கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1999.10-11

Page 1
சைவ வளர்ச்சி கருதிய செய்தி தரும் மாத இதழ்
MONTHLY MAGAZINE OF SAVAISM OCTOBER - NOVEMBER 1999
 
 
 

சைவந்தி
SAIVANEETHI

Page 2
6O 6-6
பொருளடக்கம் 1. சைவாலயங்களும் சைவாதீனங்களும்.
- - ஆசிரியர் .
2. தேவார அருள்முறைத் திரட்டு - அருளது நிலை.
- உமாபதி சிவாசாரியார்
3. வாழ்த்துரை.
- சி. ரகுநாதபிள்ளை .
| 4. இலங்கை மெய்கண்டார் ஆதீனத் தாபகர்.
- சித்தாந்த கலாநிதி பூரீ க 5. முதற் குருமகா சந்நிதானம்.
- வி. குமாரசிங்கம் . 6. இலங்கை மெய்கண்டார் ஆதீன இரண்டாம் குரு
- இ. நகுலேஸ்வரராசா 7. வவுனியாவில் மெய் கண்டார் ஆதீன எதிர் காலப் - க. சீனிவாசகம் . 8. ஈழத்தில் சைவ ஆதினங்கள்.
- வித்துவான் வ. செல்லை 9. நான் கண்ட சிவத்தொண்டர்.
- சைவ நன்மணி நா. செல் 10. விசுவரூப மூர்த்தி.
- நா. கதிரவேற்பிள்ளை .
11. சைவ வினாவிடை . தமிழ் வேதவியல்.
- ஆறுமுகநாவலர் . ། 12. மெய் கண்டசந்தானம்.
- க. பரஞ்சோதி .
13. நினைவிற் கொள்வதற்கு. . 14. சைவத்தமிழ் வரலாற்றில் ஆதீனங்களின் பங்களி - இராஜேஸ்வரன் . 15. திருவெண்காடு. - பண்டிதர் ச. சுப்பிரமணி. 16. திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் பதிகம் திருவெ 17. சிவஞான போதம் - மெய்கண்டதேவர் . 18. திருவாசகச் சிந்தனை - கோயில் முத்த திருப்பதிக - பண்டிதர் சி. அப்புத்துை 19. நமிநந்தியடிகள் நாயனார்.
- சிவ. ச ண்முகவடிவேல். 20.மாதிரி வினாத்தாள்.
- நாமர் . 21. சைவ சமய அறிவுப் போட்டி . சைவ நீதி இதழில் வரும் கட்டுரைகளிலு ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்
-— —— = — = -
 
 
 

பம் . . . . . . . . . . . . . . . . . . • • • • • • • • • • • • • • • 2O
ள்ள கருத்துக்களுக்குக் கட்டுரை
- இதழ் நிர்வாகிகள் ノ

Page 3
6
"மேன்மைகொள் சைவநீத
GODINEF
மலர் 3 பிரமாதி ஐப்பசி சைவசமய வளர்ச்சி
கெளரவ ஆசிரியர்
ஞானசிரோமணி 60) (FG) /// சைவப்புலவர்மனி, வித்துவான்
திரு. வ. செல்லையா ைெ சவத்தில் Mr. W. Chellaiah சைவாதீனமுமேயாகு
நிர்வாக ஆசிரியர்
திரு. செ. நவநீதகுமார் Mr. C. Navaneethakumar
பதிப்பாசிரியர் திரு. பொ. விமலேந்திரன் Mr. P. Vimalendran Unie Arts (Pvt) Ltd Tel.: 330195, 478133 E-mail: uniearty (@slt,lk
மதியுரைஞர் பண்டிதர் ச. சுப்பிரமணியம் Pandit S. Subramaniyam
திரு. பொ. பாலசுந்தரம் ,
Mr. P. BalaSundaram
Trustee Sri Waratharaja Vinayagar Temple, Kotahena
திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா சட்டத்தரணி Mr. Rajarajeswaran Thangaraja
Attorney-at-Law
திரு. கு. மகாலிங்கம் Mr. K. Mahalingam
Sivayogaswami Trust Fund
திரு. அ. கந்தசாமி Mr. A. Kandasamy Chairman, U.P. S.
42, Janaki Lane, Colombo 4.
பாலிக்கின்றான் ஆ அருளெளி பரப்புகின் கைகூப்பிச் சிரம் தா குருமுதல்வரையும் க மலிந்தவர் வேடமு! சிவஞானபோதம் நம நமக்கு ஆல குருமுதல்வரையோ ஆதீனங்கள் தோன் இரண்டு ஆதீனங்கள் ஈடுபட்டுக் கொண் அறிந்திருப்பார்கள். வவுனியாவில் நிை ஆதீனத்தையும் அ அறிந்திருப்பார்கள்.
ஆவணி மா வெளியிடப்பட்டது. ஐ வெளிவருகிறது. இ ஆதீனங்களும் செt உணர்ந்து பயன் பெற நடாத்தி உதவுகிறார் வேண்டும். ஆதீனத் அங்கு பரமாச்சா நன்னெறிப்படுத்துகி மெய்ஞான வழி நிற்கி வேறெதுக்கும் அடிL வளருகிறது. இதனை
 

O
JLDLLJLh
- விளங்குக உலகமெல்லாம்'
வங்தி
கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 7
லயங்களும் சைவாதீனங்களும்
இருகண்களாக விளங்குபவை சைவாலயமும் ம். ஆலயத்தில் இறைவன் எழுந்தருளியிருந்து அருள் தீனத்தில் குருமுதல்வர் பரமாச்சாரியாராக வீற்றிருந்து றார். ஆலயத்தைக் கண்டதும் அரன் என்று நினைந்து ழ்த்தி வணங்க வேண்டும். சிவவேடந் தாங்கியிருக்கும் ரங்குவித்துத் தொழ வேண்டும். இதனை 'மாலறநேயம் ம் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே” என்று க்கு எடுத்துக் கூறுகிறது. பத்தை வணங்கிப் பழக்கமுண்டு. ஆதீனத்தையோ வணக்கம் செய்து பழக்கமில்லை. இந்தியாவிலே பல றிச் சைவப் பணிபுரிந்து வருகின்றன. இலங்கையில் T இரண்டு தாசப்தங்களுக்கு முன் தோன்றிச் சேவையில் டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பலரும் இதனை 1996 ஐப்பசி மாதத்திலிருந்து மெய்கண்டார் ஆதீனம் லயாக் விருந்து சைவச் சேவை புரிந்து வருவதால் தன் சேவைகள் பற்றியும் இங்குள்ள மக்கள் ஒரளவு
தச் சைவநீதி நல்லையாதீனச் சிறப்பிதழாக ப்பசி மாத சைவநீதி மெய்கண்டார் ஆதீனச் சிறப்பிதழாக தனைப் படித்து இலங்கையிற் சைவச் சேவையை இரு ய்து வருவதை அனைவரும் அறியமுடியும். அதனை முடியும். ஆலயங்களிச் சிவாச்சாரியார் பூசாகிரியைகளை இவர் திருமணம் புரிந்தே இக்கருமத்தைச் செய்தல் தில் பூசை வழிபாடுகள் உண்டு. அது ஆத்மார்த்தமனவை. ரியார் ஞான போதனை செய்து மக்களை றார். பரமாச்சரியார் துறவு பூண்டு உலகப் பற்றைத் துறந்து றார். இவர் ஒரு வீரத்துறவியாவர். சைவநீதிக்கன்றி அவர் பணியமட்டார். இவர்கள் நெறியிலேயே சைவ சமயம் Tச் சைவ மக்கள் மனங் கொள்ள வேண்டும்.

Page 4
65615
- PD LDIITLI
அருள் என்பது இறைவனோடு பிரிப்பின்றி, அத்துவிதமாய் நிற்கும் அருட்சத்தி. நிலை என்பது நிற்கும் இயல்பு. அருளது நிலை என்பது இறைவனோடு பிரிப்பின்றி நிற்கும் அருட்சத்தியின் இயல்பு என்று பொருள்படும் ; அதாவது ஆணவமலத்தால் பிணிப்புண்டிருக்கும் உயிரினது நிலையை நோக்கி இரங்கி, அம் மலப்பிணிப்பை நீக்குதற்கு ஏதுவாகத் தொழில் செய்யும் இயல்பு. உலகமெல்லாம் ஒடுங்கியிருக்கும்போது சிவனிடத்து ஒடு ங்கியிருக்கும் அருட்சத்தி, சற்றே அவனிடமிருந்து பிரிந்து, உயிரினுடைய மலப்பினிப்பை நீக்கவேண்டுமென்று பொதுவாக இரக்கம் கொண்டபொழுது பராசக்தி என்று பெயர் பெறும். மாயையினோடு சேராத இந்தப் பராசக்தி உயிரினுடைய பக்குவத்தை அறிந்து தொழில் செய்யத் தொடங்குதற்கு மாயையினோடு சேரும்பொழுது ஆதிசத்தி அல்லது திரோதான சத்தி என்ற பெயர்பெறும். இந்தத் திரோதானசத்தி மறைப்புத் தொழிலைச் செய்வதினாலே திரோதமலம் என்ற பெயரும் பெறும். இந்தத் திரோதானசத்தியிலிருந்து இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்திகள் பிறக்கின்றன. இந்த மூன்று சத்திகளாலும் இறைவன் உயிரின் பொருட்டுப் படைத்தல், காத்தல், அழித்தல்களாகிய முத்தொழில்களையும் சங்கற்ப மாத்திரையானே செய்கின்றான். இச்சத்திகளே உயிரினுடைய வேட்கை, அறிவு, செயல்களுக்குத் தாரகமாயிருந்தது, அது உலகில் எத்தொழிலையும் செய்தற்குத் துணைபுரிந்து வருகின்றன.
ஆசிரியர் மேலை அதிகாரத்தில், உயிர் மலப்பிணிப்பினின்றும் நீங்கிப் பேரின்பம் அடையும் பொருட்டுச் செய்யத்தகும் தவ முயற்சியைக் கூறி, இந்த அதிகாரத்தில் அம் மலப்பிணிப்பை நீக்கி ஜந்தொழில் செய்யும் அருட்சத்தியின் இயல்பைக் கூறுகின்றார். இதனால் இவ்வதிகாரத்தினது இயைபு இனிது விளங்கும்.
முதலாவது பாட்டு இறைவன், அறநெறியில் ஒழுகும் மாந்தருக்கு அவர்கள் அறியும் தரம் அறிந்து அருளால் அறிவிக்கின்றான் என்று கூறுகின்றது
 
 

நிலை
தி சிவம் -
2-வது பாட்டு. திரோதமல வயப்பட்டுத் தன்னை அறியாதிருக்கும் மாந்தருக்கு அறிவு சற்று விளங்கும்படி அவர்களது கிரியாசத்தியை எழுப்புகின்றான் என்று கூறுகின்றது. 3-வது பாட்டு திரோதமல வயப்பட்ட மாந்தருக்கு அறிவு விளங்கும்படி இறைவன் அவர்களுடைய உள்ளத்தில் 96 T6OT நடனம் செய்து கொண்டிருத்தலைக் கூறுகின்றது, 4-வது பாட்டு, திரோதமல வயப்பட்ட மாந்தருக்கு அவர்கள் அடைகின்ற துன்பத்தினாலே மயங்கினும், முன்னையினும் சிறிது அறிவு விளங்கப்பெற்று, தானே அத்துன்பத்தை நீக்குதற்குத் தாரகமாயுள்ளானென்று தன்னை நோக்கின பொழுது, இறைவன் அவர்களைக் கண்டு 'அஞ்சாதே ! நம்மிடம் வா’ என்று சொன்னதாகக் கூறுகின்றது 5-வது பாட்டு. திரோதமல வயப்பட்ட மாந்தர் முன்னையினும் சிறிது அருளொளி விளங்கப்பெற்று. தங்கள் உள்ளத்தில் இறைவன் இருப்பதை ஐயுற்று உணர்ந்தபொழுது இறைவன் அவர்களோடு அத்துவிதமாய்க் கலந்து நிற்றலை அறிவித்ததாகக் கூறுகின்றது 6-வது பாட்டு, திரோதமல வயப்பட்ட மாந்தர் தங்கள் துன்பத்தை நீக்க இறைவனே தாரகமாயுள்ளவனென்று தெளிவாய் அறிந்ததாகக் கூறுகின்றது. 7-வது பாட்டு. அங்ங்னம் இறைவனே தாரகமாயிருக்கின்றானென்று அறிந்த மாந்தர், அவனைத் தொழ உயரிய வாழ்வைத் தாங்கள் அடையலாமென்று அறிந்ததாகக் கூறுகின்றது 8* வது பாட்டு, அங்ங்ணம் இறைவனே தாரகமென்று தெளிவாயறிந்த மாந்தருக்கு, இறைவன் அவர்களது திரோதமல மயக்கத்தை நீக்கி அவர்களுடைய சிந்தையைத் தெளியச்செய்து சிவலோக நெறியை அறிவித்ததாக முடிவிற் கூறுகின்றது. இதனாலே அடுத்த 5-வது அதிகாரத்துக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாயிற்று. இந்த " அருளது நிலை ப் பாட்டுக்கள் மாந்தர் முறையே ஒன்றின் பின் ஒன்றாய்ச் சிறிது சிறிதாகப் படிமுறையில் திரோதமல மறைப்பினின்றும் நீங்கிச் சிவலோகம் அடையும் நெறியை அறிந்ததாகக் கூறுதலை நோக்குக.
நன்றி : தேவார அருள்முறைத்திரட்டு

Page 5
ចាបថាfur ៣លថ្វាយ ១]បr
ចាrណ្ណ
- சி. ரகுநா
இலங்கை மெய்கண்ட ஆதீனம் இலங்கையில் சைவச் செந்நெறியைக் கடந்த இருபத்தேழுவருடங்களாகப் பாதுகாத்து வளர்த்து வருவதை அனைவரும் அறிவர். காஞ்சிபுரம் மெய்கண்டார்தீன அன்றய குரு முதலவரால் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வாதீனம் தொண்டர் என்று சிறப்பாக அழைக்கப்பட்ட காரைநகர் அருளம்பலவானரை முதலாவது குருமுதல்வாக் கொண்டு இயங்கிவந்தது. அவர் ஆதீனத்தைத் திருக்கேதீஸ்வரம் திருமடத்தில் வைத்துச் சைவச் சேவையை ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்துக்குரிய சேவையை வித்துவான் திரு. வ. செல்லையாவை ஆதீன அமைப்பாளராக நியமித்து அங்கும் ஆதீனச் சேவை விரிவு படுத்தினார்கள். யாழ்ப்பாணத்தில் நல்லையாதீனம் முன்னர் சேவையை நடாத்திவர, மெய்கண்டார் ஆதீனமும் தன் சேவையைச் தொடங்க இரு ஆதீனங்களும் முரண்பாடு இல்லாது தனித்தனியே சமய சேவையில் சிறந்து விளங்கின. நல்லையாதீன முதல்வர் பிரசங்கவாருதியாவர். இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் போல திருமுறை இசைவழிநின்று பெருஞ்சேவையாற்றியது நல்லையாதீனம் இலங்கை மெய்கண்டார் ஆதீனகுரு முதல்வர் சைவசித்தாந்த பிரசண்டமாருதம் ஆவர். சைவத்தின் இருகண்கள் என்று சொல்லப்படும் திருமுறைகளும் மெய்கண்ட சாத்திரங்களும் இக்காலத்தில் நன்குவளர்க்கப்பட்டன. சைவ
நன்மக்கள் நன்கு பயன்பட்டனர் என்று சொல்ல
முடியும்.
 

சு அதிபர் அவர்கள் வழங்கி
ந்துரை
தப்பிள்ளை -
1990 இல் மெய் கண்டார் ஆதீனகுருமுதல்வர் சமாதிப் பேறடைய அதன் பொறுப்பு வித்துவான் செல்லையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னுடன் சைவாசிரி யாகாலாசாலையில் பயின்ற சைவ சித்தாந்த கலாநிதி, திரு கணபதிப்பிள்ளையை இரண்டாங்கு குரு முதவராக நியமித்து மெய்கண்டார் ஆதீனத்தை மீள் ஸ்தாபிதம் செய்து சிறப்புற நடாத்தி வந்தார். இந் நிலையில் யாழ் மக்களின் இடம் பெயர்வு நிகழ 1996 ஐப்பசித் தீபவளித் திருநாளன்று வவுனியாவில் ஆதீனம் நிலை கொண்டு தன் சேவையைத் தொடருகிறது. மெய்கண்டார் ஆதீனம் வவுனியாவில் பல வகைப்பட்ட சைவத் சேவையை ஆற்றிவருகிறது. மாணவர்களுக்குச் சமய பாடங்களில் பயிற்சியளித்தல், ஆலபங்களில் பஞ்சபுராணம் ஒதுதலை நெறிப்படுத்தல் சமய விழாக்களை நடாத்தல், முதியோர் நலன்பேணல் சைவ நூல்களை வெளியிடல் என்பன ஆதீனம் செய்துள்ள பணிகளாகும். இவற்றை நாம் போற்றி ஆதரவளித்தல் வேண்டும். வவுனியாவில் ஆதீனம் இருந்து செயற்படுவதற்கு வேண்டிய காணிநிலம் கட்டிடம் என்பனவற்றைச் சைவ நன்மக்களாகிய நாம் கொடுத்துதவ முன்வர வேண்டும். ஆதீனம் தன் பணியைச் சிறப்பாக ஆற்றிவளர வேண்டும்மென்று இறைவனை வேண்டி எனது வாழ்த்துரையை
மனநிறைவோடு வழங்குகின்றேன்.
"வாழ்க சீரடியாரெல்லாம்"

Page 6
இலங்கை மெய்கண்டார் 8 தொண்டை மண்டல ஆதீன (
ஞானப்பிரகாச தேசிக
சைவசித்தாந்த கலாநிதி பூ (மெய்கண்டார் ஆதீன ஒய் சீலத்திரு சுவாமிகளின் பிள்ளைத் திருநாமம் வித்துவான் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் என்பதாகும். தருமபுர ஆதீனப்பல்கலைக் கல்லூரி முதல்வராக விளங்கியவர். பின்னர் காஞ்சிமெய்கண்டார் ஆதீன 229 ஆவது குரு மூர்த்திகளாக விளங்கினார். இவர்கள் திருமுறைகள் சித்தாந்த சாத்திரங்கள் சிலவற்றிற்கு அரிய உரை கண்டுள்ளார்கள்.
சித்தாந்த சாத்திரத்தில் உண்மை விளக்கம் என்பது மெய்கண்டாரின் நேர்மாணவர் மனவாசகங் நடந்தாரால் இயற்றப் பெற்றதாகும்.
ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? வினை ஏது? நான் ஏது? நீ ஏது? நாதன் நடம் ஏது? அஞ்செழுத்து ஏது? பேரின்பம் ஏது? என்பன வற்றிற்கு மெய்கண்டார் கூறும் விடைகளைக் கொண்ட அரிய நூலே உண்மை விளக்கம்.
உண்மை விளக்கத்தில் மாணாக்கர் "குருநாதரே! என் வடிவத்தைக் காட்டினீர், சிவரூபத்தைக் காட்டுவீராக” எனக் கேட்க ஆசிரியர் "கண்களுக்குக் கதிரவன் நின்று காட்டி உதவுவது போல, நாம் உன் உறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்திடுவோம்” என்கின்றார். இதனை விளக்கி உரை எழுதிய சுவாமிகள் சிவஞான போதம் சித்தியார், சிவஞான முனிவரின் சிற்றுரை, பேருரை, திருமந்திரம் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டு விளக்கியுள்ளார்கள்.
எழுத்துக்கள் எல்லாவற்றிலும் அகர உயிர் நிற்கின்றது. அதுபோல யாம் எல்லா உயிர்க்கும் உயிராய் இருக்கின்றோம் எனத் திருக்குறட் கருத்தினை உண்மை விளக்கமும் உரைப்பதனை பின்வரும் எடுத்துக் காட்டுக்களால் விளக்கியுள்ளார்.
'அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றால் போல் மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம்” உண்மை விளக்கம் 'அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல்”
- சிவஞானபோத வெண்பா
 
 
 

நதீனத் தாபகராகிய காஞ்சி நருமகா சங்ங்தானம் சீலத்திரு ரமாசாரிய சுவாமிகள்
ரீ க. கணபதிப்பிள்ளை வு பெற்ற குருமுதல்வர்)
'அக்கரங்கள் தோறும் சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனும் சேர்ந்தே"-சிவஞான சித்தியார் 292 'அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகர் இல் இறை நிற்கும் நிறைந்து'- திருவருட்பயன் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்.
உண்மை விளக்கம் "புதல்வா' என்கின்றது. இதனை விளக்கும் போது "தெரிந்த குருமுதல்வர் உயர்சிவ ஞானபோதம் செப்பினர். பின்பு அவர் புதல்வர் சிவஞான சித்தி விரித்தனர்” என்னும் சிவப்பிரகாசப் பகுதியை எடுத்துக்காட்டி துகளறு போதமும் தருமை ஆதீனத்துச் சம்பிரதாய தீபமும் கூறுகின்ற பின் வரும் செய்யுள்களை முறையே எடுத்துக்காட்டியுள்ளார். "கருவேலை தன்னைக் கடப்பர் உலகில் மருவாத இன்பத்துள் வைத்த - குருவின் அடியார் அடியார் அடியார் அடியார் அடியாரைச் சார்ந்த அவர் - துகளறு போதம் "குருவே உபதேசம் கூறென் குருவின் குருவின் குருவின் குருவின் குருவின் குருவின் குருவின் குருவின் குருவின் குருவின் உபதேசம் சொல்வேன் கேள்”
-சம்பிரதாயதீபம்காஞ்சி மெய்கண்டார் ஆதீன 229 ஆம் குருமூர்த்திகளின் நூல்கள் உரைகளை மெய்கண்டார் சந்தான குருமரபுக்கு ஏற்றவாறு உபதேசிப்பதே இலங்கை மெய்கண்டார் ஆதீனத்தின் அடிப்படைக் குறிக் கோளாகும். அது நிறைவேறத் திருவருள் துணை புரியுமாக.
“ஒளியில் இருள் அடங்கி ஒளியாய் நிற்றலைக் கதிரோன் ஒளியில் உலகிருள் அடங்கி ஒளியாய் நிற்றலால் அறிக. அவ்வாறே ஆணவ இருள்
ஞான ஒளியில் அடங்கி, அந்த ஞான ஒளியாகியே
நிற்கும்' என்பதும் சுவாமிகளின் உரை விளக்கமாகும்.

Page 7
முதற்குரு மகா ச ஞானப்பிரகாசத் த
- திரு. வி. (
இலங்கையில் மெய்கண்டார் ஆதீன முதலாவ பதவியேற்றவர் சீலத்திரு ஞானப்பிரகாச தம்பிரான் பரிபூரணமடைந்தார். இவரின் சமாதி கீரிமலையிலுள் சுவாமிகளின் இயற்பெயர் அருளம்பலம். பிறந்து வாழந் இளமை தொடங்கிப் பொதுச் சேவையில் ஈடு அழைக்கப்படலானார். ஞானநாட்டம் மிக்கவராக விளங் உலகியல், அரசியல் அறிவும் நிரம்பியவர். தர்க்கித்து உண்மைக்கு அர்ப்பணிப்பவராகவும் விளங்கினார்.
ஞான விசாரணையில் பெரிதும் ஈடுபாடு செ நிகரற்றவராகத் துலங்கினார்.
வழிபாடு இரு வகைப்படும். ஒன்ற புறவழிபாடு, ஈடுபாடும் குருவருளும் தேவை. புறவழிபாட்டிற்கு புறவழிபாடு பக்திமார்க்கமாகும். அதாவது கிரியாவதி.
ஞானவதி அந்தரியாகம் எனப்படும் அந்தரியாக
முதலிய எண்வகைப் பூக்கள் அவசியமாகும். அகச்சு
கிரியாவதியிலும் நல்லறிவு பெற்ற சுவாமிகள் ஆலய நேருக்குநேரே எடுத்துரைப்பதிலும் எழுத்திலே எழுதுவத
மெய்கண்டார் இதழ்களிலே காணலாம்.
 

சுங்தானம் சீலத்திரு hUTរ៉ា បារាំងចាr
குமாரசிங்கம் -
து குருமகா சந்நிதானமாக 1972 சித்திரைச் சித்திரையிலே சுவாமிகளாவர். 1990 சித்திரைப் பரணித் திருநாளன்று 1ளது. 18 ஆண்டுகளாகக் குருபீடாதிபதியாக விளங்கிய த இடம் யாழ்ப்பாணம் காரைநகர்.
பட்டமையால் அனைவராலும் தொண்டர் என அன்பாக கிய சுவாமிகள் வேதாந்த அறிவும், சைவசித்தாந்த அறிவும், உண்மையை நிறுவுவதிலும் அதன் பொருட்டுத் தம்மையே
ாண்ட சுவாமிகள் பிறர்க்கும் அதனை வழங்குவதிலே
மற்றது அக வழிபாடு. அகவழிபாட்டிற்கு ஞானசாஸ்திர ஊர்தோறும் பற்பல திருக்கோவில்கள் ஏற்பட்டுள்ளன. அக வழிபாடு ஞானமார்க்கமாம். இது ஞானவதி எனப்படும். பூசைக்கு அன்பு, அறிவு, தவம், கொல்லமை, பொய்யாமை த்தமே ஞானவழிபாட்டுக்கு அத்திபாரம். ஞானவதியிலும் விழாக்களிலே கிரியாவதியிலே ஏற்படும் தவறுகளை நிலும் சிறந்து விளங்கினார். இதனை அவர்கள் வெளியிட்ட
5

Page 8
இலங்கை மெய்கண்டார் முதல்வரும் ஆதி
- இ. நகுலே6
(வவுனியா வடக்கு சைவ சமய பாட ஆசிரியரு
இலங்கை மெய்கண்டார் ஆதீன குருமுதல்வர் 1990 சித்திரை பரணியில் சமாதிப் பேறடைந்தார். அன்னாரின் தீபழசையன்று வைத்திய கலாநிதி முருகவேள் பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் ஆதீனத்தின் எதிர்காலம் பற்றி நிர்ணயம் செய்ய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆதீனக் குருமுதல்வரை நியமித்து ஆவன செய்யும் பொறுப்பு அதன் அமைப்பாளராக இருந்து செயற்பட்ட வித்துவான் (GGF66DD6) LLUIT அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதீனத்துக்குத் தகுந்த ஒரு குருமுதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இரு வருடங்கள் கழிந்தன. அதுவரை ஆதீனப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆதீனமும் செயல் இழந்து விட்டது. வித்துவான் அவர்களின் அயரா முயற்சியின் பயனாக அவருடன் சைவ ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்ற சகபாடி சைவசித்தாந்த கலாநிதி திரு. க. கணபதிப்பிள்ளை வாய்க்கப் பெற்றார். அவர் சைவாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று வெளியேறி ஆசிரியப் பணியை மேற்கொண்டவர். பேராதனைப் பல்கலைக் கழக வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற் கொண்டு கலைமாணி (B.A.)ப்பட்டம் பெற்றார். பின்னர் இந்திய பேரறிஞர் துணைக் கொண்டு சைவ சித்த சாஸ்திரங்களில் பயிற்சியும் பெற்றார். அதில் மேலும் ஆய்வுகளை மேற் கொண்டு இந்தியாவில் சைவசித்தாந்த கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றார். நல்லை ஆதீனத்தின் தலைமைப் புலவராகி மகாவித்துவான் பட்டமும்பெற்று அவ்வா தீனத்திலேயே சைவசித்தாந்த சாஸ்திரங்களை ஞான போதனையாகவும் நடாத்தினார். அவரின் சைவ சித்தாந்த வகுப்பில் யாழ்ப்பாணத்தின் L6) LITETë களிலிருந்தும் வந்து பெருந்
 
 
 

ஆதீன இரண்டாங் குரு ன மீள்தாபகரும்
ஸ்வரராசா - ம் ஆதீன வெளியீட்டு பிரதம ஆசிரியரும்)
தொகையானோர் பாடங் கேட்டுச் சாஸ்திர அறிவையும் பெற்றனர்.
யாழ்ப்பாணத்தின் முதியவர், இளைஞர் எனப் பலர் அவர் மாணவர்களாகினர். அவர் ஒய்வு பெற்றதும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் சைவசித்தாந்த வகுப்புக்களை ஆரம்பித்து நடாத்தி வந்தார். அதில் துணையாசிரியராகச் சைவப்புலவர் திரு.மு. திருஞானசம்பந்தபிள்ளையையும் நியமித்தார். இக்காலத்திலேதான் வித்துவான் செல்லையா அவர்களின் நாட்டம் சைவ சித்தாந்த கலாநிதி அவர்களின் மேல் வைக்கப்பட்டது. அவர் நடாத்திய வகுப்புக்களில் தானுங் கலந்து அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவர்கள் மூலமும் தூண்டுதல் விடுத்தார். சம்மதம் கொடுக்க மறுத்து விட்டார். தனக்கு இவ் வகுப்புடன் சைவப் பாதுகாப்புச் சபை ஒன்றின் சேவையுமுண்டு. சைவசித்தாந்த சாஸ்திரத்தில் மேலும் ஆய்வுகள் உண்டு என்று கூறி ஆதீனப் பொறுப்பை ஏற்க முடியா தென்றே கூறிவிட்டார்கள். வித்துவானும் தன் முயற்சியில் தளரவில்லை. அயராது முயன்று வந்தார். கரைப்பவர் கரைத்தால் கல்லுங்கரையும் மன்றோ" மீண்டும் மீண்டும் வகுப்பில் கலந்து ஒருநாள் வகுப்பில் 5 நிமிடம் ஒதுக்கித் தர வேண்டு மென்று ஒரு சிறு வேண்டுகோள் செய்து சொற்பொழிவை ஆற்றினார். அவரின் உருக்கமான வேண்டு கோளில் மாணவர்களும் ஈடுபாடு கொண்டு நல்ல பணிக்கு உதவும்படி தம் குருவை வேண்டி நின்றனர். குருவும் இணங்கினார். ஆதீனத்துக்கும் நல்ல ஒரு குரு முதல்வர் வாய்க்கப் பெற்றார்.
ஒரு நல்ல சுபவேளையில் கஸ்தூரியார் வீதி ஆலயத்தில்

Page 9
பூசை வழிபாட்டுடன் ஆதீன சம்பிர தாயப்படி பரமாச்சாரியாராகப்பட்டம் சூட்டப் பட்டார். யாழ்ப்பாணத்தில் மெய் கண்டார் ஆதீனப் பணி மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குருமுதல்வர் ஆணைப்படி வித்துவான் செல்லையா அவர்கள் மெய்கண்டார் ஆதீன மீள்தாபராக ஆக்கப்பட்டார். குருமுதல்வர் அருளுரையையும் ஆரம்பித்தார். ஆலயங்களிலும் சைவச் சபைகளிலும் அவர்களின் அருளுரை பிரபல்யமாகியது. அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சைவசித்தாந்த சாத்திர போதனைகளை புற நிலைக்கற் கைநெறியாக்கி வகுப்புக்களை நடாத்தி வந்தது. அதில் ஆதீனத்தின் சார்பாக அழைக்கப்பட்டு அவ்வகுப்புக்குத் தலைமை தாங்கி அருளுரை யாற்றினார்கள். இங்ங்னமாக ஆதீனம் செயற்பட்டு வருங்காலத்து யாழ்ப்பாண மக்களின் இடம் பெயர்வும் நிகழ்ந்தது. யாவரும் தங்கள் இஷ்டப்படியே இடம் தேடிச் செல்லக் குருமுதல்வர் கொழும்புக்குச் செல்ல வித்துவான் செல்லையா வவுனியாவுக்கு வந்து சேர்ந்தார்.
வவுனியாவில் அங்குள்ள சைவத் தாபனங்களின் அழைப்பை ஏற்றுச் சமயப் பணிகளில் வித்துவான் செல்லையா அவர்கள் இணைந்து கொண்டார்கள். இதனைப் பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிந்த ஆதீனக் குருமுதல்வர் அத்தாபனங்களூடாக வித்துவான் அவர்களுடன் தொடர்பு கொண்டு கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு வந்து சேர்ந்தார். அவரின் மகள், மருமகன் குடும்பத்துடன் தங்கியிருந்து மீண்டும் வித்துவானுடன் தொடர்பு கொண்டு இங்கு ஆதீனப் பணியை ஆரம்பிக்குமாறு பணித்தார். 1996 ஐப்பசி தீபா பளி நன்நாளிலே மெய்கண்டார் குருபூசையும் ஆதீனக் குரு முதல்வருக்கு வரவேற்பு விழாவும் ஆதிவிநாயகர் ஆலயத்தில் அதன் பரிபாலன சபைத் தலைவர்
 
 

திரு. தில்லைநாதன் (தில்லை) அவர்கள் மூலம் நடாத்தி வைக்க வித்துவான் ஆவன செய்து வைத்தார். வவுனியா மக்களுக்கு அன்று ஆதீனம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் இன்றுவரை ஆதீனம் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளை வவுனியாவில் ஆற்றி வருவதை யாவரும் நன்கு அறிவர். சைவ சிரியர்களுக்குச் சமய பாடத்தில் கருத்தரங்குகள் மூலம் பயிற்சியளித்தல், மாணவர்களுக்குமணனப் போட்டி வைத்துப் பரிசளித்தல், சைவ நூல்களை எழுதி, தொகுத்து வெளியிட்டு மலிவு விலையில் வழங்குதல் மெய்கண்டதேவர், நாவலர், ஆதீன முதலாங்குருமுதல்வர் முதலானவர்களின் குரு பூசைகளை மகேஸ்வர பூசையுடன் நடாத்துதல். சைவச் சேவை புரிந்து வருவோர்களைக் கெளரவித்துக் கெளரப் பட்டம் வழங்குதல். முதியோரின் நலத் திட்டங்களை வகுத்து அவர்களுக்குதவுதல் என்பன ஆதீனப் பணிகளிற் சிலவாம்.
இங்ங்னமாக நன்கு ஆதீனம் சேவை யாற்றிவரும்போது இரண்டாங் குரு முதல்வர் உடல் நலக் குறைவால் ஒய்வு பெற்றார். அவரில்லாக் குறையை மீள்தாபகர் வித்துவான் ஆதீன பரிபாலனத் தலைவராக இருந்து எக்குறையும் நேராது செவ்வனே பணியாற்றி வருகிறார். தகுதியான ஒரு வரைக் குரு முதல்வராக ஆக்க இங்கும் இந்தியவிலும் தொடர்பு கொண்டு முயற்சி செய்து வருகிறார். அத்தோடு ஆண்டவன் அருளையும் வேண்டி
நிற்கிறார். 60) Ց 6) | நன்மக்களும் இதற்குப் பேருதவிபுரிவார்களாக

Page 10
ចាលចាfuUTចា ៣ எதிர்காலப்
- திரு. க. சீனிவாசகம் கோட
"செயற்கரிய செய்வர் பெரியோர் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளினார். இவற்றுக்கு அமைவாக, நாவலர் பெருமான் மாணவ பரம்பரையில் வந்த சைவப்புலவர்மணி மகாவித்துவான் வ. செல்லையா அவர்கள் இளமையிலேயே சைவமும் தமிழும் கைவரப் பெற்றவராக தொண்டு செய்தலே கடனாகக் கொண்டு, ஆசிரியராக அதிபராகக் கடமையாற்றி ஒய்வு பெற்ற காலத்திலும் ஒய்வின்றி சைவப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொரு வரும் ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் செயற்பட வேண்டியது அவசியம் ஆலயங்களோடு ஆதீனங்களும் அமைய வேண்டிய அவசியம் கருதி, ஆதீனத்தை அமைக்கும் முயற்சியில் முன்னின்றுமைத்த இவர். 1996ம் வருடம் இடம் பெயர்ந்து வந்த போதும் வவுனியாவில் மெய்கண்டார் ஆதீனத்தை இந்துமாமன்றத்தில் சிவனடியார் உதவியுடன் அமைத்தார். அப்போது இறை அருள் கூடப் பெற்று வருகைதந்த சீலத்திரு ஞானப்பிரகாச சுவாமிகள் ஆதீனத்தின் குருமுதல்வராக அமர்ந்து சேவை தொடர்ந்தது.
குருமுதல்வரால் ஞாயிறு தோறும் சைவ சித்தாந்த வகுப்புக்கள் நடத்தப் பெற்றன. சைவப் பெரியார்கள் பட்டமும் பட்டாடையும் அளித்துக் கெளரவிக்கப்பட்டனர். ஆசிரியகளுக்குக் கருத்தரங்குகளும் மாணவருக்கு சமய அறிவுப் போட்டி, பண்ணிசைப் போட்டி என்பன நடத்தப் பெற்று பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நாவலர் குருபூசை, மெய்கண்டார் குருபூசை வெள்ளிவிழா, ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
சிலகாலம் செல்ல குருமுதல்வர் சுகவீனமுற வேறு ஒரு குருமுதல்வரைத் தேடும் பணிக்காக அழைப்புக்கள் விடப்பட்டன. எவரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை.
c27uoaj3 29úcuá°
 

ய்கண்டார் ஆதீன
பணிகள்
டக்கல்வி அதிகாரி வவுனியா -
ஆசிரியர்களுக்கு சமயக் கருத்தரங்குகள் மட்டும் அன்றி எதிர் காலத்தில் சைவப் புலவர் தேர்விற்கான வகுப்புக்களும் தொடங்கப்படவுள்ளன மதமாற்றம் என்பது காட்டுத்தீ போலப் பரவும் இவ்வேளையில் இவ் ஆதீனம் அவசியமாகின்றது. சொற்பொழிவுகள், புராண படனங்கள், நூல் வெளியீடுகள் இவற்றால் மக்கள் மனதில் சலனமற்ற, நிலையான பரம்பொருளை அறிந்து, அதன் வழி நிற்கின்ற உணர்வை வெளிக் கொணர முனைகின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற உறுதியான வாக்கு உதிக்கின்றது.
ஆலயங்கள் தோறும் முதியோரை மதித்தல் முதியோர் கருத்தரங்குகள், முதியோர் பிரார்த்தனை என்பவற்றை காலத்துக்குக் காலம் செய்கின்றது. மேலும் மெய்கண்டார் ஆதீனவரலாறு, பஞ்ச புராணத் தொகுப்பு நூல் முதியோர் பிரார்த்தனை நூல் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.
இத்துணைப்பாடுபடும், ஆதீனத்திற்கு மக்கள் ஆதரவு வெகுவாகக் கிடைத்துள்ளமை பாராட்டற்குரியது. இருந்தும் சேவைக்கேற்ற வசதிகள் குறைவாகவே உள்ளன. நிலையான இடம் தேவை. கட்டிடடம் தேவை. முதியோர் இல்லம் தேவை. அரச அதிபர் இவற்றுக்கான காணியை வழங்க வேண்டும் பெருமனம் படைத்தவர்கள் நடமாடும் நிலையில் உள்ள ‘ஆதீனமாக இல்லாமல் நிலையான ஆதீனத்தை
அமைக்க முன்வர வேண்டும்.
இன்னும், சிவதீட்சை வழங்கல், கொல்லாமை, பசுவதை செய்யாமை ஆகிய நற் போதனைகள் இவ் ஆதீனத்தின் மூலமாக சிறுவர் முதல் முதியவர் வரை சென்றடைய வேண்டும் நாட்டிலே சைவமும் தமிழும் தழைக்க வேண்டும். சைவ அடியார்கள் இந்நிலவுலகம் உள்ளவரை வாழ்ந்து மக்களை நெறிப்படுத்த வேண்டும். திருநீற்றின் ஒளி எங்கும் பிரகாசிக்க வேண்டும். வாழ்க சைவம் வளர்க சைவ அடியார்கள்.
)

Page 11
ஈழத்தில் சைவி
- வித்துவான்
ைெசவ சமயஸ்தாபனங்களில் முதன்மை
யானவை சைவ ஆதீனங்கள். ஈழத்திருநாடாம் இலங்கையைப் பொறுத்தவரையில் சைவாதீனங்கள் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டன. முன்னர் சைவப்பணிகளை ஆலயங்களும், வித்தியாலயங்களும், மடால யங்களும், சைவச்சங்கங்களும், சபைகளுமே புரிந்து வந்துள்ளன.
சென்ற நூற்றாண்டுக்கும், இந்த . நூற்றாண்டுக்கும் தொடர்புடைய சைவத்தமிழ்ப் பேராளன் ஆறுமுகநாவலர் அவர்களும், ஒரு தனிமனிதாக நின்றே சைவத்தமிழ்ச் சாதனை புரிந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு இரு நாட்டுத் தொடர்பிருந்தும், தமிழ் நாட்டில் சைவாதீனங்களின் சேவைகளை அறிந்திருந்தும், சைவாதீனங்கள் அவர்களின் சேவையறிந்து பட்டம் வழங்கிப் பாராட்டியிருந்தும் ஈழத்தில் சைவாதீனங்கள் நிறுவிப் பணியாற்றாது இருந்தமை எங்களுக்குப் புரியாத ஒன்றாகவே உள்ளது.
எனது நால்வர் நெறியில் நாவலர் என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கிய புலவர்மணி முரு. பழ. இரத்தினம் செட்டியார் அவர்களும் நாவலர் அவர்களைக் குறிப்பிடும் பொழுது "ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியை நாவலர் பெருமான் ஒரு தனி மனிதனாய் நின்று ஆற்றியிருக்கின்றார்” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது நாம் சிந்தனை செய்ய வேண்டிய விஷயம். நாவலர் பெருமான் சிவபதமடைந்த போது நம்நாட்டறிஞர் ஒருவரும் 'நாவலரைப் போல் இனி ஆள் இல்லை’ என்று கவலைப்பட்டிருக்கின்றார். இங்ங்னமாக நாவலர் பெருமான் சைவாதீனமைத்து அதன் குரு முதல்வராக இருந்து சைவத்தமிழ்ப் பணி புரியாததேனோ என்பது சிந்திக்க வேண்டியதே.
நாவலர் பெருமான் ஸ்தாபித்த நாவலர் வித்தியாலத்தில் அன்னாரின் குருபூசைத்
 
 

ப ஆதீனங்கள்
bJ. G) gFGü6o Ga) gu JFT –
தினத்தன்று (1963) நாவலர் சைவச் சாதனை மகாநாடு ஒன்று நடைபெற்றது. அன்றைய கருத்தரங்கில் நான் கருத்துத் தெரிவித்தபோது ஈழத்திருநாட்டிற்குச் சைவச் சேவை புரிவதந்குச் சைவாதீனங்கள் அவசியம் தேவையென்று எடுத்துக் கூறியிருந்தேன். அன்று எனது கருத்துக்களுக்குப் பத்திரிகைகள் மதிப்பளித்துப் பிரசுரித்திருந்தன. சைவஸ்தாபனங்களும் பாராட்டியிருந்தன.
இங்ங்னமாக சைவாதீனங்கள் பற்றிக் கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கக் கதை காலாச்சேபத்தைப் பக்கவாத்திய சகிதம் சங்கீத கதாப்பிரசங்கமாகப் பரப்பிக் கொண்டிருந்த மணிபாகவதர் ஐயா அவர்கள் கருத்து இவ்விடயத்தில் ஒன்று பட்டிருந்தது. அவர்கள் தமிழ்நாட்டு ஆதீனங்களுடன் கதாப்பிரசங்கமூலம் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். தமிழ்நாடு சென்போது ஆதீனத்தில் துறவுநிலை எடுத்து றுநீலறுநீ சுவாமி நாதத் தம்பிரானானகப் பட்டங்கட்டி நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தை உருவாக்கினார் இலங்கையில் முதல் ஆதீனத்தை ஆக்கிய பெருமை அவரைச் சாரும் பின்னர் சைவ சேவையில் முன்னின்று பரமாச்சாரியாராகி நல்லைக் குருமணியுமாகினார். இன்று நல்லை ஆதீனம் உலகெங்கணும் தெரிந்த ஒரு ஆதீனமாக மிளிர்கின்றது. முதலாம் குரு முதல்வர் சமாதிப் பேறடைய இரண்டாம் குருமுதல்வர் பரமாச்சாரியாராக பட்டம் கட்டி இன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று மதிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
1972ம் ஆண்டு காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீன முதல்வர் ஞானபோத6.ணக்காக இலங்கைக்கு வருகை தந்தார்கள். அவர்களை அழைத்தவர்கள் கொழும்புவாழ் சைவத்தமிழ் அன்பர்கள். சிவஞான போதம் முதலாம் சைவசித்தாந்த நூல்களில் போதனை நடத்தப்பட்டது. குருமுதல்வரின் சிந்தனையில் சைவாதீனக்கிளை ஒன்று ஸ்தாபிக்கக் கருத்துத்

Page 12
தோன்றியது. அக்கருத்தை இலங்கை மாணவர் மத்தியில் வெளியிட்டார்கள். அதில் காரைநகர் அருளம்பலனார் நியமிக்கப்பட்டார். அதற்குரிய கிரியைகள் செய்து தீட்சாநாமமாக ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் என்றும் அருளம்பலனாருக்குச் சூட்டப்பட்டது. இக்கருமங்களில் முன்னின்று உதவியவர்களில் வைத்தியகலாநிதி முருகவேள் பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
இலங்கையில் மெய்கண்டார் ஆதீனம் நிறுவி குரு முதல்வராக் காரைநகர் அருளம்பலனார் நியமிக்கப்பட்டதும் காரைநகரில் வரவேற்பு விழா நடந்தது. அவ்விழாவுக்கு அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கப் பிரதிநிதியாக நானும் கலந்து சிறப்பித்தேன். அங்குவைத்தே என்னை மெய் கண்டார் ஆதீன அமைப்பாளராக ஆக்கிக் கொண்டார்.
ஆதீனப் பணிகளைக் கீரிமலையைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்தோம். ஆதீனக் குருமுதல்வர் திருக்கேதீஸ்வரம் மடத்திலிருந்து என்னை நெறிப்படுத்தினார். ஆதீனப் பணிபுரிய சைவப் புலவர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள், ஆசிரியர்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டோம். இலங்கையில் நடமாடும் ஆதீனமாகத் திகழ்ந்தது மெய்கண்டார் ஆதீனம். யாழ்ப்பாணத்து மூலைமுடுக் கெல்லாம் சென்று மக்களோடு மக்களாக நின்று நாம் சேவைபுரிந்தோம். ஆதீன முதல்வருக்கு வாகன வசதியே தேவைப்படாது. அவர் நடை பவனியாக
/
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க புதிய கலாச்சார சுவாமி ஆத்மகனாநந்தஜி அவர்களால் அ
C1
ܢ
 
 

ஊர்தோறும் சென்று ஆலயங்களிலும், சபைகளிலும் பணிபுரிந்திருக் கின்றார்கள். குழந்தைகளோடு அளவளாவிக் கருத்துக்கள் வழங்கியுள்ளார்கள். சிரமதானப் பணிகளை நடத்தியிருக்கிறார்கள். கொழும்பில் கூடப் பெரிய சமயவிழா எடுத்துள்ளது மெய் கண்டார் ஆதீனம் என்றால் அதன் பெருமையைச் GlԺ T6Ù6Ս6ւլլի வேண்டுமா. நல்லையாதீனம், மெய்கண்டார் ஆதீனம் என்றும் இரண்டினோடு மூன்றாவது ஆதீனமொன்று இலங்கையில் தோன்றிச் சமரசச் சைவச் சேவையைப் புரியத் தொடங்கியுள்ளதை நாம் அறிதல் வேண்டும். 1965 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கந்தர் மட் வேதாந்த மடத்தில் கைலைச்சர்வோதய ஆதீனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு கோண்டாவிலைத் தலைமைப்பீடமாக்க கொண்டு இயங்குகிறது. இதன் குருமுதல்வர் மெய்கண்டார் ஆதீன இரண்டாம் குருமுதல்வரின் மாணவராவர். இலங்கையில் ஒரேயொரு ஆதீனந்தான் உண்டு என்று நினைப்போர் கூறுவோர் இதனை அறிதல் நன்று.
இவற்றைவிட மாவிட்டபுரம் கந்தசுவாமி தேவஸ்தானம், கீரிமலை நகுலேஸ்வரம் என்பனவும் சைவச் சேவைகளை ஆதீனங்கள் என்ற நிலையிலிருந்து புரிவதையும் அறிதல் வேண்டும். கரணவாய்ச் சைவக்குருக்கள் மாரும் இந்தியாவிலும்
மண்டபம் கொழும் பு இராமகிருஷ்ண மிசன் புண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையிலும் மடங்களை அமைத்து மடாதிபதிகளாக இருந்து ஆதீனங்கள் என்று ஒழுகிவருவதும் அறிதற்பாலது.
N
ار
D

Page 13
நான் கண்ட சீ ஆானப்பிரகாசத் தர
சைவ நன்மணி
தொண்டர் 6T60T GéF6)6ULDT5 அழைக்கப்பட்ட ஞானப் பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் எனக்கு ஒரு சிறந்த தோழராகவே கடைசி மட்டும் திகழ்ந்தார். என்னை முன்பின் அறியாத தொண்டர் அவர்கள் தாமாகவே வீடுதேடிவந்து நல்லுறவு பூண்டார்.
காவி உடை மெல்லிய உயரமான தோற்றம்; . வள்ளுவர் பாணியில் தாடியும் கொண்டையும்; நெற்றியில் நீறும் சந்தனப் பொட்டும்; கழுத்தில் உருத்திராக்க மாலை. எழுபது வயது வரையானாலும் திடகாத்திரமான சரீரம் ஒளிமயமான கண்கள்; இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற ஒருசிவயோகியர் 1972ம் ஆண்டில் என்னுடைய வீட்டுக் கதவில் தட்டுகிறார். கதவைத் திறந்து பார்த்த பொழுது அவரை இன்னாரென அறியாது சங்கடப்பட்டேன் ஏதோ யாசிக்க வந்த சந்நியாசியோ ஏனச் சந்தேகப்பட்டேன்.
சந்தேகம் தவறாயிற்று “நீங்கள்தானோ சித்திரச் சுடரொளி நூல் ஆசிரியர்! உங்களைக் கண்டு ஆசீர்வதிக்க வந்துள்ளேன் என அவர் கூறினார். உடனே அவரை வணங்கி "ஆம் நான்தான் அந்த நூல் ஆசிரியர்” எனக் கூறி அவரை உபசரித்து வீட்டு மண்டபத்தில் இருந்த ஒரு நாற்காலியில் உட்காரும்படி பணிவுடன் வேண்டினேன்.
அமைதியாக உட்கார்ந்த அவர் "உங்களுடைய கன்னி நூலைச் சைவப் புலவர் கணபதிப்பிள்ளை அவர்களிடமிருந்து பெற்று வாசித்தேன். கலைமகள் வழிபாட்டைப் பற்றி விரிவான விளக்கம் அளிக்கும் வேறு நூல் எதையும் நான் இற்றைவரையில் வாசித்தது இல்லை. சரஸ்வதி கடாட்சம் இன்றி அத்தகைய அற்புதமான நூலைப் படைத்தல் அரிதாகும். இனிய செந்தமிழ் நடை ஒப்பிலா ஆய்வு:
 
 

வத்தொண்டர் by 66
BT. G36)6oli IT
இலகுவான சாதனை வழி காட்டல் நெறி; அத்தனையும் கொண்ட ஒரு நூலாசிரியரைக் கண்டு நேரில் வாழ்த்துதல் வேண்டும் எனவந்தேன். மேலும் சிறப்பாக உங்கள் சைவ எழுத்துப் பணி தொடருதல் வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்’ என ஆசீர்வதித்தார்.
எனக்கு இவ்வளவு மதிப்புக் கொடுத்து எவ்வித பலனும் கருதாது வீடுதேடி வந்து வாழ்த்து வழங்கிய சைவத்துறவியார்? என்பதை அறிய ஆவல் கொண்டு "சுவாமி தங்களுக்கு எனது மனம் உவந்த நன்றியறிதலைக் கூறும் இதே வேளையில் தங்களை இன்னார் என அறியாது திகைத்து நிற்கிறேன். தயவு செய்து தங்கள் வாயாலையே தங்களை எனக்கு அறிமுகப்படுத்தி உதவுங்கள்; என வேண்டினேன்.
கொழும்பில் உள்ள சிவனடியார் இலங்கையில் ஆதீனக்கிளை ஒன்று அமைக்க விரும்பி என்னை ஆதீன தம்பிரான்சுவாமிகளாக்குவதெனத் தீர் மானித்தனர். நான் வர்த்தகத் தொழிலைத் துறந்து தம்பிரான் பதவியை ஏற்றுக் கொண்டேன். பரமாசாரிய சுவாமிகள் எனக்குத் தீக்கை கொடுத்து ஆசீர்வதித்து என்னை இலங்கைக் கிளை ஆதீனத் தம்பிரானாக முறைப்படி நியமித்தார். தொண்டர் என்னும் பட்டத்துடன் ஞானப்பிரகாசத் தம்பிரான் என்னும் பெயரும் சூட்டப்பட்டது. அன்று தொடக்கம் நான் இந்தக் கோலத்தில் சிவத்தொண்டு ஆற்றி வருகிறேன் உங்களைப் போன்ற சைவமறை ஞானிகளின் தூய சேவை நமது ஆதீனத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. உங்கள் வரலாற்று விபரம் யாவையும் சைவப் புலவர் கணபதிப்பிள்ளை அவர்கள் எனக்கு விளக்கி உள்ளார். அவர் தான் உங்களை ஒரு மறைஞானி எனப் போற்றினார்.

Page 14
இப்பொழுது இந்தக் கட்டை யார் என்பது தெரிகிறதல்லவா? எனக் கேட்டார்.
அதற்கு நான் "தங்களை நானே தேடி வரவேண்டிய இடத்தில் தாங்களே என்னைத் தேடிவந்தமை தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. எவ்வகையில் எனது சேவை தங்களுக்குத் தேவைப்படுகிறது”என வினாவினேன். அதற்கு அவர் "திருக்கோயில்கள் மூலமும், சைவஸ்தாபனங்கள் மூலமும் சைவ மக்களுக்குச் சைவ சித்தாந்த தோத்திர சாத்திரப் பிரசாரம் செய்ய ஆயத்தப்படுகிறேன். அதற்கு அனுசரணையாக ஆறு பிரசார சைவ அடியார்களை ஒரு குழுவாக அமைத்துச் செயற்பட உள்ளேன் அக்குழுவில் உங்களையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனைய ஐவரும், வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சைவப் புலவர் கணபதிப்பிள்ளை; இளவாலைச் சைவப் புலவர் செல்லையா, காரைநகர் வித்துவான் சபாரத்தினம், புலோலி டாக்டர் பாலசுந்தரம், சுன்னாகம் பண்டிதர் நமசிவாயம் என்பவர்களாவர். கூட்ட அமைப்பாளராகப் புங்குடுதீவுக் கூட்டுத்தாபன மொத்த விற்பனை நிலைய முகாமையாளர் தம்பு அவர்கள் செயற்படுகிறார். உங்களுக்கு உகந்த மறைஞானச் சைவ சாத்திரப் பிரசாரகர் பதவியைக் கொடுக்க விரும்புகிறேன். சம்மதமா?
"சுவாமீ! தங்கள் சித்தம் எனது பாக்கியம்” எனப் பதிலளித்தேன்.
மேலும் தொடர்ந்த அவர் ‘நமக்கு உள்ள குறைபாடு ஆதீனத்துக்கென நிரந்தரமான கட்டிடம் எதுவும் இல்லாமையாகும். இப்பொழுது நான் பிறந்த ஊராகிய காரைநகரில் ஒரு தற்காலிகமான இடத்திலிருந்து செயற்படுகிறது. T செலவுக்குக் கஷ்டம் இல்லை. கொழும்பில் உள்ள தாளையன் அச்சக அதிபர் அல்ஹாஜ் அப்துல் கறீம் அவர்கள் கணிசமான பண உதவி மாதா மாதம் செய்து வருகிறார். தாளையன் சுவாமிகள் ஒரு முஸ்லிம் ஆக இருந்த போதும் சைவசித்தாந்தத்தைக் கற்றுத்
 
 

தெளிந்து ஆதரித்து வந்தவர். யோக சுவாமிகளைப் போன்ற சித்தர். தருமசீலர் ஆதனால் அவருடைய பெயரால் நமது பணிக்கு ஆதாரம் கிடைக்கிறது.
அடுத்த மாதம் கொழும்பில் உள்ள ஈழத்துத் திருநெறி மன்றத்தினர் மெய்கண்டார் ஆதீன ஆதரவில் சைவத்திருமுறை மகாநாடு நடத்த உள்ளனர். அதில் நீங்களும் நமது சார்பில் கலந்து, "சைவயோக ஞான மார்க்கம்” எனும் விடயம் பற்றிய விரிவுரை ஆற்றும் படி வேண்டுகிறேன். அப்பொழுது அல்ஹாஜ் அப்துல் கறீம் அவர்களை அறிமுகம் செய்து வைப்பேன். உங்களுடைய எழுத்துப் பணிக்கு அவர் உதவி செய்வார் என நம்புகிறேன்.” எனக் கூற முடித்தார்.
அதே போல நான் கொழும்பில் ஆற்றிய விரிவுரை நிகழ்ந்தினேன்.
சைவசித்தாந்தத்தையே ஆதரித்த அவர் வேதாந்தத்தை எவ்வகையிலும் தூஷிக்கவில்லை. திருமூலர் கூறியவாறு வேதாந்த உண்மை விளக்கம் கொடுப்பது சைவ சித்தாந்தம் என உபதேசித்து வந்தார் எனது வீட்டிற்கு அடிக்கடி சமுகமளித்துப் பல மணிநேரம் தங்கி இருந்து வேதாந்த சித்தாந்த சமரசம் பற்றிக் கலந்து உரையாடுவார். வேதாந்த நூல்களாகிய "கைவல்யம், ஞானவசிட்டம், விவேக சூடாமணி, முதலியவற்றை எனக்குப் படிப்பித்து உதவினார்.
அவருடைய அருளால் நான் சுத்த சைவ சமரச
சன்மார்க்க நெறியை அனுசரித்து வருகிறேன்.
அவர் சிவபதம் அடைந்தமை சைவ உலகுக்குப் பேரிழப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை நான் சுவாமிகளுடன் தோழமை பூண்டு அவருக்கு ஒத்தாசையாகப் புரிந்த அனைத்துச் சேவைகளையும் இச்சிறு கட்டுரையில் விபரிக்க இடமில்லையே என வருத்துகிறேன். தில்லை வெளியில் கலந்த அவர் நிரந்தரமான சத்சித் ஆனந்தம் அடைதல் திண்ணம் நமது வாழ்த்துதல் வேண்டியதில்லை.
சுபம்

Page 15
Ճնճiնսը,եւ
- நா. கதிரே
முருகப் பெருமான் சூரபன்மனுடன் போர் பு
அம்பினாலே அழித்து அவனை நோக்கி
வெம்புயலிடையிற் றோன்
இம்பரி லெமது முன்ன மெ
அம்பினி லவற்றை யெல்லா
நம்பெரு வடிவங் கொள்வ
திருப்பெருவடிவைச் சூரபன்ம
உள்ளடியினிடத்தே மேருமலை, மந்தரம், "
மாலியவான், கந்தமாதனம், நிடதம், இமயம், ஏமகூடம், விபுலம், சுபாசுபம், சுவேதம், சிருங்கம், நீலம், மகேந்திரம், பொதியம், விந்தம், பாரியாத்திரம், சத்தி, மானுடம், சோமம், தமனசு, சந்திரம், துந்துபி, மகாகிரி, பிரவிராசனம், நாரதீயம், கோமேதம், உன்னதம், குமுதம், குமாரம், மேகம், சங்ககம் முதலாய பலகோடி மலைகள் காணப்பட்டன. புறத்திருவடியினிடத்தே உப்புக்கடல், பாற்கடல், தயிர்க்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர்க்கடல், என்னுஞ் சமுத்திரங்களும், மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்த லென்னும் உத்தியானே கங்கை, யமுனை, கெளதமி, சரசுவதி, கொளசிகி, காவிரி, நருமதை, கம்பை, துங்கபத்திரை, குசை, பாலாறு, பாஞ்சாலி, கோமதி, ஆம்பிரவதி, மணிமுத்தம், பவானி, சூரி, சிகி, பாபவிநாசினி, சங்கவாகி, பாரத்துவாசி, சிகை சார்வரி, சந்திரபாகை, சரயு, வேணுபிங்களை, மாணிக்ககங்கை, மாவலிகங்கை, சுவர்ணமுகி, குண்டலை, பெண்ணை, வைகை, கந்தநதி, சிவை, விபாவை, அமிர்தை, சுகிர்தை, மனுதத்தகை சித்தி, கிரமை அங்குசோனை, ரூபியை, மதி, தூமிரை, நேத்திரை, பாவவிமோசனை முதலாய எண்ணிறந்த நதிகளுங் காணப்பட்டன.
திருவடி விரல்களினிடத்தே இடியேறு, மின்னல், முழக்கம் நட்சத்திரங்கள் கிரகங்கள்
 

மூர்த்தி
வற்பிள்ளை -
சிந்து அவன் கொண்ட மாய வடிவங்களை எல்லாம்
றி விளிந்திடு மின்னு வென்ன
ல்லையி லுருவங் கொண்டாய்
ம் மட்டன மழிவி லாத நன்றுகண் டிடுதி யென்றான். எனக் கூறித்தமது னுக்குக் காட்டினார் அதில்
என்பனவும், இருபரடுகளிடத்தும் வருணன் குபேரன் கருநிற வருவத்தனாய நிருதி, பலப்பல அரக்கர்கள் என்பாரும், கணைக்கால்களினிடத்தே மார்க்கண்டேயர் வசிட்டர், விசுவாமித்திரர், காசிபர், கெளதமர், அகத்தியர், பாரத்துவாசர், ஆங்கிரசு, துர்வாசர், அத்திரி, பிருங்கி, உருரு, சுவேதர், உபமன்னியர், பிருகு, உக்கிரசீலர், போதாயனர் பிரிங்கி, விபாண்டகர், துருவர், நாரதர், சுப்பிரர், புதர், சுமதி சங்கமர், வாமதேவர், கண்ணுவர், அரிதகர், பெளலர், சுமுந்தரர் ஆபத்தம்பர், கருணர், பருப்பதர், காத்யாயனர், பெளமர், பாசதரர், பராசார், வியாசர், பக்குவர், கபிலர், கலாதரர், காணர், காலவர், கைவல்லியர், செளபரி, முற்கலர், சாபங்கர் செளநகர், யாஞ்ஞவற்கியர், ததீசி, சனகர், சனாதனர், சனற்குமாரர், சனந்தனர், புசுண்டர், பைப்பலாதர், பதஞ்சலி, கணாதர், அக்கபாதர், சித்தர், சத்தியர், பண்டி தோத்தமர், சுவேதாசுவதரர், அதர்வணர், சதாநந்தர், வான்மீகி, மாண்டுக்கியர், முண்டகர், சாதாதபர், சமதக்கினி சற்சரர், மாண்டவியர், சுதீக்கணர், இரதிதர், சாபாலர், காண்டிப்பியர், குண்டலர், அசிதர், தேவலர், உசனர், முதலாயமுனிவர் கூட்டங்களும், சிந்தாமணி, பாது காஞ்சனம், சியமந்தகமணி, சூளாமணி, சூடாமணி, கெளத்துவமணி முதலிய இரத்தினங்களுங்
காணப்பட்டன.

Page 16
முழந்தாளிலே வித்தியாதரர், கின்னரர், கிம்புருடர், சித்தர், கந்தருவர், போகபூமியர், கருட, பூதர், இயக்கர், சாரணர், பைசாசர் முதலானோர்களும், தொடை மூலத்திலே இந்திரனுமவன் குமாரனான சயந்தனும், தொடைச் சத்தியிலே யமனும் அவன் மந்திரியாகிய காலனென்பானும் குதத் தானத்திலே அசுர கூட்டங்களும், இருவிலாப் புறங்களினும் எண்மர் வசுக்களும், பன்னிருவர் திவாகரரும், பதினொருவர் உருத்திரரும் இருவர் மருத்துவருமாகிய முப்பத்துமுக்கோடி தேவரென்னும் நால்வகை, கடவுளரும், பீருட்டத்திலே சர்ப்பர்களும், கோசத்திலே மரணத்தை யொழிக்குமமிர்தமும், திருவுந்தி யினிடத்தே, சகல சராசரத் தோற்றங்களும், திருமார்பினிடத்தே வாஜசநேயம், கேனம், கடம், பிரச்சீனம், மூண்டகம், மாண்டுக்கியம் தைத்திரீயம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிருக தாரண்யகம், பிரமம், கைவல்லியம். சாபாலம், சுவேதாசுவதரம், அம்சம் ஆருணிகம், கர்ப்பம், நாராயணம் , பரமஹம்சம், அமிர்தபிந்து, அமிர்தநாதம், அதர்வசிரம், அதர்வசிகை, மைத்திராயணி, கெளவிதப் பிராஹ்மணம், பிருகச்சாபாலம். நிருசிம்மதாபினி, காலாக்கினி ருத்திரம், மைத்திரேயி, சுபாலம் முதலிய உபநிட தங்களும், உபவேதங்கள், மிருதிகள், புராணங்கள், உபபுராணங்கள் இதிகாசங்கள், ஆறுசாத்திரங்கள், அறுபத்துநான்கு கலைகள் முதலியவும் உபவிதமுங் காணப்பட்டன.
அறிவுடையோர் செய்யார் இ
பிறர்மனை, கள், களவு சூது,
அறனறிந்தார் இவ்வைந்தும் ே
எள்ளப் படுவதுTஉம் அன்றி நிர செல்வழி உய்த்திடு தலால்.
அடுத்தவன் மனைவி மேல் ஆசை வைத்தல்,
செய்தல் ஆகிய ஐந்தையும் நன்னெறி அறிந்த சான்றே
இச்செயல்களால்) அவர்கள் ஒழுக்கம் அற்றவர்கள் 6
அவர்களை நரகத்துக்கு இழுத்துச் செல்லும் வழியும்
 

அளவிறந்த உரோமத்தொகுதிகளுள் ஒவ்வோருரோமங்ளினு மொவ்வோரண்ட புவனங்களும், உருத்திர கோடிகளும், உள்ளங்கையினிடத்தே யெல்லாப்போகங்களும், திருத்தோள்களினிடத்தே பிரம விட்டுணுக்களும், திருக்கை விரல்கடோறும் எல்லாத் தேவப் பெண்களும், திருக்கண்டத்திலே எல்லாப் பண்களுமிசைகளும் அக்கினிதேவனும், திருவாயினிடத்தே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும், பற்களினிடத்தே எல்லா வெழுத்துக்களும், நாவின்கண் காமிகம், யோகசம், சிந்தியம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகத்திரம் அஞ்சுமான், சுப்பிரபேதம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம் முதலிய சிவாகமங்களும், அவற்றின் பேதங்களாகிய உபாக மங்களும், உதடுகளிலே மகாமந்திர வித்தியா சமுகங்களும், நாசியினிடத்தே வாயுதேவனும், திருக்கண்களிலே சூரியசந்திரர்களும், செவிகளிலே பத்துத் திக்குகளும், அழகிய நெற்றியினிடத்தே பிரணவமும், சிரத்தினிடத்தே பரமான்மாவும் அமைந்து காணப்பட, இன்னும் மற்றைய உறுப்புகள்தோறும் அளவிறந்த சத்திகளும் சத்தர்களுங் காணப்பட்டனர்.
நன்றி சுப்பிரமணிய பராக்கிரமம்
ந்த ஐந்து செயல்களையும்
*கொலையோடு நாக்கார் - திறனிலர் என்று suj55jä
கள் குடித்தல், திருடுதல், சூதாடுதல், கொலை மார் நினைத்துப் பார்க்கவும் மாட்டார்கள். (காரணம் ான்ற பழிப்புக்கு ஆளாவதோடு கூட, இச்செயல்கள் ஆகிவிடும்.
நன்றி ஆசாரக் கோவை

Page 17
10.
சைவவின
gណ្ណវិចា
சைவ சமயிகள் ஒத வேண்டிய தமிழ் வேதர் தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம். தேவாரஞ் செய்தருளினவர் யாவர்? திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கர திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்? மானிக்கவாசக சுவாமிகள் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராம திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதா திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வே. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதார திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவ: பாண்டிநாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவர்கள் யாது காரணத்தினால் இவர்கள் சைவசமயகு பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச் எனப் பெயர் பெறுவர்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரிடத்தில் 6 1. மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து டெ 2. சிவபெருமானிடத்தில் பொற்றாளமும், முத்துப்ப பந்தரும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்ற 3. வேதாரணியத்திலே வேதங்களினாலே
திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு 4. பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடின 5. பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போ 6. சமணர்களெதிரே தேவாரத் திருவேட்டை அக் 7. வைகையாற்றிலே திருவேட்டைப்போட்டு எதிே 8. புத்த நந்தியுடைய தலையிலே இடியிடிக்கச் செ 9. ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஒடத்ை 10. ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கினது. 11. விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது 12. விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும் 13. தமது திருக்கல்யாணந் தரிசிக்க வந்தவர்க
முத்தியிலே சேர்த்தது.
 
 

gចារិu
- ஆறுமுகநாவலர்
பகள் எவை?
சு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.
திருவவதாரஞ் செய்தருளினார்? ண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார். ரஞ் செய்தருளினார்? |ளாளர் குலத்தில் திருவவதாரஞ் செய்தருளினார். ஞ் செய்தருளினார்? சிவப்பிராமண குலத்தில் திருவவதாரஞ் செய்தருளினார் தாரஞ் செய்தருளினார்?
பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார். நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவர்கள்?
தரவர்கள் எனப் பெயர் பெறுவர்கள்? சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமயகுரவர்கள்
விளங்கிய அற்புதங்கள் யாவை?
ாற்கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.
ல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப்
து.
பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய
| அடைக்கப் பாடினது.
望、
க்கினது.
கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.
ரறும்படி செய்தது.
ய்தது.
தத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.
il. பைப் பெண்ணாக்கினது. ள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து

Page 18
11.
12.
13.
14.
15.
16.
17.
திருநாவுக்கரசு நாயனாரிடத்தில் விளங்கிய சமணர்களாலே ஏழுநாள் சுண்ணாம்பு அறை 2. சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோ 3. சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ்செ 4. சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்தி 5. சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது. 6. வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட் 7. விஷத்தினால் இறந்த பிராமணப் பிள்ளையை 8. காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தினுள் முழு
கரையேறினது. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அ 1. செங்கற்கள் பொன்னாகப் பெற்றுக் கொண்ட 2. சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம்
திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது. காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது. முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அ 5. வெள்ளை யானையில் ஏறிக் கொண்டு திருக் மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கி 1. சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் .ெ
பெற்றுக் கொண்டது. புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது 4. தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவை
பெற்றுக் கொண்டது. 5. எல்லாருங் காணக் கனகசபையினுள்ளே புகுந் இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகி சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங் தமிழ்வேதம் ஒதுதற்கு யோக்கியர் யாவர்? மதுபானமும் மாமிசபோசனமும் இல்லாதவராய், ஆ தமிழ் வேதத்தை எப்படி ஒதல் வேண்டும்? சுத்திசெய்யப்டட இடத்தில் பீடத்தின்மேலே தமிழ்வே இருந்து கொண்டு அன்புடனே ஒதல் வேண்டு படுக்கையிலேனும், மடியிலேனும் வைக்கலாகாது. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஒதி சிவபெருமானுடைய திருவடிக்கீழ்ப் பேரின்பத்தை அ
திருச்சிற்
 
 

அற்புதங்கள் யாவை? பிலே பூட்டப்பட்டிருந்தும் வேவாது பிழைத்தது. ற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது. ய்து வணங்கப்பட்டது.
ரத்தில் இடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறினது.
ட திருக்கதவு திறக்கப் பாடினது. உயிர்ப்பித்தது. கித் திருவையாற்றில் ஒரு வாவியின்மேலே தோன்றிக்
அற்புதங்கள் யாவை?
粤 பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றிலே போட்டுத்
ம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது. கைலாசத்துக்கு எழுந்தருளினது. ய அற்புதங்கள் யாவை?
காண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடிபடும்படிக்கும்
ாாக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது. ந பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய
J. யாரையும் சிவபெருமானே எழுந்தருளிவந்து எழுதும்படி
ந்து சிவத்தோடு கலந்தது. ன்றது? பகுகின்றது.
சாரமுடையவராய், சிவதீகூைடி பெற்றவராய் உள்ளவர்.
த புத்தகத்தை வைத்து அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, ம். புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும்,
நினவர் யாது பயன் பெறுவர்?
நுபவிப்பர்.
றம்பலம்

Page 19
GlLmLÈH GODĪTI
திருக் கைலாயமலையிலே கல்லால மரத்தின் கீழ் சிவபொருமான் தட்சணாமூர்த்தியாகி திருநந்தி தேவருக்கு வேதாகமங்களின் மெய்பொருளை உபதேசித்து அருளினார். அதை திருநந்திதேவர் தன் மாணவர்களில் சிறந்தவரான சனற்குமார முனிவருக்கு உபதேசித்தார். இதைச் சனற்குமார முனிவர் தனது மாணவராகிய சத்தியஞான தரிசனிகளுக்கு உபதேசித்தார். இதை இவர் தம் மானவராகிய பரஞ்சோதி முனிவருக்கு. உபதேசித்தார். இவ்வாறு திருக் கைலாச மலையில் இருந்து ஒரு குருசீட பரம்பரை (சந்தானம்) தோன்றி வரலாயிற்று.
தென் நாட்டில் மெய்கண்டார் தோன்றினார். இவர் திருவெண்காடர் என்னும் பிள்ளைத் திருநாமம் கொண்டவர். இவரிடம் ஆணவம் பற்றிக் கேள்வி கேட்ட சிவாச்சாரியார், சகலாகம பண்டிதர் என அழைப்பட்டார். அவர் மெய்கண்டாருடைய குலகுருவுமாவார். மெய்கண்டார் அவரைத் தமது மாணவராக ஏற்ற பொழுது அவருக்குக் கொடுத்த தீட்சைப் பெயர் அருணந்தி என்பதாகும்.
வடதிசையில் இருந்து தென் நாட்டுக்கு வந்த பரஞ்சோதி மாமுனிவரே மெய்கண்டாருக்கு ஞான குருவாய் உபதேசம் செய்தார். அவர் சிறுபிள்ளையாக வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த திருவெண்காடரின் பக்குவ நிலையை கண்டு அவருக்குச் சைவசித்தாந்த மெய்ப் பொருளை உபதேசித்தார். அவர் தன் குருவின் பெயரையே வடமொழியில் இருந்து மொழியர்பெயர்த்து மெய்கண்டார் என்று பெயர் இட்டார் என்று வரலாறு கூறுகின்றது.
மெய்கண்டார் தாம் பெற்ற உபதேசத்தை உலக மக்கள் அறிந்து பயன்பெறும் பொருட்டு சிவஞான போதம் என்னும் நூலாக வெளியிட்டார். அதைத்
 

- சந்தானம்
த்சோதி M. A
தமது மாணவராகிய அருணந்தி சிவாச்சாரியாருக்கு உபதேசித்தார். அருணந்தியார் விரித்து சிவஞான சித்தியார் என்னும் வழிநூலைச் செய்தார். அத்துடன் சைவசித்தாந்த உண்மைகளை விளக்கி இருபா இரு பஃது என்னும் நூலையும் செய்தார்.
அருணந்தி சிவாச்சாரியார் தாம் விரிவாக்கிய உண்மைகளை மறைஞான சம்பந்தருக்கு உபதேசித்தார். இதை இவர் தமது மாணவராகிய உமாபதி சிவம் என்ற மாணவருக்கு உபதேசித்தார். உமாபதி சிவம் எட்டுச் நூல்களை அருளினார். இவை சித்தாந்த அட்டகம் என்று சொல்லப்படும்.
மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர் உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரையும் குரு சீட மரபிலே சைவ சித்தாந்த மெய்ப் பொருளை உபதேசித்து வந்தமையால் சந்தான குரவர் என்றும் யெர் பெறுவர். இவர்களைப் புற சந்தான குரவர் என்றும் கூறுவர்.
உமாபதி சிவாச்சாரியாரின் சீடர்களிடம் உபதேசம் பெற்றவர்கள் திருவாவடுதுறை, தருமபுரம் முதலிய ஆதீனங்களை நிறுவி சைவசித்தாந்த மரபுகளைப் போற்றி வந்தனர்.
இவ்வாறு அகச் சந்தான குரவர் நால்ரும் புறச் சந்தான குரவர் நால்வரும் சேர்ந்து இந்த எண்மருடன் உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்ற திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய ஆதீனங்களின் குருமுதல்வரும் சேர்ந்து திருக்கையாலய பரம்பரையினர் என அழைக்கப்படுவர்.
இவ்வாறாக இலங்கையில் யாழ்ப் பாணத்திலும், வவுனியாவிலும் ஆதீனங்கள் தோன்றிச் சமயப் பணிகள் ஆற்றி வருகின்றன.
சைவத்தின் இரு கண்களில் ஒன்றாகிய ஆதீனங்கள் யாழ்ப் பாணத்திலும் பல தொண்டு புரிந்து

Page 20
இதைத் தொடர்ந்து மெய்கண்டார் ஆதீனம் தோற்றம் பெற்றது. இதைத் தவிர கரணவாய் சைவக் இந்தியாவிலும் இலங்கையிலும் மடங்களை அமைத்து ஆதீனகர்த்தராகித் தொண்டு
குருக்கள்மாரும்
செய்கின்றனர்.
- - - - - - - - - - - - - - - - - நினைவிற் ெ
ஐப்பசி OI 18.10.99 திங்கள் (Osg)
ᏝᏝ ᏧᏂfᎢ.
O2 19.10.99 செவ்வாப் விஜ
O4 21.10.99 வியாழன் ஏகா
பிரே
O7 24.10.99 | ஞாயிறு J60 08 | 25.10.99 திங்கள் ஜப்ப
O9 26. 10. 99 | Golge 66) Tu 35 Triá
II 28.10.99 வியாழன் asia,
I2 ஜப்ப
14 31.10.99 ஞாயிறு சத்தி
I9 | 05. III. 99 || GGGGTGlif பிரே
2I 07.11.99 ஞாயிறு 9 for
மெட்
22 08.11.99 திங்கள் ஸ்கர்
23 O9.II.99 || GgFGIGI Tui [ 1Ꮷ6Ꭰ
25 II. II. 99 || Gíîulu ITpGóT 221Ut.
26 I2. TT.99 Gគ្នាឆ្នាំTត្រfi சதுர்
27 || 13. III. 99 || 3F Gof ஸ்கர்
28 14.11.99 | ஞாயிறு ஸ்கர் 30 | 16.11.99 செவ்வாய் விஷ்
4.52
 
 

1972 ஆண்டிலே இலங்கையில் மெய்கண்டார் ஆதீனத்தைக் கொழும்பிலே ஸ்தாபித்தார்கள். இலங்கையில் மெய்கண்டார் ஆதீனத்தின் முதலாவது குருமகா சந்நிதானமாகப் பதவி ஏற்றவர் சீலத் திரு ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகளாவர். இவரின் பிள்ளைத் திருநாமம் அருளம்பலம் (தொண்டர்) ஆகும்.
காள்வதற்கு
ப்பிறப்பு விஷ" புண்ணிய காலம் காலை 10.59 வரை
நவமி சரஸ்வதி பூசை
பதசமி, கேதார கெளரி விரதாரம்பம்
நசி விரதம்
தாஷ விரதம், ஐப்பசி வெள்ளி
ண விரதம், திருமூலர் குருபூசை
சிப் பரணி - வைரவ விரதம், நெடுமாறர் குருபூசை
திகை விரதம், இடங்கழியார் குருபூசை
டஹர சதுர்த்தி விரதம்
சி வெள்ளி
யார் குருபூசை
தாஷ விரதம், ஐப்பசி வெள்ளி
ாவசை விரதம், தீபாவளி கேதார கெளரி விரதம்,
கண்ட தேவர் குருபூசை
தஷஷ்டி விரதாரம்பம்
ர் குருபூசை
டிகள் காடவர்கோன் குருபூசை
த்தி விரதம், ஐப்பசி வெள்ளி
த பஞ்சமி
த ஷஷ்டி விரதம்
ணுபதி புண்ணிய காலம் இரவு 1228 முதல் பி. இரவு
ബ്ബ്

Page 21
சைவத் தமிழ் வரலா Uங்க
- திரு. இ. இர
சமய குரவர், அறுபத்து மூன்று நாயன்மார், காலமே சைவத்தின் பேரெழுச்சிக் காலமாகும். இது பல்லவர் ஆட்சிக் காலமுமாகும். அதன்பின் சோழப் பேரரசுக் காலம் ஏற்பட்டது. இது தமிழர்களின் பொற்காலம் எனப்படுகின்றது. இதன்பின் மாற்றுச் சமயத்தவர்களின் ஆட்சி ஏற்பட்டது. சைவ சமயத்தவர்கள் அல்லாதவர்களின் ஆட்சிக் காலத்திலே சைவத்தையும் தமிழையும் பேணிப் பாதுகாத்த பெருமை சைவ ஆதீனங்களுக்கே உரியதாகும்.
ஆதீனம் என்பது சைவத்திற்கே சிறப்பாக உடையதாகும். சைவ ஆதீனங்களுக்கு முன்னர் சைவ மடங்கள் ஏனைய சமய மடங்களைப் போல ஆங்காங்கே இருந்தன. ஆனால் மெய்கண்ட தேவ நாயனாரின் பரம்பரையில் ஏற்பட்ட சைவ ஆதீனங்களின் வளர்ச்சி பதினான்காம் நூற்றாண்டு முதல் இன்றுவரை சிறப்பாகவுள்ளன.
சந்தான குரவர் நால்வர். இவர்களுள் உமாபதி சிவாசாரியர் நான்காவதாக விளங்கினார். சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய சித்தாந்த நூல்கள் எட்டினை அருளினார். இவரது காலம் கி.பி. 1313 இதனை உள்ளடக்கியதாகும். இவரின் மாணவர் மச்சுச் செட்டியார் எனக் கூறப் பெறும் கொற்றவன் குடி அருள் நமச்சிவாயராவர். இவரின் மாணவர்களிலே விதந்து கூறப்படும் இருவர் சித்தர் சிவப்பிரகாசர், காழிக்கங்கை மெய்கண்டார் என் GLJITOTT6) Jff.
சித்தர் சிவப்பிரகாசரின் முதன் மாணவரே திருவாவடுதுறை ஆதீன முதற் குரவராகிய நமச்சிவாய குருமூர்த்திகளாவர். இவர் காலம் பதினான்காம் நூற்றாண்டு.
காழிக்கங்கை மெய்கண்டாரின் ஞான பரம்பரையிலே வந்தவர்களுள் சிறப்பானவர்கள் காழிச் சிற்றம்பல நாடிகள், காஞ்சி ஞானப்பிரகாசர், தத்துவப் பிரகாசர், சிவப்பிரகாசர், தவப்பிரகாசர், கமலை ஞானப்பிரகாசர் முதலியோராவர். கமலை
 

ற்றில் ஆதீனங்களின் Grifūų
ஜேஸ்வரன் -
ஞானப்பிரகாசர் 15ஆம் நூற்றாண்டினர். இவரின் மாணவரே தருமபுர ஆதீன முதற் குரவராகிய குருஞானசம்பந்தமூர்த்திகளாவர் தருமபுர ஆதீன பரம்பரையில் வந்தவரே திருப்பனந்தாள் ஆதீன முதற் குரவராகிய குமரகுரு பரசுவாமிகளாவர்.
பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த காழிச் சிற்றம்பலநாடிகளின் பரம்பரையில் வந்த கச்சி ஞானப் பிரகாசசுவாமிகளே காஞ்சி ஞானப்பிரசாக மெய் கண்டார் ஆதீன முதற் குரவராவர்.
பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் பாண்டிய சோழத் தமிழ் அரசர்களின் ஆட்சி நிலைகுலைந்தது. விஜயநகர நாயக்கர் ஆட்சியும் அதன்பின் இஸ்லாமிய ஐரோப்பியர் ஆட்சியும் தமிழ் நாட்டிலே ஏற்பட்டன. இலங்கையில் போர்த்துக்கேய-ஒல்லாந்த ஆங்கிலேய ஆட்சிகள் பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்டன. திருவாவடுதுறை ஆதீனத்தில் நாவலர் பட்டம் பெற்ற ஆறுமுக நாவலர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சைவ ஆதீன வழிவந்த சைவப் பாரம்பரியத்தை நிலைநாட்டினார்.
நாவலர் பெருமானுக்கு முன்னரும் பின்னரும் அந்நியர் ஆட்சிக் காலத்திலே சைவ சமயத்தையும் தமிழையும் மிகச் சிறந்த முறையிலே பேணிப் பாதுகாத்த பெருமை மெய்கண்டார் ஞானப் பரம்பரையிலே வந்த சைவ ஆதீனங்களுக்கே உரியதாகும்.
இருபதாம் நூற்றாண்டிலே சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றை முதன் முதல் அச்சுவாகனம் ஏற்றித் தமிழ்த்தாத்தா எனப் பெயர் பெற்ற மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சுவாமிநாதையாரும் திருவாவடுதுறை ஆதீன மாணவரே ஆவர்.
அதே தமிழ்த் தாத்தாவிடம் தமிழ் வித்துவான் பட்டத்திற்குக் கற்றவரே இலங்கையில் மெய்கண்டார் ஆதீனத்தைத் தாபித்த காஞ்சி மெய்கண்டார் ஆதீன 229 ஆம் குருமூர்த்திகளாகிய சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளாவர்.

Page 22
திருவெ
- இயற்றமிழ் வித்தகர் பல
திருநால் மறை, திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், எனவே ஒளவையார் வரிசைப் படுத்தியுள்ளார். இவையன்றித் தொடர்புடைய நூல் பல அவை திருமுறை எனவே வகுக்கப்பெற்றுள இவற்றைக்கருவாகக் கொண்டு உருவாகியவை மெய்கண்ட சாத்திரம் என உள்ளன.
இவையின் தோற்றத்துக்கெல்லாம் - வெளிப்படுவதற்கு - மூலகாரணமாக முன் னின்றருளியவர் மூலாதாரநிலையராகிய மூத்தபிள்ளையார் முன்னவன் எனப்பெறும் விநாயகர் - பொல்லாப்பிள்ளையார் - என்பர். இவர் திருவெண்ணெய் நல்லூர் திருநாரையூர் என்னும் தலங்களிலே சாத்திர தோத்திரங்களில் தோற்றத்துக்கு காரணராக முன்னின்றருளியதை அறிவோம்.
நம்பியாண்டார் நம்பிகள் மூலம் தோத்திரங்களாகிய திருமுறைகளைக் காட்டி வெளிப்படுத்தினார். மெய்கண்டார் மூலம் சாத்திர நூல்கள் வெளிவர ஞானபோத குருவாக அமர்ந்து அருள்புரிந்தார்.
மேன்மை கொள் சைவநீதி எமக்கெடுத்துக் காட்டும் பொருள்கள் யாவும் திரு என்னும் அடைமொழி பெறுவன. திரு என்பதன் பொருள் யாது? "திரு என்பது கண்டரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்” என்பர் திருக்கோவை உரையாசிரியர் திரு இங்கு செம்பொருளாகிய சைவத்திரு.
திருவெண்காடு பற்றியத் தொண்மையாக அறியவரும் செய்தி கந்தபுராணத்தில் வருகிறது ; இந்திரன் மகன் சயந்தன், சூரன் மகன் பானுகோபன் என்பவனோடு போர்புரிந்து தோற்கிறான். அதிலே நான்கு தந்தமும் முரியப்பெற்ற அயிராவதயானை திருவெண்காட்டில் வந்து சிவனை பூசித்து ஊறுபாடு நீக்கியது.
அடுத்து அங்குள்ள மூர்த்திகளில் தனித்துவமான சிறப்புள்ளவர் அகோரமூர்த்தியாவர் இவர் கோயில் மேலை வீதியிலே தனிச்சந்தியில் நிற்கிறார் இவரை எதிர்நேக்கும் சந்நிதியில் உக்கிர காளியும் நிற்கிறார். இருவர் திருக்கோலமும் பயங்கரமானவையே முன்பு மருத்துவன் என்பானோர் அசுரன் சிவனை வழிப்பட்டு பெருவலியும் சூலமும் பெற்றான். அதனாலே தேவரையும் முனிவரையும்
 

ண்காடு ண்டிதர் ச. சுப்பிரமணியம்
தொல்லைப்படுத்தினான். அவர்கள் இத்தலத்துப் பெருமானிடம் அபயமடைந்தனர். பெருமான் இடபதேவரை அசுரனை விரட்டும்படிவிட, மருத்துவன் அவரையும் மடக்கிவிட்டான். அதனால் சிவபெருமான் தமது அகோரமந்திரத் திருமுகத்திலிருந்து வெளிப்பட்டு மருத்துவனை வதஞ்செய்தருளினார்; இடர்தீர்த்தார். அந்தத் திருவுருவே இவர்.
இவருக்கு இடப்பக்கத்திலே தாமிரசபையிலே சிவகாமிசமேதரான நடராசப்பெருமான் சந்நிதி உளது. பஞ்சசபைகளில் இது ஒன்று. சிதம்பர தலத்திலமைப்புக்கள் போல எல்லாம் அமைந்துள. ஆதி சிதம்பரம் எனப்படும் சிறப்பும் உண்டு.
சூரியன் சந்திரன் அக்கினி என்ற முச்சுடர்களின் பெயரோடு சிறப்புற்ற மூன்று தீர்த்த குளங்கள் ஆலய முகப்பிலே அமைந்துள்ளன.
மேற்படி தீர்த்த விஷேடத்தினத்தினாற் போலும் திருஞானசம்பந்தப் LS 6T60) 6TLT if இங்கு
இறைவனைத்தரிசித்து பாடியருளிய தேவாரப்பதிகத்திலே
*(BULLISOLLUT. முக்குளநீர் தோய்வினையா
ரவர்தம்மை’ எனச் சிறப்பித்தார்.
திருவெண்காட்டுப்பெருமானும் பேரருட்
பிரசாதமுள்ளவர். எட்டேவயதுடைய பிள்ளையான சுவேதகேது என்பவனை மரணப் பிடியிலிருந்து மீட்டு நித்திய வாழ்வு நல்கினார். மேலும் வேதராசி எனும் பிரமணனைப் பற்றிய பிரமகத்தி தோஷத்தை நீக்கியருளினார் என்றும் வரலாறு உண்டு. அன்றியும் இந்திரன் முதலாம் பலர் தேவரும் முனிவரும் வழிபட்டு வரம் பெற்ற வரலாறுகளும் தலபுராணம் கூறும்.
எங்கள் சமய குரவர் நால்வரும் இங்கு வந்து வழிப்பட்டுப் பெருமானைப் போற்றிப் பாடியருளிய திருமுறைப்பாக்கள் உண்டு. இத்தலப்பெருமான் பெயரையே இயற்ப்பெயராகக் கொண்ட பட்டினத்தார் இங்குவந்து தரிசித்துச் சிவபூசை செய்திருந்ததாகவும் வரலாறுண்டு.
இக் கோயிலுக்கு மாத்திரம் எண்பதுக்கு மேல்
கல்வெட்டுச் சாசனங்கள் அவை சோழப்பாண்டிய வேந்தரும் குறுநில மன்னரும் செய்த திருப்பணிகள் நிபந்தனைகளை எடுத்துரைக்கின்றன அவற்றில் இக்கோயிற் பெருமான் “ வடகரை நாங்கூர் நாட்டு

Page 23
நாங்கூர் பூரீ திருவெண் காடுடைய தேவர் ” என்று குறிப்பிடப்பெறுகிறார். இத் திருநாமம் சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம் சேஷத்திரக் கோவையாகிய ஊர்த் தொகைப்பதிகத்தில் கூறப்படுகிறது.
இத்தகைய தலத்தீர்த்தத்தின் சிறப்பும் தரிசன விசேடமும் பற்றிய வரலாறு திருவெண்ணெய் நல்லூரரான அச்சுத களப்பாளர் என்னும் சைவ வேளாளர் மகப்பேரின்றி வாடி குலகுருவான அருணந்தி சிவாச்சாரியரிடம் முறையிட்டார்.
அவர் திருமுறை ஏட்டிலே சிவபிரானது திருவுள்ளம் நோக்கிக் கண்டு சம்பந்தர் வாக்கில் கூறியபடி திருவெண்காட்டில் விரதநியமத்தோடு முக்குளத்திலும் தீர்த்தமாடிச்சிவனை வழிபட்டு வருக குறைதீரும் என்றார். அதன் படி அவருக்கு கிடைத்த . பிள்ளைக்கும் திருவெண்காடர் என்றே பெயரிட்டு வளர்த்தனர். மூன்றாம் வயதிலே அகச்சந்தானாசாரியராகிய பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்று மெய்கண்டாரென தீட்சாநாமம் தாங்கினார். அவரே புறச்சாந்தானாசாரியரில் முதற் குரவர் மெய்கண்ட சாத்திரங்களில் முதன்மை பெற்ற சிவஞான போதம் என்னும் நூலை ஆக்கியருளினார். தம்மிடம் வந்தடைந்த மாணவர் பலருக்கும் சிவஞான போத உண்மைகளை உபதேசித்து அவருள் தலைமாணாக்கரான அருணந்தி சிவச்சாரியாரிடம் அந்நூற்பொருளை விளங்க விரிவாகச் சிவாஞான சித்தியார் எனும் நூலை ஆக்கப் பணித் தருளினார். அவ்வாறு தொடர்ந்த ஞான நூல்களே மெய்கண்டசாத்திரங்கள். சாத்திரம் பதினான்கில் மெய்கண்டார் ஒன்றும் அருணந்தியார் இரண்டும் உமாபதி சிவம் எட்டும் அருளினர் திருவுந்தியர் திருக்களிற்றுப்படியார் என்னும் இரண்டும் இவற்றின் முன்னே தோன்றியவை. இவை முறையே திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாராலும் திருக்கடலூர் உய்யவந்த தேவநாயனராலும் செய்யப்பட்டது. மனவாசகங்கடந்தாரால் அருளப்பட்டது உண்மை விளக்கம்.
இவ்வகையில் சைவ நல்லூலகத்தவர்க்கு அன்பும் அறிவும் எனத்தகும் மெய்யுணர்வு பெறுதற்காக அமைந்துள்ள இரு ஞானக்கண்களையே உதவும் உபகாரிளை உருவாக்கி உதவிய பிள்ளையாரின் பிள்ளைகளின் ஒரு பிள்ளைக்குப் பேருபகாரியான பெருமானும் பிள்ளையும் சம்பந்தமுடைய ஒரு செய்தியைத் தெரிந்து கொள்வது நன்று.
 

இவ்வாறெழுந்த மெய்கண்ட சாத்திரங் களுக்குக்கெல்லாம் மூலமான வித்தாயுள்ளவற்றையே தமிழ் வேதமென்னும் திருமுறைகளென்பர்.
அந்தத் திருமுறை முதலிகளில் முதல்வராகப் போற்றப்படுவர் ஆளுடைய பிள்ளையாராகியசம்பந்தர். அவரருளிய திருப்பதிங்கங்களில் ஒன்று திருவெண்காட்டுக்கு உரியது. அதில் ஒரு திருப்பாடலே மெய்கண்டார் தோற்றத்தின் விளைவுக்கு மூலவேராக விளங்கியது.
"GL /60)LIL//T; பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு ஆயினவே வரம் பெறுவார் ஐயுற வேண்டா ஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண் காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’
திருவெண்காட்டுப் பெருமானின் திருவருள் தூண்டவே அது ஆளுடைய பிள்ளையார் திருவாக்காக வெளிவந்து சைவ நன்நெறியின் கருவூவலமாகிய அருட் செல்வத்தை வெளிப் படுத்துதவும் திறவுகோலாகியது.
எடுத்த எடுப்பிலேயே குறையுற்று வந்த அச்சுத களப்பாளரின் அகக்குறையைத் தீர்க்கும் மருந்தாக பின் விளைவாகிய வரப்பேறுகளை எடுத்துரைக்கிறது. தொடர்ந்து ஐயுற வேண்டாம். அனைத்தும் சிந்திக்கும் என ஆணையிடுவது போலத் தோற்றுகிறது. இதனை உணர்ந்துபவர் உதவுபவர் யாவர் என்பதை உமை பங்கர் எனச் சுட்டிக் காட்டுகிறது. முடிவிலே அதனை அடைய ஆற்ற வேண்டிய கடனை - உழைப்பை ஒரு வசனத்திலே கூறி மேலும் கிடைப்பதோர் அரும்பெரும் பேற்றையும் கூறி விடுகிறார்.
மூன்று குளத்துத் தீர்த்த நீரிலே தோய்தலே கடமையாகச் செய்ய வேண்டிய கருமம். தீர்த்த உரிமையாளர் பிரமாவித்தியா நாயகியாகிய உமையும் சிவனும் நாம் ஊதாமலே காற்றை வாங்கித் தானே வேணு கானம் செய்யும் இயல்பினது வேய் - வேணு - எனும் மூங்கில் . அதுபோன்ற தோள் உடையவர். மேலாகிய பிரம வித்தையின் வடிவாயுள்ளவர் அம்மை. அந்த அம்மையைப் பிரிவின்றியே இடப் பாகமாகக் கொண்டிருப்பவர் பெருமான், தடைக்காவல் ஏதுமின்றித் தீர்த்தம் நாமெல்லாம் ஆடும் படி முன்வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் அம்மையப்பர் இருவர் திருவருளும் எவரும் கொள்ளை கொள்ளும்படியே வெண்காட்டில் வெளியேயுள்ளது.
நியமமாக நீராடிச் சந்நிதி சென்று தரிசிப்போம். பயன்கள் வருமாறு : அகப்பேயாகிய காமம் முதலிய அகப்பகையும் புறத்திலிருந்து வந்துபற்றும் பீடைப்

Page 24
பகையும் வந்துசேரா, முன்புள்ளவையும் அகன்றே விலகி விடும்.
உத்தம பேறாகிய புத்திரபேறும் உண்டாகும்; மேலும் உள்ளத்திலே நினைந்து உசிதமான பேறுகள் எவையோ அவையும் வரப்பிரசாதமாகப் பெறுவர். வேண்டாதென விலகவும் வேண்டுவன வேண்டியாங் கெய்தவும் குறை தீர்ந்து விடுகிறது. எண்ணம் நிறைவாகுமோ என்ற ஐயமும் வேண்டாம். ஒரு குறையும் மிஞ்சாது.
இவையெல்லாம் தீர்த்தமாடுவதாலேயே சித்திப்பன. அவற்றின் மேலும் அப்பெருமானின் சென்று தொழாமல் விடலாமா? தரிசித்தேயாக வேண்டுமென எண்ணம் தோன்றும் தரிசனத்தின் பலனாக தீவினைதோயாவாம் என்கிறது. கருமம்
@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ 尊
திருஞானசம்பந்த
திருவெண்காரு திருச்சிற்ற
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 1
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையாரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.2
மண்ணொடுநீரனல்காலோ டாகாயம் மதியிரவி எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும் பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம்பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே 3
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 4.
வேலைமலி தண்காணல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன் மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர் ஆலமிடற் றனாடியா ரென்றடர அஞ்சுவரே. 5.
 

புண்ணிய பாவம் இரு விலங்குகளே இவை! இவற்றாலேயே தொடர்பிறப்பு வினைத்தோயாவாம் எனப் பிறப்பொழிந்து இனிஇப் பிறவா வீடுபெறுவர் என்பதாம்.
தோய்வினை என்பதால் அறமும் ஆயினவே வரம் பெறுவார் என்பதால் பொருளும் இன்பமும் தீவினை தோயாவாம் என்பதால் வீடும் ஆக உறுதிப் பொருள் நான்கும் பெறுவதற்கு உபாயமும் பேறு உறுதியென்பதும் உணராம்.
நாம் யாத்திரை செய்து திருவெண் காடரைத்தரிசிக்க இன்றைய சூழ்நிலை உகந்ததல்லவெனினும் இத்திருப்பதிகத்தை பாராயணம் செய்து பாவனையாகவே நீராடி வணங்குவோம். வரந்தருவான்.
LLLSS L 0SSSSSYSSSZSSLLSSSSL0SSSLSS SLLSS SLLSSZSSLLSSLLSSLLSSLLSSLLSSYSYSYSSSLSSLLSSLSSSLSS SLLLL S S 0 S S L S L SLLLSLLLLS
மூர்த்தி நாயனார்
பண் - சீகாமரம்
ம்பலம்
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில் பண்மொழியா லவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும்
வெண்காடே. 6.
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லதைத்தானு மடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளநன் குடையானு முக்கனுடை யிறையவனே. 7
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த உன்மத்த னுரம்நெரித்தன் றருள்செய்தா னுறைகோயில் கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்டிசைமுரலும் வெண்காடே 8.
G56T6ITTffG)éfsh கமலத்தான் கடல்கிடந்தா னெனவிவார்கள் ஒள்ளாண்மை கொளற்கோடியுயர்ந்தாழ்ந்து முணர்வரியான் வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுனரோமே. 9.

Page 25
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் பேதையர்களவர்பிறிமி னறிவுடையீ ரிதுகேண்மின் வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்ானென் றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 10.
மெய்கண்ட தேவர் அருளி
மங்கல
கல்லால் நி வில்லார் அ பொல்லார் நல்லார் புன 1. பொது இயல்பு பிரமாண இயல்
முதற் சூத்திரம் (பதி உண்மை) அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்
இரண்டாம் சூத்திரம் (பாச உண்மை) அவையே தானே ஆய்இரு வினையின் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே
மூன்றாம் சூத்திரம் (பசு உண்மை) உளது இலது என்றலின் எனது உடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின் உண்டிவினை இன்மையின் உணர்ந்த உணர்தலின் மாயா இயந்திர தனுவின்உள் ஆன்மா 2. இலக்கண இயல்
நான்காம் சூத்திரம் (பசு இலக்கணம்) அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை சந்தித்தது ஆன்மாச் சகசமலத்து உணராது அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே
ஐந்தாம் சூத்திரம் (பாச இலக்கணம்) விளம்பிய உள்ளத்து மெய்வாய்கண்மூக்கு அளந்து அறிந்து அறியா ஆங்கு அவை போலத் தாம்தம் உணர்வின் தமி அருள் காந்தம் கண்ட பசாசத்து அவையே
ஆறாஞ் சூத்திரம் (பதியின் சொரூப இலக்கணம்) உணர்உரு அசத்துஎனின் உணராது இன்மையின் இருதிறன் அல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் இசைக்கும் மன்உலகே
திருச்சிற்றம்
 

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டை பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.11.
ச் செய்த சிவஞான போதம் வாழ்த்து ழல மலை ருளிய இணைமலர் }னவரே
2. உண்மை இயல்பு 3. சாதன இயல்
ஏழாஞ் சூத்திரம் (பசுவின் சிறப்பு இலக்கணம்) யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின் சத்தே அறியாது அசத்துஇலது அறியாது இருதிறன் அறிவுஉளது இரண்டு அலா ஆன்மா.
எட்டாஞ் சூத்திரம் (குருவுமாய் உணர்த்தும் முறை) ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத் தம்முதல் குருவும்.ஆய்த் தவத்தினில் உணர்த்த விட்டு அந்நியம் இன்மையின் அரன்கழல் செலுமே. ஒன்பதாஞ் சூத்திரம் (ஆன்மா சுத்தி)
ஊனக் கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினில் சிந்தை நாடி உராத் துணைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் தண்நிழலாம் பதி விதி எண்ணும் அஞ்சு எழுத்தே 4. ULU60fusio
பத்தாஞ் சூத்திரம் (பாசநீக்கம்) அவனே தானே ஆகிய அந்நெறி ஏகன்ஆகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை இன்றே
பதினொன்றாஞ் சூத்திரம் (சிவப்பேறு) காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே
பன்னிரண்டாஞ் சூத்திரம் (சீவன்முத்தி) செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பரொடு மரீஇ மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே.
பலம் (கருத்துரை, மேற்கோள், ஏது. உதாரணங்களும் உள)

Page 26
திருவாசகச் சிந்தனை
கோயில் மூத்
பத்துப் பாடல்களைக் கொண்டதொரு பகுதி பதிகம் எனப்படும். கோயில் - சிதம்பரம், தில்லை, தில்லையிற் பாடப்பட்ட பதிகங்கள் பலவற்றுள்ளும் காலத்தால் முந்தியது, அதாவது முதலிற் பாடப்பட்டது. இத்திருப்பதிகம் என்ற காரணத்தால் இது கோயில் மூத்த திருப்பதிகம் எனப்பட்டது என்பர். திருக்குறள்வேள் ஜி. வரதராஜன் 'அடிகள், தம் வாழ்வினுட் பிரசித்தி பெற்ற திருப்பெருந்துறையையும் கோயில் என்று மதிப்புறக் கருதிக் கொண்டாராகலின் தில்லையாகிய கோயிலை அதனின் வேறுபடுத்துதற்கு மூத்த கோயில் என அதனது பழமையையே அதற்குரிய அடையாகப் புணர்த்தோதினார்” என்பது பண்டிதமணி க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார் கருத்து. இவ்வகைக் கருக் கொள்வதற்காக பதிகத் தலைப்பை மூத்த கோயில் திருப்பதிகம் என்று மாற்றிக் காணும்படியும் பண்டிதமணி பாரதியார் எழுதியுள்ளார். தில்லையில் வீடுபேறடைய அருளுமாறு அடிகள் வருத்தி வேண்டிய பகுதி இது என்பது பாரதியார் குறியீடு.
கோயில் எனும் போதே தெய்வீகம் பரிமளிக்கின்றது. அது காரணமாக முன்னைய பதிகங்களுக்குக் கொள்ளப்பட்டது போலத் தெய்வீகத்தையுணர்த்தும் திரு என்னும் அடை இந்தப் பதிகத்துடன் புணர்த்தப்படவில்லை. அநாதியான சற்காரியம் என்பது இப்பதிகத் திருப்பாடல்களில் திரண்ட பொருட்பேறெனத் திருவாசகத் திருவுள்ளக்கிடை குறிப்பிடும். அதாவது தோற்றமும் முடியும் இல்லாத இறைவன் நிலையான செயல் என்பது.
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த பத்துத் திருப்பாடல்களைக் கொண்டது இப்பகுதி. அந்தாதித் தொடையால் நிறைவுறுவது.
 
 

த திருப்பதிகம்
இப்பதிகத் திருப்பாடல்கள் தரும் கருத்துக்கள்
1.
பொன்னம்பலத்திலே ஆடுகின்ற எமது முடியில்லாத முதல்வனே எம்மையுடைய சிவசக்தி உன்னிடத்துள்ளான்; நீ அவளிடமாகியுள்ளாய். இருவிரும் என்னுள் இருப்பது உறுதியெனில் அடியவனாகிய என்னை உன் அடியார் நடுவுள் இருக்குமாறு திருவருள் புரிவாயாக! என்பது. 'பொன்னம்பலத்துள் திருநடம் புரிதலை மிகுதியாக விரும்பியவனே! யான் பக்குவமடையும் முன்பாகவே என்னை ஆட்கொண்டு விட்டாய். யானும் அந்த வழித் தகுதியை உண்டாக்க வேண்டி முயன்று தொடர்ந்து பணி செய்கின்றேன். அங்ங்ணம் செய்வதில் யான் பின்னடைந்து விட்டேன். இந்த நிலையிற் திருவருள் என்னிடமாக நின்று வீடு போதுவாயாக என்று வழிப்படுத்தாவிடில், உன்னிடமாகியுள்ள அடியார் இவன் யாரென்று கேட்க மாட்டார்களா? அயலவன் எனக் கருதுவார்களே' என்பது. பொன்னம்பலத்திற் திருநடனம் புரியும் முழுமுதலே, அன்புடனாகிய அடிமைத் திறத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனே! அன்பால் உருகாத அறிவிலியாகிய யான் உலகம் அறியும்படி எடுத்துச் சொன்னால் அது பொருத்தமற்ற (Uഞp என்று சொல்வார்களல்லவா! வேள்வி செய்து பொருந்தும் வழியில் நிற்பவர்கள் ஒழுங்காக வாழ அருள்பவனே அடியனாகிய எனக்கு உன் முகத்தையாவது காட்டாவிடில் இறந்து படுவேன் ! என்பது. பொன்னம்பலத்துத் திருநடனஞ் செய்யும் அரசே, எல்லாவற்றுக்கும் முதலானவனே, ஐம்பொறி

Page 27
அறிவுகளுக்கும், அறிவு, இச்சை, செயல் என்னும் முயற்சிகளுக்கும் புருடனாகிய எனக்கும் இயக்கக் காரணமானவனே, உன்னுடைய பழமையான அடியவர்கள் கூட்டத்திற்கு அருள்புரிய வேண்டி எழுந்தருள்பவனே என்னை உன்னுடனிருக்க இரங்குவையோ என்று அழுவதல்லது யாம் செய்யவல்லது யாது! என்பது. 5. தலைவனே, பொன்னம்பலத்திற் திருநடனம் புரியும் அமுதம் போன்றவனே! என்று உனது கருணையை எதிர்த்து உன்னைத் தேடுகின்ற கொக்கினைப் போன்று களைத்து விட்டேன். பிறவிக் கடல் எல்லையை அடைந்த அடியவர்களுக்கு மகிழ்ச்சி மிகுதியாகும்படி காட்சி கொடுத்தருளி உன் அடியவனாகிய என்னிடத்து தமியனாவற்கு உறைவிடப்பட்ட பாலில் நெய் தோற்றாது போல வெளிப்படாது, என்னுடன் பேசாதிருந்தால் என்னை ஏனையோர் இழித்துப் பேசமாட்டார்களா ! என்பது. 6. ஒளிமயமானவனே, இறைவனே, பொன்னம்பலத்
தாடுகின்ற அப்பனே, உண்மை அன்பில்லாதவனென்று ១_6T6យា៣ யுணர்ந்தவர்கள் என்னை ஏசுவர். யான்
உன்னுடைய அடியவனென்றும் பேசுவர். யான் உன் திருவடிகளையே போற்றி நிற்கின்றேன். உன் அன்பிற்குப் பாத்திரமான அடியார்கள் சேவிக்கும் திருவோலக்கத்தை யானும் சேவிக்க இனியாயினும் இரங்க மாட்டாயா! என்பது. 7. எனது வாழ்முதலே, திருச்சபையில் திருநடம் புரிபவர் இரங்கி வீடுபேறடைய வைப்பாயென்று நினைந்து நினைந்து ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் என்னைப் புதிய வகையிற் கற்பிதமான வழியில் ஆட்கொண்டாய். இப்போ
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு யாத்திரையோ அல்லது தீர்த்த யாத்திரை வைத்த பணத்தில் ஐந்தில் ஒரு பங்கை செய்ய வேண்டும். இதன் பலண் புத்திர,
 
 

யான் உடையவனில்லாத மாடு போன்றாகி விடுவேனோ உன்னிடமாகி நெருக்கமாகவுள்ள அடியார்களும் நீயும் நின்று விளையாடும் இடத்திற்குப் பக்கலிலாவது வர, என் வாழ்வே வாவென்று அருள மாட்டாயா! என்பது. 8. பொன்னம்பலத்து நடம் புரிபவனே, என்னையும் ஒரு பொருளாக மதித்து என்னை ஆண்டுகொண்ட மேலானவனே, நீ எனக்கு அருளவில்லை என்றால்அடியேனைப் பயப்படாதே என்று சொல்லக்கூடியவர் யார்? மயக்கமாகிய உள்ளத்தோடு உன்னைப் பிரிந்து வருந்தும் என்னை வந்து சேருவாயென்று உன்னுடைய தெளிவானவர் கூட்டத்தைத் காட்டிச் சேர்க்க வில்லையானால் யான் இறக்க நேரும். அப்போ உன்னைச் சிரிக்க மாட்டார்களா! என்பது. 9. தலைவ, உனது உண்மையான அன்பர்கள் மகிழ்ச்சியாற் சிரித்துக் களிப்படைவர். அனுபவிப்பர் சேர்ந்த சேர்ந்து உன் திருப்புகழ் பேசுவர். அதனை விரும்பிக் கேட்பர் வியந்து கொண்டாடுவர். தனித்தனி இருந்து உன் திருப்பெயரை நினைப்பார்கள். பொன்னம் பலத்தாடும் தலைவனே என்பார்கள். அவர்கள் முன்பாக நாயேன் இகழ்ச்சிக் குரியவனாகி இருப்பேனோ! உன் மகிழ்வைக் கொடுப்பாயாக! என்பது 10. என்னை அடியவனாக உடையவனே! எமக்கு அருளாது போகமாட்டாயென்று எண்ணி உன் திருநாமத்தைப் பலமுறை சொல்லி கண்ணிர் பெருக வாய் குழறித் துதி செய்து வணங்கி, மனத்தில் நினைந்து உருகி, பலமுறையும் உன்னை நினைந்து நீங்காது நிற்கும் எனக்கு இரங்கித் திருவருள் புரிவாயாக 1 என்பது.
- ༄། வரும் தண் வாழ்நாள் முடிவுக்குள் புனித யோ மேந்கொள்ள வேண்டும். சேர்த்து இந்த மாதிரி நந்காரியங்களுக்கு செலவு சிபளத்திரர்களுக்கே கிடைக்கும்.

Page 28
நமிநந்தியடிக
- சிவ. சண்மு
திருச்சிற்றம்பலம் ஆராய்ந்தடித்தொண்டர்ஆனிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான் ஆரூர் நறுமலர்நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை நீனா டறியுமன்றே.
என்பது வாகீசர் வாய்மை திகழ் திருவாரூர்த் திருவிருத்தப் பாமாலைத் திருப்பதிகம் ஒன்றில் அமைந்த பூமலர் ஒன்று.
சோழர்கள் உலகத்தைக் காவல்புரிபவர்கள். அவர்களது செங்கோல் தனியானது. சோழ அரசர்களுடைய திருநாட்டைப் பொன்னி நதி வளம்படுத்துவது. அந்த மேன்மையினால் சோழர்கள் பொன்னியின் செல்வர்கள் என்றும் போற்றப் படுவார்கள்.
ஏமப்போறுார் சோழநாட்டிற்குச் சொந்தமானது. அங்கு பெரிய வயல்கள் உள. தடாகங்கள் எங்கும் நீர் நிறைந்திருக்கும். நீரின் மேல் செந்தாமரைகள் செழித்திருக்கும்.
ஏமப்பேறுாரின் வீதிகள் அழகுடையன. மருங்கில் காணப்படும் மாலைகள் மனத்தைக் கவரும். தோரண நிரை துள்ளாத உள்ளத்தையும் துள்ள வைக்கும். மாடங்கள் மீது கடல்நீர் பருகும் மேகங்கள் படரும் சோலைகளில் குளிர்ந்த இருள் சோபிக்கும். கமுகுகளைச் சுரும்புகள் சுற்றித் திரியும்.
காலம் தப்பாமல் வேதம் ஒலிக்கும். பெருமை விளங்கும் அப்பதியில் வேதநெறி தழைத் தோங்கும். மிகுசைவத்துறை விளக்கும் அந்தணர் புகழினால் பெருமை மிக்கது. ஒருமை வழி ஒழுகும் அந்தணர் குலத்தில் நமிநந்தி அடிகள் அவதரித்தார். அவர் இம்மை அம்மை ஆகிய இருமை உலகிலும் சிவனடியே சிந்திக்கும் பேறு பெற்ற தவத்தினை அருமையாக ஆற்றி வருபவர். வேதநூல் ஒழுக்கத்தால் வளர்க்கும் செந்தியாவார் எனப் பேசும் பெருமைக்குரியார். "வாய்மை மறைநூற் சீலத்தால் வளர்க்குஞ் செந்தீ யெனத் தருவார்,' என்பது பெரியபுராணம்.
நமிநந்தி அடிகள் ஏமப்பேறுாரில் இருந்தும் திரு ஆரூருக்குச் செல்வார். செம்பொற் புற்றின் மாணிக்கச் செழுஞ்சோதியின் மலர்த்தாள் மனங் கொண்டு வணங்குவது தம் பயனாக நினைந்தார்.
பணிந்து பொன் மதில் புறமாகப் போந்தார்.
(2.
 

GñI HII LUIGOIITĪT
கவடிவேல் -
திருமுற்றத்தின் பக்கமாகத் தனியான ஒர் இடத்தில் அமைந்த அரனெறி ஆலயத்தை அணுகி அணைந்தார்.
அரனெறியில் அண்ணலாரை அன்போடு வழிபட்டார். மனத்திலே இன்னது என்று உணர இயலாத திருவருட் குறிப்புத் தோன்றியது. பல திருத்தொண்டுகளைப் பரவிச் செய்வார். தங்கி இருக்கும் சமயத்தில் எண்ணற்ற தீபங்கள் ஏற்ற வேண்டும் என்ற நினைப்பு உள்ளத்தில் நிகழ்ந்தது. விளக்கு ஏற்ற விரும்பி எழுந்தார்.
நமிநந்தி அடிகள் எழுந்த போது சூரியன் இறங்கியது. மாலைக்காலம் ஆயிற்று. ஏமப் பேறுாருக்கு ஏகிவரின் பொழுது போய் விடும். அங்கே நெய்பெற விரும்பி அயல் மனை ஒன்றுள் புகுந்தார். நெய் கேட்டார். அது சமணர் மனை. அவர்கள் உரைப்பார்கள்.
“உங்கள் கடவுள் கையில் கனல் வைத்துள்ளார். அவருக்கு விளக்கு மிகுதி காணும்.”
என்றார்கள்.
"எனக்கு வேண்டியது நெய், "இங்கு நெய் இல்லை.” என்று
மறுத்துரைத்தார்கள் சமணர்கள்.
“விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி
ஞானமாகும்.
'நீர் நிறைய அள்ளி எரித்தல் செய்யும்’
என்றார்கள் ஏளனமாக.
நமிநந்தி அடிகள், மதியாது சமணர் வார்த்தை
கேட்டுத் தரியாதவரானார். பிறை அணிந்த முருகு
விரியும் மலர்க்கொன்றை முடியார் கோவில் முன் வந்தார். உருகும் அன்பர் உள்ளம் குளிர ஒருவாக்கு உயர் விசும்பில் நிகழ்ந்தது.
“வந்த கவலை மாற்றுவாய், அருகிலுள்ள குளத்து நீரை அள்ளி வந்து ஏற்றுவாய்."
இந்து சேகரர் இன்மொழி கேட்டுச் சிந்தை களித்தார் திருத்தெண்டர். நமிநந்தி அடிகளார் நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கார் நந்தி நாமம் நமச்சிவாய என்று நாவார நவின்றார். குடத்தில் நிறைத்து நீரைக் கொண்டு வந்தார். முந்நீர் உலகம் அதிசயிக்க முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார்.

Page 29
விளக்கில் ஒன்று ஏற்றினார். சுடர்விட்டு எழுந்தது கண்டார். ஆதி முதல்வர் அரனெறி ஆலயம் அடங்கவும் விளக்கு ஏற்றினார். நமிநந்தி அடிகளார் நாதன். அருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய”
திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய தகளிகள் கொள்ளும் நீர் வார்த்தார். அவ்விரவே ஏமப்பேறுார் மனைக்கு ஏகினார்.
நமிநந்தி அடிகள் மனையில் சிவபூசை செய்தார். பரவிப் பணிந்தார். திருவமுது செய்தார். பள்ளி கொண்டார். பொழுது புலர அரவம் அணிந்தாரை அருச்சித்தார். ஆரூர் நகரில் அணைந்தார்.
அரனெறியார் ஆலயத்தை வலம் வந்து அடி பணிந்தார். திருக்கோவிலின் புறம்பும் உள்ளும் வேண்டும் பணிகளை விரைந்து செய்தார். அந்திக் காலத்தில் அரிய விளக்குப் பரிமாறினார். எங்கும் எழில் மிக்க ஒளி மயமாக உவந்து உருகி ஏத்தினார்.
தொண்டர் பலநாளும் பண்டு போலப் பணிபுரிந்து ஒழுகுவார். நமிநந்தி அடிகளார் நாளும் நன்மை பெருகி நாமுய்ய இறைபணி நிற்பார். அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் வணங்கும் அணி ஆரூர் ரழுலகும் ஏத்தும் பெருமை பெற்றது.
அரசர் அரியணையில் அமர்ந்த வண்ணம் ஆரூர் ஆலயத்திற்கு நிபந்தம் நியமித்தார். பூதநாதர் புற்றிடங்கொள் புனிதர்க்கு அமுது படி யாவும் வேதாகம நூல் விதிமுறையே வழங்கப் பெற்றது. நமிநந்தி அடிகள் நாமத்தால் அரசர் அமைத்தார்.
ஆரூர்ப் பெருமான் அருள் ஆடல் விழாவையும் பங்குனி உத்தரப் பெருவிழாவினையும் வேண்டிக் கொண்டார். நமிநந்தி அடிகள் விண்ணப்பர் செய்தவாறு பெற்றுக் கொண்டார்.
தியாகேசப் பெருமான் திருமணலிக்கு ஒருநாள் எழுந்தருளப் பெற்றார். நமிநந்தி அடிகள் எல்லோருடனும் தாமும் சேவித்துச் சென்றார். சிவபிரான் மீண்டும் திருக்கோவிலுக்கு எழுந்தருள நமிநந்தியார் தம்மனை ஏகினார்.
இராக்காலத்தில் மனையுள் புகுதாமல் புறங்கடையில் தங்கினார். மனைவியார் வந்து அழைத்தார்.
'சிவபூசை செய்ய வேண்டும். அக்கினி காரியம் ஆக வேணும். அமுது கொள்ள வேணும். பின்னர் பள்ளி கொள்ளலாம்.” என்றார்.
"தியாகேசரைச் சேவித்துத் திருமணலிக்குச் சென்றேன். எங்கும் எல்லோருடனும் போதலால் அழுக்குப் படிந்தது. குளித்துத் தூய்மை செய்து அகம்
 

புக வேணும். நல்லநீர் இங்கு எடுத்து வருவாய்.” என்று நமிநந்தி அடிகள் எடுத்து உரைத்தார்.
மனைவியார் கணவர் பணி புரிய மனையுள் ஏகினார். ஏகிய மனைவியார் மீண்டும் அணைவதற்கு முன்னராக எதிர்பாராத விதமாக நமிநந்தியார் கண்ணயர்ந்து உறங்கினார். உறக்கத்தில் கனவுக் காட்சி தோற்றியது. வீதிவிடங்கப் பெருமான் நமிநந்தி அடிகளார் பூசனைக்கு வருவார் போலக் காட்சி கொடுத்தார்.
'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் ஞானமறையோராவார். நமது சிவகணங்கள் அவர்கள். அத்தன்மையை நாம் காட்டுவோம். நீ காண்பாய்.” என்று அருளிச் செய்தார். பெருமான் கனவினின்றும் நீங்கினார்.
நமிநந்தி அடிகள் விழித்து எழுந்தார். “சிவபிரான் பூசனை புரிந்திலேன். குறை காண முற்பட்டேன்.” என்ற அச்சத்துடன் மனையுள் புகுந்தார். அன்பான அருச்சனை ஆற்றினார். மாதரார்க்கும் கண்ட கனவைக் கூறினார். விடியற்பொழுது விரைவோடு திருவாரூர் புகுவார். கண் எதிரே அந்நகர் காண்பார்.
திருவாரூர்ப் பிறந்து வாழ்வார்கள் எல்லாரும் சிவபெருமானது திருவடிவம் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் யாவரும் ஒளி பெருகத் திரண்ட மேனியர் ஆம் தன்மை கண்டார். கூப்பிய கையராகிக் குலவயத்தில் வீழ்ந்து கும்பிட்டார். களிப்பில் மேம்பட்டார்.
"தெய்வப் பெருமாள்திருவாரூர்ப்பிறந்து வாழ்வார் எல்லாரும் மைவைத்தனைய மணிகண்டர் வடிவே யாகிப் பெருகொளியால் மொய்வைத்தமர்ந்த மேனியராம் பரிசு கண்டுமுடிகுவித்த கைவைத் தஞ்சிஅவனிமிசை விழுந்து பணிந்து களி சிறந்தார்."
என்பது பெரியபுராணம் திருவாரூரர்களுடைய வடிவம் மாறியது. மீண்டும் அவர்களைப் பழம்படியே பார்த்தார் தொண்டர். ‘அடியேன் அறியாமை பொறுக்க வேண்டும்” என்று ஆரூர்ப் பெருமான் அடிகளைப் பூண்டு போற்றினார்.
நமிநந்தி அடிகள் திருவாரூரில் குடி கொண்டார். திருத்தொண்டு நிகழச் செய்தார். அடியார்களுக்கு வேண்டுவன விரும்பிச் செய்தார். "தொண்டர்க்கு ஆணி’ என்று திருநாவுக்கரசு நாயனார் போற்றும் பேறுபெற்றார்.
திருத்தொண்டிற் சிறப்புற்ற நமிநந்தி அடிகள் திருவாரூர்ப் பெருமான் திருவடி நீழலின் வளர்செம் பொற் சோதியினுள் நிலையான வாழ்வு பெற்றார்.

Page 30
GS) FG)
ஆண் மாதிரி வி
வேத சிரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது சம்பந்தப் பெருமான் எங்கிருந்து திருக்கேதி பாடினார்? பன்னிரு திருமுறைகளையும் அருளியோர் எ கந்தரலங்காரம் யாரால் பாடப்பட்டது? கந்தன் என்ற சொல்லின் பொருள் என்ன? சகலகலாவல்லி மாலை பாடியவர் யார்? உபாகமங்கள் எத்தனை? ஆகமப் பொருளைத் தமிழிற் கூறும் நூல் எது தீட்சை என்னும் சொல்லின் பொருள் யாது?
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எவ்விடத்தில் திரு
சங்கம வழிபாட்டால் மிக உயர்ந்த நிலையை ஆவாகனமாவது யாது?
திருக்கலியாணம் குறிக்கும் தத்துவம் யாது?
பயனை அவாவிச் செய்யப்படும் பூசை எது? பூரணையில் மேலோங்கி நிற்கும் குணம் எது
மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தேவா
கதிர்காமத்தின் தீர்த்தம் யாது? புவனேஸ்வரி பீடமெனப் போற்றப்படும் ஆ6
அரசகேசரியால் அமைக்கப்பட்ட விநாயகரா சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கு விஜயதசமி அன்று கோயில்களில் நிகழும் திரு ஆதித்தர்கள் எத்தனை? முச்சுடர்கள் எவை? பெரியபுராணத்தின் காவிய நாயகன் யார்? இறைவனைக் கண்டு வழிபடும் இடங்கள் மூ . LOTGOuufait Log,Göt uTit?
ஆறு நாளில் ஞானம் பெற்று பரமுத்தி அடை சக மார்க்கமாவது யாது? மனக்கோயிலில் இறைவனை இருத்தி வழிபா அருணந்தி சிவாச்சாரியாரின் குரு யார்? சித்தாந்த சாத்திரங்கள் எத்தனை? தமிழ் வேதம் என்று போற்றப்படுபவை எவை திருவெண்காடர் என்னும் பிள்ளைத் திருநாப சிவஞான சித்தியாரின் இரு பகுதிகளும் எை சிவஞான போதத்தின் சார்பு நூல் எது? மூலமலம் எது?
சத்திநிபாதமாவது யாது?
மகாசிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படும் ச கதிரவன் சிங்கராசியில் இருக்கும் மாதம் எது சூரியன் தைமாதம் முதல் ஆனிமாதம் வரை வட
 
 

நெறி т66), 11 னாத்தாள்
எது? நீஸ்வரம், திருக்கோணேஸ்வரத்தின் மீது பதிகம்
நமர்
த்தனை பேர்?
?
ருவடித் தீட்சை கொடுக்கப்பட்டது?
அடைந்த நாயனார் யார்?
2 ரத் திருவுருவில் உறைந்திருந்த கோயில் எது?
MOULID 6 Tg5!?
லயம் எங்குள்ளது? நம் அம்சமாயுள்ள வடிவம் எது?
ருவிழா எது?
ன்றும் எவை?
ந்தவர் யார்?
ட்ட அடியவர் யார்?
2
DD (GJISTGðõTIL GI fit u Třir?
5?
ாலம் எது? 2
டக்கு நோக்கிச் செல்லும் காலம் எப்பெயர்பெறும்?

Page 31
GîNG
1. வேதாந்தம் 2. இராமேஸ்வர 4. அருணகிரிநாதரால் 5. ஆறு திருமே6 6. குமர குருபரர் 7. 207 9. ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது
11. விறன் மிண்டர் 12. இறைவனை விக்கிரகத்திலே எழுந்தருளும்படி மந்திர உ 13. அருள் வடிவான சத்தி, அறிவுமயமான சிவத்தோடு கல
14. காமிய பூசை 15. சத்துவ குண 17. மாணிக்க கங்கை 18. நயினாதீவு ந 19. நீர்வேலியில் 20. அரிகர வடிவ 22. பன்னிருவர் 23. சூரியன், சந்தி 24. சுந்தரமூர்த்தி நாயனார் 25. குரு, இலிங்க் 27. கண்னப்பர் 28. இறைவனைத் 29. வாயிலார் நாயனார் 30. மெய்கண்ட ே 32. தேவாரம், திருவாசகம் 33. மெய்கண்ட ே 35. திருவருட்பயன் 36. ஆணவம்
37. உயிரின் கண் இறைவனின் திருவருட்சத்தி படிந்து உயி 38. மாசி மாதம் தேய்பிறை பதினான்காம் நாள் 39. 40. உத்தராயணம்
------------– – – – – – توگه
き சைவந்தி - ச
தனிப்பிரதி வருடச் இலங்கையில் - ரூபா 25.00 இலங்ை இந்தியாவில் - ரூபா 25.00 இந்திய
(இந்திய ரூபா)
ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் பவு
வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரதும் ட
சந்தா அனுப்பப்பட வேண்டிய முகவரி:
S. NAVAN
42, Janaki
Colombo -
g) Sri Lanka.
- - - - - - - - - - - - - - - علقة
G
 
 

Ö)
த்திலிருந்து 3. 27 ரிகள் ஒன்றாகக் கூடியவன்
8. திருமந்திரம்
10. சித்தவட மடத்தில்
டச்சாடனத்தினால் வேண்டுதல் ந்து பிரபஞ்சத்தை இயங்க வைப்பது.
h 16. திருக்கேதீஸ்வரம் ாகபூஷணி அம்மன் ஆலயம் ம் (அரியர்த்தர்) 21 மானம்பூ திரன், அக்கினி ம், சங்கமம், (மெய் அடியார்) 26. சூரபன்மன்
தோழனாகப் பாவித்து அன்பு செய்யும் முறை
தவர் 31. 14
தவர் 34. பரபக்கம், சுபக்கம்
ரைத் தன்வயப்படுத்தி நிற்றலாம்
ஆவணி
????????”ဇီ(ရွှဲ
ந்தா விபரம் GU
Fசந்தா கையில் - ரூபா 250.00 ாவில் - ரூபா 250.00 (இந்திய ரூபா)
ண் 10 அல்லது US $ 15. சைவநிதியின்
பங்களிப்புப் பெரிதும் வேண்டப்படும்.
NEETHAKUMAR,
Lane,
04,
ఇస్తో
屋三蓋翼爱_囊苇圈孪圈碁露 圈目露菲氢─圈
29

Page 32
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
6ᏡᏧᏠ6ᎧlᏧᎭᏞᏝᏓLI 9! போட்டி
விளக்கழகு தேரழகு என்று புகழப்படும் த சிவபெருமானுடைய ஐந்து தாண்ட வங்க இறைவனை அடைவதற்குரிய நால்வகை சமயக் குரவர்கள் யாவர், அவர்களுடைய ஐம்பூதப் பதிகள் யாவை? சிறுத் தொண்டரின் புதல்வன் பெயரென்ன ஐந்தொழில்கள் எவை? விநாயகரை எப்படி வணங்க வேண்டும்? திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் பெ
போட்டியிற் பங்கு கெ எவரும் பங்கு கொள்ளலாம். சைவநீதி இதழில் வெளியாகியுள்ள கூப்பனு ஒருவர் ஒரு விடைத்தாள் மட்டுமே அனுப் நிறைவு செய்யப்பட்ட விடைத்தாள்கள், 1 கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும். விடைகள் அனுப்ப வேண்டிய முகவரி :
வெற்றி பெறும் மூவர் பரிசில் பெறுவர். போட்டி அமைப்பாளர் குழு முடிபே இறுதி முதற்பரிசு ரூபா 100 இரண்டாம் பரிசு ரூபா 50 மூன்றாம் பரிசு சைவநீதி ஒன்று
சிவ
GOSFG
சமய அறிவுப் (
பெயர் : . முகவரி : .
 
 

றிவுப் போட்டி இல - 1
முடிவு திகதி - 30.11.99 லங்கள் எவை? ரும் எவை? நெறிகள் யாவை? குருபூசைத் தினங்கள் எவை?
2
தகாத காலங்கள் எவை? ற்றோரின் பெயர் என்ன?
ாள்வோர் கவனத்திற்கு:
றுடன் விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும்.
u Guo TLD.
999.11.30 ஆந் திகதிக்கு முன்பர்கக் கிடைக்கக்
MR. K. SWAMINATHAN 227/19, Mahavidyalaya Mawatha,
Colombo - 12.
தியானது.
ஆசிரியர்
༄།
மயம்
போட்டி இல. 1
கையெப்பம் أص

Page 33
ང།-
ug:56õõTI LITT
G)LD
 
 
 


Page 34
SASTSSASSASSASSASSA
இவ்விதழுடன் ஸ்கந்த வடிவிஷ்டியை
இலவச இணைப்
 
 
 
 
 

iqSiSAT SiSiSSMSSASSAASSA
முன்னிட்டு ஸ்கந்த வடிஷ்டி ឬ ច្រាលចាfលួច័យ