கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2001.06-07

Page 1
நயினாதீவு முரி நாகபூவி LDEGİTTİ) GEGILIĞ,
2.06, 2001 -
 

SAIANA
JILLINE - JILLILY 2001
ܠܓ69 ܠܢ ܡܫܝ= ¬ܐܠ
BLITT 25/=
ரணி அம்பாள் ஆலய
சிறப்பிதழ் 06.02.2001

Page 2
சைவசித்தாந்த எழில்ஞானப் பெரு
திருவாவடுதுறை ஆதீனம் 2 ; சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சு * சீர்மிகு காசி விசுவநாத தேசிக சுவ
 
 
 
 
 

விழாவில் திருக்கயிலாய பரம்பரை 3ஆவது குருமகாசந்நிதானம்
வாமிகளின் அருளாசியுடன் இளைய சந்நிதானம் ாமிகள் வாழ்த்துரை வழங்குகின்றார்.
பெருவிழா அழைப்பு

Page 3
r
S
ଦ୍ବ ZZZAAAت
క్ష*
座_ afe LD
"மேன்மைகொள் சைவநீதி 6
*6) fe)
கெளரவ ஆசிரியர்: ஞானசிரோமணி சைவப்புலவர்மணி, வித்துவான்
திரு. வ. செல்லையா
மதியுரைஞர்: சிவறி கு. நகுலேஸ்வரக்குருக்கள்
திரு. D.M. சுவாமிநாதன் அறங்காவலர் ரீபொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
திரு. அ. கந்தசாமி Chairman U.P.S.
திரு. கு. மாகலிங்கம் Sivayougasami Trust Fund
துணை ஆசிரியர்:
திரு. சு. சதாசிவம் தொ.பே. 586013
பதிப்பாசிரியர்:
திரு. வே. திருநீலகண்டன் லகூழ்மி அச்சகம்
விநியோகம்: திரு. க. சீனிவாசகம் ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி
நிர்வாக ஆசிரியர்: திரு. செ. நவநீதகுமார்
42, ஜானகி ஒழுங்கை, கொழும்பு -04. தொ.பே: 078-626882,595221 E-mail: saiwaneethy Gphotmail.com
"சிவபூமி" எனட் 19ம், 20ம் நாட்களில் பெற்று நிறைவான நி உணர்ந்தறிவர்.
g5 (5&60356)Tuj L. தேசிக பரமாசாரிய, சீர்மிகு காசி விசுவந வுக்கென விஜயம் (
இளைய சந்நித இலங்கை இந்துமாம வைக்க நாகேந்திரன் சைவநிதி கெளரவ அ யீடும், சந்நிதானத்தில் திருவாசகச் செந்நாளி முதல்நாளும், இலங்ை பிரதம குருவான 8 சிவாசார்யப் பெருந் நாகேஸ்வரனின் சில சிவசுவாமியின் யோ ஆதீன இளைய சந்நி நடைபெற்றது.
தொடர்ந்து மா சித்திரை மாதத்தில் சமய உயர்தகைமை கான பதக்கங்களும் திருவாசகச் செந்நாவு பெருவிழா இனிதே
ஆறுமுகநாவல( ஆதீனம் "சைவநீதி" னத்தைக் கடல்கடந் வாழ் சைவ மக்களி
இந்த வகையி: சிரந்தாழ்த்தி வணங்
சைவநிதியின் ெ பரிசளிப்பு வைபவமு ஆதரவும் நல்கிய சை நன்றி உணர்வுடன்
 
 
 
 
 
 

LJLb விளங்குக உலகமெல்லாம்"
படும் இலங்கையின் தலைநகரில் வைகாசித் திங்கள் b "சைவசிந்தாந்த எழில் ஞானப் பெருவிழாவாக", நடை கழ்வுகளில் "அருளொளி" வீசியதை சைவர்கள் யாவரும்
ரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச சுவாமிகளின் அருள் ஆசியுடன் இளைய சந்நிதானம் ாத தேசிக பரமாசாரிய சுவாமிகள் இலங்கைக்கு இவ்விழா செய்தமை இலங்கை வாழ் சைவ மக்களின் பாக்கியம்.
ானத்தின் திருமுன்னிலையில் திருமுறை அரங்கில் அகில ன்றத் தலைவர் வி. கைலாசபிள்ளை நந்திக்கொடி ஏற்றி ன் சிதம்பரநாதன் குழுவினரின் மங்கள இசை பொழிய ஆசிரியர் தலைமையில் சைவநீதியின் பொன்னிதழ் வெளி ன் அருளுரையும், நிர்வாக ஆசிரியர் விளக்கங் கொடுக்கத் பலர் சற்குருநாதனின் பண்ணிசையும் இனிய நிகழ்வுகளாக கையின் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் சிவழி சுப்பிரமணியப்பட்டர் அவர்களின் தலைமையில் தகைகள் ஐவரின் சிவபூசை மாநாடும் வாகீசகலாநிதி பயூசை விளங்கச் சொற்பொழிவும் கலாநிதி கே.வி.கே. ாகாசன விளக்கமும் செய்முறையும், திருவாவடுதுறை தானத்தின் அருளுரையும், தொடர்ந்து மாகேசுர பூசையும்
லையில் இளைய மகாசந்நிதானத்தின் அருளுரையும் அகில இலங்கை மட்டத்தில் "சைவநீதி" நடாத்திய சைவ ப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் தகுதி பெற்றவர்களுக் சான்றிதழ்களும் வழங்கும் வைபவமும், இறுதியாகத் லர் சற்குருநாதனின் பண்ணிசைக் கச்சேரியும் நடைபெற்று நிறைவெய்தியது.
நக்குப் பட்டமளித்துக் கெளரவித்த திருவாவடுதுறை யின் அழைப்புக்கு அருட்கண் காட்டி இளைய சந்நிதா து அனுப்ப இசைந்தமை "சைவநீதி" சார்புடன் இலங்கை ன் பெரும் பாக்கியமே எனக்கூறலாம்.
ல் திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவப்பணிகளுக்கு கி நெஞ்சம் நெகிழ்கிறது "சைவநீதி".
பான்னிதழ் வெளியீடும், சைவசித்தாந்தப் பெருவிழாவும் ம், குறைவின்றி நிகழப் பல வகைகளிலும் பேருதவியும், வ அமைப்புக்களுக்கும், தனிப்பட்ட சைவ அன்பர்களுக்கும், இறைவன் அருள்வேண்டி "சைவநீதி" பிரார்த்திக்கின்றது.
ク

Page 4
LS SS S
그 afell
○○デ○
, .
ga, so 666. . . .
1. திருபுன்கூர்பதிகம் .
2. நயினை ரீ நாகபூஷணி அம்மன் நவரெ
3. இலங்கையின் பூர்வீகக் குடிகளான நாகர்
4 சைவநிதி விளங்குக உலகமெல்லாம் .
5. திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றுச்
6. சிவசக்தியைப் போற்றுவோம் .
7. சைவினா-விடை
குருசங்கம சேவையியல் .
8. வன்றொண்டன் வாக்கிலிருந்து.
10. Kandha Puranam .......................................
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔؟
சைவந்தி இதழில் வெளிவரும் கட்டு
 
 

DU. jLIC)
LSL SLLLL LLL LLL 0LLS 0LL LL L0L L 0L 0L 0L L 0L L L 0L L L 0L 0L 0L 0L L LLL 0 00 0L 0L 0L Y 0 0 LS S 0 00L 00 L0S 0 0 LLS S S S S S LS S LS 0S 0S 0S LSS SLS 0 0 0 YY 00 Y0 00 00 0 0 00 0 YY
- சுந்தரமூர்த்தி நாயனார்
த்தினப் பாமாலை .
- சிவகுரு பரராசசிங்கம்
களின் வழிபாட்டுத் தலமே.
- நாகமணி கோபாலகிருஷ்ணன்
QAVO Q64QO
Ф () • “ “).
- சைவப்புலவர்: நா. விசுவலிங்கம்
சுருக்கம்
மட்டுவில் ஆ நடராசா
----- - - - -
- பூரீலறி ஆறுமுகநாவலர்
- சிவ. சண்முகவடிவேல்
SSSL SLSS0 S0 Y SL S S0 SLL L SLL LSLSL SSLS SL SLLL 000L LLL 0S SLLLS SLL L SLL S0 0LL SL S S SL0 0S 0 S0L 0L 0L 0L S SL SLLLL 0L 00 0L 0L 0L SSLL SSSS
- முருகவே பரமநாதன்
Sivarajasingam
SLS L SSL
நிரைகளிலுள்ள கருத்துக்களுக்குக் ளிகளாவர். -இதழ் நிர்வாகிகள்
棒
員
津
属
棒
棒
属
鄙
属
03,棒 鄙
棒 : 04
棒
06
棒
員
08
員
09
10
員
1a : 員
棒
棒
19 -
員 22
26 :
أص.

Page 5
N
இ
2
அந்த ணாளனுன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வினாய்க் குன்றன் வன்மைகண் டடியேன் எந்தை நீயெனை நமன்தமர் நலியின்
இவன்மற் றென்னடி யானென விலக்கும் சிந்தை யால்வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூ ருளானே.1
வையக முற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளும் செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூ ருளானே.2
ஏத நன்னில மீரறு வேலி
ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக் கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற தாதை தாளற வெறிந்தசண் டிக்குன்
சடைமி சைமல ரருள்செயக் கண்டு பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே. 3
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானும் கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினும் குணமெனக் கருதும்
கொள்கை கண்டுநின் குரைகழலடைந்தேன் பொற்றி ரண்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே. 4
கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோளர வுசுற்றிக் கடைந்தெ ழுந்த ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி நீல மார்கடல் விடந்தனை உண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.5
திருச்சிற் } (چی) جSہے سے لاDZ NAC کے ہ>ے zبر@
 

றம்பலம் பண்: தக்கேசி
இயக்கர் கின்னரர் யமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் மயக்க மில்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
திகைப்பொன்றின்றிநின் திருவடி யடைந்தேன். செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே. 6
போர்த்த நீள்செவி யாளரந் தணர்க்குப்
பொழில்கொ ளானிழற் கீழறம் புரிந்து பார்த்த னுக்கன்று பாசுபதங்கொடுத்
தருளினாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் றிருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.7
மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல் காவ லாளரென் றேவிய பின்னை
யொருவ நீகரி காடரங் காக மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே. 8
அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம்
அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து எறியு மாகடல் இலங்கையர் கோனைத் துலங்க மால்வரை கீழடர்த் திட்டுக் குறிகொள் பாடலி னின்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.9
கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச் செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை உம்ப ராளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்ட லுள்ளத் தாலுகந் தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை யிலரே. 10
Blbu6)b
(ධර්‍ම
ܠܠ
ܠ (ঞ্জ
ܠܓQܠܢ ܡ-ܫܝ=ܨ ¬>ܠ DZ کے ہSے ترویج

Page 6
ஆக்கம்: சிவகுரு
மாணிக்கம் (சூரியன்) செந்தாமரையே தேஜோ மயமாய்
செங்கதிரோன் தன் தேர்மீதமர்ந்தே சிந்தாகுலந் தீர் யாகத் தெருக்கம்
சிதையிற் சொரிநற் சமித்துக்குவக்கும் எந்தாதை சிவ ருத்ரன் தேவி
நந்தா விளக்காய் ஒளிர் மாணிக்கமே
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே. 1.
முத்து (சந்திரன்) எத்தேசத்தரும் இறைஞ்சும் மாயோன்
இளையாய் வதனத்து இலங்கும் நாகையாம் முத்தே விமானந் தணில்வந் தருள்வாய், முளரிமலரே மதியே நதியே சித்தே விளைவார் முருக்கஞ் சமித்தால் செய்யும் யாக வெண்தி யொளியே
நத்தார் நலங்காணரி தீஞ்சுவையே
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே. 2
பவளம் (செவ்வாய்) பாவாய் பவளச் செவ்வாய் பணியும் பாலன் குமரன் தாயே சிரசின் மேவாய் துவர்ப்புச் சுவையை விரும்பி
விரைந்தே அன்னந் தனில் வந்துணையே ஆவாகனஞ் செய் கருங்காலி அவி
அளிப்போர்க்கருள் சண்பகநல் மலரே நாவாய் மலியும் கடல்நாற் புறஞ்சூழ்
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே. 3
 
 
 
 

றி நாகபூஷணி அம்மன்
பரராசசிங்கம் - நயினை (பசிக்கவி)
மரகதம் (புதன்) கண்ணினை ஈர்க்கும் மரகத மணியே
காந்தள் மலரே கழுத்தை முதுகை நண்ணியே காப்பாய் வாயுவின் உருவில் நாயுருவி அவி நயந்தே ஏற்க மண்ணில் பரிமேல் மகிழ்வாய் வருவாய்
மாயோன் தங்காய் வானில் கணக்கன் நண்ணும் உவர்ப்புச் சுவையாய் விளங்கும்
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே.
புஷ்பராகம் (குரு) குஞ்சர வுர்திக் குருவின் ஞானக்
கோலப் பிரம்ம சொரூபி வதனத்(து) அஞ்சத் தகுநோய் அணுகாதகற்றி
அரசஞ் சமித்தின் யாகாக்கினியை விஞ்சும் புஷ்ப ராகநல் லொளியே
விரும்பும் முல்லை மலரே இனிப்பாய் நஞ்சுண்டவர் நற்றுணையே கனலே
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே.
வைரம் (சுக்கிரன்) அத்திப் பழத்தின் அவியுவந் தேர்க்கும்
அசுரர்க்குரு தன் கருடன் மிசையே தித்திப்புவக்க வருவான் செயலால்
சேரும் அரையிற் பிணி தீர்த்தருள்வாய் எத்திக்கும் ஒளிர் வைரம் நிகர்ப்பாய்
எழில் சேர் வெண்டாமரையே புனலே நத்தித் தொழுவார்க் கருள்நற் துர்க்கே நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே.

Page 7
s
நீலம் (சனி) காகத் தமர்வான் காரி காலன்
கருங்குவளையினால் மலர்ப்பூசனை செய் யாக வன்னிச் சமித்தை ஏற்பான்
நலிசெய் தொடையிற் பிணி தீர்த்தருள்வாய் யோகத்தவர்க்கும் கைப்புச் சுவைசேர்
யோகாம் பிகையே நீலமணியே நாகத் தமர்ந்தே நலிந்தோர்க் கருள்வாய்
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே. 7
கோமேதகம் (இராகு) ஆட்டில் அமர்வான் இராகுக் களிக்கும்
அவிர் புளிப்பாகும் மலர் மந்தாரை மூட்டும் யாகத் தறுகஞ் சமித்தே
முத்தேவர் பணி கோமேதகமே வாட்டும் முளங்கால் பிணி தீர்த்தருள்வாய் வையத் தருள் பத்திரமா காளி நாட்டில் எமையே வாட்டுந் துயர்தீர்
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே. 8
நயினாதீவு நாகபூஷணி அம்பா
இராகம்:- மோகனம்
656 நலமருள்வாய் நாகபூஷணித் தாயே தலமதில் சிறந்த நயினை வாழ்வே
அனுபலி கைலாய வாகனத்தில் காட்சிதரும் ஆ கைலாய நாதனைப் பாகமாய்க் கொ6
சரண மணிபல் லவத்தில் மாண்புடன் எழுந் தணியாத தாகங்கொள் பக்தர்களை அணிகலனாய்க் கரத்தில் அமுதசுரபி பணியாய்ச் சிவசேவகம் பாங்குடன் ெ
 
 

வைடூரியம் (கேது) தேசஞ் செழிக்கும் யாகத் தர்ப்பை
செந்தி நிகர்க்கும் கேது புளிப்பு நேசத் துவப்பான் இந்திரன் எவர்க்கும்
நிகரில் ஒளிசேர் வைடூரியமே மாசற்றிடு செவ் வல்லி மணங்கொள்
மாலை அணிந்தே அரிமீதமர்ந்தே நாசஞ் செய்வார் நலிய நலஞ் செய்
நயினா நகர்வாழ் நாகேஸ்வரியே. 9
bTib Luigi எவரெத் திறத்தர் எனினும் என்றும் நவரெத் தினப்பா நாளும் நயந்தே அவமற் றிடும் அன்பிதயத் தழுத்த சிவரெத் தினமாய் ஜெகமீ தொளிர்வார்.
ள் மீது பாடப்பட்ட கர்ேத்தனம்
தாளம்:- ஆதி pவி
- நலமருள்வாய். ᎣᎧᎧᎧil }ம்மையே ண்டவளே - நலமருள்வாய். Tub தருளி ஆட்கொள்வாய் யை ஏற்றவளே காண்டவள் நீ - நலமருள்வாய்.
ஞானக்கவிமணி

Page 8
அனைத்துலகில் உள்ள சமயங்களிற்கெல் லாம் அனாதியானதும் தோற்றவித்தவர் யார்? எக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்ற கேள் விக்கு விடைகாண முடியாத சமயம் சைவசமய மாகும். மற்ற மதங்களிற்கு எல்லாம் தோற்று வித்தவர்களின் பெயர்கள் உண்டு. தோற்றுவித்த காலம் உண்டு. ஆனால் சைவசமயம் தோற்றுவித்த வரை அறியாத காலத்தை அறியமுடியாத மூத்த மதமாக அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்றவாறு அனைத்துலக மக்களையும் அன்பால் அரவணைத்து நிற்கின்றது.
எமது மத வரலாறு எத்தகைய பின்னணியைக் கொண்டதோ அதேபோன்று தோற்றுவித்தவர்கள் யார்? தோன்றிய காலம், எதையும் ஆதாரபூர்வமாக விளக்க முடியாத பின்னணியைக் கொண்டது நயினைதீவு பூரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம். தோற்றத்தை அறிய முடியாத சுயம்பு மூர்த்தமாக அம்பாளின் மூலவிக்கிரகமும் விக்கிரத்தின் பின் உள்ள நாகபாம்பின் தோற்றமும் பிரதிஷ்டை செய்யப்படாது தானே தோன்றிய சுயம்பு மூர்த்தங் களாய் விளங்குகின்றன. அநாதியாய், பலவாய், ஒன்றாய், பிரம்மமாய் எம்பெருமாட்டி நயினாதீவில் ஊற்றாகித் தோன்றி அனைத்துலக மக்களுக்கும் அருள்பாலிக்கின்றாள்.
காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும், கன்னியாகுமரியில் கன்னி பகவதியாகவும், நயி னையில் நாகம்மையாகவும் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். அகிலலோக நாயகியாகிய உமை
 
 

நயினை - நாகமணி கோபாலகிருஷ்ணன்
யம்மை பலபதியிலும் பல நாமங்களோடு வீற்றி ருந்து அருள்பாலிக்கும் நாயகியாம் எம்பிராட்டியை, நாயகி, நான்முகி, நாராயணி, கைநளினபஞ்ச சாயகி, சாம்பவி, சாங்கரி, சாமனை சாதிநச்சு வாயகி, மாலினி, வராகி, சூலினி, மாதங்கி என்று நாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
என்று போற்றுகின்றார் அபிராமிப்பட்டர். நமக்கு வரும் இன்னல்களை அரணாக நின்று காத்து அருளுகின்றாள், நயினை நாயகியாம் அம்பிகை.

Page 9
7
சரணம் அரண் நமக்கே என்ற அபிராமிப்பட்
டரின் ஞான வார்த்தைக்கு உயிர் கொடுத்து அவ ரின் அருள்வாக்கை நிதர்சனமாக்கி வீற்றிருக் கின்றாள் நயினையில் நாகம்மை, இலங்கையின் பூர்வீகக்குடிகள், இயக்கர், நாகர், வேடர் என்பது வரலாறு. இலங்கையின் பூர்வீகக் குடிகளான நாகர் கள்தான் ஆதித்திராவிடர்களான தமிழர்கள். வடகிழக்கு உட்பட சிலாபம் முனீஸ்வரம், பொலந றுவை வரை விரிந்து வாழ்ந்துள்ளனர் நாகர்கள் என்ற தமிழர்கள். நாகர்களின் வழிபாட்டுத் தலமாக அன்று விளங்கியது நயினாதீவு பூரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம். மணிபல்லவம், நாகதீவு, நாக தீபம், மணித்தீவு என்று பல பெயர்கள் நயினாதீவிற் குண்டு. நாகர்களின் வழிபாட்டுச் சின்னமே நயி னாதீவு பூரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம் என் பது புலனாகின்றது. தமிழர்களின் பாரம்பரிய பரம்பரை பெயர்களை ஆராயுமிடத்து ஆண், பெண் இருபாலர்களின் முதற் பெயர்களில் நாக என்று தொடங்கும் பெயர்கள் பரவலாகவுள்ளதை அறியமுடிகின்றது. எனவே இலங்கையின் பூர்வீ கக் குடிகள் தமிழர்கள். அடியவர்க்கு அரனாகி நின்று காத்தவள், காத்துவருபவள் நாயகி தான் என்பதை மேற்கண்ட அபிராமிப்பட்டரின் அபிராமி அந்தாதி 50வது பாடல் விபரித்து நிற்கின்றது.
நயினாதீவு ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம் வரலாற்றுச் சிறப்பை வரலாற்றுச் சின்னங்களை தன்னருகே கொண்டது. ஏழ்கடல் சூழ்ந்த ஏழாற் றுப்பிரிவு கருடன்கல் பாம்பு சுற்றியகல் கோமுகிக் குளம், அமுதசுரபி, பெளத்தவிகாரை என்பன முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள். சரித்திரப்
பிரசித்திபெற்ற நயினை பூரீ நாகபூஷணி அம்பாள்
 
 

ஆலயம் அறுபத்திநான்கு சக்திபீடங்களில் ஒன்றா கிய புவனேஸ்வரிபீடம் என்று போற்றப்படுகின்றது.
பசுவதைக்கெதிராக கிளர்ந்தெழுந்து பசுக் களை வேள்வியில் பலியிடுவதை தடுத்து நிறுத் திய ஆபுத்திரன் கையில் இருந்து அனைவருக்கும் அமுதளித்த அட்சய பாத்திரமான அமுதசுரபி இந்திரனின் வஞ்சனையால் கோமுகிப் பொய்கை யில் மணிபல்லவத்தீவாம் நயினாதீவில் தான் விடப்பட்டது என்பதை "ஆபுத்திரனும் அமுதசுரபி யும்" என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது. எனவே வரலாறு படைத்த தெய்வீகத்தீவாம் நயினைதீவு வேறு நாகபூஷணி அம்பாள் ஆலயம் வேறல்ல. ஊரும், கோயிலும் ஒன்றியதே நயினை பூரீ நாக பூஷணி அம்பாள் ஆலயமாகும். நயினை பூரீ நாக பூஷணி அம்பாள் ஆலயம் என்ற பெயரோடு கனடா போன்ற வெளிநாடுகளிலும், இலங்கையில் கொழும்பு, சுண்ணாகம் ஆகிய இடங்களிலும் கோவில் அமைக்க சிலர் முனைந்து செயல்படுவது வேதனைக்குரியதும், சமயத்தையும் அனைத்து ஆலயங்களையும் அவமதிக்கும் செயல் மாத்திர மல்ல கேலிக்கூத்தாகும் நடவடிக்கை ஆகும். ஆலயங்களிற்கு கிளைகள் இருக்க முடியாது. ஆலயங்கள் வருமானத்திற்காக ஆரம்பிக்கப்படக் கூடாது. நயினை பூரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம் சட்டபூர்வமான அறங்காவலர் சபையின் நிர்வாகத்தில் இயங்குகின்றது. எனவே நயினை பூரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் பூர்வீகச் சொத்தாகும். நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவ அவளின்
பாதக் கமலங்களை இறைஞ்சுவோமாக.

Page 10
"நீதி" மேன்மைகொள் நீதியாகும். உலகில் பரந்துபட்ட வழக்கில் உள்ள நீதி, நியாயம் என் பன ஆழமான கருத்துக்களை உடையன. இவ் விரு சொற்களையும் ஊன்றி நோக்கின் பல்வேறு கருத்துக்கள் தோன்றக்காணலாம்.
நியாயம் என்பது வையத்து வாழ்வாங்குவாழ மக்களால் வகுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளாகும். இந்த ஒழுங்கு விதிகள் இறைவனின் சித்தத்திற்கு அமையவும், சைவநெறிகளுக்கும் அமைவாகவும் செயற்படும் போது இவை நீதியாகின்றன. எனவே தான் தெய்வநீதி, மனுநீதி, உலக நீதி என வழங்கப்படுகிறது.
இறைவன் நீதி வடிவானவன். மணிவாசகப் பெருமானும் இறைவனைப் "பங்கையத்தனும் மாலும் அறியா நீதியே" எனக் கூறியுள்ளார். இறைவன் நீதிவடிவானவன். "நல்லார்க்கும் பொல் லார்க்கும் நடுநின்ற நடுவே" என இராமலிங்கசுவாமி கள் குறிப்பிடுகின்றார். எனவே நீதியே கடவுள் எனவும் கூறலாம்.
சைவம் என்பது சிவமாகும். சிவசம்பந்தமானது சைவம். சைவநிதி என்பது சிவன் வழி நின்று அதன் கட்டுப்பாட்டுக்கு அமைந்து நடக்கும் சமய வழிபாடு எனவும் கூறலாம். சைவசமய ஒழுங்கு முறைப்படி நடப்பது சைவநீதியாகும். இந்தச் சமயநீதி நெறி உலகெல்லாம் வழங்கச் சிவசமயம் எங்கும் பரவவேண்டும்.
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாகனார் தான்வருவார்" என்ற கூற்றுக்கமைய எவ்வித வழிபாடும் சைவநீதி நெறியில் நின்று நடைபெறின் உலகில் துன்பநிலை நீங்கிச் சாந்தியும் சமாதானமும் உண்டாகும்.
 
 

சைவப்புலவர்: நா. விசுவலிங்கம் சமாதான நீதிவானும், பிரசித்த நொத்தாரிசும் நயினாதீவு நாகபூஷணி அம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபை உறுப்பினர்.
சிறப்பாகச் சொல்லப்போனால் சைவசமயத் தின் அடித்தளமே நீதியும், நியாயமும் கொண்ட தாகும். இந்தச் சமயநீதியின் வழிமக்கள் நாட்டங் கொண்டால் என்றும் இன்பமே ஒழியத் துன்பம் இல்லை.
நீதியை, நீதிதேவன், தர்மதேவதை, எனக் குறிப்பிடுகின்றனர். இந்த நீதி சமயத்தின் அடிப் படையிலேயே தோன்றவேண்டும் தேவன் அன்பாயி ருக்கிறார் என விவிலிய வேதம் கூறும். இந்த அன்பே இறைவன். அவனே சிவன்.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்"
என்ற திருமூல வாக்கினை நோக்கும்போது சிவமும், சைவமும் சைவத்தின் வழிவந்த சைவ நீதியும் உலகில் பரவவேண்டும். எனவே,
"வையம் நீடுக மாமழை மன்னுக மெய்விளங்கிய அன்பர் விளங்குக சைவ நன்நெறி தான் தழைத்தோங்குக துய்ய வெண்திருநீறு சிறக்கவே"
என இறைவனை வேண்டி,
"மேன்மை கொள் சைவநீதி
விளங்குக உலகமெல்லாம்"
என வணங்கி அமைகின்றேன்.

Page 11
திருக்கயிலாயத்தில் ரீகண்ட பரமசிவத்திடம் நந்தியெம்பெருமான் உபதேசம் பெற்றார். நந்தி யெம் பெருமானிடம் சனற்குமாரரும், சனற்குமா ரரிடம் சத்தியஞான தரிசினிகளும், சந்தியஞான தரிசினிகளிடம் பரஞ்சோதி முனிவரும், பரஞ்சோதி முனிவரிடம் மெய்கண்ட தேவரும், மெய்கண்ட தேவர் வழிவழியாக வரும் ஆசாரிய மரபில் சித் தர் சிவப்பிரகாசரும் உபதேசம் பெற்றனர். இப் பரம்பரை உபதேசப் பரம்பரை எனப்படும். சித்தர் சிவப்பிரகாசத்திடம் மூவலூர் வைத்திய நாதன் என்பவர் அருளுபதேசம் பெற்றார். இவருக்கு நமச்சிவாய தேசிகள் என்னும் தீட்சா நாமம் சித்தர் சிவப்பிரகாசத்தால் சூட்டி அருளப்பட்டது. இவரே திருவாடுதுறையில் ஆதீனத் திருமடத்தைத் தாபித்தவர் ஆவார். இவர் முதலாகத் தொடங்கிய பரம்பரை அபிடேக பரம்பரை எனப்படும். இத் திருமடம் 600 ஆண்டுகளுக்கு முன் தாபிக்கப் பட்டது என்றாலும் இப்பரம்பரை திருக்கயிலாயத் திலிருந்து தொடங்கி வருவதால் திருக்கயிலாய பரம்பரை என்று போற்றப்படுவதாகும்.
தற்பொழுது இருபத்து மூன்றாவது குரு மகா சன்னிதானமாக சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஞானபீடத்தில் எழுந்தருளியுள்ளார். இவர்கள் 7-4-1983 ல் ஞான பீடம் ஏறிய நாளிலிருந்து சைவமும், தமிழும் சிறந்தோங்க அருள்பாலித்து வருகின்றார்கள். 1991ம் ஆண்டு முதல் சாதி, மத, இன, வயது வேறுபாடின்றி மாணவர் யாவரும் சைவசித்தாந்தக் கல்வி பெற்றிட சைவசித்தாந்த பயிற்சி மையம் அமைத்தருளினார்கள். இப்பயிற்சியில் இதுவரை பயின்று 4945 மாணவர்கள் சான்றிதழ் பெற்றுள் ளனர். சைவசித்தாந்தப் பயிற்சியளிக்க 45 இடங் களில் பயிற்சிக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2001-2003ம் பயிற்சி வகுப்பில் 3155 மாணவர்கள் சாத்திரப் பயிற்சி பயின்று வருகின்றார்கள்.
 
 

ஆதீனத்திற்குச் சொந்தமான கல்வி நிலை யங்கள் செம்மையாக நடைபெற்று வருகின்றன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் திருவிடை மருதூரில் உள்ள மேனிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்குத் தங்க மோதிரம் வழங்கி ஆசி அருளுகின்றார்கள். ஏழை மாணவர்கள் தங்கிக் கல்வி பயில ஆதீ னத்தில் திருவானைக்காவல் பாப்பம்மாள் சத்திரம் உதவுகிறது. திருவிடைமருதூரில் உள்ள திருவா வடுதுறை ஆதீன மேனிலைப் பள்ளியில் பவள விழா நினைவுக் கட்டம் கட்டப்பெற்றுத் திறப்பித் தருளினார்கள். இப்பள்ளியில் கணிணிக் கல்வி தொடங்கப் பெற்றுள்ளது.
குரு மகாசன்னிதானம் அவர்கள் "மனிதர் களிடையே சாதி இன வேறுபாடு கூடாது" என அருளித் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆசியருளி வருகின்றார்கள். மேலும் கேரள மாநிலத்திற்கு யாத்திரை சென்றபோது அங்குள்ள மக்களிடம் மது அருந்தாமல் திருநீறு அணிந்து நல்முறையில் குடும்பத்தைப் பேணுமாறு அருளாசி வழங்கினார் கள். மேலும் துறவிகள் எங்கிருந்து வந்தாலும் அவர்களை நன்கு உபசரித்து அவர்கள் தேவை களை அறிந்து உதவி வருகின்றார்கள்.
ஆதீன முனியுங்கவர் குழாத்துள் திருமுறை களிலும், சாத்திரங்களிலும், வட மொழியிலும் சிறந்த புலமைமிக்க அடியவராய் விளங்கிய தவத்திரு. காசி விசுவநாதத்தம்பிரான் சுவாமிகள் அவர்களை 24-3-1997 ல் காசி விசுவாத தேசிகள் என தீட்சாநாமம் சூட்டி இளைய குரு மகாசன்னி தானமாக விளங்கியருள் குரு மகாசன்னிதானம் அருள்பாலித்துள்ளார்கள். இளைய மகாசன்னி தானம் அவர்கள் குருவருளாணை வழி சிறந்து செயலாற்றும் பெருமை மிக்கவர்களாய்த் திகழ் கிறார்கள்.

Page 12
எறும்பு முதல் யானையிறாக உயிரினங்களின் இயக்கத்துக்குக் காரணமாயிருப்பது சத்தி. அவற் றுக்குச் சத்தியைக் கொடுப்பது உணவு.
பல்வேறு வகையான இயந்திரங்கள் இயங்கு வதற்குக் காரணமாயிருப்பது சத்தி. அவற்றை இயக்குவதற்கான சத்தி நிலநெய், நீராவி, மின், அணு, காற்று, சூரியஒளி முதலியவற்றிலிருந்து பெறப்படுகின்றது.
கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஈர்ப்பு சத்தி உண்டு. நாம் எங்கெங்கு நோக்கினும் அங் கங்கெல்லாம் சத்தியைக் காண்கின்றோம் சத்தி இல்லாத இடமே இல்லை. மேலே கூறப்பட்டனவும் கூறப்படாதனவுமாகிய சடசத்திகளின் இயல்பு களைத் தொகுத்து நோக்குவோம்.
சத்தி உண்டென்பதை உணரமுடியுமே தவிர அதைக் காணமுடியாது. சத்தியைச் சேமித்து வைக்கமுடியும். அதை அளந்தறிய முடியும். சத்தியை எமது தேவைக்கேற்ப நாம் விரும்பிய வாறு உபயோகிக்க முடியும் சத்தியை மனிதனால் வெற்றிகொள்ள முடியும். சத்தி வரையறைக்குட் பட்டது. நாம் உபயோகிக்கும் சத்திகள் அனைத் தும் சடசத்திகள். சத்தி அழியும்போது அதன் முதலும் அழியும், சடப்பொருளிலிருந்து சடசத் தியே தோன்றும், சடப்பொருள்களால் சத்தியைத் தோற்றுவிக்கவும் ஒடுக்கவும் முடியாது. இவ்வா றான மேலுஞ்சில இயல்புகள் சடசத்திகளுக்கு இருக்கலாம்.
காணப்படுகின்ற இவ்வுலகம் இதைப் படைக் கும் ஆற்றலுடையான் ஒருவன் உண்டென்பதை அனுமானித்தறிய உதவுகின்றது. அதுபோலச் சடசத்தியும் தன்னோடொப்பிட்டு, இன்ன தன்மைய ளென்றறியொனாச் சிவசத்தியின் இயல்புகளை
 
 

மட்டுவில் ஆ நடராசா
ஓரளவு அனுமானித்தறிய உதவலாம். அதனால் மேலே தரப்பட்ட சடசத்தியின் இயல்புகளோடு ஒப்பிட்டுச் சிவசத்தியைப் பற்றி அறிய முயல்வோம். அறிவற்ற பொருள்களால் அறிவுள்ளவற்றை இயக்க முடியாது. மனிதனால் இயந்திரத்தை இயக்க முடியுமே தவிர இயந்திரத்தால் மனிதனை இயக்க முடியாது. அறிவுள்ள பொருள்களால் மாத்திரமே அறிவற்ற பொருள்களை இயக்க முடியும் அறிவும் ஆற்றலுமுள்ள ஒருவரால் மாத் திரமே மற்றவர்களைத் தன் ஆணையின்வழிநடக் கச் செய்யமுடியும். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒழுங்காக இயங்குவதால் இதை இயக்குவோன் ஒருவன் இருத்தல் வேண்டும்.
செய்பவனின்றிச் செயல் நிகழாது. செய்தொழி லின்றி எந்த ஒரு பொருளும் உருவாகாது. இந்த உலகம் உருவாகியிருக்கின்றது. இதை ஒருவர் உருவாக்கி இருத்தல் வேண்டும். இதை உருவாக் குவதற்கு அவருக்குச் சத்தி வேண்டும். சத்தியில் லாதவரால் இவ்வுலகம் படைக்கப்பட்டிருக்க முடியாது. அதனால் இவ்வுலகத்தைப் படைத்தவன் சத்தன் என்பது பெறப்படும் சத்தன் - சத்தியை உடையவன்.
நாம் காணும் சேதன அசேதனப் பிரபஞ்சம் அனைத்தும் இயங்குகின்றது. அதை இயக்கும் சத்தி ஒன்று உண்டு. சேதனம் அறிவுள்ளது. அசேதனம் - அறிவற்றது.
ஒரு காரியத்தைச் செய்வதற்கு நிமித்த கார ணம் முதற்காரணம் துணைக் காரணம் என்னும் மூன்றும் வேண்டப்படும். மின்சத்தியை உண்டாக்கு வதற்கு அதை உற்பத்தி செய்யும் பொறியிய லாளன் நிமித்த காரணம், நீர் முதற் காரணம், மின் உற்பத்தி செய்யும் எந்திரம் துணைக்காரணம்.

Page 13
11
இதைப்போலச் சிவசத்தி தோன்றுவதற்கும் முதல், துணை, நிமித்த காரணங்கள் உண்டா என்பதைப் பார்ப்போம்.
சிவனுக்குச் சொரூப நிலை, தடத்த நிலை என இரு நிலைகள் உண்டு. அவன் நிட்களனாய், நிர்மலனாய், ஞானமயமாய் நிற்கும் நிலை சொரூப நிலை. உருவ, அருவுருவ, அருவத் திருமேனி களைக்கொண்டு ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் நிலை தடத்தநிலை.
ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு ஐந்தொழில் செய்யக் கருதிய நிலையில் சிவனி டத்தில் ஒடுங்கியிருந்த சத்தி விரிந்து அவனுக் குரிய வடிவங்களாய் அமைய, சிவன் அவற்றைப் பொருந்தி நின்று ஐந்தொழில் செய்வன்.
பராசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி முதலிய சத்திகளாயும் லய, போக, அதிகார சத்திகளாயும் பல்வேறு நிலைகளில் நின்று சிவனுக்குரிய அருட்டிருமேனிகளை ஆக்கியும் தத் துவங்களை இயக் கியும் பல வேறு தொழில்களைச் செய்யும் பராசத்தி, மனோன்மணி, மகேஸ்வரி, உமை, திரு, வாணி, என்னும் சத்தி களாயும் துர்க்கை, காளி, திருமால் முதலிய சத்திகளாயும் விளங்கும்.
"ஓராய மேயுல கேழும் படைப்பதும் ஓராய மேயுல கேழும் அளிப்பதும்
ஓராய மேயுல கேழுந் துடைப்பதும் ஓராய மேயுல கோடுயிர் தானே.” என்கின்றார் திருமூலர். ஆயம் - கூட்டம். அது சிவசத்திகளின் கூட்டம்.
நாடகம் நடிப்போன் பலபல வேடங்களைத் தாங்கி நடித்தாலும் தன் நிலையிற்றிரியா திருப்பது போல, சத்தியும் பலபல வேடமாகி நின்று அருட் செயல்களைச் செய்கின்ற போதிலும் அச்சத்தி களைப் பொருந்தி நிற்குஞ் சிவன் தன்நிலையிற் றிரியாது நிர்விகாரியாகவே இருப்பன்.
 
 

தன்னிடத்தில் ஒடுங்கியிருக்குஞ் சத்தியை விரியச் செய்யும் சிவனே சிவசத்தியின் தோற்றத் துக்கு நிமித்த காரணன். சூடு தீயின் குணமாய் இருப்பதுபோல சிவனின் குணமாய்ச் சிவனிடத்தி லிருந்து தோன்றுவதால் சிவசத்தியின் தோற்றத் துக்கு முதற் காரணமுஞ் சிவன் ஆன்மாக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென்னுஞ் சிவனது இச்சை காரணமாகச் சிவசத்தி பரந்து விரிதலால் சத்தியின் தோற்றத்துக்குத் துணைக் காரணமுஞ் சிவன்.
அழகான பொற்குடம் ஒன்றிருக்கிறது. அதற்கு நிமித்தகாரணம் அதைச் செய்தோன், முதற்கார ணம் பொன், துணைக்காரணம் அதைச் செய்வ
தற்கு உபயோகிக்கப்பட்ட கருவிகள். குடம்
உருவானவுடன் நிமித்த காரணமும் துணைக்கார ணமும் அதைவிட்டு நீங்கி நிற்கும். முதற்காரண மாகிய பொன் அதைவிட்டு நீங்காது.
பொன்னின்றிப் பொற்குடமிருக்க முடியாது. குடத்தின் வடிவமின்றிப் பொன் மாத்திரம் இருந்தால் அது பொற்குடமாகாது. பொன்னும், குடத்தின் வடிவமும் ஒன்றாயிருப்பது போலவே எந்நிலை யிலும் சிவமுஞ் சத்தியும் ஒன்றாயிருக்கும். சிவமும் சத்தியும் ஒன்றைவிட்டொன்று நீங்கி நிற்கமாட்டா, “அருளது சத்தியாகும் அரன்றனக்கு அருளையின்றித் தெருள் சிவம் இல்லை, அந்தச் சிவமின்றிச் சத்தியில்லை" என்கின்றார் அருணந்தி சிவாச்சாரியார். சிவசத்தி அருள்வடிவமானது. சடசத்தி அருட்குணம் இல்லாதது.
கடவுள் உண்டெனக் கொள்வோர், அவர்கள் எந்தச் சமயத்தவர் ஆனாலும் அவர் ஆதியந்தம் இல்லாதவர் என்றுமுள்ளவர் என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள். ஒரு நாமமும் ஒருருவமும் இல்லாத கடவுளுக்குச் சிவனென்று பெயரிட்டால், சிவன் என்றும் உள்ளவரென்பதை எவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் சிவம் என்றும் உள்ளவர் என்பதை எவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். சிவம் என்றுமுள்ளது எனவே சிவசத்தியும் என் றும் உள்ளது.

Page 14
1
சடசத்தி என்றும் உள்ளதல்ல, முடிவிலாற்ற லுடையதல்ல. அது ஆக்கப்படுஞ் சத்தி, அழிந்து போகுஞ் சத்தி.
மின்சத்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. உபயோகிப்பதனால் அது அழிந்து போகின்றது. அதை அளவையால் அளந்தறியமுடியும், சிவசத்தி அளந்தறிய முடியாதது, மனவாக்குக் கெட்டாதது.
பூமிக்கு ஈர்ப்புச் சத்தி இருக்கிறது. அச்சத்தி ஒரு வரையறைக்கு உட்பட்டே செயற்படும். அவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பொருள்களைப் பூமியின் ஈர்ப்புச் சத்தியால் இழுக்கமுடியாது.
சூரிய ஒளி பூமியின் ஒருபகுதியில் விழும்போது மறுபகுதி இருளாயிருக்கும் சூரிய ஒளி பூமி எங்கும் வியாபிக்கும். ஆனாலும் சமகாலத்தில் அது பூமியெங்கும் வியாபகமாய் இருக்கமாட்டாது. சிவசத்தி சமகாலத்தில் பிரபஞ்சம் எங்கும் வியா பித்திருக்கும். அது நுணுக்கரிய நுண்ணியதாய் எதையும் ஊடுருவி நிற்கும்.
ஒளியைத் தரும் சூரியன் ஏற்றிய விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருப்பது போல ஒளியுடன் இருக்கின்றான். ஒளியை ஒடுக்கும் ஆற்றலோ, ஒளியைத் தோன்றச் செய்யும் ஆற்றலோ சூரிய னுக்கு இல்லை. மகாசங்கார காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் புதுச் சிருஷ்டி தொடங்கும்போது சூரியனுந் தோன்றுகின்றன. இவ்வாறே இயற்கைச் சத்திகளெல்லாம் சிவசத்தியாற் தோற்றுகின்றனர்.
"அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியினிற் றண்மை வைத்தோன் திண்டிறல் தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரில் கின்சுவை நிகழ்ந்தொன் வெளிப்பட மண்ணிற் றிண்மை வைத்தோ னென்றென்
றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும் அனைத் தனைத் தவ்வயின அடைத்தோன்."
என்கின்றார் மாணிக்கவாசக சுவாமிகள் (திருவண்டப்பகுதி 20-28).
 
 

2
சடசத்தி தான் என்ன செய்கின்றது என்பதை அறியாது. சிவசத்தியே அறியுஞ் சத்தி. அதுவே அறிவிக்குஞ் சத்தி. சிவசத்திக்கும் சடசத்திக்கும் இடையிற் பல வேறுபாடுகள் இருப்பினும் சிவசத்தி அருளுருவாயும் இச்சா ஞானக் கிரியா சத்திகளாய் விரியும் இயல்புடையதாயும் இருப்பதையே இவ்விடத்தில் முக்கியமாகக் குறிப்பிடல் வேண்டும். சடசத்திகளில் ஒன்று பணம். அதைப் பயன் படுத்திப் பல கருமங்களைச் செய்யமுடியும். சிவனையே முதற் கடவுளெனக் கொள்ளுஞ் சைவ சமயிகளெனத் தம்மைக் கருதுவோர் சிலர் பணத்துக்கும் பணப்பெட்டிக்கும் நாடோறுந் தூபதிபங் காட்டி மலரிட்டுப் பூசை செய்கின்றார்கள். பணத்துக்குப் பூசை செய்வோரைப் போல தாம் உபயோகிக்கும் இயந்திரங்கள் முதலிய சடப் பொருள்களுக்கும் பூசனை புரிவோரும் உண்டு.
பணமும் இயந்திரங்களும் தம்மைப் பூசிப்பதை அறியும் ஆற்றலோ, தம்மைப் பூசிப்போருக்கு அருள்புரியும் அருட்குணமோ அற்றவை. அவற்றை வழிபடுவோர் அவ்வழிபாட்டினால் எந்தப் பயனை யும் பெறமுடியாது. அவர்கள் இறையன்பை வளர்ப்பதற்குப் பதிலாகப் பொருட்பற்றை வளர்த் துக் கெடுகின்றார்கள்.
வேறுசிலர் பிறந்திருந்து இறந்துபோன அல்லது கவிஞனின் கற்பனையில் உருவான கதாபாத்தி ரங்களைச் சிவசத்திகளெனக் கருதி, அவற்றுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டுப் பயன் பெறாமற் போவதுடன், விநாயகர், வயிரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர் முதலிய சிவசத்திகளை அவ்வால * யங்களிற் பரிவாரத் தெய்வங்களாக வைத்துப் பூசித்துச் சிவநிந்தனையாகிய பெரும் பாவத்துக்கு ஆளாகின்றனர்.
இவர்கள் 'சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்', 'உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லா தெங்கள் உத்தமனே', 'எம்பிரான் தம்பிரான் திருவுருவன்றி மற்றோர் தேவரெத் தேவரென்ன அருவராதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சு மாறே என்பன போன்ற திருமுறைகளிற் கூறப்படும்

Page 15
சீரிய கருத்துக்களையும் சிறுதெய்வ வழிபாடு பற்றி நாவலர் பெருமான் கூறிய கருத்துக்களையுஞ் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்னுஞ் சிலர் சிவசத்தியே இவ்வுலகமாய்ச் சடசத்தியாய் விரிந்து கிடக்கின்றதெனப் பேசியும் எழுதியும் வருகின்றனர். சித்து சத்தாகிய சிவத்தி லிருந்து அசித்தும் அசத்துமாகிய பிரபஞ்சம் தோன்றாது. 'யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலான் சிவத்தனி முன் முனைத்து நில்லாத பிரபஞ்சம் சிவத்திலிருந்து தோன்றுவதெப்படி? சித்து - அறிவுள்ளது. சத்து - என்றுமுள்ளது.
g6JLI
திருஞானசம்பந்தர் உமாதேவியாரிடம் ஞானப்பால் உண்டதும், தந்தையின் மிரட்டலுக்கு, உமையம்மையுடன் இடபாருடராய்க் காட்சியளித்த தோணியப்பரைக் காட்டி "தோடுடைய செவியன்." என்ற தேவாரத்தை முதன்முதலில் பாடியதும் யாவரும் அறிந்த கதை.
அவர் ஏன் முதன் முதல் இறைவனை "தோடு டைய செவியன்” என்று விளித்துப்பாடினார் என் பதற்கு வாரியார் அருமையான விளக்கம் தந் துள்ளார்.
ஞானப்பாலுண்டமையால் அவரது ஞானக்கண் களில் இறைவனின் காதுகளில் மிகப் பெரிய இசைவிற்பன்னர்கள் குடியிருப்பது தெரிந்துவிட்டது போலும், அதனால்தான் இறைவனிடம் தனது இசைப் பாடலையும் கேட்கவேண்டி இறைஞ்சுவது போலவும், அந்த விற்பன்னர்களின் இசையிலிருந்து இறைவனின் கவனத்தைத் தன்பால் ஈர்க்கவேண் டும் என்பது போலவும், "தோடுடைய." என்று தனது தேவாரத்தை இசைக்கத் தொடங்கிவிட்டார் என்பது அந்தக் கதையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். வாரியார் கூறிய கதை இதுதான்.
அசுவதரன், கம்பளதரன் என்ற இரு கந்தவர் கள். இவர்கள் மிகச் சிறந்த இசைவல்லுநர்கள். இவர்களின் நுணுக்கமான இசையைக் கேட்டு இரசிக்காதோர் இல்லை. இவர்கள் சிவபெருமானை
 
 

13
சிவத்தையும் சத்தியையும் பற்றிப் பேசுவோர் சைவசமய உண்மைகளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிவுபெறவேண்டும். சத்திவழிபாடு என்ற போர் வையில், சிவசத்தியல்லாத வேறெந்தச் சத்திக்குஞ் செய்யும் வழிபாடும் பிறப்பிறப்பிற்படும் உயிர்க ளுக்குச் செய்யும் வழிபாடும் சத்தி வழிபாடாகாது. எந்நிலையிலும் சிவமுஞ் சத்தியும் தாதான் மியமாய் ஒன்றிணைந்து நிற்பதால், சிவத்துக்குச் செய்யும் வழிபாடு சத்திக்கும் சத்திக்குச் செய்யும் வழிபாடு சிவத்துக்கும் உரியதாகும். இவ்வழி பாட்டின் மூலமே பத்தர்கள் பயன்பெற முடியும்.
Falai 蠶薔
வேண்டித் தவஞ்செய்தார்கள். சிவபெருமான் தோன்றி, "என்ன வரம் வேண்டும்?” என்று கேட டார். "நாங்கள் பாடிக்கொண்டே இருக்க வேண்டும், நீவீர் இடையறாது கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்", என்றார்கள்.
போச்சுடா, ஐம்பெரும் தொழில்களைச் செய் கின்ற எம்பெருமான் இடையறாது இவர்களின் இசையைக் கேட்டுக்கொண்டிருக்க எப்படி இயலும்?
அவர் ஒரு தந்திரம் செய்தார். அதன்படி அந்த இருகந்தவர்களையும் தோடுகளாக மாற்றிச் செவிகளில் அணிந்துகொண்டார். காதுகளில் அத்தோடுகள் பாடிக்கொண்டே இருக்கும். சிவபெரு மான் கேட்டுக்கொண்டே இருப்பார்.
இறைவனே! முதிர்ந்த கந்தர்வர்களின் பாடல் களைக் கேட்கின்ற நீர் இளங்குழவியாகிய என் பாடலையும் கேட்டருளும்” என்ற பொருளில் "தோடுடைய செவியன்" என்றார் திருஞானசம்பந்தர்.
இருகந்தவர்கள் தோடாக இருந்து பாடு கின்றார்கள் என்ற கருத்துடைய பாடல் இது. தொல்காப்பியத்தேவரின் பாடல்.
"பாடுவார் பாடும் பரிசில் வரிசையெலாம் ஆடுவாரன்றி அயலார் அறிவாரோ? தோடுவார் காதென்றே தோன்றாத் துணையாய் பாடுவார் ஓரிருவர்க்கு இட்ட படைவீடே."

Page 16
சைவ வினா-விடை
1.
குரு என்றது யாரை? தீக்ஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலா யினரை குரு, ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட்சொற்கள்.
சங்கமம் என்றது என்னை?
நிருவாணதீகூழிதர், விசேஷதீகூழிதர், சமய தீகூழிதர் என்னும் முத்திறத்துச் சிவபக்தர்
55606IT.
குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?
மனிதர் எனக் கருதாது சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன் றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிட்டை செய்து பூசிக்கப்படும். சிவலிங் கத்தை சிலை என்று நினைத்து அவமதிப் பவரும், சிவதீகூைடி பெற்று இயன்றமட்டும் விதிப்படி அனுஷ்டிக்கும் சிவபக்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வார்.
சிவபக்தர்கள் சிவபெருமான் எனக் கருதப் படுதற்குத் காரணம் என்னை?
சிவபெருமான் வேறற அதிட்டித்து நிற்கப்பெறு வனவாய்க கண்டவுடனே சிவபெருமானை நினைப்பிப்பனவாய் உள்ள திருவேடங்களை யுடைமையாய், நாடோறும் பூரீ கண்டநியாசம் பிஞ்சப்பிரமஷடங்க நியாசம் அஷடத்திரிம்
 
 
 

சத்கலாநியாசங்கள் வாயிலாகச் செய்யுஞ் சிவோகம்பாவனையும், பிரசாதயோகஞ் செய் தலும், தம்மின் இரண்டற இயைந்த சிவத்தோடு கல்ந்து நிற்குந் தன்மையுமாம். சிவபக்தரைச் சிவமெனக் கண்டு வழிபடுதற்கு, வேடம், பாவனை, செயல் தன்மை என்னும் இந்நான் கனுள் ஒன்றே அமையும்.
சிவனடியாரை வழிபடாது சிவலிங்கத்தை மாத்திரம் வழிபடலாகாதா? ஒருவன் ஒரு பெண்ணிடத்து அன்புடைமை அவளுடைய சுற்றத்தாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பின் அளவு பற்றியே தெளியப்படும். அது போல, ஒருவன் சிவபெருமானிடத்து அன்புடைமை அவரு டைய அடியாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும். அன்பினளவு பற்றியே தெளியப் படும். ஆதலினாலே, சிவனடியாரிடத்து அன்பு செய்யாது அவமானம் செய்துவிட்டுச் சிவலிங் கப் பெருமானிடத்தே அன்புடையவர் போல் ஒழுகுதல், வயிறு வளர்ப்பின் பொருட்டும் இடம்பத்தின் பொருட்டும் நடித்துக் காட்டும் நாடகமாத்திரையே அன்றி வேறில்லை.
சிவபக்தர்களோடு இணங்குதலாற் பயன் என்ன?
காமப்பற்றுடையவருக்கு, அச்சம்மந்தமுடைய வருடைய இணக்கம் அக்காமத்தை வளர்த் தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அக்கா மத்தைக் கெடுத்தலால் அவ்விணக்கத்தில்

Page 17
வெறுப்பு மிகுதியும் உண்டாகும். அதுபோல
9.
10,
11.
சிவபக்தி உடையவருக்கு, அச்சம்பந்தமுடை யவருடைய இணக்கம் சிவபக்தியை வளர்த் தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அச்சிவ பக்தியைக் கெடுத்தலால் அவ்விணக்கத்தில் வெறுப்பு மிகுதியும் உண்டாகும்.
சமயதீகூழிதர் யாரை வணங்குதற்கு உரியவர்? ஆசாரியரையும், நிருவாணதீகூழிதரையும், விசேஷதீகூழிதரையும், சமயதீகூழிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியவர்.
விசேஷதிகூழிதர் யாரை வணங்குதற்கு s flushift?
ஆசாரியரையும், நிருவாணதீகூழிதரையும், விசேஷதீகூழிதர்களுள்ளே தம்மின் மூத்தோரை யும் வணங்குதற்கு உரியர்.
நிருவான தீகூழிதர் யாரை வணங்குதற்கு S fugift?
ஆசாரியரையும், நிருவாணதீகூழிதருள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்குரியவர்.
ஆசாரியரையும் யாரை வணங்குதற்கு so flushift? ஆசாரியர்களுள்ளே தம்மின் மூத்தோரை வணங்குதற்கு உரியர்.
வரணத்தாலாவது ஆச்சிரமத்தலாவது வரு ணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீ லியவற்றினாே தம்மில் உயர்ந்தவராயின், அவரையாது செய் தல் வேண்டும்?
அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்கு தலும் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர்
 
 

தப்பாது நரகத்தில் வீழ்வார். சிவஞானிகளே ஆயின் அவரை வருண ஆச்சிரமம் முதலி யவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தை உடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித்தடைப்படா, உடனே அத்திரு வேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்: அவ்வுண்மை திருத்தொண்டர் பெரிய புராணத்தினாலே தெளியப்படும்.
12. குருவையும் சிவனடியாரையும் எப்படிப்போய்த்
13,
தரிசித்தல் வேண்டும்?
வெறுங்கையுடனே போகாது, தம்மால் இயன்ற பதார்த்தத்தைக் கொண்டுபோய் அவர் சந்நிதியில் வைத்து, அவரை நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, வீயூதி வாங்கித் தரிசித்துக் கொண்டு, மீண்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் "இரு” என்ற பின் இருத்தல் வேண்டும்.
குருவாயினுஞ் சிவனடியாராயினுந் தம்விட் டுக்குவரின், யாது செய்தல் வேண்டும்?
விரைந்து எழுந்து குவித்த கையோடு எதிர் கொண்டு, இன்சொற்களைச் சொல்லி, அழைத்துக் கொண்டு வந்து ஆசனத்திருத்தி, அவர் திருமுன்னே இயன்றது யாதாயினும் வைத்து, அவர் திருவடிகளை பத்திர புஸ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இவர் "இரு" என்ற பின் இருத்தல் வேண்டும். அவர் போகும்பொழுது அவருக்குப் பின் பதினான்கடி போய் வழிவிடல் வேண்டும். இராக்காலத்திலும், பயமுள்ள இடத்திலும், அவருக்கு முன்போதல் வேண்டும்.

Page 18
14,
15.
16.
ஒருவர் தாம் பிறரை வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்திபண்ணல் வேண்டும்? "இவ்வணக்கம் இவருக் கன்று. இவரிடத்து வேற்ற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்" என்று புத்தி பண்ணல் வேண்டும். அப்படிச் செய்யாதவர் அவ்வணக்கத்தாலாகிய பயனை இழப்பர்.
ஒருவர் தம்மைப் பிறர் வணங்கும் வணக் கத்தை எப்படிப் புத்திபண்ணல் வேண்டும்? "இவ்வணக்கம் நமக்கன்று, நம்மிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்" என்று புத்தி பண்ணல் வேண்டும் அப்படிச் செய்யாதவர். சிவத்திரவியத்தைக் கவர்ந்தவராவர்.
குருவுக்குஞ் சிவனடியாருக்குஞ் செய்யத் தகாத குற்றங்கள் யாவை? கண்டவுடன் இருக்கைவிட்டு எழாமை, அவர் எழும்பொழுது உடன் எழாமை, அவர்முன்னே உயர்ந்த ஆசனத்தில் இருத்தல், காலை நீட்டிக்கொண்டிருத்தல், சயனித்துக் கொள்ளு தல், வெற்றிலை பாக்கு புசித்தல், போர்த்துக் கொள்ளுதல் பாதுகையோடு செல்லல், சிரித் தல் வாகனமேறிச் செல்லல், அவராலே தரப் படுவதை ஒரு கையால் வாங்குதல், அவ ருக்குக் கொடுக்கப்படுவதை ஒரு கையாற் கொடுத்தல், அவருக்குப் புறங்காட்டல், அவர் பேசும் போது பாராமுகஞ் செய்தல், அவர் கோபிக்கும் போது தாமும் கோபித்தல், அவ ருடைய ஆசனம், சயனம் வஸ்திரம் குடை, பாதுகை, முதலியவைகளைத் தாம் உபயோ கித்தல், அவைகளைத் தம்காலினாலே தீண் டுதல், அவர் திருநாமத்தை மகிமைப் பொருள் படும் அடைமொழியின்றி வாளாசொல்லல், அவரை யாராயினும் நித்திக்கும் பொழுது காதுகளைப் பொத்திக் கொண்டு அவ்விடத் தினின்று நீங்கிவிடாது கேட்டுக்கொண்டிருத்தல் முதலியவைகளாம்.
 
 

17.
18.
19,
20.
குரு முன்னுஞ் சிவனடியார் முன்னும் எப்படி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்?
வஸ்திரத்தை ஒதுக்கிச் சரீரத்தைச் சற்றே வளைத்து வாய்புதைத்து நின்று, அவரை "சுவாமீ" என்பது முதலிய சொற்களினாலே உயர்த்தியும், தன்னை "அடியேன்” என்பது முதலிய சொற்களினாலே தாழ்த்தியும், மெல்ல விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்.
கடவுளையும் குருவையும் சிவனடியாரையுந் தாய் தந்தை முதலானரையும் நமஸ்கரிக்கும் போது கால் நீட்டத்தக்க திக்குகள் எவை? மேற்குந் தெற்குமாம். கிழக்கினும் வடக்கினுங் கால் நீட்டி நமஸ்கரித்தலாகாது.
குருவையுஞ் சிவனடியார் முதலாயினரையும் நமஸ்கரிக்கலாகாத காலங்களும் உண்டா? உண்டு. அவர் கிடக்கும் போதும் வழிநடக்கும் போதும், பதிரபுவழ்பம் எடுக்கும் போதும், வெற்றிலை பாக்கு உண்ணும்போதும். ஸ்நா னம் சத்தியாவத்தனம் பூசை ஓமம் சிரார்த்தம் போசனம் முதலியன பண்ணும் போதும், இராசசபையிலே போய் இருக்கும் போதும் அவரை நமஸ்கரிக்கலாகாது.
தீக்ஷாகுரு வித்தியாகுரு முதலாயினர் திருமுகம் விடுத்தருளின் அதை யாது செய்தல் வேண்டும்?
பீடத்தின் மீது எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஸ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து இரண்டு கைகளாலும் எடுத்து, இரண்டு கண் களிலும் ஒற்றிச் சிரசின்மேல் வைத்துப்,
பின்பு திருக்காப்பு நீக்கி வாசித்தல் வேண்டும்.

Page 19
21,
22.
23.
தான் வழிபட்டுவந்த ஆசாரியன் பெரும்பாவங் களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும்?
தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியி னாலே பழுதுபடின், அதனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வெறொரு சிவலிங்கத்தைக் கைக்கொள்வது போலத் தான் வழிபட்டுவந்த ஆசாரியன் சிவநிந்தை சிவத்திரவியாபகாரம் முதலிய பெருங்கொடும் பாதகங்கள் செய்து கெடுவானாயின், அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும்.
குருவினிடத்தே சிவசாத்திரம் எப்படிப் படித்தல் வேண்டும்?
நாடோறும் ஸ்நானம் முதலிய நியதிகளை முடித்துக்கொண்டு, கோமயத்தினாலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே பீடத்தை வைத்து, அதன் மீது பட்டுப் பரிவட்டத்தை விரித்து, அதன் மீது சிவசாத்திரத் திருமுறையை எழுந்தருளப் பண்ணிப், பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்துப், பின்பு ஆசாரிய ருடைய திருவடிகளையும் அருச்சித்து நமஸ் கரித்து, அவள் கிழக்குமுகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருக்க, அவருக்கு எதிர்முக மாக இருந்து படித்தல் வேண்டும். படித்து முடிக்கும் பொழுதும் அப்படியே நமஸ்கரித்தல் வேண்டும். இப்படிச் செய்யாதவர் படித்ததனால் ஆகிய பயனையும் இழப்பர்; அம்மட்டோ! நரகத்திலும் விழுந்து வருந்துவர். (திருமுறை = புத்தகம்)
சிவசாத்திரம் படிக்காலாகாத காலங்கள் எவை?
பிரதமை, அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை பெளர்ணிமை, உத்தராயணம், தகூழிணாயனம்,
 
 

24.
25.
26.
சித்திரைவிஷ", ஐப்பசிவிஷ", சந்தியாகாலம், ஆசௌசகாலம், மகோற்சவ காலம் என்பவை 356TITLD.
எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்த பின், யாது செய்தல் வேண்டும்?
சிவலிங்கப் பெருமானுக்கும் சிவசாத்திரத் திருமுறைக்கும் வித்தியாகுருவுக்கும் விசேஷ பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தகூழினை முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையுந் தீக்ஷாகுருவையும் மாகேசுரர்களை யும் குருடர் முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது செய்வித்தல் வேண்டும்.
சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப் படிப்
diss6)TLDIT?
அச்சம், நண்பு, பொருளாசை, என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்குப் படிப்பிக்கலாகாது; நல்லொழுக்கமுங் குரு லிங்க சங்கம பத்தியும் உடைய நன்மாணாக் கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கரு ணையினாலே படிப்பித்தல் வேண்டும். அவர் கள் விரும்பித்தருந் தகூழினையைத் தாஞ் சய்த உதவிக்குக் கைம்மாறெனக் கருதி ஆசையால் வாங்காது அவர்கள் உய்யுந் திறங் கருதிக் கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
மாணாக்கள்கள் தாங்கள் குருவுக்குக் கொடுக் குந் தகூழினையை அவர் செய்த உதவிக்கு கைம்மாறெனக் கருதலாமா?
தாங்கள் குருவுக்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும், தங்களை அவருக்கு அடிமை யாக ஒப்பித்துவிடுதல் ஒன்றையே அன்றி, அப்பொருளைக் கைம்மாறெனக் கருதிவிட 6ᎠIᎢéᏐ5fᎢg5l.

Page 20
27. தீக்ஷாகுரு, வித்தியாகுரு முதலாயினார் சிவபத மடைந்துவிடின், யாது செய்தல் வேண்டும்?
வருஷந்தோறும் அவர் சிவபதமடைந்த மாச நகூடித்திரத்திலாயினும் திதியிலாயினும் அவ ரைக் குறித்துக் குருபூசை செய்துகொண்டு வரல் வேண்டும்.
28. இன்னும் எவ்வெவருக்குக் குருபூசை செய்வது
ஆவசியகம்? பல அற்புதங்களைச் செய்து தமிழ் வேதத் தைத் திருவாய் மலர்ந்தருளியுஞ் சைவசமயத் தைத் தாபித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். முதலிய சமயகுரவர் நால்வருக்கும், அறுபத்து மூன்று நாயன்மாருடைய மெய் யன்பையும் அவ்வன்புக்கு எளிவந்தருளிய சிவபெருமானுடைய பேரருளையும் அறிவித்து அவரிடத்தே அன்புதிக்கச் செய்யும் பெரிய புராணத்தைத் திருவாய் மலர்ந்தருளிய சேக்கிழார் நாயனாருக்கும். பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் இலக்கணங் களை அறிவிக்குஞ் சைவசித்தாந்த நூலு ணர்ச்சியை வளர்த்தருளிய மெய்கண்ட தேவர் முதலிய சந்தான குரவர் நால்வருக்கும், தமிழ் வழங்கும் நிலமெங்கும் நல்லறிவுச் சுடர் கொளுத்தருளிய தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாருக்கும் இயன்ற மட்டுங் குருபூசை செய்துகொண்டே வருவதே அவசி ULDIT(5lb.
29. இந்நாயன்மார்களுடைய குருபூசைத் தினங்
கள் எவை?
1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
வைகாசி - மூலம்.
2. திருநாவுக்கரசு நாயனார். சித்திரை - சதயம்.
3. சுந்தரமூர்த்தி நாயனார்.
 
 

30.
31,
32.
4. மாணிக்கவாசக சுவாமிகள்.
ஆனி - மகம். 5. சேக்கிழார் நாயனார்.
வைகாசி - பூசம். 6. மெய்கண்டதேவர். ஐப்பசி - சுவாதி. 7. அருணந்திசிவாச்சாரியார்.
புரட்டாசி - பூரம். 8. மறைஞான சம்மந்த சிவாச்சாரியார். ஆவணி - உத்தரம். 9. உமாபதி சிவாசாரியார்.
சித்திரை - அத்தம். 10. திருவள்ளுவ நாயனார். மாசி - உத்தரம்.
குருபூசைக்குத் தக்க பொருளில்லாதவர்கள் யாது செய்ய வேண்டும்? குருபூசை செய்யப்படும் தானத்திலே தங்கள் தங்களால் இயன்ற பதார்த்தங்கள் கொண்டு போய்க்கொடுத்துத் தரிசனம் செய்தல்வேண் டும். அதுவும் இல்லாதவர்கள் கறி திருத்துதல் முதலிய திருத்தொண்டுகளேனுஞ் செய்தல் வேண்டும்.
குருபூசை எப்படிச் செய்தல் வேண்டும்? திருக்கோயிலிலே சிவலிங்கப் பெருமானுக்கும், அந்நட்கூடித்திரத்திலே சிவபதம் அடைந்த நாயனார் திருவுருவம் உள்ளதாயின் அதற்கும் விசேஷ பூசை செய்வித்துத் தரிசனம் செய்து கொண்டு, தம்மிடத்துக்கு அழைக்கப்பட்டும் அழைக்கப்படாதும் எழுந்தருளிவந்த சிவபக் தர்களை அந்நாயனாராகப் பாவித்துப் பூசித்து திருவமுது செய்வித்துச் சேஷம் புசித்தல் வேண்டும்.
சேஷம் எத்தனை வகைப்படும்? பாத்திரசேஷம், பரிகலசேஷம், என இரண்டு வகைப்படும்.
ܐܝܛ

Page 21
நல்ல அந்தணர்கள் வாழ்கின்ற திருவெண் ணைநல்லூர்ப் பெருமான் சுந்தரமூர்த்தி நாய னாருக்கு அருளிச்செய்கின்றார், “முன்பெனைப் பித்தன் என்றே பொழிந்தனை. ஆதலாலே என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்த பித்தன்' என்ற பதத்தை முதலாகக் கொண்டு அன்று முதலாக, அடியவர் பால் மெய்த்தாயினும் இனியானை வியன் நாவலர் பெருமான் அர்ச்சனைப் பாட்டே ஆகச் சொற்றமிழ் பாடத் தொடங்கினார்.
சுந்தரமூர்த்திநாயனார் தேவார மூவர் முதலி களில் மூன்றாமவர் அவருடைய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வேத மந்திரங்களாகப் போற்றப்படுபவை தேவாரங்கள். சுந்தரமூர்த்தி நாயனாருடைய தேவா ரங்கள் வேதமாகவும் மந்திரமாகவும் நாயனாரு டைய வாழ்க்கையில் அகச்சான்றாகவும் விளங்கு வன. இவற்றை விரிக்கின் அளவுபடாது. மிகச் சுருக்கமாக ஒரு சிலவற்றைக் காண்போம்.
சிவபிரான் திருவெண்ணை நல்லூரில் நம்பியா ரூரரைச் சபையில் வழக்குரைத்து அடிமையாக தடுத்தாட்கொண்டார்.
அடிமை ஒலையையும் காட்டினார். அந்த உண்மையை ஆரூரர் பின்வருமாறு அருளிச் செய்வார்.
"அன்று வந்தனை அகலிடத் தவர்முன் ஆள தாகனன் றாவணங் காட்டி நின்று வெண்ணைய்நல் லூர்மிசை ஒளிந்த நித்தி லத்திரள் தொத்தினை"
(திருக்கோலக்கா)
 
 

சிவ. சண்முகவடிவேல்
நம்பியாரூரருக்குத் தம்மைத் தோழனாகக் கொண்டார், நள்ளாற்று அமுது, ஆரூரர் தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டார். பரவையாரு டைய புலவியைத் தீர்க்கச் சிவபிரான் தூது சென்றார். இச்செய்திகளை நம்பியாரூரர் பாடிய திருநள்ளாற்றுத் திருப்பதிகத்தில் கண்டு களிக்
B6)Tib.
- - - - - அடி யேற்கெளி வந்த
தூத னைத்தன்னைத் தோழமை அருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
என்னும் வாய்மையால் உணரலாம்.
நம்பியாரூரரைப் பயந்தவர் இசைஞானியார். தந்தையார் சடையனார். பெற்றோர் இட்ட திருநாமம் ஆரூரர். இந்த உண்மைகளை திருவாரூரர் திருப் பதிகத்தால் அறியலாம். “என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன் அன்னவனாம் ஆரூரன்."
"திருநாவலூர்கோன்' என்பதனால் பிறந்த g6Isfact (GLjurfair (G6) of L60)L.
பரவையாரையும் சங்கிலியாரையும் மணம் புணர்ந்துகொள்ள அருளியவர் சிவபிரான். அந்த உண்மையைப் பின்வருமாறு உணர்த்துவார்.
"மாழை ஒண்கண் பரவையைத்தந் தாண்டானை
"சங்கிலியோ டெனைப்புணர்ந்த தத்துவனை"
என்னும் திருவாரூர் திருப்பதிகத் திருவாக் குகள் உணர்த்துகின்றன.

Page 22
நம்பியாரூரர் "சங்கிலியாரைப் பிரியமாட்டேன்" என்று திருவொற்றியூரில் மகிழ மரத்தை வலம் வந்து சத்தியம் செய்து கொடுத்தார். கொடுத்த வாக்கை மீறியதால் கொத்தையானார். கொத்தை - குருடு, அந்த உண்மைகளை உலகறியத் திருவாரூர்ப் பதிகத்தில் பகிரங்கப்படுத்துவார்.
கொத்தை ஆக்கினி." "ஏற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்.” "பாரூர் அறிய என்கண் கொண்டீர்.” என்பதனால் அறியலாம்.
சங்கிலியாருக்காகவே கண்ணிழந்த காரணத் தைத் திருவட முல்லை வாயில் திருப்பதிகத்தில் தெளிவாகப் பாடுவார்.
"தண்பொழில் ஒற்றி மாநகள் உடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசு தாபரஞ் சுடரே."
சுந்தரர் திருக்கச்சி ஏகாம்பரத்தில் இடதுகண் பெற்றுக்கொண்டார். "காலகாலனைக் கம்பனெம் மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே" என்னும் வாக்கினால் உணர்த்துவார்.
திருஆரூர் திருத்தலத்தில் "மற்றைக் கண் தான் என்றால் ஒரு கண்ணைத் திருவாரூரில் வேண்டிப் பெற்றுக்கொண்டார் என்ற உண்மை புலனாகும்.
குண்டையூரில் பெற்ற நெல்லைத் திருவாரூ ருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆட்களைப் பெருமாநி டத்தில் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
"கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே."
og திருநாவல வூரனவன் நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந் தேத்திய பத்தும் வல்லார்" என்று திருக்கோளிலித் திருப்பதிகத்தில் அழுத்தம் கொடுத்துப் பாடுவதால் அறியலாகும்.
 
 

ஆலாலசுந்தரர் திருப்புக்கொளியூரில் குளத் திடை முதலைவாய் உண்ட அந்தணச் சிறுவனை மீட்டுக்கொடுத்தார். திருப்புக்கொளியூர்த் திருப்பதி கத்தில் வரும் திருவருட் குறிப்புக்களால் அந்த வாய்மையை உய்ந்து உணரலாம்.
"பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே.
"புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
"புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.
(திருப்புக்கொளியூர் அவிநாசித் திருப்பதிகம்)
சுந்தரர், சேரர் கொடுத்த செல்வத்தை வழிப் பறி வேடுவர்களிடத்தில் பறியுண்டார். திருமுருகன் பூண்டியில் வந்து பெருமானிடத்தில் முறையிட்டு மீண்டும் பெற்றுக்கொண்டார்.
"வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவலாமை சொல்லிக் கல்லி னால்எறிந் திட்டும் மோதியும் கூறை கொள்ளுமிடம்.
என்பதனால் அச்செய்தியை அப்பதிகத்தால் அறியலாகும்.
நம்பியாரூரருக்கு 'வன்றொண்டன் என்னும் நாமத்தை இறைவனே ஈந்தார், என்ற உண்மை யையும் நாவலுர்க்கோனே நமக்கு உணர்த்துவார்.
"நன்மையினாலடியேனைத்தாம் ஆட்கொண்ட நாட் சபைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்" என்று இனிக்கப் பாடுவார்.
திருவெண்ணை நல்லூர்ப் பதிகத்தில், பெரு மானே! வழக்கில் என்னை அடிமை என்பதை ஆணவத்தால் நிரூபித்து விட்டீர்கள், நான் இனி அடிமை அல்லேன் என்று அறையலாமோ என்று ஆதரித்துப் பாடுவார்.

Page 23

21
திருக்கச்சூர்ப் பெருமான் அந்தணராக அன்னப் பிச்சை ஏற்றுவந்து வன்றொண்டருக்கு வழங்கினார்.
கழலுஞ் சிலம்புங் கலிங்கப் பலிங்கென் றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே."
சுந்தரமூர்த்தி நாயனாரை நொடித்தான்மலை உத்தமன் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு வெள்ளானை அனுப்பினர். திருக்கயிலைக்குச் சுந்தரரை அழைத்த செய்தி, "வரமரி வாணன் வந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே"
இவை போல்வன7ம் திருமுறையில் நம்பியா
ரூரருடைய வாழ்க்கை அகச்சான்று அநேகம். சொல்லிய சில. சொல்லாதன பலப்பல.
盖菇”Y
ததி விாராம்
) ஆண்டொன்றிற்கு ரூபா 250.00 கு ஸ்ரேலிங் பவுண் 10 அல்லது US $ 15
சியில் எங்கள் பங்களிப்பு வொருவரும் சிந்திப்போமாக.
NAVANEETHAKUMAR
ANAKI LANE,
OMBO - 04,
LANKA. No. 595221.
لر

Page 24
2.
s ΦΣΟΧΟΣΦΧΟΣΟΧΟΣΟΣΟΧΟΣΦXOXOXOXΦΧ.Φ.
"தேவர்எலாம் தொழச்சிவந்த செந்தாள்முக்கண் செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப்புஆக
மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே
மூடனேன் புலம்பியசொல் முற்றுமோதான்." தாயுமான சுவாமிகள்
செங்கரும்பே-பரமானந்தமே, முற்றுமோதான்
பாடல்களையும் - மூவர் பாடிய தேவாரத்தையும் ஒப்பீடுசெய்து அவர்கள் தந்த பாமாலை தனது பாடல்களிலும் மேலாந்தரமானது என்பதை வெளிப்படுத்தும் போது மூவர் திருவாக்குகளைத் தமிழ் என்று குறிப்பிடுகின்றார்.
இதேபோல ஒளவைப்பிராட்டியும் ஓர் பாடல் தந்துள்ளார்.
"தேவர்குறளுந் திருநான்மறை முடியும் மூவர்தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்." நல்வழி
தேவர்குறள்-திருக்குறள், தேவர்-திருவள்ளுவர், திருநான்மறை முடிபு-உபநிடதம், மூவர்-திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தமிழ் அவர்கள் பாடிய தேவாரங்கள், முனி மொழி என்பதற்கு மூன்றுவிதமாகப் பொருள் கூறுவர். முனி வேத வியாசர் என்று பொருள் கொண்டு அவர் செய்த பாரதம் என்பர். அகத்தியரையே முனி என்றசொல் குறிக்கிறது. எனவே முனிமொழி என்பது அகத் தியம் என்னும் நூல் தான் எனச் சிலர் எழுதியுள் ளனர். மேலும் முனிமொழியும் கோவை திருவாச கமும் எனச்சேர்ந்து, திருவாதவூர் செழுமறை முனிவராகிய மாணிக்க வாசகரின் அருளிச் செயல்களான திருக்கோவையாரும், திருவாசக
 
 
 

தமிழ்
Sorosorererererrorrero
முருகவே பரமநாதன் மும் எனவும் பொருள் கூறுவர். ஈற்றிற் பேசப்படும் திருமூலர் தந்த திருமந்திரமாகும். திருமூலர் பாடிய திருமந்திரம் மூவாயிரந் தமிழ் எனத் திருமூலரே பாடியுள்ளார்.
"மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ் ஞாலம்அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந்தோதிடின் ஞாலத் தலைவியை நண்ணுவர் அன்றே.
ஒருமொழியைக் குறிக்கும் தமிழ் - கருத்துப் பரிமாற்ற ஊடகமாய் அமைந்துள்ளது. எனினும் வெவ்வேறு உபயோகங்கள் மூலம் பொருள் அமைவிலும் வித்தியாசப்படுத்துகிறது.
"இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகுமே” என்பது பிங்கலந்தையார் கூற்று. பன்னிரு ஆழ் வாரின் பாசுரங்களை நாலாயிரந் தமிழ், தமிழ் நாலாயிரம், பாவளருந்தமிழ், முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு, என வைணவ இலக்கியங்கள் போற்றுகின்றன. சைவத்திருமுறைகள் முதல் ஏழும் தேவாரம். இதுவே மூவர் தமிழ் என்னும் பெருமைக்குரியது.
சங்கத்தமிழ், முத்தமிழ், பிள்ளைத்தமிழ், சொற்றமிழ், பைந்தமிழ், பசுந்தமிழ், வடிதமிழ், மதுரமொழிய தமிழ், முத்தமிழ் சேர்தருமது, தெள்ளித்தெளிக்குந் தமிழ், பண்ணுலா வடிதமிழ், தெளிதமிழ், தென்னன் தமிழ், தெளிந்த தமிழ், தெய்வத்தமிழ், முதுதமிழ், செஞ்சொற்தமிழ், கொழிதமிழ், தீந்தமிழ், ஒண்டமிழ், வண்டமிழ் தண்ணார் தமிழ், தேன்தமிழ், என்ற பிரயோகங் கள் தமிழின் விழுமியங்களை எடுத்துச் சொல்லு கின்றன. மொழியையும் தாண்டி அன்பு, அழகு, பாடல், பதிகம், பாவிகம், இறைவன் என்ற பொரு ளிலும் தமிழ் ஆளப்படுகிறது. பக்தி இலக்கியத்

Page 25
துறையிற் தோத்திரம் இறைவனையே பாடும் கீர்த்தனம் ஆகும். இந்நெறியில் வளர்ந்த மூவர் பாடல்களிலும் தமிழ் வெவ்வேறு ஆளுமைகள் நிறைந்து காணப்படுகிறது. அப்பர் பெருமான் இறைவனைத் தமிழ் என்கிறார். தமிழன் என்றும் பாடுகிறார். "வானவன் காண் வானவர்க்கும் மேலானான்காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண் ஆணைந்தும் ஆடினான்காண்."
திருமுறை 6.871
"மூரிமுழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனிமுதல்வன் கண்டாய் ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்."
மேலது 6.235 இறைவனைத் தமிழாகவும், தமிழனாகவும் காட்டிய பாவேந்தர் பாமாலைகளைத் தமிழாகவும் பாடப்பணித்தவன் பரமபதியேதான் எனவும் பாசுரம் 69ug66TTT. “கந்த மலர்க் கொன்றையணி சடையான் தன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச் சந்த மலர்த் தெரிவை யொரு பாகத் தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப் பந்த மறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடுவித்தென் சிந்தை மயக் கறுத்ததிரு அருளி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.” திருமுறை 6.844
"பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை"
மேலது 6543
இப்பாடல்களை ஆக்கிய நாவேந்தர், பாவேந் தராகவும், தாண்டகவேந்தராகவும், திகழ்கின்றார்.
 
 
 

23
வேதசாரமாய்த் திகழும் திருமுறைகள் இறை வனது திருமேனி என்ற நாவலர் கூற்றை மெய்ப் பிக்கும் பாடல் ஒன்று அப்பர் தேவாரத்தில் அமைந்துள்ளது. “பூம்படி மக்கலம் பொற்படிமக்கலம் என்றிவற்றால் ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனித மர்ந்தார் தாம்பாடி மக்கலம் வேண்டு வரேல்தமிழ் மாலைகளால் நாம்படி மக்கலம் செய்து தொழுதுய்மட நெஞ்சமே."
இறைவனது திருவுருவை உலோகங்களா லும், கல்லினாலும் செய்து வணங்குவது போல தமிழ் மாலைகளால் அவன் திருக்கோலத்தை இசைத்துப்பாடு என அப்பரடிகள் தன் மனத்துக்குச் சொல்வதாக இப்பாடல் அமைந்துள்ளது. படிமம் -இறைவனது வடிவம், இறைவனைப் பாதாதிகே சமாக வர்ணிக்கும் திருமுறைப்பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. நாவுக்கரசர் தான் இயற்றிய பாடல்கள் எல்லாம் இறைவன் அருளால், ஆணை யால் தான் எழுந்தன. என்று கூறுவது போலச் சம்பந்தரும் இவை எல்லாம் எனது வாக்கு அல்ல. இறைவாக்கே என திரு இலம்பையங் கோட்டுர்பதிகத்திலே குறிப்பிடுகின்றார். இப்பதிகப் பாடல்களின் இறுதியடி "இலம்பையங் கோட்டுர் இருக்கையாய்ப் பேணியென் எழில் கொள்வ தியல்பே" என வருவதைக் காணலாம். இப்பதி கத்தின் பத்துப்பாடல்களிலும் "எனதுரை தனது ரையாக" என்ற தொடர் வருவதை அவதானிக்க வேண்டும். ஒரு பாடலை இனிப்பார்ப்போம்.
"நீருளான் தீயுளா னந்தரத்துளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும் ஊருளா னெனதுரை தனதுரையாக
ஒற்றை வெள் ளேறுகந் தேறியவொருவன் பாருரளார் பாடலோ டாடலறாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம்பாடும் ஏருளார் பைம்மொழி லிலம் பையங் கோட்டுள்
இருக்கை யாப்பேணி யென்னெழில் கொள்வதியல்பே." திருமுறை 1767 சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட் கொண்ட சிவபெருமானே "அர்ச்சனை பாட்டே

Page 26
2
ஆதலின் சொற்றமிழ் பாடுக” என இறைவனே அருள்பாலித்துப் "பித்தா” என்று பாடும்படி ஆணை பிறப்பித்தார். எனவே இறையாணையிற் பிறந்த பாடல்களே தேவாரம். அவைதமிழோடிசைப் பாட லாய் அமைந்தன என்பதை "தமிழோடிசைபாடல் மறந்தறியேன்” என்ற நாவேந்தர் வாக்காலும் அறியலாம். சம்பந்தரும் சுந்தரரும் தம்பதிகந் தோறும் வரும் முத்திரைக் கவிதைகளிலெல்லாம் தமிழ் என்று பொழிந்துள்ளனர். அவற்றையும் இனிக்காண்போம்.
ஞானசம்பந்தர் வாக்கில்:-
"திருநெறிய தமிழ் பத்தும் வல்லார்
திருமுறை 1.1.11
ஞானசம்பந்தன் தமிழ் வல்லவர்
திருமுறை 19.11
தமிழ் விரகன் ஞானசம்பந்தன்
திருமுறை 1.20.11 ஞானசம்பந்தன் பரவார் தமிழ் பத்து
திருமுறை 1.33.11 தண்டமிழால் ஞானசம்பந்தன் சொன்ன
திருமுறை 1.51.11 ஞானசம்பந்தன் செந்தமிழ் திருமுறை 1.13.11 திருஞானசம்பந்தன் செந்தமிழ்கள்
திருமுறை 2.20.11 ஞானசம்பந்தன் பாடலாய தமிழ் ஈரைந்து
திருமுறை 2.62.11 தமிழ்கெழு விரகினன் தமிழ் செய்மாலையே
திருமுறை 3.19.11 ஞானசம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
திருமுறை 3.43.11 ஒண்டமிழ் நூலிவை பத்து திருமுறை 3.66.11 சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லார் சங்கையிலரே” திருமுறை 3.74.11
சுந்தரர் வாக்கில்:-
ஆரூரர் உரைத்த நற்றமிழின் மிகுமாலையோர் திருமுறை 73.10
சந்தம் மிகுதண் தமிழ்மாலைகள் கொண்டடி வீழ் வல்லார் தடுமாறிலரே திருமுறை 74.9
 

ஆரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும் வல்லார் வினைபோய் பாரும்விசும்பும் தொழப்பரமன்னடி கூடுவரே திருமுறை 7.31.11
செஞ்சொற் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
சிவலோகத் திருப்பது திண்ணமே
திருமுறை 7.42.10
நற்றமிழிவை ஈரைந்தும் வல்லார் திருமுறை 7.61.11 அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் தொண்டன் திருமுறை 7.72.11
ஊரன் உரைசெய்தபா இன்தமிழ் வல்லார் பரலோ கத்திருப்பாரே திருமுறை 7.78.10
அடித்தொண்டன் உரை செய்தகுறையாத் தமிழ் பத்தும் திருமுறை 7.80.10
எழிசையின் தமிழால் இசைத் தேத்தியபத்திவை திருமுறை 7.100.10
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
திருமுறை 7.67.10
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்
திருமுறை 7.5.10
இவ்வண்ணம் மொழியோடும், இறைவனோடும், பாட்டோடும், பயனோடும், பாடியவர்களோடும் தமிழ் செறிந்து சிறந்து நிற்கும் பாவண்ணத்தமிழின் மேன்மைநிறைந்த மூவர் தேவாரங்களும் தமி ழென்றே பலராற் போற்றப்படுவது காண்போம். சம்பந்தர் தமிழை கொஞ்சு தமிழ் என்றும், அப்பர் தமிழை கெஞ்சு தமிழ் என்றும், சுந்தரர் தமிழை விஞ்சு தமிழ் என்றும் புலவர்கள் போற்றுகிறார்கள். நம்பியாண்டார் நம்பிவாக்கிலும் இம் மூவர் தமி ழும் எப்படிப் பேசப்படுகிறது என்பதை இனிவரும் பாடல்களிற் காணலாம்.
"மணியினை மாமறைக்காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வந்திறப் பித்தன தென்கடலிற் பிணியன கன்மிதப் பித்தன் சைவப்பெரு நெறிக்கே அணியன நாவுக்கரசர் பிரான்றன் அருந்தமிழே."
- திருத்தொண்டர் திருவந்தாதி 25

Page 27
"நந்திக்கு நம்பெரு மாற்குநல் லூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி செற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்றொண்டன் என்பர் இவ்வையகத்தே"
- மேலது 32
"பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தோற்றோணி கண்டீர் - நிறையுலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்"
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்
கோவை இவ்வாறு அருந்தமிழ் தந்த அப்பரைக் கவியோகி என்றும், செந்தமிழ் தந்த நாவலரை
2/2
/ ബ
நினைவிற் ெ
/ LLSL L SSL L SSZSLL LS SL L S L S S S S S S S SLLLSSSLL LS SSSL LSSL LSL LSL SLL L SLL SL LL SS
须 ஆணி 1 17-07-2001 செவ்வாய்க்கிழமை / / 2 18-07-2001 புதன்கிழமை 須 4 20-07-2001 வெள்ளிக்கிழமை / / / 8 24-07-2001 செவ்வாய்க்கிழமை / / 10 26-07-2001 வியாழக்கிழமை 须
11 27-07-2001 வெள்ளிக்கிழமை
12 28-07-2001 சனிக்கிழமை
须 须 15 31-07-2001 செவ்வாய்க்கிழமை 须 - 须 16 01-08-2001 புதன்கிழமை 须 須 18 03-08-2001 வெள்ளிக்கிழமை / 须
23 O8-08-2001 புதன்கிழமை
/ 27 12-08-2001 ஞாயிற்றுக்கிழமை / 須
公 Z
 

மதுரகவி என்றும், ஞானத்தமிழ் தந்த சம்மந்தரைத் தமிழாகரர் என்றும் நம்பியாண்டார் நம்பி போற்று கின்றார். எனவே பாடற் பொருளுணர்ந்து மூவர் தமிழைப்பாடிப் பணிவோமாக.
"சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்காதானை
நற்பான்மை அறியாத நாயினேனை
நன்னெறிக்கே செலும் வண்ணம் நல்கினானைப்
LITT uuT6Jub 6 Tu TyČ LITTLņuuTọử
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளுர் அளுங்கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடிலாரே."
2 公
e es 须 b/767762/7/DGZ--- SS SSLL SSSLL SSSLL SSZSLL L SLL SLLLL S SZSSL LS SLLSS SLL LSS SLLS SLL LSS LSL LSSL L S SLL SL L / 须 ஆடிப்பிறப்பு
/ பிரதோஷ விரதம் 須 / ஆடி அமாவாசை விரதம்
/ நாகசதுர்த்தி விரதம், ஆடிப்பூரம் 须 o 须 ஷஷடி விரதம் 须
பெருமிழலைக்குறும்பர் குருபூசை
/ சுந்தரமூர்த்திநாயனார் குருபூசை / சேரமான் பெருமான் குருபூசை 須 / கலியர் குருபூசை, கோட்புலியர் குருபூசை % / பிரதோஷ விரதம்
須 பூரணை விரதம், வரலசுஷ்மி விரதம் 须
பட்டினத்தடிகள் குருபூசை
须 சங்கடஹர சதுர்த்தி விரதம் 3 / கார்த்திகை விரதம், மூர்த்தியர் குருபூசை 須 புகழ்ச்சோழர் குருபூசை / 须 22222 公

Page 28
Kanthapuranan
THE AV SKANDA
Indira and the gods were happily hopeful of the prospect of the birth of a son toSiva and Parwathy which event they believed would bring an end to their sufferings. But the prospect remained an empty dream. They felt Siva had ignored their earlier request or was indifferent to their sufferings. They however decided to approach Eswara once again and renew their appeal led by Vishnu. They reached Kailas and with the kind permission of Nandhi Deva gained admission to the Lord's presence. "What amount of apology is needed to atone for the disturbance we cause, we know not, Oh Lord" they moaned. "We were fervently hoping you would beget us a son to end our endless suffering at the hands of the Asuras. Delay not any more Our Lord in granting our request," they pleaded.
Easwara cast a benign look over the celestials and said " Your request shall be granted forthwith". As the devas sat watching spell - bound, he took a new appearence with six faces. Now from each eye on the forehead of each of the faces there emanated a fire spark. Since those sparks were produced to bring good to the lives, they did no harm to Asuras. However their dazzling brightness and fierce heat made Umadevi tremble with fear . She was so scared that she withdrew from the spot. Meanwhile the sparks flew on all directions vomiting Our great mass of heat. The celestials in great fear implored the Lord to call them back to Hisplace. Siva accordingly summoned them to His presence. Then he called upon the
 

ATAR OR
KUWARA
V. SIVARAJASINGAM
Gods of air and fire and bid them to carry the sparks and put them in river Ganga which would then take them to Saravana Pond. On hearing these words the two Gods were panicsticken. They fell at Siva's feet and with great trepidation said. "Forgive us O Lord for daring to speak. The fireborn of the sparks that spread far and wide with great vehemence threatening to consume the entire earth a few seconds before, now lies inactive because of your grace and power. How can We bear such deadly sparks. Even the very thought of approaching them seems to Scorch Our hearts." Lord Siva graciously smiled and told them. He would give them enough strength enabling them to carry the sparks till they are deposited in the river. The two Gods agreed. Meanwhile Lord Siva told the celestials. "Once the sparks reach the Saravana Pond, they will together burgeon as a child who will grow up as Muruka and destroy the entire Asura clan. Now bury your worries in meditation and return to your respective places."
Gangadevi received the sparks with care and regard and delivered them unto Saravana Pond as Siva willed it. There the sparks glowed like radiant lotus flowers. The flowers transformed themselves into six beautiful faces bearing which appeared a child glowing with divine effulgence.
It was indeed the Absolute, the Supreme one without begining or end the one that is at once formless and manifesting in form that true

Page 29
Brahma that came into being as Sri Muruka possessing six beautiful faces and twelve arms and eternal light for the body.
The omnipresent Lord who is beyond the reach of words the mind and the scriptures, appeared as six-faced Kumara (Theeternal child) resting or a sweet smelling lotus flower amidst the Saravana Pond. The celestials were overwhelmed with joy. Brahma, Vishnu and Indira summoned the Pleiad sisters and said "The Six - headed Lord Muruga is staying in the form of a child in Saravana Pond. It is our request that you suckle and bring him up.They gladly consented and approaching the Pond they stood amazed losing them Selves in admiration of the ineffable beauty of the child. Aware of the intention of the celestial sisters he abandoned his present form with the view to granting their yearning and appeared before them as six different children, one gently crawling another toddling, yet another swimming in the pond, the fourth resting on the flower, the fifth one leaping to reach them and the sixth falling in its attempt to leap.
When Umadevi ran in fear, unable to bear the heat of the sparks that appeared from Lord Siva's eyes the nine precious stones fell from her anklets. Finding in them the beautiful reflection, Umadevy the Lord he spread his gracious look upon them and they stood transformed into nine maidens, who got their names after the Stones with Umadevi's magnanimity they became pregnant and each of them gave birth to a child called Manicka Valli bore a son called Veerabahu and other sisters produced eight sons. The young knights who appeared thus, fell at the feet of Siva and Umadevi who bestowed their blessings on them all.
Siva then invited his consort Uma to go with
 

him to Saravana pond to take Balakumar to Mount Kailas. Uma consenting, they'left Kailas, reached mount Himalayas and approached the Saravana pond wherein they found their darling child appearing in six differentforms. Mother Uma was so enchanted by the charming and resplendent appearence of the six forms that she got down into the pond and embraced with delight all the six tiny tots with her tender hands, there by transforming them into one lovely childbearing six faces and twelve arms. Just as all the saktis (energies) are combined into one, so also the six forms became united into one. Thereby Kumara obtained the name Skanda. After being brought to mount Kailas, Kumara was found to loiter about the slopes of the mountainto play ingroves and gardens, trot along riversides and bathe in water-falls. He would sometimes appear one-faced, somtimes as a six faced child. He would sometimes appear, alad, a bowman and Brahmin watching the frolicsome gambols of lies son, Siva spoke of the prowess of his son to Uma, "Since Ganga carried our son born of my eyes, he is known as Gangeya, as he grew up in the saravana pond, he has got the name Saravana bava, because of his being breastfed by the place sisters, he is called Karthikeya. Consequent on your uniting of his six forms into one, he has received the appallation Skanda. It is from my six faces representing Pranava (The Primeval sound) and Panchchara (the five letters) that he gothis (six countenances. The Sadakshara(six letters in his name sarava nabawa) are but the combination of Pravana the Primeval letter and Panchchara ( five letters viz. Na ma si Va ya ). Hence Shanmuga is the embodimentof my sakti. There is no distinction between myself and Himself. He and I are one entity. He is omnipresent like me. He is omniscient though he appears a child. He is capable of bestowing wealth, knowledge and grace on those who worship him. There will be an occasion when Skanda would question Brahmato explain the

Page 30
meaning of Pranava, the source of scriptures. Brahma would blink with ignorance.
Our son would then strike him on the head, put him in prison and would himself undertake the function of creation for a considerable period. He would then defeat and destroy, Tharak asura ( the elephant headed) Sinhamukasura
நெய்தடவி வாரிச் செறித்திட்ட நீலமணி
நேர்கின்ற கொண்டை யாட
நிலவுமிழு கலைமதியி னொளிர்நித் திலச்சுட்டி
நெற்றியில் வயங்கி யாட வெய்யகயல் விழிசென்று போரடி மீள்செவி
விளங்கு குழை மகரமாட வெண்சங்கு வளையுடன் பரியகம் சூடகம்
மென்மலர்க் கையிலாட ஐயர்திரு மேனியைத் தழுவிக் குழைக்கவென்
றமைந்தமணி மார்பகத்தே ஆணிமுத் தாரமும் அடியர்பா மாலையும் அசைந்திசைந் தொலி செய்தாட
செய்யமலரடிதனிற் கிண்கிணி சிலம்பிடச் செங்கீரை யாடி யருளே தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி
நாகம்மை
செங்கீரை யாடியருளே
 
 

(the lion faced) and Sura - Pathma the Lordof the Asuras and redeem the celestials from frolldom restoring to them their heavenly pelf and positions.
Umadevi was highly pleased to hear of the prowess of her son eulogized by the father.
கருவிற் புகுதா வகையெனது
கருத்திற் புகுந்துள் ளொளிபெருக்கிக்
கதிபெற் றுய்யும் நெறிகாட்டும் கதிரே வருக கயிலைமலை
மருவு மொருத்தல் நிதம் சுவைக்க
வளருங் கரும்பே வருகசதுர்
மறைக்கற் பகத்தில் அலர்ஞான
மலரே வருக மலர்மகளிர் இருவர்தொழும்பு செயவிளங்கும் இறைவி வருக இன்புலவோர் இயற்றுஞ் செஞ்சொற் கவிமாலை
இறைக்குஞ் செழுந்தே னுடன்பயிலும் மருவே வருக இமயமலை மானே வருக வருகவே மறிக்குந் திரைசூழ் நயினைவளர்
மாதே வருக வருகவே,
- பிள்ளைக்கவி வ. சிவராஜசிங்கம்

Page 31
ck
*
米
ck
ck
ck
米
:k
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுை
சிவபூஜையில் பங்குபற்றிய அருளாசி வ
மங்கள இசை வழங்கிய நாதஸ்வர, தவி
ஒதுவார், பண்ணிசைக் கச்சேரிக்கு அணி
வடக்கு கிழக்கின் புனர்வாழ்வு, புனரமை
இந்து கலாசாரத் திணைக்களம்.
Sri Lankan Air LineS.
தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி நிறு தமிழ்ச்சேவை, "சக்தி” FM, சூரியன் F.
"தினக்குரல்" - பத்திரிகை நிறுவனம்.
சைவசமய உயர்தகைமை வினாவிடைப் கத்தர்கள், மதிப்பீடு செய்தவர்கள், பாடசா மாணவமணிகள்.
சைவசமய உயர்தகைமை வினாவிடைட் பங்கேற்றுப் பரிசு பெற்றவர்களுக்கான த அன்பளிப்புச் செய்த பெரியோர்கள்.
"சைவநீதி ஐம்பதாவது இதழ் வெளியீடும் சிறப்புற நடைபெறத் தம் பங்களிப்பை ம
"ஆனந்தசாகர மண்டப நிறுவனர், காப்
GESTILJL JT6TT356T.
சனாதனதர்ம விழிப்புணர்ச்சிக் கழக அங்
“லகூழ்மி அச்சகத்தினர்"
விழாவிற்கு வருகைதந்து, விழாவைச் சிற
கொட்டாஞ்சேனை - "சம்பூர்ணா”.
"கலை அரசி" நிறுவனம் - சென்னை.
இவர்களுக்கு உள
 
 

றை ஆதீனம்.
ழங்கிய சிவாசாரிய பெருந்தகைகள்.
பில் வித்துவான்கள்.
சேர்த்த பக்கவாத்தியக் கலைஞர்கள்.
ப்பு, தமிழ் விவகாரங்களுக்கான அமைச்சு.
றுவனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன M.
போட்டியை மேற்பார்வை செய்த உத்தியோ லை அதிபர்கள், மற்றும் போட்டியில் பங்கேற்ற
போட்டி, கட்டுரைப் போட்டி என்பவற்றில் நங்கம், வெள்ளி, வெண்கலப் பதங்கங்களை
, சைவசித்தாந்த எழில் ஞானப் பெருவிழாவும் னமுவந்தளித்த பெரியோர்கள், பேச்சாளர்.
பாளர்கள், "சரஸ்வதி மண்டபம்" நிறுவனர்,
கத்தினர்கள்.
றப்புறச் செய்த அன்பர்கள்.
ம் கனிந்த நன்றி!

Page 32
Regd. No. QD / 19 / News 2001 S66, g5up 603 Gué. கொழும்பு-13, லக்ஷமி அச்சகத்தில் அச்சு
 

தி நிறுவனத்தினரால் இல195, ஆட்டுப்பட்டித்தெரு, Fட்டு 28-06-20001 இல் வெளியிடப்பட்டது.