கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2000.04-05

Page 1

Αν
贰町(

Page 2
r
சைவந்தி மூன்றவது ஆண்டு 1
 

ட்டு விழா நிகழ்வுகள்
DGOດ້ @@@ນີ້ໄດ້

Page 3
@@纤剑 நான்காவது ஆன
LLLLLMMMMSLSMLLLLLSLSLLLLL SMS MS SeLL LLL LLLL LSeALASSeeeSLLLLSLLA 'SSSSS
aga??.
திருச்சிற்றம்
நாலு மேன்முகஞ் செ நாலு நான்குணர்ந் திட
நாலு வேதஞ் சரித்தது நாலு போலெம கத்து
திருச்சிற்றம்
 
 
 
 

&2&އެްޗެޗެޗް&2822#&
allo
ற்றது மன்னிழல் ட்டது மின்பமா
நன்னெறி றை நாதனே
அப்பர்

Page 4
விக்கிரம சித்திரை (
6O 6-6
O GİTGGIT...........
1. 6), Tip jigs duT.
- தவத்திரு சாந்தலிங்க இ 2. மன்னுக பல்லாண்டு மகிழ்ந்து .
- மணிப்புலவன் . 3. நாலுபேர் சொன்னபடி நட . 4. அணைந்தோர் தன்மை.
- உமாபதி சிவம் . 5. நான்காம் அகவையிற் சைவரீதி
- முருகவே பரமநாதன். 6. போகர் சுவாமிகள்.
- டாக்டர் அறிவொளி 7. ஒரு ஞான சூரியன் நம் மத்தியில்.
- சைவப் புலவர் சி. திரு 8. மானடி.
- தவத்திரு சாந்தலிங்க இ 9. விறன் மிண்ட நாயனார்.
- சிவ. சண்முகவடிவேல் 10. இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருை
- பண்டிதர் ச. சுப்பிரமணி 11. பொய் சொல்லாதே.
- கிருபானந்தவாரியார் . 12. இரு பேருருவின் ஒரு பேரியாக்கை. . 13. சைவ வினாவிடை விபூதியியல்.
- ஆறுமுகநாவலர் . 14. திருவருட் பயனில் திருக்குறட் சிந்தனை,
- சித்தாந்தரத்தினம் க. கே 15. பிக்ஷாடனர்.
- சிவபூரீ ச. குமாரசுவாமி 16. பூக்கொய்து மாலை தொடுத்துச் சிவனுக்குச் சா - ஆறுமுக நாவலர் . 17. சைவசமய சாரம்.
- ஆறுமுகம் கந்தையா சைவநெறி வினாவிடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ள கருத்துக்களுக்குக் கட்டுரை
-இதழ்நிர்வாகிகள்

Page 5
O (0 × 0 (0 × 0 (0. ()
翡、 * தொலைபேசி 897995 கயிலைமாமுனிவர் வித்துவான்
Tij560 à 5 3 J TIE 3 ITIE UI 1235 GT 参 பேரூர்தீனல், பேரூர் (அஞ்சல்) کھیل கோயமுத்தர் - 54 (10 தமிழ்நாடு
3ாந்தலிங்கர்
s
சாந்தலிங்கர் த.
வாழ்த்
திருவளர் செம்மை சேரத் திகழ்ந்
பெருமைசேர் சைவ நீதி பேசிடு
அருள்நெறி மணம் பரப்பி அகி
மருவிய அன்பர் உள்ளம் மகிழ்
தட்டுண்டு தடுமாறாமல் தமிழர் வெட்டுண்டு வீழ்ந்திடாமல் வெ
கட்டுண்டு அடிமையாகிக் கழி
ஒட்டிய உறவால் சைவ நீதியை
 
 
 
 
 
 
 
 
 

چې لتاi
Telephone : 807995
- Kailai - Ma - Minivar Vidvaru க் Sontholinga Ramusamy Aidigqi ཚོ་ཟི་ PERURATHEENAM, PERUTIR (P.0.) . . . . COIMBATORE - 64) 010 క్ష్ g_ggj_{EEA-)_Tamilnadu El Peruradgalés yáfióó.com ET##೯೩žಟ
ாண்மலர் வாழ்க
துப்பா
திடும் இலங்கை தன்னில் ம் இதழ் மலர்ந்து
லத்துச் சிவம் சேர்வாழ்வு
ର[[D வாழ்த்துகின்றோம்
fg5 Gir Lj 68) 3568) LD LITTG36)
ற்றியை விரும்ப வேண்டும்
யாமல் உலகமெங்கும்
உயர்த்த வேண்டும்.
அன்புள்ள (தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகள்)

Page 6
G
9.
d6 JLD மன்னுகபல் லா
எண்ணருஞ்சீர்ச் சைவ எழுச்சி நண்ணு பராயமொரு நாலுகா ரன்னசைவ நீதி யனவரதந் தெ மன்னுகபல் லாண்டு மகிழ்ந்து நீடுமிசை யார்சைவ நீதியெனு பீடுநடை கொண்டிந்தப் பேரு மார்க்கச் சிறப்பை மகிழ்வா ே சீர்க்கண் மிசைக சிறந்து. நெஞ்சுதொறு மேவுசைவ நீதி சஞ்கிகையு மாதேவன் தாளின கொண்டுவகை வாட்டுங் கெ மண்டிசையி லார்க மலர்ந்து.
<><>><>><>ල<>ෆ<><<>ථ<>I<>><>><>><><<>I<>I<>><>උ<>ර
Tநினைவிற் ெ
13.04.2000 வியாழ
வி
இ
U
@
த்
தி
ബ
O
O2 | 14.04.2OOO || GG GITGI 04 16.04.2000 | ஞாயிறு 05 17.04.2000 திங்கள் 06 || 18.04.2000 || GgFỗuGIII
07 19.04.2000 | புதன் IO 22.04.2000 ! গুৰুক্রোন্তীি 15 27.04.2000 | வியாழ 17 || 29.04.2000 || g টেীি 18 30.04.2000 | ஞாயிறு 19 Ol.05.2000 திங்கள் 21 03.05.2000 புதன் 22 04.05.2000 வியாழ 23 05.05.2OOO I GGJ GITGI 24 06.05.2000 || 96টীি 25 07.05.2000 | ஞாயிறு 26 08:05.2000 திங்கள் 27 09.05.2OOO Gastó6.
s
gg
 
 

Uh ண்டு மகிழ்ந்து! TUIT
யது மேலோங்க ண் - வண்ணமல ாண்டுஞற்றி
1.
ஞ் சஞ்சிகைதான் லுகில் - ஆடு மிறை யடுத்தியம்பு
யெனு மின்பமிர்தச் |ணமென் - கஞ்சவருள் ாடுமையெலா நீக்கியென்று
உடுப்பிட்டி "மணிப்புலவன்.
காள்வதற்கு
5T வருடப்பிறப்பு விஷ" புண்ணியகாலம் பகல்
11.45 முதல் மாலை 7.45 வரை.
f ஏகாதசி விரதம்.
பிரதோஷ விரதம். உமாபதி சிவாச்சாரியார் குருபூசை ாய் சித்திராபூரணை விரதம், சித்திரைச் சித்திரை சித்திரகுப்த விரதம், இசைஞானியார் குருபூசை. திருக்குறிப்புத் தொண்டர் குருபூசை சங்கடஹர சதுர்த்தி விரதம்.
ன் நடேசரபிஷேகம்.
திருநாவுக்கரசு குருபூசை
ஏகாதசி விரதம்.
பிரதோஷ விரதம்.
s
s
s
அமாவாசை விரதம், சித்திரைப்பரணி, சிறுத் தொண்டர் குருபூசை. கார்த்திகை விரதம்.
மங்கையர்க்கரசியார் குருபூசை. சதுர்த்தி விரதம், அக்கினி நாளாரம்பம். விறன்மிண்டர் குருபூசை ாய் ஷஷ்டி விரதம்.
oងៃ ក្លេអ៊ែរ
Suras to

Page 7
விக்கிரம சித்திரை
சிவ "மேன்மைகொள் சைவநீதி
GUIFG
மலர் 4 விக்கிரம சித்திரை சைவசமய வளர்ச்சி கரு
நாலு பேர் ெ
மெக்கு யாராவது அறிவுரை கூறும் போது கேட்டிருக்கிறோம். யார் அந்த நாலுபேர்? அவர்கள் செ
சைவநீதி நாலாவது ஆண்டின் முதல் இதழில் சிந்திப்போம்.
இங்கு நாலு பேர் என்பது சம்பந்தர், அப்பர், ! அறிவுரைகளைக் கூறி எப்படி வாழ வேண்டும் என்று வ நான், எனது குடும்பம், எனது சுற்றம் என்று குறு அனைத்து உயிரினங்களும் பயன்படும் வண்ணம் பணி ெ இரங்கி அவர்களுக்கு உதவ வேண்டும். திருமருகலில் வாடியது கண்ட சம்பந்தப்பிள்ளையார் அவள் துயர் நீக்க இறைவனை வேண்டி வணிகனை உயிர்பெற்றெழச் செய் தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன்ப இருக்காது ஊர் ஊராகச் சென்று மக்கள் குறையைத் தா பஞ்சம் வந்தபோது இறைவனிடம் படிக்காசு பெற்று உை பதிகம் பாடி நோய் தீர்த்தும், பிறர் துன்பத்தைத் தீர்த்து
எத்திறத்தில் நின்றாலும், எத்தொழிலைச் செய்த தான் அடியவனென அடியவர் வழிபாட்டை அறியத் த நடந்தாலும் மென்றாலுந் துயின்றாலும் மன்றாடும் ԼՈ6Ն உள்ளத்தில் இறைவன் எழுந்தருளியிருப்பான்.
எந்தப்பிறவி எடுத்தாலும் இறைவனின் மலரடியை புழுவாய்ப் பிறந்தாலும் உன்னடியை மறவாத த6 இறைநினைவுடன் இருப்பவர்கள் துன்பமின்றித் துயரின்
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணிய வழுவா திருக்க வரந்தர வேண்டு தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சை
air (4) - irr
toց Ե5ւo, 4
 

5)
DLith
s 95. விளங்குக உலகமெல்லாம்'
பாரீதி
நதி வெளிவரும் மாத இதழ் இதழ் 1
ான்னபடி நட
'நாலு பேர் சொன்னபடி நட' என்று கூறுவதைக் ான்னதுதான் என்ன? நாலு பேர் சொன்னபடி நடக்கும் மார்க்கம் பற்றிச் சற்றுச்
சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர். அவர்கள் பல ாழ்ந்தும் காட்டியுள்ளனர். கிய எண்ணத்திற் பணி செய்யாது அனைத்து மக்களும், சய்வதே உயர்ந்த செயலாகும். பிறர் துன்பத்தைக் கண்டு பாம்பு தீண்டி இறந்த வணிகனின் மனைவி துயரத்தால் 5 எண்ணி எந்தாய் தகுமோ இவளுண்மெலிவே” என்று பது இருவரையும் இல்வாழ்விற் புகுவித்தார். னி செய்து கிடப்பதே" என்பது அப்பர் வாக்கு ஓரிடத்தில் மே அறிந்து உதவிச் சமயம் வளர்த்தவர்கள் சமயக்குரவர் எவளித்தும், அடியவர் குளிர் சுரத்தால் வருந்தியபோது மக்கள் சேவையே மகேசன் சேவையென வழிகாட்டினர். ாலும் சித்தத்தைச் சிவன்பாற் செலுத்திய அடியவர்க்குத் ந்தவர் சுந்தரர் நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் ர்ப் பதத்தை மறவாத சிந்தையர் அடியவர். அடியவர்
மறவாதிருக்க வேண்டும் என்பதே அடியவர் விருப்பம். ன்மை வேண்டும் என வேண்டி நிற்கிறார் அப்பரடிகள். றி இருப்பர். பிறரின் துன்பங்கண்டு இரங்கி உதவுவர்.
வன்னடி யென்மனத்தே மிவ் வையகத்தே
செய்பா திரிப்புலியூர்ச்
- மேல்வைத்த தீவண்ணனே

Page 8
- உமாபதி
அணைந்தோர் தன்மை என்பது, அணைந்தோரது தன்மை என விரியும். அணைந்தோர் என்பது சிவபெருமான் திருவடி நீழலை அடைந்த சீவன்முத்தர்; தன்மை என்பது இயல்பு. அணைந்தோர் தன்மை என்பது சிவபெருமான் திருவடி நீழலிலேயே, தங்கள் வேட்கையறிவு செயல்கள் நிகழப்பெற்று, உள்ளும் புறமும் ஒரு தன்மைக் காட்சியராய் இன்புற்றிருக்கும் சீவன் முத்தருடைய இயல்பு என்று பொருள்படும்.
ஆசிரியர், மேலை அதிகாரத்தில் சீவன் முத்தர் தங்களை வாதனை மலம் தாக்காதிருத்தற்குரிய சாதனங்கூறி, இந்த அதிகாரத்தில் அவர்களுடைய இயல்பு கூறுகின்றார். இதனாலே இவ்வதிகார இயைபு இனிது விளங்கும்.
1- முதல் 5 - பாட்டுக்கள், சிவன் திருவடி நீழலை அடைந்த சீவன் முத்தர்கள், தாங்கள் அடைந்த அத்துவித நிலையிலிருந்து வழுவாதிருத்தற்கு, சிவன் திருக்கோயில்களில் சரியைப்பணிகள் செய்து சிவனை நினைந்து தொழுதல் வேண்டுமென்று கூறுகின்றன. 6-வது பாட்டு, சீவன்முத்தர்களுடைய உள்ளத்தில் பேரறிவு விளக்கமும் பேரின்ப விளக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்குமென்று கூறுகின்றது. இதில்
LLSLL LSLLSLL SS SS SSL SSLLLSS SLL SSLLSSLLSSLL LSSSSL SSL LS SLLSSS SS SS SS SSYSSS SSLSSS SSSYSSSSSLSSSSSSLSSS0S ஒரு மனிதன் பணம் அதிகம் வரும் போது சாதனமாகும். இப்படித் தர்மம் செய்பவனது புகழ் கட்டுதல், பிச்சைக்காரன், தொழுநோய் உள்ள கும்பாபிஷேகம் செய்தல், கோவில் விளக்குக் போட்டுக் கோவிலுக்குப் புஷ்பம் கொடுக்க ஏற்ப பாடசாலை நடத்தல், கஷ்டப்பட்ட மாணவர்களு குளம் வெட்டுதல், சுமைதாங்கிக் கல் பதித்தல் பசு செய்தல் ஆகிய தர்மத்தைச் செய்வதற்குத் தகுந் §T ஒருவன் மூன்று லோகங்களிலு
அஉைகிறான் e e e e e e e e e e e e e e e e e
୫୮
 
 
 

| GAGNLD -
திருநாவுக்கரசு அடிகள். தாம் இம்மை வாழ்விலேயே பேரின்ப உணர்வை அடைந்ததைக் கூறுதல் காண்க. 7-வது பாட்டு சிவன் திருவடி நீழலை அடைந்த சீவன்முத்தர்கள், சூக்குமதன் மாத்திரைகளால் நிகழும் ஜம்புல விடயங்களிற் செல்வார்கள் என்று கூறுகின்றது. 8,9,11 பாட்டுக்கள், சிவன் திருவடிநீழலை அடைந்த சீவன் முத்தர் உலகில் எவர்க்கும் அஞ்சாது நமனுக்கும் அஞ்சாது எந்நாளும் இன்புற்றிருப்பர் என்று கூறுகின்றன. 10-வது பாட்டு, சீவன் முத்தர்கள் புறப்பற்று அகப்பற்றுக்கள் அற்றிருப்பார்கள் என்று கூறுகின்றது. 12-வது பாட்டு, சீவன்முத்தர்கள் சிவவேடந் தாங்கிய அடியார்களைக் கண்டால், அவர் அடிமைத்திறம் ஒன்றனையே நினைந்து அவரைத் தொழல் வேண்டுமென்று கூறுகின்றது. 13, 14, 15 வது பாட்டுக்கள், சிவபெருமானை எப்பொழுதும் மறப்பு நினைப்பின்றி நினைந்து கொண்டிருக்கும் சீவன் முத்தரிலக்கணங் கூறுகின்றன. 16-வது பாட்டு, சீவன் முத்தர்கள் திருக்கோயிலில் எழுந் தருளியிருக்கும் சிவபெருமானைத் தொழ அவரது பிராரத்துவ உடல் நீங்குமட்டும் அவர்கள் உள்ளத்தில் விருப்பு வெறுப்புக்களும், துயரமும் அணுகாவென்று கூறுகின்றது.
@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ தான் புண்ணியம் சம்பாதிக்கத் தர்மமே சிறந்த மூன்று லோகங்களிலும் பிரகாசிக்கும், சத்திரம் வன் தங்க இடம் கொடுத்தல், கோவில் கட்டிக் த எண்ணெய் கொடுத்தல், புஷ்பத் தோட்டம் டு செய்தல், தண்ணிர்ப்பந்தல் அமைத்தல், வேத க்குப் பணம் கொடுத்துப் படிப்புக்கு உதவுதல், க்கள் உராய்வதற்குக் கல்பதித்தல், கண் தானம் ஆட்களை நியமித்துக் கண் காணித்தல் ஆகிய ம் பிரகாசிப்பதோடு இறந்த பின்பும் புகழை?

Page 9
apata5ao gasgada
grលើយ ថាយ
முருகவே
படைப்பாக்க இலக்கியம், புதுக்கவிதை, நாவல், நாடகம் போன்ற ஆக்க இலக்கியத்துறை எடுபடும் காலம் இது விமர்சனம், திறனாய்வு மதிப்பீடு போன்ற பல இலக்கியத்துறைகளின் வீச்சும், வெளிப்பாடும் வாசகர்களை வழிநடத்தவும் செய்கின்றன. இவற்றிலே தோய்ந்த சுவைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிரப்ப நிறைவு செய்யப் படைப்பாளிகள் முயல்கிறார்கள், தமிழிலே இத்துறை மிக்க செல்வாக்குப் பெறச் சஞ்சிகைகள் காரணமாகும். உலகெங்கும் பரந்துபட்ட தமிழின் இதழியக்க வாதிகளின் முயற்சியில் வரும் வெளியீடுகள் அவற்றைச் சுமந்து வாசகர்களின் மத்தியிற் செல்வாக்குப் பெறும் இச்சகாப்தத்தில் எழுத்தாளர்களின் பேனா அப்பக்கமாகவே அசைந்து கொண்டும் இருக்கிறது. காலத்தின் போக்கோடு படிப்பாளிகளும் படைப்பாளர்களும் இயங்குவதும் காலத்தின் 35' TLu (Ln. இத்துறை பல்கலைக்கழகத்தில் முக்கியத்துவம் பெற்று விமர்சிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்டப்பிற்படிப்பு போன்ற படிகளில் சிறப்புப்பட்டம் பெற இத்துறை ஆய்வுமதிப்பீடுகள் முன்னுரிமை வகிக்கின்றன. அரசாங்கங்களும் சாகித்தியப் பரிசுகள் வழங்குகின்றன. இதே பாங்கில் அறிவியல், அழகியல், நுண்கலை, கவின் கலைகள் மேலோங்கவும் செய்கின்றன. தேவையும்கூட இவ்விழிப்புணர்வு தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாட்டை மேதகுநிலைக்கு உயர்த்தும்போது சமய இயல் . புதிய பார்வையில், விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் தன்னை வழிநடத்த வேண்டியும் உளது. இவைபோன்ற பல வழிநடத்துகையின் மத்தியில் சைவசமயமும் சமயஞ்சார்ந்த துறைகளும் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற கூர்ப்பு மிக அத்தியாவசியம் ஆகும். அன்றாட வாழ்க்கையுடன் அல்லாடும், இயந்திரமயமான மனித வாழ்வில் ஒழுக்கமும்,
 
 
 

வயிற் சைவநிதி
பரமநாதன்
கட்டுப்பாடும், விழுமியங்களும், மனிதமும் பேணப்படும், போக்கிற் சமயம் தன்பங்களிப்பைச் செய்யும் வகையில் ஒரு அம்சம் வெகுசனத் தொடர்புச் சாதனங்கள். இதன் ஒரு அங்கம் தான் சமயப் பத்திரிகைகள், வெளியீடுகள் போன்றவை. ஈழமணித் திருநாட்டில் சைவ மக்கள் நிலை தளராமலும், வழமையான, பழைமையான பாதையில் அவர்களை வழிநடத்தவும் வாழ்வளிக்கவும் சைவம் துணை செய்வதோடு, வெளிநாடுகளில் வசிக்கும் மக்களின் சமய உணர்வுகளுக்கும் பங்கம் வராவண்ணம் பாதுகாக்கவும் எழுந்த சைவ சமய ஏடுதான் சைவநிதி, திங்கள் தோறும் வெளிவருகிறது.
இப்படிக் கடல்தாண்டிய கண்டங்களில் தமிழர் வதியும் இடங்களிலும் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆயினும் படைப்பிலக்கியச் செல்வாக்கு நிரம்ப உண்டு. இம்முயல்விற் கொழும்பில் மூன்றாண்டுகளாக வலம் வரும் சைவநீதி தன் தடத்தைப் பதித்து அரிய தொண்டாற்றுவதில் முன்னணிப் பத்திரிகையென்ற
இ xஇ% நல்ல காரியத்தைச் செய்தால் இரவில் சுகமாக இருக்க மகிழ்வானோ அந்தக் காரியத்தைப் பகலிலேயே தீர்மானிக்க
*
சேகரித்துச் செளகரியமாக ை வேண்டும் எந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைக்கிறானோ
966 66 குழந்தை பிறந்த உடனேயே சேமித்து வைக்க வேண்டும். எதை வைத்துக் கொண்டால் வயதான காலத்தில் குழந்தைகள் கவனிப் பார்களோ அதை GIGSL காலத்திலேயே ਲ வைத்துக் கொள்ள வேண்டுப்
༤ > ༤ 贊

Page 10
தரத்தை எட்டியுள்ளது. எழுத்தாளர்கள், வெளியிடுவோர். பதிப்பாளர், பதிப்பகத்தார், ஆசிரியர், நெறியாள்குழு வெகுசிரமத்தின் மத்தியிற் சிரத்தையோடு தொழிற்படுகிறார்கள். தன்நலமறுப்பான, சேவை, தொண்டு இது. தகுதி, தரம், தேவை, தெளிவு, நோக்கு, இலட்சியம், அமைப்பு, வெளியீடு போன்ற அம்சங்களைப் பேணுவதிற் கண்ணும் கருத்துமாய்த் தொழிற்படுவதாகத் தெரிகிறது. இத்தரமான ஆக்கங்களை வாசகர்கள் மனங் கொண்டு படிக்கிறார்கள்.
வாசகர்களின் தரம் வளர்ந்து உயரவேண்டும். எனின் பேனா பிடிப்டோரும் உயரவேண்டும். படிப்பவனைப் பார்த்து உன்னை உயர்த்திக்கொள் எனக் கேட்பதிலும் பார்க்க வாசகர் வட்டத்தை, தரத்தை உயர்த்தப் பத்திரிகாதர்மமும் படைபாற்றல் உள்ளவர்களும் ஒத்து உழைக்கவேண்டும். இதைக் கருது கோளாக்கி வெளியாகும் சைவநிதி தன்னையும் தரமாக்கி, சமூகத்தையும் உயர்த்தும் கட்டுமானத்தில் தனித்துவம் காக்கிறது. தமிழ் நாட்டிலே தர்மசக்கரம், இராமகிருஷ்ண விஜயம், ஞானபூமி, ஆன்மீகம், பூரீசக்தி போன்ற பல இதழ்கள் வெளியாகின்றன. இலங்கையிற் சிவதொண்டன் என்னும் இதழ் தரமான வெளியீடாகும். நீண்டகாலம் உலகெங்கும் பரவிய ஆத்மஜோதி இன்று இல்லை. ஆதியிலே ஊரெழு சரவணமுத்து ப்புலவர் தமிழகத்திலும், யாழ்ப்பாணத்திலும் சைவ உதயபானு என்னும் திங்கள் வெளியீட்டை தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் (ஏககாலத்தில்) வெளியிட்டார்கள். இந்து சாதனம் என்னும் பத்திரிகையும் இரு மொழிகளிலும் இயங்கிய சமயப் பத்திரிகை. ஐக்கிய இராச்சியத்தில் சைவ உலகம், கலசம் என்பன வெளிவருகின்றன. கனடாவில் சைவநீதி தரமான பத்திரிகையாக வருடத்தில் மூன்றுமுறை வெளியாகிறது. சினிமா, விளையாட்டு, அரசியல் சார்ந்த பத்திரிகைகளை இளந் தலைமுறையினர் விரும்பிப் படிக்கிறார்கள். இவர்களின் வாசிப்புத்திறனைச் சமய, ஒழுக்க, வாழ்வியல், ஆத்மீகத்துறைக்கு ஈர்க்கும் வழியிற் சமய சஞ்சிகைகள் இயங்க வேண்டும்.
முற்ற முழுக்கச் சைவ சமயம் சாசனங்களை மையாக்கி வெளிவரும் சமகாலப் பத்திரிகையான சைவநீதி தன் தரத்தை ஆக்கத்திறனை, சேவையை உலகெங்கும் வாழும் சைவசமயிகளான தமிழ்ச் சமுதாய மத்தியிலும் நிலைநிறுத்த வேண்டும். அதன்
 
 

象
O
G)
O
尊
尊
鬱
O
e
O
D
O
e
鬱
O
)
( சைவதிதி)
தனது கூர்மையான அறிவை வைத்துப் பயத்தை வராமல் காத்துக் கொள்ளலாம். ஆண்டவனை வழி படுவதால் ஆபத்தைக் காத்துக் கொள்ளலாம். பூஜை செய்வதால் சிறந்த வஸ்துக்களைத் தாமதத்தில் பெறலாம். தியானம் செய்வதால் ஆன்மீக பலம் பெறலாம்: எல்லாவற்றுக்கும். மேலாக மெளன. விருதமிருந்தால் නූ බ්‍රහණනසG8th ). ஜெயித்து விடலாம்.
SLL S L S L SLL L L L L L L L L L L L L L L L L L L L L L YL
பொருட்டு அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வேய், ஒல்லாந்து, டென்மார்க்கு முதலிய நாடுகளில் வாசகர் வட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். எழுதுவது போற் செயற்படுத்துவது கடினம். நிர்வாகிகள் சிரமமின்றித் தரணியெங்கும் சிவ நெறியை வலுப்படுத்த வெளிநாடுகளில் வதியும் தமிழர்கள் இப்பணியிற் ஈடுபற்றி நேசக்கரம் நீட்டவேண்டும். இச்சாதனை நிறைவேறப் பொருளாதார வளம் மிகமிக முக்கியமாகும். எனவே சைவசமயச் சமுதாயம் பொருள் உதவி வழங்கி உலகெலாம் சைவநீதி பரவச் சேர்ந்து உழைக்கவும் வேண்டும். கடின உழைப்பே கை கொடுக்கும். ஒன்றை ஆக்கி வெளியிடுவது எவ்வளவு பெறுமானமானதோ, சதமடங்கு வளர்ப்பது, பேணுவது, காப்பது, கைக்கொடுப்பது முக்கியமாகும். சமயத்துறையின் முன்னெடுப்புகள் குறையாமல், குன்றாமல், மேன்மேலும் வளர வகை செய்வது நம் பொறுப்பும், கடமையுமாம், ஈதோர் தெய்வீகப்பணி, தேசியப் பணியென்ற எழுச்சி, நம் சமுதாயத்தின் மறுமலர்ச்சியுமாம். சேரவாரும் செகத்திரே! தருணம், காலம் பொன் போன்றது. எதிர்கால இளந்தளிர்களாம் தலைமுறைகளை எண்ணித் தொழிற்படுவோம். தொண்டின் சிகரமே மனித வாழ்வின் பயன்பாடு.

Page 11
一 L厅岳L直
யாழ்ப்பாணத்தில் யோகர் சுவாமிகளை
அறியாவர் இல்லை. இலங்கையைத் தெரியாதவர்களுக்கும் இவரைத் தெரியாமல் இருக்காது.
அவதார புருஷர்களின் அத்தனை வல்லபமும் வாய்ந்தவர்.
இப்படிப்பட்ட ஞானிகள் ஒருவரைப் பார்த்ததுபேர்ல் இன்னொருவர் இருப்பதில்லை.
பிரபஞ்சம் முழுதும் அவர்கள் மனத்தில் பந்துபோல் சுழன்று கொண்டிருக்கும்.
ஆன்மீக அனுபவங்களை வெளியில் சொல்ல LOTL Tři g56íT. காரணம் நமக்கு அந்த அனுபவங்களைப் புரிந்து கொள்ள முடியாது.
சீன மொழி தெரியாமல் சீனர் ஒருவரிடம் அவர் அனுபவத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?
பிரம்மம் ஆகிய கடவுளுக்குப் “பெரியது” என்றுதான் பொருள். அதாவது பெரியதற்கு எல்லாம் பெரியது. பிரபஞ்சம் என்பது பெரியது இல்லையா? அதையே தனக்குள்ளே அடக்குமளவு பெரியதுதான் பிரம்மம்.
ஜிராவில் போட்ட குலோப்ஜாமூன் உள்ளேயும் ஜிரா இருக்கிறது. அதற்கு வெளியேயும் ஜிரா இருக்கிறது.
பிரம்மமும், ஜீராவைப் போலப் பிரபஞ்சத்தின் உள்ளேயும் வெளியேயும் நிரம்பி இருக்கிறது. அதாவது பிரபஞ்சம் என்பது குலோப்ஜாமூன் மாதிரித்தான்.
அவதார புருஷர்களும் பிரமத்தைப் போல் பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாக இருப்பவர்கள்தான். அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. வெள்ளை வாரணனார். அவர் விபுலானந்தரின் Linff600TTé55ñ.
காரில் பயணம் செய்து யோகர் சுவாமியைப் பார்க்கப் போனார்கள். அவசரமாகப் பேசி முடித்து விட்டுப்புறப்பட எழுந்து வணங்கி விடைகேட்டார்கள்.
 
 

அறிவொளி -
2
'போக முடியும்வரை போகிறதுதானே? என்றார் யோகர் அவர்களுக்கு ஒன்றும் சொல்லமுடியாத சங்கடம். காரில் ஏறி அமர்ந்தார்கள், ஆனால் கார் கிளம்பவில்லை.
பழுது பார்க்கும் வரை யோகரிடம் பேசியிருக்கலாம் எனத் திரும்பி வந்தனர்.
காரில் என்ன கோளாறு என்றே தெரியவில்லை. இரண்டுமணி நேரமாகி விட்டது. விமானத்தைப் பிடிக்க முடியாதே என்று அவர்களுக்குத் தயக்கம். —
யோகர் சிரிதுக் கொண்டே சொன்னார் நீங்கள் காரில் சவாரி செய்யலாமே என்றார்; அவரே வெளியில் வந்தார்.
கார் புறப்படவில்லை என்று ஒட்டுனருக்குக் கலக்கம். ஓடாத காரில் ஏறுவதா என்று பேராசிரியருக்குத் தயக்கம்.
"ஏறுங்கள் - ம் - ஒட்டுங்கள்” என்று யோகர் சிரித்தபடியே சொன்னார். ஒட்டுநர் கார்ச்சாவியைத் திருப்பினார். கார் கிளம்பி விட்டது.
"விமானம் இன்றைக்குத் தாமதமாகத் தான் வரும் போங்கள்’ என்றார் யோகர்.
போகப் போகத்தான் தெரிந்தது. ஒரு காரணமும் இல்லாமலா யோகர், காரை ஓடாமல் செய்தார் என்ற உண்மை - அவர் கூறியபடியே விமானமும் தாமதமாகவே வந்தது. விமானத்தையும் யோகர்தான் தாமதப்படுத்தினாரா? காரை மட்டும்தான் ஓடாமல் செய்தாரா? என்று வியந்து பேசிக் கொண்டனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தத்து வத்துறைப் பெரும் பேராசிரியர் தேவசேனாபதி அவர்கள் யோகர் சுவாமிகளைத் தரிசிக்கப் போயிருந்தார்.
ஒருநாள் இருந்து விட்டு விடைபெற்றுக் கொள்ளும் போது யோகர் மேலும் சில நாள் தங்கிச் செல்லுமாறு கூறினார்.

Page 12
பல்கலைக்கழகத் தத்துவப் பேராசிரியர் மாநாடு வெளிநாட்டில் நடக்கிறது. அதற்குப் போகவேண்டுமென்று பேராசிரியர் விடைகேட்டார்.
"அந்த மாநாடு ஒரு மாதம் தள்ளி வச்சாச்சே” - என்றார் யோகர்
ஓராண்டிற்கு முன்பே எல்லாருடைய ஒப்புதலும் கேட்டு நடத்தப்படும் மாநாடு அதை அவ்வளவு
சீக்கிரத்தில் தள்ளிப்போட மாட்டார்கள் - என்ற தயக்கத்தில் சுவாமிகளிடம் மீண்டும் பேசாமல் இந்தியா வந்து விட்டார்.
வீட்டுக்குப் போனதும் ஒரு தந்தி வருகிறது; "மாநாடு ஒருமாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது" - என்பது தந்தியில் உள்ள செய்தி.
யோகர் தான் நிறுத்தினாரா, அல்லது நின்றுபோனது தந்திக்கு முன்பே யோகருக்குத் தெரிந்தவிட்டதா? என்று பரபரப்பானார். குருநாதர் பேச்சைக் கேட்காமல் வந்தோமே என்று நெடுநாட்கள் பேராசிரியருக்கு மனத்தாக்கம் நீடித்தது.
கதிர்காமத்தில் முருகனுக்குத் திருவிழா. யோகர் சுவாமிகள் வழக்கமாக அங்குதான் போவார். முதுபெரும் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் யோகரைத் தரிசிக்கப் போனபோது, அவர் கதிர்காமம் போகாமல் தங்கியிருந்தது வியப்பாக இருந்தது.
சுவாமி கதிர்காமம் போவது வழக்கம் என்றார்களே. போகவில்லையா?”
"நாமென்ன அங்கே போவது? அவன்தான் மயில் வைச்சிருக்கானே! இங்கே வரட்டுமே" - என்று யோகர் சிரித்துக் கொண்டே பேசினார்.
பேராசிரியர் சிலநாள் கழித்துக் கொழும்புக்குப் போனார். செய்தித்துறை இயக்குநரிடம் பேராசிரியர் பேசிக் கொண்டிருந்தார்.
"யோகர் சாமி கதிர்காமத்தில் பேசியதைப் படமாக்கியிருக்கிறேன் பாரும்” என்று பதினாறு எம். எம். ஒலியுடன் கூடிய சினிமாப்படத்தைப் போட்டுக் காட்டினார்.
பேராசிரியருக்குப் பெரிய வியப்பு 'இந்த ஆண்டு எடுத்த படமா இது?’ என்றார்.
ஒரு வாரத்துக்கு முன்பு நானே எடுத்த படமாக்கும்’ என்று இயக்குனர் உறுதியாகச் சாதித்துப் போசினார்.
டு
 
 

இதேநேரத்தில் யோகருடன் Lਲੰ கொண்டிருந்தேன். கரிர்காமம் போகவில்லை என்றார்” - என்று அ. ச. ஞா. அதிர்ந்து போய்க் கூறினார்.
மீண்டும் காரில் போய் யோகரைப் பார்த்தார். "நீங்கள் கதிர்காமத்தில் பேசியதைப் படமாகப் பார்த்தேன்’ என்றார் பேராசிரியர்.
“யார் இல்லையென்றது. சென்ற முறை என்னைப் படிம்பிடித்ததைத்தான் நீ பார்த்தாய்' என்று குறும்பாகச் சிரித்தார் யோகர்
ஒரே நேரத்தில் யோகர் அங்கும் இங்கு என்று இரண்டிடத்திலும் இருந்திருக்கிறார்.
இது அவதார புருஷர்களின் சித்து விளையாட்டு. கடவுளால் எல்லா இடத்திலும் வெளிப்பட முடியும் என்பதை இந்த யோகர் சித்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் சுவை மிகுந்த திராட்சை
அதை ஓர் அன்பர் யோகருக்கு அன்பளிப்பாகத் தந்து போனார்.
அ. ச. ஞா முதலியோர் அங்கிருந்தனர். யோகர் ஒரிரு பழங்களைச் சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுக்கு எல்லாப் பழமும் தருவது வழக்கம்.
யோகர் வழக்கத்துக்கு மாறாக இரு நூறு பழத்துக்கும் மேலாகத் தானே சுவைத்துச் சுவைத்துத் தின்றுவிட்டார்.
அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒவ்வொரு பழம் மட்டுமே மிஞ்சியது.
மிஞ்சியதை யாவருக்கும் யோகர் கொடுத்தார். ஆசையோடு வாங்கி வாயில் போட்டவர்கள் முகமெல்லாம், துண்டுதுண்டாக உடைந்த கண்ணாடி போல் புளிச் சுவையில் மாறியது.
எலுமிச்சம்பழத்தைப் போன்றதைச் சுவாமி சுவைத்துச் சுவைத்து எப்படிச் சாப்பிட்டார் என்று வியந்து போயினர்.
தான் மட்டும் சாப்பிட்டார். அன்பர் ஒருவர் கொடுத்ததால் அருவருக்காமல் தாமே அதைச் சுவைத்துச் சாப்பிட்டார் என்ற சித்துக்கள் பிறகுதான் விளங்கின.
தன் அன்பர்களின் நலனுக்காக மட்டுமே வாழும் வாழ்வே அவர்கள் வாழ்வு.
இப்படிப்பட்ட அருளாளர்கள் நம் ஒழுங்குகளுக்கும் உலக ஒழுங்குகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் ஆவர்.
நன்றி ஆன்மீகம்

Page 13
ஒரு ஞான சூரிய
- சைவப் புலவர்
ஓயாது உழைக்கும் சூரியனுக்கு ஆன தைப்பொங்கல் விழா, தமிழ் மக்கள் தம் நன்றிக் கடனைச் சூரியனுக்குச் செலுத்தும் நன்னாள். கடந்த எண்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஞான ஒளி வீசும் சைவப்புலவர் வித்துவான் வ. செல்லையா அவர்கள் அகில இலங்கைச் சைவப் புலவர் சங்க ஸ்தாபகத் தலைவர். இவர் இளவலை மெய்கண்டான் மகா வித்தியாலய இளைப்பாறிய அதிபர். அவர்களுக்கு இலங்கை மெய்கண்டார் ஆதீனமும் சைவ சமய அறிஞர்களும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஆயிரம்பிறை கண்ட விழா இதுவாகும். இவர் அறிவின் சுடராய், அன்பின் இருப்பிடமாய், சிவஞான ஒளிப் பிழம்பாய்த் தமிழ் கூறும் நல்லுலகிற் சைவப் பெரியாராய், இந்தியா, மலேசியா இலங்கை முதலிய நாடுகளில் நடந்த சைவ சமய விழாக்களில் தலைமை வகித்தும் சொற்பெருக்காற்றியும். சைவ
ஆயிரம் பிறை கண்ட அண்ணல்
5"LGoGTš; 5GS'ilt
சொல்லைச் சித்திர மாக்கிச் சபைகளிற்
சுவைபடும்படி சொற்பொழிவாற்றிடும் நல்லை நாவல ரின்சுவ டொற்றியே &ল্প நாளுஞ் செந்தமிளோடுசை வத்தையுந் தில்லை யானரு ளாலே வளர்த்தலாற் சேர வாயிரம் நற்பிறை கண்டநஞ் செல்லை யாவெனுஞ் செம்மல் திடமுடன் சிறந்து வாழ்கென வாழ்த்துதும் யாருமே.
புராணவித்தகர் மு. தியாகராசா.
 
 

பன் நம் மத்தியில்
சி. திருநாவுக்கரசு -
சித்தாந்த மகாநாடுகளை அமைத்து நடத்திச் சைவ சமய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எழச் செய்தும் கடந்த அரை நூற்றாண்டு காலமாகப் பணிபுரிந்து வருகிறார்.
நேர்மையான பரீட்சைகள் சைவப்புலவர்களை உருவாக்கிச் சைவப்புலவர் சங்கத்தினைத் தொடர்ந்து நிலைக்கச் செய்யும் இவர்களின் சேவை மிகவும் மகத்தானது; சிவபுண்ணியம் மிக்கது. தமிழும் சைவமும் வளர்த்த ஆறுமுகநாவலர் அவர்களின் அடிச்சுவடுகளில் வேரூன்றி நிற்பது.
இவர் சித்திரமேழிப்பதி ஞானவைரவப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு அனுஷ்டானம், சீலம், நோன்பு, தவம், கல்வி, சான்றாண்மை முதலிய நற்குணப்பண்புகளினூடாகச் சைவ உலகிற்கு வழிபாட்டியாக எழுந்து நிமிர்ந்து நிற்கின்றார் பழகும்போது மலர் போன்றவர். கொள்கையில் தளராது நிமிர்ந்து நின்று உழைப்பதில் மலைபோன்றவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் அயில்வேல் போன்றவர். எடுத்த பொருளை விளக்குவதில் கதிர்ச் சுடர் போன்றவர். விளக்கம் பெறுபவருக்கு ஒர் ஞானக்களஞ்சியம். பல வளம் நிறைந்த கீரிமலையின் அயலில் சித்திரமேழி எனும் இடத்தில் ஞான ஊற்றாக ஊற்றெடுத்து யாழ்ப்பாணத்தினூடாகப் பாய்ந்து ஈழம் முதல் இமயம் வரை ஞானதீர்த்தமாகத் தமிழும் சைவமும் வாழும் உலகெங்கும், பாய்ந்து சைவசித்தாந்த ஞான சாகரத்தில் சங்ககமாகும் கங்காநதி இவர். இவரின் எண்பது ஆண்டுப் பூர்த்தி விழா சைவ உலகின் ஓர் பூரண விழாவாகும்.
资女★

Page 14
கயிலைமாமுனிவர் தவத்திரு சாந் பேரூராதின
திருக்குறள் "தமிழ்மறை” என்று போற்றக்கூடிய சிறப்பிற்குரியது. "மேல்வழி உணர்த்திக் கீழ்மை விலக்கும் நல்வேதம்’ என்று கூறினார் முருகதாச அடிகள். அத்தகைய திருக்குறள் நம் வாழ்வோடு இயைந்தது. உயிர்நலம் பெறவும், உடல் நலம் பெறவும், உளம் நலம் பெறவும் அமைகின்ற பல கருத்துக்களை வழங்குகின்ற பெருமையுடையது. வாழ்வியல் முறைகளையும் மனிதன் மனிதனாக, மாமனிதனாக வாழ்ந்து தெய்வத்தோடு ஒப்ப விளங்குகின்ற திறமையையும், “வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” வாய்மையையும் நமக்குத் தருவதற்கு உரிய நூலாக விளங்குகின்றது.
குறள்நெறியில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் அடங்கி இருப்பதைக் காண முடியும். காலம் கடந்து நிற்கின்ற பெருமைக்குரியது நம் பொதுமறை. இத்தகைய சிறப்பிற்குரிய குறள்நெறியை மக்கள் ஆய்ந்து அறிந்து அதன் வழி நிற்பது மிகவும் இன்றியமையாதது. பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவைப் பெற்றவன் மனிதன். தான் அறிந்து கொள்ள வேண்டியவற்றைப் புலன்களாலும், பொறிகளாலும் அறிந்து அவற்றை நுகர்வுடையதாக மாற்றுகின்ற பெருமைக்குரியவன்.
திருக்குறள், உலகியல் நெறியையும், அருளியல் நெறியையும் எடுத்துக் கூறுகின்ற வகையில் அமைந்துள்ளது. தம் நூலில் கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் முதலில், 'அகர முதல எழுத்தெல்லாம்” என்கின்றார். 'அ' என்கின்ற எழுத்து வாய் அங்காத்தலின் போது வெளியே வருகின்ற சிறப்பை உடையது. அதுபோலவே உலகத் தோற்றம் இறைவனை முதன்மையாகக் கொண்டது. எழுத்தை அறிவதன் மூலம் அறிவைப் பெறுகின்றோம். எழுத்து அறிந்து வாழ்கின்ற வாழ்க்கை தாழ்வினை நீக்கி உயர்வினைப் பெற வழிவகுக்கும்.
அறிவு பற்றிக் கூறும்போது, அறிவின் சிறப்பினைக் கூற வந்த வள்ளுவனார்,'மனத்துக்கண்
 
 

தலிங்க இராமசாமி அடிகளார் ம் பேரூர்
மாசிலன் ஆதல்” என்று தூய அறிவின் திறத்தை அழகாகக் காட்டுகின்றார். மேலும் அறிவு உருவாவதற்கு அறிவை வளமாக்குவதற்கு, அறிவைத் திறம்படுத்துவதற்குத் தேவையானதாக இருப்பது கல்வி கல்வியின் சிறப்பைக் கூறும்போது, அறிவு என்பதனையும் பற்றிக் கூறிவிட்டு, பின் அந்த அறிவு ஒருவனுக்கு புல்லறிவாகவோ, காரறிவாகவோ மாறாமல் பேரறிவாக, மெய்யறிவாகக் திகழ்கின்ற வகையில் விளங்குகின்ற ஒரு கல்வியைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது கடவுள் சிந்தனை என்று கூறுகின்றார்.
பொதுமறையின் இரண்டாம் குறளில் கூறும் போது, “கற்றதனால் ஆய பயன் என்கொல்"? என்று ஒரு கேள்வியைக் கேட்டு, கற்கின்றீர்கள், கற்கின்றதனால் பயன் என்ன என்று கேட்டால் வாலறிவன் நற்றாளைத் தொழ வேண்டும். எனவே அறிவின் உருவாய் விளங்கும் இறைவனின் நற்றாள்களைத் தொழ வேண்டும், என்கின்றார். திருமுறைகள் வணங்கும் முறை பற்றிக் கூறும் போது "தொழுது தூ மலர் தூவித் தொழுது’ என்று சிறப்பாகச் சொல்லும். அப்படிப்பட்ட தொழுதலைச் செய்கின்ற வாழ்க்கை உயர்வான வாழ்க்கை. எனவே கல்வியினுடைய பயன் இறைவனுடைய திருவடிகளைத் தொழுவதுதான். இவ்வாறு வணங்குவதால் உளம் செம்மையுறும். செம்மையுடைய உள்ளத்தில் இறைவன் எழுந்தருளுவான்.
இறைவனைப் புறத்தே காண்கின்ற காட்சியாக வைத்துக் கொள்ளுதல் மட்டுமல்லாது, அகத்தே நிலைபெறச் செய்கின்ற காட்சியாக அமைத்துக் கொள்ளுதல் தேவை. நெஞ்சம் ஒரு சிறந்த மென்மை கொண்ட மலராக மலர வேண்டும். மலர்ச்சிக்கு உரியதாக அறிவு துணை புரிய வேண்டும். நெஞ்சமாகிய மலரிடத்தே இறைவன் எழுந்தருளுவான். இறைவனின் திருவடியை அடைந்த அடியார்களின் உள்ளங்களில் இமைப்பொழுதும்

Page 15
நீங்காமல் இருக்கிறான் என்பதைப் பொய்யாமொழியார் அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்றார். எனவே இதைத்தான் நமது திருமுறைகள் 'நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்' என்று குறிப்பிடுகின்றன.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" இந்த வைர அடிகளில் 'மலர்மிசை ஏகினான்’ என்பது இங்கு நெஞ்சத்தைக் குறிப்பதாகப்பொருள்படும்.
இங்கு 'மாணடி’ என்று குறிப்பிடுவதன் காரணம் இறைவனுடைய திருவடிகளை வணங்க நினைப்பவர்கள் உயர்நலத்தைப் பெறுகின்றார்கள். மதிநலம் உடையவராக வாழ்கின்ற வாழ்க்கையைப் பெறுவார்கள். ஆதலினால் அப்படி மதிநலம் நிறைந்த வாழ்க்கையைப் பெறுவதற்கு உயரிய திருவடியை வணங்க வேண்டும் என்பதனை உணர்த்த “மாணடி’ என்று குறிப்பிட்டார். எனவே நெஞ்சமாகிய தாமரையிலே வீற்றிருந்தால் நாம் நற்செயல்களையும், நற்குணங்களையும் உடையவராக வாழ்வதற்கு அந்தத்
. . . . . . . . . . . . . . . .
நினைவிற் (
讓_
வைகாசி 01 14:05.2000 | ஞாயிறு DTA
(ቧቃ
02 15.05.2000 திங்கள் Lŷg C 04| 17.05.2000 புதன் J6 08. 21.04.2000 ஞாயிறு திரு
குரு
09 22.05.2000 திங்கள் a#AJé 15 28.05.2000 | ஞாயிறு அக் 16 29.05.2000 திங்கள் 6ᏤᏰᏂᏁ 18 31.05.2000 | புதன் பிரே
19| 01.06.2000 வியாழன் கார் 20| 02.06.2000 || G\GlőTGrf 9Jss
23 05.06.2000 திங்கள் dåbs 24 06.06.2000 | செவ்வாய் நமி 25 07.06.2000 | புதன் (as 30 12.06.2000 திங்கள் ᎧᎫᏰᏂᏁᎢ 321 14.06.2000 | புதன் பிரே
L
 
 

y
திருவடிகள் துணைபுரியும் என்பதினால் 'மாணடி என்று கூறுகிறார் என்று கொள்ளலாம்.
"விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கை உயர்ந்தது' என்பதற்குச் சமய நூல்கள் பலவாகச் சிறப்புக்களை எடுத்துச் சொல்லும் சாந்தலிங்கரும் கூறும் போது, 'சந்தனம் பூசினாலும் அல்லது அழுக்குகளைப் பூசினாலும் இரண்டிற்கும் ஒரே தன்மையுடையதாக வாழ்வது என்பார். அத்தகைய வாழ்க்கை சமநிலை என்று பேசப்படும் "செத்தினும் போழினும் செஞ்சாந்து எறியிலும் வைத்து ஓடாத மனநிலை' என்றும் சான்றோர் குறிப்பிடுவார். சான்றோர் அப்படி வாழ்கின்ற வாழ்க்கையைப் பெறுவது இறைவனது திருவடியை வணங்குவதன் மூலமாக எய்தும், என்று வாழ்ந்து காட்டி நமக்குச் சான்றாக்கிச் சென்றுள்ளனர்.
மனிதன் அறிவுடையவனாய், நெஞ்சத்தால் நெகிழ்வுடையவனாய் வாழ்கின்ற தன்மையைப் பெறுவதற்கு இறைவனுடைய"மாணடி சேர்தல்” என்று கூறினார். இறைவனின் திருவடியோடு நம் வாழ்வையும் இணைத்துக் கொள்வது என்பது இதன் பொருள்.
கொள்வதற்கு
நப்பிறப்பு விஷ்ணுபதி புண்ணியகாலம் காலை 512 ல் பகல் 1.36 வரை, ஏகாதாசி விரதம் தோஷ விரதம் னை விரதம், வைகாசி விசாகம். ஞானசம்பந்தர் குருபூசை, திருநீலகண்ட யாழ்பாணர் பூசை, முருகர் குருபூசை, திருநீலநக்கர் குருபூசை கடஹர சதுர்த்தி விரதம். கினி நாள் முடிவு. தசி விரதம். தாஷ விரதம், கழற்சிங்கர் குருபூசை. த்திகை விரதம். வாசை விரதம். ர்த்தி விரதம் நந்தியடிகள் குருபூசை, சேக்கிழார் குருபூசை. மாசிமாறர் குருபூசை, ஷஷ்டி விரதம். தசி விரதம் தாஷ விரதம், ஷடசிதி புண்ணியகாலம், இரவு126 ல் 5.50 வரை.

Page 16
விக்கிரம சித்திரை
சிவ. சண்முக
மலைகள் மலிந்தது மலைநாடு, மல்ைநாடு பலவளங்கள் நிரம்பப் பெற்றதால் என்றும் அலைவு படாதிருந்தது. மலைநாட்டில் கடல்படு திரவியமும்
கணக்கில் அடங்காதிருந்து. நிலம் தரு செழுவளத்தால் நிரம்பப் பெற்றது. மலைபடு செல்வம் மலியப்பெற்றது. மலைநாடு பரசுராமன்
வருணனிடத்தில் பெற்றநாடு கொன்றை மாலை சூடிய சடாமுடியினர் சிவபெருமான். அப்பரம் பொருளின் திருவடிகளை வழிபாடு செய்த முனிவன் ராமன். அவன் சிவபிரானிடத்தில் பரசு என்னும் படைக்கலம் பெற்றான். அதனால் பரசுடைய ராமன் பரசுராமன் என்று அழைக்கப்பட்டான்.
கேரம் (வடமொழி) என்பது தேங்காய், காலப் போக்கில் சேரம் என மருவியது. சேர மிகுந்த நாடு சேரநாடு. சேரநாட்டை ஆண்டவன் சேரன் எனப்பட்டான். சேரநாடு மலைப் பாங்கான பிரதேசம். ஆகவே இது மலைநாடெனவும் அழைக்கப் பெற்றது. சேரர்களுடைய திருநாட்டு ஊர்களில் சிறந்த மூதூர் செங்குன்றுார். திருச்செங்குன்றுாரில் கடல், ஒளிரும் முத்துக்களை அள்ளிச் சொரியும். வயலில் விளையும் கரும்பில் முத்து விளையும். மூங்கில்கள் குளிர்ந்த முத்துக்களை முன்சொரியும். யானைத் தந்தங்களில் முத்துக்கள் உருவாகும். அம்முத்துக்களைப் பெண்கள் வகை தெரிந்து கோப்பார்கள். பெண்களுடைய சிரிப்புக்கள் அந்த முத்துக்களை அவர்களுடைய பல்வரிசையோ என்று எண்ண வைக்கும்.
வேதம் மெய்ப்பொருளை ஆராயும். வேதம் வகுத்த நெறியில் ஒழுகும் தூய குடிமைத் தலைநிற்கும் குலம் இரண்டு. ஒன்று மண்மகார், அன்னங்கள் பயிலும் உழவு தொழிலில் வளம் காண்பவர்கள். மற்றது அந்தணர்கள், ஆறு தொழில் ஆட்சியால் அருள்வளம் காண்பவர்கள்.
அப்பெருமை வாய்ந்த பதியில் எம்பிரானார் விறன்மிண்டர் அவதரித்தார். பற்றற்றான் பாதங்களைப் பற்றிப் பாரில் விடாப் பற்றுக்களை எல்லாம் பாற்றுவார். மெய்யடியார்களிடத்தில் மேலான அன்புடையவர் விறன்மிண்டர் நதியும் மதியும் வதியும் சடைப் புனிதனார் பதிகள் எங்கும் கும்பிட விரும்பினார். விறன்மிண்டர் செல்லும் திருத் தலங்களில் திருத்தொண்டர் கூட்டத்தில் எதிராக முன் பணிவார். பின்னர் சிவபிரானைத் தொழும் அருள் பெறுவார்.
 
 
 

வடிவேல்
விறன்மிண்டர் பொன்கொழிக்கும் அருவிகள் சூழ்ந்த மலைநாட்டினின்றும் புறப்பட்டார். கடல் சூழ் உலகு எங்கும் சென்றார். அங்கு எல்லாம் இறைவணக்கம் அடியார் வணக்கம் ஆகிய ஒழுகலாற்றை நிலை நிறுத்தினார்.
விறன்மிண்டர், சிவபெருமான் அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆளும் திருவாரூரைப் பணிந்தார்.
திருவருள் விளங்கும் தேவாசிரிய மண்டபத்தில் திருக்கூட்டத்தவர்கள் சிறந்து இனிது இருந்தார்கள். வன்றொண்டர் பொலிந்திருக்கும் அடியார்களைப் புறகிட்டு ஒதுங்கிச் சென்றார். அது கண்டு விறன்மிண்டர் சினந்தார்.
அன்பரோடு மருவாமல் அகன்று செல்லும் வன்றொண்டர் புறகு'என்று அருளினார்.
"சிவனாரடியார் திருக்கூட்டம் பேனாதேகும் ஊரனுக்கும் பிரானாந் தன்மைப் பிறைகுழப் பூனாரரவம் புனைந்தார்க்கும் புறகென்றுரைப்ப மற்றவர்பாற் கோணாவருளைப் பெற்றார்’ விறன்மிண்டர்.
விறன்மிண்டரின் உள்ளிட்டை உணர்ந்த நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகை பாடினார். உலகம் உய்ந்தது. நாம் உய்வடைந்தோம். சைவமாகிய நன்னெறி உய்வு பெற்றது. சிறந்த ஒழுக்கம் நிலை நின்றது. வேதங்கள் ஒலமிட்டும் உணர்தற்கு அரியவர் சிவபிரான். 'நாம் அடியார்க்குப் புறம்பு அல்ல. உடனாயுள்ளோம்" என்று அருளிச் செய்தாராயின் - ஆலகால நஞ்சை அமுதாக அருந்தி அருளிய அரனார் அடியார் பெருமை அறிந்தவர் ஆர்?
தெய்வத் தமிழில் சேக்கிழார் பெருமான் உய்யப் பாடுகின்றார்: "ஞால முய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீலமுப்பத்திருத்தொண்டத்தொகைமுன்பாடச்செழுமறைகள் ஓலமிடவுமுணர்வரியாரடியாருடனாமுள தென்றால் ஆல மமுது செய்தபிரானடியார் பெருமை யறிந்தார்
திருத் தொண்டத்தொகைத் திருப்பதிகம் கிடைக்கப்பெற்றதனால் சைவப்பேருலகம்பெருவிளக்கம் பெற்றது. அப்பேற்றிற்குக் காரணமான விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர் - மேலும் பல காலம் இவ்வுலகத்தில் மேலான சைவப் பெரு நெறிகளைப் பாதுகாத்தார். திருத்தொண்டு செய்யும் பேறுபெற்றார்.
சிவபெருமானுடைய திருவடி நீழலின் கீழ் உயர்ந்த கணங்களுக்கு நாயகத் தன்மை பெற்றார் - விறன்மிண்ட நாயனார்.

Page 17
- இயற்றமிழ் பண்
ன்ெபது திருஞானசம்பந்தப்பிள்ளையார்
அருளிய திருவெழுகூற்திருக்கையிலே அமைந்த திருவாக்கு அருளாளரான அறிஞர்கள் இதற்குத் தரும் விளக்கம் பலவாறுள.
சிறியேன் சிற்றறிவுக்கு எய்தியதொரு கருத்தையும் கூறலாம் என எண்ணுகிறேன். இருமை என்பது இருவேறு தன்மைகள் - பண்பு அவையாவன உயிருக்குள்ள இயல்பும் உடலுக்குள்ள இயல்பும். அவ்வியல்புளிரண்டும் இரு வேறு துருவங்கள் போன்றன. ஆயினும் அவ்விரண்டும் இணைந்து ஒன்றி ஒருமைபோலவே ஒரே தன்மையாயுள்ளது புறக்காட்சிக்குத் தோன்றுதல் அற்புதமாகவேயுள்ளது.
உயிர் அநாதி, நித்தியம். சித்து அறிவுள்ளது, ஊன் சம்பந்தமான அழுக்கில்லாதது, ஆனால் உடம்போ தோன்றிமறையும் அநித்தியமானது. அறிவில்லாத சடமானது, ஊன்எனும் அழுக்குடையது. விபரித்துச் சொல்லும் போது இன்னும் பற்பல முரண்பட்டவேறுபாடுகளுள்ளவை.
ஆயினும் இரண்டும் இணைந்து ஒமையாகத் தோன்றிச் சிலகாலம் வாழ்கின்றன; பின்வேறுவேறாகி மறைந்து விடுகின்றன. எனினும் உடம்பானது சடமானதன் ஆக்கத்திற்கு மூலக் கூறாகிய மாயையின் பேதங்களாகிய பஞ்சபூதங்களோடு கரைந்து கலந்து அவையேயாகின்றது. உருவிலதாகிய உயிரோ உடலைவிட்டு உயிர்க்
குயிராகிய முதல்வனது அருளோடு தன்னியல்புக்கேற்றதொரு நிலையையடைந்து நித்தியமாய் நிற்கிறது.
அந்தநிலையும் சிவனருளும் சீவனும் என்ற இரண்டின் இருமையின் ஒருமை நிலையே. சிவனருளும் சிவனும் என்றுமே பிரிவின்றிக் கலந்து நிற்கப்பெறினும் முத்திநிலையிலுள்ள கலப்பு
| gn en, ro,
 
 
 

டு மையும் ஒருமையின்
மையும்’
ாடிதர் ச. சுப்பிரமணியம்
மெய்யுணர்விலே புலப்படலாம். பெத்த நிலையாகிய பிறவி வழிநிற்கும் உயிர்களால் அதுதெளிய உணரப்படுதலில்லை. உடம்பு உயிருடன் கூடி நிற்பதும், உயிர்பிரியச் செயலற்றுக் கிடப்பதும் பிறரெவரும் அறியலாம். ஆயினும் அவ்வவ்வுடம்போ உயிரோ தத்தம் சேர்வும் பிரிவும் சாதாரணமாக அறிய முடிவதன்று.
இவ்வாறே இருமையான இவற்றை ஒன்றிணைத்து ஒருமையாகச் செய்து அந்த ஒருமையில் நின்று அவை ஆடலைப் பார்பவனும், பன்மையான இவ்வுயிர்களின் வேறாகத் தான் என்றுமே g(560) LOLUT 35 உள்ளவனும், அவ்வுயிர்களுள்ளெல்லாம் உயிராய் உள்ளேயிருந்து இயக்குகின்றவனும், இவ்வாறு ஊனோடு கூடிநின்றாடும் தொல்லையிருந்து பக்குவமான உயிர்களை மீட்டெடுத்து ஞானநடம் புரிவதற்காக ஆடலைப் பார்த்திருப்பவனும் பசுபதியாகிய பரமன் ஒருவனே. அவனுடையதன்மை ஒருமையின் பெருமை எனப்பட்டது.
இறைமைக்குணம் எனப்படும் எண் குணமுள்ளவனாய் ஒப்பாரும், இணையாரும், மிக்காரும் இலனாகி ஏகனாகியிருக்கும் இறைவன், தன் பேரருள் நிலையால் உயிர்களுக்கு உதவும் பொருட்டு வேறாயும் ஒன்றாயும் உடனாயும் நின்று என்றும் உபகரித்து வருகின்றான்.
அந்த அருட்பெருநிலை அவையே தானாய்" என்ற இருசொற்களாலே சிவஞானபோதச் சூத்திரம் காட்டும். அவையே யாவும், தானேயாயும், அவையும் தானுமாயும் என மூன்று கூறாகிநின்றென்பது பொருள். விசித்திரமான உலகம்யாவுமே உள்ளது வேறெதுவும் இல்லையெனும்படி அவற்றுள் மறைந்தும் நிற்கிறான்; உலகத்தில் எதிலும் தோய்வின்றித்தான் தனியே தன்மயமாயிருக்கிறான். உலகில் தோன்றும் விகாரங்கள் எதனாலும் தான் மாற்றமுறாது தூயனாம்

Page 18
நிலை என்பதும் பொருள்; வினை செய்பவனும் செய்வினையும் சேர்பயனும், சேர்ப்பவனும் என எண்ணப்படும் நான்கு நிலைகளிலும் தான் ஒருவனே உயிர்தோறும் உடனாக நின்று உபகரிக்கிறான் என்பது முடிபொருள்.
இந்த நிலைமைகளைப் பலவேறு
சமயசாஸ்திரகாரர்கள் அத்துவைதம் அத்துவிதம் எனும் சொற்களாலே குறிப்பிட்டு அன்மை இன்மை LOGO g5 606ID) 6T60 மாறுபட்ட பொருள் கூறிவிளக்கந்தருவர். சைவசித்தாந்திகள் அன்மை எனும் மாறுபட்டபொருள் கூறி விளக்கம் தருவர். சைவசித்தாந்திகள் அன்மை எனும் பொருளே கொள்வர்.
உடம்போடு கூடிநிற்கும் உயிர் உடம்பையே
தானென்று அபிமானம் கொள்வதைக் காணலாம். மேலும் உடம்பின் ஒவ்வொரு உறுப்பிலும் தான் கலந்து நின்று உணர்கிறது. ஏவி இயக்குகிறது. உடலுறுப்பில் ஒரு பாகம் துண்டிக்கப்பட்டு வேறாகி விடின் அதற்கும் (வேறான உறுப்புக்கும்) உயிருக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடுகிறது. இவ்வகையில் உடம்பாயும், உடம்போடு உடனாயும், உடம்பின்வேறாயும் உயிருள்ளதை நாம் உணரமுடிகிறது.
அவ்வாறே இறைவனும் உலகுயிர்
அனைத்திலும் அவையேயாக நின்றும், உடன்நின்று இயற்றியும், அவற்றின்வேறாய் நின்றும் உபசரிக்கும் தன்மை நாம் சிந்தித்து உணர வேண்டியதாகும்.
10.
சைவநெறி வினாக்களு
இறைவன் ஒருவனே எனும் கோட்பாடு. பசு என்றால் ஆன்மா, பதி என்பது தலைவன், இறைவன் சத்து (உள்பொருள்) ஆகவும், சித்து (இன்பமான பொருள்) ஆகவும் விளங்குகின்றா அருவம், அருவுருவம், உருவம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அ பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், ச: "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமா என்றார். இறைவனை மனதில் நினைத்தற்காகவும், மன திருவுருவம் தாங்குகின்ற உருவ நிலையில் வழி சிவப்பரம் பொருளாகவே காணும் சிவநெறி தனித்துவம் ஆகும். தன்வயத்தராதல், தூய உடம்பினராதல், இ இயல்பாகவே பாசங்களின்றும் நீங்குதல், ே வரம்பில் இன்பமுடைமை.
: (4) = @ោះ
ass66 un arri, a
 

ረ?
இவ்வாறே உலகிலுள்ள 6T606) TGlo இருவேறியல்பினவாகவே அமைந்தும் ஒன்றாக இணைந்து ஒருமை பெற்றும், பெருமையுள்ள ஒருமையான இறைவனால் இணைக்கப்பட்டும் வேறுபிரிக்கப்பட்டும், தன்னுடன் பிரிவின்றி ஐக்கியப்படுத்தப்பட்டும் இயக்கமுறுவதே இயல்பாக உள்ளது.
இரவு பகல், நன்மை தீமை, நித்து அசித்து, ஆண்பெண்எல்லாமே இருமையாவதும் உலகில் ஏதோ ஒருவகையில் ஒருமையாவதும், மீளவும் அவை பிரிவதும் அந்தத்தில் அனைத்துக்கும் மூலமான ஒருமையோடு ஒருமையாயே விடுவதுமே இயற்கை நியதியாக நிலவுகின்றது.
கடல் நீர் தானே முகிலாய் மழையாய் ஆறுகளாய் வெவ்வேறு பெயரோடு பூமியில் வந்துவெவ்வேறாயும் ஒன்றிணைந்தும் பிரிந்தும் சென்று மீண்டும் கடல் நீராகவே ஒருமையின் பெருமையோடு ஒருமையாய் வேறுபட்ட பெயர்களும் நீங்கிக் குற்றம் குறைகளும் கழிந்து எல்லாமே சமுத்திரதீர்த்தம் எனும் புனிதமான பெயரோடு பொலிகின்றன.
சைவநீதியோடு நாமும் சங்கமமாகும் போது வேற்றுமை விலகி யாவரும் தூயவராய்ச் சிவமயமாதலே தெளிவாகும்.
நக்கான விடைகள்
ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன். து.(அறிவுடைய பொருள்) ஆகவும், ஆனந்தம் 6T.
ருளல். நாசிவன். கி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்"
ம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் படுகின்றோம். ஆழமாக வேரூன்றி இருப்பதே சைவமரபின்
யற்கை உணர்வினராதல் முற்றும் உணர்தல், பரருள் உடைமை முடிவில் ஆற்றலுடைமை,
| go. Garfurrun urri, sig norr.

Page 19
GLTUT (a
- கிருபான
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
- திருக்குறள் - 294
ஒருவன் தன் மனதறியப் பொய்கூறாது வாழுவானாயின், அவன் உலக மக்கள் உள்ளத்தில் எல்லாம் இருப்பவனாவான்.
கனியமுதனைய இக்கருத்தை விளக்க வந்த் இனிய கதை இது.
பெண்ணே! நமக்கு ஆண்டவன் கருணையால் குழந்தை பிறந்தது. தங்க விக்ரகம் போன்ற நல்ல கட்டழகுடைய மகன் பரதனுக்கு ஆண்டு ஒன்றேயாகின்றது. அவனுடைய முகத்தில் அறிவுஒளி வீசுகின்றது; அவனை வளர்க்கும் பாக்கியம் நான் செய்யவில்லை. உன்னையும் அவனையும் அநாதைகளாக விட்டுவிட்டு நான் போகின்றேன். நீயோ ஒன்றும் அறியாத பேதை உனக்கு அயல்வீடு தெரியாது. குழந்தையையும் உன்னையும் நமது குல தெய்வமாகிய குமாரக் கடவுள் காப்பாற்றுவார். நான் அருமையிலும் அருமையாகச் சேகரித்து வைத்தது இது; இதில் ஐம்பது பொற்காசுகள் இருக்கின்றன. இந்தா இதைப் பெற்றுக் கொள்; இதை உன் மகன் வயதுக்கு வந்தவுடன் அவனிடம் கொடு; இதைக் கொண்டு அவன் முன்னுக்கு வரட்டும்; அப்பா தனக்கு ஒன்றும் வைக்கவில்லை என்ற நிந்தனைக்கு நான் ஆளாகாமலிருக்க வேண்டும். என் கண்ணே! அழாதே நீஅழுதால் என் உயிர் சாந்தமாகப் பிரியாது. எல்லாருக்கும் இந்த முடிவு ஒருநாள் வந்தேதான் தீரும். கவலைப்படாதே வினையினால் வந்த உடம்பு, வினை தீர்ந்தால் விழுந்து விடும். ைேமவருங்கண்டத்தர் மைந்தகந்தாவென்றுவாழ்த்துமிந்தக் கைவருந் தொண்டன்றிமற்றறியேன்கற்ற கல்வியும்போய்ப் பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும் ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் அடைக்கலமே'
 
 

சால்லாதே
ந்தவாரியார்
என்று கண்களை மூடினார் மயில்வாகனம் பிள்ளை. அவருடைய மூச்ச ஒடுங்கியது.
கண்ணம்மாள் கணவன்மேல் வீழ்ந்து, "என் செல்வமே என் ராஜாவே என் தெய்வமே' என்று புலம்பினாள். தாவிப் படரக் கொழு கொம்பில்லாத தனிக் கொடிபோல் தளர்ந்தானள். நாள் செல்லச் செல்ல ஒருவாறு தேறினாள். பரதனுடைய மழலைச்சொல் அவளுடைய மனப்புண்ணை ஆற்றியது. அவன் செய்யும் இளமைக் குறும்புகளால் சிறிது மகிழ்ச்சியுற்றாள்.
பரதனுக்கு ஆண்டு ஐந்து தாய் கண்ணம்மாள் படாத பாடுபட்டு அவனைக் காப்பாற்றி வந்தாள். மகனைப் பள்ளிக்கு அனுப்பினாள். பரதன் ஒழுங்காகப் பள்ளிக் கூடம் போவான். மற்றப் பிள்ளைகளோடு சேரமாட்டான் பள்ளிக்கூடம் விட்டால் நேரே வீட்டிற்கு வருவான். நல்ல பிள்ளையென்று எல்லாரும் கூறுமாறு நடந்து வந்தான். ஒருநாள் பரதன் தன் தாயிடம் வந்து, "அம்மா! அடுத்த வீட்டில் வேலனுடைய அப்பா அவனுக்கு மிட்டாய், பழம் எல்லாம் வாங்கி வந்து தருகின்றாரே! எனக்கு அப்பா இல்லையா? அப்பா எங்கேயம்மா? ஏனம்மா அழுகின்றாய்? எனக்கு அப்பாவைப் பார்க்கணும் என்று ஆசையாய் இருக்கிறது’ என்று சிணுங்கிப் பேசினான். கண்ணம்மாள் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு மகனையெடுத்து மார்போடு அணைத்து, 'என் கண்ணே உன் அப்பா பரலோகம் போயிருக்கின்றார். இப்போது வரமாட்டார். நீ நன்றாகப் படித்துப் பெரியவனாக ஆன பிறகுதான் வருவார். இந்தா, அடையைத் தின்றுவிட்டுக் கஞ்சியைக் குடித்து விட்டுப் பள்ளிக்கூடம் போய்வா” என்றாள்.
இப்போது பரதனுக்கு 16 ஆண்டு பூர்த்தியாகிவிட்டது. நல்ல உளப்பண்பும் உடற்பண்பும்

Page 20
விக்கிரம சித்திரை ) ஒருங்கே அவனிடம் அமைந்திருந்தன. ஆசிரியரிடம் கலைகளை நன்கு கற்றுத் தேர்ந்தான். தன் தாய் சதா கூலி வேலை செய்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. தனியே இருந்து சிந்தித்தான். "நாம் பிறருடைய உழைப்பால் உண்டு உடுப்பது முறைமையாகாது. அதிலும் நமது தாய் தளர்ந்த வயதில் நாள் தோறும் அண்டை வயலில் சென்று கூலி வேலை செய்து அயர்ந்து விட்டாள். முன்னறி தெய்வமாகிய அன்னையை மேலும் வருத்தியா இந்த வயிற்றை வளர்ப்பது? இனி, நம் உடம்பாலும் உணர்ச்சியாலும் உழைத்துத்தான் வயிற்றை வளர்க்க வேண்டும். தவிர, வெறும் வயிற்றை வளர்ப்பதோடு நாம் அமையக் கூடாது. நாயும் நரியுங்கூடத்தான் வயிற்றை வளர்க்கின்றன. நிரம்பவும் பொருள் ஈட்ட வேண்டும். பொருளை நல்ல வழியில் தேட வேண்டும். நமது தாயாரைப் பரம சுகமாகப் பஞ்சணையில் படுக்க வைத்துப் பாதபூஜை செய்து உணவு தர வேண்டும். பலர் மெச்ச வாழ வேண்டும். தான தருமங்கள் புரிந்து உலகம் புகழ அழியாத கீர்த்தியைத் தேடவேண்டும். பொருள் தேடுவதற்கு நாம் இருக்கும் சிற்றுார் ஏற்றதன்று. பெரிய நகரஞ் சென்று பெரும் பொருள் சம்பாதிக்க வேண்டும்” என்று கருதினான்.
தாயாருடைய திருவடியைத் தொழுது, "அம்மா! நான் நகரஞ்சென்று பொருள் தேட நினைக்கின்றேன். தாங்கள் ஆசி கூறி விடை கொடுங்கள்” என்றான். கண்ணம்மாள் மகனுடைய சொற்களைக் கேட்டு மகனைப் பிரிவது குறித்து வருத்தமும், அவன் பொருள் தேடிப் பெருவாழ்வில் வாழ வேண்டும் என்று நினைப்பது குறித்து மகிழ்ச்சியும் அடைந்தாள். மகனை நோக்கி, ‘என் கண்ணே நம்மையாளும் வடிவேலிறைவன் கருணையால் விரைவில் நீ கோடீஸ்வரனாக விளங்குவாய். என் வாக்குப் பொய்யாகாது. ஆனால், உனக்கு நான் இன்று கூறுகின்ற ஒன்றை நீ ஒருபோதும் மறக்கக் கூடாது. அப்போது தான் நீ எனக்குப் பிள்ளை; உன் உயிரே போனாலும் 'பொய் சொல்லாதே’ இதுதான் உனக்குத் தரும் அழியாத செல்வம். இதை நீ கடைப்பிடித்து வாழ் கடவுள் கருணை பரிபூரணமாக உனக்குத் துணை செய்யும். இங்கே வா, உன் தந்தை உயிர் விடும் தருணத்தில் உன்பால் தருமாறு 50
(1.
 
 

பொற்காசுகளைத் தந்திருக்கின்றார். அது உன் பிதாவின் சொத்து. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு நீ பொருள் தேடுவாய்; இங்கிருந்து 50 கல் கடந்தால் பல்லவ புரம் என்று ஒரு பெரிய நகரம் உண்டு; அவ்விடம் போய் உனது முயற்சியைச் செய்” என்று கூறி, தன் வீட்டில் பானையில் வைத்திருந்த ஐம்பது பொற்காசுகளையும் எடுத்து மகன்பால் தந்தார். விடியற்காலை கட்டமுது கட்டிக் கொடுத்து, "என் குலமணியே! உன் உயிருக்குத் துணையாகச் சத்தியத்தையும் உடம்புக்குத் துணையாக இந்த அன்னத்தையும் தருகின்றேன்; போய் வா’ என்று விடை கொடுத்தாள்.
பரதன் தாயாருடைய பாதமலர் மீது வீழ்ந்து பரிபூரணமான ஆசியைப் பெற்றுக் கொண்டு சட்டையின் உட்பையில் தாய் தந்த பொற்காசுகளை வைத்துக் கொண்டு பல்லவ புரத்தை நாடிப் புறப்பட்டான். ஊரைக் கடந்தவுடன் அவன் மனத்தில் ஒர் அச்சம் ஏற்பட்டது. ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். 'வேலும் மயிலும் துணை' 'வேலும் மயிலும் துணை' என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். உச்சிப் பொழுதாயிற்று. இடையில் வந்த ஒரு குளத்தில் நீராடி, இறைவனைத் தியானித்துப் பசியாறினான். சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மீண்டும் புறப்பட்டு நடக்கலானான். மாலை நேரம் வந்து விட்டது. ஏதாவது ஊர் வருமானால் அதில் தங்கலாம் என்று கருதினான். சமீபத்தில் ஒன்றும் ஊர் இருப்பதாகத் தெரிய வில்லை! கதிரவன் மேற்கடலில் வீழ்ந்தான். இருள் சூழத் தொடங்கியது. பரதன் மனமும் இருண்டது. என்ன செய்வான் பாவம், வேகமாக நடக்கின்றான். சுற்றும் முற்றும் பார்க்கின்றான்.
திடீரென்று உருண்டு திரண்ட ஒரு வடிவம் அவனுக்கு முன் வந்து நின்றது. "அடே நில் என்ன கொண்டு போகின்றாய்? சொல்” என்று அதட்டிய குரல் அவன் செவியில் வீழ்ந்தது. பரதன் நடுநடுங்கினான். தாயார் “பொய் சொல்லாதே’ என்று கூறியது நினைவுக்கு வந்தது. அண்ணா! நான் பல்லவ புரம் போகின்றேன். ஐம்பது பவுன் என்னிடம் இருக்கின்றது' என்றான். கள்வன் அதை நம்பவில்லை. இச்சிறுவனிடம் ஐம்பது பவுன்

Page 21
இருக்குமா? கேலிபண்ணுகின்றான்' என்று எண்ணி முதுகில் ஒர் அறை கொடுத்து தடிப்பயலே பொய் சொல்லுகின்றாயா? ஒடிப்போ' என்று அதட்டி விட்டுச் சென்றான்.
பரதன் மிகுந்த வேதனையுடன் சிறிது தூரம் சென்றான். எதிரில் மீண்டும் ஒரு கள்வன் வந்தான். "அடே நில் என்ன வைத்திருக்கின்றாய்?" என்றான். "ஐயா! ஐம்பது பவுன் இருக்கின்றது” என்றான் பரதன். 'போக்கிரிப் பயலே ஐம்பது பவுன் வைத்திருக்கிறவன் மூஞ்சப்பாரு, புளுவுக்காரப் பயலே ஒடிப் போ” என்று தலையிலே ஒர் குட்டுக் குட்டிவிடுச் சென்றான். மீண்டும் ஒருவன் எதிர்ப்பட்டான். இதே நிகழ்ச்சி நிகழ்ந்தது. நாலாவது ஒரு திருடன் வந்தான். அவனிடமும் பரதன் ஐம்பது பவுன் இருக்கிறது. என்றே கூறினான். அவனும் நம்பவில்லை. அவன் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய்த் தங்கள் தலைவன்பால் விடுத்தான். மற்ற மூன்று கள்வரும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அது பயங்கரமான குகை எலும்பு குவியலாகக் கிடந்தது. கள்வர் தலைவன் பருத்த உடம்பும், தடித்த மீசையும், கொடிய பார்வையும் உடையவனாய் இருந்தான். -
கள்வர் தலைவன் பரதனைப் பார்த்து, "அடே சின்னப் பயலே யார் நீ உன்னிடம் என்ன இருக்கின்றது?’ என்றான்.
பரதன் "அண்ணா! என் பேர் பரதன். நான் பரம ஏழை என்னிடம் ஐம்பது பவுன் இருக்கின்றது”
நான்கு கள்வர்களும், "எஜமான்! இந்த மாதிரியே எங்களிடமும் கூறினான்’ என்றார்கள்.
கள்வர் தலைவன் பயலே உன்னிடம் உண்மையாக ஐம்பது பவுன் இருக்கின்றதா? பொய் சொல்லாதே. கொண்ணுடுவேன்.
பரதன் அண்ணா உயிர் போனாலும் பொய் சொல்ல மாட்டேன்; ஐம்பது பவுன் இருக்கின்றது.
கள்வர் தலைவன் என்ன உண்மையாகவா? காட்டு.
பரதன் ஐம்பது பவுன்களை எடுத்து அவன் முன்னே வைத்தான். கள்ளவர்களும் கள்வர் தலைவனும் ஆச்சரியப்பட்டார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
கள்வர் தலைவன்: "அடே தம்பி பணம் வைத்துக் கொண்டிருப்பவன், என்னிடம் ஒன்றுமே
 
 

இல்லையென்று கூறுவதுதான் வழக்கம். பவுன் இருக்கின்றது என்று யாருமே கூறமாட்டார்கள். உன்னைப் போலவே பயித்தியக்காரன் உண்டா? ஏண்டா! நீ இல்லை என்று தப்பித்துக் கொண்டு போகாமல் பவுன் இருக்கின்றது என்று கூறினாயே, என்ன காரணம்? என்று கேட்டான்.
பரதன் அண்ணா!'உயிரே போனாலும் பொய் சொல்லாதே என்று தாயார் எனக்கு உபதேசித்திருக்கின்றார்கள். நான் தந்தையை இழந்த தனயன், தாய் தளர்ந்த வயது உடையவள். அவளால் வேலை செய்ய முடியவில்லை. இந்தப் பவுன் தந்தை சேகரித்தது. உயிர் போகும் தருணத்தில் என் தாயிடம் தந்து, உற்ற வயதில் என்பால் தருமாறு கூறினாராம். கோடீஸ்வரனும் கோவணாண்டியும் உண்பது நாழி, உடுப்பது நான்கு முழந்தான் இறந்து போனால் அவனவன் செய்த பாவ புண்ணியந்தான் உடன் தொடர்ந்து வருகின்றன. பொருள் நல்வழியில் தேடி நல்வழியில் செலவழிக்க வேண்டும். பிறர் நடுங்கச் சேர்க்கும் பொருளால் யாது பயன்? செத்தால் உடன் வருவது யாரும் இல்லை. ஆனபடியால் உண்மையை ஒருபோதும் கைவிடக் கூடாது. சத்தியமே நித்தியம், மற்றதெல்லாம் அநித்தியமே. நாய் நரிக்கு இரையாகின்ற இந்த நாற்றமடிக்கின்ற பாழும் புலால் உடம்பை வளர்ப்பதற்காகப் பிறரைத் துன்புறுத்தியும், வஞ்சித்தும் பொய் சொல்லியும் பொருள் சேர்த்து வாழ்வதைப் பெரியோர்கள் வெறுக்கின்றார்கள். ஈ, எறும்பு, நாய், நரி முதலிய சகல பிராணிகளும் வயிற்றை வளர்க்கத்தான் செய்கின்றன. தேன் இருக்குமிடம் தேடித் தேனைப் பருகி வாழ்கின்றன தேனீக்கள் மலத்தைத் தேடிச் சென்று மலந்தின்று வாழ்கின்றன பன்றிகள், வாழ்க்கை இரண்டும் ஒன்றாகுமா? ஆனபடியால் நான் பொய் சொல்லக் கூடாது என்ற விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் பொய் புகலேன்' என்றான். அவ்வாறு கூறும் அவனுடைய வாய்ச் சொற்கள் ஒவ்வொன்றும் உயிருள்ள சொற்களாகவும் இனிமையாகவும் வெளிப்பட்டன. அவன் கண்களில் நீர்த்துளிகள் சிந்தின. அக்கள்வர் தலைவன் மனம் உருகியது. அவன் கடின சிந்தை இளகியது. தனது கொடிய செயலையும் தனது தீய வாழ்வையும் எண்ணி

Page 22
விக்கிரம சித்திரை எண்ணி இரங்னான். "ஆகா இந்தச் சிறுபிள்ளைக்கு இருக்கும் அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட எனக்கு இல்லை. எத்தனை பேரைக் கொன்றேன்? இத்தனைப் பொருளைச் சேகரித்து என்ன பயன் கண்டேன்? சதா கவலை; எங்கே யார் வந்து பிடித்துக் கொள்கிறார்களோ? என்ற ஏக்கம்; நிம்மதியில்லை. அறநெறிக்குச் சம்மதியில்லை; சீ சீ இந்த மறச் செயலை இன்றே விடவேண்டும். செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேட வேண்டும்” என்று தீர்மானித்தான்.
அவன் மனம் திருந்தியது. செய்த பாவத்தை எண்ணி உள்ளம் வருந்தியது. பரதனை நோக்கி, "அப்பா! நீ என் குருநாதன். இன்றே நான் திருட்டுத் தொழிலை விட்டு நல்வழிப்படுவேன். எனக்கு நல்வழி காட்டு, இந்தா இவ்வளவு செல்வத்தையும் நீ எடுத்துக்கொள். என் பாவம் போகும்படி எனக்கு அருள் செய்” என்றான்.
பரதன் "அண்ணா! எனக்கு இந்தப் பொருள் வேண்டாம் ஆண்டவர் எனக்குத் தருவார்! தாங்கள் நல்வழிப்பட்டதே எனக்குக் கோடி பொன் கிடைத்ததாகும். தாங்கள் என்னுடன் பல்லவ புரம் வாருங்கள். இந்தச் செல்வத்தை முதலாக வைத்துச் சத்திய நெறியில் வியாபாரஞ் செய்யலாம். அதில் வரும் ஊதியத்தைக் கொண்டு தருமம் செய்யலாம். அதனால், தங்கட்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயனாகப் புண்ணியமும் புகழும் உண்டாகும்’ என்றான். கள்வர் தலைவன் அதற்கு இசைந்தான்.
பரதன் அவர்களுடன் பல்லவபுரஞ் சென்று ஒரு பெரிய கட்டிடத்தை விலைக்கு வாங்கினான். பலவகையான வியாபாரங்களை ஆரம்பித்தான். கள்வர் தலைவன் எல்லாப் பொருட்களையும் அவன்பால் ஒப்புவித்துவிட்டுத் தன் சகாக்களுடன் அவனிடம் இருந்து சன்மார்க்க மொழிகளைச் சதா கேட்டுக் கொண்டும் வியாபாரத்திற்குத் துணை செய்து கொண்டும் இருந்தான்.
அந்த வியாபாரத்தில் உண்மை விளக்கு நன்றாக எரிந்தது. அதன் ஒளி எங்கும் வீசியது. பலரும் பாராட்டினார்கள். பெரிய மனிதர்கள் அனைவரும் பரதனுக்கு நட்பு ஆனார்கள். வருகின்ற ஊதியத்தை மூன்றாகப் பிரித்து ஒரு கூறு தருமத்திற்கும், ஒரு கூறு கள்வர் தலைவனுக்கும்,
 
 
 

ஒரு கூறு தனக்குமாக அமைத்தான். தான தருமம் நிரம்பவும் புரிந்தான். ஆயிரக்கணக்கான ஏழைகட்கு உடையும் குடையும் தந்தான். அவன் புகழ் எங்கும் பரவியது.
நல்ல குறிச்சியில் நூற்றுக்கணக்கான பேர் பஜனை செய்து கொண்டு போகின்றார்கள். கண்ணம்மாள் வீதியில் வந்து பஜனைக் கோஷ்டியைக் காண்கின்றாள். அவர்கள், "பரத வள்ளல் வாழி: அவர் தருமம் வாழி; அவர் குலம் வாழி' என்று கூறுவதைக் கேட்டாள். "ஐயா! அவர் யார்” என்று வினவினாள். 'அம்மா! பரத வள்ளலை உமக்குத் தெரியாதா? அவர் புகழ் எங்கும் பாவியிருக்கிறதே! மகா கொடையாளி உத்தம குணசீலர்; அவரைப் பெற்ற மாதாவின் வயிறு பாக்கியம் செய்த வயிறு. அம்மம்மா குமணனும் அவருக்கு நிகராகான். பரம காருண்ய மூர்த்தி” என்று வாயாரப் புகழ்ந்தார்கள். கண்ணம்மாள் அவர்கள் கூறும் பரதன்தான் தன் மகன் என்று எப்படி அறிவாள்?
ஒரு நாள் பல்லக்கும் மேளதாளங்களும் வந்து அவள் குடிசைக்கு முன் நின்றன. அரசகுமாரனைப் போல் பரதன் குடிசைக்குள் நுழைந்து தாயின் தாள்மலர் மீது வீழ்ந்து வணங்கினான்; மகனைக் கண்டு “கனவோ’ என்று எண்ணினாள் கண்ணம்மாள். சிறிது நேரம் கண்களை நம்பவில்லை. மகனைத் தழுவி உடம்பு பூரித்தாள். பல்லக்கில் தாயாரை ஏற்றிக்கொண்டு பல்லவ புரம் சென்றான். தன் ஊரில் உள்ள ஆலயத்தைப் பெரிய கோபுர ம்ன்டபங்களுடன் புதுக்கினான். ஏழை மாணவர்கட்கு இலவசக் கல்லூரி கட்டினான். லக்ஷக்கணக்கான தருமம் புரிந்தான்.
கண்ணம்மாள், "மகனே! இவ்வளவு பொருள் ஏது?" என்று கேட்டாள். "அம்மா! பொய் சொல்லாதே என்று அன்று தாங்கள் கூறிய சத்தியத்தால் வந்த செல்வம் இது எல்லாம் தங்கள் ஆசீர்வாதம் என்றான். கண்ணம்மாள் கேட்டு ஆனந்த பரவசமடைந்தாள். கணவன் இருந்து இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்கில்லையே என்று எண்ணினாள். கண்களில் இரு முத்துக்கள் சிந்தின. பரதனுக்கு நல்ல மனைவி வாய்த்தாள்; மக்கட்பேறும் கிடைத்தது. கண்ணம்மாள் எல்லாருடனும் இனிது வாழ்ந்தாள்.

Page 23
முன்னொரு காலத்தில் பிரமனும் திருமாலும் திருக்கைலாயத்திற் சென்று தங்கள் ஊர்திகளாகிய அன்னத்தினையும் கருடனையும் புறத்தே நிறுத்தித் திருக்கோயிலினுள்ளே சென்று சிவபெருமானைத்
தரிசித்தனர். அப்போது முருகக்கடவுளின் ஊர்தியுங் கொடியுமாகிய மயிலும் சேவலுமாகும் பேற்றைப்பெற விழைந்த சூரன் பதுமன் என்னும் பூதகனத் தலைவர் சிங்கமுகன் தாரகன் என்னும் கணத்தலைவர்களுடன் சேர்ந்து அத்திருக்கைலயங்கிரிச் சாரலிற் கழிப்பொடு வசித்த முருகக்கடவுளின் பழைய ஊர்தியுங் கொடியுமாகிய மயிலினையும் சேவலினையும் அடைந்து பெரியீர்! முருகக்கடவுளின் திருவடிகளைத் தாங்கும் பேற்றினையும் அப்பெருமானது வெற்றிப்புகழை விளக்கும் கொடியாகிய பேற்றினையும் பெற்ற நும்பெருமை சொல்லுமளவிற் றன்று. அங்ங்ணமிருப்ப, பிரமனுர்தியும் திருமாலூர்தியும் நும்மிரு வீரரையுஞ் சிறிதும் மதியாது மிகுந்த வலிமைக்குத் தாமே உறைவிடமாயினம் என்று செருக்குற்றிருக்கின்றன. அவற்றின் செருக்கை அடக்க நீவிர் முற்படுங்கால் யாமும் படைத்துணையாய் உடன் வருவோம் என்று குறளைக் கூறினர். அதுகேட்ட மயிலும் சேவலும் பெருஞ்சினங் கொண்டு அப்பூதகணத் தலைவர்களுடன் சேர்ந்து சென்று, அப்பிரமன் திருமால் ஊர்திகளாகிய அன் னத்தினையும் கருடனையும் எதிர்த்துப் போராடின. அப்போரில் ஆற்றாது அன்னமும் கருடனும் தத்தம் உலகங்களுக்குப் பறந்தோடி ஒளித்தன. மயிலும் சேவலும் அவ்வளவில் அமையாது கணத் தலைவர்களுடன் பிரமனுலகினும் திருமாலுலகினுஞ் சென்று அன்னத்தையும் கருடனையும் அழித்து அவ் வுலகங்களுக்கும் கேடு செய்து மீண்டன.
 
 

இஃது இவ்வாறாக திருக்கைலாயத்தில் செம்பொற்றிருக் கோயிலுள்ளே சென்று சிவதரிசனஞ் செய்து திரும்பிய பிரமனும் திருமாலும் புறத்தே வந்து தம்மூர்த்திகளைக் காணாது நிகழ்ந்த வரலாற்றைத் தம் உலகங்களினின்று வந்த தேவர்கள் கூறக்கேட்டு வருந்தி அத்திருக்கைலாயத்தின் பக்கலிலுள்ள வெற்றிவேற் படையை ஏந்திய முருகக் கடவுளின் உறையுளிற் சென்று தரிசித்து வணங்கித் துதித்துத் தங்குறையை விண்ணப்பித்தனர். அதனைத் திருச்செவி மடுத்த முருகக்கடவுள் அப்பூத கணத்தலைவர்களை அழைத்து நீவிர் இக்கொடுஞ் செயலைச்செய்தமையின் கடல்சூழ்ந்த நிலவுலகில் கொடிய அவுணர் குலத்திற் பிறந்து தேவர்களுக்கு இடுக்கண் செய்து முடிவில் நம் வேலால் இறந்து
சோகத்தினால் (க3 குணம் மாறுகிறது மூளை பாதிக்கிறது. அதோடு உடல் வியாதியும் தேடி வருகிறது. மனித நலனுக்கு ஊருறு செய்யும் சோகத்தை வெறுக்க வேண்டும் சதா சிந்தனை செய்வதும், மனக்கோட்டை கட்டுவதும் பத்தி பேதலிக்க ഖപ്പെട്ടു @l சஞ்சலப்படுவதாலும் နှီး မ္ဘာ၂ဆောoj?;း || படுவதாலும் நினைத்த பொருள் கிடைத்து விடாது. சரீரம்தான் மெலிகிறது. ரத்த ஒட்டம் குறைகிறது. மனிதனின் கவலை அதிகமாகும் போது சத்ருக்கள் சந்தோஷப் படுகிறார்கள். மனிதன் கஷ்டத்திற்குக் காரணமான கவலையை விட்டுவிட
3៣ឆ្នាយ៉ា

Page 24
கதியடையக் கடவீர் என வெகுண்டு கூறினார். அதனைக் கேட்டகணத்தலைவர்கள் எம்பெருமானை வணங்கிச் சுவாமி அடியேங்கள் செய்த கொடுமையால் அவுணர்குலத்துத் தோன்றினும் தேவரீர்பால் நீங்காத அன்பினை அருள வேண்டும்; அன்றியும் தேவரீரது திருக்கரத்தமைந்த வெற்றி வேலினால் வீடுறும்பொழுது நாங்கள் இருவரும் முறையே மயிலும் கோழியுமாகித் தேவரீருக்கு ஊர்தியும் கொடியுமாயமைய அருள்புரிதல் வேண்டும், என்று பன்முறை பணிந்து வேண்டிக் கொண்டனர். அவ்வாறே முருகக்கடவுள் அருள் செய்து பின் தமது ஊர்திகளையும் இழந்து உலகங்களும் கேடுறப் பெற்ற பிரமன் திருமால் இருவரும் அவற்றைப் பழமை போலப் பெறுமாறு அருள் செய்தனர். எம்பெருமான் அருளியபடியே சூரனும் பதுமனும் சூரபன்மன் என்னும் பெயருடன் இருபேருருவின் ஒரு பேரியாக்கை பெற்று அவுணர் குலத்தில் மாயவள் வயிற்றில் வந்து பிறந்து தேவர்களுக்கு இடுக்கண் பல செய்து வந்தனர். பின் எம்பெருமான் அச்சூரபன்மனை ஒரு பேருடல் இரண்டு கூறாய் அற்று வேறாகும்படி சுடரிலை நெடுவேலால் தடிந்தருளினார். அவற்றுள் சூரன் கூறு மயிலூர்தியாகவும் பதுமன் கூறு கோழிக் கொடியாகவும் அமைந்தன என்பதாம்.
முருகக் கடவுளின் திருவடியிற் செல்லுதற்குக் காரணமான செம்மலுள்ளத்தோடு வீடுபேற்றை விரும்பினாயாகில் அதனை முற்பிறப்பிற் செய்த நல்வினையால் பெறுவாய் என்க.
கடவுளின் திருவடிக்கீழ் இருத்தலே வீடுபேறாதலால் 'சேவடி படரும் என்றார். அது "தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி’ என்னும் திரு வாசகத்தினாலும் "இறுமாந்திருப்பன் கொலோ வீசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்-சிறுமா னேந்திதன் சேவடிக்கீழ்ச்சென்றங்-கிறுமாந்திருப்பன் கொலோ’ என்னும் தேவாரத்தினாலும் திருவடியைக் கூறுமாற்றான் உணர்க. இவ்வெடுத்துக் காட்டுக்களுட் குறிக்கப்பட்டது, சிவபெருமான் திருவடியாம்
 
 
 

பிறவெனின், அங்ங்ணமாயினும் சிவபெருமானுக்கும் முருகவேளுக்கும் வேறுபாடின்மையின் அவை எடுத்துக்காட்டப்பட்டன. இதனை "ஆதலினமது சத்தியறுமுகனவனும் யாமும், பேதகமன்றானம்போற் பிரிவிலன் யாண்டு நின்றான், ஏதமில்குழவி போல்வான் யாவையு முணர்ந்தான்சீரும், போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்” எனக் கந்தபுராணத்துள் வருவதனால் அறிக. அவ்வீடு பேற்றிற்கு ஞானம் ஏதுவாதலால் புலம் புரிந்துறையும் என்றும், அதற்கு நல்வினை - நிஷ்காமிய கருமம். "தன்கடன் அடியேனையுந் தாங்குதல்- என்கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் அப்பர் தேவாரம் அதனை வலியுறுத்தும். நல்வினைகளைச் செய்தல் காரணமாதலின் நலம்புரி கொள்கைப்புலம் என்றும், வீடுபேற்றினைப் பெறுவார்க்கு முற்பிறப்பிற் செய்த நல்வினைகள் காரணமாதல் பற்றி இன்னே பெறுதிநீ முன்னிய வினையே’ என்றும் கூறினார்.
சேவடி - சிவந்த திருவடி படர்தல் - செல்லுதல் என்றது இடைவிடாது நினைத்தலை. இதனை 'படரேயுள்ளல் செலவுமாகும்’ என்னும் தொல்காப்பிய உயிரியற் சூத்திரத்தானறிக. புலம் - மெய்ஞ்ஞானம் நன்னர் நெஞ்சம் - நன்றாகிய நெஞ்சம். நசை-விருப்பம் முன்னியவினை - முற்பிறப்பிற் செய்த நல்வினை.
ஆறாது. 艇 பிறர் மனம் நோகாதவாறு பே வேண்டும். அதாவது அம்பை ஒருவன்
மீது எய்தாலும் அவன் அதைப் பிடுங்கி எறிந்து விடலாம். ஆனால் அவனைக் கடுஞ்சொற்களால் பேசினால் அதை அவன் மனதை விட்டுப் பிடுங்கி எறிய
g 000000L0000L0L000L0LLL0000000L000LL

Page 25
விக்கிரம சித்திரை
10.
11.
12.
an
சைவர்களால் ஆவசியகமாகச் சரீரத்திலே விபூதி, உருத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம். விபூதியாவது யாது? பசுவின் சாணத்தை அக்கினியினாலே தகித்தலால் இரகூைடி.
எந்த நிற விபூதி தரிக்கத் தகும்? வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதி தரிக்கலாகாது. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொ புதுவஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப்பாண்டத் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ே வைத்துக்கொள்ளல் வேண்டும். விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண் பட்டுப்பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும். குடுக்கைக விபூதியை எந்தத் திக்கு முகமாக இருந்து வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இ விபூதியை எப்படித் தரித்தல் வேண்டும்? நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து ‘சிவ சிவ வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களின தொடுத்திழுத்துத் தரித்தலுமாம். வாயங்காந்துகெ தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனு விபூதி நிலத்திலே சிந்தினால், யாது செய் சிந்திய விபூதியை எடுத்துவிட்டு அந்தத் தலத்தைச் எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நி எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியக சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும் சூரியா பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்தி பண்ணி ஆசமித்த பின்னும், தீகூைடியில்லாதவர் தீண் விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும். விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் ச சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித் ஆசாரியராயினுஞ் சிவனடியாராயினும் வி மூன்றுதரமாயினும் ஐந்துதரமாயினும் நமஸ்கரித்து, எ கொண்டு, முன்போல மீட்டும் நமஸ்கரித்தல் வேண்டு
(4) - 227 పుస్తaడాడు, శ్రేణి Lo_°C ឆ្នាទាំង 3ខ្លះ
 
 
 
 
 

இ) இசைவதிதி)
RÄNSNINN
தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாவை?
உண்டாகிய திருநீறு. விபூதியின் பெயர் பசிதம், பசுமம், கூடிாரம்,
பும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந்
ள்ளல் வேண்டும்? தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறு சண்பகம் ள போட்டுப், புதுவஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி
ாடு தரித்தல் வேண்டும்? குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும், எடுத்து ளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது. கொண்டு தரித்தல் வேண்டும்? ருந்துகொண்டு தரித்தல் வேண்டும்.
என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் ால் இடப்பக்கந் தொடுத்திழுத்துப் பெருவிரலினால் வலப்பக்கந் ாண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் ந் தரிக்கலாகாது.
தல் வேண்டும்?
சுத்தி செய்தல் வேண்டும்.
தரிக்கலாகாது? பத்தும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது. மாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்? ஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் ரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் டிய போதும், பூனை கொக்கு எலி முதலியன தீண்டிய போதும்,
மமாகும்?
துக் கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும். பூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்? ழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்
so.
់ ព្រោយក្oួ ឬខ្ចាយត្រង ប្រួo ភ្លឺ ហ្វ្រិយ ភ្ញាក្សា

Page 26
19.
20.
21.
22.
%തു
எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?
ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்
தரிக்கலாகாது.
சுவாமி முன்னும் சிவாக்கினி முன்னும் குரு மு
விபூதி தரித்தல் வேண்டும்? முகத்தைத் திருப்பிநின்று தரித்தல் வேண்டும்.
சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் ய
வேண்டும்?
கொண்டுவந்தவர் தீகூைடி முதலியவற்றினாலே தம்மின் உ வேண்டும்; அப்படிப்பட்டவரல்லராயின், அவ்விவூதிப் பிரச புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல்
விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
திரிபுண்டரமாவது யாது?
முக்குறித் தொகுதி.
திரிபுண்டரம் எப்படித் தரித்தல் வேண்டும்?
வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டா வளவினதாதத் தரித்தல் வேண்டும். திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை? சிரம், நெற்றி, மார்பு கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புய இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் ப இவைகளுள், விலாப்புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வ திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தான் வேண்டும் என்றும் நியமம் உண்டோ? ஆம், நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், ! தானங்களில் ஒவ்வோ ரங்குல நீளமும் பொருந்தத் தரித்த குற்றமாம். எல்லாரும் எப்பொழுதும் விபூதியை சலத்திற் கு தீகூைடியுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குன் குழையாமலே தரித்தல் வேண்டும். தீகூைடியில்லாதவர் ப வேண்டும்.
விபூதிதாரணம் எதற்கு அறிகுறி? ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விள
திருச்சிற்றம்
 
 

ட விபூதியும், சிவதீகூைடியில்லாதார் தந்த விபூதியுந்
ன்னும் சிவனடியார் முன்னும் எப்படி நின்று
ாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல்
பர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் தத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்துப் அதனைப் பத்திர வேண்டும்.
மலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல
ங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் தினாறுமாம். இரண்டையுங் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் தும் உண்டு. எங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல்
மார்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் ல் வேண்டும். இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங்
தழைத்துத் தரிக்கலாமா? ழத்துத் தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் த்தியானத்துக்குபின் சலத்திற் குழையாமலே தரித்தல்
ங்குஞ் சிவத்துவப்பேற்றிற்கு அறிகுறி.
பலம்

Page 27
திருவருட்பயனில்
சித்தாந்தரத்தின் இலண்டன் மெய்
1ெ1ழ்வியல் நூலான திருக்குறளில் உள்ள கருத்துக்கள் பல பின்வந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன. அதிலுள்ள சொற்றொடர்கள்கூடப் பலரால் எடுத்தாளப்பட்டுள்ளன. சைவ சித்தாந்த நூல்களிலும் இத்தகைய தாக்கங்களைக் காணலாம்.
சிந்தாந்த நூல்களில் திருவருட்பயன் மட்டும் குறள் வெண்வினால் ஆக்கப்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் உமாபதி f.6).jTë 5 Trfurt flait அருளணுபவத்தின் வெளிப்பாடாகத் தோன்றியது இந்நூல் என்பது அறிஞர் கருத்து.
இந்நூலிலும் திருக்குறளிலுள்ள கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் காணமுடிகிறது. இது குறித்த சிந்தனை பயனுள்ளது.
திருவருட்பயனும் அதன் ஆசிரியரும்
உமாபதி சிவாச்சாரியாரால் அருளிச் செய்யப்பட்ட திருவருட் பயன் பத்து அதிகாரங்களைக் கொண்டது. நூறு குறட்பாக்களும், காப்பாக இன்னொரு பாவும் இதில் உண்டு. இதிலுள்ள முதல் ஐந்து அதிகாரங்கள் திருவருள் பற்றியும், மற்றைய ஐந்து அதிகாரங்கள் திருவருளின் பயன் பற்றியும் கூறுகின்றன. திருவருளைக் கொடுக்கும் பதியின் தன்மை. அதனைப் பெறும் உயிரின் தன்மை, அதனால் நீக்கப்படும் மலத்தின் தன்மை, திருவருளின் தன்மை, திருவருள் வடிவாகிய குருவின் தன்மை ஆகியவை முதல் ஐந்தில் விளக்கப்படுகின்றன. திருவருளால் ஆன்மா இறையை அறியும் நெறி, அது பெறும் விளக்கம் பேரானந்தத்தைப் பெறும் முறைமை, ஐந்தெழுத்தின் அருள் நிலை, சீவன்முத்தர் நிலை ஆகியவை பின்னைய ஐந்தில் கூறப்படுகின்றன.
இந்நூலின் ஆசிரியருக்குச் சிந்தாந்த உலகில் ஒரு தனியிடமுண்டு. வேதாகம நூலறியு மிக்கவர், சித்தாந்தம் தெளிந்த ஞானி, அருளாளர், யோகக்
 

X2×ჯ&
திருக்குறட் சிந்தனை
ாம் க. கணேசலிங்கம் கண்டார் ஆதீனப்புலவர்
காட்சியில் நின்றவர் என்றெல்லாம் போற்றப்படுபவர் அவர் தமிழிலும் வடமொழியிலும் பல நூல்கள் செய்துள்ளார். மெய்கண்ட சாத்திர நூல்கள் பதினான்கில் எட்டு நூல்கள் இவரால் GeFLiILLJÚLILL606)J.
மற்றைய நூலாசிரியர் போலன்றி, துணிச்சலான புதுமை மிக்க பல கருத்துக்கள் சைவ தத்துவத் துறையிலே புகுத்தியவர் உமாபதி éfls frögfffflu Ilf.
தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா, இன்று தோன்றிய நூல் எனும் எவையும் திதாகா என்று தனது சிவப்பிரகாச நூலில் எழுதியுள்ளார். இவரின் இந்தக் கருத்து அன்றைய சூழலில் புதுமையும் புரட்சியுமுள்ளதாகக் கருதப்பட்டது.
தமிழகத்துத் தத்துவ உலகிலே நூலின் பொருளைப் பொது, சிறப்பு என வகுத்து, பொது அதிகாரம், சிறப்பு அதிகாரம் எனக் கூறுவது வழக்கம். உமாபதி சிவம் தனது சிவப்பிரகாசம் எனும் நூலில் பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என வகைப் படுத்தியுள்ளார்.
இறை, உயிர் இரண்டோடு ஆணவம், கன்மம், மாயையையும் சேர்த்து என்றுமுள்ள பொருள் ஐந்தென்று கொள்வது சிந்தாந்த மரபு மாயையை இரண்டாக வகுத்து ஆறாகக் கொள்வகைத் திருவருட்பயினிலே காணலாம்.
ஏகன் அனேகன் இருள்கன்மம் மாயைஇரண் டாகவிவை ஆறாதியில் (தி ப. 6-2)
இறைவனின் பதியாகிய நிலை தடத்த நிலை எனப்படும். அவனின் மேலான தன்நிலை சொரூபநிலை எனப்படும். இதனைப் பதியின் முன்னைய நிலை என்ற கருத்தில் பதி முதுநிலை என்று திருவருட்பயனில் குறிப்பிடுகிறார். இது பிற நூல்களில் காண முடியாததொன்று.
இவைபோன்ற பல புதிய கருத்துக்களைக் கொண்டு புதிய நோக்கில் சித்தாந்த தத்துவத்தை

Page 28
அணுகியவர் உமாபதி சிவாச்சாரியார். இத்தகைய அருள் ஞானிக்குத் திருக்குறட் கருத்துக்களை உள்வாங்கி எழுத வேண்டிய அவசியமில்லை. ஆயினும் அப்படி எழுதியுள்ளார். காரணம் அவரின் சிந்தனையிலே திருக்குறட் கருத்துக்கள் சித்தாந்த விளக்கத்துக்கு ஏற்றவையாகத் தென்பட்டன.
தமிழகத்துச் சிந்தனை
வள்ளுவர் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் சைவ சித்தாந்த சிந்தனை உருவாகிவிட்டது. தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் நூல்களிலிருந்து இதனை அறியலாம்.
எழுத்துக்களின் இலக்கணத்தைக் கூறும் தொல்காப்பியம் சைவ சித்தாந்தக் கொள்கையை அதன்மூலம் விளக்குவதை ஆங்காங்கே காணமுடிகிறது. அதில் வரும் மெய்யொடு இயையினும் உயிரியல்திரியா வினையெனப்படுவது வேற்றுமை கொளாது நினையுங் காலை காலமொடு தோன்றும் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' போன்ற தொடர்கள் இதனை விளக்கும் சில உதாரணங்கள். இவற்றிலே சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்களைக் காண முடிகிறது.
இங்ங்ணம் வளர்ந்து வந்த தமிழகத்துச் ( சிந்தனையில் எழுந்த சைவசித்தாந்தக் கூறுகள் ( திருக்குறளில் விரவியிருப்பது இயல்பே. ( சைவசித்தாந்தம் ஒரு சமய தத்துவமாயினும் அது தமிழரின் வாழ்வியல் தத்துவம், இறை, உயிர், தளை ஆகிய முப்பொருளுண்மையைப் பேசியபோதும், உயிருக்கும் மற்றைய இரண்டுக்கும் உள்ள உறவையே முக்கியமாகக் கொண்டுள்ளது. ஆன்ம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இறை தன்மையையும் உலகப் பொருட்களையும் விளக்குகிறது.
இறைவனை வாழ்வியல் அடிப்படையிலே அம்மை அப்பராகக் காட்டி, உலகில் நல்ல வண்ணம் வாழவும் இறை நிலையை அடையவும் வழிகாட்டுவது - 6056)JejFLDuLO. பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருக்கிறான், அவனை வழிபட்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்று சம்பந்தப் பெருமான் அறிவுறுத்துகிறார். குனிந்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் கொண்ட கூத்தப்
ଆstored (40) * $r୍bility ୋ; sijos rf (pg1566Nur i nr.
 
 

பெருமாளின் திருக்கோலத்தைக் காண்பதற்கு மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்று அப்பர் அடிகள் உருகுகிறார். தெண்ணிலா மலர்ந்த வேணியன் திருவடிகளைக் கும்பிட்டதனால் மண்ணில் எடுத்த பிறவி புனிதமுற்றது, இன்பமானது என்று சுந்தரர் போற்றுகிறார். இக்கருத்துக்களை திருவள்ளுவர் மறைமுகமாகப்பின்வருமாறு கூறுகிறார். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பையில - (குறள் 4) இது போன்ற பல பாக்களைத் திருக்குறளிலே 5T600T6urth.
வாழ்வியல் என்பது ஆன்ம வளர்ச்சியையும் உள்ளடக்கியது என்பது வள்ளுவரின் கருத்தாக உள்ளது. அக்கருத்தைச் சைவசித்தாந்தப் பின்னணியில் வாழ்வியல் நெறியாக வெளிப் படுத்துகிறார்.
இறையருளே உலகை ஆள்வதும் வாழ்விப்பதும் என்பது சைவ அருளாளரின் அனுபவ வழிவந்த கருத்து, அருளே உலகெலாம் ஆள்விப்பது' என்று காரைக்கால் அம்மையார் கூறுகிறார். அன்பிலார்க்கு இவ்வுலகம இல்லை’ என்று கூறி அன்புக்கு மேலான இடம் கொடுத்த வள்ளுவர், அருளை அன்பின் பெருக்காகக் காண்கிறார். அருளென்னும் அன்பீன் குழவி என்பது அவரின் விளக்கம். அருட் செல்வம் செல்த்துட் செல்வம் என்றும் அல்லல் அருளாள்வார்க்கில்லை என்றும் பலப்படக் கூறி அருளின் பெருமையை விளக்குகிறது வள்ளுவம். திருவருளையும் அதன் பயனையும் பேச வந்த டம்ாபதிசிவம் இத்தகைய திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் வியப்பில்லை. அகரம்போல் இறை
தமிழ் எழுத்துக்களில் அகரத்துக்குத் தனிச்சிறப்புண்டு. அதனை இறைவனுக்கு உவமையாக்கி விளக்குவதைச் சைவ வைணவ நூல்களில் காணலாம். திருக்குறளும் அகரத்தை முன் வைத்தே தொடங்குகிறது.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆகி பகவன் முதற்றே உலகு - (குறள் 1) மெய் எழுத்துக்களின் ஒலிகள் அகர ஒலியை உட்கொண்டுள்ளன. அகரம் அவற்றுடன் கலப்பினால்

Page 29
ஒன்றாகவும், பொருளினால் வேறாகவும் உள்ளது. அவற்றின் ஒலி வெளிப்பாட்டுக்கும் அல்லது இயக்கத்துக்கும் துணையாகி உடனாயும் இருக்கிறது. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் என்பது தொல்காப்பியம். இங்ங்ணம் ஒன்றாய் வேறாய் உடனாய் இருப்பது அகரத்தின் இயல்பு. சைவ சித்தாந்தம் காணும் இறை - உயிர் உறவை விளக்க அகரத்தின் இந்த இயல்பே சிறந்த உதாரணமாக அமைகிறது.
அகரத்தை இறைவனுக்கு ஒப்பிடும் திருவள்ளுவர் எழுத்துக்களை உலகிற்கு ஒப்பிடுகிறார். எழுத்துக்கள் தொகுதியாக உள்ளதுபோல் உலகும் ஒரு தொகுதிப்பொருள் என்பது இதனால் உணர் த்தப்படுகிறது. சிவஞானபோதம் முதற்குத்திரம் இதனை 'அவன் அவள் அது எனும் அவை என்று கூறி, உலகை ஒரு தொகுதிப்பொருளாகக் காட்டுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் இக்குறளில் வரும் 'ஆதி என்ற சொல்லாலே சிவஞான போதமும் இறைவனைக் குறிப்பிடுகின்றது. ஆகவே குறிப்பிட்ட குறள் இறைபற்றிய சைவசித்தாந்த விளக்கமாக அமைகிறது. உமாபதி சிவம் இதனைப் பின்பற்றித் தனது திருவருட்பயனைத் தொடங்குவது பொருத்தமானதே.
அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறைநிற்கும் நிறைந்து - (தி ப ) என்பது அவரின் முதற்பாடல்,
தொகுதிப் பொருளான உலகிற்கு முதலாகிய இறைவனை அறிவு வடிவாகக் கண்டவர்கள் அருளாளரும் ஞானிகளும் தன் நிலையில் அவன் ஞானம் அல்லது அறிவாகவே உள்ளான் என்பது சைவசித்தாந்தக் கருத்து. இதனைத் திருவருட்பயனும் கூறுகிறது; திருக்குறளும்
வாலறிவன்'என்று கூறி உணர்த்துகிறது.
இருவகை நோக்கு
பிறவித் தொடரிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி இறைவனடி சேர்தலே என்று திருக்குறள் கூறுகிறது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தவர் - (குறள் 10)
 
 

சமயங்கள் பொதுவாகக் கூறும் இந்தக் கருத்தை வள்ளுவர் வாழ்வியற் கருத்தாக எளிமைப்படுத்தி விளக்குகிறார். பிறவித்தொடருக்கான அடிப் படைக்காரணம் உயிரைப் பற்றிய ஆணவம் என்பது சைவதத்துவம் மூலம் அறியப்படுவது. இறைவனடி சேரும்பொழுது ஆணவப்பிடிப்பு நீங்குகிறது. அதனால் பிறவித் தொடர் அறுகிறது. திருவள்ளுவர் வாழ்வியல் நோக்கில் எடுத்துரைத்த கருத்தை சித்தாந்த அடிப்படையிலே விளக்குகிறார் உமாபதி சிவம்
உன்னுமுள தையமில துனர்வா யோவாது மன்னுவந்தீர்க்கும் மருந்து - (தி ப. 10)
ஆணவத்தை இருளுக்கு ஒப்பிடுதல் சைவசித்தாந்தத்தில் காணக் கூடியது. ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை மழுங்கச் செய்யும் ஆணவப் பிடியிலிருந்து விடுபடுவதற்கு வினை செய்ய வேண்டியுள்ளது. வினையினால் அனுபவமும் அனுபவத்தினால் அறிவும் பெற, படிப்படியாக
ஆன்மாவின் ஆணவப்பிடிப்புத் தளர்கிறது. செய்த
வினை நல்வினை தீவினையாகி அதன் பலன்கள் அனுபவத்திற்கு வருவதற்கு மீண்டும் வினை செய்ய வேண்டியுள்ளது. இங்ங்னமே இருவினைகளும் ஆன்மாவைத் தொடர்கின்றன. ஆணவத்தின் சோக்கையாலே உண்டான இந்த இரு வினைகளையும் இருள்சேர் இருவினை' என்று வள்ளுர் கூறுகிறார். வினைத் தொடரிலிருந்து விடுபடுவதற்குச் செய்கின்ற செயலைத் தன் செயலென்று எண்ணாமல் இறைசெயல் என்று எண்ணிச் செய்ய வேண்டுமென்று சித்தாந்தம் கூறுகின்றது. இதனைத் திருவள்ளுவர் பின்வருமாறு விளக்குகிறார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - (குறள் 5)
வள்ளுவரின் இக்கருத்தைத் திருவருட்பயன் சித்தாந்த நோக்கில் ஆணவத்தை அடிப்படையாகக் கொண்டு, பின்வருமாறு கூறுகிறது.
இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேற் போக்கும் பொருளுண்டேல் ஒன்றாகப் போம் - (தி ப 27)
இவை போன்ற பல திருட்குறட் கருத்துக்கள் திருவருட் பயனிலே இடம் பெற்றுள்ளன. இவை

Page 30
அனைத்தையும் எடுத்துரைப்பது இங்கே இயலாததொன்று.
வாழ்வியல் 5T 6) FT60T திருக்குறளில் சைவசித்தாந்த விளக்கம் அளிப்பது வள்ளுவரின் எண்ணமுமல்ல; குறிக்கோளுமல்ல. ஆனால் தமிழகத்தில் எழுந்த சைவசித்தாந்தச் சிந்தனைக்கு திருக்குறளிலே இடமுண்டு. அவற்றை அனைவருக்கும் ஏற்றவகையில் எளிமைப்படுத்தி வள்ளுவர் தந்துள்ளார். இதிலே அவரின் நோக்குப் பொது வகையில் அமைந்த வாழ்வியல் நோக்காக உள்ளது. அவற்றை உள்வாங்கிய உமாபதி சிவம் சிந்தாந்த நோக்கில் அவற்றைக் கண்டு திருவருட்பயனில் தந்துள்ளார்.
பிறமதங்களுக்கு உடன்பாடற்றவை
வள்ளுவத்தின் நோக்கம் எதனையும் பொதுவகையில் கூறி அறவாழ்வில் உலகை வழிப்படுத்துவது சமயக் கொள்கைகளை வளர்ப்பது அதன் நோக்கம் அல்ல. ஆயினும் வாழ்வியற் சிந்தனையிலிருந்து சமயத்தையும் Ց*ԼՈԼԱ தத்துவத்தையும் ஒதுக்க முடியாதென்பதை வள்ளுவர் உணர்ந்துள்ளார். இதனாற்றான் சமய தத்துவக் கருத்துக்கள் பலவற்றை வள்ளுவத்தில் காணமுடிகிறது.
வள்ளுவர் காலத்திலே பிற மதக் கொள்கைகளும் தத்துவங்களும் தமிழகத்திற்கு வந்து விட்டன சமண பெளத்த தத்துவங்களும் தேவ உபநிடதக் கருத்துக்களும் தமிழகத்தில் முன்னரே நுழைந்து விட்டதை நூல்களிலிருந்து அறியலாம். அவற்றின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகச் சில குறட்பாக்கள் உள்ளன. இதனால் பிற சமயத்தவர் சிலர் திருக்குறளைத் தமது சமயம் சார்ந்த நூலாகக் காட்ட முனைந்துள்ளனர். ஆயினும் அதிலுள்ள கருத்துக்கள் அனைத்தும் எல்லாச் சமயத்தினருக்கும் ஏற்புடையதென்று கருதுவதற்கு இடமில்லை.
உலகத் தோற்றத்திற்கும், வினைப்பயன் அனுபவத்திற்கு வருவதற்கும் ஒருவன் அல்லது ஒரு பேராற்றல் தேவையில்லை என்பது சமணரின் கருத்து. உலகியற்றியான் ஒருவன் உண்டு; வினைப்பலனை ஊட்டுவதற்கு ஒருவன் வேண்டும் என்பதே வள்ளுவர் வாய்மொழியாக உள்ளது.
 
 

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் - (குறள் 1062) வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - (குறள் 377) இக்கருத்துக்கள் சமணத்துக்கு மாறானவை; சைவத்துக்கு உடன்பாடானவை.
திருக்குறளில் வரும் மன்னுயிர் பல்லுயிர் போன்ற சொற்கள் உயிர்கள் உண்டு, அவை பல. சிந்தாந்தக் கொள்கையுடையவை. இவை பெளத்தத்திற் முரணானவை.
மன்னுயிர் என்ற தொடர் உயிர் என்றுமுள்ளது என்பதை உணர்த்துகிறது. இறைவன் வேறு உயிர்கள் வேறு என்பது பல இடங்களில் உணர்த்தப்படுகின்றன. இவை வேதாந்தத்துக்கு உடன்பாடற்றவை.
மறுபிறவிக் கொள்கையை ஏற்காத கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற சமயங்களுக்கு உடன்பாடற்ற கருத்துக்கள் பல திருக்குறளில் உண்டு. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு - (குறள் 339) இக்குறள் கிறித்தவம் கூறும் நிரந்தர Garrió,35th Syrigsty Byasth (eternal heaven and eternal hel) பற்றிய கொள்கையையும் மறுக்கிறது.
பிறப்பறுந்து முத்திநிலை வரும்போது உயிர்கள் ஒருவகைத் திருமேனியுடன் திருமாலின் சந்நிதியில் இருக்கும் என்பது வைணவக் கொள்கை. இத்திருமேனி அப்பிராகிருதத் திருமேனி என்றும் திவ்விய மங்கள உடம்பு என்றும் கூறப்படும். இக்கொள்கைக்கு முரணானதாகப் பின்வரும் குறள் உள்ளது.
தாய், பிறப்புக்குக் காரணமாகவும், தனது முன்னேற்றத்திற்கு ஆதாரமாகவும் உள்ள அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்கு, வருஷத் திதி இவைகளைத் இல்லாமல் செய்வதற்குப் புத்திரன்

Page 31
விக்கிரம சித்திரை
மற்றுத் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்புமிகை (குறள் 345)
இக்குறளுக்கு பரிமேலழகர் பிறப்பறுத்தலை மேற் கொண்டோருக்கு அதற்குக் கருவியாகிய உடம்பு மிகையாம்' என்று விளக்கம் அளிக்கிறார். உடம்பு என்றதால் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும்’ என்றும் கூறுகிறார். இப்படி விளக்கிய பரிமேலழகர் ஒரு வைணவர் என்பதும் கருதற்பாலது.
மேற்காட்டியவை போன்ற பல கருத்துக்கள் பிற மதக்கொள்கைகளை மறுப்பதாகத் திருக்குறளில் உள்ளன. ஆனால் சைவசித்தாந்தத்துக்குப் பொருந்தாத கருத்துக்கள் எவற்றையும் அதில் காண முடியாது. உமாபதி சிவாச்சாரியார் திருக்குறட் கருத்துக்களை எடுத்தாண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
ஆகமவழி
சைவம் வேதத்தையும் ஆகமத்தையும் ஏற்றுக் கொண்டாலும் வேதத்திலும் பார்க்க ஆகமத்துக்கே முன்னுரிமை கொடுகின்றது என்பது பலரும் அறிந்ததே.
அருணந்தி éf6 TěF5F Tirffumi தனது சிவஞானசித்தியார் அவையடக்கத்தில் இறைவனை ஆகமத்தால் அறியலாம் என்று கூறுகிறார். உமாபதி சிவாச்சாரியார் தனது சிவப்பிரகாசத்தில் சைவசித்தாந்தத் திறனை வேதாந்தத் தெளிவு' என்றும், அது பெருநூல் சொன்ன அறத்தினால் விளைந்தது' என்றும் இயம்புகிறார். பெருநூல் என்பது ஆகமநூல் என்றே உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.
திருவள்ளுவர் ஆகமம் அறிந்தவரென்பதும் ஆகமவழியை ஏற்பவர் என்பதும் அவரின் குறளிலிருந்து அறியக் கூடியது. குணாதிதனான பாம்பொருளுக்குக் குணங்களைக் கற்பித்து வழிபடுவது உலகியல் வழக்கு. அவனுக்குள்ளவையாக எட்டுக்குணங்களை ஆகமங்கள் கூறும் திருவள்ளுவரும் எண்குணத்தான் என்றே குறிப்பிடுகிறார் -
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வனங்காத்தலை - (குறள் 9)
இதற்கு உரைகண்ட வைணவ மதத்தைச்
சேர்ந்த பரிமேலழகர் இறைவனின் எண்குணங்களை
 
 

ஒருவனுக்குப் பக்தி மட்டும் இருந்தால் போதாது. ஆசாரமும் வேண்டும். ஆசாரம் இருந்தால் அனுஷ்டானம் தேடிவரும். பணமும் பொருளும் இன்று வரும், நாளை போகும், ஆசாரமும் அனுஷ்டானமும் என்றும் நிலைத்து நிற்கும். பணத்தால் குறைந்தவன் குறைந்தவனல்லன். ஆனால் ஆசார அனுஷ்டானமின்றிக் கெட்டவன் கெட்டவனே ஆவான். ஆசாரக் குறைவுள்ள குலங்கள் எவ்வளவு தான் வசதியுடன் இருந்தாலும் தீர்க்க முடியாத குறைகள் 8 இல்லாமல் போகாது.
விளக்கிய பின், இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது' என்கிறார். 60.56. It gods கருத்துக்களைக் கொண்டு திருக்குறள் ஆசிரியரைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் என்று தமது நெஞ்விடு தூது என்ற நூலில் உமாபதி சிவம் போற்றுவதைக் காணலாம். இது திருவள்ளுவர் மேல் அவருக்குள்ள ஈடுபாட்டையும் மதிப்பையும் உணர்த்துகிறது. யாழ்ப்பாணம் தவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள் திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார்' என்று அழைப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உமாபதி சிவம் தனது திருவட்பயனில் திருக்குறட் கருத்துக்களை விதைத்தற்கு இதுவும் காரணமே.
(plq-660) J.
சைவ சித்தாந்தம் தமிழர்தம் சிந்தனையில் உதித்த தத்துவம். அதன் கூறுகளைப் பழந்தமிழ் நூல்களிலும் திருக்குறளிலும் காணலாம்.
திருக்குறளில் பல சமயக் கருத்துக்கள் உள்ளன. ஆயினும் அதில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பிற சமயங்களுக்கு உடன் பாடானவையல்ல.
சைவத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் திருக்குறளில் இல்லை. சைவ சித்தாந்தக் கருத்துகள் பல அதில் உண்டு. அவற்றை வாழ்வியல் நோக்கில் கண்டு திருவள்ளுவர் தனது திருக்குறளில் தருகிறார். சித்தாந்த தத்துவ நோக்கிலே கண்டு உமாபதி சிவாச்சாரியர் தனது திருவருட்பயணிலே விளக்குகிறார்.

Page 32
பிக்ஷ
இ)
- சிவபூஞரீ ச. குமாரசுவ
இரணியாக்கனுடைய புத்திரனாகிய அந்தகாசுரன் கொடுங்கோல் செலுத்தி அரசாளுங் காலத்தில், பன்னிரு வருடம் மழை வளங்குறைய வேத பண்டிதர்களாகிய தாருகாவனத்து முனிவர் பசிநோயால் வருந்திக் கெளதம முனிவருடைய ஆச்சிரமத்தை அடைந்தார்கள். முனிவர் அவர்களைப் பூசித் தக மகிழ்ந்து, நாடோறு மன்புடன் அமுதருத்தி வந்தனர். அவர்கள் அடிசிலையருந்தி ஆச்சிரமத்தில் வசிக்கும் நாட்களில், முகில்வள நிறைந்து மழை பெய்தது. பன்னிரு வருடமும் வருத்திய பசிநோய் அச்சமுற்றோட மிகுந்த செல்வம் பெருகுதலும். அவர்கள் தங்களாச்சிரமங்களையடைய நினைத்தார்கள். விருந்தினராக வந்த தங்களைவிடக் கெளதமருக்கு விருப்பமின்மையாயிருப்பதையறிந்து, அவர்கள் ஒரு மாயப்பசுவையுண்டாக்கி முனிவர் முன்னிலையில் அனுப்பினர். நரம்புகள் மிதந்து, தசைப்பற்றற்று வந்த பசுவை முனிவர் கண்டு பசுவுக்கு வந்த துன்பங்களை நீக்கிக் காத்தல் மேலான சிவதருமமாய் முத்தியிற் கூட்டும்; காவாது விடுத்தல் கொடிய நரகத்துக்கு இரையாக்கும் எனச் சிவாகமங்கள் கூறியதை நினைத்து “யானும் இப்பகவுக்குத் தீங்குவராமற் காப்பேன்’ என்று கூறிப் பசுவைக் கரத்தினாற்றிண்ட அது பூமியில் விழுந்து இறந்தது. அதனைக் கண்ட கெளதம முனிவர் துன்பக்கடலுளமிழ்ந்தத் தாருகாவனத்து முனிவர்கள், பசுக்கொலை புரிந்த பாவியினுடைய கிருகத்தில் விரும்பியுண்டால் அப்பாவம் தமக்குஞ் சேருமென்று சொல்லிக் கொண்டு, தம்முடைய இடங்களையடைந்தார்கள். கெளதம முனிவர் ஞானக்கண்ணாலுற்றுணர்ந்து அவர்கள் செய்தது வஞ்சனையென்றறிந்து, "வேத வொழுக்கத்தினின்று நீங்கிச், சிவபெருமானிடத் தன்பின்றிக் கொடிய துன்பக்கடலில் விழுந்தமிழ்ந்து வார்களாக” என்று கோபத்தோடு சபித்தனர். அவ்விதமே அவர்கள் அஞ்ஞானிகளாய், வேதமோதல் முதலிய
 
 

Fடனர்
பாமிக் குருக்கள்
நற்கிரியைகளை விடுத்துத் தவவொழுக்கத்தி னின்றும் நீங்கிக் கன்மமலத்தினாற் கட்டப்பட்டுத் துன்பமாகிய சமுத்திரத்திலLமிழ்ந்தி, மீமாஞ்ச மதப்பிரவேசஞ்செய்து அசுத்தரானார்கள். சிவபெருமானானவர், பரதந்திரர்களான மற்றய ஆன்மாக்கள் இவர்களைப் பின்பற்றிக் கெட்டுப் போவார்களென்பதையும், கடவுளின் கிருபையாலன்றிப் புண்ணியஞ் செய்தல் முடியாதென்பதையும், “பரனடிக்கன் பிலாதார் புண்ணியம் பாவமாகும்’ என்பதையும் எல்லா ஆன்மாக்களுக்கு முணர்த்தல் காரணமாகவும், முன்னர்க் காமமுங் கோபமும் அவர்களுக்குண்டாக்குவதாகிய திருவுருவத்தைப் பொருந்திச் சென்று, காமிகளுங் கோபிகளுமாகச் செய்து, அவர்களது ஆணவ மலசக்தியையுங் கருமத்தையுமழித்து, ஞானத்தைப் பயப்பதாகிய திருமேனியைக் காட்டி, மெய்ஞ்ஞானத்தைக் கொடுத்துச் சுத்தவைதிக சைவர்களாக்கும்படி திருவுள்ளங் கொண்டனர்.
பின்பு சிவபெருமான், அதிபாதகர்களாகிய முனிவர்களுக்குத் தம்முருவங்காட்ட வொண்ணா மையின், விட்டுணுவையழைத்து மோகினி வடிவங் கொள்ளும்படி செய்து, முனிவரை மயக்கவிடுத்து, அற்ப பாதகிகளாகிய முனிபத்தினி மாரை மயக்கியருளும் பொருட்டு, வேதமூபமாகிய கெளமீனத்தையும், சிவஞானமாகிய பூனூலையும்,
முச்சத்தி வடிவானதும் மும்மலங்களை நீக்குவதுமான
சூலத்தையும், பராசக்தி வடிவானதும் அன்பான பிச்சையேற்பதுமாகிய பிக்ஷாபாத்திரத்தையும், நாதரூபமானதும், ஞானத்தைக் கொடுப்பதுமாகிய உடுக்கையையும், மலபரிபாகஞ் செய்வதும் திரோதான சக்தி ரூபமாகிய விபூதிப் பையையுந் தரித்துக் கொண்டு மோகினியுடன் சென்றார்.
மோகினி தபோவனத்தையடைய முனிவர்கள் கண்டு மிகக்காமிகாளகிப் பின்சென்றார்கள்.

Page 33
பிக்ஷாடன மூர்த்தியானவர் முனிபத்தினி மார்களுடைய வீதிகளிற்போய், அவர்களைச் சுத்தர்களாக்கும் பொருட்டுத் தமது திருவுருவத்தைக் காட்ட அவர்கள் பிட்சையிடும்படி வந்து திருவுருவைக் கண்டு காமித்துப் பேராசைவைத்துப் பார்வை மாத்திரத்தாலே கருப்பவதிகளாயினர்.
புருடர்களது சேர்க்கையின்றிச் சிவதரிசனத்தா லாகிய கருப்த்திலே பிறக்க வேண்டுமென்று நினைத்துத் தவஞ்செய்த நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்களும் அக்கருப்பத்தினின்றும் பிறந்து வணங்கிக் கடவுளுடைய அனுமதிப்படி தவஞ்செய்யப் போயினர்.
முனிபத்தினிமார்களாற் சூழப்பட்டுச் சிவபெருமான் செல்ல, முனிவர்களாற் சூழப்பட்டு மோகினி சிவ சன்னிதானத்தையடைந்தார்.
முனிவர்கள் தமது மனைவிமாருடைய கற்பழிந்தமையைக் கண்டு காமமொடுங்கக் கோபமதிகரித்தனர். இதனைச் செய்தவர் சிவனும் விட்ணுவுமேயென்பதையறிந்து பெருங்கோபங் கொண்டு சிவனைக் கொல்லவேண்டுமென நினைத்து ஒரு அபிசார வேள்வி செய்தார்கள். அவ்வோம குண்டத்தினின்று மெழுந்த புலி முதலியவற்றை முனிவர்கள் அனுப்பச் சிவபெருமான் புலியையுரித்துத் தோலையுடுத்தும், மழுவையும் மானையும் கரத்திற்றாங்கியும், பாம்புகளை யாபரணமாகவணிந்தும், பூதங்களைச் சேனைகளாக்கியும், முனிவர்களது ஆணவ மலமாக வந்த முயலகனைக் காலால் மிதித்தும் நின்றனர். பின்பு նթԼ0 குண்டத்திற் பொருந்திய அக்கினியையனுப்ப அதனையேந்தினர். பின்பு அனுப்பிய மந்திரங்கள் உடுக்கை வடிவாகிச் செல்ல, அதனைத் திருக்கரத்தில் தரித்தனர். முனிவர்கள் தாம் அனுசரித்து வந்த மீமாஞ்சை மதம் பொய்பட்டமையிற் சோர்வடைந்தனர்.
காமம் வெகுளிமயக்க மீவைமூன்ற னாமங் கெடக் கெடுநோய்” எனத் திருவள்ளுவர் கூறியபடி மலநோயினின்றும் நீங்கிப் பக்குவர்களாயினர். அவர்களது பக்குவமுதிர்ச்சியைக் கண்ட சிவபெருமான்
 
 

ஆணவரூபமாகிய முயலகன் மீது மிதித்து நின்று பஞ்சகிருத்திய நிருத்தத்தைச் செய்தனர். அந்நடனத்தைக்கண்ட முனிவர்கள் பயந்து பூமியில் விழுந்து சிவனருளாலெழுந்து சிவஞானத்தைப் பெற்று வணங்கினர். சிவபெருமான் முனிவர்களைப் பார்த்து, “நீங்கள் இந்நாள்வரையுந் துன்மார்க்க வழியில் நின்று மோகர்களாயினிர்கள். இப்பொழுது உங்களுடைய மோகத்தை நீக்கினோம். இனி நீங்கள் சைவ மார்க்கத்தையனுசரித்து, வீபூதி உருத்திராக்கந் தரித்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து, இடை விடாதபடி பூசித்துப் (SLIII e; மோட்சங் களையடையுங்கள்’ என்று கூறியருளித் திருக்கைலாசமலையிற் சென்று வீற்றிருந்தருளினார்.
திருஞானசம்பந்த சுவாமிகள்
பண் - நட்டராகம்
குடல் வெண்பிறையினர் சுடர்முடியர்
சுன்ன வெண்ணற்றினர் சுடர்மழுவான் பாடல் வண்டிசை முரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவையசைந்திலங்கக் கோடனன் மூகில்விரல் கூப்பிநல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்து பெய்ய வாடல் வெண்டலை பிடித்திவராணfர் வாய் மூரடிகள் வருவாரே'
திருவாசகம்
அம்பலத்தே கூத்தாழ அமுது செயப்பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்னுமது வென்னேடீ நம்பனையு மாமா கேனான் மறைகடாமறியா வெம்பெருமானிசாவென் றேத்தினகரன் சாழலோ"
சிவபெருமான் மோகினியைப் பார்த்து, உனக்கு யாது வரம் வேண்டும் என வினாவியருள,"அடியேன், தேவரீருக்குச் சத்தியாகும் வரத்தைத்தந்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவ்வரத்தைக் கொடுத்தனர்.
சிவபிரான் பிக்ஷாடனமூர்த்தங் கொண்டது மீமாஞ் சைமதத்தைப் பற்றி அதிமோகிகளாயிருந்த இருடிகளைச் சுத்த வைதிக சைவ மார்க்கத்திலே நிறுத்தியருளும் பொருட்டேயாம்.

Page 34
விக்கிரம சித்திரை
சிவனுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பல வகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், பூரீபஞ்சாக்ஷரம் செபித்தலும், மிகச் சிறந்த புண்ணியமாம். 'நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில்புக்குப் - புலர்வதனமு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் - தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று - மலை புனல்சேர் செஞ்சடையெம் மாதி யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே.' போற்றிலார் - நாக்கைக் கொண்டர னாம நவில்கிலாராக்கைக் கேயிரை தேடி யலமந்து - காக்கைக் கேயிரையாகிக் கழிவரே.’ என்னுந்
பூக்கைக் கொண்டான் பொன்னடி
திருநாவுக்கரசுநாயனார் தேவாரங்களாலும்,
முத்தனே முதல்வா முக்கணாமுனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே செல்வத்திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தமே வியச் ரத்தனே யடியே ன்ாதரித்தழைத்தா லதெந்துவே யென்றருளாயே"
என்னுந் திருவாசகத்தாலும், "நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற்பவித்த போதெவையும் புலத்தி னழுந்தாவன் பினொடும் போதா னந்தன் கழற்க னிந்தோர் மலத்தினநாதி முத்தன்மல வயிரியுறையுஞ் சிவலோகத் - தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்.’ என்னும் சிவபுண்ணியத்தெளிவாலும், உணர்க.
இத்திருப்பணி செய்ய விரும்புவோர். நாடோறும் சூரியன் உதிக்குமுன் எழுந்து, ஸ்நானம் செய்து, தோய்ந்து உலர்ந்த வஸ்திரம் தரித்து, சந்தியா
(3.
பூக் கொய்து ம/ சிவனுக்கு
 
 

) ாலைதொடுத்துச் ( ச் சாத்தல்
- ஆறுமுகநாவலர் -
வந்தனம் முடித்துக்கொண்டு, சுத்திசெய்யப்பட்டு நாபியின் கீழ்ச் செல்லாது மேலே உயர்த்தகைகளை உடையராய், திருப்பூங் கூடையை எடுத்துக்கொண்டு, சிவனது திருவடிக்கனன்றிப் பிறிதொன்றினும் சிறிதும் இறங்காத சிந்தையோடு மெளனம் பொருந்தி, சென்று, பத்திர புஷ்பங்கள் கொய்து, திருப்பூங்கூடையில் இட்டுக் கொண்டு வந்து, சுத்திசெய்யப்பட்ட காலினையுடையராய், புஷ்பமண்டபத்திற் புகுந்து விதிப்படி சுத்திசெய்யப்பட்ட பூக்குறட்டில் வைத்து, இண்டை முதலிய திருமாலைகளைச்செய்க. சிவலிங்கத்தைத் தீண்டற்கு உரியார் தாமே சாத்துக. அல்லாதார் அதற்கு உரியாரைக் கொண்டு சாத்துவிக்க. திருப்பூங்கூடையை நாபிக்குக் கீழே பிடியாது ஒரு தண்டின் நுனியிலே கட்டி உயரப் பிடித்துக்கொண்டு வருக. அன்றேல், நாபிக்கு மேலே உயர்ந்த கையினாற் பிடித்துக்கொண்டு வருக. பத்திரபுஷ்பம்
ஒரு மனிதன் பணம் அதிகம் வரும் போதுதான் புண்ணியம் செய்யலாம். புண்ணியம் சம்பாதிக்கத் தர்தமே சிறந்த சாதனமாகும். இப்படித் தர்மம் செய்பவனது புகழ் மூன்று லோகங்களிலும் பிரகாசிக்கும், சத்திரம் கட்டுதல், பிச்சைக்காரன், தொழுநோய் உள்ளவன் தங்க இடம் கொடுத்தல், கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தல், கோவில் விளக்குக்கு எண்ணெய் கொடுத்தல், புஷ்பம் கொடுக்க ஏற்பாடு செய்தல், தண்ணீர்ப்பந்தல் அமைத்தல், வேத பாடசாலை நடத்தல், கஷ்டப்பட்ட மாணவர்களுக்குப் பணம் கொடுத்துப் படிப்புக்கு உதவுதல், குளம் வெட்டுதல், சுமைதாங்கிக் கல் பதித்தல் பசுக்கள் உராய்வதற்குக் கல்பதித்தல், கண் தானம் செய்தல் ஆகிய தர்மத்தைச் செய்வதற்குத் தகுந்த ஆட்களை நியமித்துக் கண்காணித்தல் ஆகிய காரியங்களால் ஒருவன் மூன்று லோகங்களிலும் பிரகாசிப்பதோடு இறந்த பின்பும் புகழை அடைகிறான்.

Page 35
கொய்யும்போது மெளனம் வேண்டும் என்பது, "வைகறையெழுந்து போந்து புனன்மூழ்கி வாயுங்கட்டி - மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தனவனத்து முன்னி' என எறிபத்தநாயனார் புராணத்தில் கூறியவற்றால், உணர்க. மனம் வேறுபடலாகாது தீஷையில்லா தான், இழி குலத்தான், மிகுநோயாளன். தூர்த்தன், ஆசாரமில்லாதான், ஆசௌசமுடையான் என்னும் இவர்கள் கொண்டுவரும்பூ எடுத்து வைத்து அலர்ந்தபூ பழம்பூ உதிர்ந்தபூ, காற்றில் அடிபட்டபூ கையிலேனும் உடுத்த புடைவையிலேனும் எருக்கிலை ஆமணக்கிலைகளிலேனும் வைத்தபூ அரையின் கீழே பிடித்தபூ புழுக்கடி எச்சம் சிலந்திநூல் மயிர் என்னும் இவற்றோடு கூடியபூ ஸ்நானம் பண்ணாமல் எடுத்தபூ பொல்லா நிலம் மயானசமீபம் சண்டாளர் வசிக்கும் இடம் முதலிய அசுத்த ஸ்தானங்களில் உண்டாகியயூ இரவில் எடுத்தபூ இவை முதலாயின சிவனுக்குச் சாத்தலாகாது. 'எடுத்துவைத்தே யலர்ந்த மலர் பழம்பூக்கண் மற்ற வெருக்கிலையா மணக்கிலையி னிற் பொதிந்த பூக்க - ளுடுத்தபுடை
வேண்டுமென்றே பொய் சொல்வது நம்பி பயனை துரோகம் செய்வது, பிறர் பூரணமாக நம்புவது, உடல்பீடையால் அவதிப்படும் சமயம் அடிக்கடி வைத்தியரை மாற்றுவது, அடிக்கடி கடன் வாங்குவது குழந்தைகளை அடிப்பது மனைவியைக் காரணமின்றிக் கோபி உறவினர் வீட்டில் அதிக நாள் தங்குவது அடிக்கடி பயணம் செய்வது பெண்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தெய்வ நிந்தனை செய்வது ஜோதிடத்தைப் பழிப்பது சாதுக்களை நிந்திப்பது மத குருவைக் கேலி செய்வது, பெற்றோரை அவமதிப்பது ஆகிய காரியங்களை எவன் செய்யாமல் இருக்கிறானோ அவன் வீட்டில்
@ងៃ ១រោះត្រាgarទាំ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வையிற் கரத்தி னமைத்த நறும் பூக்க ளுதிர்ந்திடுபூ வரையின்கீ முற்றவிரைப் பூக்களடுத்த புழுக் கடியெச்சஞ் சிலந்திமயி ருறுத லங்கை யில்வைத் தங்கைகுவித் திடுதல்கங்குறணிலே - யெடுத்தமலர் நீரமிழ்த்தல் புறங்காட்டி லெய்த லெச்சில்குளி யாதெடுத்த லிழிபெனுமா கமமே.” என ஞானப்பிரகாசதேசிகர் புஷ்ப விதியினும், மடியினிற் பறித்தி டும்பூ மலர்ந்துகீழ் விழும்பூ முன்னா - ளெடுபடு மலரி ளம்பூ விரவினி லெடுத்தி டும்பூதொடர் நோயன் றிக்கை யில்லான் றுார்த்தனா சார மற்றோன் - கொடுவரும் பூவ னைத்துங் குழகனுக் காகாவன்றோ,’ எனப்பிறிது புஷ்ப விதியினும் கூறுமாற்றால், உணர்க.
இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் முருக நாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையால் அன்றோ, பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றும், அவராலே “தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங் - கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலங் - கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் - வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே' எ-ம் ஈசனேறமர் கடவு ளின்னமிர் தெந்தையெம் பெருமான் - பூசு மாசில்வெண் ணிற்றர் பொலிவுடைப் பூம்புகலூரின் மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்- வாச மாமல ருடையார் வர்த்தமா னிச்சரத்தாரே எ-ம். புகழப்பட்டும், அவருடைய திருமணத்திலே சிவனது திருவடிநிழலை அடைந்தார். 'ஏந்துமுலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப் - பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக் - காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய் - வேந்தின் றுயர் தவிர்ர்த தானையெப் போதும் விரும்பு மினே' என்று திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருவந்தாதியிற் கூறினார் நம்பியாண்டார்நம்பி என்க.
- முருகநாயனார்டிரான சூசனம்

Page 36
இவ்வுலகில் மனிதராகப் பிறந்தவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பொருள்கள் மூன்று ஆகும். முதலில் நாம் நம்மைப் பற்றி நன்றாய் அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின் நம்மை நடத்துகின்ற இறைவனைப் பற்றியும் அறிந்து தெளியவேண்டும். நமக்கும் இறைவனுக்கும் இடையில் நின்று இறைவனை அடையமுடியாதபடி தடுக்கும் தடைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இம்மூன்றையும் பசு, பதி, பாசம் எனவும் உயிர், இறை, தளை எனவும் ஆன்றோர் கூறுவர். இதனைக் காசிபர். "சான்றவர் ஆய்ந்திடத் தக்கவாம் பொருள் மூன்றுள மறையெல்லாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி ஆருயிர்த் தொகை வான்றிகழ் தவையென வகுப்பர் அன்னரே என்றனர்."
நாம் இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருள் களையும் பற்றி ஆராய்கின்றோம். ஆனால் நம்மைப் பற்றி ஆராய்வதில்லை.
"நான்’ என்பது ஆன்மா அல்லது உயிர் எனப்படும். இவ்வான்மா என்ற ஒன்றில்லை எனச் சிலர் கூறுவர். வேறு சிலர் உடம்பே ஆன்மா என்றும், இந்திரியங்களே ஆன்மா என்றும், அந்தக் கரணங்களே ஆன்மா என்றும் பிராண வாயுவே ஆன்மா என்றும் கூறுவர். இவர்கள் கூற்றைச் சிவஞான போத ஆசிரியர் மறுத்து, ஆன்மா தனித்த பொருளென நிலை நிறுவுகின்றார்.
நெல்லில் உமியும் தவிடும் முளையும் அரிசியைச் சூழ்ந்து உறைவது போல, ஆன்மாவை ஆணவம் கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் செம்பில் களிம்பு போல, ஒட்டி வாழ்கின்றன. இவைகள்தான் கடவுளை அடைய முடியாதபடி நம்மைத் தடுக்கும் தடைகள். இத்தடைகளை அகற்றி இறைவனை ஆன்மா அடைந்து இன்புற்று வாழ்வதற்கு அமைந்தவைகளே 606F6). FLOLLILOT (5LO.
(49 சதானிகபிச் I tiromrg5 និង
 
 
 

- ஆறுமுகம் கந்தையா J.P
2. இம் முப்பொருள் உண்மையை ஆலயங்களில் விளங்கக் காட்டியுள்ளார்கள். எல்லா ஆலயங்களிலும் மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிருஹம் என்ற ஒன்று உண்டு. அம்மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மூர்த்தியே இறைவன் ஆவான். அவ்விறைவனை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் நந்தி, மயில், கருடன் முதலியவைகளே ஆன்மாவகும். அதன் பின் நிறுவப்பட்டிருக்கும் பலிபீடமே பாசம் அல்லது தடை ஆகும். எல்லாக் கோயில்களிலும் இம்மூன்றையும் அமைத்து முப்பொருள் உண்மையை விளக்கியுள்ளார்கள். ஆகவே சமயத்தின் சாரம் இம்முப்பொருள் உணர்வே ஆகும் எனக்கூறலாம்.
இறையுணர்வு
இறைவன் ஒருவன் 'உளன்' எனவோ இலை" எனவோ கூறாது இவ்வுலகம் இனிது நடக்க இறைவன் என்ற ஒருவன் வேண்டும் என நமது சமயம் கூறுகின்றது. அவ்விறைவன் அகளனாகவும் அதாவது வடிவம் இல்லாதவனாகவும் சகளனாகவும் அதாவது வடிவம் உள்ளவனாகவும் இருக்கின்றான். அகளனாய் அவன் இருக்கும்போது அவனை நமக்கு அறிந்து கொள்ள முடியாது. அதற்காகவே இறைவன் அகள நிலையிலிருந்து சகள நிலைக்கு வருகின்றான். அச்சகள நிலையே ஆலயத் திருவுருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நம் பொருட்டு ஆண்டவன் சகள உருவம் தாங்கி வந்தால் அவனை ஆன்மாக்களாகிய நாம் ஆலயங்களில் அமைத்து வழிபட்டு, பூசித்து விழாக்கள் கொண்டாடி வாழ்வதை 'சதாசிவமூர்த்தி’ என்போம். சிவலிங்கத்தின் அடிப்பாகம் நான்கு பக்கமாய் அமைக்கப்பட்டு "அயன்” அல்லது பிரமனையும்: நடுப்பாகம் எட்டுப்பட்டமாய் அமைக்கப்பட்டு *unIIậu” அல்லதுவிஷ்ணுவையும் மேல்பாகம் நீண்ட உருண்டை வடிவமாக அமைக்கப்பட்டு உருத்திரனையும்

Page 37
உணர்த்துகின்றன. இம்மூர்த்திகள் சதாசிவமூர்த்தி தன்னுள் கொண்டு தண்ணளி புரிகின்றார். இறைவன் உலகுக்குச் செய்யும் பேருபகாரம் அழிந்தொழிந்த உலகத்தைத் திரும்பவும் ஆக்கிக் கேவல நிலையில் கிடந்த ஆன்மாக்கள் வாழ்வதற்கு உலகம், உடம்பு, உடம்பின் உட்கருவிகள், போகப் பொருள்கள் இவற்றை அமைத்துத்தருவதே ஆகும்.
உலகம் மாசங்காரத்தால் அழிக்கப்பட்டபோது பராபரையாகிய இறைவி பரனை வேண்டிக்கொள்ளப் பரைக்கு இரங்கிய பரன், அவள் வேண்டுதலின்படி நமக்குத் தனு கரண புவன போகங்களை அளித்து (1) ஆக்கல் (2) அழித்தல் (3) அளித்தல் (4) மறைதல் (5) அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் இனிது நடத்தி வருகின்றான். அவற்றை நடராஜர் திருவுருவம் நன்கு விளக்கும். ஆக்கல் தொழிலை உடுக்கையும், அழித்தல் தொழிலை தீயும், அளித்தல் தொழிலை அபயக்கரமும், மறைத்தல் தொழிலை ஊன்றிய திருவடியும், அருளலைத் தூக்கிய திருவடியும் உணர்த்துகின்றன. இவ்விறைவன் உலகத்தை மாயையிலிருந்து தோன்றச் செய்கின்றான். உலகம் ஒரு பருப்பொருள் (Matter). மாயை ஒரு நுண்பொருள் (Energy) விஞ்ஞானத்தாலும், விஞ்ஞானக்கருவிகளாலும் பருப்பொருளை ஆராய முடியுமே தவிர, நுண்பொருளை ஆராய இயலாது. நுண்பொருளை ஆராய்வதற்குரிய கருவி மெஞ்ஞானம் ஆகும். அழிந்த உலகம் சிதறிச் சிதறிப் பரமானுவாகப் போய்விடுமென்பர் விஞ்ஞானிகள். பரமானுவை நசுக்கிவிட்டால், அது எங்கோ போய்விடுகிறது. அது எப்படி ஆகிறது என்று எங்களுக்கு விளங்கவில்லை என்பது விஞ்ஞானிகளின் கொள்கை. அதனை நன்றாக விளக்குவது சமயம், பருப்பொருள் அழிந்தால் ஒரு நுண்பொருள் ஆகும். Mater energy யாய் மாறும். அவ்வாறு பருப்பொருள் மாய்ந்து போவதை 'மாய்” எனவும் அதிலிருந்தே எல்லாம் ஆகி வருவதால் "ஆ" எனவும் கொண்டு 'மாயா' என்று அந்த நுண்பொருளை (Energy) க் கூறினர். அம் மாயையே உலகம் தோன்றுவதற்கு முதற் காரணமாயிற்று, விஞ்ஞானத்தால் அறிந்து கொள்ள முடியாத இடத்தில் மெய்ஞ்ஞானம் தோன்றுகிறது.
H. (4) 9 */2599Cঃডিয়াক্টোিৰ ।
 
 
 

இறைவன் நிமித்த காரணன், மண்ணிலிருந்து ஒரு தொழிலாளி ஒரு குடத்தைச் செய்கிறான். குடத்திற்கு முதற் காரணம் மண் ஆகும். தொழிலாளி நிமித்த காரணமாகின்றான். தொழில் செய்வதற்கு உதவும் கருவி அல்லது தண்ட சக்கரம் துணைக் காரணமாகிறது. அத்துணைக் காரணத்தையே "பரை' சக்தி எனக் கூறுகிறோம். ஆலயங்களில் சிவலிங்கத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் ஆவுடையாகிய மனோன்மணியும், மஹேஸ்வரனோடு காட்சி அருளும் மகேஸ்வரியும், உருத்திரனோடு விளங்கும் உமாதேவியும் இப்பரையை உணர்த்துகின்றனர். இறைவன் அம்மையப்பராய்க் காட்சியளிப்பதன் கருத்து இதுவேயாகும்.
3. இவ்வம்மையப்பராய்ப் போகவடிவில் இருந்து உயிர்களாகிய நமக்குப் போகத்தைப் புணர்த்துகின்றான். அவன் ஞானாச்சாரியனாய்த் "தகூதிணாமூர்த்தி' என்ற பெயரோடு கல்லால் நிழலில் சின்முத்திரை தாங்கி அருள் புரிகின்றான். சின் முத்திரையின் கருத்து ஆணவம் முதலிய மலங்களிலிருந்து நீங்கி உயிர் இறைவனை அடைந்து ஒன்றி வாழ வேண்டுமென்பதாகும்.
Tgo
ஆணவம் முதலிய பாசங்கள் அனாதியாகவே உள்ளன. அவை இருள்போல நின்று உயிர்களின் அறிவை மறைப்பன, இப் பாசங்கள். கதிரவன் முன் நிற்க ஆற்றாது அழிந்து ஒழியும் இருள்போல இறைவனைச் சென்று அணுகாது. இருள் நம்மை அணுகித் துன்புறுத்துவது போல பாசமும் துன்புறுத்தும். இத்துன்பத்திலிருந்து நீங்குவதற்கு ஏக மார்க்க மாயிருப்பது இறைவனை அடைதலேயாகும். இறைவனை அடையும் வழி
இறைவனை அடைவதற்கென்று நம்முன்னோர் நன்மார்க்கங்கள் நான்கை வகுத்தார்கள். 5yl6Ꮱ60 ] 1 சரியை 2 கிரியை 3 யோகம் 4 ஞானம் எனப்படும்.
3.ff6ău
சரியைத் தொண்டிற்குத் தக்க இடம் ஆலயங்களேயாகும். கோயிலில் அலகிடுதல், மெழுகுதல், பூமாலை கட்டுதல், புகழ்ந்து பாடுதல், திருவிளக்கிடுதல் இவை சரியைத் தொண்டாகும்.

Page 38
பெறுகின்றன. இப்பணிகள் புரிபவர்க்கு ஈசன் தனது உலகத்தில் வாழ்வளிக்கின்றான்.
6rf6ou
இறைவனைத் கும்ப பிம்பங்களில் மலர், மஞ்சனம், அமுது முதலியவைகளைக் கொண்டு பூசித்துப் பஞ்ச சுத்தி செய்து பக்தியோடு வழிபடுவதே கிரியையாகும். இக்கிரியைகளை ஆலயங்களில் என்றும் நடைபெற்றுவரும் பூசையே இனிது விளக்குகிறது. இதனை இனிது நடத்தி வருவோர் இறைவனது பக்கத்து அமரும் பாக்கியம் பெறுவர்.
GufTg, lo
யோகம் எட்டு வகைப்படும். இவ்வட்டாங்க யோகத்தைக் கைக்கொண்டு வாழ்பவர் இறைவனது உருப்பெறுவர்.
ஞானம்
இறுதியான ஞானம் (1) கேட்டல் (2) சிந்தித்தல் (3) தெளிதல் (4) நிட்டை கூடுதல் என நான்கு வகைப்படும்.
விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும், அரும்பு, மலர், காய்கனிபோல் அன்றோ
காட்டுக் களைந்து கல் ஆப்பிநீர் எங்கும் தெ நீர்ச்சால் கரகம் நிறை இல்லம் பொலிய அடு நல்லது உறல் வேண்டு
அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பசுஞ்சா தண்ணிர்ப் பானை, குடம் இவை நிறைய நீர் விளக்கம் பெற, அடுப்பில் தீ மூட்டி அன்றை பொழுதும் நலமாக வேண்டும் என்று நினைப்ப
 
 
 

பராபரமே' என்பர் தாயுமானவர். இந்நான்கு மார்க்கங்களை மேற்கொண்டு ஒழுகின் அவரை ஆட்கொள இறைவனோ, இறைவனது அருள் பெற்றவர்களோ எழுந்தருளுகின்றனர். அவர்கள் நமது பாசங்களை அறக்களைந்து உபதேசம் அருளி உதவுவர். இவ்வாறு குரு அருள் பெற்ற ஆன்மா இருவினை ஒப்பு எய்துகின்றது. அதனைப்பற்றி நின்று மலபரிபாகம் அடைகின்றது அப்போது சத்தி நிபாதம் அல்லது திருவருள் பதிவுபெற்று முத்தியடைகின்றது. முத்தியடைந்த ஆன்மாவுக்குப் பிறவி நோய் இல்லை. இப்பரமுத்திரையை அடையாத ஆன்மாக்கள் பிறந்து இறந்து துன்புறும். இப்பாழ்த்த பிறப்புபை அறுத்திடுவதே மக்களாய்ப் பிறந்தோரின் தக்க நற்பணியாகும். அதற்கெனவே சமயமும், சாத்திர தோத்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கூறியவற்றால் சமயத்தின் சாரம் (1) இறை (2) உயிர் (3) தளை எனும் முப்பொருளில் அடங்கும் எனவும், அம்முப்பொருள் நிலையை நன்குணர்ந்து பாசவயப்பட்ட ஆன்மா அப்பாசத்தை அறக்களைந்து பரமனடி அடைந்து இனிது வாழ்வதேயாகும் எனவும் தெள்ளிதில் விளங்கும்.
3.
0ம்கழிஇ இல்லத்தை ரித்துச் சிறுகாலை ப மலர் அணிந்து ப்பினுள் தீப்பெய்க
V GITT.
ா, வீடு பெருக்கிக் குப்பைகளை நீக்கி; ணத்தால் மெழுகி நீர் எங்கும் தெளித்து, நிரப்பி வைத்து, மலர் சூடிக் கொண்டு, வீடு பொழுதைத் தொடங்குவார்கள், நாளும் வர்கள்.

Page 39
சைவநெறி
1. கீழ்க்காணும் வினாக்ககுக்கு விடை தரு சைவமரபினன் ஒருவன் வலியுறுத்தும் “பசுபதி” என்பது யாது? "சச்சிதானந்தன்' எனும் சொல்லின் டே இறைவனின் மூவகைத் திருமேனிகள் ஐந்தொழில்கள் எவை? ஐந்தொழிலை ஆற்றும் மூர்த்திகள் யா பல வடிவங்களை வழிபடுவது பற்றிச் இறைவனை உருவநிலையில் ஏன் வழி சைவ மரபினரின் தனித்துவம் எது? இறைவனின் எண் குணங்களும் எவை
0.
2. இறைவனின் தனித்துவத்தை அட்டவ்3
இை ஆதியும் அந்தமும் இல்லாதவன்
இறைவனுக்கு ஈடான | ତ୍ରି
தனக்குவமை இல்லாதவன்
LDFTGŪof
முன்னை பழம் பொருட்டு
பின்னைப் புதுமைக்கும்
6ծ) ՑF6):
இறைவன் ஒருவனே என்ற ே
இல
“பசுபதி எனப் ே
பசு என்றால் ஆன்மா
எனவே ஆன்மாக்கள் 9Ꮋ6ᏈᎶᏡᎢᎶᏂᏗ
அன்பே
 
 

GSGOTT GOGODIL
3.
- 'சாந்தையூரான் நக.
கோட்பாடு யாது?
JT(56 uusg5!?
6 TGÖNG?
首? சிவஞானசித்தியர் யாது கூறுகிறார்?
படுகின்றோம்?
2 (இவற்றிக்கான விடைகள் பக். 16ல்) ணைப்படுத்துக.
றைவன்
அவனே பரம் பொருள்
பொருள் ஒன்று இல்லை
தனை
ஒன்று அவன் தானே
க்கவாசகர்
ம் முன்னைப் பழம் பொருளே
பேர்த்தும் அப்பெற்றியனே
மரபினன்
கோட்பாட்டை வலியுறுத்துவன
பாற்றப்படுகின்றான்
பதி 51ರ್ನೆಲ್ಲಿ தலைவன்
ருக்கும் தலைவன் இறைவனாவன்
சிவமாகும்.

Page 40
1. திருக்கேதீஸ்வரம் 2. கம்பர் 4. விஷ்ணு 5. கீரிம6ை 7. i. பாடசாலைகளை ஸ்தாபித்தார்.
i. விபூதி உருத்திராட்டசம் முதலிய சிவசின்னங்கை i. சைவ வினா விடை 1ம், 2ம், பாகங்களை அச்சிட்டு இவை தவிர இன்னும் பல தொண்டுகளையாற்றி 8. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்.
9. 14 ஆகும். 10. திரு. டெ பரிசு பெற்றோர் விபரம் 1D uffig 2D uffig நிஷாந்தினி நித்தியானந்தன் பிரியதர்ஷினி ெ திருஞானசம்பந்தர் வீதி, 3A, றுநீ விமலராசா வி திருகோணமலை. களுபோவில, தெகிவ
போட்டி இல.
1. பிரம்மா - அன்னம், விஷ்ணு-பன்றி 2. பிரம்மாவுக்கு 4. முன்னேஸ்வரம் 5. திருக்கோனே 7. மகா சிவராத்திரி, மாசி, மகம். 8. 133 அதிகாரர் 10. வைகாசி மூலம்
பரிசு பெற்றோர் விபர
ÍtD Lirflag, 2io Lurf gr. இந்துஷா பூணூரீகாந்தன் நி. ஆனந்த 19B, U.C குவாட்டஸ், 92/18, கல்லூ மன்னார் வீதி, குருமன்காடு, கொழும்பு - 13 வவுனியா,
சைவந்தி - ச
தனிப்பிரதி வருடச்
இலங்கையில் - ரூபா 25.00 இலங்ை
இந்தியாவில் - ரூபா 25.00 இந்திய
(இந்திய ரூபா)
ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் பவு
வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரதும் ட
சந்தா அனுப்பப்பட வேண்டிய முகவரி:
C. NAVA
42, Janaki
Colombo -
Sri Lanka.
* Galerriging
(4) اول
jing
 
 
 
 

6 - விடைகள்
3. வேதவியாசர் நகுலேஸ்வரம். 6. மாணிக்கவாசகர்.
ாச் சைவ மக்களை அணியச் செய்தமை. வெளியிட்டமை.
TrIf.
ான்னம்பலம் முதலியார்.
D - போட்டி இல. 6
3D li jifflg ஜகதீஸ்வரன் யோ. சங்கர்
தி, மே/பா நல்லதம்பி, நல்லதம்பி பாதை, 506IT. கோவிற் புகுக்குளம், வவுனியா.
5 — 6) 6ÕDA LAJ,6řT
தனிக்கோவில் இல்லை. 3. திலகவதியார் ாஸ்வரத்தில் பாடப்பட்டது. 6. ஆவணிமூல நட்சத்திரம். பகள். 9. தில்லையில் பாடப்பட்டது.
ம் போட்டி இல. 5
3 D i ffig, _166 கெளசல்யா சிவனேசன், ரி வீதி, 55, குருமன் காடு,
வவுனியா.
ந்தா விபரம்
சந்தா கயில் - ரூபா 250.00 ாவில் - ரூபா 250.00 (இந்திய ரூபா)
ண் 10 அல்லது US $ 15. சைவநிதியின் |ங்களிப்புப் பெரிதும் வேண்டப்படும்.
NEETHAKUMAR, Lane,
04, s

Page 41
திருச் திருஞானசம்பந்தமூர்
திருநீற்று
திரு.
பண் -
மந்திர மாவது நீறு வானவர் மேல சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவ
தந்திர மாவது நீறு சமயத்தி லுள் செந்துவர் வாயுமை பங்கன் திரு .
வேதத்திலுள்ளது நீறு வெந்துயர்
போதந் தருவது நீறு புன்மை தவி ஒதத் தகுவது நீறு உண்மையிலு சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆ
முத்தி தருவது நீறு முனிவரணிவ சத்திய மாவது நீறு தக்கோர் புகழ் பத்தி தருவது நீறு பரவ இனியது சித்தி தருவது நீறு திரு ஆல வாய்
காண இனியது நீறு கவினைத் த பேணி அணிபவர்க்கெல்லாம் பெரு மானந் தகைவது நீறு மதியைத் தி சேனந் தருவது நீறு திரு ஆல வி
பூச இனியது நீறு புண்ணிய மாவ பேச இனியது நீறு பெருந்தவத் ே ஆசை கெடுப்பது நீறு அந்தம தா தேசம் புகழ்வது நீறு திரு ஆல வ
 

笠_ sunth
*சிற்றம்பலம் rத்தி நாயனார் தேவாரம்
றுப்பதிகம்
ஆலவாய்
காந்தாரம்
து நீறு
து நீறு
ளது நீறு ஆல வாயான் திருநீறே.
தீர்ப்பது நீறு ர்ப்பது நீறு ள்ளது நீறு ல வாயான் திருநீறே.
து நீறு
வது நீறு
நீறு பான் திருநீறே.
தருவது நீறு ருமை கொடுப்பது நீறு தருவது நீறு பாயான் திருநீறே.
து நீறு தோர்களுக் கெல்லாம் வது நீறு Tயான் திருநீறே.

Page 42
அருத்தம தாவது நீறு அவலம் அறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அ பொருத்தம தாவது நீறு புண்ணிய திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆ
எயிலது அட்டது நீறு இருமைக்கும் பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தா6 அயிலைப் பொலிதரு சூலத் தால எ
இராவணன் மேலது நீறு எண்ணத் பராவண மாவது நீறு பாவம் அறுப்பு தராவண மாவது நீறு தத்துவ மாவ அராவணங் குந் திரு மேனி ஆல வி
மாலொ டயனறி யாத வண்ணமு மு மேலுறை தேவர்கள் தங்கண் மெய்ய ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தரு ஆலம துண்டமிடற்றெம் ஆல வாய
குண்டிகைக் கையர்க ளோடு சாக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனி எண்திசைப் பட்ட பொருளாளர் ஏத்
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல
●●
பொருள் (4) - அ
gడం
 

|ப்பது நீறு ளிப்பது நீறு
பூசும் வெண்ணிறு ல வாயான் திருநீறே.
உள்ளது நீறு
நீறு
பது நீறு
பாயான் திருநீறே.
தகுவது நீறு து நீறு
து நீறு ாயான் திருநீறே.
|ள்ளது நீறு பது வெண்பொடி நீறு 5வது நீறு ான் திருநீறே.
கியர் கூட்டமும் கூடக்
ய்து நீறு துந் தகையது நீறு
வாயான் திருநீறே.
蟲
10.
»ւo, Gւնrrզshir,

Page 43


Page 44
Regd. No. QD/22/News 2000. 96,635) og Gurg,
என்னும் முகவரியிலுள்ள யுனி ஆர்ட்ஸ் இல்
 

நிறுவனத்தினரால் 48B, புளூமெண்டோல் வீதி, கொழும்பு 13
அச்சிட்டு 2000 05, 14 இல் வெளியிடப்பட்டது.