கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:ஞானம்

Page 1


Page 2

ஞானம்
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியல் வசந்தங்கள்- பாகம் 05 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூலி விபரம்
நூல் தலைப்பு : ஞானம்
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 05
ஆசிரியர் : பருத்தியூர் பால.வயிரவநாதன்
மொழி : தமிழ்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு விபரம் : முதல் பதிப்பு
உரிமை : ஆசிரியருக்கு
தாளின் தன்மை 70 கிராம் பாங்க்
நூலின் அளவு கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
அச்சு எழுத்து 13
மொத்த பக்கங்கள் 155
அட்டைப்படம் : அஸ்ரா பிரிண்டர்ஸ்
கணனி வடிவமைப்பு : அஸ்ரா பிரிண்டர்ஸ்
அச்சிட்டோர் : அஸ்ரா பிரிண்டர்ஸ் நூல் கட்டுமானம் பெர்பெக்ட்
வெளியிட்டோர் : வானவில் வெளியீட்டகம்
நூலின் விலை : 250/-
ISBN : 978-955-0469-06-2

ෆිණof1ff;ෂ්ණතII
"வாழ்வியல் வசந்தங்கள்” என்னும் இந்த அருமையான நூல் தமிழ் கூறு நல்லுலகிற்கும் சிந்தனையுலகிற்கும், சீர்திருத்தவுலகிற்கும், மொழியாளுமைகள் விற்பனைவுலகிற்கும் மிகப்பெரும் அரிய பங்களிப்பாகும். தினக்குரல் பத்திரிகையிலே ஞாயிறுதோறும் வெளிவந்துள்ள நல்ல பக்கங்கள் மீளவும் நூல் வடிவில் கிடைக்கின்றன. இம்முயற்சி பாராட்டத்தகும்.
கலாபூஷணம், சிந்தனை வள்ளல், புயல் வேகத்தவர், தமிழ்நடை மன்னன், ஆன்மீகவாதி, மானுடச் சிகரம் பருத்தியூர் பால,வயிரவநாதன் அவர்கள். அவர் எழுதும் கருத்துக்கள் என்றும் நிலை பேறு உடையனவாகும். அதே முடிவுக்குத்தான் நீங்களும் வருவீர்களென்பது இந்நூலின் உள்ளடக்கத்தை படித்துமுடித்ததும் எழும் முடிவு என்பதும் யானறிவேன்.
திருடுதல், ஞானம், நகைச்சுவை, தற்பெருமை, ரசனை, தனித்துவம், உங்களை விரும்புங்கள், மறதி, மனிதன் தான் உயர்ந்தவனா? என்னும் ஒன்பது தலைப்புக்களுடன் இன்னும் சில தலைப்புக்களில் விஷயதானம் அமைகிறது.
தன்னனுபவம், உலக இலக்கியச் செய்திகள், தகுந்த நடைமுறை முன்னுதாரண எடுத்துக்காட்டுகள், தர்க்க ரீதியாக விவாதிக்கும் உத்தி, வாசகனிடம் வினாதொடுத்துக் கருத்துக் கேட்கும் ஜனநாயக முறைமை, உலக சவால், சரியெனப்ப
- 3 -

Page 4
டுவதை நிறுவும் வரைக்கும் உறுதிப்பாடு, இச்செயல்களையும் அவற்றிற்கெதிரான நெறிமுறை வழி காட்டல்களையும் எடுத்து ரைத்துச் சரியான நடத்தைகளை விண்டுரைக்கும் பாங்கு என்னும் அடிப்படை நியதிகளையும்,நியாயங்களையும் வரித்துக் கொண்டு தமது தனிக் கருத்துக்களையும் எண்ணங்களையும் நிறுவும் திறன்பெரிதும் பாராட்டத்தக்கது.
இந்நூலின் மொழிநடை, அதாவது ஆற்றாறொழுக்கான கருத்தோட்டத்தை வெளிப்படுத்தும் தமிழ் மொழி வளம் மெச்சி யுரைக்கத்தக்கது. தொடர்ந்து எடுத்துரைக்கப்படும் கருத்துக் களை சலிப்பேற்படாது கண்ணில் படிக்கும் விருப்பமேற்பட்டு இவரது எழுத்துவான்மையே என்பேன். பாட்டுக்கள் கலந்து பரவி எழுதும் போதும், எழுத்தின் மொழியின் தரம், மிகவுயர்ந்தே யிருப்பது இவரது எழுத்துக்களின் பெருவெற்றி யெனலாம். மொழி என்பது கருத்துத் தொடர்பூடகம் மட்டுமல்ல அதன் பெறுமானம் செம்மையும், மதிப்பும், பண்பும், உயர்வும், ஏற்றமும், வெற்றியுமடைதல் வேண்டும் என்பது முக்கியமல்லவா?
இத்தகு செம்மைமிகு எழுத்தாற்றல், மொழி வளம், எழுத்து நடை கைவரப்பெற்றவர் பருத்தியூர் பால,வயிரவநாதன் அவர்கள். எப்பொழுதும் உற்சாகமாகவும், துடிதுடிப்புடனும், தானுண்டு தன் பணிகளுண்டு என்றுஅடக்கமாக வாழ்ந்து தனது எழுத்துந்தலால் தினமும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இவர், இவரது சிந்தனைகள், தான் காணும் சங்கதிகள் குறுகிய விஷயங்களுக்குள் அமையாது பன்முகத் தன்மையையும், நடைமுறை செயல்களை விமர்சிப்பனவாயும் அமைந்து விடுகின்றன.
ܚ 4 ܚ

விஷயப்பரப்பு விரிந்தது மட்டுமன்றி நுட்பமானவை யாகவும் தெரிவுசெய்து எழுதி வரும் கவர்தல் சிந்தனையூற்று அருவி போலவே வற்றாது பெருக்கெடுத்து பயனுடன் என்றும் ஏற்றம் பெறவும், மேன்மை பெறவும் சிந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்னும் பெருவிருப்பமே இவரது எழுத்துக்கான மூலம், இத்தகு குணவியல்பு ஒருவரிடத்துத் தோன்றுவது என்பது துர்லபம், பேரறிவாளுமையும், அனுபவத்துடனும், தெய்வ நம்பிக்கையும், சிந்தனைச் செறிவும் சமூகத்தின் மீது கொண்டவற்றாத அன்பும், பாசமும், அனுபவத்தினது தெளிவும், தீர்க்க தரிசனமும், பகிர்ந்துகொள்ளும் மனவிருப்பும், ஞானிகளது தொடர்பும், பருத்தியூர் பால,வயிரவநாதனைஆட்கொண்டமை யாலேயே இத்தகு நேரிய-சீரிய எழுத்துலகம் இவருக்குள் கலந்துள்ளது என்று கூறுவது வெற்றுரையன்று.
வாழ்க்கையின் நெறிமுறையிலே காணப்பட வேண்டிய நல்ல சிந்தனைகள் சிலரது எழுத்தாக்க உள்ளடக்கங்களாக வெளிப்பட்டுள்ளன. எழுத்தை நேசிக்கும் உள்ளங்களுக்கு எல்லாம் நல்ல தீனிபோடும் திருப்தியுடன் திகழ்வன இவரது எழுத்துக்கள். கருத்துக்களை அள்ளிக்கொட்டும் சூல் கொண்ட எழுத்துலகில் பால, வயிரவநாதன் எனின் அது தகும்.
இவரது ஆத்ம ஞானம் எழுத்துக்களினூடே பளிச்சிடு
கிறது. நெஞ்சின் நிழலே முகம் என்ற அகத்தின் அழகு பற்றிய
செய்தி, அகவழகு முகவழகிலே துலங்கும். இவை பால.
வயிரவநாதனின் தனித்த பேரியல்புகள், "பால " என்ற சொல்
ஈண்டு சற்று மனதில் கொள்ளப்பட வேண்டும். இளமை, - 5 -

Page 5
மனப்பலம், செல்வம், குழந்தை மனம், மென்மை, அன்பானப் பிணைப்புடனான உறவு, கரவற்ற உள்ளம், வஞ்சனையற்ற தொடர்பாடல், உண்மையை உரைக்கும் வாழ்வு, சித்தத்தைப் புடம் போடும் தினம் மேலீடு, இயற்கை விருப்பு, என்பன "பால” என்ற சொல்லுக்குள் அடக்கம் என்பது பிறிதொரு வியாக்கி யானம் ஆகும். நல்ல மொழிப் பற்றும், இசைப்பற்றும், சமயப் பற்றும், கலைப்பற்றும், கல்விப்பற்றும் கொண்ட எழுத்தாளர் பால, வயிரவநாதன் அவர்கள்.
இத்தகு அரிய தகைமைகள் வாய்க்கப்பெற்ற சிந்தனை யாளரான இவரது இந்நூற் கருத்துக்களையும், சில எடுத்துக் காட்டுக்களையும் வியந்துரைத்து விளக்குவது பொருத்தமானதே யாகும், சான்றாக, திருடுதல் குறித்த கட்டுரைக் கருத்துக்களை எழுதும் போது அரசியல்வாதியால் அவஸ்தைப்படும் சிலர் மிகவும் பெறுதற்கரிய நேரத்தை ( காலத்தை) வீணடிக்கும் செயலும் ஒரு திருட்டே என்று எழுதுகிறார். இன்றைய உலகிலே காலத்தின் பெறுமதியென்பது உணரப்படாமல் வீணடிக்கப் படுகின்றது என்பது முற்றிலும் உண்மை."ஏமாற்றம், வஞ்சனை எண்ணத்தால் ஒரு நபரை வருத்தி வாழும் வாழ்வில் எவரும் உருப்பட்டதாக வரலாறு இல்லை" என்று எழுதுகின்றார். ஏமாற்று நடவடிக்கைகளும் திருட்டே இலக்கிய விஷயத்தைக் களவாடுவதும் திருட்டே மக்களின் நலனுக்குத் தீங்காயின் அவையெல்லாம் திருட்டே என்று எழுதுகின்றார். " நோய்கள் பரவுதல், வெள்ளம் பெருக்கெடுத்தல், காட்டுத் தீ, நில நடுக்கங்கள், பயங்கர விபத்துக்கள் என்று அடிக்கடி நடக்கின்றன என்பதனை நாட்டின் தலமையில் உணருதல் வேண்டும்.
- 6 -

என்கின்றார். இனச் சுதந்திரத்தை அபகரிப்பதும் தலையீடு செய்யும், சகிக்கவொண்ணா மனித மனங்களைத் தகிக்க வைக்கும் காரியங்களே என்கின்றார்.
"அபகீர்த்தியான திருட்டுக் குற்றங்கள்” என்பதை அரசியல்வாதிகள் உணர்வார்களா? என்பதே இக் கட்டுரையின் பலத்த எதிர்பார்ப்பாயுள்ளது! அரசியலாளர்களுக்கு எத்தனை ஆலோசகர்கள் இருந்தாலும் ஒட்டைக்காது என்றால் எதுவுமே ஏறாது, விழலுக்கிறைத்த நீரேயாகும்.
"ஞானம்' என்பது அறிவின் முதிர்வும் அதனிலும் மேலானதும் அறிதலுடன் உள் உணர்வினையூட்ட ஆன்மா ஒளி பெறச் செய்தலே ஞானம், ஞானம் வரப்பெற்றால் சந்தேகம் கடந்த உண்மைநிலை உருவாகின்றது."ஞானிகள் நித தய சிரஞ்சீவிகளாகவே இருப்பதும் புதுமையானது அல்லவேயல்ல" என்கின்றார்.
நகைச்சுவை உள்ளத்திற்கும் உடலுக்குமானது. சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது நகைச்சுவை. நகைச் சுவையாளர் உளவள சிகிச்சையாளர் "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது முதுமொழி என்றும் எடுத்துக் காட்டுகின்றார் பால, வயிரவநாதன்.
"தற்பெருமை", காலத்தையும், செயலையும் விரய
மாக்கும். நாம் சார்ந்த மதம் மொழி, நாடுகள் மட்டுமே மேன்மை
யானது ஏனைய எவையுமே புனிதமற்றது என எண்ணுதல் - 7 -

Page 6
பேதைமை பொருந்திய தற்பெருமை தான். உள வளத்தை வளர்க்க தற்பெருமை அகற்ற வேண்டும். தற்பெருமை அகந்தையில் உற்பத்தியாகின்றது. அடுத்தவர் இயல்புகளை புரியாதவர் தற்பெருமையாளர். தற்பெருமை சுயபுராணம் ஒதும், தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனித பலவீனம், அறியாமை யினால் தற்பெருமை பேசும் போதுகோபம், குரோதம், வெறுப்பு, அருவருப்புத் தான் தோன்றும்.
எங்கள் திறமைகளை எமது வாயினால் இழந்து விடக் கூடாது. பல திறமைசாலிகள் இதனையே செய்து வருகின்றார்கள் பொய்யான செய்திகளைச் சொல்லுதல் தவறு. ஒருவரின் பெருமைகளைத் தக்க சமயத்தில் பாராட்டிக் கெளரவித்தல் மானிடப் பண்பாகும். உண்மையாளர்கள் உலகில் பூத்து எழுந்தால் சத்தியத்தின் அற்புதங்களைத் தரிசித்துக் கொள்ள
6) TLD.
இரசனை என்ற கட்டுரையில், இரசனையுணர்வு புத்துணர்ச்சியூட்டும். ஒருவரின் இன்பங்களைக் கண்டு இரசிப்பதே நல்ல இரசனை கலையுணர்வு மனிதனை என்றும் இளமையுணர்வுடன் இயங்க வைக்கும். இரசனை உயிருக்கும் போஷணையூட்டும், இரசனை உணர்வின்றிவாழ்க்கை ருசிக்காது.
"நல்ல இலக்கியங்களைப் படிக்கும் வாசகர்கள்
குறைந்துவிட்டார்கள். முன்னைய இலக்கியங்களை போல் ஏன்
இன்னமும் எம்மாற்படைக்க முடியவில்லை? முன்பு பார்த்த அதே
கலை வடிவங்கள் சிற்பங்களையே இன்னும் பார்க்கின்றோம், - 8 -

இரசிக்கின்றோம்.அவ்வண்ணமே உருவாக்கவல்ல முழுமையான சிற்பங்களை நாம் இன்னமும் உருவாக்கவில்லையே? ஏன்? என்று நல்லதொரு வினாவை எழுப்புகின்றார்.
"தமிழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசை எந்த ஒரு தமிழரும் இது வரை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உலகத்திலேயே அற்புதமான காவியங்களைப் படைத்த எம் முன்னோரின் படைப்புக்களைப் பார்த்தும் இன்னமும் உலகை ஈர்க்கும் வண்ணம் இலக்கியத்தை எதற்காகப் படைக்காமல் இருக்கின்றோம். இரசிக்கத்தக்கநாம் படைக்கும் பிரம்மாக்களாக உருவாக வேண்டும்.
எமது படைப்புக்களால் உலகம், மேன்மை, பெருமை யடையவேண்டும். "நல்ல இரசனையை வளர்க்கும் பூமியாக இது இல்லை. மனிதன் சிரிக்காமல் விட்டால் அவன் நித்திய அழுஞ் சீவியாகிவிடுவான். "இரவுநேரத்தில் சந்தோஷமூட்டும் எண்ணங் களுடன் உறக்கத்திற்குச் செல்லுங்கள் உடலை சுத்தமாக வைத்து நல்ல இனிமையான இசைகளைக்கேட்டபடியே கண்ண யர்ந்து விடுங்கள். அந்த சுக அனுபவத்தை விட வேறென்ன வேண்டும். சிரித்துக்கொண்டே உறங்குங்கள். அழுதபடி படுக்கை க்குச் செல்ல வேண்டாம்." என்று நல்ல புத்தி மதி - அறிவுரை கூறுகின்றார்.
தனித்துவம் என்ற கட்டுரையில் ஆணவச் செருக்குடன்
சனங்களுடன் சேராமல் வாழ்வது தனித்துவமல்ல, ஒழுக்கத்துட
னான தனித்துவம் புனிதத்துவமாகும். அந்நிய தேசங்களுக்கு - 9 سے

Page 7
புலம் பெயர்ந்தோ, தற்காலிகமாகச் சென்று வாழும் போதோ, தமது நாடு, மொழி கலாசாரங்களை மறந்து வாழ்வதை பெரும் கெளரவமாகவும் கொள்கின்றவர்கள்!
"உங்களை விரும்புங்கள்” என்ற கட்டுரையில், "உங்களில் நீங்கள் அக்கறை கொள்வது போல பிறரிடமும் கரிசனை காட்டுவீர்களாக! என்கின்றார். முதலில் உங்களை நீங்கள் இரசனையுடன் இரசிப்பீர்களாக தன்னை நேசிப்பது வேறு மமதையாய் மற்றவர்களுடைய மனதைத் துன்புறுத்துதல் வேறு.
"மறதி பற்றிய கட்டுரையில், தீயவைகளை மறப்பதே சிறப்பு மறதியை இறைவனே ஏற்படுத்தியுள்ளான். கண்டதை யும் போட்டு மூளையைக் குடையாதிருக்க மறதி பெரும் துணை கொள்கின்றது.
"மனிதன் தான் உயர்ந்தவனா” என்ற கட்டுரையில், இயற்கையை, சகல உயிர்களை நேசிப்பவனே உயர்ந்த மனிதன். மனித இனம் தான் உன்னதமானது. ஏனைய ஜீவராசிகள் எல்லாமே தாழ்ந்தது என எண்ணிக் கொள்வது உண்மையை மறைக்கும் பொய்மைக் கூற்று ஆகும். சிந்திக்கவும், வார்த்தை களை சிந்தவும் தெரிந்தவன் மனிதன். மரண பயம் மனிதர்க்கு மிகையாகாது" மிருகங்கள் வாழும் காலம் வரை மகிழ்வோடு வாழும்”
மிகமிக அரிய பேருண்மைக் கருத்துக்களை உறுதி படவே எழுதுகிறார் பால,வயிரவநாதன். மனித இனத்திற்கு எத்தனை வருடங்கள் பயிற்சி வழங்கினாலும், உபதேசங்கள்
- 10 -

செய்தாலும் இவர்கள் நன்கு பயில்கின்றார்களா? கேட்கின் றார்களா? எத்தனை ஞானிகள், தீர்க்கதரிசிகள், புவியில் அவதரித்து பாடம்,உபதேசம் சொல்லிப் போனார்கள் செவிமடுத் தார்களா? மதச் சண்டை, மொழிச் சண்டை, நிலத்துக்காக, நீருக்காக, எத்தனை எத்தனை விஷயங்களை முன் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மனிதனை விட வேறு எந்த ஜீவராசிகளும் உபதேச ங்களைக் கேட்பதில்லை, ஆயுதங்களை கையில் எடுத்து ஆரவாரமாக மோதுவதில்லைமிருகங்கள்எதுவாயினும், கல்லால் எறிந்து பொல்லால் தாக்கித் தம்முள் மோதுவது உண்டோ? ஆண்டவன் பார்வையில் அனைத்தும் ஒன்றே காரணம? இன்றி எதுவுமே படைக்கப்பட்டதுமில்லை உலகை ஆள எண்ணும் நாம், உலகை இரசிக்கவும், உலகின் அனைத்து உயிர்களையும் நேசிக்கவும், கருணை காட்டவும் முனைப்புடன் ஒன்று பட்டால் தான் மானுடம் போற்றும் மனிதன் என்று நூலை நிறைவு செய்கின்றார்.
"சூல்கொண்ட எழுத்துலகில்” பால, வயிரவநாதனின் புகழ் ஓங்குக!
கலாநிதி - கனகசபாபதி - நாகேஸ்வரன் M.A.Phd முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை, சப்ரகமுவா பல்கலைக்கழகம், பெலிகுல்லோயா.
- 1 -

Page 8
Iošlйцеоп
"எண்ணங்களில் கவனமாக இருங்கள்அது வார்த்தைகளாக வெளிப்படுபவை. வார்த்தைகளில் கவனமாக இருங்கள்அது செயலாக வெளிப்படுபவை. செயல்களில் கவனமான இருங்கள்அது உங்கள் பழக்கமாகின்றது. பழக்கங்களில் கவனமாக இருங்கள்அது உங்கள் ஒழுக்கமாகின்றது. ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்" என்னும் தத்துவத்தை இணையத்தில் படிக்க முடிந்தது. "எண்ணங்கள் தான் வாழ்வை மேம்படுத்தும் என்று ஒரு வார்த்தையில் சொல்வதையும் கவனித்திருக்கின்றேன். அதை அப்படியே சொல்லிவிட்டு போனால் யாரும் புரிந்து கொள்வ தில்லை. அதை எப்படி என்று இப்படி விளக்கினால் சகலரும் நின்று நிதானித்து புரிந்து கொள்வர்.
இதைத் தான் திரு. பால, வயிரவநாதன் தன்னளவில் செய்திருக்கின்றார். பொதுவாக ஊடகங்களும், அனுபவங்களும், எங்களுக்கு கற்றுத் தருகின்றவற்றைத் தான் நாம் எமக்குள் இயல்பாகவே இருக்கிறது என நம்புகின்றோம். எமது குடும்பத் தின், சமூகத்தின் பழக்க வழக்கங்களை குழந்தைகள் பார்த்து கேட்டு கற்றுக் கொள்கின்றன. வளர்கின்ற போதுஊடகங்கள்
- 12 -

கற்றுக் கொடுக்கின்றன. சந்ததி சந்ததியாக இப்படித்தான் கடத்தப்படுகின்றது. இதைத் தான் இயல்பாக உள்ளன என நாம் வெளிப்படுத்திவிட்டுப்போய்க் கொண்டிருக்கின்றோம்.
தமிழ்க் கலாசாரத்தில் பண்பாடு என்பதனூடாக நாம் பல விழுமியங்களை கொண்டிருக்கின்றோம். ஆனால் அதில் திட்டவட்டமான தெளிவுகள் பலருக்கு இல்லை. அதை முறைப்படுத்தப்பட்ட வழியினூடாக சொல்லுகின்ற போது இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோருக்கும் தெரியும் நேரம் பொன்னானது என்று. இன்று பவுண் விற்கும் விலையில் யாராவது அதை அபகரித்துச் சென்றால் என்னவாகும் எங்கள் நிலைமை? இதைத் தான் இங்கே பால வயிரவநாதன் திருட்டு என்ற தலைப்பில் உங்களுடன் உரையாடுகின்றார். இன்று கோடானு கோடி மக்கள் தமது பொழுதுகளை திருட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுவது படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது.
இந்நூலில் திருடுதல், ஞானம், நகைச்சுவை, தற்பெருமை, ரசனை, தனித்துவம், உங்களை விரும்புங்கள், மறதி, மனிதன் தான் உயர்ந்தவனா? போன்ற தலைப்புக்களில் அந்தந்த விடயங்கள் நாளாந்த வாழ்வில் எப்படி பிரயோகிக்கப் படுகின்றது அல்லது பிரயோகமாகின்றது என்பதை வெகு சுவாரஸ்யமாக ஆசிரியர் காட்டுகின்றார். இந்த சுவாரஸ்ய ங்களுக்கு பின்னால் ஒவ்வொருவரினதும் இழப்புக்கள் பற்றி தார்மீக கோபம் தொனிக்க கூறுகின்றார். அதை கொஞ்சம் தவிர்க்கலாம்போல் தெரிகின்றது. தம்மேல் கொண்ட காழ்ப்பினால்
- 13 -

Page 9
  

Page 10
ஆனால் மனிதரில் பலர் உலகின் வனப்புகளில், கவனம் செலுத்தாமல் புலன்களை மறு திசையில் வைத்துக் கொள்கின்றார்கள். துன்ப உணர்வுகள், இணங்காமல் இருக்க இயற்கை தரும் சந்தோஷப்படைப்புக்களை அள்ளிப்பருகுக!
களிப்புடன் சிரித்து வாழ்வதற்கு எல்லோரிடமும் நகைச் சுவையினைப் பகிர்ந்து கொள்வோமாக! நானே யாவரிலும் பெரியோன் என்கின்ற சரிந்த எண்ணங்களைக் கருக்கி, உள்ளத்தை விரித்து, பரந்து பட்ட உலகை விருப்புடன் நோக்குதலே சிறப்பு.
நாம் பரந்த உலகில் காண்பவை அனைத்திலிருந்தும் எம்மால் முடிந்த வரை சிறப்பானவைகளைச் சேகரித்தேயாக வேண்டும். இந்நூலில் ஒரு அணுவளவேனும் வாசகர்களுக்கு நல்லவற்றைச் சொல்ல முடிந்தால் அதுவே எனக்குப் பெரு
ിങ്ങ]ഖ.
ஆன்மீகவாதியும், தலைசிறந்த தமிழ் வல்லாளரும், நா நயம் மிக்கவரும்,நகைச்சுவையூடாக நல்ல கருத்துக்களைத் தமிழிசையுடன் பாடிப்பரவி வரும், கலாநிதி கனகசபாபதி - நாகேஸ்வரன் அவர்கள், நீண்ட செறிவான அணிந்துரையினை நூலுக்கு அணிந்துள்ளார். என்னுடன் நெருங்கிப் பழகும் அன்பானவர் நாகேஸ்வரன் அவர்களாவர்.
உணர்ச்சித் ததும்ப பேசும் போது தம்மை மறந்து
விடுவார். தமிழும், சைவமும் இவரது முழுமூச்சு எமது நாட்டில்
மட்டுமல்ல தமிழ் பேசும் பல நாடுகளிலேயும் தம் நாவன்மை - 16 -

யினால் தடம் பதித்த வெள்ளை உள்ளம் கொண்ட அழகான நல்ல மனிதர்,
என்னை அடிக்கடி உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுக்கும் சஞ்சீவி போல் செயல்புடுவார்."ஞானம்" என்னும் தலைப்பிலான நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார். எதற்கும் அச்சப்படாதவர். ஆனால் அன்பின் வசப்படும் திரு.கனகசபாபதிநாகேஸ்வரனுக்கு நான் நன்றி பகர்வது எனக்கு நானே நன்றி சொல்வதை ஒத்ததாகும்.
இந்த நூலில் நான் குறிப்பிடத்தக்க ஒருவர் இணை கின்றார். எனது எழுத்தை விரும்பி ஏற்றுத் தினக்குரலில் வெளியிட்ட என் அன்பிற்குரிய ஒருவராக திருமதி எம்.எஸ். தேவகெளரி திகழ்கின்றார். தினக்குரல் ஞாயிறு மஞ்சரிக்கு இவரே ஆசிரியாராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நிகழ்ந்த தமிழத்தினப் போட்டியின் நடுவர்களாக தேவகெளரியும், நானும், கலந்து கொண்டோம். இந்தச் சந்திப்புத்தான் தினக்குரலை என்னுடன் சங்கமிக்க வைத்தது.
இன்று திருமதி தேவகெளரி இதழியல் கல்லூரியில்
விரிவுரையாளராக கடமை புரிந்து வருகின்றார். மிக நல்ல
செறிவான திறனாய்வாளராக, பெண்களுக்காக குரல்
கொடுக்கும் துணிச்சல் மிக்க பெண்மணியாகவும், இருப்பதுடன்
நல்ல குடும்பத் தலைவியான இவரின் கணவர் திரு. சுரேந்திரன் - 17 -

Page 11
சிறந்த ஓவியக்கலை, கணினியியல் வல்லுனர். இவர்களுக்கு ஒரு அழகிய சுட்டிப் பெண் குழந்தை, அன்பான சின்னக் குடும்பம். மதிப்புரை வழங்கிய திருமதி சு.தேவகெளரி என் பாசத்திற்குரிய சகோதரி
ஆரம்பத்தில் தினக்குரலில் வாழ்வியல் தொடர்பான கட்டுரைகளை நான் எழுதும் போது தினக்குரலின் பிரதம ஆசிரியராக திரு. சிவனேசச்செல்வன் அவர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்தார் ஞாயிறு தினக்குரலில் தொடர்ந்தும் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. திரு. சிவனேசச் செல்வன் அவர்கள் எனக்கு மனப்பூர்வமாக அளித்த ஒத்துழைப்பிற்கு எனது நன்றி!
இவரைத் தொடர்ந்து தற்போதைய தின்க்குரல் பிரதம ஆசிரியர் திரு-வீதனபாலசிங்கம் அவர்கள் என்னை மென்மேலும் உற்சாகமூட்டி வருகின்றார். இவருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
மேலும் இந்நூலில் தினகரன் ஞாயிறு வாரமலர் வெளிவந்த பல கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன" வாழ்வியல் பொக்கிஷங்கள்” எனும் தலைப்பில் வெளியிட உதவிய அதன் ஆசிரியர் திரு. செந்தில்வேலவர் மற்றும் - சிரேஷ்ட உதவி ஆசிரியர்களான திரு-எஸ்- எஸ் நாகேஸ்வரன், திருமதி எஸ் - வாசுகி ஆகியோர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
- 18 -

இந்த வேளையில் இந்நூல்களை அழகிய வண்ணப்பட அட்டையுடன் உறுதியான வடிவமைப்புடன் ஆக்கித்தந்த அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிற்ரெட் அதிபர் திரு.எஸ். சிவபாலன் அவர்களின் ஒத்துழைப்பிற்கு எனது நன்றிகள்.
எனது பணியில் கூட இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் அன்பினை பகிர்ந்து கொள்கின்றேன்.
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் -05 இன் "ஞானம்” தொகுப்பின் கட்டுரைகளை தொடராக வெளியீடு செய்த தினக்குரல், தினகரன் நிறுவனங்களின், ஆசிரியர், அவர்க ளோடிணைந்த ஆசிரியர் குழாத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! உரித்தாகும்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன்
"மேரு இல்லம்"
36-2/1
ஈ. எஸ். பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு 06.
தொ.பே இல 011-2361012.
O71-4402303,
O7743 18768,
- 19 -

Page 12
பருத்திபூர் (40, ஓரவநதர்
Ol.
O2.
O3.
04.
05.
06.
07.
08.
09.
0.
வாழ்வியல் வசந்தங்கள் - வெறுமை - பாகம் - 1
12.
13
18
நூலாசிரியர் பருத்தியூர் பால, வயிரவநாதனின் வெளியீடுகள்
வாழ்வியல் வசந்தங்கள் - உண்மை சாஸ்வதமானது பாகம் -0
வாழ்வியல் வசந்தங்கள் - அம்மா - பாகம் -02
வாழ்வியல் வசந்தங்கள் - சுயதரிசனம் - பாகம் -03
வாழ்வியல் வசந்தங்கள் - கோழைகளாய் வாழ்வதோ? பாகம் -04
வாழ்வியல் வசந்தங்கள் - இஞானம் - பாகம் -05
வாழ்வியல் வசந்தங்கள் - கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின்
சாதனை செய் - பாகம் - 06
வாழ்வியல் வசந்தங்கள் - சும்மா இருந்தால் - பாகம் - 07
வாழ்வியல் வசந்தங்கள் - உண்மைகள் உலருவதில்லை - பாகம் 08
வாழ்வியல் வசந்தங்கள் - உண்னோடு நீ பேசு - பாகம் -09
வாழ்வியல் வசந்தங்கள் - நான் நானே தான் - பாகம் - 10
வாழ்வியல் வசந்தங்கள் - காதலும் கடமையும் - பாகம் - 12
வாழ்வியல் வசந்தங்கள் - அகஒளி- பாகம் - 13
14.
15.
16.
17.
வாழ்வியல் வசந்தங்கள் - உன்னை நீ முந்து - பாகம் - 14
வாழ்வியல் வசந்தங்கள் - சுயபச்சாத்தாபம் - பாகம் - 15
வாழ்வியல் வசந்தங்கள் - மெளனம் - பாகம் - 16
வாழ்வியல் வசந்தங்கள் - மரணத்தின்பின் வாழ்வு- பாகம் -17
வாழ்வியல் வசந்தங்கள் - சிந்தனை வரிகள் - பாகம் - 18
- 20 -

சமர்ப்பOைrம்
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும்
எனது ஆககங்கள சமரபபணம
- ஆசிரியர் -
- 21 -

Page 13
01)
02) 03)
04) 05) 06) 07) 08)
09)
10)
11) 12) 13) 14)
பொருளடக்கம் -உ3ை:இ8உைாட
தலைப்பு
திருடுதல்
(GSTTEOTID
நகைச்சுவை
தற்பெருமை
JTöF606)
தனித்துவம் உங்களை விரும்புங்கள் !
DD5
IDGpfl:5air 25 Tair 9_LLyfri656n IGEDITr? சிறார்களின் நலனை பாதிக்கும் விடயங்கள் (ஒரு பார்வை) காலப் பெறுமதியைக் கண்டு கொள்க! தெளிதலும், தெளிதலும் அஞ்சேல், அஞ்சேல் முதியோரும், இளையோரும்
iଣfiଆsi}
23
34
45
56
66
78
85
99
11.
122
130
136
142
148
- 22 -

ஞானம்
செல்வத்தை வஞ்சகமாக, மறைமுகமாகக், கவர்ந்தெடுப்பது மட்டும், திருட்டு அல்ல. பிறர் பொழுதுகளை வீணாகக் கவர்வதும் திருட்டுத் தான். காலங்களை அனாவசியமாகக் கரைப்பது, எங்களை அறியாமலும், அறிந்தும் எங்களையே களவு கொடுப்பது போலாகும். புலன்களை நல்வழியில் திருப்புவது மேலான செல்வத்தை ஈட்டுவதாகும். தவறான வழியில் கீர்த்திகளைச் சேகரிக்க விரும்புபவர்கள் திருடுதலைவிடக் கேவலமான காரியத்தைச் செய்பவர்களாவர். திருடுதலால் முடிவில்லா மனநெருடல் தான் பற்றி நிற்கும்.
மறைவாகவும், வஞ்சகமாகவும் பொருட்கள் உடமை கள், பணம் முதலியவைகள் திருடப்படுவதனால் பாதிப் படைந்தவர்களுக்கு ஏற்படும் நீங்காத மன நெருடல்கள் சொல்லும் தரமன்று!
ஆனால், ஒருவரது பொருட்கள், பனங்களைத் திருடுவது மட்டுமே "திருட்டு" என்று சொல்லிவிட இயலாது. - 23 -

Page 14
மருத்திபூர் (40 ஆயிரவநாதர் ஒருவர், அவசரம் அவசரமாக, ஒரு காரியத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றார். வழியில் அவரை இடைமறித்த நபர் ஒருவர் அநாவசியமாக அவரிடம் பேச்சைக் கொடுத்து, வளர்த்து அவரது பொழுதைக் கரைத்து, முடிவில் அந்த அப்பாவி மனுஷனின் பொழுதை அவப்பொழுதாக்கி பொன்னிலும் மேலான பொழுதைப் பழுதாக்கிய நபரான வர், பொழுதை திருடிய குற்றவாளியாகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சொத்துக்கு மேலானதாம், எமது பொன்போன்ற பொழுதுகள். அதனை நாம் வீணே கழிப்பதும் இன்னும் ஒருவர் அதை வீணாக்குதலும் மன்னிக்க இயலாத திருட்டுக் குற்றம் எனக்கருதுவோமாக!
இன்று கோடானகோடி மக்கள் தமது பொழுதுகளைத் திருட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இதில் வேடிக்கையும், வியப்பும் பரிதாபத்திற்குரியதுமான விஷயம் என்னவெனில், தமது "காலங்கள்" திருட்டுப் போவதை தெரியாமலும், தெரிந்தும்கூட, அதைத் தொலைத்து வீணாக்குவதும் என்ன கொடுமை ஐயா? காலம்பூராவும, உழைக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதும் பொழுதை மட்டுமல்ல,அவனை மனிதனாக மதிக்காது அவனது உரிமைகளையும் பறிக்கும் நரித்தன மான, வெறிச்செயல்.
தேவையற்ற கருத்துக்களையும் தமது கலாசார பாரம்
- 24 -

GT60TLD பரியங்களுக்கு முரண்பாடான காட்சிகளை நாம் திரைப் படங்கள், தொலைக்காட்சிகளுடான ரசனையுடன் கண்டு களித்துவருகின்றோம். ரசனைஎன்று எண்ணி சஞ்சிகைகள், பத்திரிகைகளில் விரசமான செய்திகளை கண்ணைக்
கவரும் வண்ணப் படங்களுடாக பார்த்துக் கொண்டு இருக் கின்றோம். எமது புலனைத் திசைதிருப்பி விடும் எச் செயலும் காலத்தைக் கரைத்து திருட்டுக் கொடுக்கும் செயல் அன்றி வேறென்ன?
காலவிரயம் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளா மல் விடுவது போல் தப்புக்கள் வேறில்லை. நோக்குக!
பொழுதுபோக்குகள் என்பது மாந்தர்க்கு அத்தியாவசி யமானது தான்.ஆனால் எமது பொழுது போக்குகளுடாக மேலான ஆதாயங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அனுபவங்கள் நாம் தேடும் பணத்திற்கும் பார்க்கப் பெறுமதிமிக்கது. இதுகூட ஒரு நல்ல சேமிப்பு ஆகும்.
மேடையில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கின்றார். நாம் ஒரு நிகழ்ச்சிக்குப் போவது என்பது, எமக்கு அதன் மூலம் ஏதாவது புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாம். சொல்ல வேண்டிய விஷயத்தை விட்டு, இன்று அநேகர் கூட்டத்தில் இருக்கும், நூற்றுக்கணக் கான மக்களின் நேரத்தை அவர்களுக்குத் தெரியாமலேயே கவர்ந்தால் அதுபோல ஒரு அநாகரிகமான வேலை வேறு என்ன இருக்கப் போகின்றது?
- 25 -

Page 15
பருத்திபூர் அல. ஆயிரவருழர்
இன்று சிலர் தேவையற்ற பேச்சுக்களைப் பேசுவதும், புளுகுவதும் அதனை நம்பும்படி நச்சரித்து, மக்களை ஏற்கச்செய்து பொழுதுகளைக் கரைத்தும் மோசடிகள் செய்கின்றார்கள். இந்த விஷயங்களுக்காக நாம் எவர்க்கும் தண்டனை வழங்கமுடியாது, என்பதனால் இத்தகைய, பிரகிருதிகள் கண்டபடி உளறிக் கொட்டித் தீர்ப்பதும், அதனையே ஒரு திறமையான செயல் என்று தம்மைத் தாமே ஏமாற்றித் திருப்திப்படுதலும், நகைப்பிற்குரியதே!
மிகவும், சாதுர்யமாகத் தவறான கொள்கைகளையே விடாப்பிடியாகவும், மக்களை ஏமாற்றி வாக்குகளைச் சேகரிக்கும் சில அரசியல்வாதிகள் போலத் திருடர்கள், ஏமாற்றும் எத்தர்கள் வேறுயாரும் இல்லை. இவர்களை, மக்களிடம் வாக்குகளைக், கொள்ளையடிப்பதானது, அவர்களின் உரிமைகளைத் தந்திரமாக, மோசடியாகக் கவருவதாகவே கருதப்படும்.
மக்களின் இந்த அறியாமை காரணமாக இவர்கள் படும் துன்பங்களும் எண்ணிலடங்காது. ஒரு அரசியல்வாதி செய்யும் அராஜகம், ஒட்டு மொத்தச் சமூகத்தையே, அல்லாட வைக்கும். ஆனால் இவர்களோ, பெற்ற பணம், சொத்துக்களை வெளிநாட்டு வங்கிகளில் இட்டு மக்களின் நலனையே முழுமையாக ஏப்பமிடுகின்றனர். இத்தகைய வர்கள் எல்லோருமே ஒரு சமூக நோய்தான். ஆனால், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பலபெரும் நிதி நிறுவன ங்கள், தொண்டு அமைப்புக்களில் உள்ள பெரிய
- 26 -

65T60TLD புள்ளிகளும் சமூகத்தையே மட்டம் தட்டி வாழத் தலைப்படு கின்றனர். குறுகிய காலத்தில், தமது பணத்தின் மூலம் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று எண்ணிப் பல
தனிநபர் வங்கிகளில் முதலீடு செய்வதும், பின்னர் அந்த வங்கியே, இமைப்பொழுதில் முடங்கிச் சாவதும் நாம் அறிந்ததே!
இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்குண்டு, பிரலாபிக்கும் ஏமாந்த மக்களின் அவலக் கதைகளை நாம் பலதடவைகள் தொலைக்காட்சிகளில் கண்டும் பத்திரிகை களில் படித்துமிருக்கின்றோம். எதிர்பாராத நம்பமுடியாத வரவுகள் வரும்போது இவை எங்ங்ணம் எப்படிச் சாத்திய மாகும் என ஒருபொழுதாவது, மக்கள் சிந்தித்தால் என்ன?
கிராம மக்கள் பலர் கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்த காசை தங்கள் ஊரில் அல்லது தெரிந்தவர்களிடம், சீட்டுக் கட்டுவதும், பின்னர் அவர்கள் இதனால் ஏமாற்றப் படுவதும் நாம் அறிந்த ஒன்றுதான். இன்னும் ஒரு நபரை வருத்தி எந்த ஒரு நபருமே உருப்பட்டதாக வரலாறு ജൂൺങ്ങബ.
ஒரு ரூபாய் திருடினாலும் சரி, ஒரு கோடி திருடினா
லும் சரி, குற்றம் குற்றமே என்பார்கள் ஆனால் இன்று
நடப்பது என்ன, ஒரு ரூபாய் திருடியவன் அகப்பட்டுக்
கொள்கின்றான். ஒரு கோடி ரூபாய் ஏய்த்தவன் மிகத்
தந்திரமாகப் பெரிய வழக்குரைஞரை ஏற்பாடு செய்து - 27 -

Page 16
கருத்திபூர் பல. ஆயிரவரஷ் சட்டத்தின் கண்ணில், மண்ணைத் தூவி அதனையே மட்டம் தட்டிவிடுகின்றான்.
ஒரு ஏழை,தென்னம் தோப்பில் புகுந்து இளநீர் திருடுகின்றான். அவன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுத் தண்டனை பெற்றுவிடுகின்றான். ஆனால் தென்னம் தோப்பின் சொந்தக்காரனாக இருப்பவனோ, முன்னர் அதே தோப்பை ஏற்கனவே இன்னும் ஒருவரிடம், அநியாயமாகக் கைப்பற்றி ஏப்பமிட்ட சொத்தாகவும் இருந்தும், அதே தோப்பில் ஓரிரு இளநீரைக் களவாடிய ஏழையைப் பிடித்துத் தண்டனை கொடுப்பது எவ்வளவு வக்கிரமான புத்தியல் லவா? பெரிய தவறுகளைச் செய்தவர்கள்கூடச் சின்னத் தவறுகள் செய்தவர்களை மன்னிக்கத் தயாராக இல்லாமல் இருப்பது சரிதானா?
இன்று, அரபு நாடுகளில் சிறு களவு செய்தவர்களா யினும், பெரும் குற்றம் செய்தவர்களுக்கும் கொடுக்கும், தண்டனைகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். களவு செய்தவனின் கரத்தையே கொய்துவிடுகின்றார்கள். அங்கு இத்தகைய கொடும் தண்டனைகள் விதிக்கப்படுவதனால் திருட்டுக்குற்றங்கள் மிகவும் குறைவாகவே காணப்ப டுகின்றன.
இன்று பல நாடுகளிலேயும் உள்ள அரசியல் தலைமைகள், தமது தகாத செயல்களால் தங்களால் ஏற்பட்ட பெரும் சுமைகளை அடுத்துவரும் அரசுகளில் - 28 -

65 TGOTLD சாதுர்யமாகச் சுமத்தித் தப்பித்துக் கொள்கின்றன. இதில் மிக சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஒரு அரசாங்கம் மிகப்பெரிய ஒரு திட்டத்தைத் தயாரித்து அதனை நிறைவேற்றி முடிக்கும், தறுவாயில் அந்த அரசு கவிழ்ந்துவிட அடுத்துவரும் அரசு ஆட்சிபீடமேறும்.
முன்னர், இருந்த அரசு செய்த பணிக்கும், புதிதாக வந்த அரசிற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையவே கிடையாது. ஆனால் அவர்கள் செய்த திட்டத்திற்கு முழு உரிமை கோருவதுடன், ஆரம்பம் முதல் இன்றுவரை தாமே அதனைச் செய்து முடித்ததாகக் கூறி, மக்களை நம்பவைத்து, திட்ட நிறைவை ஒரு வெற்றி விழாவாகக் கொண்டாடி மகிழ்வார்கள். இது போன்ற அநாகரிகமான, "திருட்டு" நடவடிக்கை வேறு என்ன? யாரோ எழுதிய கதையைத் தனது கதையாகச் சொல்லித் திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் மோசமான வேலை போன்றதுதான், நான் முன்னர் கூறிய ஏமாற்று நடவடிக்கை களாகும்.
இன்று காசு கொடுத்து பெரிய புலமைக்குச் சொந்தக் காரராக முனைபவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஒருவன் எழுதியதை, களவாகத் திருடுவது ஒருவரின், வித்துவத் தையே திருடுகின்ற செயல் அல்லவா? யாரோ ஒருவரைக் கவிதை எழுதச் சொல்லி, அதைவாங்கி அதை நானே எழுதினேன், என்று மேடையில் பாடலாமா? சொந்த முயற்சியில்தான் ஒருவன் துலங்கமுடியும். அடுத்தவன்
- 29 -

Page 17
பருத்திபூர் (40. ஜலிரஷதன் ஆக்கிய எந்த விஷயத்தையுமே எடுத்துத் தனதே அது வெனச் சொல்ல எவர்க்கும் அதிகாரம் இல்லை.
ஒருவருக்குச் சேரவேண்டிய "கீர்த்தி"களைச் சேர விடாது, அவை தமக்கேயானது என்று கூறிக் கவருவதும் கூட களவாடும் தன்மையானது தான்.
பரீட்சையில் தவறான முறையில் புள்ளிகளைப் பெறு கின்றவர்கள். ஆனால் அதன் மூலம் நல்ல பதவியையும் பெற்று விடுகின்றனர். மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தும் கூட வேறு மாணவர்கள் குறித்த புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருக்க தப்பான வழியில் புள்ளிகள் பெற்று பதவி பெற்றவர்களால் நஷ்டப்படுவது உண்மையாக உழைத்த வர்கள் அல்லவா? ν
சிறிது, சிறிதாகச் சேகரித்த செல்வத்தை நொடிப் பொழுதில் அபகரிக்கும் போது மனம் அடையும் துயரின் அளவு சொல்லிடமுடியாது. பட்டப்பகலில் ஒருவர் கொள்ளையன் ஒருவனால் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப் பட்டுக் கொள்ளையடிக்கப்படும்போது, வழியில் நிற்பவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள், விமர்சிக்கின்றார்கள். எவராவது, அதனைத் தடுக்க வருவதும் மிகக்குறைவான நபர்களாகவே இருக்கின்றார்கள். பேருந்தில், கைப்பையைத் திருடும் நபர்களைக் கையும் மெய்யுமாகத் தான் பிடித்த போதும் அங்கு நின்ற பொதுமக்களோ, அல்லது பேருந்தின் சாரதி, நடத்துனர்களோ ஒன்றும் வாளாதிருந்தனர். என்று
سے 30 =

65FT60,TLD ஒருவர் என்னிடம் புலம்பினர். இந்த இலட்சணத்தில், ஒரு பயணி "ஏன் ஐயா. நீங்கள் பேருந்தில் காசு, பணத்தைக் கொண்டு வருகின்றீர்கள். நீங்கள் சத்தமிடுவதால், எங்களுக்குத்தான் பிரச்சனை என்றார்.
இது என்ன கொடுமையான விமர்சனம்? காசு, பணத்தை பேரூந்தில் கொண்டுவராமல் விமானத்தில் அல்லது, தனியாக வாகனத்திலேயே கொண்டுவரமுடியும்? நகை, பெரும் பணங்களை மிக அவதானமுடன், எடுத்துவர வேண்டும் என்பது தெரிந்ததே! ஆனால், பணத்தைத் தொலைத்துத் தவிக்கும் நபர்களிடம் வந்து கண்டபடி அவர்கள் மனம் புண்படும்படி பேசலாமா? அவர்களின் பணம் கையாடப்பட்டால் இப்படி இன்னும் ஒருவர் விமர்சனம் செய்வதை அவர் அனுமதிப்பாரா?அவரவர் துன்பங்களை அவரவர் அனுபவித்தால்தான் அதன் வலி வேதனைகள் புரியும்.
மக்களின் மெளனமும் பாராமுகமும் பல சமூக அத்துமீறல்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உடந்தை போலாகி விட்டது. காவல்துறையினரின் கட்டுப்பாடான, நீதியான அணுகுமுறைகள் குன்றினால், அராஜகம், வன் முறைகளே நாட்டில் தாண்டவமாடும்.
போலி ஆவணங்களைத் தயாரித்தல், சட்டவிரோத
மான பொருட்கடத்தல்கள், போலி கடவுச் சீட்டுகளை
மாற்றியமைக்கும் மோசடிகள் எல்லாமே இன்று சர்வதேச, س= 31 =

Page 18
பருத்திபூர் பல. ஆயிரவநாதர் தேசிய தொழில்போல் ஆகிவிட்டன. சட்டம் இதனைத் தனது இரும்புக்கரம் கொண்டு அடக்கியேயாக வேண்டும். சமூகத்தின் மிகப் பிரபல்யமாக இருக்கும் பேர்வழிகள் தாங்கள் சம்பாதித்து சடுதியில் உயர வேண்டும் என்பதற் காக போதைவஸ்து தயாரித்தல், கடத்துதல் போன்ற கொடிய அபாயகரமான தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர். சமூகத்தைக் கெடுக்கின்ற எல்லாச் செயல்களுமே மறைமுகமாகச் செய்யப்படுவதால் இவை கள் யாவும் மக்கள் நலனையே கொள்ளையடித்துக் குதறி விடும் வேலைதானே?
எந்த ஒரு ஜீவனுக்கும் கெடுதல் செய்பவர்கள், கெட்ட ழிந்து போகின்றார்கள். தமது நாட்டு நலனுக்காக இன்னும் ஒரு வறிய நாட்டைச் சுரண்டுவதும் போர்களைத் தூண்டு வதும் ஒருபெரிய கொள்ளையடித்தல் செயல்தான்.
ஆனால், துரோகம் செய்து கொண்டு வேதம் ஒதும் நாடுகளை இயற்கை ஒருபோதும் மன்னிப்பதேயில்லை. இதை நாம் சரித்திரபூர்வமாகப்படித்து உணர்ந்திரு க்கின்றோம். யப்பான் நாட்டை அழிக்க அணுகுண்டுகள் இரண்டைப் பொழிந்ததால் யப்பான் பூரணமாக அழிந்து தொலைந்து விடவில்லை. மாறாக அது இன்று மேலோங்கி வளர்ந்து விட்டது. தமது நாட்டில் நோய்கள் பரவுதல், வெள்ளம் பெருக்கெடுத்தல், காட்டுதி, நிலநடுக்கங்கள், பயங்கர விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன என்பதை அந்த நாட்டின் தலைமைகள் உணருதல் வேண்டும்
- 32 -

65T60TLD
நியாயம், நீதி பிறழ்தலால் எந்த அனுகூலமும்
எவர்க்கும் கிடைத்துவிடப்போவதில்லை. கெட்டழிவதற்கு முண்டியடித்து முன்னே செல்லலாமா?
அனைத்து உலக மக்களின் நலன்களையும் சமூக, நாடு, கண்டங்கள் எனப் பாகுபாட்டு உணர்வுடன் நோக்கல் ஆகாது. முறையற்ற விதத்தில் எவர் எதனைக் கவர்ந்தாலும் அது அவர்களுக்கு"உரிமை"யானதுஎன்று சொல்ல முடியுமா? இச் செயல் இந்த உலகத்தின், அனைத்து மனித உரிமைகள், அவர்தம் சொத்துக்களையும் அபகரித்த அபகீர்த்தியான திருட்டுக் குற்றங்கள் என்பதை மறுக்க
(plquirtgil.
இதேபோல், தனிஒருவரின், அல்லது இனங்களின் சுதந்திரத்தை அபகரிப்பதும், தலையீடு செய்வதும் சகிக்க வொண்ணா மனித மனங்களைத் தகிக்கவைக்கும் காரியங்களே!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
12.08.2008
- 33 -

Page 19
பருத்திபூர் அல. ஆயிரவநாதன்
ஞானம்
அறிவின் முதிர்வாயும், அதனிலும் மேலானதாம் “ஞானம்" அறிவு நிலையில் மனிதன் சந்தேகங்களை உருவாக்குகின்றான். ஞானம், சந்தேகமற்ற உண்மைநிலை. இகத்திலும் பரத்திலும் முக்கியமானவை அனைத்தையும் இறைவன் அளித்தவண்ணமிருக்கின்றான். இன்ப, துன்பத்தினுள் ஆட்பட்டுப் பக்குவ நிலையில் தெளிந்தவன் ஞானி. இறைவனும் ஆன்மாவும் கொண்ட வாத்ஸ்யத்தினால் ஆன்மாவிற்குப் பேரின்ப ஞானம் கிட்டும். இறை பிரேமையின்றி சந்தோஷியாக முடியாது. எளிமையும் பரிபூரண அன்புப் பரிமாற்றங்களும் ஆன்ம விழிப்பூட்டலுக்கு இட்டுச் செல்லும்.
மோனத்தில் நின்று, புலன்கள் அடக்கி வென்று, ஒப்பிலா ஞானத்தைப் பெற்று உயர்ந்த அருள் ஞான வள்ளல்கள். தாம் பெற்ற அகண்ட ஞானத்தின் வாயிலாக இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தினையும் என்றுமே உய்வித்த வண்ணமாயுள்ளனர்.
- 34 -
 
 

ஞானம் அறிவின் முதிர்வாயும் அதனிலும் மேலானதாம் "ஞானம்" என்று சொல்லப்படுகின்றது. அறிவது அறிவு. அறிதலுடன், உள் உணர்வினையூட்டி ஆன்மா ஒளிபெறச் செய்தலே ஞானம் என்று கூறுகின்றார்கள்.அறிவு நிலையில் சந்தேகங்களை மனிதன் உருவாக்குகின்றான். ஆனால் "ஞானம்" என்கின்ற அதி உன்னத நிலை வரப்பெற்றால் சந்தேகம் கடந்த உண்மைநிலை உருவாகின்றது.
ஞானிகள் என்றும் எளிமையானவர்கள் ஆயினும், நாம் உலக டாம்பீகத்தினுள் மூழ்கிக்கிடப்பதும் அற்பமாயா உலகில் எம்மை மறந்து திளைத்து வாழ்கின்றோம் என்பதே ஆன்மீகவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சொல்லப்பட்டு வருகின்ற வார்த்தைதகளுமாகும். எனினும் இந்த உலகி னில் வாழ்ந்து காட்டுவது எப்படி என்றும் எமக்குச் சொல்லித் தந்தார்கள்.
பக்திமார்க்கம்,அன்பு,தயவு எல்லாமே மானுடத்தை எளிமையான வாழ்வு முறைகளால் செப்பனுடன் வழி சமைக்கின்றன. ஞானம் பெற்ற ஞானிகள் அன்பு எனும் திவ்ய உணர்வுடன் இணைந்து பேரின்ப நிறைவினைக் கண்டவர்கள் இவர்களாவர்.
எளிமையானவர்களால் தான் வலிமையான காரியங்
களைச் செய்யமுடிகின்றன. ஞானம் பெற்றவர்கள் சகல
வல்லமை கொண்ட போதிலும் கூட பிச்சையேற்றுத் தவ
மின்றி வாழ்ந்து காட்டினர். எதனையும் உருவாக்கு س 35 سم

Page 20
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் தலுக்கும், அருள் வழங்குவதற்கும், தங்களிடம் உள்ள சக்தியை இறைவன் மூலம் கொடுக்கும் திறன் கொண்ட வர்கள். இகத்திலும் பரத்திலும் எது முக்கியமானதோ அதுவே இறைவன் கொடையுமாகின்றது. முக்கியத்துவம் எனப்படுவது, அறிவு, ஞானம் என்பதனால், அதனையே தேடியவர்கள், அதுவேயாகின்றனர்.
உலக வாழ்வில் நாம் சகலதும் பெற்றிட அறிவு மட்டு மல்லாது, பெற்றிடும் அறிவின் மேலாம் பக்தியும், பண்பும், எமது ஆன்மாவை விழிப்பூட்டுபனவாய் அமைகின்றது. துன்பங்களைப் பறிப்பவனும், இன்பங்களை அளிப்பவனுமா கிய கடவுள் மாந்தர்க்கு, அவர் தம் அறிவு முதிர்ச்சி அனுபவம், நற்பண்பு, பக்குவ நிலைக்கு வந்தபின் "ஞானம்" என்கின்ற மிக அற்புதப் பெருங்கொடையினை நல்கின்றான்.
இறைவனும், ஆன்மாவும் ஒருவர்க்கொருவர் கொண் டுள்ள வாத்ஸல்யமானது, ஆன்மாவிற்குப் பேரின்ப ஞானத் தினை அளிப்பதுடன், அவன் சந்நிதியில் இரண்டறக் கலந்து கொள்ளச் செய்கின்றது. இறைவன் மீது ஆன்மா கொள் ளும் பிரேமை ஈர்ப்பினால் இறைஞானம் தானாக உதயமா கின்றது.
ஆன்ம ஞானம் எல்லா மதத்திற்குமே பொதுவானது. எல்லா மதங்களில் இருந்தும் ஞானிகள் தோன்றினார்கள். இன்னமும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆண்டவன் பார்வையில் எல்லோரும் ஒன்றே என்பது, இந்த - 36 -

ஞானம் மண்ணின் மீது அனைத்து சாதி, சமயத்திலிருந்து அவத ரித்த மகான்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்ற தல்லவா?
புத்தர், யேசு, நபி நாயகம், நாயன்மார், ஆழ்வார் கள் ரமணமகரிஷி, சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அருளாளர்கள் எமக்கு கடவுளாகவே காட்சி நல்கி எம்மை வழிநடாத்துகின்றனர். இந்த ஞானவான்கள் திரு அவதாரம் எடுக்காது விட்டால் இந்தப் பூமி தன் சமநிலை யை இழந்து தத்தளித்துத் தவித்துப் போய் விடுமன்றோ!
லெளகீய வாழ்வில் பொன்னும், பொருளும் சதமல்ல. மேலான இறை அருள், அன்புதான் மெய்யானது என ஞானிகள் உணர்ந்தமையினால் தான் அவர்கள் வைரத்தை, பொன்குவியல்களை, கற்களையும் கூட ஒன்றாக நோக்கினர். இந்தப் பிரபஞ்சத்தில் இருந்துதானே எல்லாமே வந்தன? எனவே எல்லாமே இறைவன் படைப்பு, எல்லாமே ஒன்று என்ற உணர்வு மேலோங்கியமையினால் எதனை யுமே பெரிது என அதன்மீது அதீத பிரேமை, வெறுப்பு என்ற எண்ணமின்றி நிர்ச் சிந்தையுடன் வாழ்ந்து காட்டினர். இவர்கள் வாழ்ந்த ஞான வாழ்க்கைச் சம்பவங்களை நிறையப் படித்திருக்கின்றோம். எனினும், நாம் எமது சிற்றறி வினால் இன்னமும் பூரண தெளிவின்றித் தடுமாறு கின்றோம்.
எமது பொது அறிவினாலும், விஞ்ஞானக் கண்டு
سے 37 سے

Page 21
பருத்தி பல. விவரக்
பிடிப்புக்களாலும் மெய்ஞானத்திற்கு விளக்கம் சொல்ல முடியுமா? மேலோட்டமான அறிவினால் எழும் சந்தே கங்கள், என்றுமே சந்தேகங்களாக நிலைத்து நிற்கின்றன.
மகா அலெக்ஸாந்தர், இந்தியாவில் புகுந்து பல இடங்களை வெற்றி கொண்டான். அவன் செல்லும் வழியில் ஒரு துறவி மரத்தின் கீழ் அமர்ந்த வண்ணமிருந்தார். அவர் மன்னரைக் கண்டு கொள்ளவில்லை. அலெக்ஸாந்தர மிகுந்த கர்வமுடன் "நான் வந்திருக்கின்றேன், தெரிய வில்லையா. நான், யார். என்று புரியவில்லையா என்றான். துறவியோ புன்னகையுடன் "அது சரி நீ, யார்?." என்று கேட்க, அவனோ நான் மாமன்னன் மகா அலெக்ஸாந்தர் என்றான். "அதுசரி. நீ என்ன செய்கின்றாய்.” என்று துறவி கேட்க, "நான் இந்த உலக நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி வருகின்றேன்" என்றான்."கைப்பற்றி முடிந்ததும், என்ன செய்யப் போகின்றாய்.” என்று துறவி கேட்க, அதன்பின்னர் நான் நிம்மதியாகப் படுத்துறங்குவேன் என்றான்.
"அடடா. இதைத்தானே நான் செய்கின்றேன். நான் எந்த நாட்டையும் கைப்பற்றவில்லை. பெரும் போர் செய்து மனித உயிர்களைக் கொன்று நாடுகளை வெல்லவும் இல்லை. ஆனால் நீயோ எவ்வளவோ இம்சைகள் பட்டுக் கஷ்டமுற்றுப் பெரும் பிரயாசைப்பட்டா, நிம்மதியாக படுக்கப் போகின்றாய்? நானோ, எதுவுமே செய்யாது நிம்ம தியாய் நிர்ச்சிந்தையால் வாழ்கின்றேன்" என்றார்.
- 38 =

ஞானம் மாமன்னன் அலெக்ஸாந்தர் வாயடைத்து அந்த மகானைப் பணிந்தான். உண்மை ஞானம் பெற்ற ஞானிகளின் இயல்பு இதுதான்.ஆன்ம வசீகரம் இன்றி ஞானம் வந்திடாது. நாம் எம்மை, எம் ஆன்மாவைக் கட்டுப்படுத்திச் சுய வசீகரத் தினுள் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று ஆன்ம விமோசனம் பெறப் போகின்றேன், எனச் சொல்லி, படோபகாரமாகத் தோன்றியுள்ளவர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். ஞானம் பெறுதல் என்பது, பல்பொருள் அங்காடிகளில் விற்கும் பொருள் அல்ல. “ஞானம், நித்யசந்தோஷம் வழங்குகின்றேன்", எனச் சொல்லும் சுவாமிகள் போன்றவர்கள், வாழும் வாழ்க்கை முறைக்கும், பேசும் உபதேசங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?
இலட்சக் கணக்கான ரூபாய்களை இவர்களிடம் கொட்டிக் கொடுக்கின்றார்கள். இவர்களைக் காணக் கட்டணம் செலுத்த வேண்டும்.தங்கக் கட்டில், பல்லக்கு களில் தாவுகின்றார்கள்.இவர்களின் பக்தர்கள் இவர்களைத் தூக்கி அலைகின்றார்கள் வாழும் அரண்மனை, ஒரு வல்லரசு நாட்டின் தலைவனால் கூடக் கற்பனை செய்ய முடியாது. ஆள், அடிமை, ஆர்ப்பாட்டம், ஒரே ராஜபோக வாழ்க்கை தான்! இந்த வாழ்க்கை வாழுபவர்களுக்கு "ஞானம்" ஏன் என்று கேட்காது ஓடிப்போகுமன்றோ!
ஞானம் பெற்ற வள்ளங்கள், ஈகையாளர்கள், அவர்கள்,
- 39 -

Page 22
பருத்திபூர் (40. ஆயிரலுருதஷ் மக்களிடம் நிதியுதவிகள், காணி, நிலம் கேட்கவில்லை.
அளவிட வியலாத பேராற்றல்களையும்,மன அமைதியை யும் கொடுத்தார்கள். மக்களிடம் கைநீட்டி சுகமான சீவியம் செய்பவர்கள் எப்படி சித்தத்தில் ஒளியூட்டும் ஞானத்தை நல்கிட முடியும் நண்பர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்.
கடவுளை நம்பாமல் எந்தவித ஆன்ம பலம் அற்ற மனிதர்களை நம்புவது கடவுளையே மறப்பது போல் இழி நிலைவேறு ஏதுமில்லை. மனிதர் எல்லோருக்குமே அறிவு உண்டு. சிந்தனைகளைப் புனிதமான உணர்வுடன் அதனை வியாபகப்படுத்தினால் மாபெரும் சக்தி கிளர்ந்து எழுந்து நல்லறிவூட்டுவதுடன் இறையுணர்வின் உண்மைத் தன்மை எதுவெனத்தானாகவே புரிய வைத்துவிடும்.
புனிதமான சூழலும், நல்லோர் வார்த்தைகள், உபதே சங்கள், அவர்தம் நேயங்கள் எமக்குள் ஞான ஒளியைப் பாய்ச்சி நிற்கும். சித்தத்தைத் தூய்மையாக்கினால், அத்தன் எனும் ஏக இறைவன் உள் உறைவது நிச்சயம்.
"வரம்” என்பதன் அர்த்தம் மிக உயர்ந்தவற்றுள் உயர்ந்தது என்பதாகும். இந்த உலக வாழ்விற்கு உவப் பான, நிலம், பணம் முதலானவற்றையே இறைவனிடம் மக்கள் வரம் எனக் கேட்கின்றார்கள். ஆனால், நிரந்தர மில்லாத பொருள் வரம் அல்ல. ஆன்மாவிற்கு நித்ய அமைதி வேண்டுவதே "மாவரம்” ஆகும். இந்த நித்ய அமைதி கண்டவர்களே ஞானிகளாவர். அழிவற்ற ஒன்று
- 40 -

GHTSUILö தானே எமக்கு வேண்டும். எனவே ஆன்ம ஞானமே, இறையுடன் அவர் ஒளியோடு ஒளியாய் கலந்த மேலான
இன்பம்.
துறவிகள் தனித்திருந்து தவமியற்றியதாகப் படித்திருக்கின்றோம். உலக வாழ்வில் இருந்து விடுபட்டு அவர்கள் தனிமையில் தவமியற்றினாலும் கூட அவர்கள் உலக ஷேமத்திற்காகத் தங்கள் தவ வலிமையினைப் பிரயோகித்தனர்.
நீரும், ஆகாரமும் இன்றியே பல ஆண்டுகளாக நிலத்தில், நீரினுள் இருந்தும் தவமியற்றினர். இந்தப் பிரபஞ்சத்தினுள் உள்ள பஞ்ச பூதங்களில் இருந்து தமது தேகத்திற்கான சக்தியைப் பெற்றனர். அது மட்டுமல்ல அவர்கள் இருந்த இடங்கள் எல்லாமே புண்ணிய பூமியாகின. அவர்கள் இருந்த மரம் கூடப் புனிதப் பேறு பெற்றதேயாகும். புத்தர் அரச மரத்தின் கீழ் இருந்து தவமியற்றி ஞானம் பெற்றதால் அரச மரம் பெரும் பேறு பெற்றது.
ஞானிகளில் இருந்து புறப்படும் ஞான அலைகள்
முழு உலகை மட்டுமல்ல, முழு பிரபஞ்சத்தையுமே ஆட்
கொண்டு விடுகின்றது. உலகமே அவர்களின் முன் மண்டி
யிட்டு வணங்குகின்றது. இந்த அற்புத புருடர்கள் வாழ்ந்
தமை எமக்காக, நாம் பூரணத்துவம் காண்பதற்கான வழி
காட்டலுக்கானதேயாம். ஞானக் கதிர்வீச்சு எங்கள் ܚ 41 -

Page 23
கருத்தியூ 840. ஆயிரவரர் பாவத்தைப் போக்கி உண்மைத் தேடலுக்கான பாதையை வகுப்பதுமாகும்.
அந்தகார மமதை எனும் மாய இருளுக்குள் மதி மயங்கிக் கிடப்பவர்க்கு சாதாரண கைவிளக்கினால் ஒளிகாட்டவியலாது. ஆன்ம ஞானிகளில் உள் இருந்து வரும் ஞான ஒளிதான் வழிகாட்டவல்லது. எந்த விதமான சிந்தனையுமற்று ஓர் மரத்தில் கீழ் இருந்து வரும் துறவிகள், யாரையும் சீண்டுவதில்லை. ஆனால் அவர்கள் எம் இதயத்தை தட்டி விடும்போது அதன் அதிர்வுகள், ஒப்பில்லா இனிய ஓசையாகி, ஞானசங்கீதம் எமக்குள் உருவா கின்றன.
பாகுபாடான எண்ணம் இன்றி எல்லோரையும் ஒரே தன்மையாகப் பார்க்கும் ஞானிகளை பெரும் சக்கரவர்த் திகள் பலரும், உயர்வான இடத்தில் வைத்துப் போற்றினர். ஆயினும் இந்தக் கெளரவத்திற்காக எளியோரை அவர்கள் மன்னருக்குரிய நிலைக்கும் கீழாக நோக்கியது கிடையவே கிடையாது. இந்தப் பக்குவநிலை அற்புதமானது. இது இறை நற்கருணை!
ஒரு துறவி, பேசாமல் சும்மா ஒரு இடத்தில் இருந்த
போது, வழியில் தன் பெரும் படையுடன் வந்த அரசன் அவர்
தன்னைக் கண்டும் காணாதது போல் இருந்ததால் ஆத்திர
மடைந்தான்."என்ன சுவாமிகளே. என்னைக் கண்டும்
காணாதவர் மாதிரி உட்கார்ந்திருக்கின்றீர்களே, நீர் என்ன - 42 -

ஞானLD பெரிய ஆளா.." என்று கேட்டான். அதற்குத் துறவியாரோ மிக அமைதியாக, நீங்கள் நிற்கின்றீர்கள், நாங்கள் அமர்ந்திருக்கின்றோம். யார் பெரியவர் என்று நீங்களே உணர்வீர்களாக என்றார். மன்னன் மெளனமானான்.
எந்தவிதமான எதிர்பார்ப்புகளுடன், வாழாதவர்கள் எவர்க்கும் ஏன் அஞ்சப் போகின்றார்கள்? ஒருவரிடம், ஏதாவது உதவிகளைக் கோரும் போதுதான் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டவர்களாகின்றோம். துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பார்கள். கொடுப்பவன் இரக்க வேண்டியதில்லை. அருள் சுரக்க அருள்பவர் ஒருவருக்கும் அச்சப்படவோ அன்றித் தலைகுனிய வேண்டிய தேவைகளுமில்லை.
இத்தகைய ஆன்ம வள்ளல்கள் மனம் குளிர்ந்தால் பூமி குளிர்மையேறும். எந்தவித சலனமற்று இருக்கும் ஞானிகளை நாடுவதற்கும்கூட எமக்கான சந்தர்ப்பங்களை இறைவன் உருவாக்கியே தீருவான். எமது வாழ்வின் ஒழுக் கங்களை, மானுடர்களுக்குமான மாண்புகளை உள்ளபடி உணர்ந்தாலே எமது நெஞ்சம் தானாகவே கனிந்து கொள்ளும்.
இன்று இன்னமும் பல ஆன்மீக ஞானிகள் பல சமூக
நலப்பணிகளை தமது அமைப்புக்கள் மூலம்,வியப்பூட்டும்
வண்ணம் அற்புதமாகச் செய்து வருகின்றனர்.கல்விக்
கூடங்கள், வைத்தியசாலைகள், கிராமிய தொண்டு س 43 سم

Page 24
மருத்திபூர் 00. ஜூரர் நிறுவனங்கள் எனப் பல தரப்பட்ட நிறுவனங்களை பணிகளை எந்த வித லாப நோக்கின்றி அருட்பணியாற்றி வருகின்றனர். மிகப்பெரிய பல்கலைக் கழகங்களையே இவர்கள் ஸ்தாபித்து நடாத்தியும் வருகின்றனர்.
துறவிகள் மக்களில் இருந்து விலகி வாழ்பவர்கள் அல்லர், என்பதை மெய்ப்பிக்கும் வகையாக ஆன்மீக நிறுவனங்களை இவர்கள் நடாத்தி மக்கள் பணிகளைச் செய்துவருவதானது அரசாங்கத்தின் பெரும் சுமைகளையே குறைப்பது மாகும். இறைஞானம் சேவைகளுடனும் இணைந்துபட்டதேயாம். அரசாண்ட பெருமன்னர்களில் இருந்து சாதாரண குடிமகன் வரை தன் ஆன்மாவை தூய்மையேற்ற வேண்டியவனாகின்றான்.
ஆசாபாசங்களுக்கும், லெளகீய, வாழ்வின் அழுத்தங் களுக்கும் உட்படாது அதே சமயம், சாமானியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சகல ஜீவன்களுக்குமான ஆன்ம விழிப்பி ற்குமாக தம்மையே ஆகுதியாக்கும்"ஞானம்" பெற்ற ஞானச் சுடரான அருளாளர்கள் என்றும் மரணமில்லாப் பெரு வாழ்வுடன் எம்முடன் ஜீவித்து ஒளியூட்டி வருகின்றார்கள். எங்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த ஞானிகளும், நித்ய சிரஞ்சீவிகளாகவே ஜீவிப்பதும் புதுமையானது அல்ல (86) LL606),
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 05.08.2008
一44一

அறுசுவை உடலுக்கானது. நகைச்சுவை, உள்ளத்திற் குமி உடலுக்குமானது. ஹாஸ்யத்தில் சிரிப்பை மட்டுமன்றிச் சிந்தனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விகாரம்ான, மனதை நோகடிக்கும் கேலிப் பேச்சுக்கள் நகைச்சுவையல்ல. அங்கவீனர்கள், மனநோயாளர்களை நகைச் சுவையாக ரசித்துக் கிண்டலடிப்பது கேவலமான செய்கை, நகைச்சுவையாளர்களை நோக்கியே மக்கள் செல்கின்றார்கள். மனதினுள் பாரம் நீங்கச் சிரித்து மகிழ்வதே சிறப்பு சோர்வின்றிச் செயலாற்றச் சிரித்து மகிழ்வோம்.
நகைச்சுவை சுவைகளுக்குள் மிகச் சிறந்ததாகும்.
அறுசுவை உணவு உடலுக்கானது. நகைச்சுவை, எம்
உடலுக்கும், உள்ளத்திற்கும் இசைவானதாகும். எந்த ஒரு
துன் பத்தினையும், தாங்க முடியாத மனிதமனம்,
நகைச்சுவைப் பேச்சுக்களைக் கேட்ட மாத்திரத்தே தம்மை
மறந்தே சிரித்து மகிழ்ந்து தேற்றிக் கொள்ளச் செய்கின்றதே! - 45

Page 25
பருத்திபூர் (40. ஆயிற்றிதழஷ் மேலும், ரசனையுடன் நாம் நகைத்தலால் ஆயுள் நீடிக்கும். துயரங்கள், துவம்சமாகும்.
நகைச்சுவை ரசனை இன்றி வாழும் வாழ்வு, உப்புச் சப்பின்றிப் போய்விடும். உயிர்ப்புடனும், சுறுசுறுப்புடனும், நாம் வாழச் “சிரிப்பு” அவசியமாகின்றது. தேக ஆரோக் கியமே வாழ்க்கைக்கு நிரந்தர தேவையாகையினால் இந்தப் பணியை நகைச்சுவை எமக்கு அளிக்கின்றது.
நல்ல நகைச்சுவைக் கதைகள், துணுக்குகள், நடிப்புக் காட்சிகளை நாம் காண்கின்றபோது, எமது மனது களிப்பில் ஆழ்ந்து விடுவதால் அது லேசாக அமைதியாகிவிடுகின்றது. "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போய் விடும்”
என்பார்கள்.
நகைச்சுவைகள், சிரிப்பூட்டுவதுடன் நின்றுவிடாது. சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைதல் வேண்டும். மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகர்களாகவிருந்த சார்லிசப்ளின், பொப்ஹோப் போன்ற மேல்நாட்டு திரைப்பட நடிகர்களும், கலைவாணர் என்-எஸ்-கிருஷ்ணன், டி-கே- துரைராஜா, கே. நாகேஷ் தங்கவேலு, சந்திரபாபு போன்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சிரிப்புடன் சிந்த னைக் கருத்துக்களையும் அள்ளித்தந்தவர்கள். அக் காலத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது இத்தகைய நகைச்சுவை நடிகர்கள் சமூக விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வந்தனர்.
- 46 -

65FIGOTLE நகைச்சுவையாளர்கள், ஒரு சமூக மருத்துவர்கள். அத்துடன் ஆன்மீகவாதிகள் மக்கள் இதயங்களைச் சுத்திகரிப்பது போலவே சத்தான இனிய கருத்துக்களைக கூட நகைச்சுவை ததும்ப மிக இலகுவில் மக்கள் நெஞ்சங் களைத் தொடுமாற்போல் பேசி வந்தார்கள். இவர்கள்சேவை
ஒரு தெய்வீகக் கொடையுமாகும். இத்தகையவர்களை மக்கள் பார்த்த மாத்திரத்தே சந்தோஷமுடன் கை கொட்டிச் சிரிப்பதுடன் அவர்களைத், தம்முள் ஒருவராகவே ஏற்றுக் கொண்டனர். மிக எளிமையாக வாழ்ந்து மக்களோடு மக்களாக அவர்கள் பிரச்சனைகள், துன்பங்களை அறிந்து துன்பங்களை மறக்கும் வித்தைகள் மூலம் "உளவளச் சிகிச்சை” செய்தார்கள் என்றே கூறுதல் வேண்டும்.
ஒருவரைச் சிரிப்பூட்டுவது சாதாரண விடயம் அல்ல. மனிதர் ஒருவரைப் புண்படும்படி பேசினாலே போதும். அவருக்கு உள்ளம் சுக்குநூறாக உடைந்து விடுகின்றது. அதே நேரம் புண்பட்ட மனதுடன் வரும் ஒருவரைத் தம் பக்கம் இழுந்து அவர்கள் பண்படும் வண்ணம் இன் சுவைப் பேச்சினால் மனம் களிக்கச் செய்தல் மிக அற்புதமான 35L60)LDLLI6ü6)(36) IIT!
ஒரு வைபவம் ஆரம்பமாகஇருந்தது. வைபவம்
ஆரம்பமாக முன்பு வெளியே ஒரு மரத்தடியில் மெலிந்த
தோற்றமுடைய ஒரு இளைஞரைச் சுற்றி, இளைஞர்கள்,
யுவதிகள், சுற்றி நின்று கொண்டிருந்தனர். இவர்கள் அனை
வருமே அந்த இளைஞர் பேசுவதையே மிக ஆர்வமுடன்
கேட்டுக் கொண்டிருந்தனர். இளைஞன் பேசும் ஒவ்வொரு - 47 -

Page 26
பருத்திபூர் அல. ஐவிரலுருந்தர் வார்த்தைக்கும், எல்லோருமே சிரித்துக் கொண்டேயிருந் தனர். அவனை வாஞ்சையுடன் நோக்கி அவனையே வைத்த விழி விலகாதிருந்தனர். சொல்லப் போனால் அந்தச் சுற்றுப்புறமே ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போயி ருந்தது. அவனது நகைச்சுவைப் பேச்சு எல்லோரையுமே கட்டிப் போட்டிருந்தது.
சற்றுநேரத்தில் அந்த இளைஞன் "சரி. சரி நேரமாகி விட்டது. வாருங்கள் நிகழ்ச்சிக்குப் போவோம்” என்று அழைத்ததும் அனைவருமே அவனைப் பிரியமனமின்றி அவனைத் தழுவி விடை பெற்றனர். மேலும், ஒருவரைக் கவர்ந்திழுக்க வெளி அழகுத் தோற்றம் அவசியமேயல்ல. சமூகத்தில் ஒரு நகைச்சுவையாளர் ஒருவருக்குக் கிடைக்கும் கெளரவமே மேற்படி நிகழ்ச்சியாகும்.
முற்காலத்தில் அரச சபையில் மந்திரி பிரதானிகள் அனைவரும் உள்ள இடத்தில் தங்கள் வேலைப்பளு, மன அழுத்தங்கள்ை விலக்க அரண்மனை விதூஷகர்கள் (விகட கவி நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தங்கள் மதிநுட்பத் தினுடனான, சாதுர்யமான பேச்சுக்களால், அனைவரையும் மகிழ்வித்தனர். இவர்கள் அரசர்களுக்குப் புரியாத பல பிரச்சனைகளைத் தீர்த்தும் வைத்தனர். ஒரு நீதிபதி போல் செயல்பட்டு வந்தார்கள்.
விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராய மன்ன ரிடம் தெனாலி இராமன் என்கின்ற விகடகவி இருந்தார்.
- 48 -

ஞானம் தெனாலி இராமன் கதைகள் உலகின் மிகப் பிரபலமான நகைச்சுவை, நீதிக்கதைகளுமாகும்.மேலும் டெல்லியின் அக்பர் பாதுஷாவின் அரண்மனையைப் பீர்பால் என்கின்ற மாபெரும் நகைச் சுவையாளர் இருந்து அரசரின் பேரபிமானத்திற்குரியவரானார். பீர்பால் கதைகளும் மிகப் பிரபலமானதே. மேலும் முல்லா நசுருதீன் கதைகள் சமூகத்தின் உள்ள மானுட பலவீனங்களை, மனித மன இயல்பினைக் லேசாகக் குத்திகாட்டி சிரிப்புடன் சிந்தனை யைத் தூண்டுவனவாகும். இவைகளைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படிக்கின்றார்கள்.
தவறான முறையில் விரசமான இரட்டை அர்த்தத் துடன் பேசுவது நகைச்சுவை ஆகாது.இந்நடவடிக்கைகள் குழந்தைகள் மனதைத் திசைதிருப்பிவிடும்.ஆயினும் மமதையுடன் நடந்து கொள்ப்வர்களைச் சவுக்கடி போல் நகைச்சுவையாகப் பேசித் தமது பிழைகளை உணரச் செய்பவர்களின் திறமைகள் தனித்துவமானது.
ஒரு குறுகிய ஒற்றையடிப் பாதை, ஒரு முரட்டு ஆசாமி அவ் வழியே சென்று கொண்டிருக்கின்றார். அவர் எதிரே ஒருவர் வந்து கொண்டிருந்தார். ஒருவர் வழிவிட்டாலே மற்றவர் பாதையைக் கடக்க முடியும். முரட்டு மனிதரோ எதிரில் வருபவரை மட்டம் தட்டும் நோக்குடன் "நான் முட்டாள்களுக்கு வழிவிடுவதில்லை" என்றார். ஆனால் அதைக் கேட்டவரோ புன்முறுவலுடன், அவரைப் பார்த்து "நான் வழிவிடுவதுண்டு” எனச் சொல்லிப் பாதையை விட்டு
- 49 -

Page 27
பருத்திபூர் 00. ஆயிரவருதல் விலகி வழிவிட்டார். கர்வமுடன் பேசியவருக்கு அசடு வழிந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
உலகின் பல அறிஞர்கள் ஞானிகள், ஆன்மீக வாதிகள் பலருமே நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாக இருந்தார்கள். பெர்னாட்ஷா என்கின்ற பிரபலமான தத்துவ ஞானியிடம் ஒரு அழகி வந்தாள். "ஐயா, எனது அழகும், உங்கள் அறிவுடன் கூடிய ஒரு குழந்தை பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எனவே என்னைத் தாங்கள் திருமணம் செய்தால் என்ன” என்று கேட்டாள். அவளது பேச்சைக் கேட்ட பெர்னாட்ஷா அவர்களோ "வாஸ்தவம் தான், ஆனால் ஒன்று, சிலவேளை எனது உருவமும் உனது அறிவும் உள்ள குழந்தை எமக்குக் கிடைத்தால். எப்படியாக இருக்கும்” எனத் திரும்பக் கேட்டார்.
சுவாமி இராமகிருஷ்ணர் கூறிய பல நீதிக்கதைகள் அற்புதமானவை. அவற்றுள் ஒன்று, ஒரு ஞானிமுன் ஒரு துறவி வந்து சொன்னார். "நான் பல ஆண்டு காலங்கள் தவம் இயற்றிப் பல அற்புதமான சித்துக்களைப் பெற்றுள் ளேன்” என்றார். "என்ன என்ன சித்துக்களைப் பெற்றுள்ளீர்" என்று ஞானி கேட்க, நான் நீரின் மேல் நடந்து அதோ தெரியும் அந்த ஆற்றைக் கடந்துவிடுவேன் என்றார். அது கேட்ட ஞானியோ, சிரித்தபடி, "அடடா. இந்த ஆற்றைக் கடந்துபோக, நீரில் நடக்க, அதற்காகவா இத்தனை வருடங்கள், தவமிருந்து இந்தச் சித்துக்களைக் கற்றீர்கள். ஆற்றைக் கடப்பதற்கு ஒரு அனா போதுமே படகுக்காரன்
- 50 -

ஞானம்
கொண்டு சேர்ப்பித்து விடுவானே" என்றார்.
இந்தக் கதையில் எவ்வளவு தத்துவங்கள் இருக்கின் றன. எமது தவம் எமக்கு மட்டுமல்ல, யாவருக்குமே நன்கு பயன்பாடு உள்ளதாக அமைய வேண்டும். நல்ல செயல் செய்வதுகூட ஒரு மாதவம்தான். சில மாணவர்கள் தமது தவறுகளைச் சாமர்த்தியமாக மறைத்துப் பேசுவார்கள். ஒரு மாணவன் தன்னுடைய ஆசிரியரிடம் கேட்டான்" ஐயா. ஒருவன் செய்யாத தவறுக்காகத் தண்டனை அவனுக்கு வழங்கப்படலாமா என்று கேட்க, ஆசிரியரோ,.” கூடவே கூடாது." என்று சொல்லவும், அவனோ "ஐயா. இன்று நான் வீட்டுக் கணக்கைச் செய்யவில்லை” என்றான். ஆசிரியரோ திகைத்துப் போனார்.
குடும்பத்தினுள் நடக்கும் நகைச்சுவை, நீதிமன்ற நகைச்சுவை, பாடசாலைகளில் பேசும் கேலி, கிண்டல்கள், மருத்துவமனை, பொது இடங்களில் நடந்து கொண்டி ருக்கும், உரையாடல்களை சுவாரஸ்யமான, துணுக்கு களாக நாம் படிக்கும் போது எம்மையே, மறந்து
விடுகின்றோம்.
திருடன் ஒருவன் வீட்டினுள் புகுந்து கணவன்
மனைவியைக் கட்டிவிட்டு வீட்டில் உள்ள பொருட்களை
எடுத்துக் கொண்டு செல்லு முன் கணவன் திருடனை
அழைக்கின்றான். சரி போனால் போகின்றது, அழைக்கின்
றாரே என்று அவருக்குக் கிட்ட வந்து "என்ன வேண்டும்?" - 51 -

Page 28
பருத்திபூர் 04ல. ஆயிரவருதல் எனக்கேட்க, “ரொம்ப நன்றி. ரொம்ப. நன்றி” என்கின்றார். "என்ன. ஐயா நன்றி நான் திருடியதற்கா நன்றி” என்றார். அதற்கு அந்த நபரோ.""ஒன்றுமில்லை, எனது மனைவி வாயை என்னாலேயே கட்ட முடியவில்லை. ஆனால் நீ, இவளது வாயைத் திறக்க முடியாமல் கட்டி விட்டாய், மேலும் இவளின் மோசமான சமையலை எவ்வளவு ஆர்வமாகச் சாப்பிட்டு மீதியை உனது வீட்டிற்கும் எடுத்துக் கொண்டு செல்கின்றாய். உனது ரசனையை, வீரத்தை என்ன என்பது? ரொம்ப நன்றி அப்பனே" என்ற துமே திருடனுக்கு வாய் அடைத்துவிட்டது. இன்னும் ஒரு துணுக்கு இதோ.
"உலகில் சந்தோஷமானவர்கள் யார்” என்று, ஒருவர் கேட்க மற்றவர் சொன்னார் "இன்னமும் இந்த உலகில் பிறக்காதவர்களும் ஏற்கனவே இந்த உலகில் இருந்து விடைபெற்றுச் சென்றவர்களும் தான்" என்றார். உண்மை யில் நாம் எல்லோருமே நல்ல ரசனை உணர்வுள்ளவர்க ளாக இருந்தால் தான் இந்த உலகை நன்கு அனுபவித்து ரசிக்க முடியும்.
எந்த விஷயங்களையும், மிகவும் பாரதூரமாகக் கருதாமல் அவைகளை சந்தோஷமான, சிரிப்பூட்டும் விஷய மாக நோக்கினால் வாழ்வு மிகவும் இயல்பாகி விடுமல்லவா? எவரையும், எதிரியாக நோக்காமல் எவர் மனதையும் புண்படுத்தாமலும் வாழ்வதில் என்ன ஐயா, சிரமம் உள்ளது?
- 52 -

65ITGOTLD கேலிப் பேச்சுக்கள் என்கின்ற ரீதியில் திரைப்படங்கள், சஞ்சிகைகளில்ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, குலத்தை அல்லது செய்யும் தொழிலைக் கொச்சைப்படுவது, மிகவும் கண்ணியக் குறைவான செயலாகும். அதை விட வருந்த தக்க விஷயம் என்னவெனில், அங்கவீனர்களை அவமானப் படுத்திக் கிண்டலடிப்பதாகும். மக்கள் இத்தகையவர் களைக் கேலி செய்யும் போது சிரித்து மகிழ்வது கொடுமையிலும் கொடுமை ஐயா! ஒருவரைத் தாழ்த்து வதும், அவர்கள் அவமானப்படும்போது சிரிப்பதும் ஆணவச் செருக்கு அன்றோ! ஒருவர் விழும்போது ஏறிமிதிக்கலாமா?
ஒரு ஹாஸ்ய நடிகர் மற்றவர்களைச் சிரிப்பூட்டுவதற் காகத் தனது உடலை வருத்துகின்ற நிலை ஏற்படுவதுண்டு. சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கோமாளி அங்க சேஷ்டை களைச் செய்யும் போது தடுக்கி ஏணியில் இருந்து வீழ்ந்துவிட்டான். அதுவே ஒரு நகைச்சுவை எனக் கருதி மக்கள் விழுந்து, விழுந்து சிரிக்கலாயினர். நிகழ்ச்சி முடிவில் அவரது சர்க்கஸ் குழு நண்பர்கள், "என்ன விழுந்து விட்டீர் களே பலமாக அடிபட்டு விட்டதா" என்று அனுதாபத்துடன் கேட்டார்கள்.
அதற்கு அவரோ, "மக்கள், குழந்தைகள் சிரித்து
மகிழ வேண்டுமாயின் நான் எத்தனை தடவைகளும் என்
உடலை வருத்துவதற்குத் தயார்” என்றார். சனங்களைச்
சிரிக்கச் செய்ய தங்கள் உடலை அஷ்ட கோணலாக 一53

Page 29
பருத்திபூர் 00. அரவநாதர்
வளைப்பதும் முகத்தை மேனியை விகாரமாக்கிச் சிரிப்பை வரவழைக்க இவர்கள் செய்யும் முயற்சி உண்மையில் வியப்புக்குரியது. தங்கள் அழகை மாறுபாடாக்கி விழுவதும், உருளுவதும், அடிவாங்குவதும் அதனையே மக்கள் முன் காட்டிட மன உறுதியும் வேண்டுமல்லவா? வெறும், பணத்திற்காகத்தான் இப்படிச் செய்கின்றார்கள் எனச் சொன்னாலும் படும் அசெளகரியங்கள் பற்றியும் நாம் உணரவேண்டும்.
சமூகத்தில் நாம் பலவிதமான பலவீனங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இவைகளை ஒருவர் நாசூக்காக எமக்குச் சொன்னால் எம்மால் அதனை ஏற்க முடிகின்றது. சிரிப்பூட்டும் வண்ணம் சிலர் சொல்லும் செய்திகள் எம்மைத் திருந்தி வாழவும் வழிசமைக்கின்றது.
நகைச்சுவைக் கதைகளில் திரைப்படங்களில் தப்புச் செய்பவர்கள் அதை மறைக்கச் சொல்லும் பொய்யான நகைச்சுவைக் காரணங்களை, நடிப்புக்களை, ரசிக்கும் படியாகச் சொல்லும் போது உண்மையில் இவைகளைப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள் நிச்சயமாகத் திருந்தியே விடுவார்கள்.
நீதிமன்றத்தில் திருடனைப் பார்த்து நீதிபதி எதற்காக
நீ, பொது இடத்தில் வைத்திருந்த பொருட்களைத்
திருடினாய் என்று கேட்கத் திருடனோ "ஐயா, நேற்று இரவு
கோவிலில், பிரசங்கம் செய்தவர் இந்த உலகம் - 54 -
s

ஞானம் பொதுவானது, இது எல்லோருக்குமே சொந்தமானது அவைகளை உங்கள் சொத்துக்கள் போலக் கருதுங்கள் என்றார். அப்படி இருக்க நான் நீங்கள் சொன்ன பொருளை எடுத்தது தப்பாகுமா” என்று கேட்டான். இப்படிச் செய்த தவறுக்கும் நியாயம் சொல்லும் மனிதர்களும் இருக்கின் றார்கள்.
குழந்தைகளை மகிழ்வூட்ட கார்ட்டூன் (கேலிச் சித்திரங்கள்) காட்டப்படுகின்றன ஸ்பெயின் நாட்டில் மன அழுத்தத்தைக் குறைக்கச் சிரிப்புச் சிகிச்சை முறை கையாளப்படுகின்றன. நகைச்சுவை மன்றங்கள் எல்லா நாடுகளிலும் இன்று இயங்கி மக்கள் மனச்சுமை மன அழுத்தங்களைக் குறைக்க அறிவுரைகளை நகைச்சுவை யூடாக வழங்குகின்றன.
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்கள் சிரித்து மகிழ வேண்டும். இதனால் இரத்தோட்டம் சீராகின்றது. நாம் தினசரி வாய்விட்டுச்சிரிப்பதை ஒரு வழக்கமாகக் கொள்ள வேண்டும். முற்காலத்தில் கூத்துக்கள், நாடகங் களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டே வந்தன. இந்த முறையிலே அவை இன்னமும், கலை, நிகழ்ச்சிகளில் பின்பற்றப்படுகின்றன. விரக்தியை நீக்கி மனத்துக்குச் சக்தியூட்டும் நகைச்சுவை ஆச்சரியமூட்டும்
ஒளடதமாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி, 19.08.2008
- 55 -

Page 30
பருத்ரிபூர் பல. ஆயிர்வரர்
ICIU
தற்பெரும்ை
தற்பெருமை பேசுதல், காலத்தையும் செயல்களையும் விரயமாக்குமி மனதில் அகந்தையுண்டானால் புதியன படைக்க மனம் மறுக்கும். தமக்குமட்டும் எல்லாமே தெரியும், மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியா என எண்ணினால் ஒன்றையும் கற்றுவிட முடியாது. பணம், புகழ் கூடிவரும் போது பணிவு கனிவுடன் பற்றி நிற்க வேண்டும். நாம் சார்ந்த மதம் மொ நாடுகள் மட்டுமே மேன்மையானது, ஏனையவை எவையுமே புனிதமற்ற என எண்ணுதல் பேதமை பொருந்திய தற்பெருமை தான். உளவளத்ை வளர்க்க தற்பெருமையை அகற்ற வேண்டும்.
தற்பெருமை அகந்தையில் உற்பத்தியாகின்றது. தங்களை விட மற்றவர்க்கு ஏது தகுதி என்கின்ற சற்றேனும் சிந்திக்காத இயல்பினால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது கேட்பவர் செவிகளை மரத்துப் போகச் செய்யும் செயல் தான். மேலும், தங்களைப் பற்றிய விளம்பரங்களை தங்கள் மேலான அலுவல்களாகக் கொண்டியங்கும் பேர்வழிகளும் இருக்கின்றார்கள்.
- 56 -
 
 
 
 
 
 
 
 

560Tib நல்ல தகுதிகள், திறமையுள்ளவர்களுக்குப் பேச நேரம் இருக்காது. ஆனால் திறமையுள்ளவர்களின் கீர்த்தி யை முடக்கும் கனவான்களும் இருக்கின்றார்கள். எந்தவித விசேட தகுதிகளும் இல்லாதவர்கள் ஜம்பமாகப் பேசு
வார்கள். தாங்கள் செய்கின்ற சின்னப் பணிகளையும் பிரமாதப்படுத்திச் சொல்வார்கள்
“இன்று நான் சந்தைக்குப் போனேன். என்னைக் கண்டதுமே எல்லா வியாபாரிகளும் வந்து "என்ன வேண்டும் ஐயா" என்று கேட்டார்கள். நான் கேட்குமுன்னரே தட்டுப் பாடான சாமான்களை எல்லாம் தந்துவிட்டார்கள். "உங்க ளால் இதுவெல்லாம் முடியுமா” என்று சொல்லிக் கொள்வார். கடையில் சென்று காசைக் கொடுத்தால் எல்லாமே கிடைத்து விடுகின்றது. ஏதோ தனக்காகத்தான் கடைதிறந்து வைப்பதுபோல் பிரமாதமாக எதற்குப் பொய் பகர வேண்டும்?
இன்னும் சிலர் "நான் மட்டும் என்னைப் பற்றிச் சொல்வதேயில்லை. என்னுடைய தகுதிக்கு நான் எவ்வள வோ சொல்லலாம்”, என்று சொல்லத் தொடங்குபவர் தொடர்ந்து சுயபுராணம் பாடத்தொடங்கினால் மனிதர் நிறுத்தவே மாட்டார். இதுவெல்லாம் தற்புகழ்ச்சி என்று அவருக்கே புரியாதா? சபை நடுவில் எப்படியாவது ஏறினால் சரி என்று மேடையில் ஏறி அவமானப்படும் மனுஷர்களை நீங்கள் பார்த்ததில்லையா? தெரியாத்தனமாக ஒருவரிடம் ஒரு விஷயத்தைப் பேசச் சொல்லி மேடையில் ஏற்றினால்
57 -

Page 31
பருத்திபூர் பல. ஒலிவருந்தர் போதும் அவர் மேடையில் தரப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டுத் தம்மைப் பற்றியும், தன் குடும்ப பெருமை களைப் பற்றியுமே விலாவாரியாகப் பேசி சனங்களின் பொறுமையைக் குத்திக் குதறியே விடுவார்.
தற்பெருமைக்காரர்கள் அடுத்தவர் மன இயல்பு களைப், புரிவதேயில்லை. ஒன்றுமே தெரியாமல் புரியாமல் வாய் ஒன்றினாலே எல்லாவற்றையுமே சாதிக்கலாம் என்று எண்ணி மற்றவர்க்குப் போதனை செய்யும் பிரகிருதிகள் தங்களுக்கான அருகதை என்ன எனப் புரிந்துகொள்ளச் சம்மதமளிப்பதேயில்லை. மேலும், தந்திரசாலிகள் தங்க ளைப்பற்றி விளம்பரம் செய்யும் உத்திகளே வியப்பாக இருக்கும்.
சமூகப் பிரபலங்களுடாகத் தங்களை எப்படியாவது பாராட்டும்படி செய்வதற்காக அவர்களுக்காகப் பெரும் விழா எடுப்பார்கள். அவர்கள் அதற்குப் பிரதியுபகாரமாக தங்களை உச்ச நிலைக்கு வைக்க முயற்சி செய்பவர்களைப் பாராட்டித் தீர்ப்பார்கள். ஆனால், குறுக்குவழியில் பாராட்டைப் பெற்ற அதே நபரோ "ஐயய். யோ. எனக்கு இந்தப் பாராட்டுதல்கள் எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நான் ஒரு சாமானியன், என்னைப் பாராட்டிப் பேசுகின்றார்கள். எனக்கு எந்தத் தகுதியுமே இல்லை" என்று அடக்கமாகக் கூறி நடிப்பார்.
உண்மையில், தகுதியுள்ளவனுக்கே பாராட்டுதல்கள்,
- 58 -
 

ஞானம் புகழ் கீர்த்தி சொந்தமாவதற்கு அருகதையுண்டு. இன்று இந்த உலகில் கீர்த்தி மிக்க சான்றோர் மேடையில் வெளியுலகில் கண்டபடி தோன்றக் கூச்சப்படுகின்றார்கள்.
மின்மினிப் பூச்சிகள் எல்லாமே சூரியன் முன் சவால் விடுகின்றன. நாக்கிழிப் புழு (மண்புழு "நாகபாம்புக்கு என்ன பலம்" உண்டு என்று கேட்பதுபோல் அறிவிலிகள் ஆரவாரத்துடன் சுயபுராணம் ஒதுகின்றனார். மிகவும் வேதனையான விஷயம் என்னவெனில், மிகத் திறமைசாலி களை ஒரம்கட்டி விடுவதனால் தாங்கள் மேன்மையடை யலாம் என்று சிலர்தப்புக்கணக்குப் போடுகின்றார்கள். வேண்டப்பட்ட வர்களை மேடையில் ஏற்றித் துதிபாடுவதும் வல்லவர்கள், நல்ல பெரியோர்களை கண்டு கொள்ளாமல் தரம்தாழ்த்தச் சதிநடவடிக்கையில் ஈடுபடுவதும் கொடுமை,
தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதுபோல் நடந்து கொள்பவர்களை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு பிரபல மான பயில்வான், தனக்கு நிகரானவர் ஒருவருமே இல்லை எனச் சவால் விட்டான். தன்னை தனது குருவினால் கூட ஜெயித்து விடமுடியாது என்று கூறியதுடன் அவரையும் தன்னுடன் வந்து சண்டையிடுமாறு பகிரங்கமாவே வேண்டுகோள் விடுத்தான்.
வேறுவழியின்றிக் களமிறங்கினார் வயதான அந்தக்
குரு சிஷ்யனான அந்தப் பயில்வான் குருவை அலட்சிய
மாக நோக்கினான். சண்டை ஆரம்பமானது. குருவானவர்
முதல் விட்ட சாதுர்யமான குத்திலேயே இளைஞனான - 59 -

Page 32
பருத்திபூர் (40, வயிரவருந்தர் பயில்வான் சுருண்டு விழுந்தான். நோவினால் ஈனஸ் வரத்தில் குருவிடம், "நீங்கள் எனக்கு இந்தச் சண்டை முறையை ஏன் கற்பிக்கவில்லை" என்று பரிதாபத்துடன் கேட்டான். குருவோ புன்னகைத்தபடி உன்னைப் போன்ற வர்களால் எனக்கு இந்த நிலை ஏற்படலாம் என அறிந்தி ருந்தமையினால் தான் இந்த நுட்பமான யுத்த முறையைச் உனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றார்.
என்னதான் ஒருவன் தன்னைப்பற்றி அதீதமான, கற்பனைகளுடன், ஆணவத்துடன் பேசிக்கொண்டாலும், வல்லவனுக்கும் வல்லவன் என்றும் இருப்பான், என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கையில் ஒருவர் பேசுவதற்கும் தம்மைப் பற்றியே பெருமையாகச் சொல்வதற்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. மற்றவர்களைக் கெளரவமாக நோக்குபவனுக்கே தன்னை உயர்த்தும் தகுதியும் உண்டு. மற்றவர்களைக் கேலியாக நோக்குதலும், அவர்கள் பற்றிய பெருமைகளை மறைப்பது, கெடுப்பவர்களுக்கு, தங்கள் திறமைகளைச் சொல்ல எந்தவித தார்மீகத் தகுதிகளும் இல்லை.
உண்மையிலேயே நல்ல திறமைகளை வைத்திருப்
பவர்களுக்கும் கூட பொறாமை, புகைச்சல், போன்ற கெட்ட
குணங்கள் இருக்கலாம். ஏன் கற்றறிந்த பல அறிஞர்கள்
கூடத் தம்மை விடப்படித்தவர்களைப் பகிரங்கமாகத் தாக்கிப் - 60 -

ஞானம் பேசுகின்றார்கள். இந்தச் செயல் கற்ற கல்வியையே கேவலப்படுத்துவதாக அமையும். மேலும் கற்றறிந்த சிலர் தமது வித்துவத்தின் உயர்ச்சியால் நடந்து கொள்ளும் முறைகள் எரிச்சலூட்டுவதாகவும் அமையலாம்.
வித்துவக் கிறுக்கர்கள் என்று சிலரைப் பற்றிச் சொல்வார்கள். ஒன்றுமே தெரியாதவன் தன்னைப் பற்றிப் புளுகுகின்றான். நான் எதற்கு, மற்றவர்களுக்காக அடி பணிய வேண்டும், எல்லோருமே என்னிடம் வந்தாக வேண்டும் எனுமாற்போல் நடந்து கொள்வார்கள். பொது வாகப் புலவர்களிடம் இத்தகைய ஆணவ முனைப்புகள் இருந்ததாகப் படித்திருக்கின்றோம். படிக்காத பாமரர்களை விட படித்த பண்டிதர்களே சபையில் மோதுவதுண்டு. இந்தக் குணங்கள் எல்லாமே ஒரு மனித பலவீனம் தான்.
எல்லோருக்குமே பொது வாழ்வில் மக்களிடம் பழகும்போது கண்ணியக் குறைவாக நடப்பது தவறு என்பது தெரியாதா? இன்னமும் கூடத் தங்களிடம் எந்தவித தகுதியையுமே வளர்த்துக் கொள்ளாமல் தான் சார்ந்த சாதி பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். மிகவும் கஷ்டப் பட்டுத்தான் அந்தச் சாதியில் வந்து அவதாரம் எடுத்தாரா என்ன? எந்த சாதி பற்றிப் பெருமையாகப் பேசிக் கெளர வத்தை எடுக்க எண்ணுதலும் அல்லது பெற்ற செல்வம், பதவியால் மற்றவர்களுடன் இறுமாப்புடன் உரையாடு வதால் அதைக் கேட்பவனுக்கு அதனால் என்ன லாபம் வந்து விடப்போகின்றது?
- 61 -

Page 33
பருத்திபூர் அல. ஐவிரல்
இந்த அறியாமையினால் எழுந்த பேச்சுக்கள்,
செய்யும் அகம்பாவ நடவடிக்கையினால் மற்றவர்களுக்குக்
கோபம், குரோதம், வெறுப்பு அருவருப்புத்தான் தோன்றும்.
எவரையும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தித் தம்மை உயர்த்திவிடமுடியாது. தங்கள் பெருமை மிகு பேச்சுக்களை மற்றவர் செவிகளில் ஏற்றுதல் அடுத்த வனுக்கு எவ்வளவு சிரமம் தரும் என்பதை ஏன்தான் உணரா மல் இருக்கின்றார்கள் ஐயா?
உண்மையான திறமைசாலிகள் கூடச் சில சமயம் குழந்தைகள் போல் நடந்து கொள்வதுண்டு. இவர்களின் வெளிப்படையான பேச்சும், போக்கும் வித்தியாசமாக இருப்பதுண்டு அவர்கள் தங்களைப் பற்றிச் சொல்லும் தகவல்களை மற்றவர்கள் நம்புவதுமில்லை. ஏதோ பொய் சொல்கின்றார் என்பார்கள்.
எவராவது தங்கள் திறமைகள், பெற்ற வெற்றிகளை தக்க இடம், சந்தர்ப்பங்கள் அறியாது வெளிப்படுத்துதலால் அவர்களைப்பற்றிப் பிறர் உணராத தன்மையை ஏற்படுத்தி விடலாம். ஒரு விஞ்ஞானி தனது கண்டுபிடிப்புக்கள், அதன் தாற்பரியங்களைச் சாதாரணமான, அது பற்றிய எந்த அறிவுமில்லாத பாமரனிடம் சொல்லி விட முடியாது. கலைகளை உணராத, ரசிக்க முடியாதவனிடம் அதுபற்றி விளக்கம் சொல்ல முடியுமா? இடமறிந்து எவரும் தங்கள் விடயங்களை எடுத்துரைக்க வேண்டும்.
- 62 -

ஞானம் ஊருக்குள் பெரிய பெயர் பெற்ற கனவானாக இருப்பவர், வெளியிடங்களில் அவர் பெற்ற கீர்த்திகளை அவராகச் சொல்லிட முடியாது. அதை எவரும் நம்பமா ட்டார்கள். அவர்கள் பெருமையை வேறு யாராவது சொல்ல வேண்டும். மற்றவர்களாகப் பெருமைப்படுத்துதலும் கெளரவமளிப்பதுவுமே உண்மையான திருப்தியளிப் பதாகும். எங்கள் திறமைகளை எமது வாயினால் இழந்து விடக் கூடாது. பல திறமைசாலிகள் இதனையே செய்து வருகின்றார்கள்.
நாங்கள் பெற்ற நல்ல அனுபவங்களைப் பெற்ற கீர்த்திகளை, எவ்வித மமதையுமின்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். வெற்று வெளியில் ஒருவருமின்றி உரத்துச் சொல்வதனால் பயன்இல்லை. ஆயினும் ஆபத்துமில்லை. ஆனால், உரிய தகவல்களை உரியவர் களிடம் சேர்ப்பித்துவிடுங்கள். காழ்ப்பு, குரோதம், மமதை, பொறாமை கொண்டோரிடம் உங்களைப்பற்றி நீங்கள் கூறுவதை அர்த்தம் திரித்து உங்களை ஒரு வீணராக உருமாற்றம் செய்து, இத்தகையவர்கள் வெளிப்படுத்தி விடுவர். ஜாக்கிரதை!
யாராவது ஒருவர் தங்கள் உண்மைத் தன்மை
யுடைய, செயற்கரியன செய்து விட்டால் அதைக் காது
கொடுத்துக் கேட்பீர்களாக எதைக் கேட்டாலும், எல்லாமே
சுத்தப் பொய் என்று புறம்தள்ள வேண்டாம். இன்று
ஏராளமான திறமைசாலிகளின் கூற்றுக்களை அவை தமது - 63 -

Page 34
பருத்திபூர் (40. ஆயிரவநாதர் பெருமைக்காகச் சொல்லப்பட்டவை என்று சொல்லித் தூற்றி நிராகரித்தமையால் பல உண்மைக் கூற்றுக்கள் உலகிற் கும், புலப்படாமல் புதையுண்டு போயின. தற்பெரு மைக்கும், உண்மை வெளிப்படுத்துகைக்குமுள்ள வேறு பாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள் எமக்குத் தெரியாத விஷயங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்தால் அதனை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருப்போமாக,
மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பவசமாகவோ, அல்லது வேண்டுமென்றோ தங்கள் பெருமைகளைச் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் இதே காரியத்தைமற்றவர் செய்யும் போது கேலி பண்ணு வார்கள். இது இயல்பு தம்மைப்பற்றிச் சந்தர்ப்பம் வரும் போது சொல்லிக் கொள்வதில் தப் பேதுமில்லை. பொய்யான செய்திகளைச் சொல்வது தான் தவறு.
மனிதனின் கீர்த்திகள் ஒரு வட்டத்திற்குள் பூட்டப்பட்ட தல்ல. அவனது ஆன்மாவின் தூய்மை உலகிற்கு அப்பா லும் பரந்துபட்டது. தூய வாழ்வு வாழ்பவனுக்கு எந்தப் புகழும், பெருமையும், தூற்றுதல், அவமானப்படுத்துதல் எல்லாமே அவனைப் பாதித்து விடுவது மில்லை.
சுய ஆரவாரம், வீண்படோபகாரம், பெருமை பேசுதல் எல்லாவற்றினையும் விட்டெறிந்து, சுய வலிமையுடன் ஆன்ம பலத்துடன் வாழ்பவன்நிலையானவனாவான். ஆன்மபலத்துடன் கல்வி, ஞானம், தன்னம்பிக்கை வீரம், - 64 -

65T60TLD வீரியம், நிதானம் உள்ளவர்களின் செயல்களில் குறைக ளைக் கண்டறிவது முடியாத செயல். அவர்களைக் குறை வாக மதிப்பிடுவதும் ஆணவம், அகம்பாவம் பிடித்தவர் என்று எடுத்த எடுப்பில் சொல்லிட முடியாது.
ஒருவரின் பெருமைகளைத் தக்கசமயத்தில் பாராட்டிக் கெளரவித்தல் மானிடப் பண்புமாகும். இன்று உரியவர் களுக்கு உரிய அந்தஸ்து, பதவி, கெளரவம் வழங்காமை யினாலேயே பல பெரியோர்கள், திறமைசாலிகள், வல்லுனர்கள் காணாமல் போவதுடன் பொய்யான, போலியானவர்கள் அந்த இடத்தில் நுழைந்து உலகை அசுத்தப்படுத்தி வருகின்றார்கள். உண்மையானவர்கள் உலகில் பூத்து எழுந்தால், சத்தியத்தின் அற்புதங்களைத் தரிசித்துக் கொள்ளலாம்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி 07.09.2008
- 65 -

Page 35
பருத்திபூர் 04ல. ஆயிரவநாதர்
JéᎦ60Ꭷ60Ꮨ
ரசனையுணர்வின்றி வாழ்ந்தால் மனம் மரத்துப் போகும். ரசனையுணர்வு புத்துணர்ச்சியூட்டும். மனதில் கிளர்வூட்டி மனிதனைச் சுறுசுறுப்பாக இயங்க இயற்கை பல கொடைகளை வழங்கியுள்ளது. ஒருவரின் இன்பங்களைக் கண்டு ரசிப்பதே நல்ல ரசனை. பிறர் துன்பங்களைக் கண்டு மகிழ்பவர்கள் உலகினால் இகழ்ச்சிக்குள்ளாவர். கலையுணர்வு மனிதனை என்றும் இளமையுணர்வுடன் இயங்க வைக்கும். ரசனை உயிர்க்குப் போஷனையூட்டும்.
ரசனை உணர்வின்றி வாழ்க்கை ருசிக்காது, ஜடம் போல் இருப்பது மாந்தர்க்கு உடந்தையானது என்று எவரும் சொன்னதில்லை. உணர்வுள்ளவன் மனிதன். துன்ப உணர்வுகளை நிர்மூலமாக்க ரசனை என்கின்ற ஒளடதம் கட்டாயம் தேவைப்படுகின்றது.
என்றும் புத்துணர்ச்சியுடன் இருப்ப்வர்க்குக் குதூகலம் தானாகவே வரும். மனிதர்க்கு மட்டும் மகிழ்ச்சி சொந்த - 66 -
 

65T60TLD மானதுமல்ல, சகல உயிரினங்களுமே தம்முள் ஒரு ரசனை உணர்வுடன் குதூகலத்துடன் வாழும்போது நாம் மட்டும் மெளனியாக, பற்றற்ற துறவிபோல், சும்மா இருக்க முடியுமா? கரும்திராட்சையெனக் கண்விரித்துக் குமிழ்ச் சிரிப்புடன் குழந்தை சிரித்து நோக்குகையில், முகம் திருப்ப எமக்கு மனம் வருமா?
மெளனமாக இருந்து ஆன்மாவை வளப்படுத்துதலும் ரசனை உணர்வுடன் தன்னைமறந்து, உலகோடு லயிப்ப தும் வெவ்வேறான விஷயங்கள். ஆயினும் எல்லாமே ஆன்மாவை வசப்படுத்தும் இயல்பேயாம். உலகில் நடக்கும் இயற்கை நடப்புகளைப் பார்த்து நாம் என்னவெல்லாமோ நினைக்கின்றோம். நல்ல விஷயங்களில் மட்டும், எமது புலன்களைச் செலுத்திச் சந்தோஷம் காணவேண்டும்.
தவிர, யாரோ ஒருவர் நடக்கும்போது தவறி விழுவ தைக் கண்டதும் உதவி புரிதலைவிடப் பார்த்து ரசிப்பதோ மனித நல்நடத்தையாகுமா? ஒருவன் துன்பங்களே துன்மார்க்கர்களுக்கு நல்விருந்தாகும்.முற்காலக்கதைகளில் மன்னர்கள் தங்கள் கேளிக்கைக்காக அடிமைகளை இம்சித்து அவர்கள் படும் இன்னல்களைக் கூடி இருந்து கை கொட்டிச் ரசிப்பதைப் படித்திருக்கின்றோம்.
சர்வாதிகாரிகளில் பலர் தம் எண்ணம் ஈடேறுவதற் காகச் செய்யும் செயல்கள் காலப் போக்கில் அதுவே சித்திரவதை செய்தலை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டி ருந்தனர்.
- 67 -

Page 36
பருத்திபூர் பல. ஆயிரவநாதர்
அன்பு இல்லாதவர்கள் கூட ஏதோ துரதிஷ்டவசமாக பேரரசர்களாகி விடுவதுமுண்டு. எனினும் எமது முன்னோர் கள் எத்தனை இடர்கள் சூழ்ந்திடினும் தாங்கள் கலை, இலக்கியப் படைப்பினூடாகத் தாங்கள் சந்ததியினர்களுக்கு மனங்களைச் செம்மைப் படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்து கொண்டார்கள். இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு ரசனை உணர்வு தானாகச் சொரிந்து கொள்ளும், வானில் பறக்கும் புள் இனம், தரையில் தவழும் பிராணிகள் நீரில் நீந்தி விளையாடும் மீன் இனங்கள், அவைகளின் வனப்புக்கள் எல்லாமே இறை கொடைகள்!
எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிப் பறந்து திரியும் சிட்டுக் குருவிகள், தன் அலகுகளால் கொண்டுவந்த உண வைத் தன் குஞ்சுகளுக்குத் தாய்மை உணர்வுடன் தாய்ப் பறவை ஊட்டிவிடும் அழகு, கன்றுக்குட்டி துள்ளி ஒடும் அழகை ரசிக்கும் தாய்ப் பசுவின் பெருமிதங்களை நாம் பார்க்கும் போது எமது மனம் எம் வசமிழக்கின்றது. வேட்டையாடும் கொடும் மிருகங்களேயாயினும் கழுகு போன்ற பொல்லாத பட்சிகள், சுறாக்கள், திமிங்கிலங்களின் ஆற்றல்மிகு உருவங்களிலும் அழகு உண்டு. கம்பீரம் உண்டு. ரசிக்க வேண்டுமல்லவா?
கொடும்வனத்தில் கூட, தங்கள் குட்டிகள் துள்ளி விளையாடுவதை சிங்கம், புலி என்ற எல்லா மிருகங்களுமே பாசத்துடன் பெருமித பார்வையுடன் நோக்குகின்றன. எந்த - 68 -
 

ஞானம் நாளும் காணும் சூரிய உதயம், பெளர்ணமிச் சந்திரன், பிறை நிலவு சில் என்ற காற்று, பூத்துக் குலுங்கும் மரங்கள் இவைகளை நாம் நேற்றும் பார்த்தவை தானே.இதில் என்ன விஷேஷம் வேண்டிக்கிடக்கின்றது என்று சொல்லி ஒதுக்கி ஒதுங்க முடியுமா?
சின்னக் குரங்கு ஆட்டம் போட்டு ஓடினால் அதுவும் அழகு. கிளிகள் கொத்திக் கொத்திப்பழங்களைச் சுவைப்பது தனி அழகு எத்தனை வர்ணங்களுடன் மேனி எங்கும் கொண்டு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடியே நீந்தும் எல்லா மீன் இனங்களும் கொள்ளை அழகுதான்.
ரசிப்பதற்கும் கொடுப்பனவு வேண்டும். ஏன் என்றால், படுவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் அதிர்வு மிகு உலகத்தில் பலருக்கும் எதையும் பார்த்துச் சந்தோஷப்படவே நேரம் இருப்பதில்லை.
ஒரு பசு தன் கன்றை ரசித்துப் பாலூட்டி நாவால் நக்கி முகர்ந்துகொள்ளும் நேரத்தை சில மனித இனத்துத் தாய்மார்கள் செலவிட அவர்களுக்கு நேரம் வாய்ப்பதில்லை. பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளைப்பார்க்கப்பல பெற்றோர் களுக்கு நேரம் கிடைப்பதில்லை. என்னதான் உழைக்க வேண்டியிருந்தாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இயற்கை யை ரசிக்கத் தயங்கும் மனிதர்கள் இழந்து போகும் மகிழ்ச்சிகளின் அளவுகளை அளவிடமுடியாது.
- 69 -

Page 37
பருத்திபூர் 00. ஒயிரவநாதர்
ஆயினும் எல்லா மனிதர்களுமே ரசனை உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் அல்லர். இன்றுள்ள நாகரிக உலகில் கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமான கேளிக்கை விஷயங் களைப் பலரும் நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கையான நிகழ்வுகள், இயற்கைக் காட்சிகளை ரசிப்பதுடன் நாமாகப் கலைப் படைப்புகளை பயின்று கொள்வதும் நுகர்வதும் என்று பல வழிகளில் எங்கள் மனதைப் பண்படுத்தியேயாக வேண்டும்.
நல்ல ஒரு கலைஞனை உருவாக்குவதே பெற்றோர் மற்றும் அவரைச் சார்ந்தோருக்குமான பெருமைமிகு பணியுமாகும். சின்ன வயதிலேயே இயல், இசை, நாடகத் துறைகளில் மட்டுமல்ல, விளையாட்டுத் துறைகளில் புலனைச் செலுத்துவதால் எதிர்கால செல்வங்கள் வளம் மிக்க உலகைப் படைக்கப் புறப்படுவார்கள்.
இன்று, மிகவும் ஒப்பற்ற திறமைசாலிகளான கலை ஞர்களைப் பலர் இனம்கண்டு கொள்ளாமல் அவர்கள் ஒதுங்கி விட்டார்கள். நல்லறிவுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை விடுத்துக் கலை, கலாசாரப் பண்புகளை வேருடன் கழற்றுகின்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே கெளரவ மானது என்று கருதுபவர்கள்காலப்போக்கில் ஒரு வக்கிர புத்திக்காரர்களாகவே, மாறிவிடுவரன்றோ!
நல்ல இலக்கியங்களைப் படிக்கும் வாசகர்கள்
- 70 -

ஞானம குறைந்து விட்டார்கள். மாறாக விரசமான விஷயங்களே தரமான முற்போக்கான எழுத்துக்கள் என்று சொல்லித் திரிபவர்களை என்ன செய்ய? நல்ல ரசனைகளை மழுங்கடிக்கச் செய்பவர்களைவிடக் கொடுமைக்காரர்கள் வேறில்லை.
முன்னைய இலக்கியங்களைப் போல் ஏன் இன்ன மும், எம்மால் படைக்க முடியவில்லை? முன்பு பார்த்த அதே கலைவடிவங்கள் சிற்பங்களையே இன்றும் பார்க்கின்றோம் ரசிக்கின்றோம். அவ்வண்ணமே உருவாக்க வல்ல முழுமை யான சிற்பிகளை நாம் இன்னமும் உருவாக்கவில்லையே? 667
தமிழ் இலக்கியத்திற்கான நோபல்பரிசை எந்த ஒரு தமிழரும் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உலகத்திலேயே அற்புதமான காவியங்களைப் படைத்த எம் முன்னோர்களின் படைப்புக்களைப் பார்த்தும், இன்னமும் உலகை ஈர்க்கும் வண்ணம் இலக்கியத்தை எதற்காகப் படைக்காமல் இருக்கின்றோம்? ரசிக்கின்ற நாம் படைக்கும் பிரம்மாக்களாகஉருவாக வேண்டும். எமது படைப்புக்களால் உலகம் மேன்மை பெருமையடையவேண்டும்.
ஆனால் இன்று கோடிக்கணக்கான பணத்தைக்
கொட்டிச் செலவு செய்து உருவாகும் தமிழ் திரைப்படங்கள்
மக்களின் எண்ணங்களில் குப்பைகளையே கொட்டுகின்றன.
ஒரு தனிமனிதன் சொத்துச் சேர்க்கும் இடமாக திரையு
லகம் மாறிவிட்டதே ஒழிய நல்ல ரசனை வளர்க்கும் பூமியாக - 71 -

Page 38
பருத்ரிபூர் 040, 9ர்வரர் இது இல்லை.
காடைத்தனமும், வக்கிரபுத்தியும், ஆபாச நடனமும் கோமாளிக் கூத்துக்களும் ரசனைக்கு உரியன அல்ல. வெளியில் சாமியார் வேடம் போட்டுச் சினிமாவில் நாயகனா கச் சண்டைபோட்டு அரைகுறை ஆடை அணிந்த நாயகியு டன் சரசமாடி ஆடிப்பாடி நடிப்பதைப் பார்த்தால் எந்த ஆத்மாவும் தூய்மைபெறுமா ஐயா..?
இளவயதினரை உருப்படி இல்லாத ஐந்துக்களாக்க முனையும் கலைஞர் என்று சொல்லிக்கொள்ளும் கேவலம் கெட்டவர்கள் பிடியில் இருந்துமீட்க நல்ல தெய்வீகக் கலைஞர்களை உருவாக்குவோம். பொழுதுபோக்கு என்பது எமக்குச் சந்தோஷத்தையும், அதேசமயம் எமது சிந்தனை க்கு விருந்தாகவும் அமைய வேண்டுமல்லவா?
இன்று, உலகில் உள்ள அரசியல், சமூக மாற்றங் களால் பல நாடுகளில் போர் முழக்கங்களே வலுவேற்றப் படுகின்றன. நாடுகளிடையே சுமூகமான உறவுகள் இன்மை யால் பொருளாதார வளத்தை மேம்படுத்தலை விடப் போருக்கான முனைப்புகளில் முந்திக் கொள்வதால் மக்கள் சிரிக்கவே மறந்து போகின்றார்கள். எந்தச் சூழலிலும் மனிதன் சிரிக்காமல் விட்டால் அவன் நித்திய அழுமூஞ்சி யாகி விடுவான். ஏன் சிலர் சிரிக்கவே பயப்படுமாற்போல் நடந்து கொள்கின்றனர்.
- 72 س

ஞானம் "சிரிப்பு" என்கின்ற உன்னத ரசனைக்குட்பட்டால், எந்தத் துயரும் எம்மை அணுகாது. அத்துடன் மனம் விட்டு வயிறு குலுங்கச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றும் பெரியவர்கள் சொல்வர். நல்ல நகைச் சுவைப் பேச்சுக்களை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதே ஒரு இனிமையான சுகானுபவம் தான்.
வேடிக்கை அம்சங்கள் நிறைந்த கலை நிகழ்வுகளே மக்களின் மனங்களில் இடம்பிடிக்கின்றன. கோமாளி ஒருவன் குதித்து ஆடும்போது சின்னக்குழந்தைகள் கூடக் கைகொட்டிச் சிரிக்கினர். இயற்கையின் ஒவ்வொரு அசைவு களையும், பெரியவர்களை விடக் குழந்தைகளே அதிகமாக ரசிக்கின்றன.
நிலவை அசையும் மரத்தை எங்களை விடப் பிள்ளைகள் தானே ரசிக்கின்றனர். நிலவைக் காட்டினால் குழந்தைகள் உணவை உண்கின்றனர். ஆனால், பெரியவர் களோ மனம் சஞ்சலமடைந்தால் சாப்பிடமாட்டார்கள். அந்த நேரம் இயற்கையை ரசிப்பதே அவர்களுக்குச் சுமையா கின்றது. மனதை ஆசுவாசப்படுத்த நாம் இடம் கொடுக்க வேண்டும். நேரத்திற்குத் தகுந்த வண்ணம் சிலசமயம் எம்மை நாம் மாற்ற வேண்டியுள்ளது. மனம் சோர்வான வேளையில் சோர்வை போக்கிட தொடர்ந்தும் சோகமான விஷயங்களில் புலனைச் செலுத்தக்கூடாது.
இன்று பலரும் இரவு முழுவதும் சோகமான எண்ண
- 73 -

Page 39
பருத்திபூர் அல. ஆயிரவருதஷ் ங்களை உண்டுபண்ணும் தொலைக் காட்சி நாடகங்களைப் பார்த்து உறங்கப் போகின்றார்கள். இரவுநேரத்தில் சந்தோஷமூட்டும் எண்ணங்களுடன் உறக்கத்திற்குச் செல்லுங்கள். உடலைச் சுத்தமாக வைத்து நல்ல இனிமை யான இசைகளைக் கேட்டபடியே கண் அயர்ந்து பாருங்கள். அந்த சுகானுபவத்தைவிட வேறென்ன வேண்டும். சிரித்துக் கொண்டே உறங்குக! அழுதபடி படுக்கைக்குப் போக (36).J6ÖöILITLD!
மனதை ஆசுவாசப்படுத்திக் குடும்பத்தினர்களுடன் மன அழுத்தமின்றிச் சந்தோஷமாக உரையாடி மகிழ்வீராக! நல்ல ரசனைக்குரிய விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல நூல்களை வாசித்தால் அதுபற்றிப் பேசுங்கள். இவைபோன்ற நூல்களையே திருமணம், பிறந்த நாள் வைபவங்களுக்குப் பரிசாகக் கொடுங்கள்.
இரவும் அழகே பகல் பொழுதும் அழகே ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு தோற்றங்கள்! அதனுள் புகுந்து எம்மை வசப்படுத்துவோம். பகலில் தோன்றும் ஒளியில் பல காட்சிகள் தெரியும் ரசிக்கின்றோம். எல்லா உயிர்களுமே விழித்தெழுந்து சப்தமிட்டுச் சம்பாஷனை செய்தபடியே இயங்குகின்றன.
ஓ. என் இறைவா! பகல் பொழுதினில் எத்தனை
காட்சிகளை எனக்குக் காட்டுகின்றாய். நான் விழித்தபடியே
உறங்குகின்றேனே. இவைகளை முழுமையாக ரசித்து - 74

(65ʻrT6OTLib உணர அருள் செய். தேவே அதுபோல், இரவுப் பொழு தின் கருமைப்பிடிக்குள் உலகம் உறங்கிய படியும், விழித் தும் இயங்குகின்றதே? இறைவா. எத்தனை அற் புதங்களைக் காட்டி நிற்கின்றாய். அழகான கோடிக் கணக்கான விண்மீன்கள், வானத்தில் மிதக்கும் நிலவு ஓடும் மேகங்கள் எத்தனை அற்புதப்படைப்பு?
இருட்டுடன் போரிடும் மின் குமிழ்கள், நகரங்களை வீதிகளை, சகல வீடுகளையும் ஒளியேற்றுகின்றன. கேளிக் கைக் கூடங்கள், எத்தனை வசீகர மூட்டும் காட்சிகள் பலவும் இரவில்கூட காண்கின்ற பிரமிப்பூட்டும் காட்சிகள்! தூங்கும் போது தானே பலர் தம்மை மறக்கின்றார்கள்.
இரவு நேரத்து அமைதியை நன்கு ரசித்து அனுபவிப் பீர்களாக இரவு நேரத்து இளம்காற்றும் மெல்லிய குளிரும் தேகத்திற்கு இதமானது.இந்த உணர்வுகளைக் கிராமத்தில் சஞ்சரித்து உணர்ந்தால் கோடி சுகம்! இயற்கைச் சுகங்களை இழப்பது, வென்றுவிட்ட அதிஷ்டலாபச் சீட்டை வேண்டுமென்றே தொலைப்பது போலத்தான்.
மழைக்காலத்தில் அதனை இழக்காமல் அது தரும்
குளிர்ச்சியில் நுளைந்து, நனைந்து கொள்வோமாக மழைச்
சாரலில் நுழைந்தால் தேகமே புது வடிவம் பெற்றது
போலாகும். ஓடுகின்ற மழை வெள்ளத்தில், குழந்தை
களுடன், குழந்தையாக மாறிக் காகிதக் கப்பல் கவிழாமல்
செல்லும் அழகைப் பார்த்து ரசிக்க வேண்டும். அதை
75 -

Page 40
கருத்ரிபூர் பால, வீரரர் விடுத்து, மழைவந்தால் வெளியில் செல்ல முடியவில் லையே என அலுத்துக் கொள்ள வேண்டாம். மழையை ரசித்தபடியே குடைபிடித்தபடி நடந்து போவதும்கூடச் சுகமானதே! முழு உலகத்தையுமே குளிரூட்டிச் சிலிப்பூட்டுவது மழை அல்லவா? உயர்ந்த மலைகளுடாக வீச்சுடன் ஓடிவரும் நீர்விழ்ச்சிகள், அலைகளை அள்ளி வீசும் பெருங்கடல், பெருமணல் பரப்புகள் அடர்ந்த காடுகள், சமவெளிகள், இவைகளைப் படங்களில் பார்ப்பதைவிட நிஜங்களாகவே நேரில் பார்த்து ஏறி நடந்து, ஒடிக்கிடந்து, நுகர்ந்து, புரண்டு எழுந்து ரசிப்பீர்களாக நண்பர்காள்! முழுமையாக ரசியுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே ரசிப்பதற்கே! எமது ஒவ்வொரு செயல்களுமே ரசனையுடன் அமைதல் வேண்டும். உண்ணும் உணவை ரசனையுடன் உண்ணு ங்கள். வேண்டா வெறுப்புடன் உண்ணவேண்டாம். சந்தோஷமாக பரந்த எண்ணங்களுடன் சிந்தனைகளைப் பரவவிடுங்கள். நவரசம் என்பார்கள். அதனுள் சோகத்தை யும் ஒரு ரசம் என்பர். அதனால் துன்பங்களையும் தூக்கித் திரியக் கூடாது. துன்பம் வந்தால் அழது தீர்த்ததும் பின்பு எழுந்து துணிவுடன் உலா வாருங்கள்!
நீங்கள் அழுவது கூடச் சிலருக்குச் சந்தோஷமாக இருக்கலாம். அந்தச் சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்க (86605 LIT b.
= 76 سه

(65s,60TLD நல்ல நகைச்சுவை உணர்வுடனும் அழகை ஆராதிக்கவும், கலைகளை நேசிக்கவும், குழந்தையுள்ளத் துடனும், ஒரு உணர்ச்சிபூர்வமான காதலர்களின் துடிப்புடனும் இயங்கினால் நல்ல ரசனை மிகு ரசிகனாக, உலகை நேசிக்கும் அன்பனாகவே என்றும் இருப்பீர்கள்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
31.08.2008
- 77 -

Page 41
கருத்திபூர் அல. ஆயிரவநாதர்
ஆணவச் செருக்குடன் சனங்களுடன் சேராமல் வாழ்வது தனித்துவமல்ல. தனித்துவம் தனிமனிதனுக்கு மட்டுமானது அல்ல. சமூகம், இனம், மதம், நாடுகள் எல்லாவற்றிற்குமே தனித்துவமான இயல்புகள், கலை, கலாசாரப் பண்பாடுகள் உண்டு. எளிமை தூய்மை தோழமை, அன்புடைமையுடன் வாழ்பவர்கள் என்றும் புது மனிதனாகத் தனித்துவமாக மிளிர்வர். வேற்றுமை பாராட்டுபவர்கள் சமூகத்தால் விரட்டப்படுவர். அன்பு கொள்பவர் ஆற்றல் பன்மடங்காகும். ஒழுக்கத்துடனான தனித்துவம் புனிதத்துவமாகும்.
நற்பண்புகளுடன் இணைந்து மிளிரும் தனித்துவம் மிக்க சிறப்பு ஆளுமைகள் பிரமிப்பு ஊட்டுவன. நான் தனித்துவமானவன் என ஆணவச் செருக்குடன் சொல் பவர்கள் அவர்கள் என்ன குறிப்பிடத்தக்க கொடுப் பனவுகளை உலகிற்கு ஈந்தார்கள் என்பதனைத் தமக்குள் கேட்டுக் கொள்வார்களாக
- 78 -
 
 
 
 
 
 

ஞானம் என்னதான் திறமைகள் வல்லமைகள் இருந்திட்ட போதிலும் கூட ஒருவன் ஒழுக்க சீலர்களாக வாழாமல் இருந்தால் அவர்களுடைய தனித்துவம் எவராலும் சிலாகித்துப் பேசப்படாது போய்விடும். "மனுஷனுக்கு, மற்றவர்களுடன் பேசப் பழகவே தெரியவில்லை. இவர் எல்லாம் என்ன மனுஷன்? என்ன படித்துக் கிழித்துவிட்டார்” என்று தான் சொல்லிக்கொள்வார்கள்.
ஆயினும், தனித்துவப் பண்புகள் தனி ஒரு நபருடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. சமூகம், இனம், மதம், நாடு என வியாபகமானது. மனிதன் இவைகளுடன் இரண்டறக் கலந்து நிற்பதால் அவன் தான் சார்ந்து வாழும் சமூகத்துடன் மதம், மொழி, நாடு முதலானவற்றுடன் அவன் தனித்துவ இயல்புகள் கலந்து நிற்கின்றன. அவன் இவைகளில் இருந் துவிடுபட இயலாது. ஏன் விடுபட விரும்புவதுமில்லை.
ஆனால் தமது நாடுகளை விட்டு அந்நிய தேசங்க ளுக்குப் புலம் பெயர்ந்தோ, தற்காலிகமாகச் சென்று வாழும்போதோ அவர்கள் இனம் சார்ந்த தனித்துவங்களை இழக்கின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. சிலர் தமது நாடு, மொழி, கலாசாரங்களை மறந்து வாழ்வதையே பெரும் கெளரவமாகவும் கொள்கின்றார்கள்.
ஆனால், தமது, கலை, கலாசாரப் பண்புகளை, மத நம்பிக்கைகளைத் துறந்து வாழ விரும்பாதவர்கள் தங்கள் - 79 -

Page 42
மருத்திபூர் 00. ஒற்றுடிதர் சந்ததிக்குப்பெரும் உபகாரங்களைச் செய்தே வருகின்றனர். ஒவ்வொரு நாட்டின் கலாசாரங்கள் அந்த நாட்டிற்குப் பெரும்பாலும் உகந்ததாகவே இருக்கும் பாரம்பரியமாகவே தத்தமது நாடுகளின் சூழல், சுவாத்தியங்களுக்கு ஏற்ப பழக்க வழக்கங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. இது இயற்கை நிகழ்வு. இவை எல்லாமே பத்தாம் பசலித்தனமானது என எடுத்த எடுப்பிலேயே சொல்லி விட முடியுமா?
மிக எளிமையான வாழ்க்கை முறையே எமக்கு உகந்தது. எமது மனவளத்தை உடல் ஆரோக்கியத்தினை மேம்பாடடையச் செய்வன. குளிர்பிரதேச மேற்கத்திய நாட்டின் வாழ்க்கை முறையுடன் எமது நாட்டின் நடைமுறை கள் ஒத்துவராது விட்டாலும் கூட அதுவே ஒரு நல்ல நாகரிகமானது, என விடாப்பிடியாகக் கைக்கொள்வது தமது இனத்தின் தனித்துவத்தை இழந்துவாழப் பிரியப்பட்டு, தனது இனத்துடன் பிரிந்து வாழப் பிரயத்தனப்படும் வருத்தத்திற்குரிய் செயல்.
ஒவ்வாத பழக்கத்தை வேண்டுமென்றே கடைப்பிடிக்க எண்ணுதல் செளகரியமான சந்தோஷ மூட்டும் கருமம் என எவராவது எண்ணி வாழ்ந்தால் அதன் பயன் அவன் தான் வாழும் சமூகத்தில் இருந்து அவனாகவே நழுவிச் செல்லும் கோழைத்தனமான முட்டாள் போக்குத்தான். உணர்க!
ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஒரு குறிப்பிட்ட தனித்து வமான குண இயல்புகள் இருக்கத்தான் செய்யும். இவை - 80 -

65IT60TLb புதுமையோ, மற்றவர் இகழத்தக்கதுமல்ல. விஞ்ஞான ரீதியில் இவைகள் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. பரம்பரை இயல்புகள், ஒருவனைக் கட்டுப்படுத்துகின்றன.
ஆனால் எந்த ஒரு மனிதனும் நற்பண்புகளைக் கொண்டு இயங்குவதற்கு அவன் பரம்பரை இயல்புகள் தடையானவை என்று சொல்லிட முடியாது. நல் ஒழுக்க நெறியுடன் எத்தரத் தாரும் சிறப்புடன் வாழமுடியும்.
ஒரு இனத்தின் மதச்சடங்குகள், நடை உடை பாவ னைகள், உணவுப்பழக்க வழக்கங்கள், பேசும் முறைகள் இன்னும் ஒரு இனத்தவர்க்கு வியப்பாகவும் இருக்கலாம்.
சீக்கிய சமூகத்தில் ஆண்கள் பெரிய தலைப்பாகை அணிவார்கள். இஸ்லாமியர்கள் தொப்பி அணிவார்கள், இந்துக்கள் தமது மத பாரம்பரியத்தைக் காட்டும் சின்னங்களுடன் தமது தோற்றத்தை வெளிப்படுத்துவார்கள். இவை அவர்களுக்கே உரிய தனித்துவ உரிமை. அப்படித் தோற்றத்துடன் திகழ வேண்டாம் என்று சொல்ல எந்த நாட்டுச் சட்டமும் தடைவிதிக்க இயலாது.
மேலும் தனிமனிதன் ஒருவனின் மேலான தனித்து வத்தைக் குந்தகப்படுத்துதல், அவற்றினை அகற்றி ஸ்தம்பிக்கும் நடவடிக்கைகளில், ஈடுபடுதல் அவனது தனிமனித சுதந்திரத்தை, சுயகெளரவங்களை பாதிப்புக்குள் ளாக்கும் நாகரிகமற்ற செயலுமாகும்.
- 81 -

Page 43
பருத்திபூர் 04ல. ஆயிரவருதஷ்
ஒவ்வொருவரும் தமக்குரிய தொழிலைச் செய்யும் போது அனுபவ முதிர்ச்சி காரணமாகவும்,செய்கருமத்தின் ஆர்வம் காரணமாகவும் விசேட திறமைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் எல்லோருமே தமது பணியில் தனித்துவமான கீர்த்திகளைப் பெறுவதில்லை. அர்ப் பணிப்பு, கடமை உணர்வுமிக்கோரால் மட்டுமே எக் கருமத் திலும் விசேட தகுதிகளைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.
எல்லோரும் தான் உணவு விடுதிகளை நடாத்தினா லும் கூட சில உணவு விடுதிகளை மட்டும் மக்கள் நாடுவது ஏன்? குறிப்பிட்ட கல்வி நிலையங்களை மட்டும் மாணவர்கள் நாடி வருவதுமேன்? எவ்வளவு பெரிய கல்வி கற்றவர்களிடம் இருந்தும், பெற முடியாத அறிவைச் சில குறிப்பிட்ட ஆசிரியர்களிடம் மட்டும் பெறுதற்கு முக்கியமான காரணம் அவர்களது தனித்துவமான கல்வி கற்பிக்கும் ஆளுமை, செயல்திறன், சிரத்தையேயாகும்.
வித்தைகளைக் கற்பதைவிட அதனை உரிய முறையில் செயற்படுத்தலே மேலான வித்தையாகும். படித்த கல்வியை நல்ல உத்திகள் மூலம் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமல்லவா? தவறான கருத்துக்களையே பிடிவாதமாக ஏற்று நடப்பவர்கள் சிலர் தங்களை ஒர் தனி யான நபராகக் காட்ட முயற்சிக்கின்றார்கள்.
"நான் கண்டபடி நட்புக்கொள்வதில்லை, பொது வைப
வங்களுக்குச் செல்வதும் இல்லை. இன்று எல்லோருமே
சுயநலவாதிகளாக இருக்கின்றார்கள், எனவே நான் - 82 -

ஞானம் ஒருவரிடமும் நட்புக்கொள்வதுமில்லை" என்று, கர்வமாகச் சொல்பவர்கள் தாங்களே எல்லோருக்கும் மேலான
நியாயவான் என எண்ணிக் கொள்வதுமுண்டு. குற்றம் சொல்பவன், கேலி, ஏளனம் செய்பவன் தன்னை ஒரு அறிவாளி, அனுபவஸ்தன் என்று சொல்லிப் பெருமைப்பட இயலாது.
இத்தகையவர்கள் சமூகத்தினை அந்நியப்பட்ட நோக்கான பார்வையில் பார்த்து நின்று தங்களை அதி மேதாவியாக எண்ணி விமர்சனம் செய்வதே ஒரு வேடிக்கை தான். இந்த லட்சணத்தில் நாங்கள் எந்த வீண் வம்புக்கும் போவதில்லை. கேடு கெட்ட சமூகம், நாம் தான் என்றும் விலகி நிற்கும் உண்மை மனிதர் என்று தங்களது தனித்தன்மை பற்றிச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொள்ளுவார்கள்.
நாம் எந்த ஒரு உயிரினத்தில் இருக்கும் தனித்துவ பண்பை நோக்குவோம். கொடிய மிருகங்களில் இருக்கும் சிறப்பியல்புகளைப் பார்ப்போம். மனிதர் போல் அவை களின் குணம் இருக்காது விட்டாலும் கூட ஏதோ ஒரு தனித் துவ பண்புகள் அவைகளுக்கும் இல்லாமல் இருக்காது. கடவுள் சகல உயிர்களுக்கும் அவை வாழும் வாழ்வுக்கு ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்ப உடல் அமைப்பு, உணவு முறைகள், குணங்களை ஏற்படுத்தியுள்ளார். அணிலின் மென்மையான உடல் அமைப்பும், முயலின் வேகமும், சிங்கத்தின் கர்ச்சனையும், மிடுக்கும், பசுவின் சாதுவான குண இயல்பும், திமிங்கிலத்தின் விசால தோற்றமும், பலமும்
- 83 -

Page 44
பருத்திபூர் பர்ல. ஆயிரணுகுந்தர் அதேசமயம், கண்ணுக்குத் தெரியாத எத்தனை எத்தனை உருக்கள் அவைகளுக்கே உரிய தனித்தனி குண இயல்புகள்!
மனிதர்கள் மிகவும் சிரமப்பட்டு பெருமுயற்சி செய்து தமது ஆற்றல்களை வளர்க்க வேண்டியுள்ளது. ஆனால் மிருகங்களுக்கும், பறவை, நீர்வாழ் உயிரினங்களுக்கும், ஏனைய சிற்றுயிர்களுக்கு மான வியத்தகு ஆற்றல்கள்
இயல்பாகவே இறைவனால் கொடுக்கப்பட்டுவிடும். ஆனால்
மனிதன் தன் ஆளுமையை தன் முயற்சியால் வளர்த்துக் கொண்டாலும் கூட எல்லையில்லாத அறிவிருந்தும்கூட பூரண திருப்தியற்றவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கின் றான். இயல்பான திறன் கொண்டவன். தன் சுய உழைப்பி னாலேயே தன்னைப் புதுப்பிறவி எடுத்த புது மனிதனாக ஆக்க வேண்டியுள்ளது.
அதிகம் உண்ணுவதைவிடப் பல மடங்கு அறிவை சிரசிற்கு உவப்பாக அளிக்க வேண்டியுள்ளது. வாழ்க்கையில் எமக்குரிய நியதி இதுதான் என்று கண்டதையும் ஏற்றுக் கொண்டால் அவன் தனித்துவமான உன்னத மனிதனாகி விடமுடியாது. விதியை அமைக்கும் புதுவிதியைச் சமைக்கும், நவயுக மனிதனாகுவோம்.
சிந்தனை செய்யத் தயங்குபவன் முன் உதாரண புருடனாக முடியாது. இன்று உலகத்தில் பலருமே தங்கக் கூண்டினுள் வாழ்ந்து கொண்டு உள்ளத்திற்கு உவப்பான
எல்லையில்லா ஆனந்தத்தை மறந்து வாழ்கின்றார்கள்.
- 84 -

ஞானம் தன்னைக் கட்டி முடங்கி வாழ்பவனால் உலகத்தை அன்புடன் நோக்குகின்ற சுய ஆதிக்க வலுக் கொண்டவனா கத் தன்னை மாற்றி அமைக்கவும் இயலாது. விசாலமான உலகில் சுற்றி வாழ இறக்கைகள் தேவையில்லை. தன்னை ஒரு புது மானுடனாக்கி எல்லை கடந்த ஆன்மாவாகிட தனித்துவம் மிக்க களங்கம் களைந்த இதயம் கொண்டாலே போதும்!
ஒரு எளிமையான வாழ்வினை வாழ்ந்து கொண்டி ருக்கின்ற தென் இந்திய குன்னுரை அண்மித்த, பழங்குடி இனத்தினரின் தனித்துவமான வாழ்க்கை பற்றி செய்தி ஒன்றை அறிந்தேன்.
அவர்கள் வீடுகளுக்குத் கதவுகள் இல்லை. அவர்களது வீட்டிற்கு எவராவது உறவினர்கள் வந்து செல்ல அனுமதி தேவையில்லை. ஒருவர் கூட பசித்திருக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. உணவு நேரத்தில் ஒரு வீட்டில் உணவு தயாரிக்க நேரம் சென்று விட்டால் தாராள மாக அடுத்த வீட்டிற்குச் சென்று உணவருந்தலாம். ஒருவருக்கொருவர் பண்டங்களைப் பரிமாறிக்கொள்வார்கள். சாதாரணமாக எமக்குள்ள கூச்ச, அகம் பாவ உணர்வு களுடன் தங்களுக்குள் பழக மாட்டார்கள். வெளிப்படையாக அன்புடன் பரிவுடன் பழகிக் கொள்வார்கள்.மேலும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், பகல் பூரா உழைத்த வர்கள் இரவு ஆனதும் எல்லோருமே ஒன்று கூடிவிடு வார்கள். முதியவர் இளைஞர் முழுக் குடும்பத்தினருடன்
- 85 -

Page 45
பருத்திபூர் 00. ஆயிரவரஷ் குழந்தைகள் உட்பட எல்லோரும் இணைந்து ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டாடுவர். அவர்கள் மனதில் சுமைகள் இல்லை. பணம், பண்டம், செல்வம் இல்லையே என்ற ஏக்கம் சிறிதளவும் கிடையாது. எந்நாளும் அவர்களுக்குப் பண்டிகை, திருநாட்களே தான்!
மேலும் அவர்கள் பரந்த மனத்தினால் எதனையும் எதிர்பார்த்து ஏங்காத இயல்பினால் நோய்,நொடி இன்றி முழுமையான தேக ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள். மன மகிழ்வு பூரணமாக இருந்தால் நோய்கள் எம்மை வந்தடைந்து விடாது அல்லவா?
மன அழுத்தம், எல்லாவற்றையும் மூடி மறைத்தும் வாழும் முறைகளினால் மனிதன் சோர்வடைந்து தன்னிலை இழந்துதவிக்கின்றான்.
தனித்துவமான வாழ்வு என்பது, ஒரு முரண்பாடாக சமூகத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது அல்ல. மக்களோடு மக்களாக அதே சமயம் இதயத்தை அகல விரித்து, அதனுள் அன்பை மட்டுமே அடக்கிப் பல சாதனைகளைத் தன் மனோ வலிமையானால் செய்து கொள்ளும் அற்புதச் சாதனை நிலையுமாகும்.
சாதனை செய்ய விரும்புபவர்கள் தமக்குள் புது சக்தியை ஏற்படுத்தியேயாக வேண்டும்.மனித இதயங் களைப் புரிந்து கொள்ளாமல் நாம் எம்மை மட்டும் வளப் படுத்திட முடியாது. காரிய சித்தி பற்றிப் பேசுகின்றோம்.
- 86 -

SETTIGUTLED ஒருவனது வெற்றிகளும், கிடைக்கும் புகழும் அவனது முயற்சியினால் கிட்டினாலும் கூட, கண்ணுக்குப் புலனாகாத பலரது ஆரோக்கியமான ஆசிகளும் அதனுள் இணைந்திருக்கின்றன.
நீங்கள் தூய ஆடை உடுத்து தெளிந்த மனதுடன் ஒரு காரியத்திற்குச் செல்கின்றீர்கள். வீட்டில் பெற்றோர் களின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு. அதேசமயம் உங்களை பேரூந்தில் கொண்டு செல்லும் சாரதி சிரித்த முகத்துடன் வழியில் கண்டு கொள்ளும் நண்பர்கள், இனம் தெரியாத அன்பு உள்ளங்கள், என எல்லா நெஞ்சங்களின் கூட்டு இணைப்பினால்தானே நாம் செய்கின்ற செயல்கள் திருவினையாகின்றது.
தொடர்ந்து கிடைக்கும் வெற்றிகளால் நாம் தனித்து
வமான திறமைசாலிகளாகின்றோம். சமூகம் எம்மை பார்க் கின்றது. புனிதமான இந்த உலகம், எங்களை நேசிக்கின் றது. "நான் என்றும் "அன்பு" எனும் சிரஞ்சீவித் தன்மையை நுகர்ந்துவாழப் பிரியப்படுபவன்," என்று ஒவ்வொருவரும் எண்ணினால் தனி ஒரு மனிதனில் ஆற்றல் பன்மடங்காகப் பரிணமித்து, அவனுள் திவ்ய ஒளி புகுந்து அவனை மாமனிதனாக மாற்றிவிடும்.
தினக்குரல்
ஞாயிறு மஞ்சரி
17.08.2008
- 87 -

Page 46
பருத்ரிபூர் 00. ஆலிவரஷ்
விரும்புங்கள்!
உங்களை நீங்கள் முதலில் விரும்புங்கள். தன்னம்பிக்கை இதனால் வலுப்படும். பயம், சந்தேகம், கோப உணர்வுகள், எமது சக்தியை மழுங்கடிக்கும். தன்னை விரும்புபவன், உலகையும் நேசிப்பான். தனது, குறை, நிறை, பலவீனங்களை அவன் ஒத்துக் கொள்வதால் உலகில் எவரையும் அன்பு பாராட்டும் இயல்பு தானாகவே வரும். உங்கள் அழகை, உங்கள் நம்பிக்கைகளை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். மனித இனம் ஒன்றே. உங்களில் நீங்கள் அக்கறை கொள்வது போல பிறரிடமும் கரிசனை காட்டுவீர்களாக
நீங்கள் உங்களை முதலில் விரும்புங்கள்! நீங்கள் விரும்பியபடியே செய்யும் கருமங்கள், உங்கள் மீதான நம்பிக்கைகளை வலுப்படுத்தி மேலதிக சக்தியூட்டி விழிப்பூட்டும்.
- 88.
 
 
 
 
 

ஞானம் உங்கள் மீதான எண்ணங்களில் உண்மைத் தன்மைகள் உண்டாக்குதலே முதற் பணியாகிவிட்டால் அச்சம் என்பது ஏது? உண்மையின் அதீத சக்தியினால் உள்ளம் வியாபகமாகும். உண்மையான தூய வாழ்வு
வாழ்பவர்களை உலகம் நேசித்து ஏற்றுக்கொள்வதால் நாமும் அவ்வண்ணமே தூய்மையுடன் இருந்தால் எம்மை நாம் விரும்புவது மிக இயல்பான தன்மையாகிவிடும்.
தன்னை விரும்பாமல், நம்பாமல் நாம் எப்படிப் பிறரை விரும்பமுடியும்? ஏற்றுக்கொள்ள இயலும்? எங்களிடம் இல்லாத ஒன்றுபற்றி நாம் பிறரிடம் எதிர்பார் ப்பதுண்டு. ஆனால் நாம் எதனை எதிர்பார்த்தாலும் அவைகளில் உண்மைத் தன்மை வேண்டும்.
பொய்யான விஷயங்களை அது பொய் என்று தெரிந்தும் விரும்புவதும் எவ்வளவுகோழைத்தனமான அக வெளிப்பாடு என்பதையிட்டு வெட்கப்படுவீர்களாக
இன்று நிஜத்திற்குக் காட்டாத பரிவு, ஆர்வம், விருப்பங்களை வெறும் போலிகளுக்கும், நிழல்களுக்குமே காட்டுவதால் தான் பலரும் சஞ்சலத்திற்குள் ஆட்படுகி ன்றார்கள். எவர்கள் பின்னால் ஓடுகின்றோம் என்பதே புரியாமல் விழிக்கின்றோம்.
"மனம்" உள்ளவன் மனிதன் அவன் சிந்திக்கும்,
திறன் படைத்தவன். நினைப்பதற்கும் அதனைச் செயற் - 89 -

Page 47
பருத்திபூர் பல. ஹவிரவநாதர் படுத்துவதற்குமான முழு ஆற்றலைக் கொண்டவன். நாம் நல்லனவற்றையும் செய்ய முடியும். கெட்டவைகளையும்
சுலபமாகச் செய்யமுடியும்.
*
"நீ எதனைச் செய்ய விரும்புகின்றாய், என உன் னையே நீ கேட்பாயாக! எதனைச் செய்தால் உன்னால் நீகவரப்படுவாய்" அதனால் மற்றவர்களும் கவரப்பட்டுப் பயன் பெறுவார்களா என்றும் உணர்கின்றாயா?
ஹே. அண்பான இதயம் கொண்ட மனிதா! உன்னை ஒரு தூய ஆன்மாவாக எழச்செய்யவே இறைவன் விருப்பம் கொள்கின்றான். அவன் எல்லோரையுமே நேசிப்பதனால் அவர்களுள் ஒருவனாக நீ இருப்பதனால் நீ ஒன்றும் பயந்து உலகினில் ஒளிந்து வாழத் தேவையே இல்லை.
அவர் விரும்பும் ஒருவனாக "நீ” இருப்பதனால் உன்னை நீ விரும்புவதில் தப்பேதுமில்லை, அதுவே சரியான சீவியத்திற்கு நல்ல வழியுமாகும். இதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது?
முதலில் உங்களை நீங்கள் ரசனையுடன் ரசிப்பீர்
களாக சிலர் சொல்வார்கள் “ஜயோ.என் முகம் காணச் சகிக்கவில்லையே” என்பார்கள். ஆனால் சிலர் தங்கள்
அழகில் தாங்களே பெருமைப்பட்டும் கொள்வார்கள்.
-'90 -

65 Tao Lib பலரும் இதுபற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளாமல் இருப்பது முண்டு.
நண்பர்களே! நீங்கள், உங்களை கண்ணாடியில் பார்க்கும் போது அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுங் கள். உங்கள் நினைவுகளை உங்கள் உருவத்துடன் பிணைத்து ஒன்றாக்கி விடுங்கள். "எனது உருவம் என்றும் உண்மையை அன்பான உலகத்தையே நேசிப்பதாக, எனக்குள் எந்தவித அகம்பாவம் ஆணவம் இல்லாது இருப்பதாக! நான் உலகத்துடன் ஒன்றித்து வாழும் தூய ஆன்மாவாகின்றேன். இதுவே இறைவனின் சித்தமும் ஆக இருக்கின்றது." என உளமார எண்ணி கனிவான புன்முறு வலுடன் எவ்வித களங்கமும் இன்றிச் செயலை ஆரம்பித்துப் பாருங்கள்.
தன்னை விரும்புபவன் சுயநலம் மிக்கவன், ஆணவம், அகங்காரம் திமிர் பிடித்தவன் என்கின்ற வார்த்தைப் பிரயோகங்களால் சொல்லப்படுகின்றான். தன்னை நேசிப்பது வேறு, மமதையால் மற்றவர்களுடைய மனதைத் துன்புறுத்துதல் வெவ்வேறான விஷயம். ஏன் எனில், தன்னை நேசிப்பவர்கள் அதனை வெளியில் சொல்ல வேண்டிய தேவை, அவசியம் கிடையாது. எம்மை நாம் விரும்புவது எமக்கு நாம் விதிக்கும் அன்பான கட்டளை தான். மேலும் எமது இந்த எண்ணங்கள் எமது முன்னேற்றத் திற்கு மட்டுமல்ல, உலக மக்களை இதனூடு இணைப் பதற்குமான மேலான வழியுமாகும். உணர்க!
- 91 -

Page 48
கருத்திபூர் 04). ஆயிரவரர்
பலரும் தங்களுக்குள் இருக்கும் உண்மையான பேராற்றலை உணராமல் தங்கள் புறத்தோற்றத்தை, தாங்கள் கற்ற சொற்ப கல்வித்தரம், வருமானங்களின் அளவு பற்றியே வைத்துக் கணக்கீடு செய்கின்றார்கள்.
மூடிய தோலை உரித்துப் பார்த்தால் எல்லா மனிதர் களின் உருவமும் ஒன்று தான். இங்கு நாம் அழகன், அழகிப் போட்டி வைத்தால் யார் ஜெயிக்கப்போகின்றார்கள்? மனிதனுக்கு மட்மே சாயம் பூச வேண்டியுள்ளது. உடை உடுத்த வேண்டியுள்ளது.
உலகில் மற்ற எல்லா ஜீவராசிகளும் எமது பாஷை யில் நிர்வாணமாக ஆனால் அழகாக உலாவருகின்றன. மனித நிர்வாண உருக்களை எம்மால் ஜீரணிக்க முடியாது, ரசிக்க முடியாது. எந்த ஒரு மனிதனுமே தனது வடிவத்தை நேரில் பார்க்க முடியுமா?
தனது முகத்தைக் கூடக் கண்ணாடி மூலம் தான் பார்க்க முடியும், முதுகை, பிடரியைப் பின்னே வைத்த கண்ணாடி மூலம் மிகச் சிரமப்பட்டுத்தான் நோக்க வேண்டும். இந்த லட்சணத்தில் வெறும் மேனியை வைத்து வண்ணம் தீட்டும் நாம் உண்மையான ஆன்மாவை தரிசிக்கத் தயங்குதல் எமக்குள்ள அறியாமையும், குறைபாடும் தான் நோக்குக!
எங்களை நாம் வசியப்படுத்துதல் வேண்டும். சுய வசியம் என்பது, எங்களை விரும்புதலேயாம். யாரையாவது - 92 -

65T60TLD நாம் விரும்பி நட்புக் கொண்டால் சிலர் வாய் கூசாமல் "என்ன வசியம் செய்தாய்” என்று கேட்டு விடுகின்றார்கள்.
காதலர்கள் கொள்ளும் உறவை, அவர்கள் வசியப் பட்டு விட்டார்கள் என்கின்றோம். இன்று வசியம் என்ற சொல்லைக் கொச்சைப்படுத்திப் பேசுபவர்களும் உள்ளனர். மாந்திரீகத்தில் வசியம் செய்தல் என்கின்ற சொல் தாராள மாகப் பயன்படுத்தப்படுகின்றது.
உண்மையில் "வசியம்" என்பது முரண்பாடு அற்ற நிலையில் உடன்பாடு அடைவதாகும். முரண்பாடு தோன் றினால் உடன்பாடு வராது. ஆயினும் சில விஷயங்கள் மட்டும் உடன்பாடுகள் காணதவர்கள் தமக்குள் பரஸ்பரம், அன்பை நீக்காமல் இருப்பதுமுண்டு.இது அவர்களின் மேலான மனத் திண்மையைப் பொறுத்தவிடயம். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வசியப் பொருத்தம் இருக்கின்றதா எனப்பார்ப்பார்கள். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியாது என்றும் இணைந் திருப்பதை வசியமாக இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
தனது பணிகளைச் சுயநல நோக்குடன் முடித்துக்
கொள்வதற்காக மட்டும் பிறருடன் அன்போடு பேசிக்காரியம்
முடிந்ததும் அவர்களைக் கழற்றி விடுவது எல்லாம் கயமை
த்தனமான செயற்பாடுகளேயாம். ஒருவரது தோற்றத்தைக்
கொண்டும் நட்புப் பாராட்டப்படுவதும் உண்டு. அன்பு,
அறிவு, ஞானம் உள்ளவர்களின் முகத்தில் “தேஜஸ்” - 93 س

Page 49
பருத்திபூர் அல. ஜிஹரர் ஏற்படுவது இயற்கையானது. எத்தகைய அழகுள்ளவர்கள் கூட இத்தகைய பெரியோர், ஞானிகளின், தேஜஸான தோற்றத்தின் முன் ஒப்பீடு செய்திடல் இயலாது. இந் நிலை அவர்கள் அக ஒளியுடன் சம்பந்தப்பட்டது.
எனினும் நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட தோற்றத்தைக் கொண்டு பெருமைப்பட்டேயாக வேண்டும். ஏன் எனின் உங்கள் தோற்றத்தினைப் போல் வேறு ஒருவரு க்குமே அந்தத் தோற்றம் வந்துவிடாது. எனவே, என்னைப் போல் வேறு எவருமே இல்லாத ஒரு பிரத்தியேக வடிவைக் கொடுத்த இறைவனுக்கு நாம் நன்றியும் செலுத்த வேண்டுமல்லவா?
நீங்கள், உங்களைப் பரிபூரணமாக நம்பி உங்களை ஏற்றுச் செய்யும் காரியங்களை இறைவனின் செயலாகவும் இணைத்துச் செய்யும்போது ஏற்படுகின்ற அற்புதங்களை உண்மையாகவே அனுபவிப்பீர்கள். நேற்றையதை விட இன்று நான் எப்படிப் புதுப்பொலிவு பெற்றேன் என ஆச்சரியப்படுவீர்கள். என்னை நான் எப்படி முன்னைய நாட்களை விட வெற்றி கொண்டேன் என்பதையிட்டுப் புளகாங்கிதமடையும் அந்த அற்புத நிகழ்வினைப் பூரண மாகப் பெறுவீர்கள் தோழர்களே!
இன்று பலருக்கும் உள்ள பெரும் பிரச்சனை தங்கள்
பற்றிய கணிப்பீடுகளைப் பிறர் கண்ணோட்டத்தில் இருந்தும்
நோக்காமையாகும். தன்னைப்பற்றிய சுய விமர்சனத்தைத் - 94 -

SEPT60,TLD தானே கண்டு கொள்ள முயற்சிப்படுதுடன் தன்னைப்பற்றிய பிறர் என்ன விதமாக நோக்குகின்றார்கள் என்பதை அறியா மல் செயல்படுவது பல பிரச்சனை களையும் துன்பங் களையும் ஏற்படுத்தி விடலாம் எல்லவா? எம்மைப் பிறர் விரும்பி ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் கூட கனிவுடன் மற்றவர்களுடன் பழகாமலே இருந்து விடுகின்றார்கள்.
முகம் மலரச் சிரித்தாலே போதும் எந்த அழகும் இல்லை என்று எவரையாவது கருதினாலும் கூட,அவர்கள் உங்கள் முன் நின்று புன்முறுவல் பூத்திடப் பூரண அன்புடன் நோக்கினால் அவர் அழகுபற்றி நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்கள்.எனவே, சந்தோஷமுடன் வாழப், பழக அழகு என்கின்ற விஷயம் ஒரு பொருட்டேயல்ல. ஏனெனில், அழகு என்பது, வெறும் உருவத்துடன் தொடர்பு பட்டது அல்ல. ஜடப் பொருளில் அழகு உண்டு. மனித உள்ளத்தினுள்ளும் அழகு ததும்புகின்றது. முகமலர்ச்சி யாக, சிரிப்பாக, புன்முறுவலாகச் செய்கின்ற நற்கருமங் களுடாக அது பரிணமித்து அவர்கள் உண்மை அழகை வெளிப்படுத்திவிடும்.
ஒருவர், புத்தம் புது ஆடையுடுத்து உங்களிடம்
வருகின்றார். அவர் உங்களிடம் ரொம்பவும் பரிச்சம் அதிகம்
இல்லாதவராகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவரைப்
பார்த்துச் சந்தோஷமுடன் "ஆகா.உங்கள் உடைகள்
ரொம்பப் பிரமாதம் இது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக 一剪5一

Page 50
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் இருக்கின்றது" என்று சொல்லுங்கள். அந்த நேரத்தில் அவருக்கு ஏற்படும் உணர்வுகள் இரண்டு விதமாக இருக்கும்.ஒன்று தனது உடை தனக்குப் பொருத்தமானது என்று சொல்லப்பட்டதால் ஏற்படும் பெருமிதம் இரண்டா வது ஏற்படும் உணர்வு மிகவும் நுண்ணியமான விஷய மாகும். எனது உடையை மனம் உவந்து பாராட்டுகின்றாரே இவரது இந்த நல்ல பரந்த மனம் எவ்வளவு உயர்ந்தது என்பதுடன் உங்களைப் பற்றிய மதிப்பு அவர் உள்ளத்தில் நிரந்தரமாகவே நிலையாக இருத்திவிடும்.
யாரோ ஒருவர் நன்றாக, அழகாக வந்தாலே மனம் பொருமிப் பொறாமைப்படுகின்ற நபர்களும் இல்லாமல் இல்லை. ஒருவரிடம் நட்புக்கொள்வது ஒரு கஷ்டமான காரியமே அல்ல. மனம் திறந்து பாராட்டி அன்பு செலுத்து வது சிரமமான அல்லவே? பிறர் எங்களை நேசிக்க நேசிக்க எங்கள் மீது எங்களுக்கே பற்றுதல் அதிகரித்துக் கொண்டே
வரும.
பிறரிடம் காட்டும் அன்பையே நாம் எங்கள் மீது காட்டு வோமாக! எங்களிடம் நாம் வெறுப்பை இம்மியளவும் பதித்தல் கூடாது. இந்த நிலை உருவாகினாலே உடனே விரக்தி என்ற அரக்கன் உள்ளத்தில் குடியிருக்கத் தலைப்பட்டு விடுவான் ஜாக்கிரதை இந்த விரக்திப் போக்கு, நாளடைவில் சமூகத்தின் மீதான வெறுப்பு உணர்வுகளை உமிழ ஆரம்பிக்கின்றது. இதனால் என்ன லாபம்? பிறர் தூற்றுதலுக்கும் கேலிப்பேச்சிற்கும் ஆளாவதுடன் ஒதுக்க
ப்பட்ட தனி மனிதராக நடமாட வேண்டிவரும்.
- 96 -

ஞானம் எங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் துணிவும் மற்றவர் தவறுகளை மறந்துவிடும் இயல்புகளும் இருந் தாலே சமூக வாழ்வில் நாம் பரஸ்பரம் மக்களிடம் ஒட்டுறவு டன், சங்கமித்துக் கொள்ளுகின்ற நிலைக்குள் வந்து விடுவோம். ஆணவம் என்கின்ற மமதை எவ்வளவு கொடியதோ அவ்வண்ணமே நான் வீணானவன் பயன் அற்ற வன் என்கின்ற தாழ்வு மன இயல்பு மிக்க கொடிதே யாம். கனவுப் பூங்காவில் பூப்பறிக்க எண்ணுதலை விட நிஜமாகவே மக்கள் மனதில் அன்பு எனும் வாசனை விதைகளைத் தூவினால் அதன் பிரதி பயனாக முழு உல கையும் சுகந்தத்தில் அன்பு ஆழ்த்தும்.
நல்ல மகிழ்வூட்டும் கவிதை எழுதவேண்டுமா? உங்கள் முன் நிற்கும் சிறியோர்களையும் வாழ்த்துங்கள். அது ஆயிரம் கவிதைக்கும்மேலானது. மக்கள் முன் பிரசங்கம் செய்ய ஆசைப்படுகின்றீர்களா? மக்களோடு, மக்க ளாக உள்நின்று அவர்களையே பாசமுடன் உற்றுநோக்கிப் பழகுங்கள். கோடி மேடைகளில் நின்று பிரசங்கம் செய்த திருப்தி உண்டாகும்.
யாரோ ஒருவர் பலர் போரிட்டுப் பெறும் கிரீடத்தைச் சூட்டிக்கொள்ள விழைய வேண்டாம். ஒரு சின்னக் குழந்தை பாசமுடன் தரும் ஒரு சின்ன மலருக்கு முன் இந்த புகழ் மகுடங்களுக்கு என்ன பெறுமதி உண்டு ஐயா?
நல்ல மனமூடாக வார்த்தைகளும், நற் செயல்களும்
- 97 -

Page 51
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் அமையவேண்டும். எம்மை நாம் வளர்த்தல் என்பது, எல்லோரையும் நேசித்தல், பாராட்டுதல் என்பது தான். இந்தப் பண்பான செயல்கள் மிகவும் சுவாரஸ்யமானது. "எல்லாமே நன்றாக நடக்கின்றது. அதுவும் எமக்காக" என்று எண்ணுதலே, உள்ளம் வலிமை காண்பதற்கான வழி
நாம் எம் முன் நடக்கும் நடப்புக்களை கிரகித்து ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தான் சந்தோஷம், துக்கம் எல்லாமே இருக்கின்றன. எதை நாம் தெரிந்து எடுக்கின் றோமோ அதுவே எம்மை ஆட்கொள்கின்றன. எனவே, நாம் நல்லனவற்றைக் காண்பதிலேயே புலன்களைச் செலுத்து வோமாக! எங்கள் வசமே எங்கள் நல்வாழ்வு. எங்களை நாமே குஷியாக வைத்திருந்தாலே எமது பணிகளும் மேல் நோக்கியதாக இருக்கும். எம்மை நாம் நேசித்தாலே எல்லா நலன்களும் எங்களைச் சேர சாத்தியப்படும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
14-09, 2008
- 98 -

ஞானம்
தீயவைகளை மறப்பதே சிறப்பு எல்லா விஷயங்களையும் மூளையில் பதிவு செய்ய இயலாது. தேவையற்ற சங்கதிகளை மறந்தால் நல்ல விடயங்கள் மட்டுமே எஞ்சி நின்று எம்மிடம் நிரந்தரமாகிவிடும். மறதி பெறுமதிமிக்க பயன்களைத் துறக்கவைக்க நாம் அனுமதித்தலாகாது. நியாயமான காரணங்களுக்காகவே "மறதி"யை இறைவன், கொடுத்துள்ளான். கண்டதையும் போட்டு மூளையைக் குடையாமல் இருக்க "மறதி எமக்குத் துணை செய்கின்றது. செய்யவேண்டிய காரியங்களை உடனே செய்தால் மறதியின் தாக்கம் அறவே அற்றுப்போகும். காலம் கடத்துதல் ஞாபக சக்தியை இழக்கச் செய்யும்.
மறதி பெறுமதிமிக்க பயன்களைத் துறக்கவைக்கும். நல்லனவற்றை மறக்காமலும், தீயவை எல்லாவற்றையும் மறந்து துறப்பதே சிறப்பு வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையுமே மூளையில் திணிப்பது இயலாத விஷயம். அப்படி நல்லது நீங்கலாகப் பொல்லாத சங்கதிக ளையே இரை மீட்டி வாழ்ந்தால் அதுவே புரையோடி மனதை வருத்தும் பிணியாகிவிடும்.
- 99 -

Page 52
பருத்தியூ 00, ஜூடிதர்
எனவே, நியாயமான காரணங்களுக்காக எமக்கு ஏற்படும், "மறதி கூட இறைவன் கொடையாகி விடுகின்றது. எல்லா விஷயங்களையுமே மனதுக்குள் போட்டுக் குழப்ப வேண்டிய அவசியமேயில்லை. பெற்ற கல்வி, செய்ய வேண்டிய பணிகளை நாம் மறக்கலாகாது. அத்துடன் எம்மைச் சுற்றி இருக்கின்ற அன்பான சீவன்களை மறத்தல் ஆகவே ஆகாது. செய் நன்றி மறத்தல் போல் கொடிய பாவம் வேறு யாது உண்டு?
எனினும், சிலர் தமக்கு பிறரால் பெற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் தனது வாழ்க்கைக்கு எது அவசியம் தேவையானது என்பதை மட்டும் கருத்தில் கொள்வார்கள். பிறர் நலன் மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். யாராவது அவரிடம் ஏதும் ஞாபகமூட்டிக் கேட்டால், "அடடா. நான் மறந்து போய் விட்டேனே." என்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மறந்து போனதாக நடிப்பார்கள். தங்கள் அனுகூலத்திற்காக மட்டும் குடைந்து, குடைந்து வற்புறுத்திக் கேட்பவர்களுக்கு மறதி எப்படி வரும்?
பெரும் விஞ்ஞானிகள் அறிஞர்களுக்கு ஞாபகமறதி வருவதுண்டு. அவர்கள் தமது செயலில் கண்ணும், கருத்துமாக ஒரே சிந்தனையில் கண் துயிலாது தம் கடமைகளைச் செய்யும் போது புற சிந்தனைகளில் நாட்டம் கொள்வதில்லை. இத்தகையவர்கள் தமது உன்னத சேவை களை மறப்பதில்லை. மற்றப்படி நேரத்திற்கு உணவு ܩ 100 -

ஞானம் அருந்துவதையோ, சீராக உடை உடுத்துவதையோ கவனத்தில் கொள்ள மாட்டார்கள். சிந்தனைத் தெளிவும் கருமத்தில் கண்ணாக இருப்பவர்களின் உலகமே தனித்து வமானது. அவர்களோடு தம்மை இணைத்து "நானும் அப்படித்தான்" என எவராது சொன்னால் அது நகைப்பிற் குரியதே!
செய்ய வேண்டிய பணிகளை என்றும் மானசீகமாக நிலை நிறுத்துவோர்க்கு ஞாபகம் என்றுமே நிலைத் திருக்கும்.
திருமண வைபவம் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரே ஆரவாரம், புரோகிதர், மணமகன் வீட்டாரிடம் மாங்கல்யத்தினைப் பூஜையில் வைப்பதற்காகக் கேட்கின்றார். அப்போதுதான் வீட்டில் உள்ள பெரியவர்கள் எங்கே, தாலி என்று கேட்டபடி கொண்டு வந்திருந்த பையை (சூட்கேசை) துழாவுகின்றார்கள்.அந்தப் பையினுள் தாலிக் கொடியினைக் காணாமல் ஒரே பரபரப்பாகின்றது. கல்யாண வைபவம்.
அப்போது இந்த வைபவத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்த சுட்டிப் பையன், "என்ன தேடுகின்றீர்கள்." என்றுகேட்டு விஷயம் என்ன என்று தெரிந்து கொண்டான். தனது தாயாரிடம் வந்து, "அம்மா. அந்தச் சங்கிலியையா தேடுகின்றீர்கள், அதை நான் வீட்டில் ஒளித்து வைத்திருக் கின்றேன்” என்கின்றான்.
- 101 -

Page 53
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
எல்லோருமே பதட்டத்துடன் பையனை அழைத்து வீட்டிற்குச் சென்று பையன் மூலம் தாலியை எடுக்கின் றார்கள். திருமணம் இனிதே பதட்டம் நீங்கி நிறைவுபெற்றது. நடந்தது இதுதான்.
திருமணத்திற்கு முதல்நாள் எல்லோருமே திரும ணத்திற்கு வாங்கிய பட்டுப் புடவைகள், நகைகளை ஆவலுடன் பார்க்கின்றனர். எல்லோருமே தாலிக் கொடி யைப் பார்க்கும்போது அந்தவிட்டுச் சின்னப்பையன் தானும் அதனைப்பார்வையிட்டே தீர வேண்டுமென அடம் பிடிக்கப் பெரியோர்களும் அவ்வண்ணமே அவனிடம் கொடுத்து விட்டு மறந்துபோக, அதன் பின்னர் நடந்த கலாட்டாக் களைத்தான் நான் முன்னரே சொல்லி விட்டேனே!
எந்த ஒரு கருமத்தையும் செய்து முடித்த பின், அவை எல்லாமே ஒழுங்காக நடைபெற்றதுதானா எனச் சரிபார்க்க வேண்டும்.கூட்டு முயற்சியுடன் காரியங்களையும் ஒவ்வொரு வருக்கும் ஒப்படைக்கப்பட்டாலும், எந்த ஒரு தனி மனிதரையும் முழுமையாக நம்பாமல் செய்கருமங்களை மீள ஆராய்ந்து சரி செய்தேயாக வேண்டும். எல்லோருமே ஞாபகமாக இருப்பார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாத மும் இல்லை.
எமது நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர்
வைபவத்தில் கலந்து கொள்கின்றார். விளக்கு ஏற்றி
வைபவத்தை ஆரம்பித்து வைக்க வேண்டும். எல்லோருமே -- 102 ܚ

giFT60TLD ஆவலுடன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க விளக்கு ஏற்ற வந்த ஜனாதிபதி மெழுகுவர்த்தியைக் கேட்கின்றார். விழா நடத்துனர் திரு, திருவென விழிக்கி ன்றார்.
ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி அவரிடம் கொடுக்க ப்படவில்லை. தீப்பெட்டியோ, மெழுகுவர்த்தியோ அங்கு வைக்கப்படவேயில்லை. உடனடியாக அங்குள்ள ஒருவரிடம் தீப்பெட்டி வாங்கி குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அன்றி லிருந்து எந்த வைபவத்திற்குச் சென்றாலும் விளக்கு ஏற்ற தீப்பெட்டி அல்லது (தீப்பற்றவைக்கும் உபகரணம்) லைட்டர் இன்றிச் செல்வதேயில்லை என ஜனாதிபதி சொன்னாராம். மேலே சொன்ன விஷயங்கள் எல்லாமே வெறும் நகைச் சுவைக்காகச் சொல்லப்பட்ட விஷயங்களே அல்ல.
மறதி காரணமாக அவமானப்படுதலை விட அவதான மாக இருப்பதில் என்ன சிரமம் உண்டு? வாக்குறுதி அளிப்பவர்களில், எத்தனைபேர் அதனை நிறைவேற்றுவதில் அவதானமாக இருக்கின்றார்கள்? ஏன் சொன்னபடி செய்யவில்லை என்று கேட்டால் "மறந்துவிட்டேன்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னால் கேட்பவர் இத்தகையவர் களை ஒரு மனிதராக மதிப்பாரா?
கல்வி கற்கும் மாணவர்கள் கற்றதை எக்காலத்திலும்,
மனதில் பதித்திருக்க வேண்டுமன்றோ? உடல் நிலை,
வறுமை காரணமாகப் பல இளம் சிறார்களுக்குக் கல்வியில் س 103 سم

Page 54
பருத்திபூர் ர40. ஆயிரவநாதர் நாட்டமின்மையுடன் மூளையில் எதனையுமே உட்புகாத தன்மையும் ஏற்பட்டுவிடுகின்றன. இயற்கை வைத்திய முறையிலும் ஞாபக சக்தியை உண்டுபண்ண முடியும் என்றும் சொல்கின்றனர். மனதை ஒரு நிலைப்படுத்தும் தியான முறைகள், உடற்பயிற்சிகளால் உடலும், உள்ளமும் சீராவதனால் எமக்குத் திடசிந்தனையுடன்,தேகபலமும் தானாக வந்துவிடுகின்றது.
நல்ல திடமான நிலையானவர்களுக்கு பதட்ட மற்றநிலை உருவாகின்றது. பல கருமங்களை ஒரே சமயத்தில் கையில் எடுத்துப் பதட்டமுடன் செய்யும் வேலைகள் குழப்பத்தில்தான் முடியும். கருமத்தில் தெளிவும், ஆர்வமும் இருந்தால் "மறதி” எம்மைவிட்டுத் துறந்துவிடும்.
விருப்பமின்றி நாம் சொல்லும் சொற்களும், தொடுக்கும் கருமமும் அர்த்தமற்றுப் போவதுடன் சமூகத் தில் பொய் பேசும் ஒருவராக, நம்பிக்கையற்ற நபர் என்கின்ற அவப்பெயரையும் ஏற்படுத்தி விடலாம்.
திட்டமிடாமல் மற்றவர்களின் பாராட்டுதல்களை எப்படியாவது பெற்றால் சரி என்கின்ற அதீத ஆவலுடன் தொழில் எதுவெனத் தெரிந்து கொள்ளாமல் அதனுள் புகுந்து கொள்பவர்கள் தமக்குத் தெரிந்த ஆரம்ப அறிவைக் கூடப் பயன்படுத்தமுடியாது துன்புறுகின்றனர்.
- 104 -

ஞானம்
மூளையை நொறுக்கி நாம் எக்கருமங்களையும், பொறுப்புடன் செய்ய முடியாது. படிப்படியாக எமக்குரிய விஷயங்களை செலுத்துவதுபோல் இலகுவானது
வேறில்லை. எங்கள் கட்டளையை மூளை ஏற்கின்ற பயிற்சி களை நாமே உருவாக்குவது கஷ்டமானது என்று ஒருபோதும் எமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது.
சின்னக் குழந்தைகளைப் பாருங்கள், அவர்கள் தனக்கு வேண்டியதைப் பெற்றோரைக் கேட்டுப்பெற மறந்து விடுவதேயில்லை. ஒரு பொருளை எடுத்து விளையாடு வார்கள். எங்கேயாவது கொண்டு சென்று போட்டு விட்டும் வருவார்கள். நீங்கள் பொறுமையாக அந்தப் பொருள் எங்கே என்று கேட்டுப் பாருங்கள். உடனே அவர்கள் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். எப்போதோ ஒருவரைப் பார்த்தாலும் குழந்தைகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். குழந்தைகள் பெரிய குற்றவாளிகளைப் பார்த்த மாத்திரத்தே மனதில் பதித்து அவர்களை அடையாளம் கண்டு கொள்கின்ற சம்பவங்களைக் கதைகளில் படித்திருக்கின்றோம். இவை யெல்லாம் நம்பத்தக்க உண்மைகளேயாம்.
வயது குறைந்தவர்களின் ஞாபக சக்தியில் ஒரு சிறு
பங்கு இருந்தாலே போதும். நாம் எவ்வளவோ சாதித்திட
முடியும். மனிதர்கள் தமது மூளையின் சக்தியைப்
பூரணமாகப் பயன்படுத்தினால் இந்த உலகத்தையே
கைக்குள் அடக்கலாம். யோகிகளும், ஞானிகளும் தங்கள்
சித்தத்தை யோகமார்க்க மூலம் விருத்தி செய்து கொண் - 105 -

Page 55
பருத்திபூர் (0. ஆயிரவநாதன் டார்கள். எனவே முக்காலத்தையும் துல்லியமாக உணர்ந்து கொண்டார்கள் என அவர்கள் பற்றிய நூல்கள், எடுத்தியம்பு கின்றன.
சில முதியவர்களிடம் பேசிப்பாருங்கள். எப்பொ ழுதோ நடந்து சம்பவங்களையே திரும்பத், திரும்பச் சொல்லிக் கொள்வார்கள். தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைச் சரியான நேரம், திகதி, வருடங்களைச் சுட்டிக் காட்டிச் சொல்வார்கள். ஆனால் எம்மில் பலருக்கும் காலையில் என்ன உணவு உட்கொண்டேன் என்பதையே மறந்து விடுவார்கள்.
நல்ல சொற்பொழிவுகளைக் கேட்கும் போது, அவற்றை உன்னிப்பாக, அவதானமாகக் கேளுங்கள். ஒரு மகாநாட்டுக்கு அதிதியாக நீங்கள் போய் அங்குள்ள குளிர் சாதனத்தின் கதகதப்பில் மெல்லிய குளிரில் உறங்கிவிட்டு யாராவது தட்டி எழுப்பும் நிலைக்கு வரக்கூடாது. ஒரு விஷயத்தையுமே காதில் போடாமல் இறுதியில் பக்கத்து இருக்கையில் சுவாரஸ்யமாக, அவதானமாகக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் அவர்கள் என்ன பேசினார்கள் எனக் கேட்டு நச்சரிப்பது நாகரிகமாகாது.
குறிப்பு எடுப்பது, கேட்பது எல்லாமே எமக்கு ஒரு புது
விஷயத்தைக் கற்கின்ற அறிவை வழங்குவதுடன் நல்ல
நினைவாற்றல்களைச் சுயமாக ஏற்படுத்துகின்றன. அவசரம்
அவசரமாகக் கேட்கும் அறிவுரை, உபதேசங்கள், உரைகள்,
- 106 -

GETTGÜTLÖ
எமது புலனுக்கு உட்புகுந்து விடாது. இவைகளை அறிந்தும் தவறு செய்தால் ஞாபகம் எங்கே வரும் ஐயா?
காலையில் வீட்டைவிட்டுப் புறப்படு முன்பு செய்ய வேண்டிய காரியத்தைத் துண்டுக் காகிதத்தில் மனைவி எழுதிக் கொடுப்பதும் மாலையில் கணவன் வீட்டிற்கு வந்ததும், "என்ன நான் சொன்ன தெல்லாம் செய்து விட்டீர்களா" என்று கேட்டதும், "சே.சே நான் நீ கொடுத்த கடதாசியை மறந்தே விட்டேன்" என்று சொல்வதும் சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிதான்.
அரசாங்க தனியார் நிறுவனங்களில் திட்டமிட்டபடி எந்த வித அலுவல்களையும் கிரமமாகச் செய்து முடிக்க "நினைவூட்டல் தினப்பதிவேடு”என்கின்ற ஏட்டினை வழங்குவார்கள்.செய்ய வேண்டியபணிகளைக் காலையில் வந்ததும் ஏற்கனவே ஊழியர்கள் பதிவு செய்ததன் பிரகாரம் அதைப் படித்து மறக்காமல் தங்கள் கருமங்களைச் செய்து வருவார்கள்.ஆனால் பெரும்பாலான ஊழியர்களுக்கு அந்தப் பதிவேடு ஏன் வழங்கப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அந்த ஏட்டில் வீட்டுக்கணக்கு, அல்லது தனிப்பட்ட தினக் குறிப்பாகப் பாவித்துக் கொள்வதுமுண்டு. மக்கள் பல மைல் தூரத்தில் இருந்து அலுவலகங்களுக்கு வருகை தரும்போது அங்கு பணியாற்றுபவர்கள் "நீங்கள் சொன்ன விஷயங்களை மறந்து விட்டேன்" என்று பொதுமக்களிடம் சொல்வது நியாயம் தானா?
107

Page 56
பருத்திபூர் 240. ஆயிரவநாதர்
மனிதனுக்கு வாழ்க்கையின் சுமைகள், அதிகரிக்க, அதிகரிக்க அவன் புதிய புதிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாகின்றான்.பழைய தீர்க்க வேண்டிய அத்தியாவசியமான விஷயங்கள் இருக்கப் புதிய முளைத்த பிரச்சனைகளுக்கு முன் உரிமை வழங்க எத்தனிக்கின் றான். ஆனால், மனம் சீராக இயங்காத காரணத்தினால் எல்லாக் கருமங்களையும்,முடித்துவிடாமல் அல்லல் படுவதுடன், ஏற்கனவே தீர்க்காமல் இருந்த விஷயங்கள் எல்லாமே நிரந்தரமாக அவனுள் ஒட்டிக்கொள்கின்றன. மறந்து போய் விட்ட விஷயங்களே மீண்டும் பூதாகாரமாக உருவெடுக்கும்போது அச்சப்பட்டு அதிர்ந்து உடைந்து போகின்றான். உடனுக்குடன் எமது கடமைகளை ஒழுங்கா கச் செய்துவரின் இந்நிலை வருமா?
காதலில் தோல்வி கண்ட காதலர் அதனை மறந்து மீண்டும், நல்லபடி வாழ மறதி அவசியமாகின்றது. தோல்வியுற்ற காதல், மரணங்கள்.நினைத்த எதிர்பார்த்த காரியங்களில் தடை, போன்றவைகளை மனம் மறக்க முடியாது அவதியுறுகின்றது.
துன்பப்படுபவன் முன் தத்துவம் பேசினால் அது எடுபடாது. விட்டுப்போன காதலை சட்டென மற என்றால் அவனால் நடைமுறையில் அது முடியாது. ஆனால், நாம் எமது கடமைகளை ஒழுங்காக தொடர்ந்து செய்துவரின் நெஞ்சின் நெருடல்கள் வந்து வருந்த நேரம் கிடைக்காது.
- 108 -

ஞானம்
"துன்பம்” எனும் கொடும்குளிர் வாட்டுகின்றது.
"கடமை" என்கின்ற ஆடைகொண்டு மூடுவதே குளிர் என்கின்ற துன்பங்களை நீக்க ஒரே வழியாகும்.
懿
மறக்க முடியாத துன்பங்களை மறக்க வேண்டு மெனில் மக்களுக்குச் சேவை செய்ய நேரங்களை ஒதுக்குங்கள். மனதை ஒரு நிலைப்படுத்த வணக்க ஸ்தலங் களுக்குச் செல்வீராக! மனம் விரும்பும் பெரியோருடன் உள்ளம் திறந்து உரையாடுங்கள்! ஒரேவிதசூழல்களும் துன்பங்களைஏற்படுத்திய சுற்றாடல்களும், ஒருவர்க்குப் பங்கத்தை வரவழைக்கு மாயின்சொற்பநாட்களுக்கு,எங்காவது சுற்றுலா விற்குச் சென்று வாருங்கள் கவலைகளையும், துன்பத்தையுமே தருகின்ற நபர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பீர்களாக!. நல்ல நூல்களைப் படியுங்கள்,பயன் தரும் பொழுது போக்குகளில் மனதார ஈடுபடுங்கள். கள்ளம் கபடமற்ற குழந்தைகளுடன் நன்றாகச்
சிரித்துப்பேசி மகிழ்வீராக!.
"காலம்” என்கின்ற கண்காணாத ஒன்று பல பிரச்ச
னைகளைக் கரைக்கின்றது. அது எமக்கு வழங்குவது நல்ல அனுபவங்களைத்தான்.
- 109 -

Page 57
பருத்திபூர் 04ல. ஆயிரவருதஷ்
நல்ல இனிமையான, பசுமையான சம்பவங்கள்
உங்களை என்றுமே இன்பமுடன் வாழவைக்கும். இந்த நல்ல ஞாபகங்கள் மனம் விரும்பாத விஷயங்களை மறக் கடிக்கும் மழுங்கடித்து முடிவில் இல்லா தொழித்துவிடும். ஞாபகங்களும், மறதியும் எம் தேவைக்கு ஏற்ப வாழ்க்கை யைக் கட்டியெழுப்ப இயலும். கெடுதலை மறப்பதும், நல்லதை ஞாபகத்தில் இருத்தி வைத்தலும் எம் திறனாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
24.08.2008
- 110 -

ஞானம்
மனிதன் தான் உயர்ந்தவனா..?
ஆண்டவனுக்கு அனைத்துமே ஒன்று. சகல ஜீவன்களுக்கும் சக்தியுண்டு மனிதனை விடப் புலனறிவு உள்ள ஓரறிவு உயிரினங்களின் இயக்கம் வியப்பூட்டுவன. அன்பு, பாசம் காதல் அனைத்து உயிரினங்களிலும் உண்டு. இயற்கையை மனிதனைவிட மிருகங்கள், பறவைகளும், கடல்வாழ் உயிரினங்கள் உட்பட சகல சிற்றுயிர்களும் இணைந்து நேசிக்கின்றன. மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கையை வளைக்க முயன்று இளைத்துக் களைத்துப் போகின்றான். இயற்கையை, சகல உயிர்களை, நேசிப்பவனே உயர்ந்த மனிதன்.
மனித இனம்தான் உன்னதமானது. ஏனைய ஜீவரா
சிகள் எல்லாமே தாழ்ந்தது என்று எண்ணிக் கொள்வது
உண்மையை மறைக்கும் பொய்மைக் கூற்று ஆகும். எல்லா
ஜீவராசிகளும் ஒரே வினாடியில் மனிதனுடன் போர்
தொடுத்தால் அடுத்து எம் கதி அதோகதி சிந்திக்கவும்
வார்த்தைகளைச் சிந்தவும் தெரிந்தவன் மனிதன். ஆனால் - 11 -

Page 58
பருத்திபூர் அல. ஆயிரவருதஷ் மனித இனம் தவிர்ந்த எல்லா உயிர்களாலும், பேசமுடியாது, சிந்திக்க முடியாது என்கின்றோம்.
வாயால் பேசுவது மட்டுமே பேச்சு. தம் புலனறி வினால் ஒலி, மின்காந்த அதிர்வுகளால், ஓரறிவுள்ள சீவன்கள் பரஸ்பரம் தங்கள் இயக்கங்களைச் சீராகவே நடத்திக் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்கமுடியுமா?
விலங்குகளின் ஒசைக்கு விளக்கம் சொல்ல எம்மால் முடியாது. அதற்காக அவைகளின் பரிபாஷைகளே தெரியாமல் அவைகளுக்கு எம்மைவிடப் புலனறிவு ஒன்றுடன் ஒன்றுகருத்துப் பரிமாறும் சக்தி இல்லை என்று எப்படிச் செப்பிட முடியும்? தமக்கிடையே ஏதோ ஒருவித தொடர்புகள் இல்லாத ஜீவன்களே இல்லை.
பூக்களுக்குள் நடக்கும் புனிதமான சேர்க்கையினால், பூமியில் புதிதாய் முளைக்கும் தாவரங்கள் எத்தனை கோடி? அவைகள் தமக்குள் மதுவைத்தேக்கி, வண்டினை அழைத்து, அணைக்கும் கலையை யார் கற்றுக் கொடுத்தது? தவளைகள் கத்துவது எமக்குப் பிடிக்காது. அவை தமது எத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன என்பதை, எப்படி எமக்கு முழுமையாகச் தெரிந்து கொள்ள (ԼpւգԱյլb?
ஓரறிவுக் கடல்வாழ் உயிரினங்கள் ஒன்றை ஒன்று துரத்தி, நழுவி, மனிதர்கள் போலவே நெளிந்து, வளைந்து - 12 -

ஞானம் திரைப்படத்துக் காதலர்கள் போல் கடல் பூங்காவில் களித்து, மகிழ்வதை தொலைக்காட்சியில் கண்டு வியந்தே போனேன். காதல் கலை எமக்கு மட்டுமா சொந்தம்?
தமக்குள் பாஷைகள் இன்றிப் பேசுவதாகச் சொல்ல லாமா? எங்கோ இருக்கும் பூவின் சுகந்தத்தை, நுகரும் திறனை வண்டு எப்படிக் கண்டு கொள்கின்றது? ஆயிரம் அடிக்கு மேலே பறக்கும் பருந்து தெருவில் சுற்றும் கோழிக் குஞ்சைக் கண்டறிந்து சட்டெனக் கீழே இறங்கி அலாக்காக எப்படிக் கெளவுகின்றது? எதிரிகளிடம் தப்பிக்க ஒவ்வொரு ஜீவன்களும் எப்படி எப்படியான உபாயங்களைத் தம் கூர்மையான புலன்களால் அறிந்து கொள்கின்றன!
எங்கள் உடம்பினால் கண்டம் விட்டுக் கண்டம் பாய முடியுமா? அரை அங்குல வெட்டுக்கிளிகளால் அது முடிகின்றதே! அவைகளுக்குப், பாதைகளைக் கொலம்பஸ் சும், வஸ்கொடகாமாவும் வந்து சொல்லிக் கொடுத்தார்களா?
பூமியின் சீதோஷ்ணகால மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் இருப்பிடங்களை மாற்றியமைக்க பட்சிகளால் முடியும். மனிதன் பக்கத்து நாட்டிற்குச் செல்ல, குடியகல்வு அனுமதி பெற்றுப் பல்லாயிரம் செலவு செய்து போய் வருகின்றான். பத்து அடி நகரப் பேரூந்து வேண்டும் என்கின்றான். பல்லாயிரம் மைல் பறந்து செல்ல பத்து அங்குல செட்டைகள் போதுமே என்கின்றன പ്രജ്ഞഖങ്കണ.
ܚ 113 -

Page 59
பருத்திபூர் அல. ஐரேஷ்
பூமிக்குள் வாழும் சீவன்கள் மூச்சை அடக்கியும், வெளியே விட்டும் சீவிக்க முடியும். உணவை எடுக்கும் உபாயங்களை வழியை இறைவன் கொடுத்துள்ளான். ஆனால், மனிதன் இயற்கைக் காற்றை இழந்து அடைபட்ட அறையில் குளிர்சாதனப் பெட்டியை நம்பி விறைத்து, உறைந்து வாடுகின்றான். குளிரும், உஷ்ணமும், மனிதனைத் தான் அதிகம் வாட்டும். இயற்கையோடு சரசமாடும் கலையை மிருகங்களும், பறவைகளும் நன்றாக
அறிந்து வைத்திருக்கின்றன.
ஆனால், இந்த அப்பாவிச் சீவன்களுக்கு மனிதன் தான் முழு எதிரி. இவைகளால் அவன் அடையும் நன்மைகள் தான், எத்தனை, எத்தனை?. பெற்ற குழந்தைக்குப் பாலூட்ட அன்னை மறுத்தாலும் பசுக்களின் தயவினால் பல் கோடி குழந்தைகள் உயிரை வளர்க்கக் காரணமாகின்றன.
மரங்கள் மூலம் காய்கறிகளைப் பெற்றுக்கொள்வதும், உடலுக்கு ஊட்டம் தேடுவதுடன், அதையே அழித்துத் தனக்கு வீடு அமைப்பதும் மனித குணம், விலங்குகளை வேட்டையாடு வான், கடலில் புகுந்து,கடல் சீவன்களைக் கொன்று புசிப்பான். ஆனால் அவைகளின் இருப்பிடங்களை ஏன் ஐயா அசுத்தமாக்கின்றீர்களே? சுடுகாடு போல் பச்சை நிலங் களை உங்கள் இஷ்டத்திற்குப் பாலை வனமாக்கு கின்றீர்கள்? எங்களுக்கே எல்லாம் தெரியும் என்று எண்ணு கின்ற ஹே. மானுடா, உன்னைப்பற்றி இந்தஜீவராசிகள்
م 114 -

ஞானம் என்ன எண்ணும் என்று சற்றேனும் நினைந்தது உண்டா? நாம் இப்படியும் சிந்தித்தால்தான் என்ன..?
ஒரு குஞ்சுப் பறவை சொல்லும்,"ஐயோ பாவம், இந்த மனுஷன். ஒரு அடி உயரத்திற்கே பறக்க முடியாத பலவீனன். இந்த உடம்பை வைத்து என்ன செய்கின்றான்? கொடுமைகள் தான் செய்கின்றான்." என்றும் எண்ண 6) Tib.
வளைந்து, நெளிந்து நீந்தும் மீன்கள் சொல்லும்."ஒரு செக்கன் கூட நீரினுள் மூச்சைப் பிடித்து, நிற்கப் பயப்படும் இவன் எல்லாம் என்ன மனுஷன்? எங்களைப் போல் விரைவாக நீந்த முடியுமா? எங்கள் புலனறிவின் கோடியில் ஒன்று இவர்களிடம் உண்டா? குரல் எழுப்பாமலே வெறும் அதிர்வுகளால் உடல் அசைவுகளால் எங்களுக்குள் எத்தனை செய்திகளைச் சொல்கின்றோம், அனுப்புகின்றோம். எங்கள் சாகச வித்தைகளை மனிதன் பலகோடி வருஷம் பயின்றாலும் செய்வானா? இப்படி மீன்கள் சொன்னாலும், அவைகளில் ஏதும் தப்பு உண்டோ. சொல்லுங்கள் நண்பர்களே.!!
விலங்குகளும், பறவைகளும் தான் கூட்டுக்
குடும்பமாக வாழுகின்றன. மனிதர்களுள் மட்டும் தான்
உறவுகள், சுற்றம் என்றெல்லாம் உண்டா? ஒருகாகம்
இறந்து போனால் பல காகங்கள் ஒன்றிணைந்து பெரிய
சத்தங்களைக், எழுப்பி, கரைந்து, தங்கள் துயரை வெளிப் - 115 -

Page 60
பருத்திபூர் (40. ஐரே9ரர் படுத்துவதை நாம் பார்க்கின்றோம்.
தன்னுடன் இணைந்து வாழ்ந்த ஆண்பறவையோ, அன்றிப் பெண்பறவையோ இறந்து போனால் துயர் மிகுதியினால் மற்றயது செத்துப் போகின்றது. ஒரு பறவை இனத்துக்கு ஒரு தகவலைச் சொல்கின்றேன். பெண் பறவை இறந்துவிட்டாலோ அன்றி ஆண்பறவை இறந்துபோனாலோ, அவைகள் சிறு, சிறு கற்களை உண்கின்றன. அவைகளின் இரைப்பை நிறைந்ததும் உயரிய ஒரு இடத்தில் இருந்து தன் செட்டையை மடக்கிக்கீழே விழுந்து இறந்து போகின்றன. எப்படியாவது தனது உயிரைப் போக்க காதல் பறவைகள் செய்யும் வழிஎம் விழிகளில் இருந்து கண்ணிரை வரவழைக்கு மல்லவா?
மரணபயம், மனிதர்க்கே மிகையானது. மிருகங்கள் வாழும் காலம் வரை மகிழ்வோடு வாழும் கொடிய வனத்தில் மான்கள் துள்ளித்திரியும். மாடுகளும் மரைகளும், நரிகளும், பரிகளும், கிட்ைத்ததைச் சாப்பிட்டுக்களிப்புடன் வாழும்.
ஒரு வனத்தில்,சிங்கம் ஒன்று, மாடு ஒன்றைத் துரத்துகின்றது. அதனுடன், மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் சற்றுக் கலவரப்பட்டுப் பின்னர் அமைதியாகிப் பழையபடி தங்கள் பாட்டிற்குமேய்கின்றன. துரத்தப்பட்ட மாடு அகப்பட்டுச் செத்துப்போகின்றது. அவைகளின் உறவுகளுடன் ஒன்றாய் சாப்பிட்டதும் தூங்க ஆரம்பிக்கின்றன.
- 116 -

ஞானம் ஆனால், சிங்கங்களுக்குப் பக்கத்திலேயே ஏனைய மிருகங்கள் தங்கள் பாட்டிற்கு மேய்ந்து கொண்டிருக் கின்றன. தங்களுக்கான அன்றை உணவு கிடைத்தால் போதும் அவைகள் பெரிதாக எதையுமே எதிர்பார்ப் பதுமில்லை. அதேபோல், தங்களை மற்ற விலங்குகள் பிடித்துச் சாப்பிட்டு விடும் என்று எண்ணித் தங்கள் இயல்பை, கருமத்தை ஏனைய எந்த ஒரு விலங்கும் மறந்து விடுவதுமில்லை.
ஆனால், இந்த மனிதனில் எவன்தான் கிடைத்ததை வைத்துத் திருப்திப்படுகின்றான்? மீதி உணவை உணவு கிடைக்காத ஏழைக்கு வழங்குகின்றானா? அடுத்த வேளைக்கு ஆகுமே என்று எண்ணிக் குளிர் சாதனப் பெட்டி யிலே பூட்டுகின்றான்.
கிடைத்த காசை வைத்துத் திருப்திப்படுகின்றானா? அடுத்தவனிடம் சுருட்டுவது எப்படி என்று, தினம் தினம் சிந்தித்துச் சிந்தித்து தனது தலையை மொட்டையாக்கு கின்றான் என்ன கொடுமை இது?
தேவைகளைக் கூட்டுகின்றான். ஆசைகளைப் பெருக்குகின்றான். முயற்சி செய்தல் என்பது, மற்றவனை இயங்காமல் செய்வதே என்று தப்பான கருத்தைத் தனக்குள்ளே தேக்கிக் கொள்கின்றான்.
மிருகங்களுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும்
- 117 - -

Page 61
பருத்திபூர் பல. அவிழ்வரர் தங்கள் சக்தியில் அபார நம்பிக்கையுண்டு. வேட்டையாடு வது எப்படி என்று தாய் தன் குட்டிகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றனது. குட்டியாக இருக்கும் போதே பூனையும், புலியும், சிங்கமும், பறவையினங்களும் கொஞ்ச நாள் பயிற்சிகளைத் தங்கள் பிறப்புகளுக்கு வழங்கும்.
ஆனால், மனித இனத்திற்கு எத்தனை வருடங்கள் பயிற்சிகள் வழங்கினாலும், உபதேசங்கள் செய்தாலும் இவர்கள் நன்கு பயில்கின்றார்களா, கேட்கின்றார்களா? எத்தனை ஞானிகள், தீர்க்கரிசிகள், புவியில் அவதரித்துப் பாடம், உபதேசம் சொல்லிப் போனார்கள். செவிமடுத்தார் களா? மதச்சண்டை, மொழிச் சண்டை, நிலத்திற்காக, நீருக்காக என எத்தனை எத்தனை விஷயங்களை முன்வைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மனிதனைவிட வேறு எந்த ஜீவராசிகளும் உபதேச ங்களைக் கேட்டதில்லை. ஏனையவைகளுடன் சண்டை செய்வதற்காக அடக்கி ஒடுக்குவதாகப் பயிற்சிகளைச் செய்ததுமில்லை. ஆயுதங்களைக் கையில் எடுத்து ஆரவார மாக மோதியதுமில்லை.
மிருகங்கள் எதுவாயினும் கல்லால் எறிந்து, பொல்
லால் தாங்கித் தம்முள் பொருதியது உண்டோ? அவை
தங்கள் உடல் பலத்தை சுய மூளையைப் பயன்படுத்தியே
வாழுகின்றன. அவைகளுக்குப் பிரத்தியேக ஆலோசகர்கள்
இல்லை. ஒன்றன் மேல் ஒன்று அமர்ந்து சவாரி செய்த - 118 -

@fic{b துமில்லை. தங்கள் கால்களால் நடக்கின்றன. தமது இறக்கைகளால் பறவைகள் பறக்கின்றன. தட்டிச் சுற்றி அடுத்தவன் குடியைக் கெடுப்பதுபோல் ஒரு மிருகத்தை இன்னும் ஒன்று ஏய்த்து வாழ்வதுமில்லை.
அவை வாழும் நிலமும், வானும் அவைகளுக்கே சொந்தமாகின்றன. ஆனால் அவை எல்லாமே தமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடியதுமில்லை. இன்று ஒரு நிலம், நாளைக்கு இன்னுமொரு நிலம், வானத்தில், பல்திசைகளையும் நோக்கிப் பறக்கும் பறவைகளுக்கு ஏது எல்லைகள்? ஒரு வட்டத்திற்குள் வாழுவதில்லை. விலங்குகளும், பறவைகளும், மற்ற எல்லா சீவன்களும், எம்மைக் காணுமிடம் எல்லாம் கொத்திக் குதறி நோய் பிணிஉண்டாக்கி, யுத்தம் புரிந்து உலகைக் கைப்பற்ற வல்லமை இருந்தும் அதுபற்றி எண்ணுவதில்லை. அது இறை செயல், சந்தோஷப்படுங்கள்!
மனிதன் ஒரு வட்டத்திற்குள் வாழச் சித்தமாகின்றான். தனது குடும்பம் மட்டும் தான் பெரிது, அடுத்தவனுக்கும் குடும்பம் உண்டு. அவனுக்கும் பாசம், பரிவு பந்தம் உண்டு என்று, எத்தனைபேர் நோக்குகின்றார்கள்? அறிவை வைத்து, அடக்கியாளப் பிரயத்தனபடுகின்றார்கள். இயல்பாக, யதார்த்தமாக,அன்னியோன்யமாக அன்புடன் எல்லோரிடமும் வாழ முடியும் என்பதை ஏன் தான் உணராமல் நடிக்கின்றான் என்பது தான் புரியவில்லை.
119 -

Page 62
பருத்திபூர் பால. ஆயிரவநாதர்
ஆண்டவன் பார்வையில் அனைத்தும் ஒன்றே. காரணம் இன்றி எதுவுமே படைக்கப்பட்டதுமில்லை. அப்படியாயின் கிருமிகளை எதற்காக இறைவன் படைத் தான் என்று நீங்கள் கேட்கலாம். நோய், நொடி இன்றி எல்லாச் சீவன்களும் உயிர்வாழ முடியாது.
மரணம் இன்றேல் புவனம் தாங்குமா? இறப்பு, பிறப்பு எல்லாமே எல்லா உயிர்க்கும் வந்துபோகும். நோய் கிருமிகளைப் படைத்தவன் தான் அதை அழிக்கும் அறிவையும் படைத்தான். இறப்பும் பிறப்பும் இயல்பேயா யினும் பிறப்பின் நோக்க நிறைவேறப்படல் வேண்டும். இறைவன் படைப்பு அற்புதம், ஒவ்வொரு உயிர்களுமே தத்தமது பணிகளைச் செய்கின்றன.
மானுடப் படைப்பும் இவைகளில் ஒன்றாயினும், இதுவே என்றும் உலகை ஆட்சி செய்கின்றது. நல்ல வாழ்வு வாழ்ந்துகாட்டு என்பதற்காகவே அறிவைத் திறனைச் சிந்தனை வளத்தைச் சேர்த்து இறைவன் வழங்கினான். மனிதன், மனிதனாக வாழாதவரை அவன் பெருமை பேச முடியாது. எல்லா உயிர்களும் தமக்குரிய பணிகளைச் செய்து கொண்டிருக்க மனிதன் மட்டும் மாண்புடை தன்மையாய், தூய ஆன்மாவாக வாழாது விட்டால் இறைவன் படைப்பே அர்த்தமற்றதாகிவிடுமே!
தம்மைப் பற்றிப் பெருமை கொள்வோர் அவ் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டுமல்லவா? மனிதர் - 120 -

GESTGØTL b புல்லாய், பூடாய், புழுவாய்ச் சீவிக்க முடியாது. மிருகம் போல் கருமமாற்ற முடியாது. அறிவால் உலகை ஆள எண்ணும் நாம், உலகை ரசிக்கவும், உலக அனைத்து உயிர்களை நேசிக்கவும், கருணை காட்டவும் முனைப்புடன் செயல்பட்டால்தான் அவன் மானுடம் போற்றும் மா மனிதன்!.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
17-08-2008
- 121 -

Page 63
பருத்திபூர் பல. ஆழ்வரர்
۔۔۔۔
சிறார்களின் நலனை பாதிக்கும் விடயங்கள் (ஒரு பார்வை)
சிறார்களைச் சுதந்திரமாய் இயங்க விடுக! பொறுமை காப்பது அனைவரின் பொறுப்பே திறமையுமிகு பிள்ளைகளின் பெருமையறிந்து நிறை மாந்தராக்குதல் பெற்றோர் பெரும் கடன்.
ஒரு மாலைப் பொழுது எனது நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கு அவரது குழந்தைகள் மிகவும் கலகலப்பாகக் களிப்புடன் வீட்டினுள்ளேயும், வெளி யேயும் ஒடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். பார்ப்ப தற்கே மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனது நண்பர் வீட்டில் இல்லை " அவர் வரும் நேரம், சற்றே அமர்ந்தி ருங்கள்" என்றார் அவரது மனைவி.
- 122 -
 

ஞானம் ஓரிரு நிமிடத்தில் மோட்டார் சைக்கிளின் ஒலி கேட்டது. அவ்வளவு தான் அதன் ஒலியைக் கேட்டதுமே ஒடியாடி விளையாடிக் கொண்டிருந்த அவரது பிள்ளைகள் எல்லோருமே வருவது தமது தந்தையார் என்று அறிந்ததும் விழியைப் பிதுக்கியபடி அவரவர் மேசையருகே சட்டென அமர்ந்து, அருகில் வைத்திருந்த பாடப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். மாலை நேரம் விளையாடும் வேளை தந்தையைக் கண்டதும் மருளும் மக்கள் இது என்ன இராணுவ முகாமா?
வந்தவர் சும்மா இருக்க வில்லை விழிகளை உருட்டி ப்பிள்ளைகளை நோக்கி" என்ன விளையாடுகின்றீர்களா, அல்லது படிக்கின்றீர்களா" என மிரட்ட ஆரம்பித்துவிட்டார். பிள்ளைகள் முகத்தில் கலவரம் பீதி நான் அந்த வீட்டை சற்று நோட்டம் விட்டேன். வீட்டு சுவரின் ஓரத்தில் பளபளக் கும் பிரம்பு ஒன்று தொங்க விடப்பட்டிருந்தது.
“இது என்ன சர்க்கஸ் கூடாரமா" என எனது மனம் மீண்டும் கேட்டது. பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் ஆனால் பெற்றோரைக் கண்டதுமே நடுநடுங்கும் அளவிற்குப் பயமுறுத்த வேண்டுமா என்ன?
அன்பு, பாசத்தை வெளியே காட்டினால் பிள்ளை கள் பயப்பட மாட்டார்கள் எனச் சொல்லும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு என்ன என உணர்வதே இல்லை.
- 123

Page 64
பருத்திபூர் 00. அரவருதல்
பாசத்தை உள்ளே மனதினுள் பூட்டி வைப்பது சரியானதே எனச் சொல்வதே தவறுதான். வெளிக்காட்டாத அன்பு குழந்தைகள் மனத்தைச் சென்றடைந்து விடுமா? காலப் போக்கில் அவர்கள் பெற்றோர்களை எதிரிகளாகவும் நோக்க இடமுண்டு.
கண்டிப்புடன் வளர்க்கின்றோம், அவர்களுக்குத் தேவையானதை வழங்குகின்றோம், நல்ல உணவு, கல்வி, உடை,உறைவிடம் எதிலே நாம் குறை வைக்கின்றோம்? நிறைவான வாழ்க்கை அமைக்க அவர்களுடன் கண்டிப்பாக நடப்பது தவறாகுமா என்றும் பல பெற்றோர் சொல்லு கின்றார்கள்.
தமது பிள்ளைகளை எந்த விதத்திலும் வளர்க்க எமக்கு உரிமையுண்டு எனச் சொல்லுகின்ற பெற்றோர் அவர்கள் மனதைச் சதா இம்சைப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கின்றது? "முன்னர் இப்படித்தான் எமது தாய், தந்தையர் எம்மை வளர்த்தார்கள். நாங்கள் நல்ல நிலைக்கு வந்து விட்டோம். ஒழுக்கமாக வாழ நாம் சில வேளை இவர்களுக்குத் தண்டனை வழங்கினால் தப்பா என்ன என்றும் கேட்கின்றார்கள்.
நாம் முன்னர் வாழ்ந்த வாழ்க்கை முறையுடன்
தற்போதைய நிலையை ஒப்பீடு செய்ய முடியுமா? இன்று
பிள்ளைகள் கல்வி முறை, உணவு பழக்க வழக்கங்கள்
பொழுதுபோக்கும் முறைகள், உடை என எல்லாமே மாறி س 124 سم

ஞானம் விட்டது. அத்துடன் சுதந்திரமாக வாழும் எண்ணம், சமூகத்தில் பழகும் முறைமை எல்லாமே மாற்றமடைந்து விட்டது.
வீட்டினுள் பூட்டி வைத்துப் பிள்ளைகளை வளர்க்க முடியாது. புற உலகைக் காட்டாது எவருடனும் பழக விடாமல் பார்த்துக் கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாச்சாரங்களும் அல்ல.
இன்று இல்லங்களில் சில பெற்றோர்கள் தமக்கு உள்ள உரிமை காரணமாகப் பிள்ளைகளை இம்சிப்பது கூட சிறார்களுக்கான வன்முறை போலத் தோன்றுகின்றது. தாய் தந்தையாரை இழந்த பிள்ளைகளை உறவினர்களோ, மற்றும் எவரோ அவர்களைப் பராமரிக்கும் போது ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படும் மன வடுக்கள் சொல்லும் தரமன்று.
அது போலவே சில பெற்றோர்கள் ஒரு பிள்ளை சாதுர்யமாகச் செயல்பட்டு நன்கு கல்வி கற்றால் பாராட்டி மகிழ்வதும், சற்றுத் துடுக்குத் தனமாகவும், படிக்காமலும் இருக்கும் தனது பிள்ளைகள் மீதே ஒரவஞ்சனை காட்டும் நபர்களும் இருக்கின்றார்கள். எனினும், அத்தகைய பெற்றோர்களால் நிந்திக்கப்பட்ட பிள்ளைகள் வாழ்க்கை சீரழிக்கப்படுவதுமுண்டு.
- 125 -

Page 65
பருத்திபூர் (40. ஜலிற்றுருதேஷ்
அதே சமயம், இதே பிள்ளைகள் நாளடைவிலே மனம் மாறி நல்ல நிலைக்கு வந்த பின்னர் தம்மை ஒரவஞ்சனையுடன் வளர்த்த பெற்றோர்களையே தாங்கும் தயாள குணமுடைய சற்புத்திர, புத்திரிகளையும் நாம் கண்டதுமுண்டு.
எந் நிலையிலும் வீடுகள் ஒரு அடக்கு முறையின் கீழ் இயங்கும் சிறைக்கூடமாக மாறிவிடக்கூடாது.சிறார்கள் மீதான அடக்கு முறை வன்முறைகள் பல பாடசாலை களிலும் நடப்பது வேதனைக்குரியவொன்றாகும்.
சின்னஞ்சிறு குழந்தைகள் தவறு இழைத்து விட்டால் அல்லது படிக்காமல் விட்டால் வகுப்பு அறைக்கு வெளியே வெளியில் சில ஆசிரியர்கள் விட்டு விடுவதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிள்ளைகள் சிலர் ஒழங்கினமாக நடந்து கொண்டால் அவர்களை இருத்தி எழுப்புமாறு கூறுவதுடன் " இச் செயலை நூறு தடவைக்கு மேல் செய்” எனவும் தண்டனை விதித்து விடுவார்கள்.
தொடர்ந்து இருத்தி எழுப்புவதால் அடுத்த நாள் மாணவர்கள் பாடசாலைக்கு வரமுடியாமல் போய்விடும் சந்தர்ப்பமும் உண்டு. அது மட்டுமல்ல ஒரு சஞ்சிகையில் நான் படித்த சம்பவம் இது. தொடர்ந்தும் இவ்வண்ணம் பயிற்சியின்றி இருத்தி எழுப்பினால் உடல் உறுப்புக் களுக்கும் கெடுதல் வரலாம் மேலும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற கெடுதல்களால், வேறு ப்ல பின் விளைவு களையும் ஏற்படுத்தி விடக் கூடும்.
- 126 -

ஞானம்
தலையில் குட்டுவது, நகத்தால் விரல்களை நகக் கண்களில் வைத்து அழுத்துவது, காதைத் திருகுவது போன்ற செயல்கள் பாடசாலைகளில் சர்வ சாதாரணமாக
நடக்கின்றது.
மாணவர்களைப் பகிரங்கமாகவே அவமானப் படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு ரோஷம் வருமாறு தண்டனை வழங்கினால் தான் திருந்துவார்கள் எனச் சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.
தண்டனைக்குரிய குற்றம் என்பது வேறு. சாதார ணமான குறும்புத்தனங்கள்என்பது வேறு. குழந்தைகளை குழந்தைகளாகவே நடத்த வேண்டும். அவர்களை விரோதிகள் போலவா பார்பபது? எல்லை மீறிய துஷ்டத் தனம் செய்யும் பிள்ளைகளைக் கண்டிப்பது சிறு சிறு தண்டனை வழங்குவது போன்றன ஒரு வரையறைக்குள் அடக்கப்படல் வேண்டும்.
இத்தகையோர்க்கு அன்பான ஆலோசனைகளை வழங்குவதும், அவர்களின் திறமையைத் தட்டிக் கொடுத்து அவர்களை பாராட்டுவது ப்ோன்ற வழிகளையும் கையாள வேண்டும். சிறார்களின் மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தவது படுபாதகமான செயல்!
இல்லம் நின்மதியற்று இருந்தால் அவர்களது பிள்ளைகளின் மன இயல்பு பாதிப்படைவதில் வியப்பு - 127 -܂

Page 66
பருத்திபூர் 04ல. ஆயிரவருதல் இல்லை. ஒரு பிள்ளையைக் பார்க்கும் போது அவர்களின் குடும்ப சூழலை ஆசிரியர்கள் நோக்க வேண்டும்.
சிறுவர்கள் மீதான வன்முறைகள் பற்றிப் பேசுகின் றோம். சமூக விரோதிகளிடம் அகப்பட்டு உழலும் இளைய சமுகத்தை மட்டுமே நாம் கேள்விப்பட்டு கவலைப்படு கின்றோம் ஆனால் சாதாரண சூழலில் வாழும் மக்களுடன் மக்களாக வாழும் அப்பாவிக் குழந்தைகள் படும் அல்லல் கள் எமது கண்ணுக்குப் புலப்படுவதில்லை.
தனது பிள்ளைகளைக் கொண்டே மதுபானம் வெண் சுருட்டு, பீடி போன்ற பொருட்களை வாங்கி வரச் சொல்லும் தகப்பனார் செய்யும் செயல்களை என்ன என்பது?
தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் பெற்றோ ரால் பிள்ளைகள் படும் அவஸ்தை, அவர்கள் எதிர் காலத் தை இருள் மயமாக்கி விடுகின்றது. சில விஷயங்களைச் சொல்லவும் நா கூசும் பெற்றோரின் துர் நடத்தை யினால் மனம் பாதிப்படைந்து சாதாரண நிலையிலிருந்து நழுவி ஒரு மன நோயாளிகளான சிறார்களும் இருக்கின்றார்கள்.
சின்னஞ் சிறு குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன?
அன்பான பாசமுள்ள பெற்றோர்களை மட்டுமல்ல சுற்றி
யிருக்கும் நல்ல சூழலை, இயற்கையைக், கூடியாடிக் குலவ
நல்ல தன் வயது தோழர்கள் எனப் பல விஷயங்களை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ܚ ܲ128 -

ஞானம் நிலவுடன் பேசி மகிழவும், பூக்களுடன், மரங்களு டன், பட்சிகளுடன் சதா சஞ்சாரம் செய்ய விளையும் சிறுசு
களை சுதந்திரமாக உலா வர வழி விடுங்கள். இவர்கள் உலகம் மிக விரிந்தது. இவர்களிடம் இழைந்து இணைந்து மிக அந்நியோன்யமாக உல்லாசமாக வாழ விழையும் விளை பயிர்களை வையகத்தில் உன்னதமான இடத்தை வகிக்க வைப்பதே எமது கடன் பொறுப்பு
எங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல, அனைத்துப் பிள்ளைகளுமே மிக அவதானமாகப் பேணப்பட வேண்டிய பெரிய பொக்கிஷங்கள். சிறார்களுக்கான நலன்களை வழங்காமல் விடுவது அல்லது அதனைத் தடுப்பது உலக ஷேமத்தைத் தடுக்கும் நடவடிக்கை. எவரது மனத்தை, உடலை மாசுப்படுத்தல், வேதனைப்பட வைத்தல் எவருக் கும் வழங்கப்பட்ட உரிமையல்ல
தினக்குரல் “ஞாயிறு இவள்” பகுதி
10-07-2011
- 129 -

Page 67
பருத்திபூர் அல. ஆயிரவருதஷ்
காலப் பெறுமதியைக் கண்டு கொள்க!
"காலம்” கண்ணுக்குத் தெரியாது, சரித்திரம் படைக்கும் வேலை செய்வது உனக்காய் அன்று, உலகுக்குமானதே பற் பல இன்பம், துன்பம் வந்து போகும், எழுந்து நில்!
நிலைத்து நின்று அரும் பணி செய் 1. செய். செய்!
நேரங்கள் யாவருக்கும் ஒரே மாதிரியானதாகவே வழங்கப்பட்டுள்ளன. ஒரு நிமிடம் ஒருவருக்கு ஒரு மணித்தியாலம் என்று இருப்பதேயில்லை. அதே போல் ஒரு மணித்தியாலம் ஒரு விநாடியேனும் குறுக்கப்ப டுவதுமில்லை.
ஆனால் ஒருவர் தான் செய்யும் காரியங்களை கால விரயம் செய்யாமல் இருப்பதே சிறப்பானதாகும்.
- 130 -
 

ஞானம் அதாவது நேரங்களைச் சிதற விடாது திட்டமிட்டு ஆற்றல் மிகு செயல்களைச் செய்வதே காலத்திற்கு நாம் கொடுக்கும் அதிஉயர் கெளரவமாகும்.
ஒரு துளி வினாடிகளையும் வீணடிப்போர் வீணர் களாகும் சந்தர்ப்பமும் உருவாகலாம் ஒரு சிறு பொழுது களுமே பொன்னிலும் மேலானதே! கணப் பொழுது தாமதத்தினால் சொல்லொணா இழப்புக்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
விழித்தலுக்கே நாம்மேலான நேரத்தினை ஒதுக்கு வோமாக! உறங்கி வாழ்வதற்கான காலத்தை சுருக்கி ஆற்றலை மேம்படுத்த அரும் பாடுபடுக தோழர்களே!
உறக்கம் ஆகாதது அல்ல ஆயினும் பெற்ற ஓய்வுக் குப் பின்பு உழைக்கும் நேரத்தை விரயம் செய்தல் நோஞ்சா னாக வாழப் பிரியப்படுவதாகவே அமையும். கடும் உழைப்பாளி காலத்தின் நண்பராகின்றார்.
கண்களால் காணாத நேரங்களே உயிர் உள்ள
வஸ்துபோல் எம்மை ஆட்சி செய்கின்றன.
"ஒரு நாள் பொழுது சாதனையாளர்களுக்குப் பல நூறு வருட பலாபலன்களைப் பெற்றுத் தந்து விடுகின்றன
ஆயினும் ஆண்டுகள் பல வாழ்ந்தும் ஒன்றமே செய்யாத பிரகிருதிகள் ஒரு வினாடிப் பெறுமானத்திற்கு
- 131 -

Page 68
பருத்திஆர் அல. ஆயிரவருதஷ் மான சேவை செய்யாத வாழ்வோடு கால விரயம் செய்த மாபாவியாகின்றான்.
எனவே கால நீட்சியுடன் வாழ்பவன் ஒன்றுமே செய்யாது வீணான ஜம்பட்டம் அடிக்க முடியாது. ஒரு புல்
ஒரு புழு கூட ஒரு விதத்தில் ஜகத்திற்கு நன்மைகளை செய்த வண்ணம் இருக்கின்றன
ஆனால் காலத்தைக் கரைக்கும் நபர்கள் தங்கள் தன்மானத்தையும் கரைத்துவிடுகின்றார்கள் இப்போது "நீ என்ன செய்கின்றாய்" என்று கேட்டால் அவர் கொடுக்கும் பதில்களில் இருந்து ஒருவரின் திறமை எனக்குத் தெரிந்து விடும்.
நேரங்களை நாம் உருப்பாடியாகச் செலவளிக் கின்றோமா என எம்மையே நாம் கேட்டுக் கொள்வோமாக!
எனது பணிக்காகச் செலவழித்த பொழுதுகள் சரியாகச் செலவிடப்பட்டுள்ளதா எனவும் தெளிவுடன் தெரிந்து கொள்வீர்களாக
பதட்டமும் அதனால் ஏற்படும் சோர்வும் எனது பணிகளை ஆற்றுவதற்கான காலத்தை நீளமாக்கிவிடும். எனவே நாம் செய்யும் காரியங்களை விருப்புடன் செய்வது டன் நேர நிர்ணயம் செய்யும் கலையையும் தெரிந்தி ருக்கவும் வேண்டும்.
- 132 -

65T60TLE நேர முகாமைத்துவம் என்பது அரசாங்க தனியார் நிறுவன ஊழியர்கள் அதிகாரிகளுக்கு மட்டுமேயானதும்
96)6).
சகல தரப்பினர்களும் தத்தமது பணிகளைச் செய்ய நேரங்களை ஒதுக்கிச் செய்யும் முறைமைகளை அனுபவமூடாகத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
செய் கருமங்களின் தாத்பாரியங்களுக்கு அமைய இயங்குதலே அழகு, தேவையற்ற செயலுக்காக நேரத்தைச் செலவிட எண்ணுதலே தனக்குத் தானே செய்கின்ற மாபெரும் துரோகம்.
உடல்களைப்பு அடைந்தால் ஓய்வு தேவை. நாம் பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டமடைவது இயற்கை. ஆனால் எல்லாமே. ஒரு வலையறையை மீறியதாக அமையக் கூடாது
ஒரு சின்னப் பிள்ளைகளுக்கும் கருமங்களை ஒழுங்காகக் கற்றுக் கொடுக்க வேண்டும். வயது வந்தவர்க ளெனக் கண்டபடி வாழ்ந்தால் சிறார்களுக்கான ஒழுங்கான செயல்களைச் சொல்லிக் கொடுப்பது எங்கனம்?
இன்று காலவிரயம் செய்யும் நபர்களாலேயே நாடுகள் நலிவடைந்து போகின்றன முறையாகக் காரிய மாற்றுபவர்களைவிட உபதேசம் செய்யும் மனிதர்களே அதிகமாகிவிட்டனர்.
- 133 -

Page 69
பருத்திபூர் 00. ஆயிரவநாதர்
"நாட்டிற்காக உழை” என்று சொல்லுபவர்கள்
உழைக்கத் தயாரில்லை. அதைக் கேட்பவர்கள் தான்
கருமம் செய்யப் பிறந்தவர்கள் போல் பேசுகின்றார்கள்.
எல்லோருமே காலப் பெருமதியை அறிந்து உணர்ந்து தங்கள் வாழ்வை மேன்மைப்படுத்தியே தீர வேண்டியுள்ளது.உலக முதல்தர கோடீஸ்வரர் பில்கேட் ஒரு நாளில் உறங்கி விடும் நேரம் நான்கு மணித்தியாலங்கள் என்றால் நம்ப முடிகின்றதா?
சோம்பேறிகளுக்கு உறங்குவதற்கான காலம் மேலும் அதிகமாகத் தேவைப்படுகின்றது. "கால அதிகரிப்பு" கரும மாற்றுபவர்களைவிட சிரமமின்றிச் சும்மா இருப்பவர்களே விரும்புகின்றார்கள். உறக்கத்துடன் உறவாடு வதை விடுத்து விழிப்புடன் காலத்தை உருவாக் குதல்
மேன்மை.
நாம் செய்யும் மா பெரும் பணிதான் எமக்கான நற் காலத்தை அமைக்கின்றது.
காலம் எம்மை உருவாக்குவதை விட நாம் எமது செயல் திறனால் காலத்தை சிருஷ்டிப்போமாக! எதிர் காலம் எவரைப் பற்றிப் பெருமையுடன் பேசுகின்றதோ அவரே காலம் தோறும் வாழ்ந்து வருபவர்களாவர்.
- 134

ജൂiങ്ങb மேலும் அவர்களே காலத்திற்கு பெருமை அளித்த வர்களுமாவர். எங்களால் பூமி பெருமை கொள்ள வேண்டி டும் எனின் உலக வேகத்திற்கு ஈடுகொடுத்து இயங்க வேண்டியவர்களாவோம்.
கடிதென ஓடும் காலம் எம்மை முதுமைக்குள் இட்டுச் செல்கின்றன. ஆனால் சாதனையாளர்கள் செய்யும் செயலினால் இவர்கள் நித்ய சிரஞ்சீவித் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஞாலத்தை வென்றிட பொழுதுகளைப் புனிதமாக்குக!
தினகரன் வாரமலர்
26.06.2011
- 135 -

Page 70
கருத்ரிபூர் (40. ஆயிரவநாதர்
தெரிதலும் தெளிதலும்
தெரிதலும் தெளிதலும் வாழ்வின் நிலையுணர்த்தும். வழி தெரிந்து நடத்தல் மானுட நெறியாம். விதியைச் சொல்லி மதியை அடைத்து பழியை இறைவன் பெயரில் செலுத்தி விழி பிதுங்கும் வேதனை வேண்டாம். அழிவற்ற ஆற்றல் தோன்ற எழுமின்!
தங்களது திறமைகளை தெரிந்து கொள்ளாமலே பலர் இருந்து வருகின்றார்கள். யாராவது ஒருவர்" என்ன இப்படி இருக்கின்றீர்கள்? என்னால் நம்பவே முடிய வில்லை. நீங்கள் செய்யும் காரியங்களை வேறு ஒருவருமே செய்ய முடியாது" என்று சொன்னாலும் இத்தகையவர்கள் நம்பவே மாட்டார்கள்.
- 136 -
 
 
 

65T60TLD சிலர் சர்வசாதாரணமாகச் செய்யும் வேலைகளைக் கண்டால் நமக்கு பெரு வியப்பாக இருக்கும்.
ஆயினும் பல திறமையுள்ளவர்கள் தங்கள் ஆளுமை பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே இருந்து விடுகின்றனர்
விளக்கு எரியும் போது அதன் திரியைச் சற்றுத் தூண்டினால் அது பிரகாசமாகவே எரியும். விளக்கின் ஒளி எவ்வளவு பிரகாசத்தைத் தரும் என்பது அதற்குத் தெரியாது.
மெளனமாக இருப்பவர்களைக்கண்டதும் நாம் அவர்களைக் கண்டபடி எடைபோட்டு விடமுடியாது தன்னடக்கம் காரணமாகவும் சிலர்தமக்குள்ள ஆற்றல்களை வெளிப்படுத்துவதில்லை, இன்னும் சிலர் லஜ்ஜை காரணமாகத் தம்மை வெளிக்காட்டாமலே இருப்பதுண்டு
வல்லவர்களைஇனம் கண்டு அவர்களை வளர்ப்பது சமூகத்தின் பெரும் கடமையாகும்.
தங்கள் பற்றிய பலத்தைத் தெரியாமலும் அதனால் செய்ய வேண்டிய பணிகளை மேலும் செய்யப் பலர் அச்சப்படுவதுண்டு
பலரது முன்னேற்றங்கள் ஒரு சிலரால் துண்டிக்கப் படுவது உலகிற்கு உவப்பானது அல்ல, அது இழப்பு.
- 137 -

Page 71
பருத்திபூர் 04). ஆயிரவநாதர்
ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தான் தெரிந்து கொள்வதும், தனது செயல்களில் தெளிவைப் பெறுதலும் அவசியமாகின்றது.
இந்தப் பூமி பொதுவானது. எல்லோருமே நல்ல செயல்களைச் செய்ய செய்து முடிக்க ஜெயித்துக் கொண் டேயிருப்பார்கள்.
யானைக்கு அதன் பலம் தெரிவதில்லை. தெரிந் தால் சின்ன அங்குசத்திற்கு ஏன் பயப்படவேண்டும்? ஆனால் அது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனது வலி மையைக் காட்டியே விடும்.
நல்ல நுண்அறிவுகொண்ட அறிஞர்களைக் கலை ஞர்களை, தொழில் வல்லுனர்களை நாம் முழு மையாக இனம் கண்டு கொண்டிருக்கின்றோமா?
ஏன் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விசேட திறமைகளை அல்லது எதிர் வீட்டில் கிராமத்தில் உள்ள நபர்களின் திறமையைக் கண்டு உணர்ந்திருக்கின்றீர்களா? அல்லது உணர்ந்தும் வெளி உலகிற்குச் சொல்லியிரு க்கின்றீர்களா?
நல்லதை கண்டு கொள்ளாமை போல் பலவீனம்
வேறில்லை. சிலர் தமது அறியாமை காரணமாக
மற்றவர்கள் திறமைகளைப் புரிந்து கொள்வதில்லை, - 138 -

ஞானம் இன்னும் சிலர் வேண்டுமென்றே பொறாமை வஞ்சக உணர் வினால் ஒருவரின் திறமைகளைக் கண்டு கொள்ளாதது போல நடிப்பார்கள்.
சூரியனை உள்ளங்கைகளால் புதைத்துவிட இயலாது. திறமைகளை ஆளுமைகளை சூது, வாதினால் சுற்றிக் கட்ட முடியாது. எப்படியும் ஒருவரின் இயல்பான தனித்துவத்தை அல்லது மிகச் சிரமத்துடன் கற்றுணர்ந்த மையினால் பெற்றுக் கொண்ட புலமைகளை எவராவது தகர்த்திட எண்ணினால் அது அவர்களுக்கே எதிராக அமைந்து விடும். சந்தேகமே இல்லை.
சோம்பி இருக்க நேரத்தை ஒதுக்கினால் எவருமே சுபீட்சமாகத் தன்னை உணர்ந்து வாழ முடியாது
திறமைகளை தாமே உணர்ந்து கொள்ள உழைப்பு மிகவும் அவசியமானது எப்படி வாழ வேண்டும் என நல்ல முடிவை எடுப்பவனுக்கு இயல்பாகவே உழைக்கும தன்மை உள் நின்று அவனை எழும்பி நிற்கச் செய்கின்றது.
நல்ல திறமைசாலிகள் கூட ஒதுங்கி வாழப் பிரியப் படுவது உலகிற்கு அது இழப்பானதேயாம். மற்றவர்களின் தலையீட்டை அல்லது தங்களது சுதந்திரத்தில் குறுக்குடு செய்வதை அறவுே விரும்பாத பலர் தமக்குச் சேர வேண்டிய புகழை, பெருமைகளைக் கூட விரும்பாமல் இருப்பது ஆச்சரியமானதே!
- 139 -

Page 72
கருத்தியூ பல விவரம்
"அட எவ்வளவு பெரிய மனுஷன் ஆனால் எதனை யும் கண்டு கொள்வதில்லை. தனது வித்தைகளைப் பெரிது படுத்துவதுமில்லை. அதனை எவருக்கும் ச்ொல்லிக் கொடுக்கவும் இல்லை ஏன் இவ்வாறு கூச்சப்படுகின்றாரோ தெரியவில்லை" எனச் சிலரைப் பற்றிய விமர்சனங்கள் எழுவதுண்டு கூச்ச உணர்வு வந்து விட்டால் எப்படி ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும்? சொல்லுங்கள்? நான் எதுவுமே தெரியாத அறிவீனன். ஒன்றுமே எனக்குத் தெரியாது." என வல்லமையுள்ளவனே எண்ணினால் அவன் எதிர் காலம் என்னாவது?
உறங்கும் சிங்கத்திடம் எறும்பும் பயப்படாது. பாம்பு சீறாது விட்டால் அதன் ஆயுள் அணைந்து போகும் .
நாங்கள் சீவிப்பதைக் கூடப் பிறருக்குத் தெரியப் படுத்த வேண்டியுள்ளது.
எனவே தான் எங்களை நாம் இனங்காட்ட வேண்டியுள்ளது. ஆயினும் அது தற்பெருமை யாகவும் அகங்கார முனைப்பாகவும் அமையாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
தம்மைத் துதிபாடுபவர்களிடம் தன்னை இழக்கா மல் இருக்க வேண்டும். தன்னிலை உணர்வதற்குப் பொய் யுரையாளர்களின் பேச்சில் மதிமயங்குதலாகாது. காரியம் பெறுவதற்காக அழகு மொழிகளை அள்ளி வீசுபவர்கள்
- 140 -

ஞானம் எவர்களுக்கும் நன்மை செய்பவர்களாகவும் ஆகமாட் டார்கள். நல்ல பெரியோர்கள் உற்ற தோழர்களின் விமர்சனங்களின் உண்மைத் தன்மைகளை ஏற்று ஒடுங்குதல் ஏற்புடையதாகும். எம்மை நாம் அறியாதவரை எதனையும் நாம் அறிய முடியாது நல்லவற்றைப் பெறவும் முடியாது உணர்ந்து தெளிக
தினகரன் வாரமலர்
O3.07.2011
- 141 -

Page 73
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
அஞ்சேல்! அஞ்சேல்!
அஞ்சுவதால் ஆதாயம் யாது? ஆதாரம் வேண்ட
நெஞ்சை நிமிர்த்தி வஞ்சகரை வேரறு கொஞ்சம் அச்சம் புகுந்து கொண்டால்
பஞ்சு எரிவது போலப் பற்றும் அஞ்சாதே! நஞ்சனைய அச்சத்தால் உனக்கு - நீ வஞ்சனை செய்யாதே வீரமே எவர்க்கும் தைரியம்!
பயப்படுதல் எதிரிகளுக்கு உகந்ததாகி விடுகின் றது. எதற்கும். அஞ்சுபவர்களிடம் இருந்து எல்லாமே பறிபோகின்றன. உடமைகள் மட்டுமல்ல அவர்களது தனித் துவங்கள்,உரிமைகள் கூட உரித்தெடுக்கப்படுகின்றன
அச்சப்படுபவர்கள் சந்தோஷமாக இருப்பதில்லை. அனைவரையும் நேசிப்பவன் மற்றவனை அச்சுறுத்து வதில்லை.
- 142 -
 

ஞானம் தன்னை நிலை நிறுத்த சுய ஆதிக்கம் தேவைப்ப டுகின்றது வீதியில் வாகன நெரிசலைக் காரணம் காட்டி நடந்து செல்வதற்குக் கூடப் பயப்பட வேண்டுமா என்ன?
எங்கு தான் இடையூறுகள் இல்லை? இடர்களைக் களைவது தான் சுவாரஸ்யமான வாழ்க்கையாகும். இறுதி மூச்சு இருக்கும் வரை உறுதியுடன் வாழ்க்கையை வளப் படுத்துக!
பலர் வீணான கற்பனையாலேயே தங்களைத் தாங்களே சுயமாக வருத்திக் கொண்டிருக்கின்றார்கள் இது கூடச் சுயமாகவே தம்மைத் தாமே சீண்டிக் கொள்வ தாகவே அமையும்
விவேகம், வேகம், நிதானமுடன் செயல்பட்டால் பீதி ஏது? தன்னையறியாமலே தவறுகள் செய்து விட்டோமோ அல்லது எதனையும் தன்னால் செய்ய முடியாது என்கின்ற பதட்டமே பலரைச் செயல் இழக்கச் செய்து
விடுகின்றது.
செயல்களில் மந்தம் ஏற்படும் போதே பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துக் கொள்கின்றன. செய்யும் கருமங்களைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்வதே பலருக்குப் பழக்கமாகிப் போய் விட்டது.
வெறும் கற்பனைக்குள் கொடுக்கும் கெளரவத்தை
- 143 -

Page 74
பருத்திபூர் 04ல. ஆயிரவநாதர் நிஜங்களுக்கும் மனிதன் அளிப்பதால் தான் பல பிரச்ச னைகளை இவன் எதிர் கொள்கின்றான்
சாதாரண தோல்வியை அனுபவித்தவனுமே தொடர்ந்தும் அப்படியே நிகழ்ந்து விடும் எனத் தினம் நொந்து நோவதுபோல் சுத்த அறிவிலித்தனம் என்ன இருக்கின்றது?
துன்பத்தின் தடங்களில் துவண்டு சுருண்டு தடம் மாறாது எழுந்துநிற்பவர்களுக்கே புதுவழி புலப்படுகின்றது. பலவீனங்களில் மிகவும் கொடியது மனம் சோர்வடைவது தான்.இந்த நிலை தான் தனது நிழலைக் கண்டு கூட மனிதரைப் பயப்படவைக்கின்றது.
ஒருவரின் புறத் தோற்றத்தை வைத்து மட்டும் நாம் அவர்களின் மனத் திண்மையினை எடைபோட்டுவிட
(ԼՔԼԳեւ III 5l.
கட்டுடலுடன் செழித்து வளர்ந்த ஆஜானு பாகுவாகத் தோற்றம் கொண்டவர்கள் கூடக் கரப்பான் பூச்சியைக் கண்டால் அலறியடிப்பதுண்டு. ஆனால் மிக மெல்லிய நோஞ்சனாக இருப்பவர்கள் கூட ஒடும் பாம்பை விரட்டிப்பிடிக்கும் துணிச்சல்காரராக இருக்கிறார்கள்.
மனம் தான் ஒருவரை இயக்குகின்றதுடன் அவன் எதிர் காலத்தையும் தீர்மானிக்கின்றது. மனத்தின் ஸ்திரத் - 144 -
 

GESTGOTLð தன்மையை உருவாக்கச் சலனமற்ற சிந்தனையை உருவாக்க வேண்டும். குழம்பியபடி இருக்க எவர்களு க்குமே பிடிக்காது. குழப்பத்துடனான தோழமையைத் தகர்த்து தெளிவுடன் இயங்குக: பயம் தொலைந்து போகும்.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் எல்லோருமே படு துணிச்சல்காரப் பேர்வழிகள் எனச் சொல்ல முடியாது. இவர்கள் பயமிகுதியினால் தினம், தினம் செத்துச், செத்து உயிர்க்கின்றார்கள். வெளிப் பார்வைக்கு இவர்கள் தங்களைப் பெரிய வீரனாகக் காட்டிக் கொள்வார்கள்.
பணம், பொருள் தேடும் வேட்கையினால் தகாத காரியங்களைச் செய்வதும், அச் செயல் மூலம் தண்ட னையில் இருந்து தப்பித்துக் கொள்ள மனநிம்மதி இழந்து தவிப்பதும், எதிரிகளின் பழிவாங்கும் செயல்களில் இருந்து மீளப்படுகின்ற அவஸ்தைகளும் கொஞ்ச நஞ்சமானது
LD6D6)
ஒருவர் ஓங்கிச் சப்தமிடுவதால்அல்லது உறுமுவ தால் இவர் வீரனாக பயம் ஒழித்தவராகக் கருத முடியாது
மெளனமாக இருப்பவர் எல்லோருமே வீர்யம் குறைந்தவர்களாகவோ அச்சமுடன் வாழ்ந்து வருபவர்களா கவோ கருதல் கூடாது ஆழமான கடல் அமைதியானது. எந்த பெரிய கப்பலை பெரிய உயிரினங்களைத் தாங்க வல்லது
- 145 -

Page 75
பருத்திபூர் 04ல. ஐவிரலுடிதர்
விசாலமான இதயங்கொண்டவர்களை எந்தப் பிரச்சனைகளுமே தாக்கி விடமுடியாது. எதனையும் தாங்கும் இயல்பினர் மனம் தளர இடமளிக்கப் போவ தில்லை. "
பசளையற்ற வரண்டநிலத்தில் எது தான் முளைக் கும்? ஆனால் வரண்ட மனதில் பயம்தான் படரும் நல்லன உற்பத்தியடையாது.
அதீத கோபம் பதட்டத்தினையும் உருவாக்கின் றது. மனம் தன்னிைைல இழக்காது எதனையும் எதிர் கொள்ளும் திட சிந்தையினை எமது உடமையாக்குவோம்
பயம் கொள்பவர்கள் எந்தச் சுதந்திரத்தினையும் நுகர முடியாது. இவர்கள் சாதாரண சுகங்களையே இழந்து துன்புறுகின்றனர் பக்கத்தில் விளையாடும் குழந்தை சிரித்தால் பார்க்க மாட்டார்கள். பசுமை கொண்ட மரங்கள் வெறுமையாகத் தோன்றும் தென்றல் தீச்சுவாலையாய் சுடும். சங்கீதம் கேட்கத் தோன்றாது.
இவர்கள் கொஞ்சம் தம்மை ஸ்திரப்படுத்தி நிதான மாகச் சிந்தித்தால் தனது செயல்கள் யாவுமே அர்த்த மற்றதாகத் தோன்றும்.
இருள் வேளை பசாசுப் பயம், பகலிலேயும் திருடர் பயம், யார் யாரோ தன்னை மட்டுமே தீண்ட வருவதாக - 146 -

ஞானம் எண்ணினால் எப்படி ஐயா சீவிக்க முடியும்? அதீத அச்சம் கூட ஒரு மனநலப் பாதிப்புத் தான்.
தாழ்வு மனப்பான்மையின்றித் தற்துணிவுடன் காரியம் செய்பவர்கள் இரும்புக் கோட்டைக்குள்ளும் இலகுவாக உட்பிரவேசிப்பார்கள். ஒரு தெருவைத் தாண்ட ஒன்றரை மணிநேரம் யோசிப்பவர்களும் உளர். நடக்கப் பழகும் குழந்தைகளிடமிருந்தாவது துணிச்சலைக் கற்றுக் கொள்ள வேண்டும்
வெறும் காலுடனும் வேகமாய் உலகை வலம் வர முடியும். மனம் வலியது. அதை நைந்து போக நையப்பு டைக்க வேண்டாம் உங்களை நீங்களே உற்சாகப்படுத்துக. அஞ்சேல்! அஞ்சேல்! அஞ்சேல்!
தினகரன் வாரமலர்
10.07.2011
- 147 -

Page 76
பருத்திபூர் படி). ஆயிரவருதல்
முதியோரும் இளையோரும்
முதியோர் இன்றி இளையோர் ஏது? இவர்கள் முதுமொழி அறிவுரை திறமையை வள்ர்க்கும் பெரியோர் பயன் தரு புதுமையை ஏற்றால் சிறிய பராயத்தினர் உறவு பெருகும், நிறைவே என்றும்!
இளைய தலைமுறையினர் முதியவர்களையும், முதியவர்கள் இளைய தலைமுறையினரையும் பரஸ்பரம் குறை கூறிவருவது புதுமையானது அல்ல. காலம் காலமாகத் தொடரும் விடயம்
காலம் இப்போது ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது. பண்பாடு, மரியாதையை தற்போது இளைய
வர்களிடம் காண முடிவதேயில்லை. என்ன படித்துக்
- 148 -
 
 
 

- ஞானம கிழித்துவிட்டார்கள்? நாங்கள் எல்லாம் இப்படியா தறுதலை களாய் திரிந்தோம்? தாய், தகப்பன் வயது போனவர்களை மட்டு மரியாதை செய்கின்றார்களா? "என்று பொருமும் முதியவர்களின் கடந்த காலத்தையாரிடம் கண்டு கேட்பது?
ஆனால் இதே மாதிரியான பேச்சுக்களையும் குற்றச்சாட்டுகளையே தமது காலத்து முதியோர்களிடம் கேட்டுச் சலித்துப் போயிருப்பார்கள். பொதுவாக வயது முதிர்ந்த பின்னர் அறிவில் முதிர்ச்சி, அனுபவம் எல்லாமே வந்து விட்டால் சின்னத் தவறுகளும் பெரிதாகத் தான் தோன்றலாம்.
இதன் பொருட்டு நல்ல பொறுப்புள்ள இளைஞர், யுவதிகளையும் அதே தரத்தில் விமர்சித்தலாகாது. அது சரி, இளம் தலைமுறைகள் மீது குறை சொல்பவர்கள் அவர்களது நடத்தைகளுக்கு மூல காரணம் யார்.எவர் என ஆராய்ந்து பார்க்க வேண்டுமல்லவா?
இல்லங்கள் தோறும் பிள்ளைகள் தமது பழக்க வழக்கங்களைத் தாய், தந்தையினுடாகவே பழகிக் கொள்கின்றனர். அவர்களது பெற்றோர்களும் தத்தமது பெற்றோருடாகவே தங்கள் நடத்தைகளைக் கடத்து கின்றனர்.
தாயைப் போல பிள்ளை என்பார்கள் அதே போல் தந்தையே தனயனை உருவாக்குகின்றார். என்றும் கூறு
- 149 - -

Page 77
பருத்திபூர் பால. ஆயிரவரஷ் கின்றார்கள். அத்துடன் பரம்பரையான இயல்பு பற்றியும் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள், மனித நடத்தைகள் பற்றியும் சொல்லப்படுகின்றது.
படிக்கும் பிள்ளைகள் வீட்டில் தந்தை குடித்து வெறித்தால் அதன் பாதிப்பு யாருக்கு? பொறுப்பில்லாத இல்லத் தலைவன் தலைவியரால் குடும்பம் இடும்பை யைத்தான் சந்திக்கும்.
இன்று தெருவோரத்தில் கேட்பாரற்றுச் சுற்றித்த திரியும் சிறார்களின் எதிர் காலம் கேள்விக் குறியானது. இவர்களில் பலர் சமூக வழிகாட்டலின்றிச் சிக்கிச் சீரழிகின் றார்கள். சமூக விரோதிகளாகி குற்றச் செயல்களில் ஈடுபடும் பயங்கரமான வெறுப்பூட்டும் மனிதர்களாகி விடுகின்றனர்.
மதுவை வாங்கப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரும் இருக்கின்றார்கள். சேரிப்புறத்தில் கணவன், மனைவி இருவருமே மதுபழக்கத்திற்கு அடிமையாக இருப்பது புதுமையுமல்ல.
பிள்ளைகளை ஒழுங்கான ஒழுக்கம் வாய்ந்த வர்களாக உருவாக்குவது பெற்றோருடைய கடமை மட்டுமல்ல, சமூகத்தினதும் பாரிய பொறுப்புமாகும்.
ஒருவர் நொடிந்து போனால் அவருக்குக் கை
- 150 -

(65 fr60TLio கொடுப்பது மற்றவன் பொறுப்புமாகும். சமூகப் பொறுப் பிலிருந்து ஒருவருமே விலகிடக் கூடாது.
இன்று பலருமே தங்களுக்கான பொறுப்புக்களைத் தாம் சார்ந்த உறவுகளோ, அல்லது நண்பர்களே சுமக்க வேண்டும் என எண்ணுகின்றார்களே ஒழிய தங்களுக்கான பங்களிப்புகள் எது எனப் புரியாதவர்கள் போல நடிக்கிறார்கள்.
சமூக அவலங்களுக்கு பிறரை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. அது போல் அனுபவம் குறைந்த இளைஞர்களின் சிற் சில அறியாமையுடன் கூடிய நடத்தைகளைப் பக்குவமாக எடுத்துரைத்து அவைகளை களைய முனைய வேண்டும்.
ஒரு இளைஞர் விரக்தியுடன் மதுஅருந்தி விட்டு இப்படிச் சொன்னதாக நேரில் கண்ட உறவினர் தெரிவித்தார். "நான் வைத்தியம் படிக்க விரும்பினேன் அழுது அடம் பிடித்து பள்ளிக்கூடம் அனுப்பி வை அப்பா. என்றேன் அவரோ நீ படித்தது போதும் பக்கத்துச் சையிக்கிள் கடைக்குச் சென்று சைக்கிள்களுக்கு (துவிச்சக்கர வண்டி வைத்தியம் பார்க்கப் பழகு." என்று சொல்லி என் வாழ்க்கையையே கெடுத்து விட்டார். இவரது பிரலாபம் நகைப்பிற்குரியதன்று. அனுதாபத்திற்குரியது.
"படிக்க விரும்பும் பிள்ளையை குடிக்கத்
- 151 -

Page 78
பருத்திபூர் (40. ஆபிர2தரர் தூண்டுமாற் போல் நடாத்தியது யார் குற்றம்" ? இந்த வேனைக்குரிய குமுறல்களை நான் பலரிடமிருந்து கேட்டிருக்கின்றேன்.
வசதியானவர்களின் பிள்ளைகள் உயர்ச்சி கண்டு பெருமையுறும் சமூகம் எளியவர்களை உயர்த்த மட்டும் மெளனமாகி விடுகிறதே!
இன்னும் சிலர் சாதி சமய வேறுபாடுகளால் தங்கள் சமூகம் சாராத பிள்ளைகளைத் தரம் தாழ்ந்தவர் களாகவே நோக்குகின்றனர்.வயது முதிர்ந்தும் அறிவு மழுங்கியவர்கள் போல நடந்து கொள்கின்றார்கள்.
"உங்களுக்கெல்லாம் படிப்பு எதற்கு ஏதாவது வயிற்றப் பிழைப்பிற்குத் தொழில் செய்ய வேண்டியது தானே” எனச் சர்வ சாதாரணமாகச் சொல்லி விடுவார்கள்.
பாசத்துடன் வளர்த்தெடுக்கும் செல்வக் குழந்தை களை பொதுநல நோக்கான சிந்தனைகளையூட்டி வளர்க்க வேண்டியது தலையான பெரும் கடமையாகும்.
அவ்வண்ணமே பணிவு, பெரியோர் சொற் கேட்டல், எவரையும் மதித்து கர்வம் கொள்ளாது பண்புடன் நடப்பதனை முதன்மைக் குணமாகக் கொள்ள வேண்டியது இளையோர் கடன்.
- 152 -

ஞானம் பெரியவர்களின் மேலான ஆசீர்வாதம் இளைய சமூகத்திற்கு அவசியமாகின்றது. இல்லங்களில் முதியோர் இன்றி நல்லவை பற்றி ஆலோசனை நல்க, அவர்களை விட எவருக்குமே தகுதி கிடையாது பெற்றுக் கொண்ட அனுபவங்களைச் சொல்லும் போது எள்ளி நகையாட வேண்டாம். இவை நல்லது அல்ல. கேட்பது சிறப்பு.
நல்ல பழக்க வழக்கங்களை எமது அடுத்த தலை முறைக்குக் கையளிக்க வேண்டிய முதியவர்கள், தாங்கள் முதல் கண் நல்ல படி வாழ்ந்து காட்ட வேண்டும். கிளிப் பிள்ளை போல் சொல்வதை உடன் சொல்லும் பிள்ளைகளுடன் ஒழுங்கான நல்ல வார்த்தைகளையே
பேசி மகிழ்க!
குழந்தைகள் முன் தகாத எக் கருமங்களையும் அவர்கள் மூளையில் ஏற்றாதிருப்பீர்களாக வரலாறு படைக்கவுள்ள பிள்ளைகளை துன்பம் பரவாமல் தடுத்து ஆரோக்கியமான உளவளத்துடன் களிப்புடன் வாழத் தியாக சிந்தனையுடன் செயல்படுக! இளய சமூகம் புது உலகை எழுப்பும் சிருஷ்டி கர்த்தாக்களாவார்.
தினகரன் ஞாயிறு மஞ்சரி 17.7.2011
س 153 -

Page 79


Page 80


Page 81

எக்கே உரித்தான இலகு றப்பானது காட்சிகை கொண்ட சொற்களா ||ზედაგოგა அவருக்கு ள் கொண்டாடி அமைகின்றேன்.
மதி. எம்.எஸ். தேவகெளரி லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்.
ISBN 978 955 0469-06-2
||||
9 117 8 9 55 0ll4 6 9 Օ 6 2