கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2002.11-12

Page 1
SAIVALA
斷 O O O. O. {(மலர் 6 சித்திரபானு - கார்த்திகை
 
 

驢艦野儘
D
LDLLILD 313 buoulb
வளர்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ்
TEETHI
NOVEMBER-DECEMBER 2002 65 08 D.
BLITT : -

Page 2
1. மறந்துய்வனோ .
2. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவ
3. தேவாரத் திருப்பதிகங்களை வாயாராப்பா
4. பதினெண் சித்தர்கள் - பூர் அழுகண்ணர்
5. சிவவேடச் சிந்தையர் .
6. பெரியோரைப் பேணல் .
7. வாய் வேதாந்தம் .
8. முசுகுந்தச்சக்கரவர்த்தி S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 9. தேவாரம் என்னும் முத்தமிழ் வேதம் .
10. அன்றாட வாழ்வில் சைவசமய ஒழுக்கம்
11. சிந்திப்போம் திருவாசகத்தை .
12. தமிழ்விடு தூதிற் சைவம் .
13. சிவப்பிரகாசம் .
13. நினவிற் கொள்வதற்கு .
முகவரி மாற்றம் இருப்பின் எமக்கு அ * இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்காவிடின் L இதழ்களை அனுப்பிவைப்போம்.
சைவநிதி 1
பெறுமதி தனிப்பிரதி ரூபா 25.00 ஆண்டொன்றி
ஆண்டொன்றிற்கு ஸ்ரேலிங் சைவநீதியின் வளர்ச்சியில் எங்கள் பங்களிப்பு என சந்தா அனுப்பவேண் C. Navariaeethaa
42, Janaki Lane,
Sri Lanka. T'Phone NO. 595
சைவநிதி இதழில் வெளிவரும் கட்டு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பா

C C C L S S C C L C L C S L 0 S L C C C C C C C C C C C C C C C S L SLL L C C C C C C SCSC C C C S C C C C S S S C S L S S S LS S LSTS LS S LS L SL SL SL SLS L L L L L L S S .......01
TUID ........................................................................................................................................... O2
டி மகிழ்வோம் . O3
04
... 05
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S O7
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 09
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 11
S S S S S S S S S S S S S L S S S S C LS L S S S S S S S S LS S S LL LS LS LS S LS LSL S L S S S S S S S S S SS SS S LS L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 13
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 15
S SL S LS S S S S S S S S S L S LS S S S S S S S S S S S S S S S LL LS LSL SL S LS L S LS SL S LS S S LS S S LSS LSS S SS S L LS SS S SS S L LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 19
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 22
S S S S S LSL S LS S LS LS LS LS LS S L L S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LLS S C S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 25
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 28
கவனத்திற்கு அறியத்தரவும். எம்முடன் தொடர்புகொள்ளவும். கிடைக்காத SSSSSSSSSSSSSSSSSSSSSS .– – الـ
- O Dாத இதழ் தி விபரம் ற்கு ரூபா 250.00 ஏனைய நாடுகளில்
பவுண் 10 அல்லது US$ 15 ான என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக. டிய முகவரி: ukungar Colombo-04,
221
ரைகளிலுள்ள கருத்துக்களுக்குக் ளிகளாவர். -இதழ் நிர்வாகிகள்

Page 3

Du tíð
விளங்குக உலகமெல்லாம்"
《ཚེ་
பநிதி
டையவன் மனிதன் நினைக்கும் கருவி மனம் மனிதன்
த நினைப்பவன் என்று பொருள். மனிதனுக்கு மட்டுமே
வேறு எந்த உயிரினங்களுக்கும் மனம் கிடையாது.
பிறந்த எல்லோரும் மனிதனாகிவிட முடியுமா? உணவு,
ா உலகப் பற்றுக்களை நினைப்பவன் மனிதனாக
குகளும் உண்ணுகின்றன, உறங்குகின்றன.
ன் உள்ளமார்? இந்த உடம்பைக் கொடுத்தவன் யார்?
உடம்பு கிடைத்தது? இவ் வினாக்களுக்கு விடை ழுக்கத்தில் நின்று இறைவனை நினைத்திருப்பவனே ரிதன் இல்லையேல் மனித உடம்பெடுத்த விலங்குதான்.
மனிதர்களாக வேண்டும் பொன்னையும், பொருளையும்,
ட்டாடையையும், பதவியையும் நினைத்து நினைத்து
ாகி வருந்தக்கூடாது.
ப்பிட்ட நேரங்களில் இறைவனை நினைக்க வேண்டும்.
ஸ்ல இறைவனை இடையறாது நினைக்க வேண்டும்.
ம் கோயிலாகக் கொண்டவன் இறைவன். அவனை
னா என்கிறார் அப்பரடிகள்
கை மும்மத வேழ முரித்தவன்
வர் மனம் கோயிலாக் கொண்டவன்
தும் வேடமாம் அம்பலக் கூத்தனை -
நனைப் பொழுதும் மறந் துய்வனே."

Page 4
திருப்பாச்சி
பண்: தக்கராகம் அபஸ்மாரம் முயலகன்) .
திருச்சிற் துணிவளர்திங்க டுளங்கிவிளங்கச் சுடர்ச்ச பணிவளர் கொள்கையர் பாரிடஞ்சூழ ஆரி அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி ல மணிவளர் கண்டரோ மங்கையைவாட மய
கலைபுனைமானுரி தோலுடையாடை கனலி தலையணிசென்னியர் தாரணிமார்பர் தம்ம அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி
இலைபுனைவேலரோ வேழையைவாட இட வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை வேண் நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி லாச்சிரா செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் சி கனமலர்கொன்றை அலங்கல் இலங்கக் க புனமலர்மாலை யணிந்தழகாய புனிதர்கொ வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி லாச்சி மனமலிமைந்தரோ மங்கையைவாட மயல் மாந்தர் தம்பால்நறு நெய்மகிழ்ந்தாடி வள மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை மு ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி லாச்சிரா சாந்தணிமார்பரோ தையலைவாடச் சதுர்ெ
நிறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ஆறதுசூடி ஆடரவாட்டி யைவிரற் கோவன பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா ம ஏறதுஏறியர் ஏழையைவாட இடர்செய்வதே பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைெ கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்ெ அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச் சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சத ஏவலத்தால்விச யற்கருள்செய்து இராவன மூவரிலும்முத லாய்நடுவாய மூர்த்தியை யாவர்களும்பர வும்மெழில்பாச்சி லாச்சிரா தேவர்கள்தேவரோ சேயிழைவாடச் சிதை மேலதுநான்முக னெய்தியதில்லை கீழது நீலதுவண்ணனு மெய்தியதில்லை யெனஇ ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி லாச்சிர பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் பழிெ நானொடுகூடிய சாயினரேனும் நகுவர் அ ஊனொடுகூடிய உட்குநகையா லுரைக 6 ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சி பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைெ அகமலிஅன்பொடு தொண்டர்வணங்க ஆக் புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்ெ நகைமலி தண்பொழில் சூழ்தருகாழி நற்ற தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச்
திருச்சி
 

оптáFafUTTLDib
காக்கைவலி, பாரிசவாயு நீங்க
றம்பலம் டை சுற்றிமுடித்துப் டமும் பலிதேர்வர் ாச்சிரா மத்துறைகின்ற
ல்செய்வதோ இவர் மாண்பே.
bசுட ராலிவர் கண்கள் டிகள் எளிவரென்ன லாச்சிரா மத்துறைகின்ற ர்செய்வதோ இவரீடே. டுவர்பூண்பது வெண்ணுால்
நம்மைநயந்து மத்துறைகின்ற தைசெய்வதோ இவர்சீரே. $னல்தருதுமதிக் கண்ணி
லாமிவரென்ன ரா மத்துறைகின்ற செய்வதோ இவர் மாண்பே. ர்சடை மேற் புனல்வைத்து முதிரவோர் வாய்மூரிபாடி
மத்துறைகின்ற சய்வதோ இவர் சார்பே.
னாலுற்று நோக்கி 5I e.6OL த்துறைகின்ற ா இவர் ஈடே.
வண் ணுால்புனை கொன்றை
கா லாமிவரென்ன சிரா மத்துறைகின்ற நிர்செய்வதோ இவர்சார்வே. ா னையீடழித்து பன்றிமொழியாள் மத்துறைகின்ற செய்வதோ இவர்சேர்வே. சேவடிதன்னை இவர் நின்றதுமல்லால் ா மத்துறைகின்ற சய்வதோ இவர்பண்பே. வரிருபோதும் ாவைகொளவேண்டா ரா மத்துறைகின்ற சய்வதோ இவர் பொற்பே. சிராமத் துறைகின்ற கா லாமிவரென்ன மிழ் ஞானசம்பந்தன் சாரகி லாவினைதானே. 33 buoub
1ம் திருமுறை
1O.
11

Page 5
கார்த்திகை தேவாரத் திரு
வாயாரப்பாடி
தேவாரம் வேதசாரம். ஆகவே சைவ நாயன் மார்கள் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் வேதவாக்காகக் கருதப்படுகின்றன. ஆழ்ந்த கருத் துக்களுடன் அருமையாகப் பக்தியோடு அருளிச் செய்யப்பட்ட இந்தத் திருப்பதிகங்கள் சைவ மக்களது அரும்பெரும் பொக்கிஷமாகும். கிடைத் தற்கரிய இந்தத் தேவாரம் நாவாரச் சுவைத்துப் படித்து இன்புறத்தக்கவை.
சைவ நாயன்மார்கள் பக்திச் சுவை ததும்ப அருளிய தேவாரம் பண்ணோடு ஒதப்பட வேண் டியது. வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் இறைவன் தந்தது தன்னை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம். இறைவனுடைய திருவருட்டிறனை எடுத்தியம் பும் தன்மை வாய்ந்த தேவாரத் திருப்பதிகங்கள் பூரீ இராஜராஜசோழ மன்னவனின் ஆணைப்படி நம்பியாண்டார் நம்பிகளால் பன்னிரு திருமுறை களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இத்துணை சிறப்பு வாய்ந்த தேவாரத்தை நாம் முறையாக விதிப்படி ஓதவேண்டும். சைவ ஆலயங்களில் திருமுறை ஒதப்படும்போது அதா வது பஞ்சபுராணம் ஒதும்போது பண்முறை பிற ழாது சரியாக ஓதவேண்டும். வரிகள் மாறியோ அல்லது வேறு சொற்களைச் சேர்த்தோ பண் முறை தவறியோ பாடக்கூடாது. அவ்வாறு செய்தல் LD35TLIT6) ILDIT(35lb.
ஆலயங்கள் சைவ ஆகம முறைப்படி சைவக் கோட்பாடுகளுக்கமையவே அமைக்கப்பட்டுள்ளன. எனவே தேவாரங்களும் விதிமுறை தவறாமற் பண்ணோடுதான் ஒதப்படவேண்டும். இதில் சற் றேனும் விலகுதல் கூடாது. அவ்வாறு பிழை செய்தால் நரகத்துக்கே தள்ளிவிடும்.
இனிமையான இசையில் பண்ணோடு ஒதும் தேவாரங்கள் காதுகளில் தெளிவாகப் புகுந்து பக்தியை ஏற்படுத்திவிடுகின்றன. காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தம்மை நன்னெ றிக்குய்ப்பது தேவாரம் ஊனினை உருக்கி
 
 
 

(சைவரீதி) ப்பதிகங்களை மகிழ்வோம்
சைவப்புலவர், சிவநெறிக்கலாநிதி, கவிமணி, இராசையா பறிதரன் நாச்சிமார் கோயிலடி, யாழ்ப்பாணம்.
உள்ளொளி பெருக்கும் தேனினும் இனிய தேவாரத் திருப்பதிகங்களை நாவாரப்பாடி நவின்றேத்தும் போது ஏற்படும் ஆனந்தத்துக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை. அது உண்மையாக அவ்வாறு ஓதி அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். சில விடயங்கள் எழுத்திலோ சொல்லிலோ வடிக்க முடியாதவையாக இருக்கின்றன. அதில் இந்தத் தேவாரம் மிகவும் மகிமை பொருந்தியது; வர்ணிக் கவோ எடுத்தியம்பவோ முடியாது.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் இயற்கை எழில் அழகு கொஞ்சி விளையாடியிருப்பதை ஆங்காங்கே காணலாம். அவர் சிறுபராயத்தவராதலால் இயற்கையழகு அவரை ஈர்த்ததில் வியப்பில்லை.
திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருப்பதி கங்களில் ஆழ்ந்த கருத்துச் செறிவும் திருவருட் பொலிவும் மிளிர்வதைக் காணலாம். அவர் எவ்வ ளவோ கஷ்டப்பட்டுத்தான் கடவுளைக் கண்டவர். அவர் எம்பெருமானிடம் ஆழ்ந்த பக்தியுடையவர். ஆகவே அவர் அருளிய திருப்பதிகங்கள் பக்தி மயமாகவும் அருட்செறிவு உடையனவாகவும் விளங்குகின்றன.
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த அற்புதத் திருப்பதிகங்களில் தோழமையுணர்வும் கட்டளையிடும் பாங்கும் அதிகாரப் போக்கும் ஆங்காங்கே அழகுசெய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த மூவர் தமிழும் அருமையான அருட்பனுவல்கள் உள்ளத்தைத் தொடக்கூடிய அருட்செறிவு இவற்றில் இரண்டறக் கலந்தே Ա |6II6II601.
ஒப்பிலாமணியாக விளங்குகின்றவனும் வேதங் கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனாக விளங்குகின்றவனும் மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற

Page 6
பதினெண் சித்தர்களின் வரிசையில் இவரின் பெயர் தப்பாது கூறப்படும். இவர் சீன நாட்டைச் சேர்ந்த ஆசாரி இனத்தவராவார். மரவேலை, தங் கம், வெள்ளி, இரும்பு ஆகிய உலோக வேலை செய்யும் வகுப்பினரே ஆசாரி ஆவார். எப்போதும் அழுகண்ணோடும் கவலை தோய்ந்த முகத்துட னும் காணப்படுபவராதலால் இவருக்கு அழுகண் ணிச் சித்தர் என்ற பெயர் உருவாயிற்று. அழு கண்ணி என்ற அரியமூலிகையின் பாவனை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இவர் என்ப தாலும், இவருக்கு அழுகண்ணர் என்ற பெயர் நிலைக்கலாயிற்று. அத்துடன் இவரும் அட்டமா
3ம் பக்கத் தொடர்ச்சி. மெய்ச்சுடராகவும் விளங்குகின்றவனுமாகிய சிவ பெருமான் தம்மை வழிபடும் அடியார்களின் இன் னல்களையும் இடுக்கண்களையும் துன்பங்களை யும் துயரங்களையும் போக்குவதற்காகவே ஐந் தொழில்களையும் அழகுடன் புரிகின்றார். அவர் அதைச் செய்யாவிட்டால் இந்த உலகமே அடங்கி ஒடுங்கிவிடும். ஆட்டமே நின்று இயக்கமும் நின் றுவிடும். ஆகவே பரங்கருணைத் தடங்கடலாகப் பரிணமித்து எங்கும் வியாபகமாய் இருக்கின்ற இறைவனை நாம் பாடித்துதித்து ஒதியுணர்ந்து வழிபடுவதற்குத் தேவாரங்களே துணைபுரிகின்றன. அத்துடன் திருமுறைகள் அனைத்துமே தெய்வீகம்
 
 

அழுகண்ணர்
Dr.எஸ். லோகநாதன் B.S.M.S(India).P மரகதம் கிளினிக், நாநாட்டான், மன்னார்.
சித்திகளிலும் வல்லவராயினும், அவற்றினால் எவ்வித ஆன்மபலனும் இல்லை என்பதை அறிந்து ஞானமார்க்கத்தைத் தன்வாழ்நாளில் கழித்தார். மக்களின் அறியாமை, துன்பம், அகங்காரம், தாழ்வு மனப்பான்மை மற்றும், தீராநோய்களினால் படும் அல்லல்கள் ஆகியவற்றைக் கண்டு மனம் புழுங்கித் தனது மனத்தில் எழுந்த உணர்ச்சிகளை நல்ல சந்த அமைப்புடன் "அழுகண்ணிச் சித்தர் பாடல்களாக" உணர்ச்சி ததும்பும் சொற்களால் இயற்றியுள்ளார். அப்பாடல்களின் சந்த அமைப்பு பாடுபவரையும் தமை மறந்து அழவைத்துவிடும் ஆற்றலுடையது. அத்தகைய பாடல்களை இயற் றிய இச்சித்தரை அழுகண்ணிச்சித்தர் என்றழைத் தனர். இவர் அழகர் மலையில் சமாதி அடைந்தார்.
பொருந்தியவை. அவற்றைத் தெய்வீகத் திருவ ருள் செறிந்தவர்களால்தான் ஓதி உணரமுடியும். மற்றவர்களுக்கு அதை நெருங்கவே அருகதை கிடையாது. பூர்வஜென்ம புண்ணியம் செய்தவர்
களுக்குத்தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும். எல் லோருக்கும் கிடைக்காது. எனவே, ஆதியும் அந் தமும் இல்லாத இறைவனை பக்தர்களின் உள் ளங்களில் அருட்பெருஞ் சோதியாக விளங்கிப் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து பரிபூரணா னந்தமாக விளங்குகின்ற பரமசிவன் சிவபெருமான் என்ற பரம்பொருளைப் பாடிப்பணிந்தேத்தி இம் மைக்கும் மறுமைக்கும் நற்பயனைத் தேடிக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தி வாழத் தலைப்படுவோமாக.

Page 7
சிவவேடச்
சேதி நாட்டிலே திருக்கோவலூர் என்னும் ஓர் இராசதானி உண்டு. அங்கிருந்து அரசாண்டு வந் தவர் மெய்ப்பொருள் நாயனார். அவர் சிவனடியா ரின் சிவவேடத்தையே மெய்ப்பொருளெனச் சிந்தை செய்வார். அதன்காரணத்தால் அவருக்கு மெய்ப் பொருள் நாயனார் என்று பெயர் வழங்கலாயிற்று. வேதாகமங்களின் உண்மையை அறிந்து, அறிந் தபடி ஒழுகிவருபவர். அவர் தருமநெறி தவறாதவர், . தம்மை எதிர்த்த மன்னரை ஜெயித்து, மக்களுக்குக் கவசமுங் கண்ணாகவும் வாழ்ந்து வந்தார். சிவா லயங்களில் நித்திய நைமித்திய பூசைகள் முட் டின்றி நடைபெறச் சிறப்பாக நிவந்தங்கள் அமைத் தவர் தன்னிடம் வரும் சிவபக்தர்களை மனமுவந்து வரவேற்று வேண்டுவன கொடுத்து உபசரிப்பார்.
இங்ங்னமாகச் சைவநிதியே தலைக்கொண்டு வாழ்ந்து வரும் நாளில், முத்திநாதன் என்னும் அரசன் அவரோடு போரிட யுத்த சந்நத்தனானான். நால்வகைப் படையோடு அவருடன் போர் புரிய வந்தான். அவன் பலமுறை போர் செய்தும் மெய்ப்பொருள் நாயனாரை வெல்ல முடியாது புறமுதுகிட்டோடினான். ஆதலின் முத்திநாதனுக் குப் பொறாமையே தலைக்கொண்டது. எப்படியும் அவரை ஜெயிக்க வேண்டுமென்று நினைத்தான். யுத்தத்தால் அவரை வெல்ல முடியாது. சூழ்ச்சி யால் அவரை மடக்க நினைத்தான். சிவவேடத்தில் அவர் அளவிலாப் பக்தி கொண்டிருக்கிறார். விபூதி தரிக்கின்ற அவ்வடியார் வேடத்திற் சென்று கபடத்தால் வெல்ல வேண்டுமென்று நினைத்தான்.
உடல் முழுதும் விபூதியணிந்தான். சடை களைச் சேர்த்துக் கட்டினான். காவிவஸ்திரமும்
தரித்துக்கொண்டான். புத்தகம் போன்ற அமைப்பில்
 
 

சிந்தையர்
சைவப்புலவர்மணி வ. செல்லையா
உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டான். அதற்குக் "கவளி” என்று பெயர். அதற்குள் ஒரு கூரான ஆயுதம் ஒன்றை வைத்துக்கொண்டு புத்தகக் கவளியுடன் திருக்கோவலூரையடைந்தான். சென்ற வன் அரசமாளிகை வாயிலிற் புகுந்தான். முன்னரே சிவ வேடதாரிகளை வணங்கி மரியாதையோடு உள்ளே புகவிட்டுப் பழகியவர்கள் வாயில் காவலாளிகள். ஆனமையின் தற்போதும் G TU வேடந்தாங்கி வந்த முத்திநாதனையும் சந்தேக மின்றி வணங்கி உட்புகவிட்டார்கள். அவனும் எல்லா வாயில்களையுங் கடந்து இறுதி வாயிலை யடைந்தான். அவ்வாயிலில் நின்ற தத்தன் என் பான் "இப்பொழுது இராசா நித்திரை செய்கிறார். நீர் சமயமறிந்து போகவேண்டும்" என்று அவனை அப்பாற் புகவிடாமற் தடுத்தான். அதையும் பொருட்படுத்தாமல் முத்திநாதன் "நான் அவருக்குச் சாத்திரோபதேசம் செய்யப் போகிறேன். நீ என் னைத் தடுத்தலாகாது" என்று கூறி உட்புகுந்தான். அரசனுடன் மனைவியும் ஒருங்கு படுத்திருந்ததைக் கண்டும் முத்திநாதன் கட்டிலுக்கருகே பண்பின்றிச் சென்றான்.
அப்பொழுது மனைவியார் உடனுமெழுந்து மெய்ப்பொருள் நாயனாரை எழுப்பினார். அவர் விழித்தெழுந்து அவனை எதிர்கொண்டு வணங்கி நின்று, "சுவாமி தேவரீர் இங்கே எழுந்தருளக் காரணம் யாது?" என்று வினவினார். அதற்கு முத்திநாதன் "உங்கள் கடவுளாகிய பரமசிவன் ஆதிகாலத்திலே செய்தருளிய சைவாகமங்க ளுள் எவ்விடத்திலும் காணப்படாத ஒராகமத்தை

Page 8
உமக்குப் போதிக்கக் கொண்டு வந்திருக்கிறேன்"
சித்திரமானுட கார்த்திகை
என்றான். மெய்ப்பொருள் நாயனார் அதைக்கேட்டு "இதைப் பார்க்கிலும் உயர்ந்த பேறு அடியேனுக்கு உண்டோ? அதன் பொருளை வாசித்து விளக்கி யருளுக” என்று வேண்டி நின்றார். முத்திநாதன் "பட்டத்தரசி இல்லாமல் நானும் நீரும் வேறு இடத்திலிருக்க வேண்டும்" என்றான். உடனும் அரசன் பட்டத்தரசியை அந்தப்புரத்துக்கு அனுப்பி விட்டு, முத்தி நாதனை அழைத்துக்கொண்டு தனியறையை அடைந்தார். அங்கு அவனை ஓர் உயர்ந்த ஆசனத்திருத்தித் தான் கீழே பக்தி சிரத்தையோடிருந்துகொண்டு "இனி அதன் பொருளை உரையும்" என்றார். முத்திநாதன் தன் கையில் வைத்திருந்த வஞ்சகக் கவளியை மடிமேல் வைத்துப் புத்தகம் அவிழ்ப்பதுபோல் அவிழ்த்தான். அரசர் அப்பொழுது கைகூப்பிக் கண்மூடி வணங்கினார். அதற்குள் மறைத்து வைத்த கூரிய உடைவாளைத் திடீரென எடுத்து அவரைக் குத்தினான். அரசன் சிவவேடமே மெய்ப்பொருள் என்று வணங்கினார்.
முத்திநாதன் உள்ளே புகுந்த போதே சந்தே கித்து யாவையும் அவதானித்து நின்ற தத்தன் என்பான் நொடிப்பொழுதிற் பாய்ந்து தன் உடை வாளை உருவி அவனை வெட்டப் போனான். அதற்குமுன் உடைவாளாற் குத்தப்பட்ட மெய்ப் பொருள் நாயனார் விழும்போது "தத்தா இவர் சிவனடியார். இவருக்கு ஒரு இடையூறுஞ் செய் யாதே" என்று கையாற் தடுத்து விழுந்தார். மெய்ப்பொருள் நாயனாரை அவன் தலைதாழ்த்தி வணங்கி அவரைத் தாங்கி நின்று "அடியேன் செய்யவேண்டிய குற்றேவல் யாது” என்றான். மெய்ப்பொருள் நாயனார் "வழியிலே இவருக்கு எவரும் இடையூறு செய்யாதபடி அழைத்துக் கொண்டு ஊர் எல்லையில் விட்டுவா” என்று கூறி
னார்.
 
 
 

அங்ங்னமே தத்தன் முத்திநாதனை அழைத் துக் கொண்டு சென்றான். இராசாவை முத்திநாதன் குத்திய செய்தியை ஊர் மக்கள் அறிந்துவிட்டனர். ஆதலின் அவர்கள் முத்திநாதனைக் கொல்லச் சூழ்ந்து கொண்டனர். தத்தன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, "இந்தச் சிவபக்தருக்கு ஒருவரும் இடையூறு செய்யாதபடி இவரை ஊர் எல்லையில் அழைத்துக் கொண்டு சென்று விட்டுவா என்று இராசாவே எனக்குக் கட்டளையிட்டார்” என்று கூறினான். அதனைக் கேட்ட அவர்கள் பயந்து அகன்று விட்டனர். தத்தன் அவனை அழைத்துக் கொண்டு நகரத்தைக் கடந்து சென்று, அவனுக் குரிய காட்டு வழியில் விட்டு அரசமாளிகைக்கு வந்தான். சிவவேடந்தாங்கி வந்த முத்திநாதனுக்கு ஒரு தீங்கும் நேரக்கூடாது என்ற கொள்கையுடை யவர் மெய்ப்பொருள் நாயனார். அதனால் முன்னரே நீங்கிவிடக் கூடிய உயிரைத் தத்தன் வரும்வரை தாங்கி வைத்திருந்தார். தத்தன் வந்து மெய்ப் பொருள் நாயனாரை வணங்கி நின்று "சிவபக்தரை இடையூறு ஒன்றும் வராதபடி கொண்டுபோய் விட் டேன்" என்று கூறினான். அதனைக் கேட்டு மெய்ப்பொருள் நாயனார் “இன்று நீர் எனக்குச் செய்த உபகாரத்தை வேறு யார் செய்ய வல் லார்” என்று கூறி மனம் ஆறுதலடைந்தார்.
பின்னர் தனக்குப் பின் அரசராதற்குரிய குமா ரர்களையும் மந்திரி முதலானவர்களையும் அழைத் தார். அவர்களுக்கு சைவாகம விதிப்படி விபூதி மேல் வைத்த அன்பைப் பாதுகாக்கும்படி போதித் தார். கனகசபையிலே ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் சபாநாதரைத் தியானம் பண்ணினார்.
அப்பொழுது சபாநாதர் மெய்ப்பொருள் நாயனா ருக்குக் காட்சியளித்துத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.

Page 9
6) Irfoul IITso
பிதா, மாதா, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, தமையன், தமக்கை, தமையன் மனைவி, உபாத் தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை அச் சத்தோடும் அன்போடும் வழிபடல் வேண்டும். அவர்கள் குற்றஞ் செய்தார்களாயினும், அதனைச் சிறிதும் பாராட்டாது பொறுத்துக்கொள்ளல் வேண்டும். இராசா யாது குற்றஞ் செய்யினும் அவனோடு சிறிதும் எதிர்க்காது அவனுக்கு அடங்கி நடத்தல்போலவே பிதா மாதா முதலா யினோருக்கும் அடங்கிநடத்தல் வேண்டும்.
பிதா மாதா முதலாயினோர் முட்டுப்படாவண் ணம் இயன்றமட்டும் அன்னவஸ்திர முதலியவை கொடுத்து, அவர்களை எந்நாளும் பாதுகாத்தல் வேண்டும். அவர்களுக்கு வியாதி வந்தால், உடனே மனம் பதைபதைத்துச் சிறந்த வைத்தி யரைக் கொண்டு மருந்து செய்வித்தல் வேண்டும். அவர்கள் ஏவிய ஏவல்களைக் கூச்சமின்றிச் செய்தல் வேண்டும். பிள்ளைகள் தங்கள் கல்விக் கும் நல்லொழுக்கத்துக்கும் இடையூறாகப் பிதா மாதாக்கள் சொல்லுஞ் சொற்களை மறுத்தல் பாவமாகாது. "தந்தை தாய் பேண்” என்னும் நீதி மொழியைச் சிந்தியாது, மூடர்கள் அநேகர் தங் களை மிக வருந்திப் பெற்று வளர்த்த பிதா மாதாக்கள் பசித்திருப்பத் தாமும் தம்முடைய பெண்டிர் பிள்ளைகளும் வயிறு நிறையப் புசித் துக்கொண்டு, தம்மையும் பொருளாக எண்ணி, தமக்கு வரும் பழிபாவங்கட்கு அஞ்சாது திரிகின் றார்கள்; பிதா மாதாக்களையும் சுற்றத்தாரையும் வஞ்சித்து அன்னியர்களுக்கு உதவி செய்கின் றார்கள்.
பிதா மாதா முதலாயினோர் இறக்கும் பொழுது அவரைப் பிரியாது உடனிருத்தல் வேண்டும். அவர் மனம் கலங்கும்படி அவரெதிரே அழலாகாது. அவர் மனம் கடவுளுடைய திருவடியிலே அழுந் தும்படி அறிவொழுக்கமுடையவரைக் கொண்டு
 
 

TřI (8LI6OOT6šo
டிரீலாறி ஆறுமுகநாவலர்
அருட்பாக்களை ஒதுவிக்கவும் நல்லறிவைப் போதிக்கவும் வேண்டும். அவர் இறந்த பின்பும் உத்தரக் கிரியைகளை உலோபமின்றித் தம் பொருளளவுக்கு ஏற்ப விதிப்படி சிரத்தையோடு செய்து முடித்தல் வேண்டும். வருடந்தோறும் அவர் இறந்த திதியிலும் புரட்டாதி மாசத்திலும் சிராத்தம் தவறாமற் செய்தல் வேண்டும். அநேகர் தங்கள் பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக் கும்பொழுது அவர்களை அன்னவஸ்திரம் முதலி யவை கொடுத்துப் பேணாது அவர்களுக்குத் துன்பத்தையே விளைவித்து, அவர்கள் இறந்த பின்பு உத்தரக் கிரியைகளை உலகத்தார் மெச் சும் பொருட்டு வெகுதிரவியஞ் செலவிட்டுச் செய் கின்றார்கள். ஐயையோ இது எவ்வளவோ அறி யாமை இச்செய்கையால் வரும் பயன் யாது? உத்தரக்கிரியையைச் சிறிது பொருள் செலவிட்டும் செய்யலாம், அதற்குச் சிரத்தையே முக்கியம் பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக்கும்பொழுது அவர்களை முட்டுப்படாவண்ணம் அன்னவளில் திரங் கொடுத்துப் பாதுகாத்தலிலே இயன்றமட்டும் பொருள் செலவிடுதலே ஆவசியகம்
பிதா மாதா முதலிய பெரியோர்களைக் கடுஞ்சொற் சொல்லிக் கோபித்து உறுக்கிய பாவிகள், நரகத்திலே தங்கள் முகத்தை அட்டை கள் குடைந்து இரத்தங்குடிக்க, அதனாற் பதைத்து விழுவார்கள். பின்பு அவர்கள் சரீர நடுங்கி அல றும்படி இயமதூதர்கள் சுடுகின்ற காரநிரையும் உருக்கிய தாமிர நீரையும் அவர்கண் மீது வார்ப் பார்கள். அப்பெரியோர்களுக்கு ஏவல் செய்யக் கூசின, பாவிகளுடைய முகத்தை இயமதூதர்கள் குடாரியினாலே கொத்துவார்கள்; அப்பெரியோர் களைக் கோபத்தினாலே கண் சிவந்து ஏறிட்டுப் பார்த்தவர்களுடைய கண்களிலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை உறுத்திக் காரநீரை வார்ப்பார்கள்.

Page 10
- தேளது தீ நிந்தித்தவர்களும், 96) J356061TL மீளவே ରଥ
பேணாது தள்ளிவிட்டவர்களும்,
பிதா மாதா முதலாயினோரை
SS SSSSS SS ஏளனம் ே பைத்தியத்தினாலும் நாக்குப்புற்றி கோளின னாலும், நேத்திர ரோகத்தினாலும்,
காலிற் புண்ணினாலும், சர்வாங்க தேள வாயுரோகத்தினாலும், பெருவியாதி யினாலும் வருந்துவார்கள். பிதா இருப்பதை மாதா முதலாயினோரைப் பேணா நன்மை ெ
தவர்களும், உபாத்தியாயருக்குக் கொடுக்கற்பாலதாகிய வேதனத் தைக் கொடாதவர்களும், குருவுக்குக் கொடுக் கற் UITGOETöflu காணிக்கையைக் கொடாதவர் களும் தரித்திரர்களாய்ப் பசியினால் வருந்திப் பெண்டிரும் பிள்ளைகளும் கதற இரக்கத்தகாத இடங் களெல்லாம் பிச்சையிரந்து உழல்வார்கள்.
பிதா மாதாக்களுக்குச் சிராத்தஞ் செய்யாதவர்
கல்லாத மாந்தரையுங் கடுங்கோபத்
துரைகளையுங் காலந் தேர்ந்து சொல்லாத வமைச்சரையுந் துயர்க்குதவாத்
தேவரையுஞ் சுருதி நூலில் வல்லாவந் தணர்தமையுங் கொண்டவனோ
டெந்நாளும் வலது பேசி நல்லார்போ லருகிருக்கு மனைவியையு
மொருநாளு நம்பொ னாதே.
கல்வியில்லாத மனிதர்களையும், மிகுந்த கோபமுள்ள அரசர்களையும், வருங்காலம றிந்து சொல்லாத மந்திரிகளையும், துன்பம் வந்தவிடத்துதவி செய்யாத தெய்வங்களை யும், வேத நூலில் வல்லவரல்லாத பிராம ணர்களையும், கணவனோடு எந்தநாளிலும் வல்லமை பேசி நல்லவர்களைப் போல் அரு கிலிருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பக் கூடாது (வல்லா = இயலாத)
- விவேக சிந்தாமணி
 
 

பில் வீழ்ந்தாற் செத்திடா தெடுத்த பேரை ாடுக்கி னாலே வெய்யுறக் கொட்டலே போல் சித் தீங்குற் றிருப்பதை யெதிர்கண்டாலுங் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.
ாது நெருப்பில் விழுந்தால் இறந்து போமென்று தவரைக் கொடுக்கினாலே துன்புறும்படி கொட்டுதல் லிகள் பேசிப் பலவிதத் திங்குகளைக் கொண்டு நேராகப் பார்த்தும் உலகத்தில் கோளுடையவர்க்கு Fய்தல் குற்றமே உண்டாகும்.
- விவேக சிந்தாமணி
களும், புரட்டாதி மாசத்திலே மகாளய சிராத் தஞ் செய்யாதவர்களும், சிரோரோகங்களினால் வருந்துவார்கள். புலவர்களாயினும், ஞானிகளா யினும், மூடர்களாயினும், பெண்களாயினும், பிர மசாரிகளாயினும், இறந்ததினச் சிராத்தத்தைச் செய்யா தொழிந்தால், கோடி சனனத்திலே சண்
டாளராவார்கள்.
எவன் தன்னுடைய தாய் தந்தை முதலிய பந்துக்கள் வறுமையினால் வருந்தும்போது இம் மையிலே புகழின் பொருட்டு அன்னியர்களுக்குத் தானங் கொடுக்கின்றானோ, அந்தத் தானம் தரு மமன்று. அது முன்பு தேன்போல இனிதாயிருப் பினும், பின்பு விஷம் போலத் துன்பப்படுத்தும் பார்க்கும்போது புகழுக்கு ஏதுப்போலத் தோன் றினும், பின்பு நரகத் துன்பத்துக்கே ஏதுவாகும் என்பது கருத்து. எவன் தான் அவசியமாகப் பாதுகாக்க வேண்டிய மனைவி பிள்ளை (LP55 லாயினோரைத் துன்பப்படுத்திப் பரலோகத்தின் பொருட்டுத் தானஞ் செய்கின்றானோ, அந்தத் தானமும் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும்
துன்பத்தையே விளைவிக்கும்.

Page 11
சித்திரானு - கார்த்திகை
மல்லார் முனியம் மானில சொல்லுவாணர் எல்லாரும் எளர்ளம் படும்.
- திருக்குறள் 191
பலரும் வெறுக்கும்படியாகப் பயனற்ற சொற் களை ஒருவன் சொல்லுவானாயின் அவன் யாவ ராலும் இகழப் பெறுவான்.
அதனை உணர்த்துவதே இது.
நம்மில் சிலர் அனுபவமில்லாத சில விஷயங் களைப் பிறரிடம் தாராளமாக மழை பொழிவதைப் போல் பேசுவார்கள். இப்படிப்பட்டவரைக் கண்டு வாய் வேதாந்தம் பேசுகின்றார் என்று உணர்வுடை யவர்கள் உரைப்பார்கள்.
அனுபவமுள்ள அருள்ஞானிகள் தமது அனுப வத்தைக் கூறமாட்டாது மெளனமாக இருப்பார்கள். தியான சமாதியில், காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்று கூறுகின்ற ஞாதுரு, ஞான, ஞேயங்கள் அற்று அது அதுவாகி நின்று சித்தி ரத் தீபம் போல் திகழ்வர்.
இந்த அருள் நிலைதான் முப்பாழும் தாண்டி அப்பாலுக்கு அப்பாலாய் நின்ற அனுபவ நிலை. இதை எடுத்து இயம்பச் சொற்கள் கிடையா.
ஓர் ஊமன் அற்புதமான கனாக் கண்டான். விழித்து எழுந்தான். அக்கனவை நினைக்கின்றான். பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று விரும்புகின் றான். நினைவில் உவகைத் தேன் ஊற்றெடுத்து ஒடுகின்றது; உள்ளந் துள்ளுகின்றது; உணர்வு பொங்கிவழிகின்றது. ஆனால் சொல்ல வாயில்லை.
 
 
 
 

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
அகமும் முகமும் மலர்கின்றன. சிரிக்கின்றான்; அந்த அதிசயக் கனவைச் சொல்ல வாயின்றித் திகைக்கின்றான். இதுபோல்தான் ஞானிகள் தாம் அனுபவவுணர்வில் கண்ட அருள் இன்பத்தைக் கூற இயலாது தவிக்கின்றார்கள்.
"வாரிக் கொண்டெனை வாய்மடுத் தின்பமாய்ப் பாரிற் கண்டவை யாவும் பருகினை ஓரிற் கண்டிடும் ஊமன் கனவென யாருக் குஞ்சொல வாயிலை ஐயனே."
என்கின்றார் தாயுமானார்.
கற்றும் என்பலன் கற்றிடு நூன்முறை சொற்ற சொற்கள் சுகாரம் பமோ?நெறி நிற்றல் வேண்டும் நிருவிகற் பச்சுகம் பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே,
- தாயுமானார்.
ஒரு வேதியர் கூட்டத்தில் நின்று சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்; மக்கள் பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர், "மகாஜனங்களே! எல்லாம் பிரமம்; நீங்களும் பிரமம்; நானும் பிரமம்; உலகமும் பிரமம்; தூணும் பிரமம்; துரும்பும் பிரமம்; ஆனும் பிரமம்; பெண்ணும் பிரமம்; ஆனையும் பிரமம்; பூனையும் பிரமம்; புலியும் பிரமம்; எலியும் பிரமம்; நெருப்பும் பிரமம்; நீரும் பிரமம்; கரும்பும் பிரமம்;
இரும்பும் பிரமம்; எல்லாம் பிரமம்” என்று வாசாம

Page 12
1.
அறிவுளோர் தம
கோசரமாய் - தேன்மாரியாய்ப்
பேசிக் கொண்டிருந்தார்.
s , , நிறையொடு புவி "ே 9 ' " அறிவுளோர் தம பிளந்து கேட்டுக்கொண்டு அசை t
- - - வெளியரென்றிக வற்றிருந்தார்கள்.
(335|Tuigi அறிவுடைய6 ತತ! ཡི་ UT6060 மதம உலகத்தவர்களு பிடித்துச் சங்கிலியை அறுத் அவருக்கு
துக்கொண்டு ஓடிவந்தது. சபை தக்கவரென்று இ யில் இருந்த அத்தனைபேரும் தன்மையதாம். மூலைக்கொருவராக ஓடினார்
கள். எல்லாம் பிரமம் என்ற வேதியரும் வேகமாக எல்லாருக்கும் முந்தி ஓடி னார். அவர் உடுத்தியிருந்த ஆடம்பரமான ஆடை யையும் பூமாலையையும் பார்த்த யானை அவரை விடாது தொடர்ந்து விரட்டியது; அவர் தொந்தியைத் தூக்கிக்கொண்டு மந்தி போல் ஓடினார். வழியிலி ருந்த கிணற்றில் விழுந்துவிட்டார். யானை வேறு பக்கம் போய்விட்டது.
சபையில் இருந்தவர்களில் ஓர் அறிவுள்ள இளைஞன் கிணற்றைப் பார்த்தான். அதில் நீந் தத் தெரியாத வேதியர் தத்தளித்துக் கொண்டி ருந்தார்.
"சுவாமி யானையும் பிரமம்; பூனையும் பிரமம்; நீங்களும் பிரமம், நாங்களும் பிரமம்; பிரமத்தைக் கண்டு பிரமம் ஏன் ஓடிற்று."
"அப்பா! புண்ணியவானே! என்னை மேலே தூக்கிவிடு. உண்மையை உரைக்கிறேன்."
இளைஞன் கிணற்றில் குதித்து, அவரைக் கருணையுடன் எடுத்து மேலே விடுத்தான்.
"இப்போது கூறும்; பிரமத்தைக் கண்டு பிரமம் அஞ்சி ஏன் ஓடிற்று' என்று மீளவுங் கேட்டான்.
"அன்பனே; யானையும் பிரமம், நானும் பிரமம்; கிணறும் பிரமம், தண்ணிரும் பிரமம், பிரமத்தைக்
 
 

க்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார் யிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்
க்கு யாதோ ரசடது வருமே யாகில் pா ரென்று மேதினி யுள்ளோர் தாமே,
வர்களுக்கு அரசரும் வணங்கி வாழ்வார்கள் ம் உண்மையான நேசத்தோடு பணிதல் செய்வார்
பாதேனும் ஒரு குற்றம் நேரிட்டாலும் வெறுக்கத் கழ்ச்சி செய்யார். இவ்வுலகினர் செய்கை இத்
- விவேக சிந்தாமணி
கண்டு பிரமம் ஓடிற்று. கிணறாகிய பிரமத்தில் வீழ்ந்தது. பிரமத்தைப் பிரமம் தூக்கியது. ஆகவே, எல்லாரும் பிரமம்” என்றார்.
இளைஞன் மறுபடியும் அவரைப் பளிச்சென்று கிணற்றில் தள்ளிவிட்டான்.
"சுவாமி நீரும் பிரமம், நானும் பிரமம்; கிணறும் பிரமம். பிரமத்தைப் பிரமம் தள்ளியது. பிரமம் பிரமத்திலேயே இருக்கட்டும்” என்றான். அப்போதுதான் அவருக்குப் புத்தி வந்தது. "அப் பனே! நான் பிரமம் அன்று. என்னைத் தூக்கிவிடு” என்றார்.
கருணை நிறைந்த இளைஞன் தூக்கிவிட்டான்.
"ஐயா! இனி, இப்படி வாய் வேதாந்தம் பேசா தீர் மக்களுக்குப் பொருந்தும் அறிவுரைகளைக் கூறும் உம்மை ஓர் ஊசியினால் குத்தினால் உமக்கு வலிக்காமல் இருக்குமா? ஊசியும் பிர மம்; நானும் பிரமம்; பிரமத்தால் பிரமத்தைப் பிரமம் குத்துகின்றது என்று எண்ணுவாயோ? ஆகவே, சாகவேயிருந்த உன்னைக் காப்பாற்றி னேன். இனி, வருந்தாதே. பொருந்தவுரை புகன்று மக்களைத் திருந்தா வழியில் போகவிடாதே.
போய்வா” என்றான்.

Page 13
1 முசுகுந்தச்ச
முன்னொரு நாளிலே திருக்கைலாச மலை
யிலுள்ள சோலையில் உமாமகேசுவரர் வீற்றிருந்த பொழுது, ஒரு முசுவானது அவர் இருவர் மீது வில்வபத்திரங்களைப் பறித்துச் சொரிந்து கொண்டி ருந்தது. சிவபெருமான் திருவுளமிரங்கி அதற்கு மெய்ஞ்ஞானத்தைக் கொடுத்தருளினார். ஞான முதிக்கப் பெற்ற முசு பார்வதிபரமேசுவரர்களை அன்போடு வணங்கி, "அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளுக” என்று அருள் புரிந்தார். முசு அத்திருவாக்கைக் கேட்டுத் துன்பமடைந்து, "அடியேன் உங்களைத்தரிசித்து அழியாப் பெருஞ் செல்வத்தை அனுபவித்துக் கொண்டிருத்தலை விட்டு, அழியுஞ் செல்வ வலையில் அகப்படுவே னாயின் எங்ங்ணம் உய்வேன்? என்றது. சிவபெரு மான் கேட்டு, "முசுவே! நீ பூமியை அரசாண்டிருந்து பின்னர் நம்மிடத்துவருதி” என்று கூறியருளினார். அப்பொழுது அம் முசுக்கலை, “எம்பெருமானே! இம் முசுவின் முகத்தோடு பிறக்கும் வண்ணம் அருள்புரிக' என்று கூறிற்று. சிவபெருமான் அவ் வரத்தை அதற்குக் கொடுத்தருளினார். முசுக் கலை, பூமியில் வந்து அரிச்சந்திர மஹாராசனுக்கு ஒரு வழித்தோன்றலாய், முகம் முசு; மற்ற அவயங்களெல்லாம் பேரழகுடையதாகிப் பிறந்து, முசுகுந்தன் என்னும் நாமத்தைப் பொருந்தியி ருந்தது. இவ்வாறு பிறந்த முசுகுந்தன் சோழ நாட்டிலுள்ள கருவூரிலிருந்துகொண்டு, செங்கோல் செலுத்தி வருவானாயினான்.
அம் முசுகுந்தச்சக்கரவர்த்தி ஒருநாள் தனது குலகுருவாகிய வசிட்ட முனிவரிடத்திற் போய் அவருடைய பாதங்களை வணங்கி, "சுவாமி சுப்
பிரமணியக் கடவுளுடைய விரதங்களையெல்லாம்
 
 

க்கரவர்த்தி
அச்சுவேலி சிவறி ச. குமாரசுவாமிக்குருக்கள்
கூறியருளுக என்று” கேட்டான். வசிட்டமுனிவர் சுக்கிரவரவிரதம், கார்த்திகைவிரதம், கந்தவடிஷடி விரதம் ஆகிய சுப்பிரமணிய விரதங்களை அநுட் டிக்கும் முறையையும் அநுட்டித்தோர் பெற்ற பேறுகளையும் அவன் அறியும்படி விரிவாக உப தேசித்தருளினார். அரசன் இருவழியிடம் உத்தரவு பெற்று அளவில்லாத காலம் முருகக் கடவுளைத் தியானித்து அவ்விரதங்களை அனுட்டித்தான். முருகக் கடவுள் வீரவாகு முதலிய வீரர்களும் பூதர்களுஞ்சூழத் தோன்றி அருளினார். முசுகுந்தன் முருகக்கடவுளை வணங்கி, "அடியேன் பூமியை ஆளும்படி வீரவாகு முதலிய வீரர்களைத் துணை வர்களாகத் தந்தருளுக” என்று பிரார்த்தித்தான். சுப்பிரமணியக் கடவுள் அவ்வாறே கொடுத்து அருள்புரிந்து மறைந்தனர். முசுகுந்தன் வீரவாகு முதலியோருக்குப் பல வரிசைகளை உதவிச் சேனைத் தலைவனாக்கினான். அக்காலத்தில் தேவ அரம்பையர்கள் பூவுலக அரசர்கள்மாட்டு வளர்ந்தார்கள். முசுகுந்தன் வீரவாகு முதலியோ ருக்கு அவர்களை மணஞ் செய்வித்தான். வீரவாகு புட்பகந்தி என்னும் கன்னிகையை மணந்து, சித்திரவல்லி என்னும் பெண்ணைப் பெற்று, அரசனுக்கு மணஞ் செய்து கொடுத்தார். பின்னும் அனகன், சனகன் என்பவரைப் பெற்றார். மற்றைய
வீரரும் பல பிள்ளைகளைப் பெற்றார்கள். வீரவாகு முதலியோர் மற்றை அரசர்களை வென்று, முசுகுந் தனுக்குக் கீர்த்தியை நிறுவினார்கள். முசுகுந்தன் சித்திரவல்லியைச் சேர்ந்து அங்கிவன்மனைப் பெற்று மகிழ்ந்தான்.

Page 14
முசுகுந்தன் அரசாட்சி செய்துவருங் காலத் திலே, வலன் என்பான் இந்திரனை எதிர்த்து யுத் தஞ் செய்தான். இந்திரன் அவனை வெல்லமாட் டாது முசுகுந்தச் சக்கரவர்த்தியை அழைத்தான். அவன் வீரர்களோடு வந்து தேவசேனாதிபதியாந் தலைமையைத் தாங்கி, அவுண சேனைகளை அழித்தான். அவுணசேனைகள் அழிதலும் இந்திரன் வலனைக் கொன்று வெற்றி பெற்று, முசுகுந்தனை அழைத்துத் தனது கோயிலில் இருத்தி உபசா ரங்களைச் சொல்லி, அதன் பின்னர் விட்ணு வினாலே பூசிக்கப்பட்ட தியாகராசமூர்த்தியைப் பூசித்தான். முசுகுந்தன் அவரைக்கண்டு, "திருக் கைலாச மலையில் இருந்த கோலத்தைத் தரி சித்து, பெருமகிழ்ச்சியடைந்த யான் இப்பொழுது மானிடப் பிறவியால் மயங்கினேனே" என்று கூறி அவரை நோக்கித் துதிப்பானாயினான்:-
"ஏகனே போற்றி யார்க்கு மீசனே போற்றி யம்மை பாகனே போற்றி மேலாம் பரஞ்சுடருருவே போற்றி மேகமார் களனே போற்றி விடைமிசை வருவாய்போற்றி மோகமார் தக்கன் வேள்வி முடித்திடு முதல்வா போற்றி"
முசுகுந்தன் துதிப்ப, சிவபெருமான் கிருபை செய்து, "நீ எம்மைப் பூமியிற் கொண்டுபோய்ப் பூசிக்குதி" என்றருள் புரிந்தார். முசுகுந்தன் ஆச் சரியமடைந்தான். இந்திரன் பூசை முடித்து, முசு குந்தனுக்கு ஆபரணாதிகளைக் கொடுத்து, "இன் னும் உனக்கு வேண்டியதைச் சொல்லுதி” என் றான். முசுகுந்தன் "நீ பூசை செய்கின்ற கடவுளை எனக்குக் கொடுக்குதி" என்றான். இந்திரன், "அர சனே இம் மூர்த்தியை விட்டுணுவே எனக்குத் தந்தார். அவர் சம்மதம் உண்டாயின் தருவேன்"
என்றான். முசுகுந்தன் விட்டுணுவினுடைய சம்மதம் பெற்று அதைத் தேவராசனுக்கு அறிவித்தான்.
 
 

புரந்தரன் வருந்தி ஒரு உபாயத்தை நினைத்துத் தேவத்தச்சனைக் கொண்டு தான் வைத்துப் பூசிக்கும் சோமாஸ்கந்தமூர்த்தி போன்ற ஆறு திருவடிவங்களைச் செய்வித்து, ஒவ்வொன்றாக முசுகுந்தனுடைய கையிற் கொடுக்க, அவன் வாங்கிச் சிவன் அருளாமையால் ஆறு தரமும் "இவர் அவரன்று" என்று கூறினான். இந்திரன் விட்டுணு பூசித்த மூர்த்தியைக் காட்டினான். அப் பொழுது சிவபெருமான் "அன்பனே! உன்னிடம் வந்தோம்" என்றருள் செய்தார். முசுகுந்தன் மகிழ்ந்து "இவரைத் தருக" என்று வாங்கினான். வாங்கி இந்திரனிடம் விடைபெற்று விட்டுணு பூசித்த சோமாஸ்கந்தரைத் திருவாரூரில் பிரதிட்டை செய்து, மற்றை ஆறு மூர்த்திகளையும் திருநா கைக்காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயல், திருக்கோளரியூர், திருவான்மியூர், திருமறைக்காடு என்னுந் தலங்களில் ஒருநாளில் தாபித்துச் சிரத் தையோடு பூசை செய்வித்து, திருவாரூர்த் தியாக ராசருக்கும் மற்றைத் தலங்களில் உள்ள மூர்த்தி களுக்கும் மகோற்சவம் நடத்தினான். நடத்திய முசுகுந்தன் திருவருள் வழி நின்று செங்கோல் நடாத்தி அங்கிவன்மனுக்கு முடிசூட்டித் திருக் கைலாசமலையை அடைந்தான். வீரவாகு முதலி யோரும் தம் புதல்வருக்குத் தங்கள் வரிசைகளைக் கொடுத்து, தவஞ்செய்து கந்தகிரியை அடைந் 'தார்கள்.
முசுகுந்தன் முருகக்கடவுளுடைய விரதங் களை அனுட்டித்தே இத்துணைப் பெருமைகளை அடைந்தான். ஆதலால் கந்தசுவாமியுடைய விரதங் களை முறைப்படி அனுட்டித்தவர் நினைத்த வரங்களைப் பெறுவர்.
நன்றி:- சைவப்பிரகாசிகை

Page 15
(3 ரம் என்னும் தேவா ଘୁol
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பெரு மணத்தில் பாடியருளிய திருப்பதிகத்தோடு தமி ழிசைப் பாடல் நிறைவு பெறுகின்றது. நமச்சிவாயத் திருப்பதிகத்தைக் "காதலாகிக் கசிந்து" என்று எடுத்துப் பாடியருளினார். "தோடுடைய செவியன்” என்று எடுத்தார். "காதலாகி” என்று நிறைவு செய்தார். தோடுடைய செவியனிடத்தில் காதல் செய்வதே மனித வாழ்க்கைப் பேறு என்னும் தொனிப்பொருள் "தோடுடைய செவியன்” என்றும் திருப்பதிகத்தில் தொடங்கி "காதலாகி” என்று எடுத்த திருப்பதிகத்தில் நிறைவுறும் இணைப்பு எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாகத் தானாக அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தந்தையார் சிவபாதவிருதயர் வெருவி வினவினார். "யாரளித்த பாலடிசி லுண்டது நீ? எச்சில் மயங்கிட வுனக்கி திட்டாரைக் காட்டென்று கைச்சிறிய தொடுமாறு கொண்டோச்சத் தந்தை யாருக்குப் பதிலளிக்கு முகமாகப் பதிகம் பாடத் தொடங்கினார்.
திருநாவுக்கரசுநாயனார் தீராத சூலை நோய் தீரும் பொருட்டுத் தமக்கையார் திலகவதியார் தாள் சேர்ந்தார். திலகவதியார் தம்பியாரைத் திரைக்கெடில வீரட்டானத் திருந்த செங்கண்க வரைச்சிலையார் பெருங் கோயிலினுள் கொடு புக்கார் மருணிக்கியார் தம்பிரான் திருவருளால் உரைத்த தமிழ் மாலைகள் சாத்துமுணர்வு பெற உணர்ந்து உரைப்பார் கூற்றாயினவாறு விலக்கக லீரென நீடிய கோதில் திருப்பதிகம் போற்றாலுல கேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகலத் தொடங்கினார். நிறைவாகப் பாடியருளும் போது, "எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்" என்று ஏத்துகின்றார். அந்நிகழ்வினைச் சேக்கிழார் திருவாக்கில் கேட்கும் போது சர்க்கரைப் பந்தரில் தேன்மாரி சொரிந்தது போலாகும் அது இது;
 
 

3
முத்தமிழ் வேதம்
சிவ. சண்முகவடிவேல்
"மண்முதலாமுலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப் புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே னெனப்புகன்று." திருநாவுக்கரசுநாயனார் UTL 6T(655II UT19 முடித்ததில் உள்ள ஒற்றுமையை உணரும்போது திருவருள் வியப்பிலாழ்த்தும்.
திருவதிகை வீரட்டானப் பெருமானிடத்தில் எனக்கு யமனான வழியை நீக்கவேண்டும் என்று திருநாவுக்கரசு நாயனார் வேண்டிக் கொள்கின்றார். திருமுறை நிறைவில் எமன் பக்கம் சாரவில்லை. புண்ணியப் பொருளாகிய தேவரீருடைய திருவடி நீழலை நாடிவருகின்றேன் என்று நலமே திருப்புக லூர்ப் பெருமானை முன்னிலைப்படுத்திப் பாடுகின்றார்.
ஆற்றாமையை அகற்றி அருள்நெறியில் ஆற் றுப்படுத்திய அரனாருடைய அருள் தான் இருந்த வாறு என்னே!
சுந்தரமூர்த்திநாயனார் திருவெண்ணெய் நல்லு ரில் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். பாட்டினைப் பாடப் பரம்பொருள் நம்பியாரூரருக்குப் பரிந்து அருள்பாலித்தார். "பித்தா என்று பேசி னாயே! அதனால் என்னைப் பித்தா என்றே பாடு வாய்' என மறையவனாக மறைந்துவந்த மறைப் பொருள் அடி எடுத்துக் கொடுத்தருளினார்.
சுந்தரமூர்த்திநாயனார் "பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா, எத்தான்மறவாதேநினைக் கின்றேன் மனத் துன்னை வைத்தாய் ." என்று துரமறை பாடுவாயான் சொற்படி சொற்றமிழ் பாடத் தொடங்கினார்.
வன்றொண்டர் வான் வழிக்கொண்டு வெள் ளானை மீது செல்போழ்தில், "தானெனை முன் படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே." எனத் தொடங்கும் திருநொடித் தான்மலைத்

Page 16
திருப்பதிகத்தோடு பெருமான் பணித்த பாடும் பணி பூரணமாகின்றது.
சுந்தரமூர்த்திநாயனார் தொடங்கிய தேவாரத்
திற்கும் நிறைவு பெறுவதிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
கின்றேன் மனத்துன்னை வைத்தாய்.” அருளா ளரே உன்னை என் மனத்தில் வைத்தாய், அத னால் எப்பொழுதும் மனத்தில் மறவாமல் நினைக் கின்றேன் என்று வாக்கருளினார். அவ்வாறு மற வாது நினைத்ததனால் பெற்ற பேறு இது;
- - - - - - - - நாயினேனையும் ஒரு பொருளாகக் கொண்டு, தேவலோகத்தவர்கள் வந்து வரவேற்க மதம் பொழியும் வெள்ளானையை அருள் புரிந் தான், நொடித் தான்மலை உத்தமன்.
நாயினேனைப் பொருட்படுத்து, வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள் புரிந்து என்பது சுந்தரனுடைய சுந்தரத்தமிழ்.
இவ்வாறான ஒரு இன்பம் தரும் இயல்பான ஒற்றுமை ஞானவான்கள் நினைத்துச் செய்வ தில்லை. நினையாமல் செய்யும் காரியங்களில் மங்கலம் தானாக வந்து பொருந்தும்.
சேக்கிழார் பெருமான் ‘உலகு எனப் பெரிய புராணம் பாடத்தொடங்கினார். தில்லை நடராசப் பெருமான் 'உலகெலாம் என எடுத்துக் கொடுத்த அடியை மறவாமல் 'உலகெலாம் என்னும் வார்த்தை பெரிய புராணத்தை என்றும் இன்பம் பயக்க வைக்கின்றது.
அதே போலப் பன்னிரு திருமுறை இணைப்பும் மேலான இன்பம் பயப்பது முதலாம் திருமுறை "தோ” எனத் தொடங்குகின்றது. தோ = த் + ஒ. 'ஓ' எழுத்தில் ஆரம்பித்த திருமுறை 12ம் திரு
 
 

"ஒமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி ஒமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு ஒமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஒமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே!” என்று ஓம் ஓம் ஓம் ஓம் ஒலியை உணர்த்தும். "ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும் வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க் காசி தன்னிடை முடியவர்க் கெம்பிரான் கழறும் மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்" என்று கந்தபுராணம் ஒம் எனப்படும் ஒரெழுத் துண்மையை விரிவுபடுத்திக் கழறும்.
ஓம் சிவபிரான் எழுந்தருளியிருக்கும் ஆசனம். ஓம் தேவர்கள் தோற்றுமிடம் ஓம் எல்லா எழுத் துக்களுக்கும் வேத மந்திரங்களுக்கும் முன்னா னது. ஓம் காசியில் இறப்பவர்களுக்குச் சிவபிரான் உபதேசிப்பது. ஓம் குற்றமற்ற தாரகப் பிரமம். ஓம் = அ + உ + ம என விரிவடையும்.
அவ்வாறான அனைத்து மெய்ப்பொருளையும் 12 திருமுறை தரும். அதுவாக விளங்கும் என் னும் தாற்பரியத்தைத் தரும் தன்மையாக 'ஓம்' என்று 12 திருமுறை தொடங்கி 'ம்' என நிறைவு பெறுகிறது. 12 திருமுறை 'ஓம்' எனப் பரிமளிக்கின் றது என்னும் உண்மை ஒர்ந்து இன்புறத்தக்கது. புத்தம், சமணம் போன்ற புறச் சமயங்கள் ஆதிக்கம் செல்வாக்கு அதிகரித்திருந்த காலம் ஒன்றுண்டு. அவை சைவசமயத்தை நிலை தளர வைத்தது. நீரீச்சுரவாதக் கொள்கை மேலோங்கிய தால் சைவநெறிச் சார்பு சாய்ந்தது. அக்காலத்தில் மூவர் முதலிகள் திருவவதாரம் சைவத்திற்குப் புத்துணர்வு ஊட்டியது. தமிழிற்கு எழுச்சியை ஏற்படுத்தியது. கடவுள் கொள்கையைக் காற்றில் பறக்க விடாமல் கட்டிக் காத்தது. புறச் சமயங் களைப் புறகிடச் செய்தது.
அனைத்தையும் படைத்தும் காத்தும் துடைத் தும் கருணை புரியும் கடவுள் சைவர்களுக்குக் காட்டிய கருணைப்பெருக்கே, மூவர் யும் ஏனைய திருமுறை ஞானாசிரியர்களையும் தோற்றுவித்தது.
சிவபெருமான் நமக்குச் செய்த பரோபகாரத்தை நாம் என்றும் மறவாது பிோற்றுவோம்.

Page 17
அன்றாட வாழ்வில்
சமயம் என்பது விழாக் கொண்டாடுவதற்கும், விரதம் அனுஷ்டிப்பதற்கும் மட்டுமே உரியதொன் றல்ல. நல்லொழுக்கத்தோடு மக்கள் வாழ்வதற்கும், மனிதநேயத்தோடு ஒழுகுவதற்கும் உரியது. வாழ்வின் நோக்கத்தை சைவசமயம் விளக்கிச் சொல்லியிருப்பதைப் போல வேறெந்த சமயமும் விளக்கிச் சொல்லி இருக்குமோ என்பது சந்தே கமே. சைவசமயம் விஞ்ஞானபூர்வ சமயம், விஞ் ஞான உண்மைகள் எப்படி மாற்றுக்கருத்துக் களால் நிலைகுலைவதில்லையோ அதுபோலவே வேதங்கள் கோவழித்த அடிப்படை ஆன்மீக உண்மைகளும் மாற்றுக்கருத்துக்களால் நிலை குலைவதில்லை. அறிவுபூர்வமான சமயமாக சைவசமயம் அமைந்துள்ள காரணத்தினால்தான் அது ஏனைய சமயங்களை இழித்தும் பழித்தும் பேசுவதில்லை.
கர்மம் செய்வதை சைவசமயம் வலியுறுத்திச் சொல்லுகின்றது. இன்பம் மனிதனின் நிலையான லட்சியமாக இருக்கமுடியாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இன்பத்தையும் அனுபவிக்கின் றான்; துன்பத்தையும் அனுபவிக்கின்றான். இந்த இரண்டிலிருந்தும் அவனுக்குக் கிடைக்கின்ற பலன் ஒன்றுதான். அதுதான் அறிவு. ஆகவே அறிவுதான் ஒவ்வொருவனதும் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்கமுடியும்.
இன்பமும் துன்பமும் ஏதோ ஒரு நிலையில் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அதனால் பெற்ற அனுபவத்தால் மனிதன் தன்னுடைய வாழ்க்கை நோக்கை உருவாக்கிக் கொள்கின்றான்.
பொதுவாக இன்பம் மனிதனுக்கு உணர்த்தும் பாடத்தைவிட துன்பம் உணர்த்தும் பாடம் அழுத்த
 
 

1s
சைவசமய ஒழுக்கம்
செல்வி, தர்சினி சிவபாதசுந்தரம்
வ/ இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்
மானது. செல்வத்தின் மூலமாகப் பெறுவதைவிட வறுமையின் மூலமாக அதிகளவான வாழ்க்கை உண்மைகளை மனிதன் கற்றுக் கொள்கின்றான். புகழ்ச்சியால் கிடைக்கும் தெளிவைவிட இகழ்ச் சியால் மனிதன் அதிகமான தெளிவை அடை கின்றான். புறச்சம்பவங்களின் விளைவாக மனித னுக்கு ஏற்படும் அனுபவங்கள் அகத்தில் அறிவு என்னும் விளைவை ஏற்படுத்துகிறது.
அறிவு வளர வளர அறியாமை என்னும் திரை அகன்று ஆன்ம தரிசனம் மனிதனுக்கு சாத்தியமாகின்றது. அப்பிள் பழம் பூமியில் விழு வதைப் பார்த்து சேர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்ததாகச் சொல்லுகின்றோம். அப்பிள் பழம் பூமியில் விழுந்ததில் முக்கியத்துவம் எதுவுமில்லை. அந்த நிகழ்ச்சி பற்றி நியூட்டன் சிந்தித்ததன் விளைவாக ஏற்கனவே இருந்த ஒரு உண்மை விளக்கம் பெற்றது அவ்வளவுதான்.
இல்லாததைக் கண்டுபிடிப்பது சாத்திய மில்லை. இருப்பதை உணர்வது தான் அறிவு ஆகவே எல்லா அறிவும் மனித சிந்தனையில்தான் உருப்பெறுகிறது. ஒரே சூழ்நிலையில் பிறந்து வளர்கின்ற இருவரின் ஆற்றல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. காரணம் என்ன? விளக்க முடியாத புதிர்போலத் தோன்றும். இதற்கு சைவசமயம் தெளிவாகவே விளக்கம் சொல்லியிருக்கின்றது. ஒவ்வொரு பிறவியிலும் ஒருவன் இயக்கும் கர்ம பலன் வீணாகுவதில்லை. வங்கியில் போடப்பட்ட சேமிப்பு நிதிபோல் மறுபிறவியிலும் அது தொடர் கிறது என்று சைவசமயம் விளக்கம் சொல்லு கின்றது.

Page 18
சித்திரானு கார்த்திகை
ஆகவே, அனுபவங்களின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ளுகிறவன் மறுபிறவியில் அந்த வளர்ச்சிப் பரிணாமத்திலிருந்து தன்னுடைய வாழ்வைத் தொடங்குகிறான். இயேசுநாதர் புத்தர், காந்திஅடிகள், பரமஹம்சர், விவேகானந்தர் போன் றவர்கள் ஒரே பிறவியில் அத்தகைய ஆற்றலைப் பெற்றார்கள் என்று சொல்லிவிட முடியாது. இவர் களுடைய பெற்றோர்கள் பெரிய மேதைகளாக விளங்கவில்லை என்பது வரலாற்றுச் சான்று. இவர்கள் பாடுபடாது பலன் கிடைத்திருக்க முடி யாது. இதை சைவசமயம் இயற்கையின் நியதி என அப்படியே ஏற்றுக் கொள்கிறது.
நோக்கம் இல்லாமல் கர்மம் ஆற்றுவது சாத் தியமில்லை. புகழை விரும்புகின்றவர்கள் புகழுக் காக கர்மம் ஆற்றுகிறார்கள். பணத்தை விரும்பு கின்றவர்கள் பணத்துக்காகக் கர்மம் ஆற்றுகின்றார் கள். அதிகாரத்தை விரும்புகின்றவர்கள் அதற்குத் தேவையான கர்மத்தைச் செய்கின்றார்கள். கர்மத் ഞഴ്ച கர்மத்துக்காகவே ஆற்றுவது ஓர் உயர்ந்த நிலை. நமக்குத் தெரிந்த உலகம் மிகவும் குறு கியது. அதற்கு வெளியுள்ளதை நோக்கக்கூடிய தூரதிருஷ்டி நம்மில் பலருக்கு இருப்பதில்லை. கர்மம் ஆற்றுகின்றபோது பலன் கருதாமல் ஆற் றுவது சிறந்த நிலையாகும். அப்படி ஆற்றும் கருமங்களால் நமக்குத் துன்பமோ துயரமோ ஏற்படுவதில்லை. நல்லதைச் செய்ய விரும்புகின் றவன் அதைச் செய்வதிலேயே ஆனந்தம் அடை கிறவனாக இருக்கவேண்டும். இதனையே சைவ சமயம் மிக உயர்ந்த ஒழுக்கமாக வலியுறுத் துகிறது.
விஞ்ஞானிகள் சக்தியை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று நிலைச்சக்தி, இன் னொன்று சலனசக்தி ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றுவது சாத்தியமென விஞ்ஞானம் சொல்லுகிறது. சக்தி செயல்படுவது உண்மை. அதுவே செயற்படாமல் நிலைபெறுவதும் உண்டு.
16
6
6
 
 
 

இந்த இயற்கையின் நியதியைச் சைவசமயம் மனிதனுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அமைதித் தனிமையில் மெளனநிலையில் வீற்றிருக்கும் மனிதனின் அறிவு துரிதகதியில் செயற்படுகின்றது. அதுபோலவே தனது புறச்சூழ்நிலைகளில் இயக் கம் நிலைத்திருக்கும் போதும் மனிதன் அதனின் றும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு தியான நிலைபெற்றுவிட முடியும்.
இதற்கு முதற்கட்டமாகவே மெளனம், மெளன விரதம் என்பன சைவசமயத்தில் காணப்படு கின்றன. சள சளவென்று பேசுகிறவன் எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும் சொற்பொழி வாளனாக இருந்தாலும் தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான். மெளனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான். "சும்மா இருப்பதே சுகம்" என்றார்கள். பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையை விட அது மிகப்பெரியது. அதனால்தான் ஞானி களும் பெரியமேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மெளனவிரதம் அனுஷ்டிக்கிறார்கள். சைவசமய வேதங்களும் உபநிஷதங்களும் இந் தப் பேருண்மையினையே பலமாகக் கோஷிக் கின்றன.
சிந்திக்கச் சொல்லுகிறது சைவசமயம் மூட நம்பிக்கைகளின் இருப்பிடமே சைவசமயம்தான் என்பது மூடர்களின் வாதம் மூட்ப்பழக்க வழக் 5ங்களுக்கும் சைவசமயத்திற்கும் வெகுதூரம். ாந்த ஒரு சமயமும் மனிதர்களின் அனுஷ்டா னத்துக்கு வரும்போது மக்களின் அறியாமையி னாலும், மதத்தைப் பிழைப்பு உபாயமாகக் 5ருதுவோரின் சுயநலத்தாலும் மூடநம்பிக்கைகள் Dண்டி விடுவதைப்போல அநாதியான சைவசம பத்திலும் மூடநம்பிக்கைகள் மிகுந்து போயின. விஞ்ஞான அறிவை வித்தைக்காரர்கள் மக்களை மாற்றச் சில சமயங்களில் பயன்படுத்துவதைப் பால எமது சமயத்தையும் சில வித்தைக்காரர்கள் க்களை ஏமாற்றப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Page 19
உலகின் பல நாடுகளில் வாள்முனையில் ஏனைய சமயங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. வாள் முனையை நம்பி சைவசமயம் வாழ்ந்த தில்லை. வாதத்திறமையினை நம்பியே அது வரலாற்றுப் பயணத்தை நடத்தி இருக்கிறது. சொல்லப் போனால் உலகெங்கும் வாழ்கின்ற மக்கள் இந்த விஞ்ஞான யுகத்தில் அமைதிதேடி அலையும்போது சைவசமயம் உபதேசித்துள்ள தியானநிலைக்கும் மேலான நிலைக்குத் தஞ்ச மடைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சைவசமயத்தின் செல்வாக்கைக் காட்டுகின்றது.
"வாழ்க்கை என்பது ரசிக்க வேண்டிய ஒன்று தான், அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்" என்று உணர்த்தும் சைவசமயம், அந்த வாழ்க்கையின் ஆசாபாசங்களுக்கு அடிமையாகி, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. இயற்கை விதிகளுக்கு முரண் படாத கோட்பாடுகளைக் கொண்ட சைவசமயம் செம்மையான வாழ்க்கைக்கு அடிப்படைகள் இல்லை என்பதையும் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கின்றது.
அறிவின் ஆதாரத்தில் நடைபெறுவது பிரார்த் தனை மூடநம்பிக்கைக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை. நமக்குள்ளேயே உறையும் ஆண்டவனைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசிக்கும் முயற்சியே பிரார்த்தனை என்பதை அறியவேண் டும். உலகை நேசிக்க வேண்டுமானால் நம்மை நாமே நேசிப்பது முதல்படி நம்முடைய ஆற்றல் வளரும்போது அதனால் நமக்கும் பயன் ஏற்படு கின்றது. மற்றவர்களுக்கும் பயன் ஏற்படுகிறது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர்" என்றார் திருவள்ளுவர்.
வாழ்வாங்கு வாழும் வழியைப் பிரார்த்தனை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது. நம்முடைய
 
 

7
திருவாசகம்
ஆடு கின்றலை கூத்துடை
யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றலை பதைப்பதும்
செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின்
றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே.
பேசப்பட்டேன் நின்னடி யாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதல ராலுன் அடியானென் றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால் ஆசைப்பட் டேன் ஆட்பட் டேனுன் அடியேனே.
நலனுக்காக வளர்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்வது ஒருவகை. பிறருடைய நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வது மற்றொரு வகை. இவை யிரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கும்.
நம்மிடம், மற்றவர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லாத போதும்கூடப் பிரார்த்தனை செய்ய முடியும். ஏனெனில் பொருளைத் தருவதை விடப் பிரார்த்தனை செய்வது மிகவும் உயர்வானது, தூய்மையானது, எதிர்பார்ப்பு இல்லாதது.
பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்பொழுது அங்கே சுயநலம் இருக்க முடியாது. பிறருக்கு உதவும் இதயம் பெரியது. அதுவே நமக்கும் பிறருக்கும் நல்ல பலன்களை தேடிக் கொண்டு வந்து தரும்.
அதனால்தான் விவேகானந்தர் கூறினார்; "யாருடைய இதயம் பிறருக்காகப் பிரார்த்தனை செய்கிறதோ அவரையே நான் மகாத்மா என்பேன்" என்றார்.
அன்பாக, கருணையாக, இரக்கமாக அளவு கடந்த ஈடுபாட்டுடன் செய்யும் பிரார்த்தனை நல்ல முடிவு கொண்டதாக நன்மை தரக்கூடியதாக

Page 20
18
அமையும். பிரார்த்தனையின் பேராற்றலையும்
சைவசமயத்தின் சிறப்பையும் புரிந்து சிறப்புற
வாழவேண்டும்.
இவ்வாறான சிறப்புமிக்க சைவசமயமானது
அறத்தை வலியுறுத்துகின்றது.
"அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ.தும் பிறர் பழிப்பதில்லையாயின் நன்று"
எனக்கூறுகின்றது.
இல்லறத்துக்குரிய அறமாக வாழ்க்கைத்து ணையோடு இணைந்து இல்லத்தில் இருந்து கொண்டு பழிபாவத்திற்கு அஞ்சிப் பொருளை ஈட்டி, ஈட்டிய பொருளைத் தனக்கு மட்டும் பயன் படுத்தாது, ஏனையோர் வாழ்க்கைக்கும் பயனுடை யதாக்கி எண்ணம், செயல் என்பவற்றாலும் மற்ற யவர்களுக்கு உதவி, அறவழியில் வாழ்வதே வாழ்வின் முக்கிய ஒழுக்கமாகும் என்கிறது திருக்குறள்.
சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் நிம்மதியையும், சுகத்தையும், சந்தோஷத்தையும் வழங்குவது வதிவிடமாகிய வீடு ஆகும். இதே போன்று அறவழியில், நேரியவழியில் பொருள் களை ஈட்டி இன்பத்தைப் பேணி உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்தவன், அவற்றையெல்லாம் விடுத்து இறுதியிலே சென்றடைகின்ற இடம் இறைத்துவம் என்ற வீடு ஆகும்.
சைவசமயம், வாழ்க்கையைப் பொய்மை என்று கூறுவதுமில்லை. வெறுத்து ஒதுக்குவது மில்லை; ஒதுங்குவதுமில்லை. சைவசமயவாழ்வு, வாழ்வாங்குவாழ வலியுறுத்துவதேயாம். சைவ சமயத்தின் கொள்கை, நெறி, செயல் போன்றவை மட்டுமே பயன்தருவனவல்ல. சிந்தனை இன்றிய மையாதது. செயல்களின் நோக்கமே அளவைக் குரியது. வாழ்வுக்கும் உரியது. சமயம் இயற்கை யோடிசைந்தது. அது இல்லற வாழ்க்கைதான்
 
 

திருவாசகம்
கண்க ளிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள் தம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலோ
டாடல் பயின்றிடு மாகாதே பாண்டினன் னாடுடையர்ன்படை
ஆட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே மீன்வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படு மாயிடிலே.
உயர்ந்தது என்று பறைசாற்றுவதில்லை. எந்த வாழ்க்கையாயினும் நெறிமுறைகளிற் சிறந்து வாழ்வோராயின் இன்புறுவர் என்பதே சைவசமயக் கொள்கை, எந்நெறியில் நின்றாலும் எத்தொழிலைச் செய்தாலும் சிந்தனையும் செயலும் சிறந்திருக்கு மானால் சிறப்புடையதேயாம் செம்பொருள் காணத் துணை செய்வதேயாம். இந்நெறிமுறை வாழ்வே வள்ளுவர் காட்டும் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்பதும், அது "வானுறையும் தெய்வத் துள் வைக்கப்படும்” என்பதும் ஆகும். எந்தவகை வாழ்க்கையாயினும் துய்ப்பித்தல் குறிக்கோளாக இருக்கவேண்டும். இன்ப அன்பினைத் துய்த்து இன்புறுதலே வீடு
"மனமாற்றத்தை தரவல்லது உயிருள்ள
உணர்வுள்ள சைவசமய நெறி
ஒன்றேயாகும்"

Page 21
பானு கார்த்திகை
சிந்திப்போம் :
மாணிக்க வாசகர்க்கும் மகிழ்ப் பரஞ்சுந்தரர்க்கும் ஆணிப் பொன் திருமூலர்க்கும் அறுபத்து மூவர்க்கும் பேணிக்கொள் பெரியோர்க்கும்பேறருள் சிவனேயுன்னுள் தோணக் கண்டிருந்துநாகலிங்ககரைத் தொழுவாய் நெஞ்சே,
- நெஞ்சறிவிளக்கம்
மேலாந்தரமுடைய நூல்களுட் திருவாசகமும் ஒன்றென நுண்மாண் நுழைபுலம் உடையோர் கூறிப் போந்தனர். அப்படியான பக்திப் பனுவல் மாணிக்கர்க்கு முன்னும் இல்லை, பின்னுமில்லை. (வெள்ளையன் பாராட்டி, வேண்டிய நூலாக்கினார் திருவாசகத்தை) ஒரு புனிதமான மனஉருக் கத்தை ஏற்படுத்துவது இப்பக்திக்கோவை ஒன் றிற்கே உரியது. தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்த பின் ஏற்படும் இரங்கல் நிலையில் இப் பாசுரங்கள் எழுந்தன. தலைவனான திருப்பெ ருந்துறை வாழ் பதி தன்னைத் தனியே விட்டு, ஏனைய அடியாருடன் சென்ற பிரிவாற்றாமையை நினைந்துருகிய பாடல்கள் ஆனமையாற், சஹற் ருதயம் வாய்ந்த படிப்போரையும் அப்பனுவல் உருக்குகிறது.
உள்ள மலமூன்றும் மாய உருபெருந்தேன் வெள்ளந் தருபரியின் மேல்வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்து மின்கள் வாழ்த்தக் கருவும் கெடும் பிறவிக்காடு,
- பண்டாயநான்மறை-2
இப்பாவனையில் எழுந்த இன்னோர் நூல் திருச்சிற்றம்பலக் கோவையார். பாவை பாடிய திருவாயாற் கோவை பாடுவித்தவன் சிவன் இரட்டைக்குழவிகள் போன்றவை இப்பக்குவ நூல்கள். இன்று சீண்டுவார் ஒருசிலரே வெறுமனே பீரோவில் அடுக்கி வைப்பனவல்ல இவை.
நிலையாமை பற்றி நினைவு கூரப்பண்ணி
 
 

19 திருவாசகத்தை
முருகவே. பரமநாதன்
நிலையான விடுதலை காணும்படி திருவாசகம் பேசுகிறது. இந்நிலைப்பாடிருந்தாற்றான் வாழ்க்கை நீரோட்டம் செவ்வியுறும் சுகாதாரமான சுகந்த சுதந்தர வாழ்வமைதிகள் அமைக்க இவ்வுள்ளு ணர்வு சுமை தாங்கி போலாம்.
மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளைனன்புதோல் போர்த்த குப்பா யம்புக் கிருக்க கில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என் ஆரமு தேயோ அப்பா காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே,
ஆசைப்பத்து-2
சீவார்ந் திமொய்த் தழுக்கொடு திரியுஞ்
சிறுகுடில் இதுசிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முக நோக்கி ஆவா வென்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே,
மேலது.-3
மிடைந் தெலும்பூத்தை மிக்கழுக் கூறல்
வீறிலி நடைக் கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
சோத்தம் எம் பெருமானே உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
உன்திரு மலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே.
மேலது-4

Page 22
அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி
அடியே னுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடி ஆடி எளிவந் தென்னை ஆண்டு கொண்ட
என்னா ரமுதேயோ அளியன் என்ன ஆசைப்பட்டேன் கண்பாய் அம்மானே,
மேலது-5
ஆசையறாய் பாசம் விடாய் (சிவயோகசாரம்), ஆசையறுமின் ஆசையறுமின் ஈசனோ டாயினும் (திருமந்திரம்), ஆசைக்கோரளவில்லை (தாயுமா 6ÖTÜ) 6160TLI L16)ÜLLÜ பேசினும் ஆசையற்ற ஆசையொன்று இப்பத்திலே தெள்ளித் தெளிக் கின்றது. பிரபஞ்சத்தையும் கடந்து பெரும்பெருமாற் கடிமைப்படுமாசை தீங்கில்லாததே.
பொத்தை ஊன் சுவர் புழுப்பொதிந் துளுத்தகம்
பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடற்
சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய
அதிசயம் கண்பாமே.
அதிசயப்பத்து-7
இருள்தி னிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்
சிறுகுடில் இது இத்தைப் பொருளெ னக்களித் தருநர கத்திடை
விழப்புகு கின்றேனைத் - தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச்
சினப்பதத் தொடு செந்தி அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயம் கண்பாமே.
மேலது-10
 
 

புழுவினாற்பொதிந் திடுகுரம்பையிற்
பொய்தனையொ ழித்திடும் எழில்கொள் சோதியெம் ஈசன் எம்பிரான்
என்னுடையப்பன் என்றென்று தொழுத கையின ராகித் தூய்மலர்க்
கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு வழுவிலா மலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.
- சென்னிப்பத்து-8
பட்டினத்தார், அருணகிரியார் வாக்கில் இவ் வூன் பொதியுடம்பு பற்றிய அச்சுறுத்தல் நிறையப் பேசப்பட்டிருப்பதைப் படிப்போர் காண்பர். எனவே இவ்வுடம்பை வைத்துக் கொண்டுதான் உயிர்க்கு உய்தி தேடவேண்டும்; அழியுமுடம்பும், அழியா உயிரும் சேர்ந்து வாழ்வு. இந்நிலையில் நல்லாங் கும்; பொல்லாங்கும் மனித உடன்பிறப்புக்கள். செய்தவாற்றிராயினும் அல்லது செய்யாதீர் என்ற நியமம் சீரிய கோட்பாடாகும். உடம்பை வளர்த் தேன் உயிர் வளர்த்தேனே யென்ற வாக்குகள் சிந்திக்கற்பாலன.
எனவே நாம் என்ன செய்ய வேண்டும். எப்படி நம்மை வழிநடத்த வேண்டு மென்பதைத் திரு 6)jT55 6)ITula)IT55 (35L (BLITLib.
சேரக் கருதிச் சிந்தனையைத்
திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே.
யாத்திரைப்பத்து-9

Page 23
வேல்போன்ற கண்களையுடைய உமாதேவி யின் பாகனும், பாம்பையணிந்தவனுமாகிய சிவ னது, திருவருளமுதத்தை, நிறையப்பருகி, தணி யாத ஆசைமிக மூழ்கியிருப்பவர்களே? பொய்யான வாழ்விலே கிடந்து புரளாமல் சிவபிரானது பாதங் களையடைய விரும்புங்கள். எனவே அதனை யடைய எண்ணிச் சித்தத்தை - சிந்தனையைப் புனிதமாக வைத்துக் கொண்டு இடைவிடாமற் சதா அவனையே நினையுங்கள் என்பது திருவாத வரரின் திருவாக்காகும்.
இவ்வண்ணம் உயர்ந்த திருவாசகத்தில் மிக்க ஈடுபாடுடைய அன்பரொருவர் - திருவாசகம் பற்றியோர் நூல் எழுதித் தரும்படி இப்பாவியைக் கேட்டார்கள், கூண்டுக்கிளியை வென்ற, தர்மப் பொறிக்குள்ளகப்பட்ட எலிபோற் சிறைப்பட்ட என்னைச் சுற்றி இரு சிறைக்கோடுகளும் கிழித்தார் கள் ஒன்று எல்லாரும் விளங்கக்கூடிய இலகு தமிழில் எழுதவேண்டும். மற்றையது ஒரே பார் வையில் (படிப்பவர்) திருவாசகம் முழுவதையும றியக் கூடியதாய் அமையவேண்டும். இறக்கை வெட்டிய கிளியானேன் நான் கனடா வாழ்வு கசந்து போனாலும் கை கொடுக்கும் திருவாசகம். திருவாய் மொழி கசக்கவேயில்லை. அந்த வெற் றிலைச் சாற்றைச் சப்பிச்சப்பி, எழுதி எழுதி. பேசிப் பேசி என் மனக்கவலைக்கு ஒத்தணம் கொடுக்கும் வேளை இறுதிக்கட்டளை இடப்பட் டதும்; இறைவன் தண்டனையே கொல்லவல்ல கொல்லவல்ல, பொல்லாக்குணம் கொடுத்தான். எழுத்தாளனின் எழுத்தோட்டத்தின் மொழி நயத் துக்கு ஓர் தடைக்கல், பொருளுக்கோர் வேலி, என்னாலியலாத்திற முரைத்தேன். அழுங்கு (3urra» வர் விடுவதாயில்லைத் தொடர்கிறேன்.
சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ் திருப் பெருந்துறை மேவிய சிவனே யெனப்பாடிய சுவாமிகள் - சிறை பெருநீர் போற்சிந்தை வாய்ப்
 
 

21
பாயும் பெருந்துறையுறை சிவனேயெனப் பாடிய பகுதிகள் என் மனதில் மின்னிப் பொலிந்தன. நாயக மவனேயென்று நாயும் துணிந்தேன். கரு தேவரை முன்னி, நடராசனை வன்னி, இல்லற ஞானி சோதியகாவை வணங்கித் துவங்கினேன். குல தெய்வம் வழிகாட்டினான்.
எனவே அடியேனிது நாள் வரை எழுதிய நூல்களின் தரத்தை இது முற்று முழுக்க எட்டிப் பிடியாவிடினும் எங்கோர் இடத்தைத் தொட்டாற் போதும் என்ற மனக்கடுப்பும் உண்டு. மணிவாசகர், அவர் தந்த வாசகம், அதன் வாச்சியப் பொருள் மிகமிக உயர்ந்தன. எனவே அந்த முச்சக்தியும், இது ஒரு சாரமான நூலாக அமையச் செய்யும் என்ற நினைப்பு, எனக்கு ஊன்றுகோலாகும்.
திருவாசகப் பெருநூலை நுகர இச்சிறுநூல் ஒரு தூண்டுகோலாக அமைந்தாற் போதும்; பூர ணத் தொட்டியுள் வாழலாம். இந்நூற் குறைபாட் டிற்கு அடியேனே உரிமைக்காரன். உயர்வுக்கு என்னை வழிப்படுத்திய குருதேவர் திருவாசக சுவாமிகள் சபாரத்தின அடிகளே சொந்தக்காரர்.
நன்றி!
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்த பெருந்துறை
விலங்கி னேன்வினைக் கேடனேன் இனி
மேல்வி ளைவத றிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவடிகள்
இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கி னேன்கலங் காமலேவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே,
திருக்கழுக்குன்றப் பதிகம் திருவாசகம்

Page 24
22 தமிழ்விடு தூதிற்
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்."
கண்ணி 151 தமிழ்விடு தூது தமிழிலே நிறையத் தூதுப் பிரபந்தங்கள் இறைந்து கிடக்கின்றன. தொண்ணுற்றாறு வகைப் பிரபந்தங்கள், இப்போ நூற்றிருபது வகையென ஆய்வுகள் கூறுகின்றன. சமயம் சார்ந்த இலக்கியங் களிலும் பேரிலக்கியங்கள், சிற்றிலக்கியங்களிலும் சங்க இலக்கியங்களிலும் ஆங்காங்கே தூதுச் சம்பவங்கள் அமைந்துள்ளன. தமயந்தி அன்னத் தைத் தூதாத அனுப்பினாள். இராமாயணத்தில் அங்கதன் தூது, அனுமன் தூது, பாரதத்தில் உலுகன் தூது, கிருஷ்ணன் தூது, கந்தபுரா ணத்தில் வீரவாகு தேவர் தூது பிரபல்யமானவை. சுந்தரர் பரவையாரிடம் இறைவனையே தூதாக அனுப்பினார். இதை அருணகிரியார் "பரவை மனைமீதிலன்று ஒருபொழுது தூது சென்ற பரம னருளால் வளர்ந்த குமரேசா என்று பாடியுள்ளார். தாயுமானார் அதைச் சுந்தரர் தமிழுக்காகவே இறைவன் தூது சென்றார் எனக் குறிப்பிடுகின் றார்.தமிழ்விடு தூது என்னும் இப்பிரபந்தம் வழக் கமான அன்னம், மயில், கிளி, வண்டு, பூவை, தோழி, குயில், தன்நெஞ்சம், தென்றல், தாமரை, நெல், துகில், குவளை, சண்பம், புறா, பிச்சிப்பூ என்பவற்றையும் கடந்து தமிழைத்துதாக அனுப்பு கிறது. கடந்த சதாப்த, எண்பதுகளில் வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கருடன்விடு தூது என்னும் பிர பந்தம் நம்மண்ணில் வெளியாகியுள்ளது. கலி வெண்பாவினாலே தான் தூதுப்பிரபந்தம் பாடுவது மரபு. கருடன்விடு தூது வெண்பா யாப்பினால் பாடப்பட்டது. தமிழ்விடு தூது மதுரைச் சொக்க நாதர் பேரிற் பாடப்பட்டது; இது யாராற் பாடப்பட்டது என்பது தெரியவில்லை. இது முதன் முதலாக உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்களால் நூலாக்கம் செய்யப்பட்டது. இச்சிற்றிலக்கியத்திற் தமிழ் உணர்வும், சைவசமய வீச்சும் நிறைந்து வழி
 
 

、拿 6OF6D
குகநாதன்
கின்றன. மதுரைச் சோமசுந்தரர் சந்நிதியில் பஞ்சபுராணம் ஒதும் -
நிகழ்வு இதிலே அமைந்துள்ளதால் நூலாசிரியர் காலம் அந்தமரபுக்குப் பிந்தியது எனக்கணிக்கலாம்.
"மூவர்கவியே முதலாம் கவிஐந்தும் மூவராய் நின்றார் தம்முன் ஓதி' - கண்ணி 247 மூவர் கவி தேவாரம் (அப்பர், சுந்தரர், சம்பந் தர் பாடியவை) இதோடு திருவாசகம், திருவி சைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகி யவை ஐந்தும் பஞ்சபுராணங்கள் இறைவன் சந் நிதியில் ஒதுவது இன்றும் பெருவழக்காகும். இதற்காக ஒதுவா மூர்த்திகளைத் தமிழ்நாட்டிலே ஆலயந்தோறும் நியமித்திருக்கிறார்கள். இந்தத் தூதுப் பிரபந்தம் தமிழையே ஊடகமாகக் கொண் டாலும் தமிழையே தூதாக மேற்கொண்டுள்ளமை கவனித்தற்குரியது. இத்தமிழிலே இன்றும் செய்யுள் மரபு பேணப்படுகிறது. இத்தமிழ்ப் பாட்டருமையைப் புலவர் வெகுநேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டி u_66TTT.
"பஞ்சிபடாநூலே பலர்நெருடாம்பாவே கிண்டு எஞ்சி அழுக்கேறா இயற்கலேயே - விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்ஏர் உழவர்அகம் தீயாது சொல்விளையும் செய்யுளே - வியாது ஒருகுலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய் வருகுலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் - இருநிலத்து." - கண்ணிகள் - 17, 18, 19
பஞ்சு - பஞ்சி என்பதன் திரிபு பருத்திப் பஞ் சில் இருந்து நூல் செய்யப்படும். இந்த நூலில் இருந்து புடவை நெய்யப்படும். (காந்தி கூட தக்ளியில் நூல் நூற்றார்) புடைவைக்குக் கலை என்றும் பெயர். இத்தொழிற்பாட்டைப் - பாட்டோடு இணைத்துப் பாடியது முதற்கண்ணி அடிக்கப்பட்ட மென்மையான பஞ்சில் இருந்து நூற்கப்படாத நூலே, நூல் - புத்தகம் பருத்தி நூலைப்போட்டு, கையால் திரித்து உடைசெய்வர். பாவோ பலரின்

Page 25
கைபடாதது. துணி (கலை) கிழிந்து, அறுந்து, குறைந்து அழுக்கேறும். ஆனால் தமிழ்ப்பாட்டோ எவ்வித மாற்றமும் அடைந்து அழுக்கடையாத இயல்புடைய் கலை - இலக்கியம் ஒரு கலை; பாடல்களின் தொடை, தொகுப்பு நூல் - இலக் கியம். இவ்வாறு கவிதை விழுமியத்தை வெகு சிறப்பாக எடுத்துச் சொன்ன கவிஞர் - புடை வைக்குச் சாயம் தோய்ப்பது முறை. ஆனாற் செந்தமிழோ நிறந் தோய்க்காத கலையாகும். இந்த இலக்கியக் கலை சொல்வோர் உழவர்களின் நாவிலெழும் சொற்களால் அமைவது என்றும் அழியாதது உழவர், புலவர்கள். இவர்கள் செய்யும் பாடல்கள் மக்களின் மனதையே பண்படுத்துவன. என்றும் அழியாத நீ ஒரு குலத்திலும் பிறக்கவே இல்லை. என்றும் அழியாது உயிர்க்குயிராய் நிற்கின்றாய். ஆனால் - வெண்பா - ஆசிரியப்பாகவிப்பா - வஞ்சிப்பா - மருட்பா என்பது நின் ஐந்து குலக்களாகும் எனத் தன் தாய் மொழியைப் போற்றுகின்றார் புலவர்.
மதுரைச் சொக்கநாதர் மீது, காதல் கொண்ட ஒருபெண் (காதலி) தலைவி - தன் காதற் பெருக் கைத் தலைவனுக்குத் தெரிவித்து - அப்பெருமா னது சம்மதத்தை அறிந்து வருமாறு - தமிழைத் தூதனுப்பியதாக இப்பனுவல் இயற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 268 கண்ணிகளாகும் பாட்டுடைத் தலைவன் மதுரை (கூடல்)யில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரர் ஆகும். இறைவன் மேல் ஏற்படும் காதலுக்குப் பேரின்பக் காதல் என்று பெயர். இறைவனைத் தலைவனாகவோ - தலைவியா கவோ பாவித்துப் பாடும் பாவினத்துக்கு நாயக நாயகி பாவம் என்று பெயர். இதுவே தெய்வீகக் காதல் ஆகும். தமிழில் எழுந்த திருமுறைகளிலும், ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் இப்பக்திநெறியான மதுரபாவம் நிறையவுண்டு. இதை அகத்துறை இலக்கியம் என்பர். திருப்புகழிலே பல பாடல்கள் இப்பாணியிலே நிறைய உண்டு. முருகன் மேற் காதல் கொண்ட ஒரு பெண் அவனுடைய கடப்ப மாலயைக் கேட்கும் களைசொட்டும் பாடல் இது.
 
 

"நீலங்கொள் மேகத்தின் மயில்மிதே
நீவந்த வாழ்வைக் கண்டு - அதனாலே மால்கொண்ட பேதைக்குன் மணம்நாறும்
மார்தங்கு தாரைத்தந்து - அருள்வாயே." - திருப்புகழ் தார் - மாலை. தூதுப் பிரபந்தங்கள் பலவும் காதலனின் மாலையைக் கேட்பது ஒருமுறை. தமிழ்விடு தூதிலும் மாலையை வாங்கிவா என்று தலைவி தமிழுக்குக் கூறுகின்றாள். "ஒருதொடை வாங்கி உதவாயோ ஓர்சே விருது உடையார்க்கு நீ வேறா” - கண்ணி 114 இதன் பொருள்- அவ்விறைவன் இடமிருந்து எனக்கு ஒருதொடை (மாலை) வாங்கிவந்து உத வமாட்டோயோ? ஒப்பற்ற காளைக் கொடியை உடைய ஈசன் உடன் உனக்கு என்ன வேறுபாடு உள்ளது. (தொடை - யாப்புறுப்பு - மாலை, சே விருது - காளைக்கொடி, சே - இடபம் - சிவன் வாகனம், தொகுக்கப்படுவது தொடை)
இந்நூலின் கடைசிக் கண்ணியிலே தலைவ னோடு சேர்ந்து, கலந்து இன்ப சுகம் அனுபவிக்க விரும்புவதை - இறைவனிடம் - நான் சொன்னதாகச் சொல், ஒன்றும் தவறாமற்சொல் என்றும் தமிழை ஆராமையோடு அள்ளுறக் கேட்கின்றாள் தலைவி. "துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க மறவாதே தூது சொல்லிவா." - கண்ணி 268
இரு பெண்கள் சேர்ந்து இல்லறம் நடத்துவது இல்லை. ஒரு பெண்ணும் ஆணும் இணைந்துதான் இல்லறம் நடக்கும் என்பதைத் திருவருட்பயன், "இருவர் மடந்தையர்க் கென்பயனுண்டாம், உண்டாம் ஒருவன் ஒருத்தியுறின்" எனக் கூறுகின்றது. சைவம் இல்லறம் பேணும் ஒரு சமயம் இரு ஆண்களோ, இரு பெண்களோ சேர நம் சமயம் இடமளிக்காது. இல்லற மார்க்கத்தோடு இயைந்து பேரின்பப் பெருவாழ்விலும் ஜீவாத்மாவும், பரமாத் மாவும் ஒன்று கலக்கும் நிலையையே பெரிதும் விளக்கிக்காட்டுகின்றது. இதுவே ஐக்கிய முத்தி யாகும். திருவாசகம் இது பற்றிப் பேசுகின்றது. "புல்லிப்புணர்வ தென்று கொலேர்' எனப் புணர்ச்சிப் பத்துப் பாடிய மணிவாசகர் திருக்கோவையாரும்

Page 26
பாடினார். தாயுமான சுவாமிகள்கூட கிளியைத் தூதாக ஈசனிடம் அனுப்பி ஒன்றுபட விழைகின்றார்.
"ஆரும் அறியாமல் அந்தரங்கமாக வந்து சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே." இத்தூதுப் பிரபந்தத்திலே நூலாசிரியர் எடுத்தா ளும் தமிழ்நூற் பரப்பிற்கோ அளவில்லை. நால் வர்களின் பெருமையைப் பேசும்போது, "மன்னும் மூவாண்டில் வடகலையும் தென்கலையும் அன்னை முலைப்பாலில் அறிந்தோரும் - முன்னரே மூன்று விழியார் முன்முதலையுண்ட பிள்ளையைப் பின் ஈன்று தரச் சொல்லின் இசைத்தோரும் - தோன்று அயன்மால் தேடிமுடியா அடியைத் தேடாதே நல்லூரில் பாடி முடியாய்ப் படைத்தோரும் - நாடிமுடி மட்டோலைப் பூவளையார் வார்ந்து ஒலை சேர்த்து எழுதிப் பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும்."
- கண்ணிகள் 5, 6, 7, 8
எனப் பாடுகிறது பிரபந்தம். இக்கண்ணிகளில் முறையே சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக் கவாசகர் பெருமை பேசப்படுகிறது. இவ்வாறு அகத்தியரில் இருந்து பரஞ்சோதியார்வரை பலர் வலம்வருகிறார்கள் ஏன் உன்னைத் தெரிந்து தூதுவனாக அனுப்புகிறேன் எனத் தமிழ்மொழிக் குக் கூறுமாற்றால் அமைந்த பாட்டடிகளில் அன் னம், வண்டு, மான், குயில், மனம் என்பவற்றை ஏன் அனுப்பவில்லை என்பதையும் விளக்குகின்றார் அக்கவிஞர்.
"பெண்கள் எல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில் புண்கள் எல்லாம் ஆறப் புரிகண்டாய் - ஒண் கமலத்து அன்னம் தலைவிடுப்பேன் அன்னந்தான் அங்கு அவரை இன்னம்தான் கண்டு அறியாது என்பரே - மன்னந்தாய் அப்பால் ஒர்வண்டை அனுப்பின் அவர் காமம் செப்பாதே என்றால் திகைக்குமே - தப்பாது மானைப்போய்த் தூது சொல்லிவா என்பேன் வல்லியப்பூந் தானைப் பரமர் பால் சாராதே - ஏனைப் பூங் கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கையினம் ஆகி வலியானுக்கு அஞ்சுமே ஆகையினால் இந்த மனத்தைத் தூதாய் இரு என்பேன் இம்மனமும் அந்தமனோதீதர்பால் அண்டாதே - எந்தவிதம் என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன் குன்று அணையாய் உன்னுடனே கூறுவேன்."
- g560টা600াীি956 106-112 ஆம், அன்னத்தைத் தூதனுப்ப எண்ணினேன். ஆனாற் பிரமனாகிய அன்னம் அந்த ஈசனை இன் னமுமே கண்டறியவில்லை என்கின்றனர். என்
 

தந்தையே ஒரு வண்டினைத் தூதாக அனுப்பலாம் என்றால், முன்னொரு காலத்தில் தருமிக்காக "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” என்று குறுந்தொ கைப் பாட்டொன்றிற் பாடியது போல - அவர் காமஞ் செப்பாதே என்றாற் திகைத்து நிற்குமே! மானை விட்டாலும் (வல்லியம்) புலித்தோலை (பூந்தானை - அழகிய உடை) உடுத்த சிவனைக் கண்டு மான் போகப் பயப்படுமே. குயிலைத்தூதாக அனுப்பினாலும் - வலியான் என்னும் கரிக்குருவி சிவனோடு அருகில் இருப்பதைக் கண்டு நடுங்கும். எனவே என் மனதை விட்டாலும் - சொக்கநாதரோ, மனோதீதர்-மனதிற்கும் எட்டாதவர். எனவே என் மனக்கவலைகளை உன்னிடமே கூறுகின்றேன் எனக் காதற் தலைவி கூறுவதாகப் புலவர் பேசும் கருத்தோவியம் தான் இத்தமிழ்விடுதூது என்னும் பிரபந்தம்.
மதுரைச் சோமசுந்தரேசரின் திருமுடிப் பெரு மையைப் பேசும்போது, பிட்டுக்கு மண் சுமந்தது பண்ணிறைந்த பாடல்களாம் திவ்ய திருவாசகத் தைக் கேட்டு அனுபவிக்கத்தான் என் கருத்தைக் கண்ணியிலே படரவிடுகின்றார் இதன் ஆசிரியர். "பண்சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும் மண்சுமந்த சோதிமணி முடியும்." - கண்ணி 229 திருவாசகத்திற் பண்சுமந்த பாடல் பற்றி - திருவம்மானையில் வருவது கவனத்துக்குரியது. தெளிந்த நற்பண்புகளை உடைய மாணிக்கவாச கரின் பாடல்கள் இசையுடன் இணைந்த பாடல் களாகவும் திகழ்கின்றன. சுவாமிகள் பிட்டுண்ட வரலாற்றையும் பிட்டு (உதரம்) வயிற்றின் பசி தீர்த்தமையும் பின்வரும் அடிகளிற் பாடுகிறார். "தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளி அள்ளி உண்டு பசிதீர்ந்த உதரமும்" — 356001600াীি 222 எனவே மணிவாசகரைப் புலவர் வாதவூர் ஆளி எனப் போற்றுகின்றார்.
"ஓங்குபுகழ் மூவர் ஒருபா.தும் ܡ ஆங்கு அவை சொல்வாத வூராளி சொல்லும்" - கண்ணி 50 மூவர் - அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆளி - சிங்கம் திருவாதவூரர் பாடியது திருவாசகம் ஒருமா ஒருப.து - பதிகம்.
இவ்வாறு தமிழும் சைவமும் பளிச்சிடும் தமிழ்விடு தூது சைவசமயிகளின் கருவூலமாய்த் திகழ்கிறது. சமய உணர்வு ஏத்தும் இதையும் цot 103штib. "தாழ் பாயலாளரை நீதானே தொடர்ந்தாயோ சூழ் பாயோடு உன்னைத் தொடர்ந்தாரே'
- தமிழ்விடு தூது 93

Page 27
சித்திர த்திகை
சைவசித்தாந்தம் பயில்வோம்
AF6)
இந்நிலையில் ஐந்துசுத்தம் ஏழ்சுத்தா சுத்தம்
எண்மூன்றும் அசுத்தமெனும் இவைமுப்பத்தாறாம் மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தாம் மருவும்உரு நிலையழிய வரும்பொழுது வரியார் பன்னகம்அண் டசம்கனவு படர்வகையே முன்னம் பகரவரும் கலாதிநிலை பரவியசூக் குமமாம் தன்உருவில் அணைந்துபயன் அருந்திஅரன் அருளால் தரையிடை வருமென்று சாற்றும் நூலே, 46
இ-ன் இந்நிலையில் - இவ்வாறு தத்துவங்கள் தோன்றிய முறையிலே, ஐந்து சுத்தம் - நாதம் முதல் சுத்தவித்தை ஈறாகிய ஐந்தும் சுத்ததத் துவம், ஏழ் சுத்தாசுத்தம் - கலை முதலிய வித் தியா தத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்த தத்துவம் எண்மூன்றும் அசுத்தம் - பிரகிருதி முதல் பிரு துவி ஈறாகிய ஆன்ம தத்துவம் இருபத்து நான் கும் அசுத்த தத்துவம், எனும் இவை முப்பத்து ஆறாம் - என்று சொல்லப்படும் இவற்றின் தொகை முப்பத்தாறாகும், மன்னிய தத்துவங்களிடை மயங்கி - இங்ங்ணம் பொருந்திய தத்துவங்களின் வழியிலே மயங்கி, தாம் நெடும் துயர் மருவும் உயிர்களாவை பெருந் துன்பத்தை அனுபவிக்கும் உருநிலை அழியவரும் பொழுது - சரீரமானது நிலைகுலைய வரும்போது, வரியார் பன்னகம் அண்டசம் கனவு படர்வகையே - வரி பொருந்திய பாம்பு தோலுரித்துச் செல்வது போலவும் முட்டை யிற் பிறப்பன அதைவிட்டுச் செல்வது போல வும் கனவில் அறிவு வேறுபட்டாற் போலவும், முன்னம் பகரவரும் கலாதிநிலை பரவிய சூக்குமமாம் தன் உருவில் அணைந்து - அசுத்தமாயா தத்து வங்களின் பிரவிருத்திக் கிரமத்தில் முதலிற் தோன்றியதெனச் சொல்லப்படும் கலாதி தத்து வங்கள் கூடிய சூக்குமமாகிய தனக்குரிய புரி யடக உடம்போடு சுவர்க்க நரகங்களை அடைந்து பூதசார பூத உடம்புகளைப் பொருத்தி, பயன் அருந்தி - அங்கங்கே அனுபவிக்க வேண்டிய
 

25
ரகாசம்
மட்டுவில் ஆ. நடராசா
இன்ப துன்பங்களை அனுபவித்து, அரன் அருளால் தரையினிடை வருமென்று நூல் சாற்றும் - சிவனருளால் மீண்டு பூமியிற் பூதபரிணாம சரீரத் தோடு பிறக்குமென்று ஆகமங்கள் கூறும் எ-று.
சுத்ததத்துவம் அங்குள்ள ஆன்மாக்களுக்கு எல்லா அறிவையும் எல்லா வல்லமையையும் உண்டாக்குதலாற் சுத்ததத்துவம் எனப்படும். அது அசுத்த தத்துவங்களைப் பிரேரிப்பதால் பிரேர காண்டம் எனப்படும். இது சுத்தாத்துவா எனவுஞ் சொல்லப்படும்.
பிரேரித்தல் - செலுத்துதல்.
சுத்தாசுத்த ஆன்மாக்களுக்குச் சிற்றறிவு சிறுதொழில்களை விளக்குவதற்குச் சாதனமா கையால் சுத்தமாயும் சூக்கும தேகத்தின் வழி யாகக் குண்ரூபமாகிய சுகதுக்கங்களை உண் டாக்குதற்குச் சாதனமாய் அசுத்தமாயு மிருப்ப தாற் சுத்தாசுத்தம் எனப்படும். ஆன்மாக்களுக்குப் போகத்தைக் கொடுத்துப் புசிப்பிக்கையாற் போக காண்டம் எனப்படும். போகத்தை உண்டாக்குத லால் போசயித்திரு காண்டம் எனப்படும். ஆன் மாக்களுக்குச் சிற்றிவை உண்டாக்குதலால் வித்தியா தத்துவம் எனப்படும்.
போசயித்திரு - புசிப்பிப்பது.
சுத்தமாயையாற் பிரேரிக்கப்பட்டு அசுத்த மாயையிற் றோன்றுவதால் இது சுத்தாசுத்தமெனப் படுமெனவுங் கூறுவர்.
ஆன்ம தத்துவங்கள் ஆன்மாக்களுக்குச் சுக துக்க மோகங்களை உண்டாக்குதலால் அசுத்த மெனப்படும். அனுபவிக்கப்படும் பொருள்களாய் இருத்தலால் போக்கிய காண்ட மெனப்படும். ஆன்மாவோடு சம்பந்தப்பட்டிருப்பதால் ஆன்ம தத்துவம் எனப்படும்.

Page 28
போக்கியம் - அனுபவிக்கப்படும் பொருள்.
பூதங்கள், தன்மாத்திரைகள், ஞானேந்திரியங் கள், கன்மேந்திரியங்கள், அந்தக் கரணங்கள், குணம், பிரகிருதி, கலாதி என்னும் முப்பது தத் துவங்களைக் கொண்ட எட்டுக் கொத்துக்களும் புரியட்டகம் எனப்படும்.
பன்னக உவமை உடல் வேறுபாட்டுக்கும் அண்டச உவமை இடவேறுபாட்டுக்கும் கனவு வமை அறிவு வேறுபாட்டுக்கும் கொள்ளப்பட்டன.
பன்னகம் - பாம்பு அண்டசம் - முட்டையிற் றோன்றுவன.
தூல உடம்பு நீங்கியபின் சூக்கும சரீரத்தி லிருந்து பூதசார, பூத உடம்புகள் உண்டாகும்.
இன்ப துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும்
உடம்பை எடுக்கும்.
கனவு நிலையில் நனவில் நிகழ்ந்ததை மறப் பதுபோல, உயிர் சுவர்க்க நரகங்களிலிருக் கும்போது பூமியில் நிகழ்ந்தவற்றை மறந்துவிடும்.
தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பிச்சம் சராயுசங்கள் நான்கின் ஊற்றமிகு தாவரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி மன்னியிடும் பப்பத்து மாநுடர்ஒன் பதுமா ஏற்றியொரு தொகையாக இயம்புவர்கள் யோனி எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே 47
இ-ன் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்து வரும் உற்பிச்சம் சராயுசங்கள் நான்கின் தோற்றியிடும் என்றும் - உயிர்கள் பூமியின் கண் வந்து பிறக்கும்போது முட்டையிற் றோன்றுவன வியர்வையிற் றோன்றுவன பூமியில் நெருங்கிவரும் வித்திற் றோன்றுவன கருப்பையிற் றோன்றுவன
 

gEli
ஒன்றினொ டெரன்றுமோ ரைந்தினொ டைந்து ாப்பது LDT.g., T(35 U-60T60TL9 UTU19 last UL9.
யோமென வுய்ந்தன வாகாதே கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே காரண மாகு மனாதி
குணங்கள் கருத்துறு மாகாதே நன்றிது தீதென வந்த
நடுக்க நடந்தன வாகாதே நாமுமே லாமடி யாருட
னேசெல நண்ணுது மாகாதே யென்றுமெ னன்பு நிறைந்த
பராவமு தெய்துவ தாகாதே யேறுடை யானெனை யாளுடை
நாயக னென்னுள் புகுந்திடிலே,
வென நான்கு வகையாகத் தோன்று மென்றும் ஊற்றமிகு தாவரங்கள் பத்தொன்பது நூறாயிரம்நிலைபேறு மிக்க தாவரங்கள் பத்தொன்பது நூறாயிரம், ஊர்வன பதினைந்து நூறாயிரம் - ஊர்வன பதினைந்து நூறாயிரம், அமரர் பதி னொன்று நூறாயிரத்தோடு - தேவர் பதினொரு நூறாயிரத்தோடு, உலவாமால் தரு நீர் உறைவன நல் பறவைகள் நாற்காலி பப்பத்து நூறாயிரம் என்றும் - குறையாத விருப் பத்தைத் தரும் நீர் வாழ்வன நல்ல பறவைகள் நாற்கால் விலங்குகள் என்பன ஒவ்வொன்றும் பத்து நூறாயிரம் என்றும், மாநுடர் ஒன்பது நூறா யிரம் ஆ ஏற்றி - மாநுடர் ஒன்பது நூறாயிரமுமாகக் கூட்டி, யோனி எண்பத்து நான்கு நூறாயிரம் என்று எடுத்து இயம்புவர்கள் - யோனிபேதம் எண்பத்து நான்கு நூறாயிரமென் றெடுத்துரைப்பர் அறிஞர் எ-று.
யோனி - வடிவம் - உடல். ஆக என்பது 'ஆ' என நின்றது. நூறாயிரம் என்பது, தாவரங்கள் என்பது முதல் மாநுடர் என் பதிறாக எல்லாவற்றோடுங் கூட்டப்பட்டது.

Page 29
உயிர்கள் நான்கு வகையாகத் தோன்றும் ஏழுவகைப் பிறப்பையும் என பத்து நான்கு நூறா யிர யோனி பேதங்கை ைெடயன என்பது இச் செய்யுளின் கா
کھ
இணையபல பிறவிகள் அறதுயிறந் தருளால்
இருவினைகள் புரிந்தருந்தும் இது சகலம் அகலா
முனம்மருவும் இருபயனும் ஒருகாலத் தருந்த
முந்துநுக ருந்துபயன் அந்தமுற வந்த வினையும்எதிர் வினையும்முடி வினையுதவு பயனால்
நேராக நேராதல் மேவுங் கால்முற்
சினமருவு திரோதாயி கருணை யாகித்
திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே. 48
இ-ன் அருளால் இணையபல பிறவிகளில் இறந்து பிறந்து இருவினைகள் புரிந்து அருந்தும் இது சகலம் - பரமசிவனுடைய திருவருளால் மேற்கூறிய எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களையுடைய பல பிறவிகளிலே பிறந்தி றந்து நல்வினை தீவினைகளைச் செய்து அவற் றின் பயனாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும் இந்நிலை சகலாவத்தை எனப்படும். முந்துநுகர் உந்து பயன் - முற்பிறவிகளில் இன்பதுன்பங்களை நுகரும் பொருட்டு மனம் செலுத்துதலால் அவற்றை அனுபவிக்கும்போது வந்தேறிய சஞ்சித வினையும், அகலா முனம் மருவும் இருபயனும் - விட்டு நீங்குதலின்றி முற்பிறவிகளிற் பொருந்திய நல் வினை தீவினைகளின் பயனாகிய புண்ணிய பாவங்களும் ஒருகாலத் தருந்த வந்த வினையும் எடுத்த ஒரு பிறவிக் காலத்திலே அனுபவிக்கும் பொருட்டு வந்த பிராரத்த வினையும், எதிர் வினையும் - பிராரத்தத்தை அனுபவிக்கும் போது வந்தேறும் ஆகாமியவினையும், முடிவினை உதவு பயனால் - முத்தியைத் தருகின்ற சிவ புண்ணி யங்களின் பயனால், அந்தம் உற - இல்லா தொழியும் படி நேராக நேராதல் மேவுங்கால் -
 
 
 
 
 

திருவாசகம்
நாடகத்தா லுன்னடியார்
போனடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றே னாடகச்சீர் மணிக்குன்றே
யிடையறா வன்புணக்கென் னுாடகத்தே நின்றுருகத்
தந்தருளெம் முடையானே.
சமமாகக் கருதுதலாகிய இருவினை ஒப்பு நிக ழும்போது, முன் சினம் மருவு திரோதாயி கருணை ஆகி முன்பு கோபத்தைப் பொருந்தி நின்ற திரோதான சத்தி அருட்சத்தியாகி நிற்க, திருந்திய சத்திநிபாதம் திகழும் - தீவிரதர சத் திநி பாதம் விளங்கும் எ-று.
உந்து - உந்துதல். இது ஈறுகெட்ட வினைப் பெயர்.
இருவினை யொப்பாவது, நல்வினை தீவினை களையும் அவற்றின் பயனாகிய புண்ணிய பாவங்களையும் அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களையும் ஆன்ம அறிவின் கண்ணே விருப்பு வெறுப்பின்றி ஒப்ப நோக்குதலாகும்.
இருவினையொப்பு சரியை கிரியை யோகம் என்னும் சிவபுண்ணியங்களால் வரும்.
முடிவு - வீடு. 'முடிவினை என்பதற்கு, கன் மங்களுக்கு முடிவைத் தருகின்ற வினை எனப் பொருள் கூறினும் பொருந்தும்.
ஆணவமலம் பரிபாக மடைதற் பொருட்டு அதற்கு அனுகூலமாய் நின்ற திரோதான சத்தி, அந்த மலவலி குன்றிய போது கருணை மறம் மாறி அருட்சத்தியாய் நிற்கும். இதை விளக்கு வதற்காக முற்சினமருவு திரோதாயி கருணையாகி என்றார்.

Page 30
A
s
麗
■三」
மார்கழி
s
霞 Ol
s
s
O2
s
顯 B 04
s
05
O6
08
14
16
s
18
19
22
s
24
26
29
- afeldt
16-12-2002
17-12-2002
19-1 2-2002
20-12-2002
21-12-2002
23-12-2002
26-12-2002
29-12-2002
3 - 12-2002
02-01-2003
O3-01-2003
O6-01-2003
O8-01-2003
10-01-2003
13-01-2003
திங்கட்கிழமை
செவ்வாய்க்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை
திங்கட்கிழமை
வியாழக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
செவ்வாய்க்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
திங்கட்கிழமை
புதன்கிழமை
வெள்ளிக்கிழமை
திங்கட்கிழமை
VN
 

LILD
மார்கழி மாத்டி, 4 . - 2
பிரதோஷ விரதம்,
கார்த்திகை விரதம்
பூரணை விரதம்
சடையனார் (ՖԱ5Ա6Փ&,
இரவு நடேசர் ஆர்த்திராபிஷேகம்
உதயம் நடேசர் ஆர்த்திரா தரிசனம்
சங்கடஹர சதுர்த்தி விரதம்
இயற்பகையார் குருபூசை
மானக்கஞ்சாறர் குருபூசை
பிரதோஷ விரதம்
அமாவாசை விரதம்
சாக்கியர் குருபூசை
சதுர்த்தி விரதம்
ஷஷ்டி விரதம்
வாயிலார் ಆÚ©ಠ
கார்த்திகை விரதம்
N

Page 31
'^ଅଂଶoryś, 1ச் சிறு 1 ހ/
༽ „6Í &LDU Í S) 6া, 9 لاحیتtری ات _ Jரிசாம்பாள்", "
ܐܢܓܠܚܠ܇ .
என்பவற்றை அடினிெற்றிக் கதைகள் தத்துவங்களைத் தெரியப்படுத்துவனவா வேண்டும்.
O கல்வியியற் கல்லூரியிற் பயிலும் ஆசிரியர்கள், பாடசாலையில் சை இதில் பங்குபற்றலாம்.
முதற் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு போட்டி முடிவுத் த
மாதிரி விண்ணப்பப் படிவம்
- - - - - - - - - - - - - -
பெயர்:-.
முகவரி:-. ................
Θέ5Τιβού:-.............................................. பிறந்த திகதி:-.
S S S S S S S S SS S S S S S S S S S S S S SSSLS S SL S L S S S S SS S S S S S SS
திகதி - - - - - - - - - - - - - -
அனுப்பவேண் சைவநிதி பே
166, காலி வீதி

D. Se e O தி நடத்தும் கதைப் போட்டி
நிவைப் பெறக்கூடியதான சிறுகதைகள் சிவாக்கியர்”, “ஓம் நான் சொல்லுகிறேன்"
அமையலாம். கதைகள் சைவசமயத் யும் சமய அறிவூட்டுவனவாயும் அமைய
) ஆசிரியர்கள், அறநெறிப்பாடசாலை ஈவசமயம் போதிக்கும் ஆசிரியர்களும்
еђШТ 3000/- ரூபா 2000/- ebLJIT 1000/-
lasgi, 31-01-2003
- - - - - - - - - - - -
கையொப்பம்
============
டிய முகவரி;-
ாட்டிப் பிரிவு
, கொழும்பு-04,
ஆசிரியர் குழு, சைவநீதி

Page 32
மாணிக்கவாசக க
திருவ வெளிவ ந்
நீண்டகாலப் பாவனைக்கு ஏற்றவண்ணப் விற்பனைக்கு உண்டு. பிரதி ஒன்றின் கொள்வனவிற்குக் கழிவு உண்டு.
米 பெரிய புராண வசனம்
* சிவஞான சித்தியார் (சுபச்
* திருவருட்பயன் - முலமும்
ஆகிய நூல்களும் விற்பனைக்
கிடைக்கும் இடம்:
6○○Fé
I95, ஆட்டுப்பட்டித்
L L L L L L L L L L L L L L L L L L L
எங்களிடம்,
ஐம்பொன், வெள்ளி, பஞ்சலோகம் பொருட்கள், கலைநயம் மிக்க சிலா பட்டுக்குடைகள், கும்பக்குடைகள் சந்தி சுருட்டி மகர தோரணம், திரைச்சீலைக மாலை மற்றும் மின்சார மங்கள வாத்த குத்துவிளக்குகள், வீட்டு அலங்காரப் பெ
。リー。
23/1, விவேகானந்த மேடு, ெ
Regd. No. QD/25/News 2002 66j6ïngbup 6og
அச்சிட்டு 07-12-2002
 
 
 
 
 

s
) பிளாஸ்டிக்கவருடன் கூடிய திருவாசகம் 蟹 விலை ரூபா 150/- மட்டுமே. மொத்தக்
-
- - -
க்கம்) - முலமும் உரையும்
உரையும்
கு உண்டு.
வநிதி
தெரு, கொழும்பு- 13.
வார்ப்பு விக்கிரகங்கள், வீட்டுப்பூசைப்
விக்கிரகங்கள், கோபுரக்கலசங்கள்,
வட்ட, பூச்சக்கரக் குடைகள், ஆலவட்டம்,
ள், வெள்ளி, முத்து, கிரீடங்கள், வாக யங்கள், இந்திய கலைத்திறம் படைத்த ாருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
வநீதி நிறுவனத்தினரால் லசுஷ்மி அச்சகத்தில் இல் வெளியிடப்பட்டது.