கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:அக ஒளி

Page 1
வாழ்வியல் வசந்த
சிந்தனைக்
 

6 – II (D 15 கட்டுரைகள்

Page 2

அகஒளி
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வின் வசந்தங்கள்- பாகம் 73 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் விபரம்
நூல் தலைப்பு :
ஆசிரியர் :
மொழி :
பதிப்பு ஆண்டு :
பதிப்பு விபரம் :
உரிமை :
தாளின் தன்மை
நூலின் அளவு:
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
கணனி வடிவமைப்பு:
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை :
அகஒளி
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 13
பருத்தியூர் பால.வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க்
கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
13
153
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
தையல்
வானவில் வெளியீட்டகம்
250/=
ISBN: 978-955-0469-14-7
 

அணிந்துரை
வாழ்வுக்கு ஒளியூட்டும், பொலிவூட்டும் நூல்களே நமக்குத் தேவை. இத்தகைய நூல்கள் வாழ்வில் நம்பிக்கையுணர்வை ஏற்படுத்துகின்றன. நல்வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. அவ்வப் போது வாழ்வில் ஏற்படும் விரக்தி மனப்பாங்கை நீக்குகின்றன. இத்தகைய நூல்கள் ஒரு நூலகத்தில் இருந்தால் அல்லது ஒரு வீட்டில் இருந்தால் ஓரிடத்தில் ஏற்றி வைத்த விளக்கு முழு இடத்துக்கும் ஒளிசெய்வது போல் ஒளிசெய்ய வல்லன.
பருத்தியூர்.பால,வயிரவநாதனின் இந்நூலும் அத்த கைய தன்மைகளைக் கொண்டதுதான். வாழ்வில் ஒளியேற்றும் தீபமாக இந்நூல் விளங்குவதே அதன் சிறப்பாகும். நூலாசிரி யரின் நோக்கமும் அதுவே தான். எழுத்துக்கு ஒரு நல்ல குறிக் கோள் இருக்க வேண்டும். வாசகருக்கு நல்லவற்றை மனம் திறந்து சொல்ல வேண்டும் பருத்தியூர் பால,வயிரவநாதனின் எழுத்துக்கும் ஒரு நல்ல குறிக்கோள் உண்டு. வாசகருக்கு நல்லவற்றை மனம் திறந்து சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குநிறையவே உண்டு.
எழுத்தாளர் பால. வயிரவநாதன் ஆக்க இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டிருப்பதைப் போன்றே ஆன்மீக, உளவியல்துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். அவர் பத்திரிகை யில் எழுதியுள்ள கட்டுரைகள் அவரது ஆர்வத்தை இனங் காட்டுகின்றன.

Page 4
பால,வயிரவநாதனின் வாழ்வியல் வசந்தங்கள் என்ற சிந்தனைக் கட்டுரைத் தொகுப்பின் இரு பாகங்கள் இது வரை வெளிவந்துள்ளன. அதன் அடுத்த பாகங்கள் இப்போது இந் நூலாக வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகின்றது.
இவரது இத்தொகுப்பில் இடம்பெmயம் கட்டுரைகளும் அவரது சநதவை வெளிப்பாட்டைப் புலப்படுத்துவதோடு, வாசகனின் சிந்தனைக்கு விருந்தாகவும் அவர்களின் சிந்தனை யை தூண்டுபவையாகவும் அமைந்தள்ளன. பக்தி, அறிவும் அனுபவங்களும், அர்ப்பணிப்பு, இல்லை எதற்கும் தயாரா? நம்பிக்கை,வேற்றுமைகள்கள்வம்,அகலுளி எனப்பலகட்டுரைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு கட்டுரையும் நல்லதைச் சொல்ல வேண்டும், நல்லதைச் செய்ய வேண்டும். என்ற அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது. அவர் விடயங்களை விளக்கிச் சொல்லும் முறை, நூலைப்படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. பால. வயிரவநாதனின் இந்நூல் அவரது அயராத உழைப்பினைத்தாங்கி வெளிவருகிறது. ஒய்வொழிவில்லாது எழுத்துத்துறையில் இயங்கிக் கொண்டி ருக்கும் அவரது முயற்சிநிச்சயம் பயன்படத்தக்கது. இந்நூலை இளைய சந்ததியினரும். ஏனையோரும் படித்து பயன் பெற வேண்டும். பால, வயிரவநாதனின் இத்தகைய எழுத்துப்பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள்.!
கலாநிதிதுரை மனோகரன் தமிழ்த்துறைத் தலைவர் போராதனைப்பல்கலைக்கழகம்
- 4 -

மதிப்புரை
மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக்கூறுவதிலேதளராத ஆர்வத்தோடு தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் பருத்தியூர் பால, வயிரவநாதன் அவர்கள். சமகால ஈழத்துத் தமிழ்ப்பத்திரிகைகள் பலவற்றையும் தமது களமாகக் கைக்கொண்ட இப்பணியை அவர் செய்துவருகிறார். அவராக அவர் எழுதிய வாழ்வியல் சிந்தனைக்கட்டுரைகளைத்தொகுத்து இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் வரிசைகளைத் தொடர்ந்து தற்போது ‘வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூற் தொகுதிகளை வெளியிடுவது மகிழ்ச்சிக்குரியது.
பக்தி, அறிவும் அனுபவங்களும், அர்ப்பணிப்பு இல்லை, எதற்கும் தயாரா?நம்பிக்கைகள்,வேற்றுமைகள், கள்வம்,அகஒளி, என்னும் தலைப்புகளிலான பல்வேறு கட்டுரைகள் இந்நூலை அணிசெய்கின்றன.
தெய்வத்தின்மேல் பக்திகொண்டு வாழ்வதன் அவசிய த்தை பக்தி என்ற கட்டுரை அழகிய முறையில் சொல்கின்றது. அது மட்டுமன்றி பெற்றோர், குரு, முதலானோரிடத்துக் காட்ட வேண்டிய பக்தி குறித்தும் அதுபேசுகின்றமை சிறப்பு.
அறிவு என்பது கல்வியால் மாத்திரம் வருவதில்லை, ஆழ்ந்த அனுபவத்தினாலும் பெறப்படுவது. ஆகவே கற்றலுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்தை அனுபவத்திற்கும் கொடுக்க
-5-

Page 5
வேண்டும். அந்த அனுபவம் முதியவர்கள் மூலமாகப் பெறத்தக்கது. ஆகவே அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். என்றவாறான செய்திகளை அறிவும் அனுபவமும் என்ற கட்டுரை நன்கு விளக்குகின்றது.
அர்ப்பணிப்பு என்ற கட்டுரை எந்தச் செயலையும் அர்ப்பணிப்புணர்வோடு ஆற்ற வேண்டும். என்ற உண்மையை வலியுறுத்துகின்றது."பொறியியலாளர்கள் பாரிய கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் விட்டால் அதுமக்களைப்பாதிக்காமல் விடுமா?பாரியகருமங்கள் என்றில்லாமல் மிகச் சிறிய கருமங்களையும் சிரந்தையுடன் செய்தேயாகவேண்டும். என்றவாறாக சிறுஉதாரணங்கள் மூலம் விளக்குவது சிறப்பாகவுள்ளது.
'இல்லை என்ற கட்டுரை இல்லை என்ற உணர்வினால் வரக்கூடிய தீமைகளையும் நல்லதெல்லாம் எம்மிடம் உண்டு என்ற நம்பிக்கையினால் வரக்கூடிய நன்மைகளையும் வலியுறு த்துவதாகவுள்ளது. "எம்மிடம் தீயவையில்லை இல்லவே இல்லை. பூரண இன்பங்களும் வெற்றிகளும் எல்லாவற்றிற்கும் மேலான அன்பும், கருணை கூர் இதயமும் உண்டு. என்று உளப் பூரிப்பு எய்துவதற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.
இவ்வாறாக இந்நூலில் அமைந்துள்ள கட்டுரைகள்
யாவுமே மனித வாழ்வைச் செம்மைப்படுத்தத் தக்கனவாக
அமைந்துள்ளன. வழிவழியாக எமக்கு வாய்த்திருக்கின்ற அறக்
கருத்துக்களையும் உளவியல் உண்மைகளையும் உள் - 6 -
 
 

வாங்கிய வகையில் ஆற்றப்படும் இத்தகு சேவைகள் என்றும் பாராட்டப்பட வேண்டியன.
பால,வயிரவநாதன் அரசாங்க திணைக்களங்களிலே பொறுப்பான பதவிவகித்தவர். அவ்வகையிலே சமூகம் பற்றிய பொறுப்புணர்வும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது. பத்திரிகைகளில் பல்லாண்டுகளாக எழுதிவரும் பயிற்சி அவருக்கு உண்டு. அது காலங்கடந்தும் பயன் செய்வதற்கு அமைய இத்தகு நூலாக்க முயற்சிகள் உதவும். அவர் ஏலவே இத்தகுநூலாக்க முயற்சி களால் அரச விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். இந்நூலாலும் அத்தகைய ஒரு வாய்ப்பு அவருக்கு உண்டாவ தாக!
மானிட ஒழுக்க நெறியினை வலியுறுத்தும் இவரது பன்முக எழுத்துப் பணி தொடர என்றும் நயினை நாகபூசணி அம்பாளின் இன் அருளை வேண்டிநிற்கின்றேன.
கலாநிதி மு. கதிர்காமநாதன் தலைவர், கொழும்புத் தமிழ் சங்கம்.

Page 6
எனது உரை
உள்ளத்தில் தூய்மையை நிலை நிறுத்துதலே அற வாழ்வின் ஆதார சுருதியாகும்.
இதனாலேயே அகத்தில் ஒளிபெருகும். முகமூடியுடன் மூச்சுத் திணறி வீழ்வதை விட சொந்த முகத்துடன் சிறப்புடன் வாழ்வதே சந்தோஷத்திற்கான வழி.
கெளரவம் கருதி கண்டபடி நடக்கின்றார்கள். எளிமை ஆசையை இழக்க வைக்கும்
"அகத்தின் ஒளிஉண்டாகுதல் என்பதுநற்கருமத்தினை நிர்ச்சிந்தையுடன் பலாபலன் கருதாது செய்யப்படுவதால் உண்டாகும் தெள்ளிய உணர்வு அலைகளேயாம்.
இதனால் உயிர்களை நேசிக்கும் பாங்கு தானாய் உருவாகுவதுடன் பக்குவப்பட்ட ஒருவராய் எவர்க்கும் எதனையும் "இல்லை" என்று உரைக்காமல் வழங்கும் வள்ளலா கவும் பரிணாமம் பெறுவார்கள்.
இல்லை என்பவர்களுக்கு எதுவுமே இல்லை. செல்வம் இருந்து மனது வெறுமையானால் அவனிடம் நல்லவை எதுவுமே இல்லை.
உலோபியிடம் தங்கம் எனும் உலோகம் இருப்பினும்
-8-

உலகத்தில் அவன் களிப்பு மிகுந்த உதவாத பண்டமாகி விடுவான். பேச்சில், செயலில் கனிவும் காருண்ய நோக்கும் புலப்பட வேண்டும். அது வலுப்படவும் வேண்டும்.
எமது அறிவும் அனுபவங்களும் எல்லோருக்கும் பயன்படச் செய்வதனால் சுய நல உணர்வுகள் இல்லா தொழிவதுடன் வேற்றுமை அற்ற தோற்றம் கொள்வீர்கள்.
மேலும் எங்கள்பலம், பலவீனங்களை அறிவினுடாகக் கண்டுகொள்ள முனைய வேண்டும். அறிவிற்குள் அனுபவத்தை அனுபவத்திற்குள் அறிவையும் பெற்றுக்கொள்வது ஜீவன் பெறும் சாதனையாகும்.
இத்தகைய வருமதிகளைப் பெற்றவர்கள் கர்வம் கொள்வதுமில்லை ஆன்ம வலுப்பெற்றவர்கள் எதற்கும் தயாரா கத் தம்மை ஆக்கிக்கொண்டவர்களுமாவார்.
"பயப்படாதவனை ஒன்றும் செய்யமுடியாது" ஆனால் செய்கருமங்களில் நியாயநேர்மைகளில் உறுதியானவர்களாக இருந்தால் மட்டுமே அச்சம் எச்சந்தர்ப்பத்திலும் இவர்களை அணுகிட முடியாது.
மரணம் வருமுன் மரணித்தபடி வாழ்கின்றவர்கள் நல்ல தருணங்களை விரும்பாதவர்கள். பயம் கூட மரணத்தை ஒத்த நிலை தான். பதுங்கி வாழப் பிரியப்படுபவர்கள் மக்களை நெருங்கிட மறுக்கின்றனர்.
- 9

Page 7
எல்லோருமே எதிரிகள் என எண்ணி சந்தேகத்துடன் கலந்தால் குதூகலம் சதாகாலமும் பிணைந்துநிற்குமா?
வாழ்க்கையை இயல்பாகக் கழித்திடுக!பயம், பதட்டம் எதுவுமின்றி எவருடனும் பகைமையின்றி அனைவரையும் நேசித் g5 Too 6). Typ6) dil ILDT6015).
எனது உரையினை இனி அடுத்து வரும் வாழ்வியல் வசந்தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இனி அணிந்துரை மதிப்புரை தொடர்பானவர்கள் பற்றிப் பேசுகின்றேன்.
பல்கலைக்கழகங்கள் ஊடாகவும், தமிழ்சான்றோர்கள், பொது அவைகளிலும் தமது கம்பீரமான குரலில் அனைவரையும் வசப்படுத்தும் தமிழ்த்துறை வல்லோன் கலாநிதிதுரை மனோ கரன் என்பதனை அனைவரும் அறிவார்கள். சுவாரஸ்யமாக, தமிழ் இலக்கியங்களைச் சுவைபட பேசுவதுடன் பிரச்சனை களுக்குரிய, ஐயத்திற்குரிய விடயங்களை நுணுகி ஆராய்ந்து தெளிவுடன் ஆணித்தனமாக பேசுவதில் சமத்தர்.
துணிவு இவருக்கு அணிகலன். நான் இவரது ரசிகன். இலங்கையில் மட்டுமல்ல, கடல்கடந்த நாடுகளிலும் பல்வேறு இலக்கிய ஆய்வரங்களில் பங்குபற்றிவருகின்றார்.
மேலும்பல்கலைக்கழகத்தில் இவரிடம் பயின்றமாணவர்
கள் அநேகர், இவர் பட்டதாரிகளை உருவாக்கியதுபோலவே,
பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும்,பேராசிரியர்களையும்
- O -

தந்துள்ளமை குறிப்பிடத்தக்க விஷயம்.தமதுஅணிந்துரை மூலம் வாழ்வியல் வசந்தங்கள் தொகுப்பின் "அகஒளி"க்கு அணி சேர்த்துள்ளார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தை உலகறியும். தமிழர் வாழும் நாடு எங்ங்ணும் இதன் பெருமை, சேவைகள் பேசப்படும்.
இதன் தலைவராக விளங்குபவர் திரு. மு. கதிர்காம நாதன் அவர்கள். இவர் சைவம், தமிழ் இரண்டையும் தம் இரு கண்களாகக் கருதுபவர்.
மேலும் இவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் இயங்கும் இந்துநிதியத்தின் அங்கத்தவர்.
அகில இலங்கை இந்து மா மன்றம், உலக சைவப்
பேரவை என கொழும்பில் உள்ள பல சமய சமூகநல நிறுவனங் களில் பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்துவருகின்றார்.
இவர் வாழ்வியல் வசந்தங்கள் பாகம்-13இன் "அகஒளி க்கு மதிப்புரை வழங்கும் போது பெருமகிழ்வுடன் வாழ்த்தினார் நன்றிகள்!
புத்தகங்களை ஆக்குவது, வெளியீடு செய்வது என்பன சிரமமான பணி என்பதை அதனை வெளியீடு செய்பவர்கள் அறிவார்கள்.
எழுத்தாளர்களின் அகத்தை அவர்கள் ஆக்கியபடைப் புக்கள் எடுத்துக் காட்டும், நல்ல புத்தகங்கள் எம் அறிவிற்குள் நிறைந்து தெளிவூட்டும்.
- 11 -

Page 8
கல்வித்துறை இலக்கியத்துறையென எங்கும் பற்பல விடயங்களை பரவிப்பேசும் கோடிக்கணக்கான நூல்கள் பெரும் சமுத்திரம். அத்தனைக்குள்ளும் மூழ்கிநல்ல முத்துக்களைத் தெரிந்தெடுப்பது சாமானிய விடயமல்ல உலகில் எல்லாவற் றையும் படித்துமுடிக்க பல்கோடிப்பிறப்புக்கள் போதாது.
ஆயினும் அறிவுப் பசிக்கு அண்டம் அடங்காது. நல்ல நூல்களை உலகிற்கு அளிப்பது அறிவுலகின் கடமை.அதே நூல்களிலுடாகப் பயன் பெறுவதும் வாசகர் கடமையாகின்றது.
நூல்களை அச்சிட்டு வெளியீடு செய்ய உதவிய திரு.எஸ். சிவபாலன் அவர்களுக்கு (அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட்) எனது நன்றிகள். ஒத்துழைப்பு வழங்கிய நண்பர்கள், அன்பர்களுக்கும் அன்புநிறைந்த வாழ்த்துக்கள்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால. வயிரவநாதன்
மேரு இல்லம்"
36-2/1
ஈ.எஸ் பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு 06.
தொ.பே இல - 011-2361012. O71-4402303,
O77-43 18768
- 12 -

சமர்ப்பOைrம்
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
ஆசிரியர்
- 13

Page 9
நூலாசிரியர் மருத்தியூர் மரல. வயிரவநாதன் எழுதி வெளியிட்ட "வாழ்வியல் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
. உண்மை சாஸ்வதமானது
g|LibLDIT
சுயதரிசனம் , கோழைகளாய் வாழுவதோ? . ஞானம்
. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்!
. சும்மா இருத்தல் . உண்மைகள் உலருவதில்லை! . உண்னோடு நீ பேசு!
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
நான் நானே தான்! G6 gp160LD காதலும் கடமையும் அக ஒளி உன்னை நீ முந்து சுயபச்சாதாபம்
மெளனம் மரணத்தின் பின் வாழ்வு
சிந்தனை வரிகள்
- LIT35lb - 01
- LITTEELò - 02
- LITBLs) - 03
- LIFT85ub - 04
- LIFT35lb - 05
- LITæld - 06
- LUFTGESLò - 07
- LIFTE b - 08
- ListasLib - 09
- LITassif - 10
- Tab - 11
- LIT35lb - 12
- LITălb - 13
- LIT35lb - 14
- LIFT85 b - 15
- LIITablf - 16
- LITEL) - 17
- Listasi b - 18
- 14
 

01) O2)
OS)
Ꭴ4Ᏹ
O5)
O6)
ᎤᏃᏱ
ᎤᏰᏱ
O9)
li)
12)
RÓ)
4)
5)
ló)
ア)
பொருளடக்கம்
பக்தி அறிவும் அனுபவங்களும் அர்ப்பஐரிப்பு இல்லை எதற்கும் தயாரா?
நம்பிக்கைகள்
வேற்றுமைகள்
கர்வம் ෆිඝෆිබfl பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறைகளும் வசைப்படுதலும் குழந்தைகளும் குறும்புத்தனங்களும் இவை தான் உண்மைகள்! அழகை மட்டும் முதன்மைப்படுத்தலாமா? உறவுகளைப் பிரிக்க முயலும் வஞ்சகர்கள் ஓடிப் போனவள் 2 பெண்கள் நிலை பற்றிய சமூகப் பார்வை முதுமையிலும் காதல் வாழ்வு
பக்கம்
3ア
47
5フ
68
8O
O2
8
26
32
37
42
47
- 15 س

Page 10

அகஒளி
பக்தி, ஞானத்தை மோனத்தினூடாக வழங்கி ஆண்மாவைத் தூய்மைப்படுத்துகின்றது. பக்தி முத்திக்கு வித்து. பத்தியின்றேல் வித்தைகள் எதுவும் சித்திபெறாது. நம்பிக்கையற்ற பக்தியால் பயனில்லை. இளமைப்பருவத்தைவிட முதுமையிலேயே பக்தியுணர்வு ஓங்குவதாக விஞ்ஞானம் கூடச் சொல்கின்றது. அனுபவ அறிவு பக்தியை உண்டாக்கும். இளவயதிலேயே பெரியவர்கள் குழந்தைகளுக்கு இறையுணர்வையூட்ட வேண்டும். பக்தி வைராக்கியமானது. இறைபக்தியுடன் இந்த உலகையும் மாதா, பிதா, குருவையும் உள்ளன்புடன் நேசிப்பதே உகந்ததாகும்
பக்தி முத்திக்கு வித்து என்று ஆன்மீகம் சொல் கின்றது. பக்தியின்றேல் வித்தைகள் எதுவும் சித்திபெறாது. இது அறிவு நிலைக்கு அப்பாற்பட்டது. நம்பிக்கையில் இருந்து உற்பத்தியாகின்றது என்று ஆன்மீகவாதிகள் அறுதியிட்டுச் சொல்வார்கள்.
سه 17 س

Page 11
பருத்திபூர் 040, 9ரவரர்
பக்தி ஞானத்தை மோனத்தினூடாக வழங்கி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகின்றது. ஆன்மா இறைவன் மீது செலுத்தும் மன ஒழுக்கத்தினால் பக்தி சுரக்கின்றது. இளவயதில் இறைபக்தியில்லாமலும் பின்னர் காலப் போக்கில் வயது ஏற ஏற மனித மனம் இறைவனைத் தேடுவது இயல்பு. இதற்கு விஞ்ஞான காரணங்களும் உண்டு என்கின்றார்கள். மனித மூளை வயதின் முதிர்ச்சி காரணமாகப் பக்தியுணர்வை ஏற்படுத்துவதாக விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள்கூட வலியுறுத்துகின்றன.
எனவே பக்தி மனித வாழ்விற்குத் தேவையான தென்பது இயற்கையின் நியதியாகிவிட்டது. பக்திமான் களைக் கேலியுடன் நோக்குவதும், பேசுவதும் ஒருபோதும் ஏற்கக்கூடியது அல்ல.
தனது இறை அன்புகாரணமாக ஒருவர் "பூரணதிருப் தியுடன் வாழ்கின்றேன்" என்றால் அதை எப்படி ஒருவர் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று விதண்டாவாதம் செய்ய முடியும்?
பக்தி உணர்வை விருப்பமின்றி ஒருவருக்குத் திணித்து விடமுடியாது. பக்தி இயல்பாக வருகின்ற உணர்வு. இதனால் உள்ளம் இளகுகின்றது. மனம் கசித்து இறைவனை வழிபட்டால் தனக்கு எண்ணியது நடக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான். நம்பிக்கையும், அன்பும் இணைந்து கொண்டால், பக்தி வருகின்றது. இதனால்
- 18
 

அகஒனி தெய்வ அருள் கிட்டுவதாகப் பக்தன் உணருகின்றான். இது எல்லா மதங்களுமே ஏற்றுக்கொண்ட உண்மை.
மதங்கள் அன்பினை வலியுறுத்துகின்றன. எனினும் கடவுள் மீது நம்பிக்கையற்றவன் அன்பு அற்றவன் என்று சொல்லக்கூடாது. இறைவன் தன்னை நம்பினார்க்கும் நம்பாதவர்க்கும் உள்நின்று உள் ஒளி பெருக்குபவன். எனவே நாஸ்தீகர் என்றாலும், அவர்களும் இறை அருள் பெற்றவர்கள்தான். அன்பு எவரிடத்தும் எத்தரத்தாரிடத்தும், புறப்பட்டாலும் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட வர்களே.
அன்பு, கனிவு, காருண்யம் இன்றிப் பக்தி என்கின்ற முகமூடி அணிந்தால் அவர்கள் கடவுள் கிருபையை எதிர் பார்ப்பது எப்படி? மனம் லயிப்புடன் சந்தோஷமாக இறை வனை வழிபாடு செய்வதே நிஜமான பக்தி நிலையாகும். மன இறுக்கத்துடன் வலிந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு கடவுளைக் கும்பிடுவது பக்தியுணர்வை ஏற்படுத்திவிடுமா?
என்ன தான் கடவுள் பற்றிய அக்கறையில்லாமல் இருப்பதுபோல் தம்மைக் காட்டிக்கொண்டாலும் கூட அவர் கள் உள்மனதில் “இறை” பற்றிய உணர்வு இருந்து கொண்டு தான் இருக்கும். ஏன் எனில் மதம் பற்றிய நம்பிக்கைகள், கடவுள் பற்றிய சிந்தனைகள், வழிபாடுகள் கலாசாரங்கள் மீதான நாட்டம், எல்லாமே பரம்பரை
- 19 -

Page 12
மருத்தில் பல. ஆயிரவநாதர் பரம்பரையாகத் தொடர்ந்தும் வருவன. பரம்பரைக் குணா திசயங்களைச் சட்டென வெட்ட முடியுமா? மனிதர்கள் தாம் வாழும் சூழல், பண்பாட்டு நடைமுறைகளுடன’ தனது வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கின்றான். எனவே மத உணர்வுகள், மொழிகலை கலாசார பாரம்பரிய பற்றுதல்கள் எம்முள் ஒட்டியவாறு இருப்பது ஒன்றும் புதுமையை (Suju6b6).
மேலும் பக்தி என்பது இறை பக்தி மட்டும்தானா என்பதை நாம் கேட்டேயாக வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் எனப்படுவோர் எமது வணக்கத்திற்குரிய முதன்மைத் தெய்வங்கள் எனச் சிறுவயதிலேயே படித்திருக ’கின்றோம். கடவுளுக்கும் மேலாகப் பெற்றோரே முதன்மை ஸ்தானத்தில் வைக்கப்படுகின்றனர். அன்னையும், பிதாவும், முன்னறி தெய்வம் என்று பாலர் வகுப்பில் படித்திருக் கின்றோம். அன்னையின் காலடியில் கிடைக்காத நிம்மதி வேறு எங்கு உண்டு என்பார்கள். அவள் இன்றி இந்த உலகை எப்படிக் கண்டுகொள்ள முடியும். எமக்குக் கடவுள் வழிபாட்டைக் காட்டியவள் அவள்தானே?
எம்மை இறையருளால் உருவாக்கியதாயும், எம்மை
வளர்த்தும் அவயத்துள் பெரியோனாக்கிய தந்தையும், பக்தி
செய்ய வேண்டிய தெய்வங்களன்றோ! இவர்களால் நாம்
ஆசீர்வதிக்கப்படாமல் தெய்வ ஆசிகள் கிடைத்துவிடாது.
அன்பு பாசத்து டன் எம்மை அவர்கள் உருவாக்கியதால்
தான் எமக்கும் அன்பு என்றால் என்ன, கனிவு பாசம் - 20
 

அகஒளி
எத்தகையது என்பதை உள்ளுர உணர்கின்றோம். இந்த நல் உணர்வுகள்தான் "கடவுள் பக்தி” என்கின்ற மேன்மை நிலைக்குள் எம்மை ஆட்படுத்துகின்றது.
இளமையிலேயே பிள்ளைகள் மேலான கனிவு பாசத்துடன் வளர்ந்துவரும் குழந்தைச்செல்வங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே மனம் விரிந்த மேன்மக்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அடுத்து எமக்குக் கல்விச் செல்வத்துடன் பண்பு நெறிகளையும் அளித்த ஆசிரியர்கள் எல்லோருமே கண்ணெதிரே தோன்றிய தெய்வங்களாவர். நாம் எமது கல்வியறிவை ஒருவரிடத்தில் இருந்து மட்டும் பெற்றுவிடுவதில்லை. பல்வேறு துறைகளில் நாம் நாட்ட முறுகின்றோம். பலதரப்பட்ட கல்வி நெறிகளைக் கற்கின் றோம். நாம் எத்தரத்தாரிடம் கல்வி கற்றாலும்கூட அவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவராவர்.
இன்று பலரும் தமக்கு இளமைக் காலத்தில் கல்வி யூட்டிய ஆசான்களை மறந்து விடுவார்கள். ஆனால் வயது வந்த பின் இறுதியாக யாரிடம் கல்வி கற்றார்களோ அந்த ஆசிரியர்களை மட்டுமே கெளரவித்துக் கொள்வார்கள். அதுபற்றியே பெருமையுடன் பேசிக்கொள்வார்கள். ஆனால் தமக்கு ஆரம்ப காலத்தில் கல்வியூட்டிக் கொடுத்த நல் ஆசான்களை மறந்தே போய்விடுகின்றார்கள்.
இளமைக் காலத்தில் எங்களுக்கு அறிவூட்ட அந்த ஆசான்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள்? எங்கள் - 21 -

Page 13
பருத்திபூர் (49. ஆயிரவரர் குறும்பான சேஷ்டைகள், செய்த அட்டகாசங்களைப் பொறுத்து நின்று பெருமைக்குரிய கல்வியை ஊட்டினார் களே. அன்று அவர்கள் சொல்லித்தந்த "அறம் செய்ய விரும்பு"ஆறுவது சினம்" போன்ற அறத்தை வலியுறுத்தும் சொற்கள் தானே, இன்றளவும் எமக்கு ஞாபகத்தில் இருக்கின்றதே!.
இந்த உன்னத ஜீவன்களே எம் தெய்வங்கள் பக்தி செலுத்த வேண்டிய பெருமக்கள் அல்லவா? உங்கள் வீட்டு வைபவங்கள் ஊரில் நடக்கும் விழாக்களில் ஆசிரியர் பெருந்தகைகளுக்கு முதன்மை ஆசனங்களை வழங்குங் கள். அவர்கள் உங்களை வாழ்த்தும்போது அந்தப் பெறுமதி மிக்க இதயபூர்வமான அன்பின் ஸ்பரிச அலைகள் உங்கள் குழந்தைகளை ஏன் உங்கள் முழுக் குடும்பங்களையும் சென்றடைந்து நல்வாழ்வளிக்கும்.
எனவே பெற்றோரை, ஆசான்களை தெய்வங்களாகப் போற்றுதல் செய்தாலே அது தெய்வத்திற்குச் செலுத்தும் பக்திபோல் அமைந்துவிடும். கடவுள் ரூபத்தில்தான் நல்லோர்கள் ஆசிரியர்கள் இந்த வையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றனர். கடவுள் தன்பொருட்டே இவர்களைச் சிருஷ்டித்துள்ளார். நாம் எமது வாழ்வைச் சீராக நடாத்து வதற்கு எங்கள் கடமைகளில் சிரத்தை ஏற்பட வேண்டும். செய்யும் கடமையில் பக்தி செலுத்த வேண்டும். மன ஈடுபாட்டுடன் விரும்பிச்செய்வதே பக்தி என்பதால், எங்கள்
- 22
 

அகஒளி
கடமைகளில் கூட பக்தி தோன்ற வேண்டும். தொழில் மீதான கரிசனம் என்பது உன்னத சேவையாகின்றது.
நற்சேவை செய்பவனை இறைவன் நேசிக்கின்றான். எனவே கடமை என்கின்ற விஷயம் எமக்காக மட்டும் எனக்க ருதாமல் அதுவே தெய்வசேவை எனக்கொண்டு எல்லா மாந்தர்களுமே இதனால் நன்மை பெறல் வேண்டும் என்று நாம் கருதிப்"பணி" செய்வோமாக! கடமைகளை உதாசீனம் செய்து கடவுளைத்தேட முனையலாமா? தத்தமக்குரிய பொறுப்புக்களைச் சரிவரச்செய்து உலகை வாழவைக்கவே மனிதர்களை ஆண்டவன் படைத்தான். பொறுப்புக்களில் வெறுப்புக்கொள்பவன் கோழை, இவன் அழுது தொழுதா லும் இறைவன் அருளை அள்ளமுடியாது.
இன்று பணத்தையே கடவுள் எனக்கருதி அதைப் பெட்டியில் வைத்துப் பூட்டி கடவுளுக்கும் மேலாக மதித்துத் தொழுகின்றான். காசு கடவுள் என்றால் நிம்மதியை எங்கே தேடுவது? பணம் வாழ்க்கைக்குத் தேவை என்பதற்காகவே எதனையும் இழக்கத்தயாரானவன், தான் பெற்றுக்கொள்ள வேண்டிய இறைவன் அருளை கண்டு கொள்ளாமல் விடுகின்றான். செல்வத்தைத் தேடுவது புறவாழ்விற்கானது.
பக்தியோடு வாழ்வை இணைப்பது இதயம் நித்ய அமைதி பெறுவதற்கேயாம். நாம் யாவருமே இறைவன் அருளாட்சிக் குள் தான் வாழ்ந்துவருகின்றோம். எமது
- 23

Page 14
0ருத்திபூர் 04ல. லுயிரவருதல் "தொழுகை”என்பது கடவுளுக்குச் செலுத்தும் நன்றியுணர்வுதான் உணர்க!
பக்தி தொண்டு செய்யும் உணர்வை உண்டுபண்ணு கின்றது. ஈரமான இதயத்தில் தான் தொண்டு செய்யும் எண்ணங்கள் உதயமாகின்றன. தொண்டனே பக்தி மானாகின்றான். அவனே மக்கள் அன்பனும் ஆகின்றான். அதீத கோபம், பொறுமையின்மை வஞ்சனை, காழ்ப்பு கொண்டோருக்குப்"பக்தி"உணர்வு வரவேவராது. ஆயினும் இத்தகைய குணங்களை உடையோர் தம்மைப் பக்திமா னாகக் காட்டினால் கூட அது பயன் தராத முயற்சிதான். அதிகூடிய முயற்சிகள் தான் தக்க பயனை அளிக்கின்றன. புலனடக்கம் என்பது உடனடியாகக் கிட்டுவதுமில்லை. படிப்படியான பயிற்சிகளினால் எம்மை நாம் நல்ல முறையில் மாற்றியமைக்க இயலும்.
புலனடக்கம் உள்ளவன் கண்டபடி ஆசைப்பட மாட்டான். எவரிடமும் குரோதம் வஞ்சனை கொள்ளவும் மாட்டான். இவர்களிடத்தே இறைபக்தியுடன் சகல நல்ல இயல்புகளும் தானே குடிகொண்டு விடுகின்றது. மனமே கோயிலாக வேண்டும். அங்கு உறையும் இறைவன் மனிதரூடாகவே அருளாட்சி செய்கின்றான். நல்லவர்கள் செய்யும் பணிகள் எல்லாமே இறைவனால் உள்நின்று உரைத்து, உணர்த்திச் செய்யப்படுபவைகளே! நாம் என்றும் இறைவன் கருணையுடனும் அவன் ஈந்த அருள் கொடையாம் அறிவுடனும் வாழ்ந்து வருகின்றோம்.
- 24

அகஒளி நம்பிக்கை நீங்கா அன்பு, அறிவு, பக்தி இவையாவும் சங்கமிக்கும் போது ஞானம் வந்தெய்துகின்றது. பக்தி இன்றி ஞானம் இல்லை. வெறும் அறிவு உலக வாழ்க்கைக்கு மட்டும் என்று சொன்னாலும், அது புறவாழ்வின் ஷேமத்திற்காக இறைவனால் வழங்கப்பட்டதே!.
அறிவோடு இறை நம்பிக்கையைக் கலந்தவர்க்கு உயிர்ப்புள்ள சந்தோஷகரமான வாழ்க்கை கிட்டிவிடும். தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் பக்தி மார்க்கமூடாகத் தொண்டுகளைப் பாரபட்சமின்றி இந்த உலகிற்குச் செய்து காட்டினர். பக்திமானாகத் தம்மைக்காட்டி நிற்பவர்களில் சிலர் ஏழைகளுக்கு இரங்காமலும் குனிந்து நிமிர்ந்து சேவைகள் செய்வதே கெளரவக் குறைவானது என்றும், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் காட்டுவதற்குப் பக்தி மார்க்கமே சிறந்த ஒருபோர்வையாக்கிக் கொண்டும் வாழ்வதால் தான் இளைய சமூகத்தில் "பக்தி” என்றாலே போலியான ஒன்று என எண்ணும் மனோபாவத்திற்கு வந்து விட்டார்கள்.
தெய்வபக்தியுள்ளவர்களும் சரி, தங்கள் கடமைகளில் பக்தியுள்ளவர்களும் சரி, அவர்கள் எவர்க்குமே அச்சப் படுபவர்களாக இருப்பதில்லை. ஞானிகள் மன்னர்களுக்குப் பயப்பட்டதாகச் சரித்திரத்திலேயே இல்லை. உண்மை யுள்ள இடத்தில் பயம் தங்கி இருக்கப் பயப்படும். நல்லோ ரைக் கண்டால் காலன் அவன் உயிரைக் கவரக் கவலைப் படுவான்.
س- 25 س

Page 15
கருத்திழ் ப0. ஆயிரவநாதர்
பக்தி பரந்தது செறிந்தது. தெய்வ உறவுடன் கலந்தது நிறைந்துநின்று அருளை வழங்குவது.
வெற்று உடலுக்குள் பக்தியைப் பாய்ச்சுவதாலேயே அது செய்யும் கருமங்கள் சித்திக்கும். வெறும் நிலத்தில் பயிர்செழிக்க நீரும், வளியும் தேவை. அதுபோல ஆன்மா நிறைந்து ஒளிபெறவும், உலகின் பிறந்ததன் பயனை உலகிற்கு ஈந்திடவும், உண்மையுடன் வாழ்ந்தாலே அதுவே "பக்தி” எனும் ஆதார சுருதியாகிஎம்மைச் சுவீகரித்துவிடும்.
தினக்குரல் ஞாயிறுமஞ்சரி
03.08.2008
-26

அகஒல7
அறிவும் அனுபவங்களும்
அறிவைப் பெருக்கினால் மட்டும் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடுமா மானுட நேயமில்லாத அறிவினால் பயனில்லை. அன்பில்லாதவர் எதனைத்தேடினாலும் நிம்மதியான வாழ்க்கையை அமைக்க முடியாது. அறிதல் அறிவு, இதனைச் செறிவாக்குதல் சிறப்பு. அறிவுடன் பெற் அனுபவத்தினூடாக மானிலத்திற்கு நல்லன செய்க! அறிவு ஆணவத்தையுண்டு பண்ணினால் அது ஆபத்து. அனுபவங்களும் அறிவோடு இணைந்தவையே. ஏட்டில் படித்தவை, காலத்தால் உணர்ந் பெற்றவை, மனிதனை வல்லவன் ஆக்கிவைக்கும். "பணிவு" அறிவை,
னுபவத்தைச் செறிவாக்கும்.
அறிதல், அறிவு இதனைச் செறிவாக்குதல் சிறப்பு. அறிவுடன் ஆணவத்தைத் கலந்தால் அது நிறைவான ஒன்றாக உருப்பெறாது. பெறுதற்கரிய அறிவைத் தேடிப் பெறுதலே ஆறு அறிவுடை மாந்தர்க்குப் பெரும் பேறும் ஆகும்.
இன்று மனிதன், தன் அறிவுக்குள் மட்டும் சிக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அறிவு மட்டும் வாழ்க்கை - 27

Page 16
மருத்திபூர் அல. ஆயிரவநாதர் யாக அமைந்து விடுமா? அதனிலும் மேலான ஒன்றுமே
இல்லை என்று இறுமாந்து போவது சரிதானா? தன்னால்
எல்லாமே ஆகும் என எண்ணுதல் "துணிவு” ஆனால், அறிவுடன் மட்டுமே மனிதன் முழுமையடைந்து விட்டான் என்று தீர்மானம் எடுப்பது சரியானதல்ல.
அறிவுடன் கூடிய மானுட நேயத்துடன் இணையாமல், மக்களுடன் அனுசரித்துக்கொள்ளாமல் "நான் கல்விமான் எல்லாம் படித்தவன்" என்று தன்னைத்தான் மார்தட்டிக் கூறி வாழ்ந்தாலும் அவன் ஒட்டுதல் இல்லாத காய்ந்த இதயத் துடன், வரண்டுபோன வாழ்வுடன் பாலைவனத்தில் பட்டுப் போன மரம்போல் தேடுவாரற்ற ஒடுக்கப்பட்ட ஒருவனாக இருக்க வேண்டியதே!
நல்ல அனுபவங்களை ஏற்றுக்கொள்பவன் பெற்ற அறிவைப் புனிதமாக்கிக்கொள்கின்றான்.
எமது வாழ்க்கையில் கழிந்து போன அனுபவங்களை வெறும் சம்பவங்களாவே அது போன சுவடு தெரியாமலே கழித்துவிடுவது எந்தளவில் எமக்கு உதவப்போவதுமில்லை. அனுபவங்கள் எமக்குச் சாதகமாக அமையாது விட்டால் அதனை மறக்கவே எண்ணுகின்றோம். கெட்ட சம்பவங்களை மறப்பது உத்தமம். ஆனால் எமக்கு அவை நல்ல அறிவூட்டுபவையாகத் தெரிந்துணர்ந்தால் அதுவே எமக்கு ஆசானாகி விடுகின்றது. நாங்கள் எமக்கு ஆகாத விஷயங்களைக் கெட்டவையாகவே நோக்கு கின்றோம்.
- 28

அகஒளி தவறுகளைச் செய்தால் அது தவறு என்று உணரும் போதே அது நல்ல அனுபவமாகின்றது. நான் செய்தது தவறே அல்ல என்று விதண்டாவாதமாக மனம் வேண்டுமென்றே மறுதலிக்கும் போது, அந்த நேரமே நாம் எமக்கான அனுபவங்களை ஏற்றுக் கொள்ளவும், தவறுகளை மறைக்கும் கபட எண்ணமும் கூட வந்துவிடுகின்றது.
ஆனால் உண்மையில் எந்தவித தவறும் செய்யாத சந்தர்ப்பங்களில் ஏற்படும் துன்பங்களைக் கண்டும். அதனால் ஏற்பட்ட இழப்புக்களையிட்டும், தொடர்ந்தும் துவளாமல் எல்லாமே அடுத்து வரும் எமது இயங்குதலுக் குமான சக்திக்கு வழிகாட்டல் என நம்புவோமாக!
எமது நல் அறிவினூடாக எமது வாழ்வின் நிகழ்வுகள் சில எம்மால் ஜீரணிக்க இயலாது விட்டாலும்கூட, அவை ஏன் நிகழ்ந்தது, எதற்காக ஏற்படுகின்றது எல்லாமே எனது தவறினாலா அல்லது தெரியாமல் செய்தவைதானா என்று உணருதலும், அத்துடன் புறதாக்கங்கள் பற்றிய விஷயங் களை அறிவதாலும் எமக்கு அனுபவஞானம் பெற்றுக் கொள்ள முடியுமல்லவா! அறிவைப்பாவிப்பது என்பது, எமது பலத்தை மட்டுமல்ல, பலவீனங்கள் எங்கே எமக்கு உண்டு என்பதைக் கண்டுபிடித்துக்களைவதற்குமாகும். படித்தால் நல்ல வேலை தேடலாம், பணம், பொருள் தேடலாம், எல்லாவற்றிற்கும் மேலாக பிறரை அடக்கி ஒடுக்கலாம் என்று கருதுபவர்களும் இருக்கின்றார்கள். அறிவினால் எம்மை மட்டும் வளர்க்காமல் பிறரையும்
س 29 س

Page 17
கருத்ரிபூர் (40. ஆர்வதாதர் வளர்த்துப் போற்றவும் முடியும் என்று கருதுதலே பெற்ற கல்வியின் முழுப்பயனுமாகும்.
இன்று பலரும் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களால் பட்ட வலிகளைத்தான், பெரிதாகப் பிறருக்குச்சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கின்றார்களே ஒழிய, மற்றவர்களின் துன்பங்களைப்பற்றி எதுவிதமான சிந்தனையுமின்றி, அதைக் கேட்கவே பிரியப்படாமல் நழுவிச்சென்று விடுவார் கள். "ஐயா எனக்குக்கடுமையான தலையிடி, அத்துடன் காய்ச்சல் வேறு என்னை வருத்துகின்றது எனக்கு விடுமுறை தாருங்கள்"என்று தனது எஜமானிடம் கேட்டால்” போ. போ. அது எல்லாம் என்னால் முடியாது, போய் நடக்க வேண்டிய வேலையைப் பார்” என்று சொன்னால் அந்த வேலையாள் என்னசெய்வான்?
ஆனால் அதே எஜமான் தனக்கு ஒரு தலையிடி என்றாலே பெரிய, பெரிய மருத்துவ நிபுணர்களை நாடு வதுடன் ஒய்வு எடுக்க எங்கோ உள்ள விடுதிக்குச் சென்று மறைந்துகொள்வார். இதுவெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும் சம்பவங்களே! தனக்கான துன்பங்கள், அனுபவங் களே பெரிய சமாச்சாரங்கள், அதையெல்லாம் எல்லோ ருமே அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மற்றவன் படும் வேதனையைக் கேட்கவே விரும்பாது அதிலிருந்து விலகித்தனக்கென ஒரு சுயநல பாதையினைக் கொண்டிருப்பது என்ன வாழ்க்கை ஐயா!
- 30 س

அகஒலf7 இன்று சில இளவயதுக்காரர்களிடம் வயது முதிர்ந்த வர்கள் தங்கள் அனுபவம் காரணமாக எதையாவது கூறினால், உடனே அவர்கள் முதியவர்களைக் கேலியுடன் கிண்டலடிப்பார்கள். சில வீடுகளில் பாருங்கள் மிகவும் உயர்நிலையில் பதவி வகித்து ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு அனுபவ அறிவினால் புத்திமதிகள் சொன்னால் அதுபற்றி அந்த இளவட்டங்கள் செவிமடுப்பதுமில்லை. அறிவுபூர்வமான வார்த்தைகளைக் கூட அலட்டல் என்றும் பழமையான கருத்து என்றும் சொல்லி விடுகின்றார்கள். "நவ உலகில் வாழும் நாம் உங்களது பத்தாம் பசலிக் கதைகளை, உபதேசங்களைக் கேட்கத்தயாரில்லை” என்கின்றார்கள்.
இளைய தலைமுறையினர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற மூடக் கொள்கையைத் தவிர்க்க வேண்டிய அதே சமயம், இவர்கள் யாரிடம் கல்வி பயின்றார்கள் எப்படி அறிவு பெற்றார்கள் என்பதை அறிய வேண்டும். பாலர் வகுப்பில் நாம் பயின்ற அ, ஆ. என்ற எழுத்தை எம்மைவிட வயது கூடிய ஆசானிடம், படித்துப் பின்னர், கல்லூரிகளிலும், வயது முதிர்ந்து ஆசான்களிடமே கல்வி பயின்றோம். விஞ்ஞானிகளும், ஞானிகளும் கல்வி யறிவாளர்களும், எல்லோருமே இளையவர்களாக இருக்க (piqul DIT? அவர்களிடமே படித்து, அவர்கள் வயதுடைய, அனுபவஸ்தர்கள் ஏதாவது நல்லவற்றைச் சொன்னால் மட்டும் அதை ஏற்க மறுப்பதுமேன்? இந்த எண்ண மெல்லாமே, ஒரு தன்முனைப்புத்தான்.
-31 -

Page 18
பருத்திபூர் 04ல. லுயிரவநாதர்
மிகவும் வயதுகுறைந்தவர்கள்கூடச் சாதனைகள் பல புரிகின்றார்கள். இத்தகையவர்கள் வாழ்க்கையை ஆராய்ந் தால் அவர்களை ஆளாக்கிய பெரியோர்களின் அர்ப்பணி ப்பினை உழைப்பை நாம் நோக்க வேண்டும்.
இன்றைய அனுபவஸ்தர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கும் எவருமே தாங்கள் முதுமை எய்தியபின்தங்களது அனுபவங்களை எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகின்றார்கள்?
மேலும் ஏதோ சில நூல்களைப் படித்தும் பட்டம் பெற்றால், எல்லாமே எமது அறிவுக்குள் அடக்கம் என்று கருதிச் செயல்பட்டால் எதாவது பிரச்சனைகள் வந்து அல்லல்படுத்தும் போது புத்தகங்களுக்குள் புகுந்து பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியுமா? மேலும் அதிகம் படித்தவர்கள் சிலர், தமக்குத் தேவையேற்படும் போதுகூட படிக்காத அனுபவம் உள்ளவர்களிடம் அறிவுரை கேட்கக் கூச்சப்படுவார்கள். தங்கள் கெளரவத்திற்கு அது இழுக்கு என்றும் எப்படி இவரிடம் போய் நான் என்ன கேட்பது என்றும் கருதுவதுண்டு.
அனுபவங்கள் கூட நல்ல அறிவுடன் கூடிய ஒன்று என்று உணரவேண்டும். அனுபவ ஞானத்தை நல் அறிவில் இருந்து பிரித்துக்கூறமுடியுமா? முற்காலத்துமக்கள் தங்கள் அனுபவ அறிவினால் சொன்னவற்றை நாம் இன்னமும் படிக்கின்றோம். அதன் பொருள் பற்றி இன்னமும் வியந்து நோக்குகின்றோம். படித்துப்பெற்றால்தான் அறிவு, அல்லது
-32 -
 
 

- அகலுளி கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் படித்தால்தான் அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை.
படிப்பதற்கும் பல மார்க்கங்கள் உண்டு. பாடசாலை இல்லாத பழங்காலத்தில் குருகுலமுறை மூலம் மாணவர் பாடம் கேட்டனர். அதாவது குரு ஒருவர் தம் இல்லத்தில் வைத்து மாணவர்க்குப் பாடங்களைப் போதித்தார். இயற்கைச் சூழலில், காடுகளில் உள்ள குடில்களில் ராஜா வீட்டுப் பிள்ளையுடன் சாதாரண குடிமக்களின் பிள்ளை களுடன் கூடி ஒன்றாக படித்தார்கள் என்று நீங்கள் கதைகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
பாகுபாடு அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க எல்லோரு டனும் ஆணவம் அற்ற நிலையில் பழக தமது பிள்ளைகளை மாமன்னர்கள் ஏனைய மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்பதற்கு ஒரே ஆசானிடம் அனுப்பி வைத்தார்கள். இந்த அரிய அனுபவத்தினால் அரசிளங்குமரர்கள் சமூகத்தை, சமூக அமைப்பினை, பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த விஷயங்கள் எல்லாமே நாம் உணரவேண்டிய விஷயங்கள். அறிவை எப்படி எப்படியெ ல்லாம் தேட வேண்டும். மக்களை எப்படி நாம் நேசிக்க வேண்டும் என்பதனை எல்லாம் நம் முன்னோர்கள் எப்போதே சொல்லி விட்டுப்போய் விட்டார்கள்.
எங்கெங்கோ யார், யாரிடமோ, கஷ்டப்பட்டுப்படித்த பின் எல்லாவற்றையும் நானாகத் தேடிக்கொண்டேன், - 33

Page 19
கருத்ரிபூர் பல. ஆயிரவநாதர் எல்லாமே எனக்குத்தெரியும் என்று மமதை கொள்வதுகூடக் கற்ற கல்வியை அவமதிப்பது போல் அன்றோ!
மனிதனிடம் பரிபூரணத் தன்மையை ஏற்படுத்துவதே கல்வியாகும். கல்வியை, நல்ல ஞானத்தை அளிப்பதனை சாதாரணமான வேலை என்று சொல்லக்கூடாது. கல்விப் பணி என்பது புனிதமான அறச்சேவைதான். கல்வி மூலம் பூரணத்துவம் பெற்றவன் ஞானமார்க்கத்திற்கான பாதையூடு பயணம் செய்யும் பாக்கியம் பெற்றும் விடுகின்றான். அறிவிற்கு அடுத்தபடி மேலே "ஞானம்" எம் ஆன்மாவை இறைவனுடன் இணைத்து விடுகின்றது. சாதாரண நிலை யில் உள்ள மனிதனும்கூடத் தனது புனிதமான வாழ்க்கை முறையினால் அகத் தூய்மையினால் ஞான வழியில் செல்ல ஆரம்பிக்கின்றான். எனவே அறிவு நற்சேவை பட்டறிவு எல்லாமே சங்கமித்துவிட்டால் ஒருவனுக்கு இயலாத கருமம் என்று ஒன்றும் இல்லை.
இன்று அறிவாளிகளுக்கு உள்ள பெரும் பிரச்ச னையே அதுவா, இல்லை இதுவா? என்பதில் முடிவு காணாது திணறிப்போகின்றமையாகும். அறிவு கூடும் போது சந்தேகங்களும் கூடிக்கொண்டே செல்கின்றது. சாதாரண கிராமவாசிதன் சுதந்திரமான அறிவு அனுபவத் தால் உடனே ஒரு முடிவைச்சுயமாக எடுத்துச் செயல்படு கின்றான். அவனுக்கு அச்சம் என்பது கிஞ்சித்தும் இல்லை.
-34

அகஒளி
அறிவு மேலதிகமாகச் சந்தேகங்களை ஏற்படுத்
தினால் மனிதன் இயங்குவது எப்போது? தெளிவற்ற அறிவு
குழப்பத்தையன்றோ ஏற்படுத்துகின்றது? எமதுஅறிவினால்
மட்டும் முடிவுகள் அமைவதில்லை. நல்ல அனுபவஸ்
தர்களிடம் சென்று தேடிப் பெறவேண்டியது எவ்வளவோ இன்னமும் உண்டு.
எதனைக் கண்டறியவேண்டும் என்பதைப் பூரணமாக உணர்ந்தவன் அச்சமற்ற முடிவுகளை எடுப்பவனாகின்றான்.
ஆண்டவனால் அருளப்பட்ட ஆயுட்காலங்கள் பூரண மாகப் பயனுடன் செலவளிக்கப்படல் வேண்டும் இதற் காகத்தானே அறிவு. அவனால் தரப்பட்டது. பெயரும், புகழும், பணமும், செல்வமும் கிடைக்கவேண்டும். இதற் கான வழிகள் ஏராளமாக உண்டு. ஆயினும் இவைகளை அடைய முக்கியமாக "ஆன்மா” எம் வசப்படல் வேண்டும்.
அறிவைப்படைத்த இறைவன் அதனூடாக ஆன்ம பலத்தையும் வழங்குவதற்காகவே அனுபவ ஞானத்திற்கான சந்தர்பங்களையும் வழங்கிய வண்ணமுள்ளான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆன்மாவை, அறிவுடன் இயைபு படுத்துவோமாக, யந்திரமயமான அறிவு எம்மை முழுமைப் படுத்திவிடாது. அதன் வழியில் வாழும் மனிதன் திருப்தியு டன் வாழ்ந்து விடமுடியாது.
-35

Page 20
மருத்திபூர் 00. ஆயிரவநாதர்
மனம், ஆன்மா, முரண்படாது வாழ்ந்தால் தான் எங்கள் அறிவும், அனுபவமும் எம்மை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும். எங்கள் எண்ணங்களைச் சிதறவிடாது குறிக்கோளுடன் லயிப்பதே பெற்ற அறிவின் முழுப்பய னுமாகும்.
சந்தேகங்களும், குழப்பங்களுமற்ற மனோநிலையில் வாழ்வதைவிட வேறு என்ன செல்வம் பெரிதாக உண்டு? அமைதியான சூழலுக்குள் எம்மை உட்புகுத்த வேண்டும். எமக்கு நாம் உண்மையான ஆற்றல் பூத்த எஜமானனாக எம்மை ஆக்கிக்கொள்ளவும் வேண்டும்.
மூளையை உடைத்து அதனுள் அறிவை வலுக்கட்டா யமாக திணிக்க வேண்டும் என்பதுமல்ல. அறிவு இயல்பாக ஆர்வம் இருந்துவிட்டால் அறிவு சுரந்து வரும். அறிவுக்குள் அனுபவமும் அனுபவத்திற்குள் அறிவும் இருந்தால் மனிதன் பூரணத்துவ சிருஷ்டியாகின்றான்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 20.07.2008
-36

அஆஓரி
அர்ப்பணிப்பு
விருப்பமின்றி எக்காரியத்தைச் செய்தாலும் அது முழுமை பெறாது. மனதைச் சுழலவிட்டு உடல்மட்டும் இயங்கினால் அர்ப்பணிப்பான சிந்தை வந்துவிடாது. எண்ணங்களே எம்மை ஆக்குகின்றது. சிந்தையை ஒரே திசையில் குவித்தால் செய்கருமங்கள் திருப்தியாக அமைந்து வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும், எல்லோருமே எங்களை ஆசீர்வதிக்கும்படியாக வாழ்ந்தால், எமது மனம் வியாபகமாகி உலகின் ஷேமத்திற்காக அர்ப்பணிப்புடன் கருமமாற்றுவோராகிவிடுவோம். நல்ல ஆற்றலை வளர்க்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுக!
மனம், வாக்கு, காயத்தினால் எவ்வித களங்கமும் இன்றி, முழுமையான ஈடுபாட்டுடன் குறித்த செயலைச் செயல்படுத்தல், அர்ப்பணிப்புடன் கருமமாற்றுவதாகக் கொள்ளப்படும்.
விருப்பமின்றி ஏனோதானோ என்ற ரீதியில் மனம்
லயிக்காமல் தேகம் மட்டும் இயங்கினால் அது அர்பணிப் س، 37 است.

Page 21
கருத்திபூர் 04). ஆயிரவநாதர் பான செயலாக அமைந்து விடாது. உடலால் மட்டும் செய்யும் காரியங்கள் முழுமையான செயலாக இருக்க முடியுமா? மனம் பல்திசையாகக் கண்டபடி சுழன்றால் அது புனிதமான காரியங்களைச் செய்வதற்கும் தடையாகிப் போகின்றது. மனம் இயங்குகின்றது. அது ஸ்தம்பிப்பது மில்லை. எனவே மனதின் ஓட்டமும் ஒரு வேலை போல் ஆகின்றதே?
எம்மை எமது எண்ணங்கள் ஆட்டுவிக்கின்றது. இந்த எண்ணங்களை ஒரே இடத்தில் குவித்துச்செய்யும் காரியங் களில் நல்லதை மட்டுமே கருதிக் கடமை செய்யும் போது அங்கு எமக்கு அர்ப்பணிப்பு மனோபாவம் தானாகவே உருவாகி விடுகின்றது. கெட்டபணிகளை அர்ப்பணிப்புடன் செய்ததாக எண்ணுதலை விடுத்து நாம் கருதும் விஷயங்கள் எல்லாமே சிறப்பானதாக எண்ணி உருவாகி விட்டால், பெறுதற்கரிய அற்புத சக்திகள் எம்முள் பீறிட்டு எழுந்து எம்மை ஆக்கிரமித்துவிடும்.
இந்த அற்புத சக்தியை எம்முள் உட்புகுத்த நல்ல எண்ணங்களுடன் ஒரே நல்ல வழியில் சென்றாலே போதும் கிடைப்பனவெல்லாம் ஒழுங்காகக் கிடைத்துவிடும் எங்களுக்குள் எப்படி இந்த உன்னத சக்தி உட்புகுந்துள்ளது என நீங்கள் உங்கள் நிலையுணர்ந்து வியப்படைவீர்கள்.
நீங்கள் ஒருவரை நோக்கும் போதே உங்களிடம் இருந்து கண்ணுக்குப்புலனாகாத சமிக்ஞைகள் உங்களிடம் - 38

அகஒளி இருந்து புறப்பட்டுவிடுகின்றன. ஒருவரை நீங்கள் வெறுப்புடன் இகழ்ச்சி செய்யும் மனப்பான்மையுடன் ஒரு வார்த்தை கூடப்பேசாமல், வெறும் பார்வையை மட்டும் வீசினாலே போதும், அடுத்த கணம் அவர் உங்களை மலர்ச்சியுடன் நோக்கவே மாட்டார்.
எங்களுக்கு அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர் என்றில்லாமல் எல்லோருமே எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றே கருதுவீர்களாக ஒருவர் எங்களை விரும்பு வதைவிட வெறுப்பதை நீங்கள் விரும்புகின்றீர்களா? மேலும் நீங்கள் ஒருவரை வெறுத்தும் ஒதுக்கியும் விட்டாலும் அவர்கள் உங்கள் காலடியில் வந்து கிடக்கவேண்டும் எனக்கருதுகின்றீர்களா? அத்தகைய குரூரமான நிலைக்குத் தள்ளப்படும் நபராக மாற நீங்கள் உங்களை மாற்ற விரும்பும் நபராக இருக்க விரும்புகின்றீர்களா?
மேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து விடுபட்ட எல்லோராலும் நேயம்மிக்க மாந்தராக இருந்து கொள்ள உங்களை நீங்கள் மக்களை நேசிக்கும் மனிதனாக உருவாக்கிக்கொண்டால் எல்லாம் வல்ல அற்புத சக்தியை உருவாக்கிய பெருமைகளைப் பெற்றவராகவும் அர்ப்பணிப் புடன் காரியமாற்றும் நுட்பங்களைப் பெற்றவராகவும் நிஜமான மனிதத்தோற்றத்தைப் பெற்றவராகவும், பூரணமாக மாறிவிட்ட புண்ணிய புருஷனாகியும் மாறி விடுவீர்கள். உணர்க தோழர்களே!
- 39

Page 22
மருத்திபூர் 00. ஒயிற்றிருந்தர்
பொய்யாக சிரிப்பவர்களை மற்றவர்களும் பொய்யான சிரிப்புடன் நோக்குவார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்? தீமைதரும் குரூரபுத்திதான், இதனால் நிரந்தர மாகக் குடிகொண்டு விடும். தூசிகள் நிறைந்த கெட்ட ஜந்துக்கள் வீட்டில் வசிக்க எவர் தான் விரும்புவார்கள்? நீங்கள் இருக்கும் வீடு மிகப்பெரியதாகச் சகல வசதிகளை யும் கொண்டிருக்கலாம். ஆனால் இருக்கும் வீடு தூய்மை யற்றும், ஆபத்தான பாம்பு, பூரான், தேள், கொடுக்கன் வாழ்கின்ற இடமாக இருந்தால், அவைகளை அழிக்காமல் எப்படி நிம்மதியாகச் சீவிக்கமுடியும்?
வெளித்தோற்றத்தில் மட்டும் அழகாக டாம்பீகமாக வாகன வசதிகளுடன் உலாவந்தால் என்ன கெளரவம் வேண்டிக்கிடக்கின்றது? உள்ளத்தில் உள்ள ஒட்டடைகளை நீக்கித் தூய்மையாக்கி, உள் ஒளி சேர்க்காமல் விட்டால் எது பயன் வாழ்வில் உண்டு?
குறுகிய நோக்கம் கெட்ட எண்ணம் கொண்டவர் களால் நல்ல காரியங்களை அர்ப்பணிப்புடன் செய்யும் ஆவல் தான் வருமா? தனக்காக வாழுபவன் கூட மற்றவ னைச் சார்ந்துவாழாமல் இருக்க முடியாது ஆகையால் தான் வாழ்ந்து கொள்ளவாயினும் மற்றவனை மதித்து அன்பு செலுத்தியேயாக வேண்டும்.
மேலும் செலுத்தப்படும் அன்பு இயல்பாகவும் காரியம் பெறுவதற்கு மட்டுமானதாக இருக்கவும் கூடாது.
- 40
N
 

அகஒரி மனதால் அனுதினமும் நல்ல எண்ணங்களை எண்ணுதல் இந்த உடலுக்கு சிரமானது எனக்கருதக் கூடாது. அரை குறையாகச் செய்யும் அலுவல்கள் என்பதே ஒரு வேலை யில் இருந்து விலகி ஓட எத்தனிப்பது போலத்தான். மேலும் செய்யும் வேலையை அவமதிப்பது போலாகும் என நாம் கருத வேண்டும்.
ஒருவன் செய்யும் பணி அவர்கள் "அது தன்னிலும் உயர்ந்த" ஒன்றாகக் கருதிக்கொள்ள வேண்டும்.
விஞ்ஞானி ஒருவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்கின்றார் என்றால், அவர் முழு அர்ப்பணிப்புடன் தன் தேகம் இருப்பதையே மறந்து செயல்படுவதாகவே நாம் காண் கின்றோம்.
குடும்பத்தலைவன் தன் மனைவி குழந்தைகளைப் பராமரித்தலுக்காக இயன்ற வரை தன்னை வருத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றான். இவன் தன் பணியில் சற்றேனும் பிசகினால் கடமையில் இருந்து வழுவினான் என்று சாமானியமாகச்சொல்லி விடமுடியுமா? பொறுப்பு களில் இருந்து விலகுதலால் எவருமே முழுச் சமூகத்திலிரு ந்தே தன்னை நிலை நிறுத்தத் தவறிவிடுபவன் ஆகின்றான். இது கோழைத்தனமான பலவீனத்தன்மை என்பதுடன் அவன் சார்ந்த பல உறுப்பினர்களை உயர்த்துதற்குத் தடையானவனுமாகின்றான்.
- 41 -

Page 23
பருத்ரிபூர் (49. ஓரவநாதர்
எனவே எவராயினும் தன் கடமைகளில் இருந்து நழுவுதல் என்பது அவரது தனிப்பட்ட பிரச்சனை என்று சம்பந்தப்பட்டவர்கள் இம்மியளவும் கருதலாகாது. தங்கள் கருமத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படாமையால் எழும்பு கின்ற சகல பிரச்சனைகளும் முழுச் சமூகத்தையும் பாதிக்
56)),
பொறியியலாளர் பாரியகட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் விட்டால் அது மக்களைப் பாதிக்காமல் விடுமா? பாரிய கருமங்கள் என்றில்லாமல் மிகச் சிறிய கருமங்களையும் சிரத்தையு டன் செய்தேயாக வேண்டும்.
மிகப்பெரிய பேருந்தில் எல்லா இயந்திரங்களும் வேலை சரிவர இயங்குதற்காகச் செப்பனிடப்பட்ட பின்னர், அது புறப்படத் தயாராகின்றது. வாகனக்சாரதிபேரூந்தைப் பொறுப்பேற்க வருகின்றார். அந்த நேரத்தில், தொழில் நுட்பப்பிரிவில் கடமை புரிந்த தொழில் நுட்பவியலாளர் வாகனச்சாவியை எங்கோ யந்திரத்தினுள் வைத்துவிட்டார். உரியநேரத்தில் மிகுந்த சிரமத்தில் செப்பனிடப்பட்ட அந்த வாகனம் சில மணி நேரதாமத்தின் பின் சாவி எடுத்த பின்னரே உரிய முறையில் அவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது. கவனக் குறைவு மிகச்சின்ன விஷயமேயா னாலும் அவைபாரிய பிரச்சனைகளை உண்ணு பண்ணு மல்லவா? அச்சாணியின்றேல் வண்டி புறப்படுமா? நான் இப்போது என்ன செய்கின்றேன் என்ற உணர்வே யின்றி

அகஒளி
வேலை செய்தால், செய்ய வேண்டிய பணி முடிந்து சரிவர ஒப்பேறிவிடுமா?
குறித்த "இலக்கு" இன்றி இயங்குபவன் துலக்கமற்ற பார்வையற்றவனாகின்றான். இத்தகையவர்கள் பயனற்ற கருமங்களையே, மீண்டும், மீண்டும் செய்து காலத்தைக் கரியாக்குகின்றார்கள். ஒரிரு வினாடிப் பொழுதில் செய்யும் வேலையை, ஒன்றரை நாட்களிலும் செய்துமுடிக்காமல் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
ஈடுபாட்டுடன் எதனைச்செய்தாலும் அதில் தவறுகள் ஏதும் ஏற்படாது என்கின்ற திடமனதுடன், அச்சமின்று விருப்பத்துடனும், மகிழ்வுடனும் செய்யக்கூடியதாகவே உணர்வார்கள். விரும்பிச் செய்யும் காரியங்களில் வெறுப்பு ஏது? காலத்தை விரயம் செய்தலும் நடக்காது.
குழந்தையைக் குளிக்கவார்க்கும் தாய், நீண்ட பாதையில் பிள்ளையைத்தோளில் சுமக்கும் தகப்பன், பசியுடன் கணவன் வருவானே என்கின்ற எண்ணத்துடன் அறுசுவை உணவுகளைத் தயாரிக்கும் மனைவி, மேலதிக நேரம் வேலைசெய்தாவது அன்பு மனைவி பிள்ளைக ளுக்காகப் பணம் சேர்க்கும் குடும்பத்தலைவன், இவர்கள் எல்லோருமே தங்கள் பணியைச் சுமையாகக்கொள்ள மாட்டார்கள். அன்பு, பரிவு, பாசம் ஏற்பட்டால் எவர்க்குமே தங்கள் கடமையே ஒரு சுகானுபவமாகவே இருக்கும். இவர்களுக்கான பொறுப்புக்கள் பற்றி பிறர் எதுவுமே
A莺

Page 24
மருத்திபூர் 00. ஐரேவதர் எடுத்துரைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடப்போவது மில்லை.
தமது வாழ்வின் அர்த்தமே இறைசிந்தையுடன் வாழ்ந்து உலகிற்குச்சேவை ஈந்து அவன் இணையடி சேர்ந்துவிடுதல் என்கின்ற குறிக்கோளுடனேயே ஆன்மீக ஞானிகள் தம்மையே ஆகுதியாக்குகின்றனர். இறை பேரின்ப நுகர்ச்சியானது இயம்பிட இயலாததாகும். ஆன் மாவை இறைவன்பால் அர்ப்பணித்துச் சரணடைவதிலும் பார்க்க மேன்மை வேறு ஏது உண்டு?
மக்களின் ஆன்மீக வெளிப்பாட்டினாலேயே உலகம் என்றுமே அவன் கருணையினால் தீட்சண்யமான பார்வை யினால் இயங்குகின்றது. பக்தர்களின் உள் உணர்வின் ஸ்திரத்தன்மையினால் எழும் பக்திமிகு எண்ணங்கள் ஓய்ந்து விடுவதுமில்லை.
காதலர்கள் எல்லோருமே தங்கள் காதல் புனித மானது, தெய்வீகமானது என்றும். தங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையுமே காதலுக்காக அர்ப்பணித்து விட்ட தாகவும் சொல்லித்திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
காதல் என்பது வெறும் உடல் காமத்துடன் மட்டும்
சம்பந்தப்பட்டது அல்ல. அழகைக்கண்டு ஆசைப்படுதல்
புதுமையுமானதுமல்ல. நான் அவள் அழகைக்கண்டு
ஆசைப்படவில்லை என்று சொல்லும் ஒரு சாரார்,
- 44

அகலுளி சிலசமயம் அவளது சொத்து, பணம், காசுக்காகவும் பிரியப் படலாம். இவை எல்லாவற்றையும் தவிர்த்து ஆன்மாவுடன் ஒன்றித்த காதலர்கள் எத்தனை பேருளர்?
உடலை மட்டுமே மையப்படுத்தாது மனத்துடன் சங்கமமாகி உயிருடன் கலந்த, களங்கமற்ற பவித்திர நிலையில் உருவாகும் காதல், ஊழிக்காலத்தின் பின்னரும் இந்த ஜகம் மீண்டும் மீண்டும் தோன்றி பல் உயிர்களுடன் மீண்டும் மீண்டும் அவை ஜனிக்கும் போது, இந்த உன்னத தெய்வீக காதலரின் ஆன்மாக்கள் தொடர்ந்தும் இணையும் பிணையும்.
இதயங்கள் சங்கமமாகி அவை ஒன்றுக்கொன்று அன்புடன் அர்ப்பணமாகி இணைந்து நின்ற உன்னதக் காதல் கிட்டியவர்கள் பாக்யவான்கள்.
நாம் விரும்பித் தேடும் எந்தப்பொருள் கிட்ட வேண்டு மாயின் எம்மை நாம் அர்ப்பணித்துச் செயல்படும் போது கிட்டாமல் விட்டதுமில்லை. எனவே தோல்வியற்ற நிலை வேண்டுமாயின் மனம் லயிப்போடு செயல்படும் உள்ளம் வேண்டும் அறிவோமாக!
ஆணவமுனைப்புக்கள் இருந்தால் அர்ப்பணிக்கும்
சிந்தை வந்து விடாது. என்னால் முடியும் என்று எண்ணுவது
ஆணவ முனைப்பு அல்ல. அதேசமயம் தாழ்மையுடன்
பணிந்து உள்ளத்தை விரித்து அர்ப்பணிப்புடன் கடமை سے 45 سہ

Page 25
பருத்திபூர் 040 ஆயிரவரர் புரிதல் பலவீனம் என்று சொல்லக் கூடாது. பிறருக்கு ஒன்றுமே தெரியாது எனக்கு மட்டுமே அனைத்தும் புரியும் என்பது தன் முனைப்பு ஆகும். இந்த எண்ணங்களைத் தவிர்க்க! இது நற்செயல்ை உருவாக்காது.
இன்று வீரம், ஆணவம் என்கின்ற இரண்டினையும் ஒரே கருத்துடன் சிலர் தவறாக நோக்குகின்றார்கள். நல்ல காரியத்திற்காகப் போராடுவதும் தனது சுயநலத்திற்காக வீராப்புடன் பேசிமோதுகின்ற மேலாதிக்க ஆணவத்திற்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. இந்த மேலாதிக்க உணர்வு வீரம் என்று சொல்லவே கூடாது வெறும் அசட்டுத்த னம்தான்.
தாழ்மையாகப் பணிவுடன் தன்னை மாற்றுவதும் தன் முன் நிற்பவர்களைக் கெளரவப்படுத்துதலும் மனித நேயத்திற்கான பண்புமாகும்.
"அர்ப்பணிப்பு" என்பதே எம் ஆன்மாவின் வலுவான ஆரோக்கிய நிலைதான். யோகிகளும், ஞானிகளும், கற்று அறிந்த அறிஞர்களும் தங்களை நெறிப்படுத்துதற்கு அர்ப்பணிப்புடன் முழுமையாக இயங்கியமையினாலேயே உள் ஒளிபெருக்கி உயர்ந்தனர். ஆற்றலை வளர்க்க உள் உணர்வை ஒளி கூட்டமுழு அர்ப்பணிப்புடன் செயலாற்றுக!
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 13.09.2008
- 46
 
 
 

2566if
இல்லை
"இல்லை" என்று எண்ணுதலும், சொல்லுதலும் எம்மை, "வறுமை" நிலைக்குத் தள்ளிவிடும். ஆசை, கோபம், வன்மம், காழ்ப்பு பொறாமை போன்ற துர்க்குணங்கள் எம்மிடம் இல்லவே இல்லை எனுமாறு நாம் வாழ்ந்து காட்டுவோம். அறியாமை துன்பம் இல்லா வாழ்வு வேண்டும். இல்லையென்று சொல்லாத அன்பினை வழங்கினால் எல்லாமே எமக்குக்கிடைத்துவிடும். இல்லையெனாது மனம் நிறைந்தால் எட்டாத உலகத்தை எமக்குள் உருவாக்கிவிடுவது ஒன்றும் புதுமையுமல்ல.
இல்லை இல்லையென்று சொல்லிச்சொல்லியே எதிலும் தப்பித்துக்கொள்வதால் தொல்லை இல்லை என்று எண்ணுதல் தம் வல்லமையையே இழந்து விடுகின்ற செயல் என்று உணர்வார்களாக!
"இல்லை” என்று எடுத்ததெற்கெல்லாம் சொல்லு கையில் அங்கு வறுமை இயலாத்தன்மை சூன்ய, உணர்வு
- 47

Page 26
பருத்திபூர் 04ல. ஆயிற்றுதாரர் சேர்ந்தே வந்து விடுகின்றதே? எனினும் தகாத சிந்தனைக ளைக் கொய்ந்து இல்லா தொழிப்பதுவே மானுட உயர் பண்புமாகும். பொய்யான பேச்சுக்கள், நடத்தைகள், எமக்கு இல்லாது இருந்தால் அதுவே பெருமை, கருமையற்ற தூய்மையுமாகும்!
நீங்கள் ஒரு கடைக்குச்செல்கின்றீர்கள் உங்களுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள் ஒன்றை வாங்குவதற்காகக் கேட்கின்றீர்கள். கடைச் சிப்பந்தியோ எடுத்த எடுப்பிலேயோ அது எம்மிடம் இல்லையென்று சொன்னால் உங்களுக்குக் கோபம், ஏக்கம் ஆற்றாமை வந்துவிடாதா? ஒரு பொருளைக் கேட்டதுமே கிடைக்க வேண்டும் என்றுதானே எல்லோரும் எதிர்பார்க்கின்றார்கள்? அடுத்த கடையிலும் போய் அலைந்து திரிந்து வாங்கலாம் என எண்ணுவது வேறு விஷயம்.
ஆயினும் சில வியாபாரிகள் இல்லை என்று சொல்லவே மாட்டார்கள். "அடடா p5ங்கள் கேட்ட பொருள் நாளைக்கு நிச்சயம் எங்களுக்கு வந்துவிடும் பரவாயில்லை சற்றே அமருங்கள் என்று சொல்லித் தமது சிப்பந்தி மூலம் அடுத்த கடையில் வாடிக்கையாளர் கேட்டபொருளைத் தருவித்துக் கொடுப்பதுமுண்டு.
இல்லை என்றுகூறிப் பெறுமதிமிக்க ஒரு வாடிக்கை யாளரை இழக்கப் புத்திசாலியான ஒரு வர்த்தகர் பிரியப் படவே மாட்டார்.
- 48
 
 
 

அகலுளி இல்லை என்று சொல்வதையே ஒரு பழக்கமாகக் கொண்டால் அவர் இல்லாதவராகிவிடுவதும் உண்மையே.
நிறைந்த வாழ்வை விரும்பும் நாம், பின்வரும் சிந்தனைகளை எங்கள் மனதினுள் விதைப்போமாக!
* எந்நேரமும், எக்கணமும் கோபதாபம், பொறாமை, வஞ்சகம், காழ்ப்பு, போன்ற துர்க்குணங்களை இல்லா தொழிப்போமாக!
* எம்மிடம் உதவிகளைக்கேட்கவரும், எத்தரத்தினரைச் சார்ந்தோராயினும், அவர் எமக்கு வேண்டப்பட்டவர் என்கின்ற பாகுபாடு இன்றி எம்மால் முடிந்தளவு சேவைகளை நல்குவோமாக! மேலும் நாம் அளிக்கும் எந்த உதவிகளையும் கருதி அவைகளைப்பெற்றுக் கொள்வோரிடம் இருந்து கைமாறு கருதாத மன உறுதியுடன் இருப்போமாக!
* எனக்குத் துன்பங்கள் இல்லை என்றுமே நான் சந்தோஷமாகவே இருக்கின்றேன். நிறைந்த மனதுடன் வாழ்ந்து வருகின்றேன். என்னிடம் பூரணமான அன்பு உண்டு. கனிவான நல் இதயம் உண்டு. என்னைச் சுற்றி என்றுமே நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள். என நான் பூரணமாக நம்புகின் றேன். இறை கருணையினால் எதனையும் பெறுப வன் ஆகின்றேன் என்பதை உள்ளத்தில் நிறுத்துக!
- 49.

Page 27
பருத்தியூர் 240. ஆயிரவநாதர்
நாம் பிறர்க்கு எதனையுமே கொடுக்கின்றவர்களாக இருந்தால், இல்லையென்று சொல்லாத நிறை மாந்தராகி விடுவோம் அன்றோ!
"மகிழ்ச்சி" என்கின்ற வரவை எதிர்நோக்குபவர்க்கு அது கிட்டியே தீரும் இத்தகையோர் எவர்க்கும் கொடுத்த படியே வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.
ஆசைகளை அபமிர்தமாகத் கொண்டுள்ளவர்கள் எல்லாவற்றையுமே தமதாக்க முனைகின்றார்கள். அவர்க ளிடம் எதையுமே எவரும் கேட்டுவிடமுடியாது. ஆசைகளில் மூழ்கிக்கிடக்கும் சிலர் தமது மனைவி, மக்களைக் கூடச் சந்தோஷமாக வைத்திருப்பதும் இல்லை. பிள்ளைகள் அவசியமான எந்த விதமான பொருட்களைக் கேட்டாலும் "அது அநாவசியமானது, இப்போது எனக்கு வசதி இல்லை" என்று கூறித் தட்டிக்கழித்து விடுவார்கள்.
சேர்த்து வைப்பதிலேயே குறியாக இருந்தால் எவர்க்கும் கொடுக்கும் எண்ணம் எங்கே வரப்போகின்றது ஐயா?
தயாள மனது உடையோர் ஆசை வலையினுள் விழாது தப்பித்துக்கொள்கின்றார்கள். ஆசை அசுரத்தன மானது. தேவையானதை மட்டுமே தெரிந்து கொண்டு ஆசைப்பட மனிதனுக்குச் சிரமமாக இருக்கின்றது. எல்லாவற்றையுமே வைத்துக்கொள்ள ஆசைப்படுபவனுக்கு.

அகஒளி எதையும் ஏன் சகலதையுமே மறைத்துக் கொள்ளும் எண்ணமும் கூட வந்து விடுகிறது. பணம் படைத்த உலோ பிகள்"இல்லை” என்று சொல்லிட வெட்கப்படுவதேயில்லை. "விரிந்த மனம் இரங்கும்", என்றும் அன்பு சுரந்தோடும். என்றும் நல்லவைகளை அளித்துக் கொண்டேயிருப் பவனுக்கு மற்றவன் நட்பை, அன்பை அழிக்கச் சித்த மிருக்காது.
எல்லோருமே, தங்களிடம் எதையாவது பெற்றுக் கொள்ள, அல்லது சுரண்டத்தான் வருவதாகச் சில கருகிய மனத்து உலோபிகள் கருதுவதுண்டு. தமது முகத்தினைக் காட்டுமுன்பாகவே, "எதுவும் கேட்க வேண்டாம் எதுவுமே யில்லை” என்று கேட்குமுன் சொல்லும் பிரகிருதிகளை நீங்கள் காண்பதில்லையா? அன்பில்லாதவர் எவரையும் அரவணைக்கத் தெரியாதவர்கள்.
மற்றவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்பவனுக்கு அவர்தம் சொந்தக்கவலைகள், மன அழுத்தங்கள் ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத வண்ணம் தெய்வாதீனமாகச் சுலபமாகவே தீர்ந்துவிடுகின்றன.
என்றுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என எண்ணினால், நாம் அடுத்தவன் சந்தோஷத்தை வளர்க் கின்றவனாகவும், எத்தருணத்திலும் பிறர் நிம்மதிக்கு ஊறு நேரா வண்ணம் பார்த்துக்கொண்டாலே போதும்.

Page 28
பருத்திபூர் 040, 2யிரணுருதேஷ்
செல்வத்தில் கிடைக்காத பெரும்பேறுகளை இல்லை யெனாது அன்பு மீதூர பிறரைக் கவர்ந்தும், அவர்களுடன் சொந்தம் கொண்டாடி மகிழ்வதாலும் பெற்றுவிடுகின்றோம். விலகி வாழ்வதால் இலகுவில் மகிழ்வு வந்திடுமோ?
உண்மையான உழைப்பினால் கொடுக்கப்படும் "தானம்", இறைவனாலும் ஏற்றுக் கொள்ளப்படும். தவறான வழியில் தர்மம் செய்கின்றவர்கள் “நான், எவர்க்கும் இல்லையென்று சொல்லாமல் வழங்குகின்றேன்" என்று சொன்னால் அது ஏற்புடையன்று!
நேர்மையற்ற வழியினால் வழங்கிடும் எவையுமே, செய்த பாவத்தை பிறரையும் பங்காளியாக்க முனைவ துமாகும்.
நல்லதைச் செய்பவன் மட்டுமே பெருமிதம் கொள்ளும் பாக்கியம் பெற்றவனாகின்றான். அடுத்தவன் வீட்டைச்சுரண்டி பெற்ற பிள்ளையையும் வாழவைக்கக் கருதக்கூடாது. அறுசுவை உணவை இரந்து புசிப்பதிலும் பார்க்க, உழைத்து பெற்ற கூழேயாயினும் அதுவே திருப்தி
மேலும் கோடானு கோடி செல்வங்களை நான்
வைத்திருக்கின்றேன் என்று சொல்லுபவர்கள். தர்ம கைங்
கரியங்களுக்கு யாராவது போய் உதவிகளைக் கேட்டால்
மட்டும் பஞ்சப்பாட்டுப்பாடுவார்கள். டாம்பீகமான வாழ்வும்,
ஆணவ முனைப்புடனான பேச்சுமே பேசி வாழ்பவர்கள் - 52


Page 29
கருத்திபூர் ச40, 20வரர்
கல்வி கற்றவனிடம் இல்லாத செல்வம் எல்லாமே சேருகின்றது. கல்வி கற்காது விடுவதை விடவேறு என்ன வெட்கம் இருக்கின்றது? இன்று உலகம் கல்வித் தகைமை களை வைத்துத்தானே ஒருவனை எடை போடுகின்றது. செல்வந்தனை நோக்குவதைவிடக் கல்வியாளனைக் கெளர வத்துடன் நாம் பார்ப்பது புதுமையான சங்கதியும் அல்ல. அறியாமையை இல்லாமல் செய்யும் பணியினை, எமது சமூகம் கடின உழைப்புடன் மேற்கொள்ள வேண்டும். ஏனோ தானோ என்கின்ற மனப்பான்மையுடன் நவீன சமூகம் இருந்துவிட முடியுமோ?
அறியாமையை "இருள்" என்றும் இதுவே துர்ப்பாக் கியம் என்றும் சான்றோர் பகர்ந்து வருகின்றனர். ஏழ்மையை விட அறியாமை தான் பெரும் துன்பத்தை ஏற்படுத்த வல்லது. தன்னையே உணரவைக்காத தன்மையை விடக் கொடியது வேறென்ன உண்டு ஐயா?
"நீ எதுவாக இருக்க எண்ணுகின்றாயோ, அதுவாக மாறிவிடுவாய்" என்கின்ற கூற்று, மிக ஆழமான உளவியல் ரீதியான பேருண்மையுமாகும். “திருப்தியாக நான் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றேன்” என்கின்ற பூரண நினைப்பே எம்மை அதே நிலையில் வைத்திருக்கும் என்பதை நாம் நம்புவோமாக வெறும் பேச்சளவில் மட்டுமல்ல இல்லாமை இயலாமைகளை வேரோடு களைந்தால் எம்முள் இருப்பது சாந்தியும், சந்தோஷமும் அன்றி வேறு எதுவுமே எம்மிடம் குடிபுகுந்திடுமோ?
- 54

அகஒளி
வெறுமை வாழ்வில் எம்மைக் கருக வைக்காது. எமக்குள் எம்மை மிஞ்சும் அழகிய புதுமுகங்களை உற்பத்தி பண்ண வேண்டும். நித்தம் நித்தம் புதிதான மலர்களின் குளுமையும் சிலிர்ப்பும் வனப்பும், சுகந்த மணமும், இறைவனிடமிருந்து உற்பத்தியாகின்றன. அதே போலத்தான், மனிதன் தினம் தினம் வாடாத புதுமலராக களிபழட்டும் காந்தப்பூக்களாக அனைவரையும் வசீகரித்திட வேண்டுமன்றோ? வாடிய முகங்களை எவர்தான் தேடுவர்?
அழகிய தோற்றப்பொலிவுடன் இருந்தாலும் கூட உள்ளத்தில் கவலைகள், தாக்கங்கள் ஏற்பட்டால், அங்கு இயல்பான அழகு வெளிப்படுமோ? துன்பத்தில் புகுந்து கொள்ளுதல் இலகுவானது. "துன்பமாக இருக்கின்றேன், என்று சொன்னாலே போதும். அது வேண்டாத விருந்தா ளியாக எமக்குள்ளே ஒட்டிக்கொள்கின்றது. "இது வேண்டாம் இதன் வருகையை நான் பூரணமாக எதிர்க்கின்றேன். இதனுள் அமிழ்ந்திட நான் இனிமேலும் அனுமதிக்கவே மாட்டேன்” என்று உறுதி பூண்பவன், "சந்தோஷி” யாகின்றான்.
கள்ளாமில்லா கருணையான அகவெளிப்பாடு உள்ள த்தில் திருப்திகாணும் இயல்பு, முழுமையான உழைப்பு இருக்கின்றவனுக்கு இல்லாத செல்வம் என்று சொல்லிட எதுவுமேயில்லை. வாழ்கின்ற காலத்தில் வாழ்க்கையை விரும்பி ஏற்போம். அதுவே ஒரு பாரம் எனக் கணக்குப் பண்ணலாகாது.
-55

Page 30
0ருத்திபூர் 04ல. ஹவிரவநாதன்
தப்பித்து ஓட வாழ்க்கை ஒரு சிறையோ அல்லது ஒரு குறுகிய பாதையோ அல்ல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வித அனுபவங்கள் அதனைப் பரிபூரணமாக ஏற்போம். துன்பங்களும், தடைகளும், எம்முள் குடியிருக்க வருவதுமில்லை. ஒரு முறை வந்ததும் உங்களைச் சந்திக்கும். பின்னர் அது தன்பாட்டிற்கு விரைந்தோடிவிடும்.
"எமக்கு எட்டாத உலகத்தையே நாம் எட்டிவிட்டோம், ஏன் அடக்கியாண்டும் விட்டோம்" என்றே புது உலகவாசிகள் புகழ்கின்றார்கள். அப்படியாகப் பெருமைப்பட்டுக் கொள் ளும் நவ உலகினராகிய நாம் தீயவை எம்மிடம் இல்லை இல்லவேயில்லை, பூரண இன்பங்களும், வெற்றிகளும், எல்லாவற்றிற்கும் மேலான அன்பும், கருணைகூர் இதயமும் உண்டு, உண்டு என்று மனப்பூர்வமாக 3-ITibgp(86) TLDIT85
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 22.06.2008
- 56

அகஒளி
எதற்கும் தயாரா?
மனிதன் நற்செயல்களைச் செய்வதற்கு என்றும் தயாராக இருக்கி வேண்டும். எதற்கும் தயாராக இருப்பவனைப் பயப்படுத்தவியலாது. அறிவு, செல்வம், புகழ் போன்றவைகள் மூலம் எதனையும் செய்துவிடலாம் என்று எண்ணுதல் ஆணவம். இவை மனித ஆற்றலை முடக்கும். எவரையும் எரிச்சலூட்டி வாழ்ந்துவிட முடியாது. துணிச்சலுடன் நற்காரியங்களைச் செய்பவர்களுக்குக் கடவுளின் உதவிகள் தாரளமாகக்கிட்டும். சோம்பல், உள்ளவன், தன்னைப் புதுப்பிக்கத் தெரியாதவன். தன்னை நம்பாதவன், தயார் நிலையில் இல்லாதவன்.
ணிச்சல் கருமங்களைப் பலமடங்காக்கும்.
எதற்கும் தயாராக இருப்பவர்களைப் பயப்படுத்த இயலாது. இவர்கள் செயலைத்தடுத்தி நிறுத்தி செயல் இழக்கச்செய்வது சிரமமானது ஆயினும், அசட்டுத்து ணிச்சலுடன் வீணான கருமங்களுக்காகத் தங்கள் புலனை ச்செலுத்துவதும் விவேகமான காரியம் அல்லவேயல்ல!
س 57 س

Page 31
கருத்தியூர் (49. ஆடுவரர் மேலும் தகாத எண்ணங்கள் கொண்டு அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து எல்லாமே சரி என்று தாங்களா கவே தீர்மானம் செய்து அதன் பொருட்டு மற்றவர்களை இம்சைகள் புரிவதை எவர்தான் அனுமதிக்கப் போகின் றார்கள்?
அறிவுக் கூர்மை மிக்கவராக இருந்தாலும் கூட சுய நலத்தின்பால், பற்றுறிதி மிக்கோராய் "எல்லாமே என் அறிவுக்குள் அடக்கம்” என்று கருதி"எதற்குமே நான் தயார் தான், வருவது வரட்டும்” என்று செயல்படுவது அங்கீகரிக் கத்தக்க விடயமும் அல்ல. இந்தக் குரூர புத்தி கொண்ட, அதி மேதாவிகள் எனத் தம்மைக் காட்டிக் கொண்ட வர்களை, சாமானியமான, ஒருவன் தலைகுனிய வைக்கும் நிலை ஏற்படலாம்.
தமக்கு அனுகூலமான விஷயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதும், அதனால் சமூகத்திற்குப் பங்கம் ஏற்படுத்தப்படும் எந்தக்காரியங்களையும் முழு மூச்சுடன் செய்தாலும் கூட அது வெற்றி பெற்றிடப் போவது மில்லை. எனவே நாம் செய்யும் காரியங்களைப் பொறுத்தே "நான் எதற்கும் தயாராகச் சுறுசுறுப்பானவனாக இருக்கின் றேன்." எனப்பெருமையுடன் சொல்லிக் கொள்ளவும் முடியும், எமது பணிகளை செய்வதற்கு நாமே முழு ஆதார மாகக் கொண்டு இயங்கினால் அவை ஸ்தம்பிதமடையப் போவதில்லை. தன்னை நம்பாத ஒருவனால் எக்கரு மத்தையும் திறம்படச் செய்து விடமுடியாது.

அகஒளி
எவரையும் எரிச்சலூட்டி அதனுாடு தனக்கான
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள விழைவதும், குறுக்கு
வழியில் அழுத்தமாகச் செயல்பட்டால் எதனையும் இலகு
வாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புவதும் வாழ்வதற்கு ஏற்ற நல்லவழியுமல்ல.
மற்றவனை முந்தி ஓடுவது என்று கருதாமல் தனது முழு வல்லமையுடன் ஒடிஜெயிப்பதே பந்தயத்தின் பூரண திருப்தியுமாகும். ஒருவனை நான் விழுத்துகின்றேன் என்று எண்ணாமல், உங்கள் பாட்டிற்கு உங்கள் வழியில் நன்றாகப் பலம் கொண்டமட்டும் ஓடி வெல்வதே உத்தம நெறியு மாகும். எங்கள் பொழுதுகளில் பெரும்பாலும் மற்றவர்க ளைப் பார்ப்பதிலேயே கழிந்து விடுகின்றதே! இந்த லட்சண த்தில் தன்னைத்தான் வளர்ப்பது எங்ங்னம் ஐயா!
"அவன் ஏதோ செய்கின்றான். நான் அதைப் பார்த்துச்சும்மா இருப்பதா. விட்டேனே பார்.” என்று மனம் கருதியபடி, "இதோ. நானும் தயார்தான் செய்து காட்டுகின்றேன். அப்பனே.” என்றபடி, கண்டபடி சவால் விட்டே மண்கள்வ எண்ணுதல் போல வேடிக்கை வேறென்ன உண்டோ?
எங்களால் சொல்லப்படும் "சவால்கள்” பொறாமை ஆற்றாமைகள் உள்ளக் குமுறல்களின் வெளிப்பாடாக அமைவது எம்மை நாமே இழிவுபடுத்துகின்ற காரியங்கள் தான். பிள்ளைகளிடம் படிக்கச்சொல்லி, அவர்களை
s

Page 32
பருத்திபூர் 00. ஒற்றுரஷ் ஊக்கப்படுத்துவது பெற்றோர் கடமை.ஆனால் அடுத்த வீட்டுப்பையனை ஒரு குறியீடாக்கி “நீ. அவனை முந்த விட்டுவிடாதே! அவனைவிடக் கூடப்படி" என்று சொல்லி ஒரு பகையுணர்வைக் குழந்தைகள் மனதினுள் விதைப்பது சரியா?
சிறுவன் ஒருவன் வழமையாகவே சிறந்த பெறுபேறு களைப்பெற்ற மற்ற மாணவனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டான். ஏன் என்று கேட்டதற்கு "அவன் என்னைவிட இரண்டு புள்ளிகள் (மதிப்பெண்) கூட எடுத்துவிட்டான். வீட்டில் எனது அப்பா அம்மா இதற்காகக் கண்டிக்கின் றார்கள். எனவே நான் அவனுடன் விளையாடுவதையும், பேசுவதையும் நிறுத்திவிட்டேன்" என்றான். பிஞ்சுநெஞ்சில் நஞ்சைக் கரைக்கும் பெற்றோர்கள். இதை உணர்வார்களா?
பிள்ளைகளைக் கல்வித்தரத்தில் உயர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பரீட்சையின் மேலதிக தயார் நிலைக்காக அவர்களை ஓட ஓட வைத்துப் படிப்பிக்கப் பெற்றோர் முனைகின்றார்கள். கல்வியை மேம்படுத்தப் பல விதமான உபாயங்கள் உண்டு. கல்விகற்பதற்கான வலிமை யை தக்க சூழல் மூலம் உருவாக்க வேண்டு மல்லவா? குழப்பமான அறிவுரை என்ற பெயரில் உதிர்க்கப்படும் குத்தலான வாசகங்களைக் கடைப்பிடிக்கும் பிள்ளைகள். தங்கள் எதிர்காலத்தில் தங்கள் சந்ததிகளையும் இந்த விதமான பாணியில் வழிநடாத்தி சுயநலத்தையும் சமூகத் தில் ஒட்டாத ஒரு நிலையையும் ஏற்படுத்தி விடுவார்கள்
- 60
 

அகஒளி
அல்லவா?
எங்களால் நிறைவேற்றப்படவுள்ள எந்தக் காரியங் களிலும் கடினமான முயற்சிகளுடன் மென்மையான போக்குகளையும் இழையோட விடவேண்டும்.
மனம் மென்மையாய் இருந்தால் மட்டுமே மனிதன் தொடர்ந்து இயங்கும் வல்லமையைப் பெற்று விடுகின்றான். இதனால் மனம் சலிப்படைவதும் இல்லை அவசரப்படுவதும். உடலை அநாவசியமாக அலட்டிக் கொள்வதும், கண்டபடி கண்டவர் உபதேசங்களைச் செவிமடுப்பதும், நீங்கள் ஏற்கனவே தயார் நிலையில் தேக்கிவைத்த சக்தியைக் குழப்புவதாகவும் அமைந்து விடலாம்.
ஒரு குறிப்பிட்ட கருமங்களைச் செய்யும் ஒருவர் அக் கருமத்துடன், எல்லாக் கருமங்களுமே, முடிந்து விட்டதாகக் கருதுவது முண்டு. சாதாரணமாக எந்த ஒரு செயலும் ஒவ்வொரு படியாக வளர்ச்சியடைந்த வண்ணமேயிருக்கும்.
சாதனையாளர்கள் தங்கள் பயணங்களில் ஓர் எல்லை யை வகுப்பதுமில்லை. இவர்கள் சாதனை நிறைவுகொண்ட தாகக் கருதி விட்டால் தொடர்ந்து எங்ங்ணம் புதியன படைத்திட இயலும்? "நான் தயார் நிலையில் உள்ளேன் என்பது நான் தொடர்ந்தும் தொடர்ந்து இயங்கியபடியே. வருகின்ற பணிகளை முடித்தபடியே. இனி வரும்
- 61 -

Page 33
பருத்திபூர் அல. லுயிரவநாதர் கடமைகளை வரவேற்பவனாகவும் இருப்பேன்" என்பதேயாம்.
செயல்களை நிறுத்தியவன் பின்பு எழுந்து நிற்க நாழிகையாகிவிடும். இதுவே நல்ல தருணம் என்றவாறு "ஓய்வு” என்ற பெயரில் “சோம்பல்” ஒட்டி உறவாட வந்துவிடலாம் அல்லவா? எதற்குமே தயார் நிலையில் உள்ளவனைப் புதிய பிரச்சனைகளால் ஒன்றும் செய்ய முடியாது. துணிவுடன் வேலை செய்யத்தயார் என்றால் அடுத்த வேலைபற்றியும் அதனுாடு தோன்றக்கூடிய பிரச்சனைகளைக் கண்டு எதற்கு அச்சப்படல் வேண்டும்?
கருமங்களை ஆற்றாதவனுக்கு எல்லாமே கஷ்டம் தான். சின்ன வேலைக்கே பெரிய பெரிய திட்டம் போடுவார்கள். தம்பட்டம் அடிப்பார்கள். அது பற்றியே வியாக்கியானம் செய்வார்கள். முடிவில் ஒன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் ஏன் அதனைச் செய்ய வில்லை என்பதற்கான நம்பகரமான ஆதாரங்களைச் சுவைபட எல்லோரும் நம்பும்படி சொல்லிக்கொள்வார்கள்.
"தாங்கள் எதற்கும் தயார், எதையும் எவரது உதவியு மின்றியே செய்து முடிப்பேன்" என்று வீராப்புடன் பேசுப வர்கள். மற்றவர்க்குத்தெரியாமல் அடுத்தவனிடம் சென்று கெஞ்சிக்கூத்தாடி உதவிகள் பெறுவதுமுண்டு. எந்த ஒரு விஷயத்யுைம் செய்து பார்க்கும் போது தானே அதன் உண்மைத் தன்மையும் செய்யும் போது உள்ள சிரமங்க ளும் புரிகின்றது. எனவேதான் வேலையைபடி, பயின்றுபார்
- 62
 
 
 
 

அகஒனி
அப்புறம் செய் என்று பெரியவர்கள் தங்கள் அனுபவ அறிவினால் கூறுகின்றார்கள். மாடு மேய்ப்பது சுலபமானது என்று கருதி ஆசிரியர், மாணவரைப் பார்த்து "நீ படித்து ஏன் சிரமப்படுகின்றாய் பேசாமல் மாடு மேய்க்கப்போ.” என்பார். ஆனால் மாடு மேய்ப்பது ஒன்றும் இலகுவான வேலை அல்ல.
வெய்யிலிலும், மழையிலும், மாடுகளை ஒட்டுவதும் அவை திமிறி ஓடும்போது துரத்திப் பிடித்துக் கட்டுவதும், பின்பு மாலையில் அவைகளை ஒன்றாகச் சேர்த்துப் பட்டியில் அடைப்பதும் சுலபமானதா என்ன? இப்படியாக அவஸ்தைப் படுவதைவிட இளமையில் சுலபமாகச் சந்தோஷமாகப் படிப்பது எவ்வளவு வாழ்க்கைக்கு லாபகர மானது தெரியுமா?
தங்களைத் தாங்களே நெறிப்படுத்தும். வல்லவர்க ளுக்கு ஆயத்த நிலை என்று குறிப்பிடும் படியாகச் சொல்ல வேண்டியதேயில்லை. தமது பணிகளைக் கிரமமாகச் செய்யும் போது வேலைகளில் தேக்கம் இருக்காது அல்லவா? எனவே தொடர்ச்சியான பணிகளைச் செய்ய வர்கள் எந்தக் கணமும் தயார்நிலையில் தம்மை வைத்துக் கொள்கின்றார்கள்.
மனதில், வாக்கில், செயலில் உறுதி பூண்டோர்கள்
எஞ்ஞான்றும் தங்கள் நிலைகளில் இருந்து வழுவாத திறன்
கொண்டோராவர். சலன சபல புத்தி கொண்டோரிடம் - 63 -

Page 34
பருத்திபூர் அல. ஆயிற்றுதாதர் எப்படித் திடமான முடிவை வினைத்திறனை எதிர்பார்க்க இயலும், "இதோ இப்போதே வருகின்றேன் நீ அங்கேயே இரு. நான் புறப்பட்டு விட்டேன்" என்று சொல்லியவர், அடுத்த கணம் புதிதான நண்பர் ஒருவரைக் கண்டதுமே வந்த வேலையை மறந்து, புதிய நண்பருடன் எங்கோ சென்று விடுவார். இவரை நம்பியவரின் கதி அதோ கதி தான்!
எங்களால் செய்து முடிக்கப்படும் காரியங்களுக்கு அடுத்தவரை நம்பினால் நாம் தயார் நிலையில் கருமங் களை முடிக்க முடியாது. மேலும் எம்மில் பலருக்கும் குறித்த வேலைகளைத் தங்களால் செய்து முடிக்கவியலாத பட்சத் தில் யாரிடம் அந்த வேலைகளை ஒப்படைப்பது என்பதில் கூடப் பிரச்சனைகள் எழுகின்றது.
வேலைகளை செய்து முடிக்கும் ஆற்றல்கள் என்பது வெறும் அறிவுசார்ந்தது மட்டுமல்ல, அனுபவம், ஒழுக்கம் கூட இணைந்துள்ள சமாச்சாரமாகும்.
ஒருவரின் மன இயல்பை மதிக்காதவன் அடுத்தவ னுடைய வேலைகளின் முக்கியத்துவத்தை உணரவே மாட்டான். திருமண வீடு ஒன்றில் படப்பிடிப்பிற்காக படப் பிடிப்புத் துறையில் வல்லுனர் ஒருவரை திருமண வீட்டார் நாடினார்கள்.மிகவும் பிரபலமான படப்பிடிப்பாளரான அவர் பலத்த வேலைப்பளுவின் மத்தியிலும் பண ஆசை காரணமாக மேற்படி வேலையை ஒப்புக் கொண்டார். அத்துடன் அகம்பாவம் கொண்ட வரும் கூட.
- 64

அகஒனி திருமண நாளும் வந்தது, குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்பாளர் வரவேயில்லை. அவரது சொல்லிடத் தொலைபேசியினூடாக எந்தத் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியாதவாறு அது நிறுத்தி வைக்கப்பட்டது. குறித்த நேரத்தில் படப்பிடிப்பாளர் வராமையினால் திருமண விட்டார் உடனடியாகவே வேறு ஒரு படப்பிடிப்பாளரை நாடினார்கள். அவரை மட்டும் நம்பாமல் தயார் நிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் திறனால் பிரச்சனை தீர்க்கப்பட்டது பின்னர் அவசரம் அவசரமாக முன்னர் வருகை தருவதாக ஒப்புக் கொண்ட படப்பிடிப்பாளர் அங்கு வந்தபோதுஅனைவராலும் கண்டிக்கப்பட்டதுடன், அவரிடம் ஏற்கனவே வழங்கப்பட்ட முற்பணமும் மீள வசூலிக்கப் பட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் கருமங்களை நாம் செய்ய முற்படும் போது எங்களை முன் கூட்டியே தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். கோபம், பதட்டம், ஆவேசப் படுவதால், ஏற்கனவே திட்டமிட்டபடிகருமமாற்ற இயலாது போய்விடலாம். ஆயினும் தவிர்க்க முடியாத சூழ்நிலை களால் எமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்குப் பிரச்சனைகள் வரும் போது நாம் என்ன செய்வது? அதற் கான முன் ஏற்பாடுகளையும் செய்யும் திறனை நாம் கொண்டிருக்க வேண்டும். -
நாம் வாழும் போதே எதிர்காலத்திற்கான திட்டங் களை வகுக்க வேண்டியுள்ளது. கவலையற்ற சுபீட்சமான - 65

Page 35


Page 36
மருத்திபூர் 04ல. ஆயிற்றூரன்
நம்பிக்கைகள்
நம்பிக்கைகளே வாழ்க்கைக்கான ஆதாரம். நல்ல நம்பிக்கைகளை நெஞ்சில் இட்டுக் கொள்ளும் கட்டளைகளாக்குக! மூடக்கொள்கைகளை நம்பிக்கைகளாகக் கொள்ளற்க சந்தேகம் நம்பிக்கைக்கு எதிரானது எனினும் எதையுமே ஆராயாது எவை மீதும் அதீத பற்றுதல் வைத்தல் தகாது. நிச்சயமான விஷயங்களை நம்பாது அநித்தியமானவைகள் மீது லயிப்பு ஏற்படுவது உண்மைகளை ஏற்காத செயல். தன்னை நம்புபவனே உலகையும் நம்புவனாகின்றான்.
"நம்பிக்கை" தான் வாழ்க்கை என்பார்கள். நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லை, இன்று வாழ்பவர்கள் நாளைக்கு இருப்பதில்லை என்று சொல்லிக்கொண்டே எதிலுமே பற்று அற்றவர்களாக எல்லோருமே இருந்து விட முடியாது. வாழ்க்கையை நம்பிக்கையுடனும் பற்றுதலு டனும் வாழ்ந்தால்தான் அது உண்மையாகவும், களிப்பூட்டு
- 68

அகஒளி வதாகவும் அமையும். நல்ல நம்பிக்கை என்பது நாம் எமது நெஞ்சத்தில் இட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயக் கட்டளை պլDIT(ծ5ւb.
எங்களது நம்பிக்கைகள் நிகழ்காலத்திற்கும், எதிர் கால நலன்களுக்கும் உகந்தாகவும்,எந்த ஒரு தனிமனிதனு க்கும் சமூகத்திற்கும் குந்தகம் ஏற்படாமல் இருப்பதுடன், எமது மனதிற்கு வலிமையூட்டுவதாகவும் அமைந்தால், வாழ்க்கைப்பாதை தடைகளின்றி இறைவனின் அளப்பரிய கொடைகளைப் பெற்றிட்ட நாயகர்களாகியும் விடுவோம். நம்பிக்கையுணர்வில் தளர்வு அரும்ப ஆரம்பித்ததுமே செயல்களில் தொய்வுகள் மெல்லெனப்பற்றி இறுதியில் செய்கருமங்களில் விருப்பமற்று ஸ்தம்பித்த நிலைக்குள் ஆளாகிவிடுவர்.
இன்று எத்தனை எத்தனையோ நல்ல விடயங்களில் பற்றுதல்களை ஸ்திரமாக்கிக் கொள்ள வேண்டிய பலர் தேவையற்ற மூடக்கொள்கைகளையும், கேலிக்குரிய விஷயங்களிலும் அதீதமான உறுதியுடன் கைப்பற்றி வைத்திருப்பது அவர்தம் முன்னேற்றத்தை விடுத்து பின் நோக்கி இழுத்து அடித்துச்செல்வது போலாகும். கால விரயம் பற்றிக் கவலைப்படாமலும், தேவையற்ற நம்பிக்கை களால் உந்தப்பட்டும், மனதை நோகடித்தும் பொருட்களை விரயம் செய்தும்கூட வாழ்க்கையின் இழப்புகளின் வலிமையினை இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருக்கின் றார்களே! இது என்ன கோமாளித்தனம் ஐயா!
aara

Page 37
பருத்திழ் 04ல. லுயிரறுரர்
இதோ கொஞ்சம் உதாரணங்களைப் பாருங்கள்! கடவுளைவிடத்திரைப்பட நட்சத்திரங்களை போலிஆன்மீக வாதிகளை, பொய் பேசும் அரசியல்வாதிகளை நம்பி, நம்பிக்கை கொள்பவர்கள், தங்கள் இந்த முயற்சியை விடுத்து ஒருசில மணித்துளிகள், தன்மீது நம்பிக்கை வைத்தால் தான் என்ன? பெற்ற தாயை, தகப்பனாரை நம்பாதன், போலி வார்த்தை பேசும் போக்கிரி நண்பனை நம்புகின்றான். திரைப்படத்தில் வீரவசனம் பேசும், கதாநாயகன் பேச்சை, இறைவன் செப்பிய வேதம் எனச்
சொல்கின்றான். ஆனால், ஏதாவது நல்ல கருத்துக்களை திரைப்படத்தில் சொல்லி விட்டால், அது ஒரு பொழுது போக்கிற்காகச் சொல்லப்பட்ட வாசகம் என்றும் எண்ணிக் கொள்கின்றான்.
இன்று சிலரின் கைப்பையைப் பாருங்கள். அதனுள்ளே இஷ்ட தெய்வங்களின் திருவுருவப்படங்கள் காணப்பட மாட்டாது. திரைப்படத்தின் அன்றைய நடிகர், நடிகைகளின் படங்கள் தான் இருக்கும். அடுத்த மாதம் வேறு ஒரு பிரபல நடிகர் நடிகைகள் உதயமானால் பழையபடம் குப்பைக்குள் சேர்க்கப்பட்டுவிடும். இந்த நடிகர்களே தங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டிகள் என்று ஆவேசமாகப் பேசுவார்கள் இதைவிட என்ன அறியாமைக் கொடுமைவேண்டும்?
உலக ஞானம், ஆன்மீகம் போன்ற விடயங்களைப் புரிந்து அவைகளில் வைக்கும் நம்பிக்கைகளைவிட கண்டவர் - 70
 
 

அகஒளி பேச்சைக் கேட்பதும் அதுவே ஞானோபதேசமாகக் கொள்வதும் வேடிக்கை யார் எதனைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடுவதுகூட சுயபுத்தியை நம்பாத இயல்புதான். ஒருவர் வந்து "இன்று நான் நண்பகல் சூரியனைப்பார்த்தேன் அதிலிருந்து ஒரு நறுமணம் வீசும் மெல்லிய பூ ஒன்று புறப்பட்டு என் கரத்தினில் வந்து விழுந்தது. இதோ பார்” என்று சொன்னால் அதை நம்பி பக்தியுடன் எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் நபர்களும் இருக்கின்றார்கள்.
மக்களின் நம்பிக்கை உணர்வை வைத்துப் பித்தலாட்டம் செய்யும் நபர்களால்தான் நாடு நாசமாகிவிட்ட தாக புதுமை விரும்பிகள் ஆதங்கத்துடன் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவரிடம் நம்பிக்கை கொண்டு விட்டால் அவர் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பு சாதாரணமாக எல்லோருக்குமான பொது இயல்பேயாகும். இதனையே சாக்காகக் கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, அவனைப் பலவீனப்படுத்துவது எவ்வளவுகேவலமானது அல்லவா?
மக்களில் பலருமே நம்பிக்கை கொள்கின்ற விடயங்
களில் சில சமயம் குழம்பிய நிலையில் இருப்பதுமுண்டு.
"இவர் சொல்வதை நம்பலாமா, அவர் சொல்வதை நம்ப
லாமா” என்று ஆராய்ச்சிகளையே செய்யும் அதேவேளை
தனது சொந்த வலிமை தன்னுள் புதைந்திருப்பதை மறந்து
போய் விடுகின்றார்கள். ஒருவரிடம் ஒரு கருமத்தை
71

Page 38
பருத்திபூர் 040. ஆயிரவருதஷ்
ஒப்படைத்ததுமே அவர்மீது நம்பிக்கை கொள்வதுடன் தனக்கான கடமையையே கணக்கில் எடுத்துக் கொள்ளா மல் விடுவது சரியான செய்கையல்ல! தங்களது பிள்ளைக் கான கருமங்களை அவர்களிடமும் ஒப்படைக்க வேண்டும். கூடவே பிள்ளைகள் செய்யும் செயல்களைக் கவனிக்காமல்
விட்டுவிடக்கூடாது.
அதேசமயம் எங்களது செய்கைகள் மற்றவர்களால் நம்பிக்கையீனமான எண்ணங்களைப் புகுத்திவிடக்கூடாது. ஒருவர் எம் மீது கொண்ட நம்பிக்கைகளை எமது சந்தேகமான பார்வைகளால் அந்த உயரிய நம்பிக்கை யினைச் சிதைக்க நாங்களே காரணமாகி விடக்கூடாது. குடும்ப வாழ்க்கையில் கணவனும், மனைவியும், புரிந்து ணர்வு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தாதுவிட்டால் அது இனிய இல்லற வாழ்வாக அமைந்துவிடுமா? ஒருவர் மீது நம்பிக்கை வைத்துப்பழகிவிட்டுத் திடீர் என தமது சுயநலத்திற்காக புதிதான ஒருவர் பக்கம் சாய்வதனால் நீண்டகால நட்பு பாதிக்கப்படுவதுமுண்டு. அடிப்படையில் தூயமனதுடன் நாம் அன்பு செலுத்தி வந்தால் எவரும் எமக்குத்தீமை செய்யத்துணிய மனம் வராத நல்ல மனிதராக உருவாகிவிடுவார்.
ஒருவரிடம் நன்மைகளைப் பெற்றும் நன்மை செய்தவர்களுக்கே தீமை செய்வதைப்போல் துரோகம் வேறில்லை. ஒருவர் தங்கள் மீதுவைத்த நம்பிக்கைக்கும் குந்தகம் ஏற்படுத்துதலை நம்பிக்கைத் துரோகம்
7.

bagp67 என்கின்றோம். பிரதிபயன் கருதாது நல்லகாரியம் செய்த வர்க்குத் தீமைபுரிதலும், நல்லவர் என எண்ணியவர்களே சுயநலமாகச் செயல்பட்டுக் கெடுதல் செய்வது எல்லாமே
நம்பிக்கைத்துரோகம் என்பதுமட்டு மல்ல, அவர்கள் இறைவனின் சீற்றத்திற்கும் ஆளாகவேண்டிய கீழ்மக்க ளுமாவர்.
ஒரு நிறுவனத்தில் நாம் சென்று பொருட்களை வாங்கும்போது ஒரு நம்பிக்கையில்தான் வாங்குகின்றோம். இந்த நம்பிக்கையைக் கெடுக்குமாற்போல் போலியான பொருட்களை விற்பதனால் அந்நிறுவனத்திற்கே கெட்ட பெயர் உண்டாகிவிடுகின்றது.
இன்று புகழ்பூத்த பெரும் நிறுவனங்கள் பெற்ற நன்மதிப்புக்கு என்றே பெரியவிலை ஒன்று உள்ளது. இந்தக் கெளரவம் மிக உயர்ந்தது. அங்குவாங்கும் பொருட்களுக்கு என்றே ஒரு கிராக்கி என்னும் இருக்கும். இந்த நன்மதிப்பு (Goodwill), பங்குச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறுவதுடன் அதிகமான வியாபாரிகள் மேலதிகமாகப் பங்குகளை வாங்கவும் போட்டி போடுகின்றனர். மக்கள் நம்பிக்கையின் மூலம்தான் எந்த நிறுவனமும் உயர்ந்து வரமுடியும் என்பதற்கு இவையெல்லாம் நற்சான்று களேயாம். இறைநம்பிக்கை, பக்தி என்பதெல்லிாம் எங்கள் மனதுடன் சம்பந்தப்பட்ட பவித்திரமான உணர்வுகளாகும். இவைகளைக் கிண்டலாகக் கேலியாக நோக்குதல் போல அறியாமை வேறில்லை.
- 73 -

Page 39
பருத்திழ் 04ல. ஆயிரவநாதர்
பாரம்பரிய மதசம்பிரதாயங்கள் கலாசாரத்தின் மீதான நம்பிக்கைகள் எல்லாமே மக்களை நல்வழிப்படுத்து தலுக்காகவே ஏற்படுத்தப்பட்டன. மேலும் நமது உடல், உள் வளத்தை மத அனுட்டானங்கள் கிரியை வழிபாடுகள் தியானங்கள் வலுப்படுத்துகின்றன.
வணக்கத்திற்குரிய திருத்தலங்களில் மக்கள் வழிபாடு செய்தலும், உடலை வருத்திச்செய்கின்ற பணிகளும், ஆரோக்கியமான மன வளத்தினைப் பேணுவதற்கேயாகும். எல்லாச் சமயங்களிலும் வெவ்வேறான வழிமுறைகளைக் கையாண்டாலும்கூட இவையெல்லாமே தேக, மன ஆரோக் கியத்துடன் தொடர்புபட்டமையினால் அந்த அந்த மதங் களைச் சாராதவர்கள் வேற்றுமையான, குரோத, கிண்டல்செய்யும் எண்ணத்துடன், பேசுதலோ, கண்டித்த லோதகாத செயலாகும்.
இன்று மக்கள் மதநம்பிக்கைகளை விட விஞ்ஞான த்தின் மீதான நம்பிக்கையிலே ஈடுபாட்டுடன் இருக்கின்ற ார்கள். விஞ்ஞானத்தின் கருத்துக்கள் கூட காலத்திற்குக் காலம் மாறுபாடான கருத்துக்களைச்சொல்லிவருகின்றது. ஆயினும் விஞ்ஞானத்தில் நம்பிக்கை வைக்காமல் அதன் துணையின்றிஎம்மால் வாழ்ந்து விட முடியுமா? இன்று நாம் அனுபவிக்கும் சகல வசதிகளையுமே விஞ்ஞானம் தான் ஆக்கித்தந்துள்ளது. இதனை நம்பியே உலகம் உயிர் வாழ்கின்றது. இயற்கையின் மாறுதல்களாலேயே சகலதும் மாறிவருவதனால் மனித அறிவின் வியாபகம் கூட
- 74

அகஒளி இயற்கையினை எமக்கு அளித்த இறைவனாலேயே அருளப் படுகின்றது.
மகிழ்ச்சியுடன் எப்போழுதும் வாழ்ந்து விடவும் அதனோடு என்றுமே நீக்கமற நிறைந்து கொள்ளவுமே நாம் பிரியப்படுகின்றோம். அப்படியிருக்கும்போது வீணான குருட்டு நம்பிக்கைக்குள் சந்தேகங்களுக்குள் வாழ்ந்து கொள்ள எத்தனிப்பது புத்திசாலித்தனமாகாது. இதனால் மன அமைதி விடைபெறுவதுடன் மன அழுத்தம் வீணான கற்பனைகள் வந்து ஒட்டிக்கொள்வதுடன் எதிலுமே ஈடுபாடு கொள்ளாத நிலைக்கும் உட்படவேண்டிவரும்.
மேலும் சந்தேகம் என்கின்ற இயல்பு நல்ல நம்பிக் கைக்குச் சத்துரு என்றே கருதப்படும். தேவை. யேற்படும் போது சந்தேகப்படாமல் கண்டபடி நம்பிக்கை வைப்பதும் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குள் கொண்டுவிடும். ஆனால் நல்ல வழிகள் கூற்றுகளின் மீது நம்பிக்கை வைத்த பின் வேறுயாராவது குட்டையைக் குழப்புவது நெஞ்சத்தில் நஞ்சை ஊட்டுவதாகும். இந் நடவடிக்கைகள் அவர்கள் மீதான அக்கறையினால் அல்ல. எனினும் சிலர் அறியாமை காரணமாகவும் சில தவறான கருத்துக்களைச் சொல்வது முண்டு.
தவறான நம்பிக்கைகள் ஒருவரின் வழியை மறித்து
அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தையே நிறுத்தி
வைக்கின்றது. நெஞ்சினில் தவறான கருத்துக்களை
- 75.

Page 40
மருத்திழ் 04ல. ஹார்வரர் ஆழமாகப் புதைத்து வைத்தால் அதனில் இருந்து மீண் டேயாக வேண்டும். வெளியே புறப்படும் ஒருவர் வழியில் பூனையைக்கண்டால் தமக்குப் போகும் காரியம் தடைப் படும் என்று, தமக்குத்தாமே ஒரு தடையை ஏற்படுத்தி விடுகின்றார். ஒரு பிரபல நடிகர் சொன்ன தகவல் இது,
தமக்குப் பிடித்தமான ஒருத்தியை மணமுடிக்க எண்ணித் தமது பெற்றோர்களிடம் சம்மதம் கோரினார். நடிகரை மணமுடிக்க அந்தப் பெண் ஆவலுடன் காத்திருந் தார். திருமணப் பேச்சிற்காக நடிகரின் குடும்பம் வீட்டை விட்டுக்கிளம்ப ஆரம்பித்தபோது அவர்கள் விரும்பாத சகுனங்கள் தென்பட்டதால் அந்த பெண்பார்க்கும் படலம் பாதியிலேயே தடைப்பட்டு முடிவில் அந்தத் திருமணமே நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அதன் பின்னர் மேற்படி பெண்ணிற்கு மிகவும் உன்னத நிலையில் உள்ள ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தில் திருமணம் முடிந்து விட்டது. ஆயினும் நடிகர் தனது வாழ்க்கையில் இது ஒரு சோகமான எதிர்பார்க்க முடியாத ஜீரணிக்க முடியாத நிகழ்வாகிவிட்டதாக மிகவும் மன வருத்தத்துடன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தேவையற்ற குழப்பம் சந்தேகம், நம்பிக்கையீனம், ஒருவரின் வாழ்க்கை யையே திசை திருப்பிவிடுவது எவ்வளவு துன்பகரமானது தெரியுமா?
மனம் விசித்திரமானது சில பொழுது அது திடீர் என
- 76

அகஒளி ஒன்றின் மீது ஆசைகொள்ளும். பின்னர் விரும்பிய பொருள் மீதே வெறுப்பினை உமிழ்ந்து கொள்ளும். யாராவது நல்லதைச்சொன்னால் மறுத்துரைக்கும். மீண்டும் அதனையே ஏற்றுக்கொள்ளும். மனம் எப்பொழுது எதனை ஏற்றுக்கொள்ளும், எதில் இருந்து விடுபடும் என்பதே தீர்க்கமாகச்சொல்ல முடியாத விஷயமாகிவிடுகின்றது.
ஆயினும் ஸ்திரமான மனநிலையை நாம் உருவாக்கி விடுவோம் என நாம் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். முதலில் தன்னை நம்பாதவன் எவரையும் நம்ப முடியாது. ஏன் தலைவனையும் நம்ப முடியாது. சிலர் தங்களை நம்பாமல் மற்றவர்களை மட்டும் நம்புவது கூட தன்னம்பிக்கையற்ற நிலைதான்.
உண்மையாக வாழுகின்ற ஒருவன் தன்னை நம்பாமல் வாழ்ந்து விடமாட்டான். மற்றவன் மீது நம்பிக்கையின்றிநாம் வாழ்ந்துவிடவும் முடியாது. ஆயினும் எதனை ஏற்பது, எதனை விட்டுவிடுவது என்பது எங்களது ஆரோக்கியமான எண்ணத்தின் வலுவில் தங்கியுள்ளது.
இன்று எத்தனையோ பேர் மரணம் என்பது நிச்சய மானது என்று சொல்லியபடியே கண்டபடி வாழ்ந்து வருகின்றார்கள். மரணம் பற்றித்தெரிந்தும் அதன் உண்மை நிலை, நிச்சயமான நிலையைக் கருதாமல் வாழ்வது யாருக்கு நஷ்டம்?இவர்கள் வெந்து நொந்து கொள்வதைத் தாமே உருவாக்குகின்றனர்.
- 77.

Page 41
மருத்திபூர் 04ல. ஆயிற்றருதஷ்
மரணத்தை வரவேற்கும் இயல்பு மன வலிமை போன்றனவற்றில் பரிபூரணமான "திருப்தி" நிலை உருவானால், சாவு என்பதே ஒரு சராசரியான சின்னச் சம்பவம் என்றே கருதிவிடுவார்கள். சாவை மனப்பூர்வமாக ஏற்பவன் சரித்திரம் படைக்கின்றான். "வாழ்வு" என்பது எவ்வளவுநம்பிக்கைக்குரியதானது என்று சாதனை படைப்ப வர்கள் கருதும்போது, மனித வாழ்வின், வரவேற்கவேண்டிய முடிவு சாவு என்பதையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய, நிலையில் இல்லாதுவிட்டாலும் நடக்கின்ற மாற்றங்கள் நடக்காமல் போவதுமில்லை. மாற்றங்களை ஏற்பதே துணிவும் ஆகும்.
ஏன் எனில், எமக்குப் பின்னால் எத்தனையோ பேர் சாதனை செய்யப் பிறந்து கொண்டேயிருக்கின்றார்கள். மரணம் என்பது, புதியவர்களை உருவாக்கச் சந்தர்ப் பங்களை உருவாக்குவதனால், மரணத்தை வரவேற்கும் உணர்வினைப் பெறுவோமாக!
மிக உன்னதமான தெளிவு நிலையில் நல்ல நம்பிக்கைகளும் உதயமாகும். இயற்கையுடன் வாழ்ந்து வரும் நாம் அதன் மீது நம்பிக்கை வைத்து போற்றுதல் செய்யும் அதேசமயம், அதன் படைப்பான மனித உருவங்கள் உயிர்களை நேசிப்பதனால் நம்பிக்கை உணர்வுகள் தானே இயல்பாக உருவாகி விடுகின்றது.
"கடவுளை நம்பினேன் அவர் என்னைக் கைவிட்டு
- 78

அகஒளி விட்டாரே" என்று பிரலாபிப்பது சிலரின் துன்ப உணர்வின் வெளிப்பாடு என்றாலும் இவர்கள் கடவுள் நம்பிக்கைகளைக் கைவிடுவதில்லை. இன்று போரினால், இயற்கை அழிவ தினால், என்னதான் அனர்த்தங்கள் நடந்தாலும் கூட மனித னின் சாதனைகளும், முன்னேற்றங்களும், தடைப்பட்டு விட்டதா என்ன? : 霹。葱
எல்லாமே நடந்து கொண்டேயிருக்கின்றன. இவைகளின் முன்னேற்றங்களை எவராலும் தடுக்க முடியாது என்பதே மனிதனின் அசைக்க முடியாத நம்பிக்கை உணர்வுமாகும்.
"காலத்தின் கட்டளைகள்” எல்லாமே மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், நம்பிக்கையுடன், தரப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு இயல்பாக எளிமையாக வாழ வேண்டும் என்பதேயாகும்.
எங்கள்"நம்பிக்கைகள்"துணிச்சலை பேராற்றல்களை வளர்க்கவேண்டும். இதன் மூலமே எமது எதிர்கால உலகை ச்சமைக்கின்ற பணிகளை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லும் பாக்கியத்தைச் செய்தவர்களுமாவோம்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 2004.2008
... 79

Page 42
மருத்திபூர் 04ல. ஹவிற்றுதாதர்
வேற்றமைகள் - 11
ஆண்டவன் ப்டைப்பில் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. தோற்றத்தில் குணத்தில், செயலில் எல்லாமே வெவ்வேறாக இருப்பினும் இந்த வேற்றுமைகளில் கூட இந்த உலகம் விழித்தபடி உடையாமல் உருளுவது அற்புதமோ அற்புதம்! வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதே நியதி. வேற்றுமைகளைத் தோற்றுவித்தால் ஒற்றுமை சிதைக்கப்படும். தமது இனம் வாழ்வதற்காக பேதங்களை உருவாக்குவது அவர்கள் இனத்திற்கே அவமானமும் கேடுமாகும். அன்பினால் எதையுமே எம்மால் பெறமுடியும், வேற்றுமைகளை வளர்ப்பவர்கள் தூற்றுதலுக்கேயாளாவர்.
வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதால் ஒற்றுமை சிதைக்கப்படுகின்றது. ஒரு முழு சமூகத்தினரிடையேயான தோன்றும் வேற்றுமை உணர்வு ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குமே ஊறு விளைவிக்கின்றது.
வேற்றுமை காரணமாக ஏற்படும் நாசகார நடவடிக்
கைகள் சிலருக்கு வேடிக்கைக் காட்சியாகிவிட்டாலும் - 80 -
 
 
 
 
 
 
 
 

அகஒளி இந்தப்பெரும் துன்பங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட வாழ்வைத் தொட்ட பின்னர் தான் ஒற்றுமையின் அவசியம் உணரப்படும். பட்டபின் ஞானம் பெறுதலைவிட, துன்ப அவலங்கள் தொடரும் சிந்தையை நல்வழிப்படுத்தி, நல்லன செய்ய முந்துதலே சாலச் சிறந்த பணியாகும்.
ஆண்டவன் படைப்பில் ஒன்றுபோல் ஒன்று இருப்பதி ல்லை. தோற்றத்தில், குணத்தில், செயலில் எல்லாமே, வெவ்வேறாகவே எமக்குத் தெரிகின்றது. இந் வேற்றுமை களில்கூட இந்த உலகம் விழித்த படி உடையாமல் உருளுவது அற்புதமோ, அற்புதம்!.
வேற்றுமைகளில் கூட ஒற்றுமை காண வேண்டும் என்கின்ற நியதி இருப்பதனால் மனிதன், எப்படியாவது மற்றவனுடன் சார்ந்தே இயங்குவதால், உலக இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், நாம் இன்று சமாதான சுபீட்ச வாழ்வை நோக்கி ஓடாது விட்டாலும்கூட நகர்கின்றோமா என்பதே பெரும் கேள்வியாகும். எல்லோ ருமே திசைக்கு ஒருவராய் தங்கள் மனத்தைத் திருப்பினால், உலக இயக்கம் இரசிக்கும்படி இருக்காது தேவையற்ற உராய்வுகளால் வெறுக்கும் நிலையே உருவாகிப்போகும்.
ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்
மைகள், ஆளுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆயினும்
இவைகளைப் புரிந்துகொள்வதும், அதனைக் கெளரவிப்
பதும் எமக்குத்தெரியாத காரியங்களாகிவிட்டது. தெரிந்து -81 -

Page 43
பருத்திபூர் அல. ஆயிற்றூதர் கொண்டாலும் புரியாத மாதிரி சிரமத்தை வலிந்து வாங்குகின்றார்கள்.
ஒவ்வொரு இனத்து உயிர்களுக்கும் தனித்துவமான வடிவமைப்பு இருப்பினும் கூட அவைகளுக்குள்ளேயும், ஏதோ ஒரு சின்ன வித்தியாசத்தை ஏற்படுத்தி அவைகளில் தோற்ற வேறுபாடுகளை இறைவன் புகுத்தியுள்ளது என்ன புதுமை என்னே படைப்பின் விந்தை!.
உதாரணமாக மனிதனின் அடிப்படை உருவம் ஒன்றே. ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவரவர் நாட்டிற் குரிய ஒரு பொதுத் தோற்றம் இருக்கும். உடலமைப்பு, நிறம், போன்றவைகளால் பொதுவான வேறுபாடுகளைக் கண்டாலும் இன்னார் இவர் என்பதில் இனம் காணச் சிரமப்படுதல் இயற்கை.
சீன தேசத்தவர்களைப் பார்த்தால், இவர் சீன தேசத் தவர் என்று சொல்ல முடியுமே தவிர அவர்களைக் குறிப்பி ட்டுப்பேதம் காட்டுவது சிரமமாக இருக்கும். ஒரு இந்தியர் ஒரு சீனதேசத்தவரைப் பார்த்துக் கேட்டார். "உங்களை நாங்கள் வெவ்வேறான நபர்களாக இனம் காண்பது கஷ்டமாக இருக்கிறது நீங்கள் எப்படி உங்கள் நாட்ட வர்களை இனம் காண்கின்றீர்கள்” என்றதுமே, அந்தச் சீன தேசத்தவர் "எங்களுக்குக்கூட இந்தியர் எல்லோருமே ஒருவர் போலத்தெரிகின்றார்கள்” என்றாராம்.
- 82 -

- - அகஒரி?
எல்லோருக்குமே தமது தேசத்துமக்களை இனம் காண்பது சிரமமான காரியம் அல்ல. தங்கள் தேசத்துக்குள் ளேயே உள்ள இனங்களுக்குள்ளேயே உருவ வேறுபாடு களும் இருப்பதுண்டு. சிலர் மிக நுட்பமாக பல்வேறு பிரதேசங்களுக்குரியவர்களின் தோற்றம், நடத்தைகள், பேசும் மொழி வேறுபாடுகளைக் கண்டுபிடித்துவிடுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவதுண்டு உருவங்கள் வேறுபாடுகள் கொண்டாலும். நாம் மனிதர்கள், இறைவ னின் அரிய படைப்புக்கள் என்கின்ற எண்ணத்தை மறக்கலாகாது.
பேதம் காட்டி நடந்தால் அவரையே நிந்திப்பதாக அமையும். மனித வடிவங்களை வைத்து அவர்கள் தன்மைகளை, ஆளுமைகளை நிந்திப்பவர்களை நாம் காண்கின்றோம். ஒருவரது அழகை வைத்தும், பேசும் பாவனைகளை வைத்தும், கண்டபடி விமர்சிப்பது சிலரின் பழக்கமாகியும் இருப்பதுண்டு. பண்பை முன் நிறுத்தி ஒருவரைக் கெளரவிக்காது, வெறும் தோற்றத்தை வைத்து மட்டும் வேற்றுமை காட்டுதல் சற்றும் ஏற்புடையதன்று.
மேலும், நலிந்த மக்களின் இனத்தை, மொழியை, அல்லது அவர்கள் குடும்ப நிலைமைகளை வைத்தும் தவறான கணிப்பீடு செய்வதும் சகஜமாகிவிட்டது. வசதியான இனத்தில் பிறப்பது என்பது, ஒரு உயிர் விரும்பி ஏற்றுக் கொண்ட ஜனனம் அல்ல. எங்கோ ஓரிடத்தில் பிறப்பது எல்லாமே இயற்கை நிகழ்வு. இதையெல்லாமே
... 83

Page 44
மருத்திபூர் 04ல. ஐவிரலுருந்தர் ஒரு மாபெரும் தகுதியாகப் பீற்றிக் கொள்வது வீண் வேலை யாகும்.
ஒருவன் மன்னனின் மகன் என்றால் அது பிறப்பி னால் ஏற்பட்ட ஒரு இயற்கையான விஷயம் என்பதை எண்ணாது, கடவுள் படைப்பிற்கே தவறான வியாக்கியானம் புனைவதும், சாதாரண குடும்பத்தில் பிறந்தோரை தரத்தில் குறைவாக மதிப்பீடு செய்வதுகூட அறியாமை தான். துறவிகளுக்கு எல்லோருமே சமானமானவர்கள் என்பார் கள். இந்த நிலை ஒவ்வொருவரின் ஆன்மீக பக்குவநிலை யுடன் சம்பந்தப்பட்ட விஷயம். சாமான்ய மாந்தர்களை ஏற்றத்தாழ்வுக் கண்ணோட்டத்தில் நோக்குவது, தங்களைத் தாங்களே தரம் குறைப்பதாகவும், சுய கெளரவத்தையே இழக்கவைக்க வழிகாட்டிய செயலாகவே கருதவேண்டி யுள்ளது. பேதங்களால் யாதென்றுச் கிட்டுவதுமில்லை.
ஆனால், நாம் வேற்றுமை காட்டக்கூடாது என்பதற் காக எமது தனித்துவத்தை இழக்க வேண்டுமென்ப துமில்லை. எமக்குரியநாடு, எமக்குரியமதம், மொழி மீதான பற்றுதலை எக்கணமும், விட்டு விலகிடவும் இயலாது. கலாசாரத்தின் மீதான கரிசனை, விருப்புக்கள் அவனது நல் நடத்தைக்கான காரணியாகும். ஒரு இனத்தின் கலாசாரத் தைச் சிதைப்பது, அல்லது வலிந்து,வேற்று இன, மத, கலாசாரங்களை உள் நுழைப்பதால், அந்த இனத்தின் தனித்துவம், பண்பாட்டு உணர்வுகளில், ஏற்படும் மாறுதல் கள் பாரதூரமான, எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
-84 -
 

அகஒளி ஒவ்வொரு நாட்டின் சூழல், புராதன நாகரீக மேம்பாடுகள், கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள் மூலமாக கலாசாரங்கள் பேணப்பட்டு வந்தாலும் கூட, இவைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை எம்மால் தடுத்துவிடமுடியுமா?
தங்கள் இனம், மொழி, மதம் தான் உயர்ந்தது என்று வேற்றுமைகாட்டி, தம்மை முதன்மைப்படுத்தி ஆதாயம் தேட முனைதல் போல மடமை வேறில்லை. இன்று உலகம் பூராவும் இந்த அடவாடித்தனமான விடாப்பிடியான போக்கினால் "மறப்போம், மன்னிப்போம்” என்கின்ற பரந்த சிந்தனையே அருகிவிட்டது.
யாராவது செய்த அறியாமை காரணமான தவறுக ளையே தூக்கிப்பிடிப்பதும் அதே வேளை தங்களுக்குள்ள மேலாண்மை வசதி வாய்ப்புகள் மூலம் நலிந்தோரை மென்மேலும் உருத்தெரியாமல் ஒழிப்பவர்களும் அதே சமயம் இவர்கள் செய்யும் அநியாயங்களைச் சரி என ஒத்து ஊதும் ஆத்மாக்களும் இருக்கும் வரை வேற்றுமை உணர்வு கள் சற்றும் சளைக்காது முளைத்தெழுந்து ஓங்கிவிடும். கவலை தரும் விஷயம் அன்றோ இது. வேற்றுமை பேசி வயிறு வளர்க்கும் வல்லூறுகள் பிறரை வதைத்தும் பெரி தாக அழுது ஆர்ப்பாட்டம் செய்வதும் ரசிக்க முடியாத கோமாளித்தனமே, தங்களைப் பற்றி மற்றவனின் மதிப்பீடு கள் பற்றி இன்னமும் தெரியாதவர்கள் போல் நடிப்பது தாங்களே ஒடுங்கிப் போவதற்கேயாம்!
- 85

Page 45
மருத்திபூர் அல. ஆலிவரர்
தங்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து, உயர்ச்சி என்ப தெல்லாம், தங்களால் வெளிப்படுத்தப்படும் துவேஷமான, வேற்றுமைகளைக் கூறும் தன்மையினாலேயே என்று கருதும் எத்தர்கள் எத்தனை நாட்களுக்குத் தான் எல்லோ ரையும் ஏய்த்து வாழ இயலும்? இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இன்னமும் மக்களில் சிலர் இவர்கள் பேச்சை வேத வாக்காக நம்பித்தொலை க்கின்றார்கள். எக்தர்களைச் சுத்தமானவர்களாக்குவதே கஷ்டமாக இருக்கின்றது.
"நாட்டுப்பற்று" என்பது தனது நாட்டில் பற்று வைப்ப தும், மற்ற தேச மக்களை எள்ளி நகையாடுதலும் என்றே எண்ணுவது, உலக ஞானமற்ற எண்ணம் தான். இனத்து வேஷம் பேசுவோர் கடவுளால், ஆசீர்வாதம் செய்யப் பட்டவர்கள். தாங்கள் மட்டுமே எனத் தப்பு அபிப்பிராயம் கொள்வது, இறையச்சம் என்பதைப் பொருட்படுத்தாத, பொருந்தாத போக்குமாகும்.
இத்தகையவர்கள் வேற்றுமை நோக்குடன் சாற்றும் மொழியால், ஈற்றில், தம்மைத்தாமே தூற்றிக்கொள்வதாக ஏற்றுக் கொள்ளப்படும், நிலையினை உருவாக்கிக் கொள்வார்க்ள்.
வலையில் மீன்களைக் கெளவுதல் போல துவேஷ
வலைகள் மூலம் அப்பாவிச் சனங்களை அலாக்காய்
கெளவுதல், பொய்மை வேஷம் தூஷணை வார்த்தைக -86
 

அகஒளி ளைவிட, துவேஷமான பேச்சு மனதிற்கு ஏற்காத கூச்சத்தை அளிக்கும். வேற்றுமைகளைக் காட்டி வேதனையூட்டிச், சூழ்ச்சிகள் செய்வதைவிட அன்பைக் காட்டி அரவணை ப்பதே அருமையான வழியுமாகும்.
ஒரு நாட்டில், பலமத, இன, மக்கள் வாழ்ந்தாலும் கூட, அவர்களின் சுய கெளரவத்திற்குப் பங்கம் ஏற்பட்டாமல் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ முடியும். இதற்கு உதாரணமாக உலகில் பல நாடுகள் உண்டு.ஒரு நாட்டின் மூலவளங்களில் முதன்மையானது, மனித வளம் என்பதை நாம் அறியவேண்டும். சகல மக்களும் ஒன்றிணைந்து, ஒற்று மையாக இயங்கும்போது, இன, மத, மொழி பேதங்களை அறவே மறந்துபோய்விடுவர். இன்று முக்கியமான பணிகள் பல, எம்முன் விரிந்து கிடக்கின்றது.
இதைவிடுத்து ஒருவரை அடிப்பதும், முடக்குவதும் தான் பிரதான கருமமாகிவிட்டதுபோலவும், அதுவே தமது சமூக முன்னேற்றத்திற்கான தங்களின் அளப்பரிய பணி எனவும் கருதித் தாம் சார்ந்த சமூகத்தைப் பெரும் பழிக்கே இட்டுச் செல்கின்றனர். சட்டத்திற்குட்பட்டு வாழும் சமூகம் மட்டம் தட்டப்படுவதுடன், சட்டத்தின் துணை தேடுமுன் பெரும் துன்பங்களால் நொருங்கிப் போகின்றார்கள்.
மனிதனை மனிதன் மதிக்காதவரை எவ்வாறு நிம்மதி மதியினுள் உட்புகுந்து கொள்ளும்? பலரும் ஆன்மீகம் பற்றிப் பேசுகின்றார்கள், நல்ல அரசியல் கருத்துக்களை அள்ளிவீசுகின்றார்கள், முற்போக்காகச் சிந்திக்கின்றார்கள்.
-87 -

Page 46
மருத்திபூர் 04ல. ஆயிரவரர்
தர்ம, நியாயங்களை, வார்த்தைகளாக அள்ளிக் கொட்டுகின் றார்கள். ஆனால், வேற்றுமையுணர்வும், காழ்ப்பும், கரவும், வஞ்சனைப் போக்கும் இன்னமும் ஏன் தொலைந்து ஏன் போகவில்லை? இவையெல்லாம் செழித்து வளருகின்றதே! வேதனை ஐயனே! வேண்டி விரும்பி ஏற்கும், பழி, பாவத்திற்குக் கடவுளா காரணம்? சொல்லுங்கள்! சுதந்திரம் பற்றித் தந்திரமாகப் பேசி என்ன பயன்? இப்படித்தான் சுதந்திரம் என்றும் சொல்கின்றார்கள். அமைதியான சாந்தம் மிளிரும் வாழ்க்கை என்பது தான் என்ன? அது சுதந்திரம் என்கின்ற வாழ்க்கை முறையில் அமைந்துள்ளது.
நடுநிசியில், கன்னிப்பெண் நகைகளுடன் தன்னம் தனியே போய் வரும் நாளே, சுதந்திரம் பெற்ற நாள் என்று மகாத்மாகாந்தி சொன்னார். பட்டப்பகலில், பத்துப்பேர் கூடப் போனாலும் ஒருவனே கழுத்தில் கத்தி வைத்துக் காசு பறிக்கும் போதுமிகுதி ஒன்பது பேரும் ஓட்ட மெடுக்கும் அவனியில் அல்லல்படுகின்றோம்.
பக்கத்து வீட்டு நோஞ்சான் ஒருவன் வேலியில் உள்ள, பூக்களைக்கொய்தால் நெஞ்சத்தை வாள் கொண்டு அரிவதுபோல் வீர வசனம் பேசிச் சண்டை செய்யும் நபர்கள், தங்கள் வீட்டுக்குள்வந்து வலியவர் செய்யும் அக்கிரமங்களுக்கு, அடக்கிப் போவதுடன், அவர்களுக்கு ஆலவட்டமும் பிடிப்பதும் வெட்கம்! இரண்டு சண்டியர் களுடன் சினேகம் கொண்டால் பிறருக்குத் துன்பம் கொடுப் பதற்கான அனுமதி என எண்ணுபவர்களும் இருக்கின் றார்கள்.
- 88
 
 
 

அகஒளி
அன்பை, பரிவை, பாசத்தை வழங்கத் தயங்கு பவர்கள் பின்னர் நடக்கும். கொடுமைகளைக் கண்டு பேதலிக்க வேண்டிதே!"அன்பை வழங்கிப்பார், எல்லாமே இன்ப மாகும்” இதனால் எவரும் எம்மைத் துன்புறுத்த விளைவார் களா? அடிக்க வருபவனுக்கும் அன்பைப் பொழிவது கோழைத்தனம் அல்ல. இழிந்தோரையும் மன்னித்துப்பார்த்தால் என்ன?கோபம் கொண்டவர்களை, அவர்களில் பேதம், வேற்றுமைகளைக் காட்டாது அன்பால் அவர்கள் மனத்தினுள் ஆதிக்கம் செலுத்துவது சாமானிய வீரத்திலும் மேலானது."அடிக்க வருபவர்க்கு அன்பைக் கொடு, அடங்கிப் போவான்” ஆனால், பொல்லாத வர்களுக்கு வழங்கப்படும், நல்ல சந்தர்ப்பங்களை அவர்கள் ஏற்காதவரை, ஈற்றில், மெளனமாக, இருப்பவர்களின், விஸ்வரூப எழுச்சியினால் நிச்சயம், எதிரிகள் துச்சமாகிப்போய்விடுவர்.
என்ன தான் நாம் வலிமை மிகுந்தவர்களாக, இருந்தா லும், எங்கள் எதிரில் உள்ளவர்கள், மிகவும் பலம்குறைந்த, வசதியற்றவராக இருந்தாலும், அவர்களிடம் பகைமை பாராட்டி வேற்றுமையுடன் நடந்தால், நாம் சுதந்திரமாக இயங்க முடியாத நிலை உருவாகி விடலாம். ஒரு சின்னத் தவறுகளை நாங்கள் செய்தாலும் ஒருவரும் மன்னிக்கவே மாட்டார்கள் "எங்கே, இவன் விழுவான், ஏறி மிதிப்போம்” என்கின்ற, பழி உணர்ச்சியினால் உந்தப்படுகின்றவர்களை நாமே உருவாக்கும் நிலையினால் தனிமைப்பட்டுப்பெரும் அவஸ்தைக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
- 89

Page 47
கருத்திபூர் அல.ஜலிற்றுருந்தர்
மனத்தை தனது இருதயத்தினை முழுமையாக இறைவனிடமும், அவரது பிரியத்திற்குரிய சகல ஜீவன்க ளுக்குமாக ஈகை செய்பவனுக்குள் பேதம் காட்டும் உணர் வுகள் கணப்பொழுதும் எழுந்துவிடாது.
தங்கள் சமயத்தையும் அதன் பரந்த சாத்வீகக் கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காது பேசுவதே மனித சுபாவம். ஆயினும் சமயம் காட்டும் நற்போதனைகளைப் பேசுவதற்காக மட்டுமின்றிச் செயலில் காட்டுவதே மானுட மாண்பாகும். பரந்த இதயம் நிறைந்த சேவைகளைச் செய்ய வழிசமைக்கும். நற்சேவைக்கான முதற்படி வேற்றுமை களைந்த "நல் இயல்பு"ஒன்றே தான். உணர்க!
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 30.03.2008
-90 -

அகஒளி
கர்வம் கொண்டால் சர்வமும் துயராய் அமையும், துணிச்சல், தன்னம்பிக்கை கொண்டால் அது கர்வமாகாது. மேலாதிக்க உணர்வு, தன்முனைப்பு, போன்ற குணங்களால் உண்மையான திறமைசாலிகளே அமுங்கிப்போகின்றார்கள். கர்வம் ஒருவேலி என்று எண்ணித் தம்மை மறைத் து மேன்மைப்படுத்துபவர்கள் அறிவிலிகளாவர். கண்ணியவான்கள் கர்வம் கொள்வதில்லை. உலகம் என்றுமே மாறியபடியே இருக்கும். இது நிரந்தரமற்றது என எண்ணினால் எல்லாமே சாமான்யமாகி கர்வம் ஒழுங்கிவிடும்.
கர்வம் கொள்ளுதல் வாழ்க்கைக்கு ஒவ்வாதது. இதனால் சர்வமும் துயராய் முடியும் என்று சொல்லப்ப ட்டாலும் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மிக்கவர்களை க்கர்வம் கொண்டவர்கள் என்று முத்திரையிட்டுக் கொள்ளுதல் ஏற்புடையதன்று.
-91 -

Page 48
aருத்திபூர் 04ல. லுயிரவநாதர்
எந்தவித திறமையும், ஆளுமையுமின்றித் தற்பெரு மை கொண்டு மற்றயோரைத் தூற்றித் திரிகின்ற நபர்கள் வாழுகின்ற இந்த உலகில், நிறைகுடம் போல் அடக்கமாக வும் தெளிந்த நற்சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின் றவர்களை நோக்கும்போது நமக்கு வியப்பு மேலிடு கின்றதே!
மேலாதிக்க உணர்வுடன் தங்களை வெளியுலகில் ஒரு புத்திசாலி செயல்வீரன் என்று காட்டி நடிப்பதும், தங்களை எல்லோரும் பாராட்டிப் புகழவேண்டும் எனக் கருதுதல் போல் பேதமை வேறு ஏது? இந்த எண்ணமே கர்வத்துடன் கூடிய, வெட்கப்படும் ஒரு நிலைதான்!
நியாயபூர்வமாக ஒரு செயல்வீரன் கர்வம் கொண் டாலும் கூட அதனை ஏனையோர் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொண்டே விடுகின்றனர். கர்வம் கொள்வதற்கும்கூட ஒரு தகுதி வேண்டும். காலிப் பாத்திரத்தினால் என்ன வழங்கிட முடியும்?
புகழேணியில் இருப்போர் எல்லோருமே கர்வம் கொண்டு செயல்படுவதில்லை. சாதாரண மனிதர்களை விட எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பீடிகையாகப் பந்தாவுடன் பேசுவதால் உயர்ந்தோராய் காட்டி விட முடியுமா? ஒரு பொருட்காட்சிக்குச் சென்ற போது கண்ட சம்பவம் இது ஒரு கிராமவாசிஅங்குள்ள பொருட்கள் பற்றிக் கேட்டபோது அவரின் தோற்றத்தைக் கண்ட ஊழியர்கள்
- 92

அகஒளி அவரைக் கேலி செய்து அனுப்ப முயன்றனர். அப்போது ஒருவர் அங்கு வந்தார். மிக எளிமையாகக் காணப்பட்டவர்,
அந்தக் கிராமவாசியை அணுகிப் பவ்யமாக அவர் என்ன கேட்டார் என்பதை அறிந்து கொண்டதுமட்டுமின்றி, மிகவும் பொறுமையாக அவர் புரியும்படி தகுந்த விளக்கமும் அளித்தார்.
அவரது விளக்கத்தில் திருப்தியடைந்ததும் கிராமவாசி அவருக்கு நன்றி தெரிவித்து அகன்றார். ஆனால் இதுவரை இங்கு நடந்ததைக் கண்ட அலுவலர்கள் வெட்கப்பட்டுத் தலைகுனிந்தனர். காரணம் அங்கு விளக்கமளித்தவர் அந்தப்பொருட்காட்சிக்குப் பொறுப்பான பணிப்பாள ரேயாவர்.
அகம்பாவ உணர்வு வந்தாலே மற்றவர்க்கு ஒன்றுமே தெரியாது என்கின்ற தவறான உணர்வு வந்துவிடுகின்றது.
பெரிய கோடீஸ்வர்கள் கூட வெளியே பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டவராக இருக்கலாம். அதே சமயம் டாம்பீகமான தோற்றத்துடன் இருந்தபடி மற்றவர் களை அலட்சியமாக நோக்கும் ஆசாமிகள் எந்தவிதமான ஆர்ப்பாட்டம் செய்தற்கும் லாயக்கற்றவர்களாகவும் இருக் கின்றார்கள். மக்களை மிரட்டும் பாவனையில் தங்களை அகம்பாவம் பிடித்தவர்களாகக் காட்டிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.
- 93

Page 49
மருத்திபூர் அல. ஆயிரவநாதர்
மிகவும் பிரபல்யமாக இருப்பவர்கள் தம்மைக் காப் பாற்றிக்கொள்வதற்கு ஒரு வேலியை அமைத்துக் கொள்கின்றார். என்ன தான் இவர்கள் எளிமையாக வாழ்ந்தாலும் கூட தம் நிலையினைத் தப்பவைக்கவும், கடமைகளை ஒழுங்காகச் செய்வதற்கும், சில சமயம் சற்று ஒதுங்கி அல்லது பாதுகாப்புடன் வாழ வேண்டிய நிலை யுள்ளது என்பதை நாம் மறுக்க முடியுமா? ஒரு பிரபல்ய மான கலைஞனை அல்லது அரசியல் தலைவரை எல்லோருமே எல்லாச் சந்தர்ப்பத்திலும் நெருங்கிவிட முடியாது. இவர்கள் சுதந்திரமாக சீவிக்க முடியாதுள்ளது. அவர்கள் விரும்பினாலும் கூட மக்களுடன் ஒன்றித்து வாழ முடியாத நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதனால் நாம் இத்தகையவர்களைக் “கர்விகள்” என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட முடியுமா?
எனினும் மக்களுடன் கலந்து வாழ்வதற்கான சந்தரப்பங்களை உருவாக்காது விட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். பல பிரபல்யங்கள் மக்களை உதாசீனம் செய்தமையால் முகவரி இழந்து தவிக்கின்றார்கள். இது ஒரு அவல நிலை! மக்களைச் சந்திக்காமல் அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் மக்கள் ஆதரவைப் பெற்றுவிட முடியாது. மக்கள் பிரதிநிதிகள் பலர் கர்வமுடன் தங்கள் பெருமை பற்றிப் பேசுவார்கள் அவர் களை உதாசீனம் செய்வார்கள். முடிவில் தங்களுக்கு என ஏதாவது தேவைகள் ஏற்பட்டால் கேவலமான முறையில் அவர்கள் காலில் விழுவார்கள்.
A A

அகஒனி கண்ணியமுள்ள நல்நடத்தையாளர்கள் கர்வம் கொள்வதுமில்லை இன்னும் ஒருவர் முன் தலைகுனிந்து கொள்ளும் தேவை இருப்பதுமில்லை. இன்று தன்னம் பிக்கையுடன் துணிவுடன் செயல்படுபவர்களை சிலர் காழ்ப்பு உணர்வு காரணமாக அவர்களை "இவன் அகம்பாவம் பிடித்தவன்" என்று சொல்லித் தவறான முத்திரை குத்தி விடுவார்கள். அநியாயங்களை எதிர்த்துக்குரல் கொடுப்ப வர்களை சில அடிமைத்தனமான போக்குள்ள புல்லுருவிகள் இவர்களைப் பார்த்து "இவர் எதற்காகச் சத்தமிடுகின்றார் சும்மா இருக்க வேண்டியதுதானே. என்றாலும் இவருக்குத் திமிர் அதிகம்” என்று சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
வீரமுடன் வாழுதல், சுயகெளரவமுடன் சிந்தனை செய்து தம்மை வளப்படுத்தல் என்பது அகம்பாவம் என்று அர்த்தம் கற்பிக்கலாகாது.
எவர்க்கும் துயர் கொடுக்காது தனிமனித சுதந்திரங் களைப் பறிக்காது, தன் வழியில் சென்று வாழுபவனைச் சீண்டுதல் கண்டிக்கத்தக்கதேயாம். எவர்களுடைய முன்னேற்றத்தை ஆப்புவைக்கும் கைங்கரியங்களைச் செய்வோர் தங்களுக்கும் சமூகத்திற்குமான இடை வெளியை அதிகரித்துக் கொள்வதற்கும் சமூகத்தால் கேலிக்கும் வெறுப்பூட்டலுக்குமான நபராகக் காலப் போக்கில் மாற்றமடைவதற்குத் தாமே காரணியாகிவிடுவர்.
– 045–

Page 50
மருத்திழ் 04ல. லுரிலுருந்தர்
ஒரு துறை சார்ந்த வல்லுனர் ஒருவருடன் அது பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் வந்து ஆர்ப்பாட்டமுடன் தனது கருத்தைத் தவறாக மொழிந்தால், அதனை மறுத்து வல்லுனர் ஏதாவது பேசினால் உடனே"உங்களது பேச்சுத் தவறானது நீங்கள் அகம்பாவமுடன் கதைபேசுகின்றீர்கள்" என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள். "உங்களுக்கு இதுபற்றித் தெரியாது ஐயா" என்று சொல்லி விதாண்டா வாதம் செய்பவர்கள் தங்களுள் இருக்கும் மமதை அறியாமை பற்றித்தெரியாமலே இருந்து கொள்கின்றார்கள். புரியாததைப் புரிந்தமாதிரிக் காட்டிக்கொள்வதும், பேசுத லும், முரணான நடத்தையுடன் தங்கள் சுய உருவைக் காட்டுதலும் தான் வீணான ஏற்க முடியாத ஆணவ முனைப்பும் அறியாமையுமாகும்.
எல்லோரையும் அனுசரித்து நடப்பவர்கள் சகலரதும் மன இயல்புகளைப் புரிந்தவர்களாகின்றனர். இவர்களிடம் அகங்காரமான எண்ணங்கள் எழுவதில்லை. மற்றவர்கள் இதயத்தை அறுப்பது போல் பேசுபவர்களால் எந்த வழியிலும் எவரது இதயபூர்வமான அன்பினையும் பெற்றுவிட முடியுமா?
தன்னை இழக்காமலும், தன்னை ரசிப்பவனாகவும், விரும்புவதுடன் உலகினையும் ரசனையுடன் நோக்குவதே ஒரு தவப்பேறுதான்.
எவராவது தன்னைத் தன் உணர்வை ஆன்மாவை
س 96 =

அகஜனி
விற்கத்தானே தலைப்பட்டால் அத்தகையோரை எத்தகைய வர்களும் கண்டபடி கையாளத்தலைப்பட்டு விடுவர். "நான் நன்மைகள் செய்ய எண்ணும் நல்லவன், நான் எளிதில் தவறான வழியில் விற்கப்படும் விற்பனைப்பொருள் அல்ல தூய்மையான நல் எண்ணங்களை நேசிப்பவன்” என்கின்ற கூர்மையான சுய கர்வத்துடன் இயங்கினால் அவர்கள் செல்லும் நல்வழியை எந்தத் தீயசக்திகளும் அடைத்துவிட முடியாது. உணர்க!
நாம் பகுத்தறிவு பற்றிப் பேசுகின்றோம்."எங்களைப் பற்றி மற்றவன் என்ன கருதுகின்றான். நான் செய்வது நல்ல காரியங்கள்தானா, இதனால் சமூகத்திற்கு சாதகமானது அல்லாதவைகளை நான் செய்து கொண்டிருக்கின்றேனா என்கின்ற கேள்விகளை எம்முன் கேட்டேயாக வேண்டும். இதன் மூலம் எம்முள்ளே புதைந்துள்ள அறியாமை மமதைகள் வெளியே தெரிந்து அவைகளைக் களைவதற் கான வழிகளும் புலனாகலாம் அல்லவா?
சகல மக்களிடம் உள்ள எதிர்பார்த்தல் என்பது தங்களை எல்லோரும் விரும்ப வேண்டும் என்பதேயாகும். இந்த அன்பை எதிர்பார்க்கும் நாம் அவ்வண்ணமே நாமும் அன்பை வழங்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
அன்பு, நேயம், பாசம் கொண்டவர் முன்,எத்தகைய
முரண்பாடான கர்வங்கள் இருக்கப்போவதில்லை. எதனை
யுமே, அன்பின் மூலம் வழங்கச் சித்தமாயுள்ளவன், அற்ப .97 -

Page 51
பருத்ரிபூர் அல. ஆயிரவநாதர் சலுகைகள், பொருட்களுக்களைப் பெரிதென மதிக்கவும் LDTl Lir6ör. -
இன்று தங்கள் குலப்பெருமைகளைப் பேசி வலிமை குறைந்த தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை இறுமாப்புடன் நோக்குபவர்கள் அதே வசதிகுறைந்தவர்கள் உயர்நிலை அடைந்தவர்களைக் கண்டுவிட்டாலோ,"இதோ அவனைப் பார்த்தீர்களா எவ்வளவு கர்வமுடன் போகின்றான்” என்று வாய் கூசாமல் சொல்வர்ர்கள்.
உலகத்தில் எல்லாமே நிரந்தரமானதும் இல்லை அதே சமயம் எதுவுமே எவர்க்கும் கிடைக்கக்கூடாது என்கின்ற நியதியும் கிடையவே கிடையாது. பணம், பொருள், கல்வி, அதிகாரம் எல்லாமே எவர்க்கும் கிடைக்க லாம். மாறி வரும் இந்த உலகில் எத்தனை எத்தனையோ புதுமைகளைக்கண்டு வருகின்றோம். ஒன்றுக்குமே வழியில்லாதவர்கள் உயர்வடைந்து மேன்மையடைவதும் பரம்பரை, பரம்பரையாகப் பணத்திலேயே புரண்டவர்கள் எல்லாவற்றையுமே எதிர்பாராமலே இழந்துவிட்ட சம்பவங்களையும் அறிந்திருப்பீர்கள்.
எனவே "நான் நல்ல பணம் சம்பாதித்து விட்டேன் எனது பிள்ளைகள் நல்ல கல்வி கீர்த்தி பெற்றுவிட்டார்கள்" என்று கூறி கர்வத்துடன் எவரையும் மதிக்காமல் வாழ்ந்து வருவது அழகல்ல! இறைவன் எல்லோர்க்கும் எல்லாமே
- 98
 
 
 
 
 
 

அகஒளி
தருகின்ற வள்ளல். அவன் கொடுத்த கொடைகளை மதிப் பளித்தல் என்பது அகங்காரம் அற்ற நிலையில் தம்மை உருவாக்குவதுடன் தானும் செழித்து வாழுவது போல் ஏனையோரையும் கருணையுடன் நோக்குதலேயாம்.
நாங்கள் பெற்ற செல்வங்களால் தலைக்கணம் கொண்டு துச்சமெனப் பிறரை ஏளனத்துடன் நோக்குவது என்பது கடவுளையே அவமானப்படுத்துதல் போன்றது. எவரையும் வேண்டுமென்றே எரிச்சல்ப் பட வைப்பது கூட தங்கள் இதயத்தை இறுதியில் எரிக்கும் செயல்தான். மக்களை ரசிப்பவனும் மக்களால் ரசிக்கப்படுவபனும் துன்ப மேயற்றகளிப்புநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். மனம் வாயிலாக உதிர்க்கப்படும் மொழிகள் பூவிலும் மென்மையாக சுகந்த மூட்டும் சந்தோஷங்களை நல்குவ தாக அமைய வேண்டும். வார்த்தையில் அக்கினியைத் தோய்த்து இறுமாப்புடன் உறுமுவதால் என்ன பயன் வந்துவிடப்போகின்றது?
தேவையற்ற கர்வத்தினால் உறவுகளிடையே விரிச ல்கள் ஏற்படுவதும் அதனால் இவர்கள் நிரந்தரமாகவே பிரிந்து விடுவதுடன் இவர்களின் பரம்பரைகளே கூறுபட்டு தங்கள் உறவுகள் யார் என்பதே தெரியாமல் போவதும் வேதனையான விஷயங்கள். -
மேலும் தனிப்பட்ட குரோதங்களால் கர்வத்துடன் நாடுகளின் தலைவர்களே பிற நாடுகளுடன் பொருதுவதும்
- 99

Page 52
பருத்திபூர் 04ல. ஆயிரவருதஷ் பின்னர் அந் நாடுகளிடையே சண்டைகள் மூளுவதும் பல் ஆயிரம்பேர் மாளுவதும், எழுத்தினால் வடிக்க இயலாத அநியாய வரலாறுகள். இவை போன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்வதும் எவருமே அறியாததுமல்ல. ஆணவ முனைப்புடன் ஹிட்லர் மேற்கொண்ட அடாவடித் தனத்தினால் முப்பது லட்சம் யூதர்கள் மரணமடைந்தது வரலாற்றின் இரத்தப்பதிவுகள்.
அன்னியோன்யமாக உறவுகளை வளர்த்தலும் அன் பினை இதயத்தில் எந்நேரமும் பிரவாகித்தபடி அதனுடன் சரணமடைந்தவர்க்குகர்வம் என்பதேது?ஜனனத்திலிருந்து மரணம் வரை சினத்துடன் எவரையும் நோக்காது எந்த இனத்தின் மதம், மொழி சார்ந்தோரையும் அரவணைப்பதே எம் வாழ்விற்குத் துணையான நீதியுமாகும். கனிவின் முன் எவரும் பணிவார்கள்.
கர்வம் கொள்ளும்போதே கோபம் மேலாதிக்க உணர்வு பழிவாங்கும் இயல்பு, மனக்கொதிப்பு, ஆற்றாமை, என்பன கூடவே எழுந்து வருதனால் உடல் நிலையில் கூடப் பாதிப்பு ஏற்படலாம். மேலும் மனதில் அமைதி ஏற்படாத நிலையில் கூட எழும் வெற்றிகளோ எந்த வரவுகளோ முழுமையான திருப்திகளைத் தந்துவிடாது. நாம் அமைதி சாந்தம் காணுதலுக்கான வழிகளை நாமாகத் தேடிக்கொள்ள வேண்டும்.
மனதையும் உடலையும் உபாதைக்குள்ளாக்கி
- 100.

அகஒனி
வெறுமைப்பட்டமனதுடன் வேற்றுமையுடன் நோக்கிமமதை கொள்வதாலும், எவருக்குமே விட்டுக் கொடுக்காமலும் வாழுவதால் இன்பம் முகிழ்த்து எழுந்திடுமோ? கனவினில் கூட எவரையும் இழிவாகப் பழிப்பதும் இடித்துரைப்பதும் பழிதீர்க்க எண்ணுதலும் கூடாது.
நல்லதை நினக்கவும், நல்லதைச் செய்வதாலும் எந்தவித சிரமங்களும் ஏற்படப்போவதில்லை. கருணை யுடன் எவரையும் நோக்குக! கர்வத்தைக்களைக! “தர்மத்தின்” வழி கூர்மதியுடன் மானுடத்தை நோக்கி அரவணைப்பதேயாம்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 06.04.2008
- 101 -

Page 53
பருத்திபூர் (49.9றிலுரர்
அக ஒளி
நல்ல முறையில் அறவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கண்டபடி தம் நிலையினை சுயபிரகடனம் செய்து தம்மை விளம்பரப் படுத்துவதில்லை. இதயசுத்தி என்பது சொல்லில் செயலில், தூய்மையுடன் செய்வதற்கான மேலான எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற மாபெரும் சத்தியுமாகும். அன்பு செலுத்துதலே இன்பமூட்டும் அனுபவம். இதய வாசலை அன்புடன் அகலத்திறந்தால் அதனூடு பிரகாசமாக வியாபித்து அக ஒளி நிரம்பி நிற்கும்.
வாழ்க்கையைச் செம்மையாகவும் எவ்வித சஞ்சலமு மின்றிக்கொண்டு செல்வதற்கு நெஞ்சத்தில் தூய்மையை நிலை நிறுத்துதலே அற வழியின் ஆதார சுருதியுமாகும்.
உண்மையுடன் இயல்பாக வாழுதல் என்பது சிக்கலான ஒன்றுமல்ல. பொய்யான வாழ்க்கை என்றாலே - 102 -
 
 

'; அகஒளி அதில் ஒரு நடிப்பு வந்து விடுகின்றது. இந்த பொய்யான வாழ்வின் வடிவம் எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் எங்களுக் கும் மற்றயவர்களுக்கும் துல்லியமாகத் தெரிய வந்து விடுகின்றது.முகமூடியுடன் மூச்சுத்திணறி அல்லல் படுவதை விடுத்து, அதனைக் களைந்து தெளிவாக உலகின் முன் சொந்த முகத்துடன் நடமாடும் சந்தோஷத்திற்கு எல்லை ஏது நண்பர்களே!
மனிதர் தம் வாழ்க்கையைத் தங்கள் இஷ்டப்படி வாழ எண்ணுதல் என்பதே ஒரு தான்தோன்றித்தனமான செயல்தான். அத்துடன் இது சுயநலத்தின்பால் இட்டுச் செல்வதுடன் தனது துன்பங்களைச் சுமைகளை பிறர்மீது இட்டுச் சுமத்துவதற்கான சந்தர்ப்பங்களைத் தேடுவதும் அப்படியே நடந்து கொள்வதுமாகும்.
சுயநல எண்ணமுடன் செயல்படுவது சில சமயம் அறியாமையினாலும் சில பொழுது வேண்டுமென்றே, செய்யப்படும் செயலாகவும் அமையலாம். தன்னை நல்ல வழிமுறைகளில் காப்பாற்றுவதற்காக சுயநலத்துடன் நடப் பது பெரிய தவறும் அல்ல. ஆனால், தன்மீது உண்மைத் தன்மையில்லாமல், வெறும் சுயநலத்தை மட்டுமே கடைப் பிடிப்பது கயமைத்தனம் அல்லவா?
"தன் உயிர் போல் பிற உயிர்களையும் மதித்து நட”
என எல்லோருமே சொல்லிக்கொள்கின்றார்கள். ஆனால்
செயல் முறையில் தனது உயிர் உடல் தான் மேன்மை - 103

Page 54
மருத்திபூர் 00. ஆயிரவநாதர் யானது, மென்மையானது. துன்பங்களைத் தாங்கிக் கொள்ளாது என்று கருதி ஏனையவர்கள் பற்றி ஏன் என்று எண்ணாமல் இருப்பதும் ஏன்?
பிறரை மதிக்காமல் இருப்பதும் அவர்கள் மீது துன்பங்களை ஏற்றுவதும் மனித உரிமை மீறல்கள் தான். மனிதனின் உரிமைகளைப் பறிக்க எண்ணுவது தன் இதயத்தினுள் சுத்தமாக ஒளியைப் பாய்ச்சுதற்குத் தானே தடை ஏற்படுத்தும் பரிதாபத்திற்குரிய அவர்தம் சுய முயற் சியே தான். பெருமுயற்சி செய்து துன்பங்களைச் சுமந்து கொள்வதுபோல் அறிவற்ற தன்மைவேறு இல்லை.
எதுவெல்லாம் எனக்குக்கிடைக்கும்? அவைகளை மாற்றாருக்குக் கிடைக்கவே கிடைக்கக்கூடாது என்றும் அதனை அனுமதிக்கவே மாட்டேன் என்று எண்ணுதல் போல் கரியமனம் வேறு என்ன உண்டு சொல்மின்! “எனது மனம் சுத்தமானது" என்று அடிக்கடி சொல்லிக் கொள்பவர் களை பிறர் சந்தேகக் கண்கொண்டு நோக்குவதுண்டு. நல்ல முறையில் அறவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கண்டபடி தமது நிலையினைச் சுய பிரகடனம் செய்து கொண்டு தம்மை விளம்பரப்படுத்துவதுமில்லை.
மிக எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒருவருக்கு ஆசைகள் அதிகம் துளிர்விடுவதில்லை.
ஆசைகள் தேவைகளை நோக்கிச் செல்வதனால் மனித
நடத்தைகளில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
- 104

அகஒளி அதிகமாக ஆசைகள் வேட்கைகள் இல்லாதபோது தீயநோக்கு சஞ்சலம், பொறாமை உணர்வுகள் அருகி அவை இல்லாமலே போய் விடலாம். பொதுவாகப் பலரும் ஆன்மீகவாதிகளாகக் கருதப்படுபவர்கள் மட்டுமே. அன்பு ணர்வு கொண்டவர்கள் நேரிய வழியில் செல்பவர்கள் என மக்கள் மத்தியில் பெருமதிப்பினைக் கொண்டவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
இறை நம்பிக்கையற்றவர்கள் என்றால் அவர்கள் மக்கள் நேயமற்றவர்கள் என்று கருதுவதே தகாது. மக்களால் ஏற்றக்கொள்ளப்பட்ட மக்கள் மீது நேயம் கொண்ட சேவை யொன்றே தங்கள் இலட்சியமாகக் கொண்ட நாத்தீக வாதிகளும் உளர்.
தெய்வ சிந்தனையுடன் சீரிய பணியினைச் செய்வ தும், மக்களை நேசித்து அவர்களுக்கான தொண்டுகளைச் செய்துவரும் ஆத்தீகவாதிகளின் பணிக்கும் நாத்தீக வாதிகளின் பணிக்கும் எவ்வித பேதமும் கிடையவேகிடை
யாது.
“இதய சுத்தி” என்பது சொல்லால் செயலால்
தூய்மையுடன் செய்வதற்கான மேலான எண்ணங்களை
வெளிப்படுத்தும் மாபெரும் சக்தியுமாகும். நல்நோக்குடன்
செயல்படும் உத்தமர்களின் இதயம் பக்குவப்பட்டே
இயங்குகின்றது. மக்களை மதித்து, அவர்களுக்கான
கடமைகளை அர்ப்பணிப்புடன் எவர் செய்திடினும் அவர்கள் - 105

Page 55
பருத்திபூர் 04). ஆயிரவநாதர் இறைவனின் மேலான அணுக்கிரகத்தையும் ஆசியையும் பெற்றுக்கொண்டவர்களேயாவர்.
“அகத்தில், ஒளி உண்டாகுதல்” என்பது நற்கரு மத்தினை நிர்சிந்தையுடன் பலாபலன் கருதாது செய்யப் படுதலால் உண்டாகும் தெள்ளிய உணர்வு அலைகளே யாம். இந்த நல் எண்ணங்களில் மேன்மையான, இதமான, அதிர்வுகளால் ஏற்படுகின்ற பரந்த பக்குவநோக்கு சர்வ வியாபகமானதும் எல்லோர்க்கும் பொதுவாகச் சென்ற டையக் கூடியதுமாகும். மனம், வாக்கு, காயத்துடன் தூய வாழ்வோடு ஒன்றித்த ஜீவன்களால் தான் இந்த ஜகத்திற்கு நித்ய சாந்தியை, சமாதானத்தை, அன்பை மழையெனப் பொழிந்திட இயலும்.
பகுத்தறிவின் துணைகொண்டு முன்னேறிச் செல்லும் நாம், எங்கள் இதயத்தை அன்பின் பெரும் புதையல்களாக்கி, அதனை எல்லோர்க்குமாக ஈந்திடின் அந்த விலை மதிப்பற்ற புதையல் எனும் பெரும் பொக்கிஷம், வற்றாத பெரும் ஊற்றாகப் பிரவாகித்து எம் நெஞ்சை நிறைந்து எம்மை ஆட்சி செய்யும். அன்பினால் ஆட்சி செய்யப்படுவதைவிடச் சிறந்த பேறு ஏது உண்டு ஐயா? எம்மைத் துரத்தி வரும் அற்ப ஆசைகளும் அவாவும், சுயநலப்போக்குகளும் அன்புக்கொடையினை நாம் நல்கும் போது ஆதவனைக் கண்ட பனி என துர்ப்பழக்கங்கள் விலகிவிடுவதை எவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திட முடியும்.
- 106
 
 
 
 
 
 

அகஒளி மாயா உலகில் சஞ்சாரம் செய்பவர்கள் உண்மை உலகம் தான் போலியானது துன்பமயமானது என எண்ணிக்கொள்வதாக ஞானிகள் பகர்வர். போலியான சங்கதிகள் கூடச் சிலசமயம் இன்பம் தருவதாக தப்பாக உணரப்படலாம். "அறிவிற்கு வேலை கொடு உண்மை நிலை தெளிவாகும்” என்பதே உணரப்பட வேண்டிய மாபெரும் தத்துவமுமாகும்.
சிந்தையை மந்தமாக்க முனைந்தால் அந்தகாரத்தில் மூழ்க வேண்டிதே!
மனிதன் என்னதான் சாதுர்யமாகச் செயல்பட்டாலும் கூடச் சோதனைகள் அவனைத் துரத்தாமல் விட்டு வைப்பதுமில்லை. குடும்பப்பாரம், நோய், பொருளாதாரப் 'பிரச்சனைகளால் பலவித துன்பங்களுக்கு முகம் கொடுத் தேயாக வேண்டியுள்ளது. மனமும் உடலும் ஆரோக்கிய மாக இல்லாதுவிடின் நிம்மதியாகச் சீவிப்பது எப்படி? நாம் தேக ஆரோக்கியத்தில் கூடிய கவனம் எடுக்காது விடில் மனோநிலை ஸ்திரமாக இருந்து விடாது. தீராத நோயுடன் போராடினால் அவனால் நிம்மதியாகக் காலத்தைக் கழிக்க இயலுமா? நோயின் கொடுமைகளால் ஆற்றாமை, சினம், வெறுப்பு விரக்தி நிலை தானாகவே வந்து ஒட்டிக் கொள்கின்றன.
எனவே உடலும், மனமும் ஸ்திரமாக இருக்க வேண்டும். சித்தர்கள், யோகிகள், ஞானிகள் என்று பல - 107 -

Page 56
0ருத்திழ் 04ல. லுயிரவநாதர்
வாறாகச் சொல்லி அழைக்கப்பட்டவர்கள், "தேகத்தினைப் பாதுகாத்துக் கொள்வாயாக. இது இறைவனால் படைக்கப் பட்டது. இதனை நோகடிக்காதே. இதனைச் சிதைக்க நீயே உடந்தையாக இருக்காதே’ என்றும் சொல்லி வந்தார்கள்.
மேலும் நன்நடத்தைகள் தான் தேக ஆரோக்கிய த்துடன் இயங்க, உறுதுணையாக இயங்கப் பெரும் உதவி புரிவதனால் மனிதனின் சிந்தனை செய்யும் ஆற்றலும் அதனூடு அவன் தெளிவு நிலை அடைந்து கொள்ளவும் நற்பண்புகள் உற்ற துணையே தான். உள்ளத்தெளிவு நன்நடத்தைகள் ஆகியன உடல் ஆரோக்கியத்துடன் இணைந்த தொடர்புகொண்டவையாக இருப்பதனாலேயே எல்லாச் சமய நூல்களிலும் சடங்குகள், சம்பிரதாயங்கள், சுகாதாரத்தை மையப்படுத்தியே எடுத்தியம்புவதாக உள்ளன.
நாம் சில எதிரிகளை எம்முடன் கூடவே சுமந்து கொண்டு திரிகின்றோம். கொடும்பகை, கோபம், பொறா மை, ஆற்றாமை, அவா போன்ற எதிரிகளின் நாசகாரத் தன்மைகளைப்புரிந்தும் புரியாதவர்கள்போல் அதன் ஆட்சிக்குள் சிலசமயம் அடங்கிப் போகின்றோம். மனதை ஆட்டுவிக்கும் துர்நடத்தைகளின் கோரப் பிடியினை ஆரத் தழுவினால் பெருமரத்தின் ஆணிவேர் அறுபட்ட நிலைக்கே மனிதர் உள்ளாக வேண்டி வருமன்றோ!
சந்தோஷமாகச் சீவிப்பதற்கு இலகுவான வழிதான்
- 108
 
 

அகஒளி என்ன? இருதயத்தை இருட்டாக்கி ஒளிசேர்ந்த உலகினுள் நுழைய முடியுமா? அகத்தினுள் ஒளி துலங்கியோர்க்குப் புறத்தே தோன்றும் வெறுத்தற்குரிய வேதனைகள் எல்லாமே சொல்லாமல் தொலைந்தேகும்!
நல்ல காரியங்களைச் செய்வதற்காக மனசை நெகிழ்ச்சித் தன்மையுடன் பேணும் அதேசமயம் “சரியானதைச் செவ்வையாக முடிப்பேன்" என்கின்ற நிலை வரும் போது"இரும்பை விட வலிமையான துணிச்சலுடன் கையாளுவேன்” என்று நாம் எம்மைத் தயார்படுத்து (86 IIT DITEs.
அன்பு செலுத்துதலே இன்பமயமான அனுபவம் தான். உண்மையான அன்பு பரிணமிக்கும் போதே நேர்மையும் எவர்க்காகவும் தன்னை அர்ப்பணிக்கும் இயல்புகளும் தானே கிளர்ந்தெழுந்து விடுகின்றது.
குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒரு சிலரை மட்டும் உறவுகள் என்று சொல்பவர்களை விட எல்லோரிடமும் அன்பைப் பொழிபவர்களுக்கு ஆயிரமாயிரம் உறவுகள் கேட்காமலே வந்து ஒட்டி நின்று உறவாடி வேண்டிய மன நிறைவினை அளித்துவிடும். இந்த சுகானுபவமான அன்புக்காக வாழ்ந்து மரணிப்பவன் சாகாமலே வாழ்ந்து சிரஞ்சீவித் தன்மையைப் பெற்று விடுகின்றான்.
இதயத்தை விரித்துவைத்து ஒளி சேர்ப்பவனுடன்
5İTÖûILb, 6).jiği 560T 560ğ556İ GÖLIğilb. LD606)56) bib önle - 109.

Page 57
கருத்திபூர் 04ல. ஆயிரவரஷ் அருகே வந்து குனிந்து கொள்ளும் ஆர்ப்பரிக்கும் கடல் அடங்கி ஏகும். பெரும் தீச் ஜூவாலை குளிர்ந்து வெள்ளிப் பனிக்கட்டியாகும். நிலவு வந்து தலைக்கு மேலே குடை பிடிக்கும், பச்சை மரங்கள் சாமரம் வீச தென்றலுக்குப் பஞ்சம் வராது, கண்ணுக்குள் ஆனந்தம் பெருகி ஓட கசிந்து நெஞ்சம் நெக்குருகும்.
இந்த இன்ப அனுபவம் உங்களுக்கும் வேண்டுமா? எல்லோருமே இந்த இன்ப நுகர்விற்குள் உள்நுழைந்து கொள்ளலாம். வாருங்கள்! உங்கள் இதயவாசலைத் திறந்து கொள்க! அதனுள் உண்மை அன்பு தானாகவே வந்து உள் நுழைந்து கொள்ளும் இறைவன் அன்பானவன் அவன் தன்னைப் போலவே உங்களை ஆக்கிட ஆர்வமுடன் உள்ளான். வாருங்கள் வந்துசேருங்கள் அன்பர்களே!
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 13.04.2008
- 110
 
 
 
 
 
 

அகஒளி
பெண்களுக்கு எதிரான உடல்ரீதியான வன்முறைகளும் வசைபாடுதலும்
பெண்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தல், பாலியல் ரீதியான வல்லுறவுகளுக்கு உட்படுத்துதல் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எனப் பொதுவாகப் பேசப்படுகின்றன. அடாத நெஞ்சை நொருக்கும், கொடிய வார்த்தைகளைப் பிரயோகித்தல் கூட மிகக்கேவலமான மனித வன்முறைகள்தான்! தனக்குள்ள "சுயகெளரவம்", பெண்ணுக்கும் உள்ளது என இத்தகைய கொடும் செயலைச்செய்வோர் உணரவேண்டும். பெண்கள் சந்தோஷகரமாக இருந்தால் தான் இல்லம் சிறக்கும். இன்றைய வாழ்வு சிறப்புற அமைந்தாலே நாளைய பொழுதுகள் பூரணமாய் அமையும்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பது அவர்களை அடித்துத் துன்புறுத்துவது, பாலியல் தொல்லை களுக்கும் அல்லது வல்லுறவுக்கு அவர்களை உட்படுத்து தல், முயற்சித்தல், மட்டுமல்ல அடாத நெஞ்சை நெருடும் கடும் வார்த்தைப் பிரயோகங்களும் பெண்களின் மனதைச்
- 111 -

Page 58
மருத்திழ் 04). ஆர்வதர் சிதறடித்துச் சின்னாபின்னப்படுத்தி, கிட்டத்தட்ட அவர்களை
மனதளவில் ஒரு நோயாளி ஆக்குவதுகூட பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறைதான்! எவரையும் திட்ட வசைபாட எமக்கு ஏது உரிமை?
எடுத்த எடுப்பிலேயே கோபம் வந்தால் ஒருவரு டைய சுயகெளரவம் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் பேசுதல் போல அத்துமீறல் வேறேதும் கிடையாது. அவர்கள் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி இரு சாராருமே மற்றவருடைய சுய கெளரவங்களைக் கெளரவப்படுத்துதல் வேண்டும். பெண் ஒருத்தி இன்னும் ஒரு பெண்ணை வசைபாடுவதும் ஆண் ஒருவன் பெண் மீது அவதூறு பேசுதலும் பெண்களுக்கு எதிரான வன்முறை விடயங்களில் ஒரே தன்மையுடையவைதான் உணர்க!
ஒருமுறை ஒரு நண்பரின் இல்லத்திற்குச் சென்றிரு ந்தேன். நண்பர் தமது இன்னும் ஒரு நண்பருடன் சுவாரஸ் யமாகச் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து பலத்த சப்தம் கேட்டது. எனது நண்பரோ அதுபற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை.
“என்ன இது ஒரு சப்தமாயிருக்கின்றதே, அத்துடன் ஒரு பெண்ணின் அழுகுரல் பெரும் ஒலமாகவும் கேட்கின்றதே. நீங்கள் உங்கள் பாட்டிற்குச் சும்மா இருக்கின்றீர்களே. என அவர் வீட்டிற்கு வந்திருந்த நண்பர்
கேட்டார்.
- 112
 

அகஒனி இதற்கு வீட்டுக்கார நண்பரோ. இல்லையில்லை. அந்த வீட்டில் இது எல்லாம் சர்வசாதாரணம்தான். தினம், தினம் இந்த குரல்களும் அடிதடியும் ஓயாமல் நடக்கும் சங்கதிகள்தான். எங்களுக்கு இதுவெல்லாம் பழகிப்போய் விட்டது என்றார். எங்களுக்கோ ஒரே ஆச்சரியம்! இந்தக் களேபரம் இவருக்குப் பழகிவிட்ட ஒன்றா. எப்படி ஐயா நீங்கள் அமைதியாக இருக்கின்றீர்கள். என வியப்புடன் நான் கேட்டேன்.
"நாங்கள் என்ன செய்ய முடியும்? இது கணவன், மனைவி சமாச்சாரம் நாங்கள் இதில் எப்படி மூக்கை நுளைக்க முடியும்.” எனத் திருப்பி எங்களைக் கேட்டார்.
இதற்கிடையில் அடுத்த வீட்டில் இருந்து, ஒருவர் அடிப்பதும் தொடர்ந்து பெண்ணின் அலறலும் கேட்டது. நண்பரின் வீட்டிற்கு வந்தவருக்குப் பொறுக்கவில்லை. "நீங்கள் சும்மா இருங்கள் இதோ வந்து விடுகின்றேன்.” என்றவர், பதிலுக்குக் காத்திருக்காமல் சத்தம் வந்த அடுத்து வீட்டிற்கு ஓடிப்போனார்.
சற்று நேரத்தில் அந்த நண்பர் உரையாடுவதும் எமக்குக் கேட்டது. தொடர்ந்து இருவரிடையே வாக்குவாதம் புரிவதும் பெரிதாகக் கேட்டது. ஆயினும் அதனைத் தொடர்ந்து அந்த நண்பர் ஓடோடித் திரும்பி எங்களிடம் வந்துவிட்டார்.
- 113 -

Page 59
பருத்திழ் 04ல. ஆயிரவரர்
அரக்கப்பரக்க ஓடிவந்தவரால் பேச முடியவில்லை. நாக்கு உளற பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது. நாங்கள் அவரை ஆசுவாசப்படுத்தினோம். என்ன நடந்தது அங்கே? சில நொடிகளின் பின்னர் அவர் பேச ஆரம்பத்தார்.
"நான் அங்கே போய் இருக்கக்கூடாது எனக்கு ஏற்கனவே அங்கு போனால் பிரச்சினைவரும் என்று தெரிந்தும் போய் மாட்டிக்கொண்டேன். நான் அங்கு சென்ற போது அந்த வீட்டுக்காரன் தனது மனைவியைத் தாறுமா றாக அடித்துக் கொண்டிருந்தான். எனக்குப் பொறுக்க வில்லை "இப்படியா ஒருத்தியை அடிப்பது என்ன. ஐயா இது, நீங்கள் செய்வது நன்றாகவா இருக்கின்றது. ஒரு பெண்ணை நீங்கள் இப்படி வதைப்பது சரியா? அவளால் திருப்பி அடிக்க முடியாது என்கின்ற தைரியத்தில் இப்படியா மோசமாக அடிப்பது. இவள் தற்செயலாகச் செத்துப் போனால் என்ன செய்வீர்கள்.? தயதுசெய்து அடிக்காதீர் அப்பனே.” எனக் "கெஞ்சினேன் என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.
அந்த கயவன் என்ன சொன்னான் தெரியுமா. நான் எனது மனைவியை அடித்தால் உனக்கு என்ன கோபம் வருகிறது. இது எங்கள் குடும்ப சமாச்சாரம், நீர் யார் ஐயா இதில் தலையிடுவது. அதுசரி. உமக்கு ஏன் ரோசம் வருகின்றது. எனது மனைவிமேல் உனக்கு என்ன அக்கறை. உமக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு.?. என்று கேட்டவன்"அடியே. இப்படிக் கண்டவன், நின்றவன்
- 114
 
 
 
 
 

ஆகஒளி வந்து என்னிடம் நியாய, அநியாயம் பற்றிப் பேசுகின் றானே. நீயாடி இப்படி வந்து பேசச் சொன்னது.? இவன் உனக்கு யார்” என்று கேட்டு மறுபடி அவன் அவளை அடிக்க நான் தப்பினால் போதும் என்றபடி ஓடிவந்து விட்டேன்" என்றவர், தொடர்ந்து "இவனது அக்கினிப் பேச்சு, அந்த அப்பாவிப் பெண்ணை வதைப்பதைவிட மிகக் கேவல மானது" என்று மனம் வெதும்பக் கூறிக்கொண்டார்.
உண்மைதான் மனைவியை அடித்து உதைப் பதுடன் நின்றுவிடாது அதற்கான காரணங்களை கற்பித்து மேலும் தமது அடாத செயலுக்கு நியாயம் கற்பிக்கும் கசடர்கள் செயல்களை என்ன என்பது?
இத்தகைய வீணர்கள்தான் அவளது கணவன் என்கின்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, அவளது இயலாமையை ஒரு கருவியாக வைத்து எப்படியும் Guggon LDT2
இன்னும் சிலர் மனைவியை கோபம் வந்தால் அடித்துத் துன்புறுத்துவதில்லை. மிகமோசமாக வசைபாடு வார்கள். இந்த இம்சைகள் எல்லையற்ற மனவடுவை ஏற்படுத்திவிடும். சாதாரணமான பேச்சு என்றால் பரவா யில்லை. அவள் நல்லவளாக இருந்தாலும் வேண்டு மென்றே அவள் நடத்தைபற்றிப் பேசுவார்கள்.
ஆயினும் கோபம் தணிந்ததும் "நான் கோபத்தில்
- 115

Page 60
வருத்திபூர் (49. உயிரவநாதர் ஏதோ உளறிவிட்டேன், இதையெல்லாம் நீபொருட்படுத்த வேண்டாம்” என்றும் சொல்லிவிடுவார்கள். குடிபோதையில் உளறுவது ஒன்றும் புதுமையுமல்ல.
ஆனால் வேண்டுமென்றே மனதினுள் வக்கிரத் தைப் புதைத்து வைத்திருந்து, குடித்தபின் கண்டபடி பேசுவதும்போதை தெளிந்தபின், மனைவியிடம் சரணாகதி அடைந்ததுபோல் நடிப்பதும் பச்சை அயோக்கியத்தன GLDu Isrlö.
குடும்பம் சிதறிவிடும். பிள்ளை குட்டிகள் அநாதர வாகிப் போய்விடும் என்பதற்காகவே, அநேகமான பெண்கள் தமக்கு ஏற்படும் எல்லா வன்முறைகளையும் பொறுத்துப் போகின்றார்கள்.
ஆயினும் இத்தகைய பெண்களின் நிலைகண்டு அவள் சார்ந்த உறவினர்களால் ஒன்றுமே பேசமுடியாது திணறுகின்றனர். ஆனால் கணவன் வீட்டாரில் பல பெண்கள் அவனைத் திருத்துவதில் முனைப்போடு செயல்படுவதில்லையென்றுதான் பெரும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
துன்பங்கள், பிரச்சினைகள் தமக்கென வரும்போது தான் அதன் தாக்கம் புரிகின்றது. தமக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயங்களைக் கற்பித்தால் அதுவெல்லாம் நிரந்தரமான அமைதியை, வெற்றியைத் தந்துவிடாது.
- 116

அகஒளி
பெண்கள் சந்தோஷமாக இல்லாதுவிட்டால் இல்லம் சிறக்காது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கள் பேணப்படல் வேண்டும். மனைவியை இம்சிக்கும் கண வனும் அவருக்குத் துணைபோகும் அவரது உறவினர்களும் இதனை உணர வேண்டும். இன்றைய வாழ்வு சிறப்புற அமைந்தாலே நாளைய பொழுதுகள் பூரணமாக அமையும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 01-08-2010
- 117

Page 61
மருத்திபூர் (40. ஆயிரவநாதர்
O O
O O O
குறமபுததனங்களும உயிர்ச் சிற்பங்களான குழந்தைகள் இயல்பாகவே நுண்அறிவு கொண்டவர்கள். இவர்களே எதிர்காலத்தின் உயர்தலைவர்கள்.குழந்தைகளின் குறும்புத்தனங்களால் அவர்களது உடல்நிலை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் அதீத திறமைகளை எவருமே முடக்கிஒடுக்கக்கூடாது.பெற்றோர்கள் குழந்தைகளுடன் இணைந்துமகிழ போதிய நேரங்களை ஒதுக்க வேண்டும். பிள்ளைகளைத் தனிமைப்படுத்தி வளர்த்தல், அவர்கள் மென்மையான உள்ளத்தைப் பாதிக்கும். ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி சகல குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்துதல் அனைவரினதும் பொறுப்பு.
குழந்தைகளே எமது உலகின் வருங்காலத்தின் ஒப்பற்ற தலைவர்கள். இவர்களை மேன் மக்களாக உருவாக்கவேண்டியது பெற்றோர்களின் பெரும் பொறுப்பும் கடமையுமாகும்.
- 118
 
 
 

o அகஒரி உயிர்ச் சிற்பங்களான குழந்தைகள் இயல்பாவே நுண்அறிவு கொண்டவர்களே. சில சமயங்களில் இவர்கள் பேச்சும், செயல்களும் எம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கு கின்றன.
ஒருதடவை மோட்டார் வாகனத்தில் மூன்று வயதுச் சின்னச் சுட்டிப் பையன் தனது பெரிய தந்தையாருடன் பயணம் செய்துகொண்டிருந்தான். வாகனம் மிக வேக மாகச் சென்று கொண்டிருந்தது. வெளியே வானத்தில் ஒரு விமானம் பறந்து சென்றது.
உடனே பையன் "பெரியப்பா இந்த விமானம் எவ்வளவுவேகமாகப் பறக்கின்றது பார்த்தீர்களா” என்றான். உடனே அவனது பெரிய தந்தையார், பையனின் திறமை யைப் பரிசோதிக்க இந்த விமானத்தை விட அதிவேகமாகச் செல்வது எது எனக் கேட்டார்.
அவரது எண்ணம் அவன், சின்னப் பயல்தானே விண்கலம், றொக்கட் எனச் சொல்வான் எனக் கருதினார். இவர்கள் இருவருமே ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தனர். சற்று நேரம் அவன் மெளனமானான். hairGOTir ghost 6T60T (Thought is Fast) "6T60iiGOOTris(36T வேகமானவை” என்றானே பாருங்கள்! பெரிய தந்தையார் மிகவும் அதிர்ந்து ஆச்சரியப்பட்டார். இது உண்மைச்
Flbu6 b.
- 119 -

Page 62
மருத்திபூர் 04ல. ஆயிரவநாதர்
இத்தகைய திறமை கொண்ட குழந்தைகள் இயல்
பாகவே குறும்பு செய்வதில் வல்லவர்கள். இவர்கள்
செய்யும் குறும்புகளை ரசிக்கலாம். ஆயினும் செய்யும்
எரிச்சலடையவும் வைக்கும்.
சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின்
குறும்புகளை ரசிப்பார்கள். பக்கத்து வீட்டுக்குழந்தைகளின் குறும்புகளை வெறுப்பார்கள். "சே. சே. இது என்ன
சேஷ்டைகள் அதிகரிக்கும்போது பெரியவர்களை
பழக்கமோ. குரங்குச் சேஷ்டைகளை செய்கின்றார்களே
இவர்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டாமோ" என்பார்கள்.
குழந்தைகளைப் பெரியவர்கள் போல கட்டுப்பாடாக இரு என்று சொன்னால் அவர்களுக்குப்புரியுமா? புரியும்படி சொல்ல வேண்டும். அன்புடன், கனிவோடு பேசவேண்டும்.
இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளுடன் நண்பர் கள் வீடுகளுக்குச் செல்வார்கள். அங்குள்ள விலையுயர்ந்த தொலைக்காட்சிப்பெட்டி, கண்ணாடிப் பொருட்கள், தளபாடங்களை தங்கள் பிள்ளைகள் அடித்து உடைப்பதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். போகின்ற இடத்திலாவது பிள்ளைகளுக்குப் புத்திமதிகளை அன்புடன் சொல்லிக் கொடுத்து நல்வழிப் படுத்தவே மாட்டார்கள்.
- 120
 

அத்ஒளி இத்தகைய குடும்பத்தினரை எவர்தான் வரவேற்று உபசரிக்கப் போகின்றார்கள்?. குழந்தைகளை எப்படி வளர்ப்பது? போஷிப்பது பற்றி அனைத்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள் வாயிலாகப் பலவித விடயங்களைச் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள். எத்தனை பேர் அவைகளை உள்வாங்கு கின்றார்களோ தெரியவில்லை.
குழந்தைகளின் குறும்புகள், விளையாட்டுகள் இயல்பானவை. அவைகளை நாம் அடக்கி ஒடுக்க முனையக்கூடாது. சுதந்திரமாக விளையாடும் சிறார்களை விளையாட வேண்டாம் எனச் சொல்வதே அடிமைத்த னமானது. இன்ன வேலையை, இப்படிச்செய் என, அவர்கள் புரியும்படி சொன்னால் புரிந்து கொள்வார்கள். -
குழந்தைகள் தமது இரண்டு வயதிலேயே எத்தனை எத்தனையோ பல நூறு சொற்களை உடனே கிரகித்துக் கொள்கின்றார்கள். நல்ல பழக்கவழக்கங்களை நாம் சொல்லிக் கொடுப்பதுடன் நின்றுவிடாது, நாமும் அவர்கள் முன் அப்படியே வாழ்ந்து காட்ட வேண்டும்.
காலை, மாலை வேளைகளில் வழிபாடு செய்தல், நல்ல பாடல்களை பக்தியுடன் இசைத்தல், பாடங்களை படித்தல், நல்ல வார்த்தைகளையே என்றும் பேசுதல் எனப் பற்பல விஷயங்களை அன்பு பாச உணர்வுடன் சொன்
- 121 -

Page 63
ருேத்திபூர் (49.ஆயிற்றுதாரர் னால், எந்தக் குழந்தைகளும் கேட்டே தீரும்.
காலையில் இருந்து மாலை வரை குறித்த நேரங்களில் குறித்த பணிகளைச் செய்யாது, வீண்வார்த்தை யாடுதல், சதா எந்த நேரமும் கோபத்துடன் பேசுதல், வீட்டிலும் வெளியேயும் பிறருடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் பெற்றோரைக்கண்டால் எப்படிப்பிள்ளைகள் நல்ல பிரஜைகளாக வளரமுடியும் சொல்லுங்கள்?
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றி தாய்மார்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்குப் பிரபல குழந்தைகள் நல உளவளவிய லாளர் சாலினி எனும் அம்மையார் தொலைக்காட்சி யூடாகப் பதில் அளித்தார்.
பல தாய்மார்கள் தமது குழந்தைகளின் கட்டுப் படுத்த இயலாத குறும்பு, சேஷ்டைகள், குழப்படிகள் பற்றிக் கேள்விகளைக் கேட்டனர்.
பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பெரும் தொல்லை தருவதால் அது ஒரு குறைபாடான நோயா எனவும் கேட்டனர். சொல்லமுடியாத, ஜீரணிக்க முடியாத படி ஏதேதோ குளப்படிகள் செய்கின்றார்கள். ஒரு வினாடி கூடச் சும்மா இருக்கின்றார்கள் இல்லையே எனச் சொன்ன போது உளவளவியலாளர் சொன்னதாவது,
- 122 -
 

அகஒளி இத்தகைய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கே முதல் புதுமையான முறையில் முதல் கண் உளவியல் பாடங்களை விஞ்ஞான ரீதியில் சொல்லிக் கொடுக்கின் றோம். பாடநெறிகளுக்கான ஆலோசனை நூல்கள் சில உபகரணங்களையும் அனுப்பிவைக்கின்றோம். நூல்களில் சொல்லிய வண்ணம்,பிள்ளைகளுக்கு சொல்லித்தருகின்ற கருவிகளைக் காட்டி மகிழ்வுறச் செய்தால் அவர்கள் தாமா கவே ஒரு ஒழுங்கில் வந்துவிடுவார்கள். குழந்தைகளின் நடவடிக்கைகளை வைத்து அதனை ஒரு குறையாகக் கருதிக் கொள்ள வேண்டவே வேண்டாம் என்றார்.
மேலும் இது தொடர்பாக இணையத்தளமூடாகப் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ள முடியும் 616örgosrá.www.salinistatkids.com.Glogyð 2-60&lsör பலபாகங்களில், பலதரப்பட்ட பதவிகளை வகிப்பவர்களில் இருந்து சாதாரண பொதுமக்கள்வரை தம்முடன் தொடர்பு கொள்வதாகச் சொன்னார்.
குழந்தை வளர்ப்பு என்பதும் ஒரு அரியகலைதான். சாதாரண கல்வி கற்காத பாமரப் பெண்களே அற்புதமான குழந்தைகளைப் பெற்று இந்த அவனிக்கு அளித்த வண்ணமுள்ளனர். குழந்தைகளை பாசமுடன், நேயத்துடன் வளர்க்கவேண்டும். அன்புடன் கூடிய கண்டிப்பும், அரவ ணைப்பும் தேவையானதே. மேற்தட்டு வர்க்கத்தினர் குறிப்பாக இது விடயத்தில் பூரண கவனம் செலுத்துவ
- 123

Page 64
மருத்திபூர் 04ல. ஆயிரவநாதர் தில்லை. பணம், வசதி வாய்ப்புக்களால் மட்டும் குழந்தை யின் எதிர்காலத்தை உருவாக்கிவிட முடியாது. இத்தகைய வசதிகள் உள்ள பெற்றோர் பல தியாகங்களைச் செய்தே யாக வேண்டும்.
குழந்தைகளுக்காக தமக்குரிய நேரங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். பாசத்தைப் பகிர்ந்துகொள்ள தமது பிள்ளைகளுடன் பேச வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பணவசதிஅந்தஸ்துநோக்காது சாதாரண குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட, படித்து, மகிழ இடம் கொடுக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் கணவன், மனைவி இருவருமே சமபங்களிப்பை கொண்டிருத்தல் அவசியமா னதாகும்.
நாம் எங்கள் பிள்ளைகள் நலனை மட்டுமே நோக்குகின்றோம். எத்தனையோ பிள்ளைகள் அநாதரவாகப் பெற்றோரின்றி வீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நற்பிரஜைகளாக்குவது எப்படி? யுத்தம் காரணமாகப் பெற்றோரை இழந்து அன்பான உறவுகளைத் துறந்து அரவணைக்க எவருமேயற்று ஏங்கும் அந்தப் பாலகர்களின் வாழ்க்கையினை ஒளியேற்றுவது எங்ங்ணம்?
இவர்களின் பிரச்சினைகளுக்கு நல்ல முடிவைக் கொடுக்க வேண்டியது ஒரு சமூகப் பொறுப்பேயாகும். அரசை மட்டும் நம்பியிருக்காது அநாதைச் சிறார்களின்
- 124 سم
 
 
 
 
 

அகஒளி எதிர்கால சுபீட்சத்திற்கு எம்மாலான உதவிகளைச் செய்தே
யாக வேண்டும்.
குறிப்பாக இன்று எமது நாட்டில் உள்ள அநாதை குழந்தைகள் இல்லங்களில் வாழும் குழந்தைகள் ஏனைய குழந்தைகள் போல் சந்தோஷமாகக் களிப்புடன் வாழ அர்ப் பணிப்புடன், மனப்பூர்வமான உதவிகளை நல்குவோமாக!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 10-05-2010
- 125 س

Page 65
கருத்திழ் 04ல. ஆலிரஷரர்
இவை தான் உண்மைகள்!
மாணவர்களின் கல்வியூட்டல் விடயத்தில் ஆசிரியர்களின் அக்கறையுடன் கூடிய சிறிய தண்டனைகளையும் மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களே ஏற்கத் தயாராக இல்லை. ஆயினும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக, ஆசிரியர்கள் வழங்கும் தண்டனைகளை வரவேற்கின்றார்கள். முன்னைய காலத்தில் எல்லா பெற்றோர்களுமே ஆசிரியர்களுக்கு பிள்ளைகள் விடயத்தில் சகல உரிமைகளையும் வழங்கியிருந்தனர். அன்போடு கூடிய கண்டிப்புக்கள், சிறு தண்டனைகள் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காயின் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியதே! நல்லாசிரியர்களைப் போற்றுக! பிள்ளைகளை வல்லவராக்க இவர்களுடன் பெற்றோர் இணைந்து செயலாற்றுக!
பிள்ளைகளுக்கு கல்வியூட்டும் விடயத்தில்
பெற்றோர், ஆசிரியர்களுக்குப் போதிய உரிமைகளை அளிக்க வேண்டியவர்களாகின்றனர். இவர்கள் வழங்கும் சிறிய தண்டனைகள் கண்டிப்புக்களை எதனையுமே, எவருமே ஏற்பதற்கு தயாராக இல்லை. ஒரு மாணவன், தனக்குரிய தண்டனைகள் அல்லது கண்டிப்புகள் நியாய
- 126
 
 
 
 
 
 
 

அகஒளி
மானது என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவனது கல்வி கற்றலின் தேவையை அவனால் உணரமுடியும்.
மேலும் இன்றைய பெற்றோர்கள் தமது பிள்ளை களை ஆசிரியர்கள் அல்லது பெரியோர்கள் கண்டிப்பதை விரும்புகின்றார்களா அல்லது ஏற்றுக்கொள்கின்றார்களா என்பது கேள்விக்குரிய விடயமே!
தொடரூந்தில் நான் பயணம் செய்த போது, என்னைச் சந்தித்த ஒரு ஆசிரியர் சொன்ன ஆச்சரிய மூட்டும் தகவல் இதோ! ○
"நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கல்லூரி யில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பில் ஒரு மாணவி இருந்தாள். வசதிபடைத்த குடும்பத்திலிருந்து வந்தவள். எனவே அவள் வீட்டின் செல்லப்பெண் ஆதலால், வகுப்பில் பொல்லாத பெண்ணாகக் காணப்பட்டாள். பாடத்தில் போதிய சிரத்தை காட்டவில்லை. நான் கணித பாடம் கற்பித்தேன். ஒருநாள் அவள் கணித பாடத்தினைக் கற்பதில் அசிரத்தையாக இருந்தமையினால் சற்று கோபா வேசப்பட்டு அவளை பிரம்பினால் அடி கொடுத்துத் தண்டித்து விட்டேன்.
எனது செய்கை தவறானதுதான். நான் தண்டனை
வழங்கியதால் கல்லூரியில் சற்றுபரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
சக ஆசிரியர்கள் வந்து "நீங்கள் எப்படி ஒரு வயது வந்த - 127.

Page 66
மருத்திழ் 00. ஆயிரவநதர் பெண்ணுக்கு அடிக்கலாம். மேலும் அவளது தந்தையார் ரொம்பவும் பொல்லாதவர் என்று வேறு சக ஆசிரியர்கள் என்னைப் பயமுறுத்தினர். உண்மையில் நான் வேண்டு மென்றா தண்டித்தேன், அவளது முன்னேற்றத்திற்காகத் தானே தண்டித்தேன், எனக்கூறியும் எனக்காக எவரும் பரிந்து பேசவேயில்லை.
அடுத்த நாள் நடந்த சம்பவம் என் மனதை விட்ட கலாத விஷயமாகும். நம்ப இயலாததுமாகும். வாட்ட சாட்டமான மனிதர் கல்லூரியினுள் வந்து "எங்கே அந்த ஆசிரியர், உடனே வெளியே வரச்சொல்லுங்கள். எனது மகளை அடித்த அவர் யார் எனநான் அறியவேண்டும்" நான் அவர் குரல் கேட்டு அதிர்ந்தேன். எப்படியும் உண்மை வெளிவரத்தான் போகின்றது. அதைவிட அதனை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். இதற்காகப் பயந்து நடுங்க முடியுமா என எண்ணி, அவர்முன் வந்து,"உங்கள் மகளை அடித்தது நான்தான், அவள் பாடத்தில் கவனம் செலுத்த வில்லை, வேறுவழியின்றி அவளைத் தண்டித்துவிட்டேன், வேண்டுமென்று நான் இதனைச் செய்யவில்லை “மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.
நான் பேசியதையடுத்து அவரது செய்கை
என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. "சேர். நான்
உங்களைப் பெரிதாகப் பாராட்டுகின்றேன். நீங்கள் செய்த
காரியம் மெத்தச் சரியானது. இவளுக்கு ரொம்பச் செல்லம்
கூடிவிட்டது கண்டித்தால் தான் வழிக்கு வருவாள். எனது
- 128

அகஒளி மகளுக்குப் படிப்பு விஷயத்தில் என்ன தண்டனை வழங்கி னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இவளது நன்மைக்காகத் தயவுசெய்து எனது மகள் நன்கு படிக்க உங்கள் உதவியை நாங்கள் நாடுகின்றோம்” என்று அவர் சொன்னதுடன் நிற்காது எனது கரங்களைப் பற்றிக் குரல்
தழுதழுக்க நன்றி உணர்வுடன் விடைபெற்றுக் கொண்டார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த மாணவி என்னிடமே கல்விப் பொதுதராதர உயர்தரப்பிரிவில் படித்து திறமைச்சித்தியடைந்து, இன்று அவள் பொறியியலாளராகி விட்டாள். இன்றைக்கும் என்னைக் கண்டால் தனது குருபக்தியை வெளிக்காட்டியபடியே இருப்பாள்" என அந்த ஆசிரியர் சொன்னார்.
தற்கால நடைமுறையில் சின்னப் பையன்களுக்கும் கூட ஆசிரியர்கள் சிறிய தண்டனைகளை வழங்க எந்தப் பெற்றோரும் இணங்குவதேயில்லை. உண்மையில் தற்கால நடைமுறையில் மாணவர் ஒருவரை அடிப்பதைக் கண்டபடி ஏசுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
எனினும் பழங்கால வாழ்க்கை முறையுடன் இன்னமும் ஒன்றிப்போன பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளர்ப்பதில் ஏது தவறு எனக் கேடகிறார்கள்.
அன்பான கல்வியூட்டலே சாலச்சிறந்தது. மேலை நாடுகளிலும் என்றல்ல, சகல நாடுகளிலும் ஆசிரியர்கள், = 129 سب

Page 67
பருத்திழ் 04), ஹமிழரர் மாணவர்களுடன் நட்பு ரீதியில் கல்வி கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆயினும் பிள்ளைகளை நல்வழிப்படுத்துதலில் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட் டேயாக வேண்டும்.எத்தருணத்திலும் மாணவர்களின் மனம் உடையுமாற்போல் ஆசிரியர்கள் நாகரீகமற்ற முறையில் ஏசுதல் தகாத செயல்.
ஆனால் தமது பிள்ளைகளின் தவறான நடத்தைக ளுக்காகப் பரிந்து பேசுவதும் கல்வியில் நாட்டமற்ற தமது பிள்ளைகளை ஆசிரியர் புத்திமதியோ அல்லது கண்டன ங்களோ தெரிவித்தால், அவர்கள் மீது வரிந்து கட்டிச் சண்டைக்குப் போவதால் யாருக்கு நஷ்டம் வரும் என்பதை உணரவேண்டும்.
ஆசிரியர்கள் கெளரவத்திற்குரியவர்கள். பெற்றோர்க ளுக்குப் பயந்தே சில ஆசிரியர்கள் சில குறிப்பிட்ட மாணவர்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதுமுண்டு. கல்வி எமக்கு அரும்பெரும் சொத்து. எமக்கான வாழ்க்கை யின் ஆணிவேர். ஒரு தாவரத்தில் பூச்சி, புழுக்கள் வந்தால் கிருமி நாசினி தெளித்து அதனைக் காப்பாற்ற வேண்டு மல்லவா?
அவ்வண்ணமே ஒரு பிள்ளை ஒழுங்காகச் சமூகத் தில் வாழ பெற்றோர், ஆசிரியர்களின் பங்களிப்பு மிக அளப் - 130
 

அகஒளி பரியது. இள வயதில் எல்லா ஆசைகளுமே நியாயமானது
என்றே குழந்தை ந்த பிள்ளைகள் கூடக் கருது வார்கள். சரியானது எதுவெனச் சுட்டிக் காட்டுவதுடன் அ வும், அவசியமான
தருணத்தில் கண் கொள்ள வேண்டி கைகளுமேயாவ மாணவர்களும்
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்”பகுதி 22-09-2009
- 131 -

Page 68
மருத்திபூர் 00. ஐபிறருந்தர்
அழகை மட்டும் முதன்மைப்படுத்தலாமா?
அழகை எல்லோருமே விரும்புவது இயல்பு. ஆயினும் அழகிற்கு மட்டும் நாம் அடிமையாகலாமா? குடும்ப வாழ்விற்கு "அழகு" மட்டும் ஆதாரமானதும் அல்ல. திருமண வாழ்வில் கணவன், மனைவி பரஸ்பரம் ஒருவர்மீது ஒருவர் புரிந்துணர்வுடன் காதல் வாழ்வில் சங்கமித்தால், அவர்கள் வாழ்வில் "அழகு" என்பது முன்னுரிமையாய் இருக்காது. இறைவன் படைப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை. அன்புடன் பழகினால் எல்லோருமே அழகாகத்தான் தெளிவார்கள். எளிமையே அழகு உள்ளத்தின் களிப்பு அங்கேயே துலங்கும்.
திருமண பந்தத்தினுள் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலாருமே அழகிற்கே முன்னுரிமை கொடுப்பதை நாம் அறிவோம். ஒவ்வொருவருமே, தமக்கு மிக அழகான ஜோடியான பெண்ணையோ, ஆணையோ தேடிக் கொள்ள விழைகின்றார்கள். பதவி, பொருள், காணி,
- 132
 
 
 
 
 
 
 
 
 

அகஒளி வீடு என எந்தச் செல்வம் வந்தபோதும் அழகான மனைவி தனக்கு அமைய வேண்டும் என எதிர்பார்ப்பதும், அவ் வண்ணமே பலவிததகுதிகளையுடையஒருவனை விட தனக்கு
வரவேண்டிய கணவன் அவன் அழகான ஆண்மகனாக
வரவேண்டும் என எண்ணுவதும் வியப்பான விடயமும் அல்ல. அழகை விரும்புவதும் தப்பான எண்ணமும் அல்ல!
வெறும் அழகிற்கு மட்டும் நாம் அடிமையாகலாமா? ஆயினும் குடும்ப வாழ்வில் அழகு மட்டுமா முதன்மைப் படுத்தப்படல் வேண்டும்?
எனக்குத் தெரிந்த ஒருவரின் கதை இது அவர் ரொம்பவும் அழகானவர். அத்துடன் அரசாங்கத்தில் உயர் பதவியிலும் இருந்தார். அவருக்குத் திருமண வயதானதால் பெற்றோர், அவருக்குத் தகுந்த மணமகளைத் தேடிக் கொண்டிருந்தனர்.
அவர் காலத்தில், பொதுவாக பெற்றோர் நிச்ச யிக்கும் பெண்ணையே, ஆண்கள் எவ்வித மறுப்புமின்றி மணம் புரிவதும், பெண்களும், தாய், தகப்பன் முடிவு செய்த மணமகனிடம் கழுத்தை நீட்டுவதும் வழக்கமானதே.
இதுவிடயத்தில் ஆண் பெண் இருசாராரிடம் சுய விருப்பு பற்றிப் பெற்றோர் போதிய அபிப்பிராயம் கேட்கச் சித்தம் கொள்வதுமில்லை.
- 133

Page 69
விருத்திபூர் 04ல. ஆலிற்றூதர்
இதேபோலவே முன்னர் குறிப்பிட்டவருக்குப், பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்காகத் தங்கள் மகனுக்குத் திருமணம் நிச்சயித்திருந்த தகவலைத் தெரிவித்தார்கள். திருமண நாளுக்கு முன்னைய சில நாட்களின் தனது இல்லத்திற்கு வந்தார். அவர் மணமகளைப் பார்க்கவேயில்லை. பெற்றோரின் முடிவு சரியானது என மனதார நம்பியிருந்தார்.
குறித்த திருமணம் இனிதே நடைபெற்றது. மண மகளுக்குத் தாலி கட்டிய பின்னர்தான், முதன்முதலாக அவர் தமது மனைவியைப் பார்த்தார். அவருக்குத் தலை சுற்றியது போயும் போயும் இவளா தனக்கு மனைவியாக வாய்த்தாள் என மனம் உடைந்தேபோனார்.
காரணம் மணமகள் அழகாகவேயில்லை. இப்போது என்ன செய்வது? திருமணம் முடிந்தாகிவிட்டது. அடுத்து என்ன நடந்தது தெரியுமா? ஒருவருடனும் அவர் பேசவில்லை. தனது பெற்றோரிடமும் பேசாமல், கட்டிய மனைவியையும் பார்க்காது, திருமணச் சடங்கு முடியும்வரை பொறுத்திருந்து, வீட்டினுள் முடங்கிக் கொண்டார். எந்த உறவினர்கள், நண்பர்களுடனும் அவர் பேசத் தயாராகவில்லை.
இந்த நிகழ்வு முடிந்து சில நாட்கள் சென்றன.
ஒருநாள் நான் அவரைச் சந்தைக்குச் செல்லும் வழியில்
கண்டேன். தமது துவிச்சக்கர வண்டியில் பொருட்களுடன்
- 134

அகஒனி வந்தவர், என்னைக் கண்டதும் இறங்கிக் கொண்டார்.
அப்போதுநான் எண்ணியதுபோல அவர் முகத்தில் எந்தவிதமான ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருக்க வில்லை. மிகவும் குதூகலத்துடன் காணப்பட்டார். என்னால் நம்பவே முடியவில்லை."என்ன. எப்படி சுகமாக இருக்கின் ஹீர்களா? திருமண வாழ்க்கை எப்படி.." என்று சாதாரண மாகக் கேட்டுவைத்தேன்.
நான் கேட்டபோது அவர் அளித்த பதில் என்னை வியப்புக்குள் சஞ்சரிக்க வைத்துவிட்டது."என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள், எனக்கு வாய்த்த அதிஷ்டம் வேறு ஒருவருக்கும் வாய்த்திருக்காது. என்ன தங்கமான மனைவி எனக்குக் கிடைத்து இருக்கின்றாள் தெரியுமா? என்னை, எனது அம்மா, ஜயாவை, மிக்க கரிசனத்துடன் கவனிக்கின் றாள். அதுமட்டுமல்ல வீட்டு வேலைகள், சமையல் காரியங்களில் இவள் போல நான் யாரையும் கண்டதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, என்மீது அளவுகடந்த பிரியம் வைத்திருக்கின்றாள். மனம் கோணாமல் புத்திசாலித்தன மாகவே காரியங்கள் அனைத்தையும் செய்கின்றாள். இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்? அன்பான மனைவியுடன் வாழ்வதைவிட வேறு என்ன பேறு ஐயா! என்று என்னிடம் கூறிக்கொண்டார்.
உண்மைதான் இன்று நாம் அழகு என்பதற்கு என்ன அர்த்தம் கொள்கின்றோம்? எமது ரசனை எல்லாமே - 135

Page 70
பருத்திபூர் (40. ஒற்றுருதர் வெறும் புற அழகுடன் நின்று விடுகின்றது. அக அழகுள்ள வர்கள் தான் எல்லோரையும் அன்புடன் அனுசரித்து அரவணைக்கின்றனர். எளிமையானவர்களே அழகாகத் தெரிகின்றார்கள்.
ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் பெண் வெறும் அலங்காரப் பொம்மை அல்ல. இவள் ஒரு குல விளக்காக, மிளிர்ந்து தனது கணவனைப் பிள்ளைகளைப் போஷிப்ப துடன் நின்றுவிடாது, தமது உற்றம், சுற்றம், நண்பர்கள் என்றில்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் கனிவுடன் நோக்கினால், அவளுக்குத் தெய்வ அனுக்கிரஹம் தானாகக் கிட்டும். அன்புடன் பழகினால் எல்லோரும் அழகாகத்தான் தெரிவார்கள்.
இறைவன் படைப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. நாமாகவே பேதங்களைக் கற்பிக்கின்றோம். குடும்ப வாழ்வு ஒரு பரம்பரையுடன் முடிந்துவிடுவதில்லை. இவை தொடர்ந்து செல்லும், கணவனும் மனைவியும் இணைந்து அன்புடன் நல்அறம் காத்திடல் வேண்டும். இதற்குப் புற அழகு மட்டுமே ஒரு காரணமாக அமைந்திடல் கூடாது.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி "இவள்” பகுதி 07-02-2010
- 136
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

besgaf
உறவுகளைப் பிரிக்க முயலும் வஞ்சகர்கள்
குடும்ப உறவுகளை நண்பர்களைப் பிரித்து விடுவதில் சிலருக்கு அலாதி பிரியம். நம்பவே முடியாத பிரகிருதிகள் இந்த உலகில் உலாவந்து கொண்டிருக்கின்றார்கள். எங்கும், எவருடனும் பேசும் போது ஜாக்கிரதை உணர்வு அவசியமாகின்றது. சிலருடைய கரிசனை வார்த்தையில் நெருப்பு மனம் உருளுவது புரியவே புரியாது. அன்பிற்கும், வம்பிற்கும் பேதமறியா மனிதர்கள் பிறள் துன்பம் கண்டு மகிழ்வர்.குடும்ப விவகாரங்களைக் கண்டவர் முன் பேசுதல் இல்லத்தினுள் சூறாவளியை ஏற்படுத்தி விடும். மனம் செம்மையானால் வார்த்தைகளில் நறுமணம் கமழும். பிறர் உறவுகளை வளர்க்க இவை உதவும்:
உலகில் நாம் நம்பமுடியாதபடியான நஞ்சனைய நபர்கள் உலாவந்து கொண்டிருக்கின்றனர். எதற்கும், மனிதர் ஜாக்கிரதையுணர்வுடன் செயல்படவேண்டியுள்ளது. குடும்ப உறவுகள், நண்பர்களைப் பிரித்துவிடுவதில் இவர்களுக்கு அலாதி பிரியம்.
- 137

Page 71
பருத்திபூர் (40. ஆயிரவநாதர்
தற்போது சிலர் செய்யும் மிகக் கேவலமான செயல்பற்றி நீங்கள் அறியவேண்டாமா? இத்தகையோர், யாராவது ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுவர்கள் “என்னசெளக்கியமாக இருக்கின்றீகளா? எனக்கரிசனமாகக் கேட்பதுடன் ஊரில் என்ன விசேடம் ஏதாவது புதினம், கிதினம் இருக்கின்றதா எனக் கேட்டு வைப்பார்கள்.
அவருடன் பேசும் அப்பாவி நபர், எதுவித வஞ்சக உணர்வின்றி யாரைப் பற்றியாவது சொல்லிவிடுவர். சிலசமயம் தமக்கு வேண்டாதவர் பற்றியும் சொல்லி பெரிய விமர்சனமும் செய்துவிடுவார். தமது நெருங்கிய உறவினர், நண்பர்கள் பற்றியும் ஏன் சிலசமயம் தமது மனைவி, மக்களின் குறை நிறைகளையும் உளறித்தள்ளி விடுவார். கோபம் மிகையாக வரும்போதே, கேலி கிண்டல் பேச்சுக் களைத் தற்செயலாகச் சொல்லும் போது பலர் தம்மை மறந்துவிடுவதுமுண்டு.
ஆனால் நடப்பது என்ன? நான் ஏற்கனவே
குறிப்பிட்ட சில நபர்களோ சற்றும் எதிர்பாராத முறையில்
நயவஞ்சகமாக அவர் தொலைபேசியில் பேசியதை அப்படியே குரல் பதிவு செய்து விடுவார். அதுமட்டுமின்றி தனது செயல்பற்றி மூச்சுவிடமாட்டார்.
தகுந்த சந்தர்ப்பம் வரும்போது, அவர் பேசியதை அப்படியே பிறருக்கு வெளிப்படுத்திவிடுவார். நவீன தொழில் நுட்ப முறைகள் அடுத்தவனைக் கெடுப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்டதல்ல.
- 138 -
 

அகஒல?
கணவன், மனைவியைக் கோப மிகுதியால்
பேசியதையும் பதிலுக்கு மனைவி கணவனைத் திருப்பி
தனது நியாயங்களை, சற்று வன்மையாக வெளிப்
படுத்துவதைப் பார்த்து ரசிக்க எத்தனையோ ஜீவன்கள் காவல் காத்துக் கிடக்கின்றன.
தங்கள் வீட்டு விஷயங்களை மறைத்து அடுத்தவன் வீட்டில் ஏதாவது சங்கதி நடக்கின்றதா என அறிவதில் அதீத ஆசைகள் சிலருக்கு உண்டு மனஸ்தாபப்பட்டுகுடும்பங்கள் பிரிவதால், இவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கப் போகின்றது?
இரண்டு பெண்கள் தெருவில் வாக்கு வாதப்பட்டுக் கொண்டார்கள். இவர்கள் இருவருமே தாம் முன்பு ஒற்றுமையாக இருந்த காலத்தில் பேசியதைப் பகிரங்க மாகச்சொல்லிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல இரு வருமே தத்தமது கணவர்மார் பற்றித் தமக்குள் பரிமாறிக் கொண்ட விஷயங்களை எவ்வித வஜ்ஜையுமின்றிச் சொல்லிக்கொண்டார்கள்.
இதனால், இவர்கள் வாயில் சிக்கிக்கொண்ட அப்பாவி மனிதர்கள் எதுவித சம்பந்தமின்றி மோதிக் கொள்ளும் நிலையை இவர்கள் தமது கோபமிகுதியால் உருவாக்கிக் கொண்டனர்.
தமது மனைவியர் தங்களைப் பற்றிய கருத்து க்களை தமக்கிடையே பகிர்ந்து சொன்னதால் அவர்களின் கணவர்மாரின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
- 139.

Page 72
மருத்திபூர் (40. லுற்றுநாதர்
ஆண்களிடமும் இந்தப் பலவீனம் உண்டு. பொது வாக குடிபோதையில் இருக்கும் நபர்கள், தமது நண்பர் களிடம் ஊர்வம்பு பேசிப்பேசி பல பிரச்சினைகளை உருவா க்கிவிடுவார்கள். பொழுதுகளை வீணாகக் கரைத்தால், வீணாக வாய் அசையும். இதனால் பலரின் மனங்கள் நொந்து, நைந்து, வெந்து போய்விடும்.
மனங்களைச் செம்மையாக வைத்தால் வாய் கண்டபடி, கெட்டவார்த்தைகளைப் பேசமாட்டாது. நாம் தொடர்ந்தும் எவரிடமும் பகைமை பாராட்டி விடமுடியாது. இதையுணராமல் வீட்டிலேயே கணவன், மனைவியுடன் கண்டபடி வார்த்தையாடுதலைத் தவிர்க்கலாம் அல்லவா?
கணவனும் மனைவியும் தமக்குள் செல்லமாக கடிந்து கொள்வதும் பின்னர் சமரசமாவதும் சகஜமானதே. மேலும் எத்தருணத்திலும் திருமணமாகாத காதலர்க ளாட்டும் திருமணமான தம்பதியினராகட்டும் இவர்களது ஊடல்கள் நீண்டநேரம் தொடரக்கூடவே கூடாது. நீண்ட நேரப் பொய்க்கோபம் சிலவேளை இவர்களிடம் ஒரு வளையாத தன்மையை, தன்முனைப்பினை ஏற்படுத்
திவிடலாம்.
கேலிக்காகவேனும் மனைவியைக் கணவன், கண்ட
படி அவளின் குடும்பத்தை, உறவுகளைத் தரம் தாழ்த்திப்
பேசுதல் தகாது. அவ்வண்ணமே மனைவி தனது குடும்ப
அந்தஸ்து மேலானதாக இருப்பினும்கூட, புருஷனை
- 140

அகஒளி?
மட்டம் தட்டுமாற்போலத் தனிமையிலும், பிறர் முன்னிலை யிலும் ஏன் பிள்ளைகள் மத்தியிலும் பேசுதல் ஆகாது.
பல்லாண்டு காலம் இணைபிரியாது வாழ்ந்த தம்பதியினர்களைப் பாருங்கள். இவர்கள் தமது பராயங் களை மறந்து என்றும் புதிதான காதலர்கள் போல் சுகித்து இருப்பதைக் கண்டு அவர்கள் போல் அன்புணர்வுடன் வாழச் சித்தம் கொள்வதே உத்தமமானது.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 03-01-2010
- 141 -

Page 73
பருத்திபூர் (40. ஜலிற்றுதல்
“ஓடிப்போனவள்” பெண்கள் நிலைபற்றிய
சமூகப் பார்வை
காலம் மாறிக் கொண்டே போனாலும் காதல், பெண்கள் விடயத்தில் சமூகத்தின் பார்வை பாரபட்சமாகவேயுள்ளது. தான் விரும்பியவனுடன் ஒரு பெண் வாழச் சென்று விட்டால் அவளுக்கு “ஓடிப்போனவள்” என்ற நாமத்தைச் சூட்டி விடுகின்றனர். ஆயினும் அவனைக் கூட்டிக்கொண்டுபோன ஆண்மகனை “ஓடிப்போனவன்” என அழைக்கப்படுவதேயில்லை. எனினும் காதல் திருமணங்கள் புதிதான ஒன்றுமல்ல. பெண்களை அவமானப்படுத்துதலும் புதிதானதல்ல. மனம், மொழி, வாக்கால் பெண்களுக்கு ஊறு விளைவிக்காது இருத்தலே
studd!
ஒரு பெண் தான் விரும்பியவனுடன் வாழச் சென்று விட்டால் அவளுக்குச் சமூகத்தினர் “ஓடிப்போனவள்” எனும் நாமத்தைச் சூட்டி விடுகின்றார்கள். எனினும் அவளைக் கூட்டிச் சென்றவனை ஒருபோதும் “ஓடிப்போனவன்” என்று ஒருபோதும் சொல்லியதில்லை. சொல்லப்போவதுமில்லை.
- 142 -
 
 
 

அகஒளி ஆனால், ; :
சில சந்தர்ப்பங்களில் ஆண்களில் யாராவது தான் விரும்பியவர்களுடன் வாழச் சென்றால் நையாண்டியாகக் "கிளம்பிக் கொண்டு சென்று விட்டான்” என்று சொல்வ துண்டு. ஆண்கள் விடயத்தில் இவையெல்லாம் தற்காலிய மாகச் சொல்லப்படுபவை தான்.
பெண் என்பவள் இவர்கள் சொல்வதுபோல் தனது காதலனுடன் விழுந்து, விழுந்து ஓடிப்போவதுமில்லை. அவ்வண்ணமே, ஒரு பாறாங்கல்லை கிளப்புவதுபோல். பெண் ஒருத்தியை ஒரு சடம்போலத் தூக்கிக் கொண்டு ஓடுவதுமல்ல.
காலம் மாறிக்கொண்டே போனாலும் கூட, காதல் விடயத்தில் பெண்கள்தான் பரிகாசத்திற்குரிய பொருளாகிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆண்கள் பலரும் இது விடயத்தில், பெரிதும் கிண்டல்களுக்குட்பட்டாலும்கூட காலப்போக்கில் சமூகம் அவன் கடந்த காலக் கதைகளை மீட்டிப்பார்ப்பதேயில்லை.
ஒரு பெண் காதலித்துத் திருமணம் புரிந்து
குழந்தைகளைப் பெற்றுப்பலவருடங்கள் சென்றபின்னரும்
யாருடனாவது அல்லது உறவினர்களிடமாவது அவள் மனஸ்
தாபப்பட்டுக் கோபப்பட்டாலே போதும், உடனே அவர்கள்
“போ.போ. நீ என்ன. என்னுடன் பேசுவது, வீட்டிற்குத் - 143

Page 74
பருத்திபூர் 04). ஆயிற்றுருதர் தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்து பிள்ளை பெற்ற வள் தானே.” என்று சற்றும் மனம் கூசாமல் சொல்லி விடுகின்றார்கள்.
அதுமட்டுமல்ல,
தங்கள் சாதி, சமயத்தை விடுத்து வேறு எங்காவது காதல் மணம் புரிந்தால், ஏதுமறியாத அவர்கள் குழந்தைகள் மீது வீணான பழியைச் சொல்லிக் குரூர திருப்திப்பட்டும் கொள்கின்றார்கள். இது ஒரு சமூக அவலம்.
காதல் திருமணங்கள் இன்று மட்டுமா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது? முற்காலத்திலும் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் நிகழத்தான் போகின்றது. "காதல்"மனம், உணர்வு சார்ந்த விஷயம். வெளியில் இருந்து விமர்சனம் செய்யமுடியாது,
எனினும்,
ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையினை மனம் போனபடி அமைத்திடல் முடியாது. ஆண்களுக்கும் இக்கருத்துப் பொருந்தும். ஆண் மகன் கெட்டுப் போவதற் கான சகல உரிமைகளையும் விரும்பி வழங்கும் குடும்ப, சமூக நபர்கள் இருக்கின்றார்கள்.
பெண்களின் நிலை யதார்த்தத்தில் அவளுக்கான உரிமைகளை இந்தச் சமூகம் மட்டுமல்ல, அவள் பிறந்த
- 144
 
 
 
 
 
 
 
 

அகலுளி வீட்டிலும் பூரணமாகக் கிடைக்கின்றதா என நோக்க வேண்டும்.
ஒரு பெண்ணின் காதல் ஒரு தடவை முறிந்தாலே அதுபற்றியே பேசித் தீர்க்கப் பலரும் பிரியப்படுகின்றார்கள். ஆண் மகனுக்கு அதுவே வீரம் என்றும் சொல்லுபவர்கள் உண்டு. பல பெண்களுடன் கூடிக் குலாவுபவர்களைப் பார்த்து அவர்களது நண்பர் "அவனுக்கென்ன, அதிஷ்டக் காரன், நினைத்தவுடன், நினைத்த பெண்களுடன் சுற்றுகின் றான்” எனச் சற்றுப் பொறாமையுடன் அவனது செயலை மெச்சியும் பேசுவார்கள். இதுபோதாதா ஒருவன் தொடர்ந்து கெட்டலைவதற்கு? இதில் பெருமை வேறு!
பெண்ணுடன் கூடிப் பிறந்தவர்களுக்கும் பெண் ணாகப் பிறந்தவர்களுக்கும் கூட பெண்ணின் பெருமை புரிவதில்லை. "அவனுக்கென்ன அவன் ஆண் பிள்ளை, நீதான் கவனமாக, இருக்கவேண்டும்" என்று தாய்மார்களே தங்கள் மகளுக்குப் புத்திமதிகள் சொல்வார்கள். தமது ஆண்மகனின் சேஷ்டைகளைத் தாய்மார்களே அங்கீ கரிப்பதுபோல இவர்கள் பேச்சும் இருக்கும்.
என்ன இது அநியாயம்! ஆனால் தாய் ஒருத்தி இப்படிச் சொல்வதுகூட இந்த உலகிற்குப் பயந்துதான் சொல்கின்றாள். உண்மையும் அதுவே தான். இப்படியான உலகில்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
- 145

Page 75
பருத்திபூர் (40. ஆயிற்றுருந்தர்
பெண்களுக்கான உரிமைகள் பற்றி பேசும்போது செய்கின்ற செயல்விடயத்தில் நாம் பொய்களை மிகத் தாராளமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தாங்கள் பெற்ற மகளுக்கு அவளுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதைப் பல பெற்றோர்களும், கூடப் பிறந்த சகோதரர்கள், சகோதரிகளுமே உணரத்தயாரில்லை.
பெண்கள் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவளுக் காகப் பரிந்துபேசுகின்றோம். ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப் பத்தில் அவளுக்கு அபகீர்த்தி வருவதுபோல பேசுவதை விட்டுவிடுகின்றோமா? பொய்யான உபதேசங் களும் நடத்தைகளும் ஒரு விடியலையும் தரப்போவது மில்லை.
ஆண்களுக்காயினும் சரி பெண்களுக்காயினும் சரி விசேடமான எந்த உரிமைகளும் வழங்க வேண்டும் என்றில்லை. எல்லோரையும் சமனாக நோக்கில் மனதால், வாக்கால், உடல்ரீதியாகக் காயப்படுத்தாமல் விடுதலே மானுடதர்மமாகும். இறைவனும் இதனையே எம்மிடம் நாடுகின்றான்.
தினக்குரல் ஞாயிறு மங்சரி "இவள்” பகுதி 10-01-2010
- 146
 

அகஒளி
முதமையிலும் காதல் வாழ்வு
"காதல் வாழ்வு" என்பது இளையவர்களுக்கே தனியுடைமையானது அல்ல. திருமணமான பின்னரும் காதல் வாழ்வு தொடரவேண்டும். முதுமையிலும் தொடரும் அன்பான வாழ்வுதான் சாஸ்வதமானது. இளமைக்கால கவர்ச்சி, யௌவனம்,துடிதுடிப்புகளால் தோன்றிய காதல் முதுமையில் முடங்கிப் போனால் அது உண்மையான காதலே அல்ல மனதிற்கு வயது ஏது? எந்த வயதிலும் உற்சாகமாக வாழ முதுமையிலும் கணவன், மனைவி உறவு நிறைவாக அமைதலே சிறப்பு. உண்மைக் காதல் வாழ்வுக்கு வயது, வரம்பு ஏது? முதுமையிலும் நதிநீராய் பெருக்கெடுத்துப் பிரவாகமாய் ஓடும்.
காதல் வாழ்க்கை என்பது இளையவர்களுக்கே தனியுடமையானது என்றே பலரும் எண்ணிக் கொண்டிரு க்கின்றனர்.இதற்கு ஏற்றால் போல திரைப்படங்களில் உண்மைக் காதலுக்கு பொருத்தமான வடிவம் கொடுக்க ப்படுவதில்லை.
காதல் என்றால் யதார்த்தத்திற்கு ஒவ்வாத காட்சி களையே படம் போட்டுக் காட்டுகின்றார்கள். தேவையின்றி
- 147

Page 76
மருத்திபூர் (40. வயிற்றுரீதர் வீதிகளில், மலைமுகட்டில், பள்ளங்களில் ஒடுவதும், பூங்காவில் பலர் முன்னிலையில் கட்டி உருளுவ துமாக, விரசமாகவே காதல் உணர்வுகள் சித்தரிக்கப்படுகின்றது.
காதல் வாழ்வின் ஆதாரமான குடும்ப உறவுகளை தெளிவாகச் சொல்லத் தெரியாமல் வெறும் ஜனரகத் தன்மையுடன் காசு தேடல் தான் தங்கள் மேலான பணி என படாதிபதிகள் எண்ணிச் செயல்படுகின்றனர்.
குடும்ப உறவுக்குக் காரணமான முதியவர்களின் காதல் வாழ்வின் மகத்துவத்தை நாம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை போல் தெரிகின்றது. சொல்லப் போனால் இளமையில் நாம் அனுபவிக்கும் காதல் வாழ்வைவிட கடிதென மாறுகின்ற கால ஓட்டத்தில் வயது முதிர்ந்தபின் கணவன், மனைவியிடம் உள்ள இறுக்கமான அன்பின் காரணமாக ஒருவர் மீது ஒருவர் காட்டும் அந்நியோன்ய மான பரிவு, கரிசனைகளே போற்றுதற்குரியதாகும்.
கரும்பின் நுனிப்பகுதி உவர்ப்பாக இருக்கும். நாம் அதனை நுனிப்பகுதியிலிருந்து அடிப்பகுதி வரை சுவைத்துப்பார்க்கும் போது படிப்படியாக அதன் சுவை அதிகரிப்பது தெரியும்.
நாம் கரும்பை அடிப்பகுதியில் இருந்து அதன் நுனிப்பகுதி நோக்கிச் சுவைக்க ஆரம்பித்தால், ஆரம்பம் சுவையாகப் போகப் போக முடிவில் நுனிப்பகுதி சுவையற் றுப்போகும்.
- 148
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகஒளி
இதேபோல் நாம் ஆரம்ப கட்டத்தில் அடிக் கரும்
பைச் சுவைத்துக்கொண்டு நுனிக்கரும்பை நோக்கிச்
சுவைப்பதுபோல வாழ்க்கையை அனுபவிக்கத் தலைப்பட
லாகாது. இதை எமக்கு உணர்த்தவே "பட்டினத்தார்” கரும்பைத் தனது கரத்தில் கொண்டு காட்சியளித்தார்.
இளவயதில் மிகவும் ஆடம்பரமாக வாழ்வதும், பின்னர் முதுமையில் தேடிவந்த கைப் பொருட்களைச் சேமிக்காது, துன்பப்படுதல் மடமையானதல்லவா? மேலும் இளவயதில் காதலித்துமணம் புரிந்த தம்பதியினர், மிகவும் அந்நியோன்யமாக வாழும்போது எதிர்காலம் குறித்துச் சற்றேனும் சிந்திக்காது மனம்போனபடி வாழ்ந்து, பின்னர் வயது ஏற ஏற பொருளாதார நெருக்கடி குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற செலவினங்களால் மனம் சோர்ந்து தம்மிடையே உள்ள காதல் அருகி முரண்பட்டு வாழ்வதுபோல் பேதமை வேறு ஏது?
ஆயினும் உண்மையான காதல் வாழ்விற்கு வயது, பொருளாதாரம் என்பது ஒரு தடையே அல்ல. இன்னமும் எழுபது எண்பது வயது தாத்தா, பாட்டிகள் கூட என்றும் புதுமணத் தம்பதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். இது உண்மைக் காதலின் கனதியான உறுதிமிகு பிணைப்பு. விலகிடாத இறுக்கமே மூல காரணமாகும். இதைச் சிலர் வேடிக்கையாகவும் நோக்கலாம்.
காதலின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கல்யாணம் முடித்து குடும்ப - 149.

Page 77
பருத்திபூர் 04ல. ஹரிஹரர் வாழ்க்கையை ஆரம்பித்ததில் இருந்து தம்பதியினரின் அன்பு சதா காலமும் வளர்ந்த வண்ணமாய் இருக்கப் பரஸ்பரம் தம்மிடையே புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
குடும்பத்திற்கு வெளியே உள்ளவர்களின் அத்து மீறலான ஆக்கிரமிப்பான, தவறான உபதேசங்களைச் செவிமடுக்காது, குடும்ப நலனில் மேலான கவனம் செலுத்திவந்தால் கணவன், மனைவி காதல் மென்மேலும் வளர்ந்தோங்கி வரும். உறவினர், நண்பர்களின் நட்பை பேணவேண்டிய அதேசமயம், தங்கள் குடும்ப உறவினை அவை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். வெறும் உடல் உறவுமட்டும் கணவன் மனைவி உறவுகளாக அமைந்து விடுவதில்லை. அதற்கும் மேலாக எத்தனை எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
இளமைக் கால அழகு யெளவனம், துடிதுடிப்பு, கவர்ச்சி மட்டும் காதல் வாழ்வுக்கு முதன்மையானது, இதற்குமேல் இனி என்ன வேண்டிக்கிடக்கின்றது என இளம் வயதில் எண்ணுபவர்கள் பலர். முதுமை வந்ததும் தாமாகவே ஒதுங்கி, வெறும் அழகு மட்டுமே வாழ்க்கைக்கு இதம் தரும் என்று தங்கள் மனசுக்குள் ஆழமான எண்ண த்தை வைத்துக்கொண்டு கணவன், மனைவி ஒருவரை ஒருவர் நோக்கினால் எப்படி பழைய கால இனிமையை மீண்டும் கொண்டுவர முடியும்?
- 150 -
 

2.96f
மனம் சோர்ந்தால் எல்லாமே சோர்ந்துவிடும்.
உடல் சோர்ந்துவிடும் நல்ல இனிமையான உணர்வுகள்,
சிரிப்பு, புன்முறுவல், தேஜஸ் எல்லாமே மெல்லென அகன்று போக எவரும் அனுமதித்தலாகாது.
மனதிற்கு ஏதுவயது?எந்த வயதிலும் உற்சாகமாக வாழ சந்தோஷமான எண்ணங்கள் வலுப்பட்டால் இளமை விலகாது. புரிந்து கொள்ளுங்கள்! மேலைநாடுகளில் காதல் வாழ்விற்கு வயது ஒரு தடைக்கல்லாக அவர்கள் கருதுவதே யில்லை. நாம் அவர்கள் பற்றி இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவேயில்லை.
மேல் நாடுகளில் உள்ள நகர வாசிகளை விடுத்துச் சுற்றுப் புற நகர், கிராமத்து சூழலில் வாழும் அங்குள்ள மக்களில் பலர் இன்னமும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
தங்கள் பேரன், பேத்திகளுடன் மிக உல்லாசமா கவே வாழ்கின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கலாசாரம் எமக்கு மட்டுமானதுமல்ல. அங்கேயும் இவ்விதமாக மிக அன்னியோன்யமாக வாழும் தம்பதியினர் இருக்கிறார்கள்.
தேக ஆரோக்கியம், உழைப்பு விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதாலேயே மேலைநாட்டினர் அழகாக, திடமாக வாழ்வதுடன் வயது போனால் முடங்கி ஒடுங்கி வாழ்ந்தேயாக வேண்டுமெனக் கருதுவதுமில்லை.
- 151 -

Page 78
பருத்திழ் 04ல. ஹார்வரர்
பலவெளி நாடுகளில் உள்ள நிறுவனங்களில் எழுபது, எழுபத்து ஐந்து வயதுவரை கருமம் ஆற்றுகின் றனர். அங்கு ஓய்வூதிய விதிப்பிரகாரம் எழுபது வயதிற்கு மேலும் வேலை செய்கின்ற உரிமையுண்டு. எமது நாட்டில் இருந்து சென்ற எம்மவர்கள், அவர்கள் போல வேலை செய்ய தங்களால் முடியவில்லையே என அங்கலாய்ப்புடன் சொல்கின்றார்கள்.
உடல் உழைப்பு என்பது எமக்கு ஒரு பாரமாக, வேண்டப்படாத சிரமமாகக் கொண்டால் எப்படி உற்சாகம் கொப்பளிக்க முடியும்?
வயதுசென்று உடல் சோர்ந்தால் கணவன், மனைவியை வேண்டாத பொருளாக நோக்குவதும், அதே போல் மனைவிக்கு வயதுபோய்விட்ட காரணத்தால் அவள் யெளவனம் போய்விட்டதே என்று கண்டபடி மனசை வேறு வழியில் திசை திருப்பும் ஆண் வர்க்கத்தில் ஒரு பிரிவினர் தமக்கும் பராயம் பட்டெனக் கழிந்துபோய் விட்டதை மறந்துபோய் திரிகின்றனர். இளமை,முதுமை சகலருக்கும் பொதுவானதே. ஒருவரை ஒருவர் கேலிபேசமுடியாது.
இளமைக் காலத்தில் தம்மை மறந்து காதல் மொழி பகன்று, ஈருடல் ஒருயிர் என்பவர்கள், முதுமை வந்ததும் முட்டிமோதி வாழ்வது அழகா? ஏழு எட்டுப்பிள்ளைகளைப் பெற்றபின்னரும் விவாகரத்துக் கேட்கின்ற முதியோர் வாழும் காலம் இது, கொடுமை!
- 152
 
 

அகஒளி
நாற்பது, ஐம்பது வருடகாலத் தாம்பத்திய வாழ்வு
வாழ்ந்த பின்னரும்கூட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்
ளாமல் வாழ்வது என்ன வாழ்வோ எனக் கேட்கத் தோன்று கின்றதல்லவா?
மாறா அன்பு கொண்டுவிட்டால் நாம் நேசிப்பவர்கள் எமக்கு புத்தம் புது நண்பர்களாகவே என்றும் இணைந் திருப்பார்கள். திருமண பந்தம் புனிதமானது. இரு ஜீவன்களுக்கிடையேயும் அவர்களது எதிர்கால சந்ததிக்குமான பிணைப்பு. காதல் என்றுமே சிரஞ்சீவித் தன்மையுடன் கூடியதேயாம். இந்த உணர்வுகளுக்கு ஏது வயது? ஆண்டுகளால் அளவிடமுடியாத காதல் வாழ்வு முதுமையிலும் தளர்வுறாது, வளர்ந்துவிடும்.
தினக்குரல் ஞாயிறுமஞ்சரி "இவள்” பகுதி 06-06-2010
- 153

Page 79


Page 80


Page 81
வாழ்வுக்கு ஒளியூட்டும் பொழிவூட்டும் நூல் த்தேவை. இத்தகைய நூல்கள் வாழ்வில் ந ணர்வை ஏற்படுத்துகின்றன. நல் வாழ்வுக்கு கின்றன. அவ்வப்போது வாழ்வியலில் ஏற்
: ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
மனப்பாங்கை நீக்குகின்றன. இத்தகைய b ஓரிடத்தில் ஏற்றிை
జట్స్భ
ஒளி கொடுக்க வ
(86ზGზu] தளராத
பால, வயிரவநாதன் அவர்கள். சமகால
பால, வயிரவநாத வி வகித்தவர். அவ்வை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SBN 978 955 O469-14-7
|
9 5 5 0 til 4 6 9 1