கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:சுயதரிசனம்

Page 1

Aŭtobisî - Toño Cos. Filტyნილmpoნჩ|

Page 2

சுயதரிசனம்
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வின் வசந்தங்கள்- பாகம் 03 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் தலைப்பு
ஆசிரியர்
பதிப்பு ஆண்டு
பதிப்பு விபரம்
உரிமை
தாளின் தன்மை
ញ្ញាវៃ ចាបgh
சுயதரிசனம்
வாழ்வியல் வசந்தங்கள் பாகம்
பருத்தியூர் பால, வயிரவநாதன்
மொழி :
தமிழ்
: 2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க்
- 03
நூலின் அளவு : கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் : அஸ்ரா பிரிண்டர்ஸ்
கணனி வடிவமைப்பு : அஸ்ரா பிரிண்டர்ஸ்
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை
ISBN
13
146
பெர்பெக்ட்
: 250/=
: 978-955-0469-04-8
அஸ்ரா பிரிண்டர்ஸ்
வானவில் வெளியீட்டகம்
 
 

வாழ்த்துரை
"எனது தமிழ் ஆசானின் வாழ்த்து"
பருத்தியூர் பால, வயிரவநாதன் எனப்பத்திரிகைகளில் வெளியாகும் பெயரை உடைய பாலகிருஷ்ணன் வயிரவநாதன் எனது மாணவன். நான் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழ் மொழியும், இலக்கியமும் கற்பித்தேன். அவரது சகோதரர்களும் அங்கே படித்தனர்.எனது தந்தையாரும் அவரின் பிதாவும் நெருங்கிப்பழகியவர்கள். நீண்ட தொடர்பு
இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, ஓவியம், சிறுகதைகள் என பல்துறைகளிலும் எழுதி பாராட்டுக்கள் பெற்றவர். தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி, தினகரன் ஆகியவற் றில் எழுதிய கட்டுரைகள் விசேஷமானவை.
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் ஒன்று 2003 ஆம் ஆண்டிலும், பாகம் இரண்டு 2005 ஆம் ஆண்டிலும், மணிமேகலை பிரசுரத்தினால் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழாக்களும் நடைபெற்றன. தமிழ் ஆர்வம் மிக்கவரானதால் ஓய்வுபெற்ற பின் எழுதுவதற்கு அதிக நேரம் உளது. எழுதியவற்றை நூல் வடிவில் வெளியிடவும் விரும்பினார். மூன்றாவது பாகத்திலிருந்து அச்சிடுகின்றார்.

Page 4
அவர் பல துறைகளிலும் ஈடுபாடு உடையவராதலால் “கலாபூஷணம்” விருது 2009ஆம் ஆண்டு கிடைத்தது. அன்னாரின் இந்நூல் வாழ்வியலைப்பற்றி அறிய முனைவோர்க்கு ஒரு கருவூலம் எனக் கருதலாம். பால வயிரவநாதனின் இவ்விலக் கியத் தொண்டு தொடர புற்றளை சித்தி வினாயகரும் அவர் உடன் உறை மருதடி குருமணல் கந்தசுவாமி சமேத வள்ளி, தெய்வானையும், அவருக்கு உடல்நலத்தையும் உள உறுதி யையும் அருள்வாராக,
சே. ஏகாம்பரநாதன் இளைப்பாறிய பிரதிக் கல்விப் பணிப்பாளர்.
 

அணிந்துரை
வாழ்வியல் வசந்தங்கள் தொகுதியின் மூன்றாம் பாகத்திற்கு இவ்வணிந்துரையை எழுதுவதில் மகிழ்ச்சி யடைகின்றேன்திருபால வயிரவநாதன்"வாழ்வியல் தேடல்கள்." என்னும் தலைப்பிலே ஞாயிறுதினக்குரல் பத்திரிகையில் கடந்த ஆண்டுகளில் எழுதிய பல்சுவைக் கட்டுரைகளின் தொகுப் பாகவே இந்நூல் வெளிவருகின்றது.
மக்களுக்குத் தேவையான பல வகையான ஆலோச னைகளை இக்கட்டுரைகளுடாக ஆசிரியர் முன்வைக்கின்றார். சோர்ந்து கிடப்பவரைத் தட்டி எழுப்பும் மருந்து போல இவருடைய கருத்து அமைகின்றது. "துணிச்சலுள்ள, எழுச்சி மிக்க, எம் ஆளுமை உணர்வில் பெருநம்பிக்கை கொண்டு எழுந்து நிற்பதுவே உண்மையான விழிப்பு நிலையாகும். இந் நிலையில் சோர்வு இல்லை, துன்பம் இல்லை, தோல்விகள் துளி கூட இல்லவே இல்லை" என்று "விழிப்புடன்களிப்போடு உழை” என்னும் கட்டுரையிலே குறிப்பிடுகின்றார்.
மனிதர்களுடைய பலங்களையும், பலவீனங்களையும் தன்னுடைய எழுத்துக்களுடாக திரு. பால,வயிரவநாதன் சிறப்பாகவே சித்திரிக்கின்றார். "கோபம்" என்ற தலைப்பில் ஓர் அருமையான எழுத்தோவியம் வரையப்பட்டுள்ளது. சில விடயங்களைக் கோபத்தாலும், சில விடயங்களை சாந்தமாகவும் சாதித்து விடலாம் எனக் கூறும் ஆசிரியர் "நல்லவர்கள் ஒருவர்
5

Page 5
மீது கோபம் கொள்வார்களே ஒழிய அவர்கள் மீது வெறுப்புக் கொள்ளவே மாட்டார்கள். கோபம் வேறு, வெறுப்பு வேறு" என்று கூறுவதில் எவ்வளவு உண்மை உண்டு என்பதை உணரக் கூடியதாயுள்ளது.
அறிஞர் சி.என். அண்ணாத்துரை ஓய்வு நேரம்" என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். ஒருமனிதனுக்கு ஒய்வு நேரம் ஏன் தேவை, அதனை எவ்வாறு அவன் பயன்படுத்த வேண்டும் என்ற பல விடயங்களை அதிலே குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டு களுக்குப் பின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவு ஏற்பட்டுள்ள இக்காலப்பின்னணியிலே திருபால வயிரவநாதன் "நல்ல பொழுது போக்கு வாழ்க்கைக்கு உவப்பு" என்னும் கட்டுரையினை எழுதியுள்ளார். மனிதனுக்கு உழைப்பும் தேவை, ஒய்வும் தேவை எனக் கூறும் ஆசிரியர் ஒய்வுநேரத்தை எவ்வாறு பயனுள்ளதாகக் கழிக்கலாம் எனப்பல வழிக்ளைக்கூறுகின்றார்.
ஓர் அமைதியான, நிறைவான, பயனுடையதான வாழ்வு இந்த உலக மனித சமூகத்திற்குக் கிடைக்கவேண்டுமென்னும் பெருவிருப்புடையவராக பால, வயிரவநாதன் திகழ்கின்றார்.
அவருடைய கட்டுரைகளை ஊன்றிப் படிக்குமிடத்து இப்படியான ஓர் ஆசிரியரையே அவற்றினூடாகக் கான முடிகின்றது. அவருடைய இந்த முயற்சி பாராட்டுக்குரியதாகும். பத்திரிகையிலே இக்கட்டுரைகள் வெளிவரும் போது எல்லோரும் எல்லாக் கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்புச் சில வேளை
6

கிடைக்காமலிருக்கலாம். எனவேதான் ஆசிரியர் அவற்றை நூலுருவிலே கொண்டு வருகின்றார். நின்று நிலைத்துப் பலருக்கும் பலனுள்ளதாக இந்நூல் அமையுமென்பதில் ஐய மில்லை. ஆசிரியருக்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுதல் களையும் கூறி இவ் வணிந்துரையை நிறைவு செய்கின்றேன்.
போராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் LIGoīLT6If ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிநிலையம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

Page 6
Փ85646ՕII ஒரு ரசனைக் கணிப்பின் பதிவு நல்ல மனம் வேண்டும்.
நல்லதை நினைத்து, நல்லதைச் சொல்லி, நல்லதை செய்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவராகவே இருப்பர். அப்படியிருப்பதற்குமுதலில் நல்லமனம்வேண்டும். அவ்வாறான மனதினைக் கொண்ட நண்பர் பால, வயிரவநாதன் எனலாம். பருத்தித்துறையைச் சேர்ந்த இந்தப் பண்பாளர் பண்பாகப் பழகும் அதேவேளையில் குள்ளப்புத்திக்காரரை இனங்கண்டு நேர்மையை உணர்த்தி நிற்பார்.
நாளிதழ்களிலும் வாரப்பத்திரிகைகளிலும் இவர் நிறைவாக எழுதி வரும் உளவியல் சார்ந்த கட்டுரைகளை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவன்.
* வாழ்வியல் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கங்களை இவர் எழுதியிருப்பது பிரமிக்கத்தக்கது. "வாழ்வியல் பொக்கிஷங்கள்” “வாழ்வோடு நாம், "வாழ்வியல் புதையல்கள், "வாழ்வியல் தேடல்கள்” எனப் பற்பல தலைப்பு க்களில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்த இவர், தனது "வாழ்வியல் வசந்தங்கள்” என்ற தலைப்பில் இரண்டு பாகங் களாக நூல் வடிவில் வெளியிட்டுப் பரிசுகளும் பெற்றுள்ளார்." "வாழ்வியல் அரங்கம்” “வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள்” ஆகியனவற்றையும் நாம் மறக்கலாகாது. இத்துடன் நில்லாது பருத்தியூர் பால, வயிரவநாதன் "சிந்தனை வரிகள்” போன்ற வற்றையும் எழுதி நம்மைப் பயனுள்ள முறையில் பரவசப்
8

படுத்தியுள்ளார். ஒவியம், இலக்கியக் கட்டுரைகள் சிறுகதை, கவிதை போன்றவற்றிலும் எழுதித் தன்னை ஓர் ஆக்க இலக்கியகாரனாகவும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியி ருக்கின்றார். இவையும் நூல் வடிவாக வரும் என நாம் எதிர்பார்க்
856). D.
இவ்வாறு பல் துறைகளில் பரிச்சயம் கொண்ட இவர் 2009ஆம் ஆண்டில் “கலாபூஷணம்” என்ற விருதையும் சம்பாதித் துள்ளார். அதுமட்டுமன்றி கலாச்சார அமைச்சின் போட்டிகளில் தமிழ்பாடல் பிரிவில் சிறப்புப் பரிசிலும்,சிறுவர் இலக்கியத்துக்கான முதல் பரிசும் விருதும் பெற்றுள்ளார். இவருக்கு 2006 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்ட சிறுகதைப் போட்டியொன்றில் சிறப்பு பரிசும், பாடலுக்கான சிறப்புப் பரிசும் கிடைத்தமையை இங்கு குறிப்பிடலாம். இவர் தகைமை கண்டு. தமிழ் சாகித்தியக் குழுவின் செயலாளராகவும் இவர் நியமனம் பெற்றிருக்கிறார்.
இவருடைய எழுத்து நடை வசீகரமும், தகவல் தொகுப்பும், அவற்றை அளிக்கும் பாங்கும் எப்படி ஏற்பட்டன என்று நாம் பார்த்தால் அவருடைய இதழியல் அனுபவமே பின்னணியாக நின்றதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
1970 முதல் 1977 வரை இவர் ஒருமுழுநேர செய்தியா
ளராகப் பெற்ற பயிற்சியும், அனுபவமும் இவருக்குக் 605.
கொடுத்து உதவியுள்ளன. ஈழநாடு, ரைம்ஸ் நிறுவன பத்திரிகை
களுக்கும் ஏரிக்கரைப் பத்திரிகைகளுக்கும் இவர் செய்தி
நிருபராகச் செயற்பட்டுப் பயனடைந்துள்ளார். அரச பணியாள 9

Page 7
ராகவும் பதவி வகித்த பால,வயிரவநாதன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நிர்வாக உத்தியோகத்தராகப் பணியாற்றி இளைப்பாறியுள்ளார். 1949 இல் பிறந்த இவர் தற்சமயம் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளில் உற்சாகமாகக் கலந்து கொண்டும், பயனுள்ள கட்டுரைகளை எழுதிக்கொண்டும் செயல் வீரராகத் திகழ்கிறார்.
இவருடைய எழுத்து வன்மையையும், வசீகரத்தையும் உளவியல் சார்ந்த பொருட்செறிவையும் இரசித்து மகிழ்வதில் நிறைவு கண்டு இங்கு பதிவுசெய்கிறேன்.
கே. எஸ். சிவகுமாரன்
O

15աճյնDI
எழுத்தாளர் பருத்தியூர் பால,வயிரவநாதன் அவர்கள் தொடர்ச்சியாய்ப் பத்திரிகையில் எழுதி வந்த அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இது அவரது மூன்றா வது தொகுப்பாகும். பல்வேறு மகுடங்களில் சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்டு எழுதப் பெற்றுள்ள இதன் கட்டுரைகள் வாழ்பனுபவங்களின் தேறல்களாகும்.
பிறருக்காய்ச் சொல்ல எண்ணும் நல்லவற்றையும் சொல்லப் பின்னடையும் இன்றைய கால கட்டத்தில், ஆசிரியர் தூய சமூக நோக்கோடும் துணிவோடும் இந்நூலில் பேசியிருக் கின்றார்.
தொடக்கக் கட்டுரையில், தமக்கான பிரச்சனைகளை நெஞ்சத்துள் புதைத்துவைத்து மீண்டும் மீண்டும் அதனை அசை போடுவதால் ஏற்படும் விளைவுகளையும், அவற்றை மறக்க வேண்டியதன் அவசியத்தையும் சொல்லும் அவர். சிலவற்றைப் பிறரிடம் சொல்லுவதால் மனச் சுமை குறையும் என்பதற்காக அதைச் சொல்லத் தகாதவர்களிடம் சொல்லுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துக் கூறுவதுடன் எச்சரிக்கையும் 68Füg66TT.
மனிதர் தம் தனித்தனி விருப்பங்களின் யதார்த்தத்தை
யும் ஒப்பும் ஆசிரியர், அது பிறர் மீது திணிக்கப் படுவதைச்
சாடுகின்றார். உவமைக்கு ஒன்று கல்வித்துறையில் 11

Page 8
பிள்ளைகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கற்கத் துண்டுவது. இவ்வாறு பல்வேறு காரண காரியங்களை "விருப்பங்களும் அதன் விளைவுகளும்” என்னும் கட்டுரைத் தலைப்புக்குப் பொருந்தவிளக்குகின்றார்.
தினசரி வாழ்வில் ஏற்படும் மாறுபட்ட பிரச்சினைகளால் தோன்றும் விரக்தி மனப்பான்மையின் காரணமாக மனிதன் சோர்வடைகின்றான். இவ்வாறான நிலைமையில் மனித மனத்திற்கு இவர் சொல்லும் தேறுதல்கள் விரக்திக்கு LDC555T856)Tib.
இன்பதுன்பம் இயல்பானது தோல்வி கண்டு துவஞதல் வேண்டாம். எடுத்த கருமத்தை தொடர்ந்து முடித்தால் வெற்றி நிச்சயம் என்கின்றார். தோல்விகளே விரக்திக்கு வித்தென்றால் வெற்றி அதன் பகையாகும் தோல்வி கண்டு ஒதுங்காது வெற்றியை இலக்காகக் கொள்ள ஆசிரியரின் அறிவுறுத்தல்கள் நூலில் விளக்கம் காட்டுகின்றன.
கனவுகள் பற்றிக் கட்டுரையொன்று பேசுகின்றது . கனவுக்கான காரணங்கள் நிறையவே விளக்கப்படுகின்றன. உணர்வின்கசிவினால் உருவாகும் கண்ணிர்க்கரைசல் வெறும் உப்புத் திரவம் அல்ல. அது மலையையும் கரைக்க வல்லது எனவும், மனச்சுமையைக் குறைக்கும் மருந்தென்றும் கண்ணிர் பற்றிக்கூறி, அதன் வலிமையையும் விளக்குகின்றார்.உழைப்பின் அவசியத்தையும், அதனைக் காலமறிந்து செய்து பயன்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் ஆசிரியர், தவறவிடுவதால்
12

ஏற்படும் இழப்புக்களையும் தனது கட்டுரையில் விபரித்துள்ளார்.
இவ்வாறே தனது ஒவ்வொரு கட்டுரையிலும் மனித சமூதாயத்தின் ஏற்றத்துக்கான வழிகாட்டல்களை நிறைந்த உதாரணங்களோடு விபரித்து பின்பற்ற வேண்டியன பகன்று. தவிர்ப்பன தவிர்க்கவும் அறிவுரைபகன்றுள்ளார்.
இது வரை அவரால் எழுதப்பெற்ற அறிவியல் கட்டுரைகள் பலநூறு வாராந்தப் பத்திரிகைகளில் வெளிவந் துள்ளன. தொடர்ந்தும் வெளிவந்து கொண்டும் இருக்கின்றன. தீவிர வாசிப்பின் விரிவான தேடலுடன் ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாகவும் இவரது கட்டுரைகள் விளங்குவதைக் கற்போர் அறிவர்.
புற்றீசல் போல் புத்தகங்கள் பிரசவமாகும் இன்றைய நாளில், புத்திக்குத் தீனியிடும் நூல்கள் மிகக் குறைவே. அவ்வகையில் அக்குறை நீக்க முயன்றுள்ள நண்பர் பால. வயிரவநாதனின் முயற்சியைப் பாராட்டாதிருக்க இயலாது. இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் நான் நயந்தவற்றில் உவமைக்காய்ச் சிலவற்றை மட்டும் இங்கு தொட்டுக் காட்டியுள்ளேன்.அவர் மேலும் தொடர்ந்துதன் பணியைச் செய்ய வேண்டுமென விரும்பி, அவரைத் வாழ்த்தி இந்நயவுரையை நிறைவு செய்கின்றேன். வாழ்த்துகின்றேன்.
“காப்பியக்கோ ஜின்னாஹற்ஷரிபுத்தீன்"
13

Page 9
எனது உறை
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே எமது சான்றோர் எமக்குச் சொல்லித் தந்தார்கள்.மாதாபிதா,குரு, ஆகியோரை நாம் வணங்கிப் போற்றுதல் செய்தால் தெய்வத்தின் அணுக் கிரஹம் தானே வந்தெய்தும் என்பதே இதன் பொருளாகும்.
பெற்ற அன்னையையும், தகப்பனையும், கல்வி கற்பித்த ஆசானையுமே முதன்மைப்படுத்தி, அவர்களுடாக பெறற்கரிய ஞானமும், அதனூடாக இறைவன் திருப்பாதமும் எமக்குக் கிட்டும் என்பது பொய்யா மொழியாகும்.
எனவே, எம்மால் ஆகாததை இறைவன் இவர்க ளூாடாகச் சகலதையுமே அளித்து வருகின்றான் என்பது கண் கூடு எல்லாமே இறை அருள். எம்மை இயக்கும் இறைவனே நல்ல பெற்றோரையும், குருவையும் அளித்தமையினால் அவர் களின் நல்லாசியுடன் எனது "வாழ்வியல் வசந்தங்கள்” தொடர் நூல்களை முத்தமிழ் தந்தருளும் சித்தி விநாயகன் திருப் பாதங்களைத் தொழுது ஏற்றிச் சமர்ப்பணம் செய்கின்றேன்.
எனது சிற்றறிவிற்குட்பட்ட சொற்ப அனுபவமூடாக
என்னை எழுதுவிப்பது அவன் அருளால் எடுக்கப்பட்ட
முடிவாகும். எந்த விதமான ஜாதி, சமய, மொழி வேறுபாடு
களேயின்றி, பொதுமையான, மனித வாழ்வியல் பற்றியதாயும்,
உயிர்கள் அனைத்திலும் கருணைக்கண் கொண்டு நோக்க
14

வேண்டும் என்பதையே வலியுறுத்தியுமே எழுதிவருகின்றேன்.
ஆன்மீகம், சமூக நடத்தைகளுடன், உளவியல் கலந்த, எளிமையான படைப்பாகவே எனது நூல் தொகுப்பு அமை கின்றது. மனிதன் தன்னைத் தான் உணர வேண்டியவனா கின்றான். தனது சுயதரிசன மூடாகத் தனது பலவீனங்களை அகற்றி, புலன்களுடாக நல் எண்ணங்களை வளர்த்தால், விரக்தி விரட்டப்படும்.அன்புநிலை வந்தெய்தும்,
என்றும் அந்தரங்களினுள் புதையுண்டு சுதந்திரமற்ற நிலையினுள் தன்னைத்தான் வருத்தலாகாது. சந்தோஷகரமாக வாழ்வதற்கே இறைவன் ஆஞ்ஞையிட்டுள்ளான். அதனை நாம் நிறைவேற்றுவோமாக, விழிப்புடன் களிப்போடு உழைத்தலே எமது நோக்கமாகும்.
இன்னோரன்ன கருத்துக்களைத் தாங்கி பல கட்டுரை களை நீங்கள் வாசித்து மகிழ எளிமையான தமிழ் நடையில் என்னால் இயன்றளவில் தந்துள்ளேன்.
இந்த வேளையின் எனது பணியினை ஊக்குவித்த பெருமக்கள், நண்பர்கள் பற்றி நான் எடுத்துரை செய்யக் கடமைப் LIL' (66i (36T6ċi.
வாழ்வியல் வசந்தங்கள் பாகங்கள் இரண்டு தொகுதிகள் எற்கனவே வெளிவந்து விட்டன. பாகம் மூன்று, வாழ்வியல் வசந்தங்கள் "சுயதரிசனம்" எனும் தலைப்பிலானது.
15

Page 10
இந்நூலுக்கு எனது தமிழ் ஆசான் உயர் திரு - சேஏகாம்பரநாதன் ஆசியுரை வழங்கியுள்ளார். இவரிடம் நான் ஏழு ஆண்டுகள் தமிழ், சைவ சமயம் என்பன பயின்றவன். அத்துடன் இவர்கள்குடும்பத்துடன் மூன்றுதலைமுறைநட்புஉள்ளது. தமிழ் பெரியார் கந்த முருகேசனாரின் மூத்த மாணாக்கரான இவர் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளருமாவார். இச்சமயத்தில் பால்ய வயதில் ஆரம்பகால தமிழ் அறிவையூட்டிய இளவாலை செல்லையா பண்டிதர், தமிழ் அறிஞர் ஆறுமுகம் உபாத்தியாயர், திரு கிருஷ்ணபிள்ளை அவர்கள் அனைவரும் எஞ்ஞான்றும் மறக்க முடியாத பெருந்தகைகளுமாவர்.
தமிழ் பேராசான் சண்முகதாஸ் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார். இவரிடம் நான் நிர்வாக சேவைப் பரீட்சையில் தோற்றுதவதற்காகச் சிறிது காலம் கல்வி கற்றதையிட்டு, பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.இவரினதும், இவரது துணைவியார் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களினதும் தமிழ்ப்பணி இயம்புதற்கரியது. பேராசான் எனது நூலுக்கு வழங்கிய அணிந்துரை என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இவருக்கு என்பணிவானநன்றிகள்.
மேலும் திறனாய்வுத் துறையில் ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் எமது நாட்டிலும் கடல்கடந்த நாடுகளிலும் மிகவும் பிரபல்யமானவர் திரு.கே.எஸ்-சிவகுமாரன் என்பது அனைவரும் அறிந்தவிடயம். என்மீது பேரன்பு கொண்டவர். இவர் எனது நூலுக்கு மதிப்புரை வழங்கியமயை மிகுந்த கெளரவமாகவே கருதுகின்றேன். அவருக்கு அன்புடன் நன்றி கூறுகின்றேன்.
16

காவியங்கள் பல படைத்து வரும் எனது இனிய நண்பர். ஜின்னாஹற்ஷரிபுத்தீன் அவர்கள் நயவுரை நல்கியுள்ளார்.அவர் கவிதையினுள் கலந்து இருக்கும் தமிழ்மணம், என் சிந்தையை மயக்கும். அன்புடன் நல்கிய இவரின் நயவுரை இனிது.
இச்சந்தர்ப்பத்தில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்த எனது அன்பு நண்பர் திரு ஆழ்வார்பிள்ளை கந்தசாமி அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கத்திற்கும், ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர் ஏற்கனவே எனது இரு நூல்கள் வெளியீட்டுக்கும் முன்னின்று உழைத்தவர்.
இன்று எனது தொடர் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் அனைத்திற்கும் என்னுடன் கூட இருந்து ஊக்கமூட்டி ஒத்து ழைப்பு நல்கியதுடன் குறிப்பாக செவ்வை பார்த்த முனைவர் சநந்தினி, திரு.க.சுதர்சன், எனது மனைவி வசரஸ்வதி ஆகியோரை நன்றி பாராட்டுகின்றேன்.
மேலும் எனது பேரன்பிற்குரிய பிரபல பத்திரிகையாளர் திரு.ந வித்தியாதரன் அவர்கள் எனது பணிக்கு ஊக்கமளித் தமைக்கு எனது உளமார்ந்த நன்றி!
"வாழ்வியல் வசந்தங்கள்” நூல்தொகுப்பில் இடம்பெற்ற எனது புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து உதவிய எனது மருமக்கள் திருந.குமரருபன், திருநராகுலரூபன் அவர்களுக்கு எனது பாராட்டுதல்கள்!
17

Page 11
செல்வி, நந்தினி அவர்கள் சைவசித்தாந்த துறையில் சென்னைப்பல்கலைக்கழகத்தின் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றவர். மிகுந்த சிரமம் வாய்ந்த பணியையும், சந்தோஷத்து டன் எற்றுச் செவ்வனே செய்து தந்தார்.
எனது அன்பு நண்பர் க.சுதர்சன் எனது முயற்சிக்கு உறுதுணையானவர். கணினித் துறையில் தேர்ச்சிபெற்றவர். எனது நூலாக்கத்தின்போது, ஆக்கபூர்வமாகச் செயற்பட்டவர். மேலும் நூலிற்கான கணினி சார்ந்த பணிகளை செல்வி.வளர்மதி செய்தார். இவர்களது பணிக்கும் எனது அன்பான நன்றிகள்.
தொடர்ந்தும் கணினிப் பதிவும் பணிகளை அஸ்ரா பிறின்ரேட் நிறுவனமே மேற்கொண்டது. இக்கருமத்தில் உதவிய அனைவருக்கும் உளப்பூர்வமானநன்றிகள் உரித்தாகுக!
எனது இந்த முயற்சியினை,செயல் உருவில் பெற்றுக் கொள்ள எதிர்பாராத முறையில், எனக்கு இறைவன் அனுப்பிய மனிதராக அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிரெட் மூலமாக நூலுருவாக்கம் செய்த திரு.எஸ். சிவபாலன் அவர்களுக்கு எனது நன்றியைதெரிவிப்பதுடன் நானும்,எனது துணைவியாரும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். இது ஒரு பாரியமுயற்சி
மேலும் இவர் எனது குடும்ப நண்பர். இவர்கள் குடும்பத்தினர் அனைவருமே எங்களைத் தங்கள் உறவுகளா கவே கருதுபவர்கள்.
இந்த முயற்சிக்கு என்னை என்றும் உற்சாகப்படுத்திய தமிழ் ஊடகங்களை நான் உயிரிலும் மேலாகவே மதிக்கின்றேன். 18

தினக்குரல், தினகரன்,வீரகேசரி, சுடர்ஒளி போன்ற எமது நாட்டின் தினசரிகள், வாரமஞ்சரிகளில் எனது ஆக்கங்களை வெளியிட்டு என்னைப்பெரிதும் கெளரவப்படுத்தியமை நான் பெற்ற பெரும் பேறு.
இறைவன்துணையுடன் எல்லாகாரியங்களும் வெற்றி பெற அவனது மேலான ஆசியை வேண்டுகின்றேன். அனைத்துஉயிர்களும் ஷேமமாக இருக்க அவன் அருள் என்றும் சுரந்தபடியிருக்கும்
என்றும் உங்கள் அன்பின் பருத்தியூர் பால, வயிரவநாதன்
"மேரு இல்லம்"
36.2/1
ஈ. எஸ் பெர்னாண்டோ மாவத்தை
GöT(LÇLİL 06.
தொ.பே இல - 011-2361012 O71-4402303
O774318768
19

Page 12
நூலாசிரியர் பருத்தியூர் மரல. வயிரவநாதன் எழுதி வெளியிட்ட"வாழ்வியல் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
உண்மை சாஸ்வதமானது
. gyfðL DIT
சுயதரிசனம் கோழைகளாய் வாழுவதோ? ஞானம்
கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்!
சும்மா இருத்தல் உண்மைகள் உலருவதில்லை! உண்னோடு நீ பேசு!
10.
11.
12.
13.
14.
5.
16.
17.
18.
நான் நானே தான்! வெறுமை காதலும் கடமையும் அக ஒளி உன்னை நீ முந்து சுயபச்சாதாபம்
GLD6T60TLE மரணத்தின் பின் வாழ்வு சிந்தனை வரிகள்
– LIITGELÊ - 01
- LIFTGELÊ - 02
- LUPTEBLİS - 03
- LUPTEBLİS - 04
– LUFTGELÊ - 05
- LITEL) - 06
- LUFTGELÊ - 07
- LUFTGELÊ - 08
- LITEBLİS - 09
- LTABLib - 10
- LIFT35lb - 11
- LTE 5 - 12
- LUFTGELÊ - 13
- LUFTGELÊ - 14
- LITEL) - 15
- LT355 - 16
- LITTEELð - 17
- LITELD - 18

சமர்ப்பனம்
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
ஆசிரியர் -
21

Page 13
01) 02) 03)
04)
05) 06)
07) 08)
09) 10)
11)
12)
13) 14)
15)
16)
பொருளடக்கம் - - -2-53s-3s - H
தலைப்பு
அந்தரங்கங்களும் சுதந்திர உணர்வுகளும் விருப்பங்களும் அவற்றின் விளைவுகளும் விறக்தியை விரட்டு கனவுகள், அதன் பாதிப்புக்கள்
கண்ணீர்
Gilping air 56f(ELITG 2 Dy
சுயதரிசனம் அன்பு நிலையும் துறவு நிலையும் நல்ல பொழுதுபோக்கு வாழ்க்கைக்கு உவப்பு. இல்லங்கள் ஆலயங்களாக வேண்டும். வேற்றுமை உணர்வு
GrifflesGDE 9 GRIsra)
தன்னை ஆட்சிப்படுத்தல்
GIIITiaDDLEr6EIfrasair இண்சொல் பேசினால் இல்லம் சிறக்கும் அனுபவங்கள் தரும் அர்த்தங்களைப் புரிந்து 66
108
114
120
125
130
135
4.

சுயதரிசனம்
அந்தரங்கங்களும் சுதந்திர உணர்வுகளும்
எங்களது அந்தரங்கங்களால் நாமே, எமக்குள் அச்சுறுத்தப்படுதல் கொடி சிறைவாழ்வு சமூக நலன் கருதி மறைக்கப்பட வேண்டிய விஷயங்கள் மறைக்கப்பட்டேயாக வேண்டும். நல்லவர் ஒருவர் வாழ்வில் தற்செயலாக ஏற்பட்ட அச்சுறுத்தலான, கெளரவக் குறைவான விஷயங்களை அம்பல மாக்குவது போல வஞ்சக எண்ணம் வேறில்லை. இதயத்தில் பாரமற்ற நிலை தான் சுதந்திரம், மறக்க வேண்டியதை மறப்பதே புத்திசாலித்தனம். தேவையற்ற விஷயங்களில் நாட்டமுற்றுப் பிரச்சினைகளை வாங்குவது வெளியில் சொல்ல வொண்ணா, தன்னைத்தான் கட்டிவைத்துக் குழம்பிப் புலம்பும் நிலையை உருவாக்கும்.
தமது அந்தரங்கங்களால் தமக்குள் தாமே அச்சுறுத் தப்படுவதும், துன்பப்பட்டு மனம் வெதும்புவதும், சிறை வாழ்வு போன்ற நிறைவற்ற வெற்று வாழ்வேயாகும்.
23

Page 14
மருத்திபூர் அல. ஆயிரவநாதன்
சொல்லப்படக்கூடாத விஷயங்களுக்குள் ஆளாகுதல், இதனால் ஏற்படும் குற்ற உணர்வுகள், பிறர் நகைப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்கின்ற அச்ச உணர்வுகள் என்பன மென்மையான உணர்வு உள்ளவர்களை நிச்சயம் பாதித்தே தீரும்.
அந்தரங்கங்களின் சொந்தக்காரராக இருந்தால் தினம் தினம் ஏன் கணப்பொழுதும் கூட, ஜாக்கிரதை உணர்வு தேவைப்படுவதாகவே கருதுகிறார்கள். இந்நிலையை எவர்தான் விரும்புவார்கள்? சுதந்திர மனோ நிலையில், சந்தோஷ நிலையில் வாழத்தான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன.
எனினும், தங்களை மேலானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காகச் சிலர் தமக்குப் பல விஷயங்கள், பிறருக்கும் மேலாகத் தெரியும் எனச் சொல்லிக் கொள்வதும் உண்டு.
இவர்கள் தாங்கள் பல அந்தரங்கங்களைக் காப்பாற்று வதாகக் கூறி தமது தராதரத்தினை தாங்களே மெச்சிக் கொள்வார்கள். இது தங்களுக்குத் தாங்களே வழங்கும் நற்சான்றிதழ் போன்றதாகும். உண்மையாகவே சமூக நலன் கருதி இரகசியங்களை வெளிப்படுத்தாதவர்கள் வெளியே சொல்லிக் கொண்டு திரியமாட்டார்கள். சும்மா வாயை வைத்திருக்காமல் ஏதாவது உளறி வைத்து உருப் படாமல் போன பிரகிருதிகள் எம் மத்தியில் ஏராளமான வர்கள் இருக்கிறார்கள். நாட்டு நடப்புத் தெரியாமல் பேசித்திரியக்கூடாது.
24

கயதரிசனம்
"நான் என்ன சொன்னேன்? இதில் என்ன இரகசியம்?
செய்தித்தாளில் சொன்னதைத்தான் சொன்னேன். என்னைக் கைது செய்து காவல் துறையினர் கொடுமைப் படுத்திவிட்டார்களே” எனப் பின்னர் புலம்பி என்ன பயன்?
சில பரகசியமான சம்பவங்களையும் எமக்குள் இரக சியமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. பத்திரிகை யில் ஹேஸ்யம் என்று சொல்லும் சங்கதிகளை முச்சந்தியில் முந்திய, பிந்திய செய்திகளாக நாம் சொல்லித் திரிந்தால் தப்பு எம்மீது என்றே புரிந்து கொள்க! எல்லா விஷயங்களையும் எல்லோரிடத்திலும், எப்பொழுதும் சொல்லமுடியாது. அறிக! புரியாத விஷயங்களையும், புரிந்த விஷயங்களையும் இடம், பொருள், அறியாது பேச முடியாது. தெரிந்து கொள்க! பிடியாத ஒரு விஷயத்தை நாம் ஒருவரிடம் திணிக்க முயன்றால் அது முடிவில்லாப் போராகிவிடும். அந்தரங்கம் எனக் கருதும் ஒரு விஷயத்தை நீங்கள் அந்த விஷயத்தில் பிடிக்காத ஒருவரிடம் விமர்சிக்கப் புறப்பட்டால் வரும் விபரீதத்தை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். வேண்டாமே, வீணான வினைகள்! உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பிடித்து இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு கட்சியைச் சார்ந்தவர் களாக இருந்து மாற்றுக் கட்சிக்காரர்களிடம் போய்,
25

Page 15
மருத்ரிபூர் அல.அவிர்வதுதல்
அவர்கள் சார்ந்த உள்கட்சி அந்தரங்கங்களை எடுத்த எடுப்பிலேயே சொல்ல முனைந்தால் என்ன ஆகும்?
நீங்கள் சொல்வதை பிறர் ஏற்காதவரை உங்கள் கருத்துக்கள் அவர்களுக்குப் பொய்யாகவே கருதப் படும். எனவே நாம் ஜாக்கிரதை உணர்வுடன் இது விஷயத்தில் பழக, பேசவேண்டியவர்களாக இருக்கின் றோம். புரிந்துகொள்ளுங்கள்.
நல்ல, நயம் பயக்கக்கூடிய விடயத்தில் நாம் சில உண்மைகளைக் கூறியே ஆக வேண்டியுள்ளது. எனவே போலியான முகமூடி அணிந்தவர்களின் இரகசியங்களை உடைத்தெறிந்து உண்மைகளை வெளிப்படுத்தியேயாக வேண்டும். எமது நல்ல முயற்சிக்காக தகுந்த ஆதாரங்க ளைத் தேடாமல் பொல்லாதவர்களுடன் போரிட முடியுமா? போரிடல் என்பது சண்டையிடல் அல்ல! உண்மைகளை வலியுறுத்தல் ஆகும். இது ஆயுத, உடல் வலிமைகளை விட வலுவானது என முதலில் உணர்வோமாக.
எல்லோருக்குமே ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கும். இவை என்றும் புதுமைகள் அல்ல நகைப்புக்கு இடமானவை அல்ல.
நல்ல, கெளரவமான ஒருவரைப் பேதலிக்க வைத்து
வேடிக்கை பார்க்க வைக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். எதைச்
செய்தால் ஒருவனை வீழ்த்தலாம் என அங்கலாய்க்கும்.
அவர்கள் முதலில் நாடுவது தமக்குப் பிரியப்படாத அப்பாவி 26

சுயதரிசனம் களின் அந்தரங்கங்களைச் சேகரிப்பதுதான். பலவீனமான இடத்தில் அடித்தால் சுருண்டு விடுவார்கள் என்கின்ற வித்தை அறிந்து மற்றவரைப் பஸ்பமாக்கும் அஸ்திரங் களைப் பிரயோகிப்பார்கள்.
எனவே, எந்த தேவையற்ற குழப்பங்களில் இருந்து நாம் சுதந்திரமாக விடுபட முனைதல் வேண்டும். எமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து வெற்று மனிதராக விடுபட்டு உலாவருதல் வேண்டும்.
உங்கள் சரித்திரம் பொய்மையற்ற தூய்மையான தாக, கருமையற்ற வெண்மை நிறைந்ததாக இருந்தால் மாற்றான் உரைக்கும் வஞ்சக குற்றச்சாட்டுக்கள் அர்த்த மற்றவையாகி, அவமானக் குற்றச்சாட்டுக்கள் பெறுமான மற்றவையாகி, அவற்றில் இருந்து விடுதலைக் குள்ளாகி விடும். -
சந்தர்ப்பவசமாக ஒருவர் செய்த குற்றங்களை மறைக்க முயல்வதாலேயே அந்தரங்கம் அவருக்குள்ளேயே பெரும் தீனிபோட்டு வளர்க்கப்படுகின்றது. சமூகத்தின் முன் எமது தவறுகளை ஒப்புக்கொள்கின்ற துணிவு வந்துவிட்டால் எமக்குள்ள குறையை எவரும் குத்திக் குதறிக் கொண்டிருக்க (piqug|DIT
எங்கள் தவறுகளுக்கான வருத்தம் உண்மையா னதாக, நெஞ்சினைத் தொடுவதாக, வஞ்சக உணர்வின்றிச் 27

Page 16
பருத்திஆர் பல. ஒரேறுருதம் சத்திய தரிசனத்தினைத் தொட்டுக் கொள்வதாக நீங்களே உணர்ந்தால் எதிரி எம்மிடம் ஒன்றுமே இல்லை என அறிந்து விலகிவிடுவான். அதனை விடுத்து, நீங்கள் பயந்து விலகி ஓட, மற்றவர் துரத்த, நீங்கள் ஓட. முடிவில்லாமல் ஒட முடியாது இறுதியில் விழுந்து விட, பிறர் கைகொட்டிச் சிரிக்கும் நிலைவர வேண்டுமா? சொல்லுங்கள்.
நீங்கள் நிமிர்ந்து நின்றால் எதிர்ப்பவன் ஓடிவிடுவது நிச்சயமே!
9 தெளிவான நிலையில் தேக்கமாக எந்த அச்சமும் குடியிருப்பதில்லை. பூரணத்தினுள், எதுவும் புகுந்து விட முடியுமா? வெற்றுப்பாத்திரத்தினுள் கண்டதை யும் போடலாம். அறிவும், ஆற்றலும், அன்பும், பரிவும் நிறைந்த பூரணமானவனிடம் வேறு குறைகளும், தாக்கங்களும் உட்புகுந்து கொள்வது இயலுகின்ற காரியமா?
சமூக நலனுக்குட்பட்ட அந்தரங்கங்கள் எனில் காப்பாற்றுங்கள்.
உதாரணமாக இரு சமூகங்களிடையே பிணக்குத் தோன்றி விட்டால் ஒருவர் சொன்ன வார்த்தைகளை மற்றவரிடம் சொல்லக்கூடாது அல்லவா? யாராவது தெரியாது சொன்ன பேச்சுக்களை நாம் பதிவுசெய்து அதை அப்படியே சொல்லிக் கொண்டு திரியலாமா? எனவே, சில விஷயங்களை வெளியே நிச்சயமாகச் சொல்லவே கூடாது. குடும்ப உறுப்பினர்கள், கணவன் - மனைவி, நண்பர்களி
28

a grfarytis டையே நடந்து முடிந்த சம்பவங்களை யாராவது மீட்டு, வெளியே தெரியாமல் இருந்த கசப்பான விடயங்களை அம்பலப்படுத்துவது தம்மைத் தாமே அலங்கோலமாக நிர்வாணப்படுத்துவதற்கு ஒப்பானதாகும்.
கொச்சையான, தகாத பேச்சுக்களைவிட இனிமை யாக உரையாடி ஒருவரைக் கெடுக்க நினைப்பது அடுக்காத செயல். உண்மை என்னவெனில் இவர்களின் இதயத்து அந்தரங்கமே அசுத்தமானது. இதன் வெளிப்பாடுகளே மாற்றானின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தி அவர்களின் மனதினை மாறுபாடாக வைக்க முனைதலாகும்.
எனவே, எம் எதிரே இருப்பவர்களின் இதயசுத்தியை அவர்கள் எம்மில் கொண்டுள்ள அக்கறையின் மூலம் உணர வேண்டும்.
நன்மையளிக்க வரும் நல்லவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறரின் கெட்ட நோக்கங்களை அம்பலப்படுத்தும் உத்தமர்களையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இல்லாதுவிடின், நல்லவர்களின் நோக்கங்களையும்
புரிந்து கொள்ளாது, புல்லர்களின் புகலிடமே கதி எனப்
புகுந்து கலங்கி வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு
விடுவோம் அல்லவா? கொஞ்சம் சிந்தித்தால், இலவச
புத்திமதி சொல்லப் புறப்படும் சில துன்மார்க்கர்கள், பிறர் 29

Page 17
பருத்திபூர் அல. ஆயிரவரர் அந்தரங்கங்களினூடே ஆதாயம் பெறுபவர்களாகவே இருக்கின்றார்கள்.என்பதைப் புரிந்து கொள்ள முடியும் ஏன் அதனை வைத்துப் பிழைப்பவர்களாகவும் காலப்போக்கில் கண்டுகொள்ள முடியும்.
சுதந்திரமாக இயங்குபவன் அந்தரங்கங்களுக்கு ஆளாவதுமில்லை.தமது அந்தரங்கங்களினால் தாக்க முற்றுக் கலங்கித் தவிப்பவர்கள், யாரிடமாவது போய், தங்கள் பிரச்சினைகளைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இதனால் மன அழுத்தம் இழக்கப்பட்டவர்களாகி, சுமை களைந்தவர்களாகின்றார்கள்.
ஆனால்,எமது குறைகளை,பிரச்சினை சரியானவர் களிடமே கூறவேண்டும். எங்கள் துன்பங்களில் குளிர் காய்பவர்களிடம், விபரம் புரியாது போய் பேசக் கூடாது. எமது அறியாமை காரணமாக மற்றவர்களைப் புரியாமல் கண்டபடி கண்டவர்களிடம் உபதேசம் கேட்பதன் விபரீத விளைவு சொல்ல முடியாத பின்விளைவாகிவிடும்.
மனப்பாரங்கள் இறக்கிவைக்கப்படல் வேண்டும். வல்லவர்கள், நல்லவர்கள்,அறிவுபகரும் துறைசார் உளவள ஆலோசகர்கள் இருக்கின்றார்கள். எமது அந்தரங்கங்களை துல்லியமாக ஆராய்ந்து ஆலோசனை நல்குவர். அனுபவ ஞானம் உள்ளோரை அணுகுவது நன்று. எதனையும் பிறரிடம் பறைசாற்றாதவர்களிடம் பிரச்சினைகளைப் பற்றி ஆலோசனை கேட்க வேண்டும். புரிந்து நடப்போம்.
30

artigfiersei நல்ல நண்பர்கள், வேண்டப்பட்டவர்கள் ஆகியோ ரைத் தேடி நட்புறவு கொள்பவர்களுக்குப் பிரச்சினைகள் எல்லாமே சுலபமாகத் தீர்ந்து போகின்றன. எல்லாமே எமக்குத் தெரியும் என்கின்ற இறுமாப்பில் அனைத்துப் பிரச்சினைகளையும், அந்தரங்கங்களையும், மனதுக்குள் இறுகப்பூட்டி இயலாத ஒரு நிலைக்குள் நாமே எம்மைத் தள்ளிவிடலாமா?
அந்தரங்கங்கள் பற்றிய உறுத்தல் உணர்வுகள் அகற்றப்பட்டேயாக வேண்டும். இல்லாது விட்டால் வெட்ட வெளியில்கூட சிறைக்குள் மாட்டுப்பட்ட நிலையில் தான் வாழவேண்டும். இந்நிலை தேவைதானா? வேண்டாம்!
வேண்டவே வேண்டாம்!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 18.12.2005
31

Page 18
விருப்பங்களும் அவற்றின் விளைவுகளும்
எமது விருப்பங்கள் எங்களுக்குரியவை ஆயினும் நாம் பிறரிடம் எமது விருப்புக்களைத் திணித்தல் தகாது. சுயகட்டுப்பாடு, நேர்மை,
உழைப்பினால் மட்டுமே எமது தேவைகள் நிறைவேற்றப்படல் வேண்டும். எமக்கு ஏற்படும் இழப்புக்களால் பிறர் நன்மையடைந்தால் அது கூட ஆன்மதிருப்தி தான். ஆனால் எங்களையும் காப்பாற்றி மற்றவர்களுக்கும் உதவி புரிவதற்காக தெளிந்த மனோநிலையில் போராட வேண்டியுள்ளது. செய்கருமங்களின் பின்விளைவு கருதாமல் இயங்குதலுக்கு நியாயம் கற்பிக்க முடியாது. உதவுதலுக்கு மன உறுதி வேண்டும். நெறிதவறியோர் விருப்பங்களுக்கு உதவி செய்யற்க!
விருப்பம் என்பது ஒருவரின் தனித்துவ உரிமை, மனித மன இயல்பு. இருப்பினும் இதனைத் தெரிவிப்பதிலும் செயற்படுத்துவதிலும் முரண்பாடுகள், உடன்பாடுகள் ஏற்படுவது இயற்கை,
32
 
 
 
 
 

29 Augsfargrafi ஒருவரது நியாயபூர்வமான விருப்பங்களினால் கூட பிரச்சினைகள் உருவாகலாம். கருத்துச் சுதந்திரம் போலவே விருப்பங்களைப் பெறுவதிலும் உரிமையுண்டு என்று பலரும் எதிர்பார்ப்பது சகஜமே!
ஆனால், பிறரைப்பாதிக்கின்ற, நடைமுறைச் சாத்திய மற்ற விஷயங்களில் நாம் நினைத்தவாறு கருமங்களாற்ற முடியாது. பொதுவாகப் பிரச்சினைகளற்ற விருப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படலாம். கட்டுப்பாடற்ற கண்ட கண்ட எதிர்பார்ப்புகள் வீணான எதிர்விளைவுகளை வரவேற்பன வாகவே அமையும்.
எங்களது கருத்துக்களை பிறரிடம் திணிக்க முயலும் போதுதானே பகைமையும் வெறுப்பும் உருவாகின்றன? சில சமயம் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் அனைத்துத் தரப்பி னர்களின் உள்ளவாறான நினைப்புக்களை அறிந்துகொள்ள வேண்டியவர்களாகவுமுள்ளோம்.
எமது தனிப்பட்ட பழக்க வழக்கங்களுடன் சமூக இயல்புகளையும் நாம் ஒப்பு நோக்க வேண்டியவர்களே!
கல்வி,கலாசாரம் போன்ற முக்கியமான விஷயங் களில் மனிதனின் சுயவிருப்பங்கள் ஆட்சி புரிகின்றன. விரும்பாத கல்வித்துறையில் பிள்ளைகளைக் கற்கச் செய்யத் தூண்டுதல், ஒருவர் சார்ந்த கலாசார ஈடுபாட்டை மாற்றிய
மைக்க எத்தனித்தல் போன்ற செயல்களினால் தனிமனித 33

Page 19
சூத்ரிபூர் 04. ஆயிரவரர் விருப்பங்களைக் கூறுபோட முனைவதாகக் கொள்ள முடியும். இந்தத் தவறான நடைமுறைகளை தமக்கான பொறுப்பு எனவும் சேவைகள் எனவும் வாதாடுவது அபத்தம்,
இவை எல்லாமே வெளிப்படையான விடயங்கள். ஆனால், அறிவுக்கும் புலனாகாத எத்தனை காரியங்களை நாம் மற்றவரின் ஆசை, அபிலாசைகளைத் துரத்தி மூடி விடும்படி செய்துவிடுகின்றோம் தெரியுமா? சின்னச் சின்ன விடயங்கள்தான். ஆனால், பிறர் வெறுப்பைச் சம்பாதிக்க இவை எல்லாமே பாரிய விடயங்களே!
உதாரணமாக, ஒருவருக்குப் பிடிக்காத உணவை நாம் புகட்ட எத்தனிக்கலாமா? தினசரி சைவ உணவு உண்பவனைக் கேலிசெய்து அசைவ உணவைச் சாப்பிடச் சொல்லலாமா? இவை, இந்த முயற்சிகள் ஒருவரது ஆழ் மனதினுள் பதிந்துள்ள கலாசாரப் பதிவுகளாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் ஒரு வீட்டில் புலால் உணவை அவர்கள் புசித்தாலும் ஒருவர் மட்டும் இயல்பாகவே சைவ உணவில் நாட்டம் அற்றவராக இருக்க முடியும். எனவே இவை போன்ற செயல்களால் எங்கள் விருப்பங்களை மற்றவரிடம் புகுத்தி விடக்கூடாது அல்லவா?
உழைக்கின்ற விடயத்தில் ஒவ்வொருவருக்கும் நாட்டம் வெவ்வேறாக இருக்கின்றது. தான் விரும்பாத துறைகளில் நுழைபவர்கள் போதிய நாட்டம் இன்மையால்
34.

ಆಗ್ನyfಆಠi தொடர்ந்து முன்னேற முடியாத முட்டுக் கட்டைகளைத் தங்களுக்குள் இட்டுக்கொள்கின்றனர்.
பிடிக்காத கல்வித் துறையை பெற்றோர் தெரிவுசெய்து பிள்ளைகளுக்கு அளிக்க முற்பட்டால் ஏற்படும் சிரமங்களை நாம் அன்றாட நிகழ்வுகள் ஊடாகக் கண்டிருப்போம். தொடர்ந்து கல்வியைத் திறமையாகக் கற்க இயலாது மனத் தளர்வுற்று எதிர்காலத்தினையே கருவறுத்துவிடுவதை பெற்றோர்கள் காலம் கடந்து உணர்ந்தும் எவ்வித பிரயோசனமும் ஏற்பட்டு விடாது.
மத விவகாரங்களும் இதே போலத்தான். எந்த மதத்தினரும் தாம் சார்ந்த மதத்தினை கெளரவப்படுத்துவது போல, ஏனைய மதங்களுக்கும் மதிப்பு அளித்தால் மதப்பிரச்சினைகள் உருவாகிவிடுமா? மதக் கலவரங்கள் வெடிப்பதனால் அதனூடாக தொடர்புள்ள சமயங்களும், மத உணர்வுகளும் சிதைக்கப்படுவது கண்கூடாக இருந்தும் கண்மூடித்தனமாக இருப்பது வெறுப்பைத் தரும் வேதனை
எதனையும் அனுசரிக்கும் மனப்பாங்கினைக் கொண்டவர்கள் பிறர் செல்லும் திசைகளையும் அறிந்து அவ்வண்ணம் செயலாற்ற வல்லவர்களாகின்றனர். நாம் செல்லும் வழி எமக்குப் பிரதானமானது அதுபோலவே ஏனையவர்களும் தமக்கேற்றவாறான பாதைகளை உருவாக்கிவிடுகின்றனர். சில சமயம் எங்கள் வழி சுலபமாகவும், ஏனையவர்களின் வழி இலகுவானதாக
35

Page 20
பருத்தில் 04). ஆயிரவருதம் இன்றிச் சிக்கலானதாகவும் இருக்கலாம். நண்பர்களிடையே யாகட்டும்,கணவன்-மனைவியினிடையேயாகட்டும், குறிப் பறிந்தும்உரையாடியும்விருப்பங்களுக்கு வழிசமைக்க வேண்டும்.
இதேபோல், எங்களது தெரிவிலும் பார்க்க மற்றவர்கள் தெரிவு சிறப்பாக இருக்கலாம் அல்லவா? எனவே எடுத்த எடுப்பிலேயே எங்கள் விருப்பு பற்றியே விமர்சிப்பதை, எமது ஊடுருவல்களைத் தவிர்த்தேயாக வேண்டும்.
நல்ல விடயங்களைக் கற்றுக் கொள்ள சிலவேளை நாம் பழகிய பழக்கங்களைக் கூட மாற்றியமைத்திட அல்லது கைவிட வேண்டியுள்ளது. இதற்கான மனப்பக்குவத்தை ஏற்படுத்தினால் நல்லது உள்ளதை உள்ளவாறு ஏற்பது நல்ல முடிவுதான். எம்மை மீறி எதுவும் நடக்கக்கூடாது என்றுதான் மனம் ஏங்குகின்றது. எங்களாலேயே நடக்க வேண்டும் என்பது எல்லா நேரமும் சரிவரப் பொருந்தி வருமா?
மாற்றாரின் விருப்பத்திற்காகவும் தேவைகளுக்கு மாக நாமாகவே முன்வந்து செய்கின்ற கருமங்கள் தியாகமாகின்றன. எங்கள் இழப்புக்களால் பிறர் அடையும் நன்மைகள், நாம் அளித்திடும் கொடைகள் என்பனவே "தியாகம்” எனப்படுகிறது. எனினும், வெகுமதிகளோ அன்றிக் கொடைகளோ மனஉளைச்சலுக்கு இடம்தராது, திடசிந்தனையுடனான வழங்கலாக, பிறரை மேன்மைப்
36

தயதரிசனம்
படுத்துவதாக, சந்தோஷ உணர்வுடன் அளிப்பதே தியாகத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடு ஆகும்.
இதனால் இழப்புக்கள் கூட, நாம் அடைகின்ற மன நிறைவு எனப்படுவதால், நாம் இழப்பதில் ஒன்றுமே இல்லை என்றாகி விடுகின்றன. ஏனெனில், நாம் கொடுப்பதால் ஒரு நிறைவைப் பெற்றுக்கொண்டமையினால் இழப்பு என்கின்ற ஒன்று நிகழவில்லை எனத் திருப்திப்பட்டுக் கொள்கின்றோம் அல்லவா?
உனக்காக என்றில்லாமல் பிறர்க்கும் எதனையும் வழங்கிடு தோழா என்றே எல்லா கவிஞர்களுமே பாடிக் கொண்டிருக்கின்றார்கள். மக்களுக்கான நியாயபூர்வமான தேவைகளை உன்னால் முடிந்தால் இயன்றளவு விருப்பத் துடன் செய் என்றுதான் சகல சாஸ்திரங்களும், வேதங் களும் வேண்டிக் கேட்கின்றன. சாதனையாக இதனை நாம் செய்ய முனைந்தால் என்ன?
சாகாத சத்தியங்களின் விருப்பம் என்ன? பெறப் போகும் நன்மைகளை, வரவுகளை, இன்பங்களை உண்மையின் அடிப்படையில் தேடிக்கொள். இதில் கிடைப்பவை நிரந்தர வைப்புக்கள் பணவைப்பை விட நெஞ்சத்தில் வைத்துக் கொள்ளும் சத்தியம் நிரந்தர மானது. இதன் விஸ்வரூப வெளிப்பாடு, எம்மை நோக்குப வரையும் பிரகாசிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. கொடுப்பவருக்கு ஏது ஐயா வருத்தம்? கொடுக்கின்றவனின் விருப்பம் மிகுந்த இதயம் வற்றாத புதையல்,
37

Page 21
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
தவறான விருப்பங்களுக்கு பெற்றோர் இறுக்கமான தடை உத்தரவு போடும் போது பிள்ளைகள் தமக்குள்ள சுதந்திரம் பற்றிப் பேசுகிறார்கள். பிள்ளைகளுக்குத் தகுந்த முறையில் உண்மைகளை உணர்த்துகின்ற பக்குவம் இருந்தால் தான் அவர்களது நிலையினை உணரவைக்க வும் இயலும் இன்றுள்ள சூழ்நிலையில் எவருடனும் பேசிப் புரியவைக்க முடியாத நிலையில் இருக்கின்றோமே எனப் பலரும் கூறுவதைக் கேட்கின்றோம்.
குறிப்பாக இளம் வயதில் சஞ்சரித்துக் கொண்டிருக் கும் பராயத்தவர்களுக்கு உலக யதார்த்த உண்மை நிலை புரியாமல் இருக்கலாம். விரும்பிய வண்ணம் எதனையும் செய்ய முடியும் எனக் கூறிக் கொண்டும் இருப்பார்கள். இதன்பொருட்டு வயது வந்தவர்கள் கோபம் கொண்டுவிட இயலுமா?
திருமண விடயங்கள், சொத்து விடயங்களில் பெரிய வர்களின் முடிவுகளைச் சில சமயம் இளையவர்கள் பொருட் படுத்துவதில்லை. முக்கியமாக காதல் திருமணமாகட்டும், இல்லாதுவிட்டால் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா கட்டும், பெற்றோரும் பிள்ளைகளும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து நடக்கும் போக்கினைக் கையாள வேண்டி யுள்ளது.
எல்லாக் காதல் விவகாரங்களுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. பல்வேறு பிரச்சினைகள் எழ வாய்ப்பு
38

சுயதரிசனம் உண்டு. சில, திருமணங்களில் அவை நிறைவு பெற்ற பின்னர்தானே பிரச்சினைகள் முளைக்க ஆரம்பிக்கின்றன?
காதல் விவகாரங்களில் பெற்றோர் கூறும் காரணங்கள் பிழையாகவும் தோன்றலாம். இந்த இடத்தில்தான் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புக்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. வாழ்க்கைப் பிரச்சினையில் தீர்வு காணுமுன்னர் சிந்திக்க வேண்டியது இரு சாராரின் பொறுப்பாகும். பெற்றோர் தங்களின் பேச்சினைக் கேட்டே யாக வேண்டும் என எண்ணுவது அவர்களது பாசத்தோடு இணைந்த உரிமைதான். பாசத்தின் மீதான உரிமைகள் பலவந்தமாவது கொடிய வேதனை.
எனினும், விருப்பம் கொண்ட காதலான இதயங்களை சர்ப்பம் போல் தீண்டி வதைப்பது முறைதானா? இந்தச் சம்பவங்கள் அடிக்கடி கேட்டுச் சலித்த விஷயங்கள் என்றாலும் இந்தச் சங்கதிகள் தான் பரிதாபமாகப் பேசப்படு வதும், சுவாரஸ்யமாகப் பார்க்கப்படுவது மான காட்சிக ளாகும். இவை இன்றைய பிரச்சினைகள் மட்டுமல்ல, காலம் காலமாகத் தொடர்கின்ற வாலிப காலத்து நெருடல்கள், மிரட்டி உருட்டும் கல கலத்த முழக்கங்கள்.
வாழ்க்கைப் பந்தல் கட்டப்படுவதே இன்ப,
துன்பங்கள், விருப்பு, வெறுப்பு, வேதனை, சாதனைக
ளோடிணைந்த கலப்பினால் அல்லவோ? அறுசுவைகளுள்
கசப்பு, உறைப்பு, துவர்ப்புக் கூடச் சுவைகள் என்றே 39

Page 22
பருத்திபூர் அல. ஆயிரவரஷ் சொல்லப்படுகின்றன. வாழ்க்கையில் துன்பங்களையும்கூட ஏற்கக்கூடிய அம்சங்களாகக் கொள்வோமாக!
அத்தனை பேரின் விருப்பங்களும், விருப்பம் அல்லாதனவும் ஒன்றாகிவிடா, ஆனால் மக்கள் இதுபற்றி இறுக்கமான முடிவுகளுடன் இருக்கத் தயாரில்லை. அப்படி இருந்துவிட்டால் உலகம் நிறுத்தப்பட்டுவிடுமே. இதுமாதிரி இங்கு நடக்கிறதா? ஒருவர் தடுத்தாலும் உலக இயக்கம் நடக்காமல் இருக்குமா?
ஏதோ ஒரு சக்தியால் மக்கள் வேற்றுமை பொருந்திய கருத்துக்களுடனும் ஒருமித்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த அணைப்பு ஒரு வினாடி அறுந்தாலே போதும், சுக்கு நூறாகிப் போகும் இந்த வையகம். ஆனால், இது நிகழமாட்டாது. இது தெய்வ முடிச்சு ஏற்றுக் கொள்ள முடியாத நல்ல விடயங்களும் உள்ளன. தூற்றி, வையக்கூடிய கெட்டவை களும் இருக்கின்றன. எதையும் பார்க்கிறது எம் தாயாகிய பூமி,
வக்கிர புத்திகள் வேரறுக்கப்படும் வேளை புதிதான பிரச்சினைகள் உருவாகுவதும், அவையும் களைந்து எறியப்பட மாற்றுக் கருத்துக்களும், நல்ல போதனைகள், நெறிகள் வளர்ந்து வருவதும் மாற்ற முடியாத இயற்கை நிகழ்வுகள்தான்.
4●

கயதரிசனம் விருப்பங்களை நோக்கி மனிதன் நடக்கின்றான். இடையூறுகளை விரும்பி அவன் ஏற்பதுமில்லை. எனினும் மனிதன் வாழும் முயற்சியில் பின்வாங்கப் போவதுமில்லை. என்னே இயற்கையின் சிறப்பு? உங்களது விருப்பங்களால், ஏனையவர்கள் பயன், நயம், சுகம் பெறுவார்களாக! வாழ்வின் அர்த்தம் இதுதானே!
தேவைகளை நோக்கி ஓடுவதும் விரும்புவதும் தவறே இல்லை. இவை இன்றி எப்படி ஐயா வாழ்வது? நெறிதவறாத நிலையில் நல்லதை விரும்புவோம். அதை அடையப் போராடுவோம். கிடைத்ததை ஏற்போம். கிடைக்காதவிடத்து மனம் தளர்ந்து விடமாட்டோம். நல்லவைகளை எடுக்கத் தடைகளை உடைப்போம். வாருங்கள் வாருங்கள் அன்பான நெஞ்சங்களே!
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
29.01.2006
41

Page 23
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
விரக்தியை விரட்டு
துன்பங்களே தினசரி தரிசனமானால் விரக்தி வீராப்புடன் எழும். எனினும் இன்ப, துன்பங்கள் எல்லாமே முடிவானவை அல்ல என்று திடமாக எண்ணினால் விரக்திகரைந்துவிடும். தோல்வி வருகின்றதே என ஆரம்பத்திலேயே கருதினால், வெற்றியைத் தன் மனதில் இருந்தே விடைகொடுத்து வழியனுப்புகின்றவனாகின்றான். சாதிக்க எண்ணி முழுமையாகச் செயல்படுபவனுக்கு ஏது விரக்தி? விஷக் கிருமிகளின் ஆக்கிரமிப்பைவிட மனச்சோர்வின் படையெடுப்பு ஆபத்தானது. விரக்தி பெருநோய். உற்சாகமான எண்ணங்கள், செயல்கள் இதனை
விரட்டியழிக்கும்.
அடுத்தடுத்துத் தொடுத்துக் கொள்ளும் தோல்வி களாலும் எதிலுமே நிறைவற்ற குறைகளைக் காணுவதனை இயல்பாக்கியோர்க்கும் விரக்தி கருக்கொள்வது சகஜமே!
நல்ல மனோநிலையில் உள்ள மாந்தர்களுக்கும் துன்பமே தினசரி தரிசனம் என்றால் என்ன செய்வது?
42
 

apagflats if
விரக்தியின் உச்சத்திற்கே சென்று தெளிவடைந்த
ஞானிகளும் உள்ளனர். விரக்தியில் அழிந்துபோன சாமானியர்களும் ஏராளம்,
எனவே, பிரச்சினைகளைக் கையாள்வதில் தான் மனிதன் எழுச்சி தங்கியுள்ளது. துன்பங்களில் அமிழ்வதும், எழுவதும் அவரவர் ஆத்ம சக்தியைப் பொறுத்த விடயம் என்பர் பெரியோர்.
தோல்விகளும், வெற்றிகளும் புதுமையான அம்சங்க ளேயல்ல. இதைச் சாதாரண சங்கதி என்று அதில் சம்பந்தப் படாதவர் கூறலாம். தாங்கிக் கொள்ள முடியா மனோ நிலையில் சின்னத் தோல்வியும் எமக்கு வந்தால் அது மலை எனவே திகழ்வது இயல்பே. ஏன் தற்கொலை போன்ற தகாத முடிவு எடுப்பவர்களும் உளர்.
9 தோல்வி வருகின்றதே எனக் காரியங்களில் இருந்து நழுவுகின்றவன் வெற்றியின் ஆரம்பத்திலேயே ஒதுங்குகின்றவன் ஆவான்.
"முன்னேற்றம் என்பதே ஒரு முழு மூச்சுடனான வேகம்" என உணர்க உணர்க!
இங்கு பின்னடைவான நோக்கிற்கே இடமில்லை. வெற்றி விளிம்பைத் தொட்டு விட்டிட எத்தனிக்காமலே அந்த எண்ணத்தையே முளைவிட விரும்பாது விட்டால் நாம் ஜெயிக்க முயலவில்லையே என எப்படி ஆதங்கப்பட (ԼԶւգԱյլb?
43

Page 24
பருத்திy 04ல. ஆயிரவருதஷ்
மிகவும் பெரிதாகச் சாதித்தவர்கள் விரக்தி பற்றிய சிந்தனையை ஒதுக்கியவர்களாகவே தெளிந்து காணப்படு கின்றனர். ஆனால் அவர்களிடையே பேசிப் பார்த்தால் "அடடா நான் இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம். உடனடியாகவே செய்தேயாக வேண்டும் " என்று எண்ணியதுடன் மறுவினாடியே முனைப்பான பணிகளில்
ஈடுபட்டு விடுவார்கள்.
இன்னும் ஒரு விடயம். "என் னிலும் பார்க்க அந்தஸ்தில் குறைந்தவனாக இருந்தவன், என் கண்முன்னே உயர்ந்து விட்டானே இனி என்பாடு அதோகதிதான். நான் அவனிலும் பார்க்கத் தாழ்ந்து போய்விட்டேனே" என்று பொறாமை காரணமாக விரக்தியுடன் பேசுபவர்களை என்ன செய்வது?
தனக்கு நேர்ந்த அவலங்கள், துன்பங்களுக்காகச் சோர்வடைவது மனித இயல்பு. ஆனால் பிறர் வளர்ச்சி கண்டு பொருமுவது விரக்தியல்ல; அது தன்னைத்தானே நொருக்கி அழிப்பது போலாகும் என்று அறிக.
சுய முயற்சியுடன் முன்னேறியவன் தன் தகுதி பற்றி தானே அறிந்தவனுமாவான். முன்னேறாமல் வெறும் கற்பனையுடன் உழைப்பின்றி வாழ்பவன் ஒரு கால கட்டத்தில் தனது வெறுமை நிலை கண்டு குறுகி, சிதறி ஒதுக்கப்பட்டே விடுவான். இந்நிலை தவிர்க்கக்கூடிய ஒன்றேதான். "முடியும் வரை முயலாதவன் மனிதனே யில்லை”.
44

ଅy୬ffଅଞ நாட்டில் மிக உச்ச அந்தஸ்தில் உள்ள ஜனாதிபதி ஒருவர் தனது நண்பரிடம் அலுத்துக் கொண்டாராம் இப்படி “எனக்கு இனி பதவி உயர்வே இல்லையே! இனி என்ன செய்வது" என்றாராம். பதவிகளைத் தேடிக் கொண்டே யிருந்தவர் அது கிடைத்துக் கொண்டேயிருந்தும், முடிவில் அது,ஒரு எல்லைக்கு மேல் உழைப்பின் மேலுள்ள ஆர்வம் காரணமாக ஒரு அங்கலாய்ப்பாகவே மாறிவிட்டது. எனினும் உழைக்காமல் பெரிய பதவிகளும் பரிசளிக்கப்படுவது மில்லை. உழைப்பவன் ஒய்வடைய விரும்புவதுமில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
இத்தகையவர்கள் தமது அலுவல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்களே ஒழிய விரக்தியான பேச்சுக்களால் சலிப்படையப் போவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அந்தப் பேச்சு பேசுவதற்கான சிந்தனையோ, நேரமோ கிடைப்பதில்லை.
இயங்கும் ஆத்மாக்கள் படுத்துக் கிடப்பதில்லை. படுத்துக் கிடப்பவனுக்கு எடுக்கும் கருமங்கள் முறிந்து போகும். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள், "படிப்பதில் உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா?” என்றால், "படிக்காமல் விட்டால் தான் சலிப்பும், அலுப்பும்" என்பார்கள்.
விரும்பும் தொழிலைச் செய்தால் விரக்தி ஏற்படாது. விரும்பாத காரியங்கள், பிறரால் திணிக்கப்படும் வேலைகள்,
45

Page 25
கருத்தியூர் அல. வர்வதன் தெரியாத வேலைகள், அனுபவமில்லாத கருமங்கள் பிறரின் அவதூறுகள் என்பன மன உழைச்சலைத் தருவதுடன் விரக்தியை நோக்கிய பாதைக்கு வழி சமைக்கும்.
பிறருக்குச் செய்யும் வேலையில் அவதானம் வேண்டும். இத்தகைய பணிகளால் ஏற்படும் சாதக, பாதகங்களை நாம் ஏற்றேயாக வேண்டும். பொதுவாக இப்பணியினை மேற்கொண்டு அதனால் பயனேதும் கிட்டாதுபோனால் தென்படும் கண்டனங்கள்,அவமானங்கள் சிலவேளை துன்பத்தையும் தலைவலியையும் ஏற்படுத்தி விடுமன்றோ?
தேவையற்றுச் சுமக்கும் துன்பங்கள் விஷக்கிருமிகள் போல உடலையும், உள்ளத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி
விடுகின்றன.
அழையா விருந்தாளிபோல், நோய்கள் நுழைவது போல் தேவையற்று வலுக்கட்டாயமாக ஏற்படும் கஷ்ட நஷ்டங்களால் விரக்தி கொள்பவர்களே ஏராளமாக இருக்கின்றார்கள்.
என்னதான் உதவும் கரங்களாக நாம் இருந்தாலும் கூட சமயத்தில் எங்களை நாம் காப்பாற்றிக் கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று பிரச்சினைகளைப் பிறர் தலையில் தள்ளிவிட்டு சும்மா இருப்பவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். இவர்களை இனம் கண்டு கொள்வோ
LOFTE E5.
46

சுயதரிசனம் வேளைக்குச் செய்யாத கருமங்களால் நாம் வீணர் களாகவும், கோழைகளாகவும் மாற வாய்ப்பு உண்டு. சும்மா இருந்தால் மனமும் மரத்துவிடும். அப்புறம் திடீர் என விழித்துக் கொண்டு "அடடா நான் எல்லா விடயங்களையும் கோட்டை விட்டு விட்டேனே" என்று சொல்லிக் கொண் டேயிருக்கும்போது காரியம் எல்லாமே காலாவதியாகிப் போய்விடும்.
மனம் சலிப்படைந்தால் எமது ஆற்றல்களை இனம் காணமுடியாதவர்களாகி விடுவோம். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். உள்ளே இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியே தீரவேண்டும்.
ஆற்றல்களைப் பூட்டி வைத்தல் உயிரோடு சடலமாக உலாவருதல் போன்றதாகும். துன்பங்களையே நேசிப்ப வர்கள் இருக்கின்றார்கள். சதாகாலமும் புலம்பித் திரிபவர் களுடன் உறவு வைத்தால் காலப்போக்கில் நீங்களும் இவர்கள் பேசுவது போல் ஆகிவிடலாம். அவர்களைத் திருத்தி நல்எண்ணங்களைப் புகுத்த இயலுமாயின் நல்லது அல்லது, நீங்கள் அவரை விட்டுச் செல்வது உகந்தது.
எனவே, பலவீனமான மனதை வீரமூட்டாத கோழைப் பேச்சு பேசுபவர்களிடம் தோழமை வேண்டாம். ஆனால் இயலாமையின் காரணமாகத் துன்பத்தில் உழல்பவர் களைத் தூக்கி விடுக!
47

Page 26
பருத்திபூர் அல. ஆயிற்றுருதஷ்
வஞ்சனை எண்ணங்களுடன் விரக்தியூட்ட நினைக்க முயல்பவர்களுடன் விலகி நில்லுங்கள். தங்களது துன்பங் கள் அவை எம் மூலம் விலகும் என எண்ணும் அப்பாவி ஜீவன்களுக்காக சொல், செயல், எண்ணங்களால் அவர் களுக்கு வலுவூட்டுங்கள்!
உங்களை நீங்கள் நம்பினால் விரக்தி எண்ணங்கள் வந்துவிடுமோ? மரணம் வந்துவிடுமோ? என்று பயம் கொண்டு விரக்தியடையும் சாதாரணமானவர்களும், நோயாளிகளும் இருக்கின்றார்கள். "மரணம் ஒரு வினாடி வாழ்வு பல கோடி" என உணர்ந்தால் சாவு பற்றி உணராது, தன் உழைப்பு, உறுதி, திடமான நம்பிக்கையுடன் போராடி வெற்றி காண்பது எளிதான காரியமாகிவிடுமன்றோ?
அழுதே பொழுது கழியக் கூடாது.
எழுவதற்கும், வாழ்வதற்குமே வாழ்வு
மறக்க வேண்டியதை மறந்தேயாக வேண்டும். மனதில் நிறுத்தி வைக்க வேண்டியதை நிறுத்தி வைத்தேயாக வேண்டும். ஒரு முறை மனம் நொருங்கிப் பல முறை இறந்தவர்களாகக் கூடாது. கனமான இதயத்தை இலேசாக்க வேண்டும். பெரும் பிரச்சினைக்குள்ளானவன் கூடச் சிரித்துக் கொண்டேயிருக்க, கடுகளவு கஷ்டங்களைக் கண்டால் விரக்தியுற்றுக் கலங்கலாமா?
48

೫ugfixià எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் எல்லாம் பூமியில் சகஜம். எதையும் தாங்குதல் எம் நிலை எனக் கருதி, உங்களை எதற்கும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
நடக்காதது நடந்து விட்டதே எனக் கலங்குதல் வேண்டாம். எல்லா விஷயங்களும் நடந்து கொண்டேயிருக் கின்றன. நல்லது பொல்லாதது என்று பேதமற்று சகலதும் நடைபெறுகின்றன. எனவே ஏற்கும் பக்குவம் உருவானால், விரக்தி எண்ணம் கருகும்.
ஒரு வழி அடைபட்டால் மறுவழி பிறக்கும் என்பர். வாழ்வதற்குப் பல வழிகள். கோழைகளுக்கே வழிகள் அடைக்கப்படுகின்றன.
தனிப்பாதை உருவாக்கிப் புதுவழிசமைப்பவன் பல யுகங்களைப் படைப்பவனாகின்றான். ஏனெனில் அவன் வைத்த வழியில் பலர் பிரியத்துடன் பயணம் செய்வ தாலாகும். பல சந்ததிகளும் இவனால் பயன் பெறுகின்றன. நீங்கள் புதிய வழிகளை, புதுமைகளை படைக்க வல்லவர்களே! விரக்தியில் வேதனைப்பட உருவானவர்கள் அல்லர். தெளிவான இதயத்தில், கழிவான சிந்தனைகள் புகுந்துவிடாது. இங்கு கனிவும், காருண்யமும் நிறைந்து கொள்வதால் எதுவுமே சுலபமாகவும், சீக்கிரமாகவும் கிடைத்துவிடுகின்றது.
49

Page 27
பருத்திபூர் பல. ஆயிரவநாதர்
துணிவும், தயவான எண்ணமும் கொண்டோருக்கே தீட்சண்யமான பார்வையும், நோக்கும் இருக்கும். இவர் களிடம் விரக்தி விலகி ஓடிப்போகும். உங்கள் உறுதியை நம்புங்கள். அது உங்களுடன் ஒட்டிக் கொள்ள விரும்பும் போது பற்றிக் கொள்ளுங்கள். இதனால், விரக்தி எண்ணம் வேருடன் அறுபடும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
24.07.2005
50

சுயதரிசனம்
கனவுகள் அதன்
பாதிப்புகள்
நிகழ்வாகவே தோற்றம் காட்டும் கனவு எமது மனதின் ஆழத்தின் அதிர்வுகளை வெளிப்படுத்துகின்றது எனச் சொல்கின்றார்கள் கனவுகளுக்கு பலன் தேடி அல்லல் படுபவர்கள் ஏராளம், உடல் தூய்மை, இறை சிந்தனையுடன் உறக்கத்துக்குச் செல்லுங்கள். கனவுகளால் ஏங்குவதை விடுத்து, நனவு வாழ்வில் உண்மையானவனாக வாழ்வதே ஆரோக்கிய மானது. நல்லதையே எண்ணுங்கள், ஒவ்வாத சிந்தனைகளால் மனம் பேதலிக்கும். கனவுகளாய் வந்து வாட்டும். இயற்கை எம்மை அசைத்துக் கொண்டிருக்கின்றது. அதுபோல் நல்ல கனவுகளை நிஜமாக்க, எம்மை நாம் வசப்படுத்தி உயர்வடைவோம்.
கனவுகள் நெஞ்சத்தில் புதைந்திருந்தே புறப்படு கின்றன என்றும் இவை அடிமனதின் ஆழத்தின் அதிர்வுக ளாகவும், மென் அசைவுகளாகவும் கிளர்ந்தெழுந்து விடுமெனவும் கூறப்படுகின்றன. சில பொழுது இவை சிறு சலனமாகவும், பின்பு சீறிப்பாய்ந்து எம்மை மிரட்டு பவை யாகவும் அமைந்து விடுகின்றன.
51

Page 28
கருத்திபூர் பல. ஆயிரவநாதர்
எது எப்படியோ கனவு காணுகின்ற நேரம், அது வாழ்வின் நிஜங்களாகவே போக்குக்காட்டி எம்மை மயக்க வைக்கின்றன. "வாழ்வே கனவு" என்றும் கூறப்படுவதுண்டு கனவுகூட வாழ்வின் நிகழ்வாகத் தோற்றம் காட்டுவது விந்தைதானே.
எனினும், இன்றைய பொழுதுகள் கூட சில வேளை எமக்கு நாளை மறந்தே போகின்றன. மறைந்த நினைவுகள் அழிந்து போன ஒன்றா? உண்மையில் அழிந்த பொழுது களே கலைந்த வாழ்வாகும். நல்ல பொழுதாக அமைந்தால் தான் வாழ்வில் நினைவுகளும் வாழ்க்கையும் நல்லன வையாக, ஜீவன் உள்ளவையாக ஏன் என்றுமே சாஸ்வதமாகப் போற்று தற்குரியதாகவே இருக்கும்.
மனதிற்குப்பிடிக்காதவைகள் அழிந்தும் போகும். சில வேளைகளில் அவையே பற்றிக்கொண்டு எம்மை ஆட்டும். மறக்காத நினைவுகளைக் கனவு கற்றுக் கொண்டு விடுகின்றது. அவ்வப்போது எம்மைச் சீண்டி வேடிக்கை காட்டுவதுண்டு. நல்லவைகளை நினைத்தால் எமக்கு இஷ்டமாக இருக்கும். எமக்கு இஷ்டப்படாதவைகளை நினைத்தால் நிச்சயம் கஷ்டந்தான்.
என்றாலும், மனித மனம் எதை எதையோ, தேவை
யில்லாதவைகளையும் தேடுகின்றது. மறக்க வேண்டியதை
மறக்கவும், நினைக்க வேண்டியதை நினைக்கவும் முடிந்
தால் எவ்வளவு ரம்மியமான வாழ்க்கை அமையும்.? 52

சுயதரிசனம் நடக்கக்கூடாத சம்பவங்களை நாம் மீட்கத் தவறினாலும், கனவுகள் வந்து தொந்தரவு செய்கின்றனவே?
ஆனாலும், நாம் நினைத்துப் பார்க்கவொண்ணா காட்சிகளையும் நாம் கனவில் கண்டு கொண்டிருக் கின்றோம்.
சம்பந்தமேயில்லாத காட்சிகள், வாழ்க்கையில் ஒரு தடவை கூடப் போயிருக்க முடியாத இடங்கள், பிரதேசங் கள், முன்பின் கண்டிராத மனித முகங்கள், மிருகங்கள், பட்சிகள். என இன்னும் எத்தனை எத்தனையோ?
எதிரிகள் எனக் கருதாத மனிதர்கள் சிலசமயம் எதிரிகள் போல எம்மைத் தாக்க வரும் பயங்கரவாதி களாகத் தெரிவதும், நல்லவர்கள் பொல்லாதவர் களாகவும், பொல்லாதவர்கள் நல்லவர்களாகவும் கனவு இராஜ்ஜி யத்தில் காணுகின்ற தரிசனங்கள் சிலவாகும்.
ஏழை ஒருவன் குபேரன் போல கனவிலாவது தன்னைக் காண்கின்ற நேரத்தில் திருப்தியடைகின்றான். கனவு கலைந்த பின்பு உண்மையில் அவன் அடைவது பரிதாபமான சலிப்பு. ஆனால், கனவில் கூட துன்பங்களைக் கண்டு சகிக்காத பெரிய மனிதர்கள் நனவு வாழ்க்கையில் சாதாரண மனிதனின் அவல நிலைக்கு இரங்காதிருப்பது விந்தையே ஒரு சிறு வினாடி கனவில் தான் பணமின்றித் துன்பமுற்றால் போதும், என்ன அவஸ்தைப்படுகின்றான்?
53

Page 29
பருத்திழ் படி, ஆயிரவருதல் விழித்து எழுந்தாலும் கூட தான் கண்ட கனவு குறித்து ஏங்குகின்றான்.
துன்பங்களைக் காட்டும் கனவு மூலமாவது நீ நல்ல பாடங்களைக் கற்க வேண்டாமா? கனவின் பலன் ஏதாவது நல்லது நடக்குமா என ஏங்குகின்றாய். ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் உனது செய்கைகளின் சாதக பாதகங் களைச் சொப்பனம் மூலமாவது உணர்ந்திருக்கின்றாயா?
மனச்சாட்சியை இறைவனின் குரல் என்பார்கள். மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்பவர்கள் பலர் சொப்பனத்தின் மூலம் அரண்டுமிரண்டு திருந்தினர் எனக் கதைகள் மூலம் கேட்டிருப்பீர்கள்.
எல்லாம் நாங்கள் சொல்வது, செய்வதே சரி என விதண்டா வாதம் பேசி நடந்து கொள்பவர்களுக்கு இயற்கை எந்த ரூபத்தில் எச்சரிக்கை செய்தாலும் திருந்தப் போவதில்லை. சொப்பனங்கள்கூட சிலசமயம் இயற்கை தந்த எச்சரிக்கை உணர்வாகக் காட்டி நிற்கின்றன.
தேக ஆரோக்கியம் குன்றும் போதும் கூட, அதாவது மன அழுத்தம் போன்ற காரணிகள் உடலை வருத்தும் போது கூட அடிக்கடி மன உளைச்சலினால் கூடாத கனவுகள் தென்படலாம்.
54

ଅଞiff; நல்ல எண்ணங்களை மனதில் தேக்கினால் உடல் ஆரோக்கியமாகும் என்று பெரியோர்கள் புகல்வர். எம்மைச் சுற்றிய சூழல் புனிதமாகச் சுகந்தமாக இருத்தல் வேண்டும். படுக்கைக்குப்போகும் முன் எமது உடலைச் சுத்தமாகவும், உறங்கும் இடத்தினை நல்ல வாசனை கமழவும் அமைக்க வேண்டும்.
கனவு பற்றிய ஓர் ஆய்வு இது ஒருவரது படுக்கையில் அவர் நன்கு முகர்ந்து கொள்ள நல்ல வாசன மலர்கள் வைக்கப்பட்டன. அன்று அவர் உறங்கும் போது, பூங்கா ஒன்றில் உலா வருவதுபோல் கனவு கண்டாராம்.
மனதினை இலேசாக வைத்திருக்கப் பழகவேண்டும். தினசரி தியானம், நல்ல ஓய்வு, உடற்பயிற்சி அமைதியான சிந்தனை, கோபம் வராமல் எம்மைப் பார்த்துக்கொள்ளுதல், மன அழுத்தம் தரும் விடயங்களில் புலன்களைச் செலுத் தாமல் விடுதல், ஒய்வு நேரங்களில் சந்தோஷகரமான சுற்றுலா, இத்தகைய அனுபவபூர்வமான செய்கைகளில் நீங்கள் ஈடுபட்டேயாக வேண்டும்.
மிக முக்கியமான விடயம் ஒன்று
எமது இதயம் சீராக, மூச்சு இதமாக உட்சென்று வெளிவர வேண்டும். மூச்சுப் பயிற்சி போன்ற விஷயங்கள் இன்று நாடெங்கும் பல நிறுவனங்களால் பயிற்றுவிக்கப் படுகின்றன. யோகாப்பியாசம், தேகப்பயிற்சி போன்றவை
எமது உடலை இலேசாக வைத்திருக்க உதவுகின்றன.
55

Page 30
பருத்தில் பல. வயிரவநாதர்
9 கலங்கிய எண்ணங்கள்,
காழ்ப்புணர்வுகள்,
கட்டுப்பாடற்ற வாழ்க்கை,
* குடிப்பழக்கம்,
(335|TL b,
போன்றவை கனவிலும் எம்மை நிம்மதியாக இருக்க
6LLDIT LIT.
ஆழ்ந்த தூக்கமே அமைதிக்கான வழி என்பர். இதற்கான வழிகள் பல உண்டு. எவையுமே நாம், நல்லவை என்றால் அவற்றை கடைப்பிடிக்காமல் நொந்துகொள்வதில் அர்த்தம் இல்லை.
வெறும் மூடக் கொள்கைகளையும், சொப்பனங்க ளையும் மையமாக வைத்து, அர்த்தங்களைத் தேடுவதில் என்ன பயன் வந்து விடப்போகின்றது?
ஆழ்மனதில் உள்ள சில அருவருப்பான எண்ணங் கள் கனவுலகில் வெளிப்பட்டு மனிதர்களைக் குடைந்து எடுப்பதுமுண்டு.
"நானா. இப்படி, எனக்கு ஏன் இந்தக் காட்சிகள் தோன்ற வேண்டும்?” எனப் பலர் பொருமுவதுமுண்டு. நனவில் தோன்றி மறையும் சில காட்சிகள் எம்மையறி யாமலே எம் மனதில் பதிந்தும் விடலாம்.
56

கயதரிசனம் ஏனெனில் தொடர்ந்தும் சில தேவையற்ற காட்சிகள் கனவு மூலம் காணப்பட்டால் உஷாரடைந்த சிலர் மனோத த்துவ வைத்தியர்கள் மூலம் சிகிச்சை பெற்று நல்ல பயன் களைப் பெற்றிருக்கிறார்கள்.
ஒரு பொழுதிலும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் தாம் மது அருந்துவதாகவும் அல்லது கண்ணில் படாத ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்வதாகவும் கூறுவதுண்டு. மனதின் சலனங்களால் வளைக்கப்பட்டவர்கள் சிலசமயம் அவர்களை அறியாமலே அவஸ்தைக்குள்ளாக நேரிடலாம்.
"நான் எவ்வளவோ தடவை மறக்க எண்ணுகின்றேன், முடியவில்லை. அவள் தினம் தினம் கனவில் வந்து தொல்லை தருகின்றாள்" என்றும் கூறுபவர்கள் இருக்கின் றார்கள்.
இன்னும் சிலர், தமக்குப் பிடித்தமான நடிகர், நடிகை களையோ அல்லது வேறு எவரையோ நினைத்து கனவி லாவது தெரியமாட்டார்களா எனப் புலம்புவார்கள். வயது வந்த இளைஞர், யுவதிகள் மட்டுமல்லாது வயது சென்ற முதியவர்கள் கூட இந்த பலவீனங்களின் பிடியில் வலிய அமிழ்வதுமுண்டு.
ஒன்றைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும். மனதை அழிக்கும் ஒவ்வாத எண்ணங்கள், வக்கிர சிந்தனை கள் கத்தரிக்கப்பட்டேயாக வேண்டும்.
57

Page 31
கருத்திபூர் அல.ஹவிற்றுருந்தர்
வாலிப வயதில் மனது அலைபாயும். வாஸ்தவம் தான். ஆனால் அறிவு, அதன் ஓட்டத்தை நாமாக வலிய அடைந்திடல் கூடாது. புலன்வழி சென்றால் நிகழ்வது என்ன? பிறர் இகழ்ச்சிதான் மிஞ்சும். அதுமட்டுமல்ல, எதிர்காலம் இருள் காலமாகிவிடுமே?
சொப்பனத்தின் தாக்கம் எம்மை விழிப்படையச் செய்வதாக இருந்தால் பரவாயில்லை. அதுவே எமக்கு விகாரமானாதாக இருப்பின் எவ்வித குழப்பமுமின்றி அந்தக் கனவை ஒதுக்கி விடுங்கள். யாராவது உங்களிடம் வந்து அதற்கு இதுதான் பலன், இதுதான் நடக்கப் போகின்றது என்று சொல்லிப் பயமுறுத்த இடமளிக்க வேண்டாம்.
ஏனெனில், பயம் கொண்டாலே நடக்காதவை எல்லாம் நடந்தவையாகப் பிரமை வயப்பட்டு, சித்தத்தை சிதற விட்டவர்களாவோம்.
கனவுகள் சுதந்திரமானவை!
இவை மனிதனின் அந்தரங்கங்களுக்குள் கூச்சமின்றி நுழைந்து, புலப்படாத செய்திகளை ஒளிப்படம் போல் காட்டிவிடுகின்றன. திரைப்படங்கள், மாயத்தோற்றம் போல் விம்பங்களைக் காட்டி எம்மை நம்பவைக்கின்றன. சொப்பனங்களும் அப்படியே!
எமது வாழ்க்கையையே உண்மை போலவும்
கற்பனை போலவும் காட்சிகளாக்கி புலன்களையே புலம் 58

கயதரிசனம் பெயர வைக்கின்றன. திரைப்படங்கள் பல அலுப்பூட்டும், அதிர்ச்சி தரும், வெறுப்பேற்றும், வேதனை தரும். அதே சமயம் இதுவே குளிர்ச்சியூட்டும், கிளுகிளுப்பூட்டும், கற்ப னையை வரவழைக்கும், காதலை உண்டு பண்ணும், புரியாத பாஷைகளைப் பேசவைக்கும், மனதில் பூப் பூக்க வைக்கும், புது மனிதமாக்கும். சொப்பனங்களும் அப்ப டியே! நல்லதும் செய்யும், நல்லன அல்லாதனவும் செய்ய லாம். கண்ட கனவுகளை மனதிற்கு உகந்தவாறு வியாக்கி யானம் செய்வதும் மனித இயல்பே இவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை நோக்குவோம்.
திரைப்படம் இருளில் காட்டப்படுகின்றது. விழித் திருந்த படியே பார்க்கின்றோம். உறங்கியபடியே சொப்பனங் களை இலவசமாகப் பார்க்கின்றோம். இரண்டு நிகழ்வுகளும் இருளில் உலாவருகின்றன.
அப்புறம், பகல்கனவு என்பது என்ன? இரவில் தானா பார்க்கின்றார்கள் என கேட்கலாம். கண்கள் மூடினால் பகல்பொழுதும், இரவுப்பொழுதும் ஒன்றுதான்.
பகல் பொழுதில்கூட, இருளினுள் ஊாட விரும்பும் ஆத்மாக்கள் தான் அதிகம்.
கனவுக்கு எதிர்ப்பதம் நனவு எனப்படுகின்றது. ஆனால், நனவு நிகழ்வுடன் கனவு தொடர்புபட்டதால் முற்று முழுதாக இவையிரண்டும் முரண்பட்டவையாகக்
59

Page 32
பருத்திபூர் பல. ஆயிரவருந்தர் கருதமுடியுமா? அத்துடன் கனவுகள் மூலம் கதைகள் புனையப்படுவதும் கண்டுபிடிப்புகள் துலங்கப்படுவதும் ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகள்.
இந்தக் காரணங்களினால் சொப்பனங்கள் நித்தியம் என்றும் வாதிடமுடியுமா? மனித மனம் மாயமானது. இது பல வேடங்களைத் தரித்து நிற்கும். அது தன் வெளிப் பாடுகளை பலவிதமான வழிகளில் புலப்படுத்துகின்றது. இதன் வழி சரியானதாகவும் இருக்கும். தவறானதாகவும் இருக்கும்.
ஆனால், மனச்சாட்சி என்பது உள் இருந்தவாறே ஒலிக்கும். எமக்கு மட்டுமே கேட்கின்ற உண்மை பேசும்.இது எமது தூய நண்பன். இதனை நாம் உதாசீனம் செய்த 6υΙΤΦΠgl.
மனத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் காணப்படும் சொப்பனங்கள் எமக்கு ஏதாவது நல்ல செய்திகளை வெளியிட்டால் சிந்திப்போம். உணர்வோம். தெளிவடை (36)ITLib.
இதுதவிர, கனவினால் மனம் ஒடிவதும் சதா இது பற்றிக் குழம்புவதை வழக்கமாகக் கொள்வது அறிவீனம். தெளிவுடன் இருப்பவர்களை சொப்பனங்கள் சோர்வடையச் செய்வதேயில்லை.
60
 

೫ರುತ್ತಿಗೆ'ಆಥ್ರರಿ எனவே, எதிர்காலத்தை வளமாக்கவும், நினைத்தவை
களைச் செயலாக்கவும் கற்பனையேயானாலும் நன்மை பயக்கக்கூடிய, பிறருக்கு இம்சை விளைவிக்காத, உலகிற்கு ஒளியேற்றக்கூடிய விடயங்களில் புலன்களைப் புகுத்துங்கள்!
இதன் விளைவாக நல்ல கற்பனைகள் கனவாகத் தெரிந்தாலும் சுலபமாக வாழ்வதோடு இயைபுபட்டு இவை நிச்சயிக்கப்பட்ட முன்னேற்றங்களாக வலுவூட்டப்படும்.
நல்ல முன்னேற்றங்களுக்காகக் கனவு காணுவதில் ஏது தப்பு? எதிர்பாராமல் எல்லாமே கிடைத்துவிடும் என எண்ணாது, எதிர்கால நிகழ்விற்காக இன்றே அது பற்றிய எண்ணங்களை உற்பத்தி செய்வீர்களாக நல்ல கனவுகளை நிஜங்களாக்க முனையாதவர்கள் வெற்றி பெற்றவர்களைக் கண்ட பின்னராவது நினைத்ததை முடிக்கலாம் என எண்ணினால் என்ன கேடு வந்துவிடப் போகின்றது?
பிறர் வளர்ச்சியைக் காண்பது அவர்கள் பற்றிப் படிப்பதற்கேயின்றி எமக்கு எதுவும் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவதற்கில்லை.இயற்கை ஏதோ ஒருசில காரணங்களுக்காவே எம்மை அசைத்துக் கொண்டிருக் கின்றது.
கனவுகள், நினைவுகள், தோற்றங்கள், மாற்றங்கள் எல்லாமே மனித வாழ்வில் இழையோடிய வண்ணம் வந்து போய்க் கொண்டேயிருக்கும். தெரிந்து, தெளிவது எம் கடன்,
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
O2.10.2005
61

Page 33
கருத்தில் பால. ஆயிரவநாதன்
கண்ணிர், துன்பங்களின் பாரங்களை இறக்கி வைக்கும் தூய அருவி மலை போன்ற மனசையும் கரைக்கும் கண்ணிர், பல கதைகள் பேசும். நல்லோர் உதிக்கும் கண்ணிர் உலகை அசைக்கும். போலி அழுகை புரட்டர்களின் வேலை, பொய்யான கண்ணிர் வெட்ட வெளிக்கு, வெள்ளையடிக்கும் செயல்,மனிதநேயம் கொண்டவரின் இரக்கம் மேவிய விழிநீர் சத்தியத்தின் வெளிப்பாடு. அழ வேண்டியவைக்கு அழவேண்டும். துன்பங்களை நெஞ்சினுள் புதைப்பது தகாது. கலங்கித் தொடர்ந்தும் அழாமல், எழுந்து இயங்குக! உப்புக் கண்ணிர் கரைசல் மாபெரும் உஷ்ணத் திராவகம்.
உணர்வின் கசிவினால் உருவாகும் கண்ணீர்க், கரைசல் வெறும் உப்புத் திராவகம் அல்ல, இது, மலையை யும் கரைக்கும்.
62
 
 
 
 
 
 
 
 

aufiguri
மலர் போன்ற மென்மையானவர்களை இரும்பாக்கி
வலுவூட்டும். நெஞ்சங்களை இசைவாக்கி வசமாக்கும. எவரையும் மசியவைத்து வசியப்படுத்தும் வஸ்து இது.
துன்பங்களின் பாரங்களை இறக்கி வைக்கும் தூய அருவி. இசைக் கருவிகளால் நெகிழாதவன், உதிர்க்கும் கண்ணிரில் துவண்டே போவான். இதன் சக்தி அசாதாரண மானதே.
கண்ணிரின் வலிமையைப் பற்றி கூறாத சரித்திரங்கள் உண்டோ? உகுக்கப்படும் கண்ணிரின் உண்மைத் தன்மையில் தான் அதன் வலிமை தங்கியிருக்கின்றது. போலியாக அழுகிறவர்களும் காரியம் சாதிக்கின்றார்கள் தான.
ஆயினும், நியாயபூர்வமான ஒரு ஏழையின் அழுகை, கற்பரசிகளின் கண்ணிர், விதவைகளின் ஏக்கம் தோய்ந்த உஷ்ண கண்ணிர், செந்நீரைவிட உக்கிரமானவையே.
விழிநீரை உகுத்தபடியே செய்கருமங்களை மறந்து விட்டால் பயன்கள் கிடைக்காது போய்விடுவதுண்டு. ஆற்றாமை யினாலும், ஆத்திரத்தினாலும் வஞ்சம் கொட்டி அழுவதனால் உடல் சோர்வும், மன உழைச்சலும்தான் மிஞ்சும்.
பிரிவுத்துயர் என்கின்ற விஷயத்தில் எல்லோருமே தம்நிலை மறந்துதான் போகின்றனர். மரணம் மட்டும் பிரிவு
63

Page 34
பருத்தி அல. ஆயிர்வரர் அல்ல. காதலர் பிரிவு, நண்பர்கள் பிரிவு, உறவினர் பிரிந்து போதல் போன்ற விலகிச் செல்கின்ற நிகழ்வுகள் கூட மனதில் பாரங்களைப் பதிக்கின்ற சங்கதிகள்தான்.
பேரன்பு கொண்ட காதலர்கள் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து செல்லுதல் மரணத்தை விடச் சோகமானது என்று சொல்வார்கள். இவை பற்றியே கவிஞர்கள் பல காவியங்க ளையே சிருஷ்டித்து விட்டார்கள்.
சீதாப்பிராட்டியின் கண்ணீர், கண்ணகியின் வழிந் தோடிய விழிநீர், மண்டோதரியின் சோகம் போன்றவற்றைக் காட்டும் காவியங்களை மட்டும் நாம் படித்திருக்கலாம். ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள சகல நாடுகளில், இனங்களில், மதங்களில் இன்னமும் பேசப்பட்டுள்ள கதைகளும், காவியங்களும் எண்ணிலடங்காதவை 96)6)6. IT?
நீதியின் முன் அழும்போது அது இறைவனாற் கேட்கப்பட்டு நியாயம் கிடைத்தே தீரும் போலி அழுகை புரட்டர்களின் வேலை. காருண்யம் மிக்கவர்களை நம்பவைத்துக் காரியம் பார்ப்பவர்களின் கைங்கரியம். கோழைத்தனமான கோணங்கித்தனம் தான்.
பொய்யாகக் கண்ணிர் சிந்தினால் மெய்யாகவே வேதனையில் வீழ்வர். அப்போது இத்தகையவர்களுக்கு கண்ணிர்தான் நிரந்தரமான உறவும் ஆகிவிடும்.
உணர்வார்களா?
64
 

சுயதரிசனம் பொய்யான கண்ணிர் வெட்ட வெளிக்கு வெள்ளை யடிக்க முயற்சிக்கும் கருமம் போன்றது. இத்தகைவர்கள் காலத்தை விரயமாக்கிக் காணாமல் போய் விடுவார்கள். புரிந்து கொள்வார்களா?
அழுவது கோழைத்தனம் என்றும் கூறுபவர்கள் இருக்கின்றார்கள். எடுத்ததெற்கெல்லாம் அழக்கூடாது. தொட்டதற்கெல்லாம் துன்பப் படக்கூடாது. எட்டாத பிரச்சினைகளை வீணாகத் தொட முயற்சிக்கக்கூடாது. எம்மிடையே திணிக்கப்படும் பிரச்சினைகளை முகம் கொடுத்து தீர்த்து வைக்க திடசங்கற்பம் பூணுவோம்.
அழாதவன் மனிதனேயில்லை என்பவரும் உண்டு. இரக்க சுபாவம் மனிதனின் அக உணர்வுடன் ஒன்றியது. இரக்கப்பட வேண்டியவைகளுக்கு இரங்குதல் பலவீனம் என்றும் இல்லை. துன்பப்படுபவர்களைக் கண்டும், பிறர் சோகங்களைக் கண்டும், நாம் கண்ணிர் சிந்துதல் எமது மானுடத்தனத்தை, மனிதாபிமானத்தை துல்லியமாகத் தெரியப்படுத்துதல் என்பதே, இது இயல்பான விஷயம் தான். இங்கு நடிப்பு, நாடகம் என்று ஒன்றுமேயில்லை.
உண்மையான மனித நேயம் மிக்கவனது இரக்கம் கண்ணிராக உருவானால், அதன் வெளிப்பாடு மிகவும் சத்தியத்தின் புறப்பாடாக இறைவனின் வாசலை அது தட்டித் திறக்கும்.
65

Page 35
0ருந்தியூ அல. லுயிரவநாதர்
எனினும் சிலருக்கு அழுகை வரவே வராது. ஆயினும் அவர்கள் இதயத்துள் அழுது தீர்ப்பவர்களாக இருக்கின் றார்கள். இவன் என்ன கல் நெஞ்சக்காரனாக இருக்கின் றானே எனச் சிலர், விமர்சனம் செய்வதுண்டு. இத்தகைய அழமுடியாதவர்களில் அனேகருக்கு நோய்கள் உருவாகி அல்லல்ப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அழவேண்டியவற்றிற்கு அழுதே தீர வேண்டும். கண்ணிர் மனப்பாரங்களைத் தீர்க்கும். இது மருத்துவர் களின் கருத்தேயாகும். தவிர அழுவதன் மூலம் உடல் ரீதியான சில மாற்றங்கள் ஏற்படுவதாகவும், அதனால் உளவியல் ரீதியில் துன்பங்களில் இருந்து விடுபட்ட உணர்வு பெறப்படுமென சொல்லப்படுவதுடன் உடலில் ஏற்படுகின்ற பெளதீக மாற்றங்கள் கூட மனித உடற்கூற்றிற்கு உகந்த தாகவே காணப்படுகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், மிதமிஞ்சிய சோகம் நீடிப்பதாலும், கண்ணிர் வற்றும் அளவிற்கு மனதை வருத்திக் கொண்டால் இந்த உடல் தாங்குமா?
அழ வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அழாமல் விடுவதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மன நோயாக, இருதய நோயாக ஆவதுடன் உயிர் போகின்ற விஷயமாகி விடுகின்றதே.
ஆயினும், அழுபவன் கோழை என்று சர்வ சாதரண
மாகச் சிலர் சொல்லிவிடுகின்றனர். இந்த விமர்சனம் அழ
வேண்டிய நிலையில் உள்ள பரிதாபத்திற்குரியவருக்குப் 66

சுயதரிசனம் பொருந்தாது. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்.
சோகம், சுகம் எதுவுமே உணர்வு பூர்வமான அனுப வங்கள். நுகர்வதை, உணர்வதை வார்த்தைகைகளால் பேச முடியாது. சில நேரங்களில் நாம் எம்மை வைத்துப், பிறர் நிலையை நோக்க வேண்டும். சில சமயம் பிறர் நிலையைப் பார்த்து எமது நிலையை உணர வேண்டும்.
மன வலிமை, பக்குவ நிலை என்பன எல்லாம் எமது முயற்சியாலும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இயற்கை யாகவே மன வலிமை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆத்மீக வழியில் நாட்டம் உள்ளவர்கள் எளிதான சில பயிற்சிகள் மூலம் சிந்தனையை ஒருமனதாக்கி மனதினை அலைய விடாது திடமாக இருக்கிறார்கள். ஆத்மீகத்தில் நம்பிக்கையற்றவர்கள் திடசிந்தனையற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்றில்லை.
மனதை இலேசாக்க, ஆனால் எதனையும் எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். முற்போக்கான நாத்தீகவாதம் பேசுபவர்கள், சிந்திப்பவர்கள் பலர் சமூக நல்லுணர்வுடன் மக்களுடன் பழகி, பேசி வருவதானால் இவர்கள் தங்கள் ஆற்றல்களைத் தாம் வழங்கும் சேவை மூலம் வலுவூட்டிக் கொள்கிறார்கள்.
67

Page 36
பருத்திபூர் அல. அவிர்வரர்
புறப்பார்வைக்கு வீரம் பொதிந்த வீரனாகக் காட்டி
நின்று நெஞ்சினைச் சோரவைத்தால் நிச்சயம் கண்டதற்கும்
கலங்கிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
சுதந்திரமான மன உணர்வுடன் இருப்பவர்களைத் துன்பம் எளிதில் சீண்டுவதில்லை. எல்லாமே யதார்த்தம், உண்மையானவை. இன்பமும் உண்மை அதன் பின்னே வரும் துன்பமும் உண்மை. எல்லாவற்றுக்கும் மேலாக எதுவுமே நிரந்தரம் என்பதும் இல்லை என்று நோக்கும் மனிதர்கள் சுதந்திரமாக, சந்தோஷமாகச் சீவிக்கிறார்கள். உங்கள் முன்னே அப்படி இருக்கும் பாக்கியவான்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள்.
ஜனனம், மரணம் சாஸ்வதம் தானே! இதில் என்ன சலனம்? சஞ்சலம்? இது வரட்டு வேதாந்தம் இல்லை. முற்று முழுதுமான உண்மைதானே!
எனவே,
அழுவது, கலங்குவது இயற்கையே எனினும் இந்நிலையினுள் புதைந்து, அள்ளுண்டு போகலாமோ? எப்படியும் சீவிக்க வேண்டும். முழுமையான வாழ்வு காண வேண்டும்.
துன்பம் கண்டு எல்லோருமே அழுது கண்ணிர்
சிந்தினால் உலக இயக்கம் எப்படி நடக்கும்? வீட்டின்
தலைவன் வருந்தி அழுது வேலை செய்யாது இருக்க
68

சுயதரிசனம் முடியுமா? வாழ்க்கைக் கடலில் மிதப்பது அறிவு.அதனுள் மூழ்கி மூச்சடைத்து உழல்வது சரிவு சந்தோஷமாக நீந்திக் கரை சேர்வதே சிறப்பான நிகழ்வு ஆகும்.
மற்றவருக்காக கரிசனை கொண்டு கருணை கூர்ந் தால் உலகில் கண்ணிர் சிந்துவோர் தொகை அருகி விடும். ஞானிகளும், மகான்களும் ஒருபோதும் தமக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என ஏங்கி அழுததில்லை. உலகை எண்ணி உள்ளுக்குள் வெந்திருக்கின்றார்கள். இந்த மெய்மையின் வெளிப்பாட்டினால் தான் மனோ சக்தியினால் தான் தமது அருளை உயிர்களுக்கு வாரி வழங்கினார்கள். புத்தர், இயேசு, நபி பெருமான் ஆகியோர் பிறர் சோகம் துடைக்க அருவியென அருளுரை பகர்ந்தனர். மனிதன் சந்தோஷமாக இருக்கவே பிறந்தவன் என்பதில் சந்தேகமே
(8660, LIT b. ۔۔۔۔۔
கீழ்க்கண்டவற்றினை வலியுறுத்தி நெஞ்சினில் நிறுத்துவோமாக சோகத்திற்காக சோகப்பட்டு இருக்கும் சுகங்களை இழக்க வேண்டாம். ஒரு சிறு துன்பத்திற்காக பெரிதாக வருகின்ற இன்பத்தினைத் தொலைக்கத் துணிய வேண்டாம். இதனை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டாலும் நல்லது.
இருளுக்குப் பயந்து கரும் சேற்றுக்குள் புகுந்து விடாதே மனிதா என்றே கூறக் தோன்றுகின்றது. இவை ஒரு புறம் இருக்க, நினைத்தபடியே பணம், பதவி, புகழ்
69

Page 37
பருத்தி 00.ஆயிரவருதல் கிடைக்கவில்லையே என ஏங்குகின்றவர்கள் அதுபற்றியே பிரலாபிக்கின்றவர்கள் நிலை சற்று வித்தியாசமானது.
உழைக்காமல் வருந்துவது தகாது. ஒன்றுமே செய் யாது கிடைக்காதது பற்றிப் பேசவே முடியாது. உழைத்து உயர்ந்தவன் நிலை அறியாது சும்மா குமுறுவது கவலை களைக் கேட்டு வாங்குவது போலத்தான் என தெரிந்து GT65.
என்றாலும் கூட, செய்த உழைப்பிற்கேற்ப பலன் கிட்டாதுவிட்டால் துன்பம் கிட்டே வந்து ஒட்டிக் கொள்வது இயல்புதான். இவை எல்லாமே சோதனை, தற்காலிக மானவை எனக் கருதித் தொடர்ந்து இயங்குதலே சிறப்பா கும். ஏனெனில் வேதனையான அனுபவங்கள் கூட புதிதான வெற்றிகளுக்கு வழிசமைக்கின்றன.
அடிபட்டு விழுந்தாலும் எழுந்து ஓடுவதையே வழக்க மாக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. கொஞ்சம் அழுங்கள், விழிநீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். பின்பு இயங்குங்கள், தொடர்ந்தும் இயங்கியபடியே இயங்குங்கள். கண்ணிர் வருகின்றதா பார்ப்போம்.?
கருணையின் நிமித்தம் ஒருவர் செய்கின்ற உதவி களை எத்தனை நாட்களுக்கு எதிர்பார்க்க இயலும்? சொல்லுங்கள்! வாய்க்குள் உணவு ஊட்டப்படுவது
70

சுயூதரிசனம் எத்தனை நாட்களுக்கு? விழுந்த பிள்ளை எழுந்து ஓடாமலா இருக்கின்றது? ಙ್ಗ
நாமே நமக்கு இம்சைகள் செய்யலாமா? கண்ணில் கண்ணிர் தொடர்ந்து வராமல் அதுவற்றிய பின்பு நிகழ்வது என்ன? இதயம் சுருண்டுவிட மனிதன் முடமாகி விடுகி றானே?
கண்ணிருக்கு விடை கொடுப்போம்! துன்பம் அதனுடன் தொலைந்தே போகும் ஆரோக்கிய மனதுடன் வாழ்வது எப்படி என்று எத்தனையோ எத்தனையோ ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன.
என்ன துன்பம் நிகழ்ந்தாலும் சற்றே உங்களை சுதாகரித்துக் கொள்ள முயன்று பாருங்கள். இறைவனிடம் மட்டும் உங்கள் பாவங்களை ஒப்படைத்து விடு என்று ஆன்மீகவாதிகள் சொல்வார்கள். அவ்வண்ணமே மனதை மெளனமாக்கி அதனை இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் நீங்கள் சுமைகளற்ற உள்ளம் கொண்டவர்களா வீர்கள் அமைதியை வேண்டி கொஞ்சம் முயன்று பாருங்கள். நல்லதே!
உடல் தூய்மை, சுற்றுப்புறத் தூய்மைகளே ஒருவனைப் பெரிதும் பாதிக்கின்ற அம்சங்களாகும். நல்ல தூய்மையான உடைகளை அணியுங்கள், நல்ல காற்றோட்ட மான இடங்களை நாடுங்கள் நல்ல நண்பர்களைத்
71

Page 38
பருத்திபூர் பால, அவிவரக் தேடுங்கள் மனப் பாரங்கள் நீங்கும். சந்தோஷமான பேச்சுக் களைக் கேட்க வேண்டும். நல்லவர்கள், வல்லவர்களுடன் பழக வேண்டும். இவர்களுடன் அனுபவங்களைக் பகிர்ந்து கொள்ள வேண்டும். சிறந்த நூல்கள், நல்ல சங்கீதம், எளிமையான கவிதைகள் தெம்பூட்டும். இவற்றை மனதில் பதித்தேயாக வேண்டும். சதா அழுகையை உண்டு பண்ணும் கதைகளை, திரைப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது சிரமமான காரியமல்ல.
அண்மைய உளவள மருத்துவ ஆய்வு ஒன்றின் தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தன. துன்பியல் திரைப் படங்கள், தொலைக்காட்சி நாடகங்களை இரவில் பார்த்து இரவில் உறக்கம் கொள்பவர்கள விடிந்ததும் சோகமயப் பட்டே எழுந்து கொள்கிறார்களாம். இந்நிலையில் வீட்டு வேலைகள் ஒழுங்காக நடக்குமா? சதா நோய் நொடிகள், முக்கியமாக இதய நோயானது ஊடுருவிவிட இந்தப் போலியான சோக திரைப்படங்களும், நாடகங்களுமே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும்,
 ேநல்ல சந்தோஷமான பொழுதுபோக்குகள்  ேவெளியிடங்களுக்கான சுற்றுலா  ேவிரும்பாத நபர்களுடன் பழகுவதைத் தவித்தல்  ேகுழந்தைகளுடன் பழகுதல் 9 அன்பான கரிசனை உள்ளவர்களிடம் மட்டும் மனம்
விட்டுப் பழகுதல்
72

ଅଞit! போன்ற அம்சங்கள் எங்களை சதா சுந்தர புருஷர் களாக்கி சந்தோஷமாக வைத்திருக்கும் காரணிகளாகும். கண்ணிரை, துன்பங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
கலங்காத மனம் இருந்தால் விலங்கான துன்பம் விடைபெற்று ஓடும். கண்ண்னிரைக் காணாத பெரும் பேற்றை நாம் எய்தல் வேண்டும். வெறு மையை, வேதனையை விலை கொடுத்து வாங்குவது அழகல்ல. தினசரி பொழுதுகள் புலர்வது, சிரித்து, மகிழ்ந்து அனைத்து ஜீவன்களுடன் உறவாடுவதற்கேயாம். நிச்சய மாக அழுவதற்கு அல்லவேயல்ல!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 25.12.2005
73

Page 39
பருத்திழ் 04ல. வயிரவருதல்
செய்கின்ற வேலைகளைச் சந்தோஷமாகவே செய்யவேண்டும். உடன் செய்யும் கருமங்கள் எம்மை ஊக்கப்படுத்துவதுடன், எதிர்பார்த்ததற்கும் மேலான பல மடங்கான பயன்களையும் தரும். செய்யாத பணிக்கான காலங்கள் செத்துப்போன காலங்கள். விழித்து எழாத காலத்தில் படுத்துக்கொண்டால் பழுதான பண்டமாகி போவார்கள். புதிய சிந்தனையுடன் புதியன படைத்தல் எம்கடன். சின்ன ஏணியால் சந்திரனை பிடிக்க முடியாது. சின்ன மூளையால் வான் வெளியைத் துழாவி அண்டங்களைப் பிடிக்கமுடியும். விழித்து இயங்கினால் சோர்வும்
துன்பமும் இல்லவேயில்லை. الم. ܢܬ
கொடுத்து வைத்தது இதுதான் என்று அடுத்த கருமத்தைத் துளியும் கருதாது படுத்துக் கிடப்பது நல்ல நடத்தையா? சும்மா இருப்பது இம்மானிலத்தில் தன்மானக் குறைச்சலான அவமானம் என எண்ணல் வேண்டும் அல்லவா? அடுத்த கால நடவடிக்கைக்கான செயல்களை, என்றோ ஆரம்பிக்க வேண்டிய பணிகளை, இன்றுகூடச்
74
 

சுயூதரிசனம் செய்யாமல் இருப்பது துடிப்பான உலகை முடக்க வைக்க முயல்வது போலத்தான் எனக்கருதுக!
ஒவ்வொருவர் பணிகளுமே உலகிற்கு வேண்டிய முதன்மைப் பணிகள்தான். உலக ஆற்றலை வளப்படுத்த, ஒவ்வொரு சீவன்களுமே இயங்கியேயாக வேண்டும்.
நல்ல இயக்கத்தில் எம்மை உட்படுத்த விளையும் போது, மனதில் தயக்கம், சுணக்கம் கிஞ்சித்தும் கூடாது. செய்யாத பணிக்கான காலங்கள் செத்து மடிந்த காலங்கள்! உயிர் போனால் மட்டுமா மரணம்? வலு இருந்தும் இயங்காது போனால் அதுவும் மரணமே. திசை தெரியாது சுற்றுவதை விடுத்து ஒரே திசையில் ஓங்கி நட ஒரு வழி புரியும்.
பிறர் மீது சாட்டுதலும், காரணங்கூறித் தப்புதலும் பணிகளை ஒதுக்கி அதனை படுக்க வைப்பது போலாகும். குனிந்து, நிமிரக் கஷ்டப்பட்டால் படுத்துக் கிடத்தி வைக்க ஆட்களைத் தேடவேண்டி வரும். "காலங்கள்" விழிப்பாக எம்மை உற்று நோக்குகின்றன. உனது காலத்தில் உனக்காகவும், இந்த உலகிற்காகவும், ஏதாவது செய்து கொண்டே இரு என்று அது சொல்வதை உணருங்கள்.
விழிக்க வேண்டிய காலத்தில் படுக்க நினைத்தால்
முடிவில் பழுதான பண்டமாகிப் போவோம். வெளுப்பான,
தூய ஆடைக்குள் புகுந்து கொள்ளுமுன் உன் உடலைத்
75

Page 40
பருத்திபூர் அல. லுயிரவருதம் தூய்மையாக்கு. உலகினில் நீ உலா வர ஆசைப்பட்டால் உழைத்த பின், அதற்குள் நுழை.
● புதிய சிந்தனை
● புதியன படைத்தல்
ஆற்றலை வெளிப்படுத்தும் முயற்சி செய்யாதவன், பணிகளின் பரிணாமம் பற்றிப் பேசவே பயப்படுகின்றான். செய்கின்றவனுக்கு ஏது அச்சம்? தொடர்ந்து செய்ய வனுக்குப் பணிகள் சிறிதாகப்படுகின்றன.
எனினும், செய்கின்ற அலுவல்களைச் சீரமைக்காது செய்வது எதிர்பார்த்த நன்மைகளை அளிப்பதில்லை. வெறுமனே கஷ்டப்படுகின்றேன், பயன் இல்லை என்று கூறுபவர்கள் பலர் இருக்கின்றார்கள்.
சுறுசுறுப்பு என்பது தொடர்ந்து இயங்குவது மட்டு மல்ல. அது பயன்தரக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்பதாகும்.
வேண்டாத கருமங்களைத் தொடர்ந்து செய்தால் அதனால் ஏற்படும் சோர்வினால் வெறுப்புத்தான் மிஞ்சும், நல்ல திறமையானவர்கள் கூட திட்டமிடாத, ஒழுங்கமைப் பற்ற கருமங்களால் சோர்ந்து வீணாகிப் போகவும் நேரிடுகின்றது.
● நல்ல ஆலோசனைகள்
● பயிற்சிகள்
76

சுயதரிசனம்
● அனுபவ ஞானம் காலம், சூழ்நிலைக்கேற்ற உதவிகள்
இவை மூலம் நாம் செய்கின்ற சின்ன முயற்சிகள் கூடப் பெரும் பயனைத் தரவல்லன. பெரும் கல்லை உருட்ட சிறு நெம்புகோல் உதவி செய்வதில்லையா? எதனையும் அறிவுடன் இணைந்த அனுபவ ஞானம் மூலம் பெற எம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
"வித்தை" என்பார்களே என்ன அது? ஒரு கருமத்தை எளிதாகச் சரியாகப் பயில்வதற்கான வழி வித்தையாகின்றது. இதனை அனுபவங்கள் மூலமும், குரு மூலமும், நூல்கள் வாயிலாகவும் பெறுங்கள் என்று சான்றோர் கூறுவர். "குரு இல்லா வித்தை பாழ்” என்று கூறுவதை நாம் அறிவோம்.
முறைப்படி கற்காமல், குருவின் வழிகாட்டல் இன்றி ஒருவர் சிரசாசனம் என்று கூறி தலைகீழாக நிற்கப் போய், கழுத்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான விபத்து பற்றி அறிந்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எல்லாமே தெரியும் என எண்ணுவது விபரீதமாகவும் போய் விடுகின்றது.
குறைந்த நேரத்தில் கூடுதல் பணி அதுவும் நிறைந்த பணியாக அமையவேண்டும். அல்லல் படாமலும் உழைக்க முடியும் வேலைகளைப் பழுவில்லாமல் செய்யும் முறையே ஒரு வித்தையாகின்றது. முரண்டு பிடித்துத் துன்பப்பட்டு அரண்டு பயந்து வேலை செய்யக்கூடாது. அது சந்தோஷமாக
இருக்குமா?
77

Page 41
elebista dago. 20069o gogotá
சந்தோஷமாக வேலை செய்யவேண்டும். இதுவும் ஒரு கலைதான். மகிழ்ச்சியுடன்தான் சிற்பி சிற்பம் செதுக்க வேண்டும். அழுது வடிந்து செய்தால் கருமம் சிறக்குமா? அது சிறுக்கும்.
மனத்தின் உறுத்தலுடன் உழைத்தால் வாழ்க்கையே வெறுக்கும். மனதினை ஒரு நிலைப்படுத்திச் சிரத்தையுடன் பணிபுரிந்தால் துன்பங்கள் தொலைந்தே போகின்றன. நான் எனக்காக மட்டுமல்ல இந்த உலகிற்காகவும் உழைக்கின் றேன் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.
அந்த நினைப்பே உங்களை உரமாக்கி வலு ஊட்டும். உங்களைப் பரந்தமன இயல்புள்ள சிந்தனையாளனாக்கும். மன உளைச்சலும் சோர்வும் எமது ஆயுள் மீதே அருவருப் பையூட்டும். "வாழ்ந்து என்ன கண்டு கொண்டேன்?" என்று சிந்திக்காத மன நிலையில் வாழ வேண்டும். வெறுப்பு உணர்வுகள் எங்களைக் கருமமாற்றவே விடமாட்டா. இந்த நோயில் இருந்து விடுபட்டேயாக வேண்டும்.
வானத்தின் மேலே என்ன இருக்கின்றது என ஆராய முற்படும் நாம் வெறும் கூரை மீது ஏறினால் போதும் எனச் சிந்திக்கலாமோ? சின்ன ஏணியில் சந்திரனைப் பிடிக்க முடியாது. சின்ன மூளையினால் அது முடியும். அதனை முதலில் நாடுங்கள். அது போதும்.
வானத்தின் மீது பறக்க புதிய சிறகுகளை நாம்தான் உருவாக்க வேண்டும். ஒட்டுண்ணி வாழ்வு மனிதனுக்கு
78

சுயதரிசனம் ஆகாது. துன்பங்களால் வெட்டுண்டபோதும் எழும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு ஆற்றல் வெளிப்பாடுகள் கட்டி வைக்கக்கூடியவையல்ல.
அவிழ்படாத முடிச்சுக்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடாது. பல்திசை ஆற்றலுக்குப் பல்திசைப் பார்வைகளை விரிவாக்குவோம். எம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்பதைத் தெரியாமல் விடுவது சுத்த அபத்தமானது.
“விழித்தல்" என்பது கண்களால் பார்ப்பது மட்டுமா? நம் இதயத்தினால், உணர்வுகளால் உலகை உற்று நோக்கிக் கருமமாற்றப் புறப்படுதல் என்பதுமாகும். கண்ணுக்கு மட்டும் பார்க்கும் சக்தி என்பது மட்டுமல்ல பரந்து நோக்கவல்ல எம் இதயத்திற்கும் நிரம்ப ஆற்றல்கள் உண்டு.
துணிச்சலுள்ள எழுச்சிமிக்க எம் ஆளுமை உணர்
வில் பெருநம்பிக்கை கொண்டு எழுந்து நிற்பதுவே
உண்மையான விழிப்பு நிலையாகும். இந்நிலையில் சோர்வு
இல்லை, துன்பம் இல்லை, தோல்விகள் துளிகூட
இல்லவேயில்லை. எமக்குப் பலன் இதுதான் என எண்ணி
இனிமேலும் சொல்லவே கூடாது. இது இறைவனை நிந்திப்பதாகவேபடும். அப்படிச் சொல்லாதீர்கள்
தினக்குரல்
ஞாயிறு மஞ்சரி
O1.01.2006
79

Page 42
பருத்திபூர் அல. ஆயிரவருந்தர்
”ܐܡܝ ܘܕܔ
சுய தரிசனம்
詹
தன்னையுணராமல் தரணியைக் காண்பது எப்படி? தங்களைப் பற்றியி சுயதரிசனம் இன்மையால் பெரும் தாக்கங்களை மனிதன் அனுபவிக்கின்றான். உண்மைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்காதவரை, பொய்மை களுடன் அந்நியோன்யமான உறவு கொண்டால் நிறைவேயின்றி நொருங்க வேண்டியதே பொய்மையாளர் தம் நிழலுக்கே அஞ்சி ஒடி ஒடி ஏமாறுவர். இத்தகையவர்கள் தமது மனத்துடன் பேசவே அச்சப்படுவர். நல்லவர், தம்மையுணர்ந்தவர்களே இறைபக்தர்களுமாவர். இறைவனைப் பக்தர்கள் அபிஷேகம் செய்வதுபோல் இறைவன் பக்தர்களைத் தன் கருணையினால் அபிஷேகிக்கின்றான்.
சுயதரிசனம் நிஜதரிசனமாக இருக்க வேண்டும்.
மனிதர்கள் தம்மைப் பற்றிய உண்மைகளைத்
தெரிந்து கொள்ள சம்மதிக்காமையினால் மிகப்பெரிய
தாக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மனிதன் தன்னைத் தான் தெரிந்து கொள்ளக் கடமைப்
பட்டவன். தங்களது உண்மைத் தன்மையை விடுத்து 80
 

கயதரிசனம் வெறும் கற்பனையாகவே உருவகிக்கும் போக்குடையவர் கள் ஒரு வகையாகவும், யதார்த்தத் தன்மையினைப் புரிந்து கொண்டு தமது நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் ஒரு வகையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மித மிஞ்சிய மேலாதிக்க மனோபாவத்துடன் உலகில் தமது நிலைய்ை மட்டுமே முதன்மைப்படுத்தும் இயல்புடையவர்களுக்கு ஏனையவர்களின் கஷ்ட நஷ்டங் களை அறிய ஆவல்படுவது கிடையவே கிடையாது. ஆற அமர நிதானமாகச் சிந்திப்பவன் மற்றவனை முந்துவது மட்டுமே முதல் வேலை என்று கருதவும் மாட்டான்.
எமது செயல்களில் தூய்மைத் தன்மையினால் மட்டுமே முதன்மை அந்தஸ்துகளின் உதயங்கள் சந்தடி யின்றிக் கிடைத்துவிடுகின்றன. வாழ்நாளின் ஒவ்வொரு வினாடிப்பொழுதிலுமே மேல் நோக்கிய சிந்தனையுடனான பயணங்களில் இணைந்து செல்ல வேண்டியவர்களாக எம்மைப் புதிய பார்யுைடன் மாற்றியும் தூய்மையூட்டிக் கொள்பவர்களாகவும் திகழவேண்டும்.
நான் யார்? எனது நிலை என்ன? சமூகத்தின்பால்
எனது பங்களிப்புகள் என்ன? முன்னைய எனதுநிலைகளில்
இருந்தும் நான் மாறுபாடாக இயங்குகின்றேனா? எனது
மாற்றங்கள் ஒவ்வொன்றுமே என்னை மட்டுமன்றி எனது
சுயநலத்திற்கும் அப்பால் பொது நலத்தின் முன்னேற்றத்
தினை வலுப்படுத்துவனவாக உள்ளவையா? எனது 8.

Page 43
பருத்திபூர் பல. ஆயிரவருதஷ் சிந்தனைகளில் திரிபுகள் ஏற்பட்டு அதன் நிமித்தம் மாறுபாடான, கோளாறான பாதையில் செல்கின்றேனா? ஏனையவர்களின் உள் உறுத்தல்களுக்கு ஆளாகின்றேனா? மேற்கண்ட் கேள்விகளை நாம் எம்மிடம் கேட்டால் எமக்குள் எம்மைப் பற்றிய ஒரு நிலையான சிறந்த உருவம் புலப்பட்டே தீரும்.
குழப்பமான, மிகவும் சிக்கலான பாதையில் செல்வ தன் முழுக்காரணமும் நாம் எங்களிடமே பொய் பேசுவத னால் தான் நிகழுகின்றது என்று முதல் உணர வேண்டும். தனக்கே பொய் உரைப்பவன் பிறருக்கு உண்மை கூறுவதையும் ஒழுக்கமான வாழ்வுடன் வாழவும் முனைய மாட்டான் என்னோடு நான் பேச கூச்சப்படவோ அச்சப் படவோ கூடாது. தவறு இழைக்கும்போது மனதுக்குள் தூசிகள் அழிக்கப்படாமல் ஒட்டிக்கொள்கின்றன. நாம் இதனை ஒப்புக்கொண்டு நிவர்த்திக்க முனையும் போது நீரில் கழுவப்படும் அழுக்காக விலகி மனம் வெளுக்கின்றது.
தவறு இழைப்பவன் தனது முகத்தின் முன் மூச்சு விடவே கூச்சப்படுகின்றான். நிறைவான தூய சுயதரிசனம் கிடைக்க எமக்கு நாம் விசுவாசம் மிக்கவராகவும் எம்மை நேசிப்பவராகவும் பிறர் மீது காழ்ப்பு, குரோத எண்ணம் அற்றவர்களாகவும் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.
தன்னையே விரும்பாமல் இதனையுமே விரக்திக் கண்ணோட்டத்தில் உற்று நோக்கினால் எப்படி களிப்பு
82

சுயதரிசனம் எம்மை எட்டிப்பார்க்க முடியும்? இயல்பாகவே எதனையும் ஏற்றுப் பழகினால் பிறருடன் பழகுதலே குதூகலத்தைக் கூட்டித்தரும்.
உனது ஆத்மா போல்தான் உன்னைச் சுற்றியுள்ள ஆன்மாக்களுக்கும் இன்ப துன்ப நுகர்வுகள்,நியாய பூர்வமான ஆசை, அபிலாஷைகள் உண்டு. அதனைக் ஏற்றுக் கொண்டு பிறர் எண்ணங்களுக்கும் கறை 3 (LDUL16) வேண்டாம். தன்னிலை புரிந்தவன் எதனையும் ஏற்றுக் கொள்ளக் கற்றுக்கொண்டு விடுகின்றான்.
ஆத்ம தரிசனம் என்பது ஞானிகளின் நிலை என்று கூறுவர். இறைவனை அவன் அன்பை உணரத் தலைப்பட விழையும்போதே ஆன்ம சிந்தனை உருப்பெற ஆரம்பிக் கின்றது. இறை ஒளியினால் உணர்த்தப் பெறுதலே "ஆத்மா” தன்னைத்தான் தரிசிக்க உதவும் ஆத்ம தரிசனமா கின்றது.
எந்த மதத்தினைச் சேர்ந்தவர்களாயினும் கூட தாம் சார்ந்த இறை அனுபவங்களுக்கான தூய வாழ்வு வாழும் போது சுயதரிசனத்தைத் தீர்க்கமாகப் பெற்றுவிடுகின்றனர்.
எனினும், உண்மையாக வாழுகின்ற எல்லோருமே
மத வேறுபாடுகளுக்கு அப்பால் நிலை நின்று ஆன்ம
விழிப்பை பெற்றுவிடுகின்றனர். மனிதப் பெறுமதியை
உறுத்தும் விதமாக நடக்கும் பிரகிருதிகள் தங்களை அறிந்து 83

Page 44
மருத்திபூர் பல. ஆயிரவநாதர் கொள்ளாமல் விடுவதுடன் சமூகம் பற்றிய பொய்யான விளக்கத்துடனேயே, அகங்கார சிந்தனையுடன் மக்கி உடைய வேண்டியவர்களாகின்றனர்.
எனினும், பலர் தமது வாழ்நாளின் எடை குறை வடையும் போது தான் இறைவனைத் தேடப் புறப்பட்டு விடுகின்றார்கள். அது மட்டுமல்ல, யாராவது பரிவுடன் இசைவுடன் கரிசனையுடன் தம்மை நோக்குகின்றார்களா வென அங்கலாய்ப்புடன் எதிர்நோக்குகின்றனர். வாழ்வின் நோக் கம், அதன் யதார்த்தத்தன்மை, இது இப்படித்தான் என்ற உணர்வுகள் எல்லாமே தமக்கென ஏதாவது உறுத்தல்கள், நெருக்கடிகள் வரும் போது தான் தெரிகின்றது.
புரிகின்ற விடயங்களைப் புரிந்து கொண்டாலே தனது நிலை என்ன என்று சொல்லாமலே உணரப்படுகின்றது. பொய்யான தகவல்களை எம் நெஞ்சத்திற்குப் பரிமாறக் கூடாது. எமது ஆத்மாவிற்கு வழங்கப்படும் தவறான தகவல்கள்கூட இறை நிந்தனையாவே கருதப்படும் என உணர்வோம்! ஆன்மாவின் தூய்மையையே இறைவன் எதிர்பார்க்கின்றான். கடவுளின் எதிர்பார்ப்புகளைச் சிதற விடுவதற்கு முனைதல், பொய்மைக்கே தலைவணங்கி தெய்வத்தையே "மாயம்" என எண்ணும் அவலநிலைக்கே உட்படுத்துவதாகும்.
84

தயதரிசனம் பலருக்குத் தமது மனதுடன் பேசக் கூடத் தெம்பு இல்லாமல் இருக்கின்றது. தவறு இழைப்பவனுக்கு, அவனது மனசே எதிரியாகி விடுவதால் அவனுக்கு அவன் இதயமும், அவனது உருவமும்கூட அந்நியம் போல் எதிரியாகிவிடுவது வியப்பு அல்ல. மனதை விரோதித்துச் சந்தோஷமாக வாழ முடியுமா? இவர்களால் தம்மைப் பற்றி உண்மையான தேடலை சுவீகரித்துவிட முடியாது.
தனது நிழலைக் கண்டு அச்சப்படுபவர் எப்படித் தனக்கு அப்பால் நின்று பிறருக்கு நிழல் தந்து உதவ முடியும்? எமக்குரிய பணிகள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்கும் போது தான், ஏனையவர்களை வீணே வருந்தி உதவிக்கு அழைக்காத நிலை வருகின்றது. பொதுவாகக் கண்டபடி மற்றவரைச் சாந்திருக்கும் LDC860TT நிலை உருவானதுமே, தமது உண்மை நிலை பற்றி எண்ணமே மறந்துவிடும் மன இயல்பு மனிதனுக்கு வந்து விடுகின்றது. இது மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும். குழந்தை பிறரை எதிர்பார்க்காமலே சுயமாக நடக்கக் கற்றுக் கொள்ள முயல்கின்றது. அந்நேரத்தில், யாராவது அதன் சுதந்திரத்தைக் குலைக்குமாற்போல், நடந்து கொண்டால் கோபப்பட்டு விடுகின்றது.
சுயமாக இயங்குவதுபோல் ஆனந்தம் வேறு என்ன
இருக்கின்றது? மனித வலு அளவிடப்பட முடியாதது.
எனினும் அதனை வலுப்படுத்த முனையாதவரை அதன்
செயல் முடக்கப்படாததாகவே கருதப்படுகின்றது. $5

Page 45
பருத்திழ் பல. ஆயிரவநாதர்
தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி மூலமே எங்கள் செயல்திறன் அதிர்வூட்டப்படுகின்றது. தொடர்ந்து செல்லும் செயலூக்கம் மூலமே எங்கள் திறன்பற்றிய அளவினை நாம் அறிந்து கொள்ளவும் முடிகின்றது.
எனவே, செயலூக்கம் கொண்ட மனிதனாலேயே தன்னுடைய நிலை பற்றிய தெளிவைப் புரிந்து கொள்ளவும முடிகின்றது. நல்ல கற்பனைகளை உருவாக்குவதற்குக் கூட தூய செயல் ஆக்கம் தேவைப்படுகின்றது. சோம்பேறிகளால் சிறப்பாகச் சிந்திக்கவும் முடியாது.சொகுசு, டாம்பீக வாழ்வு பற்றிய எண்ணங்கள் மட்டும் மனதிற்குத் தெளிவை உண்டு பண்ணா. இந்த எண்ணங்கள் மேலும் மேலும் சுயநலத்தின்பால் வேட்கை கொள்ளவே வைக்கின்றன.
சுயநலவாதிகள் சுயசிந்தனை விழிப்பு உருவாக்கத் திற்கு அப்பாற்பட்டவர்கள். நல்ல கருமங்களை உருவாக்குபவன் மற்றவர் தெரிவுகளையும் ஏற்கும் மனப்பக்குவம் பெற்றவனாகின்றான். இறைவனைப் பக்தர்கள் அபிஷேகம் செய்வதுபோல் நல்லோர், பெரியோர் களை இறைவன் தன் கருணையினால் அபிஷேக்கின்றான். நல்ல விடயங்களுக்கு மட்டுமே நாம் எல்லோரையும் பங்கு தாரர்களாக்குவோம். பரந்த நோக்கு உள்ள உள்ளங்களை தெய்வம் பார்க்கின்றது. உலகம் சிரம் தாழ்த்தி வணங்கு வதே இவர்கள் தூய தொண்டிற்காகவன்றோ!
சும்மா இருப்பவன் உலகிற்குத் தீமை செய்யாத
வனாக இருக்கலாம். எனினும் உலகிற்கு தீமை செய்யாத 86

சுயதரிசனம் வர்கள், சும்மா இருந்தாலும் தமது சமூக பங்களிப்பினை நல்கியேயாக வேண்டியவர்களாவர். சமுகத்துடன் உள் இருந்தே விலகி ஒட்டாமல் வாழ்வது எவ்வளவு காலத்திற்குச் சாத்தியமாகிவிடும்?
ஞானிகளாக மகான்களாக உள்ளவர்களால் மட்டுமே நிஜ தரிசனம் பெற்று உண்மைகளைக் கண்டறிந்து மேன் மையுடைய நெறி பிறழா வாழ்க்கை வாழ முடியும் என்று எல்லோரும் கூறலாம். ஆனால், சாமான்ய மனிதர்கள் எல்லோருமே உண்மை நெறியுடன் வாழ முனைந்தாலே போதும், அவர்களைத் தேடி சகல வெற்றிகளும் புகழும் கூடவே அணி திரண்டு வந்துவிடும். உலகின்முன் எல்லோருமே சமன் என்றே தெய்வமே கருதுகின்றது. உனது நல் நடத்தைகளே உன்னை வழி நடத்தும், இதன் பொருட்டு வாழ்வதற்கான அறிவு, சிந்தனை, உனக்கு உண்டு அல்லவா? இவற்றைச் சிரத்தையுடன் ஏற்று வாழ்வது மனிதனின் முழுப் பொறுப்பு மாகின்றது.
எங்கள் வல்லமைகளை புரிந்து கொள்வதுடன் எமக்கான இடர்கள் எங்கே தொடங்குகின்றன என்பதையும் தெரிந்து கொள்வோமாக அச்சமும், கூச்சமும் இன்றி எங்களை ஆராய்ந்து தவறுகளை அறுக்க முயற்சிப்போம். ‘சுயதரிசனம் அப்போது தான் நிதர்சனமாக எம்மை விழிப்படைய வைக்கும், புது மனிதனாக்கும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி 19.02.2006
87

Page 46
பருத்திபூர் அல. ஆயிரவருதற்
(s \ಣ್ರ
அன்பு நிலையும்,
துறவு நிலையும்
fr
சாமான்யமனிதனிடமும் தெய்வீகமான குணாம்சங்கள் அடங்கியுள்ளன அவன் தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உழைக்கும் போதே, முழு உலகிற்குமே உழைத்தவனாகின்றான். அன்பு செலுத்தும்போது அவன் இறை கருணையைப் பெற்றவனுமாகின்றான். எதனையும் வழங்கும் இயல்பு, துணிபு, துறவு நிலைக்கேயானது. தமது உயிரைத் துச்சமென கருதும் தியாகிகள் துறவு நிலைக்கு ஒப்பானவர்கள். "துறவு” என்பது சகலதையும் துறத்தல் அல்ல. சகல உயிர்க்கும் அன்பை வழங்கலுமாகும். அன்பை, கருணையை வெறுக்க இயலாது. பிரதி பயன் கருதாது உயிர்களை நேசித்தலே மேலான "துறவு",
الم.
அன்பு என்பது தூய எண்ணத்துடன் கூடிய "வழங்கல்” ஆகும். இதன் மூலம் பெறுதல் என்கிற விடயமும் அடங்கியுள்ளது. கொடுத்தல், எடுத்துக் கொள்ளுதல் என்கின்ற தூய பரிமாற்றம் "அன்பு" என்கின்ற ஒரு சொல்லிற்குள் அடங்கிவிடுகின்றது. இந்தப் பரிமாற்றத் 88
 
 
 
 
 

ଅଞflଅନ୍ତଃif தினுள் அடங்கியுள்ள மகாசக்தி பற்றியே காலம் தோறும் சொல்லியாகிவிட்டது.
எனினும் துறவிகள், ஞானிகளால் வழங்கப்படும் அன்பு, கருணை பற்றியே எங்களால் பேசப்பட்டு வருகின்றது. ஆசைகளைத் துறந்தவர்களால் மட்டுமே எல்லையற்ற அன்பினை வழங்கமுடியும் என்று கூறுவது உண்மை தானா?
ஆசை மிகுந்தவர்கள் தங்களைப் பற்றியே சிந்திக் கின்றார்கள். இவர்களிடம் பொதுநலப்போக்கு என்பதே கிடையாது என்று வாதிடுவது சரிதானா?
சமான்ய மனிதர்களிடமும் தெய்வீக குணாம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். ஒருவன் தனது குடும்பத்திற்குச் செய்கின்ற சேவை கூட முடிவில் உலகத்திற்காகச் செய்கின்ற சேவையாகி விடும். ஏன் எனில், ஒரு நற்பிரஜை ஒரு குடும்பத்தில் இருந்து தான் உருவாக முடியும். பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, பரிவு ஆகியவைகளுடன் ஒழுக்க நெறியையும் ஊட்டினால் பிள்ளைகள் உலகின் பெரும் சொத்துக்களாக உருமாறுவதில் என்ன சந்தேகம்?
அன்பினை ஈந்து கொள்வதில் சாதாரண மனிதர்
களுக்குச் சந்தேகம் என்பதே இருக்கக் கூடாது."நீ என்ன
பெரிய சுவாமியா, அவனிடம் போய் பரிதாபப்படுகின்றாய்? 89

Page 47
கருத்தியூர் அல. ஐவிரலுருந்தர் என்று குதர்க்க வாதம் செய்பவர்களும் இருக்கின்றார்கள். சாதாரணமானவர்கள் தெய்வ நிலைக்கு உயர்வடைய முடியாது என எந்தச் சாஸ்திரங்களும் சொன்னது கிடையாது. மனப்பக்குவம் என்பது தினப் பொழுதுகளில் செய்கின்ற கருமங்களூாடாக ஏற்படுகின்ற ஒரு பரிணாம வளர்ச்சி யேயாகும்.
திடீர் என ஞானிகள் உருவாகிவிட முடியாது. கால ஓட்டத்தில் பார்க்கும் காட்சிகள், உலக நடைமுறைகள்,இங்கு நடக்கும் கெடுபிடிகள், கேட்பாரற்று சிதைந்துள்ள வாழ்வியல் முறைகளினால் ஏற்பட்ட தாக்கங்களால் குழப்பமான நிலை தோன்றிடினும் முடிவில் தெளிவு காண்பவனே ஞானியாக துறவியாகக் கோலம் பூணுகின்றான். எனினும், இவற்றை நாம் உலக நடத்தைகளால் ஏற்பட்ட வெறுப்பினால்தான் என்றும் கூறிவிட முடியாது.
தெளிவு காண்பவர்கள் வெறுப்பினைக் கடந்தவர்கள். உண்மையை நேசிப்பவன் உலகை உமிழ்ந்து எறியவும் மாட்டான் துன்பமே தெரியாத இன்ப வாழ்வையே நுகர்ந்தவர்கள் கூட யாவற்றையும் துறந்து, நிறைந்த பேறு பெற்ற ஞானிகளாவர். ஆயினும் இவர்கள் மக்களைத் துறந்து ஒதுக்கியமை கிடையவே கிடையாது.
இந்த அற்புத உலகத்தை ஆண்டவன் சிருஷ்டி செய்தான். எனவே, பொய்யான உலகம் என்று பேசி
வாழ்வை மாயத்திரைபோட்டு மூடி விடமுடியாது.
90

சுயதரிசனம் இருக்கின்ற உலகினுள் உண்மையைத் தேடுபவன் மனிதன். நாம் நிலவுக்குப் பயந்து பரதேசம் போக முடியுமா? தனது ஆத்மாவைத் தூய்மையுடன் நேசிப்பவன் பிறர் ஆத்மாக்களை தூற்ற முடியாது.
அன்பு செலுத்துபவன் மனிதன் கருணை செய்பவர் கடவுள் என்பார்கள் காரிய சித்திக்காக மட்டும் நோக்கப் படுபவைகள் இதயத்துடன் ஒட்டாத, முளைக்காத விதை களாகவே கருதப்படும்.
பசை இருந்தால் தான் ஒட்டிக்கொள்ளும் ஜீவன் களும் உண்டு. தன்னலமற்ற உணர்வுகள் எமது உள்ளத் தில் பரிணமிக்க ஆரம்பித்ததுமே நாம் துறவு நிலைக்கு உயர்த்தப்பட்டவர்களாகி விடுகின்றோம்.
சாதாரண சின்னஞ்சிறுவர் கூட உயிரைத்துச்சமெனக்
கருதி தீயினுள், நீரினுள் புகுந்து பிற உயிர்களைக் காப்பாற்றுகின்ற செய்திகளைப் படித்திருக்கின்றோம்.
சரீரத்தைப் படைத்தமை என்பது வெறுமனே முட்டி மோதுவதற்காகவல்ல. பிறர் பாரத்தை ஏற்று கொடுரத்தைக் களைவதற்குமேயாகும். இந்நிலை கூடத் துறவு நிலைக்கு ஒத்ததேயாகும்.
துறவு என்பது எல்லாவற்றையும் துறத்தல் அல்ல. உயிர்களைக் காருண்யத்துடன் அணைத்தலேயாகும்.
91

Page 48
மருத்திபூர் பல. அவிழ்வரன் ஆசாபாசங்களுடன் கூடிய இந்த உலக வாழ்க்கையில் ஏற்படும் எத்தகைய சவால்களையுமே அன்பு எத்துணை சாதுர்யமாக வெற்றி காண்கின்றது தெரியுமா?
வெளிப்பார்வைக்கு அரசர்களைப்போல் தோற்றம் கொண்டிருப்பவர்கள் கூட, மனதளவில் துறவு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதேசமயம் மக்களின் பலவீனத்தினுள் புகுந்து நின்று எளிமை வேடம் கொண்டு வளமாக வாழுகின்ற புல்லர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களின் ஆடம்பரத்தினை அறிந்தும் கூட மீண்டும், மீண்டும் விட்டில் பூச்சிகளாக விழுகின்ற மனிதர்களுக்குக் காலம்தான் ஞானம் ஊட்டல் வேண்டும்.
வெறும் தோற்றத்தினால் மட்டும் வாழ்க்கையை நாம் மாற்றி விடமுடியாது. உள்ளுக்குள் உளுத்துப்போன மனதை வைத்து வெளுப்பாகக் காட்ட நினைப்பது, கனவுக் காட்சிகளைக் கட்டி வைக்கும் முயற்சி போன்றதேயாம்.
அருமையான வாழ்வு வாழாத, தேடாத துறவுக் கோலம் புரையோடும் புண்ணுக்குப் பூச்சூடுவது போலத் தான். நல்ல துறவிகளின் வாழ்வை, போதனைகளை, சாதனைகளை நாம் படிக்க வேண்டும். வெறும் உடம்போடு வெற்றுக் கால்களுடன் நெடுந்தூரம் பயணம் செய்து மரத்தடியிலும், கட்டாந்தரையிலும், காடு பாலை வனத் திலும் படுத்து மக்களோடு கலந்து நயவுரை பகன்றதை, அறவுரை ஊட்டியதை நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.
92

சுயதரிசனம் இன்றுள்ள பெரும் பொக்கிஷங்களான உண்மைமிகு வேத நூல்களை ஆக்கியோர் மானுட வாழ்வில் நுழைந்து அவர்களுடன் கலந்து அவர்கள் மூலம் பெற்ற அனுபவ பூர்வமான கருத்துக் கருவூலங்களையே தந்துள்ளனர். அதனையே நாம் இன்னும் படித்துக் கொண்டிருக்கின்றோம்.
யதார்த்த பூர்வமான வாழ்க்கையில் தான் உண்மை நிலைத்து இருக்கும். நடக்காத விடயங்களில் புலனைச் செலுத்தி வாழ்க்கையைப் பயமுறுத்துபவர்களின் வழியில் நாம் செல்லக் கூடாது. உண்மையான இயல்பான வாழ்வில் நாம் இணைந்து கொள்ளவேண்டும்.
தெளிந்த நீரோடைபோல் நாம் துலங்குவதற்கு களங்க மில்லாத அன்பினை இதயத்தினுள் இருத்து வோமாக! சாதாரணமானவன் என்கிற நிலையிலேயே நாம் இருத்தல் வேண்டுமா?
வளர்ச்சி என்பது பொருளிட்டுவதிலும், கல்வியறி வைப் பெறுவதிலும் மட்டுமல்ல, எவை எவற்றில் எம்மால் சமூகத்திற்கு அன்பினை மிகையாக வழங்கி வருகின் றோமோ, அவை ஊடாக மேற்கொள்ளப்படுவதே உண்மையான வளர்ச்சியாகும். இது அன்பு நிலையான துறவு நிலைதான்.
பாரிய இந்த நெஞ்சினுள் கொள்ள முடியாதது ஒன்றுமேயில்லை. ஆனால், இதனுள் பிரவேசிக்கக்கூடியது 93

Page 49
கருத்திபூர் 04). ஆயிரவநாதர் சடப்பொருள் அல்ல. மெய்யாகப் பிரவாகித்து ஓடும் அன்பு ஒன்றுதான். அது வற்றுவது இல்லை, மாறாக வழங்க வழங்கப் பெருகுவதுமாகும்
தென்றலின் மேலான குளிர் அருவியினதும் மலர் அணைப்பினதும் மேம்பட்ட தன்மையான ஆத்மாவை என்றுமே ஸ்பரிசிக்கின்ற சிரஞ்சீவித்தன்மையுள்ள அன்பு நிலை தவிர்ந்த வேறெதற்குமே இந்த உன்னதத் தன்மை கிடைத்திடுமா?
கால வரையறைக்குள் வாழ்ந்து போகின்றவன் மனிதன். இருக்கின்ற வாய்ப்புக்களை இழக்கக்கூடாது. நடிப்புத்தான் வாழ்க்கை என்று சொல்வதை விடுத்து, நடிப்பது போல் வாழ்வதே பொய்மை என உணர்ந்து, மெய்யான சீவியத்திற்கு சுவையூட்ட முன்வரல் வேண்டும். சரியாக வாழ்பவனுக்கு ஏது ஐயா நடிப்பு?
உண்மையைப் படிப்பதற்கும், அவ்வண்ணம் வாழ் வதற்குமே எடுத்த பிறவி இது. அதைவிடுத்து சோர்வூட்டும், சொற்களைக் கோர்த்துப்பேசி உப்புச்சப்பின்றி வாழ முயற்சிக்க வேண்டாம். பரந்த உலகம், செறிந்து வாழும் மக்களே "திவ்ய வடிவங்கள்" எம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பாசப்பிணைப்புக்கள்!
s
இவர்களை, இவர்கள் புனிதத்தன்மையினை நம்புங்
கள். தீர்காயுசு என்பது வாழும் நாளின் நீளத்தில் அல்ல.
194

வாழ்ந்து கொண்ட நாட்களில் ஈந்தளித்த அளவில்லா அன்பினை ஊட்டிய காலங்களே என அறிக உணர்க! தெளிக! அன்பு நிறைந்தவன் சொற்ப காலம் வாழ்ந்தாலும் அவன் நீண்ட காலமும் தொடர்ந்து அவதாரம் எடுத்துக் கொண்டவனாகவே கருதப்படுவான்.
அன்பு நிலையோடு இணைந்தவன், துறவு என்கின்ற நிறைந்த நிலையுடன் சங்கமித்தவனேயாவான். எல்லா மனிதனும் இந்நிலைக்கு வரவேண்டும். வரவேண்டும்!
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
26.02.2006
95

Page 50
கருத்திபூர் அல. தவிர்ரர்
வாழ்க்கைக்கு உவப்பு
தொடர்ந்து கருமமாற்றுகையினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்க மனிதனுக்கு ஓய்வு தேவையாகின்றது.பொழுதுகளை வீணாகப் போக்குவதைவிட, மனதிற்கும் உடலிற்கும் வாழ்க்கைக்கும் உவப்பானவையாக அமைத்தல் வேண்டும். பலர் பொழுதுபோக்காகக் கற்றுக்கொண்ட கலை, தொழில் நுட்ப விஷயங்கள் அவர்களுக்கு பணவரவுகளையும் அளித்து வருகின்றன். காலத்தை அவமாகக் கழிப்பது வாழ்க்கையை அழிக்க முயல்வது போலாகும். பொழுதுகளை "போக்குவது" என்றில்லாமல், அதனைத் திறம்பட "ஆக்குதல்" என்பதே நல்லது.
பொழுதுபோக்கு என்பது அழுது வடிவதற்கு அல்ல. எழுந்து உயிர்ப்புடன் புதுத் துளிர்ப்புடன் சுறுசுறுப்பான வர்களாக எம்மை மாற்றிக் கொள்வதற்கேயாகும். நல்ல பொழுது போக்குகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
96
 

Stigsgörið உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பூட்டும் முயற்சி களை தெரிந்து கொள்ளல் அவசியமாகின்றது. விரக்தி, வேதனைகள் உள்ளத்தே ஊடுருவிக் கொள்ளாமல் தவிர்க்க பொழுதுகளைச் சிறப்பாகச் சிருஷ்டிப்போமாக!
தொடர்ச்சியான வேலைப்பளு, அயர்ச்சியையும் வெறுப்பினையும் உண்டுபண்ணும். அதுமட்டுமல்ல பிரச்சினைகள் பலவும் வந்து மோதும்போது, மனசு இனம்புரியாத அந்தகாரத்தினுள் மூழ்க எத்தனிக்கின்றது. இவை எல்லாமே மனித வாழ்வில் சராசரியான நிகழ்வுகளே.
எனினும், மகிழ்வுடன் வாழவா வழி இல்லை? ஆயினும் எமது நோக்குகள் பிறரை வருத்தாமல் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமின்றி முழுச் சமூகத்தையுமே சந்தோஷமாக்க விழைந்தால் அதைவிட எமது பிறப்பின் பெரும் பயன் வேறென்ன இருக்கப் போகின்றது?
மற்றவரை வெறுப்பூட்டி எங்கள் பொழுதுகளைக் கழிக்கக் கூடாது. இன்று வீதிகளில், பொது இடங்களில் நிகழ்வதைப் பாருங்கள். தமது பொழுது போக்கிற்காக மற்றவர்களை வேதனைப்படுத்துகின்ற பாதகக்காட்சிகளைத் தானே அடிக்கடி காணுகின்றோம்?
ஒருவரை மகிழ்வூட்டி, எங்கள் காலத்தைக் கழித்தால் வாழ்விற்கு அர்த்தம் உண்டு. நல்லது செய்யத்தானே
97

Page 51
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் எத்தனையோ வழிகள் உண்டு அல்லவா? விடுமுறை நாட்களில் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டால் "சும்மா இருக்கின்றேன்" என்பதிலும் பார்க்க இரண்டொரு நபர்களின் நலனிற்காக என்றாலும் நம்மால் முடிந்தது என்று சின்னத் தொண்டாவது செய்தால் என்ன?
ஆடம்பரமாக, அட்டகாசமாக, செலவு செய்தால் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியும் என்றே பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எமது எண்ணங்களை ஆரம்பத்தில் இருந்தே ஒரு கட்டுப்பாடான வரையறைக்கு உட்படுத்தியாக வேண்டும். செலவு செய்துதான் சந்தோஷங்களை வாங்க வேண்டும் என்கின்ற தீவிர எண்ணத்தைக் கைவிட்டேயாக வேண்டும்.
எனினும் இருக்கின்ற வசதிக்குள் நாம் செலவு செய்வதில் தவறேயில்லை. இன்று மக்களை மருட்டும் பொழுதுபோக்கு அம்சங்கள் மலிந்து விட்டன. ஆனால் இதன் பொருட்டு பணம் மட்டுல்ல தேக சுகம் கூடப் பாதிப்படையும், இதைப் பலரும் உணர்வதில்லை.
விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மேலைத்தேச கலாசாரக் கலப்பினாலும் ஒருவர் கடமையின் நிமித்தம் செய்கின்ற கால அளவைவிட பொழுது போக்கிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பினுள் மூழ்கும் காலமே மேலாகி விட்டது. இதனை மறுக்க முடியுமா?
98

a ligfleesort சோம்பேறிகளுக்குப் பொழுதுபோக்குக்கென்ற ஒரு எல்லை வரையறை, காலவரையறை கிடையவே கிடையாது. சும்மா சுழல்பவனுக்குப் பொழுதுகள் செயலற்றுக் கழிக்கப்படும். கடமையை உணராமல் கண்டபடி திரிபவனுக்கு காலம் என்றுமே கடந்து, நிறுத்தப்பட்டதாகவே கருதப்படும்.
கடமையுணராது உச்சி வெயில் நேரம் என்றில்லை, கொட்டும் மழையிலும் கடற்கரையிலும் பொது இடங்களிலும் புரளுகின்றவர்கள் புழுக்களிலும் கீழானவர்கள், சாதாரண ஓரறிவு ஜீவன்கள் கூட வாழ்வை ஒட்ட, செயலற்றுக் கிடப்பதுண்டா, யாரோ உழைத்த காசை செலவு செய்து காலத்தை ஒட்டுபவர்கள்கூட எனக்குப் பொழுது போக வில்லை என்று சொன்னால் சிரிப்பு வராதா?
இன்னும் ஒரு சாரார் வீட்டில் இருந்து கொண்டு வேலைக்கே போகமாட்டார்கள். ஆனால், நேரம் கிடைக்க வில்லை என்று வீம்பு பேசுவார்கள். மிகவும் வேதனையான விடயம் என்னவெனில், இளைய சமூகத்தினருக்கு நேரப் பயன்பாட்டினை முதியவர்கள் கற்றுக் கொடுக்காமல் விடுவதேயாகும். இருக்கும் காலம் கொஞ்சம் தான். நாம் எல்லோரும் எமது காலத்தில் இவற்றை எல்லாம் அனுபவித்தோமா? எமது பிள்ளைகளாவது அனுபவிக் கட்டுமே என்று காலத்தைக் கரைக்கக் கற்றுக் கொடுக்கின் றார்கள். பொழுது போக்குகளால் கூட சம்பாதிக்கின்ற கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
99

Page 52
பருத்ரிபூர் gற, ஆற்றுதாரர்
ஓய்வு நேரத்தில் கலையார்வம் மிகுந்த பலர் செய்கின்ற கருமங்களைப் பாருங்கள். உடலுக்கும் உள்ளத்திற்கும் உவகையூட்டும் விதத்தில் தமது கலைத் திறனை வெளிப்படுத்திச் சாதனைகளையே படைக்கின் றார்கள். இன்று பல இசை மேதைகள், நடிகர்கள், ஓவியர்கள் அநேகர் தங்கள் சொந்தத் தொழில் வேறாக இருந்தும்கூட பொழுதுபோக்கிற்காகச் செலவிடும் நேரத்தையே கலை வெளிப்பாடுகளுக்காகப் பயன்படுத்தி தமது திறமைகளை வளர்த்திருக்கின்றார்கள்.
இத்தகைய சிருஷ்டி கர்த்தாக்கள், தங்களையும் உலகத்தையும் ஆனந்தமயமாக்குவதே தமது குறிக் கோளாக மாற்றி வருவதை நாம் அறிவோம். இவர்களுக்கும் புகழ்மட்டுமல்ல பணமும் கூட வருகின்றதல்லவா? வீட்டில் குடும்பத் தலைவன், தலைவியர் நல்ல பொழுது போக்கு களில் ஈடுபட்டால் சின்னவர்களுக்கு நாம் எதற்காக சொல்லிக் கொடுக்க வேண்டும்? அவர்களாகவே இவற்றைப்
பார்த்துப் பழகி விடுவார்களே!
பெரிய கலைஞர்களின் வாரிசுகளைக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் எப்படி முன்னேறிப் பெரிய கலைஞராக உருவாக முடிந்தது என்று கேட்டால் "வீட்டில் அப்பா, அம்மாவைப் பார்த்தேன், பொழுது போக்காக நானும் கற்றுக் கொண்டேன், அப்புறம் படிப்படியாக எல்லாமே தானாக வந்தது. அதன் பின்னர் முறைப்படி படித்தே முழு நேரக் கலைஞரானேன்" என்பார்கள்.
100

கயூதரிசனம் சாதாரண வாழ்க்கையில் நாம் ஒரு தொழில் செய்கின் றோம். வருமானமும் பெறுகின்றோம். இந்தக்கால பொருளா தாரப் பிரச்சினையான சூழ்நிலையில் நாம் ஏதோ ஒரு வகையில் எமது தனிப்பட்ட திறமை காரணமாகப் பிறருக்கு உதவுவதுடன் கொஞ்சம் பொருளீட்டினால் அது எவ்வளவு மன நிறைவைத் தரும் தெரியுமா?
எனினும் பொழுதுபோக்குகள் உடலை வருத்துவன வதாக அமையக்கூடாது. மன அமைதிக்கும் உடல் ஆரோக் கியத்திற்கும் ஓய்வு தேவைப்படுகின்றது. இந்த ஓய்வு தேவைப்படும்போதுஉடலை வருத்தினால் ஓய்வு என்பதற்கு அர்த்தமேயில்லாது போய்விடும்.
ஓய்வாக இருந்து கொண்டே நல்ல விதமாகப் பொழுதைப் போக்க முடியும் அல்லவா? பலரும் நல்ல நூலை படிக்கின்றார்கள். நல்ல இசையை ரசிக்கின்றார்கள். அத்துடன் பலர் தமது அன்பான நண்பர்கள் உறவினர் களுடன் பொழுதைப்போக்குகின்றனர். அதுகூட நிறைவான திருப்தி அல்லவோ?
பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லோருக்குமே
ஒத்தவையாக இருக்க முடியாது. வயதுக்கு ஏற்றவாறு
ரசனைகளும் மாறுபாடடைகின்றன. அத்துடன் ஆண்,
பெண் இரு சாராரின் விருப்பங்களும் ஒன்றாக இருப்ப
தில்லை. பொழுதுபோக்கிற்காக புடவைக்கடைக்குள்,நகைக்
கடைக்குள் புகுந்து விலை கேட்டு நேரத்தை வீணடிக்க O

Page 53
பருத்தில் பல. ஆயிரவருதல் மனைவிக்கு பிடிக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட கணவருக்கு இது பிடிக்குமா?
சின்னப் பையன்கள், நவீன கணினி மூலமான விளையாட்டுக்களில் ஆர்வமுடன் ஈடுபட்டுக் கொண்டிருப் பார்கள். அந்த நேரம் அவர்களது அப்பாவிற்கு இது பிடிக்காதிருக்கலாம். இளைஞருக்குத் துள்ளாட்டப் பாடல் பிடிக்கும். வயது போன முதியவர்களுக்கு ஆன்மீக பேச்சு, பக்திப் பாடல் பிடிக்கும்.
இதற்காக இளைஞர்கள் தாத்தாமார்களைக் கேலி பண்ணலாமா? ஒவ்வொருவரின் ரசனைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். மற்றவர்களின் விருப்பங்களை நாம் தடைபோட வேண்டும் என்பதில்லை. சதா ஒரு விடயத்தில் மூழ்காமல் குறித்த காலத்தில் செய்ய வேண்டியவைகளைச் செய்வதற்கு அனுமதி கொடுத்தேயாக வேண்டும். எமக்குச் சிரமமாக இருப்பின் அவர்கள் வழியில் செல்லாமல் விலகுதல் சிறப்பானதாகும்.
காலத்திற்கேற்றாற்போல் பக்குவமாக வாழப் பழக வேண்டும். சிறுவன் ஒருவன் தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக ஓய்வு வேளையில் சிறுவர் நிகழ்ச்சியைக் (கார்ட்டூன்) கண்டு களித்துக் கொண்டிருக்கின்றான். அந்த நேரம் அவனது அம்மா திடீரென தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிறுத்தினால் எப்படி அவனது மனோநிலை இருக்கும்?
102

ଅ}{u୬୩) ଅଷ୍ଟ୍ରି எனவே, நாம் ஓய்வு நேரத்தில் கிடைக்கும் சந்தோ ஷங்களைப் பறிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட முனைதல் தகாத காரியமாகும். இதேசமயம், இன்னும் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
9 வேலை நேரத்தில் வேலை
ஓய்வு நேரத்தில் ஓய்வு ஓய்வு நேரத்தில் இதமூட்டும் பொழுதுபோக்கு
மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றுக்கொன்று அவைகளைக் குழப்பிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டேயாக வேண்டும். பொழுதுபோக்கு காலங்களில் ஏற்படுகின்ற மன அமைதி எமக்குப் பல சிந்தனைகளை உருவாக்குகின்றது. ஓர் அமைதியான சூழலிலேயே ஒரு சிருஷ்டி கர்த்தா உருவாகின்றான். குழப்பமும், வேலைப் பளுவும் சூழ்ந்தால் எவனால் சிந்திக்க, மூளைக்கு அனுமதி வழங்க முடியும்? கிரகித்தல், உண்மைகளை ஏற்றுக் கொள்ளுதல், பரந்த ஞானத்தை உள்வாங்குதல் போன்ற விஷயங்களை நாம் அமைதியாக இருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும் நாம் இந்த நுட்பமான விடயங்களை சாதாரண வேலை நேரங்களில் உள்வாங்குதல் என்பது இலகுவானது அல்ல. பொழுதுபோக்குக்கான காலங்களை நாம் ஒதுக்கிக் கொள்ளும் போது, அந்தக் கால வேலைகள் சிந்திக்கும் சுரங்கத்தினுள் எம்மையிட்டுச் செல்கின்றன.
103

Page 54
பருத்திபூர் 04ல. ஆயிர்வரன்
உடல் உழைப்பு வேறு, மன உழைப்பு வேறு மனம் கூட உழைக்கின்றது. அறிவு பெறப்படுவது எங்ஙனம்? மூளை உழைக்காமல் அறிவு பெறப்படுமா? உடல் உழைப்பினால் சிந்தனையும் வளம் பெறுகின்றது. சிந்தனையினால் அறிவு முழுமையடைகிறது. அறிவு பெறப்படுகின்றது.
உடல் ஆரோக்கியம்மூலம் தான் மூளை உறுப்புக் கள் வளம் பெறுகின்றன. நல்ல சுகதேகியால் சீராகச் சிந்திக்க முடிகின்றது. நோய்வாய்ப்பட்டால் என்னதான் செய்ய முடிகின்றது? எனவேதான், பெரியோர்கள் சின்ன வயதில் சிரமப்பட்டு உழை, படி என்று எல்லாம் சொல்கின் றார்கள். உடலை வருத்தி உழைத்துப் பெற்ற நிம்மதி நிரந்த ரமானது அல்லவா? இதன் மூலம் பெற்ற அமைதியான நிலையில் பெற்ற அறிவு எவ்வளவு பவித்திரமானது.
மனிதனுக்கு உழைப்பும் தேவை. ஓய்வும் தேவை என்பது எவ்வளவு உண்மை தெரியுமா? இவை வாழ்வில் சுழன்று, சுழன்று வரும் சந்தோஷ சம்பவங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எமக்குப் பிடித்தமான விதத்தில் பொழுதுகள் கழிக்கப்பட வேண்டும். விருப்பமில்லா விடயத்தில் நாம் பொழுதைக் கழித்தால், அதனால் மன அழுத்தம்தான் மிஞ்சும். அத்துடன் ஏற்படும் பிரதிபலிப் பாகக் கோபம், எரிச்சல்தான் கூட வருகின்றது. இது தேவைதானா?
அத்துடன் எங்கள் பொழுதுபோக்கிற்காகப் பிறரைச் சிரமப்படுத்தவும் கூடாது. உங்களுக்கு சீட்டாட்டம் பிடிக் 104.

3 garogi கலாம். அதற்காக உமது நண்பரை வலுக்கட்டாய மாகச் சீட்டாட்டத்திற்கு அழைக்கலாமா? மனைவி, கணவன் இருபாலாரும் ஒத்த நோக்கில் ஓய்வு நேரத்தினைப் பயன்படுத்தல் நல்லதுதானே. எல்லோருமே விட்டுக் கொடுத்துப் பொழுதுபோக்கு நிகழ்வில் ஈடுபடுதல் சிறப்பானது. இல்லாவிட்டால் சந்தோஷமான ஓய்வு நேரம், மனப்பூசல் வேளையாக வேதனை நிறைந்துபோகும்.
ஒரு மேடையில் அல்லது ஒரு தொலைக்காட்சியில் ஒரு காட்சிதான் தோன்றும் அவரவர் தமக்கு இஷ்டமான தைத்தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கலாமா? மற்றவர்களிப்பில் நாம் மனம் நிறைவு பெற்றால் வாழ்வில் ஏது ஐயா குறை?
சந்தோஷகரமான வேளைகளில் வேறு தொல்லை தரும் விஷயங்களைப் புகுத்துதல் கூடாது குடும்பம் ஒன்று உல்லாசமாக பயணம் செய்கின்றது. வழியில் கணவனும் மனைவியும் பழைய மனஸ்தாபங்களை, தமது குடும்ப உறவுகளின் சரி பிழைகளைப் பற்றிக் கண்டபடி கதைக்க லாமா? இதனால் வந்த நோக்கமே திசை மாறுகின்றது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கால நேரம் உண்டு. சந்தோஷகரமான இடங்களில் எல்லா பிரச்சினைகளுமே கரைந்து போக வேண்டும். அவை நினைப்பூட்டும் கேந்திர நிலையங்களாக மாறிவிடக் கூடாது. சகதிக்குள்ளேயே மனதைச் சஞ்சரிக்க விட்டு விட்டு சஞ்சாரம் போனால் மட்டும் நிம்மதி கிட்டிவிடுமா?
105

Page 55
பருத்திழ் பல. ஆயிரவநாதன்
நண்பர்களிடையே பேதங்கள் இருந்தாலும்கூட மன அமைதியான நேரங்களில் தன் முனைப்பு நோக்கின்றி அவர்களைச் சந்தித்துப் பிரச்சினைகளைக் களைய முடியும். வேலைப்பளு, மன அழுத்தமான நேரங்களில் பேதங்கள், குரோதங்களைக் களைய முடியாது அல்லவா? பொது நிகழ்ச்சிகள், வைபவங்கள் எல்லாம் ஏன் நிகழ்த்தப் படுகின்றன என்பதை முதலில் உணர வேண்டும். பரஸ்பரம் அன்பு, ஆதரவு, நேயங்களை வளர்த்துக் கொள்ள இந்த நேரங்களை நாம் பயன்ப்டுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பொழுதுகளால் மனிதனுக்கு தனிமை, வெறுமை உணர்வுகள் கூடத் தவிர்க்கப்படுகின்றன அல்லவா?
உலக நடப்புக்கள், கலை, கலாசார அறிவுகளை பொது நிகழ்ச்சிகள் மூலம்தான் நாம் மிக இலகுவாகத் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்தக் கூத்து, கும்மாளம், பேச்சு எனக்குப் பிடிப்பதில்லை. நேர விரயம் தான் மிச்சம் என்றும் பலர் கூறுவதுண்டு என்றாலும் நல்ல நிகழ்ச்சிகளுக்குச் செல்வதால் ஒன்றும் கெட்டுப் போக மாட்டோம். நல்ல பெரியோர் உறவு, நல்ல நண்பர்களைப் புதிதாகக் கண்டுகொள்வதுடன் பல நாட்கள் காணாத பலரைக்கூட இந்த நேரங்களில் கண்டுகொள்ள முடியும்.
மனிதன் ஜடமாக வாழ்ந்து விட முடியாது. காலங்கள்
எமக்காக நிலையாய் தரித்திருப்பதில்லை. அது ஓடியபடியே
புதுப்புது வடிவங்களைப் படைத்தபடியே மேன்மேலும்
தேடியபடி ஓடும். எனவே நாம் செய்கின்ற செயல்களின் 106

சுயதரிசனம் பயன்பாடுகள், எதிர் விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாவோம். வாழ்க்கை, அலுப்பூட்டுவதாக அமைய நாம் இடம் கொடுத்தல் ஆகாது எமது பணிகளின் அளவு குன்றியிருந்தால் அதனை எவரிடத்தில் இருந்தும் கேட்டுக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். எமது பொழுதுகள் வீணாக்கப்படுகின்றனவா என்பதை அறிவதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.
நல்ல பொழுதுகளை அமைத்தவன் நலிந்து போன தில்லை. பொழுதுகளை கஷ்டப்பட்டுக் கழிக்கக் கூடாது. அவை குழப்பமின்றி இஷ்டமுடன் வீணடித்தலின்றி அமைய வேண்டும். நல்ல பொழுதுபோக்கு என்பதே வாழ்க்கை என்னும் விருட்சத்தில் கிளைகளை, உரமூட்டும் விழுது களை அமைக்கும் நன் முயற்சியாக அமைத்தலேயாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 12.03.2006
107

Page 56
இல்லங்கள் ஆலயங்களாக வேண்டும்
வழிபாடுகள் செய்யும் ஆலயங்கள் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியமானவையோ, அவ்வாறே வாழ்விடமான இல்லங்களும் புனிதாமாகப் பேணப்பட வேண்டும். பலர் இணைந்து வாழும் இல்லம் இறைவன் விரும்பும் வதிவிடம் தான். சின்ன வயதிலிருந்தே எமது பழக்க வழக்கம், ஒழுக்கம், பண்பாடுகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன. எல்லோருமே தத்தமது வீடுகளை, சுற்றுப்புறங்களை தூய்மை நிறைந்ததாக ஆக்கினால் இவர்கள் இருப்பிடம் இறைவன் கருவறை போல் நிறைந்து ஒளியூட்டும். இல்லங்கள் எல்லாமே அறப்பணியாற்றும் இடங்களாக மிளிர்ந்தால், அவை எல்லாமே ஆலயங்கள் போல் தூய்மைமிக்கதாய் ஆன்மாவிற்கு அமைதியூட்டும்.
ஆலயங்கள் எங்கள் வாழ்வோடு இணைந்துநின்று எமக்கு நிம்மதியைத் தருகின்றன. ஒவ்வொரு வருக்கும். தங்கள் சார்ந்த மதங்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் இன்றி யமையாதனவாகும்.
108
 
 
 
 
 
 

சுயதரிசனம் எங்கள் ஆன்மாவிற்கு அமைதியைத் தரும், அதனால், நல்லனயாவும் இனிதே நிகழ்ந்து விடும் என எண்ணியே ஆலயங்களுக்குச் செல்கின்றோம். ஆலயங் களின் புனிதத் தன்மையினை உணர்ந்து அங்கு மக்கள் சென்று வழிபாடு செய்யும் அதேவேளை, நோக்கம் புரியாது ஆன்ம துரோகம் செய்யும் ஆத்மாக்களை என்ன வென்பது?
வழிபாடு செய்யும் கோயில்கள் மனிதர்களுக்கு எவ்வளவு புனிதமானதோ, அவ்வாறே எமது வாழ்விடமாகிய இல்லங்களும் புனிதமாகப் பேணப்பட வேண்டிய ஒன் றாகும். "காயமே கோயில்" எனப்படும் போது, பலர் இணைந்த நல்ல இல்லம் இறைவன் விரும்பும் வதிவிடம் தான்.
தனி ஒரு மனிதனின் பண்பு, அவன் வாழும் வீட்டில் இருந்தே பிறக்கிறது."தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பார்கள். சின்ன வயதில் எமதுபழக்க வழக்கம், ஒழுக்கம் ஆகியன இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன.
எனவே எம்முடன் கூட இருக்கின்றவர்கள், தங்களை நல்ல முறையில் வளப்படுத்தாமல் தான் தோன்றித்தன மாக வாழக்கூடாது. தமக்கு சார்பாகவே சட்டங்கள் இயற்ற
(LDLQULIFT5 .
எமக்குப் பின்னால் எதிர்காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்து கொள்ள புத்தம் புதிய
109

Page 57
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் வார்ப்புக்கள் எங்களை நாடி நிற்கின்றன, நீங்கள் சொல் வதை இன்று செய்து கொண்டிருப்பவற்றை அவர்கள் மிக உன்னிப்பாகக் கவனித்த வண்ணமுள்ளனர்.
எங்களையே நம்பி எங்கள் சொற்களையே தினம், தினம் செவிமடுக்கும் இந்த புது மலர்களுக்கு இயல்பா கவே உள்ள அழகு, வாசனைகளைப் பெரியவர்கள் களங்
கப்படுத்தலாகாது.
அவர்களுக்கு நல்ல காட்சிகளையே காட்சிப் படுத்துங்கள். நல்ல சொற்களை, நயம்மிகு கருத்துக்களை மட்டுமே ஊட்டுதல் எமது கடமை. வெள்ளை உள்ளங்க
ளுக்கு வெளிச்சமூட்டுதல் எமது பணி.
ஆன்மாவை வயப்படுத்தி, இறைவனோடு ஐக்கியப் படுத்துகின்ற இடமாகக் கோயிலை நாம் கருதுகின்றோம். ஆனால் வீடுதான் எமது ஆரம்ப பல்கலைக்கழகமாக, இளம் வயதிலேயே நல்ல செயற்திறனைக் கூர்மையாக் குவதற்கும் மிகவும் பழக்கப்படும் இடமாகவுள்ளது.
எமது சின்னஞ் சிறிய வீடு, பரந்த உலகை அறிய, புது உலகை கிருஷ்டிக்க உதவும் ஒரு "கேந்திர நிலையம்" என்றால் அது மிகையல்ல. தாய், தந்தையர் எனும் ஆசான்களே முதன்மைக் குருவாக விளங்குகின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தி முதலிடம் கொடுத்து முதன்மைப்படுத்திய முன்னோர்
110

கள், எமது குருவுக்கு முன்னோடிகளாகத் தாய், தந்தையை வைத்துக் கெளரவப்படுத்தினர்.
உலகைக் காட்டிய முதல் ஆசான்கள் பெற்றேர்கள் தான். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமது அருஞ் செல்வங்கள் தவழும் இடத்தைப் புனிதமாகப் பேண வேண்டியது ஒரு மாபெரும் பொறுப்பாகும்.
நற்பிரஜைகளை உருவாக்குதலே மாபெரும் தவம், கோயிலுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்கின்றோம். எமக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கடவுளிடம் உரிமையுடன் எதை எதையோ கேட்ட வண்ணம் இருக்கின் றோம்.
எல்லோரும் தத்தமது வீடுகளில் மட்டுமின்றித் தங்களைச் சூழ்ந்துள்ள சூழல்களில் வாழ்ந்து கொண்டி ருக்கும் ஜீவன்களின் நலன்களில் அக்கறை கொண்டாலே, அவர்கள் "இருப்பிடம்" இறைவன் "கருவறை" போல் நிறைந்த ஒளியூட்டி நிற்கும்.
நல்ல முறையில் வாழ்ந்து காட்டாதவர்களால், எப்படி நற்பிரஜைகளை உருவாக்க முடியம்? சில பெற்றோர் களைப் பார்க்கும் போது, அவர்களிடம் இருந்து விலகி வாழ்வதே, பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு உகந்ததுபோல் தோன்றுகின்றது.
111

Page 58
பருத்திபூர் 040, 2யிர்வரர்
இயல்பாகவே நற் குணமுடைய பிள்ளைகளை பெற்றோரில் சிலர் தவறான வழியில் கொண்டு செல்கின்றனர். வசதி வாய்ப்புகள் உள்ள பலர், தமது பிள்ளைகள் மிக எளிமையாக வாழ அனுமதிப்பதில்லை.
மேலும், பிறருடன் பிள்ளைகளை சகஜமாக பழக விடுவதில்லை. மேலாதிக்க உணர்வினையூட்டுவார்கள். எளிமையானவர்களை, இழிந்தவர்கள், தங்களிலும் அந் தஸ்து குறைந்தவர்கள் எனச் சொல்லிச் சொல்லியே 66Tr"List raisir.
பரந்த மனப்பாண்மையுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டியது பெற்றோரின் நற் பண்பாக அமைதல் வேண்டும். தெய்வ பக்தி, பெரியோர்களிடம் பணிவாகப் பழகுதல், இன்சொல் போன்ற நற்பழக்கங்களை பக்குவமாகக் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கோயில்களில் அடியார்களுக்கு பிரசாதம், உணவு அளித்தல் போன்ற தர்ம காரியங்கள் நடப்பது நாம் அறிந்த ஒன்றேயாம். ஈகை, எளியோர்க்கு உதவுதல்களை எம் முன்னோர்கள் ஆலயங்களினூடாக செய்தனர். இப்பணி, இல்லங்களிலும் செய்யப்படல் வேண்டும்.
இத்தகைய அறப்பணிகளைச் செய்வதால்
உண்டாகும் திருப்தி எல்லையற்றது. ஏழைகளுக்கு உண
வளித்தல் அவர்களின் கல்விப் பணிக்காக, இல்லறத்தார்,
12

தயதரிசனம் தங்களால் இயன்றளவு உதவுதலால், சமூகப்பணிகளைக் கூட தாம் வாழுகின்ற மனைகள் மூலம் செய்வதனால், இவை ஆலயப்பணி போல் சாலச் சிறந்தனவல்லவோ!
வீணான ஆடம்பரங்களுக்கும், பகட்டான வாழ்க்கை முறைக்குள்ளும் அமிழ்ந்து விடாது செய் கருமங்களை நேரிய வழியில் செய்தால் அதுவே இறை பணியாகி விடும். இப்பொழுதினில் செய்வதே மேல். அடுத்துவரும் காலத்திற்காக ஒத்தி வைக்கும் செயல் வீண்.
இந்த உலகில் ஒருவருமே தமக்கு எவருமே இல்லை என்ற உணர்வில் வாழக் கூடாது. "அதோ இந்த வீடு உள்ளது. இவர்கள் எமக்கு ஆறுதல் அளிப்பார்கள்" எனுமாறு நம்பிக்கை ஊட்டுக. புனிதமாக்குக! எல்லோரது இல்லங்களுமே அனைவருக்கும் ஆதரவு நல்குவனவாக இருப்பின் அங்குள்ள அங்கத்தவர்களுக்கும் கடவுள் பேராத ரவு வழங்கியபடி இருப்பார். உங்கள் இல்லம் கோயிலாகி விடும்.
தினகரன் வார மஞ்சரி 2002, 2011
13

Page 59
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
வேற்றுமை உணர்வு
வேற்றுமையால் ஏதுபயன்? அதனால் மமதை மிகுதியாகும்
பிறர் நலன் பேணுவதே முற்றிலும் நன்று. உயர்வு தாழ்வு எண்ணத்தால் மனம் தாழ்வுறும். வியத்தகு வாழ்விற்கு மயக்கும் பேதம் எதற்கு?
வேற்றுமை உணர்வு மிகையாகும் போது மமதை கூடவே கோலோச்ச ஆரம்பித்து விடுகிறது.
என்னை விட உயர்ந்தவன் எவன் எனும் அகங்காரம் உருக் கொள்ளும் போது தனக்குத் தானே வீழ்ச்சிக்கு வித்திட்டுக் கொள்கின்றான். வேற்றுமையால் பயன் இல்லை, துயர் தான்! ஆயினும் ஆண்டவர் எல்லா உயிர்
14
 

சுயதரிசனம் களையும் ஏன் வெவ்வேறாகப் படைத்தான்? அப்படியாயின் அவர் உருவாக்கிய உருக்கள் பேதத்தைக் காட்டவா, மோதிக் கொள்ளவா என எண்ணினால் அது சரியா?
கடவுள் படைப்பில் ஐயம் கொள்வது எமது சித்தத் திற்குத் தேவையற்றது. ஆராயப் பொருத்தமற்றது. எல்லை யற்ற இறையையும் மனித வலைக்குள் அடக்க முடியுமா? எல்லா உயிர்களையும் ஒரே மாதிரிப் படைத்தால் என்ன நடக்கும்? சற்று சிந்திப்போம்!
சகல உயிர்களையும் மனிதர்களாகவே படைத்து, வேறு எந்த விருட்சங்களோ, அல்லது விலங்குகள், கடல் வாழ் ஐந்துக்கள், சிற்றுயிர்கள் இல்லாது விட்டால், நாம் ஜீவிதம் செய்வது எப்படிச் சாத்தியமாகும்? உண்ண உணவு உறைவிடம் எது தான் கிடைக்கும்? ஏனெனில் மனிதனைத் தவிர எதுவுமே படைக்கப்பட்டிருக்காதே.
அதே போல் வெறும் தாவரங்கள், மிருகங்களை அல்லது வேறு உயிரினங்களைத் தனித் தனியே, முழுதாகப் படைத்து விட்டால் எந்தக் காரியங்கள் தான் நடக்கும்?
எனவே, கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றிலும் நாம் புரிந்து கொள்ள வியலாத பல்கோடி அர்த்தங்கள் மறை பொருளாகப் புதைந்திருக்கும்.
115

Page 60
பருத்திபூர் அல. ஆயிரவநாதன்
உருவங்களில், செயல்களில் அவற்றின் அளவுகளில் விஸ்தீரணத்தில், வண்ணங்களில் எனப் பலவாறாக எமது கண்ணுக்குப் புலனாயும் புலனாகாதவாறும் வேறுபாடாகப் படைக்கப்படுகின்றன. இவற்றின் காரண காரியங்களை எவருமே பூரணமாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் எல்லாமே , எதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பது மட்டும் உண்மை.
எனவே நாம் இறை படைப்பில் வேற்றுமைகளைப் பார்த்து, அவற்றை ஒதுக்குவதும் , வெறுப்பது தகாது.
மனித இனம் ஒன்றுக் கொன்று உருவில் சிறிது மாற்றமாக இருப்பினும், முழுமையான தோற்றம் ஒன்றே. இரண்டு கைகள், கால்கள், ஒரு சிரசு மாதிரியானவைகளே.
ஆயினும்,
நடத்தைகள் பலவிதம். மனிதன் அவனாகவே உருவாக்கிய வேற்றுமைகளோ பல்லாயிரம், நாடுகள் பல, அங்கு வாழும் மக்களுக்குள்ளும் பேதம் பல, இனம்,சாதி, சமயம், மொழி, கலாசரம் என எல்லமே வெவ்வேறானவை. ஒரே எண்ணங்களுடன் எல்லோரும் வாழ்கின்றார்களா? அதுவும் இல்லை.
ஒவ்வொரு பிரஜையும் தனக்குரிய மொழி, சாதி, சமய கலாசாரமே மேலானது என எண்ணிக் கொள் கின்றார்கள்.
16

அது மட்டுமல்ல வெளியே ஒன்றே குலம்’ எமக்கு ஏது பேதம் என்பார்கள். ஆனால் தம்மோடு இணைந்து கொண்டவர்களிடமே “எங்கள் முன் பேச இவன் யார்?" எனக் கேட்பார்கள்.
தங்கள் சமூகமே பெரிது என்று பேசுபவர்கள், தனிப் பட்ட முறையில், தமது குடும்பமே மிகவும் உயர்ந்தது, செல்வாக்குள்ளது எனப்பேதம் காட்டுவார்கள்.
விரிந்த தேசத்தில் பல முன்னேற்றங்கள் பன்மடங்கு பெருகினாலும், தமக்குள் வேற்றுமைகளைப் பற்றி நிற்பதில் மனிதன் பிடிவாதமாகவே இருக்கிறான்.
எல்லாமே எனக்கு, எனது என்கின்ற தான் சார்ந்த எண்ணங்களை முதன்மைப்படுத்துவதை விடுத்துப் பொதுமைப் பண்பில் தன்னை இணைக்கத் தயங்கு கின்றான் மனிதன்.
ஆத்மீக நேயம் பற்றி விலாவாரியாக நாம் பேசுகின் றோம். ஆனால் அது சொல்லும் அன்பின் இறுக்கத்தைப் புரிந்து கொள்ள மறுக்கின்றோம். இது மனிதன் ஆண் டாண்டு காலமாகவே தனது பரம்பரை வாயிலாக அமுக்கி, அதனைப் பேணிக் காத்த அதீத பற்றுதலின் அடையாள மாகிவிட்டது.
17

Page 61
பருத்திழ் பல. அவிஷாதம்
எல்லாம்கடந்த நிலையில், "ஒன்றுமே தேவை யில்லை” எனச் சொல்லும் சாமிமார்களும், எல்லா பற்றுதல்களையும் குவித்து அத்துடன் சொத்து சுகங் களையும், படை பட்டாளம் போன்ற பக்த கோடிகளையும் வைத்துக்கொண்டு பற்றுதல் வேண்டாம் என பறை சாற்றுகின்றார்கள். என்ன கொடிய நடிப்பு இது
எனவே பரந்த மனத்தை நாம் பெற்றிட நாமே எம்மை பக்குவப்படுத்தியாக வேண்டும். நாம் கற்கும் அறப் போதனைகளில் ஒரு வரியையாவது செயல் மூலம் காட்டும் மனவலிமையினை தருமாறு இறைவனிடம் கேட்க வேண்டும்.
நாளைய நல்ல விடியலை இன்றைய நல்ல செயல்களே உருவாக்கும்.எனவே என்றும் பேதமையில்லா அன்பு பாராட்டும் குணங்களே எதிர் காலத்தில் சகல உயிர்களையும் எம்மை நோக்கி அரவணைத்திட வழிகோலும்,
எமக்குள் ஓர் உருவம் நல்லதையே சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதை நாம் கேட்கத் தயாராக இல்லை. உபதேசங்கள் கேட்கப் பிடித்தமானதாக இருக்கின்றன. ஆனால் கடைப்பிடிக்கச் சந்தர்ப்பங்களைத் தட்டிக் கழிக்கின்றோம்.
18

ថាហ្វ្រវវិទ្យយឺ சில சமயம் அவை எமக்குப் பிடிப்பதுமில்லை. எமக்குள் இருக்கும் அகங்காரம் ஒன்றைக் கேட்கும். அதனை மறுதலித்தும் காரியமாற்றும்
“ஒற்றமையாக வாழ்வாய் அது நல்லதற்கே"என்று எமக்குப் புரியாதா? ஆனால் வலியற்றவனுடன் மோதிப் பழகி,அவனுடன் தோழமை கொள்வதைத் தவிர்க்கின்றோம்.
சகல துன்பங்களுக்கும் ஏக காரணம் மனிதன் ஒற்று மையாக இருக்கப் பிரியப்படாமல் இருப்பதுதான். வேற்று மைகளால் விளைவது எதுவுமேயில்லை. சாத்தியமான நல்ல காரியங்களையும் குரோதம் குலைத்துவிடும்.
எவரும் தங்கள் தனிப்பட்ட தனித்துவங்களை இழக்க முடியாது. வேறுபட்ட மாந்தர்களுடன் இணங்குவதால் தனித் துவங்களை நாம் இழங்துவிடுவோம் என அச்சப்படத் தேவையில்லை, இறுக்கமான அன்பு தனித்துவத்தையும் பாதுகாக்கும். அது வேற்றுமையில் ஒற்றுமையையும் உண்டுபண்ணவல்லதுமாகும்.
தினகரன் ஞாயிறு மஞ்சரி திகதி 11-09-2011
119

Page 62
மருத்திபூர் 04ல. ஆயிரவநாதர்
எச்சரிக்கை உணர்வு
எச்சரிக்கையின்மையால் அச்சமூட்டும் விளைவு வரும். நிச்சயப்படுத்தாமல் கருமங்கள் செய்ய வேண்டாம். இச்சைப்பட்டு ஆராயாமல் கெட்டு, நொந்து இச்சமூகத்தில் சாதிக்க முடியாது, யோசித்து இயங்கு
மேலதிக அவாவும், பொறுமை இன்மையும் எச்சரிக்கை உணர்வை வலுவிழக்கச் செய்து விடும். எதனை யும் உடன் பெற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்கள், பின் விளைவுகளைப் பற்றி எண்ணிக் கொள்ளக் கால அவகாச த்தை தமது மனதிடம் கோருவதேயில்லை.
எச்சரிக்கையின்மையால் செய் கருமம் பாழாகக்
கூடும். மனம் சோர்வடைந்து போகும். சின்னஞ் சிறிய
20
 

தயதரிசனம் ஜந்துக்கள் கூட தம்மைப் பாதுகாத்துக்கொள்ள சர்வ ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றன.
கரப்பான் பூச்சியை துரத்தியடிக்க எம்மால் பல சமயம் முடிவதில்லை. சாதுரியமாக படுவேகமாக அவை ஓடிச் சந்து பொந்து இடுக்குகளில் நுழைந்து கொள்கின்றன. அவை எந்நேரமும் தமக்கு எதுவும் நிகழும் என்பதால் தம்மை சுதாகரித்த நிலையிலேயே வாழ்ந்து காட்டுகின்றன. இதுவும் இறைசெயல்.
ஆனால் ஆறறிவு மானுடன் என்ன செய்கின்றான்? எந்த வித ஆய்வும் இன்றி கஷ்டப்பட்டு உழைத்த காசை, ஊர் பேர் தெரியாத முகவரியற்றவர்களிடம் முதலீடு செய்கி ன்றான். e
வெளிநாடு செல்ல மிகக் குறைந்த கட்டணம் என எவர் சொன்னாலும் அவர்கள் பின்னே ஓடிக்காசையும், காலத்தையும் கரைத்த மனுசர்கள் எத்தனை எத்தனை பேர்? சும்மா இரந்து, ஏய்த்துப் பிழைக்கும் சமூக விரோதி களுக்கு நிதியுதவி செய்வதே ஏமாளிகளின் தலையாய வேலையாகி விட்டது மிகப் பெரும் புத்திசாலிகளாகத் தங்களை வெளியே காட்டிக் கொள்பவர்களே அடிக்கடி ஏமாந்துபோகின்றார்கள்.
ஆனால் தற்காலத்து சிறுசுகளை இலகுவில்
ஏமாற்றி விட முடியாது. அவர்கள் எதற்கும் எச்சரிக்கையுடன் 121

Page 63
ܠܢ
பருத்திபூர் பல. ஆயிரவருதஷ் இருக்கின்றார்கள். பச்சாதாபமாகப் பேசினாலும்
இலகுவில் மசிந்து விடமாட்டார்கள். எச்சரிக்கை உணர்வு பெரியவர்களை விடக் குழந்தைகளிடமே அதிகமாக இருக்க வேண்டியுள்ளது.
குழந்தைகள் ஒன்றாகப் பந்து விளையாடிக் கொண் டிருந்தனர். விளையாட்டில் குழந்தைகள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் பந்தை வீசியடித்து விளையாடும்போது, பந்து மைதானத்தினருகே உள்ள வீட்டினுள் விழுந்து விட்டது. பந்து விழுந்த திசையை நோக்கி ஓடிய குழந்தை பந்து விழுந்த வீட்டின் முன்னே போன போது வீட்டினுள் இருந்த ஒருவர் பந்தை எடுத்தபடி வெளியே வந்தார். குழந்தையைக் கண்டதும் விடயத்தைப் புரிந்து கொண்டார். குழந்தையை நோக்கி "பந்து வேண்டுமா? அப்படியானால் இங்கே. வா. இந்தப் பந்தை உனக்குத் தந்து விடுகின்றேன்" என்றார். அவர் இப்படிச் சொன்னதுமே குழந்தை அவரைக் குறும்புடன் உற்று நோக்கியது "மாட்டேன் இந்தப்பந்தும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் வேண்டாம் போ.போ." என்றவாறே ஓடியே போய் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டது.
அந்நியர்கள் என்றாலே தங்களைச் குழந்தைகள் சுதாகரித்துக் கொள்கின்றனர், அந்நியர்கள் என்ற உணர்வு வந்ததுமே அவர்களுடன் உடனே இணைய மறுக்கின் றனர்.ஆனால் வயதுவந்தவர்கள் என்ன செய்கின்றார்கள்? எவரையும் உடனே நம்பிவிடுகின்றார்கள்.
122

சுயதரிசனம் பாடுபட்டு வளர்த்துப் படிப்பித்து ஆளாக்கிய செல்வ மகள், யாரோ, எவனோ, ஊர் பெயர் தெரியாத வனைக் கண்டதுமே காதல் கொண்டு அடுத்த சில நாட்களிலேயே வீட்டை விட்டேகி விடுவதும், பின்னர் அவனைத் திருமணம் செய்து பின்னர் ஏமாற்றப்பட்டுச் சிக்கிச் சீரழிந்த நாராகி முடிவில் நைந்து, நொந்து பெற்றோரிடமே சரணடைவதும் நாம் கேள்விப்படுகின்ற சில காட்சிகளில் ஒன்று தான்.
எதையுமே சிந்திக்காது ஆசைப்படுவதன் பின் விளைவுகளை உணராத பலர் அதனை முன் வினைப் பயன் என்று வேறு சமாதானம் சொல்லுவார்கள். எந்தத் தவறையும் ஒப்புக் கொள்வதே தங்கள் தன்மானத்திற்கே இழுக்கு என எண்ணபவர்கள், தங்கள் மனத்தையே மறுதலிக்க வைக்க எண்ணும் குறுமதியாளர்கள்.
பெறுமதி மிக்க காலத்தினை சிறு மணித்துளியின் கவனக்குறைவினால் விரயம் செய்வது வருத்தத்திற்குரியது. நெருக்கடிகளைக் காரணம் காட்டுபவர்கள், பிறர் நெருக்கு தல்களுக்குள் தள்ளப்படுபவர்கள், எதையும் சிந்திக்க முடியாத நிலைக்குள் உட்படுகின்றார்கள்.
எல்லா நிலையிலும் மனத்தை ஒரு நிலையில் வைக்க இயலாமல் இருக்கின்றது. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எதையும் பேசலாம், ஆனால் ஒருவர் மனம் சலனப்படும் போது சோதனைகளை வெல்வது எப்படி? இதுவே பெரிய வினாவாக உள்ளது.
123

Page 64
கருத்திஆர் பல. ஆயிரவநாதர்
எங்களை நாம் என்றும் ஸ்திர நிலையிலேயே வைத்துக் கொண்டேயாக வேண்டும். எல்லோரையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதில்லை ஆனால் கேட்க வேண்டிய உபதேசங்கள்,அறிவரைகளை எடுத்த எடுப்பில் நிராகரிக்கவும் கூடாது.
உண்மையான நோக்குடைய உங்களை நேசிக்கும் அனுபவம் மிகுந்தவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். ஆனால் அனுகூலம் தருபனவற்றைத் தெரிவு செய்ய அறிவிற்கு வேலை கொடுப்பீர்களாக உங்களால் முடிந்தவரை உங்கள் பலத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்க் கையின் பாதைகளை நீங்களே சமைப்பீர்களாக
எங்கள் வாழ்க்கைக்கு நாங்களே தலைமகன் என்பதனை எக்கணமும் மறக்கலாகாது. உங்கள் வாழ்வின் தலைமைத்துவத்தை நீங்களே நிராகரிக்க உங்களுக்கு நீங்களே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டாம், நல்லன வற்றில் தீவிரமாக இருங்கள், தீயனவற்றில் எச்சரிக்கை. இப்படி இருந்தால் ஏது பயம்?
தினகரன் வாரமஞ்சளி
04-09-2011
124

தயதரிசனம்
தன்னை ஆட்சிப்படுத்தல்
" தன்னை நிலைப்படுத்தினால்
உன்னில் பலம் பெருகும்! மனம் திண்மையானால்
என்ன துன்பமும் எய்திடாது!
தங்களது பலத்தை வளர்ப்பதை விடுத்து அதனைக் கரைப்பதிலேயே முனைப்பாக இருக்கும் பிரகிருதிகள், சுருதியில்லா சங்கீதம் போல் வாழ்வின் வளத்தைக் சுருக்கிச் சீரழிக்கின்றார்கள்.
எல்லா வசதிகளையும் தம்மிடம் வைத்துக் கொண்டு, இம்மியளவும் சந்தோஷமில்லாமல், பயந்து நெளிந்து ஏன் இவர்கள் வாழ்கின்றார்கள்?
125

Page 65
பருத்திஆர் பல. ஐவிரலுருதஷ்
சுய பலத்தில் நம்பிக்கை கொள்ளாது, பிறர் அறிவை மட்டும் அல்லது அவர்களின் துணையை மட்டும் பெரிதென எண்ணித் தங்களை நம்பாமல் ஜீவனம் செய்வதில் எப்படித் திருப்திப்பட்டு வாழ இயலும்?
கடையில் போய் பொருட்களைத் தெரிந்து எடுக்க, பேரூந்தில் தனித்துப் பயணம் செய்ய, பத்துப் பேருடன் நிமிர்ந்து பேசத்தைரியம் இல்லாத நபர்களை நீங்கள் கண்டதில்லையா?
எதற்கெடுத்தாலும், தனது மனைவியிடம் கேட்க வேண்டும் எனச் சொல்பவர்கள், தனது நண்பர்களிடம் கேட்டுச் சொல்கின்றேன் என்பவர்கள் ஒரு வினாடிகூட, தங்களது கருத்து என்ன எனத் தங்களுடன் உள் நிற்கும் மூளையிடம் கேட்பதாயில்லை
பிறரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது என்ப தில்லை. பிறர் கருத்தையும் உள்வாங்கி, தனது அறிவுடன் பகுப்பாய்வு செய்து அதனைச் செயலுருவில் கொணராது எடுத்த எடுப்பிலேயே ஒரே பக்கமாகப் பிறர் அறிவுடன் சார்ந்திருப்பது சரிதானா?
தன் புத்தியை நம்பாதவர்கள் முதலில் ஒன்றினை
உணர்தல் வேண்டும். எம்முன்னே இருக்கும் நபர்கள்
எல்லோருமே எங்கள் மீது அக்கறையுள்ளவர்களா?
இவர்களில் சிலர் மறை முகமான எதிரிகளாகவும்
126

a giferoti இருக்கலாம், அல்லாது விடின் உலக ஞானத்தில் போதிய அனுபவம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இவை பற்றி எந்தவித எச்சரிக்கை உணர்வின்றி இயங்குதல் ஆபத்தான தேயாம்.
நீங்கள் செய்யும் காரியங்களின் விபரீதத்தை உங்க ளுக்கு ஒவ்வாதவர்கள் ரசிப்பார்கள். உங்கள் பிரச்சினை களை அவர்கள் விருப்புடன் செவிமடுப்பதனால் அவை ஆறுதலாகப் படலாம். இதுவும் ஓர் அறிவு மயக்க நிலை என்பதைக் மறந்துவிடக் கூடாது.
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகச் செயற்பட்டால் உங்களது பிரச்சனைகளுக்கான தீர்வை எட்டுவதில் தெளிவு காண்பதுடன் சுய அறிவின் ஆதிக்க சிந்தனையும் வலுப்படும். ஆனால் இதில் ஆணவச் செருக்கு உள்நுழைய இடமளித்தலாகாது பெரியோர் சகவாசம், நல்ல அறிவுசார் நூல்களைப் படித்துணர்தல்,ஒழுக்கமான நண்பர்களுடன் பகை கொள்ளாதிருத்தல் போன்ற இக் குறிப்புக்களை நோக்குக. அத்துடன்,
மமதையின்றி பலதரப்பினருடனும் பழகுதல்
சமூகத்தின் மீதான அக்கறை.
9 கல்வி, பொருளாதார வசதிகள் கிடைத்தமையினால்,
127

Page 66
பருத்திபூர் அல. ஆயிரவருதஷ்
தமது முடிவைப் பிறர் ஏற்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை எக்கணமும் கொள்ளாதிருத்தல்.
இவற்றை எமது உள்ளத்தில் நிரந்தரமாக நிறுத்தி னால் சுய ஆளுமை, சுய அறிவுடனான நம்பிக்கை அதிகரிக்கும்
சுய அறிவு விருத்திற்குப் படித்தால் மட்டும் போதாது. இன்று கல்வி கற்ற பலரும் துணிச்சலுடன் செயல் புரிகின்றார்களா என்பதே சந்தேகத்திற்குரியது.
பல்வேறு பிரச்சினைகளுடன் மோதுண்டு மோது ண்டு அதிலிருந்து மீண்டு புறப்படும் போதே மனிதன் எழுச்சி கொண்ட வீரனாக, அனுபவ ஆளுமையுடன் எழுகின்றான்.
புத்தகத்தை மட்டும் அசை போடுவதால் மனதின் விசை அதிகரிக்காது. துன்பங்களையும் ஏற்று இடர்களை தமது அனுபவ அறிவால் எறிந்தாலே மற்றவர்களுக்கு உதவி நல்கும் திறன் கை கூடும்.
ஒன்றுமே தெரியாது, துன்பமே புரியாது, இன்பங்க ளின் சூட்சுமம் உணராது விடின் எது பற்றியும் ஒருவர் பெருமை கொள்ளுதல் தகாது.
சாதனைகளைப் படைக்க பெரிய பெரிய பிரச்சினை
128
 

தயதரிசனம் களே பேருதவி புரிகின்றன. மேலும் ஒருவன் சுயமாகப் பெற்ற சாதனைகளுடன் தான் மட்டும் பயனடையாது, அது ஒரு சமூகம் அல்லது தான் சார்ந்த உலகிற்கான வெற்றி எனக் கருதினால் தன் முனைப்பு விலகி மேலதிக ஆளுமைகளை அவன் தனக்குள் உருவாக்குபவனாகிறான்.
எங்களது எந்த ஒரு காரிய சித்திக்கும் மூலவேர் எங்கள் சுயபலம்தான். குழந்தையாக இருக்கம் வரை தாய் தனது குழந்தைக்குப் பாலுட்டிப் பின்னர் படிப்படியாக உணவு ஊட்டுவாள். வயது அதிகரிக்க அதிகரிக்க அவனே வளர்ந்து தன்னையும்,தாய் தந்தையாரையும், சமூகத்தை யும் போஷிக்கும் வல்லவனாகின்றான். இது உலக நியதி.
சோம்பல், அறியாமையுடன் வாழ்ந்தால் பலத்தை எப்படிப் பற்றிப்பிடிக்க முடியும்? முதலில் எம்மை நாம் ஆட்சிப்படுத்துவோம். மனிதன் தனது வளர்ச்சியை மட்டுமே நோக்க வேண்டுமேயொழிய, தளர்ச்சிக்கான வழியை அல்ல.
நல்ல வழியில், தீரமுடன் வாழ்வதுமுடியாத செயலு மல்ல, எங்களை நாம் அங்கீகரிப்போமாக! இதனால் சிந்தனை, செயல் முன்னேற்றமடையும்.
தினகரன் வார மஞ்சரி 16-10-2011
129

Page 67
பருத்திபூர் பால. ஆயிரவருதல்
பொய்மையாளர்கள்
பொய்மையாளர்கள் முன் போக வேண்டாம். வாய்மைச் சிறப்பின்றி ஏது நல் வாழ்வு? தேய்ந்து உருக்குலையாமல் நாம், வான் மேல் உயர்வதே நீதியான வாழ்வு
பொய் பேசுவதையே பிரதான கொள்கையாகக் கொண்டுள்ள பொய்மையாளர்கள் சமூக நோயாளர்களா கவே கருதப்படுவர்.
உடல் நோயிலும் கொடிய உள நோயைத் தாராள மாகக் கொடுக்கும் கொடியவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு
130
 
 

ଅigମ୍ପିଅof சந்தர்ப்பத்தில் சிற்சில பொய்களைப் பேசுவது தவிர்க்க முடியாத வொன்றாக உள்ளதெனச் சொல்லுகின்றார்கள்.
ஆனால் எந்த விதமான கெடுதல்களையும் செய்யாத மனிதரிடம் பொய் பேசியே மோதி வேடிக்கை பார்க்கும் நண்பர்கள் செயலை என்ன என்பது?
பொய்யுரைக்காமல் எவரும் வாழ முடியாதா? உண்மை பேசுவது அவ்வளவு கஷ்டமாகவா இருக்கின்றது?
வாய்மை பற்றி வாய் கிழியக் கத்தும் பல ஆசாட பூதிகள், அது, தனக்காக அல்ல, பிறர் பொருட்டேயாகும் என்பது போலவே நடந்து கொள்கின்றார்கள்
ஒருவர் பொய் பேசாமல் இருப்பது போல மேலான செய்கை பிறிதில்லை.
அதே சமயம் ஒருவர் பேசுவது உண்மையானதா, அல்லது திரிபுபட்டதா என அறியாமல் விடுவதே சுத்த அறிவீனமானதேயாம்.
உண்மையாக வாழும் நல்லவர்கள்கூட எவரையும் களங்கமின்றி நோக்குவதால் சில சமயம் ஏமாளியாகி விடுவதுமுண்டு.
நல்லவர்களாக எம்முன் ஜீவிக்கும் எல்லோருமே
131

Page 68
பருத்தியூர் பல. அவிழ்வருதல் வல்லவர்களாகவும் புல்லர்களிடமிருந்து தங்களைக்
காப்பாற்றிக் கொள்ளும் திறமையடையோராகவும் இருக்க வேண்டும்.
இன்று நல்ல ஜீவன்கள் கூட கண்டவர் கூற்றையும் நம்பிப்படும் அவஸ்தைகளை நாம் கண்டு கொண்டிரு க்கின்றோம். கொடும் கூற்றுவனை விடக் கொடியவர்கள் தான் பொய்மையாளர்கள், வாய்மை பற்றியே தெரிந்து கொள்ளாதவர்கள் செய்யும் செயலில் வறியவர்கள் என்றால் அது மிகையல்ல!
கொடிய வார்த்தைகளைத் செந்தணலாக உதிர்வ தும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சுய நல நோக்குடன் வார்த்தை ஜாலம் புரிவதும் வாய்மைக்கு விரோதமானவை.
வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளைக் கண்டறிய வேண்டும் என்று பெரியவர்கள் புகல்வார்கள். ஆனால் துன்மார்ககள்கள் நெளிவு, சுழிவு என்பதற்கு வேறுவிதமான அர்த்தங்களையே கற்பித்து விடுகின்றார்கள்.
செய்யும் அடாவடித்தனங்களில் இருந்து சட்டத்தின் ஒட்டைகள் வாயிலாக தப்பிப்பது எப்படி? சனங்களை ஏமாற்றும் அதேவேளை அதுவே சரியான கொள்கை என அவர்களை நம்பச் செய்வது போன்ற கைங்கரியங்களை எவ்விதம் புகுந்து விளையாடிச் செய்வது என்ற கலை தான் நெளிவு, சுழிவு என்பதன் முழு அர்த்தம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
132

கயதுரிசனம் பொய்யைச் சரளமாகப் பேசினால் சகல துஷ்டத்த னங்களும் கூட வரும். ஒரு பொய் சொன்னால் ஓராயிரம் துன்பங்களைச் சுமக்க வேண்டிவரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல் என்பது சொன்ன பொய்யான சொற்களைத் தொடர்ந்து காப்பாற்றியேயாக வேண்டுமென்பதற்காகவே என முடிவுறா நிலையில் மாறுபாடாகப் பேசித் தீர்க்கின்றார்கள்.
மகிழ்ச்சி நிரந்தரமாக அமைந்திட வேண்டும் என எண்ணுபவர்கள் தவறான வாழ்க்கையைத் தேடி ஒட மாட்டார்கள். எதாவது சின்னச் சின்ன பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு மனம்மறுத்திட, உதடு பிசகி தவறான வழியில் நடந்தால், இறுதியில் எதிர்பார்க்கும் சந்தோஷங்கள் எட்டாக்கனியாகிவிடும்.
நல்லவை நடந்திடவும் பொறுமை காத்திட வேண்டும். துன்பங்கள் துரத்துகின்றன எனவே அதிலிருந்து விலகிட பொய்யில் சரணடைவதில், என்ன நியாயம் இருக்கின்றது ஐயா?
மகிழ்ச்சிக்கான வழி வாய்மையுடன் இணைந்ததே என்பதைப் புரிந்தால் எல்லோருமே எம்மை நேசிப்பதுடன் உலகமே எமக்கு இன்பமயமாகிப் போய்விடுமன்றோ!
மானுட நேயம் என்பது எக்கணமும் எம்மால் எவருக்கும் ஊறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுடன் இன் 133

Page 69
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் சொல்லாலும் நாம் செய்யும் செயலாலும் அனைவரையும் அரவணைப்பதுமாகும்.
உயிர்களிடம் பரிவு உள்ளவன் செப்பிடும் வார்த்தை களின் உண்மைத் தன்மையே பிறரை அவர் பால் வசியப்படுத்துவதுடன் அவர்கள் செய்யும் பணியையும் உற்சாக மேற்றுகின்றது.
வாழ்க்கை வெறும் அதிசயமல்ல, இயல்பாக வாழ்ந் தால் அதுவே நமது வசமாகும் மிக எளிய வழி நல்லபடி நம்மை நாம் ஆக்குவது தான்.
தவறான வழிகள் எம்மைச் சஞ்சலப்படுத்துகின்றன. எதற்கு இந்த வீண் வம்பு?
இது தவறு என உணர்ந்தாலே போதும், நல்ல பண்புகள் உடன் பற்றிக்கொள்ளும். நாவைச் சுத்தப் படுத்தினால் வார்த்தைகளின் சுவை பன்மடங்காகும். பரிமளித்து இதயத்தை இனிமையாகும் .
தினகரன் வாரமஞ்சரி 20-09-2011
134

கயதரிசனம்
鲁 இல்லம் சிறக்கும் காற்றுப் புக முடியாத சூன்ய பிரதேசங்களிலும் நல்ல வார்த்தைகள் உட் சென்று அவ்விடத்தினைப் புனிதமாக்கும். அகங்காரப் பேச்சுக்களால் இல்லம் அமங்கலமாகி விடும். இன்றைய வாழ்விற்கும், நாளைய வாழ்விற்கும் இல்லம் சிறப்பிடமாக அமைந்திட வேண்டுமேயானால் என்றும் இனிமை பொங்கப் பேசிடுக! குடும்ப உறவு கூறாகக் காரணம், கணவன் மனைவியிடம் எழுகின்ற வாய்த்தர்க்கமே தான். நல்ல மனமும், வசீகரப் பேச்சும், உங்களிடம் காணப்பட்டால் என்றும் அழகு உங்கள் பக்கத்திலேயே சுற்றி நிற்கும்.
வீட்டுக்குள் சீற்றத்துடன் பேசி வந்தால், வீடே நாற்றமாகிவிடும். சீற்றமுடனான பேச்சுக்கள் காற்றையே அசிங்கம் படுத்திவிடும்.
கணவனும், மனைவியும் சற்றேனும் சளைக்காமல், விட்டுக் கொடுக்காமல், கொடும் பகைவனைப் போல்,
135

Page 70
கருத்திபூர் பா.ை வயிரவநாதர் கோபத்தையே ஆயுதமாக்கினால் மனை இனிமையை
இழந்து போகும்.
கொஞ்சம் கறைபடிந்த உடைகளே கண்ணுக்குப் பெரிதாய் தோன்றுகின்றன, குடும்பத்தின் குரோதங்களை மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பார்களா? எங்களு க்குத் தெரியாத எங்களது தவறுகள் மற்றவர்களுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்து விடுகின்றன.
குழந்தை குட்டிகளுடன் இணைந்து வாழ என்றும் மனத்தில் சினத்தை அடக்குக! கல்விக் கூடங்களில் படிக்க முடியாத அனுபவப் பாடங்கள் வீட்டில் இருந்தே ஆரம்பிக் கின்றன. சமூகத்தில் ஆற்றும் எமது நடத்தைகள், இல்லத் தில் நாம் வாழும் முறைமையில் பிரசவிக்கப்படுகின்றன.
பெற்றோர்கள் வரும் கால சந்ததியினருக்கு உணவு, உறைவிடம் கொடுத்தால் மட்டும் போதுமா? எப்படி அன்புடன் பழகுவது, அனுசரிப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்காமல் விட்டால் எந்தச் செல்வங்களை வழங்கினாலும் அவற்றினால் ஏது பயன்?
பெரிய அந்தஸ்துக்கள், பதவியுடன் இருக்கும் ஒருவருடைய இல்லத்திற்கு யாராவது வந்த வேளையில் அவரது மனைவி, பிள்ளைகள் சற்றும் சங்கோஜமின்றி வார்த்தைகளில் உஷ்ணமேற்றி வீட்டுக்காரருடன் பேசினால் வந்தவர்கள் என்ன கருதுவார்கள்? இவர் மீது வைத்துள்ள மதிப்பு அர்த்தமற்றதாகிவிடுமென்றோ!
136

தயதரிசனம் இன்று சில வீடுகளில் உள்ள மனிதர்களின் நிலை இத்தகையதே. மனதை வசப்படுத்தி அடக்க முடியாமல், பிறர் கவனம் பற்றிக் கிஞ்சிந்தித்தும் பொருட்படுத்தாமல், இஷ்டம் போல் உசாவி வருகின்றார்கள். குடும்பத்தில் கோபம் இருந்தால், அது சாபமிட்ட வீடாகி விடும்.
வெம்மையான மனதைக் குளுமையூட்டி என்றும் சாந்தமுடன் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கங் களே நாகரீகமாக வாழ வகை செய்யும். புத்தகத்தில் இவற்றைப் படிக்கத் தேவையேயில்லை.
அன்பு என்பதே இயல்பாக மலர்வது. தனது துன்பங்களை மட்டுமல்ல, பிறர் துன்பங்களையும் களை வதும் இதுவேயாம்.
அன்பான குடும்பம் வறுமையிலும் செம்மையா கவே வாழும். ஒரு சோற்றுப் பருக்கையாயினும் ஒன்பா தாகப் பகிர்ந்துண்பவனே மனிதன். கோடி பணவரவிலும், நாடும் நல்லவர் சேர்க்கை அன்பான அறவழிக்குள் இட்டுச் செல்லும் வல்லமையுள்ளது.
காற்றுப் புகமுடியாத சூன்ய பிரதேசத்திலும் நல்ல வார்த்தைகள் உட்சென்று அவ்விடத்தைப் புனிதமாக்கும். நல்ல மனதுடன் நடந்தால், வீடு குதூகலம் என்னும் பெருவிருந்து தான்.
தாரத்தை மதிக்காத கணவனும், கணவனைக் கண்டு கொள்ளாத மனைவியும், குடும்ப வாழ்வில் உருப்பட முடியுமா?
137

Page 71
கருத்திபூர் அல. ஆயிரவநாதர்
அகங்காரப் பேச்சுக்களால் வீடு அமங்கலமாகும்.
கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் கோபத்தை அணிகல
னாக்கினால், மனம் பிணியாகும். உணர்வார்களா?
இன்றைய வாழ்விற்கும், நாளைய வாழ்விற்காகவும் அமைந்துள்ள ஆரம்பப் பயிற்சிப் பாடசாலை வீடு தான். நல்ல வாழ்வைச் சிருஷ்டிக்கும் கோவில் இதுவே என்பதால் என்றும் இதனைத் தூய்மையுடன் பேணுதல் ஒவ்வொரு குடும்ப அங்கத்தினர்களின் பெரும் பங்கு அல்லவா?
குடும்ப உறவுகள் சீர்கெடுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், இதில் முக்கியமானது, கணவன், மனைவியிடையே ஏற்படுகின்ற வாய்த்தர்க்கம் தான்.
சாதாரணமாக ஒருவரோடு ஒருவர் ஹாஸ்யமாகப் பேசிக் கொள்வார்கள். ஏதாவது ஒரு வார்த்தை தெரியாத்த னமாகச் சொல்லி விட்டால், அது போதும். சண்டை செய்யத் தயாராகி விடுகின்றார்கள்.
எங்கோ, ஆரம்பித்து எங்கோ போய் முடியும் துன்ப குளியல்கள் எதற்கு? வார்த்தைகளில் கட்டுப்பாடு இன்றேல் முட்டாள்தனமான முடிவுகள் ஏற்பட்டுவிடும். பத்துப் பேர் முன்னிலையில் பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும்.
தனது தோழியர்கள் முன் கணவன், வேடிக்கையாகச்
சொன்ன வார்த்தைகளை மறந்து விடாமல், அதனையே பூதாகரமான விடயமாகப் பெருக்கி, எதிர் வாதம் செய்து
138

சுயதரிசனர் கணவனை அவமானப்படுத்துவது போல பேசினால்,
என்ன தான் முடிவு நிகழும்?
இரு மனங்கள் முரண்படக் கூடாது. எவர்க்கும் தன் மானம் பெரிது. சின்ன நாய்க்குட்டியையும் சீண்டக் கூடாது. அது முதலில் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும். அப்புறம் கடிக்கும். குடும்பத்திலும் இதே போல் தான் நடக்கின்றது.
என்றும், எப்பொழுதும் இன் சொல் பேசுதல், இன்பமான குடும்பத்தில், நித்திய மலர்ச்சியை உண்டு பண்ணும், அழவைத்து வேடிக்கை பார்க்கக் கூடாது.
நாம் உன் நோக்கமின்றிச் செய்யும் சின்னச் சின்னச் சமாச்சாரங்களின் வெளிப்பாடுகள் மற்றவர் களுக்குப் பாரியமனச் சிதைவுகளை உண்டுபண்ணலாம்.
ஒருவர் நெஞ்சத்து உணர்வுகளை இன்னும் ஒருவர் உடனே புரிந்து கொள்ள முடியாது. ஆனால் சாதாரணமாக எவருடனும் மிக இயல்பாக அன்புடன், பரிவுடன், பேசினாலே போதும், மற்றவர் நிலை பற்றி எமக்கு வேறு எதற்கு ஆராய்வு? வேண்டுமென்றே அவர்களைச் சஞ்சலப்படுத்தவெ எதுவுமே செய்தலாகாது.
எமது பேச்சில் தூய்மைத் தன்மை பேணப்படல் வேண்டும். அடுத்தவர் இயல்புகள் பற்றி வீண் விவாதங்கள் எதற்கு?
எல்லோரும் விரும்புவது அன்பான பேச்சுக்களைத்
139

Page 72
பருத்ரிபூர் ர. ஆயிற்றுருதம் தான். உங்கள் கடுகடுத்த பேச்சினால், முறைப்பான பார்வையினால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை. அழகாக நல்ல மனதுடன் பேசுங்கள். அப்புறம் உங்களைச் சுற்றி எத்தனை எத்தனையோ இதயங்கள் குவிந்து நிற்கும்
பாருங்கள் !
தினகரன் வார மஞ்சரி 27.03.2011
140

சுயதரிசனம்
| Ei täessä.
es نوع من 13 عائلة
في 3 أهة ممتدة 離リョ
SLLLL L YGLZ LLLLSSS SLLLLL L L LS LLLLL LLLL LELYSzZ L L sYLT LL TSSSLLLLLLS
அனுபவங்கள் தரும் அர்த்தங்களைப் புரிந்துகொள்க!
(எல்லோருடைய அனுபவங்களுமே, அவரவர்களுக்கு அற்புதமான வைகயே. எவருடைய அனுபவங்களும், ஏற்கக் கூடியதாயின் அதனை ஏற்றுக் கொள்க! பணம், பதவியில் உள்ளவர்கள் எதைச் சொன்னாலும் அதனை வேதவாக்காகக் கொண்டால் உண்மைகளை மறுப்பவர்களு மாவீர்கள், நல்ல விஷயங்களை அனுபவரீதியாக நீங்கள் கண்டால் அதனால் மற்றவர்களும் நலம் பெறச் செய்வதே அழகு துஷ்டர் என அறிந்தும் அவர்களிடம் ஆலோசனைகளைப் பெறுதல் அறிவீனம். வெற்றிகளால், மதியிழக்கலாகாது, தோல்விகளூடாகப் பெறும் அனுபவங்களின் அர்த்தங்களையும் புரிந்து கொள்க! கசப்பான
அனுபவங்களூடாகவும் எதிர்காலக் காரிய சித்திகளை நிச்சயம் பெற Վtpւգարք - .أمس
எந்தத் தராதரத்தை உள்ளவர், எவராயினும் அவர்
கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் எல்லாமே, அவர வரைப் பொறுத்தவரை அவை அவருக்குப் பெறுமதி வாய்ந்தவைகளே!
14

Page 73
பருத்திஆர் அல. ஆயிரவருதஷ்
ஏற்கக் கூடிய நல்ல பயனுள்ள அனுபவங்களை மட்டும் கிரகித்து, ஏற்ற பயனை ஒரு பாடமாகக் கொள்ள
நாம் அவர்களை ஏளனமாக நோக்கிக் கிண்டல் பண்ணக்
Gin LTT35l.
ஒருவரின் தராதரத்தை வைத்து அனுபவங்கள் உற்பத்தியாவதில்லை. நான் பெற்ற அனுபவமே பெறுமதி யானது என விவாதம் செய்வது கேலிக்குரிய செயல்.
இன்னும் சிலர் இருப்பார்கள், யாராவது அந்தஸ்தில், பணபலத்தில் தங்களை விட மேல் மட்டத்தில் இருந்தால், அவர்கள் எதனைச் சொன்னாலும் அதுவே வேதம் எனச் சொல்லித் திரிவார்கள். அவர்கள் வார்த்தை களை, ஒரு நல்ல அனுபவபூர்வமான பேச்சு எனச் சொல்லி உள்ளப் புளகாங்கிதம் அடையுமாற் போல் பேசுவார்கள்
பலர் தங்கள் அனுபவங்களுடன் மிகப் பெரிய கற்பனைக் கதைகளையும் புனைந்து நல்ல பொழுது போக்கான கதையாகச் சொல்லிக் கொள்வார்கள். இந்தக் கதைகள் வெறும் புளுகு எனப் பலரும் சொல்ல முனைந் தாலும், அவர் மனம் புண்படும் எனக் கருதி வெளிப்படை யாகச் சொல்ல மாட்டார்கள்.
3.
எல்லாக் குழந்தைகள் முன்பும் எமது அனுபவக்
கதைகள் எடுபடாது. சற்றே பொய் கலந்திருந்தாலும்
142
 

கயதரிசனம் குழந்தைகள் அதனைக் கண்டு பிடித்துப் பகிரங்கப்படுத்தி விடுவார்கள்.
வாழ்க்கை அனுபவம் என்பது வெறும் கேலிக் குரியது அல்ல. சில சமயம் வேடிக்கையான சுவரஸ்யமான சம்பவங்களும் எமக்கு ஏற்பட்டு விடுவதுண்டு. ஆனால் எல்லா விடயங்களுமே மனதைத் தொட்டு விடுவதுமில்லை. பலவற்றையும் மறந்தும் விடுகின்றோம்.
சில நல்ல பசுமையான நினைவுகளை மட்டுமல்ல, வேண்டாத துன்ப மூட்டும் நினைவுகளையும், சுமந்து திரிகின்றோம். எனினும் நாம் மனதை விட்டு மறந்து விட வேண்டும் என எண்ணுபவை பலவும் எம்மைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, எம்மை சிறைப்பிடித்து விடுகின்றனவே என்ன GEFUJULI?
எனவே நாம் துன்பப்படும் அனுபவங்களூடாகவும் எமது வாழ்வை செப்பமூட்டும் வழி எதுவோ, அதன் பாதையில் எமது மனோ பலமூடாக எங்களை நாம் பலப்படுத்தியே தீர வேண்டும்.
தோல்வியினால் ஏற்பட்ட அனுபவங்கள் தான் பலரையும் தலைவர்களாக்கியமையை நாம் அறிவோம். ஒரு விஞ்ஞானி ஒரே தடவையில் தனது பரிசோதனை களில், வெற்றி பெறுவதில்லை.
எங்கோ ஓரிரு வெற்றிகள் சில சமயம் திடீர் என ஓர் அற்புத நிகழ்வாகக்கிட்டி நிகழ்ந்து விடலாம். எனவே
143

Page 74
பருத்திர் 04ல. விவரன் என்றுமே நாம் திடீர் என நிகழும் அதிசயங்களை நம்பி எமது காலத்தை ஒட்டுவதைப் போல் அறிவிலித்தனம் வேறு ஏது?
அதிஷ்ட லாபச்சீட்டை வாங்கி விட்டு அதை நம்பி கடன் வாங்கக் கையை நீட்டக் கூடாது. ஒருவரின் பயன் தரும் அனுபவங்களைக் கருத்தில் கொள்ளாமல் பரீட்சாத்த மாகக் காரியமாற்றுவதால் ஏற்படும் பின் விளைவுகள் ஆபத்தானவை. படித்தவர்கள் கூடச் சில சமயங்களில் இது விடயத்தில் முட்டாள்களாக செயற்படுவதுண்டு.
ஒருவரிடம் நாங்கள் பெறும் பணம் சொத்துக்களை விட நல்ல அனுபவங்களை ஒருவரிடம் எந்தவித மமதையு மின்றி கேட்டறிந்து அதன் மூலம் பயன் பெறுவதே மிக உன்னதமானதாகும். அனுபவ ஞானம் கூட எம்முடன் இருந்து எம்மை வழிநடத்தும்.
ஆயினும் நாம் ஒரு ஆலோசனையை கண்டவர்க ளிடமும் கேட்டுவிட முடியாது. ஒரு சிலருக்கு, மற்றவர் "நான் சந்தோஷகரமாக இருக்கின்றேன்" எனச் சொன்னாலே அறவே பிடிக்காது.
எனவே
"ஐயா, நான் சிறு வியாபாரம் செய்து பிழைக்க விரும்புகின்றேன். உங்கள் அனுபவங்களைச் சொல்லி எனக்கு உதவி புரியுங்கள்" என எல்லோரிடமும் கேட்டு விட (LDLQUT 35l.
144

கயூதரிசனம் நாம் கேட்கக்கூடியவரிடம் தான் கேட்க வேண்டும் ஏதோ கொஞ்சம் தெரிந்தவராயிற்றே என அவர்களிடம் போய் ஆலோசனை கேட்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவங்களைக் கேட்டு அறிந்து, நிறைவைப் பெற முயற்சி செய்யுங்கள்.
நாம் பிறருக்குக் கொடுக்கும் "மகிழ்ச்சி எதுவெனில், எமது நல்ல அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கு மேலான நல் வாழ்வை அமைப்பதற்கான முறைகளை, சூழல்களை உருவாக்குவதேயாகும்.
நல்ல விஷயத்தைத் தெரிந்தால் அதை மற்றவர் களுக்குச் சொல்லாமல், தெரியவிடாமல் மறைப்பதுபோல தெய்வத்துக்குப் பிடிக்காத செயல் வேறில்லை. நல்லதை மறைப்பது மானுட நாகரீகமும் அல்ல. நாம் ஒரு நல்ல உலகப் பிரஜையாக இருக்க வேண்டுமானால், பொதுமை யான நற் பண்புகளில் துலங்க, முனைப்புடன் இயங்க வேண்டும்.
எந்த இனத்தவராயினும், எந்த நாட்டினைச் சார்ந்த வராயினும் சரி அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை உடன் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர், அவர் யாராக இருப்பினும் கூட அவர் எமக்கு அனுபவபூர்வமான தகவல்களைச் சொல்லுமிடத்து செவி மடுத்துக் கேளுங்கள்.
145

Page 75
பருத்திபூர் (இல. ஆயிற்றூர்
சங்கோஜமும், காழ்ப்புணர்வும், மேலாதிக்க உணர்வுகளும், பிறர் அனுபவ மொழிகளை கேட்கத் தடை செய்கின்றன. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பலதும் இருக்க, வேண்டா விஷயங்கள் எமக்கு எதற்கு?
தினகரன் வார மஞ்சளி
O3.04.20
146
 


Page 76


Page 77
டையதான வாழ்வு இந்த உலக மனித சமூகத்திற்
s
டையவராக திகழ்கின்றார், ஆசிரியருக் கின்றேன்.
பேராசிரி
நல்லதை நினைத்து, நல்லதைச் சொல்லி, ந6 ட்டு எண்ணக்கூடியவராகவே இருப்பர். அ வேண்டும். அவ்வாறான மனதினைக் (ରsitäfl. பருத்தித்துறையைச் சேர்ந்த இந்தப்பண்பாளர் புத்திக்காரரை இனம் கண்டு நேர்மையை உ வாரப்பத்திரிகைகளிலும் நிறைவாக எழுதிவி விரும்பிப்படிப்பவர்களில் நானும் ஒருவன், அதிகமான ஆக்கங்களை இவர் எழுதியிருப்ப
 
 
 
 
 
 
 

யர் கலாநிதி திரு. அ.சண்முகதாஸ்
ஸ்லததைச் செய்து வருபவர்கள் விரல்வி ப்படியிருப்பதற்கு முதலில் நல்லமனம் வர் நண்பர் பால, வயிரவநாதன் எனலாம்
பண்பாகப் பழகும் அதேவேளை குள்ளப் ணர்த்தி நிற்பார். இவர் நாளிதழ்களிலும் பரும் உளவியல் சார்ந்த கட்டுரைகளை வாழ்வியல் தொடர்பான ஆயிரத்திற்கு து பிரமிக்கத்தக்கது.
திரு. கே. எஸ். சிவகுமாரன்
திறனாய்வாளர்
isbn 978 9550469-04-8
|
9 117 8 9 55 0ll4 6 9 0 4 8