கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:கோழைகளாய் வாழுவதோ

Page 1

2. வயிரவநாதன்

Page 2

கோழைகளாய் வாழுவதோ..?
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியன் வசந்தங்கள்- பாகம் 04 சிந்தனைக் கட்டுரைகள்

Page 3
நூல் தலைப்பு :
ஆசிரியர்
மொழி :
பதிப்பு ஆண்டு :
பதிப்பு விபரம் :
உரிமை :
தாளின் தன்மை :
நூலின் அளவு :
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
கணனி வடிவமைப்பு :
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை :
ISBN: 978-955-0469-05-5
நூல் விபரம்
கோழைகளாய் வாழுவதோ..?
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 04
பருத்தியூர் பால,வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க்
கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
3
52
அஸ்ரா பிரிண்டர்எல்
அஸ்ரா பிரினன்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
பொபெக்ட்
வானவில் வெளியிட்டகம்
250/-
 
 

அணிந்துரை
தனது எல்லையற்ற அன்பினால் என்மீது அன்பு பாராட்டும் எனது நண்பர்நாடறிந்த எழுத்தாளர், சிந்தனையாளர். பால, வயிரவநாதன் அவர்கள் எழுதிய நூலின் நான்காம் பாகத்துக்கு அணிந்துரை எழுத சந்தர்ப்பம் கிடைத்தமை யையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
நீண்ட காலமாக பத்திரிகையில் மனித விழுமியங்கள் பற்றி எழுதி வரும்பால, வயிரவநாதன் அவர்கள் அக்கட்டுரை களின் தொகுப்பை நூலாக வெளியிட முன்வந்துள்ளமை பாராட்டுதற்குரியது. வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இக்காலத்தில் மனிதன் தான் அன்றாடம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு எது என இனங்கான முடியாமல்தடுமாறுகிறான். நாம் தினசரி சந்திக்கும் இன்ப துன்பங்கள் வெளிக்காரணிகளால் ஏற்படுவன போல் ஓர் மயக்கத்தை ஏற்படுத்தினும் , ஒரு பிரச்சனையை நமது மனம் எவ்வாறு அணுகுகின்றது என்பதைப் பொறுத்தே அதற்கு உரிய விடையைக் காண முடியும். இது அனுபவ வாயிலாகக் கற்றறிய (3660õgu LIITLDT(öb.
நூலாசிரியர் மனித மனங்களின் செயற்பாடுகளை ஆராயவல்ல ஒருவர். குற்றவியல் வழக்குகளில் குற்றச் செயலைப் புரிந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு செய்தான் என்பதை வழக்குத்தொடுத்தனர் தரப்பு நிரூபிக்க
- 3 -

Page 4
வேண்டும் எனச் சட்டம் எதிர்பார்ப்பதில்லை. இதற்குக் காரணம் என்னவெனில், ஒருவன் மனதில் ஒரு குறிப்பிட்ட வேளையில் என்ன நினைக்கின்றான் என்பதை ஒருவராலும் கண்டுபிடித்துக் கூறமுடியாது என்பதே செயலின் தன்மையை வைத்தே மனதில் எழுந்த எண்ணத்தை அனுமானிக்க முடியும்,
மனம்பண்பட பல வழிகளைபொருத்தமான உதாரணங் களுடன் விளக்கி எழுதியுள்ளார். இன்று பணம், பதவி அரசியல் அதிகாரம் இவற்றுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு, உண்மையாக வாழ்ந்துவருபவர்கள் புறக்கணிக்கப்பட்டு அலட்சியம் செய்யப் படுவதைப் பார்த்து அவரின் மென்மையான மனம் வாடுவதை அவதானிக்க முடிகிறது. நெல்லுக்கும், புதருக்கும் வித்தியாசம் காணாமல் பதரை நெல்லென உயர்த்திக் காட்டும் சமூகத்தில் வாழும் நாம் சான்றோரெனப் போற்றத்தக்கவர்கள் இக் குழப்பத் தில் எதிர்நீச்சல் போட வலுவற்று ஒதுங்கிப் போவதைக் காண்கின்றோம். இவற்றையும் நூலாசிரியர் தொட்டுக் காட்டத் தவறவில்லை.
பொருள் தேடுவதையே குறியாகக் கொண்ட இவ்வுலகில் நல்ல குணம் நிறைந்த மனங்களைத் தேடும் நூலாசிரியரின் ஆழ்ந்த அறிவும், ஆய்வுத் திறனும், சிந்தனைச் செழுமையும் அவரது கட்டுரைகளில் பளிச்சிடுகின்றன.
படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும்
நிறைய கருத்துக்களும் தகவல்களும் இத்தொகுப்பில் உண்டு.
பெற்றோர்கள் கட்டாயம் தமது பிள்ளைகளுக்கு இவற்றைப் - 4 س

படிப்பதற்கும் அதன்படி இணங்கியொழுகுவதற்கும் சந்தர்ப்ப மளிக்க வேண்டும்.
எனது நண்பர் வயிரவநாதன் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று இத்தகைய நன்முயற்சிகள் பலவற்றில் ஈடுபட்டு மக்களுக்கு நல்வழி காட்டி இறைவன் திருவருள் துணைநிற்க வேண்டும் என்று அவன் திருவடிகளை இறைஞ்சுகின்றேன்.
ஜே. விஸ்வநாதன் மேல்நீதிமன்ற ஆணையாளர், மேல்நீதிமன்றம்,
வவுனியா,

Page 5
மதிப்புரை
இறைவனுடைய படைப்பினுள் சிந்திக்கும் திறன் மனித இனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதம். அவர்களுள்ளும் ஒரு சிலர் தான் சதா சிந்தித்துக் கொண்டே, தேடுதலைச் செய்து கொண்டே இருக்கின்றனர். இந்தத் தேடுதலும் பல வகைப்படும். அவை பொருள், கல்வி, புகழ் தன்குடும்பம் சார்ந்த இனம், மொழி என விரியும்,
மற்றும் ஒருசாரார் எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை, கவலை கொள்வதுமில்லை. அவர்களது நோக்கம் எல்லாம் உடலிற்கும், வயிற்றிற்கும் இரைதேடுவது மட்டுமே.
விண்ணிலே மிகஉயரத்திலே பறக்கும் பருந்துக்கு எந்த வித உயர்ந்த எண்ணங்களுமில்லை. மண்ணிலே கிடைக்கும் பிணங்களும், செத்த பிராணிகளும் மட்டுமே அவற்றின் குறிக்கோள். அதுபோன்ற மனிதர்களும் உண்டு.
ஒரு சிலரே இதிலிருந்து விலகி நின்று தம்மைச் சுற்றியுள்ள உலகத்தை ஊன்றி நோக்குகின்றனர். உண்மை களை தரிசனம் செய்கின்றனர். அவ்வனுபவங்களைத் தங்க ளோடு நிறுத்திக் கொள்ளாமல் உலகத்திற்கும் வாரி வழங்கு கின்றனர்.
“தாமினிபுறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்"
- திருக்குறள்
- 6 -

மனித குலம் உய்ய "சேதவாகும் செகத்திரே" என்று குரல் கொடுக்கின்றனர்.
மேற்கூறிய சிறந்த மனிதருள் ஒருவர் தான் பருத்தியூர் பால, வயிரவநாதன் அவர்கள். சிறந்த சிந்தனையாளர். சிந்தனையை எழுத்திலே வடிப்பவர். புதையுண்ட பல உண்மை களைத் தோண்டி எடுத்துத் தூசுதட்டி மெருகூட்டி மக்களின் முன் வைப்பவர். அப்படி பல கருத்துக்களின் வண்ணம் தான் இந்தப்கட்டுரைகள் தினக்குரல், வீரகேசரி, தினகரன்,எமது தூது, கல்வி அமைச்சின் தமிழ்மொழிப்பிரிவின் ஆண்டுமலர்(கூர்மதி) ஆகியவற்றில் வெளிவந்துள்ள தனது கட்டுரைகளை நூலில் கோர்த்து மலராக்கியுள்ளார். பெற்றுப் பயனடைவது நம்மவரின் பொறுப்பு
நலமே தழைக்க!
660013535D
அன்புடன் வசந்தா வைத்தியநாதன்

Page 6
எனது உரை எழுச்சிமிக்க சமூகம் உதயமாக வேண்டும் என்கின்றார் கள். ஒவ்வொறு தனி மனிதனதும் விழிப்பு நிலையே ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு வழிவகை செய்யும் என்பதையும் நாம் உணரவேண்டும்.
வாழ்வியலில் நாம் காணும் வெற்றிகளில் எம்மை மறந்துவிடலாகாது.தன்னலம்,குரோதம் சமூக அவலங்களைக் கண்டு கொண்டும் கூட அது பற்றிய விழிப்பூட்டலுக்கான செய ல்களில் ஈடுபடாமை போன்றவையே தனிமனிதனின் தோல்வி களுக்குமான பிரதானமான காரணங்கள். என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
கோழைத்தனமாக வாழ்வதனால் நாம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கொள்ளமுடியாது உலகில் உண்மை எது, பொய் எது எனப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தையும் தெரிந்து கொண்டால் சுய ஆளுமை வலுப்பெறும்.
எவரையும் சிறுமைப்படுத்தலாகாது எந்த ஒரு மனிதனையும் எதிரியாகக் கடுகளவும் நினைத்தலாகாது. நாம் ஜனனம் அடைந்ததே இந்த ஜனனத்தில் புதிய, செறிந்த, நல் லவைகளை மட்டும் வழங்கவே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
காலங்கள் தோறும் கற்க வேண்டியவை ஏராளம் ,
- 8 -

எனவே, வளர்ச்சிக்கான பாதைகளை உருவாக்க காழ்ப்பு, கசப்புணர்வுகளை அகற்றி, நெகிழ்ச்சித்தன்மையுடன் அனைவ ரையும் அரவணைப்போம்.
வாழ்வது வீழ்ந்து விட அல்ல, எனவே வீழ்ச்சி என்பதே முறியடிக்கக்கூடிய சவால், அடுத்து வரும் வளர்ச்சிக்கான அறைகூவல் என மனதார நம்புங்கள்.
இவை பற்றிய கருத்துக்களையே தூவியிருக்கின்றேன். நல்ல விஷயங்களை அடிக்கடி உருப்போடும் போது, அவை சித்திக்கின்றன. எமக்கு இவை தெரிந்திருந்தாலும் கூட அவற்றை படிக்கக் கேட்க சிந்தை மேலும் சுடர்விடுகின்றது.
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 04 "கோழைகளாய் வாழுவதோ..? உங்களது கரங்களில், வெகு சிரத்தையுடன் இதனை அளிக்கின்றேன். இந்த பதிப்பிற்கு மேல் நீதி மன்ற ஆணையாளர் உயர்திரு. ஜே. விஸ்வநாதன் அவர்கள் அணிந்துரையாக அணி சேர்த்துள்ளார். அமைதியும் எளிமையும் நிறைந்த நீதிபதி ஆழமான கருத்துக்களுடன் மிக அழகாக பேசும் சிறந்த பேச்சாளர்.
எனது வாழ்வியல் வசந்தங்கள் முதல் இரண்டு பாகங்களின் வெளியீட்டு வைபவத்திற்கு இவரும் இவரது துணைவியார் திருமதி. வி ரஞ்சினி அவர்களும் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். மேலும் வாழ்வியல் வசந்தங்கள் இரண்டாம் பாக வெளியீட்டு விழாவிற்கு நீதியரசர் ஜே. விஸ்வநாதன் அவர்களே தலைமை தாங்கினார்.
س- 9 -

Page 7
ஆழ்ந்த தமிழ் அறிவும் ஆன்மீக ஞானமும் உள்ள நீதியரசர் எனது இந்த நூலுக்கு அணிந்துரை நல்கியமை எனக்கு பெருமையான விடயமாகும். இவரது ஆசீர்வாதம் என்னை என்றும் வசீகரிக்கும்.
செழும் தமிழ் அரசி, கலாபூசணம் திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களை அறியாதவர் எவருளர். இவரது இந்துசமய பேருரைகளை கேட்டமாத்திரத்தேசிந்தை விழிப்புடன் விரியும், மடை திறந்த @ការណ៍ពាហ៍ போன்ற இவரது பேச்சுக்கள், சொற் கோர்வைகள், அதிலுள்ள அற்புதமான ஞானக் கருத்துக்கள் அப்பப்பா. இயம்புவதற்கு எளிதன்று!
மேலும் இவர் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் விற்பன்னர் இந்துசமயம் சார்ந்த எவ்வித சந்தேகங்களையும், தெளிவாகத் தயக்கமின்றிச் சொல்வதில் வல்லவர். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இவரை என்றுமே தனது ஆலோசகராக, வழிகாட்டியாக வைத்துக் கெளரவப்படு த்துகின்றது. மேற்படி திணைக்கழத்தின் சகல இந்து சமய மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் திருமதி வசந்தா வைத்தியநாதனின் பங்கு என்று முண்டு. தொலைக்காட்சி, வானொலி நிகழ்வுகளிலும், சமய இலக்கிய நிகழ்ச்சிகளிலும் தமது சிரமம்பாராது உழைத்துவரும் இவர்கள், எனது நூலுக்கு மதிப்புரை அளித்துள்ளமை எனக்கு பெரும் மகிழ்வினைத் தருகின்றது.
- 10 -

கலாசார அமைச்சின் தமிழ் சாகித்ய குழுச் செயலா ளராக நான் இருந்த சமயம்.இந்து சமய கலாசார திணைக் களத்தில் கடமை புரிந்தேன்.அப்பொழுது தமிழ் இலக்கியக் குழுவின் உறுப்பினரான அம்மையாருடன் நான் இணைந்து கடமை புரிந்தமை பெருமை சேர்க்கும் விடயமுமாகும்.
மேலும் எனது நூலாக்கம் நூலுருவில் வெளிவர மூல காரணங்களாக அமைந்த தினக்குரல்,வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி ஆகிய நிறுவனங்களுக்கும்,அதன் ஆசிரியர் பீடங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
தொடர்ந்து எனது கட்டுரைகள் மேற்படி பத்திரிகை களில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவின் வெளியீடான"கூர்மதி ஆண்டு மலரில் "பொறாமை எனும் பெரும் தீ எனும் கட்டுரையும் வெளிவந்தது. இதனையும் இத்தொகுதியில் இணைத்துள்ளேன்.
நூலாக்கத்தின் போது, என்னுடன் இணைந்து எனக்கு ஒத்துழைப்பு நல்கிய செல்வி ச நந்தினி, திரு. க.சுதர்சன், திருமதி வ. சரஸ்வதி ஆகியோரின் பணி மெச்சத்தக்கது. இவர்கள் நூலின் ஒப்புநோக்கிய பணியினை மேற்கொண்டனர்.
மேலும் வாழ்வியல் வசந்தங்கள் நூல் தொகுதிகளை அச்சுருவாக்கம் செய்த அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிற்ரெட் நிறுவன அதிபர் திரு.எஸ். சிவபாலன் அவர்கள் எனது பேரன்பிற் குரியவர். நூலை அழகிய முறையில் வடிவமைத்துள்ளார்.
- 11 -

Page 8
ஒரு நல்ல தரமான நூலை ஆக்குவதென்பது தேனீக்கள் ஒன்றிணைந்து கூடு கட்டுவதை ஒத்ததாகும். எனது நூலை அனைவரும் வாசித்துப்பயன் பெறுவதிலேயே என் எண்ணங்களும் கலந்திருக்கின்றன.
எனவே வாசியங்கள்! வாசிப்பை நேசியுங்கள்! பயன்பெறுங்கள்!
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால,வயிரவநாதன்
"மேரு இல்லம்"
36-2/1
ஈ.எஸ் பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு06.
தொ.பே இல-011-2361012, O71-4402303,
O77-43, 18768
- 12 -

FloffíucOTið
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- 13 -

Page 9
நூலாசிரியர் மருத்தியூர் மரல. வயிரவநாதன் எழுதி வெளியிட்ட "வாழ்வியல் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
உண்மை சாஸ்வதமானது . S|bLDIT
சுயதரிசனம் கோழைகளாய் வாழுவதோ? ஞானம்
கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்!
சும்மா இருத்தல் உண்மைகள் உலருவதில்லை! உண்னோடு நீ பேசு!
10.
11.
12.
நான் நானே தான்! வெறுமை
காதலும் கடமையும்
அக ஒளி
14.
15.
16.
7.
18.
உன்னை நீ முந்து சுயபச்சாதாபம்
மெளனம் மரணத்தின் பின் வாழ்வு சிந்தனை வரிகள்
– LUFTFELD - 01
- LIFTSELÈS - 02
- LUPTEBLİS - 03
- LuFTGELÊ - 04
- LIFFELò - 05
- LUFTGELÊ - 06
- LUFTELb - 07
- LITTGELÊ - 08
- LUFTGELÊ - 09
- LTěBLib - 10
- LJT35LĎ - 11
- LIFT35lb - 12
- LITESLřò - 13
- LT85 b - 14
– LJT36LĎ - 15
- LITEELD - 16
– LITEBL5 - 17
- List&lf - 18
- 14 -

பொருளடக்கம் -H ఆ అక్షాల ప్రహ్రెప్రాక్షాతా+r-
தலைப்பு பக்கம்
1) அவமானப்படுத்துதல் அத்து மீறுலே 2) பொறுாமையெனும் பெரும் தீ 堑4 3) கோழைகளாய் வாழுவதோ? 32. 4) எழுச்சி 5) ☎ရီဂြိုီ# 霹9 6) இல்லறும் 密急 7) உண்மை 69 8) ខាំណាំ 78 9) விதைத்தல் 87 10) ஜனனம் 98. 11) மரணம் 107 12) கடன் 117 13) சலிப்பு 12.9 14) ஆற்றலை வளர்ப்பதே வாழ்க்கை 135 15) கணவன் மனைவி பொருத்தம் என்பது
என்ன? 140 16) அயலாரோடு மனஸ்தாபம் கொள்ளந்த 氢45
- 15 .

Page 10
பருத்திபூர் அ.ை 2யிரவநாதர்
அவமானப்படுத்த்தல்
அத்துமீறலே!
ஒருவரை நிந்தனை செய்தல், அவர்கள் அந்தராத்மாவையே, துன்பமேற்றும் ஆணவச் செயல். எவர் மனத்தையும், கொப்து காயப்படுத்த ஒருவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அவமானப் படுத்துபவன், அவமானப்பட்டுப்போவான். வலிமை கூடியவன், வலிமை குறைந்தவனை இம்சித்தால் இறைவனே பொறுமையிழந்து விடுவான். செருக்குற்றவர்கள், தாமே உயர்ந்தவர் என்று எண்ணினால் உலகின் வெறுப்பினுள் நுழைந்து கொள்ள வேண்டியதே எதிர்மறை எண்ணங்களுடன், தரக்குறைவாக நடப்பது, தன்னையே இழிவாக்கும், கோமைத்தனம்.
அவமானப்படுத்துதல் ஒருவருக்கு வழங்கப்ப டக்கூடிய கொடிய தண்டனை என்றே கருதப்பட வேண்டும். எவரையும் கேவலப்படுத்தி நிந்தனை செய்ய எவருக்குமே அதிகாரம் கிடையாது. தமக்கு பிடிக்காதவர்களை பிறர் மூலம் அவமானப்படுத்த எத்தனித்தல் போல் மாபாதகம்
ൈ, 16
 
 
 
 
 
 
 

கோழைகளாய் வாழுவதோ..?
தாமாகவே வலிந்து எடுத்துக்கொண்ட அதிகார மாகவே அவமானப்படுத்துதலை நாம் கருத வேண்டியுள் ளது. தனிமனித உணர்வுகளைப் புண்படுத்துதல் என்பது ஒரு மனித உரிமை மீறல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவமானப்படுத்தப்பட்டு விட்டால் நீதிமன்றில் நியாயம் கேட்பவரும் உண்டு.
வலிமை கூடியவன் எப்படியும் பேசலாம். ஊறு விளை விக்கலாம். அதனைப் பார்த்தபடியும் நொந்தபடியும் இருக்க வேண்டியதே அடுத்தவன் கடமை என்பதல்ல. தவறு, குற்றங்களுக்கான தண்டனை வழங்கல் என்பவை பொது வான வேறு விடயங்கள்.
நீதித்துறை, அரச நிறுவனங்கள், பொது அமைப்புக் களில் மக்கள் மனங்கள் கசக்கப்படுவது கண்கூடு. இதில் விசனப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
பதவி வகிப்பவர்களும், அவர்களோடு இணைந்த வர்களும் பக்குவமாக நடப்பது எப்படி என்று தெரியாமல் அகங்காரத்துடன் தீங்கான வார்த்தைகளைக் கண்டபடி உதிர்த்தபடியும், நடைமுறைக்கு ஒவ்வாத வழியிலும் நடந்தால் பாதிக்கப்பட்டவன் அவமான உணர்வினால் மனம் சஞ்சலமடைவது எத்தகைய துன்பம் என்பது இவர்களுக் குப் புரியுமா?
- 17 -

Page 11
பருத்திy 04). ஆயிரவநாதர்
அவமானம் என்பது அவரவர்க்கு வந்தால் தான் புரியும் செய்யாத தவறுக்காக அவமானப்படுவது பரிதாபம் ஆனால் தவறு செய்தவன் கூட பிறரால் அவமானப்பட்ட பொழுது "ஐய்யய்யோ எனக்கு இப்படி ஆகிவிட்டதே." எனப் பொருமுகிறான்.
செய்த செயலுக்கு மனம் வருந்தியாக வேண்டும். ஆனால் அதைவிடக் கிடைக்கும் அவமானம் எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா? ஒருவர் செய்கின்ற தவறு களுக்காகப் பழிதீர்க்கும் வண்ணம் அவமானப்படுத்தும் படலம் தொடர் கதைகளாக விரிகின்றது. "அவன் மட்டும் இப்படிச் செய்யலாம், நான் என்ன இழிச்ச வாயனா..?” என்றவாறு தமது வல்லமையை அவர்கள் தமது எதிரிகள் மீது பாய்ச்சுவதிலேயே காலத்தைச் செலவளித்தால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகின்றது?
இன்னும் சிலர் ஒன்றுமே பேச மாட்டார்கள். யாராவது எதையாவது சொல்லி அவமானப்படுத்தினால், வேறு வழிகளில் மெளனமாகக் குழிபறிக்க ஆரம்பித்துவிடுவார்கள். "ஆழமறியாமல் காலைவிடாதே" என்பார்கள். சில பேர் வழிகள் தம்முன் தோன்றுபவர்கள் எல்லோரையுமே துச்ச மாகப் பார்த்து, அச்சமின்றி, வார்த்தைகளால் அர்ச்சிப் பார்கள். பின்னர் அந்த நபர் யார் என அறிந்ததும் சாஸ்டாங் கமாக விழுந்து விடுவார்கள். இவை எல்லாம் தேவைதானா? எல்லோரிடமும் சகஜமாகப் பழகினால் செளஜன்ய உறவு வந்துவிடுமல்லவா?
- 18 -

கோழைகளாய் வாழுவதோ..? பார்க்கின்ற நபர்களை, அவர்களின் பேச்சுக்களை நாம் ஏன் எதிர்மறைக் கோணத்தில் நோக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்து கண்டபடி உளறுவது கேலிக்குரியதாகும். பத்துப் பேர் எங்களைச் சண்டைப் பிரியன் என்றழைப்பது சந்தோஷமான, கெளரவமான விஷயமல்ல. "அந்த மனுஷனுடன் பேசினால் மரியாதைக் குறைவாகக் கதைப்பான்" என்று உங்களைப் பார்த்து ஒருவன் விலகி ஓடினால் எப்படி இருக்கும்?
நாங்கள் பேசுவது பிறகுக்குச் சில வேளை புரியாமல் இருக்கலாம். கேட்பவர்கள் உங்களைப் பற்றி விமர்சனங் களைச் சொன்னால் கேட்டு வைப்பது நல்லது அதற்காகக் கண்டபடி பேசும் குதர்க்கக்காரர்கள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியமானதே!
நெஞ்சம் இரும்பு அல்ல, கொஞ்சம் ஈரமின்றிய பேச்சுக் கேட்டால் உருகித் தளர்ந்துவிடும். வெஞ்சொல் பேச வேண்டாம் என்று பரிதாபமாகக் கெஞ்சினாலும், தம் பக்கத்து நியாயங்களை நிலைநாட்ட ஆக்ரோஷமான, உஷ்ணமான வார்த்தைகளைச் சிலர் பேசித் தீர்த்தே விடுவார்கள்.
"பன்னீர் தெளிக்காது விட்டாலும் பரவாயில்லை. வெந்நீர் கொட்டாமல் விட்டாலே போதும்" என்றே மனிதர் சிலரது பேச்சைக் கேட்டால் தோன்றும்.
- 19 -

Page 12
இன்று அரசியலில் என்ன நடக்கிறது? தங்கள் பற்றிய அரசியல் விஷயங்களைப் பேசத் தெரியாத இந்த அரசியல்வாதிகள், பிற மாற்றுக் கட்சிகளை அவதூறு செய்வதால் நியாயம் பெற்றுவிடுவதாகக் கருதுகிறார்கள்.
இதில் என்ன துரதிஷ்டம் என்றால் கண்டபடி பேசுபவர்களுக்கே கைதட்டல் கிடைக்கிறது. காலப்போக்கில் இத்தகையோர்தான் பிரசாரப் பீரங்கி என்றும் வர்ணிக்கப் படுகிறார்கள்.
சொற் கொடையாளர் எனப் போற்றப்படுபவர்கள் நீதி, நியாயங்களுக்கு ஆட்பட்டவர்கள். இவர்களின் உவமானங் களை உபதேசங்களைக் கேட்க எத்தனையோ மனிதர்கள் காத்துக் கிடக்கின்றார்கள்.
ஒருவனை அடிப்பதும், இம்சிப்பதும், அவமானப் படுத்துவதும் எல்லாமே கோரத் திருப்பதியடையும் சுபாவங்களேயாகும். எவரையும் அனுசரிப்பவன் அவமானப் படுத்தவே மாட்டான்.
கோபாவேசத்தில் ஒருவனைக் கோபப்படுத்துபவன் சொல்வதறியாமலே ஜாதி, சமயங்களை இழுத்துப் பேசும் போது, அது சமூகப் பிரச்சினையாகி விடுகிறது. இன்று எத்தனையோ பத்திரிகைச் செய்திகளைப் படித்திருப்பீர்கள். அடி, தடி, கொலைக்கான மூல காரணமே ஒருவரை அல்லது அவரது குடும்பத்தை தாழ்வாக அவமதித்ததாகவே இருக்கிறது. எத் தாக்கத்துக்கு எதிர் தாக்கம் உண்டு.
- 20 -

கோழைகளாய் வாழுவதோ..? கட்சியின் தலைவர்கள் கூட ஜாதி, சமய, மொழி பற்றிப் பேசும் போது சில மதத் தலைவர்களும் வரிந்து கட்டி பேசுகின்றார்கள். இது வருத்தத்துக்குரியது . இந்த உண்மை ஏன் சிலருக்குப் புரியாமல் போகிறது?
நானே உயர்ந்தவன் என எண்ணுபவர்கள் அந்த எண்ணத்தை தம்முள்ளே வைத்திருக்க வேண்டியதே! அதற்காகப் பிறருடன் ஒப்பீடு செய்து பார்ப்பதும் பேசுவதும் சமூகப் பார்வைக்கு சாபத்தின் வடுவாகவே நோக்கப்படும். ஏன் வம்பு எனத் தன்பாட்டில் சும்மா போகிறவனுடன் சீண்டக்கூடாது. சிலர் வலிய வினைதேடியே அவமானப் பட்டுப் போவது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாகவும் சிரிப்பூட்டுவதவாகவும் அமையலாம்.
வல்லரசு நாடுகளே வலிய வம்புக்குப் போவதும், சீண்டுவதுமாக இருக்கின்ற போது சாதாரண பொருளா தாரத்தில் நலிவுற்ற நாடுகள் தம்முள் உராய்ந்து கொள்வது தேய்ந்து போவதற்குத்தான் என அறிக வல்லரசு நாடுகளுக் கிடையேயான அவதூற்றுதல்கள், நடவடிக் கைகள், எல்லையின்றி நீண்டு சென்றால் வல்லமையற்ற நாடுகளே அமுக்கப்படுவது உறுதி.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் யுத்தத்தை விரும்பும் பைத்தியக்காரத்தனமின்றி வேறென்ன?
- 2 -

Page 13
பருத்திபூர் பால, லுயிர்வகுதேஷ்
அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியன் தான் அவமானப்பட்டதால் எழுந்த மாறாச் சினம் காரணமாக வீறு கொண்டு தன்னை அவமதித்தவர்களை வேருடன் மிதித்து அழித்தான்.
திரெளபதி தன்னை ஏளனம் செய்து அவமானப்ப டுத்தியதாகக் கருதிய துரியோதனன், திரெளபதியை பழிக்கு ப்பழி தீர்க்க, மானபங்கப்படுத்த விழைந்து வீழ்பட்டதை மகாபாரதம் கூறும். இவை வெறும் சரித்திரங்கள், புராண இதிகாசங்கள் அல்ல, சிந்தனைக்குள் செலுத்த வேண்டிய அரிய விஷயங்கள்.
அவமானப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் உடன் நிகழாதுவிட்டாலும் அது மீண்டும் பற்றி வாட்டி வதைக்கும். எல்லோரிடமும் அன்பைப் பகிர்ந்துகொள்பவனு க்கு எத்தகைய இடையூறுகளும் எழ வாய்ப்பில்லை. எமது பார்வை ஒரே மாதிரியாக, நெஞ்சில் வஞ்சகமில்லாமல், கரிசனை மிக்கதாக அமைந்தால் தூற்றுதல், அவமானப் படுத்தல் போன்ற எண்ணம் கருக்கொள்ளுமா? ஏற்கனவே தப்பான எண்ணம் கொண்டவர்களாலேயே மற்றவர்களை உதாசீனம் செய்து கொள்ள முடியும். சிலவேளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் கூட மனிதரை மாற்றி விடுகிறது.
நிலைமைகளைப் புரிந்து கொள்ள புத்திக்கு
அவகாசம் கொடுப்போம். எங்கள் மீது ஒருவர் வைத்துள்ள
நன்மதிப்பை நாசம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஏனைய
س 22 سب

கோழைகளாய் வாழுவதோ..?
வர்களிடம் நல்ல எதிர்பார்ப்புகளை நாம் எதிர்பார்ப்பது போலவே, மற்றவர்கள் எம்மிடம் நல்ல அனுகூலங்களை எதிர்பார்க்கின்றனர். 鬣
உணர்ச்சிவசப்பட்டுத் தன்நிலை மறப்பதும், பாதிப்பு க்குள்ளாவதும், பின்பு வருந்துவதும் ஒரு சராசரி நிலை அந் நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.
மனிதன் உயர்ந்தவன்
* மாசக்தி உடையவன்
இந்தச் சக்தி கோபப்படுவதில், சலனமடைவதில் வீண் விரயமாக்கப்படக் கூடாது.
எங்கள் மீது தகுந்த காரணம் இன்றி ஒருவர் மனம் சலிப்படைதல், வெறுப்படைதல் போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்றே விரும்புகின்றோம். காழ்ப்புகள், கரிய சிந்தனைக்கே வழிவகுக்கும். எங்கள் மூலம் பிறர் மன உறுத்தல்கள்ை அனுபவிக்கக் கூடாது.
வெறுப்புடைய வைப்பதும், வேதனைப்பட வைப்பதும் மானுட இலட்சணங்கள் அல்ல வர்ண ஒளிப்படம் போல் பிரகாசமாக, துல்லியமாக, நெஞ்சினை வைத்துக் கொள்வோம். மனம் செழிப்பாக இருப்பவனால் தான், களிப் பானவைகளை உருவாக்கவும், தானும் களிப்பேரு வகை முடியும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி-25.11.2005
- 23 .

Page 14
பருத்தியூர் அ.ை ஆயிற்றுருதேஷ்
•፤ స్ట్యా
பொறாமையெனும் பெரும் தீ
பொறாமையைத் தொட்டவரை அதுவே பற்றியெரிக்கும். ஆயிரம் கோடி சூரியர்களின் உஷ்ணத்தைவிட பொறாமைக்குணத்தின் உஷ்ணம் பொறாமை கொண்டோரின் ஆன்மாவையே பொசுக்கிவிடும். சுயநலம், தாழ்வுமனப்பான்மை, குரோதம், தோல்வி ஆகியன பொறாமை உருவாக முக்கிய காரணிகள் ஆதிக்க உணர்வு ஆணவம், மற்றவர்களை மடக்க எண்ணுகின்றது. இதுவும் காழ்ப்பின் ஒரு வடிவமாகும். எல்லோரும் வாழவேண்டும் என்று எண்ணுபவர்களை தீயநோக்கு தாக்குவதில்லை. நேரிடையான எதிரிகளை விட பொறாமையால், மறை முகமாக பிறரை அறுக்க வருபவர்கள் வெறுக்கத்தக்கவர்கள்.
ஆயிரம் கோடி சூரியர்களின் உஷ்ணத்தைவிடவும்,
பஸ்பமாக்கும் திறன், சிறுமைக் குணத்தில் முதன்மை கொண்ட பொறாமைக்கே உரித்தானதாகும்.
பொறாமை காரணமாக, மற்றவர்களுக்கு, துன்ப மூட்டித் திருப்தி காணலாம் என எண்ணுவது, தனக்குத்
- 24 -
 
 
 
 
 
 
 
 
 
 

கோழைகளாய் வாழுவதோ..? தானே, தீமூட்டிக்கொள்வதுபோலாகும். இது தொட்டவரைப் பற்றிக் கொள்ளும், மற்றவர் வளர்ச்சியில், குரோதம் கொள் வதில் குறியாய் இருந்து கொள்ளும்.
துர்ச்சிந்தனைகளுக்குமூல காரணமாகவும் கற்றவர் களைக்கூட சில வேளை மதிமயக்கத்திற்குட்படுத்த வல்லதாகவும் உள்ள மோசமான மூலகாரணி இது.
கதைகளிலும், காப்பியங்களிலும், இதுபற்றியே பேசப்படு கின்றது. ஒரு கதை நகர்வதற்குப் பாத்திரங்களில் வரும் அருவருக்கத்தக்க கதாபாத்திரங்களுக்கு அரசனாகப் பொறாமைதான் பொருத்தப்படுகின்றது. எந்த நாட்டின் வரலாற்றுக் கதைகளிலும் இதன் ஆட்சியில்லா பாத்திரங்களே கிடையாது.
துன்பங்களுக்கு நாயகமாகவும் சரித்திரங்களை வளைத்து ஒடிக்கும் கருவியாகவும் பொறாமையின் வலு, இலகுவாக உட்சென்று ஒட்டிக் கொள்ளுகின்றது.
வில்லனின் வில்லங்கங்கள் இல்லாமல் கதைகள் தொடருமா? இன்பதுன்ப சம்பவங்கள் இழையோடாவிட்டால் நாவலின் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் தொடர்ந்திடுமா?
ஆனால், மனிதன் திருந்த வேண்டும், திருந்தியே
ஆக வேண்டும் என்பதன் பொருட்டே தீவினையாளர்கள்
பற்றியும் அவர்தம் பொறாமையின் குணாம்சங்கள் பற்றியும் - 25 -

Page 15
பருத்தி பல அற்றதுதல் காலத்திற்குக் காலம் எழுதப்படும் எழுத்துக்கள் எமக்கு விழிப்பை ஏற்படுத்துவதற்காகவே படைக்கப்படுகின்றன.
)ே தனக்குக் கிட்டாதது பிறர்க்குக் கிட்டினால் அல்லது மேலும் எடுக்கும் காரியம் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டதால் ஏற்படும் வன்மம்
)ே தன்னைவிட மற்றவர்கள் உயர்ந்து விடக்கூடாதே
என்கின்ற சுயநல நோக்கு, தாழ்வு மனப்பான்மை,
)ே முன்னேற்றமடைய தீவிர விருப்பு இன்மை, உழைப்புக்காட்டாமை, தனக்கு மட்டுமே தோல்விகள் வருகின்றன எண்ணிக்கொள்ளுதல்
)ே எந்த விஷயத்தை பெரிதாக எண்ணி, அதனைச்
செய்து முடிக்காமல் விடுகின்ற இயலாத்தன்மை.
இத்தகைய பல்வேறு காரணங்கள், பொறாமை யுடன் தோழமை கொள்ள ஏதுவான அம்சங்களாகும்.
இது தன்னைச் சார்ந்தோரைச் சுருட்டி மூளைக்கு வேலை வைக்காமல் செய்யும் கைங்கரியத்தைக் கனகச்சித மாகச் செய்து விடுகின்றது.பொறாமை கொண்டு பிதற்றுப வர்களுடன் பேசிப்பாருங்கள். தமது சிந்தனையைப் பாவிக்காமலே பேசுவார்கள். சில வினாடித் துளிகள் கூட மற்றவர் நிலை, மனோ நிலைகளைப் புரிந்துகொள்ளப் பிரியப்படவே மாட்டார்கள்.
- 26 -

கோழைகளாய் வாழுவதோ..?
தனது தோல்வி, துன்பம் இவையெல்லாமே பிறரா லேயே வந்தவை எனக் கற்பனை பண்ணிவிடுவார்கள். அல்லது வேண்டுமென்றே அவதூறாகப் பேசி வன்மம் வளர்த்தும் விடுவர்.
பின்னர், இதன் காரணமாகப் பொறாமைப்படுவ துடன் நின்றுவிடாது தாங்கள் விரும்பாத நபர்களுக்கெதிரான செயல்களையும் செய்ய முயன்று விடுவர்.
பொறாமை காரணமான மனதின் தூண்டலினால் தானே சதி வேலைகள் நடக்கின்றன?
தனிமனிதன் வாழ்வில்,
சமூகங்களுக்கிடையில்,
எங்குதான் பொறாமையின் ஆட்சி இல்லாதிருக் கின்றது? அழிவு வேலைகளின் ஆரம்பமே பொறாமை தானே?
ஆழ்ந்து நோக்கினால் பொறாமைப்பட்டவன் சிறுமைப்பட்டுச் சீரழிந்த கதைகளைத்தான் நடைமுறை நிகழ்வுகளில் கண்டிருப்பீர்கள். இதனையே கதைகளாகவும், திரைப்படங்களாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
வல்லரசுகளின் ஆதிக்க உணர்வு பொறாமையில்
தான், அரும்பி, முளைவிட்டு பின்னர் மாபெரும் யுத்தமா
கவே வெடிக்கின்றது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய - 27 -

Page 16
பருத்தி அல. ஆயிரணுகுந்தர் ஒன்றிருக்கின்றது. பொறாமையின் கோரப்பிடியினுள் சம்பந்தப்படாத ஜீவன்கள்கூட இவ்விளைவுகளுக்குள்சிக்கி அழிந்து போவது தான் வேதனைக்குரியதாகிவிட்டது.
இரண்டு குடும்பங்களை எடுப்போம். இந்தக் குடும்பத் தலைவர்களின் மோதல்கள் அங்குள்ள சின்னஞ் சிறிசுகளைப் பாதிப்பதில்லையா?
இவர்களின் பாதையில் செல்லும் பிள்ளைகள் பெற்றோரின் வழியில்தானே செல்லுகின்றன?
சாதாரண விஷயங்களுக்குக் கூட மனிதன் மனதை அலட்டிக் கொள்வது விசித்திரமாக இருக்கின்றதைக் காணலாம். இத்தகையோர் கண்டதையும் சொல்வார்கள். "கடையில் சாமான் வாங்கப்போனேன். நான் கேட்ட சாமான் தீர்ந்துபோய்விட்டது. நாளை வாருங்கள் எனக் கடைக்காரன் சொல்லுகின்றான். ஆனால் எதிர்வீட்டுக்காரன் மட்டும், அதனை வாங்கி விட்டான். “ஹம். என் நிலை இப்படி!" 6T6. Trisoir.
இந்தப் பேச்சில் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனக்குக் கிடைக்காததையிட்டு மட்டும் கவலைப்படவில்லை. அதே பொருள் எதிர்வீட்டுக்காரனுக்குக் கிடைத்ததைத் தான் அவரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை.
- 28 -

கோழைகளாய் வாழுவதோ..?
ஆனால், இதே பொருளை அவர் அடுத்த கடை
களில் போய் வாங்க முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அவர் இந்த முயற்சியில் ஈடுபடவே மாட்டார்.
சதா பொறாமை உணர்வு காரணமாகப் பிறர் மீது குற்றம் காணுவதும், சலிப்பான வார்த்தைப் பிரயோகம் செய்வதுமே தமது, பிழைப்பாக கொள்பவர்கள், இந்த நடத்தைகள் பிழையானது என எப்போது உணர்வார்கள்? இன்னமும் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது.
சிலர் மெளனமாகவே பொறாமைப்பட்டு, உள்ளுக் குள்ளேயே வெந்து அவிந்து கொள்ளுவார்கள். இவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதே ஒருவ ருக்கும் தெரிந்துவிடாது.
இன்னும் ஒரு சிலர் தமது பொறாமையின் வெளிப் பாடுகளை வெளிப்படையாகவே சொல்லிக் காட்டி விடுவார்கள்.
"போ. போ. உனக்கு என்ன தெரியும், ஏதோ குதிக்காதே. நீ எல்லாம் பேசவந்துவிட்டாயே பெரிதாக." என்று, இழிவாக, கஷ்டப்பட்டு முன்னேறிய நபர்களையே கன்னா, பின்னா என்று வார்த்தைகளால், வறுத்தெடுப் பார்கள்.
- 29

Page 17
பருத்தி பல. ஆயிரவருதல்
எது எப்படியோ, காழ்ப்புணர்வு கொண்டவர்களிடம்
இருந்து தப்பிப்பதில் எங்கள் புத்தியை, நிதானத்தை நாம்
துணையாகக் கொண்டேயாக வேண்டும்.
சாதுரியமாக வார்த்தையாடுவதும், நல்லவர்கள் போல நடிப்பதும், மற்றவர்களை எரிச்சலடைய வைக்க முயல்வதும் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு வார்த்தைகளை மாற்றிக் கொள்ளுவதும் போன்ற செயல்களில் அப்பாவித் தனத்தினையும் நடிப்பாகப் புகுத்திக் கொள்ளுகின்ற, பொறாமைக்காரப் புல்லுருவிகளை, நல்லவர்கள் இனம் கண்டேயாக வேண்டும்.
ஒருவனைக் கெடுக்க வேண்டுமென எண்ணிக் கங்கணம் கட்டுபவர்கள் செய்கின்ற சாதுரியமான கபடவேலைகளை, சமூகத்தில் எல்லோருமே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
மொட்டைக் கடதாசி, பொய்யான முறைப்பாடுகள், அவதூறுபரப்பும் காரியங்களில் ஈடுபடுதல் போன்ற மோசமான நடவடிக்கைகளைச் சட்டத்துறை சார்ந்தவர்கள் கண்டு காணாமல் இருப்பது கவலைக்குரியது. அநாமதேயக் கடிதத்திற்காகத் திருமணம் தடைப்படுவதும், வேலை வாய்ப்புக்கள் மோசடியாகத் தடைப்படுவதும் அன்றாடம் நாம் காணும் அவல, அவஸ்தைச் சம்பவங்கள்.
சரி. சரி. விட்டுத்தள்ளுங்கள், யாரோ ஒரு பொறாமைக்காரன் செய்த சதி எனத்துக்கி எறிய இந்தச் - 30 -

கோழைகளாய் வாழுவதோ..? சமூகத்திற்கு மனசே இல்லையா என ஏங்கத்தோன்று கின்றது அல்லவா?
காலம்தோறும் நடந்து வருகின்ற இந்த பொறாமை, வன்முறைகளைக் கிள்ளி எறியாதவரை சமூகமும், நாமும் உருப்படமுடியுமா?
எல்லோரும் வல்லவராய் நல்லவராய், உறவாடி, உரிமையுடன் பழக, சுதந்திரமாகச் ஜீவிக்கத்தான் இந்தப் பூமி உதயமானது. இங்கு மனித மனங்கள் புதைக்கப் படலாகா, ஒருவரை மற்றவர் கெடுக்க நினைக்ககூடாது. அடுத்தவன் வாழாதவரை நாம் வாழ்ந்து விடமுடியாது. விலக்கி வைக்கப்பட வேண்டிய துர்க்குணங்கள் நிர்மூல மாக்கப்படவேண்டியவை தான்.
எவன் ஒருவனும் மற்றவனால் பாதிப்புக்குள்ளா னதாக கேள்விப்படுவதே கூடாது.
அந்த நல்ல நிலை வரும், வரவேண்டும் என நாம் பூரணமாக நம்புவோமாக. எவரினதும் நெஞ்சம் புண்படா மல், புண்படுத்தப்படாமல் வாழ்ந்தால், வாழ்வித்தால் பொறாமை, கூறாமல் விடைபெறும்.
கூர்மதி (கல்வி அமைச்சு ஆண்டுமலர் 2006)
- 31 -

Page 18
约、
கோழைகளாய் வாழுவதோ..?
துணிச்சல் உள்ளவன் எதனையும் பெறுதற்குத் தகுதியுள்ளவன். கோழைகளே வாழ்க்கையில் ஏழைகள். இவர்கள் தம் பயத்தினால், வருகின்ற வரவுகளையே துரத்தும் நபராகிவிடுவார்கள். மனத்தை வளமாக்கினால், துணிச்சல்தானே வரும், உடல் பலத்தை விட மனோபலம், எதனையும் செய்து முடிக்கவல்லது. கோழைகளுடன் தோழமை கொள்ளற்க பயந்தவன் தன்னை மட்டுமல்ல, தனது குடும்பத்தையும் காப்பாற்றும் தைரியத்தை இழந்தவனாகின்றான். பருந்து பறக்க அஞ்சினால் கோழிக்குஞ்சு கூட அதனை ஏறி மிதிக்கும். பாம்பு சிறப் பயந்தால், மண்புழு, அதன்மீது புரண்டு அமுக்கும். கோழையால்
ண்டநாள் வாழ்வதை விட, வீரனாய் ஒருகணம் வாழ்ந்தால் மேன்மை.
கோழைகள், வாழ்க்கையில் ஏழைகள், மனமும், உடலும், பயத்தினால் பதறினால், எந்தச் செல்வமும் இருந்து என்ன ஆகப்போகின்றது?
துணிச்சல் உள்ளவன் எல்லாம் பெற்றவன் ஆகிவிடு கின்றான். துணிச்சல் அற்றவன் என்ன இருந்தாலும் அனைத்தையும் இழந்தவன் போல் ஆகின்றான்.
- 32 س
 
 
 
 
 
 
 
 
 
 

கோழைகளாய் வாழுவதோ..?
வருவது வரட்டும் என்கின்ற உணர்வு வருகின்ற போது, எதனையும் எதிர்கொண்டு அதனை எய்தும் திருப்தி தானாவே ஏற்பட்டுவிடுகின்றது.
திருப்தியின்மை என்கின்ற நோக்கு வர ஆரம்பிக் கும் போதே பயமும், தோல்வி உணர்வும், மனிதனை மெது மெதுவாக தொற்றி ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கின்றன.
இன்னது என்றே தெரியாத ஒரு அர்த்தமற்ற உணர்வுகூடச் சில சமயம் தென்படுவதாகச் சிலர் சொல்வ துண்டு. உடலில் சற்று வலிமை குன்றினாலும் கூட, தெளி வின்மையும், சோர்வுடன் கூடிவர துணிச்சலற்ற தன்மையும் ஆணி அடித்தால் போல நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு விடும்.
எனவே, துணிவுடன் வாழ உடலும், மனமும் கூட ஒத்துழைக்க வேண்டும்.
தேக நிலையைக்கூட, மனத் திண்மையினால் பலமாக்க முடியும். எனவே எமக்கு அடிப்படையில் மனோ வலிமை ஸ்திரமாகஅமையவேண்டும். கோழைகள் வாழுவ தில்லை. அழுது தன்னையும் தேய்த்து, சுற்ற இருப்பவர் களின் மனோபலத்தையும் அழிக்க முயல் பவன் ஆகின்றான்.
- 33 -

Page 19
பருத்தி பல விவரக்
சலிப்பு, அலுப்பு அற்று வாழ முயலவேண்டும். மனிதனுள்ளே ஒரு மாபெரும் சக்தி புதைந்துள்ளது. அதனை ஒருதரம், தட்டி எழுப்பி, உசுப்பிவிட்டால் போதும், அதன் விஸ்வரூபம் பற்றி அவனே அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவான்
பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள் "நானே நினைக்க வில்லை. எப்படி இதனைச் செய்து முடிப்பேன் என்று” என்பார்கள். கோழைகளாய் இருப்பவன் தன்னை உணர்ந்தாலே போதும். அவன் மீண்டும் எழுவான். அந்த நேரம் இவன் சாமான்ய நிலையில் இருக்கமாட்டான். அவனுள்ளே கிளர்ந்து எழும் மாபெரும் சக்தி அவனை முழுமனிதனாக உருமாற்றிவிடும். மனிதனின் நம்பிக்கை அசுர சக்தி தான்.
திரைப்படங்களில், கதைகளில், அடிபட்டவன் எழுவதைக் கண்டிருப்பீர்கள். இவை வெறும் கற்பனையாகத் தோன்றினாலும் யதார்த்தத்தில் இத்தகைய அதிசய நிகழ்வுகள் இடம் பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.
"என்னால் முடியும்" என்று தனக்குத் தானே கட்டளை இடாது விட்டால், எந்தக்காரியத்தையும் திருப்திகரமாகச் செய்யமுடியாது. பிறரின் முட்டுக்கட்டை போடுகின்ற, தகாத உபதேச மொழிகளைக் கேட்கக்கூடாது. செய்யக்கூடிய நல்ல செய்கைகளுக்குக்கூட, புத்திமதிகள் என்ற சாக்கில் கச்சிதமாகத் தடைக்கற்களைப் புதைத்துவிட
- 34 -

கோழைகளாய் வாழுவதோ..? சிலர் முயல்வதுண்டு. உங்கள் அறிவோடு, வீரத்தை, துணிவினை இணைத்துவிட்டால் பயம் என்பதே பயனற்றுச் செயலற்று ஓடிவிடுமன்றோ?
பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க கோழைத்தன மாக, விலகியவர்கள் கூட, தாம் புத்திசாலித்தனமாக தப்பித்ததாகக் கூறிக் கொள்வதுண்டு. உண்மையில் இவர் கள் தமது அந்தராத்மாவில் அடைபட்டு அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்ற அனுதாபத்திற்குரியவர்களே.
கோழைத்தனம் என்பது, தீமைகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பது மட்டுமல்ல, தன்னையே கட்டி வைத்துக் கொள்ளுகின்ற மாபெரும் துன்பியல் நடவடிக்கை யுமாகும்.
நியாயபூர்வமான விஷயங்களுக்குப் பயப்படுவது நல்லது. அதை விடுத்து, தவறான கருமங்களுக்காகத் துணிவு என்கின்ற பெயரில் நெஞ்சை உயர்த்தக் கூடாது. இது கல் வரும் திசையில் தலையைக் காட்டுவது போல இருக்கும்.
பிறர் நியாயங்களுக்காகப் போராடுவது பேராபத்து
என்பவர்கள் தமது நலம் சம்பந்தப்பட்டதாயின் பிறர்
உதவிகளை இவர்கள் கோரத் தயங்குவதில்லையே? இது
சுயநலம் மட்டுமல்ல, கயமையின் அப்பட்டமான வெளிப்
பாடு. உண்மையான ஒருவனுக்கு வேதனையான - 35 -

Page 20
பருத்திபூர் அ,ை அரேவதறர் அனுபவம் என்ன தெரியுமா? கோழை ஒருவனுடன் பழக சீவிக்க நேர்வதுதான்.
குடும்பத்தைக் கோழை காப்பாற்றமாட்டான். எல்லா வற்றிற்கும் காரணம் சொல்லுவான். முடியாது போனால் பிரச்சினை என்று சொல்லிக் குடித்து, வெறித்து அழிந்தே போகின்றான். பிரச்சினையை மறக்கக் குடிக்கின்றேன் என்று கூறுபவர்கள் துணிச்சலானவர்களா?
காட்டிக் கொடுப்பவனும் கோழை ஆகின்றான், தன்னைக் காப்பாற்றுவதாக எண்ணித் தனது ஆன்மாவை அடகு வைக்கின்றான். பெறும் லாபம் இதனால் ஒன்றுமே இல்லை. தற்காலிக நன்மை ஒரு வேளை கிட்டலாம். முடிவில் பெறப்போவது துன்பமே தான். துன்பமே தான்.
பயம் ஆட்டுவிக்கும் போது சூழ நிற்கும் பாதிப் புக்கள், புலன்களுக்குப் புலப்படாது போகின்றன. தனக்கும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே தனது வலிமையை பிரயோகிப்பவன் தன் சுயநலம் போக்கினால் தனக்கு வேண்டப்பட்டவர்களாலேயே அவமதிப்புக்கு உள்ளாக்கப்படவும் கூடும்.
எங்கள் துணிவு, வலிமை, திறமை அனைவருக்குமே உபயோகப்படுவனவாக இல்லாதுவிட்டால் என்ன பயன் உலகிற்கு ஏற்பட்டு விடப்போகின்றது?
- 36 -

கோழைகளாய் வாழுவதோ..? ஒருவன் பத்துப் பேருடன் சேர்ந்து ஒரு பயணம் செய்யும் போது வரும் ஆபத்தில் தன்னை மட்டும் காப் பாற்றுகின்றான். அவனால் எல்லோரையுமே காப்பாற்ற முடியும். ஆனால் அவன் ஏது வம்பு என்று விட்டு விடுகின்றான். -
முடிவு, அவன் தனி வழிப்பயணம் செய்ய முடியாது திணறி வழியில் பிறிதொரு தொல்லையில் அகப்பட்டு இறக் கின்றான். எங்களையும், எங்களோடு இருப்பவர் களையும் போஷிக்க வேண்டும். சகலரையும், எங்கள் வலிமை கொண்டு காப்பாற்றியேயாக வேண்டும்.
ஒரு கண்ணுக்கு வலி ஏற்பட்டால் மற்றக் கண்சும்மா இருப்பதில்லை. கலங்கி அழுதுவிடும். மனிதன் செல்லும் பாதைகளை அவன்தான் உருவாக்க வேண்டும். நடக்கும் போதே, கால்கள் சுளுக்குப் பிடிக்கும் என எண்ணினால் அடுத்த அடியைத் தொடுக்க முடியுமா? படிக்கும் போதே முடிவு கஷ்டம் என்று எண்ணினால் முதல் பக்கமே சுருண்டு படுத்துவிடும்.
காதலிக்கப் புறப்பட்டவன் காதலியின், அத்தை பையனுக்குப் பயப்பட்டால் கல்யாணம் என்பதே காததுரம் தான். பணம் தேடப் புறப்பட்டவன் கனநேரத்துத் துன்பங்க ளுக்குப் பயந்தால் செல்வம் சேர்க்கும் ஆசை பலமிழந்து போய்விடும். முட்டையை உடைத்துவரக் குஞ்சு
- 37

Page 21
பருத்தி அல. அவருதல் அஞ்சுவதில்லை. கழுகு பறக்க அஞ்சினால் கோழிக்குஞ்சு கூட அதனைக் கடித்துக் குதறும்.
கோழைகள் தயாரிக்கும் வேலி, ஊதினால் உதிர்ந்துவிடும். இவர்கள் வதியும் வீடு தென்றலிலும் தவிடு பொடியாகும். இவர்கள் விடும் மூச்சுக்கூட இவர்கள் செவிக்கு இடி முழக்கமென ஒலி, ஒலித்துப் பெரும் பயமுறுத்தும்.
தனக்குத் தானே பயப்படுதல் இவர்கள் விரும்பி எடுத்த தொழிலாகும். இந்த லட்சணத்தில், பக்கத்தில் நிற்பவனைப் பார்த்தே பயப்படுவதில், புதுமை என்ன இருக்கப் போகின்றது?
பயப்படுபவன் சந்தேகப்படுகின்றான். சுகங்களைத் தூக்கி எறிகின்றான். மற்றவனையும், தன்போல மாற்ற முயற்சிக்கின்றான். இவனிடம் இருப்பதே ஒரு நோய் என எண்ணாமல் இவனுடன் ஐக்கியப்பட நேர்ந்தால் அதனைவிடப் பரிதாபம் வேறில்லை.
எதற்குமே "ஐயய்.யோ. கவனம். பார்த்துச் செய்ய வேண்டும். கஷ்டமாக இருக்கும்" என்று பேசிக் கொண்டேயிருந்தால் காரியங்கள் கோணலாகி விடுமல்லவா? சும்மா படுத்து இருப்பவனுக்கு யமன் வரும் திசையைக் காட்டும் அறிவிலிகள் இவர்கள்.
- 38 -

கோழைகளாய் வாழுவதோ..? கற்பனை உலகில் பயம் என்கின்ற கோழைத் தனமான குகையில் முடங்கியிருக்கும் ஜீவன்கள் உலகின் பாரங்கள். ஓரிருவினாடி வாழும் விட்டில் பூச்சிகள் கூட அச்சமின்றிச் சிறகடித்துப் பறக்கின்றன.
நீண்ட பகல்கள், நீண்ட இரவுகள், முழுநாட்கள், வருடங்கள் பலப்பல. இந்த காலக்கணக்கில், ஒளிந்து நிற்கா மல் விலகி ஓடாமல், நேராக நிமிர்ந்து நில்லுங்கள், துணிந்து செல்லுங்கள். இதுதான் வாழ்க்கை கோழைகளாய் வாழ்வது குதூகலம் அல்ல. தாளம்போட்டு வாழ்ந்து தப்பிக்க முடியாது. சரி எனப்பட்டதைச் செய்யுங்கள். தவறே இல்லை. துணிவு எம்மை வழிநடத்தவல்லது எழுவதற்காகவே எம்மை இறைவன் படைத்தான் என எண்ணுமின் கண்ட வன் காலில் விழுந்து அழுவதற்கு அல்லவேயல்ல!
வீரகேசரி
02.08.2005
- 39 -

Page 22
"எழுச்சிமிக்க சமூகம்" என்பது ஒவ்வொரு தனிமனிதன்தும் உழைப்பு விடாமுயற்சியால், உன்னத நிலைக்கு வரப்பட்டதேயாகும். மன எழுச்சியுடன் இயங்குதலானது, நல்ல பணிகளைச் சிறப்பாகச் செய்தலாகும். குரோதம், தன்னலம், கொண்ட சமூகம், விழிப்புநிலை அடைவதேது? உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் சமூக சீர்கேடுகளைத் தகர்க்க முடியாது. காரிய சித்திக்கு மனப்பக்குவம் அவசியம். மனித நீதி, சட்டம், ஒழுங்கு முறைகளாலேயே சமூகம் முழு அமைதியினைக் காண முடியும்.
மனத்தினாலும், உடல் நிலையினாலும், ஒருவர் தளர்ச்சியுற்றால் எழுச்சியுடன் தான் சார்ந்த சமூகத்திற்கும், தனக்கும் உழைத்தல் அரிது.
"எழுச்சி" என்பது தனி ஒரு மனிதன் மட்டுமல்ல, முழு சமூகமும் எழுச்சி பெற்று விடுதல் என்பதுமாம். எழுச்சிமிக்க சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனின் முழுப் பங்களிப்பும் ஆற்றுகைப்படுத்தலால் அது உலகிற்கே,
-4●一
 
 
 
 
 
 

கோழைகளாய் வாழுவதோ..? பொதுவானதாய் ஏதோ ஒரு வழியில் சென்றடைந்து விடு கின்றது. உழவன் உண்டாக்கும் நெல், அவனுக்கு மட்டு மல்ல, அது எல்லோருக்கும் சென்றடைகின்றது. மேலும், உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒருவன் சிரமத்துடன் உருவாக்கும் பொருள் எங்களுக்குக் கிடைக்கின்றது.
உற்பத்தி செய்பவர்களே, தங்களது வலு என்ன எனத் தெரியாமலேயே வாழ்ந்துவருகின்றனர். பல மனிதர்கள் ஒன்றிணைந்து செய்யும் காரியத்தினால் பெறப்படும் அதிகூடிய சக்தியினால் அபரிமிதமான நற்பயன் கிட்டினால் அது மானுட இணைப்பினால் ஏற்பட்ட மிகப் பெரும் வலிமையன்றோ!
எமது மனம் என்றும் திண்மையாக இருந்திடல் வேண்டும். எமது உடல் நிலையைப் பொறுத்தவரை, அது நாம் சொல்லியவாறு செயற்படும் விதமாய் அமைந்திட வேண்டும். அதற்கேற்ப நாம், எம்மை வயப்படுத்துதல் அவசியமும் கூட மனப்பக்குவம் இன்றேல் தேகம், பிறரிடம் யாசகம் எனும் உதவியைக் கேட்க நேரிடும். மனமும், தேகமும், ஒத்திசைவின்றி இருந்தால் எண்ணியவை. எண்ணியபடி காரியங்களை உற்சாகமாய், வெற்றிகரமாய் முடித்திடல் இயலாது போய்விடும் தெரிந்துகொள்க!
மேலும், மனளழுச்சியுடன் இயங்குதலானது மேலான்
நல்ல பணிகளை மட்டும் செய்வதற்காக மட்டும் தான்.
கண்டபடி, வாழ்வதற்கும் இன்னும் ஒரு சமூகத்திற்கும்
- 41 -

Page 23
குருத்திபூர் அல. ஆயிரவருந்தர் மதத்திற்கும் எதிராக, மொழியுணர்விற்குக் களங்கமேற்ப டுத்துதலுக்கும், "எழுச்சி" என்ற சொற்பதத்தைப் பாவிப்பது அநியாயமானதாகும்.
குரோதம் மிகுதியால் நெஞ்சில் வஞ்சகம் கொண்டோர் முழுமூச்சுடன் செயல்படுதலை "எழுச்சி” மிக்க செயல் என்று சொல்லிப் பாராட்டும் பொய்மையா ளர்களின் பூமியாக இது மாறக்கூடாது என்பதற்காகவே நன்நூல்களைச் சான்றோர் ஆக்கிவைத்தார்கள். மக்கள் எழுச்சிகளைத் தவறாகப் பயன்படுத்தல் அநாகரிகமானது.
உணர்ச்சி மிகுதியினால் நாம், எம்மை மறந்தும், சில காரியங்களைச் செய்து விடுகின்றோம். நற்காரியங்களைச் செய்வதற்கும் கூட நாம், எம்மை மறந்து இயங்கிட முடியாது. எந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதற்கும் ஒரு வரைமுறையுண்டு. இன்று இளைஞர்கள் பலர், சமூக அநீதிகளை எதிர்ப்பதாகக் கூறி, உணர்ச்சி வசப்பட்டு, இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தக்க தலைமைத் துவத்தை, ஏற்றிடத் தயாராகவுமில்லை. எல்லாமே தமக்குத் தெரியுமாற் போல் தாமே தமக்கு ஏற்றால் போல் காரியங் களை நிறைவேற்றத் துடியாய் துடிக்கின்றார்கள். இத்தகைய இளைஞர்களின் எண்ணங்கள் சிறப்பாக இருந்தாலும் கூடத் தமது மன எழுச்சியைத் தக்க முறையில் பிரயோகிக்க முடியாது, மயங்கித் தெளிவற்றுப் போகும் நிலைக்கும் தள்ளப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டு விடுகின்றன.
- 42 -

கோழைகளாய் வாழுவதோ..? உணர்ச்சிகரமான, உணர்வின் வெளிப்பாடுகள், சட்டம், மனிதநீதி, ஒழுங்கு இவற்றுக்குப் புறம்பாக அமைந்துவிடலாகாது. எந்தப் பிரச்சினையையும் அறிவு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும், தெளிந்தொழுகுதல் சாலச் சிறந்தது. கட்டுப்பாடு, கண்ணியம், நல்ல நடத்தை நெறிகள், சத்தியத்தின் மீது அதீத பற்றுதல்கள் உள்ளவர்கள் மட்டுமே செய்யும் பணியை உத்வேகத்துடன் ஆற்றமுடியும்.
தேச விடுதலை, ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடு தல், தாம் சார்ந்த சமய நல் நோக்கங்களுக்காகப் பணி யாற்றுதல், பொதுப்பணிகள் போன்ற இன்னோரன்ன காரியங்களைச் செய்த தலைவர்கள், மகான்கள் மனப்பக்கு வத்தைத் தமக்குள் ஆக்கிவைத்த முறைமையை மக்களு க்கும் ஊட்டிச் சென்றார்கள். மக்களை வசப்படுத்தல் சாமான்ய காரியங்களுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக மக்கள் நல் எழுச்சிகள் கூட திரிபுவாதிகளால், சுயநலச் சோம் பேறிகளால் தடம் புரள்வது அன்னை பூமியை அதிர்ச்சியும் வேதனையுமடையச் செய்யும் செயல்.
மாணவர்கள் கல்வி கற்பதையே முதற்பணியாகக்
கொள்ளவேண்டும். அவ்வண்ணமே, ஒரு தொழிலாளி அவர்
செய்யும் வேலையானது எத்தன்மையாயினும் முகம்
சுளித்தல் இன்றி அதனைச் செய்ய வேண்டும்.
எவரெவர்கள் எத்தகைய உயர் பதவி, வசதிகளைக்
கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் உலகிற்காக, - 43 -

Page 24
பருத்தி அல. அரிமருந்தத் உழைக்கப் பிறந்த முழுநேர ஊழியர்களேயாவர். இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். எனவே, எழுச்சிமிக்க நல்உலகிற்காக நாம் அனைவருமே, உழைக்க வேண்டிய சமபங்காளிகளாவோம்.
சோம்பல், எதிலும் பாராமுகம், பற்றுதல் இன்மை, துன்பம், சோகம் ஆகியன பற்றி நின்றால் எமது இயக்கம் ஸ்தம்பிக்கும். கல்வி மட்டும் கற்பதனால் ஒருவன் சுறுசுறுப் புள்ளவனாக, மாறிவிட முடியாது. குடும்ப, சமூகநல விடயங்களில் அக்கறையின்றேல் எல்லாமே அனர்த்த LIDITÉl6(BOLb.
"வாழ்க்கையே இருட்டாக இருக்கின்றது” என்று சிலர் சொல்வதுண்டு தங்களைப் பூட்டி வைத்து விழிகளைமட்டும், திறந்துவைத்து உலகத்தைப் பார்த்தால் உலகம் அழுவ தைப் போல் தான் இருக்கும், தூய்மையற்றவையையே பார்ப்பதும், கேட்கத்தகாதவையையே கேட்பதுமாகவும், சொல்லக் கூடாத வார்த்தைகளைப் பேசப்பிரியப்பட்டுப் பேசுவதாகவும் இருந்தால் மன எழுச்சி நிலை நிலை குலைந்து விடுமல்லவா?
தேடியது எல்லாமே கிடைத்தாலும் நிம்மதி கிடைப் பதில்லை. ஒன்றுமே கிடைக்காது விட்டாலும் வாழ்ந்து என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகின்றது என முன்னுக் குப்பின் முரணாகச் சிந்திப்பதும், பேசுவதும் மனித இயல்பு. தன்னை மட்டுமே சிந்தித்துச் சிந்தித்து சுய நலத்துடன் 44

கோழைகளாய் வாழுவதோ..?
வாழ்ந்து கொண்டு பரந்த நிம்மதியைத் துடிப்பான கிளர்வுகளை எங்ங்ணம் எதிர்பார்க்க முடியும்?
தாம் செய்வது தவறு எனத் தெரிந்தும், தாங்கள் எண்ணிய தப்பான செய்கை மிகவும் விபரீதமானது எனத் தெரிந்தும் தங்களுக்கு சாதகமான பயன் அல்லது சமிக்ஞை கிடைக்காது விட்டால் கடவுளை நொந்து கொள்வதுடன், தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் கோபம், குரோதம் கொள்ளும் மனிதர்கள் இருக்கின்றார்கள். இந்த லட்சணத் தில் இவர்களிடம், எந்த முன்னேற்றம், வேகம் புறப்பட்டு விடப்போகின்றது ஐயா?
ஆர்வத்துடன் செய்யும் நற் பணியினால் அன்றி நாம் எந்த முன்னேற்றங்களையுமே கண்டு விடமுடியாது. தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருப்பவர்களுக்கு அடுத்து வரும் பிரச்சினைகள் பற்றி என்ன கவலை வந்து விடப் போகின்றது? இவர்கள் என்றுமே, இயங்கியபடியே. இயங்கியபடியே..! இவர்களுக்கு பிரச்சினைகள் யாவும் விலகியபடியே வழிவிட வெற்றிகள் யாவும் குவிந்தபடியே. குவிந்தபடியே..!! எழுச்சிமிகு எண்ணங்களுடன் உடலை வளைத்து கருமங்களைச் செய்பவர்களுக்கு தர்மங்கள் தக்க துணை செய்யும். இது இயற்கை விதி உணர்க!
இன்பங்கள் தான் உடன் கழிந்து விடுகின்றன என்பார்கள். விடுமுறைநாட்கள் என்ன வேகமாய் ஓடிவிட்டன. வேலை நாட்கள் ஏன் மந்தகதியில் செல்கின்றன எனப் பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
- 45 -

Page 25
பருத்தியூ பல. அவிழ்வருவதன்
விருப்பமுடன் வேலை செய்தால் அல்லது, பொழுதைப் போக்கினால் காலம் எவ்வளவு சந்தோஷமாகக் கழிந்து விடுகின்றது. நாம் எமது கடமைகளைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால் காலம் நகர்வது தெரியாது. துளி வினாடிகளும் சொர்க்கம் போல் இருக்கும். தூங்கு மூஞ்சிகளுக்கு எழுச்சியான கருமங்களின் தரம் அல்லது பெறுமானம் அறவே புரியாது.
துன்பங்களைப் பெரும் துன்பங்களாகவும், சந்தோஷ மாகக் காலத்தைக் கழிக்கும் சந்தர்ப்பங்களில், இனிவரப் போவது, துன்பங்களாகவே இருக்குமோ எனவும் எண்ணிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கின்றார்கள்.
“உங்களுக்கு என்னகுறை? பிள்ளைகள் எல்லோ ருமே, வேலைக்குச் சென்று கை நிறையச் சம்பாதிக்கின் றார்கள். அவர்களுக்குக் கல்யாணம் செய்து முடித்து விட்டீர்கள். இனி என்ன குறை?" என்று கேட்டால் "அதை ஏன் கேட்கின்றீர்கள்? இனி இந்த சந்தோஷங்களை எல்லாம் அனுபவிக்க நான் நீண்டநாட்கள் வாழுவேனா?” என்று ஆதங்கத்துடனும் கவலையுடனும் பேசும் மனிதர் களை என்ன என்று சொல்ல?
நல்லதை அனுபவித்தும் கூட கடவுளைக் குறை
சொல்பவர்களும் இருக்கின்றார்கள். இல்லாத காலத்தில்
கடவுளை வேண்டி அழுபவர்கள் எல்லாமே கிடைத்ததும்,
கடவுளிடம், என்ன குறைகளைக் கண்டுபிடிக்கலாம் எனக் - 46 -

கோழைகளாய் வாழுவதோ..? கணக்குப் பண்ணும் கோணங்கிகள் குவலயத்தில் உண்டு, பிழைகளையே தேடுபவர்களுக்குத் திருப்தி ஏது?
தானாகவே குனிந்து, நெளிந்துகோணங்கித்தனமாக நடக்கப் பிரியப்படுபவன், நாளடைவில், அவன் நடையே அதுவாகிவிடும். இவன் எழும்ப மாட்டான் குனிந்தபடி குறுகிப் போவான். மனித நடத்தைகளில் எழுச்சி காணப் படாது விட்டால் வீழ்ச்சி நிச்சயம் , இந்நிலை தவிர்க்க ப்படல் வேண்டும்.
எதையுமே எதிர்நோக்கியபடி ஆயத்த நிலையில் உஷாராக வாழவேண்டும். ஆனால், அதன் பொருட்டுக் கண்டபடி வீணான கற்பனைகளில் மூழ்கிப்போகக் கூடாது.
தான் மட்டும் சுகங்களை அனுபவித்துக் கொண்டு தனக்கு ஏதாவது சின்ன இடர்கள் வந்து விட்டால் மட்டும் இந்த முழு உலகமே தன்னைத் தாங்கவில்லையே எனத் திட்டுபவர்களுக்காக நாம் பரிதாபப்படுவது, அவர்களை மென்மேலும், வளர்ச்சியை நோக்கிய திசைக்கு இட்டுச் செல்லாது.
எழுச்சியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு,
வாழ்க்கையில் வந்துபோன அனுபவங்களே துணை
செய்கின்றன. சாமான்யனாக வாழ்ந்தவர்களே, சாம்ராஜ்
ஜங்களை நிறுவினார்கள் எனப் படித்திருக்கின்றோம்.
தீட்சண்யமான உலக பார்வையுடனும், தெளிந்த சிந்தனை سے 47 س=

Page 26
பருத்தியூ யாரு ஆயிற்றுதாரர் களுடன் மக்களை அவர்கள் நேசித்த முறைமையும் தான் இத்துணை வளர்ச்சிகளுக்கு இட்டுச் சென்றன.
நாம் என்னதான் முயற்சி செய்து எங்களை முன் னேற்றினாலும் கூட, ஒரிரு பொழுதுகளாவது மற்றவர் களுக்காக இரங்கி அவர்கள் துன்பங்களைத் துடைத்தா லன்றி, எந்த வெற்றியையும், மன நிம்மதிகளையும் முழுமையாகப் பெற்றுவிட முடியாது.
நாம் எழுந்து நிற்கும் போது பிறரையும் எம்முடன் சேர்த்துக் கொள்வோமாக! நாம் வீர நடையுடன் செயல் படும் போது அடுத்தவன் கரங்களையும் வலுவேற்றுவோ மாக எழுச்சியான வாழ்வு அமைய, உலகு உய்ய அனைத் துக் கரங்களையும் ஒருங்கே இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்.
தினகரன்
எழுகதிர் 13-09-2010
- 48 -

கோழைகளாய் வாழுவதோ..?
靠
வீழ்ச்சி அகத்தில், கருமையினை உள்நுழைத்து புறத்தே, தம்மை மினுக்கித் தனக்கும் உலகிற்கும் ஒவ்வாமல் வாழ்வது, வீழ்ச்சியை நோக்கிய பாதையில் எவ்வித தயக்கமின்றிச்செல்வதாகும். சமூக பிரக்ஞையுள்ளவன் வீழ்ச்சியடையப்போவதில்லை. உழைப்பது மட்டும் வாழ்க்கையல்ல. அ யந்திரத்தனமானது. மானுட நல் இயல்புடன் கூடி சமூகத்துடன் இணைந்து வாழ்வதே வாழ்க்கை உழைப்புடன், நெஞ்சத்தையும், பஞ்சு போல் ஆக்குக! வாழ்க்கையில் "வீழ்ச்சி என்பது வீழ்வது மட்டுமல்ல அதன் மூலமான அனுபவம் வளர்ந்து செல்ல உதவும் உத்வேக மாத்திரையும்
BL.
உலகத்திற்கு, ஒவ்வாததும், தனக்குத்தான் எவ் விதத்திலுமே பயன் படாததுமாக வாழ்வது ஒருவரை வீழ்ச்சிப் பாதையில் விரைந்து இட்டுச் செல்லும்,
உலகில் நாம் ஒரு கெளரவமான பிரஜை என்று, சொல்வதன் அர்த்தம் எங்களால் மற்றவர்கள் பெறும் பயன்பாடுகள் எத்தகைய உயர்வானவை என்பதனைப் பொறுத்ததாகும்.
-49 س -

Page 27
பருத்தி அல. ஆயிரவநாதர்
தம்மை மட்டும் மினுக்கி வெளியில் ஒரு வாழ்வும், செயலளவில் சாத்தான்களுடன் கூட்டணி அமைத்து அந்த உறவை, சாதுர்யமாகப் பிறர் அறியாமல் மனிதர்களுக்குத் துன்பங்களையே வெகுமதி போல் அளிப்பதும் ஒருவன் வீழ்ச்சியை மட்டுமே விரும்பி ஏற்கும் போக்காகும்.
சமூக பிரக்ஞையுள்ள பொதுநலவாதி வீழ்ச்சியடை யப் போவதில்லை. ஏன் எனில் இவர்களைத் தாங்கிக் கொள்ள உலகம் தன் கைகளை ஏந்தித் தயார் நிலையில் உள்ளது.
உழைப்பு மட்டுமே ஒரு நாட்டை உயர்த்தி விடும் என்று சொல்ல முடியுமா? அழகான இயந்திரங்களுடன் மட்டும் நாம் வாழ்ந்து விடமுடியாது. உழைப்பு என்பது உடலையும், மனத்தையும் இணைத்துப் பக்குவப்படுத்த வேண்டும். எங்கள் மனத்தினை பக்குவப்படுத்தாமல் வெறும் பணத்தை மட்டுமே வெளியீடு செய்யும் உழைப்பு உதவாது. இன்று பலர் பணத்தைப் பெறுவதற்காக உழைத்து, உழைத்து ஓடாய்போகின்றார்கள். மனத்தினைச் செழுமைப் படுத்தாமல் குடும்பத்தைச், சமூகத்தைக் குளுமை யேற்றாமல் வாழும் வாழ்வு, ஒருவாழ்வா?
எனவே, உழைப்புடன் சேர்த்து எங்களது நெஞ்சத்தை
யும் பஞ்சுபோல் மென்மையாக்கி, உலகிற்கு இசைவாக
மாற்றினால் வாழ்வில், வீழ்ச்சி என்பது ஏது? தங்களுக்கு
வேண்டப்படாதவர்கள் செய்கின்ற நல்ல காரியங்களை - 50 -

கோழைகளாய் வாழுவதோ..? ஏற்காமல் அவர்களின் நற்செயல்களையே பாவச் செயல் எனத் தனிநபர் விமர்சனம் செய்து வருபவர்கள் சிலரால் இந்த உலகு களங்கப்படக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்து நற்காரியங்கள் புரிந்தால் "வீழ்ச்சி" என்பது உலகிற்கு வந்திடுமோ?
மனம் வீழ்ச்சியடைவதுபோல் வேறு எந்த தண்டனை யையும் நாம் பெரிதாகக் கருதிடல் இயலாது. பரிபூரண விருப்புடனான தியாகம், ஈகை, ஆன்மீக நாட்டம் எல்லாமே எம்மை ஆட்கொண்டால் உள்ளம் வியாபகமடையும்.
உலக சரித்திரத்தில் ஒவ்வொரு நாட்டின் வீழ்ச்சி பற்றிப் படிக்கும் போது அவை பற்பல உண்மைகளை எமக்குப் போதிக்கும். நெப்போலியன் ஒரு மாவீரன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோல், ஹிட்லரின் திறமைகள், ஆளுமை, புத்திசாலித்தனம்பற்றி எவருமே குறைவாக எடைபோட முடியாது.
ஆயினும், இவர்களின் "ஆதிக்கம்” எப்படி வீழ்ச்சிய டைந்தது என்பதை நாம் படித்திருக்கின்றோம். ஒருவரது திறமைகள், சூழ்ச்சிகள் எல்லாமே "உண்மை" விஸ்வரூபம் எடுக்கும் போது, அதன் முன் ஈடுகொடுக்காது வீழ்ச்சி யடைந்து போகின்றது. இது இயற்கையின் மேலான விதி. உணர்க படு பிற்போக்கான கொள்கைகளைக் கூட அதிகார தோரணையில் பேசுகின்றவர்கள் இருக்கின்றார்கள். கேவலமான நிலையை உணராமல் இருப்பதைக் கூட
- 51 -

Page 28
பருத்திர் பல வர்மரன் அதுவே, பூரணமான நிலை என்று கருதுபவர்களும் இருக்கத்தான், செய்கின்றார்கள்.
"முடியாது" என்பதை வலிந்து ஏற்றுக் கொள்பவன் எழுந்து நடமாடுவது எப்படி ஐயா? நாங்கள் செய்ய முடியாததை இறைவன் எங்கள் மூலம் செய்து முடிப்பான் என்பதை, எத்தனை பேர் உளமாற நம்புகின்றார்கள்? அப்படி நம்பியவர்க்கு வீழ்ச்சி இல்லை.
நியாயங்களை நிறுத்த முயற்சிப்பவனும் அதனைத் துறந்தவர்களும், அதனைத் தமக்காக தாழ்த்தி, நிறுத்திப் பார்க்க முனைபவர்களும் மனத்தால் அழிந்தவர்களே. வெறும் உயிர்வாழ்வு மட்டும் வாழ்வு அல்ல.
நேர்மைக்கும் அதன் கூரிய பார்வைக்கு மதிப்பளிப்ப துமே உயிர்வாழ்வு கடவுளுடன் பேச இஷ்டப்பட்டதைச், செய்ய முனைகின்றோமா? "நாம் ஏன் அந்த மனிதனைப் போல் இல்லை, நான் அவரை விடச் சிறப்பாக இயங்குகின் றேனே எனக்கு என்ன குறை, என்றுமே வசதி, வாய்ப்புக் கள் ஏன் தேடி வருவதில்லை?” என்று சொல்கின்றவர்கள், நல்ல சந்தர்ப்பங்களை இறைவன் கொடுக்க முன்வரும் போது தூக்கத்திற்குச் செல்கின்றார்கள். சந்தர்ப்பங்களைப் பாவிக்காதவன் வீழ்ச்சிக்கான வழியை தானே ஏற்படுத்திக் கொள்கின்றான்.
வீழ்ச்சியடைந்தவர்கள் எழும்பக்கூடாது என்பது
-- 52 ܗܝ

கோழைகளாய் வாழுவதோ..? எங்குமே சொல்லப்பட்டது அல்ல. மாறாக, "வீழ்ச்சி” என்பது வளர்ந்து செல்வதற்கான ஒர் உத்வேக மாத்திரை எனக் கொண்டு எழுவீர்களாக மயக்க நிலையில் அறுவை சிகிச்சை செய்தபின் நோயாளி, அந்த நிலையிலேயே படுத்திருக்க விரும்புவதில்லை. படுத்தது போதும், எல்லாமே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது என மனத் தெம்புடன் எழுவதுதானே சரியானது. வீழ்ச்சியைக் காரணம் காட்டி முயற்சியின்றி தனது கை, கால், அவயங் களை சுயமுடிச்சு இட்டு முடங்குதல் தான் வளர்ச்சிக்குத் தடை!
வீழ்ச்சியடைந்து விட்டேன் என தைரியம்குன்றுவது, மரணத்தினைவிடக் கேவலமானது. தனக்காக மட்டும் பணியாற்றுவதும், அதன் பயனாக வாழ்வது மட்டுமே இன்பம் எனக் கொள்வதும், மற்றவர்க்காக, ஏதாவது செய்வது என்றும் துன்பமானது, தமது உடலை வருத் துவதுமானது, என்றும் கொள்பவர்களுக்கு தாழ்வு நிலை அசுரத்தனமாக வளர்ந்து கொள்ளும்,
கீழ்ப்படிதலும், இறை விசுவாசமும் இல்லாமல் வாழ்வதும் கூட ஒரு கட்டுப்பாடு அற்ற வாழ்வே. பெரி யோர்கள், ஆசான்களுக்குக் கட்டுப்படுதல், கீழ்ப்படிதல் என்பதே ஒரு அடக்குமுறை என்றும் எண்ணிக் கொள்ப வர்கள் இருக்கின்றார்கள். ஒருவரை ஒருவர் ஆளுதல், அடக்குதல் என்பதில் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அர்த்தங்கள் மாறுபாடு அடையலாம்.
-53一

Page 29
பருத்தி வடிவிற்குதல்
அன்புடன் ஆட்கொள்தல், அதிகாரத்துடன் அடக்கு தல், ஒரு தேவைகளைப் பெறுவதற்காக அடங்கிப்போதல் எனப் பலவாறு மனித நடத்தைகள், மாறுபாடு அடை கின்றன. ஆனால் செப்பனுடன் வாழ்வை நாம் வாழ வேண்டும் என்பதைத் தீர்மானமாக எண்ணிக் கொண்டால் கட்டுப்பாடு, பணிவு எல்லாமே, எமது விசால மனத்தினைக் காட்டிநிற்கும் உயர் பண்புகளாகிவிடும். தேவைகளைப் பெறுதலுக்காகவே பலர் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் விசுவாசிகள் போலவும் பணிவானவர்களாகவும் தம்மைக் காட்டிக்கொள்கின்றார்கள்.
வீடுகளில் கணவன், மனைவி, பிள்ளைகள்கூடச் சில சந்தர்ப்பங்களில் பணிந்து நடப்பது, கீழ்ப்படிவதுபோல் தோற்றம் காட்டுகின்றார்கள்.உண்மையான பணிவு என்பது, அடக்குமுறைக்கு உட்பட்டதுமல்ல. ஒருவன் ஸ்திரமாக, வீழ்ச்சியற்றநிலையில் வாழ, பணிவு கீழ்படிதல், விசுவாசம் இன்றியமையாதவைதான். உணர்வோம், தோழர்காள்!
இன்று பலரும் தங்களது பிரச்சினைகளை வெளிக் கொணராமலும் அவற்றைத் தமக்குள்ளேயே பூட்டிவைத்து, மறுகிக் குறுகி வைத்துக்கொள்வதனாலும் இதன் பொருட்டு சமூகத்தின் மீது, அல்லது தனிப்பட்ட ஒருவர் மீதோ எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிக்கொள்கின்றார்கள். இதனால் ஏற்படும் தப்பு அபிப்பிராயங்கள் மிகவும் அதிக LDIT(5b.
- 54

கோழைகளாய் வாழுவதோ..?
மேலும், சிலர் வேண்டுமென்றே, எதிர்மறை உணர்வு களை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். இந்த நிலையும் ஒருவரை வீழ்ச்சி நிலைக்குஇட்டுச் செல்லலாம். எதனையும் நாம் புரிந்து தெளிந்துகொள்ளப் பரஸ்பரம், திறந்த மனதுடன் உரையாடலாம். அதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். குடும்ப உறவுகளிடமே பேச முடியாத விஷயம் என்ன இருக்கப் போகின்றது? குரோதம் வளர்வதால் என்ன அனுகூலம் வந்துவிடப் போகின்றது? கொஞ்சம் சிந்திப்போம்! பிரச்சினைகளை தங்களுக்குள் அமுக்கிவைத்துக்கொண்டு, தமக்கு நீதி கிடைக்கவில்லை என்று சப்தமிடுவதால் ஏதுபயன்?
பாலைவனத்து மனதுடன் பசுமையான எண்ணங் களை எப்படி வளர்க்க முடியும்? கொஞ்சம் காற்று எம்மீது ஸ்பரிசிக்க இருட்டு அறையினுள் இருந்து காற்று அற்ற பிரதேசத்தில் இருந்து உங்களை வெளியேற்ற, விடுவிக்க உங்களது பரிபூரண அனுமதியுடன் வெளியே வாருங்கள்!
முதற்கண், நீங்கள், உங்களால் வரவேற்கப்படுவீர் களாக பூச்சிகளும், வானத்தில் மின்னும் நட்சத்திரங் களும், பிராணிகளின் சங்கீத சப்தங்களும், மனிதகரங் களும், அணைந்து ஸ்பரிக்கக்காத்துக் கிடக்கின்றன. இயற்கை என்றும் எமக்கு விரோதமானவை அல்ல. அது மரம், செடி கொடியாக இருக்கலாம். அல்லது ஊர்வன, பறப்பன விலங்கினமாக இருக்கலாம். வானமும், நிலமும்,
- 55 -

Page 30
பருத்திர் 09:அறிந்துதல் நீர்ப்பரப்புகளும் மனித தேவைகளுக்கும், அனைத்து உயிர்களுக்குமானவை, என்பதால் நாம் எதனையுமே எதிர் மறையாக எண்ணுதல் நகைப்பிற்குரியது.
காரணத்துடன்தான் எல்லாமே படைக்கப்பட்டன என்கின்ற சூட்சுமத்தினை நாம் தெரிந்து கொண்டாலே போதும். எமக்கு வாழ்க்கை என்பது ஒரு புதிரேயல்ல. உணர்க!
தெரியாததைத் தொடர்ந்தும், தெரியாமலே நாம் வைத்திருக்க முயல்வதுதான் மனிதப் புதிர் மனிதன் வேதனைக்குரிய எண்ணங்களை வலிந்து தன் மூளையில் புகுத்தினால் அவன் உயர்ந்து எழுவது எங்ங்ணம்? தாழ்வு நிலையை நாம் தெரிந்து கொள்ளாமல் விடுதலே பெரும்
தவறு.
நாம் நியாயங்களைக் கேட்காமல், மெளனியாயிருக் கின்றோம். கேட்க வேண்டிய நேரத்தில், அல்லது எதற்கா வது, தகுந்த பதில் தெரிந்தும் சொல்லாமல், வேண்டு மென்றே மெளனம் சாதிக்கின்றோம். ஒருவருக்கு, நல்ல விஷயங்களை அல்லது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை சொல்லி விட்டால் அவர்கள் அனுகூலம் பெற்றுவிடுவார்கள் என்று வஞ்சகக் காழ்ப்பு உணர்வு தோன்றினால் அதனால் ஏற்படும் வீழ்ச்சியை எப்படித் தடுக்க முடியும்?
- 56 –

கோழைகளாய் வாழுவதோ..? எவரது வளர்ச்சியையும் மனதளவில் கூட ஏற்காமல் பாவசிந்தனைகளையே தொடர்ந்தும் வளர்ப்பவர்களும் மற்றவர்க்குச் சேரவேண்டிய கொடுப்பனவுகளைச் சேர விடாது தடுப்பவர்கள், அல்லது அபகரிப்பவர்களும் வீழ்ச்சி யடைந்து கொள்ள விரும்பும் ஆத்மாக்களாகவே ஆகி விரும்பி அழிபவர்களமாவர்.
இன்பத்துடன் வாழ எண்ணுதல் ஒருவரின் விரும்ப்ப சுதந்திரம். அது நியாய பூர்வமானதாக இருக்க வேண்டும். இன்பமாக இருப்பதால் அவர்கள் துன்பங்களைத் தொட்டு விட வேண்டும் என்பதுமில்லை. துன்பத்தைத் தருவது இன்பத்தின் வேலையும் அல்ல.
எல்லாமே மனுஷதர்ம நீதிப்படி, அதாவது இறைவன் அவனுக்கு அளித்த நல் அறிவுப் பிரகாரம் நடந்து கொண்டால், வீழ்ச்சி நிலை எவர்க்கும் வந்துவிடாது. "அது நிச்சயம்"
தினகரன்
எழுகதிர்
27-09-2010
- 57 -

Page 31
பருத்திபூர் பல விரல்
நல்லவைற்றையே என்றும் செய்தல் அறம் இல்லறம் அதற்குத் துணைசெய்யும். கணவன், மனைவி இணைந்தே, புது உலகம் உருவாகின்றது. இல்லறத்தின் சிறப்பு நிகழ்காலத்தையும், வருங்காலத்தில் வனப்பையும் சீராக்க வேண்டும். அன்புடன் இல் வாழ்வு எல்லோருமே அமைத்துக் கொண்டால் உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக மாறும். கணவன் மனைவி, தன்முனைப்பின்றி ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பிற்கு முதல் காரணியாகும். ஒவ்வொருவரினதும் குடும்பநலனும், உலக ஷேமத்திற்கே உரியதாகும்.
அறம் செய்தல்என்பது நல்லனவற்றை,விருப்புடன் என்றும் செய்தல் எனச் சொல்லலாம்.மனிதர்கள் எல்லோருமே,அறநெறியைக் கடைப்பிடித்து ஒழுகினால் சமூக நீதியில் அவர்தம் சுதந்திர சுபீட்ச வாழ்வில் பங்கம் ஏற்படமாட்டாது. நல்ல இல்லங்கள் அறம் வளர்க்கும் சொர்க்கபூமியாகும். எவராயினும் தான்சார்ந்த தொழில், சமூக தர்மம்,குடும்பவாழ்வு,அறப்பண்புகளில் விலகிட முனைதல் தகாது.
- 58 -
 
 
 
 
 
 
 

கோழைகளாய் வாழுவதோ..? இந்த அற வாழ்வை சிறப்புற வாழ்வதற்கு இல்லறமே, நற்துணையாய் இருக்கின்றது. ஏனெனில் நாம் அனை வருமே, ஒரு இல்லத்தில் பிறந்து, வளர்ந்து, உயர்ந்தவர் களாகின்றோம். எனவே, எமது நிரந்தர வாழ்விடத்தில் இருந்தே நற்பண்புகளைக் கற்பவர்களாக, அதன்படி ஒழுகுபவர்களாக இருக்க வேண்டியுள்ளோம்.
சிறந்த இல்லறத்தை, அதன் தர்மப்படி வாழுகின்ற, கணவன், மனைவி இவ்வுலகில் உத்தம நாயகன், நாயகி யாகின்றார்கள். ஒவ்வொரு குடும்பத்லைவனும், தலைவியும், உலகின் சீரிய வாழ்விற்கு ஏதோஒரு விதத்தில், பெரும் நன்மைகளைச் செய்த வண்ணமாயிருக்கின்றனர்.
ஒரு இல்லத்தின் சிறப்பு, எமது வாழ்வுப் பயணத்தில் நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் சிறப்புறத் துலங்க வழிசமைக்கின்றது.
மகிழ்ச்சியுடன் வாழாதவன் பிறர்க்கு மகிழ்வை உண்டாக்க மாட்டான். எந்நேரமும், துன்பங்களுடன், தூங்கி எழுபவன், எப்படி மற்றவர்களுக்குக், “களிப்பு" என்றால், என்னவெனச் சொல்லித்தர முடியும், சொல்லுங்கள்? எனவே, ஒரு வீட்டில், கணவன் மனைவி, பரஸ்பரம் அன்புடன், புரிந்துணர்வுடன் வாழ்ந்து வந்தால் என்றும் இல்லம் களிகூரும். அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைச் செல்வங்களும், தமது பெற்றோர்போலவே என்றும் மகிழ்வாகச் சுறுசுறுப்பாக இயங்கி இவ் வையகத்திற்கு ஒப்பற்ற நற்சேவைகளையே வழங்கிவருவர்.
- 59 -

Page 32
பருத்தில் பால, அவிரவருதஷ்
இல் லத்தின் முதல் முக்கிய பாத்திரமாக விளங்குபவள் மனைவியாவாள். கணவன் வீட்டின் "தலைவன்" எனச் சொல்லப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் "அம்மா” எனும் தலைவியைச் சாரந்தே ஒரு குடும்பமானது, அவள் அன்பின் பாசத்தின் ஆதாரத்துடன் அவளது அரவணைப்புடன் சுகமாய் சீவிக்கின்றது. உழைக்கின்ற கணவனின் வரும்படிக்கேற்ப சிக்கனத்தை கடைப்பிடித்து தன் குழந்தைகளை மட்டுமன்றி கணவனையே, ஒரு பிள்ளையாகக் கருதியே பேணுவதன் மூலம், பெற்ற தாயின் இடத்தில் மனைவி வாழ்ந்து ஒளியூட்டுகின்றாள் அல்லவா?
நல்ல மனைவியை அடைந்தவனுக்கு எந்தப் பிரச்ச னையும் அவன் தனது தலையில் சுமத்தப்படுவதில்லை. எல்லாவற்றையுமே, மனைவியானவள் தன்னிடமே உரிமை யுடன் எடுத்துக் கொள்வதால் இல்லத் தலைவன் சுதந்திர மாக வாழ்ந்து குடும்பத்திற்குப் பொருள் ஈட்டுகின்றான்.
இன்று கணவன், மனைவியர் இருவருமே, தொழிலுக் காக அரச, தனியார் துறைகளுடன், தனிப்பட்ட முறையிலும் சுய தொழிலை மேற்கொள்ள வேண்டியவராகின்றனர்.
பெண் அடிமைத்தனம் பற்றி இன்றும் பேசப்ப டுகின்றது. ஆனால் காலம் காலமாக இருந்து வந்த பத்தாம் பசலித்தனங்களில் இருந்து விடுபட இன்னமும் சில சமூகங்கள் தயாராக இல்லை. எனினும், காலச் சுழற்சி, பொருளாதார நெருக்கடிகள் நெருக்கி, நொருக்கினால்,
- 60 -

கோழைகளாய் வாழுவதோ..?
வீட்டினுள் அடைபடாமல் பெண்கள் தங்கள் குடும்பச் சுமைகளைத் தீர்க்கக் கட்டாயம் கல்வி கற்று வேலை தேட வேண்டியவராகின்றனர். முன்பெல்லாம் பெண்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும். இன்று அப்படிச் சொல்ல முடியா மல் பிள்ளைகள் கருத்துக்களை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர். வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கு முன்னரே பெண் படித்து இருக்கின்றாளா? என்ன வேலை செய்கின்றாள்? என்றே கேட்கின்றார்கள்.
சமூக மாற்றங்களுக்கு ஏற்ப இல்லங்களும் மாறுகின் றன. உலகின் தேவைகளை அறியாமல் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பழைய காலத்து குலத் தொழிலை மட்டும் செய்து வாழமுடியும் என எதிர்பார்க்க முடியுமா? ஒவ்வொரு இல்லமும் சிறக்க நல் ஒழுக்கம் பேணப்படல் வேண்டும்.
மத நம்பிக்கைகள் நல் ஒழுக்கத்தைக் கட்டாயமாக் கின்றன. பாவங்கள் என்றால் என்ன என்று மதங்கள் எல்லாமே வலியுறுத்துகின்றன.
மதச்சடங்குகள் ஒழுங்கான வாழ்வு முறைகள், சுகா தாரத்துடன் வாழும் வழி முறைகளைச் செம்மையாக உரைக்கின்றன. தெய்வபக்தி, குருபக்தி இல்லாத இல்லம், தான்தோன்றித்தனமான வழிகளில் செல்கின்றது. ஆயினும் உண்மை நெறியில் வாழ்பவர்கள், எந்தக் கொள்கையைப் பின்பற்றினாலும் அதுவே இறைவன் விரும்பும் பாதையு LOffGib.
-- 61 -

Page 33
பருத்தி பல வயிரவருதல்
குடும்பம் என்றவுடன் அது கணவன், மனைவி மட்டுமே சார்ந்தது அல்ல. அவர்களது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் உறவினர்களும், அதில் பின்னப்பட்டு விடுகின்றனர். முற்காலத்தில் கூட ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களுமே சேர்ந்து உழைத்து வந்தார்கள். பெண்கள் எல்லோரும் வயல் வரப்புகளில் மெய்வருந்தக் கஷ்டப்பட்டார்கள். முதியோர்கள், ஆலோசனை வழங்குப வர்களாகச் செயற்பட்டார்கள். முன்னர் வயல்களில் தொழில் செய்தமையை எவருமே எதிர்த்ததில்லை. கேலி பேசியதுமில்லை. ஆனால், தற்போதைய, உலகில் தொழில் என்பது பற்பல ரூபங்களாக வடிவமைக்கப்பட்டு விட்டன. எனவே, இல்லத்தின் அங்கத்தினர் அனைவருமே ஆண், பெண், வேறுபாடின்றி உழைப்பது புதிதான ஒரு விஷயமே அல்ல. வெளியுலக தொழில்கள் ஆண்களுக்கு மட்டுமே உரிமையானவையும் அல்ல.
பற்பல வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில் நாம் எல்லோருமே அவற்றை நாடுவது இயல்பு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வசதிகளை எதிர்பார்த்து தங்களை மாற்றிய மைத்தும் வருகின்றனர். வசதிகள் மட்டும், ஒருவனை வாழ்வின் உயரத்தில் நிறுத்திவிடாது. நல்ல கல்வியூட்டல் மூலமே நல்ல தொழிலைத் தேட முடிகின்றது. இல்லத்தில் உள்ள கணவன் மனைவி இன்று தமது குழந்தைகளுக் காகச் செய்யும் தியாகம் மேலான உழைப்பு வியப்பிற் 慕 குரியது. இவற்றுக்கு, விலைநிர்ணயம் செய்ய இயலாது. ஓய்வின்றி உழைத்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு நல்ல
- 62 -

கோழைகளாய் வாழுவதோ..? கல்வியூட்ட முடியும். நல்ல உணவு அளிக்க முடியும். இது தற்கால உலக நியதி.
முன்பு குடில்களில் வாழ்ந்த வாழ்வு முறை இன்று இல்லை. தனது பிரதேசத்தில் மட்டும் கல்விகற்ற காலம் இப்போது இல்லை. உலகம் பூராவும் மக்கள் சுற்றிப் பறந்து படிக்கின்றார்கள், உழைக்கின்றார்கள். எனவே, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாம் என்னென்னவோ பாடுபட வேண்டியுள்ளது.
முன்பெல்லாம் குடும்பங்கள், கூட்டுக் குடும்பங்களா செயல்பட்டன. கணவன், மனைவி, மாமன், மாமி என்றெல் லாம், இணைந்து ஒரே வீட்டில் வசித்துவந்தனர். முதியோ ரின் தலைமையை ஏற்று அவர்கள் சொற்களே வேதவாக் காக அமைந்தன. அனுசரித்து இயங்குவது அவர்களுக்கு இயல்பான வாழ்க்கை நெறியாயிற்று. குடும்ப உறவு இன்றேல் இல்லறம், நல்லறம் அன்று. குடும்ப உறவு நிலைக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை தாராளமாக எம்முள் தங்கி நிலை பெறுதல் வேண்டும்.
ஆனால், இன்று எமது வீடுகளில் இப்படியாக
வாழ்ந்துவிடமுடிவதில்லை. வாழும் முறை, மனப்பக்குவம்
எல்லாமே துறந்து, வெவ்வேறு கலாசாரக் கலப்பினால்
தங்கள் தங்கள் கலாசார பாரம்பரியங்களையே மறந்து
போய்க் கிடக்கின்றார்கள். அனுசரித்துப்போவதே சிரமமாக
இருக்கின்றது. விருந்தோம்பல் பண்பு பற்றி நாம் எமது - 63 ܚ

Page 34
கருத்திழ் பல ஆயிரக் இலக்கியங்களில் நிரம்பப்படித்திருக்கின்றோம். சில சமயங் களில் எங்களை எத்தனை நபர்கள், பெரிதும் அறிமுகம் இன்றியே உபசரித்தார்கள் என்பதை உணர்ந்தால் அன்பு டன் பிறரைப்பேனும் பண்புவரும்.
ஒரு இல்லறத்தான் தன்னை நாடிவருவோரை இன்முகத்துடன், வரவேற்று உபசரித்து நல்விருந்தோம்பு வான். தனது உடன் பிறப்பு, பெற்றோரகளும் உற்றோரையோ மறந்துவிடும் மனிதர் நிறைந்த உலகமாகி விட்டது. ஒருவரை உபசரித்தல், அவர் நலத்தை ஒப்புக்காகக் கேட்டல், வெறும் கெளரவம், வீண் பெருமை பாராட்டுதலுக்காகவே வாழுதல், வெட்கப்பட வேண்டிய விஷயங்களன்றோ!
ஆரம்ப காலத்தில் இளமையில் யார், யாரிடமோ, கடமைப்பட்டு வாழ்ந்தவர்கள், உழைத்து, நாலு காசு சம்பாதித்ததும் தனித்து, தனக்கென வாழத் தலைப்படுகின் றார்கள். முன்பு இருந்த நிலையை மறப்பது உண்மை களையே மறப்பது போலவேயாகும்.
சின்ன வயதிலேயே பெற்றோர் அன்பு, பாசத்தின் வலிமையினை உணர்வு ரீதியாக பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். பாசப்பிணைப்பின் உன்னதத்தை வெளியே உள்ள நல்ல குடும்பப் பாரம்பரியங்களில் சிறப்பாக வாழும் முறைமைகளைப பார்த்துப் பிள்ளை களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். வசதியற்றவர்களைத் தமது"உறவுகள்" என்று, பிள்ளைகளுக்குச் சொல்லித்தராத பெற்றோர்களும் இருக்கின்றார்கள்.
= 64 سے

கோழைகளாய் வாழுவதோ..? மிகவும் அறியாமையானதும் வெட்கப்பட வேண்டிய துமான விஷயம், இன்று பல குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்குத், தமது பாட்டன், பூட்டன்மார் நாமங்க ளைத்தெரியாது என்பது தான். சொந்தமாமன், மாமி, அவர்களின் பிள்ளைகளை அறவே "முகங்கள்" தெரியாமல் முழு முக்காடு போட்டு வளர்த்துவருகின்றார்கள். தங்களை உறவினர்கள் தெரிந்துகொண்டால் ஏதாவது ஐந்து, பத்துப் பெறத் தம்மை நாடி வந்து விடுவார்களோ எனப் பயப்படுகின்றார்கள் எனவும் கருதலாம்.
ஆனால், ஆதியில் மிகவசதியாக இருந்து தங்கள் பிள்ளைகள் குடும்பத்தை மறத்து வாழ்ந்து தமது இரத்த உறவுகளை உதாசீனம் செய்தவர்கள் தங்களால் நிராகரிக் கப்பட்டவர்களின் அபரிமிருதமான வளர்ச்சி கண்டு பிரமித்துப் போகின்றார்கள். ஏன் சில சமயங்களில் கூசாமல் அவர்களிடம் சென்று கைநீட்டவும் செய்கின்றார்கள்."என்ன உலகம் இது" எனக்கேட்கத் தோன்றுகின்றதல்லவா?
எனவே, இல்லறத்தை, நல்லறமாகக் கைக்கொண்ட வர்கள், செய்யும் நற்பணிகள், உதவி புரியும் நல் எண்ணங்கள், அவர்கள் எதிர்காலத்தின் உயர்விற்காக ஏற்ற மிகு பயன்களை கொடுத்தேயாகும் என்பதனை அறியாத வர்களே புரியாத பொய்யான போலிக் கெளரவத்துடன் நடித்து வாழ்ந்து தனித்து எல்லோராலும் கைவிடப்பட்ட ஆத்மாக்களாகின்றனர்.
- 65 -

Page 35
பருத்திபூர் 040 ஆயிரவருதஷ்
பிள்ளைகளைப் பெற்றோர் ஒர் யந்திரத்தன்மையுடன் வளர்த்து வருவதைக் கண்டு கொண்டிருக்கின்றோம். குழந்தைகள் விளையாடி மகிழ பலவித விளையாட்டுப் பொருட்களை வாங்கி வீட்டில் நிரப்புகின்றார்கள். ஆனால் குழந்தைகளை சுதந்திரமாக விளையாடவிடச் சம்மதிப்ப தேயில்லை. "என்ன, எந்த நேரமும் விளையாட்டு என்ன வேண்டிக்கிடக்கின்றது? பொம்மைகளை உடைக்கி ன்றாயே. கை, கால்களில் பட்டுக்காயம் ஏற்பட்டால் என்ன ஆவது. சரி. சரி விளையாடியது போதும்." எனச் சொல்லுவதுடன் நின்று விடாது, அந்த மூன்று நான்கு வயது நிரம்பாத குழந்தையைத் தர, தர என இழுத்து ப்போய், படி, படி எனவேறு நச்சரித்துக் கொடுமை ப்படுத்துகின்றார்கள். இது தேவையற்ற நடத்தையல்லவா?
சும்மா வீம்புக்காக வீடு நிரம்பப் பிள்ளைகளுக்குப் பொருட்களை வாங்கிக் குவிப்பதும் அவைகளைத் தொடவிடாமல் தடுப்பதும் என்ன கொடுமை ஐயா?
மேலும், பல வீடுகளில் பொழுது போக்கு சாதன ங்களை, அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் அவற்றை இயக்கி ஆனந்தப்படவே மாட்டார்கள். குளிருக் குப் போர்த்துமாற் போல், அவைகளை, மூடிக்கட்டிவைத்துக் கொள்வார்கள்.
● அனுபவிக்க வேண்டிய வயதில், நியாபூர்வமான விடயங்களை அனுபவித்திட அனுமதியளியுங்கள்
-

கோழைகளாய் வாழுவதோ:
曹 பொறாமை, அவா, கோபங்களைக் களைந்திட ஏற்ற மதியுரைகளைப் பக்குவமாக குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பீராக! துஷ்ட பழக்கங்கள் களையப்பட அன்பு தானாகவே பரிணமிக்கும்.
ஒடியாடி, விளையாட அனுமதிக்கும் நீங்கள், அவர்களுக்குக் குறித்த நேரத்தில் குறித்த கருமங்களைச் செய்துவரப் பழக்கி விடுங்கள்.
நன்றியுணர்வுடன் இணைந்து, தோழமையுடன் பழக வாய்ப்பளியுங்கள்!
இல்லறம் பேணுதல் என்பது, எமது பண்பாட்டிற்கு மட்டுமேயானது என உரிமை கொண்டாடிப் பேசுதல் பேதமை, மனித நாகரீகம் எல்லா மக்களுக்குமான உயர்ச்சி தான். பழைமையை மட்டும் பேசுவதாலும், புதுமைக்கு இடம் கொடாது மல்லுக்கட்டிப் பேசுதலாலும் எமது வீடுகளில் என்ன முன்னேற்றம் வந்து விடப்போகின்றது?
ஒவ்வொரு மனிதனும், தன்னை உணராது, தனக்கு என மக்களில் இருந்து வேறான முகத்தைப் பூட்டி வாழ்ந்திட முடியாது. தன்னைத் தரிசித்து, உணர்ந்தாலே மற்றவர் குறைகளைப் பார்க்கும் குணமே குலைந்துவிடும். ஏன் எனில் எல்லா தவறுகளுக்கும், அல்லது சின்னச் சிறு, சிறு தவறுகளுக்கும், நாமே சொந்தக்காரர்களாக இருக்கின் றோம்.
நாங்கள், வீட்டின் ஒரு தனி அங்கமாக, அந்தரங்கமாக
- 67 .

Page 36
குர்தித் அல.அந்துதல் வாழுவதால் எமது தனிமனித குணாம்சங்கள்தான் இந்தப் பரந்த பூமியையும் பெரிதாகப் பாதிக்கும். வீடு வேறு நாடு வேறு அல்லவேயல்ல. "நான் ஒரு சிறு தவறு விட்டுவிட்டேன் அதனால் என்ன படுபாதகம் வந்து விட்டது" எனச் செய்த தவறுக்கு சமாதானம் செய்யற்க!
வீடுகள் தோறும், மகிழ்வு உட்புகுந்தால் அது இந்த உலகிற்கான நல்வரவு. எங்களைப் போலவே எல்லோருமே தங்கள் குடும்பங்களுடன் சந்தோஷமாக, செளக்கியமாகக் கெளரவமுடன் வாழ இறைவனிடம் வேண்டுதல் செய்திடுக! இல்லங்களின் நல் ஒளிசேர்தல் என்பது அங்கு வாழும் இதயங்களின் நல் எண்ணங்களின் பிணைப்பேயாகும். அறிவோமாக!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
14-量2–2008
- 68

கோழைகளாய் வாழுவதோ..?
உண்மை என்றும் நிரந்தரமானது. உண்மை திரிபு அற்றது. அநீதிகளுடன் வாழ்பவர்கள் அதுவே தமது "நீதி" என்று எண்ணிவிடுகின்றனர். பொய்யர்களுடன் புகலிடம் தேடுவது, ஓநாய்கள் வாழ்வதற்கு, ஆடுகளை வலிந்து கொடுப்பதுபோலாகும். நல்லோர் சொல் பலிக்கும்.பொய்யர்கள் உண்மைத் தீயினுள், பொசுங்கிப் போவார்கள். உண்மையெனும் மாமலையினை, “பொய்” கொண்டு தேய்த்து அழிக்க முடியாது. கஷ்டப்பட்டுப் பொய்மையாக வாழ்வதை விடுத்து, மிக இயல்பாக உண்மையுடன் வாழ்வதே மேன்மை."உண்மை” சாதனை செய்யும்.
உள்ளதை, உள்ளபடி காட்டி நிற்பது உண்மை யாகும். உண்மையின் கூற்றுக்கள் நிரந்தரமானவை பக்கச்சார்பு அற்றவை அழிவற்றவை. உண்மைகளைத் திரிவுபடுத்த முடியாது. அப்படியே, திரிபுபடுத்தும், முயற்சியில் ஈடுபடுவோர், முடிவில் தோற்றுப் போய் விடுவார்கள்.எனினும், உண்மையுடன் வாழ்பவர்களைச் சிலர் ஏமாளிகள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் கேலியுடன் பேசுவதுண்டு. ஆனால், உண்மையுடன்
வாழுவதே சிரமமானது என்று சொன்னால் s23, 356 DTS
- 69 -

Page 37
பருத்திழ் அல. ஆயிரவநாதர் கருத்துத்தான். ஏனெனில் எல்லோருமே சத்திய வழியில் வாழ்ந்து வந்தால் ஒருவரை, ஒருவர் ஏய்த்துப் பிழைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
எனவே, எல்லோருமே சரியானபடி செவ்வனே வாழ்ந் தால் ஏது சிரமம்? ஆனால், நடைமுறையில் அப்படி யார் வாழுகின்றார்கள்? ஒருவன் தன்னை ஏமாற்றுகின்றான் என்றால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள மற்றவன் அவனைப் பழி தீர்க்கவும், அவனை விடத் தானே முந்தி விடவேண்டும் என்பதற்காக, தானும் நீதிக்குப்புறம்பான காரியங்களைச் செய்ய எத்தனிக்கின்றான். உண்மை, சத்தியம், நியாயம் என்று சொல்லப்படுபவை எல்லாமே, நீதியுடன் இணைந்தவை தான் காலம், காலமாக நீதி பற்றி எமக்கு அறிவூட்டப்படுகின்றது. நீதி நெறியில், இருந்து பிறழ்ந்தால், அழிவு நிச்சயம் என்று அறிந்தும், தற்காலிக சுகம்தேடும் மானுடர், சத்தியவாழ்வை மறந்து நிற்கின் றார்கள்.
அநீதிகளுடன் வாழ்கின்றவர்கள் அவை எல்லாமே, பழக்கமாகவிட்டால் முடிவில் அதுவே உண்மையானது என நம்பி விடுகின்றார்கள். இந்த அவலக் கட்டுக்குள் இருந்து அவனி விடுபடல் வேண்டும். நல்லதைச் சொன்னால் கேலியுடன் நோக்கும் காலம் களையப்படல் வேண்டும்.
ஒநாய்கள் வாழ்வதற்காக ஆடுகளை வலிந்து கொடுக்கும் மனிதர் சிலர் வளர்ந்து வருகின்றனர். தீமைக்
- 70 س=

கோழைகளாய் வாழுவதோ..? குத்தீனி போடுவதால் ஆதாயத்தை அதிகமாக நோக்கலாம் என்று எண்ணி தன்னைத்தான் காட்டிக் கொடுத்து ஆன்மாவில் அசுத்தத்தைத் தானாகவே தேய்த்துக்கொள் கின்றார்கள். கொடுமை உண்மையைத் தேடி ஓடி அலையத்தேவையே இல்லை. தன்னைத்தான் முழுமை யாக்கி உருப்பெற, உண்மையை மட்டும் ஏற்றுக்கொள்ளும் தெளிவு ஏற்படின் எமது செயல்கள் அனைத்தும் உண்மையை அன்றி வேறு எதனையும் ஏற்கமாட்டாது. இந்த உன்னத நிலையை எமக்குள்ளேயே நிலை நிறுத்தினால் துணிவு, உற்சாகம், கம்பீரம் எல்லாமே திரண்டு நின்று சரியான பாதையை விட்டு விலகாத நிலை தோன்றி விடும்.
உண்மை பேசுபவன் வாய்மை, தூய்மை பெறுவ தனால், அவன் சொற்கள் வலிதாகி விடுகின்றன. அதற்கு முன் மறுபேச்சு, குதர்க்கம், எதிர்வாதம் எதுவுமே செயலற்று விடுகின்றன. நல்லவர்கள், சொல்பலிக்கும் என்பார்கள். இதயம் விஸ்தாரமானால், தேவையற்ற கஷ்டங்கள் தூர ஓடும், தூர்ந்தும் போகும்.
குறுக்கு வழி சம்பாத்தியக்காரர்களின் திடீர் உயர்ச்சி கண்டு சாதாரண மக்கள் குழம்பிப்போவதுண்டு. "அவரைப் பாருங்கள், எந்தவித படிப்பும் இல்லை, வேலையும் இல்லை, ஆனால் எப்படித் திடீர் எனக் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். எல்லாம் அதிஷ்டம் ஐயா! எல்லோரும் எப்படியோ சம்பாதித்து முன்னேறிவிட்டார்கள். நாங்கள் - 71 -

Page 38
பருத்தி dago. 206 gol gaytá எவ்வளவு கஷ்டப்பட்டும் உண்மையாக உழைத்துப் பயனில்லாமல் போய் இப்படிக் கஷ்டப்படுகின்றோம். எல்லாமே "விதி" என்கின்றார்கள்.
இப்படியாக மனம் நொந்து முடிவில் இத்தகைய சிலர் தகாத வழியில் தம் எண்ணங்களை மாற்றியமைத்துக் கெட்டழிந்து போவதுமுண்டு.உண்மையின் சாஸ்வதத் தன்மையை இத்தகையவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு கொள்வதற்கு நல்ல வல்ல, ஆளுமைமிக்க பெரியோர்களின் உபன்யாசம், கருத்துரை களைக் கேட்க வேண்டும். ஆழமாக, சமூக நலன்களை வலியுறுத்தும் கலை நிகழ்வுகளை மட்டும் கேட்டுப் பார்க்கப் பழகவேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு பக்கத்தினுள் அடக்கப்படும் விளம்பரமோ அல்லது பல நூறு பக்கம், பக்கமாகச் சொல்லி முடிக்கக்கூடிய நாவல் இலக்கியமோ அல்ல. இது பல விடயங்களைத் தொட்டுநிற்பது எல்லாவற்றையும், பூரணமாகச்சொல்லி முடிக்கவியலாது.
ஆனால், உண்மை, நேர்மை, உழைப்பு, பக்தி,
அன்பு இவற்றுடன் இணைந்த வாழ்க்கையில் முழுதுமாய்
வியாபித்திருப்பது இன்பம். பேரின்பம். வாழ்நாள் முடியும்
வரையும் அதன் பின்னரும் மற்றோரால் வியந்துபாராட்டக்
கூடியதும் இந்த உண்மையான வாழ்க்கை முறைமைகள்
தான். இதை உணராமல் சரியான வாழ்வை அமைக்க
- 72 -

கோழைகளாய் வாழுவதோ..? முரண்பட்ட திசையில் வாழ்ந்தால் துன்பங்களைத் தவிர வேறு எதனையும் பெற்றுக் கொள்ள முடியவே முடியாது.
தனி ஒரு மனிதன் தூய வழியில் நடந்து பெற்ற பல் ஆயிரம் சாதனைகள் பல்கோடி மாந்தரை விழித்தெழச் செய்து இயங்கவைக்கும்.
பல நாடுகளின் விடுதலைப்போராட்டங்களில் ஈடுபட்ட தியாகிகள் கட்டிவைக்கப்பட்டு, அடித்து உதைபட்டுச் சிறை வாசம் அனுபவித்தும் கூடக் கொண்ட கொள்கையில் இருந்தும் தமது அறநெறியில் இருந்தும் பிறழ்திடாமல் வாழ்வாங்கு வாழ்ந்து, தூய்மை வாழ்வு இதுவென நிரூபிக்காதிருந்தால் உலகம் இன்னமும் உள்ளதை உள்ளபடி உணராமலேயே தலைகீழாய் மாறியிருக்கும். தெரிந்து கொள்க! இன்னமும் பலரினதும் தனி மனித சாதனைகளால் நாம் பயன் பெற்று வாழ்வதை மறுக்க முடியுமா? ஒருவர் உள்ளத்தில் ஒளியுண்டானால் அவரிடம் இருந்து அபமிருதமான, சக்தி புறப்படுவதாகவே ஆன்மீகம் எமக்குச் சொல்கின்றது. எத்தரத்தாருக்கும் நியாயம், நீதி பொதுவானது. கடவுளைத் திட்டுபவர்களும் சரி, இறைவனை நம்புகின்றவர்களும் சரி, "வாய்மையே வெல்லும்” என்பதை மனதார நம்பி அவ்வண்ணம் ஒழுகினால் அவர்கள் தெய்வத்துடன் நெருங்கியவர்களாகி விடுவார்கள். இன்று எம்மில் பலரும் தங்களுக்கான நீதி, நியாயம் எதுவெனப் புரியாது தம் பிரச்சினைத் தீர்க்க நீதிமன்றங்களுக்கு உடனடியாகப் போகின்றார்கள். பேசித்
- 73 -

Page 39
பருத்தி அல. ஆயிரவநாதர்
தீர்க்க வேண்டிய சாதாரண விஷயங்களுக்காக யாரோ, எவரோ ஒரு நியாயவாதியிடம் பணம் கொடுத்துப் பிரச்சினைகளைத் தீவிரமாக வளர்க்கின்றார்கள்.
சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியவை பொது மன்றங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டால் குரோதம்தான் மிஞ்சும் தங்கள் பக்கத்து உண்மைகளை நிரூபிப்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கூட, அறியாமையால், வழங்கி விடுகின்றார்கள். உண்மைக்கு ஒரு முகம்தான். எனவே, ஒரு முறை சொல்லப்பட்ட உண்மைகளை பல விதமான, கற்பனைகள் இழைந்த, பொய்மையான சோடனை வார்த்தைகளால் மறைத்துவிடமுடியாது.
பல உண்மையான வழக்குகள், பொய்மையாளர்க ளால் திசை திருப்பப்படுகின்றன. இவையெல்லாம், சமூகத்தில், நாம் பார்க்கும் பகிரங்க மோசடிகள் "காலம்" என்கின்ற நீதிபதி கொடுக்கும் தண்டனைகள், காலன் வழங்கும் தண்டனையை விட உக்கிரமானவை. எனவே நல்லவர்கள் மனம் கசந்து குமைந்து நீதிக்காக இரந்து அழுவதற்கு கடவுள் "காலம்" மூலம் தக்க பதில் வழங்குவார்.
உண்மை என்பதே, மிகப் பெரும் மலையைவிட உயர்ந்தது, வலியது. அதனை நமது, நகம் கொண்டு சுரண்டித் தேய்க்க இயலாது. சிலர் இந்த அறியாமையான காரியத்தையே தினம் தினம், செய்து தாமே தேய்ந்தழி கின்றனர்.
س- 74 -

கோழைகளாய் வாழுவதோ..? சரியான வழி, தொந்தரவானது அல்ல. சூரியப் பிரகாச ஒளியோடு, தெளிந்த அறிவோடு, எவ்வளவு நீண்ட பயணங்கள் என்றாலும் அது மனோரம்யமான சந்தோஷம் தரக்கூடியதே!
காற்றே இல்லாமல், மூச்சு முட்டத், துர்நாற்றத்துடன், பலத்த இரைச்சல்களுடன், காதுகுடைய, உடலில் நீர் சிந்த பத்து அடிப்பாதையைக் கடக்குமுன் எமது பிராணன் போய்விடும். இது தேவைதானா?
நாம் நல்லபடி வாழ மிகுந்த கஷ்டப்பட வேண்டும் என்றே கருதிவிடுகின்றோம். ஆனால் நியாயமான வரும்படிகள் காலம் தாழ்த்திக் கிடைத்தாலும், அவை நிரந்தரமானவை. அவசரப்பட்டுச் செல்லும் தகாத நடவடிக்கையை விட பொறுமையாக "தூய்மை" போற்றி வாழ்பவன் பாக்கியவான். உணர்க அறியாமை, ஆணவம் மிதமிஞ்சிய ஆசைகள் எல்லாமே எம்மையறியாமலேயே நிஜங்களை வேறாகக் காட்டி விடுகின்றதுரதிருஷ்டங்களே!
மேலான ஆசைகளை வென்றவர்களுக்கு, உண்மை யாக வாழ்வது ஒரு மிக இயல்பான வாழ்வு முறைதான். தானாகவே மகிழ்வு இவர்களுள், உறைவிடமாக நின்று ஒட்டிக்கொள்கின்றது. கண்ணுக்கு முன் களி நடனம் புரியும் சந்தோஷமானவைகளை, நாம் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம் என்பதே எமக்குப் புரிவதில்லை. மாறாக ஆரவாரம், அடங்காத வேட்கைமிகு எண்ணங்களுள்
- 75 -

Page 40
பருத்தித் 40. ஜலிற்றுருதேஷ் புகுந்ததும், களிப்பூட்டும் நெஞ்சத்தை, உற்சாகப்படுத்தும் உணர்வுகளைப் புறந்தள்ளுகின்றோமே, அது ஏன்?
மனிதர்க்கு உண்மை பற்றிச் சொன்னால் புரிகிறது இல்லை. பட்டால் தான் புரியும். வேதனை மூலம் நிஜங்க ளைக் காண்பதற்கு முன்னர், ஆரம்பத்திலேயே நல்ல வற்றுடன் உறவு பூண்பது எவ்வளவு லாபகரமானது கால விரயமற்றது எனத்தெரிந்து கொள்வோமாக உண்மையை ஆராதிக்காதவன் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கையைத் தான் தேடுகின்றான். ஏன் எனில், அவன் தான் வாழ்ந்து கொள்ளப் பாவங்களிடம் சென்று கை ஏந்துகின்றான். களவு எடுக்கும் மார்க்கத்தைக் கோருகின்றான். எப்படி ஏமாற்று வது என்று ஆராய்ந்து தேடுவதில், காலத்தைக் கரைக்கின் றான். அறியாமை, தெளிவின்மையுடன், கீழ் நோக்கி ஓடும் முறையானது, பள்ளத்தில் விழுந்து கொள்ளும் கற்களின் வேகத்தை விட அதிவேகமானது. இந்த வேகத்தினால் ஒரு நொடிப் பொழுதில் நீண்ட பொழுது வாழ்க்கை, பனி எனக் கரைந்து விடுகின்றது.
சிலரிடம் பேசுவதைவிட நாம், ஒரு வெற்றிடத்திற்கு உபதேசம் செய்யலாம். எப்படிக் கத்தினாலும் கேட்காத ஜன்மங்களுடன் எதனைச் சொல்வது? நல்ல சிந்தனை களை,வெளியே வெறும் வெளியில் சொன்னாலும் பரவா யில்லை. எமது இதயம் துப்பரவாகும்.
பிரபஞ்ச வெளியில் இரண்டறக் கலந்து, நல்லோர்
- 76 -

கோழைகளாய் வாழுவதோ..? செவிகளில் ஏற்றி ஒளியூட்ட எத்தனை ஞானிகள், சித்தர்கள் சிந்தனையாளர்கள், யோகிகள், தீர்க்கதரிசிகள் உபதேசம் செய்தார்கள், செய்து கொண்டேயிருக்கின் றார்கள். உண்மையைப் பேசு, அதன்படி ஒழுகு, வாய்மையே நல்வாழ்வு என்று நாம் படித்ததில்லையா?
கல்வி, கலை, கலாசாரம் என்பவை எல்லாமே மேலான நல் அறத்த வலியுறுத்தலுக்கானவை தான். சொல்லுதற்கரிய நல் உபதேசங்களைச் செவிமடுத்தலும் அதனைப் பிறர்க்குத் தெரியப்படுத்தலும், அவ்வண்ணம் வாழ்ந்து காட்டுதலுமே மேலான மானுட தர்மம், எக்கணத் திலும், எம்மை நோக்குபவர்களை, நாம் கவர்ந்து, களிப்பூட்டு பவர்களாக இருக்க வேண்டும். நீங்கள், உண்மையானவர் களாக இருந்து பாருங்கள். எல்லா உறவுகளும் தேடிவரும். சத்தியத்தைத் தேடும் மனிதர்களுடன் பழகுதலே பேரின்பம்.
நல்ல நேயங்கள், நல்ல இதயங்களைக் கொண்டவர்க
ளுடன் மட்டும் உறவு வைத்திருந்தால், என்றும் எமது
நெஞ்சம் லேசாக, நிம்மதியாக அமைதியுடன் மிதப்பதாக
உணருவீர்கள். உண்மை மட்டுமே ஸ்திரமான சுகங்களை
அள்ளித்தரும் இயல்பினதாகும். நல்ல அனுபவபூர்வமான, நிதர்சனமான நல்லோர் தீர்ப்பு இதுவே தான்.
தினக்குரல்
(ஞாயிறு
30.11.2008
- 77 -

Page 41
பருத்தியூர் பல விவரம்
6. ří
பொய், நீதி, நியாயங்களைச் சேய்மைப்படுத்தி வைக்கும். பொய்யும் புரட்டும், வாழ்க்கையை உருட்டி, வீழ்த்தும். இது ஆன்மவிரோத மாகையால், இதனை நம்பி உய்ந்தவரில்லை. பொய் என்பது பேசுவதில் மட்டுமானதல்ல. நெறிதவறிய வாழ்வு வாழ்ந்தாலும் அது பொய்மையானதே. பொய் தோல்விக்கு வித்து. பொய்மைக்குப் பல முகங்கள். எல்லாமே அசிங்கங்கள், கேவலங்கள். உண்மை ஒளியை நெஞ்சினுள் செலுத்தினால், மாயப்பொய் அவிந்து தொலையும். பொய்மையானவர்கள் செயல்கள் கண்டும் மெளனிப்பவர்கள்,
றவாழ்விற்கு அப்பாற்பட்டவர்களே!
உண்மைக்கு, எதிர்மறையானதும் ஆன்ம விரோதமானதும், ஏமாற்றங்கள், தோல்விகளையே உண்டு பண்ணக் கூடியதும், "பொய்" என்கின்ற பொய்மையாகும். பொய்யும், புரட்டும் வாழ்க்கையை மிரட்டி, உருட்டி
வீழ்த்தும்.
பொய்யை நம்பி வாழ்ந்து உய்ந்தவர் எவரும்
- 78 -
 
 
 
 
 
 

கோழைகளாய் வாழுவதோ..? இல்லை. ஆனால் இதனையே சரணடைந்தவர்கள், எய்தும் தற்காலிகமான இன்பங்களை விட சுமக்கும் துன்பங்களோ பல்கோடி பிறப்புகளுக்கே வழிசமைக்கும். செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் மூலகாரணமே பொய்யான வாழ்க்கை முறைதான். "பொய்" என்பது பேசுவதில் மட்டு மல்ல, தவறான முறையில் வாழ்ந்தாலும் அது பொய்யான வாழ்வு தான் உணர்க!
நல்ல, தூய உறுதிமிக்கவர்களுக்கு எத்தகைய இடர்வரினும் கட்டுப்பாடு, தூய்மை தானாய் துலங்கி நிற்கும். கட்டுப்பாடுகளுடன் வாழ்கின்றவன் தனக்கு எஜமானனாக வாழ்கின்றான்.
பொய்யுடன் புரள்பவர்கள் சொல்கின்ற பொய்யையும் வேண்டாத நடத்தைப் பிறழ்வுகளையும், மிகத் தீவிரமாகவே மற்றவர்களுக்கும் அதனையே செய்யத் தூண்டுபவர்களாக இருக்கின்றார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்கள் செய் கின்ற தவறுகளை சில சமயம் தெரியாமல் இருக்கின் றார்கள். ஆனால் பல சமயங்களில் தவறான செயல்களைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள் தெரிந்தாலும் அதனைப் புறம்தள்ளி விடுகின்றனர். இன்னமும் சொல்லப் போனால் அதனை முழுமையாக அங்கீகரித்து அதுவே சரியானது எனவும் வாதிடுகின்றனர். இந்தக் கேவலநிலை தவறானது என யாராவது சொல்லப் போனால் அவர்களிடம் குரோதம், சினம் கொள்கின்றனர்.
- 79 -

Page 42
பருத்தியூர் அற. வயிரணுகுந்தர்
பொய்மையின், ஆளுமைக்குள் பிரவேசிப்பதை, உண்மை நிலையில் இருந்து படிப்படியாகப் பிறழ்வதைக் கண்டு கொள்ளாமல் பொய் எனும் மாயவலைச் சதிக்குள் ஆட்பட்டு உழல்வதைவிட அசிங்கமான துர்நடத்தை வேறேதும் இல்லை. பொய்க்குப் பலமுகங்கள் என்பார்கள். நாம் படித்த புராணக்கதைகளில் அரக்கர்கள், இராட்சதர்கள் எனப்பல பாத்திரங்கள் வருவதுண்டு. இவர்கள் பல விதமான வடிவங்களை எடுப்பார்கள். நல்லவர்களை வதைப்பார்கள். முடிவில் இவர்கள் உருத்தெரியாமல், செத்துப் போவார்கள். "பொய்" என்பது இதுவெனக் காட்டப்பட்ட உபதேசம் புனைகதைகள் இவையேதான்! உணர்க.
இதேபோல, "பொய்" என்கின்ற துர்க்குணம் பல வடிவங்களை எடுக்கும். மனிதர்களை மயக்கி, வாட்டி வதைக்கும். இதன் உண்மை நிலை உணர்ந்தவர்கள் தப்பித்துப் போவார்கள். மாட்டிக் கொண்டவர்கள் அல்லல் பட்டு அவதியுற வேண்டியதே!
துன்பங்களின் வேர்களைப் பொய்மையாளர்கள் விரும்பி உற்பத்தி செய்கின்றார்கள். இதில் இருந்து எழும் விஷ விருட்சங்கள் கயமை, மேலாதிக்கம், அத்துமீறல், குரோதம், தீராப்பகை போன்ற துர்க்குணங்களைப் பெற்றுத் தள்ளுகின்றன. இந்த விருட்சத்து விஷப்பழங்களும் காய்களும் குலைகளும், மாந்தர்கள் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ளவோ பசிக்கு உணவாகவோ பயன்படப் போவதில்லை. மாறாக, தீராத துன்பங்கள், ஆயுளை
- 80 -

கோழைகளாய் வாழுவதோ: அரிக்கும் வருத்தங்கள், பிணிகளையே வலிந்து வரவழை க்கும். எந்த மனிதனும் நீண்ட ஆயுளுடன், வாழ்ந்து பிறர்க்குத் தொல்லைகள் கொடுத்து தனது ஆன்மாவையும் அழுக்கடையச் செய்வதை விட இருக்கும் சொற்ப காலத்தில் பொய்மையே இல்லாத வாழ்வுடன் வாழ்ந்தால் அவன் கோடானகோடி காலங்கள் வாழ்ந்து சாதித்த நற்பேறு பெற்றவனாகி விடுகின்றான்.
மனிதன் எப்படி வாழவேண்டும் என்கின்ற இறை கட்டளை எதுவோ, அதுவிடயத்தில் அவர்கள் இன்றும் என்றும் ஜாக்கிரதையாக இருக்கக் கடமைப்பட்டவர்களாவர்.
அடுத்தவனைக் களைப்படையச் செய்து, அதன் மூலம் அவன்மேல் ஏறிநின்று தாக்க, சாதிக்க எண்ணுதல் சுத்த கோழைத்தனமானது. தவறான வழியில் ஒருவரை அடித்து விழுத்துவதில் என்ன வீரம் உண்டு? பொய்யாக, போக்கிரித்தனமான வாழ்பவர்கள் தெருவில் போகின்றவர் களைக் கண்டால், சும்மா இருக்க மாட்டார்கள். வலிந்து சண்டைக்கு இழுத்து சுரண்டிக் கொள்வார்கள். அல்லது இனிக்க, இனிக்கப் பேசியே கவிழ்த்தும் விடுவார்கள்.
தம்மைச் சுற்றி நல் "நெறி" என்ற வேலியே இல்லாத
பொய்யர்கள் அடுத்தவன் கோட்டையை வெறும் பேச்சினால்
பஸ்மமாக்குவது விந்தைதான். எந்தப் பொய்யனும் வீரனாக
முடியாது. ஆனால், உடலில் மெலிந்து உள்ளத்தில் ஒளி
ஏற்றி வாழ்பவன் எவருமே சாதிக்க முடியாத வலிமைமிகு
- 81 - -

Page 43
பருத்தி பல. அவிவரர் செயல்களை வெகு சாமர்த்தியமாக இலகுவாகச் செய்து முடிக்கின்றான்.
"நீ, உனது அல்லன். உனக்கு நீ உரிமையானவனும் அல்லன், எல்லாமே இறைவனுக்கு, அவனுடையது', என்கின்ற எண்ணம் பரிணமித்தால் பொய்பேசி, பொய்யவ ன்னாகவாழ்ந்திட மனம் சித்தமாயிருக்காது. எனக்கு, எனக்கேயானது என்ற தன்முனைப்பு வந்ததுமே தவறு, குற்றம் புரிதல், பொய் வேஷங்கள் எல்லாமே எனது நியாயத்திற்கு உரியவை என மனிதன் எண்ணிடத் தலைப்படுகின்றான்.
இறைவன் கூட மனிதனிடம் பல வரங்களைக் கேட்கின்றான். "நீ பொய்யுடன் வாழாதே உண்மையா னவனாக வாழ்வாயாக! அன்புடன், எல்லோரையும் நேசிப் பாயாக! எக்கணமும், தீங்குசெய்தலையும், தீங்கு செய்யத் தூண்டும் தீய சிந்தைகளையும் அகற்றுவாயாக" என்று தான் கேட்கின்றான். அவன் எந்தமுறையில் கேட்கின்றான்?
ஒ. அது உங்கள் மனமூடாகப் பேசுகின்றான். மனச் சாட்சியினூடாக, கேட்காத ஒலியூடாக, உள் உணர்வாக உண்மைகளை மட்டும் சொல்லிக் கொண்டேயிருப்பான் நாம் எமது மனச்சாட்சிப்படி, நடக்கின்றோமா? எமக்குப் பிடிக்காமல் விட்டால் நல்ல சொற்களைக் கூட நாம் கேட்ப தில்லை. எமக்கு எமது சுயநலத்திற்கு எது உவப்பானது என்று தான் எதிர்பார்க்கின்றோம்.
- 82 -

கோழைகளாய் வாழுவதோ..?
எங்களிடம் உள்ள உபயோகமற்ற, பொருட்களை, எவர் தலையிலாவது கட்டி விட எண்ணுகின்றோம். சிலர் அவற்றை கூட இலவசமாகக் கொடுக்கத்தயாரில்லை. அவைகளில்கூட ஏதாவது காசைப் புரட்டலாமா எனச் சிந்திக்கின்றனர். இந்த நிலையில் நல்ல நிலையில் உள்ள எந்தப் பொருளையும் இல்லாதவனுக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவன் படைப்புக்கள் எல்லாமே தமக் குரியன என,எண்ணுபவர்க்குத் தானதர்மம் சிரமமானதே
நாம் கடவுளிடம் பொன், பொருள், பதவி, புகழைத் தான் கேட்கின்றோம். "எமக்கு நற்சிந்தனையூட்டுவாயாக! ஆசைகளைக் களைவாயாக! என்றுமே, பொய் புகலாத வனாக இருக்கும் மன உறுதியைக் கொடு தேவா எனக் கேட்கின்றோமா?" கேட்க வேண்டியவை எவ்வளவோ இருக்கும் போது, உலக இன்பங்களை மட்டும் இரந்து கேட்கின்றோம். இந்த உயிருக்கு உகந்த பெரும் பேறு எதுவென எண்ணுவதில்லை. பொய்மை கலவாத உண்மை வாழ்வுதான் சாஸ்வதமான அழியாத ஒன்று என்று நாம் அறிந்ததுமே எமக்கு எல்லாமே பூரணமாகக் கிடைத்து விடும்.
நாம் கடவுளிடம் கேட்க எதற்குக் கூச்சப்படல்
வேண்டும்? கேவலம் ஓர் அற்பமான பொருள் ஒன்று
வேண்டுவதற்காக, வியாபாரியிடம் இரந்து கேட்கின்றோம்.
"ஐயா, நீங்கள் கேட்கும் பொருள் தற்போது, எம்மிடம்
இல்லை. அரிதானது" என்று வியாபாரிசந்தர்ப்பம், தேவை - 83 -

Page 44
பருத்தியூர்:சிவகுதம் யறிந்து பொய்பேசுகின்றார். ஆனால், நாமோ எமது காசைக் கொடுத்து பிச்சை கேட்பது போல் இரந்து கேட்கின்றோம். "ஹே மனிதா. கண்ட கண்ட பொருளுக்காக, உனது அற்ப ஆசைகளுக்காக, யார் யாரோ காலில் விழுந்து, இரந்து பிச்சை கேட்கின்றாயே? எல்லாம் வல்ல இறைவனிடம் உனது குறைகளைக் கேட்க மட்டும் என்ன வெட்கம் வேண்டிக் கிடக்கின்றது? நீ, அவரிடம் சென்று கேட்காத நிலைதான் வெட்கத்துக்குரியது. தெரிந்து கொள் தோழனே!"
டயோஜினில் என்ற ஞானியிடம் மகா அலெக்ஸாந்தர் வந்தான். "நீங்கள், பெரிய ஞானியாமே? என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்" என்று கர்வமாகக் கேட்டான். உலகம் முழுவதும் சுற்றிப் போராடிப்போராடி, பல் ஆயிரம் உயிர்களைக் கொன்று குவித்து பல நாடுகளைக் கைப்பற்றியதால் தானே பெரிய வீரன் என்கின்ற மமதையில் அப்படிப் பேசினான்.
அவன் பேச்சைக் கேட்ட டயோஜினிஸ் சொன்னார். "நீ ரொம்பவும் கஷ்டப்பட்டு, நாடுகளை வென்றாய். ஆனால் நான் என்னையே வென்று நிற்கின்றேன்" என்றார். ஆமாம், தன்னை வென்றவன், தன் புலனை அடக்கியாண்டவனே மாபெரும் வீரன் தன்னை வெல்லுதல் என்பது தன் புலனடக்கத்தின் மூலம் ஆசைகளை ஆணவத்தை, பொய்மைகளை வேருடன் களைதலாகும்.என்னதான் நாம் பெரும் பதவி, புகழ், செல்வங்களைப் பெற்றிட்டாலும்
- 84 -

கோழைகளாய் வாழுவதோ..? தன்னை ஆளாதவன் மனிதனே இல்லை என்றே எல்லா மதங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அன்பு எனும் ஒரே கூரையின் கீழ் நாம் அனைவரும் ஒருமித்து இருப்போமாக! இந்த எண்ணமே எமது பொய்மையான சிந்தனைகளைப் புறம் தள்ளி விடுகின்றன.
வரட்சிக்காலத்தில், வரண்டு கிடக்கும் நீர் நிலைகளுக் குப் பெரு மழை பொழிந்தாலே அது நனைந்து நிரம்பும், ஒரு செம்புநீர் இறைத்தால் அது நிரம்பாது பொய்மையாக வாழ்ந்து சேர்த்த பாவங்களைக் கழுவ ஒரு சில நற்காரியங் களை வெறும் புகழுக்காகச் செய்து புண்ணியம் சேர்க்க முடியாது. எம்மிடமிருந்து அன்பு மழை பொழிந்தால் உள்ளம் நிரம்பும் எல்லாமே நல்லதாய் நடக்கும் தனக்குக் கிடைக்காத எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்தே ஏங்குகின் றான். அவற்றை எப்படிப் பெறுவது என்கின்ற உபாயத்தை தெரிந்து கொள்ள முனைவதேயில்லை.
எமது வாழ்விற்கு வள மூட்டவல்லது எது எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா? எனக்கு மிகவும் அயல வனாய், ஏன் எமக்குள்ளேயே இருக்கின்ற, எல்லாம் வல்ல ஏக இறைவனை விடுத்து நாம் பற்பல தெளிவற்றவர்களிடம் சென்று நல்ல பாதை எதுவென கேட்கின்றோம். சுயதேவை களை மட்டும் பெரிதென நம்புகின்றவர்கள் தங்கள் மனம் விரியாத நிலையினால் இறைவனிடம் செல்லப் பிரியப்படு வதில்லை. இன்னும், பலர் கடவுளைச் சரணடையக்கூட வெட்கப்படுகின்றார்கள்.
- 85 -

Page 45
பருத்ரிபூர் பல விவரச்
நோயைக் குணப்படுத்த அந்த நோய்களைக் குணப் படுத்தவல்ல வைத்திய நிபுணர்களையே நாடுகின்றோம். இன்று பலரும், உண்மை விளக்கம் பெற பற்பல மார்க்கங் களுக்குள் புகுந்து கொள்வதும், பின்னர் விலகி ஓடுவதுமாக இருக்கின்றார்கள். ஆனால், பொய்மையை விலக்கினாலே போதும், எல்லா நன்மைகளும் தானே குவிந்துகொள்ளும் என்கின்ற அடிப்படை உண்மையினைத் தெரிந்தும், தெரியாமல் நடிக்கின்றார்கள். அறியாமையாலும் தவித்துத் திகைத்து ஏங்குகின்றார்கள்.
இருளுக்குள் ஒளி ஏற்றினால் எல்லாமே துலங்கும். ஏற்றப்படும் ஒளி நிரந்தரமாக, நித்திய சுகங்களை உண்டு பண்ணும். பொய்மையற்ற உணர்வு எனும் ஒளியே அந்த உண்மை வாழ்வை எமக்கு அளிக்கும்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 07.12.2008
- 86 -

கோழைகளாய் வாழுவதோ..?
தங்களை நிரூபிப்பதற்காகக் காலங்களை விரயமாக்கிக் கொண்டிரு ப்பவர்கள், சரியான பாதையில் பயணித்தாலே உலகம் அவர்களை ஏற்றுக்கொண்டுவிடும். எங்களை மட்டும், சுற்றிச் சுற்றி வாழ்வது வாழ்வல்ல. நல்லதையே, நெஞ்சில் விதைத்தவனுக்கு, உலகமே அவனுக்குரித்தாகி விடுகின்றது. தன்னை நிலை நிறுத்துதல் என்பது, தன்பிழை உணர்ந்து பிறர் நிலைகளையும் மதிப்பளிப்பதாகும். அன்பினை விதைத்தவன் "இறை கருணை" எனும் நறுங்கனிகளை அறுவடை செய்கின்றான். சுயநலம் இன்றேல் சுயபலம் வரும்.
நாம் எதனை விதைக்கின்றோமோ அதுவே அது சார் ந்தவையாக, உருப்பெறுகின்றது. நாம் எதனைத் தேர்ந்து எடுத்தால் சிறப்பானது எனக் கொள்வதில் குழம்பாது, நல்லதையே என்றும் நினைத்து வந்தால் அதுவே, அந்த எண்ணமே, சரியான பாதையைக் காட்டிக் கொண்டே செல்லும்,
சீரிய சிந்தனைகள் எமக்கு ஆண்ம வலுவை
- 87 -

Page 46
பருத்ரிபூர் அ.ை ஆயிரவருதஷ் ஏற்படுத்துவதுடன் எம் உள்ளே அவை நின்று, ஒளியேற்று வதால் சலனம்,சஞ்சலம் பஸ்மீகரமாகி விடுகின்றன. நல்ல ஒரு மனிதரை நாடுங்கள். உங்கள் பிரச்சனைகளைக் கூறிப் பாருங்கள். அவர் தமது அற்புத சக்தியால், நொடியில் உங்கள் இயல்பு அறிந்து நல் மார்க்கத்தைச் சொல்லி விடுவார். எந்நேரமும் நற்சிந்தைகளைச் சொந்தமாக்கிய வர்கள் தூவும் உபதேச நல் விதைகள் கேட்போர் நெஞ்சத்தில் ஆழமாக வேரூன்றி, மணம் கொழிக்கும் மா விருட்சமாகி வாழ்வை அதிசயிக்கும் வண்ணம் நற்பயன் களை ஈட்டித் தந்துவிடும்.
ஆனால், இன்று பலரும் தம்மை மட்டும் நிலை நிறுத்தும், ஆர்வமிகுதியால் எதையுமே கேட்டு உணரச் சித்தமின்றி மந்த கதியில் இயங்கிக் கொண்டிருக்கின் றார்கள். தங்களை நிரூபிப்பதற்காகவே வாழ்வின் காலங்களை விரயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். தங்கள் பாதை சரியானதுதானா, அன்றி தவறானதா என்பதுபற்றிக், கருதிப்பார்க்க நேரமின்றித் தம்மைத் தாமே சுற்றிச் சுற்றிக் களைத்தே போய் விடுகின்றார்கள்.
சுய விமர்சனங்களைத் தமக்குள் செய்யாமலும் தன்னை அறிவதற்கே பயந்து ஒதுக்கி கெட்டுப்போவதற்கு தாங்களே ஒரு காரணம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் திகைத்தும் நிற்கின்றார்கள். இது ஒரு "வீம்பு" நிலைதான். அடுத்தவனுக்கு ஒன்றுமே தெரியாது என எண்ணுதலும் அதே சமயம் ஒருவர் பேச்சிற்கே முன் உரிமை கொடுப்பதே
- 88 -

கோழைகளாய் வாழுவதோ..?
சரியானது என்பதும் ஒரே தாக்கத்தை ஏற்படுத்துகின்ற மாபெரும் தவறுகள் தான். உணர்க!
தன்னை நிலை நிறுத்துதல் என்பது தன்குறைகளை ஏற்றுக் கொள்வதும் அதை மீண்டும் செய்யாது இருப்பதும், பிறர் நிலைகளை மதிப்பதுமாகும். பிறரது சுய உணர் வினுள் நாம் புகுந்து விளையாடக் கூடாது. ஆனால், அவர்கள் நல் உணர்வினை ஏற்று அவர்கள் பாதையில் செல்லத் தடை செய்யாமல் இருந்தாலே நாம் மேல் நோக்கிய வசீகரமான எண்ணம் கொண்ட மாமனிதராகி
விடுவோம்.
பிறரது நல்ல கருத்துக்களை அடைத்து நிற்பதுபோல் கொடும் வினை வேறில்லை. இந்த எண்ணமே, நச்சு விதையை தமக்குள் செழிப்புடன் வளரவிடும் கொடுரச் செயல் அல்லவா?
எங்களுக்குள் நாம் பல மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். சில தோற்றங்கள் விநோத மானவை. சில அருவருப்பானவை. இன்னும் உருவகங்கள் சில நல்லவையாகவும் இருக்கின்றன. இவற்றுக்குள் எதை நம்புவது, எதனைக் கைவிடுவது என்பதில் ஏற்படும் விட சிக்கல்கள், எங்களைப் பக்குவப்படுத்தவிடாமல் சிக்கல் களுக்குள் ஆளாக்கியும் விடுகின்றன. நாங்களாகவே தேவை யற்ற கருத்து மோதல்களை உருவாக்கச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருப்பதுபோல் துன்பங்கள் வேறு ஏது ஐயா?
- 89 -

Page 47
பருத்திர் பல விவரம்
எதன் பொருட்டு வாழ்கின்றோம், இந்த வாழ்வின் அர்த்தம்தான் என்ன என எண்ணி முடிவில் நாம் வாழ்வது எங்கள் நலனுக்காகவே என்பதைத் தான் பலரும் தங்கள் முடிவாகக் கொண்டு இயங்குகின்றார்கள். எனினும், விரக்தி மேலிட்டவர்கள் தமக்காகவும் வாழாமல் பிறர்க்காகவும் வாழ எத்தனிக்காமல் சீரழிந்து போகின்றார்கள்.
சுயநலன் இன்றி வாழ முடிவதில்லை. வாழ்வைச் சுபீட்சமாக வாழ தன்னை நேசிக்காமல் வாழ்ந்து விட முடியாது. ஆயினும் தனது ஷேமத்தைக் கருதி வாழ்ப வர்கள் பல விடயங்களை விநோதமாகப் பார்க்கும் இயல்பினராய் போவது சமூக அக்கறையீனம் என்பதைத் தவிர வேறில்லை.
சுயபலம் என்பதைப் பலரும் அது வெறும் உடல் பலம் எனக்கருதி விடுகின்றார்கள். எனவே, இளமைக் காலத்தில் முறுக்கேறிய உடல்வாகுடன் வலிந்து சண்டை க்கு இழுத்து மோதி, இம்சைப்படுத்தி, தாம் நினைத்ததை அடைய முடியும் எனக் கருதி அநியாய வழியில் முரண்பட்டு வாழ்ந்தே கெட்டழிகின்றார்கள். ஆன்ம பலம் என்பதே மேலானது என்கின்ற உண்மையை உணராது விட்டால், அழிந்து போகும் உடலை மட்டும் நம்பி மனிதனை மனிதன் மதிக்காது வாழ்வதாகவே அமைந்துவிடும். உணர் (86 ftDT-5
இந்தத் தவறான போக்கினால் ஆன்மாவை அசுத்தப் படுத்துகின்றவர்கள் வருங்காலத்து வாழ்வின் தூய்மைத்
- 90 -

கோழைகளாய் வாழுவதோ..?
தன்மை எது என அறிவதற்கே லாயக்கற்று துன்பத்தை விதைக்கும் பாதகமான பிரகிருதியாகின்றனர். மாயமான, கீழ்த்தரமான, தந்திரோபாயங்களால் எம் உயிர்க்கு உறு துணையான ஞானம், விவேகம் என எதையுமே பெற்றுவிட முடியுமா? ஒருவனை அறிவிலியாக்குவதால் அல்லது ஒருவரை நோகடித்துப் பலமிழக்கச் செய்து சமூகத்திற்குத் தவறான கருத்துக்களைச் செலுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுகளின் உஷ்ணமான வேகத்துக்கு இவர்களால் தாக்குப் பிடிக்கவே முடியாது.
சமய, இலக்கியங்களில் நாம் படிப்பதை வெறும், சாமான்ய விஷயமாக எடுக்கக் கூடாது. அவை, சுவாரஸ் யமான பொழுதுபோக்கான கதைகள் எனக் கொள்ளா திருக்கவும். நாம் தெய்வத்திற்கு விரோதமான, தீய சக்தி களைப் படித்திருக்கின்றோம். அவை, அழிந்து போவது எப்படி என்றும் படித்திருக்கின்றோம். படித்த மாத்திரத்தே பக்திப் பரவசமாகும். மக்கள், செயலளவில் முரணான வாழ்வைக் கொண்டிருப்பது விசித்திரமாக இருக்கின்றது. ஒருவரது உள் உணர்வுகள் தூய்மையோடு இருக்கும்போது பிற தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு வக்கரித்துப் போய்விடும்.
மனிதன் தான் பெறும் வெற்றிகளில் மயங்கிப்
போகின்றான். செல்வத்தைக் கண்டதும் மருண்டு நிற்கின்
றான். பெரும் கல்வியைக் கற்றதும் வித்துவக் கிறுக்கில்
தன்னை இழக்கின்றான். எதையுமே, சமநிலையில் நோக்
கும் திறன் அற்றுப்போனால் எதையும் செய்து விடலாம் - 9.1 -

Page 48
பருத்திபூர் பல. ஹவிரவநாதர் எனத் தனக்குத்தானே தீர்ப்புச் சொல்லிவிடுகின்றான். இந்த நிலை வந்துவிடாது மனத்தைப் பக்குவப்படுத்தாது விட்டால் சுய கட்டுப்பாட்டை இழந்து சாமான்ய நிலைக்குக் கீழ்பட்ட மாந்தராகி விடுவோம்.
நல்லனவற்றையே ஏற்பதும் அவற்றின் பிரகாரம் ஒழுகுவதுமே மேலான மானுட கலாசாரமாகும். இந்த வழி மதம், மொழி, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இவற்றில் இருந்து பிறழ்பவன் தீமைகளைத் தன் வாழ்வில் வலிந்து அழைப்பதால் சாதாரண சோதனைகளுக்கே முகம் கொடுக்காத பலவீனன் ஆகிவிடுகின்றான்.
ஆனால் ஒன்றை மட்டும் உணர்ந்திடுக தோழர்களே! துன்பங்கள் தீயவர்களுக்காக மட்டும் வருவதில்லை. நல்ல மனிதர்களுக்கும் துன்பம் தொடர்ந்துவரும். ஆனால் இவர்கள் பாவங்களை விதைக்காமல் இருந்தும் கூட இயற்கை கஷ்டங்களை இஷ்டப்படி கொடுத்துவிடுகின்றது. இந்த நிலையைப் படிப்படியாகக் களையும் திடசிந்த னையை இறைவன் அவனாகவே உள் நின்று உணர்த்தி விழிப்பூட்டி விடுவான். எனவே, மானுட நேயம் கொண்ட வள்ளல் பெருமக்களின் துன்பங்களுக்கும் தீவினையா ளர்களின் துன்பங்களுக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. மனச்சாட்சியின்றி வாழ்பவர்கள் எதனையும் வக்கிர புத்தியுடன் ஏற்றுக்கொள்வதனால் அவ்வண்ணம் செயல்படு வதனால் "பாவம்" என்பதே புனிதமான செயல் என ஏற்றுக்கொண்டு விடுகின்றனர்.
- 92 -
s

கோழைகளாய் வாழுவதோ..? கெட்டுப் போவற்காகச் சந்தோஷப்படுபவர்களும் உண்டு.
இறைவன் எத்தனை கோடி மனிதர்களைப் படைத் தாலும் கூட, அவர்களுள் ஒரே ஒரு புனிதர் மலர்ந்தெழுந் தாலே அவர் சிருஷ்டியின் அர்த்தம் எமக்குப் புரிந்து விடும். ஏன் எனில், ஒரு புனிதர், ஞானி என ஒருவரே போதும், சகல ஜீவன்களையும் உயிர்ப்புடன் எழச் செய்வதற்கு என உணர்க தனி ஒரு தீர்க்கதரிசிபூமிப்பந்தை நிமிர்த்த வல்ல நெம்பு கோலாகிவிடுகின்றார். இத்தகைய அவதாரபுருடர் கள் காலத்திற்குக் காலம் தோன்றிய வண்ணம் இருக்கின்றார்கள். அத்துடன், இந்தப் புண்ணிய சீலர்களே பாவங்களை விதைத்த பாவாத்மாக்களை தம் ஞானத்தின் மூலம் அருட்பார்வை மூலம்,விழித்தெழச் செய்கின்றார்கள். உரத்துச் சொல்லும் பொய்களினால் உண்மைகள் கறுத்துப் போவதில்லை. எல்லா கெட்டவர்களும் சேர்ந்து ஒரு பரந்த சாம்ராஜ்யத்தை அமைத்தாலும் அது ஒரு நொடிப்பொழுதில் சுக்கு நூறாகிக் கவிழ்ந்து போகும். தங்கள் நலனை மட்டும் மையப்படுத்தி வாழ்பவர்களால் வையகத்தை வாழச் செய்து விடமுடியாது.
ஆன்மா அழிவதில்லை என்று சொல்வதானது, ஒருவன் செய்த நலன்கள் மட்டும்தான் அவன் காலத்தின் பின்னரும் வாழும் என்பதாகவும் கொள்ளலாம். இருக்கும் போதே எந்த நன்மைகளையும் செய்யாமல் உயிரற்ற உடலாக வாழ்வதைக் காட்டிலும் வாழும் கொஞ்சகாலத்தில்
நல்லதையே உரமாக வழங்கி தன் உடல், பொருள் என
- 93 -

Page 49
பருத்திர் பல அரிமருந்தர் அர்ப்பணிக்கும் மனிதனின் ஆன்மா செத்துவிட்டாகச் சொல்வது மெத்தப் பிழையல்லவா?
ஒரு பெரிய செல்வந்தர் தமது வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டிருக்கின்றார். திடீர் என வழியில் நோய்வாய்ப்படுகின்றார். நிலைமை மோசமானதாக உணர்ந்ததுமே கூட வந்தவர்கள் ஒரு தனியார் வைத்தியசாலைக்குக், கொண்டு செல்கின்றனர். அங்கே இவருக்குரிய அவசரமான மருந்து இன்மையால் வெளியே உள்ள மருந்தகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அங்குள்ள வைத்தியர்கள் கூறுகின்றனர். கூட வந்தவர்களும் உடனடியாக அருகே உள்ள மருந்த கத்தில் கேட்ட மருந்தைப்பெற்று வைத்தியசாலையில் கொடுத்ததும் வைத்தியம் நடைபெறுகின்றது. ஆனால், அந்தச் செல்வந்தரோ, எவருமே எதிர்பாராதவாறு இறந்து விடுகின்றார். அவருக்கு வைத்தியம், செய்த வைத்தியர் களுக்கோ பெரும் அதிர்ச்சி எப்படி அவர் இறந்து போனார்? அவருக்குரிய சிகிச்சைகளைச் சரியாகத்தானே செய்தோம். ஆராய்ந்து பார்க்கின்றார்கள்.
வைத்தியர்கள் ஆராய்ந்து பார்த்தபோதுதான் உண்மை விஷயம் தெரியவருகின்றது. மருந்தகத்தில் வாங்கிய மருந்து போலியானது காவல்துறைக்குத் தகவல் பறக்கின்றது. விசாரணைகள் நடக்கின்றன. முடிவில் அவர்கள் புலனாய்வில் கண்டறிந்த உண்மை என்ன வென்று தெரியுமா? மேற்படி, போலியான மருந்தை விற்பனை செய்த நபருடன் தொடர்புகொண்டபோது அந்த
= 94--

கோழைகளாய் வாழுவதோ..?
மோசடியில், முக்கியமான நபர் வேறுயாருமில்லை. திடீர் என இறந்துபோன அதே நபரே தான். தவறான வழியில் சொத்துச் சேர்க்கப் போலியான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்த பாவம் அவரது உயிரையே குடித்து விட்டது. செய்த வினையில் இருந்து தப்பிக்க முடியுமா?
பெற்ற தாய்க்கு, தகப்பனுக்கு, உற்ற உறவுகளுக்கு எதுவும் செய்யாது, ஆடம்பரமாக வெளியுலகில் சுற்றித் திரிபவர்கள் இறுதிக்காலத்தில் படும் அவஸ்தைகளை நீங்கள் கண்டுகொண்டிருப்பீர்கள். பொதுச் சொத்துக்களை அபகரித்தும் மக்கள் வழிபடும் கோவில்கள், நிறுவனங்களில் சாதுர்யமாக நிர்வாகத்தைக் கைப்பற்றிச் செல்வந்தரான வர்கள் முடிவில் மக்களால் ஒதுக்கப்பட்டு நைந்து, நொடிந்து கேட்பாரற்ற சீவன்களாக அவமானப்பட்ட வாழ்வுடன் வாழும் மனிதர்களை பலரும் அறிந்தே இருப்பார்கள்.
நாம் உண்ணும் உணவிற்கு ஏற்பவே ஜீரணம் நடந்து கொண்டிருக்கும். ஒவ்வாத உணவே வேதனை. ஒவ்வாத தீவினை ஆன்ம நாசம். நாம் நேற்றுச் செய்த பாவங்களை இன்றைக்காவது ஒத்துக் கொண்டால் நல்லது. திருந்தி நடக்க வாய்ப்பு உண்டு. சாகும் நாள் வரை தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் கேவல வாழ்வு வாழவேண்டுமோ?
முன்வினைப்பயன், அதுவே எமக்குக் கிடைக்கும் என்கின்றார்கள். அது இருக்க இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதைக் கேட்போமாக!
-95

Page 50
பருத்திபூர் அல. ஹவிற்றுருதத்
உங்களைப்பற்றி நீங்கள் அக்கறை கொள்வதென்பது நல்ல செயல்களை மட்டும் செய்வதில் கவனம் வையுங்கள்! என்பதாகும். மற்றப்படி கண்டபடி அகெளரவம் தரும், செயல்களால் உங்களை வளர்ப்பது அல்ல. நெருப்பு இன்றி சமையல் செய்ய இயலாது. அன்பான நற்செயல்கள் இன்றேல் ஆன்மாவை வளர்த்து ஒளி ஏற்ற முடியாது. அற்பர் சகவாசமும் ஆணவ முனைப்பும் நற் செயலைச் செய்ய விடா, இந்த வழிமுறையில் வாழ்ந்தால் நற்பேறு கிடையாது. வாழ்க்கையே கூறுபோட்டதாய் அமையும்.
நாம் வெளி உலகில் எங்கே, எங்கே சஞ்சரிக்கின் றோம் என்பதல்ல. எமது இல்லத்தில், எமது அயலவர்கள், உற்றார் உறவுகளுடன் எப்படி அன்பைப் பகிர்ந்து உண்மை யாக வாழுகின்றோமா என்பதை நாம் எமக்குள் கேட்க வேண்டும்.
எங்கள் உள்ளத்து இயல்பினை எமக்கு வெளியே உள்ள உலகம் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது. எனவே எமது பார்வைகளைச் சரி செய்து கொள்வோமாக! நாம் எல்லாவற்றிற்கும் பிறரைச் சாக்காகச் சொல்லிச் சொல்லியே பல பாவங்களைச் செய்யக் காரணம் தேடுகின் றோம். உண்மையில் தன்னையும், தன்னுள் உள்ள உண்மைத்தன்மையையும் மட்டும் விசுவாசிப்பவனே நல்ல மனிதன். பிறரை மதிக்காமல் அவர்களிடம் குறைகூறி அல்லது எவர்களிடமாவது பெற்றுவிடுவதே சாதுர்யமானது என எண்ணுவதே யாசகம் பெறும் நிலை தான். எதையுமே
= 96 -

கோழைகளாய் வாழுவதோ..? கேட்காதவன் சுயமரியாதையுள்ளவன். மாபெரும் செல்வந்த னுக்கும் மேலானவன்.
இத்தகைய பரந்த வாய்மைமிக்க ஒழுக்கமுள்ளவர் கள் தீவினைக்கு அஞ்சுபவர்களாவர். அன்பான "செயல்" எனும் ஆயுதத்தினால் நல்வினைகளையே விதைத்து உலகிற்கு நல்லவை வழங்கும் விருட்சங்களை உற்பத்தி செய்பவர்களுமாவர். அன்பான விதைகளை விதைத்தவன் இறை கருணை என்கின்ற நறும் கனிகளுக்கு உரித்தான வனாகின்றான்
தினக்குரல் (ஞாயிறு) 23.11.2008.
- 97 -

Page 51
பருத்திபூர் பல. ஹவிரவநாதர்
இந்தப்பூமியில் உள்ள சகலதுமே நிலம், நீர், காற்று, ஒளி, வானி ஆகியவைகளிலிருந்து உற்பத்தியானவை. நிலத்தில் பிறந்த மனிதன் அங்கேயே மறைந்து மீண்டும் ஜனனமாவதால் பூமிக்கு எந்தப்பாரமும் கிடையாது. மனிதனதும், ஏனைய உயிர்களினதும் தேவைகளுக்கு ஏற்ப அனைத்தும் முழுமையாகக் கிடைக்காமைக்குக் காரணங்கள் பலவுண்டு. பிரபஞ்சத்தில் இருந்து பிரசவிக்கப்பட்ட உலகத்தின் மக்கள், தங்களது ஜனனம் மட்டுமே மேன்மையானது எனக்கருதி, ஏனைய உயிர்களை வதைப்பதும், தம்மிடையே பொருதுவதும் இறையோன் படைப்பினையே உணராத தன்மையேயாகும். ஜனனங்களால் பண்பான மக்கள் கிடைத்தாலே மேதினி மாட்சிமை காணும்.
இந்த ஜகம், உயிர்ப்புடன் இயங்க ஜனனங்கள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. எத்தனை கோடி பிறப்புக்கள் நடந்தாலும்கூட அவற்றால், இந்தப் புவிக்குப்பாரம் என்று சொல்லிட முடியுமா?
ஏன் எனில், இந்தப் பூமியில் இருக்கின்ற எல்லாமே நிலம், நீர், காற்று, ஒளி, வான் என்பவையூடாகவே உற்பத்தி - 98 -
 
 
 
 
 
 
 
 
 

கோழைகளாய் வாழுவதோ..? யாகின்றன. இங்கேயே ஜனிப்பதும், பின்னர் புதுப்புது அவயங்களுடன், வடிவுடன் பிறந்தும் கூட தம் தேகங்களை விட்டு உயிர் துறப்பதும் இயற்கை நிகழ்வுகளேயாம். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் இருந்து, உலகம் பிரசவிக்கப் பட்டது. நாம் இங்கிருந்தே சகலதையும் பெற்றோம், இன்னமும் பெற்ற வண்ணமுள்ளோம்.
ஒரு பொருளில் இருந்தே பல வடிவங்களுடன் வேறு சிறு, சிறுதுகள்களாக உருமாறி, உருமாறித் தோன்றி னாலும் கூட, மூலக்கூறுகள், அணுக்கள் அழிவதேயில்லை. எந்த ஒரு மூலகத்தையும் நாமாக உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. இது விஞ்ஞான உண்மைத் தத்துவம் மட்டுமல்ல, இதனையே, ஆன்மீகமும் தத்துவ ஞானமும் வலியுறுத்துகின்றன. சடத்தில் இருந்து சக்திதோன்றுவதும், சடத்தை அழிக்க முடியாது என்பதும் ஆன்மீக தத்துவ உட்பொருளாகும்.
எனவே தான் எமது பூமியில் எத்தனை கோடி, ஜனன ங்கள் நடந்தாலும் கூட அவற்றால் இந்த மண்ணுக்கு எந்தப்பாரமும் இல்லை. ஒரு தேகம் அழிந்தாலும் அதில் உள்ள அனுப்பொருட்கள் வேறு ஒரு வடிவுடன் இந்த உலகுடன் கலந்தே விடுகின்றன. எனினும், பூமிக்கு மக்கள் பெருக்கத்தினால் பெரும் பாரம் வந்துவிட்டது என்று ஏன் நாம் சொல்லிக் கொள்கின்றோம்? மக்கட் பெருக்கத்திற்கு அமைவாக நாம் எமது மண்ணின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதேயில்லை என்கின்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேயில்லை.
- 99 -

Page 52
பருத்திபூர் அல. ஆயிரவருதம்
மனிதனுக்குத் தேவையான உணவு, நீர்,உடை, இருப்பிட வசதிகளை நாம் பூரணமாகப் பெற்றிட என்ன, என்ன செய்கின்றோம்? இருக்கின்ற இயற்கை வளத்தினைப் பாதுகாத்தாலே போதும். எத்தனை கோடி மக்களையும் இந்தப் பூமி சந்தோஷமாகத் தாங்கிச் சுழலும்,
ஆனால், இன்று நாம், மக்கள் தொகையினைக் காரணம் காட்டி உலகம் பொருளாதார வசதியில் நலிவுற்ற தாகச் சொல்லிக் கொள்கின்றோம். இருக்கின்ற எல்லா உயிர்களையும், வளங்களையும், செம்மையாகப் பாதுகாத் துக் கொள்கின்றோமா? கடலினுள் கோடானு கோடி உயிர் கள் வாழ்கின்றன. உலகின் முக்கால் பங்கு நீர் சூழ்ந்தும் கால்பங்கு மட்டுமே நிலமாக இருந்தாலும்கூட நிலத்தில் வாழும் மாந்தர்க்கு நல்ல அறிவை ஆண்டவன் அளித்தான். ஆனால் அவனோ சர்வ உலகத்து ஜீவன்களையும் ஆக்க வும், அழிக்கவும் தன்னால் இயலும் என்று இறுமாப்புடன் வாழ்கின்றான்.
கால்பங்கு நிலத்தில் வாழும் மனிதர்கள் முக்கால் பங்கு நீரில் வாழும் கோடானுகோடி உயிரினத்தை இம்சை செய்வது இறைவன் வழங்கிய ஜனனங்களை அவமதிக்கும் செயல், நோக்குக! ஏன் எனில் இன்று நிலம் மட்டும் கவனிப் பாரற்றுக் கிடப்பதில்லை. கடல் வளமும் நன்கு பராமரிக்கப் படுவதில்லை. நாமாகவே உண்டாக்கிக் கொள்ளும் பிரச்சினைகளுடன் வெளியில் இருந்துவரும் தேவையற்ற தொல்லைகளால் மனிதப் பிறப்பின் உண்மையான சந்தோஷங்களை இழந்து வருகின்றோம்.
- 100 -

கோழைகளாய் வாழுவதோ..?
யுத்தங்கள் இயற்கை அனர்த்தங்களால் உயிர் இழப்புக்கள் நடக்கின்றன. யுத்தங்கள் மனிதரால் தோற்று விக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் சிதைக்கப்படுவதுடன் அவனுடன் அவன் சரித்திரமுமே மூடப்பட்டு விடுகின்றது.
ஓர் உயிர் அநாவசியமாக இழக்கப்படுவது எத்தனை, எத்தனை பிறப்புக்களை அறுக்கவைக்கும் தேவையற்ற முயற்சி அல்லவா? மேலும் ஒருவர் குடும்ப பந்தத்தில் இல்லாதவரேயாயினும் அவர் இல்லாதவிடத்து அவரில் தங்கி இருப்போரால் எவ்வளவு அனுகூலங்கள் தடுக்கப் படுகின்றன தெரியுமா? எனவே, உலகத்தில் புதியன பூக்க, உற்பத்தியாக்க எல்லோருக்குமே சமபங்கு உண்டு. ஒரு பிறப்பு என்பது சாமான்ய விஷயமா என்ன? இதுபோலவே ஒருவன் மரணிப்பதை, சாதாரணமாக எம்மால் எடுத்துக் கொள்ள இயலுமோ? எல்லாமே இயற்கை, இதன்பொருட்டு என்ன மயக்கம், துன்பம் என்று வாயளவில்தான் எம்மால் சொல்லிட முடியுமே தவிர யதார்த்தத்தில் இந்த நிகழ்வுகள் எல்லாமே அற்புதம் அற்புதமே!
எல்லா தாய்மார்களும் மிகவும் கஷ்டப்பட்டுத்தான்
குழந்தையைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், நாம்
விலங்குகள் அல்லது பறவை போன்ற இதர ஜீவன்களின்
பிரசவ வேதனைகள் பற்றிச் சற்றேனும் கிஞ்சித்தும்,
நினைந்தது உண்டா?அப்படி எண்ணியிருந்தால் நாம்
நிச்சயமாக அனைத்து ஜீவன்களி பிறப்பின் தாற்பரியத்தை - 101 -

Page 53
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் உணர்ந்தவர்களாவோம். ஒருகோழி மிகச் சிரமத்துடனேயே முட்டையிட்டுக் கொள்கின்றது. எண்ணிப் பார்க்குக.
ஒரு மனிதன் பிறக்கின்றான் என்றால் அவன் மட்டும் தான் பிறக்கின்றானா? அவனுடன் கூட, எத்தனை உயிர்க் கலங்கள் உருவாகின்றன. அவனுடன் இணைந்தே அவை வளருகின்றன. அவனுள் இருந்து அவை தம்மை வளர்க்கின்றன. மனிதனுக்குத் தெரியாமலேயே, மனிதன் வேறு, வேறு உயிர்களைத் தன்னுள் வளரத் துணை நிற்கின்றான். என்ன அற்புத நிகழ்வுகள்? ஐயனே!
மனித உயிர்களுக்கு உகந்த பக்ரீரியா போன்ற உயிர் வர்க்கங்களுடன் நோய்க்கிருமிகளும் கூட உருவாவது, நல்லதும் கெட்டதும் எமக்குள்ளேயே இருக்கின்றன என்ப தைக் காட்டுவதாகவே அமைகின்றதல்லவா? ஆயினும், கெட்ட கிருமிகளை மனிதன் தன்அறிவால் அழித்துவிடு கின்றான். ஆனால் கெட்ட தனது சிந்தனைகளை எந்த அமிலத்தாலும் அழித்துவிட அவனால் முடியுமா?
நல்ல நோக்கங்களே எம் வாழ்வைத் தீர்மானிக் கின்றன. நல்ல நோக்கங்களே எம் அந்தரங்க ஆத்மாவை உள்ளேயும், வெளியேயும் அரங்கேற்றுகின்றன. உண்மை, அன்பு, அமைதி, விழிப்புணர்வு எம்மை முழுமனிதனாக்கும் போது இறைவனால் உண்டாக்கப்படும் பிறப்பின் ரகசியங்களைப் பூரணமாகத் தெரிந்து கொள்ளும் ஞானத்தையும் பெற்றுவிட முடியும்.
- 102 -

கோழைகளாய் வாழுவதோ..?
இன்று பிறந்தோம், நேற்றும் பிறந்தோம், ஏன் நாளையும் பிறக்கப் போகின்றோம். ஆனால், நாம் மட்டு மல்ல, கூடப் பல்கோடி இதர உயிர் வர்க்கங்களும் தான்.
ஆயினும் எமது பிறப்பிற்கு என்ன கெளரவத்தினை ஏற்படுத்தினோம் என்று நாம் எம்மைக் கேட்டுக்கொண் டோமா? மானுடப் பிறவி எடுத்த நாம் எம் மூலம் எத்தனை ஜீவன்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றோம்?. பசித்தோனுக்குத், தினசரி அல்லது வசதி கிடைத்த வேளையிலாவது ஒரு பிடி அரிசி வழங்கச் சித்தம் கொள்கின் றோமா? உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் தானம் செய்ய விருப்பம் இருந்தும் கூட அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளாமையே உண்மையாகும்.
மனிதப் பிறவியை மட்டும் நாம் மேன்மைப்படுத்து கின்றோம். ஆனால் ஏக இறைவன்தான் எல்லா ஜனனங் களையும், தன் ஆசீர்வாதத்தால் நிகழ்த்திக் கொண்டிரு க்கின்றான். அப்படியிருக்க அவன் சித்தத்திற்கு விரோத மாக மனிதன் மனிதனை மட்டுமே கெளரவிப்பதில் என்ன நியாயம் உண்டு? முடிந்த வரை எம்மை நாடும் சகல உயிர்களையும் அன்புடன் நோக்குதல் எல்லா பிறப்புக்களையும் கெளரவப்படுத்தும் செயல். ஆனால், நாம் சாதாரணமான நல்ல விஷயங்களையே மூளையில் ஏற்றிக் கொள்வதாயில்லை.
- 103 -

Page 54
பருத்திபூர் பல அறிந்துதல்
“கர்ப்பிணிப்பெண்ணுக்கு இருக்கை கொடு” என்று பேரூந்தில் விளம்பரம் ஓட்ட வேண்டியுள்ளது. "முதியோரை மதி" என்று அடிக்கடி, உபதேசம் சொல்ல வேண்டியுள்ளது. இறையோன் ஆஞ்ஞைப் படி நாம் வாழத்தலைப்பட்டால் அனைத்து உயிர்களுமே எமது உடைமையாகும். இது போலத் திருப்தி தருவது வேறு எது உளதோ?
செல்வங்களைச் சேகரித்தலைவிட, மனித மனங்க ளைச் சேகரியுங்கள். அதுவே செல்வத்துள், பெருஞ் செல்வமாகும். இன்று நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து வாழ்வதுமில்லை. ஏற்கனவே இருந்து கொண்டோ ரும் நல்ல இடத்தில் தொடர்ந்து வாழமுடிவதுமில்லை. சஞ்சல, சபல புத்தியை மட்டும் நிரந்தரமாக்கி இறை அற்புதங்களை நுகர மறுக்கும், அந்தகார, ஆன்மா வாக்கிட எம்மை நாமே உட்படுத்துகின்றோம். இதனா லேயே மனிதப் பிறப்புக்களை மதித்திட மறுப்பதும், தனது உயிர்மட்டுமே உன்னதமானது, எமக்கு மட்டுமே இன்பங் கள் பூரணமாகக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதுடன் தனது வலிகள் துன்பங்களே மிக மிக அதிகமானது. என்னை மட்டும் இதிலிருந்து விடுபடத் தூக்கிவிடுங்கள் என எதிர்பார்க்கின்றான்.
இறைவனால் தரப்பட்ட இயற்கையைப் பூரணமாக ரசித்து, அனுபவித்தாலே போதும். எல்லா நிரந்தர, சந்தோஷங்களையும் எம்முன் உண்டு பண்ணி விடலாம் அல்லவா?
- 104 -

கோழைகளாய் வாழுவதோ..?
)ே இந்த உலகம் அழகானது.
)ே இயற்கை, அதன் வனப்பு எமக்கானது.
)ே காலை நேரச் சூரிய உதயம், அது மறையும் தோற்றம்
)ே பெரிய மலைகள், எம்மைச் சுற்றி வருடும் காற்று
ல் புதுப்புது உயிரினம், எம்முடன் பேசவிழைகின்றன!
இவற்றுடன் பேசுமாறு, இறைவன் கட்டளையிட் டுள்ளான். தாராளமாக இந்த ஜனனங்களை நாம் ஏற்போ மாக! இந்த வளங்கள் அனைத்திற்குள்ளும் உயிர்கள்.
இவை என்றுமே எப்போதுமே புதிது, புதிதாக ஜனித்தபடி ஜனித்தபடியே!
"ஹே. மானுடா, நீ, இன்னமும் கூட உன்னைப்பற்றி மட்டும் நினைப்பது எப்படி? கொஞ்சம் இந்த அகன்ற பரந்த உலகை உற்று நோக்கு உன்னுள், ஏராளமான கற்பனை க்கு எட்டாத மகிழ்ச்சிப் பிரவாகம் ஒட்டு மொத்தமாகப் பரிணமிக்கும். அதனுள் நீ புகுந்து விளையாடு இறை அற்புதத்தினைத் தேடி ரசிப்பதைவிட வேறென்ன வேலை உனக்கு?
பிறப்பு இன்றேல் எதுதான் நிகழும்?"ஜனனம்" அது இறை சித்தம். அதனை நாம் போற்றுவோம். ஜனனம்,
- 105

Page 55
பருத்திபூர் அல. ஆயிரவருதஷ் முன்பு நிகழ்தாலும் இன்று நடந்துகொண்டிருந்தாலும், இனி மேலும் நடக்கவிருந்தாலும், அது என்றும் புதியது. புதியதே UITTLb.
எனவே, வருகின்ற புதிய ஜீவன்களை வரவேற்போம்.
நாம் காணும் புதிய ஜீவன்களை எம்மால் இயன்றவரை போஷிப் போமாக! மேலும் இவைகளின் ஷேமங்களுக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்வதே மேலானது.
மரணத்திற்கே சவால் விடும் பிறப்புக்களால் உலகமே இறந்து போகாமல் என்றும் ஜிவிதமாய் இருக்கின்றமையினை உணர்வோமாக!
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 26.10.2008
- 106 -

கோழைகளாய் வாழுவதோ..?
மூச்சு அடங்குதல் மட்டும் மரணம் அல்ல, மூச்சுடன் இயங்கும் காலத்தில் நல்வழியில் இயங்காமல் வாழ்வதும், உயிரற்ற வாழ்வுதான். செத்தபின் என்ன நிகழும் என்றே தெரியாத, மரணம் பற்றி அச்சமடைதல், தேவையற்றது. மரணத்தின் பின், சம்பாதித்த அனைத்தையுமே விட்டுவிட்டுச் செல்வதால், மிகையான ஆசைகளால், தேட்டங்களால் ஏதுபயன்? மரணம் இன்றேல், புதியயூமி உதயமாகாது. ஒரு கண மரணத்திற்காக, பல்கோடி கணங்களைப் பயத்துடன் கழிப்பதே வெட்கப்பட வேண்டிய அறியாமை, இருக்கும் காலத்தில் சாதனை செய்தவன் மரணத்தை வென்ற சிரஞ்சீவி.
மரணம் வரும் தருணத்தில் மனிதனின் சர்வ அங்க மும் ஒடுங்கும். இந்த வேளையில்தான் தனது நிலை பற்றி, இயலாமை பற்றி உலக வாழ்வின் அநித்தியம்பற்றி ஏங்குகின்றான்.
மரணம் என்பதே, இறைவனால் வகுக்கப்பட்ட நியதியாக இருப்பினும்கூட நாம் எமக்கு மட்டுமே மரணம் س 107 -=

Page 56
பருத்திர் 09:அர4 வருவதாகக் கருதிக் கலவரப்படுகின்றோம். மூச்சு, அடங்கு தல்தான் மரணம் அல்ல, மூச்சுடன் நல்லவழியில் இயங்காமல் வாழ்வதும் மரணம் தான்.
உண்மையில், நாம் ஆழமாகச் சிந்தித்தால் உடலை விட்டு உயிர் பிரிவது பற்றி கவலைப்படுவது அர்த்தம் இல்லாததாகவே படும். ஒருவர் இறப்பது என்பது முடிந்த முடிவு. எல்லோரும் இந்த உலகிலே நிரந்தரமாக இருப்ப தாக வைத்துக் கொண்டால் என்ன நடக்கும்? கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள்!
எல்லா வயோதிபர்களுமே தங்கள் பதவிகளை விட்டு விலக மாட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்களில் இளைய முகங்களைக் காணவேமுடியாது. தெருவில் நடந்துபோக முடியாது. ஒரே நெரிசல், கடலுக்கு மேலே, நிலம் வைத்து மேடை போட வேண்டும். வதிவிடங்களை எப்படி அமைந் தாலும் அடங்காது. உணவு, தண்ணீர் பிரச்சினைகளை எப்படிக் கையாளமுடியும்? வீடுகளில் வயோதிபர்களின் ஆளுமைகளும் கூடவே, அவர்களின் அட்டகாசமும் இளையவர்களுடன் சதா மோதல்களும் கூடிக்கொண்டே போகும். உண்மையில் நாம் மரணம் என்கின்ற துணை யின் அவசியத்தை, அதன் நோக்கங்களை மேற்கண்ட கற்பனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இறை அற்புதங்கள் எல்லாமே சாமான்யமான விஷயங்களே அல்ல. எல்லாமே இங்கு சரியாகச் செம்மை - 08 .

கோழைகளாய் வாழுவதோ..? யாகவே நடந்து கொண்டிருக்கின்றன. ஜன்னமும், மரணமும் சாஸ்வதமே. இரண்டு நிகழ்வுகளுமே தொடர்ந்து நடந்து கொண்டு இருக்காது போனால் நாம் எங்ங்னம் இயங்க முடியும்? சமநிலை இயக்கம் பூமியை ஒழுங்காகச் சுழல வைக்கும். எனவே, மரணம் பற்றி நாம் மயங்கி, ஏங்குவது எங்கள் மதியீனம் தான்.
உண்மையில் இயற்கை எவ்வித பாகுபாடும் செய்வதேயில்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கின்ற பாகுபாட்டுடன் பிறப்பு, இறப்புக்கள் வருவது மில்லை. விரும்பி ஒருவர் ஓர் இடத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்துவிட முடியுமா? ஒருவர் தனக்குத் தான் இவ்வளவு தான் ஆயுள் காலம் என வகுத்திட முடியுமா? இஷ்டப்படி உயிரை மாய்த்திட விதி விடுவதுமில்லை. கஷ்டமான வாழ்க்கையேயாயினும் போராடி வாழ்ந்து தான் ஆக வேண்டும்.
மரணம் பற்றி நாம் அச்சப்பட வேண்டியது இல்லை. ஏன் எனில் நாம் செத்தபின்னர் என்னதான் தெரியப் போகின்றது? நாம் என்ன பிறவி எடுப்போம் என்பது பற்றி ஏன் வீணாகக் கற்பனை செய்ய வேண்டும்? செத்தவர்கள் மீண்டும் வந்து இதுபற்றிப் பேசியதுமில்லை. இருக்கும் போதே நல்ல காரியங்களைச் செய்பவர்களுக்கு இந்த மாதிரிப் பேசவே நேரம் இருக்காது. எமக்குள்ள கடமை களைச் சரிவரச் செய்யும் போது வாழ்வின் சந்தோஷங் களுக்கான கதவுகள் தானாகவே திறந்து கொள்கின்றன.
- 109 -

Page 57
aøjhus qG. VöýByggi
பாவம் என்றால் என்ன, புண்ணியம் என்றால் என்ன என்று சிலர் கேட்பதுண்டு. உண்மையில் தீய காரியங்கள் எதனையுமே செய்யாதே என்று எல்லா மதங்களுமே எச்சரிக்கை செய்கின்றன. கெட்ட காரியங்களைச் செய்தால் கெட்டு அழிவாய். அது இறைவனுக்கே அடுக்காது. பாவங்கள், எது என்று ஆன்மீகவாதிகள் எம்மை நோக்கி எச்சரிக்கைகளைச் சொல்லாது போனால், சாமான்ய மக்கள் திருந்தி வாழாமல் போய் விடலாம் அல்லவா?
மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் பண்பு, கலை, கலாசாரம் என்று சொல்லி வாழ்வதுமில்லை. அவைகள் அப்படி வாழ வேண்டிய தேவையுமில்லை. அவை தாம் வாழும் காலத்தில், வாழ்ந்து இறந்து போகின்றன. ஆனால் அவற்றின் சிருஷ்டிகள் எல்லாமே இந்த உலகின் இயக்கத்திற்கு அத்தியாவசியமானவை தான். காரணம் இன்றிக் காரியங்களை இறைவன் செய்வதில்லை.
சாவைப் பற்றிய பயம் மனிதனை மட்டுமே கூடுத லாக ஆட்டுகின்றன. ஆனால் விலங்குகள், பறவை, நுண் உயிர்கள், தமக்கு ஆபத்து வரும் வேளை மட்டுமே எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள இடம்தேடுகின்றன. நோய்களும், விபத்துக்களும், யுத்தங்களும் எம்மை நோக்கிய சவால்களாக இருந்தாலும் இந்தப் பேரழிவுகள் எல்லாமே மனிதனுடன் கூடவே அனைத்து உயிரினங் களையுமே பாதிப்புக்குள்ளாக்கி விடுகின்றன.
- 110 -

கோழைகளாய் வாழுவதோ..? ஆனால், மனிதரில் பெரும் பகுதியினர் இருக்கின்ற காலத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கும்போதே தமது இந்த வாழ்க்கையே சாஸ் வதம் என எண்ணிக் கண்டபடி நடக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் பஞ்சமா பாதகம் செய்தவர்கள் கூடத் தமது இறுதிக்காலத்தில் மரணப்படுக்கையில், "கடவுளே நான் யாருக்கு என்ன செய்தேன், என்னை ஏன் வதைத்துத் துன்புறுத்துகின்றாய்” என்கின்றார்கள். மிகப்பாரதூரமான கொலைக்குற்றம் செய்து, தூக்குத்தண்டனை பெற்று, வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களின் கடைசிக் காலங்கள் பற்றிப் படித்தபோது, மிகவும் திகைப்பாக இருந்தது.
அவர்களில் சிலர் மெளனமாக, எவருடனும் பேசாது இருந்தனர். ஆனால், பலரும் தமக்கு சாவு வரப்போகின் றதே என்று தினசரி அழுது கண்ணிர்விட்டு ஏங்கி, சித்தப் பிரமை பிடித்தவர்கள் போல் செயலற்று இருந்தார்கள். ஒரு சிலர் தமக்கு இந்தத் தண்டனை கிடைத்தது ஓரளவு சரி என்றும் ஆனால், இறப்பதற்குத் தாங்கள் அச்சம் அடைவதாகச் சொன்னதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், துணிச்சலுடன் சாவை எதிர்கொள்ளத் தயாரானவர்கள் மிகக் குறைவு தான்.
தமது மிடுக்கான வயதில், அல்லது ஆணவமான
வாழ்வு வாழ்ந்த காலத்தில் செய்த படுபாதகமான கொலை
யால் பாதிக்கப்பட்டவன் அவன் கொலை செய்யப்படும்
போது அலறிய அலறலை பொருட்படுத்தாமலும், இந்தக்
- 11.1 - -

Page 58
பருத்தியூ அல. ஆயிரவருதற் கொலையால் கொலையுண்டவர்களின் குடும்பத்துக்கு ஏற்பட்ட நிலைமையைக் கிஞ்சித்தும் எண்ணாதவர்கள் தமக்கு எனத் துயர் வரும் போது எப்படிக் கலங்கித் துடிக்கின்றார்கள், பார்த்தீர்களா?
ஆனால் பொது சேவை, நலன்களுக்காகத் தமது நலனைக் கவனிக்காது உழைப்பவர்களுக்குத் தமது தேக அசெளகரியங்கள் பற்றித் தெரிவதேயில்லை. மகாத்மா காந்தியடிகள் போன்ற புனிதர்கள் அச்சம் கொள்ளாது தமது அறப்போராட்டத்தை முன்னெடுத்தனர். துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் கூட தமது மரணத்தறுவாயில் இறை நாமம் சொல்லியபடியே தான் உயிர்நீத்தார் அவர் நாட்டிற் காக, தம் உயிரை பரித்தியாகம் செய்பவர்களுக்கு மரண LILLILð 6 JUTTg5.
அச்சமின்றி வாழ்பவர்க்கு மரணம் துச்சம். தினம் தினம் பயந்து நடுங்கி வாழ்பவர்கள், அனுதினம் செத்துச் செத்து வாழ்ந்து காலத்தையோட்டுகின்றார்கள். மிகையான எதிர்பார்ப்புகள், உலக இன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்கின்ற ஆவல்கள் எல்லாம் மனிதனின் தவிர்க்க முடியாத ஆசைகள்தான். ஆனால் இவற்றை மனிதன் முறையா கப்பெற்று அனுபவிக்கும் போது அவன் மனம் விசால மாகின்றது. சகல இன்பங்களையும் தன் சொந்த முயற்சி யால் அறவழியில் ஆண்டு அனுபவித்தவன் வாழ்க்கையின் நிலையாமையை தனது பரந்த அறிவினால், அனுபவத்தி னால் பெற்றுக் கொள்கின்றான்.
- 112 -

கோழைகளாய் வாழுவதோ..? கஷ்டப்பட்டு உழைத்துத், தனது குடும்பத்திற்கும், உலகிற்கும் வழங்கியவன் திருப்தி நிலைஅடைகின்றான். முற்காலத்தில் மன்னர்கள் கூடத் தமக்குரிய கடமைகளைப் பூரணமாக முடித்தபின்னர் கிரஹஸ்த வாழ்வு முறையை விட்டுச் சந்நியாசம் சென்றுவிடுவதாகப் படித்திருக் கின்றோம். மனிதன் தன் வாழ்நாளின் பராயங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு சாதனைகளைப் புரிய வேண்டியவனாகின்றான். எல்லாம் நிறைந்த திருப்தியான வாழ்க்கையை மனிதன் காண்பது சாமன்யமானது அல்ல.
ஆனால், ஆன்மீக நாட்டம், ஒழுக்கம், பரந்த நோக்கு இவற்றை நாம் தெய்வ வழிபாடு, தியானம்மூலம் பெற்றாக வேண்டும். தினசரி உண்டு, உறங்கி, விழித்து, மீண்டும் யந்திர கதியில் வாழ்ந்து ஒரு சராசரி மனிதனாகச் சாகக் கூடாது. இந்த உலகிற்கு ஏதாவது நன்மைகள் செய்யாமல் உயிர் நீத்துவிடுவது ஒரு சிறப்பான வாழ்வாக அமையாது.
மரணத்தை எண்ணி, ஏங்கி இருக்கின்ற வாழ்வின் சந்தோஷங்களை இழக்கலாமா? ஒரு நண்பர் தனது அனுபவம் ஒன்றினைச் சொன்னார். "சாவு என்ன ஐயா. சாவு. இது ஒன்றும் புதுமையேயல்ல. எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியசாலையில் குடும்பத்தினர் கொண்டு சேர்ப்பித்தார்கள்.
அறுவை சிகிச்சை ஆரம்பிக்க முன்னர் ஒரு ஊசியை எனக்கு வைத்தியர் ஏற்றினார். எனக்கு ஒன்றுமே தெரிய - 113 -

Page 59
கருத்திபூர் அல. ஆயிரவருதற் வில்லை. நினைவினை நான் இழந்தேன். கண்விழித்துப் பார்த்தபோது வைத்தியசாலையின் நோயாளர் பாராமரிப்பு அறையில் இருந்தேன். எனக்கு சற்றுமுன் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள், மனிதன் இறப்பது என்பது இப்படித்தானே இருக்கும். கண் மூடினால் என்ன ஐயா தெரியும்” என்றார்.
உண்மைதான், இவருடைய அனுபவங்கள் போல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மட்டுமல்ல, விபத்துக்களில் சிக்கிக் காயப்பட்டு உயிர் பிழைத்தவர்களும் அறிந்து உணர்ந்திருப்பார்கள்.
"மரணம்” என்பது கண் துயில்வது போலத்தான். "ஜனனம்" மனிதன் மறுபடி கண் விழிப்பதுபோல் அல்லவா?
மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங் களின் எண்ணங்களை நாம் கண்டு கொள்ள முடியாது. அவற்றின் அசைவுகள், சப்தங்கள் மூலம் நாமாக எதனை யோ கருதுகின்றோம். ஆயினும் ஒன்றினைப் புரிந்து கொள்ளலாம் இவற்றுக்கு, மனிதன் போல் பெரிதான எதிர்பார்ப்புக்கள் ஒன்றுமேயில்லை. ஒருநாள் வாழ்ந்து உயிர் நீங்கிப்போகும் சிறிய உயிர்களிலிருந்து பெரும் தோற்றம் கொண்ட விலங்குகள் எல்லாமே தமது எதிர்காலம் அந்திம காலம் பற்றி அழுது தீர்ப்பதில்லை. மனிதர்க்கு அறிவு சிந்தனை கூடச் சில சமயம் திரிந்து சிரமத்தைக் கொடுக் கின்றதோ என எண்ண வேண்டியுள்ளது. இந்த உலக வாழ்வு மாயமானது, அழிந்து
- 114 -

கோழைகளாய் வாழுவதோ..? விடும் என்று அறிந்தும் கூட வேட்கை, அவா, ஆசைகள் சாவு பற்றி மனதை அலைபாய விடுகின்றான்.
வெறும் கனவுகளுடன் காலத்தை ஒட்டாது, நனவு நிலையில் நிஜத்தை நோக்காமல் இருப்பது அர்த்தமற்றது என்பதை ஏன் உணராமல் இருக்கின்றான்? இறைவன் கொடுத்த உயிர்களை இன்று மனிதன் பறிக்க எண்ணுகின் றான். கேட்டால்பல காரணங்களைச் சொல்கின்றான். விதியைப் பற்றிவாய் வலிக்கப்பேசுபவன், இயற்கையான நிகழ்வுகள் தனக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் பாதகமாக அமைந்துவிட்டால் அரற்றுகின்றானே அது ஏன்? புரியவில்லை.
எத்தனை கதைகள், ஆன்மீக நூல்கள், நிஜமாக நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையுமே நாம் படித்தும் கூடத் துன்பங்கள் வந்ததும் சுய உணர்வினை இழந்து விடுகின் றோமே!
இந்த உலகில் தனியொரு மனிதனின் இழப்புக்கூட முழு உலகிற்குமான பேரிழப்பேயாகும். அவன் ஏழையா கவோ, அல்லது செல்வந்தனாக, படித்தவன், படிக்காத வனாக இருப்பினும் எமக்கு எம் எல்லோருக்குமே, வேண்டப்பட்டவனாகவே கருதுவோமாக!
ஆனால் இன்று நடப்பது என்ன மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாமல் போய் விட்டது. துர்மரணங்கள், ! கொலைகள், இனப் படுகொலைகள், யுத்தம் எனக் கேட் பாரற்றுப் பூமி தத்தளிக்கின்றது. நாம் இந்த மரணங்களை வெல்ல வேண்டும், நிச்சயமாக நாம் மரணத்தை ஜெயிக்க
... 115 -

Page 60
மருத்தி அல. ஆயிற்றுந்தர் முடியும். மரணத்தை நீண்ட வருடகாலம் ஒத்திவைக்க முடியும். அதன் வலுவை அழிக்கவும் முடியும்.
நல்லவர்கள் செத்தும் சாவதில்லை. மரணத்தை வெற்றி கொள்ளப் பின்வரும் உபாயங்கள் எமக்கு வழிசமைக்கும்.
பத்தி / ஆன்மீக ஈடுபாடு உ மெளனம்
9 அன்புடைமை உதேக ஆரோக்கியம் உபுலனடக்கம் உநிம்மதி மேற்சொன்ன வழிகளில் நாம் எமது வாழ்வை அமைத்துக் கொண்டால் எமக்கு இறை ஆசியுடன், கிடைத்தற்கரிய பெரும் அருட்செல்வம், பொருட்செல்வம் என்று எல்லாமே கிட்டுவதுடன் மரணபயம் என்பதே முழுமையாக அற்றுப்போய் விடும். ஒரே தடவை ஏற்படும் மரணத்திற்காக மனம் கலங்கி,வெதும்பி தற்காலிகமாகச் செத்து எழுவது அழகேயல்ல. என்றும் நாம் நித்திய வாழ்வுடன் வாழ மக்கள் இதயங்களை வெல்ல வேண்டும். சிரஞ்சீவித் தன்மையுடன் சீவிக்கலாம் என்பதன் அர்த்தம் இது தான்!
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
O2.11-2008
- 116 ܚ

கோழைகளாய் வாழுவதோ..?
கடன்படுதல் உள்ளம் மடிந்த நிலை, இலவசமாக எதைக் கொடுத்தாலும் ஏற்பதும் ஒருவகையில் கடன்தான். சேமிப்பவனுக்கு கடன் தொல்லைகளில்லை. எதிர்பாராத நிலைகளில் மனிதர் உதவிகோருதல் தவறு அல்ல. உழைப்பு, பொறுமை, தியாகம் போன்ற இயல்புடன் இயங்கினால் பிறர் துன்பங்களைக் களையும் சுபாவமும் தன்னம்பிக்கை யாவுமே கூடிவரும். சோம்பல், அதீக ஆசைகள் கடன்படுதலை
விஸ்தீரணமாக்கிவிடும்.
"கடன்" படுதல் என்பதே, எமது மனதிற்கு உடன் பாடானது அல்ல. மனதிற்குச் சங்கோஜத்துடன் உடல் குறுகி இலவசமாகக் கேட்கும் பாவனையில் கடன்படுதல் உள்ளம் மடிந்த நிலைதான். ஒருவரிடம் பணம் பொருள் மட்டுமல்ல, இதர உதவிகளைப் பெறுதலும் கடன் தான்.
ஆனால், பெற்றோர், ஆசிரியர்களிடம் பெற்றகடன்
ஈடு செய்ய வொண்ணாப் பெருங்கடன். எனினும், எந்தவித
விவஸ்தையுமின்றிச் சர்வசாதாரணமாக முழு உரிமையை
- 17 -

Page 61
பருத்தி பல ஆயிரவருதல் யும் எடுத்துக்கொண்டு "ஒருபத்தாயிரம் ரூபாய் தருகின் றாயா, நாளைக்குத் தருகின்றேன். இன்றைக்கு எனக்கு வருமதியாகவுள்ள லட்ச ரூபாய் இன்னமும் வந்து சேர வில்லை, சரி. சரி எனக்கு அவசரமாகப் பணம் தேவை தாருங்கள்" என்று டாம்பீகமாகவும் ஏதோ கொடுத்து வைத்த பணத்தைத் திருப்பிக் கேட்பதுபோல் லஜ்ஜயின்றிக் கடன் கேட்பவர்கள் பலர் எம்முன் நடமாடிக் கொண்டிருக்கின் றார்கள்.
தெருவில் ஒரு பெரியவர், தமது நண்பருடன் வெகு சுவாரஸ்யமாகப் பேசியபடியே வந்துகொண்டிருந்தார். வழியில் எதிர்ப்பட்ட நபர் ஒருவரைக் கண்டதும் எதிர்த்திசை யில் நோக்கியவாறு பேசியதை விடுத்து திரும்பிப் பயந்தபடி நடந்து மறைந்து விட்டார்.
மறுநாள் அவரது நண்பர் பெரியவரைக் கண்டதும், “என்ன அந்த ஆளைப்பார்த்ததும் ஓடி மறைந்து நழுவி விட்டீர்களே. என்ன விஷயம். அந்த ஆளிடம் ஏதாவது கடன், கிடன் வாங்கி விட்டீர்களா..? எனக்கேட்டதும் "ஐய.யோ. நானா. நானாவது அந்த மனிதரிடம் கடன் வாங்குவதாவது, அவருக்குத்தான் நான் பல மாதங்களுக்கு முன்பு இரக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தேன். அன்றிலிருந்து அந்த மனிதர் எனக்குக் கடனைத் திருப்பித் தரவேயில்லை. ஒருநாள் கடன்பட்ட காசைத் திருப்பித் தாருங்கள் என்றேன். அவரோ. தான் கடனைத் திருப்பித் தராமைக்காக ஒரு பெரிய சோக புராணத்தையே எடுத்து
- 118 س

கோழைகளாய் வாழுவதோ..? விட்டார். அதுமட்டுமல்ல. என்னிடம் இப்போது காசைக் கேட்பது என்ன நியாயம் ஐயா? , என்று திருப்பிக்கேட்டார் அவர்” என்றார்.அந்தப் பெரியவர் அதைக் கேட்ட நண்ப ருக்கோ பொறுக்கவில்லை. "அடடா அப்புறம்" என்று (85'LİTÜ.
"என்னை அந்த நபர் வழியில் கண்டால் போதும் என்னை நிறுத்தித் தர்ம உபதேசம் செய்ய ஆரம்பிப்பார், ஏழைகள் படும் துயர்களை, தனது குடும்ப நிலவரங்களை, மணிக்கணக்காகச் சொல்ல ஆரம்பித்துதான் எப்போதுமே ஒரு கடனாளி இல்லவேயில்லை. தன் நிலைமை அப்படி என்று கூறி, என்னை வறுத்தெடுத்துவிடுவார். இவரிடம் தப்பிப்பதே எப்படி என்று ஆகிவிட்டது. இந்த மனுஷன் தயவு செய்து கடனைத் திருப்பித்தராமல் விட்டாலும், பரவாயில்லை, என்னை இம்சிக்காமல் இருந்தாலே போதும் ஐயா." எனப் பரிதாபமாக என்னிடம் அந்த மனிதர் புலம்பித்தீர்த்தார்.
மிகவும் சாமர்த்தியமாகப் பணத்தைக் கடன் என்கின்ற பெயரில் சுருட்டுகின்ற சில பேர்வழிகளில், இவர்களைப் போன்றவர்கள் பற்றியும் தெரிந்திருப்பீர்கள். யாராவது வசதியுள்ள ஒருவரிடம் போவார்கள், எப்படியோ சாமர்த்தியமாகப் பேசி ஆரம்பத்தில் ஒரு சிறுதொகைக்ை கடனாகப் பெறுவார்கள். ஆனால் வாங்கிய பணத்தைச் செலவு செய்யாமல் அதை அடுத்த நாளே திருப்பிக் கொடுத்துவிடுவார்.
- 119 -

Page 62
பருத்திபூர் பல. ஆயிரவநாதர்
கொஞ்சநாளில் இதே நபர் முன்னர் கடன் கொடுத்த வரிடம் இதே பாணியில் கேட்கும் பணத்தில் கொஞ்சம் மேலதிகமாகவே கேட்பார். முன்னர் அவர் நடந்து கொண்ட விதத்தால் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக அவர் கேட்ட தொகையைக் கொடுக்க, பணத்தினைப் பெற்றவர், முன்னர் செய்தவாறே, அதே பணத்தை முழு நோட்டுகளாக, மாற்றியமைத்து தனது செய்கையைக் கண்டு பிடிக்காத வாறு திருப்பி ஒப்படைத்துவிடுவார்.
அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா? இந்தக் தடவை மிக அதிகமான தொகையைச் சாதுர்யமாகப் பெற்றபின்பு, அவர் அந்த ஊரில் இருந்தே தலை மறைவாகிவிடுவார். இப்படிக் கடன் கேட்கப் பலயுக்திகள் உண்டு இல்லாத பொல்லாத பொய்யுரைப்பார்கள். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் மாமன், மாமி இறந்துவிட்டதாகவும் பிள்ளை களுக்குப் பரீட்சைக்குப் பணம்கட்ட வைத்தியச் செலவு களுக்கு எனப் பல தரப்பட்ட பொய்களை உற்பத்தி செய்து பணத்தை ஏப்பமிடுவார்கள் கேட்டால் சுவையான, ரசனை யுடன் பல கதைகளைச் சொல்லி கேட்பவர்களின் மனத்தை மருட்டிச் சுருட்டியே விடுவார்கள். எதிரே இருப்பவர்களை உணர்ச்சிப் பிழம்பாக்கிக் காரியத்தை வெற்றிகரமாக நடாத்திவரும் இத்தகைய எத்தர்களால் நியாயமாக, அத்தியாவசியதேவைகளுக்குக் கூடத் தம்மை அண்மிக்கும் நண்பர்களுக்கே உதவி புரியப் பலரும் பயப்படுகின்றார்.
"என்ன ஐயா. பெரிய கடன், இதைக்கேட்க, நான்
- 120] -

கோழைகளாய் வாழுவதோ..? ஏன் வெட்கப்பட வேண்டும்? அரசாங்கமும் தான் கடன் கேட்கின்றது. பெரிய, பெரிய கோடீஸ்வரர்கள் கூடக் கோடிக் கணக்காகக் கடன்படாமலா சீவிக்கின்றார்கள்? நான் ஏதோ கொஞ்சம் கடன் பட்டால் என்ன கேலி பேச வேண்டிக் கிடக் கின்றது?" என்றும் சொல்பவர்கள் உண்டு.
கடன்படுதல் என்பது மிகவும் கேவலமான ஒன்று மல்ல. மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள் உலகத்தின் பல நாடுகளும் மிகுந்த, சிரமத்தினுள் அமிழ்ந்திருக்கின்றன. அங்கு வாழும் மக்களில் பெரும் தொகையினர் நிதி நெருக் கடியினுள், வறுமையினால் அல்லலுறுவது நாம் அறிந்ததே. அரசாங்கமும், பொது நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் எல்லாமே சேமிப்புப்பற்றியே வலியுறுத்துகின்றன. வரவுக்கு மிஞ்சிச் செலவுகள் அதிகரித்து விட்டன. ஒருவர் இன்னும் ஒருவரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்பி வாழ வேண்டிய நிலை. இது தவிர்க்க இயலாது.
இந்த லட்சணத்தில், சேமிப்பினைச் சொல்லும் வங்கி கள் மக்களுக்கு கடன் கேட்கும், கொடுக்கும் வழிகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எப்படியாவது, மக்களிடம் எப்படிச் சம்பாதிப்பது என்பதில் உலகின் எல்லா நாட்டு அரசாங்கங்கள், வங்கிகள், அரச, தனியார் நிறுவனங்கள் எல்லாமே போட்டி போட்டவாறே சாமர்த்தியமான திட்டங் களை வகுத்துச் செயற்படுகின்றன.
இன்று வங்கிகள் கடன் அட்டை (கிறடிற்காட்) மூலம்
- 121 س

Page 63
குருத்திபூர் அல. ஆயிரவநாதன்
பலரையும் அவை நிரந்தர கடனாளிகளாக்கி விடுகின்றன. பணம் படைத்தவர்களுக்கு கடன் அட்டை மூலம் எந்தவித பிரச்சினைகளும் எழப்போவதில்லை. ஆனால் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் எந்தவித கட்டுப்பாடுமின்றி ஆசைப் பட்டதைக் கடன் அட்டைகள் மூலம் வாங்கிப் பின் கடனை அடைப்பதற்கு படும் அவஸ்தைகள் சொல்லும் தரமன்று.
ஆனால், வங்கிகள், நிதி நிறுவனங்கள் வீடுகள் கட்டுவதற்கும், வாகனங்கள் வாங்குவதற்கும், கடன் உதவி செய்கின்றன.சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், மிக எளிமையான சிக்கனமான வீடு அமைப்பதாயின் இத்தகைய வீட்டுக்கடன் திட்டங்கள் பேருதவி புரிகின்றன. இது தொடர்பாக வீட்டுக்கடன் பெற்றவர்கள் சொல்லும் கருத்து பின்வருமாறு கூறப்படுகின்றது.
"கொழும்பு போன்ற தலைநகரங்களில், வீட்டு வாட கைக்காகக் கொடுக்கப்படும், பல ஆயிரம் தொகையைவிட வீட்டுக் கடன் மூலம் பெறப்படும் தொகைக்கான மாதாந்த அறவீடுகள் அதிகமாவை என்று சொல்வதற்கில்லை. பெறுகின்ற கடனால், சொந்த வீடு கிடைக்கின்றது. மாதா மாதம் கொடுக்கும் வாடகைப் பணம் போல் வங்கிகளுக்கு மேலதிகமாகச் சிறுதொகை செலுத்தினாலே போதுமானது"
எனினும், அரசாங்கம் கொடுக்கும் ஆதனக் கடன்க ளைத் துர்ப்பிரயோகம் செய்யும் பிரகிருதிகளும் இருக்கின்
- 122 --

கோழைகளாய் வாழுவதோ: றார்கள். சொந்தமாகப் பணம் இருப்பவர்கள் கூட கடன் உதவி பெற்று அதனை நிரந்தர வைப்பீடு செய்வார்கள். எடுக்கும் கடனுக்கான, மாதாந்த அறவீட்டினைச் செலுத்தி கடன் நிலுவை முதிர்வு எய்தியதும் அவர்கள் இட்ட பணம் முழுவட்டியுடன் கிடைத்து விடுகின்றது. பணம் படைத்தவர் களுக்கு, இந்த வழிமுறைகள் மூலம் தங்களின் நிதி வளத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.
மிகவும் புத்திசாலித்தனமான உழைப்பையே நம்பி வாழ்ந்த ஒருவர் எப்படி கடன் பெற்று உயர்ந்தார் என்கின்ற சுவாரஸ்யமான கதையினைச் சொல்கின்றேன். குறித்த ஒரு வியாபார நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற்ற வாலிபர் நல்ல தொழில் அனுபவம் பெற்றுக் கொண்டார். அவர் தாம் பெற்ற தொழில் அனுபவமூடாக, ஒரு சிறுவியாபாரத்தை செய்ய முடிவு செய்து கொண்டார். தொழில் செய்ய அவரிடம் நிதி வளம் இல்லை. எனவே, தமக்கு நெருக்க மான நண்பரை அணுகி அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி பெற்றுக் கொண்டார்.
கடன் பெற்றவர் அதனை உடனடியாகவே ஒரு வங்கியில் நிரந்தர வைப்பில் இட்டுப்பின்பு வைப்பீடு செய்த பணத்தையே பிணையாக வைத்து எண்பது ஆயிரம் பெற்றுக் கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், நிரந்தர வைப்பின் மூலம் அவருக்கான வட்டியில்மாற்றம் ஏற்படாது. எடுத்த பணத்தைத் அவர் கொஞ்சம், கொஞ்சமாகச் செலுத்தி விடவேண்டும்.
- 123 -

Page 64
பருத்திபூர் பல விவரன் பணத்தைப் பெற்றவர் வியாபாரத்தை ஆரம்பித்தார். வியா பாரம் அவரது உண்மையான உழைப்பினால் உயர்ந்தது. பெற்ற கடனைத் தமக்குத் தந்தவருக்கு மாதம், மாதம் செலுத்தியதுடன் வங்கிக் கடனையும் செலுத்தியபடி வந்தார். காலப் போக்கில், அவர் தனது முழுக்கடனையும் தீர்த்து விட்டார். குறித்த வங்கியில் இட்ட வைப்புப் பணம் முழுவட்டியுடன் கிடைத்து விட்டது. இந்த விதமான விடயங்களில் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் நபர்களால் மட்டுமே இவ்வண்ணம் சாதிக்க முடியும்.
பெற்ற கடனை உரிய முறையில் செலவு செய்ய வேண்டும். கடன்பட்டு எடுத்து கெளரவமாக வாழ எண்ணு தல் கேலிக்குரியது. போலிக்கெளரவத்திற்கு அடிமைப்படு வதும், குடித்துக் கும்மாளம் போடுவதற்காகக் கடன் எடுப்பதும் கடவுளுக்குப் பொறுக்காத போக்கிரித்தன மல்லவா? எந்த ஒரு மனிதரும் தமது எதிர்கால வாழ்வு ஆதாரங்களை வலுப்படுத்தாமல், பின் விளைவுகளைக் கவனிக்காமல் வாழ்வது மிகப்பெரிய துன்பங்களை வலிந்து ஏற்றுக் கொள்வது போலாகும்.
ஓய்வூதியம் பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான வசதிகளைப் போலவே தனியார் துறையில் தொழில் புரிபவர்கள், சாதாரண தொழிலாளர்களுக்குமான சேமிப்புத் திட்டங்கள் வங்கிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறித்த காலங்களில், வைப்பீடு செய்யப்படும் பணம் வயது முதிர்ந்த காலத்தில், மாதாந்த ஓய்வூதியம் பெறும்
- 124 - ܨܡ

கோழைகளாய் வாழுவதோ..? அரசாங்க அலுவலர்கள் போல் இவர்களும் பெற்றுக் கொள்ளுமாற் போல் பல நல்ல, பெறுமதியுள்ள திட்டங்கள் உருவாகிவிட்டன. இவை மிகவும் சுலபமாகக் கையாளத் தக்கவிதத்தில் ஏற்பட்டுள்ளன.
பல தனியார்துறை ஊழியர்கள் பலரும் தங்கள் ஓய்வு பெறும் காலத்தில் கிடைக்கும்,ஊழியர் சேமலாப நிதியினை தமக்கென வைத்துக் கொள்ளாது, தங்கள் பிள்ளைகளின் திருமணம், விசேட வைபவங்களுக்கு செலவு செய்த பின்பு கடைசிக் காலத்திற்கு, எந்த வித ஆதாரமும் இன்றி அவஸ்தையான வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.எவரும் மற்றவர்களை நம்பி எவ்வளவு காலத்திற்குக் காலத்தை யோட்ட முடியும்? பெற்ற பிள்ளைகளைக் கூட முழுமை யாக நம்புவது கூடச் சுயகெளரவத்தைப் பாதிப்பதாகவே பலரும் எண்ணுகின்றார்கள்.
உண்மையில், பல பெற்றோர்களின் முன் யோசனை யற்ற தன்மையினால் கைப்பொருள் இழந்து, பெற்ற பிள்ளைகளால் உதறி எறியப்பட்டு முதியோர் இல்லத்தில் வைக்கப்படும் அவலம் அநாவசியம் மிகவும் கெளரவமாக, வாழ்ந்த காலத்திலேயே எதிர்காலம்பற்றிச் சிந்திக்காமல் வாழ்வது என்பது தற்போதைய சமூக அமைப்பில் மன்னிக்க வியலாத குற்றம்தான்.
தேக அசெளகரியம், நோய்,நொடி என்று வந்தால் ஏற்படுகின்ற செலவுகள் எம்மை மலைக்க வைக்கின்றன. ܚ 125 -

Page 65
பருத்திபூர் பல அரவகுத்
எல்லாமே வரும், ஆனால் அதன்பொருட்டு நாம் எமது மனதை வதைத்து வாழவேண்டுமென்கின்ற அவசியமும் இல்லை. என்னிடம் எல்லாமே இருக்கின்றது என்னும் படியான நிதி வளத்தை உருவாக்கியே தீரவேண்டும். எம்மால் முடிந்த மிக எளிமையான வாழ்விற்குத் தேவையான பண வசதியைத் தேடாமல், தற்போதைய சூழலிலேயே உருவாக்காமல் இருப்பது எதிர்காலத்தில் மன உளைச்சலுடன் எமது ஆன்மாவையே துன்புறுத்தும் காரியத்தை நாமாகவே வலிந்து ஏற்படுத்தும் நடவடிக்கை தான், நோக்குக!
இன்று பத்திரிகைகளில் கடன் தொல்லைகளால் ஏற்படும் அவலங்களைப் படித்திருப்பீர்கள். தனது குடும்பத் தைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தாங்கள் பெற்ற கடன் தொல்லைகளைத் தீர்க்கச் சுலபமான வழி தற்கொலை என்று முடிவெடுத்து விடுகின்றார்கள். தற்கொலை செய்வதால் கடன்பிரச்சினை முடிவடைவதுமில்லை. மாறாகக் குடும்பத்தை நடுவழியில் கைவிட்ட பெரும்பழி தான் அவருக்குக் கிடைக்கின்றது. கடன்காரனாகச் சாவதைவிட இழிவான அவப்பெயர் வேறு என்ன உண்டு?
எவரிடமும் கடன்கேட்காமல் கொஞ்சம் பணத்தை யாவது சிறுகச் சிறுகச் சேமிக்க முடியாது என்று எவரும் சொல்ல முடியாது. நான் கடன் பெற்றவன் அல்லன். நான் எல்லோருக்குமே பணம், பொருள் கொடுத்தவன் என்பதில் பெருமை கொள்வீராக!
- 126 -

கோழைகளாய் வாழுவதோ..? )ே நீங்கள், உங்கள் காலில், சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்க பெற்ற பதவி மட்டும் காரணமல்ல, நீங்கள் பெருக்கிக் கொண்டிருக்கும், சேமிப்பும் மூல காரணமாக அமைய வேண்டும்.
)ே எந்த வேளையிலும், எத்தகைய இடர்வரினும், உங்க ளைப் பலப்படுத்திக் கொள்ள எவரிடமும், கை நீட்டாத நிலையை உருவாக்குங்கள். கடன் கேட்பவர்களைக் கண்டால் விலகி ஓடும் நிலையை விடக் கேவலமானது வேறில்லை.
ぐ> அதீத ஆசைகளுக்கு அடிமைப்பட வேண்டாம். உள்ளதைக் கொண்டு செப்பமாக வாழ்வீர்களாக! பிறருக்காக நீங்கள் உங்களை இழக்க வேண்டாம்.
வீட்டில் கணவனின் வருமானத்தினை மனைவி, பிள்ளைகள் அறிந்து அதன்படி வாழ முனைந்து கொள்ளாது விட்டால் இல்லத்தில் அமைதி வந்திடுமா? எதிர் வீட்டுக்காரர்களின் வாழ்க்கை முறையுடன் ஒப்பீடு செய்து தாமும் அவ்வண்ணமே வாழ எண்ணிக் குடும்பத்தலை வனை ஓயாமல் நச்சரித்துக் கணவனை நித்திய கடனாளி ஆக்குவது எவ்வளவு கொடுமையானது?
எப்படியாவது கடன் இன்றிவாழ குறுக்குவழியாக வஞ்சம், ஏமாற்று வழிகளை நாடும் பேர்வழிகளும் உளர். பிள்ளைகளின் கல்வி, விவாகம் போன்ற விஷயங்களில் குடும்பத்தலைவன் படும் சிரமங்கள் எவ்வளவு இருந்தாலும்
س 127 س

Page 66
பருத்தி cygea). Qeógykerty அவற்றில் இருந்து மீளுவது திட்டமிட்ட வாழ்வு முறையில் தான் தங்கியுள்ளது. பிரச்சனைகள் தீர வாயால் சொல்வது சுலபம். ஆனால் இவற்றை யதார்த்தத்தில் தீர்த்து கொள்வது சிரமானதுதான்.
காலத்தை விரயமாக்காமல் உழைப்பு, பொறுமை, தியாகம், விடா முயற்சியினால் மனிதன் தன்னைப் பலப் படுத்தியாக வேண்டும். எமது சுமையை நாமே சுமக்க வேண்டியுள்ளது. எமக்காக பொறுப்புக்களை நாம் உழைக்கும் காலத்தில் நாம்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். சுகதேகியாக உழைக்கும் திறன் இருந்தும் மற்றவர்களை நம்பி வாழ எண்ணுதல் கண்ணியமல்ல. இதுவே பழக்கமாக்கினால் சமூகத்தில் அவன் தலை நிமிர்ந்து வாழ இயலுமா? ஒருவனது உழைப்பை இலவச மாகக் கேட்பதும், யார் மீதாவது பொறுப்பை சுமத்துவதும் கூட ஒரு தன்னலமான திருட்டுப் புத்திதான்.
நித்திய கடன்காரர்களாக எப்படி நிம்மதியாக வாழ இயலும்? எங்களுக்கான கொள்ளளவை நாம் அறிந்து கொள்வோம். எங்கள் நிதி ஆதாரங்களைப் பலமேற் றுவோம்! உழைக்கும் காலத்தில் நிரம்ப உழைப்போம்! அப்புறம் என்ன, "கடன்" என்ற சொல்லே, உடைந்து நொருங்கும்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)
21.09.2008
- 128
 
 

கோழைகளாய் வாழுவதோ..?
வாழ்க்கை என்பது தேய்மானமல்ல.
உழைத்து நல்லலோராய் வாழ்ந்தால் என்றும் விலை சொல்ல வொண்ணா பெறுமானம் வல்ல மனிதா சலிப்பின்றி வாழ்ந்து காட்டு
சலிப்பு உணர்வு தலை தூக்கினால் செயல்களில்
வீழ்ச்சி ஏற்பட்டு விடும். தொடர்ச்சியாக ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்யும் போது சலிப்பு ஏற்படுவது இயற்கை.
எனினும் எக் காரியத்தையும் விருப்பமின்றிச் செய்தால், சலிப்பு எளிதில் பற்றும். சிலர் ஒரு சின்ன காரியத்தைச் செய்யுமுன் இதனை எப்படிச் செய்வேன், இது மிகப் பெரிய காரியமாயிற்றே என்று சலிப்புடன்
- 129 -

Page 67
பருத்தி 0.அரவரன் சொல்வதையே பழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.
தனிப்பட்ட பிரச்சினைகளால் மனிதன் அவதி யுறும் போது எந்த காரியத்திலும் லயிப்பு ஏற்பட்டுவிட இயலாது. அமைதியற்ற விதத்தில் இருந்து விடுபட முதற்கண் முயற்சி செய்ய வேண்டும்.
தன்னால் செய்யப்பட வேண்டிய கடமையுணர் வினைப் பின் தள்ளி உடன் தேவையற்ற விடயங்களுள் மனத்தினை உட்செலுத்தினால்எதுவிதபயனும்ஏற்பட்டுவிட போவதில்லை.
馨 தேகஅசெளகரியம்
尊 குடும்ப சுமை
மற்றவர் முன்னேற்றங்களைக் கண்டு
காழ்ப்பு அடைதல்
தாழ்வுச் சிக்கல்
போன்ற காரணங்களால் மனம் சலிப்படைகின்றது. என்றும் மகிழ்ச்சியான இயல்புன்டயோருக்கு இந்நிலை ஏற்பட்டு விடாது.
எப்போதும் பிறருடன் தம்மை ஒப்பீடு செய்து கொள்வதால் பயன் ஏதுமில்லை. இதனால் சில சமயங் களில் ஆற்றாமை பொறாமையுணர்வு தான் உள்ளத்தை ஆட்டியபடியே இருக்கும்.
- 30 -
 

கோழைகளாய் வாழுவதோ..?
"அட. என்ன வாழ்வு இது.? எப்படி உழைத்தாலும் பயனில்லை. வரவுக்கு மிஞ்சிய செலவு பெருகின்றது
அவனவன் எப்படி எப்படியெல்லாம் வாழுகின்றான்.என்று தான் எனது பிரச்சனை தீர்ந்துவிப் போகின்றதோ!" என நடுத்தர வர்க்கத்தினர் புலம்புவதை நாம் கேட்டிருக் கின்றோம்.
இவர்களின் கூற்றுக்கள் சில சரியாகவும் இருக்க லாம். அவ்வளவு தூரம் இன்று பொருளாதாரச் சுமைகள் மனிதர்களை விரட்டி வீழ்த்தினால் சலிப்பு ஏற்படாதா என்ன..?
தொடர்ச்சியான தோல்விகள் ஒருவரை தாழ்வுச் சிக்கல்களுள் நிறுத்தி விடலாம். இது மிகவும் பரிதாபத்திற் குரியது. எழுச்சி மிகு எண்ணங்களை உள்ளத்தில் நிலை நிறுத்துவதே இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாகும்.
துன்பமிகு எந்நிலையிலும் மீண்டு வர வேண்டியது கட்டாய நிலை என்பதையும் உணர வேண்டியுள்ளது. எப்படியும் இந்த உலகில் வாழ்ந்து எமக்குரிய கடமைகளை நாம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முடங்கினால் காரியங்களைத் தொடர்ந்து முன்னெ டுப்பது எங்ங்ணம்? கலங்குவது மனித சுபாவம். ஆயினும்
- 131 -

Page 68
பருத்தியூர் பல ஆயிரவநாதர் எந்தவித துன்பமூட்டல் உணர்வுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு.
ஏதாவது அற்புதங்களை எதிர் நோக்கிக் காத்திருப்பதை விட இப்பொழுதே எழுந்தியங்குவதே அற்புதத்திலும் பேரதிசயமான காரியங்களை ஒப்பேற்று வதற்கான ஏற்ற நல் வழியாகும்.
கற்பனையுடன் சீவிப்பதை விட காரியமாற்றுவது எப்பொழுதும் சிறப்பானதாகும். நிச்சயமற்றதில் புலனைச் செலுத்துவதை விட இயலக்கூடிய விடயங்களில் அதிதீவிர மாகப் புலனைச் செலுத்தினால் நினைத்தவை ஈடேறும். சலிப்பு, அலுப்பு தொட்டு விடாது விலகும்.
அவசர அவசரமாகத் தீர்மான ប្រពូតា எடுக்காமல் செயல்களைச் செய்தால் அது பன்மடங்கு கஷ்டப்படும் நிலைக்கு எம்மை உட்படுத்தி விடுகின்றது. இது மனிதன் தானாகவே உருவாக்கும் அர்த்தமற்ற செயலாகும்.
எமது செயலைக் கரிசனையுடன் செய்யும் போது ஏற்படும் அனுகூலங்கள் எமக்கு வழங்கப்படும் நீதியு மாகும்.
இதனால் கலகலப்பான? சலிப்பேயற்ற, நிரந்தர மான களிப்பூட்டும், எழுச்சி பெறும் வல்லமையினையும்
பெற்று விடுகின்றோம்.
- 132 -
 

கோழைகளாய் வாழுவதோ..?
எழிலார்ந்த பூங்காவில் சஞ்சாரம் செய்துகொண்டே அந்தரங்க இருள் பற்றி மனதினுள் உருப்பெருக்கி எண்ணுவர்கள் வாழ்வில் மலர்ச்சி முகிழ்வது எப்படி?
ஆரம்பத்தில் வருகின்ற இடர்கள் யதார்த்தமான நிகழ்வு என ஏன்தான் பலரும் உணர்வதேயில்லை? எல்லாமே எளிதாக இருந்தால் பெறுகின்ற" வருமதி"களின் பெருமை அருமைபற்றித் தெரியாமலே போய் விடும்.
நாமாக முயற்சி செய்து பயிரிட்டு அதன் மூலம் பெறும் காய், கனிகளைச் சுவைப்பது போல் சந்தோஷம் வேறு ஏது உள்ளது?
எனவே சலிப்பற்று முயன்று பெறும் சுகம் அலா தியானது
சின்ன சின்னச் செடிகளுக்கு நீரூற்றி, பராமரித்து அது பூக்களைச் சொரியும் போது எமது மனம் பெறும் நெஞ்சத்து நிறைவை காசுக்குக் கடைத்தெருவில் வாங்கும் மலர்கள் மூலம் பெற்று விட முடியுமா?
அனுபவங்களைப் பெறுவதே மகிழ்ச்சியூட்ட வல்லது என்பதை உணர்ந்து கொள்க! சோம்பேறிகளே அடிக்கடி மனம் சோர்ந்து சலிப்பான வார்த்ததைகளைக் கோர்வை யாக வெளியிடுகின்றார்கள்.
- 133 -

Page 69
பருத்திபூர் அல. ஐவிரலுருந்தர்
மனம் வெண்மையாக இருக்க வேண்டுமே தவிர வெளிறி இருத்தலாகாது. நல்லதே என்றும் நடக்க வேண்டும் என எண்ணும் மாந்தர் வல்லமை சேர்ந்திட சலிப்பு உணர்வை தூர வீசி எறிந்தால் ஏது சோர்வு, துன்பம் ஏற்பட்டு போகின்றது?
"GTLD55 g." வார மலர்
O9-O9-2O1
- 134
 

கோழைகளாய் வாழுவதோ..?
ஆற்றலை வளர்ப்பதே வாழ்க்கை
சேற்றைத் தாண்டி செந்தாமரை மலரும். தூற்றுதல் தொல்லைகளால் துவளாது எழுக! நேற்றைய பொழுதிலும் இன்றைய வரவிலும் நாளைய உலகை ஆக்கிடு தோழா !
எல்லா வரவுகளுக்கும் எல்லா விதமான இழப்பு களுக்கும் தயாராக இருத்தல் வேண்டும் கிடைக்கும் வரவுகளுக்காகப் பெருமிதம் கொள்வதோ, இழப்புக்களுக் காகச் சிறுமைப்பட்டு விட்டோம் எனக் கருதுவதோ தவறு.
எல்லாமே இயல்பு, உண்மையான இயல்புநிலை களே தத்துவமாகின்றன. எனவே எதனுள்ளும் அமுங்கி - 135 -

Page 70
பருத்தி:விமரன் யிருக்கும், சுதந்திரமற்ற நிலை எமக்கு வேண்டாம். ஒருவன் தனக்குள்ளும் புறதாக்கங்களுக்கும் உட்புகுந்து கொள்ளும் போதுதான் "அடிமை” நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.
எதுவுமே கிடைக்கும் என்பதில் உறுதியாக இருப் பவர்கள் தோற்றுப் போனதுமில்லை. எதனையுமே நாமாக வரவழைக்கும் வரை எதுவும் வந்து விடுவது மில்லை. ஆனால், எதிர்பாராத விளைவுகள் எம்மை ஆட்கொள்ளும் போதுதான் பரிதாப நிலை எமக்கே என எண்ணிக் கொள் கின்றோம். இந்தப் பலவீனத்திலிருந்து எப்படி விலகுவது?
உள்ளவை, உள்ளபடியே இருக்கின்றன என்ப தைப் புரியாத வரை தெளிவென்பதேது? சத்தியத்தையும் அதனைச் சார்ந்த சங்கதிகளையும் புறம் தள்ளினால் மாயமான எண்ண வலைக்குள் அமிழ்ந்திருப்பதே இன்ப மாகத் தோன்றும்.
உண்மை இயல்புகள் கூட சில சமயம் புறதாக்கங் களால் சுமையாகத் தோன்றலாம். சூது, வாது, பொய், வஞ்சகம், காழ்ப்பு, சூழ்ச்சி, கடும் பகை, விதண்டாவாதம் எல்லாமே தெய்வ தண்டனைக்குரியன.
சந்தோஷம் எனும் குளிர் அருவியில் எங்ங்ணம் ஜலக்கிரீடை செய்வது? கடும் குளிர் காலத்தில் குளிப்பது கஷ்டம். இதற்காக கம்பளி போர்வையைச் சுற்றியபடி தண்ணீருடன் சங்கமமாக எண்ணுவது அறிவினம்.
- 136 -

கோழைகளாய் வாழுவதோ..?
குளிராக இருக்கின்றதே எனக் கருதாது உடைகளை தூக்கி எறிந்து கொஞ்சம் நீரில் நனைந்து கொண்டால் மீண்டும் . மீண்டும் கொஞ்சம் தொடர்ந்து நீருடன் இணைந்து கொண்டால் ஆஹா. அதுவே சந்தோஷம்! இது போல், சற்றே கஷ்டமானவைகளுடன் போராடினால் அவை விலகிப் போகும். உண்மையான இதழுட்டும் ரசனைகள், தெம்பு, தானாகத் தொற்றி நின்று புதுப் பலத்தை உண்டு பண்ணும். -
முயற்சியினுள் மூழ்காதவர்கள் காலப் போக்கில் தங்களாலேயே தாங்கள் இகழப்படும் துர்ப்பாக்கிய அனுபவங்களைப் பெறுவார்கள்.
உடல் பாரத்தை விட மனப்பாரமே அதிகமாக அழுத்துகின்றது இரண்டையுமே துண்டிக்க முடியுமா? கொஞ்சமாகவேனும் குறைக்க முயற்சி செய்க
கண்ணாடியில் நாம் பார்ப்பது எமது முகத்தை மட்டும் தான். நெஞ்சுக்குள் நெருடுபவை எவருக்கும் புரியுமா? இது விலகும் வரை முகத்திற்கு வெளிச்சம் வராது. துன்பத்துடன் தங்கள் முகத்தை தரிசிப்பதற்கே பலரும் விரும்புவதில்லை.
அழகான முகம் தெரிய மனதில் சோகம்
சுரண்டப்பட வேண்டும் என்பதைவிட அவை பூரணமாகத்
துடைக்கப்படல் வேண்டும். தற்காலிகமாக மெல்லிய - 137 -

Page 71
பருத்திர் 00. அர்ஷரன் கீறல்களாகக் கவலைகளைத் தேய்த்து எடுத்தாலும் முழுமையாகப் போகாத வரை அவை மீண்டும், மீண்டும் சிரசு கொய்யப்பட்டும் உயிர்த்தெழும் அசுரன் போல விழித்தெழும். சுழற்றி எறிக தோழர்களே!
வாழப் பிறந்த பின்னர் அனல் எனப் புழுங்குதல் இழிவு எந்த நேரமும் விழுந்து விடுவோம் என்கின்ற நிலை அழகு அல்ல. பூமியில் பரந்து வளர்வது மட்டுமல்ல, ஆழமாக வேர் ஊன்றுவதே தாவரங்களின் எண்ணமா யிருக்கின்றன.
இவை நல்ல காற்றை, ஒளியை, நீரை நின்ற நிலை யில் உறிஞ்சியெடுக்கின்றன. ஹே.மனிதா ஓடவும், நிற்கவும், படுக்கவும் பின்பு ஓடி ஆடவும் திறன் கொண்ட வர்கள் நாம் அல்லவா? அசைகின்றவன் ஆற்றல் மிகுந்த வன். ஒலியை, ஒளியைவிட வேகமாகச் செயல்படுக!
ஒரு பொழுதிலும் ஓராயிரம் சாதனை செய்! இயங்காதவன் அடிமை நிலையில் உள்ளவன். ஆயினும் அதனை விடக் கேவலமான நிலையில் உள்ளவன் என்றே கூறலாம். ஆற்றல் இருந்தும் செயலற்றவர்கள் பற்றியே கூறுகின்றேன். இவர்கள் நூறு ஆண்டுக்கு ஜீவனம் செய்தும் ஏதுபயன்? வலு இழந்தவர்கள், பலமிழந்த முதியோர்கள் என எவரையும் எங்கள் உற்சாக வார்த்தை களால், அரவணைப்பினால் செயலில் ஆர்வம் கொண்டவர் களாக்க முடியும்.
- 138 -

கோழைகளாய் வாழுவதோ..?
ஆற்றல் வாய்ந்தவர்களிடம் தன் வலிமையைக் காட் டிடக் கூற்றுவனும் அஞ்சுவான். பலம் மிக்க மனமே, எந்த சவாலையும் நீக்கும் நல் மருந்து.
எந்த நேரத்திலும் எந்த இடர் வரும் சூழலிலும் மனம் புழுக்கமடைய இடம் கொடுத்தால் இடர் தான் தேடி வரும்.
எளிதாகக் கிடைத்து விடும் என்பதற்காக அவை
உடன் அதனை நாடிக் காப்பாற்றுவதே புத்திசாலித் தனமானது. பலரின் துன்பங்களுக்கும் முதல் காரணம் எளிதான அனுகூலங்களை சுபலமாக இழந்து விடுவது தான்.
எமது ஆயுள் காலத்தில் ஒவ்வொரு மணித்துளியு டன் எமது பாரிய முயற்சிகள் இணைந்திருக்க வேண்டும் இவை இந்த யுகத்திற்கான சாதனையாக அமைந்து விடும். காரியம் ஆற்ற ஆயுளின் நீளம் கூடிய படியே இருக்கும். சாதனை புரிபவருக்கு என்றும் தீர்க்காயுசு.
தினக்குரல் நிறப்பிரிகை O-03-2012
- 139 -

Page 72
பருத்திடி பல. ஆயிரவநாதர்
கணவன் மனைவி பொருத்தம் என்பது என்ன?
கணவன் மனைவியிடயே குடும்ப வாழ்வு நல் எண்ணங்களுடன், தெளிந்த நீரோடைபோல் அமைதல் வேண்டும். இரு மனங்கள் இரண்டறக் கலந்த கணவன் மனைவி உறவுநன் மக்களை பெறுவது மட்டுமல்ல, உலகை உய்விக்கச் சமுக நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். மனப் பொருத்தம் என்பது, ஒருவரை ஒருவர் புரிந்துணர்வுடன், செயல்படு த்துவதாகும். இந்தப் பொருத்தம் என்றும் நற்கானியங்களுடன் ஒன்றித்து நிற்கவும் வேண்டும். கணவன் , மனைவி சதா முரண் பாடுகளுடன் வாழ்ந்தால், குடும்ப உறவு மட்டுமல்ல, இவர்களுக்குச் சமுகத்தின் மீதான அக்கறையும் அருகிவிடும். நல்ல் குடும்பம் எதையும் சாதிக்கும், வேதனைகளைச் சாதனைகளாக மாற்றும்,
திருமண பந்தத்தில் ஆண், பெண் இருவரும் இணைவது ஏன் என்பது பற்றி எமது முன்னோர்கள், அவர்கள் படைத்த இலக்கியங்கள், சமயங்கள் வாயிலாக நாம் பலவிதமான உண்மைக் கருத்துக்களைப் படித்திருக் கின்றோம்.
= 140 -
 
 

கோழைகளாய் வாழுவதோ..?
கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர்,
ஆதாரமாக இருந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்துப்
போஷிப்பது மட்டும் தான் திருமண பந்தத்தின் முழு நோக்கமும் ஆகுமா?
"சாடிக்கேற்ற மூடி” என்று எம்மில் சிலர் கணவன், மனைவி பொருத்தம் பற்றிச் சொல்லிக் கொள்வார்கள் கணவன் ஒருவன் சகல நற்குணங்கள் பொருந்திய வனாகவும், மனைவியும் அவ்வண்ணமே அமைந்தி ருந்தால் அது நல்ல ஜோடிப் பொருத்தம் தான்.
கணவனும் அழகன், அவனுக்கு வாய்த்த மனைவியும் அழகி, என்றால் அது கூட நல்ல அழகுப் பொருத்தம் தான்!
ஆனால், கணவன், மனைவி இருவருமே நல்ல குணங்களைத் தழுவாது, சமூகத்திற்கு ஒவ்வாது வாழ்ந் தால், அவர்களை பொருத்தமான ஜோடி என்று சொல்ல முடியுமா? வேண்டுமென்றால் கேலிக்காகச் சமூகம் அப்படிச் சொல்லிக் கொள்ளும்.
துர்ப்பழக்கம், சமூக விரோதப் போக்குகளுடன்
இணைபவர்கள் நல்ல பங்காளிகளயாக இருக்க
மாட்டார்கள். இவர்கள் எக்கனமும் ஒருவரை ஒருவர்
விரோதித்துக்கொள்ளலாம். மனதுக்குள் ஒன்றும் வெளியே
வேறு நினைப்புடனும் சதா வாழ்ந்து கொண்டிருப்பார்கள். - 141 -

Page 73
பருத்திர் பல விவரன் வெறும் சுய நலம் ஒன்று தான் ஒரே குறிக் கோளாகும்.
எனவே, கணவன் , மனைவி பொருத்தம் என்பது நல்ல குணங்களுடன் சங்கமிக்கும் இணைப்பாக அமைய வேண்டும்.
கணவன் சில சமயங்களில் தவறான மாறுபாடான வழிகளில் சென்றால் மனைவி அவனை, அன்புடன் நல்ல வழியில் திருப்ப முனைய வேண்டும். அவ்வண்ணமே, மனைவியின் செயலில் தவறுகள் இருந்தால் கணவன் முரண்படாமல், பக்குவமாகச் சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும்.
கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் விசுவாசம் கொண்டு விட்டால், ஒருவர் பேச்சை இன்னும் ஒருவர் கேட்டே திருவார்கள். மனம் ஒத்த தம்பதிகள் தமக்குள் விட்டுக் கொடுத்துக் கொண்டிரு ந்தாலும், நல்லனவற்றைச் செவி மடுப்பதிலும் எவ்வித தயக்கமும் காட்டவே மாட்டார்கள். ஆன்மார்த்த ரீதியில் ஒன்றுபட்ட நற் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒரே சிந்தனையினையே அதே கணத்தில் எண்ணுவார்கள்.
எனவே, கணவன் மனைவியர் குடும்ப வாழ்வு எவ்விதமான சிக்கலின்றி தெளிந்த நீரோடை போல செல்ல நல்ல மனங்கள் ஒரு நிலைப்பட வேண்டும்.
- 42

கோழைகளாய் வாழுவதோ..? ஒரு குடும்பம் சதா பிரச்சினைகளுடன் வாழ்வதற்கு என்ன காரணம் என்கின்ற விடயத்தினை ஆராய்ந்தால் , ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக் கொள்வதுமில்லை, அவைகளை நிராகரிப்பதுடன், ஒருவரை ஒருவர் தூவிப்பது மாகும். இந்நிலை மிகவும் ஆபத்தானது.
நல்ல விஷயங்களில் ஒன்றுபடுதல் வேண்டும். நல்லன இல்லாத விஷயங்களைத் தூக்கி எறிதல் வேண்டும். புருஷனின் கெட்ட நடத்தைகளைக் கண்டும் காணாதது போல் இருப்பது மட்டுமல்ல, எப்படியாவது இவர் பணம் சம்பாதித்துத் தன்னையும், தங்கள் பிள்ளைகளையும் நன்கு பராமரித்தால் சரி என எண்ணுவது போல் மடமைத்தனம் வேறு என்ன உண்டு?
"கால் காசு என்றாலும் நேர்மையாக உழைத்து வாழ்வோம், எல்லோரிடமும் அன்புடன் வாழுவோம், வன்மம் பாராட்ட வேண்டாம்” எனக் கேட்டுக் கணவனைத் திருத்த முனைந்தால் அவளது எண்ணம் ஈடேறியே தீரும். திடமான எண்ணங்களுடன், நல்லதை மட்டுமே எண்ணுபவர்களின் போராட்டங்கள் தோற்றதுண்டா?
அதீதமான கற்பனைகளையும், ஆலோசனை களையும் வளர்த்து அவை நிறைவேறாது போனால் இல்லத்தரசி, இல்லத் தலைவனுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கலாகாது.
- 143 -

Page 74
பருத்தி eige). Qieğyaşaye
எண்ணங்கள் நிறைவேற தங்கள் குடும்பம் மோலோங்க இரு சாராரும் உழைக்க வேண்டும். அரசாங்க வேதனம் தங்கள் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இல்லை என்பதனால், மனைவியும், கணவனும் இணைந்து மண்ணை நம்பி தோட்டம், வயல் என்று ஓடியாடி உழைத்து நல்ல விவசாயம் மூலம், பெரும் வருமானம் பெற்ற தம்பதியினரை நாம் பார்த்திருகின்றோம். ஆரம்பத் தில் மிக சாதாரணமாகத் தொடக்கப்பட்ட தொழில் படிப்படியாக இருவர் முயற்சியால் விஸ்தீரணமாகி உயர்ந்த கதைகளை நீங்கள் கேட்பதில்லையா?
மனைவி தொட்டதெல்லாம் துலங்கும் என்று அவளைப் பாராட்டும் கணவனை நாம் பார்த்திருக்கின்றோம். இதுதான் கணவன், மனைவி உறவும், அதன் அபரிதமான வளர்ச்சியுமாகும்.
குடும்ப உறவு அந்நியோன்யமாகவும், அதே வேளை எதிர் காலத்தை நன்கு சிருஷ்டிக்க வல்லதாகவும் இருக்க வேண்டும். முன்னேற ஒரே வழி, சரியான் வழியில் ஒரே பார்வையில் கை கோர்த்து இணைந்து நடப்பது தான். ஒருவரைத் தமது பக்கம் மட்டும் வளைத்து மற்றவர் பார்வை யை மறைத்து ஒருவரை ஒருவர் ஒடுக்குவது அல்ல, "கருத்து ஒருமித்தல்" என்பது நல்ல கருத்துக்களுடன் ஒன்றிப்பது மட்டும் தான்.
தினகுரல் ஞாயிறு மஞ்சரி
09.01.2011
- 144 -

கோழைகளாய் வாழுவதோ..?
மனஸ்தாபம் கொள்ற்ைக!
(நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் வாழும் மனையில் அன்பும், சாந்தியும் குடிகொள்ள வேண்டும். அத்துடன் நாம் எமது வீட்டின் அருகேயுள்ள அயலவர்களுடனும் நட்புடன் பழகவும் வேண்டும். எவரையும் வெறுத்து நோக்காது, அரவணைக்கும் பண்பை வளர்த்தால், எமக்கு பகை எனும் துன்பம் நிகழ்ந்து விடாது. எம்மைச் சுற்றிப் பல்வேறு குணாம்ச ங்களுடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நல்லவர்களும், கெட்டவர்களும் சூழ்ந்த உலகில் நாம் மனம் தழும்பாமல் சர்வ ஜாக்கிரதையுடன் சீவிக்க வேண்டும். கண்டபடி வார்த்தை பேசி, முரண்பாடுகளை வளர்த்தால் ஏது பயன்? பக்கத்து வீட்டுகாரனுடன் பகைத்தால், நிம்மதிபோவதுடன் பொழுதுகள் தீய்ந்தும் போகும். அன்பை
பரஸ்பரம் பகிர்ந்தால் சந்தோஷம் என்றும் சாஸ்வதம்
இல்லங்கள் தோறும் அமைதியும், அன்பும்
குடிகொண்டாலே இங்கு சந்தோஷங்கள் களிநடனம் புரியும்.
ஒவ்வொருவரும் தமது இல்லங்களில் மட்டுமே அன்பை,
ஆதரவைப் பகிர்ந்தால் மட்டும் போதுமா?
- 145 -

Page 75
பருத்தி பல விவரம்
அயலவர்கள் மற்றும் சுற்றத்தினர் அனைவரிடமும் தங்கள் அன்பை வெளிப்படுத்துதல் அத்தியவசியா மாகின்றது.
அதிலும் முக்கியமாக அண்டை வீட்டார்களுடன் குரோதம் கொள்வது ஆகவே ஆகாது. இது மிகவும் பாரதூரமான பின் விளைவுகளுக்குள் இட்டுச் சென்று விடும். -
நாம் சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்ட சின்னக் கோபங்களைக் கூட, சிலர் பெரிதாக எடுத்துப் பழி தீர்த்துக்கொள்ள எத்தனிக்கலாம். நாம் அன்பினால் எதனையுமே வென்று கொள்ள முடியும். இதனைப் புரிந்து கொள்ள இதோ ஒரு படிப்பினையூட்டும் சின்னக் கதை!
இப்படியான சம்பவங்களை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். ஏன் சில சமயம் நீங்களே கண்டும் இருக்கலாம். நல்லவர்களும், பொல்லாதவர்களும் வாழும்
பூமி இது.
ஒரு நல்ல குடும்பத் தலைவன் , தலைவி இவர்க ளுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவளுக்குத் திருமண வயதாகிவிட்டது. பையன் கல்லூரியில் படித்து வருகின் றான்.
ஒரு நாள் இவர்கள் வீட்டு வளவினுள், பக்கத்து
- 146 -
 

கோழைகளாய் வாழுவதோ..? வீட்டாரின் ஆடுகள் புகுந்து அங்குள்ள தோட்டத்தை மேய்ந்து விட்டது. இதனால் ஆத்திர முற்ற இந்த மனிதர். அடுத்த வீட்டுக்காரியையும், அவரது ஆடுகளையும் திட்டித் துரத்தி விட்டார்.
இவர் திட்டியதை பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணி கேட்டதும் சண்டமாருதம் கொண்டு வெகுண்டெழுந்தார். முடிவு இரு வீட்டாருக்கு மிடையே வாக்கு வாதம், சாதாரணமாக எழுந்து அது முற்றி நீண்ட சச்சரவுக் குள்ளாகி, எப்படியோ அக்கம் பக்கத்தார்கள் வந்து சமரசம் செய்து வைத்தார்கள்.
இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள் கடந்தன. இரு வீட்டாரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை நிறுத்திக் கொண்டனர். கொஞ்ச நாளில் இருசாராருமே அமைதியாகவே இருந்தார்கள்.
இந்தக் கால இடைவெளியின் பின்னர் முன்னர் குறிப்பிட்ட குடும்பத்தினரின் மகளுக்குத் திருமணப் பேச்சு நடந்தது. மணமகன் வீட்டாருக்கும் பெண்ணைப் பிடித்துப் போக உடனே சம்மதம் தெரிவித்துத் திருமண நாள் நிச்ச யம் செய்வதாக உறுதி கூறி சென்றனர்.
மணமகன் வீட்டார் பெண்ணைப் பார்த்துச் சென்ற
சில வாரங்களின் பின்னரும் பதில் ஏதும் தெரிவிக்க
வில்லை. இதனால் மிக்க ஆவலுடன் அவர்களுடன் - 147 -

Page 76
பருத்திர் 09:விவரம் தொடர்பு கொண்டு தாமதத்திற்கான காரணம் கேட்டனர். அப்போது அவர்கள் சொன்ன பதில் இவர்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. என்ன நடந்து விட்டது, சந்தோஷ மாகத்தானே சென்றார்கள். இடையில் என்ன மன மாற்றம்? குழம்பினார்கள்.
"உங்கள் குடும்பத்தில் சம்பந்தம் வைக்கத் தற்போது இஷ்டமில்லை. கொஞ்சக் கால அவகாசம் எமக்குத் தேவை தப்பாக எடுத்தக் கொள்ள வேண்டாம்" என்பதே அவர்கள் சொன்ன பதிலாகும். இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை தமது நண்பர்கள், உறவின ர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்கள் ஏன், எதற்காக இவர்கள் மன மாற்றம் கொண்டார்கள் என்று ஒருவருக்குமே புரியவில்லை.
ஆயினும் இதன் விபரம் இவர்கள் உறவுக்காரர் ஒருவர் மூலம் புரிந்தது. ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரர் இவர்கள் மீது கொண்ட பகை காரணமாக மணமகன் வீட்டாருக்கு ஏதோ தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விட்டார்கள் எனவும், மேலும் அவர்களுக்கும் மணமகன் வீட்டார்க்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது எனவும் நம்பத் தகுந்த விதத்தில் தகவல்கள் கிடைத்து விட்டது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? எனினும் கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம் என மனைவியைச் சமாதான ப்படுத்தினார் கணவர்.
- 148 -
 

கோழைகளாய் வாழுவதோ..? இந்தச் சமாச்சாரம் நிகழ்ந்து ஒரு மாதம் கழிந்தது. திடீர் என சற்றுவித்தியாசமாக பக்கத்து வீட்டில் இருந்து ஏதோ ஆரவாரமும், அழுகுரலும் கேட்டது. அவரால் பொறுக்க முடியவில்லை. ஒரே எட்டில் வீட்டின் வெளிப்புறமிருந்து பார்த்தார்.
"ஐயோ என்ன நடந்தது.? விழுந்து கிடக்கிறாரே..!! நெஞ்சு வலிக்கிறது. வலிக்கிறது. என்று சொல்லிக் கஷ்டப்படுகின்றாரே. என்ன செய்கிறது ஐயோ..!" என்றபடி அந்த வீட்டுக்கார பெண்மணி கத்திக் குழறினார். அவர்களின் பிள்ளைகள் பேந்தப் பேந்த விழித்தபடி செய்வதறியாமல் தவிர்த்தார்கள்.
இதற்கிடையில் இச்சம்பவத்தைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி "என்ன பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள், உடனே போய் எங்காவது ஒரு கார் பிடித்து வாருங்கள்” எனச் சொல்லி அவர்கள் வீட்டினுள் சென்றார். அவர் ஓரிரு நிமிடங்களுக்குள் ஒரு வாகனத்துடன் வந்தார். பக்கத்தில் உள்ள பிள்ளைகளின் உதவியுடன் வந்த வாகனத்தில் உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார். உரிய நேர சிகிச்சையின் பயனாய் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணிக்கு இவர்களைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது பேச வார்த்தைகளே வரவில்லை.
அன்று மாலை வைத்தியசாலைக்குச் சென்றவரைக் குணமாகிய மனிதர் பார்த்ததுமே கண்கலங்கியபடி @gHT6016TTT.
- 149 -

Page 77
பருத்திர் 09:விவரச்
"நாங்கள் தெரியாத்தனமாக ஓர் அற்ப விஷயத்துக்
காக மனஸ்தாபப்பட்டுக் கொண்டோம், அதனால் மிகக் கீழ்த்தரமான காரியம் செய்து ஒரு குமர் காரியத்தைக் கெடுக்க எத்தனித்து, அதை பெரிய காரியம் என எண்ணி விட்டேன். ஆனால் எல்லாம் தெரிந்த நீங்கள், எங்கள் பகைமையை மறந்து மனிதாபினமாக என்னை காப்பாற்றி விட்டீர்கள்" என்றவர் "இப்பவே நான் உடனே நீங்கள் திருமணம் பேசிய எனது நண்பர் வீட்டுக்குப் போய் உண்மைகளைச் சொல்ல வேணும்" என்றார்.
ஒரு சின்ன விஷயத்துக்காக தம் வசம் இழந்து அடுத்த வீட்டுக்காரருடன் கண்ட படி முரட்டுத்தனமாகப் பேசும் போது, அதன் எதிர் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் நியாயங்களைப் பேசும் போது தங்களை மறந்து உணர்ச்சிகளுக்கு அடிமையாதல் ஆகாது.
அன்பர்களே!
மேலே சொல்லப்பட்டவை வெறும் கதையல்ல! யதார்த்த பூர்வமான அனுபவப்பதிவுகள். இந்த உலகில் நல்லவர்களும் இருப்பார்கள், அல்லாதன செய்பவர்களும் இருப்பார்கள். தீயவர்களைத் தூயவர்களாக மாற்ற முனைவோமாக!
எங்கள் குடும்ப உறவுகள் மட்டுமே உறவுகள் அல்ல. எம்மைச் சார்ந்த, சாராத அனைவருமே எமக்கு (866បំqu_6uff8(86T
- {150 س
 

கோழைகளாய் வாழுவதோ..?
கணவன், மனைவி இருசாராருமே செய்யும்
நல்ல காரியங்களுக்கு பரஸ்பரம் ஊக்கமளிக்க வேண்டும். தகாத காரியங்களைத் தடுக்க முனைதல் வேண்டும்.
கணவன்,மனைவி இருவருமே தங்கள் குடும்பங் களில் சில சமயங்களில் சதாரண விஷயங்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை எவ்வளவு சீக்கிரம் மறந்து போகிறார்களோ அவ்வண்ணமே எமக்கு உறவே இல்லாத ஏனையோர் செய்யும் தவறுகளைத் தூக்கிப்பிடித்துப் பேசக்
ಲಿಗಾಗಿ!_fgj
சில சமயங்களில் எம்மை சுற்றி என்ன நடக்கின் றது என எமக்குப் புரியாமல் இருக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமும் அல்ல. கண்டபடி வாயாடுதலால் நாம் சில வேளை படுகின்ற அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சமா?
எமது பக்கத்தில் நியாயம் இருக்கும். அதை அடுத்தவனுடன் சண்டை போட்டா நிரூபிக்க வேண்டும்?
எக்காலத்திலும் எமது மன அமைதிக்குப் பங்கம் விளைவிக்காது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். மனஸ் தாபப்படுவதால் ஏது பயன்? லாவகமாகப் பிரச்சனைகள் கையாளப்படல் வேண்டும். மனதை உறுத்தி , வருத்தி எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு எட்ட முடியவே முடியாது. பொறுமை, நிதானம் அவசியம். இதனாலேயே குடும்பம் நித்ய சந்தோஷமடையும். இல் லத்திற்குள்ளேயும், வெளியேயும் இந்த நல்ல இயல்பை கடைப்பிடிப்போமாக!
- 151 -

Page 78
பருத்திபூர் மூல. ஆயிற்றுத்தம்
"மளஸ்தாபம்” எமது ஸ்திர நிலையை இழுக்க வைக்க முனையும் அமைதி குறைந்தால் உடல் உறுதி குறையும் பிறர்மீது பகை வலுக்கும். கோபம் வரும் போது மமதையை நீக்கி, பரஸ்பரம் பேசி தோழமை கொள் ளுதலே நல்லது. இதனால் விலை மதிக்க இயலாத நிலைத்த உறவு மேலோங்கும் வேறென்ன வேண்டும் நமக்கு?
தினக்குரல் நிறப்பிரிகை 08-03-2012
- 152 -


Page 79
ம், பதவி, அரசிய
ள் இத்தொகுப்பில் டு ே
ட ஆயுள் பெற்று வாழ இறைவன் திரு
ள இறைஞ்சுகின்றேன்
 
 
 
 

ல் அ
திகார
க்கிஏழுதி
“அருள்மொழி அரசி
திருமதி: வசந்தா வைத்தியநாதன்
ISBN 978 955 0469-05.5
|
分550彗车69