கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1998.08

Page 1
ulti, Ircւgւն է սlt; * : It is tքնutiմ մՍ Լոl նthi à tք (ԼեԹմign
 
 

1. - Golf Lafi í GJITË gử BÈH IT Í GÜ
| tr ti-nյն կ Լոնuir
__

Page 2
பொருளடக்கம் :
1. வினை
2. கொழும்பு கொம்பனித்தெரு அருள் மிகு சிவ
கொடிக்கவி பாடிக் கொடி ஏற்றியது
ஏனாதி நாத நாயனார்
கும்பிட்டோர்க்கு விடுதலை
திருவாசகச் சிந்தனை : திருஅம்மானை வாழ்க்கையிற் சைவநிதி
திருவிளையாடற்புராணம் : தடாதகைப் பி
9. அறநெறி : புலால் மறுத்தல்
10. தமிழரும் முருக வழிபாடும்
11. மாதிரி வினாத்தாள் - 2 ஆண்டு 10.
ர் அனுசரணை
இச்சிறப்பு மல 3.
ganrif, Gg, mra
3. திரு. S. goguna
4 திரு. சி. மயூரன் அ
இந்த இதழில் வெளிவரும் கட்டுரைகளிலுள்ள பொறுப்பாளிகளாவர்.
 
 
 
 
 
 

நீதி
ஆசிரியர் I
பசுப்பிரமணிய சுவாமி கோயில் பண்டிதர் சி. அப்புத்துரை 2
வித்துவான் வ. செல்லையா
சிவ சண்முகவடிவேல் 3.
முருக வே. பரமநாதன் I
பண்டிதர் சி. அப்புத்துரை
வே. தனபாலசிங்கம் 3.
UITL q-AUTsj
கூடலான் 20
செ. நவநீதகுமார் 23 திருமதி ஞானேஸ்வரி சோமசுந்தரம் 25
மாதினி
ா கருத்துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர்களே
-நிர்வாகம்

Page 3
சிவ "மேன்மைகொள் சைவரீத
3DF
மலர் 2 வெகுதானிய ஆவணி சைவசமய வள
கெளரவ ஆசிரியர் சைவப்புலவர்மணி வித்துவான் திரு. வ. செல்லையா
நிர்வாக ஆசிரியர் திரு.செ. நவநீதகுமார்
42. ஜானகி லேன், கொழும்பு 04
எமக்கு அன்றாடம் ப6 துயருறுகின்றோம். இவற்று காரணம். "முற்பகல் செய் இருந்தாலும் செய்வினை செய்யப்படுகின்ற வினை என்பதொன்றுண்டு. வினை சேர்ப்பிப்பதற்கு ஒருவனும் ( கூறுகின்றது.
"செய்வினையும் செt
உய்வகையால் வகுத்
தபோபலம் மிக்கமுை கணத்தவர் சுவர்க்கத்திலு ஓரிடத்தில் மலைத் தொடர் முனிவர் வினாவினார். யாசகனெருவன் வந்தான். உ வண்ணம் நீர் அவன் பாத்தி சோற்றுடன் அக்கல்லையும் இதை நீர் உண்டு அவ்வினை சொடியாக்கிச் சிறிது சிறித தீர்த்தார். அம்முனிவர் சில பொடியாக்குதல்)
ஆதலால் நாம் செய் முன் செய்தவினை தாமே
 

9.
ILDLJIh
விளங்குக உலகமெல்லாம்
வாரீதி
ர்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 5
0 துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படுகின்றன. துன்பங்களாற் க்குக் காரணமென்ன? நாம் செய்த வினை தான் இதற்குக் யின் பிற்பகல் விளையும்” என்பது முதுமொழி, யாராக Tப் பயனை அனுபவித்துத் தான் தீரவேண்டும். என்று ஒன்றுண்டு. அவ்வினைக்குப் பயன் ாயைச் செய்கின்ற ஒருவனும் வினையை அவன் மாட்டுச் அவன் தான் இறைவன்) உண்டென்று பெரிய புராணம்
ப்வானு மதன்பயனும் சேர்ப்பானும்
த பொருள் நான்காகு மெனக் கொண்டோ'
ரிவர் ஒருவர் சுவர்க்கத்திற்குச் சென்றார். அங்குள்ள ஸ்ளவற்றை யெல்லாம் முனிவருக்குக் காட்டி வந்தனர். ஒன்று வளரக் கண்டு அம்மலை பற்றிக் கணத்தவரிடம் நீர் சிறுவனாக இருக்கும் பொழுது உமது வீட்டிற்கு உமது தாயார் அவனுக்குச் சோறு போட்டார். அவன் அறியா ரத்திற் சிறுகல் ஒன்று போட்டீர். அவன் அதை அறியாது உட் கொண்டான். அக்கல் இம்மலையாக வளருகிறது. யை நீக்க வேண்டும் என்றனர். முனிவரும் அம்மலையைப் ாகக் கரைத்தும் குடித்துத் தம்வினையை அனுபவித்துத் ாதலர் எனப் பெயர் பெற்றார். (சிலை, மலை அதலம் -
த வினையை நாமே அனுபவிக்க வேண்டும். "தாந்தாம் அனுபவிப்பர் என்பது ஒளவையார் வாக்கு

Page 4
கொழும்பு கெ
அருள் மிகு சிவசுப்பிற
பண்டிதர் சி.
தோற்றம்:
புறக்கோட்டை டாம் வீதியுலுள்ள சைவப் பெரியார் பெரியதம்பி அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிற் திருமுருக வழிபாடு நடைபெற்று வந்தது. 1830 ஆம் ஆண்டிற்கு முன் பின்னாக இந்த வழிபாட்டு முயற்சி ஆரம்பமாகி இருக்கலாம். நாளுக்கு நாள் இந்த வழிபாட்டிற் தொடர்பு கொள்வோர் தொகை பெருகியது. அதனால் ஆலய அமைப்பிலும் பெருக்கம் காணப்பட்டது. சைவப் பெரியார் அருணாசலம் பொன்னம்பல முதலியார் அவர்களுக்கும் இந்த வழிபாட்டில் ஈடுபாடு உண்டாயிற்று. 1932 வரையில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியப் பெருமான் மூர்த்தம் ஸ்தாபிதமாயது. இந்த நிலையிற் கோயிற் பரிபாலனம் முதலியார் அவர்களைச் சார்ந்தது. வீதிப் பெருக்கம், வேறு தேவை, நோக்கமாக அந்த நிலம் அரசினருக்குத் தேவைப்பட்டது. அதனாற் கோயிலமைப்பிற்கு நல்லதோர் இடத்தைக் கண்டு கொள்ளுமாறு GLIII 6öT60TLhLj6) முதலியார் கேட்கப்பட்டார். நிலத்திற்கான பெறுமதியும் அன்றைய அரசியலாளராற் கொடுக்கப்பட்ட தென்பதொரு தகவலும் உண்டு. பணிப்பை ஏற்றுக் கொண்ட முதலியாரவர்கள் வழிபாட்டிடத்தைக் கொம்பணித் தெரு கியூறோட்டிலுள்ள நிலத்திற்கு மாற்றினார்கள். இந்த மாற்றம் நிகழ்ந்த காலம் 1867 ஆகலாம். ஆரம்பத்தில் அங்கே சிறியதொரு கோயில் அமைக்கப்பட்டது. காலத்திற்குக் காலம் விரிவாகிய ஆலயம் 1887 இல் பூரீ கதிரேசன் கோயில் எனவும் பெயர் பெற்றது.
வளர்ச்சியும் கும்பாபிஷேகங்களும்
1900 ஆம் ஆண்டளவிற் கோயில் நிர்வாகம் சேர் பொன். இராமநாதன் அவர்களைச் சார்ந்தது. இரண்டு ஆண்டுகளில் சுவாமி பாலஸ்தாபனமாகித் திருப்பணி வேலை தொடர்ந்தது. 1902 இல் முதலாவது மகா கும்பாபிஷேகம் சேர் பொன். இராமநாதன்
 

ாம்பனித்தெரு 60fL G6) Ind GömussisÖ
அப்புத்துரை
பரிபாலனத்தில் நடைபெற்றது. ஆலயமும் கொம்பனித் தெரு ஹி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என நாமகரணஞ் செய்யப்பட்டது.
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் வடிவு பெற்று வந்த கலியுக வரதன் கந்தப் பெருமானின் அருட்டிறம் பெருக்கமாவதை மக்கள் உணர்ந்தனர். அதனால் வழிபடும் மக்கள் கூட்டமும் பெருகிக் கொண்டிருந்தது. இரண்டாவது முறையாக ஆலயம் புனரமைக்கப்பட வேண்டிய நிலை வந்தது. பாலஸ்தாபனஞ் செய்து புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தன. 1975.03.31இல் அனுஷ நட்சத்திரத்தில் சைவப் பெரியார் வே. கனகசபை அவர்களைத் தலைவராகவும் சைவப் பெரியார் க. தியாகராசா அவர்களைச் செயலாளராகவும் கொண்ட பரிபாலன அனுசரணையுடன் இரண்டாவது மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுளது. இந்தக் கும்பாபிஷேக நிகழ்வு பிரதிஷ்டா பூஷணம் நயினை சிவபூரீ ஐ கைலாயநாதக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் நிறைவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இராஜகோபுர வேலைகள் நடைபெற்றன. கட்டிடப் புனரமைப்பு வேலைகளும் தொடர்ந்தன. அனைத்தும் நிறைவாகி 1993.03.29 இல் ரோகிணி நட்சத்திரத்தில் சம்பு ரோட்சணமகா கும்பாபிஷேகம் வேதாகமக் கிரியா சூடாமணி நவாலி சிவபூரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் நிறைவு செய்யப்பட்டது.
ஆலயத்தின் இன்றைய அமைவு:
மேற்குப் புறத்தமைந்த வாயிலைப் பிரதான வாயிலாகக் கொண்டது இந்த ஆலயம். கியூ றோட் ஆலயத்தின் மேற்குப் புறத்தில் வடக்குத் தெற்காகச் செல்வதே இதற்குரிய காரணமாகும். ஆலயத்தின் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வடக்குத் தெற்காக நீண்டிருப்பது இதற்கான ஒரு காரணமாகலாம். கர்ப்பக்கிருகம் அர்த்த மண்டம், மகா மண்டபம், தம்ப மண்டபம் என்னும் நான்கு

Page 5
மண்டபங்களையும் ஒரு சுற்றுப் பிரகாரத்தையும் உடையது இந்த ஆலயம். அருள்மிகு முருகன் அருட்பிரகாசம் கர்ப்பக்கிருகத்தில் வீசுவது கண்கொள்ளாக் காட்சி. கர்பக்கிருகத்திருந்து வெளியே வந்து கொண்டிருக்கும் போது மகாமண்டபத்தில் நுழையும் வாயிலின் வலது புறம் தெட்சணாமூர்த்தி சிவலிங்கம் எனும் மூர்த்தங்களது சிறிய சந்நிதிகளையும் இடதுபுறம் அம்பாள் முருகன் எனும் மூர்த்தங்களையும் தெற்கு நோக்கியனவாகப் பார்க்க முடியும். மகா மண்டபத்தின் இடதுபுறம் மேற்கு நோக்கிய நிலையில் ஆறுமுகசுவாமி சந்நிதி அமைந்துள்ளது. தம்ப மண்டபத்தில் கொடித்தம்பமும், பலிபீடமும், மயூரமும் அமைந்துள்ளன. தொடர்ந்து முதலாவது வீதியை சுற்றி வரும் போது விநாயகப் பெருமானின் அருமையான காட்சியை வடமேற்கு மூலையிற் காண்கின்றோம். விநாயகனை வழிபடும் ஆவலில் நடந்து கொண்டிருக்கும் போது வலப்புறம் மகாமண்டபத்தமைந்த ஆறுமுகசுவாமி வாயிலைக் கடக்கின்றோம். அவ்வேளை ஆறுமுகசுவாமி வாயிலின் மேற் சுவரில் ஆறுபடை வீட்டு அழகுறு காட்சிகளையும் பார்க்க முடிகின்றது. இடதுபுறம் வாகானசாலையையும் மேலே சுவரில் நல்லை முருகன், செல்வச் சந்நிதி முருகன், நயினை நாகபூசணியம்மை என்போரை நினைவு கொள வைக்கும் அலங்கார ஒவியங்களையும் பார்க்கின்றோம். தொடர்ந்து விநாயகனை நோக்கி நடக்கும் போது எமது இடதுபுறம் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர் திருத்தேவாரமும் திருவாசகமும் தந்து எமக்கெல்லாம் உய்வைக் காட்டிய நால்வரைப் பார்க்கும் பெரும்பேறு பெறுகின்றோம். அதே பக்கத்தே துர்க்கா தேவியையும் தரிசித்துக் கொண்டு ஞான விநாயகனை வலம் வந்து, பஞ்ச கிருத்திய நடனஞ் செய் நடேசரை வழிபடும் வாய்ப்பினைப் பெறுகின்றோம்.
தொடர்ந்து கருவறையின் பின்புறமாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் போது வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கிய மகாவிஷ்ணு சந்நிதியைத் தரிசிக்கின்றோம். அப்பால் மேற்கு நோக்கிய வாயிலை உடையவராக நவகோள்களுள் சனிஸ்வரனைக் கண்டானந்திக்கின்றோம், அப்பால் தெற்கு நோக்கிச் செல்லும் போது எமது வலதுபுறமாக கர்ப்பக்கிருக அபிஷேகத் தீர்த்தம் வெளியே வந்து
 

கொண்டிருக்கும் கோமுகைக்கு முன்பாகச் சண்டேசுரரைத் தரிசிக்கின்றோம். இறுதியில் விடைபெற வருகின்றோமெனஅவரிடம் விடைபெற்று அப்பாற் செல்லும்போது நம்மை ஆட்டிப் படைக்கும் நவகோள்களை இடதுபுறம் ஒன்று சேரக் கண்டு பயபக்தியுடன் வணங்குகின்றோம். அப்பால் எழுந்தளும் மூர்த்திகளைக் கொண்ட மேற்கு நோக்கிய வசந்த மண்டபத்தினையும் பக்கலில் மேற்கு நோக்கிய யாகசாலை மடைப்பள்ளி என்பவற்றையும் காண்கின்றோம். அப்பால் வடக்கு நோக்கிய வாயிலையுடைய சந்நிதிகளில் வயிரவக்கடவுள் சந்திரன் என்போரை ஒரு புறமும், சூரியன் இராஜராஜேஸ்வரி என்போரை மறுபுறமும் தரிசிக்க முடியும்.
தெற்குப் புறமாகிய முன்புறத்தில் பிரதான வாயில் அமைய வேண்டிய இடத்தில் வாயில் போன்றதொரு அமைப்பையுங் காணலாம். ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் கோயிற் பரிபாலன வேலைகளைக் கவனிக்கும் அலுவலகம் உண்டு. கர்ப்பக்கிருகத்தின் பின்னே நடேசர் சந்நிதிக்கும் மகாவிஷ்ணு சந்நிதிக்குமிடையே வெளியே செல்லக் கூடிய தொரு பாதை உண்டு. அங்கே ஆலய நித்திய நைமித்திக பூசை நியமக்ளை நடைமுறைப்படுத்தும் சிவாச்சாரியப் பெருமக்களுக்கும் உதவியாளர்க்குமாய இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
வளியேயும் உள்ளேயும் செல்லுமாறு அமைந்த. மேற்குப்புறத்து பிரதான வாயிலை நடுவணதாகக் கொண்டு எண்பத்திரண்டடி 9) LLUITLOT 60T இராஜகோபுரங் கட்டப்பட்டுள்ளது. அதன் இருமருங்கும் தனித்தனி ஐம்பத்தொரு அடி உயரமான இரண்டு மணிக்கோபுரங்கள் அமைந்துள்ளன.
அர்ச்சகர்கள்:
டாம் வீதியில் ஆலய மிருந்த வேளையில் பூரீ றணஜி மஹாராஜி என்ற பெரியார் பூஜகராக இருந்திருக்கிறார். அவர் உதவியாளராக பூரீ மாணிக்கப் பண்டாரம் இருந்திருக்கிறார். 1994 ஜனவரி முதலாக சிவானுபூதி சிவபூரீ கணேச சிவபாலக் குருக்களைத் தலைவராகக் கொண்ட
சிவாச்சாரியார்கள் தேவசிகாமணி சிவபூீ
எஸ். சந்திரசேகரக் குருக்கள் கிரியாரத்தினம் சிவபூீ கு. சிதம்பரக்குருக்கள், பிரம்மபூீ இரா. நீதிநாத சர்மா,

Page 6
பிரம்மறுநீ இ. ஆரூரன் சர்மா, பிரம்ம பூரீ வஞானிசேகரன் சர்மா பிரம்மறுநீ ஜெ. பால முருகானந்த சர்மா என்போர் பணிபுரிந்து வருகின்றனர்.
9,6)ll if TG) 6TD :
ஆரம்ப காலத்திய ஆலய பரிபாலனம் சைவப் பெரியார் அருணாசலம் பொன்னம்பல உடையார் அனுசரணையுடனானது. அவரைத் தொடர்ந்து மகன் சேர் பொன்னம்பலம் இராமநாதன் பரிபாலனத்தை ஏற்றுக் கொண்டார். 1902 இல் நடைபெற்ற கும்பாபிஷேத்தின் பின் இராமநாதன் அவர்கள் கொம்பனித்தெரு அருள் மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாக்த்தைக் கொச்சிக்கடை அருள்மிகு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துடன் இணைத்து விட்டார். சேர் பொன். இராமநாதன் காலத்தின் பின் அவர் புத்திரன் இராஜேந்திரா அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். 1942 இல் அத்தியார் அருணாசலம் அவர்கள் தலைமையில் ஒரு குழு ஆலயத்தைப் பரிபாலித்தது. அதன் பின்னர் ஆலய நிர்வாகப் பொறுப்பு ஒரு அறங் காவலர் சசையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறங்காலவர் சபையின் தலைவராகச் சைவப் பெரியார் எம்.எஸ் திருவிளங்கம் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
எதுவித திருத்த வேலைகளும் இன்றி இருந்த ஆலயத்தைப் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டுப் பிரபல வர்த்தகராகிய சைவப்பெரியார் வி. என். கனகசபை அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு தர்மகர்த்தாசபை 1970 இல் அமைக்கப்பட்டது. இச்சபை செய்த புனரமைப்பின் பின் 1975 இல் புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அறங்காவலர் சபைமீது வழிபடுவோருக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1980 இல் எழுந்த பிணக்கில் அரசினர் சிரேஷ்ட இறைவரி மதிப்பாளர் சைவப் பெரியார் வே. சண்முகம் அவர்களை இவ்வாலய நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமனஞ் செய்தனர். அரச நம்பிக்கைப் பொறுப்பாளர் சண்முகம் காலத்தில் ஆலய வைப்புப் பணமாக ஒரு இலட்சத்திற்கு மேலான தொகை மீதமாக்கப்பட்டு வைப்பிலிடப்பட்டிருந்தது. தனியொருவராக நின்று நிர்வாகத்தைச் சிறப்புற அமையச் செய்தவர் திரு சண்முகம் அவர்கள் என்று மக்கள்
 

வாழ்த்தியதுண்டு. 1984 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீமன்றம் அளித்த உத்தரவை ஏற்று நீதியரசர் சைவப் பெரியார் வீ. சிவசுப்பிரமணிம் அவர்கள் தலைமையில் ஆலயச் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. 1984 கார்த்திகை மாதம் 18 ஆம் திகதி நடந்த மேற்படி விசேட கூட்டத்தில் தங்கள் நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் பாத்திரமான ஒரு அறங்காவலர் சபை நியமனம் பெற்றது. அரசின் பணிப்புடன் இப்போது சைவப் பெரியார் க. கனகசபாபதி ஜே.பி. ஆலய நம்பிக்கை பொறுப்பாளராகப் பணிபுரிகின்றார். ஒழுங்கமைப் பாளராசக் சைவப்பெரியார் க. பாலசுப்பிரமணியம் ஜே.பி. உதவுகின்றார்.
விழாக்கள் :
தைப் பொங்கல், சிவராத்திரி, வருடப்பிறப்பு நவராத்திரி, கந்தஷஷ்டி, திருவெம்பாவை முதலிய விழாக்களனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. வருடாந்த மகோற்சவம் ஆவணி அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பன்னிரண்டு நாள்கள் நடைபெறும். யாழ் நல்லை முருகன் தேர்த் திருவிழாவும், கொழும்பு கொம்பனிர்தெரு அருண்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவும் ஒரே நாளில் இடம் பெறுவது சிறப்பானதொரு அம்சமாகும்.
தேரோடுந் திருவிழா :
இந்த ஆண்டுதான் முதன் முதலாகப் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள தங்கத்தேர் கலியுகவரதனைச் சுமந்து வீதியுலா வருகின்றது. கலசம் முதலிய பகுதிகள் பொன்னால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பொற்கலசம் பூட்டுவிழாவும் வெள்ளோட்டமும் கடந்த 1998.08.09 ஞாயிற்றுக்கிழமை மிகுந்த பக்திபூர்வமாக நடைபெற்றன. இந்த அற்புதத் தேரினை உருவாக்கிய முதன்மை ஸ்தபதி மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சரவணமுத்து ஜெயகாந்தனும் உதவியாளர்களும் எமது பாராட்டிற்குரியவர்கள். முருகன் திருவருள் அவர்களுக்கு என்றென்றும் கிடைப்பதாக, இந்த அற்புதப்பணி நிறைவுறும் வழி நின்ற அனைவரையும் வாழ்த்தி, கந்தப் பெருமான் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல் தந்தோர் ஆலய நிர்வாகம், க. பாலசுப்பிரமணியம் ஜே.பி. விவேகானந்த சபை முன்னாள் பரீட்சை செயலாளர் சிகந்தசாமி என்போர்.

Page 7
கொடிக்க
Q
கொடிே
வித்துவான்
தில்லையம்பதியிலே வாழ்கின்ற
அறிவுடையந்தனர் குலத்திலே உமாபதி
சிவாச்சாரியார் பிறந்து வளர்ந்தார். அவர் இளம்
பராயத்திலே உரிய கல்வியையும் வேதாகமப்
பயிற்சியையும் பெற்றார். அந்தணர் ஒழுக்கத்திலும்
மேம்பட்டு 666Tilf GOTIT i. இதனால்
பொன்னம்பலவாணேஸ்வரருக்குப் பூசனைபுரியும்
பேறு பெற்றுத் திகழ்ந்தார். தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவருள் இவர் ஒருவரே
சித்தாந்த ஞானத்தை உலகோர்க்கு
விளக்கியவராவார். இவர் சிவாகமங்களை எல்லாம்
துறைபோகக் கற்றுத் தவநெறி ஒழுக்கத்தினின்று இறைவனது ஒப்பற்ற திருவருள் பதித்தற்கு ஏற்ற
பக்குவம் வாய்க்கப் பெற்றிருந்தார்.
அவர் ஒரு நாள், கூத்தப் பெருமானுக்குப்
பூசனை வழிபாடு முதலியன முடித்துக் கொண்டு தமது வீட்டுக்கு வழமையான சீர்வரிசைகளுடன் சிவிகைமேற் செல்வாராயினர். இங்ங்ணமாக அவர்
செல்லும் வீதியிலே ஒரு திண்ணையில் மறைஞான
சம்பந்த சிவாச்சாரியார் தன் மாணவர்களுடன்
வீற்றிருந்தார். உமாபதிசிவாச்சாரியார் சிவிகையில்
விருதுகளோடு செல்வதைக் 356T LIT. மறைஞானசம்பந்த சிவாச்சாரியார் தமது சீடரை நோக்கிப் பட்ட கட்டையிற் பகற்குருடு ஏகுதல் பாரீர்”
என்று கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட
 

வி பாடிக் பற்றியது
ĐI. GoìJF606Ö) Gou III
உமாபதிசிவாச்சாரியார் சிவிகையினின்றும் விரைவில்
இறங்கி மறைஞான சம்பந்தரின் திருவடிகளில்
விழுந்து அன்புடன் வணங்கித் தாங்கள் கூறிய
வாக்கியத்துக்குப் பொருள் யாது? கூறுவீர்களாக
என்று வேண்டி நின்றார். அவர் அதன் பொருளை
விளக்கிய பின்பு அவரின் திருவடித் தொண்டு பூண்டு உமாபதிசிவம் ஒழுகிவரலானார். பட்டகட்டை யென்றது சிவிகை, பகலிலும் உபசார விருதாக விளக்கெடுத்துச் சென்றமையாற் பகற் குருடு என்ற
வாக்கியம் எழுந்தது. இதனால் நிலையாமையை உணர்த்தியவாறாயிற்று. பூரீ உமாபதி சிவாச்சாரியார் சிவஞானப் பேறொன்றையே கருதிச் சாதி, குலம்,
பிறப்பென்னும் தடஞ்சுழியைக் கடந்து நின்றார். "தில்லையிற் பிராமணர் எல்லை கடவார்கள்,” என்ற
வாக்கொன்று இருந்து வந்தது. இவரோ எனின் ஞான
அதீதராகி அவ்வெல்லையைக் கூடக் கடந்து நிற்கத்
தலைப்பட்டார். அதனாற் தலைப்பட்டே விட்டார்.
ஒரு நாள் ဤ” L_ff]|fljr பரிபக்குவம்
அறிதற்பொருட்டு மறைஞான சம்பந்தர் கைக்கோளர் தெருவிற்குச் சென்று, பாவிற்குக் காய்ச்சி ஊற்றிய
கஞ்சியின் மிச்சத்தைக் கையில் ஏந்திப் பருகினார்.
அப்போது உமாபதிசிவம் அவரின் புறங்கையால்
ஒழுகிய மிச்சத்தை ஏந்திப் பருகினார். உடனே அவருக்கு ஞானோபதேசம் செய்து, சிவஞானபோதப்
பொருளை மறைஞான சம்பந்த சிவாச்சாரியார்

Page 8
குருவாக எழுந்தருளியிருந்து உபதேசித்தார். இங்ங்ணம் மரபு கடந்து ஞானம் பெற்றமையின் சிறப்பினை உணராது ஏனைத் தில்லை வாழ் அந்தணர்கள் குலமுறை பிறழ்ந்தவராகக் கருதினர். அதனால் தில்லை நடராசப் பெருமானுக்குப் பூசை செய்யத் தகுதியற்றவர் என இகழ்ந்து தள்ளி வைத்தனர். பின்பு உமாபதி சிவாச்சரியார் சிதம்பரத்தினின்றும் நீங்கிக் கொற்றன் குடி' என்னும் ஊருக்குச் சென்று அங்கு ஒரு மடமொன்று நிறுவி, அதில் தமது அடியார்கள் சூழச் சிவபெருமானை விதிப்படி வழிபட்டுக் கொண்டிருந்தார். அன்று முதல்
அவரைக் கொற்றங்குடியார் என்றும் அழைக்கலாயினர்.
இங்ங்ணம் இருப்ப, பூரீ உமாபதி சிவாச்சாரியாருக்குச் சிதம்பரத்துப்பொன்னம்பலவருக்குப் பூசை செய்யும் நாள் வந்தது. அங்கு பூசைக்கு அவர் சென்ற போது அவரைச் சிற்சபைக்குச் சென்று பூசை செய்ய விடாது ஏனைய அந்தணர்கள் தடுத்து
நின்றார்கள். அதனாற் கவலை கொண்டு உமாபதி
if6) கொற்றங்குடிக்குத்
திரும்பலானார். அங்கு நடராசப்
பெருமானை நினைந்து மனந்தளர்
வுற்றிருந்தார். அங்கு நின்ற சில O அந்தணர்கள் சிற்சபைக்குச் சென்று
60) Ց5 Ց560), அழகிய பெட்டகத்தைத் திறந்து ۔ ۔ ۔ ۔ உச்சரித் பார்த்த போது அங்கு அழகிய
- கொண்( திருவுருத்தைக் காணாது அஞ்சிக் கவலையுற்றனர். அப்போது யாவருங் வழிப்படு கேட்கத் தக்கதாக வானில் ஒரு ஒலி வருதல் பிறந்தது. "நம்மைப் பூசையாற்றுந்
அ தகுதியுடையவன் உமாபதி ஆதலால்
& _______
அவன்பால் அமர்ந்தோம்” என்பதே
 

அவ்வொலியாகும். அதனைக் கேட்ட அந்தணர்கள்
எல்லாரும் ஒன்று கூடித் தாயைப் பிரிந்த கன்றுபோல
உமாபதி சிவத்திடம் சென்று, தாங்கள் நாம் செய்த குற்றத்தை மன்னித்துச் சிற்சபைக்கு எழுந்தளிப் பொன்னம்பலவாணருக்குப் பூசை புரியும்படி வேண்டி நின்றனர். அவ்விதமே அம்பலஞ்சென்றுகடவுட் பூசையை முடித்துக் கொண்டு கொற்றங்குடி மடத்துக்கு மீண்டார்.
எங்ங்ணமாயினும் தில்லைவாழ் அந்தணர்களில் 69 (5 ຫົວຕໍ உமாபதி சிவாச்சாரியாரிடத்து வெறுப்புணர்ச்சியுடனேயே இருந்து வந்தனர். அவர்களும் சைவநெறி ஒழுக்கமுள்ளவர்களாகக் காட்சியிலிருந்தாலும் மனமாட்சியில் சிறிதளவாயினும் உமாபதி சிவத்தின் நிலைக்கு ஒப்பாக இல்லை.
இதனால் அவர்கள் பொறாமையே கொண்டிருந்தனர்.
"அந்தணர் 6T6öT (L|Tsf அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருக்குறளுக்கு இலட்சிய புருடராக உமாபதிசிவம் வாழ்ந்து வந்தார். அந்தணர்க்குரிய
སྡེ། வலம் வருதல்
டியின்மேல் அடி வைத்துக் கொண்டும்,
ளக் கூப்பிக் கொண்டும், சிவநாமங்களை
துக் கொண்டும், சிவத்தியான ஞ் செய்து
டும். இவ்விதம் மனம் வாக்குக் காயங்களை ஒரு
த்திக் கொண்டு. மும்முறை சுவாமியை வலம்
வேண்டும்.
ச்சுவேலி சிவபூணூரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்.

Page 9
அழகிய தண்ணளியில்லாது அவர்கள் வாழ்ந்து
வந்தமையால் உமாபதி சிவாச்சாரியாருக்கு
மனக்கவலை அதிகரித்திருந்தது. அதனால் அவர்
எல்லாவித கிரியைகளிலும் விலகி நின்றார்.
உமாபதி சிவத்தின் மனக்கவலையை நீக்க
எம்பெருமான் திருவுளங்கொண்டார். ஒருநாள்
சிதம்பரத்தில் திருவிழாவுக்குக் கொடியேற்று
வதற்காகத் தில்லை வாழ் அந்தணர்கள் வேண்டிய
கிரியாதிகளை முடித்துக் கொண்டு வேத கீத பாராயணஞ் செய்தனர். மங்கள வாத்தியங்கள்
முழங்கின. உரிய சுபமுகூர்த்தத்தில் அங்குள்ள
அந்தணர்கள் கொடியை ஏற்ற எத்தனித்த போது
கொடி எழாமை கண்டு மிகக் கவலை கொண்டனர்.
என்னே! விந்தை. பொன்னம்பலவாணரை இறைஞ்சி
நின்று கொடி மேலெழாமையால் என்ன நிகழுமோ
என்று தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாரும் அஞ்சி
நின்றனர் பக்தர் கூட்ட மெல்லாம் கண்ணிர் மல்கிக்
கசிந்துருகி நின்றனர். இங்ங்னமாக இருக்கும் பொழுது ஆகாயத்தில் 'உமாபதி வந்தக்கால் கொடியேறும் என்ற திருவாக்கு எழுந்தது. உடனே அந்தணப் பெருமக்களும் மற்றுமுள்ள பக்தர்களும் உமாபதி சிவாச்சாரியாரிடம் சென்று அவரை வணங்கி நடந்தவற்றைக் கூறி வேண்டிநின்றனர். சுவாமிகள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, எம்பெருமான் திருவுளம் இதுவாயின் அதற்கு மறுப்பும் உண்டா? என்று கூறிச் சிதம்பரத்துக்கு விரைந்து வந்து
சேர்ந்தார்.
ஆலயம் வந்து எம்பெருமானை வணங்கிக் கொண்டு கொடித்தம்பத்தருகில் வந்துநின்றார்.
பொன்னம்பலவாணரை மனத்திற் தியானித்துக்
 

கொண்டு கொடிக்கவியைப் பாடத் தொடங்கினார்.
கொடிக்கவியில் முதற்பாட்டைப் பாடியவுடன் கொடி
தானாக ஏறியது. இது அற்புதம் அற்புதம் என்று பக்தர்கள் கண்ணிர் மல்கச் சிவநாமத்தை ஒதி
நின்றனர். அந்தணர் வேதகிதம் பாடிநின்றனர்.
அன்று முதல் திருவிழா சிறப்புற நடைபெற்றது.
கொடிக்கவியென்னும் நூல் மெய்கண்ட
சாஸ்திரம் பதின்னான்கினில் ஒன்று. இது சைவ
சித்தாந்தக் கருத்துடைய சிறந்த மிகச் சிறிய நூல். நான்கு பாடல்களைக் கொண்டது. அதனை இங்கு
தருகிறோம்.
கொடிக்கவி
1. ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடலொன்
றொளிக்கு மெனினு மிருளடராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிகொடி கட்டினனே,
2. பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே-தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கொபுர வாசற் கொடி
3. வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி
4. அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்து - நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டக் கொடி

Page 10
ஏனாதி நாத
هل عصحيح
சிவ. சண்மு
C சிTழ அரசர்கள் குளிர்ந்த முத்துக்குடைக்
கீழ் வீற்றிருப்பார்கள். நாட்டை நன்னிலை வழுவாது பரிபாலிக்க அது நன்கு உதவும். அவர்கள் இமயத்தில் ஏற்றிய வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். அது அவர்கள் புகழை விண்ணுலகிற்கும் பறை
காற்றுவது போலாகும்.
எயினனூர் சோழ நாட்டிலுள்ள மூதூர்களில் சிறந்தது. வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய மருதத்தண்பனையாற் சூழப்பட்டது. சோலைகளைப் பூக்களின் வாசனை சூழ்ந்திருக்கும். பண்பாடும் வண்டுகள் மலர் மணத்திற்கு மெருகூட்டுவது போல் அமையும் வயற்பரப்புக்கள் வேழக் கரும்பினோடு மென்
கரும்பு தாழக் கதிர்ச்சாலி தானோங்கும் தன்மையது.
எயினனூர் வாழக் குடி தழைக்கும் பொற்பதி அங்கு ஈழக்குலச் சான்றோருள் ஒருவர் ஏனாதிநாதர்.
ஏனாதிநாதர் பழையான திருநீற்றுத் தொண்டில் தலைநின்றவர். நீற்றுவழிபாட்டில் என்றும்
நிலைதளராதவர்.
அரசர்களுக்கு வாட்படை பயிற்றும் தொழிலில் வல்லவர். வெற்றி தரும் வித்தையில் தலைமை
பெற்றுள்ளார்.
வாட்படைத் தொழிலில் அவருக்கு வருவாய் வர வர வளர்ந்தது. வாய்த்த வளம் அடிமுடி அறிய
 

JISTILJKOTTñ
கவடிவேல்
முடியாதவர்களையும் ஆட்கொள்ளும் சிவபெருமானுடைய அடித் தொண்டர்களுக்கே உரித்து ஆக்குவார்.
தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந்தொண்டாளும் பெருமா னடித் தொண்டர்க் காக்குவார்.” என்று அச்செயலை எடுத்துப் பாடுவார்
எம்பிரான் சேக்கிழார்.
ஏனாதிநாதர்தம் தொழிலுக்கு உரித்து உடையவனாக ஒருவன் இருந்தான். அவன் பெயர்
அதிசூரன்.
அதிசூரன் வாட்பயிற்றுதலில் தன்னைத் தானே மேம்பாடாக மதித்தான். அவன் குலத்தாயத் தொழிலில் வருவாய் நாளும் நலிந்தது. அவன் மனத்தை நாளும் அது வருத்தியது.
ஏனாதிநாதரிடத்திற் பொறாமை பூண்டான். அவருடன் வாட்போர் புரியக் கருதினான். போருக்குத் துணிந்து எழுந்தான்.
அதிசூரனுடன் சுற்றத்தார் சென்றார்கள். அவருடைய போர் வீரர்களும் கூட்டமாக வந்தார்கள். ஏனாதிநாதருடைய இல்லத்தின் முன்கடை வாயிலில் நின்றான். கோபத்தோடு அறை கூவினான்.
"வாள் பயிற்றும் தாயத்தை வலியாரே கொள்ள வேண்டும். வாட்போர் புரிந்து நிர்ணயிப்போம்
வாருங்கள். ’ என்று அழைத்தான்.

Page 11
"யார் போருக்கு அழைத்தான்? ஏனாதிநாதர் ஆண் சிங்கம் போல் துள்ளி எழுந்தார். உடையவாளை இடையில் வரிந்து கட்டினார். கூரார்ந்த வாளைக் கையிற் கொண்டார். பலகையையும் பற்றினார். போர்
முனையை நோக்கிப் புறப்பட்டார்.
“இந்த வெளியிடத்தில் அமர் விளைப்போம்.
தாயத்து உரிமையை வென்றவர் கொள்ளட்டும்.’
என்றான் அதிசூரன்.
"அது உனக்கு நல்லது; நீ எங்கு கருதுவாயோ. அங்கு நான் வருவேன்” என்றார் ஏனாதிநாதர், உள்
மகிழ்ந்து.
இரு பக்கப்படை வீரர்களும் கைவகுத்தார்கள்.
போரை நேர்நின்று புரிந்தார்கள். இருதிறத்து
வீரர்களும் இறந்தார்கள்.
ஏனாதிநாதருடைய L60)
இறவாது எஞ்சிய
வீரர்கள்
பின்வாங்கினார்கள். ஏனாதிநாதர் கோபித்து
எழுந்தார்.
ஏனாதிநாதருடைய கோபத்தால் வாள் தீயை
உமிழ்ந்தது. வீரக்கழல் கலித்தது.
சிவ அன்பர் எதிர்ந்த வேலுழவர் ( சிர உரமும் தோள் உரமும் கால்
உரமும் சிந்தி விழத் துணித்து நாம் முற்பு
வீழ்த்தினார். இம்மானிட தேக
சைவசித்தாந்த
ஏ T ன தி நா த  ைர நமக்கு இந்த மா
எதிர்த்தவர்கள் எல்லாரும்
யோகம் என்னு
இறந்தார்கள். ஏனையவர்கள் சிவஞானத்தை கொலைக்களத்தை விட்டு பொருட்டேயாம். ஒடியதனால் எதிர்க்காதவர்கள்
ஆனார்கள். அது "நிலையான \உ
 

ஞான உணர்வு வெளிப்பட்ட போதில் அலைத்த குற்றம் போல் ஆனார்கள் இது சேக்கிழார் அருட் சிந்தனை:
"முட்டாதார் கொல்களத்தை விட்டு நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதிலலைப்பட்ட
வார்வமுதற் குற்றம் போ லாயினார்.”
அதிசூரன் அது கண்டான். பின்நின்ற வீரர்களை முன் அழைத்துச் சென்றான். மின்னொழி
போல் வாள் வீசும் வீரர்நேர் நின்று போரிட்டான்.
ஏனாதிநாதர் அதிவேகமாக சுற்றிச் சுற்றிச் சுற்றி வட்டணை வந்தார். சுழலும் வேகத்தில் அவரையோ வாளையோ தெரியவில்லை. கூர்வாளின் சீரிய ஒளியே தெரிந்தது. ஏனாதிநாதர் விசையோடு எதிர்க்கும் பொழுதில் அதிசூரன் தன்னைக் காத்துக் கொண்டான். புறமுதுகு காட்டிப்
(SuT60TT66T.
மானமிழந்து போன அதிசூரன் LO 6ÕTLO மறுகினான். மண்ணிற் படுத்தான். கண் உறங்கான் இராக்காலம் முழுவதும் இருந்து சிந்தித்தான். வஞ்சனையால் வெல்லக் கருதினான்.
பிறப்
த்தைப் பராபர முதல்வராகிய பரமசிவன் எமக்குத் தந்து மயத்திலே ஜனனமாகவும் திருவருள் பாலித்தருளினார்.
তেীিL
ம் சிவபுண்ணியங்களைச் செய்து தம்மை வழிபட்டுச்
9
இந்தப்பிறவி
பிற் செய்த புண்ணியம் காரணமாகப் பெறுதற்கரிய
தேகத்தைச் சிவபெருமான் தந்தது சரியை, கிரியை,
திக்கும் படி செய்து முத்தியின்பத்தைத் தரும்
அச்சுவேலி சிவபூரி ச. குமாரசுவாமிக் குருக்கள்.

Page 12
பொழுது புலர்ந்தது. அவன் புத்தி தெளிந்தது. வீரரைக் கொல்வது தகாது. நாம் இருவரும் வேறிடத்தில் போர் ஏற்போம். தாய உரிமையை நிலை நாட்டுவோம். ’ என்று ஆள் மூலம் அழைப்பு விடுத்தான்.
கைவாள் போர் புரிய அதிசூரன் விரும்பிய களத்திற்குச் செல்வேன். கொடிய வாள் ஏந்திய வீரன் அங்கு வரட்டும்’ என்று ஏனாதிநாதர் சொல்லி
6)SNLLITÍ.
ஏனாதிநாதர் சுடர்வாள் தாங்கினார். பொற்பலகையோடும் போர்களத்திற்கு முன் வந்தார். அதிசூரனின் வருகையை எதிர்பார்த்துத் தனியே நின்றார்.
திருநீறு தாங்கியவருக்கு ஏனாதிநாதர் தீங்கிழைக்க மாட்டார். தீயோன் அதை அறிந்திருந்தான். அதிசூரன் வழிபாட்டு நெறியில் வெண்ணிறு அணியும் பயிற்சி இல்லாதவன்.
வெண்ணிற்றை நெற்றி நிறையப் பூசினான். நெஞ்சினுள்ளே வஞ்சகப் கறுப்பும் கொண்டான். சிவநீதிப் போர் வீரர்க்குச் சொல்லிவிட்ட போர்க்களம் புகுந்தான்.
அதிசூரன் தன் நெற்றியைத் திண்பலகையால் மறைத்து வந்தான். ஏனாதிநாதருடன் வாட்போரைத்
தொடங்கினான்.
ஏனாதிநாதர் வலிய இடபம் போல அதிசூரனை எதிர்த்தார். அவனைக் கொல்லும் சமயம் தெரிந்து காலை எடுத்து வைத்தார். அதிசூரன் தனக்கு ஆபத்து நேர்ந்ததை உணர்ந்தான். உடனே நெற்றியை
 
 

மறைத்த பலகையை நீக்கினான். வஞ்சகனுடைய
நெற்றியில் வெண்ணிறு தாம் கண்டார்.
‘ஐயகோ! நான் தவறு பெரிதுடையேன். இவரிடத்தில் முன்பு காணத வெண்ணிற்றுப் பொலிவு கண்டேன். இவர் சிவபெருமானுடைய சீரடியார் ஆயினார். இவர் கருத்திற் கொண்ட குறிவழி நிற்பேன்’ என்று எண்ணினார் ஏனாதிநாதர்
கைவாளுடன் பலகையை நீக்கக் கருதினார்.
அடுத்த கணம் அது செய்யார்.
"நிராயுதரைக் கொன்ற பழிக்கு அவர் ஆளாகலாகாது.” என்று எண்ணினார். போர்
வாளுடன் முன்பு போல் நின்றார்.
கைவாளுடன்பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றா ரெனுந்திமை பெய்தாமை வேண்டு மிவர்க்கென்றிரும்பலகை
நெய்வாளுடனடாத்து நேர்வார்போ னேர்நின்றார்
ஏனாதிநாதருடைய திருவுள்ளத்தை ஆர் அறிவார் எதிர் நின்ற பாதகன் இலகுவாகத் தன் கருத்தை நிறைவாக்கினான். இத்தன்மை அறிந்த பிரான் இவர்க்கருள் செய்தார்.
மின்னல் நின்றது போலும் செஞ்சடைப் பெருமான் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தருளினர்
"அந்நின்ற தொண்டர் திருவுள்ள மாரறிவார் முன்னின்ற பாதகனுந் தன் கருத்தே முற்றுவித்தான் இந்நின்ற தன்மை யறிவா ரிவர்க்கருள மின்னின்ற செஞ்சடை யார் தாமே வெளிநின்றார்.
எம்பெருமான் ஏனாதிநாதருக்கு என்றும் உடன் பிரியா அன்பருளினர். தாமும் பொன்னம்பலம்
அணைந்தார்.

Page 13
5.JibrīL GLITñi
முருக வே
9 (19li இனங்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதே மனிதம் மனிதத்துவம் என்னும் பேராண்மை மனித சமுதாயத்தின் ஆளுமை உயர்சூக்குமம்; உடல் தூலம், ஆத்மா மனித சரீரத்துடன் சஞ்சரிக்கும் நிலைதான் மனிதப் பிறவி.
நிலைக்குத்தாய் வளரும் மனிதனுக்கு நேரிய நீர்மை.
ஒரு சிறந்த பண்பு. பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல். இம் மனித விழுமியங்களைப் பற்றிப் பேசுவன பதினென் கீழ்க்கணக்கு நூல்கள். இவற்றுள் முதன்மை வகிப்பது திருக்குறன். மக்களை மையமாகக் கொண்டு எழுந்த வாழ்க்கை நூல் இது. இதை ஆக்கியளித்தவர் திருவள்ளுவர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதமிழ்நாடு என்கின்றான் பாரதி மண்ணுலக வாழ்வு கண்டு விண்ணுலக வாழ்வையும் விண்டுரைக்கிறது இக்குறட்பா இலக்கியம். இதற்கு முப்பா நூல் என்றும் பெயர். புருஷார்த்தங்கள் நான்கனுள், அறம், பொருள், இன்பம் பற்றிப் பேசுவது இது. இம்மூன்றும் முறைப்படி அமைந்து விடின் நான்காவதான வீடு தானே வந்தெய்தும் என்பது உரையாசிரியர் வாக்கு ஈதல் அறம் தீ வினை விட்டீட்டல் பொருள், காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம். இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு' என்பது ஒளவை வாக்கியம். ஆக மண்ணோடும், விண்ணோடும் தொடர்புடைய மனிதப் பிறவிக்கான உயிர் இவ்வுலக வாழ்வில் மட்டும் சிறந்தாற் போதாது. உயிர் உடம்பை நீத்த பின்பும் அதற்கோர் வாழ்வமைதி உண்டு. g) LIS) st எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேரும் போது. உயிர் மெய் தோன்றும். மெய்க்குத் தனித்தியங்கும் திறன் இல்லை. உயிரும் ஏகமாய் இருப்பினும் அது அசைய உடம்பு (மெய்) வேண்டும். உயிர்கண்ணுக்குத் தென்படாது. கைக்குட் சிக்காத காற்றைப் போல.
 

க்கு விடுதலை
பரமநாதன்
உடம்பு கண்ணுக்குப் புலப்படும். இது தூலம், அது சூக்குமம். காற்றின் அசைவு நம்முடலிற் பட உணர்கின்றோம். அப்போது அது அசைவு நிலை. இவ்வணமே உடம்புடன் உயிர் இணையும் போது உடம்புக்கோர் நடமாட்டமுண்டு. உயிரில்லாமற் போனால் உடல் வெறும் சடம் ஆண் பெண் சேர்ந்த இணைவிழைச்சின் பிரதிபலிப்பே ஜீவராசிகள். இந்த ஆண் பெண்ணின் இணைவு , உடம்புக்கும் உயிருக்கும் உள்ள கூட்டுப் போன்றது என்பர் வள்ளுவப் பெருந்தகை
உடம்போ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு.
(குறள் - 1122)
இவ்வுடம்பு உயிருக்கு நிரந்தரமான வதிவிடமன்று. ஆயிரமாயிரம் அன்னையின் பிரசவ வேதனையின் உதிர்ந்த உடலே இது ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்தது தான் இல்லறவாழ்வு ஏன் உலக வாழ்வு எனவும் கூறலாம். இருவர் மடந்தையருக் கென்பனின் புண்டாம். ஒருவன் ஒருத்தியுறின் உண்டாம் என்பது மறைஞானியர்வாக்கு. எனவே இந்த உயிர் எண்ணிலி காலம் பிறந்து இழையாமல், ஓரிடத்தில் ஒடுங்க வேண்டும். அதுவே இறைவனின் திருவடி நீழல்.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவார் வாழ்
(குறள் - 3)
"சீவனொடுக்கம், பூதவொடுக்கம் தேற உதிக்கும் பர ஞான தீபவிளக்கம் காண எனக்குன் சீதள பத்மந்தருவாயே" என்பது திருப்புகழ் சேர்தல் -

Page 14
இடைவிடாது நினைத்தல். அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தில் இறைவன் விரைந்து உறைகிறான். எம்மைப் பெற்ற அன்னை, தந்தையைக் காட்ட யார் எமது அப்பன் என்று அறிகிறோம். உணர்த்த உணருவது உயிர் அன்னையும் தந்தையும் நம்மை ஈன்ற கண்கண்ட தெய்வங்கள். அவர்கள் உலகமாதாவையும் உலகப் பிதாவையும் அறிமுகம் செய்கின்றனர். இந்த அம்மையப்பர் நிலை என்ன? மணிவாசகர், " உடையாள் உன்றன் நடு விருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி’ என்று பேசுகிறார். "உடையாள் உன்றன் நடுவிருக்கும்” என்றது. சிவம் 9-6Ս60)Ե5 நோக்காது அறிவே வடிவாய் நிற்கும் போது, சக்தி சிவத்திலடங்கி அதன் வயமாய் நிற்றலை. இதுவே சிவத்தின் சொரூபநிலை. அதுவே உண்மைநிலை. “உடையாள் நடுவுள் நீயிருத்தி என்றது உலகத்தை நோக்கி அருள்புரிய வரும் போது சிவம் சக்தியில் அடங்கி அதன்வயமாய் நிற்றல். இதுவே சிவத்தின் தடத்த நிலை; அல்லது அருள் நிலை; எனவே "மெய்யருளாந்தாயுடன் சென்று பின் தாதையைக் கூடிப்பின் தாயை மறந்து ஏயுமதே நிட்டை என்றான்’ என்பது பட்டினத்தார் அருள்வாக்கு. எனவே எல்லார்க்கும் அம்யைப்பனைச் சிவனும் சக்தியுமாகக் காட்டும் சைவம் இவ்விறை தத்துவத்தை விளக்கும். குறள், திருவருட் பயன் இவ்விடத்திலே நமக்குக்கை கொடுக்கின்றன.
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
(குறள் - 1)
அகர வுயிர் போ லறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து.
(திருவட்பயன் - 1)
எள்ளிலெண்ணெய் போல் சர்வ வியாபகமாய் ஒளிரும் இறைவனின் தலைமையும், கலப்பும் பேசும்
சாத்திரங்கள் அகரத்தை அழுத்திக் காட்டின.
12
 

அகரமுமாகி யதிபனுமாகி அதிகமுமாகி - அகமாகி, அயளெனவாகி அரியெனவாகி அரனெனவாதி அவர் மேலாய், இதரமுமாகியெவைகளுமாகியினிமையுமாகி வருவோனே' என்பது அருணகிரிவாக்கு” எண்ணும் எழுத்தும் சொல் லானாய் போற்றி' என்கிறார் அப்படிடிகள். இஃதே போன்று சுந்தரரும் தமிழ் நெடுக்கணக்கின் (உயிர் 12 + மெய் 18) மூலவரிவடிவை வைத்து, இறைதத்து வத்தைத் தெளிவு படுத்துகின்றார்.
" இழைக்கும் எழுத் துக்குயி ரே ஒத்தியால்
இலையே ஒத்தியால் உன்னையே ஒத்தியால் குழைக்கும் பயிர்க் கோர்புய லே ஒத்தியால்
அடியார்தமக் கோர்குடியே ஒத்தியால் மழைக்குந் நிகர் ஒப்பன வன்திரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அழைக்கும் கடலங்கரை மேல் மகோதை
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
(ஏழாந்திருமுறை - 35)
மகோதை - கொடுங்கோளுர், அஞ்சைக்களம் - அங்குள்ள திருக்கோயில் இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் - நீ உலகத்தை இயக்குவதில் மெய்யெழுத்துக்களை, எழுப்பும் உயிரெழுத்துப் போல நின்றாய்; இலையே ஒத்தி - இல்லாதது போன்றும் இருக்கிறது போன்றும் காணப்படுகிறாய். மனித நேயம் பேணும் ஒரு மனிதக் குழந்தை பிறந்த அன்றே மறைவும் பொறிக்கப் படுகிறது இஃது முட்டையை விட்டுக் குஞ்சு பறப்பதை ஒக்கும்
' குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு
(குறள் - 338)
"தனித்தொழிய வென்றதனான் முன்னின்றமையாமை பெற்றாம். அஃதாவது கருவுந்தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாந்துணையும் அதற்காதாரமாய் நிற்றல்,

Page 15
அதனால் அஃது உடம்புக்குவமையாயிற்று. முட்டையுட் பிறப்பன உளவேனும், புள்ளையே கூறினார். பறந்து போதற் றொழிலான் உயிரோ டொப்புமை எய்துவது அது வேயாதலின் என்பது பரிமேலழகர் கூற்று. எனவே கூடினபிரிதலும், பிரிந்தன கூடலும் உலகியற்கை.
'பிறந்தன விறக்கு மிறந்தன பிறக்குந் தோன்றின மறையு மறைந்தன தோன்றும் பெருத்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம் உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம் என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும்
புற்புதக் குரம்பை துச்சி லொதுக்கிடம்
(பட்டினத்தார் கோயிற்றிரு அகவல் 1)
கூடாரவாசமான இவ்வுடம்பை, பாம்பு சட்டையைக் கழற்றி விடுவது போன்று, விட்டு விட்டு உயிர் புறப்பட்டு விடும். தகுதி இல்லாத போது உடம்பை உதறிதத் தள்ளிவிடும் உயிர்.
"புக்கிலமைந் தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு
(குறள் - 340)
இவ்வுடம் பும் உயிரும் இணைந்து நடாத்தும் மனிதவாழ்வு மண்ணிலேயே சிறப்பாயமைய வேண்டும். அமைந்து விட்டாற் பின் மண்ணுக்குத் திருப்பாத விண்ணுலக வாழ்வு கை கூடிவிடும். உயிர் தனியாக நின்று தன்னைப் பற்றிச் சிந்திக்க முடியாது. எனவே மானுடப் பிறவி உயிர்க்குக் கைவலிய நவநீதமாகும். இந்நிலையிலேதான் உயிர்க்குத் தன்னைப்பற்றிச் சிந்திக்க வாய்ப்புண்டு. இதுவே மெய்ஞ்ஞானமாகும். இந்த மறைஞானம் என்றும்
 

பிறவாத மெய்ந்நிலைக்கு ஆத்மாவை வழிப்படுத்தியது. இதை ஆத்மீகம் எனலாம். இந்த ஆத்மார்த்தமான சிந்தனைகள் தான் உயிர்க்கு உய்தி காட்டின. இந்த மானிடச் சட்டைகிடைத்த இப்பிறவியை நாம் எம்விடுதலைக்காகப் பயன்படுத்த வேண்டும். இதையே கட்டறுத்தல் என்கிறார் மணி மொழியார் திருக்கழுக்குன்றப் பதிகத்தில், இப்பிறவியை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதும் திருவாசக நெறி
' காலமுண்டாகவே காதல் செய்
துய்ம்மின் கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன்
வானவர் நண்ணரிய
ஆலமுண் டான் எங்கள் பாண்டிப்
பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்
றான்வந்து முந்துமினே
(திருப்பாண்டிப் பதிகம் - 5)
"வாய்த்தது நந்தமக்கிதோர் பிறவி மதித்திடுமின்'இது அப்பர்வாக்கு சரஸ்வதி பண்டாரம் - கல்வி.
வாழ்க்கை வாழ்வதற்கென்றே பேசப்படினும், வாழ்வு ஒரு கலையுமாம். உண்டு, உடுத்து, அனுபவித்து, இணைவிழைச்சுக் காண்பது தான் வாழ்வு அன்று. மெச்சத்தக்க வாழ்வை அமைத்துக் கொள்வதும். மறுகைக்கான வாழ்வியலை வகுத்துக் கொள்வதும்
மண்ணுலக வாழவிலேதான் நடைமுறைப்படுத்தலாம்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'
(குறள் - 50)
"வசையொழிய வாழ்வாரோ வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதயவர்"
(២pនាំ - 240)

Page 16
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ஞலகு
(குறள் -34)
மண்ணுலக வாழ்வு நேரியதானால் விண்ணுலக வாழ்வும் சீரியதாகும் மண்ணிலே நடமாடும் போதே விண்ணுலக வாழ்வு கண்டவர் ஜீவன் முத்தர்கள். இவர்கள் இரட்டைகளை வென்றவர்கள். இவர்கள் குளத்தில் காணப்படும தாமரை இலைபோன்றவர்கள். அமைதியோடு திரிவர்.
“நீரிலேமுளைத் தெழுந்த தாமரையின் ஒரிலை நீரினொடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம் பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பரே' இவ்வாறு உலகியலையுங் கடந்து, உளவியலைப் பயன்படுத்தி நமக்கு நன்னெறி காட்டிய அனுபூதிச் செல்வர்களில் நாயன் மார்களும் அடங்குவர். இவர்களுள் ஒருவரான சம்பந்தர் "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - வைகலும், எண்ணில் நல்லகதிக் கோர் ஐயுறவில்லையே” என்று கூறினார். இவ்வுலக இன்பங்கள் நிலையில்லாதவை. எனவே எமது உறவுகளை இறைவனோடு தொடர்பு படுத்துங்கள், நன்மைபயக்கும் என்றார் நம்பியாரூரர்.
'இறைகளோடு இசைந்த இன்பம்
இன்பத்தோடு இசைந்த வாழ்வு பறைகிழித்து அனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத் திறைகொணர்ந்து ஈண்டித் தேவர்
செம்பொனும் மணியும் தூவி அறைகழல் இறைஞ்சும் ஆருர்
அப்பனே அஞ்சினேனே'
(சுந்தரர் பதிகம் 81)
இறைகளோடு இசைந்த இன்பம் - சிவபெருமானோடு ஒன்றிய பேரின்பம், பறைகிழித்தனைய போர்வை - பறை கிழித்தால் அதன்தோல் பயன்படாதவாறு போல, இறந்துபட்டால் பயன்டாத உடம்பு இப்படி இறைவனைச்
 
 

சொற்றமிழால் அருச்சனை புரிந்த ஆளுடை நம்பி பாடுந் தொழிலே மேலானது. எனவே இறைவனைப் பாடிப் பரவுங்கள். இம்மைக்கான செல்வங்களையும் மறுமைக்கான செல்வங்களையும் தருவான். மணிசரைப் பாடி என்னபயன் அடையப் போகிறீர்கள் எனப் புலவர்கட்கு அறிவுறுத்தினார்.
தம்மையே புகழ்ந்து இச்சைபேசினும்
சார்வினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம் மையாளரைப் பாடாதே எந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையே தரும் சோறுங் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே
(சுந்தரர் பதிகம் 34.1)
மிடுக்கிலாதனை வீமனே விறல்
விசயனே வில்லுக்கு இவனென்று கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப் பார் இலை பொடிகொள் மேனியெம் புண்ணியன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள் அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதுமையுற வில்லையே
(சுந்தரர் பதிகம் 342)
எனவே பாசக் கட்டினின்றும் இறைவனையே பாடிப்பரவினால் எல்லாம் தருவான். எமக்கு விடுதலை கிட்டும்.
"காற்றைப் போல விடுதலை கட்டில்லாத விடுதலை ஆற்றையுண்டு நடனமாடும் ஆழிபோல விடுதலை நேற்றைக் கவலை ஏனினி
நெற்றிக் கண்ண னருளுவான் கூற்றையெற்றி மிதித்த பாதம்
கும்பிட்டோர்க்கு விடுதலை
கவியோகி சுத்தானந்த பாரதியார்
圭

Page 17
திருஅம்.
அம்மானை என்பது மகளிர் ஆடுவதொரு விளையாட்டு. இங்கு இத்திருவாசகப் பதிகத்துள்ள ஒவ்வொரு திருப்பாடல் இறுதியும் அம்மானாய் என்று நிறைவுறுதல் காரணமாக, திரு என்னும் அடையுடன் சேர்த்துத் திருஅம்மானை என இப்பதிகம் பெயர் பெற்றுளது. திரு, தெய்வ உணர்வைத் தருவது. அம்மானாய், அம்மானை என்பதன் விளியுருபேற்ற வடிவம், ஆய் விகுதி பெற்று நிற்கின்றது. மகளிர் மூவர் மூவராகச் சேர்ந்து இசைப்பாடலுடன் ஆடுவது அந்த விளையாட்டு. அதனை ஆடுவோம் என்று சொல்வதாக அமைந்தவை இப்பதிகத்துள்ள திருப்பாடல்கள். இதற்கு முந்திய பதிகமான திருவெம்பாவையில் நீராடல் பற்றிய செய்திகளைப் பார்த்தோம். இங்கே இசையுடன் பாடி ஆடுதலைப்
பார்க்கின்றோம்.
திருஅம்மானை என்னும் பதிகத்துப் பாடல்களைத் திரட்டிப் பிழிந்த பிழிவென ஆனந்தக் களிப்பு என்னும் தொடரினைத் திருவாசகத் திருவுள்ளக்கிடை குறிப்பிடும். திரு அம்ானைப் பகுதியில் இடம் பெற்றுள்ள திருப்பாடல்கள் இறைவன் தம்மை ஆட் கொண்டதனால் ஏற்பட்ட களிப்பினைப் புலப்படுத்துவதாக அடிகள் பாடியுள்ளமையே
இதற்கான காரணமாகும்.
இப்பதிகத்தில் இருபது திருப்பாடல்கள் உள்ளன. இவை வெண்டனை தழுவிக் கலியோசை பெற்றுள்ளன. இவை ஒப்புமை பற்றி வந்த ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பாக்கள்.
 
 

D-6)6O. புத்துரை
இனி இப்பதிகத்துள்ள திருப்பாடல்களை அவற்றின் பொருளமைதிக்கேற்பத் தொகுத்துக் G5IT 600T (ELINTLh. திருவெம்பாவை எனும் பதிகத்தின் இறுதிப் பாடலில் "தோற்றமாம் பொற்பாதம்” என்பது முதலாக ஐந்தொழில் நிகழ்வுங் கூறப்பட்டன. உயிர்களைப் பிறப்புடையனவாக்கி, அநுபவிக்கச் செய்து, ஒடுக்கி, மறைத்து அருளலைச் செய்வன அவன் திருவடிகள். அத்திருவடிகள் பற்றிய செய்திகள் திரு அம்மானை எனும் இப்பதிகத்தும் தொடர்வதைப் பார்க்கின்றோம். அடிகளை ஆட்
கொண்டவையும் திருவடிகளே.
" செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி 65 Tf5 JGGT பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையான்
(திரு அம். 1)
“பாரார் விசும்புள்ளோர் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக் கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான்'
(திரு. அம். 2)
' கிளிவந்த மென்மொழியான் கேழ்கிளரும் பாதியனை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகன்'
(திரு அம். 18)
என்னும் முன்று பாடல்களிலும், மால், அயன்,
இந்திரன், ஏனைத் தேவர்கள் முதலாயினோர் தேடித்

Page 18
நித்திரை விட்டெழல்
சூரியனை உதயமாவதற்கு மூன்றே முக்கால் நாழிகைப் பொழுதாவது முன்பாக நித்திரை விட்ழெல் வேண்டும். வேண்டிய கடமைகளை நிறைவு செய்து, நீரினாற் சுத்தி செய்து விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்து ஏனைய முயற்சிகளைத் தொடரலாம்.
அச்சுவேலி சிவபூgரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்
2
தேடொனாத் தேவனாகிய சிவனை எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுகொள்ளவில்லை என்றும், இப்பூவுலகை நாடி எளி வந்து தம்மை ஆட்கொண்டானென்றும் பெருமிதமடைகின்றார். இங்கே இறைவன் கருணைத்திறங் காட்டப்படுகின்றது. ஐந்தொழில்களையும் புரிவன திருவடிகளே என்பதால், "அங்கருணை வார்கழலே பாடுதும் '(திரு. அம். 1) என்றும், 'வான் வந்த வார்கழலே பாடுதும்’ (திரு. அம். 4) என்றும், "வானவன் பூங்கழலே பாடுதும்' என்றும் அடிகள்
பாடினர் போலும்.
"இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்குஞ சீரார் பெருந்துறையான்"
(திரு. அம். 3)
"வான் வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்
டுன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
 

தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழல்'
(திரு. அம். 4)
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
எப்பிற வியுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண் டினிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கள் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நஞ்சிவன்"
(திரு. அம். 12)
என்னும் மூன்று திருப்பாடற் பகுதிகளும் அடிகளை ஆட்கொண்ட வண்ணம் பற்றிப் பேசுகின்றன. இந்திரன் முதலிய தேவர்கள் காட்டினை இடமாகக் கொண்டு இறைவன் திருவருளை வேண்டித் தவம் செய்கின்றனர். அவர்களைப் பொருட்படுத்தாது, எளியனாகி மண்ணுலகு வந்து அடிகளை ஆட்கொண்ட உயர்வு சிந்திக்கப்படுகின்றது. அந்த மகிழ்வை நாம் பாடி ஆடுவோம் என்கின்றார்கள்.
“கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியன்'
(திரு. அம். 5)
“ஆனையாய்க் கீடமாய் மானிராடப்தி தேவராய் ஏனையப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன்'
(திரு. அம்.14)
என்னும் பகுதிகளிலே தன் தாழ்வு நிலையை நினைகிறார்கள். யான் கல்லாதவன், கடையவன்;

Page 19
நாயேன் ஆட்கொள்ளப் படுதற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதவன், எண்ணில்லாத பிறப்புக்களை அநுபவித்து இளைத்து விட்டேன். அப்படிப்படட என்னைக் கல்லைப்பிசைந்து கனியாக்குவது போலப் பக்குவப்படுத்தித் தன் கருணை வெள்ளத்துள் மூழ்கடித்து விட்டான் என்று இறும்பூதெய்துகின்றார்; பெருங்கருணையை நினைந்து நினைந்து மகிழ்கின்றார்.
"ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை'
(திரு. அம். 7)-
"பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன்'
(திரு. அம். 8)
"செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந்தன்மையினான்"
(திரு. அம்.11)
தன்னை ஓயாது நினைப்பவர் உள்ளத்துள் நின்று அருளுபவன். பண்ணமைந்த பாடல்களை, இசைப்பாடல்களைப் பாடுவோருக்குத் திருவருள் புரிபவன். எந்த வகையிலாயினுஞ்சரி தன்னை வந்தடைந்தாரை அன்பினால் உருகச் செய்பவன். "நினைந்துருகும் அடியவரை நைய வைத்தார்’ (நாவுக்கரசர் தேவாரம், பதிகம் 228.1.), "நினைப்பவர்மனங் கோயிலாக் கொண்டவர் (நாவுக்கரசர் தேவாரம், பதிகம் 16,1) என்னும் அப்பர்
தேவாரங்களும் சிந்தனைக்கு உதவுவன.
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டங் கரியான்செம்மேனியான் வெண்ணிறத்தான்”
(திரு.அம், 9)
 

அவன் ஒரு கலையை உடைய சந்திரனை அணிந்தவன்; வேதப் பொருளானவன் திருபெருந்துறையை இடமாகக் கொண்டவன். முப்புரி நூலணிந்தவன்; அழகிய குதிரை வாகனத்தை உடையவன்; நீல கண்டன், செம்மை நிறத்த மேனியான்; திரு வெண்ணிற்றை அணிந்தவன் என்று அடிகள் தாம் கண்டு அனுபவித்த வடிவினைக் குறிப்பிட்டு, அவனைப் பாடி அம்மானை ஆடுவோம்
என்கிறார்கள்.
அவன் “விண்ணாளும் வேதியர்க்கு மேலான வேதியன், (திரு. அம். 10), தக்கனுடைய யாகத்திற் சந்திரனைத் தேய்த்து இந்திரன் தோள் நெரித்து எச்சன் தலை அரிந்து, சூரியன் பல் தகர்த்து, திசை கெட்டுத் தேவர்களை ஒடச் செய்தவன். அப்படிப்பட்டவனது திருப்பெருந்துறை மந்தார மலையைப் பாடுவோம்.
கேட்டாயோ தோழி, ஒருவன் செய்த விளையாட்டை காட்டாதன எல்லாங் காட்டினான். இறுதியிலே தன்னையுங் காட்டினான். அதாவது உண்மைப் பொருளைக் காட்டித் தான் சிவம் என்பதையுங் காட்டி விட்டான். (திரு. அம். 6) என்பது தெரிகிறது. அவன்மீது கொண்ட வேட்கையால் கொன்றை மாலையை அணிவேன். அணிந்து அவன் திரண்ட தோள்களைக் கூடுவேன், கூடித் தழுவி நின்று மயங்கி நின்று ஊடுவேன். அவன் சிவந்த வாயைப் பெறுவதற்கு உருகுவேன். மனமுருகித் தேடுவேன். அவன் திருவடிகளையே சிந்திப்பேன். அவன் அருள் கிடைக்காமையால் மெலிவேன். தீயேந்தி அடுபவனாகிய அவனது திருவடிகளைப் புகழ்ந்து அம்மானை பாடி ஆடுவோம். (திரு. அம். 17)
இறைவன் ஆட் கொண்ட மகிழ்ச்சி மணிவாசகரது இப்பதிகத்துள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் வெளிப்படுவது தெரிகிறது.

Page 20
வாழ்க்கையி
வே. தனபா
நீதி கடவுளின் வடிவு “பங்கயத்தயனும் மாலறியா நீதியே’ என்பது மாணிக்க வாசகரின் வாக்கு. "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” என்று பத்திரிகைகளும், நூல்களும் கூறினால் மட்டும் போதாது. சைவநிதி உள்ளத்திற்
பிரகாசிக்க வேண்டும்.
சைவநெறி நின்று வாழ உள்ளம் பரிசுத்தமாகும். மாசில்லா மனதில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கு குற்றங்களும் குடிபுகமாட்டா. இந்த நிலை வருவதற்கு அவன் அருள் வேண்டும். கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரம் கோள் களவு கல்லாமற் தோகையர் மாயையிலே செல்லாமல் வாழ்வு அமைய
வேண்டும். இந்த நிலையைப் பெற்று விட்டால்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
வாழ்க்கையில் வெவ்வேறு தொழில்களை நாம் செய்கின்றோம். எத்தொழில் செய்தாலும் அங்கே நீதி இடம் பெற வேண்டும். "எத்தொழிலைச் செய்தாலும்
ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கு
மோனத்தே’ என்பது பெரியவர்கள் கூற்று. அந்தணர்கள் செந்தண்மை பூண்டு ஒழுக வேண்டும். வியாபாரி நிதான விலைக்குக் கொள்ளல் -
கொடுத்தல் செய்ய வேண்டும். பாலில் நீர்கலந்து
விற்பனை செய்தல் மிகப் பாவமான செயல்.
 

=&*
ற் சைவநிதி
ாலசிங்கம்
கொள்வது உம் மிகை கொளாது, கொடுப்பதுஉங்
குறைகொடாது. பிறவுந் தமபோல் நினைந்து,
கொள்வதோ கொடுப்பதோ செய்தல் வேண்டும்.
கமக்காரன் உண்டி கொடுத்து உயிர் கொடுப்பவனாக
வாழ்பவன். விதை முதல்களை நிதான விலைக்கு
விற்று, ஏழைகளுக்குக் குறைந்த விலையிற் கொடுத்து வாழ்ந்தால் அவன் சமயி, ஆசிரியர், செய்யுந் தொழிலே தெய்வம் என்ற நிலையில் கடமை செய்து ஒளிமயமான எதிர்காலத்தைக் கண்டு களிப்ப்புற வேண்டும். எதிர் காலச் சந்ததி ஒன்று ஆசிரியன் கையிலே தரப்படுகின்றது என்பது தெளிவு. ஆதி காலத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வருவாயை
எதிர்பார்த்து வேலையைச் செய்யவில்லை. கல்வியிலே
நாட்டமுள்ள மாணவர்கள் ஆசிரியன் இருக்குமிடந் தேடிக் சென்றார்கள். ஒய்வு நேரங்களிற் குருவுக்கு வேண்டிய தேவைகளையுங் கவனித்தனர். இன்றைய நிலை வேறு. பணத்தை - சம்பளத்தை எதிர்பார்ப்பதாக ஆசிரியத் தொழில் மாறிவிட்டது. வாழ்க்கைத் தேவை நிறைவிற்கு பணம் வேண்டுந் தான். அதைப் பெறத்தான் வேண்டும். ஆனால் அதேவேளை செய்யும் தொழிலின் மகத்தும் சிந்தையில் நிறைந்திருக்க வேண்டும். மாத முடிவிற் கிடைக்கும் சம்பளம் கிடைக்கட்டும். எண்ணம்
முழுவதும் எதிர்கால உலகாலமே விரிந்து நிற்க வேண்டும். அந்த உலகியல் உயர்வுக்கான
தொழிலாகக் கருதித்தன் தொழிலைத் தொடர

Page 21
வேண்டும். வைத்தியர் நிதிக்கு ஆசைப்பட்டு நீதியை மறந்து போகாது நோய் நாடி அது தணிக்கும் வகை கண்டு தன் கடமையைச் செய்து கடவுள் என்ற பெயர் பெற வேண்டும். வைத்தியனிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அபாரமானது. இவ்வளவு அவ்வளவு என்று எல்லையிட்டுக் கூற முடியாதது. தம் உயிரையே துச்சமாக மதித்து அவனிடம் சரணகதி ஆகிறார்கள். அவ்வண்ணமாய மக்களினத்தின் நம்பிக்கைக்கு மறு ஏற்படாவகை வைத்தியர்கள் பணி புரிய வேண்டும். அரச உத்தியோகத்தர் கைக்கூலி வாங்காது 55L60). LD Glg tiltL வேண்டும்.
அவர்களுக்கென்று மாதா மாதம் பணம் கிடைக்கிறது.
மேலதிகமாகவேலை GerL வேண்டி
புரட்டாதி 1 17998 வியாழன் - ஷடசி 2. 18.9.98 வெள்ளி - பிரதே 3 19.998 επ6ύf - புரட்ட
4. 20.9.98 ஞாயிறு - 9|LDIT6 5 2甘.9.98 திங்கள் - J56)JIJFT 8. 24.9.98 வியாழன் - சதுர்த் 10 26998 g:ஒரி - ஷஷ்டி 11. 27.9.98 ஞாயிறு - ëfIT6m)6 13. 29.9.98 செவ்வாய் - LD5)m)T 14. 30.9.98 புதன் - விஜய
16,2.10.98 வெள்ளி - ஏகாத
7. 3.10.98 g60াীি -
贯3。4.10.98 ஞாயிறு நடேச
19. 5.10.98 திங்கள் - பூர6ை 2售。7.10.98 புதன் - உருத் 22. 8.10.98 வியாழன் - கார்த் 24. 10.10.98 ভF60াীি - திருந
30。16.10.98 வெள்ளி - ஏகாத 3世。17.10.98 g60াীি F60f
சிவா
V இரவு
 
 

நேரங்களிலெல்லாம், அவர்களுக்கு மேலாதிக ஊதியமுங் கொடுக்கப்படுகிறது, நிலைமை இப்படி இருக்க அவர்கள் வேலைக் குரியவர்களிடம் பணம் பெற நினைப்பது கேவலமானது. கைக்கூலி கொடுத்தலும் பாவமான செயலாகும். கூலிவேலை செய்பருக்குப் போதிய கூலி கொடுத்தலும், கூலிக்காரன் வஞ்சகமில்லாமல் தனது பணியைச் செய்வதும் முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். சத்தியம் நித்தியமாகக் கொண்டு வாழ வேண்டும். "அரன் தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம் வீண் செயல்” என்பதை மனத்திற் கொண்டு. மனிதத் தன்மை உள்ளவர்களாக வாழ்ந்து, வள்ளுவர் காட்டிய இல்லற வாழ்க்கை வாழ்ந்து நற்கதி அடைவோமாக.
தி புண்ணியகாலம் பகல் 159 முதல் இரவு 8.23 வரை ாஷ விரதம் ாதிச் சனி வாசை விரதம் மஹாளய பகூடிமுடிவு த்திரி விரதாரம்பம் நதி விரதம் கடையிற் சுவாமி குருபூசை
விரதம் வதி பூஜாரம்பம்
நவமி விரதம் சரஸ்வதி பூஜை தசமி கேதார கெளரி விரதாரம்பம் ஏனாதிநாதர் குருபூசை சி விரதம் பிரதோஷம் புரட்டாதிச் சனி நரசிங்க முனையர் குருபூசை ரபிஷேகம் ண விரதம் திர பசுபதியார் குருபூசை திகை விரதம் ாளைப் போவார் குருபூசை, புரட்டாதிச் சனி சி விரதம் பிரதோஷ விரதம் புரட்டாதிச் சனி அருணந்தி சாரியார் குருபூசைவிஷ புண்ணிய காலம் 10.25 முதல் 3.25 வரை
ଏ୭

Page 22
டெமொழி தென்மொழி என்பவற்றில்ஆற்றல் நிறைந்தவனான மலையத்துவச பாண்டியன் மனுநூல்வழி செங்கோலாட்சி நடத்தியவன். முப்போதுஞ் சிவதரிசனம் செய்தவன். காண்டற்கு எளியவன். மிகுந்த அழகுடையவன். சூரிய குலத்தவனான சூரசேனனுடைய மகளாகிய காஞ்சன
மாலையைத் துணைவியாக்கிக் கொண்டவன்.
நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாத அவன் பல விரதங்களை அனுட்டித்தான். அசுவமேத யாகஞ் செய்யத் தொடங்கித் தொண்ணுற்றொன்பது முறை நிறைவு செய்தான். நூறாவது தடவையும் பாண்டியன் அசுவமேதயாகம் செய்து முடிப்பானாயின் தன் பதவிக்கு இடையூறு வரலாமே என்று தேவேந்திரன் அஞ்சினான். உடனும பாண்டியனிடம் சென்றான். அவனுக்குப் புத்திமதி கூறுவது போன்று தன் அபிப்பிரயாங்களைக் சொன்னான். “நீ விரும்பியது புத்திர பாக்கியந்தானே! அதைப் பெறுவதற்குப் புத்திரகாமேட்டி LLUIT G5In செய்வதுதான் பொருத்தமானது” எனறு பாண்டியனிடம் சொல்லி, அந்த யாக முறைமையையும் சொல்லிப் பாண்டியன் வழிபாட்டு முறையையும் திருப்பிவிட்டான் தேவேந்திரன். இந்திரன் வார்த்தையில் நம்பிக்கை வைத்த பாண்டியன் தன் மனைவியுடனாகிப் புத்திரகாமேட்டி யாகம் செய்யத் தொடங்கினான். யாக குண்டத்திலே நெய், பொரி சமித்து முதலியவற்றை இட்டு ஆகுதி செய்த போது அக்கினி சுவாலை விட்டெழுந்தது. அந்த வேளை பண்டியன் வலத்தோளும அவன் மனைவி காஞ்சன மாலையின்
இடக்கண்ணும் துடித்தன. ஈரேழுலகமும் மகிழ்வெய்த,
தடாதகைப் பிராட்டி
=子沅_L
 
 
 

உயார் திருவவதாரம்
லான்
சைவந் தழைத்தோங்க, பாவம் குன்ற, தருமம் தழைக்க, உலக மாதாவாகிய உமாதேவியார், மூன்று முலைகளையுடைய ஒரு பெண்பிள்ளை வடிவுடன் மூன்று வயது நிரம்பியவராகக் காஞ்சனமாலையின் மடியில் வந்திருந்தார். உடனே காஞ்சனமாலை அப்பிள்ளையை எடுத்து மார்போடனைத்து,
உச்சிமோநது, முத்தமிட்டுப் பேரானந்தம் அடைந்தார்.
இந்தப் பிள்ளையின் தோற்ற வரலாற்றை அறிந்து கொள்ளாத மலையத் துவசபாண்டியன் வருத்தமுற்றான். “புத்திர பாக்கியம் இல்லாததால் யான் புத்திர காமேட்டி யாகமல்லவா செய்தேன். எனக்குக் கிடைதிருப்பது பெண்குழந்தையாயிற்றே! அதுவும் மறறையோர் சிரிக்கக்கூடிய வகையில் உருவம் அமைந்து விட்டதே' என்று புலம்பினான். அப்போது “அரசே மகனுக்குச் செய்வது போன்று உனக்குக் கிடைத்துள்ள மகளுக்குச் செய்து தடாதகை எனப் பெயரிட்டு முடிசூட்டுவயாக, இப்பெண்ணுக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும். மனங் கலங்காதே’ என்று அசரீரி வார்த்தை கேட்டது. அசரீரியைக் கேட்ட மலையத்துவசன் பேரானந்தமடைந்தான். அன்பும் உவகையும் பொங்க, கண்களின்றும் ஆனந்தக் கண்ணிர் சொரிய, அடியார்க் கெளினாகிய சோமசுந்தரக் கடவுளை வணங்கி, யாகத்தை நிறைவு செய்து எழுந்து மனைவியொடும் மாளிகையை அடைந்தான்.
மண்டபதிருந்த அந்தணர்க்கும் ஏனையோர்க்கும்
சுவர்ண தானஞ் செய்தான். சோமசுந்தரக் கடவுள்

Page 23
கோயிலில் விசேட பூசை திருவிழா நடை பெற, வேண்டிய ஒழுங்கு செய்தான். சிறையிடப் பட்டிருந்தோரை விடுதலை செய்யும்படி பணித்தான். சிறைக் கூடங்களை இடித்து அழிக்குமாறும் பணித்தான். ஏழு வருடங்களுக்குப் பொது மக்களிடமிருந்து இறைவரி எடுக்கக் கூடாதெனவும் அறிவித்தான். அயல்தேய மன்னர்கள், சிற்றரசர் களிடமிருந்து திறை பெறுவதையும் தவிர்த்தான். சுங்கவரி பெறுவதை நீங்கி விட்டான். ஆலயங்கள் அறச்சாலைகள் சிறப்பாக நடைபெற வேண்டி ஆலோசனை வழங்கி ஊக்குவித்தான். பகை மன்னரது கால் விலங்கை அகற்றி, யானை, குதிரை தேர்ப் படைகளைப் பெற்றுச் செல்லுமாறு பணித்தான். யாவரும் தத்தமக்கு விரும்பியவற்றை எடுத்துச் செல்ல வசதியாகப் பண்டாரத்தைத் (களஞ்கியத்தை) திறந்து வைக்கச் செய்தான். எல்லோருக்கும் வேண்டிய தானங்கள் செய்யப்பட்டன. பாண்டி நாட்டோர் எல்லோரும் பேருவகையுடன்
ET600TJLJL't 60Trf.
அசரீரிச் செய்தியின் படி குழந்தைக்குத் 季—T鱼505。 start பெரிட்டுச் சாதக கன்மச் சடங்குகளை நிறைவாக்கி வளர்த்து வந்தான். தடாதகை அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுணர்ந்து, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் பயின்று. வில், வாள் முதலிய படைக்கலப் பயிற்சியும் பெற்று
6UTਨੂੰ துறையிலும் வல்லவளானாள். மலையத்துவசன் மனம் மகிழ்ந்து பிராட்டியாருக்கு முடி சூட்டத் துணிந்தான். முடி சூட்டுதற்கான மங்கல தினம் நிர்ணயிக்கப்பட்டது. எல்லாத் தேயமன்னர்க்கும் ஒலை போக்கினான். அலங்கார
வேலைகள் வேகமாக நடை பெற்றன. புண்ணிய
 

தீர்த்தங்கள் தருவிக்கப்பட்டன. அக்கினி காரியம் செய்து சிங்காசனத்தைப் பூசித்துத் திருமுடியை யானைமேல் வைத்து நகர் வலம் வந்து, தடாதகைப் பிராட்டியாரைச் சிங்காசனத்திலே எழுந்தருளச் செய்து, கும்ப தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, தேவர்கள் பூமாரி பொழிய, முனிவர்கள் வாழ்த்திசைக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, வேதம் ஒலிக்க, தடாத கைப்பிராட்டியாருக்கு முடிசூட்டி மலையத்துவசன் தன் அரச உரிமைகளை வழங்கினான். அதன் பின் வெண்குடை நிழற்ற, வெண சாமரம் வீச, தேவர்கள் பூமாரி பொழிய
வெள்ளையானை மீதேற்றிப் பிராட்டியை நகர்வலஞ்
செய்வித்து மகிழ்ந்தான். சில நாள்களின் பின்
སྡེ་ உணவுகொளல்
வாயையும் கை கால்களையும் சுத்தி செய்து கொண்டு விபூதி தரித்துப் போசனஞ் செய்ய வேண்டும். போசனம் செய்யும் போது இருகால்களையும் மடக்கி வைத்துக் கொள்ளல் வேண்டும். போசனம் பண்ணும் போது அவ்விடத்திற்கு வேண்டாத வார்த்தைகளைப் பேசலாகாது. தெற்கு நோக்கியிருந்து போசனம் செய்யக் கூடாது.
அச்சுவேலி சிவபூgரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்
NU
மலையத்துவசன் சுவர்க்கமடைந்தான். மகளாகிய
தடாதகைப்பிராட்டியார் வேண்டிய கிரியைகளை
முறைப்படி நிறைவு செய்தாள்.
பெண்ணரசியாகிய தடாதகைப் பிராட்டியார்
அறநூல் வழி அரசை நடாத்தினார். ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு ஐந்து நாழிகை இருக்க

Page 24
நித்திரை விட்டு எழுவார். செய்ய வேண்டிய காலைக்
கடமைகளை நிறைவு செய்து, சிவபூசை முடித்து,
அந்தணர் அமைச்சர்கள் சூழத் திருக்கோயில் சென்று
சோமசுந்தரரை வலம் வந்து வழிபட்டு மாளிகை
திரும்பி அத்தாணி மண்டபத்தை அடைவார்.
அநிந்திதை கமலினி எனுந் தேவமகளிர் மானிட
மகளிராகி அடைப்பபையும், பொற்காளாஞ்சியும் ஏந்த,
இலக்குமி சரஸ்வதி என்பபோர் மானிட மகளிராகிச்
சாமரை இரட்ட சேர சோழர் வழிபட அந்தணர்
அமைச்சர் முனிவரர் சூழ இரத்தின சிங்காசனத்து
வீற்றிருந்தருளுவார். இந்த வேளை சகல
செய்திகளையும் அறிந்து, ஒவ்வொன்றும் எந்த எந்த
வழியிற் தீர்வு காணப்பட வேண்டுமோ அந்த வழியில்
அதிகாரிகளைச் செல்ல வைத்து மக்களுக்கு அனுசரணை ஆவார். பின்னர் புராணங்கள், அறநூற்
செய்திகளைக் கேட்டு மகிழ்வார்.
இவ்வண்ணம் L660TITL' gluth 60)LOLLITri
திருவவதார வரலாற்றை அகத்திய மாமுனிவர்
சொல்ல ஏனைய முனிவர்கள் கேட்டு, மாமுனிவரை வணங்கி, தயாநிதியே! 'முயன்று தவஞ் செய்த
தபோதனர்களாகிய தக்கன் இமவான் என்போர்க்குப்
பிள்ளையாகப் பிறந்த உமாதேவியார் சாதாரண
மனிதனாகிய பாண்டியனுக்கு மகளாய் வந்த காரணம் யாதாகலாம்’ என்று வினவினராக அகத்திய
மாமுனிவர் சொல்லுகின்றார்.
விசுவாவசு என்னும் பெயரையுடைய ஒரு
வித்தியாதரன், வித்தியாவதி என்னும் பெயரையுடைய
பெண்ணொருத்தியைப் பெற்றான். அவள்
ஆதாரம் நாவலர் திருவிை
(22
 

உமாதேவியாரிடம் மிகுந்த அன்புடையவளாகி,
அம்மையை வழிபடச் சிறந்த தலம் எது என்று அறிந்து
மதுரை சென்றடைந்தாள். அங்கே பொற்றாமரை
வாவியிலே நீராடிச் சொக்கலிங்க மூர்த்திக்கு
வலப்பக்கத்திலே எழுந்தருளியிருக்கும்
மீனாட்சியம்மையை வணங்கினாள். தொடர்ந்து
பன்னிரண்டு மாதங்களும் பெரு விரதமிருந்து
அன்னையை இருதய கமலத்திலே தியானித்து, யாழ்
கைக்கொண்டு நரம்பொலி பின் செல்லப் பாடி
வழிபட்டு வரலானார். அன்பு வலைப்படும் அன்னை
மூன்று பிராயத்தையுடைய ஒரு சிறு பெண்குழந்தை
வடிவங் கொண்டு ஆகாயத்தில் தோன்றினார். வித்தியாவதி அஞ்சலி செய்து கொண்டிருந்தாள். மீனாட்சி அம்மையார் அவள்மீது திருக்கடைக்கண்
சாத்தி, உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார். "தாயே! உன் திருவடித் தாமரையில் நீங்காத பேரன்பு வேண்டும்; தந்தருளுக” என்றாள். அது கேட்டு மகிழ்ந்த மீனாட்சியம்மையார், ' இன்னும் என்ன வேண்டும்? கேள்’ என்றருளினார் அன்னை. "இந்தப் பெண்ணுருவாய் வந்து அடியாளிடத்து அருள் சுரந்திருக்கும்படி அருள்க’ எனறு பணிந்தாள்
வித்தியாவதி. மீனாட்சியம்மை அதற்கியைந்து, "இந்த நகரில் மலையத்துசவன் என்றொரு
பாண்டியன் பிறப்பான். நீ அவன் மனைவியாவாய். அப்பொழுது யானுனக்குப் புதல்வியாவேன்' என்று
திருவாய் மலர்ந்தருளினார். அதுவே மீனாட்சியம்மை
பாண்டியன் மகளாகப் பிறக்க நேர்ந்த வரலாறாகும்,
என்று மாமுனிவர் சொல்லக் கேட்ட எல்லோரும்
பெருமகிழ்வடைந்தனர்.
|ளயாடற் புராண வசனம்

Page 25
புலால்
உணவு உயிர் வாழ்விற்கு முக்கியமான தொன்றாகும். உணவு என்பது கிடைப்பவையா வற்றையும் உணபதல்ல; எமது உடலுக்கும் உள்ளத்திற்கும்தீமை தராத உணவுவகைகளை நாம் உட் கொள்ள வேண்டும். உணவை இருவகையாக வகுக்கலாம். தாவரங்களில் இருந்து பெறப்படும் தாவர உணவு ஒன்று மற்றது விலங்குகளில் இருந்து பெறப்படும் புலாலுணவு. இவ்விரு உணவு வகைகளிலும தாவர உணவுதான் சிறந்தது. எமது உடல் அமைப்பிற்கு ஏற்றதொன்று. விலங்குணவு
விலக்க வேண்டியதொன்றாகும்.
ஊன் உண்ணும் விலங்குகளிற்குப்பல் அமைப்பு
பிரத்தியேகமாக உள்ளது. மனிதருககு அப்படி அல்ல.
நாம் உண்ணும் உணவு வகைகளைப் பொறுத்தே மனநிலையும் இருக்கும். இராசதம், தாமதம், சாத்வீகம் என்னும் முக்குணங்கள் எம்மில் இருக்கின்றன. ஊன் உண்பவரிடை கோபமும், பகை உணர்வும் உடைய இராசதகுணம் மேலோங்கும் ஆனால் தாவர உணவு உண்பவர்களிடத்து அன்பும்
அமைதியும் உடைய சாதவீகுணம் நிரம்பி இருக்கும்.
உயிர்களைக் கொல்லாமல், ஊன் உண்ணாமல் இருப்பவனை உயிர்கள் எல்லாம் கை கூப்பித்
துதிக்கும் என்கின்றார் திருவள்ளுவர்.
செநவநீ
 
 
 

மறுத்தல்
R
கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்
தமக்குத் புண் வந்தால் அதைக் கழுவிப் தூய்மையாக்கி மருந்திட்டு அப்புண்ணைக் குணமாக்குவர். ஆனாற் பிற உயிரைவதைத்து அதன் செம்புண்ணாகிய மாமிசத்தின் வறுவலை விரும்பி உண்ணுகின்றனர். இம்படிச் செய்வது ஆறறிவு படைத்த மனிதருக்கு உகந்ததன்று. இழிவான செயலாகும்.
தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர் - அந்தோ நடுநின்றுலக நயனிலா மாந்தா வடுவன்றோ செய்யும் வழக்கு
பட்டணத்துப் LS)6T606TL Tri இறைவனிடம் "கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரம் கோள் களவு கல்லாமல்’ இருக்க அருளும் படி வேண்டுகின்றார்.
மாயீகன் என்று ஒர் அரக்கன் இருந்தான். அவன் தான் விரும்பி வடிவு எடுக்கும் ஆற்றல் உடையவன் மாமிச உணவை மிகுதியாக உண்பான் ஏதாவது மிருகங்களைக் கண்டால் அந்த மிருகத்தைப் போல் உருவமெடுத்து அந்த மிருகத்தைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பான். இவ்வண்ணம்
மாயீகன் திரியும் நாளில் ஒருநாள் மார்க்கண்டேய

Page 26
முனிவர் இருப்பிடம் வந்தான். முனிவருக்குச் சமீபத்தில் பன்றி ஒன்று நின்றது. அப்பன்றியைக் கொன்று தின்ன எண்ணினான் மாயீகன். அப்பன்றியைப் போல உருவமெடுத்து அதன் அருகிற் சென்றான். மார்க் கண்டேய முனிவர் அவன் தீய எண்ணத்தினை அறிந்து அவனைப் பன்றியாகவே இருந்து உழலுமாறு சபித்தார். மாயீகன் பன்றியாய்த் திரிந்தான்.
"காழுறு மூன்றுப்த்தலின் மாயீகனுமார்க் கண்டனான் மோழலுருப் பெற்றான் முருசேசா-வீழும் படைகொண்டார் நெஞ்சம் போல் நன் உக்றுாகா தொன்றன்
2) LLG) JAGDG GD GðiðITL LITT LIDGðILD
கொலைத் தொழில் செய்யும் கருவிகளைக் கையில் வைத்திருபபவர்களின் மனம் கொலைத் தொழிலை விட்டு வேறு எதையும்நாடாது. அது போல மாமிசம் உண்பவர் அவ்வுணவினை நாடுவதன்றி அருளை
நாடார்.
இறை அருள் பெற வேண்டி ஆயிரம் யாகங்கள் செய்ய வேண்டியதில்லை. நெய் முதலியவற்றை அவியாகச் சொரிந்து செய்யும் இந்த வேள்வியை விடச் சிறந்தது விலங்கொன்றின் உயிரைக்
கொன்றுஅதன் மாமிசத்தை உண்ணாமை,
'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று'
ஒரு விலங்கினைக் கொன்று அதன் ஊனை உண்ணுதல் கொடிய செயல் என்று எண்ணி, அவ்வண்ணம் எண்ணிய போதே மாமிச உணவை ஒருவர் உண்ணாதுவிடுவாரானால் அவருக்கு
என்றுமே துன்பமில்லை; துயர் இல்லை.
 

இல்லறவாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் அவர் தவவாழ்வு மேற் கொள்ளும் துறவி போல் ஆவார் என்கிறது
அறநெறிச் சாரம்
கொன்றுான் நுகரும் கொடுமையை உள்நினைத்து அன்றே ஒழிய விடுவானேல் - என்றும் இடுக்க ணென உண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்.
ஊன் உடம்பு ஆலயம் என்று திருமூலர் கூறியுள்ளார் என்றும், “காயமே கோயிலாக” என்று அப்பர் அடிகள் குறிப்பிட்டுள்ளார் என்றும் அறிகிறோம். இறைவன் உறைந்திருக்கும் எமது உடலைப் புனிதமாக வைத்திருக்க வேண்டுமல்லவா?
உடலை விட்டு உயிர் பிரிந்தால் அவ்வுடலைப் பிணம் என்பர். அதை அடக்கம் செய்வது இடுகாட்டில் இறவன் எழுந்தருளியிருக்கும் உடலில், மாமிசப் பிண்டங்களை இடுகாட்டில் அடக்கம் செய்வது போல வயிற்றினுள் இடுவது எவ்வளவு பாதகமாக செயல். இது தீய செயல் என்று அறிந்த அறிவுடையோர் உயிர் விட்டு நீங்கிய ஊனை உண்ணமாட்டார் என்கிறது
திருக்குறள்.
"செயிரின் தலைப் பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
தன் உடல் வீக்குதற் பொருட்டுப் பிற உயிரின் ஊனினை உண்பானாயின் எங்ங்கனம் அவன் அருள்
பெறுவான்.
மச்சஞ் சுமந்துய்ப்பவானோர் ப்பணி கொண்டான்
துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே தன்னுரன் பெருக்கற் குத் தான் பிறி தூனுண்பான்
எங்ங்ணம் ஆளுமருள்.

Page 27
அசுர குலத்துதித்த மாயை என்பவளுக்கும் காசிபமுனிவருக்கும் மகனாகப் பிறந்தான் சூரபத்மன் தந்தையாரின் உபதேசத்தை வெறுத்து மாயையின் போதனைப்படி யாகம் செய்தான். நீண்ட காலமாக வேள்வி செய்தும் இறைவன் தோன்றாததால், தன் உடற்தசைகளை அரிந்து அவியாக சொரிந்தும் குருதியை வேள்விக் குடத்தில் ஆகுதிபண்ணி அக்குண்டதுள் வீழ்ந்திறந்தான்.
அங்கு இறைவன் தோன்றிச் சூரபன்மனை
உயிர் பெற்றெழச் செய்தார். அவனுக்கு ஆயிரத்தெட்டு
அண்டங்களை நூற்றெட்டு யுகங்கள் ஆளவும் வரம்
கொடுத்தான் இறைவன்.
பெற்ற வரத்தினால் மதிமயங்கினான் சூரபன்மன். தேவர்களைச் சிறைப்படுத்தினான்; துன்புறுத்தினான்; வான் உறையும் தேவர்கள் மீன் நிறைந்த கூடையைச் சுமந்து குற்றேவல் புரிந்தனர். மச்சம் சுமக்கத் தேவர்களைப் பணித்த பழி
சூரபத்மனைச் சூழ்ந்தது.
மீனும் வடியும் வியன்தசையும் சுமந்த
வீன மதுவன்றி மீதோர் பழி சுமக்கின்
மான மழிய வருமே யது வன்றித்
தீன முறு சிறையு: தீராது வந்திடுமே
துயர் கொண்ட தேவர்கள் தம் துன்பத்தைத் தீர்த்தருளும் படி இறைவனை வேண்டினர். இறைவன் முருகக் கடவுளைத் தேவர் துயர்துடைக்கும் வண்ணம்
பணித்தார். முருகப் பெருமான்சூரனையும் அவன்
சுற்றதவரையும் அழித்தார்.
 

பொருட்களால் உண்டாகும் LLចាំ அப்பொருளைப் பேணிக் காத்தவர்கே உண்டு. அதுபோல் அருள் ஆட்சியாருக்கு உண்டெனில் ஊன்
உண்ணாதவருக்கே ஆகும்.
"பொருளாட்சி போற்றாதவர்க்கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு
ஊன் உணவில் தான் சத்துக்கள் அதிகம் உண்டு என்று சிலர் எண்ணுகின்றனர். இது தவறு. ஊன் உணவை விடத் தாவர உணவு கூடிய சத்துக்களைக் கொண்டுள்ளது. ஊன் உண்பதால் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவு தாவர உணவினால்
உண்டாவதில்லை
விலங்குணவு உண்பதனால் உடலில் பலம் அதிகம் உண்டு என்போரும் உண்டு. தாவர உணவு உண்ணும் யானையை விட விலங்குணவு உண்ணும்
மிருகங்கள் பலமாக இருக்கின்றனவா?
தீமை பயக்கும் மாமிச உணவை விரும்பி உண்ணும் மக்களை எமதருமனுடைய தூதுவர் பலரும் காணும் படியாக எரிவாய் நரகாகிய அக்கினிப் பிழம்பு நிரம்பிய நரகத்தில் குப்புறப்படுத்தி வருத்துவர் என்பர் திருமூலர்
பொல்லப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பரே.

Page 28
BiblpGib CD
திருமதி ஞானேஸ்
தமிழர் மத்திலேயே முருக வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்கள் வாயிலாக, இதனை நாம் அறியக் கூடியதாயுள்ளது.
பழந்தமிழ்ப் பேரிலக்கணமாகக் கருதப்படும் தொல்காப்பியத்திலே, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நானிலங்களுக்குமுரிய தெய்வங்களைக் கூறுமிடத்துச் "சேயோன் மேய மைவரை உலகம்' என முருகன் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் குறிப்பிடப்படுகின்றான். குறிஞ்சி நில மக்கள் வேட்டையாடுதலையே பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். இவ்வேட்டுவ வாழ்க்கை மனித இன வளர்ச்சியின் மிக முற்பட்ட நிலை. உண்வைச் சேகரிக்கும் நிலை. இது முருக வணக்கத்தின் தொன்மைக்குத் தக்கதொரு சான்றாகும். மேலும் அவனுடைய இரு சக்திகளில் ஒருவராகக் கொள்ளப்படும் வள்ளி வேடர் குலத்தைச் சேர்ந்தவரே வள்ளி என்பது தூய தமிழ்ப் பெயராக இருப்பது நோக்கற்பாலது. இது வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்ட குறிஞ்சி நில மக்களுக்கும் முருகனுக்குமிடையேயுள்ள தொடர்பினை மேலும் வலியுறுத்துவதாக உள்ளது.
சங்க இலக்கியங்களிலே காலத்தால் மிகவும் முற்பட்டனவாகக் கருதப்படுவனவற்றில் முருகன் தூய தமிழ்ப் பெயர்களாலேயே குறிக்கப்படுகின்றான்.
செவ்வேள் சேயோன், செய்யோன், சோய், வேலன்
 

நகவழிபாடும்
uவரி சோமசுந்தரம்
என்று அவன் அழைக்கப்படுகின்றான். முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள் கொள்வர். வீரம், வெற்றி ஆகிய திறன்களோடு, இளமை அழகு என்னும் பண்புகளும் பொருந்தியவனாக முருகனைப்
பண்டைத் தமிழ் மக்கள் போற்றி வந்தனர்.
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணி முக வூர்தி ஒண் செய்யோனும் என்ற புறநானூற்று அடிகளிலிருந்தும் முருகென மொழியும் வேலன்' என்ற ஐங்குறுநூற்று அடியிலிருந்தும் முருகன் செய்யோன் எனவும் வேலன் எனவும் பெயர் பெற்று விளங்கினான் எனவும் மயிலைத் தனது ஊர்தியாகக் கொண்டிருந்தான் எனவும் அறிகிறோம்.
எட்டுத் தெகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல் என்ற நூலிலே முருகனைப் பற்றி எட்டுப்
பாடல்கள் உள. அவன் அவுனரை அழித்தமை,
குருகொடு பெயரிய மால் வரை - கிரௌஞ்ச மலையை
உடைத்தமையும் பிறப்புப் பற்றிய செய்தியும் விளக்கமாகக் கூறப்படுகின்றன. அவன் தேவர் படைக்குத் தலைவனாகும் நிலையும் விளக்கப்படுகின்றது. ஓரிடத்தே மாஅல் மருகன் என்ற உறவு முறையும் கூறப்படுகின்றது.
பத்துப்பாட்டில் முதற்பாட்டாகத் தொகுக்கப் பட்டுள்ள திருமுருகாற்றுப்படை, முருகன் அடியவர் ് (5 ബഞ് முருகன் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் திருவாவினன்

Page 29
குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை, ஆகிய ஆறு படைவீடுகளுக்கும் வழிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இதிலிருந்து அக்காலத்தில் இவ்வாறு தலங்களும் முருகவழிபாட்டிற்குரிய சிறந்த இடங்களாக விளங்கின என அறியலாம். அகநானூற்றிலும் பரிபாடலிலும் பரங்குன்றிற் கோயில் கொண்ட முருகப் பெருமான் பற்றிய செய்திகள் உள. திருச்சீரலைவாய் கடற்கரையில் அமைந்துள்ளது. அதனாலேயே அலைவாய் எனப் பெயர் பெற்றது. திருச்செந்தூர் என இக்காலத்தில் வழங்கப் பெறும் இத்தலத்தைப் புறநானூறும் சிலப்பதிகாரமும். செந்தில்’ என்ற பெயரால் குறிப்பிடுகின்றன. இவ்விரு தலங்கள் மீதும் பிற்காலப் புலவர்களும் பல பிரபந்தங்களைப் பாடியுள்ளனர். திருமுரு காற்றுப்படையில் புராணச் செய்திகள் பலவும் கூறப்பட்டுள்ளன. குறமகள் வெறியாடி வழிபட்ட
நிலைம விளக்கப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்திலிருந்து பண்டைச் சோழர் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்திலே முருகனுக்குக் கோயில் இருந்த செய்தியை அறியலாம்.
அ னி மு க ச் ے=== செவ்வேள் அணிதிகழ் கோயில்’ என அது
குறிப்பிடப்படுகின்றது.
UIT 6ööTy. நாட்டுத் பஞ்சாமிர்தப் தலைநகராகிய மதுரையில் இரு வகைப்படும், முருகன் (335 TuS6) விதிப்படி சேர்ப்பது இருந்தமையை சருக்கரை என்ப5
பலாப்பழம், மாம்பழ “உவனச் சேவல்
உயர்த்தோன் கோயில்
என்ற அடியால் அறியலாம்.
 

மேற்கூறிய செய்திகளையெல்லாம் நோக்க ஆதியில் குறிஞ்சி நிலத்திற்கும் அதில் வாழ்ந்த ஒரு குழுவினருக்கும், தெய்வமாக இருந்த முருகன் காலப் (SLITö556) பெருந்தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுதலையும் முருக வழிபாடு தமிழகமெங்கும் பெருவழக்கில் இருந்தது என்பதையும் உணரலாம்.
ஆரிய நாகரிகம் தமிழகத்திலே கலந்து கலாசாரப் பிணைப்பு ஏற்பட்ட காரணத்தினால் பழந் தமிழ்த் தெய்வமாகிய முருகன் கந்தன், சுப்பிரமணியம், ஆறுமுகன், சரவணபவன், கார்த்திகேயன் என்றெல்லாம் பெயர் பெறுகிறான். வடநாட்டு ஸ்கந்தனும் தமிழ் முருகனும் ஒன்று பட்டதின் விளைவாகவே இம்மாற்றம் ஏற்பட்டது. "வெற்றி வேற் போர்க் கொற்றவை சிறுவ என்றும் மலைமகள் மகனே' என்றும் பழம் தமிழ் நூல்களிலே முருகன் குறிப்பிடப்படுதல் நோக்கற்பாலது. கொற்றவையும் முருகனைப் போலவே தமிழ் நாட்டில் விளங்கிய பழம் பெரும் தெய்வமாகும். இது, தாய்வழி உரிமையை மேற்கொண்டு விளங்கிய தமிழர்க்குரிய தெய்வமாக முருகன்விளங்கினான் என்பதற்குத் தக்கதொரு சான்றாகும். ஆரியருடைய வைதிக மரபு
N
பஞ்சாமிர்தம்
ரசபஞ்சாமிர்தம் மென்றும், பல பஞ்சாமிர்த மென்றும் பால், தயிர், நெய், தேன், சருக்கரை என்பவற்றை
இரச பஞ்சாமிர்தமாம். பால், தயிர், நெய், தேன், பற்றோடு விதிப்படி அமைக்கப்பட்ட வாழைப்பழம், ம் என்பவற்றின் தொகுதி பல பஞ்சாமிர்தமாம்.
அச்சுவேலி சிவபூணுரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்.
- اكتسب

Page 30
தமிழரிடையே வந்து கலந்து, பின்னரே அவன் சுப்பிரமணியனாகி சிவபெருமானின் திருப் புதல்வனாகவும் கொள்ளப்படலானான் என்பது
ஆராய்ச்சியாளர் முடிபு.
தமிழ் நாட்டிற் சிவவழிபாடு சிறப்புற்ற போது கொற்றவை சிவனின் சக்தியாகவும், முருகன் ஆலமர் கடவுளாகிய சிவனின் மகனாகவும் கூறப்படுகிறான். கயிலை நன் மலையிறை மகன்’ என்று
சிலப்பதிகாரத்தில் அவன் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு பழந் தமிழ் நாட்டிலே தமிழர்களாற் போற்றி மேற்கொள்ளப்பட்டு வந்த முருக வழிபாடு, அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர்தம் சமய வாழ்வில் சிறப்பான இடம் பெற்று வருவதை நாம் காண்கிறோம். தனித்தனி முருகன் கோயில்களை அமைத்து வழிபட்டு வருவதுடன் பெரிய சிவன்கோயில்களிலே முருகனுக்கென்று ஆலயம் அமைக்கும் வழக்கமும் ஏற்பட்டது.
தமிழகத்தில் மாத்திரமன்றித் தமிழர் வாழும் இடங்களிலு மெல்லாம் முருகவழிபாடு சிறப்புற்று விளங்கி வருகின்றது. இலங்கையில் உள்ள கதிர்காமம், மிகச் சிறந்த முருக வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. தமிழகத்திலிருந்தும் கதிர்காமக் கந்தனை வழிபடுவதற்கு, பக்தர் பலர் வருவது வழக்கம். செல்வச் சந்நிதி, மண்டூர் திருக்கோயில் என்பனவும் பிரசித்தி பெற்ற முருகத் தலங்களாகும். இம்மூன்று தலங்களிலும், வழிபாட்டு முறை, ஆகம முறைப்படி அமையாது, வாயைத் துணியாற் கட்டி மெளன பூசை செய்யும் முறையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முருக வழிபாடு எவ்வளவு பழமையானது என்பதனை அறிந்து கொள்ள இவ்வாலயங்களில் நிலவும் வழிபாட்டு
முறைகள் தக்க ஆதாரங்களாகின்றன.
 
 

மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலும், நல்லூர்க்
கந்தசாமி கோயிலும் அடியார் பலரை ஈர்க்கும் முருகன்
ஆலயங்களாக விளங்குகின்றன.
யாழ்ப்பாணத்திலே கந்தபுராணம்
சைவமக்கிளிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
முருகன் ஆலயங்களில் மாத்திரமன்றிச் சிவாலயங்களிலும் கந்தபுராணம் படிக்கப்பட்டுப் பொருள் கூறும் வழக்கம் நிலவி வருகிறது. இதனைப்
புராண படனம் என்பர்.
முருகன்பால் பக்திபூண்ட அடியார் அவனைப்
பலவாறாகப் போற்றித் துதித்துப் பாடியுள்ளனர்.
இவர்களுள் சந்த இசைப் பாடல்களாகத் திருப்புகழை
யாத்த அருணகிரிநாதர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் தமிழகத்திலுள்ள முருகத்தலங்கள்
மீது மட்டுமன்றிக் கதிர்காமக் கந்தன் மீது 13 திருப்பாடல்களும், திருக்கோணமலை முருகன் மீது ஒரு திருப்பாடலும் பாடியுள்ளார். கந்தரந்தாதி,
கந்தரலங்காரம், கந்தரனுபூதி முதலியவற்றையும் இவர் பாடியருளினர். குமரகுருபரசுவாமிகள் முருகன் மீது
பாடல்யாத்த இன்னுமொரு சிறந்த அடியாராவர்.
தமிழர் தம் தெய்வமாய் விளங்கி, முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகனையே, தம்
இஷ்டதெய்வமாகக் கொண்டு, அவன்மீது பாமாலை புனைந்தும், விரதம் அனுஷ்டித்தும் காவடி எடுத்தும் வழிபாடியற்றி, அவனருளை நாடி நிற்கும் அன்பர்கள் அளப்பிலர் தமிழ் மக்களின் மனங்கவர் தெய்வமாக விளங்குகின்றவன் முருகனே என்று கூறினும்
மிகையன்று.

Page 31
மாதிரி வின
ஆண்
ஆன்மா ஒன்றே உள்ளது. அதைத் உலகமெல்லாம் மாயத் தோற்றமே" என்ற
1. இராம கிருஷ்ண பரமகம்சர்
3. சங்கரர்
மருத்துவக்கலையின் முறைகளைக் கொ6 இருக்கு 2. LJJiÍ
சம்பந்தர் தந்தையாரின் யாகத்துக்கு வே urtatu (3.356), TU fio,
அவ்வினைக்கிவ்வினை
மடையில் வாழை
திருத்தாண்டகம்” பாடியவர்,
மானிக்க வாசகர்
3. திருநாவுக்கரசர்
5. யோக நெறியில் நின்று இறைவனை வழி
1. திருஞானசம்பந்தர்
3. அப்பர்
6. " என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
1. திருவலஞ்சுழி
3. திருவீரட்டானம்
7. இறைவி பக்குவர்களைச் சார்ந்து நின்று மு
1. சத்திநிபாதம்
3. D6DLuffNL UITGELO
 

ாத்தாள் - 2
G - 10
- மாதினி
தவிர்த்து வேறு ஒன்றுமே இல்லை. கானும்
கூறியவர்,
2. சத்தியசாயிபாபா
4。 குமரகுருபரர்
ண்டுள்ள வேதம்,
3. GFITLDL) 4. அதர்வம்
ண்டிய பொன்னை இறைவனிடம் பெறும் போது
2. இடரினும் தளரினும்
3. சடையாய் எனுமால்
2. திருஞான சம்பந்தர்
3. சுந்தரர்
பட்ட நாயனார்.
2. சுந்தரர்
4. LDIT600 flig56) Taggif
0" என்னும் திருப்பதிகம் பாடப்பட்ட திருத்தலம்
2. திருக்கோலக்கா
4。 சீர்காழி
தலிற் செய்யும் அருள்.
2. சாலோபமுத்தி
4. அத்துவிதம்

Page 32
8. பதினொரம் முறையில் அடங்கும் நூல்
售 நாற்
3. ஐம்பத்துமூன்று
9. கந்தரலங்காரம் பாடியவர்.
குமரகுருபரர்
3. மானிக்கவாசகர்
10. பஞ்சராத்திரம்' என்று அழைக்கப்படும் ஆ
售 சைவ ஆகமம்
3. வைணவ ஆகமம்
11. ஆகமக் கருத்துக்களைத் தமிழில் படியவர்
1. திருமூலர்
3. ஆறுமுகநாவலர்
12. சங்கம வழிபாட்டால் மிக உயர்ந்த நிலைை
售 அப்பூதி அடிகள்
3. காரைக்காலம்மையார்
13. ஆணவம் வலியிழந்து ஆன்மா மல நீக்க
ஏற்றுவதைக் குறிக்கும் திருவிழா
1. தேர்த்திருவிழா
3. கொடியேற்றத் திருவிழா
14. தேவர்களுக்காக இறைவன் நஞ்சுண்ட க.ை
திருவெம்பாவை
3. சிவராத்திரி விரதம்
15 இறைவன் அம்மையப்பனாக நடுவில் முரு
售 சந்திர சேகரர்
3. தட்சணாமூர்த்தி
 

களின் தொகை
2. முப்பத்திரண்டு
4. நாற்பத்துதொன்று
2. அருணகிரிநாதர்
4. தண்டியடிகள்
கமம்
2. சாக்த ஆகமம்
4. சமண ஆகமம்
2. இராமகிருஷ்ணர்
4、 சம்பந்தர்
ய அடைந்தவர்
2. கண்ணப்ப நாயனார்
4. விறன்மிண்ட நாயனார்
ம் பெறுதற் பொருட்டுத் திருவருளாகிய கொடியை
2. தீர்த்தத் திருவிழா
4. நித்திய பூசை
தயை நினைவு படுத்தும் விரதம்.
2. ஏகாதசி விரதம்
4. பிரதோச விரதம்
கனுடன் காட்சி அளிக்கும் கோலம்.
2. சோமாஸ்கந்தர்
4. கங்காதரர்

Page 33
அன்பு நெஞ்சங்
ஒராண்ை து பெருமிதத்துடன் T வரவேற்கிறீர்கள் s உணர்கின்றோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் எமக்குத் தெரியும்
ܓܠ ̄ . இலங்கையில் ஏனைய நாடுக
அனுப்ப ே C. NAVANe
42, Janaki Colombo
Sri Lan
Reg. No: QD/66/ News 98. g6i
48B, புளூமன்டோல் வீதி, கொழும்பு யுனி ஆர்ட்ஸ் இல் அச்சிட்டு 1998-0
 
 
 

கவல்
"ப்பதைப் புன்னகையுடன் டகிறீர்கள் என்பதை யாம் ாமரிப்புச் செலவும் பெருகும் 1தை யாம் அறிந்தது தான்.
விரும்புகின்றீர்கள் என்பதும்
ரூபா 200/- US $ 15 g6ão Gogh
ள்ள சைவ நீதி உங்களைப்
10 ஸ்ரேலிங் பவுண்
கவரி
தழ் சைவநீதி நிறுவனத்தினரால்
13. என்னும் முகவரியிலுள்ள -20 இல் வெளியிட்டப்பட்டது.

Page 34