soul is capable of omniscience. Since men are actually not omniscient, there must be Something which keeps down this omniscience. Our philosophy calls this Anava.
(to be Continued in the next issue)
ISSNS স্ত্ৰ C
, நெய், தேன், இளநீர் முதலியவைகளினால் விதிப்படி மங்கள் சாற்றுகின்றன.
ம், மாக்காப்பு மலநாசத்தையும், நெல்லிக்காப்பு த்ததையும், பஞ்சகவ்வியம் ஆன்மசுத்தியையும், செல்வத்தையும், பஞ்சலோதகம் மந்திரசித்தியையும், பிருத்தியையும், நெய் மோகூடித்தையும், தேன் தையும், சர்க்கரை சத்துருநாசத்தையும், வாழைப்பழம், பும், மாம்பழம் சகலவிஜயத்தையும், தமரத்தம்பழம் பூமி , நாரத்தம் பழம் சற்புத்தியையும், எலுமிச்சம்பழம் அரசுரிமையையும், இளநீர் சற்புத்திரப் பேற்றையும், பயநாசத்தையும், கஸ்தூரி வெற்றியையும், பனிநீர் யத்தையும், சகஸ்ரதாராபிஷேகம் ஞானத்தையும், அன்னாபிஷேகமானது அவமிருத்துவை விலக்கும்;
ருத்தியைச் செய்யும்; சர்வசாந்தியையுந் தரும் என்று
28)

Page 31
சைவ சமய அறி
போட்டி இல. 4
菲。
தமிழ் வேதங்கள் யாவை? பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? ஞான மார்க்கமாவது யாது? மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, எத்தனை பாடல்கள் உள்ளன? உத்தராயண காலம் எப்போது ஆரம்பமாகி எ "இடரினும் தளரினும்' எனும் பதிகம் பாடப்ப திருக்கேதீச்சரத்தின் இறைவன், இறைவி பெய சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவலோகப் பெயர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமுை
திருஞானசம்பந்தர் வாழ்ந்த நூற்றாண்டு யாது?
போட்டியிற் பங்கு கொ எவரும் பங்கு கொள்ளலாம். சைவநீதி இதழில் வெளியாகியுள்ள கூப்பனு ஒருவர் ஒரு விடைத்தாள் மட்டுமே அனுப்ப நிறைவு செய்யப்பட்ட விடைத்தாள்கள், 20 கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும். விடைகள் அனுப்ப வேண்டிய முகவரி M
2.
C
வெற்றி பெறும் மூவர் பரிசில் பெறுவர். போட்டி அமைப்பாளர் குழு முடியே இறுதி முதற்பரிசு ரூபா 100 இரண்டாம் பரிசு ரூபா 50
மூன்றாம் பரிசு சைவநீதி ஒன்று
 

வுப் போட்டி
முடிவுத் திகதி 29. 02, 2000
திருப்பள்ளி எழுச்சி என்பவற்றில் முறையே
ப்போது முடிவடையும்? ட்ட சந்தர்ப்பத்தைக் கூறுக?
ர் யாது?
uTg5!? றகளுக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?
ள்வோர் கவனத்திற்கு
டன் விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும். 50 Tip.
0.0229 ஆந் திகதிக்கு முன்பாகக் கிடைக்கக்
R. K. SWAMINATHAN 27/19, Mahavidyalaya Mawatha, OlOmbO - 13.
பம்
நீதி
பாட்டி இல. 3
கையெப்பம்

Page 32
போட்டி இ
திருமந்திரம் திருமூலர் அருளியது.
திருகோணமலையில் 1. கண்ணாடி i. நிறைகுடம் V. தோட்டி Vi. (plygin 16வது வயதில்
i. வெள்ளெருக்கு i, புன்னை V. நந்தியாவட்டை wi. செண்பகம் viii. 96Nof
27 நட்சத்திரங்கள்
i யாழ். சைவப்பிரகாச வித்தியாசாலை,
ஆண்டு 1848
ஆனி மாத மக நட்சத்திரம்
1. பெரியாழ்வார் i. ஆண்டாள் i V. பொய்கை ஆழ்வார் Vi. திருமழிசை ஆழ்வார் V ix திருப்பாண் ஆழ்வார் X, மதுரகவி ஆழ்வார் X
10. திருவண்ணாமலை
போட்டி பரிசு பெற்றோர் விபரம்
1D fa, 2 ft) f_fff"g,
செல்வன் நி. பவானந்தன், செல்வி கு. 23 திருஞானசம்பந்தர் வீதி, கல்லடி, திருகோணமலை. - மட்டக்க வவுனியா
சைவந்தி -
தனிப்பிரதி (Լ5 t இலங்கையில் - ரூபா 25.00 இலர் இந்தியாவில் - ரூபா 25.00 இந்தி
(இந்திய ரூபா) ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் ப
வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரதுப் சந்தா அனுப்பப்பட வேண்டிய முகவர்
C. NAV 42, Jana
Colomb Sri Lank
 

Hno. 2 — GOSF6ÕDA LAJ,6řir
i. கொடி iV. FITLOTTứh wi. விளக்கு wi. இணைக்கயல்
i. நீலோற்பலம் iv. LIITg5rf Vர். செண்பகம் wi. செந்தாமரை
i. குலசேகர ஆழ்வார் iv தொண்டரடிப் பொடி ஆழ்வார் i. பேய் ஆழ்வார் viii. Jg5ġġ5TģGJITrif 1. திருமங்கை ஆழ்வார் Xi. நம் ஆழ்வார்
இல 2
3 to isfa,
புனிதவதி, செல்வன் யோ. கேசவன்,
கோவில் புதுக்குளம்,
ளப்பு. 4D ஒழுங்கை,
சந்தர் விபரம்"
டச்சந்தா வகையில் - ரூபா 250.00
யாவில் - ரூபா 250.00 (இந்திய ரூபா)
வுண் 10 அல்லது US $ 15. சைவநிதியின் b பங்களிப்புப் பெரிதும் வேண்டப்படும். f:
TANEETHAKUMAR, ki Lane, O - 04.
Ka.
3)

Page 33
உலகத்தில் வாழக் கடவுள் பக்தி அவசி ー துதிப்பது சமயச் சடங்குகளை ஆற்றுவது, ச நின்று விடுவதில்லை. வாழ்க்கையில் மெய்கு அப்பர் இது பற்றி
குறிகளும் அடையாள நெறிகளும் அவர் நின் அறிய ஆயிரம் ஆரண பொறியீலிர் மனம் என் என்கிறார். சமயச் சடங்குகள், நெறிகள், கே. �); ஆயிரம் வேதங்களை pԱք ஒதினாலும் bտ տor பயனேதும் இல்லை இந்த மெய்ஞானத்தை உ உணர்ந்தும் நம் உள்ளதோடும் உயிரோடும் க
வேண்டும்.
* சைவநிதிக்குக் கட்டுரைகள், கவி
ஆக்கங்கள் தரக் கூடியவர்களிட மாணவர்களும் ஆக்கங்கள் தர " + 65)=Gujg பற்றிய உங்க
எதிர்பார்க்கின்றோம். உங்கள் பதுடன் மேலும் சிறப்பான மு கருத்துக்களையும் நடைமுறைப்பு - , εισισίπ ஆலய விழாக்களை மு:
வெளியிட விரும்புவோர் முன் கொள்ளவும்.
சந்தாதாரருக்கு இதழ் கிடைக் போன்றவற்றை எமக்குத் தெரிய
 
 
 
 
 
 
 

%
தனையில்
Lம் பத்தி
பம் கடவுள் பக்தி என்றால் இறைவனைத் மயச் சின்னங்களை அணிவது, இத்துடன் நானத்தையும் இணைத்து வழ வேண்டும்.
மும் கோவிலும்
தேடா நேர்மை
ம் ஒதினும்
ா கொல் புகாதே ாவில்கள் இவைகள் பற்றி எல்லாம் கூறும் ம் மெய்ஞானத்தை உணரவில்லை என்றால் ணர்வதும் மட்டும் போதாது. இதை நன்கு லந்து அன்றாட வாழ்விலும் பிரதி பலிக்க
ள் பங்களிப்பு)
தைகள் மற்றும் பொருத்தமான
டமிருந்து எதிர் பார்க்கின்றோம். aðfTLD.
5T அபிப்பிராயங்களையும்
அபிப்பிராயங்களைப் பிரசுரிப் மறையில் வெளியிடுவதற்குரிய டுத்துவோம்.
ன்னிட்டுச் சைவநீதி சிறப்புமலர் கூட்டியே எம்முடன் தொடர்பு
காதுவிடின்/முகவரி மாற்றம் பப்படுத்தவும்.

Page 34
Regd. No. QD/22/News 2000. 96.5g Gogo.gif என்னும் முகவரியிலுள்ள யுனி ஆர்ட்ஸ் இல்