கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:வெறுமை

Page 1


Page 2

வெறுமை
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியன் வசந்தங்கள்- பாகம் 77 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் விபரம்
நூல் தலைப்பு: வெறுமை
வாழ்வியல் வசந்தங்கள் பாகம்- 11 ஆசிரியர் : பருத்தியூர் பால.வயிரவநாதன்
மொழி : தமிழ்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு விபரம் : முதல் பதிப்பு
உரிமை : ஆசிரியருக்கு
தாளின் தன்மை : 70 கிராம் பாங்க்
நூலின் அளவு: கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
அச்சு எழுத்து 13
மொத்த பக்கங்கள் : 145
அட்டைப்படம் : அஸ்ரா பிரிண்டர்ஸ்
கணனி வடிவமைப்பு : அஸ்ரா பிரிண்டர்ஸ்
அச்சிட்டோர் : அஸ்ரா பிரிண்டர்ஸ்
நூல் கட்டுமானம் : தையல்
வெளியிட்டோர் : வானவில் வெளியீட்டகம்
நூலின் விலை : 250/=
ISBN : 978-955-0469-12-3
VQ 2

அணிந்துரை
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்றொரு முதுமொழி வழக்கில் இருக்கின்றது.கண்டதும் கற்கப்பண்டிதன் ஆவான் என்ற கருத்தும் எமது பண்பாட்டில் காணப்படுகின்றது. நிறைய விடயங்களை வாசித்து, அறிந்து, கற்பதன் மூலம் ஒருவனுடைய அறிவுப்புலம், அனுபவம், ஆளுமை என்பன மேம்பட வாய்ப்புண்டாகின்றது. வெறுமனே வாசிப்பு என்பதற்கு அப்பால், வாசித்த விடயங்களைப்பற்றிய ஆய்வும், விளக்கமும் வாசித்தவற்றை தமக்கேற்றாற் போல் உள்வாங்கி வைத்தி ருக்கும் திறனும் இணைந்தே ஒருவருடைய அறிவு மற்றும் அனுபவ விருத்திக்குத் துணையாகின்றன.
வாசிப்பதைப் போன்று யோசிப்பதாலும் மனிதன் பூரண மடைவர் என்றே தோன்றுகின்றது. பொதுவாக எண்ணங்கள், சிந்தனைகள், யோசனைகள் போன்றன தன் பாட்டிலே, இயல்பாகவே எழுகின்றன என்றாலும், அவற்றை நாம் சரிவரக் கையாளுகின்ற பொழுது அவை எமக்கு மிகவும் நல்ல பலா பலன்களைத் தந்து விடுகின்றன. கண்டபடி, எழுந்தமானமாக எமக்கு வந்துபோகின்ற யோசனைகளுக்கு ஒருஒழுங்கு வடிவம் கொடுக்கின்றபொழுது, அவை ஒரு சிந்தனையாக, கருத்தாகத் தோற்றம் பெறுகின்றன. அவ்வாறுஉருவாகும் சிந்தனையினை அல்லது கருத்தினைத் திரும்பத் திரும்ப மீள் பார்வைக்கு ட்படுத்தி, அதனைப்பட்டைத் தீட்டி மெருகுபடுத்துவதன் மூலம் அதனை மேலும் செழுமையடைய வைக்கலாம். செழுமையான
3

Page 4
சிந்தனைகள் எமது வாழ்வை மட்டுமல்ல, ஏனையோர் வாழ்வை யும் வளம்பெறவைக்கும் ஆற்றல்உடையன.
சிந்தனைகள் வெற்றிடத்தில் இருந்து உருவாகு வதில்லை. நாம் பார்த்தவை, கேட்டவை, அறிந்தவை, ஆசைப் பட்டவை, அடிமனதில் இருப்பவை போன்ற பல தரவுகளின் இடைவினைகளுடாகவே சிந்தனைகள் தோன்றுகின்றன. எமது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு செல்வதிலும் அவ்வாறு செல்கின்ற பொழுது ஏற்படுகின்ற சவால்களைக் கையாளு வதிலும் எமது சிந்தனைகள் மிகவும் பாரிய பங்கினைவகிக்கின் றன. எங்களில் இருக்கின்ற சிந்தனைப் புலமே நாங்கள் கணந் தோறும் எடுக்கின்ற தீர்மானங்களை வழிநடத்துகின்றன.
தற்கால உலகில் மேலோங்கியிருக்கும் அவசரமான, மேலோட்டமான நோக்குகளிடையே வாழ்க்கை ஒ(ட்)டத்தைத் தளம்பாமல் சமநிலை கெடாமல் இயங்குவதற்கு வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளிலும், ஒவ்வொரு கணங்களிலும் எடுக்கின்ற தீர்மானங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தத் தீர்மானங்களைக் குறைபடாமலும், மிகையாகாமலும், சரியான அளவுகளில் எடுக்கவேண்டியிருக்கின்றது.
சரி என்றால் என்ன? சற்று ஆழமாகப்பார்த்தால் சரியென்பது ஒரு சார்பு நிலைப்பட்ட விடயமாகவே இருக்கின்றது. அது எதனுடன் சார்பு பட்டு நிற்கின்றது? எம்முடன்? எமது விருப்பு வெறுப்புக்களுடன்? நாம் கற்றறிந்தவற்றுடன்? இந்த விளைவுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கின்ற சுக துக்கங்
4.

களுடன்?. எவ்வாறாக விருந்த போதிலும் சரியென நாம் கருதுகின்ற விடயங்கள் யாவும் ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணி களுடன் தொடர்புபட்டு, அவற்றைச் சார்ந்து வருபனவாகவே இருக்கின்றமையைநாம் காணலாம்.
எந்த ஒன்றும், எல்லோருக்கும் எவ்வேளைகளிலும் சரியாக அமைந்துவிடுவதில்லை. உண்மையில் அந்தக் கணங் களில், குறிப்பான சூழமைவுகளில் இருக்கின்ற நிலமைகளைக் கணித்துக் கொண்டு அவற்றின் தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு, காரணகாரியங்களை மற்றும் விளைவுகளை அனுமதித்து. அனுமானித்துக் கொண்டு, தமது தனிப்பட்ட மற்றும் தாம் சார்ந்து வாழும் சமூகத்தின் ஒழுக்க விழுமியங் களை உள்வாங்கிக்கொண்டு. அவற்றைத் தமதுவிருப்புவெறுப் புக்கள் மற்றும் பலம் பலவீனங்களுடன் ஒப்பிட்டுத் தேர்ந்து எடுக்கப்படுகின்ற தீர்மானங்களே சரியான தீர்மானங்களாக அமைந்துவிடுகின்றன.
எமது வாழ்க்கையை அகவயமாகவும், புறவயமாகவும் நோக்குகின்ற பொழுது பல விடயங்கள் எமக்குப் புலப்படத் தொடங்கும். நாம் ஒருகாலத்தில் சரியெனநினைத்தவிடயங்கள் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பிழை என நிறுவிய விடயங்கள் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பிழையாகத் தெரியாது போவத னையும் அவதானிக்கலாம். மற்றவர்களைத்தீர்ப்பிடும் கண்ணோ ட்டத்தோடு நோக்கும்பொழுது நாம் உபயோகிக்கின்றசரி-பிழை எனும் அளவுகோல்கள், எமக்கென்று வருகின்ற பொழுதில் உருமாறுவதையும் நாம் காணலாம். இதிலிருந்து நாங்கள்
5

Page 5
எல்லோருமே எமது தீர்மானங்களின், செயல்களின்சரிபிழையை, சரியான அளவில் பேணுவது என்பது பல்வேறு விடயங்களின் சார்பு நிலையின் அடிப்படையிலேயே என்பதனைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறானதொரு புரிதல் எமது வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.
ஒவ்வொன்றினதும் சரியான அளவைத் தீர்மானிப் பதற்கு எமக்கு நியமப் புள்ளிகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான நியமப்புள்ளிகள் அமையும் பொழுதே நாம் அந்தப் புள்ளிகளை மாறிலியாக வைத்துக் கொண்டு அவை சார்ந்து எமது"சரி யைத் தீர்மானித்துக்கொள்ள முடிகிறது.ஒவ்வொரு விடயங்களிலும் நாம் எதிர் எதிரான இரண்டு அந்தங்களை நியமப்புள்ளிகளாக உருவாக்கி வைத்திருக்கின்றோம். உண்மை-பொய்,நன்மை, தீமை, புண்ணியம், பாவம், கவலை, மகிழ்ச்சி, பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு தொலைதூர அந்த ங்களின் வீச்செல்லைகளுக்கிடையே தான் நாம் சரியெனத் தீர்மானிக்கும் பல விடயங்கள் அமைந்திருக்கின்றன
இன்னுமொரு வகையில் சொல்லுவதாயின் வாழ்க்கை ஒ(ட்)டத்தின் சமநிலையைத் தீர்மானிப்பதற்கு பல்வேறு எதிரெதிரான விசைகள் தேவைப்படுகின்றன.இந்த விசைகளைச் சரியாகக் கணித்து, கையாண்டு, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்பொழுதேஎனது சமநிலை பேணப்படுகிறது.
எப்பொழுதும் எதிரெதிரான இரண்டு விசைகள் இருக் கின்ற பொழுதே ஒரு சமநிலை பேணப்படும். எமதுசரிகளும்,
VQ 6

தீர்மானங்களும், இந்த இரண்டில் ஒன்றுக்கு அண்மித்ததாகவோ, அல்லது அவற்றிற்கிடையேயான ஏதோவொருபுள்ளி சார்ந்ததா கவோ இருக்கின்றது. ஒன்று மட்டுமே இருந்து விட்டால் அது சமநிலையைக் குழப்பிவிடும்.ஒளிமட்டும் இருந்தால் காணாது. இருளும் இருக்க வேண்டும் கடவுள்கள் மட்டும் இருந்தால் காணாது அசுரர்களும் சாத்தான்களும் இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல கூட்டு வாழ்க்கை,சமூகங்கள், நாடுகள், உலகம், போன்றனவும் தத்தமது சமநிலையட்ை பேணுவதற்கு எதிரெதிரான இரண்டு விசைகள் இருப்பது அவசியமாகின்றது.
இதன்காரணமாகத்தான் மனிதவாழ்வை வளப்படுத்து வதற்கான உதித்த சிந்தனைகளும் கருத்துக்களும் இவ்வகைப் பட்ட பல நியமங்கள் பற்றி, அவை சார்ந்து எடுக்கப்படக் கூடிய தீர்மானங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. எமக்காக எழுதப்பட்ட அனைத்து வேதங்களும், இலக்கியங்களும், இந்த எதிர்எதிரான விசைகளின் தேவை பற்றிக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். என்று எழுகின்ற அதேவேளை, தேவைப்பட்டால் பொய்யும் பேசலாம் எனக் குறிப்பிடுவது இந்த யதார்த்தத்தினால் தான். அனைத்து உயிரினங்களிடத்தும் அன்போடும், இரக்கத்தோடும், கருணை யோடும் இருக்க வேண்டும் என்ற அறிவுரை சொல்லி, பின்பு தேவைப்பட்டால் அல்லது கடமைக்காகக் கொலையும் செய்ய லாம் என உபதேசிப்பதும் இதன் காரணமாகத்தான். நாங்கள் எப்பொழுதும், எல்லா விடயங்களிலும் இரண்டு எதிர் எதிராக இருக்கும் நியமப் புள்ளிகளைச் சார்ந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்து இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.
7

Page 6
இந்த நூலின் ஆசிரியர் திரு. பால,வயிரவநாதன் அவர்கள் மனித வாழ்வின் போக்கை நன்கு அவதானிப்பவராக இருப்பதனை உணர முடிகிறது. அவர் அத்தோடு நில்லாது, தான் அவதானித்தவற்றை சிந்தனையாக்கி பின்பு அச் சிந்தனைகளைத் தனக்கேயுரிய தொரு தனித்துவமான மொழி நடையிலும், பாணியிலும் அளிக்கை செய்திருக்கின்றார். இவரது எழுத்துக்களை, அனுப்வங்களை, ஆலோசனைகளை வாசிக்கும் பொழுது எனக்குப் பல சமாந்தரமான எண்ண ஓட்டங்கள் ஏற்பட்டன. என் போலவே, இந்நூலை வாசிக்கும் ஏனைய வாசகர்களும் அவ்வாறானதொரு அனுபவத்தை பெறுவார்கள் எனநான்நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்!
சா. சிவயோகன்
உளமருத்துவர்

முன்னுரை
கடுகுசிறிது காரம் பெரிதுஎன்பார்கள். பல்வேறுசிறந்த தலைப்புக்களில் மிகச்சிறந்த கருத்துக்களையும் எண்ணங் களையும் வெளிப்படுத்தி வாழ்வியல் வசந்தங்கள்என்ற கவர்ச்சி கரமான கட்டுரைத் தொகுதியான இந்த நூலை வெளியிட் டிருக்கின்றார் பருத்தியூர்பால, வயிரவநாதன் அவர்கள். கட்டுரை கள் கற்பனை என்ற தலைப்பில் ஆரம்பித்து யாசகம், ஓசை, கெளரவம், பார்வை, வெறுமை, திருப்தி, கவர்ச்சி, எனவாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னி டாக ஒரு குறிப்பையும், காணலாம், தினக்குரல் வீரகேசரி, தின கரன் வாரப்பத்திரிகைகளில் வெளிவந்த இவரது கட்டுரைகளை வாசித்தவர்களுக்கும் அவற்றை மீள் வாசிப்புக்கு வழிசெய்யும் விதத்தில் அவை தொகுப்பாக வெளிவந்திருப்பது நீண்டகால பயன்பாட்டுக்கு ஏற்றதாகும்.
ஒவ்வொரு கட்டுரையிலும் சிந்தனையைத் தூண்டும் பல விடயங்களைக் காணலாம். உதாரணத்திற்கு ஒரு சில மூட நம்பிக்கையும்முற்போக்குச்சிந்தனையுமற்றவர்களே "முன்னோர் கள்” என்று ஒரு தவறான அபிப்பிராயம் இன்னமும் உலாவு வதாகக்கூறும் கட்டுரையாளர் மற்றோர் இடத்தில் இப்படித் தெரிவிக்கின்றார். “பரிணாம வளர்ச்சி பற்றி என்ன தான் கூறி வந்தாலும் கூட பழைமையானகலை இலக்கியப்படைப்புக்கள் போல் எம்மால் இன்னமும் ஏன்சிருஷ்டிக்க முடியவில்லை?
இன்று எந்த நாட்டின் பழைய காலத்துச்சிற்பங்கள், கோட்டைகள், நீர்ப்பாசனக் கட்டுமானங்களைப்பாருங்கள். பாரிய
9

Page 7
விஸ்தீரணமான எத்தனை ஏரிகளை, குளங்களை முன்னோர்கள் ஆக்கிச் சென்றார்கள். உலக மகா அதிசயங்களில் ஒன்றைத் தானும் முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்று கூறும் நாம் அதனைச் செய்து விட்டோமா? இவ்வாறு கேள்வியெழுப்பும் கட்டுரையாளர், யாசகம் பற்றி ஒரு கட்டுரையில் "உழைப்புக்கு ஏற்றஊதியம்" கொடுத்தாலேபோதும், இன்றுள்ள பெரும்பாலான வறியோா பிறரிடம் யாசகம் கேட்பது போன்ற கொடுமைகள் இல்லாது போய்விடும்” என்று சுட்டிக்காட்டுகின்றார். மொழிப்பா வனைபற்றி கட்டுரையாளர், கவர்ச்சி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தனது கருத்தை இப்படி முன்வைக்கின்றார்.
"பேசுகின்ற தாய்மொழிகூடகவர்ச்சி வலையில் விழுந்து அதன்மூலவேர்களையப்படுவதுபோல் தெரிகின்றது. எந்தவித மொழியும் சாராத பல மொழிகள் உருவாகிக் கொண்டிருக் கின்றன. காலம் போகின்றபோக்கைப்பார்த்தால் மொழிகளின் தனித்துவம், பழைமைச்சிறப்பு, அழகு எல்லாமே மாறி வேறு வடிவங்கள் சமைக்கப்படுமோ என எம்மை ஏங்கவும் வைக்கின் றது” என்று குறிப்பிட்டுமொழிக் கலப்புக்களால் புரிதல் தன்மை குன்றுமென கூறுகிறார்.
இலகு நடையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றைப் படித்து மனப் பக்குவம் பெறமுடியும்.
வீ. எ. திருஞானசுந்தரம்
முன்னாள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம
y 10

எனது உரை
வெறும் கற்பனையுடன் மட்டும் காலத்தையோட்ட
முடியாது. ஆயினும் கற்பனைவளம் இன்றி எதனையும் சிருஷ் டித்துவிடவும் முடியாது.
கற்பனையின்றிக் காவியங்கள், இலக்கியப் படைப்பு க்கள் உதிர்ந்திடுமா? மனிதனின் சிந்தனை வளர்ச்சியூடாகவே உலகம் வளர்ந்தது.
கற்பனையில் இயற்கைக்கு முரணான எண்ணங்களும் மூளையில்வசப்படும். ஆனால்சிந்தனைகள் செப்பமாக இருப்பின் மாறாத உண்மைகள் மட்டுமே புலப்ப்டும்.
களிப்பூட்டும் கற்பனையும் தேவைப்படும். அதே சமயம்,சீரிய சிந்தனை மாந்தர்க்கு உற்ற துணையாகின்றது. மொத்தத்தில் சித்தத்தில் உதிக்கும் இவை மனித சக்தியைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
நல்ல நோக்குடன் உலகை உற்றுப்பார்த்தால், அதன் அழகு எம்மைப் பரவசப்படுத்தும் நல்லதும், கெட்டதும் பார்வை யைப் பொறுத்த விஷயம்.
நாம் எங்களை மட்டுமே கெளரவமான பிரஜையாகப் பார்க்க முடியாது. எல்லா உயிர்களுமே, அவை அவை இனத் திற்கு உயரியவையே. வெறும் வெளிப்பகட்டுதான். எங்களை
11

Page 8
வெளிஉலகிற்கு அடையாளப்படுத்துவதாக எண்ணிக்கொண்டி ருக்கின்றோம்.
அனால் உண்மை அதுவல்ல. எங்கள் செயல்களை இயக்கும் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் மட்டுமே எமது கெளரவம் பிறருக்கு வெளிப்படுத்தப்படும்.
எதனையும் மூடிமறைத்து நாம் உருவாக முடியாது. மனிதநடத்தைகள் வேவுபார்க்கப்படுகின்றன.
நல்லபடி வாழ்ந்தால் அவனி ஆசையுடன் உங்களை நோக்கும். கெட்ட வழியில் நடந்தால் அது உதறிவிடும்.
"நல் இசைபோல் வாழ்க" என்றால் அதுபொருத்தமான வாழ்த்தும் முறை. ஏனெனில் இசை ஒரு ஒழுங்கில் அமைந்தால் தான் அதில் சுகராகம் கேட்கும்.
ஒவ்வொருவருக்கும், அவர்கள் தாய்மொழி நல் இசை, குழந்தைகள் எந்த நாட்டில் ஜனித்தாலும் அதன் சிரிப்பு, அழுகை எல்லாமே இனிப்புத்தான்.
நல்லசொற்கள், கவிதைகள் அன்பான,பணிவான வார்த் தைகள், சங்கீதம் எல்லாமே அற்புத ஒசையில் பலதரப்பட்ட வடிவங்கள் எனவே நல் ஓசைபோல் சீராக வாழ்வை அமைத்தல் மேன்மை,
12

கவர்ச்சியில் மட்டும் மனதை அலையவிடாமல் உண்மை யின் வடிவங்களையே தரிசனம் செய்திடுவோம். எனினும் கவர்ச்சிக்கும் சிறப்புஉண்டு. தரமான பொருட்களையும் கவர்ச்சிப் படுத்தாமல் விற்பனை செய்யமுடியாது.
அழகிய பெண்களையும், ஒப்பனை செய்கிறார்கள். குழந்தைகள் எல்லாமே அழகு ஆனால் அவர்களையும் நல்ல சட்டை போட்டுப்பொட்டிட்டுநாம் அதன் அழகை மென்மேலும் கவர்ச்சிப்படுத்துவதில்லையா? வரண்ட வெறுமை நோய்க்கு ள்ளாகாது எல்லா விடயங்களிலும் திருப்தி காண்பதே நிறைந்த வாழ்வு இவ்வாறு கிடைத்ததே இறை கொடை, இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வோம்,முன்னேறும் வழிகளை முறைப்படி கடைப்பிடிப்போம். இதுவே திருப்திகரமான வாழ்விற்கு ஏற்றவழி
வாழ்வியல்,ஆன்மீகம், சமூக உளவியல் சார்ந்த நூல் ஆகையினால், இவை தொடர்பாக சில விடயங்களையே அணிந்துரை, மதிப்புரை,வழங்கிய பெரியோர்களும் தந்திரு ந்தார்கள்.
எனது "வாழ்வியல் வசந்தங்கள்”-பாகம் 11 "வெறுமை" எனும் தலைப்பிலால் ஆனாது. இதன் அணிந்துரையைப் பிரபல உளநலமருத்துவர் திருசா.சிவயோகன்எமக்கு அளித்துள்ளார்.
யாழ்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்செல்வி.வசந்தி அரசரத்தினம் அவர்களிடம் எனது வாழ்வியல் சமூக உளவியல் தொடர்பான நூல்கள் பற்றிக் கூறியபோதுதான், எனக்கு அவர்
13

Page 9
திரு.சா.சிவயோகன் பற்றிப்பாராட்டிப்பேசி அவருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அவ்வண்ணமே நான் அவரைச் சந்தித்துப் பேசினேன். யாழ் மாவட்டத்தில் யுத்த அவலங்களால் உளநலம் பாதித்த பலருக்கு இவர் தமது அன்பான அரவணைப்பினால் தெம்பூட்டிப் புதுவாழ்வளித்த பணியினை நாம் அறிவோம். இவரது சேவை யினால் பூரண குணமடைந்து வழமையான வாழ்வுநிலைக்குத் திரும்பியுள்ள அனைவரினதும் சந்தோஷமே இவரது சேவையின் திருப்தியுமாக இருக்கிறது.
இதேவேளை இங்கு இவருடன் பலத்த பிரச்சனைகள் மத்தியில் மக்கள் நலனுக்காகத்தங்கள் கடமையை அர்ப்பணிப் புடன் செய்தசகவைத்தியர்நிபுணர்களின் சேவையினை மக்கள் என்றுமே மறந்து விட மடியாது.
உடற்காயங்கள் மட்டும் நோய் அல்ல. மனத்தின் வடு, கடும் ரணத்தை விட அபாயகரமானது.உள்ளத்தைத் மென்னை யாக கரிசனையுடன்கையாண்டு அவர் துன்பங்களைக் களைந்து இவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சாமான்ய விஷயமா என்ன?
அந்த அற்புதப் பணியைச் செய்து வரும் உளநல வைத்தியரின் அனுபவங்கள் சொல்லி அடங்காது. ஒருவரின் ஏக்கங்கள், துக்கங்களுடான காயங்களைக் குணப்படுத்துதல் இவருக்கு இறைவன்கொடுத்த வரம்.
14

எனவே இத்தகைய ஒருவர் எனது வாழ்வியல், சமூக உளவியல்சார்ந்த படைப்புக்களுக்கு அணிந்துரை செய்தமை எனக்கு பெரும் திருப்தியை உண்டுபண்ணுகின்றது.
தமது உளவியல் பார்வையில் அணிந்துரையினை விரிவாக எழுதியிருக்கிறார். திரு. சிவயோகன் அவர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் திரு.வீ.ஏ. திருஞானசுந்தரம் அவர்கள் தமிழ் ஒலிபரப்புத்துறையில் பல சாதனைகளைப் புரிந்தவர். பத்திரிகை, ஊடகத்துறையில் துறை தோய்ந்த அனுபவசாலி.
இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றியபோது நான்கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் சாகித்திய குழுசெயலாளராக இருந்த அந்த காலப் பகுதியில் கலாசார அமைச்சின் நாடகக் குழுவில் இவர் இணைந்து மிகப்பெரிய அளவிலான தமிழ் நாடக விழாவினை எல்பின்ஸ்ரன் கலையரங்கில் எமது திணைக்கள அனுசரனை யுடன் அப்போதைய இதன் பணிப்பாளர் திரு எஸ்.தில்லை நடராஜா அவர்களுடன் இணைந்து நடாத்தினார்.
அன்றைய காலம் முதல் திரு. திருஞானசுந்தரம் அவர்கள் என்னுடன் நட்புரிமையுடன் பழகிவரும் நேயராகவே இருக்கின்றார். இவரைப் போலவே இவரது சகோதரர்கள் நல்ல ஒப்பற்ற கலைஞர்கள்.
15

Page 10
மறைந்த மூத்த சகோதரர்கள் பெயர் திரு வீ.ஏ. சிவஞானம்,இளையவர் திருவி.ஏ. மனோரஞ்சிதம், என்போராவர். இவர்கள் நினைவாக முறையே "சிவலயம்” “மனோலயம்” என்கின்ற சிறந்த நூல்களை வெளியிட்டார்.
நூல்களில் பல அரிய தகவல்கள், ஒலிபரப்புத்துறை சார்ந்த அனுபவங்கள் கோர்க்கப்பட்டிருந்தன.உறவுகளின் பிரிவு வலியினால் வெளிவந்த இந்நூல்கள் பலரது மனங்களைக் கசியவிட்டதுடன்,நல்ல பல விடயங்களையும் வாசகர்களுக்குத் தந்தன.
என்னை எங்கு கண்டாலும் நலம் விசாரிப்பார். புன்முறுவலுடன் தட்டிக்கொடுத்து எப்போது உமது நூல்களை வெளியீடு செய்யப்போகின்றீர்கள் என்று கேட்பதுண்டு.
என்மீது மிகவும் அக்கறை கொண்ட இவர் எனது கட்டுரைகளின் வாசகள் என்பதில் நான் பெருமிதமடைகின்றேன்.
"வாழ்த்துவது ஒருவரை எழுச்சியுறவைக்கும்.”
திரு. வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்களின் மதிப்பார்ந்த முகவுரைக்கு எனது நன்றியைநவில்கின்றேன்.
அத்துடன் இந் நூல் வெளியீட்டில் அக்கறையுடன் செயல்பட்ட அன்பிற்குரிய திரு.எஸ்.சிவபாலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இவர். அஸ்ராபிரிண்டர்ஸ்.பிரைவேட்
16

லிமிடட் இன் அதிபர் இவரின் அரிய பணி சிறக்க எனது நல் வாழ்த்துக்கள்.
மற்றும் நூலாக்கத்தில் ஒத்துழைப்பு நல்கிய எனது நண்பர்கள், அபிமானிகளுக்கும் எனது நன்றியறிதல்களைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன்
"(8Lp(B (96)6Ob"
36- 2/
ஈ.எஸ் பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு06,
தொ.பே இல- 011-2361012 O71-4402303
O77-4318768
17

Page 11
நூலாசிரியர் பருத்திடிர் பால. வயிரவநாதன் எழுதி வெளியிட்ட"வாழ்வியுள் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
1. உண்மை சாஸ்வதமானது - UT86Lib - 01
2. அம்மா - Tsib - 02
3. சுயதரிசனம் - LIFTElf - 03 4. கோழைகளாய் வாழுவதே? - LIT85lb - 04 5. ஞானம் - TLb - 05 6. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்! - LITELD - 06 7. சும்மா இருத்தல் - Listasib - 07 8. உண்மைகள் உலருவதில்லை! - LiTaSLb - 08 9. உண்னோடு நீ பேசு! - LITBlf - 09
10. நான் நானே தான்! - LT35LD - 10 11. வெறுமை - LITsub - 11 12. காதலும் கடமையும் - பாகம் - 12 13. அக ஒளி - usTBlb - 13 14. உன்னை நீ முந்து - பாகம் - 14 15. சுயபச்சாதாபம் - LutsLb - 15
16. மெளனம் - Lusiast b - 16
17. மரணத்தின் பின் வாழ்வு - LITBlf - 17 18. சிந்தனை வரிகள் - il urablb - 18
18

örloffLiecorið
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
19

Page 12
01) 02)
03) 04) 05) 06) 07)
08)
09)
10) 11)
12)
13) 14)
பொருளடக்கம்
--os-ses-so
ஒசை
கெளரவம்
Tra)6
Ghelugp16DID
திருப்தி
கவர்ச்சி குடும்ப அமைதி பெற
பழங் கதைகளைச் சுரண்டாதீர் குழந்தைகள் முன் வம்பளக்க வேண்டாம்! கணவன் மனைவிக்கிடையே
புரிந்துணர்வு அவசியம்
இல்லங்கள் தோறும்
வீட்டுத்தோட்டங்களை அமைக்குக! பொறுப்புக்களை கையளித்தல்
பேச்சுச் சுதந்திரம்
பக்கம்
21
35
47
56
66
77
86
99
111
117
122
127
132
138
20

ólogam
கற்பனை
(பிடிப்படியான சிந்தனை வளர்ச்சி மூலம் மனிதனின் கற்பனா சக்தி அற்புதமாக மெருகேறுகின்றது. கலைப்படைப்புக்கள் மட்டுமின்றி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும் கூட மனிதமூளையின் சிறு எண்ணங்களே விஸ்வரூபமாக உருப்பெருத்துப்பின்னர், தமது கற்பனை மூலம் கண்டவைகளை உண்மையாக்குவதில் விஞ்ஞானிகள் பலரும் வெற்றிகொள்கின்றார்கள். கற்பனை என்றும் பெயரில் நிஜவாழ்க்கைக்கும், நீதிக்கும் முரணான, குதர்க்கவாதங்களுடன் இயைபுபட்ட கருத்துக்கள் உலகிற்குச் சென்றடையக் கூடாது. எமது பழைய இலக்கியங்கள் போல அதி உன்னதமான சிருஷ்டிகளை இன்னமும் உருவாக்க முடியாமல் இருக்கின்றோம். நல்ல கற்பனைகளால் மனம் விசாலமடைகின்றது. சூந்தோஷம் எம்மை ஆட்கொள்கின்றது. الص
உலக மகா இலக்கியங்கள், காப்பியங்கள் கலைப்ப டைப்புக்கள் போன்ற அற்புத சிருஷ்டிகள் எல்லாமே கற்பனை என்கின்றவற்றாத நற்சிந்தனையூடாகவே காலம் காலமாக மாந்தர்க்கு வழங்கப்பட்டு வருகின்றன.
21

Page 13
பருத்தியூர்.பால. வழிவகுரர்
கற்பனையில்லாத மனிதர் எவராவது இருக்கின்றா ர்களா? தான் செய்ய வேண்டிய கருமங்களைப்பற்றிச் சிந்திப்பதும், அதனை எவ்வாறு முடித்து வைப்பது பற்றி நாம் தினம், தினம் மனதில் உருப்போட்டுக் கொண்டிருக் கின்றோம். செய்ய விரும்பி வெறும் கற்பனையோடு காலம் தள்ளுவது கனவோடு சீவிப்பது போலத்தான். நல்ல கற்பனை என்பது வேறு, மனக்கோட்டை கட்டுதல் என்பது வேறு, உருவகப்படுத்தும் ஆற்றல் இன்றேல் செய்யப்படும் கருமம் இலகுவாக்கப்படமாட்டாது அல்லவா? சில கருமங் களை அனுபவ ஞானம் மூலம் எவ்வித சிரமமும் இன்றி முடித்து விடமுடியும். எனினும் ஆரம்ப அறிவை வளர்க்க ஒருவன் எடுத்த கால அளவையும் பெற்ற சிரமங்களையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
படிப்படியான சிந்தனை வளர்ச்சி மூலம் மனித னின் கற்பனா சத்தி அற்புதமாக மெருகேறுகின்றது. சிலர் இயல்பாகவே சின்னஞ்சிறு வயதிலேயே கவி புனையவும், பிரமாதமாகச் சித்திரம் வரையவும், கலைப் பொருட்களை உருவாக்கவும் கற்றுத் தேர்ந்துவிடுகின்றனர். "எப்படி இந்த வயதில் இந்தச் சின்னப் பையனுக்கு இசைஞானம் வந்தது" என்று நாம் இளம் இசைக் கலைஞனைப் பார்த்து வியந்து போற்றி இருக்கலாம்.
ஆர்வமும், முயற்சியும் உள்ளவர்க்கு நல்ல கற்பனைவளம் எளிதில் ஊற்றெடுத்துவிடுகின்றது. கற்பனை உலகில் சதா சஞ்சரிக்கின்ற கலைஞர்கள் உலகை மறந்த
22

úlyog உணர்வுடன் புதுப்புதுப் படைப்புகளை உருவாக்கி உல கிற்கு வழங்கும் ஒரு கொட்ையாளியாகவே மாறி விடுகின் றனர்.
கலைப்படைப்பு மட்டுமல்ல விஞ்ஞானக்கண்டு பிடிப்புக்கள் கூட மனிதமூளையின் சிறு எண்ணங்களே விஸ்வரூபமாக உருப்பெருத்துப் பின்னர் தமது கற்பனை மூலம் கண்டவைகளை உண்மையாக்குவதில் முனைப்பாக நின்று விஞ்ஞானிகள் பலர் வெற்றி கண்டுமுள்ளனர்.
ஆரம்பத்திலேயே இதுவும் நடக்குமா? என்ற எண்ணம் கொண்டால் விடாமுயற்சி என்கின்ற சக்தி அவனிடம் இருந்து விடைபெற்று ஏகும். மனித சமூகத்திற்கு உகந்த எண்ணங்களை நாம் சதா எண்ணினால் தான், நாம் நிறைவேற்றக்கூடிய தெளிந்த கற்பனை ஊற்று எமக்குக் கிடைக்கும்.
“எனக்குக் காசு வந்துவிட்டது இதோ பெரிய மாளி கையைக் கட்டிக்கொண்டிருக்கின்றேன்” என்று தனக்கு சொல்லியபடியே அது நிஜம் என்று தனக்குள் கருதியே வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் பேர்வழிகள் கூட இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்று யதார்த்தத்திற்கு ஒவ்வாத உண்மை என்பதே அறவேயற்ற கற்பனை என்கின்ற பெயரில் கதைகளும், திரைப்படங்களும், பொய்மையான தகவல்களும் மக்கள் முன்னே நடித்துக் கொண்டிருக்கின்றன.
23

Page 14
பருத்தியூர்.04ல. அற்றுருதர்
கற்பனை என்கின்ற பெயரில் நிஜ வாழ்விற்கும் நீதிக்கும் முரணான குதர்க்க வாதங்களுடன் இசைவுபட்ட கருத்துக்கள் மக்களிடையே பரப்பப்பட்டும் அதனையே சமூகமும் ரசிப்பதும் ஏற்பதுமாக இருப்பது எவ்வளவு கவலை தரும் விடயம் தெரியுமா?
சமூக நீதி செத்துப் போவதைக்கூடச் சிலர் ரசிக்கின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது. எல்லா கேவலமான நடத்தைகளையுமே அது இன்று உண்மை யாகவே நடப்பதாக மாயா வாதம் செய்கின்றார்கள்.
"நாங்கள் சொல்வது வெறும் பொய்யான கற்பனை என்று சொல்கின்றீர்களே. அதில் உண்மையை அறியுங்கள் என்று சொல்லி இளைய தலைமுறையினரை நோக்கி வீசப்படும் ஆபாசமான, தகாத கற்பனைக் கதைகளும், இலக்கியம், கலை, என்ற பெயரில் பல தரக்குறைவான பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் நஞ்சாக அதிகரித்து விட்டன. இவை கழுகுபோல் உலகைச்சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.
நற்சிந்தனை அற்றுப் போனவர்கள் நல்ல கற்ப னைக்கும் தூய்மைக்குக் கருத்துக்கும் பேதம் தெரியாமல் காசைச் சேர்ப்பதற்காக வேஷம் போடுகின்றார்கள்.
பரிணாம வளர்ச்சி பற்றி என்னதான் கூறிவந்தாலும் கூட பழைமையான கலை, இலக்கியபடைப்புகள் போல் எம்மால் இன்னமும் ஏன் சிருஷ்டிக்க முடியவில்லை?
24

úlyog இன்று எந்த நாட்டின் பழைய காலத்து சிற்பங்கள், கோட்டைகள், நீர்ப்பாசனக் கட்டுமானங்களைப் பாருங்கள். பாரிய விஸ் தீரணமான எத்தனை ஏரிகளைக் குளங்களை முன்னோர்கள் ஆக்கிச்சென்றார்கள்? உலகமகா அதிசயங் களில் ஒன்றைத் தானும் முன்னேற்றமடைந்து விட்டோம் என்று கூறும் நாம் அதை செய்துவிட்டோமா?
அத்துடன் பழையகாலத்தில் பெரிதாக வசதிகள் இல்லை என்று வாதிட்டுநாகரீக உலகில் கர்வமாகத்திரியும் எம்மவர்கள் முன்னைய கட்டிடங்கள் சிற்பங்களில் ஒன்றைத் தானும் அல்லது அதுபோலவே வேறு கலைப் படைப்புக்களை உருவாக்கமுடியாமல் இருக்கின்றதே ஏன்? நல்ல இலக்கியவாதிகளும் அறிஞர் பெருமக்களும் இருந்து வாழும் இந்த உலகில் கற்பனை வளமிக்க முன்னைய பழங்கால இலக்கியம் போல் அதன் சிறுபகுதியின் தரத் திலாவது சிருஷ்டிக்க முடிகின்றதா?
அர்ப்பணிப்பும் சிரத்தையும், உறுதியான தூய மனோ நிலையுடன் மேலான இறை சக்தியினாலேயே இவ்வாறான கற்பனை நயம், வளம், மிக்க, இலக்கியப் பொக்கிஷங்களை முன்னோர் எமக்கு உவந்து அளித்துப் போயினர்.
மூடநம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையுமற்றவர் களே "முன்னோர்கள்” என்று ஒரு தப்பான அபிப்பிராயம் இன்னமும் உலவுகின்றது.
25

Page 15
பருத்தியூர்.0. வலிர்வரர்
ஒவ்வொரு காலத்திலுமே அக்காலத்து மாந்தர் களால் வாழ்ந்து வந்த காலமானது அப்போதைய பொற் காலம் தான். இருக்கும் காலத்தை மட்டும் எடுத்து எக்காலத்தின் தாற்பரியத்தையும் உணராமல் பழமையை எதிர்ப்பதும் அதன் பொருட்டு உண்மை நிலையை உணராமல் ஒரேகோணத்தில் உலகை உற்று நோக்குத லும் நல்ல வளர்ச்சிநிலைக்கு உவப்பானதல்ல. பழமையில் புதுமையை நோக்குதலும் புதுமைக்குள் புதுமையினை மெருகு சேர்ப்பதுமே அழகாகும்.
ஏன் எனில் சிந்தனை உருவாக்கல், கற்பனைகள் எல்லாமே எல்லாக் காலத்திலும் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவை எவ்போது தான் ஓய்ந்து போயிற்று?
ஆயினும் பண்பாடு, கலாசாரங்கள் முழுமையாக அதன் வடிவம் முழுவதும் சிதையாமல் இருக்கின்றதா என்றும் கேட்கத் தோன்றுகின்றதல்லவா?
போரும் போராட்டங்களும், சச்சரவுகளும் எல்லாக் காலத்திற்குமான நிரந்தர பிரச்சினைகள் தான். மனித மனோநிலை அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே அவன் வாழும் சூழல், வெளியார் வரவுகள், தாக்கங்களால் மாறுபட்டேவிட்டன.
26

6alpably எனவேதான் காலத்திற்குக்காலம் தனிமனித கற்பனை ஆற்றல்கள் கூட அவைகளின் ஆழம் செறிவுகள் மாறுபாடாகவே தோன்றுகின்றன.
நிம்மதியுடன் வாழுகின்றவனின் கற்பனா சக்தியும், சதா துன்பத்துடன் அச்சத்துடன் சீவிக்கின்றவனின் யோசனைகளும் ஒன்றாக இருக்காது என்பார்கள். அனுபவங்களுக்கும் ஆற்றல்களுக்கும் ஏற்ப கற்பனைகள் மாறுபாடாக வித்தியாசமாக அமையும்.
ஆனால் துன்பத்துடன் வாழும் "கலைஞன்” அதீத ஆற்றல் வளம்மிக்க படைப்பாளியாக இருப்பது ஒன்றும் புதினமல்ல. சாதாரண மனிதனுக்கும் கற்பனை வளம் மிக்கவனுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
எந்தத் துன்பங்களிலும் சோதனைகளிலும் பெரும் படைப்பாளி தன் படைப்புக்களை நிறுத்திவிடுவதுமில்லை, உலகிற்குஅருமருந்தாகவும்,படிப்பினையும், இனிமை யூட்டும் இலக்கியம் படைத்தவன் செத்துப்போவதுமில்லை.
தீர்க்கதரிசனமாகவே பின்னர் நிகழப்போகின்ற சங்கதிகளைத் தம் தெய்வீக அருள் மூலம் தன் கற்பனா சக்தியால் சொல்லிவிடும் ஆற்றல் கவிஞர்களுக்கு உண்டு. கனவாகத்தெரிந்த விஷயங்களை நம்பமுடியாது. ஆனால் தெய்வீக கிருபை பெற்றவன் சிந்திய சொற்கள் பிழைத்துப் போவதுண்டோ? சொல்லப்போனால் ஆன்மீகவாதிகள்
27

Page 16
பருத்திபூர்.பல. வயிற்றுகுழர் போல் படைப்பாளிகளான கலைஞரும் கவிஞர்களும்
சொல்லிச் செய்கின்ற வேலைகள் யாவும் சித்து வேலையோ எனப் பிரமிக்க வைக்கின்றனவே?
مطھه எந்நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிவா ற்றல் மூலம் அவர் தம் அனுபவ வாயிலாகவும் ஆழ்மனதின் தூய்மை வாயிலாகவும், சொல்லப்படுபவைகள் கற்பனை போன்ற நிஜங்களே தான்!
இலக்கிய ரசனைக்காக சொல்லப்படும் வரி வடிவங்கள் எம்மைச் சந்தோஷமூட்டவும் இயற்கையினை, மானுட இயல்பை கலையுணர்வை மேலோங்கச் செய்வதற் காகவே புனையப்பட்டுள்ளன. இவைகளைப் வெறும் பொய் எனக் கருதாது. இதயங்களைச் சுவீகரித்து இன்பங்களை, ஏன் பிறர் துன்பங்களைக்கூடப் பகிர்ந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்டதே என அறிக!
கரிப்போடும் வெறுப்போடும், உலகை நோக்காது விருப்போடு பார்ப்பவனே உண்மைக் கலைஞனாவான். மக்களை நேசிக்காதவன் தூய கலைஞனாகமாட்டான். எனவேதான் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்ற கலைஞ ர்கள், கவிஞர்கள் எல்லோருமே மென்மையான உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
எனினும் உலகில் நடக்கும் அத்துமீறல்கள் அநியா யங்களைக் கண்டுவிட்டால், அதனைச் செய்கின்ற எத்தரத்த
28

6ailable வராயினும் ஏன் மன்னர்கள், ஆட்சியாளர்களேயாயினும், கொதித்தெழுந்து விடுகின்றனர். அந்நேரத்தில் அவர்கள் சொல்கின்ற வார்த்தை அம்புகள் இறைவன் தொடுத்த பாணம் போலவே ஆழமாக, ஊடுருவித் தைத்து விடுகின் றனவே!
முற்காலத்தில் புலவர்களை மாமன்னர்கள் தலை மகன்களாகக் கெளரவித்தார்கள். அவர்கள் மனநிறைவுடன் வாழ்த்தினால் அந்நாடு வாழ்ந்து செழித்தோங்கும் என அனைவருமே முழு நம்பிக்கை கொண்டனர். புலவர்கள் அருள்கூர்ந்து தம்மைப்பாட வேண்டும் என அனைத்து மன்னர்களுமே எதிர்பார்த்து அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை அளித்தும் வந்தனர்.
தூய மாந்தரின் சொல் செயல் எல்லாமே களங்க மற்றது. எனவே அவர்கள் வாக்கு கற்பனையானது மாயை யானது என எவரும் அதனைச் துச்சமென எண்ணியதும் கிடையாது.
இன்று எம்மத்தியில் உள்ள நல்ல படைப்பாளிகள் வெளி உலகிற்குத் தெரியாமலேயே வாழ்ந்து மறைந்து போவது வேதனையானது இவர்களது வளம் பொருந்திய ஆக்கங்களை உலகம் கண்டுகொள்ளாமலே விடுவது அவர்களை விட இந்த அவனிக்குத்தான் பெருநஷ்டமானது என்பதை மறுக்க முடியாது.
29

Page 17
சூத்ரி.டி. 949%ரர்
எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அற்புதமான கலைஞர்கள், கவிஞர்கள், புத்திஜீவிகளின், வியத்தகு ஆக்கங்களை மக்கள் முன்கொண்டுவர அனைத்துத்தரத்து மக்களும் முக்கியமாக பத்திரிகைகள், சஞ்சிகைகளும் முயற்சிசெய்ய வேண்டும்.
எங்காவது ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் அமைதியாகக் கலைப்படைப்புக்களை எழுத்து ஆக்கங் களை உருவாக்கும் பிரம்மாக்களை அரவணைப்பது என்பது இந்த உலகிற்குப் புது உருவம் வழங்கச்செய்தலுக்கு நாம் வழங்கும் பேருதவியுமாகும். கருமங்கள் ஆற்றுவோனைச் சிரமம் கருதாது, ஊக்குவித்தல் சமூகப்பணியுமாகு
மன்றோ!
மனம் விசாலமானவர்களின் சொல், எழுத்து, கற்பனை அத்தனையுமே சுத்தமானது என்பது அவர் தம் செயல்மூலம் தெளிவாகிவிடும். நீங்கள் ஒரு சிறந்த கலைஞனிடம் அல்லது, கவிஞனிடம் பேசிப்பாருங்கள்! உங்கள் உள்ளத்தில் உள்ள சஞ்சலங்கள் அத்தனையும் உங்களை விட்டுப் போனது போன்ற உணர்வைப் பெறுவீர்கள். இவர்களின் அனுபவஞானம் சுவாரஸ்யமானது
தான.
எப்பொழுதும் சந்தோஷமாக கலகலப்பாக இருப்ப வர்களின் எண்ணங்கள் எங்கள் மீதும் தொட்டுக் கொள்வ தால் நாமும் அவ்வண்ணமே மாறிப்போவதில் வியப்பில்லை அல்லவா? VQ
30

ólogollo சிறந்த நுட்பமான கற்பனைகள் இல்லாதுவிடின் ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் எப்படி ஒருவரிடம் இருந்து பிரசவிக்க இயலும்? நன்கு திட்டமிடல்கூட கற்பனையின் ஒரு உருவம் தான். இப்படித்தான் செய்ய வேண்டும் என்கின்ற உருவாக்கல் என்பதே மனதில் எழும் ஒரு படம்தானே?
ஆரம்பத்தில் எழுந்த கற்பனை வடிவம் பிரகாசமாக உள்நின்று உருவாகி அது முழுமையாகும் போது நீண்ட சிந்தனை ஆராய்ச்சிகளே மக்கள் விரும்பும் தேவைப் படுகின்ற கண்டுபிடிப்புமாகின்றது.
எனவே, கற்பனை எனும் நல்வித்து சிறப்பாக உருவானால் எத்தனையோ நல்ல ஆய்வுகளை மக்களுக்கு நலம்தரும் புதிய தேடல்களை உருவாக்க முடியும் அல்லவா?
கனவையும் கற்பனையையும் ஒரே பார்வையில் சிலர் பார்க்கின்றார்கள். உண்மையில் இவையிரண்டிற்கும் இடையில் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு.
நாம் நினைத்தபடி கனவு காணமுடியாது. ஆனால் நினைத்தவாறு எப்படி வேண்டுமானாலும் கற்பனை உலகில் சஞ்சாரம் செய்யமுடியும்.
31

Page 18
கருத்தியூர்.00. ஒயிற்றரச்
மேலும் நாம் எம் அறிவுக்கும் ஆளுமைக்கும் உகந்தவாறு கற்பனையை ஒரு கட்டுப்பாட்டினுள் வைத்தி ருக்க முடியும். ஏதாவது முடியாத வீண் எண்ணங்களில் லயிப்பதை சதா உருப்போட்டு எம்மை அது வசப்படுவதைக் கட்டுப்படுத்திவிடலாம். ஏன் அறவே அகற்றியும் விடலாம். ஆனால் நாம் கனவைக் கட்டுப் பாட்டினுள் கொண்டு வரமுடியுமா? மேலும் விழித்திருக்கின்ற வேளையில் கற்பனை உருவாகின்றது. உறக்கத்தில் கனவு வந்து மறைகின்றது.
நனவில் நிகழும் நிகழ்வுகள் எண்ணங்களே கனவாகச் சித்திரம் போடப்படுகின்றது என்றும் கூறுவர் எனினும் வெளிப்படையாகக் கனவு என்பது ஒரு மாயா ஜாலமானது. அந்தக் கணப்பொழுதில் அது எங்களை மயக்கிவிடுகின்றதே.
கற்பனை, நனவுடன், நனைந்து கொள்வதால், எமது சொந்த நிலையை, எந்தத் தருணத்திலும் எம்மால் உணர்ந்து கொள்ள இயலும் அல்லவா? சின்ன வயதில் நல்ல கற்பனையுடன் தன்னை வளர்த்துக் கொண்டவர்கள் காலப்போக்கில், நிஜமாகவே வாழ்க்கையில் உயர் நிலையை அடைந்து விடுகின்றார்கள்.
எவ்வித உழைப்பும் இன்றிதங்கள் வாழ்வின் உயர்
நிலைபற்றி கனவுடனும் கற்பனையுடனும் வாழ்ந்தால் வாழ்க்கையின் சிறப்பான உயர்வினை எப்போது பிடிப்பது?
32

agang
மனதை ஸ்திரப்படுத்தாத வாழ்வில் உழைப்பினைக் கொடுக்காத கற்பனை வாழ்வில் என்ன பயன் இருக்கப் போகின்றது?மேலும் தூய சிந்தனையற்றவர்களது கற்பனை எதிர்பார்ப்புக்கள், எல்லாமே மன அமுக்கத்தினையும் பழி உணர்வினையுமே ஏற்படுத்துவதனால் அந்நிலையில் இருந்து உடன் விலகாதவரை உள்ளத்தில்களிப்பேருவகை இவர்களைச் சென்றடைவதுமில்லை.
இன்று மனிதனின் கற்பனை வளத்தினால் உருவாக்கிய கருவிகளே மனித இனத்தையே இயக்கிக் கொண்டிருக்கின்றது. பிரபஞ்சம் பற்றிய அறிவைக்கூடத்தன் அதீத கற்பனைமூலமும் தான் பெற்ற கல்விமூலமும் காணத்துடிக்கின்றான்.
உண்மைகளைத் தேடக்கூடக் கற்பனை தேவைப் படுகின்றது.கேட்டல் படித்தலுடன், சுயமாக மனித இனம் பரந்த ஞானத்தைத் தன்னுள் தேடிக்கொண்டேயிருக்கி ன்றது. "இந்த ஆய்வுக்கு ஒய்வேதுமில்லை”.
தாம் கண்ட ஒரே விடயத்தையே பலர் பலவிதமான வடிவில் எமக்குச் சொன்னாலும் கூட ஒவ்வொரு கருத்தி லும் ஏதோ ஒரு புது மெருகு தோன்றுவதை நாம் மறுக்க இயலுமா? இதுதான் கற்பனைச் செறிவும் புதியன தேட முனைதலுமாகும். ஆரம்பத்தில் சர்வசாதாரணமாகத் தோன்றும் விடயங்களே, முடிவில் மிகப்பெரிய உருவில் பிரமிக்கத்தக்க கண்டுபிடித்தலாகவும் மாறலாம்.
33

Page 19
|
|
|
கருத்தியூர்.0. வயிற்வரர்
ஒருவரது உருவாக்கல் திறனையும் கற்பனையின் அற்புத பெறுபேறுகளையும், மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும். எம்முன் இருக்கின்ற ஒவ்வொருவரின் தனித்து வத்தை ஆற்றல் வெளிப்படுத்துகையை காணாமல் கண்டு கொள்ளவிரும்பாமல் ஒளிந்து கொள்ளவேண்டாம்.
எங்களால் முடியும். அதேபோல் எம் முன்னே உள்ளோரும் பல்துறை ஆற்றல்களைச் செய்யவல்லவர் என்பதை உணர்வோம். எல்லோர்க்கும் எல்லாமே பொது வாக ஈந்தான் ஈசன். எனவே பரந்துபட்ட சிந்தனையுடன் புத்தம் புது கற்பனைகளை உலக உருவாக்கலுக்காக படைக்க எண்ணுமின்! என்றுமே உயிர்ப்புடன் பூமியை பூக்கச்செய்வது அனைத்து உலக அங்கத்தவர்களின் ஒப்பற்ற கடமையுமாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 17-09-2006

ólagplanol
Ugrofissió
சிக்கன வாழ்வு வாழ்பவன் கையேந்தி நிற்கமாட்டான். இருப்பதை வைத்துப் பொறுப்புடன் சேமித்து அடுத்த வேளை பற்றிச் சிந்திப்பவனே சிறந்த மனிதனாவான்.தன்மானம் என்பது ஏழைகளுக்கும் சொந்தமானது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்குச் செய்த உதவிகளைச் சுட்டிக்காட்டி எண்ணிநகையாடுதல் குரூர புத்தி யாசகம் என்பது எல்லா நேரங்களிலும் மோசமானது என்று சொல்லக் கூடாது. இருப்பவர்களிடம் இருந்து பெற்று, இல்லாதவர்களுக்கும் வழங்குவதில் என்ன தப்பு? சும்மா படுத்துக் கிடப்பவர்கள் கூட தங்களைப் பல்லக்கு கொண்டு தூக்க வேண்டும் என்று கெளரவமாக யாசகம் கேட்கின்றார்கள்.
பணம், பொருள் கேட்டுக் கை நீட்டுதல் மட்டும் யாசகமாகுமா? உடல் வலு இருந்தும், மனவலு இன்றி, பிறர் தயவில், தொங்கிவாழுதல் கூட இங்கிதமற்ற யாசகம் அன்றி வேறென்ன சொல்வீர்!
35

Page 20
பருத்திபூர்.04ல. ஆயிரவருதஷ்
இருப்பவன், இல்லாதோர்க்கு வழங்குதல் அறநெறி யாகும். இயலாத நிலையில் உள்ள வறியோர்க்கு அவர் தம் நிலையுணர்ந்து செய்தலே தர்மம். சோம்பலை யும், சோர்வையும் வியர்வைசிந்தி உழைக்க வைக்காத நிலைமை யையும் எவர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்களோ அவர் இறைவனுக்கே துரோகம் இழைத்தோராகக் கருதப்படுவர்.
"இல்லாமை, இல்லாத நிலை வேண்டும் இறைவா” எனக் கோருபவர்கள், எல்லோரும் இறைவன் விருப்பப்படி மனதையும், உடலையும் நம்பி உழைத்தால் கடவுளின் கருணையைப் பெருவாரியாகப் பெற்றே தீருவர்.
அன்னை தெரஸா எனும் தெய்வத்தாயார் இருப்ப வரிடம் இரந்து பெற்று இல்லாதோர்க்கு வாரி வழங்கினார். அவரது கோரிக்கை யாசகம் அல்ல, சேவை என்பதை நாம் அறிவோமாக! பணம், பொருள் கொடுத்தல் மட்டும் தர்மம் அல்ல, தம் உடலினால் ஆதரவற்றோரைப் போஷிப்பது அவர்களை ஆசீர்வதித்துக் கருணை காட்டுவதுகூட மானுட தர்மநெறியேயாகும். இதனையே அன்னை தெரஸா அவர்கள் உலகிற்குச் செய்துகாட்டினார்.
ஒரு தடவை அவர் புகையிரத வண்டியில் பயணம் செய்தபோது பயணிகள் தாம் உண்ணும் உணவினை விரயம் செய்வதைக் கண்டதும் அவர் உணவை விரயம் செய்யாது மீதி உணவ்ைப் பக்குவமாகப் பொதி செய்து
36

6alpole தருமாறு கேட்டுப்பெற்று உடனடியாகவே அதனை ஏழை எளியோர்க்கு வழங்கியும் விட்டார்.
இது விடயத்தில் எமது நாட்டின் திருஅருட்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பொது நலப்பணி போற்றுதற்குரியது. ஆதரவற்றவர்களுக்கு அம்மையார் செய்த பணி எந்நாளும் போற்றுதற்குரியது. இன்று உலகில் உணவிற்காக ஏங்கும் எத்தனை ஏழைகள் இருக்கின்றார்கள். இவர்களை புவியியல் ரீதியாகத் தாம் வாழும் நாட்டில் தொழில் செய்ய வாய்ப்பு இன்றி, வரட்சியால் தமது வாழ்க்கையையே இழந்து மிரட்சியுடன் இறப்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோர்க்குப் பணம் படைத்த நாடுகளின் மக்கள்தாம் வீண் விரயமாக்கும் பொருளில் ஒரு சிறு பங்கையாவது சேகரித்து வழங்கினால் வறுமை ஒழிந்து விடுமல்லவா?
ஒருவர் வறுமையால் வாடுவதைவிடக் கொடுமை வேறில்லை என்பர். உண்மையில் வறியோர்களை உருவாக் குவதே பெரிய பாவச்செயலாகும். இன்று தாம் சுரண்டப் படுவதை தமது உழைப்பு பிடுங்கப்படுவதை இழக்கப் படுவதை உணராத அப்பாவி ஜீவன்கள் யாசகம்கேட்டுப் பெரும் தனவந்தர்களை முதலாளிகளைச் சரணடைவது மனம் பொறுக்க இயலாத கொடுமையன்றோ!
உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுத்தாலே போதும் இன்றுள்ள பெரும்பாலான வறியோர் பிறரிடம் யாசகம்
37

Page 21
பருத்தியூர்.பால. லுயிரவநாதர் கேட்பது போன்ற கொடுமைகள் இல்லாது போய்விடும். முழுமையாக உழைக்காதவனுக்குப் பரிதாபப்பட்டுப் பிரயோசனம் இல்லை. மற்றவரின் இரக்க சிந்தனையினால் தனது வாழ்க்கையைக் கருவோடு ஜீரணம் செய்வது புத்தி கெட்ட சோம்பறிகளின் செயல்தான் என்பதை இத்தகை யோர் எப்போதுதான் உணரப்போகின்றார்களோ தெரிய வில்லை.
இன்னொருவரது உழைப்பைக்கொண்டு தான் வாழ எண்ணுதலும் பிறர் பணத்தைக் கூசாமல் கேட்பதும் ஒரு தன்மானமற்ற செயல் என்று யாசகம் கேட்பவர் உணர்வதும் இல்லை.
உலக ஷேமத்திற்காகத் துறவு மேற்கொண்டவர்கள் மக்களிடம் வந்து யாசகம் மேற்கொள்ளுதல் அவர்கள் தமக் காக செய்யும் பணியல்ல. ஞானிகள் தமக்காக உணவைத் தவிர வேறு எந்த விதமான ஆடம்பரங்களையும் கேட்பது மில்லை. ஆனால் இன்று பிச்சைகேட்டு வருபவர்கள் நவீன உத்திகளைக்கையாண்டு மக்களை மதிகெட்டவர்கள் என எண்ணி நடந்துகொள்கின்றார்கள். ஏதாவது பொது நிதி கேட்டு வருபவர்கள் போலவும் தமக்கு அல்லது குடும்பத்தி னர்க்கு நோய் வந்து அதன் பொருட்டு உதவி கேட்பதாகவும் பலர் வந்து மக்கள் முன் போலி யாசகம் கேட்கிறார்கள்.
சமூக நல நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் பெயரில் நிதி மோசடி பண்ணுகின்ற பேர்வழிகள் பற்றி
38

ólapjúDO அவ்வப்போது செய்தித்தாள்களில் செய்திகளை நாம் படித்திருக்கின்றோம். என்றாலும் மக்கள் இதுவிடயத்தில் முழுவிழிப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் இரக்க சுபாவத்தைத் தமக்கு ஆதாரம் ஆதாயம் என்று கருதி இத்தகைய சமூக விரோதச்செயல்களை செய்பவ ர்களை சனங்கள் இனம் கண்டேயாக வேண்டும்.
"குறிப்பு அறிந்து தரம் உணர்ந்து வழங்கலைச் செய்” என்று பெரியவர்கள் சொல்வர். இன்று வசதிபடைத்த வர்கள்கூட இல்லாதவர்கள் போலவும், ஒன்றுமே இல்லாத வர்கள் கூட வசதிபடைத்த செல்வந்தர்களாகவும் தம்மைக் காட்டி நிற்கின்றனர்.
வெளியில் உள்ள பணக்காரனைப் பார்த்து அதே போல் தானும் வாழ ஆசைப்பட்டுத் தன்னிலை மறந்து வெளி ஆடம்பரத்திற்காக உல்லாச வாழ்வு வாழ்ந்து தமது கைப்பொருள் அனைத்தையும் இழந்தவர்கள் எத்தனையோ பேர்கள் உண்டு தெரியுமா?
முடிவில் இவர்கள் கையேந்தி பிறர் முன் நிற்பதும், அவர்களைப் பிறர் அவமதிப்பதும் எத்தனை துன்பக ரமானது என்பதை இவர்கள் ஆரம்பத்திலேயே ஏன் உணராமல் போனார்கள்? பிறரை எதிர்பார்க்காமலும் தன் நிலை அறிந்தும் வாழ்பவர்கள் எவருமே அவமானப்பட வேண்டிய சந்தர்ப்பமே எழுவதில்லை.
39

Page 22
பருத்தியூர்.00, வயிற்றுருபரர்
கெளரவமாக வெளித்தோற்றத்துடன் தம்மைக்காட்டி ஏமாற்றி எந்த உதவியைக் கேட்டாலும் அவர்களின் வேடம் களையப்படுவதுமட்டும் உறுதியானதாகும்.
*
இன்று உலகு எங்கும் ஆட்சியைப் பிடிக்க அரசியல் வாதிகள் மக்களிடம் வாக்குகளைக்கேட்டு வாக்குறுதி அளிக்கின்றார்கள். ஆனால் இவர்களில் பலரும் தமது வாக்குகளை பதவிக்கு வந்த பின் அழித்து விடுகின்றனர். பொய்மையானவாக்கு அளிப்பதும் அதனைக் கேட்பதும் யாசகம் அன்றி வேறென்ன சொல்ல முடியும்? பணத்தை விட கொடுக்கும் வாக்கு எவ்வளவு பெரிது? என்பதை இருசாராரும் மறந்து போகின்றார்கள். தமதுவாக்குகளை வேண்டப்படாத வேட்பாளர்க்குக் கொடுத்துப் பின்னர் வெட்கப்பட்டு வேதனைப்படும் மக்கள் பின்னர் அடைகின்ற பலாபலன்களை அனுபவித்துக்கொண்டேயிருப்பர். ஆனாலும் தொடரும் இந்த நாடகங்களின் அரங்கேற்றங்கள் முடிவில்லா துன்பியல் நிகழ்வுகளாகவே இன்னமும் நடந்து கொண்டிருப்பது அனுமதிக்கக் கூடாத அசிங்கமானதே!
கல்விக்காகப் பிச்சை எடுப்பதில் தப்பேதுமில்லை எனச் சான்றோரே கூறியுள்ளனர். ஆனால் கல்வி கற்பதற் காகச் செல்லும் மாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் பிச்சை கேட்பது வெட்கக் கேடானது அல்லவா! சொல்லப்போனால் இதுகூட ஒரு வகை இலஞ் சம்தான். அரசாங்கம் எத்தனை திடீர், தீவிர நடவடிக்கைகள்
YQ
40

6ailable மூலம் இத்தகையோரைக் கையும் மெய்யுமாகப் பிடித்தும் கூட இன்னமும் இந்த சமூக விரோதச் செயல்கள் ஓய்ந்த பாடில்லை.
ஒருவன் வாழ்க்கையின் பெரும் இலட்சியமாகக் கருதப்படும் கல்விச்செல்வத்தை அளிக்கும் கல்விக்கூடங்கள் பொருட்செல்வத்தினைப் பலவந்தமாகக் கேட்கின்றபோது மனம் அருவருப்பு அடைவதில்லையா? தன்னால் இயன்றவரை கொடுத்தும் இருப்பவரிடம் கேட்டு இல்லாதவரிடம் கொடுத்து வாழ்தல் என்பது தாழ்ந்த நிலையில் உள்ளோரைத் தாங்கும் அறப்பணியாகும். இன்று பல அரசு சாரநிறுவனங்கள் பலவும் வசதி படைத்த நாடுகளில் இருந்தும் பொது அமைப்புக்கள் மூலமாகவும் நிதிகளைப்பெற்றுப் பல ஆக்க பூர்வமான பணிகளைச் செய்து வருகின்றன.
கஷ்டப்படும் மக்கள் எங்காவது சென்று கடன் கேட்கின்றார்கள். கடன் கேட்பதுகூடச் சிலவேளை யாசகம் போலத் தெரிகின்றது. கடன் கேட்பவர் கூச்சப்பட்டு அவஸ்தைப்படுவதும், கடன் கொடுக்கும் சிலர் அவர்களை அற்ப புழுக்களைப்போல் பார்ப்பதும் எவ்வளவு பரிதாபமான விஷயம் அல்லவா? கொடுப்பவன் கை உயர்ந்து அதனைப் பெறுபவன் கரம் தாழ்வதும் ஒருவரின் இயலாமை மூலம் கிடைக்கும் அனுபவங்களே!. இல்லாமை, இல்லாது ஒழிந்தால், புவனியில் ஏது துன்பம் ஐயா!
41

Page 23
பருத்திபூர்.040. ஆயிரணுகுழர்
மனதில் வரட்சியின்றி வாழ வேண்டும். சிக்கன வாழ்வு வாழ்பவன் கையேந்தி நிற்கமாட்டான். இருப்பதை வைத்துப் பொறுப்புடன் சேமித்து அடுத்த வேளைபற்றிச் சிந்திப்பவனே சிறந்த மனிதனாவான்.
தன்மானம் என்பது ஏழைக்கும் சொந்தமானது என்பதைத் தனவந்தர்கள் பலர் உணர்வதேயில்லை. ஏதோ சந்தர்ப்பத்தில் உதவிகள் செய்வதும் பின்பு அதனையே குத்திக்காட்டி எள்ளி நகையாடுவது குரூரபுத்தியன்றி வேறென்ன?
தங்கள் உழைப்பினை ஈந்து வரும் ஒரு பாட்டாளி தன் துன்பநிலை ஆற்றாமை காரணமாகத்தான் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளரிடம் உதவி கேட்கப் போகும் போது அவன் மூலம் பெற்றுக்கொண்டிருக்கின்ற பாரிய உடல் உழைப்பின் பெறுமதியைப் பலர் கண்டு கொள்வதேயில்லை.
ஒருவனது வேலை சேவைகளிலும் பார்க்கத் தாம் வழங்கும் பணமே முழுப்பெறுமானமானது என ஒருவன் எண்ணுவது அவனது மனச்சாட்சியே மாண்டு போய் ‘விட்டதாகவே கருதப்படல் வேண்டும். சிலர் ஒருவர் செய்த தொழிழுக்காகக் கொடுக்கும் சம்பளத்தையேதாம் வழங்கும் பிச்சை எனக்கருதிக்கொடுக்கின்றார்கள். இத்தகையவர்கள் மற்றவர்களை இளைத்தவர்கள் எல்லோருமே தங்களுக்குப் பணிசெய்ய வந்த ஏவலாளர் என்றும் எண்ணிக் கொள்கின் றார்கள். vq
42
 

ólaplanol உலகம் எவ்வளவோ நாகரீகமடைந்து அறிவியலில், முன்னேற்றத்தில், விசாலமடைந்தபோதிலும்கூடச் சிறுமதி யாளரின் தொகை அருகியதாகத் தெரியவில்லை. ஏன் எனில் இன்னமும் சுரண்டப்படும் சீவன்கள் யாசகர்கள் போலவே நோக்கப்படுவது எமது நெஞ்சம் நோகும் நஞ்சான விஷயம் அல்லவோ இறைவா!
மிக இயல்பாக வழங்கப்படக் கூடியதும் அதனைப் பெறக் கூடியதும் அன்பு, பரிவு, பாசம் தான். அதனைப் பெறுதற்கு நாம் ஒவ்வொருவரும் நாடுவது இயல்பேயாகும். இதில் முக்கியமாகக் கருதப்பட வேண்டியது என்னவெனில் அதனை வழங்குபவர் பெறுபவர், பரஸ்பரம் பெறுதற்கரிய நிறைவினைக் காண்கின்றார். பொருளை வழங்குதல், பெறுதல் என்பது அவை கூடுவதும் இழப்பதுமாகும்.
ஆயினும் அன்பினை நாடுவது என்பதே தூய பெறுகையாகும். இங்கு இழத்தல் இல்லை. வரவுதான். அதுவும் இதயம் நிறைந்த புதையல்களேயாம்.
குற்றச்செயல்களைப்புரிந்து முறைகேடாகப் பொரு ளிட்டுவதை விடப் பிச்சை எடுப்பது மேலானது என்றும் நாம் சொல்வதுண்டு. அங்கவீனர்கள் கூட பிறரை எதிர்பாராது சுய முயற்சியால் தமது சுயகெளரவத்துடன் தம்மால் இயன்ற தொழில் செய்து பிழைப்பதை நாம் காண்பது உண்டல்லவா?
43

Page 24
பருத்தியூர்.0. வயிரவருதர்
குனிவதற்கும் நிமிர்வதற்கும் இஷ்டப்படாமல், வாழ்வை இலகுவாக ஒட்டுவதற்கு கண்டபடி குறுக்குவழி உபாயங்களை விடுத்து எழுந்து, நிமிர்ந்து உழைக்க முன் வரல்வேண்டும். உடலும், மனமும் படைக்கப்பட்டது. உலகிற்கும் நமக்குமான நியாயபூர்வமான உழைப்பினை தேடுவதற்கே.
சும்மா படுத்துக் கிடப்பவன் தன்னைப் பல்லக்குத் துணைகொண்டு தூக்கிக் கெளரவிக்கவேண்டும் என எதிர்பார்க்கலாமா?
தன்னை பெற்று வளர்த்து உருவாக்கிய பெற்றோர் களையே வீதியோரத்திலும், முதியோர் இல்லங்களிலும் விட்டு விடுவதால் அநாதைகள் போல் அவர்கள் நிம்மதி யுடன் சீவிப்பதற்கு வழியின்றி அல்லல்படும் காட்சிகள். இந்த உலகில் நீதிசெத்துவிட்டதோ எனக் கேட்கத் தோன்றும்.
பிச்சைக்காரர்களை உருவாகுவதற்கு இந்தச் சமூகமும் ஒரு காரணம் என்பதைச் சமூகம் கட்டாயம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இருப்பதற்கு வீடு இன்றியும் உணவு, உடை இன்றியும் வாழ நாம் அனுமதிக்கலாமா?
இன்று நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பங்கள் கூட இடப்பெயர்வு குடும்ப அங்கத்தினர்களின் உடல்ரீதியான மனரீதியான கோளாறுகளாலும், பெரும் பொருள் இழப்பி னாலும், யாசகர்கள் போல் வாழ்ந்துவருகின்றனர். திடீர் என
44
 

ólogollo
மனிதனுக்கு ஏற்படுகின்ற வாழ்க்கைத் தொய்வு கள் அவனை நிலைதடுமாறச் செய்து சரித்தே விடுகின்றன.
மக்கள் தமக்கு எதிரே அல்லுறுபவர்கள் தமது சகோதர சகோதரிகள், உடன்பிறப்புக்கள் என மனதார எண்ணல் வேண்டும். தங்களை அவர்கள் நிலையுடன் ஒப்பிட்டு நோக்கினால் நோவின் தாத்பரியம் விளங்கும். நான் இந்நிலைக்கு ஆட்பட்டால் எனது நிலை என்ன, எதுதான் நிரந்தரம் என்கின்ற உள் உணர்வு உறுத்தி நின்றால் எமது கருணைக்கண் அகலமாக விரிந்து நோக்கும்.
இரப்போரைத் துரத்தாது, அவர்களின் நிலை உணர்ந்து மானுடதர்மத்தின்படி எமக்குள்ள கடமையின் நிமித்தம் உதவி நல்குவதால் நாம் தெய்வ ஆசீர்வாதத் தினைப் பெற்றுக் கொள்கின்றவர்களாகின்றோம்.
ஏழைகள் இதயத்தில் குடியிருப்பவர் கடவுள் என்கின் றோம். அத்தகைய ஏழைகளை நாம் எமது செயலளவில் நேசிக்கின்றோமா? எல்லா சமய வேதங்களும் இல்லாதவர் களுக்காகவே பரிந்து அவர்கள் வாழ்வில் உலகில் நயம்பட வாழ வேண்டு மெனவே உபதேசிக்கின்றன.
"அவர் தன் புகழுக்காகத்தான் தான, தர்மம் செய்கின்றார்” எனச்சிலர் விதண்டாவாதம் செய்யலாம். நல்லன செய்ய முற்படும் வேளை பொல்லாப்பும் கேட்க
45

Page 25
கருத்திபூர்.அல. ஆயிரவநாதர் வேண்டிவரும் வில்லங்கமான வார்த்தைகள் விட்டுத் தள்ளப்பட வேண்டியதே!
எமது வாழ்க்கையின் கால எல்லையை எம்மால் வரையறை செய்ய இயலாது, இருக்கும் காலத்தில் செய்யும் சேவைகள் காலத்தின் விஸ்தீரணத்திலும் மேலானவை. உதவிகளின் அளவைக் கொண்டு அதன் தரத்தை நிர்ணயம் செய்யக்கூடாது. தினம் ஓரிரு ரூபாய்கள் உழைப்பவன் சில சதங்களைத் தான, தர்மம் செய்வதன் பெறுமதி எவ்வளவு மேன்மை பொருந்தியது தெரியுமா?
யாசகம் என்பது எல்லா நேரங்களிலும் மோசமானது என்று கருதமுடியாது. இன்று சந்தர்ப்பவசத்தால் பெருநிதி இழந்து வீடு, வாசல் இழந்தவர்க்காக நலிவுற்ற நாடுகள் செல்வந்த நாடுகளிடம் உதவிக்கரம் நீட்டுவது இயற்கை.
துன்பம் கண்டு துவண்டு படுத்து அடுத்தவன் என்றைக்கும் உதவுவான் என எண்ணுதலே பேதமை. "உன்னை ஒருவன் தூக்கி நிறுத்தியபின் நீ எழுந்து ஓடி ஆடிச்செயல்படு” இதுவே மானுட உதவுதலும் மீண்டும் செயல்பட வைப்பதற்குமான நெறிமுறையுமாகும். உன்னை நம்பினால் கை ஏந்துதலும் இல்லவே இல்லை.
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி 24-09-2006
46
 

ólogado
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய் மொழி ஓசை இனிமையானது. ஓசை, இசை, எல்லாமே இனம், மொழி, நாடு கடந்த விரிந்த ஒப்பற்ற சப்த சாகரமாகும். குயிலின் குரலும், பட்சிகளின் இறகுகள் படபடவென அடிக்கும் ஒலியுடன், அவைகள் தம்முன் பேசும் கீச்சிட்ட பேச்சுக்களும், சேவலின் கம்பீரமான கொக்கரக்கோ. என்னும் கூவுதலும், பசுக்கன்றின் "அம்மா” என்ற அழைப்பும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வைப்பன. நல்ல அன்பான பேச்சே நல்ல ஓசைதான். இனிய நல் ஓசை எம் ஆன்மாவைத் தூய்மையேற்றும்.
நல்ல ஓசை, செவிகளை மட்டுமன்றி தேகத்தின் ஒவ்வோர் அணுக்களை, இருதயத்தைச் சுத்தம் செய்யும் அற்புத சக்திமிக்கது. பெருத்த சப்தமும் பேயிரைச்சலும் நெஞ்சத்தைத் துடிதுடிக்க வைத்து நம் ஆத்மாவைப் பரிதவிக்கவைக்கும்.
47

Page 26
பருத்திஆர்.பல ஆயிற்றுருதர்
மென்மை உணர்வு மிக்க பறவை இனமொன்று பெரும் சத்தத்தைக் கேட்டதுமே துடி துடித்துச்செத்தே போய்விடுமாம். நல்ல இசையின் ஒலி, அது பரப்பும் அலை கள் எம் ஆழ்மனதுள்ளும் ஊடுருவி சந்தோஷ சாகரத்தி னுள் எம்மை நிறுத்தும். மனம் சந்தோஷமாகப் பறப்பதை உணர்ந்து கொள்ளப்பிரியப்படுகின்றீர்களா? இனிமையான மென்மை பொருந்திய மெல்லிய ஒலி அலைகளை எம் செவிகளுள் சேர்க்க இடமளியுங்கள். அவை நல்ல இசை யாக மட்டுமல்ல நல்ல வார்த்தைகளாகவும் கூட இருக் கலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்மொழி ஓசை இனிமையானதே. இந்த அனுபவங்களை எல்லோ ருமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பினும் தாய் மொழியின் பூரண இனிமையை தங்கள் மொழி பேசப்படாத தூர இடங்களில் வசிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உதாரணமாக எங்கள் மொழி பேசப்படாத தேசம் ஒன்றில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு எங்கோ ஒருவர் எங்கள் மொழியைப் பேசிக் கொண்டிருந்தால் எப்படியான உணர்வுகள் ஏற்படும்?
உள்ளம் புளகாங்கிதமடைந்து எமது மொழியை பேசியவருடன் உரையாடி, உறவாட மனம் விரும்பு மல்லவா? தமது மொழி மீதான ஈர்ப்பினை எந்தச் சக்தியா லும் தகர்க்க முடியுமா? தமது மொழியின் சப்த அலைகள் நிரந்தரமாகவே ஒவ்வொருவர் மனதிலுமே நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை தான்.
48

6opog
தமக்கு வேண்டப்பட்டவர்களின் குரலும், விரும்பும் இசையும் எவரையும் ஆட்கொள்ளவல்லது. தனக்குரிய நபர்களின் குரல் வளம் இனிதாக இல்லாது விட்டாலும் கூட அவர்களின் பேச்சை அழைப்பினை ஒருவருமே நிராகரிக்க மாட்டார்கள்.அன்னையின் அழைப்பை, தகப்பனாரின் கட்டளையை, குருவின் ஆணையை மீறி உதாசீனம் செய்வது நல்ல மனிதரின் இயல்புமல்ல. குரல் ஓசை ஏதோ ஒரு மாயசக்தி போல் எம்மை ஆட்கொண்டே விடுகின்றது.
மரணத்தறுவாயில் இருக்கும் முதியவர்கள் கூடத் தம்மோடு தமது தாய், தகப்பன், உறவுகள் பேசி அழைப் பதாகக் கூறிக்கொள்வார்கள் என்றோ இறந்தவர்களின் குரலோசை, மரணகாலத்தில் அவர்களுள் சஞ்சரிப்பது விந்தையன்றோ!
ஒசையின்றி உலகு இயங்குமா? எங்குமே ஒலி வியாபித்து எம்மை வழி நடத்துகின்றது. எவரது குரலையும் நாம் உடன் கேட்டு நுகர வழி பிறந்தும் விட்டது.விஞ்ஞான யுகத்தில் எமது கைக்குள்ளேயே, உலகத்தினரில் ஒசைகளை எத்திசையில் இருந்தாலும் கேட்க முடியும்.
நாட்டின் தலைவராகவோ, அல்லது மதத்தலை வர்களாகவோ இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை பிறர் கவரும் வண்ணமே பகிர்ந்து கொள்வதாலேயே செல்வாக் குப் பெற்று வருகின்றனர். மகான்களின் குரலில் இருந்து எழும் சப்த அலைகள் மக்கள் உள்ளங்களில் உடன் வியா
49

Page 27
கருத்திஆர்.பால. லுயிரவநாதர் பித்துப் பெருமாற்றங்களையே அவர்களுள் உருவாக்கி விடுகின்றன.
கடுமையான தொனிகள் எப்படியான மாற்றத்தை ஏற்படுத்திச் சித்திரவதைப்படுத்தும் சக்திவாய்ந்தது என்பது பற்றி ஒரு விஷயத்தைக் கூறுகின்றேன்.
உகாண்டாவின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி இடி அமீன். தமக்கு எதிரான குற்றவாளிகளுக்கு இப்படி யான விசித்திரமான தண்டனையையும் விதித்தார். அதாவது தமக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளவரிடம். உமக்குப் பிடிக்காத இசை எது எனக் கேட்பார். குற்றவாளி எனக் கருதப்பட்டவர் தமக்கு விரும்பாத ஒரு இசை பற்றியோ, பாடல் பற்றியோ கூறியதும், அந்த நபரை ஒரு தனி அறையில் அடைத்துவிடுவார்கள்.
பின்பு என்ன செய்வார்கள் தெரியுமா? பலத்த ஓசையுடன் அந்தக் குற்றவாளிக்குப் பிடிக்காத இசை யையோ, பாடல்களையோ கேட்கச் செய்வார்கள் இப்படியே தொடர்ந்தும் பல மணித்தியாலங்கள் கேட்கச்செய்வார்கள். எப்படி இருக்கும் அவரதுநிலை? உடலும் உள்ளமும் சுக்கு நூறாவது போன்ற பிரமையுண்டாகும். தலையே வெடிப்பது போன்ற பெரும் அதிர்வுகளை அனுபவித்து முடிவில் சித்தப்பிரமை பிடித்து இறக்குமளவிற்கு உட்படுத்தப்பட்டு விடுவார்கள்.
50
 

மிவறுமை இன்று இளவயதுப் பிரிவினர் ஆர்ப்பாட்டமான துள்ளல் இசையை நாடுவது வழக்கமாகிவிட்டது. சாஸ்திரீக சங்கீத நாட்டமுடைய இளைய தலைமுறையினர் எண்ணிக் கையில் குறைவாகவே உள்ளனர். மேற்கத்திய இசை எல்லாமே பெருத்த சப்தமுடன் கூடிய உஷ்ணமான சங்கீதம் என்று கூறிவிட முடியாது.
இன்று நாம் மேற்கத்திய நாடுகளில் உள்ளோரின் சாஸ்திரீய சங்கீதத்தின் அற்புதத் தன்மையிணைப்புரியாமல் இருக்கின்றோம். மேலும் சீன, யப்பான் போன்ற ஆசிய நாட்டினரின் பழைமையான இசைக் கருவிகளுடன் அவர்களின் பாடல்களைக் கேட்க வாய்ப்பிருந்தும் கேட்க ஆர்வமின்றி இருக்கின்றோம்.
ஒசை, இசை, சப்தம் எல்லாமே இனம், மொழி, நாடு கடந்த விரிந்த ஒப்பற்ற சப்தசாகரமாகும். நல்ல பேச்சு, நல்ல பாட்டு, எல்லாமே மொழி வேறுபாடு கடந்த இன்ப நிலைக்கு எம்மை எடுத்துச்செல்லவல்லது.
இசைக்கருவிகள் இன்ன நாட்டினர்க்கோ, இன்ன மொழியினருக்கே உரித்தானது என்று கூறமுடியுமா? அதில் இருந்து புறப்படும் சுகராகங்கள் எமது ஆன்மாவினை மெல்லென ஸ்பரித்து நிம்மதியூட்டும் கலை வடிவங்கள் அல்லவோ?
முற்காலத்தில் ஒவ்வொரு இன நாட்டு மக்களால்
51

Page 28
பருத்தியூர்.04ல. ஆயிரவநாதர் உபயோகிக்கப்பட்ட இசைக்கருவிகள் எல்லாமே இப்போது
சர்வ உலகின் பொதுச் சொத்தாகக் கருதப்படுவது நல் இசையின் வியாபகத் தன்மைக்கு நல்ல ஆரோக்கியமான விஷயம்தான்.
கீழைத்தேய, மேலைத்தேயசங்கீதங்களை இணை த்துப் புதுப் புது வடிவங்களைப் புகுத்தினாலும் அடிப்படை யான சங்கீத ராகங்கள் ஒன்று அல்லவா?
எனவே,
ஓசையால் இறைவன் எல்லோரையுமே ஒருங்கே பிணைத்துள்ளான் என்பது அற்புதமான உண்மையுமாகும்.
அதிகாலையில் நாம் நல்ல ஒசையுடன் விழித்துக் கொள்ள வேண்டும். கிராமிய சூழலில் நாம் இந்த சுகானு பவத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். குயிலின் குரலும், பட்சிகளின் இறகுகள் பட பட வென அடிக்கும் ஒலியுடன் அவைகள் தம்முள் பேசும் கீச்சிட்ட பேச்சுக்களும், சேவலின் கம்பீரமான கொக்கரக்கோ, எனும் கூவுதலும், பசுக்கன்றின் "அம்மா” என்ற அழைப்பும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வைப்பன.
சோம்பலுடன்படுத்திருக்கும் ஒருவனைக் கூட விழிப் பூட்டு ஓசையுடனான பாடல் அவனை முற்று முழுவதுமாக மாற்றியே விடுகின்றது. சூழ்நிலைக்கு ஏற்பவே இசைகளின் வடிவங்களும் மாறுபடும்.
52

6agyang
கோவிலில் பாடப்படும் பாடல்கள் பக்தியுடன் பவ்ய உணர்வுடன் இசைக்கப்படும். அதேவேளை யுத்தத்திற்குச் செல்லும் இராணுவத்தினருக்கான இசை, அவர்களை எழுச்சியூட்டி வீர உணர்வினை எழச்செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். குழந்தைப் பாடல்களுக்கும், முதியோர் படிக்கும் கவிதைக்கும் வித்தியாசம் இல்லையா? பருவத்தினர்களின் வயது வேறுபாடுகள் அவர்களது ஆர்வம், விருப்பு, மனோபாவம், ரசனைக்கு அமையவே பாடல்கள் இசை அமைக்கப்படுகின்றன.
எந்தவிதரசனையுமற்றவன் ஓசைகளின் சுகங்களை உணரவேமாட்டான். கருவில் இருக்கும் சிசுவும், மிருகங்க ளும், தாவரங்களும்கூட இசையை, நல்ல மென் அதிர்வு களை ரசிக்கும்போது முழுமனிதன் நல்நெறியோடு வாழ்வ தற்கு ரம்யமான சூழலை, எண்ணத்தை, வளர்த்துக் கொள்வ தற்கு செறிந்த சீரான சொற்களையே பேசுவதும், கேட்பதும் ரசிப்பதுமாக வாழ்ந்தால், வாழ்க்கையே என்றும் புது வசந்தமுடன் திகழுமன்றோ!
வாயில் இருந்து புறப்படுவது வெறும் காற்றோடு கலந்துவிடும் ஒலி அலைகள் அல்ல. இன்றும் கூட புத்தர், யேசு, நபிபெருமான் போன்ற புண்ணிய அவதார புருஷர்களின் உபதேசங்கள் இந்தப்பிரபஞ்சத்தில் இருந்து மறைந்து போய் விடவில்லை. அவர்கள் மூச்சுடன் மிதந்து வந்த ஒலி அலைகள் இன்னமும் அழியாத அலைகளாக எங்களை ஆட்கொண்ட வண்ணமேயுள்ளன.
53

Page 29
பருத்ரிபூர்.00. வலிவரன்
நாங்கள் கண்டபடிபேசக்கூடாது. அப சகுனமாக பிறர்மனம் வருந்த இம்சை தரும் வார்த்தைகளைக் கொட்டக் கூடாது. இந்தச் சொற்களின் வெம்மை பாரதூரமானது. இவைகள் காற்றுடன் சங்கமிக்கும் போது உலகத்தையே அசுத்தப்படுத்திவிடும்.
நாம் எங்கள் எதிரியைத் தூஷித்தாலும் கூட அதனைச் செவிமடுக்கும் யாரோ ஒருவரின் மனம்கூட சஞ்சலப்பட வேண்டிவரும். "நான் எதைப் பேசினாலும் உனக்கு என்ன? என்று விதண்டாவாதம் பேசுவதுகூடப் பிறர் நிம்மதியைக் கெடுப்பது போலத்தான். எனது வீட்டின் வானொலியை நான் எப்படியும் இயக்குவேன் என்றும் தனது தொலைக்காட்சிப்பெட்டியைதானே ரசிப்பதற்காக ஒலியைக் கூட்டினால், பக்கத்து வீட்டுப் பையன்படிப்பது எப்படி?
இதுபோலத்தான் மனதை நெருடும் விதமாக ஒலி, ஊடகத்தின் கீழ்த்தரமான பாடல்கள், இசைகள் மூலம் ரசிகர்கள் செவியினுள் புகுத்த விழைவிப்பதுஅத்துமீறலான வன்முறை போலத்தான் என்பதைச் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் உணரல் வேண்டும்.
நாம் காலையில் விழித்துக் கடமைக்குச் செல்வதி லிருந்து உறக்கத்திற்குச் செல்லும்வரை, எம்முடன் நல்ல ஓசைகளையும் இணைந்து கொண்டால் என்றும் புத்தம் புது மனிதனாக மனம் பாரம் அற்றவராக, காண்பது எல்லாமே தூய்மை நிறைந்ததாக உணர்ந்து கொள்வோம்.
54
 

ólámpad
எங்களிடம் இருந்து மற்றவர்கள் எதிர்பார்ப்பது முதலில் என்ன என்று புரிந்து கொள்வோம். நீங்கள் அறிமுகம் இல்லாத எவரைக் கண்டாலும் அவரை நோக்கிப் பேசும் இனிய சொற்கள்தான், அவர்களை உங்கள்பால் வசீகரிக்கச் செய்கின்றது. வார்த்தைகள் என்பது வெறும் சொற்கள் அல்ல. இவைகளை அன்புடன் ஊட்டப்படும் போது தென்றலினும் மெல்லிய சங்கீதமாகவே மற்றவர் க்குக் கேட்கும்.
குழந்தை எப்படிப் பேசினாலும் அது பெரும் வாத்தியங்களைவிட நாம் பெற்ற அனைத்து சம்பாத்தியங் களை விடவும் இனிமையாகவே இருக்கும். அல்லவா? களங்கமற்ற இதயத்தில் பூத்துநின்று புறப்படுவதே அந்த மழலைமொழியாகும்.
எமது இதயத்தேரில் இனிமையை ஏற்றி புதுப் பொலிவுடன் நற்சொற்களை சிறந்த, தெளிந்த உணர்வுக ளுடன் ஊட்டிப்பவனிவந்தால், எம்மைச்சுற்றி நல் ஓசைகள் சூழ்ந்து நின்று எம் வாழ்க்கைப் பாதையை புனித வழியில் இட்டுச்செல்லும்.
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி 01-10-2006
55

Page 30
பருத்தியூர்.00. வலிவரஷ்
ஆணவ முனைப்புடையோர்க்குக் கெளரவம் கிட்டாது. மண்டைக்கணம் பிடித்தவர்களை வேண்டப்படாத சீவன்களாகவே மக்கள் கருதுகின்றனர். கெளரவம் வலிந்து பெறுதல் அல்ல. சேவை, திறமைகள் மூலம் அளிக்கப்படுவதாகும். போட்டிபோட்டுக்கொண்டு மரியாதை பெற விழைவது கேலிக்குரிய விடயம். உண்மையான திறமைசாலிகளை மூடிமறைப்பது, வளரும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் செய்யும் கொடுமை. எனினும் நல்லோர், பெரியோரைத் தேடி கெளரவங்கள் நிச்சயமாக வந்தேதீரும். வீண் பகட்டு வாழ்வு வாழும் மாந்தர்களிடம் பெறும் கெளரவத்தைவிடச் சாமான்யமாக வாழும், ஏழை எளியவர்களிடம் பெறும் கெளரவமே மேலானதும், இறை ஆசியுடன் கூடியதுமாகும்.
ஒருவரது நற்பண்பினாலும்,அவர்தம் நடத்தை நெறியினாலும், கல்வி, அனுபவ ஞானம் போன்றவை களாலும், செய்யும் சேவையினால், பவ்யமாக எவ்வித எதிர்பார்த்த லின்றியும் பெற்றுக்கொள்வதே "கெளரவம்" ஆகும். Ve
56
 
 
 
 
 
 
 

Gopabig ஆணவ முனைப்புடையவர்க்குக் கெளரவம் கிட்டாது. மண்டைக்கனம் பிடித்தவர்களை வேண்டப்படாத வன்களாகவே மக்கள் கருதுகின்றனர். எவ்வளவுதிறமைகள் இருந்தும் பணிவு இன்றேல் வாழ்வின் பாதை சீராக இருக்காது,
“கெளரவம்", என்பது வலிந்து பெறும் ஒன்றல்ல. சேவைசெய்தலின்றிமாற்றுவழிகளில் கெளரவத்தைத் தேட முனைபவர்கள் பரிகாசத்திற்குரியோராகவே ஈற்றில் கருதப் படுவர். இவர்களின் வாய்வீச்சும், வீண்பகட்டும், இவர்கள் ஆரவாரத்தன்மையும் மக்களிடம் இருந்து விலகி நிற்பதற்கான மூலகாரணமாகும். உலகில் பெரும்பாலான ஜனங்கள் மிகச்சாதாரணமானவர்கள் எளியவர்கள் தான்
எனவே மக்கள் தம்மோடு ஒத்தவர்களைத்தான் நேசிப்பார்கள். இந்த விடயம் புரியாமல் தம்மை மினிக்கி, நற்காரியங்களைச் சுருக்கும் வீணர்களை மனிதர் விரும்புவா ர்களா? நிச்சயமாகப் புறந்தள்ளியே தீருவார்கள். இத்தகையவர்கள் இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்களை மக்கள் முன் நிறுத்திக் காட்ட என்ன செய்யலாம் என ஆலோசனை செய்து பலவழிகளில் மரியாதையைத் தேடும் முயற்சியைச் சிலர் கைக்கொள்வ துண்டு. பிரதிபலனைப்பெறும் நோக்கோடு பணத்தைச் செலவு செய்து, பதவியைத் தேடுவதே முதல்
57

Page 31
கருத்தியூர்.அல. ஆயிற்றுதாரர் நோக்கமாகவும் இருக்கின்றது. பாசாங்கு மூலம் செய்யும் தொண்டுகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப்போகின்றது?
தமது உடலால், மனத்தால், செய்யும் சிறு தொண் டுகள் கூட ஒருவருக்கு நல்ல கெளரவத்தினை அளிக்கக் கூடியதே. ஒருவர் செய்த உதவியின் அளவை வைத்து அவரை நிறுத்துப்பார்க்கக் கூடாது. அற்ப உதவியே யானாலும் பற்பல நன்மைக்கான வித்துக்கள் அவை, மனதில் நிறுத்துக! அறிவோமாக!
சும்மா கிடந்து சோர்வைத் தேடாது, நம்மால் முடிந்த வைகளைச் சமூகத்திற்கு செய்வோம். உழைப் பாளர்களை மக்கள் தமது பக்கம் இழுப்பர். உடலை வளைக் காதவர்களை, மக்கள் விழித்தும் நோக்கார்.
மற்றவனின் சேவையில் ஒட்டிநின்று கெளரவம் தேடுபவர்களும் உள்ளனர். இதுமிக வெட்கக் கேடானது. யாராவது பெரிய பதவியில் இருந்தால் கேட்காமலே அவர்களிடம் வலிந்துபோய் சேர்ந்து கொள்வார்கள்.தமது கருமங்களைபட்பெற்றுக்கொள்ள விழைவதுடன், மாற்றார் ஏதாவது உதவிகளைப்பெற்றுக் கொள்ள இருந்தால் அதனையும், தமது சாதுர்யத்தினால் தடுத்து நிறுத்தியும் விடுவர். போட்டிபோட்டுக் கொண்டு மரியாதை பெற நினைப்பது சிரிப்புக்குரிய விஷயம் தான்.
எந்தவிதமான அனுகூலமும் இன்றியே சிலர் பலரைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இந்தச்
58
 

ólagyapig
செய்கை மூலம் தமக்கு நல்ல பெயர் கிடைக்கும் எனத்தப்பு அபிப்பிராயம் கொண்டு விடுகின்றனர். ஈற்றில் உண்மைகள் வெளிவரும்போது ஏற்படும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா? யாராவது புகழடைந்தவரைச் சுற்றி நிற்கும் சிலர், ஒரு கேடயம் போல் மனித வளையத்தைப் போட்டு நிற்பர்.இவர்கள் உண்மையான நல்லவர்களுக்குக் கூட சரியான தகவல்களைச் சொல்ல விடுவதும் இல்லை.
பெரிய நிறுவனங்களில், அரசியலில், பொது அமைப்புக்களில், நன்மைசெய்யும் பெரிய பொறுப்புள்ள வர்களை இத்தகைய புல்லுருவிகள் மறைத்து நின்று தாமே ஆதாயம் தேடிக் கொள்கின்றார்கள். உண்மையில் இது ஒரு சமூக ஏன் தேசத்திற்கான கொடுமையும் கூட. கெளரவம் பெற்ற பெரியவர்களை நிம்மதியாக உறங்க விடாத கூட்டம் பெருகி விட்டது. ஆனாலும் பெரியோர்கள் இதனைப் பொருட்படுத்துவதில்லை. சாதனை செய்யப்புறப்பட்டவர்கள் எத்தகைய சோதனைகளையும் வென்றே தீருவார்கள்.
பயத்தைத் தேக்கியவன் பனிமலையில் ஏற முனை வானா? துணிவுள்ளவன் கிடைக்கவிருக்கும் கெளரவத் தைமட்டும் நோக்காது. தன்பாட்டிற்குச் செயல்களிலேயே வலு உள்ளவனாக ஓடிக் கொண்டிருப்பான்.
சில விசித்திரமான பிரகிருதிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எதையாவது விமர்சித்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் விமர்சனம் பல சமயம் பொருத்தமற்றதாகவே
59

Page 32
பருத்தியூர்.00. லுபிறழர் இருக்கும். நல்ல செயல்களை யாராவது செய்தால் அதற்குப் புதுவடிவம் கொடுத்து வேறு அர்த்தத்தினை ஒட்டி அது ஒரு தவறான செயல் என்று வர்ணம் தீட்டுவார்கள். இத்தகைய வர்களின் குரூர போக்கை நம்புபவர்களும் உண்டு.
எப்படியாவது தனது பேச்சு சனங்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொடுத்துவிடும் என்று நம்பும் இவர்களில் கோணங்கித்தனமான செய்கைகள் எவ்வளவு காலத்திற்கு எடுபடப்போகும் என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.
இன்னும் ஒருசாரார், எவ்வித கூச்சமும் இன்றி. பிறர் பெற்ற புகழ் தன்னால்தான் கிடைத்தது என்று கூறிப் பற்பல ஆதாரங்களைக் கோர்வையாகச் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் நல்ல மனிதர்கள் தாங்கள் செய்த உதவிகளை வெளியே சொல்வது இல்லை.
மேலும் தமக்கு வர வேண்டிய நற்பெயரை மாற்றார் தட்டிச்செல்வதாகக் குறைப்பட்டுக்கொள்வார்கள். சில சமயம் குறுக்கு வழிப்பேர்வழிகள் யாரோ செய்த நற்காரி யங்களைத் தாமே செய்ததாகப் பிரசாரம் செய்வதும், மக்கள் அதனை நம்புவதும் உண்டு. இத்தகைய சில வேண்டப்படாத சம்பவங்களின் உண்மைத்தன்மைகளைக் காலம் தான் தகுந்த பதிலளிக்கும். உண்மை நெறி வாழ்ந்த ஒருவனின் மனக்குமுறல் நல்ல பெறுபேறுகளை ஈற்றில்
60
 

வெறுமை தந்தே தீரும். பொதுப்பணிகளில் ஈடுபடுவோருக்கும் இத்தகைய பல பிரச்சனைகள் எழக்கூடும்.
எனினும் இலாப, நட்டம் பார்த்தால் சேவைகள் செய்ய முடியுமா? சேவை என்பது ஊதியம் கருதாது உழைப்பது. வேலை என்பது செய்த வேலைக்குச் சம்பளம் பெறுதலுமாகும். ... :
ஆனால் செய்யும் வேலையைக்கூட மனச்சாட்சிக்கு விரோதமின்றி. உடல் உழைப்பை, அறிவை நல்கியே செய்ய வேண்டும். அப்போதுதான் தொழில் வழங்கியவன் எங்களுக்குரிய மதிப்பை அளிப்பான். நியாமான வழியில் சுயதொழில் செய்பவனும் மேலான கெளரவத்தை அனைவரிடமும் பெற்றுக் கொள்கின்றான்.
மேலும் நாங்கள் பிறருக்கு வழங்கிய சேவை மூலம்
கிடைக்கின்ற திருப்திகூட ஒரு வருமானம் போலத்தான்.
இது நாம் உழைக்கும் பணத்தைவிடப் பெறுமதிவாய்ந்தது. எங்களால் செய்யும் கருமங்களை. மற்றவர்க்கு வழங்குவது ஒரு வாய்ப்பு என்பதால் யாராவது கெளரவம் தரவேண்டும் என்கின்ற எண்ணமேயற்ற பரந்தநோக்கு, எம்முள் வியாபித்துவிடும்.
சபை நடுவே நாம் பெறும் கெளரவம் மட்டும் கெளரவம் அல்ல. மிகவும் எளிமையான ஏழைகள், துன்பப் படும் சாதாரணமான மக்கள், வழங்கும் ஒருவாய்ச்சொல்லே போதும். அது எங்கள் அகத்தினுள் உள்நுளைந்து தேகம்
61

Page 33
பருத்தியூர்.40. ஆயிரவரர் எங்கும் பெரும்பூரிப்பினை உண்டு. பண்ணிவிடும். இந்தப் பாராட்டுக்கள் எமது தலைமுறைக்கே வந்து சேர்ந்த வண்ண மிருக்கும்.
பெரும்பாலானவர்கள் சொல்வதுண்டு. எனக்குச் சமூகத்திற்கு எவ்வளவோ செய்யச் சித்தம் உண்டு. ஆனால் அதை எங்ங்ணம் செய்யலாம் என்று கூறுவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்பவர்களைப் பார்க்கின்றோம். இவர்களில் பலர் தாய் நாட்டை மறந்து தமது நாட்டிற்கு எந்தச்சேவையும் செய்யாமல் இருப்பதாகப் பலரும் குறைப்படுகின்றனர்.
ஆனால் அங்கு சென்ற நம்மவர்களில் பலர் இங்குள்ளவர்களுக்கும், சமூக நிறுவனங்களுக்கும் உதவி நல்குவது உண்டு. பல பொதுநல நிறுவனமூடாக அரும் பணியாற்றும் பெரியோர்களும் இருக்கத்தான் செய்கின் றார்கள். கலை, இலக்கிய சமூகப் பணிகளைச் செய்து வருவதும் கண்கூடு. உதவி செய்வதற்கான சந்தர்ப்பங்களை நாம் தான் தேடிப்போகச் சித்தமாயிருக்க வேண்டும்.
தவிர மற்றவரிடம் இருந்து உதவிகளை நோக்குவதை விடுத்து நாமாகவே வலிந்து சேவைபுரிவதே கெளரவமான பணியுமாகும். மேலும் சமூகப்பணியாற்ற இயல்பாக விருப்பு உடை யோர்க்கு அதற்கான உபாயங்களை, வழிகளைக் காட்ட, பொதுநிறுவனங்கள் உதவுவது அவைகளின் தலை யாய கடமையுமாகும்.
62
 

6alpa).
நல்ல பணிகளை முன் நின்று செய்யும் உத்தமர் களை நாம் பாராட்டத் தயங்கவே கூடாது. மேலும் ஆர்ப் பாட்டம் இன்றி மெளனமாகக் கடமை புரிபவர்களை நாம் கண்டு கொள்ளல் வேண்டும்.
எந்த மனிதனையும் நாம் கெளரவிப்பது என்பது எமக்குள்ள பெருந்தன்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும். எவரையும் பாரா முகமாக இருப்பது நேரான குணமும் அல்ல. எங்கள் செய்கைகள் தான் எமது சுய உருவைக்காட்டி நிற்கும்.
எதிரிக்குக்கூடக் கெளரவம் வழங்கு! அவன் உன் வழிக்கு வருவான். இது எவருமே ஏற்றுக்கொள்ளும் கூற்றாகும்.
எங்கள் மனத்தினை எங்களின் மேலாதிக்க உணர்வும் விட்டுக்கொடாத தன்மைகளும் அரித்து விடக்கூடாது.
கருத்து முரண்பாடுகள், சாதாரண பிணக்குகள் எல்லாமே தீர்க்கக்கூடியவைதான். இதற்காக மனிதர்க்குரிய கெளரவங்களை நாம் எமது சொந்த முரண்பாடுகள் காரணமாகத் துண்டித்துக் கொள்ள விழையலாமா? பேதங்களை எமக்குச் சொந்தமாக்க வேண்டாம். அந்த உணர்வு வந்தால் நாமே நம்முடன் மோதி சிந்தனைகளைக் குந்தகமாக்க வேண்டிவரும் தெரிந்து தெளிவோம்!
63

Page 34
பருத்தியூர்.பால, அவிழ்வரர்
"அவருக்கு வசதிகள் உண்டு, எனக்கு அது இல்லை, நானே திண்டாடித் தவிக்கின்றேன். நான் என்ன செய்ய முடியும்?” என்று வேதனைப்படும் மனிதர்கள் ஒன்றை உணரல் வேண்டும்.
எல்லாவற்றையும் பெற்று விட்டு, நாம் பொதுப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனில், எப்போது எம் பணியை ஆரம்பிக்க முடியும் ஐயா! எல்லாமே, எல்லா நேரத்திலும், எவர்க்கும் முழுமையாகக் கிடைத்துவிடுமா? இருக்கும் வளங்களைக் கொண்டு திருப்தியுடன் பணிசெய்தலே, சமூகத்திற்கு நாம் வழங்கும் வெகுமதி ஆகும்.
சாக்குப் போக்குச் சொல்லித் தப்பித்தல் கூட தனி மனித கெளரவத்திற்கு இழுக்கானது தான். நாங்கள் எவர்க்கும் சொல்லும் பொய்யுரைகள், அவை எமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் வஞ்சனை வரிகளாகும்.
மேலும் நல்ல மனிதர் நலிந்து போனாலும் அவர் தம் கெளரவம் தலை நிமிர்ந்தே நிற்கும். எந்த நிலையிலும் தமது வழங்கல்களை இவர்கள் தம்மால் இயன்ற அளவு அளித்துக் கொண்டேயிருப்பர். சிறிது கெளரவத்திற்குப் பங்கம் ஏற்படினும் இன்னுயிரை விடத் துணிபவர்கள் பற்றியும் படித்திருக்கின்றோம்.
64

ólopolo அரிய பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற கெளரவத்திற்குரிய பெரியோர்கள், “எமது நாடே உனக்கு, நான் என்ன செய்யவேண்டும். தொடர்ந்தும் என்பணி செய்ய விருப்புடன் உள்ளேன். சகல சந்தர்ப்பங்களையும் எதிர்பார்த்துக் கொண்டேயுள்ளேன்” என்று தான் சதா மனதுள் உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள்.
நற்பேறு என்பது எம்மால் முடிந்த நல்லனவற்றை நிறைவேற்றமுயலுதலும்,அவைகளைச் செய்வதும் தான்.
இவ்வண்ணம் ஒழுகுபவர்கள் தாமாக கெளரவத் தைத் தேடி முன்னுக்கு வருவதில்லை. அனைத்து மக்களுமே அவர்களை தம் இதயத்துடன் பிணைத்து மக்கள் முன்னே உயர்த்தி நிற்பார்கள். உண்மையான தியாக நோக்குடைய வீரர்கள் பெறும் கெளரவம்கூட அவர்களுக்கான ஒப்பற்ற ஆபரணமாகும்.
மனித தேவைகளை அறிந்தவனே முழுமையான முதல்வனாவான். இந்த முழு உலகும் ஒரு கூடாரத்தில் தான் இருக்கின்றது. ஆனால் இது விசாலமான இறைவனின் கூடு. இதனுள் இருந்து விலகி வாழக்கூடாது, வாழவும் முடியாது. ஐக்கிய உணர்வுள்ள எவனும் கெளரவிக்கப்பட வேண்டியவனே. ஏன் எனில் இவனிடம் கோப, குரோத, சூழ்ச்சி எண்ணங்கள் இல்லை. அன்பு ஒன்று தான் சர்வ வியாபகமாக இவனுள் ஸ்திரப்பட்டு நிற்கும்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி27-08-2006
65

Page 35
பருத்திபூர்.04ல. ஆயிரவநாதர்
எல்லோரையும் சமனாகப் பார்க்கவேண்டும். நல்லதையே நினைப்பவர்கள் மற்றவர்களின் குறைகளை மட்டும் நோக்கமாட்டார்கள். அன்பினை, பரிவினை, பாசத்தினை அவர்தம் அகத்தினூடாகப் புறப்படும் கருணை முகத்தினூடாகப் பார்க்க முடிகின்றது. கண்களால் பார்ப்பது மட்டும் பார்வை அல்ல. எண்ணங்களால் நோக்குவதும் பார்வைதான். நல்ல எண்ணங்களுடன் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவர்களின் நோக்கம் ஒருபோதும் பிறழ்வதேயில்லை. நாம் முதல் பார்வை மூலம் எடுக்கும் முடிவுகளை, உறுதியான முடிவு எனக்கொள்ளல் தகாது. அன்புடன் நோக்கினால் எவருமே எமக்குத் தீங்கு செய்யப்போவதுமில்லை. உங்கள் நல்ல பார்வை எல்லோரையும் உங்கள் வசமாக்கும்.
கண்களால் பார்ப்பது மட்டும் பார்வையல்ல, எண்ணங்களால் நோக்குவதும் கூட பார்வை என்றே கருதப்பட வேண்டும்.
Ve
66
 
 
 
 
 
 
 

06:Այ019
அன்பினை, பரிவினை, பாசத்தினை, அவர்தம் அகத்தினில் இருந்து புறப்படும் கருணை முகத்தினூ டாகவும், பளிச்சிடுகின்ற விழிகளுடாக் கசியும் மெல்லென வழியும் விழி நீருடனும், இதயத்தில் சப்திக்கின்ற மென் அலைகளுடாகவும் நாம் உணர்ந்துகொண்டிருக்கின்றோம்.
நவரசங்களை நாம் கண்களால் பார்த்தாலும்கூட பிறர் அக வெளிப்பாடுகளை எமது உணரும் திறத்தாலேயே அறிந்து கொள்ளமுடியும். எமது அனுபவ ஞானத்தால் பழகிய விதத்தால் பூரணமாகவே புரிந்துகொள்ள முடியுமா?
சிலருக்கு எல்லோரையும் பார்த்தால் கெட்டவர் களாகவே தெரியும், இன்னும் சிலருக்கு எல்லோரைப் பார்த்தாலுமே நல்லவர்களாகவே தெரியும். இத்தகைய நோக்கு அவரவர் மன இயல்பு, அறியும் திறனைப்பொறுத்த விஷயம்.
ஆனால் பார்த்த மாத்திரத்தே எல்லோரையுமே கெட்டவர்களாகவே நோக்குவது நிச்சயமாகப் புத்திகெட்ட மட்டமானசெயல்தான். எங்களை ஒருவர் எடுத்த எடுப்பி லேயே கெட்டவர் என்று முத்திரை குத்தினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நான் மட்டுமே உத்தமன், மற்றவன் அதர்மன் என்று எண்ணக்கூட எமக்கேது உரிமை ஐயா? சின்னச் சின்னத் தவறுகளைக் கண்டு பிடித்துத் தமது பெரிய தவறுகளை மறைத்துப் பிரமாதமாகக் குதர்க்கம்
67

Page 36
பருத்தியூர்.பால. அவிந்தைக் 'பேசும் கோமாளிகளை சனங்கள் கண்டால் சிரிப்புடன்
ஒதுங்குவார்கள், ஒதுக்குவார்கள்.
நல்லதையேநினைப்பவர்கள் மற்றவன்குறைகளை மட்டும் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்குச் சேவை செய்வதே நோக்கமே ஒழிய, பிறர் தூற்றுதலைக் கண்டு கொள்ள எங்கே நேரம் இருக்கப்போகின்றது? இப்படிப் பலர் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் “என்னவோ தெரிய வில்லை இந்த மனிதரைப் பார்த்தவுடனேயே நல்ல அபிப் பிராயம் ஏற்பட்டுவிட்டது. ஏதோ நெடுநாள் பழகியமாதிரி ஒரு எண்ணம் வருகின்றது. ஆனால் ஏன் என்றே தெரியவில்லை” என்பார்கள் உண்மைதான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்கின்ற ஒரு சில மனிதர்கள் எம் நெஞ்சத்தைத் தொட்டு விடுகின்றார்கள். இவைகளுக்கான காரணம் புரிவ தில்லை.ஏதோபூர்வஜன்மபந்தம் என்றுகூடச் சொல்வார்கள். இப்படிச் சந்திக்கி ன்றவர்களில் சிலவேளை, எம்மைச்சாராத வேற்று மதம், மொழிகளைச் சேர்ந்தவர் களாகவும் இருக்கலாம்.
இந்தச் சந்திப்பை இந்த உணர்வினை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள். இப்படிப்பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உங்கள் அனுபவங்களை மீட்டிப்பாருங்கள். எல்லை கடந்த மனிதநேயம், ஆற்றல், அதன் பரிணாம த்தினால் எங்கோ ஒரு முறை தொட்ட நெஞ்சை ஏன் மீண்டும், மீண்டும் பார்க்க எத்தனிக்க வேண்டும்? ஒரு சின்னச் சம்பவத்தை உதாரணத்திற்கு கூறுகின்றேன்.
68

álogjog பேருந்தில் நான்பயணம் செய்துகொண்டிருந்தேன் நல்ல சனக்கூட்டம் பேருந்தில் சேவைசெய்துகொண்டிருந்த நடத்துனரான இளைஞர்ஒருவர் துருது என்ற விழிகளுடன் பம்பரமாகக் கருமமே கண்ணாக இருந்தார்.
அந்த இளைஞன் தனது கட்டணத்தை என்னிடம் பெறவந்தான். வந்தவன் என்னையே பார்த்துக் கொண்டி ருந்து விட்டுச் சென்று விட்டான். நானும் அவனைப் பார்த்த தும் ஏதோ பழகிய முகம் போலவே தெரிந்தது. ஆனால் நான் நிச்சயமாக அவனைக் கண்டதோ, பேசிய தோ கிடையாது. அவன் மீண்டும் வந்து புன்னகைத்து என்னு டன் பேசினான். உங்களைப் பார்க்கச் சந்தோஷமாக உள்ளது என்றான். அப்புறம் அவனுடன் சிறிது பேசினேன். நான் எனது இடம் வந்ததும், அவனைப் பிரியமனமின்றிப் பிரிந்தேன். அவனும் கனிவுடன் சிரித்தவாறு என்னைப் பேரூந்தில் இருந்து இறக்கிவிட்டான்.
இத்தகைய பல அனுபவங்களை நிச்சயம் நீங்கள் பெற்று இருக்கலாம் அல்லவா? இந்த உலகம் பரந்து பட்டாலும் கூட நல்ல மனிதனின் சின்னப்பார்வை எல்லோ ரது நெஞ்சங்களையும் பிணைத்துவிடும். இது எல்லாம் இறை அற்புதமேயாகும்.
“கண்டதும் காதல்" என்று பேசுகின்றார்கள். இது பலருக்கு வேடிக்கையாகப்படும். பல வருடக் காதலையே புரிந்து கொள்ள முடியாத பிறவிகள் இருக்கின்ற உலகில் ஒரு கணத்தில் காதல் உதயமாவது எப்படி?
69

Page 37
பருத்திபூர்.0. வலிற்றுருதஷ்
எந்த ஒரு விடயத்தையும், பரீட்சார்த்தமாகச் செய்து பார்ப்பதுண்டு. ஆனால் வாழ்க்கையில் எடுக்கப்படுகின்ற முடிவுகளை நாம் பரீட்சார்த்தமாக மனதில் எழுந்த வண்ணம் கைக்கொள்ள முடியுமா? தீர ஆலோசனை செய்யாமல் எடுக்கின்ற எந்த முடிவுகளுமே, இறுதியில் எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை முதலில் உணரல் வேண்டும்.
இளமைவேகம், துடிப்பு, மனதினைக் கட்டுப்படு த்தாத தன்மைகள் எல்லாமே இயற்கைதான். இதனைப் பலர் இலட்சியம் செய்வதேயில்லை. உண்மையில் சில நல்ல விஷயங்களுக்கான அங்கீகாரம் கூட துடிப்பு மிக்க சில இளைஞர்களுக்குக் கிடைப்பதும் இல்லை.
எந்த முடிவும் தங்களுடாக எடுப்பதையே பெரும் பாலான பெற்றோர் விரும்புவது இயற்கை. பிள்ளைகளின் பார்வை நேரியதாகவும், முற்போக்கு உணர்வுடனும் இருப்பதை ஏற்றுக்கொள்ளச்செய்வது இலகுவானது அல்ல. உதாரணமாக, ஒரு இளைஞனோ, யுவதியோ, சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்து காதல் வயப்பட்டால் அது அவர்கள் நோக்கில் சரியானதாகவே இருக்கும். ஆனால் உற்றார் உறவினர் இவர்கள் தயவில், அல்லது இவர்களை எதிர்பார்த்திருக்கும் வேளையில் இத்தகைய காதலைப் பிணைப்பை அங்கீகரிக்கத் தயங்குவர்.
70

விவறுமை
மேலும், பழைமையில் ஊறிப்போன பெரியவர்கள் சிலர் தமக்குப் பின்நாட்களில் சமூகத்தினால் எதிர் விளைவுகள் இந்த உறவுப்பிணைப்புக்களால் வரும் எனப்பயப்படுவதும் இயற்கை தானே? தங்கள் குடும்பத்தில் உள்ள அங்கத்தினர் தவிர வேறு தரப்பினர் செய்கின்ற இத்தகைய விடயங்களில் கேலி பேசுபவர்கள், தங்கள் குடும்பத்தில் இவ்வாறு காதல் கலப்புமணங்களை எப்படி மனம் உவந்து ஆமோதிக்கப்போகின்றார்கள்?.
இன்னும் சிலர் தமது குடும்ப உறவுகளைத் தவிர ஏனையவர்கள் விடயத்தில் மட்டும். காதலை ஆதரித்துப் பேசுவார்கள். எது எப்படி இருப்பினும் பரந்த மனமும், தீர்க்கமான சிறந்த முடிவு எடுக்கும் திறனும், அனைத்து பெற்றோர், பிள்ளைகளுக்கும் இருந்தேயாக வேண்டும்.
குடும்ப சூழல், பொறுப்பு, கடமைகளால் நாம் பின்னப்பட்டு இருக்கின்றோம். இவைகளில் இருந்து நாம் விடுபடுவது சிறப்பும் அல்ல. எமது நோக்கம், பார்வை, எம்மை மட்டுமா சார்ந்து இருக்கின்றன? இல்லையே? பின் விளைவினை எதிர்பார்க்காத வாழ்க்கை எம்மை பின்னேதள்ளி முடக்க எத்தனிக்கும்.
மனித பலவீனங்களுக்கு அமையவே பார்வையின் தரமும் அமைந்திருக்கின்றது. உலகில் பலதரப்பட்ட தரங்களில், அந்தஸ்துக்களில் மக்கள் வாழ்ந்து கொண்டிரு க்கின்றனர். பணம் படைத்தவர்கள், படித்தவர்கள், பாமரர்கள்
71

Page 38
பருத்தியூர்.பல அவிவரச் எனப் பலவாறான தரத்தவர்களை இந்தப் பூமி வைத்துக் கொண்டிருக்கின்றது.
அனேகமானோர் தம்மோடு இசைந்தவர் களுடனேயே நட்புத்தொடர்புகளை வைத்திருப்பது சகஜம். பணக்காரர்கள் ஏழைகளைப் பார்க்கும் பார்வை ஒரு விதமாகவும், ஏழை பணம் படைத்தவர்களை வேறு கண்ணோட்டத்துடனும் பார்க்கின்றார்கள். இந்த வர்க்க வேறுபாடுகள் யதார்த்தமானவை தான். எனினும் சிலர் இந்நிலையில் இருந்து விடுபட்டுப் பரந்த நோக்குடன் சரிசமனாகப் பழகுவதுமுண்டு.
ஏழ்மை நிலையிலுள்ளோர் சிலர் தமக்குப் பணம் படைத்தவர்களைப் பார்த்தாலே பிடிப்பதில்லை எனவும் ,அதேபோல் வசதிபடைக்காதவர்களுடன் பார்த்துப்பேசவே கூச்சப்படுகின்ற செல்வந்தர்களும் இருந்தாலும் கூட, இந்நிலைமை களையப்பட வேண்டுமென்றே அறம் வளர்க்கும் பெரியோர் அறிவுரைபகர்ந்த வண்ணமுள்ளனர்.
இன்னும் ஒரு வியப்பான விடயத்தைக் கூற வேண்டும். மக்கள் கூடும் அங்காடிகளில், பேரூந்துநிலைய ங்களில், பொது இடங்களில் முன்பின் சந்தித்திராதவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வந்து போவார்கள். இவர்களில் ஒரு சிலர் பொருள் வாங்குதல், பேருந்தில் அனுமதி சீட்டுப்பெறுதல் போன்ற விடயங்களில் சம்பந்தமே இன்றிக் கருத்து மோதலை உண்டாகி, மோதிக்கொண்டு
72

6apan19
காவல்துறைக்கு முறைப்பாடு செய்யும் வரை விஷயங்கள் முற்றிப்போய் விடுவதுமுண்டு. ஒரே ஒரு தடவை பார்த்துப் பிரிந்து, அவரவர் கருமங்களுக்கு மீண்டும் செல்லும் மனிதர். ஏன் ஒருவரைக் கண்டவுடனே பகைமை உணர்வுடன் சண்டையிட்டு மற்றவர்கள் சிரிக்கும்படியாகவும், வேதனைப்படும் படியாகவும் நடந்துகொள்வது வியப்பு இல்லையா?
எவரையும் தோழமையுடன் நோக்கினால் என்ன குறைந்து விடும்? உனக்குக் கிடைக்காத பொருள், வசதி மற்றவனுக்குக் கிட்டினால் நீ ஏன் பதட்டமும், பொறாமை யும் கொள்கின்றாய் “மனிதா,” என்று கேட்கத் தோன்ற வில்லையா?
எக்காரணமும் இன்றிச் சிலர் சொல்வார்கள். "அவனை எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. இவனைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு எரிகின்றது" என்பார்கள்.
ஒருவரிடம் பழகப்பழகத்தான் வேற்றுமைகள் களையப்படுகின்றன. பலர் மிகவும் எரிச்சலும், உதாசீனம் செய்தோருடனேயே பின்னர் இணைபிரியா தோழர்கள் ஆக்கிக் கொள்வது முண்டு. ஆனால் சிலர் ஆரம்பத்தில் நல்லவர்கள் போல் தம்மைக் காட்டிக்கொள்வதும், அதனைநம்பி அவர்களுடன் பழகியமையால் சிலர் மிகுந்த சிரமப்படுவதுமுண்டு.
73

Page 39
பருத்தியூர்.00, வயிரவரர்
எனவே முதல் பார்வை மூலம் பெற்ற முடிவுகள் அறுதியான முடிவு அல்ல. ஒருவரைப் பார்த்தமாத்திரத்தே, சிலர் அவர்களைப் புகழத் தொடங்கிவிடுவார்கள். புகழ்ச்சிமிகு சொல்லைக்கேட்டதுமே அதனை ஏற்பார்கள். வேறுசிலரோ, இவர் ஏன் இப்படி என்னைப் புகழுகின்றார்? எனச் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். எனவே நாம் பார்த்துப் பழகுபவர்களுடன் சர்வ ஜாக்கிரதையாக, அளவாக, மிகையான புகழ்ச்சி இன்றி அதே சமயம் அன்புடனும், ஆதரவுடனும் பழகுதலே சிறப்பானதாகும் உணர்வோமாக!
பார்வைகள் எல்லாமே ஒரு ஈர்ப்பு என்றெல்லாம் பேசுகின்றார்கள். குருவிடம் பக்குவப்பட்ட சீடன் அவர்தம் பார்வையாலேயே ஈர்க்கப்படுகின்றான். கடவுள் எங்கே? என்று சுவாமி விவேகானந்தர், சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்ஸரிடம் கேட்டபோது அவர் தம் தீட்சண்யமான பார்வையினால் அவரை நோக்க, அந்தக்கணப்பொழுதில் அவர் கடவுளையே தரிசித்ததாக அவர்களின் வரலாறு மூலம் காண்கின்றோம்.
எமது பார்வை அன்புடனும், அருள் கலந்தும் நோக்குமிடத்து எங்கள் விழி கருணை கொண்டுமிளிர் கின்றது.
விலங்குகள், பறவைகள் தமது இரையைத் தேட எதிரில் வரும் தம்மிலும். பலம் குறைந்த உயிரினங்
74

úlolyog களைத்தம் விழியாலேயே நிலைதடுமாற வைத்து அவைகளை உடன் கவ்விக் கொள்கின்றன. ஆக்ரோஷமான புலியின் விழியும், இருட்டு வேளையில் ஆந்தையின் கண் களும் பயமூட்டும், அதே வேளை, மருளுகின்ற மானின் பார்வையும், குதித்தோடி விளையாடும் குறும்புச் சிறுவனின் கண்களும் எம்மைக் களிப்பில் ஆழ்த்துகின்றதல்லவா?
சூழ்நிலைக்கேற்ப பார்வைகளும் மாறுபடும். கோபத்தில் விழிகள் சிவக்கும். சாந்தநிலையில் விழிகள் மெளனமாகக் கனிவுடன்நோக்கும். நவரச பாவங்களின் பார்வைகளின் சஞ்சாரமே தனித்தனி உணர்ச்சிகளாய் பலகதைகள் பேசும். இலக்கியங்களில், கலைப்படைப் புக்களில் இந்தப் பார்வைகள் பற்றிய சமாச்சாரங்களை அற்புதமாகவே கலைஞர்கள் வடித்துள்ளார்கள். -
சதா குற்றச் செயல்களைச் செய்யும் சமூக விரோதிகளை அவர்கள் பார்வை மூலமே பலரும் கண்டு பிடித்துவிடுகின்றார்கள். ஒருவரது உள்நோக்கை அவர்களது பார்வையே காட்டிக்கொடுத்து விடுகின்றது. விழிகளின் ஆழம், அது அவரவர் மனதின் விசாலத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. நல்லவர்களைக் கண்டால் எம்மால் விட்டு விட்டு ஏக முடிவதில்லை.
புலன்கள் தெளிவற்ற நிலையில் உள்ள பரிதா பத்திற்குரிய ஜீவன்கள் கூட, தம் உள்ளார்ந்த உணர்வு சிந்தனைகள் மூலம் உலகோடு உறவாடிதம் நிலைமறந்து
75

Page 40
பருத்தியூர்.பல ஆயிரவருந்தர் வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் போது சகல உறுப்புக்களும் முழுமையான முழுமனிதன் தனது அறிவை, உணர்வை, நல்நோக்குடன் பார்வைகளைச் சரிவர நற்திசையுடன் நோக்கி வாழ்ந்தால். இந்த உலகின் துன்பங்கள் சூழ்ந்திடுமோ சொல்வீர்!
முகம் இறுக, விழி பிதுங்க, மனம் வெளிற, உடல் வெட வெடக்க நாம் சமூகத்தின் கண் தோற்றமளிக்க க்கூடாது. துன்பம் வரும் போது அழுவதும், மேனிகுலுங்க வியர்க்க விறுவிறுக்கச் சோர்வடைவதும் இயற்கையான மனித மாற்றங்கள்.
ஆனால் சாதாரண நிலையிலே கனிவை எம்முன் கொண்டு வருவோம். பார்க்கின்ற எல்லாமே இறை தந்த அற்புதத் தோற்றங்களே!. இவைகளை நாம் துதிசெய்வோம். பரந்துபட்ட இவ்வுலகில் நெருங்கி வாழப்பிரியப்படுவோம். இதுவன்றோ சிறப்பு. குரோதமும், வெறுப்புமற்று, பொறுமையும் புன்முறுவலுமாக எதிரில் தெரிபவன் நம்மவர், எவ்வுயிரும் இறைவன் தந்த உறவு எனத்தெளிந்த, நல் நோக்குதலுடன் பார்வையை எந்நேரமும் புத்தொ ளியுடன் வீசிடுவோமாக!.
தினக்குரல்
(ஞாயிறுமஞ்சரி 03-09-2006
76

6ailable
சூன்யவெளியில் எத்தனை பிரமாண்டமான கோள்கள், நட்சத்திரங்கள், அவைகளின் தன்மைக்கேற்ப ஓர் ஒழுங்கில் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. சூன்யத்தினுள்ளும் பல உண்மைகள் புதைந்து மறைந்துள்ளன. இருப்பதை இயன்றளவு முழுமனதுடன் வழங்குபவனுக்கு "வெறுமை" என்பதேயில்லை. கொடுப்பவன் இழப்ப தில்லை. அவன் கெட்டு நொந்ததுமில்லை. மாறாக அவனுக்கு இறைவனின் அருட்கொடைகள், மிகத் தாராளமாகக் கிடைக்கின்றது. எல்லா வளங்களையும் இறைவன் அருளியமையால் வெறுமை, இல்லை, என்ற பேச்சிற்கே நாம் இடமளிக்கக்கூடாது. வழங்குபவன் ஆன்மா உறங்குவதில்லை. என்றும் விழித்தபடி, என்றும் நிறைந்த மனத்துடன்
ா களிப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பான்.
ஒன்றுமற்ற நிலை அல்லது சூழல் வெறுமையானது என்றும், வெற்றிடம், சூன்யம் எனப் பலவாறும் சொல்லப்ப டுகின்றது.
77

Page 41
பகுத்தியூர்.பல.அறிவதுரக்
இந்தப் பிரபஞ்சம் எல்லைகள் அற்றது. வல்ல இறைவன் ஆட்சிக்குட்பட்டது. கருமை நிறம் கொண்ட அண்டப் பெருவெளி "சூன்யம்” என்று கூறப்பட்டாலும் அதனுள்ளே, அண்டசராசரங்கள்,நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் என எல்லாமே சுற்றித் திரிகின்றனவே! சூன்ய வெளியிலும் எத்தனை பிரமாண்டமான கோள்கள், நட்சத்திரங்கள், அவைகளின் தன்மைக்கேற்ப ஓர் ஒழுங்கில் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன. சூன்யத்தினுள்ளும் பல உண்மைகள், புதைந்து மறைந்துள்ளன.
எனவே ஒன்றுமே இல்லாத சூன்யவெளியிலும் இருக்கின்ற பொருட்களின் விஸ்தீரணம் தான் என்னே! ஒன்றுமில்லாத் தன்மைக்கு எம்மால் எப்படி விளக்கம் கூறுவது?. இவை எல்லாமே பெரும் அற்புதமே! இருப்பினும் கூட வெறுமை பற்றி நாம் ஓரளவாவது புரிந்து கொள்ள த்தானே வேண்டும்!
ஒரு பணக்கார நண்பருடன் பேசிக் கொண்டிரு ந்தேன். அவர் சொன்னார். "எனக்கு எல்லாமே சூன்யமா கவே இருக்கின்றது. எல்லாமே வெறுமை வெறுமை, வெறுமைதான். எனக்கு எதுவும் அற்ற உணர்வே மேலோங்கி நிற்கின்றது. நான் தனித்தவன் போல் உணர்கின்றேன்” என்றார். எனக்கு அவர் பேச்சு வியப்பும், சிரிப்பையும் வரவழைத்தது.அவரை நான் நன்கு அறிவேன். எவருக்கும் அவர் கேடு விளைவித்தவரல்லர். எனினும் யாருக்கும் எதையும் கொடுத்தவருமல்லர்.
78

வெறுமை
இவரது கூற்றின் பொய்மைத்தன்மை எனக்கு சற்று வருத்தத்தையும், ஏன் எரிச்சலையும் தந்தது. இந்த நபர் எதை, எதை இழந்தார்? யார், யாருக்கு எதை எவற்றை எல்லாம் வழங்கினார்? இவரிடம் பணம், சொத்து, பதவி என்று எல்லாவற்றையும் இன்னமும் நிரம்பவே வைத்திருக்கும் போது இவர் எப்படி வெற்று மனிதரானார்? உண்மையில் இருப்பதை இயன்றளவு முழுமனதுடன் வழங்குபவனுக்கு வெறுமை என்பதேயில்லை.
கொடுப்பதற்கும், முழுமையாக வழங்குவதற்கும், எதையுமே இழப்பதற்கும் சித்தமாயுள்ளவன் சித்தனாவான்.
அவன் வெறுமை, வேதனை, துன்பம், தோல்வி, சூன்யமான உணர்வு என்று எதுவுமே அற்றவனாவான். இவன் சந்தோஷ சாம்ராஜ்யத்தின் சொந்தக்காரன். முழுமையின் முழு மனிதன் ஒன்றுமில்லாத தன்மையிலும் எல்லாமே நிறைந்தவன். பணம், பொருள், பண்டம் ஆஸ்திகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு அதை ஒருவருக்குமே வழங்காது, அல்லது உதவிநல்காது விடுபவன் இருந்தும் இல்லாதவனே. ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே இறந்தும்போவான்.
ஆனால் அவனுள் இருப்பது எல்லாமே ஆசைகள், நிராசைகள், ஏக்கம், எதிர்பார்ப்பு, அவா, துன்பம், அங்கலாய்ப் புக்கள் தான். கொடுப்பவன் இழப்பதில்லை. அவன் கெட்டதுமில்லை. கொடுப்பவன் வறியவன் அல்லன். கொடுக் காதவன் செல்வந்தனாயினும், காய்ந்த புல்லினும்
79

Page 42
பருத்தியூர்.0.ஐயிரணுகுழர்
பெறுமதியற்ற மெலிந்தவறியவனே எனப்புரிந்துகொள்வோம்!
இத்தகையவர்களுக்குத் துன்பம் வரும் போது வெறுமை நோக்கில் சுய பச்சாதாபத்துடனே தம்மை நோக் குவது கொடுமையிலும் கொடுமை ஐயா! உண்மையான அன்பு இவர்களுக்குக் கிட்டாது விட்டால் வாழ்வே வெட்டுண்டு போகுமல்லவா!
நாம் பூரண மகிழ்வினைத் தேட விழைவது என்பது பிறருடன் இணைந்து அதனைப் பகிர்தலே ஆகும். அப்போது தனிமை உணர்வு எப்போதுமே தலைகாட்டாது.
பெரிய கோடீஸ்வரர்கள் கூட விரக்தியுற்றுத் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அத்துடன் பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட, மற்றவர்களை அதிர்ச்சிக்கு ள்ளாக்கும்படி திடீர் எனத் தம் இன்னுயிரை மாய்த்து விடுகின்றனர். பெரிய செல்வாக்கு உள்ளவர்களைப் பார்க்கும் சாமான்ய மக்கள் அவர்களைப் போலவே தமது வாழ்வும் அமையாதா என அங்கலாய்ப்பது உண்டு. உண்மையில் இந்தப் பதவிகளும், செல்வமும் எல்லாமே வேண்டாம் என்று எதற்கு இவர்கள் மாய்ந்து போக வேண்டும்? இவர்கள் ஓடி, ஓடி உழைத்தது எல்லாமே யாருக்காக? எந்த ஒரு கணத்திலும் இத்தகையோர், வாழ்வின் நல்ல பரிணாமங்களைச் சிறப்புக்களைச் சிந்திப்ப தேயில்லை.
80

6ailable இந்தப் பேர்வழிகள் உயிரைப்போக்கு முன் இந்த உலகில் பலர் எதுவுமே இல்லாதவர்கள் பற்றியும் தொல்லைகள் உள்ள ஏராளமானவர்கள் படும் துன்பங்கள் என்ன என்பது பற்றியும் சிந்தித்திருக்கமாட்டார்கள். தங்களை தங்கள் துன்பங்களை மட்டுமே முதன்மைப்
படுத்துகின்றனர்.
உயிரின் பெறுமதி உணராத இவர்கள் சிறிதாவது சிந்தனைக்குச் சிறிது முன்னுரிமை அளித்து, இருப்பதை இல்லாதோருக்கு வழங்க எண்ணினால் என்ன? அந்த நல் எண்ணம் கொண்டாலே போதும், அவன் தன் உயிரை விடுத்தலை விடுத்து துன்பம் துறந்த இன்பமே சூழ்ந்த மனிதனாகி விடுவான். இத்தகைய நற்சிந்தனை வந்து, தற்கொலை உணர்வினைத் தகர்த்து, சுத்த ஆத்மாவாக உருக்கொண்டவர்களும் உண்டு.
“அடடா எனக்கு இதுவரை புலப்படாத உண்மை களை இன்றுதான்புரிந்துகொண்டேன். சேவைசெய்வதிலும், வழங்குவதிலும் இப்படி ஒரு ஆத்ம திருப்தி இருப்பதை அறியாமல் விட்டேனே" என்று உரைத்த பலரை நாம் கண்டு இருக்கின்றோம்.
சேவை புரிபவனுக்கு, வாழ்க்கையை வெறுக்கும் நிலை இல்லை. வெறுமை என்று ஒறுத்துப் பேசுதலும் இல்லை.
81

Page 43
கருத்திர்கால, அவரர்
வீணாக இந்த உடல் படைக்கப்பட்டதன்று. எமக்கு எல்லாவற்றையுமே வழங்க இந்தப் பூமி தயாராக உள்ள போது, நாம் ஏன் அதன் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளத் தயங்க வேண்டும்?
மனிதன் தன்னிலை உணராமல் இல்லாமை பற்றி வரட்டு, வாய்மொழிகளை உளறித் தீர்க்கின்றான். இந்தப் பேச்சுக்கள் கூட சுய கெளரவத்தை அழிக்கவைக்கும். "இல்லை" என்பதே தொல்லைக்குள் ஆட்படுத்தவல்ல "சொல்” தான்.
* எனக்கு யாவுமே இருக்கின்றது எல்லாமே கிடைத்துக்
கொண்டேயிருக்கின்றது.
* இறைவன் தருகின்ற செல்வத்தை, வளங்களை
இல்லை எனச் சொல்லவே மாட்டேன்.
* எந் நிலையிலும் தளர்வற்ற நிலையில் நான்
இருப்பேன்.
* வெறுமை உணர்வும், வேதனையும், விரக்தியும்
என்னிடம் இருந்துவிடுபட்டு விட்டது.
என உங்களுக்குள் நீங்கள் அடிமனதுாடான தெளிவுடன் உரை செய்வீர்களாக இவை எல்லாமே உங்கள் அந்தராத்மாவைப் புனிதப்படுத்திவிடும். நீங்கள் மனதார
82

மிவறுமை உங்களுக்கு இடுகின்ற கட்டளைகள், நிச்சயமாக உங்களை நல்வழிப்படுத்தும். ஒரு நம்பிக்கைக்குரிய நபராக, மன உறுதி,
மனோவளம் மிக்க மானுடனாக மாற்றிவிடும்.
சந்நியாசம் என்பது வெறுமை உணர்வினால் விளைந்த நிலை என்றும் சிலர் கூறுவதுண்டு. உண்மையின் நிறைந்த நிலையில் எல்லாமே உணர்ந்த நிலையில், "ஞானம்" நோக்கிய பயணமே துறவுநிலையாகும்.
இங்கு கடமை மறந்து காடு ஏக முடியாது. எந்த ஒரு சந்நியாசியும், "கடமையை மறந்து என்னுடன் புறப்படு” என்று சொல்லமாட்டார்கள். "வாழ்க்கையை வெறுத்துச் சந்நியாசம் போகின்றேன்” என்று தற்காலிக மான வாசகத்தை உதிர்ப்பவர்கள் பின்னர் வாழ்க்கையில் சில விடயங்களை விட்டு விட்டு வந்து விட்டோமோ என ஏங்கித்தவிப்பதும், பின்னர் சொன்ன வார்த்தையை பின்னுக்குத் தள்ளுவதும் அன்றாட காட்சிகள்தான். மேலும் இத்தகையவர்கள் தெரியாமல் சாமியார்வேடம் போட்டு செய்கின்ற தப்புத்தண்டாக்கள் சொல்லிமாளுமா?
எனவே தன்னலமற்ற எண்ணங்களுடன் அதன் படியே நடந்துகொள்ளும் செயல்திறன் மிக்க நல்லோர்கள் வெறுமையைக் காணாத இறை தாசர்களேயாவர். மக்களுக்கான தொண்டுகள், இறைபணி போன்றதுதானே?
பழங்களை நல்கும் மரங்கள் அக்கனிகளைத் தாம் உண்பதில்லை. எங்கள் உழைப்பின் மூலம் பெறும் எந்த
83

Page 44
பருத்தியூர்.040.ஹயிரவருதஷ் பொருட்களும் பிறருக்கும் வழங்கப்பட்டால், அதுவன்றோ நிறைவு மரத்தை நட்டவனைவிட அதன் மூலம் பயன் பெறுபவர்களே அதிகம். தனது மரத்தின் கனிகளை உங்கள் அனைவருக்கும் வழங்குகின்றேன், என வழங்குபவன் வெறுமையற்ற பரோபகாரி
வழங்குபவனின் ஆன்மா, உறங்குவதில்லை. அது எந்நேரம் பயணித்தபடியே மக்களைச் சந்தித்துக் கொண்டி ருக்கின்றது.
மனதளவில் நிறைவற்றவன் தான் முடம்போல் வாழ்ந்தும் வாழாது சாகின்றான். நிறைவு அற்ற வெறுமை பற்றியே பேசித் துக்கத்தையே தியானித்தல் போல கொடுமை வேறு என்ன இருக்கின்றது?
நறுமணத்தினையே முகர்ந்து மலர்களை ஸ்பரித்து கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு திசையில் பார்வையை செலுத்தி அருகில் உள்ள விஷ விருட்சத்தின் முட்களைப் பிடித்து இழுத்து அதுகுத்துகிறதா, அதிலிருந்துதுர்நாற்றம் வருகின்றதா என வீணான கற்பனை வயப்பட்டு.தம்மை மறங்து, அனுபவிக்கும் சந்தோஷங்களைப் புறம் தள்ள எத்தனிப்பது நல்ல வாழ்வாக அமையுமா?
வெறுமை வேதனை உணர்வுகள் கூட இப்படித் தான். மனிதன் பலதடவைகளின் தன்னுள் உள்ள ஆன்மா வை அதன் சுதந்திரத்தினை, அதன் வியாபகத்தை ஆராதிக்கபிரியப்படுவதில்லை.
84

பிறுமை சமூகத்தில் மற்றவர்களுடன் முரண்படுவதிலும் பார்க்கத் தன்னுடன் ஒருவன் முரண்படுவதே பெரிய துன்பமாகும்.
"அன்பினை வழங்கி ஆறுதலைத், தேறுதலைப் பெறு" என்பர் ஆன்றோர். எனவே எம்மைச் சுற்றிப் பலர் இருக்கின்றார்கள். நாம் அச்சப்படவோ தனிமையில் துன்புறவோ தேவையில்லை. பூரணதிருப்தியினை நாம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இனிமேலும் பெற்றுக் கொள்ளுவோம் என மனதார எண்ணுவோமாக!
இந்நிலையினை நம்புவதும், பூரணமாக அதனுள் ஐக்கியப்படுவதும் கூட ஒரு தவநிலைதான். செறிவான நிறைவுள்ள மனதினை நாம் பெற்றால் சூன்ய உணர்வு சேய்மையாய் மறைந்தே போகுமன்றோ!
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி 10-09-2006
85

Page 45
மருத்தியூர்.அல. ஹவிவரர்
இருப்பதில் திருப்தி காண்போம். இல்லாதது பற்றிப் பொல்லாப்பு ஏதுமில்லை. தங்கள் சொந்த திருப்திக்காக காண்பதற்காக ஏனையவர்களின் திருப்திசந்தோஷங்களை, எதிர்பார்ப்புக்களைப் பறித்தல் அதர்மம். கடமைகளை ஒழுங்காகச் செய்தவர்களுக்கு என்றுமே திருப்திதான். திருப்தியுடன் உறங்கச் செல்பவன் மறுபடி விழிக்கும்போதும் நிம்மதியுடன் எழுந்து நிற்கின்றான். எளிமையும், இதய சுத்தியும் கொண்டவர்கள் திருப்தியின் முழுமையை அனுபவித்த
திருப்தி காண்பதில் திருப்தியற்றவர்களாக இருப்பது வாழ்வின் முழுமையான சந்தோஷங்களை வலிந்து இழப்பதாகவே கருதப்படும்.
இருப்பதில் திருப்தி காண்போம். இல்லாதவை பற்றிப் பொல்லாப்பு எதுவுமில்லை என்றே எண்ணுக!
86
 
 
 
 
 
 

6agang இந்நிலைமை எமக்குள்ளேயே உருவாக்க மனத் தைப் பக்குவப்படுத்த வேண்டுமென்று ஆன்மீகவாதிகள் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனர். எதுவுமே முடியாது என நாம் முன் கூட்டியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமோ?
திருப்தியுடன் வாழ்வது என்பது இருப்பதைக் கொண்டு அதனைப் பரிபூரணமாக ஏற்று வாழ்தலும், அதன் மூலம் எம்மை முழுமையான மனிதனாக ஆக்க முயல்வது மாகும்.
நான் நேரில் கண்ட ஒருவர் பற்றிச்சொல்கின்றேன். இவரை அடிக்கடி பேரூந்துத் தரிப்பிடத்தில் காண்பதுண்டு. இவர் அனேகமாக ஒரு தினசரியைப் படித்துக் கொண்டி ருப்பார். அழுக்கடைந்தமேனியும், அழுக்கான சட்டையுடன் எவர் பார்வையையும் லட்சியம் செய்யாதவராகவே காணப்படுவார். தெருவில் வருவோர் போவோர் யாராவது சில்லறை நாணயங்களைப் போட்டால் எல்லா நேரங்களிலும் அதனைப் பெற்றுக்கொள்ளமாட்டார். கொஞ்சம் காசு சேர்ந்ததும் அதை எடுத்த பின்பு அதன் பின்னர் யாராவது காசு போட்டால் வாங்க மறுத்துவிடுவார். நான் ஒரு சமயம் அவரிடம் காசு கொடுக்க முனைந்த போது அதை ஏற்க மறுத்துக் கைகளால் சைகை செய்து, வேண்டாம் என்பது போல் உணர்த்திவிட்டார். இவர் ஏன் இப்படிச் செய்கின்றார் என நான் பின்னர் அவதானித்த போதுதான் உண்மை யினைத் தெரிந்து கொண்டேன்.
87

Page 46
பருத்தியூர்.04ல.ஐயிரணுகுந்தர்
தனக்குத் தேவையான பணம் சேர்ந்ததும் அருகில் உள்ள கடைக்குச் சென்று உணவு அன்றைய தினசரிப் பத்திரிகையை வாங்கிக் கொள்ளுவார். இவர் ஆங்கிலத் தினசரிகளையே படிப்பதை நான் கண்டிருக்கின்றேன் தெருவிலேயே உணவுப்பொதியை வைத்துச் சாப்பிடுவார். பின்னர் எங்காவது மெளனமாக முடங்கிக்கொள்வார்.
இவரது செய்கைகள் எமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எல்லோராலும் இந்த நிலையில் வாழ முடியுமா? தனக்குத் தேவையானதில் மட்டும் திருப்திப்பட்டு எதிர்காலம் பற்றி எந்தக் கவலையும் இன்றி வாழுவது இயலுகின்ற காரியமா என்ன? இந்நிலை கூட ஒரு துறவு நிலை மாதிரியன்றோ! திருப்தி என்பது அவரவர் மனநிறை வினைப் பொறுத்தவிடயம்தான். எல்லை மீறாத ஆசைகள் இல்லாதவன், இருப்பதில் மகிழ்வினை, இதயத்தில் பூக்கச் செய்கின்றான்.
இன்னும் ஒரு அபூர்வமான மனிதர் பற்றி நான் சொல்லியேயாக வேண்டும். இவர் ஒரு சிகை அலங்கரிப்புத் தொழிலாளி. நல்ல மனிதர். அத்துடன் திறமையான தொழிலாளி. திருமணமாகாதவர். தமக்குள் தாமே ஏதோ பேசிக்கொள்வார், பாடுவார். ஊர் உலக நடத்தைகள் அரசியல் விவகாரங்கள் தெரிந்தவர். அக்காலத்தில் இவர் நன்று படித்தவர். வாசிகசாலைக்குச்சென்று அனைத்துச் செய்தித்தாள்களையும் படித்துவிடுவார்.
88

ólagyog
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காலை வேளையில் மட்டும் தனது தொழிலை ஆரம்பிப்பார். பல விடயங்களை என்னுடன் பேசிக்கொள்வதுண்டு. தினசரி அன்றைய பொழுதில் ஒரு குறிப்பிட்ட பணம் சேர்ந்ததும் தனது தொழிலை நிறுத்திக்கொள்வார். அவர் தனது கருமத்தினை முடித்த பின்பு எவர் வந்து கேட்டாலும் தனது தொழிலைச் செய்யவேமாட்டார். அப்படியாராவது அன்புடன் கண்டிப்பாக க்கேட்டால் மட்டும் சிகை அலங்கரிப்பினை கேட்ட நபருக்குச் செய்துமுடிப்பார் ஆனால் அவர் கொடுக்கின்ற பணத்தை வாங்க மறுத்து விடுவார். "இந்தா பிடி காசை” என்றால் "எனக்கு ஒன்றும் வேண்டாம் 55T 5 வாங்கமாட்டேன்" என்ற படியே பதிலை எதிர்பார்காமல் போய் விடுவார். ஏன் இப்படிச் செய்கின்றீர் என்று நான் கேட்கும்போது "இதெல்லாம் எனக்கு எதுக்கு” என்றுதான் பதில் அளிப்பார், மேலும் யாராவது அன்புடன் கூலியைக் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால் கண்டிப்பாக அதனை ஏற்க மறுத்தும் விடுவார்.
தனது காணி, வீடு அனைத்தையும் உறவினர்க்க ளுக்குக் கொடுத்துவிட்டு வாழ்ந்த இந்த அற்புத மனிதர் இறுதிக் காலம் வரை திருப்தியுடன், மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்து சென்றார்.
இந்தக்காலத்தில் இந்தக் கதைகளை எல்லாம் எம்மால் நம்ப முடியாதுதான். நடைமுறை வாழ்விற்கு இவர் களைப் போல் நம்மால் வாழ்ந்துவிட முடியாது. ஆனால்
89

Page 47
பருத்திர்.08.9பிந்தைக் இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் அர்த்தம், நியாயம் இருப்பதை நேர்மையுள்ளவர்கள் கண்டாலே வியப்படைவர்.
வாழ்வில் கடைப்பிடிப்பது முடியாத விஷயம் எது என்பது, மனமார எதனையும் இழக்கச் சித்தமாயிருத்தல் என்பதாகும்.
தேவைகளை மட்டும் தொட்டு ஏனைய வைகளை விட்டு விடுதல் என்பது, பல பிரச்சினைகளில் இருந்து நாம் விலகுவதற்கும் ஏற்ற உபாயம் தான். மனித இயல்பு என்பது இதுவே போதும் என்று எண்ணுவதும் அல்ல.
ஆயினும் “இதுவே போதும், அதிகம் வேண்டாம்” என்று நினைக்கின்ற போது வாழ்வின் நாம் செய்யப் போகின்ற சாதனைகள் முடக்கி வைக்கப்படுகின்றன. இக் கூற்றில் என்ன தவறு இருக்கின்றது எனக் கேட்கத் தோன்றுகின்றதா?
மனிதனின் மேல் நோக்கிய பயணத்தில், இடை நடுவில் கிடைப்பதே போதும் என்றால் அவனது லட்சியங் களே, அவலட்சணமாகிவிடும். தொடப்போகின்ற எல்லை யைத் தொட்டு விட்டேயாக வேண்டும். மேலும் அந்த எல்லையைக் கண்டபின் விழிகளை உயர்த்தி மேலும் என்ன புதுவழி உண்டு எனத் தேட முனைபவனுக்குச் சோம்பலற்ற சுறுசுறுப்பு உணர்வு மேலோங்குகின்றது. "நியாயமான இலட்சியங்கள் பேராசை அல்ல”
90

6alpable எமது செயலூக்கத்தினால் பெறப்படும் பெறுபேறு களை எமக்கும் உலகத்திற்கும் நாம் அர்ப்பணிக்கும்போது நாம் நிறைந்த திருப்திநிலையை அடைய வழிபிறக்கின்றது. அதை விடுத்து முயலுதல் இன்றி, இருப்பதை உண்டு, அடுத்தவனுக்குகொடுப்பதும் அற்ற வாழ்வு என்ன வாழ்வு?
திருப்தியை உனக்குத் தேடுவதுடன் மற்றவர்க்கு ஊட்டு எனக்குள்ள திருப்தி நிலையினை மற்றவரும் பெறுதல் வேண்டும் என எண்ணுக! எமது உழைப்பினால் இது சாத்தியமாக்கப்படக் கூடியதே. சாதனையாளர் தூங்கியிருந்தால் இன்றும் உலகம் வேதனையைத்தான் முகர்ந்து கொண்டேயிருக்கும். புரிந்து கொள்ளுங்கள்!
ஏதோ ஒரு விதத்தில் எமக்காகச் செய்யும் பணிக ளின் நன்மைகள் பிறரையும் போய்ச்சேருகின்றது. அதன் பொருட்டாயினும் நாம் எமது பணியினைப் பூரணத்துடன் நேர்மையுடன், விருப்புடன் செய்வோமாக!. பணிகள் நிறுத்தி வைக்கும்போது முன்னேற்றங்கள் முடக்கிவைக்கப்படும்.
இன்று அனேகமானவர்கள் தமது திருப்திக்காக ஏனையவர்களின் திருப்தி சந்தோஷங்கள் எதிர்பார்ப்புக் களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள்.
நாங்கள் எதிர்ப்பார்த்த சந்தோஷங்களை அனுப விக்கும்போது, எமது விருப்பங்களையே மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற எவ்வித கட்டாயமும் யாருக்
91

Page 48
பருத்தியூர்.0. வயிரவருதஷ் கும் இல்லை. தமது விருப்பங்களுக்கு ஏற்ப சந்தோஷங்கள் வருவதுமில்லை என்கின்றார்கள். உங்கள் விருப்புக்கள் மற்றவர்க்கு ஒவ்வாமலும் இருக்கலாம்.
பொதுவாக பெற்றோர், கணவன், மனைவியர் தங்கள் விருப்பமே தம்மைச் சார்ந்தவர்கள் விருப்பமாக வேண்டும் என எதிர்ப்பார்ப்பதுண்டு. "நான் எவ்வளவு வசதிகளை எனது குடும்பத்திற்கு அளிக்கின்றேன். இருந்தும் கூட என்னை எனது குடும்பத்தில் கண்டு கொள்வதில்லை” எனப் பலர் வேதனையுடன் குறைப்படுவதுண்டு.
ஒருவரைக்கூண்டுக்குள் வைத்திருந்து நாம் அவர்க ளிடம் சந்தோஷங்களை எதிர்பார்க்க முடியுமா? அன்பினை அதிகம் காட்டி அவர்களை எமது கட்டுக்குள் கட்டிப்போட எத்தனிக்கலாமா? சிலவேளை சிலர் செய்கின்ற கட்டுப் பாடுகள் அன்பின் நிமிர்த்தமாக இருப்பினும் இது கூடச் சித்திரவதை தான். எல்லோரும் தமக்கே உரியவர் என்று எண்ணுபவர்கள் அப்பொருள் தம்மைவிட்டு விலகினால் எவ்வளவு அவஸ்தைப்பட வேண்டும் தெரியுமா?
எதையும் இழக்கச் சித்தமாயுள்ளவன் எப்பொழுதும் திருப்தி நிலையில் வழுவாத மனோநிலையில் இருப்பான்.
இருக்கும் வரை கடமையை ஒழுங்காகச் செய்தவன், தன்னால் முடிந்த வழங்கல்களைச் செய்தவன், எவ்வித எதிர்பார்ப்புக்களையும் கருதாதவன் தன்னை விட்டு எது விலகினாலும் நிர்சிந்தையுடனேயே வாழ்ந்து கொண்டி
92

6agyang ருப்பான்."இழத்தல்" என்பது, திருப்திநிலை உள்ளவனுக்கு இல்லவேயில்லை. உணர்வோம்.
மிகையான காதல் எதிர்பார்ப்புக்களில் தீவிரமாக இருந்த ஒருவர் பற்றிச்சொல்லுகின்றேன். பெரும் செல்வந் தரான இவர் மிகவும் வாட்டசாட்டமான அழகானவர்.தமக்கு ஏற்ற அழகிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். வசதிகளைக் கொண்டிருந்த காரணத்தாலும், மனைவியிடம் அளவுக்கு மீறிய காதலாலும், எந்தவிதமான வசதிகளில் குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மற்றவர்கள் பார்த்தால் வியக்கும் வகையில் மனைவிக்கு எல்லாச் செல்வங்களையும் அள்ளிக்குவித்தார்.
ஆனால்,
தனது மனவிைக்கு எல்லா வசதிகளையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அவரை ஒரு கூண்டுக்கிளிபோல் நடாத்தி வந்தார். தமது நண்பர்கள் உறவினர்களிடம் தனது மனைவி ஒரு அதிஷ்ட தேவதை, தனது அன்புச்செல்வம் என்று புகழ்ந்து தள்ளிய இவர், மனைவியை ஒரு இடங்களுக்கும் கூட்டிச் செல்வதில்லை. கோவில் குளம், நண்பர்கள் வீடு எங்குமே அழைத்துச் செல்லமாட்டார். தனது மனைவி மீதான அதீத பிரேமை காரணமாகவும், தனக்கே உரியவள், வேறு ஒருவருமே அவரைப் பார்க்கவே கூடாது என்கின்ற ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டார். தமது மனைவி தனக்குக் கிடைத்த ஒப்பற்ற சொத்து என்று சொல்லிச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டேயிருந்தார்.
93

Page 49
கருத்தில்.04ல. ஹவிர2தரர்
ஆனால் நடந்தது என்ன? அவர் சற்றும் எதிர்பா ராதது நடந்து விட்டது. அவரது அழகிய மனைவி எந்த வித தோற்றப் பொலிவற்ற கணவரின் தோட்டத்தில் வேலை செய்த ஒரு ஏழைத் தொழிலாளியுடன் ஊரைவிட்டே ஓடிப்போனாள். எப்படி இருக்கும் அவருக்கு என்பதை எண்ணிப்பாருங்கள்! தனது திருப்திக்காக மனவிையின் எதிர்பார்ப்புக்களை அவர் லட்சியம் செய்ததேயில்லை. வீட்டிற்குள்ளே சுதந்திரமின்றி முடங்கிக் கிடந்தாள். செல்வத்தைக் கொட்டினால் சந்தோஷம் கிட்டிவிடுமா? பலாத்காரமான திணிப்புகளில் ஏது திருப்தி?
மிகவும் விரக்தியுடன் காணப்பட்ட அவர் எல்லாமே இருந்தும் எல்லாமே இழந்தவரானார். மற்றவரின் மன இயல்புகளை உணராதவர் எப்படித் தான் மட்டும் நிரந்தரமான திருப்தி நிலையை எய்த முடியும்? பாவம் செய்பவர்களின் நிலையைப் பார்த்தால், அவர்களது குரூர திருப்தி என்பது ஏனையவர்களை வதைப்பதாகவே இருந்து கொண்டிருக்கும். இந்த அல்ப சந்தோஷம் எல்லாம் இவர்களுக்கு நிரந்தரமன்று. எல்லாவற்றையும் இழந்து ஈற்றில் எய்துகின்ற அவஸ்தைகள் சொல்லும் தரமன்று.
தோல்வி, துன்பம், ஏமாற்றங்கள் வாயிலாக, அதன் மூலம் கிடைத்த அனுபவங்களால் தான் தெளிவு ஏற்படு கின்றது. எனவே துன்பம், ஏமாற்றம், தோல்வி என்பவைகூட எமக்கான கொடுப்பனவுகள் என்று கருத வேண்டும். எந்த
94

ólagog வித சோதனைகளையும் காணதவனிடம் முதிர்ச்சி நிலையை எதிர்பார்க்கலாமா?
அனுபவ அடிகள் பெறாதவன் வாழ்க்கையில் ஒரு அடிகூட முன்னேறி விடுவானா? ஏமாற்றங்கள் மூலம் பெற்ற தெளிவினால் எதனையுமே எதிர்பார்க்காத எண்ண வலுவை நாம் பெற்று விட முடியும்.
எனவே, வருகின்ற அவஸ்தைகளைப் பெற்றுத் தெளிந்த பின்பு கிடைப்பது"திருப்தி” தான். இதில் எவ்வித சந்தேகமும் வேண்டவே வேண்டாம். விரக்தி நிலையைக் கடந்தால்தான் ஒளிமயமான உலகு புலப்படும். விரக்தியுற் றோர்க்கு ஏது திருப்தி? எங்கே சூரியன் மறையப் போகின்றான் எனக் காத்திருந்து அது சற்றுமறையும் போது இருள்கப்பென்று சூழ்வதுபோலத்தான். எம்மிடம் இருக்கும் தைரியம் என்கின்ற தன்னம்பிக்கை சற்றே தொய்வடை ந்ததுமே மனக் குழப்பத்துடன் சூழ்ந்த திருப்தியற்ற நிலை எம்மை ஆக்கிரமித்து விடுகின்றது.
நிரந்தரமான ஒளிபோன்ற நம்பிக்கைகளில் வலுவாக நாம் பிணைந்து கொண்டால் தற்காலிக சுகங்களைக் காட்டும் சலசலப்புக்கள் எம்மை உலுப்பிவிட முடியாது.
இன்று தனிமனித திருப்தி நிலையைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நாடுகள் எல்லாமே தன்னிறைவுடன் திருப்தியுடனா ஆட்சி
95

Page 50
பருத்திர்ப0. ஆயிற்றுதாரர் செய்கின்றன? ஒரு நாடு நிம்மதியாக இருந்து நிம்மதியான ஆட்சி நடப்பதற்கு பக்கத்து நாடுகளும் வல்லரசு நாட்டின் தலைமைகளும் தயாராக இருப்பதில்லை.
தனி மனிதன் வாழ்வில் ஏற்படுகின்ற சலனங்கள் போலவே சுற்றியுள்ள தேசங்களும் குரோத வீம்பு எண்ணங் களுள் சுழன்றுகொண்டிருக்கின்றன. இருக்கின்ற வளங்கள், ஆற்றல்கள் எல்லாமே தமக்கே உரிய தனித்துவமான சொத்து என எண்ணுவதால் வரப்போகும் எதிர்காலம் பற்றிச் கிஞ்சித்தும் உணராது பிற நாடுகளை வஞ்சிப்பதால், குரூர மான களிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றன.
அளவு கடந்த அறிவு மேல் நோக்கிய யுகத்தில் வாழும் நாடுகளில் ஒரு சின்னஞ்சிறிய நாடு கூட வல்லர சாகத் தோற்றம் காட்டிவிடக்கூடும். அது மட்டுமல்ல, வல் லரசு நாடுகளின் எதிர்பார்ப்புக்கள் கூட வினாடிப்பொழுதில் நொடிந்து உடைந்தும் போகலாம். ஏனைய நாடுகளை அரவணைக்காத நாடுகள் திருப்தியுடன் ஆட்சிசெலுத்திவிட முடியாது. ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற ஒரு தனி மனிதன் விருப்பு வெறுப்புத்தானே ஒரு நாட்டை, ஏன் உலகத்தையே ஆட்டுவிக்கின்றது.
சர்வ அதிகாரமமதை உள்ளவர்களுக்கு இறைவன் எதை வழங்கினா லும் அவன் திருப்திப்பட்டுவிடப் போவதுமில்லை. பெரிய நாடுகள் கூட இன்று தனி மனித செல்வாக்கினுள் நுளைந்திருப்பது வேதனையிலும் வேதனைதான்.
96

topolo நாட்டுப்பற்றுள்ள எந்தத் தலைவனும் வேற்று நாடு களை வெற்றுக் குடுவையாக்க முனையமாட்டான். வேற்று நாட்டவர்களைப் பகைமை பாராட்டும் தலைவர்கள் ஈற்றில் இருந்த இடம் தெரியாமல் தடம் தொலைத்த கதைகளை உலகம் நன்கு படித்துள்ளது. ስት
வக்கிரம் பொறாமையற்ற சமூகத்தினுள் நாம் பிணைந்து நின்றால் எமது தனிப்பட்ட எண்ணங்களும் பவித்திரமாகவே விஸ்வரூபத்துடன் துலங்கி நிற்கும். இந்நிலையில் நாம் சஞ்சரிக்கும் போது எமது சமூகத்திற்கு எம்மாலான பங்களிப்பினை வரைவின்றிச் செய்து கொண்டேயிருப்போம். அப்போது எமக்கு ஏற்படும் நிம்மதி உணர்வே திருப்தியுமாகின்றது.
ஆன்மீகம் காட்டும் பாதை என்பது கூட தனிமனித ஆன்ம ஈடேற்றம் பற்றியதுமட்டுமல்ல. ஒட்டுமொத்த சகல ஜீவன்களுக்குமான நிம்மதியை அளிக்க வழிசமைப்ப துமாகும்.
எளிமை பொருந்திய, இதயசுத்தியுடன் வாழுகின்ற ஒவ்வொருவருமே திருப்தியின் முழுமையை அனுபவித் தவனாகின்றான். காண்பது எல்லாவற்றிலும் இச்சையும், தனக்கு மட்டுமே எல்லாம் என்கின்ற உணர்வுகள் களையப் படாது விட்டால் நிம்மதி என்கின்ற வெகுமதியை அவர்க ளாகவே தொலைத்தவர்களாவர். தேவைகளைச் சுருக்கா தவர் திருப்தியைக் காணாதவர்களாகவே காலத்தை ஒட்ட
97

Page 51
பருத்தி.). ஹார்வரர் வேண்டியது தான். வாழ்க்கைப் பாடங்களைக் கண்டு கொண்டும்கூட கவனத்தில் கொள்ளாது விட்டால் என்று தான் எம்மை நாம் கண்டு கொள்ள முடியும்?
என்றுமே திருப்தியுடன் உறங்கச் சென்று மறுநாள் காலை விழித்து அடுத்த நாள் பூரண திருப்தியுடன் கடமை புரிந்து மீண்டும் முழுத்திருப்தியுடன் உறங்குபவனே முழுமை மனிதன்.
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி 06-08-2006
98

-úlolgál.
எமது அறிவிற்கும், பார்வைக்கும் கசப்பானதாகத் தோன்றும் நல்ல விஷயங்கள் கூடப் புரியாமல் விடுவதுண்டு. இன்று விளம்பர்க் கவர்ச்சியால் உண்மைப் பொருட்களைத் தவறவிட்டு விடுகின்றோம். நல்ல பொருட்களுக்குக் கூட விளம்பரம் செய்தேயாக வேண்டும். சிறப்பான விஷயங்களைக் கூட கவர்ச்சியாகப் பேசினால் தான் புரிகின்றது. எனினும் கவர்ச்சி காட்டிப் போலிகள் உருவாகுதல் துரதிருஷ்டமானதாகும். கவர்ச்சியினால் கவரப்படுதல் மானுடஇயல்பு. பொய்மைகளின் ஈர்ப்பால் எமது கலாசாரம், பண்பாடுகள் கெட்டழிய நாம் அனுமதித்தல் ஆகாது. மனோரம்யமானசெளந்தர்யமான உண்மை அழகை அதன் கவர்ச்சியினை ரசிப்பது அற்புதமான சுகானுபவமாகும்.
கவர்ச்சிக்குள் நுகர்ச்சியைத் தேடுபவர்களே அதிக மாக உள்ளனர். கவர்ச்சி விசையின் உண்மைத் தன்மை யினை அறியுமுன் தம் வசமிழப்பவர்கள் தொடர்ந்தும் அதன் ஈர்ப்புக்குள் இருந்து மீளாது இருக்கின்றனர்.

Page 52
பருத்தியூர்.00. உயிர்வரர்
இருப்பினும் எல்லா கவர்ச்சிசம்பந்தப்பட்ட விடயங் களும் அருவருப்பானவையோ எமக்கு ஒவ்வாத ஒன்றோ அல்ல. கவர்ச்சிக்கும் சிறப்பு உண்டு. கொடுக்கும் தரமான பொருளுக்கும் கூட கவர்ச்சிச் சாயம் பூசாதுவிட்டால் சந்தையில் பொருட்கள் விலைபோகாது. யதார்த்தமான, உண்மை இதுவே. &: {, 1, ... '"' '"'",
ஒரு பொருளில், அல்லது ஒரு விடயத்தில் மிகை யான ஈர்ப்பு ஏற்பட்டால், அல்லது ஏற்படவைப்பின் அது கவர்ச்சிகரமாகின்றது. கவர்தல் என்பதே கவர்ச்சி என்றும் கூறலாம்.
எனினும் இதன் ஈர்ப்பினால், எழும் மனச் சுழற்சி
யால் ஏற்படுவது,
0. மன எழுச்சி, ஆவல், ஆசை
மன உழைச்சல், குழப்பம் என்பன (ஒருவர் தன்மைக்கும் இயல்பிற்கும் ஏற்ப பல தாக்கங்களை இது ஏற்படுத்த வல்லது).
கவர்ச்சி என்பதே பல வகைப்படும்.
O பொருட்கள் மீதானது
சொத்துக்கள் மீதானது
VA 100

வெறுமை * பதவி, அந்தஸ்து,
கண்களுக்குப் புலனாகாத அக உணர்வுடன் சம்பந் தப்பட்ட விடயங்கள்
O பாலினக் கவர்ச்சி
மனதில் தூண்டல் இன்றி எந்தக் காரியத்தையும் மனிதனாலோ எந்த விலங்கினங்களாலோ செய்து விடமுடியுமா? ஏன் தாவரங்கள் கூட இரசாயனத் தூண்டலினா லேயே அதன் வளர்ச்சிக்குத் தன்னைத் தானே உருவாக்கி வளர்ச்சி பெறுகின்றது. ஒரு கலம் கொண்ட ஜீவன்கள் கூட ஒன்றையொன்று கவர்ந்துபிணைந்துகொள்கின்றன.
விருப்பு இன்றிச்செய்யும் காரியங்கள் முழுமை பெறுவதில்லை. ஒரு விடயத்தைப்பார்த்த மாத்திரத்தே மனம் தூண்டப்பட்டு ஆர்வப்பட்டு செய்து கொள்ளும் செயல்களிலேயே அதன் விஸ்தீரணம் அதிகமாகும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் பார்த்த கணத்திலேயே அதனைப் பற்றி நிற்க வேண்டும் என்று எண்ணுவது ஏற்புடையதன்று. பார்க்கின்ற காட்சிகள் பொருட்கள் பற்றி ஆராயாது விடுதலும், யாரோ ஒருவர் சொன்னதற்காக அதுபற்றி உடன் கவரப்படுவதும் எம்மை ஏமாற்றுதலுக்கு உள்ளாக்கிவிடும். எமதுஅறிவுக்கும் பார்வைக்கும், கசப்பானதாகத் தோன்றும். நல்ல விடயங்கள்கூடப் புரியாமல் விடுவதுமுண்டு. மறை
101

Page 53
கருத்தி.00.ஆயிரவரர் பொருட்களைத் தேட நாம் காலத்தைச் செலவிடுவது எமது வேலையல்ல என்றே எண்ணுகின்றோம்.
அதீத ஆவல்கள் கூட அவஸ்தைப்பட வைக்கக் கூடும். இன்றைய உலகம் வர்த்தகமயமானது. எதனையும் கவர்ச்சியைக் காட்டியே மக்களுக்கு ஊட்ட வேண்டி யுள்ளது. விற்கப்படும் பொருளுக்கும் அதுபற்றிக் காட்ட ப்படும் படங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இருப்ப தில்லை. பிஞ்சுக் குழந்தைகளுக்கான பொருட்களுக்குக் கூடக் கண்ணைக் கூசவைக்கும் கவர்ச்சிக் கன்னியின் வண்ணப்படத்தைக் காட்டுகின்றார்கள். என்ன கொடுமை
இது!.
எனினும் விளம்பரம் இன்றேல், வியாபாரம் இல்லை என்று ஆகிவிட்டது, மக்களுக்குத் தெரியப்படுத் தாமல் வியாபாரம் செய்ய முடியுமா? எப்படியாவது எந்த முறையிலாவது விளம்பரம் செய்ய வேண்டும் என்பதற் காகச் சட்ட விரோதமாகவும், சட்டப்படியும், சமூகநோக்கு இன்றியும் கவர்ச்சியாகவும் போலித்தனமுமாக மக்களு க்கு எதை எதையோ காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். அசந்தால் வீதியில் நடந்து போவோர் வருவோர் முதுகிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டால் ஆச்சரிய மில்லை.
வானொலி, பத்திரிகைகளைப் பாருங்கள், அரசியல் வாதிகள் பொருட்களை விற்பனை செய்வதுபோல் தங்கள்
V
102

állayang
பற்றிய வீரப் பிரதாபங்களை செய்த, செய்யாத கருமங்கள் பற்றிவிபரமாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். கடவுளால் சிருஷ்டிக்க முடியாத பல விஷயங்கள், பொருட்கள் இன்று போலியான எழுத்துக்களால், பேச்சுக்களால், படங்களால், உருக்காட்டப்படுகின்றன. எனவே எது, எவை சாத்தியப்படக் கூடியன என மக்கள் சிந்திப்பது இல்லை போலத்தெரி கின்றது.
பேசுகின்ற தாய் மொழி கூடக் கவர்ச்சி வலையில் விழுந்து அதன் மூலவேர் களையப்படுவது போல் தெரிகின்றது. எந்தவித மொழியும் சாராத பல மொழிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. காலம் போகின்ற போக்கைப் பார்த்தால் மொழிகளின் தனித்துவம் பழைமைச் சிறப்பு, அழகு எல்லாமே மாறி வேறு வடிவங்கள் சமைக்கப் படுமோ என எம்மை ஏங்கவும் வைக்கின்றது இறைவா..! மொழிக் கலப்புகளால் புரிதல் தன்மை குன்றும்.
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர்கள் கவர்ச்சிகரமாகவே பேசுகின்றார்கள். கவிஞர்கள் இவர்களிடம் சொற்களைக் கடன்வாங்கலாம். உண்மையான காதலர்களை விட, உடல் இச்சையாலும், காரணகாரியத்துடனும் பழகும் காளைகளும், கன்னியரும் அழகாக, உண்மையான காதலர் போல் கவர்ச்சி மிகு வார்த்தைகளைப் பேசிக் கொள்
கின்றார்கள்.
103

Page 54
மருத்திw.aல. ஆயிரவநாதர்
நல்ல மொழியின் அழகுநடை மூலம் மேடைகளில்
பொய்கள் புனையப்படுகின்றன. மனதை ஈர்க்கும்படி எப்படிப் பேசிடினும் அது கவர்ச்சிதானே? காரியம் கைகூடக் கண்டபடி பேச வேண்டியிருப்பதை ஓர் தர்மம் என்றே எண்ணுபவர் பலர் உளர்.
உண்மையான அன்புடன் பழகுபவர்களைப் பேசுபவர்களைக்கூடச் சில சமயம் சந்தேகக்கண் கொண்டு நோக்கத் தலைப்படுபவரும் உள்ளனர். ஏன் எனில் இவர்களில் பலர் ஏற்கனவே நல்ல அழகான பேச்சுக்களில் காட்டிய போலி அன்பினால் ஏமாந்த பேர் வழிகளாக இருக்கக்கூடும்.
தெளிந்த மனதுடனான கவர்ச்சியான பேச்சும், பவ்வியமான பழகும் திறனும் மனிதர்க்கு இருக்க வேண்டிய சிறப்பான பண்பு என்பதை நாம் அறிவோம். என்னதான் எமக்குச் சிறப்புத் தகுதிகள் இருப்பினும் பிறரைக் கவரக்கூடிய நடை, உடை, பாவனை இன்றேல் எம்மிடம் எவரும் அணுகவே அச்சப்படுவார்கள். புற அழகைவிட எவருடனும் பேதம் காட்டாது பழகும் திறன் மிக நுட்பமான விடயம் தான். இத்தகையவர்கள் மொத்தமாய் மக்களைத் தம் வசப்படுத்துகின்றனர்.
இன்று கவர்ச்சி என்று சொல்லப்படும் போதே அது பாலியல் பற்றிய விடயமாகவே நோக்கப்படுகின்றது. கலாசாரம், பண்பாடு என்று நாம் பேச்சளவில் விட்டுக்
104
s

– 60000 கொடுக்காமல் கதைத்தாலும் பாலியல் தொடர்பான விடயங் களில் இவை தொடர்பான பிரச்சனைகளில் முன்னுக்குப் பின் முரணான விதத்திலேயே பலரும் செயல்படுகின்றனர்.
காமத்தை தேகத்தில் தேக்கிவைக்கும், கட்டிளம் கன்னியரின் கவர்ச்சிமிக வண்ணப் படங்களை பத்திரி கைகள், திரைப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி மூலம் பலரும் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
திருட்டு ரசனையில் இளையவர்களுடன் முதியவர்க ளும் இணைந்து நிற்கின்றார்கள். வீட்டுக்குள் ஆபாச பத்திரிகையைக் கொண்டு வரமுடியாது விட்டாலும், வீட்டினுள்ளே சதா எம்மை நோக்கி விழித்து நிற்கும் தொலைக்காட்சியை, அது ஊட்டும் திரைப்படங்களைப், பாடல் காட்சிகளை, விளம்பரங்களை எவர்தான் குழந்தை களுடன் பார்க்காமல் இருக்கின்றார்கள்? அத்துடன் வானொ லியில் இசைக்கப்படும் இசைப்பாடலின் வக்கிரமான வரிகளின் அர்த்தத்தைக் கேட்காமல் இருப்பது சிறப்பு. மொழிக் கொலையுடன் மனதைக் கலைக்கும் இவற்றிற்கு தடைகள் விதிக்கப்படுவதேயில்லை.
உண்மையில் சொல்லப்போனால் ரம்யமான, செளந்தர்யமான அழகை ரசிப்பது என்பதன் அர்த்தம் பலருக்குப்புரியாமல் போய்விடக்கூடும். நல்ல சொற்களில் கவர்ச்சியான வசனம் கோர்ப்பது ஆபாசவார்த்தைகளால் அல்ல. எழுதுபவர்களுக்கு இது புரியாதா? அழகிய பெண்
105

Page 55
கருத்திக்க.ை99ரஜ் களை அழகிற்காக ரசிப்பது என்பது அவர்கள் உடைகளை விலக்கிய கோலத்தில் பார்ப்பதற்காக அல்ல. மூடிய அழகி லும், முழுமையான அழகு பளிச்சிடும். அழகை அசிங்க மாக்குதலானது அதை வெறுமையாக்கி வேட்கையுடன் நோக்குதல் என நாம் உணர்தல் வேண்டும்.
கவர்ச்சிப்பத்திரிகைகள் விற்பனையாகுதல் போல் சமூக எழுச்சிப்பத்திரிகைகள் விலைபோவதில்லை. நல்ல தரமான இலக்கிய நூல்கள், சஞ்சிகைகளின் பெயர்களைக் கூடப் பலருக்குத் தெரியாமல் இருப்பது என்ன துரதிஷ்டம்?
மக்கள் கூடும் சந்திகளில் ஒட்டப்படும் ஆபாச திரைப்பட விளம்பரங்கள் மிகப்பெரிய நிறுவனங்களின் இராட்சத அளவு கவர்ச்சிப் படங்களால் வீதி விபத்துக்கள் கூட ஏற்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன.
இன்று நடக்கும் வன்முறை பலாத்காரம், கற்பழிப் புக் குற்றச்செயல்களின் முக்கியகாரணியாக, கவர்ச்சிமிகு சலனப் படங்களும், வீதியோரத்தில் சுதந்திரமாகக் கண்டபடி உடை உடுத்தி நடமாடும் இளம் பெண்களும் தான் என்று பட்டி மன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகின்றார்கள். படித்தல், கேட்டல், பார்த்தல் எல்லாவற்றிலுமே கவர்ச்சி, விரசங்களில் தோய்ந்தபடி இளயதலைமுறையினர் தமது ரசனையைக் காட்டுகின் றார்கள். இது விடயத்தில் ஆண், பெண் என்கின்ற இரு
VQ
106

óhaggamo சாராருமே பண்பாடு பற்றிய தூய்மையின் மகத்துவத்தை முதலில் உணருதல் வேண்டும்.
திடீர் எனத்தோன்றும் உள்ளத்தின் கிளர்ச்சிகள் வந்த வேகத்தில் தளர்ந்துவிடும், ஆயினும் இதுநிலைத்து நின்ற ஓரிரு நொடிப்பொழுதில் மென்மையான மனதினைப் புண்ணாக்கிரணமாக்கும்.
எந்த விதத்திலும் பெண்களைக் கவர்ச்சி என்கின்ற பெயரில் களங்கப்படுத்தும், எல்லா நடவடிக்கைகளையும் உடைத்தேயாக வேண்டும்."கவர்ச்சி வியாபாரத்தைச் சட்ட மூலம் தடுக்க முடியாதா” என்று கேட்கின்றார்கள். மக்கள் விழிப்பு இன்றேல், சட்டம் எப்படி இறுக்கி வைத்தாலும் சமூகம் நல்லபயன் பெறப்போவதில்லை. கவர்ச்சியை மாறு கோணத்தில் அர்த்தப்படுத்தி அதை விரசமாக்கின்ற உத்திதான் இன்று வியாபார யுகத்தில் நடைபெறுகின்றது. விரசமான காட்சியை அந்தக் கவர்ச்சியைப் பார்த்துக் கூச்சப்படுபவர்கள், அருவருத்து வெட்கித்துத் தலை குனிபவர்கள் தொகை குறைந்து விட்டதோ என மனம் துக்கப்படுகின்றது. ஆரவாரத்துடன் மகிழ்வுடன் குறும்புடன் ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை கலாசார சீரழிவினைக் கண்டு நாம் துக்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்?
பொதுநல அமைப்புக்கள், சகல கலாசார அமைப் புக்கள், மகளிர் அமைப்புக்கள் எல்லாமே கலாசாரச்
107

Page 56
கருத்திபூர்.அல. ஆயிரவருதற் சீரழிவுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்த வண்ணமாயிருக்கின்றன.
காதல், பாலுணர்வு விவகாரங்கள் எல்லாமே ஒரு புதுமையான விஷயங்கள் அல்ல. இவை மானுட, விலங்கு கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள அடிப் படை சமாச்சாரங்கள். அதற்காக இவைகளைப் பகிரங்கமாக கவர்ச்சி வியாபாரத்திற்காக மக்கள் முன் மேயவிடப்படுவது விரசம் அல்லவா?
எந்த ஒரு பொருளையும் ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். எமது வீடுகள், வியாபார நிலையங்கள், தொழில் செய்யும் ஸ்தாபனங்கள், கல்விக்கூடங்கள், பொது இடங்கள், அழகாக சுத்தமாகப் பேணுதல் கூட கவர்ச்சியாக வைத் திருக்கும் நல்ல நடவடிக்கைகள் தான். இதுபோல தனது மேனியை அழகாக தூய்மை பேணி வைத்திருப்பதும் கூட அழகும் கவர்ச்சியுமான செயலேதான்.
எதையுமே நாம் செய்கின்றபோதுகட்டுப்பாடு சமூக வரம்புகளைத் தகர்த்துச்செய்ய முடியுமா? மனித மனங் களை தீவிரமாகக் கசக்குவது கூட வன்முறைச் செயலுக்கு ஒப்பானதே.
மென்மை நோக்குடன் எதையுமே பார்க்க நாம் விழைய வேண்டும். இதனால் நாம் ஒன்றும் கெட்டுவிடப்
Ve 108

óleoparDA
போவதுமில்லை. மாறாக தூய்மையான இதமான சுகந்த சிந்தனையே எம்மை ஆட்கொண்டு விடும்.
மக்கள் ரசனைகளைப் பக்குவமாக நெறிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பு மாகும்.குட்டையை உருவாக்கி அதனுள் மீனைப்பிடிக்க முயற்சிக்கலாமா?
நிர்மலமான இதயத்தினுள் களங்கம் ஏற்படுத்த முயல்வது எவ்வளவு பாதகமானது அழகு, கவர்ச்சி, ரம்மியம், யெளவனம் என்று எல்லாம் கவிஞர்கள், கலைஞர்கள் வர்ணிப்பது, மனித மனங்களை வளப்படுத்த, சந்தோஷ ப்படுத்த, அதன் மூலம் உலகம் புத்துணர்ச்சி பெறுவதற்கே என அறிக
கவர்ச்சிகூட மனதினை இதழுட்ட வல்ல முறையில் ஸ்பரிக்கப்பட்டால் வரவேற்கத்தக்கதே இந்த நடைமுறைகள். ஒரு வரமுறைக்குள் கட்டமைப்பினுள் இருப்பது எவ்வளவு சிறப்பானது தெரியுமா? பகுத்தறிவு உள்ள மக்கள்பக்குவமாக வாழாதுவிட்டால் வாழ்வின் அர்த்தம்தான் ஏதுமிக இயல்பாக எளிதாக சுவைக்கக்கூடியதே வாழ்வு ஆகும்.
உலகின் எத்தரத்தில் உள்ளவர்களும் அவரவர்
நாட்டிற்குரிய கலாசாரப் பின்னணியிலேயே வாழ்ந்து பழகியவர்களாவர். ஆனால் இன்று உலகம் சுருங்கிவிட்டது.
109

Page 57
பருத்திபூர்.00, ஹரேவதரர் பன்னாட்டுக்கலை கலாசாரங்கள் ஒவ்வொரு நாட்டினுள்ளும்
புகுந்துவிட்டது.
எனினும் இவைகளின் தனித்துவம் பேணப்படல் வேண்டும். எமது நாட்டினைப் பொறுத்தவரை பழமையைப் போற்றும் நாம்,"பழமை"யுடன் "புதுமை"வாழ்வுநெறியினை ஏற்றுச் சிதைக்காமல் பார்த்துக் கொள்ளுதல் ஏற்புடையதே. எமது இதயத்தை அழகாக வைத்தல் மூலமே வையகம் எம்மைக் கவர்ந்து இழுக்கும் "கவர்ச்சி” என்பதுமாகும்.
கவர்ச்சி சர்ச்சைக்குள் ஆகக் கூடாது விரசம், ரசமானது அல்ல மனம் நற் குணத்தை விட்டேகக் கூடாது நல்ல கவர்ச்சியுணர்வு வேகத்தைப், புத்துணர்வை அதே சமயம் மன அமைதியையம் நல்கும்
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி 13-08-2006
110

06:Այնո0
குடும்ப அமைதிபெற
பழங்கதைகளைச் சுரண்டாதீர்!
கணவனோ அன்றி மனைவியோ விரும்பத்தகாத பழைய சமாச்சாரங்களைக் கோபம் வரும்போது அதனை மீட்டு அஸ்திரமாக ஏவுதலால் குடும்ப விஷயங்கள் பிறர் நகைப்பிற்குள்ளாகிவிடும். மறக்க வேண்டியவைகளை மறந்தேயாக வேண்டும். சின்னச் சின்னச் சண்டைகளைக் கூட கணவன், மனைவி தொடரக்கூடாது. இதனையே சாதகமாக்கிப், பிறர் இவர்கள் குடும்ப வாழ்வில் புகுந்து கூறுபோட் முனைந்திடுவர். குடும்ப அங்கத்தினரிடையே மமதை ஏற்பட்டால் மனங்கள் விகாரமாகிஅந்நியர்களாகிவிடுவர். எவர் மீதும் துன்பங்களைத் திணிக்க வேண்டாம். அன்பு உள்ளோரிடம் வீம்பு எடுபடாது.
"சேச்சே. எல்லாம் போச்சு. நன்றாகவே நான் ஏமாந்துபோய் விட்டேன். எல்லாமே என் தலைவிதி. எனக்கு அப்பொழுதே சொன்னார்கள், உனக்கு இந்தச் சம்பந்தம் சரிவரவே வராது. சாதகம் பொருந்தாதவளைக்
111

Page 58
பருத்தியூர்.கர்ல. அறிவதன் கல்யாணம் கட்டாதே என்றார்கள். கேட்டேனா நான்.? விதி யாரை விட்டது? இவளைத் தெரியாமல் கட்டித் தொலைத்துவிட்டேன். இப்போது நான் படும் அவஸ்தை யாருக்குத் தெரியப்போகின்றது. என்னை ஏமாற்றி விட்டார்கள். இவளை ஏமாற்றி என் தலையில் கட்டியடித்து விட்டார்கள்.”
இப்படி அலுத்துச் சலித்து, சபித்து, பிரலாயப்படு பவருடைய பேச்சைக் கேட்டீர்களா. இவருக்கு இப்போது என்ன வயது இருக்கும் என நினைக்கின்றீர்கள். இவருக்கு ஒன்றும் அண்மையில் திருமணமாகிவிடவில்லை. ஒரு இளவயதுக்காரரோ அல்லது நடுத்தர வயது ஆசாமியோ அல்ல! அப்போது இவர் யார்.?
இந்த வாலிபருக்கு வயது அறுபத்து ஐந்துக்கும் மேல். ஏழு பிள்ளைகளின் தந்தை. இவருடைய ஐந்து பிள்ளைகளுக்கும் திருமணமாகி நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இளையவர்கள் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு வசதிக் குறைவும் இல்லை. பின் என்ன பிரச்சனை இவருக்கு வந்துவிட்டது?
இவருக்கும் மனைவிக்கும் ஒரு சாதாரண பிரச்சனை தான். சந்தையில் இவர் வாங்கிய காய்கறி சரியாக இல்லை. வீட்டில் சந்தோஷமாக வந்தவரை அம்மையார் இவர் வாங்கிய பொருட்களைக் கண்டதும் ஆக்ரோஷமடைந்து விட்டார். "நீங்கள் என்றைக்குத்தான்
Ve 112

ólogollo
ஒரு உருப்படியான காரியம் செய்து இருக்கிறீர்கள்?காசைக் கரியாக்குவதே உங்கள் வேலை. துப்புக்கெட்டதனமாகத் தினம், தினம் நடக்கின்றீர்கள். இதுவெல்லாம் என்ன காய்கறி. முற்றல் முருங்கைக்காய், வாடல். சூத்தை குத்திய கத்தரிக்காய், உதவாத பயிற்றங்காய். எல்லாம் என் தலைவிதி உங்களைக் கட்டி நான்மாரடிக்கின்றேன்.” என்று மனைவி சப்தமிட இவர் மட்டும் சும்மா இருப்பாரா? வார்த்தைகள் வெடிக்க, எதிரில் வயது வந்த பிள்ளைகள் பரிதாபமாக விழித்துப்பார்க்க, அக்கம் பக்கத்தில் உள்ளவர் களுக்கு ஒரே தமாஷதான்!
திருமணமாகிக் குழந்தை, குட்டிகள், பேரன், பேத்தி களைக் கண்ட பின்னரும் கூட இப்போதுதான், தனக்கும் மனைவிக்கும் சாதகப்பொருத்தம் சரியில்லை என்கின்றார். அதுமட்டுமா. பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்த பின்னரும்கூட, சடுதியாகக் கோபம் வந்த பின்னர் மனம் திசை மாறுகின்றது! சிலர் சண்டை செய்வதற்கே பொருத்தமான வேளைகளுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்றார்கள்.
கோபம் வந்தால் சாதகம் பொருத்தமில்லை, என்பதோடு எப்போதோ இறந்துபோன பெற்றோரைச் சபித்துச் சாபம் போடுகின்றார்கள். இவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்து பிள்ளைகள் பெற்றும்கூட மனம் இன்னமும் ஏன் சஞ்சலப்படுகின்றது? முன்பு குடும்பங்களில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகள் ஞாபக மூட்டப்படுகின்றன. இவை
113

Page 59
பருத்திற்.0.9லிரவதழர் தேவை தானா?
எழுபது, எண்பது வயதிற்குப் பின்னர்கூட மேலை நாடுகளில் விவாகரத்துக் கோருகின்ற கணவன் மனைவியர் உளர். சதா சண்டை போடுவார்கள் ஊரைக் கூட்டுவார்கள். ஆனால் குழந்தைகளைப் பெற்றுவிடுவார்கள் எனப் பலர், சில குடும்பங்களைப் பார்த்துக் கேலிபேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தினம் தினம் மனஸ்தாபங்கள் அவசியம்தானா..? பிறரின் கேலியைச் சிலர் பொருட்
'படுத்துவதே கிடையாது.
சிலருக்கு இது பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கைகள், தங்களது உடல் நிலைகளைப் பாதிப்பதை உணர்ந்து கொள்வதேயில்லை. மன அழுத்தம், உழைச்சல்கள் மனிதனுக்குப் பாரிய பின் விளைவுகளைத் தரும். கணப்பொழுது கோபங்களைக் கட்டுப்படுத்தாது, கண்டபடி பேசித் தீர்க்கின்றார்கள்.
இன்னமும் கூட பழைய மறந்துபோன விரும்பாத சமாச்சாரங்களை மீட்டிப் பார்ப்பதால் ஏது பயன்? கல்யாணம் செய்யுமுன்பு யாரோ ஒருவர் கணவர் வீட்டார் பற்றிய தகாத செய்திகளைக் கேட்டு அதனை மனதில் பூட்டி வைத்துச் சமயம் வரும்போது அதனைச் சொல்லிக் கணவனை வதைக்கும் மனைவி. அதேபோலவே நண்பர்கள், உறவினர்கள் மூலம், மனைவியின் குடும்பம் பற்றிப் பொய்யான கதைகளையே நம்பித் தினம், தினம்
VQé 114

பிறுமை நச்சரிக்கும் கணவன். மேலும் இருசாரார் வீடுகளில் உள்ள பெற்றோர், சகோதர, சகோதரிகள், மைத்துணர்களின் அடாவடித்தனமான பேச்சுக்கள் குடும்ப அமைதியைக் குலைத்தும் விடலாம். தங்களது குடும்ப பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொண்டால் பிறர் தலையீடு எதற்கு.?
சந்தோஷமாக இருக்கும்போது சகலதையும் மறந்து போவதும், கோபம் வந்தால் எல்லாவற்றையும் மீட்டு, மனதை அலைமோதவைப்பதும் நியாயம்தானா? இது ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயம். சுவரில் தலையை அடித்தால், உடைவது சுவர் அல்ல! இதை இரு சாராருமே உணராதவரை ஏதுநிம்மதி?
சாதாரண சின்னச் சண்டைகளைக் கூட வளரவிடக் கூடாது. உணர்க! யதார்த்தத்திற்கு ஒவ்வாத சிந்தனைகளை உள்ளத்தில் இருத்தி, அதற்கு தமக்கு ஆதாரமாகப் பிறரது வீண்பேச்சுக்கள்,சோதிட சாஸ்திரங்களை வேண்டுமென்றே துணைக்கு அழைத்துக் குடும்ப அமைதியை வீணாக்குவது அறிவீனம்.
உள்ளத்தில் அன்பு குடிகொண்டால் சாஸ்திர, சம்பிரதாயங்களை வேண்டுமென்றே தமக்குச் சாதகமாகக் கொள்ளவேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மை, நேர்மை, இறையுணர்வு கொண்டோரிடம் சாமானிய விடயங்களுக்கு வன்மம் சாதிக்கும் எண்ணங்கள் துளிர்விடாது.
115

Page 60
பருத்தியூர்.040.அறிவகுழர்
சுயநலமும், ஆண்,பெண் இருசாராரிடமும் தோன் றக்கூடிய மேலாண்மை அல்லது தன்முனைப்பு ஆகியன எக்கணமும், குடும்ப கட்டுக்கோப்பை விரும்புவோரிடமும் எழக்கூடாது அல்லவா?
அடிமனதில் நீங்காத அன்பை வைத்துக் கொண்டு சும்மா வீம்புக்காகக் கணவன் மனைவி தமக்குள் சிறுசிறு சச்சரவுகளில் ஈடுபடுதல் சகஜமே! எனினும் தமக்கிடையே உறவுகள் ஒருபோதும் உடையாவண்ணம் சுயகெளர வத்தை, அகெளரவப்படுத்துமாற் போல் தமக்குரிய அதீத உரிமை காரணமாக உரையாடுவதைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். உள்ளத்தே மிக அழுத்தமாக வரைந்து கொள்ளவேண்டிய நாகரீகம் இதுவேயாகும். இல்லங்களில் இருந்தே எல்லா பண்புகளும் பரிணமிக்கின்றன.
குடும்பத்தில் எல்லோருமே தம்மிடையே உரிமையு டனேயே பேசவேண்டும். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் எவர் மனங்களும் உடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எவர் மீதும் துன்பங்களைத் திணிக்க வேண்டாம்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 04-07-2010
Ve 116

குழந்தைகள் முன் வம்பளக்க வேண்டாம்!
பெற்றோர்கள் எதனைச் சொன்னாலும் குழந்தைகள் அதனை நம் விடுவார்கள். எனவே பெற்றோர்கள், குழந்தைகள் முன் நல்ல வார்த்தை
க்கரிய பேச்சுச் த்தவிர்ப்பதும் குழர் ரின் மனவளத்திற்கு நன் தரும். விடயமாகும். பேச்சுக்கள் காற்றோடு கரைந்து போவதில்லை. பிஞ்சு
கண்டபடி பேச விழைய வேண்டாம் அழகல்ல. கள்ளமற்ற உள் நல்ல வரைபடங்கயையே தீட்டுங்கள்.
குழந்தைகளிடையே பேசும்போது, பெற்றோர்கள் மற்றும் அவர்களுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எவராயினும் சரிசர்வ ஜாக்கிரதையாகப் பேசல் வேண்டும்.
117

Page 61
கருத்திi.dr). ஓரிவரர் முக்கியமாக வீடுகளில் பெற்றோர் உதிர்க்கும் வார்த்தை களில் வல்லமையுண்டு. அந்தப் பேச்சுக்களை இன் சொல் லாக நன்மைபயக்கும் வண்ணம் அமைந்தால் சிறப்பானது அல்லவா?
பிள்ளைகளுக்குப் பெற்றோரே முதன்மையானவர் கள், ஆதலினால் இவர்கள் பேசுகின்ற வார்த்தைகளே மெத்தச் சரியென பிள்ளைகள் கருதுகின்றார்கள். எனவே இதுபற்றி விளங்காது வன் சொல் பேசுவதைக் கேட்கும் குழந்தைகள் அதுவே சரியான மொழி என எண்ணிக் கொள்வதில் வியப்பேதுமில்லை.
மேலும், அவர்கள் உதிர்க்கும் கருத்துக்கள் பிஞ்சு மனதில் நிலையாக வேரூன்றியும் விடுகின்றன. தமக்குப் பிடிக்காதவர்கள் பற்றிய கருத்துக்கள், வம்பு அளத்தல், கேலி, கிண்டலடிப்பதைக் குழந்தைகளின் செவிகளில் ஏற்றுதல் ஏற்புடையதன்று. ஒரு சம்பவத்தைக் கூறுகின் றேன். ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது. இது வேடிக்கையானது மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கின்றது.
ஆரம்ப வகுப்பு ஆண்டு இரண்டில் அவர்களது ஆசிரியர் தமது கற்பித்தலில் சிரத்தையுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பில் சிறு சலசலப்பு. ஒரு "சின்னஞ்சிறுகுஞ்சு மாணவன் எழுந்துநின்று சேர். சேர். அங்கே பாருங்கள் சேர். அவன் அந்த பிள்ளைக்கு (பெண்பிள்ளை) ஒரு கடிதம் கொடுக்கின்றான். என்ன
VA 118

62ô4pJOD19
என்று பாருங்கள”என்றான். வகுப்பில் சப்தத்துடன் சிரிப்பும் கேட்டது.
ஆசிரியருக்கு ஒன்றுமே புரியவில்லை. வகுப்ப றையை நோட்டமிட்டு அந்தப் பையன் சொன்ன பக்கம் பார்வையைச் செலுத்தினார். அங்கே, அவர் பார்த்த திசையில் ஒரு சிறுவன் திரு, திரு என விழித்துக் கொண்டி ருந்தான். அவன் படிக்கும் மேசையின் அடுத்த திசையில், சின்னஞ்சிறு சிறுமியும் விழியை விரித்தபடியும், பயந்தபடியும் இருந்தாள்.
ஆசிரியரும், சற்று வியப்புடன், சரி. சரி இங்கே வா. எனச் சற்று உரக்கக் கூறி அந்தப் பையனின் கையில் இருந்த கடிதஉறையை வாங்கிப்பிரித்துப் பார்த்தார். கடித உறையினுள் ஒரு வெள்ளைக் காகிதம் மட்டுமே இருந்தது. அதனுள் ஒன்றுமே எழுதப்படவில்லை. ஆசிரியருக்கு ஓரளவு விஷயம் புரிந்துவிட்டது. "என்னடா. என்ன செய்தாய், ஏன் இந்தக் கடிதத்தை இவளிடம் கொடுத் தாய்.” என்று கோபமாகவே கேட்டுவிட்டார். இதற்கு அந்த மாணவன் சொன்ன பதில் நகைப்பூட்டுவதாயும், பெற்றோர் கள் மீது சற்று வெறுப்பூட்டுவதாகவும் ஆசிரியருக்கு இருந்தது.
"எனக்கு ஒன்றும் தெரியாது சேர். வீட்டில் அம்மா வும், அப்பாவும் நேற்றுப் பேசிக்கொண்டார்கள். காதல் கடிதம் கொடுப்பது இப்படித்தானாம். யாராவது பொம்பிளை
119

Page 62
பருத்தியூர்.பல. அவிழ்வருடிஷ் களுக்குக் கடிதத்தை மடித்துக் கொடுப்பார்களாம். நானும் இப்படியே செய்துபார்த்தேன். எனக்கு ஒன்றுமே தெரியாது! என்று சொன்னவன் பின்னர் அழ ஆரம்பித்தான்.
அந்தச் சிறு பாலகனுக்குக் காதல் பற்றி என்ன தெரியும். எங்கோ ஓரிடத்தில், யாரோ காதல் கடிதம் பரிமாறிக் கொண்டதை அவனது பெற்றோர் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டார்கள். இதை இவன் கேட்டுக் கொண்டு விட்டான். அப்புறம் என்ன தானும் இப்படியே செய்தால் என்ன என்று எண்ணிவிட்டான். அது மாத்திரமன்றி அவனுக்குச் சரியாக எழுதவும் தெரியாது. கடிதம் என்றால் உறையில் ஒரு காகிதத்தினையிட்டுக் கொடுக்க வேண்டி யதே என எண்ணிவிட்டான். கடிதம் என்றால் எழுத வேண்டும் என்று அவனுக்குத் தெரியுமா? தாய், தகப்பன் சொல்லியதைக் கேட்டு அதன்படியே, விளையாட்டாக அதனைக் கொடுத்துவிட்டான் அவ்வளவே!
இந்தச் சம்பவத்திலிருந்து ஒவ்வொரு பெற்றோரும், பிள்ளைகள் முன் எவ்வளவுஜாக்கிரதையுடன் உரையாற்ற வேண்டும் தெரியுமா? இவர்கள் உரத்துப் பேசும்போது உள்ளேயோ, அன்றி வெளியேயோ பிள்ளைகள் இதனை மிக அவதானமாகக் கேட்கலாம். தவிர எதை, எப்படி பேசுதல் வேண்டும் என உணர்ச்சிவசப்பட்டுக் கோபா வேஷத்தில் பேசுபவர்கள் சற்று நிதானத்துடன் அக்கம் பக்கத்தையும், மிக அவதானமுடன் நோக்குதல் வேண்டும்.
120

fogamblo
பேச்சுக்கள் எல்லாமே காற்றோடு கரைந்து போவ தில்லை. இவை இதயத்தில் நிலையாய் இருந்தும் கொள்ளும். நல்ல வார்த்தைகள் நிலையாய் இருந்தால் இவர்களின் எதிர்காலம் சுபீட்சமுறும், அன்புநிறைந்ததான நல்ல சொற்களை, நல்ல கருத்துக்களையே என்றும் பேச வேண்டும். கள்ளமற்ற உள்ளங்களில் நல்ல வரை படங்க ளையே தீட்டுங்கள்.
மாறாக, மனதை நொறுக்கும் பேச்சுக்கள். உண்மைக்கு மாறான செய்திகள், தெரியாமை காரணமாக உதிர்க்கும் கருத்துக்களை மனதில் எழுந்தவண்ணம் வாய சைப்பது, உள்ளத்தினை நொறுக்க வல்லது பெற்றோர், பிள்ளைகள் கண்டபடி பேசுவதைக் கேட்டுப் பாராமுகமாக இருப்பதும், சில பெற்றோர் அதனை ரசிப்பதும் விசனத்திற் குரிய விளைவைத் தரும். காலங்கள் எம்முடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. எதிர்காலத்தை உருவாக்கும் தற் கால இளம் சமூகத்திற்குமானது. நல்ல பேச்சு மன வளர்ச்சியை மேம்படுத்தும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 28-02-2010
121

Page 63
கணவன் மனைவிக்கிடையில் புரிந்தணர்வு அவசியம்
கோப உணர்வுகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. ஆயினும் குடும்பங்களில் கணவன், மனைவி கண்டபடி கோபமிகுதியால் உரையாடுதல் கூடாது. கோபம் கேவலமானது. தங்களுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்யும்போது, கணவனும், மனைவியும் பொறுமை இழக்கலாகாது. அன்பின் இறுக்கம் தளர்ந்து, வீடு வெறுமையடைய என்றும் இடம் கொடுக்கலாகாது. தவறுகளை ஏற்றுக் கொள்வதும், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுத்தலுமே எந்தக் காலமும் சந்தோஷமாக இருக்கச் செய்யும் வழியுமாகும். பேசு முன் யோசித்தால் இருசாராருமே வருத்தம் கொள்ள வேண்டியதில்லை.
கோபத்தின் தாக்கம் ஊழிக்காலத்து உஷ்ணத்தை விடக் கொடியதாகும். ஒரு குடும்பம் நிலை குலையாது, தழைத்து ஓங்க தலைவனும், தலைவியும் கோபங்களை தவிர்ப்பது நல்லது.
VQ 122
 

எனினும்,
மனிதர்க்குக் கோப உணர்வுகள் வருவது, தவிர்க்க வியலாத ஒன்றேதான். தேவைப்படுமிடத்து ஓரளவு கோபத்தைக் காட்டுதலின் போது கோபிப்பவரிடத்தே ஒரு உண்மைத் தன்மை இருத்தல் வேண்டும். தங்கள் மீது தவறுகளைப் புதைத்து வைத்திருந்து பிறரிடம் கோபதாபம் கொள்ளுதல் ஏற்புடையதன்று.
இப்போது, நான் சொல்லும் கதை ரொம்பவும் பரிதாபகரமானதும் அதே சமயம் உங்களைச் சிந்திக்கவும் வைக்கும்.
ஒரு சின்னக்குடும்பம் இரண்டே இரண்டு பிள்ளை கள் இவர்களுக்கு. ஒரு ஆண் மற்றவர் பெண். கணவர் பரம சாது மனைவி பொல்லாதவர் என்றும் சொல்லமுடியாது. இவர்கள் அந்நியோன்யமாகவே வாழ்ந்து வந்தார்கள். மனைவி தனது கணவனைப் போல் அல்லாமல் சற்றுக் கோபித்துக்கொள்ளும் குணமும் எதிர்வாதம் செய்வதும் உண்டு. எதுவிதமான அபிப்பிராயங்களையும் திணிக்கும் சுபாவம் அந்த இல்லத்தலைவரிடம் அறவேயில்லை. இதனால் சிலவேளை, கணவனின் அபிப்பிராயங்களை அதிகம் கேட்கும் பழக்கம் மனைவியிடம் இல்லை. இதற்காக அவரும் பெரிதாகக் கோபித்ததும் இல்லை. எனினும் இவர்களின் குடும்பம் சந்தோஷமாகவே இருந்து வந்தது.
இப்படியிருக்கையில் ஒருநாள் இவர்களின் உறவி
123

Page 64
பருத்தியூர்.கல. ஆயிரவருதர் னர்களின் இல்லமொன்றில், திருமண வைபவம் நடந்தது. எல்லா உறவினர்களுமே அங்கு இருந்தமையினால், வைபவம் களைகட்டியது. உறவினர்களும், நண்பர்களும் ஒரே கேலி கிண்டல் பேச்சுக்களைப் பேசிய வண்ண மிருந்தனர்.
அப்போதுதான் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. உறவினர்களிடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு, பரஸ்பரம் வாதம் செய்துகொண்டார்கள். ஆயினும் இது ஒரு சாதாரண பிரச்சினைதான். மேலே நான் குறிப்பிட்டவரின் மனைவி ஏதோ சமரசம் செய்வதுபோல் பேச ஆரம்பித்து விட்டாள். இது கணவருக்குப் பிடிக்கவில்லை. நாம் ஏன் இங்கு வந்தோம். எதற்காக வீணான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என எண்ணி மனைவியை நோக்கிச் “சரி. சரி. விடும். எமக்கு எதற்காகத் தர்க்கம்..” எனத் தடுத்து, அறிவுரை கூறினார்.
எனினும், கணவர் அந்த இடத்தில் வைத்து தனது செய்கையை தடுத்தது, ஏதோ ஒரு செய்யத்தகாத செயல் எனக் கருதிக் கொண்டார். தன்னிலை மறந்தார். பக்கத்தில் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே, சூழ்ந்திருப்பதை அறவே மறந்து “சரி. சரி. நீங்கள், சும்மா வாயைழுடி வைத்திருங்கள் எனக்கு எல்லாமே தெரியும், எனக்கு நீங்கள் சொல்லத் தேவையில்லை, உங்கள் பாட்டிற்கு உங்கள் வேலையைப் பாருங்கள், எனக்கு நீங்கள் என்ன புத்திமதி
என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
”
சொல்வது.
VQ 124

úlaga19 அந்த சமயம், திருமண வீட்டிற்கு வந்தவர்கள் அனைவருமே அதிர்ந்துபோய்விட்டார்கள். சற்றுநேரம் சபை மெளனமாகியது. பின்னர் அங்கு கசா. முசா. எனச் சப்தங்கள் கேட்கலாயின.
இதனை எதிர்பாராத அவரின் கணவர் சற்று ஸ்தம்பித்துப் போய்விட்டார். அவருக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. சப்த நாடியும் ஒடுங்கிவிட்டதுபோன்ற பிரமை. எப்பேர்பட்ட அவமானம்! பலபேரின் முன்னே, தன்னை வாயை மூடச் சொல்லிவிட்டாளே”எனக் கருதிய வர், அருகில் இருப்பவர்களைப் பார்க்கவே கூச்சப்பட்டார். அவ்விடத்தை விட்டு ஒன்றுமே பேசாது அகன்றுவிட்டார். அவரது பிள்ளைகள் திருதிருவென விழித்தார்கள்.
இச்சம்பவம் நடந்ததுமுதல் அவர் தமது மனைவியு டன் பேசுவதை அடியோடு நிறுத்திக் கொண்டார். மனைவி எவ்விதமான முயற்சிகள் எடுத்தும், மன்னிப்புக் கேட்டும் மனிதர் அசைந்து கொடுக்கவேயில்லை.
தனது பிள்ளைகளுடன் மட்டுமே பேசிக் கொண் டார். மனைவி சமைத்த உணவைப் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் போட்டார். தேவையான பணத்தைப் பிள்ளைகள் மூலம் கொடுத்தார். எக்காரணம் பற்றியும், வீட்டில் எதுவித பேச்சையும் பேசுவதற்கு வாய் திறக்கவேயில்லை. எதுவித மான அபிப்பிராயங்களைச் சொல்வதையும் நிறுத்திக் கொண்டார்.மனதை இறுக்கிக் கொண்டார்.
125

Page 65
பருத்தியூர்.00.அறிவகுழர்
பிள்ளைகளுக்குத் திருமணவயதாயிற்று. இது சம்பந்தமாகத் தனது எண்ணங்களைத் தமது மனைவியுடன் பகிர்ந்து கொள்ளாமல் பிள்ளைகளுடன் மட்டுமே பேசிக் கொண்டார். இந்த நிலையில் இவர் தமது மனைவியின் மனோ நிலைபற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளவே யில்லை. இவரது மனைவியோ தனது துன்பங்களை மனதினுள் மறுகியும் தமது பிள்ளைகள், நெருங்கிய உறவினர்களுடன் அழுதுதான் தீர்த்துக் கொண்டாள் இந்நிலை எவருக்குமே வரக்கூடாது அல்லவா?
பரம சாதுவான ஒருவரைச் சீண்டினால் ஏற்பட்ட விளைவுதான் இது. “சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பார்கள். எனினும் அவர் செய்த காரியம் சரியானது அல்ல. குடும்பங்களில் இவையெல்லாம் சர்வ சாதாரண மானது என்ற உண்மையை இவர் ஏற்கப் பூரணமாக மறுத்துவிட்டார். மனைவியை பழிவாங்குவது போல், தன்னையும் உள்ளூர வதைத்துவிட்டார். "பேசுமுன் யோசிக்க வேண்டும்” கணவனைப் பற்றி மனைவியும், மனைவியைப் பற்றிக் கணவனும் ஆன்மார்த்த ரீதியாக அன்பு, காதல் கொண்டால் இந்த இழிநிலை வரவே வராது.
தினக்குரல் ஞாயிறு மஞறுசரி "இவள்” பகுதி 21-02-2010
VA 126

Ital
இல்லங்கள் தோறும் வீட்டுத் தோட்டங்களை அமைக்குக!
நாங்களே உற்பத்திசெய்த காய், கனிகளை நாங்களும் உண்டு, அதனை மற்றவர்களுக்கும் அளித்து வருவதுபோல மனநிறைவு வேறு ஏது? விலைவாசி உயர்வின் தாக்கங்களில் இருந்து அனைவரும் விடுபட அனைவரும் இணைந்து வீட்டுத் தோட்டம் அமைத்தேயாக வேண்டும். உழைப்பதே இன்பம். அதிலும் குடும்பத்தினருடன் இணைந்து இத்தகைய வீட்டுத்தோட்டம் அமைத்தல் சொல்லவொண்ணாநிறைவைத் தரும். இது ஒரு எளிய வழி வீட்டுப் பொருளாதாரத்தை உயர்த்தி நிற்கும் வலிமை
பணி
ஒரு முறை நீதிபதி ஒருவர் இல்லத்திற்குச் சென்றி ருந்தேன். அப்போது அவர்கள் வீட்டின் பின்புற முற்றத்தில் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அன்று
127

Page 66
பருத்தியூர்.அல.அபிந்தைக் விடுமுறை தினம் அவரது குடும்பத்தினர் அனைவருமே மிக்க குதூகலத்துடன் அங்கு தோட்ட வேலை செய்துகொண்டிருந்தனர்.
அவர்கள் வீட்டின் சிறு தோட்டத்தில் கத்தரி, வெண்டி, மிளகாய், பயிற்றை எனப் பயிர்கள் செழிப்புடன் வளர்ந்திருந்தன. எல்ல்ோருமே மிக உற்சாகமாக தமது கருமத்தில் கண்ணாக இருந்தனர். இதன் போது நீதிபதி அவர்கள் சிரித்தபடி'என்ன பார்க்கின்றீர்கள், எமது தோட்டம் எப்படி இருக்கின்றது”என்று என்னிடம் கேட்டார்.
நான் அவரையும் அவரது குடும்பத்தினரையும், பாராட்டியபோது அவர் பேசலானார். "இதில் என்ன பாராட்டும், புதுமையும் இருக்கின்றது? எமது நாட்டு மக்களின் பிரதான தொழில் விவசாயப் பயிர்ச்செய்கை தானே? முன்னர் நாங்கள் படித்துக் கொண்டே எமது பெற்றோருடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தோம் இன்று இந்த நிலை இல்லை. அரசாங்க வேலை கிடைத்ததும் பலரும் தோட்டம் துரவு என்பதையே மறந்து விட்டார்கள். சிலர் இனியும் என்ன விவசாயம் என்றும் எண்ணித் தங்களின் பதவிகளே பெரிது என எண்ணிக்கொண்டார்கள். தோட்ட வேலை செய்வது போல் சந்தோஷம் வேறு என்ன இருக்கின்றது?” என்று சொன்னார்.
உண்மைதான் இன்று நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள
V 128

slogal வேண்டியதில்லை. சிறு பயிர்ச் செய்கையினால் கிடைக் கின்ற ஆதாயம் மிகப் பெரியது. இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுதல் அவசியமாகும்.
இது விடயத்தில் வீட்டுத் தோட்டம் அமைத்தல் பிரதானமாகிவிட்டது. ஏனெனில் இன்று சந்தையில் காய், கறிகளின் விலைகள் மலை போல் ஏறி எம்மைத் திணறடிக்கின்றது. எனவே ஒவ்வொருவர் இல்லங்கள் தோறும் சிறு தோட்டம் அமைத்தல் அவசியமாகின்றது.
எமது அன்றாட தேவைக்கான காய், கனி வகைகளை உடனுக்குடன் பறித்துச் சமையல் செய்யும் போதுள்ள ருசியே அலாதியானது. அதுவும் எமது முயற்சியால் உருவான மரம் செடிகள் வாயிலாகப் பறிக்கப்படும் போது ஏற்படும் மனநிறைவு சொல்லில் அடங்காது.
வீட்டுத் தோட்டம் செய்வது ஒன்றும் சிரமமான தேயல்ல. நல்ல இன தாவர விதைகளைக் கமத்தொழில் திணைக்களத்தின் கிளைகள் மற்றும் எங்கள் விவசாயிகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் உடன் பயன்தரக் கூடிய புதிய ரக தாவர இனங்களின் விதைகளையும் முறைப்படிவளர்த்து அவைக ளைச் சாடிகளிலும் வைத்துவிற்பனை செய்துவருகின்றனர்.
129

Page 67
பருத்தியூர்.00, வயிரவரர்
நிலம் அற்ற குடும்பத்தினர் என்ன செய்வது என்றும் கேட்கலாம். முக்கியமாக கொழும்பு போன்ற நகர்புற வாசிகள், தொடர்மாடிக் குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பது சாத்தியமானதா என்றும் நீங்கள் கேட்கலாம். இருக்கின்ற ஒரு அங்குல நிலத்தை வீணாக்குதல் பூமித்தாய்க்குச் செய்யும் துரோகமாகும்.
யப்பான் நாட்டு மக்கள் நகர்புறங்களில் வாழ்ந்து வந்தாலும், அங்கு நல்ல அகன்ற சாடிகளில், உணவுக்கேற்ற உடன் பயன் வழங்கவல்ல தாவர இனங்களை வளர்த்து வருகின்றனர். தாவரவியல் விஞ்ஞானிகள் விஞ்ஞான முறையில் பல அற்புதமான உணவு பயிர்களைக் கண்டு பிடித்த வண்ணமுள்ளனர்.
ஒரு சின்னச்சாடியினுள் மிகப் பெரிய தக்காளி உட்பட மிகச் செழிப்பாக வளரும் மிளகாய், பழவர்க்க இனங்களையும் கூட பயிரிட்டு வருவதைப் பார்க்கும்போது மிக வியப்பாக இருக்கும்.
தோட்டச்செய்கை போல் பயன்தரும் சிறந்த பொழுதுபோக்கு ஏது? இன்று பலரும் சாடிகளின் பூ மரங்களையே வைத்து அழகு பார்க்கின்றார்கள். இதில் தவறு இல்லை. இதைவிட உணவுக்கேற்ற தாவரங்களை உருவாக்குதல் சிறப்பானது. இதிலும் அழகுண்டு. தொடர்மாடியில் வசிப்போர் அளவான சாடிகளில் காய்கறி
V 130

úlopjamo வர்க்க தாவரங்களை வெளி விறாந்தையில் (பல்கனி) செழிப்பாக உண்டு பண்ண இயலும். நான் பார்த்த வரையில் தக்காளி, கத்தரி, கருவேப்பிலை உட்பட, உடன் வளரக்கூடிய கீரை வர்க்கங்களைச், சாடியில் வளர்த்துப் பயன் பெற்றிருப்பவர்களைக் கண்டுள்ளேன்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தோட்டவேலை செய்வதால் அவர்களிடையே குடும்ப உறவு வலுப்படும். அத்துடன் தேக ஆரோக்கியத்துடன், நிறை வான திருப்தியும் ஏற்பட்டே தீரும். எனது உறவினர் ஒருவர் தாம் புதிதாக வாங்கிய நிலத்தில் சும்மா விவசாயம் செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன், தமது கொஞ்ச நிலத்தில் ஒருதடவை நெல் விதைத்தார். அவரால் நம்பவே முடியவில்லை. அந்த ஆண்டு முழுமைக்குமான நெல் கிடைத்தது. அடுத்து சிறு போகத்தில் உழுந்து பயிரிட்டு, நிறைந்த லாபம் பெற்றார். பெரியதாகச் செலவும் இல்லை. எம்மால் எதையும் நினைத்தால் திறம்படச் செயலாற்றவும் இயலும்.
பொருளாதார வசதி குன்றினால் குடும்ப உறவு பாதிக்கும். சகல பிரச்சினைகளும் கூட வரும். எம்மால் இயன்றவரை சிறுதோட்ட செய்கை மூலம் நாம் ஈட்டும் நலன்கள் பெரிது, மிகப் பெரிதே!
தினக்குரல் ஞாயிறுமஞ்சரி
24-01-2010
131

Page 68
பருத்தியூர்.uல. ஆயிரவநாதர்
பொறுப்புக்களைக் கையளித்தல்
அநேகமான பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கூட தங்கள் அதிகாரங்களை விட்டுக் கொடுப்பதில்லை. வளர்ந்த பிள்ளைகளை என்றுமே சின்னக் குழந்தைகளாக கருதுகின்றார்கள். அடக்கு முறையில் பிள்ளைகளை வளர்த்தால் அவர்களுக்கு எப்போது பெற்றோர் பொறுப்புக்களை வழங்கப் போகின்றார்கள்.? பொறுப்பு இல்லாத பிள்ளைகளால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது. கணவன், மனைவிக்கு அவளுக்குரிய கெளரவத்தை வழங்காமல் விட்டால் வீட்டு நிர்வாகம் சர்வாதிகாரமாகும். எதுவும் சரிப்பட்டு வராது. இருவருமே ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்று தமக்குரிய பொறுப்புக்களுடன் சமுகத்திற்காக ஆற்றும் கடமைகளையும் மறந்து விடலாகாது. பொறுப்புக்களைக்" கையளித்தல்” பரஸ்பரம் கை
கொடுப்பது போலாகும். சுமைகுறையும், செயல் பெருகும். أص
வயது வந்த பிள்ளைகளை எப்பொழுதுமே குழந்தையாகவே எண்ணிக் கொண்டிருப்பது பெற்றோரின் இயல்பு ஆகும். பிள்ளை பாசத்தினால் அக்கறையுடன் இப்படி எண்ணுவதில் தப்பு இல்லை. ஆனால் இந்த எண்ணத்தினால் அவர்களிடம் எந்தவிதமான பொறுப்புக்
132
 

úlyá09 களையும் வழங்காமல் இருப்பதுவே மாபெரும் தவறு ஆகும்.
அநேகமான பெற்றோர்கள் பிள்ளைகள் மீதான தங்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க தயாராக வில்லை. "அவன் என்ன சின்னப் பையன். ஊர் உலக விபரம் அவனுக்கு தெரியுமா என்ன..” என்று சர்வசாதாரணமாகச் சொல்லுவார்கள். ஆனால் நடப்பது என்ன?
சதா காலமும் ஒரு அன்பான அடக்குமுறையில் வாழ்ந்த பிள்ளைகள், வெளியுலகைப் பார்த்த பின்னர், அதனுள் புகுந்து பெற்றோர் கூறும் நல்ல விஷயங்களைக் கூட உதாசீனம் செய்து விடுகின்றார்கள்.
அதுமட்டுமல்ல, தங்கள் திருமண விஷயங்களில் கூட தாங்களாகவே முடிவு எடுத்து விடுகின்றனர். சில வேளை இவர்கள் எடுக்கும் இந்த முடிவுகள் மிகவும் பாரதூரமாக அமைந்து விடுகின்றன.
“பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளை, பெற்றோர் களை விட்டு விட்டு வந்தவளுடன் ஓடிவிட்டானே" என வருந்தி நெஞ்சம் புண்ணாகிப் போகின்றார்கள். அன்பை பாசத்தைக் காட்டுபவர்கள் புத்திமதி கூறத் தயங்குகின் றார்கள்.
ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல பெண் பிள்ளை
133

Page 69
கருத்தியூர்.09. விவரர் களும் தாங்களாகவே முடிவு எடுப்பதுடன் எவருடனும் ஆலோசனை செய்யாது விடுவதும் புதுமையான விடயமற் றதாகி விட்டது. பிள்ளைகளுடன் பேச பெற்றோர் சிலர் அச்சப்படுகின்றனர்.
வலிமையுள்ள நெஞ்சுறுதியுடன் சமூகத்தில் நடந்து கொள்ள ஒவ்வொரு பிரஜையும் தனது பொறுப்பு மிக்க கடமையை அவர்களாகவே செய்ய அனுமதியளிக்க வேண்டும். அன்போடு கூடிய அறிவுரையுடன் பொறுப் புக்களை வழங்குக!
வீடுகளில் இல்லாத சுதந்திர உணர்வினை வெளியே பெற்றுவிட முடியாது. என்றுமே "அப்படி செய்யாதே, இப்படி செய்யாதே" என்று நச்சரிப்பது அவர்களை முடக்கும் முறையெனக் கருதும் நிலையை பெற்றோரும், அவர்களுடன் கூட இருக்கும் வயதுமுதிர்ந்த உறவினர்களும் ஏற்படுத்தலாகாது. எதற்கும் தாங்கள் முன்னைய கால வரலாற்றையே சுற்றிச் சுற்றிப் பேசுவதால் ஏதுபயன்?
நல் ஒழுக்கத்தை வலியுறுத்துவது என்பது அவர்கள் நெஞ்சை உறுத்து மாற்போல் அமைந்திடத் தேவை யில்லை. பக்குவமாகப் பேசுவது வெளியுலகத்துக்கு மட்டுமென எண்ணுவதும் வீட்டில் இராணுவ அதிகாரிபோல் நடக்க வேண்டும் என எவர் தான் சொன்னார்கள்?
VQ 134

மிவறுமை. கட்டுப்பாட்டை வளர்க்க திட்டித் தீர்க்க வேண்டுமா என்ன?
எனினும்,
இயல்பாகவே சில பிள்ளைகள் வயதிற்கு மீறிய, துடுக்குத்தனமான காரியங்களைச் செய்வதுண்டு. இள வயதில் அவர்களின் மிதமீறிய குறும்பையும், பெரியவர்கள் போல் பேசும் தகாத வார்த்தைகளையும் ரசிக்கும் பெற்றோர், பின்னர் பிள்ளைகளின் ஒழுக்கம், பிறழ்வதைக் கண்டு உள்ளம் வெதும்புவது அறியாமையினால் வந்த விளைவு
கணவன், மனைவிக்குக் கூட வீட்டில் சாதாரண மான விடயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்குவதில்லை, இவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் எங்கே இவள் தன்னை மீறிச் செயல்படுவாளோ என்று எண்ணுவதுடன் வீட்டின் சகல அலுவல்களையும் தனது தலையில் ஏற்றுக் கொண்டு அல்லலுறும் பிரகிருதிகளை
என்ன என்பதோ?
"உனக்கு என்ன தெரியும் நீசும்மா இரு” என்று மனைவியை அதட்டி விடுவதுடன், தான் செய்யும் காரியத்தில் தவறு ஏற்படும் பட்சத்தில், அதற்கான முழுப் பொறுப்பையும் தனது மனைவி, மக்கள் மீது சுமத்துவது சுத்த அபத்தம் ஐயா.
கணவன் மட்டும் இந்தத் தவறான செயலைச்
135

Page 70
பருத்தியூர்.அல. லுயிர்வகுழர் செய்துவிடுவதில்லை கணவனுடைய சில பலவீனங்களைக்
கையிலெடுத்து அதனைத் தான் பெற்ற பலமான ஆயுத மாக்கிக்கொண்டு கணவனைச் செயலற்றவனாக்குவோரும் இருக்கின்றார்கள்.
"அவருக்கு ஒன்றுமே தெரியாது எல்லா வேலை களையும் நான் தான் செய்கின்றேன். அங்காடிக்குச் சென்றால் ஒரு பொருளையும் உருப்படியாக வாங்க மாட்டார். கொடுக்கல் வாங்கல்களைகளையும் நான் தான் செய்ய வேண்டும். எதனையும் தப்பும் தவறுமாகத்தான் இவர் செய்வார். அது மட்டுமல்ல, இவரைப் போலவே தான் பிள்ளைகளும் இருக்கிறார்கள்" என்று சொல்லிச் சொல் லியே வீட்டுப் பொறுப்பை வேண்டு மென்றே சுமக்கும் இல்லத் தலைவிகளை நீங்கள் நிச்சயமாகக் கண்டிருப்பீர்கள்.
எல்லோருக்குமே பற்பல கடமைகள் காத்திரு க்கின்றன. மிகச் சிறிய வேலையேயாயினும் அதற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். எனவே நாம் ஒவ்வொருவர் கருமத்தையும் கெளரவப்படுத்தல் வேண்டும்.
ஒவ்வொருவர் கடமைகளை நாம் செய்ய அவர்களுக்கு வழி விட வேண்டும். இதனால் எவரது உரிமைகளும் பறிபோய் விடப் போவதில்லை. இல்லத் தலைவனும், தலைவியும் ஒருவருக்கொருவர் தமது பொறுப்புக்களை பரஸ்பரம் விருப்புடன் கையளித்தல் வேண்டும்.
Q 136

úlyos கணவன் மனைவிக்காக பொறுப்புக்களையும் , மனைவி கணவனுக்கான பொறுப்புக்களையும் பெருமை யுடன் வழங்கி சந்தோஷப்படவேண்டும். அவ்வண்ணமே, தங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் வளர அவர்களுக்காக கடமைகளைக் கையளிப்பதே மேலானது.
அரச, தனியார், நிறுவனங்களின் செயற்பாடுகள் மேம்பாடு அடைய அவர்களுக்கான பொறுப்புக்களை நம்பிக்கையுடன் அதிகாரிகளால் கையளிக்கப்படல் வேண்டும்.
வீடுகள் இப்படி நிர்வாகத்தில் சீராகச் செயற்பட்டால் தான். முழுச் சமூக கட்டமைப்பும் ஒழுங்காக அமையும். நாடு வேறு, வீடு வேறு இல்லை!
மேலாதிக்க உணர்வால் எவர்களுடைய ஆளுமை களையும் பின்னோக்கித் தள்ளுவதும், முயற்சிப்பதும் கேவலமான செயலன்றி வேறென்ன? பரந்த மனப்பான் மையுடன் வாழுவதே சிறந்த மானுட நேயத்திற்கான வழியு மாகும். " கையளித்தல்” பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பது போலாகும். சுமை குறையும். செயல் பெருகும்.
தினக்குரல் ஞயிறு மஞ்சரி -09.01.2011
137

Page 71
aருத்தியூர்.பல ஆயிரவரர்
Ea
at
பேச்சுச் சுதந்திரம்
『
பேச்சுச்சதந்திரம் என்பது கட்டுப்பாடான, எவர் மனசையும் புண்படுத்தாதி
சுதந்திரமான ஓர் எல்லைக்குள் அமையலாம். ஒரு சின்னப் பையன் பேச்சுக்கும் கெளரவம் கொடுங்கள். நாங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அடுத்தவன் எம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விடுவான். மனித உறவை மேம்படுத்த எம்மிடையே உரையாடல் அவசியமாகின்றது. எனவே கேவலமாக பேசி உறவுகளை அசிங்கப்படுத்தினால் உலகம் அவர்களைத் தனிமைச் சிறையில் தள்ளி விடும் . நாவினால் நல்லதையே பேசினால் நானிலம் போற்றும். கருத்தோடு அளவாக அளவளாவினால் குடும்பம் குதூகலிக்கும்,
அனைவரும் கண்ணியமுடன் நோக்குவர். لم ܥ
மேடையில் பேச்சாளர் ஒருவர் உஷ்ணமாகப் பேசிக் கொண்டிருந்தார் அவரது ஆவேசமான வார்த்தை களின் வேகத்தால், வைரஸ் தாக்கத்தால் சுருண்டு விழும் கோழிபோல ஒலிவாங்கி மடிந்து போய்க்கிடந்தது.
VQ 138
 

00Јард. இவ்வளவிற்கும் அவர் யாரைப்பற்றி வசைபாடுகி ன்றார்? அது அவருக்கே புரியாது யாரைப்பற்றியாவது காரணங்கள் இன்றித் திட்டித்தீர்க்க வேண்டும். பொது சனங்கள் போதுமடா சாமி எனுமாற் போல் தத்தமது தலைகளைச் சொறிந்து கொண்டிருந்தார்கள்.
ஒலி வாங்கி மட்டும் உணர்வுடன் கூடிய உயிர் இருந்தால், அவர் சிரசில் குட்டுக்கள் இறக்கியிருக்கும். இத்தகையவர்கள் எதையாவது பேசுவார்கள். மக்கள் அதைக் கேட்டேயாக வேண்டும். என்ன கொடுமையடா சாமி இது எனக் கேட்கத் தோன்றவில்லையா?
பேச்சு உரிமை என்பது இதுதானா? எவரை எப்படியும், எந்த விதத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் கண்டபடி வசை பாடுவது தான் பேச்சுச் சுதந்திரமா? இப்படியாகப் பேசுவதே தமது உரிமை என்றல்லவா சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
வீட்டிற்கு வெளியே மட்டுமா இந்த நிலை? வீட்டுக் குள்ளும் இதே மாதிரி நடந்து கொள்ளும் குடும்பத் தலைவர், தலைவிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
இல்லத் தலைவன், கண்டபாட்டிற்கு எதனையாவது தன் பாட்டிற்குச் கண்டனக் கணைகளாகத் தொடுத்த படியேயிருப்பார்."இங்கேயுள்ள எவருக்காயினும் பொறுப்பு
139

Page 72
பருத்திபூ.40. ஆயிரவருதர் இருக்கிறதா, நான் ஒருவன் மாடாக உழைக்கின்றேன். இங்கேயுள்ள கழுதைகளுக்கு எங்கே இது புரியப்போகின் றது” எனப் பொரிந்து தள்ளுவார். உண்மையில் இவரது கோபத்திற்கு பெரிதாக எந்தக் காரணமும் கிடையவே கிடையாது.
தனது பேச்சை எல்லோருமே கேட்டேயாக வேண் டும். அது தனது உரிமை. இங்கே எவருமே தனக்கு முன், தனக்கு முரணாகப் பேசக்கூடாது என்கின்ற மமதையுடன் பேசுவதில் என்ன நியாயமுண்டு?
தங்கள் மீது தங்கி இருப்பவர்கள் பெற்ற பிள்ளை மனைவியேயாயினும் அவர்களுக்கான நியாயபூர்வமான உரிமைகள் இருப்பதைச் சிலர் உணர்வதேயில்லை.
மனைவிமார் கூட தங்கள் கணவர் ஒரு அப்பாவி யாக இருந்தால், அவரைப் பேசவே அனுமதிக்க மாட்டார் கள். அதுவும் தனது கணவன் ஏதாவது ஒரு சிறு தவறு இழைத்து விட்டால் அதையே ஒரு சாட்டாக வைத்து அவரை மன்னித்து விடாது. தனது இஷ்டப்படி நடத்திக் கொண்டிருப்பார்.
வீட்டில் தான் எவரையும் அதிகாரம் செய்யலாம் வெளியே எவர் பார்த்து விடப் போகிறார்கள் எனச் சிலர் எண்ணிக் கண்டபடி மனம் நோகப் பேசுவதுண்டு.
Ve 140

úlyog உண்மையில் எவருக்காவது வீட்டிலேயே இல்லாத பேச்சுச் சுதந்திரம் வெளியே எப்படி கிடைக்கும்? சிலர் வீட்டில் வாய்மூடி மெளனியாக இருப்பார்கள்.
ஆனால் வெளியே தமது மொத்த ஆதங்க த்தையும் கொட்டித் தீர்ப்பது போல பிறரை அதிகாரம் செய்து துன்புறுத்துவார்கள். வீட்டிற்கு வெளியே ராஜாவாக உலா வருவதும் உள்ளே அடிமை போல் முடங்கிக் கிடப்பதும் ஒரு பலவீனமான நிலை தான்.
சில அதிகாரிகள் தமது பணிமனையில் தமது சக ஊழியர்களைப் பேசவே விடமாட்டார்கள். இவர்கள் ஆண் அதிகாரிகளாகவும் இருக்கலாம்,பெண் அதிகாரிக ளாகவும் இருக்கலாம். ஆனால் தத்தமது வீடுகளில் ஒரு அடிமை வாழ்வையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அக உணர்வுகள் பாதிப்படையும் போது சிலர் முடங்கிய போகின்றார்கள் சிலர் பழிதீர்க்கப் புறப்பட்டுப் போகின்றார்கள்.இதிலிருந்து மீள எண்ணுபவர்கள் எத்தனை பேர்?
பொது வாழ்வில் சிலர் நடந்து கொள்ளும் முரணான நடத்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புக் களும் ஒரு காரணமாகும்.
141

Page 73
பருத்தியூர்.00, வயிரவரர்
பேச்சுரிமை என்பது ஒரு கட்டுப்பாடான சுதந்திர
மான எல்லைக்குட்பட்டதே! சுதந்திரம் என்பதும் கட்டுப்பா டான சமூக முறைமையேயாம். இது ஒரு தனிமனிதருக்கு மட்டுமல்ல! நாங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அடுத்தவர் நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொள்வான். பேசுவதும், பிறருடன் நடந்து கொள்ளும் விதமும் நாகரீகமான முறையில் அமைந்தால் தான் சமூகக் கட்டமைப்பு சிதையாமல் இருக்கும்.புரிந்துணர்வுடன் பேசினால் உறவு பிரியாமல் இருக்கும்.
ஒரு சின்னப் பிள்ளையின் பேச்சுக்கும் கெளரவம் கொடுக்க வேண்டும். இன்று இளைய தலைமுறையினர் நியாயமாகப் பேசினாலும் கூட அது சிறு பிள்ளைத் தனமானது என உதாசீனம் செய்தல் கூடாது.
சரி, பிழைகளைச் சுட்டிக் காட்டுவது அனைவரி னதும் பாரிய பொறுப்பு எனினும் இவைகளை எங்ங்ணம் வெளிப்படுத்துவதே பிரச்சனையாகவுள்ளது. எவருமே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வதில்லை.
எதனையும் பேசு முன், யோசித்துப்பேச வேண்டும். மனிதன் பேசாமல் வாழ முடியாது கொஞ்ச நேரம், கலகலப்பான மனிதர் சூழ்ந்த இடத்தில் முடங்கியிருந்து பாருங்கள். அவர்களோடு இணைந்து. பேசி மகிழ வேண்டும்
142

பிறுமை போல் இருக்கும். ஐன நடமாட்டம் அற்ற இடத்தில் மெளனமாக இருந்து தியானம் செய்வதும் எளிதல்ல. தியானம் என்பதே மன ஒடுக்கத்தினுடான பயிற்சி தான். இதனால் உள்ளம் விரிவடையும். ஆயினும் மக்களோடு மக்களாக உறவாடுவது என்பது வேறு மெளனமாக இருந்து தியானம் புரிவது வேறு.
ஆனால் “மெளனமான வழிபாடு என்பது கூட இறைவனோடு உரையாடுவது" என்பதை நீங்கள் உணர வேண்டும். மெளனத்தை விட ஸ்திரமான மொழி வேறில்லை. மெளனம் என்றுமே யெளவனம்தான்!
மனித உறவை மேம்படுத்த உரையாடல்கள் தேவைப்படுகின்றது. பேசாமல் சும்மா இருந்தால் வாழ்வு சுவைக்காது. இதோ ஒரு சின்னக் கதை.
மிகவும் பாவச் செயல்களைச் செய்தவன் இறந்து போன பின், உடனே அவனை மேல் உலகத்திற்கு, மேல் உலககாவலர்கள், ஒரு பெரிய அரண்மனைக்கே அழைத்துச் சென்றனர்.
அவனால் நம்பவே முடியவில்லை. மகா பாவம் செய்த எனக்கு இந்த வாழ்வா? அங்கு நடப்பவைகளை அவனால் நம்பவே முடியவில்லை "இதோ பார், இங்கு உனக்கு ஒரு வேலையும் இல்லை.ஒன்றுமே பேசக் கூடாது.
143

Page 74
பகுத்தியூர்.பல விவரச்
நல்ல விதவிதமான உணவு, பானங்கள் வழங்கப்படும்.
பேசாமல் இவைகளை அருந்துவதும் சாப்பிட்டு உறங்குவதுமே உனது வேலை. இங்கு எவருமே உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இங்கு எவருமே உன்னிடம் பேச்சுக் கொடுக்கப் பேவதில்லை புரிந்ததா” என்று அவர்கள் கூறிவிட்டு சென்று விட்டார்கள். அப்பாடா இது போதும் என்றவன், நன்றாகச் சாப்பிட்டான், தூங்கினான். ஆனால் எவருமே பேச வில்லை. உணவு அங்கு வைக்கப்பட்டிருக்கும். படுக்கப் பஞ்சு மெத்தை தயாராக இருக்கும்.
ஆயினும் எவ்வளவு காலத்துக்குத் தான் இப்படியே உண்டு, உறங்கிக் காலத்தை ஒட்ட முடயும்? ஒரே தனிமை, பேசுவதற்கு ஆளேயில்லை. அவன் மனம் நொடிந்து ஓடோடிச் சென்று அங்குள்ள காவலாளியிடம் "நான் இங்கிருப்பதை விட பேசாமல் என்னை நரகத்திற்கே அனுப்பிவிடுங்கள்” என்றான். ஒருவருக்கு வழங்கும் மிகப் பெரும் தண்டனை அவனைப் பேசாமல் சும்மா இரு எனக் கட்டளையிடுவதே தான்! அவனுக்கு வழங்கப்பட்டதும் நரக தண்டனையேதான் .
மனிதர் வாய் இருந்தால் கண்டபடி பேசக் கூடாது. நல்ல வார்த்தை பேச மட்டும் வாய் அசைய வேண்டும். உணவை உண்பதற்கும், எம்மை வளர்ப்பதற்கும், பயன்படும் வாயை புனிதமாக வைத்திருக்க வேண்டும்.
V 144

úlolyog படித்ததைச் சொல்லிக் கொடுக்க, இறை புகழ் பாட, மற்றோரை, உற்றோரை வாழ்த்த நாம் தயங்கவே கூடாது.
உரிமை என்பது பிறர் வாழங்குவது அல்ல! ஒருவனை முடக்காமல் இருந்தாலே போதும். அவன் உரிமை பெற்று உயர்ந்துவிடுவான். ஒருமுறை ஒருவரை நேசித்தாலே காழ்ப்பு எழாது, தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை அநாவசியாமாக உதிர்க்காது அளவோடு பேசி, மகிழ்வோடு வாழ்க! பேச்சுத் சுதந்திரமே மானுடத்தின் வேண்டுதல். நல் இயக்கத்தின் தூண்டுதல்.
தினக்குரல் ஞயிறு மஞ்சரி
06-02-2011
145

Page 75
- . . . -
..
. . "
. -
',
- .
--
tx
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 76


Page 77

களையும்"வாழ்வியல் வசந்தங்கள்
• Ꮉ-- >>ᎹᎹ • -- ಜೀ
கவர்ச்சிகரமாக நூலாசிரிய
க ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம்
isBN 978 955 0469-12-3
9||789
5 5 0ll4 6 9 1 2 3