கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:கணப் பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனைசெய்

Page 1
击
affilia Dar
圆 雷 儒 잃
● 후 啤 일
 

© ©
藏
క్ష
6 sa ITIS|ID
இ
Lidbolts

Page 2

கணப் பொழுதேயாயினும் யுகப் பொழுதின் சாதனை செய்!
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியன் வசந்தங்கள். பாகம் 06 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் விபரம்
நூல் தலைப்பு கணப்பொழுதேயாயினும் யுகப்
பொழுதின் சாதனை செய
(வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 06)
ஆசிரியர் : பருத்தியூர் பால, வயிரவநாதன்
மொழி : தமிழ்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு விபரம் : முதல் பதிப்பு
உரிமை ஆசிரியருக்கு
தாளின் தன்மை 70 கிராம் பாங்க்
நூலின் அளவு : கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
அச்சு எழுத்து 13
மொத்த பக்கங்கள் 154
அட்டைப்படம் : அஸ்ரா பிரிண்டர்ஸ்
கணனி வடிவமைப்பு : அஸ்ரா பிரிண்டர்ஸ்
அச்சிட்டோர் : அஸ்ரா பிரிண்டர்ஸ்
நூல் கட்டுமானம் : தையல்
வெளியிட்டோர் : வானவில் வெளியீட்டகம்
நூலின் விலை : 250/=
ISBN: 978-955-0469-07-9
- 2 -

அணிந்துரை
பருத்தியூர் பால,வயிரவநாதனின் "வாழ்வியல் வசந்தங்கள்” எமது வாழ்க்கையை வளமூட்டக்கூடிய வலுமிக்க கருத்துக்களைக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு முதல் கட்டுரையை எடுத்துப் பார்த்தோமானால் "எதிர்ப்பினை எரி பகைவனை மதி" என்று தலையங்கம் கொண்டுள்ளது அது மனிதாபிமானத்தையும், மனிதநேயத்தையும் மனதில் வைத்து இத்தகைய ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.
என்னை எதிர்ப்பவனும் மனிதனே. அவனுக்கு மனிதன் என்ற முறையில் நான் கொடுக்க வேண்டிய மதிப்பையும், மரியாதையையும் தொடர்ந்து நான் கொடுக்கவேண்டும். ஆனால் அவன் மீது மரியாதை காட்டுவதால் அவன் கூறும் சகலதையும், அவன் செய்யும் சகலதையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய
அவசியம் எனக்கில்லை என்பதை நான்மறக்கக்கூடாது.
"நீ கூறுவது எதுவுமே எனக்கு உடன்பாடில்லை. ஆனால் உன் கருத்துக்களை நீ வெளியிடும் உன் உரித்தை நிலைநாட்ட உயிர் உள்ளளவும் நான் போராடுவேன்” என்றான்
வோல்டயர் என்ற பிரான்சிய ஞானி.
இன்றைய காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடையே "எதிர்ப்பினை எரி, பகைவனை மதி" என்ற கூற்றின் தாற்பரியம் கூடிய விசேடத்தைப் பெற்றுள்ளது.
س 3 ست

Page 4
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் தமது உரித்துக்கள் சம்பந்தமான அடுத்தகட்டநடவடிக்கைகள் பற்றி தடுமாற்றத்தில் இருக்கின்றனர். பல அரசியல் வாதிகள் குட்டையைக் குழப்பி தடுமாற்றத்தை மேலும் உக்கிரமடையச் செய்து வருகின்றனர். இத் தருணத்தில் தமிழ்பேசும் மக்கள் ஒரு விடயத்தை மனதில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கவேண்டும்.தமிழ்பேசும் மக்களான எம்முன் வேற்றுக் கருத்துக்கள் பல இருக்கலாம். ஆனால் நாம் யாவரும் தமிழனங்கைத் தாயாகக் கொண்டவர்களே! எம்முன் எதிரும் புதிருமான கருத்துக்கள் நிலவலாம். ஆனால் நாம் ஒருவர்க் கொருவர் பகைவர்கள் அல்லர். ஒரு தாய் மக்களே!
நாம் ஒவ்வொருவரும் எமது கருத்துக்கள் சுயநலம் மிக்கதா தமிழ் நலம் அல்லது தமிழ்ப் பேசும் மக்கள் நலம் கொண்டதா என்பன எம்மை நாமே வினவினோமேயானால் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லாமல் போய்விடும். பலரின் முரணான கருத்துக்கள் தமக்கும் தமது கட்சி அங்கத்தவர்க ளுக்குந் தனிப்பட்ட முறையில் என்ன இலாபம் கிடைக்கும் என்பதைக் குறி வைத்தே வெளியிடப்படுகின்றன. இன்றைய எமது சுயநலம் எமது இனத்தின் நாளைய சாவு மணி என்று நாம் உணர்ந்தோமானால் கருத்து முரண்பாடுகள் குறைந்து வர இடமுண்டு. ஆனால் முரண்பட்ட கருத்துக்களை ஒருவன் வெளிப்படுத்துகின்றான் என்ற ஒரு காரணத்துக்காக அவனை
நாம் எதிரியாகக் கருதி ஒதுக்கி வைக்க வேண்டிய அவசிய - 4 -

மில்லை. தமிழ்பேசும்மக்கள் எமது முரண்பட்ட கருத்துக்களை நல்மணத்துடனும் சுமூகமான சூழலிலும் விவாதித்து எமது கருத்துக்களில் பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்த முன் வரவேண்டும்.
இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்களாக வழி வகுக்க வேண்டும். அதற்கு மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும், மனிதநேயம் வளர ஆசிரியர் தமது நூலிற் தரும் பாடம்
“எமக்குள் இருக்கும் அகம்பாவம், ஆணவம், கோபம், காழ்ப்பு, போன்ற உள் நின்று வருத்தும் எதிரிகளை எதிர்ப் போமாக!" என்பதே"எம்மைநாம் நல்வழிப்படுத்தினோமேயானால் துஷடர்கள் எம்மை நெருங்கிடவே அச்சப்படுவார்கள் என்கின்றார் ஆசிரியர். இது முற்றிலும் உண்மையே. ஒரு காரியாலயத்தில் பிழைகளில், தவறுகளில் ஈடுபடக் கூடியவர் ஒருவர் என்று அவரைஅடையாளம் கண்டுகொண்டால் அவரை நோக்கித் துஷடர்கள் படையெடுப்பார்கள். தவறுக்குத் தாலாட்டுப்பாட மாட்டார் இன்னெருவர் என்று தெரிந்து கொண்டால் பொதுவாக அவரை நோக்கித்துவுடர்கள் அணுகப் பயப்படுவார்கள்.
இப்பேர்ப்பட்ட கருத்துக்களைத் தமது " வாழ்வியல் வசந்தங்கள்" என்ற நூலில் வெளியிட்டு எம்மை நாமே திருத்தி
- 5 - -

Page 5
வாழ வழி வகுத்துள்ளார் திரு. பால வயிரவநாதன் அவர்கள். சிறியதொரு நூலில் பெரிது பெரிதான வாழ்வியல் கருத்துக் களை வண்ணமுற வெளியிட்டு எம்மை வாழ்வாங்கு வாழ வழிசமைத்துக் கொடுத்துள்ளார் வயிரவநாதன் அவர்கள்.
அவரின் இந்த நூல் தமிழ் பேசும் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே பல பத்திரிகைகளில் வாசகர்களுடன் வாழ்வியல் விடயங்கள் சம்பந்தமாக உறவாடி வரும் அவர் இந்நூல் வெளியிடுவதால் அமைதியாக எவரும் அவரின் வாழ்வியில் கருத்துக்களை வாசித்து இரசித்துப் பயன் பெற வழிவகுத்துள்ளார். அவரின் எழுத்துப் பணி மேலும் விரிவடைந்து மக்களுக்கு நன்மை LJU LIL 15TG5!
நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்
- 6 -

மதிப்புரை
"மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மானிலத்தே" என்ற மணிவாசகப்பெருமானின் கூற்றின் வாயிலாக பிறப்புக்கள் அனைத்தையும் விடவும் உயர்வானதாக மனிதப் பிறவி போற்றப்படுகின்றமை அறியக்கிடக்கின்றது அந்த மனிதப் பிறவியின் உயர் நிலைக்கு அடிப்படையாக அமைவது ஒவ்வொரு மனிதனதும் நல்லொழுக்கம், நன்னடத்தை, நற் பண்புகள் நிறைந்த வாழ்க்கையாகும், மனிதப்பிறவிக்கு பெருமை சேர்க்கும் நற்குண இயல்புகள்,நல்ல மனித பண்புகள், வாழ்க்கை விழுமியங்கள் என்பன தற்காலத்தில் அரிதாகி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இத்தகைய உயர்ந்த வாழ்வியல் கருத்துக்களை உள்ளடக்கியதாக வாழ்வியல் வசந்தங்கள் என்னும் தலைப்பில் நூற்தொகுதிகளை திரு. பருத்தியூர் பால. வயிரவநாதன் அவர்கள் எழுதியுள்ளார். இந்நூற் தொகுதிகள் யாவும் எளிமையாகவும், தெளிவுடனும் சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டதாயும் வாசகர் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதப் பெற்றுள்ளமை பாராட்டிற்குரிய
தாகும.
அந்த வகையில் ஆறாவது தொகுதியாக இந்நூலில் முத்தான பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகள் அமைந் துள்ளன. பகைவனையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் , நேரத்தைப் பயனுடையதாக அமைத்தல் , குடும்பத்தின்
- 7 -

Page 6
முக்கியத்துவம், சிந்தித்துச் செயலாற்றுதலின் சிறப்பு, அன்பு, கருணை என்பன போன்ற அரிய கருத்துக்களை உணர்த்தும் வண்ணமாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நூலாசிரியர், சிறந்த ஒவியர், கலாரசிகள் என்பதுடன் திறமைமிகு கவிஞரும் ஆவார். "வாழ்வியல் வசந்தங்கள் என்னும் நூற்தொகுதியை எழுதியதன் மூலம் அவர் சிறந்த சமூகவியல் சிந்தனைமிக்க கட்டுரையாளர் என்பதையும் நிரூபித்துள்ளார். பல ஆண்டுகளாக இலக்கியப் பணியாற்றி வரும் இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஆசிரியரின் இந்நூல் தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு துணை செய்யும் என்பது தெளிவு. அந்த வகையில் இவ்வரிய பணிபுரிந்த ஆசிரியர் திரு.பருத்தியூர் பால. வயிரவநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்து க்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்வடைகின்றேன். மேலும், அவர் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.
திருமதி. சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இல248-1/1 காலி வீதி, கொழும்பு-04
- 8 -

6াGOTন্ত| 2_GOD
எதிர்ப்பினை எரிக்காது விடின் வாழ்க்கையில் எங்ங்ணம் ஒரு காரியத்தை நினைத்தவாறே செய்திட முடியும்? பயந்தவாறே பணிபுரிய முடியாது. காலங்கள் விரயமாகும்.
ஒரு கணப்பொழுதினையும் அவப் பொழுதாக்க லாகாது. ஒரு கணப்பொழுதில் செய்யவேண்டிய பணிகளைத் தவறவிட்டால் சிலசமயம் அதேபணிகைக்கு எட்டநீண்டகாலம் எடுக்கலாம்.
ஏன், சிலசமயம் அவை கைகூடாமலும் விடலாம். எனவே துணிந்து செயல்படும் அதே வேளை, செய்யும் கருமங்களில் நியாயத்தன்மை துலங்கவேண்டும்.
நியாயமற்ற செயல்களில் நிம்மதி கிட்டாது. குறுக்கு வழியில் பூரணத்துவம் காணமுடியாது. எவரையும் எதிரிகளாகக் கருதினால் பகைமை பெருகும். எதிர்ப்புக்களை தகர்க்கும் அதே சமயம் பகைவர்களையும் மனிதராக மதிக்கவேண்டும்.
நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தினால் ஒரு கணப் பொழுதில், யுகப்பொழுதின் சாதனைகளைப்புரிய முடியும்,
கட்டுப்பாட்டுடன் ஒழங்காகக் காரியமாற்றுக! கட்டுப்பாடுகள் எங்களை கட்டி வைப்பதற்காக அல்ல.
- 9 -

Page 7
அண்ட சராசங்கள் ஒழங்காகச் சுழலாது விடின், அவை கட்டுப்பாடற்ற விதத்தில் தம் நிலை துறந்தால், சர்வ சங்காரம் நிகழ்ந்துவிடுமல்லவா?
இறைவன் தனது படைப்பில் சகலதையும் தனது கட்டு ப்பாட்டிலேயே வைத்துள்ளான். கட்டுப்பாட்டுடன் வாழ்வது கூட தவம் தான். வாழும் வழியும் இதுவே!
இறைவனால் உணர்த்தப்படும் உண்மைகளை எமக்கு ஞானிகள் சொல்லும் போது அதனை ஏற்றுக்கொள்க!
என்றுமே மாறாத உண்மைநிலையே தெளிவு. இதனை உணரும் பக்குவம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எனினும் முரணான வாழ்க்கைக்கு ஒவ்வாத எண்ணங்கள், தெளிவை நோக்கிய பயணங்களைத் தடுத்துவிடும்.
நிரந்தரமற்ற உலகில் நிஜத்தைத் தேடுக! சிந்தனை யும், செயலும் தூய்மையானால் நிஜங்களை உணர்வது எளிதே
எமக்குரிய, எமக்கு வழங்கிய காலங்களில் சந்தோஷ மூட்டும் நல்ல விஷயங்களை,அறிவுடன் பொருந்தும் சமாச் சாரங்களை எவருடனாயினும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தாகம் இருந்தால் அதுவே யோகம்!
எல்லோராலும் இவை முடிந்தகாரியங்களே!. பத்துப் பேருடன் பேசும் போது தேவையான நல்லவைகளையே
- 10 -

பேசினால் பிரச்சனைகள் வராது. உள்ளத்திற்கு அறிவு வருமதி யாகும். இதனால் எல்லோரும் ஈர்க்கப்பட வேண்டும் என்பதே பேரவா ஆகக் கொள்ள வேண்டும்.
"கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்” எனும் இந்நூல் தொகுப்புக்கு மேற்கண்ட கட்டுரைகளை எழுதும்போது ஏற்பட்ட சிந்தனைகளே இவை,
இந்நூலிற்கான அணிந்துரையினை எமது பெரும் மதிப்பிற்குரிய ஒய்வுபெற்ற மேன்முறையீட்டுப்பிரதம நீதியரசர் உயர் திரு.க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் மனமுவந்து gg6f6ffi.
இவர் எற்கனவே எனது வாழ்வியல் வசந்தங்கள் பாகம்01 இற்கு நூல் விமர்சனம் செய்துள்ளார். இந்த அரிய விமர்சனம் என்னை மென்மேலும் ஆர்வமுடன் எழுதத் தூண்டியது. இது தினக்குரல் ஞாயிறு வாரமஞ்சரியிலும் அழகுற வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியம், ஆன்மீகம் எனப்பல விடயப் பரப் பினுள் தனது ஆளுமைமிக்க எழுத்தினால், உரையாற்றலினால் சகல தரத்து மக்களையும் தன் பால் ஈர்த்தவர்.
மேலும், அசாத்திய துணிச்சலுடன் வெளிப்படையாகவே எழுதுபவர். பேசுபவர் என்பது உலகறிந்த விடயம்.
- 11 -

Page 8
இவரது "யதார்த்தச் சிறுகதைகள்"எம்முள்” ஆகியன தொடராகத் தினக்குரல் ஞாயிறு மஞ்சரியில் வெளிவந்தது.
எவர் மீதும், என்மீதும் என்றும் அன்புடன் பழகுவார். பழகுவதற்கு இனியவர். இவருடன் நான் ஈர்ப்புற்று, பழகியமை எனக்கான பெருமையாகும்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி , சாந்தி நாவுக்கரசன் இந்நூலுக்கான மதிப்புரையினை நல்கியுள்ளார்.
நான் இவருடன் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்படி திணைக்களத்தின் பிரதம எழுதுவினைஞராக, நிர்வாக அலுவலராக, பதவி நிலை உதவியாளராகக் கடமை புரிந்துள்ளேன்.
ஆழ்ந்த இந்து சமயப் பற்றும், தமிழ் அறிவும் நிரம்பியவர். தலை சிறந்த நாவல்லாளர், அன்பு பாராட்டுபவர், தனது மதிப்புரை வாயிலாக என்னைக் கெளரவித்துள்ளார்.
நூலில் இணைந்துள்ள கட்டுரைகளை தொடராக வெளியிட்ட தினக்குரல், தினகரன் ஆசிரியர் பீடங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. நூல் ஆக்கத்திற்கு அச்சுருவாக்கம் செய்த அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவன உரிமையாளர் திரு.எஸ். சிவபாலன் அவர்களின் பேருதவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
- 12

என்னுடன் கூட இருந்து நூல் செவ்வையாக்கலில் ஈடுபட்டும், ஊக்குவித்த திரு. க.சுதர்சன், செல்வி ச நந்தினி திருமதிவ. சரஸ்வதி ஆகியோருக்கு எனது அன்பான வாழ்த்துக் களுடன் நன்றிகள் நன்றிகள்
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன்
மேரு இல்லம்"
36-2/1
ஈ. எஸ். பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு06.
தொ.பே இல-011-2361012. O71-4402303,
O7743 18768,
- 13 -

Page 9
01) 02)
03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14)
15)
பொருளடக்கம்
-ഭുള8
தலைப்பு இதி
எதிர்ப்பினை எளி பகைவனை மதி: கணப்பொழுதேயாயினும் யுகப் பொழுதின் சாதனை செய்!
கட்டுப்பாடுகள் சிந்தனையும் செயலும் சந்தர்ப்பங்கள்
தவம்
கொடுத்தனும் இரத்தலும் தெளிவு II
பதவி நல்லன நல்கும் நம்பிக்கைகள் கொடை வழங்கல்
தாம்பத்தியம்
ஆராய்வு இன்றை இளவயதுப் பெண்கள் எதிர் கொள்ளும் தடைகள் கவிதை போல் வாழ்க!
28
38
49
60
71.
81.
92
103
114
120
26
135
142
149
- 14 -

● ● ● 8FLDITLILII 60OTLD
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- 15 -

Page 10
நூலாசிரியர் பருத்தியூர் மால, வயிரவநாதன் எழுதி வெளியிட்ட "வாழ்வியல் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
உண்மை சாஸ்வதமானது
SEJLSLDPT சுயதரிசனம்
கோழைகளாய் வாழுவதோ?
ஞானம்
கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்!
சும்மா இருத்தல் உண்மைகள் உலருவதில்லை! உண்னோடு நீ பேசு!
10.
11.
12.
3.
14.
15.
16.
17.
18.
நான் நானே தான்!
வெறுமை காதலும் கடமையும் அக ஒளி உன்னை நீ முந்து
சுயபச்சாதாபம்
GLD6T66 Lib
மரணத்தின் பின் வாழ்வு
சிந்தனை வரிகள்
- LITTEELÊ - 01
- LITEBLÈS - 02
- LUFTGELÊ - 03
- LUFTGELÊ - 04
- LUFTEISLĖS - 05
- LT35lb - 06
- LUFTGELİ) - 07
T - 0.8
- LÄTTEELÊ - 09
- LT85 b - 10
- LITTEELÊ - 11
- LITTEELÊ - 12
- LumTEELÊ - 13
- LT355 - 14
- LITEEL5 - 15
- LIITGELÊ - 16
- LUFTGELÊ - 17
- LUFTGELÊ - 18
- 16 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
பகைவனை மதி: பகைவர்களின் வஞ்சகச் செயல்களைத் தகர்ப்போம். இவர்களி செயல்களை மட்டும் நிராகரிக்கும், நாம் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது. மனிதனை மனிதன் வெறுக்கலாகாது. எந்த மனிதனும் திருந்தி வாழமுடியும். ஒருவரை நாம் வெறுத்து ஒதுக்கினால் அதனால் நாம் சமூகத்தில் ஒருவரைக் களைய முற்படும் பாவத்தைச் செய்தவ ராவோம். அத்துடன் நல்லவராகும் எவரையும் தடுத்ததாகவே கருதப்படும். அதே சமயம் தீவினையாளரைக் கண்டு அச்சமடைதல் கூடாது. களங்கமற்ற எண்ணங்களுடன் தீய பகைவர் செயல்களை அறுப்பது பாவமானது மல்ல. அதுவே மானுட தர்மமும், உலகின்
எதிரிகள் என்போர், எம்மை உற்சாகமூட்டும் கருவிகள் எனக் கொள்வோம். இவர்களை எரிச்சலூட்டும் பிரகிருதிகளாக மட்டும் கொள்ளாது, எங்கள் வாழ்க்கையைச் சரிவர இயக்குதற்கு வல்லமையூட்டும் சக்திகளாகக் கொள்வோம்!
= 17 سے

Page 11
மருத்திபூர் பல. அவிழ்வருதல்
எமக்குப் பிடிக்காத ஒரே காரணத்திற்காக, எதிரிகள் எனக் கருதப்படுவோர் துரோகிகளும் அல்லர். எனவே பகைவரை மதித்தலே நற்பண்புமாகும். ஆனாலும், எதிரிகளைச் சம்பாதித்துக் கொள் என்று சொல்ல வரவில்லைதானாக உருவாகிவரும், தொல்லையூட்டும் எதிரிகளின் தரம் உணர்ந்து செயல்படுவோமாக
எதிரிகளைத் துரும்பெனக் கருதிப் பாரா முகமாகவும் இருந்திட முடியாது. அதே சமயம் அவர்கள் எங்களிலும் பார்க்கச் சாமர்த்தியமும், வல்லமையும் கொண்டவர்கள் என்று எண்ணி எம்மை நாமே வருத்தி எங்களைப் பலவீனப்படுத்தி விடக் கூடாது.
பலவீனங்களே துன்பங்களுக்குக் காரணமாகும். எங்களை நாம் சக்தியூட்டுபவர்களாக மனப்பூர்வமாக உணர்ந்து செயலாற்றிவரின் எதிரிகள் துரும்புகளேயாவர். வரும் பகையை நட்பு உறவாகக் கொள்வது எங்கள் பலவீனமும் அல்ல. அது மானுட நேயமும் திறன் கொண்ட விசாலமான மனோ இயல்புமாகும்.
இன்று எத்தனையோ விதமான பலவீனர்கள் எம்முன்னே வீராப்புடன் உலாவருகின்றனர். எங்களை விட மிஞ்சியவர் யாருமே இல்லை என்பார்கள். ஆனால் இத்தகையவர்கள் தங்களை விட பலம் குறைந்த, வசதிகளேயற்ற,நொய்ந்து,நொடிந்தவர்களை மட்டுமே எதிரிகளாகக் கொள்வர்.ஆனால் வார்த்தையளவில், தாங்கள்
- 18 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! வலு குன்றியவர்களை நேசிப்பதாகவும், பலம் கொண்ட தமக்குச் சமமானவர்களை மட்டுமே எதிரிகளாகக் கொண்டி ருப்பதாகவும் கூறிக் கொள்ளுவார்கள்.
தன்னைவிட அல்லது தமக்குச் சமனானவர்களுட னேயே தங்கள் திறமைகளைக் காட்டுதலே, கெளரவ மாகும். ஏழை, எளியவர்கள், நொந்தவர்களுடன், பொருது வதும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை களைத் தந்திரமாகவோ அன்றி நேரிடையாகவோ, பகைத் துப் பழிவாங்கிப் பலவந்தமாக பறிப்பதோ அடுக்காத கொடுரம் gШт!
கண்டபடி எவருடனும் பகை கொள்ளுதல் பண்பற்ற செயல். ஆயினும் வலியவரும் இடர்களை உடைத் தெறியாமல் விடுவதும் கோழைத்தனமானதே. ஒருவர் அநியாயமான முறையில் பகைமை பாராட்டித் தீங்கு செய்தால் அவரை ஒடுக்குதல் ஒரு சமூக நற்பணிதான்.
ஏனெனில் இத்தகைய துர் ஆன்மாக்கள் தொடர்ந் தும் தொந்தரவுகள் செய்து வருவதுடன் இதையே சாக்காகக் கொண்டு எல்லோரிடமும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பிப்பார்கள். இதன் பொருட்டேயாயினும் தீயவர் களிடம் நாம் அடங்கிப் போகாது அவர்கள் திமிர்களை அடக்குவதில் தப்பேதுமில்லை. எனினும் மன்னிக்கும் பண்பும், விட்டுக் கொடுக்கும் இயல்புடையோர் எவரையும் எதிரிகளாகக் கொள்வதில்லை.
- 19 -

Page 12
மருத்திபூர் பல. ஆயிரவருதல்
தொடர்ந்து தமது எதிரிகளால் அல்லல் பட்டவர்கள் அதனால் பட்ட பட்டறிவினால் துணிச்சல் மிக்கோராய் வீரர்களாகிய சரித்திரங்களும் பலவுண்டு. சும்மா இருப்பவனைச் சுரண்டிப் பார்த்தால் விளைவுபடுமோசமாக வேயிருக்கும். "சாதுமிரண்டால் காடு கொள்ளாது" என்பர். நல்ல ஒரு நண்பனைத் தேடுவது கடிமையானது. ஆனால் பலரையும் எதிரியாக்குவதோ சுலபமானதாகும். பகைவரின் அநாவசியமான கோப மூட்டல்களால் வீறுகொண்டு எழுந்ததால் பகைவர் துவம்சமாகிப் போய்விடுவர். எனவே சாமான்ய மனிதர் என்று எல்லோரையும் கருதி அவர்கள் மீது வீண் பகைமை கொள்வது அறிவிலித்தனமானதேயாம்.
ஒருவன் தன் முயற்சியால் முன்னேறிக் கொண்டி ருந்தால் அதனைக் காழ்ப்புடன் நோக்கப் பல கண்கள் உண்டு. பற்பல சூழ்ச்சிகள் செய்து இவர்களைக் கவிழ்க்க எண்ணுவார்கள்.
எதிரிகள் என்போர் வெறுமனே சண்டைக்கு வருபவர் கள் என்றில்லை. கனிவாகப் பேசுவார்கள். சொந்தம் கொண்டாடுவார்கள். அது மட்டுமல்ல, நெருங்கிய உறவு களுக்குள்ளேயே பகைமை கொள்வோர் அதிகமாகவும் இருப்பர். நேரிடையாகச் சொல்பவர்கள் அல்லது எதிர்ப்பவர் களை விட மறை முகமாகச் செயல்படும், பகைமை கொண்டோரும் அதிகமாக இருப்பார்கள். எனக்கு ஒரு பகைவர்களும் இல்லையென நீங்கள் கருதலாம். ஆயினும் உங்கள் தீவிர முயற்சியாலும், துன்பங்களைத் தாங்கியும்
- 20

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! உழைத்து முன்னேறினால் கூடச் சிலருக்கு அது பொறுக் காது. எனவே, வாழ்க்கையில் நாம் படிப்படியாக வெற்றிக ளைக் குவித்துக் கொண்டு வரும் அதேவேளை, எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன. என்பதையும் உணரும் ஆற்றல் களையும் வளர்க்க வேண்டும். அதாவது உங்கள் வளர்ச்சி க்குக்குந்தகமான சக்திகளை இனம் காண்பீர்களாக எச்சரிக்கை என்பது, எம்மைப் பய மூட்டுபவையாக அமையாது. இவையெல்லாம் ஒரு தற்பாதுகாப்பு நடவடிக் கையுடன் எம்மை நாம் தொடர்ந்தும் வலிமைக்குள்ளாக்கும் தனித்திறமையும் தான் உணர்க!
பகைவர்கள் என்போர் மற்றவர் பலவீனங்களுக்கு நுளைந்து கொண்டு இன்னல் கொடுப்பவர்களாவர். காரியம் செய்பவர்களை விடக் கயமைத்தனங்களைச் செய்பவர்கள் மிக மிக விழிப்புடன் இயங்குகின்றார்கள்,
எல்லோருமே எங்களைப் போன்ற மனிதர்களே. நாம் எதற்கும் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமே யில்லை. யாராவது ஒருவர் தமக்கு எதிராகப் புறப்பட்டால் மனம் சஞ்சல மடைந்து விடுகின்றது. அடுத்து என்ன செய்வது எனக் குழம்பி விடுவதும், சலனப்பட்டுக் கலவர மடைவதும் என மென்மேலும் பயமூட்டப்படுவதால் ஒருவரின் செயல்திறன் அருகி விடச் சந்தர்ப்பமளிப்ப தாகவும் இருக்கின்றது.
எத்தகைய எதிர்ப்புக்களுக்கும் சலனத்துடன் மனம்
- 21 -

Page 13
பருத்தி அல. ஆயிரவருதல் குழம்புவதை பகைவர் நோக்கும் தன்மையை நீங்கள் உருவாக்குவது எவ்வகையிலும் உங்களுக்குத் துன்பங்க ளையே உண்டு பண்ணலாம். எதிரியை எதிர் கொள்ளும் போது எதிரியை எப்படி மடக்கலாம், அப்படிச் செய்யலாமா, அல்லது இப்படிச் செய்யலாமா எனத் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே.
ஆனால் எக்காலத்திலும் எம்மிடம் நியாயத்தன்மை இருந்தால் எவர்க்கும் அஞ்சுகின்ற தேவை ஏற்பட வேண்டிய தேயில்லை. எங்களிடம் தவறுகள் இருந்தும், அது சரி என நிரூபித்தலுக்காக நாமாக ஒருவருடன் விரோதிப்பது என்பதே நீங்கள் உங்களின் முதலாம் தர எதிரியாவீர்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
தவறான செயல்களைச் செய்பவர்கள் நியாயங் களைக் கற்பிக்க முயல்வது, இறைவனோடு போராடுகின்ற அதிமுட்டாள்தனமும் தான். எனவே, தவறு செய்பவர்களை நோக்கிப் பிறர் சுட்டிக்காட்டினால், அந்தச் செயல் செய்பவர் களை நீங்கள் உங்கள் பகைவன் எனக் கருதுதல் தகாது. உணர்க!
எமக்குள் இருக்கும் அகம்பாவம், ஆணவம், கோபம்,
காழ்ப்பு போன்ற உள் நின்று வருத்தும் எதிரிகளை
எதிர்ப்போமாக இந்தத் துர்க்குணங்களால் ஏற்படும் மன
நிம்மதியின்மை,சதாகலவரஉணர்வுகள், சஞ்சலங்கள்,
தவிப்புக்கள் சொல்லில் அடங்காத பெரும் சுமைகள். - 22 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! அறிவு, அனுபவங்கள், ஆற்றல்கள், பெரியோர் சொற்கேட்டல், ஆன்மீக நாட்டங்களால் எம்மை நாம் தூய்மையேற்றினால் எந்தவித இடையூறுகளும் வந்திடாமல் எம்மை நாம் காப்பாற்றிட முடியும்.
நல்ல மனிதர்களைத் துஷ்டர்கள் நெருங்கிடவே அச்சப்படுவார்கள். எத்தகைய நல்ல பழக்கங்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூடக், "கோபம்" என்கின்ற இயல்பு தான் எமக்கு எதிரிகளை சம்பாதிக்கும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
நல்ல பெரிய மனிதர்கள் கூட அநாவசியமாகக் கோபம் கொள்வதால் தம் நிலை மறந்து பேசுவதால், கெட்டபெயர் எடுப்பதுடன் பிறர் தூற்றுதலுக்கும் ஆளாக நேரிடுகின்றது.
எத்தகைய நற்காரியங்களைச் செய்தாலும் கூட, எங்கே அவர்கள் ஒரு சிறிய தப்பைச் செய்தாலும் தேடிக் கண்டு பிடித்து, அதைச் சொல்லிக் காட்டிக் கவிழ்க்கத் தயாராக இருக்கும் நபர்களும் இருக்கின்றார்கள்.
இன்று பலரும் தங்கள் "பலம்" பற்றிச் சிந்திக்காமல்
தங்கள் பலவீனம் பற்றியே சிந்தித்தபடி தங்களைக்
குழப்பியபடி இருக்கின்றார்கள். தங்கள் வல்லமைகளை
வளர்க்கத் தங்களைப் பூரணமாக்கியபடி முன்னேறினாலே
போதும் பலவீனங்கள் தானே அருகிக் கருகிவிடும். - 23 -

Page 14
கருத்திபூர் அடி, அர்த்தக் இல்லாததை இருக்குமாறு போல் கற்பனை செய்தல் கூடாது. எனவே,பலம் பொருந்திய சிந்தையும், நோக்கும், செயல் உடையாரைப் பகைவர் தேடமாட்டார்கள். நெருங்குதற்கும் அஞ்சுவர்.
இன்று மனிதர்கள், வெறும் சடப்பொருள்களைப் பெற்றாலே போதும் என்று கருதி ஜட வாழ்க்கை வாழுகின்றார்கள்.அனுபவிப்பதற்கு என்று வேண்டியன அல்லாததையும் பெற்றுக்கொள்ள மனிதன் விழை கின்றான். ஆனால் இவைகளுக்கு மேலாக, மனித இதய மூடாக, மனித ஆன்மாக்களின் இருந்து பெறும் தூயஅன்பு பற்றி எவ்வளவுதூரம் கரிசனைப்படுகின்றார்கள். என்பதைத் தங்கள் சுய சிந்தனை மூலம் உணர்கின்றார்களா? சற்றே யோசிப்போம்.எல்லா மாந்தர்களையும் பூரணமாக ஏற்றுக் கொண்டால் பகைமை வருமா, இல்லை, அதுவளருமா? அப்படியே தொலைந்து விடுமல்லவா?
இன்று பலரும் பிரச்சனைகள் என்று வந்தாலே, அது எமக்கு எதிரானது என்று கருதி விடுகின்றார்கள். பிரச்ச னைகள் என்றால் அது எமக்குப்பாதகமானது என எண்ணுவது ஒருதவறான எண்ணமல்லவா? எங்களுடன் ஒத்துவராத விஷயங்கள் எல்லாமே எமக்குப் பாதகமானது என்று எண்ணுவது என்ன நியாயம்? நாங்களே செய்யும் காரியங்கள் எல்லாமே சரியானதுமல்ல.
எனவே, எந்தப் பிரச்சனைகளையுமே எமக்கு
- 24 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
எதிரானவை எனக்கருதாது, அவைகளின் உண்மைத் தன்மைகளை ஆராய்க! உண்மைகளைத் தெரிந்து, தெளிந்ததும் எந்தப் பிரச்சனைகளையும் எதிர் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடாது. ஆராயாமல் நாமாகவே ஏற்படுத்தும் சிக்கல்களால் வீணாக சஞ்சலப்படுதல் எம்மை நாமே வெறுப்பேற்றும் செயலாகவும் அமையக் 8inᏣᏓᏝ6Ꭷ6Ꮝ6lᎥᎥᎢ?
நாங்கள் காட்டுகின்ற சீற்றம் எங்கள் ஆற்றல்களைக் குறைத்து விடுவதால், எதிரிகளுக்கு அது ஆயுதமாகப் போய்விடும். அமைதியுடன், இருப்பவர்களே நல்ல திட்டங்களை வகுப்பதற்கு ஏற்ற மதிநுட்பமானவர்களாக இருக்கின்றார்கள். கண்டபடி நடந்து பேசி உடல் குறுகி எவரிடமும் மன்னிப்புக் கேட்டு மறுகுதலைவிட ஆராய்ந்து, அன்புடன் நடந்து கொண்டால் எம் முன் எவருமே வேற்றுமை காட்டிப் பழகவே மாட்டார்கள்.
ஆயினும், நியாயபூர்வமான கோபங்கள், பகைவரைச் சிந்திக்க வைக்கும், அச்சம் கொள்ளவும் வைக்கும். ஏன் அவனைத் திருந்தி நடக்கவும் செய்திடும். பகைவருடன் பொருதுவது என்பது, கத்தி, பொல், துப்பாக்கியுடன் சண்டை செய்வது அல்ல.
இன்று சாதாரண கருத்து மோதல்களே முடிவில்,
ஆயுதம் கொண்டு போராடும் நிலைக்கே தள்ளப்படுவது
முண்டு. உங்கள் கருத்தை ஏற்காதவர் உங்கள் எதிரிகளும் - 25 -

Page 15
பருத்தி அல. ஆயிர்வத்துக் அல்லர். நல்லவர்கள் நியாயங்களைச் சொன்னால் கேட்க வேண்டும். ஆரம்பத்தில் உலக தலைவர்களில் ஒருசாரார் ஒரு நாட்டின் போக்குக்கு எதிராக ஒரு கருத்தைச் சொல்லுவார்கள். அதை அந்த நாடு மறுக்க, அதற்கு ஆதரவாக மற்றய நாடுகளிடையே பல வித அணிகள் உருவாகுவதும், பின்னர் அவையே பெரும் போராக முடிவடைவதும் சரித்திரம் கூறும் கதைகளே. சுயநலத்தை மட்டுமே தமது கருத்தாகக் கொண்டு மற்றயவர்கள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் விட்டால் நடப்பவை எல்லாமே பாராதூரமான விளைவுகளையே ஏற்படுத்தி விடலாம்.
இன்று பகைவர்களைக் குறுகிய குறுக்கு வழியில், கொடுரமாக அழிக்க எண்ணுகின்றார்கள். இப்படியாக இவர்கள் தப்பாக எண்ணுகின்ற அதே சமயம் இவர்களு டைய பகைவர்களும் அதே எண்ணம் கொண்டு தம்மை அழிக்கலாம் என எண்ணுவதுமில்லை. அத்துடன் தனக்குத் தீங்கு விழைவிப்பவன் செய்வது மட்டுமே தவறு, தாம் எதுவும் செய்ய எல்லா வித உரிமையும் தமக்கு உண்டு எனக் கருதியும் விடுகின்றார்கள்.
உண்மையான வீரன் குறுக்கு வழியில் எதிரியை அழிக்கவும்மாட்டான்.வீரனுக்கு அழகு, மரணம் வந்திடினும் எதிரிகளிடம் சரணடையாத் தன்மையுமாகும். உண்மை களை ஒத்துக்கொள்வதுமாகும்.
= 26 س
露

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
எவரையுமே மிரட்டி, அடிமை கொள்ள நினைத்தால் நாம் வென்று விட்டதாக அர்த்தம் கொள்ள முடியுமா? நியாயத் தன்மையற்ற வீரம் என்பது கூட ஒரு கோழைத்தன மான திமிர்தான். அறிக!
அன்பைக் காட்டுவதும் அதனை உணர்ந்து சகல ருக்கும் அதனை அளிப்பதுமே "சமாதானம்" உருவாவ தற்கான வழியதாகும். இதுவே கிடைத்தற்கரிய வெகு மானங்கள் என்று உளமாரக் கருதுவதே எதிரிகளற்ற சந்தேஷகரமான வாழ்க்கையுமாகும்.
நாம் வாழ்வது எமது சந்தோஷங்களுக்காக மட்டுமின்றித் தீமைகளைச் செய்யாதிருப்பதும் பிறருக்குத் தீமை செய்வோர் செயலைத் தடுத்து உடைப்பதுமேயாகும். இதனால் எல்லோருமே சந்தோஷமாக இருக்க வழிவகை செய்தவராவோம். எதிரியையும் அரவணைப்போம். "கருணை" கூர்ந்தால் எதிரிகளும் நண்பராவர். உறுதி!.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 29.06.2008
- 27 -

Page 16
கருத்தி: 248. ஆயிரணுகுநர்
யுகப் பொழுதின் சாதனை செய்!
எமது வாழ்நாளில் ஒரு கணப்பொழுதையேனும் வீணாக்கினால் மீட்க முடியாத பெறுமதிமிக்க காலத்தினை நாம் விரயம் செய்து விட்டோம் என உணர்க! கோடான கோடி மக்கள் ஒவ்வொருவருமே ஒரு வினாடித் துளியைக் கரைத்தால், அவைகளின் மொத்தப் பெறுமதியை இந்த முழு உலகம் இழந்ததாகக் கருதப்படும். ஒவ்வொரு கணப்பொழுதிலும் உலகில் என்னென்னவோ அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. காலம் சரியாக இல்லையென்று வேலையே செய்யாமல் ஞாலத்திற்குப் பாரமாக இருப்பதே |DÆIII JIT6)Hó.
ஒரு கணப்பொழுதேயாயினும் கூட அக்கணத்தில் கூட யுகப் பொழுதின் சாதனைகள் நடந்தேறிவிடுகின்றன. சற்றே சிந்திப்போமாக! இந்த ஒரு கணத்தில் என்ன, என்னவெல்லாம் உலகம் பூராவும் எமக்குப் புரியாமல் எம்மைக் கடந்த விநாடிகளில் எத்தனை, எத்தனை சங்கதிகள் நடந்தேறி விட்டன. இனிவரும் கணங்களில் வேறு
- 28 -
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
என்னவெல்லாம் நடக்கப் போகின்றன! கற்பனைக்கு எட்டாத அற்புதங்கள், எதிர்பார்த்த நிகழ்வுகள், எதிர்பாராத நிகழ்வுகள் விஸ்வரூப தரிசனங்கள்! அடேயப்பா. அப்பப்பா. இறைவா!
இந்த ஒரு கணம் எத்தனை எத்தனையோ, கோடானு கோடிதீர்மானங்களை மக்கள் எடுத்துக் கொண்டி ருப்பார்கள். நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் நடந்து கொண்டிருக்கலாம். பல இலட்சம் புதுப் புது உயிர்கள் பிரசவிக்கப்பட்ட வண்ணமிருக்கும். மனித இனங்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள், மரம், செடி, கொடிகள் எல்லாமே தத்தமது வடிவங்களை உருவாக்கிய வண்ணமிருக்கும்.
அது மட்டுமா,அடுத்துவரும் சந்ததிகளில் இனப் பெருக்கத்திற்கான நெருக்கங்களும் ஒன்று கூடல்களும் அரங்கேறியபடி இருக்கும். மேலும் இந்த உலகிற்காக விஞ்ஞானிகள் கூட்டம் உலக ஷேமத்திற்கான ஆராய்ச்சி களையும் அதே சமயம், உலகத்தை ஒரே கணத்தில் எப்படி, எப்படி அழிக்க முடியும் என முடியைப் பிய்த்தபடியோ சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். முடிவுகளையும் கண்டு பிடிப்பார்கள்.புதிய, புதிய கண்டு பிடிப்புக்களும், மருந்துகளும், பொறியியல் சாதனங்களும் வந்து கொண்டேயிருக்கும். திருமணங்கள், விழாக்கள் நடக்கும். விளையாட்டுப் போட்டிகளும், புதிய அரசுகளும் அமைக்கப் படலாம். அல்லது கவிழ்க்கப்படலாம்.
- 29

Page 17
பருத்திபூர் அல. ஆயிரவநாதன்
இதே கணத்தில்,எங்கோ ஒரு நாட்டில் பூகம்பங்கள் நடந்தபடியிருக்கும் அரசியல் கொலை,தனிப்பட்ட குரோதங்களுக்கான பழிவாங்கல்கள், புயல்,கடல், கோள் அனர்த்தங்கள் போன்ற இயற்கைப் பேரழிவுகள் மட்டுமல்ல, மரணங்கள், போர் அவலங்கள், இடப்பெயர்வுகள், பூமி அதிர்ச்சிகள் போருக்கான முஸ்தீபுகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகள், அரசியல் கழுத்துறுப்புக்கள் மறைமுக நடவடிக்கைகள், மழை, வெள்ளம், மின்னல் தாக்கம், கட்சிகள் மாற்றம், ஆட்கடத்தல், சந்தோஷமாகப் பேசிய படியே சுதந்திரத்தை நசுக்குதல் போன்ற கைங்கரியங்களும் நடந்து கொண்டேயிருக்கும் இவைகள் எல்லாமே தடைசெய்ய இயலாத அத்துமீறல்களாகவும், இயற்கை நிகழ்வுகளாகவும், பெயர் பெற்றுக் கொள்ளலாம். அது உங்கள் சிந்தனைக்கே.
காலங்களை நாம் வீணாக கழிக்கக்கூடாது, விழிப்பு டன் நோக்கி ஒவ்வொரு கணத்தையும் ஒரு பெரும் வரவுக் கான உழைப்பு ஆக்குக! எனவே காலம் என்பது ஒரு செல வேயல்ல. அது சகல பெறுமானம் மிக்க வரவுகளைக் கொடுப்பனவுகளைக் குவிப்பதாக அமையட்டும்.
எல்லாப் பொழுதுகளும் எமக்காக, எமக்குள்ளே
கலந்து இருக்கும், எமக்குமாக, என்கின்ற பொது நோக்கு
டன் இயங்குவோமாக உணர்க சற்றே சிந்திப்போம். இந்த
வினாடிப் பொழுது, நான் எனக்காகவோ, அன்றி வேறு
எவருக்காகவோ என்ன செய்தேன். சரிபோகட்டும், கடந்து - 30 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதினர் சாதனை செய்! போன, கணத்தில் நான் என்ன உருப்படியான செயல்க ளைச் செய்தேன். மேலும் அடுத்த கணம் என்ன செய்யப் போகின்றேன்? சரி ஒன்றுமே. செய்யவில்லையா? வெட்கப் படுவோம். எங்களை மாற்றியமைப்போம். மனச்சாட்சியைத் தொட்டு, உங்களை நீங்களே கேட்பீர்களாக அதேசமயம், நீங்கள் செய்த தீய செயல்களையும், தற்போது செய்த ஏதாவது தீய செயல்களையும் அறவே விட்டு விட எண்ணுவீர்களாக!
தெரிந்தோ தெரியாமலோ தீய செயல்களைச் செய்தால் அதற்காக நெஞ்சம் கசிந்துருகி கடவுளிடம் மன்றாடுங்கள் இந்தக் கணமே "என் தீய சிந்தனைகளை அறவே வெட்டிவிடு" என்று கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் நாம் புதிய மனித வடிவு எடுத்துப் புதுப்பொலிவுடன் நல்ல ஆத்மாவாக வேண்டுமெனக் உள்ளம் நெகிழக் கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் உங்கள் விழிப்பையும், முக மலர்வையும் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
நல்லவைகளை எண்ணுவோரும், அதனையே என்றுமே தமது முழு மூச்சான பணி என மேற் கொள் வோரின் வதனம் தேஜஸ் ஆக ஒளிபெருகி ஆனந்த மயமாகவே என்றும் துலங்கும். பெரிய, பெரிய மகான் களைப் பாருங்கள், அவர்கள் திருவுருவைத் தரிசியுங்கள். அவர்கள் பொன் வார்த்தைகளைப் படியுங்கள், கேட்டுப் பாருங்கள். அக்கணமே உங்கள் உடலின் இனிய அதிர்வு களை உளமார அனுபவித்தேயாகுவீர்கள். அனுபவம் தேட
- 31 ܚ

Page 18
கருத்திபூர் அல. அபிறருந்தர் நல்லவர்களை நோக்குக! வல்லமை எல்லையின்றி வரும்.
இன்று மனிதர்களில் பலரும் சேவை என்றதுமே அது மனித இனத்திற்காக மட்டுமேயானதாகக் கருதுகின் றார்கள். உலகம் பூராவும் இந்த எண்ணத்தை நீக்க ஜீவ காருண்ய சங்கங்கள் உருவாகிவிட்டன. "உயிர்களை எப்பொழுதும் வதை செய்யாதே அவைகள் மீது கருணை காட்டு" என்பதாகும். கருணைக்கு ஏது வேற்றுமை!
வேண்டுமென்றே அற்ப உயிர்களைக் கொல்லு வதைப் போல கொடுமை வேறு என்ன உண்டு. காட்டுக்குள் போய் சும்மா சுதந்திரமாகத் திரியும் விலங்கு, பிராணிக ளைக் கொல்கின்றார்கள். மனிதர்களின் பொழுது போக்குகள் விலங்குகளின் வாழ்க்கைக்குவேட்டுவைப்பதாக அமையலாமா? எந்த வினாடியும், குரூர சிந்தனைகளைக் களையச் சித்தம் கொள்க! எமக்கு மட்டுமா, உணர்வுகள்? வலிகள்? இரக்க சிந்தையை நெஞ்சில் இருத்துக!
மனிதனை விட விலங்குகள், சின்னஞ்சிறு அற்பமான பிராணிகளுக்கே வலிகள் அதிகமானது. என்பதை அவை களின் அதிர்வுகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
அண்மைய ஆராய்ச்சிகளில் ஒரே இனச் செடிக
ளுக்கு நல்ல நீர், சூரிய ஒளி, மண்வளம் கொடுக்கப்பட்டும்,
பின்னர் தகாத ஒலிகளும் கேட்கும் படியாகச் செய்யப்
பட்டன. அன்பு, பரிவு காட்டாமலேயே இவைகள் வளர்க்கப் - 32

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! பட்டு வந்து அவதானிக்கப்பட்டன. ஆனால், அதே இனத்து செடிகள் சிலவற்றிற்கு வசதிகளைக் குறைத்து நீர், வளி,ஒளி செல்வதற்கான முறைகளை ஓரளவு கட்டுப்படுத்தியும் வைத்தனர். ஆனால் நல்ல இசையையும், அன்பான சிந்தனையுடன், நீரையும் ஊற்றி வந்தனர். கருணையுடன் பார்த்தும் வந்தனர். இதன் பின்னர் அவதானிக்கப்பட்ட போது சகல வசதிகளையும் கொண்ட செடிகளைவிட அன்போடு நோக்கப்பட்ட செடிகளோ பிரமிக்கத்தக்க விதத்தில் சிலிர்ப்புடன் வளர்ந்தன. எனவே அன்பர்களே, எம்மால் கழிக்கப்படும் ஒரு வினாடிகளைக் கூட அன்பின்
வழியில் அனைவர்க்கும் சகல ஜீவன்களுக்கும் வழங்குக!
எம்மை நோக்கிக் கடமைகள் விழிப்புடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு கடமையை முடித்துவிட்டு அப்பாடா. என்று நிமிர்ந்து கொள்ளும் போதே அடுத்த கருமம் எம்மைத் தட்டி நிமிரச் செய்கின் றது. அதனை எப்படி விட்டுவிடமுடியும்? அப்படியே, எமது பொழுதுகளைக் கடத்திச் செயலைச் செய்யாது விட்டால் வேலைப்பளு கூடிக் கொண்டே சென்றுவிடுமன்றோ! எனவே, குறித்த வேலைகளைக் குறித்த விநாடியில் ஆரம்பித்து விடுக. ஆரம்பித்ததுமே சடுதியாகத் தொடர்ந்தும் செய்து கொண்டே இருப்பீர்களாக
உடனுக்குடன் செய்யாது விடுவதும் செய்ய முனை
யாது தட்டிக்கழிப்பதும், அந்தக் கருமத்தை நிராகரிப்ப
தாகவே கருதப்படும். வேலைகள் குவிவதற்கும், அவை - 33 -

Page 19
பருத்தில் பால. ஆயிரவருதல் ஸ்தம்பிப்பதற்கும், அவர்களே பொறுப்பாளிகளுமாவர். சிலர் சொல்வார்கள் நான் இந்த நிமிடமே வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் எண்ணியவாறு என்னால் செய்ய முடியவில்லை, தடைகள் வந்து குறுக்கிடுகின்றன என்பார்கள். எம்முன் உள்ள சோதனைகள் தடைகள்தான் எமது இயங்கும் வேகத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்வீர்கிளாக!
ஓடும் நீரைத்தடுத்தால் அங்கு அழுத்தம் அதிகரிக்கும். வேகமான நீர் தடுப்பை உடைத்தும் பீறிட்டு ஓடியபடியே வீச்சாகத் தன் வலுவைக் காட்டும். எங்கள் ஆர்வம் தடைகளை ஏற்கமாட்டாது மேலான ஆர்வம், தடைகளுக்கு எதிரானது அல்ல. ஆர்வமிகுதியால் உணர் வின் வேகமும், இயங்கும் விசையையும் அதிகரிக்கும். எவராவது தமது செயலில் விருப்பமின்றிச் செய்யும் கருமத்திற்காக தடைகள் பற்றிப் பேசுவது அவர்களின் துணிவின்மையையும் ஏனோதானோ என்ற மன இயல்புகளையே எடுத்துக்காட்டும். தனது புலன்களை ஒன்றாகக் குவிப்பவர்களுக்கும் இயங்குபவர்களுக்கும் தடைகள் என்பது ஒரு பிரச்சனையாகத் தோன்றுவ தேயில்லை.
தகுந்த ஆராய்வின்மையின்றியும், அனுபவங்கள்
இன்றியும் ஒரு கணப்பொழுதில் தான் தோன்றித்தனமாக,
எடுக்கின்ற தீர்மானங்கள், நடவடிக்கைகள் பாரதூரமாகப்
போய் முடிவடையும். வேகமாகச் செல்லும் வாகனம், -34 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதினர் சாதனை செய்! நூறில் ஒரு வினாடிப் பொழுதில் சாரதி கண் அயர்ந்தால் படுகுழியில் வீழ்ந்து விடும். மேலும் தீர்க்கமான ஒர் முடிவை எடுத்தபின்னர் கலவரப்பட்ட சிந்தனையுடன் தம்மை உட்புகுத்தி விடுதல் மேலும் பல சிரமங்களையும் சிக்கல்க ளையுமே ஏற்படுத்தி விடுகின்றன.அவதானமும் விழிப்பும் கவனமும் இன்றேல் காலங்கள் விரயமாகும் , துன்பமேயூட்டும் அறிக!
ஆழமாகச் சிந்தியுங்கள் உங்கள் அனுபவங்க ளையும், கற்றறிந்த, அனுபவசாலிகளின் அனுபவங்க ளையும், இணைத்து எடுக்கும் தீர்மானங்களை வெளிப்படு த்தும் அக்கணத்திலிருந்து தொடர்ந்து உங்கள் இயக்கத்தி லேயே குறியாக இருந்திடுங்கள்! நல்ல நோக்கமின்றி சிறந்த வாழ்க்கையுமில்லை கணப்பொழுதும் இமை சோராது வாழ்க்கையில் தேவையானவைகளைத் தகுந்த காலத்தி னுள் எடுத்துக் கொள்வதே அறிவுடைமையாகும்.
"செய் அல்லது செத்துமடி" என்பார்கள்.எதனையும் செய்யாது செத்துப் போவது வாழ்க்கையேயல்ல. இந்தப் பூமி பல யுகங்களைக் கண்டிருக்கலாம்.ஆனால், நாம் வாழும் இந்த நொடி எமக்குப் பெரியதுதான். யார், யாரோ எந்தப் பெரிய நிலையில் இருந்தாலும்,நீ வாழும் எளிய இந்த வாழ்க்கையே இனிமையானது என்று உளமார ஏற்றுக் கொள்வாயாக இயங்குதலில் ஏது தயக்கம்?
கழிந்து செல்லும் நிமிடத் துளிகள் எம்மை ஒரு
- 35 -

Page 20
பருத்திபூர் அல. அவிர்தநாதர்
போதுமே கட்டிவைக்க எண்ணுவதில்லை நாமே தான் எழுந்து முன்வரல் வேண்டும். காலபலன் என்று நிமிர்த்தி கனிடம் (சோதிடன்) செல்லுமுன், "நாம் எங்களைப் பலப்படுத்தி வந்தோமா? என்று கருதாமல், கிரகங்களை வைத்துக் கணக்குப் பண்ணுவது சரியா? சரிவர இயங்கு வனையே கிரகங்கள் அனுசரிக்கும். சோம்பேறிகளை எந்த நவக்கிரகங்களுமே ஏற்றுக் கொள்ளாது. இவர்களைக் கண்டாலே அவை எதிர்த் திசையில் சுழல ஆரம்பிக்கும். அல்லது சாபமிட்டுத் தண்பாட்டிற்கு சுழன்று கொண்டிருக்கும்.
நல்லபடி வாழ்பவன் நொடிப்பொழுதுகளையும் காசு ஆக்குவான், கல்வியைத் தேடுவான், பல பெரியவர்களுடன் நட்புறவு கொள்ளுவான். ஏன், நல்ல பதவிகளையும் தனதாக்கிக் கொள்வான். "காலம் செய்த கோலம்" என்றும், "படைத்தவனே, எனக்குப் பழி செய்து விட்டான்" அல்லது "கூட இருப்பவன் குழி பறித்து விட்டான்" என்று மற்ற ஒருவரைப் பழிசுமத்திப் பாரத்தை எவர் மீதாவது ஏற்றுவது எமதுபழக்கம்.உண்மையில் விரோதிகளாலும் துன்பங்கள் வருவதுண்டு. எங்கள் எண்ணங்களின் வீச்சும் செயலூக் கமும், நேர்மையான செயல்பாடுகளும், எமக்கான வெற்றிக் கதவுகளைத் திறக்க வைக்கும்.
ஒரு கணமாயினும் அது எமக்கேயானது. அதனை
ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டியதே.
காரணங்களைச் சொல்வதைவிடக் காரியங்களை ܚ 36 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
ஆக்குதலே அதிக பயனைக் கொடுக்கவல்லது. நீண்ட பொழுதுகளைப் "பேசுதல்"எடுத்துக்கொள்கின்றது மெளன மாக இயங்குவதால் கணப்பொழுதில் நாம் ஆற்றும் செயல்கள், எங்களது வினை திறனை அதிகரிக்கிறது. கணப்பொழுதின் பெறுமதி, எம் அறிவுத் திறனாலும் கூறிட முடியாத அளப்பரிய செல்வம் அன்றோ நண்பர்களே!
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி 01.06.2008
- 37 -

Page 21
கருத்திபூர் அல. ஆயிரவருதல்
கட்டுப்பாடுகள்
சுதந்திரமாகச், சந்தோஷமாகச் சீவிப்பதற்குக் கட்டுப்பாடுகள் அவசியமி கட்டுப்பாடு என்பது எம்மைக் கட்டிவைக்கும் ஒவ்வாதனவல்ல. நியாயத் தன்மையற்று, வாழ்பவர்களுக்கு, சட்டமும், சமூகமும் கட்டுப்பாடுகளை தண்டனைகளை விதிக்காது விடின் இந்தப் பூமி தள்ளாடிக் கவிழ்து போகும். நற்பண்புடன் வாழ்வதில் என்ன சிரமம் இருக்கின்றது? நல்லதைச் சொன்னால், முகம் சுழிக்கத் தேவையுமில்லை. அண்டசராசரங்கள் எல்லாமே ஒழுங்காகக், கட்டுப்பாடுடன் சுற்றி வரும் போது சாதாரண மனிதனாகிய நாங்கள் நேரிய வழியில் ஒழுங்காக இயங்கிவருகின்றோமா சிந்திப்போம்!
"கட்டுப்பாடு” என்பது, ஒருவரை இயக்கமறக் கட்டிவைத்தல் அல்ல. சுதந்திரமாகவும், சந்தோஷ கரமாகவும் எண்ணியபடி செப்பனுடன் கடமைகளைச் செய்து முடித்திட வல்ல வலுவான, நிறைவான வாழ்க் கையை நடாத்திட வைக்கும் வழிமுறையாகும்.
- 38 -
 
 
 
 
 
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செப்
கட்டுப்பாடான ஒழுக்கமின்றிக் கல்வி கற்றிட இயலுமா? நாங்கள் நினைத்தவாறே ஆசிரியர் உதவிகள் இன்றி ஒழுங்கு முறைகள் அற்றுப் பாடங்களைப் படித்திட முனைதல் அறிவினைக் குழப்பும் முயற்சி அல்லவா? கட்டுப்பாடு இல்லாது விட்டால் நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க முடியாது. ஆட்சி நடத்தும் தலைவன் சொற்கேளாது விட்டால் ஸ்திரமான அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாததுடன் அங்கு சதா குழப்பங்களும், அத்துமீறல்களும் தான் நடக்கும். நல்லன செய்யும் எவரது புத்திமதிகளுக்குக் கட்டுப்படுதலே மேலான அறமாகும். வீட்டிலாகட்டும் வெளியிலாகட்டும் ஒழுங்கு என்பது பொதுவானதேயாம்.
தெருவில் வாகனங்கள் செல்லுகின்றன. முச்சந்தியில் சிவப்பு விளக்குச் சமிக்ஞை வாகனத்தை உடன் நிறுத்துமாறு தெரிவிக்கின்றன. என்னால் வாகனத்தை நிறுத்த முடியாது, நான் அவசர அலுவலாகச் சென்று கொண்டிருக்கின்றேன் என எண்ணி வீதிப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி நடக்க முடியுமா?
கட்டுப்பாடு என்றதுமே சிலருக்குப் பிடிக்காமல் போய் விடுகின்றது. இளமைக் காலத்தில் கட்டுப்பாட்டுடன் நாம் வாழ்ந்தால்தானே எங்கள் எதிர்காலமும் பிரகாசமாகத் துலங்க முடியும்? ஆரம்ப காலத்தில் கட்டுப்பாடு ஒழுக்க நெறி சற்றும் பிடிக்காமல் கண்டபடி வாழ்ந்தவர்கள் காலப் போக்கில் தங்கள் இனிய வாழ்க்கையைத் தொலைத்து நிற்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
- 39 -

Page 22
கருத்தி பா. ஆயிரவநாதர்
தங்கள் மீது நியாயத் தன்மைகளை உணருபவன் சிறந்த கட்டுப்பாட்டு முறைகளைக் கண்டு அச்சப்படப் போவதில்லை. கட்டுப்பாடுகளுடன் ஒழுகுதல் தர்மம். எமது உடல் உறுப்புக்கள் சீராக இருந்தால்தான் நாம் நலமாகச் சீவிக்க முடியும். உடலில் ஒரு உறுப்பு ஆயினும் இயங்க மறுத்தால் முழு உடம்புமே செய்வதறியாது திகைத்து நின்றுவிடும். ஒழுங்கான குருதி ஓட்டமும், சீரான வெப்பம், காற்று, நீர், என்பன உடலுக்குக் கிடைத்தாலே கட்டுப்பாடான வரையறைக்குள் உடல் இயங்கும்.
இன்று பேசுவது எமது உரிமை என்று கூறிக் கண்டதையும் பேசுகின்றார்கள். ஒருவரைத் திட்டுவது சுதந்திரம் அல்ல. இது கட்டுப்பாடற்ற காடைத்தனம். தங்களைப்பற்றி விமர்சனம் செய்ய அனுமதிக்காதவர்கள் மற்றவர்கள் பற்றி எதுவும் பேசுதலை தங்கள் மனித உரிமை என்று வேறு சொல்கின்றார்கள். மனச்சாட்சி நலிவடைந்த வர்களிடம் கட்டுப்பாடு, கட்டுக்கோப்பான மனித நடத்தைகள் பற்றி எதுவுமே பேச இயலாது.
இறைவனால் அளிக்கப்பட்ட இயற்கை, முறைப்படி, ஒழுங்காகத்தான் நடக்கின்றது. பருவகால மாற்றங்கள், அதனோடு இணைந்த வெப்ப, தட்ப நிலைகள் காலம் மாறும் போது அவைகளிலும் மாறுதல்களை ஏற்படுத்து கின்றன. எனினும் இயற்கைக்கு விரோதமான போராட்ட ங்களில் மனிதன் தெரிந்தும், தெரியாமலும் ஈடுபட்டு வருகின்றான்.
- 40 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
அண்டசராசரங்கள் ஒழுங்காகவே சுற்றிவருகின்றன. கோள்கள், நட்சத்திரங்கள், உபகோள்கள் எல்லாமே தமக்கான ஒரு பாதையில், ஈர்ப்பில் ஒன்றை ஒன்று சுற்றி வருவதும் இவற்றுக்கும் மேலாக இவைகள் எல்லாமே ஏதோ ஒரு மகாசக்தியை நோக்கி நகருகின்றன.இவையெல்லாமே எமக்குள்ள எமது அறிவிற்குப் புலனாகாத சங்கதிகளாக இருக்கின்றன. எல்லாமே ஒழுங்காகக், கட்டுப்பாடாக இயங்குகின்றன, இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் ஒழுங்காக இயங்குகின்றோமா? சிந்திப்போம்!
பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பிரமுகர்கள் தமது சொந்த வாழ்க்கையில் தூய ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆயினும் எவர் எத்தகைய குண நலன்களைக் கொண்டவராயினும் அவர்களை அப்படியே முழுமையாக நம்பித் தங்களை அர்ப்பணித்துவிடும் அப்பாவிப் போக்கினால் மக்கள் அமிழ்ந்து போய்க்கிட க்கின்றார்கள். இதனால் ஏற்படும் பிரதிபலன்கள் எல்லாமே மக்களைப் பொறுத்ததேயாகும்.
கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிரு ப்பவர்கள் கூடத் தமது குற்றங்கள், தப்புக்களை எல்லாம் மற்றவர் மீதே திணிப்பதும், அதை அவர்கள் ஏற்றேயாக வேண்டும் என்கின்ற பாணியில் வன்முறையாகக் கட்டாயப்படுத்துவதும் யாவரும் அறிந்த ஒன்று தான்.
- 41 -

Page 23
கருத்தில் அல. ஆயிரவருதல்
குடும்பங்களில் குடித்துக் குட்டிச் சுவரான கணவன் தன் குறைபாடுகளை மறைக்க மனைவி பிள்ளைகளை இம்சிப்பதும் ஆடம்பரமாக, நவநாகரீக மோகத்தில் உழன்று கணவனை அவமதிக்கும் மனைவியும் இருக் கின்ற வீடுகளில் நிம்மதி எட்டிப்பார்த்திடுமா? இத்தகைய வர்களால் தங்கள் பிள்ளைகளை எப்படிக் கட்டுப்பாட்டுடன் வளர்த்து ஆளாக்க இயலும் ஐயா? நம்மை நாம் சுயகட்டுப் பாட்டிற்குள் வைத்திருத்தலே அரும் கலைதான். ஆன்மீக வாழ்வுமுறை எம்மை நாம் ஆள்வதற்கான முறைகளைச் சொல்லித்தருகின்றது. ஒழுக்கம் என்பதே கட்டுப்பாட்டான வாழ்வின் மூலாதாரம் அல்லவா?
தியானம், வழிபாடுகள் பற்றி தத்தமது மதங்களில் சொல்லப் பட்டவாறே மக்கள் கடைப்பிடித்திடினும் அவைகளின் முடிபு மனத்தைக் கட்டுப்படுத்தல்,அதனூடு நல்ல ஒழுக்கத்துடனும் வாழுதலும்,எக்கணமும் மகிழ் வோடும் சாந்தமுடன் வாழுதலுமாம். கட்டுப்பாட்டுடன் வாழ்பவனுக்கு உற்சாகம் தானாகவே பீறிட்டு எழும். புறத்தாக்கங்கள் கட்டியணைக்காதுவிடின் களிப்பு தானாகவே வந்துவிடுவதில் வியப்பு இல்லை.
இன்று கட்டுப்பாடு என்றதுமே எல்லோரது மனதில்
"குடும்பக்கட்டுப்பாடு” தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
உலக ஜனத்தொகைப் பெருக்கம் எல்லோரையும் அச்சம
டையச் செய்கின்றது. மக்கட் பெருக்கத்தினால் வல்லரசு
களே ஆடிப்போய் இருக்கின்றன. முக்கியமாகச் சீன - 42 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
வல்லரசில் மக்கள் பெருக்கம் அங்கு தொழில், பொருளா தாரப் பிரச்சனைக்கே பிரதானமான காரணமாகி விட்டது. ஆனால், சில நாடுகளில் மக்கட் தொகையில் பெரும் வீழ்ச்சியும் கண்டுள்ளது. நீண்டகால யுத்தம், இயற்கைப் பேரழிவு, நோய்கள், காலநிலை, பருவகால மாற்றங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
மக்கள் தொகை பெருகிவந்தாலும் இயற்கை அழிவுக ளுக்கும் குறைவில்லை. அண்மையில் பர்மா தேசத்தில் வீசிய "நர்கீஸ்" சூறாவளியால் ஒரு லட்சம் பேர் வரை மாண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. சுனாமி, பூமியதிர்வு, நிலநடுக்கம், மண் சரிவுகளால் ஏற்படும் பொருளாதார அழிவுகள் கணக்கிலடங்காது.
ஆயினும், நாம் ஒன்றைக் கவனித்தேயாக வேண்டும். ஏற்கனவே சிறுபான்மையிராக உள்ள மக்களுக்கு இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தேவையற்றதேயாகும். இயற்கை அழிவுகள், முற்றுப் பெறாத யுத்த சூழ் நிலைகளால் மக்கள் அழிந்து போயிருக்கின்றார்கள். இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாடு முறைகளால் ஒரு சமூகமே இல்லாத சூழ்நிலை உருவாகும் அல்லவா?
மிகவும் சிரமப்பட்டு வாழும் மக்கள் எத்துணை
இடர்கள் வரினும் மனத்திடத்துடனும், கடுமையான
உழைப்புடனும் வாழ்ந்தேயாக வேண்டும் என்கின்ற நிலை. - 43 -

Page 24
ஆத்திக் பல. ஆயிரவநாதன். ஆயினும் தங்கள் முன் உள்ள துன்பங்கள் எல்லாமே தொலைந்துபோகும் என்கின்ற சிந்தனையை முன்வைப் பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தியாகமும், உழைப்பும், இன்றி நாம் உயர்ந்திட முடியுமா? குழந்தை யைப் பெற்று, வளர்த்து ஆளாக்குவது என்பதும் தியாகத்துடன் கூடிய மாபெரும் உழைப்பிற்கு உட்படுத்தும் விஷயம்தான். உணர்வோம்!
மனிதர்கள் மேலதிகமாகவே தேவைகளை நோக்கி எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். எப்படியாவது எல்லாவற்றையும் பெற்றுவிட வேண்டும் எனத் துடியாத் துடிக்கின்றார்கள். இந்தப் பேராவல் பலரையுமே, வரம்பு மீறிய செயல்களுக்குள் உட்படுத்தி விடுகின்றது. இதனால் தன் கட்டுப்பாட்டு வாழ்வுமுறையையே உடைத்தெறியவும் சித்தமாகின்றான்.
பல குற்றவாளிகளிடம் சென்று ஏன் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டாய் என்று கேட்கும் போது அவர்கள் சொல்லும் பெரும்பாலான பதில்கள் இதுவாகத்தான் இருக்கும். "எனக்கு வேறுவழியில்லை. நானாக விரும்பி இதைச் செய்யவில்லை. நான் நிர்ப்பந்திக்கப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்" என்பார்கள்.
களவு, கொள்ளை போன்ற எந்தக் குற்றச் செயல்க
ளையும் செய்யும் ஒருவன், தன்னை உடைத்துக் கொண்டு
எப்படியும் நினைத்ததைச் செய்ய வேண்டும் என்கின்ற = 44 س

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
எண்ணத்துடன் தவறான காரியங்களையும், சுயகட்டுப் பாட்டை இழந்தபடியே செய்கின்றான்.எம்மைச் சுற்றியுள்ள ஆதரவற்றவர்கள் அல்லல்கள் பற்றி எத்தனை பேர் கரிச னையுடன் நோக்குகின்றார்கள். ஒரு தனி மனிதனோ, அல்லது ஒரு சமூகமோ, பாதிக்கப்பட்டும் அதனைக் கண்டு கொள்ளாத இயல்புகளால், அதனால் ஏற்படும் பாதிக்கப் பட்டவர்கள் செய்கின்ற எதிர்வினைகள் சிலசமயம் பெரு நெருப்பின் உஷ்ணத்தைவிட தகிப்பினை உண்டாக்கலாம். சமூகக்கட்டுப்பாடுகள் என்பது இன்னும் ஒரு வலுவிழந்த சமூகத்தினைக் கட்டிவைத்து இம்சை செய்வதும் அல்ல. இந்த அநியாயங்கள் எல்லாமே இன்று படிப்படியாக அள்ளுண்டு சென்றுவிட்டன.
எந்த ஒரு தனி ஒருவனது உரிமைகளையும், "எமது சமூகக் கட்டுப்பாட்டு விதி" எனச் சொல்லி அவனைக் கட்டிப் போட எண்ணக் கூடாது. எங்களுக்குச் சாதமாகவே புதிய ஒரு விதியைச் சமைப்பது என்பது சுத்த சுயநலம்தான் அறிக!
இன்று வசதிபடைத்த வல்லரசுகளில் இருந்து சாதாரண பொருளாதார வளம் குன்றிய ஆட்சி செய்யும் நாடுகள் வரை, தங்களுக்கு ஏற்ற விதிமுறைகளை வகுப்பதுடன் அதற்கு நீதி, ஜனநாயகம் என்கின்ற தோரணங்களைக் கட்டி விடுகின்றார்கள். அதனைத் தட்டிக் கேட்டால் ஒழுங்கு விதிகளை மீறுபவன் என்றும் சொல்லி விடுகின்றனர். சில நாடுகளின் கட்டுப்பாடுகள், சட்டங்கள்
- 45 -

Page 25
பருத்திபூர் அல. ஆயிரவாதம் கூடக் கேலிக்குரியதாகத் தென்படும். எந்த விதிமுறை களையும், கட்டுப்பாட்டுச் சட்டங்களையும் பணம் படைத்த வன் தனக்குச் சாதகமாக்குகின்றான். அல்லது அந்த விதி களையே வளைத்தும் உடைத்தும் விடுகின்றான்.
கஷ்டப்பட்டவன், நொந்தவன்,வசதிவாய்ப்புக்களை இழந்து நின்று பலம் கொண்டவனிடம் கேட்டே சுவாசிக்க வேண்டியிருக்கின்றது. சுவாசமே, சுமையாகிவிடும் சோகம்
நேரிய வழி செல்பவர்களுக்கு சுய கட்டுப்பாடுகள், ஒழுக்க நெறி பற்றிப் போதனை செய்யத் தேவையில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக சாத்தான்கள் மொத்த வேதங்களையும் குத்தகைக்கு எடுத்தாற் போலப் பேசித் தீர்க்கின்றன.
வாழ்ந்து காட்டுவதே "வாழ்க்கை” சும்மா கேட்பதும், உபதேசம் செய்வதுமல்ல. இன்று உபதேசம் செய்பவர்கள் தொகைதான் கூடிவிட்டது. கேட்பதற்கு எத்தனை பேர்? பலரும் கடவுள்களாக வருவதற்கும் உபதேசம் செய்வ தற்கும்தான் ஆசைப்படுகின்றார்கள் உண்மையான ஞானிகளைத் தேடப் பிரியப்படுபவர்கள் எத்தனை பேர் உளரோ? அறிமின்
எல்லையற்ற பரம்பொருளை ஒரு எல்லைக்குள்
வைத்து அதைக் கைப்பற்றி விட்டதாகச் சொல்லிச் சனங்
களை நம்ப வைக்கின்றனர். எல்லோரிடமும், உறைந்துள்ள - 46 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
இறைவனை, தங்களுக்கு மட்டுமே சொந்தம் கொண்டா டுவது என்ன நியாயம், ஜயனே!.அறிவை தேடுவதற்காக நிறையப் படித்தும் மனதை மட்டும் குறைவாக வைத்திருந்தால் கட்டுப்பாடான நெறிமுறைகளை எப்படி உருவாக்க முடியும்?
பலகோடி மாந்தர்க்கும் பல கோடி மனங்கள், அதில் கோடானுகோடி எண்ணங்கள்.இவைகள் எல்லாமே பொதுவான நல்ல பாதையில் சீராகச் செல்லவேண்டி யுள்ளது. சற்றுத் தடுமாறிய பாதையில்சென்றாலும்அவரவர் வாழ்க்கை கேள்விக்குரியதாகிவிடும். எறும்புகளை, தேனீக்களைப் பாருங்கள்! அவைகளின் கூட்டு வாழ்க்கை முறை எமக்கெல்லாம், "கட்டமைப்பு" என்றால் என்ன என்று கற்றுத் தருகின்றது. ஒன்றாக இணைந்து, ஒன்றாக உழைத்து வாழுகின்றன. அவைகளுக்கு என்று ஒரு கட்டமைப்பு உண்டு.
ஒரு குறிப்பிட்ட எறும்பு இனம் நேரான பாதையில் இரை தேடிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு எறும்பு, தமது பாதையில் இருந்து விலகினால் அதன் பாதையைக் கண்காணிக்கும் எறும்பு அதன் தலையை வெட்டியும் விடுமாம். இப்படி ஒரு தகவலை நான் ஒரு சஞ்சிகையில் படித்தேன்.
தேனீக்களின் வாழ்க்கை முறைகள் மனிதனை வியப் பூட்டுவதாக இருக்கும். அவைகள் இருப்பிடம் அமைத்த
விதம், அவைகளின் கூடுகளில் வெப்ப, தப்ப நிலைகளைப் - 47 -

Page 26
பருத்திபூர் அல. ஆயிரவருகிறழ் பேண தங்கள் இறகுகளாலேயே விசிறியடித்து சுகமாக வாழ்வதற்கான வழிமுறைகளை செய்கின்ற பாங்கு. அப்பப்பா.சொல்லிட முடியாத வியப்பு.என்னே! இறைவனின் அற்புதக் கைவண்ணங்கள்!
இந்தச்சின்னஉயிரினங்களின் கட்டுப்பாடான, வாழ்வு முறை இயற்கையோடு இணைந்தது. ஆனால் மனிதனோ, பல்வேறு வசதிகளை, வாய்ப்புக்களைத் தன் பகுத்தறிவு, ஆய்ந்தறியும் சிந்தனையால் வளர்த்தும் கூட தான் கட்டுப்பாடு அற்ற விதத்தில் வாழ்வதே பெரும் கெளரவம் எனக்கருதுகின்றான். அவன் எண்ணுவது ஒரு தான் தோன்றித்தனமானது என்பதை உணர்வதேயில்லை. "சுதந்திரம்” என்பது தான் தோன்றித்தனமான, தன்னிச்சை யான சுய நலத்துடனானதும் அல்ல.
காலங்கள் எப்படித்தான் கடிதெனக் கரைந்தாலும் மனித பண்புகள் அதை நெறிப்படுத்தும். கட்டுப்பாடுகள் அழியாமல் பாதுகாப்பதே மானுடதர்மமும் ஆகும். கட்டுப்பாடுகள் எமக்கு முட்டுக்கட்டைகள் அல்ல.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
03.07.2008
- 48 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
சிந்தனையும்,செயலும்
செயல்களற்ற சிந்தனைகளால் ஏதுபயன்? எத்தரத்தாரினதும், நற்சிந்தனைகளை ஏற்றுக் கொள்வோம். சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியினாலேயே இன்று அவனி அற்புதமாக அவதார மெடுத்துள்ளது. சிந்தனையின் வெற்றி, துணிச்சல் மிக்க செயல்பாடுகளில் தங்கியுள்ளது. புலன்கள் வசமானவர்கள், சிந்தனைகளைச் சிதறவிடுகின்றனர். அறிவை பூட்டி வைக்காது அதனை அனைவர்க்கும் ஊட்டுவதே சிந்தனையாளரின் பணி மன ஒடுக்கம், முயற்சி ஆகியன சிந்தனையும், செயலையும் நயம் படவைக்கும்.
சிந்தனை மாந்தர்க்குச் சொந்தமானது. சிந்திக்கத் தெரியாதவன் மந்தபுத்தியுடன் வாழ்க்கையில் பெறற்கரிய னவற்றை இழப்பதுடன் தன்னைத் தன் ஆன்மாவை அது இருந்தும் அது இல்லாத நிலைக்கு உட்படுத்து கின்றவனாவான்.
- 49

Page 27
பருத்திபூர் அல. ஆயிரவநாதன்
அறிவோடு இணைந்துவரும் சிந்தனை வளர்ச்சிகள் மானுடவளர்ச்சியையும் இயல்பான,நேரிய ஒழுக்கத்தி னையும் வலியுறுத்துவதுடன் செயல்திறன்மிக்க, பூமியின் புதல்வர்களாகவும் மாற்றுகின்றது.
செயல்கள் அற்ற சிந்தனையால் ஏது பயன்? நல்ல சிந்தனைகளைப் பெற்றுக்கொள்பவன் அதை மற்றவர்க்குப் போய்ச் சேருமாறு செய்ய வேண்டும்.எக்கணமும் திரிபு அற்ற நல் எண்ணங்களுடன் வாழுபவனிடம் இருந்து புறப்படும் வார்த்தைகள்,ஆலோசனைகள் தனக்காக என்றில்லாமலும் தன்னைச் சார்ந்தோருக்கு மட்டுமின்றி பொதுவான தெளிந்த வெளிப்பாடாகவே அமைந்து நிற்கும்.
வயதில் குறைந்தவர்களிடம் இருந்தும் சொல்ல ப்படும் நல்ல கூற்றுக்களை நாம் செவிமடுப்போமாக! ஒருவர் எத்தரத்தினராயினும் கூட அவர்கள்அவர்களின் எண்ணங் களின் புனிதத்தன்மை வெளியுலகில் தகுதி உயர்ந்தவர் களாகக் கருதப்படுபவர்களிலும் பார்க்கக் குறைந்ததாகக் கருதிவிடமுடியாது.
உபதேசிக்கும் ஒருவர் வாழ்க்கையிலும் பிறர்க்கு வாழ்ந்து காட்ட வேண்டியவராகின்றார்.
சுதந்திரம், மனித உரிமைகள் பற்றி நிரம்ப மேடை யில் பேசுவார்கள். ஆனால் சொந்த வாழ்க்கையில் வீட்டில், மனைவி, பிள்ளைகளைப் பேசுவதற்கே அனுமதிக்க
- 50 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதினர் சாதனை செய்! மாட்டார்கள். இன்னும் சிலர் வெளியில் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாக நல்ல கருத்துக்களைச் சொல்லி மக்களை விழிப்பூட்டுபவராக இருப்பார்கள். ஆனால் அவரது இல்லத்தில் மனைவி, மக்களால் வேண்டப்படாத நபராக அலட்சியப்படுத்தப்படும் அப்பாவியாக வாழ்ந்து கொண்டிருப்பார். வெறும் கற்பனைகள், நம்பிக்கையற்ற எண்ணங்களுடன் வாழ்பவர்கள் செயலளவிலும் துணிச்ச லின்றி வாழ்ந்தால் எந்தப் பயன்களையும் பெற்று விட முடியாது தங்கள் அறிவு இருந்தும் துணிச்சலுடன் வாழாது விட்டால் செயலாற்றல் திறன், கெளரவம், புகழ் அடைந்திடவும் முடியவே முடியாது.
"பெரிய மலை" என்று ஒரு சமூகத்தினை நாம் எடுத்துக் கொண்டால் அதில் உள்ள ஒரு பாறை ஒருவனின் வாழ்க்கையாகும். தனது சீரிய சிந்தனை எனும் கருவி மூலம், பாறையைச் செதுக்கினால் சிறந்த அழகிய சிற்பம் உருவாகும். வெறும் பாறை சிற்பமாக உருவாகுவது மனித சிந்தனை வெளிப்பாடு மூலமே துலங்குகின்றது.
செயலில் ஆர்வமும் திருப்தியும் உண்டானால் இந்தச் சிற்பம் உயிர் பெற்று எழுந்து செயற்கரிய செயல்களைச் செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் நாம் எந்த ஒரு சிறு விஷயத்தில் ஈடுபடும் போதும் எங்கள் கவனம் முழுமையான மன ஒடுக்கத்துடன் செய்தால்தான், அது பூரணமாகி எம்முள்ளே ஆனந்தத்தை உருவாக்கின்றது.
- 51 -

Page 28
பருத்தியூர் அல. ஆயிரவநாதன்
அறுகம்புல் தடக்கியே பெரிய யானையும் விழுந்து விடலாம் என்பார்கள். செயலின் பரிணாமம் சிறியதாக இருந்தாலும் எங்கள் கவனக் குறைவு எம்மைக் கவிழ்த்து விடலாம். ஒரு திறமை மிகு பொறியியலாளர் ஒரு துவிச்சக்கர வண்டியின் சின்ன திருகு ஆணியைப் பூட்டத் தெரியாதவராக இருப்பது வெட்கப்படத்தக்க விஷயம். வெறுமனே படித்து என்ன பயன்? எந்தச் செய்முறையிலும் ஈடுபடத் தெரியாமல் இருப்பதால் அவர்கள் இலகுவில் ஏமாற்றப்படக் கூடியவராக இருப்பதுடன் மற்றவர்களால் கேலிக்குட்படுத்துவராகவும் மாறிவிடுவார்கள்.
மிக ஆழமான தன்னம்பிக்கைதான் மனித சிந்தனை. ஆற்றலை வளப்படுத்துகின்றது. ஆரம்பத்திலேயே மனம் ஒடிந்து விட்டால் அடுத்து என்ன செய்வது என்கின்ற நோக்கத்தை எட்ட மனம் துணிந்து விடுமா?
எந்த ஒரு செயலையும் செய்யாத ஒருவன் நான் ஒரு தவறும் செய்வதில்லை என்று மார்தட்டமுடியாது. காரியங்கள் பல செய்யும் துணிச்சலுடன் இயங்குபவன், வெற்றிகளைக் குவிக்கும் போது சில தவறுகளும் உட்புகுந்துவிடுகின்றது. இவை இயல்பானது. தவறு ஏற்பட்டுவிடுமே என்று எண்ணிச் சும்மா இருப்பதுபோல் பயந்த நிலை வேறு என்ன ஐயா, உண்டு சொல்லுங்கள்? நன்றாகப் படிக்க வேண்டும், மற்றவன் போல் நல்ல வேலை தேடவேண்டும். ஏன் நம்மால் மற்றவர்கள் போல் வாழ முடியாது என்று எண்ணுதலை விடுத்து தமது கல்வி
- 52.

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
முயற்சியையும், உழைக்கும் ஆர்வத்தையும் மேற்கொள்ள மல் விட்டால் அதுவும் ஒரு கோழைத்தனமானதும், தன்னையே ஏமாற்றும் ஏய்த்தல் நடவடிக்கைதான். உணர்வோம்.
தன்னைத்தான் பலவீனப்படுத்துதலும், ஏமாற்று தலுடன் வாழ்வதுபோல் பாவகரமான வேலை வேறு எதுவுமே கிடையாது. உனக்கு வேண்டியதை நீயே உண்டாக்கு
நம்பகத்தன்மையுடன் வாழ்வது நம்பி வாழ்வது எங்கள் தூயசிந்தனையின் வெளிப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட தாகும். நல்ல சிந்தனையுடன் வாழுபவன் தீய சக்திகளை யும் எரிப்பவனாகின்றான். என்றும் உயிர்ப்புடன் எழுபவனு மாவான்.
நாம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மற்றவர்களை நம்பாமல் வாழ்ந்து விடமுடியுமா? எப்படியும் நாம் ஒருவர்க் கொருவரை நம்பித்தானே வாழ வேண்டும்? அங்காடிகளில் சாமான்களை வாங்குகின்றோம்.பொருட்களில் கலப்படம் செய்திருக்கப்பட்டிருக்கும். நல்ல பொருட்களும் விற்பனைக்காக விடப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாமே கலப்படமானது எனச் சொல்லி அவைகள் ஒன்றையுமே வாங்காது விட்டுவிடலாமா? பார்த்து வாங்க வேண்டியதை விடுத்து வாங்காமல் இருக்க முடியுமா?
- 53 -

Page 29
பருத்திபூர் அல. ஆயிரவருதல்
விமானத்தில் ஏறினால் விமானம் செயல் இழந்து மோதிவிடும் என்று எண்ணிப் பயணம் செய்யாது விட முடியுமா? மனிதனை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும் எந்த நேரத்திலும் சந்தேகமுடன் வாழ்பவர் களால் சந்தோஷம் இழக்கப்படும்.அத்துடன் இத்தகையவர் களால் சிந்தித்துச் செயல்களில் ஈடுபட மனம் ஒப்புதல் அளிக்கப்படுவதுமில்லை. இவர்களில் மனம் விடுதலை யடைவதுமில்லை.
அநாவசியமான சந்தேகங்களே மனத்தளர்ச்சி, தாழ்வுச்சிக்கலுக்குள் மனிதர்களை உட்படுத்தி விடுகின்றது. முடிந்த மட்டும். ஒரு குறிக்கோளுடனான சிந்தனையை ஒன்றுகுவித்து வலுமிக்கதாக்கினால் வீண் சந்தேக உணர்வுகள் செயல் இழந்து கழன்று விட வாய்ப்புமுண்டு.
இன்று மகிழ்ச்சியை நாமே மனக் கூண்டில் அடைத்துவிட முனைகின்றோம். மகிழ்ச்சி என்பதே, பரந்த வியாபகமான இனிய உணர்வுதான். இது சுருங்கி, அமிழ்ந்து, நொந்து, தொய்ந்து விடுவதுமில்லை. வருகின்ற மகிழ்வு கூடவே புதிதான, மனதுக்கு இதமூட்டும் இனிய நண்பர்களைச் சேர்ப்பதுபோல் மேலதிக இனிய உணர்வுகளையும் அழைத்துவரும்.
தனித்திருந்து சிந்தனையுட் கவரப்படுவோர் தம்முள்
களிப்பெய்துகின்றார்கள். சிந்தனைவசப்படுபவன்,தன்னை
மறந்தாலும் கூடப் புதுப்புது விஷயங்களைத் தன்னுள் - 54 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! எடுத்துக் கொள்கின்றான். என் தரத்து திறமைசாலிகளும், சிந்தனை முதிர்ச்சியின்றி தன்னை வளப்படுத்தி விட முடியுமா?சிந்தனைதான் மனிதனை முழுமையாக்கின்றது. அடுத்தவன் சிந்தனையை மட்டும் நம்பி வாழக்கூடாது. அடுத்தவர் சொல்வது நன்றாக இருந்தால் கேட்டேயாக வேண்டும். ஆயினும் சொல்வதைப் புரியும் ஆற்றல்களை நாம் வளர்க்க வேண்டுமல்லவா? கேட்கும் ஆவல்கள் எங்கள் சிந்தனை ஆற்றல்களை வளப்படுத் துகின்றது. நன்றாகச் சிந்திப்பவனால் மட்டும்தான் சிறப்பாகச் செறிவாகப் பேசவும் முடியும். இன்று பலர் சிந்தனைக்கு முன்னுரிமை கொடுக் காமல் கண்டபடி பேசுகின்றார்கள். செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.
வெறும் திரையில் தோன்றும் போலியான சமாச் சாரங்களை நம்புகின்றார்கள். கண்டபடி பேசும் கொச்சை வார்த்தைகளை மாமந்திரம் போலப் பல தடவைகள் உச்சரிக்கின்றார்கள். முன்பிருந்த முனிவர்கள், தபசிகள், வாழ்நாள் பூரா உச்சரிக்கும் மந்திர உச்சாடனத்தைவிட திரைப்பட நடிகர் கூறும் பேச்சுக்களே கேட்டற்றகரிய பெரும் கொடைபோல் அந்தச் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் திரிகின்றார்கள்.
இதைவிட மோசமானது உலகை ஆண்ட மாவீரர்
களை அழைப்பது போல் நடிகர்களைப் பொய்யாக
வாயாலே முடிசூட்டிக்கொள்கின்றார்கள். ஒருவரது
திறமைகளைப் புகழ வேண்டிய இடத்தில் புகழவேண்டும் - 55 -

Page 30
பருத்திபூர் அல. ஆயிரவநாதன் தப்பேயில்லை. அதற்காக, தளபதி, மாவீரன், புரட்சியாளன் என்றெல்லாம் நடிகர்களைப் பற்றிச்சொல்கின்றார்கள். இந்த நடிகர்கள் எல்லாம் எந்த நாட்டை, கோட்டை கொத்த ளங்ளைப் பிடித்தார்கள்? எந்த நாட்டின் தளபதியாக, மாவீரர்களாக இருந்தார்கள்? புரியவில்லை. எமக்குச் சுத்தமாகவே புரியவில்லை.
பெற்ற தாயை மாலையிட்டு வணங்காதவர்கள் வீட்டில் கடவுள் படத்தினை வைக்காமல் நடிக, நடிகைகளின் படத்தை வைத்து வணங்குகின்றார்கள்.பிறந்த நாள் கொண்டாட்டங்களை இவர்களுக்கு நடாத்துவதுடன், நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும் நாட்களில் பெரிய விழா எடுத்து, இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்த்தி வைக்கின்றார்கள். நடிகர்களைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்து வைத்து இருக்கின்றவர்கள் தாய் தகப்பன், பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாள் எது வென்றே தெரியாமலும் இருக்கின்றார்கள். மேலும் உன்னதமான மகான்கள், தலைவர்கள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறே தெரியாமல் பலர் வாழுகின்றார்கள்.
ஆனால் இன்று இளைய தலைமுறையினர் மட்டு
மல்ல, சகல தரத்தைச் சேர்ந்தவர்கள் கூடத் தேவையில்
லாத விஷயங்களுக்கு, முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.
திரைப்படம் பார்ப்பது, ரசிப்பது, இனிமையான அனுபவம்
தான். அதனூடு பல விடயங்க ளையும், நாம் தெரிந்து
கொண்டு தான் இருக்கின்றோம். நல்ல விஷயங்களை — 56 —

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! எங்கிருந்தாலும் புகுந்து ஓடித் தேடிக் கண்டுபிடித்துக் கற்றோராக வேண்டும். தெரிய வேண்டியவற்றைத் தேடாமலும், தகாதவற்றை மட்டும்நோக்குவதும், கிரகிப் பதுமே தவறான செய்கை யுமாகும்.தேனீர் தயாரிக்கும் போது நல்ல சுவையான தேனீரை வெளியேற்றி விட்டுச் சக்கையை மட்டும் தனக்காக ஏற்றுக் கொள்ளும் வடிகட்டியாக இருப்பதுபோல் மூடத்தனம் வேறில்லை.
பகுத்தறிவு என்பதுகூட ஒரு கூர்மையான வாள் போலத்தான். அறிவைத் தீட்டி அல்லாதவைகளை நீக்கி மனித மூளையைத் துலங்கச் செய்வதால் சிந்தனையும் அதன் பயனாக செயல்களைச் செய்யும் துணிச்சலையும் பகுத்தறிவு எமக்குப் புலனாக்குகின்றது.
நல்ல சிந்தனைத் தெளிவுடையோன் எவரையும் பகைக்க மாட்டான், மனம் நோகப் பேசமாட்டான். எதற்கும் நாணல் புல் போல் வளைந்து கொடுக்கின்ற இயல்பின னாய் வாழ்ந்து காட்டுவான். பெரிய, பெரிய மரங்கள்கூடச் சிறு புயல் அடித்தால் சாய்ந்துவிடும். நாணற் புல் எந்தப் புயலுக்கும் வீழ்ந்து மாயாது. காற்றின் திசைக்கு ஏற்றாற் போல சாய்ந்து, சாய்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உடைந்து தெறித்து அழிவதை விட வளைந்து இயல்புக் கேற்றவாறு வாழ்ந்து காட்டுவது நல்லது அல்லவா? இது கோழைத்தனத்திற்கான வழியல்ல. எதிர்ப்பையும் மீறி நிற்கும் வாழ்க்கைக்கான வழி.
- 57 -

Page 31
பருத்திபூர் அல. ஆயிரவநாதன்
ஆராயாது கண்டபடிமோதி அழிவதைவிட இட மறிந்து, தன்னை வளப்படுத்தி, மேல் நோக்கி வாழுவதே விவேகமாகும். இப்படிவளர்ந்தபின் அவர்களை அழித்துவிட எவராலும் முடியாத வீரராகிவிடுவர்.
இசைந்து வாழ்பவர்கள் எவர்களையும், கவர்ந்தவர்க ளாகிவிடுவதை நீங்கள் உங்கள் அனுபவங்கள் மூலம் கண்டிருப்பீர்கள்.
சிந்தனை எங்களை விவேகமுள்ளவர்களாகின்றது. சிந்தனையாளர்கள் அதிகம் பேசுவதுமில்லை. பேசுகின்ற வேளையில் புதிதான சிந்தனை விதைகளை தங்கள் எண்ண ங்களுடாக எமக்கும் விதைத்துவிடுகின்றார்கள்.தேவையற்ற விஷயங்களில் நாம் புலன்களைச் செலுத்துவதால் சிந்தனை ஆற்றல் செயல்கள் எல்லாமே ஸ்தம்பிக்கும் நிலைக்கும் வந்துவிட நேரிடும். எனவே, தெளிவான, உண்மையான நோக்கு எது என நாம் கண்டறிந்து அதன் வழி பின் தொடருவோமாக!
நாம் யாருடைய வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக் கூடாது. அதுபோல் எமக்கு எவருமே தடையாக வர அனுமதிக்கலாகாது. அத்துடன் எமக்கு நாமே தடையா கின்ற அவலத்திற்கு எம்மை ஆட்படுத்தவும் கூடாது. எமக்குள் இருக்கும் மாயத் தடைகளான சோம்பல், கவலை கள், போன்றவைகளுடன் கோபம், பொறாமை, ஆற்றாமை போன்ற குணங்களையும் நல் அறிவுடனான “சிந்தனை வளம்" நீக்கமற நீக்கியும் விடுகின்றது.
- 58 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதினர் சாதனை செய்!
செயலற்ற சிந்தனையால் நாம் பயன் கண்டு விட முடியாது. எங்கள் அறிவு எந்த ஒரு நேரத்திலும் மற்ற வனுக்கு உதவிட தயார் நிலையில் இருக்க வேண்டும். சிந்தனை மூலம் உணர்ந்து செய்யும் செயல்கள் நமக்கும் எவர்க்கும் உதவுதலையே என்றும் செய்து கொண்டி ருக்கும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
25.05.2008
- 59 -

Page 32
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
சந்தர்ப்பங்கள்
"நீ எந்நேரமும் விழிப்புடன் இரு" என்பதையே சந்தர்ப்பங்கள் எமக்கு உணர்த்துகின்றது. சோம்பித் திரிபவனுக்கு வலிந்து வழங்கப்படும் செல்வம் கை நழுவிப்போய்விடும். உரிய காலத்தில் உடன் கருமமாற்றுவதும் ஓர் அரிய சந்தர்ப்பங்கள் தான். நல்ல காலத்தைக் கோட்டைவிட்டு அது மீண்டும் வருமான எதிர்பார்த்தலைவிட தொடர்ந்து கருமமாற்றி வந்தால் எல்லாமே கிடைத்த வல்லவர்களாவோம். எமக்கு வருகின்ற நல்ல சந்தர்ப்பங்கள் மூலம் பிறர்க்கும் பயன்கிட்ட தயக்கமின்றி உதவிகள் வழங்குக!
நல்ல சந்தர்ப்பங்களை இழப்பது சிறப்பான வாழ்க்
கையையே நழுவவிடுவது போலாகும். நல்ல சந்தர்ப்
பங்களை இறுகக் கைப்பற்றித் தொடர்ந்து செயல்படுவதே எமக்குரிய திறமையும், புத்திசாலித்தனமானதுமாகும்.
சந்தர்ப்பங்கள் எல்லாமே சொல்லிக்கொண்டே
- 60 -
 
 
 
 
 
 
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
வருவதுமில்லை. எதிர்பாராத நிகழ்வுகளால் வருகின்ற வேளையில் கைப்பற்றிக்கொள்வதானது, "நீ எந்நேரமும் விழிப்புடனேயே இரு” எனத் தெரியப்படுத்துவதுமாகும்.
நல்ல வரவுகள் தேடிவரும் போது விழிகளை அயர விடுபவர்கள் ஈற்றில் நெடுந் துயில் கொள்ளும் சோம்பல் நிலைக்கே ஆளாக நேரிடும். அத்துடன், கிடைக்கின்ற "சந்தர்ப்பங்கள்", அடுத்து கிடைக்கின்ற இலாபகரமான வாழ்க்கைக்கு பெறுமதிமிக்க முதலீடுமாகும்.
சோம்பித்திரிபவனுக்கு வலியக்கிடைக்கும் செல்வ ங்களும் கைநழுவிப் போய்விடும். இவர்கள் தலையில் பொன்மாரி பொழிந்தாலும் இவைகளைப் பொறுக்கி எடுக்க வேறு ஆட்களைத்தான் தேடுவார்கள்.ஒரு அரசாங்கத்தில் புதிதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காகப் பரீட்சைக்கு ஒருவர் விண்ணப்பிக்கின்றார். இயல்பாகவே திறமையுள்ள அவர் பரீட்சை நாளில் ஒரு கேளிக்கை விழா ஒன்றில் கலந்து கொள்ள விருப்பப்பட்டு"அடுத்த தடவை இந்தப்பரீட்சையை எடுப்போம். இப்போது, என்ன வந்துவிட்டது. பரீட்சைக்குத் தோற்றி பரீட்சையில் சித்தியடைந்தால் வேலை கொடுக்கப்
தன்னுள் கேட்டு அந்தப் பரீட்சைக்குத் தோற்றாமலேயே விட்டுவிட்டார்.
பரீட்சை முடிந்ததும் பரீட்சை வினாத்தாள்களைப் பார்த்தவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. இவ்வளவு - 61 -

Page 33
பருத்திபூர் அல. ஆயிரவநாதன் சுலபமாகவா கேள்விகளைக் கேட்பது? அடடா. நான்
இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தால் நிச்சயம் நான் சித்தியடைந்திருப்பேனே. என்னே. என் மதியினம். எனத் தம்மைத்தாமே நொந்து கொள்கின்றார். பரீட்சைப் பெறுபேறுகளும் வெளிவந்துவிட்டன. இதன்பின்னர் அவரது நண்பர்களில் பெரும்பாலானோர் சித்தியடைந்து அதற்குரிய தொழிலையும் தேடிக் கொண்டனர். அவரிலும் பார்க்கக் குறைந்த கல்வித் திறனுள்ளவர்கள்கூடப் பரீட்சையில் சித்திபெற்று விட்டனர். ஆனால் இவரோ கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை இழந்ததோடு இன்னமும் தொழில்தேடி அலைந்து கொண்டிருக்கின்றார். எல்லா நேரங்களிலும் சந்தர்ப்பங்கள் வருவதுமில்லை.
மிகுந்த பெருமுயற்சி செய்தும் கிட்டாத விஷயங்கள் கூட எதிர்பாராத நல்ல சந்தர்ப்பங்களால் எளிதில் ஒப்பேறி விடுகின்றது. வலிந்துவரும் அனுகூலங்களை இறைவன் தந்த பேறாகக்கருதி ஏற்பதுடன் தொடர்ந்து முயற்சி செய்து முன்னேறுவதே சிறப்பு உயர் அதிகாரி ஒருவரைக் கட்டாயமாகத் தலைமை அலுவலகத்தில் சந்திக்க வேண்டியுள்ளது. போக்குவரத்துச் செலவுகள் ஒருபுறம் அவரைக்காண்பதற்கான நேரங்களையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த வேளையில் அந்த அதிகாரியோ சந்திக்க
வேண்டிய நபரின் ஊருக்கு வந்து விடுகின்றார். அவர்
உடனே என்ன செய்ய வேண்டும்? நாளைக்குச் சென்றும்
- 62 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
பார்க்கலாமே என்று எண்ணிச் சும்மா இருந்தால் காரிய மாகுமா? வலிய வந்து கிடைத்த அனுகூலத்தைக் கருதாது சும்மா பாராமுகமாக இருந்தால் என்னாவது? சிலசமயம் அந்த அதிகாரியே உடன் தனது தலைமை அலுவலகத்திற் குத் திரும்பிவிடலாம் அல்லவா? சுமுகமாக, சாவகாசமாக, நேரில் உடன் சந்தித்தால் ஏற்படும் நட்புறவான சந்திப்பு எவ்வளவு மேலானது?
நாளைக்கு, நாளைக்கு என ஒத்திவைக்கும் எண்ணம் கொண்டோரால் எந்தக் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது.நல்ல"சந்தர்ப்பங்கள்"கூடவே நல்ல அதிஷ்டங்களையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். எனினும் நல்ல வேளைவரும் என்று காத்திருந்து, காத்திருந்தே, இருக்கின்ற காலத்தை வீணாக்குவது பேதமை. சிலர் எங்கள் ஜாதகம் இப்படிச் சொல்கின்றது, இன்னும் கொஞ்சக்காலம் சென்றால்தான் எதுவுமே சரியாக நடைபெறும் என்று சொல்லி எதுவுமே செய்யாது விட்டு விடுகின்றார்கள். தேவையற்ற பயம், மூடநம்பிக்கைகளால் வலிந்து வரும் நற்பயன்களை உதாசீனம் செய்யலாமா?
மேலும் காலபலன்கள் ஒருபோதுமே மனிதரை வாழ்க்கைக்குரிய காரியங்களைச் செய்யாது முடங்காதே என்றும் சொல்வதுமில்லை. நடைமுறைவாழ்வில் யதார்த்தமாக எழக்கூடிய முட்டுக் கட்டைகளை எல்லாமே, எமது விதி என்றும் சொல்லிக் காலவிரயம் செய்யலாமோ?
- 63 -

Page 34
பருத்திபூர் பல. ஆயிற்றருதம்
"காலத்தைக் கைவிட்டால் ஞாலம் எமைப்பார்த்து
நகைக்கும்"
சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டவனை நல்ல தேட்டங்கள் கேட்டுக்கொண்டு வரவும் மாட்டாது. விடாமுயற்சி செய்யாதவனை ஆண்டவன் எட்டிப் பார்க்க மாட்டான். சிருஷ்டித்தவன் ஆணை என்பதே செயல் வீரனாக, எடுக்க வேண்டிய நற்கொடுப்பனவுகளை எனது ஆசிகளுடன் இந்த நொடியிலேயே பெற்றுக்கொள் என்பது
தான,
மேலும் தன்னை நம்பி முழுமையான சிரத்தையுடன் உழைப்பவன் எதுவுமே செய்யாமல் கொடுக்கப்படும் தவறான கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளவும் பிரியப்படமாட்டான். நல்லசந்தர்ப்பங்கள் என்பது, தவறான முறையில் கிடைக்கும் அனுகூலங்கள் அல்லவேயல்ல. ஒருவர்க்குக் கிடைப்பதைத் தடுப்பதே கொடுமை!
ஒருவனைக் கவிழ்ப்பதற்காகச் சந்தர்ப்பங்களை எதிர்நோக்குவதுபோலக் கேவலமானது வேறில்லை. ஒருவன் நலிந்திருந்த காலத்தில் நகைத்துக் கேவலப்படுத்தி வாழ்வதும் ஒரு வாழ்வா? பனையால் விழுந்தவரை மாடு ஏறி மிதித்தாற்போல் ஒருவன் துன்பத்தின் மேல் துவஞம் போது மேலும் இம்சிப்பது அடுக்குமா?
இயல்பாகவே மனிதன் சின்ன இடர்கள் வந்தாலும் ஆடிப்போகின்றான். இந்த வேளையில் எதிரிகள் புகுந்து
- 64

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
அட்டகாசம் செய்வது, அவர்களின் கேவலமான பலவீன நிலைதான். எல்லோருக்குமே எதுவுமே நடக்கலாம். துன்பங்களைப் பிறர்க்கு விழைவிப்போர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும். துன்பப்படுவோர் நிலை சிலசமயம் தமக்கும் ஏன் ஏற்பட்டுவிடாது? என்று ஒருகணம் நோக்கவேண்டும் அல்லவா? துன்பம் ஒருவர்க்கு எய்திட்டால், அவர்களுக்கு உதவிகளை நல்குவதனால் அவர்களிடையே அன்புதான் பரிணமித்துவிடும்.
சாதாரணமான மனிதர்களிடையே உதவிகளை வழங்கினால் ஏற்படும் அன்புணர்வு, சந்தோஷங்களுடன், எமக்கு எதிரானவர்கள் என்று கருதப்படுவோர்க்கும், அவர்கள் வேதனை உற்ற வேளையில் உடன் பகை மறந்து உதவிகளை நல்கினால் பகை ஒடுங்கும். அன்புணர்வு நெடிதென ஓங்கும். எங்கே ஒருவன் துயருறுகின்றானோ அங்கே உடன்சென்று கரம் கொடுப்பதே சிரமேற்கொள் ளத்தக்க கடமையாகும்.
எனவே, நல்லதைச் செய்ய சந்தர்ப்பங்களைத் தேடு நன்நெஞ்சே! இந்த உலகிற்கும், உன்னுடன் இணைந்த வேறு எவர்க்குமாயினும், மனம், சொல், செயல்களால், அதி உச்சசேவை செய்தல் உனக்கு இறைவன் கொடுத்த"மா" வரம் ஆகும். சிலருக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கிடைக்கரிய ஒரு அனுகூலம் ஒன்று கிடைத்து விட்டால் அதைப் பார்த்த மற்றவர்கள் எந்த வித லஜ்ஜையும் இன்றி அவைகளைத் தங்களுக்கு வழங்கிவிடுமாறு கேட்டுக்
- 65 -

Page 35
பருத்திபூர் அல. ஆயிற்றதாரர் கொள்வார்கள். இது கூட பிச்சை கேட்பதற்கு ஒப்பானதே. இதைவிட மோசமானது, ஒருவருக்கு ஏதாவது சந்தர்ப்ப வசத்தால் செல்வம் வந்து சேர்ந்துவிட்டால் அது பற்றிப் பெரிதும் பொறாமைப்பட்டும் கொள்வார்கள்.
யார், யாருக்கு எது, எது கிடைத்திடினும் பிறர் அதனுள் புகுந்து நியாயம் கேட்பதும், பங்குகேட்பதும் பொறாமைப்படுவதும், கீழ்த்தரமான பலவீன நிலை. மேலும் இந்தப் பொறாமையினால் சதா தமக்குள் தாங்களே மனம் குமைந்து இருக்கின்ற நிம்மதியை அழிப்பதுபோலாகும்.
சந்தர்ப்பங்கள் இறைவனால் எமக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புக்களேதான்.இவைகளை மட்டும் தொடர்ந்தும் நம்புவதும்,சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து அவைகளைப் பெறுவதற்காகப் பிறரை ஏமாற்றுவதும், நடிப்பதும், குற்றங்களைப் புரிவதும், பாவகரமான கொடிய செயலாகும்.
மேலும், ஒருவர்க்குக் கிடைக்கும் புகழ் பதவிகளை மற்றயவர்கள் அவர்கள் எதிர்பார்த் திருந்த சந்தர்ப்பங்களில் உட்புகுந்து தட்டிப்பறித்து விடுவதுமுண்டு. மிகவும் உழைத்துப் பெற முயன்ற பதவிகளே கிடைக்காமல் போய் விடுவதுண்டு. இவை துரதிஷ்டமான நிலை தான். மரம் நிலையாய் நிற்கும். காற்று அதை அசைக்காமல் விடாது. எந்த எதிர்ப்புகளிலும் தன்னை நிலை நிறுத்தியவன் நிலை தடுமாறாது உயர்ந்தே நின்று கொள்வான்.
எமது வாழ் நாட்கள் மிக நீண்டதாக இல்லை.
- 66 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
ஆனால் எம்முன் உள்ள பணிகளோ ஏராளம். கழிக்கின்ற காலத்தைக் களிப்புடன் கழிக்க விழைகின்றோம். இந்தச் சில பொழுது வேளையில், சில விநாடித்துளிகளில், சந்தர்ப்பம் வந்து ஓரிரு தடவைகளிலேயே எம்வாழ்க்கைக் கதவை வலிந்து தட்டி எம்மை விழிப்பூட்டுகின்றது.
எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அனுகூலம் வராமல் விட்டதுமில்லை. ஆனால் சிலர் சலிப்போடு கூறுவார்கள். "எனக்கு அதிஷ்டமே இல்லை" என்பார்கள். அடுத்தவனுக்கே எல்லா நல்ல சந்தர்ப்பங்களும் குவிகின்றது என்பார்கள். எம்மைச் சந்தர்ப்பங்கள் வந்து சந்திக்காமல் விட்டால் என்ன? நாமே சந்தர்ப்பங்களைத் தேடி ஓடவேண்டியது தானே? வாய் மூடி மெளனியாக இருந்தால் காரியம் ஆகுமோ?
எதிரே தேடுவாரற்றுக் கிடக்கும் மரத்தில் தானாகக் கனி உதிரும் வரை பசியுடன் காத்திருக்க முடியுமா? ஏறிப்பிடுங்கி உண்ண வேண்டியதுதானே? ஒடிப்பழகினால் தானே, ஒட்டப்பந்தயத்தில் சேர்த்துக் கொள்வார்கள்? படித்தால்தானே, பரீட்சையில் சித்தி எய்தமுடியும்? விடைத்தாள்களைத் தந்து விட்டா பதிலை எதிர் பார்ப்பார்கள்? -
போட்டி மிகுந்த உலகில் நாம் ஓடிக் கொண்டே
யிருக்கவேண்டியதே கிடைத்தவற்றைப் பெறுவாயாக!
கிடைக்காது விட்டால் துக்கப்பட்டுத் துவண்டு விட - 67 -

Page 36
பருத்திபூர் பல. அவிழ்வருதல் வேண்டாம். ஒடு.ஓடிக் கொண்டேயிரு காலத்தின் பெறுமதி தற்கால உலகில் கூடிக்கொண்டே செல்கின்றது. மக்கட் தொகை, பொருளாதாரப் போட்டி, இயற்கை அனர்த்தம், போர் அனர்த்தங்களால், மக்கள் அழுத்தத்திற்
யுள்ளது. அடுத்த பணி கேட்காமலேயே வந்து ஒட்டிக் கொள்கின்றது. இந்த நிலையில் எமக்கான பணிகளைச் செய்யாமலே வெறும் எதிர்பார்ப்புக்களை மட்டும் நம்பியே காலத்தை ஓட்டமுடியாது. மேலும் கஷ்டப்படாமல் இருந்து கொண்டே வாழ்க்கையை வீணடிப்பவர்கள் கடவுளால் கொடுக்கின்ற வெகுமதிகளைக்கூட உராந்து பார்த்து அவை தரம் கூடியதா, குறைந்ததா எனப்பேரம் பேசுகின்றனர். சும்மா இருந்தவனுக்கு அதிர்ஷ்டலாபச் சீட்டில் இரண்டா வது பரிசாகப் பல லட்சம் அவனுக்குக் கிடைத்தாலும் கூட, "அடடா என்ன இந்தக் கடவுளின் வேலை? யாரோ ஒருவனுக்கு முதலாவது பரிசு கிடைக்கச் செய்து "விட்டானே" என்றும் புலம்பி அழுவான்.
உழைப்பினால் உண்டாகும் வலிகூட இதமானது. அது பல அனுபவங்களைச் சொல்லும், அதனால் பெறும் பெறுமதி மிக்க காசு, புது வாழ்வுப்பாதைக்கான வழிகளை எளிதாகக் காட்டி நிற்கும். சும்மா இருந்து சாப்பிட்டுவந்தால் உடல் பருத்து வளரலாம். ஆனால் நன்கு உழைத்தால் தான் உடல் அழகுடன் உள்ளமும் வலுப்பெறும். பரந்த ஆளுமையும், ஆழமும் நெஞ்சிலேற்படும்.
- 68 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
தற்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டுச் சிறைவாசம் அனுபவிப்பதற்குப் பதிலாக குற்றவாளிகள் திருந்தி வாழுவ தற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு ஒத்திவைக்கப் பட்ட சிறைத் தண்டனைகளை நீதிபதிகள் வழங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். தொடர்ந்து திருந்தி வாழாமல் அடாவடித்தனம் புரியும் பிரகிருதிகள் திருந்தமாட்டோம் என்றால் அவர்கள் கடுமையான வேறு தண்டனைகளுக்கு
களைச் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைகளில் சேர்ப்பித்து அவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்று கல்வியில் பண்பில் மேம்பட்டு வாழ நல்ல சந்தர்ப்பங்களை ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் செய்தே வருகின்றன.
ஒவ்வொரு பிரஜைகளுமே சகல உரிமைகளுடன், வாழுவதற்கான வழிவகைகள் வழங்கப்பட்டேயாக வேண்டும். இது மானுடநீதி முறைமையுமாகும்.அரச தனியார்துறைகளில் பதவியில் அமர்த்தப்பட்ட எவரேயா யினும் அவர்கள் தமது கடமைகளில் பொறுப்புடன் பண்பில் எந்தவித கறைபடியாதவாராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இதன்பொருட்டே அனைத்து ஊழியர்களுக்கும் தகுதி
காண் காலம் எனக்குறிப்பிட்ட மூன்று அல்லது அதற்கு
மேற்பட்ட வருடகால எல்லை வகுக்கப்பட்டுள்ளன.இக்கால
எல்லையில் குறிப்பிட்ட பரீட்சைகளில் தேறினால் மட்டும்
போதாது. செயல்திறன்.நன் நடத்தைகளைக் கடைப்பிடித்து س 69 است.

Page 37
பருத்திபூர் பல ஆயிரவநாதன் ஒழுக போதிய பயிற்சிகளும், நல்ல சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.
நற்பண்புடன் வாழ்ந்து காட்ட கால எல்லைகள் தேவை
கொண்ட எமது அனுபவங்கள்,எம்மால் பிறருக்கு வழங்கப்பட்ட நன்மைகள், எமக்கான நல்ல இனிமையான பெறுமதிமிக்க சந்தர்ப்பங்களே!
தினக்குரல் (ஞாயிறு)
15.06.2008
- 70 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
GYIDSIGOTLDITa, \
இருப்போமா?
புலனடக்கம், யானம், அதன் மூலம் பெறும் தவநிலை சகல மதத்திற்குமான பொதுவான உன்னத நிலை, டாம்பீக வாழ்விற்கும் தவ வாழ்க்கைக்கும் சம்பந்தமேயில்லை. இப்படி வாழ்பவர்கள் தபஸிகளுமல்ல. எதனையும் எதிர்பாராது உலகிற்காகவும், தமது ஆன்ம ஈடேற்றத்திற்காவும் வாழ்பவர் ஞானி கடமை செய்பவன் முனிவரிலும் மேலானவன். எல்லா உயிர்களையும் தம் உயிர் என நேசிப்பவனும்,கலர்க்கும் சந்தோஷங்களையே ஊட்டுபவனும் மேலான தவத்தின் அற்பு கொடுப்பனவுகளை அனுபவித்தவனாகின்றான்.
சகல உயிர்களையும் சமனாக மதித்து, எந்தவித எதிர்பார்ப்புகளுமற்ற பரோபகார சிந்தனையுடன் மனம், வாக்கு, தேகத்தினால் தீங்கு விளைவிக்காதவராய் மாறாத திட நோக்குடன் இருப்பதே தவத்தின் வடிவமாகும்.
குறித்தவொரு ஆற்றலை வளர்ப்பதற்காக மன ஒடுக்கம் அத்தியாவசியமாகின்றது. புலனடக்கத்தினைத் - 71 -

Page 38
பருத்திபூர் அல. ஆயிரவருதற் தூய சிந்தனை உண்டாக்குகின்றது. இந்தப் புலனடக்கத்தை உருவாக்கின்ற வலுமிக்க ஆற்றலை "தவம்”ஏற்படுத்த ஏதுவாகின்றது. தவக் கோலத்தில் இருந்தால் மட்டுமே, இறைவன் கடாட்சத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில்லை. சாதாரண நிலையில் உள்ள எந்த மனிதரும், தம் நல் இயல்புகள் மூலம் எல்லோரையும் போல படைத்த கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகின்றார்கள். இறைவனுக்கு எல்லோரும் சமன்.
ஆயினும் தவக்கோலத்தில் இருக்கும் அடியவர்கள் எம்மதத் தினரைச் சார்ந்தோராய் இருப்பினும் அவர்களை ஆதரித்தல் எம்போன்றோரின் தலையாய கடனாகும். மேலும், புலனடக்கம், தியானம், அதன் மூலம் பெறும் தவநிலை சகல மதத்திற்குமே பொதுவான உன்னத நிலை தான். ஆன்மீகவாதிகள், சாமான்ய மாந்தர்களை விடத் தம் மன ஒடுக்கத்திலான தவநிலையினால் மக்களைத் தம்பால் ஈர்த்து வருகின்றனர்.
ஆனால், இன்று வேண்டத்தகாத நபர்கள் தவ வேட மேற்று கோரமான, விஷமமான வேலைகளைச் செய்து பலரின் வாழ்க்கையைச் சிதைத்து வருகின்றனர். முற்றிலும் துறந்ததாகச் சொல்லிவரும் துறவிகளின் டாம்பீக வாழ்க்கை யை அறிந்தும் அவர்களுக்கு கெளரவமளித்து அவர்கள் காலில் மக்கள் வீழ்வது மேன்?
- 72 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
இடுப்பில் ஒரு துண்டுடன், நடுக்காட்டில், அமைதியா கத் தவமியற்றிவரும் சித்தர்களை இன்னமும் நாம் மலையடிவாரங்களில், உச்சிமலைகளில் காணலாம் எனச் செய்திகள் கூறுகின்றன.
ஆனால், மக்களுக்கு ஞானோபதேசம் செய்வதாகச் சொல்லும் சில சாமியார்கள் ஐந்து நட்சத்திர விடுதியிலும் பார்க்க மிக வசதியுடைய மாளிகைகளில் வாகன, விமான வசதிகளுக்குச் சொந்தக்காரர்களாகச் சுற்றி வருகின்றார்கள். இவற்றில் குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், மிகவும் அந்தஸ்துள்ள அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள் கூட இந்தச் சாமிமார்களைத் தரிசிக்கத் தவமிருக்கின்றார்கள், காசுகளை இவர்களுக்காக அள்ளி வீசுகின்றார்கள். கல்வியை, அறிவை, அந்தஸ்தை, செல்வத் தைப் மட்டுமே பெற்றால் சிலசமயங்களில் உண்மை எது, பொய்மை எதுவென்ற பேதமே புரிவதில்லையோ?
இன்று மிகவும் வேடிக்கைப் பொருளாக இருக்கின்ற ஒன்று என்னதெரியுமா?"உண்மை"தான்.அது என்று கருத வேண்டியுள்ளது.உண்மை பேசுபவர்களைக் கேலியாக நோக்குகின்றார்கள். அவர்கள் சொல்வதை எல்லோருமே நம்புகின்றார்கள் இல்லை.
ஒரு குடும்பஸ்தர் உண்மையாக வாழ்ந்து கஷ்டப்
பட்டால் அவரது மனைவி மக்கள் பிழைக்கத் தெரியாத
மனுஷர் என்று கடிந்தும் கொள்கின்றார்கள். உண்மையாகப் - 73 ܚ

Page 39
பருத்தி: 04ல. ஆயிரவநாதன்
பேசினால் வியாபாரம் செய்யமுடியுமா? கீர்த்திமிக்க அரசியல்வாதியாக முடியுமா என்றும் கேட்பவர்கள் இருக்கின்றார்கள். யாவரது சந்தோஷங்களை உண்டு பண்ணும் பொய்களைச் சொன்னால் மட்டும் கேட்டு அதையே வேதவாக்காக ஏற்றுக்கொள்கின்றார்கள். உண்மைகளைப் புட்டுவைப்பவனை அடக்கி ஒடுக்கும் விஷயத்தில் முனைப்பாக இருக்கின்றார்கள். இந்த அநியாயமான எண்ணங்கள், செயல்களால் தான் இன்று உலகம் அல்லாடுகின்றது. நல்ல ஞானிகள், உண்மை யாளர்களை நம்பாமல், வெளி வேடதாரிகளை அவர்கள் கபடம் தெரியாமல் அவர்களைச் சுற்றி வருவதனால் ஏற்படும் பலாபலன்களை பெறும் துன்ப அனுபவங்களால், உண்மை நிலையை இறுதியில் உணர்ந்தே தீருவார்கள்.
இல்லற வாழ்வின் மூலமும் நாம் இறைவனைக் காணமுடியும் என்றே எமது முன்னோர்கள் சொல்லி வந்தார்கள். மதங்கள் எதுவுமே இல்லறத்திற்கு எதிராக எதையுமே சொல்லியதுமில்லை இல்லறத்தின் மூலம் ஒருவர் உலகிற்கு ஆற்றவேண்டிய எத்தனையோ அரிய பணிகள் உண்டு. தனது குடும்பத்திற்கு மட்டுமல்ல வறியோர், உறவினர்கள் நண்பர்களுக்கு உதவுதலுடன் எல்லாவற்றிற்கும் மேலாக, துறவறத்தில் உள்ள மேன் மக்களையும் போஷிக்க வேண்டிய பெரிய பொறுப்பு இல்லறத்தானையே சார்ந்ததுமாகும்.
இவ்வுலகின், ஷேமத்திற்காகத் தம்மை வருத்தித்தவ
- 74 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
மியற்றும் துறவிகள் எதனையுமே எதிர்பார்க்காதவர்கள் என்பதனால் அவர்களைப் போலவுள்ளவர்களின் தொகை இன்று அருகிவிட்டமையை நாம் அறிவோம். தவஞான சீலர்களின் பக்குவநிலையினைச் சாமான்யமானோர் கண்டு கொள்ளவும் முடியாது. இன்றும் எம்முன்னே பல புண்ணிய ஆத்மாக்களைக் கண்டும் கூட எங்கள் அறியாமை காரணமாகப் பெரிதாகக் பொருட்படுத்திக் கொள்வது மில்லை.
இன்றுள்ள, எமது மிகப்பெரும் பலவீனம் என்பது. பல விதமான எண்ணங்களுடன் இருந்து கொண்டு அவை களைச் சீரான வழிநடத்தல்களைச் செய்யாமையேயாகும். ஒரே நேரத்தில் பல வித சுமைகளைக் காவித்திரிய எண்ணு கின்றோம். எமக்கு எல்லாமே முன்னுரிமையாகத் தேவைப் படுகின்றது. மகனுக்கு வேலை தேடவேண்டும். மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். வீட்டைத் திருத்திய மைக்க வேண்டும் போன்ற ஏக குழப்பங்கள் ஒரே நேரத்தில் வந்து குவிகின்றது. "நற்பேறுகளைப் பெறுவதே ஒரு தவப்பேறு" என்று சொல்வார்கள்.பிரச்சனைகளை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் கஷ்டங்களுடன் சீவிக்கவா பிறந்தவர்கள் என்றும் கேட்கின்றார்கள். நல்ல நிலையில் இருப்பவர்களைக் கொடுத்து வைத்தவர்கள் என்றும் சொல்கின்றார்கள்.
நாம் மிகச் சாதாரணமான வாழ்க்கையில் துன்பங் களுடன் வாழ்ந்தாலும் பரவாயில்லை. எனது ஆன்மாவிற் - 75 -

Page 40
பருத்திபூர் அல. ஆயிற்றுருதத் குத் துரோகமிழைக்காமல், பிறர் ஆன்மாவை வருத்தாமல் இருப்பதே ஒரு தவப்பேறுதான். இத்தகையோரின் துன்பங் கள் கால ஓட்டத்தில் களையப்படும் போதுதான் இந்த தவப்பேற்றின் உண்மையை உணர முடியும்.
தீயோரிடம் இணங்கி சொற்பசுகம் காண்பதைவிட நல்லவர்களுடன் இணைந்து வரும் தீயவைகளை எதிர்த்து வென்று வாழ்தலே முறையுமாகும். பத்து கெட்டவர்களுடன் கூடிக் கொட்டமடிப்பதைவிட ஓரிரு சான்றோரிடம் பழகி மெளனமாக வாழ்ந்து காட்டுதலே பேராற்றலை தவநிலை நோக்கிய நடையினை நோக்குவதாக அமையும்.
பொருட்கள் மீது, நிலம், வீடு என்கின்ற சொத்துக்கள் தான் வாழ்க்கை என்கின்ற அதீத ஆசை கொண்டவர்கள் துறவு தவநிலைக்கு உரித்தானவர்கள் அல்லர் என்று சொல்லுகின்றோம். நான், எனது என்று எண்ணும் போதே ஆசை மனிதனைத் தொற்றிக்கொள்கின்றது. உண்மையில் இந்த உலகில் வாழுகின்ற எமக்கு வசதிகளை எதிர்பார்ப் பதில் எவ்வித தவறுகளும் இல்லை. துறவு, தவநிலையை நோக்கி வாழ்கின்ற நிலையில் இருப்பதற்கு சாதாரண மனிதர்கள் தயாராவதுமில்லை. "சந்நியாசம்” என்பது, சாமான்ய மாந்தர்க்குப் பொருந்துவதுமல்ல. உண்மை யான, மனக்கட்டுப்பாட்டுடன், ஒழுக்கமுடன்,இறை அர்ப்ப ணத்துடன் துறவு நிலையில் வாழ்வது ஞானிகளுக் குரியனவாகும்.
- 76 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
சந்நியாசத்தை மேற்கொள்கின்றேன் என்று சொல்லி உலக ஆசாபாசங்கள், கேளிக்கைகளுள் மீண்டும் வர எண்ணுதல்போல சபலசிந்தை வேறில்லை. சபல புத்திக் காரர்கள் தவம் செய்ய முடியுமா? இத்தகையோர் தங்கள் சொரூபத்தை முழுமையாக மாற்றியமைக்காது விட்டால் சமூகத்தின் அசுத்தமான பிரகிருதிகளாகச் சீவிக்க வேண்டியதே!
தவ வலிமையுடையோர் தங்கள் துன்பங்களைச் சகித்துவிடுவதுடன் அதன் பொருட்டு அதுவே சிரமம் என்று மற்றவர்களுக்கான நற்காரியங்களைச் செய்யாது விட்டது மில்லை. உலகில் தோன்றி மறைந்த மகான்கள் பலர் உடல் உபாதை நோய்களால் வாடி வதங்கியிருந்தாலும் தங்கள் சேவைகளை ஒருபோதுமே நிறுத்தியதில்லை. ரமண மகரிஷி, சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்றோர், தங்கள் உடல் நிலை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்பட்டது கிடையாது. வரும் துன்பங்களை வெறுமனே சகிப்பது மட்டுமல்ல, அதனை எதிர் கொண்டு அழிப்பதும், தங்கள் கடமைகளில், முனைப்பாக செயல்படுதலுமே மேலான வீரமுமாகும். எந்த ஒருவருமே தீமைகளைத் தீமைகளால் வெற்றி கொண்டு விடமுடியாது. நன்மையான செயல் மூலமே வெற்றி கொள்ளவும் முடியும்.
மதம் கடந்த நிலையில் உள்ளவர்களே தவத்திற்கு
உகந்தவராவர். தூய மெய்ஞானிகள், துறவிகள், எவருமே
மத விரோதம் காட்டி மாந்தர்களை எதிர்கொண்டதுமில்லை. ... 77 .

Page 41
பருத்திபூர் 04ல. ஆயிரவநாதன் பல் ஆயிரம் கணங்களைக் கழித்துக் கொண்டே காலத் தைச் செலவளிக்கின்ற மனிதன் ஒரு கணமாயினும் தன் நிலை உணர்வதற்கான நேரத்தைச் செலவு செய்தாலே போதும் எல்லையற்ற"ஞானம்”என்கின்ற வருமதிகள் கிடைத்துவிடும்.
கடமைகளைப் படிப்படியாக முடித்துக் கொண்டே வரும் போது எங்களிடையே புதியதான உற்சாகங்கள் பூத்திடும் பாக்கியம் பெற்றவராவோம். மாறாக, எமது ஆத்மாவிற்கு ஒவ்வாத பலவீனமான தேடல்களை நாமாகத் தேடுவதால் வாழ்க்கைப் பயணத்தில் சலிப்பேற்பட்டு விடும். வாழ்க்கையின் ஒவ்வொரு பராயத்திற்குமான குணாம்சங் களை விருப்புடன் ஏற்போமாக இளவயதுக் குறும்புகளும், மத்தியதர வயதின் பொறுப்புக்களும், முதிய வயதின் ஆன்மீக நாட்டங்களும், இயல்பாக மனிதனை நாடிவரும். எனினும் வயது முதிர்ந்த பின்னரும் கூடப் புலனடக்கம், பொறுமையின்றிச் சீவிக்கும் மனிதர்களும் இருக்கின் றார்கள்.
ஒருதாய், பொறுமையாகத் தன் வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்து பிள்ளையைப் பெற்றுக் கொள்கின்றாள் அவள் வலியுடனும், மிகுந்த எதிர்பார்ப்புடன், பொறுமை யுடன் இருக்கின்ற இந்தக் காலங்கள் எல்லாமே ஒரு தவநிலையன்றி வேறென்ன? புது உயிரை இந்த உலகிற்கு ஈந்தருளும்தெய்வமாகி இருக்கின்ற அன்னையர் களின், நிலைதான் "தவம்" என்பதற்கும், அதன் பெறுபேற் றின்
- 78 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! பெரும்பயன்,அவள் ஈந்தருளிய குழந்தை என்பதும் ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரு சிறந்த நல் மாணக்கனை நல்லாசிரியன் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் உருவாக்கு கின்றான்.இந்த ஆசிரியரின் சேவை ஒருதவம்.
எமது மக்கள் தங்கள் கருமங்கள் ஈடேறுவதற்காக தெய்வத்திற்கு "நேர்த்தி செய்கின்றார்கள். இதன் பொருட்டு கடும் விரதங்களை மேற்கொள்கின்றார்கள். ஆலயங்கள் தோறும் பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்து கொள்கின் றனர். மக்களின் ஒன்றுபட்ட பிரார்த்தனை வழிபாடுகளால் தெய்வீக சக்தி மேலெழும்புவதால் எண்ணியவை நடக்கும் என்பது திண்ணம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் அனை வருமே ஒன்றாகத் திரண்டு அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தியாகப் போராட்டம் ஆங்கிலேயரை அசைத்தது. பக்தியுடன் சேவையுணர்வு தியாகங்களால் ஏற்படும் அனுகூலங்கள் எல்லாமே ஒரே குறிக்கோளினால் வந்து எய்திய தவப்பேறேயாகும்.
தீவிர பக்தியினால் தவம் வலுவடைகின்றது.
அன்புடனான கரிசனை, ஈடுபாடு, விடாமுயற்சி, நற்பண்புகள்
எதனையுமே ஈகை செய்யும் தயாள சிந்தை, எத்தரத்
தாரினதும் கஷ்டங்களையும் ஏற்றுக்கொள்கின்ற தியாக
உணர்வு வந்தாலே அவர்கள் "தவம்” செய்த பெரும்
பேற்றிற்கும் உரித்தானவர்களாகின்றார்கள். நிலைத்து ... 79

Page 42
பருத்திபூர் அல. ஆயிரவநாதன் ஓரிடத்தில் தரித்துத் தியானித்தல் தவம் என்றாலும் இயங்கியபடியே அனைத்துக் கடமைகளையும் நிறை வேற்றியவர்களும், தவற் பேற்றினை இறைவன் மூலம் பெற்றுவிடுகின்றனர்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
1805, 2008
- 80 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
தேவையறிந்து ஒருவருக்கு கொடுத்து உதவ்தல் வேண்டும். வீம்புக்காகக் கொடுப்பது கொடையல்ல. பணம், பொருள்களை அளிப்பது மட்டும் கொடையல்ல. அன்பு காட்டுதலே பெரும் கொடை எங்களால் முடிந்த பணியை நாங்களே செய்யாமல் பிறரை எதிர்பார்த்தல் இரத்தலாகும். வசதிகுறைந்தோர்க்குப் பொருள் கொடுக்க இயலாதோர், சேவைகள் மூலம் வழங்கல்களைச் செய்தாலே அதுபெறுமதிமிக்கது. உழைக்காதவன் கோழை. அவனால் எதுவுமே வழக்க முடியாது விட்டால் அவனே ஏழை. உழைப்பதன் பயன் வழங்குதலேயாம்.
ஒருவரின் உண்மையான தேவையறிந்து பிரதிபலன் கருதாது கொடுப்பவர் கொடையாளியாகின்றார். உடல் வலு இருந்தும் தன்னை வருத்தப் பிரியப்படாமல் உதவிகளைக் கேட்பது "இரத்தல்"ஆகும்.இரத்தல் என்பது பணம்,பொருள்,நிலம் என்பது மட்டுமல்ல.தன்னால் செய்யக் கூடியதைப் பிறரிடம் கேட்கும் எந்தச் சேவை களுமே ஒரு யாசகம் போல்தான் கருதவேண்டும்.
- 81 -

Page 43
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
பொருள் கொடுக்க வசதியற்றவர்கள் தங்கள் மனத் தாலும், காயத்தாலும்,வாக்கினாலும் கூட எவர்க்கும் நல்லன செய்யப் புகுந்தால் அவைகள் கூட "கொடை" என்றே சொல்லப்பட வேண்டும்.
ஆலயம் புனரமைக்க ஒரு ஏழையிடம் ஆலய தர்ம கர்த்தாக்கள் வருகின்றார்கள். அந்த வசதியற்ற ஏழை பணம், பொருள் கொடுக்க முடியாது விட்டாலும் கூட மனமார அவர்கள் செயலை வாழ்த்தி ஒரு தொண்டனாக ஆலயப் புனரமைப்பிற்குத் தேவையான உடல் உழைப்பை நல்கினாலே அது பல கோடி ரூபாய்க்கும் மேலான பெறுமதி பெறும். பணத்தினால் மட்டும் சேவையின் அளவை, அளவுகோலிட்டு அளக்க இயலுமா?
மேலும், ஆதரவற்றோர்க்கு மனதார செய்கின்ற பேரு தவிகள் ஏராளமுண்டு. அண்மையில் சுனாமி போன்ற பேரழிவின்போது, அங்கு அல்லல் பட்ட மக்களுக்கு தமது மேலான உடல் உழைப்பை நல்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளை தம்மால் இயன்றளவு வயது வித்தியாசம் பாராது செய்த புண்ணிய ஆத்மாக்களான கொடையாளிகளின் நற்செயலை நாம் வார்த்தைகளால் மட்டும் எங்ங்ணம் பாராட்ட முடியும்.
வசதி குறைந்தோர்க்குக் கல்விக்கொடை செய்தல்,
கிராம, சமூக சேவைகள் மூலம், மக்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டுதல் போன்று மேலான வழங்கல் சேவை ஏது - 82 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! உண்டு? இப்படியாக, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் யாருக்கு, எதனை நம்மால் வழங்க முடியும் என்று கருதிச் செயல்படுதல் ஒரு இறை பணியேயாகும். ஆயினும், இன்று சிலர் எதுவித சமூகப் பிரக்ஞையற்று எங்கே, எங்கே எவரிடம் எப்படிப்பிடுங்கலாம் என்று கருதியே வாழ்வதனால் முழு உலகமுமே நிம்மதியின்றி வாழ முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு இருக்கின்றது. கஷ்டப்பட்டுச் சீவிப்பது மனதிற்கு உளைச்சலையும், உடலுக்கு உபாதையையும் தரும் என்ற தப்பான அபிப்பிராயத்தினால் உலகில் கொட்டிக் கிடக்கும் செல்வங்களை எப்படி ஏமாற்றி அபகரி க்கலாம் என்கின்ற எண்ணங்களுடன் வாழ்கின்ற வர்கள் எவ்வளவோபேர், சர்வசதாரணமாகச் சிரித்துக் கொண்டு காலத்தையோட்டுகின்றார்கள்!
எளிமையான நெஞ்சம்கொண்டோரின் ஆசை அபிலாசைகள் மிதமானதாயும் அவைகளை எளிதாக நிறை வேற்றக்கூடியதாகவும் அமைந்துவிடும். இவர்கள் யாரிடமும் சென்று கை நீட்டவேண்டிய அவசியமும் இல்லை. ஆரவாரமாக தங்களால் தான் எல்லாமே நடப்பதாகப் பாவனைகாட்டி, எல்லோரையும் நம்பச் செய்துவரும் பேர்வழிகள் மெளனமாகச் செய்யும் காரிய சித்திகள் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருக்கின்றார்கள்.
வீரத்துடனும், விவேகத்துடனும் செயல்படுபவர்கள்
மெளனத்தை நேசிக்கின்றார்கள். தன்னால் எழும் வலுமிக்க
எழுச்சிகள், அவனுள் ஆயிரம் படைவீரர்களிலும் மேலான - 83 -

Page 44
பருத்திபூர் அல. ஆயிரவருதல் தெம்புடன் அவனை இயங்கச் செய்வதுடன் எவரையும் அண்டிப்பிழைக்கும் மன இயல்பற்ற நிலைக்கும் அவனை உறுதிபடச் செய்து விடுகின்றது.
இன்று பலரும் கேட்டுப் பெறும்யாசகம்மிகவும் நகைப் பூட்டுவதாகவும் இருக்கின்றது. எந்தவிதமான திறமையை யும், தகுதிகளையும் தன்னுள் வளர்க்காது "பதவிப்பிச்சை கேட்கின்றார்கள். சேவை மனப்பான்மையற்றவர்கள், மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றார்கள்.
சுய கெளரவம் உள்ளவன் தன்னையும், தன் திறமை களை மட்டுமே நம்புகின்றான். உழைக்காமல், ஊதியம் கேட்கமாட்டான். வேலைக்கு இணையவரும் போது மட்டும், அழுது தொழுது இரந்து வருவார்கள். தொழில் கிடைத்த பின்னர் தேவையற்ற கோரிக்கைகளைக் கேட்கும் அலுவலர்கள் மலிந்து விட்டார்கள். உண்மையான பிரச்சனைகள் இருக்கின்ற, உழைக்கின்ற, தொழிலாளர்கள் இருக்க, மேலதிகமான வசதிகளுக்காகப் பின் வாசல் வழியாகச், சாதுர்யமாக உள் நுழைந்து இரந்துகேட்டு வரங்கள் பெறுகின்ற ஒரு கூட்டம் இருந்து கொண்டு செய்கின்ற நியாயங்களுக்குச் சவால் விடும் கைங்கரியங்களைத் தடுப்பது எங்ங்ணம்?
உலகில் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களில்
உழலும் தொழிலாளர், பாட்டாளி வர்க்கங்களின் உழைப்பு
க்குரிய ஊதியங்கள் எல்லாமும் பரிதாபத்திற்குரிய 一密4一

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
உழைப்போரின் வாழ்க்கை நலன்களும் ஓரிரு சுரண்டி வாழும் எத்தர்களால் கத்தரிக்கப்படுவதை அனுமதிப்பது மக்கள் எல்லோரினதும் தவறேயாகும். தவறு செய்பவர்கள் எவ்வித சஞ்சலமின்றி சஞ்சாரம் செய்வதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே மிகப்பெரிய அறியாமையுமாகும். கொள்கை, நேர்மை என்று பேச்சளவில் சொல்லிக் கொள்பவர்கள் தமது “உள் உரு"வை மறைப்பதற்காகவா?
மேலும், உழைக்காத கோழைகள் கூட வரலாறு படைக்கப் புறப்படுகின்ற நடிப்பான அவலக்காட்சிகளையும் நாம் பார்த்து வருகின்றோம். கொடுக்கின்றவர்கள் கேட்பது மில்லை அவர்கள் கெட்டதுமில்லை. பெரும் தியாகிகள் தமது உடல், பொருள், ஆவியை இந்த பூமிக்கு அர்ப் பணித்தாலும் கூட அதற்காகப் பெரிய பதவிகளையோ கெளரவத்தையோ கேட்டுப் பெற்றதுமில்லை. நல்ல சேவை புரிந்தவர்களே, பெரிய அனுபவஸ்தராகவும் மக்கள் மீது இரக்கம் கொண்டவர்களாகவும் துலங்குகின்றார்கள். எல்லோருமே சகல சௌபாக்யங்களையும் பெற்று விட்டால் கொடுத்தலும் ஏது, இரத்தலும் ஏது?
ஒருவரது புத்திசாலித்தனம் என்பது, மற்றவர்களின் அறிவையும் செயலையும் மறைப்பதற்காகப் பயன்படுத்து வதாக அமைதல் ஒரு துரோகமான எண்ணமாகும்.
இந்த எண்ணமே நாளடைவில் அவரை விட்டேகாத
துரோகக் குணமாகிவிடும். இன்று பல திறமைசாலிகளும்,
தொண்ட ர்களும் பலரது பார்வைக்குள் தெரியாமல் - 85 -

Page 45
பருத்தி: 04ல. ஆயிரவருதல் மறைந்து கிடக்கின்றார்கள். யாரிடமாவது எடுத்துக் கொண்டே யிருப்பவர்கள் மற்றவன் புகழை, கீர்த்தியை அவருக்குச் சேரவேண்டிய அனைத்தையுமே மறைத்து விடப் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றார்கள்.
கொடுப்பவன் கொடுத்துக் கொண்டேயிருக்க எடுப்பவன் எடுத்துக் கொண்டே நாட்டை ஓட்டையாக்கிக் கொண்டு இருப்பதை சட்டம் ஒட்ட வெட்டியறுக்காமல் இருக்கக்கூடாது.
இன்று சனங்கள் பலர் தமக்குத்தாமே அறியாமை, தெரியாமை என்கின்ற தடைகளுக்குள் தாமே உட்பட்டுப் போகின்றமையினாலேயே தவறுகள் எல்லாமே, அனுமதிக் கப்பட்ட ஒன்றாகிவிட்டது. நற்கருமங்களால் தான், ஒரு மனிதன் தன்னை உலகிற்கு அடையாளப்படுத்த முடியும். பலவீனமான தந்திரோபாயங்களால் ஒருவர்க்கு அவமானமும், அபகீர்த்தியுமே உண்டாகிவிடும்.
நல்லன செய்தோர் நலிவடைவதுமில்லை. வழங்கியவன், நெளிந்து, சுருங்கி, ஒடுங்கிக் கிடந்தது மில்லை. ஈகை செய்தவன் சதா தோகை விரித்தாடும் மயிலின்களிப்புக்குள்ளாகின்றான். உறவுகளைப் பெருக்கிக் கொள்கின்றான். புதிதான வருமானங்களைப் பெற்றுக் கொள்ள, இறைவனின் பெரும் கருணைகளை பெறுபவ னுமாகின்றான்.
- 86 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
ஒருவரை அடிமை கொள்ளும் நோக்குடன், செய்யப் படும் உதவிகளைக் "கொடை" என்று சொல்ல முடியாது. இந்த வழிமுறைகள் உதவி பெறுபவர்களை வளைத்துப் படிக்கும், "வலை" என்று தான் இந்த உத்திகளைச் சொல்ல முடியும். இந்தக் குறுக்கு வழியைத் தந்திரமாகச் செய்பவர்கள் தமக்குரிய பயன்களைப் பெற்றுக்கொண்டதும் எந்தவித இரக்கமும் இன்றி இவர்களைக் கழற்றிக் கொள் வார்கள். மேலும் தாங்கள் ஏற்கனவே வழங்கியவற்றையும் பிடுங்கி இத்தகைய ஏமாளிகளை நடுத் தெருவிற்கும் கொண்டுவந்து விடுவார்கள்.
மேலும் சிலர் எவர்களிடத்தில் பதவி, பொருள் பெற்று முன்னேறினார்களோ கொடுத்தவர் மீதே நாளடைவில் பாய்ந்து அவர்களைச் செயலிழக்கச் செய்து விடுவார்கள். பொதுவாக அரசியலில், வியாபாரத்துறையில் தான் இந்த அநாகரிகம் தலை விரித்தாடுகின்றது. யாராவதுசெய்த உதவிக்குப் பிரதியுபகாரம் செய்யாது விட்டாலும் பரவாயில்லை. செய் நன்றி மறப்பதுபோல் துரோகம் வேறு ஏது? கூசாமல் கை நீட்டுபவர்களில் பலருக்கும் மற்றவனை மடக்கி அவர்களை ஒடுக்குதற்கு எவ்விதமான அச்சப்படு தலுக்கும் உட்படமாட்டார்கள் அவர்கள் வந்த வழியே அநா கரிகமானதால் தனக்கு மேலான ஒரு சக்தி புறப்படுவதை இத்தகையோர் ஜீரணிக்கவே மாட்டார்கள்.
மனித உணர்வுகளின் மென்மையை, அவைகளின் எதிர்பார்ப்புகள்,வெளிப்பாடுகள் பற்றி இம்மியளவும் - 87 -

Page 46
பருத்திபூர் 04ல. ஆயிரவருதல் கவலைப்படாதவர்கள் மற்றவனுக்கு வேண்டிய உதவிகளை நல்க முனையாமல் இருப்பது ஒன்றும் பெரிய விஷயமாய் அவர்களுக்கு இருக்காது. "உனது வீட்டிற்கு நான் வந்தால், எனக்கு என்ன கொடுப்பாய், எனது வீட்டிற்கு நீ வந்தால் எதைக் கொண்டு வருவாய்" என்கின்ற நோக்கத்துடன் இருப்பவர்களுக்குக் கொடை வழங்கும் மனம் நித்திய தடையாகவேயிருக்கும்.
எமது நாட்டை நோக்கி இந்த முழு உலகை நோக்கிய எண்ணம் எதுவாக இருக்கவேண்டும்?"ஹே. உலகமே, நான் உன்னிடம் எவ்வளவோ, எடுத்துவிட்டேன், இப்போது எதையெல்லாம் எடுக்க முடிகின்றதோ, அவைகளை நான் எடுத்துக் கொண்டேயிருக்கின்றேன். உனக்கு நான் என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளேன்?
என்னிடம் வருகின்ற அனைத்து ஜீவன்களுக்கும் என்னாலான உதவிகளை பணிகளைச்செய்ய வேண்டியவ னாவேன், செய்தும் முடிப்பேன்". "அனைத்து இயற்கை வளங்களையும், பாதுகாப்பேன், நீ எனக்குத் தந்தவற்றின் ஒரு சிறு துளியையேனும் உன் படைப்பால் உயிர்த்த உயிர்களுக்கும் வழங்குவேன். இது எனது கடமையும், இறைவன் இட்ட கட்டளையுமாக ஏற்பேன்." கொடுப்பதும், ஏற்பதும் பின்னர் அனைவர்க்குமாகப் பகிர்வதுமாகத் தூய்மையான சிந்தனையுடன் செய்துவரின் இந்த உலகில் துன்பம், துயரேது? அன்பு எங்குமே, பொங்கி வழிந்து வையகம் பொலிந்து துலங்குமன்றோ!
- 88 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! கொடுத்துக் கொண்டெயிருப்பவனின் மனம் பக்குவப் படுகின்றது. இவனுக்கு இழப்புக்கள் பற்றிய துயர் இருப்பதில்லை. தான் காணும் மாந்தர்கள் எல்லோருமே, தனக்குரியவர் என எண்ணுபவனுக்கு தனக்குரிய செல்வம், தனக்குரிய பொருள் என்கின்ற தனி உடமை, சுயநலம் மட்டும் மனதில் தோன்றாது விடுமல்லவா?
மேலும், இல்லாத ஒருவர் ஒருவரிடம் பணம் பொருள் பெறுதல் என்பது தவறு என்று சொல்ல முடியுமா? ஆனால் இதுவே ஒரு வழி என எண்ணுதலும் தங்கள் வாழ்க்கை க்கான உழைக்கும் முயற்சியை இழக்குமாற் போல் நடப் பதும்தான் தவறானதாகும்.
கொடுப்பவரைக் கெடுப்பவர் உருப்பட்டதேயில்லை. யாராவது ஒரு ஏழை தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஒருவரைச் சென்று உதவி கேட்கும் போது அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் எதுவித சம்பந்தமும் இன்றி"என்ன ஐயா. உதவி செய்வது, இவர்கள் எல்லாம் உழைத்துப் பிழைத்தால், என்ன” என்று இலவசமாகப் புத்திமதி கூறவும், இதனால் அந்த ஏழைக்கு உதவி கிட்டாமல் போகச் செய்வதில் இத்தகையோர் என்ன லாபத்தினைக் கண்டு விட்டார்கள்? சமூக சேவை செய்யப் போகின்றவர்களைச் சிலர் தேவையற்ற கதைகளைச் சொல்லி செய்ய விரும்பும் பணிகளையே செய்யாமல் செய்வதுமுண்டு.
"இவர்கள் எல்லாம், வேலை வெட்டியில்லாதவர்கள், என்ன சமூகசேவை. என்னத்தைக் கண்டுவிட்டார்கள்? - 89 -

Page 47
பருத்திபூர் அல. ஆயிர்ஜீதர் என்று கூறி நல்ல காரியங்களை நாசமாக்க முனைபவர்கள் இந்தப் பூமியின் கீழ்த்தரமான தோஷங்கள்!
உலகின் மிகவும், உன்னதமான கொடைகளில், "அன்னம் பாலித்தல்” என்கின்ற உணவளித்தலே முதன்மையானது ஆகும். பசித்தோர்க்கு உணவளித்தலே பரமனுக்கும், விருப்பமான அறவழியுமாகும். பசியால் வருந்துதலே பிணி போல் என்பதால் "பசிப்பிணி" என்கின்ற சொற்பதம் உருவானது.
எந்த உயிர்களுமே தங்கள் இயக்கத்தினை உருவாக் குதலுக்கு, உணவு, நீர் காற்று என்பதே ஆதார மானவை யாகும். இவைகளைப் பெறுவது உயிர்களின் உரிமையும் ஆகும். ஆடம்பர வாழ்விற்காக எவர்க்காவது உதவு தலைவிட எவர்க்கு மிகவும் அவசியமான தேவை எது என அறிதலே நன்று எங்களால் வழங்கப்படும், எந்த கொடையும் அன்புடன் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். பிறர் அறியும் வண்ணம், பிரபல்ய மடையும் நோக்கத்துடன் கொடுக்கின்றவைகள் மனதார விரும்பிச் செய்யும் கருமம் அல்லவேயல்ல!
எங்கள் பணிகளால் ஒருவரைத் திருப்தியடையச் செய்வதுபோல் ஒரு நிறைந்த திருப்தி நிலை வேறில்லை. பூரணமான மனநிலையில் வழங்கும் இயல்பே ஒரு "தவம்" தான்.
இரந்து கையேந்தாத நிலையும், எவ்வுயிர்க்கும் இல்லையென்று சொல்லாது கொடை வழங்கும் மனமும்,
= 90 س=

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! பொருள் வழங்கும் திறனும், இருந்தால் அதுவே ஒப்பற்ற மானுடனாக, நாம் பிறந்ததின் முழுமையான பயனுமாகும். எமது உள்ளத்தினைப் பண்படுத்தினாலே போதும் கருணையுடன் எல்லா உயிர்க்கும் இரங்கி, நிறைவு கண்ட "ஆன்மா” ஆகிவிடுவோம்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 1105.2008
- 9.1 -

Page 48
பருத்திபூர் அல. ஆயிரவருகிறழ்
என்றும் மாறாத உண்மை நிலை "தெளிவு" ஆகும். பரந்துபட்ட் உலகில் எம்மால். எல்லாவற்றையும் படித்துத் தெளிந்து கொள்ள முடியா துள்ளது. சாதார விஷயங் களிலேயே குழம்பித் தவிக்கும் நாம், எல்லையற்ற உலக தாத்பரியங்களைக் காண்பது எப்போது? உண்மையான மன இயல்புடன் இருப்பவன். அகிலத்தையே தன்னுள் அடக்கியவனாகின்றான். களங்கமற்ற, நிர்ச் சிந்தனையுடன் வாழும் முறை இலகுவானதன்று. ஆயினும், ஆன்மீகம், பொது நலன்களில் எம்மை ஈடுபடுத்தினால், மனம் சஞ்சலம் நீங்கி தெளிவு நோக்கிய பாதையில் அவை இட்டுச் செல்லும், நெஞ்சத்தில் நெளிவு இன்றேல் தெளிவு Stolittle (56IC5b.
" தெளிவு" என்பது, என்றும் மாறாத உண்மை நிலையாகும். ஏதோ ஒரு விடயத்திலாயினும் நாம் முழுமை யான தெளிவு அடைந்து விட்டோமா? என்பது கூட ஒரு கேள்விக்குரிய விடயமாகும்.
- 92 -
 
 
 
 
 
 
 
 
 
 
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! ஏனெனில், இந்தப் பரந்துபட்ட பூமியில் சொல்ல வொண்ணா விடயங்கள் எல்லையற்று விரிந்து பல உண்மை
களைக் கொண்டிருக்கின்றது. நாம் படிப்பதற்கும் தெளிவதற்கும் ஒரு குறிப்பிட்டவரையறை ஏது? இதற்காக நாம் தொடர்ந்தும் எமது அறிவிற்கு வேலை கொடுக்க வேண்டியவராகவுள்ளோம்.
அறிவு பெறுதல் ஒரு துன்பகரமான சுமையும் அல்ல. கல்வி கற்பதில் ஐயம் திரிபுஅற தெளிவதே சிறப்பு.
சாதாரண விஷயங்களில் கூட நாம் குழம்பிப் போய் விடுவது கூட சகஜமாக இருக்கின்றது. எனினும் உண்மை நிலை என்றுமே மாறாது இருப்பதனால் நாம் என்றுமே முரண்பாடான கருத்துக்களுக்காக மனம் பேதலிக்க வேண்டிய அவசியமே இல்லை. மனித இயல்கூட அடிக்கடி மாறிவிடும் நிலையில் உள்ளதால் தனக்கு வேண்டிய
கருத்துக்களை மட்டும் ஏற்க விழைகின்றது.
ஒரு உண்மையான கருத்து என்பது, அதன் வடிவம்
எப்போதுமே மாறுபடாது. ஆயினும், அதற்குரிய விளக்கங்
கள், பலவாறாகத் தெரிவிக்கப்படுவதனால் இந்த மனித
தேடல்கள், ஆய்வுகள், அறிவு முதிர்ச்சியினால் ஏற்படுவத
னால் தேவையான நல்ல விளக்கங்களை, நாம் அறிந்தே இருப்பது ஆரோக்கியமானதேயாம்.
இந்த உலகில் நாம் தெரிந்து கொள்வதற்கு ஏராள
- 93 -

Page 49
கருத்திபூர் அல. ஆயிரவநாதன் மான விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை நாம் ஒவ்வொன்றாகக் கணக்கீடு செய்வதற்கு எமக்கு ஆயுள் போதாது என்பதை நாம் அறிவோம்.
இருப்பினும், நாம் எமக்கு அத்தியாவசியமாகத் தேவையான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டு மல்லவா? மிகவும் தெரிந்து, உணர்ந்து கொள்ளவேண்டிய கருமத்தைத் தெரிந்து கொள்ளாமல் அது மிகவும் சிக்கலானது என ஒதுங்கி இருப்பதை விட அதனைத் தெரிந்து கொள்ளச் சிறிதளவேனும் முயலாமல் இருப்பதை விட சுத்த சோம்பேறித்தனம் வேறென்ன இருக்கின்றது? எதனையுமே முயற்சி செய்யாமல் முடங்குவது கூட இயல்பான சின்ன விஷயங்களையும் செய்துமுடிக்காத நிலைக்குட்படுத்திவிடும். ஒதுங்குபவர்களைப் பிரச்சனை கள் துரத்துகின்றன.
ஆன்மீகமும், விஞ்ஞானமும் உலக ஷேமத்தின் பொருட்டே எம்மை வழிநடாத்துகின்றது. அறிவின் மேலாம் ஞானமார்க்கம், ஆன்மாவை ஒளியூட்டுவதற்காக, ஞானிகள், யோகிகள் எமக்கு உப தேசம் செய்தார்கள். இவர்கள் சொன்ன சீரிய மார்க்கங்கள் எங்கள் மனம் ஊடாக தெளிவு நிலையை நோக்கியதாக அமைந்தன.
அறிவுடன் இணைந்ததான விஞ்ஞானம் என்பது,
மனிதனின் அன்றாட வாழ்வை மிக இலகுவானதாக்கி,
அதுவே எம்முடன் இரண்டறக் கலந்தேவிட்டது. விஞ்ஞானத் - 94 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
தின் தேடல்கள் ஓயாதவரை இதன் முன்னேற்றங்கள் ஓய்ந்து விடப்போவதுமில்லை.
இதேபோல்,ஆன்ம விழிப்பு மூலம் இம்மைக்கும்,மறு மைக்குமான விமோசனத்திற்கான வழிகளை ஞானிகள், தமது உபதேசங்கள் மூலமும் தாங்கள் வாழ்ந்த வாழ்வு மூலமும் எமக்குக் காட்டியருளினார்கள். ஞானிகளின் தெளிந்துபட்ட ஞானத்தினால் எழுந்த வார்த்தைகளின் ஆழமும், அதிர்வலைகளும் இன்னமும் இந்த அவனியைச் சுற்றிய வண்ணமாய் எங்களை ஆகர்ஷித்தபடி எம்மை என்றுமே வாழ்வித்துக் கொண்டிருப்பது மறக்க இயலாத பேருண்மையாகும்.
மேலும் எமது அறிவுக்கும் மேலான ஞானநிலை என்பது சாமான்ய மாந்தருக்கு இலகுவில் வாய்ப்பது மில்லை. சிரஞ்சீவித் தன்மையுடன் நிரந்தரமான உண்மை கள் இதுதான் என்று தீர்க்கதரிசிகள் சொன்னதன் வண்ணமாய்தான் இந்த உலகம் இயங்கியும் வருகின்றது. உலக ஆசாபாசங்கள் மானுடர்களுக்கான துன்பங்கள பற்றியும் அதிலிருந்து "விடுகை” பெறுதல்பற்றிய தெளிந்த சிந்தனைகளை நாம் ஏட்டளவில்தான் படிக்கின்றோம் மனதினுள் நிறுத்தி நாம் உணர்ந்தால் இன்று இந்த உலகம், என்றுமே நிரந்தர அமைதி சமாதானத்தினுள் சஞ்சாரம் செய்யுமன்றோ! மேலான ஞானத்தின்பால் பெற்ற தெளிவின் மூலமான ஞானிகளின் வழங்கல்களை நாம் பெறுவதே வாழ்வின் கிடைத்தற்கரிய செல்வமும்
- 95 -

Page 50
பருத்திபூர் அல. ஆயிரவநாதன் ஆகும் என்பதில் ஏது ஐயம் அன்பர்களே!
நாம் எவ்வித விளக்கமும் இன்றிச் செய்யப்படும் சிறிய கருமங்கள் கூடப் பூரணமின்றி எங்களைச் சிலவேளை அலைக் கழித்துவிடும்.செய்காரியங்களில் தெளிவு ஏற்படின் அவை சுலபமாக முடிவடைவதுடன் மேலதிகமான கருமங்களை நாங்கள் செய்து கொள்வதற்கான வழிகளும் புலப்பட ஆரம்பிக்கும். தெளிவற்ற செயல்களால் காலவிரயம்மனக்குழப்பம் கோபம், தேக அசெளகரியங்கள் உண்டாவது மட்டுமல்ல, சிலசமயம் எங்கள் மீதே எங்களுக்கு வெறுப்பேற்பட்டுத் தாழ்வுச் சிக்கல்களுக்குள் எம்மை உள்நிறுத்திவிடும். உணர்க!
இன்று பெரும்பாலான அலுவலகங்களைப் பாருங்கள். அங்குள்ள பல ஊழியர்களுக்குத் தங்கள் கடமை,பொறுப்புக்கள் பற்றிய விளக்கத்தில் தெளிவற்ற வர்களாக இருக்கின்றார்கள். தங்களிடம் வருகின்ற மக்களுக்குச் செய்ய வேண்டிய ஊழியம் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதனால், மக்கள் மிகவும் சிரமப்பட்டுப் போகின்றார்கள். சில நிறுவனங்களில் உயர் அதிகாரிகளே மெத்தப் படித்திருந்தும் செயல்முறைகளில் தெளிவற்றி ருப்பதும் கண்கூடு. இந்தக் குறைபாட்டினை பலர் ஒத்துக்கொள்வதுமில்லை.
அலுவலகங்களுக்குப் பொதுமக்கள் எவ்வளவு
சிரமத்துடன் சகல ஆதாரங்கள், ஆவணங்களை எடுத்துக்
கொண்டு வந்தாலும் கூட தேவையற்ற விளக்கங்களையும், - 96 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! சட்டப்பிரச்சனைகள், அது, இதுவென்று செய்ய வேண்டிய காரியங்களை இழுத்தடிக்கின்றார்கள். தகுந்த வழிகாட்டல் கள் பயிற்சிகள் உரியமுறையில் வழங்கப்பட்டால் இந்தத்
தெளிவற்ற போக்கு விலகிப் பொதுமக்களுக்கான சேவைக ளும் உரியமுறையில் கிடைத்து விடுமன்றோ!
உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டபோதும், தேவையான தகவல்களை அறிய பலவசதிகளைப் பெற்றி ருந்தும் கூட வாசிப்புப் பழக்கங்களுக்கான முயற்சிகளையும், இணையதள வசதிகளையும் பலரும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதுடன், இதனால் என்ன பெரிய லாபம் வந்து விடப்போகின்றது எனக் கருதுவோரும் இருக்கின்றார்கள். இளையவர்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும்.
நூல்கள், சஞ்சிகைகளை வாசிக்காமல் பரந்துபட்ட அறிவை எப்படி வளர்க்க முடியும்? அன்றாட உலக விவகார ங்களை அறிய ஆவல் இல்லாமல் இருப்பவர்களில் பலரும் தேவையற்ற கீழ்த் தரமான களிப்பூட்டும் சமாச்சாரங்களில் காலத்தையும், காசையும், விரயமாக்க ஆர்வமுடன் இருந்தால் எங்ங்ணம் உலகத்தின் வேகமான ஓட்டத்துடன் இணைந்து ஓடி வெற்றிகொள்ள முடியும்?
எல்லா மதங்களிடையேயும் கிரியை, வழியாடுகள்
இருக்கின்றன. இவைகள் எதற்காக மேற் கொள்ளப்
படுகின்றன என்பதை இளையசமூகம் உணரல்வேண்டும்.
"மத நம்பிக்கைகள்" என்பது, எங்கள் வாழ்க்கையைப் பண்
97 -

Page 51
பருத்திபூர் பல. அவிழ்வரன் படுத்துதலுக்காகவே, பாரம்பரிய வழிமுறைகளால் பேணப்
பட்டு மனதுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டதொன்றாகும்.
மத அனுட்டானங்கள் கிரிகைகள் போன்றவை பற்றிய விளக்கங்கள் தெளிவுடன் அறிவுறுத்தப்பட வேண்டியதாகும். எங்கள் தேக ஆரோக்கியம், என்பதை முன் நிறுத்திச் செய்ய ப்படும், கிரியைகளை அனுட்டானங்களை இளம்பராயத் தினர் வேடிக்கையுடன் பார்க்கின்றார்கள். வணங்கும் முறைகள், இறைவனை நினைத்து மெளனமாகத் தியானித்தல், எல்லாமே தகுந்த காரணங்களுக்காக ஏற்பட்டது என்பதைச் சரிவரப் தெரிந்தாலே போதும், ஒரு கட்டுப்பாடான புலனடக்கத்துடன் வாழ்கின்ற வாழ்வியல் நெறிமுறைகளை நாம் புரிந்தவர்களாகி விடுவோம்.
ஒவ்வொருவருமே தாம் சார்ந்த மத நம்பிக்கைக ளுக்கு உரித்தானவர்களாகவும், அவை சொல்லிய வண்ணம் ஆழமான சிந்தனைகள், போதனைகளை கிரகிக்க முனைபவர்களாகவும் இருந்தால் எந்த ஒரு உயிர்களுக்கும் தீங்கு விழைவிக்க எண்ணாத இயல்பினராய் அன்பான உலகைச் சிருஷ்டிக்கும் காரணகர்த்தராக உருமாறிவிடுவர் அன்றோ!
எளிமையும், இதய சுத்தியும் எம்மைத் தெளிவு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. உள்ளத்தின் நிறைவு என்பதே, தெளிவுடன் கூடிய பரிசுத்த உணர்வுதான். கோபம், காழ்ப்பு, பொறாமை, வஞ்சகம், பொய்மை என்பன
س. 98 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய் அறவேயற்ற பேரின்ப நிலைதான் இது உலக யதார்த் தத்தை ஏற்றுக்கொள்வதும், அனுசரித்தும் போதலும் அன்பினுடாக, எவரையும் வசியமாக்குவதும், தெளிந்த சிந்தையுடையோர்க்கு இயல்பாகவே இணைந்து கொண்டு விடும்.
இருப்பதை வழங்குவதும், இருக்கின்றவைகள் "போதும்" என்று திருப்தி கொள்பவர்களும் மிகப்பெரிய கொடையாளியாகிவிடுகின்றனர். மனம் என்பது ஒரு பெரும் அகண்டட் பெருவெளியாகும். இங்கு சகல உயிர்களையும் நாம் நேசிக்கும்போது, அவை எம்முள் இணைந்து கொள் கின்றது. மனவாசலை மூடி விட்டால் அதன் விஸ்தீரணம் சட்டென்று குறைந்து அது இல்லாதொழிகின்றது. உள்ளத் தின் நிறைவு என்று சொல்கின்றோம். அன்புடன் நாம் வாழ்கின்ற போதே, மனித இதய சங்கமம் இங்கு குடி புகுந்து கொள்கின்றது. தெளிந்த உணர்வுகளும், நீடித்த களிப்பு நிலையும் உருவாகும். எங்கள் உடல் இருப்பதற்குத் தான் வீடும், நிலமும் தேவைப்படுகின்றது. சந்தோஷங் களை உருவாக்கும் எங்கள் "நெஞ்சச்சிறுகூடு” இறைவனால் கொடுக்கப்பட்ட மாபெரும் சொர்க்கத்து மாளிகையுமாகும்.
அவா, ஆசை, ஆற்றாமை, பொறாமை போன்றவை, எக்கணமும் எம்மைத் தெளிவற்ற நிலைக்குட்படுத்துவதால் நிம்மதிக்கான புதியபாதையினைத் தேடவேண்டிய கட்டாயம் எமக்கிருக்கின்றது. மெளனமான சிந்தனைகள், பிரார்த்தனை, வழிபாடுகள் எங்களை நாம் விளங்கிக்
கொள்ள வழிசமைக்கின்றன
- 99 -

Page 52
பருத்திபூர் அல. ஆயிரவநாதன்
இயக்கமற்ற வாழ்க்கை சலிப்பையேற்படுத்துகின்றது. மெளனமாக இருப்பவர்கள் சுறுசுறுப்பான நிலையில் வாழ முடியாதவர்கள் என்றும் கருதிவிட முடியாது. தெளிந்த மனோநிலையில் அமைதியாக வாழ்பவர்கள்தான் செயற்த் திறன் மிக்கோராய் துலங்குவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தூய்மையேற்றாத இதயத்தில் தெளிந்த உணர்வுகள் துளிர்விடாது.
உடலை மட்டுமே வளர்க்க எண்ணும் மனிதன், உள்ளத்தைச் செம்மைப்படுத்த எவ்வித செலவுகளும் செய்யவேண்டியதேயில்லை.
கரைகின்ற காலத்தை நாம் கணக்கெடுத்தால் சில சமயம் எமக்கு அச்சமேற்படுவது இயல்புதான். செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்க காலமோ கடிதென ஓடிக் கொண்டிருக்கின்றது.
ஓரிரு வினாடிப் பொழுதுகளை அமைதியாக இருந்து உங்களை, நீங்களே கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வீர்களாக சாதனை செய்வதற்கு நீண்ட காலங்கள் தேவை என்று பயப்பட வேண்டாம்.உங்களுக்கான சில நொடிகளை உங்கள் இதயத்திற்குச் சாந்தி ஏற்படுத்த அவகாசம் கொடுப்பீராக! இதனால் எல்லையற்ற கம்பீரம் உங்களுடன் இணைந்து பீறிட்டு எழுந்து, குறுகிய காலத்தில் நிறையச் சாதனைகள் புரிந்திட வழிபிறக்கும்.
நாங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பிறக்கும்
سے 1000 =

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
போதே கற்று முடித்து விட்டுப் பிறப்பதில்லை.வாழ்கின்ற காலப் பகுதியில் கற்கின்ற கல்வி, சுற்றாடல்களால் பெறுகின்ற அறிவு, அதனூடு பெறுகின்ற அனுபவங்கள் எல்லாம் சேர்ந்தே பல விஷயங்களைப் புரியவைக்கின்றன. இன்ப துன்பங்கள் சோதனைகள், வேதனை, தோல்விகள், விரக்தி எல்லாமே மனிதனுக்கு நல்ல அனுபவங்களைத் தான் கொடுக்கின்றன. இவைகளில் இருந்து விலகி நாம் ஒட முடியாது. ஆனால் நாம் இவைகளால் என்ன பெற் றோம், எதனைக் கைவிட வேண்டும் என்பதைப் புரிந்து தெளிய வேண்டுமல்லவா?
பிரசங்கங்கள், நாடகம், என்றெல்லாம் பொழுது போக்கும் நாம், அங்கு சொல்லப்படும் நல்ல செய்திகளை உள்வாங்குகின்றோமா? பெரியவர்கள் சொல்லும் நகைச் சுவைக் கதைகளைக் கேட்டுச் சிரிக்கின்றோம். அதனுள் பொதிந்துள்ள நல்ல தகவல்களை அகத்தினுள் செலுத்துகின்றோமா?
நிஜங்களை கிரகித்துப், பொய்மைகளைப் புறம்தள்ளி கெளரவமான மானுடப் பண்புகளை என்றும் போற்றி உள்ளத்தினைக், கலக்கியடியாமல் களங்கமற்ற தெளிவுடன் எம்மை நாம் நெறிப்படுத்தல் எமது தலையாய கடமை யாகும்.
மானுடராய் பிறந்தவர்கள் தான் மகானுபாவர்களாக மாறினார்கள். நாம் சாதாரணமான எளிமையான வாழ்வு - 101 -

Page 53
பருத்தி: 04ல. ஆயிரவநாதன் வாழ்ந்தாலே போதும், உள்ளம் தெள்ளிய பளிங்காகத் தெளிந்து துலங்கிடும். இதற்குக் காசு, பணமோ, உடலை வருத்தி உடைக்க வேண்டிய தேவையுமல்ல நெஞ்சத்தில் நெளிவு இன்றேல் தெளிவு நிலை தானாய் உருவாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
27.04.2008
- 102 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
பதவியால் ஒருவர் பெருமை பெறுதலை விட அவரால் பதவி பெரும்ை பெறுதலே சிறப்பு பதவியால், மட்டும் ஒருவன் பெருமையடைய முடியாது. மக்கள் சேவை செய்ய பதவி ஒருகருவி, பதவி மூலம் ஒருவரை, சமூகத்தை அடக்கியாள முனைவது பேதமை, மக்களுக்குச் சேவை செய்ய வருபவர்கள் எஜமானர்கள் போல் நடப்பது பதவிக்கு இழுக்கு. தகுதியற்றவன் பெரும் பதவி, சமூகத்திற்குப் பிணி. இறைவன் கிடைத்தற்கரிய மனித பதவியை எமக்களித்துள்ளான். அதனை உரிய முறையில் பயன்படுத்தலே இறை ஆசியைப் பெறுவதற்கான உயரிய
"பதவி” என்பது, மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்காக ஏற்பட்டதேயாகும்.பதவியைப் பெறுதல் மூலம் ஒருவர் பெறுகின்ற கெளரவத்தைவிடப் பெற்றுக் கொண்ட பதவியைத் திறம்பட வகிப்பதால் அந்தப் பதவியே மிகுந்த பெருமைப்பட்டுக் கொள்வதே சிறப்பானதாகும். ஆன்மீக வள்ளல்களுக்கு இறையோன் "திருப்பாதம்" இணைதலே பெரும் பதவியாகக் கொள்ளப்படும்.
- 103 -

Page 54
மருத்திபூர் 04ல. ஆயிரவநாதர்
தாம் வகிக்கின்ற பதவியின் பெயரைச்சொல்லிச் சொல்லியே சுயலாபம் தேடுவோரால் சமூகமும், நாடும் அடைகின்ற கஷ்ட நஷ்டங்கள் சொல்லில் அடங்காது. பதவி என்கின்ற வட்டத்துள் ஒளிந்து கொண்டிருக்கும் எத்தர்களை பல புத்திசாலிகள் கூடப்புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் பொருத்தமற்ற பேதமை!
“பதவி” என்கின்ற மூன்றெழுத்தைப்பற்றிப் பல விதமான வியாக்கியானம் செய்வார்கள் "ப" என்கின்ற எழுத்துப் "பண்பு” என்பதையும் "த" என்பது தனித்துவ மானது என்றும், "வி" என்பது வினைத்திறன் மிக்க சேவை யினை நல்குதல் என்றும் சொல்லப்படலாம்.பதவிக்காக முயன்று எப்படியோ அதில் ஒட்டிக் கொண்டவர்களில் சிலர் பெற்ற பதவிக்கான கடமையினை நல்குவதில் மட்டும் கரிசனை காட்டாமல் இருப்பது பதவியினை அவமதிப் பதாகவே கருதப்படும்.
நான் இந்தப் பதவியிலே இருக்கின்றேன் என்று சொல்வதில் மட்டும் திருப்தி காணும் பிரகிருதிகள் மற்றவர் களை அடக்கி ஒடுக்குவதில் மட்டும் முனைப்பாக இருப் பதில் மட்டும் அருவருப்பான திருப்தியைக் கொண்டிருப் பார்கள்.
பதவிகள் பெற்றும் சேவை செய்யாதவர்களை
உலகம் தூர எறிந்தேவிடும். என்னதான் மேலான உத்தி
யோகம் பார்த்தாலும் கூட சமூக அந்தஸ்துப் பெறுவது
அவர்களின் நடத்தை நெறியில்தான் தங்கியுள்ளது. பெரிய س 104 س

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! அந்தஸ்தில் இருக்கும் உயரதிகாரிகள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும்தான் தமது உண்மையான அந்தஸ்து என்ன என்பதை உணர்ந்தும் கொள்கின்றார்கள்.
ஒரு அமைச்சில் உயர்ந்த அந்தஸ்தான பதவியில் இருந்தவர் ஓய்வுபெற்றுச் சிறிது காலத்தின் பின்னர் தான் பதவி வகித்த அலுவலகம் ஒன்றிற்குச் சென்றார். அங்கே பொதுமக்கள் பலர் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அலுவலகப் பணியாளர்களுக்கு அவரை நன்கு தெரியும். எனவே, அவர் கம்பீரமான மிடுக்குடன் நேரே கரும பீடத்திற்குச் சென்றார். கருமபீட அலுவலர் அவரைக் கண்டு கொள்ளவில்லை. "நான், யார் தெரியுமா. இந்த அமைச்சிலேயே உயர் அதிகாரியாக இருந்தவர்". என்றார். அதற்கு அந்த அலுவலரோ அவரைக் கேலியுடன் நோக்கி, சரி. சரி. அதற்கு என்ன இப்போ. போய். வரிசையில் போய் நின்று கொள்ளும்" என்றாரே பார்க்கலாம்.!
உண்மையில் அந்த முன்னாள் அதிகாரி, அன்பா கத் தமது ஊழியர்களை நடாத்தியிருந்தால், இந்த இழி நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது.அவரைக் கண்ட மாத்தி ரத்தே வரவேற்று உபசரணைபுரிந்திருப்பார். பதவிவகித்த காலங்களில் ஆணவ முனைப்புடன் செயலாற்றுபவர்கள் பதவி இழந்ததும், பெட்டிப் பாம்பு போல் அடங்கும் பேர் வழிகள் எப்போது அனுபவம்மூலம் பெற்ற அடிகளால் திருந்துவார்களோ? நேர்மை, நாணயத்துடன் நடந்து கொண்ட பெரியவர்களை எந்த நிறுவனமும் கெளரவப் படுத்தாமல் விட்டதுமில்லை. சில திருந்தாத ஜனங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை இது.
= 105 س

Page 55
பருத்திபூர் பல. ஆயிற்றுருதேர்
ஒரு அரசியல்வாதி இருந்தார்.அவர் செய்யாத தில்லு முல்லுகள் இல்லை. அவர் செய்த பாவங்களுக்காக மரண மடைந்ததும் அவரை நரகலோகத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அவருக்குப் பல கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஆயினும் அவர் அதனைச்சிரமத்துடன் தாங்கிக்கொண்டார். அங்கு தண்டனை வழங்கிய யம தூதுவர்களுக்கோ ஒரே ஆச்சரியம், "என்னப்பா உனக்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் அசையமாட்டேன் என்கின்றாயே அது எப்படி”, என்று கேட்டார்கள். அதற்கு அவரோ,"நான் பதவியில் இருந்த காலத்தில் இதை விடப் பெரியதண்டனைகளைப் பொதுமக்களுக்கு வழங்கியிருக் கின்றேன்” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்.
அவர் பேச்சைக் கேட்ட யம தூதுவர்கள், "சரி, சரி போகட்டும், நாங்கள் உனக்குத் தண்டனை வழங்கியே களைத்துப் போய் விட்டோம்.இனிமேல் நீயும் எங்களு டன் சேர்ந்து பாவாத்மாக்களுக்குத் தண்டனை வழங்கும் கருமங்களைச் செய்" என்றார்கள்.
வேலையை ஒப்புக் கொண்ட அவர் திடீர் என உணவு உட்கொள்ளாமல் சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டார். விடயம் யமதர்மனுக்குத் தெரியப்படுத்தப் பட்டதும், "ஏனப்பா என்ன விஷயம், உனக்கு உணவு உண்ணக் கொடுத்ததே பெரியவிஷயம், இதில்சத்தி யாக்கிரகம் வேறா எனக்கேட்க அவரும்,"பிரபோ. எனக்கு எப்போதுமே ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டே யிருக்க வேண்டும். அது என் இயல்பு, எனவே எனக்கு அங்கு
- 106 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதினர் சாதனை செய்! பணியாற்றும் உங்கள் தூதுவர்களின் தலைமைப் பொறுப்பை எனக்கு வழங்கி விடுங்கள். பிரச்சனை யேயில்லை. எனக்கு, அதுவே மிகவும் பிடித்தமான ஏற்கனவே செய்து அனுபவப்பட்ட வேலையுமாகும்”. என்றார். நரகத்திற்குப் போனாலும் திருந்தவே மாட்டாத மனிதர், இவர்களைப் போற்றவர்கள் தான்!
பதவிவெறி, பதவிமோகம், என்றெல்லாம் நாம் சொல்கின்றோம். துஷ்டர்கள் மத்தியில், ஒரு தலைவனாக வருவதற்கும் பிரியப்படும் மாந்தர்களும் உளர். திரைப்பட ங்களில் அசுரத்தனமாக அடித்துக் கொலை செய்யும் கதாபாத்திரங்களைக் கூடச் சுவாரஸ்யமாக ரசிப்பவர்கள் இல்லையா? தவிர,கதாநாயகன் என்பவன் எந்தக் கொடுரங்களைச் செய்தாலும் அதனை ரசிக்க அவரது ரசிகர்கள் தயாராக இருப்பது என்ன கேவலமான ரசனை உணர்வு ஐயா?
அன்பு, கருணை, காருண்யம் இல்லாதவனுக்கு வழங்கப்படும் தலைமைப்பதவியோ அல்லது சாதாரண கருமங்களுக்கான வேலைகளுக்கோ அருகதையில்லாத இத்தகையவர்கள் தங்கள் மேலாதிக்க உணர்வினை மக்கள் மேல் செலுத்துவார்கள்.
நீதித்துறை, காவல்துறைசார் நீதிபதிகள் சட்ட
வல்லுனர்கள், அதிகாரிகள் மக்களுக்கு எதிரான விருப்பிற்கு
எதிராகப் புறப்பட்டவர்கள் அல்லர். சமூகத்துடன் இணைந்து
வாழும் சட்ட விரோதக் கும்பல்களுக்கெதிரான நடவடிக் - 107 -

Page 56
பருத்திர் 049, ஓவிர்ததக் கைகளால் சில சமயம், சாதாரண அப்பாவிகள் கூட அல்லல்படும் நிலை உருவாகின்றது. மக்கள் நேயத்துடன் சில கருமங்களைச் செய்யும் போது பதவியில் உள்ள அதிகாரத்தினைச் செலுத்த வேண்டியுள்ளது.
"அதிகாரம்" என்பது கூட, தாம் வகிக்கும் பதவியி னைச் சரிவரச் செய்ய குறித்த வரையறைக்குள் ஏற்படுத்தப் பட்ட ஒரு வழிமுறை தான்.அதிகாரங்கள் மக்களை வதைப்ப தற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்காகவும் அல்ல. நெறிமுறைகளைப் பிறழவிடாது சரியான வழி நடத்தலு க்காகப் பிரயோகிக்கும் சீரிய வழிகாட்டலும், நடவடிக் கையுமாகும்.
சட்ட திட்டங்களை வழிநடாத்தும்போது கண்டிப்பும் அதிகாரமும் தேவைக்கு ஏற்ப கையாளப்படுதல் குறித்த பதவிக்கு ஏற்புடைய இயல்பேயாகும். சட்டவிரோதிகளைக் கடுமையாகத் தண்டிக்காதுவிட்டால் இந்த உலகம் நிம்மதியாகச் சீவித்துவிட முடியுமா?
இறைவன் இந்த உலகில் எல்லோருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு பதவியைக் கொடுத்த வண்ணமாயிருக்கின்றார். நாங்கள்தான் அதைக் கண்டு கொள்வதில்லை, முத்திரையிட்டுத் நியமனக் கடிதம் கொடுத்துக் கதிரையில் அமர்த்தினால் தான் "பதவி" என்பதும் அல்ல. நல்லவன், நாணயமானவன், பண்பாளன், பெரியோன் என்கின்ற பெயர்களைப் பெறுவதை விட என்ன பெரிய பதவி மனிதருக்கு வேண்டும் ஐயா?
- 108 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! குழந்தைச் செல்வத்தைப் பெற்ற அன்னை, "தாய்மை" என்கின்ற அதி உன்னத பதவியைப் பெற்றுக் கொள்கின்றாள். களங்கமற்ற அந்தக் குழந்தைக்குப் பலவிதமான நாம கரணங்கள் சூட்டப்படுகின்றன. இந்த அன்பான பெயர்கள் சொற்கள் எல்லாமே அதிக அன்புடை யோரால் சூட்டி மகிழும் பட்டங்கள். இந்தப் பாசமிகு கனிவான சொற்களால் மகிழ்வடையும் குழந்தைக்குச் சூட்டும், கண்ணே, கனியமுதே. செல்லமே. என்கின்ற பட்டங்கள் பல்கலைக் கழகப்பட்டங்களினால் கிடைக்கும் சந்தோஷங்களை விட மேலானவை.
பின்னர் குழந்தை பெரியவனாகி "இளைஞன்” என்கின்ற பெயரில் உலாவருகின்றான்.பொருத்தமான வேலை தேடுகின்றான்.அலுவலக்த்தில் அவனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படுகின்றது. அதுவே அவனது பதவியுமா கின்றது. அலுவலகத்திலும் வெளியேயும் அவன் ஆற்று கின்ற கருமத்திற்கான பதவியைச் சொல்லி அழைக் கின்றார்கள்.
ஒரு சாதாரண வேலையில் அமர்ந்து இருப்பவன் சும்மா இருப்பதில்லை. தனது நிலையை மேலே, மேலே உயர்த்த ஓடிக்கொண்டேயிருக்கின்றான். இத்தப் பதவிக் கான வேட்டை ஓயாமல் சென்று கொண்டேயிருக்கின்றது. சமூகத்தில் எந்த வேலைக்கு கெளரவம் அதிகமாக இருக் கின்றது? என்பதைத் தேடுவதிலேயே காலம் கழிகின்றது. சிலர் தமக்கு விருப்பமான பதவிக்கு எந்த விதமாகவும் தங்களை வளர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தான் ஒரு பெரிய அதிகாரியாகச் சேவை ஏதும் செய்யாமலேயே - 109 -

Page 57
பருத்திபூர் பல ஆயிரவநாதன் அரசியல் தலைவராக வரவேண்டும் என்றும் பிரியப்படு பவர்கள் இருக்கின்றார்கள்.
தகுதிக்கு மீறிய ஆசைகளை வளர்ப்பதும், அதனால் ஏற்படும் மன உளைச்சலும் ஒருவர்க்குப் பாதகமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். சில வேளைகளில் ஒருவருக் குத் தகுதிக்கு மீறிய பதவி கிடைத்துவிட்டால் அவருக்குப் பொருத்தமற்ற அந்த வேலையினால் பெருத்த அவமானப் பட வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். படிப்படியான வளர்ச்சிகள் தான் ஒருவரின் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளும். தன்னால் இயலாத பதவியில் ஒட்டிக் கொள்ளு தலால் அடுத்தவன் கேலியாக நோக்குவது மட்டுமல்ல, தெரியாத பணிகளால், சில முறைகேடான சம்பவங்கள் அவருக்குத் தெரியாமலேயே நிகழ்ந்து விடலாம் அல்லவா? நல்ல அனுபவங்களை வளர்த்து ஆற்றல்களைப் பெருக்கிச் சிறந்த உயர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுதலே உத்தம LDIT(5tb.
எல்லோருக்கும் உதவுகின்ற மனப்பான்மை உண்டா வதற்கும், உதவிகளை எந்தவிதமான எதிர்பார்ப்புகளு மின்றிச் செய்யும் நோக்கமுடையவர்களுக்கு அந்தஸ்தோ, பதவிகளோ இருந்தேயாக வேண்டுமென்கின்ற கட்டாய மில்லை.
நாம் பெறுகின்ற தொழில் மூலம் நியாயமாகக் கிடைக்கும் வசதி வாய்ப்புக்களால் வரக்கூடிய சாதகமான சூழ்நிலையைப்பயன்படுத்துதல் புத்திசாலித்தனமானது.
- 110 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின சாதனை செய்! குறுக்கு வழியில் தொழிலைப் பெற்ற அரசியல் வாதிகளில் சிலர் தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெறுவதற்காக அதே பாவச் செயல் மூலம் சாமான்ய மக்க ளிடம் உதவிகளைச் செய்வதாகச் சொல்லி, அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் பெறுவதை நீங்கள் அறிவீர்கள்.தவிர, மிகவும் கண்ணியம் மிக்க கல்விக் கூடங்களில் உள்ள அதிபர்களே தங்கள் கெளரவமான தொழிலை எண்ணாம லேயே பொதுசனத்திடம் பணம் அறவிடுதல், இன்று சர்வ சாதாரணமான நடவடிக்கையாகிவிட்டது.
என்றுமே நல்ல இதயத்துடன் நல்லதையே எண்ணு பவர்கள், நேர்மையாக உழைப்பவர்கள், குறித்த லட்சியத் தையே நோக்கி விரைந்து ஓடிக் கொண்டேயிருப்பார்கள். எதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிவதனால் அவர்கள் எண்ணிய எல்லாமே ஈடேறி விடுகின்றன.
உலகிற்கு ஒன்றுமே கொடுக்காது தங்களுக்கு எல்லாமே வேண்டும். நல்ல வேலை, நிலம், வீடு என்பதுடன் மேலதிகமான ஆசைகளுடன் சுயநலத்துடன் உலகத்திடம் கோருவது என்பது தான் பிச்சைக்காரத்தனமானதாகும். எதனையுமே வழங்காமல் கேட்பது "யாசகம்" என்பதைத் தவிர, வேறு ஏது அர்த்தமுண்டு? உண்மையான முறையில் உழைத்துத் தொழில் தேடிக் கொண்டவர்களைப் பாருங்கள்! அவர்கள் வீண், பெருமை, பகட்டுகளுடன் தம்மைக் காட்டி நிற்பதில்லை. உயர் அந்தஸ்துடன், வாழ்ந்து கொண்டி ருக்கும் பலர் மிகவும் எளிமையாக வாழ்ந்து கொண்டிருப் பதைக் கண்டிருப்பீர்கள்.
- 111 -

Page 58
பருத்தி: 04ல. ஆயிரணுகுந்தர்
"செய்யும் தொழிலே தெய்வம்" என்பார்கள் எமது தொழிலில் நாம் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் கண்டிப்புடனும், அதன் மீது பற்றுதலுடன் செயது வர வேண்டும். சில சமயம் நாம் எதிர்பார்த்ததைவிடப் பெற்ற தொழில் சிறியதாக இருக்கலாம். படித்த படிப்புக்கு உகந்த வேலை கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவோர் அநேகர் இருக்கின்றார்கள். இருப்பினும், திறமையான ஆற்றலுடன் நாம் எமது காரியங்களையாற்றி வந்தால், நாம் எதிர்பார்த்ததற்கும் மேலான பெரும் பயனைப் பெற்றே தீருவோம். மிகவும் படித்துவிட்டுத் தனக்கு ஏற்றபதவிகிட்ட வில்லையே என, ஏங்கி ஸ்தம்பித்த நிலையில் நின்று உழலு வதைவிடக் கிடைத்த வேலையை ஏற்றுச் சிரத்தையுடன் முழுமையாகத் தம்மை அர்ப்பணித்துச் செயல்படுதலே கெளரவமானதாகும்.
இன்று, பலரும் சொல்கின்ற ஆதங்கம் இதுதான், என்னதான் பெரிய பதவி கிடைத்தாலும் கிடைக்கின்ற ஊதியம் குறைவாகவே இருக்கின்றது என்கிறார்கள். இதனால், பணம் புரட்டுகின்ற வழிதான் மேலானது, வெறும் பதவிகளுடன் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஒரு பிரயோச னமும் இல்லை எனக்கருதி, அரச, தனியார் நிறுவனங் களில் தொழில் தேடுவதை விடுத்துச் சுயதொழில் மூலம், தங்களை வளப்படுத்தப் பலரும் முனைகின்றார்கள். தற்போதைய விஞ்ஞான, தொழில் நுட்ப யுகத்தில் இவை யெல்லாமே சாத்தியப்படக் கூடிய ஒன்றுதான்.
- 2 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
மன உறுதியுடன் வாழ்பவர்கள் எதனையும் ஏற்பதற்கும், துணிவுடன் ஒரு செயலை முன்னெடுத்துச் செய்வதற்கும் தயங்கமாட்டார்கள். பதவியும், அதனால் கிட்டும் புகழும், மனிதர் விரும்புகின்றவொன்றேயாம். ஆயினும் எம்மை நாம் வளப்படுத்தியேயாக வேண்டும்.
நல்ல கல்விமானாக, கலைஞனாக, அரசியல் வாதியாக, ஆன்மீகவாதியாக, இலக்கியவாதியாக எனப் பலதரப்பட்ட விடயங்களில் ஈடுபட்டுப் புகழீட்டியவர்கள், மக்கள் மனதில் அழிக்க முடியாத நல்ல அடையாளத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இந்த உன்னத நிலை கூட ஒரு பெரும் "பதவி” தான்.
நாம் எக் கருமங்களையும் எமக்காகவும், எங்களுடன் கூடிவாழுகின்ற நெஞ்சங்களுக்காகவும் செய்துவரின் அதன் மூலம் கிட்டுகின்ற "திருப்தி” என்பது எந்தப் பதவியிலும் கிட்டாத மேலான நிலை என்பதில் ஏது சந்தேகம்?
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி 04:05.2008
- 113 -

Page 59
பருத்திபூர் பல. ஆயிரவருதல்
நல் லன நல் கும் நம் மிக் கைகள்
எண்ணங்களின் உறுதி மேவ நம்பிக்கை உருவாகும். வண்ணமிகு குணங்களை உனதாக்கிக் கொண்டால் சந்தோஷ சாம்ராஜ்யம் சாத்தியமானதே! சிந்தையில் தெளிவும் சோர்விலா உழைப்புமே மேன்மை,
உறுதியான எண்ணத் தளத்திலிருந்து "நம்பிக்கை கள்” வேறுன்றி ஸ்திரமாகி விடுகின்றன. எனவே எண்ணும் எண்ணங்கள் யாவுமே நல்லனவாக அமையட்டும். அதுவே நிறைவேறும். எண்ணம் போல் வாழ்வு மறக்க வேண்டாம்!
- 114 -
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதினர் சாதனை செய்! நல்ல நம்பிக்கை உணர்வுகள் நற்காரியங்களாக மாறுவதால் ஏனையவர்களும் உங்கள் மீது நல்ல அபிப் பராயம் மிக்க மனிதராகி உங்களுடன் இணைந்து இயங்குவர்.
நம்பிக்கைகள் கூட ஒரு வித பற்றுதலாகவே அமைந்து விடுகின்றது. மதம் , மொழி, இனம் , நாடு எனப் பலதரப்பட்ட விஷயங்கள் மாந்தருடன் பின்னிப் பிணைந் துஎளன. மனிதன் விலகிட முடியாத மிக இறுகிய கட்டினுள் அவை சங்கமித்துள்ளன.
எனினும் நம்பிக்கைகளுக்கும், பற்றுதல்களுக்கும் சிலசிறிய வேறுபாடுகள் உண்டு காலம் காலமாக எமது சமூகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள மதம்,மொழி, நாடு தொடர்பன இறுகிய பிணைப்புக்களை சாதாரண பற்றுதல்களுடன் ஒப்பீடு செய்ய முடியாது
எனினும் நாம் நாட்டுப் பற்று, இனப்பற்று, மொழிப் பற்று என்கின்றோம். சாதாரணமான பற்றுக்கள் விட்டுப் போகும். ஆனால் மதம் நாடு, இனம் தொடர்பான பிணைப்புகள் குருதி ஓடும் வரை தொடரும். அடுத்த ரம்பரையடன் இணைந்து கொள்ளும்.
எனவே இவைகளின் அசையாத எண்ணங்களோடு ஜீவிதம் செய்யும் போது அவை இறுக்கமான நம்பிக் கையாகி விடுகின்றன.
- 115 -

Page 60
பருத்தி: 24). ஆவிரலுருதத்
எனவே நாம், எமது மொழி, இனம், கலாச்சாரங் களை பிறிதொரு மொழி, இனம், கலாச்சாரம் சார்ந்தவர் களால் தவறாக விமர்சனம் செய்தால் எம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
யாரோ எவரோ கண்டபடி உளறினால் அவர்கள் சார்ந்த இனத்திடம் வஞ்சகம், குரோதம் கொள்வதே மனித சுபாவம் ஆகிவிட்டது. இந்த ஆரோக்கிய மற்ற மனவளம் குன்றிய நிலை தான் ஒன்றுபட்ட சமூகங்களைப் பிரித்துப் பந்தாடுகின்றது.
எவரது நல்ல நம்பிக்கைகளான நடத்தைகளை நாம் தேவையின்றி ஆராயக் கூடாது. நல்ல நண்பர்களை உருவாக்க வேண்டுமேயானால் அவரது தனித்துவமான நல்ல நம்பிக்கையினுள் நாம் பிரவேசித்து அவைகளை மாற்றி அமைக்க முயற்சி செய்வதாகாது.
ஒருவர் நேசிக்கும் மதக் கொள்கையினைத் தவறு எனச் சொல்ல நாம் யார்? எங்கள் இனம் சார்ந்து மட்டும் இந்த உலகு தங்கி இருக்கவில்லை. எல்லாமே பிணைந்து இயங்குவதே உலகம்.
எந்த மக்களின் நியாய பூர்வமான கருத்துக்கள் ஏற்புடையதாயின் ஏற்பதே சிறப்பு: தமக்கு என்ன தேவை என்பதே பலருக்குப்புரியாத நிலையில் அடுத்தவன் தேவை கேைள அர்த்தமற்றது எனச் சொல்லலாமா?
ܚ 116 ܚ

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! எவரது நீதியான செயலுக்குப் புறம்பான ஆசைகளை எவருமே அனுமதிக்க முடியாது.
சமூக விரோதமான செயற்பாடுகளில் நம்பிக்கை வைப்பது ஒரு தற்கொலைக்கு சமமானது. அது மட்டு மல்ல, இவர்களால் ஏற்படும் விபத்துக்கள் கொடுஞ் செயலுக்கு ஆதரிப்பது, அவர் செய்யும் செயலைவிடக் கொடியது.
ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியான உன்னதமான கலாச்சார நெறிகள் உண்டு. ஆயினும் உலகம் முழுமைக்குமான கலாச்சாரமும் உண்டு அது நல்லன எல்லாவற்றையுமே, எவரிடமும் அறிந்து அவ்வண்ணம் ஒழுகுதலாகும்.
சிறந்தவைகளைப் பயில்வதே உன்னதமான உலக கலாச்சாரமாகும்.
எனவே சரியான, நியாயபூர்வமான வாழ்வு முறைகளின் மீதே நாம் கட்டுறுதியுடன் பெருநம்பிக்கை கொள்ள வேண்டும் இதற்கு மத,இன வேறுபாடுகள் என்பது இல்லவே இல்லை.
தன்னம்பிக்கை என்பது தனது செயல்களின் மீதான நம்பிக்கையாகும்.இது துணிவும் ஆளுமையுடன் சம்பந்தப்பட்ட தாகும். ஆனால் "நம்பிக்கை” என்பது மக்களின் பொதுமையான பண்பு.
- 117 -

Page 61
பருத்தி: 04ல. அவிழ்வருந்தர்
ஒருவர் தன்னை விஸ்திரப்படுத்தி ஆளுமைகளை வளர்த்துக் கொண்டால் தன் நம்பிக்கையும் கூடவே நற் செயல்களில் மட்டுமே கொண்டிணைந்தவர்களாக இயங்கி வரின் தேசம் இவர்களைத் தழுவிக்கொள்ளும்
துயரங்கள், புற தாக்கங்களால் ஒருவருக்கு தங்கள் மீது மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்கள் மீதும் வெறுப்பை உண்டு பண்ணலாம்.
"இந்த உலகில் எது ஐயா உண்மை? எல்லாமே பொய், எனக்கு எதிலுமே நம்பிக்கை கிடையவே கிடையாது. கடவுள், இந்த மனுஷர்கள் எல்லாமே எனக்குத் துரோகம் செய்கிறார்கள் நியாயங்களுக்கு இங்கு ஏது ஐயா காலம்" என மனம் வெதும்பும் மாந்தர்களின் பேச்சுக்களை நீங்கள் கேட்டிருக்கலாம்.
மாறுதல்களை ஏற்கமறுத்தால் எங்னனம் உண் மைகளைப் புரிந்து கொள்ள முடியும்? எமக்கு முரணாக நடந்தால் யதார்த்த நிகழ்வுகளைக் கரித்துக் கொட்டுவதால் பயன் இல்லை உயர்வு மிகு நம்பிக்கை களே வாழ்வை இனிமையாக்கும்.
உண்மையிலேயே நல்லோர் தமக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சந்திக்கும் போது மனம் மறுகி, உருகி அவதிப்படுதல் இயல்பே எனினும் இந்தத் துன்பம் தற்காலியமானது இவர்களைப் போன்றோர் மனம் பேதலித்தல் ஆகாது.
- 118 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! நல்லதே நிகழும் என நம்பிக்கைகளை மனதில் பொருத்துவதே சாலச் சிறந்தது. ஏற்புடைய சிறப்பான, நீதியானவர்களை மறுத்தல், ஒறுத்தல் வாழ்வில் நிகழப் போகும் வெற்றிகளைத் தாமாகவே குறைத்ததாக அல்லது அறுத்ததாக அமைந்து விடலாம்.
கற்றுக் கொண்ட சகலவைகளுமே நல் நம்பிக்கை பூட்டுவனவாக அமையட்டும். எமது புலன்கள் அதன் மீதேலயிக்கட்டும். நேரிய பார்வை உயரிய நோக்குள்ள நெஞ்சுறுதி இருந்தால் இறுதி வரை எமது வெற்றிகளை எவருமே தடுத்திடல் இயலுமோ?
தினகரன் வார மலர்
24.07.2011
- 119 -

Page 62
பருத்தி பல. ஆயிரவருதல்
கொடை வழங்கல்
கொடை வழங்குதலால் பெறும் லாபம் கோடி கடவுள் கொடுத்ததை ஏழைக்கும் வழங்கு! கல்வியை சரீர உழைப்பை, சிரிப்பை, பரிவை நல்லவை எதனையும் நல்குவோன் நெடிது உயர்வான்.
கொடை வழங்குதல் என்பது பணம் பொருளை மட்டும் எவருக்காகவும் கொடுப்பது அல்ல! கோடுத்தலை ஒரு வட்டத்தினுள் அடக்கி விட முடியாது.
தேவையறிந்து நல்க வேண்டும் என்பர். அதுவும் நல்ல நோக்கத்திற்காக வழங்குதல் அவசியம் வீம்புக்காக கொடை என்ற பெயரில் ஏதாவது கொடுப்பார்கள். கொடுத்த பின் சொல்லித் திரிவார்கள். கொடுத்ததைச் சொன்னால்
தர்மம்-சிரிக்கும்: = 120--
 

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
நீண்ட காலத்துக்குப் பின்னர் வெளி நாட்டில் இருந்து ஒருவர் தனது கிராமத்துப் பழைய நண்பரை வந்து சந்தித்தார். "உன்னைக் கண்டு எவ்வளவு வருடங் கலாச்சு. நீயும் நானும் சேர்ந்து மது அருந்தியும் கால ங்கள் பலவாகி விட்டன. நீ எனக்கு முன்னர் எவ்வளவு முறை இவைகளை வாங்கித் தந்திருப்பாய். அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமல்லவா இந்தா. பத்தாயிரம் ரூபாய், விரும்பியதைக் குடி” என்றவாறு காசைக் கொடுத்து, அவ்விடத்தை விட்டுக் கலைந்தார்.
ஏற்கனவே பெரும் குடிகார நண்பர்களுக்கு அவர் கொடுத்த வெகுமதி இதுதான். இனியாவது குடியை விட்டு ஒழி! நல்ல வாழ்வை மேற்கொள், எனச் சொல்லி அதற் கான வழியைக் காட்டாமல் சென்று விட்டார். அவரை மோசமான வழிக்கே நட்பின் பெயரைச் சொல்லி வேறு திருப்திப்படுத்துகின்றார். இது ஒரு கொடையல்ல பாவத்திற்கே வழிகாட்டும் கொடிய கடை கெட்டவழி
சந்தோஷங்களை சந்திக்க விரும்புபவர்கள் அது நல்ல வழியில் அமைந்ததா என எண்ண வேண்டும். நேர்மையான முறையில் வாழப் பிரியப்படுபவர்களுக்கு நித்ய இன்பம் கிட்டச் சில தடைகள் ஏற்பட்டாலும் அது விலகும். ஸ்திரமான களிப்பிற்குள் வாழ வழி கிட்டும்.
இன்று இலவசமாகப் பெற்ற வாழ்க்கை வசதிகளைப்
- 121 -

Page 63
பருத்திபூர் பல ஆயிரவநாதன் பழுதாக்குபவர்கள் ஏராளம் ஏராளம்! எனவே கொடை வழங்கும் வள்ளல்கள் அவை சேரும் இடங்க ளையும் நோக்க வேண்டும்.
இதனை உணர்ந்தே பல நிறுவனங்கள் ஏழைகள், அல்லது வசதி குறைந்தவர்களுக்கு பணம் வழங்காது அவர்கள் தொழில் செய்ய ஏதாவது கருவிகள், உபகரண ங்களை வழங்குகின்றார்கள்.
வீடுகளை அமைக்க மூலப் பொருட்களை அரசு தொண்டு ஸ்தாபனங்கள் அளிக்கின்றன வெறுமனே காசைப் பெற்றுச் சும்மா இருக்காது உடல் உழைப்புடன் வழங்கும் பொருட்களைக் கொண்டு வாழ வழிகாணுதல் சிறப்பு அல்லவா?
எல்லோருமே சிரமப்பட்டுத் தான் உழைக்கின் றார்கள் யாரிடமாவது உதவி பெற்றவர்கள் சிலர் சொல்லும் கூற்று அருவருப்பானது.
"அவருக்கென்ன ஏராளமாக வைத்திருக்கிறார் கொடுத்தால் என்ன, குறைந்தா போய் விடுவார்" என்பார்கள் இன்னும் சிலர் சொல்வது இப்படி இருக்கும்.
"இவர் பெயருக்கும் புகழுக்கும் கொடுக்கிறார் செய்த பாவத்தைக் கரைக்கப் புண்ணியம் தேடும் வழி இது" என்பார்கள்.
இத்தகைய கிண்டல் கொச்சைப் பேச்சுக்களைச்
- 122 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதினர் சாதனை செய்! செவிமடுக்கால் நல்லன செய்யும் உத்தமர்கள் பலரும் இருக்கின்றார்ள்.
தவறுள் செய்பவர்கள் அதனை மறைக்கச் செய்யும் கொடைகள், இறைவனிடம் செல்ல செய்யும் தடைகள். திருந்திய ஒருவர் நடிக்க வேண்டிய அவசியம் ജൂൺങ്ങബ,
சமூகதிற்கு எத்தகைய நற் சேவைகள் செய்தா லுமே அது ஒபற்ற பழக்க வழக்கங்களாகி விடுகின்றன. கல்விக் கொடை என்பதே மிகவும் பிரதானமான உன்னத ஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அரசங்கமே இலவசமாக அனைத்து மாணவர் களுக்கும் கல்விச் சேவையை அளித்து வருகின்றது இருப்பினும் இன்று பல ஆசிரியர்கள் கல்வியைத் தனிப்பட்ட ரீதியில் பணம் பெற்று அளித்து வருகின்றனர். ஏழை மாணவர்கள் இவ்வாறு பணம் செலவழித்துக் கல்வியைப் பெற இயலாது
"ஆனால் எப்படியாவது எங்கள் பிள்ளைகளின் எதிர் கால நலன் கருதி வாயை, வயிற்றைக் கட்டி பிள்ளை களை பிரத்தியேக வகுப்புகளுக்கு மேலதிகமாகச் செலவு செய்து அனுப்புகின்றோம்" என வசதி குறைந்த பெற்றோர் சொல்லக் கேட்கும் போது பரிதாபமாக இருக்கின்றது.
இதேபோலவே வைத்திய சேவை என்பது அரசாங்
- 123 -

Page 64
பருத்திபூர் அல. ஆயிரவருதல் கத்தினால் மட்டுமே நடாத்தப்படுகின்றது. இன்று வைத்தியத் தொழில் பிரசித்த வாணிபத் தொழிலாகி விட்டது.
உயிர் காக்கும் சேவையினைப் பெற தனியார் வைத்தியசாலைக்குச் செல்ல சாமான்ய மக்கள்படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.
அரசாங்கம் செலவு செய்து சேவைகளை நல்கும் போது அதனை உணர்ந்து ஊழியர்கள் சேவை மனப்பான் மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
போக்கு வரத்து சேவை,சுகாதார சேவை என்று எல்லாமே அத்தியாவசிய தேவைகளாக இருப்பினும் அங்கு நிகழும் திடீரென நிகழும் பணிபுறக்கணிப்பு மக்கள் நலன் களையே மறுத்து ஒதுக்கும் நடத்தையல்லவா?
தன்னலம் பாராது கொடை வழங்கும் வள்ளல்கள் ஒரு புறம் இருக்க தங்களது கருமம் என்ன என்றே தெரியாமல் ஊதியம் பெற்றும் கடமைகளை செய்ய மறுக்கும் நபர்கள் மானுட நேயமற்றவர்களே!
மனம் வளர்ந்தால் வழங்கும் இயல்பு எளிதாய் மலரும். மானுடம் ஒன்றே எனும் நோக்கு பரிணமித்தால் ஒருவருக்கு ஏற்படும் வடு எல்லோர் இதயங்களிலும் பதியும் இதனால் துன்பம் துடைக்க அனைவரும் முன் வருவர்!
எல்லோருக்கும் "வலி" துன்பங்கள் வரலாம் அதன்
ܚ ܲ124 -

கனப்பொழுதேயாயினும் யுகம்பொழுதின் சாதனை செய்!
கொடிய வேதனையைப் புரிவதும், புரிந்து களைவதுமே பிறவியின் அர்த்தம் இருக்கின்றது.
அர்த்தம் இல்லாத வாழ்வு அலுப்புத் தட்டி விடும். கொடுப்பது இன்பம். உங்கள் வழங்களினால் பிறர் அடையும் திருப்தியோ நீங்கள் அனுபவிக்கும் பேரின்பமாகி விடும். உலோபித்தனத்தை உதறி எறிவதே இதயத்தைச் சுத்தமாக்க வல்லது கொடை என்பது ஊதாரித்த னமானதும் அல்ல. தேவையறிந்து வழங்கும் தெய்வீகச் செயல். இதனைப் புரிந்திடுக!
தினகரன் வார மலர்
31.07.2011
- 125 -

Page 65
பருத்திபூர் பல. ஆயிரவநாதர்
தாம்பத்தியம்
தாம்பத்தியம் சௌபாக்கியம் மெய்காதல் உறைவிடம். சம்பாத்தியம், இல்லற தர்மம் பேணினால் கிடைப்பதாம். நித்தியம், சத்தியம், போற்றிய தம்பதியர்க்கு அத்தனை பேறுகளும் கூறாமால் வந்து சேரும்! உத்தம இல்லறம் இதுவே பெரும்வரம்!
நல் நெறியுடனான தாம்பத்தியம் சௌபாக்கியம் என்றுமே மாறாத இயல்பினராய் கணவனும், மனைவியும் உள்ளத்தாலும், உடலாலும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வதே தாம்பத்திய உறவு ஆகும்.
வாழ்வாங்கு வாழ்தல் என்பது இல்லறத்தார்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரத்தினருக்குமான அற வாழ் வாகும்.
- 126 -
 
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! களவன், மனைவியாக இல்லறத்தினை நடத்துவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் செம்மை ப்படுத்துவது மட்டுமல்ல, அதனூடாக அவர்கள் தமது பிள்ளைகள், உற்றார், உறவுகள் நண்பர்களுக்கான நற்பணி களை மட்டுமே நோக்காது பரந்து பட்ட சமூகத்திற்காகவும் சேவைபுரிய வேண்டியவர்களாகின்றார்கள்.
எனவே இந்த உறுதி மிக்க செயல்களை ஆற்றத் தேவையான ஆளுமைகளைப் பெற அன்பான காதல் வாழ்வு தம்பதியினருக்கு அத்தியாவசியம் தேவையானது என்பதில் ஏது ஐயம்?
காதல் வாழ்வு என்பது இளமைக்கே உரிய அழகு என்பார்கள். ஆனால் கணவன், மனைவிக்கிடையே மாறாத காதல் என்பது முதுமையில் மெருகு ஏறும்.இளையோர்க்கு இது பாடமாகும். "அடடா இந்த வயதிலும் இத்தகைய பிணைப்பா." என வியந்து நோக்கும் இளைஞர் இங்ங்ணம் வாபவர்களைக் கண்டு பொறாமை கொள்வதுமுண்டு
உடல் மீதான இச்சை நிச்சயமற்றது. வாலிபத்தின் மிருக்கு வெளி அழகிற்கு இடமளிக்கின்றது. வாழ்வின் ஆழம் புரிபாத பராயத்தில் "எப்படி ஒரே பெண்ணுடன் வாழ் நாா பூராவும் வாழ முடியும்" எனச் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். இப்படிச் சொல்வது கூட ஒரு நாகரீக மானது என வீம்பாகவும்.சொல்லிக் கொள்பவர்கள் வெளி நாடுகளை இதற்கு உதாரணமாகவும் காட்டுகின்றார்கள்.
- 127 س

Page 66
மருத்தி: 040 ஆயிற்றிருந்தன்
எல்லா நாட்டிலும் உள்ளவர்கள் எல்லோருமே கணவன், மனைவியின் புனிதமான உறவைப் புரியாதவர்க ளும் அல்லர். இந்த உறவு ஒரு பொழுதுபோக்கு அம்சம் இல்லவே இல்லை.
காலம் காலமாகவே எமது முன்னோர்கள் வாழ்வின் இறுக்கமான பிடிப்பினை உருவாக்க கணவன், மனைவி உறவின் புனிதம் பற்றித் தமது இலக்கியமூடாக போதனை களைச் சொல்லியிருக்கின்றனர்.
மூடிய உடலுக்குள் உள்ளிருந்தவாறே சுற்றி சுற்றி ஒடிய வண்ணம் இந்த உடலை உயிருடன் இயக்குகின்
றது "குருதி"
இதே போல சமூகக் கட்டமைப்பிற்குள் என்றும் விலகாது என்றும் இயங்கியபடி குடும்பத்திற்கும், உலகிற் குமாக உழைக்கின்றவர்கள் இல்லறத்தைச் செப்பமாகப் பேணும் கணவன், மனைவி எனப்படுவோர்.
திருமண பந்தத்தினுள் இணைந்த ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் பிரியாதிருக்க வலுவான அன்பினைப் பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாவர். உள்ளத்தால் இணைவதுடன் உடலாலும் இணைகின்ற னர். தாம்பதியத்தில் உடல் சேர்க்கை அன்பை மேலும் வலுவாக்கின்றது. இது ஒரு அந்தரங்க ஆழ்ந்த உரிமையுடனான பரிமாற்றங்கள்.
- 128

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
“தனக்காக ஒருவன்" அல்லது "தனக்காக ஒருத்தி” எனும் எண்ணம் ஸ்திரப்படும் போது உடல் இன்பத்தை விட என்றும் இனிமை தரும் காதலே பெரிதென உணர் வார்கள்.
எக் காரணத்தைக் கொண்டும் தேவையற்ற வார்த் தையாடல்கள் மூலம் மனங்களைத் துளைபோடும் செயல்களில் இருவரும் ஈடுபடக் கூடாது.
எவர் பெரியவர் என்கின்ற வாதங்கள் தாம்பத்திய உறவைக் கெடுக்கும். நீண்டகால இடைவெளியில் தேவை யின்றிப் பிரிந்து வாழுதலும் கூடாது.
"ஊடல்” என்பது நீண்ட நேரத்தில் அமைதல் தகாது. பொய்க் கோபம் கொள்ளும் போது ஒருவனின் மனத்தைத் கெடுக்கும், நெரிடும் சொற்பதங்களை தமக் குள்ள உரிமை காரணமாக உளறி விடுகின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் சார்ந்த குடும்பம், அவர்களின் உறவினர்கள், பிறந்த கிராமம், அல்லது நகரம் பற்றி அதீத ஈடுபாடுகள் உண்டு எவராவது தனது சொந்த ஊரைக் கேலி பேசினால் விட்டு விடுவார் களா?
எனவே சாதாரண சின்னச் சின்ன மனஸ்தா பங்களுக்கும் ஒருவர் புனிதமாக நேசிக்கும் எதனையுமே இழிவாகப் பேசுதல் ஏற்புடையதல்ல.
- 29 -

Page 67
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
பொது இடங்கள் வைபவங்களில் முதுமையுற்ற கணவர்,மனைவியர் ஒருவருக்கு ஒருவர் ஆதாரமாக இணைந்து வருவதைக் கண்டிருப்பீர்கள். திருமண நிறைவு விழாவினைகளிப்புடன் ஆண்டுதோறும் நடாத்துவது ஒரு இனிய நிகழ்ச்சியேயாகும்.
திருமண ஆண்டு நிறைவுகளை இருபத்து ஐந்து, ஐம்பது வருடங்கள் பூர்த்தி செய்யும் போது தான் தாம்பத்ய வாழ்வின் முழுமையை நாம் எம் கண்முன்னால் காணும் பாக்கியத்தைப் பெறுகின்றோம். இந்த பெருமைமிகு பெரியவர்களிடம் ஆசி பெறுதலேமேன்மை.
திருமணமாகி ஒரு சில ஆண்டுகளிலேயே மனம் திரிந்து மணமுறிவு பெறும் இளைய தலைமுறையினர் இவர்களை போன்றவர்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வெறும் உடல் அழகை, பணம், பொருள் செல்வத் தை மட்டும் பெரிதென நோக்கி வாழ்வில் இணைவதும் பின்னர் தங்களுக்குள் உண்மையான அன்பு இன்மை யால் விலகி மண வாழ்க்கையை இழக்க முனைவதும்
இழிவு,
ஆரம்ப காலத்தில் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து பின்னர் முதுமை வந்த பின்னர் மோதிக் கொள்வது பிறரை நகைக்க வைக்கும் செயல்.
- 130 -

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
எனினும், மனைவியின் பெருமையை முதுமை யில் உணரும் ஆண்களே மிகுதி இளமையில் தீய செயல்களில் தோய்ந்து புரண்டு நோய்கள் வந்த பின் மனைவியின் மடியில் விழும் பலரைக் கண்டிருக்கின்றோம்.
அதுபோல் அன்பான மனைவியின் ஆரோக்கியம் குன்ற, பெற்ற பிள்ளைகளும் கைவிட மனைவியைக் குழந்தை போல் போஷிக்கும் கணவன், மனைவி மீதான பிணைப்பின் பலத்தையும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றோம்.
காதல் பற்றிப்பெருமை பேசுவோர் தங்கள் இல்லற வாழ்வினை முழுமையாக அனுபவிக்கின்றார்களா? என நோக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்தாலே போதும் அவர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடக்கத் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள கொண்டு விடுவார்கள்.
புரிந்து கொண்டே காதலித்தோம் இன்று முரண் பட்டு பிரிந்து விட்டோம். என்பது தாங்கள் தங்களாலேயே ஏமாற்றப்பட்டு விட்டதாகவே கருதப்படும்.
ஒருவரை ஒருவர் விரும்பி மணம் செய்யப் புற அழகு பிரதானமாகின்றது. இது இயல்பு. ஆனால் யாரோ எவருடன் பழகி, அவர்கள் இயல்பு பிடித்திருந்தாலும் புற அழகு தெரிவதில்லை."உண்மை அன்பு" மேனி அழகைக் கண்டு கொள்ளாது கனிவே காதலுமாகின்றது.
- 131 =

Page 68
கருத்திபூர் அல. ஆயிரவருத்துக்
ஆயினும் சிலர் எந்த விடயத்திலும் தெளிவின்றி கலங்கியபடி இருப்பார், தேவதை போல மனைவி வாய்த்து அத்துடன் செல்வம் செல்வாக்கு உள்ளவளே ஆயினும் இவர்களுக்கும் குடும்ப உறவு திருப்தியாக இருப்பதில்லை. இதே போலவே நல்ல குண நலன்களும் பெரும் பதவி பலம் இருந்தாலும் அவனையே வெறுக்கும் பெண்களும் இருக்கின்றார்கள்.
இவர்கள் தேவைகள் எதுவாக இருப்பினும் அது எதுவென அவர்களுக்குப் புரிவதில்லை. ஆயினும் அடிப் படையான அன்பு பூரணமாக மலராது விடின் எல்லாமே குறைபாடாகவே புலப்படும்.
உடல் சார்ந்த உறவுகளில் பலவீனம், காதல் தோல்வி, எண்ணியவை போல் வாழ்க்கை அமையாமை போன்றவைகளால் மனதைக் கசக்கிக் கொண்டு வாழ்ந் தால் மணவாழ்வு கானல் நீராகவே தோன்றும்.
இதனால் குமுறி நொந்து போகும் சிலர் உாவளச் சிகிச்சைகளை நாடுகின்றார்கள் அனால் இவைஎந்த அளவிற்கு நல்லபலனை அளிக்கு மென்று கூறமுடியாது நல்லமனவள நெறியாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மேலும் பலரும் தங்கள் பக்கத்து நியாயங்களையே சொல்லிக்கொண்டிருப்பார்களே ஒழிய தமக்கான பிரச்சனைகளை மன வடுக்களைக் களைவது பற்றி ஒன்றும் தெரியாமலேயே வாழுகின்றார்கள்.
எந்தப் பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம் ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறவைச் - 132 --

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
செப்பனிடத் தயாராக இருக்க வேண்டும்.
எங்கள் முன்னோர்கள் தங்கள் எண்ணப்படி ஒரு வனை, ஒருத்தியிடம் இணைத்து விடுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் வரும் இடர்களை பொருட்படுத்துவதில்லை. கூட்டுக் குடும்பம் சமூகப் பிணைப்பு போன்றவற்றுடன் சங்கமித்த வாழ்க்கை இது தத்தமது கலை, கலாச் சாரங்களின் மீதான பற்றுதல்களுடன் வலுவான தெய்வ நம்பிக்கையும் அவர்கள் இல்லறத்தை நல்லறமாக்கியது. முதுமை பற்றிப் புரிவதுமில்லை, அது பற்றி அக்கறையு மில்லை.
கணவன் வெளியே போனால் தண்ணீர் கொடுத்து கால்களை கழுவச்செய்வது, தாம்பூலம் கொடுப்பது, படுக்கை விரிப்பதுபோன்றவைகளை பாட்டிமார் முதுமைக் காலத்திலும் சந்தோஷமாகவே இவைகளைச் செய்வார்கள். கணவனுக்கு உணவைத் தானே பரிமாறுவார்.
இதே போலவே அவரும் மனைவியை ஜோடியா கவே பொது வைபவங்களுக்கு அழைத்துச் செல்வார் என்றும் புது மனைவி போலவே தாத்தா வாஞ்சையுடன் நோக்குவார்.
இன்று இத்தகைய தாம்பத்திய உறவை காணுகின்
றோமா? இப்போது எல்லாம் மாறும் ஒருவரை ஒருவர்
கவனிக்க நேரம் கிடைப்பதில்லை. உணவு தயாரித்துவிட்டு
மனைவி வெளியே சென்றால் கணவனே எடுத்து உண்ண
வேண்டும் , பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப
- 133 س

Page 69
பருத்திபூர் அல. ஆயிரவநாதன் வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இல்லத் தலைவனே உணவு தயாரிக்க வேண்டும். அல்லது உணவு விடுதியில் வாங்கி வரவேண்டும்
கால ஓட்டத்தில் எல்லாமே மாறும். ஓரிரு வினாடி யும் சும்மா இருக்க முடியாது கணவன், மனைவி பிள்ளை களுடன் உறவாடி மகிழும் நேரம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.
எனினும் இருக்கின்ற பொழுதை இனிமையாக்க வேண்டும். பல குடும்பங்களில் வாழ்க்கைச் செலவைச் சரிக்கட்ட வாழ்வின் சுகங்களைக் குறைக்கின்றார்கள். எல்லோரும் ஒன்றாய் இருந்து வாழவே பிரிப்படுகி ன்றார்கள. ஆயினும், தற்கால வாழ்க்கை முறைக்கு இசைவாக இல்லை எனச் சொல்கின்றார்கள்.
நவயுகத்திலும் நாம் பழமையின் இனிமை, அதனுள் புதைந்த அமிழ்ந்தினும் இனிய வாழ்க்கை நெறியை என்றும் மறத்தலாகாது. கணவன், மனைவி உறவில் பூத்து நிற்பது புது உலகம், அன்பு, அறம், உள்ளத்தில் நிறைந்தால் துன்பம் என்பது ஏது? "நல்ல தாம்பத்தியமே சந்தோஷ சாகரம், சுகராக சங்கமம்"
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி 24.07.2011
ܚ ܲ134 ܚ

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
ஆராய்வு இன்மை
ஆராயாமல் காரியம் புரிந்தால் நேரிடும் இடர்கள், பெரும் தடையாய் போகும். அவசரம் என்பதே அநாகரிகமானதே! சரிவரச் செய்ய பொறுமை காக்க தெரிந்த பணிகளிலும் கவனம் செலுத்துக! விரும்பிய வேலையும் சுலபமாய் முடியும்
அது ஒரு ஆரம்பப் பாடசாலை. அங்குள்ள வகுப்பு ஒன்றில் மாணவர்கள் எல்லோருமே ஆசிரியர் கற்பிப்பதைக் கவனமாகக் கேட்ட வண்ணம் இருந்தார்கள். கரும் பலகையில் ஆசிரியர் கணக்கை எழுதிவிட்டு, மாணவர் களை நோக்கி, என்ன தெரிகின்றதா..? எதேனும் ஐயம் உண்டா? எனக்கண்டிப்பான தொனியில் கேட்டார்.
سن 135 سم

Page 70
பருத்திபூர் அல. ஆயிரவநாதன் மெளனமாக இருந்த வகுப்பறையில் மெல்ல, மெல்ல சிறிது சத்தம் உருவானது. பின்னர் எல்லோருமே ஆம்.ஐயா. விளங்கிவிட்டது. விளங்கிவிட்டது என ஒருமித்து குரல் எழுப்பினார்கள்.
ஆனால் வகுப்பறையில் ஒரு மாணவன் மட்டும், திரு. திருவென விழித்துக்கொண்டு தலை குனிந்தபடி இருந்தான அவன் நிலையை அவதானித்த ஆசிரியர் கோபமுற்று, "நான் என்ன சொல்கிறேன், நீ என்ன மாடு மாதிரி முழிக்கின்றாய். நான் என்ன தமிழில்தானே சொன்னேன் எனக் கர்ஜித்து விட்டு, என்ன நான் படிப்பித்தது விளங்குகிறதா. தெரிந்துவிட்டதா. சொல்” என மிரட்ட ஆரம்பித்து விட்டார்.
அவர் குரலின் உகூஷ்ணத்தினால், உடல் கருகி னாற்போல் அந்தமாணவனும் கூனிக்குறுகி ஐயா. எனக்குத் தெரியவில்லை. தெரியவில்லை என்றான்.
அவ்வளவுதான் ஆசிரியர் கடுங்கோபமுற்றுத் தனது கையிலிருந்த வெண்கட்டியை எடுத்து அவன முகத்தின் மீது வீசி எறிந்தார். அதிர்ச்சியடைந்த அவன் நாக்குழற நடுநடுங்க எழுந்தான்.
மீண்டும் ஆசிரியர் அவனை நோக்கி என்ன.
உனக்குத் தெரியவில்லையா என்று மீண்டும் கேட்க,
இல்லை ஐயா.எனக்குத் தெரியவில்லை என்று மீண்டும் - 136 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! கூற, என்ன.கொழுப்பா.எனச்சத்தமிட்டவர், அவனருகே வந்து தனது பிரம்பினால் கோபம் தீர, அடித்து, நொருக்கி "போ.போ. வகுப்பிற்கு வெளியெ போய் முழங்காலில் நில்." எனக்கட்டளை வேறு இட்டு, உறுமியபடியே தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.
அடுத்த வகுப்பு ஆரம்பமாக கணித ஆசிரியர் வெளியேறி விட ஆங்கில ஆசிரியர் உட்புகுந்தார் வகுப்பு ஆரம்பமானது. வழமைபோல் பாடப் புத்தகத்தை எடுத்தார். பாடங்களை விளக்கிவிட்டு, கரும்பலகையில் முக்கியமான சொற்பதங்களை எழுதி விட்டு, மாணவர்களை நோக்கி என புரிகிறதா. எனக்கேட்டார். எல்லா மாணவர்களுமே புரிந்து விட்டது ஐயா. என்று சொல்ல, ஆசிரியர் திருப்திப்பட்டுத் திரும்பியவர் முன்னர் குறிப்பிட்ட அதே மாணவனை நோக்கினார். வழக்கம் போல அவன் விழிக்கலானான். ஏன் உனக்கு விளங்கவில்லையா என்ன தெரியவில்லை என்று அமைதியாகக் கேட்டார். "ஐயா.எனக்குத் தெரியவில்லை” என்று அவன் மீண்டும் சொன்னான்.
ஆசிரியர் மனதில் ஏதோ எண்ணம் பட்டது. “சரி. சரி. இங்கே வா. இப்போசொல். கரும்பலகையைப் பார்த்துவாசி. தெரிகிறதா, விளங்காவிட்டால் சொல்லு" என்றார்.
மாணவனோ உடனடியாகக் கடகட என வாசிக் கலானான். ஆசிரியருக்குப் புரிந்துவிட்டது. தம்மிடமிருந்த - 137 -

Page 71
பருத்திபூர் பல. அவிழ்வருதல் புத்தகத்தைக் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அவன் அதனை வாசிக்கும் போதே "சரி. சரி. நிறுத்து, உனது அப்பாவை வந்து என்னைக் காணுமாறு சொல். நீ இனிவகுப்பின் முன்வரிசையிலேயே இரு”, என்றவர், "உனக்குப் பார்வையில் பிரச்சனையுள்ளது, பாவம் நீ என்ன செய்ய முடியும் , உடனடியாகவே எனது கடிதத்தை உனது தந்தையிடம் கொடு உடனே இங்கே வந்து என்னைப் பார்க்கச் சொல்” என்றபடி, அவனை ஆதரவுடன் தட்டிக் கொடுத்தார்.
மேற்சொன்ன சம்பவங்களிலிருந்து நீங்கள் அந்த மாணவனின் நிலை பற்றிப் புரிந்திருப்பீர்கள். கணித ஆசிரியருக்கும், ஆங்கில ஆசிரியருக்கும் உள்ள ஆராயும் திறனையும், அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இன்று இல்லத்திலிருந்து முழு உலகம் வரையும் மக்கள் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்கக் கால அவகாசம் கொடுக்காமலும் சிந்தித்துப் பார்க்கவே விருப்பமே இல்லாமல், நொந்து போய் இருக்கின்றார்கள்.
ஒருவரின் ஆராயாது நோக்கும் இயல்பு அவரை மட்டுமல்ல, அவரைச் சார்ந்தவரையுமே அவதிக்குள்ளா க்கின்றது. வீணான மன உளைச்சல், கால விரயம் போன்ற இழப்புகளை நாமாக விரும்பி வரவேற்குமாற்போல், நடந்து கொள்வது போல அறியாமை வேறு ஏது உள்ளது?
ܚ ܲ138 ܚ

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! விகளில்தவறான முடிவை எடுக்கும் இல்லத் தலைவனும், தலைவியர்களும், ஆராயாது எடுக்கும் தங்களது முடிவே நியாயமானது எனச்சண்டித்தனமும் செய்வார்கள். "இந்தப் புத்தகத்தை இங்கே தானே வைத்தேன் நீதான் எங்கோ எடுத்து வைத்துவிட்டாய்" என மனைவி து பாயும் கணவன், அது தனது கைப்பையில் இருப்பதைக் கண்டதும் பேசாமல், தனது தவறை ஒப்புக்கெர்ளாமலும் உண்மைகளை அவர் என்றுமே ஒப்புக்கொள்ளவே மாட்டார். என்பதும் புரிகின்ற தல்லவா? இந்த இய பு மாறவேண்டும்.
ம1தை காரணமாகத் திடீரெனக் கண்டு பிடித்த ஒவ்வாத முடிவுகளைப் பிறர் மீது திணித்தால் அதன் பாதி ப்புக்களை பார் ஐயா சுமப்பது?
இன்று அரச, தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் அறியாத விடயத்தில் மூக்கை நுழைத்துத் தங்களது முடிவுகளை ஊழியர்கள் மீது சுமத்தி அந்த நிறுவனங்ளையே மோசமாக நடத்துவதையும் நீங்கள் அறிந்திரும்பீர்கள்.
ஆாயாமல் வாழ்வைத் தொலைத்த பேர்வழிகள் ஏராளம். நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் நிச்சயமாகிப் பின்னர் யாரோ, எவரோ சொன்னார்கள் என்பதற்காக அதே திருமணத்தைக் கருணையின்றிக் கொய்த பிரகிருதிகள், மனதால் துரோகிகளே!
= 1399 س

Page 72
பருத்திபூர் பல. ஆயிரவருதல்
"கல்வி" எனபதே தெளிந்து, துலங்கி உணர்ந்து தேட வேண்டிய ஒன்று. தெளிவு இன்றேல் அறிவு முழுமை பெறாது. கல்வி கற்பவன் தனது ஐயம் தெளியும் வரை கேள்வி கேட்க வேண்டும்.
ஐயம் தீர்க்கப்படாதுவிட்டால் எதனையும் ஆராயும் திறன் அறவே வராது. எந்தக் காரியங்களிலும் உடன் முடிவு எடுக்க முடியாது. ஆனால், கால விரயம் காரியத்திற்கு
ஆகாது.
ஒன்றுமே புரியாதவர்கள் அறிந்தவர் போல் பேசுவார்கள். இத்தகையவர்களை நம்புபவர்கள் தங்கள் அறிவை நம்புவதேயில்லை.
கற்றவர்கள் கூடச் சில சமயம் தங்கள் முடிவே
அறுதியும், உறுதியுமானது எனச்சொல்லி சின்னஞ்சிறு
விஷயத்திலும் பொறுமையின்றித் தவறிழைத்து விடுகின் றனர்.
"அறிவு” எவர்க்கும் பொதுவானது. எவர் எதனைக் கூறினாலும் அதில் உண்மைகளை ஏற்கும் மனப்பக் குவத்தை நாம் உருவாக்கியே தீர வேண்டும். நல்லதை ஏற்பதற்குக் கெளரவம் பார்க்கலாமா? சில நொடி தாமதமாகு மென்பதால், ஏதாவது நடந்தேறினால் சரியென அவசர மான முடிவெடுப்பதும், விடை தெரியாத் துன்பங்களைத் தரும்.
- 140 س

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்! வைத்தியம் செய்பவர்கள் ஒரு பக்கமாகவே சிந்தித்து வைத்தியம் செய்யக்கூடாது. பக்க விளைவுகள் நோயாளிக்கு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள
8ഖങ്ങr(lDേഖ?
நிறைவான கருமங்களைச் செய்யும்போது அது நிரந்தரபலனை அளிக்கும். எமது கருத்துக்களில் மட்டும் புகுந்து உள் நின்று கொள்ள முடியாது.
அறிவோடு சஞ்சாரம் செய்யும் போது நல்லதைச், சரியானதைச் சிரசு என்றும் ஏற்கும். கரிசனமுடன் காரியமாற்றினால் அவசர உணர்வுகள், உருவழிந்து போகும்.
அமைதியான சுபாவம் கொண்டோருக்குப் பதற்றமும் இல்லை. இதுவே இவர்களைப் பாதுகாக்கும். வேகத்தினால் விவேகத்தினை இழக்கக்கூடாது. செயலில் வேகம் வேண்டும். எனவே ஆராய்ந்து அறிந்து முடிவு கண்டபின் உறுதியுடன் வேகமாய் இயங்குக !
bԼD51 515 வார மலர்
02.09.2011
= 141 س

Page 73
இளவயதுப் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள்
இள வயது, எளிதில் புரியாத பருவம் வழிதவறி விடுவர் என்று இவர்கள் உணர்வைத் தளர்வாய் நோக்குதல், மனவளர்ச்சியை குறைக்கும். வாழ்க்கையின் நெழிவு சுழிவுகளை அறிதல் வேண்டும். நல்ல வழியில், நுட்ப உணர்வுடன், எழுந்திடும் , இவர்களின் வல்லமை ஒடுங்கத் தடைபோட வேண்டாம்!
உயர் கல்வி கற்கும் காலத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் சற்று வேறுபாடானவை. சமூகம் ஆண்பிள்ளைகளை ஒரு நோக்கிலும் வயது வந்த பெண்பிள்ளைகளை வேறு நோக்கிலும், பார்க்கும் பார்வைகள் எல்லாமே நியாய பூர்வமானதாக இருப்பதே யில்லை.
- 142 -
 
 

கனப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
எம்முடைய முன்னோர்கள் விதித்த பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் தற்காலத்தில் தற்போது ஓரளவு கைவிடப்பட்டதாக அல்லது சற்று மிகையானதாகவே இருக்கின்றது.
பெண்களுக்கேயான மென்மைப் போக்கை விரும்பும் நாம், அதே சமயம் அதனையே சாதகமாக்கி அவளை அடக்கி, ஒடுக்குவது பொருத்தமானது அல்ல.
சின்ன வயதில் பெண்களின் நெஞ்சில் அடங்கி நடக்க வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துவது 6TLD5 நாட்டிற்கே உரிய பண்பு எனக்கருதுதல் ஆகாது. எல்லா நாடுகளிலும் வாழுகின்ற மக்கள், எல்லாச் சந்தர்ப்ப ங்களிலும் பெண்களைச் சமநோக்கில் கருதுவதாகக்கூற (ԼpւգսկLPIr?
குறிப்பாகப் பெண்பாலார் இள வயதில் எதிர் கொள்ளும் சவால்கள், பிரச்சனைகளை நாம் அறியாததல்ல. இவை நாட்டுக்கு நாடு சற்றுவித்தியாசமாக இருக்கும். அவ்வளவே.
ஒரு ஆண்மகன் போல் இவர்கள்ால் வெளியே எந்நேரமும் சென்று வர முடியாது. ஆண்களுடன் தோழமை யுணர்வுடன் பேசிப்பழகவும் முடியுமா? -
- 143 -

Page 74
பருத்திy 04:0.9பிறகுதம்
சில சமயம் பள்ளிக்கூடத்தில் தன்னுடன் படித்த ஒருவருடன் தெருவில் கண்ட போது ஒரு நிமிடம் சற்று அதிகமாக உரையாடினால் அவள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் படு மோசமாளதாகவே இருக்கின்றது.
இன்னமும் எமது நாட்டில் ஆண்,பெண் இணைந்து கற்கும் உயர் வகுப்பிற்கான கல்லூரிகள் மிக அரிதாகவே இருக்கின்றன. கல்லூரிகளில் அனேகமானவை இருசாரா ருக்கும், தனித்தனியாகவே அமைந்து விட்டன.
முன்னர் பெண்கள் கல்லூரியில் நடக்கும் வைபவங்கள், விளையாட்டுப் போட்டிகளில் வயது வந்த ஆண் பிள்ளைகள் பார்க்கச் செல்வது கிடையாது. அனுமதிப்பதும் கிடையாது.
பெண்களுடன் சாதாரணமாக உரையாடவே மறுப்பது பெண்கள் மீதான அடக்குமுறை மட்டுமல்ல, களங்கமற்ற முறையில் நடந்து கொள்ள விழையும் ஆண் பிள்ளைகள் மீதும் விதிக்கும் கட்டாய கட்டுப்பாடுகளே! எல்லை மீறாதவரை ஒழுக்கம் நிலை நிறுத்தப்படும். உணர்ந்து செயல்படுக!
எனினும் இளம் பெண்கள் கல்வி கற்கும் காலத்தில் முழுமையான மன முதிர்ச்சியடையாமையினால், எவர், எவருடன் பழகுவது என்ற விபரம் புரியாமல், படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது.
- 144 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
மேலும் இளவயதிலேயே பாலியல் கல்வி முறைகளை வெளிநாடுகளில் கல்லூரிகள் அறிமுகப்படுத்திப்
பல ஆண்டுகளாகிவிட்டன.
ஆண்,பெண் உறவுகள் பற்றி மட்டும் இக் கல்வியூட்டல் அமைந்தது அல்ல. சமூகப் பண்புகளை உளவியலுடன் இணைத்தே சொல்லிக் கொடுக்கின்றார்கள். முறையற்ற நட்பினால் உண்டாகும் விபரீதங்களுக்கு இன்றும் பெண்களையே முழுப் பொறுப்பாளிகளாக்கி விடுகின்றனர்.
"புருகூடி இலட்சணமி என்பதே மதுபானம் பாவிப்பதும், புகைப்பிடிப்பதும், அழகிய யுவதிகளுடன் சுற்றுவதுமே என்கின்ற எண்ணத்தில் பல இளைஞர்கள் வாழ்ந்து வருவது அறியாமை மட்டுமல்ல, ஆணெனும் அதிகார வெறி அல்லது மமதை என்றும் கொள்ளலாம்.
இதில் வேதனையான விஷயம் என்னவெனில் ஒழுங்காகக் கல்வி கற்கும் ஒருத்தியை அவர்களின் சகதோழிகளே வலுக்கட்டாயமாக அவளது மனநிலையை மாற்ற முனைவதுதான். எந்த விதமான இலட்சியம் பற்றி உணராத இளைஞன் மீது காதல் முடிச்சுப்போடுவதில் சக நண்பர்களுடன் தோழிகளும் இணைந்து கொள்கின்றார்கள். இன்று இயல்பாகத் தானாக மலரும் காதல் சமாச்சாரத்தை விட வலிந்து மேற்கொள்ளும், தரகர் முறை காதலர் இணைப்பே பலரை நரக வாழ்வில் இட்டுச்சென்று
- 145 -

Page 75
பருத்திபூர் பல. ஆயிரவநாதன் விடுகின்றது. உலகைச்சரிவரப் புரியாத இளமொட்டுகள் வாழ்க்கை களவாடப்படுவது, வளரும் பயிருக்கு வெந்நீர் செலுத்துவது போலத்தான்.
மேலும் நன்கு கல்வி கற்கும் ஆற்றல் உள்ள பெண் பிள்ளைகளை, உயர்கல்வி பெறுவதற்குத் தடை விதிக்கின்ற பெற்றோர்கள், தற்காலத்திலும் இருப்பது அதிசயம்தான். "சின்னவயதிலேயே மாமன் மகனுக்கும் அவளுக்கும் நாங்கள் நிச்சயித்து விட்டோம். இவள் படிப்பதை மாமன், மாமி விரும்பவில்லை. எனவே பதினோராம் வகுப்போடு நிறுத்தி மேலே உயர் வகுப்பில் படிப்பிக்க விரும்பவில்லை” எனச் சர்வ சாதாரணமாகச் சொல்லுகின்றவர்களும் இருக்கின்றார்கள். உயர்கல்வி, அதன்பின்னர் கல்யாணம் என்கின்ற முறைமை ஆண்களுக்கு மட்டும்தானா? ஏன் இவள் படித்தபின் தொழில் தேடிப்பின்னர் அவளும் ஏற்கும் மணமகனைத் திருமணம் செய்து வைக்க ஏன் சில பெற்றோர்கள் விருப்பம் கொள்வதில்லை?
ஒருவரது நியாயபூர்வமான செயல்களை, ஆசைகளைத் தடை போட எவர்க்கும் உரிமை கிடையவே கிடையாது. முன்னேற்றத்தை முடக்குவதால் அவர்கள் மட்டும் முடங்கிவிடுவதில்லை. மாறாக இந்த பூமிக்குப் பாரிய துணைவர் ஒருவரின் சேவை வலிந்து பறிக்கப்ப டுகின்றது. தனி மனித உரிமை அனைவருக்குமானதே!. இதில் பெண் எனும் வேறுபாடு உண்டா?.
- 146 -
 
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
பாசத்தின் காரணமாகச் சிலர் சொல்லும் உப தேசங்கள் தற்கால நடைமுறைக்குச் சாத்தியமாகாது. "நாங்கள் அன்புடன் வளர்த்த மகள் படித்து உத்தியோகம் பார்க்கத் தேவையில்லை. எங்கள் குடும்பத்திற்கு இவை யெல்லாம் ஒத்துவராது. இவள் ஏன் அநாவசியமாகப் படித்து உழைக்க வேண்டும்?” என்கிறார்கள்
கல்வி, பதவி என்பது பணம், புகழ் மட்டுமல்ல. இது ஆன்மார்த்த திருப்தி நிலை என்பதை இன்னமும் பல பெற்றோர்கள் புரிந்து கொள்கின்றார்களா?
நான் எனது சொந்தக்காலில் நிற்கின்றேன் என்பதில் உள்ள திருப்தியே அலாதியானது அல்லவா? இதில் ஆண், பெண் வித்தியாசங்கள் என்பதேது?
இள வயதின் துடிப்பான உணர்வுகளை, நல்ல செயல் வடிவத்தில் உருவாக்க வேண்டும். படிப்பதற்கும், உலகிற்கு நற்சேவை செய்வதற்கும் ஏற்ற வயது அல்லவோ? வயது முதிர்ந்து ஏக்கமுடன் வாழ்வதை விட எந்தவொரு பெண்ணும் இள வயதிலேயே தன்னை எதிர்கொள்ளும் தடைகளை உடைத்து நவ உலகில் தன்னைப் பூரண த்துவம் வாய்ந்த ஒருத்தியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இதுதானே சிறப்பு
சின்னச் சபலங்கள், சஞ்சலங்கள் ஒருவரை
ஆக்கிரமித்தால் அதுவே விஸ்வரூபமெடுத்து அவர்களை அரித்தெடுத்துவிடும்.
ܚ 1:47 -

Page 76
பருத்திபூர் பல. ஆயிரவருதல்
இளம் வயது மங்கையர் மனம் மழுங்கலாகாது. தவறான ஆண்களின் தப்புக்களை மறைக்க அல்லது காரணம் சொல்லி மழுங்கடிக்கச் சமூகம் பல மார்க்கங் களைக் கைவசம் வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது.
இந்தப்படுபிற்போக்கான வாதங்களைச் செவியிலே ற்றாமல், இளவயதிலேயே பெண்பாலார் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளல் வேண்டும். இதேசமயம் ஒவ்வொருவரும் தத்தமது கலாசாரப் பண்புகளை மறக்காது
தனித்துவ கலாகாரப் பண்புகளே ஒரு இனத்தை அடையாளப்படுத்துகின்றது.
அதன்படி நடந்து தமக்குரிய எதிர்காலத்தை சமைப்பது உலகிற்கு அமைவானதேயாம். விலங்குகளை நாமாகவே பூட்டிக்கொள்வது எழுச்சியை வலுவற்ற தாக்கி விடும்.
தினக்குரல் இவன் - பெண்கள் பகுதி)
O5-O6-2O11
- 148 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
கவிதை போல் வாழ்க!
(ஒருவரை நாம் வாழ்த்தும் போது மனப்பூர்வமாக, உள்ளம் நெகிழ பேரன்புடன் வாழ்த்த வேண்டும். நல்ல கவிதை அதற்குரிய இலக் கணத்துடன் படைக்கப்படும். எமது வாழ்க்கையும் அவ்வண்ணமே, அற வாழ்வு நீதிக்கு அமைய அமைதல் வேண்டும். கவிதைகள் சுருக்கமாக, மிக ஆழமாக கருத்துக்களில் விரிந்ததாக, ஓசை நயம் மிக்கதாக, கேட்க இனிமையாக, சிந்தையினை மகிழ்வூட்டுவனவாக இருத்தல் வேண்டும். இதே போல் வாழ்க்கையில் நாம் பேச்சில் சுருக்கமாக, செயலில் பெருக்கமாக, கட்டுப்பாட்டுடன் உலகம் மெச்சும் வண்ணம் வாழ வேண்டும். கவிதையில் ஜொலிக்கும் யெளவனம் போல் மனித வாழ்வும் அமைய வேண்டும் என்பதால், கவிதை போல் வாழ்க! என நாம்
எல்லோரையும் வாழ்த்துவோமாக أص
நாம் யாரையாவது வாழ்த்துவதென்றால், பரிபூரண மான அன்புடன், நெஞ்சார வாழ்த்த வேண்டும். எங்கள் பாராட்டுதல்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்குரியவரின் மனோநிலையில் புத்துணர்வுண்டாக்கி அவைமென் அதிர்வு களாகி இதமுட்டுவனவாக அழுத்தமாகப் பதியப்பட வேண்டும்.
- 49 -

Page 77
பருத்திபூர் பல. அவிழ்வருந்தர்
பெரியோர்கள் தமது வாழ்த்துக்களைப் பயனுள்ள சொற்களினூடாகத் தெரிவிப்பார்கள் ஒளவையார் தான் சந்தித்த மன்னனை" வரப்புயர" என வாழ்த்தினர். வரம்பில் நீர் சேர்வதால் பயிர்கள் விளையும். அதனால் குடிமக்கள் உயர்வடைவர் என்பதே இதன் பொருளாகும்.
இன்று மக்களைப் பெருமளவு கவிதைகளே கவர்ந்திழுக்கின்றன. நல்ல தரமான, மக்களுக்குப் பயன் தரவல்ல கவிதைகள் ஒவ்வொரு தனி மனிதனையும் உயர்த்துவதால் முழுச் சமூகமும் பயனுறுகின்றது. எனவே உலகம் உய்ய நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்துவதற்கு நெஞ்சைக் குளிர்விக்கும் வண்ணம் " கவிதை போல் வாழ்க" என வாழ்த்துதல் கூட சாலப் பொருத்தமான தேயாம்.
அது சரி “கவிதை போல் வாழ்க" என்றால் கவிதைக்கும், மானுட இயல்புக்குமுள்ள பொருத்தங்களை எப்படியாக இயம்ப முடியும் என்பதை இனிப் பார்ப்போம்
நல்ல கவிதைகள் காலத்தால் அழியாததாகும். எம் முன்னோர்கள் படைத்த காவியங்கள் யாவும் இயன்றளவும் பேசப்படுகின்றன. இவ்வண்ணமே ஒருவன் வாழ்வாங்கு வாழ்ந்தால் என்றும் அவன் கீர்த்தி மங்காது.
கவிதை என்றும் சுருக்கமாக அதே சமயம் அதன் கருத்துக்கள் மிக ஆழமாக விரிவாகச் செறிவாக அமைதல் - 50 -
 

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
அவசியம்.
மனிதன் தனது சொந்த வாழ்வில் வெறும் பகட்டாவ னாகக் காட்டி நிற்காது என்றும் எளிமையுடன் துலங்க வேண்டும். அதிகம் பேசாமல், செயலில் மட்டும் செறிவாக ஆக்க பூர்வமாகச் செய்து காட்ட வேண்டும்.
நற் கருமங்களை மெளனமாகச் செய்கின்றவன் ஜீவியம் யெளனமாகின்றது இவன் பணியினால், பூமி
புனிதமடையும், ஆனந்தம் நிரந்தரமாகும்.
மேலும், எங்கள் பழைமையான இலக்கியங்களைப் பாருங்கள் அவை இலக்கணச் சுத்தமாக ஒரு வரையறை யினுள் அமைந்திருக்கும். இஷ்டப்படி எழுத முடியாது. கண்டபடி எழுதினால் காவியம் நிலைத்திருக்குமா?
தெளிந்த கருத்துக்களைச் சுவைபட சொல் ஆட்சியுடன் நல்ல மொழி ஆளுமையுடன் கவிதைகள் உருவாகினால் தான் அதன் பலன் உலகைச் சேரும். கருத்துச் செறிவின்றி கவிதை உருவாக முடியாது பொருள் இன்றேல் "பொய் தான் புரளும், கவிதையிலும் கட்டுப்பாடு வேண்டும். நாவில் நல் ஓசையுடன் தவழவேண்டும்.
அதேபோல் எமது வாழ்க்கையும் கட்டுப்பாட்டுடன் அமைதல் அவசியமானது. நல்ல குறிக்கோள், மத நம்பிக்கை, அறக்கருத்துக்கள் மீதான நாட்டமுடையவராக நாம் வாழ்ந்தால் இங்கு எமக்குத் துன்பம் தர எவருமே முன் வருவார்களா?
- 151 -

Page 78
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
சிந்தையில் திரிபு ஏற்படுமிடத்து வருகின்ற எண்ணங்களும் வக்கிர புத்தியுடனேயே கருக்கொள் கின்றது. கெட்ட மதி தொற்றிக் கொண்டால் தப்பான தரங் கெட்ட வார்த்தை உரையாடல்களும் வெளிவரும். அது ஒருவரை அந்தகாரத்தினுள் தள்ளி விடுகின்றன.
மனம் கவருகின்ற நல்ல கவிதைகளைப் படிக்க வேண்டும். அவைகளின் அர்த்தம் புரிந்து படித்தாலேயே எமக்கு எமது எண்ணங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இன்று புனையப்படும் பலரது கவிதைகள் எமக்குப் புரிவதே இல்லை. ஏன் அதனை எழுதுபவர்களுக்கே அது புரியுமோ தெரியாது.
இத்தகையவர்கள் ஏனையவர்களின் சிறந்த கவிதைகளைப் படிப்பதுமில்லை, ஏன் எமது இலக்கியங் களில் ஒரு சிறு பகுதியையாவது நுகர்ந்தால் இப்படி எழுத மாட்டார்கள்.
புதுமை இலக்கியம் என்றால் அவை மக்களுக்குப் புரியாமல் எழுத வேண்டும் என்பதல்ல. புரியும் படியாக எழுத வேண்டும் . புரியாமல் எழுதுவதே புத்திசாலித் தனமானது எனக்கருதுவது தவறு! அது போல் மனிதன் எவருக்கும் புரியாத புதிர் போல் வாழவும் கூடாது.
- 152 -

கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்!
புரியாமல் வாழ்பவன் தன்னிலை அறியாமலே வாழ்ந்து கொண்டிருப்பான்.
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரியாமல் வாழக் கூடாது ஒருவருக்கு ஒருவர் வினோதமான பிராணியைப் பார்ப்பது போல் இயங்க முடியுமா? புரிந்து வாழ்ந்தாலே வாழ்வில் நிரந்தர சந்தோஷம் உண்டாகும்.
நல்ல குடும்பத்திற்கேற்ப குல விளக்கு, குடும்பத் திற்கே இவள் ஓர் இலக்கணம் எனக் குடும்பத் தலைவியை பலர் வர்ணிப்பதுண்டு.
இதேபோல் நல்ல ஆண் மகனை உறுதியா னவன், எததையும் அச்சமுடன் நோக்காதவன் என்றும் நாம் பாராட்டுவதுண்டு ஆணாயினும் சரி பெண்ணா யினும் சரி சமூக ஒழுக்கத்தில் சமனானவர்களே!
எனவே,
நல்ல வாழ்வு முறைமையை இலக்கணத்திற்கு ஒப்பீடு செய்கின்றோம். அறிவு மட்டுமன்றி, நல்ல ஒழுக்கம் பண்புகளோடு சமூகக்கட்டுப்பாடுகளை என்றும் மீறாதபடி நாம் ஜீவிக்க வேண்டும்.
நாடுகள் எதுவாயினும் சாதி, சமயங்கள் எதுவா யினும் அங்கிருந்து புறப்பட்ட விலைமதிக்க வொண்ணா - 153 -

Page 79
பருத்தி 00. ஒயிரவநாதன் மாபெரும் சொத்துக்களான கலை இலக்கியங்கள் எல்லாமே யாவர்க்கும் சொந்தமானதே. அவை எல்லாமே மனிதர் ஆற்றலை, அவர்கள் செய்ய வேண்டியவைகளைச் சொல்வதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டன. எமக்கெனத் தனித்துவமான, பாரம்பரியமான படைப்புக்கள் இருந்தா லும், அவை வேறு ஒரு இனங்களுக்கோ, நாட்டு மக்களு க்கோ உகந்தது அல்ல எனச் சொல்ல முடியாது.
மானுட வாழ்வோடு இணைவுபடுமாப் போலவே நல்ல இலக்கியங்கள் துலங்கி நிற்கின்றன. நாம் சோகமான சாத்தியமற்ற விஷயங்களை நோக்காது, நல்ல கவிதை போல் செழுமையாக வாழ்வை அமைத்தால் அது
அமிழ்திலும் இனிதே !
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 12.12.2010
- 154 -
 


Page 80


Page 81
ԱյT LIT6ծ வயிரவநாதனி வாழ்க்கைக்கு வளமூட்டக் கூடிய வலுமி
f
கு வாழ வழி சமைத்துக் கொடுத்துள்ள
க்களிடையே நல்ல செல்வாக்கைப் (
இவரின் எழுத்துப் பணி மேலும் வி படைப்பதாக
ர்ந்த வாழ்வியல் கருத்துக்களை உள் கள் தொகுப்பின் இந்நூல் அமைந்துள் எளிமையானதாகவும், தெளிவுடனும், உ. கவும், வாசகர் இலகுவாகப் புரிந்து கொ ள்ளமை பாராட்டிற்குரியதாகும். நூலாசி என்பதுடன் "வாழ்வியல் வசந்தங்கள்” மூ மிக்க கட்டுரையாளர் என்பதையும் நிரூபி
இன்றில்
 

airpsius வசந்தங்க sists கருத்துக்களைக் கொண்டு
பகைவனை மதி" எனும் தலைய
மானத்தையும், மனிதநேயத்தையும் பர்ப்பட்ட கருத்துக்களை வாழ்வியல் முற வெளியிட்டு, எம்மை வாழ்வா
ார். இவரின் நூல்கள் தமிழ் பேசும்
isigold நிகழ்வுகளை ள்ளும் வகையிலும் எழுதப் பெற்று ரியர் சிறந்த ஓவியர்கலாரசிக லம் சிறந்த சமூகவியல் சிந்த த்துள்ளார்.
திருமதி. சாந்தி நாவுக்கரசன் gyffrynrestrifir
கலாசார அலுவல்கள் திணைக்களம்.
isBN 978 9550469-07-9
|
50 ll4 69