கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1999.05

Page 1


Page 2
1.
சிவம
6O 6f-6)
பொருளடக்கம்
தலையான மனிதர்.
- ஆசிரியர் . வவுனியா குருமண்காடு காளி அம்பாள் ஆ - கவிஞர் ெ காளியம்பாள் திருப்பள்ளியெழுச்சி.
- வித்துவா
காளியம்மன் பஞ்சகம்.
கவிஞர் ெ
10.
11.
12.
13.
14.
வவுனியா குருமண்காடு காளி அம்பாள் தேவி
தேவார அருள்முறைத் திரட்டு
- உமாபதி
கடவுள்.
- க, சிவபாத
தமிழருச்சனையின் தொன்மை.
- தவத்திரு ச
திருவருட் சக்தி.
Y. - பண்டிதர்
பாடல் அழகனும் ஆடல் அழகனும்,
- முருக வே
திருமூலர் அருளிய முப்பது உபதேசம்.
- சைவநன்ப
திருநீல நக்க நாயனார்.
- சிவ சண்
திருவாசகச் சிந்தனை - திருப் பொன்னூஞ்ச6
- பண்டிதர்
சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
- தா. வீரவ
சைவநீதி இதழில் வரும் கட்டுரைகளிலுள்6 கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளா

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SSSS 1
லய வரலாற. ச. நரேந்திரன் . 2
ன் வ. செல்லையா . 4
F. நரேந்திரன் . 6
பஸ்தான வருடாந்த விசேட தினங்கள்.
சிவாசாரியார் திரட்டியது . 8
நசுந்தரம் B.A. - - - - - - - - - - - - - - - - - - - - - - 9
ாந்தலிங்க இராமசாமி அடிகளார் . II
வ. நடராஜா . . . . . . . . . 15
'பரமநாதன் S S S S S S SS SS SS SS SS SS S S S S L S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S SS SS SS S SS S S S S Ι7
1ணி ந. செல்லப்பா . 2O
முகவடிவேல் .. . . . . . . . . . . . . . . . . . . 23
Ꭰ.
சி. அப்புத்துரை . 26
(5 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 27
ா கருத்துக்களுக்குக் வர் - இதழ் நிர்வாகிகள்

Page 3
9.
ifs) Lot
"மேன்மைகொள் சைவநீதி 6
GEFG
மலர் 3 பிரமாதி வைகாசி சைவசமய வளர்ச்சி கரு
கெளரவ ஆசிரியர் சைவப்புலவர்மணி வித்துவான் திரு. வ. செல்லையா
நிர்வாக ஆசிரியர் திரு.செ. நவநீதகுமார் 42. ஜானகி லேன், கொழும்பு 04
பதிப்பாசிரியர் பொ. விமலேந்திரன்
மதியுரைஞர்
பண்டிதர் ச. சுப்பிரமணியம்
திரு. பொ. பாலசுந்தரம்
திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா
திரு. கு. மகாலிங்கம்
திரு. ஏ. கந்தசாமி
நாம் உயர்ந்தவ உருவத்தால் உயர்ந்தவ சிறந்தவரா? “பொருட் ( அப்படியானால் வீரம் மி பெரியவரா? இல்லை; இ “தொண்டர் தம் பிராட்டியார். பாடல் இருக்கின்றன. அவற்ை கொண்ட திருத்தொன் அடியவர்கள் (தொண்டர் பெரிய புராணம். அவ நினைத்தபடி இருப்பார் அன்பினிற்கும்பிடலேய பெற்ற அருளாளர்கள்.
செல்வங்கள் எல் மக்களிடத்து மாத்திர செல்வத்துட் செல்வம்.”
“தாமார்க்கும் குடி குடியல்லோம்” என்ற பு நோயரா யாவுரித்து சடைக்கரந்தார்க்கன்பா என்பார்.
அது பெரிது இது மனத்தோடு கண்களில் காதலாற் போற்றி வழிட மனிதர்கள் ஆவர்.
 

பம் பிளங்குக உலகமெல்லாம்
நீதி
தி வெளிவரும் மாத இதழ் இதழ் 2
தலையான மனிதர்
அல்லது முதன்மையானவர் என்று யாரைக் கருதலாம். அல்லது பருத்தவர் பெரியவரா? பணம் படைத்தவர் செல்வம் பூரியார் கண்ணும் உள' என்பர் வள்ளுவர். குந்தவர் பெரியவரா? இல்லை; கல்வியிற் சிறந்தவர் இவ்வகையில் உள்ளவர்கள் தலையானவர்கள் அல்லர்.
பெருமை சொல்லவும் பெரிதே' என்றார் ஒளவைப் களின் எண்ணிக்கையாற் கூடிய பல புராணங்கள் ற விடக் குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் ண்டர் புராணம் பெரிய புராணம் எனப்படுகின்றது. கள்) பெரியவர்கள். அவர்கள் வரலாறு கூறுவதால் அது ர்கள் ஈரநெஞ்சினர். எப்பொழுதும் இறைவனையே கள். தமக்கென எதையும் வேண்டாதவர்கள். கூடும் ன்றி வீடும் (முத்தி) வேண்டாத தன்மையர் இறையருள்
லாவற்றிலும் சிறந்தது அருட் செல்வம். இது மேல் ம் உண்டு என்கிறது திருக்குறள் "அருட்செல்வம்
யல்லாத் தன்மையான சங்கரனுக்கல்லாது யாமார்க்கும் அப்பரடிகள் "அங்கமெல்லாங் குறைந்தழுகு தொழு த் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் ாகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே'
பெரிது என்று கழிவிரக்கம் கொண்டு கூறாது கனிந்த ஆனந்தக் கண்ணிர் சொரியத் தூயவனை இறைவனை ாடு செய்பவர்கள் மனிதருள்ளே தலையான உயர்ந்த
அனுசயப்பட் டதுவிது வென்னாதே கனிமனத்தொடு கண்களு நீர்மல்கிப் புனித னைப்பூவனூரனைப் போற்றுவார் மனித ரிற்றலை யான மனிதரே

Page 4
C
GuGagniiuII குருமண்
Ցiյնiյա
- கவிஞர் செ. நரேந்
தாயன்புக்கு நிகரானது உலகில் வேறொன்றுமில்லை. தந்தையிடத்தில் மைந்தன் நெருங்கி உறவாடுவதில்லை. ஆனால் தாய்க்கு நன்று செய்தாலும் தீது செய்தாலும், உயர்தன்மை பெற்றாலும் தாழ்ந்த நிலையெய்திடினும் தாயின் அன்புக்கு மகன் எஞ்ஞான்றும் தூர நிற்பதில்லை.
தாயினும் மேலான அன்னை பராசக்தியை நாம் வழிபடுவது நமக்கு மிகுந்த இன்பத்தையும் அன்னியோன்யத்தையும் தருகின்றது. தாயை
வேண்ட உபசாரம் ஏதும் தேவை இல்லை அல்லவா?
வவுனியா குருமண் காட்டில் கோவில் கொண்டிருக்கும் அன்னை காளியம்பாள் சகல குணபூஷணியாய் இருந்து நல்லருள் பாலிப்பதை யாமெல்லாமறிவோம்.
திருவாலங்காட்டிலே சிவபிரானோடு நடனமாடிய காளி அம்பாள் குருமண் காட்டில் நடேசப் பெருமானுடன் வீற்றிருப்பதால் சாந்த சொரூபியாகத் திருவருள் பாலிக்கின்றாள் என்பதை இத்திருக்கோவிலில் கூடும் பக்தர்களின் தொகை யிலிருந்தே அறியலாம்.
கருங்கல் ஒன்றில் தோன்றிய வணக்கம் கவின்மிகு கலைக் கோவிலாகியது. அதுவும் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களில் என்றால்
 

2) காடு காளி அம்மன்
GIUJ GUIII -
திரன் - குருமண்காடு -
அதிசயந்தானே! அடியார்களின் அன்புக் கண்ணிர் கலந்த சாந்துக் கலவையினால் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது என்றால் மிகையாகாது. இக்குறுகிய காலத்தில் அரண்மனை போன்ற அழகுமிகு பொற் கோவில் உருவாகியது.
வேம்பாடங்கொடி படர்ந்த அனிஞ்சில் மரமொன்றின் அடியில் கருங்கல்லில் தோன்றியவள் இக்காளி அம்பாள். இம்மரத்தடிப் புற்றில் வெண் நாகம் ஒன்றும் காணப்பட்டதை அடியார்கள் கண்டு பால்வார்த்து நாகதம்பிரான் வழிபாட்டையும்
ஆரம்பித்தனர்.
1988 ஆம் ஆண்டுப் பகுதியில் வந்த இந்திய இராணுவத்தினரின் முகாம் இச்சூழலில் இருந்ததால் அவர்கள் இம் மரத்தோடு சேர்த்து ஒரு கொட்டில் அமைப்பித்து வணங்கிச் சென்றனர். 1990 இல் மக்கள் இடம் பெயர்ந்து 1992 இல் திரும்பக் குடியேறிய காலத்தில் யாழ் நகரிலிருந்து இடம் பெயர்ந்த மக்களும் இவ்வூர் வாசிகளும் சேர்ந்து இக் கொட்டிலாகிய கோவில் புனரமைக்கப்பட்டது. குறிப்பாக வயது முதிர்ந்த பெண்களே இக்கோவிலைப் பராமரித்துப் பொங்கல் முதலியன செய்து வழிபட்டனர். அடியார்களின் தொகை பெருக ஆலய பரிபாலன
சபையொன்றை அமைக்க வேண்டிய அவசியத்தை
இப்பெண் அடியார்களே வற்புறுத்தித் திருவாளர் தா. வீரவாகு அவர்களின் தலைமையில் ஒர் பரிபாலன
irażotri இவ்வுலகமெல்லாம் ム)

Page 5
சபை அமைக்கப்பட்டு எசயலாளர் பதவியை திருவாளர் இ. கிருபாமூர்த்தி வகிக்க திரு. செல்லையா சாமியார் என்பவர் பூசகராக நியமிக்கப் பெற்று நித்திய
பூசைகள், பொங்கல் என்பவைகள் நடைபெற்றன.
மக்கள் இடப் பெயர்வால் குருமண்காடு சனம் மிகுந்த இடமாக மாறி, மாட மாளிகைகள், வியாபார ஸ்தலங்கள், பாடசாலை முதலியன பெருகி வளம் பெறத் தொடங்கிற்று. மக்கள் வரவால் கோவில் வருமானம் மிகுந்து வர, அன்பர் ஒருவரால் தரப்பட்ட காளியம்மன் சிலையுடன் பரிவார மூர்த்திகளும் பிரதிஸ்டை செய்யப்பட்டுச் சிவபூரீ சரண்யபுரீஸ்வரக் குருக்களால் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அன்றிலிருந்து சிவபூரீ சுந்தர சர்மா நித்திய பூசகரானார். அதன் பின் 10.08.96 இல் யாழ் பன்னாலையைச் சேர்ந்த சிவபூரீ சபாரத்தினக் குருக்கள் அவர்கள் பிரதம குருவாகப் பணியாற்றி இவ்வாலயத்தின் பூசை முறைகளை ஆக்கித் தந்ததுடன் ஆலய வளர்ச்சிக்குப் பெரிதும் வழிகாட்டியாயுமிருந்தார். இவர் காலத்தில் முதலாவது மகோற்சவ விழா ஆரம்பிக்கப்பட்டு ரதோற்சவமும் நடை பெற்றது.
23.01.97 இல் பாலஸ்தாபனம் செய்யப் பெற்று புதிய ஆலயத்திற்கு அத்திவாரக்கல் மேற்படி குருக்கள் அவர்களின் அனுசரணையுடன் நாட்டப் பெற்றது. இதன் பின் இவர் இளைப்பாறிச் சென்றார்.
ஒரு வருட காலத்திற்குள் பரிபாலன சபைத் தலைவர், செயலாளர் இருவரினது இடைவிடா முயற்சி காளி அம்பாளின் கருணையால் மிளிர, வேதாகம சிற்பசாஸ்திர முறை பிறழாது கலை நுட்பத்தினோடும் அழகு மிகு ஒவிய, சிற்பங்களோடும்
 
 

D
வனப்பு மிகு காளி அம்பாள் ஆலயம் உருவானது. பரிவார மூர்த்திகளான விநாயகர், வள்ளிதேவயானை
சமேத முருகன், பைரவர், நவக்கிரகாதியர், ஸ்தம்பப்
பிள்ளையார், ஸ்தம்ப சிம்மம், பலிபீடம், கொடித் தம்பம்
முதலியவற்றுடன் மணிக் கோபுரம், வசந்த மண்டபம்
என்பனவும் அமைக்கப்பட்டன. நடேசப் பெருமானுக்கு ஒரு சபா மண்டபம் அமைத்து ஆடற் பெருமானையும் அழகுற அமைத்துள்ளார்கள்.
கோவில் எந்நேரமும் துப்பரவாக இருப்பது
போற்றற்குரியது.
இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் 7.6.98
இல் சிவபூீ சாம்பசிவ சோமஸ்கந்தக் குருக்கள்
தலைமையில் கிரியா நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. 20.05.99 இல் ஆரம்பமாக விருக்கும் மகோற்சவம் வைகாசிப் பூரணையில் தீர்த்தோற் சவத்துடன் பூர்த்தியாகும். காளிதேவியின் கருணைத் திருவுலாவைக் கண்டு களித்து, கவலை நீங்கி
வாழ்வோமாக.
"நாரணன் நிரஞ்சனொடு வணங்கியேத்த
நலிவுற்ற தேவர் குறைதீர்த்த தாயே
காரணங்களில்லாத கருணையற்ற
கஷ்டங்கள் படுவோரை யறிவாயம்மா
பாரங்கொல் இது உனக்கு பஞ்சாய்ப் போக
பாருந்தன் கருணை விழிதன்னாலின்று
காரங்கொள்/இராச காளியம்மாநீயும்
கவலையது நீத்தெம்மை இரட்சிப்பாயே"
(கும் - மலர்)

Page 6
C
A.
- வித்துவான் வ
கணபதி காப்பு
திருச்சிற்றம்பலம்
செந்திருவும் கலைமகளும் சேர்ந்து வைகும்
செம்மையுறு வவுனியா நகரின் கண்ணே சிந்தைதொடும் பொழில்களொடு வாவி குழ்ந்த
சீர்குருமண் காட்டிற் புற்றிடங் கொண்டுள்ள எந்தாயாம் காளிபள்ளி யெழுச்சிபாட
ஏதமுறாதினிது நிறை வாக்கும் வண்ணம் புந்தியுறை யானைமுக வேளின் பாதம்
போற்றுவன்நான் காப்பதவர் கடனேயன்றோ
நூல்
போற்றியெம் அருள்நிதியாகிய பொருளே
பொழுது புலர்ந்ததுன் அடியிணைமலரால் ஏற்றிநின்திருமுகச் சோதியைக்கான
இனியநல்லடியவர் வாயிலில் உற்றார் நாற்றிசையும் புகழ் வவுனியா நகரில்
நலம் பொலி குருமண் காட்டிடைவைகும் ஏற்றரிக் கொடியுடைக் காளியம்பாளே
எந்தாயே பள்ளி யெழுந்தருளாயே!
பருதியிந் திரன் திசைத் தோன்றினன் வானம் பலபல வண்ணங்கள் காட்டிட இருளும் துரிதமொடகன்றது வாவியிற் கமலத்
தூமலர் விரிந்திடக் காவிகள் கூம்பக் கருநிற அறுபதம் மூசின நெற்போர்க்
களம்மிகு குருமண் காட்டினில் தெய்வ அரவுறை புற்றிடங் கொண்ட பிராட்டி
அம்பிகையே பள்ளியெழுந்தருளாயே!
 

6ffubur ரியெழுச்சி
1. செல்லையா -
கூவின கோழிகள் சிறகுகளடித்துக்
குருகினம் பலவும் குரலொலி காட்டின கோவிலின் மணியொலி கேட்ட மெய்யடியார்
குழுமினர் வந்துநின் வாயிலின் கண்ணே ஆவலின் நின் திருமுகத்தினைக் கானும்
அமைய மிது வெனத் துடித்து நிற்கின்றார் காவுறு வவுனியாக் குருமண் காட்டுறை
காளியம்மே பள்ளி யெழுந்தருளாயே!
மணியொடு சங்குகள் ஒருபுடை யொலிக்க
மறையொலிதிருமுறை ஒலியும் எழுந்தது அணிநடை மங்கையர் நடையொலி பாடி
ஆடுநர் அரவமும் கூடிய அன்பில் பணிபவர் சிரமிசைக் கைகுவித்துனது
பதமலர் தொழமிகு பரிவொடு நின்றார் அணிபெறு குருமண் காட்டிடை வைகும்
அம்பிகையே பள்ளியெழுந்தருளாயே!
எங்குமெப் பொருளிலும் இருந்தருள் கின்றனை என்றுமுள்ளாயென ஏத்துநின்னடியார் மங்கல கிதங்கள் பாடியாடுதல்லால்
மாரியம்மேநினைக் கண்டவர் கானோம் பொங்கும் பல் வளமுடை வவுனியா நகரில்
புனித நற் குருமண் காட்டிடை வைகும் அங்கயற் கண்ணியே காளியே அம்மே
அருள் செய்யப் பள்ளி எழுந்தருளாயே!
இப்புவி வாழுநர்நின்னையேநம்பி
ஏத்துவர்நீர்மலர் கொண்டு தோத்திரங்கள் செப்பி நெக்குருகி மெய் பொடித்திட வியர்வை சிந்திடு மடியவர் வேண்டு பேறளிக்கும் ஒப்பிலாக் கருனையுடைய வீர மாகாளி
உயர்வுறு குருமன் காட்டிடைக் கோயில் புற்றிடங் கொண்டனை புனிதருக் கருளும்
பொன்னே திருப்பள்ளி யெழுந்தருளாயே!

Page 7
இதுமகா காளி எம்பெரும் பிராட்டி
இஃதவள் திருவுரு எண்மிகு நம்பித் துதி செயும் அடியவர்க் கன்றியல் லார்க்குச்
சொப்பனத்திலுந் தோன்றா யெமக்கினிய கதிதரத் திருவுளங் கொண்டு வவுனியா
கடிநகர்க் குருமண் காட்டிடைப் புற்றில் இதமுடன் எழுந்தருள் பாலிக்கும் அம்மே
இனியவளே பள்ளி யெழுந்தருளாயே!
ஆதியும் அந்தமும் நடுவுமில்லாதாய்
அடியவர்க் கெளியையாய் அணுகிடும் பொருளே ஒதிமுற்றாயுணர்ந் திடவொனாத் தாயே
உலகெலாம் ஆக்கியும் காத்தும் கரந்திடும் | சோதியே வவுனியாக் குருமண் காட்டினில்
துலங்கு புற்றிடங் கொளுஞ் சுந்தரீ சிவனார் | பாதியே அடியோம் பரிந்தழைக் கின்றோம்
பார்த் தருள் பள்ளி யெழுந்தருளாயே!
முதலாம் சைே சிவ மூல ம 1. சைவ சமயிகள் நியமமாகச் செபிக்க வே
பூரீ பஞ்சாக்ஷரம். 2. பூனி பஞ்சாக்ஷர செபஞ்செய்தற்கு யோக் மதுபானமும், மாமிசபோசனமும் இல்லாதவராய், ஆ 3. பூணூரீ பஞ்சாக்ஷரத்திலே எத்தனை உருசெ நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நிய 4. எந்தத் திக்கு முகமாக இருந்து செபித்த6 கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இ 5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் டெ 6. எப்படி இருந்து செபித்தல் ஆகாது?
சட்டை இட்டுக் கொண்டும், தலையிலே வேட்டி கட்டி கொண்டும், கௌபீனந் தரியாமலும், வேட்டி தரியா செபித்தல் ஆகாது. 7 செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே சிவபெருமான். இடத்திலேயே அழுந்திக் கிடத்தல் ே 8. நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும் மற்றைய எத்தொழிலைச் செய்யும் பொழு உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிக 9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வே. வேறு ஒன்றிலும் பற்று வையாது சிவபெருமான் இடத் பூரீ பஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்
تھی۔
 

விண்ணுறை தேவரும் நண்ணுதற்கரிய
மேதகு தேவிநீ நம்மிடந்தேடி மண்ணிடை வந்தெமை வாழ்விக்க நின்றனை
மாண்புறு கோலங்கள் காட்டியெந் நாளும் கண்ணிடையே நின்று களிதருந் தேனே
கவினுறு வவுனியாக் குருமண் காட்டில்யாம் பண்ணிய தவப் பயனாலெழுந் தருளும்
பார்வதியே பள்ளி யெழுந்தருளாயே!
மானிடராய்ப் பிறந்தோர்கள் ஈசன்
மலரடியைச் சேவிக்கும் பேற்றினாலே ஊனுடலிற் போயுழல்வார் பூமியிற் போய்
உயர்ந்த மானிடமெய்தா தவமே என்று வானிலுறு தேவர்களும் வாயூ றெய்த
மங்கையருக் கரசியே எமை வாழ்விக்க கானுயரும் குருமண் காட்டினிலே வைகும்
காளியம்மே பள்ளி யெழுத்தருளாயே!
திருச்சிற்றம்பலம்
வ வினாவிடை
ந்திர இயல் ண்டிய சிவ மூலமந்திரம் யாது?
கியர் ஆவார் யாவர்? சாரம் உடையவராய், சிவ தீகூைடி பெற்றவராய் உள்ளவர். பித்தல் வேண்டும்?
மமாகச் செபித்தல் வேண்டும்.
ல் வேண்டும்?
ருந்து செபித்தல் வேண்டும்.
அடக்கி, இடைத் தொடையின் உள்ளே வலப்புறங்காலை பாருந்த நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.
க் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் மலும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டுஞ்
அழுந்திக் கிடத்தல் வேண்டும்?
வண்டும். , இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், ழுதும், மனத்தை எதிலே பதித்தல் வேண்டும்? 5ளிலேயே மனத்தைப் பதித்தல் வேண்டும்.
ண்டும்? திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும், தல் வேண்டும். - பூரீலழறி ஆறுமுகநாவலர் -

Page 8
256fi Jib D6
- கவிஞர் செ.
1. கங்கைமதி தங்குசடை யுங்கமல மங்கையுயர்
கஞ்சமலர்தும்பையொரு கொண்டையி லணிந்து
சங்கைசெறிவண்புலி யுரித்தரை போர்த்துத் தங்குமர வம்புனையுஞ் சங்கரனோ டுண்டு
துங்கநட னம்புரியு மங்கைதிரி சூலி
சுந்தரிசவுந்தரிதுரந்தரி பதத்தை
இங்கிதமு டன்பணிய வென்றுமருள் மேவு
மின்பமுறுதும்பிமுக வன்துணைய தாமே.
2. வண்டிசைகள் கண்டுகுயில் நின்றிசைகள் பாட
மண்டலம திர்ந்திடவ லம்புரிமு ழங்க
வெண்டிசையிலுள்ளவர்கள் நின்றுமலர்தூவ
வீசனுட னேதில்லை யம்பலந் தன்னில்
அண்டருட னேமுனிவர் தொண்டர்கள் துதிக்க
அன்பினுடன் வாணர்கை மத்தளமு ழங்க
தண்டையொடு கிண்கிணிசி லம்புநடமாடுஞ்
சக்திமா காளிபதம் நித்தமய ரேனே.
3. அயிராணி திருமாது அயிலோக தேவி
அன்னபரிபூரணி ஆனந்த ரூபி
பெய்யுரை விசைகள் பாடவே சுடலை தன்னில்
பிரியமுடனுரியநட மானது புரிந்த
LLLLSSSLLS SSSLSSS LSSSLLSSLLSSLSLSSSLLLLSLSSLS L SLSS0LS S LSLSSS LSSSLSLSSSSYSSSSSSS0SSSLSLSS SS SS SS SS SSLSSS LS LLL
S SS SS SSSSS SLS SSS SS SS SS SS SS SS SSSS SS SS SS
 
 

ன் பஞ்சகம்
நரேந்திரன் -
பயிரவிசெழும்பவள வாயிதழ் முக் கண்ணி
பலகலையி னொளியனைய வகிலமுழுதுடையாள்
செயில்மருவுமடியவர்கள்பிணிதொலைத்தருளவரு
தேவிமா காளிபத மேதுதி செய் வோமே.
நித்தபரிபூரணி சத்துருசங் காரணி
நிற்குமருள் பாகரி சற்குருத யாபரி
உத்தமவு தாரணி சக்திசிவ நாரணி
உற்றபரிபூரணி முத்திதரு காரணி
வித்தகவினோதரி மத்தணிம னோகரி
வெற்றிகிரு பாகரி புத்திதரு பூரணி
சுத்தமுயர் சூரசங் காரியோங் காரி
தோகைமா காளிபத மேதுதி செய்வோமே.
ஆதியபிராமிகெவு மாரிதிரி சூலி
அரலோக பரலோக ஆனந்த ரூபி
சோதிமகா தேவிமா காளிரண சூலி தோடவிழ நிர்த்தருட னாடுபர தேவி வேதனைகள் நோய்பிணிகள் தீரவரு மாரி
மேவரிய பேச்சியென் தாயனைய சக்தி
பாதமல ரேதுணைய தாகவருள் தருவாய்
பாரிலுயர் வீரபத் திரகாளித் தாயே.

Page 9
வவுனியா, குருமண் தேவஸ்தானம் வருட
சித்திரை 1. 14. O4.99
17. 30.04.99
25. O8. O5.99
வைகாசி
6. 20. O5.99
12. 26. O5.99
13. 27. O5.99
14. 28. O5.99
15. 29. O5.99
15. 29. O5.99
18. O1. O6.99
ஆணி 7. 21.06 99
7. 21. O6.99
월, 14. 20. O7. 99
26.11. O8.99
28.13. O8.99
ஆவணி 3. 20. O8.99
8.25. O8.99
27. 13. O999
புரட்டாதி 7. 24. O9.99
23.10.1O. 99
புதன் - @១៨r@fi
சனி -
வியாழன்
புதன் -
வியாழன்
G66TG -
சனி
இரவு -
செவ்வாய்
திங்கள் -
திங்கள் -
புதன் -
வெள்ளி -
புதன்
GGuGrG = ஞாயிறு
வருடப்பிறப்பு
- சித்திரா பூரணை விரதம்,
சித்திரைக் கஞ்சி நடேசர் அபிஷேகம்
து வ ஜா ரோ க ண ம் (கொடியேற்றம்) வேட்டைத் திருவிழா மாலை 4 மணி சப்பறத் திருவிழா இரவு 8 மணி தேர்த் திருவிழா காலை 8 மணி
- தீர்த்தத் திருவிழா காலை
9 மணி துவஜ அவரோகணம் - (கொடி இறக்கம்) பூரணை விரதம் (வைகாசி விசாகம்) பைரவர் பொங்கல்
ஆனி உத்தரம் நடேசர் அபிஷேகம்
செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலப் பூஜை ஆடி அமாவாசை விரதம் அபிஷேகம்
- ஆடிப்பூரம் அபிஷேகம்
ஊஞ்சல்
வ ர ல சஷ் மி விர தம் திருவிளக்குப் பூசை
- நடேசர் அபிஷேகம்
விநாயகர் சதுர்த்தி விரதம்
நடேசர் அபிஷேகம்
- நவராத்திரி விரத ஆரம்பம்
 

ÈHI ÈHITGlif
அம்Uாள்
ாந்து விசேட தினங்கள்
ஐப்பசி 2. 19, 10. 99 G)g-616)JfTuÜ
2. 19.10.99 செவ்வாய்
21. 07.199 ஞாயிறு -
21. 07.199 ஞாயிறு -
22.08.11. 99 திங்கள்
27. 1311. 99 முனரி -
கார்த்திகை 6. 22.11, 99 திங்கள் -
8. 24. 11.99 புதன் 27.13.12.99 திங்கள் 28. 14. 12. 99 G)F33Tu
மார்கழி 4. 1912, 99 ஞாயிறு -
7. 22.12.99 புதன் -
8, 23:12, 99 வியாழன் -
தை 1. 1501-2000 சனி -
7, 21.01.2000 வெள்ளி -
LDITGA 6. 1802-2000 Golgiraff
7. 1902-2000 groof -
21. O403.2OOOgEgof
பங்குனி 7. 20032000 திங்கள்
7. 20032000 திங்கள் -
விஜயதசமி (வாழை வெட்டு, காலை 8 மணிக்கு கேதார கெளரி விரத ஆரம்பம்
g/L DIT GJIT GOD AF விரதம் தீபாவளி
கேதார கெளரி விரத
(LPL9-6)
- ஸ்கந்த ஷஷ்டி விரதம்
ஆரம்பம் ஸ்கந்த ஷஷ்டி விரதம்
(LPL-6)
சர்வாலயதீபம் - பூரணை விரதம்
- விநாயக விரதம் ஆரம்பம் - விநாயக விரதம் முடிவு
திருவெம்பாவை ஆரம்பம்
சுவர்க்க வாயில் ஏகாதசி விரதம் பூரணை விரதம் - இரவு நடேசர் அபிஷேகம் திருவெம்பாவை முடிவு
 ைத ப் பெ ா ங் க ல் அபிஷேகம் பூஜை தைப்பூசம் அபிஷேகம்
பூஇை
- நடேசர் அபிஷேகம்
பூரணை விரதம் மாசி மகம், அபிஷேகம் தீர்த்தம் திருவிழா காலை 9 மணி
- மகாசிவராத்திரி விரதம்
- பங்குனித் திங்கள்
4 கிழமை அபிஷேகம் பங்குனி உத்தர உற்சவம்

Page 10
Ο Ο. O Ο O O O O O O O O Ο
2 LO/T 1666/stafssfu/T
(656).JTJ eleB6ir
நூல் விஏ
T
குறள்வெ
அருண்முறைத்திரட்டுரையை கரிமுகவன் பேரருளே காப்பு
தேவார அருள்முறை என்ற சொற்றொடர், தேவா தொகையாய் விரியும். தேவாரம் என்ற சொல் தே + ஆ) (சிவபெருமான்), ஆரம் - மாலை, அருள் - சிவபெருமானி 0 தேஅபூரம் என்பது கடவுளாகிய சிவபெருமானுடைய (திருவடிச திருநாவுக்கரசு அடிகள், சுந்தரமூர்த்தி அடிகளாகிய சைவ ச O அன்பு ஆகிய நாரிலே, தொடுத்து, ஏத்துரைகளாகச் சிவபெரு அணியப்படும் பூமாலைகள் போன்று இனிமை பயத்தலின் தங்களுடைய தூய உள்ளத்தில் விளங்குகிற சிவபெருமா6 O உலகமக்களுடைய உள்ளத்தலே அருள்ஒளி விளங்கும் பொ பாட்டுக்களைச் சிவனுரை தங்களுரையாகப் பாடியிரு திருமுறைகளாக விரிந்திருக்கிற797 தேவாரப் பதிகப் பாட்டு கு உமாபதி சிவம், 99 தேவாரப் பாட்டுக்களைத் தேர்ந்து திரட்டி பத்துத் தலைப்புக்களின் கீழ் வைத்துச் சிவ அன்பர்கள் எளி இ உய்யும் பொருட்டு ஒரு நூலாகச் செய்திருத்தலால், அந்நூல்
பெயரால் வழங்கப்படுகின்றது.
உமாபதி சிவாசாரியார், தாம் மெய்கண்டதேவ ரிய UTipu சிவப்பிரகாச நூலைப்போல, திருவருட்பயன் நூ6ை சித்தாந்த உண்மைகளை 1-வது “பதிமுதுநிலை” முதல் தேலைப்புக்களின்கீழ் வைத்து ஒவ்வொரு தலைப்புக்கும்
கூறியருளினார். இந்த நூறு குறட்பாக்களும், திருக்கு O எளியனவாயுள்ளன. அப் பத்துத் தலைப்புக்களில் O தொகுக்கப்பட்டிருக்கிற 99 தேவாரப் பாட்டுக்கள், தி துணையாயுள்ளன. அங்ங்ணந்துணையாயுள்ள 99 தேவாரப் 0 அடங்கியுள்ள சைவசித்தாந்த உண்மைகளை அறிந்துணர்ந்: விளக்கவுரையும் எழுதியுள்ளேன்,பதவுரையை மாத்திரம் நேராே விளக்கமும், விளக்கவுரையில் வேண்டுமிடங்களில் அப்டெ O மேற்கோளுடன், சித்தாந்த உண்மைகளும் அடங்கியுள்ளன அறிந்துணர்ந்து, அன்பினால் மனங்கசிந்துருகி அடிக்கடி ஒ O நீக்குதல் போல, மனத்திலுள்ள மலமாசினைச் சிறிது சிறித O பெருக்கிக் கொண்டேவரும் பெருந்தகைமையை உடையது.
- மா. வே. நெல்லைய
இவம் சக்தி தன்னை ஈனும் சச்
 
 

ர் திரட்டி அருளிய மறைத் திரட்டு .."
யன்பதனாற் செப்பக்
. ாரமாகிய அருள்முறை என இருபெயரொட்டுப் பண்புத் O
ாம் என்ற இரண்டு சொற்களாலாகியது. தே-கடவுள் இ னின்றும் வேறாகாத அருளாற்றல்; முறை - புத்தகம். ளிற் சாத்தப்படும்) பூமாலை. திருஞானசம்பந்த அடிகள், 9 மயாசாரியர் மூவரும் சொற்களாகிய பூக்களைத் தங்கள் மான்மேற்பாடின பாடல்கள், அவனுடைய திருவடிகளில் தேவாரம் எனப்பட்டன. மூன்று சமயாசாரியர்களும், O னது அருளிலே முற்றுந் தோய்ந்து அவைகளை ஒதும் ருட்டு, அவர்கள்மேல் வைத்த அருளாலே அத்தேவாரப் 0 3த்தலின், அவை அருள்முறை எனப்பட்டன. ஏழு க்களிலிருந்து, சந்தனாசாரியர் நால்வரி லொருவராகிய O , அவைகளைத் தாம் பாடிய திருவருட்பயன் நூலினது O தில் ஒதிச் சித்தாந்த உண்மையை அறிந்து உணர்ந்து ல் உமாபதிசிவம் தேவார அருள்முறைத்திரட்டு என்னும் 9
பற்றிய சிவ ஞானபோத முதனூலுக்குச் சார்பு நூலாகப் O Uப் பொதுஇயல், சிறப்பியல் என்று வகுத்துக்கூறாது, கு , 10 -வது அணைந்தோர் தன்மை வரை, பத்துத்
பத்துக் குறட்பாக்களாக நூறு குறட்பாக்களைக் ே றளின் பாக்கள் போல் ஒதி நெட்டுருப் பண்ணுதற்கு ன் கீழும் தேவார அட்டவணையிற் குறித்தபடி ருவருட்பயன் நூற்பொருளை அறிந்துணர்தற்குத் து பாட்டுக்களையும் மக்கள் ஒதிப் பொருளறிந்தும் அவற்றில் தும் நற்பயனடையுமாறு என்னாலியன்றவரை பதவுரையும் O பாதினாற்பொழிப்புரையாகும் பதவுரையிற்சொற்பொருள் ாருளை விரித்துரைக்கும் விரிவுரையும், இயைபுடைய 1. தேவாரப் பாட்டுக்களை அவற்றின் கருத்துக்களை இ தலானது பாசிபடு குளநீரில் கல்லெறிதல் அப்பாசியை ாய் நீக்கி, அதன் கண் மெல்ல மெல்ல அருளொளியைப் ே எவரும் தமது அநுபவத்திற் கண்டறியும் உண்மையிது. O
ப்பபிள்ளை பி.ஏ-
நன்றி. தேவார அருள்முறைத் திரட்டு

Page 11
&SL
- சு. சிவபா
அண்டப் பகுதிமரி தறுண்டைப் பிறக்கம் அளப்பருந்தன்மை வளப்பெருங் கரட்சி ஒன்றானுக் கொன்று நின்றெழில் பகரின் நரற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறிய வாகப் பேரிமோன்,
- திருவண்டப்பகுதி
ஆகாயத்தை இராக்காலத்திலே அண்ணாந்து பார்த்தால் அதிலே எண்ணில்லாத நட்சத்திரங்கள் மின்னி விளங்குவதைக் காணலாம். இந்த நட்சத்திரங்கள் வெகு தூரத்திலே இருத்தலாற் சிறியவைகளாகத் தோன்றுகின்றன. அவைகள் உள்ளபடி மிகப்பெரியவைகளேயாம். சூரியன் பூமியிலும் பதின்மூன்று லட்சம் மடங்கு பெரியது. எல்லா நட்சத்திரங்களும் சூரியனிலும் பெரியவைகளே. ஆதலால் இந்தப் பூமியையும், சூரியனையும், எண்ணில்லாத நட்சத்திரங்களையும் மாயையிலிருந்து உண்டாக்கிய கடவுளுடைய
பெருமையை யார்தான் சொல்ல வல்லவர்
இந்த அளவில்லாத பெருமையை உடைய
கடவுள் அன்பையே வடிவமாக உடையவர்.
அன்புசிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரு மறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே."
ஆதலால், அவர் நம்மிடத்திற் கொண்ட அன்பும் அளவில்லாததாகவே இருக்கும். பெற்ற தாயானவள் குழந்தையிடத்தே எவ்வளவு அன்புடையவளாய்
 

வுள்
35355 DUID B.A -
இருக்கிறாள். கடவுளுடைய அன்பு தாயினுடைய அன்பினும் கோடானுகோடி மடங்கு அதிகமாய் இருக்குமல்லவா? தாயைக் காணும்போது குழந்தை எவ்வளவு ஆனந்தம் அடைகிறது. ஆதலால், தாயினும் பார்க்க அதிகமான அன்பையுடைய கடவுளை நினைக்கும் போதும், அவரைக் கோயிலிலே காணும்போதும் நாம் எல்லையில்லாத ஆனந்தம் அடைய வேண்டும் , நமது மனம் கரைந்து உருகுதல்
வேண்டும்.
மெய்தா னரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழிற்கென் கைதான்றலைவைத்துக் கண்னர்
ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான்றவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதா னெகிழ விடேனுடை
யாயென்னைக் கண்டுகொள்ளே
தாய் தந்தையர் குழந்தைக்கு வேண்டிய ஊண் உடை முதலியவற்றை, அக்குழந்தை கேளாமலி ருக்கவே கொடுத்து விடுகிறார்கள். குழந்தைக்கு வேண்டியவற்றுட் சிலவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள். அவற்றைக் குழந்தை அவர்களுக்குச் சொல்லியபின்பு அவர்கள் கொடுக்கிறார்கள். கடவுள் எல்லாம் அறிபவர் ஆதலால், நமக்கு வேண்டிய யாவற்றையும் அவர் தாமாகவே தருவர். நாம் அவரை ஒன்றுங் கேட்க வேண்டியதில்லை. அவரை வணங்குதலும், துதித்தலும், நினைத்தலும், பூசித்தலுமே நாம் செய்ய வேண்டியவை.

Page 12
(0.
"பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீபாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே'
இந்த உடம்பு நம்மோடு எப்போதும் இருப்பதன்று. ஒரு நாளைக்கு நாம் இதைவிட்டு விலக வேண்டிவரும். அப்போது நமது தாய் தந்தையரும் சுற்றத்தவரும் நண்பரும் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார்கள். நமது பொருள் பண்டங்களும் தொடர்பற்றுப்போம். கடவுள் ஒருவரே எக்காலத்திலும் எல்லையில்லாத அன்பைச் சொரிந்து கொண்டு நம்மோடு துணையாய் நிற்கும் மெய்ப்பொருள்.
"ஈன்றாளுமாய்எனக் கெந்தையு
மாயுடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்துகந்
தான்மனத்துள்ளிருக்க ஏன்றான் இமயவர்க் கன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்னடி யோங்களுக்கே"
২)গ্ৰহ
விபூதி த ܓܰ
நிலத்திலே சிந்தாவண்ணம் அண்ணாந்து"சி மூன்றினாலும் தரித்தல் வேண்டும். இப்படியன் தொடுத்திழுத்துப் பெருவிரலினால் வலப்பக்கம் ெ கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து தரிக்கலாகாது.
சக்தி பின்னமிலான்
 

ஆதலால், நம்முடைய மனம் அவரையே நாடுதல் வேண்டும். நமது சீவனத்துக்கு வேண்டிய தொழில்களை நாம் செய்யும்போது நமது மனம் அவற்றிலே செல்லுமாயின் அதன் நாட்டம் எப்போதும் கடவுளிடத்திலேயே இருத்தல் வேண்டும்.
நாடகத்தாலுன்னடியார்
போனடித்துநானடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே
யிடையறா வன்புணக்கென்
ஊடகத்தே நின்றுருகத்
தந்தருளெம்முடையானே.”
- திருவாசகம்
இரவும் பகலும் துதிசெய்திருதாள் பரவும் பரிசே பரிசின்றருள்வாய் கரவுண் டெழுகுர்களையக் கதிர்போல் விரவுஞ் சுடர்வேல் விடுசேவகனே.
- கந்தரநுபூதி
நன்றி: சைவ சமய சாரம்,
২হ
ரித்தல் ܓܰ
சிவ சிவ” என்று சொல்லி வலக்கையின் நடுவிரல் றி நடுவிரல், ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தாடுத்திழுத்துத் தரித்தலுமாம். வாயங்காந்து து கொண்டும் தரிக்கலாகாது. ஒரு விரலாலும்
- பூரீலழறீ ஆறுமுகநாவலர் - ১১ই (z བརྗོད་

Page 13
சாந்தலிங்கர் தா
தமிழருச்சனைட்
கயிலைம தவத்திரு சாந்தலிங்க
பேரூர் ஆதீனம் - ே
நமது நாடு தெய்வநலம் சிறந்த நாடு. இமயத்திற்கும் குமரிமுனைக்கும் இடைப்பட்ட பரந்த நாடாம் பாரதநாடு பழம்பெரும்நாடு. இதில் தென்னகம் பக்தி நெறியில், கடவுள் வழிபாட்டில் ஊறித் திளைத்தது. அதிலும் தமிழ்நாடு, ஞான . ஒளிகாட்டிய அருளாளர்களை உடையது. நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரும் அருளாளர்களும் தோன்றினர். ஏன் சங்கரர் தோன்றிய சேர நாட்டில் அவர் காலத்தில் தமிழே வழங்கியது. இராமானுசர் தமிழ்தந்த தவச் செல்வர். இவர்கள் மெய்ப்பொருளியலைத் தத்தம் நிலையில் உலகுக்கு அளித்தார்கள். வழிபாட்டுணர்வை உலகெங்கும் பரவ உணர்த்தியவர்கள். அக்கொள்கை பரவ பிற மொழிகளைக் கையாண்டனர். ஆனால் அவர்கள் தமிழர்கள்.
சிவம் பெருக்கும் செந்நெறியாளர்களாகிய நால்வரும், திருமால் நெறியிலே ஆழ்வார்களும், அயல்வழக்குகளைப் புறக்கணித்து செந்தமிழ் மரபைத்துறைதோறும் வளர்த்தனர். ஆதலின் தெய்வச்சேக்கிழார் "அலகில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல’ என திருஞான சம்பந்தர் தோன்றியதை விளக்குகிறார். ஆழ்வார் பாடலுக்காக திருமால் பழமறைகள் முறையிட பைந்தமிழ்ப் பின்சென்றார். தமிழ்செல்வியாய் சங்கத்தமிழ் வளர்த்த ஆண்டாள் நாச்சியாரை திருமால் தம்முடன் இணைத்துக் கொண்டார். சிவபெருமான் வான்பழித்து மண்புகுந்தாண்டார். தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தந்தார் என்பது திருவாசகம்.
தமிழுக்காகத் திருவாரூர் வீதியில் வாழ்வியலை மேம்படுத்த நள்ளிரவில் திரும்பத் திரும்ப
്ബ്
 

D
ாண்மலர்வாழ்க.
சின் தொண்மை
ாமுனிவர் இராமசாமியடிகளார் பரூர் - கோவை, 10
நடந்தார். “திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள உமையொரு பாகன், தமிழ் இசைத்தாயாய் விளங்கிய 5T60T 55T6)Lh6OLDust 60T 'உமையேமற்றிவள் நம்பேணும் அம்மைகாண்” எனத் தாயிலியாகிய சிவன் அவரைத்தாயாக ஏற்றுக் கொண்டார். இவை யெல்லாம் எதனால் விளைந்ததென்பதைச் சிந்தியுங்கள். இசைத்தமிழ்ப்பாடல்களாகிய மறைகளால் கிடைத்தவை அல்லவா? தமிழ் ஒருலக நெறி கொண்டது. யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் என உலகு இன்புறக்கண்டது.
இவைகளுக்கு மூலம் பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் மலர்ந்தது. பல்லாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்நூல் கடவுள் நெறியை விளக்குகிறது. வினையில் நீங்கிய அறிவுடையவர் நிறைமொழி மாந்தர். “நிறைமொழிமாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழிதானே மந்திரம் என்ப" என உறுதிப்படுத்தினர். இது தொல்காப்பியக் காலத்துக்கு முற்பட்ட மரபு. தமிழ் மறையாகிய திருக்குறள் 'நிறைமொழிமாந்தர் பெருமை நிலத்து மறை மொழிகாட்டும்’ என்று கூறுகின்றது. இச்செய்திகள் தான் தமிழ் மரபைத் தமிழ்மொழி வழி வழிபாட்டை வளர்த்த அருளாளர்களை வழிப்படுத்தின. பக்தி இலக்கியங்களுக்குக் கருவாக விளங்கியவை
சங்கப்பாடல்கள். நன்னெறியில் செல்வார்க்கு வழிகாட்டுவது திருமுருகாற்றுப்படை. இது தமிழ் முதல்நூல். நலம்புரி கொள்கையுடையவர்கள் திருமுருகனை வழிபட்டு தாம் நினைத்ததை அப்பொழுதே பெற்றனர்.

Page 14
G
முருகன் பல இடங்களில் இருந்து அருள்பாலிக்கின்றான். பலரது நிலைகட்கேற்பத் தோன்றுகின்றான். குறப்பெண் ஒருத்தி முருகனை எழுந்தருளச் செய்கிறாள். அந்த இடம் “சிறு பசுமஞ்சளொடு, நறுவிரைதெளித்து” புனிதமாக்கி மாலைதோரணங்கள் அமைந்த கடவுள் எழுந்தருளும் இடம். பக்திக்குரிய தோற்றத்துடன் இருகைகளிலும் மலர்களைச் சேர்த்துக் குவித்து வழிபட்டு மலர்களைத் தூவுகிறாள். அது கடவுள் எழுந்தருளும் கருவறை யாகிறது. முருகனை வருமாறு அழைக்கிறாள். அவ்விடம் வேண்டுநர் வேண்டியாங்கு எய்திட வழிபடு இடமாகிறது. அங்கெல்லாம் முருகன் உறைகிறான். திருமுருகாற்றுப்படையில் தமிழில் அமைந்த அருச்சனைப் பகுதி சிறப்பாக அமைந்துள்ளமை இங்கு நினைக்கத்தக்கது.
இவ்வழியில் புற நானூற்றில் குறவர்களாகித் தமிழர்கள் தம்விளைநிலத்துக்கு மழைவேண்டி வழிபடுகின்றனர். மலர்தூவி வழிபடுகின்றனர். “மலைவான் கொள்கென’ உயர்வாகிய
மலர்களைத்தூவி அருச்சிக்கின்றனர். மழைவேண்டு மளவு பெய்கிறது. போதும் எனக்கருதி 'மாரியான்று மழைமேற்குயர்க” எனக்கடவுளைப் போற்றுகின்றனர். அக்கடவுள் புல்லை எருக்காயினும் விரும்பியேற்பர் (புல்லிலை எருக்கமாயினும் கடவுள் பேணுமென்பார்) என்று அர்ச்சனை வயலுள் அன்பு வித்திட்ட
செய்திகளைக் கூறுகின்றன.
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்தப் பொருளாகிய இறைவன் வண்ணங்காட்டி, வடிவுகாட்டி மலர்ப்பதங்கள் காட்டி வான்பழித்து மண்புகுந்து மனிதரை ஆட்கொள்ளும் வள்ளலாக வந்து அருளியது செந்தமிழ்ப்பாடலுக்கு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நற்றமிழ் வல்லவரான ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய தமிழ் கேட்கும் இச்சையால் நாளும் பொற்காசு வழங்கினார் என்று அர்ச்சகர் மரபிலே வந்த சுந்தரர் பாடுகின்றார்
அருளா வகையால் அருள்பு
 

என்றால் தெய்வத்துக்கு மிக உகந்த மொழி தமிழ் என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டியதில்லை. "பக்தரொடும் புனலும், பூக்களும் தூவித்துதி செய் மெய்த்தவத்தின் முயல்வார் எய்தும் புகலூர்” என ஞானசம்பந்தர் அனைவரும் சென்று அருச்சனை செய்த சிறப்புடையது திருப்புகலூர்த் திருத்தலம் என்கிறார். 'புண்ணிய வானவரும், மாதவரும் ஆலவாய்த் திருக்கோயில் புகுந்து உடனேத்தினர் அங்கு அணிகலன் பூண்ட மகளிர் அண்ணல் தன் பாடல்களைப் பாடுதல் நீங்காத திருவாலவாய்" என மதுரைத் திருக்கோயிலைப் புகழ்ந்து திருஞானசம்பந்தர் அருளியுள்ளமை பழங்காலம் தொட்டுத்திருக்கோயில் புகுந்து பூக்கைக்கொண்டு அரன்பொன்னடி போற்றிய சிறப்பை உணர்த்துகிறது.
உலகியல் வாழ்வில் தமிழை இணைத்து இம்மையேதரும் சோறும், கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம் என வழிகாட்டுவது சுந்தரர்நெறி திருவீழிமிழலையில் மக்களை அழைக்கின்றார். ஞானசம்பந்தர் வம்மின் அடியீர் நாண்மலரிட்டுத் தொழுதுய்ய என்கிறார். எனவே பிறமொழி வழிபாடு திருக்கோயிலில் இடைக்காலத்தில் அயல் ஆதிக்கத்தால் புகுந்தது. புதுவது போற்றி மயங்குவோரால் துறைதொறும் புகுந்தது. அந்நிலமை மாறவே நால்வர்கள் தோன்றினர். வீதிவீதியாக ஊர் ஊராக நாடெங்கும் கோயில் தொறும் சென்று இசைத்தமிழால் பூவுடன் நிறைபுனல் கொண்டு போற்றினர். குறைவில்லாத அனைத்து நலன்களையும், பதவிகளையும் பெற்றனர். இதுதான் நிறைமொழி. ஞான சம்பந்தர் ஆணையில் எமதுரை தமதுரை என்றும்,'ஆணை நமதே என்றும் அருளிய மறைமொழிகள். இவை மந்திரங்களாகும் இந்நெறியைப் புதுப்பிக்கவே அலகில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல திருஞான சம்பந்தர் தோன்றினார்.
அருபரத்தொருவன் அவனியில் சேவடி
தீண்டினன். சிவனென யானும் தேர்ந்தனன் என்று

Page 15
கூறும் மணிவாசகர், பண்பொருந்திய செந்தமிழ்ப் பாடல்களை விரும்பிச் சிவனே தன்திருக்கரத்தால் எழுதினார். இறைவன் பாம்பினை அணியாகப் பூண்டவன். நஞ்சுடைய பாம்புகள் துன்புறுத் தாமைக்குக் காரணம் செந்தமிழ் ஆற்றலைப் பெற்றது தான் என்பதைச் சுந்தரர் ‘செந்தமிழ்த்திறம் வல்லிரோ அரவம் முன்கையில் ஆடவே எனக் கொடிய நஞ்சினையும் வெல்லும் மந்திர மொழி தமிழ் என்று அருளியுள்ளார்.
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரும் நாவுக்
(
கரசரும் அயல்வழக்குகள் நீங்க நாடு முழுவதும்
அடியவர்கள் சூழ ஊர் ஊர் தோறும் சென்று வழிபட்டனர். சிலந்தியும், யானையும், குரங்கும் வழிபட்டது பற்றிய செய்திகளை அருளிச் செய்தனர். அவர்கள் பாடல்கள் மறைகள், ஆகமங்கள் ஆகும். ஆகமம், மறை இவை ஒரு மொழிக்குச் சொந்தமல்ல. எல்லா மொழிக்கும் உரியன. வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்' (அப்பர்தேவாரம்) என்பதால் மொழிக்கு அப்பாற்பட்டது மறைகள். அவை வினையில் நீங்கி விளங்கிய அறிவினர் அருளிய எழுதாக் கிளவிகளாகும். 'ஆகமமாகி நின்றண்ணிப்பான், என்றும் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும், என மணிவாசகர் அருளினார். எல்லா மொழிக்கும் உரியது எனினும் அவை திருநெறிய தமிழில் சிறந்து விளங்குவன. தமிழ் உயிர்களின் வினை நீக்கத்திற்கு உதவும் என்பதை "திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே என்றார் ஞானசம்பந்தர். அடியவர்கள் கருவறையில் மலர்தூவி வழிபட்ட செய்திகளை திருமுறையில் தொட்ட இடங்கள் தொறும் காணலாம். எடுத்துக் காட்டாக (கயிலை, திருவாரூர், தில்லை, திருவதிகைப்பதிகங்களும், திருவாசகப் போற்றியும் மலரிட்டு வழிபட அமைந்தன.) “பூ வினையிட்டுநாமடி போற்றுதும் நாம் அடியோம் தீவினை வந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்” எனத் திருச்செங்கோட்டுப் பதிகம் கூறுகின்றது.
 

3)
இனி ஆகமம் எது? அதன் உட்பொருள் என்ன? என்பதை உணரவேண்டும். ஆகமம் என்பது நூல். அது வினையின் நீங்கிய விளங்கிய அறிவினரால் அருளப்பெற்றது. இறையருள் பெறுவதற்குத்துணை புரிகிறது. ஆதலின் சிவஞானசித்தியாராகிய மெய்கண்டநூல் சிவனை அருளினால் ஆகமத்தை அறியலாம் என்கிறது. பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் நாயனாராகிய தமிழ் மன்னனுக்கு வஞ்சகத்தால் வெல்ல முத்தநாதன் அரிய ஆகமத்தைக்கூற வந்தேன் என கூறுவதால் ஆகமம் தமிழே பிறமொழிக்குரியதல்ல என்பதை உணரலாம். அதை வடமொழியாக்கி உண்மையை மறைத்தனர். இவ்வாகமங்கள் 28 என்பர். அவை முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்த சில பகுதிகளும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உடையன. சிவாகமங்கள் வடகயிலை முதல் தென்குமரி வரை உள்ள பாரதநாடு முழுமைக்கும் உரியன. ஆனால் வடநாட்டிலுள்ள திருத்தலங்களில் ஆகமங்களின் வழிமுறைப்படி அனைவரும் கோயிலுள் புகுந்து தத்தம் மொழியில் பூவும், நீரும் கொண்டு போற்றி வழிபாடாற்றுகின்றனர். ஆந்திரத்திலுள்ள பாடல் பெற்ற தலமாகிய திருப்பருப்பதத்திலும் (பூீசைலம்) கன்னட நாட்டிலுள்ள திருக்கோகர்ணத்திலும் அனைவரும் சென்று மலரிட்டுப் போற்றலாம். நீராட்டலாம். பாரதம் முழுதுக்கும் உரிய ஆகமம் தமிழகத்தில் மட்டும் இவ்வுண்மைக்கு மாறுபட இருப்பது பொருத்தம் உடையதாகுமா? ஆகமத்தை கேரளம் ஏற்பதில்லை, அதன்முறையே வேறு. பிற மாநிலங்களும் முழுமையாக கொள்ளவில்லை.
திருக்கோயில் அமைப்பு, திருவுருவங்கள், வழிபாட்டு முறை ஆகியவற்றைக் கூறுவன ஆகமங்கள். இக்கருத்தை வலியுறுத்துவன திருமுறைகள். அப்பரடிகள் கூறுவது ஆகமநெறி. ஆகமங்களால் அறியமுடியாத கரக்கோயில், கொகுடிக்கோயில், ஞாழிக்கோயில், மாடக்கோயில்,
இளங்கோயில் ஆகியவற்றை

Page 16
விரித்துரைத்துள்ளார். திருவுருவ அமைப்புகள் விரிவாக உள்ளன. பல தியான பாடல்களை ஆகமங்கள் கூறுகின்றன. இவை மனம் ஒன்றுவதற்குப் பயிற்சி அளிப்பன. இதை அப்பர் பெருமான் "ஒன்றி இருந்து நினைமின்கள்” என்று கூறுவார். இத்தகைய பாடல்கள் திருவுருவ
அமைப்பைக் கூறும் பாடல்கள்.
"குனித்த புருவமும்” என்பதும் "வடிவேறு திரிசூலம் தோன்றும் என்பதுமாகிய நாவுக்கரசர் பாடல்கள் தான் ஆகமம் கூறும் தியானப்பாடல்கள். வழிபாட்டையும் "நிலைபெறுமாறு எண்ணுதியேல்" பெரும்புலர் காலை மூழ்கி, "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” போன்ற நாவரசர் பாடல்கள் முறைப்படுத்திக் காட்டுகின்றன. இதனை விடுத்துப் புரியாத புனைந்துரைகள் மிகுந்த ஒன்றைப் பின்பற்ற
வேண்டுமா?
எஞ்சிலுடன் தீன்
எச்சிலார் தீண்டார் பசு உச்சந் தலையோடு இை திட்பத்தால் தீண்டாப் ே
எச்சிலுடன் தீண்டப்படக் கூடாதவை, பசு கூறுவர். உறுதியாக இவை எவரும் தீண்டக் கூ
எச்சிலுடன் கான
எச்சிலார் நோக்கார் புலை நக்கவீழ் மீனோடே இவ்ன நன்கறிவார் நாளும் விரை
எச்சிலுடன் காணக்கூடாதவை புலையர்,
ஐந்தும் என்று நன்மை தீமைகளை நன்குணர்ந்
( k on i Guajirsinimi i
 

காலங்கள் தொறும் தமக்கேற்றவாறு மாற்றி ஆகமம் எனக்கூறும் குளறுபடிகள் பல. மெய்கண்டார் குருவருள் பெற்று சீரிளமைப் பருவத்தில் தொல்காப்பிய நெறிப்படி சூத்திரப்பாடல் அமைப்பில் அருளியது சிவஞானபோதம். இதனை ஆகமத்திற் புகுத்தி முதல்நூல் எனக்கூறினர் சிலர். ஆனால் இது தமிழ் முதல்நூல் என்று பலப்பல சான்றுகளால் அறிஞர்கள் நிறுவியுள்ளனர். இது மட்டுமா? தமிழ்கூறும் நல்லுலகிற்குரிய திருத்தொண்டர் புராணத்தை வடமொழியில் உபமன்னியுபக்த விலாசம் என்ற பெயரில் உருவாக்கி அதிலிருந்து தான் பெரியபுராணம் வந்ததெனக் Gin GFTLD6ão - கூறுகின்றவர்களும் உள்ளனர். ஆதி சைவமரபில் வந்த சுந்தரர் தொகை ஆகவும், நம்பியாண்டார் நம்பி வகையாகவும் அருளி, சேக்கிழார் விரித்துரைத்த செந்தமிழ் நூலையே இவ்வாறு கூறுகின்ற போது பிற பொய்யுரைகள் குறித்து கூற வேண்டியதில்லை.
ண்டத் தகாதவை
பார்ப்பார் தீ தேவர் வ என்ப யாவரும்
பொருள்.
பார்ப்பனர், தீ, தேவர், உச்சந்தலை என்று
டாத பொருள்கள்.
னக் கூடாதவை
திங்கள் ஞாயிறு நாய் வந்தும் தெற்றென
535.l.
சந்திரன், சூரியன், நாய், எரி நட்சத்திரம் என்னும் தோர் நாளும் அறிந்து கூறுவர்.
நன்றி ஆசாரக் கோவை,

Page 17
திரு அ
- பண்டிதர்.
பதி என கடவுளையும், பசு என அவரை அடைய வேண்டிய ஆன்மாக்களையும் கூறுவர். ஆகையினாலேதான் இறைவனைப் பசுபதி என்பர். அஃதாவதுபசுவாகிய ஆன்மாக்களுக்குப்பதியாயுள்ளவர் என்பது
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்” என்கிறார் திருவருட்பயன் ஆசிரியர். பிரான் என்றது கடவுளை. அப்பிரானது நிலையை அடையவேண்டிய உயிர்களாகிய (மனிதர்களை) மன்னுயிர் என்றார். அஃதாவது நிலைபெற்ற உயிர்கள். அவ்வுயிர்களும் அழிவதில்லை. அதை உயிர்களுக்குத் தருவது சத்தி (வல்லமை). அந்த வல்லமையாகிய சத்தியும் அப்பிரானது பாகமாய் அமைந்துள்ளது என்றார். பாகமாய் அமைந்துள்ளது எனவே, அஃதின்றி உயிர்கள் அச்சத்தியைப் பெற முடியாது என்பதாம். பின்னம் இலான் என்பதனாற் கூறப்பட்டது,
அதைவிட்டுப் பிரியாதவன் என்பது.
திருவருட்சத்தியை உமையம்மை, பார்வதி, மீனாட்சியம்மை முதலிய பெயர்களால் வணங்குவர். உயிர்களையும் ஆணவம் எனப்படும் மலம் பீடித்துள்ளதால் அதன் மூலமே உயிர்களும் மன் உயிர்களென நிலை பெற்றுள்ளனவாகக் கொள்வர் என்பர். அவற்றுள் ஆணவமலம், மூலமலம் எனப்படும். அதுவே மற்றைய மலங்களும் தோன்றுவதற்குக் காரணமானது.
சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டில் விருத்த கிரியம்மையார் என்னும் பிரபந்தத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
 

5)
ருட்சக்தி
முதலில் உயிர்களைப் பீடித்துள்ள ஆணவம் முதலிய மலங்களை வருணிக்கிறார். அதில்,
காமமென்கின்ற கதுவு வெந்தியும்
கடுஞ்சினமெனப்படும் புலியும் களிப் பெனும் சிறுகட்புகர் முகப் புழைக்கைக் கறைமிகும் களி நல்யானையுமே தாமிகு மெனது மனமெனும் வனத்தில்
தனிவரல் வெருவினையாயிற் தழலில் நின்றாடி புலிகரியுரி போர்த்து அடுத்த ஆண்டுனை யொடும் வருவாய். என வருணிக்கிறார்.
இப்பாடலில் ஆணவமலத்தை "தீக்கு” உருவகிக்கின்றார். தீ எதனையும் தீக்கும் தன்மை வாய்ந்தது. தீக்குதல் என்றால் எதனையும் கதுவுதல். தீ, எதனையும் கதுவித் தன்வயமாக்கல். ஆகையால்தான் 'கதுவுவெந்தீ’யும் என்றார். இதனால்தான் ஆணவமலத்துக்குத் தீ உவமையாயிற்று. ஆணவ மலமும் கன்மம், மாயை
ஆகிய மலங்களுக்குக் காரணம் என்பர்.
வனத்தில் மூங்கில் மரங்கள் இருப்பதால்தான் இவை உரோஞ்சுண்டு நெருப்பு மூழுதல் இயற்கை. அவை மூளப் பெரு நெருப்பு உண்டாகும். அதனாலேதான் மனம் எனும் வனத்தில் என்றார். இந்த மனமாகிய வனத்திலே ஏனைய கொடிய விலங்குகளாகிய புலி, யானை முதலிய விலங்குகளும் வசிக்கும். புலிகளைக் கன்மமலத்துக்கும் யானையை மாயாமலத்துக்கும் உவமையாக்குகிறார். தழலை, தீயாகிய மனத்தில் கன்மமலமாகிய புலியும் மாயாமலமாகிய யானையும் அதிகமாக வாழ்கின்ற என்

Page 18
மனத்திலே நீ தனியே வருவதற்குப் பயந்தால், உன்னை அடுத்து இருக்கின்ற ஆண் துணையோடு வா. ஏனென்றால், அது தழலில் நின்றாடி புலி, கரி, உரி, போர்த்திருக்கிறது, என்கிறார்.
சத்தி என்பதற்கு வல்லமை என்பது பொருள். ஆனால் அது ஆணைவிட்டுப் பிரியாதது. சத்திபின்னமிலான் அல்லவா இறைவன் அந்தச் சத்தி இறைவனது நிலைமையை மன்னுயிர்கள் தாங்கத் தரும் சத்தி" அல்லவா அது! இவற்றினால் இறைவனுக்கு ஒர் ஆணுருவும் சத்திக்கு ஒரு பெண் உருவும் கொடுத்தார்கள்.
ஆணும் பெண்ணுமாகிய ஒருவர் தங்க ஒரு வீடு வேண்டுமல்லவா? அது மனித உள்ளமாகிய வீடு;
அங்கே தங்கலாம்; ஆயினும் அந்த வீட்டில்,
உள்ள மென் மனையில் விருப்போடு வெறுப்பாம்
உறுகுழிமேடுகள் நிரவி
ஒளிவிலா வாய்மை மெழுக்கினாற் பூசி
உயர்தரு மனமெனப்படுமோர்
பள்ளி மென்தவிசில் இருத்திநின்பதியை”
விருப்பும் வெறுப்புமாய், அஃதாவது குழியும் மேடுமாய் பல இடங்கள் இருக்கின்றன. அந்தக்குழி எவை? மேடு எவை? என நாம் அறிய வேண்டும். அந்தக் குழிதான், ஆசை என்கின்ற குழி, அதுதான் பணம் வேண்டும் என்கின்ற எண்ணம். 'போதும் என்கின்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்றிராமல் மேலும் ஆசையால் அலைவது போன்றது.
இனி, மேடு என்பது - வெறுப்பாம்; வெறுப்பாம் என்பது - பெருக்கம் என்பது போன்றது.
"கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கணி” என்பது குறள்.
இக்குறளுக்கு உரை கூறிய பரிமேலழகர், "தீவினையாற் கேடும் நல்வினையாற் பெருக்கமும்
 

யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன. அவ்வாற்றை அறிந்து அவை காரணமாக மனத்திலே கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது" என உரைகூறி, 'அவற்றிற்குக் காரணம் பழவினையே கோடுதல் அன்று' என விளக்க உரையும் கூறியுள்ளார். இப்பாடல் மூலம் கேடு வருவது புலனாகிறது. குழியாய் உள்ளது புலனாகிறது. பெருக்கம் என்பது 'பொன்விலங்கு' என்பதன் மூல்ம் விலக்கப்பட வேண்டும் என்பதும், துறவறத்தார்க்குப் புலனாதல் வேண்டும். இவை இரண்டும் அண்மையில் கூறப்பட்டாலும் வெவ்வேறு காலங்களில் நிகழ்வன. எனவே, 'உள்ளமென் மனையில் விருப்பொடு வெறுப்பாம் உறுகுழி மேடுகள் நிரவிப்பின்னர் "ஒளிவிலா வாய்மை மெழுக்கினாற் பூசி உண்மை என்கின்ற” கேடும் பெருக்கமும் இல்லல்ல” என்கின்ற உண்மையை அறிந்து 'இல்லல்ல' என்ற மெழுக்கினாற் பூசினால், அது உயர்வு தரும் மனம் எனப்படும் “ஓர் பள்ளி மென் தவிசு” ஆகும். அதிலே நின் பதியை இருத்தி, யான் எனப்படும் நெல்லை பழமலமாகிய ஆணவ மலத்தையும் மாயையாகிய உமியையும் நீக்கி பாகஞ் செய்து மென்று அருத்திடுவாய் என்று கேட்கிறார்.
மேலும் 'பாகஞ் செய்து' என்பதினால் பசுப்பாலை மாத்திரம் கலந்து வெண் சாதமாகவோ அல்லது சருக்கரை கலந்து சருக்கரைச் சாதமாகவோ
அல்லது அதன் உரையாசிரியர் கூறி இருப்பது போல
"மலபரிபாகம்” செய்யப்பட்டதாகவோ இருக்கலாம் ஆயினும் அது வெண் சாதமாகவே இருப்பது பொருத்தமாய் இருக்கலாம் என்பது கொள்ளப்படத் தக்கது. இப்பாடல்களைப் பாடிய சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய சோணசைலமாலை என்னும் நூலில்
"வெண்திருநீறு புனையும் மாதவர்க்கு விருந்து செய்துறும் பெருமிடியும் கொண்ட நல்விரதத்து இளைக்கும் யாக்கையும்
இக் கொடியனேற்கு அருளுநாளுளதோ” என்று கேட்கிறார்.
(மிடி - வறுமை, யாக்கை - உடம்பு)
பங்கே மாதொரு பாகனார்தாம் வருவர். *)

Page 19
G
பாடல் அழகனும்
- முருகவே
இயற்கை சொட்டும் அழகை, எழுத்திற் கொட்ட முயன்றான் கவிஞன். மைதிலியின் அழகையும், அபிராமனின் அழகையும் கம்பநாடன் வடித்தான். அதை அழியா அழகு, எழுதலாற்றா அழகு எனும் பதங்களிற் படிய விட்டான். படிப்பவர்காண என்றும் இளையாய் அழகியாய் என்றார் முருகனை அருணகிரியார். இயற்கையழகைக் கைபுனைந்தி யற்றாக் கவின்பெறுவனப்பு என்பர் நக்கீரர். அகத்தினழகு முகத்திற் தெரியும். சுந்தரர் அழகை முருகனோடும், பரவையார் அழகை ரதியோடும் இசைத்துக் கவிபண்ணினார் சேக்கிழார். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி கலைவாணி. இவ்வணம் அழகு விரிந்து பொலியினும் பெண்களினழகு தனியழகு. அழகு மெத்தினும் ஆபத்து, அழகு இன்றேல் அபத்தம். எல்லாம்வல்ல இறைவனின் அழகைத் தீட்டினர் பலர் அவர்களுள் ஒருவர் தாயுமான சுவாமிகள். இவர்தான் பாடல் அழகன். அவராற் பாடப்பட்ட வாச்சியப் பொருள்தான் ஆடல் அழகன் நடராஜப் பெருமான்; பாடல் அழகனும் ஆடல் அழகனும் அழகும் அழகும் அணையும்போது எப்படி இருக்கும். அழகே காண்போர் விரும்பும் வனப்புத்தான். திருஎனும் பதம் இப்படி விமர்சிக்கப்பட்டது. உண்மையில் உள்ளம் அழகாயமைய வேண்டும். கள்ளங்கபடமின்றித் தாயுமானாரின் பாடலைக் கவனிப்போம்.
பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே நாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற அழகனே அத்தன் என்ற நின்னையே பக்திசெய்து பனுவலால்
பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே சிந்தை அன்பு சேரவே, நைந்துநின்னைநாடினேன் வந்து வந்துஉன் இன்பமே தந்து இரங்கு ஸ்தானுவே
 

ஆடல் அழகனும்
பரமநாதன் -
அண்டர் அண்டம் யாவும்நீ கொண்டு நின்ற கோலமே தொண்டர் கண்டு சொரிகனர் கண்டநெஞ்சு கரையுமே அன்னை போல அருள்மிகுந்து மன்னும் ஞானவரதனே என்னையே எனக்கு அளித்த நின்னையானும் நினைவனே'
53 பாடுகின்றபனுவல் 1,2,3,4,5
பனுவலோர்கள் - ஞான நூல் உணர்ச்சி உள்ளவர்கள், ஞானமன்றில் - சித் அம்பலத்தில், ஸ்தானுவே - நிறைந்த பொருளே. இறைவன் குறைவிலா நிறைவாய், நிரம்ப அழகிய தேஸ்சுடன் மிளிர்கிறான். சித்தமழகியார் பாடாரோ நஞ்சிவனை என்று பேசுகிறார் வாதவூரீசன் - இந்த அழகிலே சொக்காதவர் யாருமே இல்லை. கூடல் என்பது மதுரையைக் குறிக்கும். மதுரையைச் சேர்ந்த அழகர் மலையிலே திருமால்குடி கொண்டிருக்கிறான். அவனுக்குக் கூடல் அழகர் என்று திருநாமம். கல்லழகர், சோலை மலையில் இருந்து அருள் பாலிக்கிறார். பழமுதிர் சோலையே சோலைமலை, அழகர்மலை - முருகன் திருப்பதியும் சிறுதொலைவில் உண்டு. இக்கூடல் அழகரை பிள்ளைப் பெருமாள். ஐயங்கார் பாடுகிறார்.
வாழ்விப்பான் எண்ணமோ வல்வினையில் என்னைஇனி ஆழ்விப்பான் எண்ணமோ அஃதுரையாய் - தாழ்விலா பாடல் அழகார்புதுவைப்பட்டர்பிரான் கொண்டாடும் கூடல் அழகாநின் குறிப்பு
அஷ்டப் பிரபந்தம்
மொழிக்கு மொழி தித்திக்கும் பாடல்களாற் பலர் பரவிப் பணிந்தனர்; பலர் இறை கட்டளையாற் பனுவல் பண்ணினர். சிலர் உள்ளத்துணர்வு கரைமீற பாடித்தந்தனர். இப்பாமாலையே உயர்ந்தது, உகந்தது எனப் பேசுகிறார் தாயுமானார்.

Page 20
"பன்மாலைத்திரள் இருக்கத்தமைஉணர்ந்தோர்
பாமாலைக் கேநிதான் பசுஷம் என்று
நன்மாலை யாஎடுத்துச் சொன்னார்நல்லோர்
நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் சொன்மாலை மாலையாக் கண்ணிர் சோரத்
தொண்டனேன் எந்நாளுந்துதித்துநிற்பேன்
என்மாலை அறிந்து இங்கே வாவா என்றே
எனைக்கலப்பாய் திருக்கருனை எம்பிரானே
16 lugito TGG)
பன்மாலைத்திரள் இருக்க - பூமாலைகள் பல இருக்கச் செய்து, பக்ஷம் - விருப்பம் நன்மாலை - சிறந்த பாமாலை, என்மாலை அறிந்து - என்விருப்பத்தை உணர்ந்து மொழியாத மொழியாய் (சொல்லாமற் சொல்லல்) எழுதாத மொழியாய் (வேதம்) பேசாத எழுத்தாய் (ஊமையெழுத்து) உள்ள தத்துவ ஞானப் பொருளும், பயனும், குருமொழியும், மறை மொழியும் கொண்டு பிறவாப் பெருமொழியாக்கும் இந்தத்தமிழ் மொழிப் பாசுரங்களின் இனிமைதான் என்னே!
"ஒரு மொழியே பல மொழிக்கு இடம்கொடுக்கும், அந்த
ஒருமொழியே மலம்ஒழிக்கும் ஒழிக்கும்என மொழிந்த குருமொழியே மலைஇலக்கு மற்றைமொழி எல்லாம்
கோடுஇன்றிவட்டுஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் கருமொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்குமொழிருசிக்கக் கரும்பு அனைய சொல்கொடு உனைக் காட்டவும்
கண்டனை மேல்
தருமொழி இங்கு உனக்கு இல்லை; உன்னை விட்டுநீங்காத்
தற்பரமாய் ஆனந்தப் பொற்பொதுவாய்நில்லே”
17 நினைவு ஒன்று 2
கோடு இன்றிவட்டு ஆடல் ஒக்கும் - கோடு போடாமல் சொக்கட்டான் விளையாடுவது போன்றதாம், குருமொழி - கருப்பத்திற் பிறப்பெடுப்பதைப் பற்றிய பேச்சு, தற்பரமாய் - சொந்தமாவுள்ள பெருநிலையில், ஆனந்தம் பொற்பொதுவாய் - பொன்னம்பலமாய்.
 

எவ்வளவு 9||0|)êزن சொட்டுகின்றன. இப்பாடல்களில் முத்தும் மணியும் பவளமும் கலந்து ஆரமாகிய நிலையும், முல்லை, மல்லிகை அரும்பாற் தொடுத்த அலங்கலாய் அமைந்த வண்ணமும் படிப்போரைத் தன்வயமாக்கி, இறைமயமாக்கும் பெற்றியன இவை. சுவாமிகள் தற்சிறுமை பேணிப்பாடிய பாடல்கள் அநந்தம். ஒன்று.
அழுக்கு ஆர்ந்த நெஞ்சு உடை யேனுக்கு ஐ
யாநின் அருள் வழங்கின் இழுக்கு ஆகும் என்று எண்ணியோஇரங்
காத இயல்பு கண்டாய் முழுக்காதல் ஆகி விழிநீர்
பெருக்கிய முத்தர்எனும் குழக்கான நின்று நடம் ஆடும்
தில்லைக் கொழுஞ் சுடரே"
ஆடல் இறைமேற் கொண்ட காதலாற் பத்து நெடும் பாடல்கள் மூலம் தன் வெளிப்பாட்டை - நிகழ்த்தியுள்ளார் தாயுமானார். கூத்தப் பிரான்மீது பல பிரபந்தங்கள் எழுந்தன. ஒன்பதாம் திருமுறை தில்லை நடராஜனை பொழிந்து தள்ளுகிறது. திருவிசைப்பா வரிசையில் வரும் பவளமால் வரையிற் பனிபடர்ந்” எனும் பாடலைத் தியாகராஜபாகவதர் இராகமாலிகையிற் பாடிய குரல் இன்றும் காதுகளில் ஒலிக்கின்றது. இவ்வளவு சிறந்த பாடல்களை நாம் கவனிக்காமற் தெருப் பாடல்களிலே கவனம்
செலுத்துகிறோம். சுவாமிகளின் கருணாகரக்கடவுள்
என்ற பாடலை இனிக் கவனிப்போம்.
மண்ணாதிஐந்தொடு புறத்தில் உள கருவியும்
வாக்காதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனமாதி கலையாதி
மன்னுகத்தாதி உடனே தொண்ணுற்றொடு ஆறும் மற்று உள்ளனவும் மெளனியாய்ச்
சொன்ன ஒரு சொற்கொண்ட தே துர வெளியதாய்அகண்ட ஆனந்த சுகவாரி
தோற்றுமதை என்சொல்லு வேன் பண்ஆறும் இசையினொடு பாடிப் படித்து, அருள்
பான்மை நெறிநின்று தவறாப்

Page 21
பக்குவ விசேஷராய் நெக்கு நெக்கு உருகிப்
பணிந்து எழுந்து இருகை கூப்பிக்,
கண்ஆறு கரைபுரளநின்றஅன்பரைளலாம்
கைவிடாக் காட்சி உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே!
கருணாகரக்கடவுள் 2
சுரோத்ராதியும் - காது முதலியனவும், சப்பதாதி - ஒசை முதலியன, மன்னு அத்தாதி உடனே - நிலத்துள்ள சுத்த தத்துவங்கள் உடனே, பண் - இராகம், தகுதி, பான்மை - முறைமை, கண்ஆறு * கண்ணிர் ஆகிய ஆறு.
இவ்வழகிய பாடல்கள் பலவால் அழகாகப் பாடிப் பணிந்தார் மன்றாடியாரை வள்ளலார் சிதம்பர நடராஜனைப் பாடிப் பரவசமானார். மாணிக்கர் பாடி, ஆடிப், பரவசமாகிக் குஞ்சிதபாதம் எய்தினார். மனிதவாழ்வில் மனம் இருக்குமட்டும் கவலையும் இருக்கும். எரிமலைபோற் குமுறிப் பொருமி விம்மி வெடிக்கும் பான்மையை யதார்த்த பூர்வமாய்ப் பாடி இரங்கும் இப்பாடல் சாதாரண எம் போலியர்க்கும் சாலப் பொருந்தும்.
"சிந்தைத் துயர்என்று ஒரு பாவி
சினந்து சினந்து போர்முயங்க
நிந்தைக்கு இடமாய் ஜகவாழ்வை
நிலைஎன்று உணர்ந்தே நிற்கின்றேன்
எந்தப் படி உன் அருள் வாய்க்கும்?
எனக்கு அப்படிநீஅருள் செய்வாய்
பந்தத் துயர்அற்றவர்க்கு எளிய
பரமானந்தப் பழம் பொருளே
23 தன்னை ஒருவா 7
ஆறுகள் போற் சமயம் என்று கம்பர் முதல் ஆழ்வார்கள் அறைந்தனர், இந்த உண்மையை எடுத்தியம்பத் தாயுமானாரும் தவறவில்லை.
 

ஆறு ஒத்து இலங்கு சமயங்கள்
ஆனுக்கும் ஆழ்கமலாய்
வீறிப் பரந்த பரம் ஆன
ஆனந்த வெள்ளம் ஒன்று
தேறித் தெளிந்துநிலைபெற்ற
மாதவர் சித்தத்திலே
ஊறிப் பரந்து அண்டகோடிஎல்
லாம் நின்று உலாவியதே
வேறுபடும் சமயம்எலாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின்விளையாட்டு எல்லாம்
மாறுபடும் கருத்து இல்லை முடிவுஇல் மோன
வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்று அம்மா.
சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்வாழ்ந்த தாயுமான சுவாமிகள் பட்டினத்தார், பத்திரகிரியார் போல எந்நாட்கண்ணி பாடினார். அவரது கிளிக்கண்ணிகள், LIJTL ITă, கண்ணிகள் மெய்ஞ்ஞானந்தரும் இலகு இலக்கியம். இவருடைய பாஷயத்தில் மஸ்தான் சாகிபுபாடல்களும் அமைந்துள்ளன. பட்டினத்தார் பாணியில் (உடற்கூற்று) வண்ணம் பாடினார்.
ஒயாதோ என்கவலை உள்ளே ஆனந்த வெள்ளம் பாயாதோ ஐயா பகராய் பராபரமே -
பராபரக்கண்ணிகள் 29
எந்தை மடலாடும் எழுதா இறைவடிவைச்
சிந்தை மடலா எழுதிச் செய்யேனோபைங்கிளியே -
பைங்கிளிக் கண்ணி 11
கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளே
எந்நாட்கண்ணி 9 - 1

Page 22
- சைவநன்மணி ந
திருமந்திரம் திருமூல நாயனாரால் அருளப்பட்டது. அதில் மொத்தமாக மூவாயிரம் அருட்பாடல்களுக்கு மேல் உள்ளன. ஒய்வு கிடையாது உழைக்கும் சாதாரண மக்களால் மூவாயிரம் பாடல்ளைப் படித்து முடித்தல் சுலபம் அன்று, ஓய்வு உள்ளவர்களாலும் அவற்றைப் படிக்க முடிகின்றதே அன்றி அவற்றுட் பொதிந்துள்ள மறை ஞானப் பொருளை உணர்ந்து ஒதுதல் கடினம் ஆகும். இச்சூழ் நிலையில் திருமூலரே ஒரு சிறந்த உபாயம் கூறுகிறார், படித்துத் தெளியுங்கள்:-
மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பதுபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே!
இதன் பிரகாரம் மூவாயிரம் செய்யுள்களையும் படிக்க இயலாதவர்கள் அவற்றுள் முந்நூற்றைப் படித்தாலே போதும். அதுவும் இயலாதவர்கள் அதிலுள்ள முப்பது உபதேசங்களை மட்டும் ஒதி உணர்ந்தாலே போதும், மூவாயிரத்தையும் படித்த பலன் கிடைக்கும். இதிற் சந்தேகம் கொள்ளாது பக்திசிரத்தையுடன் அந்த முப்பது உபதேசங்களை மட்டும் மறைபொருள் ஆய்ந்து தெளிந்து பயில்வோம்.
முப்பது உபதேசத்தையும் பயிலத் தொடங்கும் முன்பு அவற்றுக்கு ஆதாரமாக உள்ள சிவாகம இதோபதேசத்தைக் கற்றல் பேருதவியாகும். இதோபதேசம் என்பது நமது இதயத்துக்கு அறிவுறுத்தல் செய்தலாம். அந்த அறிவுறுத்தலை
k srašir Gisar apoyib arribar florar ng ayub
 
 

3. செல்லப்பா -
அறிந்து தெளிந்து அனுட்டித்தல் சிவப்பேறு பெற உதவுவதாகும். இதோபதேசத்தில் உள்ள முதலாவது செய்யுளைத் திருமூலர் எவ்வளவு அழகாகவும் ஆணித்தரமாகவும் அருளி உள்ளார் என்பதைப்
பாருங்கள்:-
மறந்தொழி மண்மிசை மன்னாப்பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்(து)அல மந்து படுதுயர்தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தை செய்வீரே!
இதன் மெய்ப் பொருளை ஓர் உதாரணத்துடன் கவனிப்போம். கிளிப் பிள்ளைக்குப் பேசப் பயிற்சி அளித்தால் அது இனிமையாக எஜமானைக் கண்ட போது"பெத்திபெத்தி' என்று அழைத்துப் பயின்றதை மீட்டு எடுத்துச் சொல்லும், ஆனால் அது பூனையின் வாயில் அகப்பட்ட போது "பெத்தி பெத்தி” என்று கூப்பிடுமா? அல்லது கீச்சு கீச்சு" என்று அலறுமா? சாதாரண சாதக பத்தர்களும் இப்படித்தான், கோயிலிற் கும்பிடும்போது ‘சிவ சிவ' என ஒதுவார்கள், ஆனால் மரணப்படுக்கையில் கடைசி நேரத்தில் என்ன சொல்லிக் குளறுவார்கள்? அவர்களுடைய சரீரத்தில் உள்ள ஒன்பது வாயில்களும் ஒக்க அடைத்து உயிர் பிரிய முடியாது திணறுகின்ற போது"சிவ சிவ” என ஒதுவார்களா? அல்லது குய்யோ முறையோ” எனக் குளறுவார்களா?
១_6យោTLT.
மரணத்தறுவாயில் ஒருவன் நினைக்கின்ற நினைப்பும், ஒதுகின்ற மொழியும் தான் அவனுடைய

Page 23
மறுபிறப்பை நிர்ணயிக்கிறது. மரணத்தறுவாயில் சிவனுடைய திருநாமத்தை ஒதிக் கொண்டே சாதல் அமரத்துவம் அளிப்பதாகும், அது போதிய தொடர்ச்சியான சாதனை இன்றிச் சாத்தியம் ஆக மாட்டாது. ஆகையால் இப்பொழுது இருந்தே அல்லும் பகலும் திருமூலர் கூறியவாறு ஈசனை நினைந்து உள்ளுருகிக் கண்ணிரால் உடல் நனைந்து சிறந்த சிவநெறியைச் சிந்தை செய்து பழகி ஒழுகுவோமாக!
சிவநெறிச் சாதனை செய்வோர் முதலாவதாகச்
(2.
செய்ய வேண்டியது நடுவு நிலை நிற்றல் என்பதைத்
திருமூலர் வலி உறுத்துகிறார். நடுவு நிலை நிற்றல் என்பது பக்கச் சார்பு இன்றி மனங்கோடாது பணிசெய்தலாகும். இதை இன்னொருவிதமாக இருவினை ஒப்பு எனச் சித்தாந்திகள் கூறுவர். இருவினை என்பது நன்மை தீமை ஆகிய செயல்களாகும். அவற்றினாலே தான் நமக்கு இன்ப துன்பம் ஏற்படுகின்றன. நாம் பொதுவாகத் துன்பத்தை விட்டு இன்பத்தையே நாடுகிறோம். இன்பத்தைத் துன்பத்திலிருந்து தனியாகப் பிரித்து அனுபவிக்க இயலாதென்பது பலருக்குத் தெரியாது. துன்பத்திலிருந்து பூரணமான விடுதலை பெறுதல் வேண்டுமாயின் இன்பத்தையும் கைவிடுதல் வேண்டும். அதற்கு உகந்த சிவநெறி அவை இரண்டையும் சரிசமமாகக் கருதி இறை பணியை நடுவுநிலையில் நின்று பலன் கருதாது புரிதலாகும்.
இவ்வாறு பணிபுரிய விரும்புவோர் எவ்வாறு சிந்தித்து ஒழுகுதல் வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் இதோபதேசம் இதோ:-
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின்நமணில்லைநானாமே சென்றே புகுங்கதி இல்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே!
 

சாதி பேதத்தாலும் பலதெய்வ வழிபாட்டாலும் இன்று சிவநெறி சீர்கெட்டு விட்டது. ஆலயங்களிற் கூடக்குல வேறுபாடு காட்டப்படுகின்றது. ஒன்றேகுலம் என்னும் திருமந்திர இதோபதேசத்தைச் செயற்படுத்துவது எந்நாளோ? அன்றே சைவ மக்கள் அனைவரும் சம உரிமை உடையவர்கள் ஆவர். தரகர்கள் மூலம்தான் ஆலயத்தில் தூர நின்று சைவப் பொது மக்கள் இறைவனுடன் கொடுக்கல் வாங்கல் செய்தல் வேண்டுமா? சிவாலயம் பங்குச் சந்தைபோலச் செயற்படுதல் சைவநீதி ஆகாது. இது சம்பந்தமாகச் சைவப் பொதுமக்கள் திருமூலர் கூறியபடி "செல்லும் அளவுஞ் சிந்தையைச் செலுத்தி” வேண்டிய சீர்திருத்தம் செய்து முன்னேறுவார்களாக
முப்பது உபதேசம் உண்மை விளக்கம்
இக்கட்டுரையில் முப்பது உபதே சங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மறைபொருள் ஆய்வு செய்து அவற்றுக்கேற்ற சாதனா முறைகளை மெய்கண்ட சாத்திர முறைப்படி வழுவாது விளக்க உள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாகக் கற்றுத் தெளிந்து அவற்றுக்குத்தக நிற்றல் வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
முதலாவது செய்யுள் பாசம் நீக்கும் தாடலை வழிபாடு
அதைக் குறிக்கும் திருமந்திரம் இதோ:-
விண்ணின்று இழிந்து வினைக்கிடாய் மெய் கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்புஅறுத் தானே!
இத்திரு அருள் மந்திரத்தில் வரும் 'களிம்பு அறுத்தானே” என்னும் சொற்றொடர் பந்தபாசம் நீக்கினானே' எனப் பொருள்படுவதாகும். யார்?
யாருக்குப் பந்த பாசத்தை எப்படி நீக்குகிறான்?

Page 24
என்பதே நமது ஆய்வுக்கு உரியதாகும். களிம்பு அறுத்தானே' எனும் வாக்கியத்துக்கு உரிய எழுவாய் தோன்றாது உள்ளது அதை நாம் வருவித்து நந்தி எம் பெருமான் எனக் கொள்ளுதல் வேண்டும். யாருடைய களிம்பை அறுத்து உதவுகிறான்? எனின் சிவன் அடியார்களுடைய களிம்பை எனக் கொள்க. பித்தளையைக் களிம்பு பிடித்தல் இயற்கையாகும். அதேபோல ஆன்மாக்களைப் பந்த பாசம் பிடித்துள்ளமை சகசமாகும். ஆகையினாலே தான் மலங்களுள் முக்கியமான ஆணவத்தைச் சைவ
சித்தாந்தம் சகச மலம் என வழங்கும்.
ஆணவமல நீக்கம் செய்வதற்கு ஆதாரமாகவே ஆன்மாக்களுக்கு மாயா மலமும் கன்ம மலமும் ஊட்டமாகின்றன. சிவயோக நெறி நிற்போருக்கு சிவதத்துவ நிலையில் சுத்த மாயையானது ஒருகை விளக்குப் போன்று சிவநெறி வழிகாட்டி உதவும், இவ்வுண்மை சிவநெறி நின்று உரிய சாதனை செய்து வெற்றி காண்போருக்குச் சிவனே ஞானக்கண் காட்டிக் களிம்பு அறுக்க உதவுவான் எனப்பொருள் கொள்ளுதல் சிறப்பாகும். சிவன் அருளால் ஊனக்
கண்பார்வை நீங்கி ஞானக்கண் புலப்பாடு
பெறுவதற்கு உரிய சாதனை,தாடலை வழிபாடு
என்பதைத் திருமூலர் மறைபொருளாக உணர்த்துகிறார். தாடலை என்னும் பதத்தைப் பகுக்கும் போது தாள் + தலை ஆகிறது. தாள் சிவசத்தியையும் தலை சிவப்பரம் பொருளையும் குறிக்கின்றன. தாளும் தலையும் புணரும் போது தாடலை எனும் ஒருபதம் ஆவது போல சிவமும் சத்தியும் ஒன்றிணைந்து அர்த்த நாரீஸ்வர னாகின்றது. இதைப் போலவே இலிங்கமும், சத்தியாகிய ஆவுடையும் சிவலிங்கமாக ஒன்றாய் உள்ளதாகும். எனவே தாடலை வழிபாடு செய்வோர் அர்த்த நாரீஸ்வரரையோ அல்லது சிவ லிங்கத்தையோ வழிபடுதல் வேண்டும் எனத் திருமூலர் நமக்கு வழிகாட்டுதல் புலப்படுகிறது.
 

உள்நின்று உருக்கி அருள்பவன் சிவன் என்பதை நாம் சரிவரத் தெளிந்து கொண்டாற் புறப்பூசைகள் செய்வதில் காலத்தையும் பணத்தையும் விரயஞ்செய்து போதிய ஆன்ம பலன்பெறாது கவலையுற வேண்டியதில்லை. புறப்பூசைகளை ஆடம்பரமாகச் செய்த ராஜ ராஜேஸ்வர சோழ மன்னனை விட மவுனமாக அகப்பூசை செய்த பூசலார் நாயனாருக்கே முதலிடம் கொடுத்து, அவரை உள் நின்று உருக்கி ஒப்பிலா ஆனந்தம் அளித்த சிவனைப் பெரிய புராணம் போற்றுவதைக் காண்கிறோம். சிவன் அவன் நம்சிந்தையுள் நீங்காது நிற்றல் வேண்டுமாயின் நாம் சிவோகம் பாவனை செய்து அவனை நம்முடைய இதயத்திலேயே பிரதிஷ்டை செய்து கொள்ளுதல் வேண்டும். ஆலயத்திலே பூசகர் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்வதனால் சைவ மக்களுடைய இதயத்தில் இறைவனைப் பிரதிட்டை செய்தல் ஆகாது, சிவோகம் பாவனை என்பது பூசகரால் மக்களுக்காகச் செய்யக் கூடியதன்று அதை ஒவ்வொரு சைவ சாதகனும் தனித் தனியே சுயமாகச் செய்தல் வேண்டும். சிவோகம் பாவனை மூலம் தான் உயிருக்கு உயிராக
மறைந்து உள்ள சிவனை உள்ளிருந்து மலரச்
செய்தலாகும். சிவோகம் பாவனை ஒரு செபதியான
சாதனையாகும். அதை அனுட்டிக்கும் சாதகன் “சோகம்’ எனும் மந்திரத்தை இடைவிடாது தனிமையில் இருந்து ஒதுதல் வேண்டும். அவ்வாறு ஒதும்போது “குறைவிலா நிறைவே' எனும் திருவாசத்தில் உள்ள கடைசி அடியில் வரும் “இறைவனே! நீ என்னுடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே' எனும் வாக்கியப்
பொருளை உணர்ந்து "சோகம்” என்பதை ஒதுதல்
உத்தமமாகும், சிந்தை செய்வதற்கு உரிய சிறந்த சிவநெறி இதுவேயாகும்.

Page 25
திருநீலநக்
- சிவ சண்மு
உலகம் நீரின்றி அமையாது. இந்த உண்மையை உணர்ந்தோராதலின் காவிரிநதி வளம்படுத்தும் சிறப்பினால் சோழநாட்டைக் காவிரி நாடு எனவும் வழங்குவர். காவிரி நாட்டில் தாமரைப் பொகுட்டின் மீது கயல் மீன்கள் துள்ளும். முற்றி
விளைந்த செந்நெற்பயிர் காடு போலச் சூழ்ந்திருக்கும். '
உலகம் அவ்வூரைத் திருச்சாத்த மங்கை என்று போற்றும், சாத்தமங்கை மங்கலம் வாய்ந்த மறையவர் வாழ்விடம். அதனால் அந்தணர் முதற்பதி வனப்பு
உடையது.
திருச்சாத்த மங்கை என்றும் நன்மைக்கு இருப்பிடமாவது நறுமணங் கமழும் நெற்றியையுடைய மகளிர் மென்மலர் தடாகத்தில் நீராடுவார்கள். அவர்களோடு அன்னங்களும் அகன்துறையில் நீராடும். நாகணவாய்கள் வேதம் ஒதும் சிறுவர்களுடைய பல கூட்டங்களுடன் சாமம் பாடும். அது அந்தணச் சிறார்கள் பிழை இன்றிப் பயில்விப்பவனாக அமையும்.
திருநீற்றை ஆய்ந்து தெளிந்த மெய்பொருள் காப்பாகக் கொள்வர். மறையவர் மூன்று தீ வளர்ப்பர். அந்தச் சிவாக்கினி பிறவிக் கடலைக் கடக்கப் பெருந்துணை புரியும். அந்தண மகளிர் தம் கற்புத் தீயுடன் நான்காக வளர்ப்பர்.
திருநீலநக்கர் திருச்சாத்த மங்கைப் பதியைச் சேர்ந்தவர். புகழோடு விளங்கினார். அந்தண குலத்தவர். திருநீலகண்டப் பெருமானுடைய அன்பராவார். வேத உள்ளுறைப் பொருள் நன்கு உணர்ந்தவர். இரு செயல்களை அன்புடன் ஆற்றும் நெறி நின்றார். ஒன்று விரிந்த கங்கையைத் தாங்கிய சடையுடைய சிவபெருமானுக்கு விரும்பி அருச்சனை
 

B)
கவடிவேல் -
புரிவது. சிவனடியார்களுக்கு ஏவல் ஆவன செய்து
ஒழுகுதல். அவை இரண்டையும் புரிவதில் குறையாத பத்தியுடைய கொள்கையரானார்:
வேத வுள்ளுறை யாவன விரிபுனல் வேணி நாதர்தம்மையுமவரடி யாரையுநயந்து பாத வர்ச்சனை புரிவதும் பணிவது மென்றே காதலாலவையிரண்டுமே செய்கருத்துடையார்”
(திருநீல - புரா- 5)
திருநீலநக்கர் திருவாதிரை தினங்கள் தோறும் சிவபெருமானுக்குச் சிறப்பான சிவபூசையை
இயற்றுவதை நியமமாகப் பூண்டு ஒழுகி வந்தார்.
தூயதொண்டர் ஒரு திருஆதிரை நாளில் திரு அயவந்திப் பெருமானுக்கு அருச்சனை புரிந்திடச் சென்றார்.
மனம் பொருந்திய அன்பான அருச்சனை புரிவதற்கு வேண்டுவன யாவும் தேடிக் கொண்டார். நிறை தவத்தார் மனைவி யாருடன் திருக் கோவிலினை வந்தடைந்தார்.
ஆலயத்துள் புகுந்தார். அயவந்தி அமர்ந்த அமுதின் அடிகளைத் தொழுதார். மனைவியார் அருகில் நின்றார். பூசனைக்கு வேண்டுவனவற்றை வேண்டும் பொழுதினில் எடுத்து உதவினார். உணர்வின் மேலவர் உயர்ந்த அர்ச்சனைமுறை தொடங்கினார்.
நிறைவான சிவபூசை நிரம்பியது. அடிகளார் அன்பு நிரம்பாதவரானார். பெருமானை வலமாக வந்தார். முன்னாக வணங்கினார். ஓரிடத்தில் அமர்ந்தார். பெருமானை உயராவணம் எழுதி உற்று
மே ஆட்டிப் படைப் பார்களுண்டோ *)

Page 26
நோக்கினார். நாதனாரின் நமச்சிவாய நாமத்தை நன்கு நவின்றனர்.
அவ்வேளை சிலந்தி ஒன்று விழுந்தது. அது பெருமானுடைய அருட்குறி அடையாளமாகிய சிவலிங்கத் திருமேனியில் நின்றது.
மனைவியார் அது கண்டார். அச்சம் உற்றார். விரைந்து எழுந்தார். இளங்குழந்தையின் மீது வீழ்ந்த சிலம்பியை ஊதுவது போல ஊதினார். பொங்கி எழும் அன்பினால் பெருமான் மீது துமிப்பவர் போல ஊதி நீக்கினார்.
நீல நக்கர் மனைவியாரின் பதைபதைப்பைப் பார்த்தார். செயலைக் கண்ணுற்றார். அவருக்குக் கோபம் குமுறியது. கண்களை மூடிக் கொண்டார்.
'அறிவில்லாத பெண்ணே! நீ என்ன செய்தாய்?'மனைவியார் மொழிந்தார். ‘சிலந்தியைப் போக்க ஊதினேன்"
நீலநக்கனார் மனைவியாருடைய அன்பினை மனத்தில் கொள்ளவில்லை. சிவபூசையில் செய்யத்
தகாத செயல் அது என எண்ணங் கொண்டார்.
மனைவியாரை விட்டு நீங்கத் துணிந்தார்.
“சிவபிரான் திருமேனியில் விழுந்த சிலம்பியை
வேறு விதமாக நீக்க வேண்டும். முன்னே ஓடி வந்தாய். வாய்நீர் பட ஊதித் துமித்தாய். நான் உன்னை விட்டு நீங்கினேன்.” என உரைத்தார் நீலநக்கர்,
மாலைக்காலம் ஆயிற்று. கணவரின் ஏவலினால் மனைவியார் மற்றொரு புறம் நீங்கிச் சென்றார். நீலநக்கர் பூசனையில் ஏற்பட்ட குற்றம் நீங்கப்பிராயச்சித்தம் புரிந்தார். நீலநக்கர் மனைக்குச் சென்றார்.
அஞ்சும் உள்ளமோடு துணைவியார் உடன் ஏகார். அயவந்தி ஆலயத்தில் அம்மையார் அமர்ந்திருந்தார். பஞ்சின் மெல்லணையில் பள்ளி கொண்டார் பரமன் அடியார்
G
( திகழ்பட்டர் துயர்தீர்க்க உய

நீலநக்கரின் கனவில் வெளிவந்தார் அயவந்திப் பெருமான், கங்கைநீர்ச் சடையோடு தமது திருமேனியைக் காட்டினார்.
'அன்பு வைத்த உள்ளத்தோடு எம்மை ஊதிமுன் துமித்த பாகம் இது, இப்பக்கம் எல்லாம் சிலம்பியின் கொப்புளங்கள். "என அருளினார்.
"பள்ளி கொள்பொழுதயவந்திப் பரமாதாங் கனவில் வெள்ளநீர்ச்சடை யோடுதம் மேனியைக் காட்டி உள்ளம் வைத்தெமை யூதிமுன்றுமிந்தபா லொழியக் கொள்ளு மிப்புறஞ் சிலம்பியின் கொப்புளென்றருள.'
(இதுவும் -18)
நீலநக்கர் பெருங்கனவு கண்டார். நனவெனக் கொண்டார். அச்சத்தோடு விழித்தனர். கைகளைக் கூப்பி அஞ்சலித்தார். ஆடினார். பாடினார். அன்போடு துதித்தார். அண்டர்நாயகர் கருணையைக் கருத்திற் கொண்டனர். கசிந்து விண்டனர் கண்ணிர்.
பொழுது புலர்ந்தது. திருக் கோவிலினுள் புகுந்தார். அயவந்தி அங்கணர் பாததாமரை பணிந்தார். நீலநக்கர் மனைவியாரை அழைத்துக் கொண்டு தம்மனை மீண்டார்.
அந்நாளில் -- பிள்ளையார் கங்கை வார் சடையாரைக் கைதொழுவாராகித் திருச் சாத்த மங்கையில் வந்து அணைந்தார். நீலநக்கர் பெருமகிழ்ச்சி பொங்கினார். மலர் மாலைகளாலும் கொடிகளாலும் அலங்கரித்தார். தோரணங்கள் நாட்டினார். நடைக்காவணம் அமைத்தார். சுற்றத்தவர்களோடு தாமும் பிள்ளையாரை எதிர்கொண்டார். பொன் விளங்கும் தம் புதுமனையில் அழைத்து வந்தார். ஆளுடைய பிள்ளையாரின் அருமைக்குத் தக அடியார் கூட்டம் பெருந்திரளாக அணைந்தார்கள். அருள்ஞான வள்ளலாரை அமுது செய்வித்தார்.
அன்று இரவும் ஞானசம்பந்தர் தம்மனையில் தங்குவதற்கு வேண்டியவற்றை நீலநக்கர் மேற்கொண்டார். மெய்யடியார்களோடு திருஞான
திங்கள் காண்பித்த செல்வி

Page 27
சம்பந்தர் திருவமுது செய்தார். ஞானக்குழந்தை :
பின்னர்
“இன்று பெரும்பாணர்க்குத் தங்க ஓரிடம் திருமறையோர் மிக மகிழ்ந்தார். யாழ்ப்பாணர்க்கு வேதிகையின் அருகில்
தந்தருள்வீர்” என்றார்.
இடங்கொடுத்தார். அமைந்துள்ளது.
அது மனையில் நடுவணாக
வேதியில் செந்தீ அப்பொழுது மேலும்
வலஞ்சுழித்து எழுந்தது. அங்கு சகோட யாழ்ப்பாணர் பாணினியாருடன் பள்ளி கொண்டார்.
திருநெறிய
தமிழ்வல்லார்
அயவந்திப்
பெருமானை வணங்கினார். பொங்கு செந்தமிழில்
பெருமானைப் போற்றினார்.
நீலநக்கரைச் சிறப்பித்தருளினார்.
திருப்பதிகத்தில்
பழைய வேதங்களைப் புதிய செந்தமிழில் ஆக்கும் பூசுரனார் ஏனைய தலவழிபாட்டை மேற்கொண்டு எழுந்தருளினார்.
Ol
O5
O6
07
IO
2
14
18
22
25
28
32
26
15.06.99
17.06.99
19.06.99
20,06.99
21.06.99
24.06.99
26.06.99
28.06.99
02.07.99
06.07.99
09.07.99
IO.07.99
12.07.99
I6.07.99
செவ்வாய்
வியாழன் சனி ஞாயிறு திங்கள் வியாழன் சனி திங்கள் வெள்ளி
செவ்வாய்
வெள்ளி
சனி திங்கள்
வெள்ளி
நினைவிற் ெ
மாதப் முதல் ( சதுர்த்தி ஷஷ்டி இரவு உதயம் ஏகாதசி சனிப் பு
பூரணை சங்கடத கலிக்க ஏகாதசி சனிப் ட
அLDT.ெ சதுர்த்தி தகூSண
 
 

நீலநக்கர் பிள்ளையாரிடத்தில் வைத்த அன்பினையும் கேண்மையையும் என்றும் தவிர்ப்பில ரானார். தமிழ்ஞான சம்பந்தர் திருவாணையைக் கடவாதவரானார். நீலநக்கர் சாத்த மங்கையில் தங்கி இருந்தார். சம்பந்தப் பெருமானின் திருவடிகள் பொருந்திய உணர்வுடையராயினர்.
தங்கி இருக்கும் நாட்களில் திருவாதிரைப் பூசனையைச் சிறப்புடன் ஆற்றி வந்தார். ஞானச் செல்வர் எழுந்தருளும் திருத்தலங்களில் நாள் இடைச் செலவிட்டுச் செல்வார். சிலநாள் உடன் உறைந்து
சாத்தமங்கைக்கு மீள்வர்.
நீண்ட நாள் இவ்வாறு நிகழ்ந்தது. பிள்ளையாரது திருக் கல்யாணத்தைச் சேவிக்கும் பேறுபெற்றார். நீலநக்கர் தாமும் உடனாகச்
சிவபெருமானுடைய திருவடிநீழல் அடையப் பெற்றார்.
கொள்வதற்கு
பிறப்பு ஷடசிதி புண்ணிய காலம் மாலை 5.14
இரவு 11.38 வரை.
விரதம் விரதம், அமர்நீதியார் குருபூசை நடேசர் அபிஷேகம் நடேசர் ஆனி உத்தர தரிசனம்
விரதம்
பிரதோஷ விரதம்
ா விரதம்
ஹர சதுர்த்தி விரதம்
ாமர் குருபூசை
விரதம், கார்த்திகை விரதம் பிரதோஷ விரதம்
ாசை விரதம்
விரதம், மாணிக்கவாசகர் குருபூசை, ாயன புண்ணிய காலம் இரவு 1.36 முதல்

Page 28
திருவாசகச் சிந்தனை
திருப்பொt
- பண்டிதர் சி. அ
2செலாடுவதுங் கிராமிய விளை யாட்டுகளுள் ஒன்று. சித்திரைப் புத்தாண்டுக் காலத்திற் சிறியர் பெரியர் ஆண் பெண் என்ற வேறுபாடுகளின்றி எல்லோரும் இந்த விளையாட்டிலே தொடர்பு கொள்வதைக் கிராமப் புறங்களில் இன்றும் பார்க்க முடியும்.
ஊசல் - ஊஞ்சல் எனவும்படும். பொன்னூசல் - பொன்னாலாகிய பலகை பொருத்தப்பட்ட ஊசல் என்பது. அத்தொடர் தெய்வீகத்தை நினைவு செய்யும் திரு என்னும் அடையுடன் சேர்ந்து திருப்பொன்னுாசல் எனப்பட்டது. ஊசல் ஆடுவோர், ஊசல் ஆட்டுவோர்பாடும்பாட்டு ஊசற்பாட்டு எனப்படும். ஊசலாட்டத்தினைப் பொருளாகக் கொண் டமையும் பாடற்பகுதி பொன்னூசல் என்னுந் தொடரான் இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
இறை திருவடிகளிலே, இறை திருவருளிலே உயிர் தோய்ந்து பந்த பாச நீக்கம் பெறும் நிலையைக் கருதும் அருட்சுத்தி என்னுந் தொடரைத், திருவாசக உட்கிடை, இப்பதிக அடைவென்று குறிப்பிடும். ஒப்புமை பற்றி வந்த ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா என்னும் பாவகையானமைந்த ஒன்பது திருப் பாடல்கள் இப்பதிகத்துள்ளன.
தில்லையில் அருளிச் செய்யப்பட்ட இத் திருப்பாடற் பகுதியிற் குறிப்பிடப்படுவன :
1. தன் திருவடிகளை எனக்கு ஊராகத் தந்தவன்; அவன் திருவடிகளைப் பாடி ஆடுவோம் என்பதும், 2. திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனாகிய இறைவன் எழுந்தருளியுள்ள
 
 

ຮີ່
அப்புத்துரை -
திருவிடை மருதூரைப் பாடி ஆடுவோம் என்பதும், இறைவன் எழுந்தருளியுள்ள திருவுத்தரகோச மங்கையிலமைந்த மாட மாளிகைகளைப் பாடுவோம் என்பதும், அடியவர் நெஞ்சுள் நின்று, அமுதமென ஊறிக் கருணை செய்யும் அவன் தூயபுகழ் பாடி ஆடுவோம் என்பதும், தேவர் குழாம் உய்யநஞ்சினை உண்ட பிறைச் சென்னிக் கூத்தன் குணம் பரவி ஆடுவோம் என்பதும், நாயேனை ஆட்கொண்ட அவனது காதாடு குண்டலங்களைப் பாடி ஆடுவோம் என்பதும், என் அத்தன் என்னையும் ஆட்கொண்டவன்,
அவனது அழகினைப்பாடி ஆடுவோம்
என்பதும், நமை ஆண்டான் திருவிளையாடல்களைப் பாடி ஆடவேண்டும் என்பதும், எங்கள் பிறப்பை இல்லாமற்செய்து அடிமை கொண்டவனது குணம்பரவிப் பாடி ஆடுவோம் என்பதும்,
இத் திருப்பாடல்களின் கருத்தமைதி எனக்
காணுகின்றோம்.
வரலாற்றுச் செய்திகள் :
1.
2.
3.
4.
நாராயணன் அறியா நாண்மலர்ந்தாள். வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள். நஞ்சமர் கண்டத்தன் "ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர் குழாம் நானாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாகஉண்டருளும்உத்தரகோசமங்கைக்கோனார் "பிறைச் சென்னிக் கூத்தன்'

Page 29
சைவநிதி விளங்கு
தா. வீரவா பூரீ காளி அம்மன் ஆல
உலகத்தில் இன்று நல்ல விஷயங்களைக் கேட்பதும் நல்லவற்றைப் பார்ப்பதும் அரிதாகிவிட்டது. தர்மமும் நியாயமும் புகலிடம் தேடி அலைய வேண்டிய நிலைமை வந்துவிட்டது. நல்ல எண்ணங்களும் தூய சிந்தனைகளும் இருக்க வேண்டிய உள்ளங்களில் மாசும் தூசும் வந்து தங்கி விட்டன. ஆசைகளின் வசப்பட்ட் மனிதன் தர்ம வழியிலிருந்து விலகி நிற்கின்றான்.
மத நம்பிக்கை, அறிவு, தீமைகளை எதிர்க்கும் குணம் குறைவுபட்டதுதான் காரணம். இதற்கு நம் மதம் அறிவுபூர்வமான, தத்துவமான, விஞ்ஞான அடிப்படையிலான என்றும் புதுமை மாறாத பெருமைக்குரியது என்பதைக் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் எடுத்துக் கூறத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள சைவநீதி இந்தப் பேருண்மையைச் சில ஆண்டுகளு க்குள்ளேயே சாதித்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
அதற்காக நம்மைக் கட்டிப் போட்டு மதத்தைப் புரிந்து கொள்ள வைக்க முற்படவில்லை. நாம் சாதாரணமாக வாழும் முறையிலேயே நம்மை அழைத்துக் கொண்டு போய் நமது பலவீனங்களைப் புரிந்து, ஏற்றுக் கொள்ளச் செய்வது நல்ல சகுன மென்றே எண்ணுகின்றேன். மனிதன் தேவனாக வாழ மட்டுமல்லாது முதலில் மனிதனாக வாழ வழி காட்டியாகப் பணி புரிகிறது.
இம்மாத இதழை வவுனியா 9) குருமண்காட்டுச் சந்தியில் GBTLS6)
 
 

S
உலக மெல்லாம்
கு - தலைவர்,
ய பரிபாலன சபை, வவுனியா
கொண்டிருக்கும் பூரீ காளி அம்மன் வருடாந்த உற்சவ மலராக வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதற் கிணங்க அதற்கிசைந்து இம்மலர் வெளியீடு செய்தமைக்கு நாம் பெருமைப்படுவதோடு நன்றி நிவிலவும்
கடமைப்பட்டுள்ளோம்.
நல்ல இனிய கருத்துக்கள் கொண்ட இம் மாத இதழ் சைவப் பெருமக்களுக்கும் துன்பத்தில் உழல்வோருக்கும் அருமருந்தாகவும் திகழ்கின்றது. அத்துடன் இக்கால இளம் சந்ததியினரின் உள்ளக் குமுறல்களுக்கு, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக மேலும் பல விடங்கள் சேர்க்கப்படுவது இன்றியமையாதது என
எண்ணுகிறேன்.
இவ்விதழ் மேலும் சிறப்பாக மலர்ந்து இந்நாட்டில் மட்டுமல்லாது உலகழாவிய ரீதியில் சைவ மணம் பரப்ப வேண்டும் என்பது எங்கள் விருப்பமும் கூட சைவப் பெருமக்களாகிய நாம் இவ் வெளியீட்டை ஊக்குவிப்பது என்பது நமது கடமை எனக் கருதி மாதந்தோறும் இதழை வாங்கிப் படித்துப் பயனுறுவது அவசியமாகும்.
இம் மாத இதழ் மேலும் வளர்ச்சி பெற்றுச் சிறப்பாக வெளிவர வேண்டிச் பூரீ காளி அம்மனின்
பாதாரவிந்தங்களை வழுத்தி வாழ்த்தி
வணங்குகின்றேன்.
GS
饼

Page 30
枋
திருவிளையாடற் புராணம்
கடல் நீர் வற்றும்படி
- d. L6)/
உக்கிரபாண்டியனது பெருமைக்குரிய ஆட்சிக் காலத்தில் வேத விதிப்படி பல யாகங்களையும் செய்தார். அசுவமேத யாகம் தொண்ணுாற்றாறு செய்த பொழுது இந்திரன் பொறாமை கொண்டான். நாடெல்லாம் வளம் பெருகிப் பொன்னுலகம் போலப் பொலிவதாலல்லவா இவன் யாகம் செய்கி ன்றான். இதனை எப்படியாவது தடை செய்ய வேண்டுமென்று சிந்தித்த இந்திரன் வருணனை அழைத்து, ' ஊழிக்காலத்து நீ ஏழுலக ங்களையும் ஒருங்கழிக்கும் கடலாய் உருத்துச் சென்று மதுரையை வளைந்து அழிப்பாயாக'
என்றான்.
பின்னே நடக்கவுள்ளதை அறிந்து கொள்ளாத வருணன், இந்திரன்
குறிப்பிட்டபடியே செய்யத் துணிந்தான். அர்த்த
இராத்திரியிலே சமுத்திரம் அண்ட கூடத்தை எட்டிப் பெருக்கெடுத்து மதுரையின் கீழ்த்திசையை அணுகும்வேளை, சோமசுந்தரக் கடவுள் உக்கிரபாண்டியனது கனவிலே ஒரு சித்தராகத் தோன்றி, "பாண்டியனே! மதுரையை அழிக்கும் பொருட்டுச் சமுத்திரம் பெருகி வருகிறது. நீ விரைந்து எழுந்துபோய் உன் வேற்படையை எறிந்து வெற்றி பெறுவாயாக' என்று அருளிச் செய்தார். உடனே உக்கிரபாண்டியர் கையிரண்டுஞ் சிரசின்மேற்
ഉബ് ഇ ബ
 
 

குவிய நாத்துதிக்க விழித்தெழுந்து மந்திரிகளோடு சென்று பேரொலியுடன் வருஞ் சமுத்திரத்தைக் கண்டு அதிசயித்து நின்றனர். அப்போது, முன் கனவில் வந்த சித்தர் இப்போது கனவில் வந்து "அப்பனே, இப்பகை கெடும்படி வேற்படையை எறிந்து பூமியைக் காப்பாயாக' என்றார். உக்கிரபாண்டியர் உடனும் வேற்படையை வலமாகச் சுழற்றி எறிந்தார். அப்டையின் தாக்கத்தினாற் சமுத்திரம் வற்றி முன்னைய நிலையை அடைந்தது. அப்பொழுது பூமியில் நின்ற சித்தர் மறைந்து விட்டார். ஆகாய வெளியிற் சிவபெருமான் உமாதேவியார் சமேதரராகக் காட்சி தந்தருளினார். தரிசித்த பாண்டியர் அடியற்ற மரம் போல் நிலத்தில் வீழ்ந்து அஞ்சலி செய்து எழுந்து செல்வராயினர். பஞ்ச துந்துபிகள் ஒலிக்க, பூதங்கள் வணங்க வேதகீதங்களாலே திக்குகள் செவிடுபட தேவர்கள் துதிக்க ஆகாய மார்க்கமாக வந்து சிவபெருமான் திருக்கோயிலுள்ளே புகுந்தார். அஞ்சலி செய்து சேவித்து வந்த உக்கிரபாண்டியர் சிவபெருமானை வணங்கி விடை பெற்று மகளிர் அட்டமங்கலம் ஏந்தத் திருமாளிகையினுள்ளே புகுந்தார். உலகின் பாதுகாவலராகி ஆட்சி புரிந்தார்.
ஆதாரம் நாவலர் திருவிளையாடற் புராண வசனம்,

Page 31
திருக்கைலாய பரம்பரை மெ
பDக்களின் வழிபாட்டுக்கெனச் சைவ ஆலயங்களும், மக்களின் சேவைக்கெனச் சைவ ஆதீனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் சைவத்தின் இரு கண்களாகப் போற்றப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். ஆலயங்களை மக்களின் வழிபாட்டுத்தலங்களென மக்கள் நன்கு அறிவர். அங்கு சென்று வழிபட்டு அதன் பலன்களையும் பெற்று வருவதனால் மிகவும் தெளிவாக அதனைப்பற்றி அறிவர். ஆனால் சைவாதீனங்கள் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்கமாட்டார்கள். அது என்ன? அதில் என்ன நடக்கிறது? அது எங்கிருக்கிறதென்றே மக்கள் கேட்பதில் நியாயம் உண்டு. காரணம் இலங்கையில் பலருக்கு அதன் நாமமே தெரியாது. இந்தியாவிற் சென்ற பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிச் சைவச் சேவையில் ஈடுபட்டுவருவதனால் அங்கு பலருக்கும் அது பற்றித் தெரிவதற்கு வாய்ப்புண்டு. அங்கு ஆதீனங்கள் தோன்றிப் பெருநிதி வசதியுடன் பல சைவப் பேராலயங்களின் பரிபாலனத்தைச் செய்து வருகின்றன. அன்றியும் செந்தமிழ்க் கல்லூரி களையும் திருமுறைப் பண்ணிசை வகுப்புக்களையும் நடத்தி வருகின்றன. இங்கிருந்தும் பலர் அங்கு சென்று பயின்று பட்டம் பெற்று வந்துள்ளனர். சைவத்திருமுறைகளையும் சைவ அறிவுநூல்களையும் அச்சேற்றி மலிவு விலையிற் பதிப்பித்து வழங்கியும் வருகின்றன. இவற்றால் அங்குள்ள மக்கள் பயன்பெறுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் தெரிந்திருக்கின்றனர். அங்குள்ள ஆதீனம் யாழ்ப்பாணத்து நல்லைநகர் ஆறுமுகநாவலர் பெருமானாருக்கு அன்னாரின் கல்வி, கேள்வி, அறிவாற்றல் வாக்குவன்மை, சைவனுநுட்டான சீலம் என்பவற்றைக்கருதிச் சென்ற நூற்றாண்டில் "நாவலர்ப்பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. இதன்
 
 

பேரில் இலங்கையில் உள்ள சைவத்தமிழ் அறிஞர்கள் ஆதீனங்கள் இருப்பதனை அறிந்திருப்பார்கள். நம்மிற் பலருக்கு அப்படியான ஆதீனங்கள் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.
இலங்கையில் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இரு சைவாதீனங்கள் தோன்றியுள்ளன. ஒன்று நல்லைதிருஞானசம்பந்தர் ஆதீனம். அது இன்று நல்லையாதீனமென்றே சுருக்கமாக மக்களால் அழைக்கப்பட்டுவருகிறது. அவ்வாதீனம் நல்லூர் கந்தசாமியார் கோவிலின் மேற்குத்திசையில் அங்கிருந்து தட்டா தெருச் சந்திக்குச் செல்லும் வீதியில் அமைக்க ப்பட்டிருக்கிறது.
மற்றையது இலங்கை மெய்கண்டார் ஆதீனமாகும் இவ்வாதீனம் 1972ம் ஆண்டு சித்திரைத் திங்கள் நிறைமதி நன்னாளில் (சித்திரையில் - சித்திரை) காஞ்சி தொண்டைமண்டல ஆதீனம் 29ஆவது குருமகா சந்நிதானம் சீலத் திருஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாதீனத்தின் முதலாம் குரு முதல்வராகக் காரைநகர் தந்த அருட்செல்வர் அருளம்பலம் (தொண்டர்), ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் என்னும் தீட்சாநாமம் சூட்டப்பட்டு நியமிக்கப்பட்டார். இவ்வாதீனத்தோடு இரட்டைச் சைவஸ்தாபனங்களாக மிளிரும் மற்றொன்று கொழும்புத் திருநெறிய தமிழ் மன்றமாகும். இதனையும் காஞ்சிபுர மெய்கண்டார் ஆதீன பரமாச்சாரிய சுவாமிகளே உருவாக்கி வைத்தார்கள். இவை இரண்டும் இலங்கையில் சைவச் சேவையைப் புரிந்து வெள்ளிவிழாக் கண்டு மிளிர்வதை அனைவரும் அறிவர். மெய்கண்டார் ஆதீனம் 60556) TLL பரம்பரைச் சம்பந்தமுடையது. கைலாயத்திலே வந்த ஜனகர் முதலாம் நால்வருக்கும் அறமுரைத்த திருநீலகண்டமுடையவரே இவ்வாதீன

Page 32
முதலாம் குரு முதல்வராவர். அது உரைக்கிற் பெருகும். கைலையில் இருந்து வளர்ந்த குருபரம்பரை தொண்டைமண்டலம் காஞ்சிபுரத்தின் மூலமாக இலங்கையிலும் காலூன்றி விட்டதென்பதை அறியும் போது நாம்பெரும் பாக்கியசாலிகளே. இதன் பேறாகிய இவ்வாதீனம் கைலாய பரம்பரை மெய்கண்டார் ஆதீனம் என்று அழைக்கப் படுவதாயிற்று.
மெய்கண்டார் ஆதீனம் கொழும்பில் நிறுவப்பட்டு யாழ்ப்பாணத்தில் வளர்க்கப்பட்டு 1996ம் ஆண்டு ஐப்பசி மாதம் தீபாவளி நன்னாளிலிருந்து வவுனியாவில், இங்குள்ள சைவநன்மக்களின் ஆதரவில் தன் சேவையில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. வவுனியாவில் இவ்வாதீனம் இங்குள்ள சைவமன்றங்களின் ஆதரவோடும், கல்வித்திணைக்களத்தின் உதவியோடும் மாணவர்களின் சைவக்கல்வியை வளர்த்து அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கமாகச் சமயப் போட்டிகளை நடாத்திப் பரிசளிப்பு விழாக்களையும் நடாத்தி வருகின்றது. சைவ சமய நூல்களை வெளியிட்டு மலிவு விலையில் வழங்கிவருகிறது. ஆசிரியர்களுக்குச் சைவசமய பாடக்கருத்தரங்குகளை நடாத்தி அவர்கள் பணிக்கு உதவிவருகிறது. 1998 மார்கழியில் நடந்த கல்வித்தராதரப் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்குச் சமய பாடக்கருத்தரங்கினை நடத்தி உதவியது. பஞ்சபுராணம் ஒதும் முறையை ஆலயங்களிலும் சமூக நிகழ்வுகள் இடம் பெறும் போதும் செவ்வனே செய்யும் பொருட்டு அது சம்பந்தமான நூல் அச்சிட்டு வழங்கிச் சமயபாட ஆசிரியர்களுக்கும் சங்கீதங் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பண்ணிசைக் கருத்தரங்கு நடாத்தியுள்ளது. அவர்களுக்கு உளநலக் கருத்தரங்கும் உடற்பரிசோதனையும் இலவசமாக நடத்த ஆயத்தங்கள் உண்டு. இங்ங்னமாக ஆதீனம் பல்துறையிலும் தன் சேவையைச் செய்து வருவதையும் வவுனியா வாழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
இவ்வாதீனத்தின் முதலாங்குரு முதல்வர் 1990լի ஆண்டு சித்திரைப் பரணியில் பரிபூரணமடைந்து மகாசமாதியடைந்தார். அன்னாரைத் தொடர்ந்து சைவ சித்தாந்த கலாநிதி
* அங்கயற்கண் எம்பிராட்டி :
 
 

திரு. க. கணபதிப்பிள்ளை அவர்களை வித்துவான் வ. செல்லையா அவர்கள் இவ்வாதினத்தின் பொறுப்பை ஏற்கும்படி வேண்டினார். அன்னாரின் சைவசித்தாந்த வகுப்பு மாணவர்களும் ஆதீனகுரு முதல்வராக வரவேண்டும் என்று வேண்டியதன் பேரில் அவர்கள் மனங்கொண்டு ஆதீன 2ஆம் குரு முதல்வராக ஏற்று சீலத்திருஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள் என்னும் தீட்சா நாமமும் பெற்று ஆதீனத்தைப் பல்வகைச் சிறப்புகளுடனும் வளர்த்தெடுத்து வெள்ளி விழாவினையும் எடுத்து ஆதீன வரலாற்று நூல் ஒன்றினையும் ஆக்கித்தந்தார்கள். இரண்டாம் குரு முதல்வர் தன் சுகவீனத்தைக் காட்டி ஆதீனத்தை பொறுப்பேற்கத்தக்கோரை வர வேண்டித் துண்டுப்பிரசுரம் ஒன்றினையும் வெளியிட்டார். பலனேதும் இல்லாது போக அவர்களும் நோய்வாய்ப்பட்டு ஒய்வுபெற்று விட்டார்கள். தற்போது ஆதீனத்தின் பரிபாலனத்தைத் தற்காலிகமாகப் பொறுப்பேற்று வித்துவான் வ. செல்லையா நடாத்தி வருகிறார்.
சைவநன்மக்களுக்கோர் வேண்டுகோள்
மெய்கண்டார் ஆதீனப் பொறுப்பைவிளம் பரஞ்செய்து பதவியில் வைப்பது மரபில்லை. ஆகவே சைவநன்மக்கள் ஆதீனங்களின் மரபுக்கேற்ற ஆசார அநுட்டான சீலம், மெய்கண்டசாஸ்திரம், திருமுறைகளில் அறிவும் நிறைந்த ஒருவர், இல்வாழ்க்கையில் முற்றிப் பழுத்தபழமாகித்துறவு மேற்கொள்ள விருப்பமுள்ள ஆர்வம் உள்ள ஒருவரைத் தெரிவு செய்து உதவும்படி வேண்டுகின்றோம். 27 ஆண்டுகளைத் தன் பணியில் பூர்த்தி செய்யும் ஆதீனத்தைத் தண்ணிலா இல்லாத வானம் போலத் தவிக்க விடலாமா? சைவநன்மக்களே சிந்தியுங்கள். சிந்தித்து ஆவன செய்யுங்கள்.
வாழ்க சீரடியாரெல்லாம் நன்றி
இங்ஙனம்
ஆதீன வெளியீட்டுப்பிரசாரப்பிரதம ஆசிரியர்
கு. நகுலேஸ்வரன்
ബിങ് ബി. *

Page 33
வவுனியா குருமண்காடு
பூணூரீ பத்திரகாளி அம்பாள் ஆலய
விழாக் காட்சிகள்
s
சிவ
ÈH LGI UGOTI
சைவநீதி இதழ், நல்ல தாள்களைக் கொ6 விருப்பம். அவ்விருப்பை நிறைவாக்கும் எங்கடன் நுங்கடனாகும். இதுகாரணமாக எதிர் வரும் ஆண்டிலிருந்து ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. விெ குரியதாகாது. அடுத்தமாதம், பிரமாதி ஆனி இதழிலிருந்து இருக்கும்.
 

2
LDYLJLib
f ថៃចាg
ண்டதாக இருக்க வேண்டும் என்பது பலர் கடன்பணி செய்வதே எமது விருப்பமும்.
இலங்கைகுள்ளான சந்தா வருடம் 250/- பளிநாட்டுச் சந்தாத்தொகை மாற்றத்திற்
இலங்கையில் தனிப்பிரதி 25/- ரூபாவாக
- நிர்வாகம் -

Page 34
ᏑᎧᏑᎧᎫ158 SAIVANEETHI
- Chat வவுனியா குருமண்காடு காளியம்பால்
飞}990520
Reg. No. QD/37/ News 99. (96.65lgig Gogol Eg, So என்னும் முகவரியிலுள்ள யுனி ஆர்ட்ஸ் இல்
 
 

சைவ வளர்ச்சி கருதய செய்தி தரும் மாத இதழ். MONTHLY MAGAZINE OF
SAWAH SWE WAA - JUNIE 1999.
i Sakti
தேவஸ்தான ஹோற்சவச் சிறப்பிதழ்
1999. O5. 29.
வனத்தினரால் 48B, புளூமெண்டோல வீதி, கொழும்பு - 13 அச்சிட்டு 1999 05, 20 இல் வெளியிடப்பட்டது.