கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2002.04-05

Page 1
ത്ഖ്
சித்ததிரம்ானு = சித்திரை
 

SAW ANNEET HY
APRIL - MAY 2002
தி重 ரூபா 40/=

Page 2
With Be
fra
RABEENA FOI
EXPORTERS OF SRI
RABEENA
MAMPC
90, Reclam Colombo-1
T'Phone: 3366
T'Fox: 94-1 E-mail: rabee
rabee

it Wishes
»/ገገ.‛
oD (PWT) LTD
LANKAN FOOD ITEM
TRADERs
RTERS
lation Road, 1, Sri Lanka.
)2-3
-332997, 57588
naG)st.lk ndG)itmin.com

Page 3
திருச்சிற்
கால்வண்டு (LJD
(35 LQU I 6J60ŐTL
கூர்மையர்க் க
போலெம கத்து
திருச்சிற்
 

محققین * :్వడ్గా
SOMS
3றம்பலம்
சிய கொன்றையன் முதல்வனார் ச்சம யப்பொருள்
நுறை யாதியே.
றம்பலம்

Page 4
பொருள
1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவா 2. அருள் வாழ்த்துரை . 3. வாழ்த்துச் செய்தி . 4. மதிப்புரை . 5. சைவசமய சஞ்சிகைகள், பத்திரிகைகள் 6. ஆறாவது ஆண்டில். . 7. சோமாஸ்கந்தர் .. 8. கற்புறு சிந்தை . 9. சைவரது சமுதாய வாழ்க்கை . 10. மண்ணுலகும் விண்ணுலகும் . 11. சிவப்பிரகாசம் . 12. ஆலய வழிபாடும் ஆத்ம சாதனமும் . 13. சைவநீதி சஞ்சிகை நடத்திய சைவ சம 14. சமூகசேவைப் பணியிற் சைவ ஆலயங்க 15. பழமொழி விளக்கம் . 16. பண்ணிசையும் இராகமும் . 17. சைவ சமயத்தில் அன்றாடம் கடைப்பிடி 18. பேசப் பெரிதும் இனியாய் நீயே! . 19. அருள் . 20. அகத்தியர் . 21. சைவ சமய அறிவுப்போட்டியில் பரிசு ெ 22. நினைவிற் கொள்வதற்கு . சந்தா நேயர்
முகவரி மாற்றம் இருப்பின் எமக்கு அ * இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்காவிடின்
இதழ்களை அனுப்பிவைப்போம்.
சைவநிதி 1
பெறுமத தனிப்பிரதி ரூபா 25.00 ஆண்டொன்றி
ஆண்டொன்றிற்கு ஸ்ரேலிங் சைவநீதியின் வளர்ச்சியில் எங்கள் பங்களிப்பு என சந்தா அனுப்பவேண்
C. Najvaneetha kummar 42, Janaki Lane, Colombo-04, Sri Lanka. T'Phone No. 595221
சைவநிதிஇதழில் வெளிவரும் கட்டு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பா

அறியத்தரவும். எம்முடன் தொடர்புகொள்ளவும். கிடைக்காத
Dாத இதழ் தி விபரம் ற்கு ரூபா 250.00 ஏனைய நாடுகளில் பவுண் 10 அல்லது US$ 15 ன என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக. டிய முகவரி:
K. Ratnasabapathy 51, Thulasingam Street, Pudupet, Madras - 600 002, South India. T'Phone No: 85299.84
ரைகளிலுள்ள கருத்துக்களுக்குக் ளிகளாவர். -இதழ் நிர்வாகிகள்

Page 5
திருவூானசம்பந்தமூர்
6:Ֆ6)III
முதலாந் திருமுறை - தி பண் ~ குறி:
திருச்சிற்
நன்றுடையானைத் தீயதிலானை ந றொன்றுடையானை யுமையொருபா சென்றடையாத திருவுடையானைச்
குன்றுடையானைக் கூறளன்னுள்ள
கைம்மகவேந்திக் கடுவனொடுடிக் செம்முகமந்தி கருவரையேறுஞ் சிர வெம்முகவேழத் திருரிபோர்த்த விக
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல்
மந்தம்முழவம் மழலைததும்ப வை செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந் சந்தம்மலர்கள் சடைமேலுடையார்
எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்ை
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுளு கறைமல்குகண்டன் கனலெரியாடு
பிறைமல்குசென்னி யுடையவனெங்
கொலைவரையாத கொள்கையர்த சிலைவரையாகச் செற்றனரேனுஞ் தலைவரைநாளுந் தலைவரல்லா6
நிலவரைநீல முண்டதும்வெள்ளை
 

ភូមិហិnuff
рibШаоlb
ரைவெள்ளே
க முடையானைச்
சிராப்பள்ளிக்
ங் குளிரும்மே. 1.
கழைபாய்வான்
கிர்தாநீ
பழியன்றே. 2
ரநிழல் த சிராப்பள்ளிச்
விடையூரும்
6WD(3u I. 8
திடைவைகிச் சிராப்பள்ளிக் ங் கடவுள்ளெம்
கள் பெருமானே. 4
ங்கள் மதில்முன்றும் சிராப்பள்ளித் மை யுரைப்பீர்காள்
JÉpLDITGLD.

Page 6
சித்திரபானு சித்திரை
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கை
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிபே
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்ட
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை
வேயுயர்சாரற் கருவிரலூகம் விளை
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய ெ
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றா
மலைமல்குதோளன் வலிகெடவூன் தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் 1
சொலவலவேதஞ் சொலவலகிதஞ்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர்
அரப்பளியானு மலருறைவானு மறிய
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் க
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர்
இரப்புள்ளிரும்மை யேதிலர்கண்டார்
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி ஊணாப்பகலுண் டோதுவோர்க ளு
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் 6
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத்
கானல்சங்கேறுங் கழுமலவுரிற் இடு ஞானசம்பந்தன் நலமிகுபாட லிவை
வானசம்பந்தத் தவரொடுமன்னி வ
திருச்சிற்
 
 

4
த் தண்போது
bய செல்வனார்
ர் தலையோட்டில்
யறிவாரே. 6
யாடும்
சல்வனார்
பெருமானார்
காதே. 7
றி மலரோன்றன்
பழியோரார்
சொல்லுங்கால்
செய்கையே. 8
ITGODds
5ல்சூழ்ந்த
மனைதோறும்
லிகழாரே. 9
நாட்காலை ரைக்குஞ்சொல்
பெருமானார்
சேர்மினே. 10
ந் திரைசூழ்ந்த
புணியன்
வல்லார்
ாழ்வாரே. 11.
நம்பலம்

Page 7
áfa ULI திருச்சிற் திருக்கயிலாய பரம்பரைத் திரு ஆவடுதுறை ஆதீனம் 23-ஆவது குரு மகாசன்னிதானம் சீர்-வளர்-சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள்
நமச்சிவாய வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ் கோகழி ஆண்ட குரு
அடுTெ )ெ
திரு செ. நவநீத குமாரை நிர்வாக வெளிவந்து கொண்டிருக்கும் சைவ நீதி என் படிக்கும் வாய்ப்பினைச் சில திங்களாகப் வெளியிடப்படும் இத் திங்கள் இதழில் வ எல்லாரும் படித்தறியக் கூடியனவாய் உள்ள
தேவாரத் திருப்பதிகங்களை முழு திங்களுக்கு ஒருமுறை திருப்பதிகம் ஒ6 இவ்விதழின் தொடக்கப் பகுதி அளித்து திருமுறைகளில் விளக்கவுரைகளும் ஆய்வு வரும் கட்டுரைகளும் படிப்போர்க்குத் திருரு பாங்கினை உடையனவாக அமைந்துள்ளன.
நூலறிவோடு சைவ நெறி ஒழுக்க துணையாயிருப்பன விழாக்கள், விரதங்கள் திருக்கோயில், திருமேனிகள், சமயச் சின்ன கட்டுரைகள் சைவர்க்குச் சமயக் கருத்துக்கை
இவைபோன்ற இன்னும் பலவற்றோடு வெளியீட்டின் நிறுவனம் தேர்வுப் போட்டி சைவ இளைஞரைச் சமய நெறியில் ஊ மிகவும் பாராட்டிப் போற்றுதற்கு உரியதாகும்.
இத்தகைய சிறப்புகள் பலவற்றுடன் வி ஆண்டு மலர் வெளிவருவது அறிந்து மிகவு
சைவத் தமிழுலகிற்கு மிகுந்த பயன பல்லாண்டு வளர்ந்தோங்கி, இப்பணி சீரும் நிர்வாக ஆசிரியர் முதலான அனைவரு அருளவல்ல எம் வழிபடு கடவுளாகிய அ மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்.
பெறுநர்
C. NAVANEETHA KUMAR, 42, JANAKI LANE, COLOMBO-O4. SRI LANKA.
 

buULib றம்பலம்
திரு ஆவடுதுறை-609803 fbsT66)85 LDTG) LLLD. தொலைபேசி: 04364-232021
நாள் 03-04-2002
நாதன்தாள் வாழ்க சின் நீங்காதான் தாள்வாழ்க மணிதன் தாள்வாழ்க
ஆசிரியராகக் கொண்டு கொழும்பிலிருந்து எனும் சைவத் தமிழ்த் திங்கள் இதழ்களைப்
பெற்றோம். சைவ சமய வளர்ச்சி கருதி ரும் கட்டுரைகள் எளிய இனிய தமிழில்
50T.
நூலில் படித்தறிய வாய்ப்பில்லாதவர்க்குத் ன்றாயினும் ஓதி உணரும் வாய்ப்பினை வருவது சாலச் சிறந்ததாய் உள்ளது. புரைகளும், அவ்வாறே சாத்திர நூல்களில் முறை, சாத்திர அறிவினை வளர்த்து வரும்
முறைகளையும் தெரிந்து கடைப்பிடிக்கத்
போன்றவற்றை விளக்கும் கட்டுரைகள்,
னங்கள் போன்றவற்றின் கருத்து விளக்கக் |ள உணரச் செய்வனவாய் உள்ளன.
இவ்விதழ் பொலிவு பெறுவதுடன் இவ் கள் நடத்திச் சிறந்த பரிசில்கள் அளித்துச் க்கப்படுத்தி வரும் சிறந்த சமயப்பணியும்
விளங்கிவரும் இச் சைவ நீதியின் ஆறாவது ம் மகிழ்ச்சியுறுகின்றோம்.
ளித்து வரும் சைவ நீதித் திங்கள் இதழ் சிறப்புமாக விளங்கிவரச் செய்யும் தலைவர், நம் நீடு இனிது வாழ்ந்து சிறக்குமாறு அருள்மிகு ஞானப் பெருங்கூத்தன் திருவடி

Page 8
சித்திரபானு சித்திரை
ଈଡ୍ଯ
243, 2/1, ගාලු පාර, @gsg=04. *8)28, 2, காலி வீதி, స్టోనివి கொழும்பு-04.
*** !! 248, 27, Galle Road,
Colombo-04.
හින්ඳු ආගමික ක. 110/3, இதe3அ ஆ இந்து சமய விவகார නිවස ෙකාළඹ-07. MINISTER OF HIND இல்லம் 110/3, விஜேராம மாவத்தை Residence) கொழும்பு-07. තියාගරක්‍ෂාජයා ද | 10/3, Wijarama Mawatha, தியாகராசா 1 Colombo-07. Thiyagaraja
சைவறித மாத சஞ்சிகை ெ வந்துகொண்டிருப்பது பாராட்டுக்குரியது
சைவ சமயத்தின் பாரம்பரியங்களும், (plgust 3560)6]. சைவசமய சாஸ்தி பாதுகாக்கப்படவேண்டிய அரும்பெரு இந்நூலைப் படிப்பவர்களும், கேட்பவர் பாதுகாத்து இனிவரும் தலைமுறை 85 60) D.
இவ் வகையில் சைவநிதி வெளியீ முன்மாதிரியானது. இத்தகைய பணி விருப்பமாகும்.
சைவநிதியின் 6வது ஆண்டு மலருக்கு வாழ் குழுவினருக்கு எனது பாராட்டுக்களைத்
།།།།༽
- . ته د له لنډه ليكي
தி.மகேஸ்வரன் இந்து சமய விவகார அலுவல்கள் அ6
 
 

g3eை ைதொலைபேசி කාෆ්යාලය sa asasi Ofi
Telephone
55480 554802
ෂැංක්ස් Оgiб) පිළිබඳ අමාත්‍ය தொலைநகல் 554803 அலுவல்கள் அமைச்சர் Fax URELIGIOUS AFFAIRS ూలైes.
இல்லம் 58.0953 මහේස්වරන් පා. ම. Residence pā56iegā ir. s. ජැක්ස් Maheswaran M. P జాణతను 58.0953
19 ஏப்பிரல், 2002
பச் செய்ததி
தாடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் வெளி .
கோட்பாடுகளும் காலத்தினால் மாற்றப்பட ரங்களும் பாராயண நூல்களும் என்றும்
ம் பொக்கிஷங்கள். ஆயினும் இன்று களும் மிக அரிதாகிவிட்டது. அவற்றைப் யினரிடம் ஒப்படைக்கவேண்டியது எமது
ட்டுக் குழுவினர் செய்துவரும் பணி ஒரு கள் விரிவடையவேண்டுமென்பதே எனது
ந்தினைத் தெரிவிப்பதுடன் அதன் ஆசிரியர்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
தி. மகேஸ்வரன் f
அமைச்சர் இந்து சமய விவ'
அமைச்சு லுல்ெகள்
இல.248 27
கொழும்புட் 6 வீதி,
DLD3 gir

Page 9
96 on, 60 as Guntil as
பரிபாலன சபைத்
ungst
கடந்த ஐந்து ஆண்டுகளாக சைவம் தை வேண்டுகோளுக்கு இணங்க மாதாமாதம் வெளி கட்டுரைகள், வினாவிடைகளாய் அர்த்தமுள்ள, க3 சைவநிதிச் சஞ்சிகை தன் ஆறாவது ஆண்டு கொள்கின்றேன்.
சைவ சமய கலாசாரங்கள், பிறமத ஆக்கிரமிப் இக்காலகட்டத்தில் இலங்கையில் வெளிவரும் 6 என்பதைச் சைவச் சான்றோர்களின் வாழ்த்துரை கட்டுரைகள், பாடசாலைகள், ஆலயங்கள், சை
சான்று பகரும்.
மலர் ஒன்று வெளியிடுவது என்பது இ6 முக்கியமானது. எனவே ஆலயங்கள், பாடசாலைகள் சித்தாந்த வகுப்புக்கள், நூல்கள் ஆகியனவற்றை முழுமையான பயன் ஏற்பட்டதாகத் தெரியாமையி இறை திருஅருள் கூட்டவே "சைவநீதி" என்ற வெளியிடுவதன் மூலம் சைவ மக்களை வெளிச்ச யில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சஞ்சின் வெளியிட்டு விநியோகிக்கும் அளவுக்கு அதன் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலு
இதன் உயர்வுக்குக் காரணம் சைவ சமயத்தள இது அமைந்தமையேயாகும். மேலும் இச் சைலி பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மு தயாரித்துப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்க படுத்தி வருவதும் சமய அறிவுப் போட்டிகள் நடா வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கெளரவிப்பதுட
வருகின்றது.
 

ண்டார் ஆதீனப்
தலைவர் வழங்கும்
t 60)
ழக்க - தமிழ் வளர, சைவ அடியார்களின்
வரும் சைவ சமய உண்மைகளை, கதைகள், வர்ச்சிகரமான அட்டைப்படங்களுடன் பரப்பி வரும்
சிறப்பு மலரை வெளியிடுவது கண்டு பெருமை
பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறி நிற்கும் சைவநீதிச் சஞ்சிகை பெரும் பயனளித்துள்ளது ரகள், தத்துவக் கருத்துக்களமைந்த விளக்கக்
வ மன்றங்கள் ஆகியவற்றின் பங்களிப்புக்கள்
Uகுவானதல்ல. பொருளாதாரக் கஷ்டம் மிக ஸ் ஆகியவற்றில் சொற்பொழிவுகள், குருபூசைகள், இலங்கை மெய்கண்டார் ஆதீனம் மேற்கொண்டும் னால் மனம் நொந்து சோர்ந்திருந்த வேளையில் ற பெயரில் சஞ்சிகை ஒன்றினை மாதாந்தம் த்திற்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை கை தற்போது மாதாந்தம் ஆயிரம் பிரதிகளை ன் பயன் உயர்ந்துள்ளது. கனடா, இந்தியா,
ம் ஆர்வத்துடன் சாந்தாதாரர்கள் முன்வந்துள்ளனர். பர்களின் விடயங்களைத் தாங்கிவரும் மலராக வநீதிச் சபையானது, க.பொ.த. சாதாரண தரப் ன்னோடிப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் கி அவர்களைப் பரீட்சைக்குத் தோற்றத் தயார் த்தி அகில இலங்கை ரீதியாக தங்கம், வெள்ளி, டன் பெறுமதியான ஆறுதல் பரிசில்களும் வழங்கி

Page 10
ஆலயங்கள், ஆதீனங்கள், சைவ மன்றங்
ஆண்டுதோறும் சிறப்பு மலர்களையும் வெளி வெளிவரவுள்ளமை மகிழ்ச்சியைத் தருகின்றது.
இம்மலரில் இலங்கை மட்டுமன்றிப் பல்வே நலன் விரும்பிகள், சஞ்சிகைச் சபையினர், மாதாந்தச் சஞ்சிகையில் திருமுறையில் ஒரு ப அடிக்குறிப்பாக திருக்குறள் ஒரு அதிகாரமும் இடம்பெறச் செய்து வருவதும் மிகப் பயனுடை
இவ்வாறு இலங்கையில் எங்கெங்கு திருவி தின் அட்டைப் படமும் அதுபற்றிய அருளுரை அமர்ந்து எதற்காக ஆக்கப்படுகின்றதோ அ; அடையவேண்டும். இதுவே, என் பிரார்த்தனையு
வாழ்க சைவம் வளர்
ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி,
20, கரப்பன்காடு, வவுனியா
 
 

5ள் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க பிட்டு வருகின்றது. இவ்வாறு ஆறாவது மலர்
று நாட்டிலும் இருக்கின்ற சைவப் பெரியார்கள், மாணவர்களதும் ஆக்கங்கள் வெளிவருகின்றன. நிகமும், மாதத்தின் நல்ல நாள், பெருநாள்களும், அதற்கான் பொருளின் ஆங்கில மொழிபெயர்ப்பும்
பதாகும்.
ழாக்கள் நடைபெறுகின்றனவோ அந்த ஆலயத் பும் தாங்கிவரும் சைவநீதி, அனைவர் கையிலும் தன் பயனை அனைவரும் உணர்ந்து உய்தி
DFT(35lb.
ரக சைவ அடியார்கள்!
க, சீனிவாசகம்
♔ങ്ങബഖj
இலங்கை மெய்கண்டார் ஆதீனப்
பரிபாலன சபை, வவுனியா

Page 11
கெளரவ ஆசிரியர் பேனாவிலிருந்து.
சைவசமய சஞ்சிகை
சைவ சமயத்தை வளர்க்க ஆர்வம் கொண் டவர்கள் தாம் மேற்கொள்ளும் பணிக்கு ஆதார பூர்வமாகச் சமய சஞ்சிகைகளையோ, பத்திரிகை களையோ, விஞ்ஞாபனங்கள், துண்டுப் பிரசுரங் களையோ வெளியிட்டு வந்தனர். இப்பணியில் முன்னோடியாக விஞ்ஞாபனங்கள், துண்டுப்பிரசுரங்’ களே விளங்கின. இவ்விரண்டின் மூலமாகச் சமயக் கருத்துக்களை முதன்முதல் வெளிக் கொணர்ந்தவர் றிலழரீ ஆறுமுகநாவலர் அவர் களே. திருக்கேதீஸ்வரம், கீரிமலை நகுலேஸ்வரம் என்னும் சிவஸ்தலங்களை மீளமைக்கவிடப் பட்ட விஞ்ஞாபனங்களை இங்கு குறிப்பிடலாம். திருக்கேதீஸ்வரம் "தேன்பொந்து" என்றே நாவல ராற் குறிப்பிடப்பட்டது. விஞ்ஞாபனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கல்லடி வேலுப்பிள்ளை அவர்களும் சைவத்துக்கெதிரான நிலைப்பாட்டைத் தவிர்க்கத் துண்டுப் பிரசுரங்களை இரவோடு இர வாக அச்சடித்து வெளியிட்டமை குறிப்பிட்டாக வேண்டும்.
ஈழத்தில் ஆங்காங்கே 19 ஆம், 20 ஆம் நூற் றாண்டுக்காலங்களில் பல சைவசமயச் சஞ்சிகை களும், சிலபத்திரிகைகளும் வெளியீடு செய்யப் பட்டுச் சமய வளர்ச்சியில் விழிப்புணர்ச்சியை உண்டாக்கின. அவற்றின் நாமமே இன்று நம்மில் பலருக்கும் தெரியாதிருப்பது வருந்தத்தக்கது. காரணம் அவை காலவெள்ளத்தால் கழுவப்பட்டு விட்டன. சைவ சமய சஞ்சிகைகள், புத்தகங் களுக்கு மக்களின் ஆதரவு மிகமிகக் குறைவு. இதனால் நிதிவளம் அருகிக் காலகதியில் எடுத்தகருமம் கைவிடப்படுகின்றது. இதனைச் சென்ற ஆண்டு பொன்விழா மலரில் எடுத்துக் கூறியுள்ளேன்.
 
 

நகள், பத்திரிகைகள்
நான் இளமைப் பருவத்தில் மாணவனாக இருந்துவந்த காலத்தில் பல சைவ சஞ்சிகை களை எம் மூர் நூல் நிலையத்தில் படித்ததுண்டு. அவற்றில் ஒன்றினை ஞாபகத்தில் வைத்திருக் கிறேன். அச்சுவேலி, குமாரசுவாமிக் குருக்கள் வெளியீடு செய்துவந்த "சைவப்பிரகாசிகை” என் னும் சஞ்சிகையே அதுவாகும். எங்களுக்குச் சைவ சமய பாடம் அப்போது இருந்ததில்லை. இச்சஞ்சிகைகள் மூலம் சமய உண்மைகளை வாசித்தறிய வாய்ப்பிருந்தது. பின்னர் இளஞ் சைவப் புலவர், சைவப் புலவர் தேர்வுக்குச் சைவப் பெருநூல் களைக் கற்பதற்குச் சைவ சமய அடித்தள அறிவை இச் சமய சஞ்சிகைகள் உதவின என்பதை இங்குக் குறிப்பிட விரும்பு கின்றேன்.
பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்கள் விஞ்ஞா பனம், துண்டுப்பிரசுரங்கள் மூலமே சுருக்கமாகவும் விளக்கமாகவும் சமயக் கருத்துக்களை வெளி யிட்டு மக்களை விழிப்புணர்ச்சிபெற வைத்தார். சமய சஞ்சிகை வெளியிடுவதில் அவர் நாட்டங் கொள்ளவில்லை. காரணம், அச்சஞ்சிகை தன்னிற் பிற்காலம் வெளிவர வாய்ப்பில்லை என்ற உறு திப்பாடேயாகும்.
19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ வெளியீடுகளில் நிலைப்பது "இந்து சாதனம்" ஒன்றே, அதிலும் ஆங்கில வெளியீடு நிறுத்தப்பட்டு இந்துசாதனத்தில் ஒரு ஆங்கிலக் கட்டுரையாக வெளிவருவது குறிப்பிடலாம். 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் இறுதிவரை பல சஞ்சிகைகள், பத்திரிகைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வகையில் ஆத்மஜோதி, சிவதொண்டன், சந்திரதீபம் (பத்திரிகை) ஐம்பதுகளுக்கு முன்னும் பின்னும் வெளிவந்தன. இவற்றில் ஆத்மஜோதி, சந்திரதீபம் என்பன இன்றில்லை. சிவதொண்டன் நிலைத்து நிற்கின்றது.

Page 12
சைவாதீனம் ஒன்றினைத் தொடக்கி, அறுபது களில் ஆண்டுப் பகுதியில் "நாவலன்" என்னும் பத்திரிகையை நகுலகணேசன் நடத்திவந்தார். அதில் நானும் இணையாசிரியராகக் கடமையாற் றினேன். நிதி பற்றாக்குறையால் இரண்டு ஆண்டு களில் அப்பத்திரிகை கைவிடப்பட்டது.
எந்த நன்முயற்சியாயினும் நிதி நிலமையும், ஆளணியும் சிறப்பாக அமையவேண்டும். இவை இரண்டும் நிறைவாக இருந்தும் ஆடிக் கலவரத்தின் போது "ஆத்மஜோதி" அழிக்கப்பட்டது வருந்தத் தக்கது. பின்னர் ஆத்மஜோதி முத்தையா மன முடைந்த நிலையிலும் ஆத்மஜோதியை இடை யிடையே வெளியீடு செய்துவந்து ஈற்றில் அது கைவிடப்பட்டது.
கல்லூரிகள், சமயச்சங்கங்கள், மன்றங்கள், சர்வகலாசாலைகள் கூட ஆண்டுமலர், காலாண்டு, அரையாண்டு இதழ்களை நடாத்திச் சைவக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இவற்றுள் சில நின்றே போயின. உதாரணமாகத் திருநெல் வேலிச் சைவாசிரிய கலாசாலையின் "நாவலன்" என்ற ஆண்டுமலரைக் குறிப்பிடலாம். இது பல ஆண்டுகளாக நடாத்தப்பட்டு ஸ்தம்பித்த நிலை யிலே 5 ஆண்டுகளின் பின் 1947 ஆம் ஆண்டு நாம் மீண்டும் தொடக்கி வெளியிட்டோம். ஆயினும் அதுவும் நின்று நிலைக்கவில்லை.
20 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஈழத்தின் நாற்றிசைகளிலும் பல சைவச் சஞ்சி கைள் தோன்றிச் சமயத்தை வளர்த்து வந்தன, வருகின்றன. இது பாராட்டக் கூடிய விஷயமாகும். இவற்றிலும் சில நிதிப் பற்றாக்குறைவினாலும் நடாத்தக்கூடிய ஆள்அணி இன்மையாலும் நின்றே விட்டன. அவற்றுள் நாமறிந்தவை கொழும்புத் திருநெறிய தமிழ் மன்றம் நடாத்திய "மெய்கண்டார்” என்ற பத்திரிகையும் மெய்கண்டார் ஆதீனம் வெளியிட்ட மெய்கண்டார் என்ற 1972ம் ஆண்டின் காலாண்டுச் சஞ்சிகையுமாகும். மெய்கண்டார் ஆதீனத்தையும், கொழும்புத் திருநெறிய தமிழ் மன்றத்தினையும் இலங்கையில் நிறுவியவர் தொண்டை மண்டலம் காஞ்சிபுரம் மெய்கண்டார்
 

ஆதீன அன்றைய குருமுதல்வரே. அவரின் நல்ல கருத்தொன்றைத் தழுவியே அத் தாபனங்கள் சமய இதழ்களை வெளியிட்டன. ஒரு சங்கமோ அன்றி மதத்தாபனமோ செயற்பாடுகளை வெளி யிட ஏடு ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் அவற்றை அறிந்து அத்தாபனங்களின் வளர்ச்சிக்குச் சேர்ந்தோ, தனித்தோ உதவுவர். இதுதான் அக்குரு முதல்வ ரின் நல்ல கருத்தாகும். இக் கருத்தை நாம் வர வேற்கிறோம். வருமானம் ஈட்டச் சைவ மாத சஞ்சிகைகளையோ அன்றிப் பத்திரிகைகளையோ நடாத்தத் தொடங்குவது வீண் செயல். இது அனுபவரீதியாக அறிந்த உண்மை.
சைவ பரிபாலனசபை, சிவத்தொண்டன் நிலை யம் என்பன பல்கிப் பெருகி வளர்ச்சி கண்டுள்ளன என்றால் அவை வெளியிடும் வெளியீடுகளின் உந்துசக்தியே என்பதைப் புரிந்து கொள்ளவேண் டும். ஒன்றுக்கு நாவலர் அவர்களின் அருள் வாக்கும், மற்றதற்கு சிவயோக சுவாமியவர்களின் திருவடிவழிபாடுகளுமே வழிகாட்டிகளாக அமைந் துவிட்டன.
நான் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியாகி வரும் சைவ சஞ்சிகைகள் பற்றி எது வும் குறிப்பிட முடியாத நிலையில் இருக்கிறேன். காரணம் அவற்றின் பூரண விபரத்தைச் சேகரித்து அதன் பின்னரே எழுதவேண்டும் என்பதேயாகும். இதற்கு இலங்கையிலுள்ள அனைத்துச் சைவச் சங்கங்கள், மன்றங்கள், தனிப்பட்டவர்களின் ஆதரவைக் கோருகின்றேன்.
19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுச் சைவ சமயச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றி ஓர் ஆய்வு என்ற விடயத்துக்கு விபரங்கள் கோருகின்றேன்.
எப்பொழுது? எங்கு? யாரால்? எந்தச் சமயச் ஸ்தாபனத்தால்? என்ன பெயரில்? சஞ்சிகைகள், பத்திரிகைகள் வெளியிடப்பட்டன என்பன தேவை. தந்துதவின் இவ்விடயத்தைத் தொடரலாம்.
விபரம் தரப்படவேண்டிய விலாசம்
கெளரவ ஆசிரியர் -"சைவநீதி" 42, ஜானகி லேன், கொழும்பு-04

Page 13
கெளரவ ஆசிரியர்: ஞானசிரோமணி,
சைவப்புலவர்மணி, வித்துவான், திரு. வ. செல்லையா
மதியுரைஞர்:
சிவநீ. கு. நகுலேஸ்வரக்குருக்கள்
திரு. D, M. சுவாமிநாதன்
அறங்காவலர், ஹீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
திரு. அ. கந்தசாமி
Chairman U.P.S.
திரு. கு. மகாலிங்கம் Sivayougasami Trust Fund
துணை ஆசிரியர்: திரு. சு. சதாசிவம்
பதிப்பாசிரியர்: திரு. வே. திருநீலகண்டன் லசுஷ்மி அச்சகம்
விநியோகம்: திரு. க. சீனிவாசகம் ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி
நிர்வாக ஆசிரியர்: திரு. செ. நவநீதகுமார் 42, ஜானகி ஒழுங்கை, கொழும்பு-04.
தொடர்புகட்கு 7.30 p.m to 7.30 a.m.
தொலைபேசி. 595221
1
鱼 ៩ិតា
"மேன்மைகொள் சைவநிதி
'6)6
cés
ՔեՈ3T67l51 . சந்திப்பதில் மக்
வயதைப் பூர்த்த பல்வேறு இடர் தோறும் வெளி
ரவும் சாந்தாதா நன்றி கூறக்கட்
ஐம்பதாவது அந்நிகழ்விலே சீர்மிகு காசி 6 வழங்கினார்கள் நன்றி அவ்விழ நன்றி தெரிவித
6ILD5l L1607
மாணவர் மத்த அறிவுப்போட்டி,
கடந்த வருடம்
பரிசு பெற்ற ம
சைவந்தி (
ஆக்கங்களைத்
மனமார்ந்த நன
நீங்கள் ஒ: சிறக்க உதவு நிற்கின்றோம்.
 
 
 

1
Du Jlb விளங்குக உலகமெல்லாம்"
ܦܫܔCs ܐ
வநீதி
ஆண்டின் முதலாவது இதழிலே உங்களைச் கிழ்கிறோம். திருவருட்டுணையால் சைவரீதி ஐந்து தி செய்து ஆறாவது ஆண்டுள்ளே பிரவேசிக்கின்றது. ப்பாடுகள் மத்தியில் சைவ சமய சஞ்சிகை மாதம் வந்துகொண்டிருக்கிறது. சைவ அபிமானிகள் ஆத ரரின் ஆதரவும் இதற்குக் காரணம். இவர்களுக்கு
மைப்பட்டுள்ளோம்.
இதழ் வெளியீடு கடந்த வருடம் நிகழ்ந்தது.
திருவாவடுதுறை ஆதீன இளைய சந்நிதானம் விசுவநாத பண்டார சந்நிதிகள் எழுந்தருளி ஆசி 1. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு எமது பணிவான 2ா சிறப்பாக நிகழ உதவிபுரிந்த அனைவருக்கும் ந்துக் கொள்ளுகிறோம்.
ரி சஞ்சிகை வெளியிடுவது மாத்திரம் அல்ல தியில் சைவ சமய அறிவை வளர்க்கச் சமய கட்டுரைப் போட்டி, முன்னோடிப் பரீட்சை என்பனவும் நடத்தி பெறுமதி மிக்க பரிசுகளும் வழங்கினோம்.
ாணவர்களைப் பாராட்டுகின்றோம்.
வாசகர்களது அறிவுக்கு விருந்தாகும் அரிய பல தந்துதவும் சைவத் தமிழ் அறிஞர்களுக்கு எமது iறி.
வ்வொருவரும் தரும் ஆதரவு தான் எமது பணி ம் சைவரீதி வளர்ச்சியுற இறையருளை நாடி

Page 14
12 GUFTI un TT6
"ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவாய்
மாலையான தொன்றழிவின்றி வைகுமாறு ஒக்கும்" - கந்தபுராணம் -
சிவபெருமானுக்கு எண்ணற்ற திருப்பெயர் களும் திருமேனிகளும் உண்டு. இதனைப் "பேரா யிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான் எனத் திருநாவுக்கரசர் போற்றுவார். இப்பெருமான் எடுத்த திருமேனிகள் பல இருப்பினும் 64 திருமேனிகளைச் சிறப்பாகக் கூறுவர். இவற்றுள் பஞ்ச விம்சதி எனப்பெறும் 25 சிவமூர்த்தங்களைச் சிறப்பி னுள் சிறப்பாகப் போற்றுவர். இந்த 25 சிவமூர்த் தங்கள் சதாசிவமூர்த்தியின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்களிலிருந்து ஐந்து, ஐந்து வீதம் வெளிப்பட்டன. ஈசான முகத்திலிருந்து முதலில் வெளிப்பட்ட திருமேனியே "சோமாஸ்கந்தர் மூர்த்த மாகும். இதில் சிவனும் உமையும் விளங்க இவர்களின் நடுவில் கந்தர் விளங்குவார். இம் மூர்த்தம் சச்சிதானந்த மூர்த்தம் ஆகும்.
சத்து - சித்து - ஆனந்தம்
உண்மை - அறிவு - இன்பம்
சிவன் - உமை - ஸ்கந்தன்
அருமை - எளிமை - அழகு
சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய அன்னைக் கும் நடுவே ஆனந்த வடிவான கந்தனோடு விளங்கியமைந்த சோமாஸ்கந்தர் திருமேனியானது சிவாலயத்தில் பிரதான மூர்த்தியாவார். (பல்லவர் களின் ஆட்சிக்காலத்தில் கருவறையில் புடைப்புச்
 
 

★ ★ ★
திருவிடைமருதூர் சு. நாராயணசுவாமி எம்.ஏ., எம்.எட், டிப்.இன். சமஸ்கிருதம் ஆராய்ச்சியாளர் - சிவாகமம் மற்றும் சிற்பத்துறை,
திருவாவடுதுறை ஆதீனம் சரசுவதி மகால் நூல் நிலையம் மற்றும் ஆய்வு மையம், திருவாவடுதுறை - 609 803,
சிற்பமாக காஞ்சிபுரம், மகாபலிபுரம் ஆலயங்களில் காணலாம்) கணவன் - மனைவி - குழந்தை என்னும் இல்லறத்தின் முப்பொருட் தன்மையை முழுமையாக்குவது இவ்வடிவமாகும். இவரே திருவாரூரில் தியாகராஜராக அருள்செய்கின்றார். மேலும் சப்த விடங்கத் தலங்களிலும் தியாகராசத் திருமேனி உள்ள சிவாலயங்களிலும் காணப்படு கின்றார். சோழர்களுடைய ஆட்சிக்காலத்தில் கருவறைப் பெருமானாக அருள்செய்யும் இவரை, உலாத் திருமேனியாக அமைக்கும் உன்னத
ിഞ്ഞുL ജൂ|ങ്ങLbgg.
திருமேனி அமைப்பு
நீண்ட செவ்வக பீடத்தில் சுகாசனமாகச் சிவ பெருமான் விளங்குவார். இவரது பின் கரங்களில் மானும் மழுவும் விளங்க, முன் கரங்களில் அபய வரதம் அல்லது அபயம், கடக முத்திரைகளைக் கொண்டு விளங்குவார். நடுவில் முருகன் அமர்ந்தவராகவோ, நாட்டியம் ஆடும் நிலையிலோ அல்லது நேராகவோ அல்லது கையில் பழம் கொண்டோ விளங்குவார். இவருக்கு அடுத்தாற் போல் சுகாசனமாகக் காட்சி தரும் உமையவள் (புத்ரசெளக்யப்ரதாயினி) தனது வலக்கரத்தில் நீலோற்பல மலரைத் தாங்கியவளாகவோ அல்லது அபயகரம் உடையவளாகவோ அல்லது கடக முத்திரை கொண்டவளாகவோ விளங்குவார். இடது கரம் வரத முத்திரை கொண்டோ அல்லது நித்தா முத்திரையுடனோ இருப்பவள் ஆவாள்.

Page 15
顯 罹 1
திருக்கோயில்களில் சோமாஸ்கந்தர்
எல்லாச் சிவாலயங்களிலும் சோமாஸ்கந்தர் திருமேனி ஆனது ஒரே பீடத்தில் விளங்கும். இதில் சிவன் - உமை - கந்தர் இம்மூவரை யும் பிரித்தெடுக்காத நிலையில் உள்ளபடியும் அல்லது தனித்தனியே பிரித்தெடுக்கும் நிலை யில் உள்ளதாகவும் இத்திருமேனியானது வடிக்கப் பட்டிருக்கும்.
இருப்பினும் சிவாலயங்களில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனியின் (இடப்பக்கம்) பக்கத்தில் தனித்து நின்ற நிலையில் இரண்டு கரம் உள்ள அம்பிகையின் திருஉருவமானது திரிபங்க நிலையில் காணப்படும். இந்த நின்ற நிலையில் உள்ள அம்பிகையைப் பற்றிக் கிடைக்கப் பெற்ற சிவாகமங்களில் இதன் விவரம் காணப்பெறவில்லை.
இருப்பினும் காமிகம் முதலான சிவாகமங் களில் தேவி பிரதிஷ்டா விதி, கெளரி பிரதிஷ்டா விதி போன்ற தலைப்புகளில் தேவியினுடைய திருமேனிச் சிறப்பினை விளக்கியும் பிரதிஷ்டா முறையையும் பூஜா முறையையும் விரிவாக அறியலாம். கற்சிற்பங்களில் சோமாஸ்கந்தர் திருமேனிக்கு அருகில் நின்ற நிலையில் உள்ள அம்பிகையின் உருவம் காணப்பெறவில்லை. “உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் திருமேனிக் குப் பக்கத்திலேயே நின்ற நிலையில் உள்ள அம்பிகையின் உருவம் இன்றும் அமைகின்றது".
ஒரு சிந்தனை:
சோமாஸ்கந்தர் திருமேனியின் இடப்பாகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்பிகையை "போக சக்தி அம்மன்” என்று கூறுவர். அதாவது ஈசனின் திருவார்த்தையினை அவ்வப்போது கேட்டுக்கொண்டு பிரியாது இருப்பவள் (அர்த்த மண்டபத்தில் நின்ற நிலையில் இந்த அம்பிகையின்
 

உருவம் பஞ்சலோகத்தால் செய்யப் பெற்று இருப்பதை இன்றும் காணலாம்) நின்று விளங்கும் (இருகரம் உடையவள், மலரை வலக்கரத்தில் கொண்டிருப்பவள் அல்லது வலக்கரம் கடக முத்திரையாகவும் இடதுகரத்தைத் தொங்கவிட்ட படியும் விளங்கும்) அம்பிகையைச் சண்டி என்று கூறுவர். இந்த அம்பிகை செயல்களைச் செய்யக் கூடியவளாக அமைகின்றாள் என்று உணர வேண்டும்.
பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்தர் திருமேனி யில் சுவாமி என்ற நிலையில் சிறப்பாக அலங் கரிப்பர். கந்தரையும் அம்பிகையையும் சற்று மறைத்தே அலங்கரிப்பர். இது மூலஸ்தானத்துக்கு உரிய சுவாமியின் உற்சவமூர்த்தியாகும் என்ற நிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். மூலஸ் தானத்தின் முன்பாக உள்ள அர்த்தமண்டபத்தில் போகசக்தி விளங்குவது சோமாஸ்கந்தரின் இடப்பக்கம் அமர்ந்துள்ள உமையின் திருமேனி யாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் பெரும் பாலான சிவாலயங்களில் (தனித்து ஆலயமாக) கர்ப்பக்கிரகத்தில் உள்ள அம்பிகைக்கு உற்சவ விக்கிரகம் இருப்பது இல்லை. சோமாஸ்கந்தர் திருமேனிக்கு வலப்பக்கமோ, அல்லது இடப் பக்கமோ நின்ற நிலையில் விளங்கும் அம்பிகை யின் உருவமே கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிலாத் திருமேனிக்கு உற்சவமூர்த்தியாகும்.
வலப்பக்கம் அல்லது இடப்பக்கம்:-
சோமாஸ்கந்தர் திருமேனிக்கு வலப்பக்கம் நின்ற நிலையில் அம்பிகையின் திருமேனியினை அமைத்து வழிபடின் அத்தலம் திருக்கல்யாணத் திற்குரிய சிறப்புடைத் தலமாகும். (அவ்வத் தல புராணங்களில் காண்க.) அல்லது இடப்பால் நின்ற நிலையில் அம்பிகையின் உருவத்தினை அமைத்து வழிபடின் அது பொது நிலையாகும்.

Page 16
1.
சிறப்பு நிலையில் உள்ள சோமாஸ்கந்தர் ஆலயங்கள்:
சப்த விடங்க தலங்கள், கீவாளூர் சிக்கல், பூவனூர், திருவாவடுதுறை, தஞ்சாவூர் கோயில் திருமாகாளம் திருவிடைமருதூர் திருமழப்பாடி மற்றும் தியாகராஜர் உறையும் திருக்கோயில்கள் உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் திருமேனி, இலங்கையிலுள்ள திருக்கேதீச்சரத்தில் அமைந்துள்ளதை யாவரும் அறிவர்.
திருக்கோயில் தலபுராணங்கள், சோமாஸ் கந்தர் தலபுராணங்கள், கந்தபுராணம், ஸ்காந்தம், சிவபராக்கிரமம் முதலான புராணங்களிலும் உத்தர காமிகப் படலம் 47, சுப்ரபேதம் படலம் 43, பூர்வகாராகமம் படலம் 11, மூர்த்தி தியானம், அஜிதாகமத்தில் ஸ்கந்தோர் உமா சஹிதம்,
கீரிமலை நகுலேஸ்வர சுவாமி ஆலி
 
 
 

அம்சுமான் காச்யபம், ரெளரகமம் கிரியாபாதம் - சோமேஸ்வர ஸ்தாபன விதி, சந்தான சம்ஹிதை, முதலான ஆகமநுால் களிலும், பிரதிமாலாட்சனம், ரூபமண்டனம், ரூபத்தியானம், தியானரத்னாவளி, சில்பரத்தனம் படலம் 22, றி தத்துவ நிதி, சாரஸ்வதிய சித்ராகம சாஸ்திரம், மானசாரம் முதலான சிற்ப நூல்களிலும் காணலாம். மேலும் திருவாவடுதுறை ஆதீன வெளியீடு எண் 407 - சோமாஸ்கந்தர் நூலிலும் சென்னை சிவசுந்தரி கலைக்கூடம் வெளியிட்ட சோமாஸ்கந்தர் மற்றும் தியாகராஜர் நூல்களி லும் டாக்டர் கோபிநாதராவ் 6TC pg5u sel, Big56) BITG)T60T (Hindu Iconography) நூலிலும், சோமாஸ்கந்தர் (சிவன்-கந்தர்-உமை) இம் மூன்று உருவத்தினை விரித்துக் கூறுகின்றார்.
Uயத்திலுள்ள சோமஸ்கந்தமூர்த்தி

Page 17
5Sri Lyn
"ஒருவனைப் பற்றி ஓரகத்திரு” என்கின்றது கொன்றை வேந்தன். இதற்கு "ஒருவனை - (நற் குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப்) பற்றிக் கொண்டு, ஓரகத்து - ஒரிடத்திலே தானே, இரு - (நீ எப்போதும்) வாசம்பண்ணு" என்று உரையெழுதப்பட்டிருக்கிறது. இவ்வுரையை நோக்குவோர், "ஒருவனைப் பற்றி ஓரகத்திரு” என்பது, கன்னிப்பெண் ஒருத்திக்கு ஒளவையார் கூறிய அறிவுரையெனக் கருதலாம். இவ்வறிவுரை யைக் கடைப்பிடிப்போர் வானுறையும் தெய்வத்துள் 606) d535 L6) Th.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்கிறது திருக்குறள்.
"ஒருவனைப் பற்றி ஓரகத்திரு” என்பதற்கு இன்னொரு பொருளுமுண்டு. அதை, தாயுமானவ சுவாமிகளின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குவோம். ஒருவன் - இறைவன்; சிவன், ஒரகம் - ஒருமனம், "ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்." என்கின்றது திருமந்திரம்.
"ஏகன் அனேக னரிருள்கரும மாயையிரண்
டாகவிவை யாறா தியில்"
என்கின்றது திருவருட்பயன்
நாம் ஒரு பொருளைப் பற்றுவதானால் முத லில் அப்பொருளை மனத்தாற் பற்றவேண்டும். மனம் ஒரு பொருளைப் பற்றவில்லையானால்
அப்பொருளை எமது கண் காணாது; கரம் பற் றாது. மனம் கொப்புக் கொப்பாகத் தாவிச் செல் லுங் குரங்கு போன்றது; மிக வேகமாக ஒன்றை விட்டொன்றைப் பற்றும் இயல்புடையது. அதனால்,
 
 

s
G- O
SFullDJ 55
மட்டுவில் ஆ. நடராசா
ஒருவனைப் பற்றி ஓரகத்திருப்பதற்கு, மனக் குரங்கை அடக்கி நடத்தும் ஒருமனப் பெண்டிரா தல் வேண்டும். இருமனப் பெண்டிரும், பலமனப் பெண்டிரும் கற்புடை மகளிராகார்.
சிவன் ஒருவனே ஏக நாயகன். ஆன்மாவாகிய நாயகி அவனையே பற்றி நின்று, அவனைக் கூடிச் சிவானுபவத்தை அனுபவிக்க வேண்டும். சிவபெருமான் ஒருமையால் உணர்பவர் உணர்வி னுக்குணர்வ தாம் பெருமையான். அவனைப் பற்றுவதானால் புறப்பற்றுக்களை விட்டு அவ னையே பற்றி நிற்கவேண்டும்.
பெண்ணொருத்தி தன் கணவனல்லாத பிற ரைக் கவர்ச்சி காரணமாக, அல்லது பொருள் காரணமாகக் கூடுவதால் வருஞ் சிற்றின்பம், இன்பம் போலத் தோன்றினாலும் அது உண் மையான இன்பமாகாது. அவள் பாலியல் நோய்க்கு ஆளாகித் தன் வாழ்வையே பாழாக்கிவிடுவாள்; அவள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத்துள் வைக்கப்படுதலாகிய இல்வாழ்வின் அதியுயர் பயனை இழந்துவிடுவாள்.
சிவபெருமான் ஒருவனே இன்பவடிவினன். அவனால் மாத்திரமே தன்னை வழிபடுவோருக்குப் பேரின்பப் பெருவாழ்வைக் கொடுக்க முடியும். சிவனைத் தவிர்ந்த வேறெந்தத் தேவராலோ, மனிதராலோ எவருக்கும் பேரின்பப் பெருவாழ்வைக் கொடுக்க முடியாது. ஆதலால், சிவனைத் தவிர்ந்த வேறெந்தத் தேவரை வணங்கினாலும், அதனாற்
பெறுமின்பம் சிற்றின்பமேயாகும்.

Page 18
"கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர்
இற்புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்
தற்பொறியாக நல்குந் தலைவநின்னலதோர் தெய்வம்
பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணானந்த வாழ்வே"
என்று கூறுகின்றார் தாயுமானவ சுவாமிகள்
சுவாமிகளது கூற்று இல்லத்தரசிகளும் சிவனை அடைய விழையும் ஆன்மநாயகிகளும் கற்புறு சிந்தையராதல் வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. இற்புறத்தவர் - அயலவர், தற்பொறி - தன்செல்வம்
யார் இவ்வாறு அறிவுரை கூறினாலும், ஏழை மனம் அவ்வுரையை ஏற்க மறுப்பதால், மனம் போன போக்கிற் போகின்றார்கள் பலர். அதனால் அவர்களுக்குத் தீங்கு விளையுமே தவிரப் பய னேதும் விழையாது. நாம் பயனடைய வேண்டு மென்பதற்காக
"காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே
ஒடுந் தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவாயுயிர்க்குயிராய்
ஆடுங் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற் கன்புநிலை
தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாருஞ் சகத்திரே"
என்று கூறி எம்மை எல்லாம் அழைக்கின்றார் தாயுமானவர்.
அவர் அழைத்தாலும் நாம், அத்தேவர் தேவர் அவர் தேவரென்று பொய்த்தேவு பூசுகின்ற பூத லத்தே எவர், எவரைத் தெய்வமென்று கூறினாலும், அவரது அருளைப் பெறலாமென்றெண்ணி அவர் பின் ஆலாய்ப் பறக்கிறோம்.
ஒருவர் பிறருக்குச் செய்யும் உதவி அவரு டைய அறிவாற்றலுக்கு ஏற்றதாகவே இருக்கும். சாதாரண மனிதனொருவன் இரவலனுக்கு இரண்டு
 
 

ரூபா அல்லது மூன்று ரூபா கொடுப்பான். செல் வந்தனான வள்ளல் ஒருவன் வழங்கும் அறக் கொடை ஆயிரங்களாகவோ, மில்லியன்களாகவோ இருக்கலாம். இவ்வாறு சிலர் ஏழைகளாகவும் சிலர் நடுத்தர வகுப்பினராகவும் சிலர் குபேரர் களாகவும் இருப்பதற்கு அவரவர் செய்த நல்வினை தீவினைகளே காரணமாகும்.
படைப்புத் தொழிலைச் செய்யும் பிரமனும் காக்குங் கடவுளாகிய திருமாலும் அவர்கள் செய்த பூர்வ புண்ணிய விசேடத்தினாலே, சிவபெரு மானுடைய திருவருளினால் தத்தம் பதவிகளைப் பெற்றவர்கள். அவர்களும் பிறந்திறந்து உழல் பவர்கள். இவ்வுண்மையை அவர்களைப் புகழ்ந்து ரைக்கும் புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகவும் அறியலாம். அவர்களும் பிறப்பு இறப்புக்கு உட் படுபவர்கள் ஆதலால் அவர்களால் தம்மை வழிபடுவோருக்குப் பிறப்பிறப்பற்ற பேரின்பப் பெருவாழ்வைக் கொடுக்கமுடியாது. உண்மை நிலை இதுவாக, திருமாலின் ஒரு அவதாரத்தின் போது அவருக்கு அடிமை, பூண்டொழுகியவ னையும் அரன் நிகர் கடவுளெனக் கருதி வழிபடு வோரின் அறியாமையை என்னென்றுரைப்பது? அவர்களின் அறிவை மாயை மயக்குகின்றது.
அல்லலாந் தொழில்ப டைத்தே அடிக்கடி உருவெடுத்தே
மல்லல்மா ஞாலங் காக்க வருபவர் கடவு ளென்னில்
தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திடா திருள்நீங்காது
நல்லது மாயை தானும் நானென வந்து நிற்கும்."
என்று கூறுகிறார் தாயுமானவ சுவாமிகள்
கடவுளல்லாதாரைக் கடவுளரெனக் கருதி அவர்களின் பெயரால் முன்னொருபோதுமில்லாத
புத்தம் புதிய மதங்களை உருவாக்குவோரும்,

Page 19
தம்மைத் தாமே கடவுளெனக் கூசாமற் கூறுவோரும் இன்று மாத்திரமல்ல, தாயுமானவ சுவாமிகள் வாழ்ந்த காலத்திலும் இருந்திருத்தல் வேண்டும். அதனாற்றான்,
"பன்மு கச்சமய நெறி படைத்தவரும்
யாங்க ளேகடவு ளென்றிடும்
பாத கத்தவரும் வாத தர்க்கமிடு
படிறரும்."
என்று பாடியிருக்கிறார் தாயுமானவ சுவாமிகள் படிறர் - வஞ்சகர்.
எமது ஐயத்தை அறிஞர் ஒருவரின் அறிவு ரையைக் கேட்பதன் மூலமே அகற்றலாம். அந்த வகையில், பைங்கிளியிடங் கேட்டுத்தன் ஐயத்தை அகற்றுவது போல்ப் பாவனை செய்து தாயுமானவ
சுவாமிகளாற் பாடப்பட்டது பைங்கிளிக்கண்ணி.
".தாவியதோர் மர்க்கடமாந் தன்மை விட்டே அண்ணலிடத்
தோவியம்போல் நிற்கின்எனை உள்குவரோ பைங்கிளியே'
என்னுங் கண்ணியினால் தாயுமானவர் வினாவும் வினாவுக்கு விடைமர்க்கடமாந் தன்மை விட்டு ஓவியம் போல் அசையாது சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தால் அவனருள் கிடைக்
கும் என்பதாகும்.
ஒருவர் எதைப்போல அல்லது யாரைப் போலப் பாவனை செய்கின்றாரோ, அவர் அதைப் போல அல்லது அவரைப்போல ஆகின்றார். பைத்தியக்காரனைப் போலப் பாவனை செய்பவன், பைத்தியக்காரனாகவே மாறிவிடுவான். குடிகார
னைப் போலப் பாவனை செய்பவன், குடிகாரனாக
மாறாதிருக்க முடியாது. இவ்வாறே மர்க்கடமா
 
 

கப் பாவனை செய்பவர், மர்க்கடமாகவும்; நான் பிரமம் எனக் கூறுபவனாகப் பாவனை செய்பவர், நான் பிரமம் எனக் கூறுபவராகவும் ஆவார். இத்தகைய பாவனைகளாற் பயனேதுமில்லை,
தீமையே விளையும்.
உயர்ந்தோர் ஒருவரைப் போலப் பாவனை செய்வதன் மூலமே நாம் உயர்வடையலாம். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் சிவன் ஒருவரே. அதனால் ஆன்மாக்களாகிய நாம் நம்மைச் சிவமாகப் பாவிக்கவேண்டும். சிவோகம் பாவனை செய்யும் ஆன்மா சிவமாந் தன்மை எய்திச் சிவானந்தத்தை அனுபவிக்கும்.
"வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
வேறுமுள கலைக ளெல்லாம்
மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
விரிவா யெடுத்துரைக்கும்.
யாதொன்று பாவிக்க நான்
அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்க முறலாம்."
என்கின்றார் தாயுமானவ சுவாமிகள்
இக்கருத்தினாற் கற்புறு சிந்தையராகிய தாயுமானவ சுவாமிகள் சிவனை நோக்கி,
"ஜய னேயுனை யன்றி யொருதெய்வங்
கையி னாற்றொழ வுங்கரு தேன்கண்டாய்
பொய்ய னாகிலும் பொய்யுரை யேன்சுத்த
மெய்ய னாமுனக் கேவெளி யாகுமே”
என்று தன் உள்ளக் கிடக்கையை வெளிப் படுத்துகின்றார்.

Page 20
1.
6ᏡᏑ601ᎠᏯbl ᏑᏩgngᎼ
கல்வி:(1). பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் பல வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. பல்லவ அரசர்கள் பலர் வடமொழியிற் சிறந்த புலமை பெற்றிருந்தனர்; பாரவி, தண்டி போன்ற வடமொழிப் புலவர்களை ஆதரித்தனர். மூன்றாம் நந்திவர்மனும் அபராசிதவர்மனும் சிறந்த தமிழறிஞர்கள், பின்வந்த சோழர்கள் தமி ழறிஞர்கள் என்பதும், அவருள் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஒட்டக்கூத்தர் மாணவர், மூன்றாம் குலோத்துங்கன் கம்பர் முதலிய புலவர்களுடன் பழகிய தமிழ றிஞன். பல்லவர் காலத்தில் தமிழ்க் கல்வி எங்ங்ணம் இருந்ததென்பதை விளக்க, ஐயடிகள்
காடவர்கோன், காரைக்கால் அம்மையார், கபில தேவர் முதலிய அடியார்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், மணிவாசகர் முத லியோர் அருட்பாடல்களும் நந்திக்கலம்பகம், பாரத வெண்பா முதலிய இலக்கிய நூல்களுமே சிறந்த சான்றாகும். கண்டராதித்தர், இரண்டாம் குலோத்துங்கன் முதலிய சோழர்கள் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்பதும். முதலாம் இராசேந்திரன் பண்டிதசோழன் எனப்பாரட்டப் பெற்றவன் என்பதும் சைவ அரசர்கள் பெற்றிருந்த புலமையை நன்குணர்த்தும்.
(2) ஐந்து வயதில் மயிர்நீக்கிக் கல்வி தொடங்குதல் வழக்கம். பிராமணராயின் பூணுாற் சடங்கு செய்த பிறகே கல்வி தொடங்கப்பெறும். மயிர் நீக்குதல் சைவ சடங்குகள் பதினாறனுள் ஒன்று. இப் பதினாறும் ஒவ்வொரு ஞானப்பொரு ளைக் குறிப்பன எனவும், அவற்றுள் மயிர் நீக்கு
 
 

ாய வாழ்க்கை
டாக்டர் மா, இராசமாணிக்கனார்
தல் சிவப்பிரசாதத்தின் உயர்வைக் குறிப்பதெ னவும் சிவாகமம் கூறும் கல்வி, நற்பொருள்களை வெள்ளம் போலப் பெருக உதவி - அறிவு விளங்கச் செய்தலால் மனம் சுருண்டிருந்த நிலையை நீக்கி மலரச் செய்யும் இயல்புடை யது என்று அக்காலத்தவர் கருதினர். அவர்கள் இலக்கியக் கல்வியும், சிவம் முயன்றடையும் தெய்வக் கலைகள் பலவும் கற்றனர். பின்னவை வேதம், சிவாகமம், வேதாங்கம், புராணம், இதி காசம், ஆயுர்வேதம் முதலியன.
(3) சைவர்கள் பொதுக்கல்வியும் சமயக் கல்வியும் மருத்துவம் வான நூற்கலை முதலிய பல்கலைக் கல்வியும் கற்றிருந்தனர் என்பது சேக்கிழார் பெரிய புராணங் கொண்டு நன்கறிய லாம். அந்நூலில் சேக்கிழார் தாம் பல்கலைப் புலவர் என்பதை நன்கு நிலைநாட்டியுள்ளார். எனவே, பண்டைத் தமிழ்க் கல்வி முறையில் பொதுக்கல்வி, சமயக்கல்வி, பல்கலைக்கல்வி என முத்திறக் கல்வி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. அத்துடன் தொழிற்கல்வியும் இருந்தது. புரவித்தொழில், யானைத்தொழில், தேர்த்தொழில், வில், வாள் முதலிய படைக்கலத் தொழில்கள். இத் தொழில்களில் அக்காலத்திற் சைவர்கள் நன்கு பயின்றிருந்தனர் என்பது இயற் பகையார், ஏனாதிநாதர், கோட்புலியார் முதலி யோர் வரலாறுகளிலிருந்து அறியலாம். சத்தியார் கத்தி வைத்திருந்ததம், எறிபத்தர் கோடரி வைத்திருந்ததும் அக்காலத்து அடியார்கள் ஆயுதப் பயிற்சியில் வல்லவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன.

Page 21
(4) "சிவன் கற்றார்கள் நாவினான்" என்றும் "கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே" என்று சிவனையே கலைஞானமென்றும் கூறலை நோக்க,
அப்பர் காலத்தில் கல்வியைப் பற்றிச் சைவர் கொண்டிருந்த மனப்பான்மை நன்கு விளங்கலாம். அப்பரும் சுந்தரரும் சங்க நூல்களை நன்கு பயின்ற சைவர் என்பது தருமிக்குப் பொற்கிழி யளித்தமை, பாரி பற்றிய குறிப்பு இவற்றிலி ருந்து தெரிகிறது. சுந்தரர் காலத்தில் புலவர்கள் பலர் இருந்தனர் என்பதும், அவர்கள் நன்கு படித்தவர்கள் என்பதும் சுந்தரர் பாக்களிலிருந்து தெரிகின்றன. "தண்தமிழ் நூற் புலவர்க்கோர் அம்மான்” என்று சுந்தரர் கூறலிலிருந்து "அக்காலப் புலவர் பலர் சைவரென்பது பெறப்படும். கல்வி உயிர்க்கு இனியது என்பதும், அதனினும் இனியவன் சிவன் என்பதும் சுந்தரர் கருத்து"
(5). திருமூலர் காலமுதல் உமாபதி சிவம் காலம்வரை திருமந்திரம் முதலிய சித்தாந்த நூல்கள் சைவர்களால் நன்கு படிக்கப்பட்டு வந் தன என்பது சென்ற பகுதியில் நன்கு விளக்கப் பட்டது அன்றோ? அருணந்தி சிவாசாரியாரை மெய்கண்டாருடைய தந்தையார் சமயகுருவாகக் கொண்டிருந்தமையும், மாளிகை மடத்து ஆசாரி யரிடம் ஒருவர் உபதேசம் பெற்றமையும் பொது மக்கள் சமயக் கல்வியில் காட்டிய ஆர்வத்திற் கேற்ற சான்றுகளாகும்.
பெண்கள் கல்வி சைவப் பெண்களும் சைவ ஆண்களைப் போலவே கல்வி கற்றிருந் தனர் என்பதற்குக் காரைக்காலம்மையாரே ஏற்ற சான்றாவார். பெண்கள் அம்மானை, பந்தாட்டம் முதலிய பலவகை விளையாட்டுக்களிலும் சிவ
னைப் பற்றிய பாடல்களைப் பாடினர் என்பது சம்பந்தர் தேவாரத்தால் தெரிகின்றது:
 
 

19
“தருந்தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக்
கடுந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
பாட்டயருங் கழுமலமே”
பூக்கொய்தல் முதலிய பலவகை விளையாடல் களிலும் பெண்கள் இங்ங்னமே சிவனது சிறப்பைப் பாடி விளையாடினர் என்பது திருவாசகத்தால் தெரிகிறது. இவை ஆறாம் அதிகாரத்தும் குறிக் கப்பட்டவையே. காரைக்காலம்மையார் பாடல் களில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இருத்தலும், சோழர் காலத்து மாளிகை மடத்து ஆசாரியரிடம் மாணவி ஒருத்தி சமயக்கல்வி பயின்றனள் என் பதும், பெண்களும் சமய சாத்திரப் பயிற்சியு டையராயிருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. திலகவதியார், மங்கையர்க்கரசியார், செம்பியன் மாதேவியார் போன்ற சைவத்தாய்மார்கள் சைவ சித்தாந்த உண்மைகளை அறியாதவர்கள் என்று கூறமுடியுமா?
திருமணம்: மணமகன் வீட்டார்கள் சில பெரி யோரைப் பெண்ணைப் பெற்றோரிடம் அனுப்பி, "இன்ன மகனுக்கு நும்மகளைத் தருதல் வேண்டும் என்று கேட்பர். இதனைத் திலகவதியார், சம்பந்தர், சுந்தரர், கலிக்காமர் திருமணங்களிற் காணலாம். இருதிறத்தாரும் மணமக்களின் குலம், கோத்திரம், குணம் இவற்றை ஆராய்ந்த பிறகே மணத்திற்கு ஒருப்படுவர். பின்னர் உற்றார் - உறவினர்க்கு ஒலை போக்கிக் குறித்த நன்னாளில் திருமணத்தை நடத்துவர். இத்திருமணச் சடங்குகள் பற்றிய விவரங்கள் சம்பந்தர் புராணத்தும், தடுத்தாட் கொண்ட புராணத்தும், காணலாம். திருமணத்தின் போது சங்கு, தாரை, சின்னம், பெருங்காளம், தாளம், வங்கியம், நாதசுரம் முதலிய கருவிகள்
ஒலித்தன. மணமகனும் மணமகளும் பலவகை

Page 22
ஆடையணிகளால் தம்மை அலங்கரித்தல் மரபு. மணமகன் அலங்கரித்துக் கொண்டு மணப்பந்த லுக்குச் செல்லுமுன் சிவாயநம என்று ஐந்தெழுத் தோதித் திருநீறணிதல் மரபு. இங்ங்ணம் பல சடங்குகளுடன் வீட்டில் திருமணம் நடப்பதே பெருவழக்கு கோவில்களில் இறைவன் திருமுன் திருமணம் நடத்தலும் உண்டு என்பது சுந்தரர் வரலாற்றால் அறிகிறோம். அவர் திருவாரூர்க் கோவிலில் பரவையாரையும், சங்கிலியாரைத் திருவொற்றியூர்க் கோவிலிலும் மணந்து கொண் டார். சிவப்பிராமணரான சுந்தரர் கணிகையரான பரவையாரையும், வேளாளப் பெண்ணான சங்கிலி யாரையும் மணந்து கொண்டமையும், சைவப் பெண்மணியான மங்கையர்க்கரசியார் சமணனான பாண்டியன் நெடுமாறனை மணந்துகொண்டதும், தமிழ்ச் சைவனான இராசராசன் தமிழனல்லாத சாளுக்கிய விமலாதித்தனுக்குத் தன் மகளைக் கொடுத்ததும் சைவரது பரந்த நோக்கத்தையும் அரசியல் அறிவையும் குறிப்பனவாகும். சைவ அரசர்கள் பல மனைவியரை மணம் செய்து கொண்டனர் என்பது பல்லவர் - சோழர் வரலாறு களிலிருந்து அறியலாம். ஆதிசைவராகிய சுந்த ரரும் காரைக்காலம்மையார் கணவனும் இரு மனைவியரை மணந்து கொண்டமை காண்கிறோம். எனினும், ஒரு மனைவி வாழ்க்கையே பெருவழக் காக இருந்தது.
மணவாழ்க்கை: மனைவி கணவனுக்குத் துணைவி; கணவன் மனைவிக்குத் துணைவன். கணவனும் மனைவியும் மனமொத்தே இல்ல றத்தை நடத்திவந்தனர். கணவன் மனைவியின் யோசனைப்படியே வீட்டுக் காரியங்களைச் செய்து
வந்தான் என்பது சிறுத்தொண்டர், இளையான் குடிமாறர் இவர்தம் வரலாறுகளிலிருந்து அறிய லாம். மனைவி, கணவன் அருகிருந்து உண்பித்
 
 

தல் வழக்கம். கணவன் செய்யும் சிவத்தொண்டு களுக்கு மனைவி ஆதரவளித்தல் வழக்கம். இதற்கு நமிநந்தியடிகள் போன்ற நாயன்மார் வரலாறுகளும் பல்லவ - சோழ அரசர்கள் வரலா றுகளும் ஏற்ற சான்றாகும். முதலாம் இராசராசன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிப் பல நிவந் தங்கள் விட்டபொழுது அவனுடைய தமக்கை, மனைவிமார் ஆகியோரும் அதே கோவிலுக்குப் பல அறங்கள் செய்தனர் என்பதும், செம்பியன் மாதேவிச் சிவன் கோவிலுக்குச் செம்பியன் மாதேவியாருடைய மருமக்கள் அனைவரும் அறங் கள் செய்தனர் என்பதும் சைவக் குடும்பத்தின் ஒருமைப்பட்ட சமயப்பற்றை நன்கு விளக்கும் சான்றுகள் ஆகும். கணவன் ஒழுக்கம் கெட்டவ னாயின் மனைவி அவனை அறவே வெறுத்தாள் என்பது திருநீலகண்டர் வரலாற்றிலிருந்து அறிய லாம். கணவன் சமயத்தில் அழுத்தமான பற்று அற்றவனாயினும் மனைவியின் சிவத்தொண் டுக்கு ஊறு செய்யவில்லை என்பது காரைக்கால் அம்மையார் வரலாற்றால் நன்கறியலாம். சமண னான கணவன் அறியாது சிவபூசை செய்த மனைவியார் மங்கையர்க்கரசியார் ஆவார். ஆயி னும் இம் மனைவியர் தம் கணவரை முழு அன் புடன் நேசித்தனரே அன்றி வெறுத்திலர். சிவபூசை யில் கணவனுடன் ஒத்துழைத்தாற் போலவே, அடியார்களை உபசரித்தலிலும் மனைவி கணவ னுடன் ஒத்துழைத்தாள். பரவையார், சேரமான் பெரு மாளை வரவேற்று உபசரித்தது பெரிய புராணத்திற் படித்து இன்புறத்தக்க பகுதியாகும்:
"பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த அணைந்து
தாமும் எதிர்கொண்டார்."

Page 23
"சோதி மணிமா விரிகையின்கண் சுடரும்
பசும்பொற் காலமளி மீது பெருமாள் தமையிருத்தி
நம்பிமேவி யுடனிருப்பக் கோதில் குணத்துப் பரவையார்
கொழுநனார்க்குந் தோழர்க்கும் நீதி வழுவா வொழுக்கத்து நிறை
பூசனைகள் முறையளித்தார்."
முதலிற் சிவனடியார் பாதங்களை இல்லத் தலைவி நீர்வார்க்கக் கணவன் நீராட்டி, அந்நீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொள்வர்; உள்ளும் கொள்ளுதல் உண்டு. பிறகு உணவு தயாரிக் கப்படும். முதலிற் கறிகள், குழம்பு, ரசம் என்பன தயாரித்த பிறகே இறுதியில் சோறு சமைக்கப்படும். சோறு சூடாக இருத்தல் நலமாதலின், இம்முறை
கையாளப்பட்டது போலும்!
சிவனடியாரை உண்பித்தல்; அடியவர் விருந் துண்ணுமுன் இலைக்கு எதிரில் பீடத்தில் அமர்ந்து, ஐந்தெழுத்தோதித் திருநீறணிந்து, பிறகு வீட்டுத் தலைவன் தலைவியர்க்கும் பிறகு பிள்ளைகட்கும் தந்து பூசிக்கொள்ளச் செய்வர்; அடியவர்க்கு அமுது படைக்கும் இடம் பசுவின் சாணத்தால் மெழுகப்படும்; கோலமிடப்படும்; தீபம் ஏற்றிவைக் கப்படும்; அங்கு நீண்ட வாழை இலை கழுவி, அறுத்த வாய் வலம்பெற வைக்கப்படும். அடிய வர் கையை தண்ணிராற் கழுவி உணவுண்ணத் தொடங்குவார். அவர் விருப்பப்படி வீட்டுத் தலை வனும் மக்களும் உடனுண்பர் வீட்டு அம்மையும் பிறரும் அமுது படைப்பர்.
அக்காலப் பெண்கள் அவசியம் நேரும்
பொழுது கணவர் பெயரைக் கூறிவந்தனர் என்பது இயற்பகையார் வரலாற்றிலிருந்து தெரிகிறது.
 
 
 

21
கணவன் செயல் உலக இயற்கைக்கு மாறுபட்ட தாயினும் சமயச் சார்புடையதாயின், மனைவி மகிழ்ச்சியுடன் கணவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள் என்பதற்கு இயற்பகையார் மனைவியே ஏற்ற சான்றாவார்.
சிறுத்தொண்டர் தாம்வழிப்பட்ட சீராளதேவர் பெயரையே தம் மைந்தர்க்கு இட்டார்; அப்பூதி யடிகள் தமது ஆசாரியராகிய திருநாவுக்கரசர் பெயரையே தம் பிள்ளைகட்கிட்டார். இவற்றிலி ருந்து சைவர்கள் தங்கள் பிள்ளைகட்குத் தங்கள் இவஷ்ட தெய்வங்களின் பெயர்களை அல்லது தம் சமயப் பெரியாரின் பெயர்களை வைத்தல் மரபென்பது தெரிகிறது. பல்லாற்றாலும் சிவத் தொண்டில் கருத்து ஒருமித்து வாழ்ந்த சைவத் தம்பதிகட்குப் பிறந்த குழந்தைகள் சிவத்தொண் டில் உறைந்த உள்ளமுடையராய் இருந்தனர் என்பதற்கு அப்பூதியடிகளின் மூத்தமைந்தனே ஏற்ற சான்றாவான். முதலாம் இராசராசன் பெரிய சிவபக்தன். அவன் தேவாரத்தை முறைப்படுத்தக் காரணமாக இருந்தான். அவன் மகன் அத்தேவா ரத்தை ஒதும் ஒதுவார்களைக் கவனிக்கத் தேவார நாயகம் என்ற அரசாங்க உத்தியோகஸ்தனை நியமித்திருந்தான். இவ்வாறே முதற் குலோத் துங்கன் தில்லையில் தொடங்கிய திருப்பணிகளை அவன் மகனான விக்கிரமசோழனும் அவனுக்கும் பின்வந்த அவன் மகனான இரண்டாம் குலோத் துங்கனும் தொடர்ந்து முடித்தனர். இரண்டாம் குலோத்துங்கன் பெரிய புராணம் பாடக்காரணமாக இருந்தான். அவன் மகனான இரண்டாம் இராசராசன் பெரியபுராண நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாமரரும் அறிந்து அறிவு பெறும்படி தாராசுரம் கோவிலிற் சிற்பங்களாகச் செதுக்குவித்தான். இத்தகைய சைவக்குடும்பங்களாற்றான் அக்காலத் தில் சைவசமயம் நன்கு வளர்ச்சி அடைந்தது.
(நன்றி - சைவ சமய வளர்ச்சி)
米米米米米米米来米米冰冰

Page 24
மண்ணுலகும்
உலக வாழ்வு துன்பம் தருவது, குறையுடை யது, சிறுமை மிக்கது என்பது சில சமயங்களின் கருத்து. எக்குறையுமில்லாத நிறையின்ப வாழ்வு ஒன்று உள்ளது என்று உணர்த்தி அதனைக் காட்டுவதற்கு எல்லாச் சமயங்களும் முனைகின் றன. இந்த முயற்சியில், நாம் வாழும் மண்ணுலகை விடச் சிறந்த உலகாக நாம் காணாத விண்ணு லகைக் கூறுகின்றன.
சைவ சமயமும் இத்தகைய உலகைப் பற் றிக் குறிப்பிடுகிறது. அந்த உலகை அடையும் வழிமுறைகளைக் காட்டி, அதற்கான சாதனை களையும் விளக்குகிறது. அந்த வழிகளில் நின்று விண்ணுலகுக்கும் மேலான ஒரு உலகை அடைந்து அந்தமில் இன்பத்தை அடைய முடியும் என்ற கருத்தையும் சைவ சித்தாந்த நூல்களிலும் திருமுறைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
வள்ளுவமும் இக்கருத்தைக் கொண்டிருப் பதைப் பல குறட்பாக்களில் காணலாம். அதில் வரும் வானோர் உலகு', 'புத்தேளிர் வாழும் உலகு', 'வானோர்க்கு உயர்ந்த உலகு போன்ற தொடர்கள் இதனைக் குறிப்பதாக உள்ளன.
பற்றின் வருவது துண்யம்
மண்ணில் பிறந்திறந்து இன்பதுன்பங்களை அனுபவிப்பதற்கும், விண்ணுலகை அடைந்து இன்பம் மட்டும் துய்ப்பதற்கும் ஒருவன் செய்த வினையின் பயனே காரணம் என்பது பல சமயங்களின் கருத்து. இன்ப துன்பங்கள் கலந்த
மண்ணுலக வாழ்வில் துன்பத்தையே பெரிதும்
 
 

சைவசித்தாந்த கலாநிதி க. கணேசலிங்கம்
கண்டு, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறை களைப் பெளத்தம், சமணம் போன்ற மதங்கள் கூறுகின்றன.
பிறப்பினால் வருவது பெரும் துன்பம். ஆகை யால் பிறவா நிலை கிட்டுமாயின் அதுவே பெரும் இன்பம், பிறப்புக்குக் காரணம் ஆசை அல்லது பற்று. பிறப்பற்ற நிலை பற்றை விடும்பொழுது கிட்டும், என்று பெளத்தம் கூறுகிறது. பெளத்தம் சார்ந்த நூலான மணிமேகலை பின்வரும் அடி களால் இதனைத் தெளிவாக்குகிறது.
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக.
நிலையான உயிர்கள் இல்லை என்ற கருத்துக் கொண்டது பெளத்த மதம், உடலிலும் உள்ளத் திலும் உள்ள சில ஆற்றல்கள் சேர்ந்தே உயிர் போல் இயங்குகின்றன. மரணம் உடலைப்பற்றியது. உள்ளத்திலுள்ள எண்ணம், அவா போன்ற ஆற் றல்கள் மரணத்தின்பின் அழியாமல், வேறு உட லுடன் தோன்றுவதே பிறப்பு, பிறப்பற்ற நிலை யில் இவைகள் எதுவும் இல்லாத, சூனியமான (நிர்வான) நிலை கிட்டும் என்பது பெளத்தத்தின் கொள்கை.
பெளத்தம் போலன்றி, நிலையான உயிர்கள் (சீவர்கள்) உண்டெனச் சமணம் கருதுகிறது. அவை என்றும் உள்ளவை, அறிவுடையவை, இறைத்தன்மை வாய்ந்தவை என்று அது நம்பு கிறது. பெளத்தம் போல் சமணமும் பற்றற்ற பொழுது தான் முத்தி அல்லது விடுதலை கிடைக்குமென்று கூறுகிறது.

Page 25
பற்றற்ற நிலை வருவதற்கும் அதனால் முத்தி கிடைப்பதற்கும் சில வழிகளை இந்த மதங்கள் கூறுகின்றன. அட்டாங்க மார்க்கம் என்று எட்டு உறுப்புக்களான நற்பண்புக் கூறுகள் பெளத்தத்திலே சொல்லப்படுகின்றன. சமணத்தி லும் இவை போன்று சில நற்செயல்கள் கூறப்படு கின்றன. இவை கூறும் நற்பண்புகளும் நற்செயல் களும் சைவம் உள்ளிட்ட பல சமயங்களி லும் வலியுறுத்தப்படுகின்றன. வள்ளுவம் இவை நிறைந்த நல்வாழ்வை, "வாழ்வாங்கு வாழ்தல் என்று கூறி, அத்தகைய வாழ்வை ஒருவன் மேற்கொண்டால் வானுலகில் உள்ள தெய்வமாக மதிக்கப்படுவான் என்கிறது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள் 50)
நல்ல வண்ணம் வாழலாம்
வள்ளுவரின் இந்தக் குறள் இல்லறத்தில் நின்று பயனுள்ள நல்வாழ்வு வாழ்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பெளத்தம், சமணம் போன்று, முத்தி அடைவதற்கு இல்லறத்தைத் துறக்க வேண்டுமென்று வள்ளுவம் கூறவில்லை. சைவ சமயமும் துறவறத்தை எங்கும் வலியுறுத்த வில்லை. தமிழகத்துச் சிவனடியார்கள் பலரும் இல்லறத்தில் நின்று இறைநிலை அடைந்தவர்கள். இல்லறம் என்ற சொல்லே அறம் நிறைந்த மனை வாழ்க்கையைக் குறிப்பிடுகிறது. ஆயினும் சைவ சமயமும் வள்ளுவமும் துறவறத்தை ஒதுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகியலில் துன்பத்தையே பெரிதும் கண்டு, அதிலிருந்து விடுதலை பெறும் வழிகளைப் பெளத்தமும் சமணமும் வலியுறுத்துகின்றன. இன்பம், துன்பம் இரண்டையும் ஏற்று, அவற்றிற் கான காரணங்களைக் கண்டு, இந்த உலகிலேயே பயனுள்ள இன்பவாழ்வு வாழலாம் என்று வள்ளு வரும் சைவ அருளாளரும் காட்டியுள்ளனர்.
 
 

23
அம்மை அப்பராக இருக்கும் சிவபெருமானை வணங்கி மண்ணில் நல்ல வாழ்வு பெறலாம், எண்ணியது கிடைக்கும், நல்ல கதிக்குப் போகலாம் என்று ஞானசம்பந்தப் பெருமான் கூறுகிறார்.
"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்ல."துறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே."
ஆடும் பெருமானைப் பார்த்து ஆனந்தமாக இருக்கிறேன், அதற்காக இந்த மனிதப் பிறவியும் வேண்டுவதே என்று அகமகிழ்கிறார் அப்பரடிகள் மதிசூடும் பெருமானின் திருவடிகளை வணங்கி னதால் மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம், இன்பமாம்' என்று சுந்தரர் ஆனந்தக் கண்ணிர் சொரிகிறார். உலகிலேயே துன்பமற்று இன்பமாக வாழலாம் என்று இந்த அருளாளர் கூறியும் வாழ்ந்தும் காட்டினார்கள். இறைவனின் அருளாகிய திருவடியை அகலாமல் சேர்ந்து இவர்கள் இருந்ததனாலே இத்தகைய வாழ்வைப் பெற முடிந்தது. வள்ளுவர் இதனைச் சுருக்கமாகப் பின்வருமாறு விளக்குகிறார்.
"வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை யில." (குறள் 4)
தேவருலகம்
இன்ப துன்பம் கலந்த உலகியல் வாழ்வி லிருந்து விடுதலை அடைவதே முத்தி என்று பொதுவாகக் கருதப்படுகிறது. முத்தி நிலையில் உயிர்கள் வானுறை தேவர்களாய் ஆகிறார்கள் என்ற கருத்தும் உண்டு. தேவர் உலகு, வானுலகு, விண்ணுலகு, சொர்க்கம் என்ற பல பெயர்கள் இதனோடு தொடர்புடையன. இத்தகைய பெயர் களை வள்ளுவத்திலும் காணலாம்.

Page 26
விண்ணுலகடைந்து வானுறை தெய்வநிலை அடைவதே உயிரின் ஆன்மீகப் பயணத்தின் முடிந்த முடிவாகப் பல சமயங்கள் கருதுகின்றன. சைவ சமயமும் அதன் தத்துவமும் இதனை ஏற்ப தில்லை. ஆயினும், தேவர்கள் பற்றியும் தேவருலகு பற்றியும் அவை பேசுகின்றன.
தேவர்கள், முன்பு தாம் செய்த புண்ணியப் பலனால் அந்த நிலையை அடைந்தவர்கள். அப் பலனுக்கேற்ப வானுலகிலிருந்து இன்பம் அனுப விக்கின்றனர். அவர்கள் என்றும் இந்த நிலையில் இருப்பதில்லை. ஒரு காலப் பகுதியளவு இன்பம் அனுபவித்து, அதற்கான வினைப்பலன் தீர்ந்தபின், மீண்டும் அவர்கள் உலகில் வந்து பிறக்க நேரும். அவர்களின் இன்ப அனுபவத்தையும் அதற்கு வேண்டிய வானுலகையும், அவர்களின் வினைக்கேற்ப, இறைவனே அமைத்துக் கொடுக் கிறான். ஆகவே, நிலைபேறற்ற அவர்களின் நிலைக்குக் காரணமான சிவபரம்பொருளை வணங் குதலே வேண்டத்தக்கது. அத்தேவர்களை வணங் குதலால் எப்பயனும் கிடைப்பதில்லை. இது சைவசித்தாந்தக் கருத்து.
தேவர்களும் இடருறுவர்
இத்தேவர்களையும் சிறு தெய்வங்களையும் வணங்குவதால் எத்தகைய பலனும் கிடையாத தோடு, ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறாகவும் அது இருப்பதுண்டு. இதனால் இவர்களை வணங்கு வதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தைச் சைவ தத்துவ ஞானிகளும் அருளாளரும் பலபடக் கூறி வலியுறுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாகச் சில உரைகள் கீழே தரப்பட்டுள்ளன.
-- - - - - - - - - - மற்றத் தெய்வங்கள்
வேதனைப் படும்; இறக்கும்; பிறக்கும்; மேல் வினையும் செய்யும்; ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே." (சித்தியார் 115)
 
 

சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
(அப்பர் தேவாரம்)
'உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்
லால் எங்கள் உத்தமனே
மற்றுமோர் தெய்வந்தன்னை உண்டென
நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (திருவாசகம்)
வானவரும் சிறுதெய்வங்களும் இறைவனின் ஆணைக்கு உட்பட்டன. ஆதலால் அவர்களை வழிபட்டுக் காலத்தை வீணாக்காமல், பரம்பொரு ளாகிய சிவனை வழிபடுதலே பயன்தரும் என்று பல இடங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாகச் சில வரிகள் வருமாறு:
"எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது" (சித்தியார் 116)
“காண்பவன் சிவனே ஆனால் அவன் அடிக்கு அன்பு செய்கை மாண்பறம், அரன்தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம் வீண் செயல்" (சித்தியார் 117)
தேவர்கள் தமது இன்ப அனுபவம் முடிந்த நிலையில் மீண்டும் மண்ணுலகிற்கு வந்து, ஆன் மீக முன்னேற்றத்திற்கான சாதனைகள் செய்து இறைநிலை எய்தவேண்டும் என்பது சைவ சம யக் கருத்து. இந்த இறைநிலை தேவருக்கும் எட்டாத உயர்நிலை; விண்ணுலகிற்கும் அப்பாற் பட்ட, சிவலோக அனுபவம் பெறும் நிலை அது. திருவள்ளுவர் இதனை வானோர்க்கும் உயர்ந்த உலகு என்று கூறி விளக்குகிறார்.

Page 27
"யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்." (குறள் 346)
"வானோர்க்கு உயர்ந்த உலகம் என்பதால் தேவர்கள் உறையும் விண்ணுலகிற்கும் அப்பால் ஒரு உலகம் உண்டென்பதைத் திருவள்ளுவர் இங்கே உணர்த்துகிறார். இத்தொடருக்குப் பரிமேலழகர் தரும் விளக்கமும் இக்கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது. வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும் என்பது அவர் தரும் விளக்கம். இது சைவசித்தாந்தக் கருத்தென்பது கருதற்பாலது.
ஆணவத்தின் வெளிப்பாடு
தேவர்கள் தாம் செய்த புண்ணியப் பலனால் இன்பம் அனுபவித்தாலும், தாம் உயர்நிலை யில் உள்ளவர் என்ற இறுமாப்புக் கொண்டவர். ஆணவ மலத்தின் வலிமை முற்றாக நீங்காத வர்கள் அவர்கள். திருமாலும் பிரமனும் செருக்குக் கொண்டு சிவனின் அடிமுடி தேடிய கதை இதனை விளக்குவது.
இங்கே, இத்தேவர்கள் பற்றிய சைவசித்தாந்தச் சிந்தனை பயனளிப்பது. முழுமுதற் கடவுளாகிய சிவபரம்பொருள், ஆன்மாக்களின்மேல் கருணை கொண்டு, ஆன்மாக்களை ஈடேற்றுவதற்கு, சிவ தத்துவங்களைப் பொருந்தி, கீழிறங்கி வருகிறது. இதில் சிவனின் ஒன்பது நிலைகளை சிவஞான சித்தியார் விளக்குகிறது. நவந்தரு பேதமாக ஏகநாதனே நடிப்பன்' என்பது அதில் வரும் தொடர். இந்த ஒன்பது நிலைகளில் இறைவன் கொள்ளும் வடிவம் சம்புபட்சத் திருமேனி எனப்படும். உருத்திரன், திருமால், பிரமன் ஆகிய வடிவங்கள் இதில் மூன்று.
உயர்நிலையடைந்த ஆன்மாக்களும் உருத்தி ரன், திருமால், பிரமன் போல் வடிவம் கொள்வ துண்டு. இவர்களின் வடிவம் அனுபட்சத் திருமேனி எனப்படும். இவர்கள் சம்புபட்சத்தைச் சேர்ந்த
 
 
 

25
மூவரிலும் வேறானவர்கள். இவர்கள் பிறப்பிறப் புக்கு ஆளாகும் தேவர்கள். தமது நிலையால் அகந்தை கொண்டவர்கள். அடிமுடி தேடிய மாலும் அயனும் அனுபட்சத்தைச் சேர்ந்த தேவர்களே. இவர்களால் அறியமுடியாத பரம் பொருள் சிவன் என்று மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்கள் கூறுகிறார்கள். 'விண்ணகத் தேவ ரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே என்று அவர் சிவபெருமானை விழிப்பது சிந்தனைக் குரியது.
ஆணவ வலிமை முற்றாகக்கெட்ட போது தான் வீடுபேறு கிட்டும் என்பது சைவசித்தாந்தக் கருத்து ஆணவத்தின் வெளிப்பாடாக உள்ளவை யான்', 'எனது என்னும் மமதையும் அகந்தையு மான செருக்கு. இந்தச் செருக்கு எமது துன்பத் துக்கும் உலக வாழ்வின் சீரழிவுக்கும் அடிப் படையாக உள்ளதென்பது உலக சிந்தனையாளர் சிலரின் கருத்தாகவும் இருக்கிறது. டேவிட்போம் என்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் ஜெ. கிருஷ்ணமூர்த் தியும் இதுபற்றிக் கலந்துரையாடும் பொழுது, கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு கூறினார்:
"I am inclined to observe that the origin is ego, the "me", the "I'." (J. Krishnamurthi & David Bohm, The Ending of Time', Krishnamurthi Foundation India, 1996).
'எனது', 'நான் என்ற அகந்தையே (எமது குறைகளுக்கு) மூலமாக இருக்கிறது என்று நான் எண்ணவேண்டியுள்ளது.
நான்', 'எனது என்ற அகந்தைக்கு மூலமானது ஆணவம், ஆணவம் குறித்த கொள்கை சைவ சித்தாந்தத் தத்துவம் ஒன்றிலேதான் உள்ளது. இந்த அகந்தை அழிந்தாலே, தேவருக்கும் மேலான வீடுபேறு கிடைக்கும் என்ற சித்தாந்தக் கருத்தை வள்ளுவரின் குறிப்பிட்ட குறள் கூறு கிறது. "யான் எனது என்னும் செருக்கறுப்பான்" என்று கூறி விளக்கும் வள்ளுவம் தமிழர் தத்து வமான சைவசித்தாந்தத்தையே வழங்குகிறது.

Page 28
சைவசித்தாந்தம் பயில்வோம்
O சிவப்பி
அசுத்தமாயை
உருவாதி சதுர்விதமாய் ஒன்றொன் றொஷ்வா
உண்மையதாய் நித்தமாய் ஒன்றாய் என்றும் அருவாகிக் கண்மாந்தம் அணுக்கள் யார்க்கும்
ஆவாரமாய் அசித்தாய் அசலமாகி விரிவாய தன்செயலின் வியாபியாய் எல்லாம்
விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை ஒடுங்க வருகாலம் உயிர்களெல்லாம் மருவிடமாய் மலமாய் மன்னியிடும் அரனருளால் மாயை தானே. 22
இ-ள்: மாயை தானே - அசுத்தமாயையானது, உருஆதி சதுர்விதமாய் - தனு, கரணம், புவனம், போகம் என்னும் நான்கு விதமாய்க் காரியப்பட்டு, ஒன்றொன்று ஒவ்வா உண்மையதாய் - ஒன்றோ டொன்றொல்வாத தத்துவங்களாய், நித்தமாய் - காரண ரூபத்தில் அழியாததாய் என்றும் உள்ள தாய், ஒன்றாய் - ஒரு பொருளேயாய், என்றும் அருஆகி - எம்பொழுதும் உருவமின்றி இருப்பதாய், கன்மாந்தம் அணுக்கள் யார்க்கும் ஆவாரமாய்கன்மம் அனுபவித்து முடியும் வரையும் உயிர்கள் எல்லாவற்றுக்கும் மயக்கம் செய்வதாய், அசித்தாய் - சடமாய், அசலமாகி - சலனமற்றதாய், விரிவாய தன் செயலின் வியாபியாய் - தன்னிடத்திற்றோன் றிப் பரந்த பொருள்கள் எல்லாவற்றிலும் வியாபித்து நிற்பதாய், எல்லாம் விரிந்தவகை புரிந்த அடை வின் மேவி - எல்லாக் காரியங்களையும் விரிந்து தோன்றச் செய்த முறையிற் பொருந்தி, அவை ஒடுங்க வருகாலம் - அவை ஒடுங்குகின்ற சங் கார காலத்திலே, உயிர்கள் எல்லாம் மருவிடமாய் - உயிர்கள் எல்லாம் பொருந்தியிருக்கும் இடமாய், மலமாய் - மும்மலங்களில் ஒன்றாய், அரன் அருளால் மன்னியிடும் - சிவசத்தியினாற் காரியப் படுவதாய் நிலைபெறும் எ-று.
 
 

ரகாசம்
மட்டுவில் ஆ நடராசா
மாயை என்பது பிரபஞ்சமெல்லாம் தன்னிடத் தில் ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் காரணமா u_616 6_TB6.
LDT60)UI - LDTUIT, LOT - 965|G5560, u III - தோன்றுதல், அசித்து - சடம், அறிவில்லாதது. அசலம் என்பதற்கு விகாரம் இல்லாதது எனப் பொருள் கூறினும் பொருந்தும்.
மாயையிலிருந்து தோன்றுந் தத்துவங்கள், தூலம் சூக்குமம் என இருவகைப்படும். அவை ஒன்றோ டொன்றொல்வா உண்மையதாய் இருக் கும். உண்மை - தத்துவம், ஒன்றோடொன்றொல் வாமையாவது, பூதங்கள், தன்மாத்திரை, அகங்காரம், புத்தி, பிரகிருதி, கலாதிகள் என்பன முறையே ஒன்றிலும் பார்க்க மற்றது சூக்கும மாயிருக்கும். இப்படியே இந்திரியம் அந்தக் கரணம், உள்ளந்தக்கரணம் முதலியவையும் ஒன்றுக்கொன்று சூக்குமமாயிருக்கும்.
அந்தக் கரணங்கள் மனம், புத்தி, அகங்காரம் என்பன உள்ளந்தக் கரணங்கள் கலை, வித்தை, அராகம், புருடன் என்பன.
இறைவன் உயிர்களுக்குத் தநு, கரண, புவன போகங்களைத் தருதல் கன்ம அனுபவத்தின் பொருட்டேயாகும். கன்மம் இல்லையாயின் அதை "அநுபவித்தற்கு வேண்டிய தநுவாதிகள் வேண் டப்படா. தநுவாதிகள் இல்லையாகவே அவற் றால் வரும் மயக்கம் உண்டாகாது. அதனால், கன்மாந்தம் அணுக்கள் யார்க்கும் ஆவாரமாய் என்றார்.
மாயை காரண ரூபத்தால் உயிர்களை மயக்கி, காரிய ரூபத்தாற் பயன்படும். காரண ரூபத்தாற் பயன்படாத நூல், தன் காரியமாகிய புடைவையாய்ப் பயன்படுதல் காண்க.

Page 29
புவனம் - உலகம், போகம் - உயிர்கள், இன்ப துன்பம் அநுபவித்தற்கேதுவான பொருட்கள்.
மாயை கலாதி தத்துவங்களால் அறிவை விளக்கும். போக நுகர்ச்சியின் பொருட்டு மயக்கம் செய்யும். அதனால் மாயை மலம் எனப்படுகின்றது.
மாயை அறிவில்லாத சடமாகையால் தானாகக் காரியப் படமாட்டாது. அது சிவசக்தியின் சங்கற்பத் தாற் காரியப்படும். அதனால், அரனருளால் மன்னியிடும் என்றார். அருள் - சிவசத்தி.
என்னையிது எனின் உலகுக் குபாதான மில்லை
இறைவனல தெனின் அசித்துச் சித்தினிடத் துதியா, மன்னியுள தேல்முதல்வன் என்கொல் என்னின் மாயைதான் அசித்துருவாய் மருவ மாட்டா தன்னவனும் இதுவொழிய ஆக்க மாட்டான்
அசத்தனாம் எனின்அதுவும் அவன்போல் நித்தம் முன்னவன்அவ் வசித்தைவிரித் தெவையும் ஆக்கும்
முதன்மைஅது கொடுத்ததென மொழிந்தி டாரே, 23
இ=ள் என்னை இது - மாயை என்னும் இப் பொருள் எதற்று? உலகுக்கு உபாதானம் இறை வன் அலது இல்லை எனின் - உலகம் தோன்று வதற்கு முதற்காரணம் இறைவனல்லது வேறொன் றும் இல்லை யென்று நீ சொல்லின், அசித்து சித்தினிடத்து உதியாது - அசித்தாகிய பிரபஞ்சம் சித்தாகிய பிரமத்திலிருந்து தோன்றாது, மன்னி யுளதேல் முதல்வன் என்கொல் என்னின் மாயை, பிரபஞ்சத்துக்கு முதற்காரணமாகப் பொருந்தியுள்ள தாயின் முதல்வன் வேண்டப் படுவது எதற்காக என்று கேட்டால், மாயை அசித்து தான் உருவாய் மருவ மாட்டாது - மாயை அறிவில்லாத சடமாகையால் அது தனு, கரண, புவன போகங்களாய்ப் பொருந்தமாட்டாது. அன்னவனும் இது ஒழிய ஆக்கமாட்டான். அந்த முதல்வனும் இந்த மாயை இல்லாமல் பிரபஞ் சத்தை உருவாக்கமாட்டான், அசத்தன் ஆம் என்னின் - அதனால் அந்த முதல்வனும் மாயை யைப் போலப் பிரபஞ்சத்தை ஆக்கும் ஆற்றல் அற்றவனாவான் என்னில், அதுவும் அவன் போல்
 
 

நித்தம் - அந்த மாயையும் அவனைப் போல அனாதியானது, முன்னவன் அவ்வசித்தை விரித்து எவையும் ஆக்கும் - முதல்வன் அசித்தாகிய அந்த மாயையை விரியப்பண்ணிப் பிரபஞ்சம் எல்லாவற்றையும் ஆக்குபவன், முதன்மை அது கொடுத்தது என மொழிந்திடாரே - ஆதலால் பிரபஞ்சத்தை உண்டாக்கும் முதன்மையை அந்த மாயையே முதல்வனுக்குக் கொடுத்ததென்று அறிவுடையோர் கூறமாட்டார் எறு.
பசு, பாசங்கள் தனிப் பொருள்களல்லவென் றும் அவை சிற்சத்தியின் பரிணாமமே யென்றுங் கூறும் சிவாத்துவித சைவரும், பிரபஞ்சத் தோற்ற ஒடுக்கங்களுக்குப் பிரமமே முதற்காரணமென் னும் ஏகான்ம வாதிகளும் இச்செய்யுளால் மறுக்கப் ULL 60TÜ.
இவர்கள் சிலந்தியிலிருந்து நூல் தோன்றி ஒடுங்கினாற்போலவும் வானில் மின்னலும் இடியுந் தோன்றி ஒடுங்கினாற் போலவும் கடலில் அலை தோன்றி ஒடுங்கினாற் போலவும் கர்த்தாவிடத்திலே பிரபஞ்சம் தோன்றி ஒடுங்கும் என்பர்.
படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நரராய்ப் பண்ணியதென் முன்னைவினைப் பான்மை என்பர் அடுத்தவினை உளதாயின் இறைஏன் என்னில் அசேதனமற் றவைஆவிக் கமைத்த தாகும் எடுத்தவினை உருவுறுவ துயிரேல் தானே
இருவினைக்குத் தக்கஉடல் எய்து மென்னில் சடத்திரளும் கர்த்தாவாய் அறிவொன் றில்லாத்
தன்மையனும் கூடவொரு சங்கை யின்றே, 24
இ=ள் படைத்தது ஒருபடி இன்றி பறவை பசு நரர் ஆய் பண்ணியது என் என்னில் - இறைவன் பிரபஞ்சத்தைப் படைக்கும்போது ஒரே விதமாகப் படைக்காமல் பறவை விலங்கு, மனிதர் எனப் பலவேறு விதமாகப் படைத்ததேன் என்று கேட் டால், முன்னை வினைப் பான்மை என்பர் - முன் னர் செய்த கன்மத்துக் கீடாக அப்படிப் படைத்தா ரென்று பெரியோர் கூறுவர், அடுத்தவினை உள தாயின் இறை ஏன் என்னில் - உயிரைக் கூடின

Page 30
2.
கன்மம் உளதாக அதற்கேற்பப்படைப்பு நிகழுமா யின் இறைவன் எதற்கென்று கேட்டால், அசேதனம் - அவ்வினை அறிவில்லாத சடமாகும் (அதனால் அது படைத்தற் றொழிலைச் செய்ய மாட்டாது), அவை ஆவிக்கு அமைத்தது ஆகும் - அவ்வு டம்புகள் உயிர்களுக்கு அவை செய்த கன்மத்துக் கீடாக இறைவனால் விதிக்கப் பட்டனவாகும், எடுத்த வினை உரு உறுவது உயிரேல் - முன் செய்த வினைக்கேற்ற உடலைப் பொருந்துவது உயிரானால், தானே இருவினைக்குத்தக்க உடல் எய்தும் என்னில் - அவ்வுயிரே தான் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்ற உடலைப் பொருந்து மென்றால், சடத்திரளும் அறிவு ஒன்று இல்லா தன்மையனும் கர்த்தாவாய்க்கூட ஒரு சங்கை இன்றே சடமான மாயா காரியங்களின் திரட்சியான உடலும் தானே அறிவதற்கென வொன்று மில்லாத இயல்பினையுடைய உயிரும் கருத்தாவாய்க் கூடுவதற்கு ஒரு தகுதியும் இல்லை எ-று.
"படைத்ததொரு படியின்றிப் பறவை பசு நரராய்ப் பண்ணியதென்" என்று உலகாயதனும் "அடுத்தவினை உளதாயின் இறை ஏன்' என்று நிரீச்சுர சாங்கியனும் வினவுவர். அவர்களது வினாக்களுக்கு விடையளிக்கிறது இச்செய்யுள்.
அல்லல்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன் அருவினைகள் அருத்துதற்கோ வினையோ அன்றிச் சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால் ஒல்லைவரு மெனின்உளதாம் உயிருண் டாவே உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம் நெல்லின்முளை தவிடுமிபோல் அனாதி யாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே, 25
இள் ஈசன் - இறைவன், உயிர்க்கு அல்லல்மிக இவை அணைத்தது - உயிர்களுக்கு மிகுந்த துன்பமுண்டாகும்படி வினையையும் அதற்கீடான உடலையும் சேர்த்தது, அருவினைகள் அருத்து தற்கோ - அருவமாய் வந்து கூடுகின்ற வினைப் பயனை ஊட்டுவதற்காகவோ, (அப்படியாயின்)
 
 

சொல்லி வரும் வினையோ அன்றி மாயையோ அணுவை முந்த சூழ்ந்தது - சொல்லப்பட்டுவரும் வினையோ அல்லது மாயையோ உயிரை முதலிற் பொருந்தியது, எனும் உரை - என்னும் பயனற்ற வினா, முதல் ஓர் தொடக்கு இலார்பால் ஒல்லை வருமெனின் உளதாம் - முன்பு ஒரு பந்தமும் இல்லாதவரிடத்தில் இந்த மலங்கள் விரைந்து வந்து பொருந்துமாயின் உண்டாகும், உயிர் உண்டாவே மலம் உளது - உயிர் எப்போது உண்டோ அப்போதே ஆணவ மலமும் சகசமா யுள்ளது, மலம் உளதாய் ஒழிந்த எல்லாம் (உள) - ஆணவமலம் உண்டாகவே அதைத் தவிர்ந்த கன்ம மலமும் மாயா மலமும் உண்டாம், நெல்லின் முளை, தவிடு, உமி போல் அனாதி ஆக நிறுத்திடுவர் - இம்மலங்கள் நெல்லிடத்தில் முளையும் தவிடும் உமியும் இருப்பது போல அனாதியாயிருக்குமென்று சொல்வர், இது சைவம் நிகழ்த்தும் ஆறே - இது சிவாகமங்கள் சொல்லும் முறையாகும் என்று.
இச்செய்யுளில் வரும் உவமான உவமேயங்கள்:
உவமானம் S. 6(3LDutb
(!pങ്ങണ് - 856ðILDLb தவிடு - LDPT60) U
g) if - ஆணவமலம்
இம்மூன்றுங் கூறப்படவே, இவற்றாற் பற்றப் பட்டிருக்கும் அரிசி உயிருக்கு உவமானம் என்ப தும் முளையுந் தவிடும் உமியும் நீங்கிய அரிசி முளையாதவாறு போல மும்மலங்களும் நீங்கிய உயிர் பிறப்பெடுக்கா தென்பதும் பெறப்படும். சொல்லி வரும் - சொல்லப்பட்டு வரும்.
வினை முந்திய தெனவும் மாயை முந்தியதெ னவும் சொல்வாரும் வினை முந்தியதோ மாயை முந்தியதோ என வினாவுவாரும் உளராதலால், வினையோ அன்றிச் சொல்லிவரும் மாயையோ அணுவை முந்தச் சூழ்ந்ததெனும் உரை என்றார்.
இவ்வுரை எழக் காரணமேயில்லை என்பதைக் குறிப்பிடுவதற்காக "முதல் ஓர் தொடக்கு இலார் பால் ஒல்லை வரும் எனின் உளதாம் என்றார். இச் செய்யுளில் சைவம் என்பது சிவாகமங்களைக் குறிக்கின்றது.
米米米米米米米米米米米米米

Page 31
சித்திரபானு சித்திரை
ஆலய வழிபாரும்
சைவ சமயத்தில் எல்லாக் கிரியைகளும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் பக்தனுடைய ஆத்ம முன்னேற்றத்திற்காக இருக்கின்றமை கண்கூடு சிலவற்றின் விளக்கம் வெளிப்படையாகத் தெரிந்தாலும் சிலவற்றின் விளக்கங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியவையே.
ஆலய பூசை முறையானது எப்படிப் பக்த னுடன் நேரடித் தொடர்புள்ளது என்று பார்க்கலாம். ஆத்ம முன்னேற்றம் என்பது ஆத்மா தன் ஆணவ, கன்ம, மாயை ஆகிய மும்மலக் கட்டிலி ருந்து விடுபட்டுப் பிரிந்து, பதியாகிய சிவத்துடன் இரண்டறக் கலத்தலாகும். ஆத்மாவானது மலக் கட்டில் இருந்து விடுபடுதல் என்பது தன்னையே நன்கு உணர்தலாகும். எமது மனமானது புறச் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு தனக்குள் உள்முகமாகத் திரும்பித் தன்னுள்ளேயே சிவத் தைத் தேடிக்காணவேண்டும்.
அப்படித் தமக்குள் சிவத்தைக் கண்டவர்களே யோகிகளும் ஞானிகளும். இதையே செல்லப்பா வும் "யாரடா நீ? உன்னுள்ளே பாரடா” என்று மகாவாக்கியம் சொன்னார்.
ஒருவன் தனக்குள் உள்முகமாகப் பார்க்கும் போது அவனுக்கு ஒரு இருண்ட சூனியமே தோன்றும். அப்போதும் அவன் தன் தேடலை விடாது தொடர்ந்து தனக்குள் தேடும்போது அவன் மெல்லியமணி போன்ற ஒலியினைத் தன்னுள் கேட்பான். தொடர்ந்தும் தேட அவனுள் ஆயிரக் கணக்கான மின்மினிப் பூச்சிகளைக் காண்பான். இனிய சுகந்தத்தை உணர்வான். தொடர்ந்தும் அவன் தன்னுள் தியானித்து தேட மெல்ல இருட்டானது விலகிப் புகைபோன்ற தோற்றம் பெற்று அதனுள் இருந்து அவன் ஞான ஒளியினைக் கண்டு தரிசித்துக்கொள்ள முடியும்.
 
 

29
ஆத்ம சாதனமும்
வல்வையூர் இரா. முகுந்தன்
இவ்வாறு யோகிகளும் ஞானிகளும் தேடிக் கண்டதாகக் கூறுகின்றனர். இந்தத் தேடல்தான் நாம் தினமும் மூலஸ்தானத்தில் பார்க்கும் பூசை என்பது தெளிவு.
மூலஸ்தானம் - அது யன்னல்கள் அற்ற ஒரு அறை, அதாவது அதனுள் புற ஒளி உள்வர முடியாது, இருண்டது. எமது மனம் கூட இருள்புற ஒளி அற்றதல்லவா? அதுவே மூலஸ்தானம்.
வெளியே பக்தன் நிறைந்த ஆவலுடன் மூலஸ்தானத்தைப் பார்த்தபடி (உள்முகமாக நோக்கி) சுவாமியின் தரிசனத்திற்குக் காத்தி ருக்கின்றான்.
மூலஸ்தானத்திற்குத் திரை போடப்பட்டிருக் கிறது. உள் எங்கும் ஒரே இருட்டு. மெதுவாகக் குருக்கள் உட்செல்கிறார். ஆம், இதோ மெதுவாகக் குருக்கள் கைமணியை மெதுவாக ஒலிக்கிறார். உள்ளே அடுக்குத்தீபம் ஏற்றப்படுகின்றது. உள்ளே ஏற்கனவே போட்ட சாம்பிராணித்துபத்தின் சுகந்தம் பக்தனை எட்டுகின்றது. விலகாத திரையினுள் மின்மினிப் பூச்சிகள் போல் அடுக்குத்தீபம் பக்த னுக்கு மங்கலாகத் தெரிகின்றது. இதோ திரை (அஞ்ஞானத்திரை) விலகுகின்றது. சாம்பிராணித் தூபத்தின் புகையினுள் மூலமூர்த்தியும் அடுக்குத் தீபமும் மங்கலாகத் தெரிகின்றது. புகை சற்று விலகுகின்றது. இப்போது மூலவருடைய அழகிய ரூபம் மிகத்தெளிவாகத் தெரிகின்றது பக்தனுக்கு.
இதேபோலவே எமது அஞ்ஞானத் திரையை விலக்கி நாம் எம்முள்ளே உற்றுநோக்கி எம் முள்ளே உள்ள எம்பெருமானைக் கண்டு களிப் புற்று எமது ஆத்மாவை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வோம்.

Page 32
10.
11.
12.
13.
14.
15.
16.
சிவஞான சுவாமிகளால்.
திருத்துறையூர்.
ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், சங்கார தாண்டவம்.
நின்றாடும் பெருமான் நடராஜர், தியாகராஜர் அமர்ந்தாடும் பெருமான் சோமஸ்கந்தர்.
அதிரா அடிகளால்
பஞ்சவில்வம், நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலங்கை என்னும் ஐந்து இலைகளும் ஆகும்.
உலகெலாம் உணர்ந்து, அஞ்செழுத்தோதி ஏறினார், உய்ய உலகெலாம், என்றும் இன்பம் g) GoG356)Tib.
பிரமாபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம், சீர்காழி.
5,6öTLDT.
சங்கற்பநிராகரணம், உமாபதிசிவாச்சாரியார்.
சிவஞானபோதம்.
இயற்பகையார்.
மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம்,
56O6).
பதினான்கு.
சைவப் பெருமைத் தனிநாயகன்.
இறைவனின் அத்துவித நிலை.
 
 

17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
பிரமம் சிரம் கொய்தது, அந்தகாசுரனை வதைத்தது, தக்கன் வேள்வியை அழித்தது, முப்புரம் எரித்தது, காலனை உதைத்தது, சலந்தரனை அழித்தது, காமனை எரித்தது, யானையை உரித்தது.
3066 LITL6)56.
கதிர்காமம், திருக்கோணேஸ்வரம்,
யாழ்ப்பாணாயன் பட்டணம், அருக்கொணாமலை.
சித்திரை, ஐப்பசி.
வடக்கு வாயிலூடாக,
நக்கீரரால்.
அகத்தியர்.
நத்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை.
அத்திரி, வசிட்டர், காசிபர், கெளதமர், பரத்வாசர், ஜமதக்கினி, விசுவாமித்திரர் என்பவர்கள் விரும்பிய ஒருவரைப்பற்றி 100 சொற்களுக்குக் குறையாமல் எழுதுதல்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
புற இருளைக் களைந்து ஒளிபரப்பும் திருக் கார்த்திகைத் தீபம், அக இருளைப்போக்கி, மெய்ஞானச்சுடர் பரப்பும் தத்துவப்பொருள்.
இறைவனது திருவருள் சிறப்பாக விளங்கித் தோன்றுகின்ற உயர்ந்த இடம்.
சிற்ப நூல்களும், ஆகமங்களும்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமானன்.

Page 33
ಆF(p565F6od
60ᎧᏪ-ᏊᎧ1 ©Ꭽ
செம்மலர் நோன்ருள் சேர வொட்டா அம்மலங் கழீஇ அன்பொடு மரீஇ மாலறநேய மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே.
- சிவஞானபோதம்
நாடு நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே. - திருமந்திரம் 1418
சைவசமயிகள் வழிபடும் இடம், வழிபாட்டுத் தலம் ஆலயம். இது உலக சமயங்கட்கும் பொது அவை வெவ்வேறு குறியீடுகளால் அழைக் கப்படும். சைவ சமயிகள் கோயில், கோவில், ஆலயம், சினகரம், தளி, தலம், சேத்திரம், கோட் டம், என்றெல்லாம் அழைக்கின்றனர். இவற் றில் ஆலயம், கோயில் என்ற பிரயோகங்கள் பிரபல்யமானவை. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை', 'ஆலயந் தொழுவது சாலவும் நன்று என ஒளவையார் பாடியுள்ளார். சைவப் பெருங் குடி மக்கள் சிதம்பரத்தையே கோயில் என்று அழைப்பர். வைணவர்கள் கோயில் என்பது பூரீரங்கத்தையே. பூலோக கைலாயமாய்த் திகழ் வது சிதம்பரம் பூலோக வைகுந்தந்தான் ஹிரங்கம். ஆலயங்கள் மக்கட் சமுதாயத்துடன் மிக நெருக்
 
 

Laoff
முருகவே பரமநாதன்
கமானவை. தமிழினத்தின் பண்பாட்டுக் கோலங் களின் மையம் இவையே. உலகியல் வாழ்வான லெளகீகத்தோடும், ஆன்மீகத்தோடும் ஒன்றித்து நிற்பனவும் இத்திருக்கோயில்களே. இவற்றைப் பாடல்பெற்ற தலங்கள் என்றும், வைப்புத்தலங்கள் என்றும், விசேஷ தலங்களென்றும், சாமானிய தலங்களென்றும், யாத்திரைத் தலங்களென்றும் பலவகையாகப் பேசுவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் தல விசேடங்களாகும். இவ்வண்ணம் மிளிரும் ஆலயங்கள் சமுதாயப் பணிமனைகளாகவும், சேவாக்கிருகங்களாகவும் இயங்கின காலம் ஒன்று இருந்தது. ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பது அப்பர் பெருமான் திருவாக்கு, சமுதாயம் இன்றேற் சமயம் ஏது? ஆலயம் ஏது? நாடு, இனம், மொழி, மதம், இறைவன் அவரவர் பிறப் பினால் அமைந்தவை. இன்றுமொழி, சமயம், நாகரிகம், பண்பாடு, கலாசாரம் மாறினாலும் இனமும், பிறந்த நாடும் நிலைத்துவிடுகின்றன. ஏசியன், ஜமேக்கன், வடநாட்டவன், இந்தியன், திராவிடன், ஆரியன், செவ்விந்தியன் என்ற பிர யோகங்கள் நாட்டையும், இனத்தையும் சுட்டு கின்றன. எனவே எம்மதமும் சம்மதம் என்று பேசு பவர்கள் தமது தாய்ச்சமயத்தை விட்டுவிடு வது இல்லை. மதவெறி, சமயவைரம் (காழ்ப்பு)
பகைமை, வேற்றுமை இன்றிச் சமூகசெளசன்யம் நிலவவும், உடன் இருந்து வாழவும், பேதம்

Page 34
3
இன்றிச் சரளமாகப் பழகவும் பிறசமயங்களை மதிக்கவும் இது வழிவகுக்கின்றது. ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்ற திருமூலரின் வாக்குப் பயன்படும் நிலை இது சமாதான சக
வாழ்வே மக்களுக்குத் தேவை. எனவே ஒவ்வொரு சைவ சமயியோடும் ஒன்றிப் போனவை ஆலயங் கள். ஒரு கிராமத்தின் சிறப்பு ஆலயங்களிலேயே தங்கியுள்ளது. இதனாலேதான் ஊரானோர் தேவ குலம் என்றனர். வரலாற்றுப் பெருமை வாய்ந்த மக்கள் ஒரு ஆலயத்தோடு தொடர்புடையராய் இருப்பர். எனவே வரலாறு படைத்த இனமும், வரலாற்றுப் புகழ்வாய்ந்த ஆலயங்களும் பிரிக்க
முடியாதனவாம்.
இவ்வாலய உற்பத்தி பலதிறப்பட்டன. ஒரு கழகம், ஒரு கிராமமக்கள், துறவி. ஆண்டிபரதேசி, ஞானி, வள்ளல்கள், சிற்றரசர், பேரரசர், தரும வான்கள், அருளாளர்கள், ஏன் தேவர்கள் என்ற பலரால் ஆலயங்கள் எடுக்கப்பட்டன. அவற்றைப் பராமரிக்க, நிர்வகிக்க, பாதுகாக்க அறக்கட்ட ளைகள், நிபந்தங்கள் எழுதியும் வைக்கப்பட்டன. இப்படியான ஆலயங்களை விடச் சுயம்புவாகத் தோன்றிய இறை இல்லங்கள்; தான்தோன்றி ஈசுவரங்கள் எனப் பெயர் பெற்றன. இன்றோ ஆலயங்கள் திறக்கப்படுகின்றன. திறப்பு விழா செய்யுமுன்னரே கும்பாபிஷேக மலரும் தயாராய் விடும். சில தினங்களில் உற்சவம் நடைபெற்றுத் தேர் உற்சவமும் விமரிசையாய்க் கொண்டாடப் படும். அதையடுத்துக் கல்யாண மண்டபத்திறப்பு விழாவும் நடைபெறும். ஈதெல்லாம் வெளிநாட்டு நிகழ்வுகள். இவை வணிகநோக்கம் கொண்ட வையே, தார்மீகம் சைபர். மக்களுக்காக மகா தேவனா, மகாதேவனுக்காக மக்களா? முன்னோர் ஆலயங்களைத் திருக்கோயில் என்றனர். இன்று Hindu Temple ஆய்விட்டது. அப்பர் சுவாமிகள் திருக்கோயில் இல்லாத திருவிலூரும், ஒருக்காலுந்
 

திருக்கோயில் சூழாராகில் எனப்பாடி ஆலய மேன்மையை உணர்த்தி உள்ளார். ஒவ்வொரு கிராமந்தோறும் மக்கள் அங்கேயமைந்த தங்கள் ஊர்க்கோயில்களுக்குத் திருப்பணித் தொண்டு களும் பல சரியைத் தொண்டுகளும் செய்தனர். அதனாற் தம் கர்மவினைகளைத் தேய்த்துப் பிறவியை வேர் அறுத்தனர். மகிழ்வோடும் வாழ்ந் தனர். ஊதிய நோக்கத்தோடு ஆலயம் அமைவதை மாற்றி ஊழியம் செய்யும் தேவஸ்தானங்களே இன்று சமுதாயத்துக்குத் தேவைப்படுகிறது. பயன் கருதாப் பணியே தெய்வீகப்பணி மக்கள் சேவையே மகேசன் சேவை, மக்கள் சேவையே மாதவன் சேவை என்பதை ஆலயங்கள் பிரக்ஞை யில் உள்வாங்க வேண்டும். காலத்தின் தேவை கட்டிடங்களன்று. மக்களின் சமய இழப்புகளை உணர்ந்து அதை நிவர்த்தி பண்ணக் கடவுட் கோட்டப் பொறுப்பாளர் முன்வரவேண்டும். ஆலயங் கள் வெறும் சடங்கு நிலையங்கள் மட்டுமன்று. ஆலயங்கள் கைமாறும் வர்த்தக தாபனங்களன்று. மக்களை வழிப்படுத்தும் கொள்கைகளை உரு வாக்கிச் செயற்படுத்தும் சமய மேம்பாட்டு மைய
முமாம்.
ஆலயங்கள் துவக்கத்திற் கொட்டில்களா யும், குடில்களாகவும்தான் அமைக்கப்பட்டன. 'காலப் போக்கிலவை மாற்றம் அடைந்தன. யாழ்ப்பாணத்திற் பல கற்கோயில்கள் உருவான காலத்திலும் தில்லையம்பலப் பிள்ளையார் கோயில் வட்டக்குடிலாகவே அமைந்திருந்தது. இந்த ஆலய அமைப்பு வளர்ச்சியை நான்காகக் கணித்துள்ளனர்.
1. மண்தளிக்காலம்
2. செங்கற்கோயிற்காலம்
3. குகைக்கோயிற்காலம்.
4. கற்றளிக்காலம்

Page 35
கருங்கல் இல்லாத இடங்களிற் சுண்ணக்கல் லும், வைரக்கல்லும் கட்டுமாணத்திற்குப் பயன் பட்டன. சோழமன்னவர் காலத்திலே ஆலயங்களிற் பல சமுதாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலக் கோயில்கள் கல்வி நிலையங்களாக, கலைக்கூடங்களாக, ஆதுலர்சாலைகளாக, தங் கும் இடங்களாக, நீதி தீர்க்கும் நீதிமன்றங்களாக, கலாசார, பண்பாட்டுக் கழகங்களாக, சேமிப்புக் களஞ்சியங்களாக, மக்களின் மனநிம்மதியைக் கட்டியெழுப்பும் ஆத்மீக இல்லங்களாக, இசை நடனக் கல்லூரிகளாக, வைத்தியசாலைகளாக, விவசாயம் செய்விக்கும் இடமாகத் திகழ்ந்தன. இவையெல்லாம் சமூகசேவையின் மையங்களே. ஆனால் இன்று வெறும் சடங்கு நிலையங்களாக வும், ஆடம்பரவிழாக்கள் எடுக்கும் இடங்களாகவும், பணம் ஈட்டும் சென்ரர்களாகவும் மாறிவிட்டன. அடியார் சேவையே ஆண்டவன் சேவை. மக்கள் சேவையே மகாதேவன் சேவையென்ற சமயக் கோட்பாட்டைப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரே
திருமூலர் எழுதி வைத்துள்ளார்.
படமாடக் கோயிற் பகவற்கொன் றியில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றியில்
படமாடக் கோயில் பகவற்க தாமே.
- திருமந்திரம் 1821
மானிட ஆக்கை வடிவமே கோயில் என்பர். அதேபோல மனித உடம்பே ஆண்டவன் குடியி ருக்கும் கோயில் என்றும் கூறுவர். சிவலிங்கமே உடம்பு என்பதும் தத்துவம். உடம்பு உயிருடன் இணைந்தால் நடமாடும், செயற்படும். சிற்பங்கள் நிறைந்த சிங்காரக் கோயிலிலே, உயிர்க்கு உயிரான உத்தமன் குடிகொண்டு இருக்கிறான். இது அசையாக் கோயில். மனித வடிவம்
அசையும் கோயில், அசைப்பவன் ஆண்டவன்.
 

3
அவனின்றி ஓர் அணுவும் அசையாது. ஒரு துரும் பைக்கூட எம்மால் எடுத்துப்போட முடியாது. நாம் இயந்திரங்கள். அவன் இயந்திரி. ஆக இறைவனுக் குச் செய்யும் அபிடேகம், நிவேதனம், காணிக்கை இறைவனுக்கு மட்டுமே உரியது. ஆனால் உலா வித்திரிகின்ற அவனது அடியார்களைச் சேராது. ஆயின் நடமாடும் கோயிலான மனிதர்களுக்கு நாம் ஏதும் கொடுப்போமாயின் அது, ஆண்டவனைப் போய்ச் சேரும் எது மேலானது? மனித சேவையே
மேலானது. இதையே தாயுமானார்,
"அன்பர்பணி செய்யன்னைஆள் ஆக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே”
எனப் பாடியுள்ளார். பிராமணர்க்கு ஆயிரம் ஆயிரம் வசிப்பிடங்கள் (வீடுகள்) கட்டிக்கொடுத்து என்ன பயன்? அதேமாதிரி ஆயிரக்கணக்கான கோயில்களுக்குக் கோபுரம் கட்டிக் குடமுழுக்குச் செய்துதான் என்ன பிரயோசனம்? இவை எல்லாம் சிவபெருமானின் அருள்பெற்ற சிவஞானிக்கு, ஒருவேளை உணவு கொடுக்கும் தொண்டுக்குச் சமானமாக மாட்டாது என்பது திருமந்திர
வாக்காகும்.
"அகரம் ஆயிரம் ஆரியர்க்கு ஈயில்என் சிகரம் ஆயிரம் செய்துமுடிக்கில் என்
பகரும் ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே.”
- திருமந்திரம் 1824
ஆரியர் - அந்தணர், பிராமணர்; அகரம் - பிராமணர் வீடு; சிகரம் - கோபுரம்; ஊண் - உணவு; நிகர் - சமானம், ஈடு, ஒப்பு.
பசி பொல்லாதது, அதைப் பசிப்பிணி என இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. பசி வந்தி டப் பத்தும் பறந்துபோம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, என மணிமேகலை கூறும்.

Page 36
3.
பசித்தோர் முகம்பார் என்பது பட்டினத்தார்
வாக்கு சாப்பாடு கொடுத்தவனை வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பர். அதனாலே
தான் திருமூலர் "யாவர்க்குமாம் உண்ணும்போது
ஒருகைப்பிடி" என அறிவுரை கூறினார். பெற்றோரை,
உறவினரை இழந்து தாபரிப்பார் இல்லாமல்
வாழும் ஆயிரம் ஆயிரம் அநாதைச் சிறுவர்கள்
பாலுக்கும், பருக்கைக்கும் வக்கின்றி வருந்த,
நாம் பாற்குடங்களைச் சுமந்து, பாலாபிஷேகம்
செய்வது - எவ்வளவு மனிதநேயம் வரண்ட
செயல் என்பதைச் சைவசமயிகள் சிந்திக்க
வேண்டிய காலம் இது. நாம் சேவார்த்திகளாய்
இருந்தாற் போதாது, சேவையாளராகவும் தொழிற்
பட வேண்டும்.
புதிதாக எழுந்த கோயில்கள் உயரிய
இலக்கை முன்வைத்து இயங்கவேண்டும். நோக்கு
இல்லாது ஒரு இலக்கை அடைவது சாத்தியம்
இல்லை. சமகால நம் சமய நிலைப்பாட்டை
உணர்ந்து மக்கள் மத்தியிற் சைவ உணர்வுகளை
விதைத்து, அவர்களை ஒருமைப்படுத்தல்
வேண்டும். நாமெல்லாம் கொம்பியூட்டர் யுகத்தில்
வாழ்கின்றோம். இணையத்தளங்கள் எம்மை
வழிப்படுத்துகின்றன. புதிய தலைமுறையினரும்,
பெற்றோரும் அவ்வழி அறிவியல் நோக்கில்
எதையும் கணிப்பவர்கள். அறிவியல் இல்லாத ஆத்மிகம் ஆபத்தானது எனக் கருதுகின்றனர். இந்த ஆலய உற்பத்திப் பெருக்கம் ஏன்? என்ப தற்குப் பொருத்தமான விடையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி எத்தனை கோயில்கள் வந்தாலும், திசைமாறி, அழிந்துகொண்டிருக்கிற
எமது இளைய பரம்பரையைக் காப்பாற்றுவதற்கு
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எல்லாம்
பொய் என்ற கருத்தும் நம்மிடையே எழாமல்
 

4
இல்லை. சமய ஈடுபாடு நிறைந்தவர்கள் வாழும்
நம் மண்ணிலும் வளரும் இளஞ்சமுதாயத்துக்
கும் - சைவ சமயத்துக்கும் இடையில் ஓர்
விரிசல் - இடைவெளி - வளர்வதாகக்கூறி -
இதற்கு மாற்றுவழி என்ன எனச் சிந்திக்கிறார்கள். இவ்வீழ்ச்சி தொடராமல் இருக்க ஆலயங்கள் புதிய வழிமுறைகளைக் கையாளவேண்டியுள் ளது. கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
துர்க்கை அம்மன் ஆலயச் சேவைகளை மக்கள்
மயமாக்கி - முன்மாதிரியான கருமங்களை மேற்
கொள்கிறார். இது வசதிபடைத்த ஆலயங்
களுக்கு முன்மாதிரி ஆகும். இலண்டன் சிவயோகம்
தர்ம அறக்கட்டளை நிதியத்தின் தன்னலமற்ற
சேவையைப் போல நம் ஆலயப்பணிகள் தேவை
யான பாதையில் விஸ்தரிக்கப்படல் வேண்டும்.
ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் வாழ்பவர்களின்
தாயகச் சந்ததியினர் தாய்மொழியை வாய்மொழி
யாகக்கூடப் பேசக் காணோம். இம்மொழியை
வளர்க்கவும் - நிலைநாட்டவும் ஆலயங்கள் தம்
பங்களிப்பைத் திட்டம் தீட்டிச் செயற்படுத்த
வேண்டியதும் - தலையாய - பணியாகும். பெருந்
தொகையான சைவத் தமிழர் கிறிஸ்தவர்களாக
நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுத்து மக்களை வழிப்படுத்த ஆலயங்களும்
ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
சைவம் சிறக்கவும் சமுதாயம் மேலோங்கவும்
சமயப் பணியும் சமுதாயசேவையும் முக்கியமான
தென்பதை ஆலயங்களும் கருத்திற்கொள்ளல்
நன்று.
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும்.”
(குறள் 435)
米米米米米米米米米米米米米米米米米米

Page 37
LJP-6) JDTD
- டாக்டர் திருமுருக கிருபா
1. "இருந்தால் எழுந்திருக்காத பிள்ளையும் படுத்தால்
எழுந்திருக்காத பெண்ணும் குடும்பத்துக்கு தேவை."
மேலோட்டமாகப் பார்த்தால் இதன் கருத்து
மாறுபாடாகத் தோன்றும்.
ஒரு சிறுவன் தாழ அமர்ந்துவிட்டால் பெரிய வரைக் கண்டு எழுந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. இது அடக்கத்தைக் குறிக்கும்.
ஒரு பெண் எல்லாருக்கும் உணவைக் கொடுத் துவிட்டுக் கடைசியில் படுத்தால் இடையே எழுந் திருக்க வேண்டிய அவசியம் வராது. இது பெண்
னின் தன்மையைக் குறிக்கும்.
2 ஆவதும் பெண்களாலே, அழிவதும் பெண்களாலே"
இந்தப் பழமொழிக்கு பெண்கள் குடும்பத்தை அழித்துவிடுகின்றார்கள் எனப் பொருள் கொள் கின்றனர். இது பிழை பெண்கள்தாம் குடும்பத்தைக் கைதுக்கி விடுகின்றனர். ஆண்கள் குடித்தும், குதிரைப் பந்தயத்துக்குச் சென்று சீட்டாடியும் குடும்பத்தை அழிக்கின்றனர். தாய்க்குலமே சிக்கன மாகக் குடும்பத்தைக் காக்கின்றது.
அழிவதும் பெண்களாலே என்னும் சொற் றொடருக்குக் கணவனுக்கு வரும் துன்பங்களை மனைவி தன் முயற்சியினால் தீர்த்து வைக்கின் றாள் என்பது பொருள். இதற்குச் சான்றுகள் சந்திரவதி, சாவித்திரி வரலாறுகள்.
3. "கொன்றால் பாபம் திண்றால் போகும்."
என்னும் பழமொழிக்கு அடியில் வருகின்ற
உண்மைப் பொருளை உணர்க.
 

35
== * 66 raiseSib
னந்த வாரியார் சுவாமிகள் -
ஓர் உயிரைக் கொன்றால் அந்தப் பாபம் கொன்ற ஓர் ஆத்மாவைத் தொடரும் எமன் அந்த ஆத்மாவைப் பாசக் கயிற்றால் கட்டி, அவன் தசைகளை வாயில் வைத்து, அடித்து நொறுக்கி உண்ண வைப்பான். தன் மாமிசத்தைத் தானே உண்ண வேண்டி வரும்.
வருபவர்களோலை கொண்டு நமனுடைய தூதரென்று
மடிபிடிய தாக நின்று தொடர்போது
மயலதுபொ லாதவம்பன் விரகுடைய னாகுமென்று
வசைகளுட னேதொ டர்ந்து அடைவார்கள்
கருவியதனாலெறிந்து சதைகள்தனை யேயரிந்து
கரியபுன லேசொ ரிந்து விடவேதான்
கழுமுனையி லேயிரென்று விடுமெனும்
- அருணகிரிநாதர்
4. "ஆயிரம் வேரைக் கொன்றவண் அரைவைத்தியன்
ஆவான்." என்பது பழமொழி.
இந்தப் பழமொழிக்கு உண்மையான பொருள்
இது.
இதில் பகரம் வகரமாகத் திரிகின்றது. ஆயிரம் வேரை (மூலிகையை)க் கொண்டவன் அரை
வைத்தியன்.
5. "குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால்
குட்டுப்பட வேண்டும்."
இந்தப் பழமொழி பிழையாக வழங்கப்படுகிறது.
மோதகக்கை என்பது தான் மோதிரக்கை என்று
மருவிற்று.

Page 38
36
மோதிரக்கையால் குட்டுப்பட்டால் உதிரம்
வரும், மோதகக் கையையுடைய விநாயகரிடம் குட்டுப்பெற வேண்டும். இதுதான் இந்தப் பழ மொழியின் பொருள்.
6. "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது"
மொட்டைத்தலை - பிரணவம்; கால் - காற்று; முழம்கால் - ஒருமுழ நீளமான பிராண வாயு,
கால் என்கின்ற பிராணவாயு, முழம் நீளம் வந்து சுழிகின்றது. அப்படியில்லாமல் மொட்டைத் தலையாகிய பிரணவத்துடன் முழம் நீளம் ஒடு கின்ற பிராண வாயுவைத் தடுத்து நிறுத்தவேண்டும். இதுதான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள்.
1. "ஆட்டை யாகத்தில் போடுவது பற்றி"
வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஜம் - பிறப்பு: அ - இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல் முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள் அஜம் என்றால் ஆடு என்று ஒரு பொருள் உண்டு. அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள். இதனை அருணகிரிநாதர்,
"அஜ அநியாயம் செய் வேதியரே" என்று
கண்டிக்கின்றார்.
8. "ஆறிலும் சாவு நுாறிலும் சாவு"
இந்தப் பழமொழிக்கு உண்மையான பொருள்
இது.
 

* தேடினால் அகந்தை ஒட்டம் பிடிக்கும். எஞ்சி நிற்பது ஆத்மாவே - பூரீரமண மகிரிஷிகள்
* இறைவன்தூய பக்தர்களிடம் அதிக அளவில் பிரகாசிக்கிறான். அவதாரபுருஷரை நினைப் பது இறைவனை நினைப்பதற்குச் சமம்.
- பூரீராமகிருஷ்ணர்
* ஆண்டவனை இடைவிடாமல் சிந்திப்பதே பக்தி - இராமானுஜர்
* உலகத்திலுள்ள எல்லாச் சக்திகளையும் விட
ஆன்ம சக்தியே அதிகப் பலமுள்ளதாகும்.
- காந்தியடிகள்
* உண்மை உரைப்பவனுடைய உயிராற்றல் பெருகும். நாளுக்கு நாள் அவன் நல்லவ னாவான். - ரிக்வேதம்
கர்ணன் குந்திதேவியின் வேண்டுகோளின்
படிப் பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.
அப்படியின்றித் துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு. இந்தப் பழமொழியின் உண்மையான
பொருள் இது.
9. "இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவான்.”
இறைவனுக்கு நமது உள்ளத்தை இடமாகக் கொடுத்தால், நம்மில் உள்ள மடம் - அறியா மையை இறைவன் வேரோடு களைந்து விடுவான். ஆகவே நமது உள்ளத்தை இறைவனுக்கு
இடமாகக் கொடுக்கவேண்டும்.
ܬܠ
《( 修个 NZ ༄༡༡

Page 39
பண்ணிசையு
பண்ணிசை, பண்ணும் இசையும் என இரண்டு
அம்சங்கள் கொண்டது.
பண் இசையுமன்று; இசையில் வேறுமன்று. பண் இசையிற் பிறந்து இசையைத் தமிழ் செய் வது. இதனை விளக்குவோம்.
இங்கே இசை என்றது உள் ஒலியை. அது நமது சரீரத்தினுள்ளே ஒலிக்கும் ஒலி.
சூக்குமை, பைசந்தி, மத்திமை வைகரி என்ற வாக்குக்களாய், வைகரியின் விருத்தியான
எழுத்தொலியாய் உள்ளொலி விருத்திப்படும்.
இந்த உள் ஒலியாகிய இசைக்கு, வைந்தகம் என்று பெயர் விந்து சுத்த மாயை. அதிற் பிறந்த மையால் வைந்தவம் எனப்பட்டது.
உள் ஒலியாகிய வைந்தவத்தில் எழுத்தொலி
யாலான பாடல் அமைவதுண்டு. இப்பாடலை ஒலித்திரள் எனலாம். ஒலித்திரளாய பாடல் உள்
ளத் தூய்மைக் கேற்றவாறு உயர்ச்சியுறும்.
சம்பந்தப் பிள்ளையார் அபர சுப்பிரமணியர் தேவ மனித வர்க்கத்தில் பிள்ளையாரின் உள்ளத் தூய்மைக்கு மேலே ஒரு தூய்மையை நினைக்க
(UDLQUITU).
தோடுடைய செவியன் என்ற பாடல் உயர் வற உயர்ந்த உள்ளத் தூய்மையில் விளைந்த ஒலித்திரள். அப் பாடலில் பிள்ளையார் கண்ட மெய்ப்பொருட் காட்சியின் சாயலாகிய இயலைக் காணுகிறோம். நிழற் படத்தைப் பார்த்து ஆளைக் கற்பனை செய்வதுபோலப் பிள்ளையார் கண்ட
காட்சியைக் கற்பனை செய்கின்றோம்.
எங்களுக்கு அப்பாடல் இயற்றமிழ் இயல் -
தன்மை. பிள்ளையார் கண்ட காட்சியின் தன்மை.

இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
விதி வசத்தால் சந்தித்த காதலர் இருவர், தத்தம் நிழற்படத்தை மாற்றிக்கொள்கின்றார்கள். அடுத்த கணத்தில் பிரியும் நிலை நேருகின்றது. அப்பால், அப்படங்களை வைத்துப் பார்த்துக் கொள்வதில் மாத்திரம் அவர்களின் உள்ளத் துணர்ச்சி அமைதியுறுமா? மீண்டும் மீண்டுஞ்
சந்திக்க முயலுவார்களன்றோ!
பிள்ளையார் கண்ட காட்சியின் இயலை,
அவர் அருளிய பாடலிற்கண்டு கற்பனை செய்து, அவர் தந்தையார் அமைதியுறலாம். பிள்ளையாரின் உள்ளத்துணர்வு அவ்வாறு அமைதியுறுமா? அது முன்கண்ட மெய்ப்பொருட் காட்சியை மீண்டும் மீண்டும் தலைப்படக் கிளர்ந்தெழுமன்றோ! அந் நிலையில் பாடலாகிய ஒலித்திரள் நெகிழ்ந்து, நீர்த்திரள் ஆவியாய் மேலெழுவது போல மேலெழா நிற்கும். அப்பொழுது நெகிழ்த்த ஒலியாகிய இசையில், சப்தசுரங்கள் பண் செய்து உபகரிக்கும். பண், இசையிற் பிறந்து, அவ்விசையைத் தமிழ் செய்யும். தமிழ் செய்தலாவது இசையே தமிழாமாறு செய்தலாம். இசை, இசைவிப்பது. உள்ளத்துணர்ச்சியை மெய்ப்பொருட் காட்சி
பால் இசைவிப்பது.
இயல், நிழல்போன்ற சாயலை உணர்த்த, இசை, சாயலின் மூலமான மெய்ப்பொருட் காட் சியை உணர்த்தாநிற்கும். நிழலுக்கும் நிழல் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடாயிருக்கும், இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு இயற்றமிழிலும் அநந்த கோடி மடங்கு மேலானது இசைத் தமிழ்.

Page 40
இத்துணைச் சிறந்த இசைத் தமிழ், பிறர் செவிகளையும் உளப்படுத்த நேரும்போது, சப்த சுரங்கள் சரீரத்துக்குப் புறத்தேயுள்ள புற ஒலியில், இராகம் என்ற உடலைச் செய்து, பண்ணா கிய உயிருக்கு உபகரிக்கும். இராகம், பண்ணி சையை வேண்டிய அளவுக்குப் பெருக்கிப் பயன் செய்யும்.
முன்ன்ர் உள்ளொலி பற்றிப் பேசினோம். இப் பொழுது புற ஒலியென ஒன்று பேசுகின்றோம். இப்புற ஒலிக்குப் பெளதிகம் என்று பெயர். பூதத் தில் பிறந்ததால் இப்பெயர் வந்தது. பஞ்சபூதங்கள், முப்பத்தாறு தத்துவங்களில் இறுதித் தத்து வங்கள். ஒலியைப் பிறப்பிக்கும் முக்கிய தத்துவம் ஆகாயம், அதன் குணம் சப்தம். இச்சப்தமாகிய பெளதிக ஒலி, அர்த்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்தது. வைந்தவ ஒலியாகிய இசை சப்தப் பிரபஞ்சத் தைச் சேர்ந்தது. அன்றி, தத்துவங்களும் தத் துவ மூலமான கலைகளும் பிறக்குமிடமாகிய சுத்தமாயையில் பிறந்தது.
சுத்த மாயைக்குக் கீழே அசுத்த மாயை. அதற்குக் கீழே பிரகிருதி மாயை. அதன் இறு தித் தத்துவம் பூதம். அதிற் பிறந்தது பெளதிக ஒலி.
பிறப்பால் பண்ணிசைக்கும் பெளதிக இசைக் கும் வெகுதூரம். ஆயினும், பண்ணாகிய உயி ருக்கு, இராகம் உடலாய் அமைந்து பேருபகாரம் செய்கின்றது.
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்” என்கின்றார் நாவலர். இதனை நோக்கும்போது, "இராகம் நமக்குக் கிடைத்தது, பண்ணாகிய உயிர்க்கு உறுதிசெய்து, அடையக் கடவதனை அடையும் பொருட்டேயாம்." என்ற
எண்ணம் தோன்றுகின்றது.
இராகம் பண்ணைச் சேராத வழி. உயிரற்ற உடலேயாம். வைந்தவப் பண்ணிசைக்குப்
 

s
பெளதிக இராகம் உடலாய் அமைந்த வழி உளதாம் பயனை அளவிட முடியாது. அது ஆனாயநாய னார் புராணத்தால் அறியத்தக்கது.
ஐந்தெழுத்து மந்திரம் வைந்தவ இசையில் உச்சமானது. அவ்விசையைப் பெளதிக இசை யோடு சப்த சுரங்கள் மூலம் இசைத்து, வேய்ங் குழல் வாயிலாக வெளிப்படுத்தியருளினார் ஆனாய நாயனார். அந்த இசை, ஓரறிவுயிரையும் ஊடுரு வியது; உயிர்களைப் பற்றியிருந்த இருள் விலக, ஒவ்வோர் உயிரிலும் அருள் ஒளி மேலிட்டது.
இவ்வாற்றால் இயற்றமிழ் இயல்பும், இசைத் தமிழ்மேன்மையும் பேசப்பட்டன.
இசைத் தமிழ் வேறு, இசைக் கலை வேறு; இசைக் கலையில் இசை தமிழாதல் இல்லை.
இசைத் தமிழின் பிறப்பு வளர்ப்புப் பேசப்பட் டது. இசைத் தமிழ் சென்று முற்றும் இடத்தில் நாடகத் தமிழ் தொடங்கும். அங்கே பாடல், இசை யாதும் இல்லை. மெளன முத்திரை தான் அங்கே பாஷை அதனைத் தகூழிணாமூர்த்தி சந்நிதியில் காணலாம். தகூழிணாமூர்த்தியின் இருக்கையும், திருக்கைச் சின்முத்திரையுந்தான் நாடகத் தமிழ். அத்தமிழ் பயிலும் மாணவர் முனிவரர் நால்வர்.
நாடகத் தமிழ் வேறு; நாடகக் கலை வேறு. நாடகக் Ecuaు பாடல், இசை உண்டு.
நாடகத் தமிழை ஒளிநெறி என்கின்றார் பிள் ளையார். "ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட் டினை” என்பது பிள்ளையார் வாக்கு.
நாடகத் தமிழுக்குப் பிள்ளையார் அருளிய பெயர் ஒளிநெறி.
ஆகவே,
இசைத்தமிழ்:- ஒலிநெறி.
இயற்றமிழ்:- ஒலித் திரள் நெறி.

Page 41
மூன்றாம் வயசில் பிள்ளையார்பால், உதிக்கத் தொடங்கின ஒலித் திரளாகிய பாடல்கள்.
அவை பதினாறாம் வயசு வரை, ஒலியாகிய பண்ணிசையாய், எழுந்தெழுந்து அலைமோதின. பண்ணிசைப் பிரவாகத்தில், பிள்ளையார் நீந்திக் கொண்டிருந்தார்.
பதினாறாம் வயசில், ஒரு சுப தினத்தில், ஒளிநெறி சோதியாய்க் காட்சியளித்தது. பிள்ளை யார் மணவாளப் பிள்ளையாய், அந்த அரும் பெருஞ் சோதியுட் கலந்தருளினார்.
பிள்ளையார் பாடல்கள் முத்தமிழ்; அவர் - வாழ்க்கையும் முத்தமிழ் இதுநிற்க,
பண்ணுக்கும் இராகத்துக்கும் வேற்றுமை மேலே சொல்லப்பட்டது.
இனி, அவ்விரண்டின் ஒற்றுமை பற்றி ஒன்று 65Tab6TD.
உண்மையில், பண்ணும் இராகமும் ஒன்றே. உள் ஒலியிற் பிறப்பதைப் பண் என்பதும், புற ஒலியிற் பிறப்பதை இராகம் என்பதும் மரபு.
பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்ற
பாகுபாடு இராகத்துக்கு உண்டு. பண்ணுக்கு அப் பாகுபாடு இல்லை.
சப்த சுரங்களோடு கூடிய சம்பூரண இராகத் துக்குப் பண் என்று ஒரு பெயர் உண்டு. ஆனால் வழங்குவதில்லை.
சம்பூரண இராகமாகிய பண் வேறு; வைந்தவ இசையில் பிறக்கும் பண் வேறு இரண்டும் முறையே ஒன்றன் உள்ளும் புறமுமாம்; உயிரம் உடலும் போல.
இனி, இனம் பற்றி, கட்டளை பற்றியும் ஒன்று சொல்லத் தக்கது.
1. பண், இசையிற் பிறந்து இசையைத் தமிழ்
செய்வது.
2. இராகம், பண்ணுக்குக் கவசமாயிருந்து பண்ணி
சையைப் பெருக்குவது.
 

39
* எண்ணற்ற கடவுள்கள் மீதான நம்பிக்கை கடவுள் ஒன்றே என்ற கொள்கைக்கு வழி வகுத்தது. தன்னை முற்றும் இழந்த நிலை யிலேதான் அன்பு தோன்றக்கூடும்.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
* கடவுளே உண்மை, கடவுளை அறிவதே
மனிதனுக்கு நன்மை தருவதாகும்.
- உபநிடதம் * கடவுள் ஒருவரே. எல்லா ஜீவராசிகளும் அவ ருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந் திருக்கிறார். அப்படியிருக்கும்போது, "அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறே" என்று இந்தப் பிரிவினை எல்லாம் ஏன்? - கபீர்தாசர்
3. கட்டளை, பண்ணுக்கு அநாயாசம் அளிப்பது.
அநாயாசம் - ஆயாசம் இன்மை.
கட்டளை, நடை பற்றிய யாப்புப்பேதம். நடையானது பாடுவோருக்கும், பாடும் பொரு ளுக்கும் அவ்வப்போதுண்டாகும் தொடர்பு பற்றி வேறுபடும்.
புராணங்களிலும், காவியங்களிலும் இடையி டையே வேறு என்று இருப்பது போன்றது கட் டளை, வேறுபாட்டை அவதானித்து, ஆயத்தம் செய்துகொண்டு ஒதினால், பண் தடங்கலின்றி இடையீடுபடாமல் இனிது நடக்கும்.
கட்டளையும், பண்ணின் புறத்தோற்றமா கிய இராகமும் ஓதுவார் பரம்பரையில் இருந்து வந்தவை.
ஓர் உயிருக்கு இரண்டு உடல் இருத்தல் சாலாது. இப்பொழுது பண்ணுக்குரிய இராகத்தில் ஒதுவாருக்கிடையில் வேறுபாடு தோன்றியிருப்பது, உயிராகிய பண்ணில் நோய் உற்பத்தியாய் விட் டது என்ற எண்ணத்தை வருவிக்கின்றது. எனினும் ஒதுவார்களுக்குள்ளே பழைய பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்களைப் பின்பற்றுவதே நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரேஒரு வழி.
நன்றி - செந்தமிழ்க் களஞ்சியம்
米米米来来来来来来米来

Page 42
சைவ சமயத்தி கடைப்பிடிக்கும்
கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை, பேராதனை வீதி, கண்டி
அன்றாட வாழ்வில் சைவ மக்கள் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்ன என்பதனை பார்க்க முன்னர் மதம் என்றால் என்ன? அது எமக்கு எவற்றை உணர்த்துகின்றது என்பதனைப் பார்ப்போம்.
சமயம் என்பது வெறும் நம்பிக்கையின் தொகுதியன்று. அது சமூக உறவுகளுடனும் உற்பத்தி உறவுகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. குறிப்பாக நிலவுடமை அமைப்பின் சமூக உற்பத்தி உறவின் ஒரு முக்கிய அங்க மாகும். சமயமானது ஒழுக்கநெறிகளையும் சமூகப் பெறுமானங்களையும் நிலைநிறுத்துகின்றது. தமிழிலே காணப்படும் அறநூல்கள் இவ்வுண் மையை வலியுறுத்துகின்றன. இங்கு அறம் என் னும்போது ஒவ்வொரு மதமும் அதன் நம்பிக்கை, சடங்கு உலக நோக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப அறப்பெறுமானங்களை வற்புறுத்துகின்றது. அந்த வகையில் எமது சைவ சமயமும் அன்றாட வாழ் வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங் களைக் கூறி நிற்கின்றது.
சைவர்களின் வாழ்வில் விரதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. மூன்று வேளையும் உண்ணும் மனிதன் குறிப்பிட்ட சில தினங்களையாவது மனம், பொறிகளின் வழிப்போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றிலும் கட வுளை விதிப்படி மெய்யன்போடு வழிபடுவதுடன், ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்ந்துகொள் ளவும் விரதங்கள் நோற்கப்படுதல் வேண்டும்.
அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ஒரு பிடி அன்னமாவது அன்னதானம் செய்தல்
 

o இசைவரீதி 7ல் அன்றாடம் ஒழுக்கங்கள்
சிவதர்ஷினி சுப்ரமணியம் 12 வர்த்தக பிரிவு
வேண்டும் என்பதை சைவ சமயம் வலியுறுத்து கின்றது. அத்துடன் காலையிலும் மாலையிலும் நேரம் தவறாது சுமங்கலிப் பெண்கள் விளக்கேற்றி வீட்டில் உள்ள அனைவரும் உள்ளத்தில் இறை வனைக் குடியேற்றி சிந்தை கலங்காது தியானிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
சைவ சமயத்தின் சிறப்பு அன்றாடம் கடைப் பிடிக்கும் ஒழுக்கங்களில் அதன் சிறந்த தத்து வங்களில் புலப்படும். சைவத்தின் மிகவும் உயர்ந்த கருத்தாக விளங்குவது "அன்பே சிவம்” என்தாகும். அன்புதான் சிவம் என்கின்றது சைவ சமயம் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதி அவற்றை எல்லாம் இணைக்கின்ற ஒரு இணைப்பாக அன் பைக் காட்டுகின்றது. அந்த வகையில் சைவ சமயம் புலால் உண்ணுவதையும் உயிர்களை வதை செய்வதையும் எமது அன்றாட வாழ்வில் நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்று கூறுகிறது. எமது குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் . அன்றாடம் இறைவனை வணங்கினால் மட்டும் போதாது. எம்மைச் சுற்றி உள்ளவர்களுடைய மனம் கோணாது, கடும் சினம் கொண்டு அவர்களது உள்ளத்தைப் புண்படுத்தாது வாழவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் நெஞ்சத்தி லும் இறைவன் உறைகின்றான். இதனால் ஒரு மனிதனது உள் ளத்தை வதைப்பது இறைவனை வதைப்பது போல் ஆகும். எனவே இப்படியான செயல்களை சைவ சமயிகளான நாம் எமது அன்றாட வாழ்வில் செய்யாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யாதிருக்க என்ன செய்யலாம் என்று சற்றுச் சிந்தித்துப் பார்ப்போமானால் மேற்

Page 43
கூறப்பட்டுள்ளவாறு அன்பு என்னும் ஆயுதத்தை
கையில் ஏந்தவேண்டும். இதைத்தான்,
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரு மறிகிலார் அன்பே சிவமாவதாரு மறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
என்று எமது திருமூலர் பெருமான் அன்பு நெறி பற்றி அழகாகச் சொல்கின்றார். மற்றச் சக்திகளையும் விட அழகானது அன்பு என்பது 666ពិ_GDL.
ஊர் என்று எடுத்துக்கொண்டால் அங்கு கட் டாயமாகக் கோயில் இருக்கும். எம்மால் முடிந்த வரை கோயில்களுக்கு அன்றாடம் சென்று இறைவனுக்கு பூமாலை சாத்தி பாமாலை பாடுதல், கோயில்களில் குப்பைகளை இடுவதையும் தவிர்த்துக் கொள்ளல், பக்கத்தில் இருப்பவர்க ளுடன் ஓயாது கதைப்பதை நிறுத்தி இறைவனிடம் தஞ்சம் புகுதல் வேண்டும். சிறுவர்கள் ஒடியாடுதல் விளையாடுதல் ஆகியவை கோயில்களில் கண் டிக்கப்படவேண்டிய குற்றமாகும். தாய்மார்களும் பெரியவர்களும் கோயில்களில் இவ்வாறு செய்வ தைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். இவையும் நாம் கோயில்களில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளாகும்.
இங்கு தைத்திரிய உபநிடதம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவைகளை இவ்வாறு கூறுகின்றது.
உண்மை பேசு அறம் செய்க ஒதுவது ஒழியேல் அன்னையை தெய்வமாக போற்றுவாயாக தந்தையை தெய்வமாக போற்றுவாயாக ஆசிரியையை தெய்வமாக போற்றுக.
அறநெறி நின்று சத்தியம், அகிம்சை ஆகிய நற்பண்புகளை சைவ சமயிகளாகிய நாம் தினமும் கடைப்பிடிக்க வேண்டும்.
நாம் உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்து கோயில்களுக்குச் செல்லுவதாலும், ஆர்வத்துடன் வணங்குவதாலும் இறைவனைக்
 
 

1
காணமுடியாது. ஆலயத்தைச் சுற்றி அநாதைகள் அமர்ந்து இருக்கின்றனர். கை இழந்தோர், கால் இழந்தோர், வயிற்றுக்கு உணவின்றி வாடி நிற் போர், ஆதரவு இன்றி தவிப்போர், தொழுநோயால் துடிப்போர் இவர்களைப் பார்த்தும் பாராதது போல் சென்று இறைப்பணி செய்கின்றோம். கோயில்களில் மட்டுமே செய்யப்படும் எதுவும் மக்களைச் சேருவதில்லை. எனவே நடமாடும் கோயில்களான நலிந்தோருக்கு உதவுவதே சைவ சமயம் காட்டும் நெறி, ஏழைகளுக்குச் செய்யும் தொண்டு என்று சைவ சமயம் கூறி நிற்கின்றது.
சமயம் வேறு, வாழ்க்கை வேறு என்று இல் லாமல் வாழ்வுடன் இணைந்து மானிட சமுதாயம் உய்யும் வண்ணம் ஒவ்வொருவரும் வாழவேண்டும். உலகில் வாழும் அனைத்து உயிர்களும் நலமாக வாழவேண்டும் என்று நினைக்கவேண்டும். ஆலயங் களுக்குச் சென்று தனக்கு மட்டும் வேண்டாது உலகத்தில் உள்ள அனைவருக்கும் போரில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையரை இழந்து அநா தைகளாக வாழும் மக்களுக்காகவும் நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்பட ஒவ்வொரு தனி மனித னும் அன்றாடம் பிரார்த்திக்க வேண்டும்.
கல்வி அறிவு அற்றவர்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கல்வி அறிவு புகட்டுவது சிறந்த தர்மமாகக் கொள்ளப்படுகின்றது. பொருளா தார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களாய் இருக்கின்ற மக்களை இனங்கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஆவன செய்தல் வேண்டும்.
எம்மவர் மத்தியிலே காணப்படும் மூட நம்பிக் கைகளை அவர்களிடமிருந்து நீக்குதல் வேண் டும். சாதிப்பாகுபாடு தகர்த்து எறியப்பட வேண்டும். சைவ சமயம் பற்றியும் அதன் நோக்கம், அதன் கொள்கை, ஒழுக்கங்கள் ஆகியவற்றை அறியாது காணப்படுபவர் மத்தியிலே சைவ சமயம் பற்றிய அடிப்படை அறிவினை வளர்த்தல் வேண்டும்.
சைவ சமயத்தில் அன்றாடம் சமூகப் பணிகள் சமயப் பணிகள் செய்யுமாறு வலியுறுத்தப்படு

Page 44
4.
கின்றது. இந்துமத உண்மைகளைச் செவ்வனே
விளங்கிக் கொள்வது, ஒடுங்கிய மனப்பான்மை ஒழிந்து பரந்த மனப்பான்மை ஏற்பட உதவும். பெரும்பாலான சைவர்களுக்கு சைவ சமயம் பற்றிய அடிப்படை அறிவு இல்லை. இந்நிலையில் சமய நிறுவனம், பூசை, விழா முதலியவற்றில் மட்டும் இருந்து விடாது சைவ சமய அறிவையும், உண்மை உணர்வையும் பொதுமக்களிடம் பரப்பும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
சமயமும் கல்வியும் நெடுங்காலமாக இணைந்து வளர்ந்தவை என்பதனையும் அறி யாமை ஆபத்தான எதிரி என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே முதலில் குறிப்பிட் டதுபோல் அறியாமையைப் போக்குவதும் ஒரு சிறந்த ஒழுக்கமாகக் கொள்ளப்படுகின்றது.
படமாடக் கோயில் பகவற்கொன் றியில் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றியில் படமாடக் கோயில் பகவற்க தாமே.
என்று திருமூலரும், சமயம் வெறும் வயிற் றுக்கு உரியதல்ல என்று இராமகிருஷ்ண
* சுருக்கெழுத்தும் கைரேகையும் அவற்றைப் படித்தவனுக்குத்தான் தெரியும், மற்றவ னுக்கு அவைகள் வெறும் கோடாகத்தான் தெரியும். அதுபோல் கோயிலில் இருக்கும் கடவுளின் திருவுருவம் பக்தி உடைய வனுக்குத்தான் தெய்வமாகத் தெரியும்.
மற்றவனுக்குக் கல்லாகத்தான் தெரியும்.
- வாரியார்
* அஞ்சேல்! இறைவன் உன்னைப் பாதுகாத் துக் கொண்டே இருக்கிறான். அவனுக் குரிய பணிகளைச் செய். தினந்தோறும் சிறிது வேலை செய்தாலும், அது மனத்தி லிருந்து வீணானநினைவுகளை நீக்கிவிடும். - சாரதாதேவி
 

பரஹம்சரும், கடவுளை அடையச் சிறந்த வழி மனிதருக்கு சேவை செய்வதே என்று சுவாமி விவேகானந்தரும் கூறியிருப்பதன் தாற்பாரியங் களைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
'அன்பினும் ஆர்வமுடைமை' என்றார் திருவள் ளுவர். சைவ சமயப் புரோகிதரும் தர்மகர்த்தாக் களும் மட்டும் இன்றி, சைவ சமயிகள் யாவரும் நடமாடும் கோயில்களான உயிர்களிடத்து ஆர்வ முடையவர்களாகவும், எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் மனப்பாங்கினராகவும் செயற்படின் இந்துமதம் செழித்து இன்றைய உலகுக்கு அர்த்தமுள்ளதாகத் துலங்கும்.
கீதை எழுந்த இடம் போர்க்களம். போர்க் களத்தை விட்டு விட்டு என்னுடன் வா என்று கண்ணன் சொல்லவில்லை. கண்ணன் சொல் கின்றான் "நீ வாழவேண்டியது அவசியம். உனது வாழ்க்கைக்கு ஒரு நோக்குண்டு. இது தான் சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய பணி. அந்தப் பணியைப் புரியும்போது பந்த பாசங்க ளுக்கு மயங்காதே. கோஜழத்தனத்தைக் கொண்டு வாழ்க்கையை விட்டு விலகியோட முயலாதே." இங்கும் கடவுளை அடைய "சமுதாயத்தொண்டு ஒன்றே வழி" என்பதனைக் காணுகின்றோம்.
எனவே ஆறுமுகநாவலர் தமது இரண்டாம் பால பாடத்தில் "இந்தச் சரீரம் நமக்குக் கிடைத் தது, நாம் கடவுளை வணங்கி முக்தியின்பம் பெறும் பொருட்டேயாம்” என்கின்றார். எனவே நாம் வாழும் வரை சைவ சமயம் கடைப்பிடிக் கும் ஒழுக்கநெறிகளைத் தவறாது கடைப்பிடித்து இறைவனை மெய் அன்போடு வணங்கி முக்தி யின்பம் பெறுவோமாக! அன்றாட சைவ சமய ஒழுக்கங்களுக்கு ஏற்ப நடந்து சைவ சமயத்தைப் புரிந்துகொண்டு ஒழுகவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.
குறைவிலாது உயிர்கள் வாழ்க!
米米米米米米米米米米米冰米

Page 45
சித்திரை
பேசப் பெரிதும்
"பேசப் பெரிதும் இனியாய் நீயே" என்பது வாய்மை திறம்பாத வாகீசர் வாக்கு வாகீசர், திருநாவுக்கரசு, மருணிக்கியார், உழவாரப்படை யாளி என்னும் பெயர்கள் யாவும் திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக் கரசு நாயனாரைச் சுட்டுவதாகும். மேலே குறித்த வார்த்தை திருவையாற்றுத் திருப்பதிகத் திருத் தாண்டகத் திருப்பாடல் ஒன்றில் வருவதாகும். திருத்தாண்டகம் ஆறாம் திருமுறை என்பதைச் சைவ உலகம் நன்கு அறியும்.
பேசப் பெரிதும் இனியாய் நீயே என்பது ஒரு திருத்தாண்டகத்தில் வரும் வார்த்தை ஒன்றாக இருப்பினும் அது நாவரசர் இறைவனோடு பழகிய இன்ப அனுபவச் சிந்தனையாகும்.
சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனியுடையவர். வாக்கும் மனமும் இல்லா மனோலயம், சொல்லும் பொருளும் இறந்த சுடர் சொற்பதம் கடந்த அற்புதச் சோதி.
கருணைக்கடலாகிய அப்பெருஞ் சோதி நம் மோடு பேசுவதற்கு வாயுண்டா? நாம் பேசுவதைக் கேட்பதற்குக் கடவுளுக்குச் செவியுண்டா? என்ற வினாக்களைப் பகுத்தறிவு ஆராயும். அந்தப் பகுத்தறிவு வினாக்களுக்கு எல்லாம் மறைமுகமாக விடை இறுக்கும் தன்மை போல அமைகின்றது. "பேசப் பெரிதும் இனியாய் நீயே" என்ற வாக்கு.
நால்வர் நல்லுபதேசங்களான முத்தமிழ் வேதத் திலும் சிவபிரானோடு இனிக்க இனிக்கப் பேசிய அமுத வாக்குகளை ஆங்காங்கே பரக்கக் 35T600T6 TLD.
கல்லுஞ் செம்பும் கதைக்குமா? கருவறை மூர்த்தி எம்மோடு பேசுமா? என்ற வாதங்களுக்கு அப்பால் நின்று திருநாவுக்கரசு நாயனார் சிவபெருமானோடு பெரிதும் இனிதாகப் பேசிய தேவாரத் திருப்பாடல்களைக் காண்போம்.
இறைவனோடு நாயனார் பேசிய தன்மைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நாயனார் இறைவனோடு உரையாடியமை. இரண்டாவது,
 
 

இனியாய் நீயே!
சிவ. சண்முகவடிவேல்
இறைவன் நாயனாரோடு உரையாடியமை, மூன்றா வது இறைவனும் நாயனாரும் கலந்து பேசியமை.
மேலே காட்டிய மூன்று தன்மைகளிலும் முதலாவதாக நாயனார் இறைவனோடு உரையாடி யமைக்கான தேவாரப்பாடல் இவை போல்வன:
1. ஒசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதி
2. பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற்கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னர் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே
இவ்வாறான திருமுறைப் பாடல்களில் இறை வன் பதிலாகப் பேசிய செய்திகள் இல்லை. ஆயினும் திருத்துங்கானை மடத்துச் சுடர்க் கொழுந்தினிடம் செய்த விண்ணப்பத்தைச் சிவக் கொழுந்து திருச்செவியில் ஏற்றுக்கொண்டதால் இலச்சினை பெற்றார் என்னும் உண்மை பெரிய புராண வாயிலாக அறியமுடிகிறது.
நீடுதிருத்துங்கானை மாடத்து நிலவுகின்ற, ஆடகமேருச்சிலையான் அருளாலோர் சிவபூதம், மாடொருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில், சேடுயர்மூ விலைச்சூலம் சினவிடையி னுடன்சாத்த"
அதேபோலத் திருமறைக்காடு தன்னில் திருக் கதவம் திறக்க விண்ணப்பிக்கின்றார்.
"அரக்க னைவிர லார்அடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கத வந்திறப் பிம்மினே." நாயனாருடைய வேண்டுதலுக்குப் பதில் திருவாய் மொழியாக வரவில்லை. செயல் நிகழ்

Page 46
4
வாகத் திருக்கதவம் திறக்கப் பெற்றமையை பெரிய புராணத்தினால் அறிகின்றோம்.
"வேத வனத்தின் மெய்ப்பொருளி னருளால் விளங்கு மணிக்கதவங் காதலன்பர் முன்புதிருக் காப்பு நீங்கக் கலைமொழிக்கு நாதர் ஞான முனிவருடன் றொழுது விழுந்தார் ஞாலத்து ளோத வொலியின் மிக்கெழுந்ததும்பரார்ப்பு மறையொலியும் (திரு 269) இனி இறைவனோடு உரையாடியமைக்கான எடுத்துக்காட்டு:
எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண் டங்கே வந்தடையாளம் அருளினார் தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனார் தென்கொலோ,
"திருவாய்மூர்ப்பெருமான் அங்கே வா என்று போனார். அது எதற்காகவோ" என்கிறார் நாயனார்.
வாயினால் பேசாமல் குறிப்பினால் பொருளை உணர்த்துவதும் உண்டு. அதற்கு எடுத்துக்காட்டு இது.
"சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்றுவந் தாய்என்றும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே'
இறைவனும் நாயனாரும் கலந்து பேசிய மைக்கான திருப்பாடல் இது.
நாயனார் "அதிகை கெடில வீரட்டானத்துறை அம்மானே!" என்று சிவபிரானை அழைக்கின்றார். "உனக்கு என்ன வேண்டும்? என்று இறைவன் உள்நின்று உணர்த்துகின்றார்.
"உயிரை உடம்பிலிருந்து கூறுபடுத்தும் நோயை மாற்றுகின்றீர்கள் இல்லை." என்றார் நாயனார்.
இறைவன் பேசுகின்றார்.
"இழைத்த பாவமும் பழி பற்றுதல் வேண்டும்" "கொடுமை பல செய்தன நான் அறியேன்” "அறியாமல் குற்றம் புரிந்திருக்கலாம் அல்லவா?” "எப்பொழுதும் பெருமானுடைய திருவடியைப் பிரியாது வணங்குவன்"
"உனக்கு என்ன செய்கிறது?" என்று இறைவன் வினவினார்.
 

4
“என்னுடைய வயிற்றினுள்ளே சூலைநோய் தோற்றி குடரோடு பின்னி முறுக்குகின்றது.
"தாங்கிக் கொள்"
"அடியேன் ஆற்றேன் அம்மானே" என்றார் நாயனார்.
பெரிதும் இனிதாக நிகழ்ந்த பேச்சை உள்ளடக்கப் பொருளாகக் கொண்ட தேவாரம் இதுவாகும்.
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றா யடிக்கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
இவ்வாறு எல்லாம் ஈசனோடு பேசுவது இலகு வானது அல்ல. அந்தச் சாதனையைப் பெறுவ தற்குத் தன்னைச் சிவார்ப்பணம் செய்வதை விடக் கடவுள் கதைக்கமாட்டார் என்று உரைத்து விடுவது மிக இலகுவானது.
அந்த அனுபவத்தைப் பெற்ற நாயனார் திருஇன்னம்பர் பெருமான் மீது பாடிய திருப்பாட்டில் அவ்வுண்மையை உணர்த்துகின்றார்.
ஒருவனுக்குத் தன்னை விட இனிமையானவர் ஒருவர் இருக்க முடியாது. தமக்கு இன்னம்பர் பெருமான் தம்மிலும் இனியவராக இருக்கின்றார். அவர் தமக்குள்ளே உயிர்ப்பாக புறத்தே போயும் உள்ளே புகுந்தும் நிற்பார்.
என்னி லாரும் எனக்கினி யார்இல்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
அத்தத்துவ மெய்யுணர்வு அலைப்பட்டவர் கடவுளோடு கதைப்பதைக் கற்பனை என்னலா (5(3LDIT
米米米米米米来来来米

Page 47
அருளாவது இவை தொடர்புடையவை என் றும் இவை தொடர்பில்லாதவை என்றும் நோக் காது இயல்பாகவே எல்லாவுயிர்கண் மேலுஞ் செல்வதாகிய கருணை, அருளெனினும், கருணை யெனினும், இரக்கமெனினும் பொருந்தும் உலக வின் பத்துக்குக் காரணம் பொருளேயாதல் போலத் தருமத்துக்குக் காரணம் அருளேயாம், ! அருளென்னும் குணம் யாவரிடத்திருக்குமோ, அவரிடத்தே பழி பாவங்களெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். வாய்மையாகிய தகழி யிலே பொறுமையாகிய திரியை இட்டு, தவமாகிய நெய்யை நிறையப் பெய்து, அருளாகிய விளக்கை ஏற்றினால், அஞ்ஞானமாகிய பேரிருள் ஒட்டெடுப்ப, பதியாகிய மெய்ப்பொருள் வெளிப்படும். மரண பரியந்தம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல் போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப் பவன் யாவன், அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ் செய்பவனாகி, தான் எந்நாளும் இன்பமே
வடிவமாக இருப்பன்.
சிந்திக்கச் சி
* ஒவ்வொன்றுக்கும் அளவு உண்டு. ஆனால் தா * இந்த உலகில் அழகானவற்றை எல்லாம் பற்றிக் (
* மதத்திற்கு அடுத்தபடியாகப் பாவங்கள் செய்யவி நம்முடைய சுயமரியாதைதான். சுயமரியாதைை எந்த மனிதரையும் ஒதுக்கித் தள்ளாதீர்கள்.
* நாம் பிரார்த்தனை செய்வதைப் போலவே வே6 உடல் இறைவனுக்குச் செலுத்தும் மிகச் சிறந்த
* உடன் வாழும் உயிர்களில் ஏதாவது ஒன்றுக்
முடியுமானால் உன் வாழ்க்கையின் இலட்சியம்
 

யாழ்ப்பாணம் நல்லூர் றிலழறி ஆறுமுக நாவலர்
உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமே னிகள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர் கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடைய வர்களே ஆவார்கள். உயிர்களிடத்து அன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர் போல் ஒழுகுதல் நாடக மாத்திரையே யன்றி உண்மை யன்றென்பது தெள்ளிதிற்றுணியப்படும். பிறவுயிர் களிடத்து இரக்கமில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்துகொள்ள மாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்து மாத்திரமா தம்முயிரி டத்தும் இரக்கமில்லாதவரே யாவார். அவர் தமக்குத் தாமே வஞ்சகர்.
நன்றி - பால பாடம்
னதருமம் செய்வதற்கு மட்டும் அளவே கிடையாது.
கொள்கிறோம். பயனுள்ளதைத் தள்ளிவிடுகிறோம்.
டாமல் நம்மைத் தடுக்கும் கடிவாளம் எது தெரியுமா? ய எந்த இடத்திலும் இழக்காமல் இருக்கவேண்டும்.
லையையும் செய்வோமாக. ஏனெனில், வேலையே
5 பிரார்த்தனையாகும்.
காவது உன்னால் மனமகிழ்ச்சியைக் கொடுக்க
நிறைவேறிவிட்டது.
圆

Page 48
இவரைப்பற்றிக் குறிப்பிடாத புராணங்களே இல்லை எனலாம். இவருக்கு கும்பமுனி, குள்ள முனி, குறுமுனி, வண்டமிழ் மாமுனி, கும்பமாமுனி, சங்கநூல் தமிழ் தந்த குறிபோன், வைந்தமிழ் முனிவர், அறிவன் முத்தண்டமிழ் தேர்முனி, தமிழ் நற்கோமான் ஆதிமுனி எனப்பல பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார்.
வேளாளர் குலத்தைச் சேர்ந்த இவர் எல்லாச் சித்தர்களிலும் காலத்தால் முற்பட்டவராவார். பன்னிராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர், கடலைக் குடித்து வற்றச் செய்தவர் என் னும் விந்தத்தின் இறுமாப்பை அடக்கியவரென் றும், பார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின்போது கூடியசுகூட்டம் காரணமாக உலகின் வடபாகம் தாழ்ந்த போது, சமமாக இருக்கச் செய்யத் தென்திசை நோக்கிச் சிவனால் அனுப்பப்பட்டுத் தமிழ் நாட்டிற்கு வந்தவரென்றும், திருக்குற்றா லத்தின் மால் வடிவைக் குழைவித்து இலிங்க மாக்கிச் சிவத்தலமாக்கியவரென்றும், முருகப் பெருமானிடம் தமிழ் கற்றவரென்றும் தென்பொதி கையில் இன்றும் என்றும் தங்கிவருபவர் என்றும்
நூல்கள் கூறுகின்றன.
விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாகிய உலோ பாமுத்திரை எனும் கற்புக்கரசியை மணந்தார். இவர்களுடைய தவப்புதல்வரே புலத்தியர் ஆவார். தந்தையைப்போலமகனும் பெருஞ்சித்தராய் விளங் கியவராவார். "வேதத்திலும் சிறந்தது தமிழே என்று நிரூபித்துக் காட்டியவர் அகத்தியரே.
 

6 (சைவரீதி) கத்தியர்
LIII iš Lj 6aF, GGMÖTNI AS556õi B.S.M.S (India), J.P.
தம்மைத் தேடிவந்து வணங்கிய இராமபிரானுக்கு மனம் உவந்து பல மந்திரங்களை அருளிச் செய்து தம்மிடமிருந்த தெய்வீகம் பொருந்திய வில்லையும், கணைகள் நிறைந்த அம்பறாத் துணியையும் வழங்கி இராவணனை வெற்றி கொள்ள ஆசியும் வழங்கினார் என இராமாயணம்
கூறுகின்றது.
யோகாசனப் பயிற்சியில் இறுதியாகக் கூறப் பெறும் சமாதி நிலையை இவர் அனந்தசயனம் எனும் தலத்தில் எய்தியதாக நூல் வாயிலாக அறியமுடிகின்றது. வேறுசில நூல்களில் அகத் தியமாமுனி திருக்குடந்தை என்றழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்ப கோணத்தில் சமாதி எய்தினார் என்றும் கூறப்பட் டுள்ளது. இவரின் பெருமைகளைக் கந்தபுராணம் அசுரகாண்டத்தில் அகத்தியப் படலம், கிரெளஞ்சப் படலம். விந்தப்பிலம்புகு படலம், வில்லபன் வாதாபி வதைப்படலம். காவிரி நீங்கு படலம், திருக்குற்றாலப் படலம் எனும் ஆறு படலங்களில்
வியப்புடன் தெளிவாகக் காணலாம்.
அகத்தியர் இருபத்தோராயிரம் அகத்தியர் பன்னிராயிரம் அகத்தியர் பரிபூரணம், அகத்தியர் ஆயூர்வேதம், அகத்தியர் சித்தமறை, அகத்தியர் நயனவிதி, அகத்தியர் கணபாடம், அகத்தியர் இலக்க செளமிய சாகரம், அகத்தியர் அமுத கலைஞானம், அகத்தியர் செந்தூரம் 300, அகத்தி யர் வைத்திய காவியம் 500, அகத்தியர் கும்மி, அகத்தியர் பள்ளு, அகத்தியர் பிள்ளைத்தமிழ், ஆகியவை இவர் இயற்றிய நூல்களாகும்.
米米米米米米米米米

Page 49
- முதலாவது பரிசு = தங்கம்பதக்கம்
செல்வன். த. சுகேந்திரகுமார் இ/
இரண்டாவது பரிசு - வெள்ளிப்பதக்கம் செல்வி. இ. ஜீவிதா வ/
மூன்றாவது பரிசு = வெண்கலப்பதக்க செல்வி. R. சுதர்சினி இ/
ஆறுதல் பரிசுகள்
செல்வி அனுஷா சண்முகநாதன் வ/ செல்வி, மயூரி சண்முகநாதன் 6) / செல்வன். க. பிரசாந்த் இ/ செல்வி. யோ. கணேசலிங்கம் வ/ செல்வி, ரொ. ராஜரட்ணம் கெ செல்வி. அ. சஜனா 6) I/ செல்வி. குவேதினி இரவீந்திரன் ଗ86
முதலாவது பரிசு - தங்கப்பதக்கம் செல்வி. ர றுரீகாந்தன் கெ
இரண்டாவது பரிசு = வெள்ளிப்பதக்கம் செல்வன். சி. திவாகரன் கெ
மூன்றாவது பரிசு = வெண்கலப்பதக்க
செல்வி. த. நயனி கெ
ஆறுதல் பரிசுகள்
செல்வி. பா. சரண்யா கெ செல்வன். வெ. கஜானன் கெ செல்வி. ர. பிரசாந்தி வ/ செல்வி. ரீ. ழரீதுஷாரா ଗ8 செல்வி. த. ஜனனி கெ செல்வன். பா. சஞ்சீவன் (ଗ8 செல்வி. செ. செல்வலோஜினி 6)/
செல்வன். ப. லஜிதரன் ଗ8
 
 

றை தமிழ் மகா வித்தியாலயம்
விபுலானந்த மகா வித்தியாலயம்
D றை தமிழ் மகா வித்தியாலயம்
சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயம் சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலயம் றை தமிழ் மகா வித்தியாலயம்
இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ாழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் Tழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
T/ சைவமங்கையர் கழகம்
ாழும்பு இந்துக்கல்லூரி
b ாழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
ாழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ாழும்பு இந்துக்கல்லூரி
சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலயம் ாழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ாழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ாழும்பு இந்துக்கல்லூரி
இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ாழும்பு இந்துக்கல்லூரி

Page 50
முதலாவது பரிசு = தங்கப்பதக்கம்
செல்வி சி.
(35FTL 5IT
616)
இரண்டாவது பரிசு = வெள்ளிப்பதக்கம் செல்வன். க. ராம்பிரசன்னா
6).16)
மூன்றாவது பரிசு = வெண்கலப்பதக்கம் செல்வன. பூரீ சுபாங்கன்
ஆறுதல் பரிசுகள் செல்வன். ரா. மாணிக்கராசா செல்வன். கோ. மயூரன்
செல்வி ம.
செல்வி. ச.
ஆராதனா யாழினி
செல்வன். ச. பரிகரன்
செல்வி. ச.
செல்வன். பூ துவாகரன்
பவித்திரா
செல்வன. இ. சிந்துஜன
கொ
6.16) 6i/
LD66,
(5
(655
வைகாசி
O1
O2
04
05
10
11
12
14
16
25
26
27
31
N
நினைவிற் ெ
15-05-2002
16-05-2002
18-05-2002
19-05-2002
24-05-2002
25-05-2002
26-05-2002
28-05-2002
30-05-2002
08-06-2002
09-06-2002
10-06-2002
14-06-2002
புதன் வியாழன்
6
ஞாயிறு
ଜୋରjତitଗif
6ਹੀਂ
ஞாயிறு
G366) Tu
வியாழன்
6
ஞாயிறு திங்கள்
மாதப்பி சதுர்த்த
ରତ୍ନତତ୍ତୀରୁ
(35FITLDIT:
பிரதோ
6006)IB5ITծ
ᏓᏓᎫᎫ60Ꭷ600
திருஞான (35(5,60) சங்கடத சனிப்பி கார்த்தி
9LDT6) is
சதுர்த்த
சேக்கிழ
 

னியா த ம. ம. வி.
னியா த. ம. ம. வி.
D ழும்பு இந்துக்கல்லூரி
/ றோயல் கல்லூரி னியா த ம. ம. வி.
சைவப்பிரகாச ம. ம. வி. இறம்பைக்குளம் ம. ம. வி. / சித்திவிநாயகர் இந்து வித்தியாலயம்
இறம்பைக்குளம் ம. ம. வி. ழும்பு இந்துக்கல்லூரி ழும்பு இந்துக்கல்லூரி
5. f6f6 ITFASSLÖ கெளரவ பரீட்சை செயலாளர்
ཡོད།
காள்வதற்கு
றப்பு நி விரதம்
விரதம் சிமாதர் குருபூஜை ஷவிரதம்
if gig-TElb
விரதம் னசம்பந்தர் குருபூஜை, திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஜ, முருகர் குருபூஜை, திருநீலநக்கர் குருபூஜை ஹர சதுர்த்தி விரதம் ரதோஷ விரதம், கழற்சிங்கர் குருபூஜை கை விரதம் ாசை விரதம்
விரதம், நமிநந்தியடிகள் குருபூஜை, DTர குருபூஜை

Page 51
With Best Compliments from:
People make the size ol
For All Your C United parc
"UPS
209/2, Un COROMM,
O74-721720
 
 

WA.
can't beat service!
VTD LTD
ourier Needs ce Service
OuSe"
On Pla Ce, bO-O2. 773, 328793 FC 4342.87

Page 52
சைவ சித்
தாந்த எழில்
Regd. No. QD/25/News 2002 Gaiusốngib Gogar கொழும்பு-13, லக்ஷமி அச்சகத்தில் அ
 
 
 
 
 

(S)
拿冀 ܨܘܪܓ தந்த எழில் இானப்
L (
2&3 - 2001 தி ஜம்பதாவது இதழ்
Aఅశ్వ நீதி நிறுவனத்தினரால் இல.195 ஆட்டுப்பட்டித்தெரு, ச்சிட்டு 12-05-2002 இல் வெளியிடப்பட்டது.