கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1999.06-07

Page 1
சைவநிதி
SAIVANEETHI
நயினாதீவு நாகபூஷணி
மகோற்சவச் I4. Oo. 1999
 
 

| ភ្លាត្រា ១៣ ខ្សត្រិយ | GJij. JUjit IDIJ, இதழ்
MONTHLY MAGAZINE ΟΕ SAVAISM JUNE-JULY 1999
பிரமாதி ஆனி
东 அம்பான் 9b6O ULI
சிறப்பிதழ் 29.06. I999

Page 2

நயினை உற்சவமூர்த்தி
9 DUITST
݂ ݂
韃藝
தியான மண்டபத்துடனும் கல்யாண மண்டபத்துடனும்
ஆலய விதி

Page 3
।
"மேன்மைகொள் சைவநி
ԹՍՀ-1
பிரமாதி ஆனி சைவசமய வளர்ச்சி
கெளரவ ஆசிரியர் ஞானசிரோமணி சைவப்புலவர்மணி வித்துவான் திரு. வ. செல்லையா Mr. W. Chellaiah
நிர்வாக ஆசிரியர் திரு. செ. நவநீதகுமார் Mr. C. Navaneethakumar
பதிப்பாசிரியர் திரு. பொ. விமலேந்திரன் Mr. P. Vimalendran Unie Arts (Pvt) Ltd Tel.: 330195, 478133 E-mail uniearts (0sltlik
மதியுரைஞர் பண்டிதர் ச. சுப்பிரமணியம் Pandit S. Subramaniyam
திரு. பொ. பாலசுந்தரம் Mr. P. Balasundaram
Trustee Sri Waratharaja Vinayagar Temple, Kotahena
திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா சட்டத்தரணி Mr. Rajarajeswaran Thangaraja Attorney-at-Law
திரு. கு. மகாலிங்கம் Mr. K. Mahalingam
Sivayogaswami Trust Fund
திரு. அ. கந்தசாமி
Mr. A. Kandasamy Chairman, U.P. S.
42, Janaki Lane,
D60TL) 6T GL வற்றையே எப்பொழு ஏற்படுத்தும்.
வழி நடந்து அம்மரம் நினைத்தை இருந்தபடியே அறுசு6 எண்ணினான். அவ உண்டான். படுக்கை நினைத்தான். அவன் படுத்திருந்தபடி, அரு நினைத்தான். இருவ அப்போது அ நினைத்தபடியே எல் எண்ணிய போது அவ விழுங்கி விடுமோ எ விழுங்கியது.
தனக்கு உரிய அல்லாதவற்றை மன இருந்து நன்மை பெற நினைவு எப்டெ நினைவிற்கே இடமில் தாம் அடிமை என்பா மாறுபாடே காரணம். நேரம் இல்லை எ செயற்படுகிறோம். த வழிபட வேண்டும். சரித்திரப் பிரசித்தி டெ மனத்திலாவது நினை இம்மாத சைவி அம்பாளை உங்கள் ம அருட் கருணை எல் இணைந்து உதவிய அவளை நினைத்து அ
Colombo 4.
பிரமாதி ஆனி
 

9.
2ILOLIh
தி விளங்குக உலகமெல்லாம்”
ភាណាម៉ី
கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 3
மறந்து உய்வனோ?
ாழுதும் எதையோ நினைத்தபடியே இருக்கும். நல்லன தும் நினைக்க வேண்டும். அல்லாத நினைவு அழிவை
களைத்த ஒருவன் ஒரு மரத்தடியில் இளைப்பாறினான். தக் கொடுக்கும் கற்பகதரு என அவனுக்குத் தெரியாது. வை உண்டி இப்போது இருந்தால் உண்டு பசியாறலாமென பன் முன்னே உணவு வகைகள் வந்தன. திருப்பதியாக 5 இருந்தால் நீட்டி நிமிர்ந்து நிம்மதியாக உறங்கலாமென நினைத்தபடி பஞ்சணைப்படுக்கை அங்கு தோன்ற அவன் கிருந்து கவரி வீச இருவர் இருந்தால் நன்றாயிருக்கு மென Iர் அருகில் வந்து கவரி வீசினர்.
வனுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. நான் லாம் நடக்கிறது. இது பூதத்தின் மாயம் தானே என பன் முன் ஒரு பூதம் தோன்றியது. இந்தப் பூதம் என்னை ன நினைத்தான். அவன் நினைவின்படி பூதம் அவனை
வற்றையே தான் அனுபவிக்க வேண்டும். தன் உடமை த்தினால் கூட நினைக்கக் கூடாது. நல்ல நினைவுடன்
வேண்டும். மாறுபட்ட நினைவால் தீமையே பெருகும். ாழுதும் இறைவன் மீது இருந்தால் துன்பமேயில்லை. வேறு லை. சிந்தனை முழுவதும் சிவன்பாலே வைத்தவருக்குத் சுந்தரர். எமது இன்றைய துன்பங்களுக்குச் சிந்தனை
இறைவழிபாடு, இறை சிந்தனை இவற்றிற்கு எமக்கு ன்று நாளும் பொழுதும் ஏதேதோ செய்கிறோம். தினமும் சில நிமிட நேரமாவது இறைவனை நினைத்து ஆலயத்திற்குச் சென்று வழிபடல் வேண்டும். புராதன பற்ற ஆலயங்களிற்குச் செல்ல வேண்டும். முடியா விட்டால் த்து வணங்க வேண்டும். நீதி சக்தி பீடங்களுள் ஒன்றான நயினை நாகபூசணி னக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அம்பாள் லோருக்கும் கிடைக்க வேண்டுமென்று இந்தப் பணியில் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். மறவாது மனத்தில் புருள் பெற்று உய்வோமாக,
( சைவ நிதி )

Page 4
O)
11.
10.
12.
13.
14.
15.
16.
17.
பொருளடக்கம்
மறந்து உய்வனோ,
- ஆசிரியர் பொருளடக்கம். . நயினை அம்பிகையின் ஆலய வரலாறு.
- கா. ஆ. தி அம்பிகையின் மகத்துவம்
- நா. யோகந நயினை பூரீ நாகபூசணி அம்மன் திருவூஞ்சல் - பூரீ மா. அ. பூரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் .
- சிவபூரீ ப. மு
அமுதசுரபியில் அன்னதானம் என்னும் அற - ச. பரமேஸ்
தேவார அருள் மொழித்திரட்டு - பதிமுதுநிை
இந்நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் சை
- இலக்கிய க தாயன்பு.
- திருமுருக கி அரிவாட்டாய நாயனார்.
- சிவசண்முக
நித்திய விரதம்.
- சைவப் புல
குடமுழுக்குக் கண்ட சேக்கிழார் கோயில்,
- சித்தாந்த ரத் நாவகாரியம்.
- முருக வே. திருவாசகச் சிந்தனை. அன்னைப் பத் - பண்டிதர் சி
நினைவிற் கொள்வதற்கு- . வவுனியா - சிவபுரம் சிவாலயம்
சைவநீதி இதழில் வரும் கட்டுரைகளிலுள்ள கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவி
 

S S S SL S SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS S SS S SS S SS SS SS SSSSSSS SS SS SS SS SS SS SS SS SS SS SS
S SS SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வ சித்தாந்தம். லாநிதி பண்டிதர் மு. கந்தையா . 14
ருபானந்த வாரியார் .. . . . . . . . . . . . . I9
21
வர் சு. செல்லத்துரை . 23
தினம் க. கணேசலிங்கம். 24
26
து
28
SS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SSSS SSSSS SS SS SS SS SS SSSSSSSSS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SSS SSS SSS SS SS SS SS SS SS 29
30 காக்கக்க ----------- ༄༽
ருததககளுககுக
爪 - இதழ்நிர்வாகிகள்

Page 5
பிரமாதி ஆனி
PiusGOGI 3HIhUGOöLI
ஒரு கண்ே
கா. ஆ ! தலைவர் நயினை பூரீந
இலங்கையின் வடபால் யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள சப்ததீவுகளில் நடுநாயகமாகத் திகழ்வது நயினாதீவாகும். பாரம்பரியமான வரலாற்றைக் கொண்ட இத்தீவில், அறுபத்து நான்கு சத்திபீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடத்தை அலங்கரித்துக் கொண்டு நாக ராஜேஸ்வரி. நாகேஸ்வரி, நாகபூசணி என்ற திருநாமங்களுடன் அம்பிகை அருளாட்சி செய்கின்றாள்.
இப்புவனேஸ்வரி பீடத்தின் அம்பிகைக்குப் பூக்கொண்டு நாகத்தால் பூசிக்கப்பட்டதால் நாகபூசணி, நாகேஸ்வரி என்ற திருநாமங்கள் வழங்கப்படலாயிற்று. இதனைத் தெளிவுபடுத்தும் வரலாறும் உண்டு. நயினாதீவுக்கு வடக்கேயுள்ள அனலைதீவின் ஒருபகுதியான புளியந்தீவில் இருந்து நாள்தோறும் பூக்கொண்டு வந்து நாகம் ஒன்று அம்பிகையை வழிபட்டு வந்தது. ஒருநாள் கடல் நடுவே வரும்வழியில், கருடன் ஒன்று நாகத்தினைக் கண்டு அதனைக் கொல்ல முயன்றது. நாகம் கடல் நடுவே உள்ள கல்லொன்றில் சுற்றிக் கொண்டதும், எதிரிலுள்ள கல்லொன்றில் கருடன் அமர்ந்து பாம்பினைக் கொல்வதற்கு எ தி ர் பார் த் தி ரு ந் த து . அக்கடல்வழியே மரக்கலத்தில் பண்டங்களை ஏற்றி வந்த வணிகன் ஒருவன் இதனைக் கண்டான். பாம்பின் மீது இரக்கம் கொண்டு, அதனைக் கொல்ல வேண்டாமெனக் கருடனிடம் கேட்டுக் கொண்டான். அவ்வேளையில் உனது செல்வம் அனைத்தையும் கொண்டு, நாகேஸ்வரிக்குக் கோயில் கட்டுவதானால் நான் விலகிச் செல்கின்றேன் என்ற வாக்குக் கேட்டது. வணிகன் அதனை ஏற்று, அவ்வாறு செய்வதாக உறுதி
* நாக தோஷத்தை
 
 
 
 

fរ៉ា ឱ្យចាបu ចាប្រចាបញ្ជា DOTTI LILLIh. . . . .
தியாகராசா ாகபூஷணி அம்மன் கோவில்
அளிக்கவே, கருடன் நாகத்தை விட்டு விலகிச் சென்றது. அன்றைய தினம் இரவு வணிகன் வீட்டுச் சயனஅறையில் நாகரத்தினக் கல் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட வணிகன், அன்னையின் திருவருளாகக் கருதி, அதனைக் கொண்டே, அம்பிகையின் ஆலயத்தை அழகுற அமைத்ததாகவும் நயினாப்பட்டர் என்ற பூசகரை பூசைக்கு அமர்த்தியதாகவும் வரலாறு உண்டு. இவ்விரு கற்களும் ஆலயத்தின் வடக்கேயுள்ள கடல் நடுவே சரித்திரச் சான்றுகளாக இன்றும் உள்ளன.
மணிமேகலைக் காப்பியத்திற் கூல வாணிகன் சீத்தலைக் சாத்தனாரால் மணிபல்லவம் என்னும் தீவுபற்றிய செய்தி கூறப்படுகின்றது. இம்மணிபல்லவமே நயினாதீவு என்பது ஆய்வாளர்கள் பலரின் முடிவு விலைமதித்தற்கரிய மாணிக்கம் பதித்த அரியணை ஒன்று, தேவ உலகவேந்தனாகிய இந்திரனால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்பெறுமதி வாய்ந்த அரியணைக்காக நாகமன்னர்கள் இருவர் போரிட்டதாகவும், இப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் புத்தர் பிரான் வந்து, இவ்வரியணை இந்திரனாற் புவனேஸ்வரி அம்பாளுக்கெனப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தென்ற உண்மையை எடுத்துரைத்து, அ ன்  ைன க் கு ரி ய இவ்வரியணையை வணங்கிச் செல்லுமாறு வேண்டி, அ வ ர் க  ைள ச் சமாதானப்படுத்தியதாகவும், அவர்கள் அவ்வாறே வழிபட்டுப் பகைநீங்கிச் சென்றதாகவும் கூறப் படுகின்றது. புத்தபெருமான் இலங்கைக்கு மூன்று முறை வந்ததாகவும், மூன்றாவது தடவையே இம்மணிபல்லவத்துக்கு
அகற்றுவாப் போற்றி *

Page 6
வருகை தந்ததாகவும், அவரின் வருகைக்கு முன்பே இந்திரனால் அமைக்கப்பட்ட பீடமான புவனேஸ்வரி பீடம் இங்கு அமைந் திருந்ததாகவும் கிடைக்கும்
செய்திகளிலிருந்து தெரிகின்றது. இப் பீடத்தினைத்
தேவர்கோனாகிய இந்திரன் வழிபட்டான் என்பது ஆய்வாளர் கூறும் செய்தியாகும். பெரியவன் தோன்றா முன்னர் இப்பீடிகை கரியவன் இட்ட காரணத்தானும்” என்னும் மணிமேகலைக் காப்பிய வரிகளால் இதை உணரலாம். (மணிமேகலை 25, 54 -55) புத்தபெருமான் வருகையை நினைவு கூரும் வகையில் தருமபீடிகை அமைந் திருந்ததாகவும், அதனை மணிமேகலை வழிபட்டதாகவும், மணிமேகலைக் காப்பியத்தால் அறியும் செய்தியாகவுள்ளது.
சாவக நாட்டில் மழை வளம் சுருங்கி அங்குள்ளோர் உணவு கிட்டாது வருந்து வாராயினர். இதனை அறிந்த ஆபுத்திரன் சாவக நாடு செல்லும் கப்பல் ஒன்றிலே அக்கப்பலில் உள்ளோர் வேண்டியபடி, தான் வைத்திருந்த அமுதசுரபியோடு ஏறி அங்குள்ளவர்களின் பசிபோக்கிடச் செல்லலானான். இந்திரனின் சூழ்ச்சியாற் புயல் வீசிற்று. அப்புயல் காரணமாகக் கப்பல் மணிபல்லவத்திற் கரை ஒதுங்கியது. புயல் அடங்கியதும் கப்பலிலுள்ளோரும் மாலுமிகளும், ஆபுத்திரன் ஏற்கனவே கப்பலில் ஏறிவிட்டான் என்று எண்ணித் தமது பயணத்தைச் சாவகம் நோக்கிக், தொடர்ந்தனர். தன்னந் தனியனாய்த் கப்பலில் ஏறத்தவறிய ஆபுத்திரன் தன் பணி நிறைவேற முடியாததால் வருந்தித் தான் உறங்கிய இடத்தின் அருகேயுள்ள கோமுகிப் பொய்கையில் அமுதசுரபியை இட்டு, தான் உண்ணா நோன்புநோற்று மரணம் அடைந்தான். இவ்வரலாறு மணிமேகலைக் காப்பியத்தால் நாம் அறியக் கூடிய செய்தியாக உள்ளது.
நயினாப்பட்டர் என்பவர் பூசகராக இருந்த காரணத்தால் நயினாவு தீவு எனப் பெயர்வரக் காரணமாயிற்று என்பர். நாகபூசணி அம்மன் ஆலயக் கருவறையிற், சுயம்பு மூர்த்தமாகத் தோன்றிய ஐந்து தலை நாகமும், அம்பாளும் இணைந்த மூர்த்தமுள்ளது. இது பதினான்காயிரம் ஆண்டுப் பழமைவாய்ந்ததென்றும், நாக வழிபாட்டோடு தொடர்புடைய மிகப்பழமையான சுயம்பு மூர்த்தமெனவும், சிற்ப சாஸ்திர
* திவாகர சகஸ்ர பி
 

ஆராய்ச்சியாளர் எம். நரசிம்மன் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். இந்தியாவிலும் நாக வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்ற இவ்வாறான புராதன கோயிலைக் காண்பது அரிது. தூயதும், கலப்பற்றதுமான நாகவழிபாட்டின் பண்பினை, நயினாதீவிற் காணலாம். இந்நாகச்சிலை பதினான்காயிரம் வருடப் பழமையுடையது. இலங்கை, இந்தியா போன்ற இடங்களிலோ வேறெங்குமோ பார்க்க முடியாத பிரத்தியட்ச உருவமாகவும் நாக வழிபாட்டின் தொன்மைக் கருவூலமாகவும் இது இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாகதீவு, நாகத்துவீபம், நாகதீபம் எனப் பல பெயர்களால் இத்தீவு வழங்கப் படுகின்றது. என்பதை வரலாறுகள் மூலம் அறிகின்றோம். . இந் நாக வழிபாடும் நயினா தீவுக்கு இவ்வாறான பெயர் வரக் காரணமாக இருந் திருக்கலாம்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகிய அந்நியர் வருகையால் மதவழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்பட்ட போது இவ்வாலயமும் பாதிக்கப்பட்டு, இருந்ததாகக் கூறப்படும் செப்புத்தேர், பவளத்தேர் என்பன கடலில் முழ்கடிக்கப்பட்டதாகவும், ஆலயத்தை இடித்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டே ஊர்காவற்றுறையில் உள்ள கோட்டையைக் கட்டியதாகவும் வரலாறுகள் உண்டு. இவ்வாலயத்தில் முதலாம் பராக்கிரமபாகு காலத்துத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இரண்டு சரித்திர ஆதாரங்களாக இன்றும் உள்ளன.
நெய்தலும் மருதமும் கலந்த இயற்கைச் சூழலில் விளங்குவது நயினையம் பதி. இயற்கை எழிலோடு தெய்வீகப் பொலிவும் பொருந்தியது. ஆலயத்தைச் சூழ்ந்து எங்கணும் வேப்பமரத் தோப்புக்கள் நிழல் பரப்பி நிற்கக் கடலில் இருந்து குளிர்ச்சியுடன் எழுந்து வரும் காற்று இம்மரநிழலில் கலந்து வெப்பத்தினைப் போக்கிக் குளிர்ச்சியை நல்கிட, அடியார்கள் இவ்வியற்கையான தெய்வீகச் சூழலில் தம்மை மறந்து நிற்க, அழகுறு ஆலயத்தில் கம்பீரமாக வீற்றிருக்கின்றாள் அன்னை நாகபூசணி. இவ்வாலயத்தின் தலவிருட்சம் வன்னிமரமாகும். ஆலயத்தின் பிரதான கோபுரத் துக்குத் தென்புறமாக கோபுரத்தை அண்டி இத்தலவிருட்சம் எழில் பெற்றுக் காணப் படுகின்றது.
த்தாப் போற்றி *

Page 7
நயினாதீவுச் சுவாமிகள் எனப் போற்றப்படும், பூநீலழநீ முத்துக்குமார சுவாமிகளால் உருவாகக் கப்பட்டது. இருந்த தீர்த்தக் கேனியே, இவ்வாலயத்தின் புண்ணிய தீர்த்தமாகும். அலைகடலைத் தாண்டி அடியார்கள் கரையேறும் போது அம்பிகையின் அழகுமிகுந்த கோபுரம் கண்களைக் கவர, ஆலயத்தின் இயற்கைச் சூழல் சிந்தையைக் குளிரச் செய்ய, அம்பிகையின் காண்டாமணி ஒசை அடியார்களை வரவேற்று நிற்கும் அற்புத அமைப்பைக் கொண்டதே இத்தலம்.
1960 ஆம் ஆண்டுவரை இவ்வாலயத்திற் பத்துத் திருவிழாக்களே நடைபெற்றன. பின்னர் திருவிழாக்காலம் ஆனிப்பூரணை நாளைத் தீர்த்த நாளாகக் கொண்டு, பதினைந்து தினங்களாக மாற்றப்பட்டது. மகோற்சவ காலத்தில் அடியார்கள் பெருந்திரளாக வந்தாலும், சப்பறம், தேர், தீர்த்தம் ஆகிய மூன்று தினங்களும் பல்லாயிரக் கணக்கான அடியார்கள் கூடுவது தொன்று தொட்டு இருந்து வரும் நிகழ்வாகும். தீர்த்தம் முடிந்த மறுநாள் பூரணை நிலவெறிப்ப கடல் நடுவே தெப்பத்தில் அம்பிகை தோன்றி, அடியார்கள் தாண்டி வந்த அலைகடலைத் தன்திருக்கண் நோக்காற் பார்த்து ஆனந்த மடைந்து திரும்பும் தெப்பத் திருவிழா கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இத் திருவிழாவை பூங்கா வனத்திருவிழா என்றும் கூறுவர். இவ்வாலயத் திருவிழாக்களிற் கொடியேற்றம், கைலைக் காட்சித் திருவிழா, மஞ்சத் திருவிழா, பூந் தண்டிகைத் திருவிழா, சப்பறம், தேர், தீர்த்தத் திருவிழா, தெப்பத்திருவிழா என்பன சிறப்புப் பெற்றிருப்பதோடு, இத்திருவிழா நாட்களே அடியார்களும் பெருந்திரளாக கூடும் நாட்களாகவும் இருக்கும்.
இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பல மணித்தியாலங்களைச் செலவழித்தே நீண்ட பெரும் கடற்பரப்பைத் தாண்டி அடியார்கள் அன்னையைத் தரிசிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ யாழ்ப்பாணத்தில் இருந்து காலையில் புறப்பட்டால் குறிகாட்டுவான் வரை வாகனத்தில் வந்து 10-15 நிமிட கடற்பிரயாணத்துடன் நயினாதீவுக்கு வந்து சேர்ந்து விடலாம். அன்றைய தினமே, அடியார்கள்
 

தம்வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்லக் கூடியதாகவிருக்கும். அந்தளவுக்கு பிரயாணம் சுருங்கி விட்டது.
தினசரி அம்பிகையைத் தரிசிக்க வரும் அடியார்கள் தங்கிச் செல்வதற்கு ஆலய வடக்கு வீதியில் இறைபயணிகள் இல்லம் உண்டு. அவ்வில்லத்தில் தினசரி அன்னதானமும் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றது. இன்றைய சூழ்நிலையில் நயினாதீவைப் பொறுத்த வரையிற் காலத்தின் தேவையாக இருப்பதை உணர்ந்து அறங்காவலர் சபையினரால் இவ்வேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனாற் சாதாரண நாட்களில் தினந்தோறும், அம்பிகையைத் தரிசிக்க வரும் அடியார்களின் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அம்பிகையின் ஆலயத்தில் திருமணம் செய்ய வேண்டுமென நேர்த்தி வைத்தவர்களுக்காகக் கல்யாண மண்டபமும் இறைபயணிகள் இல்லத்துடன் அமைக் கப்பட்டுள்ளது.
நாட்டிற் காலத்திற்குக் காலம் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் இவ்வாலயத்திற் நித்திய நைமித்திய பூசைகள் பாதிக்கப்படாமல் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை அம்பிகையின் திருவருள் என்றே கூறவேண்டும்.
இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களின் சித்திரத் தேர்களிற் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிறந்த நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பத் தேர், இவ்வாலயத்திலேயே உண்டு. இத்தேருடன் விநாயகப் பெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் அழகுறு திருத்தேர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வருட மகோற்சவம் 14.06.1999 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29.06.1999 தெப்போற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது. வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு வருடம் தோறும் அமுதசுரபி அன்னதான சபையினரால் வழங்கப்பட்டு வரும் அன்னதானம் இவ்வருட மகோற்சவத்துக்கும் இடம் பெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அம்பிகையைத் தரிசிக்க வரும் அடியார்களின் நலன்கருதி செய்யப்பட வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் நிறைவாகச் செய்யப்பட்டுள்ளன.
அம்பிகையின் திருவருள் அனைத்து மக்களுக்கும் மனநிறைவான நல்வாழ்வைத் தர வேண்டுமெனப் பிரர்த்திக்கின்றேன்.
5ம் சோதியே போற்றி *

Page 8
Сб
©Iffff@ຽງງົວນີ້
- நா. யோக நிறைவேற்று அலுவலர், நயினை பூ
"பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்பது மணிவாசகரின் திருவாசகம், அன்பு, பொறுமை, இரக்கம், மன்னிக்கும் சுபாவம் என்பனவற்றைத் தாய்மையில் நாம் தெளிவாகக் காண்கிறோம். ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லாத பரம் பொருளுக்கு ஆயிரம் திருநாமம் பாடிப் பல் வேறு வடிவங்களில் நாம் வழிபாடு செய்கின்றோம். இப் பக்திநெறிகளுள் மிக நெருக்கமாக உளங்கலந்து உணர்வுபூர்வமான உறவை ஏற்டுத்தி வழிபட வாய்த்த நெறி, தாயாகக் கருதி வழிபாடு செய்யும் நெறியேயாகும்.
தடித்ததோர் மகனைதந்தையின்டடித்தால் தாயுடன் அணைப்பாள் என்பதும் பொல்லாத சேயெனில்தாய்தள்ளல் நீதமோ புகலிடம் பிறிது முண்டே என்பதும் தாய்க்கேயுரியதான ஒரு தனித்துவமான அரவணைக்கும் பண்பைத் தெளிவாக்கி நிற்கும் பாடலடிகளாகும். இதனாலேயே சிவிகை ஏற்றுவித்த சிவனை நோக்கிப் பாடிய மணிவாசகர் தாய்க்குரியதான இரக்கப் பண்பை இறைவனிடம் கண்டு இறைவனைத் தாயாக்கி 'அம்மை எனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே' என்று தாயன்பை மிக அழகாக எடுத்துக் கூறினார்.
அம்பிகை மும் மூர்த்திகளுக்கும் மூத்தவள். அதனாலேதான், திரிபுரா என்றும், மகா திரிபுரசுந்தரி என்றும் போற்றப்படுகின்றாள். பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம் காத்தவளே”என அபிராமிப்பட்டர் கூறியவாறு எல்லாவற்றிற்கும் "மூல முதலாய்” நின்று உலகைத் தோற்றுவித்துக் காத்து நிற்பவள் அவள்.
இத்தாயன்பு மிக்க சக்தியின் அருட்பொலிவு பெற்ற இடங்களே சக்தி பீடங்களாகக் கருதப்படுகின்றன. உலகில் உள்ள சக்தி பீடங்கள் அறுபத்தி நான்கு எனக் கூறுவர். மதுரையில் மீனாட்சியாகவும் காஞ்சியில் காமாட்சியாகவும், நாகபட்டினத்தில் நீலாயதாட்சியாகவும் உறையும்
* தொழும் அரவத்தினுள்
 

மகத்துவம்
நாதன் -
நாகபூசணி அம்மன் கோவில்
மாபெரும் சக்தியே, புவனேஸ்வரி பீடமாகிய இந்நயினையில் நாகபூஷணியாக உறைகின்றாள்.
இயற்கை எழில் மிகுந்த இடங்களே, இறைவன் விரும்பி உறையுமிடங்கள். நதிக்கரை, கடற்கரை, சோலை, மலையடிவாரம் முதலான இடங்களே எழில் மிகுந்தவை. நயினை நாகபூசணி அம்பிகையும் நீலத்திரைக் கடல் ஒரத்தில் அமர்ந்து நித்தமும் நாடிவரும் அடியார்களுக்கு நித்திய லெட்சுமியாகக் கோயில் கொண்டு, நல் அருள்புரியும் வண்ணம் எழுந்தருளி இருக்கின்றாள். தலத்தைச் சூழ்ந்துள்ள விருட் சங்களிலிருந்து தலமூர்த்தியை அறிந்து கொள்ளலாம் என்பர். இங்கே வேப்ப மரங்கள் தோப்பாகச் சூழ்ந்து எழிலுற வளர்ந்து நின்று இறைவியின் இருப்பிடம் இதுவென எடுத்துக் காட்டி நிற்கின்றன. பத்தினித் தெய்வத்திற்குரிய மரம் வேப்ப மரமாகப் பரவலாக எல்லோராலும் கருதப்படும் வழக்கம் உண்டு.
நாகபூசணி அம்மன் ஆலயக் கருவறையிற் கல்லினாலான ஐந்துதலை நாக உருவமும் அதன்கீழ் ஒருலிங்கமும் உள்ளது. ஆராச்சியாளர் நோக்கிற்கு இந்நாகம் மிகமிகத் தொன்மையானது. இதனை ஆராய்ந்த எம். நரசிம்மன் என்ற ஆராச்சியாளர் இதன் தொன்மையை வியந்து கூறினார்கள். *நாகவழிபாடு தொன்மையானது. நாகபூசணியாக நாகதம்பிரானாகப் பல இடங்களில் இவ் வழிபாடு நடைபெறுகின்றது. சர்ப்பம் சக்தியின் சின்னம் எனவும் கருதப்படுகின்றது. அம்பிகை நாகவடிவிற் சென்று அன்பர்களுக்கு அருள்புரிந்ததாகக் கர்ணபரம்பரைக் கதைகள் பலவுள.
அம்பிகை குண்டலினி சக்தியாகவும், அருட் சக்தியாகவும், Ցալու மூர்த்தமாகவும் எழுந்தருளியுள்ளாள். எமது மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை விளிப்புறச் செய்தவர்களே மகான்கள் ஆவர். அவர்கள் ஆன்மீக ரீதியில் அரிய பெரிய காரியங்களைச் சாதித்துள்ளார்கள். இராமபிரான்
மிளிர்வாய் போற்றி

Page 9
துர்க்கையைப் பூசித்ததாகவும் கண்ணபிரான் கார்த்தியாயினியை வழிபட்டதாகவும், ஆதிசங்கரர் சாரதையைப் பூசித்ததாகவும் வரலாறு உண்டு. இராமகிருஷ்ணர் காளியைப் பூசித்துப் பெரும் பேறு பெற்றது போலவே அபிராமிப் பட்டரும் சக்தி வழிபாட்டாற் பேரின்பப் பேறு பெற்றார்.
யாவராலும் மேலானதாகக் கருதப்பட்ட சக்திவழிபாடு இன்றைய உலகில் மிக இன்றியமையாத வழிபாடாகவுள்ளது. சக்தியை மூன்று விதமாக வழிபடலாம். மந்திர ஜெபம், பூரீசக்கரம், குண்டலினி யோக சாதனை. மந்திரங்கள் இறைவியின் ஒலிவடிவம். இதனாற் தான் இறைவியை நாதரூபி, நாதாந்த சக்தி, என அழைக்கின்றனர். இந்த மந்திரஜெபம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தினந்தோறும் முறையாக நடைபெறுகின்றது. நவராத்திரி தினங்களில் வேறு எந்தத் தலத்திலும் இல்லாத முறையில் இங்கு அம்பிகையானவள் மந்திரங்களால் துதிக்கப்பட்டுப் பிரார்த்திக்கப் படுகின்றாள்.
அடுத்ததாகபூரீசக்கரம், தேவியின் வரிவடிவம் எனப்படுகின்றது. ஒவ்வொரு பூரணைத்தினத்திலும் இந்த வரிவடிவம் வரையப்பட்ட தகடு வைக்கப்பட்டு வில்வம் முதலியவற்றைச் சாத்தி விரிவான பூசை நடைபெறுகிறது.
குண்டலினி சக்தி புறத்தே நாகவழிபாடாக வழிபடப்படுகின்றது. அம்பிகையின் வணக்கத் துக்குரிய மூன்று வழிபாட்டு முறைகளும் இங்கே நடைபெறுகின்றன. இது மிகவும் போற்றத்தக்க ஒன்றாகும்.
புவனங்கள் எல்லாம் கடந்து நிற்கின்ற எம்பெருமான் திருவுள்ளத்தில் அம்பிகையின் வடிவை அழகொழுகும்படி மெல்ல மெல்ல எழுதி முழுவடிவத்தையும் அங்கே உருவகித்து அதையே தனது உள்ளத்திரையிற் பார்த்த வண்ணம் தவமிருக்கின்றான். அப்படி இருக்கும் போது அவனுள்ளத்தில் உயிருள்ள சித்திரமாக அம்பிகை நிற்கின்றாள். இறைவன் புறத்தோற்றத்தே எல்லாம் அடக்கிய யோகியாக இருந்தாலும் அம்பிகையை நினைத்த வண்ணம் இருப்பவன். இதனாலேதான் அம்பிகையைத் தன் ஒருபாகத்தில் இறைவன் வைத்துக் கொண்டான் என்று சிவபக்தர்கள் சொல்வார்கள். அதனால் அப்பெருமானுக்கு அர்த்தநாரீஸ்வரன் என்ற திருநாமம் அமைந்தது. =ܓܠ
* ஆலமா பொந்தினுள்
 
 

ஆனால் அம்பிகையின் பக்தர்கள் அப்படிச் சொல்லத் தயங்குவார்கள். அம்பிகையே அந்தப் பாகத்தை உரிமையோடு பெற்றுக் கொண்டாள் என்பார்கள். அருணகிரிநாதர் அம்பிகையே தன் வலப்புறத்தே இறைவனை ஏற்றுக் கொண்டுள்ளாள் என்பர். “ஒருவரைப் பாங்கில் உடையாள்” என்ற அடி இதனை நன்கு புலப்படுத்தும்.
தியாகப் பொருப்பைத் திரிபுரந்தகனை பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி”
எனக் கந்தரலங்காரம் கூறும் சிவபக்தர்கள் இறைவனின் அர்தநாரீஸ் வரரான தெய்வீகக் கோலத்தைக் கண்டபின் அம்பிகை பக்தர்களோ அர்த்தநாரீஸ் வரியாகக்
கண்டார்கள். என்பது இங்கே புலப்பட்டு
நிற்கின்றது.
அபிராமிப் பட்டரும் அப்படியே தான்
காண்கின்றார். அம்பிகை இறைவனின்
ஒருபாகத்தை எடுத்துக் கொண்டு ஆட்சி நடத்துகின்றாளாம். அவனுடைய இடப்பாகத்தில் ஒருபாதியை ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சி செலுத்தும் பராபரையாக இருக்கின்றாளாம் இதனை அபிராமிப் பட்டர் - கூறும்போது, சிவபெருமான் காமனை தன் கண்களால் அழித்தவன். தவவிரதம் பூண்டவன். அவனையே மயக்கி ஒருபாகத்தில் குடிகொண்டு ஆட்சி நடத்துகின்றாளாம் அம்பிகை என்கின்றார்.
விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
"பழிக்கும்படி ஒருபாகம் கொண்டாடும்பாபரையே’ என்பர். அப்படியாக உள்ளவள் தன்னுடைய அளவற்ற கருணையினால் தன் பக்தர்களுக்குத் தரிசனம் தருவாள். அன்பர்கள் விரும்பிக் செய்யும் பூசைக்குத் தரிசனம் கொடுப்பாளன்றோ.
பலவகையான கிரியா முறைகளை உடையது தேவி பூசை. அந்தக் கிரியைகள் எல்லாவற்றையும் ஏற்று மனமகிழ்ந்து அவரவருக்கு அருட்காட்சி கொடுப்பாளன்றோ. இத்தகு தேவியின் தரிசன த்தைப் பெற்றவர் அபிராமிப் பட்டர். இப்பேரருளை நினைந்தே தன் இணையற்ற கருணையினால் அபிராமிப் பட்டருக்கு கண்ணுக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் எட்டாத தன் அழகு வடிவத்தை காட்டியருளினாள்.

Page 10
"மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி என்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்’ என்று வியந்து பாடினார்.
இத்தகு பெருமையும் புதுமையும் வாய்ந்த அம்பிகையான புவனேஸ்வரி தானிருப்பதற்குத் தன்திருவருட்படியே மணித்துவீபம் என்ற அதிசய ஆனந்த புவனத்தைத் தேர்ந்தெடுத்தாள். கடலின் நடுவே பலவித இரத்தினங்கள் குவிந்து கிடக்கும். மணற்பரப்பில் இருக்கும் சிந்தாமணி பீடத்தில் கொலுவீற்றிருக்கின்றாள். இப்புவனேஸ்வரிதேவியை ஆராதிப்பவர்கள் யோகிகளாகவும், சித்தர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் விளங்குகின்றார்கள். புவனேஸ்வரியை உபாசித்ததன் பயனாய்ச் சகலசெளபாக்கியம் என்ற ஐஸ்வரியமும் கிட்டும். அவளைத் தினம் தியானித்துத் தொழு பவர்களுடைய வாழ்க்கை படிப்படியாக மேன்மை அடையும் என்பதற்கு நிறைந்த பல சாட்சியங்கள் உண்டு. அம்பிகையின் திருவருளின் பெருமை பற்றி உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வரும் ஆச்சரியம் மிகுந்த அடியார்களின் திருமுகங்களும் அவர்கள் நேரடியாகக் கூறும் செய்திகளும் நம்மை வியப்படையவும், மெய்சிலிர்க்கவும் வைப்பதாக இருக்கும். அத்தகைய மகோன்னதமான திருவருட் சக்தி கொண்டவள் அன்னை நாகபூசணி
இத்தகைய பெருமைக்கும் சிறப்புக்கும் உரியவளாகிய அன்னை பூரீநாகபூசணியின் ஆலயத்தில் ஆண்டு தோறும் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டுப் பல்லாயிரக் கணக்கான அடியார்கள் அலை அலையாக திரண்டு அன்னையின் அருள் பெற்றேக வந்து செல்வர். வழமைபோல் இவ்வருட மகோற்சவத்துக்கும் அடியார்கள் பெருந் தொகையாக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனக் கென்றோர் தனிவரம் நா என் இனத்தார் வாழ்ெ உனக் கெல்லா உயிர்களுமே ெ
உண்மையை நான் ஒரு
சினங் கொண்டு தீங்கிளைக்கு
சீலமுற வேண்டு மெ6
தனக் கொருவர் ஒப்பில்லாத்த
தரணி தனில் சாந்திை
* நாக சாபந்தீர்த்து அணி

இவ்வாலயத்திற் பாரியபல திருப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் இவ்வருட மகோற்சவம் ஒரு தனிச்சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. இவ்வருட மகோற்சவத்திற்கு அம்பிகையின் சித்திரத் தேருடன் பிள்ளையாரின் திருத்தேரும் சுப்பிரமணியரின் திருத்தேரும் வீதியுலாவரும் அருட்கோலக்காட்சி இடம்பெற இருக்கின்றது.
எதிர்வரும் 14.06.99 ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இவ்வருட மகோற்சவம் 27.06.99 தேர்த் திருவிழாவுடனும் 28.06.99 தீர்த்தத் திருவிழாவுடனும் முடிவுற்று, 29.06.99 நடைபெறும் தெப்போற்சவத்துடன் நிறைவு பெறும் வருடம் தோறும் அடியார்கள் நலன்கருதிச் செய்யப்படவேண்டிய சகலவிதமான ஏற்பாடுகளும் நிறைவாகச் செய்யப்பட்டுள்ளன. அம்பிகையின் மகோற்சவத்தை முன்னிட்டு வருகை தரும் அடியார்களுக்கு அநுக்கிரகம் வழங்கி அவர்கள் எல்லோருக்கும் நிறைவான நல்வாழ்வு வழங்க வேண்டும் என்றும், அம்பிகையை நேரில் தரிசிக்க முடியாமல் தூரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அடியார்களினது நல்வாழ்வு வேண்டியும், இடப்பெயர்வுகளினாலும் சூழ் நிலைகளாலும் அகதிவாழ்வென்ற அவல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் வேண்டியும், அவர்களின் எதிர்கால சுபிட்சம் வேண்டியும், அம்பிகையைப் பிரார்த்திப்பதோடு, நாட்டிற் சாந்தியும் சமாதானமும் நிலவி, அன்பும் அருளும் தழைத்து, மனஅமைதியும் நிறைவும் கொண்ட சூழ்நிலை ஏற்படவேண்டுமென்று மனமுருகிப் பிரார்த்திப்போமாக.
ன் கேட்கவில்லை வன்றே கருதவில்லை சாந்த மென்ற நபோதும் மறந்ததில்லை b தீயர் தாமும் ன்றே வேண்டுகின்றேன் ாயே இந்த பயே தருவாய் நீயே
ரிந்தாய் போற்றி *

Page 11
இ
நயினை பூஞரீ நா திருவி
பூணி, ம. அப சீர்பூத்த தென்னிலங்கை தன்னின் மேவும் திரைபூத்த கடனயினை நகரில் வாழும் ஏர்பூத்த நாகேசு வரியைப் போற்றி
இசைபூத்த செந்தமிழா லூஞ்சல் பாட ஆர்பூத்த சடைமெளலி யரனா ரீன்ற
அருள்பூத்த வறிவிச்சை தொழிலென் றோதும் கார்பூத்த மும்மைமத களிற்றின் பாதம்
கரம்பூத்த மலர்கொண்டே கருதி வாழ்வாம்.
பலனோங்கு செம்பவளங் கால்க ளாக
பகர்வைர ரத்தினமே விட்டமாக குலனோங்கு வெண்டரளங் கயிற தாக கூறரிய மாணிக்கம் பலகை யாக வலனோங்கு மூஞ்சன்மிசை யினிது வைகி
மலர்மகளுங் கலைமகளும் வடந்தொட் டாட்ட நலனோங்கு திருநயினை நகரில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 2
உவகையொடு மலரயன்மால் கரங்கள் கூப்ப
ஒசைமணி வாயிலட்ட பாலர் காப்ப தவமறையோர் தூபமொடு தீபங்காட்ட
தாழ்ந்துகண நாதர்புகழ் மாலை சூட்ட அவிரிடப துவசமகல் வானந்தூர்ப்ப
அனந்தன்முதலுரகர்செய செயவென்றார்ப்ப நவையறுசீர் நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 3
கொம்பினொடு துடிமுரசு முழவ மோங்க
குடைகளுட னாலவட்டம் குழுமி யோங்க தும்புருநாரதர்வேத கீதம் பாட
தொண்டரக மகிழ்ந்துசுக வாழ்வு கூட வம்பவிழு மலர்மாரி யமரர் பெய்ய
வரமுனிவரடிபரவி யாசி செய்ய நம்புமடியவர்க்கருளி நயினை வாழும் நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்,
அன்னநடையயிராணி கவிகை தாங்க
அயிலைநிகர் விழியரம்பை களாசியேந்த வன்னமுலை யுருவசிவெண் கவரி வீச
மணிகொள்கிருதாசிகமண்டலங்கைக் கொள்ள மின்னிடைமே ணகைவெளிலை பாகு நல்க
வியந்துதிலோத் தமைவிகித நடனஞ் செய்ய நன்னயஞ்சேர் நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்,
மதிமுகமா லினிபனிநீர் வாசந்துவ
மயிலைநிகர் சுகேசைமலரடிக ணிவ
விதிமுறைமங் கலைமுதலோராலஞ் சுற்ற வேதியர்தம் மகளிர்சுப வசனஞ் சாற்ற
அனிதரு விசுத்
 
 
 
 

GuLDuЈto
கபூஷணி அம்மன்
ឬញ៉ាr மரசிங்கப் புலவர் ܐ
அதிவினைய மொடுசுமனை யாடி காட்ட அன்பினநிந் திதைககந்த வருக்க நீட்ட
நதியுலவு நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 6.
* கோலமுறு வைரமணிச் சுட்டியாட
குலவுமெழின் மாணிக்கத் தோடு மாட 1 . வாலியமுத் தாரமொடு மதாணியாட
o வயங்குவளை தொடியுடனங் கதமு மாட
சாலவொளிர் பாடகமுஞ் சிலம்பு மாட
தண்டையொடு பாதசரந் தயங்கியாட
ஞாலமுக மெனவிளங்கு நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 7
- முந்துதவ மாதர்துதி கூறியாட
* முகமனொடு புனன்மாதர் முன்னின் றாட
வந்தனையோ டுரகமட மாத ராட
வரையிலுறை மாதரடி வணங்கியாட
* கந்தருவ மாதரிசை பாடியாட
கருதரிய புவிமாதர் களிகொண் டாட
நந்துதவழ் கழனிசெறிநயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 8.
ஆரணியே யம்பிகையே யாடீ ரூஞ்சல்
அந்தரியே செளந்தரியே யாடீ ரூஞ்சல் பூரணியே புங்கவியே யாடீ ரூஞ்சல்
புராதனியே புராந்தகியே யாடீர் ரூஞ்சல் காரணியே காருணியே யாடீ ரூஞ்சல்
கன்னிகையே கண்மணியே யாடீ ரூஞ்சல் நாரணியே நாயகியே யாடீ ரூஞ்சல்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 9.
* பனிவரையில் வருமுமையே பரையே போற்றி
பகருமற மெண்ணான்கும் வளர்த்தாய் போற்றி தனிமுதலாம் பரமனிடத் தவளே போற்றி
தணப்பில்பல சக்திவடிவானாய் போற்றி இனிமைமிகு மாரமுதே கனியே போற்றி
எவ்வுயிர்க்குந் தாயாகி இருந்தாய் போற்றி நனிகுலவு நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல், 1O.
ஆவாழி யந்தணரோ டரசர் வாழி
அரியதவ மகநிகமா மகமும் வாழி தாவில்குல மங்கையர்கள் கற்பும் வாழி
சைவசமயமுமறமும் தழைத்து வாழி பாவார்வெண் ணிறுபஞ்சாட் சரமும் வாழி பாடியவூஞ் சற்றமிழும் பாரில் வாழி நாவலர்கள் புகழ்நயினை நகரும் வாழி
நாகபர மேஸ்வரியும் வாழி வாழி 11.

Page 12
Lujy:Tegnée Grön
ஸாஹித்யசிரோமணி
- சிவபூனி ப. முத்துக்கும நயினை பூரீநாகபூசண
அம்பாசாம்பவிசந்த்ரமெளளிரபலாஅபர்னாஉமாபார்வதி
காளீஹைமவதிசிவாத்ரிணயநாகாத்யாயநீரைவி ஸாவித்ரீநவயெளவநாசுபகரீசாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபிபரதேவதா பகவதி'றுரீநாக ராஜேஸ்வரி பொருள்:
அம்பா - அன்னை சாம்பவி - சம்புபத்நி, சம்பு
சிவன். சந்திரமெளளி - பிறைமுடியினள், அபலா - மெல்லியள், அபர்ணா - சருகுதானும் புசியாது நோற்றவள், உமா - உமை தவத்திற்குச் செல்ல, வேண்டாமெனத் தாயினால் தடுக்கப்பட்டவள், பார்வதீ - மலைமகள் காளி - கருநீலநிறமுடையவள், ஹைமவதி - இமவான் மகள், சிவா - சிவனுக்கு மனைவி, த்ரிணயனா - முக்கண்ணுடையவள், காத்யாயநீ - காத்யாயன முனிவருக்கு மகள், பைரவி - பைரவன் மனைவி, சாவித்திரி - உலகையீன்றவள், சூரியனைப் பிரகாசிப்பிக்கிறவள் நவயெளவநா - என்றும் மாறாத இளமையை உடையவள். சுபகரீ - சுபஞ்செய்பவள், சாம்ராஜ்ய லக்ஷமீப்ரதா - பாக்கியலட்சுமியைக் கொடுப்பவள், சித்ரூபி - ஞானவடிவினள், பரதேவதா - மேலாகிய தெய்வம், பகவதி - பகவனுக்கு மனைவி பூஜிக்கத்தக்கவள், பூரீநாக ராஜேஸ்வரி.
அம்பா மோஹிநிதேவதாத்ரிபுவநீஆனந்தசந்தாயிரீ
வாணிபல்லவபாணி வேணுமுரலிகானப்ரியாலோலினி கல்யாணி'உடுராஜ பிம்பவதனாதும்ராக்ஷ ஸ்ம்ஹாரிணி சித்ரூபிபரதேவதா பகவதியூரீநாக ராஜேஸ்வரி பொருள்:
அம்பா மோஹிநீ-மயல் செய்பவள், தேவதா - பிரகாசமுடையவள், த்ரிபுவநீ - மூச்சகமுதல்வி, ஆனந்த சந்தாயிநி - ஆனந்தம் அருள்பவள், வாணி - வாக்ரூபமானவள், பல்லவபாணி வேணு முரளி கானப் பிரியா லோலினி - தளிர்க்கரத்தில் பிடித்த வேய்குழரினது கானத்திற் கொண்ட விருப்பத்தால் எழுச்சியுடையவள், கல்யாணி - மங்கள வடிவமா
* பண்டாசுர சங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரி அவர்டகம்
- வித்யாகல்பநிதி ாரசாமிக் குருக்கள் - 7.அம்மன் கோவில்
னவள், உடுராஜபிம்பவதனா - சந்திரனை ஒத்த முகமுடையவள், தூம்ராக்ஷஸம் ஹாரிணி - தூம்ராக்ஷன் புகைக்கண்ணன் அவனை சங்கரித்தவள், சித்ரூபீ - ஞானவடிவி, பரதேவதா - மேலாகிய தெய்வம், பகவதி - பகவானுக்கு மனைவி, பூஜிக்கத்தக்கவள் பூரீ நாக ராஜேஸ்வரீ.
அம்பாநூபுரத்ன கங்கணதfகேயூரஹாராவளி
ஜாதிசம்பக வைஜயந்திலஹfக்ரைவேயவைராஜதா வீனாவேனுவிநொத மண்டிதகராவீராசனாசம் ஸ்திதா
சித்ரூபிபரதேவதா பகவதியூரீநாக ராஜேஸ்வரி பொருள்:
அம்பா நூபுரத்னகங்கணதரீ - பாதச் சிலம்புரத்தினவளையல் என்பன தரிப்பவள், கேயூர ஹாராவளி ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரிக்ரை வேயவைராஜதா - தோளணியும் முத்தாரங்களும் சாதிமலர் சண்பக மலர்களாகிய கழுத்தணிமாலை யினசைவும், கழுத்துப் பட்டையும் என்னும் இவற்றால் மிகப் பிரகாசிப்பவள், வீணா வேணுவினோத மண்டிதகரா - வீணையும் வேய்ங்குழலும் வினோதமாக ஏந்தப் பெற்ற கரங்களையுடையவள், வீராசனாசம்ஸ்திதா - வீராசனமாக நன்கு இருப்பவள், சித்ரூபி - ஞானவடிவி, பரதேவதா - மேலாகிய தெய்வம், பகவதி - பகவானுக்கு மனைவி-பூஜிக்கத்தக்கவள், ரீநாக ராஜேஸ்வரி அம்பாரெளத்ரிணிபத்ரகாளிவகளாஜ்வாலாமுகீவைஷ்ணவி ப்ரம்மாணித்ரிபுராந்தகிளUரநுதா தேதிப்பம் நோச் ச்வலா சாமுண்டா ஸ்க்ரிதரக்ஷ போஷ ஜநநீதாகூராயணி வல்லவி சித்ரூபிபரதேவதா பகவதியூரீநாக ராஜேஸ்வரி பொருள்:
அம்பா ரெளத்ரிணி - உருத்திரன் மனைவி, பத்திரகாளி - சுபஞ்செய்பவள், ஜ்வாலாமுகி - சுவாலை ரூபமான நாவையுடையவள், வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்திருபமானவள், ப்ரம்மாணி - பிரமாவின் சக்திருபமானவள், த்ரிபுராந்தகி -
ரியே போற்றி *

Page 13
திரிபுராந்தகன் - சிவன் அவன் மனைவி, சுரநுதா - தேவர்களாற் போற்றப்படுபவள், தேதீப்யமா நோச் ச்வலா - தகதகவென்னெறிக்குங்காந்தியுடையவள், சாமுண்டா சண்டன் - முண்டன் என்னும் இருதானவரை ஜயித்தவள், ஆச்ரிதரக்ஷ போஷ ஜநநீ - அண்டினவரைக் காப்பாற்றி வளர்க்குந் தாய், தாகூடிாயணி - தக்கன் மகள், வல்லவீ - கோபிகை ரூபமுடையவள், சித்ரூபி-ஞான வடிவி, பரதேவதா - மேலான தெய்வம், பகவதி - பகவனுக்கு மனைவி பூஜிக்கத்தக்கவள், பூரீ நாக ராஜேஸ்வரி.
அம்பா குலதநு குசாங்குசதரி அர்த்தேந்து பிம்பாதf வாராஹி மதுகைடப ப்ரசமநீ வானிரமா சேவிதா மல்லாத்யாசுர மூகதைத்யதமரீ மாஹேஸ்வரி அம்பிகா சித்ரூபிபரதேவதா பகவதியூரீ நாக ராஜேஸ்வரி பொருள்:
அம்பா சூல தனு ; குசாங்குச தரீ - சூலம், வில், பாசம், அங்குசம் என்பவற்றைத் தரிப்பவள், அர்த்தேந்து பிம்பாதரீ - பாதிச் சந்திரனைத் தரிப்பவள், வா ராஹி - வராகாவதார விஷ்ணுவின் சக்தி ரூபமானவள், மதுகைடபப்ரசமநீ - மது. கைடபன் என்னும் அசுரர்களை அடக்கினவள், வாணிரமாசேவிதா - சரஸ்வதி, இலக்குமி இருவராலும் சேவிக்கப்படுபவள், மல்லாத்யாசுர மூகதைத்யதமநி - மல்லாசுரன் முகாசுரன் முதலியவனை அழித்தவள், மாஹேஸ்வரி - மஹேஸ்வரன் மனைவி, அம்பிகா - மாதா, சித்ரூபி - ஞானவடிவி, பரதேவதா - மேலாகிய தெய்வம், பகவதி - பகவனுக்கு மனைவி பூஜிக்கத்தக்கவள். பூரீ நாக ராஜேஸ்வரி1
அம்பாசிருஷ்டி விநாசபாலனகரீஆர்யாவிசம் சோபிதா காயத்ரீப்ரனவாகூராம்ருத ரசப்பூர்னாநுஸம்திக்ருதா ஓம்காரீவிநதாசுதார்ச்சிதபதா உத்தண்டதைத்யாபஹா சித்ரூபீபரதேவதா பகவதி பூரீநாக ராஜேஸ்வரீ, பொருள்:
அம்பா சிருஷ்டி விநாச பாலனகரீ - படைத்தல், காத்தல், அழித்தல்களைச் செய்பவள், ஆர்யா - சிரேஷ்டமானவள், மேலானவள், விசம்சோ பிதா - மிகநன்கு பிரகாசிப்பவள், காயத்ரீ - காயத்ரிமந்திர ரூபமானவள், ப்ரணவாக்ஷராம்ருத ரசப்பூர்ணா பிரணவாகூடிரமாகிய அமுதசாரமயமானவள், அநுசந்தீக்ருதா - விடாது தியானிக்கப்படுவள், ஓங்காரி - ஓங்கார
இண்ள்ே மகிஷனை
 
 

ரூபமானவள், விநதா சுதார்ச்சிதபதா - வினதை புத்திரனால் அருச்சிக்கப்பட்ட திருவடி களையுடையவள், சித்ரூபீ - ஞானவடிவி, பரதேவதா - மேலாகிய தெய்வம், பகவதி - பகவன் மனைவி- பூஜிக்கத்தக்கவள், பூரீ நாகராஜேஸ்வரி1
அம்பா சாஸ்வதிஆகமாதிவிருதா ஆர்யாமஹாதேவதா யாபிரம்மாதி பிபீலிகாந்த ஜநநீயாவை ஜகன் மோஹிநீ யா பஞ்சப் ப்ரனவாதிரேய ஜநநீயாசித்கலாமாலிநீ சித்ரூபி பரதேவதா பகவதியூரீநாக ராஜேஸ்வரி பொருள்:
அம்பா சாஸ்வதி - நிலை பேறுடையவள், என்றுமுள்வள் ஆகமாதி விநுதா - ஆகமம் வேதம் என்பவற்றாற் விசேஷமாகத் துதிக்கப்படுபவள், ஆர்யா - சிரேஷ்டமானவள், மஹா தேவதா - மேலாகிய தெய்வம், யா பிரம்மாதி பிபீலிகாந்த ஜநநீ - எவள் பிரமா முதல் எறும்பிறாகவுள்ள சகல ஜிவவர்க்கங்களையும் படைத்தவளோ அவள், யாவை ஜகன் மோஹிநீ - எவள் உயிர்களை உலக வாழ்வில் மயல் கொளச் செய்பவளோ அவள், யா பஞ்சப் ப்ரனவாதி ரேபஜநநீ - எவள் பஞ்சவித ரூபமான பிரணவம் முதலிய மந்திரங்களை அருளிச் செய்பவளோ அவள், யா சித்கலா - எவள் உயிர்களிடத்தில் அறிவுக்கறிவாய் விளங்குபவளோ அவள், மாலிநீ - மாலையணிந்தவள் சிரமாலையணிந்தவள், சித்ரூபீ - ஞானவடிவி, பரதேவதா - மேலாகிய தெய்வம், பகவதி - பகவன் மனைவி, பூஜிக்கத்தக்கவள். பூரீ நாக ராஜேஸ்வரீ.
அம்பாபாலித பக்தராஜரநிலம் அம்பாஷ்டகம்யபடேத் அம்பாலோக கடாக்ஷ வீகூலேவிதம்ஐஸ்வர்யமல்யாஹதம் அம்பா பாவந மந்த்ரராஜ படநா அந்தில மோகூப்ரதா சித்ரூபிபரதேவதா பகவதியூரீநாக ராஜேஸ்வரி பொருள்:
சிறந்த பக்தியோடு எவரொருவன் அம்பாஷ்டகத்தை இடைவிடாது படிக்கின்றனரோ அவர், அம்மையினது கடைக் கண்பார்வை பதியப்பெறுவர்: தடைப்படாத செல்வ வாழ்க்கையையும் பெறுவர்: அம்மையினது பரிசுத்தமாகிய சிறந்த இந்த மந்திரத்துதியைப் படிப்பதால் ஈற்றில் சிவ சாமீப்பிய பதவியைக் கொடுத்தருள்வள். பூரீ நாக ராஜேஸ்வரி அம்மை.
த் துணித்தாப் போற்றி —

Page 14
அமுதசுரபியில் அன்னதாக
- ச. பரமே பொருளாளர் அமுதசுரL
வெரலாற்றுச் சிறப்போடும் அருட் பொலிவோடும் விளங்கிக் கொண்டிருக்கும் ஆலயம் நயினாதீவு பூரீ நாகபூசணி அம்மன் ஆலயயாகும். வருடா வருடம் இவ் ஆலயத்தில் நடை பெறும் மகோற்சவத்தைக் காணவும், அம்பிகையின் அருள் பெற்றின்புறவும், பல்லாயிரக் கணக்கான அடியார்கள் வந்து செல்வார்கள். 9|ഞ ബ அலையாகத் திரண்டு பெருந்தொகையாக வந்து செல்லும் இவ் அடியார்களின் உணவு வசதி கருதி, 1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்தே அமுதசுரபி அன்னதான சபையாகும். இன்று நாற்பதாவது ஆண்டைத் தொட்டு நிற்கும் அமுதசுரபி அன்னதான சபையினரின் கடந்த காலப் பணி, பல்லாயிரக் கணக்கான அடியார்களின் உடலோடும் உள்ளங்களோடும், சங்கமித்து விட்ட அருட் பணியாக இருப்பதும் எதிர் காலத்தில் எத்தனையோ அடியார்களின் பசிப்பிணிதீர்க்கும் பெரும் பணியாக இருக்கப் போவதும் இங்கு குறிப்பிடபடவேண்டிய தொன்றாகும்.
ஆரம்பத்தில் பாரிய ஒலைக் கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அன்னதானப்பணி, இன்று அமுதசுரபி என்ற பெயர் தாங்கிய மணி மண்டபத்தில் பொலிவுபெற்று வளர்ந்தோங்கி நிற்கின்றது.அன்றொருநாள் ஆபுத்திரன் என்பான் பசிப்பிணி தீர்க்க அமுதசுரபி என்ற அட்சய பாத்திரத்துடன் வந்து சேர்ந்த இடம், இம்மணிபல்லவம். இங்கு பசிப்பிணி தீர்க்கும் அவசியமில்லாது போகவே அட்சய பாத்திரத்தை கோமுகி என்னும் பொய்கையில் இட்டு, ஆபுத்திரன் உயிர்துறந்ததாக வரலாறு கூறும். மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடப்படும் மணிபல்லவமும் ஆபுத்திரனின் அட்சய பாத்திர வரலாறும், நயினாதீவைக் குறித்து நிற்பதாகவே ஆய்வாளர்கள் கூறுவர்.
இவ்வாறான வரலாற்றுத் தொடர்பும் ஆன்மீகத் தொடர்பும் இந் நயினைக்கு பூர்வீகத் தொடர்புகளாய் இருப்பதாலேயே இப்பணி இன்று சிறப்புப் பெற்றிருக்கின்றது. அன்று பசிப்பிணி தீர்க்க ஆபுத்திரனின் அமுதசுரபி எனும் அட்சய பாத்திரத்தைப் பயன்படுத்தியது வரலாற்றுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഞ്ബ ക്ഷ
-g= -8ూ *ge
ாம் என்னும் அறப்பணி ஸ்வரன -
அனனதானசபை செய்தியாயினும், பேரறிஞர் கி. வா. ஜெகநாதன் அவர்கள் நயினைக்கு வருகை தந்த போது இவ் அன்னதான சபைக்கு அமுதசுரபி என்ற வரலாற்றுச் செய்தியோடு கூடிய பெயரை இட்டுச் சிறப்பித்தது மிகவும் பொருத்தமானதாகவே அமைந்து விட்டது. திருவிழாக் காலத்தில் வருகை தரும் அடியார்களுக்கு அள்ள அள்ளக் குறையாமல் இவ் அமுதசுரபியில் அன்னம் சுரந்து கொண்டே இருக்கும். அன்னபூரணியாக இருக்கும் நாகபூசணி அம்பிகையின் தெய்வீகத் திருவருளே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். ஆரம்பக் காலத்தில் அதாவது இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னுள்ள காலத்தைப் பின் நோக்கிப் பார்ப்போமானால், அன்றைய காலத்தில் திருவிழாக் காண வந்து சென்ற அடியார்கள் எதிர் நோக்கிய சிரமங்கள் பல. அவற்றில் உணவு முக்கியமான தொன்றாக இருந்ததால் தர்மசிந்தையுள்ள புண்ணிய சீலர்களின் சிந்தனையில் உதித்து, தேவியின் திருவருளால் உருவாக்கப்பட்டது தான், இன்றைய அன்னதான மண்டபமாகும். வருடா வருடம் வளர்ச்சியடைந்து நாற்பது ஆண்டுகாலத் தன் புனிதப் பணியை நிறைவு செய்யும் இதன் சேவை, மேலும் வளரவேண்டும். எதிர்காலத்தில் அதன் யாப்பு உபவிதிகட்கமைய சமய சமூக ரீதியிலான ஏனைய பணிகளையும் செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் நாளடைவில் இந்நோக்கம் நல்லபடியாக நிறைவேற்றப்படும் என்பது எமது நம்பிக்கை, அப்போது தான், சபை ஆரம்பிக்கப்பட்டதன் முழுமைத்துவ நோக்கமும் நிறைவேற்றி வைக்கப்படும். வழமைபோல் இவ்வருடமும், மகோற்சவத்தையொட்டி அடியார்களுக்கு இப்பணி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் எமது சபையின் தருமப்பணியை முன்னெடுத்துச் செல்ல வருடாவருடம் எம்முடன் இணைந்து தமது ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் சபையின் சார்பில் அன்னையின் அனுக்கிரகமும் ஆசியும் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

Page 15
தேவார அருள்
பதிமுது
"பதிமுது நிலை’ என்பது பதியினது முதுமையான நிலை என விரியும். பதி என்பது இங்கே பொது இயல், சிறப்பு இயல் என்ற இருவகை நிலைகளிலுமுள்ள இறைவனைக் குறிக்கின்றது பொது இயல் என்பது இறைவன் உயிர்கள் இன்ப நலம் அடையும் பொருட்டு ஐந்தொழில் செய்தற்கு, பொருளாகிய உலகினோடும் உயிரினோடும் அத்துவிதமாய் ஒன்றுபட்டிருக்கும்" நிலை. அங்ங்ணம் அவன் அவற்றோடு ஒன்றுபட்டிருப்பினும் யாதொரு விகாரமும் அடைதல் இல்லை. பொது இயல் தடத்த இலக்கணம் என்றும் கூறப்படும். சிறப்பியல் என்பது இறைவன் பிறிதொரு பொருளையுஞ் சாராது உண்மை அறிவு இன்பப் பொருளாய் (சச்சிதானந்தப் பொருளாய்) த் தனித்து நிற்கும் நிலை. சிறப்பியல், சொரூப இலக்கணமென்றும் உண்மை இயல் என்றும், தன்னியல் என்றும் கூறப்படும். இவ்விரண்டு இயல்களும் பின்னே கூறுகிறபடி, இவ்வதிகாரத் தேவாரப் பாட்டுக்களிற் கூறப்பட்டிருக்கின்றன. முதுமை என்னும் பண்புப் பெயர்ச் சொல்லில் ‘மை விகுதி கெட்டு முது என நின்றது. முதுமை என்பது பழைமை, அதாவது அநாதியாயுள்ள தன்மை, நிலை' என்பது விகாரப்படாது என்றும் ஒரு தன்மைத்தாய் நிற்கும் இயல்பு, இறைவன், உயிரினோடும் உலகினோடும் அநாதியாகவே அத்துவிதமாக நிற்கும் நிலை பதி முதுநிலை" ஆகும்.
இறைவன் உயிரினோடும் உலகினோடும் அத்துவிதமாய் நிற்கும் நிலையினாலே உயிரில்லாத உலகம் யாதொரு பயனும் அடைவதில்லை. இறைவன் நிறைவுடைய பொருளாதலால் ஒரு பயனும் வேண்டுவான் அல்லன். அநாதியாகவே ஆணவமலத்தினாலே பிணிப்புண்டிருக்கிற உயிரே. அம்மலப் பிணிப்பினின்று நீங்கி அறிவு விளக்கம் பெற்று, இன்பம் அடைதலாகிய பெரும்பயனை அடைதற்கு உரிய பொருளாகும். இங்கே உயிரென்று சொன்னது மாந்தரை, இந்நூல் மாந்தருக்குக் கூறப்பட்டதாகலின்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13)
முறைத் திரட்டு
து நிலை
முதல் இரண்டு பாட்டுக்களும் இறைவன், தனது அருளினாலே உயிரின் பொருட்டுச் செய்யும் ஐந்தொழிலையுங் கூறி அவனே உயிருக்குக் கட்டு நிலையினும் வீட்டு நிலையினும் களைகனாய் உள்ளவன் என்று கூறுகின்றன. 3,4,5,6 பாட்டுக்கள் பேரொளிப் பொருளாயிருக்கிற இறைவனை, உயிரானது கட்டு நிலையில் அறிய முடியாதென்றும், வீட்டு நெறியில் உணரலா மென்றும் கூறுகின்றன. 7வது பாட்டு, இறைவன், உலகில் உள்ளும் புறமுமாய் ஊடுருவிநின்று முத்தொழிலும் செய்கின்றான் என்றும், மீளப்படைக்கின்றான் என்றும் கூறுகின்றது. 8வது பாட்டு, இறைவனுடைய அழிப்பு (சங்கார)த்தொழிலைச் செய்தபின், உலகத்தை மீளப் படைக்கின்ற இறைவன், தன்னை அன்புடன் தொழுகின்றவர்களுடைய வினையை நீக்குகின்றான் என்று கூறுகின்றது. 10வது பாட்டு, இறைவனுடைய படைப்புத் தொழிலைக் கூறுகின்றது. 11வது பாட்டு, இறைவன், முத்தொழில் செய்தற்காக எட்டு உருவங்களைக் கொள்கின்றான் என்று கூறுகின்றது. 12வது பாட்டு அங்ங்னம் எட்டு உருங்களைக் கொள்கின்ற இறைவன் அவற்றை எவ்வாறு இயக்குகின்றான் என்று கூறுகின்றது. 13வது பாட்டு இறைவனுடைய காத்தல் தொழிலைக் கூறுகின்றது. 14வது பாட்டு இறைவனுடைய சிறப்பு இயலையும், பொது இயலையும், பொது இயல்பால் இறைவன் விகாரம் அடையாமையையும் கூறுகின்றது. 15வது பாட்டு, இறைவன் உயிரைப் பக்குவப்படுத்தற்காக அதற்குத் தனு கரண புவனங்களைக் கொடுத்து மயக்கு தலையும், பின் அம்மயக்கத்தை நீக்கித் தெளிவித்லையும் கூறுகின்றது. இங்ங்ணம் இறைவனுடைய முத்தொழிலை 1, 27, 9 பாட்டுக்கள், தொகுத்தும் 8, 10, 13 பாட்டுக்கள் விரித்தும் கூறுதலையும் 11, 12 பாட்டுக்கள், அவனுடைய பொது இயலையும் 3, 4, 5, 6, 14 பாட்டுக்கள், அவனுடைய சிறப்பியலையும் கூறுதலையும், 15வது பாட்டு இறைவன், தனது பொது இயலாலும், சிறப்பியலாலும் மாந்தருக்குச் செய்யும் அருட்செயல்களைப்பின் 2வது அதிகாரப் பாட்டுக்களுக்குத் தோற்றுவாயகக் கூறுதலையும் அறிக.
நன்றி : தேவார அருள்முறைத் திரட்டு

Page 16
G இந் நூற்றாண்டின்
சைவசித்
- இலக்கிய கலாநிதி ப6
தமிழ் நிலம் இலக்கியத் தமிழுக்குப் போல் சைவ சித்தாந்தத்திற்கும் இயற்கை விளைநிலம். அநாதி தொட்டே இந்நிலம் இவ் இரண்டையும் சித்திரப் பூந் தொட்டிலில் இட்டுச் சீராட்டிப் பாராட்டி வந்துள்ளது. இந் நிலம் இப்படி இவற்றைப் போற்றி வந்த மகிமை சுருதி, யுக்தி, அனுபவம் மூன்றுக்கும் ஒத்துள்ள முழுமையான உண்மை ஆகும். அங்கே இஸ்லாமியர் ஆட்சி அதிக்கிரமக் கெடு பிடிகளும் இங்கே சிங்களர் ஆட்சி அதிக்கிரமங்களும் அங்கேயும் இங்கேயும் ஒரே மாதிரி பறங்கியர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சிக் கோளாறுகளும் குறுக்கீடாய் இருந்த கால கட்டத்திலும்கூட தமிழகத்திலும், ஈழத்திலும் இலக்கியத் தமிழும் சைவ சித்தாந்தமும் யதார்த்தமான தமது தூய்மை நி-ை லயை விட்டுக் கொடுக்காமல் பேணப்பட்டு இருந்தமை கண்கூடு.
ஈழத் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் சிங்கை ஆரியர் காலம் முதலாகப் புலோலி சைவப் பெரியார் சிபாதசுந்தரம் காலம் ஈறாக இவ்விரண்டும் தம்மியல்பில் தளர்வுறாமலே நிலவிவந்துள்ளன. இக் காலப் பகுதியில் இலக்கியத் தமிழ்த் திறமையும் சித்தாந்த ஞான விளக்க விலாசமும் மிக்கோராய் யாழ்ப்பாணத்துச் சான்றோர் பலர் தமிழகத்திலும் தம் புகழ் நிறுவி உள்ளமை பிரசித்தம். அங்கே எழுந்த சங்க இலக்கியங்கள், பஞ்ச காவியங்கள், பிரபந்தங்கள், மெய்கண்ட சாஸ்திரங்கள், சைவத் திருமுறைகள், சைவ புராணங்கள் என்பவற்றுடன் இங்கு எழுந்த இரகுவம்சம், தட்சிண கைலாச மாண்மியம், பரராசசேகரம், செகராசசேகர மாலை, திருநெல்வேலி ஞானப்பிரகாசரின் வட மொழிச் சிவஞான போத விருத்தி, தமிழ்ச் சிவஞான சித்தியார் உரை, சமஸ்கிருதத்திலான சிவயோக நூல்கள், பின்னால் வந்தவர்களின் கல்வளை அந்தாதி, புலியூர் யமக அந்தாதி, மாவை யமக அந்தாதி, திண்ணபுரத்து அந்தாதி,திக்கை அந்தாதி போன்ற கடின நூல்களைக்கூடக் கல்வியாளர் மட்டம் கற்றுத் தெளிவதில் எந்தவித இடைஞ்சலும் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ 1950 வரை இந்த நிலை சீராகவே இருந்துள்ளது.
* சிவாம்க நாகபூச
 
 
 

பின்னரைப் பகுதியிற்
蛋TT互逝I
ண்டிதர் மு. கந்தையா -
இக் காலம் வரை அறிவு விளக்க சாதனம், மனித ஒழுக்கப் பண்புக்கு ஊன்று கோல், ஆன்மாவை லெளகிகத் துறையில் இருந்து ஆன்மிகத் துறைக்கு இட்டுச் செல்லும் வாகனம் என்ற வரையறைப் படுத்தப்பட்ட உயர் நோக்கே கல்வியின் நோக்காக இருந்து வந்தது உண்மை.
ஆனால் ஏனோ விளைந்தது என்றும் எப்படி விளைந்தது என்றும் எண்ணி உணரக் கூடாத வகையில் வாழ்க்கைக்கு வருமானம் அளிக்காத கல்வி, கல்வி அல்ல என்று எண்ணும் விபரீதம் விறு, விறு என்று வந்தேறிய நிலையை இந்நூற்றாண்டின் பிற்பகுதி ஏற்றுப் பிரதி பலிக்க வேண்டி ஆயிற்று. அதன் சார்பில் வருமானத்திற்கு உதவும் பரீட்சைக்கு நேரடியாக உதவாத எதையும் கற்க வேண்டியது இல்லை என்ற கண்டிப்பான அனுசரணையும் உள தாயிற்று, இந்த நிர்ப்பந்தத்துக்குள் தமிழ் இலக்கியக் கல்வியும் சைவ சித்தாந்தக் கல்வியும் தாங்களும் தடக்குண்டாயின.
யதார்த்தத்தில், இலக்கியத் தமிழ் கல்வி போலச் சைவ, சைவசித்தாந்தக் கல்வியும் வாழ் க்கையை நிராகரிப்பதல்ல, ஆனால், அதன் வாழ்க்கை நோக்கு இப்போ பொதுமையிற் காணப்படுவது போன்ற உலகியல் வாழ்க்கை வருமான நோக்கல்ல. இலக்கியத் தமிழ் கல்விக்குப் போல இதற்கும் முக்கிய நோக்காய் உள்ளது ஆன்மவியல் சார்ந்த அறிவாசார விருத்தியும் அற நெறி ஒழுக்கப் பண்புமாம். இப்பெறு பேற்றை எய்துதற்காம் கல்வி முறை இலக்கியத் தமிழ்க் கல்விக்கும் போலத் தகுதியான ஆசிரியர் கற்பிக்க மாணவர் உரிய நூல்களை வரன் முறையாகக் கற்றுத் தேர்தலாகும். அதற்குரிய ஆசிரியன் தானாக வகுக்கும் கல்வித் திட்டத்தினால் மட்டும் ஆகற்பாலது அது துர்அதிஷ்ட வசமாக இன்று அவ்வாறான சூழ்நிலை அரிதாகி விட்டது மொன்று. அஃதிருக்க,
இத்தகைய வரன் முறையான சைவ சித் தாந்தக் கல்வி உயர் தரப் பாடசலைகளில் ஆரம்பித்துப் பல்கலைக்கழகத்தில் முற்றுறக் கூடியது. தற்போது இரு நிலையிலும் அது இல்லை.
னியே போற்றி

Page 17
உயர் தரப் பாடசலைகளில் O/L, A/L சித்திக்கு அவசியமென அங்கும் இங்குமாகத் தொகுக்கப்பட்ட சில சைவ பாடங்களே கற்பிக்கப்பட்டாகின்றன. அதுவும் பெரும்பாலும் பரீட்சை எதிர்நோக்கும் வினா விடைப் பாணியில் கடந்தேறுகிறது. பல்கலைக் கழக மட்டத்தில் அங்கத்தைக்கு வேண்டும் ஆய்வியல் தேவைக்கு வேண்டுமளவில் மட்டும் ஒரு விதமாய் அமைகிறது.
இந்தியாவிற்கூட இல்லாத அளவுக்கு இலங்கை, பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக் கழக கலைத்துறைப் மட்டமளவும் சைவ சமய சித்தாந்தக் கல்விக்கும் இடமளித்திருந்தும் உருப்படியான ஒரு அறிவுத் தரம் எட்டப்படுதற்கு லாயக்கற்ற இந்நிலை இருத்தல் கழுத்தளவு நீருள் நின்றும் நாவரட்சி நீங்கா நிலை போலாகிறது.
இலங்கைத் தமிழ் மாணவர் கல்வியில் சைவ சித்தாந்தம் இவ்வளவுக்கு இடங்கொள்ளவைக்கத் தம்மால் ஆம் வகையால் எல்லாம் முயன்று பலன் கண்ட சைவப் பெரியார் புலோலி சிவபாதசுந்தரம், B.A. முதலியோர் இனி உய்ந்தது சைவ சித்தாந்தம் என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் தமது இறுதி மூச்சையும் கலக்கவிட்டுப் போயுள்ளனர். அவர்கள் நினைவு மறையா முன்னமே எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வந்தேறாமை மட்டிலன்றி வந்தேறும் அற்ப சொற்ப அறிவுத் தகுதிதானும் யதார்த்தமான சைவ சித்தாந்த உண்மை விளக்கந் தழுவிய அறிவாக இருந்து விடாமைப் பண்ணும் மற்றொரு குறுக்கீட்டின் நிலை பரிதாபகரமானதாம்.
இன்றைய தமிழ் உயர் தர பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள்,
"சைவம் என்பது இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்று. அதற்கு மட்டும் சிவன் முழுமுதற் கடவுள். அதுபோல மற்றைய ஐந்து சமயங்களிலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் முழுமுதற் கடவுள் உளர்’.
என்று கற்றுப் பரீட்சை எழுதிப் பாஸ் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்காளாக்கப்பட்டுள்ளனர். இது சைவ சித்தாந்த உண்மையாகாது. மாயாவாதம் என்ற தமது தத்துவ ஞானக் கொள்ளையை வலுவிழக்கச் செய்யும் உரமுடையதாயிருக்கும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை யொன்றைத் தம் நலங்கருதி மாயாவாதிகள் உருத்திரித்து மேற் கொண்ட எதிரிடைக் கொள்கை இதுவாகும். சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்கள் முன்னாக
| garai pisu motor DC
ეუწყნაზე, ზაზე *
 
 
 
 
 
 
 

முளைத்த இக் கொள்கையாளர் சமய ரீதியிலும் தத்துவ விளக்க ரீதியிலும் நேருக்கு நேர் முரண்பாடாக உருவாக்கிய கருத்துக் கொள்கைகள் மிகப் பல.
சைவம் சிவாகம சமயம், சைவத்தைக் குறிக்க, ‘சிவாகமய என்ற வார்த்தையே சிங்களத்தில்கூட உண்டு. வேதம் போல் தொன்மையானது எனப்படும் சிவாகம விதிப்படி அமையுங் கிரியை வழிபாடு என்பது இதன் தாற்பரியமாகும். அதற்கு நேர் முரண் ஆக,
ஸ்மிருதி என்ற வைதிக நூலின் விதிவழி அமைவது கிரியை வழிபாடு என்பது அவர்கள் கொள்கை. இக் கொள்கையின் பேரால் அவர்கள் ஸ்மாத்தர், எனப்படுவர். செயற்கைப் படைப்பாகிய ஸ்மார்த்தரின் இக் கொள்கையே சைவ சித்தாந் தத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றெனச் சைவப்பிள்ளைகள் படிக்கும்படி யாகிறது. இன்று , யதார்த்த நிலை என்ன வெனில், சைவம் என்பது செய்தவர் பெயரால் வந்த செயற்கைச் சமயமல்ல. சிவனுடன் ஆத்மா சம்பந்தமாதலை உடையது என்ற அர்த்தத்திலுள்ள இயற்கைப் பெயர் அது. இச் சைவம் கால தேச வரையறைக்குட்படாத இயற்கைச் சமயம். இது தன்னில் தானான ஒரு முழு முதற் சமயம். எனவே இதன் முதற் கடவுள் என்றுள்ள சிவன், சைவத்துக்கு மட்டுமல்ல, சகல உலகுக்கும் சகல உயிர்களுக்கும் மற்றுமுள்ள அனைத்துச் சமயங் களுக்கும் தானே முதல்வன். அதனால் அவன் முழு முதல்வன். அதே சிவனின் அருள் சக்தி; சிவனும் சக்தியும் ஒருங்கிணையக் கொண்ட மூர்த்தம் கணபதி. சிவன் பொதுமையில் வெளிப்படாதிருக்கும் தன் அதோ முகமுந் தோன்ற வெளிப்பட்டிருக்கும், மூர்த்தம் குமரன், விஷ்ணு, சிவன் அருளின் வேறல்ல. சூரியன் சிவப்பிரபாவத்தின் உயர் பிரதிபலிப்பே யன்றித் தனிக் கடவுளல்ல. "அருக்கனாவான் அரனுரு அல்லனோ” என்பது தேவாரம், செளர மண்டல மத்யஸ்தம் சாம்பம் என ஒலிக்கிறது சிவன் தியாக சுலோகம். இவ்வாற்றால் சக்தி, விஷ்ணு, விநாயகர், குமரன், சூரியன் என்ற இவ் வைந்தும் சிவனோடு சிவனாகச் சைவ உள்வளாகத்திலுள்ளவை. சிவனை மூல மூர்த்தியாகக் கொண்டுள்ள கோயில்களில் இவ்வைந்தும் சிவ வழிபாட்டு நிறைவுக்கு உதவும் அச்சங்களாக நிலவுதல் இன்றும் காணத்தகும். சிவாகம சம்மதம் தழுவிய இவ் அமைப்பைத் தம் தேவைப் பொருட்டாகச் சிதைத்து ஸ்மார்த்த முனைவர்கள் சைவ

Page 18
வளாகத்துக்கு வெளியில் உள்ள ஐந்து தனி வேறு சமயங்களாக வகுத்துக் கொண்டனர். அவர்கள் செயற்பாட்டு வழி வந்த விளக்கமே இன்று சைவப் பிள்ளைகள் கற்கும் சைவம் பற்றிய விளக்கம் ஆகிறது.
சிவனே முழு முதல்வன். லெளகீகத்திற்கும் அவனே, ஆத்மீகத்துக்கும் அவனே முழு முதல்வன் என்ற சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்தொன்றைக் குளறுபடியாக்கும் இவ் விளக்கம்; முதற் கோணல் முற்றுங் கோணல் என்றவாறாகச் சைவ சித்தாந் தத்தை அடியோடு குளறுபடியாக்கி விடுகிறது.
இவ் விபரீதத்தைத் தோற்றந் தெரியாமைப் பண்ணும் மறைப்புப் போர்வையாகும் வகையில் ஆறுக்கும் கூட்டுப் பெயராக இந்து சமயம் என்ற வழக்கும் ஆயிற்று. ஆய்வியலாளர் கையாளத் தொடங்கியுள்ள ஆய்வாளரைப் பார்த்து இப் பெயரையே அகில உலக அங்கீகாரம் பெற்ற பெயரென்று பல்கலைக்கழகமும் ஏற்றுக் கொண்டமையால், சைவ சித்தாந்தத்தையும் ஒரு பாடமாக ஏற்றுப் பல்கலைக் கழகம் புகும் மாணவர்களும் இந்த அடிப் படையி லிருந்தே ஆரம்பித்து முற்குறித்தவாறு அங்கு பெறும் பற்றாக் குறைவான அறிவைத்தானும் சைவசித்தாந்த உண்மைக்கு நேர்மையாகப் பெறும் வாய்ப்பை இழக்கின்றனர்.
உத்தரவாதமுள்ள உயர் கல்வி நிலையத்தினர் என்ற சாட்டில் சமூகத்தில் இடம் பெறும் சங்கங்கள் சபைகள், மகாநாடுகளுக்கு விரும்பியழைக்கப்படும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் சமூகத்துக்கு உண்மையான சைவ சித்தாந்த விளக்கம் வழங்குவோராக இல்லை. அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் கெளரவப் பிரச்சனையால் அவர்கள் அல்லாதவர்களில் உண்மையான சைவ சித்தாந்த விளக்க முள்ளோர் இன்று பெரும் மகாநாடுகளில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இதனாற் சைவசித்தாந்த அறிவாசார பாரம் பரியம் அடியோடு முடக்கப்பட்டாகிறது. சைவ சாஸ்திர உண்மைகள் வேண்டாப் பண்டங்களாகின்றன. சைவசிந்தாந்த உண்மை விலாசினிகளின் சைவத் திருமுறை விளக்கங்கள் இருட்டடிக்கப்படுகின்றன. குறித்த பேச்சாளர்களுக்கு இவற்றை வெளிக் கொணரும் ஆற்றல் சூனியம். அவர்கள்
* திருவளர் கைலை
 
 

பெற்றுயர்ந்த கற்றல் மரபுக் குறைபாட்டின் விளைவு அது ஆரேனும் வல்லவர்கள் சிரமதான ரீதியாகக் கற்பிக்க முன் வந்தாலும் அதனை முகங் கொடுத்து ஏற்கும் அளவுக்கு அவர்கள் பாஷையறிவுத்தரம் ஒத்துழைக்க முடியா நிலையுண்டு. இது இங்ங்ணமாக, உண்மையான சைவ சித்தாந்த விளக்கம் பிரகாசிக்கத் தடையாயிருக்கும் புறநிலைக் காரணிகளுஞ் சில உளவாம்.
படிப்பித்தல் நோக்கிலோ, ஆய்வு நோக்கிலோ, பிரசார நோக்கிலோ எழுதப்படும் சித்தாந்த விஷயங்கள் அவற்றுக்கு ஆதார நூல்களாகிய சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்துகளுக்கு அமைவாக அமைதல் இன்று பெரும்பாலும் இல்லை. இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெறும் சோஷலிச ஹியூமானிச கருத்துக்களின் செல்வாக்குக்கமைய அவை உருவாதல் காணப்படும். புதிய ஆராய்ச்சி முறை என்று அதற்கோர் கெளரவ கணியம் சில பகுதிகளிற் கொடுக்கப்படுவது வேறு விஷயம். உண்மையை அறிய அவாவும் சைவ சித்தாந்த மாணவனுக்கு இவை இடைஞ்சல் விளைப்பவை என்பதே இங்கு கருதப்பட வேண்டிய குறிப்பாகும்.
இந் நாளில் அகில அளவிற் பிரசாரமாகும் சமத்துவம் உலக சகோதரத்துவம் போன்ற உயர் நலன்களுக்கு உபகரிக்கும் வகையில் உலகப் பிரசித்தி பெற்ற சமயங்கள் சோஷலிச ஹியூமானிசக் கருத்துக்களுக்கு முதன்மையளிக்கும் போக்கிருக் கையில் சைவ சமயமும் அவ்வவ்வினக் கருத்துக் களுக்கு ஒத்துப் போகும் வகையில்தான் கருத்துக்களைச் சீர் செய்யாத பட்சத்தில் அச்சமயங்களுக்கு நிகராக உலக அரங்கில் ஏற்கப்படும் வாய்ப்பை இழந்துவிடும். உதாரணமாக, சைவ சித்தார்ந்தக் கன்மக் கோட்பாட்டில் நல்வினையும் பிறவிக்குக் காரணம் என்றிருக்கும் கருத்து, சைவ மக்கள் பொது நல சேவையில் ஈடுபடத் தயங்குதற்குக் காரணமாக இருந்து வருதலை ஒரு குறைபாடாகக் குறிப்பிடலாம். பிரசித்தி பெற்ற அகில உலகச் சைவ சஞ்சிகை ஒன்றில் அறிஞரொருவர் இக் கருத்துப்பட எழுதியிருப்பது காணப்படுகிறது. இதன் சார்பில் மூன்று வித ஆசங்கைகள் எழுதற்கிடமுண்டு. அவை முதன்மை பெறும் அந்நாடுகளில் அவற்றால் ஆம் பேறு யதார்த்தமான சமத்துவ சகோதரத்துவ நலன்களுக்கு உண்மையில் உதவுகின்றதா?

Page 19
என்பதொன்று. நல்வினையும் பிறவிக்குக் காரணம் எனச் சைவ சித்தாந்தம் கூறுவது உண்மை விரோதமா? அதனால் பொது நல நோக்கு உண்மையில் முடக்கப்படுகிறதா என்பதொன்று. மக்களைச் சமூக நலன்களுக்கான நல்வினையில் ஈடுபடவைக்கும் போக்குச் சைவ சித்தாந்தத்துக்கு உண்மையில் இல்லையா என்பது மற்றது.
அந் நாடுகளிற் சோஷலிச ஹியூமானிச சேவைகள் விருத்தியுறுவதும் அவற்றால் மக்கள் வாழ்க்கைப் புற நிலைச் செழிப்புகளைப் பெறுவதும் ஏதோ உண்மைதான். அதே வேளை, கருதப்படும் மனித உண்மை நலப் பேறுகளுக்கு நேர் எதிரான போட்டி, பொறாமை, பூசல்களும் இனவாதம். இனப்படு கொலை அனர்த்தங்களும் இருந்து கொண்டிருப்பதும் அப்பட்டமான உண்மையே எனின் பின்னைப் பேசுவானேன்? இந்நிலையானது எதிர் பார்க்கப்படும் சமத்துவ சகோதரத்துவ உயர்வுகளுக்கு வாழ்க்கைப் புற நிலை விருத்திகள் உதவுமாறில்லை எனவும் அதற்குதவத் தகும் காரணி வேறேதோ எனவும் தெளிவாக அறிவிக்கின்றது.
மனித முழுமைத்துவமே தன் பண்பும் பயனுமாகக் கொண்டுள்ள சைவ சிந்தாந்தம் வாழ்க்கைப் புறநிலை விருத்திகளல்ல, மனித அகநிலை விருத்திகளே அதற்கு நேரடியாகவும் உண்மையாகவும் உதவுவன எனக் கொண்டு அவ்வக நிலை விருத்திகளை ஆக்குவதற்கு உத்தரவாதமுள்ள உபாயங்களையும் அறிவியற்கேற்கும் முறையில் 9) L' கொண்டிருகின்றது. அதன் பிரகாரம் -
செயலில்லாமற் பயனில்லை
அவனவன் செய்ததையே அவனவன் அனுபவிக்கிறான் என்ற பிரபலமான அறிவியல் உண்மைப்படிக்கு, மனித அனுபவத்தில் இன்பம் துன்பம் என இரு வித அனுபவங்கள் இருத்தலால் இவற்றுக்குக் காரணமான செயல்களும் இரு விதமாயிக்க வேண்டும். அவையே நல்வினையும் தீவினையும். இனி அனுபவிக்கிறவன் பிறந்தே எந்த அனுபவத்தையும் பெற வேண்டியிருப்பதால் நல்வினையும் பிறவிக்குக் காரணம் எனக் கூறும் சைவ சித்தாந்தம் நியதமான ஒரு விதியையே கூறியிருக்கிற தென்பது வெளிப்படை. அது
அங்ங்ணமாக, முன் செய்வினைப் பலன் மற்றொரு
பிறப்பில் ஒன்றுஞ் செய்யாதிருக்க அனுபவத்துக்கு
堑Gü、
 
 
 

வருமாறில்லை. முன் தீவினைப் பலனான துன்பத்தை ஏற்க முன்னோடியாக ஒருவன் இப்பிறப்பிற் அதற்குத் தோதான ஒரு தீவினையைச் செய்தே அதன் மூலம் ஏற்க வேண்டும். முன் செய்துள்ள ஒரு கொலைத் தண்டனைக்கும் தந்திரமாகத் தப்பியிருந்தவன். இப்பிறப்பில் அதன் பயனாகத் தண்டனைத் துன்பத்தை அனுபவிக்க முன்னோடியாக ஏதானுமொரு கொலையிற் சம்பந்தப்பட்டாக வேண்டும். அதாவது மீண்டும் தீவினை யொன்றைச் செய்தே முன்னைத் தீவினைப் பலன் அனுபவிக்க வேண்டும். எனில், இன்ப அனுபவத்திற்கும் நியதி இதுவே என்பதை மறுத்தற்கில்லை. அவ்வகையில் முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனான இன்பத்தை அனுபவிக்க, உள்ள ஒவ்வொருவனும் அதன் பொருட்டு மறுபிறப்பில் நல்வினை செய்தே ஆதல் உறுதி. இது இவ்வாறாதலால் நல்வினையும் பிறப்புக்குக் காரணம் என்ற சைவ சித்தாந்தத் கோட்பாடு மனிதன் நல்வினை செய்வதற்கு ஆதாரமாவதன்றி எதிராதல் ஒருபோதும் இல்லையாகும். வேறு விதமாகச் சொன்னால் இன்ப அனுபவத்திற்கு அருகதை உள்ள எவனும் நல்வினை செய்யாதிருக்க முடியாது எனலாம்.
ஆனால் கைவளமுள்ளவர்கள் பலர் கஞ் சத்தனம் பண்ணுகிறார்கள் எனில், அதன் தாற்பரியம் வேறு, கைவளம் அவனிடமுண்டுதான், ஆனால், அதனால் அவ் இன்பப்பேற்றுக்கு லாயக்காய நல் வினைப் பேறு இப்போ அவனுக்கில்லை.
அவனுக்கு முன் தீவினைப் பலனாக உள்ளது துன்பப் பேறே. அதற்கு வலுவூட்டும் ஏதாவதுதொரு முகாந்தரத்தில் அவனுக்கு இப்போ செல்வம் வந்திருக்கிறது. அவன்தன் கஞ்சத்தனத்தால் அதற்கே முற்றிலும் அனுசரணையாய் இருந்து விடுகிறான் என்பதே அதன் தாற்பரியமாம். செல்வம் வருதல் எல்லார் விடயத்திலும் நல்வினைப் பேறாகாது, பொருட் செல்வம் பூரியார் கண்ணுமுள என்ற வள்ளுவர் கூற்றால் இது வலுவுறும்.
ஒருவனுக்கு இன்பம் அனுபவிக்கும் ஊழ் இருக்கும்போது கைவளமில்லா விடினும் பிச்சை எடுத்தாவது அவன் நல்வினை செய்யாதிரான்.
அது இல்லாதபோது கைவளம் எவ்வளவிருந்தாலும் அது செய்யவே மாட்டான். உளனாயிருந்தும் அவன் 1
இலன்தரக் கணிப்புக்கே உரியவனாவான்.
豪リ三
-
鼩

Page 20
எவ்வாறாயிருப்பினும் விவேகம் (பகுத்தறிவு) என ஒன்று மனிதனுக்குப் பிரத்தியேகமாக உள்ளது. அதை அவன் தொழிற்பற்றி உய்ய இயலுமேல் உய்யட்டும் என்ற கருணையால் தான், கைத்துண்டாம் போழ்ந்தே கரவாது அறன் செய்மின், "ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் தாமுடைமை வைத்திருக்கும் வன் கணவர்’ “இரப்பவர்க் கீய வைத்தார் ஈய்பவர்க்கருளும் வைத்தார். கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்’ என்ற அருளுரை உபதேசங்கள் தமிழர் வழக்கில் எழுந்துள்ளன என்பதும் இத் தொட்ரில் அறியத்தகும்.
எனவே மக்கள் நல்வினை செய்ய வைத்தற்கே சைவ சித்தாந்தம் முழுமூச்சாய் உள்ளது. அதன் பொருட்டுச் சைவ சித்தாந்தக் கோட்பாடு ஒன்றைக் குறை கூறுதல் அநாவசியமாம்; அபவாதமும் ஆம்.
சைவ சித்தாந்தத்தைச் சைவ சித்தாந்தமாக அதாவது, உள்ளது உள்ளபடி அறியத் தவறும் சோர்வினால் இன்றைய சைவசித்தாந்த ஆக்கங்களில் இடம் பெறும் இத்தகைய தவறுகள் எத்தனையோ, பல இவற்றால் இக் காலத்துச் சைவ சித்தாந்தம் சுய கெளரவத்தோடு நிலவ முடியா நிலையுண்டு. இதே தவறு காரணமாக வளர்ந்து வரும் விஞ்ஞானப் போக்கிற்கு அமையச் சைவ சித்தாந்தம் தன்னைச் சீர் செய்து கொள்ள வேண்டும்; சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பகுத்தறிவுக்கேற்க விளக்கப்பட வேண்டும் என்றவாறான பிரஸ்தாபங்களும் இன்றைய எழுத்துக்களில் இடம் பெறுகின்றன.
விஞ்ஞான ஆய்வியலாளர் மிக அரிதின் முயன்று இப்போதான் வெளியிடும் கருத்துக்களான அண்டம் முட்டை வடிவம் (Cosmic egg) அதன் கூறுகள் பலவாக விரியும் (அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப் பருத் தன்மை வளப் பெரும் காட்சி நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன) தோற்றும், பொருள் எதுவும் நிலைமாறுவதன்றி இல்லா தொழிவதில்லை (பிரபஞ்சம் மாயையாகியதன் காரணத்திலிருந்து காரிய நிலைக்கு மீளுவதே சிருட்டி, மீள அது காரியநிலையிலிருந்து காரண நிலைக்கு மாறி ஒடுங்குவதே சங்காரம்) அணுவும் பலவாகப் பிரிக்கப்படும் உட் கூறுகள் கொண்டதுசடமாயும், அவயவப் பகுப்புடையதாயும் இருந்தால் பரமானு பிரபஞ்சத்துக்கு முதற் காரணமாகாது என்பவற்றைப்
பிறைவடிவுக்குள் கண்டவாறு அன்றே - விஞ்ஞான
 
 

ஆய்வுக்கலை அரும்பாத காலத்திலேயே - சிவாகம ஞான வாயிலாக ஏற்று உட்கொண்டிருக்கும் சைவ சித்தாந்தத்துக்கு விஞ்ஞான குறைபாடு எங்ங்னமாமோ? இயற்கைக் கண் உள்ளதற்குச் செய்கைகள் வேண்டிய தில்லையே!
மேலும் திருஞானசம்பந்தர் முதலிற் பாடியது
"தோடுடைய செவியன். பதிகம் என்பது பகுத்தறிவுக் கொவ்வாது. அப்பதிகத்திற் காதற் கருத்துள்ளது. மூன்று வயதில் காதல் தோன்றுமாறு எங்ங்னம்? மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு முன் திருக்கோவையார் பாடி இருக்க வேண்டும். பாசப்பற்று நீங்கிய பின் காதல் தோன்றல் அசம்பாவிதம் என்பன போன்ற கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. வரலாற்றுண்மைக் கிணங்கத் திருஞானசம்பந்தர் முன்பு சிவயோகத்திற் சிவனையே காதலித்திருக்கும் சாமீப பதவியில் இருந்து சிவனருளினாற் பூமியிற் பிறக்க வைக்கப்பட்டவர். அதற்குப்பண்டு திருவடிமறவாப் பான்மையோர் தமைப் பரமர் மண்டுவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்தலால்" எனப் பெரிய புராணத்தில் புறச்சான்றும், 'மறக்கு மாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின் மேற் பிறக்குமாறு காட்டினாய் என அவர் தேவாரத்தில் அகச் சான்றும் இருத்தல் கண்கூடு. இதன் பிரகாரம் திருஞானசம்பந்தருக்குச் சிவக் காதல் பிறவிக் குணம். தன்னல மற்று உயிர் உணர்வாயெழும் அன்பின் முதிர்ச்சியே காதல், அது உயிர்ப் பண்பாய் உலகியலில் ஒருவன் ஒருத்தி காதல் போல ஆன்மவியலில் ஆன்ம சிவக் காதலாதல் இயல்பே. இது சிவக் காதல் பாசப் பற்றறும் முன் எல்லாவற்றானும் ஆதலில்லை என்ற சைவ சித்தாந்த ரீதியான உண்மை விளக்கங்களை மூழ்கடிக்கும் அறிவு முயற்சிகள் இவையாதல் துணிபு. இவ்விதமான கருத்துப் புரட்சிகள் இக் காலம் உண்மைச் சைவ சித்தாந்த விளக்கத்திற்குச் சவாலாகவேயிருக்கின்றன. இவற்றுக்குள் மாளாமற் சைவ சித்தாந்தத்தை நிமிர்த்தி வைக்கும் கடன் சைவ சித்தாந்த நேயர்க்குப் பாரிய பொறுப்பாகும்.
சைவ சித்தாந்த ஞான விளக்க அடிப்படையில் உருவாகி அவ் விளக்கப்பேற்றையே இலக்காகக் கொண்ட சைவாலயங்கள் இன்று மெல்ல மெல்லச் சுமார்த்தப் பாங்கான சாக்த வைணவ மயப்படுத்தப்படும் நிலையும் இன்று சைவ சித்தாந்த உண்மை விளக்கத்துக்குச் சவாலாகவே உள்ளது. அது தனி விஷயம்.
DGöfunrüŭ Gröön

Page 21
பிரமாதி ஆனி
திருமுருக கிரு நம்மீது எத்தனையோபேர்கள் அன்பு செய்கின்றார்கள், தந்தை அன்பு செய்கின்றார், மனைவி அன்பு செய்கின்றாள், மகன் அன்பு செய்கின்றான், உடன் பிறந்தார்கள் அன்பு செய்கின்றார்கள், ஆனால் தாய் செய்கின்ற அன்புதான் தலையாய அன்பு
தாயன்புக்கு நிகரானது வேறு எதுவும் கிடையாது. தாய் நம்மை முன்னூறு நாள் சுமந்து, அங்கமெல்லாம் நொந்து பெறுகின்றாள். தன் உதிரத்தைப் பாலாக மாற்றித் தருகின்றாள். கண்ணை இமை காப்பதுபோல் காத்து வளர்க்கின்றாள்.
நமக்கு இரண்டு தாயர் உண்டு. ஒன்று பெற்றதாய் மற்றொருதாய் இறைவன். தாய் இந்தப் உடம்பைப் பெற்றவள்; இந்தப் பிறப்புக்கு மட்டும் தாய். இறைவன் பிறவிகள் தோறும் நமக்கு உதவுகின்ற தாய், அதனால் இறைவனைத் தாய் என்று கூறுகிறார் மாணிக்கவாசகர். "தாயான செல்வர்க்கே சென்றுதாய் கோத்தூம்பீ "தாயில் சிறந்த தயாவானதத்துவனே' - திருவாகம் "எவ்வுயிர்க்குந் தாயானானை" - பெரியபுராணம் "எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ"
- கந்தரனுபூதி நம்தாயாரைத் தங்க ஊஞ்சலில் வைத்துப் போற்றிப் பாலும் தேனும் ஊட்டி, மலர் சூட்டி வழிபட்டாலும், தாயார் நம்மை ஒருநாள் வளர்த்ததற்கு இணையாகாது.
சந்நியாசம் பெற்ற ஒருவனைக் கண்டு நிலத்தில் வீழ்ந்து வணங்காதிருந்தால் தந்தைக்கு நரகம். சந்நியாசம் பெற்ற ஒருவன் தாயாரைக் கண்டு நிலத்தில் விழ வில்லையானால் அந்தச் சந்நியாசி நரகத்தை அடைவான்.
பற்றற்ற பரமஞானியும் தாயாரைப் போற்ற வேண்டும்.
சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரரும், பட்டினத்துச் சுவாமிகளும் தாயாருக்குத் தகனக்கிரியை செய்தார்கள்.
தாய்தான் சிறந்த தெய்வம், தாய் பூமியைக் காட்டிலும் கனமானவள் என்று யட்சப்ரச்னை கூறுகின்றது.
 
 

IGirl பானந்த வாரியார்
'ஈன்றாளின் எய்ந்த கடவுளும் இல்லை' என்பதுநான் மணிக்கடிகை. இத்தகைய தாயன்பை அடியிற்கண்ட வரலாறு இனிது விளக்குகின்றது.
வடநாட்டிலே ஒர் அரசினிடம் சமஸ்தான வித்வானாகப் பேரும் புகழும் பெற்றுச் சீரும் சிறப்பும் எய்தி “றி ஹீரன்” என்பவர் இருந்தார். இவர் வடமொழியில் வல்லவர். இவர் அரச சபையிற் சூரியனைப்போல் விளங்கினார். அவருமைய வாக்கின் வன்மையைக் கண்டு மன்னன் மகிழ்ந்து அவருக்குப் பல விருதுகள் வழங்கினார்.
ஒருநாள் அயல்நாட்டிலிருந்து ஒரு புலவன் வந்தான். கையில் யாளிமுகத் தோடாவும், வைரக் கடுக்கனும், நவரத்தின மோதிரங்களும், பொற்சரிகைப் போர்வையும் உடைய அப்புலவன் சீடர்கள் பலர்சூழ மிடுக்குடன் தோற்றமளித்தான். அப்புலவனுக்கு ஆஸ்தான வித்துவானாகிய பூரீ ஹிரனுக்கும் கல்விப்போர் நிகழ்ந்தது. அதில் பூரீ ஹிரன் தோல்லியடைந்தார். அந்த அவமானத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்குச் சிந்தாமணி என்ற மகாமந்திரம் தெரியும். அம்மந்திரம் சரஸ்வதிக்கு உரியது. அதனைப் பன்னிரு ஆண்டுகள் ஜெபித்தால் கலைமகள் தோன்றிக் காட்சி தருவாள். இல்லையேல் நடுஇரவில் பிணத்தின் மீது அமர்ந்து அச்சம் இன்றிப்பன்னிரெண்டு நிமிஷம் ஜெபித்தால் கலைமகள் காட்சி தருவாள். அவருக்கு பூரீ ஹர்ஷன் என்ற ஒரு சிறிய குழந்தை இருந்தது.
அந்த மந்திரத்தை அந்தச் சின்னஞ்சிறு பாலகனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்று கருதினார். மந்திரத்தை உபதேசிக்கக் கூடிய வயது குழந்தைக்கு இல்லை. தன் மனைவி மாமல்ல தேவிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தார்.
“பெண்ணே! சிந்தாமணி என்ற இந்த மந்திரம் மிகச்சிறந்த அருமையும் பெருமையும் உடையது. இதனை நமது மகன் பூரீ ஹர்ஷனுக்கு உரிய காலத்தில் நீ உபதேசம் செய். இம்மந்திரத்தைப் பயபக்தியுடன் பன்னிரண்டு ஆண்டு ஜெபித்தால் கலைவாணி காட்சி தருவாள்.

Page 22
இல்லையேல் நள்ளிரவில் பிணத்தின் மீது அமர்ந்து சிறிதும் அச்சமும் அருவருப்பும் இன்றிப் பன்னிரண்டு நிமிஷங்கள் ஜெபித்தாற் கலைவாணி காட்சி தருவாள். இது கிடைத்தற்கரிய அரியபொக்கிஷம், இதனை மகனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் "மானம் இழந்த பின் வாழாமை முன் இனிது” என்ற வாக்கின் படி அவர் உயிர்துறந்தார். மனைவி மாமல்லதேவி கணவனாருடைய பிரிவைக் குறித்துப் பெரிதும் வருந்தினாள். மந்திரத்தை மகனிடம் ஒப்புவிக்கும் பொருட்டு உயிர் தாங்கிக் கொண்டிருந்தாள்.
குழந்தைக்கு 6) IULS வந்தபின் அம்மந்திரத்தை அக்குழந்தைக்கு உபதேசித்தாள். அம்மந்திரத்தைச் சதா உச்சரிக்கும் பயிற்சியை அக்குழந்தைக்குத் தந்தாள், தன் மகன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஜெபித்தால்தானே வாணிதேவியின் தரிசனம் கிடைக்கும்? அத்தனை நாள் தாமதிக்காமல் அதிவிரைவில் அன்னை கலைமகளின் அருளைத் தன் அருமை மகன் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
ஒருநாள் இரவு 15 நாழிகை நள்ளிரவு, தன் வீட்டுக் கூடத்தில் அவள் மல்லாந்து படுத்துக் கொண்டாள். மகனை மார்புமீது வைத்துக் கொண்டாள். கண்ணா உனக்குச் சொன்ன மந்திரத்தை நீ சொல்லிக் கொண்டே இரு அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் உனக்கு நிரம்ப பட்சணம் தருவேன். விளையாட்டுச் சாமான் வாங்கித் தருவேன்’ என்றாள். அவள் இட்ட திட்டத்தைக் குழந்தை அறியாது தானே? தாயின் மார்பில் அமர்ந்திருந்த பூரீ ஹர்ஷன் மந்திரத்தை இடையறாது ஜெபித்துக் கொண்டிருந்தான்.
தாய் விளக்கை அனைத்தாள். முன்னமேயே படுக்கைகுள் ஆயத்தமாக வைத்திருந்த வடிவாளை எடுத்துத் தன் தலையைத் துண்டித்துக் கொண்டாள். குழந்தை இதை அறிந்து கொள்ளவில்லை. மந்திரத்தைச் ஜெபித்து கொண்டேயிருந்தது. நள்ளிருளிற் பிணத்தின் மீதிருந்து மந்திரத்தைச் ஜெபித்ததாற் கலைமகள் அன்னவாஹனத்தில் தோன்றி ஆயிரம் சந்திரோதயம் போற் காட்சி அளித்தாள்.
 
 

அந்த அருள் ஒளியில் வாணிதேவியைக் குழந்தை தரிசித்தது. அதே நேரத்தில் தன்னைப் பெற்றெடுத்த அன்னை மாண்டிருக்கக் கண்டது. இந்தத்தாயை நோக்கி அழுவதா? அந்தத்தாயை நோக்கித் தொழுவதா? என்று எண்ணித் திகைத்தது.
கலைமகள் அக்குழந்தைக்குப் பூர்ணமான அருளை வழங்கிக் கலை ஞானத்தைத் தந்தருளினாள். பூரீ ஹர்ஷன் கலைமகளை நோக்கி "அம்மா என் தாய் பிழைக்க அருள் செய்” என்று தொழுது அழுது வேண்டினான். வாணிதேவி அருள்புரிந்தாள் மாமல்லதேவி உயிர் பெற்று எழுந்தாள்.
பூரீஹர்ஷன் வடமொழியில் பெரும் புலவராக விளங்கினார். இவர் நளனுடைய சரிதத்தை நைஷதம் என்ற நூலாகப் பாடினார். அது மிகவும் கடினமாக எளிதிற் பொருள் விளங்காதபடி இருந்தது அக்காலத்திலிருந்த புலவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. -
பூரீ ஹர்ஷ னுடைய அறிவு மிகவும் கூர்மையாக இருந்தது. அவரால் எளிமையாகப் பாட இயலவில்லை. புலவர்கள் அவரைப் பார்த்துத் "தங்களுடைய அறிவின் கூர்மைச் சிறிது மழுங்க வேண்டும். அப்படி மழுங்குவதற்கு நீர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மாமனார் வீட்டில் சிலகாலம் இருக்க வேண்டும். காலையில் எருமைத்தயிர் அன்னம் சாப்பிட வேண்டும். அவரைப் பந்தலின் கீழ் இருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
பூரீ ஹர்ஷர் இவற்றை இவ்வாறு செய்து அறிவின் கூர்மையை மழுக்கிக் கொண்டு இரண்டாவது முறையாக நைஷதத்தைப் பாடினார். அப்படிப் பாடிய நைஷதமே மிகவுயர்ந்த காவியமாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. “நைஷதம் புலவருக்கு ஒளஷதம் ' என்பது பழமொழி.
இந்த வரலாற்றினால் தாயன்பு நன்கு புலனாகிறது. தன் மகனுக்காகத் தாய் தன்னையே தியாகம் செய்து கொண்டாள்.
நன்றி வாரியாரின் அமுத மொழி

Page 23
அரிவாட்டா
திருநாள் - வி
- சிவ சண்
காவிரி ஆற்றால் வளஞ் சிறப்பது சோழநாடு. சோழநாட்டுப் பதிகளில் ஒன்று கணமங்கலம், வண்டினங்கள் சூழ்ந்து இசைபாடும். கரும்புகள் கணுக்களிடமாகத் தேனினைச் சொரியும். அது அப்பதியில் வாழ்விற்குக் குறைவில்லாத எல்லாச் செல்வங்களையும் உள்ளடக்கியிருப்பதை உலகோர்க்கு உணர்த்துவது. போலாகும்.
தாயனார் கணமங்கலத்தில் வாழ்வு பெற்றவர். சிறந்த இல்வாழ்க்கை உடையவர். வழி வழியாக வந்த பெருஞ் செல்வப் பேறு பெற்றவர். ஒப்பற்ற வேளாண்மையில் தலைமை பெற்றவர். சிவபெரு மானுடைய திருவடி அன்பில் மேம்பட்டு ஒழுகி வந்தார்.
சிவபெருமானுக்குத் திருவமுது செய்விப்பது தாயனாருடைய நியதி.
தாயனாருடைய அகலா அன்பைக் கண்டு திருவுளம் மகிழ்ந்தார் சிவபெருமான். அன்பருக்குச் சிவலோக வாழ்வு சித்திக்கத் திருவுளங் கொண்டார்.
தாயனாருடைய பெருஞ்செல்வம் போனவழி அறியாமல் போக்கினார் புரிபுன்சடையார்.
வறுமையிலும் செம்மையில் நின்றார் தாயனார். அம்மை அப்பருக்குத் தாம் ஆற்றிவரும் அரும்பணியை அன்போடு தவறாது செய்து வந்தார்.
வயலில் சென்று கூலிக்கு நெல்லரிவார். கூலியாகச் செந்நெல்லும் கிடைக்கும். கார் நெல்லுங் கிடைக்கும். செந்நெல்லை இறைவனுடைய திரு வமுதிற்குச் சேமிப்பார் கார் நெல்லைத் தங்கள் உணவிற்கு உபயோகிப்பார்.
சிவபிரான் தாயனாருக்குக் கிடைக்கும் நெல் யாவும் செந்நெல்லாகத் திருவுளங் கொண்டார்.
"அடியேன் செய்த புண்ணியம் இதுவாகும்" என்று அது கண்டு தாயனார் மேன் மேலும் 'மகிழ்ந்தார்.
இல்லத்தில் உணவிற்கு நெல் இல்லை. மனைவியார் இல்லக் கொல்லையிலுள்ள இலை களைப் பறிப்பார். தாயனாருடைய உண்கலத்தில்
* முற்படு குண்டலி
 
 

DJJ J5m J Jigorri
தைத்திருவாதிரை
முகவடிவேல் -
சேர்த்து வைப்பார். அதனைத் தாயனார் உணவாகக் கொள்வார்.
நாட்கள் செல்ல வீட்டுத் தோட்டத்தில் இலைகள் எல்லாம் தீர்ந்து போயின. கற்புடை மடவார் தண்ணிரையே அருந்தும் உணவாகத் தந்தார். அன்பரும் அதனை அருந்தி அரும்பணியில் வழுவாது ஒழுகுவார்.
வழமை போல ஒருநாள். தாயனார் இறை வனைத் திருவமுது செய்விப்பதற்கு மூண்டு எழும் அன்போடு முன்னிச் செல்லுவார். செந்நெல்லரிசி, மாவடு, செங்கீரை முதலியனவற்றைக் கூடையில் வைத்துச் சுமந்து சென்றார் தாயனார். அவர் பின்பாக மனைவியார் செல்வார். பசுவில் பெற்ற பஞ்ச கவ்வியங்களையும் மண்பாத்திரங்களில் பக்குவமாகக் கைகளில் ஏந்திச் சென்றார் மனைவியார்.
தாயனாருடைய மேனித் தளர்ச்சியினால் கால்நடை தப்பியது. தளர்ந்து வீழ்ந்தார் தாயனார். பின்னே வந்த மனைவியார் கணவனாரை அனைத்தும் திருவமுதுக்கானவை கூடையிலிருந்து கொட்டி விட்டன.
நெந்நெல்லரிசி, மாம்பிஞ்சு, செங்கீரை எல்லாம் நிலப்பிளப்பில் சிந்திவிட்டன. தாயனார் மனம் பதைத்தார்.
'திருக்கோவிலுக்கு இனி ஏன் போக வேண்டும்?” என்ற வினா ஆன்ம உணர்வாக வாயில் வந்தது.
"துன்பம் தீர்த்து ஆள வல்ல சிவபெருமான் திருவமுது செய்தருளும் அப்பேறு, எல்லை இல்லாத் தீமையுடைய நான் இங்கு எய்தப் பெற்றிலேன்.” என்று வாய்விட்டுப் புலம்பினார். புன்கணுற்றார்.
தாயனார் விரைவாகக் கழுத்தில் அரிவாளைப் பூட்டினார். மிடற்றினை அரிவாராயினார்.
“என்னை ஆட்கொள்ளும் பெருமான் தாம் இங்கு அமுது செய்யப் பெறவில்லையே” என்று கூறிக் கழுத்தினை அரிபவர் - பிறவி வேரை அரிபவருக்கு ஒப்பானர்.
சத்தியே போற்றி

Page 24
"ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார்'தாயனார் கழுத்தை அரியும் செயலை விலக்க அம்பலத்தில் ஆடும் எம்பெருமானுடைய வீசிய செய்ய திருக்கரமும் மாவடுவினை உண்பதினால் எழுகின்ற 'விடேல், விடேல் என்னும் ஒசையும் ஒரே சமயத்தில் நிலப்பிளப்பிலிருந்து எழுந்தன.
அந்த அருட்செயலை வெளிப்படுத்தும் திருவாக்குச் சேக்கிழார் திருவுளத்தில் இவ்வாறு எழுந்தது
மாசறு சிந்தை பன்பர் கழுத்தரி பரிவாட் பற்று மாசில் வன் கையை மாற்ற வம்பலத் தாடு மையர் வீசிய செய்ய கையு மாவடு விடேல்வி டேலென்
னோசையுங் கமரினின்று மொக்கவே யெழுந்த வன்றே"
திருவருட் சிறப்பில் திளைத்த தாயனார் அருட் கருணையைத் தொழுது துதிப்பாராயினார்.
"உடுக்குப் போன்ற ஒடுங்கிய இடையை உடைய உமைபாக! என் அறியாமை அறிந்தும் என்
அடிமையைத் திருவுளங் கொண்டீர்கள்! நிலத்து
а - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சைவநீதி ச
சைவநீதி இதழ் நல்லதாள்களைக் கொண்டத
அப்பணிவழி நிற்பது எம்கடன். இவ்வெண் வருடச் சந்தா இருநூற்றைம்பது (250/-) ரூபா (25/-) வாக இருக்கும்.
வெளிநாட்டுச் சந்தா தொகை பத்துப் (105)பவு (5S) U.S டொலர் ஆகவும் கொள்ளப்படலாம்
விபூதி த
நிலத்திலே சிந்தாவண்ணம் அை வலக்கையின் நடு விரல் மூன்றினாலும் தர் ஆழி விரல்களினால் இடப்பக்கந் தொடு கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், விரலாலும் தரிக்கலாகாது
܀ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܠ
 
 

வாரத்தில் வந்து அமுது செய்த அரும்பொருளே அடைக்கலம், செம்பொற் சோதி காக்க. பவளம் போன்ற திருமேனியில் திருநீறு தரித்தவ. புரிசடையானே. முன்னைப்பழம் பொருட்கும் முன்னான பொருளே. போற்றி"
அடியனேனறிவிலாமை கண்டுமென்னடிமை வேண்டிப் படிமிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே போற்றி துடியிடை பாகமான தூயநற் சோதி போற்றி பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி"
"அன்பனே! நின் செய்கை நன்று. நின் மனைவியோடு என்றும் எம் சிவலோக வாழ்வில் சிறப்புற்றிருப்பாய்.” என்று திருவாய் மலர்ந்தருளி இடபவாகனராக அருள் பாலித்தனர்.
தாயனாரும் துணைவியாரும் உடன் வர இளம் இடபத்தை ஊர்ந்து எம்பெருமான் எழுந்தருளிச் சென்றார்.
தாயனார் கழுத்தில் அரிவாள் பூட்டி அரிதலால் - அரிவாட்டாயர் என்னும் தூய நாமம் உடையாரானார்.
༠ ༠ ༠ ༤ ༠ ༠༠༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ ༠ བ་
ந்தா விபரம் )
ாக இருக்க வேண்டுமென்பது பலர் விருப்பம்
2ணம் நிறைவேறுவதால் இலங்கைக்குள்ளான வாயிருக்கும். தனிப்பிரதி இருப்பதைந்து ரூபா
ணாகவே இருக்கும். இத்தொகை பதினைந்து
-நிர்வாகம்,
ரித்தல்
எணாந்து 'சிவசிவ' என்று சொல்லி த்தல் வேண்டும். இப்படியன்றி நடுவிரல், த்திழுத்துத் தரித்தலுமாம். வாயங்காந்து கவிழ்ந்து கொண்டும் பூசலாகாது. ஒரு
- பூரீலழறீ ஆறுமுகநாவலர் -
محے • • • • • • • • • • • • • • • • • • • • • = = = =
ாகினி போற்றி *

Page 25
நித்திய
- சைவப் புலவர்
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ என்று நாம் இறைவனை வழிபடும் போதெல்லாம் வேண்டுதல் செய்கின்றோம். இந்த உலகில் இன்பமே எவ்விடத்தும் நிலைகொள்ள வேண்டும்; எல்லாம் இன்பமயமாக இருக்க வேண்டும்; எல்லாரும் இன்புற்றுவாழ வேண்டும் என்பது இந்த வேண்டுதலின் பொருள் ஆகும்.
இதனை நாம் வேறெங்கோ இருந்து எதிர் பார்க்கின்றோம். அந்த இன்ப வாழ்வில் நாமும் திளைக்க ஆசை கொள்கின்றோம். அதேவேளை உலகெலாம் இன்பம் சூழ்வதற்கு நாமும் என்ன செய்ய வேண்டும்; அதில் எம் பங்கு என்ன? என்பதை ஒவ்வொருவரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
நாம் இன்புற்று வாழ வேண்டுமெனில் பிறர் எமக்குத் துன்பம் செய்யக் கூடாது; ஆகவே பிறர் இன்புற்று வாழ வேண்டுமெனில் நாம் பிறர்க்குத் துன்பம் செய்யக் கூடாது. வாழ்வில் எக்காலமும் நித்திய விரதம் இருக்க வேண்டும். தனக்கும் பிறர்க்கும் துன்பம் அகன்று இன்பம் மலர நித்தியம் மேற்கொள்ளப்பட வேண்டிய விரதங்கள் இரண்டு உள. ஒன்று உண்மை பேசுதல், மற்றது புலால் உண்ணாமை,
உண்மையில் விளைவது இன்பம்; பொய்மையால் விளைவது துன்பம், என்றும் நிலையாக உள்ளது உண்மை; உண்மையல்லாதது பொய்மை. ஆதலால் எக்காலத்தும் உள்ளதையே நினைந்து உள்ளதையே சொல்லி உள்ளபடி,
இ9 உஉ உஉ உஉ உ9 S தம்மை மனதினாலே சிந்திக்கவு அதிட்டிக்கப்படும் குருலிங்க சங்கமம் என்னு தரிசிக்கவும், கைகளினாலே பூசிக்கவும்
கால்களினாலே வலஞ் செய்யவும், தமது டெ
காதுகளினாலே கேட்கவுமே இம்மனித சரீரத்
編。
 
 

| ======enے = Islingh
சு. செல்லத்துரை -
அதாவது உண்மையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.
உண்மை பேசி உத்தமர்களாக வாழ்ந்து, தனக்கும் பிறர்க்கும் எக்காலத்தும் இன்பம் விளைத்த மகாத்மா காந்தி, நாவலர் பெருமான் போன்றவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
கொலை செய்பவர்கள் கொடியவர்கள் ஆவர். ஆனால் நல்லவர்களும் கொலை செய்து விடு கிறார்கள்; அல்லது கொலைக்குக் காரணர்களாகி விடுகிறார்கள். அதாவது தாம் இன்புறுதற்காகத் தம் உணவுக்காகப் புலால் - ஊன் உண்ணும் பழக்கத்தால் கொலைகாரர்களாகவோ கொலைக்குக் காரணர்களாகவோ ஆகி விடுகின்றார்கள். கொல்லப்படும் உயிர்களின் துன்பத்துக்குக் காரணர்களாகி விடுகின்றார்கள். இதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ முடியாத நிலை உருவாகின்றது.
எனவே உண்மை பேசுதலும் புலால் உண்ணாமையும் நித்திய விரதமாகக் கொள்ளப்பட வேண்டும். இரண்டும் இலகுவான - உறுதி பயக்கும் - நம்மை உத்தமர்களாக்கும் அதி உயர்ந்த விரதங்களாகும். உள்ளதைத் சொல்லுதல் இலகு: அதேபோல் புலால் உண்ணாதிருத்தலும் இலகு. ஆதலால்"இன்பமே சூழ எல்லோரும் வாழ உண்மை பேசுதலையும் புலால் உண்ணா மையையும் நித்திய விரதமாகக் கொள்வோமாக.
o o o e o o o O S O S O S O S S o e o o S O S oOpe ம், நாவினாலே துதிக்கவும், :::::'; ம் மூவகைத் திருமேனியையும் கண்களினாலே கும் பிடவும், தலையினாலே வணங்கவும்
பருமையும், தமது திருவடியார் பெருமையும் தைச் சிவ பெருமான் தந்தருளினார்.
- பூஞரீலழனி ஆறுமுகநாவலர் -
LL S L SZ SS S SS S SS LLSS SL LL SLS SL SL SL SLS S S SS S SS SS SSL SSLLS S LS SLLSS SLSS SSSZ SLLSSLLS
காகினி போற்றி *
@ရှ်Ś

Page 26
பிரமாதி ஆணி G
குடமுழுக்குக் கண்ட சித்தாந்த ரத்தினம்
கோயில் என்றால் சிதம்பரம் என்று சைவர்களால் போற்றப்படுவது சிதம்பரம் தில்லை நடராசர் திருக்கோயில், இதற்குத் தென்கிழக்கில், ஞானப்பிரகாசர் குளத்தின் வடபகுதியில் அமைந்திருப்பது சேக்கிழார் கோயில், நாவலர் பெருமானின் சிந்தையில் உதித்ததென்று கூறப்படும். இக்கோயில் எண்பது ஆண்டுகளின் முன் அ வ ரி ன் உ ற வி ன ர | ன ச.பொன்னம்பலம்பிள்ளை அவர்களால் கட்டு விக்கப்பட்டது. இக்கோயில் 29.04.99 அன்று குடமுழுக்குக் கண்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது.
திருமுறைகளின் உறைவிடமாகவும் வெளிப்பாடாகவும் விளங்கிய சிதம்பரம் தில்லை நடராசர் கோயிலிற்றான் சேக்கிழாரின் பெரிய புராணமும் அரங்கேறியது. திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணச் சுவடிகள் பட்டுத்துணியால் போர்த்தி, தங்கத் தட்டில் வைத்து, யானை மீதேற்றி, தன்னுடன் சேக்கிழாரையும் அமர்த்தி ஊர்வலம் வந்து, 'தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பட்டத்தைக் கொடுத்துச் சேக்கிழாரைப் போற்றியவன்அநபாயச் சோழன். மன்னனாற் போற்றப்பட்ட சேக்கிழாரின் பெரியபுராணம் இல்லையேல் சிவனடியார் பெருமையை சைவர்கள் அறிந்திக்க மாட்டார்கள். சைமும் தன் நிலைகுன்றிப் பொலிவிழந்திருக்கும். சைவம் இன்றும் நிலைப்பதற்கு சேக்கிழார் சுவாமியே முக்கிய காரணமென்றால் அது மிகையாகாது.
சேக்கிழாரின் பெருமையை நன் குணர்ந்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் பூரீலறுநீ ஆறுமுகநாவலர் அவர்கள் (1822 - 1897). அவர் எழுதிய “பெரிய புராண வசனம்" போல் அரிய ஒரு வசன நூல் இன்னும் வெளிவரவில்லை “பெரியபுராண சூசனம்' என்ற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகள் சிவனடியாரின் வாழ்வியல் நெறிகளையும், சைவக் கொள்கையையும் தத்துவத்தையும் விளக்குவன.
மணிபூரகத்து
 
 

(3.pnfl (35myfob
க. கணேசலிங்கம்
நாயன்மாரிடத்தும் சேக்கிழாரிடத்தும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஆறுமுகநாவலர் சேக்கிழார் கோயில் அமைக்க எண்ணியதில் வியப்பில்லை. ஒரு முறை அவரின் தமையனார் பெரியபுராணத்தில் வரும் கதைகள் கட்டுக் கதைகள் என்று கூறினார் என்று சொல்லக் கேட்டு, அவரை வெட்டுவேன் என்று சீறி எழுந்தார் நாவலர். சிதம்பரம் கோயிலில் உள்ள ஸ்மார்த்தப் பிராமணர் சிலர் அங்குள்ள நாயன்மாரின் திருவுருவங்களுக்கு பூசை செய்ய மறுத்து சைவ நிந்தனை செய்தனர். இதனைக் கண்டித்துக் குரல் எழுப்பிய நாவலர், அவர்கள் போற்றும் சங்கரர் தனது செளந்தர்ய லகரி, சிவபுஜங்கம் போன்ற நூல்களில் ஞான சம்பந்தரையும், கண்ணப்பரையும், சண்டேசுரரையும் பிற நாயன்மாரையும் போற்று கையில், சங்கரரைப் போற்றும் பிராமணர்கள் நாயன்மாரை நிந்திப்பது தமது குருவாகிய சங்கரரை அவமதிப்பதாகும். என்று விளக்கினார். அவரின் அறிவுசார்ந்த விளக்கத்துடன் கூடிய கண்டனத்தில் சிதம்பரம் திருக்கோயில் சைவமரபு பிறழாது வளர்ந்துள்ளது. ஆயினும், இக்கோயிலில் அண்மையில் அமைக்கப்பட்ட, சைவத்துக்கு உடன்பாடற்ற வழிபாடு சிதம்பரம் திருக்கோயில் தன் சைவநெறியையும் வரலாற்றுப் பெருமையையும் இழந்து விடுமோவென்று அச்சம் கொள்ள வைக்கிறது.
60)3F6) நாயன்மாரிடம் கொண்ட ஈடுபாட்டினால், அவர்கள் வரலாற்றை எழுதி சைவம் வளர்த்த சேக்கிழாருக்கு கோயில் அமைக்க நாவலர் எண்ணியிருக்கலாம். அத்துடன் நாயன்மாரை நிந்திக்கும் கோயில் அர்ச்சகரின் போக்கை மாற்றுவதற்கு இக்கோயில் துணைபுரியுமென்று அவர் எண்ணியிருக்கலாம். அவர்காலத்தில் எழும்பாத கற்கோயில், அவரின்பின், இற்றைக்கு எண்பது ஆண்டுகளின் முன் கட்டப்பட்டுள்ளது. இதனைக் கட்டுவித்த ச. பொன்னம்பலம்பிள்ளை அவர்கள் சிதம்பரம் ஆறுமுகநாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை
கினி போற்றி

Page 27
பிரமாதி ஆனி
அறக்கட்டளையின் இரண்டாவது அறங்காவலராக இருந்தவர். இவ்வறக்கட்டளையின் இன்றைய அறங்காவலரான க. சுவாமிநாதன் உள்ளிட்ட திருப்பணிக்குழுவால் இன்று குடமுழுக்கு விழா எடுக்கப்பட்டுள்ளது.
ஞானப்பிரகாசர் குளத்தின் வடபகுதியில் உள்ளது சேக்கிழார் கோயில். ஞானப்பிரகாசர் குளமும் வரலாற்றுச் சிறப்புடையது. இக்குளத்தைத் தோண்டிய ஞானப்பிரசாகர் (17 ஆம் நூற்றாண்டு), நாவலருக்கு முன், யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்தவர். வடமொழியிலும் தமிழிலும் அரிய நூல்கள் எழுதியவர். சைவ சித்தாந்த நூலாகிய "சிவஞானசித்தியார்” என்ற. நூலுக்கு "அறுவர் உரை" என்ற பெயரில் பழைய சிறந்த உரைகள் உண்டு. இதில் ஒன்று ஞானப்பிரகாசர் எழுதியது.
ஞானப்பிரகாசர் காலத்தில் ஈழத்தை ஆண்ட போர்த்துக்கேயர் ஆட்சியில், அதன் யாழ்ப்பாணப் பிரதிநிதி ஒரு ஆணை பிறப்பித்தார். நாளொன்றுக்கு ஒரு பசு மாடு உணவிற்காக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கொடுக்கப்பட வேண்டுமென்று இந்த ஆணை. இக்கொடுமையை பொறுக்க முடியாத ஞானப்பிரகாசர் தனது நாள் வருவதற்கு முதல் இரவே, அரசுக்குத் தெரியாமல் ஊரைவிட்டு வெளியேறி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அங்கிருந்து சிதம்பரம் போய், தில்லைநடராசனை வணங்கி, சிவகாமி அம்மை வாசலில் பலநாள் தவமிருந்து, அம்மையின் அருள்பெற்று, வடநாடு சென்று வடமொழி
C3 LDC3 Guor
உடுத்தலால் நீராடார் உடுத்த ஆடை நீருள் ஒன்றுடுத்து என்றும் முந்தையோர் கண்ட உடை சுற்றிக் கொண்டு அல்லால் நீராட மா மாட்டார்கள். இடுப்பில் கட்டிய ஆடையைக் குளி பெருமைக்குரிய சான்றோர் கற்றவர் கூடிய சபைக்குள் முறைகள் இவையாகும். இடுப்பில் துணியின்றி நீராட6 உடுத்திய ஆடையை அவிழ்த்துக் குளிக்கும் நீரில் ச புகுதல் தீது என்பது கருத்து.
o e o a o o o o o o o e o O 6 is a o o o o o o o o O O. o o
 

பயின்று, வேதாகம நூல்களைப் படித்தார். இவரால் தோண்டப்பட்டதே சிதம்பரத்திலுள்ள ஞானப்பிரகாசர் குளம். இந்தக் குளத்தின் முன்பிருக்கும் ஞானப்பிரகாசர் வீதியில் அமைந் திருக்கும் சேக்கிழார் கோயிலில் ஞானப்பிரகாச சுவாமிகளின் திருவுருவம் அமைந்திருப்பது பொருத்த முடையதே. இக்கோயிலின் மகாமண்டபத்தில் விநாயகர், பாலசுப்பிரமணியர், திருமூலநாதர், ஞானப்பிரகாசர், ஆறுமுகநாவலர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.
நாவலர் பெருமானின் அழகிய ஐம்பொன் சிலையொன்றும் உள்ளது. இது போன்ற எழில் வடிவத்தை அவர் பிறந்த ஈழத்திலும் காணமுடியாது. நாவலரின் குருபூசை நாளன்று சேக்கிழார் கோயிலிலிருந்து இச்சிலை ஊர்வலமாக நாவலர் பாடசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அங்கே ஒதுவார்களின் திருமுறைப்பாடல்களுடன் பூசை நடைபெறும். பாடசாலை மாணவர்களின் பேச்சு, பாட்டுப் போட்டிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். இன்று சைவ மக்கள் பலர் தமது சமயக் கொள்கை எது, தத்துவம் என்ன என்று அறியாத நிலையில் குழம்புகின்றனர். அன்னிய, அயல் வழக்குகளைப் பின்பற்றுகின்றனர். இந்த நிலை போக்கி, சைவம் தழைப்பதற்கு சேக்கிழார் கோயிலும் அதனைப் பேணும் நாவலர் பெயரால் அமைந்த அறக்கட்டளையும் பெரிதும் துணை புரியுமென நம்பலாம். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் ஒரு சமயப் பாலமாக விளங்கும்
ார் பண்பு
ஒன்றுடுத்து உண்ணார் பிழியார் விழுத்தக்கார் அவை புகார் என்பதே
முறை. ட்டார்கள். ஒற்றை ஆடையோடு உணவு உட்கொள்ள க்கும் நீரிலேயே பிழியமாட்டார்கள். ஒர் ஆடையுடன் நுழையமாட்டார்கள். நம் முன்னோர்கள் கண்ட மேலான b, இடுப்பில், மேலும் ஆடையில்லாமல் உணவு உண்ணல், சக்கிப் பிழிதல், மேலாடை இல்லாமல் மேலோர் அவை
நன்றி ஆசாரக் கோவை
ராகினி போற்றி *

Page 28
- முருகவே ட
நாவகாரியம் - நாவினாற் செய்யும் கருமம், செயல், வினை, தொழில், தொழிற்பாடு, வேலை எனப் பொருள் கொள்ளலாம்.
Fர் அறிவில் இருந்து ஆறறிவுவரை அமைந்த உயிர்க் கூட்டங்கள் நாவினால் பெறும் (சுவை), ரச உணர்வுடையன. ரச உணர்வு நாக்கோடு தொடர்புடையது. இந்த நாக்கு எல்லா உயிர் இனங்கட்கும் பொது பகுத்தறிவுக்குச் சிறப்பு. பகுத்தறிவுடையவன் மனிதன். இது நன்று, இது தீது என அறிந்து செயற்படுவான். இவ்வறிவு இயற் கையாய் அமைந்த பிறப்பு மனிதம். இவனை அறிவுஜீவி, புத்திஜிவி என இன்றைய விஞ்ஞானம் பேசுகிறது. பகுத்தறிவு இயக்கம் சமூதாயத்தின் மூடநம்பிக்கைகளை, கலையுரைத்த கற்பனையை, பொருந்தாத போக்குகளை, வேண்டாப் பழைமைகளை உடைத் தெறிந்து விட்டது. இப்பகுத்தறிவு வாதம் ஒரு இசம் தான். இந்நிலையிலே அறிவு பூர்வமான, புத்தி பூர்வமான வாழ்வியலை நமக்களித்து புதுமை நெறி நம்மைச் சிந்திக்கவும் செயற்படவும், வைத்து நல்ல பயன்மிகு அறுவடைகளையும் தந்துள்ளது. இயல் பறிவுடன் கல்வி, கேள்வி, அனுபவம், யுக்தி போன்ற அனுபவத்தால் வரும் துன்னறிவும், நுண்ணறிவும் சேர்ந்து எதையும் பகுத்துப் பார்க்கும் விவேக நிலையையும் தந்துளது. இந்த அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற கருதுகோளை அளித்தவன் வள்ளுவன். நூற்று முப்பத்து மூன்று அதிகார அமைப்பில் அறிவுடைமையும் ஒன்று அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரன் அற்றங்காக்கும் கருவி இறுதிவர7மற்காக்கும் கருவி அற்றம் அவமானம் மெலிவு சென்ற இடத்தாற் செலவிடாதி தொரீஇ நன்றின்பாலுய்ப்பதறிவு ஒருவுக - விடுக, ஒருவுதல் -ஒழிதல், ஒரும் -ஒழியும் ஒரீஇ - நீக்கி விட்டு அறிவுடையார் எல்லாமுடையார் அறிவிலார் என்னுடைய ரேனுமிலர்
திருக்குறள் 421, 422, 430
குங்கும சந்தன நுத
 
 

Tífi Jrð
ரமநாதன் -
அறிவுடைமைக்கு முன்அமைந்த கல்வி கல்லாமை, கேள்வி என்ற அதிகாரங்களை அறிவுடைமையுடன் ஒப்பீடு செய்து படிப்பர் பயன் பெறுவர் மேலோர்
கற்றிலனாயினுங் கேட்க என்பது குறளின்குரல்
இந்நிலையிலே நாக்கு எல்லா உயிர்க்கும் பொது வெனினும் மனிதப் பிறப்புக்குச் சிறப்பானது, செவ்வியானது, பிரத்தியேகமானது, அமோக பயன்தருவது. ஆனால் அது ஒரு ஆயுதம் எனினும் நாவெனும் வாளை அடக்கிப் பாவித்தல் முக்கியம், வாளினால் நன்மையும் செய்யலாம். தீமையும் விளையலாம். எனவே நாவடக்கம், நாநயம், நாணயம் பெரிதும் முக்கியம். இவைதவறியோரை எவரும் மதியார் ஆக நா ஒரு பெறுமானமுள்ள, மதிப்புடைய கருவி. மொழியோடு தொடர்புடைய பேச்சு நாவினால் அமையும். செந்தமிழும் நாப் பழக்கம் என்றார் ஒளவையார். கருத்தை வெளிப்படுத்துவது நாக்கு. எம்மொழியும் நாக்கினால் வெளிப்படும். பேச்சு, பாட்டு, இசை, குரல், ஒசை, சப்தம், ஒலி எல்லாம் நாவின் செயற்பாடு. உண்ண, கதைக்க நா வேண்டும். நன்மையும் தீமையும் நாவால் வரும். ஸப்தசுரங்கள் சங்கீதமாகக் காற்றில் மிதக்க நாக்கு வேண்டும். அறுசுவைகளை அனுபவிப்பதும் நாக்கே. பேச முடியாதவன் ஊமை, மூங்கை, பெருஞ் சொற் கொண்டல்கள் நாவளம் மிக்கவர்கள். எனவே சங்கீத மேதைகள் இசை வல்லார்கள், சொற்பொழிவாளர்கள். நாடக நடிகை மேதைகள் சினிமாப் புகழ்மிக்க நடிகவேள்கள் நாவிலே நடப்பவர்கள். அருணகிரியார் நா மேல் நடவீர் நடவீர் என்றார். எந்தைபுகலூர் பாடுமின் என்றார் சுந்தரர் ஆக நாவின் நலமிகு, நனிமிகு தன்மைகளை ஒவ்வொருவரும் கவனிப்பதும் சாலப் பொருத்தமே. நாக்கை வெகு சாதுரியமாய்ப் பிரயோகிக்க வேண்டும். நாக்குச் சுத்தம் நமக்கு நற்பயன் தரும். நாவசைய நாடசையும் என்பர். நேர்மை, நம்பிக்கை, நாணயம், நாவின் பயன்கள்

Page 29
நயன்கள் நாக்கை இடமறிந்து பிரயோகிக்க வேண்டும் ஒளவை இன் சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன் சொலால் என்றும் மகிழாதே என்றாள். குயிலின் குரல் இதமானது. கழுதை கத்தினால் அகிதமானது. எனவே இன் சொல், வன் சொல் பற்றியும் நா நலம் பற்றியும் வள்ளுவர் என்ன பேசினார்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
இன்சொலால் ஈரம் அளை இப் படிறிலவாம் செம் பொருள் கண்டார்வாய்ச் சொல்
ஈரம் - அன்பு படிறு - வஞ்சனை நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைப் பிரியாச் சொல். தலைப்பிரியாச் சொல்-இனிமைப் பண்பின் நீங்காச் சொல்.
திருக்குறள் 101; 91; 97 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
திருக்குறள் 127 சோகாப்பர் - சொற்குற்றத்தின்கட்பட்டு தாமே துன்புறுவர் நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்துள்ளது உம் அன்று கொல்லா நலத்தது மேன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு தியினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு ஆறிப் போதலால் தீயினாற் சுட்டதனைப் புண் என்றும் ஆறாது கிடத்தலால் நாவினாற் சுட்ட வடு என்றுங் கூறினார். - பரிமேலழகர்.
திருக்குறள் 941, 984, 129. ஊமைக் காயங்கள் ஆறாதது போல மனம் புண்படப் பேசும் காயங்கள் ஒத்தடமின்றி உயிர் உள்ளவரை அராப்திக் கொண்டே இருப்பதைக் கடைசிக் குறள் சுட்டிநிற்கிறது. எனவே பிறர் மனம் புண்பட நாம் நடக்கக் கூடாதென்பதும் வெளிப்படை எல்லாம் நாக்கிலே தங்கியுள்ளன.
உள்ளத்தோடு நீங்காத் தொடர்புடையது நாக்கு. எனவே உள்ளமும் நாக்கும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும். இதையே

பாரதி உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றார். உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் இனிமையும் காட்டும் வஞ்சகரின் சேர்க்கையிற் கவனமாய் இருத்தல் அவசியம். உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டு மென்றார் வள்ளலார். போலிகளாம் வெள்ளை வேட்டிக் கள்ளரை நம்பி மோசம் போகவும் கூடாது. இந்நா உலகியலுக்கு மட்டும் உபகாரியாய் இருப்பது போன்று பாபகாரியம் செய்யாமல் தேவ காரியம் செய்து ஆத்ம ஈடேற்றம் பெறவும் பயன்தர வேண்டும். இறை நாமத்தை, இறை புகழை, பேசிப் பேசி நாத்தழும் பேற வேண்டுமென ஆழ்வார்களும் நாயன்மார்களும் விண்டுரைத்தனர்.
நாவின் சுவை செவிவழி நுகர் கனியாக்கிய பேராளர்களின் திருவாக்குகளாம் திருமுறைகளும், திவ்யப் பிரபந்தமும் சார்ந்த வெவ்வேறு அருளிச் செயல்களும் எழுந்ததும் இந்நாவிலே தான். எனவே நாவகாரியம் சொன்ன பாசுரம் வருமாறு: மனம் வாக்குக் காயம் கொண்டு திருமாலைத் கொண்டாடுபவரையும் அனுபவியாதவரையும் ஒப்பீடு செய்து பேசுகிறது திருமொழி
நாவ காரியம் சொல்லிலாதவர்
நாபொனும் விருந் தோம்பு வார் தேவ காரியம் செய்து வேதம்
பயின்று வாழ்திருக் கோட்டியூர், மூவர் காரியமும்திருத்தும்
முதல்வனைச் சிந்தியாத அம் பாவகாரிகளைப் படைத்தவன்
எங்ஙனம் படைத்தான் கொலோ,
திருநாலாயிரம் 360
இம்மனித சரீரம் பெறுதற்கு அரியதாதலாலும், இது இக்கணம் இருக்கும் இக்கணம் நீங்கும் என்று அறிதற்கு அரிதாகிய நிலையாமை யையுடைய தாதலாலும் நாம்
இடையறாது எக்காலமும் சிவபெரு மானிடத்தில் அன்பு செய்தல் வேண்டும்.
- பூனிலழறீ ஆறுமுகநாவலர் -
கன்னியே போற்றி

Page 30
(2.
திருவாசகச் சிந்தனை
860 6)6O.
- பண்டிதர் சி.
இப்பதிகத்துள்ள பாடல்கள் எல்லாம் அன்னே என்னும் விளியை ஏற்றுள்ளமையால் இப்பகுதி அன்னைப்பத்து என்னும் பெயர் பெற்றது. தலைவி பற்றிய செய்திகளைத் தோழி, செவிலிக்குச் கூறுவது போன்றமைந்தது இப்பகுதி. செவிலி - வளர்ப்யுத்தாய். அன்னே என்று குறிப்பிடப்பட்டுள்ள விளிகள் தலைவியால் தோழியை விளிக்கப்பட்டவை. தலைவி தோழியை அன்னே என விளித்துக் கூறினாள். அச் செய்திகளைத் தோழி செவிலியிடந் தந்தாள். அவ்வண்ணஞ் சொல்லப்பட்டவை என்னும் என்ற சொல் கொண்டு உறுதிப்படுத்தப்படுகின்றது. “வேதமொழியர் வெண்ணிற்றர் செம்மேனியர் நாதப்பறையினர் அன்னே, என்றுஞ் சொல்லுவாள்' என்பது கொண்டு - என்று பொருள் பெறப்படும் முறைமை கொண்டு, செய்தியைத் தோழி செவிலிக்குச் சொல்வதாக அறியமுடிகின்றது. தலைவி தோழியை அன்னாய் என்று அழைப்பதை வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளும்.
ஆன்மா சிவனுடன் நிறைந்து நிற்றல் என்று பொருள் தரும் ஆத்துமயூரனம் என்னுந் தொடரை, இப்பதிகத் திரண்ட பொருட் பேறெனத் திருவாசக உட்கிடை குறிப்பிடும். கலி விருத்தம் என்னும் பாவினவகையால் அமைந்த பத்துத் திருப் பாடல்களைக் கொண்டது இத்திருப்பதிகம். இது தில்லையில் அருளப்பட்டது என்பர்.
இத்திருப்பதிகத்துக் குறிப்பிடப்பட்டுள்ளவை : 1. வேதங்களை மொழியாக உடையவர்; திருநீற்றினை அணிந்தவர். செம்மையான திருமேனியை உடையவர்; நாதமாகிய பறையை உடையவர் என்று உன் மகள் சொல்வாள், அவன் நான்முகனுக்கும் மாலுக்குந் தலைவன் என்றுஞ் சொல்லுகிறாள்.
மைதீட்டப் பெற்ற கண்ணை உடையவர், கருணைக் கடலானவர்; உள்ளத்தே நின்று உருக்குபவர் என்று உன் மகள் சொல்வாள்.
* சொற்பதங் கடந்த பூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பத்து அப்புத்துரை -
உள்ளத்தினின்றும் உருக்கி அளவற்ற ஆனந்தத்தைத் தருபவன் என்றுஞ் சொல்லுகிறாள். 3. என்றும் மணவாளக் கோலமுடையவர்; நிரம்பிய அழகுடையவர்; என் மனதில் எப்போதும் இருப்பவர் என்று உன் மகள் சொல்வாள். என் சித்தத்து இருக்கின்ற அவர் தென்னா ட்டிலுள்ள பெருந்துறைக் கடவுள், ஆனந்த வடிவினர் என்றுஞ் சொல்லுகிறாள். 4. ஆடும் பாம்பை ஆபரணமாகவும் புலித்தோலை உடையாகவும் உடையவராகி உடம்பெங்கும் திருநீறணிந்து அவர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே என்பாள் உன்மகள் . அந்த வேடத்தைப் பார்த்துப் பார்த்து என் மனம்வாடும். இது ஏன் என்றுங் கேட்கின்றாள். 5. நீண்ட கையை உடையவர்; சுருண்ட சடா பாரத்தையுடையவர்; பாண்டி நாட்டை யுடையவர் என்று உன் மகள் சொல்வாள். பாண்டிநாட்டையுடைய அவர் விரிந்து செல்கின்ற விரிந்து பரந்து செல்கின்ற என் மனத்தைக் கட்டுப்படுத்தி அருளுகின்றார் என்றுஞ் சொல்லுகின்றாள். , 6 நினைத்தற்கரிய சிறப்புக்களைப் பொருந்திய திருவுத்தரகோச மங்கையை உடையவன் என் நெஞ்சில் உறைபவர் என்று உன் மகள் சொல்வாள்; திருமால், அயன் என்போராற் கண்டு கொள்ளப்படாத அவர் என் நெஞ்சில் நிலைபெற்று இருக்கின்றார் என்றும் கூறுகின்றாள். 7. வெள்ளை ஆடையை உடையவர். வெள்ளிய நீறணிந்த நெற்றியை உடையவர்; அறச் சாலைக்குரிய சட்டையை அணிந்தவர். என்று உன் மகள் கூறுவாள். அறச் சாலைக்குரிய சட்டையை அணிந்த அவர் பாய்ந்து செல்லுங் குதிரைமேல் வந்து என்
உள்ளங்கவர்வர் என்றுஞ் சொல்லுகின்றாள். ந்துகிலாப் போற்றி

Page 31
பிரமாதி ஆனி
8. அறுகம்புல் மாலையை அணிந்தவர்; சந்தனக் கலவையைப் பூசியவர்; அடிமையாக எங்களை ஆண்டருள் புரிபவர் என்று உன்மகள் கூறுவாள்; அடிமையாக எங்களை ஆண்டரு ளுகின்ற தலைவர் கையில் தாளம் இருந்த விதம் என்னே! என்றுங் கூறுகின்றாள். 9. மாதொரு பாகன் ஆனவர்; தவவேடத்தை உடையவர்; பிச்சை ஏற்பார் என்று உன் மகள் சொல்வாள். பிச்சை எடுத்துக் கொண்டு தெருவிற் போகும் போது என் மனம் வருந்தும், இது என்ன காரணத்தாலோ என்றுங் கேட்கின்றாள்.
LSS SYS S SLSLS SY SS S SSLSS SY SLLLS SS SS SSL SSLLS S SSLSSSL S SSLSLS SSLSSSLSSSLS S SSS SSS SS SS SS SSL SSSSSSSYSS SSSSS SSS
================
ஆடி 01 - 17.07.99 சனி
8.00
02 - 18.07.99 | ஞாயிறு குமா 04 - 20.07.99 செவ்வாய் ஆடி 05 - 21.07.99 புதன் சுந்த 08 - 24.07.99 i g: Gof 夺重Jā
09 - 25.07.99 ஞாயிறு பிர:ே
11 - 27.07.99 செவ்வாய் ஆடி 12 - 28.07.99 புதன் பூரை 16 - 01.08.99 ஞாயிறு சங்க 18 - 03.08.99 செவ்வாய் ஆடி 20 - 05.08.99 வியாழன் கார்த்
22 - 0.7.08.99 i gr 60f ஏகாதி 23 - 08.08.99 ஞாயிறு கூற்ற 24 - 09.08.99 திங்கள் பிரே 25 - 10.08.99 செவ்வாய் ஆடி 26 - 11.08.99 புதன் 28 - 13.08.99 வெள்ளி ஆடி 30 - 15.08.99 ஞாயிறு ᏰᏏᏁᏰ5Ᏸ 31 - 16.08.99 திங்கள் கருட 32 - 17.08.99 செவ்வாய் ஷஷ்
 

10. கொன்றை மலரும் மதியும், வில்வத்தொடு ஊமத்தமும் பொருந்திய சடாமுடியை உடையவர் என்று உன் மகள் சொல்லுவாள். சென்னியிற் பொருந்திய சடையில் உள்ள ஊமத்த மலர் இப்பொழுது எனக்கு ஒரு பித்தை உண்டு
பண்ணியவாறு எப்படி என்றுங் கேட்கின்றாள். நெறிதரு குஞ்சி - சுருளுதலையுடைய மயிர் வெண்டிரு முண்டத்தர் - வெள்ளிய நீறணிந்த
நெற்றியை உடையவர்.
பள்ளிக்குப் பாயத்தர் - அறச் சாலை க் குப் பெ ா ரு த் த மா ன
உடையை உடையவர். தாளி அறுகு - கணுக்களிற்கிளைக்கும்
ஒருவகை அறுகம்புல்
@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @
==================
கொள்வதற்கு
ப் பிறப்பு, தகூஷிணாயன புண்ணிய காலம் காலை
மணிவரை ஸ்கந்தபஞ்சமி
ரஷஷ்டி விரதம்
ச் செவ்வாய்
ரமூர்த்தி குருபூசை, சேரமான் பெருமாள் குருபூசை
ஏகாதசி விரதம், சதுர் மாஸ்ய விரதாரம்பம், கலியர், கோட்புலியர் குருபூசை
நாஷ விரதம்
ச் செவ்வாய், பட்டினத்தடிகள் குருபூசை ண விரதம், வியாச பூஜை
ட ஹர சதுர்த்தி விரதம்
ச் செவ்வாய் திகை விரதம், மூர்த்தியார் குருபூசை, புகழ்ச்சோழர் குருபூசை
சி விரதம்
ரவர் குருபூசை
ாஷ விரதம்
ச் செவ்வாய்
அமாவாசை விரதம்
ப்யூரம்
துர்த்தி விரதம் பஞ்சமி விரதம், பெருமிழலைக் குறும்பர் குருபூசை டி விரதம், ஆடிச் செவ்வாய், விஷ்னுபதி புண்ணிய
காலம் பகல் 12.58 முதல் மாலை 722 வரை
==================

Page 32
வவுனியா - சாஸ்தி SILJb TGULõLI
- செ. பத்ம திருப்பணிச் சை
இச் ម៉ាតា លាយយ៉ា
சி வ பெ ரும  ைன க் இறைவனது பெயர் சிவபுர சுந்த ரே ஸ்வரர் பெயர் சிவபுரசுந்தரேஸ்வரி ஆலயம் வவுனியா வடமேற்குத் திசையில் ஐந்து தொலைவில் இரணை - வவுனியா பிரதான வீதியில் கூழாங்குளம் கிராமத்தில் புதுக்குளம் L|TL BET606) | அண்மையில் உள்ளது. ஆலயம் அமைந்துள்ள இடம் 8 போல உள்ளது. பாடசாலை விளையாட்ரங்கு, உயதாற் பாடசாலை போன்ற நிறுவனங்கள் ஆலயத்தைச் சூழ இடமாக விளங்குகிறது. எந்நேரமும் மக்கள் ஆலயத்து இவ் ஆலயம் ஆரம்பத்தில் ஒர் சிறிய வைக்ே மூர்த்தங்களான பிள்ளையார், சுப்பிரமணியர், நவக்கிரக உள்ள ஆலயமாகத் திகழ்கின்றது. நித்திய பூசை ந பூசைகள். உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
சிவபுரம் சிவாலயம் 1975 ஆம் வருடம் தொடக்க நிர்மாணிக்கப்பட்டு தற்போது பிரமாதி ஆனி மாதத்தி சபையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த ஆலய மூலவர் சிவலிங்கப் பெருமான். மிச இராசாக்களால் மடத்து விளாங்குளம் எனும் இடத் கர்ணபரம்பரையான கதைகள் உண்டு. வன்னி இராச் சிவன் கோவில்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள்
அக்காலப் பகுதியில் மடத்து விளாங்குளம் ! கற்கட்டிடங்கள் அரண்மனைகள் குறிப்பிட்ட பிரதேசத் அங்குதான் இந்தச் சிவலிங்கம் கோவிற் குஞ்சுக்குளம் முடியாது மீண்டும் காட்டுக்குள் போட்டு விட்டார்கள். இச்சரித்திரங்களை பெரியார்கள் வாயிலாக அ சிவலிங்கத்தைப் பயபக்தியுடன் எடுத்துவந்து விதிமு5
நன்,
 
 
 
 

ரி கூளாங்குளம்
றிய சில தகவல்கள் ܝܘܬ
நாதன்
த் தலைவர்
மூலமூர்த்தியாகச் கொண்டுள்ளது.
இ  ைற வி யி ன் ஆகும். ந க ரி ன்  ைம ல் ( 5 ) இலுப்பைக் குளம் ச ரி ஸ் த் தி ரி இருக்கின்றது. ஆ ல ய த் தி ன் கிராம விஸ்தரிப்புக் காரணமாக ஒர் சிறிய பட்டணம் கந்தோர், கூட்டுறவுச் சங்கம் சுந்தரேஸ்வரி பாலர் உள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள நுக்கு சென்று வழிபடுவார்கள். கோல் கொட்டிலில் தொடங்கி தற்போது பரிவார கம், வைரவர், நந்தி, பலிபீடம் போன்ற சகல அம்சமும் ாளாந்தம் நடைபெறுவதுடன் விசேட நைமித்திய
நம் சிற்ப சாஸ்த்திர விதிப்படி சிற்பாசாரிமார்களால் ல் மகா கும்பாபிஷேகம் செய்வதற்குத் திருப்பணிச்
ப் பழைமையான காலத்தில் வன்னியை அரசாண்ட தில் பிரதிட்டை செய்து வழிபட்டதாக செவி வழி சியங்கள் சீரும் சிறப்புமாக இருந்த காலத்தில் பல p_TTT.
சிறப்புற்று இருந்துள்ளது. அதற்கான தடயங்கள் தில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருக்கின்றன. மக்களால் கண்டு எடுக்கப்பட்டு ஆலயம் அமைக்க
|றிந்த சாஸ்த்திரி கூழாம்குளம் பகுதி மக்கள் அச் றப்படி ஆலயம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
57
|rgian Gu unriეხენ] + .

Page 33
தலவிருட்சத்துடன்
 
 

றிக் கல்லும், கருடன் கல்லும்
琴リ
2க்குக் கோபுரத் தோற்றம்

Page 34
ᏑᎧᏑ6
| SALVAN
கும்பாபிஷேகத்தின் முன் ஆலய இரு கோபுரங்களினதும்
தோற்றம்
-9), Goulu தென் கோபுரத் தோற்றம்
Regd. No. QD/37/ News 99.95.65gg 6036), S5
என்னும் முகவரியிலுள்ள யுனி ஆர்ட்ஸ் இ
 
 
 
 
 
 

நிறுவனத்தினரால் 48B, புளூமெண்டோல் வீதி, கொழும்பு 13 ல் அச்சிட்டு 1999 06, 14 இல் வெளியிடப்பட்டது.