கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:சும்மா இருத்தல்

Page 1


Page 2

சும்மா இருத்தல்
பருத்தியூற் பால, வயிரவநாதன்
வாழ்வியன் வதந்தங்கள் - பாகம் 07 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் தலைப்பு
ஆசிரியர் :
மொழி :
பதிப்பு ஆண்டு :
பதிப்பு விபரம் :
உரிமை :
தாளின் தன்மை :
566 96Tថា ៖
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள்
அட்டைப்படம் :
நூல் விபரம்
கம்மா இருத்தல்
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 07
பருத்தியூர் பால.வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 ëlJFTib LITTÉië
கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
3
: 40
அஸ்ரா பிரிண்டர்ஸ்
கணனி வடிவமைப்பு : அஸ்ரா பிரிண்டர்ஸ்
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை
அஸ்ரா பிரிண்டர்ஸ்
தையல்
வானவில் வெளியீட்டகம்
: 250/=
ISBN 978-955-0469-08-6

அoைரிந்துரை
பருத்தியூர் பால, வயிரவநதான் அவர்களின் கருத்து oloostrůLTG560)6|T (DESCOURSES) po 6ří6|TLFŠešul Guigou Ta "வாழ்வியல் வசந்தங்கள் அமைந்துள்ளன. வழிவழியாகப் பேறுகொண்டு எழுந்த பண்பாட்டுத்தளத்தில் நின்று சம காலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்பு வடிவங்களாகக் கருப்பொருட் கள் அமைந்துள்ளன.
தொடர்பாடல் கொள்ளல் பேசுதல், விழுமியங்களை விபரித்தல், காரணங்காணல், கருத்தேற்றம் செய்தல், விளக் குதல் முதலிய செயற்பாடுகள் ஒவ்வொரு கட்டுரைகளிலும் இடம் பெற்றுள்ளன.
கட்டுரைகள் சமகாலத்து வாழ்வின் பதிவுகளோ டிணைந்த மனக்கோலங்களை அழைப்பனவாகவும், அரவ னைத்து அறமுரைப்பனவாயும் அமைந்துள்ளன. சமூக வரன் முறைப்பாட்டை மீளவலியுறுத்தும் கருத்தமைவின் கட்டுமானங் களாகக் கட்டுரைகள் மேலெழுந்துள்ளன.
அன்னியமயமாகிச் செல்லும் மனித மனங்களை மீள் ஒழுங்குபடுத்தலும், ஒன்றிணைந்து ஆக்க நிலை நிறுத்தல் செய்தலும் ஆக்கங்களின் நோக்கங்களாகவுள்ளன. சமூக நோக்கிலே சீர்மியம் செய்யும் உளச்சமூகச் செயற்பாடும் ஆக்கங்களின் உட்பொருளாக அமைந்திருத்தலையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

Page 4
வாசகர்களை வெறுமனே நுகர்வோராகக் கருதாது, சிந்திக்க வேண்டியவர்களாகவும், வினைப்பாடோடு தொழிற்படு (36). TUT356ub (ACTIVEREADERS) LDITBgilio GlguQT5551856).67 இந்நூலாசிரியரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, விளைவை உருவாக்கும் சிந்தனை உருவாக்கத்திற்கு அறிகைப் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளது. நூல்களைச் "செயற்பாடுகளை உள்ளடக்கிய பெட்டிகள்” என்று கூறும் மரபு மேலைப்புலச் சிந்தனைகளிலே காணப்படுகின்றது. அறிவின்கையாட்சி சமூகத்தில் விளைவுகளை உருவாக்குதலாக நிலை மாற்றம் பெறுகின்றது அதாவது அறிவே கருவியாகி நிலை மாற்றத்தை அவாவி நிற்கின்றது.
தாரண்மை நோக்கு, மானிட நோக்கு, முதலிய இலட் சியங்கள் நூலாசிரியரின் எழுத்தாக்கங்கள் வாயிலாக எழுச்சி கொள்கின்றன. மானிட நலங்களை மேம்படுத்தும் உயர்ந்த இலட்சியம் நூலாசிரியரின் கருத்து வினைப்பாட்டுக்கு ஆற்ற லைக் கொடுத்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட தலைப்புக்கள் சமகாலத்தையும், உளவியல் தேவையையும், தேடலையும் புலப்படுத்தி நிற்கின்றன. ஒவ்வொருவரினதும் தன்னிலை விருத்தி இந்நூலாக்கத்தின் குவியப்பாடாக அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது
எதிர்விசைகளை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கக் கூடிய
ஆளுமை வளர்ச்சியை முன்னெடுக்கும் வண்ணம் கருத்துப்
புனைவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குரிய மொழிச்
செழுமை மீதும் ஆசிரியர் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்
4.

தக்கது. கருத்தமைவும், மொழியமைவும் இணைபிரியாதவை . மொழியின் செப்பம் நூலாசிரியர் மேற்கொண்ட கருத்தின் செப்பமாகி நிற்கின்றது.
நடத்தை மேம்பாடு,ஒழுக்கமேம்பாடு, சீலமேம்பாடு என்ற வாறு நவீன விழுமியக் கல்வியில் வலியுறுத்தப்படும் இலக்கு களை அடைவதற்குரிய அறிகை நிலை ஆற்றுப்படுத்தல் நூலாக்கம் ஒன்றினைப் பருத்தியூர்பால,வயிரவநாதன் அவர்கள் தந்து சிறப்பித்துள்ளார். விழுமியக் கல்வியில் அவர் பெற்ற அனுபவங்களும், வாசிப்புநிறைவும் இந்நூலின் தனித்துவத்தை வலிதாக்கியுள்ளன.
ஆக்க இலக்கியநூல்கள் அதிகம் வெளிவந்துகொண்டி ருக்கும் இன்றைய சூழலில் இவ்வகை அறிவுபுகட்டும் நூல்கள் மிக அரிதாகவே வெளிவருகின்றன. நூலாசிரியரின்எழுத்தாக்கப் பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள்
பேராசிரியர் சபா.ஜெயராசா

Page 5
(ԼՕ85646C»II
பருத்தியூர் பால வயிரவநாதன் ஞாயிறு தினக்குரலில் தன்னுடைய "வாழ்வியல் வசந்தங்கள்” என்ற கட்டுரைத் தொடரை எழுதியபோது, வாசகர்கள் மத்தியில் அதற்குப் பலத்த வரவேற்பு காணப்பட்டது. அதனை நூலுருவில் இப்போது அவர் வெளியிடுவதும் வாசகர்களின் பெரும் அபி மானத்தை நிச்சயமாகப் பெற்றுக் கொள்ளும் என நம்பலாம்.
உளவியல் சார்ந்த வாழ்வியல் கட்டுரைகள் அண் மைக் காலத்தில் வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப் படுவனவாக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இந்த வகையைச் சார்ந்த நூல்களே விற்பனையில் முன்ன ணியில் உள்ளன. உளவியல் ரீதியில் மக்களை வழிப் படுத்து வனவாகவும், சோர்வுற்ற மனங்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பனவாகவும் இவ்வாறான கட்டுரைகள் அமைந் துள்ளன.
இந்த வகையான கட்டுரைகளை எழுதக் கூடியவர்கள் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ள னர். அந்த வகையில் குறிப்பிடக் கூடிய ஒருவராக பருத்தியூர் பால, வயிரவநாதன் உள்ளார். கடந்த சுமார் ஆறு வருட கால மாக ஞாயிறு தினக்குரலில் அவருடைய கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. வாழ்வியல் தொடர்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை ஞாயிறு தினக்குரலில் முதல் தடவையாக
6 w

எழுதிய இவ்வாறான கட்டுரைகளுக்கும் வாசகர் வட்டம் ஒன்று உள்ளது. என்பதை அடையாளம் காட்டியவர் பருத்தியூர் பால, வயிரவநாதன்.
பருத்தியூர் பால,வயிரவநாதன் தன்னுடைய வழமை யான தொழில் முயற்சிகளிடையேயும் இதற்கான நேரத்தை ஒதுக்கியிருந்து இதனை எழுதி முடித்துள்ளார். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறுபட்ட தலைப்புக்களில் உள்ளது தன்னுடைய தேடல் அனுபவம் என்பனவற்றுடன் வாசித்தறிந்த தகவல்களையும் அடிப்படையாக வைத்துத் தான் இந்நூலை பால, வயிரவநாதன் எழுதியிருக்கின்றார். பால, வயிரவநாதனின் ஏழாவது நூல் இது!
இது போல் மக்களுக்கு பயனளிக்கக் கூடிய பல ஆக்கங்களை பால வயிரவநாதன் எதிர் காலத்திலும் தருவார் 616öl blöLj6UTlf.
பாரதி. இராஜநாயகம் ஆசிரியர் ஞாயிறு தினக்குரல் தினக்குரல்

Page 6
எனது உறை
உற்சாகமான மனிதனே வெற்றிகளைக் குவித்து விடுகின்றான். உற்சாகமின்மை செய்கருமங்களைத் தடை போட்டு முடக்கும்.
உடல் வலி இருந்தும் சோம்பல் காரணமாக இயங்காத விட்டால் காலப்போக்கில் எதனையும் செய்ய இயலாத நிலைக் குள்ளாக்கப்படுவர்.
காரியங்களை விருப்பமுடன் செய்தால், பயம், பதட்டம், தளர்ச்சிநிலை கழன்று விடும்.
இதனை உணர்ந்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் சும்மா இருந்தல், அம்மம்மா ரொம்ப கஷ்டம், எவ்வளவுதான் வசதிவாய்ப்புக்கள் இருந்தாலும் சும்மா இருத்தால் அதுவே ஒரு பிணிபோலாகிவிடும்.
பொழுதுகளின் பெறுமதிகளை உணர்ந்தவர்கள் செயலின்றி பயனின்றி சீவிக்க மாட்டார்கள்.
திட சிந்தனையுடன் காரியமாற்றுபவர்கள். விதியைச் சொல்லி மனம் வெந்து நொந்து அழுவதில்லை. திட சிந்தனை யே ஆன்ம சக்தியாகின்றது. ஆன்மாவில் வலு நல்லதை என்றும் எண்ணுவதில்லேயே தங்கியுள்ளது.
இந்நிலை வந்தவர்களுக்குச் சுயநலம் கபடம் இருப்பது ിങ്ങെ',
8

நல்ல மனம் உள்ள மனிதர்கள் குழந்தைகள் போல களங்கமற்றவர்கள் இவர்களிடம் மறைத்தல் என்னும் சுபாவம் இல்லை. எவரிடத்தும் சந்தேகமும், நம்பிக்கையீனமும் வந்தால் எப்படி நாம் பிறரிடம் அந்நியோன்யமாகப் பழக முடியும்,
புரிந்துணர்வும், எவரையும் ஏற்றக் கொள்ளும் இயல் பினை வளர்ப்போமாக! இத்தகையவர்களை எவருமே வெறுப்பது மில்லை. இவர்களே இத்தனை சவால்களையும் எதிர்கொள்ளும் தகமையும் கொண்டவர்களாவர்
வெண்மையும், கருமையும் உற்றுநோக்குக! அதற்குள் இருக்கும் உண்மைகளை கண்டறிந்து ஏற்றுக்கொள்க!
எல்லா விடயங்களுமே எமக்கு புரிந்து விடுவதில்லை. ஆனால் தேடிவரும் புரிதலுக்கான் விடயங்களை விட்டு விடாதீர்கள்.
நல்ல அறிவுரைகள் நல்ல புத்தகங்களை படிப்பதுடன் நல்ல இயற்கை வனப்புகளையும் ரசித்துவிடுங்கள்.
எனது உரையில் நான் சில கருத்துக்களை சொல்லிட மனம் என்றும் விழைகின்றது. கூடவே அன்பான பலருக்கு என்றும் எனது நன்றிகளை சொல்ல வேண்டியவனாவேன்.
பேராசிரியர் திரு.சபா.ஜெயராஜா அவர்கள் தலைசிறந்த கல்வியியல் சிந்தனையாளர். அத்துடன் இதனோடு உளவியல் கல்வியல் சிறுவர் இலக்கியம் தொடர்பாகவும் பல அரிய நூல் களை எழுதியவர். இவரது அழகு தமிழ் அடுக்குப் பேச்சுக்கள்
9

Page 7
கவர்ச்சிமிக்கன. இவருக்கு என ஒரு தனிப்பாணிஉண்டு அதனை ரசிக்காதவர் இலர்.
இவரது மேடைப்பேச்சு, ஆய்வுரைகள், கட்டுரைகளில் கையாளப்படும் புதிது, புதிதான சொற் பிரயோகங்கள் எமது சிந்தனைக்கு உவப்பானது.
மேலும் தலைசிறந்த ஆங்கிலப்புலமையாளர்,மேலைத் தேச, கீழைத்தேச உளவியலாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியலாளர்களின் கூற்றுக்களை அடிக்கடி தமது உரையூடாக எங்களுக்குத் தெரியப்படுத்துகின்றமையால் அறிவோர் இதனை நன்கு வரவேற்கின்றார்கள்.
எனது தமையனார், பலவருடங்களுக்கு முன்னரே அவர் பற்றி என்னிடம் குறிப்பிட்டதுண்டு. எனது தமையனார் திரு.பா.முத்துக்குமார் இவருடன்சிலகாலம் ஆசிரியப்பணியினை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான் கொழும்புதமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர். எனவே நான் அங்கு செல்வதுண்டு. அங்கே நான் பேராசிரியர் திரு.சபா. ஜெயராஜா அவர்களை அடிக்கடி சந்தித்தும் வருகின்றேன். மிகவும் அடக்கமானவர். சகலரையும் மதித்துப் பழகும் இவரிடம் எனது வாழ்வியல் தொடர்பான இந்நூலைக்கொடுத்து அணிந்து ரையினையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
சமூக உளவியல் துறைசார்ந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகளை எழுதுவதனால், இதனுடன் தொடர்புபட்ட போராசிரியரின் அணிந்துரையினால் நான் பேருவகையடை கின்றேன்.
10

தினக்குரல் ஞாயிறு மஞ்சரியில் எனது வாழ்வியல் தேடல்கள் கட்டுரைகள் வெளிவரும் போது, நண்பர் பாரதியை முதல் தடவையாக அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். தேவகெளரி அப்போது அதன் ஆசிரியராக இருந்தார்.
இவரது பேச்சிலிருந்து உளவியல்,வாழ்வியல், சமூக நெறி மீதான ஆர்வத்தினை நான் கண்டு கொண்டேன். இவர் ஞாயிறு தினக்குரலில் ஆசிரியரானதும் தொடர்ந்து எனது வாழ்வியல் கட்டுரைகளையும், பெண்கள் பகுதியான "இவள்” பகுதியில் எனது குடும்பவியல் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டு என்னைப் பெரிதும் ஊக்குவித்தார்.
இத் தருணத்தில் தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு. வீ. தனபாலசிங்கம் அவர்களின் பேருதவியும் இத்துறை சார்ந்த இவரது நாட்டமும் என்னை மென் மேலும் எழுதத் தூண்டியது.
உளவியல் கட்டுரைகள் மட்டுமல்ல, ஆன்மீகம், நூல் விமர்சனம் போன்ற பல கட்டுரைகளையும் எழுதிவருகின்றேன். இதனை வெளியிட்டுவரும் இவர்களை நான் பேச்சளவிலோ, அன்றி எழுத்தின் மூலமோ நன்றி சொல்லிவிட முடியாது. திரு. பாரதி இராஜநாயகம் அவர்கள் இந்த தொகுப்பிற்கு முகவுரை தந்து உதவியுள்ளார்.
என்றும் ஊடகவியலாளர்களின் உரிமைக்காகவும் எழுத்தாளர்களின் திறனை வளர்க்கும் பணியிலும் பத்திரிகை யாளரான பாரதியின் அன்புள்ளம் என்றும் வாழும். வாழ்க!
11

Page 8
எனது நூல்களின் வெளியீடுகளைத் திறம்பட அச்சு வாகனம் ஏற்றிய அஸ்ராபிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவன அதிபர் திரு.எஸ். சிவபாலன் அவர்கள் என் விருப்பம் அறிந்து என்னை உற்சாகமூட்டி இந்நூல்களை வெளிக்கொணர்கின்றார். இவரது பணிக்கு என்நெஞ்சார்ந்த நன்றிகள்
நூல் நன்றாக அமைய பல தடவைகள் பொறுமையுடன் செயல்பட்டுச் செவ்வை பார்த்த செல்வி சநந்தினி, திரு.க. சுதர்ஷன், திருமதி வசரஸ்வதி ஆகியோருக்கும் எனது நூல்க ளின் வரவை எதிர்பார்த்த எனது அன்புள்ளங்களான அனைவ ருக்கும் தோழமையுடனான நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன்
"GLDCBS6)6Ob"
36-2/1
ஈ. எஸ். பெர்னாண்டோ மாவத்தை
GlabТОршћиц06.
தொபே இல: 011-2361012. O71-4402303,
O77-43 18768
12

சமர்ப்பனம்
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- ஆசிரியர் -
13

Page 9
  

Page 10

சும்மா இருத்தல்
உற்சாகமாக இயங்காதுவிட்டால் "களிப்பு" நிலை உருவாகிவிடாது. எந்தக் கருமங்களையும் ஈடுபாட்டுடன் செய்துவரின் உற்சாகம் கரைபுரண்டோடும். விரக்தி விரட்டப்படும். சோர்வு சரிந்தேகும். சலிப்பு ஒழிந்து விடும். எமது கடமையைக் குறைவின்றிச் செய்ய உற்சாகம் ஒளடதம். அச்சம், பதட்டம், செய்கருமங்களில் தெளிவின்மை போன்றவை, கருமங்களைத் தடைபோட்டு முடக்கும். தேவையற்ற கற்பனைகளால் மனம் பேலித்து உற்சாகத்தைத் தடை போடல் அடுக்காதசெயல், உற்சாகமான மனிதன் வெற்றிபெறுகின்றான்.
“உற்சாகம்” என்பது அற்புதமான ஆற்றல்களை நல்க வல்ல "மன உணர்வு" என்பதுடன் எழுச்சிமிக்க எண்ணங் களை வலுவேற்றுகின்ற இயல்புமாகும்.
உற்சாகமின்றேல்களிப்பு என்பது வெகுதொலைவில்
சென்றுவிடும். அவ்வண்ணமே களிப்பு எம்மிடையே துளிர் விடாது போயின், சோம்பலுடன் சேர்ந்திணங்கி விடுவோம்.
17

Page 11
  

Page 12
பருத்திபூர் அல. அவிழ்வருதல் அவர்களது திறமைகள் அமுக்கப்படுகின்றது. தவிர தங்களால் முடியாததை மற்றவர்கள் செய்தால் பாராட்டி யேயாக வேண்டும். பாராட்டாமல் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும் பேசுவதும் ஒரு காழ்ப்புணர்வுடனான போக்கு
g66)(362
எங்களுக்குரிய கடமைகளை நாம் செய்கின்ற போது ஏற்படும் சின்ன இடையூறுகளை பெரும் தடைகளாக ஆரம் பத்திலேயே எண்ணிவிட்டால் உற்சாகத்திற்கான உற்பத்தி எம்மிடம் எப்படிச் சுரக்கும்? தந்த வேலைகளை நாம் செய்து கொண்டு போக வேண்டியதே!
ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் ஒரு காட்சி இது. நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருக்கின்றது. திடீரென இடி, மின்னலுடன், புயலும் புகுந்து கொள்கின்றது. அலைமேல் எழுந்து விழுந்து கப்பல் தத்தளிக்கின்றது. கப்பல் கவிழும் நிலை, கப்பலின் தலைமை அதிகாரியின் அறையினுள் சிப்பந்தி உள்ளே நுழைகின்றார். அங்கே அவர் ஆழ்ந்து யோசனை செய்தவாறே இருக்கவும் சிப்பந்தி தனது கையில் உள்ள தேனீரை அவரிடம் கொடுக்கின்றார்.
அவர் தேனீரைப் பருகியதும் அவர் நிமிர்ந்து
நோக்கித் தன்னை ஆசுவாசப்படுத்தியவர் அடுத்த கணம்
இயந்திர கதியில் இயங்கலானார். ஓரிரு நிமிடங்களுக்குள்,
கப்பலைச் சமநிலையில் கொண்டு வந்தார். எல்லோருமே
நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர். கப்பல் தலைமையதி
20

சுங்g இருத்தல் காரியோ, மெளனமாக மீண்டும் தமது அறைக்குள் செல்கின்றார்.
எந்தக் கருமத்ச்ை செய்யுமுன் பதட்டம், பயம் என்பதை விலக்கிவிடுதல் வேண்டும். தம்மைச் சுதாகரித் துத் ஸ்திரமான நிலைக்குள் நிலை நிறுத்தி நிலைமையை உணர்ந்து செயல்பட்டால் எந்தப் பிரச்சனையான செயல் களையும் வெகு சுலபமாகச் செய்து முடிக்கலாம் என்பது உறுதியாகும். பதட்டமும், அச்சமும், வேலையில் தெளி வானஅறிவின்மையும், செய்கருமங்களுக்குச் “சத்துரு” ஆகும். இந்தப் பலவீனங்களைத் தவிர்த்தால் மிக உற்சாக மான மன நிலைக்குள் நாம் உட்பட்டு விடுவோம். சுறுசுறுப் புடன் இயங்குவர்கள், சமயோசிதமான புத்தியுடனும், துணிச்சலுடனும் தொழிற்பட்டால் அவர்களால் ஆகாத கருமம் எதுவுமுண்டோ?
மனதை ஒரு நிலைப்படுத்துபவர்கள் தம் கருமத்திலே வைத்த இலக்கைத் தவற விடமாட்டார்கள். நிதானமான புத்தியுடன் இருப்பவர்களின் சுறுசுறுப்பான உழைப்பின் பயன்கள் ஒரு சிறிதளவு கூட வீண் விரயமாவ துமில்லை.
சின்ன விஷயங்களை நாம் உதாசீனம் செய்வதும்
உண்டு. மிகவும் உற்சாகமாக மிகப் பெரிய வேலைகளைச்
செய்யும்போது, ஒரு அற்பவேலை எம்மைப் பாடாய்படுத்து
வதுமுண்டு. ஆரம்பத்திலேயே இவைகளைக் கண்ட
21

Page 13
பருத்தி 00. விவரஷ் றிந்தும்,பாராமுகமாக இருந்தமையினால் படும்சிரமங்கள் சிலவேளை சொல்லிமாளாது. மனிதர்கள் எதற்கும் தயார் நிலையில் இருந்தால் அவர்களை துயர்கள் தாக்குவ துமில்லை. "நான் உற்சாகமாகத்தான் தொழில் செய்தேன். இடிவிழுமாற்போல் இந்த இடையூறு வந்துற்றதே" எனச் சங்கடப்படுபவர்கள் பலர் இருக்கின்றார்கள்.
வாழ்க்கையில் வரும் துன்பங்கள் கூட இயல்பானது தான். புதிதாகத் துன்பங்கள் வருவது, தனி ஒருவர்க்கு மட்டு மல்ல. சில வேளை நாம் எதிர்ப்பார்க்கும் இடையூறுக ளுடன், வேறு பல துன்பங்களும் ஒன்று சேர்ந்து தாக்கலாம். இவைகளால், எமது நடத்தைகள், மன இயல்புகள் பாதிப் படையலாம். இந்நிலையில் இருந்து நாம் விடுபடல்
வேண்டும்.
நாம் ஒன்றை மட்டும் உணர்வோம். நாம் எப்போ துமே முடங்கிக் கிடக்கத் தயாரானவர்கள் அல்லர். எனவே இடையூறுகள், துன்பங்களுக்காக எத்தனை நாட்களுக்கு த்தான் வருந்தி அழுது கொண்டிருக்க முடியும்? சொல்லுங் கள்! எங்கள் கருமங்களை எப்படியும் நாங்கள் தானே செய்து முடிக்க வேண்டும்? தூக்கி நிறுத்தலுக்காகக் கையைத் தூக்கிக் கெஞ்சவேண்டாம். நீங்களாக எழுந்தால் எல்லாமே எளிதாகும் உணர்க!
"எமக்குக் கிடைத்ததே போதும்" என்கின்ற திருப்தியுள்ள மனப்பாங்குதான், எமது உற்சாகமூட்டும்
22

சுரே இருத்தல் இயல்புகளுக்கான, முதல் படியுமாகும். மனக்குறைகளுடன் திருப்பதியாக எப்படி வாழ முடியும்? மனம் கிலேசம டைந்தால் உற்சாகம் எப்படி ஐயா, உருவாக முடியும்?
மேலும், நற்கருமங்களைப் பிறருக்கு செய்வதிலிருந்து நழுவிச் செல்லும் மனப்பாங்கு உள்ளவர்களிடம் களிப்பு நிலை பொங்கிவராது. எப்போது தன்னை மட்டும் சிந்திப் பவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்து மகிழ்வதற்கு நேரத்தை ஒதுக்கமாட்டார்கள். வலிந்து எவராவது சந்தோஷத்துடன் சந்திக்க வந்தால், அவற்றில் கூட லாப, நட்டக் கணக்குப் பார்ப்பார்கள்.
"கொடுக்காதவர்க்கு எடுக்கின்ற உரிமையில்லை" மற்றவர்களை உற்சாகப் படுத்தத் தயங்குபவன் தானும் முழுமையாக உற்சாகமாக இருக்க முடியாது. பிறருக்கு இன்னல்களை விளைவித்து அடையும் குரூர திருப்தி, சடுதியில் சரிந்து அவர்களையும் அரித்து, உருத்தெரியாமல் ஆக்கிவிடும்.
இன்று விளையாட்டுப் போட்டிகளில் கூட சுறுசுறுப்பு டன் விளையாடுவதற்காக, விளையாட்டு வீரர்கள், ஊக்க மருந்து உபயோகிப்பதாகக் கூறப்படுகின்றது. மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள்கூடத் தங்கள் பல மறியாது அநியாயமான வழிகளில் சட்டவிரோதமாக, ஊக்க மருந்தைப் பாவித்து, மிகவும் அவமானப்பட்டுப் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அண்மையில் ஒலிம்பிக்
23

Page 14
பருத்திபூர் பல. ஆயிரவநாதர் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாபெரும் வீரர் தனது பதக்கங்களை இழந்து பெற்ற கெளரவத்தையே இழக்கும் படியான காரியத்தைச் செய்து விட்டார். உளவியல் ரீதியாக வீரர்களை உற்சாகப் படுத்தப்பட்டும் கூட இத்தகைய தீயவழிகளை நாடுவது பரிதாபமான நிலைதான். பல வீரர்கள், போட்டி நேரங்களில் மனம் தளர் வடைவதால், உற்சாகம் குறைந்து செயல்படுவது, அவர்களை மட்டுமல்ல அவர்கள் சார்ந்த நாட்டு மக்களையும் வேதனையூட்டுவதாக அமைகின்றன.
பெரிய போட்டிகளில் பங்குகொள்ளும் விளையாட்டு வீரர்களைத் திட்டமிட்டபடி, உளச்சோர்வு அடையுமாற்போல் பல கீழ்த்தரமான காரியங்களும் நடப்பதுண்டு விளையாடும் வீரர்களின் மனம் நோகக் கண்டபடி கீழ்த்தரமான வார்த்தை களில் திட்டி, நையாண்டி செய்யும்போது அதனைக் கேட்டும் வீரர்கள் மனம் நொந்து, செயல் இழக்கும் சந்தர்ப்பங்களும் நிகழ்வதுண்டு இயல்பாகவே திறமையுடனும் உற்சாகத்து டனும் விளையாடக் கூடியவர்களைத், திட்டமிட்டு தைரிய மிழக்கச் செய்பவர்களைச் சட்ட மூலம் தண்டிக்காதுவிடின் இந்த அவலநிலை மேலும் தொடர இடமுண்டு.
சூழ்ச்சி செய்பவர்களை விடச் சூழ்ச்சிக்கு இடங்
கொடுப்பதே தவறான காரியமாகும். உடல் ரீதியான
கோளாறுகளை நாம் மருத்துவர்களை அணுகி அவைகளை
நிவர்த்திசெய்யமுடியும்.அதேபோல் மன அழுத்தம்,
தேவையற்ற பயம் போன்றவைகள் இருப்பதாக அவர்கள்
24

கர்மா இருத்தல்
கருதினால் தக்க உளநல மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது ஒன்றும் வெட்கப்படத்தக்க விஷயமல்ல.
பலர் தமக்குள்ள உளவியல் பிரச்சனைகளை ஒத்துக் கொள்ளத் தயங்குகின்றார்கள். மேலும் இத்தகையவர்கள், தங்களுக்குள்ளான பிரச்சனைகளால் தம்மைச் சார்ந்தவர் களையும் வருத்திக்கொள்ளுகின்றார்கள். வீட்டில் குடும்பத் தலைவர் மன அழுத்தம்,விரக்தி மனப்பான்மை, அல்லது உடல் உபாதைகளுக்குள்ளானால் வீட்டில் அவர், தனது மனைவி மக்களைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வாரா?
எனவே, ஒருவர் உற்சாகம் இழப்பதால், முழுக் குடும்பமே, துன்பத்தில், ஆழ்ந்து போகும் நிலை ஏற்பட லாம். எம்மைச் சுற்றியுள்ள திறமைசாலிகளை இனம் கண்டு, அவர்களை வெளி உலகிற்கு உற்சாகமுள்ள நபராக உருவாக்கி, வெளிக் கொணரல் வேண்டும்.
ஆரம்ப காலத்தில் கூச்சசுபாவமுடன் எவருடனும் பழகாத பலர் அவர்களது ஆசிரியர்களால் இனம் காணப் பட்டு அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்தமையையும் பின்னர் அந்த மாணவர்களே தேசத்தலைவர்களாக, விஞ்ஞானிகளாகத் தொழில் அதிபர்களாக மாறிய சரித்திரங் களும் உண்டு. சூழ்நிலைகளின் தாக்கங்களால் திசை மாறியவர்களும் பின்னர் தம்நிலை உணர்ந்து வளர்ந்த கதைகள் ஏராளம், ஏராளம்!
உற்சாகத்தை, விழிப்பு நிலையை உருவாக்கினாலே
25

Page 15
பருத்திழ் பல. அவிர்வதன் போதும், மனிதன் எதிர்பாராத எழுச்சி பெற்று மாமனி தனாகி விடுவான். சின்னப்பொறியினால் ஒருதீபம் ஒளிபெற்று, முழு வீட்டுக்கும் ஒளியை வழங்குகின்றது. திறமைகளை ஒருவன் வெளிக்கொணர, அவனை உற்சாகப் படுத்தல் ஒரு தெய்வீகப் பெரும்பணியாகும். உலகத்திற்குச் சேவைசெய்வது என்பது, எமது பரந்த இதயத்தினூடாக என்பதை முதற்கண் நாம் நோக்குவோமாக! எல்லோரையும் சந்தோஷத்துடனும், முழு வல்லமை பெற்றிட வைத்திருத் தலே, பவித்திரமான எம் பணியுமாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 23.03.2008
26

சுர்டி இருத்தன் ܝܦܢ
மறைக்கப்படவேண்டிய விஷயங்களும், மறைக்கக்கூடாத விஷயங்கள் பல
இருந்தாலும், இவைகளின் தாத்பரியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும். கண்டபடி உளறுதல் ஏற்புடையதல்ல. உண்மைகளை மறைத்தல் பாவகரமானது மறைந்துநின்று பிறருக்குத் தொல்லை கொடுப்பவர்கள், இறைவனின் கோபத்திற்காளாவர். சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்களைப் பகிரங்கப்படுத்துதல் வேண்டும். தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கங்களைத் துழாவுதல் அநாகரீகம், குழந்தை மனத்துடன், எவ்வித மறைத்தலுமின்றிக், களங்கமின்றி வாழ்வதே ஒரு
கொடை.
மறைக்கக் கூடாத விஷயங்களை மறைத்து வைத்தும் மறைக்கப்பட வேண்டிய விஷயங்களை மறைக்காமல் பகிரங்கப்படுத்துவதாலும் ஏற்படுகின்ற விபரீதங்களும் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் சொல்லிட முடியாது.
ஒவ்வொரு தனிமனிதன் வாழ்வில் மட்டுமல்ல பெரிய
27

Page 16
பருத்திபூர் அல. ஆயிரவருதஷ் அரசு நிர்வாகத்திலும் கூட மறைக்கப்பட வேண்டிய விஷய ங்கள் மறைக்கப்படாமல் விட்டால் தனிமனித வாழ்வும் தழம்பிப்போகும், அரசாங்கங்களும் ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளுண்டு போய்விடும்.
இதேசமயம், மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண் டிய சங்கதிகளை மூடிமறைப்பதால் ஈற்றில் மக்கள் ஆட்சி செய்யும் அரசுகளில் சந்தேகம் கொள்வதும் எதிர்க் கட்சி களின் கேள்விக் கணைகளுக்கு, முகம் கொடுக்க இயலாது தவிப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஆனால், எந்த ஒரு நாடோ, வல்லரசோ இராணுவ பாதுகாப்பு இரகசியம் சார்ந்த விஷயங்கள் அனைத்தை யுமே பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தமது நாட்டுப் பாதுகாப்பு இரகசியங்களை மறைமுகமாக வேறு நாடுகளுக்குத் தெரிவிப்பதே இராஜ துரோகக் குற்றமாகி விடும்.
நவீன கண்டு பிடிப்புகளின் பயன் முழு உலகத் திற்கும் பயன்தரத்தக்கதாயின் அவைகள் மக்களுக்குச் சேர வேண்டியதே. ஆயினும் இன்னமும் பல தொழில் நுட்ப ரகசியங்களை மறைத்து வைப்பதில் எல்லா நாடுகளும் முனைப்பாகவே இருக்கின்றது. இவையெல்லாம் தொழில் ரகசியங்கள். கொக்காகோலா குளிர்பானம், கணினிக்குரிய உதிரிப்பாகங்கள் போன்றவைகளை எப்படி உற்பத்தி செய்வது என்பதைப் பத்திரிகைகளில் போட்டு உடைத்தால் அப்புறம் இந்தப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது எப்படி?
28

சுமோ இருத்தp
சாதாரண சமையல் செய்யும் விதத்தைக் கூடப் பக்கத்து வீட்டிற்குச் சொல்லித்தரச் சிலர் சம்மதிப்பதில்லை. எமது நாட்டின் பண்டைய சுதேச வைத்திய முறைகள் பலவற்றை பகிரங்கமாக மற்றவர்க்குச் சொல்லித்தராமல் மறைத்து வைத்தமையால் இன்று எமக்கு இந்த அபூர்வ மான வைத்திய முறை பற்றிப் பூரணமாகத் தெரியாமல் போய்விட்டது.
காலம் மாறி விட்டது. இப்போது மருத்துவக்கல்வி அனைவர்க்குமாகிவிட்டது. முன்னர் வைத்திய பரம்பரை யைச் சார்ந்தவர்கள் மட்டுமே வைத்தியம் செய்து வந்தனர். இன்று இந்நிலை மாறி விட்டதால் சாதாரணமாக எல்லோ ருக்குமே இக் கல்வி பொதுவாக்கப் பட்டமையால் தான் நவீன சுகாதாரம் தொழிநுட்பங்கள் சம்பந்தமான கண்டு பிடிப்புகளின் பயன்களை நாம் பெற்று வருகின்றோம்.
இன்று ஒருவரை ஒருவர் பூரணமாக நம்புகின்ற நிலையில் இல்லை. இந்த லட்சணத்தில் நேச நாடுகள் கூட ஒன்றை ஒன்று உறவுடன் இருப்பதாகக் கூறி ஒன்றை ஒன்று கழுத்தறுக்கும் நிலையில் தான் காரியமாற்றுகின்றன. அதி புத்திசாலிகளான உளவாளிகளை சகல வல்லமையுள்ள வல்லரசுகளும் நியமித்து ஏனையநாடுகளின் மறைப்புக் களை, ரகசியமாக ஒட்டுக்கேட்டும், எங்கே திரைவிலகு கின்றது. அங்கே ஏதாவது தெரிகின்றதா என உன்னிப்பாகப் பார்த்து, இரைதேடுகின்றன. இந்த விடயத்தில் நியாய, அநியாயங்கள் பற்றிப் பேச எவர்க்குமே துணிச்சலும் இல்லை, தகுதியும் இல்லை.
29

Page 17
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
தங்கள் நாட்டைப் பலப்படுத்தல் என்பது மற்ற நாடுகளை வலிமை குன்றப்பண்ணுதல் அல்லது நயவஞ்ச மாக முதுகில் குத்துதல் என்பதே அரச நீதியாகிவிட்டது. கெளடில்யன் என்கின்ற சாணக்கியன் தனது அர்த்த சாஸ்திரம் என்கின்ற நூலில் அரசாங்கத்தை வலிமையாக்க அரசன் செய்ய வேண்டிய சூழ்ச்சிகள்பற்றியும், அதன் மீதான நியாயத்தன்மைகளை நன்கு விபரமாகக் கூறியுள் ளார். சூழ்ச்சி, வஞ்சனை, அடுத்துக்கெடுத்தல் போன்றவை முற்காலத்தில் இருந்தே அரச லட்சணமாகிவிட்டது. இந்த பாரம்பரிய குணாம்சங்கள் படிப்படியாக வளர்ந்து இன்ன மும் உலகை ஆட்டுவித்தபடியே இருக்கின்றது.
மறைந்து நின்று மறைத்துச் செய்யப்படும் கைங் கரியங்கள், நாடகங்களை யார் அறிவார்? அரசியல் தலைவர்கள், கல்விமான்களின் இழப்புகளின் மர்மங்கள் இன்னமும் உலகிற்குத் தெரியாத இரகசியங்கள் தான். சரி முடிந்து போனபின் ஆராய்ந்து என்னதான் செய்வது? இதன் பலாபலன்களைக் கூடிப்பேசி துக்கப்பட்டுச் சோர்ந்து போனால் எவ்வித லாபமும் இல்லை. எதிர் விளைவுகளை உலகம் அனுபவிக்க வேண்டியதே.
இன்று வீடுகளில் நடக்கும் சின்ன விஷயங்களைப்
பாருங்கள். கணவனுக்குத் தெரியாமல் மனைவி தனது
குடும்ப உறவினர்களுக்கு உதவி செய்வதும், மனைவிக்குத்
தெரியாமல் கணவன் அதே பாணியில், தனது உறவினர்,
பெற்றோர்களுக்கு உதவிகள் செய்வதும் பின்னர் விஷயம்
30

சுர்டி இருத்தல்
வெளியே தெரியவர குடும்பத்தில் குழப்பம் சூழ்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. உள் வீட்டுவிஷயங்கள் எல்லாமே அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்துவதால் அக் குடும்பங் கள் கேலிக்குரிய ஒன்றாகிவிடும்.
கணவன், மனைவி வெளிப்படையாக பேசுவதில் இருந்து விலகுவதும் இருவரும் தங்கள் பிரச்சனைகளையே முதன்மைப்படுத்துவதும் விட்டுக் கொடுக்காத மமதையுடன் செயல்படுவதாலும், ஈற்றில் பெரும்துன்பங்களையே இவர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றன.
வீட்டில் பிள்ளைகள் பெற்றாரின் பிரச்சனைகளுள் சிக்குண்டு போவதும் அவர்களும் பெற்றோர் போலவே எல்லா உண்மைகளையும் மறைத்துத் தமது இஷ்டம் போல் வாழத் தலைப்படுவதும் இயல்பாகிவிட்டது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையீனமாக நடப்பதும் குற்றம் சுமத்துவதும் சந்தோஷமான வாழ்க்கையை அமைத்து விடுமோ?
கணவன்,மனைவி,பிள்ளைகளிடையே எல்லா விடயத்திலும் ஒளிவு மறைவு எதற்காக? பணவிடயத்தில் கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவனும் சேமிப்பதாக குற்றச்சாட்டுதல் கூறி பல குடும்பங்களில் மனஸ்தாபங்கள் ஏற்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம்பிக்கையினம் என்பது எவர் மனத் துள்ளும் விதைக்கப்பட்டால் அப்புறம் நடக்கும் அனைத் துமே விபரீதமாகவே அர்த்தம் கொள்ளப்படும்.
31

Page 18
பருத்தியூ 00:உயிரவாதம்
நான் வெளிப்படையாகப் பேசுபவன் என்று சொல்லிக்
கொள்ளும் சிலர் “கோள்” சொல்லித்திரிவார்கள். எனது மனதில் ஒன்றும் இல்லை எனச்சொல்லி அடுத்தவன் பற்றி தான் அறிந்தவற்றை எல்லோரிடமும் சொல்லித்திரிய அவர் களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?
மேலும், எவரது சொந்த விஷயங்களை ஆராய்வது, அதன் பொருட்டு ஆராயப்படுபவர்களின் வாழ்க்கையே பாதிப்படைவது தெரிந்தும் கூட இத்தகைய செயல் புரிபவர் களை மன்னிக்கத்தான் முடியுமா? தனது சொந்த விஷயங் களை மறைத்து பிறர் விஷயங்களைப் பகிரங்கப்படுத்து பவர்களின் வாழ்க்கையோ மிகவும் கேலிக்குரியதாகவும் இருக்கலாம்.
தெரிந்த ரகசியங்களைச் சொல்லித்திரிந்து, அதனால் தேவையற்ற பிரச்சனைகளைச் சுமப்பதைவிட “மெளனம்" காப்பதே மேலானதல்லவா? சிலருக்கு ஏதாவது விஷயம் தெரிந்துவிட்டால் அதனை யாரிடமாவது சொல்லாது விட்டால், உறக்கமே வந்துவிடாது. வீட்டு விஷயங்களைக் கூட மற்றவரிடம் சொல்லியேயாக வேண்டும் எனத் துடியாய் துடிப்பவர்களும் இருக்கின்றார்கள்.
களங்கமில்லாதவர்கள், அப்பாவித்தனமாக, சொல்ல க்கூடாத விஷயங்களைக்கூட உளறிவிடுவார்கள். அவர்களின் பேச்சையேதுக்கிப்பிடித்து ஆதாயம் தேட முயல்பவர்களின் செயல்கள் படுபாதகமானவையே.
32

சுர்டி இருத்தன்
கூடிய வரை நாம் கேட்கத்தகாத பேச்சை பிறர் ரகசிய ங்களைச் கேட்காமல் தவிர்ப்பதே நாகரீகமானதாகும். கூட்டம், கூட்டமாக எவரையாவது கிண்டலடித்து அவமானப் படுத்தினால் அந்த இடத்தை விட்டு, விலகுதலே புத்திசாலி த்தமானது. யாரைப்பற்றியாவது அவர்கள் இல்லாத போது அலசி ஆராய்வதே சுவாரஸ்யமான பொழுது போக்கு எனச்சிலர் கருதுகின்றார்கள். வேண்டு மென்றே பிறரை இனம் காண விழைவது குற்றங்களை அவர்கள் மீது புனை வது, எல்லாமே தன்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும் பாமல் மறைக்கும் ஒரு செயலாகவும் இருக்கலாம்.
மேலும், ஒருவர் பற்றிய மறைந்து போன பல இரகசி யங்கள் புதையுண்டு அவர் சிக்கலின்றி நிம்மதியாகச் சீவித்துக் கொண்டிருக்கும் போது, மற்றய ஒருவர் எதுவித சம்பந்தமும் இன்றி, புதையுண்டு போன இரகசியங்களை மீண்டும் உயிரூட்ட எத்தனித்துத் திருப்திப்படுவதுமுண்டு.
சட்டவிரோதமான, சமூகத்திற்குக் குந்தகம் விழை வித்தோர் கண்டு பிடிக்கப்பட்டேயாக வேண்டும். ஆனால் கண்ணியமான சாதாரணமான ஒரு நபரின் கடந்த கால சோகங்கள், மறைத்து வைத்த விஷயங்களை,மீண்டும் உயிர்ப்பித்து அவரை மீண்டும் ஸ்தம்பிக்கச் செய்வது மிகவும் கீழ்த்தரமான கருமம்தான் அல்லவோ?
மிகவும் பிரபலங்களாக இருப்பவர்களின் அந்தரங் கங்களை வெளிச்சத்திற்குக்கொண்டு வரும் பணியினை
33

Page 19
பருத்திபூர் பல. ஆயிரவநாதர் ஊடகங்களும், பத்திரிகைகளும் கணினி வலையமைப் பினூடாகவும் பல தகவல்களை தினசரிகள் வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன.
எனினும், தேவையற்ற அநாவசியமான, ஆபாசமான விஷயங்களும், ரகசியங்களை, அம்பலமாக்குகின்ற போர்வையில் வெளிக் கொணரப்படுவது அபத்தமானது. யாரோ ஒரு பெண் குளிப்பதையும், எவருடைய உடை விலகி இருப்பதையும் அப்படியே அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுவது மனித நாகரீகமே வெட்கப்படும் செயலன்றோ!
குளிப்பதும், உடை மாற்றுவதும், சேலை விலகுவதும் என்ன அதிசயம்? இதுவெல்லாம் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் ஆபாசமூலம் பரபரப்பைக் காட்டிக்காசுதேடும் கருமம் தானே அன்றி, இது உலக நன்மைக்காகவா காட்டப்படுகின்றது?
மேலும் செல்லிடத் தொலைபேசிகளுடாக குறும் தகவல்கள் பலரால் கேட்பாரின்றி அநாவசியமாக ஆபாச மாக நோக்குடன் பரிமாறப்படுவதால், பலரினதும் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுவதையும், நீங்கள் அறிவீர்கள்.
ஒருவரை வீழ்த்தி அழிப்பதற்காக மறைக்க வேண்டிய விஷயங்களை, அம்பலப்படுத்துவதன் மூலம் கீழ்த்தரமான திருப்தி காணுவது கொடுரமான வன்செயல்தான்.
34.

சுர்ரா இருத்தல் ஒருவரின் சமூகசேவையுணர்வை, அரசியல் துறை வளர்ச்சிகளை, அல்லது அவர் தம் கலைத்துறைச் சேவை களுக்குக் குந்தகம் ஏற்படுத்துமாற்போல் கண்டபடி தகவல்களை பரகசியமாக்குவோர் தங்கள் வாழ்வில் இது போல் சம்பவங்கள் நடப்பதை கிஞ்சித்தும் அனுமதிப் பார்களா என்ன?
குழந்தை மனத்துடன் நாம் வாழவேண்டும் என்பார்கள் களங்கமற்ற சிரிப்புடன் உண்மையான மன உணர்வுடன் குழந்தைகள் போல எம்மால் சீவிக்கமுடியுமா?
ஒளிவுமறைவற்ற குழந்தைகளின் சாட்சியத்தை நீதி மன்றங்களே ஏற்றுக்கொள்கின்றன. சின்னக் குழந்தை களுக்குக்கூடச்சிலர் பொய்பேசக் கற்றுக் கொடுக்கின் றார்கள் வெளிப்படையாக பேசும் பிள்ளைகளிடம் எப்படிப் பொய்யாகப் பேசுவது, மறைத்துச் செயல்படுவது என்று துர்ப்போதனைகூறும் பெற்றார்களை நீங்கள் கண்டிருப் பீர்கள். விளையாட்டுக்காயினும் பொய்பேச, அல்லது உண்மைகளை மறைத்துப் பேச வாய்ப்பளிக்கவேண்டாம். தகாத காட்சிகளை அவர்களுக்குக் காட்ட வேண்டாம்.தகாத பேச்சை அவர்கள் முன் பேச வேண்டாம். நல்ல சொற்க ளையே பேச வைத்து, அதைக் கேட்டு பேரானந்தம் அடை வீர்களாக
தங்கள் நெஞ்சத்தில் உள்ள காதலை சொல்லாமல் மறைப்பதாலேயே பெரும்பாலான காதல் செத்து விடு
35

Page 20
பருத்திபூர் அல. ஹவிரவருதஷ் கின்றன. காதலைத் தெரிவிக்காமல் உள்ளுக்குள் புதைத்து வைத்தல் போன்ற துன்பங்கள் வேறில்லை.
ஆண், பெண் இருபாலருமே தமக்கு ஒருவர்மேல் ஒருவர் பிரியம் ஏற்பட்டால் அதனை ஏற்பதோ அன்றி ஏற்காமல் விடுவதோ அது அவரவர் இஷ்டமாகும்.
உங்கள் காதலை என்னால் ஏற்கமுடியாது என்று கூறினால் எதுவித தப்புமில்லை. காதலை ஒருவன், அல்லது ஒருத்தி தெரிவித்தால் அது ஒன்றும் ஒருவரது கெளரவத்தைப் பாதிக்கும் விஷயமும் இல்லை. சொல்லாமல் கொள்ளாமல், மனதினுள் புளுங்கிச்சாவதும், சில சமயம் அதுவே வினையாகி வாழ்வே கசந்து, வீணாகிப் போவதுமுண்டு வெட்கப்பட்டவர்கள் காதலிக்க முனைவதே சாத்தியமற்றது. காதல் கொள்வது என்பது வெட்கப் படத்தக்கதும் இல்லை. நெஞ்சத்திற்கு மூடிமறைக்கத் தெரியாது. இவையெல்லாம் இயற்கையான நெஞ்சத்து உந்துதல்கள்.
மேலும், ஒருதலைப் பட்சமாகக் காதலித்துவிட்டு தாங்கள் ஒருவரையொருவர் காதலித்ததாகப் பிரசாரம் செய்வது ஒரு மோசடிச் செயல்தான். விடுபட்டது. எல்லாமே கிடைத்துவிடாது. கிடைக்காத விஷயங்களை விட்டு விடுதலே சாலச் சிறந்தது.
இன்று உலகின் பொருளாதாரத்தையே நாசமாக்கும் பெரிய பங்கினை கறுப்புப் பணம் வைத்திருக்கும்
36

சுமோ இருத்தல்
பணக்காரக் கும்பல்கள் செய்து வருகின்றன. வேறு யாராவது பெயர்களில் பணத்தைச் சேமிப்பதும், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பீடு செய்வதையும் யாவருமே அறிவர்.
செல்வத்தை மறைத்து, அரசாங்கங்களை ஏமாற்றி விடுவது, ஒட்டு மொத்தமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தையே குறைக்கும் தவறான செயல்தான். இன்று கணக்கிட முடியாத பணங்கள் மறைத்து வைத்துச், சட்டத்தை ஏய்ப்பவர்களை இனம் கண்டு கொள்ளாதுவிடின் நாம் என்னதான் பொருளாதாரத் திட்டங்கள் தீட்டினாலும் அவைகளால் முழுமையான பயன்பாடு கிடைத் திடுமா? ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதைகள் சீராகச் சென்றா ல்தான், அனைத்து உலக ஷேமங்களுமே, எந்தவித முட்டுக் கட்டைகளுமின்றி, பிரகாசமாக மிளிரும்.
எங்களை மறைத்து விடுதலால், உண்மைகள் கவிழ்ந்து விடாது விழித்து எழுந்து, துணிந்து வாழுதற்கு மற்றயோர் எம்மிடம் குறைகாண விழையாதபடி நாம் வாழ்ந்து காட்டுதல் வேண்டுமல்லவா? குறைகள் இல்லாத மனுஷன் இல்லை. குறைகளை அறிந்து அதனில் இருந்து விடுபட்டு எழுதலே, மனித முயற்சியுமாகும். உறுதியுடன் வாழ எண்ணுபவர், மறைந்து, ஒளிந்து வாழவேண்டிய
அவசியமும் இல்லை.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
09.03.2008
37

Page 21
காரியசித்திக்கு நேரிய திடசிந்தனையுடன் கருமமாற்றுதல், எமக்கான பாரிய பொறுப்பாகும். நினைத்த காரியங்கள் உடன் முடிந்துவிடாதிடினும், திட சிந்தனையுடன், தொடர்ந்து முன்னெடுத்தால் நிச்சயம் வெற்றி கிட்டும். அற்புத ஆற்றல் எவர்க்கும் உண்டு. அவைகளைப் பயன் படுத்தாமல் இருப்பது எமது தவறு. நல் எண்ணங்களைக் கொண்டிராதவர்களின் "ஆன்ம சக்தி" வீண்விரயமாகின்றது. நல்ல கருமங்களைச் சந்தோஷமுடன் ஆரம்பிக்கும்போது சிந்தனை வலுப்பட்டு, முரண்பாட்டு எண்ணங்களே தகர்த்தெறியப்படுகின்றன. நற்சிந்தனைக்குச் சோர் வில்லை.
டநம்பிக்கையை அது ஊட்டும்.
எடுத்த கருமத்தை எத்தகைய இடர்கள் தொடரினும், அதை உடைத்து நியாயபூர்வ வழிகளில் முழுமையாகச் செயற்படுத்துதற்கு "திடசிந்தை"யினை எம்முள் பதிப்போமாக!
காரிய சித்திகளுக்கு, பாரியளவு உழைப்பிற்கான
38
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர்மா இருத்தல் தூண்டுதலை திடசிந்தனையூட்டாகப் பெற்றுக்கொள்வோம். தெளிந்த திட சிந்தையுடன் உழைத்த பெருமக்களால் தான், இந்த உலகமக்கள் இன்னமும் அளப்பரிய பயன்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். உடல் உழைப்பை நல்காது, பயனற்ற போலியான கற்பனைகளை வளர்ப்பது நல்ல திட சிந்தனையுள் எம்மைப் புகுத்தி விடாது.
மேலும்,ஒவ்வொரு பிரஜையின் நலமூட்டும் செயல்பாடுகள் அவர்களது உடல் உழைப்பினால் மட்டு மல்ல, அவர்தம் உள்ளத்தின் ஆளுமைமிக்க எண்ண ங்களின் வலிமையினாலும் ஸ்திரமாக்கப்பட்டன என நாம் உணர்வோமாக!
நாம் நினைத்த சகல காரியங்களுமே சுலபமாக முடிந்து விடுவதில்லை. சிலசமயம் அதிஷ்டவசமாக நாம் எதிர்பார்காமலேயே பெரிய கருமங்கள் சுலபமாகவும் மிகவும் சிக்கலற்ற சின்ன விஷயங்களும் அதனைச் செயலாக்கும்போது, எதிர்பாராத கஷ்டங்களை உருவாக்கி விடவும் கூடும். எந்த ஒரு கருமத்தையும் அதனுடன் தொடர்பு கொண்ட அனுபவஸ்தர்கள் மூலம் பகிர்ந்து கொண்டால், எமது சிந்தனைத்திறன் புதுப் பொலிவுடன் மிளிர்ந்துவிடும்.
"நான் எல்லாவற்றையும் செய்து முடிப்பேன்"
என்கின்ற திடசிந்தனை வரவேற்கத்தக்கதே! அதன்
பொருட்டு "எவரது பேச்சையும் அவர்களின் உதவியையும்
39

Page 22
பருத்திபூர் பல. ஆயிரவநாதர் பெற்றுக்கொள்ள மாட்டேன்” என அடம் பிடிப்பது, அவர்களது மனவிசாலத்தைக் குறுகியதாக்குகின்ற நிலைக் குட்படுத்தி விடும். நல்ல கருத்துக்களை ஏற்கமறுப்பதால் ஏற்படும் சிரமங்களும், அதனால் எடுத்தகாரியத்தில் பயனின்றி கடந்து வந்த பாதையின் பின்னே பல தூரம் பின்னடைய வைத்துவிடலாம்.
எந்த ஒரு விடயத்தைக் கையாளு முன்னர், அதுபற்றி நன்கு தெரிந்து தெளிந்த பின்னர் செயல்களில் ஈடுபட முனைந்தால் "திடசிந்தனை” எம்முள் கிளர்ந்து எழுந்து அசைக்க முடியாத ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்திவிடும்.
தவறான செய்கையைச் செய்ய முனைதலும், எவருக்காவது கேடுகள் விளைவிப்பதற்கான முயற்சிகளின் பொருட்டு, மனதைச் செலுத்தி அசட்டுத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்துதல் அடுக்காத செயல். ஒருவனுக்குச் சேரவேண்டி யதைத் தடுத்தல், மற்றவர் குடும்பத்தைக் கெடுத்தல், உறவுகளைச் சிதைத்தல், உண்மைகளை மறைத்தல், பிறர் கெளரவங்களை அவமதித் தல் போன்ற செயல்களுக்காகத் திட சங்கல்பம் செய்யும் பிரகிருதிகள் ஈற்றில் உண்மை எனும் பெரும் ஜூவாலை க்குள் பஸ்பமாகிவிடுவர்.
சூழ்ச்சிகளும் உருட்டுப்புரட்டு நாசகார வேலைகளுக் குமாகத் தமது அறிவைக் கெடுத்து, ஆக்ரோஷமாகத் தீவிர முயற்சி எடுப்பது நல்ல திட சிந்தை அல்லவேயல்ல.
"மன உறுதியுடன் செயல்படுதல்” என்பது நல்ல
40

சுமோ இருத்தல்
மனத்துடன், நல்லன செய்ய உறுதி பூணுதல் என்பது LD (SC3LDUITLE).
நல்ல கருமங்களை நாம் செய்ய முற்படும் போது, ஏற்படுகின்ற தடங்கல்கள், முரண்பாடுகள் வேதனைகள், யதார்த்தமானவைகளே.மேலும் கருமங்களை நாம் விருப்புடன் செய்யும் போது அதன் மீது, வெறுப்புணர்வுகள், இயலாமை, மனப்பீதி, சஞ்சலம் என்கின்ற பேச்சிற்கே இட மில்லை. சும்மா இருந்தபடியே நாம் எல்லா பயன்களையும், பெற்றுவிட வேண்டும்எனளண்ணுதல் நியாயமாகுமா?
ஒவ்வொருவரும் தமது அன்றாட கடமைகளை எவ்வித தடங்கல்கள், சோம்பல் இன்றிச் செய்து முடித்தாலே, அவரிடம் உற்சாகம், உத்வேகம் முகிழ்ந்தெழுந்து விடுகி ன்றது. இந்த நிலையே ஒருவரை, எக்காரியங்களையும் செய்து முடிப்பேன்! என்கின்ற திடசங்கல்பத்தை ஏற்படுத் தியும் விடுகின்றது.
சிலவேளை நாம் சகல கருமங்களையும் செய்து, பூரணப்பட்ட நிலையான மனோ நிலையில் இருக்கின்ற போதே, புதிதான ஒரு வேலை எம்முன்னே பூதாகரமாக உருவெடுப்பதுமுண்டு. இந்தவேளை நாம் எடுக்கும் வேலைகளைப்படிப்படியாக, ஒரு திட்டமிட்ட வடிவமைப்பில் செய்து வந்தால், எந்தவித சிரமமும் ஏற்படுவதில்லை. தவிர எடுத்த எடுப்பிலேயே உணர்ச்சி வசப்பட்டு, வேலையின் பளுபற்றி சிந்திக்காது நாமாக ஆத்திரப்பட்டு அவைகளைக் கண்டபடி கையாள எத்தனிக்கும்போது, செய்கருமங்களில்,
4.

Page 23
கருத்திபூர் அல. ஆயிரவநாதர் பாரிய சிக்கல்களும் எழுந்து விடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண விஷயத்திற்காக, பெரிதாக அலட்டிக் கொள்வதாலேயே எமது மனோ நிலையில் தளர்வு ஏற்பட நாமே இடம் கொடுத்தவர்களா (86). ITLib.
தனிப்பட்ட பிரச்சனைகள் தேக அசெளகரியங்கள், போன்றவை எமது பணிகளைப் பாதிப்படையச் செய்யலாம். எனவே இவைகளின் தன்மையறிந்து, இவைகளை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் தேகசுகம் பற்றிய கவனம் எடுக்காமல் நாம் எக்காரியங்களையுமே மன லயிப் புடன் செய்வது சாத்தியப்படாததொன்றாகும். சாதாரண தலையிடி, காய்ச்சல்கூட எம்மன நிலையைப் பாதிக் கின்றதே! எனவே, இதுவிடயத்தில் எம்மை முதலில் சுகதே கியாக வைத்துக் கொண்டே, கருமங்களைச் சிரத்தையுடன் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
"சோதனைகள் வந்தாலே வேதனை” என எண்ணிக் கொண்டால் மனிதன் சாதனை படைப்பது எப்போது? மனித வாழ் நாட்கள் சொற்பமானது என்று சொல்வார்கள். இந்த வாழ்நாட்களில், நாம் இன்றைய பொழுதிற்காக வாழ்வது மட்டுமல்ல, எதிர்காலத்திற்காகவும் நம்மை நம்பிய நம் உறவுகள், சமூகத்திற்காகவும் உலக ஷேமத்திற்காகவும் வாழ்ந்து சாதனைகள் படைக்க வேண்டியுள்ளது.
எமது செயலை வலுவூட்ட திடமான மன உறுதியுடன் செயல் திட்டங்களை ஆய்ந்து ஒரே திசையில் மனதைச்
42

சுர்: இருத்தல்
செலுத்தியபடி இருக்க வேண்டியது அவசியமாகின்றது. எமக்குள்ள காலத்தின் அளவைவிட செய்கின்ற கடமைகள் பாரிய அளவினதாக அமைத்துக்கொள்ள எம்மை நாம் நெறிப்படுத்துவோமாக! மறைந்த பல தலைவர்கள், ஆன்மீக ஞானிகள், கலைஞர்கள்,கவிஞர்கள் பலரும், தமது இளவயதிலேயே பெரும் சாதனைகளை செய்துவிட்டுப் போயினர்.
காலத்தின் அளவை வைத்துச் சாதனைகளை அளவிடமுடியாது. எந்த வயதில் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் உலகம் அதனைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டேயிருக்கின்றது.
தனது இருபத்திநாலாவது வயதிலேயே, மகா அலெக்சாந்தர் மாபெரும் வெற்றித் தலைவனாகிவிட்டார். புரட்சிக் கவிஞர் பாரதியார் தமது முப்பத்து ஒன்பதாவது வயதிலேயே இந்த உலகிற்கான அற்புதக் கவிதைகளை ஈந்துவிட்டே சென்றார். துணிச்சலும் திட சிந்தனையும் இருந்தால் எந்தச் சாதனைகளைத்தான் செய்ய முடியாது ஐயா!
மிகச் சாதாரண குடும்பத்தில் பின்தங்கிய சிறு கிராமத்தில் பிறந்த அப்துல்கலாம் என்கின்ற சிறுவன் உலகம் வியக்கும்.அணுவிஞ்ஞானியாகத் தன்னை உருவாக் கியது எங்ங்ணம்? சோர்வு அற்ற உழைப்பு, நேரிய சிந்தனை, உண்மையான நடத்தை நெறிகள் எல்லாமே கூடியுள்ளமை
43

Page 24
பருத்திபூர் பல. ஆயிரவருதஷ் யினாலே அவர் விஞ்ஞானியாக, இந்திய உபகண்டத்தின் ஜனாதிபதியாகவும் அவரை மிளிர்ந்து உயரச்செய்தது நல்ல ஒழுக்கம் இன்றேல், நாம் நினைத்த வண்ணம், எச் செயல்களையும் செய்து முடிக்க இயலாது. ஒழுக்கம் என்கின்ற அத்திவாரத்தின் மேல் தான் எம்மால் உருவாக் கும் எதனையும் வல்லமையுடன் ஸ்திரமாக்கப்படும்.
எப்போதுமே உல்லாசமாக இருக்கவேண்டும் என்கின்ற நினைப்புடன் இருப்பவர்கள் முதலில் முழுமூச்சாக உழைப்பினை நல்கிடவும் தயாராக இருக்க வேண்டுமல்லவா? உயரிய நல்ல பழக்கங்களுடன் வாழ் கின்ற நல்லோரைப்பார்க்காமல் யாரோ ஒருவர் தீய வழியில், தகாத சம்பாத்தியங்களுடன், செல்வந்தனாக இருப்பதைக் கண்டு ஏங்குதல் சரியா?
மேலும், மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து உயர் நிலையை அடைந்தவர்களைப் பார்ப்பவர்கள், மற்றவர் வந்து தன்னைத் தூக்கியேயாக வேண்டும் என்று ஏன் எண்ண வேண்டும்? ஒருவருக்கு வழங்கும் ஆதரவு, அவருக்கான நல்ல வழிகாட்டலாக இருத்தலே சாலச்சிறந்தது.
சகல வளத்தையுமே இலவசமாகப் பெற்றுக் கொள்பவன் தூங்கிக் கழிப்பதற்கே தனக்கு வழி கிடைத்ததாக எண்ணிக் கொள்கின்றான். சோம்பி வாழுதற்கு காலத்தைத்தேடுதல் போல், அநாகரிகமானது வேறில்லை.சோம்பேறிகளுக்குச் சிந்தனை வளமும் இல்லை,முதுகு நிமிர்ந்து எழவாய்ப்பும் இல்லை. மனதால்
44

சுங்மா இருத்தல்
பக்குவப்படுதலுக்கு உடல் உழைப்பும், சத்தியம், தர்மம் மேல் பற்றுதலும் முதற்கண் அவசியமானது.
எந்த நல்ல நோக்கிற்காகவும் ஒருவர் செய்கின்ற காரியம் தோல்வியடைந்தாலும் அவர் கவலைப்படுதல் இயல்பே. செய்யப் புகுந்த கருமத்துடன் முழு ஊக்கத்துடன் செய்தும் கூட அது பயனளிக்கவில்லை எனில், துயரடையத் தேவையில்லை. தார்மீக ரீதியில் ஒருவர் தன் மனச் சாட்சி யின்படி முயன்று தோற்றாலும் கூட அது அவரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உயர்நிலைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு அளிக்கும்.
ஒரு விவசாயி பல முறை முயன்று விவசாயம் செய்தும் கூட அவருக்கு லாபம் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவேயில்லை. அவர் சற்றும் மனம் தளரவேயில்லை. பணம்தான் விரயமாயிற்று. திடீர் என அவருள் ஒரு சிந்தனை உதித்தது. "நான் ஏன் விவசாயச் செய்கையில் தோற்றுப் போனேன்” என எண்ணி அதற்கான காரணங் களை ஆராய்ந்தார். தனது அனுபவங்களைத் தொகுத்து பெரிய நூலாக்கி வெளியிட்டார். என்னே அதிசயம்!, அவரால் வெளியிடப்பட்ட நூலை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தார்கள். அவர் தமது விவசாயத்தின் மூலம் அடைந்த நஷ்டங்களை சற்றும் எதிர்பாராத வகையில் தமது நூல் விற்பனை மூலம் பெற்றுக்கொண்டார். முயற்சியுடைய வர்களுக்கு சாதனையாளர்களுக்குச் சோகப்பட நேரம் இல்லை. வேகமும் விவேகமுமே இவர்களுக்குத்துணை1. இவர்களுக்கு எதிராகப் புறப்படும் சவால்கள் எல்லாமே
45

Page 25
பருத்திழ் பல லுயிரவருந்தர் ஒதுங்கி வழிவிட்டேகும். துன்பங்களால பெற்ற வெற்றியின், பின்னர் ஏற்படும் களிப்புக்கு நிகரேது?
சில பேர்வழிகளைப் பாருங்கள். தங்களது தோல்வி களுக்கு ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டிருப் பார்கள். ஆனால் சிலர் தமது காரியம் சரியோ, பிழையோ, ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள். இந்த நிலையில் வாழ்பவர்களால்தான் ஒருதிடமான எண்ணங்களைக் காலப் போக்கில் உருவாக்க முடியும். சும்மா படுத்துக் கிடப்ப வரைப் பார்த்து ரசிக்க முடியுமா?
ஒருவரைப் பார்த்து அவன் “நிறைவானவன்” என்று சொல்லும்போதே, அவரது செயல், எண்ணங்களின் தூய்மைத்தன்மையால் எம்மையறியாமலேயே அவர் பால் நாம் ஈர்க்கப்பட்டு விடுகின்றோம். திட சிந்தனையுடன் செயல்படுபவனை நம்பிக்கைக்குரிய மனிதராக உலகம் ஏற்றுக் கொள்கின்றது.
சதா உழலும் மனசுடன் தேவையின்றி அலையும் பிரகிருதிகள், எவரையும் நிம்மதியாக இருக்க விடவும் மாட்டார்கள். ஞானிகள், பெரியவர்கள், அரசியல் மூதறி ஞர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களுமே, அவர்களது தூய திடசிந்தனை மூலம் பெறப்பட்ட வைரத்தின் மேலாம் பொக்கிஷங்களாகும்.
நல்நோக்கிலான செயல்களுக்கும்,சிந்தனைக்கும்
46

சுரே இருத்தல் உள்நோக்கமான களங்கமோ பிறழ்வுகளோ கிடையவே கிடையாது. கல்லைப்போன்ற உறுதியும்,மென்மையான
மணம் கமழும் பூவைப்போன்ற இதயமும் எவரையும் வசீகரிக்கும், அரவணைக்கும். இயல்பான குணநலனுடன் இருப்பவர்கள், தாங்களும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பார்கள். "திடசிந்தனை” என்பது, இரக்கத்திற்கும், கனிவிற்கும் உடன்பாடானதே! நல்நோக்கத்திற்கான, வலிமைமிகு எண்ணங்கள், முற்போக்கிற்கே வழிகாட்டும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
02.03.2008
47

Page 26
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
リニー
சுயநலம்
சுயத்தை இழந்து ஒருவன் சீவிப்பது, தன்மானத்தைத் தொலைப்பதே யாகும். சுயநலமூடாகவும் பொது நலத்தைப் பேணமுடியும். ஒருவன் தன்னைப் பலப்படுத்தாமல் எப்படி உழைத்துச் சேவையாற்ற முடியும்? தன்நலமே பெரிதென்று பிறர் துன்பம் கருதாமல் வாழ்வது வீழ்ச்சிக்கான பாதையூடாகப் பயணிப்பது போலாகும். உலகம் பொதுவானது. அது எனக்கு மட்டுமல்ல, என்ற எண்ணம் வலுப்பட்டால் அதீத சுயநல எண்ணம் கழன்று சேவை மனப்பான்மை மனதில் பதியும். உலக ஷேமத்திற்காக எம்மைச் சீராக்கி வளமாக்குவோம்.
சுயநலம் என்பது தனது நலனை மட்டுமே கொண்ட தாகவும் மற்றயோரின் உரிமைகளைப் பறிப்பதும் அவர்தம் நலனை மறுப்பதும் கெடுப்பதும்தான் என்று அர்த்தம் கொள்வது சரியானது அல்ல. ஏனையவர்களுக்கு இடைஞ்சலின்றி தம்மை வளர்ப்பது சிறப்பானதே!
48
 
 
 
 
 

சுமோ இருத்தல்
சுயத்தை இழந்து ஒருவன் சீவிப்பது அவரது தன் மானம், சுயகெளரவத்தைப் பாதிப்பதாகவே கொள்ளப்படும். எவரும் தான், தானாகவே இருக்க வேண்டுமே தவிர, மற்றவனாக இருக்க முடியாது. மற்றவர்களின் உயர்ச்சி கண்டு அவர்கள் போல், தம்மை உயர் நிலைக்கு மாற்ற லாமே ஒழிய அடுத்தவன் போல் முழுமையாக தோற்றம் காட்டுவதும், நடிப்பதும் பொருந்தாத ஒன்று. சுயமாகச் சிந்தித்துச் சுயமாக வாழ்வது ஆன்ம திருப்தியூட்டும் நிலைதான் எனினும், அத்தகைய உன்னத நிலைக்குள் ஆட்படுத்தும் தன்மை எல்லோருக்கும் பொருந்தி வரக்கூடிய ஒன்றா?
சுயநலம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமைதான். இதுவிடயத்தில் ஒருவர் தன்னைக் காப்பாற்று தலுக்கும் தன்னைச் சார்ந்தோரைப் பேணுதற்கும் உரிமை யுடையவரே. ஆனால் இதன்பொருட்டு தமது கருமத்தை நிறைவேற்ற பிறர் முதுகில் சவாரி செய்வது அடுக்காத செயல். கொலை, கொள்ளைச் செயல்களைத் தமது நலனுக் காகச் செய்து கொண்டே அது மக்களுக்கு நீதி வழங்கு தலுக்காகச் செய்கின்றோம் என்று வேறு மனச்சாட்சி யின்றிப் போதனை செய்கின்றார்கள்.
ஒருவன் தன்னை வளர்க்காமல்விட்டால் அவன் மற்ற
யோரை எப்படி வளர்க்கவோ உருவாக்கவோ இயலும்
சொல்லுங்கள்? தான் போக வழியில்லாத மூஞ்சூறு விளக்கு
மாற்றையும் காவ முயல்வது போல் முதலில் தன்னைத்
49

Page 27
பருத்திபூர் பல. ஆயிரவநாதர் தூக்க ஒருவன் முயன்று வெற்றி பெற்றேயாக வேண்டும்.
ஒவ்வொருவருமே தத்தமது வாழ்க்கைக்கான சகல ஆதாரங்களையும்,ஸ்திரமாக்கிக் கொண்டேயாக வேண்டும். ஏராளமான சொத்துக்கள் இருக்கும் செல்வந்தர் நான் பொது நலவாதி என்று சொல்லி, இருக்கும் அனைத்தையுமே ஒரு நாளில் சற்றும் சிந்திக்காது உற்றார், உறவினர், நண்பர் களுக்குக் கொடுத்துவிட்டால் அவரது எதிர்காலம் என்னாவது? வெறும் கதைகளில் இத்தகைய கற்பனைகளை உருவாக்கலாம். யதார்த்தத்தில் எவரேனும் தம் சுய நலத்தை மறந்து இத்தகைய ஈகை செய்ய முன்வந்து நடு வீதிக்கு வரச் சம்மதிப்பார்களா? சில விடயங்களை வாயளவில் சொல்வது எளிதன்றோ!
ஒருவனின் வளர்ச்சி என்பதுவே மற்றவரை முடக்குவது என்று கருதுவதாலேயே இன்று சந்தோஷம் சாதகமின்றித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
தனிமனிதனை, சமூகத்தை, நாட்டின் வளர்ச்சியை முட்டுக் கட்டை போட்டு இன்னும் ஒருவரோ அல்லது வேறு சமூகங்களோ இதர நாடுகளோ முன்னேறி விட எத்தனிப்பது தான், தகாத சுயநலனாகும். ஆனால், இந்த வழி நல்லன வற்றைக் காட்டிவிடும். எனத் தப்பு அபிப்பிராயத்தினால் முடிவில் எல்லோருக்குமே அது கெடுதல்களையே காட்டி நிற்கின்றது.
50

சுமீர இருத்தல்
நாம், நாமாகவே உயர்ந்து கொண்டே போகும்போது பார்ப்பவர்கள் "இதோ போகின்றானே இவன் ஒரு சுயநலவாதி” என்று விமர்சிப்பது தகாது. எனினும், எங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளும் நாம் எம் கண் எதிரிலும், மறைந்தும் துன்பங்களுடன் தங்கள் பலதரப்பட்ட பிரச்சனை களுக்குள்ளும், மீள வழியின்றித்தத்தளிக்கும் ஜீவன்களை யும் இரக்கத்துடன் நோக்கியேயாக வேண்டும். "எனக்கு நேரமில்லை, நானும் எனது குடும்பம் மட்டுமே வாழ்ந்தாக வேண்டும். எல்லோரையும் நோக்க எனக்கு என்ன அவசியம் வந்துவிட்டது" என எண்ணுதல் மானுடநேயத்திற்கு விரோதமானது. அன்றியும் "எனக்கு இவன் என்ன உதவி செய்தான். கெடுதல்தானே செய்தான்” என்று பாராமுகமாக இருப்பது கூட மன்னிக்கும், பண்பிற்கு ஒவ்வாதது.
நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது விட்டாலும் சின்னச் சின்ன உதவிகளை இந்த உலகிற்குச் செய்தாலே அது மகத்தானதுதான். இவை எமது சுயநலத்தைப் பெரிதாகப் பாதித்துவிடாது அல்லவா?
மறைந்த பெரியவர் காஞ்சிகாமகோடி சங்கராச்சாரியர் ஒரு தடவை இப்படிச் சொன்னார். "ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசியைக் கொடுங்கள், இந்த உலகத்தில் நிலவும் பஞ்சத்தையே போக்கிவிடுவேன்" என்றார். ஒருபிடி அரிசி கொடுப்பதால் நமக்கு ஒன்றும் குறைந்து விடாது. மாறாக எமக்கு "அருள்” என்ற செல்வம் எம் மனதை ஆக்கிரமித்துப் பெரும் களிப்பூட்டும் அல்லவா?
51

Page 28
பருத்திபூர் பல. ஆயிரவநாதர் தொண்டு ஸ்தாபனங்களும், பொது நிறுவனங்களும் மக்களிடம் கோரும் சிறுசிறு உதவிகளை மனம் கோணாது செய்தால் ஏதோ ஒரு பங்களிப்பு எம்மாலும் முடிந்ததே என்கின்ற திருப்தியே அலாதியனதன்றோ.
பெரும் உதவிகளைப் பிறருக்குத் தெரியாமலேயே செய்துவரும் பரோபகாரிகள் இருக்கின்ற இந்த உலகில் சின்னச் சின்ன விஷயங்களுக்கே அப்பட்டமான விளம்பரம் தேடி சுயநலத்தைக் காட்டுகின்ற பேர்வழிகளைக் கண்டால் ஆத்திரமும், அருவருப்பும் வரத்தான் செய்யும்.
பொது இடங்களில் சிலர் நடந்து கொள்ளும் செயல்களைக் கண்டால் வியப்பாகவும் கோபமுமாக இருக்கும். அங்காடிகளில், தட்டுப்பாடான பொருட்களை வாங்க பொதுமக்கள் வரிசையாக நிற்பார்கள். சிலர் எந்தவித கூச்சமும்இன்றி நிற்கின்ற வரிசையைப் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக்கொண்டு போவார்கள்.
புகையிரத நிலையத்தில் மக்கள் பொறுமையாக, நுழைவுச்சீட்டைப் பெற நிற்கும் போது எப்படியோ, அடுத்த ஒரு பக்கத்தின் வழியாக உட்புகுந்து நுழைவுச்சீட்டு வாயிலுக்குள் கையை நுழைத்துவிடுவார்கள். சரி இப்படி யான இடங்களில் மட்டுமா இந்த அடாத செயல்கள் நடக் கின்றன? கடவுளைக் கும்பிடும் கோவில்களில்கூட முன்னே நிற்கும் பக்தர்களை நோக்காது, மற்றவர்கள் பார்வையை மறைத்துக் குறுக்கே நுழைந்து முன்னே போய் கடவுளை
52

கர்மா இருத்தலீ பிடித்துவிடுமாற்போல் நிற்பார்கள். இறைவனை எங்கே நின்று வழிபாடு செய்தால் தான் என்ன?
எல்லா வழிபாடுகளையும் இறைவன் எத்திசையில் இருந்தும் கருணையுடன் நோக்கியபடியே தன் அருளா ட்சியைச் செலுத்திக் கொண்டு இருப்பவன் அல்லவோ? அப்பட்டமான சுயநலத்தைச் சற்றும் வெட்கப்படாமலேயே காட்டி நிற்பவர்கள், பொது நலம் பற்றி எண்ணுதற்கே சந்தர்ப்பம் வழங்காதவராவர். சுயநலத்தோடு இணைந்த பொதுநலன் என்னும் சில செயல்களை நாம் பார்ப்போம்.
வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். செய்யும் இத் தொழிலை நாணயமாக, எந்தவித கலப்படமும் இன்றிச் செய்தால் அதனால் அவரும், அவரிடம் கொள்வனவு செய்யும் மக்களும் பயன் பெறுகின்றார்கள். இது தனியே சுயநலம் காட்டும் தொழில் அல்ல. அவர்கள், தமது தொழில் மூலம் பணமீட்டும் அதேசமயம், நல்லமுறையில் நேர்மையாக மக்கள் சேவை புரிந்தால் அது மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவிடுகின்றது.
நாம் வேதனம் பெற்றுத் தான் சீவிக்க வேண்டி யுள்ளது. வேதனம் பெறுகின்றவர், செய்யும் வேலைகளில் கரிசனையுடன் செய்யாது விட்டால் கடமைக்குத் துரோகம் செய்தவராகின்றார். எமது நலனுக்காக வாழும் போது, எமக்குக் காட்டும் கரிசனத்தைப் பொதுச்சேவையிலும் காட்டுவதே மானுட மாண்புமாகும். எனவே, சம்பளம், அல்லது கூலி பெறுதல் சுயநலம் மட்டுமே என்று சொல்ல முடியுமா? அதன் மூலம் பெற்ற பணத்திற்கு வேலை
53

Page 29
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் செய்யாது விடுதலே துரோகமாகும். எல்லா சுயநலத்தினுள் ஏதோ ஒரு வகையில் பொதுநலன் கலந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதேயாம்.
நாம் எமது அறிவை, ஆளுமையை எம் பொருட்டு மட்டுமன்றிப் பொது நோக்கிற்காகவும் பயன்பெறச் செய்ய வேண்டும். எல்லா உயிர்களும் வாழ்வதற்காகப் போராடு கின்றது. மண்புழு தன் சீவியத்தையோட்ட நிலத்தைக் கிண்டியபடியே, தன் உணவைத் தேடிக் கொள்கின்றது. ஆனால் அதனுடைய செயல் விவசாயிக்கு உதவும் செயலாகின்றது. மரங்கள், பச்சைப்பசேல் என்று வளர்ந்து தன்னைப் பசுமையாக்கி தனக்கான உணவைத் தயாரிப் பதுடன் இந்த உலகைக் குளுமையூட்டுகின்றது எமக்கு மழையைப் பொழிய உதவுகின்றது, பிராண வாயுவை தருகிறது, மரங்கள் எமக்குத் தரும் வரங்களின் பெறும தியை நாம் எவ்வாறு கணக்கிடுவது?
தானும் வாழ்ந்து, தன்னோடு இணைந்த சகல ஜீவ ராசிகளையும் வாழ்விக்கப் புழுக்களும், தாவரங்களும், மாந்தர்க்கு உதவுகின்றது. தான் மட்டும் வாழ எண்ணுதல் ஒரு வக்கிர புத்தியை ஏற்படுத்திவிடவல்லது என உணர்வாய்!
தன்னை மட்டும் கவனிப்போன் படிப்படியாக அடுத்த வனைக் கெடுக்கும் எண்ணத்திலும் தன் மனதை நுழைத்து விடுவான் தெரிந்து கொள்.
சுயபலம், பணபலம், ஆட்பலம் என எது எம்மைச்
54

கர்மா இருத்தல் சேர்ந்தாலும் இவையெல்லாமே, நாம் சமூகத்திற்குச் சேவை செய்கின்றோமா எனப் பார்ப்பதற்காக இறைவன் தரும் வழங்கல்கள் தான். அவர் தரும் செல்வங்கள் எல்லாமே உனது சுயநலத்திற்காக மட்டுமல்ல அதனூடு மக்களுக்கு உரிய விதத்திலும் கொடுத்து மகிழ்வாய்!
ஹே. மானுடா! . நீ என்ன செய்யப் போகின்றாய் உன் பொருட்டு செய்யும் செயல்களுடன் மற்றவர்க்கும் இயன்றவரை ஒரு சிறிதாவது நன்மைகளையும் உழைப்பினையும் கொடு!
ஒவ்வொரு மனிதனும், தன் ஆத்மாவின் தூய்மைக்கு அதன் நலனுக்கு அவனே பொறுப்பாளியாவான்.
பிறரிடம் நாம் உதவிகளைப் பெற்றுவிடலாம். ஆனால் எம்மைத் தூய்மைப்படுத்தலுக்கான பணி எமக்கேயானது. ஆயினும் நாம் மற்றயவர்கள் மூலம் பெறும் நல்ல அனுபவங்கள், பெரியோர்களின் வழிகாட் டல்கள் எமக்கான வழிகாட்டல்களாக அமைந்து விடுவதால், எமது ஆன்மாவும் தூய்மை யேற்றப்படுகின்றது. எமது சுய தேடல்கள்,
எம்மைப் பற்றிய சுய விமர்சனங்களை நாமே எமக்குள் செய்வதால் ஒரு பரந்த உள்நோக்கு எம்முள் படர்ந்துவரும். நாம் பொதுவாக எம்மைத்தேட ஆராய முனைவதில்லை. எம்மைத் தேடுதற்கே அச்சப்படுகின் றோம். எம்மைப் பற்றிப் பிறர் விமர்சிப்பதை அங்கீகரிப் பதுமில்லை. ஆனால் எங்களை யாராவது மிகையாகப்
55

Page 30
பருத்திபூர் பல. ஒயிரவநாதர் புகழ்ந்தால் மட்டுமே அதனை ஏற்று மகிழ்கின்றோம்.
எம்மீது அதீத நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமானதே. எனினும் கற்பனையாக, மிகையாக, எம்மைப் பற்றி கூற்றுக்களை சரி என்று நம்பிவிடுவது எம்மையே நாம், தவறான வழி நடத்தலுக்குட்படுத்துவது போன்றது அல்லவா?
எமது சுயத்தை மதிக்கும் நாம் எமது சுய வளர்ச்சியை எங்ங்னம் வளர்க்க வேண்டும் எனக் கருதாமல் இருப்பது முறையாகுமா? நல்ல நியாயங்களைக் கேட்கச் சம்மதிக்க வேண்டும். "கேட்க மறுக்கும் நியாயங்களைச் சொல்லிப் பிரயோசனமில்லை" என்ற கூற்றின் படி அடம் பிடிக்காது நாம் நல்லனவற்றை யாரும் சொன்னால் கேட்டேயாக வேண்டும் என உணர்ந்து எங்களை நாம் வளப்ப டுத்துவோம்.
தன்னை வளர்த்துக்கொள்ளாத நிலைகூட ஒரு சுதந்திரமற்ற நிலைதானே? பிறரை அண்டி வாழுதல், எதற்குமே தன்னை நம்பாமல், தான் செய்வது எல்லாமே தவறு என்று பயந்து சீவிப்பதும் ஒருவனைச் சுயமாகச் சிந்திக்க இயலாத தன்மைக்கு உட்படுத்திவிடும். துணிச்சல் இல்லாதவன் சுயமாகச் சிந்தித்ததைச் செயலுருவில் வாழ்ந்து காட்டமுடியுமா?
இன்று சிலர் யார் எக்கேடு கெட்டாவது போகட்டும், தங்கள் காரியம் முடிந்தால் சரி என்று குறுகிய மனப் பான்மையுடன் வாழ்ந்து வருகின்றார்கள். யாரிடமிருந்தாவது காரியமாக வேண்டும் என்றால் மட்டும் கெஞ்சிக் கூத்தாடிக்
56

சுமோ இருத்தல்
காலில் விழுந்தாவது தமது காரியத்தை முடிப்பார்கள். ஆனால் தமது காரியம் ஆனதுமே செய்நன்றி மறந்து எதுவுமே நடவாதது போல் தன்பாட்டிற்குப் போய்விடு வார்கள்.
தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கின்ற சுயநலப் போக்குள்ளவர்கள் கூடத் தம்மைப் பொதுநல நோக்குள்ள வர்களாகக்காட்டிக் கொள்வதுமுண்டு. உண்மையில் இவர்களது மனச்சாட்சி, பொதுநல நோக்குத்தான் சிறந்தது என உள்ளுரத் தெரிந்தும் கூட கெளரவமாக நடித்துவிட்டுப் போகின்றார்கள். தங்களது நடிப்பைப் பிறர் புரிந்து கொண்டிருப்பதை உணராமல் இவர்கள் இருப்பதே வேடிக்கையாகும்.
நாம் சந்தோஷமாக என்றும் இருக்க வேண்டுமாயின் எம்மால் யாராவது நிம்மதியும் சந்தோஷமும் கொண்டாலே அதைவிட எம்மால் பிறருக்கு வழங்கக்கூடியது வேறு என்ன உளதோ!
தம் சுயநலத்திற்காக ஏழைகளைக் கசக்கிப்பிழிவதும், சொற்ப வேதனத்தைக் கொடுத்து ஊழியர்களை மேலதிக வேலைகளை வாங்கும் ஸ்தாபனங்களும், இப்படிச் செயல்படுவது தமது திறமை என எண்ணலாம். பிறருக்கு இன்னல் விழைவித்துப் பூரணத்துவமான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியுமா? நாமும் வாழ்வோம், பிறரையும் குறைவில்லாது வாழ வழிவிடுவோமாக!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
17.02.2008
57

Page 31
புரிந்துணர்வுடன் உலகத்தோரிடம் உலாவந்தால் பிரச்சனைகள் ஏது? பிறரிடம், கரிசனை, நேயம் கொண்டால் கரிப்புமனம் கெளவ எண்ணுமா?சந்தேகம்,காழ்ப்புகொண்டால் புரிந்துணர்வு நெருங்கிவராது. தனி மனிதனின் தூய்மை அடுத்தவர்களையும், தொட்டு உணர்த்துகின்றது. விட்டுக்கொடுத்தல், ஆணவமுனைப்பு இன்மையுடன் வாழ்ந்தால், மாந்தர் எம் வசமாவர். சேர்ந்திணைந்து வாழ்வதே நிம்மதி புரிந்துணர்வு மன விசாலத்தைக் காட்டி நிற்கும்.
"புரிந்துணர்வு" என்பது மனித மனங்களுடாக, கரிசனையுடனும், பரிவுடனும், தமக்குள்ள மேலாதிக்க யுணர்வை விட்டுக் கொடுத்தலுடன் அன்புணர்வுடன் பகிர்ந்தளிக்கப்படும் மனப்பக்குவப்பட்ட மானுட அதியுயர் பண்பு ஆகும்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தானே பிரச்சனைகள், மனத்தாங்கல்கள் விஸ்வரூபமாகக் கிளர்ந்து
58
 
 
 
 
 
 

சுற்று இருத்தல் எழுந்து மன நிம்மதியையே கணப்பொழுதில் இழக்கச் செய்கின்றது. அமைதியை, நிம்மதியை,சமாதான வாழ்வை விரும்பாத மாந்தரில்லை. மற்றவர்க்கு அமைதியின்மையை ஏற்படுத்தி நிம்மதி காண விழையும் துர்நடத்தைக்காரர்கள் எங்குதான் இல்லை?
ஒரு பெரியகுடத்தினுள் ஏற்படுத்தப்படும் கடுகளவு துவாரம் அக்குடத்தின் முழு நீரையுமே வெளியேற்றிவிடும். ஒருசின்னச் சந்தேகமோ, அல்லது வேண்டாத நபர்களால் ஏற்படுத்தப்படும் துர்ப் போதனைகளும் மனிதனின் முழு வாழ்வையே அழித்து விடும். அமைதியின்மையை விரும் பாத ஒரு சிலரால் கூட மற்றவர் எண்ணங்களுள் வடுக்களை ஏற்படுத்தி “புரிந்துணர்வு” என்கின்ற புனிதமான, எண்ணத்தையே பூக்காமல் செய்யவும் முடிகின்றது. ஒவ்வொரு நபர்களுமே தம்மை ஆட்படுத்தும் நற்சிந்தனை களை மட்டும் உள்வாங்கச் சித்தமாகயிருக்க வேண்டும். போலியான அன்பைக் காட்டி மோதவரும் எத்தர்களால் பல அப்பாவிகள் அகப்பட்டுச் சின்னா பின்னமாக்கப் படுதலும் கண்கூடு.
ஒவ்வொருவருமே மற்றவர்களுடன் இணைந்து, சுமுகமாக வாழ்வேன் என உறுதிபூண்டு விட்டால், குரோத, வக்கிர எண்ணங்கள் தலைதூக்கி விடுமோ? மேலும், ஏதாவது சந்தேகங்கள், தப்பு அபிப்பிராயங்கள் தோன்றி னாலும் கூட, மென்மையுணர்வுடன் கூடிய நல்லவர்கள் தாமாகப்பேசியே சந்தேகங்களைக் களைந்து கொள்ளப்
59

Page 32
பருத்திபூர் அல. அவிழ்வருதல் பிரியப்படுவார்கள். நாம் மற்றயவர் மனதைப் புண்படுத்த லாகாது என்கின்ற எண்ணம் தானாக உதயமானதுமே புரிந்துணர்வு, நேயப்பாடுகளும் பிறந்து விட்டதாக எண்ணிக்கொள்ள முடியும். எச்சமயத்திலும், நாம் சரியான முடிவுகளை எடுத்துவிடமுடியுமா?
எமக்கு எதாவது சாதகமற்ற நிலை தோன்றுமிடத்து அது மற்றவனால் வந்தவினை என மனம் சாதிக்க விழைகின்றது. உண்மையில் நாம் நினைப்பதே தவறு என்று தெரியவரும்போது நாம் இயல்பாகவே, சங்கோஜப்பட வேண்டும்.
ஆனால் புரிந்துணர்வினை, நல்லனவற்றையே ஏற்காத நபர்கள் தமது தப்பான நினைப்புகளையே மேலும் வலுப்படுத்தும் எண்ணுதலுடன், அதுவே சரியென வாதிட்டு, மேலும் முனைப்பாக பாவப்பட்ட எண்ணங்களையே சுமக்கவும் தயாராகவிருப்பர். இந்த நிலை, முடிவில் இவர்களை அமைதி, நிம்மதியினை இழந்த நிலைக் குள்ளாக்கிவிடும்.
"என்னை எவருமே புரிந்துகொள்ளாமல் இருக்கின்
றார்களே? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்”?
எனப் பிரலாபிக்கும் மனிதர்களை அடிக்கடி பார்ப்பதுண்டு.
இன்னும் சிலர் "எங்களுக்கு வேண்டப்பட்ட நண்பரே
என்னை உதாசீனம் செய்து விட்டாரே! நான் என்ன
அவருக்குத் தீங்கிழைத்தேன்?" என்பார். ஆனால் இவர்
60

சுர்ஜ இருத்தல்
குறிப்பிடும் அந்த நபரிடம் போய்க்கேட்டால், அவர் வேறு விதமான பதிலைச் சொல்லுவார். "ஐயா அவர் தப்பாகப் பேசுகின்றார், நானாவது, அவரை உதாசீனம் செய்வதாவது, அவர் எனது நண்பர். ஏதாவது அவசிய கருமங்களின் பொருட்டு அவரை நான் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். மற்றப்படி அவருக்கும் எனக்கும் எந்தவித மனச் கசப்பும் கிடையவே கிடையாது" என்பார். மேலும் "அவர்தான் என்னைப் புரிந்து கொள்வதில்லை” என்றும் சொல்லிக் கொள்வார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலே எடுக்கின்ற முடிவுகள் தவறானவையல்லவா? "சமூகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை" என்று பலர் ஆதங்கப்படுவதுண்டு.
உண்மையில் மிகச் சிறந்த திறமைசாலிகள்கூட மறைக்கப்படுவதுண்டு. வேண்டாத அரைவேக்காடுகள், அறிவிலிகள் கூட சமூகத்தில் நடித்து பெருமதிப்பைப் பெறும் சந்தர்ப்பங்களுமுண்டு. இந்தகையவர்களைப், புரிந்து கொள்ளாமல் மக்கள் ஏற்று மேடையேற்றுவது முடிவில் ஏதோ ஒரு சந்தரப்பத்தில் உண்மை நிலை உணரப்படும் போது, செய்த தவறுகளை ஏற்பதால், பயன் என்ன கிடைக்கப் போகின்றது? மக்கள் செய்கின்ற தவறுகளை மக்கள்தான் ஏற்கவேண்டும். தவறுகளுக்கான தண்டனைகளைக் கூட ஏற்க வேண்டியநிலை ஏற்படலாம்.
இன்று சாதாரணமாக இல்லங்களில் நடைபெறு கின்ற சம்பவங்களைப் பாருங்கள். கணவன், மனைவி,
61

Page 33
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடப் பதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றார்கள். மனைவியின் விருப்பத்தை, இயல்பான, நியாயமாக அவளது ஆசைகளை கணவன் நிராகரிப்பது நியாய மாகாது. அதேவேளை, கணவனின் உண்மையான நிலை, அவனது பிரச்சனைகளை, மனைவி, பிள்ளைகள் உண ராமல் செயல்படுதலும் முறையல்ல அல்லவா? குடும்பத் தின் பொருளாதார நிலையுணராமல் பிள்ளைகள் வசதிகூடிய குடும்பத்தின் வளங்கள் போல தமக்குக்கிட்ட வில்லையெனப் பெற்றோரைச் நச்சரிப்பதும் பொருத்த மற்றது.
அண்மையில் ஒரு பேராசிரியர் சொன்ன தகவல் இது, ஒரு வீட்டில் தமது மகனைப் பெற்றோர் வன்மையாகக் கண்டித்துக் கொண்டிருந்தார்களாம். கேட்டதற்கு,"இவன் இம் முறை இரண்டாம் பிள்ளையாக வகுப்பில் வந்திருக் கின்றானே? வெட்கமில்லையா? ஏன் இவன் இம்முறை முதலாம் பிள்ளையாக வரவில்லை" என்றார்களாம். இவர் களுடைய பேச்சு அந்தப் பிள்ளையை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா? இரண்டாம் பிள்ளையாக வந்ததற்காகப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. இவ்வளவு தூரம் பையன் கஷ்டப்பட்டுப் படித்து இரண்டாம் பிள்ளையாக வந்திருக்கின்றானே என எண்ணித் திட்டாமலாவது இருந்திருக்கலாம். இந்தப் பெற்றோர்களின் இத்தகைய போக்குகளால் பிள்ளைகளுக்கு விரக்தியுடன், பெற்றார் மீதான வெறுப்பு, வன்ம உணர்வுகள் கூடத் தலை
62

சுமேரி இருந்தn தூக்கலாம் அல்லவா? மற்றவனின் மன உணர்வுகளை மதிக்காமல் அவர்களை உதாசீனம் செய்யுமாற்போல் பேசுவது, நடந்து கொள்வதுபோல அநாகரிகம் வேறு என்ன oguLIT?
பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் மாணவர் போராட்டங்களைப் பாருங்கள். மாணவர்களின் இயல்புகள், அவர்களது நியாயத்தன்மைகள் பற்றிய முகாமைத் துவங்களும், முகாமைத்துவங்களின் உண்மையான நிலைமைகளை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மாணவர்களும் புரிந்து கொள்வதில்லை. இதே போல நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஏன் எமது நாட்டில் வைத்தியர்கள் கூட வேலை நிறுத்தம் செய்கின்றார்கள்.
வைத்திய சேவை ஒரு அத்தியாவசியப் புனிதப்பணி என்பது நாம் அனைவரும் அறிந்ததே, உண்மையில் எல்லாத்தரத்து அலுவலர்களுக்குமே பிரச்சனைகளுண்டு என்பதை ஏற்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுகின்றார்கள். போக்குவரத்துச் சேவை ஊழியர்கள் கடமைக்குச் செல்லாமல் வீதிக்கு வந்து கோரிக்கை வைக்கின்றார்கள் எனச் செய்திகள் அவ்வப் போது வந்து போகும். எனினும் சம்பந்தப்பட்ட, பிரச்சனை களை முற்ற வைத்துப், பல கோடி ரூபாய்களை இழக்கச் செய்து, மக்களை நோகடித்த பின்புதானா அவைபற்றிய பிரச்சனைகளை ஆராயக்குழு நியமிக்க வேண்டும்?
63

Page 34
கருத்திபூர் அல. ஆயிரவருதல்
இந்தக் கூத்து எல்லாம் வளர்முக நாடுகள் என்றில்லா மல், அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தானிருக் கின்றது. பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்க்க எவராவது முதலில் முன்வருவதே ஒரு கெளரவக் குறைவாகக் கருதுகின்றார்கள். இழப்புக்குப் பின்னரே தீர்வு என எண்ணு தலே ஒரு இறுதித் தீர்வு எனக் கருதினால் துன்பப்பட்டேயாக வேண்டும் என்பதே தலை எழுத்தா என்ன? கொஞ்சமாவது சிந்தித்தால் தான் என்ன ஐயா? சமூக விரோதக் கும்பல் களுக்கு புரிந்துணர்வு, மனச் சாட்சி உறுத்தல் என்கின்ற விஷயங்களே அவர்களைப் பொறுத்தவரை அநாவசி யமானது. அவர்களது தேவைகளை எந்த ரூபத்திலாவது செயல்படுத்தப்படல் வேண்டும். தர்மம், நியாய அநியாயங் களை நோக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகின்றது?
புரிந்துணர்வுடன் பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்க்கமாட்டேன் என்கின்ற எண்ணத்துடன் வந்து போலி யாகப் பேசினால் மனக்கசப்புகள் எவ்வாறு விலகிப் போகும்? நிரந்தரமான மனக்கசப்புதான் கெளரவத்தினைக் காப்பாற் றிக் கொள்ள வழிவகுக்கும் எனக்கருதித் தொடர்ந்தும் துன்பத்தில் மூழ்கிட எத்தனித்தால் எதுதான் சுமுகமாகிவிடப் போகின்றது?
இன்று உலக நாடுகள் எல்லாமே சமாதானம்
சமாதானம். என்று சொல்லிக் கொண்டே சண்டைக்கு
ஆயத்தங்கள் செய்துகொண்டும், அதற்காக ஆயுதங்களை
64

சுமோ இருத்தல் உற்பத்தி செய்வதும், பெருக்குவதும், தமது நேசநாடு களுக்கு சுண்டல், அவல், பொரிபோல் ஆயுதங்களை வினியோகிப்பதும் கவலையூட்டும், கோபமூட்டும், அநாகரிகக்காட்சிகள்! மக்களின் எண்ணங்களை, அவர் தம் அபிலாசைகள், ஏக்கங்களை, நாடுகளை ஆளுகின்ற தலைவர்கள் புரிந்து கொள்வதேயில்லை.
உண்மையிலேயே பாரிய பிரச்சனைகளைத் தீர்க்க ஒரு தலைவர் புறப்பட்டால் இன்றும் ஒரு சில தீயசக்திகள் அவர்கள் எண்ணங்களை மழுங்கடித்துக் குழப்பி
விடுகின்றது.
சமாதானம் கொடுப்பது, அல்லது விட்டுக் கொடுப்பது தமது வீரத்திற்கு அகெளரவமானது என்கின்ற தப்பான கருத்தையே தீவிரமாகக் கடைப்பிடிப்பதே, தாம் சார்ந்த நாட்டிற்கே பெருமை என்று எண்ணினால், எந்த நாடு தான் நெடிது உயரமுடியும்? இன்றும் கூட, இந்த உலகம் இத்தகைய இழப்புகளை, கடந்த உலகமகாயுத்தங்கள் மூலம் சந்தித்தும், இழப்புக்களால் புரண்டும் கூட "புரிந்து ணர்வின் மூலம் சமாதானம்" என்கின்ற பகுத்தறிவை நாம் பூரணமாக ஏற்றுக்கொண்டோமா? பலத்த போராட்டங்களின் மூலம் வெற்றியடைந்த நாடுகள் கூடத் தாம் கடந்து வந்த பாதைகளை மறந்து வலிமை குன்றிய நாடுகளை வதைப்பது மேன்? புரிந்துணர்வுகள் மூலம் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. இதனால், அன்பு, பரிவு, நேயப்பாடுகள் தான் எம்மை வந்தடையும். இந்தப் புரிந்துணர்வு தனிப்பட்ட
65

Page 35
பருத்திபூர் அல. விருைந்தர் இரு நபர்கள், அல்ல பலபேர்கள் சார்ந்ததுமட்டுமல்ல, சர்வ உலகத்து மாந்தருக்குமான ஒரு நேயப்பாடுடனான உறவினால், பரிமளிப்பதாகும்.
புரிந்துணர்வின் மூலம் பெறப்படும் பெறுபேறுகள் எல்லாமே தர்மத்திற்குக் கிடைத்த வெற்றி தான் எந்த நாட்டு மக்களும் தங்கள் முன்னேற்றத்திற்கான கரிசனை உணர்வை தாமாகவே உருவாக்க வேண்டும். மற்றவரை மட்டும் எதிர்பார்க்கலாமா? மதம் அல்லது இனம், மொழி சார்ந்தவர்களிடையே மோதல்களை ஏற்படுத்த அந்நிய சக்திகள் சுயநலநோக்குடன் புரிந்துணர்வுப் போர்வையில் அநியாயமான வழிகளில் தம் ஆட்சியைப் புகுந்த எண்ணிக்கொள்கின்றன. தான்வாழப் பிறரைவதைப்பது இறைவனுக்கு அடுக்காத செயல்.
கொள்கைகளை கருத்துக்களை நற்சிந்தையுடன் போதிக்கப்படல் வேண்டும். உள்நோக்குடன் சித்தாந்தம் போதிப்பதும் அதைக் கேட்குமாறு தூண்டிவிடுவதும் உலகில் நடக்கின்ற அடாத செயல்கள்.
விட்டுக் கொடுப்பதும் புரிந்துணர்வுடன் பிறரை மதிப்பதுமே எங்களை நாம் மிஞ்சிக் கொள்ளும் வீரம் மிகு செயலாகும்.
புரிந்துணர்வுடன் மற்றவரை மதித்து வாழ்வதன் சந்தோஷங்களை அனுபவித்து உணர்ந்து பாருங்கள்,
66

சுரே இருத்தல் அப்போதுதான் நாம் வாழுகின்ற வாழ்வின் அர்த்தமே புரியும்! தனி ஒருவனின் தூய்மை, அவனைச் சூழ இருப்பவர்களையும் படர்ந்துகொள்ளும், நாம் ஒருவனைப் பார்த்த மாத்திரத்தே அவர் என்னை ஒத்த மானுடன் என எண்ணினாலே போதும் பரிவும், பாசமும், நேயமும்
தானே வந்து விடும்.
சீறிடும் கடல் அலை, கர்வமுடன் முழு மூச்சுடன் மோதிடும் பெரும்புயல், கொட்டும் பெருமழையின் வேகங் கள் எல்லாமே ஒரு சிறிது பொழுதுகளே! இவை அடங்கி விடும்.
ஆனால், அமைதியுடன் நிலைமைகளைச் சீர்தூக்குபவன் நிர்மலமான நீல மேகம் போல, அமைதியான ஆழ்கடல் போல், நிதானமாக, செளகர்ய மாகச் சந்தோஷமாக, மற்றையவர்களுடன் அந்நியோன்ய மாகச் சீவித்துக் கொண்டிருப்பான். மனித மனங்களுடன் அன்புடன் உறவுகொள்பவன் ஆரோக்கியமானவன். என்றும் மற்றவர்களைப் புரிந்து வைத்திருப்பவன். இந்த உறவுநிலையே நிரந்தரமானது. ஆர்ப்பாட்டமற்ற அமைதி யானதுமாகும். புரிந்துணர்வு கொண்டவர்கள் சரிந்து போனதுமில்லை
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 24.02.2008.
67

Page 36
பருத்திபூர் 04ல. அவிஷாதம்
கருறை
பேரண்டப் பெருவெளி முழுமையும் கருமை, கருமுகில், பெரும்மலை கருநீலப் பெரும் கடல் என உலகில் கருமையின் ஆட்சிபற்றி இயம்பமுடியாது. மனிதனின் அரைவாசிப் பொழுதும் இருளில் தான் முடிகின்றது. மனித உற்பத்திகள் இரவில் தான் உதயம். அவன் இமைக்கும் காலப் பொழுதுகள், பகலிலும், இருளைத்தேடும் காலங்களையும் இணைத்துப் பார்த்தால்,கருமையின் பரிணாமங்களைக் சொல்லிடமுடியுமா? கருமையும் அழகுதான் ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு. கரும் பலகையில் தான் கல்வி கற்றோம். கருமுகில்களால், புவி, குளுமை யேற்றப்படுகின்றது. கருமை பெருமைக்குரியதே.
கருமையின் பெருமைகள் அளப்பெரியன. கருமை பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் அதனைச் சிறுமைப்படுத்திக் கருதுவதும் பேசுவதும் பொருத்தமற்ற தேயாம்.
சூர்யப்பார்வைக்கு எட்டாத அண்டத்தினுள், சூன்யப் பெருவெளி முழுமையும் கருமை, கருமைதான்! கருநீலப்
68
 
 
 

சுர்ரா இருத்தல் பெருங்கடல், பெருமலைகள், கருமேகங்கள் எல்லாமே உலகின் இயக்கத்திற்கே அத்தியாவசியமான இறையின் கொடைகள். கருமேகத்தினூடு பாய்ந்தோடும் வெண் மின்ன லால் ஏற்படும் இயற்கை மாற்றங்களை என்னென்பதோ! கருமேகத்திலிருந்து கொட்டும் மழை, உலகை முத்தமிடுவ தால் தானே உலக உயிர்கள் விழித்தெழுகின்றன!
" கரியதாய் தெரிந்த கருவறையில் உருவாகிப் பிறந்தவன் தானே இந்த அரிய மனிதன்!”
இந்த அவனியில் மனிதன் தன் அரைவாசிக் காலத்தை இருளிலேயே கழித்துவிடுகின்றான். மிகுதி அரைப்பங்கு காலத்தை ஒளியில் கழித்தாலும்கூட பூட்டிய மண்டபத்தினுள்ளும், அறையினுள்ளும் செலவழிக்கும் இருளுடன் இணைந்து கொள்ளும், காலத்தையும் கணக்குப்பண்ண இயலுமோ? -
மேலும் பலஉயிர்கள் மண்ணுக்குள்ளும்,கரும் பாறைக்குள்ளும், புதையுண்டபடியே உயிர் வாழ்வதும் புதுமையோ புதுமை!
மனிதனின் இன்பங்கள் சுகானுபங்கள் இந்த இருட் டுக்குள்ளே நடந்து கொண்டிருப்பதும், அதனாலேயே, புது உயிர்கள், புறப்படுவதும் தெரியாத இரகசியமோ?
கேளிக்கைகள், பொழுதுபோக்குகள், திரைப்படக்
69

Page 37
பருத்திபூர் அல. விற்றுருந்தர்
காட்சிகளுக்கு இரவுப்பொழுதுதான் உசிதமான இனிமை கூட்டும். இரவைப் பகலாக்கப் பல கோடி மின்குழிழ்கள் பொருத்தப்பட்டாலும் கூட இவையெல்லாமே ஒரு சூரியன் ஒளி முன் நின்றிடாது. ஆயினும், இருளில் மின்குமிழ் ஒளி பட்டால் பளிச்சென்று துலங்குமன்றோ இரவின் அழகினை தான் செயற்கையாகத் தயாரித்த ஒளியூட்டும் கருவிகளால், உலகை அழகுபடுத்த மனிதன் விழைகின்றான். இரவின் அழகுகளை நாம் மேலும் அழகுபடுத்த முயன்று கொண்டே யிருக்கின்றோம்.
உழைத்துக்களைத்தவர்கள் தம் நிம்மதியை கருமை யழகுள்ள இரவுக்காலத்தின் பொழுதுபோக்கும் இடங்களில் அடைந்துகொள்ள விழைகின்றார்கள்.
கலை, கலாசார நிகழ்வுகள் உல்லாச விடுதிகள் பகல் பொழுதுகளில் இயங்கினாலும் கூட பெரும்பாலான, சந்தோஷமூட்டும் மண்டபங்களும், விடுதிகளும் இரவுக் காலத்திலேயே இயங்கிக் கொள்கின்றன. இவைகளை நாடுவோர் பகல்வேளைகளில் செல்ல,நேரம் கிடைப்ப துமில்லை.
மனிதன் மனோநிலைகூட பகல் பொழுதிலும் பார்க்க இரவுப் பொழுதினையே வேறுபட்டு நோக்குகின்றன. இருண்ட பொழுதில் ஓய்வைத்தேடி அனுபவிக்க விழைகின்றான். பேரின்பம் தேடும் ஆன்மீகவாதிகள் கூட சப்தமற்ற வேளையென இரவுக்காலத்தையே புலன்களை ஒடுக்க உகந்த நேரமாகக் கருதுவார்கள். நிம்மதியான
70

சுமோ இருத்தல் காலம் இரவுப்பொழுது, என்பதற்குக் காரணம், மேல திகமான உடல் உழைப்புகள் குறைவு என்பதனலாகும்
எனக்கருதலாம்.
கல்வி கற்கும் மாணவர்கள் கற்றறிந்த பெரியோர்கள், ஆய்வாளர்களுக்குச் சப்தமற்ற சூழ்நிலைதான் தேவைப் படுகின்றது. சலனமற்ற, நிம்மதியான நிலையில்தான் புலன்களின் சேவை உரியபடி தீட்சண்யமாக எமக்குக் கிட்டுகின்றது. மனம் உறுதியுடன் நிலையாகக் கல்வியைக் கற்கவும், இரவு வேளையும், அதிகாலையில் சூரியன் உதிக்குமுன்னரே எழும்பித் தம் கடமைகளை நிறை வேற்றவும் இந்த பொழுதுபோல் சிறப்பானது வேறில்லை, தெரிந்திருப்பீர்கள்! நாம் பகல் பொழுதைவிட, இரவு நேரக் கடமை செய்யும் மனிதர்களின் சிரமங்களையும் நினைவு கூர்வோமாக!
காலையிலும் மாலையிலும் இறைவணக்கம் செய்வதுடன் நின்றுவிடாது உறக்கத்திற்குள் நுழையு முன்னரே, அடுத்த நாட் பொழுதுகள் இனிமையுடன் மலர இரவில் சிறிது நேரம் இறைநாமம் செய்து பிரார்த்தனை செய்வீராக! நல்ல உறக்கமும், நிம்மதியான மனசும் வந்திட இந்த இரவுநேரப் பிரார்த்தனைகள் உங்களுக்கும், உங்களது வழிபாட்டால், இந்த உலகமும் செழிக்கட்டும்!
சதா பகல் பொழுதுகளில் இரைச்சலுடனும், இரசாய
னக் காற்றுடனும் வாழும் நாம் தேகத்தையும் சஞ்சலப்
படுத்திக் கொண்டிருக்கின்றோம். இவைகளில் இருந்து
71.

Page 38
பருத்திபூர் அல. ஆயிரவருதல் விடுபட இரவுக் காலத்தை நல்ல முறையில் பயன்படுத்தத் தெரிந்து கொள்வோம்.
இறைவன், கருமையான இரவுப்பொழுதை இயற் கையாகவே ஏன் உண்டாக்க வேண்டும்? நிம்மதியாக விழிகளை மெதுவாய் மூடு நல்ல மன உறுதியைத் தேடு, நிம்மதியாகச், சாவகாசமாகப் படுத்து ஓய்வு எடு! பரபரப் பான பகல் பொழுதில் இருந்து விடுபடு மேற்படி விடயங் களை இரவுக்காலத்தின் அமைதி மூலம் நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.
எனவே, இந்த நேரத்தின் ஓய்வுடன் கூடிய நிம்மதி யால்தான் நீ அடுத்துவரும் காலத்திற்காக உன்னைச் செப்பனிடவழி சமைத்தவனுமாவாய்!
மேலும் சிலர் கறுப்பு என்றால் இளப்பமாகவே, சற்றும் சிந்திக்காமல் சொன்னாலும்கூட இவர்கள் தேடும் சுவை, சந்தோஷங்கள், எதிர்பார்ப்புக்கள் அங்கேதான் இருக்கின்றது என்பதை உணரல் வேண்டும்.
கறுப்புத் திராட்சை, கசக்குமா என்ன? கருநாவல் பழம், கருவிழி,அழகாக இல்லையா? கருகரு என நீண்ட கேசம் உருண்டோடியபடியிருக்கப் பாவனை காட்டிப் பேசும் கருமையுடன் கூடிய விழிகள், அதன் மேலமைந்த நீண்ட புருவக் கோடுகள், இவையெல்லாம் பெண்மைக்கே அழகூட்டும் கருமைச் சிருஷ்டிப்பன்றோ!
72

சுமோ இருத்தல் இந்துக்களின் முழுமுதல் தெய்வம் சிவனின் பத்தினி உமையவள், அவர் அண்ணன் திருமால் கறுப்பு வண்ண த்தினர். மேலும் மன்மதனில் மனைவி ரதி கூடக் கறுப்பு த்தான். உலக அழகி கிளியோபத்ரா பளுப்பு நிறத்துக் கறுப்பு அழகி. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். பண்டைய கலை வடிவங்கள், கட்டிடங்கள் கோவில்களும்,
சிற்பங்களும் கருங்கல்லில் இருந்து தானே உயிர்த் தெழுந்தன. கறுப்பு நிறப்பலகையில், வெண் கட்டியால் எழுதித்தானே நாம் படித்து உயர்ந்தவராகின்றோம். கறுப்பும், வெள்ளையும் இணையும் போதுவரும் அழகே அழகு!
இன்று சகல துறைகளிலும் கறுப்பு இனத்தவர்கள் தானே முன்னே வந்து நிற்கின்றார்கள்! அரசியலாகட்டும், விளையாட்டு, கலைத்துறைகளில் அகப்படும் கறுப்பு இனத்தவர்களின் பாரிய பங்களிப்பை இந்த உலகம் மதிக்கின்றது.
முன்னர் ஒருகாலத்தில் அடிமைகளாக, மிருகங் களிலும் கேவலமாக மதிக்கப்பட்டவர்கள் இன்று உயர்ந் தோங்கி வளர்வது கண்டு முழு உலகமே விழித்துப் பாராட்டி நிற்கின்றதே! கறுப்பு இனத்து விடுதலைவீரர் மார்ட்டின் லூதர் சிங், நோபல் பரிசு பெற்ற அதிவண்-பிதா-ரூட்டு, முன்னாள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்ட லிசா ரைஸ் அம்மையார், போன்ற பலர் கறுப்பு இனத்தின் கெளரவமிக்கஅடையாளங்களாக இருக்கின்றார்கள்.
73

Page 39
பருத்தில் பல. ஆயிரவருந்தர்
மேலும் வெள்ளை இனத்தவர்களுக்கு நாம் எல்லோ ரும் அவர்கள் பார்வையில் கறுப்பர்கள் தான். ஒரு காலத்தில் அவர்கள் எமது நாட்டை ஆண்டு வந்தமையினால் தம்மை உயர்ந்தோராகக் கருதி விட்டார்கள். ஆண்டு வந்ததால் உயர்ந்திட முடியாது. அடிமைகள் என்பதால் தாழ்ந்தவரு மல்லர் காலமாற்றங்களால் எல்லாமே மாறும்.
இன்னமும் கூட வெள்ளையர்களின் நிறவெறி ஓய்ந்த பாடில்லை. ஆயினும் தமது தேசவளர்ச்சிக்கு கறுப்பர் களையும் நம்பித்தான் இருக்கின்றனர். இந்த மேலாதிக்க எண்ணங்கள் இனிமேலும் இவர்களுக்குச் சாதகமாக அமையப்போவது மில்லை.
ஒரு இனத்தை மாற்ற இனம் சார்ந்துதான் வாழ்ந்தே யாக வேண்டும். இந்த இன நிற மதவெறியுடன் வாழ்ந்துவிட முடியுமா? இப்போதைய நம் வாழ்வின் அர்த்தமே இனிவரும் எமது நல்வாழ்வை மேலும் மேம்படுத்து தற்காகவே. எனவே, குறுகிய எண்ணங்களும், தமது பரம்பரை பற்றிய அதீத கற்பனைகளும், வாதங்களும் எம்மை உயர்விக்க வழிசமைத்துவிடுமா?
தன் மனத்தைச் சதா காயப்படுத்தியும் பிறர் வாழ்
வைச் சீரழிக்க முனைவோரையும் இருள் சூழ்ந்த மனத்
தினர் எனச் சொல்வதுண்டு. சிலவிடயங்களை சிலர், புரிந்து
கொள்ளாமல் இருக்கும்போது உன் மூளையில் என்ன
களிமண்ணா என்று கேட்பதுமுண்டு. இருள் பொருட்களை
74
 

சுர்ஜ இருத்துலீ மறைத்து நிற்கும். உண்மைகளை ஏற்காமல் சதா பாவங் களைப் புரிபவர்களைபற்றிப் பேசும்போது நல்லதை உணராத்தன்மைக்காக இருட்டை ஒப்பீடு செய்கின்றார்கள். இதற்காக "இருள்" என்பதே கேடு என்று அர்த்தப்பட்டு விடுமா?
அதுபோல், தலைக்குள் களிமண்ணா இருக்கின்றது எனத்திட்டினால் களிமண் தரம் தாழ்ந்துவிடாது. களி மண்ணினால் அலங்காரப் பொருட்கள், சமைப்பதற்கு உதவும் பானை, சட்டி என்பன களிமண்ணினால் தானே! உருவாகின்றன.அதுமட்டுமா? களிமண்ணினால் தான் நவநாகரீகமான வீடுகளுக்குப் பதிக்கும் தரை ஓடுகளும் தயாரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பொருளுமே அது இருக்கும் இடத்தில் இருந்தால் அழகுதான். வர்ணங்கள் எல்லாமே அழகுதான். அவை பொருத்தமாக அமைந்துநின்றால்அது லட்சணமாக இருக்கும் வெறும் அழகு நிறைந்தவர்கள் மட்டுமே நல்ல குணாம்சமானவராக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியுமா? நல்ல பண்புகள் உடையவர்களை நாம் வெறும் புற அழகைக் கொண்டு எடைபோட்டு விடமுடியுமா? புற அழகினை முதன்மைப்படுத்தி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் ஈற்றில் படும்பாடுகளைச் சொல்லிமாளாது!
அடிக்கடி பார்க்கும் இயற்கை அழகுள்ள பொருட் களையே நாம் ரசிக்கத் தெரியாமல் இருக்கின்றோம்.
75

Page 40
பருத்திபூர் பல. அவிர்வதன் மழைகாலத்துக் குளிரில் நடுங்கியபடியே வெளியே வந்து
மரம் செடிகளைப் பாருங்கள்! அவை கரும் பச்சை அழகுடன், சிலிர்த்தபடியே இருப்பதையும், புதிய துளிர் களை வெளியே காட்டி நிற்கும், சின்னப் புற்களைப் பாருங்கள் வெம்மையின் கொடுமையில் தப்பித்து, மப்பும், மந்தாரமுமாய் உள்ள சூழலில் மழையில் நனைந்து, ஆனந்தக் குளியலின், சுகமே, சுகம்!
எல்லா வர்ணங்களின் மொத்த அழகுகளையும் இயற்கை அன்னை வாரிவழங்கியிருக்கின்றாள். பஞ்ச வர்ணக் கிளிகளை, புள்ளிமான்களை, வீரம்மிகு சிங்கம், புலிகளின் கம்பீரத்தையும் ரசிக்கும் நாம் கருமை நிறத்து பலம் கொண்ட யானையையும், மென்மையுள்ள கீச், கீச் செனச் சிறகடித்துப் பறக்கும், குருவிகளை, சாம்பல் நிறத்துப் புறாக்களையும் ரசிக்காமல் விடுகின்றோமா?
நாம் அடிக்கடி பார்ப்பதால் காகத்தின் அழகை ரசிப்பதில்லை. காகத்தையே காணாதவர்க்குக், காகமும் அழகுதான் சந்தேகமில்லை. நாம் எந்த அழகியையும் தொடர்ந்து, பார்த்து ரசிக்க முடியுமா?
இயற்கை பொருத்தமான இடத்தில், பொருத்தமான
வர்ணங்களைத் தோய்த்தெடுக்கின்றது. மரக் கிளையின்
இலைகள் பச்சை நிறமாகத்தான் இருந்தால் சிறப்பு.
இலைகள் வெளுத்துப்போனால், அது உதிரப்போவதைக்
காட்டும். இளமையில் கேசம் கருமையாகவும், வயது
முதிர்ந்த பின்னர் அது வெளுத்துப் போவது இயற்கை,
76

சுர்ஜ இருத்தல்
எம்மை நாம் கண்டுகொள்ள இறைவன் கொடுத்த சமிக்ஞை.
ஆண் ஆணின் உடல் அமைப்பிலும், பெண், பெண்ணின் உடலமைப்பிலும் இருந்தால் தான் அழகு. இவைகளை இயற்கை சரிவரச் செய்து கொண்டு இருக்கின்றது. வலிந்து பெண் ஆணாகவும் ஆண், பெண்ணாகவும் தமது தோற்றத்தை மாற்றினால் ரசிக்க (ՄՋԼգԱIT5l.
எனவே, நாம் வண்ணங்கள் பற்றிக் கண்டபடி விமர்சிப்பதும், குறைப்பட்டுக் கொள்வதும் பொருத்தமற்றது. எந்தப் பெரிய அறிஞர்கள் கூடப் புலன்வசப்படுவதுண்டு. நல்லது எது, கெட்டது எதுவெனத் தெரியாமல் மயங்கி வீழ்வதுமுண்டு. எல்லாமே அவன் படைப்பு என்கின்ற, அறிவின்பால் உண்டாகும் "நம்பிக்கை"வேரோடி எம்மை ஆக்கிரமித்தால் சகல படைப்புகள். அதன் அமைப்புக்கள் நிறங்கள் யாவையுமே சிறப்பாக அமைந்தனவே. எண்ணத்தில் கொள்க!
நாம் , வெறுத்து ஒதுக்குதற்கு எத்தனையோ கெட்டவிஷயங்கள் இருக்கின்றன. இருப்பினும் எம்முடன் சிலசமயம் கூட இருந்து கொள்ளும் இந்தச் சில துர்க்குணங்களைக் கண்டு கொள்வதும் இல்லை. யாராவது இதைச் சுட்டிக் காட்டினால் கோபமும் வந்துவிடுகின்றது.
மறைபொருளாக இருக்கும் நல்லனவைகளை நாம்
77

Page 41
பருத்திபூர் அல. ஹவிரவநாதர் கண்டு கொள்ள முனையவேண்டும். வெளிப்படையாகத்
தோற்றம் காட்டிநிற்கும் உண்மைப் பொருளைக் காணாமல் விட்டு விடுவதோ வேதனை அறிய வேண்டியதை அறிவதும், தெரிவதும், தெளிவதும் எமது அரிய தேவைகள்! கருமைக்கும், வெண்மைக்கும் பேதம் காட்டாது. இவைகளின் சிறப்புகள் எங்கே, எங்கு உண்டு எனக் கண்டு கொள்ளும் போது பல உண்மைகள் துலங்கி நிற்கும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
10.02.2008
78

சுரீழrஇருத்தh
சவால்கள்
சவால்களைச் சமாளிக்கக் கூடாது. அதை உடைத்தெறிந்து வெற்றி கொள்ள வேண்டும். எமது சவால்கள் உன்னதத் தன்மையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. தடைகளை உடைப்பது எமது வலிமைக்கான அங்கீகாரம் தோல்விகள், துன்பங்களைச் சொல்லி அழுது, மனத் தளர்சியடைவதை விட, எழுந்து இயங்குவது இயலாததுமன்று. சுவாரஸ்யமான வாழ்விற்குச் சவால்களை எதிர்கொள்வதே சிறப்பு.
வாழ்க்கையில்பிரச்சனைகள் உருவாகும்போது மனிதன், பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. சவால்களைச் சந்தித்து அவற்றைச் சிதைத்து வெற்றிகொள்வதை விடச் சுவாரஸ்யமான அனுபவங்கள் பிறிது ஏது?
சும்மா இருந்து பெறுகின்ற அனுகூலங்களால்
79

Page 42
பருத்திபூர் பல. அவிர்வரன்
பெருமைப்பட என்ன இருக்கின்றது? “ஏதோ இவனுக்குக் குருட்டு அதிர்ஷ்டம்” என்றும் சொல்லிவிட்டுப் போவார்கள், அதே சமயம் உண்மையிலேயே, தனக்கு இந்த அனுகூலங் களைப் பெற என்ன அருகதை உள்ளதென அவனது மனச் சாட்சி கூட இடித்துரைக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
ஆகவே வருந்தி உழைத்து, எதிர்ப்படும் சவால்களை உடைத்தெறிந்து வெற்றி கொள்வதே ஆத்மார்த்த திருப்தி நிலையுமாகும். கருத்தில் கொள்க! திறமையும், வலுவும், மன உறுதியும் மிக்கவனுக்கு எதிர்ப்படும் சவால்கள் எல்லாமே, துச்சமெனக் கருதிச் செயல்படுவான்.
சவால்களை எதிர்கொள்வது என்பது, மற்றவர் களுடன் அநாவசியமாக மோதுவதும் சண்டை செய்வது மல்ல. தனது தவறுகளை மறைத்து தனது சுயநலத்தின் பொருட்டு மறைமுகமாகவும், தந்திரமாகவும், மோசடியான வழிகளில் பழிவாங்கி வெற்றி கொள்வதுமல்ல.
சவால்களைச் சமாளிக்கக் கூடாது. அதை உடைத் தெறிய வேண்டும். நியாயபூர்வமாக உழைப்பவர்களுக்கு, சிந்தித்துச் செயல் படுபவர்களுக்கு அவரவர்க்கான கொடுப்பனவுகள் ஈசனால் அள்ளி வழங்கப்படும். சூரியனை உள்ளங்கைகளால் மறைத்துவிட முடியாது. விழிகளை மூடினால் விழிகளை மூடியவனுக்கு மட்டும் அதன் ஒளி தெரியாது, உலகிற்கு அது தெரியும்.
80

சுர்ஜ இருத்தல்
அதே போலவே உண்மைகளை மறைத்து, ஒளித்து வைக்க இயலவே இயலாது. வலிமை இருந்தால் மற்ற வனை ஒடுக்கி விடலாம் என எண்ணுதலும் தாம் நினைத் தால் எதனையும் அநியாயமான முறையில் வென்று விடலாம் என எண்ணுவதும் முட்டாள்தனமான எண்ணம் தான். "நான் திறமைசாலியாக இருக்கின்றேன் எனக்கு எதுவுமே கிடைக்கவில்லையே” என வேதனைப்படுதலை நிறுத்தி தன்பாட்டிற்கு ஒருவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்தாலே போதும், அவனை உலகம் புரிந்து கொண் டேயாக வேண்டிய நிலை உருவாகிவிடும். நியாயபூர்வமாக நாங்கள் எடுக்கும் முயற்சி தான். சவால்களை எதிர்கொண்டு சித்தியெய்தும் நல் உபாயமாகும். உணர்க!
கழுத்துக்கு எதிரே கத்தியை நீட்டுகையில் அதை எதிர் கொண்டு போராடாமல் நின்றுவிட முடியுமா? கோழை யாகச் சாவதே நமது விதி என்பதை ஏற்க முடியாது. உங்களுக்கு வேண்டப்படாதவர்களை உங்கள் தோல்வி களால் சந்தோஷப்படவைக்க உங்களுக்குச் சம்மதமா, சொல்லுங்கள்! எனவே, எதிர்கொண்டு வெல்வதுதானே நல்ல சவாலாகும்? அதே சமயம், பிறரை நோகடித்து வெற்றி காண்பதே ஒரு நல்ல சவால் என எண்ணுதலைத் தவிர்த்து விடுக!
நியாயபூர்வமான போராட்டங்களை நல்லோர் எவரும்
எதிர்ப்பதுமில்லை, எள்ளி நகையாடுதலும் இல்ல
வேயில்லை. உங்களது அலட்சியப்போக்கும், எந்தவொரு
81.

Page 43
பருத்திபூர் 00. ஆயிரவநாதர் நல்ல விடயங்களைக் கண்டுகொள்ளாமையும், எதிரிகளை உற்சாகமடைய வைத்து உங்களை வீழ்த்த நீங்களே வழிசமைத்தவர்களாகிவிடக்கூடாது. கதைகளில் கதாநாய கன் எதிரிகளை வீழ்த்துவதையும், வரும் சவால்களை வீறுகொண்டு அடக்குவதையும், வீரதீரத்துடன் முனைப் பாகச் சண்டை செய்வதையும் நெஞ்சை நிமிர்த்திப் பார்ப்ப வர்கள் சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளைக் கண்டு மனம் தொய்ந்து போகலாம். தன்னால் முடியாததை இந்தக் கதாநாயகன் செய்கின்றானே எனத்திருப்திப்படும் ஆத்மாவாக மட்டும் இருப்பதால் என்ன லாபம் தோழர்களே!
நீங்கள் சிறப்புற வாழ வேண்டும் என்றால் நீங்கள் தான் முனைப்புடன் காரியமாற்ற வேண்டும். அடுத்தவன் வந்து தூக்கி நிமிர்த்தும் வரை காலத்தினைச் செலவழிக்க வேண்டாம். பிறரை எதிர்பார்க்கும் நேரத்தில் எத்தனையோ நற்காரியங்களைச் சுயமாகச் செய்து நிறைவேற்றிடவும் முடியும். நிச்சயமாக முடியும், அறிந்து கொள்வோம்.
வளர்ந்துவரும் எமது உலகில் விஞ்ஞான, தொழில்நுட்பக் கலைகள் நாம் எதிர்பார்த்ததை விட படு உற்சாகமாக வளர்ந்தோங்கி விட்டது. நவீன கண்டு பிடிப்புக்களால் மக்கள் ஈர்க்கப்படுகின்றார்கள். நவீன பொருட்களை நுகர்வோர் தொகை அதிகமாகிவிட்டதுடன் அட்டகாசமாக, டாம்பீக சொகுசு வாழ்க்கையுடன் தங்களை இணைத்துக் கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றார்கள்.
82

சுமோ இருத்தல் எந்த ஒரு சாதாரண பிரஜையும், வசதியுடன் வாழத் தலைப்படுதலில் தப்பேதுமில்லை. ஆனால், வசதிக்கு மீறிய வாழ்க்கைச் சொகுசைத் தேடுவதால், இருக்கும் நிம்மதியைக் கெடுப்பதால், தன்முன்தோன்றும் பிரச்சனை களுக்கு முகம்கொடுக்க இயலாமல் தடுமாறுகின்றார்கள்.
இன்று நவீன பொருட்களைச் சந்தைப்படுத்தி மக்களை அதனுள் நுழைக்கச் சகல நாடுகளும் மும் முரமாக ஈடுபட்டு வருகின்றன. வல்லரசுகளாகட்டும், சாதாரண நடுநிலை நாடுகள், ஏன் பொருளாதாரத்தில் நலிவுற்ற நாடுகள் கூட தமது உற்பத்திகளை அதிகரித்துச் சந்தைப்படுத்துகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், வளரும் நாடுகள் எதிர்நோக்கும் பொரு ளாதார சவால்களை வல்லரசு நாடுகள் சாதுர்யமாக அவைகளை வெற்றிகரமாக்கச் செய்யவிடாது, அவைகளை நசுக்குவதுதான்.
தேவையற்ற பொருட்களான மூன்றாந் தரச் சஞ்சிகைகளை, வெளியீடுகளை, மக்களிடம் கொடுத்து அவர்களை அடிமட்ட கீழ்நிலைக்கு இட்டுச் செல்கின்றன. தகவல் தொழில்நுட்ப இணைய தளமூடாக அநாவசி யமான, தகாத தகவல்களால் பல இளைய சமூகம் கெட்டுக் குட்டிச் சுவராகின்றது. எதை, எதையோ சாதிக்க வேண்டிய இளைய சமூகம், மாயவலைக்குள் அகப்பட்டுக் கிடப்ப தாகவும் தோன்றுகின்றது.
83

Page 44
பருத்திபூர் பல. ஆயிரவருதல்
வளர்முக நாடுகளை நிம்மதியாக வளரவிடச் சம்மதிக் காத வல்லரசுகள், போலிக் கண்ணிர் வடிக்கின்றன. வர்த்த கத்தை அபிவிருத்தி செய்கின்றோம் எனக்கூறி குப்பை களைக் கொட்டும் இடமாக எமது நாட்டை மாற்றி விட்டார் கள். இந்த அவல நிலையை நீக்குவது எப்படி? எமது நாட்டினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் இன்னமும் தமக்குள்ள உண்மையான சவால்களை இனம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை. இன்றைய இளைஞன் முன் தோன்றியுள்ள முக்கிய பிரச்சினைகள் என்ன?
கற்க வேண்டிய காலத்தில் கல்விகற்க வேண்டும். கற்பவனுக்குத் தேவையான வசதிகள் இதன் பொருட்டு வழங்கப்படல்வேண்டும். படித்துவிட்டு வேலை வாய்ப்பு இன்றி எத்தனையோ இளைஞர்கள் படும்பாடு சொல்லும் தரமன்று.
எனினும், அரச வேலைகளை எதிர்பாராது தம் வாழ்க் கையில் சுயதொழில் மூலம் எதிர் நீச்சலடித்தும் பல இளை ஞர்கள் முன்னுக்கு வரும் போது காதல் பிரச்சனை என்று சொல்லி, அதற்காக மனம் சோர்ந்து உயிரை விடுபவர் களைப் பார்க்கும்போது, வாழ்க்கையின் அர்த்தம் இதுதானா என ஏன் அவர்கள் உணராமல் இருந்து கொண்டார்கள் என்பது வியப்புக்குரியதே.
வீட்டுக்கும் நாட்டுக்கும் கடமைப்பட்டு, அதற்கு ஒரு
84

சுர் இருந்தர்
சிறிதளவாவது பிரதி உபகாரம் செய்யாது தனக்கு வந்த சின்னப் பிரச்சனைகளை, சவால்களைக்களைந்து கொள் ளாது தன்னை இழப்பது மன்னிக்கக் கூடிய செயலாகுமோ!
聚
崇
பார்வைக்கும் எட்டாத பரந்த வெளியிலும் புகுந்து விளையாடு தோழா! உன்னைப் பூட்டி வைக்காதே.
சின்ன அணுவிற்குள், எத்தனை சக்தி புதைந்து ள்ளதே! பென்னம் பெரிய மனுஷன் நீ உனக்குள் எவ்வளவு சக்தி, ஆற்றல் உண்டு தெரியுமா, தெரிந்து கொள்வாயாக!
வலிமை கூடிய நாயுடன் கூட பூனை போராடுகிறது. பாம்பு கீரியுடன் போராடித்தான் சாகிறது. தன்னை வலிய மிருகங்கள் கொன்றுவிடும் என்பதற்காக வலிமை குன்றிய மிருகங்கள் இரைதேடாமல் முடங்கிக் கொள்வதில்லை. பிரச்சனைகளுக்குப் பயந்து, உள்ளேபடுத்து முடங்கிக் கிடக் கலாமா?
போராடுவதும், எதிர்த்து எழுதலும் உனது ஜீவாதார உரிமை. நல்லது செய்ய எழு
வரப்போகும் நிச்சயமான மரணத்தின் பொருட்டு இருக்கின்ற, வாழ்நாள் முழுவதுமே மரண பீதியுடன் உலாவிட வேண்டாம். "பயம்” கூட மரணத்தின் மறுசாயல் தான். நீ எதற்காகப் பயப்பட்டாலும், அது கூட உன் ஆன்மாவை வதைத்ததாகவே அர்த்தப்
85

Page 45
பருத்திபூர் அல. ஆயிரவருதஷ்
崇
படும். உணர்ந்து கொள்! சண்டை செய்யாது நட்புறவுடன் சாதிப்பது இரட்டிப்புப் பயனைக் கொடுக்கும், நட்பால் ஒருவனை வெற்றி காண்பதைவிட, சவால்களை எவரிடத்தும் அநாவசியமாகக் கோருவது புத்திசாலித்தனம் அல்ல. அறிவாய்!
துன்பங்களும் தோல்விகளுமே சாஸ்வதமானது, என்கின்ற எண்ணத்தை நிரந்தரமாக மனதில் விதைத்தால் மகிழ்வுகளும், விரும்பும் வெற்றிகளும் கிடைக்காது என்பதை அறிந்து, உணர்ந்து, எதிர்மறையான,வாழ்க்கைக்கு ஒவ்வாத முரண்பாட்டுச் சிந்தனைகளைத் தகர்த்து எறி நண்பனே!
நல்ல அனுபவங்கள், மேலான கேள்வி ஞானம், பணிவு, பெரியோர் அறிவுரைகள் எமக்கான வெற்றிகளுக்கான, உந்துசக்திகள்!
இடர்களைக் களைவதற்கு, நம்பகமான துணைதேடு
மேற்சொன்ன இவைகள் எல்லாமே, சவால்களை
நாம் புரிந்து கொண்டு, அவைகளை வெல்வதற்கான சில வழிமுறைகள் தான். ஆயினும் நாம் எவ்வளவு தூரம் விடயங்களைப் புரிந்துகொண்டாலும் துணிச்சலின்றி எமது வாழ்க்கையைக் கட்டியாள முடியாது.
86
 

சுர்டி இருத்தல்
நாம் எதற்கெடுத்தாலும், சுலபமான காரியங் களுக்குக் கூடப் பெரிதாகக் கற்பனை பண்ணுகின்றோம். போட்டியில் கலந்து கொள்பவன் நிதானத்துடன் மட்டும் நின்று விட்டால் போதுமா? துணிச்சலுடன் செயல்படாமல் ஏதுபயன் கிட்டும்?
தன்னைப் புரிந்து கொள்ளாமலேயே பலரும் தோல்விகளைத் தேடிக் கொள்கின்றார்கள். இருக்கின்ற பலத்தைப் பயன்படுத்தினாலே போதுமானது. அதன்பின் கிடைக்கும் அனுகூலங்களால், புதிது புதிதான சக்திகள் பீறிட்டு எம்முள்ளே, எம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும்,
தோல்விகள் காரணமாக வருகின்ற மனத்தளர்ச்சி இயல்பானதே ஆயினும், இவைகளை நிரந்தரமாக மனதில் ஒட்டவிடாமல், பிரச்சனைகளை வரவேற்று, அதேசமயம் எமக்குச் சாதகமற்றவைகளை அடித்து வீழ்த்துவதுடன் அவை மூலம் எமக்கு அனுகூலமானவை, எவையேனும் இருந்தால் அவைகளை ஏற்போமாக!
எதையுமே தேடும்போது அது சுலபமாகவும் துன்ப மின்றியும் கிடைத்துவிடுவதில்லை. எளிதாகக் கைப்பற்றக் கூடியது என எண்ணும் விஷயங்களே சில சமயங்களில் மிகவும் எம்மை அலைக்கழிக்க வைத்து விடுகின்றது. எப்போதாவது இலகுவாகக் கிடைக்கும் நன்மைகள் கூட மிகச் சீக்கிரமாக எம்மைவிட்டு ஏகிவிடலாம்.
ஆனால், எதற்குமே முகம் கொடுக்கச் சித்தமான வனுக்குத் தோல்வி என்பதன் தாக்கமே தெரிவதுமில்லை.
87

Page 46
பருத்திபூர் பல. அவிழ்வரர் அதுபற்றி அலட்டிக்கொள்ள நேரம் கிடைப்பதுமில்லை.
சாதாரண மான சின்னச் சின்ன விஷயங்களையே ஒரு சவால் எனச்சொல்லிச் சொல்லி பெரிதுபடுத்திக் கொள்ப வர்கள் தங்கள் திறனை, ஆளுமை வளர்ச்சியைத் தாமா கவே தாழ்த்துபவர்களுமாவர்.
ஒரு அங்காடிக்குச் சென்று வந்த ஒருவர், "ஐயா, இன்று நான் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஒரே சனக் கூட்டம். நான், என்றபடியால் பெரிய சிரமப்பட்டு சாமான்களை வாங்கி னேன். வேறு எவராது இப்படிச் சிரமத்தை எதிர்நோக்கி ஒரு சிறு துரும்பைத்தானும் வாங்க முடியுமா? இப்படி ஒரு சின்ன விஷயத்தையே சாதனை என்று தமது செயல்களை உரைப்பவர்கள் எப்படி முன்னேற்றகரமான கருமங் களையும் சாதனைகளையும் செய்துகாட்ட முடியும்?
எந்த ஒரு விஷயத்தையும் செய்துமுடிக்க கொஞ்சம் சிரமம் எடுத்தால் தான் என்ன? எல்லா விஷயங்களையும் எமக்கு உவப்பாக வீடுவரை யாராவது கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது.
நாம் முழுநம்பிக்கை, ஆர்வம், ஆவல், விடாமுயற்சியு டன் சவால்களை எதிர்கொள்வோமாக இந்தக் குணாம் சங்களுடன் செயல்படுவோர்க்கு அவற்றின் பெறுபேறுகள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு மடங்காகிவிடும் கொழுந்து விட்டெரிக்கும் தீச்சுவாலைக்குள்ளும், ஆழ்கடலின் ஆழத்தி லிருந்தும், பெரும் சூறாவளியில் இருந்தும்மீளவந்துவிடுவேன் எனத்திடமாக நம்பிக்கை கொண்டு விடுங்கள்.
88

சுமோ இருத்தல்
இயற்கையுடன் சங்கமித்து வாழும் நாம் எதனைக் கண்டும் மிரளவேண்டிய அவசியமேயில்லை. எல்லாமே நமக்காக, எம்முடையதே. எம்முன் எதிர்ப்படும் பெரும் சவால்களை உண்மை உணர்வுடன் மிதிப்பேன், உதைப்பேன். என எண்ணுக! வீரியமான உணர்வு, விவேகமான ஆற்றல்களுடன் வாழ்பவனுக்கு சவால்கள் எதுவும் கவலைக்குரிய ஒன்று அல்ல.
எதிலும் விறுவிறுப்பு இல்லாத காரியங்களில் ரசனை இருப்பதேயில்லை. சாதாரணமான செயல்களில் புதுமை இன்றேல் அது சப்பென்று இருப்பதாகச் சொல்வார்கள்.
எதிர்புக்களை உடைப்பதே தமக்கும் பிடித்தமானது எனச் சாதனையாளர் சொல்வது முண்டு.
எனினும் வலிந்து வீணான வினை தேடாமல், வரும் இடர்களைக்களைவதே வீரமிகு, பெருமை!
சாதனையாளர்கள் எதனையும் சோதனை எனக் கருதுதேயில்லை! உணர்வோம்!
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி
27-01-2008
89

Page 47
பருத்தியூ பல. வயிரவநாதர்
சும்மா இருத்தல்
ஒரு வினாடிப்பொழுதிலும் சும்மா, எம்மால் இருந்து விடமுடியாது. உடல் இயங்காது விடின் மனம் என்றும் அலை பாய்ந்தபடியே இருக்கும் வேலை செய்பவன்"களை" பொருந்திய வாழ்வை அமைக்கின்றான். கணப்பொழுதுகளை அவமாக்குபவனே, பூமிக்குத் துரோக மிழைத்தவனாகின்றான் கடமைதவறாதுகாரிய மாற்றுபவனுக்கு கடவுள் கை கொடுத்து உதவுகின்றார்.சும்மா இருப்பவன் இம் மானிலத்தின், மன்னிக்க இயலாத கோழை, எல்லா உயிர்களும் இயங்கிய வண்ணமிருக்க, மனிதன் மட்டும்.முடங்கி ஒடுங்கிக் கிடக்கலாமா?
"சும்மா இருத்தல்" என்பது சாமான்ய விஷயமன்று. அப்பப்பா! இந்த "நிலை" எம்மால் அடையக் கூடிய ஒன்றா..!! "சும்மா இரு சொல் அற" என்று ஞானிகள் சொன்னார்கள். ஆனால் பேச்சளவில் நாங்கள் சொல்லிக் கொள்ளும் இந்த வார்த்தையின் பொருள் கோடிபெறும்.
ஒரு வினாடிப் பொழுதே ஆயினும் எம் முன்னே
90
 
 
 
 
 

சுமோ இருத்த
உறவினர், நண்பர்கள், பொதுமக்கள், எதிரிகள் எனப் பலவாறான நபர்களும் , அத்துடன் பலதரப்பட்ட சம்பவங்களும், காட்சிகளும் வந்து கழிந்து கொண்டே யிருக்கின்றன.
சில பொழுது வீணான கற்பனைகளில் ஈடுபட்டு தேவையின்றிக் கலவரப்பட்டு சில சமயம் வெறும் கற்பனையிலேயே நடக்காததை நடந்ததாக மகிழ்வடை வதுமுண்டு. மனம் எம்மை வழிநடத்த வல்லது. சிலவேளை எமது புலனைத் திசை திருப்பி அலைக்கழிக்கவும் வல்லது. எல்லாமே நாம் மனதைக் கட்டியாளும் திறனில் தங்கியுள்ளது.
எனவே, மனம் எம்மைச் சும்மா இருக்க விடுவ தில்லை. சாதாரண நிலையில் உடல் அசைவற்று இருக்கும் போது மனம் அசைந்து எம்மை மகிழ்விக்கலாம், துன்புறுத் தல்களும் செய்யலாம். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, உறக்கத்தில் கூட மனம் மனிதனைச் சும்மா இருக்க விடுகி ன்றதா? கனவுகள் வந்து தொந்தரவுகள் செய்கின்றதே. இதற்கு என்ன செய்ய? நல்ல கனவுகளால் நிம்மதியடை பவர்களுமுண்டு.
நாம் தேவையுள்ள இடத்தில் பேசவேண்டும். தேவையற்ற விடத்தில் அமைதியாக இருக்கவேண்டும். பல இடங்களில் மெளனம் எம்மைக் காப்பாற்றி விடும். கதை கொடுத்தே எந்த இடத்திலும் கலவரம் ஏற்படுத்துவோரும் 2-6T6 TFTU356T.
91

Page 48
கருத்திஆர் பால, அவிர்வதன்
ஒரு திருமண வீட்டுக்காட்சி இதோ, கலகலப்பான, மகிழ்ச்சிகரமாக ஒரு திருமண வைபவத்தில் பலரும் தமது உற்றார் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருக் கின்றார்கள். நல்ல சந்தோஷ வேளை, அப்போது அங்கு ஒருவர் வருகின்றார். சுற்று முற்றும் பார்க்கின்றார். எதிரில் உள்ள முதியவர் ஒருவருடன் பேச்சுக் கொடுக்கின்றார். இவர்களுக்குக் குளிர்பானம் வழங்கப்படுகின்றது. குளிர் பானத்தைப் பருகியவாறே அந்த முதியவருடன் பேச ஆரம்பிக்கின்றார்.
"இந்த மாப்பிள்ளைப் பையன் பரம சாதுவாகத் தெரி கின்றான். பரவாயில்லை. ஆனால் இவனது அம்மாக்காரி யைப்பார்த்தால், அப்படித் தெரியவில்லை. பெரியவாய் காரியாக இருப்பாள் போலிருக்கின்றது. பாவம் இந்தப் பெண், என்ன செய்யப் போகிறாளோ! மருமகளை என்ன பாடுபடுத்தப் போகின்றாளோ"
இப்படி அந்தப் பெரியவருடன் இவர் சொல்லி முடிக்கும்வரை அதை கேட்டவரோ மணமகனின் தாயாரின் சொந்த அண்ணன் என்பதை அறியாமல் இருந்ததுதான் பரிதாபம்! அப்புறம் என்ன, இதன் பின்னர் நடந்ததை எப்படிச் சொல்ல முடியும்? வாய் இருந்தால், கண்டபடி பேசலாமா? சுற்றுப்புறம் சூழல், யார் முன்பேசுகின்றோம் எனத் தெரியாமல் பேசிக் கொண்டேயிருக்கலாமா?
அத்துடன் ஒவ்வொருவரும் தமக்கான கெளரவத்தை தேவையின்றி குறைத்துக் கொள்வதற்கு தாமே காரணமாக
92

சுந்g இருத்தல் இருக்கலாமா? சந்தோஷமாகப் பேசி, உரையாடத் தெரியா மல், அல்லது செளஜன்யமாகப் பழகத் தெரியாமல் இருப் பதுவே பெரிய பலஹினம் அன்றோ!
சிலர் இருக்கின்றார்கள். வழியில் சும்மா போய்க் கொண்டிருப்பவர்களிடம் வலிய கதை கொடுப்பார்கள். "நீ என்ன பெரிய ஆளா நான் நிற்பது தெரியாமல், உன் பாட்டிற்குப் போய்க் கொண்டேயிருக்கிறாய்.” என்று சொன்னதும் அவர் விடுவாரா, பதிலுக்கு "நீ என்ன பெரிய இவனா, உனக்கு என்ன மனதில் இருக்கிறது. உன்னோடு நாம் பேசினேனா? சும்மா வலிந்து சண்டைக்கு இழுக்கின் றாய்" என்பார்.
தமக்கு எதிராக ஒருவன் துணிந்து பேசியதுமே இவரிடம் தனது ஆணவப்பேச்சு எடுபடாது என்றதும் அப்புறம் கெஞ்ச ஆரம்பித்து விடுவார், நான் "சும்மா" பேச்சுக்குச் சொன்னேன். இதுக்கெல்லாம் நீ கோபப் படலாமா? எனக்கு உன்னுடன் பேசக் கூட உரிமை இல்லையா” என்பார். இந்தக் கெஞ்சல் கதைகள் எல்லாம் தேவைதானா? சொல்லுங்கள். "வாயை வைத்து வேண்டிக் கட்டக் கூடாது" என்றும் கூறுவார்கள்.
எமது தகாத பேச்சுக்களால் இன்னும் ஒருவரை
ஆக்ரோஷமான மனிதராகவோ, அல்லது எதிரியாகவோ
ஆக்கிவிட நாம் சந்தர்ப்பம் வழங்கலாமா? ஆனால் சில
நபர்கள், ரொம்பவும் மெளனமானவர்களாகக் காட்சி
93

Page 49
கருத்தில் கல. ஆயிரவநாதர்
தருவார்கள். ஆனால் இவர்கள், செய்யும் காரியங்களோ வேறுவிதமாகவும் கொடுரமாகவும் இருக்கும். மெளனமாக இருந்து நல்ல பெரும் காரியங்களைச் செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
சும்மா அமைதியாக என்று இருந்து கொண்டே, சமூக விரோதச் செயல்களையும், எவரையும் நிம்மதியாகச் செயற்பட விடாமலும் இருப்பவர்கள், பெரும் ஆபத்தான நபர்கள் என்றே சொல்ல வேண்டும். பேசாமல் இருக்கும் இத்தகையவர்கள், எங்கே எப்போது, அடித்து வீழ்த்துவர்கள் என யாருக்குத் தெரியும்? நேருக்கு நேர் சண்டையிட முனையாமல் குறுக்குவழி, கோணல் புத்திக்காரருடன் என்றுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா?
என்றாலும், கோபத்தை வெளிக்காட்டியும், செயல ளவில் சாத்வீகமான அணுகுமுறைகளில், நல்லவைகளைச் செய்யும் நல்ல சீவன்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். எனவே சும்மா இருப்பவர்களைப் போல் பாசாங்கு செய்பவர்களையும் உண்மையிலேயே தான் உண்டு தன் கருமம் உண்டு என வாழ்பவர்களையும் நாம் இனம் காணல் வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுமே தனது வாழ்க்கையை, நன்கு
நடாத்துவதற்காக ஏதாவது ஒரு தொழிலைச் செய்தேயாக
வேண்டும். ஒவ்வொருவருமே தமது தகுதி, தராதரத்திற்கு
ஏற்ப சிறந்த ஒரு தொழிலைச் செய்யாமல் பூமிக்குப் பாரமா
94.

சுமோ இருத்தல்
கச் சும்மா இருக்க முடியாது.செல்வத்தை ஈட்டுவதற்கு மட்டும் நாம் உழைக்கின்றோம் என்பதில்லை. நாம் சந்தோஷகரமாக எமது வாழ்நாட்களை உற்சாகமாகக் கழித்திடவும், உடலைச் சதா சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யவும் வேலை செய்தேயாக வேண்டியவராவோம். உடலை வளைக்காமல், உடலை அழகுபடுத்தி வெளியு லகில் சதா கஷ்டப்பட்டு உழைப்பவராகக் காட்டித்தம்மை தாமே ஏமாற்ற முடியுமா? வேலை செய்யாமல் இருக்கும் சோம்பேறிகளைக் கண்டால் எரிச்சல்படாமல் இருக்கவே (LDLQUITS).
பொழுதுகளின் பெறுமதிகளை அறியாமல் சீவிப்பதில் அர்த்தமேயில்லை. வாழ்க்கையில் தமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சரிவரச் செய்யாமல் சும்மாகவே காலத்தைத் தள்ளும் பிரகிருதிகள், தாமாகவே உலகத்தினால் ஒதுக்கி எறியப்படுவதற்கு ஆளாகி விடுகின்றார்கள். வெறும் வார்த்தை ஜாலங்களால், வாக் குறுதிகளை அள்ளி வீசி மக்களுக்கு இறுதியில் ஒன்றுமே செய்யாத அரசியல் வாதிகளை மக்கள் இனம் கண்டபின் ஏற்றுக் கொள்ளாமல் தூக்கி அப்புறப்படுத்தி விடுகின் றார்கள்.
கடமை தவறாது ஊழியம் செய்யும் எவரையும்
கடவுள் கைவிட்டதுமில்லை. எவர்களுடைய முன்னேற்
றமோ, அல்லது தாழ்ந்த நிலைக்கோ அவரவர்களின்
செயல்கள்தான் காரணமாகின்றன.தேனீ ஒரு சொட்டுத்
95

Page 50
பருத்திஆர் யா.ை ஆயிற்றதற்ஷ் தேனுக்காகத் தன் சிறகை எத்தனை தரம் அடித்து அடித்துப் பறக்கின்றது. எத்தனை மைல்கள் சுற்றிச் சுற்றி பறந்து திரிந்து, மலர்களைத் தேடுகின்றது
"படைத்தவன் படி அளப்பான்” எனச் சொல்லி அடுத்த வேளைக்கு உழைக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா? ஒருவன் தனக்காக மட்டும் வாழ்ந்துவிடமுடியாது. ஒருவர் தானாகவே ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கள் என்றும், பிறரால், சமூகத்தினால் வழங்கப்பட்ட பொறுப்புகள் என்றும், எதிர்பாரா இயற்கையான நிகழ்வுகளால் வந்து சேர்ந்த கடமைகளும், எனப்பல வகையாக கருமங்கள் வந்து சூழ்ந்து நிற்கின்றன. இந்தப் பொறுப்புக்களில் இருந்து விலகிவிட எத்தனிக்க முடியாது.
திருமணத்தினை விரும்பி ஏற்று குழந்தை குட்டிகளைப் பெற்றுவிட்ட பின்பு கூட சாதுர்யமாக அவர்களுக்கான கடமைகளைச் செய்வதில் இருந்து ஒதுங்கி "சும்மா இருப்பதுவே சுகமானது ஆளை விடு" எனத்தப்பி 9L (piquGLDIT!
திருப்தியுடன் தன் கருமங்களைச் செய்யாதவர்கள் கோழைகள் என்பது மட்டுமல்ல காலப் போக்கில் இறுக்க மான மன நிலையில் வாழ்ந்து ஸ்தம்பிக்கப்பட்ட மரத்துப் போன ஆன்மா போலச் சடமாகிப் போகின்றார்கள். "இவன், இருந்தும் என்ன" என ஒருவர் சொல்லும் நிலைக்கு ஒருவன் ஆளாவது வெட்கம் கெட்ட சீவியம் தான் அல்லவா?
96

சுங் இருத்தல் எமது வாழ்க்கையில் எல்லாமே மனதின் தூண்டுதல்
களினாலேயே செய்யப்படுகின்றன.
நான் இயங்குவதற்கு, கடமை செய்வதற்குப் பிறந்த வன். "நான் வாழப் பிறந்தவன்" கோழையாக அழியப்பிறந்தவன் அல்லன்.
நான் இன்றைக்குச் செய்பவைகளை இன்றைக்கே செய்து முடிப்பேன்.மேலும் நேரம், வசதிகள், வாய்ப்புக்கள் இருப்பின் எதிர்கால நோக்கிற்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்.
நாம் சும்மா இருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் ஆயுள் காலம் குறுகுவதை அறிவேன்.
எனவே காலப்பெறுமதியுணர்ந்து வேலைகளைச் செய்பவனுமாவேன்.
சமுத்திரத்திலும் மேலான சுமைகள் சூழ்ந்திடினும் அவை எல்லாமே என் சீரிய முயற்சிக்கு முன் எம்மாத்திரம் என்கின்ற திடமான உறுதியுடன் என்னை நான் புத்தம் புதுப்பிறவி எடுத்த புது மனிதனாகவே ஆக்கி உலகை உருவாக்கும் பணியில் எனது பங்களிப்பினை நல்கியே தீருவேன்.
வலிய வீண்தொல்லைகளுள் போகாமல் இருப்ப தனால் என் ஆன்மா, வலுமிக்கதாக அமையும் என்பதனை அறிவேன்.எனக்குள்ள ஆற்றல்களை மேலும்உற்பத்தி செய்வதற்காக பொறுமை,நிதானம்
97

Page 51
பருத்தில் பல, வயிறுகுரர்
இவைகள் துணைகொண்டு இடையூறு அற்ற வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்பவனுமாவேன். மேற்சொல்லப்பட்ட உறுதிமிகு வாசகங்களை ஏற்று
இயங்கும் மனிதனுக்கு, சும்மா இருந்து நொந்து, நைய
வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
பயன்மிகு பொழுதுபோக்குகள், அறிவூட்டும் நூல் களை வாசித்தல், தாங்கள் வழிபாடு செய்யும் இடங்களைத் தரிசித்தல், நல்ல சொற்பொழிவுகள், சமய நிகழ்வுகள், கலை, கலாசார நிகழ்ச்சிகளில் பங்குபற்றினால் எமது வாழ்நாட்கள் இனிமையாகவும், பயன்கொண்டதாகவும் அமைந்துவிடும்.
தங்களது கருமங்களைச் செய்து முடிக்க காலம் முழுமையாகப் போதவில்லையென எத்தனையோ பேர் சொல்லிக் கொண்டிருக்க, பொன்னிலும் பெறுமதியான காலத்தை தமக்கும் தம்மைச் சார்ந்தோர் சமூகத்திற்கும் வழங்காமல் பயனற்றதாகக் கழித்து வீணடித்துவிடலாமோ!
நாங்கள், எங்களையே எங்களிலும் வலுவுள்ளவராக்க முயன்றுவர வேண்டும்.
* நான் சாதாரணமானவன் அல்லன்,
* என்னையே வென்றுவிடுவேன் என்கின்ற உறுதிமிகு
எண்ணங்களுடன் வாழ்பவன்,
98.

சுமோ இருத்தலீ
"சும்மா” இருந்து பொழுதுபோக்கமாட்டேன். எனது சாதனைகளை நானே முறியடித்தேன் என்பதைவிடப் பெரிய நிறைவு ஏது
உலகம் செழிப்பாக, வளமாக வேண்டும் என்று சொல்லும் நாம், எங்கள் தனிப்பட்ட திறனை வளர்த்தாலே போதுமானது. எங்கள் பெறுமதி மிகு திறன்கள் தானாகவே இந்த உலகைச் சேர்ந்துவிடும். கல்வி, ஞானம், அனுப வங்கள் பெற்றுக்கொண்ட மனிதன் சும்மா இருந்து affeist DIT'LT6.
தினம், தினம் நாம் உறங்கச் செல்லும்போது, இன்று நான் செய்து முடித்த பயன் தரு செயல்கள் என்ன, நாளைக்கு நான் என்ன காரியங்களைச் செய்து முடிப்பேன் என, எக்கணமும் எம்மைக்கேட்டு அதன் படி வாழுவோ மாயின் எம்பணி முழுமையாகிவிடும். சும்மா வாழக்கூடாது எமது பணி எமக்காகக் காத்திருக்கின்றது. இதில் சுணக்கம் என்ன? சோம்பல் எதற்கு? சிங்கம் எனச் சிலிர்த்து எழுக!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 06.01.2008
99

Page 52
பருத்திபூர் அற. வயிரவரர்
விதி
முயற்சி மூலம், புதிய விதிகளை உருவாக்குவோம். திடநம்பிக்கை நல்ல விதியை எமக்கு ஏற்படுத்தும், தலை எழுத்து என்று சொல்லி வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடாது. தோற்பது பலவீனமல்ல. விதியைச் சொல்லிதோல்வியில் இருந்து விடுபட முனையாமை தான் பலவீனம். பகுத்தறிவு கொண்ட நாம், துன்பங்கள், பிரச்சனைகளைக் கண்டறிந்து வெற்றிகொள்ளவேண்டும்.
இப்படித்தான், ஒருவர்க்கு எல்லாமே வாழ்க்கையில் நடக்கும் எனச் சொல்லப்படுவதை "விதி" என்றும் "தலை எழுத்து" என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள்.
மெய்ஞானத்தில் நம்பிக்கை கொண்ட ஆன்மீகத் துறையிலும், விஞ்ஞானத்திலும் "விதிகள்" பற்றிக் கூறப்படுகின்றது. விஞ்ஞானத்துறையில் உண்மையின் உருவாக விதிகளை வகுத்திருக்கின்றார்கள்.
100

சுற்று இருத்தல் எனினும், விஞ்ஞானத்துறை சார்ந்தோரால் விதிகள், தத்துவங்கள் கூட, ஆரம்பத்தில் நிறுவப்பட்டமையைப் பின்னர் வந்த விஞ்ஞானிகள் மறுத்துரைத்து அதனையே
"புதியவிதி"யாக உருவாக்கி நிறுவி வருவதும் கண்கூடு.
ஆகமொத்தத்தில் விதிகள், கூற்றுக்கள்கூடச் சில சமயம் முடிவு அற்று, தற்காலிக உண்மைகளாக அவைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாகத் தோற்றம் காட்டப்படுவது முண்டு ஆயினும் அந்தந்தக் காலங்களில் அவை தவிர்க்க முடியாத உண்மைகளே!
மனித சிந்தனைகள் காலத்திற்குக் காலம் விரிவடை ந்து பரிணாம வளர்ச்சி அடையும் போது மனிதப் பார்வைகள் பல்திசைகள் நோக்கிப் பயணிப்பதும் ஆங்காங்கு புதுப்புதுச் சந்தேகங்கள் ஏற்பட்டுவிடுவதும், இதனால் பல உண்மை கள் வெளிக் கொணரப்படுவதும் கூட இறை சித்தமேயாம்.
விஞ்ஞானிகள், விஞ்ஞான அறிவுமூலம் கண்ட உண்மைகளை மெய்ஞானிகள் தம் அக உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இன்றைய விஞ்ஞானக் கூற்றுக்களை ஏற்கனவே ஆன்மீகவாதிகள் தமது மெய்ஞான அறிவினால் உருவாக்கி உலகிற்கு அளித்துவிட்டனர். கிரக மாற்றங்கள், உடற் கூற்று சாஸ்திரங்கள் எல்லாமே வியத்தகு விதத்தில் எம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுவிட்டனர்.
101

Page 53
பருத்திபூர் பல அறிவதன்
என்றாலும், எம்மவர்களால் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் "விதி" அல்லது தலை எழுத்து, தலைவிதி பற்றி மாறுபாடான, ஒத்த சிந்தனைகளின் கருத்துப் போராட்டம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
விதி என்பதே பொய்யான கூற்று, இது சோம் பேறிகளின் இயலாத் தன்மையுடனான கற்பனை விதியைச் சொல்லியே தமது முன்னேற்றங்களை முடிவு கட்டிவிட்ட படுபிற்போக்கான, அறியாமைக் கருத்து என முற்போக்கு சிந்தனையாளர் எனச் சொல்வோரும், நாத்திகம் பேசுவோரும் வலியுறுத்துகின்றனர். ஒருவரின் அறிவினால் உணரப்பட்டவை, அல்லது அனுபவ ஞானத்தால் பெற்றவை அல்லது நிஜமாகவே நடந்தேறிய சம்பவங்கள் மூலம் கண்டறியப்பட்டவை கூட மற்றவர்களால் மறுத்துரை க்கப்பட்டும், பரிகாசிக்கப்பட்டவையுமாகக் கருதப்பட்ட துண்டு.
"நான், எனது கனவில் எனது இஷ்டதெய்வத்தைக் கண்டேன்" "மறைந்து போன எனது பெற்றோர் எனக்கு இன்னது தான் நடக்கும் என்று சொன்னார்கள்". மேலும் "நான் நேற்று இரவு, நான் வணங்கும் கடவுளையே கண்டு விட்டேன்" என்றும் பலவாறாகக் கூறுபவர்கள் உளர்.
"தங்கள் கிரக பலாபலன் படி, இன்னதுதான் நடக்கும் என சோதிடர் சொன்னது போலவே நடக்கின்றது" எனச் சொல்லுபவர்களும் இருக்கின்றனர்.
102

சுற்றா இருத்தல்
தவிர, சோதிடம் என்பதே பொய், அப்படி அதில் கூறப்படுவதில் ஒன்றுமேயில்லை என மறுத்துரைப்போரும் தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம் சொல்வ துண்டு. "இவை எல்லாமே மூடநம்பிக்கைகள், மனித முயற்சி என்பதுதான் உண்மை, வீணான கற்பனை உலகில் சஞ்சாரம் செய்ய வேண்டாம்" என்று சொல்ப வர்களின் வாதம் அவர்கள் நிலையில் அது சரியானதே. மேலும் தமது சோதிடத்தில் சொல்லியபடி உள்ளவாறே சரியாக எல்லாமே நடந்து விட்டது எனக் கூறுபவர்களும்
ஏராளம், ஏராளம்.
ஆயினும், ஒருவர் பெற்ற அனுபவங்களை நாம் பொய் என்பதும் அல்லது ஒருவரது நம்பிக்கைகளையே தவறு என்றும் நாம் வாதம் செய்வது எந்தளவுக்குச் சரியானதாகும்?
ஏன் எனில் நம்பிக்கை மூலமே தங்கள் வாழ்க்கையை மேம்பாடாக்கிய கோடானு கோடிபேர் இருக்கின்றார்கள். கடவுள் நம்பிக்கையுடன் திருப்தி கண்டு வாழ்வில் பூரணத்துவம் பெற்றவர்களை வெளியே இருந்து நோக்கும் சிலர் விமர்சித்துவிட முடியாது. அதேசமயம், எல்லாமே என் தலை எழுத்து, அதை மாற்ற யாரால் முடியும்?என்று சொல்லிச் சொல் லியே தம் வாழ்வை அலுத்துக் கொள்பவர்கள் உண்டு அவர்கள் கூற்றுக்களைச் சரி என்று கொண்டாடவும் முடியாது."விதி" என்பதைச் சரி என்றே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். இதன்
103

Page 54
பருத்திபூர் 04). ஆயிரவநாதன் பொருட்டுத் தொடர்ந்துவரும் துன்பங்களைத் தகர்த்திட எண்ணாது, அது இறைவன் இட்ட வழி, எனது ஜாதகத்தில் அப்படிச் சொல்லப்பட்டது எனக் கூறியே சீவியத்தை ஓட்டவேண்டியதுதானா?
கடவுள் மனிதர்க்கு நுண் அறிவை, பகுத்தறிவை ஏன் படைத்தான். நாம் எல்லோருமே வகுத்த விதி இதுவெனக் கருதி வாழ்ந்து சாவதற்காகவா எமைப் படைத்தார்? எங்கள் முன்னே எத்தனையோ பேர் சொகுசாகச் செளகர்யமாக வாழ்ந்து காட்ட நாம் மட்டும் எமது விதி இதுவென மனம் குமைந்து வாழ்வதைக் கடவுள் தான் அனுமதிப்பாரா?
ஒன்றை மட்டும் திடமாக மனதுள் இருந்துவீராக! எல்லோருக்கும், வாழ இந்த உலகில் பூரண உரிமை இருக்கின்றது. மனதினுள் சலனத்தை ஏற்படுத்தித் தாழ்ந்த நிலையில் மனிதன் தன்னையிட்டுச் செல்வதையும், எந்த மனிதரிலும் பார்க்கவும், எனக்கு எவ்விதத் தகுதியும் இல்லை எனச் சிந்திப்பதுவே கடவுளை நிந்திக்கும் செயல் ஆகும்.
விதி என்பதற்கும் மேலாகப் புதிதான ஒரு விதியைச் சமைப்போமாக! எமது வாழ்க்கையைச் செப்பனிடுவது பழைய விதி அல்ல, நாமாக உருவாக்கிய "புதிய விதிகள்" மூலம் எங்களைப் புதுப்பித்து, மாற்றியமைப்போம்.
நாம் புதிதான விதியை வாழ்க்கைப் பாதையை
அமைப்பதுகூட முன்னர் சொல்லிவைத்த நல்ல தலை
எழுத்து இது என எண்ணி எங்கள் முன்தோன்றும் இடர் 104.

சுரே இருத்தன்
களை உடைத் தெறிய முழுமூச் கடன் முன்நின்று உழைப்பதுதான் என்பதை முதற்கண் உணர்க!
இன்று மட்டும் அல்ல, என்றுமே புதிது, புதிதாகச்
சாதனை செய்துவரும் ஒவ்வொரு சாதனையாளர்களுமே, புதிதான விதிகளை உருவாக்கியவர்களே!. இவர்களில் ஒருவராவது எனக்கு எதுவும் சரிப்பட்டு வராது, எனது பலாபலன்கள் சரியானதாக இல்லை என்று, மனதளவில் ஒருசிறு கீற்று, எதிர்மறைச் சிந்தனைக்குள் அகப்பட்டால் எடுத்த காரியங்கள் கைகூடிவிடுமோ?
崇
崇
நான் செய்யப்போகும் செயல்கள் அனைத்துமே இறை ஆணையாகும்.
நான் மனித குலத்திற்கு சேவையாற்றப் பிறந்தவன். எனவே என்பணி, மனித குலம் நடமாடும் இந்தப் பூமிக்கானதேயாம்.
என் பொருட்டுச் செய்யப்படும் செயல்களால் கூட
நான் மற்றவர்க்கு விரோதமற்றவனாகவும், இதனால் உலகிற்கு ஏதாவது ஒரு சிறிதளவாவது, பாதகம் ஏற்படாமல் பார்த்து நடக்கச்சித்தமாயுள்ளேன்.
நான் விதியைச் சொல்லி மதியை இழக்கத் தயாரில் லாதவன். எனது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, சுய அறிவு என்பனவற்றுடன், எல்லாம் வல்ல இறை நம்பிக்கையுடன், மனத்திருப்தியுடன் பணிசெய்ய என்றுமே சித்தமாயுள்ளேன்.
105

Page 55
பருத்தியூ பல விரவநாதர்
மேற்கண்ட உறுதி மொழிகளால் நாம் எம்மையே வலுமிக்க மனிதனாக்குவோம். தலை எழுத்து இதுதான் என்கின்ற முரணான போக்கினால் எம்மை நாம் ஏன் வேதனைப்படுத்த வேண்டும்? வலிந்து வேதனைகளை உருவாக்குதல் போல பேதமை வேறில்லை. மனத் திருப்திக்காகச் சொல்லப்படும் சில சமாதானங்கள் எம்மை ஒரு பலவீன நிலைக்கு இட்டுச் செல்லலாம்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், தற்செயலான சில சம்பவங்களால் எம்மை நாம் சாந்தப்படுத்திக் கொள்ளச் செய்யப்படும், அசாதாரணமான எண்ணங்களையே, தொடர்ந்தும் நாம் கடைப்பிடிக்க விழையாது, எதிர்ப்படும் சவால்களை விடாது எதிர்கொண்டு நாமே துரத்த ஆரம்பித்தால், எதிர்ப்புக்கள் எழுந்தோடி மறைந்துவிடும்.
"துரத்துகின்றவனைக் கண்டு ஓடவேண்டாம் நின்று எதிர்த்துப்போராடு”. அவன் வலிமைமிக்கவனாயின் உன் மதி நுட்பத்தினால் அவனை வீழ்த்து! ஆனால் தகாத சிந்தனையால் முறைகேடாக துன்பங்களில் இருந்து விடுபட எண்ண வேண்டாம். இது உனக்கு நீயே விடுக்கும் எச்சரிக்கையுமாகும். சறுக்குமரத்தில் ஏற விழைபவன், விழுந்து கீழ்நோக்கி வந்து, மறுபடி முயற்சித்துப் பின்னர் வென்றுவிடுகின்றான். யாரோ ஒருவன் முயன்று வென்றதைக் கண்டும் கூட அது என்னால் முடியாது என எண்ணுதல் தவறான நினைப்பு அல்லவா? எனினும் செய்யும்காரியத்தில் போதிய பயிற்சி பெற்று விடுதல் அத்தியாவசியமானது என்பதையும் எண்ணத்தில் கொள்க!
106

சுமோ இருத்தல்
நாம் தோற்பது ஒரு பலவீனம் அல்ல. தோற்பதற் கான காரணத்தை அறிய விழையாமல் இருப்பதும், தெரிந்தும் அதனை உதாசீனம் செய்வதுமே அறிவிலித்தன மானதாகும். வாழ்க்கையே ஒரு போராட்டமாகவும் போட்டி கள் நிறைந்ததாகவும் இருக்கின்றது. என்றாலும் நாம் இதனை ஒரு யதார்த்தமானதாகவும், ஒரு இயல்பு நிலை, என்றும் ஏற்றுக் கொண்டுவிட்டால் சகிப்புத்தன்மை தானே வந்துவிடுகின்றது.
சிலவிடயங்களில் நாம் வாழ்க்கைப் பிரச்சனைகளை கடமையுணர்வுடன், அக்கறையுடன் அவதானமாக கவனித் துக் கையாள வேண்டியுள்ளது. எச்சரிக்கை உணர்வுடன் நோக்கத்தக்க விஷயங்களுமுண்டு. ஆனால், மிகச் சாதாரணமான விஷயங்களுக்குக்கூடப் பதட்டப்படும் மனிதர்கள், அதனையே பூதாகாரமாக்கி"எனது விதியைப் பார்த்தீர்களா” என அலறியடிப்பவர்களும் இருக்கின்றார்கள். எல்லா விஷயங்களைப் பெரிதாக நோக்கக் கூடாது, அதே சமயம் பாரதூரமான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கவும் கூடாது.
எச்சரிக்கையுணர்வுடன் வருமுன் தன்னைக் காத்துக் கொண்டவன், "விதி" என்று சொல்லும் விஷயத்திற்கே அப்பாற்பட்டவனாகின்றான். அத்துடன் சிரமம் பாராது கடமையே கண் எனப்போற்றி, இறைவன் செயலாகக் கருதி மனோதிடத்துடன் காரியமாற்றுபவனுக்குச் சகல வழங்கல் களுமே, இறைவனால் அருளப்படுகின்றது.
107

Page 56
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
மனிதனை ஆண்டவன் தனது கண்காணிப்பில், புனித மான சுற்றுச் சுழலுடன் அவனுக்குத் தேவையான சகல
கான மரம், செடியும் அதனூடான காய், கனி, கிழங்கு எனச் சகலதையும் வழங்கினான். குடிக்கத் தூயநீர், நீராடிமகிழ அருவி, ஓடி, நடந்து மகிழ பசும் புற்தரைகள், இயற்கையான குகைகள் குன்றுகள் என எல்லாமே கொடுத்து அவன் தன்னை அறிந்து, தன்னைக்காப்பாற்றிக் கொள்ள ஆறு அறிவையும் நல்கினான்.
ஆயினும், மனிதன் அறிவை வலுப்படுத்திய அதே வேளை, இயற்கையுடன் மட்டுமல்ல, தன்னோடு வாழ்ந்து வரும் தன் குலத்தினருடனும் மோதினான். மோதி, மோதி அல்லல்பட்டதும், செய்ததவறுகளுக்கான, பிரதிபலன்களை அனுபவிக்கும் போதுதான், விதியைச் சாட்டுதல் செய்தான்.
ஒ. மனிதா உனக்கு விதி என்ன கொடுமை செய்தது? நீயாகச் செய்தாய், நீயாக நொந்து இளைத்துப் போகின்றாய், கொதிக்கின்றாய், அரற்றுகின்றாய் அது ஏன்? ஏதாவது உனக்கு அனுகூலமாக நடக்கும் போது பிரமாதமாகக் கூத்தடிப்பதும், ஒரு சின்னச் சலனம் ஏற்பட்டு துன்பம் ஏற்பட்டால், மனதை நீயாகவே அலட்டுவதுடன் அத்துடன் தன்னைச் சார்ந்தவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துவதும், உனக்குப் பலவீனமாகப் படவில்லையா சொல்? அதுமட்டுமல்ல, எனது தலை எழுத்து இதுவெனச் சொல்லி மற்றவர்களையும் உன்வழிக்கு இழுப்பது என்ன நியாயம் உண்டு சொல்!
108

கர்மா இருத்தலி எனவே, அன்பான மனிதா, நீ உன்வழியில் கண்டபடி சென்றால் அது மற்றவனையும் பாதிக்கும் என்பதை நீசற்று யோசித்துச் சரியான புத்திசாலித்தனமான மார்க்கத்தில் நடந்தேயாக வேண்டியுள்ளது. "பகுத்தறிவு" என்பது, புது வாழ்க்கையை ஆய்ந்துணர்ந்து துணிச்சலுடன் அமைப்பதற் கேயாம். இது ஒன்றும் இறைவனுக்கு எதிரானதும் அல்ல.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கால மாற்றங்களால் கூட சிலவேளை மனிதன் முன்னேற்றமடைய சில தடைக் கற்களை அவனால் உடைக்க முடியாதுள்ளது, வேதனைக் குரியதே.
பத்துப்பேர் சரியானதைச் சொல்லும் போதும், முறை யாகக் கருமாற்றும் வேளையில் ஒருவன் வந்து கண்டபடி பேசுவதை கேட்கவும் ஆள் இன்னமும் இருக்கின்றார்களே?
எங்களது முயற்சிகள், ஆற்றல்களில் ஸ்திரத் தன்மை இருப்பின் தவறான வழியில் பிறரால் மூளைச் சலவை செய்யப்படல் இயலாத காரியமாகிவிடும்.
இறை நம்பிக்கையற்றவர்களே விதியைக் கேலி செய்வார்கள் எனவும் நாம் அறிகின்றோம். "விதி" என்பதற்கும், இறைவனுக்கும் ஏன் முடிச்சுப் போகின்றார் களோ தெரியவில்லை. அமெரிக்க விஞ்ஞானிகள் தமது விண்கலத்திற்கு தமது காத்தல் கடவுளின் பெயரான "அப்போலோ" வைச் சூட்டிக் கொண்டார்கள். இது அவர்களின் இறைபக்தி உணர்வைக் காட்டி நிற்கின்றது.
109

Page 57
பருத்திபூர் பல. ஆயிரவருதல்
விஞ்ஞானிகள் என்றால் அவர்கள் இறைவனுக்கு
எதிரானவர்கள் என்று சொல்ல முடியுமா? நாம் எல்லோரும் கடவுளால் இரட்சிக்கப்பட்டவர்கள். அவரால் கணப் பொழுதும் காப்பாற்றுப்பட்டுக் கொண்டே இருப்பவர் களுமாவோம். தவறான கருதுகோளால், விதியைச் சொல்லி எங்கள் வாழ்வை ஸ்தம்பிக்கச் செய்வதுதான் கூடாது. நடப்பது நடக்கட்டும் அதை விதி எனச் சொல்லாமல், இறைவன் விட்டவழி "முயன்று முயற்சி செய்வதே பெறுமதி மிக்கது" எனச் செயல் மூலம் செய்து காட்டுவோம்.
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு, மும்முரமாக, கடமை களில் ஈடுபடுகிறோமோ, அம் முயற்சிக்கு ஏற்ப கழிக்கும் நாட்களில் முன்னேற்றமும் வேகமும் வந்தடையும். நற்பலன்களும் எதிர்பார்ப்புக்களுக்கு மேலதிகமாகவே கிடைத்துவிடும். தான்போவது எங்கே எனத் தெரியாமல் இருப்பவர்கள் விதியைப் பற்றி விஸ்தாரமாகப் பேசுவார்கள், ஆனால் கடமைகளை முழுமூச்சாக செய்பவர்களுக்கு எதைப்பற்றியும் பேச. எங்கே ஐயா, நேரம் இருக்கின்றது?
சரியானதைச் சிந்திப்பதற்கும் செய்வதற்கும் தைரியம் வேண்டும். வாழ்வோடு போராட பலவீனமான கருத்துக்களை ஏற்காமல், வீரியம் வாய்ந்த சிந்தனைகளை ஏற்று வாழ்வை நடாத்தவும், எம்மை என்றுமே தயார் நிலையில் வைத்திருந்தால், "விதி" எம் வசமாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி23.12.2007
10

கமே இருந்தன்
கண்முன்னே வாழும் மாதரசிகளைப் போற்றங்கள்!
மக்கள் தொகையும் பொருளாதாரப் பிரச்சினையும் கூடிய இந்த உலகில், இன்னமும், தமது கலாச்சாரங்களை விட்டுக் கொடுக்காது, மிக இயல்பாகவே குடும் பத்திற்கும், உலகிற்குமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாதரசிகளைப் போற்றுங்கள் குடும்ப கட்டமைப்பு குலைந்தால் நிம்மதி வெட்டப்பட்டுவிடும். என்றுமே உறவுகளை உரமூட்டி வளர்ப்பவர்கள் பெண்கள் அல்லவா? இலக்கியத்தில் காட்டப்படும் பெண்களை ஒத்த இன்றைய மாதரசிகளின் தியாகத்தை, இதயத்தில் ஏற்றிப் பாராட்டுக!
எமது கண்முன்னே தெரிகின்ற இயற்கை எழிலையும், அற்புதமான மனிதர்களையும் நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால் யாரோ சொன்ன கற்பனைச் சம்பவங்களையும், கதைகளையும் கேட்டு அதிலேயே லயித்துப்போய் விடுகின்றோம்.
111

Page 58
பருத்திழ் அ.ை ஆயிரவருதல்
எமது இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள், இலக்கியங்களில் வருகின்ற பாத்திரங்களையே வியந்து போற்றித் துதிபாடுகின்றோம். இதில் எதுவித தப்பும் இல்லை.
ஏன் எனில் இவைகள் எமது கலை, கலாசார, பண்பாடுகளை எமக்கு வலியுறுத்துவதுடன், வாழ்வியல் நெறிமுறைகளையும் எமக்கு எடுத்தியம்புகின்றன. ஆயினும் பழைமையான கதைகளில் வரும் பாத்திரங்களின் நல் இயல்புகளின் வண்ணம் இன்னமும் எம்மவர்களால் வாழ்ந்துகாட்ட முடியுமா எனச் சிலர் ஐயுறவு கொள்ளலாம்.
சொல்லப்போனால் முன்னைய காலத்தில் ஒருவர் நல்லியல்புகளுடன் வாழ்வது சிரமமான காரியமே அல்ல. அக்கால பொருளாதார நிலை, சமூக உறவுகள், சமூக கட்டமைப்புகள் மிகவும் உன்னதமான நிலையிலேயே இருந்தன. அப்படியிருந்தும்கூட, தீயவர்கள் இருந்தார்கள். இவைகளை எதிர்கொண்டு போராடும் வரலாறுகளை நாம் படித்திருக்கின்றோம்.
ஆனால் இக்காலத்தில் முற்கால மாந்தர்கள் போல் அறவாழ்வு வாழ்பவர்கள் குறைவு எனச் சொல்கின்றார்கள். இக் கருத்தை நாம் முழுமையாக ஏற்கமுடியாது. முக்கிய மாகக் குடும்பங்களின் தலைவிகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டி ருக்கும் இந்த மாதரசிகள் எவ்விதத்திலும், அவர்களிலும் பார்க்கக் குறைந்த தரத்தில் உள்ளவர்கள் அல்லர்.
112

சுமோ இருத்தல்
மாறிவரும் இந்த உலகில் மக்களுக்குப் பிரச்சனை களின் தொல்லைகள் சொல்லில் அடங்குமா? மக்கள் தொகை பெருகி விட்டது. மேலும் கலாச்சார சீரழிவுகளை மென்மேலும் தூண்டும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், நாகரீகம் எனும் போர்வையில் நடக்கும் அத்துமீறலான போக்குகள், மோகம் எல்லாம் இருந்தும் கூட, இன்னமும் குடும்பம் எனும் கோயிலில், ஒரு முக்கிய மான உயிர் பாத்திரங்களான எமது மாதர்குல மாணிக் கங்களின் சிறப்பியல்புகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
இதிகாச புராண இலக்கியங்களில் காணப்படும் பெண் கதாபாத்திரங்களையே வியந்துபோற்றும் போது, எமக்காகச் சந்தனக்கட்டை போல் தேய்ந்து, மணம்வீசும் உங்களது அன்னையை, மனைவியை, சகோதரிகளை, அத்துடன் நீங்கள் நேரில் கண்டு கொண்டிருக்கின்ற உறவுக்காரப் பெண்கள், மற்றும் ஏனைய சாதனைப் பெண் களை ஏன் பார்த்து மெச்ச, புரிந்து கொள்ள மறுக்கி ன்றீர்கள்?
வசதிகூடிய சமூக அமைப்பில் வாழ்வது சுலபமே! ஆனால் இன்றைய சராசரி மத்தியதர சமூகத்திலும், அடிமட்ட பாட்டாளிவர்க்க, ஏழ்மை நிலையில் உள்ள சமூகத்திலும் வாழ்கின்ற திண்ணிய மனோநிலையில் வாழும் எமது பெண்கள், முன்பு வாழ்ந்துபோய்விட்ட எந்தக் கற்பரசிகளிலும் குறைவுபட்டவர்கள் அல்லவே அல்லர்.
13

Page 59
பருத்திபூர் 04ல. ஹவிஹரன்
அன்புடன் உணவுபரிமாறுவதை,வீட்டுவேலை களைக் கரிசனையுடன் செய்வது மட்டுமல்லாது தனது குடும்பத்தையும், தனது கணவர் மற்றும் உறவினர்கள் நலனில் அக்கறையுடன் கவனிப்பதில் இன்றைய எமது அம்மாக்கள் எந்தளவும் குறைவுபட்டதாகத் தெரிகின்றதா?
கற்பனையிலேயும், நிழல் உருவில் காண்பதையுமே நிதர்சனமான உண்மை எனக் கருதும் எம்மால், நிஜத்தில் வாழும் மக்கள் மேல் உண்மையான கரிசனைகள் எந்தள வுக்கு உண்டு?
ஒருவரின் திறமையின் வெளிப்பாடுகள், அவர் போராட்டங்களை முகம் கொடுத்து வெற்றி பெறுவதில் தங்கியுள்ளது. ஒரு வேளை ஒருவரின் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் கூட, அது தார்மீக ரீதியில் அதுவும் ஒரு வெற்றியே தான். பல பெண்களுக்குப் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது.
வாழ்க்கைப் போராட்டங்களை இன்று ஆண்களை விடப் பெண்களே அதிக அளவு சந்திக்க வேண்டியுள்ளது. எதற்கும் குறை கூறும் சில ஆண்கள், பெண்களே, தமது இனத்தைக் கொடுமைப் படுத்துவதுடன் கிண்டலடிப்பது, சமூக அறியாமை, என பல குறுக்கீடு களைப் பெண்கள் சந்தித்தேயாக வேண்டியுள்ளது.
கணவனுக்குப் பயந்து ஒடுங்குபவளே உத்தமி எனச் சிலர் கோணங்கித்தனமாகச் சொல்வார்கள். இன்று
114

சிம்மர் இருந்தன் எத்தனையோ பெண்கள் வழிதவறி நடக்கும் கணவர் மார்களை வெகு துணிச்சலாக பல சவால்களுக்கு மத்தியில் அவர்களைச் சமூகம் மெச்சும் நல்லவர்களாக, வல்லவர் களாக மாற்றியிருக்கின்றார்கள்.
வெறுமனே சவால் விடுத்தலை விடுத்துச் சாதனைப் பெண்களாக உலாவரும் இவர்களை மனதார மெச்சுங்கள் தோழர்களே! ஆண்களில், சிலர் தமக்குச் சாதகமான கொள்கையின்பால் செல்லும் நடக்கும் மாதர்களை மட்டும் "சரியானவள்” என்று சொல்வார்கள். உண்மையில் இவர்கள் பழைமையான பெருமைகளைப் புரியாதவர்கள். சமூக நடத்தை நன்னெறிகள் முழுமையாக அழிவதேயில்லை. பொதுவான நன்நடத்தை, அறக்கருத்துக்களுக்கும் புறம் பாக, எவரும் தமக்கான புறநடத்தைகளைச் சமூகத்தில் புகுத்திடமுடியாது.
எமது முன்னோர்கள் தமது வாழ்வில் கண்ட பாத்திரங்களை தாங்கள் முன்னரே அறிந்த சமூக அமைப்புக்கள் கலாசாரப் பண்புகளைக் கதையாக, காவியமாகச் சொல்லப்போனதை அதை நாம் போற்றிப் பேணுவதாலேயே, எமது முன்னோர்களின் கலைப்ப டைப்புக்கள் இலக்கியங்கள் இன்னமும் உயிருடன் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் தமது கடமையை செவ்வனே செய்துவிட்டார்கள்.
அவ்வண்ணமே பழைமையைப் பேணும் நாம், தற்காலத்து நன்மாந்தர்களின் சிறப்புகளைப் பதிவு செய்
115

Page 60
பகுத்திபூர் அ.ை விஷன் வோமாக! குறிப்பாக எமக்கு எமது குடும்பத்திற்கு நல்லவை செய்யும் மாதரசிகள் பற்றி உளமார ஏற்றுக்கொண்டு இப்படியும் எமது பெண்கள் வாழ்கின்றார்கள் எனச் சொல்லி இறும்பூதெய்துவோமாக!
எமது இலக்கியப் படைப்புக்களில் "எம்முன்னே வாழும் பெண்களை", அவர்தம் பெருமைகளை முதன்மை யேற்றுவதே செய்நன்றி மறவாத அதிஉயர் பண்பாகும். இருக்கின்ற, வாழ்வாங்கு வாழ்கின்றவர்களைப் போற்றினால் தான் எதிர்காலச் சந்ததிகளும் தாங்கள் இவ்வண்ணம் வாழத் திடசங்கல்பம் செய்து கொள்வார்கள் என்பதில் ஏது சந்தேகம் அன்பர்களே!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 14-03-2010
116

சிம்மர் இருத்தல்
எளிமையான வாழ்வு
ஆடம்பரமான வாழ்வு ஆபத்தானது. எளிமை இழிவானது அல்ல கஞ்சத்தனமானதும் அல்ல. சிக்கன வாழ்வு எதிர் காலத்தை வளமாக்கும். எளிமையான வாழ்வில் சந்தோஷம் கூடிவரும், கல்வி, சுகாதாரம், உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளைத் திட்டமிட்டுச் செலவு செய்ய முடியும், கற்பனையான கவர்ச்சிமிகு வாழ்க்கையில் மருண்டு இருப்பதை, இழப்பதைவிட செழிப்பான நிறைவை நோக்கி வாழ சிக்கனமான எளிமையே வலியது. செலவு செய்வது சந்தோஷமானது அல்ல. வசதியுடன் வாழ எண்ணுவதும் தப்பு அல்ல. அநாவசிய செலவுகளே ஆபத்தானது. எளிமையே ஒரு பெரும் வருமானம் வசதிகளையும் தானாகவே பெருக்கும். எளிமையே அழகுதான்.
أص எளிமை இழிவானது அல்ல. சிக்கனம் என்பது கஞ்சத்தனமானதோ அல்லது உலோபித்தனமானதும் அல்ல. சிக்கனமாக வாழ்வதே கெளரவக் குறைச்சலான விடயம் எனப் பல குடும்பத்தினர் இன்னமும் எண்ணிக் கொண்டிருப்பதாலேயே பெரும் பொருளாதாரச் சுமைகளால் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.
117

Page 61
பருத்திபூர் 00. ஆயிரவருதஷ்
இன்று நாட்டில் விலைவாசிகள் நாளுக்கு நாள் கற்பனைக்கு எட்டாத அளவு கூடிக் கொண்டே செல்கின்றது. ஆனால், இன்னமும் எம்மில் பலருக்குமே இதைச் சமாளிப்பதற்காகத் தங்கள் வாழ்க்கை முறைகளைச் சீராக மாற்றி அமைக்கத் தயாராக இல்லை. இன்னமும் கூட எந்தப் பிரச்சினை வந்தாலும் கூடத் திருமணம், 'வரவேற்பு, பிறந்தநாள், பாராட்டு விழாக்களுக்கென எத்தனை லட்சங் களை செலவழிக்கின்றார்கள்.
"மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்" எனச் சொல்லியே மிகவும்ஆடம்பரமாக வாழ்ந்து பின்பு,நொந்து வாழ்கின் றார்கள்.
எனினும், நாம் மிக இயல்பாக எளிதாக, சிக்கனமாக வாழ்ந்தாலே போதும் எமது விலைவாசி எனும் மலையான பிரச்சினையிலிருந்து மீண்டு வாழமுடியும்.
இன்றைய சூழலில் ஓரளவு பணவசதி உள்ளவர்களா லேயே, குடும்ப பாரத்தைச் சுமக்க முடியாமல் இருக் கின்றது.
நாம் செலவைச் சமாளிப்பது எப்படி எனச் சிந்திக்க வேண்டுமல்லவா?
எமக்கு எவை, எவை பிரதானமாகத் தேவை என்று நாம் எம்மையே கேட்டுக் கொண்டால், "எல்லாமே எமக்குத்
118

சுர்ரே இருத்தல் தேவை என்றுதான் முடிவில் எமக்குக் கிட்டும் பதிலுமாகும். உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், கல்வி என எதையும் நாம் விட்டுவிட்டு வாழ முடியுமா?
முக்கியமாக உணவு விடயத்தையே எடுத்துக் கொணன் டால், இன்று நகர்ப்புற வீதிகளில் நடந்து சென்றால் இங்கு மக்கள் வீணடிக்கும் உணவுகளின் அளவைப் புரிந்து கொள்ள முடியும்.
தேவையற்ற உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டுத் தயாரிப்புகளின் கழிவுகளான, குளிர்பான கொள்கலன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், வெற்றுப் பாத்தி ரங்கள், பழவர்க்கக் கழிவுகள், மதுபான போத்தல்களை வீதி யோரம் குப்பைகளில் பார்க்கும் போது நாம் வறுமையோடு சீவிக்கின்றோம் என்று சொன்னால் அதனை எவர்தான் நம்பப் போகின்றார்கள்?
தினசரி வீதி எங்கும் தெரியும் விளம்பரச் சுவரொட்டி களில் நாம் மயங்கி, அங்கு காட்டப்படும் பொருட்களை எப்படியாவது வாங்கிவிடுவது என மனம் எமக்குக் கட்டளை
யிட்டு விடுகின்றது.
தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரப் படங்க ளைப் பாருங்கள்! வித, விதமான உணவுப் பொருட்கள், வண்ண வண்ண அட்டைப் பெட்டிகளில் வந்து மனதை மருட்டுகின்றது.
119

Page 62
பருத்தியூ பால, விவரம்
அத்துடன் கற்பனைக்கு எட்டாதபடி பொய்யான காட்சிகளைக் கண்டு இவ்வளவு வல்லமையுள்ள பொருட்களா என நாம் ஆராயாமல் நம்பி விடுகின்றோம். ஒரு குவளை குறிப்பிட்ட ரக பானத்தைக் குடித்ததும் அடுத்த வினாடி தேகம் உயர்ந்து பருத்து விடுகின்றது. முகத்தில் பூச்சு மருந்தைத் தடவியதும் உடனே சருமத்தில், முகத்தில் உள்ள வடுக்கள், பருக்கள் சட்டென மறைந்து போய் விடுகின்றது.
இப்படியே மயக்கும் விளம்பரமூடான பொய்யான சமாச்சாரங்களால் கண்டகண்ட, பொருட்களைக் கண்ட உடனே கடனோ அல்லது சேமிப்பையோ எடுத்து வாங்கி விட்டே அடுத்த வேலையைச் செய்யும் நம்மவர்களை என்ன என்பது?
தேவைக்கு அதிகமாக உடைகளை வாங்கிக் குவிப்பதும், சற்று அது கிழிந்தாலோ ஏன் அதன் பொத்தான்கள் கழன்று விட்டாலோ, அதனை எறிந்து விட்டுப் புதிதான ஆடைகளு க்குள் புகுந்து கொள்வது என்ன நியாயம்? உடைகளுக்காக அதிகமாகச் செலவளிப்பது நாகரீகமானது என வீம்பாக வேறு சொல்லிக் கொள்கின்றார்கள்.
இதுவிடயத்தில் முன்னர் பெண்கள்தான் ஆண்களை விடத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். ஆனால், இன்று ஆண்கள்கூட தம்மை அழகுபடுத்துவதற்காக மிகவும் கஷ்டப்பட்டுத் தமது அழகைமாற்றி அலங்கோலமாகத் திரிகின்றார்கள்.
120

சுர்ஜ இருத்தல் அழகுபடுத்துவதற்காகப் பெண்கள் அழகு நிலையங்க ளுக்குச் சென்று முக அழகை மோசமாக்குவதும் கண்ட கண்ட களிம்புகளை வாங்கி அது பிரயோசனமற்றதாகி சரும நோய்வர, பின்னர் அரச தனியார் மருத்துவமனைக்கு ஓடுவதும் மிகச் சாதாரண விடயம்.
சாதாரணமாகச் சுத்தமாக வாழ்ந்தாலே போதும், அழகு தானாக வரும், இதைவிடுத்து உடலை வருத்தித், தேய்த் துத் தம்மைத் தாமே குரூரமாக்குவது வெட்கப்படத்தக்க 6Lu(3LD.
ஆரோக்கியமாக வாழ உடல் உழைப்புத் தேவை. நல்ல இயற்கை உணவை உண்ண வேண்டும். இவற்றை நாம் முறையாக மேற்கொள்கின்றோமா?
இன்று எமது நாட்டில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கு மேற்பட்ட சாதாரண கிராமங்கள் இருக்கின்றன. இங்கு வாழும் மக்கள் மிக எளிமையான வாழ்க்கையை சந்தோஷ த்துடன் மேற்கொள்கின்றார்கள்.
இவர்கள், நகர வாழ்க்கையை விரும்பி நகர்ந்தால், நமது நாடு இன்னமும் படுமோசமான நிலையை எட்டிவிடும். நகரத்தின் டாம்பீகம் எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை.
தேவையான கல்வி, சுகாதார பொழுது போக்கு வசதிகள் அங்குள்ள மக்களுக்கு சென்றடைந்தால்
12.

Page 63
கருத்திபூர் பல. ஹவிரவருந்தர் நகரத்தில் சீவிக்க யாருக்குமே ஆசை வராது. வீட்டு வாடகை, தண்ணிருக்கான செலவு, மின்சாரம், போக்குவ ரத்துக்கான செலவுகள் எனப் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நகர மக்கள் இன்னமும் கிராமங்களை நோக்கி மீண்டும் செல்லத் தயாரில்லை.
ஆனால் வாழ்க்கைச் செலவு பற்றி மட்டும் மனம் நொந்து பேசுகின்றார்கள். கிராம வாழ்விலும் பிரச்சினைகள் உண்டு. எனினும், நல்ல மனித உழைப்பின் மூலம் இவை கள் தீர்க்கப்பட்டுவிடும். ஆயினும், சிக்கன வாழ்வு முறை எத்தரத்தாருக்குமே பொதுவானது.
செலவு செய்வது சந்தோஷமானது அல்ல. வசதியுடன் வாழ எண்ணுவதும் தப்பு அல்ல. அநாவசிய செலவுகளே ஆபத்தானது. இது சேமிப்புப் பழக்கத்தை அழித்து விடும். பிறர் மெச்ச என்றுமே உள்ளதைக் கொண்டு எளிமையாக வாழ்க! சிக்கனம், அதனூடான சேமிப்பு ஆகியனஅழியா சொத்துக்களையும் சந்தோஷங்களையும்வாரி வழங்கி வளமூட்டும்!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 14-11-200
122

சுரே இருத்தல்
குடும்ப உறவுகளை மட்டுமல்ல சமூக உறவுகளையும் வளர்த்திடுங்கள்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெறுத்தல் ஆகாது. நாம் ஒதுங்கி வாழ்ந்தால் ஒதுக்கப்பட்ட மாந்தராகிவிடுவோம். தங்களைத் தாங்களே மேன்மைப்படுத்தி ஒருவித மேலாண்மையுடன் கர்வத்துடன் வாழ்வதும், பேசுதலும் சமூக உறவைக் கூறாக்கி, வேறாக்கி விடும். எங்களுடன் எமது உறவினர்கள் மட்டும் இந்த உலகில் வாழ்வது இல்லை. பலவித மாந்தர்கள் கூடிவாழும் ஒப்பற்ற சந்தோஷ பூமியாக நாம் மாற்ற வேண்டும். சமூக உறவுகள் வளர்ந்தாலே போதும், முழு உலகமும் படிப்படியாக ஒன்றிணைந்து விடும். பிணைப்புடன் இணங்கி வாழ்தலே அனைவருக்கும் உகந்தது.
எனது ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள அந்தக் கிராமத்தை நான் மறக்க முடியாது. சின்ன வயதில் சனி, ஞாயிறு நாட்களில் துவிச் சக்கர வண்டியில் எனது நண்பர்களைப் பார்க்கப்போவதுண்டு.
23

Page 64
பருத்திபூர் அல. உயிர்வருந்தர்
கிராமத்தின் அகன்ற பாதையின் ஒரம் இருந்த கல்வீடு. அந்தக் காலத்துக் கட்டிடம். காவி நிறம். தலை வாசல் உண்டு. நான் அந்த வீதிவழியாகப் போகும்போது, அந்த வீடு வரும்போது என்னையறியாமலேயே விழிகள் அந்த வீட்டின் தலைவாசல் பக்கம் நோக்கும்.
" உட் பிரவேசிக்க வேண்டாம்” என்கின்ற வாசகம் வீட்டின் தலைவாசலில் அழகாக எழுதப்பட்டிருக்கும். எனக்கு அப்போது ஏற்பட்ட ஆச்சரியத்திற்கு அளவே யில்லை. காலம் காலமாக வந்தவர்களை வரவேற்கும் பூமி எமது அல்லவா? போயும் போயும் வீட்டின் வாசலிலேயே அபாய அறிவிப்புப் போல இது என்ன வாசகம்? வீட்டில் நாய் ஏதும் வளர்க்கின்றார்களா என்றே அன்று எண்ணி னேன். "நாய் கவனம் உள்ளே வரவேண்டாம்” என்று அல்லவா எழுதியிருப்பார்கள். பின்னே என்ன தான் மர்மம் இது? அந்த ஊரின் எனது நண்பர்களிடமே மிக்க ஆர்வ முடன் கேட்டேன்.
அவர்கள் சொன்ன தகவல் இது, அந்த வீட்டில் உள்ளவர்கள் நல்ல மனுஷர்கள் தான். ஆனால், எவருட னும் பழக விருப்பம் அற்றவர்கள். மற்றப்படி அவர்களால் எவர்களுக்குமே பிரச்சினையில்லை. யாரிடமும் பழகுவதை விரும்புவதில்லை. எங்கும் கண்டபடி திரிவதுமில்லை. அது அவர்கள் குணம். தங்களுக்குள் வாழ்வதை நாம் ஒன்றும் குறை கூற முடியாது என்றார்கள்.
24

சுமோ இருத்தலீ இது என்ன வினோதம்? இப்படியும் வாழ முடியுமா? எங்கள் குடும்பத்துடன் மட்டும் உறவுகளைப் பேணி எப்படிச் சந்தோஷமாகச் சீவிக்க முடியும்? சமூக உறவு இன்றிச் சந்தோஷம் முகிழ்க்குமா? இப்படியே வாழ்ந்து பழகினால் முடிவு என்ன ஆகும்?
நாங்கள் பகைமை பாராட்டாமல் ஒதுங்கி இருப்பது கூட வேற்றுமையை வெறுப்பைப் காட்டுவதுபோலிருக்கும். இது எங்கள் பழக்கம் என்று கூறக்கூடாது. இது ஒரு மனோவியாதி நிலையை ஏற்படுத்தியும் விடலாம்.
சிலரது வீடுகளில் பிள்ளைகள் சந்தோஷமாகச் சிரித்து விளையாடினால் இல் லத்தலைவர் சீறி விழுவார். பிள்ளைகள் 'உம்' என்று இருந்தால் வீடா. அது? இன்னும் சில வீடுகள் கணவனும், மனைவியும் மட்டும் பேசிக் கொள்வார்கள். பிள்ளைகளிடம் அதிகார தொனியில் எச்சரித்தபடியே இருப்பார்கள்.
பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்களாம் . அவர்களுக்குத் தாங்கள் புத்திமதி சொல்வதாக எண்ணி, அவர்களின் மீளாத வெறுப்பையே சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். ஒழுக்கத்தில் தங்களை விட்டால் வேறு யாருமே இல்லை எனக்கூறிச் சமூகத்தைக் கரித்துக் கொட்டும் பிரகிருதிகளை நீங்கள் கண்டிருப்பீர்களே. நிச்சயம் பலரை அறிந்திருப்பீர்கள்.
125

Page 65
பருத்திபூர் பல. வயிரவருதர்
சமூக உறவை வளர்க்கக் குறை கூறுவதை நிறுத்துக! மனதில் வஞ்சனையின்றிப் பழகுக!
தனது பையனை பெண்மணி ஒருவர் அடி அடி என அடித்துக் கொண்டிருந்தார். "ஏன் இவனுக்கு அடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். பையன் இப்படி அழுகின்றானே விட்டுவிடுங்கள் என்றேன்.
பக்கத்து வீட்டுப் பையனுடன் சேரக்கூடாது என்றுதான் அடிக்கின்றேன்' என்றார் அவர் "அது சரி இவன் அவனு டன் சேர்ந்து விளையாடினால் என்ன. நான் இவரை ஒரு பொழுதும் இணைந்தே பார்க்கவில்லையே." என்றேன். பதிலுக்கு அந்தப் பெண்மணியோ "ஆமாம். ஆமாம் எனது பிள்ளை அவனுடன் சேர்வது இல்லைதான். என்றாலும், நான் முன் எச்சரிக்கையாகக் கண்டித்து அடிக்கின்றேன். எங்கள் பிள்ளைகளை நாங்கள் தானே கண்டித்து வளர்க்க வேண்டும்” என்றார்.
இது என்ன. கொடுமை. தவறு என்று செய்யாத பிள்ளையை முன் கூட்டியே அடித்துத் திருத்துகின்றாராம். இந்த அறியாமையை என்ன என்பது?
தொடர்ந்து பிள்ளைகளைத் தனிமைப்படுத்துவது அல்லது பிறருடன் தாங்கள் வேறாக வாழ்ந்து விடுவதால் காலப்போக்கில் எவரைக் கண்டாலுமே அச்சப்படும் நிலைக்கே இவர்கள் ஆளாகிவிடுவார்கள்.
126

சும்மா இருத்தல் தங்களைத் தாங்களே மேன்மைப்படுத்தி மற்றவர் களைச் சிறுமைப்படுத்தி ஒருவித மேலாண்மைத் தன்மையு டன்கள்வம் கொள்வதும் பேசித் திருப்திப்படுவது அறியாமை யுடன் கூடிய குரூரத்தனமாகும்.
நல்ல பண்புகள், குணங்கள் எங்களுக்கு மட்டுமே உரித் தானது எனக் கருதுவதா? நற்பண்பு உள்ளவர்கள் இப்படி எண்ணவே மாட்டார்கள். சமூக உறவை வளர்ப்பவர்கள் பிறர் மீது குறை காணுவதை வெறுப்பார்கள்.
எமது குடும்பம், எமது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே தேவையானவர்கள் என்று எண்ணுவது எந்த விதத்திலும் சரியான எண்ணமேயல்ல. இரத்த சம்பந்த மான உறவுக்கு அப்பால் சமூக உறவுகளின் அன்பையும் புரிந்து கொள்ள வேண்டும். யார், யாரோ இரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பாற்றுகின்றார்கள். இந்தப் பந்தம் எப்படி வந்தது? கூடவந்த உறவுகளுடன் சமூக பிணைப்பு களையும் இறுக அனைத்திடுக!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 26.09.2010
127

Page 66
பருத்திஆர் பா.ை வயிரவநாதர்
விவாகரத்துக்களும் ரணமாகும் மனங்களும்
மாறாக காதல், பொறுமை, பொறுப்புணர்ச்சி ஆகியன கணவன்,மனைவி இரு சாரார்களிடம் இருந்தால் விவாகரத்து என்கின்ற பேச்சிற்கே இடமிருக்குமா? ஒ
மணித்தியாலயங்கள் எம்முடன் அன்புடன் பேசி, அவர்கள் விடைபெறும் போது எமது மனம் எதனையோ இழந்ததுபோலிருக்கின்றதே? இப்படியிருக்க, ஒன்றாக வாழ்ந்து, கூடிக் குதூகலித்துக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர் மனம் முறிவு ஏற்பட்டு விவாகரத்துக் கோருவது சரியானதுதானா? விவாகரத்து பெறுபவர்கள் அதன் பின்னர் நிம்மதியாக வாழ்கின்றார்களா? மிகப்பெரிய இழப்பு குடும்ப வாழ்வை இழப்பதுதான். இருவரின் மணமுறிவிற்கு நியாயமான காரணங்களும் இருக்கலாம். திருமணங்கள் இறைவன் கொடுத்த பிணைப்பு. பிணைங்கி வாழ்வதால் அவர்களைச் சார்ந்த பிள்ளைகள் மற்றும் ஏனையவர்களையும் பெரிதும் பாதிக்கும். மனங்களை ரணமாக்கும் மணமுறிவு, இணங்கி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். .الم
நாம் சாதாரணமாக ஒருவருடன் ஓரிரு நாட்கள் பழகிய பின்னர், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட நபர் எங்களைக் கண்டும் காணாது போனால் எமது மனம் எவ்வளவு பாடுபடுகின்றது? அவர் ஏதாவது அவசர வேலை
128
 

சுங்மா இருத்தல் கருதிச் சென்றாலும் கூட, அவர் மீதுள்ள அன்பு காரணமாக எமது மனம் சஞ்சலமடைவது இயற்கையேயாம்.
இது இவ்வாறு இருக்க கணவன், மனைவியாக சந்தோ ஷமாக வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றுவிட்டுப் பிரிந்து சென்று வாழப்பிரியப்பட்டு விவாகரத்துச் செய்பவர்கள் பற்றி எண்ணும் போது வியப்பாகவே இருக்கின்றது.குடும்பத்தில் பொறுமை இன்றேல் வாழ்க்கை வெறுமை தான்!
உண்மையில் விவாகரத்துப் பெறுவதற்கு ஆவலாக இருப்பதன் காரணம் தான் என்ன? இதற்கான நியாயமான காரணங்களும் சில கணவன், மனைவியர் வாழ்க்கையில் உண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. இருப்பினும் எந்த மதங்களும் குடும்பப் பிரிவினைகளை விரும்புவதில்லை.
மதுப்பழக்கங்கள், தீராத நோய்கள், பாலியல் பிரச்சினைகள், சந்தேகங்களால் ஏற்படுகின்ற விபரீதங்கள் போன்றவை பலரது வாழ்க்கையே விபரீதமான முடிவுக ளுக்கு ஆளாக்குகின்றன எனலாம்.
எனினும் சில பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வு காண முடியும். ஆயினும் விட்டுக் கொடுக்காத போக்கு, தன் முனைப்பு போன்ற காரணங்களால் தவறான முடிவு களையே நிரந்தரமாகக் கைப்பற்றிப் பெருமிதம் கொள்ப வர்கள், ஈற்றில் என்றோ ஒருநாள் தமது தவறுகளை உணரா மல் போவதுமில்லை.
129

Page 67
ugbýky, dae). ozápagaye
பொறுப்புணர்ச்சி என்பது ஆண், பெண் இருசாரா ருக்குமே பொதுவானவொன்றுதான். எனினும் மதுப் பழக்கம், தகாத பாலியல் தொடர்பு, தீய நண்பர்களுடன் சேர்ந்து குடும்பத்தில் அக்கறை காட்டாத தன்மைகள் பற்றியே பல பெண்கள் ஆண்கள் பற்றி அதிகமாகக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு திருமணமான பின்னரும் தவறான வாழ்க்கையினை வாழ்ந்தவர்கள் திருந்தாமலேயே இருந்தால் சிரமம் தான்.
அதே சமயம் தமது மனைவியர் பற்றிக் கணவர் மார்களும் இவள் பொறுப்பு அற்றவள், தனது தாய், தகப்பனார், தனது உறவினர்கள் மட்டுமே முன்னிலைப் படுத்துவதாகக் குற்றம் சுமத்துவது சாதாரணமாகச் சொல்லும் விவாகரத்துக்கான காரணங்களாகும்.
கணவன், மனைவி உறவு என்பது தெய்வீகமான, புனிதமான ஒன்றாகும். புதிய உலகில் புதிய உயிர்களைப் புஷ்பிக்கும் ஆத்மாக்கள். அத்துடன் நற்பிரஜைகளை உருவா க்கும் சிற்பிகள். தங்கள் சுயவிருப்பங்களை முன்னிலைப் படுத்தி வாழ்வது வாழ்வு அல்ல.
ஆயினும் ஒருவர் விருப்பத்தினை அறவே உதாசீ னம் செய்வது ஆணுக்கும் அழகு அல்ல! பெண்ணுக்கும் பெருமை சேர்ப்பதாகாது.விட்டுக் கொடுத்தலால் நஷ்டமும் இல்லை. உறவு இதனால் இறுகும். இதுவே நிறைவு!
காதல் திருமணம் புரிந்து இளமையில் குதூகல த்துடன் சுகித்துக், களித்துப் பின்பு அதே திருமண உறவை
130

சுர்ஜ இருத்தலி முறிப்பது என்பது இருசாராரிடமும் அடிமனதினுள் தேங்கி யுள்ள வன்மமான போக்காகவும் இருக்கலாம்.
கொடுமைக்காரக் கணவன் நெறி கெட்ட பெண் என இருசாரார்கள் பற்றிச் சொல்லுவதில் உண்மை தன்மை
இருக்கின்றதா என்பது பற்றிச் சமூகம் சிந்திப்பதேயில்லை.
யில்லை.
எவர் என்ன குற்றம் சொன்னாலும் வேடிக்கை பார்ப்பதும்
இரத்துக்கோரும் கணவனும் மனைவியும் உணர்வதே
அதையே நம்பிக் கேலி செய்வதைச் சம்பந்தப்பட்ட விவாக
விவாகரத்துப்பெற்று அதன் பின்னர் சில வருடங்கள் கழித்துத் தனிமையில் வாழும் எந்த ஒரு ஆண்மகனோ, அல்லது பெண்களோ பின்னர் நிம்மதியாக வாழ்கின்
றார்களா? மனம் வெதும்பி, புழுங்கி தவறு இழைத்து விட்டோமோ என எண்ணுவதுமுண்டு.
உண்மையிலேயே காமுகனாக, ஊதாரியாக, குடிகார னாக இருக்கின்ற பேர்வழிகளுடன் ஒரு அப்பாவிப் பெண்
எப்படித்தான் வாழ முடியும்? கூடியவரை அனுசரித்துப் பார்ப்பாள். அப்புறம் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் பாரிய இடையூறு விளைந்தால் என்ன செய்வது? இன்று
நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நாம் தினசரிகளில் பார்க்கும் செய்திகளில் கணவன், மனைவி உறவுகளைக் கேவலப்படுத்தும் நபர்களைப் பற்றி
குடும்பத்தில் அடிதடி சண்டைகள் முடிவில் கொலை
131

Page 68
பருத்திஆர் 20. ஆயிரவநாதர் யில் போய் முடிவுறுவதை வாசிக்கும்போது நெஞ்சம் பதை பதைக்கின்றது.
திருமண வாழ்வை நிச்சயம் செய்யும்போது எந்த விதமான ஆராய்வுமின்றிப்பொருந்தாத கல்யாணங்களால் உள்ளங்கள் உடைக்கப்படுகின்றன.
மேலும், முதிர்ச்சியடையாத அறிவு நிலையில் பலர் கண்டதும் காதல் கொண்டு, திருமணமாகிப் பின்னர் பிரிந்து விடுவதும், அடுத்த துணையைத் தேடிக்கொள்ள ஆலாய்ப் பறப்பதும் வேடிக் கையான துன்பம். நிதானமில்லாத இல் வாழ்வில் சரியான பாதைகள் துலங்குவதில்லை. அழுந்தி வதைபட விரும்புவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
ஒன்றாய் உண்டு, ஒன்றாய் துயின்று அதன் பின்னர் வாய் கூசாமல் ஒருவர் அந்தரங்கங்களைப் பகிரங்கமாகச் சொல்லும் கணவர், மனைவியர் மனம் என்ன கல்லா? நல்ல வார்த்தைகள் பேசினாலே போதும், குடும்பம் ஒட்டி உறவாடிவிடும்.
சந்தோஷமாக வாழும்போது தவறுகள் புரிவதே யில்லை. பின்னர் குடும்பத்தில் குழந்தைகளைப் பெற்று அவை வளர, வளர பொருளாதாரச் சுமைகளும் பலர் மனங்களைச் சல்லடையாக்குகின்றன. அப்போதுதான் குடும்பங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் மன இயல்பு வந்து விடுகின்றது.
132

சும்மா இருத்தல் துன்பங்கள் சூழும்கால் ஒருவரை ஒருவர் தாங்கு வதை விடுத்துத் தூக்கி எறிந்து பேசுவது தகுமா? பரஸ்பரம் ஒரே தவறுகளையே மற்றவர் செய்து கொண்டே தூற்றுவ
தால் தனது தலையைத் தானே உடைப்பது போலாகும்.
இளவயதில் எதிர்காலத் திருமண வாழ்வு பற்றிய கனவு களில் காளையரும் கன்னியரும் திளைப்பதும் அதிலேயே சுகம் காணுவதும் மானுட இயல்பு எனினும் தங்களது கற்பனைக்கு ஏற்ப வாழ்க்கை அமையாதுவிட்டால் அது
போல வேறு ஏமாற்றம் பிறிதில்லை.
"அதற்கென்ன செய்வது? பேசாமல் அனுசரித்துப் போக வேண்டியது தானே" என இலவசமாக ஆலோசனை செய்பவர்களுக்கு மனசின் வேதனைகள் புரிவதேயில்லை.
எமது கலாசார, மத பாரம்பரியங்களின் நெறிபிறழாது வாழவேண்டும் என்பதற்காகவே பலர் மிகுந்த பிரயத்தன துடன் பொருந்தாத கணவன், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனினும், காலப்போக்கில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் இரக்கப்பட்டுக் கொண்டும் தங்கள் வாழ்க்கை யைப் பொலிவாக்கி விடுவதுமுண்டு.
சமூக ஏற்றத்தாழ்வு, கல்வி, பதவிகளில் உள்ள இடை வெளிகளால் பல குடும்பங்களில் நிம்மதி பறிபோகின்றன. பணவசதியுள்ள இடத்துப்பெண், வசதி குறைந்த கணவனை மதிப்பதில்லை என்பார்கள். அல்லது சாதி வேறுபாடுகள் காரணமாக ஒருவரை ஒருவர் தாழ்வாக மதிப்பதும் அவர்
133

Page 69
பருத்திபூர் பல. ஆயிரவநாதன் களின் சுயகெளரவத்தை மிதிப்பது போலாகும்.
ஒத்த கல்வி, பணம், பதவி செல்வாக்குகளே ஓரிடத்தில் முடங்கிவாழ்வதுதான் குடும்ப உறவிற்கு ஏற்ற வழியாகுமா? ஏன் இல்லாதவர்கள் இருக்கின்றவர்களுடன் கூடி வாழ்வதில் கூட ஒரு சுவாரஸ்யம் இல்லையா? படிக்காத மனைவியைப் படித்த கணவன் பூப்போல ஏந்துவதை நீங்கள் பார்த்தது இல்லையா?
எத்தனையோ குடும்பங்களில் உயர் பதவி வகிக்கும் பெண்கள், சாதாரணமானவர்களைத் திருமணம் புரிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எதிலும் மாற்றமான காரியங்களை எடுத்துக் காட்டாகச் செய்வதிலேதான் எமது திறமை, வல்லமை, திருப்தி கிடைக்கின்றன. ஆனாலும், இதனைச் செய்யப் பலருக்கும் மனம் ஒப்புவதுமில்லை. துணிவும் இல்லை.
அன்பு, பாசம், காதல், பரிவு முன்னே எமது அகம் பாவம், ஆணவம், பஞ்சு என எரிந்து போகும். குடும்பத்தில் கணவனை உண்மையாக நேசித்தால் மனைவியின் ஸ்திரமான அன்பு அவனை முழுமையாக்கிவிடும். அவ்வணன் ணமே, மனைவிமேல் மாறாத பற்றுக்கொண்டால் கணவனு க்காக எத்தகைய தியாகத்தையும் அவள் செய்திடுவாள்.
எக்காலத்திலும் குடும்பங்கள் பிளவுபடுவது தவிர்க்கப் படல் வேண்டும். இயற்கைக்கு மாறான நபர்களின் நடத்தை
134

சுர்டி இருத்தல்
பற்றிச் சட்டம் தனது கடமைகளை உரிய முறையில்
செய்யும். பரிபூரண அன்பு பீறிட்டு எழுந்தால் எங்கும்
இன்பம் தான் குடும்பம் என்பது என்றும் அணையாத
அகல்விளக்கு இதன் ஒளி மிக நீண்டு அடுத்த சந்ததிக்கும்
ஒளியூட்டும். விவாகரத்துகளால் மனங்கள் ரணப்படுத்த
ப்படுகின்றன. இது கூடாது. சுருதி பிசகினால் அபஸ்வரம் தான்!
தினக்குரல்
ஞாயிறு மஞ்சரி
24-10-200
135

Page 70
பருத்தியூ 04ல. ஆயிரவநாதர்
சொர்க்கம் எங்கே!
சொர்க்கத்திலாயினும் வேலை செய்யாமல் இருந்தால் பொழுதுகள் சலித்துப் போய் விடும். சும்மா இருந்து முடங்கி வாழுதல் ஒரு அடிமை நிலை தான். சேவை செய்வதே ஆனந்த நிலை, இதனால் துக்கப்படுவதற்கே நேரம் இருக்காது. மனிதர்களின் கற்பனையான சொர்க்கம் பற்றிய எண்ணங்களை விடுத்து நிஜமான நித்ய சந்தோசங்களை அடைய உலக உயிர்களுக்கான உயிர்ப்பூட்டும் சேவைகளை நல்குவீர்களாக இறை கருணை நிச்சயம் கிட்டும். இது நாம் கருதும் சொர்க்க வாழ்வை விட அதி உன்னதமானது.
சொர்க்கத்தில கூட தொடர்ந்து வாழ முடியுமா? சும்மா இருந்தால் சலிப்பு மோலோங்கும். உழைத்தபடி இருந்தால் பொழுதுகள் என்றுமே புதியனவாகத் துலங்கும்.
சொர்க்கத்தில் வேலையற்றுச் சீவிப்பதும் , முடங்கி வாழும் ஒரு அடிமை வாழ்வு தான்.
136
 

சுர்டி இருத்தல் அது சரி சொர்க்கம் என்பது மேல் உலக வாழ்வு என்று நாம் கருதி விடுகின்றோம். காணாத மேல் உலக வாழ்க்கை பற்றி அதாவது தேவர் உலக சொர்க்க வாழ்க்கை பற்றி நாம் படித்திருக்கின்றோம். இது பற்றிக் கற்பனை வசப் படுவதுமுண்டு. இது பற்றிய ஆய்வுகளுக்கு அப்பால் நாம் சற்றுச் சிந்திப்போமாக!
புண்ணியம் செய்தால் தேவருலக வாழ்வு கிட்டும் என்றும் சொல்வார்கள். நாம் வாழும் பூமியில் வாழ்வாங்கு வாழ்பவர்களுக்கு, இந்த உலகில் சேவை செய்வதே மேலான ஜீவிதமாகும். இதற்கு நிகராக வேறு உலகு எதற்கு? எமது சமய ஞானிகள் இதனைத் தானே செய்தார்கள். மக்களுக்காக தொண்டு செய்ய இந்த உலகம் வாய்ப்பு அளித்தமையே பெரும் புண்ணியப் பேறு அல்லவா? இதனை விட இன்பம் வேறு உண்டா சொல்மின்
அத்துடன் தொண்டுகள் செய்ய இடமளிக்கும் இந்தப் புவனம் புனிதமானது. எமது தொண்டுகளால், ஏனையவர் பயன் பெற்று அவர்களும், இவ்வண்ணமே, எல்லோருக்கும் எல்லாமே அளித்தால் அமரர் கண்டு பொறாமைப்படும் புண்ணிய ஸ்தலமாகி விடுமன்றோ! நல்லதை எண்ணும் போதே அவன் ஒரு கொடையாளி ஆகிவிடுகின்றான். நல் எண்ணங்கள் வழங்குவதை ஊக்குவிக்கும் உணர்க!
137

Page 71
பருத்திபூர் பால. ஆயிரவநாதர்
நற்கருமங்களை நாம் செய்ய இடங்களின் தன்மை ப்பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. துக்கப்பட நேரமிருக் காது எவ்வுயிருக்கும், அவர்கள் மனிதர்களாக இருக்கலாம், மிருகங்கள் மற்றும் தாவர, உயிரினங்களேயாயினும் அவைகள் பொருட்டு எம்மால் செய்யும் காரியங்கள் அந்த பிரதேசங்களை வளமாக்கி விடும். உணர்க தோழர்களே!
இன்று சமூகத் தொண்டு ஆர்வலர்கள் வளம் கொழிக்கும் நாடுகளையா நாடி ஓடுகின்றார்கள்.? எங்கே மக்கள் துன்பப்படுகின்றார்களோ, அங்கே தான் மனித சேவை தேவைப்படுகின்றன. தொண்டு நிறுவனங்கள், வசதிகளை நோக்கினால் கேட்பாரற்றுக்கிடக்கும் மக்களின் எதிர்காலம் என்னாவது?
எனவே நாம் இது பற்றி யோசிப்போம். ஒவ்வொரு தனி மனிதனும் தான் எங்ங்ணம் பூமியை வளப்படுத்த முடியும் எனத் தயங்க வேண்டியதில்லை. யாரோ ஒருவர் அல்லது பலர் சேர்ந்து செய்வதை வேடிக்கைப் பார்க்கும் மனிதனாக இருந்து எதனை உங்களால் வழங்க முடியும்?
தனக்குத் தெரிந்த எந்த காரியங்களாயினும் அது ஒருவனுக்குப் பயன் பெறுமாயின் அதனை உடன் வழங்கி விடுக! வீணான தயக்கம் எதற்கு? என்னால் என்ன செய்ய இயலும் என்பதே ஒரு தாழ்வு மனப்பான்மை மட்டுமல்ல, பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் ஒரு மார்க்கம் அன்றி வேறென்ன?
138

சும்மா இருத்தல் தெரியாது, முடியாது என்பது வெகு சுலபமான பதிலாகக் கொண்டு இயங்கினால் உங்களுக்காக, இன்னும் ஒருவர் செயலாற்றுவது மட்டும் சரியாகுமா?
நாம் எண்ணும் எண்ணத்தில் இருந்து தான் எல்லாமே உதயமாகின்றது. சொர்க்கமும், நரகமும் எம் கைகளில் என்போர் பெரியோர். நல்ல உள்ளத்தின் நீட்சி போலவே சகல சௌபாக்கியங்களும் வளர்ந்து கொண்டே (ീ9:്ളുlf.
எனவே பூலோக சொர்க்கத்தைக் கைப்பற்றுவது கூட, எங்களின் நற்சிந்தனையூடாக எடுத்துக் கொள்ளக் கூடியதேயாம்.
கைகளில் காசு இருந்தால் மட்டுமே முகம் மலரும் என்று இல்லை, என்றும் மற்றவன் முகம் மலருமாற் போல் அனுகூலங்களை நேரிய வழியில் செய்தாலே, எம்மையறியாமலே சிந்தை மகிழும். அதனால் வதனம் துலங்கும்.
எதற்காக மனிதர் துன்பமடைகின்றார்கள் என்பதற் கான உண்மைகளை ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது. சந்தோஷம் என்பதற்குக் கூட பலவிதமான வடிவங்கள் உண்டு. ஒருவன் சந்தோஷமடைவதே இன்னும் ஒருவனுக்குத் துன்பமாக இருக்கின்றது எனின் துன்பங் களின் வடிவங்கள் எத்தனை எத்தனை?
139

Page 72
பருத்தி 40 ஆயிரவநாதர்
இதில் நல்லோர், தீயோரின் துன்பங்களுக்கும் வெவ்வேறான தோற்றங்கள்! நியாயபூர்வமாக நேர்மையாக வாழ்ந்தாலே போதும் அனைத்தும் வந்து விடும் என்று தான் மதங்கள் சொல்கின்றன. ஆனால் இதனை ஏற்று எல்லோ ருமே வாழ்கின்றார்களா? ஆயினும் தனக்கு எல்லாமே வழக்க இறைவன் ஏன் தயங்குகின்றான் என்று தானே, பலரும் கடவுளைக் குறை கூறுகின்றார்கள்.
தவறுகளை ஏற்றுப் புது வாழ்வில் புகுந்து கொள்ள முனையாமல் சொர்க்கம் அது, இது எனப் புலம்பு கின்றார்கள். கொடுமையான வாழ்வு வாழ்ந்து, தனக்கு நியாயம் கிட்டவில்லை எனத் துஷ்டர்கள் அழுகின்றார்கள்.
நல்லவர்களின் உண்மையான வேண்டுதல்களு க்கான வழி திறக்கப்படும், அவர்களுக்கான இறைவனின் வாசல் கதவுகள் என்றும் அகலத்திறந்தபடியே இருக் கின்றது. மனிதனின் கற்பனையூடான கனவுச் சொர்க் கத்திலும் மேலான, நித்ய அமைதியூட்டும் புண்ணிய ஷேத்திரமான பூமியில் எல்லாம் அவர்களுக்கு இறை வனால் அளிக்கப்படும். நற் சிந்தையூடாக மலர்வதே சொர்க்கம். அற்புதங்களின் கோர்வை இது. வெற்றியின் பரிசும் இது தான்!
தினகரன் வாரமலர்
19.06.2011
40


Page 73
பருத்தியூர் பால, வயிரவநாதன் அவர்களி கருத்து வினைப்பாடுகளை (Discourst உள்ளடங்கிய பொதியாக "வாழ்விய வசந்தங்கள்" அமைந்துள்ளன.
கட்டுரைகள் சமகாலத்து வாழ்வியல் பதி ங்களை அழைப்பனவாயும், அரவணைத் துள்ளன. சமூகவரன் முறைப்பாட்டை மீ கட்டுமானங்களாகக் கட்டுரைகள் மேெ செல்லும் மனித மனங்களை மீள் ஒரு ஆக்கநிலைநிறுத்தல் செய்தலும் ஆக்க
 

eS)
iff)
வுகளோடிணைந்த p60rds (335fts து அறமுரைப்பனவாயும் அமைந் ள வலியுறுத்தும் கருத்தமைவின் லழுந்துள்ளன. அந்நியமயமாகிச் ழங்கு படுத்தலும் ஒன்றிணைந்து ங்களின் நோக்கங்களாகவுள்ளன.
Tráffurf flg. FILII. 6EBILITraFTI
ள் அண்மைக் காலத்தில் வாசகர்க
ன் தான், !
திரு. பாரதி இராஜநாயகம்
©ួិuf ஞாயிறு தினக்குரல். ISBN 978 955 O469-08-6
|
9 ll7 8 9 5 5 0 ዘ4 6 9 08 6