கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:காதலும் கடமையும்

Page 1


Page 2
حیر
s
.
 
 
 

காதலும் கடமையும்
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியல்வசந்தங்கள்- பாகம் 12 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் விபரம்
நூல் தலைப்பு :- காதலும் கடமையும்
ஆசிரியர் :
மொழி :
பதிப்பு ஆண்டு :
பதிப்பு விபரம் :
உரிமை :
தாளின் தன்மை :
நூலின் அளவு:
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
கணனி வடிவமைப்பு :
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை
ISBN:
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 12
பருத்தியூர் பால.வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க்
கிரெளன் சைஸ் (12.5x18.5 செ.மீ)
13
154
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
தையல்
வானவில் வெளியீட்டகம்
: 250/=
978-955-0469-13-0
 

அணிந்தரை
சமூகப் பயன்பாடுடைய எழுத்துக்கள் சிரஞ்சீவித்துவ மானவை, ஒவ்வொரு மனிதனது உணர்வுகளையும் உசுப்பி விடக் கூடியவை, ஏதோவொரு வகையில் சமூகக் கடமை களையும் , மானுடத்தின் மகிமையையும் உணர்த்திநிற்பவை. உலக வியாபகமான உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டு பவை, பெரும்பாலும் அனுபவதரிசனங்களாகவும், அலைகின்ற மனங்களை ஆற்றுப்படுத்துபவைகளாகவும் காணப்படுபவை. இப்படிப்பட்ட எழுத்துக்கள் மூலம் மக்களுக்கு வழிகாட்டுபவர் களில் ஒருவர் தான் பருத்தியூர் பால,வயிரவநாதன் அவர்கள். உளவியல், சமூகவியல், அறிவியல் சார்ந்த எழுத்துக்களில் பெரிதும் அக்கறை கொண்டு நாற்பத்தைந்து ஆண்டுகளாகச் செயற்பட்டுவருபவர் அவர்.
"நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்றவள்ளுவர் வாசகத்திற்கேற்ப ஒவ்வொரு மனிதரும் தத்தமது அகப்புற வாழ்க்கை எதிர் கொள்ளும் சவால்களை தீர்த்துக்கொண்டு சிறப்பானதாக வாழ வேண்டுமெனக் கருதும் பணிஇவருடையது.தமது 15வது வயதில் பிரபஞ்ச வாழ்க்கைத் தத்துவம் பற்றி பள்ளிப்பருவக்காலத்தில் கையெழுத்துச் சஞ்சி கையில் ஆரம்பித்த இவரின் எழுத்துப்பணி இன்னமும் விறு விறுப்புடன் தொடர்கின்றது. ஈழநாடு பத்திரிகை காட்டிய
-3-

Page 4
பாதையில் இன்று இலங்கையின் தமிழ்த் தினசரிகளான தினக்குரல் ‘வீரகேசரி 'தினகரன் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகள், சஞ்சிகைகளின்படுபிஸியான எழுத்தாளர் இவர். மக்களுக்கு நல்வழிகாட்டும் உளவியல்சார்ந்த,ஆன்மீகம்சார்ந்த ஆயிரத்துக்குமேற்பட்ட கட்டுரைகளைத்திரு.பால, வயிரவநாதன் அவர்கள் இதுவரை எழுதியுள்ளார். வாசகர்கள் ஈர்ப்பு அதிகரித் துச் செல்வதனால் ஒரே வேளையில் பல வேறு ஏடுகளிலும் எழுதிவருகிறார். ஒவியம்,சிறுகதை, விமர்சனம், கவிதை, ஆகிய பல்துறைப் பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ள. இவர் , 33 ஆண்டு கால அரச சேவையிலிருந்து சென்ற ஆண்டு இளைப் பாறியுள்ளார். இறுதியாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நிர்வாக அதிகாரியாகப்பணியாற்றினார்.
இவரது ஆரம்பகாலப்பத்திரிகைப்பணி லேக்ஹவுஸ் குறுாப், ரைம்ஸ்குறுாப், ஈழநாடு ஆகியவற்றுடன் தொடர்பு பட்டிருந்தது. இவற்றினூடு கிடைத்த அனுபவங்கள் உலகத்தை விளங்கிக் கொள்ளவும், தமது சிந்தனைகளையும், அனுபவங் களையும் எளிமையான பண்பாட்டு மொழி நடையில் பொது மக்களுக்கு வழங்கவும்கூடியதாயிருந்தது. இரண்டு தடவைகள் இலங்கைக் கலாசார அமைச்சின் சிறுவர் இலக்கியத்துக்கான விருதினைப் பெற்றுக் கொண்டவர்.2009 இல் 'கலாபூஷணம்’ விருதினைப் பல்துறை இலக்கியத்துக்காகவும் சுவீகரித்துக் கொண்டார்.
திரு. பால, வயிரவநாதனின் பத்திரிகைக் கட்டுரைகள், "வாழ்வியல் வசந்தங்கள்” என்ற நூல் வரிசையில் இருதடவை
- 4 -

கர் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் பானிரண்டாவது நூல் இதுவாகும் தினக்குரல் தினசரியில் ளிெவந்த பயனுடைய கட்டுரையாக்கங்கள் இதில் இடம் ற்ெறுள்ளன மனித இதயத்தை மயிலிறகு கொண்டு தடவும் ைேலயிது. ஆற்றொழுக்குப் போன்ற எளிய வசனங்களும் , அவற்றினூடு ஆழமாகப் பொதிந்துள்ள பொருண்மையும் கட்டுரை கரின் தரத்தை வெகுவாக உயர்த்தியுள்ளன. மொழிநடை கூட தரித்துவமானது. வாசகரைக்கொக்கிபோட்டு இழுக்கக்கூடியது. ஒவொரு வாசகனும் இந்த விடயங்கள் எனக்காகத்தான் எதப்பட்டுள்ளனவா? எனச் சிந்திக்கக் கூடிய எழுத்துக்கள் இ)வயெனலாம்.
பரிபூரணத்துவம், காதலும் கடமையும், தர்மம், நிம்மதி, பதூற்றுதல் ஏற்புடையதன்று. துன்பங்கள் சொந்தங்கள் அல்ல இபங்கள் நிரந்தரமாகட்டும், பெண், வேடதாரிகள், சோதனை ஆகிய பலவேறு தலைப்புக்களில் அமைந்து ஒளி வீசும் கட்டுரைகள் இவை.
“வண்ணப் பறவைகள் வாய் அசைத்துப் பறக்கும் போதே, ஒட்டி உராய்ந்து, மெத்தென்றுகொத்தி, மெல்லிய சிறகி னால் விசிறுவதைக் கண்டதும், உங்கள்தேகம் சிலிர்ப்பூட்டப்பட 65.3606)LLIT?
காதலின்புனித ஜீவிதத்தைக்கட்டுரைஆசிரியர்காட்டும்
பாங்கிற்கான ஒரு சாட்சி இது. இது போல அநேக இலக்கிய -5-

Page 5
முத்துக்கள் இந்நூலின் கண்ணுள்ளன. ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டிய உளவியல் வழிகாட்டி இந்நூலாகும். தமிழ் நூற் பரப்பில் இதன் வெளிவருகை சாலச் சிறந்தது. நூலாசிரியரின் பணி காலத்தினால் செய்த உதவியாகும். தமிழ் நூல் வாசகர்கள் இந்நூலினை வாங்கிப்பயனடைவரென எதிர் பார்க்கின்றேன்.
கலாநிதி,பண்டிதர், சைவப்புலவர் செ.திருநாவுக்கரசு நல்லூர்

ഗ്ര8ഖഞ്ചു
துன்புறு மனதை வெல்ல துணையாகும் கருத்தோவியங்கள்
வெற்றி என்ற சொல் மனிதனை கட்டி வைப்பதைப் போன்று பிறிதொருசொல் உண்டாஎன்பதுபெரும் ஆய்வுக்குரிய வொன்றாகும், சின்னஞ்சிறு சிறார் முதல் பெரும் ஞானிகள், விஞ்ஞானிகள் வரை இந்த சொல்லினைத்தமதாக்கிக்கொள்வத ற்காக ஓடுபவர்கள். "ஐயோ இந்த வெற்றி எனக்கு வேண்டாம்" என்று கூறி ஒதுங்கிக்கொள்ளும் தியாகிகள் எவரேனும் இருக்கின்றார்களா? என்றதேடுதல் ஓர் அலைச்சலாகும். அந்த முயற்சி விழலுக்கு இறைக்கும் நீரைப்போன்றது.
ஒவ்வொரு மனிதனது செயற்பாடும், சிந்தனையும்,த்ான் ஈடுபட்டிருக்கும் கருத்தில் வெற்றியை அடைவதாகும். மனித கருமங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கிய நகர்வாகவே இருக்கின்றன. அதனால்தான் வாழ்வில் வெற்றிபெறுவதுஎப்படி என்பதைக்கூறும் அறிவு நூல்கள் கடலலைகள் போன்று வெளிவந்த வண்ணமே உள்ளன.
வெற்றியடைவேன்! வெற்றியடைவேன்! என்ற தாரக மந்திரம்மட்டும் ஒருவனை வெற்றிப்பாதைக்குதூக்கிக்கொண்டு சென்று விடாது. எவ்விசயத்திலும் வெற்றிபெறுவதற்கான வழி முறையும் உள்ளன. இவற்றை உள்வாங்கலுடன், நடை முறைப்படுத்திக்கொள்தலும் வெற்றிநோக்கி விரைவதற்கான
- 7 سا

Page 6
படிக்கற்களே. சமூகத்தை முழுமையாக நேசித்தலும், தனி மனித சிந்தனைகளையும், குணங்களையும், உணர்வுகளையும், அதன் வெளிப்பாடுகளையும், கூர்மையான அவதான பெட்ட கத்திற்குட்படுத்திக்கொள்வதும் வழிமுறைகளை தமதாக்கிக் கொள்ளவைக்கின்றன.
பால வயிரவநாதன் கற்றமையதொரு சிந்தனை வாதி அவர் புரிந்த பணி, அவருட்ைய சூழல், அவர் தனக்கென ஏற்படுத்திக்கொண்டுள்ள சிலவாழ்வியல் நடைமுறைகள்,மனித சமூகத்தில் சிலந்திப் பின்னலாகிக் கிடக்கும் தனி மனித பிரச்சனைகளை கண்முன் சதா நிழலாட வைக்கவே, கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் இவற்றை எப்படி கடந்து வெற்றியை நோக்கிச் செல்வது என வழிமுறைகளை சிந்திக்க வைத்து விட்டன. எழுத்துணர்வு அவற்றைப் பந்திகளாக உந்துதல் அழுத்தம் கொடுக்கவே அவருடைய தேடுதல்களின் பிரதிபலன்கள் நமது தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சி கைகளிலும் நூற்றுக் கணக்கில் பந்திகளாக உலா வரத் தொடங்கின.
தொகுதி தொகுதியாக நூல் வடிவும் கண்டன. தேனீக் கள் மலர்களை நாடிதேன் சேகரிக்கச் செல்லும், பால, வயிரவ நாதன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றிய காலத்தில் அங்கு அவரை காண வருபவர்கள் பிரச்சனைகளால் கனத்து விட்டிருக்கும் மலர்களாகவே இருந்தார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், குடும்பங்கள் எனப் பல்வேறு வகைப்
-8-

பட்டவர்களும் சுமை தாங்கிகளாகவே அவரைச் சந்திக்க வந்தார்கள். அவற்றை ஒரு தேனியாக உறிஞ்சிக் கொள்வது இவருடைய வாடிக்கையான சமாச்சாரமாகிவிட்டது.
இலக்கிய கூட்டங்கள் நூல் வெளியீடுகள், கதாபிரசங் கங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், ஒன்றையும்விடமாட்டார். இங்கெல்லாம் இவர் ஒருதேனியாகவேசுற்றிச்சுழன்றார். அப்புறம் என்ன பிரச்சினை தேனை உறிஞ்சுவதுதானே பணி
தெருவில் இடம் பெறும் பல்வேறுபட்டவர்களுடனான சந்திப்பும் உரையாடலின்போதும் ஒருதேனியாகவேசூழல்வார். பிரச்சனைகளை பலாச்சுளைகளைப் பிடுங்கிஎடுப்பதுபோன்று சதா கேள்வி கொக்கியைபோட்டவண்ணம் இருப்பார்.பரிகாரம் கூறிய வண்ணம் இருப்பார்.இத்தகைய ஒரு சூழற்சியாக சுற்றிச் சுற்றி வரும் தேனியைப் போன்றவர்வயிரவநாதன். இந்த சேகரிப்புக்களெல்லாம் வாழ்வியல் வசந்தங்களாகியுள்ளன.
தேன்பாடுகள் அமைந்து விட்ட அவருடைய அனுபவ சேகரங்கள் எமது உள நோய்களை தீர்க்கும் மருந்துகளாக திகழ்கின்றன துன்பங்கள் சொந்தங்கள் அல்ல, இன்பங்கள் நிரந்தரமாகட்டும் என்கிறார்.
இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்வது இயலாத
காரியமாக விருக்கின்றது.துன்பங்கள்நிரந்தரம் என்று மனிதர்கள்
நொந்து போகின்றார்கள். இன்பம் வந்தால் அதுவே நிரந்தரம்
என்றுஆணவம் கொள்வதுமுண்டு சஞ்சலம் சுதந்திரஉணர்வை
9

Page 7
தகர்க்கும். வாழ்க்கையில் நடப்பவை எல்லாமே மாறிமாறி வரும் நிகழ்வுகள் யதார்த்தமானவை என்றுபூரணமாக நம்புங்கள்
முயற்சி, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால் துன்பங்களை வெல்லும் வல்லமை பெற்றவர்களாவோம்” என்கின்றார். அப்பா துன்பம் துன்பம் என்று ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய். கவலையைவிடுஅது நிரந்தரமானதல்ல இன்பமேநிரந்தரமானது. அதையே சொந்தமாக்கிக்கொள் என்று துன்பத்தை வெல்வதற் 'கான வழிமுறையை காட்டுகின்றார்.
பரிபூரணத்துவம், காதலும் கடமையும், தர்மம் நின்மதி, பசி, தூற்றுதல் ஏற்புடையதன்று, துன்பங்கள் சொந்தங்கள்அல்ல இன்பங்கள் நிரந்தரமாகட்டும்,பெண், வேடதாரிகள்,வேதனைஎன வாழ்வியல் வசந்தங்களின் இத் தொகுதியில் தலைப்புக்கள் அமைந்துள்ளன.
தோல்விகளும் இழப்புக்களும் துன்பசாகரத்தின் கரைகளே. இவைகளை அனுபவிக்கும் பொழுது சாகரத்தின் ஆழத்திற்கே இழுக்கப்பட்டு விடுகின்றான். கனவுகள் மிகுந்த மனிதன் அவன் வாழ்வு அத்துடன் கரைசலாகி விடுகின்றது இந்நிலையிலிருந்து அவன் மீட்சிபெறவேண்டும்
துன்ப சாகரத்தில் தத்தளிக்கும் மனவுணர்வுகளை
மாற்றியமைக்கட்டும்பிரயத்தனங்கள்,முயற்சிகள் சிந்தனைகள்
அவனிடம் ஏற்பட வேண்டும். அதற்கானவழிகாட்டலேவாழ்வியல்
வசந்தங்கள்.வயிரவநாதனின்கருத்தோவியங்கள் அவற்றைப்
= 10 =
 

பின்பற்றுகின்ற போது வாழ்வு வசந்தமாகின்றது. துன்பங்கள் கழிபவனாக மனதும் தெளிவடைகின்றது.
இறைவனே பரிபூரணமானவன் அவன் படைப்பான மனிதன் பரிபூரணமானவன் அல்லன். அவனுடைய தேடுதல் களும்,தேவைகளும் எண்ணிலடங்காதவை. 100முயற்சிகளில் 99இல் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்த ஒன்றுக்காகவே அவன் அலறுவான், கதறுவான், அதற்காகவே கரைசலாவான். தானே பெரியவன் என்ற மனமும், தனக்கே அனைத்தும் என்ற அவாவும் அவனை ஆட்டிப் படைக்கும் தீய சக்திகள். அவற்றி லிருந்து மீட்சி பெறுவது எப்படி?வாழ்வியல் வசந்தங்கள்வழித் துணையாகின்றது. வயிரவநாதனின் கருத்தோவியங்களுடன் மனத்தை செம்மைப்படுத்தும் வழிமுறைகளை சுட்டிக் காண்பிக் கின்றன.
ஒவ்வொரு இடரும் தோல்வியும் சோதனைகளே என் பதை உணர்ந்தால் அவற்றை வெற்றி கொள்ளும் வழிமுறை களை அறிந்தால், தெளிந்தால், உணர்ந்தால் அதுவே வாழ்க்கை யின் உயிரோட்டம் என்பதை அறிந்துகொள்ளலாம்
ஜயோ கடவுளே! இதென்ன சோதனை என்ற ஒப்பாரி
களே உலகில் அதிகம். ஆனால் சோதனைகளின் வெற்றியே
வாழ்வின் வெற்றியாகும். பரீட்சைகளின் வெற்றியே உலகில்
அதிகம். ஆனால் சோதனைகளின் பெறுபேறுகள் நன்றாக
இருந்தால் எத்தகைய இன்பத்துக்கு நம்மை இட்டுச்
சென்றுவிடுகின்றன. அதற்காக எத்தகைய முயற்சிகளில் நாம் - 11 -

Page 8
ஈடுபடுகின்றோம் அவையெல்லாம் ஆசிரியர் மூலம் கிடைக் கின்றன. பெற்றோர் மூலம் கிடைக்கின்றன. அவற்றை சரியான முறையில் பின்பற்றுகின்ற பொழுது துன்பங்களை கரை யொதுக்கும் வெற்றிகள் நம்மை வந்தடைகின்றன. வயிரவ நாதனின் எளிமையான எழுத்து நடையும், சாதாரணவாசகமும் புரிந்துகொள்ளத்தக்கசொற்பிரயோகங்களும் அவற்றை கிரகிக் கும், உள்வாங்கும், வாசகனின் வாழ்வை வசந்தமானதாக்கி விடுகின்றன. வாசிப்போம்! துன்பங்களை வெல்வோம்! வாழ்வை வசந்தமாக்கிக்கொள்வோம்.
கே. விஜயன் எழுத்தாளர் பத்திரிகையாளர்
- 12

எனது உரை
இறைவனே பரிபூரணமானவன். மனிதன் தன்னை முழு மையாக உணராதவன் ஆசைகளைத்தேக்கி வைத்திருப்பவன் அவன் பரிபூரணமானவன் என்று சொல்ல அருகதையற்றவன்.
எல்லாமே வேண்டும் என நினைத்து ஏங்கும் போது ஒருவன் ஏழையாகின்றான். நிறைவு உள்ள இடத்தில் குறைவு ஏது?
மனிதனின் தேடல்கள், ஆய்வுகள், எல்லாமே "அறிவு" எனும் கூட்டிற்குள் அகப்பட்டுக் கொள்வதால் எல்லையில்லா ஞானம்,பரிபூரண நிலை வந்துவிடாது.
உலக சிருஷ்டிகளில் ஒன்றைத் தானும், அதன் நுட்ப மான ஆற்றல்களைத் தோற்றங்களை தெரியாமல் "முழுமை” நிலையை அடைவது எப்போ?
மனிதன் மிதமிஞ்சிய எதிர்ப்புக்கள் ஏக்கங்களினால் தூக்கத்தைத் துறந்தும் உழைக்கவேண்டியவனாகின்றான்.
நிம்மதி எனும் வெகுமதியை இறைவன் அனுமதியுடன் பெற்றுக் கொள்வதை விடுத்து அவா, அழுக்காறுபோன்றவை களால் அவப்பெயருடன் மனிதர்பொழுதைக் கழிக்கின்றனர்.
سے 13 سے

Page 9
சோகத்துடன் சுழல்வதை விடுத்து வேகத்துடன் எழு வதே மீட்சிக்கான வழி.
துன்பங்கள் என்றும் சொந்தங்கள் எனக் கருதாது. இன்பங்களேநிரந்தரம் என எண்ணிச் செயல்படவேண்டும்.
மனசு வாழ்க்கையின் அமைப்பைவரைகின்றது. அதனை அழகாக வரைந்தால் என்ன?
மனோரம்யமான காட்சிகள் கண்முன் தெரியும் போது இமைகளை விரித்து ரசிப்பதே சிறப்பு.
கண்மூடும் ஒருகணம் பல அதிஷ்டங்கள் எம்மை விட்டு விலகலாம்.
சோதனைகள் எம்மைப் பரிசோதனை செய்வதற்கே.
எனவே சோதனைகளால், பதியப்பட்டிருக்கும்சுகங்களை இழக்க
லாகாது.
சோகத்திற்காகச் சோகப்பட்டால் காலம் கரையும் அப்புறம் சாதனைகளைச் செய்வது எப்போது?
கத்தி கழுத்தை நெருங்கும் போது, கத்துவதை விட எழுந்து உதைப்பதே நல்லது.
இன்று நல்ல மனிதர்கள் கூட வேடதாரிகள் முன்மயங்
- 14
 

கிக் கிடக்கின்றார்கள். திறமை இருந்தும் பிறரை நம்புவது அறிவீனம்.
கலியுகத்தில் காண்பதெல்லாம் பொய் முகங்கள் எனும் எண்ணத்தை, பொய் முகம் கொண்ட வேடதாரிகள் ஏற்படுத்திவருகின்றனர்.
பொய்களையும் பொய்மையாளர்களையும், மெய் அறிவாளர்களின்பார்வைபஸ்பமாக்கும்
சந்தோஷ ஸாகரத்தில் என்றும் சஞ்சாரம் செய்வதற்கு சிந்தையில் களங்கம் இல்லாதொழித்தால் போதும்.
இல்லற வாழ்வில் பெண்ணின் கரிசனையான, பாசம் முதன்மையானது. இல்லறமே காதலால் கட்டப்பட்டஸ்திரமான அழகு மாளிகைதான்.
இங்குதான் எல்லோரும் அன்பை, பரிவை, நின்மதியை நாடுகின்றனர். காதல் வாழ்வுரம்மியமானது.
திருமணத்தின்பின்னரும் கணவன், மனைவி சதா ஆயுள் உள்ளவரை காதலுடன் சங்கமிக்க முடியும்.
இளம் தலைமுறையினர்காதலே வாழ்வு என எண்ணிக் கடமையினை மறந்துவிடக்கூடாது.
- 15

Page 10
அன்பான இதயங்களின் இணைப்பினால் சொந்தங் களையும், செய்கருமங்களையும் துறந்தால் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவது யார்?
இளமைக் காதலால், முதுமைக்காலத்திற்கான பணி களைபுறம்தள்ளினால்இல்லறவாழ்வினில் நிறைவு தோன்றுமா?
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 12 இன் "காதலும் கடமையும்” எனும் தலைப்பிலான சிந்தனைக் கட்டுரைத் தொகுப்பிற்கு உரை செய்யுமுன் பல அறிவுசார் பெரியோர்கள் என்கண் முன்.
இந்நூலிற்கு அணிந்துரைசெய்த கலாநிதி பண்டிதர், சைவப்புலவர் திரு.செ.திருநாவுக்கரசு அவர்களைப் பார்க் கின்றேன்.
இவர் எனது அண்ணனான ஆசிரியர் திரு.பா.முத்துக் குமார் அவர்களின் நெருங்கிய நண்பர். திரு செ. திருநாவுக்கரசு அவர்கள் ஆசியர்களுக்கு ஆசான்.
ஆமாம் இவர்கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின்முது நிலை விரிவுரையாளர்.எனதுநூல்களை படித்துள்ளமையினால் எமது அண்ணனார் மூலம் ஏற்கனவே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
மிகக் குறுகிய கால எல்லைக்குள், இந்த நூலிற்கான
- 16

அணிந்துரையினை நல்கினார். இது இவரின் பெரும் தன்மை க்கும் என்மீது கொண்டபேரன்பிற்கும்ஒர் எடுத்துக்காட்டு,
மேலும் பல இலக்கிய நூல்களை ஆக்கிவருபவர். தற்போது பல நூல்களை மாணவச் செல்வங்களுக்காகவும், ஆய்வுக் கட்டுரைகளையும், அவை சார்ந்த நூல்களையும் வெளியீடு செய்வதில் பெரும் முனைப்பாக இயங்கிவருகின்றார். ஆசான் திரு.செ.திருநாவுக்கரசு அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்!
நாடறிந்த நல்ல எழுத்தாளர் திருகே. விஜயன் பற்றி எவ்வளவோ சொல்லலாம் 1960களில் யாழ் எழுத்தாளர் சங்கம் அகில இலங்கைரீதியில் நடாத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தமது கால் தடம்பதித்தார்.
தொடர்ந்து இவர் எழுத்துலகில் செய்த சாதனைகள் பல.சிறுகதை, நாவல்,தொடர்கதைகள், நூல்விமர்சனங்கள் எனப்பத்திரிகைகளில் எழுதிக் குவித்தார்.
தினசரிகள், சஞ்சிகைகள், வாரவெளியீடுகளில் தாராள மாக எழுதிய திருகே. விஜயன், வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் பல வருடங்களாகப் பணிபுரிந்தவர். அதனைத் தொடர்ந்து சுடர் ஒளியின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றினார்.
மல்லிகை, ஞானம், சுடரொளி,போன்றவற்றிலும் அத்து டன் இவர் இலங்கைப்பத்திரிகையில் மட்டுமல்லதென்இந்திய
17.

Page 11
பிரபலசஞ்சிகைகளான கணையாளி, தீபம், போன்றவைகளிலும் தம் திறனை வெளிப்படுத்துகின்றார்.
சீமான், சஞ்சரி, அக்கினிக்குஞ்சு, மேகவர்ணன், இள வேனில், மின்மினி என்கின்றபனைப்பெயர்களிலும் எழுதிவந்த இவர் தற்போதுகலை இலக்கிய கருத்தரங்குகளில், அரசியல், இலக்கிய உரைகளைச்சுவைபடபேசிவருகின்றார்.
அஞ்சாமல் போலிகளைச்சாடும்திரு.கே.விஜயன்எனது நூலுக்கு முகவுரை தந்துள்ளார். என்னை ஆராய்ந்ததுபோல் இந்த முகவுரை எனக்குத் தெரிகின்றது.
இந்த வேளை எனது நீண்ட கால நண்பர் பிரபல எழுத்தாளர் மானா மக்கீன் பற்றியும் சொல்ல வேண்டியுள்ளது. இந்த தொகுப்பில் "காதலும் கடமையும்” என்கின்ற கட்டுரைபற்றி மிகவும் சிறப்பாகச் சொன்னார்.
நாங்கள் இருவரும் நீண்ட காலம், அடிக்கடி கண்டு கொள்ள முடியாது விட்டாலும். எனது எழுத்து மூலம் நான் அன்பான நண்பர்களுடன் அடிக்கடி உறவாடிக்கொள்ள முடிகின்றது. மானாமக்கீன் அவர்களே! மனம்நிறைந்த அன்பைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
இவை ஓர் உதாரணத்திற்காகச் சொல்கின்றேன்.
திரு. மானா மக்கீன் போன்ற பல எனது நெடுநாளைய
- 18

நண்பர்களுடன், வாசகநெஞ்சங்களுடன், எழுத்து வடிவங்கள் மூலம் பேசிக் கலந்துரையாடி வருவது இறைவன் கொடுத்த அரியசந்தர்ப்பங்கள் அல்லவோ?
"காதலும் கடமையும்” நூலுடன் ஏனைய எனது நூல்க ளையும் அச்சு வாகனமேற்றி அழகுற வெளிக் கொண்டு வந்த அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட் ஆகியவற்றின் அதிபர் திரு.எஸ். சிவபாலன் அவர்களுக்கும், என்னோடிணைந்து சகல ஒத்துழைப்புகளைத் தந்த நண்பர்கள், அன்பர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன்
"மேரு இல்லம்"
36-2/1
ஈ.எஸ் பெர்னாண்டோ மாவத்தை,
கொழும்பு06,
தொ.பே இல :- 011-2361012, O71-4402303,
077-4318768
- 19

Page 12
கருத்தியூர்.09. ஆயிற்றூர்
நூலாசிரியர் பருத்தியூர் பால, வயிரவநாதன் எழுதி வெளியிட்ட"வாழ்வியல் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
1. உண்மை சாஸ்வதமானது - LITEBLÈS - 01 2. 9 èLDT - LITTEELð - 02 3. சுயதரிசனம் - Lists - 03 4 தேrழைகளாய் வாழுவதோ? - Lu Ta51b - 04
5. ஞானம் - LITEBLÈS - 05 6. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்! - TasLb - 06 7. சும்மா இருத்தல் - LITTESLb - 07 . 8. உண்மைகள் உலருவதில்லை! - Lufrasb 08 9. உண்னோடு நீ பேசு! - t III&fð - 09 10. நான் நானே தான்! - Lurasib - 10 11. வெறுமை - LITeSib - 11 12. காதலும் கடமையும் - LunTaLib - 12 13. அக ஒளி - LUFTGELÊ - 13 14. உன்னை நீழுந்து - LITER - 14 15. சுயபச்சாதாபம் - LTa5 b - 15 16. மெளனம் - LITELřò - 16 17. மரணத்தின் பின் வாழ்வு - LumTESLÊ - 17 3. 17. சிந்தனை வரிகள் - LITTEELò - 18
- 20
 

மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
ஆசிரியர்
-21 -

Page 13
பொருளடக்கம்
தலைப்பு 01) பணிபூரணத்துவம் 02) காதலும் கடமையும் 03) தர்மம் 04) நிம்மதி 05). If 06) தூற்றுதல் ஏற்புடையதன்று 07) துன்பங்கள் சொந்தங்கள் அல்ல இண்யங்களே
நிரந்தரமாகட்டும்! 08) Guart 09) Garfase 10) (Barrabar 11) எப்படியும் வாழ்ந்து விடலாமா? 12) வயதுவந்த பிள்ளைகளுடன் சீனோகபூர்வமாகப்
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள் 13) 8Bảompossilsio SawflaDID GATUETTŘEB...!
IIßGüb
23
33
48
60
73
86
95
107
120
129
140
145
150
- 22
 
 

பரிபூரணத்துவம்
றிெவிற்கு எட்டாத மா வல்லமை பொருந்திய இறைவனே பரிபூரண த்துவமானவன். எம்மை என்றும் இயக்குவதுடன் உலகம் முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருக்கின்றான்."பாதை காட்டுகின்றேன்" என்பவரின் பாதையை புரிந்து கொள்ளும் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயமாக மனநிலையில் தெளிவுடன் தன்னைப் புதியவனாக எதிலும் வல்ல நல்லவனாக ஆக்கிக்கொள்ள நினைப்பது, முனைப்போடு இயங்குவதுமுடியாத கருமமும் அல்ல. நல்ல ஞானிகளின் சிந்தனையில் திரிபுவாதத்திற்கு இடமேயில்லை. நிகழ்காலச்சூழலில் தன்னைவருத்தி மாற்றியமைக்க விரும்பாதவர்கள் தொகைதான் அதிகரித்துக் காணப்படுகின்றன. மனிதனுக்கு அறிவு ஏற ஏறச் சந்தேகங்களும் வலுப்படுகின்றன. சந்தேகம் அற்ற நிலை வருவதற்கு பரிபூரணனான இறைவன் அருளை வேண்டி நிற்க வேண்டும். ار
இறைவன் மட்டுமே பரி பூரணத்துவமானவன். சகல காரிய காரணங்களையும் அறிந்தவன், என்றெல்லாம் நாம் உரை செய்தாலும், அறிவுக்கு எட்டாத இறைபற்றிநாம் வரைவிலக்கணம் கூற இயலாது.
سے 23 -

Page 14
மனிதன் பூரணத்துவமான நிலைக்கு வரமுடியுமா என்று கேட்பவர்களே அதிகமாயுள்ளனர். மனிதன் ஏதோ
நிலையில் இவன் எப்படித்தன்னை முழு உருவமாக வரைந் திட இயலும் எனக்கேட்டிடத் தோன்றுகின்றதல்லவா? வாழ்வில் திருப்தி இன்றி வருத்தப்படுபவனிடம் வாழ்வின் முழுமை செழுமைபற்றி, உடனே புரியவைக்க இயலுமா?
மனிதன் இன்றைய வளர்ச்சி என்பது கூட ஒரு பரிணாம வளர்ச்சிதான். இதில் எதுவித சந்தேகமும் கிடையாது. தீடீர் என ஒருவன் துலங்கிட இயலுமோ?
நல்ல நினைவுகளே நற்கருமத்தைச்செய்யத் தூண்டுகின்றன. ஒருவன் தன்னை உருவாக்கிக் கொள்ளக் காலஅவகாசம் தேவைப்படுகின்றது. ஒருவன் தன்னை முழுமையாக்கிக் கொள்ள வரையறைக்குள்ளான காலத் தைக் கோருவது, நடைமுறைச் சாத்தியமானது தானா? கொஞ்சநாள் பொறுங்கள் நான் முழுமை பெற்றுவிடுவேன் என்று கூறினால், சிலவேளை அது நகைப்புக்கிடமாகவும் தோன்றும் அத்துடன், சதாகுறை கூறும் பிரகிருதிகளிடம் “நிறைவு” எப்படி எனக்கேட்க முடியுமோ?.
எனினும்,
நிச்சயமாக, மனநிலையில் தெளிவுடன் தன்னை புதியவனாக, எதிலும் வல்ல நல்லவனாக ஆக்கிக்கொள்ள -24

காதலுக் கடமையும் நினைப்பது, முனைப்போடு இயங்குவது முடியாத கரும மும் அல்ல.
மேலும்
நிகழ்காலச் சூழலில் தன்னை வருத்தி மாற்றிய மைக்க விரும்பாதவர்கள்தொகைதான் அதிகரித்துக்காணப் படுகின்றது. ஏன் எனில் நடைபெறும் உலக நடப்புக்களை உற்றுநோக்கினால் திருந்தி வாழ மனமாரச் சித்தம் கொள் வோர் எத்தனை பேர் உளர்?அப்படி நற்சித்தம் கொண்டால் பாவச் செயல்கள் என்றோ அஸ்தமித்துவிடுமன்றோ?
சரி அடுத்துப் பார்ப்போம்,
"நான் நல்லபடி வாழ நல்லறிவு கொடு” என்று இறைவனிடம் உண்மையாக யாசகம் கேட்டோர் எத்தனை வீதம் இருக்கின்றார்கள்?
செய்வதெல்லாம் சரி என்று தம் சித்தத்திற்குக் கட்டளையிட்டுத் தமது தவறான நடத்தையை மாற்றாமல் இருக்கின்றவர்கள் உண்மைநிலைக்கே சம்மதம் தெரிவிக் காதவர்களாவர்.
மனிதனுக்கு அறிவு ஏற ஏற பணிவும் நலிந்து அகந்தை மலிந்து சந்தேகங்களே வலுப்பெற்றுவிடுகின்றது.
எல்லா விடயங்களிலும் நுழைந்து அது சரியா, இது சரியா எனச் சந்தேகப்பட ஆரம்பிக்கின்றான். தன்னைச் சூழ - 25 سه

Page 15
உள்ள உயிர்களையும் சடப்பொருட்களையும்,அனைத்து மனித நகர்வுகளைக்கூடச் சந்தேகம் கொள்ள ஆரம்பிக் கின்றான்.
மனித தேடல்கள், ஆய்வுகள் என்பது"அறிவுநிலை" என்றாலும் கூட இது கூடச் சில பொழுது தேவையுள்ள சந்தேகங்களையும் தோற்றுவித்துவிடுகின்றன.
இது சரி, இது பிழை எனக்கூறிட முடியாத, நிலை க்கு மனித ஆற்றல்கள் வலுவிழந்து விடுவதுமுண்டு. ஆயினும் இதன் பொருட்டு ஏதோ ஒரு தீர்மானம் எடுப்பதும்,
யும் அடைவதுண்டு. எனவே அறிவு கூட எம்மை அறுதி யிட்டுச் செயலாற்ற விடாது எம்மை அல்லாடச் செய்வது ஒன்றும் புதுமையல்ல.
தன்னைச் சில சமயம் நம்புவதும், பிறரைப் பல தடவைகள் நம்புவதே மனிதரின் யதார்த்த நிகழ் வாகிவிட்டது. பிறரை நம்பாமல் இருக்க முடியாது.
எனினும்,
தன்னை இழந்து மற்றவரையே சார்ந்து இயங்கு
தலும் நம்புவதும் எல்லாச்சமயங்களிலும் பொருந்துவதாக அமைந்துவிடாது. உணர்க!
-26

கதறும் இமையும்
பிறர் அறிவில் நம்பிக்கையைச் செறிவாக்கிக்கொள் கின்றான். சார்ந்து வாழ்வது மனிதர்க்கு மட்டுமல்ல. சகல ஜீவராசிகளுக்குமே உள்ள இயல்புதான். ஆனால் இவைகள் தமக்கென சில உரிமைகளை உழைப்புக்களை விட்டுக் கொடுப்பதில்லை.
இயன்றவரை அவை தாமே முயன்று இரைதேடும். பறவைகள் கூடுகள் அமைக்கும். பாதுகாப்பான புகலிடம் தேடும். ஆயினும் இவைகூடத் தம் இனத்தைச் சார்ந்தே வாழும். ஒன்றாக வாழுவது வேறு. ஒன்றுக்கொன்று அடிமைப்பட்டுச் சீவிப்பது வேறு. மனிதர்களைவிட, மிக நுண்ணிய ஜீவராசிகள் தமது ஆற்றல்களை முழுமை யாகவே வெளிப்படுத்துகின்றன.
இதனாலேயே இவைகளின் சிருஷ்டிபற்றி நாம் வியந்து நோக்குகின்றோம். சின்னச்சிலந்திக்கும், தும்பிக் கும், தத்து வெட்டிக்கும் பறவைகளுக்கும் உள்ள சிறு அமைப்பை வைத்து நாம் அவைகளை மதிப்பீடு செய்ய முடியுமா?
இப்படி இருக்கையில் முழு மனிதன் தன் தேகபலத் தாலும் அறிவின் ஆக்கிரமிப்பாலும் பூரணத்துவமாக வாழ முனையாமல் இருக்கலாமா? சிந்தனைகளைத் தூய்மை யுடன் முன்நிறுத்தி இயங்க முனைந்தால் பூரணத்துவத்தை நோக்கிய பயணம் இலகு ஆக்கப்படுமல்லவா?
- 27

Page 16
கருத்தில்.ஐ.ஆவிறதழர்
இன்றைய உலகில் தனிமனித ஆளுமைகள் கூட
பலரை அவர்பக்கம் ஈர்க்க வைக்கின்றன. அரசியல் தலைவர் கள், மதத்தலைவர்கள் இத்தகைய ஆளுமைகளைப் பெற்று விடுகின்றனர்.இவர்கள் தமக்கென சிந்தனைகளை, சித்தாந் தங்களை மக்கள் முன் நிறுத்துகின்றனர். மக்களுக்கு ஏற்ற விதத்தில் பேசுகின்றார்கள். வாழ்ந்தும் காட்டுகின்றனர்.
ஆயினும்,
இத்தகையவர்கள் எல்லோருமே பெறுமதிமிக்க சிறப்பாம்சம் கொண்டவர்கள் என்றும் கூறமுடியாது. பல தலைவர்கள் மக்களின் பலவீனம் அறிந்து கொடுக்கும் தீனிகளின் பலாபலன்கள் காலம் கடந்த பின்னர் தான் வெளிச்சத்திற்கு வருகின்றன.
நல்ல ஞானிகளின் சிந்தனைகளில் திரிபுவாதத் திற்கு இடமேயில்லை. அவை என்றுமே சாஸ்வதமான நிலையில் மக்களோடிணைந்துவிடுகின்றன போலியானவர் வெறும் சலசலப்புக்காட்டி திடீர் என முளைக்கின்ற"களை" போன்றவர்கள். சீக்கரமே முளைத்து, அதிசீக்கிரமே களை இழந்து அழிந்துபோய் விடுகின்றனர்.
எனவே,
பாதை காட்டுகின்றேன் என்பவரின் பாதையைப்
புரிந்து கொள்ளும் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள
வேண்டும். கண்களை மூடி கண்ட ஞானமும் பெற்றிடல்
(plgust 35l. -
- 28
s

நாம் பெறும் உலக அனுபவங்கள் இங்கு நடை பயிலும் உயிர்களிடத்தே இருந்து பெறப்படுகின்றன. இன்று நடப்பது என்ன என்கின்ற கருத்து ஏற்கப்படுவதும் பின்னர் அதுவே மறுக்கப்படுவதும், இவையெல்லாமே அறிவின் வெளிப்பாடு. 鬣 鷲
அறிவிற்கு எல்லைக்கோடு போடமுடியாத நிலை யில் நாம் இயங்குகின்றோம். இந்நிலையில் நாம் பூரணத் துவத்தைப்பற்றிச்சிந்திக்க வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டியுள்ளது. Ꭺ
தனது குறைகளை மட்டுமே சதா நினைத்து அதனில் இருந்து மீளாத வாழ்வு எம்மை சூன்யநிலைக்கு உட்படுத்திவிட்டுவிடுமல்லவா? சந்தோஷ சூழலை எம்முள் ஆக்குவது எப்போது?
நல்லவைகளை நோக்கிய பயணத்தை நாம் ஆரம்பித்தேயாக வேண்டும். இதுவே எமது பூரணத்துவத் தைத் தேடும் முயற்சியுமாகும். நாம் இறை நிலைக்கு வர முடியாது எனச் சொல்லி ஒதுங்காது இறைவன் விரும்பும் பணிக்கு எம்மை இட்டுச் செல்வது உவப்பான செயல் அல்லவோ?
வாழும் காலம் சொற்பமானது என்று கூறுகின்
றோம். ஆனால் வாழும் காலத்தில் நாம் செய்யும் பணிகள்
சிறிதே ஆயினும் அதன் வியாபகம் விஸ்தீரணம் எவ்வளவு - 29

Page 17
மருத்தியூர்.அவிைருைந்தர் தெரியுமா? செய்கின்ற பணியின் அளவு பற்றிப் பேசுவதை
விடுத்து, அதன் பொருட்டு ஒருவன் பெற்றிட்டபயன் சிறப்பு ஆயின், அதுதான் உயர்வானது.
செய்கின்ற சிறு கருமங்கள் மூலம் பெரும் பணி யினை ஆற்றும் வல்லமை பெற்றவர்களாவோம். புரிந்து கொள்வோம்!.
மேலும் நாம் நல்லவை இதுதான் என்று அறிந்தும் கூட அதனைச் செயலாக்க முனையாமல் இருப்பது என்பது எமக்கு நாமே செய்கின்ற தடைகள் என அறிவோமாக. எல்லாமே அறிந்து சிறப்புற வாழ நாட்டம் கொண்ட நாம் எமது வாழ்வுப்பாதையினை இயல்பாகவும், சிக்கலின்றியும் அமைத்திட எமது சுவடுகளை ஆழப் பதித்து வைக்கின்ற அடிகளை நீளமாக, சீரான வேகத்துடன் வைப்போமாக!.
அன்போடிணைந்த, நல்ல அறிவை அரவணைத்த
நல் எண்ணங்களே, "சுவடுகள்" எனத்தெளிவோம்.
9 மனத்தாலும், 9 காயத்தாலும், 0 வாக்காலும்,
தூய்மை நெறியினைப் பேணவிழையும் நாம் சகல உயிர்களிடத்து மட்டும் கருணை கொள்வதால் நாம் முழுமை பெற்றுவிடமுடியாது. எம்மை வாழ்விக்கின்ற இயற்
கையை நாம் பாதுகாத்துப் போஷிக்க வேண்டியவர்களா
- 30
 

வோம். இயற்கைக் கொடைகள் இன்றேல். இந்த உயிர்கள் தான் முடங்கி ஒடுங்கி அழிந்துவிடுமே?
நிலம், நீர், காற்று, தீ, வானம் எனும் பஞ்ச பூதங்கள் என்று கூறப்பட்டவைகளை மனிதர் மாசுபடுத்துதல் கொலை செய்யும் மாபாதகச் செயலைவிடக் கொடுமை யானது அல்லவா?
இயற்கையை அழிப்பவன், தன்னை மட்டுமல்ல, தான் சார்ந்த அனைத்தையும் அழிக்க முயல்பவன் ஆகின்றான். இன்று அறியாமை காரணத்தால் மட்டுமல்ல மிக அறிந்தவர்கள் கூட இயற்கைக்கு ஊறு விளைவிப்பதில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மானுடன் வாழ்வது என்பதில் அர்த்தம் என்ன? மானுடத்தை வாழவைக்கும் தோழமைக் கொடைகளான இறைவனின் அற்புதப்படைப் புக்களைப் பேணுதலுமாகும்.
நற்செயல் புரிபவனுக்குக் களைப்பு என்பது விளை யாது. எமது கருமங்களினால் ஏற்படும் நல் விளைவினால் எம்மை அது வியப்பூட்டிக் களிப்பூட்டிச் செயல் வீரனாக்கி விடும்.
இனிமையான பணிகளை உவந்தளிப்பவர்கள் கணப் பொழுதும் யுகம், யுகமாய் வாழ்ந்தவர்களாவர் வாழ்வதில் உள்ள நிறைவுதான் எம்மைப் பூரணத்துவத்தை நோக்கிய விரைவான பயணத்தினை உருவாக்கின்றன.
-31 -

Page 18
பருத்தியூர்.டி.ஆயிரவநாதர்
இறைவனால் விரும்பப்படுகின்ற கருமங்களைச் செய்ய ஆரம்பித்ததுமே எமது உள்ளத்தில் அவருடைய ஆசீர்வாதம் உள்நுழைய ஆரம்பித்துவிடுகின்றது. கடவுள் பக்கம் சார்வது என்பது செய்கின்ற நல்ல சேவையினால் உருவாவதேயன்றி வேறில்லை.
பூரணத்துவம் என்கின்ற முழுமை நிலையினைக் கடவுளிடம் காண்கின்ற நாம், அவர் காட்டுகின்ற பாதையில்
அவர் தடைகளை இட்டு வைப்பதுமில்லை. நல்ல ஒருங்கி
ணைத்த, வைராக்கிய சிந்தனையுடன், இருக்கின்ற பொழுது களை, முழுமையான நிறைவுடன் செய்வோமாக!.
பரிதிக்குப், புதுவெளிச்சம் காட்டத் தேவையில்லை. முழுமதிக்குக் குளுமையை நாம் கொடுக்க வேண்டிய தில்லை. இயல்பாகவே, அன்புருவானவர்கள், கருணை மிகுந்தவர் தருகின்ற ஒளியை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும். ஞானிகள் வரவும், நல்லோர் உறவும், இறை, நற்கொடையாகும். இக் கொடை வழங்கல்கள் நிறுத்தப் படுவதில்லை. பூரணத்துவம் நோக்கிய நல்லோர் பயணங் களும் ஒயப்போவதில்லை.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 04-06-2006
-32 -
 

காதலும் கடமையும்
(காதல் ஒரு மெளனக் கலவரம். காதல், யௌவனம், தினம், தினம் ஒதும் மந்திரம் சீனடி விட்டு மனதைத் தோண்டி வேடிக்கைகாட்டும். மனதுக்குள் மாயச் சக்கரமாய் சதிர் போடும். சில பொழுது கடமைகளை மறைத்தும், தன் றத்தை மட்டுமே நிலைநிறுத்தும் காதல்பிணைப்பினால் உலகம் சிருஷ்டிகப்படுவதாலேயே காதலுக்கு மகோன்னதமான இடம் கிடைக்கின்றது. மக்களைப் பெருக்குவதே மனிதனின் முதல் வேலை என்று சொல்வஒேருயந்திரத்துடன் ஆறறிவு மனிதனை ஒப்பிடுவதற்குச் சமனாகும். கர்டபடி வாழ எண்ணுதலும் கடமையை மறத்தலும் காதலுக்கே ஒவ்ாதது. மாறாத காதல் இனிய வாழ்விற்கு ஆதாரம். தன் நிலை உணர்ந்து வாழாதவன், கடமை மகளை மதிக்காதவன் காதலைக் கோச்சைப்படுத் பவனாவான் காதலால் கடமையை இழத்தலாகாது.ار
காதல் பற்றிக் கதைத்தாலே பாவம் என்று சொல் பவர்களும் காதல் இல்லாமல் அது என்ன வாழ்வு என்று கனவிலும், நளவிலும் பேசும் காதல் விசுவாசிகளும் இது
-33 -

Page 19
பருத்திw.dr).ஆயிர்வகுழர் பற்றிக்கூறும் வியாக்கியானங்கள், புயலாகவும், தென்றலா கவும் இருக்கின்றன.
இருப்பினும் காதல்பற்றிச் சார்பாகவும் அது ஒரு வாழ்வின் சவால், என்று வர்ணிப்பவர்கள் தொகை மட்டும் அருகிப்போவதில்லை. அது என்ன காதல், இது பற்றியே ஏன் பேசப்படல் வேண்டும்? அன்றும், இன்றும் என்றும் காதல் பற்றிப் பேசுபவர்களுக்கு வேறு வேலையே இல்லையோ என்றும் சில தடவை கேட்கத் தோன்றும்.
காதல் ஒரு மெளனக் கலவரம்
காதல், யௌவனம், தினம் கணம் ஒதும் மந்திரம். சீண்டிவிட்டு, மனதைத் தோண்டி வேடிக்கை காட்டும் மனதுக்கள், மாயச் சக்கரமாக, சதுர்போடும். சிலபொழுது கடமைகளை மறைத்தும் தன் நிறத்தை மட்டும் நிறுத்தும்.
இப்படிப்பற்பல விதமான கருத்துக்கள், உருவகிக் கப்பட்டு நெஞ்சத்தைச் சிலபொழுதுகள் ஈரமாக்கியும், சில பொழுது அக்னியை அரவணைப்பது போலவும் செய்து விடுகின்றமையை மறுக்க முடியாது.
காதல் பிணைப்பினால் உலகம் சிருஷ்டிக்கப்படு வதாலேயே காதலுக்கு மகோன்னதமான இடம் கிடைக் கின்றது என்று மட்டும் கூறமுடியாது.
-34
 

அதனும் கடமையும் மக்களைப் பெருக்குவதுதான் மனிதனின் முதல்
வேலை என்று சொல்வதே, ஒரு யந்திரத்துடன் ஆறறிவு
மனிதனை ஒப்பிடுவதற்குச்சமமானது.
துன்பத்திலும், இன்பத்திலும் இணைந்திருக்கச் செய்கின்ற ஆற்றல் அன்பினால் மட்டுமே சாதிக்க முடிகின்றது. ஆண், பெண் உறவிற்குப் பொருத்தமான சொல்லாகவே "காதல்’ என்கின்ற சொல் பயன்படுத்தப் படுகின்றது. மற்றப்படி அன்பு, பாசம், பற்று, உறவு என்கின்ற சொற்பிரயோகங்கள், மனிததொடர்புகளில், பல்வேறு தரங்களுக்கும் ஏற்ப மாறுதலாகச் சொல்லப்படுகின்றது.
தாய், பிள்ளை, சகோதர உறவு பாசம் என்றும், உலக உயிர்களில் தோன்றும் இரக்கம் கருணை என்றும் சொல்லப்பட்டாலும்கூட அன்பு என்கின்ற பதம் எல்லா வற்றிற்கும் ஒருமித்த கருத்துக்களை இணைக்கும் வலுமிக்க பிணைப்பாகியிருக்கின்றது. ஆனால் ‘காதல்’ என்பதனுள் எல்லாமே அடக்கம் கனிவு, பாசம், பரிவு இல்லாத காதல் அது காதல் அல்ல. அன்பு, பாசம், பற்று, உறவு என்கின்ற விடயத்தில் காதலுக்குள் ஒரு தனிப்பட்ட உறவும் ஒளிந் துள்ளது.
காதலுக்குள் காமமும், பற்றுதலும், ஏன் பாசமும்
கூட உறைந்துள்ளது. ஆண்,பெண் உறவு என்பது இயற்கை
தந்த மயக்கம் என்று சொல்லமுடியாது. உண்மைக்
காதலின் முன்பு மாறுபாடான மனோபாவம் உருவாக -35

Page 20
பருத்திழ்.09.ணுயிர்வநாதன் முடியாது. எந்நிலையிலும் உடல் இன்பத்தை மட்டுமே கருதாது, அந்தஸ்து, சாதி, சமய வேறுபாடு களைந்த நிலையில், இயல்பாக ஒன்றிணைதலே காதலர் வாழ்வு என்று போற்றப்படுகின்றது.
சின்னப் பூவிற்குள்ளேயே சிருங்கார நாடகம் நடப்பதை நீங்கள் உணருகின்றீர்களா?
வண்ணப்பறவைகள், வாய் அசைத்துப் பறக்கும் போதே, ஒட்டி உராய்ந்து, மெத்தென்று கொத்தி, மெல்லிய சிறகினால் விசிறுவதைக் கண்டதும், உங்கள் தேகம் சிலிர்ப் பூட்டப்பட வில்லையா?
புலியும், கரடியும், சிங்கமும் கூடக்காதலின் நிமிர்த் தம் கனிவாகப்பார்த்தே இனிமை காட்டவைக்கும் சக்தி அதற்கு உண்டு வெஞ்சமரில் வென்றிடும் வீரர்கள் சுட்டும் விழியழகின் முன்சோர்ந்தே போவதைச் சரித்திரம் கூறும்.
"வேங்கை நான். மங்கை முன் தூங்கும் சிறு துரும் பாயினேன்” என்று சொல்பவர்கள் எத்தனை பேர் உண்டு தெரியுமா? காதல் பலம் மட்டும் கொடுக்கின்றது என்று சொல்பவர்கள் உண்டு. ஏன் எனில், நல்ல வாழ்க்கைத் துணை இல்லாதவற்றை எல்லாமே அள்ளித்தரும் என்றும் கூறுவார்கள். வண்ணமயமான எழிலும் நற்குண இயல்பு டையவளை வாழ்க்கைத்துணையாகத் தேடியவன் அவளை வாழ்நாள் முழுவதுமே காதலித்துக் கொண்டிருக்கின்றான்.
-36 -
 

அதனும் கடமையும் இன்று உள்ள இளைய தலைமுறையினர் ஒரு சிலர் கல்யாண வாழ்வின் முன்பு தான் காதலின் வேகம் பற்றியும், அதன் சுவாரஸ்யம் பற்றியும் மிகையாகப் பேசுகின்றார்கள், காலப்போக்கில் இல்லற தர்மம் மறந்து கடமை துறந்தும்போகின்றனர். காதல் என்பது இளமைக்கே உரியது என்கின்ற கருத்து வாலிபச் செருக்குடையோர் வாதம் என்றுதான் கூற வேண்டும்.
திருமணம் முடிந்தபின் அன்பு நிலை அறுந்து போகுமா? வாழ்வின் தேடல்கள் எல்லாமே நாம் கலைக்கக்கூடாத சொத்துக்களாகக் கொள்ள வேண்டும். வாழ்ந்து பார்ப்போம், வாழ முடியாது விட்டால் வெட்டி அறுத்து விலகிப்போவோம் என்பவர்களின் கருத்து எந்தவகையில் நியாயமாகும்.?
"இதுவரை வாழ்ந்த வாழ்வு இன்பம்மூட்டும் காதலாக இருந்தது. பொழுதுகளை இப்போது துன்பமாகப் போக்குகின்றேன்" என்பவர்கள். தாங்கள் இணைந்திருந்த போது என்ன, என்ன பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்? பேச்சும், உடல் இச்சைகளும் மட்டுமே உருவம் தந்திடுமா?
காதலிக்குமுன் உன்னை நீ ஒரு மனிதனாக நிறுத்து அட்புறம் காதலிப்பதுபற்றியோசி! கண்டதும் காதல், இதுமுன்பிறப்பின்தொடர்பு என்று வீம்பு பேசுபவர்கள் சப்தம் போடாமல் காதலிகளை மாற்றிக்கொள்கின்றார்கள்.
- 37

Page 21
மருத்தியூர்.00:அறிவதன்
வீட்டிற்கு இவள், வாழ்விற்கு அவள் என ஒன்றுக்கு மேல் தேடுபவர்கள்கூட அன்பு பற்றி அரை மணித்தியாலம் பேசுவார்கள். அந்தஸ்து பற்றி முன்னரே பேசாது திடீர் ஞானம் பெற்று காதலைப்பாதியில் நிறுத்தும் கோமாளிகள் எத்தனை பேர்?
காசு இல்லாத காலத்தில் ஊர்ப்பையன் மீது ஆசை வைத்து கல்லூரி சென்றதும் மெல்லன மனசுமாறி மேல் தட்டு வாலிபனிடம் மேதினியில் பெரிய காதல் பூத்ததாக பேசினால் காதல் இவர்களைப் பார்த்துக்கண்ணிர்மல்காதா?
ஹே. காதலே...!
உன்னைப்பற்றி எல்லோருமே எதுவுமே பேசலாம். நீ எதுவுமே பேசாமல் மெளனமாக உன் யௌவனத் திரை
யூடாக எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கின்றாய். மன்மதன்
இயல்புமாறாத இதயங்களுக்கு மட்டுமே உன்னைப் புகுத்துகின்றான். காதல் தெய்வம் கயவர்களுக்கானதல்ல!
கண்டபடி காதல் கொள்பவர்களை துரத்தியடிப்பது மன்மத பாணம் அல்ல அவர்களின் உள் எழுந்து வரும் நச்சு வெடி என்பதே உண்மையாகும். கள்ளமில்லா என் உள்ளத்தை அசைக்கின்றான் இக்கள்வன் என் செய்வேன் தோழி என்பது காதலியின் ரசம் மிக்க பேச்சுகள். உண்மை உள்ளத்தினூடாக இயல்பான தூயகாதலால் மட்டுமே இசைக்கப்படும் வார்த்தைகளாக அவை இருக்க வேண்டும்.
- 38
 

காதலும் கடமையும் கண்டபடி வாழ ஆசைப்பட தம் இளமை வேகம்
என்று அதன் மீது பழி போடுதல் காதலுக்குச்செய்யும் பச்சைத்துரோகம் எனக்கொள்க. தூயகாதல் என்பது கூட நல்ல மனவளம் மிக்கவனுக்கே உரியதாகும். இதனாலேயே இத்தகையவர்கள் எத்தகைய வேறுபாடுகள், அந்தஸ்து, ஆதிக்கத்தை மீறி அன்புமீதூர வாழ்ந்து காட்ட முயல்கின் றார்கள். கனிவான காதலின்முன் வன்மம், வக்கிரம், ஆவேசம் வன்முறை, இழிசொற்கள் இல்லை.
எனினும் மாறாக் காதலின் பொருட்டான போராட் டம் நீதி கோருவதன் மீதான செயல் என்றே அறிக.
இன்று காதலின் பொருட்டுக் காட்டப்படும், வன் முறைகள், போராட்டங்கள் பற்றியே சுவாரஸ்யப் பொழுது போக்குத்திரைப்படங்கள் வந்து குவிந்துவிட்டன. காதலர் சேர்க்கைக்காக இத்துணைப்போராட்டமா? எத்தனை இழிவு இது.? இந்த கேட்பாரற்ற வன்முறைகள், கேளிக்கை போலவே உருமாறி வருவது எவ்வளவு விந்தையானது? காதல் விருப்பப்படும் இணைப்பாகவும், விரும்பாத இருட் டாகவும் காலம் காலமாகவே கோலம் காட்டுவதாக முன் னையசரித்திரங்களும் தற்கால நிகழ்வாகவும் காட்டினாலும் இதுபற்றி உலகம் இதுதான் முடிவு என்று ஒரே திசையில் சென்றது கிடையாது. ... ."
காதலில் ஜெயிப்பதும் தோற்பதும் சராசரி நிகழ்வு ஆகிவிட்டது. இதனால் வாழ்கையில் இழப்புக்களும், - 39

Page 22
கருத்திஆர்.04.ைஅபிந்தைக் மகிழ்வுகளும் காதலின் மேன்மையை எடுத்தியம்புகின்றதே ஒழிய இதன் இதம் தரும் திண்மையை குறைவாக மதிப் பிடப்பட்டதே கிடையாது.
இத்தகைய சிறப்பியல்புகள் பொருந்திய ஆண், பெண் இல்லறத்திற்கே தூய்மை சேர்க்கின்ற காதல் பல துன்பியல் நிகழ்வுகளாலும் காவியமாகிப்போனதால் "காதல் சாகாவரமாகி ஜீவித்துக் கொண்டிருக்கின்றது.
காதலின் பொருட்டுக் கடமையை மறந்து வாழுகின் றவர்கள் பற்றிசொல்லித்தீர்க்க முடியாது. காதலின் பொருட் டுக் கடமையை மறத்தல், துறத்தல், காதலைக் கொச்சைப் படுத்துவதாகும். இவர்கள் பேசுகின்ற பேச்சுக்களில் பரிதாபம் கலந்த உண்மைகள் இருந்தாலும் கூட, தம் முன்னேயுள்ள எதிர்காலம்பற்றி உணராது புதிரோடு கரைந்து புதைந்தே போகின்றார்கள்.
காதலுக்காக வாழ்ந்தவர்கள் கதைகளையும் கவிஞர் கள் பேசியதையும் உதாரணம் காட்டிப்பேசினால் வாழ்வின் நுனியை எப்படி எட்டிப்பிடிக்க முடியும். தோல்விகளால் மனமுடைவதும் அதன் பொருட்டு எதிர்கால கடமையை மறந்து உடலை உள்ளத்தை வருத்துவதும் பழிதீர்க்கும் எண்ணங்களை வளர்ப்பதிலும் என்ன ஆரோக்கியம் வந்து விடப்போகின்றது?
- 40
 

"நீ. என்ன அறிவுரை கூறுகின்றாயா. நீ. காதலித்தது. உண்டா. அதன் ஆழம் கண்டதுண்டா." என்று பேசி மடக்கும் சிலர் மற்றவனிலும் பார்க்கத்தான் காதல் கொண்டதால் தமக்குரிய அந்தஸ்து உயர்ந்து கொண்டதாகவும் கருதி கண்டவாறு பேசிக் கொள்வார்கள்.
இன்று பெரும்பாலான இளையவர்கள் தமது வட்டத்திற்குள் ஒரு கதாநாயகனாக அல்லது கதாநாயகி அந்தஸ்தினைத்தேட ஒரு கருவியாக ஒருவனை அல்லது ஒருத்தியைத் தேட முனைகின்றார்கள்.
ஆனால் இத்தகையவர்கள் காதலின் நுட்பமான இதமான தூய்மையினை அறிந்து கொண்டவர்களும் அல்லர். தமது புது நண்பர்களின் நடத்தை நெறிகளை அறிந்தவர்களும் அல்லர். ஆனால் இந்த நடவடிக்கைகளால் நடப்பதுஎன்ன? வாலிபத்தில் கீறல்கள் ஆழமாகப்பதிவதை உணராமல் தப்பானவழிகளில் இஷ்டமாகவே போய் விடுகின்றனர்.
குடும்பம், சமூகம் என்கின்ற பொறுப்புக்கள் அறிந்து காதல் வருவதில்லை உண்மை தான். கண் எதிரே கடமைகள் காத்திருக்கின்றன. இவர்கள்நோக்குவதுமில்லை. அறிவுக்கு இடம்தராத மனோ நிலையில் கண்டதும் காதல் என்கின்ற உத்வேகத்தில் திரையில் பார்ப்பதை, மனத்திரையில் ஆழப்பதித்து புரியாத காதலில் அமிழ்ந்து
அல்லல்படுகின்றனர். . . . . . ,
- 41 -

Page 23
பருத்திபூர்.00:ரஷரர்
காதல் என்ன பொழுதுபோக்கா? வெற்றி பெற்றால் மகிழ்வதற்கும், தோற்றுப்போனால் மனம் இற்றுத் தாடி வளர்ப்பதற்கும் தான் வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளதா?
யார் யாரோ நண்பர்களின் சீண்டுதலினாலும் சுவாரஸ்யமான பொழுதுபோக்கிற்காகவும், விளையாட்டாக ஆரம்பித்து மனதோடு விளையாடும் இத்தகைய செயல்கள் முடிவில் வாழ்வின் நோக்கம் மறந்து அதனைத் துறந்து தறி கெட்டலையும் நிலைக்கு ஆளாகத்தான் வேண்டுமா? பல விடயங்களின் ஆழமோ அதன் பலாபலன்களோ தெரியாமல்தான் பல தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன. மனிதர்களின் பராயங்களுக்கேற்ப கடமைகளும் வகுக்கப் பட்டு விட்டன. காலத்தின் மாற்றங்களுக்குள் பற்பல சம்பவங்கள் இடையூறுகளாக ஊடுருவதும் ஒன்றும் புதுமையுமல்ல.
ஆனால் உலக நியதிகளுக்கும் கடமைகளுக்கும் உட்பட்டு நாம் எம்மை வசப்படுத்திவைத்தேயாக வேண்டும். மனதின் கிளர்வுகளை நாம் அறிந்தவர்களாவோம். அதுபோகும்பாதைகளை கட்டுப்படுத்துகின்ற வல்லமையை நாம் உள்ளத்தினுள் நிறுத்தி வைப்போமாக,
குடும்பம் எமக்குச் செய்ததியாகங்களை மட்டுமல்ல, இந்தச் சமூகமும் உலகமும் கூட ஒரு நல்ல பிரஜையை உருவாக்க எத்தனை எத்தனையோ மறைமுக உதவிகளைச் - 42 -
 
 
 
 
 
 
 
 
 
 

அதனும் இடமையும் செய்கின்றன தெரியுமா? கல்விக் கூடங்கள்ை, சமூக நல
நிறுவனங்களை மக்கள் பொருட்டு அரசும், பொது அமைப்புக்களும் உருவாக்குகின்றன. அதன் சேவைகளில் இருந்து ஒவ்வொரு தனிமனிதனும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளாமலா வாழுகின்றான்?
எனவே சமூகத்தை, உலகை, குடும்பத்தை உதை த்து எந்தத் தனிமனிதனும் தன்னை வருத்துதல் அல்லது வதைத்தல் எந்த வகையிலும் நியாயம் இல்லவேயில்லை. "எனக்குரியகாதல்பவித்திரமானது உண்மையானது, இனிமை யானது அதனைப் பாதுகாப்பது எனது கடன். என்னைச் சார்ந்தவர்களையும் நான் போஷிக்கக் கடமைப்பட்டவன்" இப்படி ஒருவன் கூறியபடி தன் முன்னேயுள்ள நீண்ட பாதையையும் ஒருதடவை பார்வையிடவேண்டும்.
வயதிற்கும், வளர்ச்சிக்கும், வருமானத்திற்கும், ஒவ்வாத எந்தச் செயலும் அனுமதிக்கப்படுவதில்லை.
பொருந்தாத விஷயங்களை எடுத்துச் சொல்லும் போதும் சிலருக்கு வருத்தம் ஏற்படுகின்றன. என்றாலும். வருத்தம் தரும் சொற்கள்கூட வாழ்க்கைக்குப் பொருத்த மாகப்பட்டால் ஏற்கவேண்டியது இளையவர்களின் கடனே யாகும். மனைவி மக்கள் இருக்கும்போதே"என்னை ஒருத்தி விரும்புகின்றாள். இதுவும் ஒரு காதல் தான் மிகையான அன்புதான். எங்கள் காதலுக்குத் தடைபோட வேண்டாம்”
- 43

Page 24
பருத்திழ்.09. வடுவரர் என்று ஒருவன் கூறினால், இது நகைப்புக்கு இடமான செயல் அல்லவா?
இளவயதினர்கள் சிலர் படிக்கும் காலத்தில் தமது இளமை வேகத்தின் செயல்பாடுகளுக்குநியாயம் கற்பிக்கின் றார்கள். இளவயது வேகம் என்பது தவறு இழைப்பதற்கு தரப்பட்டுள்ள உரிமையல்ல. இவைகளை சமூகமும், சட்ட மும் மன்னிப்பதும் இல்லை. சமூக பாதிப்புக்களை சமூக அங்கத்தினர்கள் பார்த்து ரசிப்பதும் இல்லை.
வாலிப வயதினர்களின் செயல்கள் மற்றவர்கள் ரசிப்பதாக அமையவேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயல்களும் சமூக மேம்பாட்டினை அடியொற்றி அமைந் தால் எத்துணை சிறப்பாக இருக்கும் தெரியுமா? வெட்கப் படவைக்கவும், வேதனைப்பட வைக்கவும், வாழ்க்கையை அமைத்தால் இறுதியில், துக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் தானே?
ஒன்றினை எதிர்பார்த்தே ஒன்று உருவாகின்றது. உருவம் சமைக்கப்படுமுன்னே அவை அழிக்கப்படக் கூடாது. வாழ்க்கை வரைபடம் துல்லியமாக வரையப்படல் வேண்டும். கேட்பாரற்ற வரன் முறையற்ற சீவியம் நட்ட மரத்திற்கு வெந்நீரைக் கொட்டுவதுபோலாகிவிடும். நல்ல வாழ்வை ஈந்த உலகை நாமாக, வலிந்து வேதனைப்படுத்து தல், மதியைக் கரைக்கும் செயல். சுதந்திர உணர்வு என்று கூறி எதிர்காலத்தைச் சிறை செய்யக்கூடாது. பிரச்சினை
- 44

களுக்குள் வலிந்து நுழைவதுகூடச்சிறைவாழ்வுதான்.பிறர் நலம் நோகா வாழ்வே சுதந்திர வாழ்வின் சந்தோஷ வரவு ஆகும்.
காதல் சுதந்திரமானது, தூய்மையானது, கறை அற்ற காந்த சக்தி கொண்டது. இதன் புனிதத்தன்மையினை உணர்ந்து அதன் தன்மைகெடாது நோக்கல் வேண்டும். காதல் எல்லா ஜீவன்களுக்கும் உரிய பொதுமைக்கொடை காதலை வழங்குதலையும் பெறுதலையும், தூய்மையுடன் நோக்கல் வேண்டும்.
கடமை மறந்த செயற்பாடுகள் "காதல்" என்ற புனிதத்திற்கே அவப்பெயர் கொடுக்க வல்லது. எமது வாழ்வினைப் பூரணப்படுத்தல் என்பது சகலதுறை சவால் களையும் சந்தித்து வெல்லுதல் என்பதேயாகும். எனவே காதலின் பொருட்டு மரணத்தை தழுவுதலும், வாழவிரும் பாது அடம் பிடித்தலும், காதலை அபகீர்த்திக்குள்ளாக்கும் செயலன்றி வேறென்ன? காதல் நிறைவேறாது போயின் செத்துப்போ என்று எந்தச்சாஸ்திரம் முத்திரையிட்டு சொல் லுகின்றது? தன்னம்பிக்கையற்ற சோம்பேறித் தனமான மிலேச்சத்தனமான செய்கையினால், காதலில் தோல்வி என்று கூறித்தன்னையும் தன்னைச்சுற்றியுள்ள சூழலையும் கொடுமைப்படுத்துகின்றான். எங்கள் சோகங்களால் பிறர் வாழ்வில் பங்கம் ஏற்படலாமா?
கணப்பொழுதின் முடிவினால் தினம், தினம் காதலால் சாவைத்தழுவும் காதலர்கள் பற்றிய கதைகள் = 45--

Page 25
பருத்திபூர்:அபிந்தைத்
நீண்டுவிடக்கூடாது. இந்தக்கதைகளைச் சுவாரஸ்யமாகப் படித்தும் கேட்டும் வருபவர்கள், அழுதுகொண்டே காதலை ஆராதிப்பதுடன் மனதையும் அவஸ்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். காதலித்தே கல்யாணம் செய்ய வேண்டும் என்பதில்லை.
திருமணம் முடிந்த பின்னரும் கணவனும், மனைவி யும் காதலித்துக் கொண்டே இருக்க முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
நிஜவாழ்வில் சொந்தவாழ்வில் காதலுக்கு ஆதரவு கொடுத்து வாழ்த்துபவர்கள் எத்தனைபேர்? இந்தச் சமாச்சாரம் இதயத்தை நெருடும் விஷயமாக இருக்கி ன்றதே ஒழிய காதலைப் புனிதப்படுத்தும் செயலாக அமைக்கப்படுவதுமில்லை.
காதலை ரசிப்பதும் பின்னர் அதனைத் தூற்றுவதே பொழுது போக்காக அமைந்து விடுவது வேதனை. அதைவிடக்காதலித்து பின்பு ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது கொடுமையோ கொடுமை!
கருமங்கள் கடமைகளின் புனிதம் என்பது அதனைப் பயன்படுத்தும் விதத்தில்தான் அமைந்துள்ளது. 35L60). O. களைப் பூரணமாகச் செய்பவன் தனக்குள்ள பணிகளில் எதற்கு, எதற்கு முன்னிலை வழங்க வேண்டும் என்பதையும்
தெரிந்து கொள்ள வேண்டியவனாகின்றான்.
- 46
 
 

கனுர் கடமையும் இந்தவகையில் காதலை மதிப்போம், கடமை களைத் துதிப்போம். இரண்டையும் தரப்படுத்தி வாழக் கற்றுக்கொள்வோமாக! ,
எல்லாமே பொருந்தி, இணைந்து வந்தால் அதனை விட நிம்மதி வேறில்லை. எனினும் நாமாக சிருஷ்டிக்கும் ஆற்றலை கடமையுணர்வை மையப்படுத்தி உருவாக்க வேண்டும். இத்தகைய சலனமின்றி எடுக்கும் முயற்சிகள் தாமாகவே எம்மை நல்ல வழியில் இட்டுச்செல்ல வைக்கும். காதலும் எமது கடமையும் இயைபுபட்டு இயங்கின் எவ்வித மோதலும் இன்றி வாழ்வு இயைபட்டு பாதையும் சீராகச் செல்லும்,
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 07-05-2006
- 47

Page 26
பருத்தியூர்.அல. ஆயிற்றுதாரர்
தர்மம்
தர்மம் குன்றினால் அவனி உஷ்ணம் ஏறிப்பஸ்பமாகிவிடும். இறைவன் தர்ம வழியில் வாழுங்கள் எனக் கட்டளையிட்டுள்ளார். வசதிகள் வாய்ப்புக்களைப் பெறக் கண்டபடி வாழ வேண்டிய அவசியமேயில்லை. எதை, எவர்களுக்கு, எப்படி? எந்த நேரத்தில் வழங்கவேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும். நல்லனவற்றையும் நல்லோரையும் நாடுவதை விடுத்துப் பொல்லாத புல்லர்களிடம் சரணடைவதே மேல் என எண்ணுதல் அறத்திற்கு முரணானது. கேட்டு தர்மம் செய்யாது வலிந்து வழங்குதலே சிறப்பு. தர்மத்தை நிலை நாட்ட ஏற்படும் சோதனைகள் இறுதியில் வெல்லப்படும் உறுதி!
தர்மம் என்பது “ஈகை” என்பதுடன் "நீதி" என்றும் சொல்லப்படுகின்ற அற்புதமான நல்ல சொல்லாகும். பண்பு, தர்மம் குன்றிப்போனால் அவனி உஷ்ணம் ஏறிப்
பஸ்பமாகும் என்று நம் முன்னோர்கள் கூறிச்சென்றார்கள். மனித உயிர்களும் பிற உயிர்கள் அனைத்துமே வாழ்ந்து - 48
 
 
 
 
 
 
 
 
 

செழிக்கவேண்டிய அழியாச் சொத்துக்கள். ஒரு உயிர் போயிடினும் இயற்கை அதே வடிவில் பல வடிவங்களை எமக்கு ஆக்கித்தந்து கொண்டேயிருக்கின்றது.
இறைவன் தர்மம் குன்றினால் அழிவு வரும் என உணர்த்தி நின்றாலும். அவன் அரவணைப்பினால் எல்லாமே வற்றிப்போக அனுமதிக்கப் போவதுமில்லை. ஒன்று அழிய இன்னும் ஒன்று அவன் பெயர் சொல்லி கருவாகி உருவாகி பூமியில் புரண்டு எழுகின்றது. எதை எவர்களுக்கு, எப்படி எந்த நேரத்தில் வழங்க வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும்.
தர்ம வழி வாழ்ந்தவர்கள் தமது அனுபவங்கள் அதன் வெற்றிகள்பற்றிச் சொன்னாலும்கூடச் சுலபமான எந்த வழியிலாவது புகுந்துகொள்ள சிலரது மனம் நாட்டமடை வது கேட்டைத்தரும். நெறிபிறழ்ந்து வாழ்வது அறத்திற்குச் சவால்விடுத்துமுடிவில் கவிழ்வதற்கேயாம்.
மனிதர்கள் ஏதோ ஒரு வழியில் பெரும் பேறுகள் பலவற்றை இயற்கையாகவே பெற்றுவருவதை ஏன் தான் மறந்துபோகின்றார்களோ தெரியவில்லை. கிடைக்காததை மட்டும் நினைந்து புலம்பும் நாம் கிடைத்தவைகளைப்பற்றிப் பெருமைப்படுவது அரிதான இயல்பாகிவிட்டது.
* நல்ல பெற்றோர் வாய்த்தமையை, * பெறுதற்கரியநல் ஆசான்கள் வாய்த்தமை பற்றி,
- 49

Page 27
பருத்தியூர்.அல.ணுயிர்ஷன் * நல்ல மனைவி, மக்கள், நண்பர்கள், உறவுகள், எல்
லாமே கிடைத்தமை பற்றி,
இப்படி எல்லாமே சிலருக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆனால் வீதியில் ஒருசிறுமுள் குத்திவிட்டாலோ இறைவன் ஏன் இந்த வேதனையைத் தந்தான் எனக் கடவுளைத்திட்டு கின்றவர்களை நீங்கள் காண்பதில்லையா? நன்றி மறப்பது தர்மம் இல்லை என எப்போது இத்தகையவர்கள் உணரப் போகின்றார்கள்? -
ஒருவர் தர்மவழியில் வாழ்கின்றார்களா என அறிந்து கொள்ளும் சோதனைக் கருவியாகத் துன்பம் அவனைச் சூழ்ந்து கொள்கின்றது. இந்த வேளையில்கூட மனம் சிதை யாமல், பண்பு குன்றாமல், எப்படி வாழ்கின்றான் என்பதை கடவுள் மட்டுமல்ல, இந்த உலகமும் தன் விழிகளை அகலத்திறந்து நோக்குகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
உண்மைக்காக வாழ்ந்து அனைத்தையும் வழங்கிய அரிச்சந்திரன் கதையும், புறாவிற்காகத் தன் தசையை ஈந்த சிபிச்சக்கரவர்த்தி போன்ற வள்ளல்கள், நீதி வழுவாத மாந்தர்கள், வாழ்ந்த புண்ணிய பூமி இது. எதுவும் கதைதான் என நோக்காது அதிலிருந்து தர்மம் நீதிகளின்
* உண்மைகளை நோக்குதலே சிறப்பு. * உண்மைக்காக வாழ்வது தர்மம்
-50 -
 
 
 
 

காதலும் கடமையும் * பிறர் துன்பம்களைதல் தர்மம் * எவர்க்கும் கல்வியை ஊட்டுதல் தர்மம்
எல்லாவற்றிற்கும் மேலாக பாகுபாடற்ற அன்பினை எவ்வுயிர்க்கும் வழங்குதல் மேலான தர்மசிந்தையுமாகும். "ஆதரவற்றோர்க்கு ஆதரவுகொடு” என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. ஆயினும் மதப்பூசல்களால், மொழிபேதங்களால், சாதியால், வர்க்க வேறுபாடுகளால், தர்மம் வெட்கப்படுமளவிற்குக் காரியங்கள் மிக கேவல மாகக் கணிக்குமளவிற்கு ஒவ்வொரு வினாடியிலும் உலகில் அரங்கேற்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
சூழ்ந்துள்ள சமூகத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்சி யினால் பொறாமையினால், அண்மையில் ஒருவன் துப்பாக் கியுடன் புகுந்து வெறித்தனமாக அநேகரைச் சுட்டுத்தீர்த்த கொடும் சம்பவத்தினை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அமெரிக்காவில் நடந்த இந்தச் சோக சம்பவத்தின் பின்னணியில் பெரும் உண்மை புதைந்திருக்கின்றது. வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளால் வந்த உளவியல் தாக்கம் மனிதனை மிருகங்களைவிடக் கொடுரமான நிலைக்கு ஆளாக்கிவிடுகின்றன.
இன்று பலர் எம்மத்தியில் இருந்து சொல்லும் ஒரு கருத்து இது "என்னில் எவர்க்கும் அன்பு இல்லை. இந்த உலகில் இரக்கம், கருணை, நீதி, தர்மம் செத்தேவிட்டது” என்கின்றார்கள். "எவரையும் கருணையுடன் நோக்காத -51 -

Page 28
பருத்தியூர்.அ0.அறிவதன்
உலகில் வாழ்ந்துதான் என்ன” என்றும் கேட்கின்றார்கள். எனினும் சிலரது போக்கு விசித்திரமானதும், மகா தவறா னதும் என உணர்கின்றார்கள் இல்லை. தர்மம் எங்கும்
இல்லை என்பதற்காகத் தம்மை வருத்துதலும் பூமியை எட்டி உதைக்க முற்படுவதும் என்ன நியாயம் ஐயா?
கொடுத்தால் தான் கிடைக்கும் என்று ஞானிகள் சொன்னாலும் எடுத்தால் தான் கிட்டும் என்கின்ற புதிய குதர்க்க சிந்தனைகள் கோமாளித்தனமானது. அநியா யத்திற்கு எதிராகப் போராடிப் பயனை அடைவது என்பது ஒருவரிடம் இருந்து மிலேச்சத்தனமாக கவர்வது என்று பொருள்படாது.
ஆனால் இன்று தர்மம் என்பது எதுவெனப் புரியாது பிறர் கதறக்கதற அவர்கள் ஏங்க அவர்கள் உடமைகளை, உணர்வுகளைச் சிதைக்கின்ற கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பதானது தர்ம தேவதைகளுக்கே விடுக் கின்ற அச்சுறுத்தலாகிவிட்டது. அந்தோ! சிலர் மற்றவர்க்கு உதவுவதுபோல் நடிப்பார்கள். முகமனுக்கு LDL (6 Lib வேண்டப்பட்டவர்களுக்காக மட்டும் ஏதாவது செய்வார்கள். ஆயினும் தங்களுக்குத் துன்பம் என்று வந்தவுடன் அழுது அரற்றி யார் காலிலாவது விழுவார்கள். அந்த நேரத்தில் யாரிடம் முகமனுக்காகப் பல்லைக்காட்டி விழுந்து விழுந்து உபசாரம் செய்தார்களோ அவர்களாலேயே புறக்கணிக்கப் பட்டு ஈற்றில் எளிய மனிதர்களாலேயே காப்பாற்றப்படுவதும் சகஜமான நிகழ்ச்சிகளேயாகும்.
- 52
 
 

காதலுக் கடமையும்
இன்று நல்லவர்களை நாடுவதை விடப்பொல்லாத
புல்லர்களிடம் சரணடைவதே சாலவும் சிறந்த தர்மம் என எண்ணத் தலைப்பட்டுவிட்டமை வேதனை
நல்ல புத்திமதிகளைவிட அராஜகக் கருத்துக்களைச் சர்வ சாதாரணமாக ஏற்பது கெளரவம் என்றும் நினைப்ப வர்கள். ஈற்றில் சமூக நோஞ்சன்களாகி இயங்க முடியாத இயந்திரம் போல் சித்தம் சிதைந்து நொந்து அழிந்து போகின்றார்கள். தெரிந்தவர்களுக்கு மட்டும் தர்மம் செய்வேன் என்று அடம் பிடிப்பவர்கள், தமக்குத் தெரியாத தமக்கு வேண்டாத நபர்களுக்குத் துன்பங்களையாவது செய்யாது நிற்கட்டும்!
தர்மம், நியாயம் எனச்சிலர் அழகாகப் பேசிக்கொள் வார்கள். இவர்களது செய்கை பேச்சுக்களில் ஏதோ ஒன்றைக்கருத்தில் கொண்டு சுயநலநோக்கோடு நடித்துக் கொண்டிருப்பார்கள்.
ஒருவனை ஏமாற்றும் பொருட்டுச் செய்யப்படும் காரியங்களால் அவர்கள் யாரையெல்லாம் ஏமாற்றுகின் றார்கள் என உணர்வதேயில்லை.உண்மையில் பொய் மையை விதைத்தவர்கள், அந்த பொய்மையினாலேயே சீரழிந்துபோகின்றார்கள்.
சூது, வாது, பொய்யுரைத்தல், ஏமாற்றுதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆத்மாவின் துயர்தோய்ந்த எண்ண வெளிப்பாடுகளால் தீமைகளைப் புரிந்தோர் நிம்மதியாக =53 -

Page 29
மருத்தியூர்.00:உயிர்வரர் வாழ்ந்துவிட முடியுமா? தமக்குப் பிரீதியானவைகளைப்
பெற்றுக்கொள்ளத் தர்மவான் வேடம் போடுபவர்கள், பலர் முன்னிலையில் கேலிக்குரிய நபர்களாக தனிமைப்பட்டு வாழும் போக்கற்ற சீவன்களாகி விடுவதை ஈற்றில் உணர்ந் தேதீருவர்.
பாதையொன்றில் ஒரு வாகனம் சென்று கொண்டிருக் கின்றது. தற்செயலாக ஒருவர் மீது வாகனம் மோதி சிறு காயத்திறகுள்ளாகிவிடுகின்றார். இதுபோன்ற சம்பவங்கள் நகர்புறங்களில் நடப்பதுண்டு. உடனே திமு திமுவென ஒரு கூட்டம் கூடிவிடும். பாதிக்கப்பட்ட அப்பாவி பேசாமல் இருப்பார். விபத்தினை உண்டு பண்ணிய சாரதி திரு திரு என விழித்துக்கொண்டிருப்பார். எங்கோ இருந்து வந்த ஒரு கும்பல்சாரதியை மிரட்டுவதுடன் தர்ம நியாயங்களைப் பேச ஆரம்பிப்பார்கள்.
"இதோ விபத்தில் காயமடைந்தவர் ஏழை. அவரை
நீங்கள் உங்கள் பாட்டிற்கு வாகனத்தினால் மோதிக்
காயப்படுத்திவிட்டீர்கள். அவருக்கு நீங்கள் என்ன
செய்யப்போகின்றீர்கள். அவர்கள் குடும்பத்தின் நிலை
என்ன? கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி இந்தக் காரியத்தைச் செய்துவிட்டீர்களே. எனவே இவருக்கு நட்ட ஈட்டாக ஒரு தொகை தாருங்கள். இதுதான் தர்மம்" என்று கூறவும், சாரதி வேறு வழியின்றி உடன் இருந்ததைக் கொடுக்கவும் மேலும் பெரும் தொகை கேட்டு மிரட்டவும் எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி வெற்று மனிதராக ஆளைவிட்டால்
- 54
 

காதலும் கிமையும் போதும் என்று கேட்டபடி கொடுத்து அவர் தப்பி ஓடியே விடுவார். இத்தனைக்கும் பணத்தை கைப்பற்றிய பேர் வழிகள் தங்கள் பாட்டிற்குப் போய்க்கொண்டேயிருப்பார்கள். ஆனால் காயமடைந்தவர் அப்படியே பரிதாபமாக வீதியில் கைவிடப்பட்ட அநாதை போல் நொந்தே போய்விடுவார்.
பொது இடங்களில் இத்தகைய வலிந்து உதவிசெய்ய வரும் அதர்மவான்களை நாம் பார்ப்பதுண்டு. பிழைப் பதற்கான வழி தர்மம் பற்றிப்பேசுவது அல்ல. பொதுசேவை செய்கின்றேன் எனச் சிலர் வருவார்கள். ஆனால் இறுதியில் சனங்களிடம் விடும் கோரிக்கை கேட்கச் சிரமமாக இருக்கும். “எத்தனை சேவை செய்தேன். உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளிக்கக் கூடாதா” என்பார்கள். நல்லோரை ஆதரிப்பதில் தவறு இல்லை. ஆனால் காரணத் தோடு எந்த விதமான உதவிகளையும் செய்வதற்கு ஏற்ற வராக இவர் இல்லை என அறிந்தும் ஏமாறுவது புத்திசாலித் தனமானது அல்ல.
இன்று வசதியுள்ளோர்க்கு ஒரு நீதி, வசதியற் றோர்க்கு ஒரு நீதியையும் சமூகம் வழங்குகின்றது என்று பலரும் குறைப்பட்டுக் கொள்கின்றார்கள். உரிய நீதி கிடைக்காமல் ஏழை ஒருவன் அழுதால் அவன் குரல் இறைவன் செவிகளுக்குக்கடிதெனக்கிட்டிவிடும். அவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கான பதில் அவனுக்கு இடர் இழைத்தோருக்கு கொடுங்கூற்றுவன் அளிக்கும் தண்ட னைகள் சொல்லொண்ணா கொடுரமாக இருக்கும்.
一55

Page 30
தருத்தியூர்.பல அபிந்தைக்
வஞ்சகத்தை நெஞ்சில் குடியிருத்தி வைத்தோர்க் "தர்மம்" பற்றிப்பேசி அருகதையில்லை. இத்தகையோரி ஆன்மா வலு இழப்பதுடன் வாழ்க்கையே ஏமாற்றுதலுக் குட்பட்ட சூன்ய சாகரமாகிவிடும்.
தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் மனிதர் களில், சிலர் தமக்கு இழப்புக்களே அதிகமாகிவருவதாகவும் கூறுகின்றார்கள். சத்தியத்திற்குச் சோதனை ஏற்படுவது ஒன்றும் புதுமையானதன்று. காந்தியடிகளைப் போன்ற எத்தனை எத்தனையோ பெரும் தலைவர்கள் சத்தியத்தின் சோதனைக்குள் அகப்பட்டுப் புனிதர்களாகப் பரிணமித்த வர்களேயாவர்.
நல்ல காரியங்களுக்காக இழப்புக்களைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு அது இழப்புக்களாகத் தெரிவதில்லை. மானுடநேயம் கொள்தல் என்பது கிடைத்தற்கரிய பெரும்பேறாகும். தர்மத்தை நிலைநாட்ட ஏற்படும் வேதனைகள் இறுதியில் வெல்லப்படும் என்பது உறுதி!
மானுட நேயத்தினை பெறுதலால் எமக்கு ஏற்படும் சந்தோஷங்களால் இதுவரை கொண்ட சிரமங்கள் எல்லாமே உருஅழிந்துபோய்விடும். ஒரு பயனை நாங்கள் சுலபமாக அடைந்திடுதல் என்பது எல்லா நேரங்களிலும் மிக இயல்பாக வந்துவிட முடியாது. உடல் உழைப்பு, பொருள் விரயம் என்பதற்கு மேலாக தர்மத்திற்காக நான்
- 56

எதனையுமே தாங்கிக்கொள்வேன் என்கின்ற ஆத்மார்த்த திடசிந்தனை என்பது சாமான்ய விஷய மன்று.
தர்மத்தைக் காத்துச் செயல்படுவதை விட வேறு எந்த வீரமும் ஈடாகி விடமுடியாது. பாதிப்படைந்த ஒருவனின் சுமைகளை ஏற்றுக்கொள்வதை விட வேறு என்ன தைரியம் இருக்கப் போகின்றது சொல்லுங்கள்? எமக்காக நாம் போரிடுவதைவிட நாம் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக, நாட்டிற்காக, ஏன் உலகிற்காகப் போராடுதலே தர்மத்தின் வேண்டுதலுமாகும். புரிந்துகொள்வோம்!
அன்பினைக் கொண்டு வாழ்ந்தால்தான் தர்மத்தின் பூரணத்துவமான இயல்பினைப்புரிந்து கொள்வோம். அன்பினை வெளிப்படுத்தாமல் அதனைத்தெரிந்து கொள் ளாதுவிடின் நல்ல நீதியான உணர்வுகளை எப்படிப்பகிர்ந்து கொள்ள முடியும்?
நல்லபடி ஒருவரை வாழ்த்துதல் ஒருவரது சேவை களைக் கெளரவித்தல் நாம் செய்கின்ற உதவிகள் எதுவா யினும் அதனை உடன் நிறைவேற்றுதல் போன்றவைகள் எங்கள் மனதினை விசாலப்படுத்தும் நன்மார்க்கங்களு மாகும்.
எவர் மூலமும்பெற்ற சின்னசின்ன உதவிகளைக்கூட
நினைவு கூர்வதும் அதனை மதிப்பதும் மானுட தர்ம
மாகும். சீரான நேரியபார்வை, அஞ்சாமை, அழுக்காறு س- 57

Page 31
மருத்தியூர்.00:அறிவதன் இன்மை, போன்ற குணாம்சங்களே நீதியான எண்ணக்
கருவை எம்முள் நிலையாக நிறுத்திவைக்க உதவுகின்றன. பஞ்சமும் பட்டினியும் அநாவசிய துர்மரணங்களும் நடக்கும் இந்த உலகில் பராமுகமாகவும் "எனக்கு என்ன வந்து விட்டது அவையெல்லாம் யார் யாருக்கோ” எனவும் எண்ணுவது என்ன கொடுமையான சிந்தனை தெரியுமா?
எல்லோராலும் எந்த உதவிகளும் செய்திடல் முடியும். பாதையில் கிடக்கும் சிறு முட்களைக் குனிந்து எடுத்து குப்பையில் போட்டு அகற்றிட முடியாதா? பொதுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும் வாளி உடைந்துபட்டால் அல்லது கயிறு அறுந்துபட்டால் அதனைச் செப்பனிட எம்மால் முடியாதா? மழையில் ஒதுங்க வழியின்றிக் கிடக்கும் ஒருவரை, வீட்டுத் தாழ்வாரத்தில் இருத்திட
உங்களால் முடியாதா?
குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டால்,"அடுத்த வீட்டில் போய்க்கேள்" என்று சொல்லக்கூடாது. பக்கத்து வீட்டில் மரணச் சடங்கு நடந்தால் வீட்டினுள் முடங்கி அந்தத் துயரத்தினைப் பகிஷ்கரிக்கக்கூடாது. படிக்கும் பிள்ளைகள் எதிர்வீட்டில் படித்துக் கொண்டிருந்தால் உங்கள் வீட்டில் கூச்சல் கும்மாளமடித்து அவர்களை இடைஞ்சல்படுத்துதல் அடுக்காத செயல்!
இப்படிச் சில விஷயங்களைக் கவனத்தில் எடுப்பதை விடுத்து மனித தர்மம் பற்றிக் கனிவாகப் பேசி, பிறர் நலன் பேணாதவர் கோணல் புத்திக்காரர்
- 58
 

காதலும் கிமையும் ஒவ்வொருவனும் மற்றவன் தன்னை விரும்ப வேண்டும் என்று கருதினால்முதற்கண் எங்கள் பாதங்களை அவர்களை நோக்கி முன்னே பதிய வைப்போமாக! நீதியை விரும்புகின்றவன் எவருமே மனித இனத்தின் ஆசை, அபிலாசைகள், அவர்தம் உரிமைகளை நிராகரிக்க விரும்புவதில்லை. இவர்கள் எவருமே மனித இனத்தின் ஆசை அபிலாசைகள் அவர்தம் உரிமைகளை நிராகரிக்க, அபகரிப்பதுமில்லை.
தர்மம் வழங்கல் என்பது ஒருவனுக்கான உரிமைகள் நீதிகளை வழங்குவதும் அதனைப்பெறுதற்கான முயற்சி களை எடுப்பதுமேயாம்.
நேரிய நெஞ்சுறுதிக்காக எங்களை நாம் தூய்மைப் படுத்துவோம். உலகத்தினை வெறுப்போடு அன்றி உறவோடு நோக்குவோம். எங்கள் உறவுகளே அனைத்தும் என்கின்ற நிலை வந்துவிட்டால் தர்மம் உலகில் தழைத் தோங்க ஏது தடைகள் ஐயா!
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)
25-12-2007
- 59

Page 32
மருத்திபூர்.00.ஆயிற்றுதாரர்
அளவிற்கதிகமான எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்களைச் சுமக்க எத்தனித்தால் நிம்மதிகிட்டாது. நிம்மதியே மாந்தருக்கான ஒப்பற்ற வெகுமதி கிடைக்க வேண்டிய சம்பத்துக்களை ஒரேயடியாக அள்ள எண்ணினால் மனிதசக்தி விரயமாகும். முயற்சியுள்ளவனுக்கு நிம்மதி எளிதில் கிட்டும். நாமாகக் கற்பனை பண்ணி மனதில் சுமைகளை ஏற்றுதல் நல்வாழ்விற்கு அமைவானதல்ல. எளிமையான வாழ்வு நிம்மதி. சின்ன இதயத்தினுள் பரந்த மனதை உருவாக்கினால் நிம்மதி அழுக்காறு, அவா, இவைகளை களைந்தாலே பளிச்சென இதயம் துலங்கி அதனுள் நிம்மதி குடிபுகுந்து கொள்ளும்.
"நிம்மதி” என்பதே மாந்தர்க்குக் கிடைத்தற்கரிய "வெகுமதி"யாகும். நிம்மதி என்பது மனம் உடல் சம்பந்தப் பட்டதாகும். அத்துடன் புற சூழ்நிலை அழுத்தங்கள் குரோ தங்கள் அறவே இல்லாதவரை, வாழ்க்கை என்பது களி பேருவையுடன் அனுபவிக்கக்கூடிய ஒரு விஷயம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
- 60
 
 
 
 
 
 

இதனும் கடமையும் அளவிற்கு மீறிய எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள், அபிலாஷைகள் மனித மனங்களை இனம் புரியாத தவிப்பு நிலைக்குள் தள்ளிவிடுகின்றன. அடிக்கடி சுயகட்டுப்பாடு இன்மை, வேகம் கூடிய வீண் மன உளைச்சல்கள் என்பன நிம்மதியை எம்மிடமிருந்துசேய்மைப்படுத்திவிடுகின்றது.
இந்த மனமானது நல்ல விஷயங்களின் தன்மை யினைப் புரிந்தும்கூட நெருடும் பாதிப்பான விஷயங்களை மட்டும் சதா அசைபோட்டு அரைபட்டுப் பிசையுண்டு பேதலித்துக் கொள்வதும் துர்ப்பாக்கியம் அல்லவோ! மன வருத்தங்களை விருப்புடன் வரவேற்கும் இயல்பை மாற்றியே தீருவேன் என எண்ணாதவரை நிம்மதி என்பது எங்கே கிடைக்கும்?
தனக்கு எது தேவையானது, முதன்மைக்குரியது என்பதை அறியாமலேயே மனிதர் காலத்தை விரயமாக்கிக் கொள்கின்றார்கள். சதாசந்தோஷமாக இருக்க என்ன வழி என்பதில்,"மேலான ஆசை” என்பதே ஒரு பெரும் முட்டுக் கட்டைபோல் வந்துமுடக்கிவிடுகின்றது. நியாயபூர்வமான ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் வாழ்க்கைக்கு முக்கியமான அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் எமக்குரியதைப் பெற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கின் றோமா என்பதே முக்கிய கேள்வியாகும்.
9 அளவான ஆசைகள்
9 அதனை நிறைவேற்றுதலுக்கான முயற்சிகள்
- 61 -

Page 33
மருத்திற்.0.அறிவதன்
9 கிடைத்ததில் திருப்தி
0 தெய்வ நம்பிக்கை
9 பிறரில் காழ்ப்பு, குரோதம், வெறுப்பு இன்மை.
9 எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு, கருணை செலுத்
தும் பண்பு.
மேற் சொன்ன விடயங்கள் பற்றிக் கவனத்தில்
எடுத்துத் தம்மை முழுமையான மனிதனாக்கிக் கொள்ப
வனுக்கு நிம்மதி சொல்லாமலே அவனை ஆக்கிரமித்துக்
கொண்டுவிடும்.
கிடைக்க வேண்டிய சம்பத்துக்கள் எல்லாமே ஒரே தடவையில் கிடைத்துவிட வேண்டும் எனப் பலருமே எதிர் பார்ப்பது வேடிக்கை அல்லவா? எத்தனை எத்தனையோ
பரீட்சைகளுக்குத்தோற்றிச்சித்தியடைந்து, ஒருவன் இறுதிப் பட்டப்படிப்பில் தேறி, அதன் பின்னர் பொருத்தமான
தொழில் தேடிக்கொள்கின்றான். எல்லாமே எம்மை வந்தடையகால அவகாசம் தேவைப்படுகின்றன.
எங்களுக்குத் தேவையான எதனைப் பெற்றுக்
கொள்வதற்கும் படிப்படியான வளர்ச்சி நோக்கிச்செல்லப்
பொறுமை காப்பதில் பலரும் தயாராக இல்லை. கிடைக்
கின்ற அரிய சந்தர்ப்பங்களைக் கூட மிதமிஞ்சிய பேரவா
மூலம் கெடுத்துக் கொள்பவர்களும் ஏராளம் ஏராளம். படிப்படியான வளர்ச்சி வேகம், மேலதிக சக்தியை ஊட்டுகின்றது.
コエ

நாம் இன்று பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் பூமி ரொம்பவும் பழையது. ஆனால் இங்கு தவழ்ந்து கொண்டி ருக்கும் தாவரங்கள், புல்,பூண்டு,பூச்சிகள் உட்பட மனிதர் கள் எல்லாமே புதியன. பழையனவற்றைப் பூமி வைத்துக் கொள்வதில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆயுளை இய ற்கை வகுத்துவிட்டது. ஒன்று மறைய இன்னொன்று பூத்துக் குலுங்கி மிளிர்கின்றது.
ஆனால் மனிதன் மட்டும் தன்னைப் புத்தம் புதிய மனிதனாக மாற்றாமல், எப்போதோ ஏற்பட்ட பாதிப்புக் களை, வடுக்களைச்சுமந்து வாழுதல் சரியா? இயற்கை கூடத்தன்னைப் புதுப்பிக்கின்றது. எனக்குப்பழைய கவலை கள் தொலையவில்லை. இதற்கிடையில் புதிது, புதிதான கவலைகள் என்னை வாட்டுகின்றன என்பார் உளர். புதுமையை விரும்பும் மனிதன் பழைய தொலைந்துபோன, கவலைகளை மட்டும் ஏன் புதுப்பித்து அழுதுவடிக்க வேண்டும்?
சோகத்திற்காகச் சோகப்பட்டு, இருக்கும் சுகங்களை இழக்கலாமா? துன்பத்தை நினைந்து, புதிய துன்பங்களை காவித்திரிவதால், அமைதி கிடைத்திடுமா? சொல்லுங்கள்!
பாம்பு பழைய செட்டையை உரித்துப்போடப் போட புதியதாக அதற்குப் போர்வை கிடைத்தே விடுகின்றது. எனது நண்பர் ஒருவர் தமது வெளிநாட்டு அனுபவம்
ஒன்றினைத் தெரிவித்தார்.
- 63 -

Page 34
பருத்தியூர்:ஐ.அவிர்வரன்
அவரது தாயாரை சுகவீனம் காரணமாக வைத்திய
சாலையில் சேர்த்திருந்தார். அந்த அம்மையார் அனுமதிக் கப்பட்ட சில தினங்களில் நோய் காரணமாக இறந்து விட்டதாகத் தொலைபேசியில் அவர் அலுவலகத்தில் கடமைபுரியும் போதே செய்தி கிடைத்தது. உடனே அவர் அங்கு காரியாலயத்தில் இருந்தபடியே தமது வருகை பற்றி வைத்தியசாலைக்கும், மரணச்சடங்கு செய்யும் நிறுவனத் திற்கும் தகவல்களை தெரிவித்தார். வைத்தியசாலையின் அலுவலகத்துடன் இனிச் செய்ய வேண்டிய கருமங்களைப் பூரணமாகத் தெரிவித்தார்.
அன்றைய தினமே, மிக வேண்டப்பட்டவர்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல்களை அளித்தார். பின்னர் வைத்தியசாலைக்குத் தனது மனவிை, பிள்ளைகளுடன் சென்றார்.உரிய முறையில் சம்பிரதாயமான அலுவல்கள் முடிந்ததும் அடுத்தநாள் ஈமைக்கிரியைகள் மத அனுட்டா னப்படி நடந்தது.
சொன்னால் நம்பமாட்டீர்கள்! அதற்கு அடுத்த நாள் அவர் தமது காரியாலயத்தில் மிக இயல்பாக அமைதியாகத் தனது கருமங்களைச் செய்துகொண்டிருந்தார். அவருக்குத் தாய் மீது பாசம் இல்லை என்பது அல்ல. சலனமற்ற மன நிலையில் தம்மை வைத்துக்கொண்டார். துன்பங்களை அவர் எப்படித் தாங்கினார் என்பது எமக்குத் தெரியாது.
- 64
 

3 &L ஆனால் தமக்குரிய கடமையில் அவர் கிஞ்சித்தும் விலகவில்லை. காதல்தோல்விக்காக, வருடக்கணக்கில் தங்களை அவலட்சணப்படுத்தித் துன்பத்தில் உழல்பவர்கள் தமக்கு எதிரே உள்ள பிரகாசமான உலகை காண ஏன் விழைகின்றார்கள் இல்லை.
சோகத்தைக் காட்டுதல் ஒரு கெளரவமான செயலா? சதா அழுபவனை யாருக்கு ஐயா பிடிக்கும்? கழுவிவைத்த பாத்திரம் போல் பளிச்சென்று முகத்தை வைத்திருப் பவர்களைப் பார்த்தால் பார்ப்பவர்களுக்கும் உற்சாகம் வருமன்றோ!.
ஒரு பாத்திரத்தில் இவ்வளவுதான் கொள்ள முடியும். என்றால், நாம் அதனுள் பிரயோசன பொருட்களைத்தான் முதலில் இட்டு நிரப்ப முயற்சிப்போம். தேவையற்ற குப்பைகளை உட்செலுத்த விரும்பமாட்டோம்.மனமாகிய பாத்திரத்தில் மட்டும் தேவையற்ற கோப, குரோத வன்மங் களையோ, தகாத வேறு சிந்தனைகளையோ நிரப்பி நல் எண்ணங்களான காருண்ய சிந்தை, அன்பு போன்றவை களை வெளியே வீசிட முனையலாமா?
அசுத்தங்களைச் சுமப்பதில் என்ன இன்பம் வந்து
விடப் போகின்றது? வலிந்து பிறரைச் சண்டைக்கிழுப்
பவர்கள் இல்லாமல் இல்லை. இதனால் அற்பசுகம்
காண்பவர்களும் உள்ளார்கள். ஒருவரது சோகத்தைத்
தூண்டிச் சுகம் தேட எண்ணுபவர்கள் இல்லையா? எல்லா - 65

Page 35
மருத்தியூர்.பல அறிவதன் பாவங்களையுமே கூசாமல் செய்துவிட்டுத் தமது மனதில் ஒரு சிறுகீறல் வந்தால் மட்டும், அல்லோலகல்லப்பட்டுப் பிரலாபிப்பவர்களை என்ன சொல்ல? ஒரு குறிக்கோளுடன் வாழும் போது நாம் சிந்தையினை ஒரு நிலைப்படுத்தினால் வீணான சலனங்களைப் புலன்கள் நிராகரித்துவிடும். நிம்மதியாக வாழ எண்ணும் நாம் அற்ப சலசலப்புகளுக் காகக் காரணமின்றி அவைக்குத்தோரணம் கட்ட விழைவது எத்துணை தீங்கை விளைக்கும் என்பதை ஒருதரம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனம் எனும் கருவி சீராக இயங்காது விடின், இந்த உடல்படும்பாடு கொஞ்சமா? இந்த விடயத்தில் தனி ஒரு மனிதனின் கசப்பான துன்ப அனுபவங்கள் எத்தனை எத்தனையோ நபர்களை நகராமல் செய்தும் விடுகின்றன. முகம் தெரியாத எந்த மனிதனும் கூட எங்கள் பொருட்டு மிரட்சி அடைந்துவிடக்கூடாது. சும்மா இருக்கும் சுவரைக் குத்திப்பார்த்தால் கைதான் வலிக்கும். வலிந்து வினை தேடுதலைத் தவிர்த்தல் நலமானது.
குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் இன்றி வாழுதலா லேயே அமைதி அங்கு பரிணமிக்காது விடுகின்றது. குடும்பத்திற்குள் மட்டுமல்ல எவருடனும் நாங்கள் புரிந்து ணர்வு, விட்டுக்கொடுத்தல் இல்லாமல் இயங்க முடியுமா? வீட்டினுள் நடக்கும் பிரச்சனைகளை வெளியில் கொட்டித்தீர்க்கின்றவர்களால் நிம்மதியை எப்படிக்
கண்டுகொள்ள இயலும்? இந்தப்போக்கிற்கு அறியாமை
- - 66
 

காதலும் கடமையும் மட்டுமல்ல ஆணவப்போக்கும், தாங்கள் செய்வதே சரி என்கின்ற பிழையான காரணங்களைத் தமக்குள் விதைப் பதும் காரணமாகும்.
ஒரு பெரியவர் மிகுந்த கவலையுடன் சொல்லிக் கொண்டார். "என்னை எனது வீட்டில் மனைவி, மகன், குழந்தைகள் எவருமே ஒரு பொருட்டாக எண்ணுவதே கிடையாது. நான் இந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு தூரம் உழைத்திருக்கின்றேன். இன்று என்னைக் கருவேற் பிலையைத் தூக்கி வீசுவது போல் வீசிவிட்டார்கள் என்ன செய்ய" என்றார். அதற்கு நான்"நீங்கள் சொல்வது சரியல்ல கடந்த வாரத்திற்கு முன்னரும் உங்கள் மகனை நான் சந்தித்தேன். அவர் உங்களை ரொம்பவும் உயர்வாகவே பேசினார். நீங்கள் வேறுவிதமாகக் கூறுகின்றீர்கள். குடும்பத்தில் சில வேளை வேலை அலுவல்கள், பிரச்சனை கள் காரணமாக கண்டு கொள்ள முடியாமல் இருக்கலாம். சரி விடுங்கள் எல்லாம் சரிவரும்” என்று கூறி அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் அவரது மகனைச்சந்தித்து, "உங்கள் தந்தையார் உங்கள் குடும்ப பொறுப்புகளை மிகவும் பாராட்டினார். நீங்கள் உங்கள் தந்தையாரிடம் மிகுந்த அன்பாக இருப்பதையிட்டு நான் சந்தோஷப்படுகின்றேன்" என்றேன். "அப்படியா. அப்பா, பாவம் அவருக்கு வயது வந்துவிட்டது. முதுமை காரணமாக அவர் ஏதாவது குறைப்பட்டு விடுவார் என்று சிலசமயம் பயம் மரியாதை
- 67

Page 36
மருத்திழ்.09.9பிந்தைக் கருதி அவருடன் பேசாமல் கவனமாகவே நடந்து கொள்கின்றேன் என்று பதிலிறுத்தார். ஆனால் உண்மை யிலே தகப்பனாரும், மகனும் மிகவும் நல்லவர்கள் தான். சிலசந்தர்ப்ப சூழ்நிலைகளால் புரிந்துணர்வு நிலையில் சற்று விலகி இருந்தார்கள். தற்காலிக "விலகல்கள்” கூடப் பிரச்சனை உண்டுபண்ணலாம்.
ஓரிரு வாரங்கள் இருக்கும். அந்தப் பெரியவரை மீண்டும் நான் சந்தித்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அவரிடம் இருந்த தப்பு அபிப்பிராயம் அறவே களையப்பட்டு முகத்தில் இருந்த ஏக்கம், தாக்கம் என்பன அறவே களையப்பட்டு, முகத்தில் தெளிவு தென் பட்டது. அவர்கள் இருசாராரிடையேயும் நல்ல அபிப்பிரா யங்களை ஏற்படுத்துவதற்காக நான் சொன்ன விஷயங்கள் நானாக உருவாக்கினாலும் அது நன்மையில் போய் முடியும் எனத் திடமாகவே நம்பினேன். எனது எண்ணம் சரியாகவே அமைந்து விட்டது.
எவரையும் சமாதனப்படுத்துதற்காக நல்ல உபாயங் களை, ஆலோசனைகளைச் சொல்வதில் தப்பேயில்லை. சமாதானம் இன்றேல் சந்தோஷம் வந்திடுமா? அது வீட்டினுள் ஆகட்டும், வெளியில் அல்லது அரசாங்கங்களி டையேயாகட்டும், சமாதான செளஜன்யம் இன்றேல் நிம்மதி இன்றி மக்கள் தவித்திடல் வேண்டுமல்லவா?
தர்மசிந்தை சகிப்புத்தன்மை, இரக்க உணர்வின்றி
- 68
 

வாழ்வது எந்த விதத்திலும் மக்களை எம்பால் அன்பு காட்ட வைத்துவிடாது "நான்” “எனது குடும்பம்” என்று மட்டும் வாழுதல் நடைமுறைச் சாத்தியமற்றதே. சிலர் இவ் வண்ணம் வாழ்வதனால் சமூக பிணைப்பினைத்தாமாகவே கத்திரித்தும் கொள்கின்றனர். எத்தனை நாட்களுக்குத்தான் எங்களால் உலகைவிட்டு விலகி வாழமுடியும். வெறும் வீம்பினால், ஏதோ வஞ்சம் தீர்க்கும் மனோபாவத்தால் யாருடனும் பேசாமல் பழகாமல் இருந்தால் அதன் பாரிய தாக்கம் இவர்கள் உள் உணர்வை மனநிைையச் சிதைத் துச் சீரழித்துவிடும். நல்ல உணர்வுகளை நாமாக வதைக் கலாகாது.
எதையாவது பெற்றால்தான் உதவி செய்வேன் என்ற எண்ணத்துடன் தர்ம சிந்தனை பற்றியே கிஞ்சித்தும் கருதாமல் வாழுபவர்களை நாங்களும் ஒதுக்கிவிடுதல் கூடாது. ஏதோ ஒரு நல்வழியில் சமூகத்திற்கான பங்களிப் பினை எல்லோருமே சேர்ந்து கூட்டு இணைப்பாகச் செய லாற்ற முயற்சி செய்தேயாக வேண்டும்.
இன்று பலர் தங்கள் தவறான செயல்கள் மூலம் உலகினால் ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்றார்கள். இந்த நடவடிக்கையினால் மக்களின் புறக்கணிப்பால் ஒரு பரம்பரையே பெரும் பாதிப்புக்குள்ளாகின்றது. எல்லோரும் நிம்மதி அடைய வேண்டும். இதில் எவருடனும் பேத மில்லை என்கின்ற எண்ணங்களை அனைத்து நெஞ்சங் களும் ஏற்றேயாக வேண்டும்.
- 69

Page 37
பருத்திy.40.ஹீலிர்வரஷ்
ஒதுக்கி விடுதலும், ஒதுங்கி வாழுதலும் மனித மதிப்பினைக்குறைக்கும் செயலே. குடும்பத்திலும் எமக்கு அருகே வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதரிடையேயும் பூரண அமைதி பேணாமல் வாழ்ந்தால், சந்தோஷம் என்கின்ற சொற்களைக் கூட மறந்து போகும் நிலை உருவாகிவிடுமன்றோ!
நான் கல்லூரியில் கல்விகற்ற காலத்தில் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு அடிக்கடி செல்வேன். அந்தக் குடும்பத்தின் வாழ்வுமுறைகள் என்னை மிகவும் லயிப்பிற்கு உட்படுத்தியதாலேயே அங்கு செல்வதை வழக்கமாக்கி யிருந்தேன்.
மிகவும் வறுமைப்பட்ட குடும்ப விவசாயம் செய்ய வர்கள். குடும்ப அங்கத்தினர்கள் ஐந்து பேர்கள். சின்னக் குடிசை, குடிசைக்கு வெளியே ஒரு தாழ்வாரம். பனைஒலை யால் வேயப்பட்டு பசுவின் சாணத்தால் மெழுகப் பட்டிருக்கும். வெண்மாவினால் சுவர்களில் கூட கோல வடிவம் இட்டிருப்பார்கள். வீட்டின் வெளி முற்றத்தினருகே கோலம் இட்டிருக்காத நாள் இல்லை. வீட்டு முற்றத்தில் மல்லிகைப்பந்தல், மலர்ச்செடிகள் அத்துடன் சிறு வீட்டுத்தோட்டம், வாழை மரங்கள் என ஒரு அழகுச்சோலை அந்த வீடாகும்.
அதிகாலையில் குடும்ப அங்கத்தினர் அனைவருமே
தோட்டத்திற்கு நீர் பாய்ச்சச் சென்றுவிடுவார்கள்.
- 70.
 
 
 
 
 
 
 

அக்காலத்தில் துலா மூலமே நீர் தோட்டங்களுக்குப் பாய்ச்சப்படும். காலையில் வேலை முடிந்ததும் தான் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வார்கள். எவ்வேளையில் மிக எளிமையான உணவை உண்பார்கள் தமக்குள்ளும் எவருடனும் நண்பர்கள் போலவே பேசிக் கொள்வார்கள். நான் அங்கு செல்லும் போதெல்லாம் பனங்கட்டி யுடன் தேனீரை அன்புடன் வழங்குவார்கள். அவர்கள் எவரிடமாவது எச் சந்தர்ப்பத்திலும், தங்கள் வறுமை நிலைபற்றித் துன்பப்பட்டதோ அல்லது குறைபட்டுக்கொண்டதோ கிடையவே கிடையாது.
அவர்கள் தமது வாழ்க்கையை மிகவும் ரசிப்புடன் ஏற்று வாழ்ந்தமையாலும் பிறரது படோபகாரமான டாம்பீக வாழ்வு முறைகள் இவர்களை எந்த விதத்திலும் பாதிக் காமையினால், கிடைத்த வாழ்வை மிக இனிமையாகவே கழித்துவந்தனர். இந்த மனோநிலையில் வாழ்பவர்களுக்கு இறைவன் கொடுத்த அனைத்துமே பெருவரமாகவே அவர்க ளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இருதயத்தை ஆண்டவன் சின்னத் தாமரைபோல அழகாகப் படைத்துள்ளான்.ஆனால் இதன் விசாலமோ பூமியை விடப்பல மடங்கானது. இதனைத்தூய்மையுடன் நாம் ஆக்கிக் கொண்டால் "நிம்மதி" என்பது சர்வசாதார ணமாக உள்ளே வந்து அன்புடன் ஆட்சி நடத்திக் கொள்ளும்.
71

Page 38
கருத்திடி.டி.ஆயிரவருதல்
எங்களுடன் வாழும் ஒருவர் கூட மனித நிலையில் இன்றி நழுவிக்கொண்டால் உலகு அதனை ஜீரணிக்காது. அதுமட்டுமல்ல, இத்தகைய மனிதரால் ஏற்படும் பாதிப்புக் களை நாம் அனுபவித்தே ஆகவேண்டியும் இருக்கின்றது. பலர்சார்ந்த இயக்கமாக அதன் பலமாக "நிம்மதி” சார்ந்திருக்கின்றது. எனவே பிறர் பொருட்டாவது பொறுப்பு டன் இயங்க வேண்டியவர்களாவோம்.
எனக்குள் பரிணமிக்கும் நிம்மதி உணர்வு சகலர் க்கும் அருளப்படல் வேண்டும். இந்த நிம்மதி அளிப்பிற்கு எவருமே குந்தகம் செய்ய வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. அமைதியை அள்ளி நுகர்ந்து கொள்ள இருதயங்களை விரித்து வைப்போமாக!
புதுக்காற்று, புதுவாசனை, புதிய ஸ்பரிசம், புதிய அழகுமிகு இடங்களில் நடை பயில்தல், அங்கேயே அறு துயில் கொள்ளல், விழிக்கும்போது பறவைகள், உயிரினங் களின் சப்த ஜாலங்களை ரசித்தல், எந்நேரமும் சுறுசுறுப் பாக இயங்கும் உயிர்களைக் கண்டு வியந்து மோகித்தல் போன்ற நற்பேறுகளைசதாநுகர்ந்து கொள்ள விழைந்தால், நாமும் நிம்மதிக்குரிய மனிதராவதுடன் எம்மைப் போலவே பிறரையும் எங்களுடன் இணைத்தவராவோம்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
31-12-2007
- 72
 

காதலும் கடமையும்
do
ஏழையின் பசி இந்த அவனியில் இயலாமையின் தொனியாகும். ப இல்லாவிட்டாலும் அது பிணி. வறியவனுக்கு வேண்டப்படாதது பணக்காரனுக்குப் பசி, ஒரு கொடை உணவு இல்லாதவன் சுதந்தரமற் நோயாளி போல் தெரிகின்றான். உணவின்றி மடிந்து போதல் சாமான் விடயம் அல்ல. ஒருவர் மடிவது அவன் சந்ததியையே முழுவதுமாகத் துடைத்தெறியும். பசித்தவர்க்கு இரங்காது உணவழிக்காது விட்டால் பூமித்தாயின் பெருத்த சீற்றத்திற்கு உலக மக்கள் அத்தனை பேருே ஆளாகுவர்.
பசி உலகையே அசைக்கவல்லது. இதன் அசுர சக்தி இல்லாதவனின் குரலாக ஒலித்து இறைவனிடம் முறையிடுகின்றது. எல்லோருக்குமே பசி என்கின்ற விடயம் பொதுவானது எனினும், ஏழையின் பசி, இந்த அவனியின் இயலாமையின் தொனியாகும். பசி இல்லாவிட்டாலும் அது பிணி. வறியவனுக்கும் இது வேண்டப்படாத ஒன்று. பணக்காரனுக்குப் "பசி” ஒரு கொடை, பிறவிப்பயனை
அவன் சாப்பிட்டே களிப்படைய இது ஒரு வழி பசிக்கும் - 73 -

Page 39
கருத்தியூர்.பல ஆயிற்றதன் வறியவன் ஒருவேளை உணவை உண்பதற்குக் கூட வசதி யில்லாமல் இருக்கின்றான். பணம் குவிந்தும் உணவைச் சுவைக்க இயலாத தன்மையுடைய செல்வந்தர்கள்தான் வறியவர்களிலும் வறியவர்களாவர்.
டல் தர்ம நடவடிக்கையேயாகும்.
பசித்துக் களைத்திருப்பவனைக் கண்டும், தான் மட்டும் சுவைத்து ருசித்துப் புசிப்பவன் மனுஷ வேஷம் தரித்த அதிசய ஜந்து என்றே கூறுதல் வேண்டும். மேலும் கொடுத்து உண்ணாதவன் அடுத்துப் பல் கோடி ஜன்மம்
எடுத்தாலும் அவனுக்கு ஏது ஐயா விமோசனம்?
விரதம் இருப்பது என்பது தனது ஆத்ம விமோச னத்திற்கு மட்டுமல்ல சகல உயிர்களுமே ஷேமமாக வாழவேண்டும் என்கின்ற வைராக்கிய சிந்தையைத் தன்னுள் ஏற்றுவதுமாகும். எனவே விரதம் அனுஷ்டிப்பவன் விரத காலத்தில் தன் சுற்றம் சூழச் சாப்பிடுவதுடன், சற்றும் வசதியில்லாத ஏழைகளுக்கு அன்னமிட்டு அவர்களைக் கெளரவிப்பதே சிறப்பானதாகும்.
ராணிமங்கம்மா தனது ஆட்சிக்காலத்தில் வீதிகள்
தோறும் அன்ன சத்திரம் அமைத்தாள். அத்துடன் ஏழை
எளியவர்களுக்கும் அங்கு வரும்யாத்திரிகர்கள் வழிப் - 74
பசிப்பிணிக்கு எதிரான போராட்டமானது மானுட நேயத்திற்கும் நலிவுற்ற சகல உயிர்களுக்குமான உயிரூட்
 
 

- காதலும் கடமையும் போக்கர்களுக்காகவும் கிணறு, குளம், தங்குமடம் போன்ற ஜீவாதார நிலையங்களையும் தெருக்கள் தோறும் அமைத்ததாக வரலாறு பகர்ந்த வண்ணமாய் உள்ளது.
எமது முன்னோர்கள் தெருக்களில் சுமைதாங்கி ஆவுரஞ்சிக் கற்கள், மிருகங்கள் நீர் பருக நீர்த்தொட்டிகள், அமைத்தமையை இன்னமும் பழைய சின்னங்களாக நாம் பார்க்கலாம். ஆனால் இன்று வழிப்பயணிக்காகத் தங்கு மடமோ சுமைதாங்கி ஆவுரஞ்சிக்கல், நீர்தொட்டி அமைப் பதனைக் காணமுடிவதில்லை. மிருகங்கள் கூடவேதனைப் படக்கூடாது என்பதன் பொருட்டு அவை சொறிந்து கொள்ள ஆவுரஞ்சிக் கல்லை அமைத்தனர் என்பது அவர்களின் ஜீவகாருண்யத்தை எமக்கு நன்கு புலப்படுத்துகின்றன.
ஆனால் இன்றோ வீதியில் உள்ள பழைய தங்கு
மடங்களிலும் கோவில்களின் அன்னசத்திரங்கள்,
சுமைதாங்கிக்கற்களில் திரைப்பட விளம்பரங்களும், காதலர் பெயர் முகவரிகளும் கேவலமான, தனிப்பட்ட குரோதத்தை வெளிப்படுத்தும். ஆபாசமான தூஷண வார்த்தைகளைப்
பொறித்துத் தமது மொழி ஆளுமையை வெளிப்படுத்து
கின்றனர். இவர்கள் புதிதாக எந்தத் தானதர்மமும்
செய்யாவிட்டாலும் பரவாயில்லை இருக்கின்ற பொதுச்
சொத்துக்களை எவரோ ஒரு புண்ணியவான்கள் செய்த கொடைகளை அநாகரிகமாக அசுத்தப்படுத்தல் அழகா
னதா? இதுபோல் ஒரு சமூக விரோதச் செயல்கள் வேறெ
ன்ன இருக்கின்றன?
- 75.

Page 40
பருத்தியூர்.09.வயிற்றுததர்
சரித்திரப்பிரசித்திபெற்ற கலை வடிவங்களில்கூடச் சில சமூகவிரோதிகள் கண்டபடி கீறியும், எழுதியும் சிதைப் பது பற்றி நாம் பல்வேறு செய்திகள் மூலம் அறிந்து கொண்டிருக்கின்றோம். தான தர்மம் என்பது மனப்பூர்வ மாகச் செய்யப்படும் நற் கருமமேயாகும். இன்று பல அன்ன சத்திரங்களில் அன்னதானம் செய்யும் சிலர் நடந்து கொள்ளும்முறை நெஞ்சை நெருடுவது போல் இருக்கின் றது. உணவு உண்ணவரும் அடியார்களிடம் கண்டபடி தகாத உஷ்ண வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் ஏன் சில சமயம் அடிதடி கலாட்டக்களில் ஈடுபடுவதும் சகிக்க முடியாத காட்சிகளாகும்.
அன்னம் பாலித்தல் ஒரு உன்னதமான தெய்வீகப் பணி எனத்தெரிந்தும் பிறர் முகம் சுழிக்கும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது. அன்பில்லாதவர் இட்ட உணவு எமது அடுத்த பிறவியிலும் அது பாவமாகவே தொடர்ந்து வரும் என்று சொல்வார்கள். எல்லோரிடமும் சென்று அதாவது தீயோரிடம் சென்று நீர் அருந்துதல் உணவு புசித்தல் மனம் கூசும் செயல்தான். பசித்தவனுக்கு உணவு கொடுக்கின்றேன் எனக்கூறிப் புகழ்சேர்க்க ஏதாவது பிரதிபலன் நோக்கிச்செய்யும் செயல்களை இறைவன் விரும்பவேமாட்டான்.
நல்ல கல்வி ஞானம் உள்ளவர்களின் செயல்
திறன்கள் அவர்கள் வறுமை காரணமாகத் தடைப்பட்டுப்
போகின்றன. இன்று படிக்கக்கூடிய சிறார்கள் போதிய - 76

அதனும் கடமையும் போஷாக்கு இன்மையால் சாதாரண உணவை உண்ணக் கூட வசதியின்மையால், கல்விகற்றல் தடைப்பட்டுப்போகின் றன. படிக்க வேண்டியகாலத்தில் சில வறுமையான பிரதே சங்களின் சிறார்கள் உணவுத் தேவைக்காகக் கல்உடைக்கச் செல்வதும், வீட்டு வேலைக்குச் செல்வதுமாகப் பல்வேறு பட்ட சிறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது ஒரு சமூகக் கொடுமை. தொடரும் அடுக்காத நிலை!
மேலும் தொழில் ஏதும் கிட்டாத நிலையில் பல ஆயிரம் சின்னஞ்சிறுசிறார்கள் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும், ஈடுபடுத்தப்பட்டு வருவதும் அன்றாட சம்பவங்களாகிவிட்டன.
உலகின் முக்கிய தேவை உணவு. அந்த உணவை எல்லோருக்குமே வழங்க முடியாத உலகின் எந்த ஒரு அரசும் இருந்துதான் என்ன? ஆனால் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களில் சிலர் தமது இழிநிலையை உணர்ந்ததாக இல்லை.
உழைக்கும் காலத்தில் உழைக்காது, உழைத்த பணத்தைச் சேமிக்காது, செலவுசெய்து கண்டபடி வாழுதல்,என்பது தமது வாழ்க்கையைத் தாமே சிதைப் பதையறியாமல் அழித்துக் கொள்கின்றார்கள்.
மேலதிகமாக உழைத்தவர்கள் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்ற தீச்செயலில் ஈடுபட்டு தனதுஉடலையும், - 77.

Page 41
பகுத்திர்ம.ைஅறிவதன் குடும்ப நலனையும் குலைத்து, இறுதியில் நடுத்தெருவிற்கு வந்து ஒரு வேளை உணவிற்காக அலைவது எவ்வளவு பரிதாபம் அறியாமை அல்லவா?
ஏழ்மை இன்று ஒரு வெறும் காட்சிப் பொருளாகி விட்டது. ஏழ்மை மட்டுமல்ல கல்விசமயம் எல்லாமே சேவை நோக்கு அன்றி விளம்பரமாகவே உள்ளது எனச்சிலர் ஐயப்படுகின்றனர். ஏழ்மை பற்றி வெளியே அனுதாபத்தைக் காட்டிச்சம்பாதிப்பவர்கள் தான் பெருகிவிட்டார்கள். உதார ணமாக ஒரு ஏழை படும்பாட்டினைத் திரைப்படமாக்கி அதன் மூலம் பலகோடி சம்பாதிப்பவர்கள் அதே பரிதாபத் திற்குரிய ஏழைகளுக்கு அவர்களின் பசிக்கு என்ன விதமான நிதி உதவிகளை அளிக்கப் போகின்றார்கள்?
சமூகத்தில் ஒரு அந்தஸ்தைத் தேட முனைப வர்கள், ஏழைகள் முதுகில் சவாரிசெய்வதுபோல்நடப்பதை நாம் காண்பது சர்வசாதாரணமான விஷயம்தான். ஆனால் இதன் பொருட்டு தம் சிரமம் பாராது, கஷ்டமுறும், பஞ்சப் பராரிகளுக்காக, சிரமப்படும் நல்ல ஜீவன்களின் பணிகளை நாம் சற்று நிமிர்ந்து நோக்க வேண்டும்.
ஏழைகளுக்கு, கல்வியூட்ட முனையும் அதேவேளை அவர்களின் ஜீவாதாரப்பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும். இன்று இருக்க வீடும், உண்ண ஒருவேளை உணவும், நம்பிக்கையாகக் கிடைக்கும் என்கின்ற நிச்சய
- 78.

காதலுர் கடமையும் மற்ற வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதர் களின் துயர் என்று துடைத்து எறியப்படுமோ இறைவா!
இன்று எத்தரத்தில் உள்ளவர்களும், உணவிற் காகக் கை ஏந்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை மறுக்க முடியுமா? அதாவது, யுத்த சூழ்நிலைகளில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தினால் உணவுக்காக அல்லல்படாத ஆத் மாக்கள் உண்டா? இன்றும் ஏழைப் பச்சைக் குழந்தைகள் பால்மாவிற்கு அழுவதும் எங்குபோய் வரிசையில் நின்றால் அரிசி கிடைக்கும், என்பதிலேயே ஏழைகளின் காலம் போகின்றது.
பசி என்றால் எப்படி இருக்கும் என விரதத்தின் போது எல்லோரும் தெரிந்து கொள்வர். ஆனால் பசி என் கின்ற கொடுமையை வருந்தித் திணிக்கும் காலக் கொடுமையை என்ன என்பது? காசைவிடச் சோறு பெரிது. பசிக்கும் போது தங்கத்தைப் புசிக்க முடியாது. பசிவந்தால் உழைப்பவனும் படுத்துவிடுவான். எல்லாவிருப்புக்களும் அற்றுவிடும். செயலற்ற தன்மையினைச் செயற்கையாக உருவாக்கும் தேசங்களின் கையாலாகத்தன்மை இயலா மையை எப்படிச்சொல்ல?
இந்த லட்சணத்தில் வறியநாடுகளின் வயிற்றெரிச்
சல்களில் துன்பக் குளியல்களில் அரசியல் லாபம் தேடும்,
வளம்மிகுவல்லரசுகளின் நடிப்பு நாடக அரங்கேற்றங்களை
என்ன என்பது? மற்றவன் பசியில் அதன் கொடுமையில் - 79

Page 42
பருத்தியூர்.09:அறிவருதல் தன் ஆத்மாவிற்குள் ருசியான அனுபவம் தேட முடியவே முடியாது. ஏன்னெனில் மாற்றான் இன்பங்களை சாதாரண எளிய வாழ்வைக் கொள்ளையடிப்பதும் ரசிப்பதும் இறைவனின் கோபத்திற்கு ஆளாகும் செயல் அல்லவா?
உணவு இல்லாதவன் சுதந்திரமற்ற நோயாளி போல் தெரிகின்றான். ஒரு பிச்சைக்காரன் உணவின்றிக் கெஞ்சிக்கொண்டிருந்தால், அவனை ஒரு மனித ஜன்மமாக எத்தனைபேர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றார்கள். சரி, அவன்கூட, தான் இந்த நாட்டின் கெளரவமான பிரஜை என அவனும் உணர்வதாகத் தெரிவதில்லை. அப்போதைய பசிக்காகத் தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நடைப்பிணமாகவே இருப்பதும் அதை நாம் பார்ப்பதும் இறைவனின் படைப்பில் எல்லாமே சமன் என்கின்ற உணர்வை மறுப்பது போல் தெரியவில்லையா? சற்றுச் சிந்திப்போம்!
பசிப்பவனுக்குக் கொடுப்பது எமது கடன் அதை விடுத்து அவன் பசிக்காக உணவுபெறுதலுக்காக உழைக்க வில்லையே என விவாதம் செய்தல் தகாது. ஒருவன் தன் வாழ்வை சிறப்பாகக்கொண்டு செல்லாமைக்குப் பல்வேறு அகக்காரணங்களும் புறக் காரணங்களும் உண்டு. இவை யெல்லாம் சமூகம் நன்கு உணர்ந்து தக்க பரிகாரம் கண்டே யாகவேண்டும். உணவு அளித்தல் மட்டுமல்ல, ஒருவனுக்கு வேண்டிய வாழ்வை நன்கு அமைக்கவும் நாம் ஏதாவது செய்தேயாக வேண்டும்.
- 80 -
 

இதனும் கடமையும் சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில், பஞ்சத் தாலும், இடம் பெயர்வுகளாலும், உயிர் பெயர்ந்துபோன மனிதர்களின், எலும்புக் குவியல்களின் எடையைவிட அதனைப் பார்க்கும் மாந்தர்களின் மனச்சுமையினை விபரிக்க வார்த்தைகள் உண்டா?
எங்களது மக்கள் தமது வீடுகளில் நடக்கும் விசேட தினங்களில் தமது உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து கொடுக்கின்றார்கள். தேவைப்படுகின்ற இடங்களுக்கே உணவு போய்ச்சேரவேண்டும். நாம் உணவில்லாது அவதி யுறும் மக்களுக்கு உணவு கொடுப்பது பற்றிச் சிந்திப்ப தேயில்லை.
இன்று எவ்வளவோ அநாதைச் சிறுவர் இல்லங்கள் நாடுபூராவும் இருக்கின்றன. அவர்களுக்கு ஒரு வேளை உணவினையாவது ஏதாவது ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று வழங்கினால் என்ன? அவர்களிடம் சென்று, அவர்களுடன் கூட இருந்து வழங்கி, நாமும் சாப்பிட்டால் எவ்வளவு ஆத்மதிருப்தி தெரியுமா?
சிரார்த்த தினம், ஞாபக தினம் என்றவாறு பல நிகழ்வுகளை பலரும் தமது உறவுகளுடன் மட்டும் நிகழ்த்து வதனால் ஏற்படும் செலவில் ஒரு சிறு பகுதியையாவது ஏழைகளுக்குச் செலவுசெய்தால் என்ன குறைவுவந்துவிடப் போகின்றது?.
-81 -

Page 43
பருத்திட்டில:அறிவதன்
நாம் வருந்தி வருந்தி வசதி உள்ளவர்களைத்தானே விருந்துக்கு அழைக்கின்றோம். வருந்தி வாழும் மக்களை நாம் பார்க்க ஏன் விழைவதில்லை?. சில விடயங்களை மக்கள் இன்னமும் புரியாமல் இருக்கலாம். நல்ல தர்ம சிந்தையுள்ளவர்களுக்குக்கூடச் சில வழிமுறைகள் அறியா மல் இருக்கலாம். இன்றைய சூழலில் எமது வழங்கல்கள் கட்டாயம் பசிப்பிணியைப் போக்க சென்று அடைய வேண்டும்.
உணவின்றி மடிந்துபோதல் என்பது சாமானிய விடயமா? ஒருவன் மடிவது என்பது அவன் சந்ததியே இல்லாமல் போவது அல்லவா? அவன் சார்ந்த இனமும் உலகும் இதனை உணரவேண்டும். இறப்பவனைவிட மரிப்பவனைப் பார்ப்பவனுக்கு ஏற்படும் மன உளைச்சல், துன்பங்கள் பற்றிப் பலர் சிந்திப்பதில்லை.
ஆயுதங்களைப் பயிரிடும் நாடுகள் நல்ல பண விளைச்சலைப் பெருகின்றன. அந்த பெருலாபத்தினை மேலும் பெருக்க, மென்மேலும் பல பாவகருமங்களையே சுமக்கின்றன. அவர்களது மேலான உணவுப்பயிர் உற்பத்தியினை வீணாகக் கடலில் கொண்டு வீசுவதாகவும் சொல்லப்படுகின்றது. இந்நாடுகள் அதனை வறிய நாடுக ளுக்குக் கொடுக்காது பழுதடைந்த பின் அவைகளை ஒரு நாடுகளுக்கும் சேராமல் வீணடித்தும் விடுவதுண்டு.
- 82 -
 

காதலும் கடமையும் எமது நாட்டில் கூட நல்ல களஞ்சியப்படுத்தல் முறையின்றி ஏழைமக்களுக்கான உணவுகள் வீண் விரயம் ஆக்கப்படுவதைக் கண்டும், கேள்விப்பட்டும் இருக்கின் றோம். பசியுள்ளவனுக்குள்ள பிரச்சினைகளை, பசியற்ற வர்கள், வசதி படைத்தவர்கள், அரச சமூக நிர்வாகிகள் உண்மையாகவே உணர்ந்தால் இந்த அவல நிலை தொடர்ந்திடுமா சொல்லுங்கள்!
தினசரி ஒரு பிடி அரிசியை எடுத்து வைத்துப் பின்னர் அவற்றை தர்ம கைங்கரியங்களுக்காகப் பயன் படுத்தும் முறையை முன்னர் எமது மூதாதையினர் காலம் காலமாகச் செய்து வந்தனர். தினசரி அல்லது வாரம் ஒரு தடவையாவது, அடியார்களுக்கு உணவழித்ததாக எமது சமய இலக்கிய நூல்கள் வாயிலாகப் படித்திருக்கின்றோம்.
தமது வீட்டுத் திண்ணையில் மோர்ப்பானை, நீர்ப்பானை வைத்திருப்பதை அன்றாட கைங்கரியமாக அவர்கள் செய்தும் வந்தனர். ஆனால் இன்று ஒருவரது வீட்டிற்கு செல்லுமுன், முன் கூட்டியே, தெரிவித்துவிட்டே செல்ல வேண்டும். அவசர உலகில் இதுவே சகஜம். தவிர நகர வீடுகளில் அனுமதியின்றி உட்செல்ல முடியாது. கிராம மக்கள் ஒருவரோடு ஒருவர் உள்ள நம்பிக்கை, விசுவாசம் நகரப்பகுதியில் பெரும்பாலும் இல்லவேயில்லை.
தான தர்ம கைங்கரியங்கள் விடயத்திலும் கிராமத் துக்கோவில்களில் விழாக்களில் வீட்டு வைபவங்களில் - 83

Page 44
பருத்திபூர்.அல. ஆயிரவருதல் உபசாரம் செய்யும் பண்பாடுகளை நாம் நகரத்தில் காண்பது அரிதுதான். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவை யெல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலை, வசதியீனங்களைப் பொறுத்த விடயம், மற்றும் வாழ்க்கைச் செலவுநிதிப்பற்றாக் குறைவு போன்ற இதர காரணிகளும் உண்டு.
எனினும் எம்மால் எமது சக்திக்கு உகந்தவண்ணம் ஏதாவது உதவிகளை நாம் ஆதரவு அற்ற ஜீவன்களுக்காக அளித்தே தீர வேண்டும். இது ஒரு கட்டாயக் கடமையாகும். துன்பம் வசதியீனம் என்பன பொதுவான இடையூறுகள் என்பதை நாம் அறிவோம். தொண்டு செய்யப் புறப்பட்ட வர்கள், கண்டு கொள்ளும் இடையூறுகளை தடைகள் எனக் கருதமாட்டார்கள்.
மிருகங்கள் கூட நன்றாய் இணைந்து அன்போடு உணவு உண்கின்றன. ஆனால் மனிதர்களில் சிலர் இருக்கும் உணவுப் பொருட்களை பதுக்கி வியாபாரம் செய்கின்றார்கள். உணவு என்பது ஒரு ஜீவாதாரமான விடயம் என்று உணர்ந்தும் கூட, மக்கள் பிரச்சனையில் ஆதாயம் தேடுபவர்களை என்ன செய்வது என்று விட்டு விட முடியுமா? கரிசனையற்றவருக்கு மனித உருவம் எதற்கு?
இன்று மக்களுக்கு ஆடம்பர உணவு வகைகளே வேண்டும் என்கின்ற நிலையை விடுத்து அனைத்து மக்களுக்கும் உரிய போஷாக்குள்ள, எளிய உணவுஅளித்த லுக்கான நடைமுறைகள் பேணப்படல் வேண்டும். "பசி” -84 -
 

காதலும் கடமையும் என்கின்ற சொல் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். பசியால் யாசிப்பது இனி வேண்டாம்.
மிகப்பெரிய துன்ப வடுக்கள் என்ன? குழந்தையின் பசிக்கான "அழுகை”, சிறார்களின் உணவைப் பார்த்தும் ஏங்கும் "கண்கள்" முதியோரின் உணவு தேடலுக்கான ஆற்றாமையினை வெளிப்படுத்தும் "முனகல்கள்" இவை எல்லாமே, பூமித்தாயை வருத்தும் வடுக்களாகும்.
நாம் கொடுப்பதன் பயன் எம் சந்ததிக்குப்போய்ச் சேரும் என்று முதியோர் சொல்வார்கள். நாம் செய்யும் சாதாரண வழங்கல்களை விட பசிக்காககொடுக்கும் கொடைகளே இன்றைய அவசியமான தேவையாகிவிட்டன. கொடுத்தவன் கெட்டதுமில்லை வழங்காதவன் வாழ்ந்தது மில்லை.வாழ்ந்தும் உயர்ந்ததுமில்லை.
இயற்கை சீற்றமடைவதாகச் சொல்கின்றார்கள்.
மானுடதர்மம் நேயம் செத்தால்தான் இவை நடைபெறும்
என்று சான்றோர் சொல்லி வலியுறுத்தியிருக்கின்றனர்.
பூமித்தாய் தன் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால்
ஒட்டுமொத்த உலகையே உலுப்பியெடுத்துவிடுவாள்.
எவராவது பசியுடன் இருப்பதை அவள் அனுமதிக்கவே LDirl" Lr6st.
தினக்குரல்
(ஞாயிறு மஞ்சரி)
5-10-2006
- 85

Page 45
பருத்தில்i.dல. ஆலிவரன்
தாற்றுதல் ஏற்புடையதன்று
(தூற்றுதல் என்பது,"பழிசுமத்துதல் போன்றதாகும். தீயோரைக் கண்டால் விலகுதலே உத்தமம். அவர்களுடன் மனஸ்தாபப்பட்டுத் தூற்றித் திரிவதால் பயன் ஏதுமில்லை. பகைமைதான் வளரும். மற்றவன் பலஹினத்தை அறிந்து அதனை ஆயுதமாகக் கொள்வது தமது சுய நலத்திற்காகக் கையாளும் தந்திரோபாயம்தான். "முகத்திரையைக் கிழிக்கின்றேன் பார்" எனக் கூறி தனது முகத்தையே கோரப்படுத்துதல் நகைப்பிற்குரிய முட்டாள்தனமானதாகும். பேச்சுக்கள் என்பது வெறும் சொற்கள் அல்ல. கூரிய வலிமை கொண்டது. "நா" எமக்கு சில சமயம் "நோ"வைத்தரும். நாம் இனிமையோடு பேச எண்ணினாலே நாம் நல்லன செய்ய அதுவே கட்டளையும் இடும். என்றுமே தூற்றுதல் ஏற்புடையது \அல்லவே அல்ல.
தூற்றுதல் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்புடையதன்று.
தூற்றுதலுக்குள்ளானவனைவிடத் தூற்றுபவனே ஈற்றில்
வேதனைகளுக்கு வேண்டப்பட்ட விருந்தாளியாவான். எடுத்த
எடுப்பிலேயே அடுத்தவனைப்பற்றித்தொடுக்கும் கணைகள்,
அதே வேகத்தில் தொடுத்தவன் மீது வீழ்ந்து வெடிக்கப்
- 86
 
 
 

காதலும் கடமையும் படும். ஆனால் இது உடன் விளைவுகளை செய்யாது என நினைப்பது மடமை. உள் நின்று உடைக்கும். அடுத்த வனைத்துற்ற எமக்கேது உரிமை?
தூற்றுதல் என்பது பழி சுமத்துதல் போலாகும் என்பார்கள். ஒருவன் கெட்டவன் என்று நாம் கருதினால் விலகிச்செல்லுதலே உத்தமமான செயலாகும். எமது பேச்சுக்களால் நாமே புதிய வினைகளை திணித்து ஏற்றுக் கொள்ளலாமா?
ஒருவரைக் கடிந்து பேச ஆரம்பித்ததும் சற்று நேரத்தில் எம்மை அறியாமலே நாம் எமது நிலையை மறந்து கோபத்தின் உச்ச நிலைக்கும் செல்லும் நிலை ஏற்படலாம். மனிதனைக் கோபம் ஆட்கொண்டதுமே பேசும் வார்த்தைகள் உண்மையின் பார்வையில் விலகிக் கண்ட, கண்ட சொற்பிரயோகம் செய்ய ஆரம்பிக்கப்படுகின்றன. இந்நேரத்திலேயே வார்த்தைகள் தூற்றுதலாக மாறிநேற்று வரை நண்பராக, உறவினர்களாக இருந்தவர்களையே மாற்று மனிதனாக, அவர்களாகவே ஏற்றுக் கொள்ளும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளுகின்றனர்.
எவரால் தூற்றுதல்களுக்கு உட்பட்டாலும் அது பற்றிச் சிரத்தை காட்டாதிருப்பது தூற்றுதலுக்குள்ளான வரின் மனோபலத்தைக் காட்டுவதாக அமையும்.
-87 -

Page 46
கருத்தியூர்.அல.அபிந்தைக்
0. திட்டுதல்
() கடிந்து பேசுதல்
9 விமர்சித்தல்
போன்ற அம்சங்கள் ஒருவரின் மீதான உரிமை காரணமாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல் உருப் பெறுகின்றன. பிள்ளைகளைப் பெற்றோரும், மாணவர்களை ஆசிரியர்களும், நண்பர்களிடையேயான பரஸ்பர உரையாடல்களும் "அவதூறு” என்கின்ற பதத்தினுள் அடங்காது. நல்நோக்கத்துடன் பேசுபவன் எவர் மனதையும் உறுத்தி வேதனையாக்கமாட்டான். சில உண்மைகளை உணரவைக்க வேண்டப்பட்டவர்கள் தொடுக்கின்ற சொல் அம்புகள் எம் செயல்களை நல் வழிப்படுத்துவதனால் அதனை நாம் ஏற்போமாக!
நல்ல விமர்சனங்கள் தூற்றுதல்கள் அல்ல. அவர்க ளின் செயல்பாடுகளை உயர்த்த வல்ல விமர்சனங்களைச் சம்பந்தப்பட்டவனே ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும். காழ்ப்புணர்வு காரணமாக எழுதப்படும் சொல்லப்படும் கருத்துக்கள். விமர்சனம் அல்ல.
ஒருவர் "வசைபாடுதல்” என்பது, தனது இயல்பை வெளிப்படுத்துகின்றார் என்பதாகும். இவ்வார்த்தைகள் ஆழமாக வேரூன்றி விடுவதானால் ஏற்படும் வேதனைகள் சொல்லி அடங்குமா? என்னதான் ஆதாரங்களைக் கோர்த்து மற்றவர்களைச் சினமூட்டுவதனால் மட்டும் நியாயம் உடன் கிடைத்து விடுமா? சொல்ல வேண்டிய
− - 88
 

அதனும் கடமையும் வற்றைச் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லவேண்டும். உணர்க! மற்றவனின் வடுவை, பலஹினத்தை அறிந்து அதனை ஆயுதமாகக்கொள்வது என்பது தமது சுய நலத்திற்காகவே கையாளும் தந்திரோபாயம் தான். "முகத்திரையைக் கிழிக்கின்றேன் பார்” எனக் கூறி தனது முகத்தையே அவலட்சணமாக்குதல் நகைப்பிற்குரிய முட்டாள்தனமேயாகும்.
சிலருக்கு எப்படிப்புத்தி சொன்னாலும் புரிய மாட்டேன் என்கின்றதே, ஒரு திட்டுத் திட்டினால்தான் மனுஷன் வழிக்கு வருவான் எனக் கூறுபவர்களும் உளர். "படி. படி” என்றால் படிக்கமாட்டான் கடிந்து பேசினால் தான் எழுந்து வந்து படிக்கின்றானே" எனச்சொல்லும் பெற்றோரும், "கொடுத்த கடனை திருப்பி எடுக்க முடிய வில்லை நடந்து, நடந்து நொந்துவிட்டேன், கடிந்து பேசினேன் தந்துவிட்டான்"என்று சொல்பவர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். எல்லா நேரத்திலும் நாம் சொல்லும் வார்த்தைகளின் மென்மையைச் சிலர் உணர்கின்றார்கள் இல்லை. அதனைப் பலவீனமாகக் கொண்டு. மற்றவனை முட்டாள்கள் ஆக்குபவர்களும் உண்டு அல்லவா?
பேச்சுகள் என்பது வெறும் சொற்கள் அல்ல. கூரிய வலிமையுள்ளது.நா சிலசமயம் எமக்கு நோவைத்தரும். அதுவே இனிமையோடு உரைசெய்தால் நாம் நல்லன செய்யக் கட்டளையும் இடும்.
-89

Page 47
கருத்திழ்கால ஒலிவரன்
ஒருவனை, வெறுப்பேற்றி உருமாற்றுவது எமது வேலையே அல்ல. சரியான பாதையில் செல்ல வலுவூட்டும் சொற்களைப் பிரயோகிக்க நாம் பிரியப்படல் வேண்டும். அவதூறு என்பதே, வீண்பழி, குற்றம் சுமத்துதல் என்பதனை அறிந்துகூட எதிரில் நிற்பவனின் மனஇயல்பு, உடல் நிலை தெரிந்தும், விஷம் எனத் தீண்டும்படி பேசினால் என்ன நடக்கும்? கண்டபடி பேசுபவன் கஷ்டமுறு
6T60.
நல்லவன் மீது சுமத்தப்படும் பழியினால், அவன் வெகுண்டெழுந்தால் அதன் பலாபலன், பெரும் மலை யையே மடித்து எறியும் உக்கிரத்திற்கு ஆளாவான். இந்தக் கோபத்தினால், பழி சுமத்துவன் மட்டுமல்ல, அவனைச் சார்ந்த அப்பாவிகளும் பெரும் துன்பத்திற்கு ஆளாவ துண்டு. அநேகமான குற்றச் செயல்களை ஆராய்ந்தால் அவை எல்லாமே அவதூறு பழிச்சொல்லால் எழுந்த எதிர் விளைவுகளே என அறிந்து கொள்ளலாம். உணர்க!
↔ வஞ்சகம்,
() காழ்ப்பு
() உள்நோக்கு.
இவைகளுடன் ஒன்றித்தவர்கள் பாவத்திற்கு அஞ்சு வதில்லை. எடுத்ததெற்கெல்லாம் கொடும் நஞ்சை ஊட்டத் தலைப்படுவார்கள். ஆனால் இவர்கள் கூறும் காரணங் களோ சமூகத்திற்குத் தாங்கள் செய்யும் மாபெரும் கடமை எனக்கூறிக் கொள்வார்கள்.
-90 -
 

காதலும் கடமையும்
எனினும் உங்களைச் சீண்டி வேதனைப்படுத்த ஒருவர் முனைந்தால், எதிர்வாதம் செய்தால் மட்டும் நாம் அவரை வென்றுவிட முடியாது. எங்கள் செயல்களின் தூய்மைத் தன்மையினால் மட்டுமே சமூகத்திற்கு நல்ல பதிலை அளிக்க முடியும் உள்நோக்குடன் ஒருவன் பழகுவ தைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தினை நாம் பெற்றேயாக வேண்டும். தீயோரை ஆராயமல் கண்டபடி அவர்களைப் புகழ்ந்து பேசினால் அதனையே அவர்கள் துணை எனக் கருதி தொடர்ந்தும், இடர்மிகுந்த செயல்களிலேயே புலன் களைச் செலுத்துவார்கள் "ஐயாவே சொல்லிவிட்டார். நீ என்ன சொல்ல" எனச்சில சமூக விரோதிகள் தமது துர்ச் செயலுக்கு ஆதாரம் கோர்ப்பது சர்வ சாதாரண நிகழ்ச்சி யாகிவிட்டது.
அதேசமயம் நாம் ஆராயமலே யாரோ ஒருவர் சொன்னதை ஏற்று நல்லவர்களைக்கூடச் சந்தேகம் கொள்கின்றோம். ஒருவனைப் புகழும் போதும் அதே சமயம், ஒருவன் மீது எந்த அபிப்பிராயம் கொள்வதற்கு முன்பும் தீர ஆலோசித்த பின்னரே முடிவுகாண வேண்டும். “அடடா இந்த நல்லவரை நான் கண்டபடி” பேசிவிட்டேனே. இதனால் அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும். "என்று மன வேதனையுடன் பேசுபவர்கள்” கொஞ்சம் உணர்ந்து பார்க்கவேண்டும்.
எமது கண்டனங்களால் ஒருவன் பட்ட வேதனை களை நாம் மீட்டு எடுக்க முடியுமா? பட்ட காயம் உடலில் -91 -

Page 48
பருத்தியூர்.அல, ஒலிவரன் மீது அல்ல. உள்ளத்தினுள்ளே ஊடுருவி விடும் அல்லவா? "பேசுமுன் யோசி" என்போர் பெரியோர். புரிந்துகொள்க! தாங்களே நேர்மையானவர்கள் எனக் காட்டுவதற்காகவும், சமூகத்தில் விசுவாசம் மிக்க ஒருவனாக தம்மை உயர்த்தி நிற்பதன் பொருட்டும் தூற்றுதலை ஒரு கருவியாகக் கொண்டுள்ள கொடியவர்கள் செயலை என்ன என்பது? மற்றவரைத் தாழ்த்தித் தரம் குறைத்து அடிக்கடி பேசுவ தால், கொடு வினையைத் தேடுபவர்கள் அவர்களேயாவர். தங்கள் பதவியைக் காப்பாற்றுவதற்கும், ஏனையவர்களைக் கவிழ்ப்பதற்கும், காட்டிக்கொடுத்து நல்ல பெயர் வாங்க நினைப்பது ஈற்றில் ஆபத்தை இவர்கள் விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.
அரசியல்வாதிகள் பலரும் தூற்றியே கட்சியை வளர்க்கப் பிரியப்படுகின்றார்கள். உயர் பதவிவகிப்பவர் களும், தொழில் அதிபர்கள், ஏனைய நிறுவனங்களுக்கு அவப்பெயர் வழங்குவதிலேயே முனைப்பாக இருக்கின்றா
ர்கள். பொய்யைக் கூறி மக்களை ஏய்த்துத் தலைவர்களா
கலாம் என்றும், அதுவே நிரந்தரதீர்வு என எண்ணும் தலை வர்கள் என்று சொல்லப்படுவர்களால், எந்த நாடும் உருப் பட்டு வலுப்பெறப்போவதில்லை.
“நல்லன செய்யப்புறப்பட்டு அது தோல்வியில் முடிந்து விட்டது. எனவே நான் சமூக விரோதி ஆகிவிட்டேன்” என்று ஒருவன் சொன்னால் ஏற்றுக்கொள்ள
முடியுமா?
-92 -
 

நல்லவைகளைச் செய்ய ஒருபோதும் தீய வழியை நோக்க வேண்டிய அவசியமோ, தேவைகளோ இல்ல வேயில்லை. நல்ல நோக்கத்தை அடையச்செய்ய, செய்யப் படும் வேண்டாத, அடாத செயல்களுக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது. இவை நல்நோக்கத்தை களங்கப் படுத்திவிடும்.
தூற்றுதலைத் தமது ஆற்றுகை எனக் கொண்டவர் கள் ஈற்றில், துன்பச்சேற்றினுள் அமிழ்ந்துவிடவேண்டியது
தான.
"அடஅவனா. இப்ப பெரிய மனுஷனாகிவிட்டான்? இவன் முன்னர் இருந்த நிலை எனக்குத் தெரியாதா எப்பேர்ப்பட்ட கெட்டவன், இவன் செய்யாத அநியாயங்கள் உண்டா.” என்று மற்றவன் முன்னேற்றம் கண்டு அவதூறு செய்தால் இவர்கள் அதனால் கண்ட பயன் என்ன? இப்படிச் சொன்னால் கிடைக்கின்ற நன்மைகள் ஏதாவது உண்டா? சும்மா பேசிக்கொண்டே இருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் ஏதாவது நல்ல செய்கையில் கிஞ்சித்து நாட்டம் கொண்டவர்களாக இருப்பதுவுமில்லை.
தெளிந்த மனமும், நல்நோக்கமும் நல்ல பேச்சும், மற்றவன் மன இயல்பு அறியும் திறனுடன் இருப்பவன், வாய் என்றும் பிறரை வாழவைக்க வாழ்த்துவதாகவே அமையும். கெட்டதை நினைக்க அவன் சிந்தையில் இடமேயில்லை.
- 93 س

Page 49
பருத்திழ்.வ.ைணுயிற்றுகுழர்
எம்மைச் சுற்றி உள்ளவர்கள் முகம் மட்டுமல்ல அகம்கூட சிரிக்க வேண்டும். இந்த மென்மையான அன்பினை நாம் மற்றவர்கள் மூலமும் எங்கள் அர்ப்பணிப் பான நடத்தைகள் மூலமும் வெளிப்படுத்துதல் வேண்டும். தெரியாமல் நாம் செய்கின்ற சிறு கீறல்கள் உராந்து பெருநெருப்பாக மாறிவிடக்கூடாது. அதாவது செய்கின்ற அற்பத் தவறுகள்கூட எங்களால் நடக்காது பார்த்துக் கொள்ளல் வேண்டும். எம்மால் ஒருவருமே பாதிப்படையக் கூடாது.
எங்கள் பேச்சுகள் எல்லோரையும் திருப்திப் படுத்தவும், நல்வழிப்படுத்தவுமேயாகும். நல்லதுசெய்ய எல்லா நன்மைகளுமே கூடிவரும். தூற்றுதலை எவருமே ஏற்றுக்கொள்வதில்லை. வாழ்த்துக்களையும் சகல உயிர் களைப் போற்றுதலையுமே இறைவன் தன் நெஞ்சில் நிறுத்திக்கொள்கின்றான்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 18-06-2006
- 94
 
 

காதலும் கடமையும்
துண்மங்கள் சொந்தங்கள் அல்ல! இண்மங்களே நிரந்தரமாகட்டும்!
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்வது இயலாத காரியமாக இருக்கின்றது. துன்பங்கள் நிரந்தரம் என்று மனிதர் மனம் நொந்து போகின்றார்கள். இன்பம் வந்தால் அதுவே நிரந்தரம் என்று ஆணவம் கொள்வதுமுண்டு. சஞ்சலம், சுதந்திர உணர்வைத் தகர்க்கும். வாழ்க்கையில் நடப்பவை எல்லாமே மாறி மாறி வரும் நிகழ்வுகள் யதார்த்தமானவை என்று பூரணமாக நம்புங்கள்! முயற்சி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால் துன்பங்ளை உடைத்தெறியும் மாவல்லமை பெற்றவர்களாவோம்.
துன்பங்களைக் கண்டால் ஏங்குவதும் இன்பங்களைப் பெற்றுக் கொண்டால் இறுமாப்பு கொள்வதும் வாழ்க்கை. யைச் சமநிலையில் வைத்துக்கொள்ளாத நிலையை
ஏற்படுத்திவிடும்.
- 95

Page 50
பருத்திபூர்.கால வர்ணுருதேஷ்
துன்பங்களை எவருமே விரும்பி ஏற்றுக் கொள்வ தில்லை. தானாகவே ஒட்டிக்கொள்ளும். நாமாகவே, எங்கள் அறியாமையினாலும் துன்பங்களை விலைகொடுத்துவாங்கு வதுபோல் வந்து சேர்வதுமுண்டு. இதேபோல் சந்தோஷ ங்கள் கூட எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படுவதுமுண்டு. மனிதன் தன் முயற்சியால் தன்னை உயர்த்துவதால் அடையும் மேன்மையாலும் இன்பமான வாழ்வை 960)Luj6)Tib.
எங்கள் வாழ்வில் சந்தோஷங்கள் எம்மை விட்டகலாது நிரந்தரமாகவே இருக்க வழி இல்லையா? தற்காலிகமாக வந்து போகும் இன்பத்தால் மன நிறைவு வந்துவிடுமா? சந்தோஷங்களையே கண்டவன் சற்றுத் தொய்வுநிலையில் துன்பம் வந்தாலேபோதும் அவன் உடைந்தே போகின்றான். தொடர்ந்தும் கஷ்டங்களைச் சந்தித்தவன் கூடச்சற்று இளைப்பாறுதல் பெறுவதுபோல் ஏதாவது நல்ல விஷயங் கள் நடந்தாலே போதும் தன்னையே மறந்துபோய் விடுகின்றான்.
மனிதன் தன்னை உணர்ந்து ஆன்ம வைராக்கி யத்தில் நிலைபெற்றால் அவனை எந்த சக்தியாலும் அசைத்திட இயலாது. தனக்குள் களிப்பினை ஏற்படுத்தா தவன் புற உலகில் இருந்து தேடும் சலசலப்பான தோற்றங் களில் நிரந்தர அமைதியைக்கண்டு விட முடியாது.
س- 96 -
 

“உங்களை நீங்கள் சந்தோஷமூட்டுங்கள்" அதற்காக எல்லா மனித ஜீவன்கள், சுற்றுப்புறத்தில் உங்களை நம்பி வாழும் மிருகங்கள், ஊர்வன. பறப்பன எல்லாவற்றையும், ஏற்றுக்கொண்டு அன்பை வாரி வழங்குங்கள். அப்புறம் என்ன சந்தோஷங்கள் உங்களைத்திக்குமுக்காடவைக்கும்.
ஒரு சிறு பருக்கை உணவு கீழே சிந்தினால் அது எறும்புகளுக்குப் போய்ச்சேரும். மிகுதி உணவைக் காக்கை க்கும், குருவிக்கும் கொடுங்கள். பச்சை இலைகளைப், புற்களை, பசு, மாடு ஆடுகளுக்கு வழங்குங்கள். இன்பம் உங்களுக்குள் சுரக்கும். தாராளமாக அனுபவியுங்கள்.
நீங்கள் விரும்பாத விஷயங்கள் உங்களைச் சுற்றி நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவை பொது நீதிக்குப்புறம்பானதாக இருந்தால் தீரமுடன் போரா டுங்கள். விரும்பாத விஷயங்களுக்கு நீங்கள் பயந்தால் அது உங்களைப் பலவந்தமாகக் கட்டியணைத்து முத்தமிடும். நீங்கள் எழுந்து நின்றால் விட்டோடிவிடும், இன்றேல் காலடியில் வீழ்ந்து மண்டியிடும்.
எதிர்பாராத துன்ப நிகழ்வுகளை ஏற்றேயாகவேண்டும். அதன்பின் அதற்கு மாற்று வழியைத்தேடவேண்டும். எமக்கு வேண்டப்பட்டவர்கள் மரணமடைந்தால் என்ன செய்வது? மரணத்தை நாம் தடுக்க முடியுமா? எவர் மரணத்தோடும் உங்கள் மனதை மடிந்துபோகச்செய்யாதீர்கள்!
- 97

Page 51
aருத்தியூர்.அல.அரவரன்
எமக்குப் பிடிக்காமலே ஒரு திருமணம் நடந்து முடிகின்றது."எனக்கு இதில் இஷ்டமில்லை” என்றுசொல்லி திருமணமானவர்களின் கரங்களைப்பிரிக்க எத்தனிக்க லாமா? சில வேளை எங்களுக்குப் பிடித்தவைகூட பல தவறாக அமைந்துவிடலாம். எங்கள் கூற்று எங்களுடையது அதுவே சரி என்றும், அல்லது பிழை என்றும் முடிவு செய்ய வேண்டியது "காலம்” தான். நாம் மட்டுமல்ல பிறர் கூற்றுக்களும் சரியாக அமையலாம். அத்துடன் "காலம்" தான். பல முடிவுகளை அனைவருக்கும் தருகின்றது. விதண்டாவாதத்துடன் நடந்து கொள்வது, குழப்பத்தை உள்ளத்தில் ஏற்றும். இஷ்டத்திற்கு நாம் வாழந்தால் கஷ்டம்
தான.
நாம் எல்லோருமே உலகியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தக் காலத்து இளைஞர்களின் மனோ இயல்பு புரியாமல் இன்னமும் வயதுமுதிர்ந்தவர்கள் தங்கள் வயதுடன் அவர்களை இணைத்து ஒப்பீடு செய்ய முடியுமா?
"நான் இப்படியாக இருக்கின்றேன் என்னைப்போல் நீயும் இருந்தால் என்ன” என்று, சின்னஞ் சிறுவனுடன் தர்க்கம் செய்யலாமா? நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ளும்படி பேசுவதே புத்திசாலித்தனமானது. அவை களை எடுத்துச் சொல்லும்போது, நல்ல விடயத்திலேயே வெறுப்பு ஏற்படும்படி சொல்ல வேண்டாம். சொல்லும் விதத்திலேயே கருத்துக்கள் உட்புகும்
= 98 سے
 
 

பக்குவநிலையில்லாத முதுமையினால் ஏதுபயன்? வயது கூடிய முதுமையை நாம் ஒரு உயர் தகைமையாகக் கொள்ள வேண்டும். நீண்ட காலம் வாழ ஆசைப்படும் மனிதர்கள், கிழவன், கிழவி என்று யாராவது சொன்னால் கோபம் கொள்ளக்கூடாது. பலருக்குத் தமது முதுமையைச் சுட்டிக்காட்டினால் கோபம் வருகின்றது. ஆனால் தமது அனுபவத்தை வயதை மட்டும் மற்றவர்கள் கெளரவித்தே யாக வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.
அத்துடன், நீண்டகாலம் வாழ விரும்புபவர்கள் கிழவன், கிழவியாக வர விரும்புவதுமில்லை, என்றும் இளவயதுடனேயே இருக்கப் பிரியப்படுகின்றார்கள். வயதைக் குறைத்தே சொல்லிவிடும் பலரை நீங்கள் பார்த்தி ருப்பீர்கள்.
எந்த வயதிலும் மனிதன் சந்தோஷமாக நிறைவுடன் வாழ முடியும் தங்கள் உடல் இயலாமை குறித்து, தங்கள் மீதே வெறுப்பு கொள்ளுதலை விடுத்து, தங்கள் நெஞ்சத் தை தளர்ச்சியடையாது வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தேக நிலை பாதிப்படைந்தால் மன இயல்பும் பாதிப்படைவது இயல்பு. எனவே தமது வயதுக்கு உகந்த வண்ணம் தங்கள் தேகத்தை வைத்துக்கொள்ள சில கட்டுப்பாடுகள் வைத்தும் அதீத ஆசைகளை விட்டொழித்தே யாக வேண்டும். இவையெல்லாம் சிரமமான காரியங்கள் என எண்ணற்க!
- 99

Page 52
பருத்திy.aல. லுயிரவநாதன்
இயற்கையாகவே இறைவன் வயது ஏற, ஏற பக்குவ நிலையைப் படிப்படியாக வழங்கிக்கொண்டுதான் இருக்கின் றான். வாலிபவயது எண்ணங்கள் பராயம்முதிர்ந்த பின்னர் வேறுவிதமாக அமைகின்றன. அப்போது இறை நாட்டம், பக்தி, அமைதி ஏற்படுவது இயற்கை, இந்த நல் இயல்பு களை மீறும் முதியவர்களை என்ன என்பது? தங்கள் வாழ்க்கைக்கான அமைதியைத்தேட அவர்கள் முனையாத வரை அவர்களே தமது சுகானுபவங்களை தகர்த்த வர்களாவர். அமைதி, சாந்தம், கட்டுப்பாட்டை, விஸ்தார மாக்கி, புதிய இளைய உலகத்து மாந்தர்க்கு, புத்துணர்வு ஊட்டும் பணியில் முதியோர் ஈடுபட்டால், இன்ப வாழ்வு ஒவ்வொருவர் இல்லத்திலும் அரசோச்சுமல்லவா?
தினம் தோறும் அறுசுவை உண்டு வருபவன், மிக எளிமையான உணவில் இருக்கும் சுவையை என்ன வென்றே தெரியாதவனாகின்றான். காலப்போக்கில் நன்றாக, உணவு உண்டு களித்தவன் கூட அந்த வாழ்க்கையில் கூடச் சலிப்பு ஏற்படலாம்.
என்றுமே நிரந்தரமான இன்பம் எதுவெனத் தேடிப் பிடிக்க மனிதன் தயங்குகின்றான். எது சுலபமாகக் கிடைக் கின்றதோ அதைச் சிக்கெனப் பிடிக்கின்றான். மேலும் யாராவது ஒருவர் அனுபவிக்கும், அற்பமான சுகங்கள் எல்லாமே தனக்குக் கிடைத்ததை விட மேலானது என எண்ணுகின்றான். இந்த நிலையில் உண்மையான, நிரந்த சுகங்களை எங்கே தேடுவது?"எனக்கு மட்டும் ஏன் துன்பங்
- 100
 

கள் துரத்துகின்றது" என்று அடிக்கடி பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். முதியவர் ஒருவர் சொன்னார் "எவ்வ ளவோ கஷ்டப்பட்டுப்பிள்ளைகளை வளர்த்தேன். இப்போது வயதுவந்த பெண் பிள்ளைகளுக்குத் தக்கபடி திருமணம் செய்து வைக்க வேண்டும். தொடரும், பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பேன்", என்று சலிப்புடன் கூறிக் கொண்டார்.
ஒருவரது பிரச்சனைகளை வெளியில் இருந்துபார்த்து விமர்சனம் செய்வதே எமக்குப் பழக்கமாகிவிட்டது. ஒருவர் கஷ்டம் அவருக்குத்தான் புரியும் உண்மைதான். குடும்பத் தைச் சுமக்கும் குடும்பஸ்தரின் கஷ்டமான பிரச்சினை எவ்வளவு வியாபகமானது?
வாழ்க்கையை ஒருவன் சுவைப்பதற்குக்கூட அவன் துன்பங்களுடன் சீவிக்க வேண்டியிருக்கின்றது.
மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள பலர் சவால்களை சமாளித்து வாழ்ந்தமையால் கடைசிக்காலத்தில்களிப்புடன் வாழ்ந்து வருகின்றாரகள். மேலும் ஒருவன் பட்ட சிரமங் களின் பயன் அவன் இறந்து போனபின் அவனது வம்சத்தி னால் அனுபவிக்கப்படுகின்றது. எனவே பட்டசிரமங்கள் என்றுமே சரிவைத்தராது, மாறாக வீறுடன் அவனை அவன் சந்ததியை வாழவைக்கும்.
நேர்மை நியாயத்தன்மையுடன் வாழ்ந்தவர்கள்
- 101 -

Page 53
மருத்திற்.oல. விதைத் தங்கள் கண் எதிரே தங்கள் குடும்பத்தின் மேன்மை கண்டு அடையும் திருப்தி நிலை அவன் ஆன்மா காணும் இன்ப நிலைதான். ஒரு கணப்பொழுதிலாவது "உண்மையான சந்தோஷம் என்பது "வாழ்ந்த வாழ்வில் சத்தியம் தூய்மை யுடன் வாழ்ந்த அந்தப்பொழுதுகள் தான்". இந்த சில வினாடிகளே தொடர்ந்தும் அறவாழ்வில் ஒருவரை இட்டுச் செல்கின்றது. நல்நெறியுடன் வாழ்ந்தமையினால் பெற்ற மகிழ்ச்சியை அனுபவித்த எவருமே தீய வழிக்குச் சென்றிட ஒரு பொழுதும் நாட்மாட்டார்கள்.
எல்லோருக்குமே “காலங்கள்” பொதுவானவை. காலத்தைத் தனக்காகப்பயன்படுத்தாமலும் மற்றவர்கள், உரிய முறையில் காலத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்ப போல். கயமைத்தனம் வேறில்லை. தனது உயிரைவிடக் கழிக்கின்ற காலத்தின் பெறுமதி உயர்ந்ததே. நீண்டகாலம் வாழ்ந்து வருவது எவ்வளவு கடினமானது என்கின்றோம். ஆமையும் யானையும் திமிங்கிலங்களும் நீண்ட காலம் வாழ்கின்றன. அவைகள் தங்கள் வாழ்நாட்களில் தங்கள் இனத்திற்குரிய இயல்புப்படி வாழ்ந்து மடிகின்றன. எந்த உயிரினங்களுமே தேவையின்றி உருவாக்கப்பட்டதல்ல.
மனிதனுக்குரிய இயல்பு என்ன என்று உணராம வாழ முடியுமா? அடிமையாக வாழ்வதற்கே சிலர் மனமு வந்து முன்வருகின்றார்கள். எஜமானாக வாழ்வதை விட இந்த அடிமை வாழ்வே பரவாயில்லை என்று கருதி வாழ்கி ன்றார்கள்."நிஜமான நிலையான வாழ்வு" என்பதுதன்னைத் - 102 -

காதலும் கடமையும் தான்கட்டி ஆளுவது என்பதாகும். தன்னை உணர்ந்து, தன் உணர்வுகளைச் சீராக்கி, ஒளியூட்டினால் எவர்க்கும் கிட்டாத பெரும் பேறு கிடைத்து விடும். வெளிப்பூச்சு ஆடம்பர வாழ்வு கூட ஒரு அடாவடித்தனமான கோமாளிக் கூத்துத் தான் உணர்வோம்! , ,
"கஞ்சியைக் குடித்தாலும் காந்தர்வன் போல் வாழு" இந்த உல்லாசமான களிப்புநிலை நடிப்பாக அமைதல் கூடாது. இந்த வாழ்வில் நான் நிம்மதியாக இருக்கின்றேன். என உளப்பூர்வமாக உணர்ந்து, எம்மை நாமே நேசித்தால் வேறு சந்தோஷம் இல்லை. இதுவே நிரந்தரமான இன்பம் என்பதில் ஜயமும் இல்லை.
9 சலனங்கள், சபலங்களைச் சிரசில் ஏற்றாமலும், வரட்டுக் கெளரவம், விதண்டாவாதத்தைப் பேசாமலும் இருந்து பாருங்கள். சுகம் தெரியும்.
9 உங்கள் கொள்கைகளைப் பிடிக்காதவர்களுடன் வாதம்
செய்யாதீர்கள்.
9 பிடிக்காத பேச்சைக் கேட்க நேர்ந்தால், அந்த இடத்தை
விட்டு விலகிவிடுங்கள்.
9 உங்களை மதிக்காத இடத்தில் கால் பதிக்காதீர்கள்.
பெரும் சபையில் முதல் ஆசனத்தில் இடம் தேடா தீர்கள்.
- 103

Page 54
கருத்திபூர்.அல. ஆயிற்றுதாரர் 9 கொடுத்ததைச் சொல்ல வேண்டாம். கொடுக்க
இயலாத விட்டாலும் நல்ல வார்த்தைகளைத் தொடுத்து வாழ்த்துங்கள். 9 அடுத்தவன் வளர்ந்தால் ஆசீர்வதியுங்கள். உங்களை இறைவன் பிறரிடம் நீங்கள் யாசிக்க முடியாத செல்வந்தனாக்குவான்.
என்றும் களிப்புடன் வாழ்ந்துகொள்ள எத்தனையோ உபாயங்கள், மார்க்கங்கள் இருக்கின்றன. ஆனால் நாமோ கிடைக்கும் சொற்ப சந்தோஷங்களுடன் இருக்கும் வேலைகளை மறக்கின்றோம். சந்தோஷத்தினால் அதன் லயிப்பினால் களைத்து மீண்டும் அதிலிருந்து அடுத்த
பணிக்குச் செல்லாமையினால் தொடர்ந்தும் நிரந்தர
அமைதி ஆனந்தத்தை அடைவதில் உணர்வு அற்றவர்களா
கின்றோம்.
திருவிழாவிற்குச் செல்கின்றோம். விடியவிடிய ஒரே அமர்க்களம். அந்தக் கேளிக்கையுடன் புலன்கள் செல் கின்றன. அதே சமயம் கோவில்களில் சென்றும் வழிபாடு செய்தலை பலர் மறந்தும் போகின்றார்கள்.சரி விழாமுடிந்து வீடு சென்றவர்கள். அடுத்த நாள்பூராவும் தூங்கி வழிகின் றார்கள். புது மனிதனாக மீண்டும் இயங்க மறுத்துவிடுகின்
றார்கள். முக்கிய அலுவல்களைத் தாமாகவே முடக்குகின் றார்கள். இதுதான் சோம்பேறிச்சீவியத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் பணியாகிவிட்டது. இவை யெல்லாம் சின்னச் சமாச்சாரங்களே அல்ல. எம்மை நாம் கீழே தள்ளும் விவகாரம்!
- 104
 
 

. அதனும் அம்ை எந்த நிலைவரினும் அந்த நிலையுடன் மட்டும் புகுந்து விடாது துன்பத்தோடு துன்பமாய் சங்கமிப்பதும் இன்பமே கதியென செய்யவுள்ள கடமைகளை மறப்பதும், நிரந்தர நிம்மதியான வாழ்விற்கான வழியேயல்ல. உணர்க!
"கடமை செய்தலே வரம். அதுவே தவமும் கூட" சிலர் ஒழுங்காக நேர்மையாக நாலுகாசு சம்பாதித்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிலருக்கு இது பொறுக்காது. சில ஆசாமிகள் வேண்டுமென்றே வந்து அவருக்குத் தெரியாத தொழிலில் ஆசை காட்டுவார்கள். இவரும் இவர்கள் பேச்சை நம்பி தெரியாத தொழிலில் இறங்கி முடிவில் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெரு விற்கே வந்து விடுவார்.
ஒருவருமே தங்களுக்குரிய பிரதான தொழிலை எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடக்கூடாது. புதிய தொழில்களை ஆரம்பித்தாலும்கூடத் தம்மை இதுவரை காலமும் காப்பாற்றிய மூலாதாரத் தொழிலை விட்டு விடுவது தமது வாழ்வின் மூலவேரையே கெடுத்தமாதிரித் தான் முடியும்.
வேகத்துடன் செயல்படுகின்றேன். என்று விவேகத் தைக் கைவிட்டு செயல்பட்டால் சோகத்துடன் வாழவேண்டிய நிர்ப்பந்தமே ஏற்பட்டுவிடும். தன்னை நம்பாமல் பிறர் விவேகத்தை சாதுர்யத்தை மட்டுமே நம்பி நாம் வாழ்ந்து விடமுடியுமா?
- 105

Page 55
பருத்திழ்.வ.ை அரிஹரன்
"நான் யார்” என்று யாராவது சொல்லித்தான் தெரிய வேண்டியுள்ளது. பலருக்குத்தங்கள் பெருமை அருமைகளே புரியாமல் போய்விட்டது."நீயார்” என்று கேட்டால்"என்னை அறிந்து என்ன ஆகப்போகின்றது” என்று கேட்பவர்கள்தான் இருக்கின்றார்கள்.
தன்னை உணராமல் தன் சக்தியை அதன் செயல் திறனை உணராமல் இருக்கலாமா? எங்கள் வாழ்வின் நலன் எங்களால்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். அதுவே நித்ய சந்தோஷங்களுக்குச் சொந்தக்காரராக எங்களை அமைக்கும் அறிக.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)
17.07.2008
- 106
 

அதனும் கடமையும்
பெண்
மனித குலத்தைத் தன்கருவிலே உருவாக்கி அதனைப் போஷித்துத் தன்னை வருத்திஅவனிக்கு அளித்திடும் புனித தெய்வம் பெண்.புதுப்புது ஜடப்பொருள்களைக் கண்டுபிடிப்பது பற்றிப்பெருமை பேசுகின்றோம். அறிவும், உணர்வுமிக்க உயிர்களைப் படைக்க, இறைவன் தனது கருமத்தைப் பெண் மூலம் செய்வித்தபடியே இருக்கின்றான். மென்மையான, குளுமையான, மெல்லிய பூக்களாக இருக்கும் இவள், தீமைகளைக் கண்டு பொங்கும் போது அனல் கக்கும் எரிமலை ஆகக் குமுறுகின்றாள். பெண்களின் நியாயமான கோபம் அகங்காரம் அல்ல. மனத்திண்மையுள்ள மாதரசிகள் இந்த மேதினிக்கு ஆதாரம்.
பெண் மனம் ஆழமானது, என்பார்கள். அவள் அன்பு ஆழமானது, தியாக உணர்வு ஆழமானது. காதலும், பரிவும், பாசமும் மிக, மிக ஆழமானது. தனது குடும்ப நலனிற்கும், சமூகத்திற்குமான இவள் நல்லியல்புகள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். -
இருப்பினும், பெண்ணை, வலிந்து இம்சைப் படுத்தினால் துரோகமிழைத்திட்டால், சீறிடும் புயலாவாள். - 107.

Page 56
பருத்திபூர்.40.அறிவருந்தர்
பெரும் அலையாய் கொதித்தெழுவாள். ஆழமான இவள் மனவலிமை முன் ஆழ்கடலும் பெரும்புயலும் அடங்கி மண்டியிடும். கருணையும், மன்னிக்கும் இயல்புமுடைய
பெண்ணே, அநியாயங்களைக் கண்டால் வெகுண்டெழு
வாள், சுட்டெரிப்பாள். இது பெண்ணின் இயல்பு இதனைத் தப்பு எனச் செப்ப முடியுமா?
ஒரு பெண்ணின் நியாயமான கோபத்தை அகங் காரம், அல்லது கர்வம் என்று சொல்ல முடியாது. மெல்லிய உணர்வுள்ள பூப்போன்ற பெண் உள்ளத்தினுள்ளேயும் உருகாத தன்மையுடைய பெரும் கற்பாறை போன்ற தன்மையும் உண்டு என்பதைப் பல உலக மகா காவியங் களே எடுத்தியம்புகின்றன. இது இவள் பலம், பலவீன (8LDulo)6).
மனிதகுலத்தைத்தன் கருவில் உருவாக்கி அதனைப் போஷித்து அவனிற்கு அளித்திடும் புனித தெய்வம் இவளே!
புதுப்புதுஜடப்பொருட்களை கண்டுபிடித்து பெருமை பேசும் நவ உலகம் உயிருடனும், அறிவுடனுமான உணர்வு களுடன் இணைந்து மனிதப் பிறவியைச் சிருஷ்டிக்கும் பணியைச்செய்யும் பெண் எனும் இதன் மகத்துவத்தை என்ன என்று இயம்பிட இயலுமோ?
எனினும் பெண்களின் தியாகத்தை இவர்களின்
சிரமங்களை இன்னமும் உலகம் உள்ளபடி முழுமையாக
- 108

உணர்கின்றதா? உடல் வலிமையும் மிடுக்கும், துடிதுடிப் பும் தன்னகத்தே கொண்டதால் ஆண் வர்க்கம் பெண்ணை அடிமை எனக் கருதுவதாகச் சொல்வார்கள். பண்டு தொட்டே உலகம் பெண்களை ஆராதித்துப் போற்றிக் கெளரவித்ததாகக் கூறப்பட்டாலும்கூட இவர்களை அடக்கி ஒடுக்கும் விஷயங்களில் அன்றும் இன்றும் புதிதாக என்ன மாற்றம் வந்துவிட்டது என்பதே கேள்விக்குறிதான்!
ஆண் ஆதிக்கப்போக்கு காலாதிகாலமாக, சகலரின் மனதினுள்ளும் உறைந்து நிறைந்து அதன் வழியே அந்த குறுகிய சிந்தனையும், தேய்ந்தழிந்து போகாமல் தொடர்கின்றது. அதே சமயம் எல்லா ஆண்களுமே பெண்ணை அடிமை கொண்டதாகச் சொல்லக் கூடாது.
நாகரிகமான இந்த யுகத்தில் கூட பெண்கள், பெண் களின் உதவியுடனேயே அவமதிக்கப்படுகின்றார்கள். வெறும் காட்சிப் பொருளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள். போகத்திற்குரியவளே இவள் என்கின்றமாதிரி, மேலைத் தேய நாடுகளுடன் இணைந்து நமது நாடுகளின் மக்களும் நடந்துகொள்வதும் வேதனையோ வேதனை!
தானே அடங்கிப்போக தானே வழி சமைக்கும் துர்
பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுகின்றாள். வீட்டில் மாமி
யாரின் அடாவடித்தனத்தில் முடங்கும் பெண். தானும் ஒரு
மாமியாராக மாறியதும், தனது மாமியார் வழியில் செல்ல
முற்படும் பெண்களும் உளர். மாமிமார்களால் துன்பகர - 109.

Page 57
மருத்தியூர்.பல ஆயிரவநாதன் மான அனுபவம் பெற்ற பலர் மருமகள்மார்களிடம் அன்பு பாராட்டி நடப்பதையும் காண்கின்றோம்.
குடும்பத்தில் ஒளியேற்றி, அருள்கூட்டும் மனித உருவிலான தெய்வங்கள் எம் கண் எதிரே புலப்படுகின்ற போதும் கண்டுகொள்ளாமல் பழமைவாதம்பேசி, இவர்கள் திறமைகளை முடக்குவது என்ன நியாயம்? ஆண்டவனை எல்லோரும், எளிதாகப்பார்க்க இயலாது எனவே தன் பிரதி நிதியாகத் தாயைப்படைத்தான் என்பது ஒரு அற்புதமான கூற்று ஆகும். தாய்க்குக் கெளரவம் கொடுக்கும் உலகம் அவள் வடிவில் எந்தப் பெண்ணைக் கண்டாலும், அதே மாதிரியான மதிப்பைக் கொடுப்பதில் என்ன குறை வந்துவிட்டது? Ø 1:” ።
எல்லாப் பெண்களுமே அன்புக்கும், இரக்கத்திற்கும் அடிமையானவர்களே. எனவே நாம் எத்தரத்தாரையும் நோக்கும் விதத்தில்தான் எல்லாமே இருக்கின்றது. களங்க மற்ற எண்ணத்துடன் பார்க்கும் எல்லோருமே தங்கள் எண்ணங்களுடாக மேலான அன்பினையே பெற்றுக் கொள்கின்றார்கள். அனுசரித்து நடப்பதில் ஆண்களைவிடப் பெண்கள் மேலானவர்களாகக் கருதப்படுவதுடன் தமக் குண்டான சின்னச் சந்தோஷங்களையும் கூடப்பகிர்ந்து கொள்வதில் பரோபகாரத்தன்மையுடன் வாழுகின்றார்கள்.
தாயின் மடியில் தவழ்ந்து காதலியின் வளைக் கரத்தினுள் சிறைப்பட்டும் சுகம் காணும் காதலன், காதல் போதையின் வேகத்தில் அழகான வரிகளை அற்புதமாகச்
= 110"س
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலும் கடமையும் சொல்லிக்கொள்வான். இந்த அன்பு என்றுமே நீடிக்க வேண்டுமல்லவா? ஆரம்பகாலத்தில் உன் கரம்கொடு! இந்த உலகையே உன் கையில் கொடுப்பேன் என்றும் பேசுபவன், அதன் பின்னர் இவன் செய்யும் செயல்கள் எல்லாமே நன்றாகவா இருக்கின்றது?
"சீதனம் கொண்டு வா" என்பான், "நான் கேட்க வில்லை என் அம்மா கேட்டார்” என்று அவள்மேல் பழி சொல்வான். சரிசீதனம் கொடுத்துத் திருமணமும் ஆச்சு, அப்புறம் நடப்பதுதான் என்ன? இரண்டு மூன்று பிள்ளைகள் பிறக்கும். வீட்டில் பணப்பிரச்சனை, நோய், நொடிவந்து விட்டால், கணவன் மனைவியரிடையே சச்சரவும் அதைத் தொடர்ந்து மனைவியைத் துன்புறுத்துவதும் கவலை என் கின்ற சாக்கில் குடிப்பழக்கத்தில் அடிமையாகிக் கட்டின அன்பு மனைவியை எட்டி உதைத்துத் துரத்துதல் என்ப தெல்லாம், சில வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள்.
எல்லா வீடுகளிலும் இப்படியா நடக்கின்றது? இல்லை யே. ஆனால் எந்தத் துன்பம் வந்தாலும், அவைகளின் முடிவில் அல்லாடுவது பெண்கள் தான். பெரும் செல்வந்தர் வீடுகளிலும் சரி, ஏழை வீடுகளிலும் சரி, எளிதாகக் குற்றம் சுமப்பதற்கு ஏற்ற வாய்ப்பாகப் பெண்தான் அகப்பட்டுக் கொள்கின்றாள்.
ஆனால் இதே வேளைகுடும்பத்திற்கு ஆகாத ஆண் களும், பெண்களும் இருக்கின்றார்கள். நாகரீகமோகமும், - 111 -

Page 58
பகுத்திபூ.940.அறிவதுதல் தகாத நட்புகளால் கெட்டுச்சீரழியும் பெண்கள் பற்றிய கதை களைக் கேட்டிருப்பீர்கள். கலாசாரசீரழிவுகள் எங்குதான் நடப்பதில்லை? முன்னர் நாம் எதற்கெடுத்தாலும் மேலைத் தேய நாகரீகத்தையே குறைசொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் இன்று கீழைத்தேச நாடுகள் கூட தங்கள் பண்பாடு களை மதிப்பதாகத் தெரியவில்லை.
நடை, உடை, பாவனையில் இன்று மேற்கத்திய தேசத்தவர்கள் வெட்கப்படுமளவிற்கு ஆடைகளை உடுத்தி யும் உடுக்காமலும், திரிகின்றார்கள். தமிழ்த் திரைப்படங் களைக் குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை. அரைகுறை ஆடையுடன் நடனங்களும், ஆபாசப்பாடல் வரிகளும் கேட்கச் சகிக்காது விடினும், அதனையே ரசனையுடன் பாடல் மெட்டுகளுக்காகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் இது என்ன கொடுமை ஐயா? மகளிர் அமைப்புக்கள் இந்தக் கூத்துகள் பற்றிக் கண்டனம் தெரிவித்தும்கூட செவிடன் காதில் ஊதிய சங்குபோல் நடக்கின்றவைகளைத் தடுக்க இயலாது உள்ளது.
பெண்களைக்காட்சிப் பொருளாகக்காட்டும் அவலம் எப்போது தீரும்? முச்சந்தியில் புரட்டிப்பார்த்தால் தினசரி, சஞ்சிகைகளில் நூல்களில், சவர்க்காரஉறைகள், வீசி எறியப்படும் விளம்பரத்துண்டுகள் என எல்லா இடத்திலும் பெண்களின் உருவங்களை அப்பட்டமாக ஆபாசமாகச் சித்தரிப்பதைத் தடுக்காமல் ரசிப்பது என்ன கேடுகெட்ட வக்கிரமான ரசனை ஐயா! இதைத் தவிர கணினி ஊடகங்
- 112 -
 

காதலும் வமையும் களில் இந்த ஆபாசங்களை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் வயது வித்தியாசமின்றி உட்கார்ந்து பார்த்துக் காலத்தை யோட்டுகின்றது. பணம் புரட்டுவதற்காகக் கையாளப்படும் இத்தகைய அடாத வழிமுறைகள் பெண்களை அவமதித்து களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடாதா?
குடும்பத்தைக் கட்டமைத்து ஒழுக்கமுள்ள சமூகத்தை ஒரு தாய் ஏற்படுத்திக் கொள்கின்றாள். அவளது அரவணைப்பில், பாசத்தில் முழுகுடும்பமே சார்ந்து தங்கி யுள்ளது. கணவன் என்னதான் உழைத்தாலும், மனைவி யின் சிக்கனமான, கட்டுப்பாடான வழிமுறைகளால் தான், குடும்பம் சந்தோ ஷமாக வாழ முடியும். வீட்டில் என்ன செலவு நடக்கின்றது என்று தெரியாமலேயே பல குடும்பத் தலைவர்கள் இருக்கின்றனர். வீண் ஆடம்பரத்திற்கு அடிமை யாகாமல், பிள்ளைகளின் கல்வி, உணவிற்கு முன்னுரிமை யளிக்கும் விடயங்களில் மனைவியின் கரிசனை உணர்வு அலாதியானது.
ஒரு பெண்ணிற்கு அவள் செய்யும் வீட்டு வேலை களுக்காகச் சம்பளம் கொடுத்தால் கணவனின் மாதாந்தச் சம்பளத்திற்கு மேல் பெறுமானமான வேலைகளை அவள் செய்கின்றாள். அதே சமயம் பல மகளிர் இன்று வேலை களுக்கும் சென்று சம்பாதித்துக் குடும்ப வேலைகளையும் கவனிப்பதால் இவர்களது கடமைப்பளு, மேலான தியாக உணர்வை நாம் சற்றுச் சிந்தித்தேயாக வேண்டும். இத்தனையும் செய்யும் பத்தினித் தெய்வங்களைப் பாரா
113 -

Page 59
பருத்திபூர்.அ0.அமிர்ரர் முகமாக அவள் வலிமையில் குறைந்தவள், தங்களிலும் கீழான அறிவுத்திறன் கொண்டவள் என்று ஒருவர் வீண்வீம்பு சொல்வது சரியானது தானா?
மனிதர்கள் எவர்க்குமேயான பொதுவான பலவீனங் களான கோபம், குரோதம் சந்தேகம் எல்லாம் உண்டு. தனித்து இவை பெண்களுக்கு மட்டுமானது அல்ல, ஆனால் "சந்தேகம்” என்கின்ற விஷயத்தில் அது பெண்களுக்கே உரித்தானது என்கின்றார்கள். ஒருவர் மீது அதீதமான அன்பு பரிணமித்துவிட்டால் கூடவே சந்தேகமும் வந்து விடுகின்றது. கணவன் அல்லது காதலன் என்பவர்கள் விடயத்தில் தன்னை மட்டுமே நேயம் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமான போக்கில் மனைவியோ, காதலியோ இருப்பது புதுமையல்ல. ஆனால் இத்தகைய போக்கினால் மனம் குமுறுவது குமைவது தவிர்க்க முடியாத துன்ப அனுபவங்களாகிவிட்டன.
தவறுகளை இருசாராரும் ஏற்கும் பக்குவம் ஏற்பட்டா லன்றி குடும்பத்தில் சந்தோஷம் உருவாகிவிடமாட்டாது.
எவரையும் எவரும் அடக்கியாள வேண்டும் என்கின்ற மேலாண்மை எண்ணம் வந்துவிட்டால் அமைதியான வாழ்க்கை வந்துவிடாது. என்றைக்குமே மற்றவரை எப்படி அடக்கி, ஒடுக்கலாம் என்கின்ற சிந்தனை மட்டும் மனதில் ஒட்டிக்கொண்டால், குடும்ப மகிழ்வுணர்வை வெட்டிக் கொண்டதாகவே அமைந்து விடும்.
- 114
 

காதலும் கடமையும் இன்னமும் கூடப் பெண்கள் தாங்கள் ஒரு அடிமை என்பது போல் சுயபிரகடனத்தை தமக்குள் புதைத்து வைத்துச் செயல்படுகின்றார்கள். எதற்கெடுத்தாலும் அச்ச உணர்வும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படாமல், சுயமான தீர்மானம் எடுக்கின்ற எண்ணமேயன்றி வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
தனது வலிமையே இன்னதென்று அறியாத துர்ப்பாக்கிய நிலையில் பெண்கள் இருப்பது பல ஆண்களுக்கு சாதகமாகிவிட்டது. இரக்கப்படுதலும் விட்டுக் கொடுத்தலும் இயல்பான பண்பு என்பதால் அதுவே இவளது பலவீனம் எனக்கருதுதல் தகாது.
பெண்களால் தனித்து வாழ இயலாது என்கின்ற தவறான கருதுகோள்களால், சமூகநியதிகளால், அவர்கள் தற்துணிவையும், பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கும் திறனையும் வளர்க்காமலேயே இருந்து விடுகின்றாள். சமூகம் புறக்கணித்து விடும் என்று பயமுறுத்தப்பட்டு, "ஒருவனுக்கு அடங்குவதே அழகு" என்கின்றபடிபெண் தன் மன இயல்பை உருவாக்கவேண்டும் என்பதிலும் சமூகம் குறியாக இருப்பது வெளிப்படையான உண்மைகளே. ஆண்,பெண் இருசாராருமே தனித்து இயங்கலாம் என்றால் உலகம் இயங்குமா என்ன?
பரஸ்பரம் ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழு என்று பெயரளவில் சொல்லிச் செயலளவில் "எதற்குமே நீ س 115 -

Page 60
பருத்தியூர்.அ0 ஆயிற்றுருந்தர் அடங்கிப்போ, அவன் என்ன சொன்னாலும் பொறுத்து நட" என்று போதனை செய்கின்றார்கள். "பொறுமை” என்பது நற்பண்பு. இது பெண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக் கான உரிமை இது விடயத்தில் வேறுவிதமாக நோக்கப் படுகின்றது. பொறுமை பற்றிப் பேசியே அவளைப் பேசா மடந்தையாக்கி விடுகின்றார்களே!
மனைவியின் அன்புக்குள் ஆட்பட்டவனைக் கூட அவன் பெண்டாட்டிதாசன் என்கின்றார்கள்.உலகத்தை ஆண்ட மாமன்னர்கள்கூட மனைவியின் ஆகர்ஷித்த அன்பினுள் அமிழ்ந்துதான் போனார்கள். கணவனின் பலவீனமறிந்து அதனையே ஆயுதமாகப் பாவித்துத் தன்னிஷ்டப்படி நடந்துகொள்வதே தவறு ஒழிய அன்புடன் இல்லறம் நடாத்தும் தம்பதியினரைக் காழ்ப்புணர்வுடன் நிந்திப்பது கேவலமானது.
மென்மை உணர்வுடன் தன் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் தன்மைகள் பனித்துகள்களைவிட குளுமையாகவும் மெல்லிய புஷ்பங்களைவிட ஸ்பரிப்பதில் சுகானுபவம் கூட்டுவதாயும் இருக்கும். சின்னஞ்சிறுகுஞ்சுப் பெண்குழந்தைகளில் இருந்து பாட்டி வரை குதூகலமாகச் சிரிப்பதும், நாணப்படுவதைப் பார்க்கும் போது மெல்லிய மழைச் சிதறல்கள் படுமாற்போல் சந்தோஷத்தையுண்டு பண்ணும் அன்றோ!
அமுக்கப்படும் உணர்வுடன் எந்த ஒருவராலும்
- 116
 

இதனும் அமையும் சுதந்திரமாகச் சீவிக்க முடியுமா?சிந்திக்கத்தான் அவகாசம் கிட்டுமா? பெண்களுக்கான சுதந்திரம் வழங்கப்படவில்லை என்கின்றார்கள். சுதந்திரம் என்பது என்ன கடைகளில் வாங்கும் பண்டமா? உரிமை சுதந்திரம் என்பதெல்லாம் ஒருவர் கொடுத்து இன்னொருவர் பெறுவது அல்ல அது யாசகம். இந்த சுதந்திரம், உரிமை ஒருவர்க்கான வாழ் வாதாரம்.
ஆண், பெண் என்பது இருவேறு ஜாதியுமல்ல, இரண்டுமே இணைந்துநிற்கும் ஜீவனுள்ள பொக்கிஷங்கள். உலகம் இந்த இருவரின் அந்நியோன்யமான இணைப்பு களால் உருவாகின்றது. தாய், சகோதரி, மைத்துனி எல்லாமே பெண்மையின் இனிய வடிவங்கள் இவர்களின் அன்பு இன்றி எந்த ஆண்மகனும் நிம்மதியாக வாழ்ந்து விட இயலுமா? -
ஒழுக்கம் என்கின்ற"பதம்” பொதுவான மனித நடத் தையைக் குறிப்பதாகும். இந்த ஒழுக்கத்தினுள்ளே "கற்புநெறி"யும் அடங்குகின்றது. கற்பு பெண்களுக்கு மட்டுமே என்று சொல்லி ஆண்வர்க்கம் எப்படியும் வாழ லாம், என்பதற்கான அனுமதியைத் தானாகவே பிரகடனப் படுத்த முடியாது! ஆண், பெண் இருசாராருக்குமே ஒழுக்கநெறிகள் மேலானவை கற்பு என்ற சொல்லினுள் வைத்துப் பெண்ணைச் சிறைசெய்வதுபோல் அடக்கிப் பேசுவதும் தாங்கள் சகலத்துக்குமே அப்பாற்பட்ட நீதியை வழங்குதற்கும், உரிமைகளைக் கொடுப்பவற்கும் (pop
அதிகாரம் கொண்டவர்களாக, ஆண்கள் தம்மை கருதுவது - 117

Page 61
பருத்தியூர்.ால, ஒலிற்றுதாரர் தவறான கொள்கைகளைத் தம்வசம் கைப்பற்றிக்கொள்வது போன்றதேயாம்.
தாய் அன்பைப் பெரிதென மதிப்பவர்களும், காதலிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்பவர் களும் கூட பெண்களுக்கான அந்தஸ்தை, அவர்களுக்கான கெளரவத்தை வழங்க மறுப்பதுமேன்? புரியவில்லை ஐயா!
மென்மையான குளுமையான, மெல்லியயூக்களை வெப்ப பூக்களாக, அனல் துண்டங்களாக, மாற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களை பேதை என்று சொல்லாமல் "சாதனை செய்யப்பிறந்தவர்கள்” என்று உளமாரச் சொன்னால் ஆண்களின் சுயகெளரவம் பாதிக்கப்பட்டு விடுவதில்லை.
வெளிநாடுகள் என்றில்லாமல் உலகம் பூராவுமே பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள். தலைமைத்துவ வேலைகளையும் சாதுர்யமாகச் செய்து வருகின்றார்கள். அரசியல், விஞ்ஞான, சமய சமூக, நல துறையிலும் ஆன்மீகப் பணிகளிலும் முன்னேற்றமான ஆக்கப்பணிகளினும் பெண்களுக்கான பங்களிப்பு மகத்தானது.
ஆனால், பெண்கள் தலைமைத்துவம் வகித்தநாடுகள் அல்லது சேவை நிறுவனங்களில்கூடப் பெண்களுக்கான கெளரவம் வழங்கப்படுகின்றதா? பெண் வர்க்கம் முழுவ துமே ஒரு கணப்பொழுது தங்கள் கடமைகளை நிறுத்தி
- 118
 
 
 
 
 
 
 
 
 
 

காதலும் கடமையும் வைத்தால் முழு உலகுமே அஸ்தமித்து ஸ்தம்பித்துப் போய்விடும்.
"அம்மா" இன்றி வீட்டில் நல்லாட்சி நடக்குமா? பேச்சளவில் பெண்களைக் கிண்டலடித்தாலும் அவள் இன்றி எவரால் அன்பை அரவணைப்பைக் கண்டுகொள்ள முடியும்? தாயாய், தாரமாய், சகோதரியாய், மைத்துனியாய், மனம் விட்டுப்பேசும் சினேகிதியாய், இப்படிப் பல வடிவங்களில் எம்முன் நடமாடிக்கொண்டிருக்கும் அத்தனை பெண்க ளுமே உலகின் இன்ப துன்பங்களில் இணைந்துகொண்டு, அதேசமயம் தங்கள் குடும்ப மகிழ்ச்சி ஒன்றினையே குறியாகக்கொண்டு இயங்கும் "தியாக தீபங்கள்” என்பதை மனதிலேற்றுவீர்களாக! * 、 y" 。
குடும்ப மகிழ்வில் தான்குவலயத்தின் எழுச்சி தங்கி யுள்ளது. வீட்டை மகிழ்விக்கும் பெண், உலக இயக்கத்திற் கான ஆரம்ப சுருதியுமாவாள். இவளிடம் இருந்து புறப்படும் வாழ்க்கையும், வாழ்வு அனுபவங்களும் எல்லோர் வாழ்வி லும் இரண்டறக் கலந்து நிற்கும்.
“பெண்” என்பதை விலக்கிநின்றுநோக்கிக் கற்பனை செய்து பார்த்தாலும் அதுமுட்டாள்தனமானதே பெண்கள் வீட்டிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்குமே சக்தியூட்டு பவர்களுமாவார்கள்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 16.06.2008
- 119 -

Page 62
பருத்திபூர்.09.வயிற்றுருதத்
வேடதாரிகள்
வேடதாரிகள் கொடிய நோயிலும் மேலான வருத்தத்திற்க்குள்ளாக்கும் தீயவர்களாவர். வேடதாரிகள் என்பது நடிகர்களைக் குறிப்பதல்ல. பொய்மையான வேடம் பூண்டு நயவஞ்சகம் செய்யும் எத்தர்களேயாவர். "பாவம் மலிந்தது இப்பூமி” என்று இந்த வேடதாரிகளே சொல்லி அழுவது வேடிக்கை. நல்லவர்களையும், வல்லவர்களையும் இவர்கள் மடக்கி விந்தையான தந்திரவலையில் சிக்கவைத்து விடுகின்றார்கள். சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக கல்வியறிவுபெற்றவர்கள், நல்லவர்கள் எனக் கருதப்பட்டவர்களும் வஞ்சகநெஞ்சத்தினைக் கெள்வ எண்ணுவது வேதனை. ஒருவரின் அழுகுரல் நடுவே ஆனந்த கீதம் இசைக்க இயலாது. வேடதாரிகள் கோடரிக் காம்புகள்.
வேடதாரிகளின் கபடம் புரியாதவரை இவர்களின் நடத்தைகள் சரியானதாகவே மக்களுக்குக் காட்டப்படும்.
இவர்களின் அழுங்குப்பிடிக்குள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்படுவோர் கொடியநோயிலும் பார்க்க மேலான வருத்தத்திற்குள்ளாவராவர். இங்கு வேடதாரிகள் எனக் கூறப்படுபவர்கள் நடிக்கும் நடிகர்களைப்பற்றிக்குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
- 120
 
 
 
 
 
 
 

வாழ்க்கையில் பொய்மை வேடம்பூண்டு நயவஞ்சகம் சுயநலத்தினையே குறிக்கோள்களாகக் கொண்டு வாழும் பயனற்ற எத்தர்களையே என்று அறிக!
"கலியுகத்தில் காண்பதெல்லாம் பொய்முகங்கள்” என்று விரக்தியுடன் இயம்பும் நல்லவர்களின் புலம்பல் மிகவும் துன்பகரமானது. எனினும் வேடதாரிகளாய் வேடம் போடுபவர்கள் கூட "பாவம் மலிந்து இப்பூமி” என்று அழுகின்ற விந்தையை என்ன என்பது?
நல்லவர்களையும் வல்லவர்களையும் மடக்கும் ஆற்றல் இவர்களுக்கு எப்படிக்கிட்டுகின்றது? எப்படியும் வாழ வேண்டும் என்கின்ற அதீத ஆவல்கள், பேராசைகள், குறுக்கு வழித் தந்திர உணர்வுகள் எப்படியெல்லாம் மாந்த ரில் சிலரை மாயமாய் ஆட்டுவிக்கின்றது தெரியுமா?
எல்லாவற்றையும் நம்பும் நல்லவர்களுக்கும், ஒரு சில விடயங்களில் மட்டுமே வல்லமை கொண்ட புத்திசாலிக ளுக்கும் கூடப் பரந்தவெளியில் உலவிக்கொண்டிருக்கின்ற பொய்மைகள் புலனுக்கு புரியாமலேயே போய்விடுகின்றது.
வீர விளையாட்டுக்கள் தேகபலம் எல்லாமே நிறைந்த ஒரு மனிதனை ஒரு சாதாரணமான புல்லினும் மெல்லிய ஒருவன் தந்திரத்தால் மடக்கிக் காலடிக்குள் கொண்டு வருவதே சகஜமான விஷயமாகிவிட்டது.
- 121 -
Pè,

Page 63
பருத்தியூர்.பல ஒலிற்றுதாதர்
சகல சாஸ்திரங்களையும் கற்ற அறிஞனை, வீண் குதர்க்கம் பேசுபவர்கள் பிறர் மெச்சக் கண்டபடி வினா எழுப்பி மடக்கிவிடுவது ஒரு புதுமையான விஷயமே அல்ல. இது இன்று உலகின் ஜதார்த்தமான சங்கதியாகிவிட்டது. என்ன செய்வது? ஆனால் இப்படியே நடிப்பவர்களை, ஏய்ப் பவர்களைப் புவனி பார்த்தபடியே சயனித்துக் கொண்டி ருப்பதா?
அழகிய வசியப்பேச்சுக்களும், அட்டகாசமான உறுதி மொழிகளும் கொண்டு, எதிரியை வீழ்த்துவது ஒரு அநாகரி கக்கலை. தீயவர்களில் சிலர் காரணமின்றி எளியவர் களையும், எதிரிகளைப்போல் பார்ப்பதுண்டு.
மக்களில் பலர் தெரிந்தும் கூட பொய்மைகளை நம்பு கின்றார்கள். தன்னை ஒருவன் ஏமாற்றுகின்றான் எனத் தெரிந்தும் வேறுவழியின்றி ஏமாற்றுபவர் சொல்படி ஆடுப வர்களை நீங்கள் கண்டு கொண்டதில்லையா?
கண்ணியமான தொனியில் மிரட்டுவது கூட கபட நாடகப் போக்குள்ளவர்களுக்குக் கைவந்த கலைதான்.
"இதோ பாருங்கள். நான் உங்களுக்காகத்தான் சொல்லுகின்றேன். எனக்கு இதில் ஒரு லாபமும் கிடையாது. ஏதோ எனக்குப் பட்டதைச் சொல்கின்றேன். பேசாமல் நான் சொன்னபடி நடவுங்கள் இல்லாவிட்டால் விடயம் விபரீதமாகிவிடும். அப்புறம் நான் ரொம்பவும்
- 122
 

காதலும் கடமையும் கெட்டவனாகிவிடுவேன்”மிகவும் கண்ணியமாகவே மிரட்டிக் காரிய மாற்றும் காருண் ணியமற்ற கசடர்களைத் திரைப்படங்களில் மட்டுமல்ல, நம்முன் வலம் வருகின்ற தெரிந்த முகங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
விளம்பரமும் பகட்டும் நிறைந்த இந்தப் பம்பர உலகம் அவசர கதியில் இயங்குவதால் யோசித்து முடிவு எடுக்க அவகாசம் இன்றித் திண்டாடுகின்றது. எதனையும் சுலபமாகச் சாதிக்க முயலுகின்றனர். இந்த எண்ணங்கள் வலுப்பெறுவதாலேயே புல்லுருவிகளின் பரிணாமம் விஸ்வரூபமாகி வருகின்றது.
எங்கே நமக்குச் சுலபமான வழி எனத் தேடு முன் னரே அழையா விருந்தாளிகளாக அறிமுகம் செய்யப் படுவர்கள் இந்த வேடதாரிகளேயாவர்.
அழையா விருந்தாளிகளாகச் சமூகங்களில் உள் நுழைபவர்கள் பின்னர் பங்காளிகளாகி அதன் பின்னர் மெல் லவே முழுமையாக அனைத்துத் தரப்பினர்களையும் தாமே உறிஞ்சி உள்வாங்கிச் சுவீகாரம் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களின் வருகை விதிஅல்ல. நாமாகப் போட்ட வலை. எங்கள் மதியைப் பாவிக்காத காரணத்தினால் நாமாகப் போர்த்திக்கொண்ட "பழியே எனவும் கொள்ளலாம்.
"மந்திரி மகனுக்கே நான் வேலை வாங்கிக் கொடுக் கின்றேன். ஏன் சொல்லப்போனால் எனது ஆலோசனை இல்லாதுபோனால் இவர் எப்படி மந்திரி ஆவார்? அவருக்கு
- 123

Page 64
பருத்தியூர்.பல ஆயிரவநாதன்
ஒரு காலம் அவ்வளவுதான் என்னை நம்புங்கள், இவர்கள் எல்லோரையும் விட உங்களுக்கு நான் நல்ல வழி காட்டுகின்றேன்" என்று வாய் ஜம்பமாகப் பேசுபவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என ஏன் ஏமாறுபவர்கள் சற்றும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்களோ தெரியவில்லை.
இருப்பினும், நல்ல வசதியானவர்களும் நல்ல குடும்ப பாரம்பரியமும், கல்வியறிவும் உடையவர்கள் கூட சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மனமாற்றம் கொள்பவ ராகி வஞ்சக நெஞ்சத்தினராகி விடுவது வேதனை!
வெளி உலகில் நல்ல தோற்றத்தை எப்படி உண் டாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற கலையினைப் புரிந்தாலே போதும், உலகம் பேசாமல் எல்லா நடத்தை களையுமே அங்கீகரித்துவிடும் என்கின்ற நோக்குக் கேவல மானது என ஏன் இவர்களுக்குப்படவில்லை?
உனது படிப்பு, உன் உழைப்பு, திறன் என்றென்றும் நல்லவையாகவே உனக்குள் உருவெடுத்தால், உன்னை எதற்காகவும் அற்பகாரியங்களுக்காக விற்க மாட்டாய் அல்லவோ? கீழ்த்தரமான தரங்குறைந்த செயல்கள் தன்னை, தனது ஆத்மாவை, அசூசைப்படுத்துகின்ற அதனை விற்று உழலுகின்ற கழிவான செயல் அன்றோ? தீமையாளர்கள் செய்யும் கயமைக்கு நியாயம் கோருப வர்கள் பொய்மையாளர்கள் சொல்லும் ஆதாரங்கள் வேதாளத்திடம் வேதம் கேட்பதுபோலத்தான்.
- 124
 

காதலும் கடமையும்
அத்தோடு இல்லாத பேய் ஒன்றிடம் மெய்ஞானம்
கேட்கப் பிரியப்படும் ஆன்மாக்கள் உய்வது எப்போது என்றே கவலைப்படவும் வேண்டியுள்ளது.
காலத்திற்கொவ்வாத கருத்துக்களையும், புனைகதை களையும், திரிபுவாதங்களையும் முன் மொழிந்து அறிஞரா கக்காட்ட விழைபவர்களைக் கூடச் சிலவேளை உலகம் அங்கீகரித்தால், இதன் நிலைதான் என்ன ஐயா? மிகவும் ஜீரணிக்க முடியாத சங்கதி ஒன்று. நன்கு அறிமுகமில்லாத வரிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் வேதனையா ளர்களை விட நன்கு தெரிந்த நபர்களிடம் தம்மைச் சமர்ப் பணம் செய்து துவம்சமாக்கப்படும் அப்பாவிகளே இப்பா ரினில் அதிகம் என்பதை ஒத்துக்கொள்வீர்களா?
"அடடா இவன் இப்படிச் செய்துவிட்டானே எப்படி எப்படி நான் நம்பிக்கை வைத்திருந்தேனே. இப்படிச்செய்து விட்டானே..பாவி..” என்று துன்பக்குரல் கொடுக்கும் சாமான்யர்கள் எத்தனை பேர்?
இங்கு ஒன்றைச் சொல்லவேண்டும். ஏமாற்றப்படுப வர்களுள் எந்தப் பேதமும் இல்லை. சகல தரத்தவர்களுமே ஏமாற்றப்படும் விஷயங்களில் ஒன்றுபட்டுப் போய் விடுகின்றார்கள். எவ்வளவு படித்தாலும் பெரியவர்க்கத்தினர் என்று பேசப்படுபவர்களும் கூட நன்கு தெரிந்த முகங்களா லேயே நாசமாக்கப்படுகின்றார்கள். இன்னும் ஒரு விடயம்,
இத்தகைய முகமூடியிலும்கூடப் பல ரகத்தினைச்சார்ந் - 125

Page 65
பருத்தியூர்.பல ஆயிரவநாதர் - 'தவர்கள் இருக்கின்றார்கள். எதிரில் இருப்பவன் உஷாராகி இத்தகையவர்களின் குட்டை உடைத்தால் உடனடியாகவே தடாலெனத்தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்பார்கள். ஆனால் தங்கள் கபட நாடகத்தினை வேறு வடிவத்தில் காட்ட ஆரம்பிப்பார்கள்.
இன்னும் ஒரு சாரார் தமது தவறுகளை ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். பயமுறுத்தல் மூலம் தமதுவிடாப் பிடியான நடத்தைகளுக்கு ஆதாரம் கோர்ப்பார்கள்.
கெட்ட நோக்குடன் பக்குவமாகப் பேசுதல் கடிந்து பேசுதல், உறவுமுறைகொண்டாடுதல்,தம்மைப்பற்றிய தவறான சுயவிமர்சனங்கள் ஏனையவர்களை மட்டம் தட்டிப் பேசுதல் பிறரை மிதித்துத் தம்மை உயர்த்த எத்தனித்தல், கயமைவாதத்திற்கு வாய்மைச் சாயம் பூச எத்தனித்தல், சமயம், மொழி, பேதங்களை உருவாக்குதல், தெரியாத கருமங்களுள் உள்நுழைதல், மற்றவர்களைத் தூற்றினால் தான், தமது அந்தஸ்தை உயர்த்த முடியும் எனத் தப்பாக எண்ணிக்கொள்ளுதல் போன்ற குணாம்சங்களை இவர்கள் ஆபரணங்களாக அணிந்து கொண்டால் எவ்வண்ணம் சமூகத்திற்கான நற்பிரஜையாகத் தோற்றம் பெறமுடியும்? மேற்சொன்ன குணாதிசயங்களை சாதாரண மக்கள் புரிந்து கொள்வதுகூடக் கடினமாகவே இருக்கின்றது.
ஒரு காரியத்தினைக் கனகச்சிதமாகச்செய்துமுடிக்கக் கையாளும் தந்திரோபாயங்கள் சொல்லும் தரமன்று.
- 126
 
 

காதலும் கடமையும் நேரடியாகவே ஒருவரை அணுக முடியாது விட்டால் அணுகவேண்டியவர்களுக்கு வேண்டியவர் மூலம் அதாவது இரண்டாம் மூன்றாம் தரப்பினர் மூலம் ஏதோவழியில் கையைக், காலைப்பிடித்தோ, வேறு கீழ்த்தரமான வழிகளி னாலோ, காரியங்களைச் சாதிக்கும்போது நீதிநியாயங்கள் எங்கேபோய் ஒளிந்துகொண்டன என்று கேட்கத் தோன்றத் தானே செய்யும்?
பண்பாடு கலாசாரம் என்று சொல்லுகின்ற சகல உலக மக்களும் சட்டத்தினால் பிடிபடாத இத்தகைய மட்ட மாணவர்களை இனம் காணுவது எப்போ? காணப்பட்ட தீயோரை மேன்மக்களாகக் காட்டி நிற்கும் இவர்களை தீண்டத்தகாத தகுதியுடையோர் பட்டியலில் இணைப்பது எப்போது?
உண்மைகளைக் காணவிழையும் நாம் உண்மைக் கான, உண்மையின் அழைப்புக் கிடைத்தும் துணிச்சல் இன்றி வாளாதிருந்து விடுகின்றோமே! வெட்கமாக இல்லையா?
நாமே எமக்கான குழியை வெட்டி விழுவதுதான்
வழியா? விழி இருந்தும் பாதைதெரிந்தும் ஸ்தம்பிதமாக
வெறும் கட்டைபோல் செயலற்று இருப்பது என்ன
சாதுர்யம்? கீழ்நோக்கிலான பிரச்சனைகளைப் பிரசவிக்கும்
பொல்லாதவர்க்கு வழிவிடல் இழிவான செயல் உணர்ந்து
கொள்க! கபடதாரிகளின் கண்மூடித்தனமான சமூகத்தின் - 127

Page 66
பருத்திபூர்.டி.ஹவிற்றூர் மீதான இந்தத்தாக்குதல்கள் சமூகத்தின் பலஹினமான அனுசரணையுடனேயே நடக்கின்றது.
ஒருவரின் போலியான சமூக அந்தஸ்துக்களும், பண பலமும் மட்டுமே மற்றவர்களின் வாழ்வில் இடர் கோடு களாய் உருவாகக்கூடாது. பிறருக்குத் தீங்குசெய்யாமலும், எண்ணாமலும் இருப்பதுதானே அறவாழ்வு ஆகும். மாற்றான் குரல்வளை நெரித்துச் சங்கீதம் கேட்க முடியாது. ஒருவன் அழுகுரல் நடுவே, ஆனந்த கீதம் இசைக்க இயலாது. "பொல்லாப்பு அற்ற வாழ்வு போலிகளுடன் சரணடையாது இருப்பதேயாம்" தெரிந்து, உணர்ந்து தெளிக!
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 02-04-2006
- 128
 

ாதனைகளால் மனிதன் புதுவடிவம் பெறுகின்றான். சின்ன விடயங்கை எல்லாம் வென்றுகொண்டே வரும் போது படிப்படியாக எம்முன் தோன்றும் பெரிய தடைகளையே சுலபமாக வென்றுவிடும் மன உறுதியை நாம் பெற்றுவிடுவோம். எமது வெற்றிக்கான செயல் திறன்கள் வேறு எங்கும் உற்பத்தியாவதில்லை. அவை எம்முள் எம்முடன் கூடவே என்றுமே வியாபித்த வண்ணம் இருக்கின்றன. நாம்தான் அதனை உணர்ந்து எதிர்வரும் சோதனைகளில் வெற்றி கொள்ள வேண்டும். சோதனைகள் தான் நல்ல அனுபவங்களைப் படிப்பினைகளை உருவாக்கி எம்மை முழு
னிதனாக்குகின்றன.
"சோதனை” என்றதுமே, அது எம்மைப் பாதிக்கச் செய்யும் ஒரு "காரணி”, எனப் பலரும் கருதுவதால் அது
ஒரு வேதனை என மனதில் பதிந்துகொண்டு விடுகின் றார்கள்.
சோதனைகளைக் கடந்தால்தான் சாதனைகளைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதே பொது விதி. மேலும் சோதனைகள் மூலமே ஒருவன் தன் திறனை வலிமையைத்
- 129

Page 67
பருத்திழ்.வலுையிர்ஷர்தல் தானே பரீட்சித்துப் பார்க்கும் நல்ல சந்தர்ப்பம் என ஏன் கருதக்கூடாது? புடம் போடுவதால் தங்கம் கெட்டுவிடாது. மீண்டும், மீண்டும் அது புதுப்பொலிவுபெறும் களிம்புகள் அகலும், தூய்மை துலங்கும்.
சோதனை என்றதுமே அது தாம் கற்றகல்வியைப் பரீட்சித்துப்பார்க்கும் ஒருவிடயம் மட்டும் என்று மாணவர்கள் கருதுகின்றார்கள். அதாவது தாங்கள் கற்றகல்வி ஞானத்தில் குறைகண்டு விடுவதற்காக வைக்கப்படும் பொறி என்று கூட எண்ணிக் கொள்கின்றார்கள்.
கல்வியில் மட்டுமா சோதனை ஏற்படுகின்றது? வாழ்க்கையில் கழிக்கப்படும் ஒவ்வொரு வினாடிகளுமே எங்கள் வாழ்வை சீரிய ஏற்படுத்தலுக்கான ஒவ்வொரு படிக்கட்டுகளாகும். இவைகளை நாம் தடைக்கற்களாகக் கருதிடக்கூடாது.
மாணவர்களும் பரீட்சை என்றதுமே உங்கள் குறைகளைக் கண்டறியும் சாதனம் என்றும் இது ஒரு விரும்பத்தகாத சோதனைக் காலங்கள் என எண்ணற்க! பரீட்சை என்றதுமே எங்களை நாமே பரீட்சிக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் என எண்ணி இந்தச் சவால் எம்மாத்திரம் என வீறுடன் அச்சமின்றி எழுந்து இவைகளுக்கு முகம் கொடுப்பீர்களாக!
பரீட்சையில் பெரும்பாலான மாணவ சமூகம் அச்சம்
- 130
 
 

கதறும் கடமையும் காரணமாகவே இவைகளில் மிக மோசமான பெறுபேறு களைப் பெறுகின்றமை ஒரு வேதனை தருகின்ற விடய மாகும். நன்றாகப் படித்தும் துணிச்சலை, பரீட்சை மண்ட பத்தில் கோட்டைவிடுவதை தவிர்க்க மனோபலம் மிக்கவர் களாகத்தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் மனிதன் தன் பள்ளிப்படிப்பை முடித்து எதிர் கொள்ளும் சவால்களை விட கல்வி கற்றல் என்பது பெரிய அச்சுறுத்தலான விஷயமே அல்ல.
சொல்லப்போனால் இளமையில் கல்வி கற்றலை விடச் சந்தோஷகரமான விஷயம் பிறிதில்லை. இன்னமும் பல அறிஞர் பெருமக்கள் தம் இளமைக்கால கல்லூரி வாழ்வை எண்ணி எண்ணியே இறும்பூதெய்திக் கொண்டி ருக்கின்றார்கள். எனவே கல்விகற்கும் காலத்தில் கற்றலை ஒரு சுமை என எண்ணுதலை அறவே கைவிடுக!
சின்ன வயதிலேயே கற்றலை விருப்புடன் ஒரு பணி யாகச் செய்பவர்கள் தமது இறுதி வாழ்வுவரை அதனையே தொடர்ந்தும் ஆவலுடன் செய்துவருகின்றார்கள் என்னதான் பொறுப்புக்கள், அல்லது துன்ப அழுத்தங்கள் வரினும் இவைகளையும் மீறி கல்வியை தம் உயிர் மூச்சாகக் கொள் பவர்களை நீங்கள் கண்டும், கேட்டறிந்தும் இருப்பீர்கள் அல்லவா?
ஒருவன் ஒரு பதவியைத் தேடுதலுக்காக எடுத்த
- 131 -

Page 68
மருத்திபூர்.அல. ஆயிற்றுருதேஷ் பட்டங்கள் அனுபவங்கள் எல்லாமே அவன் கடந்துவந்த சோதனைகளுக்கான அங்கீகாரங்களே. ஒரு நற்சான்றிதழ் தராதரங்களின் பின்னால் அவரது உழைப்பு மேலோங்கி யிருக்கின்றது. இவையெல்லாம் பெற்றுக் கொண்ட சோதனைகள் மூலம் கிடைத்த அதி உன்னத கெளரவங்க ளேயாகும்.
மனம் எதிலுமே திருப்திப்படாமல் இருக்கும் வரை சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பெரிய சோதனைகளாக வேபடும். செய்யப்படுகின்ற நல்ல செயல்களின் எதிரொலியாகக் கிடைக்கின்ற வருமதிகளால் எதிர்ப்படும் சோதனைகள் யாவுமே வெல்லப்படுகின்றன. எனினும் வல்லவர்கள் நல்லவர்கள் கூட தாங்கள் விதியின் வலை க்குள் சில சமயம் அல்லல்பட்டுக் கொள்வதாகக் கவலைப் படுவதுண்டு.
“எல்லாமே எனக்குக் கைகூடும்போதே இறைவன் என்னைக் கைவிட்டுவிட்டான். வெண்ணை திரண்டு வரும் போதுதானா பானை உடைய வேண்டும்? இது எனது சோதனைக்காலம் என மெய்யுருகி அழுகின்ற மனிதர்கள் அதற்காகத் தொடர்ந்தும் முயற்சி செய்யாமல் விட்டு 6, 6lbst DIT?
ஆற்றுகின்ற கருமங்களின் பயன்கள் சில பொழுது அனுகூலமின்றிப் போய்விட்டாலும், இவற்றின் தோல்விக ளுக்கான காரணங்களே அடுத்துக் கடக்கின்ற சோதனைக ளுக்கான வெற்றிகளைச் சுட்டிநிற்பதுமாகும்.
- 132
 

டகாதறும் அமையும் எத்தனையோ ஆயிரம் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து விண்கலத்தை விண்ணிற்கு ஏற்றிய பின்னர்கூடச் சின்னஞ் சிறு தவறுகளால் அல்லது எதிர்பாராத இயற்கை அனர்த்தம் கோளாறுகளால், அம்முயற்சிகளில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டு விடுவதில்லையா? இதன் பொருட்டு எல்லா விஞ்ஞானிகளுமே மனதைப்போட்டு உடைத்து விண்வெளி ஆய்வுநிலையத்தையே மூடிவிடப்போகின்றார்களா?
எனவே தனி ஒரு மனிதன் தனது தோல்விக்காக மனம் குமைவது சுத்த அறிவிலித்தனமானதே! மேலும் துன்பம் என்பதே சோதனையின் வடிவம் என்றும் சோதனைதான் துன்பம், துன்பம்தான் சோதனை என்றும் திடமாக எண்ணி மனதைக் கீழ்நோக்கிய பயணத்தில் சஞ்சரிக்கச் செய்வது ஆபத்தான விஷயமுமாகும்.
தனக்குள்ள கடமைகளை நிறைவேற்றுகின்றவன் அடுத்து வரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காமல் எங்ங்ணம் மேல் நோக்கிப் பாதங்களைப் பதிக்க முடியும்?
வாழ்வின் எல்லாக் கட்டங்களுக்குமே சில வேளை களில் சுலபமான வழிகிட்டாவிடினும் சில விஷயங்கள் நாம் ஆச்சரியப்படும் வண்ணம் பெரிய பெரியகாரியங்கள் கூட மிகச் சுலபமாக எம் வழிக்குள் வந்து ஒப்பேறிவிடுகின்றன.
இந்த வேளையில் ஒருவன் தனக்கு முன்னர் ஏற்பட்ட சில விஷயங்களுக்காகப் பட்ட மனத் தொய்விற் - 133

Page 69
வகுத்திழ்.00.அவிருைந்தர் காகக் கட்டாயம் வருத்தப்படவே செய்வான். அட போயும் போயும் இந்தச் சின்ன விஷயத்திற்கே மனம் ஒடிந்து நின்றேனே, இன்று நான் எவ்வளவு பெரிய காரியத்தை மிக நேர்த்தியாக ஒழுங்காகச் செய்துவிட்டேனே எனப் பெருமைப்படும் நில்ை கூட ஏற்படுவதுண்டு.
எனவே எங்களுக்கான வெற்றிக்கான செயற் திறன் ஊக்கம் வேறு எங்கும் உற்பத்தியாவதில்லை. அவை எம்முள் எம்முடனேயே என்றுமே வியாபித்திருக்கும். இந்த விசையை நாம் எமக்குள் தட்டிவிட்டால் போதுமானது. மூளை உடல் எல்லாமே தானாகத் தனது கருமங்களை ஆற்றத் தொடங்கிவிடும். அப்புறம் விதியாவது சோத னையாவது என நாமாகவே அந்த எண்ணங்களைத் துச்சமாகத் தூக்கியெறிந்து எம்பாட்டிற்கு முன் நோக்கிச் செல்கின்றவர்களாவோம்.
ஒரு ஒழுங்கான கட்டமைப்புக்குள் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளும் போது கூடியவரை பெரிய பெரிய பிரச்சனைகள் மனிதனை வந்து மோதி வீழ்த்துவதில்லை. கடமைகளைச்சரிவரவும் பின்தள்ளாமல், அல்லது தட்டிக்கழிக்காமல் நாம் செய்துவரில், முட்டுக்கட்டையான சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திடல் முடியும்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் செய்யப்படுகின்றஅற்பத் தவறுகள் கூட எமக்குப்பெரும் சோதனையாக அமைந்து விடுவதுண்டு. இதையெல்லாம், பார்த்து மனம் துவண்டு
= 134--
 

காதலுர் இழையும் வருகின்ற இடர்களுக்காக தம் வாழ்க்கையில் இவை தொடர்கதையோ என எண்ணுதல் கூடாது.
நாள் எல்லாம் பாடுபடும் விவசாயி தான் பாடுபட்ட தன் பயனை அறுவடை சமய காலத்தில் எடுக்க விழையும் போது திடீர் என இயற்கை அனர்த்தம் போல் மழை வெள்ளம் ஏற்படுவதும் அதனால் அவன் மனம் ஒடிந்து போவதும் ரொம்பவும் பரிதாபகரமானதே. எனினும் தற் காலத்து விவசாயிகள் தாம் பெற்ற அனுபவவாயிலாக விஞ்ஞானம் மூலம் கண்ட நவீன வழிமுறைகளாலும் பல சாதனைகளையும் செய்துவருவது கண்கூடு.
மேலும் திடீர் எனத் தமது இழப்புக்களை ஈடுகட்ட இவர்கள் காப்புறுதி போன்றவைகளில் ஓரளவு முதலீடு செய்து அதன் பயனாக தங்களது துன்பங்கள் இழப்புக் களில் இருந்து ஓரளவு நிவாரணமும் பெற்றுக்கொள்வது முண்டு.
ஒருவன் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள வேண்டிய நடைமுறைகளை ஆரம்பகாலம் முதல் கைக்கொண்டு வந்தால் எதிர்ப்படும் எதிர்பாராத சோதனை களில் இருந்து மீள வழிபிறக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்வோமாக!
ஒரு முதிய தமிழ் அரச அலுவலர் தமது அனுபவத் தைச் சொன்னார். "நாங்களும் இளவயதில் சிரமப் - 135

Page 70
மருத்திபூர்.பால,ஆழிறகுழர் பட்டுத்தான் கல்விகற்றோம்.வீட்டு வேலைகளுடன்,தோட்ட த்திற்குச் சென்று அங்கு அதிகாலையில் இருந்து எனது தகப்பனார், சகோதர சகோதரிகளுடன் வேலை செய்து அதன் பின்பு பாடசாலைக்குச் சென்று படித்துப் பரீட்சை யில் சித்தி பெற்று நல்ல அரச பணியிலும் இணைந்து கொண்டேன்” தொடர்ந்து சொன்னார்
“கஷ்டப்பட்டு வேலைதேடி அமைதியாக இருந்துபணி செய்யலாம் என்றால் பதவி உயர்வுக்காகப் படி, படி என்றார்கள். தொடர்ந்தும் அதன் பொருட்டுப் படிக்கலா னேன். அப்பொழுதுதான் பிரதான அரசகரும மொழியில் கட்டாயம் சித்தியடைய வேண்டும் என்றார்கள். அப்போது என்னுடன் கூட இருந்தவர்கள் வயதுமுதிர்வின் காரணமாக தமது தாய்மொழியைவிட சிங்கள மொழியில் படிக்கச் சிரமமாய் இருப்பதாகத் தெரிவித்து ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துக் கடமையில் இருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். அப்போது பதவி வகித்த தமிழ் அரச ஊழியர்கள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதனைவிடப் பெரிய சோதனை வாழ்வில் வேறில்லை. அரச சேவையில் உறுதிப்படுத்தக் கட்டாயம் இந்த சிங்களமொழிப் பரீட்சையில் சித்தியடைவதைத் தவிர வேறுவழி இல்லை. எனவே வாழ்க்கை பூராவுமே எதிர் நீச்சலடிப்பதுதான் ஒருவாழ்வா?” என்றும் கேட்டார்.
உண்மைதான் சில பிரச்சனைகள் உடன் விலகி விடுகின்றன. சில பிரச்சனைகள் சொல்லாமல் - 136.
 

டகாதலும் கடமையும் கொள்ளாமல் தொடர்ந்தும் தொற்றிக் கொள்கின்றன. ஆயினும் நாம் இவைகளில் இருந்து விடுபட்டேயாக வேண்டும். எல்லோராலும் தொடர்ந்து பரீட்சைக்காகப் படித்துக் கொண்டேயிருக்க முடியுமா? குடும்பப்பாரம், பொருளாதார சுமைகள், எல்லோருக்குமே சாதகமாக அமைந்து விடுமோ?
மனத்தை தழம்ப விடாது துணிவைத் துணை எனப்பற்றி முன் செல்வதைத் தவிர நாம் எங்கள் சுமைகளை இறக்கிவிட முடியாது. கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுவர ஒவ்வொரு சுமைகளும் தானாகவே கழன்று போய்விடும்.
எவ்வளவுதான் நாங்கள் சிரமப்பட்டாலும்கூட அடை கின்ற சிறு வெற்றியால் துளிர்விடும் துணிவு சட்டெனப் பற்றிவிடும் பெரும் தீ சுவாலையாய் தொடர்ந்து பல வெற்றிகளை அள்ளிக்குவித்துவிடும். அப்போது நாம் பட்ட வலி வேதனைகள், பஞ்சாய் பறந்தே போய்விடும்.
துன்பங்களினாலும் இழப்பினாலும், நாம் அடைகின்ற அனுபவங்களும் அதனால் நாம் மெருகேற்றித் தூய்மை யடைவது போன்ற பெரும் பேறு வேறு ஏது?
மலை உச்சிக்குப்போக வேண்டும் எனத்தீர்மானித்து
விட்டால் ஏறி உயர நடக்கவேண்டியதுதான். விடாமுயற்சி
யுடன் உடல் நோக மலைஉச்சியை அடைந்தபின் அங்கு - 137.

Page 71
பருத்திழ்.வ.ைஅவிந்தைன் நாம் காண்கின்ற காட்சிகளின் லயிப்புணர்வினால் நாம் பட்ட சிரமங்கள் யாவுமே பறந்துபோகின்றதே!
குழந்தையைப் பத்துமாதம் சுமக்கும்"தாய்’ குழந்தை யைஜனித்ததும் அது அழும் ஒசையினுடே தன் வலிமறந்து படும் பேரின்பம் எல்லாமே இத்தனை நாட்களாகப்பட்ட கஷ்டங்களின் பின் கிடைத்த பெறற்கரிய வெகுமதியன்றோ!
எனவே மனிதன் இழப்பினும் மேலான பேறுகளைத் தன் முயற்சிகளுடாகப் பெற்றுக்கொள்வதே முற்றிலும் உண்மையான விதியுமாகும்.
சோதனைகளைப் புதைத்து வைத்துள்ள இறைவனே அதனுள் இருந்து வெளிவரும் மார்க்கத்தையும், அதற்காக அறிவையும் மனிதனுக்குக் கொடுத்து உழைக்கும் திறனையூட்டி, எதனுள்ளும் இருந்து சுதந்திரமாக விடுபடும் ஆற்றல்களையும் கொடுத்துள்ளான்.
மனசுக்குள் கலவரங்களையூட்டாமல் தெளிவான சிந்தனையுள் வசப்படுபவன் நிதானமான வழிகளில் சோதனைகளை வென்று, சாதனைகளைப்படைத்து
விடுகின்றான்.
நாம் பலவீனமான ஒரு நிலையில் இருந்து முடிவினை எடுக்கமுடியாது. எம்நிலை அறிந்து எம்மை ஆசுவாசப்படுத்தி வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுக்காது செயல்பட்டால் காரியசித்திகள் நிச்சயமே!
- 138 -
 

காதலும் கடமையும் பல் திசைகளில் இருந்து புறப்படும் தாக்கங்களின் தன்மைகளைப்புரிந்து கொள்வோம். எங்கிருந்து எமது செயல்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நிச்சயப்படு த்துவோம்.
எடுத்த எடுப்பில் பாராதூரமான பிரச்சனைகளுள் உடன்புகுந்திடாது,படிப்படியாக எமது செயல்களை விரிவு படுத்துவோமாக! எங்கள் சகல செயல் களுக்கும் உள்ளமும், உடலும் ஒத்துழைத்தேயாக வேண்டும்.
எம்மை நாம் தயார் நிலையில் எதற்கும் அஞ்சாத உற்சாக நிலையில் வைத்திருந்தால் மனசும், தேகமும் சந்தோஷமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அந்த வேளை யில் எந்த இடர்களுமே துச்சமாகத் தூக்கி எறியப்படும். அப்போது சோதனை என்ற பேச்சேயற்றுச் சாதனை செய்தலே மேலோங்கி நிற்கும்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 09-12-2007
سد (139 -

Page 72
மருத்தியூர்.டி.ஹவிரவநாதர்
எப்படியும் வாழ்ந்து
விடலாமா?
தவறான வழியில் பொருளிட்டினால் அடையும் விளைவுகள் பாரதூரமாகவே அமையும். செல்வம் வந்து சேர்ந்தாலே போதும் என எண்ணினால் "சந்தோஷங்கள்” விட்டுவிலகிச் செல்வதைத் தடுக்கமுடியாது. பணத்தைப் பெருக்க பாவங்களைச் சேர்க்கும் முயற்சியில் முனைவது தங்கள் சந்ததிக்குச் செய்யும் குந்தகம் பெற்றோர்கள் வாழ்ந்து காட்டவேண்டும். நல் ஒழுக்கம் எல்லா வல்லமையையும் நல்கும். பிஞ்சுப் பருவத்தே நஞ்சனைய விஷயங்களை பிள்ளைகள் நெஞ்சகத்தே விதைக்க வேண்டாம் கல்வியூட்டி வாழ்க்கையை நெறிப்படுத்துக!
தனவந்தர் ஒருவர், அவருக்கு ஒரு மகன். இவர் தவறான வழியில் பொருளிட்டிருந்தார். இவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் தான் எப்படியோ வாழ்ந்து பொருளிட்டி விட்டேன்,தனது மகன் இந்த வழியில் நடக்க கூடாது என உணர்ந்தார்.
= 140 د
 
 

எனவே எப்படியாவது மகன் பெரிதாக உழைக்காது விடினும், அவன் ஒரு அரசாங்க அலுவலகராக வர வேண்டும். கெளரவமான மனிதனாக வாழவேண்டும் என எண்ணிக்கொண்டு தனது மகனை ஓரளவு படிக்க வைத்தார். மகன் அவர் எதிர்பார்த்த வண்ணம் அரசாங்கத்தில் சிறுபதவி ஒன்றைப் பெற்றுக் கொண்டான்.
ஆனால் நடந்தது என்ன? அவன் தனது வேலை யைப் பொறுப்பேற்று ஓரிரு மாதங்களுக்குள், ஒரு தீர்மானத்தைச் சொல்ல தனது தகப்பனாரின் முன்னர் வந்துநின்றான்."அப்பா. இனி நான் வேலைக்குப்போகப் போவதில்லை” என்றான். தகப்பனார் அதிர்ந்து போனார். "ஏன் ஏன் இப்படிச் சொல்கின்றாய். உன்னை எப்படியும், கெளரவமான அரசாங்க அலுவலரர்கப் பார்க்க வேண்டும் என்றே கனவு கண்டேன். அப்படியிருக்க, நீ வேலை கிடைத்தும் இப்படிப் பேசுகின்றாயே, என்ன உனக்கு என்ன ஆயிற்று" என்று வேதனையுடன் கேட்டார். அதற்கு அவனோ,
"அப்பா. எனக்கு ஒருவரின் கீழ் அடிமைபோல் கருமமாற்ற விருப்பமில்லை” என்றான். அதற்குத் தந்தையாரோ, என்ன அப்படிச் சொல்கின்றாய், நீ இப்போதுதானே வேலைக்குச் சேர்ந்திருக்கின்றாய். நீ இன்னும் எவ்வளவோ முன்னேற இடம் இருக்கின்றது. அரசாங்க வேலையில் என்ன மகனே பேதம் இருக்கின்றது? எல்லோருமே அரசாங்க ஊழியர்கள் தானே, நீவேறு ஏதோ
- 141 -

Page 73
பருத்திழ்.09:ஆபிர்அதன் எண்ணத்தை மனதில் வைத்துப் பேசுகின்றாய், என்ன சொல்? என்ன காரணத்தால் அரசாங்க வேலையே வேண்டாம் என்கின்றாய்” என்று அவர் கேட்டதும் மகன் சொன்ன பதில் அவரை அதிர வைத்தது.
"அப்பா, இன்று நான் பார்க்கும் வேலையில் பெறும் சம்பளம் எனது செலவில் ஒரு கிழமைக்குக்கூட போதாது. அப்படி என்னை சகல வசதியுடன் வளர்த்து விட்டீர்கள். மேலும் எனது செலவுக்கும், நான் மேலதிகமாக உழைக்க வேண்டும். அதற்காக நீங்கள் சென்ற வழியிலேயே சம்பாதிக்கவிரும்புகின்றேன். இதில் சரி, பிழை பார்த்தால் சரிவராது. எனக்குப் பணம் வேண்டும். செல்லும் பாதை பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நான் நீங்கள் பொருளீட்டிய விதத்தில், நானும் ஒரு முதலாளியாக விரும்புகின்றேன். என்னை எனது வழியில் செல்ல விடுங்கள்” என்றான். இதைக்கேட்டதந்தை வாயடைத்துப் போனார்.
இந்த உலகம் எங்கே போகின்றது? பழகிய பழக்கங்கள், நவீன போலியான வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்புகிறார்கள் இல்லை. இந்தச் சம்பவத்தி லிருந்து நாங்கள் தெரிந்து கொள்வது தான் என்ன? பெற்றோரைப் பார்த்துத்தான் பிள்ளைகள் நடந்து கொள்ள எத்தனிக்கின்றார்கள். அநேகமான பிள்ளைகள் தங்கள் பெற்றோரே தமக்குமுன்மாதிரியானவர்கள் எனத் திடமாக நம்புகின்றார்கள்.
- 142 -
 

டவதறும் கடமையும் இவர்கள் சின்ன வயதிலிருந்தே உலகத்தில் வலிமை மிகுந்தவர்கள் தாயாரும், தகப்பனாரும் என நினைப்பதால், அவர்களைப் பார்த்தே தமது செயல்களை அமைத்துக்கொள்கின்றார்கள். எனினும் சில பிள்ளைகள் வளர்ந்த பின், தமது நண்பர்கள், சுற்றாடல்களால் ஈர்க்கப்பட்டு தங்கள் சுபாவங்களை மாற்றி அமைப்பதும்
எனினும் பெற்றோர், பிள்ளைகள் அவதானிப்பில், நல்ல ஒழுக்கமுள்ள நபர்களாகத் தம்மை உருவாக்கி யேயாக வேண்டும். நல்ல கனிவான பேச்சு, அன்பு, பண்பு, கலாசாரங்களை முறையாகப் பேணுதலில் அதீத கவனம் செலுத்துதல் வேண்டும்.
இதை விடுத்து எப்படியும் வாழலாம் என பிள்ளைகள் முன் வாழ்ந்து காட்டினால் அவர்களின் வாழ்க்கையே விபரீதமாகிவிடும். நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களை உலகிற்கு அளித்தல் தாய், தந்தையரின் பொறுப்பு மிகு கடமையாகும். இப்பாரிய பொறுப்பில் இருந்து நழுவி, அப்போதைக்கு, அப்போது எப்படியும் வாழ்ந்தால் சரி என வாழ்ந்தால், அதைப் பார்க்கும், அவர்களின் குழந்தைகளும், இதுதான் உண்மையான வாழ்க்கை முறை எனத் தங்களையும் அவ்விதமே உருவாக்கிக்கொண்டு விடுகின்றனர்.
தமது சந்ததிக்காக எவ்வளவு செல்வங்களைத் தகாத வழியில் ஈட்டினால், அதனூடான பிரதிபலன்கள்
- 143

Page 74
மருத்தியூர்.09:அறிவதன் நிச்சயமாகச் சாதகமாக அமைந்துவிடப் போவதில்லை. மேலதிகமான செல்வம், பலரையும் தவறான பழக்க வழக்கத்தில் உட்படுத்தி விடுகின்றன. இதனையே நாம் அன்றாடம், பலரது வாழ்க்கையில் கண்டு கொண்டிருக் கின்றோம்.
பணம் சம்பாதிக்க வேண்டும், படிக்க வேண்டும் எனப் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் பெற்றோர்கள், ஒரு நல்ல குணசாலியான பிள்ளைகளை உருவாக்குவதை முதற் பணியாக கொள்ளவேண்டும். குழந்தைகளை இயந்திரத் தன்மையுடன் வளர்ப்பதை விடுத்து உணர்வு மிகு, சமூக அக்கறையுள்ளவர்களாக, பாசம் மிகுந்தவர் களாக பிஞ்சுப் பருவத்திலிருந்தே அவர்களை ஆக்கிக் கொள்ள தீவிரமாக முனைதல் வேண்டும். பிஞ்சுப் பருவத்தே நஞ்சனைய சிந்தனைகளை, அவர்தம் நெஞ்சகத்தே விதைக்க வேண்டாம். '
மாறிவரும் சமூகத்தில் இன்று பொருளாதாரப் பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுத்துவிட்டது. படிப்பு எதற்கு பணமீட்டுதலே பிரதானமானது என ஒரு சாராரும், பணமும் தேவை கல்வியும் தேவையானது இன்னும் ஒரு சாராரும் கருதுகின்றனர். இவைகளுடன், நல்ல ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தினால் அனைத்துச் செல்வங்களுமே அவற்றுடன் இணைந்து கொள்ளு
மல்லவா?
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 201-2010
- 144
 

வயது வந்த பிள்ளைகளுடன் சினேகபூர்வமாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்
பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது உள்ள மனோநிலைக்கும், வயது வந்தபின்பு மாறும் இயல்புகளும் வ்ெவ்வேறானவை. இதனைப் பெற்றோர் உணர்ந்து நடக்க வேண்டும். சின்ன வயதிலேயே நல்ல ஒழுக்கத்தையூட்டி வளர்த்தால் இயல்பாகவே பிள்ளைகள் உணர்ந்து நடந் கொள்வார்கள். பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்தால் அவர்களுடனநல்ல நண்பர்களாக மாறிக் கலந்துரையாடுவதே சிறந்த வழி பிள்ளைகளுடன் எதிரிகள் போலநடப்பது சரியல்ல. உங்கள் பிள்ளைகளை மட்டுமல்ல எல்லாப் பிள்ளைகளையும் சரிசமனாய் நோக்குக!
வயது வந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது அவர்களின் மனோ நிலைக்கும் அவர்கள் இளைஞர்களாக, பருவம டைந்த பெண்களான பின்னர் உள்ள இயல்புகளும் வெவ்வேறானவை. பாலியல் உணர்வுகள், மனதை மயக்கும் சிந்தனைகளுக்குட்படுதல் வியப்பான ஒன்றல்ல.
- 145

Page 75
கருத்திழ்.விஸ்வர்ரைன்
என்ன தான் பெற்றோர், ஆசிரியர்களின் புத்திமதி களைவிட தங்கள் உணர்வுள்ள அவர்கள் சார்ந்த வயதை ஒத்தவர்களின் நட்பையும் ஆலோசனைகளையே இவர்கள் பெரிதாக மதிப்பார்கள். இளைஞ தத்தியின் அன்பை நாடுவதும், அவ்வண்ணமே 3. பெரிய தவறும் அல்ல. இெ எல்லை மீறாத வரை பிரச்சினை
ஏதாவது ஆலோசனை சொன்னால் "எனக்கு எல்லாமே தெரியும் உங்கள் சொல்படி நடந்தால் என் நண்பர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்” என்று சொல்லும் பிள்ளைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தங்கள் பிள்ளைகள் மீது எல்லையற்ற பாசமும் கரிசனையும் இருப்பதை பிள்ளைகள் உணர்வார்கள். ஆயினும், தற்கால மாற்றங்களுடன் வளர்ந்துவரும் இளைய சமூகம், தமக்கு முன்பு வாழ்ந்தவர்களின் கருத்துக்களை ஜீரணிக்க மறுக்கின்றார்கள். எவ்வித அனுபவமும் இல்லாத நண்பர்களையே பெரிதும் நம்புகின்றார்கள் எனப் பெற்றோர் ஆதங்கமுடன் கூறிக் கொள்வார்கள்.
வளர்ந்த பிள்ளைகளின் சுதந்திர உணர்வு தமது பிள்ளைகளைப் பாதித்துவிடுமோ எனப் பெற்றோர் அச்சப் படுவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தங்களின் நடத்தை களைக் கண்காணித்தாலும் பிள்ளைகள் எல்லையற்ற கோபம் கொள்கின்றார்கள்.
- 146 -
 
 
 
 
 

கதறுக் கடமையும் கெட்ட சகவாதத்தினால் நெறிகெட்டு அலையும் இளைஞர், யுவதிகளைப் பார்த்தால் எவருக்குத்தான் பயம் ஏற்படாது? நல்ல நண்பர்கள் சகவாசத்தையே விரும்பும் பெற்றோர், ஆரம்பத்திலேயே தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கத்தினைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு பெற்றோரும், தீய பிள்ளைகளுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை விரும்புவதேயில்லை.
ஆனால் பாச மிகுதியினால், தங்களது பிள்ளை களின் தவறுகளை ஏற்கச் சிலபெற்றோர் மறுக்கின்றார்கள். தங்கள் பிள்ளைகளைக்கெடுக்க முனைவது வேறு நபர்கள் என்றே சொல்லிக்கொள்வார்கள்.
பிள்ளைகளின் தவறுகளை ஏற்க மறுக்கும் பெற்றோ ராலேயே இளைய சமூகம் மென்மேலும் கெட்டழிகின்றது. நல்வழிக்குப்பிள்ளைகளைக் கொண்டுவர உண்மைகளை ஏற்கும் மனப்பக்குவத்தை தந்தை, தாயார் தமக்குள் ஏற்படுத் திக் கொள்ள வேண்டும்.
பெற்றோரின் பலவீனத்தினைப் பிள்ளைகள் சாதக மாக்கிக் கொள்வார்கள் அல்லவா? நேரம் கழித்துவரும் மகளைத் தாயார் கண்டிக்கும்போது, தந்தையார் குறுக்கிட்டு “இது நாகரீகமான காலம், நீ உனது காலத்திலேயே இன்னமும் நிற்கின்றாய், பெண்களுக்குத் துணிச்சல் வேண்டும். இவள் நேரம் கழித்து வந்தால் என்ன? இதில் என்ன தவறு" என, ஆராயாமலே பாசமேலிட்டினால் அவர்
- 147

Page 76
கருத்திபூர்:49:அறிவதன் தனது மகளுக்குப் பரிந்து பேசினால் பின்னர் என்ன
நிகழும்?
இதே போலவே, கண்ட கண்ட கூட்டாளிகளுடன் படிக்காமல் குடித்து ஊரைச் சுற்றும் பிள்ளைகளின் தவறு களை மூடிமறைத்தால் பின்னர் துன்பப்படுவது அவர்கள் அல்ல, பிள்ளைகளின் முழு எதிர்காலமும் தான். இந்நிலை மாற குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்ன செய்ய வேண்டும்?.
சின்ன வயதிலிருந்தே பெற்றோர்கள் தமது நேரத் தின் பெரும்பகுதியை, அவர்களுக்காகவே செலவிடுதல் வேண்டும். பிள்ளைகள் வளர்ந்ததும், மனம் விட்டு அவர்க ளுடன் பேசி மகிழ வேண்டும். தினசரி உணவு உண்ணும் நேரத்திலாவது ஒவ்வொரும் தத்தமக்கிடையே நடந்த சம்பவங்களை சினேகிதபூர்வமாக உரையாடினால் பிள்ளை களால் மறைத்து வைக்கப்படும்அநாவசியமான அந்தரங் கங்கள் வெளிப்படுவதுடன் தங்கள் தாய், தகப்பனாரையும் அன்பான நண்பர்களாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். இதனால் எவ்வளவு முரட்டுத் தனமான ஆண்பிள்ளை களும், துடுக்கான, பின்விளைவுகளை அறியாத பெண் பிள்ளைகளும் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளுகின் றார்கள்.
மேலும்,
நல்ல, நல்ல நூல்களை வாங்கிக் கொடுங்கள், கலை
--148 سے

யுணர்வுமிக்கவர்களாக ஏதாவது ஒரு கலையைப் பயிற்றுவிக் கவும். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் ஒன்றா கவே சுற்றுப்பயணமோ அல்லது கலை, கலாசார நிகழ்ச்சி கள், மேலும் நல்ல அறிவூட்டும் பொது நிகழ்வுகளுக்குக் கூட்டிச் செல்வது சாலவும் சிறந்தது. முக்கியமாக ஒன்று, எச்சந்தர்ப்பத்திலும், தமது பிள்ளைகளுடன் கூட படிக்கும் மாணவர்களை நையாண்டிபண்ணியோ அன்றிகேவலமாக இவர்கள் முன்னிலையில் பேசவேண்டாம். இதனால் மன முடைந்து, பெற்றோரிடம் பழிதீர்க்கும் எண்ணமும் ஏற்பட லாம். இளம்பராயத்தினர் வளர்ந்துவரும் உயிர்ச்சிற்பங்கள். கவனமாக இவர்கள் பராமரிக்கப்படவேண்டியவர்கள்.
தெய்வ பக்தியும், பெரியோர்களை மதிக்கும் பண்பையும், பெற்றோர்கள் மூலம்தான் கண்டுகொள்ள முடியும். ஒழுக்கம் என்பது திடீர் என நுழைவது அல்ல. அனுபவமூலம், நல்ல வழிகாட்டல் மூலமே பரிணமிக் கின்றது. எனவே நல்ல பிரஜைகளை உருவாக்குவது தங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்ல. இந்தப் பாரிய உலகிற்கு அளிக்கக் கூடிய விலைமதிக்கவொண்ணா பெரும் பொக்கிஷம் ஆகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
13-12-2009
- 149 -

Page 77
இல்வாழ்வில் இனிமை பொங்க. ๑๑ !
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒருவர் கருத்து, ஏனையவர்களுக்கு ஏற்புடையதாக அமைந்திடாது. கணவன், மனைவி கருத்து ஒருமித்து வாழ்வதே ஒரு பெரும்பேறு. இவர்கள் இருசாராரிடத்திலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், அதுபற்றியே தீவிர பிரச்சினையாக உரு ஏற்றாது தமக்குள் அனுசரிப்பதே இல்லறவாழ்வின் வெற்றியுமாகும்.உலகின் சகல மக்களுக்குமே தனிப்பட்ட எண்ணங்கள் விருப்பு, வெறுப்புக்கள் இருப்பது யதார்த்தமானது. அது அவரவர் உரிமையுமாகும். ஆனால் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் பிரச்சினைகள் முளைவிடாது உள்ளம் வளைந்து நிலைகுலையாது
"கருத்து ஒருமித்து வாழ்க" எனப் புதுமணத் தம்பதி
களைப் பெரியோர்கள் வாழ்த்துவதுண்டு. கருத்தொரு
மித்தவர்களாக, கணவன், மனைவி வாழ்வதே பெரும்பேறு.
கருத்துக்கள் எல்லோருக்கும், எல்லாச் சந்தர்ப்
பங்களிலும் ஒன்றாக இருந்துவிட முடியுமா? ஏதோ ஒரு - 150
 
 
 
 
 
 
 
 
 

அதனும் கடமையும் விடயத்திலாவது நாம், மற்றவர்களினது கருத்துக்களில் இருந்து வேறுபடுகின்றோம்.
ஆயினும் கருத்துக்கள் வேறுபாடுகள் காரணமாக நாம் முரண்பட்டுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. இதே போல் ஏதோ சின்ன விடயங்களில் கருத்துக்கள் இருசாரா ரிடமும் ஒத்துவராமல் விடுவது ஒரு சாதாரண விஷயமா கவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆயினும் எண்ணங் களில் தூய்மைத் தன்மை இருந்தால் பிரச்சினைகளே உருவாகாது.
உலகின் சகல மக்களிடமும் தனித்தனியான எண்ணங்கள், விருப்பு, வெறுப்புக்கள் இருந்தே தீரும். ஆனால் நம்மில் பலரும், தங்களுடன் இசைந்தே, தங்கள் கருத்தின்படியே அதனை ஏற்று வாழ வேண்டும் என்று எண்ணுவதைப் போல் முட்டாள்தனம் பிறிதில்லை.
வெளிநாடுகளில் கணவன், மனைவி பிரச்சினை களில், பொருத்தமற்ற காரணங்களுக்காகவே முரண்பட்டுப் பின்னர் விவாகரத்துப் பெற முயற்சிக்கின்றார்கள். கணவன் உடுக்கும் உடை தனக்குப்பிடிக்கவில்லை என்றும் கணவர் குறட்டை விட்டுத் தூங்குவதே பெரிய தொல்லை எனக் குற்றம் சுமத்தி மனைவியர்கள் தத்தமது கணவன்மார் பற்றி நீதிமன்றில் விவாகரத்துக் கோரியபோது சொன்ன தகவல் இது. இந்தச் சம்பவம் உண்மையாக இருக்குமா என எம்மால் நம்ப முடியாது. இதேபோலவே மனைவிமீது
- 151 -

Page 78
மருத்தியூர்.அ9:அறிவதன் வினோதமான குற்றங்களைச் சுமத்தும் கணவர்மார்க
ளுமுண்டு.
தங்களது அந்தரங்கமான விஷயங்களைக்கூட வஜ்ஜையின்றி பகிரங்கமாக நீதிமன்றங்களில் சொல்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதுமில்லை. இதனால் இந்தக் கணவன், மனைவியிடையே சிக்கித் தவிக்கும் தமது பிள்ளைகள் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறை செலுத்துவ துமில்லை.
கணவன், மனைவி பிரிவினால், இவர்கள் குழந்தை களின் உளநலம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தங்களிடையே ஏற்படும் சண்டை சச்சரவினால் குழந்தை களில்கூடப் பெரிதும் அக்கறை காட்டுவதேயில்லை. அவர்கள் போஷாக்கு, கல்வி, விளையாட்டு போன்ற விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாது விடின், முடிவில் தாய், தந்தை மீதே பாசம் அருகி விடுவதில் ஏது வியப்பு?
பணம், பொருள் இல்லாது விட்டாலும் அக்கறை உணர்வுடன் தங்கள் விருப்புக்களை மட்டும் முன்னிறுத் தாமல், பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுப்புடன் வாழ்வதே வாழ்வு.
திருமண வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே ஒருவர்
கருத்தை ஒருவர் உணர்ந்து செயல்பட்டாலே பிரச்சினைகள்
எழ வாய்ப்பே வருவதில்லை. கணவன் இயல்பு அறிந்து, - 152

அதனும் கடமையும்
அவனுக்குள்ள பிரச்சினைகளை உணர்ந்து மனைவியும் அவ்வண்ணமே கணவன் இயல்பான ஆசைகளுக்கு மதிப் பளித்து முடிந்தமட்டும் தன் முனைப்பு இன்றி உளப் பூர்வமாக உவந்தளித்தால், மனைவியும் அதனைப் புரிந்து கொண்டு விடுவாள்.
மேலும் இயலாத காரியங்களைச் செய்யுமாறு கணவன், மனைவி ஒருவரை ஒருவர் நச்சரிப்பதை நிறுத்தியேயாக வேண்டும். கல்வியறிவு குறைந்த, அத்துடன் பொருளாதார வசதி குறைந்த இடத்தில் விவாகம் செய்த பலரும் சந்தோஷமாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதைக் கண்டிருக்கின்றோம்.
ஆனால் பெரும் பணம் படைத்த இல்லங்களில் கணவன், மனைவி சாதாரண விஷயங்களுக்காக முரணன் படுவது அவர்கள் மன முதிர்ச்சியின்மையையே, எடுத்துக் காட்டுகின்றது.
பிள்ளைகள்அதிக வசதியுடன் வாழும் சிலருக்கு, விட்டுக் கொடுக்கும் இயல்பு அருகிக் காணப்படுவதாலேயே எதிரியுடன் மோதுவதுபோல் குடும்பங்களில் குரோதங்களை வளர்த்துவருகின்றனர். இன்று எளிமையாக வாழ்பவர்களே குடும்ப நாகரீகத்தைக் கட்டிப் பாதுகாப்பவர்களாக இருக் கின்றனர். 、 リ 臀
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்றுமே குடும்பத் தில் சலனங்களை பெரும் அச்சுறுத்தல்களான விளைவு
- 153:س-

Page 79
பகுத்திi.dல.அறிவதன் களைப், பாதிப்புக்களை ஏற்படுத்த இடமளித்தலாகாது. தெய்வ, ஆன்மீக நம்பிக்கைகள் எமது மனதில் சாந்தியை ஏற்படுத்து வதுடன் தற்காலிகமாக ஏற்படும் மனக் கிலேசங்கள், பயம், கோபங்களை இவை தகர்த்து விடும். குழந்தைகளிடத்தே பயபக்தி, பெரியோரைக் கனம் பண்ணுதல் போன்ற நற்பண்புகளை நாம் வளர்த்து வருதல் வேண்டும்.
தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தித் தர்க்கம் புரிவது குடும்பத்திற்கு அழகல்ல. தங்கள் சொந்த வீட்டுப் பிரச்சினைகளை ஆராய்வதுபோல், தொலைக் காட்சித் தொடர் நாடகங்களைப் பார்த்து, மனம் குழம்பி பல குடும்பங்களில் வாய்த்தர்க்கம் ஏற்படுவது வேடிக்கை. வரும் காலங்களில் தொலைக்காட்சி நாடகங்களை விமர்சிப்பதால் குடும்பப் பிரச்சினைகள் மட்டுமன்றி அயல் வீட்டாருடன் மனஸ்தாபப்படுவதுடன், இவர்களிடையேயான உறவுகள்கூடப் பாதிபடைந்தால் அது புதுமையுமல்ல.
எல்லோரையும் நேசிக்கும் பண்பு வந்தால், இல்லத் தில் மட்டுமன்றி, வெளியிடங்களில் சமுகங்களில் நல்லுறவு தழைத்தோங்கும். கருத்து ஒருமித்து வாழ்வது என்பது பிறர் கருத்துக்களை மதித்தும் வாழ்வதாகும். கணவன், மனைவி இதையுணர்ந்தாலே போதும், இல் வாழ்வில் இனிமை
பொங்கும்.
தினக்குரல்"இவள் பகுதி" ஞாயிறு மஞ்சரி 14-07-2010
- 154 س
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 80


Page 81

ISBN 978 955 0469-13-0
JULIOLINI
5 Oil 469 13