கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:சுயபச்சாதாபம்

Page 1
靈
 


Page 2

சுயச்சாதாபம்
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வின் வசந்தங்கள் - பாகம் 75 சிந்தனைக் கட்டுரைகள்

Page 3
நூல் தலைப்பு :
ஆசிரியர் :
மொழி :
பதிப்பு ஆண்டு :
பதிப்பு விபரம் :
உரிமை :
தாளின் தன்மை :
நூலின் அளவு:
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
கணனி வடிவமைப்பு:
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை
நூல் விபரம்
சுயபச்சாதாபம்
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 15
பருத்தியூர் பால. வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க் கிரெளன் சைஸ் (125x18.5 செ.மீ)
13
136
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
பெர்பெக்ட்
வானவில் வெளியீட்டகம்
250/=
ISBN: 978-955-0469-16-1

அரிைந்துரை
மக்களுக்கு இன்றியமையாத நீதிகளை எளிமையாக மொழிநடையில் சமூகத்தின் சகலதரப்பையும் சேர்ந்தவர்களும் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்திலும் அதே வேளை மனதில் அழுத்திப் பதிய வைக்கும் வகையிலும் வாழ்வியல் வசந்தங்கள் என்ற இந்த நூல் தொகுப்புக்களை தவழவிட்டிருக்கின்றார் பருத்தியூர் பால, வயிரவநாதன்.
தினக்குரல்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்த "வாழ்வியல் வசந்தங்கள்” வாசகர்களுக்கு வருகின்றன.
வெட்கம், சாந்தி, பிராயச்சித்தம், ஆசை, சுயபச்சா தாபம், ஜீவகாருண்யம், பிரிவு, அனுபவங்கள் என்ற கருப் பொருட்கள் பலவற்றை உள்ளடங்கலாகக்கொண்ட"வாழ்வியல் வசந்தங்கள்”15ம்பாகத்தின் "சுயபச்சாதாபம்” வசந்தங்கள் அறநெறிக் கருத்துக்களை சமகாலத்துக்கு ஏற்புடைய வகையில் கூறுபவையாகக் காணப்படுவதுடன் வாசகர்களை இலகுவாக சிந்திக்க வைப்பதாகவும் அமைந்துள்ளது.
வெட்கம் என்ற தலைப்பில் உண்மையில் மனிதர்கள்
எதற்கு வெட்கமடைய வேண்டும், எதற்குத் தேவையில்லை
என்பதை பல்வேறு முன்னுதாரணங்களுடன் நூலாசிரியர்
விளக்கியிருக்கிறார். வெட்கம் என்றஉணர்வை சரியாகப் புரிந்து
-3-

Page 4
கொண்டால் வாழ்வை செம்மைப்படுத்தமுடியும் என்ற கருத்தை முன் வைக்கும் பால,வயிரவநாதன், மானிட வாழ்வின் நிலையாமைக்கு சடுதியாக இட்டுச் சென்று சாந்தி பற்றிக் கூறுகிறார். உண்மைப்பொருளை, உள்ளப்பொருளை ஆன்மா உணர்ந்து கொள்வதே சாந்தியென அவர் குறிப்பிடுகிறார்.
ஆசைதான் நாசத்துக்குக் காரணம் என்று மெய் ஞானிகள் கூறுவர்.ஆனால், ஆசைப்படுவது இலெளகீக வாழ்வில் தப்பல்லளன்றுகூறும்பால, வயிரவநாதன், அதேசமயம் பேராசை பெரும் கேடு என்பதையும் அழுத்தியுரைத்துள்ளார்.
தமிழ்ப் புலவர்களின் நன்னெறிகள் இலகு மொழி நடையில் பால, வயிரவநாதனால் சமகாலத்துக்கு ஏற்புடை யதாக எழுதப்பட்டுள்ளன. இந்த நூல் இளந்தலைமுறைக்கு பிரயோசனமானது என்பது எமது கருத்தாகும்.
இன்சொல்லால் கருத்தாழம் நிறைந்த "வாழ்வியல் வசந்தங்கள் முன்னுதாரணமான முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. -
வீ. தனபாலசிங்கம் a பிரதம ஆசிரியர் தினக்குரல்
 

பருத்தியூர் பால, வயிரவநாதன் 臀 ஓர் நல்ல மனிதநேயம் மிக்க எழுத்தாளன்
ஓர் இனத்தின் உயிர் துடிப்பும், உயர்ந்த வாழ்வும் இலக்கியத்தால் வளம்படுகின்றன. சென்ற காலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணத்தையும், இன்று வாழ்கின்ற மக்களின் எண்ணத்தையும் ஒன்றுபடுத்தி உயிர் கொடுக்கின்ற சிறப்பு இலக்கியத்துக்குத்தான் உண்டு. உள்ளத்தில் பதிந்து உருப் படுத்தும் இலக்கியத்தாலேதான்மக்களின் வாழ்வுமலர்கின்றது. இலக்கியத்தைப் படைக்கின்ற எழுத்தாளனின் உணர்ச்சியிலே ஊற்றெடுக்கின்ற எண்ணங்கள்,வாழுகின்றமக்களின் எண்ணங் களுடன் கலந்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன.
மேலும் பருத்தியூர் பால. வயிரவநாதனைசிறு வயதிலி ருந்தே எனக்கு நன்கு தெரியும். இவர் கல்விமான்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், சட்டத்தரணிகளை யும், நீதிபதிகளையும் வாழையடி வாழையாக ஈன்றெடுத்த புலோலியிலே பிறந்தவர். இந்து சமய கலாசாரத் திணைக் களத்தில் நிர்வாக அலுவலர் / பதவி நிலை உதவியாளராக மகத்தான சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்.
தமிழ் இலக்கியத்திலும்,எழுத்துத்துறையிலும் மிகவும் ஈடுபாடு கொண்டதன் காரணத்தினால் பல நூல்களை எழுதியும், பத்திரிகைகளில் வெளியிட்டும் பல மக்களிள் பாராட்டையும்,
-5-

Page 5
பெருமதிப்பையும் பெற்ற ஓர் சிறந்த எழுத்தாளன். இவரின் "வாழ்வியல் தேடல்”, “வாழ்வியல் அரங்கம்", "வாழ்வோடு நாம்” என்கின்ற கட்டுரைகள் யாவராலும் பாராட்டுப் பெற்றவை. தற்போது "வாழ்வியல் புதையல்கள்" தினசரி தினக்குரலில் தொடராக வெளிவருகின்றன.
திரு.பாலு, வயிரவநாதன் ஓர் நூல் ஆசிரியர் மட்டுமல்லர். லேக்ஹவுஸ், டைம்ஸ் நிறுவனம், ஈழநாடு போன்ற பத்திரிகை நிறுவனங்களின் செய்தி நிருபராகவும் கடமையாற்றியவர். தழிழ் சாகித்தியக் குழுவின்செயலாளராகவும் பணிபுரிந்தவர்.
கலாசார அமைச்சினால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாகத் தமிழ் பாடல்ப் பிரிவிலும், சிறப்புப் பிரிவிலும் 2005, 2006ஆம் ஆண்டுகளில் சிறந்த இலக்கியத்திற்கான முதல் பரிசும், விருதும் பெற்றதுடன் 2006ஆம் ஆண்டின் சிறுகதையில் கொழும்பு மாவட்டவிசேட சிறப்புப் பரிசும், பாடலுக்கான சிறப்புப் பரிசும் பெற்றவர்.
மேலும் இவரின் மகத்தான பல்துறை சேவையைப் பாராட்டி 2009 ஆம் ஆண்டு “கலாபூஷணம்” விருது இவருக்கு அளிக்கப்பட்டது. திரு.பால வயிரவநாதனின் தன்னிகரில்லாத சிறப்புப் பண்பு என்னவெனில், பல்வேறு எழுத்தாளர்களையும், நூல் ஆசிரியர்களையும்,சான்றோர்களையும், அறிஞர்களையும், கல்விமான்களையும், ஊடகவியலாளர்களையும், அன்பால், தன்பால் ஈர்த்து அவர்களின் அன்புக்கும், நம்பிக்கைக்குப் பத்திரமாக விளங்குவதுதான்.
- 6 -

திரு. பால, வயிரவநாதன் ஓர் நூல் ஆசிரியராக, எழுத் தாளனாக, புத்தி ஜீவியாக, பன்முகக் கலைஞனாக, நாடக நடிகனாக, செந்தமிழ்ச் செல்வியின் செல்வனாக, எல்லா வற்றுக்கும் மேலாக நல்ல மனிதநேயம்மிக்க ஒருமானிடனாக நம் மத்தியில் சீரும், சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்.
f
மேலும், பால. வயிரவநாதன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும், வல்ல இறைவ னுக்கும் தொண்டுகள் பல புரிந்து புதியன பல படைக்கவேண்டு மென்று எனது வாழ்த்துக்களையும், அன்பினையும் கூறி, அவர் நலத்திற்கும், தொடர் சேவைக்கும் அவனருளால் அவன் தாழ் வணங்குகின்றேன்.
“கலாபூஷணம்” செல்வத்தம்பிமாணிக்கவாசகள் (சிரேஷ்டபத்திரிகையாளரும், அகில இலங்கை சமாதானநீதவானும்)

Page 6
எனது உரை
மனிதன் இயங்குவதற்கு சாந்தி நிலையை சொந்த மாக்கவேண்டும். சாந்தியற்ற வாழ்வு சோகம் தான்.
இன்மைக்கும் மறுமைக்குமான பயணத்திற்கு தூய மெளனத்துடன் துலங்கும் சாந்தி எந்நேரமும் துணை செய்ய வேண்டும்.
பிறர் மனதை சீண்டி பார்ப்பது வேடிக்கையூட்டும் விளையாட்டு அல்ல. இதனால் தேடித் துன்பங்களை தொடுக்கும் வினைதொடரும்.
கோடி கொடுத்தாலும் துன்மார்க்களுக்கு நின்மதி எனும் வெகுமதி கிடைக்காது.
பூப்போல நெஞ்சத்தை வைத்துக் கொண்டால் பிறவி தோறும் "அமைதி நிலையும் களிப்பும் களி நடனம் புரியும்.
மனம், மொழி, மெய்யினால் எக்கணமும் தகாததைச் செய்ய எண்ணுதலும் சகிக்கவொண்ணா வார்த்தையாடலும், தீயன புரிதலும் சொர்க்க வாசல் அருகே செல்லத் தடையாகி விடும்.
கெடுமதியாளர்கள் சுடுவினைகளைத் தாமே தேடும் நபர்களாவர்.
-8-

கொடுங்கூற்றுவான் தரும் நரக வேதனைகளை இப் பிறவியிலேயே எடுப்பார்கள்.
செய்த பாவத்தை உணர்ந்து தெளிந்தவர்களுக்குப் பிராயசித்தம் உண்டு என்கின்றார்கள்.
பிராயச்சித்தம் கோருவது ஒரு வியாபாரம் அல்ல. தொடர்ந்து செய்யும் அடாத செலுக்கு பிராயச்சித்தம் ஒரு அங்கீகாரம் அல்ல. கடவுளிடம் பேரம் பேசிட எண்ணுவதே அடாவடிச் செயல்!
"தானம் செய்தால் பாவம் போகும்” என எண்ணித் துஷடர்கள் செய்யும் தானங்களில் எமது அவதானம் தேவை. இவைகளைப் பெறுதலே பெரும் பாவம்.
ஜீவன்களிடம்,காருண்யம் இருந்தால் அன்பான உலகம் உண்டாக்கப்படும், மனிதன் மனிதனிடம் மட்டும் அன்பு செலுத்தினால் போதுமா?
எங்களை நம்பி வரும் எல்லாமே எங்கள் ஆன்மாவை ஒத்தது, என ஒத்துக் கொண்டால் ஜீவகாருண்யம் செய்யும் பெரும் புண்ணியம் கிட்டும். ۔۔۔۔۔۔۔۔
எல்லோரும் எம்மைப் பார்ப்பதில்லை, கரிசனை இல்லை என மனம் நொந்து கொள்ளாமல் அனைவரையும் நோக்கி நாமாக முன்செல்வோமா?
-9-

Page 7
அனுதாபம் தேடும் மனப்பான்மை வேண்டாம். சுயபச் சாதபம் ஏற்படுவதால் மனம் தளர்ந்து தள்ளாடும். பலவீன ங்களை விரும்பி உள்ளத்தில் அமுக்குவது வெட்கம்.
வெட்கம் கெட்டதனமாக வாழ்வது, நடத்தை கெட்ட குணம்.
வெட்கப்படவேண்டிய இடத்தில்வெட்கப்படவேண்டும். கூச்சம் என்பது பெண்களுக்கு நளினம். இது பெண்களுக்கே உரிய அழகின் வெளிச்சம்.
வாழ்வைச் சுவைக்க எத்தனை அனுபவங்களை இறைவன் தந்துள்ளான்! துன்பங்களின் அனுபவங்களால் எத்தனை வந்தாலும், தாங்கினால் அதுவே நல்ல பாடம்.
நல்லவைகளைப் பெற்றுக்கொள்ளவும், பொல்லாத கஷ்டங்களையும் அனுபவிக்கவேண்டியிருக்கின்றது.
ஆனால் இவைகள் மூலம் மன வைராக்கியம், தெளிவு மனதில் பரிமளிப்பதே நல்லவரவுஅல்லவா?
வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தங்களையே கூறிவரு கின்றேன். வாழ்க்கை என்பது வெறும் கற்பனையல்ல. இதுவே நிஜமானதும் அனுபவித்த வண்ணமே இருப்பதுமாகும்.
இனி எமது வாழ்வியல் சிந்தனைகளை நல்கும் வாழ்வி யல் வசந்தங்களின் ஒரு பகுதியான "சுயபச்சாதாபம்” புத்தகத் - 10

திற்கு அணிந்துரை, மதிப்புரை நல்கிய அன்புள்ளங்கள் பற்றிக் கூறுகின்றேன்.
பத்திரிகை உலகில் தனித்துவமான மனிதர், தலை சிறந்த பத்திரிகை தினக்குரலின் பிரதம ஆசிரியர் திரு.வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் பற்றி நான் நிரம்பச் சொல்லலாம்.
தினக்குரல் பத்திரிகை குறுகிய காலத்திலேயே பல சாதனைகளைச் செய்தமையினை எவருமே மறுக்காது ஏற்றுக் கொள்வார்கள்.
இதன் வளர்ச்சிக்கு முக்கியமான காரணர். திரு.வீ.தன பாலசிங்கம் அவர்கள், ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்களிடம் மட்டுமல்ல நாட்டின் அரசியல் தலைவர்கள் சமூக நல மன்றங் களில் பெரும் செல்வாக்குள்ளவர் என்பதில் ஏது சந்தேகம்? நடுநிலை பிறழாது எழுதும் வணங்காமுடி!
தினக்குரலில் எனது கட்டுரைகளில் வாராந்த கட்டுரை களுடன் தினசரியில் வெளிவரும் "வாழ்வியல் புதையல்கள்” கட்டுரைத் தொடர்களை மனம் உவந்து வெளியீடுசெய்யும், திரு. வீ.தனபாலசிங்கம் அவர்களின் தகப்பனார் திரு. வீரகத்தி அண்ணன் அவர்கள் எனது நீண்ட கால நெருங்கிய நண்பர்.
இவர் கடந்த முப்பத்து ஐந்துவருடங்களின் முன்பு நான் அரச பணியில் இணைந்திருந்ததிலிருந்து திரு.வீரகத்தி அண்ணன் எனது நண்பராக இருப்பதுடன் என்னை என்றும் வாழ்த்தும் அன்பராகவே இருந்துவருகின்றார்.
- 11 -

Page 8
இந்த உறவு இவரது மகன்.திரு.வீதனபாலசிங்கம் அவர்களுடன் தொடர்கின்றது. இவரது அணிந்துரை என்னை பெருமைக்குள்ளாக்கின்றது.
ஆங்கில, தமிழ் ஊடகவியலாளர்களின் மூத்த ஊடக வியலாளர் கலாபூசணம் திரு.செல்வத்தம்பி மாணிக்கவாசகள் அனைவரும் தெரிந்த கலாரசிகள்.
டெய்லிமிரர்,டெய்லிநியூஸ் தினசரிகளில் ஆசிரியபிடத் தில் கடமை புரிந்தவராவர். அத்துடன் எனது ஊரவர் என்பதும் எனக்குப் பெருமை.
ஆங்கில பத்திரிகையில் கடமை புரிந்தாலும் தமிழில் நிறைய கட்டுரைகளை எழுதிவருபவர்.நடனம், நாடகம் என்பன பற்றிய விமர்சனங்கள், பெரியோர் வரலாறுகள், கோவில்கள் விழாக்கள் உட்பட பலதரப்பட்ட விடயப் பரப்பில் ஏராளமாக எழுதி வருவதனால் இவை அனைத்துமே ஒரு பதிவுப் பெட்டக மாகவே நான் கருதுகின்றேன்.
திரு.மாணிக்கவாசகர் ஐயா குடும்பத்துடன் நான் நெருங்கிய தொடர்பு உள்ளவன். இவரது மனைவியும் ஆங்கில புலமையாளர். இவர்களின் மூத்த புதல்வன் மா. கணேசராஜா யாழ்ப்பாண நீதிபதியாகக் கடமை புரிகின்றார். இவர்களின் உறவினர்களில் பலரும் சட்டத்துறை சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 12

மதிப்புரை நல்கியதிரு.செல்வத்தம்பி-மாணிக்கவாசகள் அவர்களுக்கு என்றும் நன்றிகள்
வாழ்வியல் வசந்தங்கள் நூல் தொகுப்பில் இடம்பெற்ற எனது புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து உதவிய எனது மருமக்களான ந.குமரருபன்,நராகுலரூபன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!
புத்தக ஆக்கம் என்பது முழுமையான சிரத்தையுடன் ஈடுபடவேண்டுய பணியாகும். இது விடயத்தில் எனது புத்தகங் களை வாழ்வியல் வசந்தங்கள் எனும் தலைப்பில் வெளியிட்ட திரு.எஸ்.சிவபாலன் (அதிபர் அஸ்ராபிரின்டர்ஸ்) அவர்களுக்கு எனது நன்றிகள். என்னுடன் சகல வழிகளிலும் உதவி நல்கிய நண்பர்களுக்குப் பாராட்டுதல்களும்,நன்றிகளும் உரித்தாகட்டும்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன
"மேரு இல்லம்" 36-2/1 ஈ.எஸ் பெர்னாண்டோ மாவத்தை கொழும்பு06. தொ.பே இல- 011-2361012,
071-4402303,
077 - 4318768
- 13

Page 9
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11)
பொருளடக்கம்
தலைப்பு வெட்கம்
சாந்தி பிராயச்சித்தம்
OGDör சுயச்சாதாபம் ஜீவகாருண்யம் firflo அனுபவங்கள்
கம்பீரம்
அவதானம் நிதானம் அவசியம்
உணர்ச்சி வசப்படுதல்
- 14
பக்கம்
17
29
40
52
65
77
92
106
118
123
129
 

O O 5LDLIL6OOTLD
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அன்னத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- ஆசிரியர் -
- 15

Page 10
நூலாசிரியர் பருத்தியூர் மால, வயிரவநாதன் எழுதி வெளியிட்ட"வாழ்வியல் வசந்தங்கள்"
நூர் தொகுதிகள்
鲨
1. உண்மை சாஸ்வதமானது - LITTGELÊ - 01 2. அம்மா - LITEBLò - 02
3. சுயதரிசனம் - LIT35lb - 03 4. கோழைகளாய் வாழுவதோ? - LITBL5 - 04
5. ஞானம் - LT85lb - 05 6. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்! - LIFT35lb - 06 7. சும்மா இருத்தல் - LITED - 07 8. உண்மைகள் உலருவதில்லை! பாகம் 08 9. உண்னோடு நீ பேசு! - LITEL) - 09 10. நான் நானே தான்! - Lufta5Lib - 10
11. வெறுமை - LIII 35lb - 11
12. காதலும் கடமையும் - LIT85Lð - 12 13. அக ஒளி - LITEBL) - 13 14. உன்னை நீ முந்து - LIT-5ò - 14 15. சுயபச்சாதாபம் - LIFT85lb - 15
16.மெளனம் - Lufrast b - 16. 17.மரணத்தின் பின் வாழ்வு - LIT35lb - 17 18. சிந்தனை வரிகள் - LT85 b - 18
- 16
 

மனித உணர்வுகளில் வெட்கமும் அடங்கும். மென்மையான, ரசிக்கத்தக்க வெட்க உணர்வு வெளிப்பாடும், கெளரவம் கலைந்து போனதால் ஏற்படும் துன்பமூட்டும் வெட்க உணர்வும் எனப்பல வகையுண்டு முயற்சி செய்து உழைக்காமல் பிறரிடம் கைநீட்டி உதவி கோருதல் வெட்கம் G&L Gauj6). காரணமின்றிக் கூச்சப்படுதல் கோழைத்தனம். நாகரீகத்தின் அர்த்தம் கண்டபடிவெட்கம் கெட்டு அலைவதல்ல. வெட்கம் கெட்டவனுக்கு எல்லாமே எளிது. வெட்கம் துறந்து வாழும் வாழ்வு அவலம். பிறர் பழிக்க வாழ்வது கேடு.
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், வெட்கப்படக்கூடாதவைக்கு வெட்கப்படுவதும், வெட்கப்படக் கூடிய சங்கதிகளேயாம்.
மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாக வெட்கம் என்கின்ற உணர்ச்சி தன்னை வெளிப்படுத்திக் - 17

Page 11
ucigi agro, ogjoggi கொள்ளும். வேண்டுமென்றே வெட்கப்படுவதுபோல் நடிப்பது, வேடிக்கைக்கும் ரசிப்பதற்மே ஒவ்வாத செயல்.
எனினும் இயல்பான, ரசிக்கத்தக்க வெட்க உணர்வு களின் வெளிப்பாடுகள் சுவாரஸ்யமாகவும் சந்தோஷத்தை ஊட்டுவனவாகவும் அமையும்.
சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தை ஆடையின்றி ஒடித் திரியும் போது, பெரியவர்கள் சிரித்துக் கேலி செய்யும் போது, தன் சின்னமேனியைக் குறுக்கி வளைத்து நெளிந்து மறைக்க வேண்டிய இடங்களை மறைக்கத் தெரியாது வெட்கமிகுதியில் முகத்தில் மெல்லிய குறுநகையுடன் மறைந்து ஓடி மறைய முனையும் காட்சி.
பாட்டி, தாத்தா தங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளை களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, தாத்தாபாட்டியைப் பலருக்கு முன் தங்கள் கடந்த காலத் திருமண சமாச்சாரங் களை, ஊடல்களை சொல்லிச் சிரிக்கும் போது, அந்த நேரத்தில் பாட்டி முகத்தில் காணும், மகிழ்வுடன் கூடிய சங்கோஜம் அப்பப்பா. எவ்வளவு ரசனைக்குரிய காட்சி தெரியுமா?
புது மனைவியின் வளைக்கரத்தை முதல் தடவை யாக வாழ்க்கையில் அவளை மட்டுமே ஸ்பரிக்கின்ற மணமகன் தொட்டு நுகர்கின்றபோது, அவளும் ஒரு ஆண்மகனின் தொடுகையை அன்றுதான் கண்டு கொண்ட
அந்த வினாடிப்பொழுதில் சிலிர்புடன் ஏற்படும் நாணம் - 18

சுயச்சாதாபர் சொல்லி முடியாத சந்தோஷரசனை ஐயா! இங்கு அவளது வதனம் மட்டுமல்ல, அவள் மேனியடங்கலுமே வெட்க த்தின் சிவப்புச்சாயம் உடல் எங்கும் தோய்ந்து பாயும் அன்றோ!
வெட்க உணர்வுகளை வெறும் வார்த்தைகள் கொண்டு, கோர்த்துச் சொல்லிட முடியாது. திரைப்படங்க ளில் வில்லன்களும், விலைமகள்களும் வெட்கப்படுவதாகக் காட்டுவார்கள். போலி வெட்கத்தை நம்பி பலர் மோசம் போவதுமுண்டு. தீயவர்கள் கூட மிகவும் பவ்யமாக வெட்கப்பட்டுக் குழைந்து நடிப்பதுமுண்டு. ஒருவன் சுய கெளரவம் குலையும் போது வெட்கப்படுகின்றான். படித்துவிட்டு வீட்டுக்குப் பாரமாக இருப்பது வெட்கம் என்கின்றார்கள். உழைக்காமல் வீட்டுக்கும் நாட்டிற்கும் பாரமாக இருப்பது மேலான வெட்கமேயாகும்.
எவ்வளவோ தொழில் இருந்தும் செய்யத்தெரியாமல் உணவிற்கு வழி இல்லை, பணம் இல்லை எனச் சொல்லித் திரியலாமோ? கூச்ச உணர்வேயின்றிக் கைநீட்டி வாழ்கின்ற கோழைகளை என்ன என்று அழைப்பது? தம்மைச் சுற்றி எல்லோருமே பம்பரமாய்ச் சுற்றி உழைக்க நான் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றேன் என ஒருகணம் எண்ணினால் என்ன? உழைப்பு இன்றேல் அச்சம் தானாய் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்போது பிறர் வந்து நகைக்கின்றபோது வெட்கமாக இருக்கின்றதே எனப் புலம்புவது சுத்த கோழைத்தனம அல்லவா?
- 19 س

Page 12
நியாயமான காரணம் இன்றிக் கூச்சப்படுவது கூட வீரமற்ற பயந்த வாழ்வை வலிந்து இழுப்பது போலாகும் புதுமையை விரும்பும் மாந்தர் தம் வழியில் சென்று கொண்டேயிருப்பர். ஆயினும், பிறர் கேலி செய்யும் வண்ணம் இவர்கள் நடந்து கொள்வது விவேகமாகாது. இன்று எவ்வித கூச்சமின்றிப் பண்பாடு மறந்து, உடை களைந்துதம்மேனி இழந்தநிலையில் நடமாடும் பெண்கள், ஆண்களை என்ன என்று அழைப்பது? என்ன தான் ஒருவன் எவ்வளவு படித்து பெரும் ப்தவி வகித்துப்பணம் செல்வம் தேடினாலும் பண்பாடு இழந்து வாழ்ந்தால் குணம்கெட்ட வெட்கக்கேடுதான்.
நாகரீகத்தின் அர்த்தம் வெட்கத்தினைத் துறப்பது அல்ல. மேலான புதுமைக் கொண்டு வாழும் அதே சமயம் அறவாழ்விற்கான பாதையில் நெறிபிறழாதுவாழ்வதுமாகும்.
கலாசாரத்தைச் சீரழித்தால் உலகம் கண் விழிக்காது. இன்று மிகவும் வெட்கக் கேடான ஒரு விடயத்தி னைச் சொல்லியேயாக வேண்டும். பெண்களே வெட்கப் படும் வண்ணம் பெண்களில் சிலர் உடை உடுத்தியும், உடுக்காமலும், திரைப்படங்களில், ஊடகங்களில், விளம்பரங்களில் காட்சிப்பொருளாகித்தோற்றங் காட்டித் தலைகுனிவை ஏற்படுத்துகின்றமையாகும்.
பெரும்பாலும் ஆண்களின் ஆடை அலங்காரம், அவர்கள் முழு உடலை மூடிக்காட்டிநிற்கின்றது. கை, கால் - 20
 

சுயச்சாதாபர்
போன்ற அவயங்கள் மூடப்பட்ட உடைகளையே உடுத்து கின்றார்கள். பொது இடங்களில் பெரும்பாலும் ஆண்கள், தங்கள் மேலாடைகள் விலத்தி தமது கால்கள் தெரிய நடந்து திரிவதில்லை. மேலும் கழுத்துப்பட்டியை அணிந்தும், மேல் சட்டைக்கு மேல் கோட்போட்டுப் பொது வைபவங்களில் ஆண்கள் கலந்துகொள்வதையே காண்கின்றோம். தேசிய உடை உடுத்துவோர் தூய வெண்ணிற வேஷ்டி, மேலாடைகளை பூரணமாக மூடியபடி அணிந்தே வெளியே செல்கின்றார்கள்.
ஆனால் நாகரீகம் என்கின்ற போர்வையில் தலை விரித்து, உடைகளைக் குறைத்து, கை, கால் முழுமை யாகத் தெரிய உடுத்து, நடமாடுவது என்ன சுதந்திரம் ஐயா? தங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளாத சுதந்திர உணர்வு"சுதந்திரம்” என்கின்ற சொல்லிற்கே இழுக்கான தாகும். எனவே, பெண்களைக் கொச்சைப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் அனைத்துத் தரப்பினரும் வன்மை யாகக் கண்டிக்க வேண்டும். வெட்கம் கெட்டதனமாக நடந்து கொண்டு அதற்குநாகரீகம் என்று சொல்வதையும், பெண்க ளுக்கான உரிமை எனக் கூறலாமா? அது சுதந்திரம் என்றால் அது அப்படித்தான் எனக்கொள்வதை எவரும் அனுமதிக்கப் போவதுமில்லை.
இப்படியே போனால் தகாத கலாசார அழிவுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கெதிராகப் பாரிய போராட்டங் 'களைப் பெண்கள் தலைமையில் அனைவரும் ஒருமித்துத் -21 -

Page 13
பருத்திழ் பல. அரக்
தினசரி போராட்டம் நடாத்த வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மிகவும் வெட்கம் கெட்டத னமாகப் பெண்களை இம்சிக்கும் சில ஆண்களை, சில கணவன்மாரை குடும்ப உறுப்பினர் எவரையாயினும் அவர்களை சமூகத்தின் முன் கொணர்ந்து சட்டபூர்வமாகத் தண்டனை வழங்கியேயாக வேண்டும். தண்டனை வழங்காவிடின் இம்சைகள் தொடரும்.
திருமண வீடு ஒன்றிற்குச் செல்லும் பலர் இந்தக் காட்சியை மிக உன்னிப்பாக அவதானித்தால் தெரிந்து கொள்வார்கள். சீதனம் அதிகமாகக் கொடுத்த மத்திய தரக் குடும்பத் திருமண வைபவங்களிலேயே இந்த அனுபவ பூர்வமான மன உணர்வுகளை, உளைச்சல்களைக் காண முடியும். மிகவும் கொடூரமான முறையில் பெண்ணைப் பெற்றவர்களிடம் வலுக்கட்டாயமாகச் சீதனம் என்கின்ற பெயரில் பணம், நகை, வீடு வாசல் என்று அனைத்தையும் பிடுங்கிக் கொண்ட மாப்பிள்ளை வீட்டார், எந்தவித கூச்ச மும் இன்றி, மிகவும் கலகலப்பாக உற்சாகமாக திருமண வீட்டில் ஓடி ஆடிக்குதூகலமாக இருப்பார்கள். ஒரு அப்பாவி மனிதரிடம் கண்டபடி காசு பிடுங்கிய குற்ற உணர்வு எதுவுமின்றிக் கர்வமுடன் அதிகார தோரணையில் வேறு இருப்பார்கள். ஆணைப் பெற்றால், ஆதிக்கம் தேவையோ?
சில குடும்பங்களில் பெண் வீட்டார் சீதனமாகத் தரும்
வீடு, பணம், நகையுடன் பிள்ளையின் தாய், தகப்பனாருக்கு
"இனாம்” என்ற பெயரில் பெரும் தொகையினை அறவிட்டுக் -22

„hulstuð கொள்ளும் கொடுமையை என்ன என்று உரைப்பதோ? எல்லாச் சொத்தையும் மகளுக்காகத் தியாகம் செய்து இருக்கின்ற மற்றப்பிள்ளைகள் பற்றியும் அவர்களின் எதிர் காலத்தையும் நினைந்தால் தங்கள் செல்லமகளின் திருமணத்தில் கூட பூரண சந்தோஷமாக எப்படி நடித்துக் காட்ட முடியும்? சொல்லுங்கள்! இந்த தாய், தகப்பனார் களின் இதயத்தில் ஓர் மூலையின் எதிர்காலம் பற்றிய ஒரு ஏக்கம் தோன்றமாட்டாதா?
எனவே இருசாராரும் சந்தோஷமாக நடக்கும் திருமண வைபவம் தான் உளமாரத் திருப்தியானதாக இருக்குமன்றோ துரதிருஷ்டமாக இன்னமும் எமது சனங்கள் இதுபற்றி, இந்தச் சீதனம் வலுக்கட்டாயமாகப் பெறுவது பற்றிவெட்கப்படுவதாக இல்லை. இருக்கின்றவன் கொடுக்கலாம் இல்லாதவன் என்ன செய்யலாம்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிந்திப்பதாக இன்னமும் தெரிய வில்லை.
இன்று உலகின் பெரும்பாலான அரசியல்வாதி களைப் பாருங்கள். மக்கள் முன் வாக்குறுதிகளை அள்ளி, அள்ளி வீசுவார்கள். மக்களும் நம்பி இவர்களுக்கே வாக்களித்து அரசியல் அரியணையில் இவர்களை ஏற்றுவார் கள். ஆனால் ஆட்சிபீடம் ஏறியதும் தங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். இது பற்றி அவர்கள் எந்தவித கூச்சமும் அடைவதில்லை. மாறாக தொடர்ந்தும் அகம்பாவத்துடன் நடப்பது மட்டுமல்ல
-23

Page 14
பகுத்திபூர்வலனுயிர்மருந்தர்
தங்கள் நல்ல திட்டங்களை நிறைவேற்ற எதிர் தரப்பினர் முட்டுக்கட்டை போட்டதாகக்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி
விடுவார்கள். அரசியல் வாதிகள் அடிக்கடி கட்சி மாறுவார் கள். ஆனால் இதன்பொருட்டு மக்கள் தங்களுக்கு வாக்கு
அளிக்காதுவிட்டால் அவர்களைப்படுபிற்போக்குவாதிகள்
என்று திட்டிச் சமயம் வரும்போது பழிதீர்த்தும் கொள் வார்கள்.
சொன்ன வார்த்தையைக் காட்பாற்றாதே! கூடுவிட்டுக்
கூடு மாறிவிடு என்று மக்கள் சொன்னார்களா? உங்களை நம்பித்தானே மக்கள் தங்கள் விருப்புரிமையான வாக்கு களை அளித்தார்கள்?
மக்களை நேசிக்கும் மக்களே நாட்டிற்கு அதிதேவை
யானவர்கள். தவறுகளைத் தெரிந்தே செய்பவர்கள் கூச்சப் படுவது கிடையாது. மனச்சாட்சியுள்ள நல்லவர்கள் சின்னப் பிழைகளைச் செய்தாலும் உள்ளத்தால் வெதும்பிக்,
கூச்சப்பட்டு மன்னிப்புக் கேட்டு நிற்பர். வாய்பிசகியவனுக்கு
வாய்ச்சவடால் அதிகம்.
இன்று கள்ளச் சந்தைக்காரர்கள் பதுக்கல் பேர்வழி கள், அநியாய வட்டிகளை அறவிடுபவர்கள் எவ்வித வெட்க உணர்வின்றித் தைரியமாக மக்கள் முன் நுழைந்து உயர் கெளரவங்களைத் தாமாக எப்படியோ பெற்றுவிடுகின்றனர். திருடர்களைத் தூக்கிவைத்தல் சமூகத் தவறுகளே!
-24

சுயசோதாuர். காசுக்காரர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல. எனவே இவர்களின் திருக்கூத்துகளை நாம் பேசினால் வீணான பொல்லாப்பினை வருந்தி வாங்க வேண்டும் என மக்கள் அஞ்சுகின்றார்கள். இத்தகையவர்களிடம் ஏதோ ஒரு சந்தர்ப் பத்தில் மக்கள் செல்வதனால், அதனை ஒரு சாக்காகக் கொண்டே சட்டவிரோதிகள் எந்த வித கட்டுப்பாடுமின்றி நடந்து திரிவது உலகம்ே வெட்கப்படக் கூடிய சங்கதியே தான். இவர்களுக்கு உலகம், உருட்டப்படும் பந்தா?
சமூக சேவையாளர்கள் எல்லோருமே சுதந்திரமாகச் சேவை செய்ய அனுமதிக்கப்படல் வேண்டும். அரசாங்கம் என்ன நல்ல, நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த இடையூறு செய்யும் சட்ட விரோதிகளின் செயல்களைக் கண்டறிந்து உரியதண்டனை யளிக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் குற்றஉணர்வின்றி வாழ்வதுகூட வெட்கமான செயல் என்பதை இவர்கள் புரியா தவரை உலகிற்கு இத்தகையவர்களால் இன்னல்கள் தொடுக்கப்பட்டேயிருக்கும். உணர்க!
இன்று யாராவது தவறு செய்துவிட்டால் அதை எவராவது தட்டிக் கேட்டால் தவறு செய்தவர்கள் சொல்லும் பதில் பொதுவாக இப்படியாகவே இருக்கின்றது. "நான் என்ன புதிதாகச் செய்துவிட்டேன். யார் என்ன செய்யாமல் இருக்கின்றார்கள். அதோ அவனைப்பார், இவனைப்பார், இவர்களை என்ன மாதிரி முன்னுக்கு வந்தார்கள். நாங்கள் மட்டும் ஏதாவது பிழை செய்தால் பெரிதாகப்பேச வந்து
**ー * -25

Page 15
பருத்திழ் 30.அற்வரர் |- விட்டீர்களே. முன்னுக்கு வந்த எல்லா தப்பானவர்களிடம் போய் கேட்க உங்களுக்குத் துணிச்சல் இருக்கின்றதா? என எதிர்க்கேள்விகேட்டு மடங்குகின்றார்கள்.
தப்பான செயலுக்குச் சப்புக்கட்டுப்பேசும் எத்தர்கள் எதைத்தான் பேசமாட்டார்கள். எல்லோருமே ஒருமித்த நிலையில் தவறுகள்,குற்றங்கள் செய்யாதுவிட்டால் இந்த உலகு உய்வடையும் என்பதை இன்னமும் ஏன் உணரா மல் இருக்கின்றார்கள்.
எத்தர்கள், தர்க்கத்திலும் வித்தகர்கள்.
ஒருவன் செய்கின்ற நல்ல செயல்களை ஆதார மாகக் கொண்டு ஒழுகாமல் மற்றவர் செய்த தகாத வேலை களை முன் உதாரணமாகக் கொண்டு ஏற்று வாழுதலில் என்ன நியாயம் உண்டு சொல்மின்
தாம் செய்த சாதாரண சின்னத் தவறுகளுக்காக ஏங்கி மனம் குமைந்துமாய்ந்துபோகின்றவர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். மனதில் துணிச்சல் இன்றி யாரிடமாவது தேறுதல் கேட்கச்சித்தமின்றி மிகவும் பரிதாபமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நபர்கள் இந்த உலகிற்குத் தங்கள் கடமைகளைச் செய்து முடிக் காமல் செத்துப்போகும் நன்றி மறந்த பேர்வழிகளுமாவர். தங்கள் செயலுக்காக வருந்தி வெட்கப்பட்டு உயிரை விட்டுவிடுதல் எவ்விதத்திலும் நியாயம் கூற இயலாத கோழைத்தனத்தின் வெளிப்பாடேயாகும்.
-26

ட சுயச்சாதியர்
சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை,விடாமுயற்சியுடன் மனதை ஸ்திரமாக வைத்திருப்பவர்களுக்கு சலனமான சிந்தனைகள் தொட்டுவிடுவதில்லை. பரீட்சையில் தோல்வி கண்டால் அது ஒரு வெட்கக்கேடான சங்கதி என எண்ணு தலும், இதேபோல காதலன் காதலியைத் திட்டினால் அல்லது காதலி தன்னை அவமதித்துவிட்டாள் எனக்கருதி வெட்கப்பட்டுக் காதலன் தப்பான முடிவு எடுத்து தங்கள் உயிரைப்பணயமாக வைப்பதும் ஜீரணிக்கமுடியாத சோக ங்கள்! மிகச் சாதாரண விஷயத்திற்காக வெட்கப் படுவது எங்கள் மனதை மேன்மேலும் ஒரு பலவீன நிலைக்கே இட்டுச் செல்லும், வெட்கம், துன்பத்தைப் பிரசவிக்கலாகாது.
நாட்டிற்கும் முழு உலகிற்கும் எவ்வளவோ சேவை செய்ய வேண்டிய நிலையில் உள்ள மனிதர்கள் கூச்ச உணர்வினால் ஒதுங்கிவீழ்ந்திட்டால் இந்தப் பூமி எவ்வளவு பெரிய இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை நாம் உணர்ந்தேயாக வேண்டும். திறமைகள் முடங்கலாமா? ஒடுங்கிப்போகலாமா?"இன்று எவராவது வந்து எதையாவது செய்துவிட்டுப்போகட்டும். எமக்கு இது எல்லாம் சரிப்பட்டு வராது" என எண்ணி, முன்னுக்கு வந்து சேவை செய்யாது விடுதலானது ஆமை தன் ஒட்டிற்குள்ளேயே சதா முடங்கித் தனது தலையையும் அச்சமுடன் உள்ளே திணித்துக் கொள்வது போல் மனிதனும் சீவிக்கக்கூடாது. பார்த்து, நிமிர்ந்து, நோக்க வேண்டியவன் மனிதனன்றோ!
- 27

Page 16
பருத்தியூர் அல.அபிந்துைதல்
காந்தியடிகள், ஆபிரகாம்லிங்கன், வீரத்துறவிசுவாமி விவேகானந்தர், புரட்சிக்கவி பாரதி போன்றோர் அடங்கி ஒடுங்கிக்கூச்சப்பட்டு உலகின் முன்வரத்தயங்கினால் இந்த அற்புத ஆத்மாக்களின், சேவை எமக்குக் கிடைத்திரு க்குமோ சொல்மின்காள்!
ஆன்மிகத் தலைவர்கள், புத்திஜீவிகள், விஞ்ஞானி கள் கலைஞர்கள், அரசியல் மேதைகள் எல்லோருமே, எங்கள் முன், எங்களுக்காக சொல்லிக் கொண்டிருக்கும் உண்மைகள் தான் என்ன?
பின்வரும் கருத்துக்களை மனிதனுள் சதா உருப் போட்டுக்கொள்ளுங்கள். துணிச்சலுடன் போராடு வெற்றி பெறு! அச்சம் அற்ற, கூச்சப்படாத, ஒதுங்கிச் செல்லாத வாழ்வை நீயாகத் தேடு மனதை விரிவாக்கு செயல்களைப் பெரிதாக்கு செய்த தவறுக்கு வருந்து இதன் பொருட்டு வெட்கப்படுவது வருந்துவது கூட மீண்டும் எழுவதற் கேயாகும். முடங்கிப்போய் மூச்சிழப்பதற்கு அல்ல. தவறு களை ஏற்பது பெரும்தன்மை. இதற்காகத் தொடர்ந்தும் துன் பத்தில் அமிழ்வதும் சரியல்ல. வெட்கம் கெட்டதனமாகத் தொடர்ந்தும் தவறு செய்வதுதான் வெட்கம் மற்றபடி வெட்கம் நுட்பமான அற்புத உணர்வுதான்.
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி)
25.03.2007
- 28
 

சுயச்சாதாuர்
இம்மைக்கும், மறுமைக்கும் ஆன்மாவினுள் "சாந்தி சேர்ந்து இயங்க வேண்டும். இதுவே கிடைத்தற்குஅரியபெரும் பேறு. எமது மனதை நாம் அடிக்கடி சீண்டிப் பார்ப்பதுண்டு இதயத்தைக் குடைந்தபடி வாழ்ந்தால் அது உடன் நொய்ந்து, நைந்து விடாதா? நிதானமான செயல்பாடுகள் அமைதி நிலையைத் தொடர்ந்து வைத்திருக்கும். தியானம், புலனடக்கம், மேலதிக ஆசைகளைக்கொய்தல் மூலம் எங்களை நாம் என்றும் புத்தம் புது மனிதானாக சுத்த நெஞ்சினனாக கொண்டிலங்கிட முடியும். அமைதியும், நிதானமும் உடையவர்களின் அகமும் முகமும் பிரகாசம் பெற்றுவிடுகின்றது.
ஆன்மாவின் அதி உன்னத அமைதிநிலை "சாந்தி” யாகும். சாந்தி நிலைநின்று தூய்மை தழுவிய மெளனத் துடனான அற்புத பேரின்ப நிலைக்கு நிகரேது? இம்மைக்கும் மறுமைக்கும் ஆன்மாவினுள்"சாந்தி"சேர்ந்து இலங்கவேண்டும்.
மனிதர்க்கு நிம்மதியின்றி அமைதி நெஞ்சில் அமரப்
போவதில்லை. அமைதியுடன் தொடர்புபட்ட "நிம்மதி” - 29

Page 17
பருத்திபூர் அல. ஆயிற்றுதாரர் தானாகவே வந்து விடுவதில்லையே என எல்லோருமே
அங்கலாய்க்கின்றார்கள். "ஏதாவது ஒரு பிரச்சனைகள் மனசைச் சதா அரித்துக் கொண்டேயிருக்கின்றதே ஒழிய இந்த அமைதி நிலை எங்கே ஐயா, வருகின்றது” என்று சதா அலுத்தும் கொள்கின்றார்கள்.
ஆயினும், நாம் எமது மனதை நாமே சீண்டிப்பார்ப் பதே வழக்கமாக்கிக் கொள்வதை நாம் உணர்வதாக இல்லை. எதற்கெடுத்தாலும் மனம் பயப்படுகின்றது. எங்கே ஏதாவது தொல்லைகள், தொந்தரவுகள் வந்து அடித்து விடுமோ என அச்சப்பட்டே வாழ்ந்து கொண்டு இருக்கின் றார்கள். இதயத்தைக் குடைந்தபடியே வாழ்ந்தால் அது உடன் நொய்ந்து நைந்துவிடாதா?
பூவைப்போல நெஞ்சமதை வைத்துக்கொள்வாயாக! ஆயினும் அது துணிச்சலுடனான வைராக்கிய சிந்தையுடன் இருக்க வேண்டும். இரக்கம் கொள்ள வேண்டியவிடயத்தில் மென்மையும், திடமான முடிவுகளை, நல்ல சேவைகளை, பெரும் உழைப்பினை நல்க வேண்டிய தருணத்தில் வலிமையான உறுதியுடனான நெஞ்சுடன் இலங்கி வாழு என்றுதான் சான்றோர்கள் சொல்லிக் கொண்டேயிருக்கின் றார்கள். மனசைக் "கல்” போல வைத்திரு, என்பது எதற்குமே இளகிவிடாமல் இரு என்பது அல்ல. திடசங் கல்பம் கொள்ள வேண்டிய நல்ல, சிறப்பான சந்தர்ப்பங் களில் மனம் குலைபடாமல் வைத்திரு என்பதேயாம். கெட்ட விஷயங்களைச் செய்யும் போது மனதைக் கல்போல் -30
 

வைத்துச் செயல்படு என்று எவராவது சொன்னால் அது அபத்தமானது அன்றோ!
அமைதியாக இருப்பதற்குக் கஷ்டமாக இருக்கின்றது என்று கூறுபவர்கள், தமக்கு விரும்பிய ஆலயங்கள் அல்லது தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடுதல் சாலச் சிறந்த தாகும். ஓரிரு நிமிடங்கள்ாவது பிரார்த்தனை செய்யக் கற்றுக் கொண்டால் அதன் பெறுபேறுகளைச் சில நாட்களிலேயே நன்று புரிந்து கொண்டுவிடமுடியும். இதில் எதுவித சந்தேக மும் வேண்டவே வேண்டாம்.
பிராத்தனை செய்யுமுன் நாம் தூய்மையாகவும் நமது எண்ணங்களையும் ஒரு நிலைப்படுத்துகின்றோம் என்கின்ற சிந்தையை எம் உள் நிலைநிறுத்திக் கொண்டேயாக வேண்டும். கோவிலில் சும்மா இருந்து மனதை வெளியே அலைபாயவிட்டு சில நிமிடம் என்ன, மணித்தியாலம் என்ன, நாள் பூராக அமர்ந்து கொண்டாலும் எதுவித பயனும் இல்லை. ஓரிரு வினாடித் துளிகளேயாயினும், களங்கமற்ற நிலையில் நிதானமாக, சுதந்திரமாகப் பிரார்த்தனை செய்வோமாக! இன்று உடலையும், உள்ளத்தையும் தூய்மை சேர்க்க சுவாசப்பயிற்சிக் கலையைக் கற்பித்து வருகின்றார்கள்.
ஆழமான, சீரான சுவாசத்தை உட்செலுத்தி வெளி
விடும் போது மூச்சு வெளிவிடும் உட்செல்லும் செயல்
முறைகள் அமைதியாக, மெதுவாக நடைபெறுவதால் -31 -

Page 18
பருத்திழ் 00:அற்றதன் ஆயுள் ஆரோக்கியம் மேம்படுவதாகச் சொல்லப்படு கின்றது. இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்ன வெனில், இத்தகைய பயிற்சிகளை நாம் மேற்கொள்ளும் போது எமக்குப்புறச்சூழல் பற்றிய எந்தச் சிந்தனைகளுமே தொட்டுவிடுவதில்லை.
மேலும் இந்த அமைதியான பயிற்சியினால் மனத்தளர்வு, கோபம், அச்சம், பீதி, ஆவேச உணர்வுகள் படிப்படியாகக் குறைந்து இறுதியில் அற்றேபோய் விடுகின் றது. ஆத்மபலம் அதிகரிக்க, அதிகரிக்க தேகபலமும் அதிகரிக்கின்றது. எமது உடல் உள்ளுறுப்புகளுக்கு அமைதியை முதல் ஏற்படுத்த வேண்டும். உடம்பை நாம் எம் இஷ்டத்திற்கு ஒரு இயந்திரம் போலக் கருதிச் செயல் படக்கூடாது. சுறுசுறுப்பாக இயங்குதல் என்பது கண்டபடி உடலை வருத்துதல் அல்ல. நிதானமுடன் செயல் படுபவர்கள் தொடர்ந்தும் களைப்பின்றி வேலை செய்கின் றார்கள். தேவையற்ற சஞ்சல உணர்வுடன் இயங்கினால் நாம் நினைத்த இலக்கினை அடைந்துவிடவே முடியாது.
அமைதியும், நிதானமும் உடையவர்களின் அகமும், முகமும் பிரகாசம் பெறுகின்றது. இவர்களின் ஒவ்வொரு கருமங்களும் பிறரை வசீகரிக்கின்றன. அத்துடன் உணவு உட்கொள்ளும் பழக்கங்களும் ஒரு கட்டுப்பாட்டினுள் அமைந்து விடுகின்றது. மிகையான உணவு உண்ணும் பழக்கத்தனால் உடல்நிலை கெட்டு விடுவதால் உள்ளமும் பாதிப்படைகின்றது. காலையிலும், நண்பகல் வேளையிலும்
-32 -

družengruš
அளவான சத்துமிக்க உணவினை உட்கொள்ளும் நாம் இரவு உணவைக் குறைத்தேயாக வேண்டும் எனவும் யோகாசனம் பயிற்றுவிப்போர் கூறுகின்றனர். நடைப் பயிற்சி எமக்கும் கட்டாயம் தேவையானது. மேலும் இரவு உணவு உண்டதும் உடனே உறங்கச் செல்வது, உடல் குப்புறப்படுத்தல், வளைந்து நெளிந்து நடத்தல், இருத்தல், தவறானது எனவும் மருத்துவர் அறிவுறுத்துகின்றனர்.உடல் சுகாதாரம் என்பது, உள்ளத்தினையும் பேண வல்லது என்பதற்காகவே மேற்சொன்ன விடயங்களைச் சொல்லப் பட்டுள்ளதனை அறிக!
அமைதியாக வாழ்வதற்கு அதனை வழங்க இறை வனும் அவனால் உருவாக்கப்பட்ட இயற்கையும் சித்த மாயுள்ளன. எங்களுக்கான வழிமுறைகளை நாம் கண்டு கொண்டும் கூட போதிய சிரத்தையின்மையான நடத்தை களால் எம்மை நாம் தவறாக வழிநடத்திக் கொண்டு வருகின் றோம் என்பதனைக் கவனத்தில் கொள்வோமாக!
எமக்குத் தெரிந்த நாம் பெற்ற இனிமையான நல்ல அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வோமாக! தாங்கள் பெற்ற அமைதியை சகல உயிர்களும் பெறுவதாக என்றே மெய் ஞானிகள் கருதிச் செயல்பட்டும் வந்தனர். இவர்கள் சொன்ன வழிகள் எல்லாமே கடும் சிரமானது என ஆரம்பத்திலேயே கருதிவிடக் கூடாது. படிப்படியான வழிமுறைகள், காலப்போக்கில் அவை எளியதாகவும், தொடர்ந்து செய்துவர சந்தோஷமூட்டுவனவாயும் அமைந்து விடும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
-33 -

Page 19
பருத்திழ் 00:ணுயிர்வரர்
*மனிதாபிமானம்” என்பது எமது உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் பேரமுதப்பெரும் பண்பாகும். எனினும், மனிதன் மனிதனுக்காக மட்டுமின்றிச் சகல உயிர்களுக்கும் இரங்கும் எண்ணத்தை உள்ளத்தே ஏற்றினால் பிறவியினை
நாம் எடுத்ததன் பெரும் பயனைப் பெற்றவர்களாவோம்.
மனிதன் தன்னை நேசிப்பது போலவே மனித குலத்தை
யும், மனித குலத்துடன் இணைந்து வாழும் எல்லா
ஜீவன்களையும் அன்புடன் நோக்காதுவிடில் எமக்குள்
நாமே ஒரு வேலியை ஏற்படுத்தி அன்பு எனும் பெரு வெளிக்குள் நுழைய விரும்பாதவர்களாவோம்.
"எல்லோர்க்கும் சாந்தி நிலை பெறுவதாக!" என்று சொல்கின்றோம். இதன் அர்த்தம் இறைவனிடம் இந்த வாக்கியத்தினை மொழிந்து கொள்ளும்போது "உன்னத மான சாந்தி நிலைக்கான அன்பூட்டலை நாம் வழங்கிடச் சித்தமாயுள்ளோம்" என்பதாகும். எனவே எம்முடன் நீக்கமற நிலை பெற்ற அன்பு வெள்ளத்தினுள் அனைவர்க்கும் உனது திருவருள் மூலம் சாந்தியைப் பெறுதற்கு நாம் விழைகின்றோம் இறைவா! என்பதாம். இந்தத் திவ்ய எண்ணம் மூலம் சுயநலம் களைந்த முழுமுகமான தோற்றத்தினையும் பெற்றவர்களாவோம்.
சோதனைகளைக் கடந்து படிப்படியாக முன் செல்லும் போது தான் அமைதிக்கான அனுமதி தானாக க்கிட்டுகின்றது. உள்ளத்தில் கொந்தளிப்பு இருக்கும் போது இன்பங்களை எங்கே அள்ளிக் கொள்ள இயலும்?
-34
s
 

சுயச்சாதாபம் சோதனைக்குள் முடங்கி இருப்பது அர்த்தமற்றது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். முடங்கி இருப்ப தற்கு இடம் கொடுத்தவர், இடர்களை ஏற்க வேண்டியதே. இவற்றைக் கடந்து சென்று கொண்டேயிருப்பவன் அமைதி நோக்கிய பயணத்திற்கு உடன்பாடான மனிதனாகின்றான்.
விரும் பத்தகாத அர்த்தமற்ற கற்பனைகளில் கட்டுண்டு அதனை விட்டுவிடமுடியாத பலர் தமக்கான அனுகூலங்கள் எப்படியும் வரும் என எண்ணுவது சரியானதுதானா? நல்ல செயல்களில் முனைப்பாக இயங் காமல் இடையூறுகளை மட்டும் இதயத்தில் நிறுத்தினால் செயல் எம்முள் கருக்கொள்ளுமா? சொல்லுங்கள்! தடைக்கற்களை உணராத நிலை மிகவும் பரிதாப
கரமானது.
சில வேண்டத்தகாத விஷயங்களே எங்களால் விருப்பப்படுகின்றன. துரதிஷ்டமான சில சம்பவங்களும் கூட வந்துவிடுகின்றன.
இவை என்ன எப்படிப்பட்டன, இவைகளின் வடிவம், இவற்றால் ஏற்படும் பிரதிபலன் விளைவுகள் என்பனவற்றை அறிந்து கொள்ள விளைதல் வேண்டும். இவற்றைத் தெரிந்து, தெளியாதவரை அமைதியான வாழ்விற்கான வழியினைக்காண, காலங்கள் தான் தேவையின்றிக் கரைந்தும் போகலாம் அல்லவா?
-35

Page 20
பருத்திபூர் பல ஆயிரலுருந்தர்
நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம் என்கின்ற
நினைப்பே எம்மை மெல்லெனத் தழுவும் பூங்காற்றுபோல சுகானுபவங்களை ஊட்டவல்லது அமைதியின் ஆட்சிக்குள் நுழைந்த எவருமே சந்தோஷசாகரத்தில், அதன் புனிதத் தினை நுகர்ந்தபடி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்பதே இல்லை. நல்ல தூய நினைப்புக்கள் எங்களை அமைதியினுள் தானாக இட்டுச் செல்கின்றது. குழப்பநிலை மனதை அலைக்கழிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாததும் அல்லவே! பொறுமையற்ற, நிதானமற்ற போக்கினால் மனிதர் மனிதரைப் பகைத்த வண்ணமே யுள்ளனர். மிகச் சாதாரண விடயத்தில் அமைதி இழந்து தம் முன்னே உள்ளவர்களையும் முகம் அறியா மனிதர் களைக் கூடத் திட்டித் தீர்க்கின்றார்கள்.
தம்மையறியாமலேயே உதிர்கின்ற கெட்டவார்த் தைகள் குண்டு வெடிப்பிற்கே அஞ்சாத வலிமை கொண் டோரையும் உடைத்தெறிந்து அணு அணுவாக மனதைச் சிதைத்தும் விடுகின்றது. "வைதல்” என்பது வைது கொள்பவரின் வறுமைமிக்க மனதைக்காட்டுவதாகும்.
இவர்கள் தங்களை மட்டும் வதைப்பதில்லை ஒன்று மறியாத அப்பாவிகளுக்கும் துன்பங்களைக் கேடுகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மனதில் இறுக்கமற்ற நிலையே சந்தோஷத்தி னையும் சுதந்திர உணர்வினையும் தரவல்லது. பாடசா லைக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்குச் -36
 
 

družengrué செல்லும் உத்தியோகத்தர் உட்பட தம்தம் கடமைகளில் ஈடுபடச்செல்லும் அனைவருமே அமைதி பொருந்திய நிலையிலேயே தமதுநிலையங்களுக்குச் செல்கின்றார்கள் எனச்சொல்லமுடியுமா?
தமது வேலையின் சுமை பற்றிய பய உணர்வு, மேலதிகாரியின் நச்சரிப்பு, கண்டனங்கள் பற்றிய அச்ச உணர்வுடன் தொழில் புரியச்செல்பவர்கள் எங்ங்ணம் கடமையினைப் பூரணமாகச் செய்துகொள்ள முடியும்? பாடசாலை மாணவர்களுக்குக் கல்வியில் பொருத்தமற்ற சந்தேகம் தோன்றினாலே வெறுப்புணர்வு, கல்வி கற்பதில் பயம், ஆசிரியர் முன் செல்லத் தயக்கம், சக மாணவர் களுடன் சரி சமனாக உலாவருவதற்குத் தயக்கம் எனப் பலதரப்பட்ட முட்டுக்கட்டையான உணர்வுகளுக்கும் ஆளாகிவிடுகின்றனர்.
எமது பொழுதுகள் என்றும் எந்நேரத்திலும் ஆனந்தமாகக் கழிக்கப்படல் வேண்டும். அது நாம் தொழில் செய்யும் இடத்திலாகட்டும், சென்று வழிபாடு செய்யும் ஆலயமாகட்டும், பொழுது போக்கும் இடங்களாகட்டும் எல்லாமே சமநிலையில் நாம் நோக்குவதற்கு மனசைக் குழப்பநிலையில் இல்லாமலும் சந்தேகமற்ற, இறுக்கமற்ற சுதந்திர உணர்வுடனும் வைத்துக்கொள்ளப்பழகவேண்டும். எந்தப் பிரச்சனைகளையும் உள்ளே வைத்துப்பூட்டி, அழுத்தி அதனைத் தீர்க்காமல் இருப்பது சாந்திநிலையை விரும்பும் மாந்தர்க்கு ஏற்புடையதன்று.
-37

Page 21
பருத்திழ் வலசிைற்றருதஷ்
நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம் என்கின்ற நினைப்பே எம்மை மெல்லெனத் தழுவும் பூங்காற்றுபோல சுகானுபவங்களை ஊட்டவல்லது அமைதியின் ஆட்சிக்குள் நுழைந்த எவருமே சந்தோஷசாகரத்தில், அதன் புனிதத் தினை நுகர்ந்தபடி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்பதே இல்லை. நல்ல தூய நினைப்புக்கள் எங்களை அமைதியினுள் தானாக இட்டுச் செல்கின்றது. குழப்பநிலை மனதை அலைக்கழிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாததும் அல்லவே! பொறுமையற்ற, நிதானமற்ற போக்கினால் மனிதர் மனிதரைப் பகைத்த வண்ணமே யுள்ளனர். மிகச் சாதாரண விடயத்தில் அமைதி இழந்து தம் முன்னே உள்ளவர்களையும் முகம் அறியா மனிதர் களைக் கூடத் திட்டித் தீர்க்கின்றார்கள்.
தம்மையறியாமலேயே உதிர்கின்ற கெட்டவார்த்
தைகள் குண்டு வெடிப்பிற்கே அஞ்சாத வலிமை கொண் டோரையும் உடைத்தெறிந்து அணு அணுவாக மனதைச் சிதைத்தும் விடுகின்றது. "வைதல்” என்பது வைது
கொள்பவரின் வறுமைமிக்க மனதைக்காட்டுவதாகும்.
இவர்கள் தங்களை மட்டும் வதைப்பதில்லை ஒன்று மறியாத அப்பாவிகளுக்கும் துன்பங்களைக் கேடுகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மனதில் இறுக்கமற்ற நிலையே சந்தோஷத்தி னையும் சுதந்திர உணர்வினையும் தரவல்லது. பாடசா லைக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்குச் -36
 
 
 

செல்லும் உத்தியோகத்தர் உட்பட தம்தம் கடமைகளில் ஈடுபடச்செல்லும் அனைவருமே அமைதி பொருந்திய நிலையிலேயே தமதுநிலையங்களுக்குச் செல்கின்றார்கள் எனச்சொல்லமுடியுமா?
தமது வேலையின் சுமை பற்றிய பய உணர்வு, மேலதிகாரியின் நச்சரிப்பு, கண்டனங்கள் பற்றிய அச்ச உணர்வுடன் தொழில் புரியச்செல்பவர்கள் எங்ங்ணம் கடமையினைப் பூரணமாகச் செய்துகொள்ள முடியும்? பாடசாலை மாணவர்களுக்குக் கல்வியில் பொருத்தமற்ற சந்தேகம் தோன்றினாலே வெறுப்புணர்வு, கல்வி கற்பதில் பயம், ஆசிரியர் முன் செல்லத் தயக்கம், சக மாணவர் களுடன் சரி சமனாக உலாவருவதற்குத் தயக்கம் எனப் பலதரப்பட்ட முட்டுக்கட்டையான உணர்வுகளுக்கும் ஆளாகிவிடுகின்றனர்.
எமது பொழுதுகள் என்றும் எந்நேரத்திலும் ஆனந்தமாகக் கழிக்கப்படல் வேண்டும். அது நாம் தொழில் செய்யும் இடத்திலாகட்டும், சென்று வழிபாடு செய்யும் ஆலயமாகட்டும், பொழுது போக்கும் இடங்களாகட்டும் எல்லாமே சமநிலையில் நாம் நோக்குவதற்கு மனசைக் குழப்பநிலையில் இல்லாமலும் சந்தேகமற்ற, இறுக்கமற்ற சுதந்திர உணர்வுடனும் வைத்துக்கொள்ளப்பழகவேண்டும். எந்தப் பிரச்சனைகளையும் உள்ளே வைத்துப்பூட்டி, அழுத்தி அதனைத் தீர்க்காமல் இருப்பது சாந்திநிலையை விரும்பும் மாந்தர்க்கு ஏற்புடையதன்று.
- 37

Page 22
பருத்திர் பல. அவிழ்வதன்
எம்முன்னே எல்லோருமே எம்மைப்போல் மனித முகங்களே. எதற்காக அச்சப்படல் வேண்டும் ஐயா? தெரியாததைக் கேட்பதும் தெளிந்ததைப் பிறருக்கு உணர்த்துவதிலும் என்ன பயம் வேண்டிக் கிடக்கின்றது.?
அழுது வடிவதால் குழப்பம் தீர்வதில்லை. எழுந்து நின்று இயங்குவதால் துணிவு எம்முள் உற்பத்தி யாகின்றது. மகிழ்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுக்கின்றது என்கின்றார்கள். இந்த நிலையிலேயே மனிதன் தொடர்ந்தும் சித்தத்தை, ஸ்திரமாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். எம்மை எக்கணமும் இறைவன் ஆசீர்வதித்துக் கொண்டு இருக்கின்றான். அமைதி வழிக்கான பாதை எம்முன் துலங்கித் தெரிய, எங்கள் நெஞ்சத்தை விருத்தி செய்வோமாக. சுருங்காத விழிகளுடன், நிமிர்ந்த நோக்குடன் கனிவுடன் உலகை நேசிப்போமாக!
* முறையற்ற தேவையற்ற விதமாக எவரையும் கண்டிப்பதனைக்கண்டனம் தெரிவிப்பதைக் தவிர்க்க * எவரையும் சரிசமனாக நோக்க மனதிற்குப் பயிற்சி
அளியுங்கள். இரக்கத்தைக் கருணையை எக்காலத்திலும் எமது இருதயத்திலிருந்து அகற்ற வேண்டாம். * நீதி கிடைப்பதற்காக அநீதி வழியை ஆயுதமாக்க
வேண்டவே வேண்டாம். 3. * உங்கள் ஆசைகளை மட்டுமே முதன்மைப்படுத்தல்
தகாது.
{
Х•
- 38

சுயச்சாதாuர் * உங்களது இலட்சியங்கள் சிறப்பானதாக இருந்தா லும் அதை நிறைவேற்றிக்கொள்ள இன்னும் ஒருவ ரின் பாதையை அவர்தம் இலட்சியங்களைப் பொடிப்
பொடியாக்க எண்ணுதல் கண்ணியமற்ற காரியம்.
முழு உலகையும் மனிதனால் ஆகர்ஷிக்க இயலும். தூய அன்பை, அமைதியைப் பிறருக்கு ஊட்டுவதை எமது கருமம் எனக் கொண்டால். இது ஒன்றும் சிரமமானது அல்ல, உலகில் அனைவரும் தங்களை எல்லோருமே நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால் வார்த்தைகளால் சொல்லத் தெரியாமலும் மானுட நேயத்தைக் காட்டிக்கொள்ள வெளிப்படையாக விரும்பாமலும் இருக்கலாம். நாம் எல்லோரையும் நோக்கி முன்செல்வோம். அவர்கள் எம்மை நோக்கி வரும் வரை காத்திருக்க வேண்டாம். மமதையற்ற இந்தக் கரிசணை யுணர்வு மேலான அன்பு நிலை எல்லோர் மனதிலும் அமைதியினை ஊட்டும். எங்கும் அமைதி வியாபித்து ஆட்கொண்டால் "சாந்தி” என்கின்ற தெய்வீக நிலை அகிலத்தை சமாதான வழியினுள் இட்டுச் சென்றுவிடும்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 14.01.2007
39.

Page 23
குர்ரி:ற்றூர்
பிராயச்சித்தம்
கருதிச் செய்யும் அடாத செயலுக்கு எந்த விதமான குற்றவுணர்வின்றி அதுசரி என விதண்டாவாதம் செய்பவர்களுக்குக் காலம் தண்டனை வழங்கியே தீரும். பாவங்களைச் செய்துவிட்டு அதை மூடிமறைக்க ஏதாவது பிராயச்சித்தம் செய்து தப்பித்துவிடலாம் என்று எண்ணியவர்கள் மீண்டும், மீண்டும் தவறான காரியங்கள் செய்தால் தெய்வம் கூட மன்னிக்குமா? குற்றங்களை மனப்பூர்வமாக உணர்ந்து வருத்தி தகாத கருமங்களை தீண்ட எண்ணங்கள் இன்றி வாழ்வதே பிராயச்சித்த முமாகும்.
பண்ணிய பாவத்தைப்போக்கலாம் என எண்ணி, கண்ணியவான்கள் போல் நுண்ணிய உதவிகள் சிலவற் றைச் சிந்தினால் பாவங்கள் துடைக்கப்படும் எனக் கருதுதல் அருவருக்கத்தக்க செயல் அன்றோ!
செய்த பாவங்களின் பலாபலன்களை அனுபவத்தே
தீரவேண்டும். அவ்வண்ணமே புண்ணிய கருமங்களைச்
- 40
 

சுயசோதார். செய்தாலும் அதற்குரிய நற்பெறுபேறுகளை அடைந்தே தீருவர் என்பது ஆன்மீகவாதிகளின் கூற்றாகும்.
செய்த பாவத்திற்காகக் கொஞ்சம் புண்ணியம் செய்து சமன்படுத்திப்பார்ப்பதற்கு வாழ்க்கை ஒரு தந்தி ரோபாயமான வர்த்தக நடவடிக்கையும் அல்ல.
மனிதன் தான் செய்கின்ற காரியங்களில் சிலவேளை களில் அவைகளின் பலாபலன்கள் பற்றி அறிந்தும் செய்கின்றான். சில பொழுது அறியாமலும் செய்து விடுகின்றான். வேண்டுமென்றே செய்கின்ற அநீதியான செயல்பாடுகள் அவனது உள்ளத்தின் குரூர வெடிப்புக் களவே கருதப்படும்.
சுயநலம் கருதிச்செய்யப்படும் தகாத செயல்களு க்குப் பரிகாரம் தேடச்சித்தம் கொள்வோர் தமது மனதினுள் தூய்மை ஏற்றாமல், செய்கின்ற போலித்தனமான எந்தக் காரியங்களுமே கடவுளை ஏமாற்ற எண்ணும் செயல்தான். கடவுள் ஏமாற்றப்படக் கூடியபொருள் அல்லர்.
“தெரியாத்தனமாகச் செய்துவிட்டேன், இனி என்ன செய்வது?” என வருந்துபவர்கள் ஒரு புறம் இருக்க, "நான் தொடர்ந்தும் தவறுகளை இறுதி மூச்சு அடங்கும் வரை செய்தே தீருவேன்” என உடும்புப் பிடியெனப் பிடித்து மடிந்து போனவர்கள் சமூகத்தின் குப்பை மேடுகளுக்கு ஒப்பானவர்கள்.
- 41 -

Page 24
மருத்திபூர் அ.ை ஆயிற்றூர்
புண்ணியம் செய்வது என்பது பாவம் செய்யும் ஆத்மாக்கள் தாம் தப்புவதற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட உத்தி இதுவெனக் கொண்டு ஒழுகுவதை ஒரு கோமாளித் தனமான கொடிய செயல் என்பதை ஏன் தான் உணராமல் இருக்கின்றார்கள்? தன்னைத்தான் சமாதானம் செய்வது என்பது கூட ஒரு நியாயத்தன்மையுடன் இணங்கப்படல் வேண்டும். சட்ட விரோதமான, நீதிக்குப் புறம்பான காரியங்களைச் செய்பவர்கள் தமக்குள் சமாதானங்களைச் சொல்லித் தம்மை ஏய்க்க முடியாது.
தவிர, நன்நோக்கத்திற்காக செயல்களைச் செய்யும் போது யாராவது எதிர்பாராத விதத்தில் பாதிப்படைந்தால் "நாம் என்ன செய்வது இப்படி நடந்துவிட்டது, என்னால் இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை"எனத்தனக்குள் துன்பப்பட்டும். பின்னர் மனதை ஆசுவாசப்படுத்திச் சமானப்படுத்திக்கொள்ளலாம். பாவம் செய்பவர்கள் சமாதானம், நிம்மதி பெறுதல் கடினம். அவர்கள் திருந்தா தவரை நற்பேறுக்கான தூரம் கண்டறிய முடியாத ஒன்றே தான.
செய்யத்தகாத காரியங்களைச் செய்பவர்கள் கூட
தாங்கள் சொல்கின்ற கூற்றைப் பிறர் ஏற்றேயாக வேண்டு
மென்ற நோக்கில் வலுக்கட்டாயமாகத் தங்கள் பக்க
குதர்க்கவாதத்தை மீண்டும் மீண்டும் உருவேற்றிக் கொள் வார்கள். இவையெல்லாம் தங்கள் பலவீனம் என்று எதிரில்: நிற்பவருக்குத் தெரியாத விஷயம் என எண்ணுதல்
மடமையன்றோ!.
- 42
 

சுயச்சாதாயம்
தமது தவறான செயலின் பரிணாமத்தினை அதன் தாக்கத்தை உணராதவர்கள் மற்றயவர்கள் ஏதாவது சிறு இடைஞ்சல்கள் இழைத்தால் அல்லது தமக்கு எதிராக ஏதாவது காரியம் செய்யப்புகுந்தால், அவர்களை இத்தகை யவர்கள் அங்கீகரித்து விடுவார்களா? பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டு போவதில்லை. உங்கள் தவறுகளை நீங்கள் மற்றவர்கள் பார்வையில் படாமல் செய்வதாகக் கருதுவதுமுட்டாள்தனமான கற்பனையாகும். யாரோ ஒருவரின் விழிகளில் குற்றம் செய்பவர்களின் செயல்கள் பட்டுவிடாமல் இருந்துபோகாது.
"தானம்" செய்தால் பாவம் போகும் என்றுதான் பலர் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் "தான் எந்தத் தானமும் பெறுவதுமில்லை, யாராவது பொது இடங்களில் உணவு அளித்தால் உண்பதுமில்லை” என்று கூறுவார். அதற்காக அவர் என்னிடம் சொன்ன காரணம் இதுதான். "யாரோ ஒருவர் செய்த பாவமூட்டையை நான் ஏன் சுமக்க வேண்டும்? அவர்கள் இடுகின்ற உணவை உண்பதன் மூலம் அவர் ஏற்கனவே செய்த பாவங்களை நானும் அங்கீகரித்தவனாக ஆகிவிடுவதால், நான் எதனையும் ஏற்பதில்லை" என்று கூறிவிடுவார்.
நாம் எம்மைத் தூய்மைப்படுத்தாமல் செய்கின்ற
தர்மங்களை இறைவன் ஏற்கமாட்டான். இழுக்கான கரங்க
ளால் உணவூட்டினால் உண்பவனின் முழுத் தேகமும் - 43.

Page 25
பருத்தி:ரர்.
ஆன்மாவும் துன்புறும்.உணர்வோமாக! இத்தகையவர்கள் செய்வது பிராயச்சித்தம் அல்ல. மரித்துப்போன சரீரத்திற்கு புதுக்குருதியூட்டும் செயலன்றி வேறென்ன? ஆன்மார்த்த ரீதியாக ஆழமாகத் தாம் செய்த துஷ்டத்தனத்தை எண்ணி வருந்துபவர்கள் மட்டும்தான் கடவுளால் மன்னிக்கப்படுவர்.
வாழ்க்கை என்பது வியாபார நோக்குடன் மட்டும் பார்க்கப்படுவதல்ல யாராவது எமக்குச் செய்தால்தான், நான் பிறருக்கு ஏதாவது செய்வது பற்றியோசிக்க முடியும் எனக் கருதலாமா? இன்று உறவுகளுக்கும் மேலாகப் பிறர் மூலமே நாம் பற்பல நற்பயன்களைப் பெற்றுவருகின்றோம். ஆனால் நாம் பிரதியுபகாரமாக என்ன, என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதைச் சிந்திப்பதேயில்லை.
நாம் வாழும் இல்லத்தினுள் மட்டுமா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இல்லையே! எங்கள் குழந்தைகள், சுற்றத்தவர்கள், நண்பர்களைவிட நாம் பார்த்துக் கொண்டி ருக்கும் முகங்கள் எல்லாமே மிக மிக அதிகமானவைதான். அந்த முகங்களை நாம் கண்டு கொள்ளப்பிரியப்படு வதில்லை.
ஒருவர் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது
அவர் தமது உடமைகளில் ஒன்றைத் தவறிக் கீழே வீழ்த்தி
விட்டார்அப்போது வழியில் வந்த ஒருவர் அதை எடுத்து
அவரிடம் ஒப்படைக்கின்றார். இதுவிடயத்தில் நன்மை
பெற்றவர் புன்னகையுடன் நன்றி செலுத்த, உதவி - 44.

செய்தவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றார். கூட்டத்தினுள் நீங்கள் சிக்குண்டு அவஸ்தைப்பட யாரோ ஒருவர், உங்களைக் கைபிடித்து ஆசுவாசப்படுத்தி தகுந்த இடத்தில் சேர்ப்பித்துவிடுகின்றார். இவை போன்ற ஆயிரக்கணக்கான உதவிகளை எமக்கு இந்த மானுடத்தின் அங்கத்தினர்கள் செய்து கொண்டுதாணிருக்கின்றனர். இந்த அனைத்து உதவிகளுக்குமே நாம் அன்புணர்வினைக் காட்டிச் சந்தோஷமடைகின்றோம். இவைகளுக்கெல்லாம் பிரதியுபகாரம் செய்துவிடவும் இயலாது.
மனிதராகப் பிறந்து உதவுதலை விடுத்து, மற்ற வருக்குத் தெரிந்தே உபத்திரவம் கொடுப்பதும், பின்னர் பிராயச்சித்தம் என்று சொல்லி ஏதேதோ செய்ய விழைவதும் பாவக்குழியில் வலிந்து வீழ்வதற்கேயாம். பாவங்களை வியா பாரமாக்கினால் சோகங்களே சேரும்.
இன்று சும்மா இருக்கும் நல்லோரைச் சீண்டுவது கூடப் பொல்லாதவர்க்குப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஒரு பெரியவர் சொன்னார்,"எந்தவித கெடுதலும் எண்ணா தவர்களின் மனதை கொல்வது எவ்வளவுகொடுமையானது தெரியுமா? ஒருவரின் உடலுக்குச் செய்யும் தீமையைவிட மற்றவர்க்கு இழைக்கும் மன உழைச்சலைக் கொடுப் பவர்களுக்கு நல்லவர்கள் கூட ஒன்றுமே செய்ய முனையா மல் மெளனமாகவே இருப்பது கையாலாகாத்தன மல்லவா?"எனக்கவலைப்பட்டார்.
- 45

Page 26
பருத்திழ் பல அருவரர்
ஆனால் உண்மையில் நல்லோர்களின் மெளனம் என்பது ஊழிக்காலத்து பெருஅக்னியை விட உஷ்ண மானது. திருந்தாத தீயோர்க்குப் பிராய்ச்சித்தம் என்பது கிடையவே கிடையாது. பிராயச்சித்தம் கேட்பவர்க்கும் ஒரு தகுதி வேண்டும்.
"நீ சும்மா இருந்தால் அவன் ஏன் உன்னிடம் சண்டைக்கு வரவேண்டும்” என்று எமது ஆசிரியர்கள் தங்களிடையே சண்டையிடும் மாணவர்களிடம் சொல்லிக் கொள்வார்கள். ஆணவ முனைப்பு உள்ளவர்களுக்கு நேயப்பாடு இருப்பதில்லை. இன்று வல்லரசு நாடுகள் என்ன செய்கின்றன? நியாயம், நீதி பார்த்தா நடந்து கொள்கின்றன? சுயலாபம் கருதி பொருளாதாரத்தில் சுருண்டு கிடக்கும் நாடுகளிடம் சுரண்டிச்சீண்டி சுதந்திரம் பற்றி அறிவுரை பகர்ந்து கொண்டுதானே இருக்கின்றன? இவர்களின் மயக்கும் வாதங்களைக் கேட்டும் இந்த நாடுகளின் பாதங்களைத் தொடும் நாடுகள் இல்லாமல் இல்லையே! இயலாமை காரணமாக பேசாமல் இருப் பதுவே உசிதமானது என வலிமை குறைந்தவர்கள் இருப் பது ஒன்றும் வியப்பு அல்ல. நியாயங்கள், நொந்துபோனால் அழிவுவந்து வலியோரையும் மடக்கும்.
இவை எல்லாமே காலப் பிழை. சர்வமும் அலங் கோலமாகிவிட்டது என்று சலிப்புடன் வாழ்வது பழக்கப்பட்ட வாழ்வாக அமைந்து விடக்கூடாது. மக்களின் நியாயமான
எண்ணங்கள் ஒரு முகமாகக் குவிக்கப்படல் வேண்டும்.
- 46
 

-அத்துத் ஒத்துப்போன நல்ல உணர்வுகளுக்கு வலிமை அதிகம் என்பதை நாம் உளமார நம்புவோமாக, ஒரு நாட்டைச் சுரண்டிக்கொண்டு பிராயச்சித்தம் செய்யுமாற் போல், "உதவுதல்” என்று போலி இரக்கம் காட்டி வீசியெறியும் சில்லறைகளுக்காக ஏங்கிப்பொறுக்கும் நாடுகளின் பட்டியல் கள் நீண்டுபோவது வேதனையிலும் மகா வேதனை
ஒருவர் எமக்குச் செய்த தீங்குகளுக்காக நாம் உளமார மன்னித்துவிட்டால் அவர் எந்தவிதமான பிராயச் சித்தம் செய்ய வேண்டிய தேவையும் இருக்காது.மன்னித் தலை விடப் பெரிய வழங்கல்கள் எதுவுமில்லை.
ஒரு அரசியல்வாதி தனது நம்பிக்கைக்குரிய நண்பருக்குச் சொன்னார், "நான் ரொம்பவும் சுயநலமாகப் பல பாவங்களைச் செய்துவிட்டேன். மக்களை வருத்தி எனது காரியங்களைச் செய்தும் விட்டேன். எனக்கு இதன் பொருட்டு பிராயச்சித்தம் செய்ய வழிகள் உண்டா? எந்தக் கோவில், பொதுநல நிறுவனங்களுக்கு நான் தானதர்மம், பூஜை, புனஸ்காரம் செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்றார். அதற்கு அவர் நண்பர் சொன்னார்."நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். செய்த பிழைகளை உணர்ந்து அடுத்த தடவை தேர்தலில் நிற்காமல் விட்டாலே போதும். கடவுள் உங்களை மன்னிப்பதுடன் மக்களும் சந்தோஷப்படுவார்கள் என்றார்.
- 47

Page 27
மருத்திய0:றதுறர்
உலகில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேடிக் கையும், அதே சமயம் கவலையளிப்பதுமான விஷயம் என்ன தெரியுமா?
ஒருவர் மோசடிக்காரன் எனத்தெரிந்தும் கூட மக்கள் அவர்கள் பேச்சை நம்புவதும் விட்டில் பூச்சிபோல் அவர் களிடம் வீழ்வதும் தான். பலதடவைகள் ஏமாற்றப்பட்ட வரிடமே தொடர்ந்து சனங்கள் இனம்புரியாத மயக்கத்தில் தீய்ந்துபோகும் நிலை என்று தான் ஒய்ந்து போமோ?
சிலர் செய்கின்ற விஷமத்தனமான துட்ட காரியங் களுக்கு மன்னிப்பு வழங்க முடியாதுள்ளதாக அனேகர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஒருவன், ஒருத்தியைக் காதலிக்கின்றான். பின்னர் அவளைத் தாயாக்கிக்கைவிட்டு விட்டான். இதனால் பாதிக்கப்பட்டபெண்ணுக்கு அது ஈடு செய்ய வொண்ணாத இழப்புத்தான். இத்தகைய பெண்ணி டம் அவளை ஏமாற்றியவன் வந்து "நான் செய்தது தவறாயினும் உன்னை நான் திருமணம் செய்ய இயலாது. ஆனால், நான் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள். இது எனக்குப்பிராயச்சித்தமாயிருக்கும்” என்று சொன்னால் எப்படி அவள் மனநிலை இருக்கும்?
இதே மாதிரி இன்னும் ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். ஒருவன் இன்னும் ஒருவனைக் கொன்று விட்டான். மேற்படி கொலை செய்தவன், கொலை யுண்டவனின் குடும்பத்திடம் சென்று, “ஏதோ நான் கோப - 48

சுயசீசாதார் மிகுதியால், இந்தக் கொலையைச் செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்று கேட்டால் அந்தக் குடும்பத் தினரின் உணர்வுகள் எப்படி இருக்கும்?
வெறும் வாயால் சொல்லும் உபதேசங்கள் எல்லாமே நடைமுறை யதார்த்த வாழ்விற்கு ஒத்துவருவதுமில்லை. வேண்டுமென்றே செய்ய்ப்படும் குற்றங்களை மன்னிக்க வேண்டிய அவசியமில்லை. நீதி, சட்டம் இவர்களை விட்டு விடுவதுமில்லை. அறியாமல் செய்கின்ற தவறுகள் தான் மன்னிக்கப்படுகின்றன. தொடர்ந்து போக்கிரித்தனமாகக் குற்றம் இழைப்பவர்களைக் கண்டும் காணாமல் இருப்பதும் அவர்கள் செயலை ஊக்குவிப்பது போல் நடப்பதும் அவர்களை மன்னிக்குமாறு பிறரைக்கேட்டு நிர்ப்பந் திப்பதும் அல்லது இத்தகையவர்களுக்குச் சாதகமான எந்த ஒரு செயலைச் செய்து சமாளிப்பது என்பவை தவறு செய்தவன் செய்கின்ற செயலைவிட மிகமோசமானதே என அறிவோமாக.
தீங்குகள் செய்கின்றவர்கள் வெளியே சிரித்தும், வீம்புகள் பேசிடினும் உள்மனம் சிதைந்தவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மற்றவர்களின் உடமை களை மட்டுமல்ல அவர்தம் மனங்களையும் உடைப்பவர் கள், கெடுமதியாளர்களே. அடாவடித்தனமான கருமங்கள் செய்வதுகூடச் சிலருக்கு உவப்பாக இருக்கின்றது.
- 49

Page 28
பருத்தியூர் பலவற்தைக்
ஆன்மீக வாழ்வுமுறைகளால்தான் உலகில் பெரும் பான்மையான மக்கள் உயிர்கள் மீதான துன்புறுத்தல் களை வெறுத்து ஒதுக்கி வாழ்ந்து வருகின்றனர். இன்றும், என்றும் இறைவன் தன் குரலான மனச்சாட்சியின் ஒசையை மக்கள் உள்ளே ஒலிக்கச் செய்யாது விடின், முழு உலகமுமே கொலைக்களமாகிவிடுமன்றோ!
மன்னித்தல் மூலம் நாம் ஒருவருக்கு உதவிகள் செய்தபின்பு, அதனைக் கண்டபடி பகிரங்கப்படுத்துதல் நாகரீகமான காரியமல்ல. "அவர் எனக்குக் கெடுதல் செய்தார். பின்பு அவர் என்னிடமே வந்து தனது தவறைச் சொல்லி வருந்தி தனக்குப் பிராயச்சித்தமே இல்லையா எனக்கேட்டுமனம் நொந்தான். நான் எனது பெரும் தன்மை யினால் மன்னித்துவிட்டேன்" இப்படியான விஷயத்தை தாம் செய்த காரியங்களை பலருக்கும் சொல்லிப் பெருமை ப்பட்டுக் கொள்வது சரியானதுதானா? இந் நடவடிக்கை யினால் சில சமயம் சம்பந்தப்பட்ட நபரே, "அட இது என்ன போயும் போயும் இந்த மனிதரிடம் நான் எனது மனச்சாட்சி யின் உறுத்தலுக்காக மன்னிப்புக் கோரியும் கூட எனது தவறான செயல்களைப் பலர் அறியப் பகிரங்கப் படுத்துகின்றாரே" என எண்ணி அவர் மனஉளைச்சலுக்கும் உள்ளாகலாம்.
சில நல்ல காரியங்களை மெளனமாகச் செய்வதே எமக்குப் பெருமை அளிப்பதாகும். செய்கின்ற உதவிகளைப் பறைசாற்றுவதுகூட உதவிபெற்றவரை அவமானப்படுத்தும்
செயல்தான் உணர்க!
-50 -
 

சுயச்சாதாuர் மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பங் களில் தெரிந்தும், தெரியாமலும் தவறுகள் புரிவதுண்டு. எனவே, மனித வர்க்கத்தினு வ ழ்கின்ற நாம் ஒருவரை யொருவர் மன்னித்து அனுசரித்தேயாக வேண்டும்.
தவறு இழைத்தவன் வருந்தி எம்மிடம் வரும்போது நாம் ஆறுதல் அளித்தேயாக வேண்டும். பிறிதொரு சந்தர்ப் பங்களில் நாமும் ஒரு தவறுசெய்யும் போது ஆதரவுக் கரங்களைத்தேடி நாம் பிராயச்சித்தம் தேட விழைவது ஒன்றும் புதுமையல்லவே! வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடித் துளிகளிலும் கடக்கும் ஒவ்வொரு அடிகளிலும் நாம் எத்துணை செயற்கரிய பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டோம் என எம்மை நாம் எடை பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது பணிகளை விட்டுவிட்மோமா என அறிந்து செயலாற்றல் வேண்டும். அத்தகைய எண்ணங்கள் நெஞ்சத்தில் வலுப்பெற்றால் தகாத கருமங்களில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டவர்களாவோம். எவர்க்கும் இன்னல் விழைவிக்க எண்ணமில்லாமல் வாழ்வது எமது மானுடப் பெரும்பேறு அல்லவோ, உணர்மின்
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)
-51 -

Page 29
பருத்திபூர் அல. ஆயிரவநாதர்
ஆசைகள் வந்து மோதாமல் எதுவுமே பிரசவிக்கப்படுவதில்லை. உலக இயக்கத்திற்கு ஆசை துணைபுரிகின்றது. நியாயபூர்வமான ஆசைகள் மூலமே வாழ்க்கையைச் சீராக்கமுடியும். பணம், பொருள் புகழ் சேர்ப்பதற்கு மட்டுமல்ல, கல்வி பெறுவதிலும் பிறர்க்கு உதவுதலிலும் ஆசை கொள்வீராக! தகுதிக்குமீறிய ஆசைகளை விடுத்துபடிப்படியான வளர்ச்சிகளுடன் தேவைகளை நிறைவேற்றுவதே உன்னதமான வழியுமாகும்.பேராசையால் உடலையும், உள்ளத்தையும் வருத்துதலால் நயக்கத்தக்க பயன் எதுவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
ஆசைகள் இன்றி வாழ்க்கை அமையுமா? ஆசைகள் இன்றியே விருப்பங்கள் முகிழ்க்குமா? ஆசைகள் இன்றிச் செயல்கள்தான் அவதரிக்குமா? ஆசைகள் இன்றிக் காதல் கருக்கொள்ளுமோ? காதல் இன்றி உலகுதான் செழிக்குமா?
- 52
":
 
 

anulóifigitudi மொத்தத்தில் ஆசைகள் வந்து மோதாமல் எதுவுமே பிரசவிக்கப்படுவதுமில்லை.
மேலும், ஆசைபற்றி எவ்வளவோ சொல்லிக்கொள்ள லாம். ஆனால், ஆசை ஒழிமின், ஆசை ஒழிமின் என்று தான் ஞானிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே உள்ளவர்களும் சொல்லி வலியுறுத்தினார்கள். இனிமேலும் இதுபற்றிச் சொல்லத்தான் போகின்றார்கள்.
ஆசை என்பது மனித வர்க்கத்திற்கு மட்டும் உள்ள உணர்வு அல்ல. எல்லா சீவன்களும் தமது இயக்கத் திற்கான உந்துதலை சொல்ல வொண்ணா ஈர்ப்பு மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றன. விருப்பம் இன்றிச்செய்யப் படும் எக்கருமங்களும் முழுமை பெற்று விடுவதுமில்லை.
நியாயபூர்வமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது ஒன்றும் தப்பான காரியமேயல்ல.
ஆசைப்படு! வாழுவதற்கு ஆசைப்படு! சத்தியத்திற்கு இயைபுபட்டே வாழ ஆசைப்படு!
நியாயபூர்வமான ஆசைகளை வைத்திருந்தால்
மட்டும் எந்தவித பயனுமில்லை. அதனை நிறைவேற்ற
என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதனைத்
தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.வெறும் கற்பனைக்
கோட்டைகளைக் கட்டிக்கொள்வதால் மனம் தன்வசம் - 53.

Page 30
பருத்திபூர் மற்றுவிரலுருந்தர் - இழக்கின்றது. தீர்க்க முடியாத ஏக்கங்களுடன் வாழுகின்ற வாழ்க்கை கோழைத்தனத்தின் ஒரு வடிவம் தான். எண்ணியன எண்ணி முடிக்காமல் மனம் குமைவதும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டேசீவிப்பதும் ஒரு வாழ்வா?சின்ன சின்ன நல்ல ஆசைகளைக்கூட நிறைவேற்றாமல் ஆதங்கப் படுபவர்கள் பலரும் சமூகத்தையும் தன் அருகே இருப்பவர் களையும் குற்றங்கள் பகருவார்கள். பசிக்கும்போதுதானே உணவை எடுத்து உண்பதை விடுத்து அடுத்தவன் வந்து ஊட்டியேயாக வேண்டும் என எண்ணுவது என்ன நியாயம் உண்டு! |WAN
சிலர்கை நிறையக் காசுவைத்திருப்பார்கள் ஆனால் அதைச் செலவு செய்து அனுபவிக்கமாட்டார்கள். யாராவது ஒரு ஏழை தன்வசதிக்கேற்பச் சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்தால் மனம் பொருமுவார்கள்.
ஆசைக்கு உதவாத செல்வத்தால் பயன்ஏது? இன்று எத்தனையோ பேர் தமது ஆசையை அடக்கித் தாமும் அனுபவிக்காமல், உலகிற்கும் ஈந்துவிடாமல் செத்தே போகின்றார்கள். சேமிப்பதில் ஆசைப்படுவது தவறில்லை. அதற்காக அதனைத் தகுந்த நேரத்தில், சிறந்த வழியில் செலவு செய்யாமல் சந்தோஷங்களைத் தொலைத்தே வாழ்வதும் ஒரு வாழ்வா? பத்திரிகைகளில் சில புதுமையான பேர்வழிகள் பற்றிப் படித்திருப்பீர்கள். பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்தே பணம் சேர்த்து அதனைச்செலவு செய்யாம லேயே மரணமடைந்த செய்திகளை அறிந்திருப்பீர்கள்.
- 54
 

பணம் சேர்ப்பதில் மட்டும் ஆசைப்படும் பலர் எதற்காக இந்தப் பணம் படைக்கப்பட்டது என்பதை அறிந்து கொள் வதில்லை. அனுபவிக்க முடியாத ஆசைகளால் அர்த்தம்
நிலையாமை பற்றி உணர்ந்தவர்கள், ஆசை பற்றி நன்கு அறிந்து தமது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்கின்றனர். "வாழ்வு நிலையற்றது” என்றுசொல்லி வரண்ட வாழ்க்கையை அமைக்காமல் சிறந்த சந்தோஷ வாழ்க்கையை அமைப்பவனே புத்திசாலி. எல்லாமே பொய் என்று சொல்லிப் பொய்யாக வாழ முடியுமா? உள்ளத்தில் விருப்பங்களைத் தேக்கி வெளியே தத்துவம் பேசி எப்படி இவர்களால் வாழ முடிகின்றது?
ஆசையுடன் பொருள்களை ஈட்டும் போது பேராசை வந்து, தன்னை வசப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வரையறையற்ற எண்ணங்கள் ஒருவனை தன்நிலை இழக்கச் செய்துவிடுகின்றது.
விரும்பாத ஒன்றை வலுக் கட்டாயமாக ஏற்றுக் கொள்வது என்பது வாழ்க்கையில் ஜீரணிக்க இயலாத ஒன்றாகின்றது. ஆசைப்பட்டது கிடைக்காது விட்டால் வாழ்வின் ஆதார சுருதியே கருகிவிட்டதாக மனிதர் சோர்வடைந்து போகின்றனர். கிடைத்தது இதுதான் என மனதிற்குச் சொல்லி ஏற்கின்ற இயல்பு எல்லோருக்குமே வந்துவிடாது. N.

Page 31
பருத்திர் வல்லுர்ஷர்தம்
காதலர்கள் ஆசையுடன் கட்டிய காதல் கோட்டை எதிர்பாராமல் சரிக்கப்படுவது சகிக்கக்கூடியதல்ல. சில ஆசைகள் படிப்படியாக உள்ளத்தில் படிந்து நிரந்தரமாகி விடுகின்றன. நீண்டகால விருப்பங்கள் நிராகரிக்கப் படுவதானால் ஏற்படும் "நோவு" என்ன என்பதை இழப்பி னால் நொந்து போனவர்களுக்கே தெரியும். இன்று மற்ற வன்" வலியை பலர் உணராமையாலேயே பலரது துன்பங் கள் கண்டுகொள்ளப்படாமல் தீர்க்கப்படாமல் போகின்றன. மற்றவன் விரும்பும் நியாயபூர்வமான ஆசைகளை நாம் கேலி பேசுவதோ தடைக் கற்களாகக் குறுக்கே எம்மை நிறுத்திக்கொள்வதோ நியாயமே அல்ல.
ஒரு சின்னக் குழந்தையின் உணர்வுகளுக்குக் கூட நாம் மதிப்பளித்தே தீரவேண்டும். நடக்க விரும்பும் குழந்தையைப் படுத்திவைத்து வேடிக்கை பார்க்கக் கூடாது. இளைஞர்களின் வீறுகொண்ட பணியினை அவர்தம் ஆசைகளை மடக்கி ஒடுக்குவதில் என்ன லாபம் வந்து விடப்போகின்றது?
வயதிற்குத் தக்க விதத்தில் பருவ ஆசைகள் கிளர்ந்து எழுவது தவிர்க்க முடியாதது. எனினும் இளவயது ஏக்கங் கள், பாலியல் உந்துதல்கள், இதுபற்றிய பரவச கவர்ச்சித் தேடல்கள் கூடச் சகஜமான சமாச்சாரங்கள்தான். தம்மை மீறிய கட்டுப்பாடு அற்ற உணர்வுகளுக்கு அடிமையா வதனால் எதிர்கால வாழ்வின் ஸ்திரத்தன்மைகள் முற்றாகக் குலைந்துவிடும் என்பதை உணர்ந்தேயாக வேண்டும். காலங்கடந்த பின் ஏக்கப்பட்டு ஏதுபயன்?
- 56

சுயச்சாதாபர் தவறான பழக்க வழக்கங்களே இளவயதில் இன்ப மூட்டல்களாகத் தோன்றும் சின்ன வயதினில் எல்லாவற் றையும் அனுபவிக்க ஆசைப்படுவதனால் வரும் எதிர் விளைவுகள் பாரதூரமாக அமைந்துவிடுகின்றன. பாலியல் தொடர்பான அனுபவங்களை இளவயதிலே தேட முனை யாமல் தமக்குரிய காலம் வரும் வரை, வேறு வழிகளில் நல்வழிகளில் புலன்களைச் செலுத்துவது கடினமான ஒன்றுமல்ல புலன்வழி சென்றால் களங்கமே மிகுதி!
கல்வி,கலை, சமய விடயங்களில் நாட்டம் கொள்ளும் போது விகாரமான சிந்தனைகள் ஒட்டிக் கொள்ளமாட்டாது. என்ன தான் மனிதன் "வலு" கூடியவனாக இருந்தாலும் மனதை அடக்க முடியாதுவிடில் அவன் என்ன மனிதன்?
கல்வி ஞானமும், பணப் பெருக்கமும் உடல் பலமும் இருந்தும் மட்டரகமான சகவாசங்களைக் கெட்டியாகப் பிடித்தால் இகழ்ச்சிக்குரிய நபர் ஆகிவிடுவரன்றோ! ஒருவ ருக்குரிய முக்கிய தேவைகள் என்பது அவனது ஜீவாதார உரிமையாகும். மேலதிக செல்வத்திற்காக அவாவுறுதல், மற்றவர் பொருளைஅபகரிக்க எண்ணுதல், எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்கின்ற மன நிலையில் வாழ்வது என்பதெல்லாம் நியாயபூர்வமான ஆசைகளாகக் கொள்ள இயலாது.
ஒருவர் தமக்குரிய முக்கிய தேவைகளை எதுவெனப்
புரியாது மற்றவர்களைப் பார்த்துத்தான் அவன் அவாவுறு - 57.

Page 32
பருத்தியூர் பல அறிவதன் கின்றான் எனச் சொல்கின்றார்கள். எல்லாச்சமயத்திலும் இக்கூற்றுப் பொருந்தாது. அவன் தேவைகளுக்காக மற்றவர் களின் முயற்சிகளைத் தடுக்க எண்ணுதலும் தகாது. இன்றுள்ள முக்கிய பிரச்சனைகளின் மூல காரணமே மற்ற வன் உயர்ச்சிபற்றிக் கண்டபடி கண்டனம் கூறுவதும், தாங்கள் செயலற்றவர்களாக இருந்தும் அடுத்தவர் ஊக்கம் கண்டு போக்கற்றவர்களாக இருந்தும் அடுத்தவர் பற்றி வெட்டிப்பொழுதுகளை கழிப்பதுவுமேயாகும்.
விமர்சனங்களை எல்லோருமே கரிசனமாகச் சொல் வதில்லை. அறிவு, ஞானம் அற்றவர்கள் இது விடயத்தில் சர்வசுதந்திரமாக உள்நுழைந்து கொள்வது வேதனை. நல்லமனதும் ஆரோக்கியமான கருத்துச் செறிவுள்ள அறிவுமுள்ள புத்திஜீவிகள் சொல்வது எல்லாம் நல்ல நோக்கத்த்தின் பொருட்டேயாம். இத்தகையவர்கள் சத்தியத்தினுள் வாழ்ந்துவரும் மாந்தரின் போக்கிற்கு வழிகாட்டியாக இருப்பார்களே தவிர இடையூறு கொடுப்பது மில்லை.
கல்வி, செல்வம், புகழ் எல்லாமே மனிதர்க்குக்கிடைத் தற்கரிய பெரும் பேறாகும். மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை கொடிது எனக்கூறுவதை நீங்கள் கேட்டிருப் பீர்கள். அத்துடன் புகழ் ஆசை, பதவி ஆசையையும் சேர்த் துக் கூறிக்கொள்ளலாம். இவை யெல்லாம், முறைகேடாகச் சேர்ப்பவர்களுக்காகவே சொல்லப்பட்டன. வாழ்வதற்கான பொருள், இருப்பதற்கு இல்லம், நல்ல மனையாள் குழந்தை
-58

S S S S S S S S S S S S augi களைப் பெறுதல் இல்லற தர்மமுமாகும். எனவே மண், பொன், பெண் ஆசைகள் பற்றிகண்டபடி பேசித் தீர்த்தல் ஒரு குதர்க்கச் சிந்தனையுமாகும். 筠、
முட்டுக்கட்டை போடுகின்ற வரட்டுப் பேச்சுக்களைக் கேட்பது சோம்பேறிகளின் விருப்பமான பொழுதுபோக்காக இருக்கின்றது."ஆசைப்படாதே" என்று சொல்லிச் சொல் லியே வீச்சுடன் செயல்படும் வீரர்களை சும்மா இருக்கச் செய்வது சரியானதுதானா?
சின்னக் குழந்தைகளின் ஆசை, அபிலாசைகளைக் கூடநாம் கெளரவிக்கவேண்டும் இன்று கல்வி கற்க விரும் பும் ஏழைச் சிறார்களின் உரிமைகள் புறக்கணிக்கப் படுகின்றது. குழந்தைத் தொழிலாளர்களாகச் சின்னஞ் சிறுவர்களை எந்தவித மனச்சாட்சியுமின்றி வேலைக்கு அமர்த்தி வேலைவாங்கும் சுயநலமிகள், அவர்களின் ஆசை, அபிலாசைகளைப் பற்றி எப்போதாவது கிஞ்சித்தும், சிந்தித்தும் பார்த்ததுண்டா? நாகரீகம், விஞ்ஞானம், முன்னேற்றம் என்று சொல்லிக் கொள்ளும் நவீன உலகு அடுத்தவன் ஈனஸ்வரத்தித்துடன் முனகுவதையும், பெரும் ஓசையுடன் கூவி அழுவதையும் கூட ஏறெடுத்துப் பார்ப்ப தாக இல்லையே எனக் கேட்கத் தோன்றுகின்றதல்லவா?
என்னதான் பலம் உள்ள தகாத ஆசைகள் முட்டி
மோதினாலும் கூட அதனை வென்றேயாக வேண்டும்.
“என்னை அது பற்றுகின்றது, நாம் என்ன செய்வது என்று - 59

Page 33
பருத்திலு:ணுயிர்ரர். புலம்பவேண்டியதில்லை". சில நல்லவர்களைக்கூட பக்கத் தில் இருக்கும் பேர்வழிகள் வலுக்கட்டாயமாக வம்புக்குள் மாட்டி விடுவார்கள். கிடைக்கக்கூடாத பொருள் மீது அது "தீயது" எனத்தெரிந்தும் கூட ஆசைத் தீயை மூட்டி விடுவார் கள். துர்மந்திரிகளின் துர்ப்போதனையால் "அரசுகள் கூட ஆட்டம் கண்டுவிடுமல்லவா?
சிலர் தமது மனைவி, மக்கள் சொற்கேட்டுத் தகாத வழியில் வாழத் தலைப்படுவதுண்டு. "அங்கே பாருங்கள், அவர்கள் எவ்வளவு சீரும் சிறப்புமாக வாழுகின்றார்கள் நாங்கள் மட்டும் ஏன் துன்பமுடன் துவளவேண்டும்” என சதா நச்சரிக்க, வீட்டுத் தலைவனும் வேண்டாவெறுப்புடன் நியாயமற்ற ஒவ்வா வழியில் சென்று துன்புறுவது எல்லோரும் அறிந்துவரும் நிகழ்வுகள் தான்.
ஆசைகளை மிதமிஞ்சிக் கொள்ளாதவன், பூரண சுதந்தர உணர்வுடன், சந்தோஷமாகச் சீவிக்கின்றான். மனதில் பாரத்துடன் எந்நேரமும் கல்லைக் கட்டியபடியே
பறந்து திரிவது சுலபமானதுமல்ல, சரியான சீவிய முறைமையும் அல்லவேயல்ல. நாம் செய்யும் செயலுக்குப் பின்னரான எதிர் விளைவுகளைப்பற்றித் தெளிவில்லாமல் இருப்பதனால் பல தொல்லைகளுக்குள் அகப்படுவது முண்டு. எடுத்த எடுப்பிலேயே ஒரு விடயத்தில் ஈர்ப்பு உண்டாகி மனம் அதிலேயேலயித்துவிட்டால் அதன் சாதக, பாதகமானவை பற்றி எவர் எடுத்துச்சொன்னாலும் புரிவதே யில்லை. கால மாறுதல்கள் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் நாம் - 60
 
 
 
 
 

சுயச்சதாபர் ஆசைப்பட்டதை எல்லாமே நிறைவேற்றிக் கொள்ளாமல் செய்வதுமுண்டு. இவைகள் தோல்விகளும் இல்லை.
சூழ்நிலைக்கேற்ற வண்ணமே செய்தொழிலும் அமையவேண்டும். தொழில் பற்றிய ஞானம் இன்றி அதனுள் புகுந்துவிட முடியாது. படித்தவன்தான், தான் படித்த கல்வியைப் பிறருக்கு ஊட்டமுடியும். ஒன்றுமே தெரியாமல், தெரிந்து கொள்ளவே முயற்சி செய்யாமல், மனதின் வேகத்துடன் எம் செயலை ஆரம்பிக்க முடியுமா?
சின்னக் குடிலுக்குள் வாழ்ந்துகொண்டே மகிழ்வுடன் மிதமான வேகத்துடன் உலகின் சகல சவால்களையும் எதிர்கொண்டு எங்கள் தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யமுடியும். சிறிது காற்றின் வேகத்தில் அசைந்து தகர்ந்துவிடும் சிறுகூட்டின் நிலைகண்டு குருவிக்கூட்டங்கள் அலறி ஓடுவதில்லை. மாறான அவை அடுத்த நொடியி லேயே புத்தம் புது வீட்டைப் பொலிவுடன் கட்டி முடிக் கின்றன.
நல்ல வீட்டில் இருந்து கொண்ட எமக்கு மாளிகை தான் வீடாகவேண்டுமென அடங்காத ஆசைகளுடன் மென் மேலும் அவாவுறுகின்றார்கள். எத்தகைய மாடி வீட்டுச் சொந்தக் காரனையும் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எல்லோருமே திருப்திப்பட்டுக் கொள்வதுமில்லை. அது பிழை, இது பிழை எனச் சொல்லிச் சொல்லி தங்கள் இருப்பிடத்தின் அளவை, மென்மேலும் விஸ்தீரணமாக்கிக்
-61 -

Page 34
பருத்திபூர் படி).ஆயிற்றுதாரர் கொள்கின்றார்கள்.எத்தனை பேர் தமக்குப்படுக்க சின்னப் படுக்கை போதும் என எண்ணிக் கொள்கின்றார்கள்? வீடு முழுக்கச் சடப்பொருட்களைக் கொட்டிக்குவித்துச் சங்கடத் துடன் காற்றுக்கு இடவசதி கொடுக்காமல் நடந்து போக நிலம் வைக்காமல் வீட்டில் அழகைமட்டும் ரசித்து உள்ளத்தை எங்கெங்கே பறக்க வைத்துவிடுகின்றார்களே பரிதாபம் ஐயா!
ஆசைகளைக்கயிறு கொண்டு இழுத்துக்கட்டிவைக்க இயலாது. உயர்ந்த இலட்சியமும், ஆழ்ந்த அறிவும், உறுதியும் எம்மை எங்கள் சுயநிலையில் இருந்து நழுவி வைக்கச் செய்யாது. மேலும், எந்த விதத் துன்பமும், மன நோவும் தராதவரை எமக்குள் ஏற்படும் நியாயமான ஆசைகளால் எமக்கு எந்தப்பிரச்சனைகளும் ஏற்பட்டுவிடப் போவதுமில்லை. எங்கள் நிலையை உயர்த்தவல்ல ஆசைகளை நாம் வெறுத்து ஒதுக்கிடத் தேவையுமில்லை. பெறக்கூடிய, நல்லனவற்றைப் பெறுதல் சிறப்பு!
வாழ்க்கையில் வென்றுவிட என்ன சூட்சுமம் இருக் கின்றது என்று ஆய்ந்து, எம்மை நாமே குடைந்து, நெடும் காலம் காலத்தை அவமாகக் கழிக்க வேண்டிய தேவையு மில்லை. மிகச்சாதாரண எளிமை வாழ்வு வாழ்ந்து கொண்டாலே போதும் எல்லா இன்பங்களும், வெற்றிகளும் படிப்படியாக வந்துசேர்ந்தே தீரும்,
ஒரு துறவி ஒருவர் வெளிநாடு செல்வதற்காக
விமானத்தில் ஏறினார். அவரிடம் ஒரு துணிப்பொதி ஒன்று
62
 
 

சுயச்சாதாuர் மட்டும் அவரது தோளில் தொங்கியது எந்த விதமான பெரிய பொதிகளும் இல்லை. எவ்வித பதட்டமும் இன்றிச் சந்தோஷமாகத் தமது ஆசனத்தில் இருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்த பயணி அவரைக்கேட்டார். உங்களின் பொதிகள் இவ்வளவு மட்டும்தானா என்றார். "ஆமாம்” இவ்வளவு மட்டும் தான் என்றார். அதுசரி நீங்கள் யாரிடம் போகின்றீர்கள்?எங்கு தங்கப் போகின்றீர்கள்? யாரைத் தெரியும் என அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார்.
துறவியாரும் புன்னகைத்தபடியே"எனக்கு யாரையும் தெரியாது. தற்போது எனக்கு உங்களை மட்டும் தான் தெரியும். நான் செல்லும் நாட்டின் முதல் நண்பர் தற்போது நீங்கள் தான்" என்றார்.
பயணியோ அதிர்ந்துவிட்டார். என்ன தன்னம்பிக்கை யான துணிச்சலான, பற்றற்ற வாசகம் எதுவித சலனமும் இன்றி எல்லோரையும் விசுவாசிக்கும் இந்த ஆத்ம பலம் லேசுபட்டதா என்ன? எவ்வித ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் இன்றிச் சுதந்திரமாக ஜீவிப்பது துறவியின் மாந்தர்களுக்கு இயலுகின்ற ஒன்றா? சுவாமியாரின் அந்தப்பேச்சு, துணிவு அந்தப் பயணியை வசீகரித்துவிட்டது. துறவியாரை அவரே தம்முடன் கூட்டிச்சென்றார்.
மிதமிஞ்சிய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள
முடியாதவிடத்து மனிதர்க்கு தாழ்வுச்சிக்கல் நிலைகூடத்
தோன்றலாம். எல்லாம் என்னால் முடியாமல் போய் -63

Page 35
பருத்திபூர் பலதுயிர்வரர் விட்டதே என மனச்சோர்வுடன் வாழ்ந்து விடுவது துரதிஷ் டமான கருத்தினை உள்ளத்தில் வலுவூன்ற வைத்துவிடும். இந்தப் பலவீன நிலைக்கு நம்மை நாம் உட்படுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இல்லவேயில்லை.
பொறுமையுடன் கூடிய தொடர் முயற்சிகள், ! நம்பிக்கை உணர்வுகள், நியாயமான எதிர்பார்ப்புக்கள், ! கட்டுப்பாடான ஆசை அபிலாசைகளை வைத்துக் கொள்பவன் நிச்சயம் தன் தேவைகளை உருவாக்கவும் பெற்றுக்கொள்ளவும் உரிமை பெற்ற மனிதனாகின்றான். இந்த நிலை வரப்பெற்ற நிறைவுள்ள மனிதர்களே பூமியில் வாழும் சகலர்களுக்கும் உதாரண புருஷர்களுமாகி ன்றனர்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)
04-02-2007.
- 64
 

бићнigrlili
சுயபச்சாதாபம்
தமக்குள்ள பலவீனங்களைக் களைய முனைவதை விடுத்துத் தமக்காக எல்லோரும் பரிதாபப்பட வேண்டும் என எண்ணுதல் தாழ்வுச் சிக்கலுக்குட்படுத்திவிடும். உடலில் வலு இழப்பதைக் காட்டிலும் மனதளவில் தளர்வுறுதலே ஆபத்தானது. உடலும், மனமும் ஒன்றுக்கொன்று இயைபுபட்டமையினால், மனத்தினைத்திடமாக வைத்தால் தேக ஆரோக்கியமும் வலுப்படும். தமக்குத் தாமே இரக்கப்பட்டு சுயபச்சாதாப நிலைக் குட்படுதலை விடுத்தும், தங்களால் ஒன்றுமே முடியாது என்ற கோழைத்தனத்தைத் தகர்த்தும், இந்த முழுஉலகிற்கும் தம்மால் நல்லவைகளை இயற்றிட இயலும் என எண்ணுதலே சாலச் சிறந்தது.
தங்களைப் பற்றிய பரிதாப உணர்வுகள் மேலோங்கி இருப்பது அவர்களையே தாழ்வான நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களைப் பற்றிய அபிப்பிராயங்களை நாம்
உணர்ந்து கொள்ள வேண்டும். ஏதாவது எமக்குரிய
குறைகளைப் பலவீனங்களைக் களைவதை விடுத்து எனது -65

Page 36
பருத்திபூர் பல ஆயிரவநாதர் நிலைக்கு எவருமே இரங்குவார் இல்லையே என மனம் உருகிக் கரைந்து கொள்ளுதல் ஏற்புடையதல்ல.
தன்னை வலுமுட்டிக்கொள்வதை விடுத்துத்தன் மனத்தைத் தளர்வுறச்செய்வது தனக்குத் தானே இழைக் கின்ற பச்சைத் துரோகமுமாகும். எம்மைத் தவிர எமது ஆத்மாவிற்குப் பலம் சேர்ப்பவர்கள் யார் உளர்? திடமற்ற மன நிலையில் தனக்குத் தானே பரிதாபப்பட்டுக் கொண்டு திரிவது "சுய பச்சாதாபம்” என்கின்ற இழிநிலை என உணர்வோமாக!
இப்போது நான் கூறுகின்ற மாதிரியான பேர் வழிகளை அடிக்கடி சந்தித்திருப்பீர்கள். நான் கூறுகின்ற நபர் என்னை மட்டுமல்ல எவரைக் கண்டாலும் இவ்வித மாகத்தான் பேச்சை ஆரம்பிப்பார்.
"இதோ பாருங்கள் தம்பி இன்று காலையில் நான் எழுந்தேன். உடம்பு எல்லாமே ஒரே வலி எழுந்திருக்கவே முடியவில்லை. அப்படியிருந்தும் நான் அதிகாலை யிலேயே எனது வீட்டுவேலைகளை நானே செய்தேன். ஒருவருமே நித்திரை விட்டு எழும்பவுமில்லை. எல்லோரது வேலைகளையும் நான் தான் பார்த்தேன். எனக்குச் சுகயினம் வேறு, என்னை வருத்துகின்றது. சரி நான் எழும்பியதும் வேலைக்குப் போக வேண்டும் என்று ஒரே பதட்டம் வேறு, சொன்னால் நம்பமாட்டீர்கள். எனது மனைவி, பிள்ளைகள் தங்கள் விருப்பப்படியே எழும்பினார்
-66
 

கள். தங்கள் கருமங்களில் கண்ணாக இருந்தார்கள்.தேனீர் பருகினார்கள், காலை உணவை மனைவி தயாரித்தாள். என்னை ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. தேனீர் எனக்குத் தரப்படவில்லை. சரி காலை உணவையாவது சாப்பிடு என்று கேட்டார்களா, அதுவும் இல்லை. நான் மனதில் துயரைத் தாங்கியவாறு, வெறும் வயிற்றோடு அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். எனதுநிலைரொம்பவும் பரிதாபகரமானது. தம்பி. எனக்கு யார் ஆறுதல்.? என்னை எவர் கவனிக்கப் போகின்றார்கள். நான் நோயாளி, என் மீது இரக்கப்பட ஒருவருமேயில்லை" என்று சொல்லிக் கொண்டேபோனவர், சில வினாடிகளில் அழ ஆரம்பித்து விட்டார்.
சரி மேலே சொன்ன விடயத்தை ஆராய்வோம், குறிப்பிட்ட நபரின் செய்கை கூற்றுப்பற்றி என்ன கருது கின்றீர்கள்? இவரது கூற்று சரியோ, பிழையோ என்பது அல்ல பிரச்சினை. எதற்காகத் தன்னை ஒதுக்கப்பட்ட நபராகக்கருதுகின்றார் என்பதே கேள்வியாகும். இத்தகைய வர்களின் பேச்சு, செயல்களில் சில நியாயங்களும் இருக்கலாம். ஆனால் இப்படியாக வேண்டுமென்றே பிறரைத் தூற்றுவதற்காகவும், தமக்கு அநியாயம் நடப்பதாகக் காட்டித் தன் மீது பிறரின் அனுதாபங்களைத் தேடுகின்ற பேர்வழிகளும் உள்ளார்கள். சாதாரணமாக வீட்டில் சந்தர்ப்பவசத்தால் மனைவி மறந்துபோய் நீங்கள் தேனீர் ஏன்பருகவில்லை எனக்கேட்காதுவிட்டால், அதையே ஒரு பிரச்சனையாகக் கொள்வோரும் இருக்கின்றார்கள்.
- 67

Page 37
பருத்திபூர் அறையிலுருதத்
தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குவளையில் உள்ள தேனீரை மனைவி சொன்னால்தான் குடிப்பேன் என்று வீம்புகொள்வது என்ன நியாயம் ஐயா! சாதாரண மாக குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளுடன் கருமங் களை, சிரமங்களுடன் செய்து கொண்டிருக்கின்ற இல்லத் தலைவிகள் தமது மேலான பொறுப்புகளின் காரணமாகக் கணவனைச் சில சமயங்களில் கவனிக்காமல் விட்டு விடலாம்.
அதே போல், கணவன் என்பவனுக்கு எல்லா வேளையிலும் வேலைகள் சீராக இருக்காது. வேலைப்பளு காரணமாக மன அழுத்தங்களுடன் அவன் இயங்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம். அந்த நேரத்தில் அவன் தனது வீடு வீட்டுக் கருமங்களை கண்டு கொள்ளாமல் இருக்கலாம். இதன் பொருட்டு "ஐயோ இந்த மனுஷன் எங்களை வெறுத்துவிட்டார். என்னைக் கவனிப்பதே கிடையாது” என்றும் "வாழ்க்கையே வெறுத்து விட்டது என்றும்” மனைவி புலம்பித்தீர்க்கலாமா?
ஒருவர் தமது மனோநிலைக்கு எதிராக இருக்கின்றார்
என்கின்ற தேவையற்ற ஒரு காரணத்தைக் கண்டு பிடித்து மன உழைச்சலுக்கு ஆளாவதால் என்ன பயன் வந்து விடப்போகின்றது? சில விசித்திரமான நபர்கள் சும்மா "ஏதாவது வழியில் போகின்றவர்களை இடமறிந்து "ஒரு சோகக்கதையை, உண்மைச் சம்பவங்களை கூறுகின் றேன்” என்பார்கள். சரி சொல்லுங்கள் என்று கேட்டு - 68
 

சுயச்சாதாuர்
வைத்தால் ஏதேதோ சொல்லி, முடிவில் "இந்தப் பரிதாப சம்பவத்திற்குள்ளானவர், யார் என்று கேட்கத் தோன்ற வில்லையா? அவர் யார் என்று அறிந்தால் மேலும் நீங்கள் ஆச்சரியமும் வேதனையும் படுவீர்கள். அது நான் தான் ஐயா, இப்படி நான் படும் அவஸ்தைகளை வேறு ஒருவரும் படக்கூடாது ஐயா" என்று தன்னைத்தான் நொந்து கொள்வார்.
இதில் வேடிக்கை என்னவெனில் இத்தகைய சிலர் வாழ்க்கையில் ஏதாவது திடீர் திருப்பத்துடன், எதிர்பாராத வரவுகள் கிட்டினால் போதும் இவர்கள் மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டார்கள். ஆக தங்கள் துன்பங் களைப் பிறரிடம் லாவகரமாகச் சுமத்தி அவர்களிடம் அனுதாப வார்த்தைகளைக் கேட்டுப் பெற்றுத் தன் பாட்டிற்குப் போய்விடுவார்கள், இத்தகையவர்களின் பேச்சை அப்படியே நம்பி, நீங்கள் அவர்கள் கூறிய துரோகம் இழைத்தார்கள் என்று அவரால் சொல்லப்பட்ட நபர்களுடன் இவருக்காகப் பரிந்து பேசப்புறப்பட்டால் அதனால் ஏற்படும் எதிர் விளைவுகளோ சொல்லிமாளாது. மனிதர்களை இனம் காணுவதே பெரும் கலை!
"அந்த மனுஷன் பேச்சை நம்பி நீங்கள் வேறு வந்து விட்டீர்களே. நாங்கள் ஒருவருக்கும் அநியாயம் செய்து விடவில்லை". என்ற எதிர்ப் பாணங்களை நாம் தேவை யின்றித்தாங்கிக்கொள்ள வேண்டிவரும்.
- 69

Page 38
பருந்திபூர் அல. ஆயிரவநாதர்
தொடர்ந்து தங்களைப் பற்றிய பிரச்சனைகளையே பெரிதாக உருப்போட்டு அது தீர்க்க முடியாத ஒன்று எனச் சொல்லிச் சொல்லியே இதயம் தீய்ந்து போகின்றவர்கள், முடிவில் மிகவும் பலவீனமான நிலைக்கே தள்ளப்படுகின் றனர். மற்றவர்களிடம் இரக்கம் சம்பாதிக்க எண்ணி சுய பச்சாதாப உணர்வு மேலோங்கினால் முடிவில் மன அழுத்த நோய்க்கும் ஆளாகின்றனர். இத்தகைய தாழ்வுச் சிக்கலில் உட்படுகின்ற நபர்கள், சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக் கின்ற எளிய மனிதர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் நபராக உருமாறுவது கூட விரும்பத் தகாத சங்கதி அல்லவா?
"அதோ பாருங்கள் முன்பு இவன் என்ன நிலையில் இருந்தான், இன்று இவன் நிலையைப் பார்த்தீர்களா..? இன்று இந்த மனுஷன் என்னையே திரும்பிப் பார்க்கின் றான் இல்லை. எல்லாமே ஒரு காலம் ஐயா. இன்று நான் நிலைமை மாறி மற்றவன் சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டேனே. என்னை எவன் கண்டு கொள்ளப்போகின்றான்.
9
நான் ரொம்பப் பாவப்பட்ட ஜன்மம் ” என்று சொல்லிக்
கரைபவர்களை என்ன என்பது?
தாழ்வு மனப்பான்மை என்கின்ற தாழ்வுச்சிக்கல்
என்பது தனக்குள் மனப்பாதிப்பு என்றும் அதனில் இருந்து
தான் விடுபட வேண்டும் என்பதை அவர்கள் உணராமல்
விட்டால் அது எவ்வளவு கோரமாக நெஞ்சை நெருடிக்
கொண்டேயிருக்கும் என்பதை அறிய வேண்டும். எத்தகைய - 70.
 

சுயச்சதயம்
துயர்களையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் எல்லாமே சாதாரண நிகழ்வுகளே என எண்ணிச் செயல்படும் துணிச்சல் மிக்கவர்கள் தமது துன்பங்களைவிடுத்து கடமைகளைச் செய்வதிலேயே நேரத்தைச் செலவழிப்ப தால் எவ்வித மனத் தாக்குதல்களையும், தூக்கிப்பிடிக்காத நபராக வாழ்ந்து கொள்கின்றனர். "கடமை காலத்தை வெல்லும்"
பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற குண்டு வீச்சுச் சம்பவத்தில் தனது இளம் மனைவியைப் பறிகொடுத்த நண்பர் ஒருவர் தனது இரு சின்னஞ் சிறுசு களுடன் மறுமணம் செய்யாமலேயே பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். எந்த ஒரு உறவினர்களிடமும் தமது குழந்தைகளை ஒப்படைக்கவோ அவர்கள் மூலம் பராமரிக்கவோ மறுத்தும் விட்டார். இன்று தமது பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வரும் அவர் எந்த ஒரு தருணத்திலும், "எனக்கு எவர் வந்து உதவு வார்கள், நான் என்ன செய்வேன்" எனச்சொல்லி இரக்கத் தைப் பெற விரும்பியதேயில்லை.
எங்களால் எல்லாமே முடியும். பிறரிடம் நாம் உதவி
கேட்பது தவறு இல்லாவிட்டாலும்கூட நீண்ட காலத்தேவை
கள் எமக்கு இருக்கின்ற போது, எல்லா நேரங்களிலும்
தொடர்ந்து எப்படி உதவிகள் கேட்க முடியும்? தவிர
எல்லோருமே தங்கள் குடும்பம், வீடு என்று யந்திரகதியில்
இயங்கிக் கொண்டிருக்கும்போதுநாங்கள் போய் அதனைச் - 71.

Page 39
தத்தியூர்:அபிந்தைத் செய்து தாருங்கள். இவற்றை முடித்துத் தாருங்கள் எனக்கேட்பதும் சரியானதும் அல்ல.
மேலும் உதவிகள் கேட்டே பழகிப்போனால் நாம் சுயமாக இயங்காத நிலையும் தோன்றிவிடலாம். சுய மரியாதை உணர்வுமிக்கவர்கள் சுயபச்சாதாபம் கொண்ட மனிதர்களாக இருக்கமாட்டார்கள். "நாம் எதற்கு எங்கள் கவலைகளை அள்ளிப் பிறர் முன் கொட்ட வேண்டும்" என்றுதான் எண்ணுவார்கள்.
சிலருடன் பேசிப்பாருங்கள் சற்று வித்தியாசமான மனிதர்களாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம். விடயம் இதுதான், "உங்களைப் பார்த்தால் ரொம்பப் பரிதாபமாக இருக்கின்றது. கடவுள் ஏன் தான் உங்களை வதைக்கின் றாரோ தெரியவில்லை. உங்களுக்காக நான் மிகுந்த அனுதாபப்படுகின்றேன்" என்று ஏதாவது பெரிய பிரச்சனைகள் காரணமாக அல்லல்படும் நபரிடம் உண்மையான கரிசனையுடனும் இப்படிப்பேசினால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு கோபாவேஷத்துடன் தமது கோலத்தை மாற்றியே விடுவார்.
"நீங்கள் யார் எண்பொருட்டு அனுதாபப்படல் வேண்டும்? எனக்கு என்ன நடந்துவிட்டதாக இங்கு வந்து கதைபேசிக் கொண்டிருக்கின்றீர்கள். எனக்கு என்மீது அனுதாபம் காட்டுபவர்களைப் பிடிக்காது. எனது பிரச்சனை களை நானே தீர்த்துக் கொள்கின்றேன். எனவே தயவுகூர்ந்து என்னிடம் வந்து இப்படிப் பேச வேண்டாம்".
-72.
 

சுயசேதார். இவ்வாறு இவர்கள் பதில் சொன்னால் கேட்க மனசுக் குச் சங்கடமாகத்தான் இருக்கும். சிலரது சுபாவமே, மற்றவர் தயவினை அறவே நாடாமலும் அல்லது பிறர் உபதேசங்களைக் கேட்க விரும்பாமலும் இருக்கலாம். மிகவும் கஷ்டப்பட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் ஏழைகள் கூட சுயமரியாதையுடன் பிறரிடம் தங்கி வாழ விரும்பாத குணாம்சங்களை இறுகப் பற்றியே வாழ்கின் றார்கள். எங்கள் பிள்ளைகள் நாங்களே வளர்ப்போம், நாங்கள் எதற்கும் கை ஏந்தமாட்டோம் என்கின்ற அதிதீவிர வைராக்கிய சிந்தையை நாம் நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியுமா?
ஏழைகள் என்போர் தாழ்ந்தோர் அல்லர். பணவசதி, செல்வம் குறைந்தோரை, அவர்தம் மனதில் ஏழைகள் எனச் சுட்டிக்காட்டி அத்தகையதோர் எண்ணத்தை ஏற்படுத்தலே தவறான செய்கையாகும். சாதாரண மன நிலையில் நாம் செம்மையாகச் சிறப்பாக தர்மநெறியில் வாழ்ந்து வருவதை விட வேறெந்த செல்வம் வந்தாலும் கிடைத்தற்கரியநிம்மதி ப்பெரும் பேறு வேறு உண்டா? சொல்லுங்கள்!
பத்துப் பேருக்கு முன்னால் "அதோ போகின்றாரே
அந்த மனிதர் ரொம்பவும் கஷ்டப்படுகின்றார். இதற்கு
முன்னர் இவர் மிகவும் வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தார்!
என்று சொன்னால் அதைக்கேட்கும் சம்பந்தப்பட்ட நபர்
மனம் உச்சி குளிர்ந்து விடாது. ஆனால் இக் கூற்றை
விரும்பும் மனிதர்கள் சிலர் இருக்கலாம். ஒருவர் நிலை -73

Page 40
மருத்திபூர் 00.0விரவநாதர் களைப் பலர் முன் காட்டிப் பேசுவதை அநேகர் விரும்பு வதில்லை. சிலசமயம் இத்தகைய பேச்சுக்களால் சாதாரண நிலையில் உள்ள மனிதர்களும், இதயம் நலிந்து தங்கள் மீதே சுயபச்சாதாப நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலைக் கும் ஆட்படலாம்.
ஒரு மனிதனை சுயபச்சாதாப நிலைக்கு, இட்டுச் செல்லும் வகையில் "நான் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு வந்து விட்டேனே" என அவனை எண்ண வைக்கும் கேவல நினைப்புகளுக்கு உண்டாக்கும் காரியங்களை எவர் செய்யப் புகுந்தாலும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது எமது கட்டாய சமூகப்பொறுப்பாகும். ஒருவனைச் சீண்டி அவர்தம் நெஞ்சைக் குட்டையாகக் குழப்புவது கூடச்சிலருக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கின்றது.
தன்னையே கடுகளவும் நம்பாமல் மாற்றாரிடம் போய் தமது துன்பங்களை விஸ்தாரமாகச் சொல்வதனால் சுயபச்சாதாபம் எனும் கொடியதாழ்வுச்சிக்கலில் சிக்குண்ட வர்கள் இறுதியில் தங்களில் இருந்தே விலகி துன்பங்களை மட்டும் துணை எனக் கருதும் துர்ப்பாக்கிவான்களாகவே மாறிவிடுகின்றனர். ஏமாற்றம், தோல்வி என்பவைகள் எல்லாமே வந்து செல்கின்ற நிகழ்வுகள் என்பதை எவர் சொன்னாலும் கேட்காத இவர்கள் தீவிர மனப் போராட்டங் களால், தங்கள் உழைப்பை மறந்து தேவையற்ற போலித் தனமான உரைகளை அள்ளி வீசுவதுடன் சமூகத்தையே
ம74.
 

சுயச்சாதாuம்
ஒரு எதிரியைப் பார்ப்பது போன்ற நிலைக்கும் தங்களை ஆக்கிக் கொள்வதுமுண்டு.
தோல்விகளை எதிர்த்துப் போராடாமல் வாழ்வது தான் வெட்கக் கேடானதே ஒழிய, மனிதனுக்குத் தோல்விகள் வருவது என்பது ஒரு வெட்கத்திற்குரியதன்று. சின்னச் சின்னத் தோல்விகளை இரைமீட்டு வாழ்வது மனிதர்க்கு அழகா என்ன? தமது வலிமையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தாங்களே ஈடுபட முயல்வது சுயதுரோக சிந்தனையே என்பதை அறியாமல் போதல் விபரீத மானதேயாம்.
தோல்வியின் வடுக்களை தாங்கி எடுக்கும் ஒவ்வொரு கருமங்களுக்காகத் தொடுக்கும் முன்னேற்றங்களை நோக்கி எடுத்த பணியை நன்றாக முடிப்பவனே சாதனைச் சிகரத்தை எட்டிப்பிடிக்கும் முழுமையான மனிதனாவான்.
கடும் முயற்சியுடன் உழைப்பவனுக்குத் துன்பப் படவே நேரம் இல்லை என்பார்கள். தூய்மையினை மனதில் நிறைத்துக் கொள்ளும் போது துன்பம் எல்லாமே சாஸ் வதமானது என்ற நிலை அற்றுத் துணிச்சல், தன்னம்பிக்கை உணர்வுகளே மேலோங்குகின்றது. பதட்டமும், சலனமும், தன்நிலையை உணராமல் செய்கின்றதே என்கின்ற நிலையை உணர்ந்து இந்த நோய்களில் இருந்து தாம் விடுபட்டே தீருதல் வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தாமல் விட்டால், மனநிலை பாதித்தவராக மாறும் நிலை உருவாகத்தான் வேண்டுமா?
- 75

Page 41
பருத்திழ் 99.9ர்ரர்
சதா ஒருவன் தேவையில்லாமல் பஞ்சப் பாட்டுப் பாடுவதைக் கேட்க யாருக்குத்தான் மனம் வரும்? எம்மால் நியாயபூர்வமாக செவிமடுத்துக்கேட்க வேண்டிய அப்பாவிச் சீவன்களின் வேதனைகள் ஏராளமுண்டு. எவர்க்கும் சொல்லாமலேயே நெஞ்சில் உள்ளேயே அவர்கள் புதைத்து வெம்பி, நொந்து போகின்றார்கள் இவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள்.
மனிதராகப் பிறந்த நாம் இவர்கள் பொருட்டு கேட்காமலேயே எமது உள்ளத்தாலும், உடலாலும், பொருளாலும் உதவிகளைக் கட்டாயமாகச் செய்தே தீருதல் வேண்டும். "பாத்திரம் அறிந்து பிச்சையோடு” என்பார்கள். உள்ளபடி வருந்தும் எந்த உயிர்களையும் இரக்க உணர் வுடன் நோக்குதலே கருணையுடைய கடவுளின் இயல்புமாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 24-12-2007
-76
 

ஜீவகாருண்யம்
நாம் உயிர்களை மனப்பூர்வமாக நேசிக்கும்போது எந்த உயிர்களுமே எம்மைக்கண்டு அஞ்சுவதில்லை. மனதில் வக்கிரபுத்தி கெட்ட நோக் உண்டானால் மனிதன், மனிதன் முன் செல்ல அச்சப்படுவான். ஒரு மிருகத்தை வதைத்தால் அதுபோடும் அவலச் சத்தம் எம் ஆத்மாை வலுவிழக்கச் செய்யும். மனிதரின் அடாத செயல்களால் மிருகங்கள், பறவைகள் துடிதுடித்து இறக்கும் போது அவை சும்மா சாவதில்லை. வேதனையுடன் மனிதனைச் சபித்தே பூமியில் இருந்து விடைபெறும்.
சகல ஜீவன்களிடத்தே கருணை கொள்வது பரிபூர்ண நிறைவுள்ள இறைவனின் இயல்பேயாகும். மனிதர்கள், மனிதர்கள் மேல் வைக்கும் அன்பு, பரிவு, பாசம் மட்டும் புதிதானதோ, வியப்பானதோ, மேலான பாராட்டுதலுக்குரியதென்று நாம் பெருமை பேசிடல் முடியாது. ஏன் எனில் நாம் காட்டும் அன்பு என்பதே மிக இயல்பான வெளிப்பாடுதான். நாம் எல்லோருமே ஒரே இனமான மனித இனம்
- 77

Page 42
பருத்திபூர் 04ல. ஆயிரவநாதர்
எனவே, எமது தேவைகளுக்காகவும் சிலவேளை
பொது நோக்கிற்காகவும் ஒருவர் மீது ஒருவர் கரிசனை காட்டுதல் தமக்கான உரிமையாகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். ஆனால் எல்லா உயிர்களும் ஒரே சமனானது.அவைகளின் உடலுக்கும் உணர்வுகள் உண்டு. பசி உண்டு, தாகம் உண்டு என எத்தனை பேர் உளமார எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்?
வீதியில் போகும் நாய்க்கு "ஐயோ. அதற்குப் பசி" எடுக்குமே யார் வந்து உணவளிக்கப்போகின்றார்கள்"எனக் கவலைப்படுபவர்கள் யார்? அல்லது வானத்தில் பறக்கும் காக்கை குருவிகளின் உணவுப்பிரச்சினை பற்றி நாம் கவலைப்பட்டு அவைகளில் ஜீவாதாரப் பிரச்சனைகள் பற்றி விவாதித்துக் கொண்டா இருக்கின்றோம்?
நாம் நினைப்பது எல்லாமே மனிதகுலம் பற்றியது தான். எப்படியாவது நாம் போஷாக்கு மிகு சுகதேகியாக உல்லாசமாக வாழ்ந்துவிடல் வேண்டும் என்பதேயாம். அதன் பொருட்டு எந்தப் பாவ கருமங்கள் செய்தாலுமே ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை எனவும் எண்ணு வோரும் உளர்.
உணவிற்காக மிருகங்களை கடல் வாழ் உயிர்களை அநாவசியமாகத் தாவரங்களைக்கூட வெட்டி ஒழிக்க மனிதன் தயங்குவதேயில்லை. உயிரினங்களில் பரிவு காட்டுதல் என்பது எமது ஆத்மாவிற்கு நாம் அளிக்கின்ற - 78
 

சுயச்சாதாuர் நல் வெகுமதியும் அதனூடாக நாமே பெற்றுக்கொள்கின்ற மன நிம்மதியுமாகும்.
எனவே நாம் உயிர்களிடத்தே காட்டும் இரக்கத்தின் மூலமான ஈகையானது செலவினம் அல்ல. அவைகள் மூலம் நாம் இறைவனால் வழங்கப்படும். ஆசீர்வாதமான அன்பளிப்புக்களையும் களிப்பினையும் மிக இலகுவாகப் பெற்று விடுகின்றோம்.
உலகில் உள்ள அனைத்துமே தனக்காகவே என மனிதன் தப்புக்கணக்குப் போட்டுவிடுகின்றான். இந்தச் சுயநலமான போக்கினால், கருணை, பரிவு என்பதனைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மறந்துபோய் விடுகின்றான்.
உல்லாசமாக ஒடித்திரியும் புள்ளிமான்களை முயல்களைப் பார்த்து ரசிப்பதை விடுத்து அவைகளை அடித்துச் சுவைத்துச் சாப்பிட்டால் என்ன என எண்ணுபவ ர்களும் உள்ளனர். வானில் பறக்கும் பட்சிகள் அவை காட்டும் வித்தைகளை எத்தனைபேர் ரசிக்கின்றார்கள்? மிக வேதனையான விடயத்தைக் கூறவேண்டும்.
பலநூறு மைல்களுக்கு அப்பால் இருந்து நல்ல
சுவாத்தியம் தேடிவரும் பறவையினங்கள் இங்குள்ள
சுற்றாடல்களின் மாசுபாட்டினால் மடிந்து போவதுமுண்டு.
சுற்றாடல் தற்போது சீர் அற்றுப் போய்விட்டது. அத்துடன்
இவை போதாதற்கு சில அல்பமான மனிதப் பிரகிருதிகள் - 79

Page 43
பருத்திபூர் 04ல. ஆயிரவருதல் பட்சிகளைக்கூட விட்டு விடுவதாக இல்லை. பட்சிகள்
அதிகமாக உள்ள இடங்களில் கண்ணி வைத்துப்பிடித்தும் வதம் செய்து விடுகின்றார்கள். வெளவால் இனங்களை மரங்களுக்கிடையே வலைபோட்டுப் பிடித்து வேட்டையா டுவதை விருப்பமான கொடுரப் பொழுதாக செய்கிறார்கள். அருகிவரும் பிராணிகளை மென்மேலும் கொன்றொழித்து விடுகின்றார்கள். உடும்பு போன்ற ஊர்வனப் பிராணிகளைக் கொல்வது சட்டவிரோதமாகும். இருப்பினும் இவைகளை வீதியோரம், உயிருடன்ேயே கட்டிவைத்து விற்பனை செய்வதை நான் கண்டிருக்கின்றேன்.
ஜீவகாருண்யம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக் கின்றோம். ஆனால் பறவைகளைக் கூண்டில் அடைத்து வைக்கும் குரூரச் செயலைக் கண்டும் காணாமல் இருக்கின் றோம்.
தொட்டியில் வண்ண வண்ணமான மீன்களை வளர்த்து அழகு பார்க்கின்றார்கள். அவைகளில் பல தக்க உணவு, போஷாக்கு, வளி, தூய்மையான நீர் இன்றி இறந்து போவதும் சர்வ சாதாரணமான விஷயம் தவிர, செயற்கை உணவினை வலுக்கட்டாயமாக போடுகின்றார்கள். தமது இயற்கையான சுதந்திரமான வாழ்வை வேறு உயிரினங்கள் மூலம் எவராவது சீரழிக்க விரும்பும் மனிதர்கள் விரும்பு
வார்களா?
-80
 

சுயச்சாதாuர் கடலில் சர்வ சுதந்திரமாக நீந்தித் திரியும் இந்த அழகுமிக்க ஜீவன்களைக் கட்டாயமாக அக்கிரமானவன் முறை வழியில் தொட்டில் சிறையில் அடைத்து வேதனைப் படுத்தி அழிப்பது என்ன நியாயம் ஐயா!
இயற்கையை ரசித்து உயிரினங்களைப் பார்த்து, அதன் வனப்புக்களில் லயித்து, கவிதைகள் பல புனைந்த அற்புதக் கவிஞரான ரவீந்திரநாத்தாகூர் அவர்கள் தோட்டத்தில் பறவைகளைப் பார்த்துப் பூரித்துப்போய் தம்மை மறந்து நிற்பாராம். அவரது கரத்தில் பட்சிகள் எந்தவித அச்சமும் இன்றி வந்து உட்காருமாம். தோளில், கரத்தில் முத்தமிடும் அவைகளைக் கருணைக்கண் கொண்டு நோக்குவாராம்.
நாம் உயிர்களை மனப்பூர்வமாக நேசிக்கும் போது எந்த உயிருமே எம்மைக்கண்டு அஞ்சுவதில்லை. மனதில் வக்கிரபுத்தி கெட்ட நோக்கு உண்டானால் மனிதன், மனிதன் முன் செல்லவே அச்சப்படுவான்.
இன்று உலகில் பல இடங்களில் ஆவினங்களுக்கு நோய் கண்டு விட்டதாகக்கூறி அவைகளைக் கொன்று புதைத்து விடுவதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அண்மையில் பத்திரிகைகளில் இவைகளின்
பரிதாபகரமான கொடுர முடிவுகளைப் படித்திருப்பீர்கள்.பல
இலட்சக்கணக்கான கோழிகளை நோய்க் காவிகளாக -81 -

Page 44
பருத்தில் பல. வயிறுகுந்தர் உறுதிப்படுத்தி இல்லாதொழித்து விட்டனர். இந்தக் கோழியினத்திற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து இவைகள் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப் போகின்றனவா என்ன?
உண்மையில் ஒரு ஆய்வாளரின் கருத்து எம்மைச் சிந்திக்க வைக்கின்றன. பறவைகள் மூலம் மிருகங்கள் மூலம் நோய்பரவுவது உண்மைதான். எனினும் இவை களுக்கு நோய்கள் உடன் பரவுவதற்கான உண்மைக் காரணம் என்ன? அதனை முதற்கண் உணரல் வேண்டும்.
பிராணிகளுக்கு அபரிமிதமாக உடல் பருமனை வளர்ச்சியடையச்செய்ய இயற்கை உணவுகள் அளிக்கப் படுவதில்லை. எமது ஊர்களில், கிராமத்தில் கோழிகள், வீட்டு மிருகங்கள் இயற்கை உணவைத் தாமே ஒடியாடிச் சென்று தேடிக் கொள்கின்றன.
ஆனால் கோழிப் பண்ணைகளில் கூண்டில் வளர்க் கப்படும் கோழிகள் ஒடித்திரிய அனுமதிக்கின்றார்களா? சிறைக் கைதிகள் போல் அவைகளை அடைத்துவைத்து ஏதேதோ இரசாயனம் கலந்து உணவையூட்டி அவைகளின் எடையைக் கூட்டும் நடவடிக்கைகளில் முனைப்பாக இருக்கின்றார்கள். ஆடு, மாடுகளுக்கும் இதே கதி தான்!.
- 82 -
 

சுயச்சாதruம்
பண்ணைகளில் வளர்க்கப்படும் உயிரினங்கள் தவறு செய்யாதவன் அனுபவிக்கும் கோரத் தண்டனையை அனுபவிப்பதுபோல்,அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
இயற்கையின் வனப்புக்களை அவைகளுக்குக் காட்ட மனிதன் அனுமதிப்பதில்லை. சும்மாதிரியும் இவை களை மனிதன் உயிரின்ம் போல் மதிப்பதுமில்லை. காசு சம்பாதித்துத் தரும் யந்திரமாகவே பார்க்கின்றான். மனித னுக்கு மட்டுமா உணர்வு உண்டு? இல்லவேயில்லை. தாவர ங்களுக்கும் உணர்வு உண்டு, என்கின்ற விடயம் தெரியாத செய்தியல்ல.
இந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் சரியான பராமரிப்பு இன்மையும் தவறான உணவுப்பழக்க வழக்கங் கள், இரசாயனப் பாதிப்புக் காரணிகளால் இவை விரைவில் தொற்று நோய்க்கு ஆளாகிவிடுகின்றன. இந்த உபாதை களை உருவாக்கிய மனிதன் தன் சுய நலத்தி னையே முதன்மைப்படுத்தி தன்னைக்காப்பாற்ற வேறு வழியின்றி இவைகளைக் கொன்றொழிக்கின்றான்.
முற்காலத்தில் எம்மவர்கள் நாக சாபம், பட்சிகளின் சாபம் பற்றி எமக்குச்சொல்லுவார்கள். நாம் ஜீவன்களுக்கு இம்சை செய்தால் அவை எமக்குச் சாபம் இட்டு விடுமாம்.
உண்மைதான் இன்று மனிதன், உயிரினங்களுக்
குச் செய்யும் இம்சைகளால் அவை அழிந்து கொண்டிருக்
கின்றன. அவைகள் தம்மை மனிதர்கள் அழிப்பதனை - 83

Page 45
பருத்திபூர் பல. அவிழ்வருதேஷ் உணர்ந்து கொள்கின்றன. ஒரு தும்பியை வதை செய்தால் அதற்குத் துன்பம் விளையாதா?
வழியில் சும்மா போகும் பாம்பை அடித்தால் அது சரியா? அதன் உள் உணர்வுகள், "செயல் தன்மை" அற்றது அல்ல!. பறவைகளைக் கல்லால் அடித்தால் அவை எம்மைப் பாராட்டமாட்டாது. தமது நுண்ணிய உணர்வுக ளால் வெறுப்புடன் எம்மை நோக்கும். ஒரு மிருகத்தைக் காரணமின்றி வதைத்தால் அது போடும் அவலச் சத்தம் எம் ஆத்மாவினை வலு இழக்கச் செய்யும். மிருகங்கள் பறவைகள் துடிதுடித்து இறக்கும்போது அவை சும்மா சாவது இல்லை. வேதனையுடன் மனிதனைச் சபித்தே பூமியில் இருந்து விடைபெறும்.
இந்த ஒட்டு மொத்த அவலச் சத்தங்கள் துடிதுடிப் புக்கள், கண்ணிர் வெளிப்பாடுகள், இதயத்தின் படபடப்பு டனான வேகத்தின் பின்னரான உயிர் அடக்கம், வெறுப் பான பிரிகைகள், உலகையே உறையச் செய்யும் ஆற்றல் மிக்கன.
ஒரு பறவை மரண பயத்துடன் தன் சிறகுகளைப் படபட என அடித்து ஒருவனால் அதன் உயிர் இழக்கப்படு மேயானால் அது பரிதாபகரமாக வெளிப்படுத்தும் உணர்வு அலைகள் உயிர் அலைகளாக உலகைச் சூழ்ந்து நின்று வருத்தி விடும்.
-84 -
 

சுயச்சாதாuர்
ஜீவகாருண்யம் நேயப்பாடு இல்லாத வாழ்வு ஒரு வாழ்வு ஆகுமா? ஒரு வியப்பூட்டும் விஷயத்தினைச் சொல் கின்றேன் கேளுங்கள்,
எனது ஆசிரியர் ஒருவர் இக்கதையினை ஒரு புத்தி மதிக்கான கதைபோலச் சொன்னார். ஆனால் இது உண்மைக்கதை. ஒருவருக்கு வேட்டையாடுவதில் ரொம்பவும் இஷ்டம், அதுவும் குரங்கு வேட்டையாடுவதில் அலாதிப்பிரியம். குரங்குகள் காட்டில் மிகவும் சர்வ சாதாரணமாகத் திரிவதனால் அவைகளைக் கொல்வது மிக எளிதான காரியமாகும். ஆனால் இவர் குரங்குகளை மட்டும் அதிகமாகக் கொல்வது வியப்பான விஷயம் தான். குரங்குகளைக்கொன்றாலும் அவைகளைப்புசிக்கமுடியாது. ஆனாலும் சில கடைகளில் குரங்கு இறைச்சியைக் கூடக் சாதாரண மாமிசங்களுடன் கலந்து சமைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்த நபர் தேவையின்றிக் குரங்குகளை வேட்டையாடிக் குரூர திருப்தியினை அடைந்தார். ஆனால் நடந்தது என்ன?
இவர் திருமணமானவுடன் குழந்தைகளைப் பெற்றார். என்ன அதிசயம்? எல்லாப் பிள்ளைகளுமே சாட்சாத் குரங்கு வடிவுடனேயே பிறந்தன. அதுமட்டுல்ல குழந்தைகள் வளர்ந்த போது அவைகளின் தோற்றம், செயல்பாடுகளைக் கண்ட மற்றக் குழந்தைகள், அவர்களை வேடிக்கைப் பொருளாகக்கண்டு கேலி செய்தும், இம்சை செய்தும் கொண்டனர். இச்செயல்களைக் கண்டால் பெற்ற வர்கள் மனம் எவ்வளவு பாடுபடும் தெரியுமா? "முற்பகல்
- 85

Page 46
பருத்திபூர் பல. ஆயிரவநாதர் செய்யின் பிற்பகல் விளையும்” என்பர். இவை யெல்லாம் அறிந்தும் மனிதர்கள் திருந்துகின்றார்களா? இதே வேளை நெஞ்சை நெகிழச்செய்யும் இன்னும் ஒரு தகவல் இதோ.
தொடர்மாடி வீட்டில் வசிக்கும் அம்மையார் சொன்ன தகவல் இது. நம்பவே முடியாத நல்ல தகவல். தங்கள் வீட்டின் பக்கத்தில் அடிக்கடி நடக்கும் சம்பவம் என்றும் சொன்னார்.
தொடர்மாடி வளவை அண்மித்து இருக்கும் மரத் தடியில் வெள்ளை வர்ண மோட்டார் வாகனம் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு தடவை வந்து போவதுண்டு இங்கு ஏராள மான கட்டாக்காலி நாய்களும், பூனைகளும் உண்டு. இவை களுக்கு வேண்டிய உணவினை இவைகள் அங்கும் இங்கும் அலைந்து தேடிக் கொள்ளும். மேலே சொல்லப்பட்ட மோட்டார் வாகனம் குறிப்பிட்ட மரத்தடியில் வந்ததும் வாகனத்தில் உள்ள பெரியவர் வாகன ஒலியை எழுப்புவார். வாகன இயந்திர ஒலியையும், வாகன (ஹோர்ன்) ஒலியை யும் கேட்டுப்பழகிய நாய்களும், பூனைகளும் குறித்த வாகனத்தினை நோக்கி ஓடிவரும்.
வாகனத்தில் இருந்து பெரியவர் ஒருவர் தமது மனைவியுடன் இறங்கி வருவார். வரும்போதே பெரிய பெட்டியையும் எடுத்து இறக்குவார். பெட்டியினுள் பொதி செய்த உணவுப் பெட்டிகளைத் திறந்து தம்மைச் சூழ்ந்த அனைத்துநாய்களுக்கும், பூனைகளுக்கும் தனித்தனியாக
- 86
 

சுயச்சாதாuர் எடுத்து வைப்பார்கள். அவைகள், அவைகளை ஆர்வமுடன் சாப்பிடும். இக்காட்சியை, மிகவும் ரசனையுடன் நெகிழ்ச்சியு டன் தம்பதியினர் பார்த்து மகிழ்வர்.
அத்துடன் அவைகளுக்கான நீரை பாத்திரங்க ளுக்குள் இட்டு வைப்பார்கள். இவைகள் சாப்பிட்டு முடிந்த தும், அவர்கள் அங்கேயே உட்கார்ந்து இருந்து அவைகளை அன்புமீதூர தடவி அணைத்து மகிழ்வார்கள். அவர்களுடன் பழக்கப்பட்ட அந்த நாய்களை, பூனைகளை, எவ்வித அருவருப்பின்றி தம் தோள்மீது சாய்த்துத் தடவி ஆறுதல் அளிப்பது ஒரு பாசமிகு பெற்றோர் நடந்து கொள்வது போலிருக்கும். அவைகளும் சர்வ சுதந்திரத்துடன் பிள்ளை கள் போல் பழகிக் கொள்ளும். இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன வெனில் குறித்த வாகனம் போல் சில வேளை வேறு ஏதாவது வாகனம் வந்தால் அவை மரத் தடியில் வந்து தாம் எதிர்பார்த வாகனம் அது அல்ல, அந்த ஒலி தங்களின் பாசத்திற்குரியவர்களின் வாகனம் அல்ல எனத் தெரிந்து கொண்டால் ஓடி மறைந்தும் விடும்.
இந்தச் சம்பவங்கள் மூலம் உங்களுக்கு தெரியப் படுத்தும் உண்மை என்ன? கொலைகளும், வன்முறை சம்பவங்களும் நடக்கின்ற உலகில், எந்தவித எதிர்பார்ப்பு களுமின்றி ஜீவகாருண்ய மேலீட்டினால் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்கின்ற கருணைமிகு அரும் பெரும் செயல் அல்லவோ இது பிரதிபலன் கருதியே செயல்களைச் செய்யும் மனிதர்கள் நல்லவை
-87 -

Page 47
கருத்திழ் 00. அர்ஷரன் செய்யாது விடினும் துர் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதுவே மேலான செயல் அல்லவா? பொருள் தேடும் இவ்வுலகு அருள் தேடமுயல வேண்டும்.
பால் பெறுவதற்காகப் பசுவை வளர்க்கின்றான். முட்டையைப் பெறுவதற்காகவும், இறைச்சியைப் பெறுவதற் காகவும், கோழியை வளர்க்கின்றான். நோய்தீர்க்கும் விஷம் பெறுவதற்காகப் பாம்பைக்கூட வளர்க்கின்றான். மனிதன் ஒரு எதிர்பார்ப்புடனேயே இவைகளை வளர்க்கின்றான். எந்த வித பயனையும் எதிர்பார்க்காது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மேற் சொல்லப்பட்ட தம்பதியர் போல் நாமும் உணவழித்து அன்பு காட்டுதல் என்பது சொல்ல முடியாத அளப்பரிய அறத்தொண்டு. கண்டு கொள்க!
எமது உழைப்பு சகல உயிர்களுக்குமே பயன் அளிப்பதாக!"காக்கைகளுக்கும் உணவு கொடு", என்பதற் காக சனி விரத காலங்களில் இந்த உண்மையினை வலியுறுத்துவதற்காக இந்துக்கள் தாம் உண்பதற்கு முன்னரே, அவைகளைச் சிரமப்பட்டு அழைத்து உணவு அளிப்பார்கள்.
உணவு உண்ணமுன் சிறு பிடியை எடுத்து பசுவிற்கோ, பட்சிகளுக்கோ கொடுக்கும் காட்சியை இன்ன மும் கிராமங்களில் கண்டு கொள்ளலாம். எறும்பிற்கும் உணவு அளிப்பதற்காக அரிசிமா கோலம் இடுகின்றார்கள்.
- 88
 

சுயச்சாதாபம்
எறும்புகள் வரிசையாகப்போகும் போது அவை களை மதிக்காமல் ஜாக்கிரதையாகச் செல்பவர்களும் உளர். ஒடித்திரியும் அணிலை, ஓணானை அடித்துப்பார்த்து வேடிக்கையாகச் சிரித்து மகிழ்பவர்களும் இருக்கின்றார்கள்.
ஒரு தடவை பெற்றாருக்குத் தெரியாமல் தமது குல வழக்கிற்கு மாறாக ஆட்டுக்கறி உணவை மகாத்மா காந்தியடிகள் உண்டாராம். ஆனால் இரவில் கனவில் தனது, வயிற்றினுள் ஆடு ஒன்று ஈனஸ்வரத்தில் கத்துவது போல் உணர்ந்ததாகச் சொல்லியிருக்கின்றார். உயிர் களுக்கு இம்சை செய்வது. தன் உயிர்க்கும் இம்சை செய்வது போல என எண்ணுக!
எம்மைச்சுற்றியுள்ள உயிர்கள் அனைத்தும் களிப்புடன் உலவி வரும் போது இவை அனைத்தும் இறை வன் படைப்புகளே என உளமார எண்ணுதல் நல்லது.
இறைவனே சகல உயிர்களையும் படைத்தான். எனவே உயிர்களை ஒரே உறவு முறையாகவே நாம் கொள்ளல் வேண்டும். ஒருவன் ஒருத்தியைத் திருமணம் புரியும்போது, பிறக்கும் குழந்தைகள் உறவுமுறைகளைச் சொல்கின்றன. தாய், தகப்பனுக்குக் குழந்தைகள் எல்லாமே ஒரே வித்தியாசம் அற்ற ஒரே உறவுமுறைகள் தானே.
எனவே
எம்மைப் படைத்து உருவாக்கிய இறையோன் பெற்ற குழந்தைகள் மனிதன், விலங்கு, தாவரம், பட்சிகள் எல்லாமேயாகும். எனவே நியாயப்படி இவை அனைத்துமே
- 89

Page 48
பருத்திழ் 04ல. ஆயிரலுடிதர் ஏக இறைவனின் சிருஷ்டிகள் என்பதனால் எல்லாமே எல்லோர்க்கும் உறவாய் அமைந்துவிட்டன. இக் கருத்தி னை நாம் உளமார ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
சிருஷ்டிக்கும் போது உருவங்கள், அமைப்புகள், குண இயல்புகள் வெவ்வேறான போதும் படைத்தவன் ஒருவன் தானே? எல்லா உண்மையையும் அறிந்து கொண்டபோதும் நாம் செயலளவில் குணம் மாறி, குற்றங்கள் செய்வதும் ஏன்? ஆச்சரியமாக இல்லையா? ஜீவன்கள் அனைத்தினையும் சம நோக்குடன் நோக்க நாம் எம்மைப் பக்குவப்படுத்துவோம். ஜீவன்களை ஒன்றாக மதிக்கும் தன்மை ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் உரிய இயல்பு எனச்சிலர் சொல்லலாம்.
ஆனால் உயிர்க்கு இரங்குதல் இயல்பான மனித சுபாவமாக உருவாக வேண்டும். "உன்னைப் போல் பிறரையும் நேசி” என்பது பொதுவான வாக்கு ஆகும்.
இயற்கை காப்பாற்றப்படல் வேண்டும். இயற்கை என்பது இறைவனின் முழுப்படைப்புக்களுமேயாகும். இந்த உயிரினங்கள் எமது ஜீவகாருண்யத்தால் காப்பாற்றப்படாது விட்டால், உலகம் தன் சமநிலையை இழந்து விடும். நாம் அன்பைப் பொழியும் போது எம்மையே முழுமையாக வழங்கியவர்களாகின்றோம். அன்பு உணர்வு பற்றி நாம் கவலைப்படாது விட்டால் ஜீவகாருண்யம் பற்றிப்பேசவும் அருகதையற்றவர்களாவோம். வெறும் தத்துவம் பேசுதல் வாழ்க்கையாகாது. சொல்லும் தத்துவப்படி ஒரு சதவீதத்தி னராவது செய்துகாட்ட வேண்டும். அன்பு பற்றி உரை
-90.
 

சுயச்சாதாயம்
செய்வதை விடுத்து, பக்கத்தில் இருக்கும் பிச்சைக்காரனுக்கு அன்னம் போடு!
இறைவன் கண்கள் தீட்சண்யம் மிக்கது. ஒரு ஜீவனுக்கு ஒரு சிறு கீறலை நாம் உருவாக்கினால் எமது முழு உடலையும் வருத்திப்பார்க்க அவனுக்குத் தெரியும் ஜீவன்களைக் கொய்ய எமக்கு உரிமை இல்லை. அவை களை ஆதரிப்பதுவே எமது கடமை, ஏன் தேவையுமாகும்.
காற்றும், ஒளியும், உஷ்ணமும், குளிர்மையும் பொதுவான சொத்து என ஆண்டவன் ஆக்கிவைத்தான். எனவே இவைகள் மூலம் நாம் எடுக்கும் செல்வத்தைச் சகல ஜீவன்களுக்கும் கொடுப்போமாக!.
நீண்டு கொண்டே செல்கின்ற கால வெள்ளத் தினுள், நாம் சஞ்சரிக்கின்ற காலம் மிக, மிகச் சொற்ப மானதுதான். ஒவ்வொரு கணப்பொழுதிலும் எமக்குரிய பெறுமதிமிக்க காலத்தை விட்டு விலகிடாது எமது வாழ்வின் அர்த்தத்தை நோக்கியபடியே பயணித்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே வழியில் தெரியும் ஜீவன்களின் தேவைகளைக் கருணைமிதுரக் கண்டு உணர்ந்து கேட்டறிந்து, அவைகளுடன் ஒட்டி, உறவாடச் சித்தம் கொள்வோம். இந்த அனுபவங்கள் தான் ரம்யமான சுகானுபவத்தினை மானுடரான எமக்குத் தரவல்லது எனத் தெரிந்து கொள்வோமாக!.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 12-11-2006
-91 -

Page 49
பருத்திழ் அ.ை ஆயிற்றுடிதர்
பிரிவு
பிரிந்து சென்றால் வாழ்வு நிறைந்து விடாது என்று இறைவன் உணர்த்தியபடியே இருக்கின்றான். மக்களுடன் பிரிந்து வாழாமல் நெருங்கி வாழ்ந்து கொள்க! இருதயத்தை விரிவாக்கிக் கருமை எண்ணங்களைப் பொசுக்குக! பசுமையான கருத்துக்களையே நெஞ்சில் பதித்துக் கொண்டால் சகல உயிர்களுமே உங்களுடன் நெருங்கி உறவு பாராட்டும். ஒன்றிணைந்து வாழ்பவர்களுக்கு விரக்தி உணர்வு வரவே வராது. பிரிந்து வாழாத உறவுமுறைகளின் தாத்பரியங்களை மிருகங்கள், பறவைகளிடமிருந்து மனிதர் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிரிவு மனதை அரிக்கும். மரணம் என்பது நிரந்தர பிரிவு. எனினும் தற்காலிகமாக ஒருவரைப் பிரிந்து, மீண்டும் சந்திக்கும் நபராக அவர் இருப்பினும் அவர் பிரிந்துசெல்லும் நேரத்தில் நாம் மனம் சோர்ந்து போகின்றோம்.
அன்பின் ஆழமும் விஸ்தீரணமும் பரந்து பட்டு
நிற்கும்போது தான் பிரிவின் துயரும், ஏக்கமும், தாளா - 92
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுயச்சாதாuர்
மையும், மனத்தளர்வின் வேகமும் வீர்யம் அடைகின்றது. காலையில் பிள்ளைகளை, கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு அவர்கள் திரும்பி வரும் வரை காத்திருக்கும் தாய், உற்ற நண்பர் சொல்லியபடி சொன்ன நேரத்தில் வராத போது தவிக்கும் ஆத்ம நண்பர்கள், ஒரு நிமிடம் தாமதித் தாலும் ஓராயிரம் கேள்வி கேட்கும் கணவன், மனைவி, காதலர், எனப்பல தரப்பட்டவர்களிடையே, "பிரிவு” என்பது தாங்கொணா ஏமாற்றம், துன்பம், சொல்ல முடியாத ஆதங்க உணர்வே,
அன்பு கொண்டால் நாம் எல்லோரையுமே ஏற்றுக் கொண்டவர்களாகிவிடுகின்றோம். எவருமே தனித்து தானே தனது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தனது இன்ப துன்ப அனுபவங்களை மற்ற வருடன் பகிர்வது மனச்சோர்வை அகற்றும் என எல்லோரு மே உணர்கின்றார்கள்.
“பாசம், காதல், அன்பு, நேசம் கொண்டு விட்டாலே துன்பம் ஐயா!, இதோ பாருங்கள் எனது மகன் இன்னமும் எனக்கு ஒரு கடிதமும் அனுப்பவே இல்லை. எங்கள் துன்பம் இவனுக்கு எங்கே தெரியப்போகின்றது. கண்காணாத பூமிக்கு அனுப்பி இன்று இந்தப் பிரிவினால் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமா?” என ஏங்கித் தவிக்கும் பெற்றோர்க்கு பிரிவின் வேதனை நன்கு புரியும்.
-93 -

Page 50
பருத்திபூர் 00. ஜலிறுகுழர்
ஆயினும் "பிரிவு", பாசத்தை, நேயத்தை வளர்க்கும் என்ற கூற்றினை நாம் மறுக்க முடியுமா? கொஞ்சம் மனஸ் தாபம் கொண்ட நண்பர்களைச் சில நாட்கள் சந்திக்காமல் இருந்து பாருங்கள். எப்போது அவரைப் பார்ப்போமோ என்கின்ற ஏக்கம் நெஞ்சில் தூக்கமில்லாமல் எம்மை ஆக்கிரமிக்கும். ஆனால் "பிரிவு” என்பது தமக்கே உரித்தான துயர் எனக்காதலர் உரிமை கொண்டாடுவது சற்று வேடிக்கையானதே.
ஒருவருடன் சற்றுப் பிரச்சினைகள், மனத்தாங் கல்கள் ஏற்பட்டால் சற்று ஒதுங்கிப்பாருங்கள். அவர்கள் மீதான கோபம் வருத்தம் படிப்படியாகக் குறைந்து இறுதியில் முழுமையாக அவை அற்றே போய்விடும்.
“எனக்குக் காலம் பிழைத்து விட்டது. எங்காவது கொஞ்சக் காலம் கோவில், குளத்திற்குப் போய் வருகின் றேன்” எனச் சொல்லிச் செல்பவர்கள், இறுதியில் மனப் பாரம் குறைந்து மீண்டும் வரும்போது நீண்டநாட்கள் பிரிவு காரணமாக முழுமையாக அவர் மாறிப் பழைய குதூகல உணர்வுடன் உறவினர், நண்பர்களை அவர் சந்திப்பார். அப்போது இவர்களிடம் காணும் மன மாற்றத்திற்கான காரணம் வியப்பூட்டி நிற்கும்.
மனம் நிம்மதியாக இருக்கும்போது எம்முள் உள்ள
கோபதாபம் பழிஉணர்வு அழிந்தொழிந்துவிடும். மனத்தைச்
சாந்தப் படுத்தும் மார்க்கங்களை நாம் தெரிந்து கொள்ளல் -94
 

சுயச்சாதாuர் வேண்டும். எமக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் கூட எம்மை அமைதிப்படுத்தி விடும். இன்று நாம் சாதாரணமாக குடும்பப்பிரிவு, நண்பர்கள் பிரிவு, காதலர் பிரிவுகள் பற்றியே பேசி வருகின்றோம். ஆயினும் உலகின் மிக முக்கியமான பிரிவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
* சமூக பிரிவு
* இனப்பிரிவு * அரசியல் வாதிகளிடையே கொள்கைப் பிரிவு * நாடுகளிடையே பிரிவுகள் * சமயங்களுக்கிடையேயான பிரிவு
இந்தப் பிரச்சினைகள் இன்று முழு உலகையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன.
சந்தேகங்களும், புரிந்துணர்வின்மையும், காழ்ப்பும், குரோதமும், பழி உணர்வும் மிகுந்து வந்தால் ஒருவரோ, அன்றிச் சமூகமோ, அல்லது நாடுகளோ பிரிந்து அந்நியப் பட்டே விடும். இதனை எவர்களும் விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே பிரிவை நோக்கிய பாதையில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
* நியாயமான நீதி, கிடைக்காமை * பிறர் பிரச்சனைகளை உணராமை * தன்னாதிக்க, மேலாண்மை வலுவினால்
பிறரை அடக்க முனைதல்.
-95

Page 51
பருத்திழ் 04ல. ஆயிரவநாதர்
போன்ற விடயங்களை விலக்காத வரை சமூகத்தின் நாட்டின் பிரச்சினைகளும், பிரிவு உணர்வுகளும் விலகப் போவதில்லை. நியாயமான தீர்வுகள் ஏற்காத போது எழும் ஏக்கம். பலர் சிந்தனைகளை மாற்றி அமைத்தே விடுகின்றது.
எல்லாப் பிரச்சினைகளுமே சுமுகமாகத் தீர்க்கப்பட லாம் என எல்லோருமே சொல்லிக் கொண்டிருக்கின் றார்கள். செயல் உருப்பெற முனையும் போது ஏன் விலகி நிற்கின்றார்கள்? வேற்றுமைகள் தலைதூக்க இடம் கொடுக் கின்றார்கள்?
தற்காலிக கோபங்கள் காலப்போக்கில் நிரந்தர வடுக் களாகி அதுவே மக்களிடையே பற்பல பிரிவுப் பாதைகளை உருவாக்குதல் நல்லதாகுமா? குரோத உணர்வுகள் உல கைக் கூறுபோட்டேவிடும். வாழும் உலகு ஒவ்வொரு தனி மனிதர்க்கும் பொதுவானது என உள்ளபடி உணர்ந்து நின்றால் எந்தப் பிரச்சினைக்குள்ளும் மனித சமூகம் உள்நுளையாது.
சாதாரணமாக இன்னமும் நாம் இந்தக் காலத் திலும் இப்படியா? என விந்தையான காட்சிகளைக் கண்டு கொண்டிருக்கின்றோம். தனிமனிதன் தன் சுயலாபத் திற்காக மற்றவர்களைப்பிரிக்கும் சதிவேலைகளில் ஈடுபடு கின்றான். சாதியைச் சொல்லியும், அந்தஸ்துபற்றியும் பேசியும் பலர் மனதைக் குழப்புவதே சிலருக்கு வேலை
யாகிவிட்டது.
-96 -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுயச்சாதாuர்
கிராமங்களுக்குள்ளேயே பிரிவினையை உண்டு பண்ணப் பல காரணங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள். மக்கள் கூடும் கோவில்களில், பொதுமன்றங்களில், ஏன் விளையாட்டு நிகழ்வுகளில்கூட சாதிச் சண்டை, குடும்ப ஆதிக்கம் பற்றிய விமர்சனங்களைச்செய்து கோமாளித்த னமாகச் சண்டை செய்யும் கும்பல்களை நாம் சந்தித்துக் கொண்டுதானே இருக்கின்றோம். கிராமங்களின் உள்ளே நடக்கும் பிரச்சினைகள் பின்னர் அயல் கிராமங்களுக்குப் பரவுதல் வியப்பில்லை.
இப்படியே சென்றால் மக்களிடம் அந்நியோன்னிய உறவு எப்போது வலுப்படையப்போகின்றது? ஒருவரது அல்லது பலரிடையே பிரிவுகளை ஏற்படுத்தி ஆதாயம் தேட முனைவது ஏற்புடையதன்று. இதுவே விஸ்வரூபம் எடுத்து சமூகப்பிரச்சினையாகி தேர்தல் காலத்தில் ஒருவரோடு ஒருவர் என்றில்லாமல் அதுவே கட்சிப் பிரச்சனையாகுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கல்ல. மக்களை இணைப்பதற்கு அன்றிப் பிரிப்பதற்காகவே அரசியல் துணை நிற்கின்றது.
இன்று உலகில் அரசியலே மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றது. மனித குலத்தின் மாண்பு என்பதே அன்பினால் உலகம் ஒன்றுபடுதலேயாம். எல்லா நாடுகளுமே தம் நிலையை வலுப்படுத்த நாடுகளிடையே பிரிவுகளை ஏற்படுதலே சிறப்பானது எனக்கருதிச் செயல்பட ஆரம்பித்துவிட்டன.
-97.

Page 52
பருத்தில் பல. ஆயிரவநாதர்
ஆன்மீக நம்பிக்கை அற்றுப்போகும் போது இத்தகைய செயற்கைத் தன்மையான தற்காலிக வீம்பு உணர்வும் ஆணவமுனைப்பும் மிகைப்படுதல் சகஜம். இந்த விடயத்தை நாம் பழைய காலத்து புராண இதிகாசக் கதைகள் வாயிலாகப் படித்து இருக்கின்றோம்.
சகோதரர்களிடையே ஏற்பட்ட பிரிவு மாபெரும் யுத்தமானது என மகாபாரதம் என்கின்ற இதிகாசம் எமக்கு உணர்த்தும் நீதி கிடைப்பதற்கான வழிகூட யுத்தம் மூலம் தான் என்று சொல்லுமளவிற்கு உலகம் செல்லுவது வேதனைக்குரியது. இந்நிலை தவிர்த்து ஏற்ற நல்ல வழிமுறைகளை உலகம் கண்டேயாக வேண்டும். உலக அனுபவ ஞானங்களை வரலாறுகள் மூலம் படிப்போமாக!
மிகவும் அதிசயமான விடயம் என்னவெனில் மிருகங்களும், பறவையினங்களும் இன்னமும் மனிதன் மூலம் வேண்டாத கீழ்த்தரமான குணாம்சங்களை இன்னமும் கற்றுக் கொள்ளாமல். அவை அன்போடு.தமது இனத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருதலாகும்.
ஆனால் மனிதர்கள், உலக மகா யுத்தங்களைச் செய்து அழிந்து பின்பு ஓய்ந்து, மீண்டும் ஒரு உலக மகாயுத்தத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கின்றனர். கொடுமை இது போல் வேறு என்ன?
இதே போல் மிருகங்கள், பறவைகளும், தமக்குள் சண்டை செய்யப் புறப்பட்டால் இந்த உலகம் தாங்குமா?
- 98
 

சுயச்சாதாயம் அப்படி அவைகள் சண்டை செய்யாமல் அன்புடன் இருக்கும் போது அவைகளை நாம் ஆறறிவு அற்றவை எனக்கூறிக் கொள்கின்றோம். இவைகள் தமக்குள் ஒரு மொழியில் பேசுவதானால் அல்லது தமது அதீத உணர் வினால் விஷயங்களைப் பரிமாறும்போது நிச்சயமாக எங்களைப் பற்றிக் கேலியுடன் தான் பேசிக் கொள்ளும்.
மனிதன் மிருகமாக இருக்கக்கூடாது என்கின்றோம். மிருகங்கள் தமக்குரிய இயல்பான உணர்வுடனேயே சீவிக்கின்றன. இது ஆண்டவன் விதித்த விதி. ஆனால் மனிதனுக்கு ஆண்டவன் போதிய அறிவு, ஞானத்தினை நல்கியுள்ளான். அதன்படி வாழுதல் அவன் கடன். நல்ல குணாம்சங்கள் எங்கு உண்டோ அங்கு அதனைப் பார்த்து கேட்டு பயில வேண்டியதேயாகும். எந்த உயிரினத்தில் நல்ல பண்புகள் உண்டோ அதனைத் தெரிந்து கற்பதே சிறப்பாகும். எனவே மிருகங்கள் எனக்கேலி பேசுதலை விடுதலே நல்லது. காகத்தைக் கண்டு உறவுகளைப் பேணுதலையும் நாயைக் கண்டு நன்றியறிதலையும் பயின்றால் என்ன? அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் சுறா மீன்கள் பற்றிய விவரணச் சித்திரம் ஒன்றினைப் பார்த்தேன். ܚ
சுறா வேட்டையாடப்படுவதைக் காட்டினார்கள். அதனைப் பார்த்ததுமே நெஞ்சம் பதைபதைத்தது. ஜீவ. காருண்ய அமைப்புக்கள் இத்தகைய செயல்களைக் காண்பதில்லையா என எண்ண வேண்டியிருந்தது. அந்த இராட்சத சுறாக்களை உயிருடனேயே குத்துவதும் வெட்டு
- 99

Page 53
பருத்திபூர் மல. ஆயிரவருதஷ் வதுமாகக் காட்சி காட்டப்பட்டது. அத்துடன் அதன் செட்டை யை கோடரி போன்ற ஆயுதத்தால் வெட்டும் போது அதன் வாய், கண்படும்பாட்டினைக்காட்டினார்கள். இவையெல்லாம் பார்க்கக்கூடிய காட்சிகள் அல்லவேயல்ல. சரி அடுத்தகாட்சி காட்டப்பட்டது. பெரியராட்சதச் சுறாக்களை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக விஞ்ஞான ஆய்வாளர்கள்படும் சிரமத்தையும் காட்சிப்படுத்தினர்.
மிகவும் வியப்பான சங்கதியை நான் பார்த்தேன். மிகப் பெரிய கடல் மீனை சுழியோடியான ஆய்வாளர் பின் தொடர்ந்து சென்று அதனைத்தொட்டு அதன் உடலைத் தடவுகின்றார். அதன் முன்புறம் வாய் முகம் போன்ற அமைப்புக்களை அன்புடன் ஆரத் தழுவுகின்றார். மிகவும் ஆச்சரியப்படும் விஷயம் என்னவெனில், அந்த ராட்சத மீன் அவர் அணைப்பினுள் கட்டுண்டு அவரது முகத்தினைத் தன் முகத்துடன் மெதுவாகத் தொட்டு உராந்து நெடுஞ்சாணாக அவருக்கு இசைவாகப் பொருந்தி நின்றது. இந்த அன்புணர்வுடன் கூடிய காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. சுறாவை வேட்டையாடும் மனிதர் ஒருபுறம், அந்த இனத்தை நேசிக்கும் மனிதர் ஒருபுறம் மீன் இனத்திற்கே குழிபறிக்கும் மனிதர்கள் பற்றி இவைகள் வருத்தப்படுவது இல்லை. தன்னை அணைத்தவரை அதுவும் அணைந்து நிற்கின்றது. மிருகங்களைவிட கடல் வாழ் மீன் இனத்திற்கு அறிவு நிலைகுறைவு என்பர். ஆனால் நாம் பார்க்கும் காட்சியானது மீன் இனத்தின் பாச உணர்வு பற்றி எமக்குக்
- 100
 

காட்டி நிற்கின்றது. அன்பை வழங்கும்போது அவை நிராகரிக்கப்படுவதில்லை. '....., ,
எமது நாட்டின் மிருகக்காட்சிச் சாலைகளில் கூடக் கடல் வாழ் உயிரினங்களின் சாகசக் காட்சிகளை கண்டிருப் பீர்கள். மனிதனை இவை நேசிக்கின்றன. டொல்பின் மீனுக்கும், மனித இனத்திற்குமான உறவுமுறை அனை வரும் அறிவர். கடலில் தத்தளிக்கும் மனிதர்களை அது காப்பாற்றியதாகப்பல செய்திகளைப்படித்திருக்கின்றோம். நல்ல பண்புகளை அன்பினை நாம் எத்தகைய உயிரினத்தி லிருந்தும் கற்கவேண்டி இருந்தால் கற்றேயாக வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன விடயங்களைப் பகிர்ந்து கொண்டேன்.
ஒரு பசுவானது ஒரு சில வினாடிகள்கூடத் தன் கன்றினைப்பிரிந்துசெல்லச் சம்மதிப்பதில்லை.கோழிதன் குஞ்சுகளைக் கணப்பொழுதும் விட்டுப்பிரிவதுமில்லை. ஆனால், குடும்பத்தைப் பாரம் என எண்ணிப்பலர் குழந்தைகுட்டிகளை விட்டு விட்டுச் சென்று விடுவதும். பின்னர் தவறான வழியில் அவர்கள் பிறிதான குடும்ப சாகரத்தில் உட்புகுதலும் நாம் அறியாததல்ல.
வெளிநாடுகளுக்குச் செல்வது உறவுகளை மறப்ப
தற்கு அல்ல. தங்கள் கலை கலாசாரத்தினைத் துறப்பதற்
குமல்ல. பிரிவு என்பது எம்மை நாம் இழப்பதற்கும் எமது
அன்புள்ளங்களிலும் பார்க்க புதிதான முகங்களும், இதர - 101 -

Page 54
பருத்தி விலவிவரம் அந்நிய பழக்கங்களுமே சிறப்பானது என கருதுவதும் ஆகாது. நல்லனவைகளை ஏற்று அல்லனவைகளைக் கொய்து எறிக அறிவோமாக! பிரச்சினைகளில் இருந்து தப்புவதற்குப் பிரிந்து ஓடுதலே சரியான மார்க்கம் எனச் சிலர் கருதுகின்றனர். ஓட ஓட எம்மைப் பிரச்சினைகள் துரத்திக் கொண்டே வரும்.
எத்தனையோ பாச உறவுகள் இன்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையர் இருந்தும் கூட பிள்ளைகள் அநாதரவாகக் கைவிடப்படுகின்றனர். இந்த சிறார்களே பின்பு நல்ல நிலைக்கு வந்த பின் மீண்டும் பெற்றோர் வந்து அதே பிள்ளைகளுடன் ஒட்டி உறவு பாராட்டுவதுமுண்டு.
ஒருநாள் அன்பாகப் பழகிய முகத்தையே நம்மால் விட்டுப்பிரிய மனம் ஒப்புவதில்லை. கோபமிகுதியினால் பெற்ற பிள்ளையை மறக்கும் பெற்றோர், பெற்றோரையே மறக்கும் புத்திரர்கள் இவர்கள் இருந்தும் இல்லாத விசித்திரப்பிரகிருதிகளே! மனம் எல்லோர்க்கும் ஒரேமாதிரி யாக இல்லை. ஆனால் மனத்தினைப் பக்குவப்படுத்திச் செம்மைப்படுத்த நாம் முனையாமல் இருக்கலாமா?
அடுத்தவன் சிறப்பாக இருப்பதைப் பார்த்தாவது, தன் வாழ்வைச் சிறப்பாக்க விழையாமல் இருப்பதே மாபெரும் தவறு ஆகும். ஆண்டவன் தேவையற்ற விதத்தில் எதனையும் ஆக்குவதில்லை. என்றும் எப்போதும், நீ - 102
 
 

siluðsfötuli
அன்புடன், பாசத்துடன்,நேயப்பாட்டுடன், இரக்க சிந்தனை யுடன் வாழாமல் பிரிந்துசென்றால் வாழ்வுநிறைந்துவிடாது என்று இறைவன் உணர்த்திய்படியே இருக்கின்றான்.
இதன் பொருட்டுத்தான் நாம் பிரிந்து வாழக் கூடாது என்பதற்காகவே பிரிவினைத் தாங்காத பாச உணர்வை, அன்பினை ஈந்து இருக்கின்றான். எனினும் தீவினையாளரு டன் சேராது பிரிந்திருப்பதே உத்தமமாகும். எம்மை நாம், தற்காத்துக் கொள்ள இது ஓர் உபாயமல்லவா? அன்பு அற்றவன் வெறும் கற்பாறைக்கே ஒப்பானவன் என்பது ஏற்புடையதன்று. கற்பாறை வீடுகட்டவும், வீதி அமைக்கவும் உதவுகின்றன. அத்துடன் கற்பாறை மூலமே கலைப் படைப்புக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏன் இறைவனின் திவ்ய சொரூபத்தினை கற்பாறை மூலம் சிற்பி செதுக்குகின்றான். கற்பாறையூடே நன்நீரை இறைவன் ஓடச் செய்கின்றான்.
ஒ. மனிதா! நீ கல்லினும் உறுதியான மனோ நிலையில் உன்னை வைத்திரு ஆனால் பாறைக்குள் ஒடும் நன்நீராய் உன்நெஞ்சிற்குள் அன்பு எனும் நதியைப் பாய்ச்சு வரண்டு போன இதயத்துடன் உறங்கிநிற்காதே! மக்களுடன் பிரிந்து வாழாது நெருங்கி வாழ்ந்து கொள். உலகம் சுருங்கி விட்டதாகச் சொல்லப்பட்டாலும் உன் இதயத்தை விரிந்ததாக வைத்துக் கொள்வாயாக!,கரிய நினைவுகளை எண்ணங்களை எரித்துப் பசுமையான கருத்துக்களையே நெஞ்சில் பதித்து வைப்பாயாக! இதுவே
- 103

Page 55
பருத்திந் பல அறிவருந்தர். என்றும் உன்னுடன் சகல உயிர்களுமே நெருங்கி நிற்ப்பதற்கான பேருபாயமுமாகும். தனித்து இயங்குவது வேறு பிரிந்துநின்று தனிமரமாக இருப்பது வேறு இதனை நீ உணர்வாயாக!
சுய உழைப்பு தன்மானம் என்பது எமக்குள்ள உரிமை, அதன் பொருட்டு மக்களுடன் விலகி வாழுதல் எவ்வகையிலும் பொருந்தாது முழு உலகையுமே கூட்டுக் குடும்பமாகக் கருதிச் செய்ல்படு!
எல்லாவற்றையுமே தானே அனுபவித்து விட வேண்டும் என்கின்ற நினைப்பினை விட்டு எல்லாமும் எல்லோர்க்குமாக என எண்ணுக பிறருடன் பிரிவு எண்ணமற்ற தோழமையுள்ளவனாக உலகம் உன்னை ஏற்றுக்கொள்வதற்கு இதுவே சிறந்த வழியாகும்.
மனிதன் இன்று எதை எதையே தேடிக்கொண்டு இருக்கின்றான். தன்னுடனும் தன் அருகேயுள்ளவனுடனும் உறவாடினாலே போதும் அவன் தனிமையுணர்வற்ற கூட்டுச் சமூகத்துடன் இணைந்தவனாகிவிடுவான். ஆனால் தன்னுடைய நிலையை தனது மனதின் கனதியை தெரியாதுவிட்டால் சுற்றி இருப்பது எல்லாமே சூனிய மாகவே படும். தனது தவறுகளைத் தெரியாமலும் பிறர் மனதைப்புரியாமலும் வாழும் வாழ்வு முடிவில் அவன் தன்னைத்தானே விரோதித்துக்கொள்ளும் இக்கட்டான நிலைக்கு உட்பட்டுவிடுவான். இது விரக்திக்கும் வித்தாகி விடும்.
- 104
 

சுயசீசரதாயம் மனம் கசிந்து கொள்ளாத வாழ்வு வாழ்வோரையும் இனிமையின் இதத்தினைப்புரிந்து கொள்ளமாட்டாத நெருங்கிவராத உறவுகளையும் மனப்பூர்வமாக வரவேற் போம்! ஏற்றுக்கொள்வோம்! மனதில் கரிப்பு அற்ற விரோதமற்ற சூழலை எல்லோருமே கூட்டாக உருவாக்க வேண்டும். 徽 鳕
ஒருவருமே எனக்கு இல்லை என விரக்தியுடன் ஒரு ஜீவனும் சொல்லக்கூடாது. அன்புள்ள, களங்கத்தினைக் கடுகளவும் கொள்ளாதவர்கள் எம் அருக்ே எக்கணமும் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள் என்கின்ற எண்ணத் தினை கொண்டால்பிரிந்துநின்றுவாழ்கின்றோம் என்கின்ற சிந்தனை கடுகளவும் இல்லாதொழிந்துவிடுமன்றோ!
கால வேறுபாட்டினால் அதன் மாற்றங்களால் தவிர்க்க முடியாத சந்தப்பங்களால் ஒருவரில் இருந்து ஒருவர் பிரிந்தாலும் இருக்கின்ற ஏனையோர் மூலம் எம் மனத்துச் சஞ்சலங்களை ஏக்கங்களை துயர்களைக் களைந்து கொள்வோமாக! தனித்திருந்து வாழ நாம் பிறக்கவில்லை.
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி) 22-10-2006
105.

Page 56
பருத்தில் பல. தவிர்வகுழர்
NNNNN
அனுபவங்கள்
வாழ்க்கையின் இன்ப துன்ப அனுபவம் எல்லாமே எமக்கான பாடங்கள் அனுபவங்களை நல்ல அனுகூலங்களாக ஏற்றுக்கொள்க. எமது முன்னோர் சொன்ன கருத்துக்கள், நம்பிக்கைகளை உதாசீனம் செய்யற்க கால மாற்ற வளர்ச்சி எல்லாமே பழமையின் அனுபவமூடாகப் புறப்பட்டவை தான். பெற்ற அனுபவங்களை உதாசீனம் செய்து மீண்டும் அதே வழியில் செல்வது மதிகெட்டதனம். சாதனை செய்தவர்களின் அனுபவங்களைக் தெரிந்து உணர்ந்து எங்களை நாம் புது மனிதனாக்குவோம்.
வாழ்க்கையில் எமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் யாவுமே நாம் கற்றுக்கொண்ட, இனிமேல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நல்ல பாடங்களே என்று உணர் வோமாக!
எனவே அனுபவங்களை நல்ல அனுகூலங்களாக
ஏற்றுக்கொள்வோம். அனுபவங்களே ஒரு படிப்பினை
யூட்டும் கல்விதான். எம் முன்னோர்கள் தாம் கண்ட - 106
 
 
 
 
 
 
 

சுயச்சாதார்
விடயங்களை அனுபவபூர்வமாக உணர்ந்து எமக்குச் சொல்லிச் சென்றார்கள். அவர்கள் காட்டிய வழியின் வளர்ச் சியாலேயே நாம் இன்று அறிவியல், ஆன்மீகத் துறை, அரசியல் எனப்பல தரப்பட்ட விடயங்களையும் எளிதில் புரிந்து கொண்டு இருக்கின்றோம்.
பெற்ற அனுபவங்களின் மதிப்பு, அதன் இன்றிய மையாத் தன்மையினை இன்னமும் பலர்புரிந்து கொள்கின் றார்கள் இல்லை. புத்தகங்களால் பெறும் கல்விதான் கல்வி என்றும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மூலம் மட்டுமே அறிவைப் பெரிதாகப் பெற்றுவிடலாம் என எண்ணிக் கொள்கின்றார்கள். கட்டிடங்களில் கட்டுண்டு மனனம் செய்து படித்துப் பரீட்சையில் தேறிவிட்டால் மட்டும் கல்வி ஞானம் வந்துவிடுமா?
கல்விக்கூடங்களுக்கும் வெளியே ஒரு திறந்த ஞானக் கூடமாக இந்த உலகம் இருக்கின்றது. இங்குதான் நாம் ஏராளமாக கற்கவேண்டியுள்ளது. எம்முன் நடமாடிக் கொண்டிருக்கின்ற அத்தனை ஜீவன்கள் மூலமாகவும் தான் நிரம்பப் படிக்க வேண்டியுள்ளது.
நாம் சாதாரணமாகக் கண்டு கொண்டிருக்கின்ற ஒரு
பாமரனைப் பார்த்ததும் அவனுக்கு என்ன தெரியும்? எனக்
கணக்குப் பண்ணி விடுகின்றோம்.அவனுக்குள் ஒளிந்திரு
க்கும் ஆத்மபலம், ஞானம் பற்றி உணரத் தலைப்படுவ
தேயில்லை. நாங்கள் ஏட்டில் படித்ததற்கும் மேலாக அவன் - 107

Page 57
பகுத்திழ் 08:அறிவருதல்
தன் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை மிக உன்னிப்பாக அவதானித்தும் தன் முன்னோர்கள் சொன்னதை எள்ளிநகையாடாமல் உள்ளத்தேகிரகித்தும், தனது அனுபவ ஞானத்தை வளர்த்துக்கொள்கின்றான். வெளிப்படையாக அவனது பேச்சும் செயலும் நகைப்பூட்டு வனவாக அமைந்திட்டாலும் உண்மையில் நிம்மதியாக அவன் எப்படி வாழுகின்றான் என்கின்ற அருங்கலையை இவர்களைப் போன்றவர்களிடமிருந்தே நாம் படிக்க வேண்டியுள்ளது.
தாங்கள் பெற்ற அனுபவங்களை மற்றவர்க்கு வழங்கா மல் இருப்பதும் எவராவது தாங்கள் பெற்ற நல்ல அனுப வங்களைச் சொல்லும்போது அதைக் கேட்காமல் நிராகரிப் பதும் நிச்சயமாக ஆரோக்கியமான செயலேயல்ல.
நாம் எதிர்பார்க்காமலேயே எமக்கு ஏற்பட்டுவிடுகின்ற அசாதாரணசம்பவங்களாலும் எமதுஅறியாமை காரணமாக ஏற்படும் எதிர்விளைவுகளாலும் சிறுசிறுஉராய்வுகளுக்கும் சிலசமயம் பாரதூரமான பாதிப்புக்ளுக்கும் ஆளாகி விடுகின்றோம்.
எமக்குத் தெரியாத சிறு விஷயத்தை மற்றவர்களிடம்
சென்று தெளிவுபெற எமது அகம்பாவம் விடுவதில்லை.
"எனது படிப்பு என்ன, வசதிகள் என்ன” என்று தமக்குள்
எண்ணியே தனது அறிவை மடக்கி ஒடுக்கி வைத்துக்
கொள்கின்றான். தனக்கு எல்லாமே தெரியும் என்பதைப் ... 108
 
 

சுயசோதூர் போன்ற அறியாமை வேறு ஏது? இந்த மமதையினாலேயே மனிதன் தனக்குத் தானே தழும்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றான். மேலும் எத்தனை இடர்கள் வந்திடினும் எவரிடத்தும் சென்று ஆலோசனை கேட்கமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களும் உளர்.
சில விடயங்களில் பெரியவர்களைவிடச் சின்னவர் கள் கூடப் பிரமாதமாகச் சிந்திக்கின்றார்கள். தவறான சில அறிவுரைகளைத் தமது அனுபவம் இதுவென அவர்கள் சொல்லும் போதும் இளைஞர்கள் தமது நுண்அறிவினால் அது தவறு என்று உறுதியாச் சொல்லுகையில் அதைக் கேட்கச் சில முதியோர் தயாராக இருப்பதில்லை.
காலமாற்றங்களின் வளர்ச்சியை சிலர் இன்னமும் ஏற்றுக்கொள்வதில்லை. இன்னமும் முரண்பாடான ஏற்றுக் கொள்ள இயலாத பழமைச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
காலத்திற்குக் காலம் அக்காலத்திற்கு ஏற்பவே சில நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. சில நடைமுறைகள் பழக்க வழக்கங்களை தற்காலத்தின் சமூக அமைப்பு ஏற்றுக் கொள்வதாயில்லை. உதாரணமாக சாதி சமூக வேறு பாடுகளை முன்னோர் ஏற்றுக்கொண்டது போல் நாம் தற்காலத்திலும் ஏற்றுக்கொண்டு பாகுபாடான வழமைக ளைப் பூரணமாக அனுசரித்தே தீருவேன் என்று தீவிரமாக வாழமுடியுமா? எமது முன்னோர் சொன்னதாகச் சொல்லப்
- 109

Page 58
பருத்திபூர் அல. ஹலீரலுகுரல் படும் பழமை வாழ்க்கை சமூக அமைப்பு சரியானது என்று விதண்டாவாதம் இனி மேலும் செய்ய முடியாது.
நன்மை தரும் பொது நோக்கான அனுபவ அறிவைப் பெற்றுக் கொள்வோம். சமூகத்திற்கு விரோதமான குரோத மனப்பாண்மையைத் தூண்டும் அறிவுரை போல் சொல்லப்படும் பொல்லாத பேச்சுக்களைத் துச்சமெனத் தூக்கியெறிவோமாக! ஆயினும் நாம் எமக்கு அனுகூல மாணவர்களிடம் இருந்து மட்டும் வாழ்க்கையைப் படித்துவிட முடியாது. எமக்கு எதிரிகளாக நீங்கள் கருதுபவர்கள் மூலமாகவும் பல விஷயங்களைப் புரிந்து கொள்வதுடன் எச்சரிக்கையுணர்வு, தற்காத்தல் போன்றவைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
எனினும் எதிரிகளைச் சம்பாதிக்காத கலையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எல்லோரையும் நேசித்து வந்தால் எதிரிகள் என்று எவர் முன்வரப்போகின்றார்கள்? நல் ஒழுக்கம் பரந்த மனப்பான்மையுள்ளோரிடம் பழகுவதால் அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களே எமக்கு நல் ஆசானாகி எம் வாழ்வில் நல் ஒளியூட்டிவரும்.
இன்பத்தில் காணும் மகிழ்ச்சிகளால் எம்மை நாமே
மறந்தே விடுகின்றோம். அத்துடன் துன்பத்தில் காணும்
மனவடுக்களால் எம்மை நாமே இழந்து எம்மாலேயே
எடுத்து எறியப்பட்டவர்களாய் தனித்து நிற்கும் மனிதர் - 110
 

சுயச்சாதru களாகும் சந்தர்ப்பத்தினை உருவாக்குகின்றவர்களாகி விடுவதுமுண்டு.
எம்மை நாம் இழந்துவிடாத வைராக்கிய உணர்வை தமது அனுபவஞான மூலம் எழுச்சி பெற்ற பெரியோர் களிடம் இருந்தும் கற்றுக் கொள்வோமாக!
ஏழ்மை காரணமாக இனபந்துக்களால் ஒதுக்கப்பட்டு தாய், தந்தையரை இழந்த பின்பும் தனது சகோதர, சகோதரிகளைத் தனது உழைப்பின் மூலம் வாழவைத்த சகோதரன் மூலமும், படித்துப் பட்டங்கள் பெற்றும் எதுவித உத்தியோகமும் கிடைக்காமல் ஊரவரின் கேலிக்கிண்டல் பேச்சுக்களாகி முடிவில் தற்கொலை செய்யும் முடிவில் இருந்தும் விடுபட்டு தனித்தே சுயதொழில் மூலம் இலட்சாதி பதியானவர்கள் மூலமும், அடுத்த வேளைக்கு உணவின்றி அலைந்து சுய முயற்சியால் கற்றுத்தேர்ந்து கொண்ட ஒரு இலக்கிய விற்பன்னர் ஒருவர் மூலமும் பெற்றுக் கொண்ட இவர்கள் போன்றோரின் அனுபவங்களை நேரில் சென்று கேளுங்கள்! இத்தகையோரின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளத்தில் இருத்தி உணர்ந்துகொள்வீர்!
இப்படி எத்தனை எத்தனையோ அனுபவஸ்தர்கள்
விற்பன்னர்கள் வழிகாட்டிகளாக எமக்கு உதாரணமாக
முன்மாதிரிகளாக இருந்தார்கள் தற்போதும் இருந்து
கொண்டேயிருக்கின்றார்கள். எவ்வளவோ இன்னல்க
ளுக்கும் மத்தியில் வாழ்ந்து முன்னேறியவர்களின் அனுப - 11.1 -

Page 59
பகுத்திழ் 09, அதன் வங்களைக் கேட்டால் நாம் எம்மாத்திரம் என்கின்ற உணர்வும் ஏற்படலாம்.
படுத்துக்கிடப்பவனுக்குச் செயல்கள் என எதுவுமே யில்லை. எனவே அவனுக்கு எந்தவித அறிவோ அனுபவமோ கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களோ கிடைப்பது மில்லை. எழுந்து ஓடிஉழைப்பவன் புதுச்சரித்திரங்களை உருவாக்குகின்றான். எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்கள் கிடைத்தாலும் கூட அதனைப் பேணுதற்கு நல்ல அனுபவ ஞானம் வேண்டும். ஒரு வயோதிபர் தனது பரிதாபகரமான கதையைச் சொன்னார்.
"எனக்கு ஐந்து பிள்ளைகள் நான் இளமையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உழைத்தேன் உழைத்த வீடு பணம் எல்லாவற்றையுமே அவர்களின் திருமணம், கல்வி, உத்தியோகம் பெறுதற்காகச் செலவு செய்தேன். என்னிடம் தற்போது எதுவுமேயில்லை. மனைவியும் போய்ச் சேர வேண்டிய இடத்தில் போய்ச்சேர்ந்து விட்டாள். பிள்ளைகள் திருமணமானவுடனேயே என்னை மறந்துத் விட்டதுடன் என்னைத் தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துத் துரத்தியே விட்டனர். என்னிடம் இப்போது ஒன்று மேயில்லை. இருக்க வீடுவாசல் கிடையாது. நான் விட்ட பெரும் தவறினை இப்போது உணருகின்றேன்.
உழைக்கின்ற காலத்தில் எனக்கென்று ஒரு சிறு தொகையையாவது ஒதுக்கிக்கொள்ளவில்லை. எல்லோ - 1 12
 

சுயச்சாதாuர்
ரையும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் நம்ப முடியாது. பெற்ற பிள்ளைகள் மட்டும் இது விடயத்தில் விதிவிலக்கு அல்ல. எல்லாமே பொய், நிரந்தரமற்றவைகள்” என்று மனமுடைந்து கூறினார். இது அவருடைய அனுபவ பூர்வமான பேச்சுத்தான். அதே சமயம் எல்லா பிள்ளை களுமே இப்படி நன்றி கெட்டதனமாக நடந்து கொள்வது மில்லை. தற்பாதுகாப்பு முன்யோசனை, அவதானம் எல்லாமே மனிதருக்கு அவசியமாக இருக்க வேண்டிய தாகும். நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? யாரால் எமக்குக் கெடுதல்கள் உருவாகும்? நண்பர்கள் யார்? நண்பர்கள் போல நடிப்பவர்கள் எவர் என நாம் கண்டு கொள்ள வேண்டும்.
வீட்டில் பெரியவர்கள் சொல்லுவார்கள் "கண்டவர்களு டன் கூடாதே கண்ட இடங்களுக்கும் செல்லாதே! தீய செயல்களைச் செய்யாதே" என்று சொன்னாலும்கூடப் பல இளையோர்கள் இவர்களது அனுபவரீதியான வார்த்தைக ளைக் கேட்டுக்கொள்வதில்லை. ஏதோ ஒரு சந்தரப்பத்தில் அவர்கள் புத்திமதிகளைக் கேட்காமையினால் வந்த பலாபலன்களை அனுபவிக்கும் போதுதான் புரிந்து கொள்வார்கள். இனிக்க இனிக்கப் பேசியவர்களால் அப்பாவிகள் ஏமாற்றப்பட்டுச் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு அநியாயமாகத் தண்டனைகளைப் பெறுவதும் நாம் அறிந்த விஷயங்கள் தான.
- 113

Page 60
பருத்திபூர் 00. வலிரடிதர்
ஒழுக்கமாகச் சீவிக்கின்றேன் எனப் பாசாங்கு செய்பவர்களை அறிந்து கொள்வது சுலபமானதல்ல. சிலர் மெளனமாக இருந்தவாறே செய்கின்ற செயல்கள் யாவுமே படுபாதகமாக இருக்கும். இன்னும் சிலர் கண்டபடி பேசித் திரிவார்கள். ஆனால் செயலளவில் யாருக்குமே தீங்கு செய்யவே மாட்டார்கள்.
பொய்யான நடிப்பைக்காட்டி ஆன்மீகம் பேசுவதா லும், வேடம் போடும் அரசியல்வாதிகள் இருப்பதாலும் உண்மையானவர்களை இனம் காண நல்ல அனுபவ ஞானம் தேவைப்படுகின்றன. ஆனால் பலருக்கும் கஷ்டங் கள் பிரச்சனைகள் வந்து அனுபவித்த பின்னர்தான் உண்மைகள் புலனாகின்றன.
தொழில் அனுபவங்களைப் பெற்றவர்கள் தமது தொழிலை மிக லாவகமாகச்செய்யும் போது பார்ப்பவர் களுக்கு அது மிகவும் எளிதானதாகவே தோன்றும். தொழிலின் நுட்பம் என்பதும் அதனைக்கையாளுதல் என்பதும் பல வருட கடினமான பயிற்சியினாலேயே கை கூடியது என்பதை நாம் உணரல் வேண்டும்.
சாலையில் பயணித்த ஒரு மோட்டார் வாகனம் திடீர்
என நின்றுவிட்டது. வாகன ஓட்டுனர் என்ன முயற்சி
செய்தும் அது இயங்குவதாயில்லை. பின்னர் ஒருவாறு
பக்கத்து ஊரில் உள்ள வாகனத்திருத்துனரை அழைத்து
வந்து காட்டினார். அவரும் வாகனத்தினை உன்னிப்பாகப் - 114
 

சுயசோதாue
பரீட்சித்து இயந்திரத்தில் உள்ள கோளாறைக் கண்டுபிடித்து விட்டார். இரண்டு மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டிருந்தன. அதனை அவர் முடிந்து விட்டார். வாகனம் இயங்க ஆரம்பித்தது வாகன ஓட்டுனர் அவரது கூலி எவ்வளவு என்று கேட்ட போது, திருத்துனரும் இருநூறு ரூபாய் என்றதும் அதிர்ந்து போனவர் "என்ன இந்த கம்பிகளை இணைக்க இருநூறு ரூபாய் கூலியா" என்று கேட்டார். திருத்துனரோ அமைதியாக கம்பிகளை முடித்துவிட அல்ல இந்தக்கூலி, எனது தொழில் அனுபவத்தினால் இந்தக் கோளாறைக் கண்டுபிடித்த மைக்கே இந்தக் கூலி என்றார். இதுபோல் இன்னும் ஒரு சுவையான கதை இது.
பிரபலமான ஒவியரிடம் மாணவர்கள் ஒவியம் பயின்று கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன் மிக சிரமப்பட்டு ஒரு ஒவியம் வரைந்திருந்தபோது அது திருப்திகரமாக அழகாக அமையவில்லை. அப்போது அவனது குரு வந்தார் ஒரு நொடிப்பொழுதில் ஒவியத்தில் சிறு திருத்தம் ஒன்றைச் செய்தார். என்ன ஆச்சரியம் ஒவியம் உடன் அழகாகச் செம்மையாகிவிட்டது.
மாணவன் சற்று இறுமாப்புடன் "ஒரே ஒரு சிறுதிருத் தத்தையே தாங்கள் செய்தீர்கள். உடனே எனது ஓவியம் திருத்தப்பட்டு விட்டதே!” என்றான். அதற்குக் குரு சொன்னார் "நான் செய்த திருத்தத்தின் மூலமே கலை பிறக்கின்றது. இன்னமும் உனது ஓவியக்கலை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. பயிற்சிசெய்" என்றார்.
- 115

Page 61
மருத்திழ் அல. அவிஷன்
பலவருட அனுபவ மூலம் கைவண்ணம், செயல் திறன்கள் பரிணமித்துப் பிரகாசிக்கின்றன. தொடர்ந்து மேடையில் பேசிவந்தால் "நா" வண்ணம் மிளிரும். இதே போல் விரும்பும் கலைகளில் போதிய பயிற்சிகளைச் செய்து வந்தால் தான் அந்த அந்தத் துறைகளில் பிரகாசிக்க முடியும். பெரியவர்களின் சுயசரிதைகள் மற்றும் தலைவர் களின் வரலாறுகள், பயண அனுபவங்கள், மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப்படித்துப்பார்க்கும்போது அவர்கள் தமது வாழ்க்கையில் பட்ட கஷ்ட நஷ்டங்கள், எதிர்நோக்கிய சவால்கள், இழப்புகள், பின்னர் இவைகளில் இருந்து மீண்ட செய்திகளைப் படித்து உணர முடியும். பிரச்சினைகளை எதிர்கொண்டு அதனை வெற்றிகொண்டாலேயே வாழ்க்கை சிறப்புற அமையும் என்பதையும் நாம் சந்தேகமறத் தெரிந்து கொள்ள இயலும்.
வயது முதிர்ந்தவர்கள் தமது வாழ்க்கை அனுபவங் களை இரை மீட்டி எமக்குச் சொல்லும்போது கேட்க அலுப் பாகச் சலிப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் பேச்சை உற்றுநோக்கினால் பற்பல சுவையான அனுபவ உண்மை களைக் கேட்டு அறிந்து கொள்ள முடியும். எம்முன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியோரிடம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே அவர்களிடமிருந்து அறிய வேண்டியன வற்றைத் தெரிந்து கொள்வோமாக!
நாம் வெறுமனே ஒரு கட்டுக்குள் எமது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பாது சுயமாக எங்குமே வியாபிக் - 1 16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ørnuvføringsruió கும் ஆற்றல்களை வளர்க்கும் வண்ணம் பலரிடம் கேட்க வேண்டியதைக்கேட்டும் தெளிந்து கொள்வதற்காக எமது அறிவை கூர்ந்து நோக்க அனும்திப்போமாக!
நாம் முடங்கி ஒடுங்கி ஒரு வட்டத்தினுள் வாழப்பிறந்த வர்கள் அல்லர். ஒரு சின்னச் சாடியினுள் குறிப்பிட்ட நீரை அருந்தி சொற்ப மண்ணில் புதையுண்டு கொஞ்ச வளியை யும், மெல்லிய ஒளியையும் ஏற்றுக் குட்டையாகவே வளரப் பிறந்தவர்கள் அல்லர். கிளைகளைப் பரப்பிச் செழிப்பாக வளராமல் ஒரு “பொன்சாய்” மரம் போல் ஒடுக்கப் படக்கூடாது ஐயா!
பரந்து சென்று அனுபவ ஞானங்களைப் பெற்றிடுவீர்!. நல்மனதும் கல்வியறிவும் அனுபவங்களும் இணையும் போது மனிதன் பூரணமாகி உலகிற்கு உதவும் ஆன்மா வாக ஆகிவிடுகின்றான். நாம் இந்த உலகில் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. இயற்கையுடன் உறவாடி மனிதரிடம் மானுடத்தையறிந்து அனுதினமும் அனுபவங்களைப் பெற்று அனைவருடனும் பகிர்ந்து கொள்வோமாக!.
தினக்குரல் (ஞாயிறுமஞ்சரி)
20.01.2008
- 117

Page 62
பருத்திழ் பல வயிரவநாதன்
புறத்தோற்றத்துடன் மட்டும் கம்பீரம் அமைந்து விடாது. உள்ளத்தில் தெளிவும் நேர்மையும் உள்ளவரிடத்தேகம்பீரம் அஞ்சாமையுடன் நிமிர்ந்து நிற்கும். மனம், வாக்கு, காயம் ஆகியவை தூய்மையாக அமையாது விடில் பயம், மயக்கம் பற்றிக் கொள்ளும், தூய்மையான மனமுடைய உடைய நெஞ்சுறுதி கொண்டவன. தன்னைப் போல பல்லாயிரம் பிரஜைகளையும் கம்பீரம் மிக்கவனாய் மாற்றி அமைத்து விடுகின்றான். கம்பீரம் ஆண்களுக்கே சொந்தமானதல்ல. எந்தச் சவால்களையும் வென்றெடுத்துவரலாறு படைத்தமையில் மகளிருக்கும் பாரிய பங்குண்டு, கம்பீரம் மேலோங்கினால் களிப்பு களிநடனம் புரியும்.
ஒருவர் வெளித் தோற்றத்தில் அஜானுபாகுவாய், மிடுக்குடன், செருக்குடன் காணப்பட்டால் அவன் "கம்பீர மானவன்” எனச் சொல்ல முடியுமா?
"கம்பீரம்" என்பது வெறம் புறத் தோற்றத்துடன் சம்மந்தப்பட்டதல்ல. உள்ளத்தில் தெளிவும் நேர்மையும்
... 118
 
 
 
 
 
 
 
 

சுயச்சுதாயம் உள்ளவர்க்கே அஞ்சாமை எனும் நெஞ்சுறுதி தானே உருவாகும். இதுவே உண்மையான கம்பீரமாகும்.
இதை விடுத்து உள்ளத்தே அழுக்குடன், வெளியே மிடுக்குடன் திரிபவர்கள் சஞ்சலமும், குரோதமும்கொண்டு குறுகித் தேய்ந்த மாந்தராகவே கருதப்படுவார்கள்.
இன்று உலகத்தவர்கள் புறத் தோற்றத்தினுள் தன்னைப் புகுத்தி, அதனுள்ளேயும் உண்மை இருக் கின்றதா என மயங்கி காலத்தை விரயம் செய்கின்றார்கள். உள்ளதை உள்ளபடி நோக்கி வாழ முடியாமை கூட அந்தகாரத்தையே வரவேற்பதுபோலாகும்.
நல்ல பண்புகளை நாடுபவர்கள் உருவங்களை மட்டும் நல்ல தரிசனமாகக் கொள்வதுமில்லை. பரதேசி யாக வாழ்ந்தபடியே எதனையும் எதிர்பாராமல் வாழ்பவர் களுக்குள்ளிருக்கும் நெஞ்சுறுதி எமக்கு இருக்கின்றதா?
நேரம் தாழ்த்தி உங்கள் இல்லத்திற்கு வருகின் றிர்கள். வீட்டில் மனைவி வெளியே சென்றுவிட்டாள். வீட்டுச் சாவி உங்களிடமில்லை பசிவேறு வயிற்றைக் கடிக்கிறது. அப்போது மனைவி சொல்லிடத் தொலைபேசியூடாகச் சொல்கிறார்." நான் அம்மா வீட்டுக்குச் சென்று விட்டேன். திரும்பி வரப் பேரூந்து கிடைக்கவில்லை, நாளை காலை வருகின்றேன். சாவியை கையுடன் கொண்டு வந்துவிட்டேன் மன்னியுங்கள். இன்றைய பொழுதை தெரிந்த நண்பர்கள்
穷
வீட்டுக்குச் சென்று கழித்து விடுங்கள் தயவு செய்து."
- 1 19

Page 63
பருத்திழ் 00. அவிவரச்
இவ்வாறு மனைவி சொல்லச் சொல்ல உங்கள்
மன இயல்பு எவ்வாறு மாறுபாடு அடையும்?" அட. இன்று இரவு எங்கே நான் தங்குவது, எப்படிப் போவேன், எப்படி உடனே செல்வது, மழைவேறு. சேச் சே. பசிவேறு." இவ்வாறு நீங்கள் அவஸ்தைப்படுவது தெரிகின்றதல்லவா?
ஒரே ஒரு இரவுப்பொழுதைக் கழிக்க இந்த மனம் எவ்வாறெல்லாம் அல்லலாடுகின்றது. அதே வேளை தினம், தினம் படுக்க இடம் இல்லாது , உண்ண உணவு இன்றி வீதியோரம் கிடக்கும் மக்களின் நிலை என்ன என எண்ணிப் பார்க்கின்றீர்களா?
ஒரு இரவில் உங்கள் துணிவு, நம்பிக்கை எங்கே போய்த் தொலைந்தது? எங்காவது போய் தங்க ஆயிரம் எண்ணங்கள், மனம் தவிக்கிறது !
எதையும் ஏற்கும் மனப் பக்குவம் தோன்றாது விட்டால் "கம்பீரம்" என்கின்ற திட சிந்தை எவ்வாறு அவத ரிக்கப் போகின்றதோ?
மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் தூயதாக அமையாதுவிடின் பயம் தானாகவே பற்றி மனிதனை அறுக்கும். பேச்சில் தூய்மை, உடற் சுத்தம், நல்ல இதயம் மாந்தர்க்கு அழகோ அழகு!
போலிக் கெளரவம் பெற்றுக்கொள்ள அடிமை வாழ்வை வரவேற்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.
- 120
 

башћfigrlili துன்பங்களை, எதிர்ப்படும் ஆபத்துக்களைச் சவால் களை எதிர்கொள்ளாமல் எப்படி வீரன் என்ற சொல்லை மட்டும் நாம் விரும்ப (plգալb?
ஒரு நெஞ்சுறுதி கொண்டவன் பல்லாயிரம் மக்க ளைத் தன்னைப் போல் கம்பீரமுள்ள பிரஜையாக்கின்றான்.
கோழைகளுடன் வாழ்வது வீழ்ச்சிக்கு வழி மட்டு மல்ல, படுத்து இருந்தபடி விண்ணை எட்ட எண்ணும் தன்னைத் தான் ஏமாற்ற விழையும் வேலை!
இன்று பலரும் நாளைக்கு என்ன செய்யலாம் என எண்ணியபடி வாழ்கின்றார்களே தவிர, காரியங்களைச் செயலுருவாக்க முயல்வது இல்லை.
புத்தகத்தைப் படித்தும், யாரோ சொன்னார்கள் என்பதைக் கொண்டும், ஆராய்ச்சியில் காலம் கடத்துகின் றார்கள். கொஞ்சம் முயன்று பார்க்கலாம் என்பதை விடுத்து, பயந்து பயந்தே வெறும் எதிர்பார்ப்புடன் நொந்து போகிறார்கள்.
மேலான வீரம் இல்லாது விட்டால், எந்தப் பிரச்சி னைகளையும் கடக்கும் ஆற்றல் வந்து விடுமா? நாளைய சிந்தையில் இன்றைய பொழுதுகளை நாசமாக்கும் சோம் பேறிகள் கூறும் காரணங்கள், மனக்கோட்டையிலும் வாசம் செய்யலாம் என்று கூறுவது போலாகும்.
கம்பீரம் மிக்கவர்கள் ஆணாகத் தான் இருக்க
- 121 س

Page 64
பருத்தியூர் அல. ஆயிரவநாதர் வேண்டுமென்பதில்லை. வீரம் மிகுந்த சாதனைப் பெண்கள் கோடான கோடி வாழ்ந்த பூமி இது உங்களைப் பெற்ற தாய் எவ்வளவு சோதனைகளைத் தாங்கி உங்களை வளர்த்தெடுத்திருப்பாள்? கொஞ்சம் சிந்தியுங்கள்.
எனவே சவால்களைச் சமாளித்த வீரர்களைத் தேடி வேறு எங்கும் தேடத் தேவையில்லை, அவர்கள் உங்கள் இல்லத்தில் உள்ளவர்களாக, ஏன் உங்கள் சமூகத்தில் ஒரு அங்கத்தவர்களாகவும் இருக்கலாம்.
இவர்களது நல்ல நடத்தைகளைக் கண்டு கொள் வீர்களாக, எப்படி ஒருவர் உயர்ந்தார் என்பதை அறிக! அவ்வண்ணம் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள அப்பொழுதே, துணிச்சல் தானாகப் புறப்படும். என்றும் புது உற்சாகத்தில், புத்தம் புதுபூக்களாகவே நித்ய அவதாரம் எடுப்பீர்கள். அது உங்களால் இயலும்.
சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டுமா என்ன? சிறகை விரித்து அடிக்க அடிக்கப் பறவை மேலே எழுகின்றது. கைகளை, கால்களை அசைத்து உழைக்க, மூளைக்கும் புது விருந்து அளிக்கப்படுகின்றது. மனதில் கம்பீரம் தோன்றியதுமே சோகம், சோம்பல் செத்து விடு கின்றது. களிப்பு உள்ளத்தில் விதைக்கப்பட்டு, மா விருட்சமாகிவிடுகின்றது.
தினகரன் வாரமலர்
20.06.2011
- 122
 

சுயச்சாதாuர்
NØ
அவதானம், நிதானம் அவசியம்!
சிரத்தையுடன் பணியாற்றுபவர்கள் நிதானம் இழப்பதில்லை. அவதான மற்றகாரியங்கள் முழுமையடைவதில்லை. பூரணத்துவமாக காரியமாற்ற விரும்புபவர்கள் திரமப்படாமல் பொறுமையுடன் செயலாற்றினால் தவறுகள் ஏற்படப் போவதில்லை. அவதானமின்றேல் சின்ன விஷயங்களே பாரிய விரும்பா? நிகழ்வுகளுக்குள் இழுத்துச் சென்று விடும். மற்றவனை முந்துவதற்காக விழுந்தடித்து ஓடுவதால் மனிதன் தன் பலமிழப்பான். அவசரமாக, நிதானம் இழந்து செயற்படுபவன், மற்றவர்களையும் பதற்றப்படவைக்கின்றான். நிதானம், அவதானம் நிம்மதியான வாழ்விற்கு ஆதாரம்.
எந்தக்காரியங்களையும் அவதானமாகச் செய்யாது விடின் அவை பெறுமானம் அற்றதாய் வீணாகப் போய் விடுவதுண்டு.
எமக்கு எல்லாமே தெரியும் என்கின்ற இறுமாப்பு டன் செய்கின்ற கருமங்களால் தவறுகளை வருந்தி
அழைக்கின்ற நிலை உருவாகலாம்.
- 123

Page 65
பருத்தியூர் 00:அறிவதாரம்
சிந்தித்துக்காரியமாற்றினால், எதிர்பார்த் வைக்கும் மேலான பலாபலன்களை ஈட்டித் தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நிதானம் இழந்தவன், ஏனைய வர்களையும் பதற்றமடைய வைக்கின்றான்.
நாங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே எங்களுக் கானவைகள் என்பதுமல்ல. எனவே எங்களது செய்கை களால் பிறர் அவஸ்தைக்கு உள்ளாகாமல் எம்மை நாம் பக்குவப்படுத்துதல் அவசியமானது அல்லவா?
எனவே அவதானமாகச் செயற்படுவது பொது நோக்குடன் கூடிய விஷயமாகும். எங்களது பணிகளில் நேர்த்தி, பூரணத்துவத்தையே ஏனையோரும் விரும்பு வதை நாம் உணர வேண்டும்."நிறுவனம் ஒன்றில் கடமை புரிபவர்கள் மட்டும் வேலைகளைக் கச்சிதமாகச் செய் தேயாக வேண்டும். சுதந்திரமாகச் செயற்படுபவர்கள் நாங்கள். எமக்கு என்ன?. எமது இஷ்ரம் போல் இயங்கு வோம்” என எகத்தாளமாகச் சிலர் பேசுவதைக் கேட்டிருப் பீர்கள்.
சமூக ஒழுங்கமைப்பு என்பது, பல அங்கத்தினர் ஒன்றிணைந்து சீராக இயங்குவதனாலேயே அதன் முன்னேற்றம் தங்கியுள்ளது. எறும்புக் கூட்டங்களை ஆய்வு செய்தவர்கள் சொல்லும் தகவல்கள் ஆச்சரியமாக இருக் கின்றன.
- 124
 
 

சுயச்சாதார் திட்டமிட்ட வாழ்க்கை முறை, உழைப்பு, கட்டுப் பாடுகள் எல்லாமே மனித சமூகம் எறும்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதாகும். ஏனோ தானோ என அவைகள் ஜீவனம் நடத்துவதில்லை.
திட்டமிடாமல் காரியம் செய்வதும், அதனால் கால விரயமாவதால் பலர் படும் சிரமங்கள் கொஞ்சநஞ்ச மானதல்ல. செய்யும் பணிக்கான காலத்தைக் கோட்டை விட்டுப் பின்னர் அவசரம் அவசரமாகச் செய்யும் காரிய ங்கள் உருப்படியாக அமைந்திடுமா?
மிகவும் திறமைசாலியான மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் சோகத்துடன் காணப்பட்டார்." "நீங்கள் தான் கெட்டிக்கார மாணவர்தானே, பின்பு எதற்காகப் பரீட்சை முடிந்ததும் கவலையாக இருக்கின் "நீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் “பரீட்சையில் நான் திறமையாகத் தான் எழுதினேன். இறுதி நாள் விடைத் தாளில் அவசரமாக எனது சுட்டெண்ணைச் சரியாக எழுதினேனோ தெரியவில்லை என்றார். விடை எழுதிய பின்னர் அதனைப் பரீட்சை அதிகாரியிடம் ஒப்படைக்கும் போது தான் எனது சுட்டெண்ணை எழுதினேன். அதில் ஏதும் தவறு வந்து விட்டதோ எனச் சந்தேகமாக இருக்கின்றது என்றார். பரீட்சை விடைத்தாளில் முதலில் சுட்டெண்ணைச் சரியாக எழுதிவிட்டு, அப்புறம் விடை எழுதிட வேண்டும் ஆனால் இறுதி விடை எழுதும்போது நேரம் பிந்தியதால் அவர் மனக்கிலேசமடைந்து விட்டார்.
- 125

Page 66
பருத்திபூர் 00. வலிரவதன்
சில சந்தர்ப்பங்களில் அவசரமான அலுவல்களால் மனம் தடுமாறுவது இயற்கை.சாதாரண விடயங்கள் கூடக் கவனக் குறைவால் பெரிய விபத்துக்களை உண்டுபண்ணி விடுகின்றது.
இரவு இரவாக நீண்ட தூரம் பேரூந்து ஒட்டிச் செல்லும் சாரதிகள், இடைஇடையே சற்று ஓய்வு எடுக்க லாம், பயண தூரத்தின் இறுதியில் சற்றுக் கண் அயர்ந்து விட்டமையினால் பெரிய விபத்தைச் சந்தித்த சம்பவங் களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சின்ன விஷயங்களுக்கே பதட்டப்படுபவர்கள் பெரிய சாதனைகளை சாதிப்பது எங்ங்ணம்?
குழம்பி தவிப்பதால், எழுந்து இயங்கும் காலத்தை இழந்து நொந்து போகும் பலர் உளர். குழம்பித் தவிப்ப வர்கள் நிதானத்தை ஏன் மறந்து போகின்றார்கள்?
மாடிப் படிக்கட்டுக்களைக் கடக்க முற்படுபவர்கள் அவசர அவசரமாக மூன்று படிகளை ஒரே எட்டில் கடக்க முற்பட்டுக் கால்களில் கட்டுப் போடுவது முட்டாள்தனம்.
அற்பக் காரியத்திற்காக முட்டி மோதி முந்தப் பார்க்கின்றார்கள். சுறுசுறுப்பான இயக்கம் என்பது மற்றவர் கேலியாக நோக்கும் தன்மையாக இருத்தலாகாது. தொடர் பேரூந்தில் ஓடித் தொற்றி ஏறுவதும், இருக்கை இருந்தும், மற்றவர் தோளில் சாய்ந்து தொங்குவதும்
- 126
s
 
 
 
 
 
 
 
 
 
 

சுயசோதாபர் மந்திகளின் கூத்து மந்திகள் தொங்கி வீழ்வதில்லை. மனிதனால் அது இயலாது. இயலாத முட்டாள் வேலையை மேற்கொள்ளுதல் இழிவு நிதானம் இழப்பவன் வேதனை யை விலைக்கு வாங்குகின்றான்.
இன்று பலரும் மற்றவனை முந்துவதற்காகவே, தனக்கு அது கிட்டி விட வேண்டும். எனக் கருதுகின்றான். தேவையற்ற ஒரு பொருள் இருந்தாலும் அது மற்றவரு க்குக் கிட்டக் கூடாது என்பதில் சர்வ ஐாக்கிரதையாகப் பலர் இருக்கின்றார்கள்.
ஐந்து வினாடி சினத்தை அடக்க முடியாது, நிதான மிழந்து மிருகம் கூட வெட்கப்படும் காரியங்களை அருவருப் பின்றிச் செய்து முடிக்கின்றான். தனது பொருந்தாத அத்து மிறல்கள், குற்றச் செயல்களை வீரம் மிகுந்தது என்றும் சொல்லிக் கொள்கின்றான்.
கருணை, அன்பு, உள்ளத்தில் சுரந்தால் செய் கருமங்களில் நிதானம் வந்து விடும். அமைதியான இயக்கம், களைப்பு உண்டுபண்ணிவிடாது. அவசரம் அவச ரமாக ஓடினால் , ஐம்பது அடி தாண்டு முன் நெஞ்சு LILLILá6(5b.
சிலர் "ஜாக்கிரதை", "எச்சரிக்கை" என்கின்ற அறிவிப்புப் பலகையைப் பார்ப்பதேயில்லை. எமது காரி யங்களுக்காக மட்டும் இந்த உலகம் இயங்குவதில்லை.
வழி விடுவோம்!
- 127

Page 67
கருத்தியூர் அல. ஐவிரலுகுந்தர்
எல்லோரும் சேர்ந்து பயணிக்கும் பெரிய பார ஊர்தி இந்தப் பூமி இதில் நாம் மட்டும் அவசரப்பட்டால் எப்படி ஒழுங்காகக் காரியங்கள் நடந்தேறும்? கொஞ்சம் சிந்தித்து நிதானத்துடன் நடந்தால் எந்தக் காரியங்களும் சிக்கலின்றிச் சுலாபமாக நிறைவேறிவிடும்.
நீ மற்றவனுக்கு வழி விட்டால் உனக்கான பாதை களை உன்னதமாக உண்டுபண்ணுகின்றாய்! நிதானமாக, அவதானமாகச், செயல்பட்டால் சுறுசுறுப்பு துணைக்கு வரும்.
தினகரன் வார மலர்
12.06.2011
- 128
 
 

aufraguó
Qp i Op d உணர்ச்சி வசப்படுதல் எதற்கும் உணர்ச்சி வசப்படும் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டு விடும். தமக்கு ஒவ்வாத கருமங்களால் சினமடைந்து அடுத்தவர்களையும் உணர்ச்சி வசப்பட வைத்தலாகாது கட்டு மீறிய மனத்தினால் உணர்ச்சியை அடக்காது விட்டால், ஆத்ம தேக பலம் குன்றுவதுடன் பிறருடனான அன்பும் குன்றும் அறிவுக்கு வேலை கொடு மமதையை அடக்கு ஆரவார உணர்வுகளுக்குள் அமிழ்ந்து விடாதே! ஆவேசத்தை அடக்கு உணர்ச்சி வசப்படுவதால் கணக்கற்ற துன்பங்களே மிகுதி! கற்ற கல்வி அனுபவம் அர்த்தமற்ற தாக்கி விடும்.
எடுத்தற்கெல்லாம் கண்டபடி உணர்ச்சி வசப்படு தல், அடுத்துக் தொடுக்க வேண்டிய, மனதின் செயற் பாடுகளை ஒடுக்கும் செயற்பாடுகளாகவே அமையலாம்.
அறிவிற்கு வேலை செய்ய சற்றேனும் அவகாசம் கொடுக்காமல் வெறும் உணர்ச்சிகளுடன் சங்கமமானால்
அங்கம் தான் துடிக்கும், செயல் மடிந்து விடும்.
- 129

Page 68
பருத்தியில்.ஆயிரவநாதர்
பட்ட மரம் போல் சடம கட்டாயமாக எமது உணர்வுகளை
கட்டுமீறிய எண்ணங்களின் தாக்கத்தினால் நாம் எல்லை மீறுவது, தேகத்திற்கு ஆகாது. விவேகமல்ல. சஞ்சலம், துன்பம், வந்தால் வருந்துவது இயற்கை. எனினும் எம்மை நாம் சுவீகரிக்கவும் வேண்டியுள்ளது. எதனையுமே ஆராயாது. புலன்வழி புகுந்து கொள்வதால் எமது ஆன்ம வலுவை நாம் இழந்து போக வழிகோலியவர்களாவோம். கண்டபடி கலங்குவதும், சின்ன சிஷயங்களில் பெற்ற சாதாரணமான வெற்றிகளுக்காகத் தம்மை மறந்து ஏக
களிப்பில் அமிழ்ந்தே விடுவது தற்பெருமைக்கே நம்மை
நாம் இட்டுச் சென்று விடலாம்.
அனுபவ முதிர்ச்சியின்மையால் இளைஞர்கள்
உடனே உணர்ச்சி வசப்பட்டுவிடுகின்றார்கள். ஒரு பெரிய
- 130
 
 

muuẩstgauğ அரசியல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தலைவர் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்."எங்கள் கொள்கையே எமக்குப் பெரியது இதற்காக நாம் இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கின்றோம். வாருங்கள் தோழர் களே. எம்மோடு அணி திரளுங்கள். நாம் உயிருக்கு அஞ்சப் போவதில்லை." இப்படியாக அவர் பேசிக் கொண்டிருக்கத் தொண்டர்கள் செய்த ஏற்பாட்டின்படி எல்லோரும் முண்டியடித்தபடி மாலைகளை மலையளவாக
அள்ளிப் போட்டார்கள்
இதனைப்பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு அப்பாவி இளைஞன். அவர் தலைவரின் ஆவேசமான, உணர்ச்சி கரமான பேச்சுக்களால் தன் வசமிழந்தான். பலத்த சத்த மிட்டவாறே தலைவா. வாழ்க! வாழ்க! உனக்காக நாங்கள் உயிரையும் தருவோம், வாழ்க. வாழ்க!” எனக் கோஷமிட்டான், மேடையை நோக்கி ஓடி வந்தான்.
வந்தவன் ஒருவருமே சற்றும் எதிர்பாராதவண்ணம் தனது சட்டைப்பையில் உள்ள பேனாக் கத்தியினால் தனது மணிக்கட்டுக் கையினை வெட்டிக்கொண்டான். ஆயினும் அப்போது உடனே இரத்தம் விரவில்லை.
இதனைக் கண்ட தலைவனின் ஆதரவாளர்கள் இந்தச் செயலைக் கண்டு மேலும் உணர்ச்சிவசப்பட்டவர் களாக, "தலைவா! வாழ்க..! உன் தியாகம் வாழ்க..! - 131 -

Page 69
கருத்திழ் அல. அதன் தொண்டர்கள் வாழ்க..! வாழ்க..!" என எந்தவிதமான எதிர் விளைவுகளையும் கருதாமல் கத்தித் தீர்த்தார்கள்.
இந்த ஆதரவுக் குரலால் மேலும் உற்சாகம் கொண்ட அந்த இளைஞர் , மேலும் ஒரு தடவை தனது மணிக்கட்டு அருகே வெட்டிக் கொள்ள அப்போது தான் வெட்டு மிக ஆழமாகப் பதிந்து கொள்ள உடன் இரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவன் தனது விரல்களால்
தலைவருக்குத் திலகமிட்டு உரத்த குரலில் வாழ்க! வாழ்க!,
எனக் கோஷமிட்ட அடுத்த நொடியில் மேலதிக இரத்தப் போக்கினால் உணர்விழந்து மயங்கிமேடையில் வீழ்ந்தான்.
அப்புறம் என்ன , கூட்டத்தில் ஒரே குழப்பம் ஏற்பட, சுற்றியிருந்த தொண்டர்கள் ஏதேதோ செய்தும் கூட இரத்தப் போக்குக் கட்டுப்படாமல் முடிவில் அவனைத் தூக்கி வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு இட்டுச் சென்றனர். அவனது கட்சியினருக்கு அதிர்ச்சி! இப்படியும் துணிவா இவனுக்கு? ஆனால் அதே அப்பாவி இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தான்.
உணர்ச்சிவசப்படுதல், அனர்த்தத்தை அழைக்கும்!
கேட்டீர்களா, இப்படியாக யாரோ ஒருவர் பேச்சில் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு செயற்படுவது விவேகமற்ற செயலன்றி வேறென்ன?
- 132
 

வெறும் ஆரவாரங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்
கும் மனிதர் மயங்கக் கூடாது. ஒரு வைத்தியர் கடும் நோயாளியைப் பார்த்து அழுது கொண்டிருந்தால் நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பது யார்? கண்டித்தல், அன்பைக் காட்டுதல், சினம் கொள்ளுதல் எல்லாமே மனிதனின் மிகச் சாதாரண செயற்பாடுகளே. ஆயினும் காரியமாற்றும் ப்ோது ஒரு வரையறையுண்டு.
பிள்ளைகள் தப்புச் செய்து விட்டால் நான் பெற்றவள்தானே எப்படியும் பேசலாம், தண்டிக்கலாம் என எண்ணி உணர்ச்சிப் பெருக்கால் கண்டபடி பேசி, அடித்து அவர்களை அவதூறு செய்ய முடியுமா? இவையெல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்துவருமா? இத்தகைய நடவடிக்கை களால் ஏற்படும் விபரீதங்களை நாங்கள் அறியாதது
LD6b6).
காதல் தோல்விகளால் மனம் நொருங்கி உயிரை விடச் சித்தம் கொள்வதும், கோபம் வந்தால் எடுத்த எடுப்பில் பிடிக்காத பேர் வழிகளை வெட்டிச் சாய்ப்பதும் மனம்வழி செல்லும் பாவச் செயல்!
இன்று நல்ல முறையில் கற்கும் இளைஞர்களின் உணர்வைத் தூண்டி, பார்க்கக் கூடாதவைகளை அவர்களு க்குக் காட்டி போதையேற்றும் புல்லுருவிகளின் செயல்
களை என்ன செய்வது?
- 133

Page 70
பருத்திழ் பல. ஆயிரவருதஷ்
வாலிபமிடுக்கு எதனையும் செய்ய வல்லது. இந்த
வயதில் தீய போதைப்பழக்கம், கெட்ட ஆண், பெண் சகவாசம் இவர்கள் சிந்தனையைக் கீழ்த்தனமான, சட்ட
விரோத செயல்களுக்குள் உடன் இழுத்துச் சென்று விடும்.
பாலியலைத் தூண்டும் படங்கள், திரைப்படங்கள், கதைகள், செய்திகள் புதிய மாயா உலகினுள், இளைஞர் களை வசீகரித்து குழிபறித்து விடுகின்றது. தன்னிலை மறந்து குற்றம் செய்வதால் சட்டம் இவர்களை மன்னித்து விடாது. யாரோ ஒருவரின் வாழ்வோடு விளையாட எவர் தான் அனுமதிக்கப் போகின்றார்கள்? ஒருவரின் வாழ்க்கை இன்னும் ஒருவருக்குப் பரிசோதனைக் களம் அல்ல. ஒருவரின் உணர்ச்சிக்கு மற்றும் ஒருவர் இரையாகவும்
(UDIQUIT g5).
தன்னை இழந்தவன் தனக்குத் தானே ஆன்ம விரோதியாகின்றான். மேலான பக்தி, அன்பு காரணமாக மட்டுமே மனிதன் பூரண விழிப்புநிலையினை அடைந்திட முடியும், அறிவு மயக்க நிலையில் உள்ளவன் அவசரக் காரனாகவும் காரியங்களைக் கோட்டை விட்டவனாகவும்
ஆகின்றான். இதோ ஒரு நகைச்சுவை.
அன்று காதலியைக் கண்ட காதலன் துணுக் குறுகின்றான். அட என் அன்புக் காதலி விழிகளில் நீரா?
- 134
 

சுயச்சதம் என்ன இது, என்ன நடந்தது? மனம்பேதலித்துப்போனான். பெரிதாக ஏற்கனவே அவள் வீட்டில் இந்தக் காதலைப் பெரிதாக வரவேற்கவில்லை. என்பதை அவன் அறிவான்.
“என்ன சொல். ஏன் விழி நீர் சிந்துகின்றாய், உன் தகப்பனார் ஏசினாரா? அவர் யார் உன்னைப் பேச. கயவன், என்னை என்ன என்று எண்ணி விட்டான்.அல்லது உன் அம்மா எங்கள் காதலைக் கொச்சைப்படுத்து கின்றாரா? இந்த இரு பிசாசுகளையும் என்ன செய்கின்றேன் பார்.” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கத்தியவன் மேல்
பாய்ந்தாள் காதலி !
"சும்மா கத்தாதே நிறுத்து! நீ என்ன என் அம்மா, அப்பா பற்றிப் பேச வந்து விட்டாய். அவர்கள் என்ன பிசாசா?, அவர்களை என்ன செய்ய முடியும் உன்னால்? என்ன கண்டபடி உன் பாட்டுக்கு வசைபாடுகின்றாயே உன்னை நம்பி நான் வந்தேன் பார். என்னைச் செருப் பால் அடிக்க வேண்டும். எங்கள் காதலுக்கு வெகுசிரமத் துடன் இன்று தான் ஒப்புக் கொண்ட இவர்களையா நீ ஏசுகின்றாய்? சும்மா கண்ணில் தூசி விழுந்தால் இப்படியா நடந்து கண்டபடி பேசுவது? இனி உன் சகவாசமே வேண்டாம். ஒடிப் போ” என்றவள் அவனை விட்டு விலகி ஓடினாள். ஆடிப்போனவன் அடங்கி நின்றான்.
- 135

Page 71
பருத்திழ் 08:ஆயிரவநாதர்
விஷயம் தெரியாது கண்டபடி உணர்ச்சி வசப்பட்டால் இது போல்தான் எல்லாமே நடக்கும். வெண்ணெய் திரளும் முன் தாளியை உடைக்கலாமா? அறிவை அறியாமைக்குள் செலுத்தக் கூடாது. இதனால் அவஸ்தைப்படவும் கூடாது. வல்லமை பெற உள்ளத்தை உறுதியாக்குக! உணர்ச்சிக்குள் நீங்கள் உட்புகுந்து கொள்ளாது அதனை செல்லும் ஆளுமையைப் பெற்றுக் கொள்க!
தினகரன் வார மலர் 15.05.2011
- 136
 


Page 72

ங்கம்
娜
ISBN 978 9550469-16