கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:மெளனம்

Page 1


Page 2

மெளனம்
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வின் வசந்தங்கள். பாகம் 76 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் விபரம்
நூல் தலைப்பு :
ஆசிரியர் :
மொழி :
பதிப்பு ஆண்டு :
பதிப்பு விபரம் :
உரிமை :
தாளின் தன்மை :
நூலின் அளவு:
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
கணனி வடிவமைப்பு:
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை :
மெளனம்
வாழ்வியல் வசந்தங்கள் பாகம் -
பருத்தியூர் பால.வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க்
16
கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
13
134
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
அஸ்ரா பிரிண்டர்ஸ்
பெர்பெக்ட்
வானவில் வெளியீட்டகம்
250/=
ISBN: 978-955-0469-17-8

அOைரிந்துரை
மனிதர்கள்'சமூகவிலங்குகள் என்று மானிடவியலாளர் கள் கூறுவர். எனினும் கூர்ப்பு என்ற முனைப்பும் பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவும் அவர்களைப் பல்வேறு தளங்களில் மாற்றி யமைத்துக் கொண்டே வந்தது எனலாம். இன்றும் மனிதர்கள் எவரும் ஒரே மாதிரியாக இல்லை. தனிமனிதன்,குடும்பம், சுற்றுச் சூழல், சமூகம், இனம், நாடு, மதம் என அவர்கள் பிளவுண்டே கிடக்கின்றனர். முரண் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறனர். இவற்றுக்கான அடிப்படைக் காரணங்கள் பலவற்றைச் சமூகவிய லாளர்கள் கற்பிக்கின்றனர். மானுட நேயச்செயல்முறைகளும், மனோபாவமும் நம்மிடையிலே இல்லை என்பதை அவர்கள் வற்புறுத்துகின்றனர். இவற்றை வற்புறுத்தி மனித மனங்களை நேர்பட வைக்க ஞானிகளும்,யோகிகளும், சீர்திருத்தவாதிகளும் அடிக்கடி தோன்ற வேண்டிய சூழலில் தான் சமூகம் இயங்கி வருகின்றது.
நமது தமிழ்ச்சூழலிலும், இந்து பண்பாட்டுச் சூழலிலும் இவ்வாறான சமூக ஒழுக்கு நோக்கிய பல நிகழ்வுகளும், இலக்கியங்களும் தோன்றி வளம்படுத்தமுனைந்ததை எவரும் அறிவர். புராணங்களும், இதிகாசங்களும்,தர்மசாஸ்திரங்களும் மனிதவாழ்வின் ஒழுங்கு பற்றியே, அதிகம் பேசின. ஆயின் அவை நேரிடையான போதனையாகவன்றி, மறைமுகமாகக் கதை களினூடாக பல மானிட தர்மத்தை வற்புறுத்தின.புராண இதிகா சங்களின் நிலை பேறாக்கத்துக்கு அவற்றின் போதனைகள்
3

Page 4
பக்க பலமாக நின்றன. தமிழ்ச்சூழலில் அற இலக்கியங்களின் தோற்றப் பாடு பற்றி யாரும் அறிந்திருப்பர். அவை பற்றிக் குறிப்பிடும் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள்
"நோய் கொண்ட ஒருவனுக்கு மருந்துபோல ஒழுக்கப்பிறழ்வு என்ற நோய் கொண்ட சமூகத்துக்கு மருந்துகளின் பெயர் கொண்ட அறநூல்கள் தோன்றின" என்பர். இது ஒரு சமூக நியதி, சமூகத்தில் எங்கு பிறழ்வு நிகழ்கின்றதோ அங்கு நெறிமுறைப்படுத்தல்களும் நிகழ்ந்து கொண்டே வந்துள்ளன. சமூக அக்கறையாளருக்கு இருக்க வேண்டிய கடப்பாடாக அது அமைந்தது.
மேற்குறித்த பின்புலத்தின்அடியாகவே பருத்தியூர்பால, வயிரவநாதனின் “வாழ்வியல் வசந்தங்கள்” எனும் சிந்தனைக் கட்டுரைகள் அடங்கிய நூலையும் நோக்க வேண்டியள்ளது. திரு பால, வயிரவநாதன் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர் ஒழுக்கப் போதனையாளர். அவை குறித்த பன்னூலாசிரியர். அவர் தமக்கான தளத்தில் நின்று கொண்டு இந் நூல்களைப் பல்வேறுபட்ட தலைப்புக்களில் தேர்ந்து தனது மனக் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். எழுத்தாளருக்கு இவ்வாறான தலைப்புக்களில் எழுத வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை அறிவதும் முக்கியமானது.
இன்று மனித சமூகம் இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றது. மனிதரிடையே குடும்பம், உறவுகள் என்ற அமைப்பில் உறவுகள் அற்றுப்போய்விட்டன.
4.

ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்கும் தன்மைகள் வளர்ந்துவிட்டால் மேலோட்டமாக மனிதர் என்ற போர்வைக்குள் அரைமிருகங்களாக மனிதர் வாழப்பழகிக் கொண்டார்கள். மனித விழுமியங்கள் செல்லாக்காசாகிப் போய்விட்டன. இவ்வாறான சூழலில் நமக்கான இருப்பையும், பண்பாட்டையும், அதன் தேவையும் உணர்த்த வேண்டிய ஒரு சூழலிலே தான் இந்த நூல்களின் வரவுகவனத்தில் கொள்ளப்படுகின்றது.
நூலாசிரியர் வாழ்வியல் சிந்தனைகளாக சந்தர்ப்பங் களைப் பயன்படுத்துதல், சகமனிதர்கள் மீது பாசம் கொள்ளு தல், எந்த விடயத்தையும் தெளிவுடன் நோக்குதல் அல்லது தெளிந்த ஞானம் பெறல், மெளனத்தின் பலம், பலவீனம், எளிமையின் அழகு, குரோதத்தின் கேடு, சலனத்தால் ஏற்படும் வீழ்ச்சி எனப்பல தளங்களில் அவை பற்றி அலசுவதும் அவற்றினைமுக்கியப்படுத்துவதுமாக விளக்கிச் சொல்கின்றார். மேலாக'கணவன் என்ற பிரகிருதிவாழ்வியலில் வகிக்கும்பாகம் பற்றி எடுத்துரைத்து நல்ல கணவன் குடும்பத்தின் நல்வாழ்விற்கு அச்சானியாவதையும் விபரித்துள்ளார்.
தமிழில் அறப்போதனைகள் அதிகம் செய்யுள் வடிவி லேயே வந்துள்ளன உரைநடையில் வந்தவை பெரும்பாலும் கதாசங்கிரகங்களாகவே வந்துள்ளன. எனினும் உரை நடை வளர்ச்சியின் விளைவால் போதனைகளும் உரை நடையில் வெளிவரலாயின. ஆயின் அவை பத்தி எழுத்துக்கள், ஜனரஞ்சக எழுத்துக்கள் என்ற வகையிலேயே அடையாளங்காணப்பட்டன. தமிழகத்தில் டாக்டர் M.S. உதயமூர்த்தி என்பவருடைய
5

Page 5
இவ்வாறான பத்தி எழுத்துக்கள் பல்லாயிரம் இளைஞர்களு டைய வாழ்வைத் திசைதிருப்ப உதவினஎன்பர்.
இன்று இவ்வாறான எழுத்துக்கள் எல்லோராலும் எழுதப்படுகின்றன அந்த வகையில் நமது பருத்தியூர் பால. வயிரவ நாதனும் தனது மனப்பதிவை, தான் கூற வேண்டிய வாழ்வியலுக்கு அவசியமான கருத்துக்களை மிகவும் நிதானத் துடனும், சுவாரஸ்யமான உதாரணங்களுடனும், சம்பவங் களுடனும் விரித்துரைத்து வாசகரிடம் தமது கருத்தைத் திணிக்காது அமைதியாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற முனைந்துள்ளார். அவரது அவா நிறைவேற வாழ்த்துக்கள்! அவரது சமூக அக்கறை இன்னும் பல தளங்கள் நோக்கிப் பயணிக்கவேண்டும் என்பது என் அவா.
கலாநிதிவ.மகேஸ்வரன் தமிழ்த்துறை பேராதனை பல்கலைக்கழகம்

(p56160
இந்த ஆக்கம் குவியப்படுத்தும் சிந்தனைகளும் எண்ண ங்களும் நமக்குப்புதியவை அல்ல.
நம்மிடமிருந்து அவை தொலைந்து விட்டன. நமது அன்றாட வாழ்புல தொந்தரவுகளால் நெருக்கடிக்களால் மறக்கப் பட்டுவிட்டவை.
இவற்றை மீண்டும் கண்டுபிடித்து நம்மைச் சூழ்ந்துள்ள மாயத்தோற்றங்களை தகர்க்கும் விசையாக இந்த எழுத்துக்கள் ஆக்க மலர்ச்சிக்கு வழிவகுக்கும்.
எமது தமிழ் எழுத்தாக்க மொழிநடைகளுள் இந்த b60)L வித்தியாசமானது. இவை வாசக மனநிலையில் சனநாயகப் பண்பை உருவாக்குவதில் இயல்புத் தன்மை கொண்டவை. அதாவது வாசக மன நிலையிலிருந்து சீர்மியம் தொடங்குவதற் கான வாயில்களைத் திறந்து விடுகின்றன.
மேலும் வாழ்க்கைமீதான பன்முகவாசிப்பு உருவாக்கும் எண்ணச் சிதறல்களையும், பார்வைகளையும், அனுபவங் களையும் பகிர்ந்து கொள்ளும் வடிவமாகவும் இந்த எழுத்துக் கள் அமைகின்றன. வாசக மனநிலையில் எப்போதுமிருக்கும் கேள்விகளுக்கும் இயல்பான அறிவும் உணர்வும் இணைந்த பதில்களைத்தாமே கண்டடையும் நுட்பங்களையும் தன்னகத்தே இந்த எழுத்துக்கள் கொண்டுள்ளன.
7

Page 6
இந்த நூல் வாசகர்களுக்கு கடினத்தன்மையற்ற இலகு வாக இயங்குவதற்கான பண்புகொண்டது. இதனால் வாழ்க்கை யின் உன்னதங்களை சந்தோஷங்களை, துக்கங்களை, இழப்புக்களை, நம்பிக்கைகளை, துரோகங்களை நேர்மனப் பாங்குடன் எதிர்கொள்வதற்கான அகவிழிப்புணர்வைஏற்படுத் தும் எழுச்சியாகவும் இந்த எழுத்துக்கள் அமைகின்றன.
இவ்வாறான ஆக்கங்களை எழுதுவதற்கான அறிவும் திறனும் மனப்பாங்கும் கொண்ட நண்பர் பருத்தியூர் பால. வயிரவநாதனின் முயற்சிகள் மென் மேலும் உயர்வு பெற வேண்டும். இதற்கான வளமான சிந்தனையையும் ஆரோக்கிய மனப்பாங்கும் நண்பருக்குக் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.
தெ. மதுசூதனன். MA

எனது உரை தெளிவு என்பது சந்தேகம் அற்றநிலை சந்தேகம் எல் லோருக்கும் இயல்பாக வருகின்ற குணமேயாயினும், ஒன்றுமே புரியாமல் தெளிந்திட விரும்பாமல் வாழ்ந்திட இயலாது.
அறிவின் முதிர்ச்சியினால் ஞானம் ஏற்படுகின்றது. இதனால் தெளிவு அழியாதநிலைபெறுகின்றது.
புலன்களின் தீய செயல்களால் ஆன்மா அல்லல் படுகின்றது. எனவே இதனைவழிநடத்துவது அறிவின்பொறுப்பு
அறிவுடன் ஆணவம் வசப்படாது, பெறும் ஞானத் தினூடாக தெளிவு இன்றேல், உண்மை வாழ்வில் சுகம் காண முடியுமா?
மன விகாரம் மனிதர்க்கும் பாதகம், நற்குண விசாலம், உயிர்க்கு உகந்தது.
சற்றேனும் சளைக்காமல் தெய்வீக ஆளுமைக்குள் சஞ்சரிக்க முன் செல்க!
மெளனத்தினை உள்நிறுத்தும் போது ஆன்மாவினுள் பிரகாசம் பிரவாகமாய் பாய்ந்து வரும்.
மெளனம் உள் நின்று ஒதப்படும் மா மந்திரத்திற்கு வலிமை சேர்க்கும். அன்பு எனும் அலையே மாமந்திரம்,
9

Page 7
மெளனம் ஒரு தியான நிலை,பேசாமொழி, வாழ்க்கையின் சுகங்களுக்கான ஆதாரம்.
எனினும் பேசவேண்டிய சந்தர்ப்பங்களில் மெளனிகள் வாய் திறந்தால் அதர்மவாதிகள் அதிர்ந்து எரிந்து போவார்கள்.
எனவே மெளனம் சர்வ வல்லமை பொருந்திய அமானுஷ்ய சக்தி!
மெளனமாக வாழ்ந்து கொண்டிருப்பவன் என்றும் எளிமையேடு துலங்குகின்றான்.
சலனமற்ற நிலையில் தான் மெளனம் உள்ளத்தில் நிலைத்திருக்கின்றது.
அதே சமயம் சலனம் கொண்டவர்கள் தியான மூடாக, மெளனமாக உண்மையுணர்வுடன் அவதானமாக விழிப்புடன் இருந்தால் என்றும் இன்பமேயன்றி வேறொன்றும் தோன்றிடாது.
நல்ல மனசில் குரோதம் குடிகொள்ளது. இவர்கள் என்றும் சாந்த சொரூபிகள்.
ஒரு கணப் பொழுது மன விகாரத்தால் ஏற்படும் எதிர் விளைவுகள் கூட பல் ஆண்டு காலத் தேட்டங்களை, கெளரவ ங்களைக் கெடுத்துவிடும்.
10

எனவே மனத்தை லேசாகவும், அதே சமயம் தீய வற்றிற்கு என்றும் வளையாத உறுதியுடன் இதனை வைத்திருந் தால் எந்தச் சோதனைகளும் வெற்றி கொள்ளும் சாதனைக ளாக மாற்றியமைக்கப்படும்.
மனித சக்தி அற்புதமானது. அதனைத் தெரியாமல் இருப்பதனாலேயே பலரும், விலைமதிப்பற்ற வல்லமைகளைப் பெறாமல் இருக்கிறார்கள்.
விழிகளை விரித்து அகன்ற உலகில் உயர்ந்தவர் களைப் பாருங்கள்! அவர்கள் வல்லமைகளை நோக்குங்கள்.
எல்லோராலும் எல்லாம் இயலும் உள்நின்று இருக்கும் ஒன்றினை அதன் பெறுமானத்தை உணர்வை உணர்க! உங்களை உங்கள் மூலம் வலுவூட்டுக!
இத்துடன் எனது உரையில் அடுத்து அணிந்துரை, முகவுரையின் பால் கவனம் செலுத்துகின்றேன்
பேராதனை பல்கலைகழகத்தில் தமிழ் துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதிவ. மகேஸ்வரன் அவர்கள் விரிவான அணிந்துரையினை அருமையாகத்தந்துள்ளார். பல வருடங்களாக நட்புடன் பழகிவருபவர். கொழும்பு தமிழ்ச் சங்கமூடாக மேலும் நட்பு வளர்ந்து வருகின்றது.
தமிழ் இலக்கிய ஆய்வுரைகளை இவர் நிகழ்த்தும் போதுநான் ரொம்பவும் ஆச்சரியப்படுவதுண்டு.
11

Page 8
செறிந்த பரந்த தமிழ் தேடலாளர் திரு. மகேஸ்வரன். என்றும் இளைமைத் துடிப்புடன் தமிழ் இலக்கிய நெஞ்சங்க ளுடன் நெடுங்காலமாக உறவாடி வருபவருமாவர்.
பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் நல் ஆசானாக மட்டுமின்றி உற்ற நண்பர் போலவும் பழகும் கலாநிதி வ. மகேஸ்வரன் இனிமையான பண்பாளர்.
எவரையும் வாழ்த்தும் நெஞ்சம் இருந்தால் அவர்களின் வாழ்க்கையும் சந்தோஷகரமானதேயாம்.
இதற்கு ஏற்ப தமிழுடன். தமிழ் சான்றோர்கள், எளிமை மிகு மக்களையும் என்றும் நேசிக்கும் மகேஸ்வரன் ஈஸ்வரன் கிருபையுடன் என்றும் சந்தோஷியாக இருக்க நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!
தமிழ் சங்கம் தந்த நல்ல நண்பன். மதுவிலும் இனிய தெ-மதுசூதனன் அழகான தமிழில், புதுமை தோய்ந்திட உரை செய்யும் ஆற்றல் மிக்கவர். "அகவிழி சஞ்சிகையூடாக பேச்சு ஆற்றல் மூலமாக இவர் புலமையை நான் அறிந்தேன்.
பல தரமான இலக்கிய ஆய்விதழ்களை நடாத்தியும் அவைகளின் ஆசிரியராகவும் பணிபுரிந்து வரும் இவர் அரசசார் பற்ற நிறுவனங்களுடாகச் சமூக நல தொண்டுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றார்.
12

தமிழ் இலக்கிய ஆய்வுகளை நடாத்தியதுடன், ஆய்வு, நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிவருபவர்என்பதும் குறிப்பிட த்தக்கது. நண்பர்கள் பலரைச் சேர்ப்பதிலும் வல்லவர்.
இவரது மதிப்புரை எனது "வாழ்வியல் வசந்தம்"பாகம்16 இன் "மெளனம்" நூலுடன் வெளிவருவதில் எனது மகிழ்ச் சியைத் தெரிவிக்கின்றேன். நன்றி!
நூல்கள் அழகாகவும் செறிவாகனகருத்துக்களையும் உள்ளதாக அமைந்திட எமது முயற்சிகள் மட்டுமல்ல எல்லாம் வல்ல இறைவனின் நல் ஆசிகளும் முதற்கண் வேண்டும்.
எல்லோரையும் இரட்சிப்பவன் இறைவன்.
இந்த வேளை நூல்களை உருவாக்க உதவிய திரு.எஸ். சிவபாலன் (அதிபர் அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட் ) அவர்களுக்கு நன்றிகள். ஒத்துழைத்த நண்பர்க ளுக்கும் எனது அன்பினைத் தெரிவிக்கின்றேன்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன் "(BLD(IB (S6)6Ob” 36-2/1,ஈ.எஸ் பெர்னாண்டோமாவத்தை கொழும்பு06. தொ.பே இல:- 011-2361012.
071-4402303,0774318768
13

Page 9
7
நூலாசிரியர் பருத்தியூர் மால, வயிரவநாதன் எழுதி வெளியிட்ட"வாழ்வியல் வசந்தங்கள்"
நூர் தொகுதிகள்
. உண்மை சாஸ்வதமானது
அம்மா
சுயதரிசனம் . கோழைகளாய் வாழுவதோ? . ஞானம்
. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்!
. சும்மா இருத்தல்
உண்மைகள் உலருவதில்லை! . உன்னோடு நீ பேசு! நான் நானே தான்! . வெறுமை . காதலும் கடமையும்
அக ஒளி . உன்னை நீ முந்து! . சுயபச்சாதாபம்
. (ഥണങ്ങtb
மரணத்தின் பின் வாழ்வு சிந்தனை வரிகள்
- பாகம் - 01
- Lufrasli) - 02
- LIFTasib - 03
- LIFT855 - 04
- LT85 b - 05
- Listasif - 06
- LITELĖS - 07
- LTalib - 08
- பாகம் - 09
- Lufrast b - 10
- பாகம் - 11
- Listasi b - 12
- LTasLib - 13
- Lufts b - 14
- LITaslib - 15
- LITælið - 16
- Listasib - 17
- Lufts b - 18
14

சமர்ப்பனம்
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
ஆசிரியர் v
15

Page 10
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10)
11)
12) 13)
பொருளடக்கம்
అ ఆఫ్రిక ప్రాశిఅతి—
தலைப்பு
சந்தர்ப்பங்கள்
Tajrib
தெளிவு
மெளனம்
66fla)ID
குரோதம்
robaTrib
கணவன் குடும்ப உறவு கற்பனையல்ல! பெண்கள் உழைப்பைச் சுரண்டும் மத்திய கிழக்கு நாடுகள் பாசத்தைக் காட்டி சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம்! முதியோர் இல்லங்களில் பெற்றோர்கள் பேரூந்து செலுத்தி வரும் அஞ்சலா
பக்கம்
17
31
46
56
68
76
85
94
106
111
117
122
128
16

சும்மா இருந்தால், கிடைத்த சந்தர்ப்பங்கள் செயல் இழந்துவிடும். நல்ல | சூழல்களே பொதுவாகச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றன என்பார்கள். | எனவே நாம் நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள முனைய வேண்டும். யதார்த்த பூர்வமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளே வாழ்க்கையாகும். மாய மந்திரத்தினால் வாழ்க்கையை அமைத்து விடமுடியாது. வெறும் யந்திரத்தன்மையானதும், வாழ்க்கையல்ல. இறை ஆசியுடன் கிடைக்கின்ற நல்ல சந்தர்ப்பங்களுடன், எமது முழு உழைப்பையும் இணைத்துக்கொண்டால் வாழ்க்கையில் எம்மால் வெல்ல
pடியாதது எதுவுமேயில்லை.
"வாழ்க்கையை வென்று காட்டு” என்பதற்காக சந்தர்ப்பங்களை இறைவன் தந்துகொண்டேயிருக்கின்றான் என்பதை உணர்வோமாக.
முன்னேறுவதற்கான மார்க்கங்களைச் சுட்டிக்காட்டிச்
சந்தர்ப்பங்களை தந்துகொண்டிருக்கும் போது மந்த புத்தியி னாலும் சோர்ந்து போய் சும்மா இருப்பதனாலும் பலர்
17

Page 11
பருத்தியூர்ால வயிரவநாதன் வருகின்ற நல் வாழ்க்கையை ஒளியேற்ற முனையாது
வீழ்ந்துபட்டு நிற்கின்றார்கள்.
சின்னக் குழந்தைகூடத் தனக்குள்ள வலுவைக் கொண்டு துள்ளி ஓடிவருவதுடன் பின் விழுவதும், எழுவது மாய் விளையாடும்போது உழைக்கின்ற வயதில் மனத்தால் இளைத்துக் களைத்து இயங்காமல் இருப்பதும் ஏன்?
"அவனுக்கென்ன லட்சம் லட்சமாய் உழைக்கின் றான். இறைவன் அவன் பக்கம். எனக்குத் தெய்வம் கூடத் துணை இல்லை" என்றுநொந்துமுடங்கிக்கிடப்பதால் என்ன பயன்? வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் சந்தர்ப் பங்கள் எம்மைச் சந்திக்காமல் விட்டதில்லை அதிஷ்டம் உள்ளவனுக்கு மட்டுமே சந்தர்ப்பங்கள் கைகொடுக்கும் எனச் சிலர் விதண்டாவாதம் செய்வதுண்டு.
உழைப்பு இல்லாது விட்டால் வந்த அதிஷ்டம்கூடக் கை நழுவிப் போவதுண்டு. வந்த பொருளைக்கூடக் காப்பாற்றாத நபர்கள் நிறையபேர் நம்மத்தியில் விரக்தியுடன் தமது துன்பத்தைச் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள்
அதிஷ்டலாபச் சீட்டிழிப்பினால் பல லட்சம் ரூபாய்களைப் பெற்றவர்களின் சிலரின் வாழ்க்கை மிகவும் கேவலமான நிலைக்கும் தள்ளப்பட்டதுண்டு. கிடைத்த பணத்தினால் எதிர்கால நலன் பற்றிக் கிஞ்சித்தும் யோசிக்காது கண்டபடி செலவு செய்வதும் கெட்டவழியில்
18

வமளனம் புலனைச் செலுத்தி உடலையும் உள்ளத்தையும் கெடுப்பதுடன் குடும்பத்தையே முன்பிருந்த நிலையைவிட மோசமான நிலைக்கு இட்டுச் செல்வோரும் உளர். உழைக் காதவர்கள் பணத்தின் அருமை தெரியாமல்தான் இப்படி நடந்து கொள்வதாக எல்லோரும் காரணம் சொல்வதுண்டு.
ஆனால் கிடைத்த பணத்தை மூலதனமாக்கி முன்னேறியவர்கள் பற்றியும் நாம் சொல்லித்தானே ஆக வேண்டும்? இளமைக் காலத்தில் கிடைத்த நல்ல சந்தர்ப் பங்களைப் பயன்படுத்தி முன்னேறியவர்கள் எல்லோருமே தமது உழைப்பு, அறிவு, திறமை, விடாமுயற்சியையும் வந்த சந்தர்ப்பங்களுடன் இணைத்துக் கொண்டே முன்னேறி னார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். சும்மா இருந்தால் கிடைத்த சந்தர்ப்பங்கள் செயல் இழந்துவிடும் அறிவோமாக!
ஒரு குறிக்கோளை மனதில் ஆழமாகப் புதைத்து அதனைத் தினம் தினம் உருப்போடுபவர்கள் ஏதாவது சின்ன வாய்ப்புக் கிடைத்தாலே போதும் அதை நழுவ விட மாட்டார்கள். எந்த வித லட்சியம் இல்லாமல் அலட்சியப் போக்குடன் குதர்க்கமே பேசித்தன்னைவிட எவர்க்கும் எது வுமே தெரியாது என்று ஆணவ மயமாகத் தோன்றுபவர்கள் தங்கள் முன்னேற்றத்தினைத்தாங்களாகவே மூடிக்கொண்ட
கள். அப்படி ஆயின் ஏன் கண்டபடி நடந்துகொள்கின்றார்கள்
19

Page 12
பருத்தியூர்யாவையிரவருதன் என்ற கேள்விநியாயமானதே. எல்லாமே தெரிந்தும் அழிந்து போகின்ற மனிதர்கள் ஏன் நல்வழியில் செல்வதில்லை? தனது பாதை தவறானது எனத் தெரிந்தும் கூடப் பலர் தடம் மாறுகின்றார்களே!.
எதிர்காலம் பற்றிய அச்சமின்மையும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற அசட்டுத் தைரியமும் எவரும் தன்னைப் பற்றி விமர்சிக்கக்கூடாது என்று பலரும் கருதிக் கொள்கின்றார்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது கோபப்படுகின்றவர்கள். மென்மேலும் அதே தவறு களை வேண்டுமென்றே முனைப்புடன் செய்தும் வருவ துண்டு.
தவறான நட்பு, சூழல், பிழையான அணுகுமுறை கள், புரிந்துணர்வின்மை போன்ற காரணங்களாலும் மேலே சொல்லப்பட்ட ஆணவ முனைப்புகளாலும் தவறுகளையே தொடர்ந்தும் செய்பவர்கள் தம் எதிரில் வந்து கொண்டி ருக்கும் நல்ல வாய்ப்புக்களைத் தாமாகவே தொலைத்துக் கொள்கின்றார்கள்.
"மற்றவனைப் பார்த்து மனம் குமைதலை விடுத்து உனக்கு வந்த சந்தர்ப்பங்களை நீ ஏன் உன் வசப்படுத்தத் தயங்குகின்றாய்” எனத் தன்னைத்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலே எல்லாமே முழுமையாக் கிடைத்துவிடுமோ? படிப்படியாக வரும் லாபங்களே பின்னர் மாபெரும் முதலீடுகளாக எமது கைக்குவரும்.
20
 
 

திறமைசாலிக்கு ஒரு சின்னச் சந்தர்ப்பம் வழங்கப் பட்டாலே போதும், அதன் பின் அவன் தன்னை வளர்த்துக் கொள்கின்றான். சில திரைப்படக் கலைஞர்கள் தொழில் அதிபர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் மிகச்சின்னக் கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துப் பின்னர் அவரே பிரமாதமான உயர்ந்த நடிகராக உருவான கதை களை அறிந்திருப்பீர்கள். தொழிற்சாலையில் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்தவர்கள் கூடச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தித் தொழில் அதிபர்களாகத் தரம் உயர்ந்தவர் களாக மாறியது ஒன்றும் புதினம் அல்ல.
மற்றவனைக் கவிழ்த்துத் தனக்கான சந்தர்ப் பங்களை உருவாக்குபவர்களும் உளர். நீதிக்கு அப்பாற்பட்ட இத்தகையவர்களுக்கு உரிய தண்டனைகளைக் காலம் அவர்களுக்கு வழங்கியே தீரும்.
அரசியலில், பொது நிறுவனங்களில், இத்தகைய பேர்வழிகள் சுயமுயற்சியில் நம்பிக்கை வைக்காது எங்கே ஒருவன் மீது பழிவிழும், அதனைச் சாதகமாக்கலாம் என எதிர்பார்த்து இருப்பார்கள்.அதுமட்டுமல்ல தாமாகவே அப்பாவிகள் மீது வீண்பழிகளை அபாண்டங்களைச் சுமத்தி JULI ஆதாயம் தேட முனைவர். தீய நோக்கிற்காகச் சந்தர்ப் பங்களைத் தேடுவதும் பொய்யான ஆதாரங்களை வீண் பழியாகச் சுமத்திக் கோர்ப்பதும் எக்காலத்திலும் பயன் விளைவிக்காது. ஆனால் இன்று சிலர் இதனையே பெரும் பிழைப்பாகக்கொண்டு வாழுவதும் என்றைக்காவது இந்தத்
21

Page 13
பருத்தியூர்யாவையிரவருதன் தீய முயற்சியால் வென்று விடலாம் என எண்ணுவதும் தெய்வத்திற்கே அடுக்காத செயல்
தேடிவருகின்ற அரிய சந்தர்ப்பங்களை அச்சம் தெளிவின்மை, முடிவு எடுக்கத் தயங்கும் தன்மைகளால் அவைகளைத் தவறவிடுபவர்கள் அனேகம் பேர் இருக்கின் றனர். இந்த விஷயத்தினுள் உள்நுளைந்தால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகிவிடுவோமோ அல்லது பொருள் விரயங்கள் ஏற்படுமோ என எவரும் பயப்படுத்தலும் புதுமையல்ல.
சில நல்ல காரியங்களில் முடிவு எடுக்கத் தயங்குகி ன்றோம். மேலும் எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களின் பலாபலன்களை விடயம் அறிந்த வல்லுனர்களின் ஆலோசனைகளையும் உடனே கேட்பதுமில்லை. யாராவது வேண்டப்படாத நபர்களின் தவறான ஆலோசனைகள் மூலம் கிடைக்கும் வாய்ப்புக்களைக் கோட்டை விடுவது எவ்வளவு பெரும் கேட்டினை உண்டுபண்ணும் தெரியுமா? ஒரு தரம் கிடைக்கும் வாய்ப்பு மறுமுறை கிடைக்க நீண்ட காலம் காத்திருக்கவும் நேரிடும். சிலவேளைகளில் மீண்டும் உடனடியாகவும், தொடர்ந்தும் சில நல்ல வாய்ப்பான சூழ்நிலைகள் உருவாகிவிடுவதுமுண்டு தனக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தை நழுவவிட்டமை பற்றி எனது தந்தையார் தமது அனுபவத்தைப் பின்வருமாறு தெரிவித்தார்.
22
 
 
 
 
 
 

அவரது நெருங்கியநண்பர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து ஒரு தொழிற்சாலையை உருவாக்கத் தீர்மானித்த போது அவரையும் இந்த முயற்சியில் ஒரு பங்கு தாரராகுமாறு வற்புறுத்திக் கேட்டனர். இதுபற்றிய விடயங்களில் உடனடியாக முடிவு எடுக்க முடியாமையாலும், அதுபற்றிய விடயத்தில் தெளிவு இன்மையாலும், அவர்களுடன் இணைந்து பங்குதாரராக சேர்ந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. அக்காலத்தில் போதிய பணவசதி இருந்தும் கூட அந்நிறுவனத்துடன் இணையும் சந்தர்ப்பத்தினை இழந்துவிட்டார். அதே புதிய நிறுவனம் காலப்போக்கில் பெரிய தொழிற்சாலையை அமைத்துக் கொண்டு பிரகாசித்ததை அவர் நன்கு அறிந்து கொண்டார். உடனடி யாகவே நல்ல தெளிவான முடிவு எடுக்காமையினால் இந்நிலை தமக்கு ஏற்பட்டதாகக் கூறினார். எனினும் சிலர் இத்தகைய சந்தர்ப்ப இழப்புகளை எல்லாமே விதி என்று கூறிச் சமாதானம் கூறுவார்கள். ஆயினும் இதைத் தந்தை யார் இது விதியின் குற்றமல்ல. வலியவந்த சந்தர்ப்பத்தில் நல்ல முடிவை எடுக்காதது தனது குற்றம் என்றே கூறினார்.
மேலும் கல்வி தொழில் விடயங்களில் பல இளைய தலைமுறையினர் பெரியோர்கள் சொன்ன முது மொழிக ளைக் கேட்பதாயில்லை"பருவத்தே பயிர்செய்"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” போன்ற பழமொழிகள் என்ன சொல்கின்றன என்பதனை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
23

Page 14
பருத்தியூர்யாவையிரவநாதன்
இளமைக்காலம் கல்விகற்பதற்கு ஏற்ற உகந்த காலம் "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" தொடர்ந்தும் கல்வி கற்றால்தான் முதுமையிலும் அது கூடவரும். நாம் கல்வி கற்கவேண்டிய பருவத்தினைச் கடந்துவிட்டால் இளமைக்காலம் போலவே ஞாபகசக்தி மீண்டும் வலுவாகத் தெளிவாக வருமா? இந்த உண்மை யைச் சகலருமே உணர்வர். ஏதோ இளமையில் கொஞ்சச் காசைச் சம்பாதித்தால் போதும் என எண்ணிக் கல்வி கற்காமல் விட்டால் முதுமையில் கல்வி கற்காத வேதனை யை அனுபவித்தேயாக வேண்டும்.
மேலும்,
கல்விகற்ற மாணவர்களில் சிலர் பரீட்சையில் சித்தி பெற்றதும் உடன் கிடைத்த தொழில்கள் தமக்குத் திருப்தி தரவில்லை என்று வலிந்து வந்த தொழிலைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். கிடைத்த வேலையை விடுத்து வேறு தொழில் தேடும் இவர்களுக்குத் தங்களது பராயம் தாங்களாலேயே காணாமலேயே பறந்தோடி விடுவதை அறிந்து கொள்வதில்லை. இப்படியாக வயது முதிர்ந்த பின்னர் தொழில்தேடி அதில் அவர்கள் முன்னேறும்போது காலம் கடிதெனப் பாய்ந்தமையால் தொழிலில் பதவி உயர்ச்சிப் போட்டிகள், பொருளாதாரச் சிக்கல்கள் என அவர்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் தெரியுமா?
24

வமளனம் களை, நல் ஆசான்களை, மனவிையை, குழந்தைச் செல் வங்களை எல்லாவற்றையுமே அவரவர் தகுதிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப இறைவன் கொடுத்துக்கொண்டுதானே இருக்கின்றான். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு வந்துவிடப் போகின்றது ஐயா!
சந்தர்ப்பங்கள் எல்லாமே மிக எளிதாகத்தான் கிடைக்கின்றன. சாதாரணமாகக் கிடைக்கும் சின்னத் தேவைகளுக்காக நாம் எவ்வளவோ காலத்தைச் சக்தியைப் பணத்தைச் செலவு செய்கின்றோம். எதை எதை நாமாகத் தேடிப்போகின்றோமோ அவை எமக்குப் பெரிதாகவும் கிரமமாகவுமே கிடைக்கின்றன.
அப்படி இருக்கின்ற போது தேடிவரும் வாய்ப்புக் களை நாம் ஏன் தொலைக்க வேண்டும்?. அனுபவிக்க வேண்டிய காலத்தில் அனுபவிக்க வேண்டிய விதத்தில் முறைமையாகப் பிறருக்கும், தனக்கும், உலகிற்கும் இடைஞ்சல்கள் இன்றி வாழ்க்கையை முழுமையாக அனுபவித்துவிடவேண்டும்.
இன்றைக்கும் நாளைய முன்னேற்றத்திற்குமானதே வாழ்க்கை. வாழ்க்கையை இழப்புக்களுக்குள் தள்ளக்
8n LT35l.
கருமித்தனமான பிரயோசனமற்ற உலோபித் தன மான வாழ்வினால் என்ன பயன் வந்துவிடப் போகின்றது?
29

Page 15
பருத்தியூர்யாவையிரவநாதன் தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் சேரவிடாமல் மற்றவர்களுக்கான வாய்ப்புக்களை மறுப்பதும் மறுக்க எத்தனிப்பதும் மாபாதகமான செயல் அன்றி வேறென்ன சொல்ல!.
நல்லபடி வாழ்வது என்பதே ஒரு தெய்வீக வாழ்வு முறைமைதான். இறைவனால் எவர்க்கும் வழங்கப்படும் கொடைகளைப் பிடுங்க எத்தனிப்பதும், மற்றவனுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களினால் அவன் உயர்வடை தலைப் பார்த்துப் பொறாமை கொள்வதும் எள்ளளவும் ஏற்புடையதன்று.
நல்ல சந்தர்ப்பங்கள்கூட எமக்கு இறைவன் தந்து கொண்டிருக்கும் மாபெரும் கொடைகள்தான். பணத்தை, நிலத்தை, பொன்னை, பொருளைவிட, இறை ஆசீர்வாத மும் அவர் தந்துகொண்டிருக்கின்ற வாழ்வதற்கான வாய்ப்பு க்களும் மிகவும் அபூர்வமான அற்புதச் சொத்துக்களே யாகும். நல்ல சந்தர்ப்பங்களைப் பூரணமாகப் பயன் படுத்தினால் கிடைக்கக்கூடிய அனைத்தும் எம்முடன் இணைந்து கொண்டே வருமன்றோ!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 24-12-2006
30

606torio
பாசத்தின் இதமான சுகத்தினுள் அமிழ்ந்து போக விருப்பமில்லாத உயிரினங்கள் உண்டோ? உறவுமுறைகளால் பெற்றுக்கொள்ள முடியாத பேருதவிகளைக்கூட நாம் தெரியாத நபர்கள் மூலம் பெற்றுக் கொண்டி ருக்கின்றோம். எவரிடத்துஅன்புள்ளம் நினைந்து இருக்கின்றதோ அவர்கள் யாவரும் எங்கள் உடன் பிறப்புக்களே. பாசத்திற்கு வேஷம் போடத் தெரியாது. பாசத்திற்கு வேலி இல்லை. இது பரந்துபட்ட மாபெரும் விஸ்தீரணப்பெருவெளி விடுபட இயலாத ஜென்ம ஜென்மாந்தரமாகத் தொடரும் திவ்யமான பிணைப்பு.
பாசத்தின் வெளிப்பாடுகள் சாஸ்வதமானது. உண் மையான அகத்தின் சுயவெளிப்பாடான பாசத்தின் வலு சொல்லிவிட முடியாத திண்மையானது. ஆனால் இதுவே மென்மையான உணர்வுகளுக்கும் காரணமானது. பாசத்தி னுள் இதமான சுகத்தினுள் அமிழ்ந்து போக விரும்பாத உயிரினங்கள் உண்டா?
31

Page 16
பருத்தியூர்பால,வயிரவநாதன்
பாசத்தினை விலக்கி வாழ்ந்தால் அது வேதனை யை வருந்தி அழைத்தல் அன்றி வேறில்லை.
தனிமையை விலக்கி எத் துன்பத்தினையும் தாங்கும் சக்தியை கொடுப்பது பாசத்தினைத் தவிர வேறு எதற்கு உண்டு சொல்மின்
தூய அன்பினை நாம் வெளிப்படுத்தும் போது அது பல்வேறு சொற்களில் வடிவம் காட்டுகின்றது. அன்பு நேசம், பரிவு, பாசம், காதல், கருணை என்றவாறு நாம் உறவுக ளுக்கு ஏற்றபடி தக்க பெயர் சூட்டிக் கொள்கின்றோம்.
* உறவினர்களுக்கிடையே, * நண்பர்களுக்கிடையே, * எல்லா ஜீவராசிகளுக்கிடையே,
மேலே சொல்லப்பட்டவைகளிடம் காட்டப்படும் அன்பு ஒன்றேயாயினும் நாம் பாவிக்கும் சொற்பதங்கள் பழகும் நபர்களுக்கு ஏற்பவே அமையும்.
தாய், தகப்பன், சகோதர, சகோதரிகள் உட்பட எமது
உறவினர்கள் எம்மீது காட்டுவதும் நாம் அவர்களிடம் காட்டு வதும் பாசம் என்கின்றோம்.
கருத்து ஒருமித்து இல்லற வாழ்வில் புக எண்ணும் ஆண், பெண் ஈர்ப்பினைக் காதல் என்கின்றோம்.
32

வமளனம் கருணை, பரிவு என்று நாம் சகல ஜீவன்களிடம் இரக்கம் காட்டுவது எல்லாமே அன்பின் வெளிப்பாடுகளே. எல்லா தூய உணர்வினதும் ஆதார சுருதி அன்புதான்.
ஆயினும் ஜென்மம் ஜென்மமாகத் தொடர்ந்து நிற்பதாகக் கருதப்படும் பாசப் பிணைப்பு என்றுமே அணைந்து விடாத திவ்யச் சுடரேதான். நாம் உதட்டளவில் எப்படிச் சொல்லிடினும் எம் உணர்வு இதன் நாமத்தை அழுத்தமாகவே உச்சரித்து நிற்கும்.
உடன் பிறக்காத நபர்களோடு பழகும் போது கூட பாசம் பிறிடுவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். அவர்கள் எத்தன்மை வாய்ந்தவராக தமது நிலையில் தன்னை அந்தஸ்தில் குறைந்தவராக அவராகவே கருதினாலும் நீங்கள் அவரிடம் பாசமுடன் பழகினால் அது வியப்பு அல்ல.
சில வேளை உறவு முறைக்கு அப்பால் மேல் நோக்கி பாசத்தினுள்ளே பலர் எம் இதயத்தின் வசம் சிக்குவதுண்டு. விலகிடமுடியா பிணைப்பாகுவதும் தெய்வசித்தமமே!
எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் இருந்தார் அவர் முன்னர் ரொம்பவுமே வசதியாக வாழ்ந்தவர். இருப்பினும் காலத்தின் மாறுபாடுகளால் அவரது வாணிபம் முடங்கி அவர் நலிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதனால் மனமுடைந்து போனவர் சற்றுச்சித்த சுவாதீன முற்றவ
33

Page 17
பருத்திரியாவையிரவநாதன். ராகப் போனார். ஆயினும் அவர் ஒன்றுமற்ற நிலைக்குத் தள்ளப்படவில்லை
உறவினர்கள் பலர் ஆதரவளித்தனர் அவரது பேச்சு சற்று வித்தியாசமாக இருப்பினும் எவரிடத்தும் கெட்ட வார்த்தைப் பிரயோகம் செய்ததே கிடையாது. தமக்குப் பிடித்தவர்களிடம் மட்டும் சற்றே உரையாடுவார்.
அவர் என்னிடம் சிலவேளை வருவார். நான் அவருடன் பரிவுடன் பேசுவதுண்டு என்னை அவருக்குப் பிடித்துவிட்டது. தமது பழைய நிலையை அவர் விட்டுக் கொடுத்ததுமில்லை. ஏன் எனில் அவர் பெரிய தன வந்தராக ஒரு காலத்தில் வாழ்ந்தவர்.
திடீர் என அவர் என்னைக் காணவரும் போது ஏதாவது பேசுவார். அப்போது யாழ்நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையங்களின் பெயரைச் சொல்லுவார். "நான் அவைகளில் ஒன்றை வாங்கி உன் பெயருக்கு எழுதி விடுகின்றேன்” என்பார். நான் நகைப்பதில்லை. "சரி, அப்படியே செய்யுங்கள்" என்பேன். வேறு ஒருசமயம் வந்து சொல்வார் "நான் உனக்கு முயற்சி செய்து மிகப்பெரிய உத்தியோகம் பெற்றுத் தருகின்றேன். சரிதானா.” என்றும் கேட்பார் அதற்கும் நான் "சரி. அப்படியே செய்யுங்கள்" என்பேன். அத்துடன் அவர் அடிக்கடி சொல்வார் "நான் இறக்கும் முன்னர் இதனை விட நீ நன்றாக நல்ல நிலைக்கு வந்து குழந்தை குட்டிகளுடன் வாழ்வதைக் காணவேண்டும்” என்பார். எனக்கு அந்நேரம்
இதயமே கசிந்துவிடும்.
34

இப்போது சொல்லுங்கள் இத்தகைய அன்புள்ளங் களை நாம் எப்படி அழைக்க முடியும்? இதனை நாம் அன்பு என்று சொல்லளவில் மட்டும் சொல்ல முடியும். வார்த்தை யில் அகப்படும் சொற்கள் இத்தூய இதயங்களுக்குப் பொருந்திடுமா? இத்தனைக்கு இவர்களுக்கு நான் எதைத் தான் செய்து விட்டேன்?அன்பு மீதுார சொன்ன எமது பேச்சுக்கள் தானே அவரை என்பக்கமும் என்னை அவர் பக்கமும் ஈர்த்தது?
மற்றவர்கள் துயரை அவர்கள் குறைகளை பொறு மையாகச் செவிமடுத்துக்கேளுங்கள். இது ஒன்றும் சிரமம் அல்ல. அவர்களுக்கு எங்களால் ஆறுதல் கிடைத்தால் அதைவிடப் பெரும் பேறு வேறு என்ன வேண்டும் ஐயா!
உறவு முறைகளால் கிடைக்காத பேருதவிகளை முகம் தெரியாத நபர்கள் மூலம் பலர் பெற்று வருகின்றா ரகள். என்றோ ஒருநாள் கண்ட பழக்கத்தினால் சிலர் தம்மை நாடியோருக்குப் பேருதவிகள் புரிந்து வருவதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஒரு பெரியவர் சொன்ன தகவல் இது ஒருமுறை ஒருவருடன் கோவிலில் தற்செயலாகச் சந்தித்துச் சில வார்த்தைகள் அவருடன் அன்புடன் சினேகபூர்வமாகப் பேசினாராம். கொஞ்ச நாட்கள் கழிந்து, ஒரு அவசிய தேவையின் பொருட்டு ஒரு நிறுவனத்திற்கு அதன் தலை வரைச் சந்திக்கப் போனபோது அங்கு தலைவருக்குரிய ஆசனத்தில் இருந்தவரைக் கண்டு வியப்பு அடைந்தார்.
35

Page 18
பருத்தியூர்பாவையிரவநாதன்
அன்று கோவிலில் சில வார்த்தைகள் உரையாடிய அதே நபர்தான் அங்கு இருந்தார். இவரைக் கண்டதும், மிகவும் சந்தோஷமாக இருக்கையில் அமர்த்தி உபசரித்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தாராம். இந்த மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்ற மைக்கான முழுக்காரணம் அந்த நிறுவனத் தலைவருடன் அன்புடன் பேசிய அந்தச்சில நிமிட நேர உரையாடல்கள் மட்டுமேயாகும்.
இதய பூர்வமாக அன்புடன் பழகினால் அதுவே மறக்க முடியாத ஒரு பாசப்பிணைப்பு போல் நிலைத்து நின்று விடுகின்றதே!
ஆனால் அதே சமயம் சுயநலநோக்கமும், காழ்ப்பு உள்ளவர்கள் தமது உறவினர்களுக்குக்கூட எந்த ஒரு உதவியையும் செய்ய முன் வரமாட்டார்கள். வெறும் வார்த்தை ஜாலங்களால் பந்தம், பாசம் என்று சொல்லிக் கொள்வார்கள். வசதி குறைந்த நிலையில் உள்ள தமது உறவுக்காரர்களை ஏறெடுத்தும் பார்க்க விழைய மாட்டார்கள். எனவே எல்லா உறவினர்களிடையும் நல்ல பாசத்தை எதிர்பார்க்க முடியாது.
ஒரு நல்ல நண்பனிடம் அல்லது உயர் நோக்கு டைய எவரிடமாவது நாம் எமது பிரச்சினைகளைக் குறைகளைச் சொல்லி தக்க பரிகாரம் காணமுடியும். "உறவுக்காரன் என நம்பி அவரிடம் சென்றேன். எனக்குக்
36

கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே" எனப் புலம்பும் பரிதாப மான மனிதர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
எவரிடத்து அன்புள்ளம் நிறைந்து நிலைத்து நிற்கின்றதோ அவர்கள் எங்களின் உடன்பிறப்புக்களே. இதில் என்ன சந்தேகம்?
சொத்துச் சுகங்களுக்காகக் குத்து வெட்டுப்பட்டுக் குடும்பத்தைக் கூறுபோட்டு விட்டு அண்ணன் தம்பி, மச்சான், மாமன் என்று பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன்? ஒப்புக்காகப் பேசுவது ஒவ்வாத செயல்.
அத்துடன் பலர் தமது உறவுமுறைகளைப் பேசுவது டன் தங்கள் சாதி, சமயம் பற்றியும் பேசிஏனையவர்களுடன் பேதம் காட்டுவதுமுண்டு சாதி, சமய உணர்ச்சி யைத் தூண்டி விடுவதற்காக தங்கள் உறவுமுறைகளை ஆதாரம் காட்டி தம்மைப் பெரிய உயர்ந்த அந்தஸ்துள்ளவராகவும் காட்டி நிற்பார்கள். 酶
நல்ல உறவு முறைகளைப் பாச உணர்வினைக் கொச்சைப்படுத்தும் இத்தகையவர்களிடம் உண்மையான உறவு அதன் தூய்மைத்தன்மை என்ன என்பது பற்றிய பரந்த மனப்பான்மை அறவே கிடையாது. உறவு முறை பாசப்பிணைப்பு என்பது ஆத்மாவுடன் இரண்டறப் பிணைந்து, ஒருவர்க்கொருவரிடையே தூய்மையான பரஸ்பர ஈடுபாட்டினை நல் உறவை நம்பகத்தன்மையுடன்
37

Page 19
பருத்தியூர் stad.6027acticea
உதவுதலுடன் எவ்வித பிரதியுபகாரம் கருதாது செய்தலுமி செய்வித்தலுமாகும். புரிந்து கொள்வோம்.
Κ.
8.
● *
d
● (x-
w
ex
உண்மையான பாசப் பிணைப்பின் முன்னே. எங்கள் அகந்தை, விட்டுக் கொடுக்காத தன்மை, தேவையற்ற கோபம்,
எல்லாமே அற்றுப்போகின்றன பாசத்தின் முன்னே
யுள்ள தன்மைகள் தான் என்ன?
தம்மிடம் உள்ள எதனையும் வழங்குதல். கெளரவம், அந்தஸ்துபற்றிநோக்காத தன்மை பரந்த மனப்பான்மை உளரீதியான ஆதரவினை நல்குதல் பொருள் பண்டம் சொத்திற்கும் மேலாக தம் உயிரினையும் ஈந்திடும் மனோபாவம் தம்மை நம்பியுள்ளவர்களுக்காகப் பலர் தம் உடல்
வலி பார்க்காது உழைத்து உழைத்து ஓடாகி கற்பூரம் போலக் கரைந்து போகின்றார்கள். இந்த உழைப்பிற்காக இவர்களின் மனம் சோர்வதில்லை. உயிர், உடல் வாடிய போதும் உள்ளம்பூரித்துப் போகின்றார்கள். பாசத்திற்காக உயிரையும் ஈந்திடும் தன்மை இதுதான். பாசம் கொண்டவர் களுக்காகத் தம் கெளரவத்தையே இழந்து விட்டுக் கொடுக்கும் தியாகிகள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள் இவர்கள் பற்றிய கதைகளை நாம் அறிந்தவைதான்.
38

பாசம் என்பது ஒன்றேயாயினும் உறவுகளிடையே அதனை வெளிப்படுத்தும் போது அந்த அந்த உறவுகளின் தன்மைக்கேற்ப வெளிப்படுத்துகையின் முறைமைகளில் வித்தியாசங்கள் உண்டு.
தாய், தகப்பன், பிள்ளைகளிடையே சகோதரன், சகோதரிகளிடையே நெருங்கிய உறவினர்களிடையே அதாவது மைத்துனர், மாமன், மாமி, சித்தப்பா, சின்னம்மா, என்ற முறைகளை எடுத்துக் கொள்ளல்.
ΦΦΦ X-x-
மேலே சொன்னவர்களிடையே பாசங்களை வெளிப் படுத்தும் முறைமை வெவ்வேறாயினும் அடிப்படையான பாச உணர்வுகளில் பேதம் காட்டப்படுவதில்லை. எனினும் பெற்ற தாய், தகப்பன் பாசஉணர்வுக்கு ஈடாக எந்த உணர்வுமே இணையாக என்றுமே சொல்லப்பட்டது மில்லை. சொல்லப் படப் போவதுமில்லை.
ஆனால்,
குழந்தைகளைப் பெறாமலேயே வளர்த்து எடுத்த வளர்த்த பாசம் எந்த விதத்திலும் குறைவானதல்ல. தாய் ஒருத்தி பெற்ற பிள்ளையையே கைவிட்டபின் அதனை வேறு ஒரு தாய் வளர்ப்பதும், அதேபோல் மனமுவந்து தனது பிள்ளையைக் கொடுத்ததனால் குழந்தையை வளர்த்த தாயானவள் அவள் அதனைத் தான் பெற்றுக் கொள்ளா
39

Page 20
பருத்தியூர் 6. வயிரவநாதன் விட்டாலும் கூட போற்றுதற்குரிய தாய்மைப்பேறு பெற்ற வளேயாவாள்.
இத்தகைய தாய்மார்கள் எந்தத் தருணங்களிலும் தனது பிள்ளைப் பாசத்தைத் தனக்குள்ள மேலான உரிமையை விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள். தன்னால் வளர்த்து ஆளாக்கப்பட்ட பிள்ளையை தன் ஆழ் மனதினுள் வேரூன்றி வளர்த்து விட்ட அந்தப் புனிதப் பிணைப்பினை அவளால் அதனை ஒரு அணுவளவேனும் விட்டுவிட முடியுமா?
சில தாய்மார்கள் பிள்ளைகளை வளர்க்க மனமுவந்து அளித்தபின்பு பிள்ளையின் வளர்ச்சி கண்டு மீண்டும் வளர்த்த தாயிடம் வந்து தனது பிள்ளைமீது உரிமை கொண்டாடும் போது பெரும் பூகம்பமே வளர்ப்புத் தாயிடமிருந்து புறப்படுகின்றது. இந்த அநியாய சம்பவங்களைப் பல கதைகளுடாக நாம் படித்திருக்கிறோம்.
பாசத்தை வெளிப்படுத்தும் விடயத்தில் தகப்பன் பிள்ளைகளிடம் பாசத்தைத்தன் இதயத்தில் வைத்து வெளிப் பார்வைக்கு சற்றுக் கடும்போக்குடன் அதிகாரத்துடனேயே பழகுவது இயற்கை.
ஆனால் தாயாரால் அப்படி நடந்து கொள்ள முடியாது. பிள்ளைகளில் சிலர் தமது தகப்பனாரின் இச்
செயல்களை விரும்புவதில்லை. அவர்களில் சிலருக்கு
தகப்பனாரிடம் சற்று எரிச்சல் கூட எழுவதுண்டு. இத்தகைய
40
 

வறளனம் விடயங்களில் தாயானவர்தான் உண்மையான நிலையைப் பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும். நல் ஒழுக்கம், கட்டுப்பாடுகளைச் சிறுவயதிலேயே தமது குழந்தைச் செல்வங்களிடம் விதைப்பதற்காகப் பெற்ற தகப்பன் சற்று கடுமையான போக்குடன் நடந்துகொள்ளுதலை வயதுவந்த பின்னர்தான் பிள்ளைகள் உணர்ந்து கொள்கின்றார்கள் கட்டுப்பாட்டினைச் சின்ன வயதில் கற்றுக்கொள்ளாது விட்டால் அதனால் எழும் நட்டம் அவர்களுக்கு அல்லவா?
எனினும் கட்டுப்பாடு கண்டிப்புக்களைச் சதா நச்சரிப்புடனும் வேண்டத்தகாத வார்த்கைள் மூலம் பெற்றோர் பேசுவதும் பிள்ளைகளின் மனம் உடைந்து நொருங்கும் வண்ணம் நடந்து கொள்வதும் முறையல்ல. எந்த நடவடிக்கைகளுக்கும் ஒரு எல்லை வரையறை உண்டு. சிலவேளை பிள்ளைகளின் புரிந்துணர்வுசரிவரப் பேணப்படாது விட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிளவு சொல்லொண்ணா இழப்புக்களை, விரிசல்களை ஏற்படுத்திவிடும். அன்போடு இணைந்த கண்டிப்பே ஆரோக் கியமானது. எவர் மனதையும் நோகடிக்க இயலாதது LDIT(5b.
பாசத்திற்கு வேஷம் போடத்தெரியாது குடும் பங்களிடையே பாசப்போட்டிகள் நடைபெறுவது சர்வசாதார ணமான விடயமாகும். திருமணம் முடித்தபின்னர் மகன் மீது உள்ள பாசமேலிடு காரணமாக மருமகள் மீது கோபப் பட்டு ஏன் பொறாமைப்படுவதும் அதேசமயம் மருமகள் தனக்குள்ள உரிமையை நிலைநாட்ட முனையும் போது
41

Page 21
பருத்தியூர்மாவையிரவநாதன் ஏற்படும் சண்டை, சச்சரவுகள் சிலசமயம் குடும்பங்களி டையே பல தாக்கங்களையே உற்பத்திசெய்துவிடுகின்றன.
மேலும் திருமணமானவுடன் தாய், தந்தை, சகோதர, சகோதரி உறவுகளை கத்தரித்துக்கொள்ள எத்தனி க்கும் பேர்வழிகளும் உளர். தனது பாசமிகு தங்கைகளு க்காகப் பாடுபடும் அண்ணன், தம்பிமார்கள் அவர்களின் சீதனத்திற்காக உழைக்க அயல்நாடுகளுக்குப் போய் அல்லலுற்று உழைப்பதும் தெரியாத சங்கதிகள் அல்லவே. பாசம் கொண்ட எத்தகையவர்களும் இத்தகைய தியாகமிகு உணர்வைவிட்டுக் கொடுக்கவோ, விலகி நிற்கவோ எச் சந்தர்ப்பத்திலும் இசைய மாட்டார்கள்.
பணம் பொருளை. சொத்தை விடப் பாசமே சிறந் தது. இந்த சுகானுபவத்தை பணம் கொடுத்து வாங்க முடியுமா? ஒரு கதையொன்றினைக் கேளுங்கள் ஒரு இளவரன் தனக்கு உள்ள வசதிகள் டாம்பீக வாழ்வினால் எந்த வித நிம்மதியும் கிட்டாமல், அரண்மனையைவிட்டேகு கின்றான். எங்கோ ஒரு கிராமத்தில், ஒரு அழகிய இளம் பெண்ணை வழியில் சந்திக்கிறான். அவள் மீது கொண்ட அன்பினால் அவளது வீட்டிற்குச் செல்கின்றான். அங்கு தான் உண்மையான தூய்மையான பாசம் என்ன என்பதை அறிகின்றான்.மேலும் அவளது கிராமம், அங்குள்ள மக்கள் அவர்களதுகளங்கமற்ற தூய அன்பின் வெளிப்பாடுகளைப் பூரணமாக உணர்ந்து, வயப்படுகின்றான்.
42
 

ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் எந்தவித எதிர் பார்ப்புமற்ற பாச உணர்வினைக் கண்டு அவள் வசமா கின்றான்.
மேலே சொல்லப்பட்டது நான் பார்த்த ஒரு ஆங்கிலத்திரைப்படமாகும். செல்வந்தர்களின் குடும்பங் களில் பாச உணர்வு வெளிக் காட்டப்படுவதில்லை. சதா பணம் புரட்டுதல், வியாபாரம், தொழிலை விஸ்தரிக்கும். இவர்கள் தமது குழந்தைச் செல்வங்களைக் கவனிக்கநேரம் ஒதுக்குவதில்லை.
இதனால் குடும்பத்தில் மன அமைதி குன்றுவதும் அவர்களின் பிள்ளைகள் தவறான வழிகளில் செல்ல முனைவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன்று மேல்தட்டு பணக்கார வர்க்கத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் பெற்றாரின் அன்பு கிட்டமாமல் குடிப்பழக்கம், போதைவஸ்துக்களுக்கு அடிமையாவதைப்பற்றிப்பல்வேறு செய்திகள் மூலம் அறிந்துள்ளோம்.
என்னதான் வசதிகள் அந்தஸ்துகள் குவிந்தாலும் கூட கிடைக்க வேண்டியநிம்மதி இன்றி என்ன வாழ்வு ஐயா!
நல்ல இனிய சந்தோஷகரமான வாழ்வின் அனு
பவங்கள் எமக்குக் கிடைக்க வேண்டுமாயின் எம்மைச் சூழ்ந்
துள்ளோரின் அன்பு, பாசம் பரிபூரணமாகக் கிடைத்தேயாக
வேண்டும். இந்தப் பாச உணர்வினை நாம் ஏனைய
வர்களுடனும் சூழ உள்ளவர்களுடனும் பொழிந்தால் இயல்
LIT35(36), 960606) (153D 6Tib60)LD (35élő555 Glg5TLÉlál GicG6lj.
43

Page 22
பருத்தியூர்ா.ைவயிரவநாதன்
பாசம் என்பது இயல்பாகவே சுரப்பது இதை நாம் அணைபோட முடியாது. எனினும் பாசம் காட்ட வேண்டிய நேரத்தில் கட்டாயம் அதனை வெளிப்படுத்தியேயாக வேண்டும்.
இதயத்தில் பூட்டிவைக்கும் எதுவும் தெரியாமல் இதயத்தினுள்ளே அமிழ்ந்து போய்விடும். அதன் பிரதி பலிப்பை நாம் காட்டியேயாக வேண்டும். பாசத்தை ஊமை யாக்கினால் தீமைகள் சூழவும் கூடும் தெரிந்து தெளிவோ LDITeS
நிர்மலமான அன்பு இதயத்தைச் சுத்தமாக்கும். ஆறுதலை அளித்துப் பிறவியைப் புனிதமாக்கும்.
உலகம் என்கின்ற மாவிருட்சத்தின் ஆணிவேர் பாசம் தானே! துன்பத்தைத் தாங்குதலும், எமது இன்பங் களைப் பகிர்தலும் பாசத்தின் பெரும் பொறுப்பு அல்லவா? எமக்கு ஏற்பட்ட இழப்புக்கள், பிறரது நலனுக்காக எனின் அதன் பொருட்டும்கூட பெறும் சந்தோஷத்தினை நாம் செலுத்தும் பாச உணர்வு மூலம் பெறுகின்றோம்.
“பாசத்திற்கு வேலி இல்லை" அது பரந்து பட்ட மாபெரும் விஸ்தீரணப் பெருவெளி எமக்காக அன்றி எம்மைச் சூழ்ந்த எல்லோர் பொருட்டும் இதயத்தில் சதா கசிந்து உருகி நிற்கும் பாச வலையில் நாம் விரும்பியே உள்நுழைந்து நிற்கின்றோம். விடுபட விரும்பாத ஜென்ம ஜென்மாந்தரமாக மனித உயிர் தோன்றிய பொழுதில்
44
 

இருந்தே பாசம் எமக்கு இன்ப ஊற்றாக ஆன்மா ஈட்டும் குளுமைப்பேரருவியாக நிலைத்தே என்றும் நிற்கும்!
பாசம் என்பதே இதயங்களின் சங்கமம். இதில் மென்மையான சங்கீத ஸ்வரங்கள் ஒலித்த வண்ண மேயிருக்கும்.துன்ப ரேகைகளைத் துடைத்து எறியும். வன்முறையாளரை வசைபாடுவோரை, துன்மதியுடன் துன்பம் தருவோரின் வக்கிரம் அழித்து சுத்தமாக்கும். சத்திய நோக்கில் பாசத்தை அரவணைத்தால் நித்திய நிம்மதி வெகுமதியாய் கிட்டும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி 08-10-2006
45

Page 23
பருத்தியூர்பால வயிரவநாதன்
அறிவின் முதிர்ச்சியால் ஏற்படும் ஞானத்தினால் தெளிவு பிறக்கின்றது என ஞானிகள் பகர்வர். அஞ்ஞானச் சுவடுகளின் வழி செல்பவர்கள் தெளிந்த சிந்தையுடையோர் பகன்ற வாசக வரிகளின் சிதறல்கள் நெஞ்சைத்தொட்டாலே போதும். போகும் வழி துல்லியமாக ஒளிதெரிய வழிகாட்டும். நல்லனவற்றையே நோக்குதல் கற்றுக்கொள்ளுதல், நல்லோர் உறவினையே நாடுதல், அவர் சொற்களைக் கேட்பதனால் படிப்படியாக எமது நெஞ்சில் கூரிய சக்தி பரிணமிக்கும் தெளிவை நோக்கி எமது பயணம் தொடரும்.
'தெளிவு' என்பது சந்தேகமற்ற நிலை என்று சொல்லப்படுகின்றது. எமது ஆன்மாவிற்கும் புலன்களு க்கும் பொருந்தாத விடயங்களில் அவை தீயது என்று உணர்ந்தும் அதனுள் நுழையப் புகுதலானது தெளிவு நிலைக்கு உகந்தது அல்ல.
46
 
 

கண்ட கண்ட தீய நோக்கிற்காக அறிவின் துணை நாடுதல் எமது மனதின்விசால நிலையை குறுக்கி அதனை இல்லாதொழித்து விடும். நல்ல அறிவின் முதிர்விற்கு ஒவ்வாத விகற்பமான குழப்பமான விகார எண்ணங்களில் புகுந்திட முனைதல் தெளிவிற்கு முரணான அழிவுப்பாதை என்பதில் சந்தேகமில்லை.
சிலர் கேட்பதுண்டு"நாம் தீய விடயங்கள் எது என்று அறிவதில் என்ன தவறு இருக்கப்போகின்றது”என்பதே பொதுவான இக் கேள்வியாகிவிட்டது. பகுத்து அறியும் முதிர்ச்சியற்றவர்கள் பலரும்கெட்டபழக்கம் எதுவென ஆராய முற்பட்டு அதனுடனேயே சங்கமித்தும் கொள்கின்றார்கள். வெளியில் இருந்து பார்க்கும் அறிவு என்பதற்கும் அனுபவ ரீதியாக அதனை நுகர முற்படுவதற்கும் வித்தியாசம் இல்லையா? வெண்சுருட்டினைப் புகைத்து மதுவைருசித்து, கண்டபடி தீயோருடன் பழகித்தான் அனுபவங்களைப் பெறமுடியும் என்பது எவ்விதத்திலும் பொருத்தமற்ற கருத்தேயாகும்.
ஏதோ சந்தர்ப்பவசத்தால் சில குற்றங்களைச் செய்வதும் பின்னர் திருந்தி வாழ முற்பட எண்ணுதலும் மன்னிக்கத் தக்க விடயம் எனக்கொள்ளலாம். ஆனால் வலிந்து சென்று துர்நடத்தைக்குள் உட்பட எத்தனித்தல் சரியான காரியங்கள் ஆகுமோ?
47

Page 24
பருத்தியூர்யா.ைவயிரவநாதன்
அறிவின் முதிர்ச்சியால் ஏற்படும் ஞானத்தினால் தெளிவும் பிறக்கின்றது என ஞானிகள் பகர்வர்."அறிவைத் தேடமுனையுங்கள்,அதற்கான தடைகளைக் களையுங்கள்” என்பதே பெரியோர் வாக்கும் ஆகும்.
வாழ்க்கையின் நெளிவுசுழிவுகளை அறிந்துகொள்ள அனுபவ அறிவும், படித்த கல்வி அறிவும் தேவைப் படுகின்றது. எனினும் கல்வியறிவு அற்றவர்கள் கூட இயல்பான சமூக நோக்கோடும் மக்களுடன் பழகிடும் விதத் தாலும் மன விசாலத்தாலும் வாழ்க்கையின் நுட்பங்களைத் தெரிந்து கொள்கின்றார்கள். பலர் கல்வியில் பெறாத அறிவை அனுபவம் மூலம் காண்கின்றார்கள். ஆனால் ஞானம்' என்பது அவனது அகவுணர்வுடன் கூடிய ஆன்மீக எழுச்சியினால் தூய தெளிந்த அன்பின் ஆழத்தினாலும் முளைவிட்டு வளர்வது ஆகும்.
வெறும் அறிவு என்பது மட்டும் உள்ளத்தை வளமாக்கும் என்று சொல்ல முடியுமா? மனிதாபிமானம்,சமூக சிந்தனை, ஜீவகாருண்யம் மிக்க சிந்தனை அற்றவனின் அறிவி னால் தனக்கான பொருளினை மட்டும் ஈட்டலாம். மனித இதயங்களைத் தன்னுடன் பிணைக்க அவனால் முடியுமா? தனித்த அறிவு மட்டும் உள்ளவனின் ஆய்வுகள் ஒரு பக்க மாக சார்ந்து ஓடுகின்றது. இவை புதிது புதிதான எண்ணங் களைக், கருத்துக்களைச், சந்தேகங்களை உற்பத்திபண்ணி க்கொண்டு இருக்கின்றது. இது ஒன்றும் தவறு அல்ல.
48
 

வமளனம் ஆனால் தனது அறிவு நிலையுடன் புலனுக்கு அப்பால் தெய்வீக ஆளுமை நோக்கிய பயணத்தினை அவன் ஆரம்பித்தேயாக வேண்டும்.
சட்டம்படித்த நீதிபதிகள் சட்டப்புத்தகத்தை மட்டும் புரட்டிப்பார்த்து தீர்ப்பு வழங்கினால் மானுட தர்மம் என் கின்ற பெரிய விஷயம் காணாமல் போய்விடும். கருணை அன்பை கடதாசியில் உணரமுடியுமா? தனிமனித தேவை கள், ஏக்கங்கள், துன்பங்கள், எதிர்பார்ப்புக்கள், வெற்றிகள், தோல்விகள் சந்தர்ப்பசூழ்நிலைகள் இவைபற்றி உணராது நாம் எப்படி ஒருவனுக்கு நியாயம் கூற முடியும்?
எழுத்தில் பேச்சில் கூறமுடியாத உண்மைகள் கூட வெளியே வர முடியாது முடங்குகின்றன. அவை தயங்கித் தயங்கியே சில சமயம் புறப்படும். அவைகளை உடன் வெளியே நிறுத்தவும் முடியாது சில உண்மைகளை உள்நின்று கண்டு கொண்டே நியாயம் தேடவேண்டும். எல்லா உண்மைகளையும் பகிரங்கப்படுத்த முடியாது. அப்படிச் செய்யவும் கூடாது.
ஒரு மனிதனுக்குள் சில உண்மைகள் புதைந்து இருக்கலாம். வெளிப்பட்டால் அது அவன் வாழ்க்கைக்கே வேட்டு வைப்பதாகவும் அமையலாம். மற்றவர்க்குத் துன்பம் விளைவிக்காத அவனதுமூடிய உண்மைகளை நாம் திறந்து பார்க்க விழையலாமா?
49

Page 25
பருத்தியூர்பால .6/02/articea
அறிவின் முதிர்வு நிலையில் ஆன்மீக சிந்தனை உள்ளவனால் சாதக பாதகங்களைத் தன் உள் உணர் வினால் பெறுகின்றான். அவனது முதிர்வு நிலை ஞான நிலையினுள் இட்டுச் செல்கின்றது. அறிவினால் பெறும் ஆராய்வுகள் காலத்திற்குக் காலம் முரண்பாடுகளைக் காட்டி நிற்கும். ஆனால் ஞான நிலையினால் ஏற்பட்ட தெளிவின் பின்னர் மாறுபாடு அற்ற சாஸ் வதமான உண்மை நிலையினை அந்த ஆத்மா பெற்றுவிடுகின்றது.
தீர்க்கதரிசிகளின் நிலைகூட இத்தகையதே. ஞானத்
தேடலின் முழுமை பெற்ற ஞானிகளின் தெளிவு என்றைக் குமே மாறுவதில்லை. இதனால்தான் இவர்களால் அருளப் பட்ட கூற்றுக்கள் நிரந்தரமாக நின்று உலகை வழிநடத்தி வலுவூட்டுகின்றது. ஞானிகள் உபதேசங்களில் கால வேறுபாடு பேதமும் இல்லை என்றைக்கும் பொதுவானது. எவர்க்கும் உகந்தது இவர்கள் சிந்தனைவயப்பட்ட செழுமைமிகு கருத்துக்கள் புதுமைக்கும் புதுமையாகவும் பழமைக்குப் பழமையாகவும் சிரஞ்சீவித்தன்மை பொருந் திய மாமருந்தும் மந்திரமுமாகும். இவர்கள் பகர்ந்த கருத்துக்களை எதிர்வாதம் செய்திடவும் முடியாது.
எந்த மதத்தைச்சார்ந்த ஞானிகளாயினும் செப்பிய வார்த்தைகள் மதிப்பிட முடியாத அரு முத்துக்கள். எந்த நாட்டில் இனத்தில் அவதரித்த இந்த உத்தமர்கள் உலகிற்கு தேவையற்ற சங்கதிகளைச் சொன்னதுமில்லை. மனிதன் அகவாழ்விற்கும் புறவாழ்விற்குமான சிந்தனைக்
50
 

வமளனம் கருத்துக்களை இவர்களைப் போன்றோர் காலம் தோறும் அவதரித்து மானுட தர்மத்தினை மேலோங்கச் செய்த வண்ணமேயுள்ளனர்.
உள்ளத்தின் தூய்மை நிலை இன்றி எதையுமே மனிதன் சாதித்துவிட முடியாது. தூய்மை நெறியில் வாழாதவன் பெற்ற கல்வி வீரம், செல்வம் எல்லாமே தக்க தருணத்தில் அதன் சுயரூபம் காட்டி, அவனை அதல பாதா ளத்தில் அமிழ்த்திவிடும். ஏதாவது சில அற்ப காரியங்களில் வெற்றி பெற்றவரின் திருப்தி என்பது தன்னையே அவர் ஏமாற்றியதால் பெற்ற வெற்றி எனக் கருத வேண்டியதே! இந்த தவறான முறையில் பெற்ற வெற்றிகளால் படும் துன்பத்தின் வியாபகத்தினால் அவன் ஆன்மா சுடுபட்டுத் துடிப்பதை காலம் கடந்தபின் உணர்ந்தேயாக வேண்டும்.
எனவே பண்பு நெறி களைந்து பெற்ற அறிவு, செல்வம் எல்லாமே உள்ளத்தின் ஒளி மேவிய பாதைக்கு இட்டுச் செல்லாது. இந்த வாழ்வு தனக்குள் நிம்மதி, திருப்தி காணாத நிலையிலேயே அவனை வைத்திருக்கும். நாம் பெறுகின்ற அறிவை தூய சிந்தனையுடனே பெறுதல் வேண்டும். கலங்கிய, களங்கம் நிறைந்த சிந்தனையுடன் மேல் நோக்கிய அறிவைத் தேட முனைதல் பயனற்றது. வெறும் பிழைப்புத் தேடுவதற்கு மட்டும் படிக்க வேண்டுமா? பிழைப்பிற்காக மட்டும் படித்தல் என்பதே ஒரு விதத்தில் நடித்தல் என்றே ஆகிவிடும். எல்லாமே வர்த்தக நோக்கோடு வாழ்க்கையைப் பார்க்கும் காலமாகிவிட்டது. ஆத்மார்த்த
51

Page 26
பருத்தியூர்பால.வயிரவநாதன் சிந்தனையுடன், எமது கல்வி, ஞானத்தால் அனைத்து மக்களுக்குமான வழங்கல்களைச் செய்வேன் என்கின்ற மனோ நிலையினை மனிதன் வளர்க்க வேண்டும்.
அன்பு நிலை உள்ளோர்க்கு ஞான நிலை தானாய் வரும் என்போர் பெரியோர். ஏன் எனில் அன்பு செலுத்து பவர்கள், எதையும் இழக்கச் சித்தமாயிருக்கின்றார்கள். உலக நிலையாமை அதன் ஆரவாரத்தன்மை பற்றிச் சலனமற்றுச் சிந்திக்கும். இவர்களுக்குத் தோன்றுவது எல்லாமே தெளிவான உண்மைகளே அன்றி வேறில்லை. அஞ்ஞானச் சுவடுகளின் வழியே செல்பவர்கள் தெளிந்த சிந்தையுடையோர் பகன்ற வாசக வரிகளின் சிதறல்கள் சில நெஞ்சைத்தொட்டாலே போதும். போகும் வழிதுல்லியமாக ஒளி தெரிய வழிகாட்டும்.
அழுக்கு உடலுக்கு ஆடம்பர உடை உடுத்தி என்ன பயன்? தன் நிலை கண்டு அவனே அருவருப்பு அடைவான். பண்பினை இறுகப் பற்றாமல் படித்து என்ன பயன்? தூய வாசனையை எம்மீது தூவுமுன் நாம் முதலில் எம்மைத் தூய்மைப்படுத்துவோமாக!
உண்மையின் தேடலைத் தேடிப் புறப்படுபவர்கள் பல முரண்பட்ட கருத்துக்களுக்குள் ஆட்பட்டுத்திசை தெரியாது அல்லல்படுகின்றனர்.பலரும் பல புதிய புதிய ஆன்மீக குருமார்களிடம் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். இந் நிலை இன்று மட்டும் அல்ல தொன்று தொட்டே இருந்து
52
 

வமளனம் வருகின்ற நிலைதான். காலத்திற்குக் காலம் தமது ஞானகுருவை மாற்றிக்கொள்கின்றார்கள்.
ஆனால்,
இதில் வியப்பு என்னவெனில் பற்பல விதமாகப் புரியாத முறையில் ஞானம் பற்றிபேசுபவர்களுக்கும் கூட்டம் சேர்கின்றது. பருவ காலத்தின் மாற்றம் போல ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொருவருக்கும் கூடும் அடியார் தொகை சந்தை வியாபாரம் போல் ஏற்ற இறக்கமாக இருக்கின்றது.
மக்களின் இந்த ஆன்ம ஈடேற்ற வேட்கையைப் சில சங்கங்கள் நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்கின் றன. ஞானம் தேடுவது என்ன கடைச்சரக்கா? எவரிடம் எவர் போய் பெறுவது? போதாதற்குப் பாமரமக்கள் பலரும் இவர்கள் பிடியினுள் அகப்பட்டதும் அகப்பட்டுக் கொண்டே யிருப்பதும் அகப்பட்டப் போவதும் ஆச்சரியமல்ல. மிகப் படித்தவர்கள் பெரும் செல்வந்தர்கள். அரசியல் வாதிகள் என்று பலதரப்பட்டவர்களும் இத்தகைய ஆன்மீகம் பேசுபவர்களிடம் சரணாகதியாகின்றனர்.
ஆனால் சில சமயம் இதுபோன்றவர்களின் நடவடி க்கைகள் அம்பலமாகி அவலட்சணப்பட்டு நீதிமன்றத்தின் முன் மேடையேற்றப்படுவதுமுண்டு. ஆன்மீகம் என்பது ஒரு விற்பனைப்பொருளும் அல்ல. ஆன்ம விழிப்பைத் தெளிவை பெறுவதற்கான ஆயத்தங்களை நாம் செய்ய எவ்வளவு தியாகங்களை மன வைராக்கியங்களை உருவாக்க
53

Page 27
பருத்தியூர் enau.6027alpineaf வேண்டும் தெரியுமா?. சபலம், சஞ்சலம், ஆசைகளையும், கபட நோக்கையே குறியாகக் கொண்டவர்கள், தமக்காகத் தாம் தப்பிக்க ஆன்மீக வாழ்வைப் போர்வையாகப் போர்த்திக் கொள்ள உலகம் வசதி செய்து கொடுக்கக் கூடாது.
நெஞ்சில் சுமையுடன் வருபவர்கள் அதை எங்கா வது இறக்கலாமா என ஏக்கத்துடன் இருக்கின்றார்கள். இத்தகையவர்களுக்கு ஞானமார்க்கம் காட்டுகின்றோம். ஒளியூட்டி வைக்கின்றோம். தேவையான தெளிவை, அள்ளி அள்ளிக் கொடுக்கின்றோம் என்று எவராவது விளம்பரம் செய்து அதை வினியோகம் செய்துவிட முடியுமா?
தன்னை எவ்விதத்திலும் தயார்ப்படுத்த எண்ணாத ஜீவன்கள், காசு, பணத்தை விட்டெறிந்து, அமைதி தேடுவது எங்ங்ணம்? வழிபாடு, தியானம் மட்டும் நற் சிந்தனைகளை உற்பத்தி பண்ணி விடுமா? இதயத்தில், புனிதத் தன்மையினைப் புகுத்தாமல் எமது எந்தச் செயலிலும் பூரணத்துவம் கண்டு விடமுடியுமா?
ஆசாபாசங்கள் துன்ப இன்பங்களுள் அல்லாடும் மனிதர்கள் எடுத்ததெற்கெல்லாம் வளைந்து இழுபடும் நிலையில் இருப்பதைத் தாமே உணரத் தலைப்படல் வேண்டும் விகுபடா இந்நிலையில் இருந்து விடுதலை பெறாமல் முடங்குவதை விட எழுந்து இயங்குவதே மேன்மை,
54
 

வமளனம் நல்லோர் உறவு நல்லவற்றையே படித்தல், அவை களையே கேட்டல், நல் வார்த்தைகளையே பேசுதலை முக்கிய பயிற்சியாகக் கொண்டேயாக வேண்டும்.
இவ்வண்ணம் நாம் ஒழுகிவரின் படிப்படியாக எமது சிந்தனை யில் ஒரு கூரிய சக்தி உருவாகுதலை உணர முடியும். சிந்தனைத்திறன் கொண்ட பெரியோரைப் பாருங்கள். அவர்கள் முகத்தில் உள்ள அமைதியை அருள் வீச்சைக் கண்டு கொள்ளுங்கள்!.
அனைத்து உயிரினங்களுமே கடவுளின் குழந் தைகள் என்பது வெறும் பேச்சு அல்ல. முழுமையான உண்மை தான். இறைவனின் ஆசியால் எவருமே எதனையும் சாதித்துவிட முடியும். மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களே ஞான நிலையை அடைவதன் மூலம் இந்த உண்மை நிரூபணமாகின்றதல்லவா?
மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும், அவனைச் சகல செல்வங்களும் வந்தடையும். அத்துடன் அவனே பெறுதற்கரிய ஞானத்துடனான மேலான தெளிவையும் பெற்றே விடுகின்றான்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
20-08-2006
55

Page 28
பருத்தியூர் பா.ைவயிரவருதன்
மெளனம் உள்நின்று ஒதப்படும் மாமந்திரம். ஒரு தியான நிலை. பேசாமொழி. பேச்சு அற்ற மெளனநிலை. பெரும் ஓசையை, பெரு நெருப்பை, இயம்பவொண்ணாக் குளுமையை ஊட்டவ்லல மகா சக்தி உடையது. பேசவேண்டிய நேரத்தில் மெளனம் காப்பது புத்திசாலித் தனமல்ல. மெளனத்தால் பல உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும். பிறருக்கு உணர்த்தவும் இயலும். தூய்மையற்ற எண்ணத்துடன் மெளனமாய் இருப்பது அவர் ஆன்மாவிற்கே இழுக்கானதும் தம்மையே வதைப்பதுமாகும். உலக ஆரவாரங்கள் ஓயப்போவதில்லை. இதனுள்ளும், தன்னை உணரவும், தன்னைக் காப்பாற்றவும், மெளனம் எம் ஆன்மாவிற்குத் தேவையான உன்னத நிலையுமாகும்.
மெளனம் ஒரு அமானுஷ்ய மொழி. இதன் தரிசனம் பல தாக்கங்களுக்கான உதயம். எனினும் நிர்மலமான சிந்தனையூடான மெளனம் வாழ்க்கையின் சுகங்களுக்கான ஆதாரம். இது உள் நின்று ஒதப்படும் மாமந்திரம். ஒரு தியான நிலை, பேசா மொழி எனவும் கூறலாம்.
56
 
 
 
 
 
 
 
 
 
 
 

வமளனம் அமைதியாகச் சும்மா இருப்பதாகக் காட்டிக் கொள்வதெல்லாம் மெளனம் அல்ல. பயத்தையும் மேலான பீதி உணர்வினைக் கொடுக்கின்ற அமைதியான நிலையை எவர் தான் நல்ல நிலை என்று சொல்லிக் கொள்வார்கள்?
எனவே,
சப்தம் செய்யாமல் மனதினுள் கறுவிக்கொள்வது அதர்மத்தைச் செய்வதற்கான உச்சநிலையன்றி வேறி ல்லை. நல் எண்ணங்களுடன் உள்ளத்தினை வளப்படுத்த வலுப்படுத்த எமக்கு நாம் அளிக்கும் கட்டுப்பாடான உள்ளத்தின் தெளிவான நிலைதான் மெளனம். இங்கு பதற்றம், பயம் இல்லை. இது கூட மனிதனுக்கான பூரணத் துவம் நோக்கியபுறப்பாடு. அதாவது பயணம் என்று சொல்லலாம். நல்ல நோக்கத்திற்கு அன்றி பிறரை வருத்த மனதைப் பிசைய ஏற்படுத்துகின்ற மென்மை போன்ற வன்மை நன்று அன்று!
தேவையற்ற ஒரு மெளனத்தினால் விளைந்த ஒரு கதையைக்கூறுகின்றேன் இது புரிந்துணர்வின்மையை தெளிவின்மையை எடுத்துச் சொல்லும்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். அவரை நான் முதன் முதலின் கண்டதுமே அவரது நடத்தைகள் மாறுபாடாக இருப்பதை உணர்ந்தேன். அவரது கதையை எனது நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண் டேன்.திடீர் எனச் சில சமயம் எமது நண்பர்களிடம் வருவார்.
57

Page 29
பருத்தியூர்யாவையிரவநாதன் சோதிடம் சொல்வதாகச் சொல்லி வலிந்து அவர்களுக்குச் சோதிடம் கை ரேகை பார்ப்பார். அவர்களிடம் சோதிடம், சொல்லி முடிந்ததும் ஒரு தொகையைக் கறாராகக் கேட்பார். எல்லோரும் அவர் நட்பு ரீதியில் கேட்கின்றாரே என நினைத்தாலும், கேட்ட தொகையை கண்டிப்பாகக் கேட்டுப் பெறுவார். இத்தனைக்கும் சோதிடம் பற்றி அவருக்குச் சரிவரத் தெரியாது ஏன் இப்படி நடக்கின்றார்? நல்ல படித்த மனிதர். அவருக்கு என்ன நடந்தது?எதற்காகக் கேலிக்குரிய மனிதராகத் தோற்றமளிக்கின்றார்? சரி அவரது சோகக் கதைக்கு வருவோம்.
திருமணமாகித் தமது மனைவியுடன் இருபது வருடங்களாக மிகவும் அந்நியோன்யமாகத் தாம்பத்திய வாழ்வு நடாத்தி வந்தார். அவர்கள் குடும்பம் ஒரு எடுத்துக் காட்டான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தது. அரச பணியில் உயர் பதவியில் இருந்தார். மனைவியுடன் ஒரு வேளையும் கோபித்துப் பேசாத மென்மையான மனிதர். மனைவியும் அத்தகைய மென்மை உணர்வுள்ள பெண்மணியாவர்.
ஒரு நாள் இவர் வீட்டிற்கு வருவதற்கு நேரமாகி விட்டது. நள்ளிரவுக்கு முன் கூட்டியே மனைவிக்குத் தகவல் தராமலேயே சென்று, பின்பு காலம் தாமதமாக அன்று வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததும் மனைவி அன்றுதான் சற்றுக்கோபமாக ஏன் வீட்டிற்குக்காலதாமதமாக வந்தீர்கள்
என்று கேட்டுவிட்டார். இவர் பதில் எதுவுமே பேசவில்லை.
58
 

பேசாமல் வீட்டினுள் சென்று படுத்துவிட்டார். அடுத்த நாள் ஒன்றுமே பேசாமல் காலையில் வேலைக்குச் சென்று விட்டார். மாலையில் வீடு திரும்புமுன் அவருக்கு அந்த அதிர்ச்சிச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
ஆம், அவரது மனைவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனதுஅன்புக்கணவர் ஒன்றும் பேசாமல் மெளனமாகப் புறப்பட்டதும், அன்று வீட்டில் உணவு அருந்தாமல் சென்றதும் அவர் மனதை மிகவும் வாட்டி விட்டது காரணத்தை எழுதித் தனது வாழ்க்கையை முடித்துவிட்டார்.
வாழ்க்கையில் இத்தனை வருடங்கள் இவ்வளவு அந்நியோன்யமாகச் சீவித்தும் கூட தனது கணவனின் அன்பு நிலையை அரவணைப்பினை உணராமல் தனது கணவனின் மெளனத்தைச் சகிக்காமல் இந்தப் பரிதாபகரமான முடிவை எடுத்துவிட்டார். மனைவியின் பிரிவினையடுத்து சித்தசுவாதீ னமின்றி நடைப்பிணமானார். தனது அரச வேலையைப் புறக்கணித்துக் கைவிட்டார் குடும்பத்தின் உறவினர்களின் உதவிகளால் தமது காலத்தை ஒட்டி வந்தார்.
சாதாரண ஒரு சம்பவத்தினைப் பேசித் தீர்க்காமல் உள் மன வெடிப்புக்களால் தணலாகி, நொந்து, மெளனம் காப்பது நல்லதா? துன்பங்களே வாழ்க்கையில் தெரியாமல் இருப்பதும், மனோ தைரியங்களை வாழ்க்கையில் ஏற்படுத் தாமல் இருப்பதும் வாழ்க்கைக்கே ஊறு விளைவிப்பதுபோல் அல்லவா ஆகின்றது?
59

Page 30
பருத்தியூர் d(60.6/02/apr26
பேச்சு அற்ற மெளனநிலை பெரும் ஓசையை, பெரு நெருப்பை, இயம்பவொண்ணாக் குளுமையை ஊட்டவல்ல மகா சக்தி உடையது. ஆனால் பேசவேண்டிய நேரத்தில் மெளனம் காப்பது என்பது புத்திசாலித்தனமல்ல. இதனால் விபரீத விளைவுகள் நாங்கள் எண்ணியவைக்கு மாறான எதிர்மறைச் சம்பவங்கள் நிகழலாம்.
காதல் சமாச்சாரங்கள்.
0.Φ
நண்பர்களிடையேயான கருத்து முரண்பாடுகள். உடனடியாகத் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சனைகள். * கொடுக்கல், வாங்கல்கள் போன்ற பிரச்சனைகள்.
0.
Х•
இத்தகைய விடயங்களை மெளனம் காத்துப் பேசாமல் இருந்தால் காரியங்கள் நடக்குமா? மெளனம் என்பதன் அர்த்தம் மூடிமறைத்தல் அல்ல. பல உண்மை களுக்கான தேடலும் பல தேவையற்ற பிரச்சனைகளுக்குள் ஆட்படாமையும் எமது ஆன்ம சக்தியினை வளர்ப்பது மாகும்.
சும்மா இருப்பது சுலபமான காரியமா? மன உறுதி இல்லாதவனிடம் இது சாத்தியப்படுமா? நிர்ச்சிந்தனையு டன் மெளனமாக இருப்பது தவநிலைதான். இதற்காகத் தம்மைத் தயார்படுத்தலுக்காக அகத் தூய்மையுடையோர் வாழும் வாழ்க்கை முறைமைகள் சமானியர்களுடன் ஒப்பீடு செய்ய முடியாததாகும்.
60

வமளனம் நினைவுகளைக் கட்டுப்படுத்தியும் கடல் அனைய உடலின் விருப்பங்களைச் சுருக்கியும் அலையும் மனதை நிலை நிறுத்துவது உன்னதமான சாந்தநிலை அல்லவா? மெளனம் மென்மையானது. ஆனால் அதன் வேகம் ஆற்றல் அளப்பரியது அறிக!.
கணினியில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளை ஒரு விரல் அசைவில் அதன் பதிவுகள் அனைத்தையும் அழிப்பதுபோல் எமது பழைய புதிய தேவையற்ற எண்ணங் களை நொடிப்பொழுதில் துடைக்க முடியுமா? ஆனால் ஒரு சில வினாடிப் பொழுதில் நாம் செய்யப் போகின்ற வேலைகளில் மனம் குழப்பமடைந்தால் அவை செயலற்றுப் போகின்றன.
ஆக்கத்திறன்மிக்க கருமங்களில் ஈடுபட விழையும் போது மனம் களைப்படைவது மிகவும் வேதனைக்குரிய தேயாகும். ஆன்மபலம், தேகபலம் இவைகளை ஒருங்கு சேர இணைத்துச் செயலாற்றுதலுக்கு நிர்மலமான மெளன நிலை எம்மை வழிநடத்தும் திறனைக்கூட்டி நிற்கின்றது.
எம்மை நாம் ஆசுவாசப்படுத்தலின்றி உடன் ஒரு விடயத்தில் குதிக்கும் போது எங்கள் வலிமைகூடச் சில வேளை மழுங்கடிக்கப்படுவதுண்டு. மன உறுதி என்பது எமது தேக வலிமையினைப் பன்மடங்காக உயர்த்துகின்றது. தேவையற்ற சக்தி விரயங்களை மெளனநிலை தடுத்து விடுகின்றது.
61

Page 31
பருத்தியூர் utta.areflatpileaf
அதிகம் பேசுபவன் அவஸ்தைப்படுகின்றான். மெளனம் மேன்மைப்படுத்துகின்றது.
ஒரு சிறந்த பேச்சாளன் மேடையில் நன்மை தரும் கருத்துக்களை மட்டும்தான் பேசுவான். எவர்களும் கண்டபடி பேசினால் அவரது கூற்றை எவரும் நம்ப மாட்டார்கள்.
சிந்திக்காமல் சின்ன வார்த்தையும் சிந்தக்கூடாது. மெளன நிலை எம்மைச் சிந்தனைக்கு இட்டுச்செல்வதால் எமது செயல்திறன்கள் அனைத்துமே கடைந்து எடுக்கப்பட்ட நற்சாறாக எம்மிடம் இருந்து சுரக்கப்படும்
புலன் வழி புகும் போது தெளிவிற்கும் குழப்பத் திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
மிகப்பெரும் பதவிகளிலும் பொறுப்புக்களிலும் இருக்கின்ற பலர் தமது கருமங்களில் எவ்வித சிக்கலு மின்றிச் செய்து முடிக்கின்றார்கள். ஆனால் அதிகம் பொறுப் பில்லாத கருமங்களைச் செய்கின்ற சிலரோ தமது வேலைகளைப்பற்றிப் பெரிதாகச்சொல்லி அலுத்துக் கொள்வார்கள். எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் எடுத்துப் போட்டுக் குழப்பியடிப்பார்கள்.
கிரகிக்கும் திறன் குறைந்ததால் எந்தப்பணியையும் நாம் சரிவரச் செய்யமுடியுமா? ஒருவர் சொல்லும் போதும் நாம் கேட்கும் போதும் படிக்கும் போதும் எமக்குக் குரல்
62
 

வமளனம் தேவையில்லை. மூளையை மட்டும் விரித்து மெளனமாக அவதானித்தலே போதுமானது.
தெளிவான கிரகித்தலால் செய்யப்படும் பணிகள் இலகுவாக்கப்படுகின்றது. குழப்பமான மனநிலையில் எம்மால் கிரகிக்க முடியாது. அத்துடன் பலரும் சத்தமிட்டுக் குறுக்கீடு செய்தாலும் எதைக் கேட்பினும் வெறுப்புத்தான் மிஞ்சும். எனவே பலர் கூடி ஒருவிடயத்தினை அறிய முற்படும் போது சகலருமே தமது நோக்கம் நிறைவுபெற கேட்கும் விடயத்தில் புலனைச் செலுத்திலயிப்புடன் மெளன மாக உள்ளத்தில் விடயங்களை நிறுத்துதல் சிறப்பானது. அறிக!
மனதின் ஆராவாரங்கள் ஒடுங்கினால்தான் சிந்தனா சக்திசரிவர இயங்கும் காட்டிற்குச்சென்று முனிவர்கள் தவம் இயற்றியதாகப் படித்திருக்கின்றோம். புற உலக ஆரவாரங் களில் இருந்துவிடுபட இவர்கள் விரும்பினார்கள் பெரிதான புலனடக்கத்தினால் ஆன்ம விழிப்புப் பெற்றவர்களுக்கு சீறிடும் புயலும், பெரும் தீச்சுவாலைகளும், அனல் வீச்சும், பெரும் இடியோசையும், பிரவாகித்து வரும் புனல் ஒன்றும் அவர்களைப் பாதிப்படையச் செய்வதில்லை.
சின்ன அமளிகளுக்குள் பெரும் கலவரத்தை மனதுள் உருவாக்குபவர்கள் நிலையற்ற விசாரங்களுள் விலக விருப்பமில்லாதவர்களேயாவர். உலக ஆரவாரங்கள் ஒயப்போவதில்லை. ஆனால் எங்கள் மன இயல்பின்
63

Page 32
பருத்தியூர் rov.amfibraggař அதிர்வுகளை கட்டுப்படுத்த எம்மால் முடியும். கண்ட கண்ட வேண்டாத அல்லல்களுக்குள் எல்லோருமா மாட்டிக் கொள் கின்றார்கள்? மிகச் சிலர்தான் அங்கு முடங்கி ஒடுங்கிப் போகின்றார்கள். நன்றாக அவதானித்து உற்று நோக்குங் கள்! தெளிந்தவன் அழிந்ததில்லை. எதனுள்ளும் அமிழ்ந் ததுமில்லை.
வீண் சலசலப்பு உணர்வுகள் எமது பலவீனமான எண்ணங்களால் கருக்கொள்கின்றன. நீண்டகாலம் பயின்ற கல்வியும், கலையும், ஒரு சின்னச் சஞ்சலத்தினால், சலனத் தினால், சபலத்தால் எம்மை விட்டு நழுவுகின்ற உணர் வினைக்கூட நாம் பெறுவதுண்டு. நிதானமாகச் சிந்தித்து இயங்கச் சில கணப்பொழுது மறுத்து விடுகின்றோம். இந்தச் சிலபொழுது சிந்தனைதான் நல்ல மெளனநிலை என்று கொள்ளப்படும்.
எந்த நேரமும் விவாதமும் எதிர் கோஷங்களும் கட்டளையிடும் தொனிகளும் நாம் எட்டிப்பிடிக்க எண்ணும் எல்லைகளைத் தொட்டுவிடாது.
எமக்குள் நாம் சும்மா இருந்து மெளனம் காக்கப் பழக வேண்டும். எம்மிடம் இருந்துபுறப்படும் உண்மை வீச்சு ரொம்பவும் பரிணாமம் கூடியதாகும். சில நேரம்பிள்ளைகள் : குழப்படி செய்தால் தகப்பனார் அவர்களை விறைத்துப் பார்த்துப், பின்னர் மெளனித்தால், அதன் எதிர் விளை வினைப் பிள்ளைகள் உணர்வார்கள் இல்லையா?
64
 

வமளனம் எங்கள் வலு உண்மையான கருமங்களை நோக்கிச் செல்லும் போது நாம் கொள்ளும் மெளனத்தின் அர்த்தமும்
விசாலமும் முழுதாக பிறருக்கும் உங்களுக்கும் புரியும்.
ஒரு சில வினாடிகள் கூட மனம் தனது செயல் பாட்டினை நினைக்கும், அதிர்வுகளை நிறுத்துவது இல்லை. ஆனால் எமது நினைப்புக்களை நிறுத்த முடியாது விட்டாலும் நல்ல நினைப்புக்களாக உயர்த்த எமது மனசுக் குக் கட்டளையிட நிச்சயமாக இயலும்,
நல்ல செயல்கள் எம்மிடமிருந்து புறப்பட ஆரம்பித்ததும் சித்தம் சுத்தமாய் எம் கட்டுப்பாட்டினுள் புகுந்து கொள்ளும்,
அத்துடன் எந்த வேளையிலும் தேவைப்படும் காலங் களில் எம்முடன் நாம் பேசி முடிவு எடுக்கும் திறனும் வளர்ந்து விடும். உங்களுடன் நீங்கள் பேசாமல் பிறருடன் மட்டும் பேசி என்ன பயன்? மனதோடு பேசு! மனச் சாட்சியை மதி! இவைகளை நாம் மறக்கக்கூடாது.
மெளனம் மனச்சாட்சியைத் தூய கண்ணோட்டத் துடன் நோக்குகின்றது. அவசரப் புத்திக்காரருக்கு மனச்சாட்சியுடன் பேச நேரம் கிடைப்பதில்லை. வெறும் உணர்ச்சிகள் மட்டும் எம்மை வாழவைக்காது. நல்உணர் வினுடான உணர்ச்சிகள்தான் வாழ்வைச் செழுமையாக்கும். இதுவே தெளிவு நிலையும்கூட. மெளனத்தின் மேல்
65

Page 33
பருத்தியூர்பால,வயிரவநாதன் நம்பிக்கையும் அந்நிலை மூலம் பெற்ற தெளிவினால் தன்னையே ஒருவன் தற்காத்துக் கொள்வதுடன் முழு உலகையுமே ஆகர்ஷித்துக் கொள்கின்றான்.
தன்னை அறியாமலே தன்னைத் தொலைத்த ஆத்மாக்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். தன்னை விட்டுத் தான் அதிக தூரம் செல்வதை உடன் நிறுத்த வேண்டும். தன் மனதோடு உறவாடி உண்மை நிலையை உணரல் வேண்டும்.உள் உணர்வுகள், உடல் உணர்ச்சிகள், உள்ளக் குமுறல்கள், தீவிர ஆற்றல்கள், சக்தி வெளிப் பாடுகள், இவை எல்லாவற்றையும் பகுத்து ஆராய்ந்து தன்னைச் செப்பமாக்க முயலுதல் வேண்டுமன்றோ?
அக உணர்வுகளை விழிப்படையச் செய்வதற்கு நாம் மெளனத்தின் அவசிய தேவையை உணர்ந்தேயாக வேண்டும். சும்மா சாப்பிட்டு உறங்கி எழுவதால் என்ன சாதனைகளை நாம் பெற்றுவிடப்போகின்றோம்?
வாழ்க்கைப் போராட்டத்தின் எத்தகைய சவால் களையும் சந்திக்க, எம்மை நாம் வலுவூட்டி வைக்க வேண்டும். உலகம் மோசமானது என்று நாம் கருதக்
&n Lstgs.
எம்மை நாம் தயார் நிலையில் வைத்திருத்தல் என்பது நல்லோர், வல்லோர் உலகத்துடன் நயம்பட திறன்பட வாழ்வதற்கேயாம். இதனால் இடர்கள் தொடராது. இன்பவாழ்வே இணைந்து கொள்ளும்!
66

வமளனம்
நற்சிந்தனையைச் செதுக்குதலே வாழ்வின் நற்பேறு மாகும். மெளன நிலையில் பேசாது இருப்பது என்பது நற்சிந்தனையை உள்ளீர்க்கும், புகுத்தும் முழு முயற்சியே யாகும். இதன் மூலம் பெறப்படும் ஆற்றல்கள் எமது வாழ்விற்கான வலுமை மிகு பெரும் கொடைகள் என உணர்வோம். “மெளனம்" எமது ஆத்மாவின் “யெளவனம்” எனக் கொள்வோமாக!.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 02-07-2006
67

Page 34
பருத்தியூர்பால.வயிரவருதன்
r u
I m m m †ነ ፡Íነ Y፡ ;
;'' ; ኳ
" . " ". " ". . . . . . ."
-' • ' • • • : ሄ' ". ", , ייו ፡ ነ · ', ̇ ; "
தோற்றத்தில் மட்டும் எளிமை காட்டுவது ஏமாற்று வேலையாகும். வாழ்வின் நடத்தை நெறியிலும், தூய்மை இலங்கினால் தான் எளிமை நளினமாகக் கவரப்படும். "ஈகை” இல்லாத "எளிமை” எனது ஆன்மாவை வலுப்படுத்தாது. உலோபித்தனமாக வாழ்வது எளிமையாகாது. சிக்கனமாகச் செம்மையாக வாழ்வதே எளிமை. இதுவே தூய்மையான வாழ்வு முறைமையுமாகும். தேவைக்கு ஏற்றபடி வாழுங்கள். அடுத்தவன் ஆடம்பரத்தினுள் நாம் நுழையக்கூடாது. சிக்கனமாக வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழமுடியும். எளிமையாக வாழ்ந்து பார்த்தால் தான் அதன் பூரணத்துவம் நன்குபுரியும்.
எளிமை என்பது உலோபித்தனமானது அல்ல. வாழ்வின் எந்நிலையிலும் எம்மைத் தயார் நிலையிலும் அமைதியாகவும் சிக்கனமாகவும் நிலைபெற்று இருக்க வைக்கும் சீரிய பண்பு நெறியாகும். 3.
இந்த வாழ்வியல் முறைமை நிரந்தர மகிழ்விற்கும், ஏனையவர்களுக்கும் வழிகாட்டி நிற்கும் கட்டுப்பாட்டுக்
68
 
 
 
 
 
 
 
 

வமளனம் கலாச்சாரமுமாகும். வாழ்வியல் பண்பே உலக கலா சாரமும் ஆகும். உணர்வோம்!
வெறும் தோற்றத்தில் மட்டும் எளிமை காட்டுவது ஏமாற்று வேலையாகும். வாழ்வின் நடத்தை நெறியிலும் தூய்மை இலங்கினால்தான் எளிமை நளினமாகக் கவரப்படும்.
ஒருவரின் பரந்த மனப்பான்மை என்பது அவர் வாழு கின்ற சாதாரண வாழ்விலேயே துலங்கித்தெரியும், வசீகரம் என்பது கூட அவர்தம் நடத்தையினால் நயம் பெறுகின்றது. உண்மைதானே! சேருகின்ற மிதமிஞ்சிய பணமும், பதவியும், புகழும் எளிமையான போக்கிற்குச் சிலசமயங்கள் சவால் விடுவதுண்டு. இயல்பாகவும் ஆரம்ப காலம் முதல் எவ்வித படோபகரமான சூழலுக்குட்படாதவன் தனது பரந்த ஆளுமைத் திறனால் தன்னைச் சுருக்கி தன் ஆன்ம விழிப்பை உயர்த்தி விரித்துநிற்கின்றான்.
அழகு மிகு வாழ்க்கை என்பது எளிமையான ஏற்றம் மிகுந்த வாழ்க்கைதான். சந்தேகம் வேண்டாம். பகட்டு வாழ்வு பம்பரமாக எம்மைச் சுழற்றிக் களைப்படைய வைக்கும். சீரான வேகத்தில் சென்றால் பாரினைக்கூடச் சுற்றுவது பெரிதல்ல.
பெருஞ் செலவு செய்து வாழ்ந்தால்தான் சகல சுகங்களுக்கும் சொந்தக்காரர் ஆகலாம் என எண்ணுவது
69

Page 35
பருத்தியூர்யாவையிரவநாதன் மடமையாகும். இதனால் உடலும் உள்ளமும் காலப் போக்கில் நலிந்துவிடும்.
g
சுகாதாரச் சீர்கேடுகள்.
உடல் உழைப்பு விரயம்.
பணச் செலவு. மற்றவர்களின் தேவையற்ற விமர்சனங்கள். கால விரயம். - தனிமனித செல்வ விரயத்தினால் நாட்டிற்கு ஏற்படும் நட்டங்கள்.
&
{
Х•
(X
X
{
மேற்படி காரணிகள் எளிமையாக வாழ்ந்துகொள்ள மையினால் ஏற்படுகின்ற எதிர்விளைவுகளாகும்.
வெறும் கெளரவத்திற்காகக் கால் நடைப் பயணத்தினைக் கூட மோட்டார் வண்டியில் செல்லப்பிரியப் படுகின்றார்கள். சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக இயற்கை வழிமுறைகளைத் தவிர்த்து தேவையற்ற இரசாயனப் பொருட்களை வாங்கித் தேய்கின்றார்கள். இயற்கைப் பொருட்களை மனிதன் உபயோகிக்க மறந்தே விட்டான். ஒன்றரை மணிநேரம் பேரூந்திற்குக் காவல் நிற்பவன் ஒன்றரை நிமிடத்தில் உடல் விருத்திக்காகவாவது நடந்து போக மனம் இடம் கொடுக்க மறுக்கின்றான். வியர்வை சிந்தினால் அவலட்சணம் என்கின்ற காலமாகி விட்டது.
70
 
 

வமளனம் யார் யாரோ என்னவோ சொல்வார்கள் என்பதற்காக கையில் இருந்ததை கைநழுவ விடுவதுதான் வாழ்க்கையா? தன்னாலே கெட்டவன் தன்னைத் தூக்கிநிறுத்த எவராவது வருவார்கள் என எதிர்பார்ப்பது இழிவு துன்பப்பட்டும் எழுதலே நல்லது.!
பொருளிட்டுவது என்பது பெரியவிடயம். வலிமை உள்ள காலத்தில் அதைத்தேடுவதும், முதுமை வந்துற்ற போது அதன் பயனைப் பெறுவதுமே முறைமை. ஆனால் சிலர் பேசும் கருத்துக்கள் மிகவும் விந்தையாக இருக்கும் “என்ன ஐயா அற்பத்தனமான வாழ்க்கை வாழுகின்றீர் இருக்கும்பொழுது அனுபவித்துவிடல் வேண்டும். செத்தால் எமக்கு என்ன தெரியப் போகின்றது செத்தபின் தேடியது எல்லாம் கூடவருமா” என்று சொல்வார்கள்.
எளிமையாக வாழ்வதற்கும் இத்தகைய கூற்றுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை நாம் என்னதான் பொருள் ஈட்டினாலும் எமது உழைப்புக்கள் எமக்கானது மட்டுமல்ல எம்மைச் சார்ந்தவர்களுக்கும் முழு சமூகத்திற்குமானது எனப் பரந்த மனப்பான்மையுடன் எல்லோரும் கருதுவதில்லை.
எத்தனையோ வள்ளல்கள் பார்வையில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றனர். ஆனால் அனைத்துப் பொதுக் காரியங்களுக்கும் தம்மால் ஆன விதத்தில் உதவுவதில் முன்நிற்பார்கள். எளிமையானவர்களை மக்கள்
71

Page 36
பருத்தியூர் unau.6/02/airplayof நேசிக்கின்றார்கள். பகட்டானவர்களைப் பார்த்தால் பயந்து விலகுகிறார்கள்.
* எனக்கு,
* எனக்கு மட்டும், * எனது குடும்பத்திற்கே,
என்று வாழுபவர்களும் இருக்கின்றார்கள். தமது சம்பாத்தியம் பொதுமையானது என்று நினைப்பவர்களும் இருக்கின்றார்கள். இது ஒவ்வோருவர் மனப்பான்மையைப் பொறுத்த விடயம்.
ஆனால் "ஈகை” இல்லாத "எளிமை” எமது ஆன் மாவை வலுப்படுத்துமா? இவர்கள் தான் அனுபவிக்கத் தெரியாதவர்கள் எனக் கொள்க!.
நல்ல வழியில் இல்லாதோர்க்கு அளிப்பது தனிச்சுக மல்லவா? நாம் வாழும் காலத்தில் இதனைச் செய்துவிடல் வேண்டும். எம் கண்முன்னே எங்களால் பிறர் அடையும் களிப்பினை கண்டு களிப்படைய வேண்டும். "இதுவே இருக்கின்ற போது அனுபவி” என்பதன் முழு அர்த்தமு மாகும்.
மேலும் சிக்கனம் என்பதற்கும் எளிமை என்பதற்கும் வித்தியாசம் உண்டு சிக்கனம் பணம் பொருள் விடயத்தில் அதைக் கண்டபடி செலவு செய்யாமல் பேணும் நல்ல உபாயம் ஆகும்.
72
 

வமளனம் ஆனால் எளிமை வாழ்வு என்பது ஆத்மார்த்தமான தூய வாழ்வோடும் இணைந்தது ஆகும். சிக்கனமாக வாழ்பவர்கள் எல்லோருமே எல்லாச் சந்தர்ப்பத்திலும் எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதில்லை.
அண்ணல் மகாத்மா காந்தியடிகள் தென்னகத்துக் காந்தி காமராஜர் அவர்கள் தங்கள் தோற்றத்திலும், வாழும் முறைகளிலும்,சிக்கனத்துடன்கூடிய எளிமை வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள்,மனத்துய்மை உள்ளவர்கள் என்றும் எளிமையினையே நாடுவார்கள். காந்தியடிகள் தூய பருத்தியி லான கதர் ஆடையை உடுத்தினார். இது சுகாதாரத்திற்கு அந்நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஆடையாகும். எனவே தேவைக்கு ஏற்பவே வாழுவதுமுறைமை மற்றப்படி ஆடம்பர உடைகள், ஆடம்பர உண்வு வகைகள் எல்லாமே தேவைக்கு ஒவ்வாதது என எண்ணல் வேண்டும்.
இன்று வெறும் வியாபார உத்தியை நம்பிஏமாந்து கண்ட கண்ட உணவுப் பழக்கங்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். ஒவ்வொரு நாட்டின் கலாசாரங்களுக்கும் அந்நாட்டின் பூகோள சீதோஷ்ண நிலைக்கும் பொருத்த மான பழக்க வழக்கங்களை நம் முன்னோர் கண்டுபிடித்து விட்டனர். இவை அனுபவ ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட எளிய வழிகள். இதை விடுத்து நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு வேற்று நாட்டைப் பார்த்து எளிமை வாழ்வினைப் புறக்கணிப்பது நல்லது அல்ல.
73

Page 37
பருத்தியூர்யாவையிரவநாதன்
மனித வாழ்வு நிரந்தர மற்றது. தாழ்ந்த நிலையில், வாழ்பவர்கள் கால மாற்றத்தால் உயர்நிலை அடைவதும் உயர் நிலையில் வாழ்ந்தவர்கள் சரிவடைந்து போவதும் இயற்கைதான். எந்நிலையிலும் நாம் வாழப்பழக வேண்டும் என வெறும் பேச்சளவில் கூறினால் மட்டும் போதுமா? எதிலும் கூடிய மிகையான ஆர்வத்தினைக்காட்டி வாழ்கின்ற வர்கள், திடீர் என ஏற்படும் வாழ்க்கைச் சுழற்சியில் சிக்குண் டால்பெரும் அவஸ்தைக்குட்பட்டுவிடுகின்றார்கள். எக்காலத் திலுமே மனதளவிலும் வெளித் தோற்றம் செயல்பாடு களிலும் சாமான்ய சீவியம் செய்பவர்களுக்கு இடையூறுகள் தடைக்கற்கள் எல்லாமே பெரிதெனத் தோற்றம் காட்டி விடாது.
மேலும் சாதாரண வாழ்வு வாழ்பவர்கள் சுதந்திரமாக வாழுகின்றார்கள். எல்லா வசதிகளையும் வேண்டுமென்றே தேவையற்ற போதும் திணித்துக் கொள்பவர்கள் அந்த நினைப்புகளுடனே சொல்லொ வொண்ணா ஒரு அழுத்த நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தேவைகளைச் சுருக்கும் போது நிம்மதி தானாக கருக்கொண்டு விடுகின்றது. வியர்க்க விறுவிறுக்க, அழகுமிக்க கனத்த ஆடைக்குள் மூச்சுமுட்ட முடங்கி ஒடுங்கிக் கிடப்பதை விட காற்று உள்நுழைய வசதிகொடுத்துமூச்சிற்கு இதமளிக்க நாம் ஏன் தயங்க வேண்டும்?
வசதிகள் வாய்ப்புகள் எங்கள் இயல்பான எளிமை உணர்விற்கு, வாழ்வியல் முறைகளுக்கு இடையூறு வர
74
 

சம்மதிக்கலாமா? துரதிருஷ்டவசமாகச் சிலர் எளிமையான வாழ்வில் நுழையவே முடியாமல் போகின்றார்கள். சத்துமிக்க வாழ்க்கையை அனுபவிக்காமல் சக்கையைத் திணித்து சப்புக் கொட்டிக் கொள்ளலாமா?
எதிலும் கூடிய மிகையான ஆர்வத்தினைக் காட்டி வாழ்கின்றவர்கள் திடீர் என ஏற்படும் வாழ்க்கைச் சுழற்சியில் சிக்குண்டால் பெரும் அவஸ்தைக்குட்பட்டு விடுகின்றார்கள். எக்காலத்திலுமே மனதளவிலும் வெளித் தோற்றம் செயல்பாடுகளிலும் சாமான்ய சீவியம் செய்பவர்களுக்கு இடையூறுகள், தடைக்கற்கள் எல்லாமே பெரிதெனத் தோற்றம் காட்டிவிடாது.
எளிமையாக வாழ்ந்து பார்த்தால் தான், அதன் பூரணத்துவம் நன்கு புலனாகும். எம்முன்னே அத்தகைய பெரியோர்களைப்பற்றிக் கேட்டும் அறிந்தும் இருக்கின் றோம். எமது முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் இயற்கையை ரசித்தார்கள். அதனோடு பழகி
ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள்.
எனவே அவர்களுக்கு எளிமை வாழ்வு ஒன்றும் புதுமையாகத் தோன்றவில்லை. அதனைச் சிரமம் மிக்க வாழ்வு முறையாகக் கடுகளவும் அவர்கள் கருதவில்லை. எளிமையை, எமது இயல்பு ஆக்கி வலுவான வாழ்வை
அமைப்போமாக!.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 09-07-2006
75

Page 38
பருத்தியூர்ப7ல.வயிரவநாதன்
நீண்டகால பகையுணர்வினை வேண்டுமென்றே தொட்டு அதனை விட்டுவிட முடியாத பேர்வழிகளுக்குக் குரோதம் கசப்பு அல்ல. இனிப்பு. மன்னிக்கும் மனப்பாங்கு ஆன்ம நேயம் அன்பு உணர்வு கொண்டவர் களுக்கு மனதை அரிக்கும் குரோதம் தொட்டு விடாது. திருந்துவதற்குச் சந்தர்ப்பம் அளியுங்கள். துர்ச் செயல் செய்பவர்கள் அதனைச் செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டாம். மேலான எமது அன்பான வழிகாட்டல்களால் அவர்களின் குரோதங்கள் கரைந்தே போய்விடும். கோபங்கள் மறைய லாம். குரோதம் உள்நின்று உராய்ந்து மாறாதரணமாகி"வடு" ஏற்றும். குரோதம் களைதல் உளவிருத்திக்கு உகந்தது.
குரோதம் இருதயத்தை அரித்து நல் எண்ண ங்களை நொருக்கி நிரந்தரமாய் தரித்து நிற்கமுனையும் நீறு பூத்த பெரு நெருப்பாகும்.
நீண்ட கால பகையுணர்வினை வேண்டுமென்றே தொட்டு அதனை விட்டுவிட முடியாத பேர்வழிகளுக்கு,
76
 
 
 
 
 
 
 
 
 
 

வமளனம் குரோதம் கசப்பு அல்ல. இனிப்பு. ஏன் எனில் சிலருக்குப் பகை உணர்வுபிடிக்கும். நட்புணர்வு கடிக்கும். சண்டையை விரும்பும் மண்டைக் கணம் பிடித்த இவர்கள் முடிவில் பகையை முடிக்கத் தம்மையே கெடுக்கும் விடாக் கண்டன்
களாவர்.
மேலதிக அவா.
ஆற்றாமை,
பொறாமை, காழ்ப்பு.
தவறான புரிந்துணர்வு.
விட்டுக் கொடுக்காமை.
ஆணவமுனைப்பு, மேலாதிக்க எண்ணங்கள்.
போன்ற காரணங்களால் மட்டும் குரோத உணர்வு கள் தோன்றுவது என்பதில்லை. புரிந்துகொள்ள முடியாத மறைந்து நிற்கும் சில சங்கதிகளும்கூட ஒருவர் மற்றவர் மீது குரோதம் கொள்வதற்குக் காரணமாக அமையலாம்.
தவிர குரோத உணர்வுகள் தனிமனிதனுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல. சமூக, இன, நாடுகளிடையேயும் இவ்வுணர்வு வலுப்பட்டு நிற்கின்றது. பழைய கதைகளையும் பகைகளையும் மீட்டுப் பேசிக் குரோதத்தை மென்மேலும் தீயிட்டு வளர்ப்போர் தொகை மிகைதான்.
தங்கள் கோப தாபங்களை தமது பரம்பரைக்கே அரிய சொத்தாக விட்டு விட்டுச் செல்லும் விசித்திரப் பிரகிருதிகளும் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றனர்.
77

Page 39
பருத்தியூர்பால,வயிரவநாதன்
குரோத உணர்வின் விளைவு பற்றியே பெரும் பாலான கதைகள் பின்னப்படுகின்றன. புராண இதிகாசக் கதைகளைப் படித்தவர்கள் எல்லோருக்கும் இது புரியும். இதன் தன்மையைப் படித்தும்கூடத் தங்களைக் கெடுக்கும் மனிதர்களை என்ன செய்வது?
கதைகள் என்பது வெறும் பொழுது போக்கிற்கும் சுவாரஸ்யத்துக்கும் மட்டுமே என்றாகி விட்டது. கதைகளின் தாக்கத்தினால் எவ்வளவு பேர் மனம் திருந்தினார்கள் என்பது கேள்விக்குரிய விடயம் தான்.
இருப்பினும் நியாயபூர்வமான கோபங்களைக் காட்டியும் எவ்வித பலாபலன்களும் கிடைக்காத பட்சத்தில் நல்லோர்கள் கூட வெஞ்சினம் கொண்டு கோபங்களை நீண்ட நாள் புதைத்துக் குரோத உணர்வோடு இணைவது வேதனை
தான.
நியாயபூர்வமான உள வெளிப்பாட்டுக் கோபத் தினைக் காட்டுகையில், நியாயத்திற்கே சத்துருவானவன் இவன் என யாராவது சொன்னால் நீதிநெறியுள்ளவன் கூட நோகாமல் இருக்க முடியுமா?
இதயத்துள் பூட்டிவைக்கும் மனஸ்தாபங்களை வெளிக்கொணர இயலாதவர்கள் உள்ளுக்குள் வெந்துகுரோ தத்தை குருவாகக் கொள்கின்றனர். அதன் வழி புலன் செலுத்தி திறன் அழிந்துபோகின்றார்கள்.
78
 

வமளனம் மேலும் பலவீனமானவன் நீதி கேட்க முடியாமல் மனம் துவண்டு போகும் போது சமூகத்தை சினமுடன் நோக்குகிறான். பெரிய பலசாலிகளுடன் மோதி நியாயம் கேட்க முடியாத நிலையில் வெளியே சிரித்து உள்ளே குமைந்துபோகின்றவர்கள் மலிந்துபோய் விட்டார்கள்.
அமைதி பேணுதல் என்பது உள் மனதுள் மனம் குமுறுதல் அல்ல. பகை மறந்து உள்ளத்தைத் தெளிவாக வைத்துஇருத்தலாகும். வேறு வழியின்றித்தன்னை வருத்தி பொய்யாகப் புன்னகை செய்யக்கூடாது. இந்தச் செய்கை சதாகாலம் உள் நின்று மாறா தரணமாகி விடுமன்றோ? இது பழியுணர்வை மேலோங்கச் செய்துவிடும். எதிரியை மடக்கத் தருணம் வரும் போது பேயாக உருக்கொண்டு தாக்கும் போது மனிதன் மனிதனாக இருப்பதேயில்லை.
. மன்னிக்கும் மனப்பாங்கு
ஆன்ம நேயம், அன்புணர்வு,
போன்ற இயல்புடைய மாந்தர் வாழ்வில் குரோதம் வக்கிரப்பட்டுவிடும். அதாவது இல்லாது அற்றே போய்விடும். ஒரு சிறிதளவு பகையுணர்வுகூட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனித இயல்பை மாற்றவல்லது. அறிந்து கொள்வோம்!
ஆயினும் தீயவர்கள் செய்யும் செயல்களுக்காக அவர்களை ஒடுக்கி உண்மையை நிலைநாட்ட எடுக்கும் முயற்சிகள் வன்மமோ குரோதமோ அல்ல.
79

Page 40
பருத்தியூர் ாவையிரவநாதன்
சில தீயோரை உடன் ஒடுக்க முடியாது போனால் காலம் காத்திருந்தே அவர்களைத் திருத்த முடியும். இந் நடைமுறைகளைக் கையாளும் போது அதைப்பக்குவமாக படிப்படியாகக்களைய முனைதல் வேண்டும்.பொதுவாகச் சத்தியத்தைப் புரட்ட எண்ணும் எத்தர்கள் தங்களை மற்றவர் கள் நியாயபூர்வமாகப் பாடம் புகட்ட எண்ணினாலும் அது அடாத செயல், வன்மம், பழைமைப் பகை என்றுதானே பிரசாரம் செய்கின்றார்கள்?
திருந்துபவர்க்குச் சந்தர்ப்பம் அளிக்கும் காலத் தையே தமக்கு மேலும் துர்ச்செயல்களைச் செய்வதற்கான அனுமதி என எண்ணுபவர்களும் உளர். அடித்து விட்டு அழுகின்ற குற்றவாளிகளும் இருக்கின்றார்கள்.
பொதுவாகப் புரிந்துணர்வு இல்லாதபோது இரு சாராரிடத்தே சந்தேகம் வலுப்பட்டு முடிவில் பகையாக மாறி விடவும் இடமுண்டு. நீண்ட காலத்து நண்பர்கள், உறவினர் களிடையே பழகும்போதுகூட சில எதிர்பாராத நிகழ்வுகளால் சந்தேகம் துளிர்விட ஆரம்பித்துவிடுகின்றன.
எப்போதாவது அந்நிலை எமக்குத் தோன்றியதும் உடன் அதுபற்றிச் சம்பந்தப்பட்டவரிடம் பக்குவமாகக் கலந்து பேசி விட வேண்டும். மேலும் இது பற்றிய பிரச்சனைகளை * உங்களால் தீர்க்க முடியாத பட்சத்தில் இது விடயத்தைப் பகிரங்கப்படுத்தாதுநம்பிக்கையானவர்கள் மூலம் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை களைந்தேயாக வேண்டும்.
80
 

வமளனம் வெறுமனே நாம் மெளனமாக இருந்தால் எங்கள்மீது தப்பு அபிப்பிராயம் கொள்பவரின் எண்ணங்கள் தவறாக மாறுபட்டு, வீண் மனஸ்தாபங்கள் தான் மிஞ்சும். முடிவில் அது பகையாக மாற இடமுண்டு அல்லவா?
எங்கள் மெளனத்தால் பிறர் சித்திரவதைப்படக் கூடாது. கோபத்தைக் காட்ட நீண்ட நேர மெளனத்தைத் தவிர்த்துவிடுங்கள். ஒருவரை எமது வழிக்குக்கொண்டுவரல் என்பது மெளன வன்முறை எண்ணங்கள் அல்லவே அல்ல. இன்னுமொரு விடயம் கோபம் வேறு, குரோதம் வேறு. எமக்குப் பிடிக்காத விடயத்தை பார்க்கும் போது அல்லது எமக்கு வேண்டப்படாத வேலைகளை மற்றவர்கள் செய்யும் போது இயல்பாக எழும் உணர்ச்சிகோபம் ஆகலாம். இந்த உணர்வு கூட எல்லோர்க்கும் உடனடியாக வர வேண்டும் என்பதுமில்லை.
ஆனால் குரோத உணர்வு வன்மஉணர்வு, மிகை யான, வேண்டத்தகாத பழைய பகையுணர்வு பொறாமை, வக்கிரபுத்தி போன்ற ஏற்கனவே எம்மால் சொல்லப்பட்ட காரணிகளாலும் உண்டாவதாகும். ஆத்திரம், கோபம் என்கின்ற சாதாரணதற்காலிக நிலை உணர்ச்சிகளை நாம் குரோதத்துடன் இணைத்துப் பேச முடியாது.
ஆயினும் நீண்டகால பகை கோபத்தின் சிறு
எரியூட்டலால் எழுவதும் உண்டு. எனவே ஆரம்பத்தில்
இருந்தே எமக்குநாமே உள் இருத்திக்கொள்ள வேண்டியது
81

Page 41
பருத்தியூர்யாவையிரவநாதன் “மனத்தை நாமே வசம் செய்யும் பக்குவத்தினை வளர்க்கப் பழக வேண்டியதேயாகும்" விரும்பும் கலைகளில் ஈடுபடல், பிரார்த்தனைகளில் ஈடுபடல், தியானம், அமைதியான இடங்களில் மெளனநிலை சிறந்த நூல்களைப் படித்தல் போன்ற விஷயங்களில் புலனைச் செலுத்தினால், அநா வசியமான பிரச்சனைகளில் நுளைந்து கொள்ள, உள்ளம் இடம் கொடுக்காது.
தீராப்பகை, போராய் முடியும் என்பர். இந்நிலை விரும்பத்தக்க ஒன்றா? இருசாராரிடம் பகை வளர்ப்பது நல்லது என எண்ணுபவர்கள் இவர்களைப் பிடிக்காத எதிரிகளே, என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் புரிந்து கொள்ளல் வேண்டும்.
"பகை” மனித தகைமைகளைக் குறைக்கும், சில சமயம் இழக்கவும் வைக்கும்.
தேவையற்ற காரணங்களைக்கூறிக் கோபங்களைக் கிளறி வளர்த்தல் வளமான வாழ்விற்குக் குழிபறிப்பதுபோல் அல்லவா? வஞ்சகம், அடுத்துக் கெடுத்தல், அநியாயம் புரிதல் என்ற சொல்லே ஒருவருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அச்சொல்லைச், செயலைத் தீயவை என அறிந்தும் மனக்குரோதம் காரணமாக இத்தகைய குறுக்கு வழி நெறி கெட்ட செயலைச்செய்வது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என ஏன் புலப்படுவதில்லை? மதயானையைக்கூடச் சின்னஞ்சிறு எறும்பு அலற வைக்கும்.
82

வமளனம் சிறுகுரோத உணர்வு மனதுள் புகுந்தாலும் நிம்மதியின்மை மனிதனை முடக்கும். மலர்ப்படுக்கையே ஆயினும் சிறு துரும்பு உறுத்தினால் உறக்கம் உவப்பாக அமையுமா?
எனவே சின்னக் குரோதங்களையும் சம்பாதித்தல் வேண்டாம். அன்பு எனும் சுகந்த வாசனையைத் தேட முனையும் நாம் கந்தக வாசனையை முகர்ந்து கொள்ள முனையக்கூடாது.
விரோதம், சரீரத்திற்கு எதிரி1
மனதை எரித்து, பழிச் செயலுக்கு அழைத்துச் செல்லும் கருமைக் கருவி
மன்னித்தலும் மறத்தலும் தீவினையாளரையும் சிந்திக்க வைக்கும். ஒரு தடவையாவது பரீட்சார்த்தமாக ஒருவரையும் எதிரி எனக்கருதாது அவர் செயலை மன்னித்துப் பாருங்கள். கொடுமதியாளரும் கூடப் படிப் படியாகத் திருந்த உங்கள் கருணை மனம் வழிகொடுக்கும்.
இருக்கும் காலத்தில் மற்றவரைச் சந்தோஷமாக வாழ வைப்பதும் நாமும் அவ்வண்ணம் சமூகத்துடன இணைந்து மகிழ்வுடன் வாழ வேண்டியதே வாழ்வின் நற்பேறு ஆகும்.
மலரை விட மனித மனம் மென்மையானது. தனக்கு எனத்துன்பம் வரும்போது அது தவிக்கின்றது. எனவே பிறர் இதயத்தில் உறுத்தலை ஏற்படுத்து முன் தன்
83

Page 42
பருத்தியூர்யா.ைவயிரவநாதன் நிலை அறிவது மானுட தர்மம் என நோக்கல் வேண்டும். அன்பினைப் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுபவர்கள். இதயத்தை இரும்பாக்கிக் கொள்ள விரும்புவார்களா?
நன்நெறிகளைக் கடைப்பிடிப்பதில் நல்வைராக்கி உணர்வும், பிறரை மதிக்கும் விடயத்தில், நோக்கும் பாங்கில், வானிலும் பரந்த அன்பு நிலையில் எம்மை உருவாக்கினால் குரோத உணர்வுகள் சரிந்து சாம்பராகும்!
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)
30-07-2006
84
 
 

666)
இளவயது சலனங்கள் முதுமையைப் பாதிக்கின்றன. பால்ய வயதில் தமக்குரிய இளவயது பருவமாற்றத்தின் காரணமாக இனக்கவர்ச்சி வசமாவதுமுண்டு. தம்மோடு ஒத்த இளம் வயதினரின் சேர்க்கையால் தூண்டுதலால் பல வேண்டத்தகாத செயல்களில் ஈடுபடுவதுமுண்டு. அந்நேரங்களில் இவை தவறாகத் தெரிவதுமில்லை. பெரியவர்கள் பெற்றோர்கள் இவர்களின் நடத்தைகளைக் கண்டறிந்து களைதல் வேண்டும். பண்பு என்பது பொதுவான உன்னதநிலை. ஆண், பெண் என்ற இருபாலாருமே பண்புடன் வாழுதல் வேண்டும். பண்பு நெறி பிறழ்தல் ஆண்களுக்குரிய உரிமையுமல்ல.ஆனால் பெண்கள் செய்யும் சிறுதவறுகளே பெரிதாகப் பேசப்படுகின்றன. சலனம் இல்லாது
உள்ளத்தை நிலை நிறுத்தல் சிறப்பு ܥܠ
أص
ஒரு கணப்பொழுது சலனம் ஏற்படுத்துகின்ற விளைவு, பல ஆண்டுகள் வாழ்ந்த வாழ்வின் பெருமையைக் கருமையாக்கிவிடும்.
85

Page 43
பருத்தியூர்பான வயிரவநாதன்
உறங்கிக் கிடக்கும் விகார ஆசைகள் திடீர் என
விழிப்புற்று எழுப்பி விடுகின்ற பேரதிர்வுகள் பரிதி முன்
பஞ்சாக எரித்துவிடும் ஆற்றல் மிக்கது.
சலனம் சபலம் வேண்டப்படாத ஒன்றுதான். இவை சாமான்யரின் அறிவு நிலைக்குச் சவால் விடுகின்றது. தேவையற்ற ஆசைகள் அபிலாசைகளுக்காக மனம் சலனப் பட்டு அலைபாயத் தேவையில்லை.
முறையற்ற விதத்தில் தேவைகளைத் தீண்ட நினை க்கும் போது அது சலனமாகின்றது. தகாத எண்ணங்களின் பலாபலன் நச்சு மழையே பொழிவது போலத்தான். எதை யும் அனுபவித்துவிடவேண்டும் என எண்ணுபவர்கள் அதற் கான முயற்சியில் ஈடுபடும் போது குறுக்கு வழி ஆசை களால் நெறி பிறழும் விதத்தில் தம்மை ஆட்படுத்திக் கொள்கின்றனர்.
நல்ல மனிதர்கள் வாழ்வில் சோதனைகள் தொடர்ந் தும் அல்லல்படுத்துகின்றபோது தமது மனோதிடத்தினால் தங்களை ஆசுவாசப்படுத்திவிடுகின்றனர். "வேண்டாம் எந்த நிலையிலும் நான் சிந்தனை தடுமாறாதவனாக எந்தச் சோதனையையும் எதிர்கொள்வேன்” எனத்திட சங்கற்பம் பூண்டு விடுகின்றபோது வரும் துன்பங்களை வெறும் சம்பவங்களாகத் தூக்கி எறிந்தே விடுகின்றனர்.
எனினும் விதிவிலக்காக சிலர் "எவ்வளவு நேர்மை யாக வாழ்ந்தேன். எனக்கு எதற்கு இந்தச் சோதனைகள்.
86
 

வமளனம் ر இனிமேலும் பொறுக்க முடியாது. என்னைச் சார்ந்த, என்னையே நம்பிய குடும்பத்தினர்க்காகக், கண்டபடி நடந்தால் தான் என்ன”என்று சலனப்படுவோரும் உளர்.
தொடர்ச்சியான மன உளைச்சல்கள் மனிதர் களைப் பாதிப்படைய வைப்பது ஒன்றும் புதுமையுமல்ல. இது ஒரு துர்ப்பாக்கிய நிலைதான். உறுதியான நிலையில் உள்ளவன் சலனங்களைச் சந்திக்கச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவே மாட்டான்.
கொஞ்சம் மது அருந்திப் பார்த்தால் என்ன? பணத்தை ஈட்டுவதற்கு திருட்டுத் தொழில் செய்தால் என்ன? மனதுக்குப் பிடிக்காதவர்களைத் தந்திரமாக அழித்தால் என்ன என எண்ணுபவர்கள் ஆரம்பத்தில் இத்தகைய செயல்களைச் செய்ய அச்சப்படுவார்கள். எனினும் அரை குறை மனதுடன் தீய செயல்களை செய்ய ஆரம்பித்து அது சிலசமயம் வெற்றி பெற்றதும் தொடர்ந்து தமது காரியங் களை மெதுவாக விரிவுபடுத்துவார்கள். முடிவில் அதுவே அவர்களின் முழுநேரத் தொழிலாகி ஈற்றில் அழிந்து போவார்கள்.
பால்ய வயதினர் தமக்குரிய இளவயது பருவ மாற்றத்தின் காரணமாக இனக்கவர்ச்சி வசமாவதுண்டு. இதனால் தம்மோடு ஒத்த வயதினரின் சேர்க்கையால் தூண்டுதலால் பல வேண்டத்தகாத செயல்களில் ஈடுபடுவ துண்டு. இவையெல்லாம் அந்த வயதில் ஒரு தவறாகவே
87

Page 44
பருத்தியூர்யா.ைவயிரவநாதன் தெரிவதுமில்லை. அவர்கள் அதைப் பொருட்படுத்துவது மில்லை. எவராவது அவர்கள் செயலைத்தட்டிக் கேட்டால் பெற்றோர், உற்றார், பெரியோர் எவரையுமே உதாசீனம் செய்தும் விடுகின்றனர்.
இளவயது சலனங்கள் முதுமையைப் பாதிக் கின்றன. இதில் குறிப்பிடத்தக்கவிடயம் என்னவெனில் வயதுமுதிர்ந்தவர்களில் சிலர் இன்னமும் பாலியல் பலவீன சேஷ்டைகளில் இளவயதினரைவிட மோசமான தீவிர வாதிகளாக இருக்கின்றனர்.
Х•
சின்னவயதில் இருந்தே கட்டுப்பாடான வாழ்க்கை யை வாழ்ந்து கொள்ளாமை.
* நிறைவேறாத பாலியல் ஆசைகள்.
* மிதமிஞ்சிய உணவு, குடிப் பழக்கம்.
* முதுமை வயதிலும், தன்னை ஒரு கதாநாயகனாகக் காட்டிக் கொள்ள எண்ணும் கோணங்கித்தனமான எண்ணங்கள்.
இத்தகைய மோசமான பேர்வழிகளைப் பொது இடங்களில்கூட நீங்கள் சந்தித்திருக்கலாம். இத்தகையவர் களாலும் மற்றும் வேறு சாதாரண இள வயதினராலும் பாலியல் உணர்வு தொடர்பான சலனங்களால் ஏற்படும்
88
 

வமளனம் விளைவுகளால் நடக்கின்ற குற்றச்செயல்களை உலகம் நன்கு அறியும். கொலை, களவு, கற்பழிப்பு, ஏமாற்று மித மிஞ்சிய மதுபோதையின் தாக்கங்கள் பல ஆரம்பத்தில் சிறிதளவாகவே மனதுள் துளிர்விட்டு அது நச்சு மரமாக வளர்ந்து கொடும் பாதகர்களாக அவர்களை மாற்றி விடுகின்றது.
உளரீதியான எண்ணங்கள் பின்பு உடல் ரீதியாகவும் ஒருவனை மாற்றி விடுகின்றது. தகாத உறவுக ளால் நிகழ்காலத்தின் தேவைகளை மட்டும் பிரதானமாக முன் நிலைப்படுத்துபவர்கள் முடிவில் நிகழ்காலத்தை மட்டுமல்ல, தமது எதிர்காலத்தையும் தம்மைச் சார்ந்தோரின் எதிர்காலத்தினையும் கேள்விக் குறியாக்கி விடுகின்றனர். இல்லையில்லை, நிர்க்கதிக்கே ஆக்கிக் கொள்கின்றார்கள்.
பண்பு என்பது ஒரு பொதுவான நிலை. ஆண், பெண் இருபாலர்க்கும் இது விடயத்தில் வெவ்வேறான கொள்கைகள் இல்லவேயில்லை. ஆண்பாலார் சபலப்பட்டு தப்புச் செய்தால் அவன் ஆண் எனவே பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண் சந்தர்ப்பவசத்தால் அவள் கற்புக்குப் பங்கம் ஏற்படும் போது அவள் சோரம் போனதாகக் கூறிவிடுகின்றனர். அவள் விரும்பாமலே காமுகனால் கற்பழிக்கப்பட்டால் அவளைக் கற்பிழந்தவளாகக் கூறுதல் தகாது. கொடுமை இழைக்கப் பட்டவர்க்கு பரிதாபப்படாமல் அவர்கள் நெஞ்சங்களை
89

Page 45
பருத்தியூர்யாவையிரவநாதன் நெரிக்கலாமா? இவர்கள் விடயத்தைக் கருணையுடன் நோக்குதலே மானுடதர்மம் ஆகும்.
அதேவேளை இன்று கண்டபடி நடக்கும் ஆண்கள், பெண்களுடன் முறைதவறி நடந்தால், அதன் பெயர் என்ன? அவனும் சோரம் போனவனாகவே கருதப்படுவான். அதாவது கற்பிழந்தவன் என்பதேயாகும். எனவே சோரம் போதல் என்பது கூட ஒழுக்கம் பிறழ்ந்த ஆண், பெண் இருசாராருக்கும் பொதுவானதே!.
அவலத்திற்குட்பட்ட பெண்ணைப் பற்றிக்கரிசனை ப்படாமல் கண்டபடி நடக்கும் ஒருவனுக்காக ஆதாரங் களைக் கோர்ப்பது என்ன நியாயம் ஐயா?
எனினும் முறைகேடான இச்சைகள் மிலேச்சத்தன மானதும் வெட்கப்படத்தக்கதுமாகும் ஒரு தனிமனிதனின் சபலங்களும் முறைகேடான எண்ணங்களும் உலக சரித்தி ரத்தையே மாற்றியிருக்கின்றன. புராண இதிகாசங்களில் கூட அற்ப சலனங்களால் மன்னர்கள் தமது நாட்டையே கலங்கடித்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது. நிதான புத்தி யைக் கொண்டிராதவர்களின் போக்கு சமூக நடைமுறை களைக் கூடக் கேலி பண்ணுவதாகவே அமையும். தமது சலன புத்தியால் வேளைக்கு ஒரு கதையும் கொள் கையுமாக வாழ்ந்து தம்மையும் பிறரையும் அவலத்திற்கா ளாக்கின்றனர்.
90
 
 

வமளனம் சலனம் என்பது எமக்கு ஏற்படும் மனசின் சல சலப்பு என உடன்புரிந்து அதனை வெட்டிக்கொள்ளுங்கள். சிலநேரம் ஒரு விடயத்தை எப்ப்டிக்கையாளுவது என்பதில் கூட மனம் சஞ்சலப்படுவதுண்டு. இது முடிவு எடுக்கும் விடயத்துடன் தொடர்புபட்டது.
சலனமும் சபலமும் மனித நடத்தையுடன் தொடர் புபட்டதாகும். நிர்மலமான நீரில் கல்லை விட்டு எறிந்தால் அது கலங்குவது போல நல்ல மனதற்குள் தீய சபலத்தை உள்நுளைத்தால் மனம் கலங்கிவிடும். நாம் தொடர்ந்தும் கற்களாகிய தீய எண்ணத்தினைப் புகுத்தாது சற்று நேரம் மெளனமாகி நிதான வசப்பட்டால் நீர் மீண்டும் அமைதி யாகித் தெளிந்து விடுவதுபோல் மனமும் நிரமலமாகிவிடும்.
எனவே தெளிவுநிலைக்கு வர உங்களை அனுமதி யுங்கள். மனதை அலைக்கழிக்கும் நிலை வருமுன் நிதான புத்திக்கு இடம் கொடுங்கள். எந்நேரமும் அமைதியான, திடமான, நிதான புத்திக்காரரை கண்ட கண்ட விடயங்களும் உடன் தொட்டுவிடுமா?
காதல் பற்றிப் பலர் கூறுவார்கள். கண்டதும் காதல் ஏற்பட்டதாகப் பெருமையாகச் சொல்லிக்கொள்வர். இன்னும் சிலர் நான் வருடக்கணக்காக முயன்று தான் காதல் கொண்டேன் என்பார்கள். எனினும் யார், எவர் காதலில் வெற்றி பெற்றுத் திருமணம் செய்வது ஒன்றும் பெரிது அல்ல. இவர் தமது சொந்த வாழ்வில் இதே அன்புடன்
91

Page 46
பருத்தியூர்யா.ைவயிரவநாதன் இன்புற்று வாழ்கின்றார்களா, கருத்தொருமித்து எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்களா என்பதே முக்கியமான விடய மாகும் வெறும் சபலத்தினால் மனம் உந்தலினால் இரு சாராரும் நொடிப் பொழுதில் காதல் வசப்படுவது எல்லாத் தருணத்திலும் சரிப்பட்டு வருமா?
தெய்வீகக் காதல், இலட்சியக்காதல் என்பது எல்லாம் மனம் பொருந்துதலில் உள்ள வல்லமையில் உள்ளதே! புரிந்து கொள்வார்களா! ஆழ்கடலுக்குள் மூழ்கி எழுவது சுலபம். கருமனதுடன் உருவான சபலத்துடன் வாழ்வில் எழுவது கடினம். ஏன் முடியவே முடியாது. அவர்கள் திருந்தினால் ஒழிய,
தீயைப் பற்ற வைத்த பின் எதில் அதைப் பொருத்துவது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எமது சக்தியைக் கண்ட இடத்திலும் பிரயோகித்து விடக்கூடாது. சலனத்தினுள் சஞ்சாரம் செய்வது சதா காலமும் மன அழுத் தத்துடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் உட்படுத்தி விடும். சீரான பிரச்சினைகள் அற்ற சுமுகமான வாழ்க்கை யைத்தான் தேடிக்கொள்ளல் வேண்டும். அதை விடுத்துக் குழப்பத்தையும், சபல சலனங்களுக்குள் ஏன் வலிந்து விழவேண்டும்?
சுழலாத மனமும், நிலையான குறிக்கோளும் உள்ள வாழ்வுதான் வாழ்வு. துன்பப் பிரியர்களாகக் கண்ட தையும் கண்டு இச்சைப்படுதல் அவர்களை வாழ்வின் உச்ச
நிலைக்கு இட்டுச் செல்லாது.
92
 

வமளனம்
விதிவிலக்கான இயற்கை நிகழ்வுகளையும் மனித பலவீனங்களையும் சாக்காகச் சொல்லியே மனிதன் வாழ்ந்துவிடமுடியுமா?கட்டாயம் தப்பித்தேயாக வேண்டும். எதிர் நீச்சல் போட்டுத்தான் ஆகவேண்டும். வில்லங்கமான எண்ணங்களை மெல்லன வெட்டாது சட்டெனக் கத்தரித் தலே மேலானது. சிறு பொறியைப் பெரும் தீயாக்கி அதனுள் பிரவேசித்தல் தகாது. மலரனைய வாழ்விற்கு உரம் கொண்ட நெஞ்சுறுதி கொண்டால் சலனங்கள்
சிதறடிக்கப்படும்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 16-07-2006
93

Page 47
பருத்தியூர் na.6/02/allottaya
"கண்" அவன் என்பதே "கணவன்” என்பதாயிற்று. பொறுப்புக்களை வெறுப்பின்றித்தன்னால் இயன்ற முழுச் சக்தியுடனும் தூய சிந்தனையுடன் செய்து முடிப்பவனே நல்ல கணவன் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றான். ஒரு "வீடு" என்பது உலகின் குட்டி ராஜ்ஜயம் தான். இங்கிருந்துதான் நல்ல பிரஜைகள் பிரசவிக்கப்படல் வேண்டும். கணவனும் மனைவியும் சம பங்காளிகளாக உலகிற்கு நல்ல சற்புத்திரர்களை உருவாக்குவதுடன் முன்னோடிகளாகவும் வாழ்ந்து காட்ட வேண்டியவர் களாயுள்ளார்கள். மேலாதிக்க உணர் வின்றித் தன் குடும்பத்தினைப் பொறுமையுடன் தாங்குபவனே அன்பான கணவனுமாவான்.
கணவன் என்பவன் குடும்பத்தின் கண் போன்ற வன். கண் அவன் என்பதால் கணவன் என்று கூறப்படு கின்றான். மனைவி மக்களிடம் பூரண உரிமைகளைக் கொண்டவனாகவும் அவர்களின் இன்ப துன்பங்களில் அன்போடு பங்குகொள்பவனாகவும் இவன் இருக்கின்றான்.
94
 
 
 
 
 
 
 
 

வமளனம் குடும்பத்தின் தலைவனாக இருந்தால் மட்டும் ஒருவன் சிறந்த புருஷனாக இருக்க முடியாது. பெயரளவில் தலைவனாகவும் செய் கருமங்களில் நல் வாழ்வில் நுழையாதவனாகவும் இருந்தால் அவனுக்குக் குடும்பம் கொடுமையாகிவிடும்.
பொறுப்புக்களை வெறுப்பின்றித் தன்னால் இயன்ற முழுச்சக்தியுடனும் தூய சிந்தனையுடன் செய்து முடிப்ப வனே நல்ல கணவன் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றான்.
குடும்ப விளக்கான மனைவிக்கு எண்ணை போல் அவளுடன் சேர்ந்து ஒளியூட்டுவதால் அவர்கள் குடும்பம் மட்டுமல்ல எதிர்கால புதுச் சமூகத்தினருக்குக்கூட நல்வழி காட்டுகின்றனர். கண்டிப்பும் திண்மை நெஞ்சும் நிறைந்த வனே ஆண்மகன் என்று கருதப்பட்டாலும் அவன் உள்ளே அன்பும், பண்பும், அனுசரணை உணர்வும் வலுப்பட்டாலே குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்றவனாக அங்கீகரிக்கப் படுவான்.
குடும்பம் ஒரு கோவில் என்று நாம் கூறுகின்றோம். எனவே சிறந்த முறையில் பேணப்படாத இல்லத்தின் நடை முறைகளால் உடைபடுவது அங்குள்ள அனைத்து ஜீவன்களும் என்பதை பாதிப்படையும் உறுப்பினர்கள் உணரல் வேண்டும்.
95

Page 48
பருத்தியூர் ால வயிரவநாதன்
ஒழுங்கமைப்பு என்பது ஒரு நிறுவனத்திற்கோ அன்றி அரசாங்கங்களுக்கோ மட்டும் அல்ல. ஒரு வீடு உலகின் குட்டி ராஜ்யம் தான். இங்கிருந்து தான் நல்ல பிரஜைகள் பிரசவிக்கப்படல் வேண்டும். இங்கிருந்துதான் நல் ஆசான்களான கணவனும் மனைவியும் புத்திஜீவிகளை ஆரம்பத்திலிருந்தே படைத்து உலகிற்குக் கொடுக்க வேண்டும்.
எனவே இதுவிடயத்தில் மனைவியை விடக் கணவன் தன் பங்களிப்பினை கூடுதலாகச் செய்ய வேண்டி யவன் ஆகின்றான். சதா வீட்டுவேலைகள், குழந்தை குட்டி களுடன் உழைக்கும் மனைவிக்கு வெறும் கட்டளையிடும் அதிகாரியாக மட்டும் நின்றுவிடாது. தன் முனைப்பு அல்லது ஆணவ நிலை கடந்து பொறுப்பாற்ற வேண்டியது கணவனின் பெருங்குணமாக அமைதல் சிறப்பானதாகும்.
பொதுவாகத் தாயைவிட தகப்பனாரிடமே பிள்ளை கள் பயப்படுவதும் கீழ்படிவதும் சகஜமானது ஆகும். வீட்டின் தலைவன் தனக்குரிய பாசத்திற்கு அப்பால் நின்று எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டியவ னாகின்றான். அன்னையர்களுக்குக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி எவ்வளவு தான் கற்பனை இருந்தாலும் பிள்ளைகளின் நடத்தைகளை சற்று இறுக்கமாகக் கண்டிக்கும் திறன் அவள் பாசமேலிட்டினால் வலு இழந்தே காணப்படுகின்றது.
96
 

வமளனம்
இது ஒன்றும் தவறு அல்ல. தாங்குகின்ற தாய் பிள்ளைகள் மனம் சோர்ந்துவிடுதலைப் பொறுப்பதில்லை. கணவனின் அதட்டல்கள் மிரட்டல்களைக் குடும்பநலன் பற்றியதாகவே என அவள் அறிவாள். இன்று எல்லை மீறுகின்ற கண்டிப்பினால் பிள்ளைகள் அப்பாக்களை வெறுப்பது நாம் பார்க்கின்ற சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன.
வயது முதிர்ந்த பலருடன் பேசியபோது அநேகர் சலிப்புடன் இப்படிக் கூறினார்கள். எனது பிள்ளைகள் எல்லோருமே தாயாரின் பக்கமே சாய்ந்திருக்கின்றனர். எனக்காகப் பேச ஒருவருமே இல்லை. என்னுடன் இவர்கள் பேசுவதுமில்லை. இந்த வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். பிள்ளைகளைச் சதா மிரட்டி ஒடுக்கியே வாழ்ந்தவர்கள், முதுமைக்காலத்தில் அவர்களுடன் இசைந்தும் சற்று வளைந்தும் கனிவுடன் பேசி வாழ முடியாதவர்களாகி விடுகின்றார்கள். எப்போதுமே கடு கடுவென விடாப்பிடியாக தங்கள் குணங்களை ஆக்கிக் கொண்டவர்களைக் குழந்தைகள் ஆரம்பத்தில் இருந்தே வெறுத்திடவும் கூடுமல்லவா?
தனது உடல் உழைப்பினைக் குடும்பத்திற்காகவே செலவழித்த குடும்பத் தலைவனுக்கு காலம் கடந்தபின் பிள்ளைகளின் பிரதிபலிப்பான செயல்முறைகள் எத்துணை வருத்தத்தைத் தரும்?
97

Page 49
பருத்தியூர் ால வயிரவநாதன்
ஆயினும் வளர்ந்து அறிவில் முதிர்ச்சியடைந்த பலர் இன்னமும் இப்படிக் கூறுவதையும் நீங்கள் கேட்டிரு ப்பீர்கள்."அப்பா என்னை எவ்வளவு கட்டுப்பாடாக வளர்த்த தன் பயனை இன்று நான் உணர்கின்றேன். அன்று நான் அவரது செய்கைகளுக்காக எரிச்சல்பட்டதுண்டு. இன்று எனது மேன்மையான வாழ்விற்கு அவர் கற்றுக்கொடுத்த கட்டுப்பாடு நிறைந்த வாழ்வுமுறைதான் காரணம்". இப்படிக் கூறும் பலரையும் நாம் கண்டு இருக்கின்றோம்.
தனக்கும் மனைவிக்கும் எந்தவிதமான இடை வெளி இன்றி அவளுக்குரிய விருப்பு வெறுப்புகளை உணர்ந்து சரி எனப்பட்டதைக் கூறவும் பிழையான கருத்துக்கள் செயல்களைப் பக்குவமாகக் கண்டிக்கும் ஆண்களின் ஆளுமையினால் தான் குடும்பம் எந்தக் கடும் சவால்களையும் வென்று முன் மாதிரியான குடும்பமாகத் திகழும்.
மனைவிக்குள்ள சுதந்திரத்தையும் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய உரிமைகள் விருப்பங்களையும் மனக்கி லேசம், ஆணவ சிந்தனை இல்லாமல் தன்னால் இயன்ற வரை வழங்கக் கூடிய கணவனை எந்த இல்லத்திலும் இகழ்வார் இல்லவே இல்லை.
அனேக வீடுகளில் கணவன், மனைவி, பிள்ளைக ளுடன் மட்டும் வீட்டு நிர்வாகம் அமைந்து விடுவதில்லை. கணவன் மனைவியரின் உறவினர், நண்பர்கள் என விரிந்து பல்திசைகளிலும் இவர்களால் நன்மைகளும் சில
98

லமளனம் பிரச்சனைகளும் வருவது இயல்பு. சமூக பிணைப்பு பற்றியும் அதன் தாத்பரியம் பற்றியும் அறிந்து கொண்டு நாம் ஊர் உறவுகளை விலக்கித் தனியாகவே நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?
இன்று ஆண், பெண் இருசாராருமே வெளியுலகில் பேதமின்றி கடமை செய்து வந்தாலும் கூட கணவனிட மிருந்து பல எதிர்பார்ப்புக்களை மனைவி விரும்புகின்றாள். அன்பான பரிவான மனைவியின் அணுகுமுறைகளால் ஈர்க்கப்பட எந்தக் கணவனும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்தே வாழ்ந்து காட்டுகின்றான். இவ்வண்ணமே கணவன் பொருட்டுத் தனக்கு இசைவில்லாத சில விஷயங்களுக்கும் விட்டுக் கொடுத்து மனைவி தன் தியாக சிந்தனை மூலம் அவன் வழிநடக்கின்றாள்.
ஆரம்ப காலத்தில் மிகவும் அகம்பாவ உணர்வுடன் மனைவியின் உறவுகளை வெறுத்த ஆண்கள் கூடக் காலப்போக்கில் மனைவியின் அன்பினால் முழுமையாக மாறிவிடுவதும் உண்டு. இன்று தனது குடும்பத்தைப் போலவே மனைவியின் சகோதரிகளை அதாவது மைத்துனி மைத்துணர்களின் நல்வாழ்விற்கும் தம்மையே அர்ப்பணித் துத் தியாக வாழ்வு வாழும் மனிதர்கள் எவ்வளவோ பேர் உண்டு தெரியுமா?
நல்ல நம்பிக்கை ஊட்டத்தக்க ஒருவனாக இல்லாது விட்டால் குடும்பம் என்கின்ற கட்டமைப்புக் குலைந்தே
99

Page 50
பருத்தியூர் (60.6%27alplayof போகின்றது. சைனியம் பின்னே செல்ல முன்னே செல்லும்
தலைவனால்தான் படையை வழிநடத்த முடியும்.
* நம்பிக்கையீனமான பேச்சுகள். * சந்தேகம், கரவு எண்ணங்கள். * மிதமிஞ்சிய அச்சஉணர்வுகள். * தாழ்வுமனப்பான்மை. * மிகையான கோபம். * குடும்பத்திற்குள்ளேயே பொறாமை உணர்வு.
போன்ற குணங்கள் அமைந்து விட்டால் குடும்பத் தினை ஒழுங்காக வழிநடத்திட முடியாது. தன்னை மட்டுமே அதிபுத்திசாலியாக எண்ணி குடும்பத்தில் தான் கூறிய கருத்துக்களை மட்டும் புகுத்தி இம்சைப்படுத்தினால் ஆணுக்குரிய வலுவை அவனாகவே இழந்த வனாகக் கருதப்படுவான். தவிர தான் எந்த உயர் பதவி களை வகித்தாலும் அதே அதிகாரங்களை வீட்டில் காட்டுவது முட்டாள்தனமான செயல் தான்.
இன்று பல குடும்பங்களில் ஆண்கள் குடித்துக் கூத்தடிப்பது கண்டபடி வார்த்தையாடல்களை தமக்குரிய உரிமைகளாக எடுத்துவிடுகின்றனர். வீட்டிற்குள் குமுறும் குழந்தைகள், மனைவியின் கெஞ்சல்களை இவர்கள் பொருட்படுத்துவதுமில்லை.
எத்தகைய அந்தஸ்தினைச் சமூகத்தில் எவர்
பெற்றிருந்தாலும் குழப்பம் மிகுந்த குடும்பத்தில் அவன் வாழ்ந்தால் எல்லா அந்தஸ்துக்களுமே இருந்தும் அஸ்த
100

வமளனம் மனமான மனோ நிலையிலேயே வாழ வேண்டியது தான். இந்நிலை, சுதந்திரமற்ற, தன் சந்தோஷங்களைப் பூட்டி வைத்திருக்கும் சிறை வாழ்வுதான்.
மிகவும் விசித்திரமான மனிதர்களைப் பார்த்திருப் பீர்கள். குடும்பத்தினுள் வாழ்ந்துகொண்டே விரக்தியுட னேயே பேசுவார்கள். ஒட்டி வாழமாட்டார்கள். வெட்டிப் பேசுவார்கள். சில வேளை தாம் சந்நியாசம் பெற்று ஓடிப் போகவுள்ளதாகவும் கூறுவார்கள். ஏன் அப்படியே குடும் பத்தை விட்டு ஓடியவர்களும் உண்டு.
ஆன்மீகம் என்பதன் அர்த்தம் புரியாமல் குதர்க்க சிந்தனையுடன் தம்முள்ளே மோதும் இந்த ஜீவன்களை என்ன என்பது? கடமை என்பதன் அர்த்தம் விளங்காமல் தப்பிப்பது என்பது தனக்குள்ளதந்திரம் என்ற குறிக்கோளு டன் இவர்கள் நடிப்பது இவர்களுக்குப் புரியாதா?
கடமை முடிக்காதவனைக் கடவுள் ஏற்பதில்லை. அவர்களைக் கடவுளுக்கே பிடிப்பதும் இல்லை. பிரச்சனை களுக்கு முகம் கொடுப்பவனே மனிதன். ஆணோ, பெண் ணோ, எவராயினும் சரி குடும்பம் என்கின்ற பிணைப் பில் ஒன்றுபட்ட பின் இரண்டு வித மனோநிலையில் சஞ்சரித்து வாழ இயலுமோ?
தொழில் புரிகின்ற கணவனும் மனைவியும் சம பங்காக வீட்டு வேலைகளைச் செய்து வருவதை நாம் நன்கு
101

Page 51
பருத்தியூர்யா.ைவயிரவநாதன் அறிவோம். மாறிவரும் உலகத்தில் பழமைவாதம் பேசித் தற்போதைய கணவன்மார்கள் பிணக்குற்று வாழ்வதுகூட அரிதாகி விட்டது. வீட்டில் குழந்தைகளுக்கான அவசிய பணிகளுக்காக கணவன் மனைவி ஒருவர் மாறி ஒருவர் அலுவலக விடுமுறைபெற்றுகுழந்தைகளைப்பராமரிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்களே!
எனினும் மனைவியரைக் கொடுமைப்படுத்துகின்ற கணவர்மார்கள் பற்றிய செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சில இல்லங்களில் கணவர்மார்களைக் கஷ்டப்படுத்தும் மனைவியரை ஏன் கண்டு கொள்வதில்லை எனவும் ஒருசாரார் சற்றுக் காட்டமாகவே கேட்பதுண்டு.
செய்கின்ற செயல்களுக்கான பலாபலன்களை எத்தரத்தாரும் அனுபவித்தேயாக வேண்டுமென்பதே இயற்கை விதியாகும். இன்று எதிர் விளைவுகள் காலதாமத மின்றியே கிடைக்கப்படுகின்றன. குடும்பத்தினை கோண லாக்கும் எவருமே நியாயவாதம் பேச முடியாது. இவர்கள் செயல் தமக்குத்தாமே செய்கின்ற கொடு வினையன்றி வேறில்லை. இவர்கள் இதனைப் புரியாமல் இருக்க
(plquirgil.
வீட்டின் தலைவன் எத்தரத்தில் உயர் பதவி வகித் தாலும் கூட வீட்டில் அவன் அன்பான கணவனாக பாசமிகு அப்பாவாகப் பிள்ளைகளிடத்தே நடந்து கொள்ளல் வேண்டும். கடமைப்பளு காரணமாக வீட்டில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதனால் அந்த வீடே பெரும் பிரச்சனைக்குள்ளாகின்றது.
102
 

வமளனம் பிள்ளைகளின் கட்டுப்பாடற்ற தன்மையும் மனைவி யின் தேவையற்ற வீண் சந்தேகங்களுக்கும் கணவன் உள்ளாக்கப்படுவதன் முதல் காரணம் வீட்டில் போதிய நேரங்களைச் செலவிடுவது இன்மையே என குடும்ப நல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாசம், காதல், பரிவு என்கின்றவைகள் எவருடனும் நெருங்கிப் பழகும் தன்மையினால் மட்டுமல்ல இயல்பான நம்பிக்கைகளை மற்றயவர்களின் இதயங்களில் வைப்புச் செய்வதுமாகும். இந்த முதலீடுகள் கரைவதில்லை. வளரு வதுமாகும்.
வீடுகளின் உள்ளேயே விலகி அந்நியப்பட்டு வாழும் குடும்பத்தலைவன் ஈற்றில் அவன் வெளியில் இருந்து நோக்கும் பார்வையாளனாகவே கருதப்பட்டு பலவீனப்பட்டு விடுவான். உரிமைகளை அவன் தானாகவே இழந்து இறுதியில் வீட்டில் உள்ளவர்களைக் குறைகூறி வெறுப்பேற் படுத்துவனாகவும் மாறிவிடுகின்றான்."எங்களிடம் அக்கறை யில்லாதவர் எங்கள் விஷயங்களில் தலையிட என்ன உரிமையிருக்கின்றது", எனத் தந்தையைக்கேட்கும் பிள்ளை களால் மனமுடையும் நிலை உண்மையில் பரிதாபகர மானதுதான்.
நியாயபூர்வமான கணவன் நிலைபற்றி தெளிவான கருத்துக்களை நல்ல அபிப்பிராயங்களை மனைவி உருவாக்காமல் விடுவதும் கூட குடும்பத்தின் விரிசல்களை பெரிதுபடுத்தலாம்.
103

Page 52
பருத்தியூர்பா.ைவயிரவநாதன்
என்றாலும் குடும்ப விஷயங்களில் கருத்து மோதல் என்பது ஒரு சர்வதேசப் பிரச்சனைபோல் குடும்ப அங்கத் தினர் எடுத்துக் கொள்ளக்கூடாது. புருஷனின் மேலான குணங்களையே அதிகமாகக் கிரகித்து ஏற்று அற்பபலவீன மான விஷயங்களைப் பக்குவமாகவே இருவரும் பரஸ்பரம் பேசிக்கதைத்தால் என்ன? இதில் என்ன கெளரவ இழப்பு வந்து விடப்போகின்றது?
எந்த விதத்திலும் கணவன், மனைவியரிடத்தே ஒளிவுமறைவு கூடாது என வாயளவில் கூறாது ஆணவம், பொறாமை, சந்தேக, குரோத எண்ணங்களைக் களைந்து வாழ்வதே சிக்கலற்ற களிப்பூட்டும் வாழ்க்கையாகும்.
ஆண் என்கின்ற மேலாதிக்க நிலையில் தன்னை நிலை நிறுத்த முயலும் எவரும் பாசமும், அன்பும், பரிவும் கசிய ஆரம்பித்ததுமே இந்த இறுக்கமான வைராக்கியமான எண்ணங்களையே மெல்லெனக் களைந்து விடுகின்றான். குடும்ப நிர்வாகத்திற்கு மென்மைப்போக்கும் கடின சித்த முள்ள பக்குவம் மிகுந்த குணாம்சமும் கட்டாயம் தேவைப்
படுகின்றது.
உஷ்ணத்தையும் குளிர்ச்சியையும் தேவையின் நிலைக்கேற்ப நாம் நாடுகின்றோம். கணவனின் கண்டிப்பை மனைவி வெறுப்பது எல்லா நிலையிலும் உகந்தது அல்ல.
104
:
 

வமளனம் உரிமையுடன் அவன் கண்டிப்பதையிட்டு மனைவி பெருமைப்படல் வேண்டும். அத்துடன் அவனைச் சுற்றி யுள்ளவர்களும் பாசத்தின் வலு என்ன என்பதையும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
அன்போடு பிணைந்த தம்பதியினருக்குப் பேதங்கள் என்றால் என்ன, எது என்பதே புரியாமல் இருக்கும். மனித குலத்தில் மட்டுமல்ல சகல ஜீவராசிகளும் தமக்குள் ፍ9(Ù பிணைப்பினை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றன. சிங்கம், புலி, பறவைகள், என அனைத்திலும் மனிதனிடம் இல்லாத விசேட குணாம்சங்களும் உள்ளன. தாயிடம் இருந்து மட்டுமல்ல தன்னை உருவாக்கிய தந்தையிடம் இருந்தும் இந்த உயிரினங்கள் தகுந்த பாதுகாப்பைப் பெறுவதை நீங்கள் அறிந்தது இல்லையா?
எனவே கணவன், மனைவி என்கின்ற அற்புத இணைப்பினுள் உள்ள புதுமைகளை இயம்பிட இயலாது. கணவன் மனைவியரிடையே உள்ள குணாம்சங்களின் இயல்புகள் கூட உலக இயக்கத்திற்கு ஏற்பவே இறைவன் உருவாக்கிவிட்டான். இதில் ஆணுக்கு மட்டும் சலுகை காட்டியதாக எண்ணவேண்டாம்.
தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி) 25-06-2006
105

Page 53
பருத்தியூர்பால.வயிரவநாதன்
குடும்ப உறவு கற்பனை அல்ல!
குடும்ப உறவுகற்பனையல்ல. தெய்வீகமானது, அதே சமயம் இயல்பான, யதார்த்தமான சுகானுபவத்தை ஊட்டுபவையுமாகும். ஒருவரிடம் ஒருவர் அன்பு கொள்வது ஆன்மாவுடன் ஒன்றித்த தூய விடயமாகும். வெறும் கற்பனை காதல் வாழ்க்கை யதார்தத்திற்கு ஒத்துவராது. அன்புடன் கூடிய கண்டிப்பு, சின்னச்சின்ன சண்டை சச்சரவுகளும் கூடவரும். திரைப்படத்துக் காட்சிகள் போல வாழ்க்கையும் அமையும் எனச் சிலர் நம்பி ஏமாறுகி ன்றார்கள். மாறாத காதலுடன் வாழும் தம்பதியினர் இயம்புதற்கரிய இன்பத்தையே சாஸ்வதமாக்கிக்கொள்ளுகின்றார்கள்.
குடும்ப உறவுகள் தெய்வீகமானதும், அதேசமயம் மிக இயல்பான யதார்த்தமான சுகானுபவத்தை உண்டு பண்ணக் கூடியதுமாகும்.
106
 
 

வமளனம் எனினும் சிலர் குடும்ப உறவு பற்றி உண்மை நிலையினைத் தெரிந்துணர்ந்து கொள்ளாமல் வெறும் கற்பனையுடன், உண்மைக்கு ஒத்துவராத விஷயங்களை உள்நின்று உரைப்பதனால் ஒரு செயற்கைத் தன்மை யினை உறவுக்குள் புகுத்தி உறவுகளில் குந்தகத் தன்மையை ஏற்படுத்தி விடுகின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் என்பது ஆன்மாவுடன் ஒன்றித்த தூயவிடயமாகும். அப்படியிருக்க வெறும் கற்பனையோடு பின்னிப்பிணைந்த நிழல் படங்களை, கதைகளைப் பார்த்து இதுதான் குடும்ப வாழ்வு என்று கற்பனை பண்ணி விட்டார்கள்.
ஒரு அப்பாவி இளைஞர் திருமணம் செய்தார். அவர் திருமணத்தினைப் பற்றிய கற்பனைகள் எல்லாமே முழுக்க முழுக்கத் திரைப்படத்தை ஒத்ததாகவே அமைந் திருந்தது. திருமண விடயத்திலும் திரைப்படத்தில் காண்பிக்கும் காட்சிகள் தான் உண்மையான திருமண முதல்இரவு என எண்ணிக் கொண்டார்.
மனைவி பட்டுப்புடவை நகைகள் சகிதம் மெல்ல அசைந்து நடைபயின்று வளைக்கரத்தில் பால் குவளை யுடன், நாணத்துடன் வருவாள். வந்ததும், கணவனின் கால் களைத் தொட்டு வணங்குவாள். அப்படியே மெல்லெனத் தனது மார்பில் பூங்கொத்தென சாய்ந்து அவள் வெட்கப்பட, ஏதேதோ வார்த்தைகள் மெல்லிய முனகலுடன் அசை
107

Page 54
பருத்தியூர்யாவையிரவநாதன் போட. என்றவாறே தான் அந்த இளைஞன் எண்ணினான்.
அதுமட்டுமல்ல திரைப்படங்களில் காட்டுவதுபோல் மெல்லிய பின்னணி இசையுடன் அன்பு மனைவி காதல் ரசனையுடன் பாட்டு இசைப்பாள் என்றவாறு எல்லாம் கற்பனை செய்தான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவே யில்லை. திருமணம் செய்த முதல் நாளிலேயே மனைவி, வெட்கப்படாமல் பாட்டுப்பாடமுடியுமா என அவன் சிந்திக்க வில்லை. சற்றுக் கோபத்துடன் உடனே ஒரு பாட்டுப் பாடு என வற்புறுத்த அவள் திரு, திரு எனச் சங்கோஜத்துடன் விழிக்க மணமகனுக்கு எல்லாமே வெறுத்துப் போய்விட்டது. எப்படியோ முதல்இரவு முடிந்தாகிவிட்டது.
அடுத்த நாள் வந்தாயிற்று. அவனை, அவனது நண்பர்கள் சந்தித்தார்கள். எப்படியடா. உனது முதல் இரவு எனக் கிண்டலடித்தார்கள். அப்போது நண்பர்கள் கேட்டகேள்வி அவனை எரிச்சலடைய வைத்துவிட்டது. “போங்கடா போங்கள். போயும் போயும் உங்கள் பேச்சை நம்பித் திருமணம் செய்ததே நான் செய்த தப்பு எல்லாமே போச்சு. நான் நினைத்த மாதிரி ஒன்றுமே நடக்கவில்லை. பேசாமல் யாரையாவது காதலித்துத் திருமணம் செய்திருக் கலாம். அவளாவது எனது இஷ்டத்திற்கு நடந்திருப்பாள்" என்று ஆதங்கத்துடன் கூறிமுடித்தான்.
அப்புறம் நண்பர்கள் துருவித்துருவி விசாரித்து, அவனது அறியாமையை எண்ணிநகைத்து, உண்மையான
108
 

வமளனம் காதல் திருமணம்பற்றி சற்று உறைக்கும்படி சொல்லி அவனைத் திருப்திப்படுத்த முனைந்தனர். இவையெல்லாம் நடந்து முடிந்து இந்த ஜோடி தற்போது குழந்தை குட்டிக ளுடன் குதூகலமாக இருப்பது வேறுவிஷயம்!
இந்தக் கதை மூலம் நீங்கள் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், மற்றும் சிறுகதை, நாவல்களில் ஜதார்த்தத்திற்கு ஒவ்வாத விடயங்களை வெறும் கற்பனை என்று பெயரில் உருவாக்குவதால், பலரின் மனங்கள் மாறு படுவதை நீங்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.
படித்துநிறைய சாதிக்க வேண்டிய வயதில் மாயத் தோற்றங்களில் மதிமயங்கி, அறிய வேண்டியதை அறியா மல், தெளியாமல், அல்லது தெரிந்து, தெளிந்துகொள்ளவே பிரியப்படாமல் இருந்தால் எதிர்கால வாழ்வு என்னாவது?
வெறும் பணம் புரட்ட எத்தனிக்கும் பிரம்மாக்கள், பொய்யான உலகைச் சிருஷ்டிக்க விழைகின்றார்கள். மனம் முதிர்ச்சியடையாத பலர் இந்த மாயக் கற்பனையே நிஜமா னது என நம்புகிறார்கள்.
கல்வி கற்ற மகா மேதைகளை பலரும் உடன் தங்கள் மனதுள் புகுத்துவது கிடையவே கிடையாது. ஒரு விஞ்ஞானி அல்லது சிந்தனையாளர் பேராசான்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதை, விரும்புவதை விட ஒரு திரைப்பட நடிகை, நடிகருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க
109

Page 55
பருத்தியூர்யா.ைவயிரவநாதன் விரும்புகின்றார்கள். இவர்களது கிறுக்கலான ஒப்பத்துடன் கூடிய வண்ணப்படங்களை வீதியோரம் வாங்கி, வீட்டில் வைத்து அழகுபார்க்கின்றனர். நடிக, நடிகர்களின் படங்கள் உள்ள அளவு பெரியார்கள் படங்கள் வீடுகளில் காணப்படுவ தேயில்லை.சில இல்லங்களில் ஆன்மீகம் தொடர்பான எது வித அடையாளங்களும் காணப்படுவதேயில்லை.
ஆன்மீகம் வேம்பாகக் கசந்தால் வாழ்க்கை துன்பம் தான். உணர்வோம்!
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய இந்தப்பண்பு கள் இணைந்தால் ஒவ்வொரு தனிமனிதனும் உயர்வு அடைவான். அப்போதுதான் குடும்ப உறவின் மகத்துவம் புரியும். இதனாலேயே அவனி அன்பு, காதல். பரிவு, பாசத்துடன் ஸ்திரமாக சாஸ்வத நிலையினை அடைந்து கொள்ளும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 14-02-2010
110
 

6ìLIGoởrõ6ử 9_oolpủeouỗ ởĩTeOơfGiỗ
மத்திய கிழக்கு நாடுகள்
(தங்களது உழைப்புச் சுரண்டப்படுவதையே உணராமல் பல அப்பாவிப் N பெண்கள் அவலப்படுவதை இனிமேலாவது தடுக்க முடியாதா? எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுவரும் பெண்கள் தங்கள் இலக்குகளில் வெற்றிபெறுவதுமில்லை. பெண் இனம் மேலான கல்வித் தகைமைகளைப் பெற்று அதியுயர் ஸ்தானங்களில் வைக்கப்படுவதை விடுத்து, மிகச் சாதாரணமான பணிகளில் சொற்ப வேதனத்தில் வேலை செய்வது அவர்கள் உடல்நலம், மனவளம் பாதிப்பது மட்டுமல்ல, இவர்களின் எதிர்காலச் சந்ததியுமே மேலோங்க முடியாது. இதனால் எமது நாடு மனித உழைப்பு வளமிழந்து நிற்கும்.
أص ܥ
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் வந்துசேரும், நீண்ட பொதுமக்கள் பிரிவில் உறவினர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
111

Page 56
பருத்தியூர்பாவையிரவநாதன்
விமானங்கள் வந்துசேரும், புறப்படும் அறிவித்தல் பலகையைப் பார்த்தேன். முழு உலகையும் இணைக்கும் பாலமாக விமானங்கள் இருந்தும், பக்கத்துநகரங்கள்கூடத் தெரியாத பிரகிருதிகளும் எம்முள் இருக்கின்றார்கள் தான். விமானங்கள் எமது நாட்டிற்குச் செல்லும் நேரங்களும், அதேபோல் அங்கிருந்து எமது நாட்டிற்குத் தரையிறங்கும் நேரங்களும் குறிப்பிட்டிருந்த வண்ணம் நேரம் காட்டி அட்டவணை அடிக்கடி நகர்ந்து காட்டியது.
நான் நின்றிருந்த சற்று நேரத்திற்குள் மத்திய கிழக்கு விமானங்களில் இருந்து பயணிகள் திமு, திமுவென வந்து கொண்டிருந்தனர். எனது பார்வை பயணிகளை நோக்கியது. என்றுமே உறங்காத இடம் எது, இந்த சர்வதேச விமான நிலையங்கள் தானே?
பயணிகளில் பெண்பாலானவர்கள் தான் அனேக மாகக் காணப்பட்டனர். பொருட்கள் ஏற்றும் வண்டியில்,
வந்திருந்த பொருட்களுடன், விமான நிலையத்தில் வரிச் சலுகையற்ற கடைகளில் வாங்கிய சில பொருட்களுடன் அவர்களை நான் கண்டபோது மனம் நெகிழ்வுற்றது. எத்தனை வருடங்களின் பின்னர் தமது உறவினர்களிடம் ஆவலாக வருகின்றார்களோ?
அநேகமான யுவதிகளின் கண்களிலும் பளபளப்புத் தென்படவேயில்லை. உற்சாகமற்ற நிலை. சிலபெண்கள்
112

வமளனம் மெலிந்தும், தளர்ந்தும் காணப்பட்டனர். தமது மெல்லிய கரங்களால் பொருட்கள் அடங்கிய வண்டியைத் தள்ளியபடி வந்த போது போதிய வலு அவர்களிடம் இன்மையால் வண்டி தள்ளாடியது. அங்கும், இங்குமாய் ஓடிப் பின் நகர்ந்தது. பொதி ஒன்றிற்கு முப்பது ரூபாய் கூலிகொடுத் தால் விமான நிலைய வாசல்வரை இதற்கான ஊழியர்கள் தள்ளிக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வசதி வேண்டுமே!
அடுத்து நான் கண்ட காட்சி என்னைக் கவலை யடைய வைத்துவிட்டது. ஒரு மெலிந்த இளம்பெண் தனது பொருட்களுடன் வெளிவாசலை அண்மித்ததுமே, தூரத்தே தமது தகப்பனார் போன்ற ஒருவரை கண்டதும், தமது பொருட்களையே மறந்து ஓடோடி வந்து மிகவும் நோயாளி போலக் காணப்பட்ட அந்த முதியவரைக் கட்டிப்பிடித்தவள், அழ ஆரம்பித்துவிட்டாள். அந்த முதியவரும் உணர்ச்சி வசப்பட்டவராய் மகளைத் தேற்றத் தெரியாது திணறினார். இவர்கள் அருகே இவர்களின் உறவினர்களில் ஒரு சிலர் காணப்பட்டனர்.
நடையுடை பாவனைகள் மூலமும் அவர்களது தோற்றங்களின் மூலமும் இவர்கள் எல்லோருமே கிராமத்த வர்கள் என இலகுவாக என்னால் இனம்காண முடிந்தது. உறவினர்கள் அனைவரும் பாசத்துடன் ஒருவர் ஒருவராகக் கட்டியணைத்து உச்சிமோந்தனர். இப்படிப்பல காட்சிகள். உறவுகளைக் கண்டதுமே அணைப்புகள், ஏக்கத்துடன் விசாரிப்புகள்!
113

Page 57
பருத்தியூர்பால.வயிரவநாதன்
இத்தகைய காட்சிகள் தினசரி நடந்து கொண்டி ருக்கும். தொழில் நிமித்தம் சென்று திரும்புகின்ற எமது நாட்டுப் பெண்களிடம் விசாரித்தால் ஒவ்வொருவரிட மிருந்தும் நீண்ட கண்ணிர் கதைகள், புதைந்திருக்கின்றன.
ஒட்டியுலர்ந்ததேகம், குழிவிழும் கண்கள், இவர்கள் இளவயதினர் என்று சொன்னால் நம்பமுடியாது. ஆயினும் எல்லோரும் இதே தோற்றத்தினர் என்றும் சொல்ல முடியாது. இளவயது யுவதிகள், நடுத்தரமான வயது தோற்ற ங்களுடன் எனப் பலதரப்பட்ட எல்லாப் பெண்களையும் கண்டேன். வெள்ளைக்காரர்களுக்கும், மத்தியகிழக்கு வாசிகளுக்கும் நாம் என்ன கூலி ஆட்களா? என எண்ணி மருகினேன்.
ஆயினும் இவர்கள் சுபீட்சமாக வாழ்ந்து சம்பாதித் துக் கொண்டு இங்கு வந்திருக்கின்றார்கள் எனச் சொல்ல முடியாது. குடும்பபொறுப்பு, வறுமை காரணமாகத் துன்பங் களை வெளியே காட்டாமல், உள்ளுக்குள் வெதும்பி வெளியே தமது உறவினர்களுடன் சிரித்து மகிழ்ந்து தமது தாய் நாட்டிற்கு வந்ததும் தங்களை மறப்பது இயல்பு.
தங்கள் உழைப்பை தமது நாட்டிற்கு வழங்குவதை விடுத்து எதற்கு எந்த நாட்டிற்கோ தானம் செய்துகொண்டி ருக்கின்றார்கள். தமது உழைப்பு சுரண்டப்படுவதை உணர்ந்தும், உணராமல் இருக்கின்றனர். மாதக்கணக்காய் வேலை செய்து, ஊதியம் பெறாமல் ஏமாற்றப்பட்டு
114
 

வமளனம் அவலப்பட்டுநாடு திரும்பும் பெண்கள் பலரின்நிலையினை நாம் அறிகின்றோம்.
இளம் பராயத்துக் கனவுகளைப் பொசுக்கி குடும்ப நலனுக்காகத் தாய் நாட்டை விட்டுச் சென்ற இவர்களின் இலட்சியங்கள், நோக்குகள் குறித்த இலக்கினை அடை கின்றனவா?
இவர்களைச் சம்பாதிக்கவிட்டுச் சும்மா இருக்கும் கணவர்களும் இருக்கின்றனர். ஏன் சில பெற்றோர்கள், தாங்கள் பெற்ற பிள்ளைகளின் பெரும் சுமைகளை, வயது வந்த இளம் மகள்மார்களின் தலையில் ஏற்றிவிடுகின்றனர். இந்தக் கொடுமைகளைப் பலரும் நேரிடையாகக் கண்டும் இருப்பீர்கள். r
பெண் இனம் கல்விகற்று மேன்மையடைய வேண்டும். உயரிய பதவிகளை ஆண்களுக்குச் சமனாகப் பெற்றிடல் வேண்டும். ஆனால் எந்த நாட்டிற்கும் சுரண்டப் படும் தொழிலாளியாகப் போவது வேதனைதரும் விஷயம். பெண்களைக் கண்போல் கட்டிக்காத்த பெற்றோர்கள் பலர் வேறு வழியின்றியே தொழில்செய்ய மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதாகச் சொல்கின்றார்கள்.
என்ன வளம் எமது நாட்டில் இல்லை? இனிவரும் காலத்திலாவது, எமது பெண்கள் கெளரவமாகக் கைநிறை யச் சம்பாதிக்கும் நிலையை நாம் உருவாக்கியே தீர
115

Page 58
utiliziki ால.வயிரவருதன் வேண்டும். எமது கல்வி, அந்தஸ்தினை உயர்த்தி அதன் பின்னர், தூரதேசம் செல்வதும், மேலதிக அனுகூலங் களைப் பெருமையுடன் சேர்ப்பதும் தவறு அல்ல. நாடு தன்னிறைவு அடைந்தால் மட்டுமே வெளிநாடு சென்று அல்லல்படும் அவல வாழ்வு அகலும்.
எவரினதும் கண்ணிருடன் உழைப்பு உருவாகக் கூடாது. சந்தோஷகரமாக உழைப்பது தான் தொடர்ந்தும் உழைக்கும் ஆர்வத்தை மென்மேலும் வளர்க்கும். உடலை, உள்ளத்தை உருக்கிக் கருக்கி வெளிநாடுகளில் தொழில் செய்வது, எமது நாட்டிற்கு வடுவை ஏற்படுத்தும். ஏன் தேசிய இழப்புமாகும். வாழ்வையும், நாட்டையும் துறந்து எதனைப் பெறமுடியும்?
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள் பகுதி"
02-05-2012
116
 

வமளனம்
பாசத்தைக் காட்டி சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம்!
பிள்ளைகளிடம் காட்டும் அதீத பாசத்தினால், சில பெற்றோர்கள் அவர்களைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் செய்துவிடுகின்றனர். பாசம் காரணமாகப் பிள்ளைகளின் உரிமைகள் பறிபோகச் செய்தல் தகாது. துணிச்சல், தன்னம்பிக்கையுடன் குழந்தைகள் வளர தன்னம்பிக்கையுடன் அவர்களை முழுமையாக இயங்கவிடுங்கள். கடுமையான கட்டுப் பாடுகள், ஆலோசனைகளால் பெற்றோரைப்பிள்ளைகள் வெறுப்புடன் நோக்குவர். விரிந்த இந்த உலகில் பரந்த அறிவைப் பெற, நற் பழக்கங்களூடாக நிறை மாந்தராக்குக! பாசத்தால் பூட்டி அவர்கள்
வேகத்தை நீக்க வேண்டாம்.
எப்போதோ கேட்ட வெளிநாட்டு நாடகத்தின் தமிழ் மொழிமூலம் இது பக்குவமாக யதார்த்தமாக பின்னப்பட்ட
கதை.
117

Page 59
பருத்தியூர்யாவையிரவநாதன்
கணவனை இழந்த பெண் ஒருத்தி அவளுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர்கள் இரண்டு பேரும் பெண் கள். இளையவன் ஆண். எப்போதுமே தன் கூடவே பிள்ளை கள் இருக்கவேண்டும் என்கின்ற பாசவெறி அவளுக்கு. எனவே சமூகத்தைப் பற்றி மிகையாகவே பயமுறுத்தி வந்தாள்.
"நீங்கள் அங்கே போக வேண்டாம், இங்கே போக வேண்டாம்! இந்த உலகம் மிகவும் பொல்லாதது, கெட்டவர் கள் மலிந்த பூமி, எவரையும் நம்பவே வேண்டாம். பிள்ளை களே! ஜாக்கிரதையாக இருங்கள் எங்குமே செல்லாதீர்கள். இந்த உலகம் சுத்தப் போலியானது. என்னுடனேயே எப்போதும் இருங்கள்" உங்களை நான் எங்குமே செல்ல அனுமதிக்கவே மாட்டேன்.
இவ்வாறு பிள்ளைகளிடம் தாயார் சொல்லியபடி இருந்தாள். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க அவள் பிரியப்படவேயில்லை. எங்கே பிள்ளைகள் திருமணம் செய்தால், அவர்கள் தன்னை விட்டுப்பிரிந்துபோய்விடுவார் களோ என்ற அச்சம் அவளுக்கு. ஆனால் இவளது பிள்ளை களுக்கோ தாயாரின் நச்சரிப்பான புத்திமதிகள் பிடிக்க வேயில்லை. ஆனால் தாய்க்கு எதிராக எதுவுமே பேச முடியாத நிலை. அவளது மேலான பாசம் பிள்ளைகளைக் கட்டிப்போட்டுவிட்டது. இதனால் இவர்கள் மிகவும் மனக் குமைச்சலுடனேயே வாழ்ந்து வந்தார்கள். வெளியில் பிள்ளைகள் செல்வதை, உறவினர்களுடன் பேசுவதைப்
118

வமளனம் பழகுவதைத் தாயார் அனுமதிக்காததையிட்டு உள்ளுக்குள் மனம் மிகவும் வெந்துபோயினர்.
ஆனால், நடந்தது என்ன? மூத்த பெண் யாரோ ஊர்பேர் தெரியாதவனுடன் ஓடிப்போய்விட்டாள். தனக்குச் சுதந்திரம் வேண்டும் என்கின்ற நோக்கில் இந்த முடிவை எடுத்தாள். அடுத்தபெண்ணோ வீட்டை விட்டுச் சொல் லாமல் எங்கோ போனாள். தகவல் எதுவும் கிடையாது. இயற்கையிலேயே நல்ல அறிவுள்ள நன்கு படித்து வந்த இளைய மகனுக்கு திடீர் என மனநோய் ஏற்பட்டுவிட்டது. அவன் எதுவுமே இயங்க முடியாத நிலைக்கு ஆளாகி விட்டான். இறுதியில் தாயார் தனித்துவிடப்பட்டாள்.
இந்தக் கதையானது உங்களுக்கு என்ன கருத்தைச் சொல்ல விழைகின்றது? குடும்பங்களில் கணவன், மனை வியர் பலரும் பிள்ளைகளில் உள்ள அதீத பாசத்தினால் அவர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்கச் செயல்படவிடாமல் இருந்தால் இறுதியில் பிள்ளைகள் இயங்கியும் இயங்காத மனோநிலையில் உள்ளவர்களாக மாறிவிடலாம் அல்லவா?
குழந்தைகளின் ஒழுக்கத்தில் கவனமாக இருக்க விரும்பும் பெற்றோர் அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடாமல் செய்வது விபரீதமான பின் விளைவுகளையே உண்டுபண்ணும்.
மேலும், பெற்றோரைக் குழந்தைகள் வெறுப்பதுடன்
119

Page 60
பருத்தியூர்பான வயிரவநாதன் தாங்கள் பெரியவர்களானதும், பழைய சம்பவங்களை நினைத்து அவர்களைப் பழிவாங்குவதுபோல் அவர்களிடம் பாராமுகமாகவும் நடந்து கொள்ளலாம்.
பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதிலும் ஒரு வரை முறை உண்டு அல்லவா? நல்ல ஒழுக்கமானவர்களாக உருவாக்குவதற்காக அவர்களின் ஆசை அபிலாசைகளைச் சுட்டுப்பொசுக்குவதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
தங்கள் பிள்ளைகள் மட்டுமே உயர்வானவர்கள். பிறரது பிள்ளைகள் சகல அந்தஸ்து, அறிவில் குறைந்த வர்கள் என எண்ணும் பெற்றோர்களும் இருக்கின்றார்கள். குழந்தைகள் செய்யும் தவறுகள் எல்லாமே அடுத்த வீட்டுப் பையன் மூலம் தெரிந்து கொண்டதுதான் என்று பலமாக நம்புபவர்கள், சாதிப்பவர்கள் ஏராளம்.
கண்டிப்புடன் குழந்தைகளை வளர்க்கும் அதே நேரம் அன்புடன் சமூக உறவுகளையும் வளர்க்க உதவுதல் வேண்டும். உறவினர், நண்பர்களிடமிருந்து, குழந்தை களைப் பலவந்தமாகப் பிரித்தால் அவர்கள் தனிமைப்பட்டுப் போவார்கள்.
குறிப்பிட்டவர்கள் எனத் தாங்கள் கருதுவோரிடம் மட்டும் பழக விடுபவர்களும் உண்டு. ஆனால் குழந்தை களிடம் பேத உணர்வு சிறிதும் இல்லை. எனவே அந்தஸ்
தில் சற்றுக் குறைந்த நிலையில் உள்ளவர்களின் குழந்தை
களிடம் நட்புக் கொள்வதில் என்ன தவறு வந்துவிடப் போகிறது.
120
 

வமளனம்
எனவே நல்ல பிள்ளைகள் எத்தரத்தைச் சேர்ந் தாலும் அவர்களிடம் நட்புறவு கொள்ளச் செய்வதில் பெற்றோர் பிள்ளைகளிடம் முரண்டுபிடிக்கலாமா? ஆலயங்களுக்கு, பொது இடங்களுக்கு, வைபவங்களுக்கு, களியாட்ட நிகழ்வுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்லவேண்டும். அவர்களைச் சமூகத்தில் இருந்து பிரித்துவிட எத்தனிக்க வேண்டாம். பிள்ளைகளின் கல்வி பாதிப்பு அடையாத வண்ணம், ஒரு நேர வரையறைக்கு எதனையுமே செய்து வந்தால், கண்டிப்பாக அவர்கள் இவைகளைஒரு பழக்கத் தினுள் கொண்டு ஒழுகிவருவார்கள்.
விரிந்த உலகினில், பிள்ளைகளது மனமும் நன்கு விரிவடையச் செய்வது, பெற்றோர் கடமையாகும்."பிள்ளை களைப் பூட்டிப்பூட்டி வளர்த்தேன்.அவர்கள் இப்படியாக மாறி விட்டார்களே”எனசொல்லி மறுகுதலை விடச் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்பட விடுக!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள் பகுதி" 08-11-2009
121

Page 61
முதியோர் @ბიბიაrწიფთჩიბ
பெற்றோர்கள்
பெற்றோர் முதுமையடைந்ததுமே, அவர்களை முதியோர் இல்லங்களிலி ஒப்படைத்து விடுதல், ஒரு நாகரீகமாகவே போய்விடுமோ என அச்சமடைய வேண்டியுள்ளது. இத்தகைய பெற்றோரின் பிள்ளைகள் தங்களுக்கும் முதுமை வரும் தாங்களும் முதியோர் இல்லத்திலேயே தஞ்சமடையலாம் என்று கடுகளவும் எண்ணிப்பார்ப்பதேயில்லை. பெரும் தியாகம் செய்து வளர்த்தெடுத்த தாய், தகப்பனைத் தனிமைப்படுத்துதல் மிக அநியாயமான மெளனக்கொலை! வயசு வந்த காலத்தில் பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக இருக்கத்தானே எல்லோரும் பிரியப்படு கின்றார்கள். ஊர்கள் தோறும் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், நூலகங்கள் போல, ஊர்கள் தோறும் முதியோர் இல்லங்கள் இனி அமைந்தால்
ஆச்சரியமில்லை. பாசமில்லாப் பிள்ளைகள் மிக மோசமான பேர்வழிகள்
அண்மையில் வடபகுதிக்குச் சென்று திரும்பிய நண்பர் ஒருவர்,அங்குள்ள முதியோர் இல்லங்களுக்கும், குறிப்பாக வன்னிப் பகுதியில் உள்ள முகாம்கள், ஆதரவ
ற்றோர் இல்லங்களுக்கும் சென்றுபார்த்ததாகச் சொன்னார்.
அவர் முதியோர் இல்லம் ஒன்றில் தாம் சந்தித்த நபர்
122
 

வமளனம் ஒருவர் பற்றிச் தெரிவித்த தகவல் என்னை வியப்பிலும், அதேசமயம் மனதில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத் தியது.
மிகவும் வசதிபடைத்த, நல்ல உயர்ந்த தொழில் செய்யும் ஒருவரின் தாயார் பிள்ளைகளின் ஆதரவற்ற நிலையில் முதியோர் இல்லத்தில் காணப்பட்டார்.
பெற்றோருக்கு வயது வந்ததும் உடனே அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவது ஒரு நாகரீகமாக மாறி விடுமோ என எண்ணி அச்சமடைவதில் வியப்பு இல்லை.
அதுவும் எமது பாரம்பரிய கலாசாரங்கள், பாசப் பிணைப்புகள் எல்லாமே சிலருக்கு மறைந்தே போய்விட்டது. எமதுபெற்றோர்கள் அனைவருமே சுய மரியாதையுடைய வர்கள். ஒவ்வொரு தாய், தந்தையர் எவ்வளவு கஷ்டப்பட்டு இவர்களை படிப்பித்து ஆளாக்கியதை எப்படி மறந்து போகின்றார்களோ? பெரும் தியாகம் செய்து வளர்த்தெடுத்த தாய், தகப்பனை தனிமைப்படுத்துதல் மிக அநியாயமான மெளனக்கொலை!
குடும்ப உறவு விடயத்தில் எமது முன்னோர்கள்
கூட்டுக்குடும்பமாக, ஒத்த நோக்குடைய, சமூக கட்டமைப்
பில் வாழ்ந்து வந்தார்கள். சமய நம்பிக்கைகள், மொழி,
இனப்பற்று இவற்றில் எவ்வித விட்டுக்கொடுத்தலின்றி
123

Page 62
பருத்தியூர்யாவையிரவநாதன் மிகுந்த உறுதியுடன் தங்கள் குடும்பங்களை தாம் சார்ந்த சமூகத்தை நிலை நிறுத்தி வந்தார்கள்.
காலங்கள் மாறிடினும் பண்பாடுகள் மாற வேண்டும் என்கின்ற அவசியமில்லை. நாகரிகம் என்பது முன்னைய காலத்தைவிட தற்போதுவாழும் வாழ்வுமுறையில் முன்னே ற்றமாக இருக்க வேண்டுமேயொழிய, கண்டபடி வாழ்தலில் என்ன நாகரீகம் உண்டு ஐயா?
மேலைத்தேயத்தவர்கள் குடும்ப உறவில் தங்களை விடத் தாழ்ந்த நிலையில் இருப்பதாகவே எம்மவர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. பிள்ளைகள் வளர்ந்த பின்னர், பெற்றோரிடம் இருந்து வேறாகித் தமக்கு இஷ்டமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகக் கேலியுடன் எம்மவர்கள் சொல்வதுமுண்டு.
ஆனால் இன்று நடப்பது என்ன? பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புபவர்கள் தாங்கள் செலவுக்கு அந்த இல்லங்களுக்குப் பணம் செலுத்து வதாகச் சொல்கின்றார்கள். சில பிள்ளைகள் அதனையும் செய்வதில்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற நண்பர் சொன்னார்.
அங்கு வாழ்கின்ற வெள்ளையர்கள் சிலர் தங்கள் . தாய், தந்தையை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பு வதைத் தவறாகக் கொள்வதில்லை. மிகவும் வேடிக்கையான சமாச்சாரம் என்னவெனில் வருடாவருடம், அன்னையர்
124

வமளனம் தினம், கிறிஸ்மஸ், புதுவருடங்களுக்கு வாழ்த்து மடல்களை மட்டும் தவறாமல் அனுப்பி விடுவார்களாம். ஆயினும் எல்லோரும் இப்படியானவர்கள் எனத் தப்புக்கணக்கு போடுதல் ஆகாது.
மேலும் அன்னையர் தினம் விசேட நாட்களில் மட்டும் தமது பெற்றோரை ஒரு விருந்தாளிகள் போல் சென்று பார்த்து வருவார்களாம். ஒன்றை இத்தகையவர்கள் உணரவேண்டும்.
இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களையும், இவர்களின் குழந்தைகள் கவனித்துக் கொண்டேயிரு க்கின்றார்கள். நாளைக்கு அவர்கள் செய்யப்போவது என்ன? இதுதான் வாழ்க்கை முறை. எமது அப்பா, அம்மாவையும் இந்த முறையில்தான் வருங்காலத்தில் கவனிக்க வேண்டும் என்கின்ற எண்ணம்தான், அந்தப் பிஞ்சுகள் எண்ணங்களில் வலுப்படும் அல்லவா?
இந்த வாலிபமிடுக்கு, இந்த வாழ்வுதான் சாஸ்வத மானது. எமக்கு முதுமை என்பதே கிடையாது என்கின்ற அசட்டு எண்ணத்தில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தால் என்றுமே மகிழ்வுதான். மாறாத இளமைதான்! இதை நாம் அனைவ ரும் உணரவேண்டும்.
பெற்றோரிடம் முரண்படும் சிலரிடம் கேட்டுப் பாருங்கள். நீ ஏன் உனது தாயாரைப் பிரிந்து இருக்கின்றாய் எனக் கேட்டால், எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. எனது
125

Page 63
பருத்தியூர்யாவையிரவநாதன் மனைவிக்கும், அம்மாவிற்கும் ஒத்துப் போகாது எனச் சொல்லி மனைவியின் மீது பழியைப் போட்டு விடுவார். அடிமனதில் பாசம் கொஞ்சமாவது இருந்தால் இப்படிச் சொல்லவே மாட்டார்கள்.
மாமியார், மருமகள் சண்டைபோல மாமனார், மருமகன் சண்டை நடப்பது இல்லை. ஆனால் வயது முதிர்ந்தவர்கள், இளையவர்களிடம் அனுசரித்து வாழாமல், அதேபோல வயது போனவர்கள்தானே கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் என்ன என இளையவர்களும் எண்ணாமல் இருந்தால் குடும்பங்களின் பிளவு என்பது நிரந்தரமாகவும் போகலாம்.
பெரியவர்கள் விட்டுக் கொடுத்தலுடன் அனுசரித்தும் போவதுமில்லை. எந்தக் காரணத்தினாலும் அவர்களிடம் வெறுப்பை உமிழலாமா? வயது செல்லச் செல்ல தங்க ளைத் தனிமை வாட்டுவதாகச் சிலர் கருதுவதுண்டு. என்றுமே கலகலப்பாகக் குற்றம் காணாத மனோநிலையில் இருந்தால், தனிமை எண்ணங்கள், விரக்தி, வெறுமை உணர்வு என்பன உருவாகவே மாட்டாது. ஆன்மீகம், இலக்கியம், கலைகளில் நாட்டம் கொண்டால் விரக்திநிலை வரவே வராது!
ஓய்வு பெறும் போது தாம் வேலைசெய்த நிறுவன ங்களிடம் பெற்ற பெரும் தொகைப்பணத்தைப் பெற்றோரிடம் சாமர்த்தியமாகப்பிடுங்கி அவர்களை நடுத்தெருவில் விடும் பிள்ளைகள் மன்னிக்க முடியாத எத்தர் கூட்டங்கள்!
126

வமளனம் முதியவர்களில் பலர் தங்கள் வருங்காலம் பற்றி இளமையில் சிந்திக்காது தமக்கென எதனையுமே வைத்தி ருக்காது, தங்கள் பிள்ளைகளின் குணங்களைப் புரிந்து கொள்ளாமல் கைப் பொருளைக் கொடுப்பதுகூட மடமையிலும் மடமையே!
ஊர்கள் தோறும் ஆலயங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் என்பது போல், ஊர்கள் தோறும் முதியோர் இல்லங்கள் தோன்றுவது இனி ஆச்சரிய மல்ல. ஆனால் மானுடம் வெட்கப்படும் நிலை இது. செய்நன்றி மறந்த பிள்ளைகளை ஆண்டவன்கூட மன்னிக்க மாட்டான். உணர்வார்களா இவர்கள்?
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி "இவள்” பகுதி 28-02-2010
127

Page 64
பருத்தியூர்யாவையிரவநாதன்
பேருந்து செலுத்தி வரும்
මlé5ෂ්oom
/ நெருக்கடிமிக்க காலங்களில் பெண்கள் துணிச்சலுடன் செயலாற்ற வேண்டும். விண்வெளி ஓடங்களையே பெண்கள் செலுத்துகின்றார்கள். அஞ்சுதல் மடந்தையர்க்கு அழகல்ல குடும்ப நலன் மேலோங்க பெண்கள் சகல துறைகளிலும் மேலான உழைப்பை நல்க வேண்டியவர்களாவர். எந்தப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கத் தயாராகப் பெண்கள் இருந்தால் “பெண்மை"யின் சமூக விழிப்பை எல்லோருமே நன்குணர்ந்து கொள்வார். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் துணிச்சலான
பெண்களைக் கண்டு கொள்ளாமல், வேறு எங்கோ திசைகளில் உள்ள
பெண்கள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.
வவுனியாவை நோக்கி கிடாச்சூரியில் இருந்து : புறப்படும் நான் எதிர் பார்த்தபடியே பேருந்து வந்துவிட்டது. சனக்கூட்டம் அதில் நிரம்பி வழிந்தது. அத்துடன் என்னைப் போல் ஓரிரு பயணிகள் வேறு அதனுள் புகுந்துகொள்ளத்
128
 

வமளனம்
தயார் நிலையில் நின்றிருந்தோம்.
ஒரு வழியாகப் பேருந்தினுள் முண்டியடித்துச் சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து கொண்டேன். வண்டி யின் சாரதியின் இருக்கையில் இருந்து கம்பீரமான ஒரு இளம் பெண்ணின் குரல் என் விழிகளை உயர்த்திப்பார்க்கத் தூண்டியது.
"எல்லோரும் தயவு செய்து உள்ளே வாங்கோ. முன்னுக்கு வாங்கோ. வாறவையளூக்கு வழிவிடுங்கோ". என்ற குரலுக்குரியவரை நோக்கியபோது நான் ஆச்சரிய மடைந்து போனேன்.
பேருந்தின் ஆசனத்தில் அமர்ந்து வண்டியினைச் செலுத்தியவர் ஓர் இளம் பெண்மணியாவார். அழகிய குடும்பப்பாங்கான தோற்றத்துடனும், விரல்களில் பளபளக்கும் மோதிரங்களுடனும், கழுத்தில் கனமான தங்கச் சங்கிலியுடனும், பளிச் சென்ற சிரிப்புடன் கலகலப்பாகக் காணப்பட்டவரைக் கண்டதும் உண்மையி லேயே நான் வியந்து போனதில் என்ன புதுமை எனக் கேட்க இயலுமா?
ஏற்கனவே வவுனியா நகரில் மக்கள் கூட்டத்திற்குப் பஞ்சமேது?அதுவும் தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் உறவுகளைப் பார்க்க வந்திருக்கும் மக்கள், வாகன
129

Page 65
பருத்தியூர் பால,வயிரவநாதன் நெரிசல்கள் என எந்நேரமும் சாலைகளில் மொய்த்தி ருக்கும் "நெருக்கடிகள்" மத்தியில், ஒரு இளம் பெண் துணிச்சலாக, வெகு லாவகமாக, பேருந்தை எவ்வித சஞ்சலமும் இன்றி ஒட்டி வந்தால் அவரது திறமையினைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?
பேருந்து வவுனியாவை நோக்கிச் செல்லுமுன்பே அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவரது பெயர் திருமதி கோகிலகுமார் அஞ்சலா. திருமணமாகித் தமக்கு ஏழு வயதில் ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும் தெரிவித்தார். வண்டி வவுனியாவை வந்தடைந்ததும் பயணிகள் அனை வரும் இறங்கிய பின்னர் ஆறுதலாகப் பேச ஆரம்பித்தேன்.
"உங்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடி யாது. எம்மவர்கள் பயந்தபடியே வாழும் இந்தச் சூழலில் படு துணிச்சலாகப் பொது போக்குவரத்துப் பேருந்து ஒட்டுவது எங்கள் பகுதியில் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணுகின்றேன்" என்றேன்.
நான் கூறியதும் சற்று நாணம் அவர் முகத்தில் தென்பட்டது. "நீங்கள் என்னைப் பற்றிச் சொல்வது சந்தோஷமளிக்கின்றது. ஆனால் நாங்கள் எதற்காகப் பயப்பட வேண்டும்? ஆண்கள் செய்கின்ற வேலைகளை எல்லாம் தற்போது பெண்களும் செய்கின்றார்கள் தானே? பயப்பட்டால் ஒன்றும் சரிவராது.” என்றவரிடம் நீங்கள் எதற்காக இந்த சாரதி வேலையைத் தெரிவு செய்தீர்கள் என்றேன்.
130

வமளனம் “எனது கணவருக்குச் சொந்தமானதே இந்த வாகன மாகும்.அவர் தற்போது கனடாவிற்குச் சென்றுள்ளார். விடுமுறை நாட்களில் இங்கு வந்து செல்லுவார். அவர் ஒட்டிய இந்த வாகனம் அவர் கனடா சென்ற பின்னர் சும்மா இருப்பதை விட நான் ஒட்டினால் என்ன என்று எண்ணினேன்” என்றவர் தொடர்ந்தார்.
"மேலும் எனது கணவர் ஏற்கனவே இந்த வண்டியை எனக்கு ஒட்டப் பழக்கியிருந்தார். எமக்குச் சொந்தமான வண்டியை வேறு சாரதிகள் மூலம் செலுத்தித் தொழில் செய்தால் நஷ்டம்தான் வரும். அவர்களால் எங்கள் வாகனத் தைத் தகுந்த முறையில் பராமரிக்கவும் முடியாது. அவர்கள் தமது தொழிலில் நியாயமாக நடந்து கொள்வார்கள் என் பதில் என்ன நிச்சயம் உண்டு? எனவே வண்டியை நானே ஒட்டுவது என்று முடிவு செய்தேன்” என்றார் அஞ்சலா.
"அப்படியானால் உங்கள் தொழிலால் குடும்ப அலு வல்களில் கஷ்டங்கள் வராதா? என்று நான் கேட்டபோது, அவர் கூறியதாவது, "எனக்கு கிடாச்சூரியில் இருந்து வவுனியா வரைக்குமான போக்குவரத்துச் செய்ய மூன்று தடவைகள் மட்டும் சென்றுவர அனுமதியுண்டு. காலை ஏழு, எட்டு மணிக்குப் புறப்பட்டால் மாலை ஏழு, எட்டு மணி வரைக்கும் ஒரே வேலைதான். பொறுமையாக வண்டியை ஒட்ட வேண்டும். வண்டி செல்வதற்கான முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். சனங்களைப் பக்குவமாக கொண்டு சேர்க்க வேண்டும். பொறுமையில்லாதவர்களால் சாரதி வேலை செய்ய முடியாது”
131

Page 66
பருத்தியூர்பால,வயிரவநாதன்
உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லு ங்கள் என்ற போது, "எனக்கு மூன்று ஆண் சகோதரர்களும் மூன்று பெண் சகோதரிகளும் இருக்கின்றார்கள். எனக்குத் தற்போது இருபத்தி எட்டு வயதாகின்றது. திருநாவற் குளத்தில் சொந்தமாக வீடு இருக்கின்றது. கஷ்டமான நிலையில் எனது குடும்பம் இல்லாது விட்டாலும் வீட்டில் சும்மா இருப்பதைவிட உழைத்து முன்னேறுவது நல்லது தானே” என்று கேட்டார்.
உண்மை தான் இன்று உலகம் பூராவும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். விண்வெளிக்கே விண்கலங்களைச் செலுத்தும் போது, சாதாரண சாலையில் ஒட்டுவதற்கு ஏன் அச்சப்பட வேண்டும் என்றேன்.
வவுனியா - இலுப்பையடிச் சந்தியில் இருந்து கிடாச்சூரி வரைக்கும் செல்லும் பயணிகள் மட்டுமல்ல, இங்கு வதியும் பலருக்கும் அஞ்சலாவை நன்கு தெரியும். மிகவும் இனிமையாகப் பழகுகின்றார்.
"ஒ. பஸ் ஓட்டுகின்ற. அந்த அக்காவா" என ஒரு சிறுமி என்னிடம் சொன்னதில் இருந்து அவரைப்பற்றி பலரும் அறிந்துள்ளமையைத் தெரிந்து கொண்டேன்.
இந்தத் துன்பம் மிகு நெருக்கடிக்குள்ளான கால கட்டத்தில் பெண்கள் துணிச்சலை இழந்தால் குடும்ப வாழ்வு
132

வமளனம் அமைதியிழந்து விடும். ஆண்களுடன் இணைந்து துணிவுடன் பெண்கள் செயலாற்றுவது காலத்தின் கட்டாயமாகும். அஞ்சலாவின் அச்சமற்ற செயலாற்று கையை நாமும் பாராட்டுவோம்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சளி "இவள்” பகுதி 30-08-2009
133

Page 67


Page 68

isen 978 gss o469-17.
978 955 Oil 4, 6 9. 1 78