கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:நான் நானேதான்

Page 1


Page 2

நான் நானே தான்!
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியன் வசந்தங்கள்- பாகம் 10 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் தலைப்பு
ஆசிரியர் :
மொழி:
பதிப்பு ஆண்டு :
பதிப்பு விபரம் :
so floodLD :
தாளின் தன்மை :
நூலின் அளவு:
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
நூல் விபரம்
: நான் நானே தான்!
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 10 பருத்தியூர் பால.வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க்
கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
13
134
அஸ்ரா பிரிண்டர்ஸ்
கணனி வடிவமைப்பு : அஸ்ரா பிரிண்டர்ஸ்
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை
ISBN :
அஸ்ரா பிரிண்டர்ஸ்
தையல்
வானவில் வெளியீட்டகம் : 250/=
978-955-0469-11-6

அணிந்துரை
கம்பவாரிதி - இ . ஜெயராஜ்
உலகம் இறைவனின் படைப்பு விரிந்த இவ்வுலகத்தின் படைப்புவிசாலமே. இறைவனின் ஆற்றலுக்காம்பெரும் சான்று. உலகப் படைப்புக்களுள்
மானுடம் தலைமை கொள்கிறது. மற்றையஜீவராசிகளுக்குக்கிடையாத, மனம் எனும் உறுப்பும் அதன் சிந்தனைத்திறனும், மானுடர்க்குக் கிடைத்ததனி இறைவரமாம், ஆயிரமான விந்தைமிகு இறைப்படைப்புக்களுள். மனித மனத்தின் நுட்பத்திற்கு நிகரானவை வேறெதுவும் இல்லை. எவர் மனத்தையும் எவரும் முழுமையாய் அறியமுடியாது. ஏன்? தத்தம் மனதை முழுதாய் அறிந்தாரும், அரிதிலும் அரிதானவரே.
ஞானியாகிய மணிவாசகரும் கூட “யான்யார்? என் உள்ளம் யார்? என வியந்து புலம்புகிறார். இவ் அரிய மனநுட்பத்தினை, அறிதலும் ஆராய்தலும் ஒரு சிலருக்கே வாய்த்த தகுதிகளாம்.
米米 米米米米米米米米米米米米 米
நாம் அனைவரும் அகம், புறம் என இரு கூறுகளுள் அடைப்பட்டுள்ளோம்.
-3-

Page 4
மறைந்திருப்பது அகம்,
புலப்படுவதுபுறம், புலப்படும் புறத்தினை அறிவது எவர்க்கும் சுலபம். மறை பொருளாம் அகத்தனை அறிதலோ அரிதலும் அரிய விடயமாம்.
புறமான உடம்பு செயற்கருவிமட்டுமேயாம். அகமான உள்ளமே புறத்தினைச் செயற்படுத்தும் ஆற்றல் கொண்டது.
அவ்வகத்தினை அறிந்து மனிதன் இயங்க, இறைவன் தந்த அரிய வாய்ப்பேமெய்ப்பாடுகளாம். இம்மெய்ப்பாடுகளை வட மொழியார் ரசம் என்பர். நம் தமிழ்மொழிவகுத்த மெய்ப்பாடுகள் எட்டு
米米米米米米米米米米米米米米米
மறைபொருளாம் அக உணர்வை, உடம்பில்தோன்றும் சில மாற்றங்களால் கொண்டு, அறிதல் கூடுமாம். மெய்யில்படும் வேற்றுமைகள் கொண்டு, அகஉணர்வை அறிதலே மெய்ப்பாடு. அவ்வறிவுதானும் நுண்மைபெற்றஒருசிலருக்கே வாய்க்குமாம். உள்ளொன்று வைத்து, புறமொன்றாய் இயங்குவாரை, மெய்ப்பாடுகொண்டும் அளத்தல் அரிதாம். இந்நிலையில், மானுட அக ஆராய்ச்சியின் அருமை, எவர்க்கும் சொல்லாமலே புரியும்.
来选中来来来来来来来米米米米米
- 4

நம்நாட்டில் இத்துறையில் ஈடுபட்டு, உளநுட்பங்கள் அறிந்து, வாழ்வில்பல வர்ணகோலங்களை, வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் ஆற்றல், திரு.பால வயிரவநாதனுக்கு இயல்பாய்வாய்த்தது. வெறுமனே உளஉணர்வுகளை ஆராயின், அது மனோதத்துவத்துறையாய் அமைந்துபோம் அதனால் பயன் கொள்வார் ஒருசிலரே. அங்ங்ணமன்றி, மனநுட்பங்களை உணர்ந்து, அம்மனநுட்பங்களுக்கு அறமுகாமிட்டு, அக ஆராய்ச்சியை வெறும் அறிவியல் ஆராய்ச்சிக்கு அப்பாற்படுத்தி, அதனை வாழ்வியலாய் வகுத்துத் தரும், பால வயிரவநாதனின் முயற்சி சமூகப் பயன் கொண்டது.
வாழ்வியல் வசந்தங்கள் எனும் அவரது இந்நூல், எட்டுக்கட்டுரைகளைக்கொண்டது வேறுவேறுபட்ட விடயங்களை உள்ளடக்கிய இக்கட்டுரைகள், சுவாரசியமானவை.
இயக்கம் எனும் முதல்கட்டுரை, முயற்சியின் அவசியத்தை அழகுற உரைக்கின்றது. அக்கருத்தினை அறிவுரை, ஆலோசனை, அனுபவம்,அறிஞர் வாழ்வு
எனப்பல முகங்களாலும் சொல்லி,
ஆசிரியர் தெளிவுறவலியுறுத்துகிறார்.
米米米米米米来来来来米米来来米
-5-

Page 5
இரண்டாவது கட்டுரைவேற்றுமை எனும் தலைப்பிலானது. சிந்திக்கும் திறன் பெற்றும், ஒற்றுமையினை வளர்த்தெடுக்கமுடியாத, மானுடரின் இழிநிலையை, மிகக்கடுமையாய் இக்கட்டுரையில் சாடுகிறார் ஆசிரியர், இவ்விடயத்தில் விலங்குகளிற் கீழ்ப்பட்டு மானுடர் உறும் இழிநிலையை,
குத்திக்காட்டுகிறார். வேற்றுமை அகற்றசில ஆலோசனைகளைக்கூறும் ஆசிரியர், முடிவுப் பந்தியில்,
ஒருவரது தகைமை என்பது, அவரதுபண்பின்விஸ்தீரணத்தில் தங்கியுள்ளது என்று உரைப்பது,
சிந்தனைக்கு விருந்தாகின்றது.
米米米米米米米米米米米米米水米 விசுவாசம் என்பதுமூன்றாவது கட்டுரை, நாய்,குழந்தைஎனஅறிவு வளர்ச்சியுறா ஜீவன்களே, விசுவாசத்தை ஆதாரமாய்க்கொண்டு வாழ்வதைச்சுட்டிக்காட்டி, அறிவுவளர்ச்சியுற்றவர்க்கு அதன்அவசியத்தை வலியுறு த்துகிறார். நம்பிக்கையின் தீவிரநிலையேவிசுவாசம், எனும்ஆசிரியரின் கூற்று நிஜமானது. உலகத்தால் அங்கீகரிக்கப்பட, உலகைவிசுவாசித்தலே வழிஎன்று இக்கட்டுரையை முடிக்கிறார்.
米米米米来米米米米米米米米米米
- 6 -

போராட்டங்கள்எனும் அடுத்தகட்டுரையில் போராட்ட உணர்வு,உயிர்இயல்புஎனஉரைக்கின்றார். மனிதப்போராட்டத்தினை அகப்புறப்போராட்டங்களாய்விரிக்கும் ஆசிரியர், இக்கட்டுரைகளில் அவற்றின் விரிவுகளை உரைப்பதோடு, போராட்டங்களே வாழ்வின்சுவை எனவும் கூறி, போராடிக்களைத்தோர்க்குத் தெம்பூட்டுகிறார். கட்டுரையின்நிறைவில் எங்கள் சுதந்திரஉணர்வுகளால், மற்றவர் சுதந்திர உணர்வும், உரிமையும்பாதிக்கப்படக்கூடாது எனஉரைக்கும் ஆசிரியரின் கூற்று, இத்தேசத்தார்க்கு உபதேசமாய் அமையவேண்டியது. வெறும்புத்தியும் அறிவும்மட்டும் வாழ்க்கைக்கு உதவாது என்று இக்கட்டுரையில் ஆசிரியர் உரைக்கும் செய்தி, அனுபவஸ்தர்களால் அங்கீகரிக்கப்படும்.
米米米米米米米米米米米米米米米
வடிவங்கள் எனும் கட்டுரையில், மானுடத்தின் பல இயல்புகளைத் தெளிவுறவிளக்கம் செய்கிறார் ஆசிரியர். புதுப்புது வடிவங்களைப்பூட்டிக்கொண்டு மனிதர் கூறும் அவஸ்தைகளை இக் கட்டுரையில் எடுத்துக் கூறுகின்றார். மனிதரின் பொய்மையால்,

Page 6
சத்தியம் வாழ்வில் அசாத்தியமாவதை வருந்திச் சுட்டுகிறார். மதிப்பார்ந்தசெய்கைகள் மூலம் அமையும் புதியவடிவேமனிதர்க்கு, சிறப்பைத் தரும் என்பதே ஆசிரியரின் கருத்தாகிறது.
米米米米 米米米米米米米米米米 米
நான் எனும் அடுத்த கட்டுரையில், அதனை அகங்காரக் குறியீடாய் அன்றி, தனித்துவத்தின் தன்மையாய், உரைக்கும், ஆசிரியரின்கருத்துப்புதுமையானது. வித்தியாசமான இக்கட்டுரையில், நான் எனும் ஆணவ வார்த்தை, அன்புவார்த்தையாகும் அற்புதத்தினை, படிப்படியாய் எடுத்துரைத்து. அன்பு வயப்பட்டு, அதனால் ஆண்டவனின் வயப்பட்டு, எல்லாம் இறைச் செயல் என ஆயின், நான் என்பது ஏது? என வினவிக்கட்டுரையை முடிக்கின்றார்.
米米米米米米米米米米米米米米米
பணிவு எனும் கட்டுரையில், அதற்காம் வரைவிலக்கணம் உரைக்கும் ஆசிரியர், பணிவு என்பதுதலைகுனிதல் அன்று, செருக்கு நீக்கிமாற்றாரை மதிக்கும் பண்பே, என்றுரைத்து வியப்பு ஏற்படுத்துகின்றார். இக்கட்டுரையில் ஆசிரியர்,
-8-

பொய்ப்பணிவினையும், நல் ஆசிரியத்துவத்தையும், உண்மை வீரத்தையும்,இனங்காட்டி, முடிவில் பணிவு என்னும் பண்பினால், அனைவரையும் ஆட்சிப்படுத்தலாம் என உரைத்து நிறைவு செய்கிறார்.
米米米米米米米米米来米米米米米
நிறைவுக்கட்டுரைமரணம் இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே, மரணம்பற்றிய ஒரு சுவாரசியமான வரைவிலக்கணத்தை ஆசிரியர் தருகிறார். மூச்சு அடக்குதல்மட்டும் மரணம் அல்ல, மூச்சுடன் இயங்கும் காலத்தில் நல்வழியில் இயங்காமல் வாழ்வதும், உயிரற்றவாழ்வுதான். மரணபயம்பற்றி இக்கட்டுரையில் சர்ச்சிக்கும் ஆசிரியர், மரணம்பற்றிய அச்சம்நீங்கப்பலவழிகளை உரைக்கின்றார். கட்டுரையின்நிறைவில், மரணத்தை வெற்றிகொள்ள, புள்ளியிட்டு ஆசிரியர் உரைக்கும் விடயங்கள், முழுமையும் சரியானவையா? கேள்வி எழுகிறது.
米米 米米米米 米米米米米 米米 米米
மொத்தத்தில், ஆசிரியரின் சிந்தனைத்திறன், அதனை உரைக்கும்போக்கு என்பவை,
- 9

Page 7
ரசனையைத் தருகின்றன.
வாழ்வனுபவங்களைப்புகுத்தி, தாம் எடுத்துக்கொண்ட கருத்தைநிரூபணம் செய்யும் அவர்தம் முயற்சி, அடிப்படை அறிவுடையோரையும் இக்கட்டுரைகளை வாசிக்கத் தூண்டும்.
சில இடங்களில்,
உபசெய்திகளின் விரிவுசற்று அதிகரித்து, கட்டுரைகளின் இறுக்கத்தை குறைக்கின்றது. கட்டுரைகளின் முடிவில், எடுத்துக் கொண்ட கருத்துக்களை அழுத்தி உரைத்து வரையறை செய்கையில், சிலவேளைகளில் தேவையற்றவிடயச் சேர்க்கையால், முடிவின் அர்த்தம் குறைகிறது.
அவற்றைத் தவிர்த்திருந்தால்,
இந்நூல்மேலும் சிறந்திருக்கும். ஆசிரியருக்கு இவ் அக அறத்துறைநன்குகை வருகிறது. அவரின் தொடர்ந்த முயற்சி அனைவருக்கும் பயன்தரும். உலகம் பயனுற வாழ்த்துகிறேன். * இன்பமே எந்நாளும் துன்பமில்லை.”
米米米米米米米米米米米米米米米
- 10

(p&66ODET இந்த எல்லையற்றபிரபஞ்சத்தில் நாம் வாழும் பூவுலகம் ஒன்றுதான். ஆனால் அந்தப் பூமிப்பந்து போல தோற்றப்பாடு கொண்ட பல்வேறுஉலகங்களுக்குஇடையில்மனிதம் சிக்குண்டு கிடக்கின்றது என்பதே மெய்மை,
மனித உறவுகளினாலும்சமூக கட்டமைப்புக்களினாலும் பின்னப்பட்டிருக்கும் சமூக உலகம், மனிதனின் சிந்தனை உலகில் சிருஷ்டிக்கப்பட்டு வியாபித்து நிற்கும் மனவுலகம். வெறும் அற்பக்கற்பிதங்களினால் நிர்மாணிக்கப்பட்ட கனவுலகம், நம்பிக்கைகள், மத சிந்தனைகள், தத்துவ விசாரங்கள் போன்றவற்றினால் வனையப்பட்டமதவுலகம், கருத்துருவ கங்களினால் உருவாக்கப்பட்ட கருத்துலகம், இப்படி நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் தோற்றம் பெற்றுள்ள உலகங்களின் வகைகளும் அவற்றின் வனப்புகளும் பலப்பல.
அவற்றிலே சிந்தனை உலகிற்கும் கருத்துஉலகிற்கும் இடையிலே நின்று சில இமயங்களைத் தொட முயன்று வருகின்றார் பருத்தியூர்.பால,வயிரவநாதன் , கனவுலக கற்பிதங்களைத்தகர்த்துநிஜவுலகின் நிதர்சனங்களை எமக்கு எடுத்துரைக்க எத்தனிக்கின்றார் அவர்.
நேரில் சந்தித்துப் பேசும் போது ஒன்று மறியா ஓர்
அப்பாவி போல தோன்றும் இந்த மனிதருக்குள் இத்தனை
சிந்தனை விசாரம்புதையண்டு கிடக்கின்றதுஎன்பது ஆச்சரியப் - 11 س

Page 8
பட வைப்பதுதான். எனினும், வெளித்தோற்றத்தையும் பாவனைகளையும் வைத்து உள்ளறிவை எடை போட்டு விட முடியாது என்ற பட்டறிவுக்கு அவரே உதாரணம். ஆழம் கூடிய நீர் ஆரவாரமின்றி,அசைவின்றி இருக்கும்.நிறைகுடம் தழம்பாது, பருத்தியூர் பால வயிரவநாதனின் அமைதிக்குப்பின்னாலும் - அப்பாவித்தனத்துக்குள்ளும் இத்தகைய ஆழமான ஆத்ம விசாரணை ஒளிந்துகிடப்பதை சிந்தனைகளின் அடிப்படையில் அவர் எழுதிக் குவித்து வரும் பல நூற்றுக் கணக்கான கட்டுரைகள் பறைசாற்றுகின்றன.
ஒரு கை தேர்ந்த - சிறந்த - படைப்பாளியின் நூலை அல்லது ஆக்கத்தை ஒரு வாசகன் முழு ஒட்டுணர்வோடு வாசிக்கும்போதுஅங்கு அந்தப்படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் ஒரு விசித்திரமான உறவுமலர்கின்றது. மானசீகமான சந்திப்புஇடம்பெறுகின்றது. மிகநுட்பமான கருத்தியல் ரீதியான - சங்கமம் நிகழ்கின்றது. ஒரு மித்த சிந்தனை ஐக்கியம் உருவாகின்றது. படைப்பாளியின் அனுபவ உலகிலே தானும் சேர்ந்து சஞ்சரிக்கும் வாசகன் அதன் ஊடே தானும் ஒரு தேடுதலை மேற் கொள்கின்றான். படைப்பாளியின் தரிசனம் வாசகனைப் பற்றிக் கொள்கின்றது கருத்துப் பிணைப்பு ஏற்படுகின்றது . ஈற்றில் வாசகனை அந்தப் படைப்பாளி ஆகாஷித்துக்கொள்கின்றான்.
இத்தகைய கருத்துலகத் தேடுதலுக்கான வாசலைத்
திறந்து அந்த சிறந்தனை உலகின் வாசகர்களாகிய நம்மையும்
பயணிக்கக்கூட்டிச்சேல்கின்றார் இக்கட்டுரைத்தொடரின் சிற்பி. - 12

‘வாழ்வியல் வசந்தங்கள் என்ற இந்தக் கட்டுரைத் தொடரில் நான் மற்றும் மரணம் என்ற தலைப்பிலே அவர் வரைந்த சிந்தனைச் சிதறல்கள் வெறுமனே வாழ்வின் வசந்தங்களை தொட்டுச் செல்வன அல்ல. வாழ்வியலின் சூக்குமத்தையே - சூத்திரத்தையே நமக்குத் தெள்ளென உணர்த்துபவை.
வாழ்வோடு நாம் என்ற தலைப்பில் அவர் வரைந்த சிந்தனைத் தேடல்களை நான் ஆசிரியனாக இருந்த சமயம் பத்திரிகையில் தொடர்து பல மாதங்கள் பிரசுரம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது. நான் இரசித்துப் படித்த சிந்தனைத் தெறிப்புக்கள் அவை.
செய்தியாளராகவும் ஆக்க இலக்கியவாதியாகவும் அவர் நான்கு தசாப்த காலங்கள் இலங்கைப் பத்திரிகைத் துறையுடன்-தமிழ் ஊடகங்களுடன்-உறவாடிவருபவர் பால. வயிரவநாதன்.
அவரிடமிருந்து இன்னும் ஆழமான சிந்தனைக் கருத்தாடல்களை சமூகம் எதிர்பார்க்கின்றது.
அவரது இடையறா தமிழ்ப் பணியும் தளராத எழுத்து முயற்சியும் மேலும் மெருகடையும் எனநம்புகின்றோம்.
ந. வித்தியாதரன் கொழும்பு
- 13

Page 9
எனது உரை
நான் நானாகத்தான் இருக்க முடியும் இன்னும் ஒருவனாக மாற முடியாது. இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் அதிபதியாகவும், அவனேயாகியும்,அனைத்துஉயிர்களையும் இரட்ஷித்தும், தனது பார்வையினைப் படரவைத்துக்காப்பவன் முன்"நான்” யார்?
"நான்" எனும் சொல் அகங்காரத்தின் வெளிப்பாடாகக் கருதிடினும், இது ஒருவரின் தனித்துவத்தையும் காட்டி நிற்கின்றது.
நான் எனது என்பதைவிட நாம், எமது என்பதே இனிது.
தன்னை உணரும்போதே ஒருவன் சுதந்திரபுருஷனாகின்றான்.
ஆயினும் தன்னை உணர்ந்து கொள்ள எல்லோரும் சம்மதிக்கின்றார்களா. அப்படி உணராதவரை, நான், எனக்கு, என்னுடையதுஎனச்சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
மனிதன் தன்னைத் தேடாமல் பிறரைத் தேடிக் கொண்டேயிருப்பது துரதிஷ்டமான அஞ்ஞானநிலை.
தெளிந்த மனோநிலையில் உள்ளவர்களுக்கே ஞான மூடாக, தன்னைப்பற்றிய தேடலில் விளக்கம் பெறுகின்றான்.
இவர்களே ஆனந்த மயமான, தூய உணர்வினைத்
- 14

துய்ப்பவர்கள், இறைவசீகரம், பிரகாசநிலையை அடைந்தவர் களுமாவர்.
மனிதனின் ஆணவம் ஒடுங்கப் பணிவு அவசியமானது. அறிவுஅதிகரிக்க அதிகரிக்க அநேகருக்கு பணிவு அருகுகின்றது.
அறிவும், ஞானமும் ஒன்றல்ல. அறிவின்மேலாம் ஞானம். பணிவுகொண்டவன் பலதும் அறிகின்றான். புரிந்துதெளிகின்றான்.
பணிவுடன் கூடிய வாழ்வுமுறை புனிதமானது. வேற்று மையுணர்வை, தமது மனதில் இருந்து கூறாக்கி விட வல்லது. மாந்தர் யாவரும் சமனே என்று வாயளவில் புகழ்ந்திடாது, வாழ்க் கையில் அனைத்துத்தரத்தினரையும் அரவணைத்திடவேண்டும். இதுமுடியக்கூடிய செயல்தான்.
செருக்கை அடக்கினால் அனைவரும் சேர்ந்து இயங்கு வர். உலக இயக்கத்திற்கு அனைவரும் இணைந்தேயாக வேண்டும். இது கட்டாயம்.
மனிதன்தன்னை மூடி பல பொய்முகங்களையும் பூட்டி, பல்வேறு வடிவங்களை எடுப்பதை விட சுயமாக, இயல்பாக வாழ்வதே வெற்றிபெற எளிய வலிய, வழிமுறையாகும்.
சண்டை சச்சரவுகளும், தான் தோன்றித்தனமான பேச்சுகளும் நிம்மதியைத் தராது. நியாயபூர்வமாகச் சகலருக்கு மாகக் குரல் கொடுப்பதே முழு உலகையும் எம்முடன் நெருக் கமாக வைத்திருக்கும்.
- 15

Page 10
ஆரவாரஉலகிலும் அமைதியாய் வாழ முடியும். மனம் புலன்களை அடக்கி ஆளுதல் முனிவர்களுக்கானதும் அல்ல, சாமான்யமாந்தரும் முயன்றால் முடியும்.
அன்பானவாசகநெஞ்சங்களே!சிந்தனைகள், தத்துவங் களைப் படித்தால் மட்டும் போதாது எம்மால் எதுவும் முடியும் என்பதனை உங்கள் மனசுக்குக் கட்டளையிடுக!
எனதுரைபகர்வது சில துளிகள். இனிஎனது உரையில் அணிந்துரைமுகவுரையை ஈர்ந்தோரைப்பார்க்கின்றேன்.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் பற்றி அறிமுகம் எதுவும் தேவையில்லை. அனைத்து முகங்களும் தெரிந்தமுகம்.
என்றும் இறை நாமம் சொல்லும் அறிவுசால் வித்தகர் பேசுவதில் எழுதுவதில் வல்லவர்.
நாங்கள் அதிகம் கேட்டுரசித்த இலக்கியசமய பேருரை களில் அதிகமானவை திரு.இ. ஜெயராஜ் அவர்களுடையவை என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
இவருடைய ஆளுமையினூடான வெற்றிகளுக்கு எது காரணம் என்று நான் ஆராய்ந்தபொழுது அவை அவரது ஆழ்ந்த தமிழ் அறிவு, சமய ஞானம் மட்டுமல்ல, இவரது "பணிவு” எனும் பண்பேமுக்கிய காரணியாகத் தெரிந்தது.
-16 -

இவர் எவரைக் கண்ணுற்றாலும்,அவர்கள் சிறுகுழந்தை களாக இருக்கட்டும் அல்லது வயது முதிந்தவர்களாகட்டும் புன்முறுவலுடன் வணங்கி நிற்பது இவரின் தனிச்சிறப்பு
எளிமையாகவும், எவ்விதசலனமும் இன்றி மேடையில் அமர்ந்திருப்பார் மேடை இவர் வருகையைக் காத்திருக்கும். பேச ஆரம்பித்ததும் குளிர்ச்சி மழை பொழியும்.
சில விடயங்களில்தார்மீகமான கோபத்துடன் நியாயம் கேட்கும்போதுவீரம் வீசும் கம்பரைமட்டும்நேசிப்பவர் அல்லர். கம்பருடன் இணைந்து தனது நல்லாசன்கள், நல்லோர், வல்லோர், எளியவர்கள் அனைவரையும் தனது நாவால் சேவையால்வாழ்த்தி மகிழும்மாமனிதர்.
இவரது எழுத்துருக்கள் பலவற்றை வாசித்ததுண்டு ஒரு முறை ஞானம் சஞ்சிகையில் இவரது சிறுகதை ஒன்றை படிக்க நேர்ந்தது. பிரமித்துப்போனேன்.
யாழ்ப்பாணத்து மண்வாசனைகள் துவ, ஒரு கல்யாண நிகழ்ச்சியை வர்ணித்திருந்தபாங்குபுலமை வாய்ந்த எழுத்தாள னாக அவரைக்காட்டிநின்றது.தான்பிறந்த மண்ணின் கலாசாரப் பண்புகளை அடிக்கடி மேடையில் பேசும் போது நான் நன்கு ரசிப்பேன்.
எமது இளைய சமூகம்,மூன்றுதசாப்தங்களாக முகவரி தொலைத்து வேறு எங்கோ ஓடியும், பக்கத்திலிருக்கும் - 17

Page 11
கொழும்பில் பில் தமது பழமையை மறந்தும் இருப்பவர்களுக்கு அவரதுஉரைபழமையில் செழுமையைஎன்றும்ஞாபகப்படுத்திய வண்ணம் இருக்கும்.
மேலும் எனது ரசனைக்குரிய எழுத்தாளர் ஜெயகாந் தனின் யதார்த்தமான வரிகளை நிகர்த இவரது சிறுகதைவரி வடிவங்கள் அற்புதமானவை.இவர்சிறுகதை இலக்கியத்தினுள் முழுமையாக புகுந்து விட்டால் அற்புத சாதனைகளை இத் துறையினுள் படைப்பார். கம்பராமாயணம் மட்டுமல்ல, திருக் குறள், சைவசித் தாந்த வாகுப்புக்களை பல ஆண்டுகளாக நிகழ்த்தியும், இலங்கையில் மட்டுமல்ல உலகநாடுகள் பலவற் றிற்கும் இவர் சென்று தமிழ், இந்துசமய கலாசார நெறிகள் பற்றி உரையாற்றுவது எமக்குபெருமை. என்றும் இவர்பல்நூற்றாண்டு காலம் இனிதே வாழ இறைவனை வேண்டுகின்றேன். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று இந்நூலிற்கு கவித்துவமான அணிந்துரையினை நல்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
திரு. என். வித்தியாதரன் அவர்கள் சுடரொளி மூலம் எனக்கு அறிமுகமானவர் எனது" வாழ்வோடு நாம்” வாழ்வியல் சிந்தனைகள் தொடர்ந்தும் தினமும் சுடரொளியில் வெளிவரக் காரணமானவர். எனது சிந்தனைத்தொடர் சுடர்ஒளியில் தொடர்ந்து வந்து வெளிவந்து கொண்டிருக்கும் போது நான் தொலைபேசியில் என்னை யாரென்று தெரியாமலேயே இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எனது ஆக்கங்களை பிரசுரம் செய்வதற்கு நன்றி எனத்தெரிவித்தேன்.
- 18 س

அப்பொழுது அவர் "நல்ல விஷயங்களை பிரசுரிப்பது எனது கடமை. இதற்கு எதற்கு நன்றி என்று சொன்னது இவரது நேர்மைமிகு பெரும் தன்மையை எனக்குக் காட்டியது.
மிகத் துணிச்சல்காரப் பத்திரிகையாளர் என நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. கம்பவாரிதியுடன் நெருக்கமான தோழர் என்பதால் இந்நூலில் இருவரையும் ஒன்றாக இணைத்துக்கொண்டேன். ஒருவருக்கு உதவிபுரிந்திட சற்றேனும் சளைக்க மாட்டார். அதனால் என்ன சிரமங்கள் உண்டு எனச் சிந்திக்கவும் மாட்டார். இவர் என்னிடம் அடிக்கடி'என்ன பயம் வேண்டியிருக்கின்றது. பயந்தால் ஒன்றும் நடக்காது" என்பார்.
எவர் முன்னிலையிலும் தனது கருத்தைச்சொல்லிவிடத் தயங்குவதுமில்லை. சுடர்ஒளி, உதயன் தினசரிகளின் பிரதம ஆசிரியாராகக்கடமைபுரிந்தபோது அதன் புகழை உலகெங்கும் பரவச் செய்ததுடன், துணிச்சலுடன் செய்திகளைப் பாரபட்ச மின்றிக் கொண்டுவந்தமையாவரும் அறிந்த உண்மை.
பத்திராதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள்,மத நிறுவனங்கள், ஆன் மீகத் தலைவர்கள், பெருமைமிகு எழுத்தாளர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் என எத்தரத்தாரினதும் நன்மதிப் பைப்பெற்ற ஓர் இளம்சிங்கமாகவே இவரை நான் பார்க்கின்றேன். சொல், செயல் ஒன்றாகக் கருதிச் செயற்படும், புதுமை யான யதார்த்தவாதி, அன்புள்ளம், திருநவித்தியாதரன். நான் - 19

Page 12
மெத்த விரும்பும் அன்பன். இவர் எனக்கு மதிப்புரை வழங்கி யுள்ளார்.
வாழ்வியல் வசந்தங்கள் நூல் தொகுப்பில் இடம்பெற்ற எனது புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து உதவிய எனது மருமக்களான ந.குமரருபன்நராகுலரூபன் அவர்களுக்கு எனது LJTUTTL (B&b&56ÍT!
வாழ்த்துவதற்கும் நல்நெஞ்சம்வேண்டும். இவர்களின் அன்பு, ஆதரவு என்னை, என் பணியைச் செவ்வனவே செய்ய ஊக்கமளிக்கும்.எனது "வாழ்வியல் வசந்தங்கள்"பாகம்-10இன் தொகுப்புக்களை அழகுற அமைத்த திரு.எஸ்.சிவபாலன் அவர்களுக்கும் எனது நன்றிகள். அஸ்ராபிரிண்டர்ஸ்பிரைவேட் லிமிடட்,நிறுவனங்களின் அதிபரான இவரது பேருதவிக்கு எனது அன்பும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
அத்துடன் எனக்கு பல வழிகளில் ஒத்துழைப்புநல்கிய திருக.சுதர்சன்,முனைவர்செல்விநந்தினி,திருமதிவ. சரஸ்வதி ஆகியோருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்!
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால,வயிரவநாதன்
மேரு இல்லம்"
36-2/1
ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு-06.
தொபே இல- 011-2361012 071-4402303 077 A318768
- 20

O. O. o afLDTLIL6OOTLD
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- ஆசிரியர் -
س- 21 س

Page 13
நூலாசிரியர் பருத்தியூர் மால, வயிரவநாதன் எழுதி வெளியிட்ட"வாழ்வியல் வசந்தங்கள்"
நூற்தொகுதிகள்
1. உண்மை சாஸ்வதமானது - Lustablf - 01 2. SlbLDT - பாகம் - 02 3. சுயதரிசனம் - LuTablf - 03 4. கோழைகளாய் வாழுவதோ? - LIT5Lib - 04 5. ஞானம் - Lub - 05 6. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்! - UT5Lib - 06 7. சும்மா இருத்தல் - பாகம் - 07 8. உண்மைகள் உலருவதில்லை! - Liff8Lô - 08 9. உண்னோடு நீ பேசு! - Listablf - 09 10. நான் நானே தான்! - LJIT85lb - 10 11. வெறுமை - பாகம் - 11 12. காதலும் கடமையும் - பாகம் - 12 13. அக ஒளி - UTSL5 - 13 14. உன்னை நீ முந்து! - பாகம் - 14 15. சுயபச்சாதாபம் - LuTabib - 15 16. மெளனம் - பாகம் - 16 17. மரணத்தின் பின் வாழ்வு - LuTGESLS - 17 18. சிந்தனை விரிகள் - LIFT35lb - 18
- 22
 

01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11)
பொருளடக்கம் --os-163D-3oo
தலைப்பு
இயக்கம்
வேற்றுமை
alliabirdi)
(ELITTITLIlies6i
வடிவங்கள்
நான்
பணிவு
மனம் எனும் மாயசக்தி பெண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்! பெண்மை தோற்கக் கூடாது! மனைவிக்கு உதவுதல் வெட்கப்படக் கூடியதல்ல
шёфф
25
38
48
60
73
87
100
113
121
127
130
-23

Page 14

நூனி நானேதானி
காரணமேயற்று இயங்காதிருந்து அதற்காகப்புதிது புதிதான சோடனைக் கதைகள் புனைவது சுயமரியாதையற்ற வேலை. சதா இயங்குதல் சந்தோஷகரமானது. இதை ஏன் புரிந்து கொள்ளாமல் சங்கடப்பட்டு முடங்கிமுனகுகின்றார்கள்? உழைப்பவனுக்கு இறைவனால் நற்சான்றுகள் வழங்கப்படுகின்றன. பணிகளைச் செய்யாமல் பரமன் பாதம் பணிவதால் பயனேது? ஏழ்மையையே தோழமையாக்காது தொடர்ந்தும் இயங்கிவந்தால், எதிர்பார்த்தமைக்கும் மேலான கருமத்தை நிறைவேற்றுவதுடன் நிம்மதியும் செல்வமும் சொல்லாமல் தேடிவரும்.
*சும்மா” இருப்பது என்பது சாமான்ய விஷயமா என்ன? அதாவது நிர்ச்சிந்தையுடன் மனதினுள் எதுவித சலனங்களுமின்றி எண்ணங்கள் அற்ற நிலையில் ஒரு வினாடிப்பொழுதே ஆயினும் எம்மால் இருந்திட முடியுமா?
நனவு நிலையில் தான் சும்மா இருக்க
pgഖിഞ്ഞു. உறக்க நிலையில் änt- фббі6цФбії біibборф
- 25

Page 15
பருத்திர் 00.9பிறகுழர் துரத்துகின்ற னவே! பொழுதுகள் தோறும் நாம் சரியாக இயங்கிக் கொண்டிருந்தால் எவ்விதமான தொந்தரவூட்டும் மனப் பதிவுகள் எம்மை அலைக்கழிக்காது என்பதைத் தெரிந்து கொள்வோமாக.
"சும்மா” இருக்கும் தெளிவுநிலை ஞானிகளதுநிலை. ஆனால் சும்மா இருந்து வெட்டிப்பொழுது கழிப்பவர்களின் நிலை முற்றுமுழுக்க வேறானது மிகச்சாதுர்யமாகப்பேசி தங்களின் இயலாமைக்கு அழகான காரணங்களைச் சாயம் பூசி அனைத்தும் அறிந்தவர்கள் போல்காட்டி உலகிற்கு மெலிந்தோராய் சீவிப்பது சுயமரியாதை அற்றசெயல்! சும்மா இருந்து அரட்டை அடிப்பவர்கள் பற்றியும் ஒரு உண்மைச்சம்பவத்தைக் கூறுகின்றேன்.
எங்கள் பகுதியில் கடமையாற்றிய ஒரு காவல்துறை அதிகாரிகண்டிப்புக்குப் பெயர்போனவர்.அவருக்குச் சும்மா இருப்பவர்களைக்கண்டால் பிடிக்காது. தெருக்களில் வேலை இன்றி, காரணமின்றிச் சுற்றித்திரிபவர்கள் குடிபோதையில் சந்திகளில் கூத்தடிப்பவர்களைக் கண்டால் விட்டுவிடமாட் டார். பொதுவாகச் சட்டம், ஒழுங்கு என்பனவற்றுக்கு வெட்டிப் பொழுதைப் போக்குபவர்களாலேயே பங்கம் ஏற்படுகின்றது.
ஒரு தடவை இரவு பதினொருமணி இருக்கும்.
மேற்குறிப்பிட்ட அதிகாரி தமது அலுவல்கள் சகிதம் தமது
வாகனத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டி -26

நூனி நூனே தூணி ருந்தார்.குறிப்பிட்ட ஒருமுச்சந்தியில் நான்கைந்துநபர்கள் ரொம்பவும் சுவாரஸ்யமாக நின்ற படி அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். இவர்களைக் கண்ட அதிகாரி வாகன த்தை நிறுத்தி" என்னசெய்துகொண்டிருக்கின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஐயா, நாங்கள் சும்மா இருந்து கதைத்துக்கொண்டிருக்கின்றோம்” என்றார்கள்."அப்படியா, நல்லது, நீங்கள் என்னுடன் வாருங்கள் சும்மா பேசிக் கொண்டே போகலாம், என்றவர், அவர்கள் அனைவரையும் வாகனத்தில் ஏறச்சொன்னார்.
அனைவரும் ஏறிக்கொண்டதுமே வாகனம் புறப் பட்டது. குறிப்பிட்ட சந்தியில் இருந்து பன்னிரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வல்லைவெளி என்ற இடத்திற்கு வண்டி சென்றதும் அதனைநிறுத்தினார். சந்தியில் நின்ற அனைவரையும் இறங்கச் சொன்னார். பின்னர் பேசினார் "நீங்கள் நடு இரவு நேரத்தில் சந்தியில் நின்று சும்மா வேலைகள் எதுவுமின்றி மக்கள் உறங்கும் நேரத்தில் பொழுதைக் கழிப்பது நல்லதல்ல. நீங்கள் உங்கள் வீடுக ளில் இருந்து பேசினால் எவரும் கேட்கமுடியாது. பொது இடங்களில் அநாகரிகமாக பேசிக்கொண்டிருக்க முடியாது. எனவே, நீங்கள் சும்மா தானே இருக்கின்றீர்கள். இங்கிரு ந்து உங்கள், உங்கள் வீடுகளுக்கு நடந்துபோய்சேருங்கள். "நடப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. வருகின்றேன்" என்றவர். உடனே அங்கிருந்து அகன்று விட்டார். சும்மா இருந்து பேசியதற்கான வெகுமதி உடனே கிடைத்தது. தங்களின் சந்தோஷத்திற்காக நிம்மதிக்காக மற்றவர்களின்
- 27

Page 16
பருத்திபூர் 00. ஆற்றுரர் சிரமங்களைக் கிஞ்சித்தும் கருதாதமனிதர்கள் தண்டனை பெற்றாலாவது திருந்துவார்களா?
மகிழ்ச்சி தரும் முயற்சியை விரும்பி ஏற்காதுவிடின் சதா காலமும் துன்பங்களும் தோல்விகளும் மனிதரை வறுத்தெடுத்துவிடும்.
நீ. இயங்கு. இயங்கிக் கொண்டேயிரு.
அழகிய பரந்த பூமிக்குள் பரந்து விரிந்த நீலக்கடல். மேலே எல்லையற்றவானம், அதில் ஓடிக்கொண்டிருக்கின்ற மேகங்கள், அது தரும் மழை, தரை எங்ங்ணும் மனிதப் பயிர்கள், உயிர்களின் பவனி, மலைகள், அருவிகள், நீண்ட ஆறுகள், பச்சை வண்ணப் பசுமை விருட்சங்கள், பாலை நிலங்கள் அங்கும் எமக்காய் எண்ணை வளங்கள்!
குளிர்மையும், உஷ்ணமும் கலந்த கலவைகளை எமக்கென ஊட்டுகின்றான் இறைவன் எல்லாமே இலவச மாகவே கிடைக்கின்றன. இவைகளைப் பெற்று அதனுடு உனது உழைப்பினை ஈந்தால், கெட்டா போகப் போகின் றாய்?
அன்பான மனிதனே! இறை தந்த வரங்களைக்
காப்பாற்ற நீதொடர்ந்தும் இயங்கவேண்டியவனாகின்றாய்.
சோர்வு உன்னைப் பற்றினால், நீசோர்ந்து தீய்ந்து போய் - 28
 

நூனி நூனே தானி Oomit GenüGo. Q9(5 பிணி கொஞ்சநாள் இயங்கிப்பார் அப்போது தெரியும் உன் இயக்கத்தின் தாத்பரியங்கள்! முயற்சி செய்யாதவன் மகிழ்ச்சியை இழந்தவனாகின்றான். பொழுதை வீணாக்கிக்காலை நீட்டிக்குறட்டைவிட்டு உறங்கி மகிழ்வதால் அப்போதைக்கு திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
இயங்கும் தன்மையுள்ள உழைப்பாளனுக்கே இறை வனின் நற்சான்றுகள் வழங்கப்படுகின்றன. சும்மா இருப்ப வர்களில் பெரும்பாலானோர் இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு எனக்கேட்டு அவரைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல தமது கஷ்ட நிலைக்கு தங்கள் முயற்சியின்மையை உணராது பிறர் மீதே குற்றம் வேறு சுமத்திக் கொள்கின்றார்கள். மன எரிச்சல் புகைச்சல்களால் வேதனையுறுவதை விட எழுந்து உழைப்பதால் என்ன துன்பம் வந்துவிடப்போகின்றது ஐயா!
உழைப்பவன் புகழ்ச்சியை விரும்புவதில்லை. மற்ற வர்களைச் சாராது தன் கரத்தையே உறுதியாய் பற்றி யிருப்பதால் அச்சங்கள் இவனைப் பற்றுவதுமில்லை. மேலும், சதா இயங்கிக் கொண்டிருப்பவர்கள் புறசூழ்நிலைத் தாக்கங்களுக்கு எளிதில் உட்படுவதுமில்லை. தமது கருமமே கண்ணாயிருப்பவர்களுக்கு அடுத்தவனுடன் பேசி நேரத்தை வீணடிக்க ஏது நேரம் இருக்கப் போகின்றது? தனக்கு வெளியே எவராலும் தாக்கப்படுவதற்கு எதுவுமே அற்ற தன்மையினால் மற்றவர்களின் தகாத கேள்விக் கணைகளை, உராசல்களை எதிர்நோக்க வேண்டியதேவை - 29

Page 17
பருத்திபூர் 04ல. ஆயிரவரர் களே வரமாட்டாது அல்லவா?
வேலை செய்யாதவர்களைச் சுற்றியே பிரச்சினை களும் துரத்த ஆரம்பிக்கின்றன. கடமைகளைக் கண்ணியத் துடன் செய்பவனைச்சமூகமும் கெளரவத்துடனேயே பார்க்கின்றது.
சின்ன எறும்புகூடத் தன்னிலும் பத்து மடங்கு எடையைத் தூக்கிச் சென்று தன் தேவைகளை முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கின்றது. ஒரு துளி தேனைச் சேகரிக்க ஓராயிரம் மலர்களுக்கு மேல் தேனியால் தேடவேண்டியுள்ளது. எல்லாச் சீவன்களுமே தமக்கென வாழ்க்கையைத் தமது உழைப்பின் மூலமும் வைராக்கிய சிந்தை மூலமும் இயற்கை வளங்கள் மூலமும் தேடியேயாக வேண்டும்.
இந்த அரிய முயற்சியினால் உயிரினங்களிடையே கழிகின்ற காலங்களும் பிரயோசனமாகவே உபயோகிக்கப் படுகின்றது. முயற்சியுடையோர்க்கு மட்டுமே ஒவ்வொரு காலத்துளிகளின் பெறுமதி தெரிகின்றது.காலம் இழுபட்டுக் கொண்டும், ரொம்பவும் சிரமமாகக் கழிக்கப்படுவதாக நாம் எப்போது உணருகின்றோமோ, அப்போதே எமது செயல் கள்வற்றிக்கொண்டே செல்கின்றது என்பதை நாம் உணரல் வேண்டும்.
சுறுசுறுப்பானவனுக்கு காலங்கள் கடுகதியாகச் செல்
- 30

நூண் நானேதானி
தாகவே தெரியும். "காலங்கள்” என் தேவைக்கு மேலும் தவை என்று தான் சொல்வானே ஒழிய நேரம் நகரு பதில்லையே என அலுத்துக் கொள்ளவே மாட்டான்.
எந்த விதமான பணிகளைச் செய்யாமல் கடவுளை வண்டுதல் செய்தாலே போதும் என எண்ணுபவர்களும் உளர். ஒரு சோம்பேறி தனக்குக் கடவுள் எந்தவிதமான உதவிகளுமே செய்வதில்லை என அலுத்துக்கொண்டான். ஒரு நாள் சற்றுக் கோபத்துடன் "ஹே. இறைவா! எனது நிலைக்கு இரங்குதல் செய்யமாட்டாயா. ஏதாவது வரங்கள் தந்தால் என்ன” என்று கேட்டான்.
என்ன ஆச்சர்யம் திடீரெனக் கடவுள் அவன் முன்னே தான்றினார். எந்தவித தவமும் செய்யாமல் "கடவுள் காட்சி தந்தது"உனக்கு என்ன வரம் வேண்டும் "அப்பா.” என்று டவுள் கேட்டதுமே, "எனக்கு நிரம்பச் செல்வம் வேண்டும்” ான அவசரம் அவசரமாகக் கேட்டுக் கொண்டான். வேறு ாந்த வரமும் கேட்க அவனுக்குத் தோன்றவேயில்லை. டவுள் அப்படியே தருவதாகக் கூறி மறைந்தார். அவனும் ந்தோஷ மிகுதியால், வீட்டினுள் நுளைந்ததும் அங்கு செல்வக் குவியல்களைக் கண்டு மலைத்தே போனான்.
காலங்கள் கடிதென மறைந்துபோயின. கஷ்டப்படா
bல் கிடைத்த செல்வத்தைக் கண்டபடி செலவுசெய்தான்.
இறுதியில் மீண்டும் ஒன்றுமற்ற நிலைக்கே தள்ளப்பட்டான்.
இவ்வளவு சீக்கிரம் செல்வம் எப்படி மறைந்து
-31 -

Page 18
மருத்திபூர் படி). அறிஷழர் செலவானதுபற்றி அங்கலாய்த்துக் கொண்டான். ஒன்றுக்குமே வழியற்ற நிலையில் மீண்டும் கடவுளைக் கேட்டுப்பெறலாம் என்ற எண்ணத்துடன் தனது தேவைகளை க்கேட்கலானான். ஆனால் கடவுள் நேரில் வருவதாக இல்லை.
எனவே மனமுடைந்தவன் தீவிர தவத்தில் ஈடுபடலா னான். எனினும் பிரயோசனம் இல்லவேயில்லை. திடீரென அவன் உள்ளத்தில் இருந்து ஓர் ஓசை கேட்டது. "நீ, யாம் தந்த செல்வத்தினை அதன் மேன்மை தெரியாது உல்லாச வாழ்விற்காகச் செலவழித்தே விட்டாய். இப்போதுநீஅதைக் கொடு, இதைக் கொடு என என்னை நச்சரித்து வருகின் றாய்". "தவம் இருந்து சிரமப்பட்டு, காலத்தை நீட்டிக் செல்வத்தைக் கேட்பதை விட, உழைப்பது மிகவும் மேலா னது. மறுமை விமோசனத் திற்காகத் தவம் செய்தலை விடுத்து, நீ உன் சுகபோக வாழ்விற்காகத் தவம் செய்யப் புகுந்தமை ஏற்புடையதன்று. உழைத்தல், முயற்சிசெய்தல் சிரமமான பணியல்ல. கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்ட நீ முயற்சி செய்து உன்னை நீ உருவாக்கு. அப்போதுதான் தெய்வ ஆசி என்றும் உனக்குக்கிட்டும்"
இறைவன் குரல் கேட்டதும் அப்போதுதான், அவன் தன் நிலை உணர்ந்தான். சும்மா கிடைப்பதில் ஏது சந்தோஷம்? பொருட்களின் பெறுமதி உழைப்பவனுக்குத் தான் புரியும்.
இன்று பலரது இல்லங்களில் உழைப்பவர் ஒருவர
- 32

grał praw grał செலவு செய்பவர் பலருமாக உள்ளனர். பணத்தின் றுமதி அறியாமல் பிள்ளைகள் வாழுகின்றனர். அதே யம் பிள்ளைகள் உழைப்பில் கண்டபடி செலவுசெய்யும் பற்றோரும் உள்ளனர்.
இளமைக்காலத்தில் முயற்சி செய்யாமல் தமது ளைகளின் எதிர்காலம் பற்றியே கருதாமல் வாழ்ந்த கள்,முதுமையில் தமது பிள்ளைகளாலேயே அவமானப் த்தப்படுவதை பலர் வாழ்க்கையில் கண்டுகொள்ளலாம். வினும் சகல தடைகளையும் மீறி சுயமாக உழைத்து மண்மையுற்ற பலரது வாழ்க்கை, ஏனையோர்க்கு நல்ல தாரணமாகவும் அமைந்துள்ளமையினைக் கண்டு காள்ளலாம்.
பணிவும், அமைதிப் போக்கும், சீரான வாழ்வை நாக்கிய பயணங்களும் எங்கள் முயற்சியைத் திருவினை ாக்கவல்லது.
இன்று உலகில் மாற்றங்களின் வீச்சுக்களில் அச்ச டைவோர் பணிசெய்யப்பயப்படுகின்றனர். இந்தக் ாலத்தில் இதனைச் செய்தால் வென்று விடமுடியுமா னக்கேட்கின்றார்கள். எந்தக் காலத்திலும் எதுவும் முடியும் ாழ்க்கைப் போராட்டம் வெளியில் இருந்து பார்த்தால் பமாகத் தோன்றலாம். உள்நுளைந்து கொண்டால் எந்த தமான சஞ்சலங்களையுமே எதிர்கொள்ளப் பழகி டுவோம். வெற்றிகொள்வதையே இலட்சியமாக கொள்ள
- 33

Page 19
மருத்திபூர் பல. அறிவதர் வேண்டிய நாம் வெற்றியை நோக்கிய பாதையில் செல்வது என்பது எவ்வளவு இன்பகரமானதும் இலாபகரமானதும் என்பதனை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ள (Մ)ւգալb.
போட்டியில் வெற்றி கொள்வதை விட போட்டியில் கலந்துகொள்வதே எமக்கான வெற்றியின் முதல்படி தான். "நான் எனக்குள் ஒரு தகுதியை உருவாக்கத் தகுதியுள்ளவ னாக என்னை ஆக்கிக் கொள்வேன்” என எண்ணுக. இந்த எண்ணத்தைச் சதா மனதினுள் உருப்போட்டுக் கொள்வீராக!
நாம் எப்போதும் எம்மைச் சுற்றி நல்ல துணிச்சலை ஊட்டுபவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அநேகமானவர்களின் முயற்சிகள் ஆரம்பத்தி லேயே முடங்கிப்போவதற்கு பக்கத்திலிருக்கும் பிரயோசன மற்றவர்களின் வலுவற்ற ஆலோசனைகளுமே முக்கிய காரணமாகின்றது. தாங்களும் இயங்காது பிறரையும் பயமுறுத்துவது சிலருக்கு கைவந்த கலையேயாகும்.
பல இளம் சாதனையாளர்களின் வாழ்க்கையைப் படித்துப்பாருங்கள். நிச்சயமாக வளரும் இளம் பயிருக்கு உரமிட்டவர்கள் அவர்களைச்சுற்றியுள்ள அவர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டோராகவே இருப் பார்கள் நல்ல வல்லோரின் பக்கத்திலிருப்பதே நல்லது.
மிகவும் சிறப்பாக வளர்ந்துவரக்கூடிய பல சிறார்கள்
-34

நான் நானேதானி
தக்க பராமரிப்பு, ஆலோசனை, வழிகாட்டல் இன்றி அவர்
களின் விசேட திறமைகள், ஆற்றல்கள் கண்டு கொள்ளப் படாமலேயே மொட்டில் கருக வைக்கப்படுகின்றார்கள். அண்மையில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் ஒரு ஏழைச் சிறுமி தனக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றினைத் தெரிவித்திருந்தாள்.
ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருந்த இச்சிறுமி மாவட்ட, மாநில, தேசிய மட்டத்தில் ஜீடோ கலையில் பல பரிசில்களைப் பெற்றிருந்தாள். அவளது திறமையை மெச்சி, வெளிநாடு ஒன்றில் மேலதிகப் பயிற்சிநெறிக்கு அழைப்பு வந்திருந்தது. எனினும் ஒரு குறிப்பிட்ட தொகை அங்கு செல்வதற்கான ஏற்பாடுகளுக்குத் தேவைப்பட்டது. உறவினர்களோ, வேறு எவருமோ அந்த நேரத்தில் உதவி புரியத் தயாரின்மையினால் குறிப்பிட்ட அந்தப் பயிற்சி நெறி அவளை விட்டுக்கை நழுவிவிட்டது.
யாரோ ஒருவரின் லட்சியக் கனவுகளைப் பற்றி எமக்கு என்ன என எண்ணினால் நாம் கஷ்டநிலையில் உள்ள திறமைசாலிகளின் திறமைகளை அறுத்தபடுபாவத்தினைப் புரிந்தவர்களாவோம். எம்மால் முடிந்த ஒருசிறு உதவியை யாவது கல்வியின் பொருட்டு அல்லது வேறு ஏதாவது முன்னேற்றத்தின் பொருட்டு செய்தால் எவ்வளவு தூரம் ஒருவரின் எதிர்காலத்தினைக் கட்டியெழுப்ப நாம் துணை நின்றவர்களாவோம் என்பதை உணரல் வேண்டும்.
ஏழ்மை நிலை காரணமாகவே சிலர் வாழ்வில்
-35

Page 20
பருத்திபூர் பல. ஆற்றுதாரர் முன்னேறமுடியாமல், கிடைத்த வேலையை எடுத்துபடித்த படிப்பை முடிக்க இயலாமல்போன துரதிஷ்ட சாலிகளை நாம் அறிவோம். இருப்பினும் காலக்கிரமத்தில் தோல்வி களைச் சவால்களாக ஏற்று முயன்று முன்னேறியவர்களும் உள்ளனர். மனதில் முறிவு ஏற்படாதவரை வெற்றிகள் கிடைக்க முடியாத ஒன்று அல்ல.
சோம்பி இருப்பதற்குநேரம் கேட்காத நிலையை நாம் உருவாக்கவேண்டும். மழைத் துமிக்குள் உள்நுளைந்து, லாவகமாகத் திரும்பிவரும் சுறுசுறுப்பைக் கற்கவேண்டும். மலையைக்கூட எலி குடைந்து வளை அமைக்கும். உஷ்ணத்திற்குப் பயந்து சமையல் செய்யாமல் இருக்க முடியாது. முயன்றுகொண்டேயிருப்பவன்முட்டாள்தனமாக காரணங்களைச் சொல்லி தனது கைகளைத் தானே கட்டி வைத்துக்கொள்ளமாட்டான். முயற்சிசெய்கின்றவனுக்குச் செய்கருமங்களில் சிரமம் தோன்றாது.
கஷ்டப்படாமல் பெறுகின்ற சம்பாத்தியங்கள் ஒரு வகையில் திருட்டுப் போலவும் லஞ்சம் போலவும் தான் என்பதைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். எம்மால் முடிகின்ற வலு உள்ளபோது, சோம்பல்பட்டு சோர்வுடன் யாரிடமாவது உதவி கேட்பது யாசகம் போல் தோன்றாதா? தன்னை வருத்தி உழைப்பவனுக்கு இறைவன் தன் வல்லமையினை,ஆசியினைப் பரிசளிக்கின்றான். உலகில் முழுமையான தூய்மையினை அதன் பசுமையை, செழுமையினை மனித குலம்- JUGOLDitë அனுபவிக்க
-36

நூண் நூனேதானி வேண்டும்.எங்களது மேலான முயற்சிகளுடன் தன்னலமற்ற சேவையுணர்வுடன் மட்டுமே பூமியின் புனிதம் பேணப்படும்.
எதையாவது மனி ன் நல்லவைகளுக்காகச் சாதிக் காமல் செத்துப்போவதில் என்ன பயன்? எமக்கு என ஒரு இல்லம். அங்கு அமைத்துக்கொள்ள நிம்மதியான வாழ்வு முறைமை. எங்களுடன் அன்பான சுற்றம் நண்பர்கள். ன வாழ்வின் சந்தோஷக் கனவுகளுடனேயே நாம் வாழ்க்கையை நாடிக் སྐ காண்டிருக்கின்றோம். நல்லதை நாடினால், கிடைக்காதுவிட்டதுமில்லை.
எமது நல்ல கனவுகள் நனவாக வேண்டுமெனின் உள்ளத்தாலும் உடலாலும் முயன்று உழைக்கவேண்டிய வராவோம். எங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக பெரிதாக நாம் அல்லல்படுமாறு இறைவன் ஒருபோதும் கட்டளை யிட்டதில்லை. மிக இயல்பாக தூய்மையாக உழைத்தாலே போதும். எல்லாமே வலிந்து எம்மிடம் வந்தணைந்து கொள்ளும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 07-01-2007
-37

Page 21
பருத்திபூர் பல. ஆயிரவரர்
வேற்றமை
வேற்றுமைகளை உருவாக்கினால் எந்த உயிரினர்களும் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகிப்போகும். மிருகங்கள் பறவைகள் கூட்டம் கூட்டமாகவே வாழுகின்றன. இன்ப துன்பங்களை அவை ஒன்றாகவே பகிர்கின்றன. வேற்றுமைகளால் மனிதகுலத்தின் வலிமை துண்டாடப்படும். பாகுபாடு காட்டுவதால் பகை, வன்மம் வளரும். வேறு என்ன லாபம் வரப்போகின்றது? மனிதர் சக்தியை வீண்விரயம் செய்வதற்கு வேற்றுமைகளால் ஏற்பட்ட மனக்குமுறல், குமைச்சல்களே பிரதான காரணமாகும். ஒருவர்க்கொருவர் சந்தோஷங்களைப் பகிர்வதே மனித நாகரீகம்.
ஒற்றுமையின்றி வேற்றுமைப்பட்டே செயலாற்று வோம் என அடம்பிடிப்பவர்கள் ஈற்றில் சற்றேனும் முன்னே ற்றமின்றியே வாழ்க்கையில் தோற்றுப் போய் விடுவர்.
எந்த ஒரு உயிரினமும் தமக்கேயுரித்தான தனித்துவ தன்மையை உறவு நிலையை இழந்து அல்லது விலகி
- 38
 
 

நூனி நானேதாr
டினால் அதனுடைய பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைத் தானாகவே இழந்து தவித்து விடும். வனங்களில் வாழும் உயிரினங்கள், தத்தமது உறவுகளுடன் கூட்டங் கூட்டமாக வாழ்க்கையினைக் களிப்புடன் கழிக்கின்றன. யானை,புலி, கரடி, சிங்கம் என்கின்ற மிருகங்களாகட்டும், பறவை களாகட்டும், பட்சிகள், நுண்ணிய ஜீவராசிகள் அனைத்துமே ஒன்றாக இணைந்தே வாழ்கின்றன. அப்படி வாழாது விடின் அந்த இனம் அழிவதுடன் இனப்பெருக்கமும் நடந்திடுமா? இவைகள் உணவிற்காக இடம் பெயரும்போதும் 9 சீதோஷ்ணநிலை காரணமாக எங்குதான் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படினும் தான்மட்டும் தப்பித்தால் போதும் எனக் கருதுவது கிடையாது. ஒன்றாகவே வாழ்ந்து தங்கள் வாழ்க்கையைத் தமது இனங்களுடனேயே முடிக்கின்றன. இது இயற்கை விநோதம்.
ஆனால்,ஆறறிவு படைத்த மனிதனால் ஒற்றுமை யினைக் காப்பாற்ற முடியவில்லை. ஒன்றாக இருப்பார்கள், நடப்பார்கள், படுத்து எழும்புவார்கள். ஆனால் சந்தர்ப்பம் வரும் போது தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டு ஓட்டமெடுப்பார்கள். பிரச்சனை என்று வந்து விட்டதும் ஒன்றாக இருந்து அன்பு பாராட்டுதலை விடுத்து, அதைவளர்த்து வேற்றுமைகளை முன்னிறுத்துவதும் பலருக்கு பழக்கமாகிவிட்டது. எப்போதோ மறந்துபோன தகாத சங்கதிகளை தனக்குப் பேசிக்காட்டச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால்அதனை ஊதிப் பெருக்கிப்புதுமெருக்கு மிட்டுப் பேசித் தன்னை மட்டும் மேன்மைப்படுத்துவது
س- 39 -

Page 22
பருத்திபூர் 040.9ழ்வரர் வன்மம் கொண்ட துர்க்குணம்தான். வேற்றுமை உணர்வி னால் எங்கள் வலிமை துண்டாடப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையை உணராமல் இருப்பது துரதிஷ்டமானதே.
மிருகங்கள் உணவுதேடும் போது அவை ஒன்றை ஒன்று பிடித்துண்ணுவது இயற்கை. ஆனால் அவை தமது பசிதணிந்ததும் சாதாரண நிலைக்கு வந்துவிடும். மேலும், சிங்கம் சிங்கத்தையோ, கரடி கரடியையோ வேட்டையாடி உண்பதில்லை. தங்கள் இனத்தின் மீதான ஈடுபாடு காரண மாக இருக்கலாம். இவைகளின் உடல்வாகுவேட்டையாடு வதற்கு ஏற்ப இறைவனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மனித உடல் மற்றவனைத்தாக்கியழிப்பதுபோல், சமைக்கப்படவில்லை. இறைவன் ஒவ்வொரு படைப்பிலுமே அவை அவை வாழும் சூழல், உணவினை அடையும் வழிவகைக்கேற்பவே சிருஷ்டித்துள்ளான். கூரிய பல்லும், நகங்களும், பலமான உடற்தசைகளுமில்லாமல் மிருகங்களால் காடுகளில் சீவிக்க முடியுமா?
ஆனால், மனிதன் மிகவும் மென்மையான உடற்பாகங்கள் கொண்டிருந்தும் கூட கடின சிந்தையும், விகாரமான நடத்தையும் கொண்டும் வேற்றுமையுணர்வுடன் தன் உறவுகளைக் கூட துண்டாட, தீங்கு செய்யத் தயங்குவது இல்லை.
வேற்றுமை என்கின்ற எண்ணமூடாகவே கொடும்
பகை, குரோதம் பெருநெருப்பாகப் பற்றி எரிவதை ஏன்தான்
உணராமல் இருக்கின்றானோ? சுயலாபம் கருதும் இயல்பு
- 40

நூனி நூனே தானி
வந்திட்டாலே இல்லாதபேதங்களை மாற்றாரிடம் விதைத்து விடுகின்றான். பேதங்கள், தமக்குத் தாங்களே ஏற்றும் துன்பங்களே!
எல்லோருமே தமது இனம் மொழிபற்றி பெருமை பொங்கப் பேசுவதில் தவறு ஏதும் இல்லை. இந்த அபிமானம் இல்லாதவன் மனிதனேயில்லை.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு காட்டு வாசியைக் கேட்டுப் பாருங்கள். உலகிலேயே தங்கள் இனம் தான் முதன்மையானது என்பான். அத்துடன் உண்மையிலேயே நாகரீக சமுதாயத் தில் உள்ள சில நம்பமுடியாத சக்திகளும் அவர்களுக்குண்டு. அற்புதமான மூலிகை மருத்துவங்கள், தேக ஆரோக்கியம், தீர்க்கமான மனோவசிய சக்தி, மோப்ப சக்தி, கடின உழைப்பு, அதற்கான உடல்வாகு, எந்த சூழலையும் தாங்கும் மனோதிடம் ஆதிவாசிகளுக்கேயுரியது. மிக முக்கியமான சங்கதி என்னவெனில் அவர்களுக்கு வேற்றுமை, குரோதஉணர்வுகள் இல்லை. சந்தோஷ மாகச் சீவிப்பார்கள். தங்கள் காட்டு வாழ்வைக் கஷ்ட ஜீவனம் எனக் கடுகளவும் எண்ணுவதில்லை.
ஒரு தலைவனின் கீழ் ஒற்றுமையுடன், வேற்றுமைகள் அற்றுக் கூட்டம் கூட்டமாக அலைந்து திரியும் இவர்களின் நிம்மதியைப் பெரும் மாடமாளிகையில் நவநாகரீகத்தில் வாழும் செல்வச்சீமான்கள் பெற்றுவிடுவார்களா? களங்க
- 41 -

Page 23
மருத்திர் 00.9ற்றுதாரர் மற்ற மாந்தரிடம் வேற்றுமைகள் தோற்றம் காட்டி விடுவதில்லை.
* நல்ல நட்புணர்வு
O ஒவ்வொரு இனத்தின் கலை கலாசாரம் மொழிகளை
மதித்திடும் இயல்பு பரந்த மனப்பாங்கு.
O தாங்கள் சார்ந்த மதத்தின் தத்துவங்களின்படி
உண்மையாக ஒழுகும் தன்மை.
இத்தகைய உணர்வுகள் வலுப்பெற்றவர்கள் வேற்று மைகளை வெறுக்கும் மனிதராக இருப்பார்கள். இன்று உலகில் பெரும்பாலானவர்கள் தாங்கள் சார்ந்த மதங்கள், மொழிகளை மட்டுமே தெரிந்தவர்களாக இருப்பதனால் மாற்று மொழி மதங்கள் பற்றி அவைகளின் தன்மை பற்றி அறியாது வாழ்ந்துவருகின்றனர்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. எல்லா மதங்களுமே நல்லதையே சொல்கின்றன. எல்லா இடங்களிலுமே பெரியோர்கள் அவதாரம் செய்தார்கள். இப்போதும் எப்போதும் பிறந்து கொண்டேயிருப்பார்கள் என்பதை நாங்கள் மனதார ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
வேற்றுமைகளை உருவாக்கும் தாகத்தை விடுத்து ஒற்றுமையாக வாழ்வது என்பதில் முனைப்பாக இருப்பத னால் ஏற்படும் வளர்ச்சிபற்றி ஒவ்வொருவரும் சிந்தித்தேயாக வேண்டும். w
- 42

நூனி நூனே தூணி சமூகநீதி, சமத்துவம் என்றெல்லாம் பேசும்போது அவை எல்லோர்க்குமானது என்பதை அறியாமல் பேசுகி ன்றனர். பிறரிடமிருந்து பிடுங்கிக்கொள்வோர் கூடச் சமூக நீதி பற்றிச் சொல்கின்றனர். தங்கள் உடமைகளை மட்டும் காப்பாற்றவும் இதற்காகவே வேற்றுமைகளைத் தூவி ஆதாயம் தேடுபவர்களைக் கூட மக்கள் நம்புவது வேதனை. மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவின் புனிதத் தன்மை என்பது தனது படைப்பான மனிதன் வேற்றுமை எண்ணமற்றவனாக இருப்பதுவேயாம். வேற்றுமைகளும் தன்னாதிக்க முனைப்புப் போக்குகளும் கொண்டவர் உறவு களை இறைவன் துறந்துவிடுவான். மகிழ்ச்சியாக இருக்கவே என்றும் சித்தமாயுள்ளவன் பிரிந்தோ,பிரித்தோ உறவுகளைக் கத்தரித்தே இருக்க விரும்புவானா? சாதாரணமான குடும்ப மட்டங்களிலேயும், கிராம மட்டங்களிலேயும் பேதம் காட்டி வாழ்கின்ற நபர்கள் இருக்கும் போது இந்தப் பெரிய உலகில் எல்லோருமே பேதங்களற்ற மாந்தராய் வாழ வைக்கின்ற முயற்சி சிரமமானதேயாகும்.
"வேற்றுமை களைந்து வாழ்க’ என அனைத்து மதங் களும், இலக்கியங்கள் அறநூல்கள் புகல்கின்றன. சாதாரண மாக ஒரு குடும்பத்திலேயே வசதிகூடிய அங்கத்தினர்க்கு ருநீதியும், வசதிகுறைந்தவர்க்கு இன்னொரு நீதி வழங்கப் படுகின்றன. சாதியை, குலத்தை, பணத்தை, மதங்களை வைத்துவேற்றுமை பேசி வாய்கூசாது தூற்றுகின்றனர். நாம் எல்லோருமே ஒரே உலகத்துப் பிரஜைகள் என்று உணர்வ
A logo.G).
- 43

Page 24
பருத்திழ் 04ல. அறிலுரர்
இன மத பேதம் பேசுபவர்கள், தங்களால் தூற்றப் பட்ட அல்லது தாங்களே தூற்றியோரிடம் சுயநலம் காரண மாக கைகோர்த்தும் கொள்வார்கள். செல்வம் படைத்த வர்கள் தங்களை ஒத்தபணம் படைத்தவர்கள் எந்த இனமாக இருந்தாலும் வேற்றுமை பற்றிப் பேசாது உறவு வைத்துக் கொள்வார்கள். ஏன் திருமணபந்தங்கள் வர்க்கம் சார்ந்த வையாகவே இருக்கின்றன. அதாவது செல்வச்சீமான்கள் தம்மோடு ஒத்தவர்களுடன் மட்டுமே தொடர்புகளை வைத்துக் கொள்வதையே பெரும் கெளரவமாக கொண்டி ருப்பார்கள். கீழ்த்தட்டுவர்க்கத்தினை மட்டமாகவே பார்த்து முகம் சுளிப்பார்கள்.
வர்க்கங்கள் ஒத்து இருந்தால் அவர்கள் தங்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்துவார்கள். வர்க்க வேறுபாடுகள் இந்த உலகை ஆக்கிரமித்து அல்லல்படுத்து கின்றது. ஆனால், பரம ஏழைகள் பரந்த மனப்பான்மை யுடன் உடலை வருத்தி உழைத்துக் கொண்டே தேய்ந்து போகின்றார்கள். எனினும் “அரசியல்" இவர்களிடம் உள் நுளைந்து கொள்வதால் பேத உணர்வுகள் மேலோங்கவும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இன்று உலகின் சிறுபான்மை மக்கள் அல்லல்படுவதற்கும் இத்தகைய போக்கே முக்கிய காரணியாகிவிட்டது.
வேற்றுமை உணர்வினால் உலகம் எத்தகைய இன்னல்களை அனுபவித்து வந்தாலும் மக்கள் தமது போக்கை மாற்றியமைப்பதாயில்லை. பண்டையகாலத்தில் எழுதப்பட்ட நூல்கள் எல்லாமே ஒழுக்கம் சார்ந்த
- 44
 

நூனி நூனே தானி
வையாகவே அமைந்தன.உலக இலக்கியங்கள் சமயங்கள் எல்லாமே பண்பாடுபற்றி சொல்லிக் கொண்டே வந்தன. நவீன விஞ்ஞான யுகத்தில் சஞ்சாரம் செய்யும் நாம், பணிபாட்டு இலக்கியங்கள் பால் எமது கவனங்களைத் திருப்புவ தேயில்லை. நல்ல சமய பிரசங்கங்களையோ, இலக்கிய பேருரைகளையோ, செவிசாய்க்க நேரத்தை முதுக்கு வதில்லை. உடன்களிப்பூட்டவைக்கும் வெறும் பொழுதுபோக்குகளை மையப்படுத்தியே வாழ்க்கையை மாற்றியமைத்துவிட்டோம்.
இந்நிலையில் சமூக கட்டுப்பாடு சமூக நியதிகளை எங்ங்ணம் உருவாக்குவது? பேதமற்ற பொது நோக்குடன் வாழும் முறைமைகளை இதயத்தில் உள்நுளைக்க அவகாசம் வழங்குவதேயில்லை. எமக்குத் தெரிந்த நல்ல சமாச்சாரங்களை அது எதற்காக சொல்ல வேண்டும் என்றே கருதி விடுகின்றோம். எல்லாமே எங்களுக்கு நன்றாகவே தெரியும். "சொல்வதற்கு இவர்கள் யார்”? எனும் போக்கும் பலரிடம் காணப்படுவதுண்டு. ஆனால் நாம் நல்ல விஷயங்களைத் தினசரி மீட்டி நோக்க வேண்டியவர்கள் என்பதை நாம் உணர்ந்தேயாக வேண்டும்.
பொழுதுபோக்கு அம்சங்களில் கூட, நல்ல கருத்துக் களைச் செலுத்தவும் வேண்டும். மனிதன் தன் இயந்திரத் தன்மையான போக்கினை விடுத்து மனம் கசிவுள்ள மனிதாபிமானம் மிக்க ஆற்றல் மிகு பேதமற்ற பொது நோக்குடையவனாக, பிறர் உணர்வை அறிந்த மென்மைக் குணம் வாய்ந்தவனாக மெய்யானவனாக தன்னை உரு
VIIIsa GaiGifub.
- 45

Page 25
மருத்திபூர் 00. அரவரர்
கஷ்டமுறும் எல்லோருமே தாங்கள் வசதியான இனத்தில். குடும்பத்தில் பிறக்கவில்லையே என அங்கலாய்க்கின்றனர். சமத்துவமான சமூக அமைப்பினை ஏற்படுத்தினால் இந்த எண்ணம் வந்திடுமா? அமெரிக்கா ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் குடியேறிவிட்டால் பிரச்சனைகள் யாவுமே கழன்று விடும் என்று கற்பனை செய்கின்றார்கள். அங்கே போய் சென்றால் எங்கள் மனசு நிறைந்து விடுமா? உண்மையைச் சொல்லப்போனால், சொந்தப் பூமியில் வாழ்வதைவிட அந்நிய பூமியில் பிறர் ஏளனமாய் நோக்கினாலும் பரவாயில்லை. காசு சம்பாதித் தால் போதும் என எண்ணுவது சுயகெளரவத்தைப் பாதிப்பதுபோலாகும். தாய் நாட்டினைவிட்டு எங்கு ஏகிடினும் அங்குள்ளவர்கள் எங்களை வேற்றுமனிதராக நோக்கி விடமாட்டார்களா எனினும் அகதிகளை ஆகாதவர்கள் என நோக்குதல் தகாது. இச்சொல் பொருத்தமற்றது.
துன்பங்களைக் கண்டு ஒடுதலை விடுத்து அதனை நீக்கிடும் பரிகாரங்களை நிவர்த்திக்க முனைப்புடன் ஆற்றுதலே சிறப்பாகும். மேலும் வேற்றுமை உணர்வுகள் என்பது சகல நாடுகளிலும் பீடித்துள்ள வேண்டத்தகாத துர்க்குணம் என்பதால் நாங்கள்தான் எங்களிடையே சமத்துவ உணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் இன்று பலரும் தன்முனைப்பாக ஆண்டவன்விரும்பாத வேற்றுமைகளை உருவாக்க விரும்புவதானது உண்மை யான இயற்கை நீதியை அடக்கி ஒடுக்குவது போன்றதே
- 46 -
 

நூனி நூனே தானி Mussollb இயற்கையை அதன் இயல்பை, வெல்வது சிரமமானது. சரியானபடி, சரியான பாதையில் செல்லும் இயற்கையுடன் மோதிப்பார்ப்பதில் என்ன லாபமோ, திறமை என்பன இருக்கின்றது?
இயற்கை "உற்பத்தி" செய்யும் படைப்புகள் அவை இயல்பாக வாழ்ந்துவிடும் என்கின்ற நோக்கிலேயே உருவாக்கப்படுகின்றன.
எனவே, "பேதங்களுடன் ஏற்றத் தாழ்வு மனப் பான்மையை உண்டு பண்ணு” என்று அதனைப் படைத்த வன் விரும்புவானா? தொண்றுதொட்டே அது அது அந்த இடத்திலேயே இருக்க வேண்டும். வேறுபாடு காட்ட வேண்டிய இடத்தில் வேறுபாடு காட்டியேயாக வேண்டும் எனப்பழமைவாதிகள் என்று பெருமைப்படுபவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு. இக் கருத்து ஏற்புடையதன்று.
நல்ல கல்வியுடன் உயர் பண்புகளை எவர் கொண்டி ருந்தாலும் அவர்களைச் சமூகம் ஏற்றுக்கொண்டு விடுகின்றது. ஒருவரது தகைமை என்பது அவரது பண்பின் விஸ்தீரணத்தில் தங்கியுள்ளது. நல்லோர் வேற்றுமைகளைக் கூறி அதனைப் போற்றுதல் செய்வதுமில்லை. இறைவன் "கூற்று" "சமத்துவத்தைப் பின்பற்றி வேற்றுமை துறந்து இன்புற்று வாழ்வாயாக’ என்பதேயாகும்.
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி) 30.03.2007
- 47

Page 26
பருத்திபூர் 00. ஆயிரவநாதர்
விசுவாசம்
வைராக்கியமான நம்பிக்கைகள் ஆன்மாமீது ஆளப்பதிந்து நின்றால், செயல்பாடுகள் யாவுமே சாமான்யமான ஒன்றாகி எளிதாகிவிடும். ஆண்டவனை விசுவாசிக்கின்ற ஆத்மாக்களுக்காக ஆண்டவனின் திருக்கதவுகள் என்றுமே திறந்துவைக்கப்பட்டிருக்கும். வெற்றி என்கின்ற மாவிருட்சத்தின் ஆணிவேராக நம்பிக்கையும் இறை விசுவாசமும் இணைந்திருக்கின்றன.
தன்மீதும், தான் வாழும் சமூகத்தின்மீதும் எல்லாவற் றுக்கும் மேலாம் இறைவன் மீதும் விசுவாசம் இல்லாத வர்கள் சந்தேகமும் துணிவுமற்ற வாழ்வோடு சிக்கிச் சுழன்று தம்மையே இழந்து சோர்வுற்றுப் போகின்றார்கள்.
நம்பிக்கை வைக்கத் தெரியாதவர்களிடம் “விசு வாசம்” எப்படி வாசம் செய்ய முடியும்?
- 48
 
 
 
 
 
 

நூர் நூனேதான்
குழந்தை தனது தாயாரை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றது. குழந்தைக்குவிசுவாசம் என்பதன் பொருள் தெரியாது. ஆனால் தனது தாயாரே தனக்கு ஆதாரம் என அது முழுமையாக நம்புகின்றது. இந்த நம்பிக்கைதான் நாம், பிறரிடத்தே வைத்துக்கொள்ளும் தூய்மையான ஈடுபாடுகள் தான் விசுவாச உணர்வாகப் பரிணமிக்கின்றது.
நாய் தன் எஜமானிடத்தே பணிவும் அன்பும் நம்பிக்கையும் ஒருங்கேசேரஅதுவிசுவாசம் காட்டிச் விக்கின்றது. எனவே விசுவாசம் என்கின்ற செயல் மானுடர்க்கு மட்டு மல்ல விலங்குகளுக்கும் சகல வராசிகளுக்கும் கூடப் பொருத்தமாகின்றது. சகல ஜீவராசிகளும் தமது இனங்களுடன் ஒருமித்து வாழ்வதற்கு ஒன்றை ஒன்று ஆதாரமாகக் கொண்டு தானே வாழ வேண்டியிருக்கின்றது.
"விசுவாசம்” என்கின்ற ஒரு சொல்லுக்குள் பல பண்புகள் அடங்கியுள்ளன.
O GLJTgp160)LD O நன்றியுடைமை O அன்பு, பரிவு, பாசம் O பரஸ்பர நேயப்பாடு O ஜீவகாருண்யம்
தன்முனைப்பு இன்மை கடமையுணர்வு
- 49

Page 27
பருத்திபூர் ப0.9ற்றுதாரர்
போன்ற உயர் குணங்களையுடையவன் சமூகத்தில் உண்மையான விசுவாசம் கொண்டவனாக அங்கீகரிக்க ப்படுவான்.
தனது குடும்பத்திடம், எஜமானிடம், மக்களின் அரசாங்கங்களுடன், தான்பணிபுரியும் நிறுவனத்திடம், பெரியோர்கள் உற்றார் உறவினர்கள்,நண்பர்களிடம் போலியான அன்பு காட்டி வாழ்ந்து விடுதல் என்பது வாழ்வு முறைக்கு ஆரோக்கியமானதுமல்ல.
தீயோர் மறைமுகமாக தமது சுயலாபத்திற்காக தங்களை நம்பிக்கை உணர்வுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் குற்றச்செயல்களில் ஈடுபடும் சில பேர்வழிகள்கூட தமது நண்பர்களுக்காகவும் பணத்திற் காகவும்கூட இயங்கும் தனது தலைவனுக்காகவும் தமது உயிரையே துச்சமெனத் துறந்துவிடுவது அதிசயமான உண்மைதான்.
வார்த்தை ஜாலம் காட்டுபவர்களிடம் மயங்கும் அப்பாவிகள் பலர் தீமைசெய்யும் இவர்களிடம் சிக்குண்டு மக்கிப்போவது வேதனைக்குரியதேயாம்.
உண்மையான இறை பக்தியுள்ளவர்கள் தெய்வ த்தின் மீதான அதியுயர் விசுவாசமிகுதியால், அச்சம் இன்றி வாழ்கின்றார்கள். கேட்டால், எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான் என்பார்கள்.
ー50ー

நூண் நானேதானி
மனிதர்கள் தமக்குத் தெரியாமலே சில புறத்தாக் கங்களுக்குள் உள்ளாவதை உணராமல் இருப்பதுண்டு.
தாங்கள் நேசித்த விசுவாசித்தவர்களே தங்களுக்குத் துரோகம் இழைத்த கொடுமைகளைச் சொல்லி வருந்துவ துண்ைடு. எங்கே இருந்து பாணம் தொடுக்கப்படுகின்றது என்பதனை உணராத நிலை, மனிதரைத் தாங்கொணாப் பிணிக்குள் தள்ளி விடும். எம்மீது எவர் உண்மையான அன்பு கொண்டுள்ளார் என்பதனையே கண்டு பிடிக்க முடியாதுள்ளதாகவும் சிலர் கூறுவதுண்டு.
யார், யார் எப்படி இருப்பினும், எமது அன்பினைப் பகிர்ந்து அளிப்பதில் பின்னிற்கக்கூடாது என்பதே மானுட தர்மமாகும். மேலும் ஒருவர், இன்னுமொருவர் மீது அதீத அன்பினைக் காட்டினாலும் கூட, அவ்வண்ணமே அன்பு செலுத்தியவர் மீது, மற்றயவர் அன்போ, விசுவாசமோ கொள்ளாமல் இருப்பது துர்ப்பாக்கிய நிலைதான்.
வேண்டத்தகாத அன்பு என்று ஒன்றில்லை. இருப்பி றும், சிலர் தாம் காட்டும் அன்பின்நிமிர்த்தம், மற்றவர்க்குத் தொல்லை கொடுப்பதும் சரியானதல்ல. சிலர் காட்டும் அன்புத் தொல்லைகள் சகிக்கமுடியவில்லை என்றும் குறைப்படுபவர்கள் Ф 6пЈ.
60TT6),
உண்மையாகவே, ஒருவர் காட்டும் விசுவாச
-51 -

Page 28
பருத்தியூர் பல. ஆயிரவநாதர் உணர்வை நாம் கெளரவித்தேயாகவேண்டும். பரஸ்ப விசுவாச உணர்வுகள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதாலேயே பெறப்படுவதாகும். இந்நிலையால் இரு சாராரும் ஒருவர்க்கொருவர் அந்நியோன்ய உணர்வினை பெற்றுக்கொள்கின்றார்கள்.
"அறிவு" உற்பத்தியானது, இயற்கையாகவும், எமது முயற்சியாலும், பிறருக்கு வழங்குதல்களாலும் கிடைக்கட் பெறுகின்றது, அறிவின் செறிவை, அதன் பெறுமதியை உணர்ந்தவர்கள்கூட மனிதப் பெறுமதியைச் சிலவேளை கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றார்கள்.
களங்கமற்ற பாமரர்களை படித்தவர்களில் சிலர் பொருட்படுத்துவதில்லை அவர்களைப் பாமரர்கள் நெருங்கி விசுவாசம் காட்ட முனைந்தாலும் அதுபற்றிப் பெரிதாக இத்தகையவர்கள் பெரிதுபடுத்துவதில்லை.சில பணக்கார வர்க்கத்தினர்கள் யாராவது ஏழை எளியோர் வந்து நின்று விசுவாசம் காட்டி நின்றால் அல்லது அவர்களுக்கு ஊழியம் செய்தால் எவ்வளவுதூரம் கழிவிரக்கம் கொள்கின்றார்கள் சொல்லுங்கள்!
தங்களிலும் தகைமை குறைந்தவர்கள் எப்படியும் விசுவாசம் காட்டியேயாக வேண்டும் என்றே இத்தகை யவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
விசுவாசத்தைக் கேட்டு நின்றோ வன்முறை வழியில் நின்றோ பெற்று விட முடியுமா? பயந்த ஒருவன் மிரட்டுப
- 52
 

நூண் நானே தானி
வனை நோக்கி"ஐயா உங்களுக்கு நான் ஒரு விசுவாசி"
ான்று உரைப்பது அவன் குரல் வளையை நெரித்து பலவந்தமாக அவன் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வது
பால் அல்லவா?
ஒருவனிடம் இருந்து அவனதுமுழுப்பயன்பாடுகளை யும் அவனது வீடும், சமூகமும், நாடும் பெற்றுக் கொள்ள வண்டும். தனது வீட்டிற்கு, சமூகத்திற்குப் பிறந்த மண்ணுக்கு விசுவாசம் கொள்ளாதவன் முழுமையாகத் தனது உழைப்பை நல்குவான் என்று நாம் எதிர்பார்க்க Opiqu|LDr?
இன்று பலர் தமது தொழில் மீது அதன் நிறுவன த்தின் மீது நம்பிக்கையும் அபிமானமும் வைத்துக் கொள்ளாமல் இருக்கின்றார்கள். முதலாளிக்குத் தன் தொழிலாளி மீது நம்பிக்கையில்லை. ஆசிரியர்களிடம் மாணவருக்கு பணிவும், நல் அபிமானமும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.
குடும்பத்தில் கணவன், மனைவியிடமும் மனைவி கணவனிடமும், பிரியத்துடனான ஐக்கியம் இன்றேல் அக் குடும்பம் நடுத்தெருவில் மற்றவர் நகைக்கும் நிலைக்கு வந்துவிடுமே!
அரச தனியார் நிறுவனங்களின், வளர்ச்சி மென் மேலும் முன்னேற வேண்டுமேயானால் தம்மைத் தாங்கு ー53ー

Page 29
பருத்திழ் 04), ஹரிஹரர் கின்ற நிறுவனங்களின் மேல் அக்கறையையும் மேலான உழைப்பினையும் ஊழியர்கள் காட்ட வேண்டுமல்லவா?
ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்து வதும் வர்க்கபேதம் பேசுவதும், தொழில் ரீதியாகப் பாகு பாடுகளை வெளிப்படையாகக் காட்டுவதும் நிறுவனங்கள் மீதுள்ள விசுவாசமின்மையையே காட்டுவதாக அமைய மன்றோ! சேவை என்பது பொதுவான விஷயம்தான். இங்கு செய்யப்படும் தொழில் எதுவாயினும் அந்தத் தொழில் மீதான அபிமானமே முக்கியமாகக் கவனத்தில் கொள்ளட் படவேண்டியதாகும். பதவி அந்தஸ்துக் கூடியவர்கள் "சும்மா” இருந்து சுகப்பட முடியாது. இந்த மனோ நிலை கூட ஒரு தேசத்துரோகமும் தமது சொந்த ஆத்மாவிற்குத் தானாகவழங்குகின்ற துரோகமுமாகும்.
சில விஷயங்களில் நாம் காட்டும் விசுவாச நிலை களின் வடிவங்கள் வெவ்வேறானத தெரியும். உதாரணமாக நோயாளி தனக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். அதே சமயம் வைத்தியர் தமது தொழிலில் விசுவாசம் காட்டியே நன்கு சிகிச்சை யளிக்கின்றார். இந்த இடத்தில் வைத்தியர் நோயாளியிடம் காட்டுவது பரிவு, அன்பு, தமது தொழிலில் காட்டும் விசுவாசம் என்பனவாகும்.
ஆனால், நோய்ாளியோ பரிபூரணமாக வைத்தியரிடம் விசுவாசமுடன் தன்னை ஒப்படைக்கின்றான். இதே போல்
- 54

நூனி நூனேதானி ானம் பறக்கின்றது, விமானி தனது கருமத்தில் கண் ாக விசுவாசமாக உழைக்கின்றார்.அவர் பயணிகளைக் கொண்டு சேர்ப்பதில் அக்கறையுடன் செயல்படுகின்றார். பயணிகளில் பலரும் விமானம் ஒழுங்காகப் போய்ச் சேரவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றார்கள். எனினும் அவர்கள் விமானியின் மீதும், அவன் சேவைமிதும் தம்மையறியாமல் விசுவாசம் கொண்டு விடுகின்றனர். விமானி பயணிகள் மீது கரிசனை கொள்கின்றார். கடமையை செய்கின்றார். ஆனால் பயணிகள் தங்கள் பயணம் சிறப்பாக அமைய விசுவாச உணர்வுடன் நம்பிக்கையுடன் பயணிக்கிறார்கள்.
எனவே, எப்போதுமே பார்க்காதவர்கள் மீது கூடஅவர்கள் சேவையினைப் பெறும்போது அவர்களிடம் நம்பிக்கை விசுவாசம் கொண்டு விடுகின்றோம்.
இறைவனிடம் பக்தன் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆத்மார்த்த ரீதியாக ஒப்படைத்தலைப் "பூரண சரணாகதி”நிலை என்று சொல்லப்படுகின்றது."என் செயலால் யாதொன்றுமில்லை, எல்லாமே நீதான்” என்கின்ற அதி உன்னத நிலையிதுவாகும். தமது எஜமானிடம், அல்லது தமக்கு மிக வேண்டப்பட்டவர்கள் மீதும் எவராவது தங்களால் இயலாத கருமங்கள் பொருட்டும் அன்புமீதுர அவர்களையே சார்ந்து நின்று இயங்குதற் பொருட்டும் பூரண சரணாகதியாக தங்களை அர்ப்பணிப் போரும் உளர். எனினும் "பூரண சரணாகதி"
-55

Page 30
பகுதி பல.அந்த எனும் சொற்பதம் இறையுடனும் ஆன்மாவுடனும் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
ஆனால்,
ஒருவர் மீது விசுவாச உணர்வில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் தாங்களாகவே தமது செயல்களைச் செய்து கொண்டிருப்பர். ஒருவர் தமது விசுவாச உணர்வின் செயல்பாடுகளுக்கு அவர்தம் சுதந்திர உணர்வு, அன்பு, நம்பிக்கை என்கின்ற அம்சங்கள் பிணைந்து உள்ளது. ஆனால்,
"பூரண சரணாகதி” என்பதில் தம்மையே இறைவனி டம்பூரணமாக ஒப்படைப்பதனால் விசுவாசத்திற்கும், பூரண சரணாகதி என்கின்ற நிலைக்குப் சில வேறுபாடுகள் உண்டு.
ஒருவர் மீதான நம்பிக்கையின் தீவிர நிலை விசுவாச மாகின்றது. சந்தேகமுள்ள நிலையில் யாரிடமாவது விசுவா சம் கொண்டு விட இயலுமோ?
வைராக்கியமான நம்பிக்கைகள், ஆன்மாமீது ஆழப் பதிந்து நின்றால் செயல்பாடுகள் யாவுமே சாமான்யமான
ஒன்றாகி எளிதாகிவிடும்.
ஆண்டவனை விசுவாசிக்கின்ற ஆத்மாக்களுக்காக
ஆண்டவனின் திருக்கதிவுகள் என்றும் திறந்தே வைக்கப்
பட்டுள்ளது."வெற்றி” என்கின்ற மாவிருட்சத்தின் ஆணி
- 56- م
 

நூனி நூனே தானி வேராக நம்பிக்கையும், இறைவிசுவாசமும் இணைந்
திருக்கின்றது.
விசுவாச உணர்வுகளை வெளியே எப்படிக் காட்டி நடித்தாலும் மனிதனின் ஆத்மாவிற்கு அதன் உள் உணர்வுகளுக்கு எது உண்மையான விசுவாசம் என்பதை உணர்த்திக் காட்டும் காட்டிவிடும்.
மிக நம்பிக்கையானவர்கள் என எண்ணி தமது வலக்கரமாக வைத்துள்ளவர்களாலேயே சிலர் கொடுரமாகக் கொலை செய்யப்படுவதும் சில ஆட்சித் தலைவர்களை அவர் சார்ந்தவர்களே பதவியில் இருந்து கவிழ்ப்பதும் புதினமான சங்கதி அல்லவே!.
ஒருவன் மனதினுள் புதைந்துள்ள வக்கிரத்தைக் கண்டு பிடிப்பது சுலபமான காரியமாகுமா? தமது நடத்தைகளை மறைத்து உலாவி வருபவர்களை நிறுத்து எடைபோடுவது எங்ங்ணம்? பெரும் அனுபவஞானம் உள்ளவர்களையே கண் இமைக்கும்பொழுதில் கழுத் தறுக்கும் கலை தெரிந்தவர்களும் இல்லாமல் இல்லை. ஊசி கூடப்போகாத துளைக்குள் ஊடுருவும் புத்திசாலிகளும் உளர். நல்ல விடயங்களில் காட்டும் அக்கறையை விட கண்ட கண்ட நெறிகெட்ட செயலுக்காக தம் சுய ஆற்றலை விரயமாக்குவதை அவர்கள் உணராமல் இருப்பதுதுர்ப்பாக்கியமன்றோ!
- 57

Page 31
கருத்திழ் 39. அர்ஷதர்
எங்கள் நோக்கத்திற்காக கண்டவரிடமும் போய் சரணடைவது எங்கள் ஆத்மாவை அசுத்தப்படுத்தும் செயல் தான். நீங்கள் எவரிடத்தே சென்று உதவி கேட்கின்றீர்களோ அவரின் நடத்தை நெறிகளை அவரின் உண்மைத் தன்மைகளை அறிவீர்களாக!.
ஏன் எனில் சில சமயம் நீங்கள் உதவி கேட்ட துர்மதி யாளர்கள், உங்களுக்குச் செய்யும் உதவிகளுக்குப் பிரதியு பகாரமாகக் கேட்கும் விலை அல்லது உங்களது சேவை மிகப் பயங்கிரமானதாக இருக்கலாம். ஒருவனுக்குக்கடமை ப்பட்டுவிட்டதால் சில நல்ல மனிதர்கள் கூட அவர்பொருட்டு சில சில தகாதசெயல்களில் ஈடுபடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எனவே,
காட்டவேண்டிய விசுவாசங்களைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டுவீர்களாக.பொருளற்ற, போலியான, வாழ்வு நிம்மதியீட்டித் தந்திடுமோ? சத்தியத்திற்குப் பயப்படாத வாழ்வு சரிந்திடும் அல்லவோ! ஒளிக்கும், இருளுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்துவிடல் முடியுமா?
எந்த இன்பங்களையும், துன்பங்களையும் வழங்கு தலும், பிடுங்குதலும் இயற்கையான உலக இயல்பே யாகும். ஆனால் உலகில் வாழும் நாம், வாழும் முறையில் நேர்மையைக் கடைப்பிடித்து ஒழுகாதுவிடின் பிறரால் நம்பிக்கை வைக்கமுடியாத பிரகிருதிகளாகிவிடுவோம்.
-58ー

நூனி நூனே தானி நாங்கள் முழு உலகிற்கும் விசுவாசம் மிக்கவர்களாக இருப்பின் நிச்சயமாக எங்களை உலகம் ஏற்றுக்கொண்டு விசுவாசித்துக் கொள்ளும். இந்தச் செயலைத்தான் இறைவன் எம்மிடம் எஞ்ஞான்றும் எதிர்பார்த்த வண்ண (polണj.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 11-02-2006
- 59

Page 32
பருத்திபூர் (40. ஹரிஹரர்
% போராட்டங்கள்
*
போராட்டம்" என்பது பகை வளர்ப்பதற்காக அமைந்துவிடக்கூடாது. தமது உரிமைகளுக்காகத், தமக்குரிய பங்கினைக் கேட்பதை எதிர் தரப்பினரைச் சண்டைக்கே அழைப்பதாகக் கருதுதல் தகாது. கேட்கின்றவர்களை உதைத்துத் துரத்துதல் மனித நாகரீகமும் அல்ல. உரிமைகளைப் பிடுங்குதலை விடக்கொடுத்தல் தர்மம். எவரினதும் உரிமைகளைப் | பறிப்பது கூட வன்முறைதான். நியாயபூர்வமாக போராடும்போது மதிநுட்பத்தைக் கூராகவும் எச்சரிக்கை உணர்வினை உச்சநிலையில்
வைத்துக்கொள்ளும் திறனையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது, போராட் டங்களை சந்தித்துக் கொண்டுதானிருக்கின்றான். தவிர்க்க முடியாத வாழ்க்கைப் பிரச்சனை இது. சும்மா இருந்தாலும் போராட்டங்கள்ள சந்தோஷமாகச் சனங்களைச் சீவிக்க விடுவதில்லை என்று எல்லோருமே சதா குறைப்படுவ துண்டு. YQ
- 60
 
 
 
 

நாண் நூனே தான்
மனிதனை எதிர் கொள்ளும் போராட்டங்கள் இரண்டுநிலைகளில் அவனைத்தாக்கிவருகின்றன. அவன் தன் மனதோடு உணர்ச்சிகள்,உணர்வுகளுடன் கூடி வருவதுமற்றயது புறச்சூழலின் தாக்கத்தினால் ஏற்படுவது மாகும். எல்லா உயிர்களுமே பெரும் போராட்டங்களுட னேயே சீவித்துக்கொண்டு தானிருக்கின்றன. பூச்சி, பூ, மரம், செடி கொடிகள் எல்லாமே பூரண ஆயுளுடன் வாழ்ந்துகொள்ள இயற்கை நிகழ்வுகள் அனுமதிப்பது மில்லை. இவை வாழ்ந்து கொள்ள எதிரிகள் விடுவது மில்லை. எதிரிகள் என்போர் மனிதர்களாகவும் இருக்கலாம்.
பூச்சிகள், புழுக்கள் ஒன்றை ஒன்று உண்பதும் சின்ன மீனைப் பெரியமீன் கெளவுவதும், மிருகங்களையும் அல்லது பறவைகளையும் மனிதன் வேட்டையாடுவதுமாக இருந்தால் எப்படி உயிர்கள் போராடி நீண்டகாலம் வாழ்ந்துகொள்ள முடியும்? இவைகளில் மிகவும் கவலை தரும் விடயம் என்னவெனில் மனிதனை மனிதன் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றான். இன்று மனிதனில் இருந்து மனிதன் தப்புவதே பெரியபோராட்டமாக உள்ளது. நோய்க்கான போராட்டம் ஒரு புறம், மனிதன் தனது இனத்தில் இருந்துதப்பித்துக்கொள்வதே பகீரதப் பிரயத்த னமாக இருக்கின்றது.
கிருமிகள் சனங்களை அழிக்கும் தொகையைவிட
யுத்தத்தினாலும், தனிப்பட்ட குரோதங்களாலும், இறந்து
போகின்ற ஜீவன்களே அதிகமாகிவிட்டது. விஷக் -61

Page 33
பகுதிஷ்டிவந்துதல் கிருமிகளின் வேலையை மனிதர்கள் கையேற்று விட்டார்கள்.
பூமியின் பாரம் குறைந்து கொள்ள யுத்தம், நோய்கள் ஒரு காரணம் என்கின்றார்கள். ஆனால் காலம் போகின்ற போக்கில் சகல ஜீவராசிகளும் தம்முள் போரிட்டு மடிந்து போகப் பூமி அந்தகாராத்தினுள் தானே தன்னைத்தான், சுற்றிக்கொண்டிருக்குமா என எண்ணத் தோன்றுகின்றது.
மனிதன் தன்னுள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மனப்பேராட்டங்களால் அவன் குழப்பங்களையும் வேதனை யையும் உருவாக்குகின்றான். ஆனால் அவைகளில் இருந்து மீளும்போது சந்தோஷியாகின்றான். பின்பும் மீண்டும், மீண்டும் துன்பம் கொள்ளும்போது உடலை மனதை உடைத்துக்கொள்கின்றான்.
இவ்வாறே, காலத்திற்குக் காலம் மனம் போராடிப் போராடிகளைத்துப்போகின்ற நிலைக்குள் நாம் ஆட்பட்டுப் பழகியே போகின்றோம். போராட்டங்களே வழக்கமாகி விட்டால் தினசரி சலிப்போடுதான் வாழவேண்டி வரு மன்றோ! இதனுடன் பழகி அதனுடன் சங்கமிப்பதை விடுத்துப் போராட்டங்களை வெற்றி கொள்ளலே எமது தலையாய பணியாகும். கஷ்டப்பட்டுக்கொண்டே மனக் குமுறலுடன் வாழும் வாழ்க்கை வேண்டவே வேண்டாம். இதை மாற்றியமைக்க வேண்டும்.
- 62
 

நூண் நூனே தானி
சிந்தனைத் தெளிவுள்ள அறிவாளிகள் எத்தகைய பிரச்சனைகளுமே வாழ்க்கையில் யதார்த்தமானவை என்றுணர்ந்து மிக இயல்பாகவே இவற்றை ஏற்று வாழ்ந்து வருவார்கள். பதட்டமும், பரபரப்புமான எண்ணங்கள் ாமிமுள் பிரவேசித்ததுமே, சாதாரண போராட்ட நிலையிலும் பார்க்க துன்பங்களின் "வலு"தன்திறமையைக் கூடுதலாகக்காட்ட ஆரம்பிக்கின்றது.
நாம் எம் நிலை தளர்ந்ததுமே கவலைகள் எல்லாம் ாம்மைக் கேட்காமலேயே உத்தரவின்று உட்புகுந்து கொள்கின்றன.
"செயல்திறன்" அற்ற மனிதனுக்கு கல்விஅறிவும் புத்தியும் இருந்து என்ன ஆகப்போகின்றது? வெறும் புத்தியும், அறிவும் மட்டும் வாழ்க்கைக்கு உதவாது என்பதை அறிவோமாக! போராட்டங்களை வென்று காட்டத் துணிச்சல், விடாமுயற்சி, தன்னம்பிக்கை அத்தியாவசிய தேவையுமாகின்றது. வெறும் மேலோட்டமான அறிவினா லும், துணிச்சல் இன்மையாலும், போராட்டங்களின் உண்மைத்தன்மையை உணரவும் முடியாது.
நியாயத்திற்கான போராட்டங்களை ஆரம்பிக்கு முன் துணிச்சல், விடாமுயற்சியைத் துணைக்கு எடுத்து வராதுவிட்டால் எடுத்துக்கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட முடியுமா?
- 63

Page 34
பருத்தியூர் படி). வயிற்றுதாரர்
ஒரு தாய் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்து வளர்ப்பதற்குள் எத்தனை தியாகங்களை கஷ்டங்களை அனுபவித்துவிடுகின்றாள். பிள்ளைகள் வளர்ந்துமாணவர் களானதும் அவர்களுடைய முயற்சிகள் வளர்ந்து வருகின் றது. மாணவர் தமது கல்வியின் பொருட்டு தமது அறிவுடன் போராடுகின்றார்கள். பரீட்சையில் சித்தி எய்தியதும் தொழிலுக்காகக் கடும் பிரயத்தனப்படுகின்றார்கள் சரி தொழில் தேடியதும் கருமங்கள் நின்று விடுவதில்லை. திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின் றார்கள். இந்த வாழ்க்கைச் சக்கரம் சுழலும்போது கூடவே எத்தனையோ அனுபவப்போராட்டங்களை அவர்கள் கண்டு கொண்டிருக்கின்றார்கள்.
சரியான இலக்கை நோக்கிநாம் நகராத வரை நாம் வாழ்க்கையில் வென்று விட முடியாது. அனுபவ அடிகளைப் பெற்றுத் தெளிந்தவன் அச்சப்படுவதில்லை. உணர்வோம்!
வாழ்க்கை என்பது ஓர் விபத்து அல்ல. எம்மைத் தினம், தினம், புத்தம் புதிதாக உயிர்ப்பிக்கும் அனுபவப் புத்தகம் ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்து எழுத்துக்களும், வரிகளும் எம்மை மனிதனாக வாழுச் செய்வதற்கான மா மந்திரங்கள் ஆகும்.
சிரத்தையுடன் வாழ்க்கையை ரசிப்பவன் முழு மனிதனாகின்றான். இதை நாம் வெறுப்பூட்டும் போராட்ட மாகக் கருதாது, இது இயல்பாக எம்மை வாழச் செய்யத் தூண்டுவது எனக்கருதுவோமாக!
- 64

நூனி நூனே தானி
வாழ்க்கையின் முன்னேற்றத்தின் பொருட்டு ஆரம்பத்தில் இருந்தே படிப்படியாக, காலடி எடுத்துவைத்து உயர் நிலையை எய்துபவர்கள் எத்தகைய போராட்ட |ங்களுக்கும் முகம் கொடுத்து அதனை வெற்றியடைந்தும் கொள்கின்றார்கள். தீடீர் என உயர்வுபெறும் முயற்சியில் அகலக்கால் பதித்து இடறி விழுந்து துன்பப்படுபவர்களால் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளவும் முடிவதில்லை. பலர் முன்னேறும் வேட்கையில் எதிர்வரும் இடர்களையறியாது தீய குறுக்குவழியில் பாய்ந்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் பின் விளைவினால் ஏற்படும் பாரதூரமான கஷ்டங்கள் சொல்லும் தரமன்று.
தாழ்வு மனப்பான்மையும் சோர்வான மனப் போக்கும் துணையெனக் கொள்பவர்கள் எதிர்வரும் சிக்க லான பிரச்சினைகளில் கசங்கியே போகின்றார்கள்.
வண்டி குடைசாயாது சீராகச் செல்லவேண்டு மெனின் அதன் வடிவமைக்கு ஏற்பவே பாரங்கள் ஏற்றப்படல் வேண்டும். யந்திரங்கள் சக்கரங்கள் சீராக இயங்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அதனைச் செலுத்தும் சாரதி திறமை மிக்கவராக இருக்கவேண்டும். பாதையின் வளைவு, நெளிவுகள், மேடு, பள்ளங்களை அவதானித்து வாகனத்தைச் செலுத்துதல் வேண்டும்.
வாழ்க்கை எனும் வண்டியும் இத்தகையதே. நாம் மது தனிப்பட்ட வாழ்க்கையை அமைக்கும்போது, எமது - 65

Page 35
மருத்திர் 09.அரவரர் சக்தியை உணர்ந்து விவேகமாகப் பிரச்சினைகளைக் கையாளவேண்டும். தேவையற்றபிரச்சினைகளை வலுவில் இணைத்துக் கொள்ளாது. திறமையுடன் எமது பணியினை மேற்கொள்ளவும் வேண்டும். எப்படித்தான் நாம் எச்சரிக்கையுடன் இருந்தாலும்கூட பிரச்சினை மிக்க போராட்டங்கள் எம்மை தொட்டுவிடவே செய்யும்."வாழும் கலை” என்பது, மனத்திண்மையுடன் நாம் பெறும் கல்வி, அனுபவ ஞானமூலமும் பெற்றுக்கொள்வதாகும். இதனைப் பெரிய பாரம் எனக் கருதாது, எமக்கு அளிக்கப்பட்ட வீரத்தின் கிரீடமாகச் சூட்டிக் கொள்வோமாக!.
புற சூழ்நிலைகளை எடுத்துக்கொண்டால் மனித ர்கள் அரசியல் விவகாரங்களில் ஏற்படும் மாற்றங்களா லேயே பெரும் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். உள்ளுர் அரசியல் காரணங்களால் ஏற்படும் போராட்டங்களால் மட்டுமல்ல வெளிநாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற மாற்றங்களால் கூட உலகின் சாதாரண பொதுமகன் பல பிரச்சினைகளை ஏதோ வடிவில் எதிர்நோக்கிய படிதான் இருக்கின்றான்.
எங்கோ மத்தியகிழக்கில் நடக்கும் பிரச்சினைகள்
காரணமாக இங்கு ஏற்படும் பொருளாதார மாற்றங்கள்
களேபரங்களால் எண்ணை, எரிபொருள் விலை அதிகரிக்
கின்றன. இவை ஒரு குடிமகனைப் பெரிதும் பாதிக்காதா?
அத்தியாவசிய எரிபொருள் விலை கூடிவரும் போது
போக்குவரத்து உணவுப் பொருள்களின் விலை கூடிவிடு - 66
 

நூர் நூனே தாr Fawrறன அல்லவா. அடுத்து உள்ளுர் அரசியல் விவகாரங் ால், ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் போராட்டங்கள் முற்றிவெடித்துநிகழும் யுத்தங்களால் எத்தனை எத்தனை Di bprikle56061T அனைத்து மக்களுமே சந்தித்து, நைந்து, நொந்து போகின்றார்கள் தெரியுமா? அரசியல் குளறுபடிகளால் பின்வரும் பிரச்சினைகள் விஸ்வரூபமாக வளர்ந்துவருகின்றன.
இனப்பிரச்சினை மொழிப்பிரச்சினை மதப்பிரச்சினை கலாசார உருமாற்றங்கள்
• பொருளாதாரச் சிக்கல்கள்
இந்த மேற்சொன்ன விஷயங்களை மையப்ப டுத்தியே போராட்டங்கள் எல்லாமே தக்க தீர்வுகள் இன்றி பின்னே நகர்த்தப்படுகின்றன. தீர்வுஅற்ற பின்நோக்கிய பயணங்களால் நாட்டில் துர்மரணங்களும் மக்களிடையே நம்பிக்கையீனமும் ஏற்பட்டு எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் நிலையையே நிலைத்திருக்க வைத்திருக் கின்றன.
இந்தப் போராட்டம் என்கின்ற விடயத்தில் ஒரு
வேடிக்கை என்னவெனில், பாதிக்கப்பட்ட ஒரு இனம்
போராடிக்கொண்டு இருக்கும்போது எந்தவித சம்பந்தமும்
அற்ற பாதிக்காத இன்னும் வலிமை மிகு ஒரு சாரார்வேறு - 67

Page 36
பருத்திபூர் 00.9ழ்வரர் எதற்கெல்லாமே போராடிக் கொள்வதாகச் சொல்லிக் கொள்கின்றனர். துன்பப்படுவோர்க்குக் கிஞ்சித்தும் இரங்காமல் தங்கள் பங்கிற்கு ஏதாவது சுருட்டலாம் என எண்ணி கொடிகட்டி ஆர்ப்பாட்டம் செய்வது எத்துணை கோழைத்தனம் தெரியுமா?
“போராட்டம்” என்பது பகை வளர்ப்பதாக அமைந்து விடக்கூடாது. உரிமைகளுக்காகவும், தனக்குரிய பங்கினைக் கேட்பதனை எதிர் தரப்பினரைச் சண்டைக்கே அழைப்ப தாகக் கருதுதல் தகாது. கேட்கின்றவர்களை உதைத்துத் துரத்துதலும் மனித நாகரீகமும் அல்ல.
சாத்வீக போராட்டங்களை இன்று எவரும் கண்டு கொள்வதாக இல்லை. ஒருவர்க்கான உரிமையை வழங்குவதால் சொந்த இருப்புக்கள் குறைவடைவதும் இல்லை. உரிமையைப் பிடுங்குவதை விடக் கொடுத்தல் தர்மம். ஆனால் தனி மனிதனுக்கான எந்தப் பொருட்களையும் அபகரித்தல் மாபெரும் அவமானத் திற்குரிய குற்றமாகக் கொள்வதுடன் அவனது சுயமரியாதை க்குப் பங்கம் விளைவிப்பதுமாகும். எவரினதும் உரிமை களைப் பறிப்பது கூட வன்முறைதான். இக்கருத்தே ஒரு சமூகத்திற்கும், முழு உலகத்திற்கும் பொருந்து வனவாய் அமையும்.
சிறு விடயங்களில் ஒரு தனிமனிதனையே அன்றி இனத்தினையே வேறுபாடாக நோக்கி அவர்களுக்கான
- 68
 

நூனி நூனே தான்
கொடுப்பனவுகளை உதாசீனம் செய்யும் போதுதானே
பாராட்ட எண்ணங்களே கருக்கொள்கின்றன?
இவைகளை இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும், புரிந்தும் புரியாமல் நடிப்பதும், இந்த முழு உலகிற்கே வேதனை தரும் கருமமாக மாறிவிடும் அல்லவா?. மகாத்மா காந்தியடிகள் தமது அகிம்சைப் பாராட்டத்தின் மூலம், வெள்ளைக்காரர்களின் விழிகளைத் நண்பால் திருப்பவைத்தார்.
போராடிப் போராடி ஜெயிப்பதில் நாங்கள் திருப்திப்பட்டுக் கொள்கின்றோம். சொந்த முயற்சியில் ஒரு சிறு துரும்பைப் பெற்றாலும் அது அற்பம் அல்ல. முழு இந்தியர்களின் பரிபூரண அறவழிப் போராட்டம் மூலமே இந்தியா சுதந்திரம் பெற்றது. முறையான சத்தியம் சார்ந்த போராட்டங்களை முழு உலகமே ஏற்றக் கொண்டேயாக வேண்டும். v
மேலும் எத்தனை எத்தனையோ போட்டிகளை மக்களின் ஊக்கத்தின் ஆக்கத்திறனை வளர்ப்பதன் பொருட்டு நடாத்தப்படுகின்றன. இவைகளில் ஈடுபட்டு ஜெயிக்கும் போதுதான் அவர்களை எதிர்கொண்ட சவால் களின் பெறுமதி உணரப்படுகின்றன. போராடும்போதே மதிநுட்பத்தைக் கூராகவும் எச்சரிக்கை உணர்வினை உச்ச நிலையில் வைத்துக்கொள்ளும் திறனையும் உருவாக்கிக் கொண்டுவிடுகின்றனர்.

Page 37
பருத்திபூர் 00.9ரவரர்
துன்பங்கள் தோல்விகள் மூலம் கிடைக்கும் வெற்றிகள் தான் இனிமேல் தொடரப்போகும் பணிக்கான உந்துசக்தியுமாகும். உலகத்தின் இயக்கம் ஒரே மாதிரியா னதல்ல. எனவே நாங்கள் எதிர்கொள்ளும் போராட்டங் களின் வடிவங்களும் மாறுபாடான தாகவே இருக்கின்றன. பிரச்சினைகளை நாம் இலகுவாகத் தீர்க்க முனையும் போது அவைகளை எமது ஆராய்வின்மையினால் சிக்கலாக்க வேண்டிய அவசியமும் இல்லை.
தொழில்நுட்ப விஞ்ஞான உலகில் வாழும் முறைகள் எல்லாமே இலகுவாக்கப்பட்டு வருகின்றன. திறன்மிக்க ஆற்றல் உள்ளவன் கடுமையான தேவையற்ற முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்வதில்லை.
போராடுகின்றேன் என்பதற்காகத் தேவைகளை உணராமல் உள்ளத்தை உடலைக் குழப்ப வேண்டிய அவசியமில்லை. இன்று மனிதவலு, முயற்சிகள் அநாவசிய மாக வீணடிக்கப்படுவதை நாம் அனுபவவாயிலாக உணர்ந்திருக்கின்றோம்.
தமக்கான தேவைகளையும் உரிமைகளையும் பெறுவதற்காகவும் இதன்மூலம் நிம்மதியான வாழ்விற்கு மாகவே போராட்டங்கள் நடாத்தப்படவேண்டும். ஆயினும் போராட்டங்கள் என்பதே வெறும் பொழுது போக்காகவும், அடுத்தவர் உரிமைகளை அவர்கள் சுதந்திரங்களைப்
we
- 70
 

நூர் நானேதான்
தற்காகவும், ஒன்று கூடிக்கோஷம் எழுப்புதலும் மனித மையினை மீறும் செயல் அன்றோ?
luwih
யார், யாரோ நடிகர்கள் பொருட்டும் அவர்களுக்காகச் சங்கம் அமைத்தும் கோஷம் போடுகின்ற கூட்டங்களை ான செய்ய? சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த எம் தமிழ் முகம் இன்று எந்த வித முற்போக்கான எண்ணமின்றி நம்மைதியாகிகளாகச் சித்தரித்தும் தனிநபருக்காக, வேறு ார் எவருக்காகவோ,பணம் பெறுதல் பொருட்டும் சுயலாபம் கருதி, பிறர்கருமங்களின் பெறுமதியறியாது பாராட்டம் எனும் போர்வையில் நடந்து கொள்ளும் செயல் வெறும் கோமாளித்தனமல்லவா? .
இன்று மேற்கத்திய நாடுகளில் கூடப்போராட்டம்
ாறு கூறி நாகரீகமற்ற விதத்தில் நடந்து கொள்வதும் படைகள் அற்ற நிலையில் அருவருக்கத்தக்க விதத்தில் பொது வீதிகளில் போராட்டம் என்று சொல்லி ஆர்ப் பாட்டங்கள் புரிகின்றனர். நேரத்தினி பெறுமதி மக்களுக்கான டையூறு என்ன என்பது பற்றிச் சற்றேனும் பொருட் படுத்தாமல் இவ்வாறு நடப்பதில் என்ன நியாயம் இருக்கி
றது?
மேலும் எங்கோ நடக்கும் பிரச்சினைகளுக்காக, தெருவில் செல்லும் வாகனங்களைத் தீ மூட்டுவதும், பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதும் ஒரு
- 71

Page 38
பருத்திபூர் (40.ஹரேவதர் போராட்டமா? நாம் இன்று இருபத்தியோராம் நூற்ற ண்டின் நவநாகரீக விஞ்ஞானயுகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வினாடிகளையும் பொன்னான பெறுமானம் மிக்க அடிகளாக எடுத்து முன்னேறியபடி சென்று கொண்டிருக்க வேண்டும்.
கணப்பொழுதில் யுகப்பொழுதிற்கான சாதனை களைச் செய்தேயாக வேண்டும்.
எங்கள் சுதந்திர உணர்வுகளால் மற்றவர் சுதந்தி உணர்வும் அவர்கள் உரிமைகளும் பாதிப்படையக்கூடாது போராட்டங்கள் மனித உரிமை. அதனை எவரும் மறுக்க முடியாது. எமது நியாயமான தேவைகளைப் புரியாதவிடத்து நாம் போராட்டங்கள் மூலமே வலுயுறுத்த வேண்டியுள்ளது
புறச்சூழலும், எமது உள் உணர்வு, மனம் சலை மின்றிச் சுத்தமாகச் செம்மையாக இருப்பின் எந்த அநீத யான போராட்டங்களும் எம்மை உறுத்தப்போவதுமில்லை ஒவ்வொரு தனிமனிதனுடைய அகவாழ்வும் புறவாழ்வு சீராய் அமைந்து நின்றால், சந்தோஷ வாழ்வு நித்தி மாகும்.
தினக்குர6 ஞாயிறு மஞ்ச 03-12-200
- 72
 

l
J.
T
சுயநலநோக்கும் எதனையும் ஆதாயம் கருதிச் செயல்படுபவர்கள் நம்மை நொடிக்கொரு தடவை மாற்றிக் கொள்கின்றனர். ஒருவன் தன் யல்பினைவிடுத்துமாறுபாடான சமூகத்திற்கு ஒவ்வாத மனுஷனாக விழையும் போது அவனுக்குரிய சுயஉருவத்தினை மீண்டும் வழங்கி நற்பிரஜையாக வாழ வகை செய்தேயாக வேண்டும். பொய்யாகப் பேசி நடிப்பதைக் காட்டிலும் மெய்யாக வாழ்ந்து அதன் மூலம் பெற்ற சவால்மிகு வாழ்க்கையின் சுவையை அறிதலே மேலானது.
ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு வடிவங்கள். Illes...... முடிவில்லா மக்கள் கூட்டம்!. ஒவ்வொரு வருக்கும், வெவ்வேறாய் முகங்கள்!
பருவங்கள் மாறிட உருவங்கள் மாறும். எனினும் அத்தனை பேருக்குமே தனித்தனி வடிவங்கள், குண இயல்புகள். ஆ. ஆண்டிவா. உந்தன் படைப்பில்
அனைத்துமே அற்புதம் அற்புதம்
-73 -

Page 39
0ருத்திபூர் (40. லுயிரணுகுழர்
ஆனால்,
மனிதன் மட்டும் இறைவன் தந்ததையிட்டுத்
திருப்திப்படாமல் தனக்கு எனச் சுயமாய் புதுப்புது வடிவங்
களைப் பூட்டிக் கொண்டு அல்லலுடன் அவஸ்தையுடன்
வாழுகின்றான்.
மனிதன் தனது குணங்கள் நடத்தைகளை மாறு பாடாக வைத்துக் கொள்வதற்காக பொய் முகங்களுள் புதைந்துநின்று செப்படி வித்தைகாட்டி முக்காலத்தையும் முழுதாய் மறைத்து நிற்கின்றான்.
நல்லோர் நடத்தைகள் மாறுவதில்லை. நடிப்பு என்பது சிறிதுமில்லை. சுயமாய், திறனாய் வாழ்ந்து வருகின் றான். காலச் சூழலை, தன்னைச் சுற்றிய மக்கள் பிரச்சினை களை உணர்ந்து, தெளிந்தே வாழுகின்றான். எளிதில் எமக்கு இவர்தம் நடத்தை நெறிகளை புரிந்து கொள்ளாது போனமையால், “சத்தியம்” என்பது கூட அசாத்தியமாய் பலருக்குத் தெரியாமல் போவது வேதனை. ஆச்சரியமான உண்மைகளை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
நல்ல ஒரு மனிதனைப் பற்றிச் சொல்லுகின்றேன். எனது நண்பர் ஒருவரின் அனுபவம் இது.
எனது நண்பர் மேல் நீதி மன்றத்தில் சிற்றுாழி
யராகக் கடமையாற்றி வந்தார். அக்காலத்தில் அங்கு
பணியாற்றிய நீதியரசர் மிகவும் கண்டிப்பான நேர்மையான - 74
 

நூண் நூனே தாண் எனப் பெயர் பெற்று இருந்தார். பொதுவாக பரசர்கள் மக்களுடன் நேரிடையாகச் சந்திப்பது, பொது ாவங்களில் கலந்துகொள்வது மிகவும் அரிதான யம். தமது முழுநேரங்களிலும் வேலைப்பளு ாமாக பிற நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் மாட் " ዘመሐ. எனவே பிறர் பார்வைக்கு அவர்கள் கண்டிப்பான ாதுமானவர்களாகவே தோற்றம் காட்டிநிற்பர்.
ஒரு சமயம் அவரது கொழும்பு வாசஸ்தலத்திற்கு தியோக நிமிர்த்தம் சில நூல்களைக் கையளிக்கும்படி ாது நண்பரிடம் ஒப்படைக்கப்பட்டன. இவர் வரும் தகவல் ரியரசருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. நண்பரும் குறிப்பிட்ட முகவரியில் அவரது வாசஸ்தலத்திற்குச் சென்றடைந்தார்.
இவர் அங்கு சென்ற சமயம் நீதியரசர் அங்கு ருக்கவில்லை. காவல் துறையினரின் பலத்த காவல்கள் வறு. நீதியரசரின் இல்லத்திற்கு இவர் சென்ற தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவரது துணைவியார் உடன் வந்து
ன்முகத்துடன் நண்பரை வரவேற்றார்.
அவரை வீட்டினுள் அழைத்து குறிப்பிட்ட அறை ன்றினுள் சென்று முதலில் ஓய்வு எடுக்குமாறு கூறி குளிர்பானம் சிற்றுாண்டிகளை அன்புடன் தானே பரிமாறினார். அத்துடன் "ஐயா, அலுவலக கடமையினை டித்துக் கொண்டு மாலை தான் வீட்டிற்கு வருவார். س- 75 سـ

Page 40
பருத்திர் 00.9மிர்ரர் எனவே தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். இங்கே எமது வீட்டில் எல்லா வசதிகளுமுண்டு. அவர் வந்ததும் பேசலாம்" என்று கூறியதுடன் "ஏதாவது தேவை என்றால் கேளுங்கள்" என்று அம்மையார் கூறியபோது நண்பருக்கே வியப்பும், சங்கோஜமும் ஏற்பட்டு விட்டது. தான் ஒரு சாதாரண சிற்றுாழியராக இருந்தும் கனிவுடன் எந்தவிதமான அகம்பாவமும் இன்றி இவர் பழகியதை அவரால் நம்பவே முடியவில்லை.
மாலையானதும் நீதியரசர் வந்தார். வந்ததும் நண்பர் வந்ததைத் தெரிந்ததும் அவரை அழைத்து சந்தோஷமாக முதுகில் தட்டி உட்காரச்செய்து "சற்றே இருங்கள்" என்றவர் பின்னர் தமது கடனை முடித்து ஆறுத லாக அவருடன் உரையாட ஆரம்பித்தார்.
ஒரு சின்னக் குழந்தைபோல் குதூகலத்துடன் ரொம்ப சுவாரஸ்யமாகப் பேசினார். அத்துடன் கலை, கலாசார, நிகழ்வுகள், திரைப்படங்கள் தொடர்பான விடயங் கள் உட்படப் பலதரப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொண்டபோது நண்பருக்கு ஒரே ஆச்சரியம்.
இதே நீதியரசர் தமது ஆசனத்தில் அமர்ந்
திருக்கும் காட்சி அவர் மனத்திரையில் தனக்குத்
தோன்றியதை எனக்குச் சொன்னார். "இந்த மனிதரா ஒரு
சின்னப் பிள்ளைபோல தன்னுடன் பேசிக் கொண்டிருக்
கின்றார். நல்ல நகைச்சுவை ததும்ப தன்னுடன் DGOT
- 76
 

நூனி நூனே தானி
-
ாந்துபேசும்போது அவர்பற்றிய எண்ணம் வானளாவாக பந்து நின்றது. அத்துடன் “இன்று நாங்கள் ஒன்றாக பாவு அருந்துவோம்” என்று கூறியதுடன், தமது ம்பத்தினருடன் இணைந்து உணவு உண்டு மகிழ்ந்தார்.
அன்று இரவு நண்பருடன் பேசும்போது "நீங்கள் பங்கள் ஊருக்குச் செல்லும் போது எனது சாரதி புகையிரத லையத்திற்கு அழைத்துச் செல்வார்" எனக்கூறி உறங்கச் சென்றார். மறுநாள் அதிகாலை அவர் பயணம் புறப்படு முன் காலை ஆகாரத்தினைப் பொதி செய்து கொடுத்து
அவரது துணைவியார் வழியனுப்பிவைத்தார்.
மேற்படி சம்பவம் பற்றி நண்பர் கூறியபோது
ன்றினைப் புரிந்து கொண்டேன். ஏற்றத் தாழ்வு அற்ற மனோநிலை உண்மையான நீதி வழுவாத பெருமகன் களுக்கே இயல்பான சுபாவமாகும்.
அத்துடன் அவரைத் தொழில் சார்ந்த நோக்கில் ஒரு வடிவமாகவும், சொந்த வாழ்வில் பிறிதொரு முகமாகவும், நாம் பார்த்தால் அது எமது கோளாறு தான். ஏன் எனில் அவரது நேர்மையும், கனிவும் சொல்லித் தெரிவது அன்று. பிறருக்கு அவர் நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்ந்து காட்டும் நபர்கள் போலியைப், பகட்டை விரும்பு வதும் கிடையாது.
சுயநல நோக்கும், எதனையும் ஆதாயம் கருதிச் செயல்படுபவர்கள் தான் தம்மை நொடிக் கொரு தடவை
- 77

Page 41
மருத்திர் 00.ஆயிரவநாதர் மாற்றிக் கொள்கின்றார்கள் ஆயினும் நல்ல நோக்கிற் காகவும் சிலர் தமது சொந்த வடிவங்களை மாற்றவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகின்றனர். நன்மை கருதிகருமங் களை இடையூறு இன்றிச்செய்து முடிக்க தம்மையே மாற்றி அமைக்கவேண்டிய கட்டாயத்தில் பலர் வாழ்ந்துகொண்டி ருக்கின்றார்கள்.
ஒரு நேர்முகப் பரீட்சைக்குச் சென்றுவந்த எனது உறவினர் ஒருவர் அலுத்துக் கொண்டார். "நீங்கள் சொன்னதற்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்றேன். இந்த நாடகம் எல்லாமே ஒரு ஒப்புக்குத் தான். இவர்களாவது வேலை தருவதாவது..? அந்த மனுஷர் சம்பந்தா சம்பந்த மில்லாமல் இடக்கு முடக்காகக் கேள்வி கேட்கின்றார். நானும் மிகவும் பொறுமையாகப் பல்லைக்கடிக்க வேண்டி ருந்தது. எப்படியோ சமாளித்து அந்த நேர்முகப்பரீட்சை வைத்தவரிடம் தப்பிப்பதே பெரும்பாடாகிப் போய்விட்டது" என்றார்.
அவர் என்னை மீண்டும் சில நாட்கள் கழித்துச் சந்தித்தார். முகத்தில் மகிழ்ச்சிகளைகட்டியிருந்தது"நான் நினைத்தது எல்லாமே தப்பாகிப் போய்விட்டது. நேர்முகப் பரீட்டையில் எனக்குத்தான் அதிக புள்ளிகள் கிடைத்தன. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. அந்த மனிதர்பார்வைக்கு ரொம்பகோபக்காரர் போலவும் என்னை எளிளிநகையாடி யவர் போலவும் தோற்றம் காட்டினார். ஆனால் அவர் உண்மையிலேயே நான் எதிர்பார்த்தபடியான மனிதர் அல்ல." 臀
78

நூனி நூனே தானி
இப்படி அவர் கூறியதும் நான் சொன்னேன். "உமக்கு வேலைகிடைத்தது உமது கல்வித்தகைமை மட்டும் அல்ல. நீங்கள் அந்நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடித்துப் பதிலளித்தீர்கள். அவர் வேண்டுமென்றே உம்மைச் சீண்டி உமது சுயரூபத்தை அறியவிழைந்தார். தொழிலில் தகைமைகள் மட்டும் போதாது. எந்நேரமும் நிதானம்,பொறுமை,உமது ஆற்றுகை அதாவது அந்நேரத்தில் உமது செயல்திறனை நேரடியாகக்கண்டு கொண்டமையினாலேயே வேலை சற்றும் நீங்கள் எதிர்பார்க்காமலேயே கிடைத்தது. ஒருவரை நாம் நேரில் கண்ட மாத்திரத்தே அவரை எடைபோடுதல் எமது தீர்மானிக்கும் திறனையே தடை போடுதல் போன்றதே" என்றேன்.
கனிவாகத் தோற்றம் காட்டுபவர்கள் தமது செயலில் கொடூரமானவர்களாகவும் இருப்பதுண்டு. கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட சில குற்றவாளிகளைப் பார்த்தால் எவராலும் நம்பமுடியாத தோற்றத்திலும் காணப்படு வர்."அட அவனா இந்தக் கொலையைச் செய்தான்” என்று வியப்பு அடைவர். பின்னர் விசாரணைகள் மூலம் உண்மையிலேயே அவர்தான் கொலை செய்தமையினை நிரூபிக்கப் படும்போது எவரது தோற்றத்திற்கும் செய்கைக்கும் எவ்வித சம்பந்தமுமே இல்லாதது புலனாகிவிடும்.
சில பெரிய மனிதர்களின் சொந்த வாழ்க்கை எமக்குத் தெரியாதவரை அவர்களை நாம் கெளரவித்துக்கொண்டே ... 79

Page 42
கருத்திபூர் 040. ஆயிரவநாதர் யிருப்போம். அவர்களின் வெளிஉலக வாழ்விற்கும் சொந்த வாழ்விற்கும் உள்ள வேறுபாடு மிகவும் கொடுமையாக இருக்கும். நல்லவர் போல நடிப்பவர்கள், பிறரைக் கெடுப்பதற்கென்றே உருவானவர்களாக இருக்கின்றனர்.
எங்களால் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாத சகிக்கவொண்ணா பிரகிருதிகள் இன்னமும் தமது சுய உருவை பிறர் தெரியவில்லை என்ற எண்ணத்துடனேயே சீவித்துவருவது வேடிக்கையிலும் வேடிக்கை அன்றோ!
இன்று சில எதிர்பாராத கசப்பான அனுபவங்களால் எத்தனையோ நபர்கள் தங்களை மாற்றிக்கொண்டு தீயவழியில் செல்ல முனைகின்றார்கள். கேட்டால் நல்லவனாக வாழ்ந்து என்ன பயன் எல்லோருமே என்னை ஏமாற்றுகின்றார்களே என்பார்கள்.
இத்தகைய தவறான கருத்துக்களைச் சமூகம் ஏற்குமா? ஒருவனுக்கு ஒரு தவறு இழைக்கப்படும் போது தவறுகளை அனுபவிப்பவன், எதற்காகத் தானும் ஒரு தவறு இழைக்கும் நபராக உருமாற வேண்டும்? இவை எல்லாமே பழி வாங்கும் முயற்சியுமல்லவா?
வாழ்க்கையில் அனுபவ அடிகளை வாங்கிய பலர்
கசங்கிய கலங்கிய நிலையில் இருந்து மீண்டு தெளிந்த
நிலைக்கு வந்து விடுகின்ற்னர்.மிகச்சிலரோ அனுபவ
அடிகளை வடுக்களாக எண்ணி அவை தமக்கு நிரந்தர - 80 -

நூனி நூனே தானி தலைக்குனிவு என எண்ணி சமூகத்தை வஞ்சம் தீர்ப்பதுபோல் தம்மை ஆக்கியும் கொள்கின்றனர். இதனால் தமக்கேயுரிய அழகிய முகத்தினை நீக்கி கரிய முகத்திரையினுள் புகுந்து மீளாத சுதந்திரமற்ற குற்றம் சுமக்கும் கைதியாகிவிடுகின்றனர்.
கிராமத்து சூழ்நிலையில் வாழ்ந்த ஒரு அப்பாவிச் சிறுமி ஒருத்தி,தனது வாழ்க்கையில் பட்ட அவலங்களாலும் பின்னர் தொடர்ந்தும் அவள் வயது வந்த பருவப்பெண் ஆனபின் அவளுக்குநேர்ந்த சமுதாயக் கொடுமையினால், சட்டவிரோத கும்பல்களின் சித்திரவதைகளால் ஒரு வன்முறை உணர்வு கொண்ட கொடுரப் பெண் ஆனாள். அவள் தான் பூலான்தேவி. அவள் தனது இயற்கையான தனது சுபாவத்தை நீக்கித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி காரணமாகவே தான் மாறுபட்ட மனுஷியானதாகக்கூறிக் கொண்டாள். பின்னர் அவள் சட்டப்படி அரசிடம் சரண் அடைந்து மக்கள் பிரதிநிதியுமானாள். ஆயினும் துரதிஷ்டவசமாக மீண்டும் வன் முறைக்கே பலியாகி இறந்துபோனாள். இது ஒரு சோகக் கதை. பெண் விடுதலைக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தும் வந்த பூலான்தேவியின் முடிவு வேதனை க்குரியது.
ஆனால் ஒருவர் தனக்கு நேர்ந்த அவலங்களான
அனுபவத்தினால் எடுக்கும் வேண்டப்படாத சமூக
விரோதமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவே -81 -

Page 43
மருத்திபூர் பல. அர்ஷதர்
முடியாது. சமூகம் அரசாங்கங்கள் தனி மனித உரிமை களை அவர்களது எண்ண அபிலாசைகளைக் கண்டு கொள்ளாமையின் பிரதிபலிப்பினை உலகம் வெறும் பச்சாதாபத்துடனும் சில சமயம் வெறுப்புடன் கோபத்துடன் நோக்குதலால் என்னதான் பயன்வந்து விடப்போகின்றது?.
நடக்கின்ற துன்பியல் நிகழ்வுகள் எல்லாமே நிகழ்ந்து போனபின் வெறும் அனுதாப வார்த்தைகளால் ஒளடதம் போட எண்ணுவதும் செய்தலும் வாடிக்கையான சமாச்சாரமாகிவிட்டது. ஒவ்வொரு தனிமனிதனும் இயல் பாகவே நல்லவர்களாக வாழ விரும்பும்போது அதற்கான வழியாக ஒட்டுமொத்தமக்களும் ஊக்கம் கொடுத்தேயாக வேண்டும்.
ஒருவன் தன் இயல்பினைவிடுத்து மாறுபாடான சமூகத்திற்கு ஒவ்வாத மனுஷனாகவிழையும் போது அவனுக்குரிய சுய உருவத்தினை மீண்டும் வழங்கி நற்பிரஜையாக வாழவகை செய்தேயாக வேண்டும்.
பொய்யாகப் பேசி நடிப்பதைக் காட்டிலும் மெய்யாக வாழ்ந்து, அதன் மூலம் பெற்ற சவால் மிகு வாழ்க்கையின் சுவையை அறிதலே மேலானது.
எம்மில் பலருமே செல்வந்தர்களாகவோ மேதைக ளாகவோ இருக்கமுடியாது. பெரும்பாலான மக்கள்கூட்டம் எங்களைப் போன்ற சாதாரண நிலையில் உள்ளவர்கள்
Ve
- 82 -

நூனி நூனே தானி
என்கின்ற உணர்வு இருந்தால், நாம் எங்களைத் தேவையின்றி மாற்றி நடித்து,வாழவேண்டிய அவசியமே யில்லை. மற்றவன் ஏதாவது சொல்லிவிடுவான் என்பதற் காகவே பலர் பொய்யாக வாழ்ந்து புத்தி பேதலித்தவன் போல நடந்து கொள்கின்றார்கள்.
ஒருவனைப் பார்த்து ஒருவர் நடந்துகொள்வது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. தேவைகளை மீறி கெளரவம் பார்த்து வாழ்வது ஆரோக்கியவாழ்வு அல்ல. அறிவோமாக!
நாம் ஆடம்பரமாக வாழ முற்படுவதால் எமது உழைப்பு செல்வம் யார் யாருக்கோ, ஏதேதோ வியாபார நிறுவனங்களுக்கோ, மறைமுகமாகவும், நேரடியாகவும் சென்று கொண்டிருக்கின்றன. தமக்குத் தீமைதரும் மாயவலைகள் வீசப்படுவதைச் சனங்கள் உணர்வதாக த்தெரியவில்லை.
விளம்பரங்களுக்கும் காட்சிப்படுத்தலுக்கும் அடிமையாகும். மனோபாவத்தினால் அறிவைச் சிறை செய்து கொள்கின்றார்கள்.
எவ்வளவுதான் அறிவு, புத் திசாலித்தனம்
இருந்தாலும் குறுக்கு வழி லாபமீட்டலுக்காக நற்பண்பை
விரோதித்து தன்னை மாற்றிக்கொள்ள விழைபவர்கள்
இழந்துபட்டவாழ்வைச் சம்பாதித்தவனாகின்றனர்.இன்றும்
சிலர் ஒரு வெற்றியை எப்படியாவது கைப்பற்றி -83

Page 44
பருத்திபூர் 00. ஐபிறகுதஷ்
டுவதற்காகப் பரிசோதனையாகச் சில தகாத நடவடிக் கைகளில் ஈடுபடுவார்கள் இம்முயற்சி சாதகமாகிப் போனால், தொடர்ந்தும் தமது முன்னைய நல்ல இயல்பு களை, வாழ்ந்த முறைமைகளை அடியோடு மாற்றி, நிரந்தர மான மாறுதலான தோற்றத்தையே தம்முள் வைத்துக் கொண்டவராகின்றனர்.
இத்தகைய நபர்கள் இறுதியில் மக்கள் முன், சட்டத்தின் முன், நியாயங்களால் நிர்வாணப்படுத்தப்படும் போது நார் நாராய்க் கிழிந்து அழிந்தும் போவதுண்டு.
களங்கமின்றிப் பிறந்த குழந்தையை அதன் குண வடிவுடனேயே போஷித்து வளர்த்து அது கழிக்கும் ஒவ்வொரு வினாடிப் பொழுதுமே தன் நல்ல குணங்களு டனேயே வளர்க்கப்பட்டு வந்தால் எக்காரணத்திலும் குழந்தை தன்திறனில் தனது ஆளுமையையே நம்பிச் சிறப்புடன் வாழ்ந்துவரும். நற்குணங்களைக் கத்தரிக்கும் எந்த துர்ச் சக்திகளையும் எதிர்க்கின்ற ஆளுமைப்பண்பை இளமைப்பராயத்தினர்க்கு ஊட்டியேயாக வேண்டும்.
O உன்னை உன் உயிர்த் துடிப்புள்ள, நற் செய்கை
களை முற்றிலும் நம்புவாயாக!
ge: என்னை நான் நம்புவதால், என் செயலை நம்பியே
வாழுவதானால், எனக்குள் ஒரு கருமையைப்
- 84

நூண் நானேதானி
பொருத்த எச்சமயத்திலும் நான் உடன்பட வேமாட்டேன்!
O நல்லதைச் செய்ய நான் அச்சப்படாத காரணத் தினால், எனக்கு வேறு எந்த வடிவங்களும் தேவையில்லை. அச்சம் கொள்ளாதவன் தன்னையே முழுமையாக நேசித்தவனாகின்றான். தன்னை விரும்பாதவன் வேறு எவரையும் விரும்பமுடியாது. அப்படி விரும்பினால் அவனுக்குச் சுயமரியாதை, தன்னம்பிக்கை, என எதுவுமே குறைபாடாகவே அமைந்துவிடும்.
மேற்சொன்ன விடயங்கள் மூலம் நாம் சுயமாக, சிறப்பாக வாழவேண்டிய தன் அவசியங்களை உணர்ந்த வர்களாகின்றோம்.
வயது முதிர்ந்தவர்கள் எல்லோருமே பிற்போக்கான மனிதர்கள் அல்லர். இளவயதினர்கள் எல்லோருமே உணர்வு செயலில் துடிப்பானவர்களும் அல்லர்.
தமது மதிப்பார்ந்த செய்கைகள் மூலம் என்றும் புதியவடிவத்துடன் புத்தொளியுடன் கூடியஅக வெளிப் பாட்டினை உணர்த்தி, உலகில் தனக்கும், ஏனையவர் களுக்கும் முன்மாதிரியாக வாழுபவனே இளமை ததும்பும் நல்ல மனிதன். நாங்கள் என்றும், எப்போதும், புதிய
- 85

Page 45
aоўяў ац9. обўayу4 தோற்றத்துடன், அதனையே நிரந்தரமான வடிவத்துடன் கொண்டு வாழ்வாங்கு வாழ்வதுவே சிறப்பாகும்.
அகவடிவம் தூய்மையாக இருப்பின்புறவடிவத்தை உற்று நோக்க வேண்டிய தேவைஇல்லை. அனைத்து வடிவங்களும் ஏக இறைவன் படைப்பிற்கு அடங்குவது. உணர்க!
தினக்குரல்
ஞாயிறு மஞ்சரி 10-12-2006
-86 -

நீங்கள், நீங்களாகவே இருக்க விரும்புங்கள். அப்படியே வாழுங்கள். ஒவ்வொருவரின் தனித்தன்மையான சிறப்புக்கள் அவரவர்க்கே சொந்தமானது. கடவுள் உருவாக்கிய ஒவ்வொரு உயிர்ச் சிற்பங்களுமே மிக அற்புதமானவை. அவை ஒன்றுபோல் ஒன்றில்லை. அவைகளின் உருவங்கள் வேறாயினும் சேருமிடம் ஒன்றே. அவைகள் இறைவனின் திருவடியினைப் பெற்றே தீரும். மேலும் உங்களை நீங்கள் உணரும் போதே சுதந்திர புருஷர்களாக உங்களுள் உருவாகிக் கொள்கின்றீர்கள்.
"நான்”, எனும் சொல், அகங்காரத்தின் வெளிப் பாடாகத் தோற்றம் காட்டி நிற்பதாகச் சொல்லப்படினும் "நான்” எனச் சொல்பவரின் தனித்தன்மையினை இது சுட்டி நிற்பதனை மறுக்க முடியுமா? அதாவது அவன்,
-87 -

Page 46
பருத்திபூர் ப0. ஜலிற்றுதாரர் அவனாகவே இருக்க முடியும். நான், நானாகத்தான் உள்ளேன், வேறு ஒருவனாக நாம் உருமாற முடியாது.
ஒருவனது வாழ்க்கைக்கு அவன் தான் கதாநாய கனும், தன்னுள் முதன்மையானவனுமாவான்.
நல்ல நோக்கமின்றிப் பிறர் விடயத்தில் அத்துமீறி உள்நுழைய அவனுக்கு ஆத்மார்த்த ரீதியில், அல்லது பிறர் தூண்டுதலில் உள்நுழைய எவ்வித அதிகாரமும் இல்லை.
நாம் நல்ல விஷயங்களைச் செய்ய முனையும் போது கூடச்சில சமயம் சம்பந்தப்பட்டவர்களிடம் முன் அனுமதி கோர வேண்டியுள்ளது. இது இன்றைய யதார்த்த நிலையாகிவிட்டது.
ஆயினும் நற்போதனைகளைச் செவிமடுங்கள் அன்பர்களே! என ஞானிகள் மக்களிடம் மன்றாட்டமாகவும் கேட்டார்கள்.
என்னை, நான் உணர்ந்து கொள்ள நானே சம்மத மளிக்காத நிலை பரிதாபகரமானதே. தன்னை உணர்ந்து கொள்ள பலர் அச்சப்படுகின்றார்கள். தீக்கோழி தான் தப்புவதற்காக நிலத்தினுள் தலையை நுழைத்தல் போல,அல்லது பூனை கண்களை மூடியபடியே பால் குடித்தல்போல, அதாவது செய்கின்ற காரியத்தைப் பிறருக்குத் தெரியாமலே செய்வது என்பது தன்னைத்தான்
- 88

நூனி நூனே தானி ஏமாற்றும் செயலேயாகும். அதேவேளை தன்னைத் தேடாமல் பிறரைத் தேட விழைவது நகைப்பிற்கிடமான விடயமேயாகும்.
தன்னைப்பற்றிய கணிப்பீடுகளில் இருந்து நழுவித் தனக்குத்தானே சமாதானம் செய்வதும் அல்லது தன்னிடமே தன் உண்மை நிலையினை ஏற்காத தன்மையும் தன் ஆன்மாவையே குற்றமாக்கும் செயல் தான். ஆனால் நான் என்னைப்பற்றி அறிய வேண்டிய வனாவேன். பின்வரும் விடயங்களை எம்முள் சொல்லிக் கொள்வோமாக!
• நான் நானேயாவேன்.
• நான் பிறராக ஆகமுடியாது. .
• நான் இன்னும் ஒருவரின் நியாயபூர்வமான விருப்புகளுக்குள் தேவையற்று உள்நுழையும்போது அவர்கள் அதனை உளப்பூர்வமாக ஏற்பதுமில்லை. * உன்னை உணரும்போதே, நீ சுதந்திர புருஷனாக
உன்னுள் உருவாகிக் கொள்கின்றாய்.
எமது தவறுகளுக்குள்ளும், எம்மை அச்சுறுத்தும் துன்பங்கள், சவால்கள், பிரச்சனைக்குள்ளும் இருந்தும் நாம் எம்மை விடுவிக்க வேண்டும். தைரியமாக நாம் மேலே சொல்லப்பட்டவைகளுக்குமுகம் கொடுக்கப்பயப்படுவதனால் தொடர்ந்தும், பல விலங்குகளை வேண்டாமலேயே, எமக்குப் பூட்டிக் கொண்டிருக்கின்றோம். இது தேவைதானா?
- 89

Page 47
குத்தி 04ல. அவிழ்வரர்
தெளிந்த மனநிலையில் உள்ளவர்கள், சந்தோஷகர மாகவும், சுதந்திரமாகவும் வாழுகின்றார்கள். மனிதனைப் புறச்சூழலும் தாக்கும் அதேவேளை,தன் உள்ளேயிருந்தும் ஒன்றுஅல்லது பல,எதிர்க்குரல்கள் எழுந்த வண்ணமா யுமிருக்கின்றன. இவை இயல்பான நிகழ்வுகளே. நாம் விரும்பியபடி எம்மைச் சுற்றி எல்லாமே சாதகமாக நடக்குமா? இவை புறத் தாக்கம் என்று கூறலாம். எனக்கு, என் நிறைவுக்கு ஏற்றபடி கிடைக்கின்றதா, உனக்கு நீஎன்ன செய்து விட்டாய் என்று எம் இதயம் எம்மைச் சதாதட்டிக்கொண்டு, நச்சரிப்பது அகத்துள் எழும்பிரச்சினை களாகும்.
இவை எல்லாமே களையப்பட்டு, "நான்” பரிபூரண சந்தோஷமுடையவனாக மாறுவது எப்போது? ஆனால், நிச்சயமாக இந்த இன்னல்களில் இருந்து "நான்” விடுபட, ஆத்மார்த்தமாக, முயற்சி செய்தேயாகவேண்டும். இந்த நிலையில் இருந்து மனிதன் மீள முடியும். கட்டாயமாக மீண்டேயாக வேண்டும்.
பலர் கற்பனை வாழ்வில் பற்பல சுகத்தினைக் காண முயற்சிப்பார்கள். நான் மட்டும் அந்த நாட்டின் ஜனா திபதியாக மாறினால் என்ன? அல்லது நானும் நான் விரும்பும் கோடீஸ்வரர் ஆனால் எப்படியிருக்கும்? சிலர் வெளிப்படையாகவே சொல்வார்கள்"நான் அவரைப் போலவே மாறினால் சந்தோஷப்படுவேன்” என்பார்கள்.
VQ
- 90

நூனி நூனே தானி
ஒருவர் நடந்து கொண்ட நல்லவழியில் சென்று முன்னேறி நல்ல பதவிகளை பொருளைச் சம்பாதிக்கலாம். அந்த நினைப்பின்படி நடந்து சிறப்பாக முன்னேறினால் நன்று. ஆனால் அவராகவே, "நான்" ஆவது என எண்ணுவது அபத்தமானது. நீங்கள் ஒருவராக உருமாறினால் நல்லது என எண்ணிவிட்டீர்கள். அந்நபர் திடீர் என இறந்து விட்டார் என்றால், அவரது மரணம் உங்களுக்கும் ஏற்படுவதை விரும்புவீர்களா? அல்லது நீங்கள் குறிப்பிட்டு விரும்பிய அதே நபர் பற்பல பாவங்களைச் செய்தால் அதே பாவ வினைகள் உங்களை ச்சார நீங்கள் அனுமதிப்பீர்களா? மேலும் உங்களது விருப்புக்குரியவர் பெறும் அவமானங்களை ஏற்றுக் கொள்வீர்களா?
எனவே,
நீங்கள் நீங்களாகவே இருக்க விரும்புங்கள், அப்படியே வாழுங்கள். ஒவ்வொருவரின் தனித்தன்மையான சிறப்புக்கள் அவரவர்க்கே சொந்தமானது. கடவுள் உருவாக்கிய ஒவ்வொரு உயிர்ச்சிற்பங்களுமே மிக அற்புதமானது.அவை ஒன்று போல் ஒன்றில்லை. அவைகளின் உருவங்கள் வேறாயினும் சேருமிடம் ஒன்றே அவைகள் இறைவன் திருவடியினைப் பெற்றே தீரும்.
கோழைத்தனமான முடிவுகளும் எண்ணங்களும் இருள் சூழ்ந்த அந்தகாரநிலை என்று சொல்வார்களே! அந்த சூன்யத்தினுள் செல்ல முனைதல் பொல்லாத வழியு மல்லவோ?
-91 -

Page 48
மருத்திபூர் 04ல. ஹலீரலழர்
விழித்து எழுதல் என்பது உறக்கத்தில் இருந்து எழும்புதல் அல்ல. தூக்கத்தில் இருப்பதும் பின்பு துயில் எழுதலும் சாதாரண நிகழ்வு. எமக்குள் அறிவினை ஏற்றி சுய ஆளுமையினைப் பெறுவதே விழிப்பு நிலையாகும். அறிவும், ஞானமும் உள்ளவனே மனதின் உள்நிலையை உணரும் திறன் பெறுகின்றான். ஆன்ம ஞானம் என்பது எல்லாம் கல்லூரிகளில் சென்று கற்பது அல்ல.
"உன்னைத் தூய்மைப் படுத்து" என்பது, உன்னை நீ நல்நெறிக்குள் ஆட்சிப்படுத்துவாயாக!, உண்மையாக வாழு, அன்பினை, பக்தியினை, அற எண்ணங்களை நெஞ்சினில் நிறுத்து என்பதுமாகும்.
மேலும் நான் என்னை அறிந்து கொள்ளல் என்பது என்து கடந்தகால வாழ்க்கை பற்றிய கலங்கிய துன்பங்களைத், தோல்விகளை உணர்ந்து விழித்து எழுதலுடன் என்னையே நான் புதுப்பித்தலுமாகும். இந்த ஆன்ம விழியினால் ஆன புதுப்பித்தல் என்பது தூய மனிதனாக என்னைப் பிரகாசிக்க வைப்பதுடன் நான் நானாக வாழ முடியும் என்கின்ற ஆளுமையை என்னுள் வலுப்படுத்துவதுமாகும்.
நான் உண்மையில் மீண்டும் உயிர் பெற்றவ
னானேன் என்பதன் ஆர்த்தம் என் பழைய சூன்ய
நிலையில் இருந்தும் துன்பக்குவியல்கள், ஏக்கங்கள்,
தாபங்கள் முழுமையாக விடுபட்டு, "நான், நான் ஆகினேன், - 92

நூர் நானேதானி
களிம்பும், களைந்த சொக்கத்தங்கம் போல் தனி மூலகம் ஆயினேன் என்பதுமாகும். தூய்மையுள்ளவனே, "நான்” எனும் நல்ல மனிதனுமாவான்.
உயிர் வாழுதல் என்பது சும்மா இருந்து காலத்தைக் கழித்தல் அல்ல. உண்மையாக வாழுதலேயாம். மனித மாண்புடன் இனிய நோக்குடன் புனிதமாகப் புவியில் வாழ்வதே வாழ்வாகும்.
காலம் எனும் மாவிருட்சம் பலகிளைகளை விரித்தபடி உள்ளது. இதனுள் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே அடக்கம். வாழ்ந்துமுடிந்த காலங்கள் எல்லாமே அனுபவ பாடங்களாக மனிதனை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
காலத்தின் ஒவ்வொரு பகுதிகளுமே அனுபவக் குவியல்கள். காலம் எமக்குப் பல ஆதாயங்களை நல்கியது. தோல்விகள் வெற்றிகள் எல்லாமே கால வீதியில் நாம் பதிந்து முன்னேறும் சுவடுகள். இதன் ஆட்சியில் இருந்து நாம் விடுபட முடியாது. விலகி ஓடமுடியாது.
எமது சிந்தனைகள் செயல்திறனில் திரிபுகள் ஏற்படின் வாழ்க்கை நிகழ்வுகளில் துன்பம், தெளிவின்மை ஏற்பட்டு எம்மை முடக்கிவைக்கின்றன.
-93

Page 49
மருத்திபூர் பல. அதிர்வரர்
எமது கண்ணுக்கும் புலனுக்கும் புரியாத காரணங்க ளால் எமது உருவங்களே எமக்குப் பிடிக்காமலும் சுற்றி இருப்பவை துன்பத்தின் வடிவங்களாக, வடுக்களாக விஸ்வரூபமாகப் புலப்படும். இது ஒரு வரண்ட குருட்டு நிலைதான். சாதகமானவைகூடத் தெளிவற்றுப்போகும். கைத்தடியை எறிந்து கொடும் சர்ப்பத்தைக் கையில் ஏற்கின்ற நிலைதான் இது. இந்நிலை வேண்டவே வேண்டாம்.
தற்காலிக சுகங்கள் பொய்மையின் தோற்றத்தை நம்பியதால் ஏற்படலாம். எம் நிலை உணர்ந்து இதுதான் உண்மை வாழ்க்கை என்பதை அறிந்த பின்னர் வருகின்ற எல்லா அனுபவங்களுமே உள்ளத்தில் ஒளி கூட்டும் ஒப்பற்ற நிரந்தரமான சுகங்களேயாம்.
ஆழம்மிக்க அன்பினுள் பயணிப்பதைவிடச் சுகானுபவம் பிறிதுண்டோ?
O எனக்குள் நான் ஆனந்த மயமானவனானேன்
O எனக்குள் நான் தூய்மையினை ஏற்றுக்கொண்டமை யினால் காலம் எவ்வளவு கடப்பினும் ஆற்றல், கம்பீரம், துணிவு, வசீகரத்தில் பிரகாசமானவன் ஆயினேன்.
O நான் பிறர்பொருட்டு வாழ்ந்து கொள்ளத் தயாரான காரணத்தால் எனக்கு என எதுவும் இல்லை. எனது எல்லாமே, பிறர்க்கானது ஆயிற்று.
- 94

நூனி நூனே தானி
இந்த ஆன்ம சங்கல்பம் எம்முள் உருப்போட்டுக் கொள்ளும் நிலைக்கு எம்மை உருவாக்குவோமாக!
தன்னைத் தானே நொந்து கொள்ளும் மனிதன் தன்னுள் ஒரு ஆனந்த சுரங்கம் உள் இருப்பதைத் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றான். இது இங்கே இருக்கின்றது, எழுந்துநோக்கு என உணராதவரை தெளிந்த ஆற்று நீர் அருகே ஒருவன் தாகத்தால் தொண்டை வரண்டு நிற்பது போலத்தான் அவதியுற்று வெறுப்புடன் வாழ்ந்து கொண்டி ருக்கின்றான்.
• நான் வைராக்கியமுள்ள மன உறுதிமிக்கவன் என்னால் நல்லன செய்ய, முடியும்.
• நான் இறைவனின் உன்னத படைப்பு, எனவே எனக்கு அச்சம், மனக்கிலேசம், சந்தேகம் என எதுவுமே இல்லை. இந்த உறுதிமொழிகளை நாம் எம்முள் உள்செலுத்துவோம். எமது சிந்தனைகளைப் பல்திசை களில் வழி தடுமாறிச் செலுத்தாது ஒரேதிசையில் புலனடக்கத்துடன் வழிநடத்தியே தீரவேண்டும்.
என்னை நான் தேடித் தெளிவுபெற்றதன் மூலம் எல்லையற்ற அன்புப் பிரவாகத்தினுள் பிரவேசித்தவ னாகின்றேன். இந்த அகண்ட ஒளிபொருந்திய இன்ப சாகரத்தினுள் நான் நுழைந்த பின்பு "நான்" கரைந்து செல்கின்றேன். எல்லாமே "ஏகம்”, எல்லாமே "இறை” படைப்பு இறைவனின் சிருஷ்டியில் பேதமில்லை எவை
95

Page 50
aருத்தியூர் அல. விவரச் பொருட்டும் நான் அச்சப்படத்தேவையில்லை. அகங்கார உணர்வு என்னை விட்டு அகலுகின்றது. பணிவு மேலோங்குகின்றது.
நான், எனது என்கின்ற வேகம், ஆக்ரோஷம், அகம்பாவம் விலகிஓட "நாம் எமது சுற்றம் எல்லா உயிர்களும் என்னோடிணைந்தது. அவை மீது அன்பு செலுத்துகின்றேன்” என்ற தூய எண்ணமே இதயத்தினுள் நிறைந்து கொள்ளும்.
இத்தனை காலமாக என்னை நானே உணரா மையினால் "என்னை விட்டால் யார் உளர் எனக்கு எல்லாமே தெரியும், யாருமே எனக்குச் சொல்லித் தரவேண்டியதில்லை” என்ற மமதையினால் எத்தனை ஜீவன்களுக்குத் துன்பங்களை ஏற்றி இருப்பேன்.
இந்த துன்பவியல் வாழ்வுகள் என்னை நான் உண்மையாக தேடியமையினால் தெய்வீக ஆற்றலினால், ஆளுமையினால் தொலைந்து ஒழிந்தே போயிற்று.
மேலும்
இறை அருளினால் தன்னிலை அறிந்தவர்களின்
பணி அனைத்துமே தெய்வீகக்கருமம் ஆகின்றது. வெறும்
ஊதியம் கருதி உடல் தேவைக்கும், பதவிக்கும்,
அந்தஸ்திற்கும் தேடலுக்குமான புறவாழ்வின் புளகாங்கித
-96

நூனி நூனே தானி உணர்வுகள் அற்று எல்லாமே தெய்வீகத் திருப்பணியாகக் கருதும் திறன் உருவாகின்றதே!
செய்கருமங்களில் அதீத லயிப்பு, ஈடுபாடு, சுற்றி இருப்போர் நாடி வரும்போது உதவிசெய்யும் மனப்பாங்கு எல்லாமே தெய்வம் கொடுக்கும் அருள் கட்டளை என்ற உணர்வுடனேயே நான், எனது, என்ற மமதை அற்றவர்கள் கருமங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
புதுப்பிக்கப்பட்ட ஒரு ஆன்மா எழுச்சி பெற்றதும் அது மீண்டும் துயில்வதற்குச் சந்தர்ப்பம் தேடுவதில்லை. அது இறை வசமாகின்றது. நல் எண்ணங்களை இதயத்தில் சதா பூக்கச் செய்தவன் அதன் திவ்ய புனித வாசனையினை முகர்ந்த வண்ணமேயுள்ளான். கடந்தகாலக் கசங்கிய நினைவுகளுக்கு பூரணமாகஇறை ஆசியுடன் விடை கொடுத்தபின்,எழும் எழுச்சிநிலையானது சொல்லிடற்கரிய பூரணமான திவ்ய ஞானநிலையேதான்.
சந்தேகங்களும், பொய்மைகளும், சூதும் உள்ள நிலையில் இருந்து அவைகளையப்பட்டவன், பிறவி எதற்காக எடுத்தோம் என்கின்ற நல் அறிவினைப் பெற்று விடுகின்றான்.
நித்திய அமைதி பெறுதல் என்பது வெறும் பணம், பூமி, பொன்பெறுதல் அல்ல. மேலாம் இரக்கம், அன்பு, பக்தி, உயிர்கள் மீதான காருண்யம் என்பதனை
அகத்தினுள் பாய்ச் சுதலேயாம். இனிமை, சுவை

Page 51
பகுதி மடிவந்துதல் பொருந்திய ஒளட்தமான இவை தருவது ஆன்மாவிற்கான அமிர்தமாம் ஞான மாமருந்தே என அறிக!
நாம் ஒருவர்க்குக்கொடுக்கும் களங்கமற்ற அன்பு அவர்களை எம் போல் அன்புமயமாக்கலுக்கு இட்டுச் செல்வதேயாம்.அதாவது நீ கொடுக்கும் அன்பினால் கட்டுண்டவர்கள் அதனையே அவ்வண்ணம் பிறருக்கும் அளிப்பார்கள்.
இவ்வாறே இந்நிகழ்வுகள் ஒருவர் மீது ஒருவராகப் பல்கிப்பெருகி இந்த ஊர், இந்த தேசம், இந்தக் கண்டம் என வியாபித்து சர்வ லோகங்களிலுமே அன்பு சஞ்சாரம் செய்ய ஆரம்பித்துவிடும். இது நாம் வாழும் பூமியைமட்டும் மையப்படுத்தும் ஒரு முயற்சி அல்ல.
அதற்கும் மேலாம் பிரபஞ்ச வெளியினுள் அன்பு சர்வசாதாரணமாக அதன் ஆட்சி செலுத்தப்பட ஆரம்பிக்கும். எனவே நீ உன்னில் இருந்து இந்த அரும்பணியை ஆரம்பிப்பாயாக!. உணர்ந்து கொள்வாய் நெஞ்சமே!.
இந்நிலை இந்த திவ்ய நிலை உருவானால் நான், எனது என்கின்ற உச்சஸ்தானத்தொனி எங்கிருந்து எழப்போகின்றது? நானே கரைந்தபின் என்னுள் எழுவது இறைவனின் திவ்ய அருட்பிரசாதமான அவன் அருள் பொருந்தியநல் எண்ணங்களான அன்புமட்டும்தான்.
-98 -

நூணி நூனே தானி நாம் எம்மை அன்பான திவ்ய இறைவனின் அதி விருப்பத்திற்குரிய நபராக ஆக்கிக்கொள்ளவேண்டும். எல்லாமே இறைவனின் அருட்கொடை என உளப்பூர்வமாக உணர்ந்தபின்,எனக்குள்ள தெல்லாம் அவனுடையதன்றோ! நயம்பட இதனை உணர்ந்தால், “நான்” என்பது ஏது?
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 06-11-2006
- 99

Page 52
பருத்திபூர் 00. லுயிர்வரர்
"பணிவு" அற்றவன் தன்னிலை புரியாதவனாகின்றான். தன்னைப் பற்றிய மேலோங்கிய உணர்வினால், தவறான மதிப்பீட்டினால், தான் யார், தனது தகுதிஎன்ன என்பதையும் புரிந்து கொள்ள மறுக்கின்றான். அத்துடன் தன் முன்னே நிற்பவர் யார், அவரது செயல்திறன் என்ன? சமூகத்தில் அவரது அந்தஸ்து என்ன என்பது பற்றியே அறியாதும் விடுகின்றனர். பணிந்து நடக்கும் போதுதான் நாம் உயர்ந்து நிற்க முடியும் என்பதனை உணர்ந்து கொள்வோம். ஆயுதங்கள் செய்யும் அட்டகாசங்களை எல்லாம் சாதாரணமான அடக்கமான பணியும்,
பணிவும் அடக்கி, ஒடுக்கி விடும்.
"பணிவு” என்பது தலைகுனிவை ஏற்படுத்துவது அல்ல. செருக்கு நீக்கி எவரையும் மதிக்கும் இயல்பினைச் சுட்டி நிற்பதாகும். பணிவு ஒழுக்கத்தின் ஆணி வேர் போன்றது. ஆணவம் இல்லாத நிலை என்பது சாமான் யமான நிலையிலும் மேம்பட்டது அல்லவா?
V
- 100
 
 
 
 
 
 
 
 

நூனி நூனேதானி
ஒருவரை மதிப்பது என்பது, அவர்களுக்கு நாம் வழங்கிக் கொண்டிருக்கின்ற உயர் கெளரவமும் ஆகும்.
என்னை விட வேறு ஒருவரும் உயர்ந்தவர் இல்லை என்கின்ற மமதையினால், சிலர் தாம் யாருக்குமே தலை வணங்குவதில்லை எனச் சொல்லிக்கொள்வார்கள். நல்லோரைப், பெரியாரை வணங்கிப் போற்றுதல் எம் கடன். துர்மதியாளரைப் போற்றித் துதி செய்யுமாறு எவரும் கூறுவதில்லை.
எனவே நாம் யார் யாருக்கு மதிப்புக்கொடுத்து வருகின்றோம் என்பதை முதற்கண் புரிந்துகொள்வோமாக. ஆயினும் மானுடர் எவரையும் வெறுத்து ஒதுக்குதல் எம் பணியல்ல. நல்லோர் அல்லாதோரையும், நல்லவர் வல்லவர் ஆக்குதலே மானுட தர்ம நெறியுமாகும். "பணிவு”
பணிவு கொண்டவர்களை உலகம் ஏற்கின்றது. எனவே பணிவாக நடப்பவர்களின் நல் ஆசியினால் எமக்கு ஆத்மபலம் ஏற்படுகின்றது. பலரது அன்பான அரவணைப்பு, ஆசிகளினால், எமது செய்கருமங்களில் மனோவலிமை மேம்பட்டு நிற்பதனால் சித்தி உண்டாகின்றது. இந்நிலையே எமக்கு ஆற்றல், துணிச்சலை ஏற்படுத்துகின்றது.
பிறரிடம் உதவி கேட்பதற்காகவே சிலர் பணிவுடன்
நடந்து காட்டுவது. இது உண்மையான நடத்தை அல்லவே அல்ல. வெறும் நடிப்பேயாகும். தன்னையும், பிறரையும்
- 101 -

Page 53
பருத்திபூர் 00.அறிவதுதர் ஏமாற்றும் செயல்பாடுதான். "இவரால் எனக்கு என்ன உதவி கிடைக்கப் போகின்றது. நான் ஏன் இவரை மதிக்கப் ‘போகின்றேன்"என்றுவெளிப்படையாகக்கூறுபவர்களும் உளர். காரியம் ஆவதற்கு மட்டும் கும்பிட்டு, தலைசாய்ப்பவர்கள் தான் மற்றவர்கள் பிறர்க்குச்செய்யும் கெளரவத்தையே கேலிபேசுவர். இத்தகையோர் யாருக்கும் தெரியாமல் ஒருவரிடம் உதவி கேட்கும் போது இவர்கள் நடந்து கொள்ளும் வழிமுறைகள் வெட்கக்கேடானவையே.
எல்லோருமே சமமானவர்கள் சமன் என்கின்ற பொது நோக்கு அற்றவர்கள் தான் பணிவு என்பதன் அர்த்தம் புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிறு துரும்பும் பல்குத் உதவும்” என்பது பழமொழியாகும்.
பெரியோரைப்பணிந்து நடத்தல் சிறியோரின் கடனாகும். அவ்வண்ணமே சிறியோருக்கும் உரியகெளரவம் அளித்தல் பெரியோரின் பண்புமாகும். நாம் சிறியோர் என வயதில் குறைந்ததன் காரணமாக எடைபோடுதல் நல்ல தல்ல. இன்றைய நவயுகத்தில் சின்னஞ்சிறு சிறார்கள் கூட மதிநுட்பத்தில் வல்லோராக இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் கேட்கும் கேள்விகள், சிந்தித்து அவர்கள் எம்மிடம் கேட்கின்ற சந்தேகங்கள், சிலவேளை எம்மைப் பொறுமை இழக்கச்செய்யும். -
ஆனால் நாம் சற்று எமது உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்தி அவர்களது ஐயங்களை ஆராய்ந்துபார்த்தால்
மிகப் பெரிய உண்மைகள் கூட எமக்கு வெளிச்சத்திற்கு - 102

நூனி நூனே தானி
வந்துவிடும். சிறுவர்களின் புலனறிவு நுட்பமானது எதனையும் கிரகிக்கவல்லது.
நாம் நடந்து கொள்ளும் பழக்கவழக்கங்களில் திரிபு ஏற்பட்டு அவை சமூகத்திற்கு ஒவ்வாது எனத்தோன்றினால் நாம் அதனை விலக்கியேயாக வேண்டும். கண்ட கண்ட எதையாவது பார்த்த மாத்திரத்தே கிரகித்துவிடும் சிறார்களை நாம் ஒழுக்கமானவர்களாக நேர்வழியில் மாற்றி விட வேண்டும். பெரியோரை மதித்து நட, பெற்றோரை, ஆசிரியர்களைப் பணிந்து செயலாற்று எனச் சிறு வயதிலேயே அவர்களுக்குத்தெளிவுடன், அமைதியாக, அன்புடன் போதித்துவரல் வேண்டும்.
பணிந்து நடக்கும் போதுதான் நாம் உயர்ந்து வருவதாக அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்வோம். பணிவு அற்றவன் தன்னிலை புரியாதவனாகின்றான். தன்னைப் பற்றிய மேலோங்கிய உணர்வினால், தவறான மதிப்பீட்டினால் தான்யார், தனது தகுதி என்ன? என்பதையும் புரிந்து கொள்ள மறுக்கின்றான்.
அத்துடன் தன் முன்னே நிற்பவர் யார்? அவரது செயல்திறன் என்ன? சமூகத்தில் அவரது அந்தஸ்து என்ன என்பது பற்றியே அறியாதும் விடுகின்றனர். சில நபர்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கலாம். அல்லது பணவலு, உறவுகள் அற்றவர்களாகவும் இருக்கலாம்.
- 103

Page 54
மருத்திபூர் 040. அரவகுழர்
ஆனால் எல்லோருக்குமே ஏதோ ஒரு விசேட தகுதிகள் எமக்குத் தெரியாமலே இருக்கலாம் அல்லவா? எனவே எவர் முன் நாம் நிற்கின்றோமோ அவர்களை மதித்து நடப்பதில் எமக்கு என்னகுறை வந்துவிடப் போகின்றது?ஆரம்பத்திலேயேகண்டபடி பலருடன்பழக த்தெரியாது முரண்பட்டு அவமானப்படுதலைவிடுத்து எவருடனும் கண்ணியமாகப் பழகுதலையே ஒரு பயிற்சியாக மேற்கொண்டால் என்ன?
இன்று அரச,தனியார்நிறுவனங்களில், நிர்வாக ங்களில் பணிவு இன்மையால் பல நிர்வாகச் சீர்கேடுகள் நிலவுவதாகக் கூறப்படுகின்றது.
நிர்வாகிகள் தமது நிலைக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களை மதிப்பதில்லை. அவ்வாறே ஊழியர்களும், நிர்வாக உயர் அதிகாரிகளை மதிப்பதில்லை. இதில் வேடிக்கை என்ன வெனில் ஊழியர்களில்கூட தமது பதவி நிலைத்தரத்தில் சிறு வேறுபாடுகள் தோன்றிடினும் தம்மோடிணைந்த சக அலுவலர்களை மதித்துப் பணிவுடன் நடப்பதில்லை. ஓரிரு வருடங்கள் தொழிலைச் செய்ததுமே தாம் முழுமையான அனுபவம் பெற்றுவிட்டதாகத் தவறாக உணர்ந்து, தாம் யாரிடம் பயிற்சிபெற்றார்களோ அவர்க ளிடமே பணிவாக நடப்பதுமில்லை.
இந்நிலை காரணமாகச் சில முதுநிலை அனுபவஸ் தர்கள். தமக்குக் கீழ் பணியாற்றும் கனிஷ்ட ஊழியர்களுக்கு தொழில்பற்றிய நுட்பமர்ன விஷயங்களைச்சொல்லிக் கொடுக்கத் தயக்கம் காட்டிவருகின்றனர்.
- 104

நூனி நூனே தானி பாடசாலையில் கல்வியில் மட்டும் குரு, சிஷ்ய முறை என்று நாம் கூறமுடியாது. நாம் எங்கு தொழில் செய்கின்றோமோ அங்கு நாம் பெறும் தொழிற்பயிற்சி காரணமாகவும் நாம் அங்கு பெறுகின்ற அனுபவத்திற்குக் காரணமானவர்களையும் குருவாகவே ஏற்றுக்கொண்டு, பணிவுடன் செயலாற்றுவோமாக!
அதேபோல் தமக்குக்கீழ் தொழில் புரிபவர்களைத் துச்சமாகக்கருதாது செயற்படுதலே அதிகாரிகளின் தலையாய கடனாகும். ஏனெனில் இருசாராரின் ஒத்துழைப்பு நேயப்பாடு இன்றேல் எந்த நிறுவனமும் உருப்பட்டுவிட முடியாது அல்லவா? பணிவு இன்மையால் ஏற்படும் கருத்து முரண்பாடுகள் எந்தவிதத்திலும் நிர்வாகத்தின் சுமுகமான செயல்பாட்டிற்கு உதவுவதாக அமைந்துவிடாது.
ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதுவே வாழ்க்கை. தங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் செய்துவிடவில்லை என்பதற்காக மனம் சலித்து பிறரைநொந்துசமூகத்தினையே பழிவாங்குவது போல் நடந்தும் தமது தவறுகளை உணராமலும் இருக்கின்றார்கள். இத்தகையவர்களை யாராவது வலிந்து சென்று பார்த்தாலும் கூட முகம் மலர வரவேற்க மாட்டார்கள். வெறுப்பாக நடந்து கொள்பவர்கள் ஈற்றில் சமூகத்தில் பொறுப்பு அற்றவர்களாகவே மாறிவிடுகின்றார்கள்.
- 105

Page 55
பருத்திபூர் (40. ஆயிரவரர்
இன்றைய மாணவ உலகம் பணிவு என்கின்ற நற்பண்பினை மறந்து விட்டார்களோ எனஎண்ணத் தோன்றுகின்றது. ஆசிரியர் மாணவர்கள் உறவுகளே வர்த்தக உறவுபோல் ஆகிவிட்டது. காசு கொடுத்தால் கல்விபெறலாம் என்றாகிவிட்டது. பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டு வலியுறுத்தப்படுகின்றது. ஆசிரியர்களில் சிலர் கண்ணியக் குறைவாக நடக்கின்றார்கள், அவர்கள் மாணவர்களின் மன இயல்பு அறிந்து அவர்களின் திறனை வளர்ப்பதில்லை என்றும் குறை கூறப்படுகின்றது.
முற்காலத்தில் மாணவர்கள் தங்கள் குருவை நம்பியே பாடம் கேட்டுவந்தனர். இங்கு கீழ்படிவு என்கின்ற பண்பே முதன்மைப்படுத்தப்பட்டு வந்தது. மன்னரின் புதல்வர்களும் சாதாரண குடிமகனின் பிள்ளைகளும், ஆச்சிரமங்களில் குருவிற்குப் பணிவிடைசெய்தே கல்வி கற்றதாக நாம் படித்திருக்கின்றோம்.
ஆனால் இன்று பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலைகளை மட்டும் நம்பி இருப்ப தில்லை. வெறும் யந்திரமயமாகவே கல்வியை மூளையில் நிரப்புகின்றனர். ஆத்மார்த்தமாக, குருவான ஆசிரியர்கள் பாடங்களைப் போதிக்கின்றார்களா?
அனுபவ ரீதியிலான பாடம் புகட்டல் எங்கே நடக் கின்றது?அன்போடு இசைவாக மாணவர்கள் - 106

நூர் நானேதானி
பராமரிக்கப்படுகின்றார்களா? எங்காவது பிரத்தியேக வகுப்பில் படித்துச்சித்தி எய்தினால் போதும் என்றாகி விட்டது. பசுமரத்து ஆணிபோல் நிலைத்திருக்கும் கல்வியை மூளையில் செலுத்தும் ஆசிரியர்தொகை அருகி விட்டது. ஆனால் கல்வி கற்றபட்டதாரிகள் தொகையோ பெருகி வருகின்றது. ஒழுக்கம் என்கின்ற அத்திவாரம் இல்லாத கல்வியால் என்ன பயன்?
பணத்தைப் பெற்றும் பாடங்களைத் திணிக்கும் கல்வி நற் பிரஜைகளை உருவாக்குமா? மேலும் கண்டபடி தண்டிப்பதே தன் கடன் என எண்ணும் ஆசிரியர்களால் கல்வியை எப்படி ஊட்ட முடியும்?
உண்மையாக தார்மீக ரீதியில், நல் உணர்வுடன் செய்யும் கடமைதான் ஏற்கக்கூடிய ஒன்றாகும். இந்த ஆசிரியரால் எனக்கு என்ன என எண்ணும் மாணவனிடம் பணிவை எப்படி எதிர்பார்க்கமுடியும்? தன்னையும், தன் மாணவர்களையும் உருவாக்குதலே நல் ஆசிரியர்களின் கடனாகும். நல்ல பண்பான, பணிவான மாணவர்களை உருவாக்கும் ஆசான்கள் மலை என உயர்ந்து உலகில் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இத்தகைய நல் ஆசான்கள் இன்னமும் இருப்ப
தால் தான் மாணவர்கள் அவர்களைக் கடவுள்போல்
போற்றியும் வருகின்றனர். பணிவான மாணவனை
ஆசிரியர்கள் ஆசீர்வதிப்பதால் அவனது வாழ்வு பலபடிகள்
மேலோங்குகின்றது. அத்துடன்அதே மாணவன் தன் - 107.

Page 56
பருத்திபூர் பல. ஆயிற்றுருதஷ் சந்ததியையும் தன்னைப் போல் வழிநடத்தியும் கொள் கின்றான்.
மேலதிக செல்வம் புகழ் சேர்ந்து வரும் போது மனிதன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவனாகின்றான். சிலவேளை மனிதன் தன்னையறியாமலேயே தன்நிலை இழக்கும் சந்தர்ப்பமும் வந்துவிடுகின்றது. பணமும் புகழும் மிகுதியாக வந்து சூழ்ந்து கொள்ளும்போது இவர்களைச் சுற்றி ஒரு குழு வந்து சூழ்ந்தும் கொள்கின்றது.
இத்தருணத்தில் சிலர் பழைய முகங்களை மறந்து புதுமுகங்களைப் பெரிய உறவாகக் கருதுவதனால் பழைய நல்லவர்களை,உறவினர்களைக்கூடமறந்து அவர்களை க்கண்டாலும் பணிந்து நின்று வணங்கவும் மனம் இடம் கொடுக்காது நடந்துவிடுகின்றனர்.
தாங்கள் நினைந்ததைச் சாதிப்பதற்காகவேமுரட்டுப் பிடிவாதமும், மூர்க்க குணம் கொண்டவர்களால் "பணிவு" என்கின்ற நல் இயல்பையே சில சமயம் எதிர்பார்க்க முடியாமல் இருக்கின்றது. எதனையும் கண்டிப்பாக, பலாத்காரமாக, துச்சமாக ஏசியும் நடந்து கொள்வதும் மிரட்டும் பாவனையில் நடத்தையில் கொடுரமாக இருப்பதாலும் காரியங்கள் எல்லாமே வெற்றியாக அமைந்து விடாது. பணிவுடன் நடந்து கொண்டால் மிக இயல்பாக பிரச்சினைகள் ஏதுமின்றி எதனையும் சாதித்துவிட முடியும்.
- 108

நூண் நூனே தானி
எங்கள் கருமங்களை எங்கள் நலனுக்காக நாம் வெற்றிகரமாக ஆக்கிக்கொள்ள நாம் திமிருடன் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்ளலாமா? இந்த அத்துமீறிய அப்பட்டமான சுயநலமிகுதி,மற்றவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும். இதனால் எழுந்த குரோத உணர்வால் எதிர்பார்க்கும் உதவிகள் அவை மிக எளிதாகக் கிடைக்க இருந்தாலும் அது கைநழுவியே போய் விடுமன்றோ!
"பணிவு செலுத்துவதானால்எதிரி உருவாகா மலேயே போகின்றான்". இந்தத் தன்மை எதிரியின் காலடியில் விழுவதுஅல்ல. உண்மை நிலையைத் தெளிவுபடுத்தவும் தேவையற்ற ஐயங்களை எவர்க்கும் உருவாக்காமல் இருக்க நாம் எம்மைப் பற்றிய சரியான தெளிவான நிலையை, எம்மை எதிரி எனக் கருது வோர்க்குத் தெரியப்படுத்தியே ஆகவேண்டும். எனவே எடுத்த எடுப்பிலேயே எம்முன் இருப்பவருடன் ஆக்ரோஷமாகப் பேசி என்ன பயன் வந்து விடப் போகின்றது?. கூடியவரை எதிரியை உருவாக்காமல் இருக்கப் பெருமுயற்சி எடுப்போமாக!
நீங்கள் யாரிடமாவது அன்புடன் பணிவாக ஏதாவது ஆலோசனை கேட்டுப்பாருங்கள். உங்கள் மீது அக்கணமே அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு விடும். பார்ப்பதற்கு சிங்கம் போல சற்றுமுரட்டுத்தனமாகத் தோற்றம் காட்டும் சிலருடன் பணிவாக அன்பாக உதவி கேட்டுப்பாருங்கள்.
- 109

Page 57
பருத்திழ் 00.9ர2தர் நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு அவர் மென்மையான நபராகிவிடுவார். எல்லா விடயங்களுமே நாம் அணுகும் விதத்திலேயே சாதக,பாதக விடயங்கள் தங்கி உள்ளன. புரிந்து கொள்வோமா?
நல்லவர்கள் பெரியோர் சிறியோரைப்பணிந்து அவர்களுக்குச் சேவைசெய்பவனே வீரன் ஆவான். ஆயுதங்கள் செய்யும் அட்டகாசத்தை சாதாரண அடக்கமான பண்பு அடக்கி ஒடுக்கிவிடும். தேவைப்பட்ட காரியங்களைத் தேவையான தருணத்தில் பொறுமையான பணிவு எமக்கு ஆக்கித்தரும்.
கீழ்ப்படிவின்மையால் எமக்கான வரவுகள் நிராகரிக்கப்படும். நிதான புத்தியுடையோரை வாய்ப்புக்கள் வீடு தேடிவந்து கூட்டிச் செல்லும். பணிவு உள்ளவன் தன்னையே வழங்குவதற்குச் சித்தமாயிருப்பதால் உலகம் அவனிடமே சேர்ந்துகொள்கின்றது.
திருமணம் பேசச்செல்லும் பெண் வீட்டாரோ மாப்பிள்ளை வீட்டாரோ தமது பேச்சில் இங்கிதமின்றி அதிகாரதோரணையில் நடந்தால் காரியம் சரிப்பட்டுவருமா? என்னதான் மேலதிக அந்தஸ்து பதவி, பணவசதிகள் இருந்தாலும் கண்டபடி வார்த்தைப் பிரயோகம் செய்தால் எந்த விடயமும் கெட்டுவிடும். ஆனால் காரியத்தில் குறியாக இருக்கும் அனுபவஸ்தர்கள் பணிவாக நடந்து எந்தப் பிரச்சினைகளையும் மிக எளிதாக வென்றுவிடுவர். எனவே தான் "நல்ல காரியங்கள் நடைபெறும்போது நல்ல
- 110

நூனி நானேதான் மனிதர்களையே துணைக்கு அழைத்துப்போ” என்கின் றார்கள். இவர்கள் பணிவு என்பதன் சக்தியை நன்கு உணர்ந்து நிதானமாக எதனையும் எளிதாகப் புரிய வைக்கும் திறமைசாலிகளுமாவர்.
தொழில் தேடி நேர்முகப் பரீட்சைக்குச் செல்லும் போது பரீட்சார்த்திகளின் பொறுமையைச்சோதிக்கும் பொருட்டும் பற்பல சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்பார்கள். நிதானமும், பணிவும் உள்ளவர்கள் கோபமின்றி பதில் வழங்குவர். “தெரிந்த சாதாரண கேள்வியை ஏன் கேட்கின்றீர்” என பரீட்சார்த்திகள் திருப்பிக் கேட்கலாமா? அப்படிக்கேட்டால் என்ன நடக்கும்? வாழ்க்கையில் எல்லை மீறிய கோப உணர்வுகள் அடக்கி ஆளப்படல் வேண்டும் இல்லாவிடில் கோபங்கள் எம்மை வென்றுவிடும். "பணிவு உள்ளவனிடம் கோபம் தங்காது.”
வெறும் முகஸ்துதி செய்து பணிவானவர்போல் நடித்துக் காரியம் ஆனதுமே உதவி புரிந்தவர்களை உதறிவிடுபவர்களும் உளர்.இவர்களைப் போன்றோ ராலேயே உண்மையான உதவி நாடுவோரைப் பலரும் கண்டு கொள்ளாமல் உதாசீனம் செய்தும் விடுகின்றனர்.
ஆயினும், சாதாரணமாக எவராவது ஒருவரிடம்
தேடிவரும்போது ஏதாவது உதவிகேட்கத்தான் வருகின்றார்
என எண்ணி விலகி நடந்தால், காலப்போக்கில் இவர்
நடத்தை கேலிக்குரியதாகி இவரிடம்பழகுவதை எல்லோரும்
நிறுத்தியே விடுவர். தங்களைப் பற்றியே எந்நேரமும் - 111 -

Page 58
பருத்திபூர் 00. ஆயிற்றுதாரர் பெருமையாக எண்ணும் சில பேர்வழிகள் யாராவது தம்முடன் பேசினால் கூட அது ஏதோ சுயநலத்துடன் தம்மை அணுகுகின்றார்கள் என்றே சொல்லிக்கொள் வார்கள்.
நாம் பகையை சதாஎண்ணி மனம் குமைந்து பகைமையை வளர்த்து வந்தால்.அந்தப்பகையை மறந்து எம்முடன் சேர எண்ணுபவர்கள் கூட நிரந்தரமாகவே விலகி விடுவர். நல்ல பெரியோரிடம் சந்தர்ப்பவசத்தில் மனக்கசப்பு ஏற்படின் உடன் எமது கசப்பு எண்ணத்தை மாற்றி அவர்களுடன் பணிவன்புடன் மீண்டும் பழகியே தீர வேண்டும். அன்புள்ளங்களை மறத்தலும், ஒதுக்கலும் நெஞ்சத்தில் நிலை நிறுத்தி வைக்கக்கூடிய பண்பேயல்ல.
நாம் பணிவினைக் காட்டுவதில் கூச்சப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை. இது பரந்த உள்ளத்தின் உண்மையான சுய வெளிப்பாடு.
"நான் எல்லோரிடமும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்” என்பதே எமக்கு நாம் சூட்டும் மதிப்புமிக்க மகுடமும் ஆகும். இந்த எண்ணம் களங்கமற்று உண்மையான வெளிப்பாடாகவும் அமைய வேண்டும். எல்லோரையும் வென்று கொள்ளல்" என்பது அடக்கமான பணிவு எனும் பண்பினால் மேலான அன்பினால் அவர்களைப் பரந்த இதயச்சிறையினுள் ஆட்சிப் படுத்து வதேயாம். அன்பைக்கொடுத்து அகிலத்தை வளைத்துப் பிடிப்போமாக! R
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி19-11-2006
VIS - 112

நூனி நானேதானி
மனம் எனும் மாயசக்தி
மனதை ஆட்கொள்ளத்தெரியாமல் புலன்வ்ழிபுகுந்தால்"வாழ்வு”என்பதிே "தாழ்வுநிலையாகப்போய்விடுமன்றோ?சாதனைபடைக்க மனம்எம்முடன் இணைதல் வேண்டும். மனது ஒருநிலைப்படுதல் அவசியம்."தாழ்வுமனம் ,பயஉணர்வினையும் சிந்தனைச்செறிவின்மையும்உண்டுபண்ணிவிடும். இவை மனிதனது சுய இயக்கத்தினையே ஸ்தம்பிக்கச் செய்து விடும். தன்னால் எதுவுமே இயலாது எனத் தனக்குள்ளே தானே சொல்லுவது மீளமுடியாத தொல்லைகளை அள்ளி வீசும். மனம் எனும் மாய சக்தியை நாமே நல்ல முறையில் இயக்க ஆரம்பித்தால், அதுவே விஸ்வரூபமாய் கிளந்தெழுந்து எம்மைச் சாதனையாளராக மாற்றிவிடும். மலரனைய வாழ்விற்கு உரம் கொண்டநெஞ்சு வேண்டும்.
“மணம்” ஒரு மாயக் கருவி போல் செயல் படுகின்றது என்பதில் உண்மையில்லாமல் இல்லை. மனம் மனிதனை முன்னிலையில் உயர்த்தும், வலுமிக்க, புலனுக்குப் புதிரான யந்திரம்தான். இது எண்ணங்களின் தொகுப்பு அல்லது குவியல்கள் என்றும் சொல்லலாம்.
- 113

Page 59
பருத்திர் 04ல. விர
எனினும், மனதை ஆட்கொள்ளத் தெரியாமல் புலன்வழி புகுந்தால் வாழ்வு என்பதே தாழ்வுநிலையாகப் போய்விடுமன்றோ? திண்ணிய மனதுஇருந்தால் எண்ணிய கருமம் நிறைவேறும். இதில் எவ்வித சந்தேகமும் எமக்கு வேண்டவே வேண்டாம். : . .
மனசின் வேகம் சொல்லி அடங்குமோ? மனதை ஓரிடத்தில் நிறுத்தி எம் சக்தியைத் திரட்டி, எமது இயக்கத்தை ஆரம்பித்தால்,எமது அசுரபலம் அப்போது தான் விஸ்வரூபம் எடுப்பதைக் கண்டுகொள்வோம். உடல் பலம் குன்றினாலும் மனவளம் குன்றும். தேகத்தை வாடாமல் பார்த்துக்கொள்வது எமது கடமை.
தொடர்ந்து தேவையின்றி கண்டபடி பேசுவதால் எமது ஆன்ம சக்தி வலுக்குன்றும், வேண்டத்தகாத எண்ணங்களை நீக்கும் வல்லமையினை நாம் பெற்றேயாக வேண்டும். சாதனை படைக்க"மனம்" எம்முடன் இணைதல் வேண்டும்.
மன வலிமையுள்ளவர்களுக்கு இது கைவந்த கலையாக இருக்கின்றது. நல்லவைகளைக் களைந்து, பொல்லாதவைகளை இதயத்துள் செலுத்தினால், உருப்படியான செயலூக்கத்தை எவ்விதம் பெறமுடியும் ஐயா! மனித மூளையின் செயல், கிரகித்தல், பரிணாமம் விசாலமானதுதான்.எனினும் ஒரு குடம் பாலுக்கு ஒருதுளி விஷத்தை ஏற்றிவிட்டு, எல்லாமே எனக்கு வெற்றியாக
- 114

நான் நானேதானி
அமைய வில்லையே எனப் பிரலாபித்தால் என்ன பலன் வந்துவிடப் போகின்றது.
மேலும், எண்ணங்களில் ஏற்படும் திரிபு பற்றிச் சற்றுநோக்குவோம்,
ஒட்டப்பந்தயம் ஒன்றில் வீரர்கள் ஓடுவதற்கு ஆயத்த மாகின்றனர். எல்லோரும் மிகுந்த ஆவலாகவும் எதற்கும் தயார் என்கின்ற நிலையில் உள்ளனர். ஒட்டப்போட்டி ஆரம்பமாகின்றது. இந்தக் கணத்தில் ஒரு திறமையான வீரர், ஏதோஒரு காரணத்தினால் தன் மனதை ஏதோ ஒரு திசையில் செல்லவிட, அவன் புறப்படும் நேரம், ஓட்டவேகம் தடைப்படுகின்றது. முடிவு என்ன? அதனை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
மனித மூளை சிலவேளை திடீர் என எதையோ நினைக்கப் புலன்களின் வேகம் செயல்கள், களவாடப் படுகின்றன. இந்த நிலை மிகவும் பரிதாபகரமானது. ஆனால் இந்நிலையை நாம் தவித்துக்கொள்ள முடியும்.
சிந்தனையில் தெளிவினை உண்டாக்கினால் புலன்களும் விழிப்படைந்து வலுவடையும், "நான் எவ்விதத்திலும் சலனப்பட மாட்டேன்" என்று, எமக்கு நாமே உறுதிமொழி எடுப்போமாக! கடுகளவு எம் புலன்களில் ஏற்படும் வீணான சலனங்கள், சஞ்சலங்களையே
ஏற்படுத்திவிடும்.
- 115

Page 60
பருத்திபூர் 04ல. ஆயிரவரர் மேலும்,
பய உணர்வுகள், பதட்டம் எதனையும், எம்மால் செய்யமுடியுமா எனச்
சந்தேகப்படல்.
• தீர, எதனையும் ஆராயாது செயற்படல்
• பிறருக்கே, தன்னைவிட அதிக வலிமையுண்டு தனக்கு அந்த வலிமை இல்லை எனச்சொல்லிச் சொல்லியே மாய்ந்து போதல் அதாவது அலுத்துக் கொள்ளுதல்.
• தனக்கே அதிக திறமை உண்டு. பிறருக்கு எந்தவித திறமையும் இல்லைஎனப் பொய்மையான, மாயநினைவுக்குள் ஆட்படுதல்
• தாழ்வுமனப்பான்மை * நல்லவைகளைப் போற்றாத தன்மைகள்.
மேற் சொல்லப்படுகின்ற சில காரணங்கள் எங்கள் மனதின் பலத்தை புரிந்துகொள்ளாமலும் அதனை வளர்த்து நிலை நிறுத்தாமலும் செய்துவிடுகின்றது. நல்ல விடயங் களைச் செய்யுமாறு உங்களுக்கு நீங்களே கட்டளை
யிடுவீர்களாக
இறைவன் படைப்பில் எல்லோருமே சமன் என்று
வாயளவில் நாம் கூறிக்கொண்டு பின்னர் ஏதாவது தமது
முன்னேற்றத்தில் இடையூறு ஏற்பட்டால் கடவுள் எமக்கு
அநியாயம் செய்துவிட்ட்தாகப் பிரலாபிப்பதில் என்ன
உண்மையுண்டு?உங்கள் எண்ணங்களால், வலிமையை
- 116

நூனி நூனேதானி
பெற விழையுங்கள். அறிவை வழங்கிய இறைவன் அதை அறுக்க விரும்புவதில்லை. உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே உரித்தாளர்கள். அதை முதலில் உணருங்கள்.
யாரோ ஒருவர் படித்துவிட்டால், அது என்னால் முடியாது என்று கூறுகின்றவர்களைப் பார்த்திருப்பீர்கள். ஏன் முடியாது என்று அவர்கள் தங்களைப் பார்த்துக் கேட்கவேண்டும். வெற்றி பெற்றவர்களில் நீங்களும் ஒருவராக ஏன் இருக்ககூடாது.
எல்லோருக்கும் படிப்பு, பட்டம், பதவி பொது வானதே.எவரும் எதனையும் தேடிக் கொள்ளமுடியும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள், காலப்போக்கில் தலைவர்களாக கல்விமான்களாக செல்வந்தர்களாக, மாறுவதில்லையா? எதிர்ப்படும் இடர்கண்டு முடங்கிநின்று பயணங்களை நிறுத்தக்கூடாது. "உறுதி”உயரவைக்கும்.
மனவலிமைமிகுந்தவன் வருந்திஅழுவதில்லை. உவீணான, நகைப்பூட்டும் சமாதானங்கள்
பொய்மையான கற்பனைகள்
சோம்பல், ஆற்றாமையுணர்வு
மேற்படி காரணங்களை தீவிரமாகக் கடைப்பிடிக்கும்
பிரகிருதிகள் நம்மையே நெரித்துக் கொள்கின்றார்கள். "அவன் விதி அப்படி, நன்றாக வந்துவிட்டான். ஐய்யய்யோ
- 117

Page 61
பருத்திபூர் ப0.அற்றுதாரர் நம்மால் முடியாது அப்பா! எவ்வளவு இடையூறு தொல்லைகள் வரும் தெரியுமா” என்கின்ற கற்பனைகள், சரி, சரிநாளைக்குப்பார்ப்போம் என்கின்ற சோம்பல் புத்தி இவைகளை தமது மூளையினுள், புதைத்து வைத்தால் சித்தம் எப்படி சுத்தமாகும் ஜயா?
யார் யாரோ, எப்படி எப்படியெல்லாம் வாழுகின் றார்கள் என எண்ணி மனம் புளுங்காமல், நாம் நமது கடமையை தொடரல் வேண்டும்.அதைவிடுத்து எங்களையே நாம் வருத்தி, மனச்சோர்வடைதல் மிகவும் தவறுதலான போக்கு அல்லவா?
கடவுள் அடுத்தவனுக்கு ஒரு நீதி, உங்களுக்கு ஒரு நீதி எனச் சட்டம் வகுத்ததில்லை. சோம்பல்படுபவர்களைக் கடவுளுக்குப் பிடிப்பதில்லை. முயற்சியுள்ளவனைத் தெய்வம் அணைத்துக் கொள்ளும் கடவுள் நம்பிக்கை மனஉறுதியை உண்டு பண்ணுகின்றது.
நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு படிகளுக்கும், மேலாகப் பலபடிகளை, உங்கள் மனம் எடுத்து வைக்கத் துணைநிற்கும்.
உங்களை முன் சென்று, உயர்த்த இயற்கையான வலிமை தயாராகவே உள்ளது. எனவே பயணத்திற்காகப் புறப்படும் நீங்கள், அடுத்து வரும் சவால்கள் பற்றியோ, பிரச்சினைகள் பற்றியோ தெரிந்து, தெளிந்து, முகம் கொடுக்கும் துணிச்சலை ஏற்படுத்திக் கொள்வீர்களாக
- 118

நூனி நூனே தானி
எதையும் தெரியாது, செயலில் புகுவது முட்டாள் தனமானது. இதன்பெயர்துணிச்சல்அல்ல.மன உளைச் சலுக்கான வழி என்பதனைத் தெரிந்துகொள்க!
எந்தவித ஆரம்ப முயற்சி இல்லாமல் கடவுள் பார்த்துக்கொள்வான் எனச் சொல்லி தங்கள் மனதினை முடமாக்கும் அறிவிலிகள், எளிதில் திருந்திவிட இயலுமோ? இவர்களுக்கு செய்யும் உதவிகள் கூட அர்த்தமற்றது. ஏன் எனில் கொடுத்த பொருளைக் காப்பாற்ற முடியாதவர்கள், அடுத் தவரின் உழைப் பரிணி பெருமையை எப்படி உணர்வார்கள்?
உழைப்பின் பெருமையை உணர்ந்த வர்க்கே, உதவுதல் என்பது உசிதமானது. மனதைச் சோரவைத்து தன் கடமையை நழுவவிட்டவன், ஈற்றில் ஒரு சமூகச் சுமையாகி விடுகின்றான்.கடனைத்திருப்பிக் கொடுக்க மாட்டான் எனத் தெரிந்தால், எவன் தான், கடன் கொடுக்க முன்வரப்போகின்றான்?
மலரனைய வாழ்விற்கு உரம் கொண்ட நெஞ்சுறுதி வேண்டும். மனதினைத் திடமாகக் கொண்டு தெளிவுடன், சிந்தனையைச் செதுக்குவோம். அதனால் எங்கள் செயல்கள் அனைத்துமே காரிய சித்தியாகும். எங்களுக்கு நாமே இடும் வலிமையான, சரியான ஆணைகள் எங்களை வளப்படுத்துவனவாக அமைந்துவிடுகின்றன. சும்மா வாழ்ந்து பார்ப்போம் எனக் கருதல் வேண்டாம்.
- 119 -

Page 62
0ருந்திபூர் 040. ஆயிரவரர் ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம். அது எம்மை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமே, விழிப்பூட்டுவதாக அமைந்தால் மானுடராகப் பிறந்ததன், நற்பயனைப் பெரும் பேற்றினைப் பெற்றவராக ஆகிவிடுவோம் அல்லவா?
கனவை நனவாக்கும் சக்தி உள்மனதிற்கு உண்டு. அனுதினமும் மன மகிழ்வுடன் எழுக! அனைத்து வெற்றிகளையும்" சித்தம்"மொத்தமாய் அள்ளித்தரும்.
"கூர்மதி”
கல்வி அமைச்சு ஆண்டு மலர் 2006
- 120

நாண் நானே தானி
பெண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்!
அன்பு அதிகரிக்கும்போது தான் ஆதிக்க அதிகாரமும் மேலோங்கி நிற்கின்றன. மனைவிதனது எண்ணங்களுக்கு ஏற்ப தனது சொற்படியே நடந்துகொள்ள வேண்டுமென கணவனும் அவ்வண்ணமே கணவன் தனது இஷ்டப்படி நடந்துகொள்ளவேண்டுமெனமனைவி எண்ணுவது இயல்பு. இதனை இரு சாராருமே புரிந்து எந்தச் சமயத்தில் எவ்வாறு நடக்க வேண்டுமென அனுபவபூர்வமாக உணருதல் அவசியம். எல்லையில்லா அன்பு கொண்ட "பெண்மை" அன்பு, உரிமையுடன் தம்மையே பரித்தியாகம் செய்தவண்ணம் இருக்கின்றது. பெண்மையாலேயே குடும்பம் எனும் விருட்சம் என்றுமே புஷ்பித்த
ஒவ்வொரு நாடுகளினதும் இன,மத கலாசார
ங்களுக்கு ஏற்ப பெண்கள் பற்றிய நோக்கு, அவர்களுக்கான
கெளரவம் தொடர்பாகப் பல தரப்பட்ட கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டாலும்கூட உலகில் உள்ள அனைத்துப்
- 121 -

Page 63
பருத்திழ் 00.ஹர்ஷரர் பெண்களுமே, ஒரு குடும்பத்தின் அசைக்க முடியாத ஆணிவேராகவே கருதப்பட்டு வருகின்ற உண்மையை புறம்தள்ள முடியவே முடியாது.
குடும்பம் எனும் மா விருட்சத்தின் ஆணிவேராக பெண் உலக உயிர்ப்பிற்கு நல் வித்துமாவாள். ஆயினும் இந்த உயரிய பெண்மையினை நாம் அனைவருமே புரிந்து கொள்கின்றோமா?
பெண்களே தாங்கள் சார்ந்த பெண்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாத போது ஆண்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒரு ஆண் தான் சார்ந்த கருத்துக்களையே பெண்களிடம் திணிப்பதுதான் அவனது வேலை எனப் பல பெண்பாலார் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஆயினும், தனக்கான உரிமை காரணமாகவும், தனது உள்ளத்தே புதைந்திருக்கும் காதல் காரணமாகவும் கூட தனது மனைவியில் அதிகாரத்தைச் செலுத்துவதை பலபெண்கள் மனதார விரும்புவதுமுண்டு. இவை யெல்லாம் கணவன் மனைவியிடத்தேயான புரிந்து ணர்வுடன் கூடிய சமாச்சாரங்களே!
அன்பு அதிகரிக்கும் போதுதான் ஈர்ப்புடனான ஆதிக்க, அதிகாரமும் சிலசமயம் மேலோங்குவதுமுண்டு. கணவன் தனது சொற்களைக் கேட்டுக்கொள்ள வேண்டுமென மனைவியும், அவ்வண்ணமே, மனவிைதன் ஆட்சிக்குள்அடங்கவேண்டுமெனக் கணவனும் எதிர்பார்ப்ப துண்டு. Ve
- 122

நூனி நூனே தூண்
மறைந்த பெர்னாசிர் பூட்டோ அவர்கள் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர். அத்துடன் அவரது தந்தையாரும் நாட்டின் பிரதமராக இருந்தவராவார். ஒரு சமயம் திருமதி பெனாசீர் பூட்டோவிடம் செய்தி நிருபர்கள், நீங்கள் எதற்காக திருமண வாழ்வை விரும்புகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் சொன்னார் "என்னை மணம் புரிபவர் என்னைப் புரிந்து கொள்ளவேண்டும். அதேசமயம் நான் எண்ணியவாறே நடந்து கொள்ளாமல் தகுந்த ஆலோசனை வழங்கும், என்னை தனது அன்பினால் கட்டுப்படுத்த ஒரு ஆண் துணை எனக்கு வேண்டும்” என்றார்.
அன்பின் மிகுதியினால் ஒருவர் மீது ஒருவர் காட்டுகின்ற அக்கறைகள் சிலச்மயங்களில் அதிகார அடக்குமுறையாகவும் எமக்குத் தோற்றமளிக்கின்றன.
ஆயினும், எல்லா ஆண்களும், பெண்களும் அன்பு காரணமாக தங்கள் உரிமையைக் காட்டுவதாக அர்த்தம் கொள்ளல் ஆகாது.
கொடுர குணம் கொண்ட கணவன், மாமிமார்கள், மைத்துணிகள் இல்லாமல் இல்லை. நல்லவைகளைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கும் போது இவர்களைப் பற்றி இப்போது பேசத்தேவையில்லை.
எப்போதோ படித்த என் நெஞ்சைத் தொட்ட கதை! மிகவும் வாயாடிப் பெண் அவள். ஒரு அங்காடியில் காய்,
- 123

Page 64
பருத்திபூர் 00.9பிறகுழர் கறி விற்பவள். அவளது வாய்க்கு மொத்த அங்காடியில் உள்ள அனைவருமே பயப்படுவார்கள். அவளை மிஞ்சி ஒருவருமே அங்குவியாபாரம் செய்யமுடியாது. ஆண்களே பயப்படும் விசித்திரப் பிரகிருதி.
- இப்படிப்பட்ட இவளுக்கு ஒரு நோஞ்சான் கணவன். இதில் வியப்பான விஷயம் என்னவெனில், இவள் தனது அந்த அப்பாவிக்கணவனையே தெய்வமாகப் போற்றினாள். தினசரி தனக்குரிய இடத்தில் வியாபாரம் செய்யும் போது, வேறு எவராவது வியாபாரம் செய்யப் புறப்பட்டால் பேயாக உருமாற,இவள்கணவனோ ஒன்றுமே புரியாது விழித்த படியே இருப்பான். "என்ரை ராசா இங்கே இப்படி உட்காரப்பா”என்று சொல்லி ஒரு மரப் பெட்டியில் இருத்திவைப்பாள். அவனுக்கு அங்கேயே அடிக்கடி உணவு, தேனீர் எனக் கொடுத்தபடி இருப்பாள்.
இவளுக்குத் திடீர் என நோய் வந்துவிட்டது. வைத்தியரிடம் காண்பித்த போது, அவள் நிலை மோசமடைந்துவிட்டது. அவள் எதிர்பார்க்காத அதிர்ச்சி! தான் இனிப் பிழைக்கமாட்டாள் என அவளுக்குத் தெரிந்து விட்டது. அந்தச் சமயத்தில் அவள் தனது அப்பாவிக் கணவனை அழைத்து இறுதியாகச் சொன்ன வார்த்தை களை வாசித்தபோது எனது நெஞ்சம் கன கனத்துக் கண்ணிரை வரவழைத்துவிட்டது.
"என்ரை ஐயா..! உன்னை நான் உலகம் தெரியாமல் வைத்திருந்துவிட்டேன். உன்னை எனது - 124

நூனி நூனே தானி பிள்ளை போல, எனக்கு ஆறுதலூட்டும் நல்ல ஜீவனாகவே எண்ணிப் புருஷனாகக் கண்போலவே வைத்திருந்தேன். உனக்கு நான் ஒரு குறையும் வைக்கவில்லை. உனது ஆறுதலினாலேயே நான் அதிகாரத்துடன் வாழ்ந்து விட்டேன். இத்தனைக்கும் நீ உலகம் அறியாத அப்பாவிச் சீவன். நான் சாவிற்குப் பயப்படவில்லை, எனது கவலை எல்லாமே உன்னைப்பற்றியதுதான். என்துரையே. நான் இறந்துபோகப் போகின்றேன். அப்புறம் இந்தப் பொல்லாத உலகில் எப்படி வாழப்போகின்றாய். நான் இறந்து போனாலும், உன்னைச் சுற்றித்தான் என்ரை உயிர் இருக்கும். என்னோடை ஆத்மா எப்படிச் சாந்தியடையப் போகின்றதோ.." எனச் சொல்லியபடி இருக்கும் போதே, அவளது உயிர் பிரிந்து விடுகின்றது.
ஒரு பொல்லாத பெண் இவள். ஆயினும் தான் வாழ்ந்த சமூகத்தில் என்றுமே பயந்து வாழவும் இல்லை. கணவனைத் தெய்வமாகக் கொண்டு இவள் வாழ்ந்ததே ஒரு நம்பவொண்ணா அற்புத வாழ்க்கையாகும். அவளை அறியாமல், அவள் ஆன்மாவுடன் இணைந்த தூய காதல் இது!
இத்தகைய தூய காதலோடிணைந்த பெண்கள் தான், தங்கள் குடும்பப் பொறுப்புக்களை எவ்வித மன உறுத்தல்களும் இன்றி விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர்.
எத்தகைய கணவன் வாய்த்திடினும் அல்லது தனக்குப் பிறந்த பிள்ளைகள் எப்படியான, நிலையில் - 125

Page 65
மருத்திலவிழை இருந்தாலும் ஒரு தாயான இவள் போஷிப்பினால் உழைப்பினால்அக்குடும்பமே திருந்தித் தழைத் தோங்கு கின்றது.
பெண்களின் தியாக உணர்வுகளைப் புரிந்தாலே போதும், அவளுடன் இணைந்த முழுக் குடும்பமே புதுவாழ்வைப் புஷ்பித்துக்கொள்கின்றது. தூய பெண்மை யிணைப்புரியாமல்,அவள் இதய அபிலாஷைகளை புறம் தள்ளுவது எத்தகைய தவறானது என்பதை அனுபவ பாடங்கள் உணர்த்தியே தீரும். குடும்ப உறவை வலுப்படுத்துவதும், அவர்களுக்காக வாழ்க்கையே பெருமையாகக் கொள்பவளைப் "பேதையர்” என்பதா?
தினக்குரல்,
ஞாயிறு மஞ்சரி
"இவள்” பகுதி
25-04-2010
- 126

பெண்மை தோற்கக் கஉடதே!
பெண்களில் பலர் சுயமான முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில் அமுக்கி வைக்கப்படுகின்றனர். வீட்டிற்கு வெளியே நல்ல பதவிகளைத் திறம்பட வகிக்கும் பெண்கள், தனது வீட்டில் கணவனாலும், அவர்களின் உறவினர்களாலும் அடக்கிஒடுக்கப்படுதல் என்ன நியாயம்? மனைவியின் திறமைகளை கணவன் ஒத்துக் கொள்வதுடன் பாராட்டினால் என்ன குறை ஏற்பட்டுவிடப் போகின்றது? வல்லமை கொண்ட பெண்ணை வேண்டுமென்ற நலிவடையச் செய்தல் வளரும் செடியை வெட்டுதல் போலாகும். இது நல்லதல்ல பெண்மைதோற்பது ஆண்மைக்கே இழுக்கு! உலக எழுச்சிக்கு இழப்பு
பெண்கள் துணிச்சலுடனும் வீரத்துடனும் எதனை யும் எதிர்கொள்ளுகின்ற மனப் பக்குவத்துடன் வாழ வேண்டும் என்பதில் அவர்களில் எத்தனை வீதமானோர் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை அவர்களே எண்ணிப்பார்க்கவேண்டும்.
- 127

Page 66
பகுதி பலவித
நன்கு படித்த, வசதியுள்ள, உயர்பதவி வகிக்கின்ற பெண்கள் நிலைபற்றி ஆராய்ந்தால், மனதினை நெருடும் விதமாகச் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்குத் தாங்களே விலங்கிடும் முறையோ எனவும் எண்ண வேண்டியுள்ளது.
வீட்டிற்கு வெளியே தாங்கள் பதவி வகிக்கும் விஷயத்தில் மிகவும் சாதுர்யமாகவும், திறமையாகவும்
தமது பணிகளைப் பலர் பாராட்டும் வண்ணம் செய்து
கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால்,வீட்டில் கணவனின் கெடுபிடிக்குள், ஏன் அவரது ஆக்கிரமிப்பில், எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியாத அடிமை போலவும் சிலர் வாழ்ந்து கொண்டிரு க்கின்றார்கள். மனைவியின் திறமை, வளர்ச்சிகளை ஜீரணிக்க முடியாத கணவன்மார்கள், வெறும் போலியான, தங்கள் மனசாட்சியையே குத்திக் குதறிச் செயல்பட்டு வருகின்றமையை பலரும் அறிந்தேயிருப்பார்கள். கணவனின் வீட்டார்கள் கூட, திறமைமிக்க இவளின் செயலைப் பாராட்டத் தயங்குவதுமுண்டு. தாங்களே ஒதுக்கப்படும்போதும் எதற்கு வீண் பொல்லாப்பு என எண்ணி, பெண்களே மெளனிப்பது, ஆரோக்கியமும் அல்ல!
அதே சமயம் நல்ல செயல்திறன்மிக்க பெண்கள்,
தாங்கள் வேலைசெய்கின்ற இடங்களில், ஒடுங்கி, முடங்கி
தங்களது கருமங்களை வெளிக்கொண்டு வந்து காட்ட
பெரும் சிரமப்புட்டு வருகின்றார்கள். வீடுகளில், - 128

நூண் நானேதானி சுதந்திரமாகச் சந்தோஷமாக வாழ்கின்ற இவர்கள், ஏன் வெளியுலக வாழ்வில் தாங்கள், தங்களைப் பலவீனர்களாகக் காட்டவேண்டும்? எப்படியிருந்தாலும் திறமை சாலிகள் தோற்றுப்போனது கிடையாது.
சிலவேளைகளில் பெண்களே மற்றப்பெண்களைப் பலவீனப்படுத்தும் காரியங்களில் கனகச்சிதமாக ஈடுபடுவது எரிச்சலைத் தரும் வேதனையோ வேதனை! இது வெறும் பொறாமை என்பது மட்டுமல்ல தங்களை உணராமை யுமாகும்.
பெண்கள் தாங்கள் வீடுகளில் வெளியுலக வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சீராகக் கையாண்டு நிலைமைக்கு ஏற்றவாறு மனோதிடத்துடன் தன்னை நிலை நிறுத்துதலே முழு உலகை உய்ர்த்துகின்ற முறைமை யுமாகும். வல்லமை கொண்ட பெண்ணை வேண்டு மென்றே நலிவடையச் செய்தல் வளரும் செடியை வெட்டுதல் போலாகும். இது நல்லதல்ல.
பெண்கள் தாங்கள் எந்த நிலையில் இருக்கின் றோம் என்பதனைச் சுயபரிசோதனை செய்வார்களாக! உலகையே உற்பத்தி செய்யும் தாய் தனது படைப்பு களுக்கு முன் தோற்றுப் போவது தலைகுனிவதும் அடுக்காது. எடுத்துக் காட்டாக வாழ்வதே பெண்களுக்கு ஆண்டவன் கொடுக்கும் கட்டளையுமாகும். பெண்மை தோற்றுப்போதல் ஆண்மைக்கே இழுக்கு
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
"இவள்”பகுதி08:032009 - 129

Page 67
نیسیسم»
உதவுதல்
மனைவிக்கு வெட்கப்படக் கூடியதல்ல!
கணவன் மனைவிக்குஉதவக்கூடாதுஎனும்எண்ணமேஆணவமிடுக்குடனான சுயநலமேயாகும். சிலபெண்கள்கூடவீட்டுவேலைகளைக்கணவன்செய்வது அழகுஅல்லஎனக்கூறித்தடுத்தும்விடுகின்றாள் மனைவிக்குஉதவுதலைஎந்த சாஸ்திரங்களுமே தவறு எனச் சொன்னதுமில்லை. ஆயினும் மென்மைப்
பெனண்களும் இருக்கின்றார்கள். குடும்ப நலனுக்காக வீட்டிலும், வெளியிலும் உழைக்கும் பெண்களின் சிரமங் ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும் மனைவிக்குஉதவுதல்வெட்கட்டடக்கூடியதல்லமாறாககுடும்பஉறவில்நிறைந்த மாறாஇறுக்கமான இன்பம்கிட்டும்
ஒருவர் தனது மனைவிக்குச் செய்கின்ற ஒரு சாதாரண உதவிகளைக் கண்டு, அவரது நண்பர்கள், உறவினர்கள், "பார்த்தீர்களா, எப்படி இருக்கு? ஒரு பெண்டாட்டிதாசனாக இவன் மாறிவிட்டானே என்று கேலி பேசுபவர்களை நீங்கள் சிந்தித்திருப்பீர்கள்.
- 130
 
 
 
 
 
 
 

நாணி நூனே தானி கணவனுக்கு மனைவி எவ்வளவோ பணிவிடை செய்கின்றாள். அவளுக்கு ஏதாவது தலையிடி, காய்ச்சல் வந்தால், கணவன் உதவிசெய்வதில் என்ன கேலிகிண்டல் வேண்டியிருக்கின்றது? இப்படிப்பேசுபவர்கள் தமது சொந்த வாழ்வில் எப்படியிருப்பார்களோ, யார் கண்டார்கள்? மனைவிக்கு உதவாத செயல், ஆணவமிடுக்குடனான சுயநலமேயாம்.
திரைப்படத்தில் ஒரு காட்சி, மனைவிக்குச் சற்று சுகவீனம் வந்துவிட்டது. கணவன் சமையலறைக்குச் சென்று தேனீர் தயாராக்க முற்படுகின்றான். அப்போது மனைவி குறுக்கிட்டு " என்ன இது நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள், இது பெண்கள் சமாச்சாரம் போங்கள் நானே தேனீர் தயாரிக்கின்றேன்” என்கின்றாள்.
இப்படிப்பட்ட காட்சிகள் திரைப்படத்தில் காட்டப்படு கின்றமை சங்கடமாக இருக்கின்றது. தேனீர், உணவு தயாரிப்பது உட்பட வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வதுதான் ஒரு இல்லத் தலைவியின் வேலையா? கணவனுக்கு அதில் என்ன பங்கு உண்டு?
வீட்டு வேலை செய்வதில் என்ன வெட்கம் ஆணுக்கு வந்துவிட்டது? சில வீடுகளில் பெண்களே, கணவன் மீதுள்ள அதீத அன்பினால், அவனை இயங்கா மலேயே செய்து விடுகின்றார்கள். இதனால் அவளுக்குத் திடீர் என நோய் ஏற்பட்டுப்போனால் சுடுநீர் வைக்கத் தெரியாமலே அவன் திண்டாடிப் போகின்றான்.
- 131 -

Page 68
பருத்திபூர் 040. ஆயிரவரர்
குடும்பங்கள் சிலவற்றில் இல்லத் தலைவனின் உறவினர்கள்,தாயார் மற்றும் அவளுக்கு வேண்டப்ப ட்டவர்கள் ஏதோ ஒரு வழியில் அவரது நல் இயல்புகளை மாற்றமடையச் செய்ய தற்கால நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொள்கைகளைக் கூறியே, அவர்களிடையே உள்ள பிணைப்பினைக்கத்தரிக்க அல்லது உறவில் நீண்ட இடைவெளியை உருவாக்க முயல்கின்றார்கள். சிலர் புரியாமல் பேசுவார்கள், பலர் வேண்டுமென்றே இப்படிப் பேசுவார்கள்.
வீட்டில் யாரும் உதவிக்கு இல்லை. மனைவிக்கு சுகவீனம். கைக்குழந்தை, அத்துடன் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் வேறு, இந்நிலையில் ஒருவன் என்ன செய்யமுடியும்?
“மனைவிக்குரிய வேலை இது” என வறட்டுப் பிடிவாதம் செய்ய முடியுமா? மனைவி, பிள்ளைகளுக்கு உடைகளைத் துவைப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டியதை யார் செய்ய வேண்டும்?
ஒன்றை மட்டும் சிந்திக்க வேண்டும், வீட்டு வேலை செய்யும் கணவனைக் கிண்டலடிப்போர் அவர்கள் வீட்டின் எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுக்கப் போவதில்லை. இவர்கள் விமர்சனம் விஷமத்தனம்.
- 132

நூண் நானே தானி
ஆனால், ஓரிரு வீடுகளில் கணவனின் தயாள
குணத்தைச் சாதகமாக்கி அவனை மென்மேலும் அல்லல்படுத்தும் பெண்களும் இருக்கின்றார்கள்.
வெளியே வேலைபார்க்கும் இல்லத்தரசிகளின் வேலைப்பளு மிகையானது. இவர்களது வீடுகளில் இருசாராருமே சிரமத்துடன் உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் இருவருமே கஷ்டப்பட்டு உழைக்கும் போது நாம் யாருக்காக உழைக்கின்றோம், எமக்காக பிள்ளைகளுக்காக எங்கள் உறவுகளுக்காக எனும்போது ஏற்படும் மனநிறைவு சொல்லில் அடங்காதது.
கணவனும் மனைவியும் இணைந்து தமதுகுடும்பத் திற்காகப் பரஸ்பரம் உணர்வு பூர்வமாக உணர்ந்து செயல்படும்போது அவர்களின் காதல் வாழ்வு சாஸ்வ தமாகி, வியாபகமாகி இன்பமூட்டுகின்றது.
நிகழ்கால உழைப்பினால் எதிர்காலம் ஒளிமயமா கின்றது. எத்தனையோ பேர் எதுவித பொருளாதார வசதி குறைந்தாலும்கூட, சிக்கனமாகவும், அதே சமயம் இருவரும் இணைந்து தொழில் செய்வதனால், தங்கள் வாழ்வினைச் செம்மைப்படுத்துவதைக் கண்டும் இருக்கின்றோம்.
அலுவலகப் பணி செய்யபோதிய கல்வித்தராதரம் இல்லாத பெண்கள் கூட கணவன்மார்களின் பூரண ஒத்து - 133

Page 69
பருத்திர் 00.9ர்வரர் ழைப்புடன் சிறுசிறு தொழில்முயற்சிகளில் ஈடுபட்டு அதில் பூரணவெற்றிகண்டும் இருக்கின்றார்கள்.
ஆண் பெண் இணைப்பு உருவானதே, வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்ல. இருவரும் ஒன்றாகி, உழைத்து முன்னேறுவதுமாகும்.இவர்களின் உழைப் பினால் மட்டுமே, சமூகத்தின்பொருளாதார பிரச்சினை களுக்கும் முகம் கொடுக்கவும் இயலும். அதுமட்டுமல்ல தங்கள் பிள்ளைகளுக்கான கல்வியூட்டலுடன், நல்ல ஒழுக்கத்தினையும் பெற்றோர்களால் தான் தரமுடியும்.
எல்லோருக்கும் முன்மாதிரியானவர்கள் முதற்
கண், பிள்ளைகளின் தாயும் தகப்பனாருமேயாவர்.
பெண்ணை ஆண் அடிமை கொள்ளும் எண்ணத்
தையும்,ஆணைப் பெண் அடக்கி ஆள்பவள் என்ற
கருத்தையும் புறம் தள்ள அன்பான பரஸ்பர ஒத்துழை ப்பான வாழ்வுமுறை நன்கு வழிவகுக்கும்.
தினக்குரல்
ஞாயிறு மஞ்சரி
"இவள்” பகுதி
15-11-2009
- 134

和

Page 70


Page 71

5 5 0ll4 6 9
9789