கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1999.11-12

Page 1
3)3F6) SAVANIEETHI
 

圆、贰 MONTHLY MAGAZINE OF SAWAISM NOVEMBER - DECEMBER SSS
பிரதி கர்த்திகை

Page 2
உள்ளே.
1. நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன்.
2. அருளுரு நிலை.
- உமாபதி சிவாசாரியார்
3. சதுர்முக சாபாரி மூர்த்தி
நா. கதிரவேற்பிள்ளை .
4. திருநீற்றுப் பதிகம்.
திருஞானசம்பந்தமூர்த்தி
5. உபமன்யு. "ية
- திருமுருக கிருபானந்தவ 6. அறம் பொருள்.
- பண்டிதமணி சி. கணபதி 7. சைவ ஒழுக்கங்கள்.
- சு. சிவபாதசுந்தரம் . 8. நினைவிற் கொள்வதற்கு. 9. அம்மா ஐயோ
- பண்டிதர் ச. சுப்பிரமணி 10. மேருவைச் செண்டால் அடித்தமை,
- கூடலான் .
11. மெய்ப் பொருள் நாயனார்.
- சிவ சண்முகவடிவேல் 12. சைவவினா விடை ப் பதியில்,
- ஆறுமுகநாவலர் . 13.எந்த மார்க்கமும் தோன்றிலது என் செய்வே - முருக வே. பரமநாதன் . 14.திருவாசகச் சிந்தனை,
- பண்டிதர் சி. அப்புத்துை
15.மாதிரி வினாத்தாள்.
- நமர் .
16.சைவ சமய அறிவுப் போட்டி.
சைவநீதி இதழில் வரும் கட்டுரைகளிலு: ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ள கருத்துக்களுக்குக் கட்டுரை
- இதழ் நிர்வாகிகள் أر

Page 3
ငါ့6)]
"மேன்மைகொள் சைவநிதி
GDEFG
மலர் 3 பிரமாதி கார்த்திகை
6O46) ja Loss.J 626Tsjää
கெளரவ ஆசிரியர் ஞானசிரோமணி சைவப்புலவர்மனி வித்துவான் திரு. வ. செல்லையா
Mr. W. Chellaiah
நிர்வாக ஆசிரியர்
திரு. செ. நவநீதகுமார் Mr. C. Navaneethakumar
பதிப்பாசிரியர் திரு. பொ. விமலேந்திரன் Mr. P. Vimalendran Unie Arts (Pvt) Ltd. Tel.: 330195, 478133 E-mail: uniearts G) slt,lk
மதியுரைஞர் பண்டிதர் ச. சுப்பிரமணியம் Pandit S. Subramaniyam
திரு. பொ. பாலசுந்தரம்
Mr. P. Balasundaram
Trustee Sri Varatharaja Vinayagar Temple, Kotahena
திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா
சட்டத்தரணி Mr. Rajarajeswaran Thangaraja
Attorney-at-Law
திரு. கு. மகாலிங்கம் Mr. K. Mahalingam
Sivayogaswami Trust Fund
திரு. அ. கந்தசாமி Mr. A. Kandasamy
Chairman, U.P. S.
42, Janaki Lane,
நல்ல
தம் நமச்சிவாயவே” என் திருவைந்தெழுத்து, ஒ நாவினால் நூறு நூற ஆகிய இந்திரனிலும் பறையும். உயிர்க்கு உ 'நமசிவாய' எ எப்படிச் செபிக்க ( தேவைப்படுகிறது. இ இது தீகூைடி மந்திர உ குருவை அடைந்து சி பெற்று குரு காட்டிய இல்லாத மந்திர செப வானம் இருள் அஞ்செழுத்துமுணர
6T6 Turti.
RER
நாம் செய்த பா நமசிவாய என்ற மந்தி உரிய காலத்திற் தீட்ை ஓதி உய்தி பெற வேண் அப்பரடிகளை நாவினால் நமசிவாய ஐந்தெழுத்து எம்மை !
கல்
ஒல்
நெ6
நல்
 

LOLLULO
விளங்குக உலகமெல்லாம்”
ug:
கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 8
நாமம் நவிற்றி உய்ந்தேன்
நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் றார் சம்பந்தர் மந்திரங்களுள் சிறந்த, உயர்ந்த மந்திரம் துவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது இம் மந்திரம். இதை ாயிரம் என்ற எண்ணிக்கையில் செபிப்பவர்கள் தேவர்கோ மேம்பட்ட செல்வர்கள் ஆவர். அவர்கள் பாவங்கள் பாறிப் புறுதி பயக்கும். ான்ற ஐந்தெழுத்து எமக்குத் தெரிந்ததொன்று. இதை வேண்டும்? இங்குதான் குரு ஒருவரின் துணை ம்மந்திர உபதேசத்தை குரு மூலம்தான் பெற வேண்டும். உபதேசம் எனப்படும். மந்திர உபதேசம் பெறவிரும்புபவர் வதீட்சை பெற்று அவரிடம் முறைப்படி மந்திர உபதேசம் வழியில் செபம் பண்ணல் வேண்டும். குரு உபதேசம் த்தால் பலன் இல்லை.
சூழ்ந்து இரவுப் பொழுதுதானதைக் கூறும் சேக்கிழார் வறிவிலோர் நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்'
வத்தை நண்ணி நின்றறுக்கும், நமக்கு நற்றுணையாகும். ரத்தை உச்சரிக்காது விடின் பிறவியின் பயன்தான் என்ன? ச பெற்றுச் சைவசமயி ஆகி உயர்ந்த திருவைந்தெழுத்தை TGh.
அமணர் கல்லினோடு பூட்டிக் கடலில் விட்டபோது என நவிலக் கல் தெப்பமாகி அவரைக் கரை சேர்த்தது. பிறவிப் பெருங்கடலில் இருந்து கரை சேரவைக்கும். பினோடெனைப்பூட்டி யமண்கையர் லைநீர்புக நூக்கவென் வாக்கினால் லுநீள்வயனிலக் குடியரன்
நாம நவிற்றியுந் தேனன்றே

Page 4
அருளுரு
--உமாபதி
அருளுரு நிலை என்பது அருள் கொள்ளும் உருவினது நிலை என விரியும், அருள்கொள்ளும் உரு என்பது இறைவனோடு பிரிப்பின்றி நிற்கிற அருட்சத்தி, மாந்தருடைய மலப் பிணிப்பை நீக்கி வீட்டின்பம் அருளுதற்குக் கொள்ளுகின்ற சாதாசிவமூர்த்தி, அநந்தேசுவரர், சீகண்ட பரமேசுவரர், உருத்திரன், மால், நான் முகன் ஆகிய இவர்கள் அருள்வடிவங்கள். மாந்தர் சத்திநிபாதம் அடையும் பருவம் நோக்கி அவர்களுக்குத் தீக்கைசெய்து, வீட்டின்பம் அருளுதற்குக் கொள்ளும் அருள்வடிவங்களும், இந்த அருள் உருவில் அடங்கும் அருளுரு நிலை என்பது அங்ங்ணம் அருட்சத்தி, தானாகவும் சத்திநிபாதமடைந்த ஆன்மாக்களை அதிட்டித்து நின்றும் மாந்தருக்கு அருள்செய்யும் பொருட்டுக் கொள்கிற அருட்குரவர்களுடைய இயல்பு திருக்கோயில்களில் மந்திரநியாசத்தாலும் அன்பர் வழிபாட்னாலும் அருள் விளங்கப்பெறும் சிவலிங்க வடிவங்களும், சிவோகம்பாவனை அஞ்செழுத் தோதல் முதலிய வழிபாடுகளால் அருள் விளங்கப் பெறுகிற சிவனடியார்களும் அருளுருவங்களே.
ஆசிரியர், மேலை அதிகாரத்தில், அருட்சத்தியானது மாதர்களின் உள்நின்று உணர்த்தும் இயல்பைக் கூறி இந்த அதிகாரத்தில் மாந்தருடைய மலப்பிணிப்பை நீக்குதற்குப் பக்குவம் வந்தபோது, அவர்கள் முன்னே வெளிப்பட்டுத்
பாழ்மனையும் தேவ கு ஊரில் வழியெழுந்த ஒ தாமே தமியர் புகாஅர் நோயின்மை வேண்டு பாழடைந்த வீட்டிலும், கோயிலுக்குள்ளேயும், சு வயதான ஒற்றை மரத்தின் கீழும், தனியாகப் போய் படுத்துறங்க மாட்டார்கள் - நோயின்றி வாழ விரும்புப
 

րհ60յնս
g) Sild
தோன்றும் அருட்குரவர்களுடைய இயல்பைக் கூறுகின்றார். இவ்வதிகாரத்தில் சிவஞானபோதம் 8ஆம் சூத்திரத்தில் கூறப்படுகிற, சிவரூபமும் அதனுடன் நிகழும் ஆன்ம தரிசனமும் கூறப்படுகின்றன. இதனாலே இவ்வதிகார இயைபு இனிது விளங்கும்.
1-வது பாட்டு இறைவன், மாந்தருக்குத் தனது அருளுருவில் தோன்றி ஆண்டருளுதலைக் குறிக்கின்றது. (இதில் திருநாவுக்கரசு அடிகள் தமக்கு இறைவன் சூலை நோயை ஏவி, திருவதிகை வீரட்டானேசுர இலிங்கவடிவில் அருள் செய்ததைக் கூறுதல் நோக்குக) 2வது பாட்டு இறைவன் மாந்தருக்குத் தனது அருள் வடிவில் சிவத்தை அடையும் நெறி இதுவெனக் காட்டியதாகக் கூறுகின்றது. (இதிலும் திருநாவுக்கரசு அடிகள் தம்மை இறைவன் சமணசமயத்தினின்றும் மீட்டு, சிவநெறி இது என்று காட்டி ஆண்டருளியதைக் கூறுதலை நோக்குக) 3-வது பாட்டு, இறைவன் தனது அருள்வழி நின்று தாழ்மையாய் வணங்குகிற மாந்தருக்குப் பேரின்ப நலங் கொடுகின்றான் என்று கூறுகின்றது. 4, 5 பாட்டுக்கள், இறைவன், தனதருளால் மாந்தரிடம் வேட்கை, அறிவு செயல்களை நிகழ்த்துகின்றான் எனக் கூறுகின்றன. 6, 7 பாட்டுக்கள், இறைவன், மாந்தரது உள்ளத்தில் மலம் நீங்கும்படி அருள் உருவோடு விளங்குகின்றான் என்று கூறுகின்றன.
நன்றி : தேவார அருள்முறைத் திரட்டு
றி வாழ
நலனும் சுடுகாடும்
ற்றை முதுமரனும்
L 195 GL) GDIGITU IT FT
LGuff. டுகாட்டிலும், ஊரில்லாத பாதையோரம் இருக்கும், த் தங்க மாட்டார்கள், பகல் நேரத்தில் சென்று
6) T556T.
- ஆசாரக்கோவை -

Page 5
சதுர்முக சா
-- நா. கதிரே
புதுச் சந்நிதி யென்னும் பொற் கோயிலினிடத்து எழுந்தருளும் புண்ணிய வடிவரான கண்ணுதல் குமரனார். சூரபன்ம னாதியரைச் சங்கரித்துக் கிரியா சத்தியெனப்படுந் தெய்வயானை யம்மையாரைத் திருப்பரங் குன்றத்திலே திருமணஞ் செய்து எழுந்தருளியிருக்கு மோர்நாளில், தேவர் முதலாயினோர் குழுமிப் போற்றுஞ் சபையிலே, தம் திருக்கரத்தின்கணுள்ள வேற்படைக் கலத்தைச் சுட்டிக் காட்டி, “தேவகனர்காள் நமக்கு இப்பெருமை யெல்லாந் தந்தது இவ்வேலாகும்’ என்று ஒரு திருவிளையாடலாகக் கூறியருளினர்.
அதனைக் கேட்ட அருகி லிருந்த "பிரமன்' இவ்வேலிற்கு இந்நிலை யென்னால் வந்த தன்றோ? என்று தனதறியாமை யானும் அகங்காரத்தானு முரைத்தான். குழகனாம் இறைவன் அதுகேட்டுச் சிறிது வெகுளியுற்று "ஆணவ மலத்தாற் சிமிழ்ப்புற்ற கீழோய்! என் மொழிந்தனை? நங்கரத்தில் பிரியா துறையு ஞான சத்திக்கு நீ கொடுப்பதொரு சத்தியு முண்டோ? முன்னர்ச்சிறையிருந்ததை மறந்தனையோ? பேதாய். நீ பூமியிற் புன் பிறப்பையடைதி என்று சபித்தருளினார்.
பிரமன் நடுநடுங்கிச் சாமிநாதன் திருவடிகளில் தஞ்சமென வீழ்ந்து புலம்பினன். கருணையங் கடலாங் கதிரை நாயகன் திருவுளமிரங்கி, "பிரமனே! நீ இப்பாவத்தைச் செய்தமையால் அநுபவித்தே தீர்த்தல் வேண்டும். பின்னர் நின்னை யாட்கொள்ளலாம்” என்று அருளினார். விதியோன் தன்னுரு மாறிப் பூமியிற் சென்று அந்திமான் என்னும் வேடனாகப் பிறந்தான். வனத்திற் கொலைத் தொழில் கொண்டு திரிந்த காலத்தில், இமய மலைச்சாரலிடஞ் சென்றான். அங்கே மிருகங்கக ளகப்படாமையாற் பட்டினியாயிருந்து பசியாலும் மிருக பயத்தானும் விழித் திருந்தான். அன்று கார்த்திகைநாள் ஆயிற்று. மறுநாட் காலையில் பிப்பலாத முனிவர் அவ்வழி வந்தனர். யாதேனும் பொருளாவது உணவாவது அவரிட மிருக்குமென்று
C
 

பாரி மூர்த்தி
வற்பிள்ளை -
நினைத்து ஒடிச் சென்று அவர்தம் உடலைப் பற்றிக் கையாலிறுகக் கட்டினன். முனிவனார் சுப்பிரமணியக் கடவுளின் திருவருட் பெருமைகளை யெல்லாமெடுத்துரைக்கும் வேத கானங்களைப் பாடினார். அதனைக் கேட்ட வேடற்குப் பண்டைய நல்லுணர்வு தோன்றித் தான் செய்த செய்கைகட்குப் பெரிது மிரங்கி, முனிவர் அடிகளில் விழ்ந்து வணங்கி.
அவரால் தன் பழைய வரலாறெல்லா முணர்ந்தான்.
'முனிவர் பெருமானே! கந்தக் கடவுளின் திருவருள் விரைவிற் கிடைக்குமாறு உபதேசித்தருள்க’ என்று முனிவனாரைப் பணிந்து கேட்டனன். முனிவனார் “சரவண வாவியிற் படிந்து கார்த்திகை விரதத்தை அநுட்டிப்பையேல் உன் பாவம் நீங்கும்” என்று சடக்கர மந்திரமும் உபதேசித்து விடுத்தார். அங்ங்ணமே அந்திமான் அவ்விரதத்தை யாற்றுவானாயினான். விரதபலத்தானே வேடத்தன்மையினின்று நீங்கி அரசனாகிக் கொடைத் தொழில் விசேடத்தானே இடை வள்ளன்மா ரெழுவரு ளொருவனாய் விளங்கினான்.
இங்ங்ணம் பிரமன் பூமியில் தங்கலாற் சிருட்டித் தொழில் நடவாதாயிற்று. அதனால் திதித்தொழிலும், சங்காரத் தொழிலும் இல்லையாயின. அதனால் வருணன் சோமன் இந்திரன் திருமால் முதலியோர் 'சித்தன் வாழ்வு' (பழநி) என்னுந் திருப்படை வீட்டுத்தலஞ்சென்று தேவநாயகனைச் சேவித்தனர். பழநிப்பெருமான் அவர்கட்குமுன்னே பாலப்பருவமும், நான்கு திருக்கரங்களும் பொன்போலுங் காந்தியும் வேலாயுதமுங் கோழிக்கொடியும் வரதமும் அபயமும் பொருந்திய திருக்கரங்களுமுடையராய்த் தோன்றினர். தேவர்களெல்லாந் துதித்தனர். சுப்பிரமணியக் கடவுளார் அந்திமானை யுடனே யழைத்துப் பாவம்போக்கிப் பிரமனாக்கி முத்தொழிலு நடக்குமாறு திருவருள் செய்து மறைந்தனர். சதுர்முகனாகிய பிரமனது சாபத்தை அரித்தமையால் (அழித்தமையால்)சதுர்முக சாபாரிமூர்த்தியாயினர். இதனால் முத்தொழிற்கும் மும்மூர்த்திகட்கும்

Page 6
முதற்பொருளாயிருப்பவர் செவ்வேட் பெருமானே யென்பது சித்தாந்த மாதல் காண்க.
பத்துப் பாட்டு - திருமுருகாற்றுப் படை புள்ளனி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் நூற்றுபத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்(து) ஈரிரண் டேந்திய மருப்பி னெழினடைத் தாழ்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
திருஆலவாய் திருநீற்று
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சயமத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே 1.
வேதத்தில் லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. 2,
முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. 3.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந்தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. 4.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவப் தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே. 5.
திருச்சிற்ற
பிரமாதி கார்த்திகை G

உலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவருந் தலைவராக ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித் தாமரை பயந்த தாவி லூழி நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப் பகலிற் றோன்று மிகலில் காட்சி.
GILDLITB, LDD வாயவ்யேச விசேஷேன ஸ்கந்தம் சா பிப்ரபூஜயேத் சதுர்பூஜர் பாலவேஷஸ்கந்த கனக ஸப்ரப: சக்திகுக்குட் ஹஸ்தச்சவராபய காரன்வித: ப்ரணவேநஸமோபேதம் ஹாம் காரேண ஸ்மன் விதம்!
சதுர்முகசாபாரி மூர்த்தயேநம:
நன்றி - ச. சுப்பிரமணிய பராக்கிரமம்
ப்பதிகம் : பண் - காந்தாரம்
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. 6
எயிவது அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத்தால வாயான் திருநீறே. 7
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திருமேனி ஆல வாயான் திருநீறே. 8
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கு மின்பந்தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே. 9 குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளாரேத்துந் தகையது நீறு அண்டத்தவர்பணிந் தேத்து மால வாயான் திருநீறே. 10 ஆற்ற லடல்விடையேறு மாலவா யான்திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே, 11 hu Guth
)
2

Page 7
DI LULm
- திருமுருக கிருபா6
அயோத தெளமியர் கங்கா நதி தீரத்தில் நடத்திவந்த குரு குலத்தில் பயின்ற மாணவர்களைத் தனது குமாரர்களைப் போன்று அன்பு காட்டி இன்பமுடன் கல்வி பயிற்றுவித்தார்.
உபமன்யு என்ற ஒர் அந்தணச் சிறுவன் அக்குருகுலத்தில் ஆருணியைப் போல் முதன்மையாக இருந்து கலைபயின்று வந்தான். உபமன்யு என்பவன் வியாக்ரபாதர் என்பவருடைய மைந்தன்.
ஒருநாள் குருநாதர் உபமன்யுவைப் பார்த்து, 'அன்புள்ள மாணவனே! குருகுலத்துக்குச் சொந்தமான பசுக் குலங்களைக் கானகத்தில் கொண்டு போய்ப் பகல் முழுவதும் மேய்த்து வருவாயாக’ என்று ஆணையிட்டார்.
SJITLD60GT3 if றுவனாகிய நான் மாடு மேய்ப்பதா என்று சொன்னானில்லை. அவன் குரு வார்த்தைக்கு மறுவார்த்தை கூறாது பசுக்குலங்களை ஒட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான்.
பசுக்களைப் புல் தரையில் மேய விட்டும், தண்ணிரில் குளிப்பாட்டியும், நிழலில் இளைப்பாற விட்டும் தினவு தீரச் சொறிந்து விட்டும் அவைகளுடன் மாலை ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தான்.
குருநதார் இரவிலே மாணவர்களுக்கு வேதம், உபநிஷதம் சாத்திரம், தோத்திரம் முதலியவைகளை அன்போடு போதிப்பார் பாடம் முடிந்தவுடன் எல்லாப் பிள்ளைகளும் உணவுச் சாலைக்குள் சென்று உணவை உண்டு வந்தார்கள். சமையல்காரன் உபமன்யுவுக்கு உணவு தரவில்லை. உபமன்யு, "ஐயா! எனக்குப் பசிக்கிறது உணவு கொடுங்கள்” என்று கேட்டான். சமையல்காரன், "உனக்கு உணவு கொடுக்குமாறு குருநாதர் கட்டளையில்லை’ எனக்கூறி மறுத்துவிட்டான். உபமன்யு முகம் வாடாமல் பட்டினியுடன்படுத்துறங்கினான்.
இப்படி ஒரு வாரம் கழிந்தது. குருநாதர் அவனை உற்றுப்பார்த்தார். அவன் உடம்பு வாடவில்லை. கொழுகொழுவென்று இருந்தான்.
 
 

ன்யு
னந்த வாரியார் -
உடம்பு அன்னமைய கோசம். உணவு இன்றி இவன்வாடாமல் வருந்தாமல் இருப்பதற்கு என்ன காரணம் எனச் சிந்தித்தார்.
"அப்பா! உபமன்யு உனக்குக் குருகுலத்தில் உணவு தருவதில்லை. உடம்பு இளைக்கா திருக்கிறதே, காரணம் யாது?’ எனக் கேட்டார்.
"சுவாமி அடியேன் கிராமத்தில் சென்று பிச்சை எடுத்துக் கொள்கிறேன்.
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்பது ஆன்றோர் வாக்கு அதனால் நான் பிச்சை எடுத்து உண்கிறேன்" என்றான் உபமன்யு,
"அப்பா! உன்னை நான் பிச்சை எடுக்குமாறு
கூறினேனா?
"சுவாமி பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறினீர்களா?”
"சரி, இனி பிச்சை எடுத்துவரும் அன்னத்தை என்பால் வைத்து விட்டுப் போ,’ என்று 35LL606TuŠh LITrŤ.
அப்போதும் உபமன்யு குருநாதன் மீது வெறுப்படையாமல், முகம் வாடாமல், பிச்சை எடுத்து வரும் அன்னத்தை ஆச்சாரியரிடம் வைத்து விட்டுப் போவான்.
இவ்வாறு ஒரு வாரம் கழிந்தது. உபமன்யுவின் உடம்பு இளைக்காமல் இருப்பதைக் கண்டு குருநாதர் அதிசயித்தார்.
'உபமன்யு பிச்சான்னத்தை என்னிடம் வைத்து விடுகிறாய். இருந்தும் உன் உடம்பு இளைக்கவில்லையே? காரணம் என்ன? என்று (355ĽLITÍŤ.
"சுவாமி அடியேன் இரண்டாம் முறை பிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்றான்.
“பேஷ்! நீயே திரும்பத்திரும்பப் பிச்சை எடுத்தால் மற்றவர்களுக்கு அது இடையூறாகும். இனி இரண்டாம் முறை பிச்சை எடுக்காதே’ என்று கட்டளையிட்டார் குருநாதர்

Page 8
ஒரு வாரம் கழிந்தது. அவன் உடம்பு இளைக்காததைக் கண்டு, 'இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்டார் குருநாதர்.
"சுவாமி கன்றுகள் பால் குடித்தபின் கருணையுள்ள பசுக்களின் மடியில் பால் பெருகி வழிகிறது. அதனைக் கையில் ஏந்திக் குடிக்கிறேன்" என்றான்.
குருநாதர், “பால் கீழே போனாலும் போகட்டும், அதைக் குடிக்காதே’ என்று வன்மையாகக் கூறினார். அதைக் கேட்டும் உபமன்யு குருவை வெறுத் தானில்லை.
முன்னையிலும் பன்மடங்கு குருவிடம் அன்பு கொண்டான் ஒரு வாரம் கழிந்தது. 'உபமன்யு நீ பாலை உண்பதில்லை. உடம்பு இளைக்காமைக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டார்.
உபமன்யு, “குருநாதா! கன்றுகள் பால்குடித்தபின் அவைகளின் கடைவாயில் வழியும் நுரைகளை உண்டு பசியாறுகிறேன்’ என்றான். அவர் புன்னகை செய்து 'இனி அதையும் உண்ணாதே. வேறு உணவுப் பொருள் எதையுமே உண்ணாதே’ என்றார்.
உபமன்யு அன்று பகல் முழுவதும் பசுவை மேய்த்து விட்டுப் பாடம் கேட்டுப் பட்டினி கிடந்தான். மூன்று நாள் பட்டினி கிடந்து அவனுடைய உடல், உள்ளம், உணர்வு நாடி, நரம்புகள் எல்லாம் சோர்ந்து விட்டன. பசிதாங்காமல் உணவுப்பொருள்களைத் தானே குருநாதர் உண்ணக் கூடாதென்று சொன்னார் என்று எண்ணி எருக்கம்பாலைக் குடித்துவிட்டான்.
அதனால் அவன் கண்கள் குருடாகி விட்டன, வழியும் குழியும் தெரியாமல் பசுக்களை ஒட்டிக் கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தான். வழியில் ஒரு கிணற்றில் வீழ்ந்து விட்டான். அப்போதும்' குருநாதா என்றே வீழ்ந்தான். கிணற்றில் தத்தளித்து அங்கு முளைத்திருக்கின்ற ஓர் அரசங்கன்றைப் பிடித்துக் கொண்டு "குருநாதா, குருநாதா” என்று ஜபித்துக் கொண்டிருந்தான்.
இரவில் மாணவர்களுக்குப் LTL Lo சொல்லுகின்ற அயோததெளமியர், “மாணவர்களே! உபமன்யு எங்கே?' என்று கேட்டார். மாணவர்கள் "குருநாதா! அவன் உணவும் உணர்வும் இன்றி
 

இளைத்து விட்டான். காலையிலே மாடு மேய்க்கச் சென்றவன் வீடு திரும்பினானில்லை’ என்று கூறினார்கள்.
குருநாதர், தீவட்டியை ஏந்திக் கொண்டு "உபமன்யு உபமன்யு என்று காடெல்லாம் தேடினார். "சுவாமி அடியேன் கிணற்றில் இருக்கிறேன்' என்று உபமன்யு கூறினான்.
அப்பா! நீ ஏன் கிணற்றில் வீழ்ந்தாய்? என்று கேட்டார்.
'குருநாதா! தாங்க முடியாத பசியால் எருக்கம்பாலைக் குடித்துக் கண்கள் குருடாகி இக்கிணற்றில் விழுந்துவிட்டேன்' என்று தழுதழுத்த குரலில் கூறினான்.
குருநாதர் தேவ வைத்தியர்களாகிய அசுவனி தேவர்களின் மந்திரத்தை உபதேசித்து, இதனை நீ உச்சரித்தால் அசுவனி தேவர்கள் உனக்குக் கண் தருவார்கள்’ எனக் கூறிவிட்டு ஆசிரமத்திற்குச் சென்றார்.
உபமன்யு ஒருமைப்பட்ட மனத்துடன் அம்மந்திரத்தை ஜெபித்தான் அசுவனி தேவர்கள் அங்குவந்து அவனைக் கரையேற்றினார்கள். தங்கத் தட்டில் உணவுப் பொருட்களை வைத்து, “இதனை நீ உண்பாய்; கண்ணொளி பெறுவாய்' என்றார்கள்.
உபமன்யு குருவின் உத்தரவின்றி உண்ணமாட்டேன்’ என்று மறுத்துவிட்டான். அசுவினி தேவர்கள் அவனுடைய உறுதியான குருபக்தியைக் கண்டு வியந்தார்கள். தெய்வ மருந்தை அவன் கண்களில் பிழிந்தார்கள்.
பொன்போன்ற கண்களை அவன்பெற்றான்.
குருநாதரை வந்து தொழுதான். அவர் அவனைத் தழுவி 'தெய்வத்தன்மை பொருந்திய உன் கண்களுக்கு முன்னே, நடந்த வரலாறுகளும், நடக்கின்ற வரலாறுகளும், இனி நடக்க இருக்கின்ற வரலாறுகளும் பிரத்தியட்சமாகத் தெரியும். இந்த அருட்கண்ணால் பார்த்து அடியார்களின் வரலாற்றை மாணவர்களுக்கு உபதேசித்து உலகத்தை உய்விப்பாயாக’ என்று கூறினார்.
இந்த உபமன்யு முனிவர்தான் பெரிய புராணத்தில் வரும் அடியார்களின் வரலாற்றை அருந்தவமுனிவர்களுக்கு உபதேசித்தார்.

Page 9
Bingh G
- பண்டிதமணி சி.
சைவந் தெரிந்த பெரியவர் ஒருவர், தாம் சிவசத்தியமாகவே சிவத்தை வணங்கு வதில்லையென்றும் கற்புள்ள பெண்களையும் வள்ளல்களையுமே வணங்குகிறார் என்றுஞ் GFIF6T60TTri.
சிவத்தை நாம் வணங்கல் முடியாது. அது முன்னிலைப்படுகிற சுட்டுப்பொருளாகாதது.
நான் கெட்டவர்கள் அனுபவிக்கிற பொருள். சிவம். சிவம் பிரகாசிக்கிற இடங்களிலேதான் நாம் வழிபடல் முடியும் ; மேன்மைகொள் நீதியிலே சிவத்தைக் காணல் வேண்டும்.
மகா விஷ்ணுமூர்த்தி ஒரு சமயம் திருக்கைலாசத்துக்குச் சென்றார். அங்கே சுவாமியும் அம்மையுஞ் சூதாடிக்கொண்டிருந்தார்கள். சுவாமி, தங்கள் சூதாட்டத்துக்கு மத்தியகூஷம் வகிக்கு வெற்றி தோல்விகள் கூறும்படி திருமாலுக்குப் பணித்தார். திருமால் பார்த்துக்கொண்டிருக்க சூதாட்டம் நடக்கிறது. ஒவ்வொரு முறையுஞ் சுவாமிக்குப் படுதோல்வி. அப்படியிருந்தும் சுவாமி தமக்கே வெற்றியென்றார். தேவி திருமாலை மத்தியகூஷம் சொல்லும்படி நெருக்கினார். திருமாலுக்குப் பரம சங்கடம் வந்துவிட்டது. பிரபஞ்சச் சூதில் பரமசிவத்துக்கு வெற்றியேது ; படுதோல்விதான். பரமசிவம் தோல்வியென்று சொல்லாமா? திருமால் திகைத்தார். வேதங்களிலே தேடினார் ; வேதங்கள் சிவத்துக்கே வெற்றியென்று முழங்கின. பேரொளிக்குத் தோல்வியேது. திருமால் கண்டது கூறாமல் வேதத்தை ஒப்பித்துச் சிவத்துக்கே வெற்றியென்றார். தேவிக்குக் கோபம் மூண்டது. பாராயலை கண்ணனுமாயினை பாலினுற்றாய்; தேராதது ஒன்றிலை, யாவருந் தேர வெண்னாப் பேராதி யோன் அவை கூறினும் நீயிது பேசலாமோ காராமெய் பென்பர் மனமுங் கரியாய் கொல்மன்னோ'
கந், கயமுகனுற். 173 ஏ வஞ்சகா, நீ இந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்துக்கொண்டே, சிவத்துக்கே வெற்றியென்று,
பிரமாதி கார்த்திகை C

பாருள்
கணபதிப்பிள்ளை -
உன்னை நீ தானே வஞ்சித்தாய். நீ பெரும் பாம்பாகக் கடவையென்று சபித்தார். விஷ்ணு பாம்பானார். சுவாமி " ஆலவனத்திலே ஒரு பழைய ஆலமரம் நிற்கிறது. அதன் பொந்துக்குள் போயிருந்து தவஞ்செய் ; ஓங்காரமூர்த்தியாகிய விநாயகன் அங்கு வந்து உனக்கு அருள்வான்' என்றார்.
முன்னொருநாள் இந்த மகாவிஷ்ணு கூறியதையே, பிருங்கி மகாமுனிவர் கூறினார். தேவி சீறவில்லை. பிருங்கி பாம்பாகவில்லை ; பரத்தை மறைத்த பார்முதற்பூதம், பிருங்கிக்குப் பரத்துள் மறைந்தது. பிருங்கிக்குச் சிவத்தை வழிபடும் பாக்கியமுண்டு.
"ஈன்ற வெம்பெரு மாட்டியை நீக்கி
எம்பிரானையே வழிபடுமியற்கை மூன்றுதாளுடை ஒருவனுக் கல்லால்
ஏனை போர்களால் முடியுமோ முடியா"
கந், கந்தவிரத. 80. என்கின்றார் கச்சியப்ப சுவாமிகள். எவர்கள் சிவத்தைக் காணுகின்றார்களோ அவர்கள் பிரபஞ்சத்தைப் பாரார் ;பார்ப்பதில்லை." தாயை மறந்து ஏயுமதே நிட்டை”
பிரபஞ்சத்தைப் பார்க்கின்றவர்கள் சிவத்தை அது பிரகாசிக்கும் இடங்களில் வழிபடுகின்றார்கள். மத்தியந்திர முனிவர் வசிட்டரின் சகோதரியை மணந்தவர். அவருக்கு ஒர் ஆண் குழந்தை. அந்தக் குழந்தை முனிவர் பரமசிவத்தை எங்கே பூசிக்கலாமென்று தந்தையைக் கேட்டார்."பார்க்குமிட மெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பரமசிவம். பார்முழுதும் பரப்பிரம சந்நிதி. பார்குமிடந்தோறும் பரம சிவத்தைக் காணமுடியாமலிருப்பது தவக்குறைவு. பசுவின் தேகத்திற் பால் சுரந்து கொண்டிருப்பதை பார்க்கும் சக்தியில்லாதவர்கள், அதன் மடியிற் பாலைப் பார்ப்பதுபோலப் பரம சிவத்தைப் பார்முழுதும் பார்க்க இயலாதவர்கள் சில விசேஷ ஸ்தானங்களிற் பார்க்கலாம். நீ தில்லைவனத்துக்குப் போ” என்று பணித்தார். அந்தக் குழந்தை முனிதரன்

Page 10
வியாக்கிரபாதர். விசேஷ ஸ்தானங்களிலே சிவலிங்கங்களிலும் சிவனடியார் வேடங்களிலுஞ் சிறப்பாகச் சிவம் பிரகாசிக்கின்றது. வேதரிஷிகள் எத்தனையோ தேவர்களிற் சிவப்பிரகாசங் கண்டு வழிபட்டார்கள். மெய்ப்பொருள் நாயனார் போன்றவர்கள் எங்கும் சிவப்பிரகாசத்தைத் தரிசிப்பார்கள். அவர்களும் மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத்” தொழுவார்கள். சுந்தர மூர்த்திநாயனார் அடியார்கள் வேடத்தில் சிவம் விசேஷித்துப் பிரகாசிப்பது கண்டு, அதை எவ்வகை வணங்கி ஆட்படுவதென்று சிந்தனை செய்தது, பெரிய புராணத்தில் உயிர்நாடியாய் விளங்குகின்றது. சாதாரண மானவர்களிலும் சிவஞானிகளே ஆலயங்களில் வேடங்களில் விசேஷ பிரகாசங் கண்டு சிவத்தை வழிபடுகின்றவர்கள்.
“ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடன், ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும்” இருள் மேலிடுகின்ற இடங்களில், சிவத்தை வழிபட முயல்கின்றவர்கள் இருளையே அடைகின்றார்கள். மூக்கு வெட்டுண்டவன் கடவுளைக் கண்ட கதை, நமது நாட்டுப் பழங்கதை.
நம்மையும பரமென்றுன்னி
நாதனிற் சிறப்புச் செய்யும் வெம்மைகொள் நெஞ்சர்திரா
விழுமவெந்நிரயம் வீழ்வர்; தம்மையஃ தெடுத்தல் செய்யா,
சமனெப் புகல்கிற் போர்கள் எம்மையுந் துயர மென்னும்
இருங்கடற் படுப்பர் அன்றே. "கானுறு புலித்தோலாடைக்
கண்ணுதற் கடவுட் கன்பர் ஆனவரென்றும் அன்னாற்
கடித்தொழில் புரிந்து வாழும் வானவரென்று மெம்மை
வழுத்தினர்க் கருள்வோ மல்லால், ஏனையர்தம்மைத் தெவ்வென்
றெண்ணியேயிருத்தும் யாமே?
- கந், உபதேச 29, 30 இவ்வாறு பிரமா தக்கனுக்கு உப தேசிக்கின்றார். உலகத்துக்குக் கருத்தா யாவர்? பிரம விஷ்ணுக்களை உருத்திரனோடு ஏன் சமத்துவம் பேசல்கூடாது? பார்க்குமிடமெங்கும் சிவத்தைப் பார்க்கிறவர்கள் யாவர்? விசேஷித்த இடங்கள்
பிரமாதி கார்த்திகை

குறிப்பிட்டது யாருக்கு? சிவஞானிகள் ஆலய வழிபாடு செய்யவேண்டியதில்லையா? நாம் நினைத்த நினைத்த இடங்களில் சிவம் வெளிப்படுமா? என்ற வினாக்களுக்கு விடை வரத் தக்கவாறு தக்கன் பிரம விசாரஞ் செய்தவன் ;பிரமாவின் புதல்வன் ;பிரசாபதி. பிரசைகளுக்கு அதிபதியாயிருந்த தோஷத்தினாலே அவன் ஒரு சமயம் எலிப் பிழுக்கையாகின்றான். பிரசைகளின் வினை அவனைத் தாக்குகிறது. உத்தியோக கர்வத்தினால் தர்மந் தவறிப் புன்னெறியிற் போகின்றான் ; சிவனை நிந்திக்கின்றான் ; அகங்களிக்கிறான்.
"கற்றை வார்சடையுடையதோர்
கண்ணுதற் கடவுளே பரமென்றே சொற்ற மாமறைச் சுருதிகள்
விலக்குதிதுணிவுனக் கிதுஎன்றான்'
--கந் பிரமயாக, 19 "ஒ பிரமாவே, சிவபரமான மந்திரங்களை வேதத்தினின்றும் எடுத்துவிடு' என்று தன் தந்தைக்குக் கட்டளையிடுகிறான் மைந்தனான தக்கன்.
முந்தொரு காலத்தின் மூவுல கந்தன்னில் வந்திடும் உயிர்செய்த வல்வினை யதனாலே அந்தமில் மறையெல்லாம் அடிதலை தடுமாறிச் சிந்திட முனிவோருந் தேவரும் மருளுற்றார்"
- --கந் பாயிர 1 என்று இரகசியத்தைத் தெளிவுபடுத்துகின்றார் 353 futu Dist6tit.
வீரபத்திர உருத்திரமூர்த்தி அவனுக்குப் பாடங் கற்பித்தார். யாக அக்கினியுள் அவன் தலை உருண்டது; ஆட்டுத்தலை வந்து லபித்தது.
அடியனேன் பிழைத்த தேபோல் ஆர்ச்செய்தார்”
--கந் யாகசங், 167
என்று அலறுகிறான் தக்கன். புன்னெறியை
விலகுகிறான்.
சென்றனன் காசியிற் சிறந்த தொன்மணி கன்றிகை ஒருபுடை கங்கை வேலையிற் பொன்றிகழ் செஞ்சடைப் புனிதற் காலயம் ஒன்றுமுன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான்'
--கந் தக்கன் சிவபூசை 2 நாயகன் மொழிதரு நவையிலாகம மேயின முறைதெரிவிரத னாகியே பாப்புனல் புனைசடைப் பரமன்றான்மலர் ஆயிரம் யாண்டுகாறருச்சித் தேத்தினான்'
--கந் தக்கன் சிவபூசை 4

Page 11
தக்கன் மேலாம் நன்னெறி ஒழுகிச், சிவபூசை துரந்தனாய், உய்தி கூடினான். எந்தத் தேவர்களின் வினைகளிலே, தக்கன் தர்மத்தில் தவறினானோ, அந்தத் தேவர்கள் இன்னுங் கரையேறவில்லை. நூற்றெட்டு யுகம் பாடம் நடக்கின்றது.
தண்டேன்றுளிக்குந்தருநிழற்கீழ் வாழ்க்கைவெஃகிக் கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே கண்டேன் பிறர்தம் பதத்தொலைவுங் கண்டனனால் தொண்டேன் சிவனேநின் றொல்பதமே வேண்டுவனே"
--கந், சயந்தன் புலம்பு. 76 இது இந்திரகுமாரனான சயந்தன் படித்த
且量_赶]。
'காடு போந்தனன் இந்திரன் பொன்னகர் கரிந்து பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடப்பட்டான் நாடில் விண்பதச் செய்கையீ தெம்பிரானல்கும் வீட தேயலால் துன்புறு மார்க்கம்வேறுண்டோ'
--கந், அமர்சிறை. 107 இது, தேவர்கள் குரல். மனிதன் "தன்னைத்தான் காதலன்' ஆகாமல், புன்னெறிகளிற் போய்த் தலை தடுமாறித் தவிக்கின்றான். அவனை அப்போக்கில் நின்றும் தடுக்குமாறறிந்து தடுத்து, மேலாகிய நல்ல நெறியில் ஒழுகச்செய்வதே அறம். அறம், இரண்டு பாகம். பூர்வபாகம் புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விலகல், உத்தரபாகம் மேலாம் நன்னெறி யொழுகல். விலக்கியன ஒழிதலும் விதித்தன செய்தலுமாய் இரண்டு பாகமாயுள்ளதும், உயிர்க்குறுதி பயப்பதுமான இந்த அறத்தைச் சூரபன்மனிலும், தக்கப் பிரசாபதியிலும், இந்திரன் முதலிய தேவர்களிலும் வைத்துச் சிறுவர்களுக்கும் இனிக்கும் முறையில் தேனொழுகும் செந்தமிழ்ப் பாடல்களில், கந்த புராணமாகிய பாற் சமுத்திரத்தில், கடைந்து திரட்டித் தந்தருளியிருக்கின்றார் கச்சியப்பப் பெருமான். இது மனிதப் பிறவியைப் பயன்படுத்திக் "கதிற்பாற் செல்ல ஏது நெறி' என்று வினவுகிறவர்களுக்கு ஒப்பு உயர்வு இல்லாத ஒர் அமிர்தசஞ்சீவி.
அமிர்தசஞ்சீவியாகிய அறத்தைத் தந்து, அதில் விருப்பத்தை எழுப்பி, மனித வாழ்க்கையின் மூல வேரைப் பரிசுத்தப்படுத்திய செயற்கருஞ் செயல்தான், கச்சியப்பப் பெருமானின் திவ்விய சரித்திரத்தின் முதலாம் படலம் , அறப் படலம்
இரண்டாவது படலம் பொருட் படலம். எப் பொருள் எத்தன்மைத்தாயினும், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், கண்ட கேட்ட பொருள்களை
பிரமாதி கார்த்திகை

அப்படியே விழுங்காமல், அவைகளை வைத்துக் கொண்டு அவற்றின்மூலம் ஆராய்ந்து மெய்ப்பொருள் காணல் வேண்டும் ; மெய்ப்பொருளைக் காணுகிற கண்தான் கண் ; அக் கண் காணுகிற காட்சிதான் காட்சி. அக் காட்சிக்குக் கச்சியப்பப் பெருமான் வழங்கிய திருநாமம், நவையறு காட்சி. கண்ட கேட்ட பொருள்களை அப்படியே காணுங் காட்சி நவைக் காட்சி ; அது பொய்க் காட்சி.
நவையென்றால் மாசு, மன மாசு. மன மாசுள்ளவழி நவையறு காட்சி உண்டாகாது. நவையறு காட்சி உண்டாதற்கு நவை போக வேண்டும்; மனத்துக்கண் மாசு நீங்குதல் வேண்டும்.
மனத்துக் கண் மாசு நீங்குதலாவது, புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விலகி மேலாம் நன்னெறி ஒழுகல், அறங் கைவருதல்; அறஞ் செய விரும்புதல், அறஞ்செய விரும்புபவர்களுக்கு மன மாசின்மையால் நவையறு காட்சி உண்டாகும். அவர்கள், பொய்ப்பொருளுக்கூடாகவே மெய்ப் பொருளைக் கண்டுவிடுவார்கள். மெய்ப் பொருணாயனார் படுபொய்யனுக் கூடாவே மெய்ப்பொருளைக் கண்டார். அறத்துக்குப் பயன் மெய்ப் பொருளைக் காண்டலே.
கச்சியப்பப் பெருமான் நமக்கு ஒரு நாரத மக ரிஷியைத் தந்தருளியிருக்கின்றார். நாரதர் திரிலோக சஞ்சாரி. அவருடைய காட்சி நவையறு காட்சி; மெய்ப்பொருட் காட்சி; “இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு' என்ற சத்தியத்தை நாரதரிலே காணச் செய்கின்றார் கச்சியப்பப் பெருமான். கந்தபுராண நாரதரை வைத்துக் கொண்டு ஒரு பெரிய நாடகத்தமிழ் சிருட்டித்துவிடலாம். பொய்ப்பொருளில் மிதியாமல் காலைத் தூக்கி மெய்ப்பொருளில் தாவுவதே நாடகம்; தாவச்செய்வது நாடகத்தமிழ், சம்பந்தன செந்தமிழ் இயற்றமிழ்; அதன்மேலே இசைத் தமிழ், அதற்குமேலே நாடகத்தமிழ், முத்தமிழ். முடிந்த தமிழ் நாடகத்தமிழ் நாரதர்மூலம் நாடகத் தமிழையே தந்திருக்கிறார் பெருமான். நாரதர் பொய்யிலே தீண்டுவது, மிதிப்பது இல்லை. நாரதர் வெறும் இசைகாரர் அல்லர், இசைக்கு மேலே நல்ல நாடகர்.
நாரதர் பூமிக்கு வருகிறார். @U தினைக்கொல்லையை அணுகுகிறார். அங்கே ஒரு பரண். அதிலே பச்சைப் பசிய ஒரு பெண். அப்பெண்ணின் வாயிலிருந்து ஆலோலம் வருகிறது. இந்த இசை நாரதரை இழுக்கின்றது; வினையை மீட்டிக் கொண்டே நாரதர் காலைத் தூக்கி

Page 12
நடக்கிறார்; கொல்லையை எட்டிப்பார்க்கிறார். அந்த ஆலோலம் இசைத்த பெண்ணை ஒரு வெறுங் குறப்பெண் என்று நாரதர் தீர்த்துவிடவில்லை; அவர் காட்சி நவையறு காட்சி.
பூவைகாள் செங்கட் புறவங்காளாலோலம் தூவிமா மஞ்ஞைகாள் சொற்கிளிகாளாலோலம் கூவல் சேர்வுற்ற குயிலினங்காளாலோலம் சேவல்கா ளாலோலம் என்றாள்திருந்திழையாள்"
--கந் வள்ளி. திருமண, 54 இந்த ஆலோலம், இயற்றமிழ் மட்டில் நில்லாது, இசைத்தமிழாய், நுண்செவி படைத்த தேவுல கத்துக்கே சென்று இசைத்தது.
"வாரியும்வடித்து உந்தியும் வரிசையாலுறழ்ந்தும் சீரியாழ்வல்லநாரதன் புவிதனிற் சேர்ந்தான்'
--கந் வள்ளி. திருமண 56 வள்ளிநாயகியின் இசைத்தமிழ், குறிஞ்சித் தமிழ் தேவ இருடியாகிய நாரதரை யாழுடன் கீழே இறங்கச் செய்துவிட்டது. அந்த வழியே நாரதர் நடந்தார்; கண்டார்; காரியத்தை உணர்ந்தார்; மீண்டார்; ஓடினார்; ஒடி,
"போய் அவட்குஅருள் புரிதியால்"
--கந். வள்ளி. திருமண 68 என்று முருகனை வேண்டினார். நாரதர் தமது நவையறு காட்சியினாலே, அந்த கொல்லையில் ஒரு வெறும் வேட்டுவப் பெண்ணைக் காணவில்லை; அந்த முருகனின் அருட்பிரவாகத்தையே கண்டார். நாரதர் கண்டது ஒருபுறம் இருக்கட்டும். கச்சியப்பப் பெருமானை ஒருக்கால் கண்கொண்டு பாருங்கள்.
மூவா முகுந்தன் முதனாட் பெறும் அமுதைத் தேவாதி தேவன் திருமைந்தன் தேவிதனை மாவாழ் சுரத்திற்றம் மாமகளாப் போற்றுகையால் ஆவா குறவர்தவம் ஆரளக்க வல்லாரே'
- கந் வள்ளி. திருமன. 45 என்று வாயூறுகின்றார். அமுதந் திரண்டெழுந்த போது தேவர்கள் கூட இப்படிக் கச்சியப்பர்போல வாயூறியிருக்க மாட்டார்கள். குறவர் நெஞ்சில் வஞ்சமில்லாதவர்கள். இனி வைதிகர் ஆவர்கள்.
தக்கன் புதல்வர்கள், தக்கன் காட்டிய வழியில் பிரமாக்கள் ஆகிறதற்குத் தவஞ் செய்கிறார்கள். நாரதர் பார்த்து விலா ஒடியச் சிரித்தார். அவர்கள் வினாவினார்கள். உங்கள் அப்பன் காட்டிய நெறி புன்னெறி, மெய்ப்பொருளைத் தலைப்படுகின்ற
பிரமாதி கார்த்திகை

மேலாம் நன்னெறி இது என்று காட்டி விட்டார். அப்புதல்வர்கள் நாரதர் காட்டிய நெறியிற்சென்று மெய்ப்பொருள் தலைக்கூடினார்கள்.
ஒரு நாள் நாரதர் சூரபன்மனை எட்டிப் பார்த்தார்; சூரபன்மன் பல்லைக் கறித்தான்; நாரதர் சிரித்தார். சூரபன்மன் கோபித்தான்; "நீ என் உறவினன்; நீ நல்லாயிருக்கிறது எனக்கு எவ்வளவு சந்தோஷம்; சந்தோஷம் வந்தால் சிரிக்கத் தானே வேண்டும்' என்றார். சூரனுக்கு இருக்கும் வருத்தம், சாதாரண சங்கீதத்தில் தீருகிற வருத்தமன்று; வீரவேல், தாரைவேல் தீர்க்கிற வருத்தம் என்றுதான் அவர் சிரித்தார். அத்தச் சிரிப்பைக் காணச் சூரபன்மனுக்கு அப்போது கண்ணுமில்லை; காதுமில்லை. நாரதருக்கு இருந்த கண் காது அடிமுடி தேடிய பிரம விஷ்ணுக்களுக்கே இருக்கவில்லை.
தக்கன் யாகத்துக்கு முனிவர்கள், தேவர்கள், ஏனைக் கணங்கள் யாவருஞ் சென்றார்கள். எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று தக்கன் வினாவினான். அப்பொழுது,
" அகத்தியன் சனகன் முன்னோர்
அத்திரி வசிட்டன் என்பான் சகத்துயர் பிருகு மேலாந்
ததீசிவெஞ் சாபத் தீயோன் பகைத்திடு புலத்தை வென்ற
பராசுரன் இணைய பாலார் மகத்தினை யிகழா வீண்டு
வருகிலர் போலும் என்றார்”
-- கந் சாலை செய், 50 அகத்தியர் முதலிய முனிவர்களுக்கு, தக்கனுடைய யாகக் கூடம் மலகூடமா யிருந்தது. சிவத்தை விலகிய கூடம் மலகூடம். முனிவர்கள் காட்சி நவையறு காட்சி; பொய்யற்ற கீரர் “துனியில் காட்சி” என்பர் துணி வெறுப்பு அவர்களுக்குத் தக்கனிலே வெறுப்பு இல்லை. இப்படித் தலைகீழ் ஆகின்றானேயென்று இரக்கம் உண்டு. ததிசி புத்திகூடப் புகட்டிப் பார்த்தவர்.
அறங் கைவந்து மனந் தூயராய்ப் பார்வை சுத்தப்பட்டு மெய்ப்பொருளைக் காணவேண்டு மென்பதை நாரதர் முதலிய மகா இருடிகளில் வைத்துக் காட்டி, பொருட்படலம் செய்து கொண்ட கச்சியப்பப் பெருமான், அப்பால் மெய்ப் பொருளைத் தரிசித்தவர்கள் தரிசித்தல் மாத்திரையில் நில்லாது அப்பொருளை அகலுதற்குச் சகிக்காது, அணுகி, அனுபவிப்பதாகிய இன்பத்தை வள்ளிநாயகி தெய்வநாயகியில் வைத்துக்காட்டி, மூன்றாவதான இன்பப் படலத்துக்கு வழி செய்கின்றார்.
நன்றி கந்தபுராண போதனை

Page 13
சைவ ஒழு
- சு. சிவபாத
1. சைவஒழுக்கங்களுள் இன்றியமையாதது திருநீறு அணிதல், அதை அணியும் போது சிவ பிரானை நினைத்தலும் திருவைந்தெழுத்தை உச்சரித்தலும் அவசியமானவை. "கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுண்தருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலியூரரனே.” 2. திருவைந்தெழுத்தை ஆறுதலாயும் அமைதியாகவும்
அன்போடு ஒவ்வொருநாளும் ஒதுதல்.
"காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.” 3. தேவாரம் அல்லது திருவாசகம் ஒவ்வொருநாளும் ஒதுதல்; திருவாசகப் புத்தகம் ஒன்று வீட்டில் வைத்துக் கொள்ளுதல். 4. சிவபெருமான், உமாதேவியார், விநாயகர், வைரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளுள் ஒன்றிலே விஷேச பற்று வைத்து நாள்தோறும் தியானித்துத் தோத்திரம் சொல்லி வணங்குதல். சிவத்தியானத்துக்கு நடராச வடிவம் மிகவும் பொருத்தமானது. "தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோத முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு"
- உண்மை விளக்கம் அதிலுள்ள ஒவ்வொன்றும் அரிய உண்மைகளை விளக்கி, நம்மை நல்வழியிற் செலுத்தத் தக்கது. ஒரு திருக்கரத்திலேயுள்ள துடியானது படைத்தலாகிய தொழிலைக் குறிக்கின்றது. கடவுள் நம்மைப் படைத்தது நாம் மெய்ப்பொருளாகிய அவரை அடைந்து பேரானந்தத்தைப் பெறுதற்காக என்பதை அது காட்டத்தக்கது. ஆதலால், அதைக்காணும் போது.
 

க்கங்கள்
Bib5Jld B.A -
"உற்றாரை யான்வேண்டேனுர்வேண்டேன்
பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு
மினியமையுங் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன்
குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக
வேண்டுவனே' என்று எண்ணலாம்.
அவருடைய வேறொரு திருக்கரம் அபயகரம் எனப்படும். அது 'நாம் உன்னைக் காப்போம்; ஒன்றுக்கும் பயப்படாதே" என்னும் குறிப்புடையது.
"மண்பா தலம்புக்கு மால்கடல்
மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட்டிருசுடர் விழினு மஞ்சல் நெஞ்சே திண்பா னமக்கொன்று கண்டோம்
திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட்
சுடரான் கழலினையே" - தேவாரம் என்னும் மனவுறுதியை ஆக்கத்தக்கது. திருவடிகளுள் ஒன்று முயலகனை மிதித்து ஆணவத்தை நசித்தலைக் குறிக்கும். அதை நாம் காணும் போது அவருடைய திருவடித்துணையைக் கொண்டு ஆணவத்தாலுண்டாகும் ஆசைகளை அடக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகும். மற்றத் திருவடி அவர் நம்மைத் தம்மோடு சேர்த்துத் தம்மைப் போல் ஆக்குவார் என்பதைக் குறிக்கும், இது:-
"புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட் டிகழ்மின் எல்லா அல்லலையு
மினியோ ரிடையூறடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்றாள் வணங்கிநாம் நிகழு மடியார் முன்சென்று
நெஞ்ச முருகி நிற்போமே."
- திருவாசகம்

Page 14
என்னும் மனப்பான்மையை ஆக்கத்தக்கது. 5. சிவனடியார்களது திருநாட்களைக் கொண்டாடி அவர்களுடைய திருச்சரித்திரங்களைச் GeTសិលើ அல்லது கேட்டு அவர்களை வழிபடல். "தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் மடியேன் திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே யென்னாத இயற்பகைக்கு மடியேன்
இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லைந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு காளே."
- தேவாரம் 6. நாள்தோறும் அல்லது வாரந்தோறும்
கோயிலுக்குப் போதல்,
LL S D S D S DS S
O நினைவிற் ெ
g,mrriji, Gagog, 0:1 || 17. III. 99 @T MOITA, Ü
甄 鲇
O3 || I9.II.99 || GG 616Tóf ஏகாதசி 05 21.11.99 | ஞாயிறு பிரதே 06 22.10.99 திங்கள் (gp6.
’ கனம் 07 || 23. II.99 G)F616)JfTu திருக்க விஷ்ணு 08 24.11.99 புதன் விநாய I0 | 26.11.99 || GGDIGITGrf affa, 13 29.11.99 திங்கள் (gro5. 15 01.12.99 புதன் 620ůů 16 02.12.99 வியாழன் SA,6ðss', 17 03.12.99 டுவள்ளி ஏகாதசி 19 05.12.99 | ஞாயிறு பிரதே 20 06.12.99 திங்கள் GAFAT MAD6 21 07.12.99 செவ்வாப் 9. (DfT6. 22 08.12.99 புதன் மூர்க்க சிறப்பு 25T1.12...996) சதுர்த் 27 13.12.99 திங்கள் விநாய 28 14.12.99 செவ்வாய் உதயத்
SLSSSLS SSSSSSLSSSSS SSL LLSSSSSSLSSSSSSLSLSSLSLSSLSLSS SSSSSLL
 

7. 6)g6) ELDL முறைப்படி எப்போதும் நடக்கமாட்டாதவர்கள் வாரத்திற்கொரு முறையேனும், பக்கத்திற்கொரு முறையேனும், மாசத்திற்கொரு முறையேனும் முறைப்படி தவறாது நடத்தல். இப்படி நடத்தல் விரத நாட்களிற் பொருந்தும். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி விரதம் சைவர் யாவரும் அனுட்டிக்கத்தக்கது.
8. நாம் ஒருவரைக் காணும்போது அவர் சிவபிரானது
திருவடிகளைச் சேருதற்கு யாத்திரை செய்பவர் என்ற எண்ணமே நமது மனத்திலே முதல் உண்டாதல். அவர் நம்மிடம் வந்த தொழிற்றொடர்பு இரண்டாவதாக எண்ணத் தக்கது.
காள்வதற்கு
பிறப்பு
சி விரதம்
ாஷ விரதம் வார விரதம், பூரணை விரதம், சர்வாலய தீபம், புல்லர் குருபூசை ார்த்திகை விரதம், குமாராலய தீபம்,
ணுவாலய தீபம்
க விரதாரம்பம் ஹாரசதுர்த்தி விரதம் வாரம், ஆறுமுகநாவலர் குருபூசை
பொருளாளர் குருபூசை யர் குருபூசை
சி விரதம்
ாஷ் விரதம்
வார விரதம்
வாசை விரதம்
ர் குருபூசை
லியர் குருபூசை
தி விரதம் க ஷஷ்டி விரதம் ந்தின்முன் திருவெம்பாவை பூஜாரம்பம்
-----------------
)

Page 15
Hon
- இற்றமிழ் வித்தகர் பண்
அம்மா, ஐயோ எனும் சொற்கள் வியப்புப் பொருளிலும் வழங்கும். முன்னையது அவ் + மா அல்லது அ+மா எனத் தனித்தனி பிரித்து அந்த மகத்தான - அளப்பரிய என்ற அரும் பெரும் பொருளும் தரும். பின்னையதற்கு அவ்வாற்றல் இல்லை.
“சும்மா இரு சொல்லற என்றலும் அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே' என்ற வழக்கிலே
வரம்புபடாத எனும் பொருள் காணக்கிடக்கிறது. இது
முருகன் உபதேசமான சும்மா எனும் சொல்லில் அடங்கி அகண்டமாய் விரிவது அருணகிரிக்கு அநுபூதியானது. இந்த அநுபூதி விளைவுக்கு வித்து, கச்சியப்பர் சூரன் கூற்றாகக் கூறிய இந்த முருகனுடைய கோலத்திலுள்ள சிறப்பனைத்தும் உலகில் யார்க்குளது; அம்மம்மா அற்புதம், அற்புதத்தோடு பல்கால் நோக்கினும் அடங்கி ற்றில்லை; இன்னும் பார்க்கும் என்வேட்கையும் அடங்கவில்லையே! என்பதே. வியந்து பாராட்டியவன் பரமவிரோதியான பாத்திரம் சூரன்.
கந்தனின் தோற்றமும் காரணமும்: துயர்விளைக்கும் சூர்கிளையைத் தூரறுத்து சுரர் சிறை விடுவித்துச் சுபிட்சமும் சுதந்திரமும் வழங்குவது. அதற்காகவே கயிலையிலிருந்து பூதகணத்தோடு காசினியில் வந்து தாரகனோடு கிரவுஞ்சத்தையும் சத்திவேலாற் சாய்த்தார்; சூரனிடம் தூதனுப்பிச் சுரரைச் சிறைவிட்டுச் சுகமாக இருக்கும்படி கூறுவித்தார் உடன்படாமையால் யுத்தம் தொடங்கியது பத்துநாள் தொடர்ந்தது. 2ம் நாட்போரிலே சூரனும் முருகனோடு பொருது எல்லாம் இழந்து வெறுங்கையோடு கரந்து நகருட்சென்றான். 3ம் நாள் முதல் நடந்த போரிலே மக்களும் மந்திரி பிரதானியரும் தம்பி சிங்கமுகனும் மாண்டு போயினர். எஞ்சியிருந்தபடை அனைத்தையும் சேர்த்துச் சூரன் போர்க்களம் புகுந்தான். நான்குநாள் தனது மாயா
 

L
gBuIII
தர் ச. சுப்பிரமணியம் -
சாமர்த்தியம் உட்படச் சகல திறமைகளையும் காட்டி யுத்தம் புரிந்தான்.
அத்தனை நாட் போரிலும் மாண்டவர்களையும், அமுத மலையைக் கொண்டு மீண்டும் உயிர்ப்பித்தான் அரைநொடிப் பொழுதிலே அனைத்தும் முருகன் விடுத்தி சம்கார ருத்திரப்படையாலே பிடிசாம்பராக முடிந்தன. மாயா பாசபந்தங்கள் அறுந்து தனித்துச் சஞ்சல முற்று நின்ற சூரனுக்கு முருகன் தனது திருப்பெருவடிவங்காட்டி நல்லுணர்வும் சிறிது நல்கவே, கண்டசூரன் கூறிய துணிபொருள் தானே நாம் கந்தபுராணத்தில் கடைந்து பெறும் நவநீதமாம்.
நஞ்சம் அமுதாம் இனிய நல்வினையினால் இறுதியும் முதலுமில்லா இப்பெருவடிவந்தன்னைக் கறைவிடம் உறழும் குரன் கண்டு விம்மிடத்தின் நிற்ப அறிவரும் உணர்தல் தேற்றா ஆறுமா முகத்துவள்ளல் சிறிது நல்லுணர்ச்சிநல்க இணையன செப்பலுற்றான்”
ஆறுமா முகனின் வரம்பிலாற்றலை வியந்துரைத்தல் "எண்ணிலா அவுணர்தானை பாவையும் இமைப்பில் செற்று விண்ணிலா வண்டந் தோறும் வியன்சமர் ஆற்றி என்பால் நண்ணினார் தம்மை யெல்லாம் நாமறத் தடிந்து வீட்டி, வண்ணமான் தேரும் மீண்டுவராநெறிதடுத்தான்மன்னோ
திண்டிறல் உடையேன்தூண்டும் திறற்படையாவும் நீக்கி கொண்ட என் மாயம் முற்றும் கொடுஞ்சர மதனால் மாற்றி அண்டமும் புவனம் யாவும் அமரரும் பிறவும் தன்பாற் கண்டிடும் வடிவமொன்று காட்டியென்கண்முன்நின்றான்"
தன்பேதைமை நினைந்து கழிவிரக்கப்படல் 'கோலமா மஞ்ருைமிது குலவிய குமரன் தன்னைப் பாலனென்றிருந்தேன்; அந்நாட்பரிசிவை உணர்ந்திலேனால்
மாலயன்தனரும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்திஇம்மூர்த்தியன்றோ"

Page 16
கழிந்ததற் கிரங்கியவன் கேள்வி கேளாமைக்கு வருந்துதல் ஒற்றெனமுன்னம் வந்தோன் ஒருதனிவேலோன் தன்னைப் பற்றிகல் இன்றிநின்ற பராபர முதல்வ னென்றே சொற்றனன் சொற்ற வெல்லாம் துணிபெனக் கொண்டி
லேன் யான் இற்றை இப் பகலில் ஈசன் இவனெனும் தன்மை கண்டேன்"
(ஒற்று - தூதன் வீரபாகு இற்றை - இன்று)
"மீயுயர் வடிவங்கொண்டு மேவியதுதன் சொற்ற வாய்மைகள் சரத மம்மா மற்றுயான் பெற்ற அண்டம் ஆயவை முழுதும் மற்றும் அறுமுகம் படைத்த செம்மல் தூயபொற் பதரோமத்தில் தோன்றியே நிற்கு மன்றே"
கேள்வியாலே பெற்ற அறிவு காட்சியாலும் உறுதியான பின்னும் சிந்தித்துத் தெளிந்த தீர்க்கமான துணிபொருளானதாலே நஞ்சனையானாயிருந்த சூரன் நல்வினையாலே நல்ல முதாகமாறி நஞ்சிவனாரேயான முருகு குறித்து உருகுமுரை "அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல் கொண்டிடும் வடிவமுற்றும் குறித்துயார் தெரிதற் LITGlorff எண்டரும் விழிகள் யாக்கை எங்கனும் படைத்தோர்கேனும், கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கு மன்றே. 量
Տ) 霹 செல்வம் வந்தால் 1
செல்வம் வந்துற்ற போ தெய்வமும்கிறிது சொல்வதை அறிந்து ெ சுற்றமும் துணை வெல்தே கருமம் அல்ல வெம்பகை வலிது வல்வினை விளைவும்
மண்ணின்மேல் 6 இந்த வுலகத்தில் வாழும் மக்கள் தமக்கு மிக்க ெ எண்ணிப் பார்க்கமாட்ார்; தாம் சொல்வதை இன்னது நண்பரையும் பொருட்படுத்த மாட்டார். எப்போதும் அவர்க வல்லவர் என்று எண்ணிப்பார்க்கமாட்டார். வலிய
faitoads 4,7556024 G

(அகிலமு மடங்கிய இவ்விசுவரூபத்தைக்கான ஆக்கையெங்கும் கண்களே படைத்தவருக்கும் காண்பதற்கு அநந்த கோடி கற்பகாலமானாலும் கண்டு முடியாது)
சீர்க்கும் ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந்தன்னில் ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம் ஆர்க்குள உலகில் அம்மா! அற்புதத்தோடு பல்கால் பார்க்கினும் தெவிட்டிற்றில்லைஇன்னும் என்பார்வைதானும்"
(இத்திருப் பெருவடிவில் இடையீடின்றி எழுவதும் நிலைத்ததுமாயுள்ள காந்தியும் சீரும் இளமையும் அழகும் ஆகிய அனைத்தும் உலகிலே வேறெவர்க்கு உள்ளன? இல்லையே; அம்மம்மா அதிஅற்புதம், அந்த அற்புத உணர்வோடே பலமுறை பார்க்கிறேன்; எத்தனை யுகமாக அபூர்வமான அழகனைத்தையும் அண்டமாயிரத்தெட்டிலும் பார்த்த என்கண்களுக்கும் பார்த்தது போதும் என்று தெவிட்டாத காட்சியாகி மேலும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுளதே அற்புதம்)
நேரில னாகியீண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேருரு வதனை நோக்கிப் பெரிதும் அச்சுறுவதல்லால்
ஆரிதுநின்று காண்பார் அமரரில் அழிவிலாத சீரிய வரங்கொண்டுள்ளேன் ஆதலில் தேரிகின்றேனால்”
மனிதரின் இயல்பு ଅଞ୍ଚୁ
து
பேனார்; சால்லார்; யும் பேனார்; u)T6ñ) துஎன்று எண்ணார்;
பாரார்;
வாழும் மாந்தர் சல்வம் வந்து சேர்ந்துவிட்டால் தெய்வத்தைச் சிறிதும் என அறிந்து சொல்ல மாட்டார்; தம் உறவினரையும் ள் வெற்றிச் செயலையே எண்ணுவது அல்லால் கொடிய பாவத்தின் விளையைவும் நினைத்துப்பார்க்க மாட்டார். ဧရှီရှို့
D

Page 17
(நேரிலன் - ஒப்பிலி - பகைவன், அமரரில் அழிவிலாத் - தேவர்களிலும் அழியாத)
ஆயிர கோடி காமர் அழகெலாம் திரண்டொன்றாகி மேயின வெனினும் செவ்வேள் விமலமாம் சரனந்தன்னிற் நூயநல்லெழிலுக்காற்றாது என்றிடில் இணையதொல்லோன்
மாயிரும் வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்”
(காமர் - மன்மதர்கள், ஆயிரகோடிமன்மதர்களது அழகெல்லாம் திரண்டு ஒருருவாய்வரினும், முருகனது திருவடியிலுள்ள ஒப்பனை செய்யப்படாத தூய அழகுக்கே நிகராகதே, அங்ங்னமேல் திருமேனி
முழுவதிலும் உள்ள அழகுக்கு எவர் எவ்வுவமையைத்
தேடி இயம்ப முடியும்; முடியாது. இது பகைவன் சூரன் கூறியது. முதல் நாட்போர் ஒன்றிலே பகையான இராமனை கண்டு மீண்ட இராவணன், பகைவனைப் பராட்டுவதாக வரும் 'சீதையின் கண்ணுக்கு அழகாண்மைகளில் காமனும் நானும் நாயெனத் தருவோம்’ என்பது இணைத்து எண்ணத்தக்கது.)
தந்தை காசிபர் போதனைகளைப் போதித்து மக்களைத் தன்மாயாவாத போதனையாலே திசைமாற்றித் தீநெறி செல்லத் தூண்டி வாழ்த்தி வந்தவள் தாயாகிய மாயை என்பவளே. அவ்வழியை அழுங்குப் பிடியாகப் பற்றிப் பெருநிலை பெற்றவர் சூரன் முதலான மக்கள், பின்பு அந்த அதர்ம வாழ்வின் பயனாக அனைத்துமிழந்து அவல நிலையிலே தனித்துத் தளர்ந்த சூரன் முன்பு தோன்றிய மாயை ஒருண்மை நிலையையும் உரைக்கத்தவறவில்லை. இது அதுதிரோதானசத்தி வலியழியும் போது அருட்சத்திமேலோங்கிச் செந்நெறி சேர்பதுபோலும்
உறுபடைகற்றம் துஞ்ச ஒருவனேயாயும் விண்ணோர் சிறைவிடுத் துய்யுமாறு சிந்தனை செய்தி லாய் நீ அறுமுகன்தன்னோடின்னும் அமர்செயக் குறித்தியாயின் நிறைபெரும் செல்வ வாழ்க்கை நீங்கினை போலுமன்றே" என்ற மாயை கூற்றால் அமரர் சிறைநீக்கி அறுமுகனை வழிபட்டு அறவழிப்பட்டு ஒழுகுவதே ஆக்கம் தருமென அறிவித்தாள்.
falong 45/mijigaoa

இதற்கு முன்னமே தம்பிசிங்கமுகனும் இளையமகன் இரணியனும் இக்கருத்தை இனிதாக எடுத்திசைத்தனர். அவையெல்லாம் புறக்குடத்தில் வார்த்த நீராகப் புறம்போயின. இதனையும் இப்போது
எண்ணினான் சூரன்.
"மலபரிபாகமும் சத்திநிபாதமும் வரும்போது பசுகரனபோதமே பதிகரனபோதமாதலால்' அண்ணலார் குமரன்மேனி அடிமுதல் முடியின்காறும் எண்ணிலா ஊழிகாலம் எத்திறம் நோக்கினாலும் கண்ணினாலடங்காது உன்னிற்கருத்தினாலடங்காதுஎன்பால் நண்ணினான்அமருக்கென்கை அருளென நாட்டலாமால்"
திருகின வெகுளிமுற்றும் தீர்ந்தன; செருவில் ஊக்கம் அருகியது; உரோமம் புள்ளி ஆயின; விழியில் தூநீர் பெருகியது; இவன்பால் அன்பு பிறந்தன; தமியேற்
குள்ளம் உருகியது; என்புதானும் உலைமெழுகு ஆகுமன்றே.” போயின் அகந்தை போதம் புகுந்தன; வலத்ததான தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன; புவனம் முற்றும் மேயின் பொருள்க ளெல்லாம் வெளிப்படுகின்ற விண்ணோர் நாயகன் உருவம் கண்டேன் நற்றவப் பயன் ஈதன்றோ" இத்தனை நாள் வாழ்வன்று, முருகனைத் தரிசித்த இதுவே எனது தவத்தின் பேறென்றான்.
குழுதல் வேண்டும்தாள்கள் தொழுதிடல் வேண்டும்அங்கை தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும்தாலு: ஆழுதல் வேண்டும் தீமை அகன்றுநான் இவற்காளாகி வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்ததுமானம் ஒன்றே" சடமான அங்கங்கள் தாமாகவே அடித்தொண்டாற்ற
முயலவும், மானம் தடுக்கிறது.
ஒன்னலர் பொருட்டால் ஏகி உறுசமர்இழைத்த செம்மல் தன்னுரு வதனைக் காணில் முனிவதே தகுதியாகும் வன்னிகொள்வெண்ணெயே போல்வலிழிந்துருகிற்றென்றால்
என்னுடை வயந்த வன்றோ உணர்ச்சியும் யாக்கை முற்றும்"

Page 18
(தாலு - நாக்கு முனிவது - கோபிப்பது என்னுடை வயத்த அன்று - என் வசத்துளவன்று)
"ஏடவிழ் அலங்கல் மார்பன் என்னுடன் இந்நாள் காளும் நீடிய இகற்போ ராற்றி நீங்கலான் நின்ற செல்லாம் ஆடலின்இயற்கையென்றே அறிந்தனன், அஃதான்றன்னான் சாடிய வேண்டு மென்னின் யாரது தாங்கற்பாலார்" ஆறுமுகன் பெரும் போர் புரிந்தவாறே நீங்காது நின்றது ஒரு விளையாட்டேயாம், அன்றி அவன் என்னைக் கொன்றிட நினைத்தால் கணத்தில் முற்றும், யார் தடுக்க வல்லார், தேவரைக் சிறையிட்டது பழுதென்றனர் பலர்; ஆனால் அதனாலேதான் சர்வேசுரனான முருகன் என்னைத் தேடிவரப் பெற்றேன். ஆகவே தீதும் நன்றாயமைந்து விட்டது.
ஒன்றொரு முதல்வனாகிய உற்றிடுமூர்த்தி முன்னம் நின்றமர்செய்தேன்இந்நாள்; நெஞ்சினித்தளரேன் அம்மா நன்றிதோர் பெருமை பெற்றேன்; வீரனும் நானே யானேன்; என்றுமிப்புகழேநிற்கும் இவ்வுடல் நிற்பதுண்டோ"
(நாவலர் பொ
உலகம் தோன்றிநின்று அழியுங்காரியமாயு காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழ என்பது நன்றாக நிச்சயிக்கப்படும்.
கடவுள் என்றும் உள்ளவர். அவருக்குப் பி நிறைந்தவர். அவர் இல்லாத இடமில்லை. ஒன்றும் இல்லை.
கருணாநிதி யாகிய கடவுள், உட்புறத்திலே : திருமேனியும் தமது மெய்யடியாருடைய தி இங்குள்ளவர் செய்யும் வழிபாட்டைக் கொன இடங்கள் இவைகளேயாகும்.
கடவுளால் விரும்பப்படுவன இரக்கம், வாய்ை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலியந கொலை, புலால் உண்ணல், களவு, கள்ளு மறத்தல் முதலிய தீமைகளாம்.
 
 
 
 
 
 
 
 
 

இந்த நிலையில் முருகன் விசுவரூபத்தை மறைத்து முன்போலவே மயில்வாகனராக அவன் முன் காட்சிதந்து, அப்போதே நற்போதத்தையும் மாற்றித் தற்போதமே தலையெடுக்கச் செய்தார். பிறைமதி வரவிலகிய இருள், அது அகல மீண்டும் வந்து விண்ணிலே நிறைவதுபோல சூரன் உள்ளத்திலே அகங்கார இருள்வந்து மண்டியது. வேலவன் செய்த மாயத்தை வென்று விட்டேன். காயம் அழியாதவரம் பெற்றயான் இருள் உரு, மாவுரு, சூருரு, எனத் தோன்றி வந்து, குமரன் கூர்வேலால் இருபிளவாகிச் சேவலும் மயிலுமாகி முன்பெற்றவரத்தின் சீராலே கொடியும் ஊர்தியுமாகி ஆட்டுப்பட்டுப் பேரின்ப நிலை பெற்றான்.
தான் செய்த தவப்பயானலே முன்னமும் தேவர் வணங்கும் பெருமித வாழ்வில் வீற்றிருந்தான்; வீடிய -பின்னும் விண்ணவரும் மண்ணவரும் மற்றெவரும் வணங்கும் மாண்பு பெற்றிருக்கின்றான் சூரபதுமன்.
தவத்தினும் பெரிதொன்றுண்டோ கச்சியப்பர் சத்திவாக்கு
GO/1gp4567
ள்ளது. ஆதலினால் உலகத்தைப் படைத்தல், லுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கிறார் -
றப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் அவர் எல்லாம் அறிவர். அவர் அறியாதது
நிருக்கோயிலுள்ளிருக்கும் லிங்கம் முதலிய நவேடமும் ஆதாரமாய்க் கொண்டு நின்றும் *ண்டருளுவார். ஆதலால் அவரை வழிபடும்
ம, பொறை, அடக்கம், கொடை, தாய்தந்தை ன்மைகளாம். கடவுளால் வெறுக்கப்படுவன நண்ணல், வியபிசாரம், பொய், செய்நன்றி
நன்றி : நால்வர் நெறியில் நாவலர்
6)

Page 19
திருவிளையாடற் புராணம்
மேருவைச் செண்
- LG
அகத்திய முனிவரது அறிவுறுத்தலுக்கமைய உக்கிரபாண்டியர் சோம வார விரதத்தை முறைப்படி அனுட்டித்தார். அந்தவேளை அவர் மனைவி வயிற்றில் ஓர் ஆண் மகவு உற்பத்தியாகிப் பிறந்தது. அதற்கு வீரபாண்டியன் என்று பெயரிட்டனர். குழந்தை வளரும் போது கலைப் பயிற்சி, படைப் பயிற்சி என்பனவும் கொடுக்கப்பட்டன. அது நிறைவெய்துங்
காலத்தில் கிரகநிலை திரிந்தது. மாரி மழை இல்லாது”
போயிற்று பயிர் வளர்ச்சி, விளை பொருள் அபிவிருத்தி என்பன தடைப்பட்டன. உணவின்றி உயிர்கள் வருந்தின. உக்கிரபாண்டியர் சோதிடர்களை அழைத்து, இந்த நிலைக்கான காரணங்களைக் கண்டறிந்து சொல்லும்படி பணித்தார். நிலைமையை ஆய்வு செய்த சோதிடர்கள், கிரகங்கள் சூரியனை நோக்கி நிற்கின்றனவென்றும், தொடர்ந்து ஒரு வருட காலம் மழை பெய்யாது என்றுங் கூறினர். உக்கிரபாண்டியர் பரமசிவனிடம் முறையிட்டார். பயன் காணாது மாளிக்ைகுத் திரும்பி, தன் மக்களது துன்பத்தை நீக்குவதறியாது நினைந்து நினைந்து துன்புற்று உறங்கிவிட்டார். அவன் கனவிற் சித்தராகத் தோன்றிய சிவன், “அரசனே. இப்போ மழை பெய்யாது. மழை பெய்ய வேண்டுமென வேண்டுதல் செய்து நீ வீணே வருந்தாதே. மாமேரு மலையின் பக்கலில் ஒரு பெரிய குகை உண்டு. அங்கே அளவில்லாத திவியம் உண்டு. நீ அங்கு சென்று மகாமேருமலைக்குச் செண்டினால் அடித்து அதன் செருக்கை அடக்கி உன் ஆணைக்கு உட்படுத்திப் பாறையை நீக்கி, உனக்கு வேண்டிய பொன்னை எடுத்துக் கொண்டு மீண்டுங் குகை வாயிலை அடைத்து உன் முத்திரையைப் பொறித்து வருவாயாக’ என்று அருளிச் செய்தனர்.
விழித்தெழுந்த உக்கிரபாண்டியர் சோமசுந்தரக் கடவுளை வணங்கி சேனைகள் சூழ எல்லா நாடுகளையும் கடந்து காசியை அடைந்து கங்கையில் நீராடி அப்பாற் சென்று இமாசலத்தை அண்மித்து,
பிரமாதி கார்த்திகை

டால் அடித்தமை .
uT6õ
அதற்கப்பாலும் பல காத தூரம் சென்று மகா மேருவை அடைந்து வலம் வந்து, பருவதராஜனே, நம்பிதாவே, என்று பலவாறு குறியிட்டு அழைத்தார். மகாமேரு வரவு தாமதமாகியது. அதனைப் பொறுக்காத பாண்டியர் செண்டினாலடித்தார். அடித்தலும் அசைவில்லாத மகாமேரு அசைந்தது; துடித்தது. அதன் கொடுமுடிகள் வெடித்தன. அதனால் மேரு வந்து நாணி நின்றது, கோபந் தணிந்த உக்கிரபாண்டியர் "மேரு பருவதமே இவ்வளவு காலந் தாழ்த்திய காரண மென்ன என்று வினவ அடியேன் நடோறும் மீனாட்சி சுந்தகேஸ்வரரை வழிபடும் நியமமுடையேன். இன்று இந்த வேளை ஒரு பெண்ணிடம் காமவயத்தனாகிக் சிவலாயக் கடமையை மறந்து விட்டேன். அதனாலேயே காலந் தாழ்த்த நேர்ந்தது. தண்டனையையும் பெற்று விட்டேன். என்று செய்தி சொல்லி, நீங்கள் இங்கு
எழுந்தருளிய காரணம் என்ன என்று வினவி,
கருத்தை அறிந்து பொற்குவை உள்ள இடத்தைக் காட்டியது. உக்கிர பாண்டியர் குகைவாயிற் பாறையை நீக்த தமது தேவைக்கு வேண்டிய பொன்னை எடுத்துக் கொண்டு மீண்டும் குகை வாயிலைப் பாறை கொண்டு மூடி தமது முத்திரையைப் பொறித்து விட்டுத் தன் தேர்மீதேறிச் சேனை உடனாக மீண்டார். வழியிலே உள்ள மன்னர்கள் தத்தம் இடங்களில் நின்று உபசரிக்க மதுரையை அடைந்தார். சோமசுந்தரக் கடவுளுடைய கோயில் அண்மித்தவுடன் தேரினின்றும் இறங்கி நமஸ்கரித்து எழுந்து வைகைகை கடநத்து நகருள்ளே புகுந்து மீண்டும் சோசுந்தரரை வணங்கி மாளிகையுட் புகுந்து கிடைத்த பொன் கொண்டு குடிகளைப் பாதுகாத்தார். எல்லோரும் மகிழ்வுடன் இருந்தவேளை கிரகங்கள் மாறுபாடொழிந்து தத்தமிடத்து நின்றன. மழைவளஞ் திறந்தது. எல்லா வளங்களும் பெருகின.
உக்கிரபாண்டியர் தம் மைந்தன் வீரபாண்டியனுக்கு முடிசூட்டி அரசாட்சி உரிமையை அவனிடங் கையளித்து தாம் சச்சிதானந்தப் பிழம்பாகிய சிவத்தோடு இரண்டறக் கலந்தார்.

Page 20
նiլոննեlՍIIլլե,
- சிவ சண்முக
மெய்பொருள் நாயனார் மலாடர் கோமான். சேதிநாட்டிற்கு அரசர் திருக்கோவலூரில் வீற்றிருந்து அரசு செய்வார். உமையொரு பாகரிடத்தில் வழிவழியாக வழிபடும் வழியில் வந்தவர். அன்பினால் அடியார் கருத்து அறிந்து கருமஞ் செய்வார்.
மெய்ப்பொருளார் அரசியல் நெறியில் வந்த தரும நெறிகளை வழுவாது பேணுபவர். மெய்ப்பொருளார் சிவனடியார் திருவேடத்தை மெய்ப் பொருள் என வழிபடுவார். தாம் தேடிய பொருள்களையும் பெருஞ் செல்வங்களையும் சிவன டியார்க்கே உரியன ஆக்குவார் நாயன்மார்களுக் கூடிய மகிழ்ச்சி பொங்கக் கொடுக்கும் பண்பினர்
மலாடர் கோமானிடத்தில் ஒர் அரசன் பகை கொண்டான். அவரை வெற்றி கொள்ள ஆசை கொண்டான். போர்மேல் புறப்பட்டுப் போனான். பகைவன் நால்வகைச் சேனையோடு சென்றான். போரில் படை இழந்து தோல்வியுற்றான்.
மாற்றான் பல தடவைகள் படை இழந்து பரிபவப்பட்டான். பகைவன் மெய்ப்பொருள் வேந்தரைப் போர்முனையில் வெல்ல முடியாமையை நன்கு உணர்ந்து கொண்டான். அவருடைய நல்லொழுக்கத்தை நன்கு அறிந்து கொண்டான். வெற்றியை வஞ்சனையால் வென்று எடுக்க
சிவாலயங்களை விதி
சிவாலயங்களிலே நித்தியமாகிய பூசையும் ை வேண்டும் நிபந்தங்கள் அமைத்து, அவைகளைச் சைவி அரசனுக்குக் கடனாம். அவ்வாறு செய்யாது ஒழ உலகத்துக்கும் பெருங்கேடு விளையும். இதற்குப் பி மழைகுன்றும் - போற்றரு மன்னரும் போர்வலி குன்று சாற்றிய பூசைகடப்பிடிற்றானே' எ-ம். "முன்னவனா வாரி வளங்குன்றுங் - கன்னங் களவு மிகுத்திடுங் க எ-ம். வரும். இச்சிவபுண்ணியத்தைச் சிறிதாயினும் என்பது, இங்கே மங்கையைப் பாகமாக வைத்தவர் லாடல்-பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து
N
G

GI IGIT LUIGJIMITĪT
கவடிவேல் -
விரும்பினான்.
பகையரசன் மேனி எங்கும் திருநீறு பூசினான். சடையை முடித்துக் கட்டினான். புத்தகம் போன்ற பை ஒன்றைக் கையில் கொண்டான். அதனுள்ளாகப் படைக்கருவியை வைத்திருந்தான். அது போல மனத்தினுள்ளும் வஞ்சனையை மறைத்துக் கொண்டான். அவன் நிலை கருமையை உட்கொண்டு ஒளியிணைப்பிரகாசிக்கும் விளக்குப் போன்றிருந்தது. முத்தநாதன் பொய்யினை வெளிக்காட்டாமைக்குத் தவ வேடத்தைப் பொதிந்து கொண்டான். மாளிகையினுள் புகுந்தான். "மெய்யெலா நீறுபூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதிவிளக்கே யென்னமனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.
என்பது சேக்கிழாருடைய செஞ்சொற் செய்யுள்.
காவலாளர்கள் முத்த நாதனைக் கைதொழுதார்கள் வழி விட்டு ஒதுங்கினார்கள். "அடிமை கொள்ளும் ஆளுடையார் தாமே வந்தார்.” என்றுரைத்து வணங்கினார்கள். முத்தநாதனை அரசர் முன் செல்ல விட்டார்கள். தடைபல கடந்து
பாகமவிதிப்படி சிறிதாயினும் வழுவாது நடத்துவித்தல்
வர் - கூற்றுதைத் தான்றிருக் கோயில்களானவை - கோயிற் பூசைகண் முட்டிடின் - மன்னர்க்குத் தீங்குள
மன்னுங் கோ-லெங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட
வழுவாது நடாத்தல்
நமித்திகமாகிய திருவிழாவும் தவறாது நடத்துவதற்கு
வானாயின்; அவனுக்கும் அவனால் ஆளப்படும் மாணம் திருமந்திரம், "ஆற்றரு நோய்மிகு மவனி
ாசினிக் - கென்னரு ணந்தி யெடுத்துரைத் தானே.” தவறாது நடாத்தினவர் இம்மெய்ப்பொருணாயனார்
55 வாழ்வார்.” என்பதனால், உணர்த்தப்பட்டது.
(மெய்ப்பொருணாயனார்புராண சூசனம்)
し夕

Page 21
அணுக்க வாயிலினை அண்மித்தான் முத்தநாதன். அங்கு தத்தன் காவல் காத்து நின்றான்.
"சமயம் தெரிந்து செல்ல வேண்டும். அரசர் துயில் கொள்கின்றார்.” என்று கூறித் தத்தன் தடுத்தான்.
"நான் அரசருக்கு உபதேசிக்கப் போகின்றேன். நீ சற்று வழிவிட்டு விலகுவாய்.”
முத்த நாதன் தத்தனைத் தாண்டி உள்ளே புகுந்தான். அரசர் பொற்கட்டிலில் நித்திரை செய்து கொண்டிருந்தார். அரசமாதேவி அருகிருந்தாள்.
மணம் கமழ் கூந்தலாள் மாதேவி விரைந்து எழுந்தாள். மன்னனைத் துயில் எழுப்பினாள். துயில்
உணர்ந்த அரசர் முத்தநாதனைக் கண்டார்.
“சிவனடியார் எழுந்தருள வேண்டும் என்று இன்மொழி பகர்ந்தார் முத்த நாதன் எதிரில் சென்று வனங்கினார்.
'மங்கலம் பெருக என் வாழ்முதல் வந்து அணைந்தது எதனாலோ?’ என்று அரசர் விசாரித்தார்.
“உங்கள் கடவுள் முன்னாளில் உபதேசித்த ஆகம நூல் ஒன்று உளது. மண்-மேல் எங்கும்
இல்லாதது. உமக்கு உபதேசிப்பதற்குக் கொண்டு
வந்தேன்’ என்று முத்தநாதன் சொன்னான்.
“எனக்கு இதற்கு மேலான பேறு இல்லை. சிவபிரான் அருளிச் செய்த ஆகமப் பொருளை உபதேசிக்க வேண்டும்.
"நாறு பூங்கோதை மாது நீங்க வேண்டும். நானும் நீயும் வேறு இடத்தில் இருக்க வேண்டும்.”
வேந்தர் பட்டத்தரசியை அந்தப்புரம் அனுப்பி வைத்தார். முத்தநாதனை ஆசனத்தில் அமரச் செய்தார். தாம் பூமியில் அமர்ந்தார். அரசர் முத்தநாதனை வணங்கினார். இனி ஆகமப் பொருளை அருளிச் செய்யுங்கள்.” என்றார்.
முத்தநாதன் புத்தகப் பையை மடிமீது வைத்தான். புத்தகத்தை எடுப்பவனைப் போல அவிழ்த்தான். அன்போடு வணங்கும் அரசருக்குத் தான் நினைந்து வந்த வஞ்சகத்தை நிறைவேற்றினான். “உண்மைத் தவவேடமே மெய்ப்பொருள் என்று தொழுது வென்றார் மெய்ப் பொருள் வேந்தர். சேக்கிழார் சொல்லுகின்றார்.
G
 

'கைத்தலத் திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப் புத்தக மவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதிற் பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தவப் பரிசே செய்ய மெய்த்தவ வேடமேமெய்ப் பொருளெனத் தொழுது வென்றார்.”
தத்தன் இமைப்பொழுதில் அங்கு வந்தான். முத்தநாதனுக்கு வாளை ஒங்கினான். அரசர் குருதி சோர வீழ்கின்றார்.
"தத்தா இவர் நம்மவரே என்று தடுத்தார். வேந்தர் வேதனைப்பட்டு மண் மேல் வீழ்ந்தார். தத்தன் அரசரைத் தாங்கினான்.
“அரசே! நான் யாது செய்ய வேண்டும்? “எம்பிரான் எவரும் தடுக்காத வண்ணம் வழிவிடுவாய்.
தத்தன் அரசர் ஆணையைச் சிரமேற் கொண்டான். கொடியவனைக் கூட்டிச் சென்றான். மனித நடமாட்டம் இல்லாத காட்டில் விட்டு வந்தான். “அரசே! தவவேடம் தரித்தவனை இடையூறு நேராமல் விட்டேன். s "இன்று எனக்கு ஐயன் செய்ததை யார் செய்ய வல்லார்? வேந்தர் தத்தனுக்கு நிறைந்த கருணை செய்தார்.
மெய்ப்பொருள் வேந்தர் அரசியல் நடத்தும் இளவரசர் மந்திரிமார் முதலானவரை நோக்கினார். மாதேவி, சுற்றத்தார்க்கும் நடக்க வேண்டிய முறைகளை நன்குரைத்தார்.
'விதியின் காரணமாக விளைந்தது இது. சிவனடியார் திருவடேத்தை வணங்க மறவாதீர்கள். திருநீற்றில் அன்பு வையுங்கள். இன்னல் ஏற்படும் வேளையிலும் திருநீற்றைப் பாதுகாப்பீர்கள். உலகைப் பாதுகாத்தல் அதுவேயாகும்.”
மெய்ப்பொருள் வேந்தர் பொற்சபையை - நினைந்தார். புண்ணியரின் பூங்கழலைப் போற்றினார். பார்வதி அம்மை சமேத பரமேசுவரன் தம்மைக் கருத்திற் கொண்ட வண்னம் காட்சியில் நண்ணினார். அம்பலவாணர் மேலான தேவர்களுக்கும் எட்டாத அருள் பாத நீழல் அடைய அருள் செய்தார்.
மெய்ப்பொருள் வேந்தர் என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் கும்பிட்டிருக்கும் அருள் கூடப் பெற்றார்.
இ)

Page 22
10.
11.
12.
13.
14.
15.
16.
60,96). G'n 60
Laba
உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான் சிவபெருமான் எப்படிப்பட்டவர்? நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும் சுவதந்திரருமாய் உள்ளவர். நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் ெ நித்தியர் = என்றும் உள்ளவர். சருவவியாபகர் = எங்கும் நீங்கினவர். சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர். சருவக் மகிழ்ச்சியுடையவர். சுவதந்திரர் = தம்வயமுடையவர். சிவபெருமான் செய்யுந் தொழில்கள் எவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னு இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம்பொருட்டன்று ஆன்மாக்களாகிய பிறர்பொருட்டே (. படைத்தலாவது யாது? ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முத காத்தலாவது யாது? தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறு அழித்தலாவது யாது? தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக் மறைத்தலாவது யாது? ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் ே அருளாவது யாது? ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை வி தனு கரண புவன போகம் என்றது என்ன? தனு - உடம்பு கரணம் = மன முதலிய கருவி. புவனம் =உ பொருள். ஒரு காரியத்துக்குக் காரணம் எத்தனை? முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம் என துணைக்காரணம் திரிகை, நிமித்தகாரணம் குயவன். தனு கரண புவன போகம் எனப்படும் பி துணைக்காரணம், அசுத்தமாயை, நிமித்தக முதற்காரணம் சுத்தமாயை, பிரகிருதி என மூன்று துணை சிவசக்தியாவது யாது? அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள் சிவபெருமானு வடிவம் எவை? அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம். சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையு அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் என6 எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுரல்
இ

ாா விடை
பல்
- ஆறுமுகநாவலர்
சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும்,
பாருள் என்ன?
நிறைந்தவர். அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் கர்த்தா = எல்லாஞ் செய்பவர் நித்தியானந்தர் = என்றும்
னும் ஐந்துமாம். து தம் பொருட்டோ பிறர் பொருட்டோ? ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.)
ற்காரணத்தினின்றுந் தோற்றுவித்தல்.
த்துதல்.
குதல்.
பொருள்களில் அமிழ்த்துதல்.
ாக்குதல்.
டம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும்
மூன்றாம். குடமாகிய காரியத்துக்கு முதற்காரணம் மண்,
ரபஞ்சமாகிய காரியத்துக்கு முதற் காரணம், ாரணம் எவை? னக்காரணம் சிவசத்தி நிமித்த காரணம் சிவபெருமான்.
ளதாகிய வல்லமை.
டைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?
பும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன்
எனவும் பெயர் பெறுவர்.
)

Page 23
17.
18.
19.
2O.
21.
22.
23.
சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்கள ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகத் சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தி திருவருட்குணங்களுள் இன்னது இன்னது இன்ன இ சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வ சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அ நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தி அதிட்டித்து நின்று செய்வார்; பூரீகண்டருத்திரர் பிரமா நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று கொண்டு செலுத்துதல்.) பூனி கண்டருத்திரர் இன்னும் எப்படிப்பட்ட சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர், பிரம விட்டு முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்கன் பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி. பிரமா, விட்ணு உருத்திரன், மகேசுரன், சதா என்ன? பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய க சத்தி மகேசுவரி; சதாசிவனுடைய சத்தி மனோன்மணி ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் பீடமும் இலிங்கமுமாகிய கன்ம சாதாக்கிய வடிவமாம். இலிங்கம் என்பதற்குப் பொருள் என்ன? படைத்தல் காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் மகேசுர வடிவம் எத்தனை? சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யா மாதங்காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர், அர்த்தநாரீசு சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏ இருபத்தைந்துமாம்.
@ទិញបាg
நிகழும் பிரமாதி வருட
(1999, 11, 28) ஞாயிற்றுக்கிழ கொட்டாஞ்சேனை இராமநாத அம்பாள் ஆலய மண்டபத்தில்
பெறவுள்ளது.
 
 

கிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா? தோல் எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; பானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய ன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம் ாரா? த்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து ம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக பூரீகண்டருத்திரரை வை அதிட்டித்து நின்று படைத்தலும், விஷ்ணுவை அதிட்டித்து அழித்தலுஞ் செய்வார். அதிட்டித்தல் = நிலைக்களமாகக்
3)fr?
ணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் 1ளச் செய்யுங் கருத்தா, சைவத்திற் புகுந்து சமயதீகூைடி
சிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர்
த்தி இலக்குமி, உருத்திரனுடைய சத்தி a son: மகேசுரனுடைய
சதாசிவ வடிம யாது? பீடஞ் சிவசத்தி, இலிங்கஞ் சிவம்.
சித்திரிப்பது (லிங்க - சித்திரித்தல்)
ணசுந்தரர் பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி,
ரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், கபாதர், சுகாசீனர். தக்ஷணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும்
சிவதீட்சை
கார்த்திகை மாதம் 12ம் நாள்
மை காலை 8.00 மணி முதல் ன் வீதி அருள்மிகு வீரமஹாகாளி
தீட்சா மந்திர உபதேசம் நடை

Page 24
எந்த மார்க்கமும் தோன்
-முருக வே. ப
யார்க்கும் வழிகாட்டும் மார்க்கம் மதம்
பDTர்க்கம் என்பதற்குப் பொருள் பல அமையினும் சமயம், வழி என்பனவும் செம்பொருளாம். சமயம் - என்பதற்குச் சமதையாய் மதம் என்னும் வார்த்தை பயின்று வரக்காணலாம். மார்க்க சகாயர், வழித்துணை விநாயகர், வழித்துணை ராமன் என்னும் நாமங்கள் சமயத்தோடு தொடர்புடையன. மார்க்கம் என்பது வழியையும் குறிக்கும். வழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள் என்பது அருணகிரியார் உள்ளக் கிடக்கை வழிமுதல், வாழ்முதல் முழுமுதல் பற்றிப்பேசியவர் மணிவாசகப் பெருந்தகை. தனிவழி போகாதே. இது ஒளவை வாக்கு மார்க்கம் என்னும் பதப்பிரயோகம் பாரதி பாடலிற் பயின்று வரக் காணலாம். பாரதம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போது, விடுதலை வேட்கையுடன் பலர் உழைத்தனர். அவர்களில் ஒருவரான மகாபாரதி "எந்த மார்க்கமும் தோன்றில தென்செய்கேன் ஏன் பிறந்தேன் இத்துயர் நாட்டிலே’ என ஆவேசமாகப் பாடினார். இத் தொடர் நமக்கும் சாலப் பொருந்துகிறது எனலாம். நம் சமய, சமுதாய நெறியில் கொஞ்சம் நடுக்கம், சபலம், திசை மாற்றம் நிழலாடுவதாய்த் தெரிகிறது. எனவே நாம் திசைமாறிய பறவைக்கு நிகரானோம் என்பதை உணர்ந்து - நம்மைத் தைரியப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளோம். இது மனித வாழ்விற் சகசம் ஆகவே மன உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்தைத் தருவாயாக தந்தையே என இறைவனிடம் இரப்போம்.
11. தொடரும் மத நோக்கு படரும்
பலபோக்கு நாவலர் பெருமான் தனி இயக்கவாதியாய்க் கடந்த சகாப்தத்திற் தோன்றி உழைத்தார். சமுதாயப் பேர்யாற்றில் அவர் தோற்றம் ஒருவரலாற்று மாற்றம். சைவசமயம், சமுதாயம், தாய்மொழி பற்றிய புதிய

றிலது என் செய்வோம்
மநாதன் -
சிந்தனைச் சிற்பியாகி அவதாரம் செய்த மண்ணிலும், தமிழகத்திலும் அருந்தொண்டு ஆற்றினார். அவர்களது தலையாய இரு நோக்குகள். இன்றும் நிறைவு காணாத நிலைதான். அருள்மிகு ஆலயங்கள், இறை இல்லங்கள் சைவ சமுதாயத்தின் அச்சாணியும் அவையே இவை திருவருள் பொழியும், திருக்கோயில்கள் மட்டுமன்றிச் சமயம் பேணும் பீடங்களுமாம். சைவ மத பீடங்களின் குவிமையம் இது ஆலய அமைப்பு, நிர்வாகம், அங்கே பூஜை செய்வோர் சமயத்தை, உணர்வை, தத்துவங்களை, கொள்கைக் கோட்பாடுகளைப் பேணி மக்களிடம் பரப்பி, வேற்று மதங்களின் தாக்கத்தினின்றும் காப்பாற்றும் ரட்சையாய் அமைய வேண்டும். என்ற நாவலரின் நோக்கு இன்றும் வினாக் குறிதான். தட்டும் துட்டுமாய் ஆலயம் இயங்காமல் இதயங்களைத் தட்டியெழுப்பி, தொட்டுப் பார்க்க வைப்பதற்கு முன்வரவேண்டும். தொழிற்பட
வீட்டில் வைத்து காயத்திரி அல்லது இஷ்டமந்திரம் ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் நதி தீரத்தில் ஜெபித்தல இருபங்கு பலன் பசுக்கொட்டகையில் ஜெபித்தால் 100 மடங்கு
பலன் ஓமம் செய்யும்மிடத்தில் ஜெபித்தால் 1000
ហLចំg Lលបំ. தேவாலயங்களிலும், க்ஷேத்திரங்களிலும் வைத்து ஜெபித்தால் நூறாயிரம் மடங்கு பலன் ஏற்படும் இஷ்டமந்திர ஜெபத்தைவிட காயத்திரி ஜெபம் சிறந்தது. தன் ஆசை காரணமாக எல்லா ஜெபத்தையும்
கொஞ்சம் கொஞ்சம் செய்வதைவிட ஒரு குறிப்பிட்ட காயத்திரி மகாமந்திரத்தை பலலக்ஷம் செய்வது நற்பலன் தர வழிவகுக்கும்.
தர்ம சாஸ்திரம்

Page 25
வேண்டும். இதனால் அடுத்த தலைமுறையும் இத்தலைமுறையும் பாதுகாக்கப்பட்டு மறுமலர்ச்சியும் பெருமகிழ்ச்சியும் எய்துவார்கள். -
II. காலமும் கோலமும் ஞாலமும்
ஞானமும்
இன்றைய நம் சமுதாயம் தறிகெட்ட நிலையிற் செய்வதறியாது திகைப்பதை, நல்ல சாக்காகப் பயன்படுத்தி வேற்றுமதத்தவர் ஊடுருவுவதையும், அதற்கு நம்மவர் வழித்துணை போவதையும் தாயகத்திலும் புலம் பெயர்ந்த பூமியிலும் காண்கிறோம். மீண்டும் போர்த்துக்கேய, ஒல்லாந்த
காலம் திரும்பிவிட்டதோ! இவ்வித ஊடுருவல்களை
இரு விதமாகக் கூறலாம். புறச்சமய வாதிகளின் கையாட்கள், சைவம் சார்ந்த இயக்க மாறுபாடுகள், வேறுபாடுகள். இதை இன்னொரு விதமாகச் சொன்னால் புறச்சமய மாற்ற வாதிகள், நம்மைத் தடுமாற வைக்கும் இந்து சமய தாபனங்கள் அமைப்புக்கள் இவற்றினாற் தடம் புரளுவது சைவ மதத்தினரே, இவ்வலைக்குள் அகப்படாமல் நம் தாய் மொழியாம் தமிழையும், சயமத்தையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிகத் துவக்க காலத்தினின்று, பகுத்துப் பார்க்கையில் சமய பரிமாணம், அதன் வழி வாழ்வியற் கோட்பாடு, நடைமுறைகள், மொழி ஆர்வம், அமுல், வழிவழிவந்த பண்பாடு, நாகரிகம், கலாசாரம், நம்மோடு செறிந்திருந்த நிலைமாறி, அகலப் போய்விடுமோ என்ற ஏக்கம், துடிப்பு, சுரணை நம்மை உரசிக் கொண்டே இருக்கிறது. இப்படியான காலக்கெடுபிடிகள் எம்மை மாற்றிவிடக் கூடாது. நாம் மாறவும் சாலாது. மன மாற்றமும் மத மாற்றமும் வெறும் கிளிஞ்சல் வெள்ளியே மாயமானின் பின்னே செல்லும் மாரீச நெறியால் ஏற்படும் மாற்றத்துக்கு சமயிகள், சைவர்கள் பலியாகக் கூடாது. ஆதி முதல் இத்தேதிவரையும் இவ்வலைக்கழிவும், அலக்கணும் ஏற்பட்டபோதெல்லாம் இறைவனே மானுடச் சட்டை தாங்கி வழிப்படுத்தினான். அப்பெருமக்களின் சொற்கேட்டு முன்னோர்கள் நடந்தனர். இன்று இளையோர் கேள்விமேற் கேள்வி கேட்டு கேலியோடு எம்மை விசனப்படுத்துகின்றனர். இதற்குப்
 

மான் தோலில் உட்கார்ந்து கொண்டு ஜெபித்தால் ஞானம் விருத்தியாகும் புலித்தோலில் உட்கார்ந்து கொண்டு ஜெபித்தால் மோக்ஷ சித்தியாகும் பெண் யானைத் தோலில் இருந்து ஜெபித்தால் வியாதி நீங்கும். ரத்னக் கம்பளத்தில் இருந்து ஜெபித்தால் கஷ்டம் நீங்கும். தர்ப்பையினாலான ஆசனத்திலிருந்து ஜெபித்தால் மனக் குறைநீங்கும். மரத்தினாலான ஆசனத்தில் இருந்து ஜெபித்தால் தேகத்திற்கு பலன் கொடுக்கும் பலாமர பலகை ஆசனத்திலிருந்து ஜெபித்தால் சுகந்தரும். இந்த ஆசனங்களை உபயோகிப்பவர்கள் சுயநலத்திற்கு ஜெயிப்பதை விடபொதுநலத்திற்கு ஜெபிக்கும்போது பலமடங்கு பலன் கிடைக்கிறது.
தர்ம சாஸ்திரம்
பொருத்தமான விடை பகரச் சமயம், சைவசமயம் தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும் கட்டம் வந்து விட்டது. (சைவம் என்பது சமயப் பேராயத்தையே குறிக்கும்) அன்றேல் இளசுகள் மடைமாறலாம், மடை மாற்றம் செய்ய படலாம். இதற்கு முகம் கொடுக்க வேண்டியது யார் பொறுப்பு? சிந்திக்கட்டும் சிவப்பேராளர்கள் சமய வாதிகள், அமைப்புகள், பின்பற்றுவோர் வந்து சமயக் கோட்பாடுகளைப் பின்னப்படுத்துவதால், திசை, மார்க்கம், செய்யும் வகையறியாது மக்கள் திகைக்கிறார்கள். விழுமியங்கள் இழக்கப்படுகிறது, விழுப்பம் சரிகிறது. சரிவை நேர்ப்படுத்தி நிதானமான தடத்தில், சமுதாயத்தை நடக்க வைக்க வேண்டியது ஒவ்வொரு அமைப்பின் உத்தம சேவையாய் அமைய வேண்டும். இந்நோக்கிற் சைவச் சனங்களின் சிந்தனை தொழிற்படுகிறது. இவ்வியக்கங்களைக் கண்டு ஒதுங்கி விடாமல் ஒருங்கிணைந்த தொழிற்பாடு இன்றைய இன்றியமையாத தேவையாகும்.
IV. விஞ்ஞானமே மெய்ஞ்ஞானம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் சில, பல நிதர்சங்களை நேரிலே ஒருங் கிணைத்துப் பார்த்து, அவைகள் சமுதாயத்தின் முன்வைக்கப்படும்போது தான், தெளிவான கருத் துக்கள் சமுகத்துக்கு வரும். மனச் சபலங்கள்
)

Page 26
அகன்று உறுதியான மனோதர்மம் உருவாகும் போதுதான் தெளிவு பிறக்கும். தான் தானென்ற நிலையிற் புகழும், பெருமிதமும், மதிப்பும் பெறச் சமயம் ஒரு நிலைக்களனல்ல. உலகில் நடைமுறையில் உள்ள நாற்பெருஞ் சமயத்துள் சைவமும் ஒன்று. இதுதான் தொன்மை மேன்மையையும், இறுக்கத்தையும், இறைதத்துவத்தையும் அதோடு வேறுபடா ஆசார அநுஷ்டானங்களையும், உபசார உறுதிகளையும் கட்டிக்காத்தும் பேணும் பெருஞ் சமுதாயமாய் விளங்க வேண்டுமாயின் சமய விழுமியங்கள் சிதையாமற் காக்கும் கருதுகோள்கள் நல்ல அடித்தளமாய் அமைய வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டு பூர்த்தியாகும் காலகட்டத்தில் வாழ்கிறோம்; கணனி, மின்துறையஞ்சல் , வலைப்பின்னற் தொடர்பு யுகம் தாண்டி அடுத்த நூற்றாண்டில் ஏகப்பட்ட மாற்றங்களை விஞ்ஞானம் எதிர் கொள்ளும் வேளையில், சமுதாயம் அதோடு ஒத்திசைக்கும் நெறியில் வளர்ந்து கொண்டும் வாஞ்சைப்பட்டு புதுமையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் உள்ளது. இச்சங்கம வேளையிற் சமயம் தன் ஆக்க பூர்வமான செயற் திட்டங்களை முன்வைக்கவும், சாத னைப்படுத்தவும் தவறக் கூடாது அன்றோ! கால ஒட்டம் நமக்குப் புறம்பான விடயமல்ல - நாமும் சேர்ந்து ஒடித் தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். எல்லாம் அரங்கத்துக்கு வந்து - சமுதாயத்தைச் செம்மைப்படுத்த வேண்டும். நாமோர் மூலையுட் குந்தி இருந்து பார்வையாளராய் அமைதல் மனிதத்துக்குப் பொருந்தாது.
நம் தாய் நாட்டிலும், சமய நோக்குகள் வலுவிழகச் செய்யும்
நகர்வுகள் மேகங்கள்
C L T sò ஜெபம் ரெ.
காட்சியளிக்கின்றன. மக்கள் நிலை தழும்பியபோது, கை  ெக |ா டு க் கு ம் பாவனையில் புகுந்து ம த ம |ா ற் ற ம் செய்கிறார்கள். நாம் கோபுரம் கட்டுவதிலும், தேர் அமைப்பதிலும், இ ட T ம் பீ க
சாஸ்திரத்தையும்
ஒதுகின்றானோ அ
ஆளாகிறான். یکIآزٹیک
தக்ஷணை அனுப்பிவி
செய்ய வேண்டும்.
 

விழாக்களிலும், புது ஆலய அமைப்பிலும், வீடியோ பிடிப்பதிலும், புகழ் சம்பாதிப்பதிலும் எம் கவனத்தைச் செலுத்துகிறோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிற் பலர் சைவத்தை விட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதை நிறுத்த நம் சமயம் என்ன செய்யப் போகிறது என்ற வினா. பலரை உலுப்பிக் கொண்டிருக்கிறது உள்ளங்கை நெல்லிப்பழம் ஆகும்.
V. சமரசமும் சைவமும்
அமைதியும் ஆன்மிகமும் சிலர் சைவம் என்கிறார்கள் சிலர் இந்து என்கிறார்கள், சிலர் சமரசம் என்கிறார்கள், இன்னும் சிலர் எம் மதமும் சம்மதம் என்கிறார்கள். நான்சிவபக்தன், நாம் முருக பக்தர்கள், நாம் துர்க்கதாசர்கள், நாம் ஐயப்பதாசர்கள் என்கிறார்கள். இன்னும் சிலர் விஷ்ணு பக்தர் என்கிறார்கள். நாம் குரு மகாராஜ்ஜின், பாபாவிடிவோட்டி என்பர். எல்லாம் வல்ல இறைவன் அடியவர் நாம் எனச் சொல்பவரும் நிறைய உண்டு. தம்மை அறிமுகம் செய்யாது அடங்கியிருப்போரும் உண்டு. பக்தியை வைத்துப் பெருமிதமோ, புகழோ ஈட்டிப் பயன்? கிறித்தவம், இசுலாம், பெளத்தத்தைச் சைவத்தோடு இணைத்துச் சமரசம் பேசுபவர்கள் சைவ மார்க்கத்திலேதான் இருக்கிறார்கள். வேறு எம்மதமும் இதற்குத் தயாரில்லை. சமரசம் வரவேற்கப்படலாம், உண்மையான சமய ஞானமும், தத்துவ தரிசனமும் கண்டவர், கொண்டவர். இறைவனைச் சமயாதீதப் பழம் பொருளாகக் கண்டனர். சாதி பேதம் கடந்த சமயத்தவர் சித்தர், முத்தர். எனினும் சிவனையே
ப்யும் முறைகளையும், வேதத்தையும் எவனொருவன் குருவுக்கு தெரியாமல்
வன் வேதத்தைத் திருடிய பாவத்திற்கு அவைகளை குரு மூலமாக அறிய து குருவை மானசீகமாக நினைத்து குரு ட்டு அவர் ஆலோசனை பெற்று அதன்படி A.
தர்ம சாஸ்திரம்
24.

Page 27
மெய்ப் பொருளாகக் கண்டவர்கள் நமக்கோர் சமயமும், நமக்கென்றோர் வழிபாடும் கொள்கையும் குறிக்கோளும் உடையவர்கள் சைவசமயிகள். எம்மதத்தாழ்ப்பும் நமக்கில்லை, வேண்டாம். ஆனால் நமக்கோர் கற்பு நெறியுண்டு, அதினின்றும் பிறழக் en LTS).
இவற்றாற் சமயம் மட்டும் பெலவீனப்பட வில்லை. சைவசமயத்தவரின் வைராக்கியம் பெலவீனப்பட்டு விட்டது. அவ்வாறாயின் நமக் கென்றோர் மார்க்கம், மதம், GLOLIlh தேவையில்லையோ என வினவுகிறது சைவப் பெருங்குடி. எனவே நமக்கென்றோர் சமய உறுதிப்பாடு நிட்சயம் இருக்க வேண்டும். இந்த மன
அழுத்த வைராக்கிய மில்லாதோர் சமயிகளல்ல
பிறமத வெறுப்பு நமக்கு வேண்டாம் நம்மதப் பிடிப்பு நமக்கு வேண்டும். பிடிப்பற்ற போக்கு நடிப்பாயமையும் நடிப்பது சமயம், நடப்பது சமயநெறி, நடப்பிப்பது இறைநெறி. நம் நெறியே சைவம். எம்மைப் பிறர் சந்தேகிக்கக் கூடாது. நாமும் சந்தேகப்படலாகாது. எனவே நாம் சைவர்களாகவே இருப்போம். வலிந்து செய்யும் செயற்பாடுகளால் நாம் குழப்பக் கூடாது. வழி மாறவும் கூடாது. தமிழிலே அர்ச்சனை இயக்கம் தொழிற்படும் இக்காலக் கட்டத்தில் நடராஜப் பெருமானைப் பற்றி அர்ச்சனை மாலை பாடும் பாங்கு கவனத்திற்குரியது.
எம் மதத்திற்கும் இசைவாய் போற்றி சைவம் வைணவம் சாக்தம் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய எம் மதத்மதிற்கும் சம்மதமான சாட்சியே போற்றி!
அரன்மால் அயன் குகன் அல்லா பிதாவெனப் பலமதம் போற்றும் பரமா போற்றி அர்ச்சனை மாலை பக்கம் 14 (ஆத்மஜோதி @@@fuff@ )
சமயம் சாரா அமைப்பிற் பாரதம் இயங்குகிறது. சமயம் சார்ந்த அரசு தாழ்ப்புணர்வை வளர்க்காமற் சமய சுதந்திரம் பேணல் முக்கியம் சமய சுதந்திரம், பல்லினக் கலாச்சாரம் நிறைந்த நாடுகளிற் கனடா முன்னணியில் நிற்கிறது. தன்னை விற்றுத் தன்னெழில் குன்ற நாம் காரிய வாதிகளாய் அமைதல் கூடாது பெற்ற அன்னையைப் புறக்கணித்து பிறர்தாயை நாம் எப்படி ஏற்றுக் கொள்ளலாம். நடைமுறையிலேயே இல்லை. எனவே பெற்ற மொழியும்
 

பிறந்த சமயமும் நம் உயிர் நாடிகள் உயிர் விழுமியங்கள் இதை நோண்டி, கிள்ளியெறியும் பெற்றியில் சைவ சமயிகள் இயங்கின் நாமும், நம் சமயமும், பண்பு பக்குவமும் என்னாவது? எண்ணிப்பார்க்க வேண்டியவர்கள் இன்றைய மகாசனங்கள் அன்றோ !
சமகால நோக்கும் சமயப் போக்கும்
இன்னோர் பாங்கிற் சிந்திக்கும் போது இன்றைய இளந்தலைமுறையினர்க்குச் சமயம் சார்ந்த தெளிவான விளக்கங்கள் போதாமையால் நிறைந்த புரிதுணர்வுகளை அவர்களிடம் எதிர் பார்க்கமுடியவில்லை. ஏன் முதியவர்கள் கூட இதை அறிவதில் ஆர்வம் காட்டுவது குறைகிறது. இதற்கான காரணிகள் ஆராயப்பட வேண்டும். உதாரணமாய்ப் பார்க்கையில் இந்து சமயம், சைவ சமயம் என்னும் பிரயோகங்களின் தத்துவம் என்ன என்பது பற்றிய நீள்நோக்கு தெளிவுபடவேண்டும். வேதாந்தம், சித்தாந்தம் என்னும் கொள்கை கோட்பாடுபாடுகள் துலக்கமாய் வெளிக்கொண்டுவராத பட்சத்திற் சாதாரண மக்கள் சிக்கற்படுகிறார்கள். இத்துறைகளிலே தோய்ந்தவர்கள் முன்வந்து, துலாம்பரமான, தெளிவான, அச் சொட்டான விளக்கங்ககை கொடுத்துச் சமய ஆளுமைகளை மக்கள் உணரக் கூடிய விதத்தில் விளக்குதல் முன்னுரிமைக்குரியது எனலாம் இன்னும் மேலே வேதாந்த சித்தாந்த சமரசம் என்பதன் தாற்பரியம், உள்ளீடு, கருத்துப் பரிமாற்றம் மயக்கத்தைத் தீர்க்கும் எனினும் மக்களும் இவற்றை அறிவதில் ஆர்வம் கொள்ளலும் முக்கியத்து வமானதாகும். சிவனையே முழுமுதற் பொருளாக வழிபடுவதில் ஆழங்காணபட்டது. சைவம். அதேபோது பலதெய்வவழிபாட்டமைப்பும், சிறுதெய்வ வழிபாடும் காணப்படுகிறது. சிவனிடம் அதிஷ்டான நிலைபோன்ற விளக்கம் மக்களை எட்டாமையால் - அவர்கள் பலதெய்வ வணக்கமே நம்சமயம் என நினைக்கிறார்கள். அறிஞர்களும், சமயவான்களும், ஆலயக் குருவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க முன் வராத பட்சத்தில் மக்கள் ஒரு திரையால் மூடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் கருதவேண்டும். ஒன்றேகுலம், ஒருவனேதேவன். ஒன்றென்றிரு

Page 28
தெய்வமுண்டென்றிரு என்னும் தலையாய தத்துவம் மக்கள் மனதிற் பதிக்கப்படலும் முக்கியமே இன்னும் காலந்தோறும் நம்மத்தியில் வாழ்ந்த வாழ்கின்ற மகான்களை வணங்குவதும். அவர்கள் சொல்லும் கடவுட் கொள்கையை வீசிவிட்டு, அவர்களை தெய்வமாக்கி, வழிபடும் வாழ்வியலும் இன்றைய நடைமுறைகளாயும் அமைந்துள்ளது வெறும் கவர்ச்சியாலும், சொந்தத் தேவைப் பூர்த்திகளை மனத்திற் கொண்டு செயற்பாட்டின் மேலாதிக்கம் கடவுள் நினைவையே கெல்லி எறிகிறது. இதனால் இளம்பரம்பரையின் நிலை? இவ்வாறான பலகுழப்பக் கூறுகள் மக்கள் மத்தியில் இருப்பதால். எந்த மார்க்கமும் தோன்றிலதென் GEFtij G855 Th. ஏன்பிறந்தோம் என்ற எண்ணம் எமை ஊசலாட்டுகிறது. இது போன்ற பல அம்சங்கள்
சமகாலத் தாக்கங்கள் எனலாம்.
VI. சிந்திப்பும் செயற்பாடும்
வந்திப்பும் வழிபாடும் நிகழ்காலச் சமயக் கோலங்களையும், செயன்முறைகளையும், உளநாட்டங்களையும் நுணுகிப்பார்க்ககின்ற ஒரு மன உளைச்சல் தானே ஏற்படும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற நிலையும், திடீரெனத் தோன்றி மறையும் கோட்பாடுகளும் நிலையானவையா? செப்பனிட்ட, பண்பான பாதையை விட்டு விலகுவது ஒரு வானவில் கவர்ச்சியா? தோத்திரங்களாய் அமைந்த திருமறைகள், முறைகள் பேணப்படாமல், தெருப்பாடல்கள் ஆலயங்களிற் புகுத்தப்பட்டுள்ளமை, கூட்டுவழிபாடென்ற நோக்கில் எதுவும் பாடலாமென்ற கருத்து எழுந்தமையும் சைவசமய நாயன்மார்கள் பாடிய அருள் வாக்குக்கு எதிரான - அதைப் புரியாத நிலைப்பாடென்றே கொள்ளலாம். தனிமனித மேம்பாட்டை மதித்து அவர்களையே தெய்வம் ஆக்குவதில் அக்கறை காட்டுவதும், அவர்களால் வெளியிடப்படும் பிரவசனங்களைப் பொழுது போக்காகக் கொள்வதும், தெய்வீகத்தை
பிரமாதி கார்த்திகை

விரல்களால் எண்ணிக் கொண்டு ஜெபித்தால் 1 பங்கு பலன் விரல்களின் ரேகைவரியால் ஜெபித்தால் 10 பங்கு பலன் சங்கு மணிகளினால் ஜெபித்தால் 1000 பங்கு ມລກ முத்துக்களை வைத்து
ஜெபித்தால் பத்தாயிரம் பங்கு
j Gv Gör. துளசிமாலையிானல் ஜெபித்தால் லட்சம் பங்கு பலன். ருத்ராக்ஷ மணியினால் ஜெபித்தால் அதன் பலனுக்கு அளவேயில்லை.
தர்ம சாஸ்திரம்
மதியாதிருக்கும் போக்கும் இடைக்காலத்தின் சமயநோக்க இயக்கமாய் அமைவதும் ஒரு கலியுகக் காட்சி போலும் இதே போலக் கடல் கடந்த மண்ணில் இயங்கும் சமயச் சங்கங்கள் ஒன்றிணைந்த செயற்திட்டத்தை அமுலாக்கி ஒருமைப்படுவதும் குறைவே போட்டி போட்டு ஆலயம் எழுவதும், முகாமைத்தும் மூலம் கீர்த்தியயை விழைவதும் வெறும் வணிகநோக்காய் அமையக் கூடாது. துண்டுதுண்டாய்ச் சமயக்கல்வி போதிக்கும் அமைப்புக்கள் ஒன்றிணைந்த பாடத்திட்டத்தை மேற்கொண்டாற்றான் சமய அறிவும் உரிய இலக்கை எய்தும். ஈழத்திலும் தென்தமிழ்ப் பாரதத்திலும் ஆதிசீர்பரவும், திருநெறியதமிழும், சைவ சித்தாந்த மரபும் வழுவாது இருப்பது போன்று, புலம் பெயர்ந்த தேயங்களிலும் சைவம் சிறக்க வேண்டும். ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், சீலம், வழுக்கிலாத்தனம், தானங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத்துறவு அடக்கம், அறிவொடு, அர்ச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால், இரங்குவான் பணி அறங்கள்.
சிவம் பரவ வேண்டும் தமிழ்நிலைக்க வேண்டும்

Page 29
திருவாசகச் சிந்தனை
ថែruិ g
- பண்டிதர் சி. கோயில் - தில்லைச் சிற்றம்பலம். இப்பதிகமும் தில்லையில் அருளப்பட்டது என்ப. பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டதேன் பகுதி. அது தெய்வீகத்தை உணர்த்தும் திரு என்னும் அடையுடன் சேர்ந்து திருப்பதிகம் என்று நின்றது. அந்த அமைப்புடன் கோயில் என்னும் தில்லையைக் குறியீடு செய்யும் சொல்லுஞ் சேர்ந்து கோயில் திருப்பதிகம் என்றாகியது. திருப் பெருந்துறையிற் குருவடிவாகி வந்த பொன்னம்பலவனைத் தில்லையில் நின்று நினைந்து பாடிய பாடற்பகுதி இது என்று கொள்ளலாம். e "தில்லையிற் பாடப்பட்டமையாற் கோயில் திருப்பதிகம் என்றாகியது' 6T66Turf திருக்குறள்வேள் ஜி. வரதராஜன் அவர்கள். 9 “கோயில் திருப்பதிகம் என்பது அடிகள் திருபெருந்துறையானை அழைத்து முறையிடும் பத்துத் திருப்பாடல்களைக் கொண்ட பகுதி என்க. மூத்த கோயில் என்பதுதில்லைப்பதியையும் கோயில் என்பது திருப்பெருந்துறையையும் குறித்தன என்க. கோயில் மூத்த திருப்பதிகத்தானே பொன்னம்பலத்தானை வேண்டி முறையிட்ட அடிகள் அவன் வந்தருளாமையின், தில்லைக்கு வருகவென ஆணையிட்ட பெருந்துறையானை அழைத்து விண்ணபித்தருளுவாராயினர் என்க. இப்பதிகத்திற் பெருந்துறையே பன்னிப் பன்னிப் பேசப்படுதலின் கோயில் என்பது திருப் பெருந்துறையையே குறிக்கும் என்பது தெளிவு", என்று பண்டிதமணி க.சு. நவநீத கிருஷ்ண பாரதியார் அவர்கள் குறிப்பிடுவர். e “கோயில் எனப்படும் தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கூத்தப் பெருமானைத் திருப் பெருந்துறையில் தமக்கு அருள் செய்த ஞானாசிரியத் திருவுருவாகக் கண்ட அடிகள் தில்லைச் திருச் சிற்றம்பலப் பெரும்ானைத் திருப்பெருந்துறையுறை சிவனே எனவே அழைத்து முன்னிலைப்படுத்தி இப்பதிகத்தினை அருளிச் செய்வாராயினர்' என்று சங்க நூற் செல்வர் பண்டிதமணி சு. அருளம்பலவனார் எழுதியுள்ளார். 6 "மூத்த திருப்பதிகம் என்பது சிறந்த திருப்பதிகம் சிறப்பு என்பது பொருள் உண்மை என்றாகும்”
பிரமாதி கார்த்திகை
G

ருப்பதிகம்
அப்புத்துரை -
இப்பதிகத்திலுள்ள
என்பது சித்தாந்த பண்டிதர் ப. இராமநாதபிள்ளை குறியீடு
மூத்த திருப்பதிகம் என்றமையால் முதலில் அருளப்பட்டது” என்பது தருமை ஆதீனப்புலவர் சி. அருணைவடிவேல் குறிப்பு. "மூத்த திருப்பதிகம் என்பதனுள் மூப்பு என்பது உயர்வைக் குறிக்கும்” என்பர் மாதவச் சிவஞான யோகிகள். சிவஞானசித்தியார் 2ஆம் சூத்திர உரை. அந்தாதித் தொடையானியன்ற இப்பதிகம் எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பத்தினைக் கொண்டது. இப்பதிகத்தின் உள்ளார்ந்த பொருள் அனுபோக இலக்கணம் என்பதாகத் திருவாசகத் திருவுள்ளக்கிடை குறிப்பிடும். சிவபெருமானை அனுபவ வாயிலாக அறிவதொரு அறிகுறி என்பது அது "அடிகளது அனுபவம் இனிது விளங்கி நிற்றலின் இதற்கு அனுபோக இலக்கணம் எனக் குறிப்புரைத்தனர் முன்னோர்’ என்பர் தருமை ஆதீனப் புலவர் அருணை வடிவேல் முதலியார் அவர்கள்.
திருப்பாடல்கள்
குறிப்பிடுவன:
1.
தெளிந்த தேன்போன்ற தேன் போன்ற இனியனே, சிவபெருமானே, திருப்பெருந்துறையில் உறைபவனே, ஈறில்லாத பதவிகள் எல்லாவற்றையுங் கடந்த ஆனந்தமானவனே, என்னைப் பகைத்து என் அறிவை மயங்கச் செய்யும் மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் புலன்களின் வாயில்களை அடைத்து அமுதாமாய்ச் சுரந்து நின்று என்னுள்ளத்துத் தோன்றுகின்ற உயர்வாகிய ஒளியே, உன்னை உள்ளவாறு காணும்படியாக வந்தருள்வாயாக.
எல்லாவற்றுக்கும் முன்னுமாய்ப், பின்னுமாய், முழுவதுமாய்ப் பரந்துள்ளவனும் இயல்பாகவே மலநீக்கத்திற்கு உரியவனுமானவன், எல்லையற்ற முதல்வனே, அழகிய திருப் பெருந்துறையில் உறைபவனே, சிவபெருமானே, சிறப்புப் பொருந்திய சிவபுரத்து மன்னனே, அன்பின் மிகுதி காரணமாக அடியனாகிய எனது உயிரும் உடம்பும் இன்பானுவங்களெனக் கசிந்துருக,

Page 30
எனக்குப் பெருத்தமில்லாத நல்லருளை நீ கொடுத்தாய். யானுனக்குக் செய்யக்கூடிய பதிலுதவி எதுவுமில்லாதவனாகி இருக்கின்றேன். அன்பர்க்கு அரசனே, அடியனாகிய என்னுடைய தந்தையே, உயிருமுடம்பும் மயிர்க்கால்கள் தோறும் நெகிழ்ச்சியுண்டாகும்படி என் உள்ளத்தே புகுந்து உருகச் செய்து ஆஞ்ஞானத்தைப் போக்கிய மெய்யொளியே, திரையின்றி நிலையாவுள்ள
அமுதமாகிய தெளிந்த கடலே, திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே,
வாக்கும் மனமுங் கடந்து நின்று திருவருளால்
உணரும்படியான உணர்வுப் பொருளானவனே, யானுன்னைப் புனைந்து கூறும் முறைமையை எனக்கு அறிவுறுத்துவாயாக,
ஞானியராகிய Glլյrflա முனிவர்களும், தேவர்களும், ஏனைய பெரியவர்களும் ஆகிய எல்லோருடைய அறிவினாலும் அறிதற்கரிய மேலானவனே, ஒப்பில்லாதவனே, எல்லா உயிர்கட்கும் உயிரானவனே, என் பிறவியை நீக்கவல்ல அமுதம் போன்றவனே, உயிரை இறுக்கிப்பிணித்துள்ள ஆணவ இருளில் நீங்கித் தெளிவாய்க் காணப்பட்ட தூய ஒளி மயமானவனே, திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே, முக்குண வசமாகாத பேரானந்தமே, உன்னை அடைந்து விட்டேன்; எனக்கு இனி என்ன குறையிருக்க முடியும் எந்தவொரு வகையாகவும் குறைவென்பதில்லாத பூரணமானவனே, மாசற்ற அருமருந்தே, இறுவாயில்லாத செழுமை பொருந்திய சுடர்க்குன்றே என்மனத்தினுள்ளே வேதமாகவும், வேதப் பொருளாகவும் சுடரும் நிலை பெற்றவனே, அணையில்லாத வெள்ளம் போல என் உள்ளத்தின் கண் பாய்கின்ற திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, தலைவனே, நீ என் உடலை இடமாகக் கொண்டு விட்டாய்; இனி யான் உன்னிடம் எதையும் வேண்ட வேண்டியதில்லையே! உன் திருவருளை வேண்டி எனதுள்ளம் உருகும் போது அங்கேதோன்றுகின்றஒளியுருவே தேவர்கள் தலையில் விளக்கம் பெறும் தாமரைமலர் போன்ற செவ்விய பாதார விந்தங்களை உடையவனே, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பெருமானே, வரிசையாயுள்ள வெளி நீர், நிலம், தீ, காற்று என்பனவாயும், அவற்றின் வேறாகியும்
பிரமாதி கார்த்திகை
 

帕。
ஆங்கே அருளாலன்றிக் காணப்படாத வடிவை உடையவனாயும் இருப்பவனே, உன்னைக் கண்ணாரக் கண்டு களித்தனன். இன்று எனக்குத் திருவருளைத் தந்து, அறியாமையை அகற்றி உள்ளத்துள்ளே எழுகின்ற கதிரவனைப் போன்று தோற்றி நின்ற உனது நிலையைச் சுட்டி அறியாது உணர்ந்து, நீயல்லாது வேறொன்றுமில்லை என்னும்படி எல்லாவற் றுளும் கலந்து நுண்ணிதாகக் குறுகிக் குறுகி ஒரே தன்மையாம் வியாபகமாகித் திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, காணப்படும் பெண் எதுவும் நீயல்லை. நீயில்லாது எந்தவொரு பொருளும் இருக்கமுடியாது. உன்னை அறியவல்லவர் யார்? பூமி, மேலுள்ள பதவியாகிய புவனங்கள் அனைத்துமாகி உலகப் பொருள்கள் அனைத்திலுமாகி வந்ததோர் ஒப்பற்ற பேரறிவின் விரிவே, நீரிலுள்ள தீ போன்றவனே, மனத்தால் நினைத்தற்கரிய குற்றமற்றவனே, உன்னுடைய திருவருள் வென்றதுசெம்மை பொருந்தியமனத்துத் தோன்றுகின்ற இனியனே திருப்பெருந்துறையுறை சிவனே எனக்குப்பேரின்பத்தைச் செய்கின்ற சோதி வடிவானவனே எனக்கு நீயல்லாது இங்கு உறவினர் யார்? அயலுள்ளோர் யார்? ஒளி உருவானவனே, அருவமானவனே, சொற்களினால் விளக்கம் செய்ய முடியாதவனே, எந்தப் பொருட்கும் தொடக்கம், இடை, முடிபு என்றானவனே, பாசப்பிணிப்பை இல்லாமற் செய்கின்ற பேரின்பக் கடல் போன்றவனே, குற்றமற்ற நன்மையைச் செய்கின்ற திருவருள் மலையே, திருப்பெருந்துறையுறை சிவ பெருமானே, நீ குருவாகி வந்து உன் திருவடிகள் இரண்டையும் திருப் பெருந்துறையில் அருளிய பின் உன் போக்கு என்ன வகையினது என்று விளங்கவில்லையே! அதை விளங்க வைப்பாயாக. என் உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கின்ற தலைவனே, திருப் பெருந் துறையுறை சிவனே, உன்னை எனக்குக் கொடுத்து என்னைப் பெற்றுக் கொண்டாய். சங்கரா, எங்கள் இருவரில் யார் திறமைசாலி? முடிபேயில்லாத பேரின்பம் எனக்குக் கிடைத்தது. நீ என்னிடம் என்னத்தைப் பெற்றுக் கொண்டாய்? எந்தையே, இறைவா, என்னுடலைக் கோயிலாகக் கொண்டாய். இந்த உனது அருட்செயலுக்குயான் செய்யக்கூடிய கைமாறுதான் என்ன, எதுவுமில்லையே!
4557-D

Page 31
சைவ மாதிரி வி
கொடித்தம்பம் இல்லாத கோயில்களில் வரு அழைக்கப்படும்? 2. மன்னாருக்குச் சமீபத்தில் உள்ள மாதோட்ட ஒன்று உள்ளது அங்கு மருந்து ஒன்று மறைந் கூறியவர் யார்? 3. அளகேஸ்வரம் என வருணிக்கப்படும் சிவத 4. சுவாமி முத்தியானந்தா என்னும் தீட்சா நாம 5. சாதகன் தன்னை மகனாகவும் இறைவனை
மார்க்கம் யாது? 6. மூலப் பிரகிருதி என அழைக்கப்படுவது எது 7. உயிரின் கண் இறைவனது திருவருட் சக்திபட
எப்படி அழைப்பர்? 8. தாண்டக வேந்தர் என்று சிறப்பித்துக் கூறப்பு 9. மெய்கண்டாருக்கு ஞான குருவாய் உபதேச 10. சைவ சித்தாந்தக் கொள்கைகளை தெளிவா. 11. நந்தனாருக்காக நந்தி விலகிய திருத்தலம் எ; 12. நரேந்திரன் என்னும் இளமைத் திருநாமத்:ை 13. பூமியிலே அழுந்திய தேரை அசைக்க பாடட் 14. திருமந்திரம் எத்தனையாம் திருமுறை 15. இறைவனின் திருவாயால் அம்மையே என அ 16. சாத்திர நூல்களின் நடு நாயகமாக விளங்கும் 17. திருவிசைப்பா பாடியோர் எத்தனை பேர்? 18. திருத் தாண்டகம் பாடியவர் யார்? 19. சகல கலாவல்லி மாலை பாடியவர் யார்? 20. இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நா பொருட்டேயாம் என்று கூறியவர் யார்?
சைவந்தி -
தனிப்பிரதி வருட
இலங்கையில் - ரூபா 25.00 இலங்
இந்தியாவில் - ரூபா 25.00 இந்தி
(இந்திய ரூபா)
ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் ப வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரதுப் சந்தா அனுப்பப்பட வேண்டிய முகவர்
C. NAV
42, Jana ColOmb
鬍。 Sri Lan
(
 
 

நெறி
GÖTTI T59595 TGIT நமர் டாந்தம் நடைபெறும் திருவிழா என்ன பெயரால்
த்திலே திருக்கேதீஸ்வரம் என்னும் தேன் பொந்து திருக்கிறது. அதனைச் சென்றடையுங்கள்” என்று
ܣ݂ ܨ லம் எது? ந்தை உடையவர் யார்?
ாத் தந்தையாகவும் பாவித்து அன்பு செலுத்தும்
2 டிந்து உயிரைத் தன்வயப்படுத்தி நிற்கும் நிலையை
படும் நாயனார் யார்?
ம் செய்தவர் யார்? கவும் விளக்கமாகவும் கூறும் நூல் எது? து?
J, go Go Lu6Ji ur?
பட்ட பதிகம் எது?
அழைக்கப்பட்டவர் யார்?
நூல் எது?
ம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும்
விடைகள் பின்புற உள் அட்டையில்
SSSSLSSSSS SSSSS SS SS
சந்தா விபரம்
டச்சந்தா
கையில் - ரூபா 250.00 யாவில் - ரூபா 250.00 (இந்திய ரூபா)
வுண் 10 அல்லது US $ 15. சைவநீதியின் பங்களிப்புப் பெரிதும் வேண்டப்படும்.
介:
TANEETHAKUMAR,
ki Lane,
Օ - 04,
a.
2)

Page 32
சைவசமய அறி போட்டி இல. 2
10ம்திருமுறை எது? அதை அருளியவர் யார்? இலங்கையில் இராவணன் வெட்டு எங்கேயு அஷ்டமங்கலப் பொருட்களின் பெயர்களை திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எத்த6ை சிவனுக்குகந்த அஷ்ட புஷ்ப்பங்கள் விை? நட்சத்திரங்கள் எத்தனை? ஆறுமுகநாவலர் அவர்கள் முதல் முதலாக யா ஆண்டில் நிறுவினார்? மாணிக்க வாசக சுவாமிகளின் குருபூசைத்தில் நாலாயிரம் தில்லிய பிரபந்தம் பாடிய ஆழ்வா 10. இந்தியாவில் மிகவும் சிறப்பாக "கார்த்திதை
போட்டியிற் பங்கு கெ எவரும் பங்கு கொள்ளலாம். சைவநீதி இதழில் வெளியாகியுள்ள கூப்பனு ஒருவர் ஒரு விடைத்தாள் மட்டுமே அனுப் நிறைவு செய்யப்பட்ட விடைத்தாள்கள், 1 கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும். விடைகள் அனுப்ப வேண்டிய முகவரி :
5. வெற்றி பெறும் மூவர் பரிசில் பெறுவர்.
போட்டி அமைப்பாளர் குழு முடியே இறுதி முதற்பரிசு ரூபா 100 இரண்டாம் பரிசு ரூபா 50 மூன்றாம் பரிசு சைவநிதி ஒன்று
r
ifs) L
GDEFG
சமய அறிவுப் ே
பெயர் : .
முகவரி .
 

வுெப் போட்டி
முடிவுத் திகதி 30.12.9
ள்ளது?
த் தருக? னயாவது வயதில் முத்தியடைந்தார்?
ாழ்ப்பாணத்தில் நிறுவிய பாடசாலை யாது? எந்த
னம் எது? ார்களில் ஐவரின் பெயர்களைத் தருக? தீபம்” நடைபெறும் திருத்தலம் யாது?
ாள்வோர் கவனத்திற்கு:
னுடன் விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும். U GJITip. 999.12.30 ஆந் திகதிக்கு முன்பாகக் கிடைக்கக்
MR. K. SWAMINATHAN
227/19, Mahavidyalaya Mawatha, Colombo - 12.
தியானது.
ஆசிரியர் =كت
outh பாரீதி
போட்டி இல 2
கையெப்பம் طر

Page 33
(சைவநிதிக்கு SO
* சைவநீதிக்குக் கட்டுரைகள்,
ஆக்கங்கள் தரக் கூடியவர்: மாணவர்களும் ஆக்கங்கள் தரல
* சைவநீதி பற்றிய உங்கள் அபிப் உங்கள் அபிப்பிராயங்களைப் பிரச வெளியிடுவதற்குரிய கருத்துக்கீை
* உங்கள் ஆலய விழாக்களை முன் விரும்புவோர் முன் கூட்டியே எப்
* சந்தாதாரருக்கு இதழ் கி போன்றவற்றை எமக்குத் தெரிய
1 அலங்காரத்திருவிழா
முன்னேஸ்வரம்
சற்புத்திர மார்க்கம்
சத்திநிபாதம்
பரஞ்சோதிமுனிவர்
11. திருப்புன் கூர்
13. திருப்பல்லாண்டு
15. காரைக்காலம்மையார்
17. ஒன்பது
19. குமரகுருபரர்
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதைகள் மற்றும் பொருத்தமான களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
| TLD.
பிராயங்களையும் எதிர்பார்க்கின்றோம். ரிப்பததுடன் மேலும் சிறப்பான முறையில் |ளயும் நடைமுறைப்படுத்துவோம்.
ானிட்டுச் சைவநீதி சிறப்புமலர் வெளியிட
Dமுடன் தொடர்பு கொள்ளவும்.
டைக்காதுவிடின்/முகவரி
LSL SLS S SS SS SS SSSSS SSS SSSS SSS SSS SS SS SSSSSSSSSSSSS டை
2. ஆறுமுகநாவலர்
4. கடையிற்சுவாமி
6. LOIT 65)LLI
8. திருநாவுக்கரசர்
10. திருமந்திரம்
12. சுவாமி விவேகானந்தர்
14. 10
16. சிவஞான போதம்
18. திருநாவுக்கரசர்
20. ஆறுமுகநாவலர்
SSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

Page 34
■巴毒」 ଦି! -
Θσυς), σ
 

றுவனத்தினரால் திே புளூமெண்டோல் விதி கொழும்பு 3 匾 g99 ß 氬 GamáLLLLg