கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:மரணத்தின் பின் வாழ்வு

Page 1


Page 2

மரணத்தின் பின் வாழ்வு
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வின் வசந்தங்கள்- பாகம் 77 சிந்தனைக்கட்டுரைகள்

Page 3
நூல் தலைப்பு :
ஆசிரியர் :
மொழி : பதிப்பு ஆண்டு : பதிப்பு விபரம் :
உரிமை :
தாளின் தன்மை
நூலின் அளவு:
அச்சு எழுத்து : மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
கணனி வடிவமைப்பு: அச்சிட்டோர் : நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை
ISBN :
நூல் விபரம்
மரணத்தின் பின் வாழ்வு வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 17 பருத்தியூர் பால,வயிரவநாதன் தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
:70 கிராம் பாங்க்
கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ) 13
152
அஸ்ரா பிரிண்டர்ஸ் அஸ்ரா பிரிண்டர்ஸ் அஸ்ரா பிரிண்டர்ஸ்
தையல்
வானவில் வெளியீட்டகம்
: 250/=
978-955-04469-18-5
- 2 -
 

அரிைந்துரை
எனது முழுமுதல் குலதெய்வம் கணபதி. சிறுவயதில் நான் அஞ்சிய போதெல்லாம் அடைக்கலம் தேடியது வைரவரை. பால வயிரவநாதனை நான் நேரடியாக தெரிந்து கொள்வதற்கு முன்னரே எனது வாழ்வின் பயங்களைக் களைவதற்குப் பயனுள்ள வழிகாட்டியாக பால வயிரவரின் (நாதனின்) ஆக்கங்கள் துணை நிற்கின்றன என்றால் மிகையாகாது.
பால வயிரவரை காணும் முன்பே அவர் ஆக்கங்களை கண்டு வியந்து போனதுண்டு. நேரடியாக அவரை கண்ணுற்ற போது இந்த எளிமையான மனிதனுக்குள் இத்தனை அரிதான விடயங்களா என வியந்து போனேன்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. உருவத்தைப் பார்த்து எடை போடாதே என்ற முதுமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் அன்று தெரிந்தது.
உள்ளந் தெளிந்த மனிதன் உரைப்பதும், எழுதுவதும் மற்றவர் உள்ளத்தையும் தெளிய வைக்கும். வாழ்வில் நம்பிக்கையூட்ட வைக்கும்.
ஓர் எழுத்தாளனை அவன் எழுத்திலே தான் அவனைப் புரிந்து கொள்ள முடியும். நதிமூலம் ரிஷிமூலம்
- 3 س

Page 4
பார்க்கக் கூடாது . எழுத்தாணி பிடித்தவர்களின் மனங்களை கணிக்கும்ஆற்றல் அவர்களின் எழுத்துக்களை படித்துணர்வது மூலம் ஏற்பட முடியும்.
"தனிமை” வாசித்தேன். தனிமையில் இத்தனை ஆழமா என வியந்தேன் ஒஷோவின்நூல்களை நான் ஆழமாக வாசித்த துண்டு. சிறுவயதிலிருந்தே நான் தனிமை விரும்பி நூல்களே எனது உற்ற நண்பர்கள். எனது சிறுவயது தோழர்கள் காரோட்டம் ஓடிய போதுதான் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் மூழ்கிப்போவேன். கூட்டம் சேராவிட்டால் தனிமை என்பது பொருள். ஆனால் தனிமையில் இன்பம் கண்டேன். பிற்காலத்தில் தனிமை விரட்டுகின்ற உணர்வாக எனக்கு இருக்கவில்லை. தனிமை எவ்வளவு பயனுள்ளது. வாசியுங்கள் பால, வயிரவநாதனின் தனிமையின் இனிமையை,
"கனிவு” ஆணவம் குனிவடைந்தால் கனிவு பிறக்கும். உதாரணங்களுடன் அழகாக விளங்குகிறார் பால. வயிரவநாதன்.
எல்லா மதங்களும் ஒன்றையே சொல்கின்றது. சொல்லியபடி நடப்பவர்கள் குறைவு,மதம் வெறும் கருவியாக உள்ளது. இறைவன் ஒருவனே. அவனை உணர்வதே இறுதி இலக்கு. பாதைகள் பல முடிவோ ஒன்றுதான்.
சந்தர்ப்பவாதம் பற்றி ஆழமாக விளக்குகின்றார் ஆசிரியர். சந்தர்ப்பவவாதம் எந்நேரத்திற்கும் எடுபடாது. தக்க
- 4 -
 

நேரத்தில் காலைவாரி மற்றவரின் கேலிக்குரியதாக்கிவிடும். முற்றிலும் உண்மை,
நல்லவர்கள் ஒருவர் மீது கோபம் கொள்ளலாம் ஆனால் வெறுப்பு கொள்ள மாட்டார்கள். எவ்வளவு அழகிய வார்த்தைகள். இப்படியே நீண்டு செல்கின்றது. படைப்பை சிறுவர் முதல் பெரியவர் வரை கற்றுணர வேண்டும்.
"மரணத்தின் பின் வாழ்வு, விழித்தபடி உறங்குவது சாமானியரின்நிலை, உறக்கத்திலும் விழித்திருப்பது ஞானியர், நிலை,
ஆத்மசாந்தியும் அமைதியான சுபாவமும் நேர்மை வழியில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் , நற்பெயரும் தானாகவே கைவரும் என்பதை வாழ்ந்து பார்த்து உணர்ந்திருக்கின்றேன்.
புகழ் உன்னை தேடிவர வேண்டும். புகழை தேடி நாம் அலையக்கூடாது. இது தான் "புகழுடன் திகழ்” என்பதன் g-ITUTL befb.
எதிரிகளை மடக்க அன்பு என்னும் பாணத்தை ஏவுமாறு எம்மையெல்லாம் அன்புடன் அழைக்கிறார்.
பருத்தியூர் பால, வயிரவநாதன்.
தன் அனுபவங்களை கற்றவைகளை பிழிந்து சுவை
பட எமக்கு அளித்துள்ள பால,வயிரவநாதன் ஈழத்தின்
- 5 -

Page 5
தமிழ்வாணன் பால,வயிரவநாதன் என்று சொன்னால் மிகையாகாது.
ஈழத்தில் வாழ்வில் நம்பிக்கையூட்டுகின்ற மனோ வியல் நூல்கள் மிகவும் குறைவு அதனை சுவைபட எழுதுபவர்கள் அதனிலும் குறைவு.
குறைவில்லாமல் நிறைவைத் தருகின்ற ஆக்கங்களே எம் வாழ்வை உயரவைக்கும், நிறையவைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. புதுமைப்பித்தனை நான் ஈழத்தில் காண்கின்றேன். பால வயிரவநாதன் ஒரு புதுமைப்பித்தன். உள்ளதை உள்ளபடி உரைக்கின்ற ஓர் அற்புதமான எழுத்தாளன் . பயன் தரும் ஆக்கங்கள் பல படைத்த பால வயிரவநாதனிடம் இன்னும் எதிர்பார்க்கின்றோம். வாழ்க! வளர்க!
மாவட்ட நீதிபதி
மாணிக்கவாசகர் கணேசராசா
 

(p566OD
ஈழவளநாடு ஈன்ற மைந்தர்கள் எம்மினிய தமிழன் னையை அலங்கரிக்க இனிய தமிழ் இலக்கியங்களை காணிக்கையாக்கி, தமிழுக்கு வளம் சேர்த்தனர். அந்த வகையில் பருத்தியூர் பால வயிரவநாதன் அவர்கள் ‘வாழ்வியல் வசந்தங்கள் என்னும் வாசமிகு மலரைப் படைத்துள்ளார்.
அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்ளும் உணர்வுகள், பிரச்சனைகள், சவால்கள் என்பனவற்றை நுணுகி ஆராய்ந்து, அதனை எதிர்கொள்ளும் வகையினை இலாவகமாகக் கூறியுள்ளார். சகல தரப்பினரும் புரிந்துணரக் கூடியவகையில் கட்டுரைகளை ஆக்கியுள்ளமை பாராட்டு க்குரியதாகும்.
பல்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைத்
தொகுப்பாக அமையும் இந்நூல் உலகின் யதார்த்தத்தைப் புரிந்து அதற்கேற்ப மக்களை வழிப்படுத்தும் வகையிலான கட்டுரைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இவர் எழுத்தாளர் மட்டுமன்றி ஆன்மீகவாதியும் சிறந்த சொற் பொழிவாளருமாவார். ‘வாழ்வியல் வசந்தங்கள் என்னும் இந்நூல் வாசகரின் இதயத்தை இதமாய் வருடி வழிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஆர். பிரபாகன்
பிரதம ஆசிரியர்
வீரகேசரி

Page 6
எனது உரை
ஆன்மாவை மேன்மைப்படுத்தி ஞானத்தை நல்கும் மதங்கள், மனிதர் கூறாக வேறாக இருக்குமாறு என்றும் கூறவேயில்லை.
மதங்கள் கூறும் பாதையில் ஆன்மார்த்தமாய் பயணிப்பவர்கள் எல்லையில்லா பேரின்பம் பெறுவர்.
ஆண்டவன் ஏகன். அவனிடம் பேதம் இல்லை. ஏன் இந்த மாந்தர் அவன் எண்ணத்திற்கு விரோதமாகப் பேதமுடன் மோத வேண்டும்?
இறைவன் ஒருவன் மதங்கள் பல ஆயினும் ஈற்றில் நாம் அனைவரும் சரணடைவது அந்த ஏகனிடம் தான்.
சந்தோஷங்களை நிறைவை குரோத, விரோதங்களால் பெற முடியாது.
எல்லா மாந்தர்களையும் களிப்புடன் கண்டு கொண்டால் கோப, தாபம் என்பதேது?
கனிவான நல் இதயம் நற்காரியங்கள் பல செய்யும். நெஞ்சத்தின் இரக்கமும் , பரிவும், அன்பும், இணைந்த மென்மையின் வெளிப்பாடே கனிவு,
-8-
 

எனவே இந்த நல்ல பண்பு இதயத்தை என்றும் புதுப் புஷ்பமாக அழகு வண்ணமாக வாசனைகளைத்தூவிநிற்கும்.
என்றும்மேன்மையுடன் புகழுடன்வாழப்பிரியப்படும்நாம் எமதுஒழுக்கத்தில் கறை, குறை இல்லாமல் இருக்க நிறைந்த மனதுடன் உலகத்தை நேசிக்கவேண்டும்.
நல்ல வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் நித்ய சிரஞ்சீவிகள். காலம் அவர்கள் கட்டுக்குள் இல்லை.
சாதாரண மனிதனே மரணிக்கின்றான். வாழ்வாங்கு வாழ்பவனுக்கு முன் மரணம் மரணிக்கும்.
ஒருவனுக்கு நற்பெயர் நிலைத்து நிற்கையில் அவன் மரணமடைந்தவனாகக் கருத முடியாது.
வெறும் சடமான உடலை அடைவது இறப்பு எனப்படலாம். ஆனால் அவன் இறை சித்தத்தினால் கொண்ட அர்த்தமிகு அர்ப்பணிப்புடனான சேவைகள் முன் இறப்பின் பின்னரும், ஆன்மா வாழும் உரிமையை, உண்மையை உணர்த்திய வண்ணமேயிருக்கும்.
அற வாழ்வு வாழ்பவர்களே சமூகத்தில் கெளரவம் பெறும் தகுதியுடையோராவர். இவர்களிடம் எதிரிகள் நெருங்க
(19լԶեւ III5l.
என்றும் உலகோடு இணைந்து, மிக எளிமையாக
- 9.

Page 7
வாழ்ந்திடும் எல்லோருமே மரியாதைக்குரிய மகான்களே!
எந்த ஒரு உயிரினங்களுமே ஆதரவற்றுத் திரிந்து நிற்கையில் அதனைப் பார்த்தும் பாரா முகமாக இருப்பது அநாகரீகம், ܝ.
பெற்ற தாய், தந்தையரைத் தனிமைப்படுத்துபவர்கள் மற்ற உயிர்களிடம் எப்படிக் கரிசனை கொள்ள முடியும்?
காலம் கடந்த பின் ஞானம் பேசுவதால் பயனில்லை உலகை ஒறுத்து, வெறுத்து ஒதுக்கியவர்கள் தனிமையின் துன்பத்தைப் பின்னர் உணர்ந்து தெளிந்தேயாக வேண்டும்.
இருக்கும் காலத்தில் செழிப்பாக வாழ்ந்திட கடவுளின் அனைத்துப் படைப்புக்களை நேயமுடன் நோக்கு வீர்களாக!
ஆறுதல், தேறுதல் அளிப்பது ஆறறிவு படைத்த மனிதனின் வேற்றுமை களைந்த பெரும் பண்பாகும்.
மனிதனை இயக்கும் எண்ணங்களின் தூய்மையில் அவன் வாழ்வுஸ்தாபிக்கப்பட்டால், உயர் ஸ்தானத்தில் இறைவனால் வைக்கப்படும் பேறு பெறுவான். இதனை அருளாளர்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
எனது உரையில் சில சிந்தனைப் பதிவுகள் இவை.
- 10
 

இதனை நூலினுள் இணைப்பதில் உவகை கொள்கின்றேன்.
அடுத்து நூலினை அணி செய்யும் அணிந்துரையை நோக்குவோம்.
இளம் வயதிலேயே சட்டத்துறையில் பல சாதனை செய்தவர் திரு. மாணிக்கவாசகர். கணேசராஜா அவர்களாவர். சிரேஷ்ட சட்டத்தரணியாக, அரச சட்டவரைஞராக, அரச சட்டத் தரணியாக, இதன் பின்னர் மாவட்ட நீதிபதியாக இலங்கையின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து, தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றுகின்றார்.
மிகுந்த துணிச்சலும் வேகமும் விவேகமும் கொண்ட இவர் சிறந்த பேச்சாளருமாவர். இவர் பிரபல ஆங்கில, தமிழ். தினசரி பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் கடமையாற்றிய பிரபல ஊடகவியலாளர் செல்வத்தம்பி மாணிக்கவாசகரின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
எனது ஊரைச் சேர்ந்தவராகையால் இளமைக் காலத்திலிருந்துெ திரு. செ. கணேசராஜாவை எனக்கு நன்கு தெரியும்.
இவரது ஆழ்ந்த சமயப் பற்றும் எல்லோரையும் பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் நல்ல பண்புகளுமே இவரின் முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாகும்.
இவர் எனது நூலுக்கு அளித்த அணிந்துரை மூலம்
- 11 -

Page 8
தமதுஅன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவருக்கு எனது நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்வெய்து கின்றேன்.
ஈழத்தின் பிரபல தினசரி,வீரகேசரி, அதன் ஆசிரியர் திரு. ஆர். பிரபாகரன். இவரைத் தெரியாதவர் எவருமில்லை.
எந்த மனிதர்களையும் நேசிக்கும் உயர் பண்பாளர். பணிவு மிகுந்தவர். எவர் திறமைகளையும் வெளியுலகிற்குக் கொண்டுவரத் தயங்காத அன்பான அமைதியானவர்.
வீரகேசரி, தினசரியில் எனது "வாழ்வியல் அரங்கம்" தொடராக வெளிவர ஆக்கபூர்வமாக ஒத்துழைப்பு நல்கினார்.
எனது "வாழ்வியல் வசந்தங்கள்” பாகம் இரண்டில், பெரும்பாலான கட்டுரைகள் வீரகேசரியில் வெளியான கட்டுரைகளேயாகும்.
என்னைத் தொடர்ந்தும் எழுதுமாறு ஊக்கப்படுத்தி வருகின்றார். எனது இந்த புத்தகத்திற்கு முகவுரை தருமாறு கேட்டபோதுமகிழ்வுடன் ஏற்று, என்னைக் கெளரவித்தமைக்கு அன்புடன் நன்றி பாராட்டுகின்றேன்.
மேலும் எனது புத்தக வெளியீடு தொடர்பாக நான் திரு சிவபாலன் அவர்களிடம் (அதிபர் அஸ்ரா பிறின்ரேஸ் பிரைவேட்
- 12
 

லிமிடெட்) கேட்ட போது தயங்காமல் எனக்கு அவைகளை வெளியீடு செய்ய உதவியமைக்கு உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நூலுக்கான பணியில் ஊக்கம் கொடுத்து ஆக்க பூர்வமாக உதவிகள் நல்கிய அனைத்து நண்பர்களின் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால, வயிரவநாதன்
"மேரு இல்லம்"
36-2/1
ஈ. எஸ்-பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு 06. தொ.பே இல - 011-2361012,071-4402303, 0774318768
- 13

Page 9
பொருளடக்கம்
தலைப்பு
01) தனிமை 02) கனிவு
03) கடவுளும் மதங்களும் 04 சந்தர்ப்பவாதிகளும், சந்தர்ப்பவாதங்களும் 05) கோபம் 06) மரணத்தின் பின் வாழ்வு 07) புகழுடன் திகழு
08) GuGS 09) கெளரவம் 10) எதிரிகள்
11) ஒப்பீடு செய்வதை தவிர்த்திடுக! 12) பிறர் துன்பம் களைதலே நாம் அடையும்
இன்பம் 13) ஒட்டுக் கேட்டல் தெட்ட புழுக்கம் 14) வெற்றிகள் போலவே தோல்விகளும்
அற்புதமானவை 15) gradio 16) சமையல் தலையில் கைதேர்ந்தவர்களாகப் பெண்கள் விளங்குவதன் இரகசியம்? 17) குரு சிஷ்யன்
- 14
 

நூலாசிரியர் பருத்தியூர் மரல. வயிரவநாதன் எழுதி வெளியிட்ட"வாழ்வியல் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
1. உண்மை சாஸ்வதமானது - LIIT85 b - 01 2. SlibLDT - பாகம் 02 3. சுயதரிசனம் - LITES b - 03 4. கோழைகளாய் வாழுவதோ? - LITS b - 04 5. ஞானம் - Lufta5Lib - 05 6. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்! - LIFT35lb - 06 7. சும்மா இருத்தல் - LTasb - 07 8. உண்மைகள் உலருவதில்லை! - LITTEESLb - 08 9. உண்னோடு நீ பேசு! - LTablf - 09 10. நான் நானே தான்! - LT35lb - 10 11. வெறுமை - பாகம் - 11 12. காதலும் கடமையும் - UT35lb - 12 13. அக ஒளி - LIFT5lb - 13 14. உன்னை நீ முந்து - LIITGELÊ - 14 15. சுயபச்சாதாபம் - LITES f - 15 16. மெளனம் - LITTEELð - 16 17. மரணத்தின் பின் வாழ்வு - LufTabLò -17 18. சிந்தனை வரிகள் - LIFT85 b - 18
- 15

Page 10
OO O &LDTLLI6OOTLD
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- 16
 
 
 

மரணத்தின் பின் வாழ்வு
நீண்ட தனிமையை எவரும் தீண்ட விரும்பமாட்டார்கள் அமைதியான தனிமை ஒருவன் தன்னையறிந்து கொள்ள தன்னை வலுப்படுத்த உதவும். தொடர்ந்து ஆரவாரம் சலசலப்புகளில் இருந்து விடுபட்டு சாந்தியை நல்கும். "தனிமை” இனிமையானதே எனினும் சமூகத்துடன்ஒட்டுறவின்றி வாழ்வது இயலாது. "தனிமை” எமது ஆத்மாவோடு இணைந்த எமது பிரத்தியேக உரிமை. இதுவே சிந்தனைத் திறனை வளர்க்கின்றது. தனிமை சமூக உறவிற்கு விரோதமானதும் அல்ல.
தவத்திற்குத் தனிமை உகந்தது. ஆனால் சாமான்ய மனிதரக்குத் தனிமை உணர்வு, அசாதாரணமாகத் மனிதர்க்குத் தோன்றும்.
நீண்ட தனிமையை எவரும் தீண்ட விரும்ப
மாட்டார்கள். இந்த நிலை சிலவேளை நெஞ்சைத் தோண்டி
ரணப்படுத்தியும் விடுவதுண்டு. பிரச்சினைகளில் இருந்து
- 17

Page 11
பருத்திபூர் அல. ஆயிரவநாதர் விடுபடத் தனித்து இருக்க விரும்புபவர்களும் சிலவேளை இது முடியாத விடத்து, எவரிடமாவது போய் ஆறுதல் தேட நினைப்பதும் புதுமையுமல்ல.
அமைதியான தனிமை துணிவைத் தருகின்றது. மனது ஆறுதலாக, அமைதியாகத் தனிமையில் இருக்கின்றபோது எதனையும் செய்து முடிக்கலாம் என்கின்ற உணர்வு கூட வருகின்றது. புறச் சூழல் தாக்காதவரை மனித மூளை அச்சங்களுக்கு வழி விடுவதில்லை. அமைதியான முடிவு எடுப்பவன் தனிமையில்தான் இவற்றைத் தேடிக் கொள்கின்றான்.
கூடி முடிவு எடுப்பது தொல்லை கூடியது என்று அல்ல. ஆயினும், குழப்பம் இன்றி பல் திசைப் பார்வைகளை உற்றுநோக்கி, எண்ணங்களைக் குவித்துத் தனிமையில் சிந்தித்தால் நல்ல திசை துல்லியமாகத் தெரியும். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லோரது பேச்சும் எடுபடாது. தனிமையில் நிரம்பச் சாதிக்க முடிகின்றது.
அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்த, நல்ல எண்ணங்களை எமது வசமாக்க, பிறரது வீண் அலட்டல்கள், துன்புறுத்தும் நெருடலான தலையீடுகளில் இருந்து விடுபட என்று பல விடயங்களுக்கு தனிமை துணை போகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் தனதுநிலை உணரவும், இதன்மூலம் நிர்மலமான சுயதரிசனம் பெற்றுக்கொள்ளவும் தனிமை வேண்டப்பட்ட நிலையாக உள்ளது.
- 18
 

மரணத்தின் பின் வாழ்வு பிறரை அறிந்துகொள்ள முற்படும் எல்லோருமே தமக்குள் தம்மை ஆராய அச்சப்படுவதுண்டு. நேர்மை யாகச் சிந்தித்தால் தானேதனக்கு விரோதமாக இருந்து கொண்டதான சம்பவங்களையும் தெரிந்து கொண்டு விடுவான். தன்னை உணராமல் தவறு செய்பவன், தனிமையில் தன்னுடன் பேசியேயாக வேண்டும். எமது தவறான செய்கைக்கு நாமே பயப்படாது விட்டால் சமூகத்தின் பார்வைகள் அருவருப்புடனேயே எம்மை நோக்கும்.சிந்தனை என்பது தனிமைக்குச் சொந்தமானதே!
சுயதரிசனம், விழிப்பு என்பதெல்லாமே தனித்து எம்மை நோக்கி நாமே கேட்கும் கேள்வி மூலம் உணரப்படுவதாகும். இதன் மூலம் தெளிவு, ஞானம் பிறப்பதால் அச்சம், மடமை, துன்பம் என்பன தூக்கி எறியப்படுகின்றன. எனினும் எல்லா நிலையிலும் தனிமை ஒத்து வருமா?
* காதலர்க்குத் தனிமை வெப்பம், குழந்தைக்குத்
தனிமை தவிப்பு,
* இளைஞர்களுக்குத் தனிமை கசப்பு.
• பழங்கதை பேசி மகிழும் முதியோர்க்குத் தனிமை வேம்பு.
மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பலரோடு ஒன்று கூடவும் தனித்து இருந்து செயல்படவும்
- 19 -

Page 12
மருத்திபூர் 00. லுயிர்வரர்
விரும்புகின்றான். நாம் சிலவேளை பிறர் குறுக்கீடுகள் இன்றி இருக்க வேண்டியுள்ளது. எல்லா வேளைகளிலும் எங்கள் மீது நம்பிக்கை வைக்காது எமக்கு நாமே துன்பங்களை
உண்டாக்குவதுண்டு.
நாம் நல்ல சிந்தனைகளைச் சீராகச் செலுத்த நேரங்களை ஒதுக்குவது இல்லை. எனக்கு, நான் இன்றியமையாதவன் ஆகின்றேன். எனது நல்லது கெட்டவைகளை அறிய வேண்டியவனாகின்றேன். சில பொழுதுகளில் எம்மைச் சிந்திக்கப் பிறர் அனுமதிப் பதில்லை. எமக்குப் பிரியமானவர்கள் கூட நான் நானாக இயங்கவிடாமல் தடுப்பது எவ்வளவு கொடுமை? வேறு ஒருவர் சிந்திக்க அல்லது அவ்வண்ணமே தீர்மானம் எடுக்க நாம் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
எமக்கு எனச் சரிப்பட்டு வருகின்ற எண்ணங்களை இடையூறு செய்வது பொருத்தமானதா? இத்தகைய காரணங்களால் வதைபடும் போதுதான் தனிமையின் இன்றியமையாத தன்மை,தேவைகள்எமக்கு வேண்டப் 'படுகின்றது."கொஞ்சம் என்னைத்தனிமையில் விட்டுவிடுங்கள். எனக்குச் சிந்திக்க சற்று அவகாசம் தாருங்கள்" என பலர் கெஞ்சுவதை அறிந்திருக்கின்றீர்கள் அல்லவா?
தனிமையை நாடுவோர் கூறும் பல காரணங்கள் ஏற்கக் கூடியவையே. இதன் தாத்பரியம் திண்மையானது. ஆனால், சோம்பல்பட்டு ஒருவருடனும் பேசாமல் முடங்கிக் கிடப்பது ஆரோக்கியமான தனிமை அல்ல. இந்நிலை
- 20

LDJ600žiki Liki 6NHLђ6) முடிவில் சித்தத்தை மந்தமாக்கிக் கலங்க வைக்கும் பரிதாபத்திற்கு ஆளாக்கிவிடும்.
சும்மா தனிமையில் நின்று பிதற்றுவதற்கும், அறிவு நிலையில் நின்று தனது ஆத்மாவோடு முனைப்புடன் இரண்டறப் பிணைந்து பேசுவதும் வெவ்வேறான விடயங்கள்.
அறிஞர்கள், இலக்கியவாதிகள் மக்களோடு பேசுவதில் செலவிடும் காலத்தைப் போலவே தம் உள் உணர்வுகளுடனும் உரையாடியதனாலேயே அறிவுசார்ந்த படைப்புக்கள் குவியல்களாக வெளிப்பட்டன. பலருடன் சகஜமாகப் பழகுதல் என்பது நல்ல விஷயம்தான். கூடி இருந்து அந்நியோன்யமாகப் பழகி வாழும் வாழ்வு இன்பகரமானதே. ஆயினும் பிரத்தியேகமான பல கருமங்கள், விஷயங்களை நாம் மட்டுமே ஆராய்ந்து முடிவு செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளோம். இந்தப் போக்கு நாம் மற்றவர்களிடமிருந்து அறவே விலகி ஓடுகின்ற நிலைக்கு இட்டுச் செல்வதுமல்ல. பொருத்தமான விடயங்களை அர்த்தமுடன் செய்வதற்குமாகும்.
பிரச்சினைக்குரிய சில விடயங்களைக் கூடியிருந்து பேசித்தீர்க்கலாம். ஆனால் தீர்க்கமுடியாத சில விடயங்க ளைத் தெளிந்த உணர்வோடு தனியே இருந்து சிந்தித்த லும் நல்ல வியக்கத்தக்க பலன்களைக் கண்டு கொள்ளவும் (ՄMգեւյլb.
- 21 -

Page 13
கருத்ரிபூர் 00:வரவரர் "தனிமை" எமது ஆத்மாவோடு இணைந்த பிரத்தியேக உரிமையாகின்றது. இங்கு அந்நிய ஆளுமைகளைக் கண்டபடி பிரவேசிக்க விடக்கூடாது. ஒத்த நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் எவர் மூலம் வந்தாலும் எமது சிந்தனைகளுடன் பொருத்திப் பார்ப்பதில் தவறேது
ിഞ്ഞുങ്ങേ,
எமக்கு நாம் கட்டளையிட தனிமையுணர்வு சாதகமாகின்றது. புதியன படைக்கவும், நல் எண்ணங் களைக் குவிக்கவும், சுயமான விருப்புடன் வாழ்ந்து கொள்ளவும் ஏற்புடையவர்களாக எங்களை ஆக்குவோ மாக. எங்களுக்கு நாங்களே நல்ல நண்பர்கள். அதாவது எனக்கு நான் நல்ல நண்பன். எனக்கு நானே ரொம்பவும் பரிச்சயமானவன் எனக்கு நானே நல்ல உறவினன். எனக்கு நானே விசுவாசமானவனுமாவேன்.
தனிமை இத்தகைய திடமான உணர்வை உண்டாக் கினால் நாங்கள் எடுக்கின்ற முடிவுகள் கூடத் தீர்க்கமானவை யேயாகும்.
தனிமையினால் உண்டாக்கப்படுகின்ற துணிச்சலே ஆன்ம பலத்தையும், உலகிற்கும் எங்களால் முடிந்தளவு உபகாரங்களைச் செய்ய முடியும் என்ற உறுதியையும் பெற்றுத் தருகின்றது.
- 22

மரணத்தின் பின் வாழ்வ எனவே, தனிமையையும் துணைகொள்வோம். அனைத்து உறவுகளையும் இணைத்தே வாழ்வோம். இதனால் கனத்த இதயங்களும் பூவனமாய் பொலிவுறும்.
தினக்குரல் வார மஞ்சரி 31.07.2005
- 23

Page 14
பருத்திபூர் அல. ஆயிரணுகுழர்
நெஞ்சத்தின் பரிவுடனான மென்மையின் வெளிப்பாடு "கனிவு". அனைவருமே ஒருவர்க்கொருவர் கனிவுடன் நேயம் கொண்டால் "அந்நியம்" என்ற ஒன்று இல்லை. பார்த்தமாத்திரத்தே ஒருவரை ஏற்றுக்கொள்வதுடன் அன்புடன் பழகினால் உலகமே அன்புமயமாகும். துன்பம் கொண்டோரைத் தனிமைப்படுத்தாது கனிவுடன் நோக்குங்கள். இதயம் பொலிவானால் எதனையும் சாதிக்கலாம். பிறவியின் பூரணத்துவம் கரிசனையான கனிவுடன் அகிலத்தை அரவணைப்பதேயாம். நீங்கள் சந்தோஷியாக இருக்க எல்லோரையும் மகிழ்வூட்டுங்கள். "கனிவு" அன்பினுள் அடக்கம்.
"கனிவு” என்று சொல்லும் போதே ஒரு மென்மையின்
வெளிப்பாடு தோற்றமாகின்றது அல்லவா?
பேசும் போது கனிவு,
பார்வையில் கனிவு,
பழகும் விதத்தில் கனிவு,
இப்படிக் கனிவு, பல் வடிவங்களில் மனிதனை
மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் ஈர்க்கின்ற பண்பு
-24
 
 

மரணத்தின் பின் வாழ்வு ஆகின்றது.எல்லோருமேகனிவாகப்பழக ஆரம்பி த்துவிட்டால் மக்கள் எவருமே அந்நியம் இல்லை என்றாகிவிடும். பலவித உடல் வேதனையால் நீங்கள் ஒரு வைத்தியரை நாடுகின்றீர்கள். வைத்தியரோ கடுகடுப்பான முகத்துடன் எள்ளும் கொள்ளும் வெடிக்கு மாற்போல் வார்த்தைகளை பொரிந்து வீசியபடியே தமது வைத்திய விசாரணைகளை ஆரம்பித்தால் அடுத்த தடவை அவரை நாட உங்களுக்கு இஷ்டம் வருமா? நோய் தீருகின்றதோ இல்லையோ கனிவான இயல்புடைய வைத்தியரை மக்கள் நாடுவதில் வியப்பு இல்லை. பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளரிடம் "போ” என விரட்டுமாற் போல் உரையாடினால் வருந்தி அவரிடம் பொருள் வாங்க எவர்தான் விரும்புவரோ? சந்தோஷமாக இருப்பவர்களால் தான் கனிவாக உரையாட முடிகின்றது.
எனவே உங்களை களிப்பான மனிதனாக மாற்றினால் பேச்சிலும் செயலிலும் "கனிவு" தானாகவே பிறக்கும். கனிவு, பனித் துளி போன்றது. குளிர்ச்சியான இதத்தை தண்ணீரும், பன்னீரும், சுவை தரு பானங்கள் மட்டும் அளிப்பதில்லை. அருள் மிகு பார்வையே போதுமானது.
எல்லோருமே அன்பை எதிர்பார்க்கும் சீவன்கள் தான்.வெளிப்புறத்தே ஒருவருமே எனக்குத் தேவை யில்லை என வாயளவில் சொன்னாலும் உள்ளுக்குள்ளே இனிய தேறுதல் வார்த்தைகள் ஸ்பரிக்காதா என மனம்
- 25

Page 15
கருத்ரிபூர் 00. ஆயிரவரர் அங்கலாய்த்தேதீரும். வெறுப்பான உணர்ச்சிகள் என்பது கூடத் தன்னை ஒருவரும் லட்சியப்படுத்தவில்லையே என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே என்பதை உணர்க. தொடர்ச்சி யாக மனிதர் எவரையாவது புறம் தள்ளினால் முடிவில் அன்பிற்காக ஏங்கியவன். கனிவு உணர்வு அற்ற வன்முறையாளனால் அதில் வியப்பு இல்லை.
எனவே கூடியவரை எவரையும் தனிமைப்படுத்திப் புறந்தள்ள வேண்டாம். எதிர்ப்படுபவனுக்குப் பொருள் ஈந்துவிட்டால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? உண்மையான நேயத்துடன் மற்றவரை நோக்க வேண்டும். பணம் உள்ளவன் கூட விரக்தி வயப்படுவது எதற்கு? குழைவான கனிவு இன்றேல் துன்பம் தான். இறுமாப்பு, அகங்காரம் ஏளனம் இவைகளை விடுத்து மனிதநேயத்தை பவ்வியமாக ஏற்றில் இதமான கனிவு எம்முடன் கூடவரும். தங்களின் சுமைகளான துன்பங்களைச் சொல்வதற்கு, ஆறுதல் தேடுவதற்கு, அவதிப்படும் மக்கள் கோடி?
9 பிறர் துன்பங்களைத் தாங்குவதற்கு இஷ்டப்படுங்கள். கனிவானநோக்கு,உங்களுக்குள் ஒரு மென்மை யுடன்கூடியகம்பீரத்தை ஏற்படுத்துகின்றது.
* இனிமையாகப் பழகும் இயல்பை உடையவனா
லேயே தலைவனாக வரமுடியும்.
கொஞ்சம் சுற்றிப் பாருங்கள்!
- 26
 

மரணத்தின் பின் வாழ்வு
சிரிப்பவனை, சிரிக்க வைப்பவனைச் சுற்றிப் பத்துப்
பேர். சிடு மூஞ்சியை, வார்த்தைகளால் வசைபாடுபவனு க்காக எத்தனை பேர்?
வழியில் கண்டவருக்கு "வந்தனம்" சொன்னால் சந்தோஷமடைவான். அதே நேரம் சிரிக்காமல் போனால் மனதுக்குள் சினந்து நோக்குவான். வசீகரம் என்பது இதயத்தின் வெளிப்பாடு. பழகும் தன்மையினால் பேச்சினால் வருவது.
இதயம் முகத்தில் அழகை வரைந்து கொள்ளு கின்றது. "கனிவு", "பரிவு” கரையாது. ஆனால் துன்பத்தைக் கரைக்கும் தூயவஸ்து. துர்ச் சிந்தனையாளனும் பிறர் பற்றிய கசிவு அற்றவனும் கூட பரிவான பார்வையின் முன்
சரணாகதியாகி விடுவான்.
தீர்க்கதரிசிகள், ஞானிகளதுஅருட் பார்வைகள் இந்த ஜகத்தைக் குளிர் ஜலமாகக் குளிப்பாட்டி புனிதமாக்கின. அன்பை தேக்கியவன் சகல பாக்கியங்களும் பெற்றவன். ஏன் எனில் அவன் அனைவரையும் தனதாக்கிக் கொள் கிறான். கனிவு கொண்ட தாயினால் இல்லம் இனிமையாகுதல் போல் பூப்போன்ற இதயங்களால் தான் பூமியை அசைக்க முடியும். அணைத்து மகிழவும் முடியும்.
இதயம் பொலிந்தால்,
- 27

Page 16
பருத்திர் 00. ஐரிஷதர் ※ மலையை மடக்கலாம்.
* சிலைக்கும் உயிரூட்டலாம். * பெரும் புயலை நிறுத்தலாம். * பெரு வெளியை எமக்கு ஆக்கலாம்.
எங்கள் மனப்பாரம் குறைய வேண்டும் என்றால் இளகிய மனத்துடன் இனிமையாக நோக்கிப் பாருங்கள். எங்கள் குறைகள் வற்றுவதை அனுபவ ரீதியாக உணர ஆரம்பிப்பீர்கள்.
பிறவியின் பூரணத்துவத்தை மனிதன் பெற்றாக வேண்டும். அழுபவனுக்கும் வலு இழந்தவனுக்கும் தேறுதல் கிட்டாது விட்டமையினாலேயே இந்த அவனியில் கல்லான மனிதர்கள் தொடர்ந்து பிரசவிக்கப்பட்ட படியே இருக்கின்றனர். ஏன் எனில், பிரச்சினைக்குட்பட்டவனிடம் கரிசனை காட்டப்படாது விட்டால் எதிர்காலப் பிரஜைகள் கூட இதுதான் இயல்பான மனிதப் பண்பு என்று தனது இயல்பான குணமாக்கியே கொள்ளுவார்கள். தாய், தகப்பன் சிரிக்க மறுத்தால் குழந்தை சிரிப்பதை இவர்கள் ரசிக்கவே மாட்டார்கள்.
குழந்தைக்குச் சிரிப்பூட்டவேண்டும். வெறுப்பூட்டியே வளர்க்கப்பட்டால் அது கணிவை, விஷக் கனியாகவே நோக்கும். கனிவு இல்லாதவன் பிணியாளன். அவன் பிணி அகற்றி, புண்ணியவானாக புனிதனாக்க வேண்டியது சமூக
கடனாகும். நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்
- 28

மரணத்தின் பின் வாழ்வு என்பதற்காகவே மாற்றாரை மகிழ்வூட்டப் புறப்படல் வேண்டும். இது கூட ஒரு நல்ல சுயநலமாகவே படுகின்றது.
“பிரதிபலிப்பு” என்பது வெறும் ஒளித்தெறிப்பு என்பது மட்டுமல்ல, எமது நல்ல வலுவான எண்ணங்கள் எதிர்ப்படுவோரிடமும், அவர்களது எண்ணங்களும் அவ்வாறே பரஸ்பரம் வெளிப்பட்டு சங்கமிக்கும் உடன்பா டான அன்புள்ளமே அதுவாகும். இவையெல்லாம் இனிய இதயங்களுக்கே சாத்தியமாகும். அனுபவபூர்வ உண்மை. நல்ல நண்பர்கள், குரு சிஷ்ய உறவு,தலைவன் தொண்டர் உறவு முறைகள், கணவன் மனைவி உறவு எனப் பல உதாரணங்கள் கூறலாம்.
காதல் சமாச்சாரங்கள் மட்டுமல்ல உலகை உறுதி யாகக் கட்டி வைக்கவும் கனிவே இனிய வாகனமாகின்றது. ஓரறிவு முதல் ஆறறிவுஜீவன்கள் வரை பற்றுதல் இன்றேல் புவி இற்றுப் போகுமல்லவா? காதல், பற்று, பரிவு, பாசம், கருணை எல்லாமே கனிவுடன் இணைந்து கொண்ட குணங்கள் என்பதனைப் புரிந்து கொள்வோமாக. உலக இனிய பண்பு இதுவெனக் கொள்வோம்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 13.11.2005
- 29

Page 17
பருத்திபூர் 04ல. ஆயிரவநாதர்
கடவுளும் மதங்களும்
எல்லா மதங்களும் நல்லதையே சொல்கின்றன. கடவுளை வைத்து மதங்கள் உருவாகின. எனவே மதத்தின் பெயரால் மோதுவது கடவுளுக்குப்பிடிக்காது. மதநம்பிக்கையுள்ளவர்கள் பாவம் செய்யத் தலைப்படமாட்டார்கள். மானுடநேயம்மிக்கவனே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன். ஒவ்வொரு நாட்டின், இன மக்களின் பண்பாடுகளுக்கேற்ப மதக்கொள்கைகள் உருப்பெற்றாலும் உயிர்களுக்கு அன்பு செலுத்தும் கொள்கையில் சகல மதங்களும் ஒன்றாகின்றன. மத, இன, மொழி, குரோதங்களை, கரைத்து அழிப்பதே இறை தரிசனத்திற்கான வழியாகும்.
மதம், மனித மனத்தினுள் உள்நின்றுநோக்கும்மாய வஸ்து என்கின்றார்கள். வஸ்து என்பது ஒரு பொருளே எனப்படுவது. ஆயினும், இது தொட்டு நுகர முடியாத அகத்துடன் தொடர்புடைய நம்பிக்கையின் இறுக்கமான கொள்கை.
- 30
 
 
 
 
 
 
 
 
 
 

மரணத்தின் பின் வாழ்வு மதங்கள்உன்னதமானவைஆயினும், மதங்களை த்தொட்டு நிற்பவர்கள் சிலரோ அது காட்டும் நெறியில் எட்டி விலகி நிற்பது விந்தை. மற்றவர் மதங்களைச் சுட்டி நின்று வெட்டிப்பேச்சு, தர்க்கம், குதர்க்கமாகப் பேசுவதே வேலையாகிவிட்டது.
35 LTULL b இவர்கள் கடவுளைக் காணப்போவ துமில்லை, உணரப்போவதுமில்லை. முட்டி மோதுகின்ற துஷ்டப்பேர்வழிகள். கடவுளின் விரோதிகள். கிஞ்சித்தும் திருந்த வொண்ணாத மந்த புத்திக்காரர்கள். கருணைமிகு கடவுளை கண்டபடி விமர்சிக்கலாமா? இறைவன் மனிதனையும் சகல உயிரினங்களையும், புல் பூண்டு களையும், அண்டசராசரங்களையும் படைத்தான்.
ஆனால் மனிதன் மதங்களைப்படைக்க ஆரம்பி த்தான். இறைவன் நம்பிக்கையின்றி மனிதன் இறுமாப்புடன் வாழ்ந்துவிட முடியாது. அப்படி வாழ முனைந்தால் அது குறை நிரம்பிய கறை படிந்த திறன் அற்ற வாழ்வாக அமைந்துவிடும்.
முற்று முழுதும் தெரியவொண்ணா பரம் பொருளுக்கு வரைவிலக்கணம் சொல்லவிழைவது பொருத்தமற்றது. இவர்கள் இஷ்டத்துக்கு கஷ்டம் இல்லாது கடவுளைப் படைக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். அவர் பெயரால் சமய, சாதிபேத முலாம் பூசி மயக்கமூட்டி புதிய புதிய விஷ விதைகளை புதைக்கவும் செய்கின் றார்கள்.
-31 -

Page 18
so
பருத்திபூர் (40. ஜலிற்றூதர்
தெரியாத சங்கதிகளில் குழம்புவதைவிட, சொல்ல எத்தனிப்பதைவிட சும்மா இருப்பதே சிறப்பு. தெளிவை நோக்கிநடை பயில்வதை விடுத்து, அழிவுச் சிந்தனையுடன் ஆரவாரிப்பது நல்லதா?
கழிவான சிந்தனைகள் புலனைத் திருப்பும். மலிவாக சந்தைக்கு வரும். ஏக இறைவன் இதயத்துள் புகுந்தால், புதுப்புது பொய்மைகள் உருக் குலைந்தே போகும். பூமி பொலிவானது, அழகானது. மனிதனின் தெளிவற்ற சிந்தனையால் அதனை அழிக்க முயல்வது, மதங்கள் பெயரால் மனித மனங்களைக் கசக்க முயல்வதுமாகும்.
மதங்கள் எவ்வளவுதான் மலிந்துபோனாலும் அதனுள் இருப்பவன் ஒருவன்தான் என உணர்ந்தால் பேதம் ஏது? குரோதம் ஏது? எல்லா மதங்களும் நல்லவை களையே சொல்லுகின்றன. "கெட்டழிந்து போ” என எந்த மதமும் சொன்னதில்லை. மக்கள் எல்லோருமே கடவுளின் பிள்ளைகள் என வாயாரச் சொல்லுபவர்களே தங்கள் மதம், தங்கள் இனம் என்று வந்துவிட்டால் வலிந்து கட்டி மல்லுக்கு நிற்பது ஏன்?
புது உலகம் படைப்போம். முற்போக்கு சிந்தனை களைவளர்ப்போம் என முழக்கமிடுகின்றார்கள். முற்போக்கு, நாத்திகம் என்றால் இறைவனுக்கு முரணான கொள்கை என்று கூடச் சொல்லுகின்றார்கள். முற்போக்கு
-32 -
 

மரணத்தின் பின் வாழ்வு என்பது இறைவிரோதக் கொள்கை என்று கருதுவது எவ்வளவு முட்டாள்த்தனமானது காலத்திற் கொவ்வாத மூடநம்பிக்கைக்கு எதிரான ஒவ்வொரு காலத்திலும் முற்போக்குவாதம் எழுந்தே வந்துள்ளது.
முற்போக்கு கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் கடவுளை வணங்கக் கூடாது என்பதில்லை. மூடக்கொள்கை யையும், இறை நம்பிக்கையையும் முடிச்சுப் போட்டுப் பார்க்கக்கூடாது. அதேபோல் நாத்தீகவாதம் பேசினால் அவர்கள்தான் அறிவுசார் கொள்கையில் வலுவானவர்கள் என்பதுமல்ல.
நாத்தீகவாதிகள் மக்கள் விரோதிகளுமல்ல, இவர்கள் மூடக்கொள்கையின் பலவீனங்களால் அதன் பலவீனகளை உணர்ந்து அதன் காரணமாக இறைபக்தி, கடவுள் கொள்கைக்கு முரணாகப் பேசிவருகின்றார்கள்.
கடவுள் பெயரால் கண்டபடி நடப்பவர்களுக்காக கடவுளை வணங்குபவர்கள் எல்லோருமே முட்டாள் எனத்திட்டமுடியுமா? அதேபோல் கடவுளை வணங்கியபடி இஷ்டத்துக்கு வேஷம் போடுபவர்களை பக்திமான் எனப் பெயரிடலாமா?
பக்திமானாக இருந்த வண்ணமே முற்போக்கான மனிதனாக வாழமுடியும். நாத்திகனாக இருந்துகொண்டே மனிதநேயம் மிக்கவனாக இறைவனால் நேசிக்கத் தக்கவனாக இருக்கவும் முடியும்.
-33 -

Page 19
பருத்திபூர் பல. ஆயிரவநாதர்
மனிதனால் நேசிக்கத்தக்கவனே மனிதன். இவன் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன். மக்கள் சேவை மகேசன் சேவை என்றுதான் சொல்லுகின்றார்கள். அப்படி இருக்க மக்கள் விரோதப் போக்காக வாழ்ந்து கொண்டு பக்திமானாக வாழமுடியாது. நடிக்க அனுமதிக்கவும் கூடாது.
கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதற்குமுன் பக்கத்திலிருக்கும் ஏழைக்கு உள்ளதைக் கொடு: ஏழைக்குக் கொடுக்கும் ஒரு பிடி உணவேயாயினும் அது இறைவனுக்கு நல்கும் பெருவிருந்து.
எளியோருக்கு இரக்கம் காட்டு என்றே இறைவன் கோருகின்றான். இன்று பணம் சேர்க்கும் உபாயமாக, ஒரு சிலரால் ஆத்மீகம் கையாளப்படுவது கவலைக்குரியது. பாமரமக்கள் என்றில்லை, படித்தவர்களும் கடவுள் பெயரால் பயமுறுத்தப்படுகிறார்கள். உழைக்கும் நோக்கத்துடன் இறைவன் பெயரால் பணம் உறிஞ் சப்டுவது வேதனை.
காசைச் செலவு செய்தால் கடவுளைக் காணலாமா? அப்போதுதான் அவன் வாசல் திறக்கப்படுமா?
கபடம் மேவிய புத்திசாலித்தனமாக உழைப்ப வர்கள் மலிந்த தனாலேயே இன்று மதத்தின் மீதான
வெறுப்பு எல்லோர் இதயங்களில் நிறைந்து விடுமோ என
-34
 

DJ60Org556or lar 6) nibo) அச்சப்பட வேண்டியுள்ளது. இப்படியே போனால் ஒரு
சிலரது தவறான போக்கு காரணமாக இறை உணர்வை அருகச் செய்து கருக வைத்து விடுமல்லவா?
ஒவ்வொரு நாட்டிற்கும் கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள், தனித்துவமாகப் பேணப்பட்டு வருகின்றன. ஆனால் மனிதப் பண்பு ஒன்றே தான். மத நம்பிக்கைகள், தெய்வ வழிபாடுகள் ஒவ்வொரு நாட்டினதும் பண்பாடு களுக்கு ஏற்ப தோற்றம் பெற்றாலும் அரசியல் பெருமாற்ற ங்களால் சகல சமயங்களுமே உலகம் முழுவதும் வியாபிக்கத் தொடங்கின.
ஒவ்வொருவரும் தமக்கு எளிதான ஒத்துவரத்தக்க மதங்களை அனுசரிக்கலாயினர். இது அவரவருக்கே உரிய சுதந்திரமும் கூட உலகம் முழுமைக்குமே ஒரு பொதுவான சமயம் என்று கடைப்பிடிப்பதும் முடியக்கூடிய விஷயமும் இல்லை. அனைத்து மக்களுமே ஒரே நிலைக்கு ஒத்துப் போக இயலுமா?
ஆனால் மக்கள் அனைவருமே இறைவன் பெயரால் ஒரே நோக்கில் பண்பில் மக்களை நேசிக்கும் விதத்தில் ஒன்று பட முடியும். மதம், மொழி, கலாசாரங்களைக் காட்டி பேதம் பேசிவந்தால் நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டியது தான். இதனால் உலகம் உடைபடுவதை நடைமுறைபடுத்த அனுமதிப்பது போலாகுமல்லவா?
- 35 س

Page 20
பருத்திபூர் 040.அறிவருறன்
அடிப்படை மனித தர்மத்தை உணராத வரை தெய்வமும், மனிதனுக்கு அனுகூலமாக இருக்குமா? கடவுள் கொள்கையில் தீவிரமாக உள்ள மனிதன் அறப்பண்பில், மனித நேயத்தில், பேதம் காட்டுதல் முரணான இயல்பாகத் தோன்றவில்லையா?
மத உணர்வு புனிதமானவை என்று கொள்கை யளவில் ஏற்கின்ற நாம் செயல்முறையில் எதிரான போக்கினைக் கொள்வது சரிதானா?
அன்பு, தூய்மை, வாய்மை, பேதமற்ற தன்மை என்பன இதயத்தில் ஆக்கிரமித்தாலே தெய்வம் அங்கு குடிகொண்டுவிடுகிறது. இந்த தெய்வத்திற்கு மனிதர்களால் பேதம் நோக்கிய மதம் என்று ஒன்றில்லை
எனவே மதம் பொதுவானது. மனித முயற்சியால்
அற வாழ்வு வாழ முடியும் மதத்திற்கு அளிக்கும் பெரும் கெளரவமும் இதுவேயாகும்.
மதம் பொதுவான தர்மம். இறைவனை நோக்கியது. மதங்களை நம்புவதை விட இறைவனை நம்புவதும், அவன் சித்தப்படி நடப்பதுவும் மேலானது. இறைவன் சித்தப்படி நட என்றுதானே எல்லா மதங்களும் சொல்லுகின்றன.
-36
 

மரணத்தின் பின் வாம் இறைவனைத்தவிர வேறொன்றில்லை என்பவர்கள், அவன் நினைப்பதைத்தவிர கண்டதையும் கருத முடியுமோ?
தெய்வத்திற்கு, மக்கள் மீது பேதமில்லை. மக்கள் தெய்வங்கள் மீது பேதம் காட்டலாமா? அன்பு, கருணை யுடனான நோக்கு மத பேதங்களைக் கடந்த உன்னத நிலைக்கு எம்மை கொண்டு செல்லும். இந்த நிலையைக் காண விழைவோமாக!
தினக்குரல் வாரமஞ்சரி 04.12.2005
- 37

Page 21
ருேத்திபூர் (20. ஜலிரவரர்
சந்தர்ப்பவாதிகளும்,
சந்தர்ப்பவாதங்களும்
சந்தர்ப்பவாதிகள் சுயநலமிகள். இவர்களுக்குக் கூச்சமுமில்லை. கொள்கைகளுமில்லை. சந்தர்ப்பமாகச் செயல்படுவது தப்பில்லை. ஆனால் எவர்க்கும் தீங்கு விளைவிக்காத நல்லவற்றை மட்டுமே சிந்தித்துச் செயலாற்றும் போது எதிர் வரும் சவால்களை ஏற்போமாக! சந்தர்ப்ப வாதம் பேசும் சந்தர்பவாதிகளான அரசியல்வாதிகளால் உலகம் சிக்கித் தடுமாறுகின்றது. குதர்க்கம் தர்க்கமாகாது. இதற்கு நியாயம் எனும் வர்ணம் தீட்டவியலாது. தோல்வி துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் நல்லோர் தங்களை இழப்பது மில்லை, பொய்மைக்குள் நுளைவதுமில்லை.
சந்தர்ப்பவாதம் செய்தலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பொய்மையாக முகமூடி அணிந்து செயல்படுவதும், சூழ நிற்பவர்களின் சிந்தைய்ை மந்தமாக்க முயல்வதுடன் அவர்களின் அறிவைச் சிறை செய்ய எத்தனிக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையுமாகும்:
- 38
 
 

LDUGUOTšbóksör fløř 6AFTAŘEM சந்தர்ப்பவாதம் எந்த நேரத்திற்கும் எடுபடாது. தக்கநேரத்தில் காலை வாரி மற்றவரின் கேலிக் குரியதாக்கிவிடும். அதுமட்டுமல்ல ஒருவரை எரிச்சலூட்டச் செய்வதும், உண்மையை நல்ல வண்ணம் போலத் திரிப்பதும்,சொந்தஅதாயங்களுக்காகத்தாம் சார்ந் தோரையும் காட்டிக் கொடுக்கின்றமையும் துஷ்டத் தனமாகும்.
தமது சுயரூபத்தைப் பிறர் காணாவண்ணம் சித்திரிக்க முயல்பவர்கள் இறுதியில் தங்கள் முயற்சியில் தோற்றுப்போய் தாம் கையாண்ட ஆயுதத்தாலே குத்துண்டு அவலப்படுவதும் உண்டு, பிறர்மேல் சவாரி செய்து கருமமாற்றுவது இவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். சந்தர்ப்பவாதிகள் என்போரே இலாபத்தை நல்ல நோக்கமின்றி அடைய முற்படுபவர்கள் என்றும் கூறலாம். ஆனால் நல்ல சந்தர்ப்பத்தினை நழுவவிடாமல் சமூகத்திற்கு நல்லது செய்பவர்களைச் சுயநலவாதிகள் என்றோ சந்தர்ப்பவாதிகள் என்றோ ஒருவரும் சொல்வ தில்லை.
மற்றவர்களின் தோளில் சாய்ந்தால் சொந்தக் கால் வலு இழந்து போய்விடும். உணர்வார்களா?
கொஞ்சப் பேர்வழிகள் இருக்கிறார்கள். தங்கள்
திறமையை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக
சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடிப்பார்கள் அல்லது
س- 39 -

Page 22
கருத்திழர் 29.9ழ்டிதர் பேசுவார்கள். உகந்த காரியங்களை உலகிற்கு ஆற்று பவனுக்கு மற்றவர் அங்கீகாரம் தானாகவே கிடைத்து விடும். இதில் ஐயம் எதற்கு?
* தோல்விகளை ஒப்புக் கொள்ள மறுப்பவன்
சந்தர்ப்பவாதம் செய்கின்றான்.
娜
குதர்க்கம் தர்க்கமாகிவிடாது.
Ꮉ சந்தர்ப்பவாதம் சொந்தப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிடாது. உண்மையான நியாயவாதி, கண்டபடி பேச வேண்டிய தேவை
இருக்காது.
எனினும் பொய்யைப் பேசுபவன் முன் மெளனித்தால் மெய் பொய்யாகி விடும். எனவே பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். சந்தர்ப்பவாதமாகச் சாயம் தீட்டுபவர்களின் சாயம் அகற்றப்பட்டேயாக வேண்டும். பச்சோந்தி தான் தப்பிக்கவும், தனக்குரிய இரையை தேடிக்கொள்ளவுமே தனது வர்ணத்தினை நிலைமைக்கு ஏற்ப மாற்றுகிறது. ஆனால் சந்தர்ப்பவாதிகள் எந்தவிதமான காரணமும் இன்றிக் கூட சவடால்த்தனமாகப் பேசி தம்மை உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களாக் காட்டிக்கொள்வர். தம்மை மேம்படுத்த எண்ணி மற்றவர்களைக் காயப்படுத்த முயலலாமா?சுத்துமாத்துச்செய்யாதே' என்று சொல்லப் படுவதுண்டு. சிலர் பேசுவது அரிச்சந்திரன் பேசுவதுபோல
- 40
 

LDLJSOUTöálstörsöŤ GAIRTLb6 இருக்கும். ஆனால் கொஞ்ச வினாடித்துளிகளில் மழையில் கழுவிய சாயம் போல உருமாறி சுயதரி சனத்தைத் தாமாகவே வெளிப்படுத்திவிடுவர்.
நன்றாகப் பொய் பேசுவதே சந்தர்ப்பவாதிகளின் தகைமையாகும். நடிப்புத்திறன், பேசும் ஆற்றல், சூழலை நன்றாகப் புரிந்து வைத்திருத்தல் ஆகியவைகளை உணர்ந்து சந்தர்ப்ப வாதிகள் ஆட்சிபீடம் ஏறுகின்றனர். ஆயினும் எவ்வித சுயலாபம் கருதாமலும், உள்நோக்க மின்றி நன்மைகளின் பொருட்டு பக்குவமாக சந்தர்ப்ப மறிந்து பேசுவது நடப்பது சந்தர்ப்பவாத செயல் என்று கொச்சையாகச் சொல்லிவிட முடியாது.
பொதுச் சேவை செய்பவன் காரியங்களைக் கனகச்சிதமாகச் செய்து முடிக்க நடிக்கவும் செய்கின்றான் நன்கு பேசுகின்றான்.
"ஆடுகிற மாட்டை ஆடிக்கற பாடுகிற மாட்டைப் பாடிக் கற" என்பர் பெரியோர் முடிக்க வேண்டிய நல்ல காரியங்களைச் சாதுர்யமாகச் செய்தல் தப்பு அல்ல தப்பு அல்ல. இது நல் வித்தையாகும் என்று அறிக.
இன்று எங்குதான் சந்தர்ப்பவாதிகள் இல்லை என்று கேட்கிறார்கள்? * அரசியல்வாதிகள், * வியாபாரிகள், * சமய பொது நலத்தலைவர்கள்,
- 41 -

Page 23
பருத்திபூர் அல. ஆலிவரன்
இப்படி பலதரப்பட்ட வர்க்கத்தினர் சந்தர்ப்ப வாதிகளாகச் செயற்பட்டே வருகிறார்கள். அரசியல்வாதி சந்தர்ப்பம் வரும்போது இருக்கிற ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சிபீடம் ஏற முனைகிறான். வியாபாரிகள் தமது பொருளின் தரத்தை உயர்த்துகின்றார்களோ இல்லையோ மற்ற வியாபாரிகளின் வியாபாரத்தை தன் மூளை வளத்தினால் சிதறடித்து முடக்க முனையாமல் இருக்கமாட்டான்.
இதுபோலவே பொதுநலம் பேசும் தலைவர்களும் சந்தர்ப்பம் வரும்போது தம்மை வளப்படுத்தாமல் விட்டு விட்டால் தாங்கள் குட்டையாகிப் பட்டுப்போவார்கள் என எண்ணிமற்றவரை முடக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். "கண் இமைப் பொழுதில் பிறர் கண்ணுக்குள் புகுந்து குத்தும் அசகாயச் சூரர் உள்ள பூமி இது" என அவர்களே கூறிக்கொள்வது வேடிக்கைதான்! சாதாரணமாக இன்று உலகில் நடக்கும் அரசியல் சமூக விஷயங்களைப் பாருங்கள்.
ஒரு அரசு அமைக்க பல உதிரிக் கட்சிகள் ஒன்றாக இணையும். இணையும் போது சந்தர்ப்பவாதம் பேசும் ஏன் ஒன்றுபட்டோம் என்று காரணத்தை சரளமாகப் பொய்கள் மூலம் நம்பவைப்பார்கள். முரண்பட்ட கட்சிகளை மக்கள் வேறுவழியின்றி ஆதரிப்பார்கள். முடிவில் இவர்களுக்கே சாதகமாக அமைந்து ஆட்சிபீடம் ஏறுவார்கள்.
- 42
 

LDJ600šálají leží 6)JT26) நடப்பது என்ன?
எல்லோருமே முட்டிமோதிக் கொள்வார்கள் ஒன்றானவர்கள் பல துண்டாவார்கள். திட்டியவர்கள் மற்றவர்களுடன் கைகோர்ப்பார்கள். முன்பு திட்டியவர்கள் இணைந்து கொள்ள முடிவில் மக்கள் முட்டாள்களாவர்.
மீண்டும் நடப்பது என்ன?
சந்தர்ப்பவாதம் பேசுவார்கள் ஏன் பிரிந்தோம்? யாருக்காகப் பிரிந்தோம் எல்லாம் மக்களுக்காகவே என்று கூறி விடுவார்கள். மக்கள் அதனையும் அந்த சந்தர்ப்பவாதத்தையும் நம்புவார்கள்.
முடிவு?
ஆட்சிமாறும் கொள்கைகள் கோட்டை விடப்படும் இவர்களில் ஒருவர் ஏதோ இருக்கிற காலம் வரை தலைவர் களாகச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மக்களின் தோள் மீது ஏறி நாற்காலியில் உட்கார்ந்து விடுவார் இது எல்லாமே பழகிப்போன சாதாரண அவலம். இன்று எல்லாமே வழமையான நடைமுறைகள். இது எல்லாம் இயல்பான கருமங்களாக உலகம் ஏற்றுக்கொண்டு விட்டது. இது மீண்டும் தொடர்கதை போல சந்தர்ப்ப வாதிகளின் சந்தர்ப்பவாதம் சரித்திரத்தையே மாற்று கின்றதல்லவா?

Page 24
பருத்திபூர் (40.2திரர்
இவை எல்லாமே நிரந்தரமல்ல ஆனால் மக்களுக் குண்டான துன்பங்கள் அவலங்கள் எல்லாமே நிரந்தரமாகி விடுகின்றன.
எனவே சந்தர்ப்பவாதிகளை இனம் காணாதவரை உலகம் உய்வு அடைய முடியுமா? பொருள்கள் விலை கூடினால், உலக சந்தை நிலைவரம் என்பார்கள். அதே காரணத்தை மாற்றுக் கட்சிக்காரன் தனது ஆட்சியின் போது கூறினால், அதை ஏற்காது போர்க்கொடி எழுப்புவார்கள். சந்தர்ப்பவாதிகளுடன் உறவே வைத்திருக்கக்கூடாது என்பார்கள். ஏனெனில் காட்டிக் கொடுப்பதே இவர்கள் தொழில். சந்தர்ப்பவாதிகளிடம் விட்டுக்கொடுக்கும் இயல்பேயில்லை. இவர்களின் குறிக்கோள் தாம் செய்வது தவறாயினும் குறித்த இலாப இலக்கை அடைவதேயாகும்.
இந்த குணதிசயங்களால் நண்பர்களிடமும் முரண்பாடுகள் தோன்றுவதுண்டு. எல்லா நண்பர்களிடமும் தப்பான அபிப்பிராயம் தோன்றி விடுகின்றது.
“எவ்வளவு நல்ல சினேகிதர்களாக வாழ்ந்தீர்களே, ஏன் உங்களுக்குள் பிரிவு” என்று கேட்டால், "அவன் என்னைக் காட்டிக் கொடுத்து சிக்கலில் மாட்டிவிட்டான்" என்று கூறுபவர்களை அன்றாடம் கண்டிருப்பீர்கள். நண்பர்களுக்கிடையில் உள்ள உண்மை நட்பையும் வேண்டாத சிலர் அது சந்தர்ப்பத்திற்கானது என்று முத்திரை குத்தப்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்
- 44
 

மரணத்தின் பின் வாழ்வு கொண்டு பார்க்கச்செய்தும் விடுவார்கள். போலியாக வாழ்பவர்களுக்கு நல்ல நண்பர்களே கிடையாது. நல்ல நண்பன் கண்டபடி வாதம் செய்யவும் மாட்டான்.
பிழைகளைச் சுட்டிக்காட்டுவது அதன் பொருட்டுச் சண்டையிட்டு விவாதிப்பதும் வெவ்வேறான விஷயங்கள். அறிந்து கொள்க!
நியாயம் கேட்பதற்கும், வாதாடி மனஸ்தாபம் கொள்வதற்கும் தொடர்பேயில்லை. உள் நோக்கமின்றி நியாயங்கள் பேசப்படல் வேண்டும். இங்கு குதர்க்கங்கள் விலக்கப்படும். தர்ம நியாயங்களே கோர்க்கப்படும். வக்கிரபுத்திக்கும் அதிகார தோரணைக்கும் இடமே யில்லை. நல்ல நியாயம் உள்ள இடத்தில் சந்தர்ப்பவாதம் எடுபடப்போவதேயில்லை. பிழைகள் பல ரூபமெடுத்து அழிந்துவிடும். சரியானவைக்கு ஒரே ஒரு வழிமட்டும் தான், அது ரூபத்தை மாற்றுவதில்லை.
சில விஷயங்கள் எல்லா நேரத்திற்கும் பொருந்து வனவாக அமைவதில்லை. மாற்றங்கள்வரும். சூழலை உணர்ந்து, செயற்படுவதில் தவறில்லை. ஆனால் உண்மைகளே முதன்மைப்படுத்தப்படல் வேண்டும். காலமாற்றத்தால் சரியானவைகள் தவறாகிச் சரிந்தது போலிருக்கும். நெளிவு சுழிவுகளை அறிந்து கொள் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். எச்சரிக்கை உணர்வு வலுக்குன்றினால் எமது தளர்வு நிலையில் அது பற்றிக் கவனம் எடுக்காது விட்டுவிடுகின்றோம்.
- 45

Page 25
பருத்திபூர் 04ல. ஆயிற்றுருதர்
எனவே, காலம், நேரம் அறிந்து போராடுபவனுக்கு
எந்த சந்தர்ப்பவாதியாலும் ஒன்றும் செய்து விடமுடியாது.
சோர்ந்த நிலையில் நாம் இருந்தால் சந்தர்ப்பவாதி முந்திக் கொள்கின்றான். பலவீனமாக நாம் இருந்தால் இவன் பாசாங்கு பலித்துவிடும்.
பச்சோந்திகள் பலமடைவது, மற்றவன் தன் நிலையை உணராமல் விடுவதன் பொருட்டேயாகும்.
சாதுர்யம் என்பது, பொய்களைப்போதிப்பதாக அமையக்கூடாது. சுயநலமற்ற நோக்கு, உண்மையின் தரிசனத்தையே நோக்குபவர்கள் என்றுமே சந்தர்ப்ப வாதியாக மாற இடமேயில்லை!
தினக்குரல் ஞாயிறுமஞ்சரி 11.12.2005
- 46 س
 

மரணத்தின் பின் வாழ்வு
கோபம்
தமது எண்ணங்கள் ஈடேறாது விட்டாலும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தனது இயலாமையை வேறு விதத்தில் செய்கை மூலம் உணர்த்த இயலாத வேளையிலும் தங்கள் முன் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொறுக்க இயலாமையினாலும் கோபம் பொதுவாக உண்டாமைக்கான காரணங்களாகும். கோபத்தினைக் கண்டபடி வெளிக்காட்டுதல் பலவீன நிலையைக் காட்டும். சினம் மனத்தை வதைத்து தேகத்தைச் சுருக்கும், அழகைக் கெடுக்கும். எவரிடமும் வெறுப்பை உமிழாமல் நல்ல நோக்கத்திற்காக கோபத்தை வெளிக்காட்டுதல் தவறு அல்ல. சினம் கொள்வோரை மனிதர் ரசிப்பதில்லை.
ஆரவாரப்போக்கற்ற அப்பாவி மனிதர்கள் கூட சிலவேளை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கடும் கோபத்திற்குள்ளாவதுண்டு. -
நியாயபூர்வமான தமது எண்ணங்களை கருமங் களை ஏனையவர்கள் உதாசீனம் செய்யும் போதும்
- 47

Page 26
பருத்திபூர் 04ல. லுயிற்றுதாரர் அல்லது அதற்குக் குந்தகம் ஏற்படுமாற்போல் நடக்கும் போதும் தவிர்க்க முடியாத நிலையில் கோபம் எற்படத்தான் செய்யும் . கோபம் வேண்டப்படாத ஒரு உணர்ச்சி வெளிப்பாடல்ல. மனதின் தூண்டலால் செயல் பிறக்கிறது. செய்கின்ற செயலுக்கும், எங்கள் மன உணர்வுக்கும் ஏற்ப காரியங்கள் நடைபெறாவிட்டால் சாதாரண நிலையில் இருந்து நாங்கள் விடுபட ஆரம்பிக்கின்றோம்.
ஆயினும், எங்கள் கோபங்கள் நியாயபூர்வமாக இல்லாது விட்டால் பிறர் கண்டனங்களுக்கு உட்பட்டாலும் அதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். வேண்டாத கோபங்கள் மனத்தாங்கலாகி மற்றவர் இதயங்களில் வேம்பாகிஉதாசீனப் பொருளாகவும் உருமாறலாம். எனவே, ஆத்திரப்படுமுன் சீக்கிரம் எமது நிலையை உணர்வதற்கு அறிவுக்கும் அவகாசம் கொடுத்தேயாக வேண்டும்.
சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப கோபங்களின் தன்மை வேறுபடும். ஆத்திரம், சினம், சீற்றம், வெகுளி எனப் பலவாறு கோபத்திற்கு நாமங்கள் சூட்டப்பட்டாலும், மனதுக்கு ஒவ்வாத நிலையில் ஏற்படும் உணர்வு இது என்பதில் இது பொதுவானதே! ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தனது இயலாமையை வேறு விதத்தில் செய்கை மூலம் உணர்த்த இயலாத வேளையிலும் தங்கள் முன் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொறுக்க இயலாமையாலும் கோபம் பொதுவாக
உருவாகக் காரணங்களாகும்.
- 48
 

மரணத்தின் பின் வாழ்வு சாதாரண நிலையில் இருப்பவன் கோபம் கொண் டால் குரூரமாகின்றான். வெளித்தோற்றம் மட்டுமல்ல உள் உறுப்புக்கள் கூட முறுக்கேறி இவர்களைத் துன்புறுத்தும். கோபம் கொண்டால் ஆத்மசக்தி விரயமாகும். தங்களை வீரனாகக் காட்டுவதற்குக்கூட கோபத்தினை சினேகமா க்கிக் கொள்கின்றனர்.
தொடர்ந்து ஆத்திரப்படுபவன் புத்தி மட்டுமல்ல, அவன் முகம் கூட அவ்னிடம் இருந்து விலகி புதுத்திரை போட்டுக் கொள்ளும், ஆத்திரமுற்றவன் முகம் அவனுக்கே பிடிக்காது. சினம் கொண்டிருப்பவர் தமது நிலையறிய விரும்புவதில்லை. மென் மேலும் தம்மை வருத்துவதுடன் உயிருள்ளஉயிரற்ற பொருள்களையும் காயப்படுத்து கின்றான்.
தான் ஒன்றும் செய்யவில்லையே என்று சொல்லிச் சொல்லி
• தப்பான அபிப்பிராயம், * சிந்திக்க அவகாசம் கொடுக்காமை,
• நான் என்கிற முனைப்பு,
• மேலதிக அதிகார எண்ணம், இருக்கிற வாய்ப்பை உடனே காப்பாற்ற முனைதல்,
போன்ற காரணங்கள் சினத்துடன் உறவை உண்டாக்கின்ற கருப்பொருட்களாகும்பெரும் பாலான வர்கள் தாங்கள் சொல்லுவதைப் பிறர்கேட்க வேண்டும் என
- 49

Page 27
பருத்திபூர் (40. ஆயிரவநாதன் எதிர்பார்க்கிறார்கள். சகல அதிகாரம் கொண்டவர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதன்கூடத் தன் நிலையை வலுப்படுத்தி தனது அறிவுக்கு நிலைக்கு தன்னால் நேசிக்கப்படுபவர்கள் கட்டுப்பட்டேயாக வேண்டும் என எதிர்பார்க்கிறான்.
ஒரு பாடசாலை ஆசிரியர் என்ன எண்ணுகிறார்? பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள்? அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன், மனைவி இவர்கள் கூட என்ன எதிர்பார்க்கிறார்கள்? தமது அதிகார வரம்பினுள் இருப்பவர்கள் தமது எண்ணத்திற்கு மாறுபாடாக இருப்பதாகக் கருதினால் ஆத்திரப்படுகின்றனர். இவர்களுடைய ஆத்திர வெளிப்பாடு சரியானதா? பிழையானதா? என்பதை நிச்சயிக்க விரும்புவது கிடையாது. கேள்விகேட்டால் கோபம் வருவது இயல்பு. அது சரியானதா? அல்லது பிழையானதா? என்பது வேறு விடயம். சாமான்ய மனிதன் தனது உரிமைகள் மறுக்கப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது சினம் கொள்வதில் தவறில்லை.
ஆனால் சில விடயங்களைக் கோபங்களாலும் சில சங்கதிகளைச் சாந்தமாகவும் சாதித்துக் கொள்ள முடியும். சில முகாமையாளர்கள் "சந்தோஷமாகக் காரியமாற்ற முனைகின்றோம், ஆனால் முடியவில்லையே” என்பார்கள்.
“கோபித்துக் கண்டபடி திட்டினால் தான் காதுக்குள் எல்லாமே நுளைகிறது. என்ன மனுஷர்கள் இவர்கள்” என்று
- 50 -
 
 
 
 
 
 
 
 

மரணத்தின் பின் வாழ்வு அலுத்துக் கொள்பவர்களை நீங்கள் பார்ப்பதுண்டுதானே. எனவே இந்தக் காரணங்களால் சினம் சிங்காரமான இயல்பு என்று கூறிவிட முடியுமா? அழ வைத்தா அழகு பார்ப்பது?
சாதாரண நிலையில் யாராவது அமைதியாக இருந்தால் அது கூடப் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேண்டு மென்றே சீண்டி இவர்களை ஆத்திரம் கொள்ளச்செய்து விடுவார்கள். ஒரு நபரைத் திருத்தி நல்வழிப்படுத்தும் நோக்கில் கோபப்பட வைத்த லுக்கும் காரணமின்றி கோபப்படவைப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டு?
* பெற்றோர், பிள்ளைகள்ை * ஆசிரியர், மாணவர்கள்ை * அதிகாரி, ஊழியர்கள்ை
இந்த நோக்கில் திருத்த முனைவதுமுண்டு. மற்றவர் நலனில் அக்கறை கொண்டவர்களுக்குக் கண்டிக்கவும் கோபிக்கவும் உரிமையுண்டு. நல்லவர்கள் ஒருவர் மீது கோபம் கொள்வார்களே ஒழிய அவர்கள் மீது வெறுப்புக் கொள்ளவே மாட்டார்கள், கோபம் வேறு வெறுப்பு வேறு, வெறுப்பு உதாசீனப்படுத்தி எங்களைத் தூரவிலக்கி வைத்துவிடும். நீண்டகால கோபம் ஈற்றில் வெறுப்பாக வளர விட்டுவிடக்கூடாது. பெரியோர்கள் ஏனையவர்களை அன்புடனேயே நோக்குவதால் வெறுப்பை உமிழ்வது கிடையாது. சாதாரணமானவர்கள் ஆரம்பத்திலேயே மற்றவர்
- 51 -

Page 28
பருத்திபூர் 00. லுசிற்றுதாரர் மீது வெறுப்புற்று பின்னர் கோபித்து அதனை மறக்காது மனதுக்குள் பூட்டி வைத்து விடுகின்றார்கள்.
கோபப்பட உரித்துடைய நாங்கள், மன்னித்து மறப்ப தற்கும் கடமைப்பட்டவர்கள். ஒரே திசையில் பார்ப்பதால் நியாயங்கள் கூடச் சில பொழுது அநியாயமாகத் தென்படலாம் அல்லவோ? பயமுறுத்தவும் கேலிக்காகவும் தரக்குறைவாக எண்ணி மட்டம் தட்டவும் எங்கள் உணர்வுகளைப் பயன்படுத்துதல் எந்த வகையிலும் நியாயமாகாது. எங்களில் ஒருவர் தங்கியிருக்க நேரிட்டால் அவன் தாழ்ந்தவன் எனக்கருதி எமது இஷ்டத்திற்கு சினம்கொண்டு வைது துன்புறுத்தல் அழகாகுமா?
பெரும் முனிவர்களும் ஞானிகளும் நீதியை நிலைநாட்டுவதற்காகக் கோபம் கொண்டு நடந்ததாகக் கதைகளில் படித்துவிட்டுப்பெரிய தோரணையில் எல்லோருமே சீற்றம் கொண்டவராகத் தம்மை மாற்றுவது வேடிக்கைதான். நியாயமற்ற தன்மையை வலுக்கட்டாய மாகத் திணிக்க சீற்றமான தோற்றத்தை ஆயுதமாக்க முனைவது காரியசித்திக்கு உதவாது.
கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் வக்கிரமான கோபாவேஷம், ரெளத்திரமாக துள்ளிக் குதிப்பது, ஜனரஞ்சகமாகக் கருதப்படுவது நிறுத்தப்பட வேண்டும். துர்க்குண வெளிப்பாடுகளை ரசனை என
ரசிப்பது, முடிவில் வளர்ந்துவரும் சிறார்களின்
- 52
 

மரணத்தின் பின் வாழ்வு
நினைப்புகளையே வேறாக மாற்றிவிடக்கூடும். வில்லன் சிரிப்பதை, பற்களை நற நற. எனக் கடிப்பதை, முகத்தை அஷ்டகோணலாக்கி திருகி, வதைத்து, அசைப்பதை நடிப்பு என ரசித்தாலும், இந்த ரசனைகள் கூட நெஞ்சத்தில் சிறுசிறு கீறல்களை உராய்ந்து கொள்ளும்.
கோபம் கூடநவரசத்தில்ஒன்றுதான். அதுவேகுணமாகக் கருதலாமா? இதுவே மனதில் இடம்பிடிக்கலாமா? மக்களைச் சீண்டதிசைதிருட்ப வன்முறைகளுக்குவித்திட்டுவளர்க்க கோப உணர்வினைஅரசியல்வாதிகள்ஆயுதமாக்கிக் கொள்ளு கிறார்கள். அதர்மங்களுக்கு நியாயம் என்கின்ற சாயம் போட்டு கோபத்திற்கான காரணங்களுக்கு விளக்கம் சொல்லக்கூடாது.
மனதினுள் குமைந்து இருக்கும் புழுக்கமான எண்ண ங்களைப் புலனடக்கம் மூலம் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். எவர் தனது தேவைகளை முழுமையாகவும் திருப்தியாகவும் பெற்றுக் கொள்ளுகிறார்கள்? எல்லாமே கூடி வரும் போது களிப்படைவதும் இல்லாவிட்டால் ஆத்திரப்படுவதும் சராசரி இயல்பேயாயினும் இந்நிலை யில் இருந்து நாம் தேறுதல் காண விழைய வேண்டும்.
எங்களுடைய உணர்வுகளை மதிக்கும் நாம், மற்றவர் இயல்புகளைப் புரிந்து கொண்டால் எவர் மீதும் ஆதங்கப்படத் தேவையில்லை. சில சமயம் எங்களது கருமங்களால் எம்மீதே கோபம் சர்ப்பமாகப் படமெடுக்
- 53 -

Page 29
பருத்திபூர் (40 ஆயிரவநாதர் கிறது. தன்மீதும், சுற்ற உள்ளவர்கள் மீதும் ஆத்திரமுற்றுப் பாமரரும், கற்றாரும் கூட பழிதீர்க்க எண்ணுவதுண்டு.
மிதமிஞ்சிய கோப உணர்வினால் பிறரைப் பழிதீர்த்து, அவப்பெயரை உண்டாக்கித் தங்களது உயி ரையே தற்கொலை மூலம் பறித்து எறிகின்ற நபர்களை என்ன என்பது? எல்லாமே கூடிவராதுவிட்டால் காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். வெகுண்டெழுந்து ஆவேசம் கொள்ளக் கூடாது.
ஒரு நொடிப்பொழுது அடங்காத ஆத்திரம் பல ஆண்டு வாழ்க்கையை தோண்டி மூடிவிடும். தன்னைத் தானே பண்படுத்த முனைய வேண்டும். பண்படுத்தியே ஆக வேண்டும்.
ஆவேசமும்அடங்காதபுத்தியும்,சண்டமாருதமாகி கண்டபடி வெகுளிக்குள் ஆட்படுவதும் யாருக்கு நஷ்டம்? தான் சார்ந்த குடும்பம், சமூகம் என்ற எதுவித பிரக்ஞையு ப்மின்றி மனம்போன வழியில் குணம் மாறிக்கோபத்தினை நல்ல ஆபரணமாகப் புனைய விரும்பலாமா? திடீர் எனத் தோற்றம் எடுக்கும் ஆத்திரம் காரணமாகக் குடும்ப பிரிவு,நண்பர்களின் விலகல் என்பன பாசங்களைக் கூறு போடும் நிலையைத் தோற்றுவித்து விடுகிறதல்லவா?
சிறுபொழுது தன்னிலை இழத்தலால், பலவருட இழப்புக்கு உள்ஆகலாமா? சினம் இயல்பான போக்காக
- 54
 

மரணத்தின் பின் வாழ்வ
மாறக்கூடாது. முன் கோபத்தால் முட்டாள்களாகவும் கூடாது.சினம் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் இதன்அடிப்படைக்குணம் ஒன்றே தான்.
எம்மை நாம் தளர்ச்சியான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது முறுக்கேறிய நெஞ்சுரம் கொண்டவர் களுக்கு சலனம்,கோபதாபம் கிடையாது. எவ் வேளையிலும் அமைதி, சாந்தம் உகந்ததேயாகும். துன்பம் தோல்வி ஆதங்கம் இவர்களுக்கு இல்லவே இல்லை!
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி
27.11.2005
- 55

Page 30
gருத்ரிபூர் (40,ஆர்வதர்
ー、リ ...”می%ہ خةے
மரணத்தின் பின் வாழ்வு
மரணத்தை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும். வாழ்வாங்கு வாழ்ந்தவன் மரணிப்பதில்லை. உலகிற்காக, உழைத்தவர்கள், இளைத்துக்களைத்து ஓய்வடைவதில்லை. இவர்கள் மரணத்தின் பின்னரும் இறைவரம் பெற்றவர்களாகின்றனர். மக்கள் உள்ளத்தில் நிரந்தரவாசியாகி விடுகின்றனர். சொர்க்கமும், நரகமும் இந்தப் பூமியில்தான். நல்லவர்கள் சொர்க்கத்தை உருவாக்குகின்றார்கள். இவர்களின் நிழலில்தான் உயிர்கள் இளைப்பாறுகின்றன. பூரண வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு மரணம் சிரமமானது அல்ல. நிறைந்த மனதுடையவர்கள், இறந்தபின்னரும் தொடர்ந்தும் இயங்குபவர்கள்.
மரணத்தின் பின்னர் என்ன, என்ன, நடக்கும் எனப் புதிது புதிதாகக் கதைகளைப் பலர் பின்னிக் கொண்டிருப்ப தைக் கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். சிலரது கதைகள் பயமூட்டுபவையாகவும் சில கதைகள் விநோதமாக வியப்பூட்டு பவையாகவும் இருக்கும்.
- 56
 
 
 
 
 
 

LDJ60Uršlsó Llsö 6llja) என்றாலும் மாண்டவர்கள் மீண்டும் வந்து சொல்லா தவைகளாக இருப்பதால் அவை அனைத்துமே சாத்தி யமற்ற கற்பனை வளமான கட்டுக்கதைகள் என்றே கூறப்படுகின்றது. செத்தவர்கள் மீண்டும் வந்து சொல்லாது விடுவது கூட நல்லதுதான். அப்படி மீண்டும் வரலாம் என எண்ணிவிட்டால் செத்துப் பார்த்தால் என்ன என்று எண்ணி உயிரை விட எத்தனிக்கும் மனிதர் மலிந்து விடுவர்.
மரணித்தால் என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சியில் மனநோயாளிகள்போல்ஆகித் தற்கொலைசெய்து கொள்ப வர்களும் உண்டு. இறந்து போனால் என்ன நடக்கும் என்று கண்டபடி பேசுபவர்களை நீங்கள் கண்டு இருப்பீர்கள் அல்லவா? உண்மையில், உலகில் வாழ்வாங்கு வாழ்ந்த உத்தமர்கள் மரணத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களது எண்ண அலைகள் இன்னும் வண்ணக் கோலங்களாக உலகை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. நல்லவர்கள் வல்லவர்கள் மரிப்பதில்லை என்பது நிதர்சனமான சத்தியவாக்கு.
சும்மா இருப்பவன் வாழும் போதே மரணித்தவன் போல் இருக்கின்றான். தொண்டு செய்தவன் அண்டம் இருக்கும் வரை இருந்து நிலைக்கின்றான். காலப் புத்தகத்தில் உன் பெயரை ஆழப் பதிவு செய்! அதற்காக உன் வாழ்வு இருக்கும் காலத்தில், குவலயத்தை கோவிலாக்குவது உனது பொறுப்பு என்றே நினைத்துக் செயல்படு! இக் கருத்தை ஏற்பதே சிறப்பு!
- 57.

Page 31
பருத்திபூர் 04ல. ஹார்வரர்
பொழுதுகள் தோறும் வளர வைக்க விழுதுகள் தன் தாய் மரத்தைச் சுமப்பது போல் எம்மை உருவாக்கிய மண்ணை எங்கள் சிறு கரங்களாலேயே தாங்கிக்கொள்ள (փlգեւյլb.
வல்லவன் கரங்கள் பத்துப் பூமியைச் சுமக்கவல்லன.
நல்ல சேவைகள் பேசப்படாமல் போனதில்லை. விரட்டப்பட வேண்டிய சோம்பலும் வீண்வீம்பும் தறித்து எறியப்பட்டால் செய்கிற காரியங்கள் சரிவராமல் போகாது.
சொர்க்கமும் நரகமும் இந்தப் பூமியில் என்பார்கள். கற்பனையில் நாம் காணுகின்ற சந்தோஷமான உலகை ஏன் நம்மால் சிருஷ்டிக்க முடியாது என கேள்வி கேட்காத வரை நாம் இன்னமும் அடிமட்ட வாழ்வுடனேயே ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் என்றே பொருள்படும்.
இன்று எதைத்தான் மனிதனால் சிருஷ்டிக்க முடியாது என்றே கூறுகின்றார்கள். இந்தக் கூற்று இறைவனுக்குவிடுக்கப்படும் சவால் என்றும் கருதப்ப டுவதுண்டு. உண்மையில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதப் படைப்பே விந்தையானது. இந்த சிருஷ்டிப்பு இறைவனுடைய கட்டுப்பாட்டினுள் அமைந்து விட்டமையினால், மனித சிந்தனை வெளிப்பாடுகள் கண்டுபிடிப்புகள் நிச்சயமாக இறைநிந்தனை என்று கருதல் தகாது. தனது எண்ணக் கிடக்கையை இறைவன் தனது சிருஷ்டிகள் மூலம் வெளிப்படுத்துகின்றான்.
- 58
 

மரணத்தின் பின் வாழ்வு குழந்தை பிறக்கத் தாய் தேவைப்படுகிறாள். மழை வருவதற்கும் கடல், மலை, மரங்கள், முகில்கள் சம்பந்தப் படுகின்றன. இவைஎல்லாமே நேரடியாக எமக்குக் கிடை பதில்லை.அது போலவே, கடவுள் தனது உருவத்தின் நிழலாகத் தியாகிகளை,தொண்டர்களை நல்ல வல்ல வர்களைப்படைத்து இவர்கள் மரணத்தின் பின்பும் ாழுகின்ற அருளைப் பொழிந்தும் வருகின்றனர்.
ஒரு முறை வரும் மரணத்தைப் பொருட்படுத்தி அஞ்சுபவன் பல முறை மரணிக்கின்றான்.
'சாகா வரம்' என்பது கூட மரணத்தின் பின்னரும் அவன் ஏற்கனவே நல்வாழ்வு வாழ்ந்துவிட்டதனால் ஏற்பட்ட மங்காத கீர்த்தியின் மறுநாமம் ஆகும்.
சேவை நலம் விரும்பும் பரோபகாரிகள் வருகின்ற இறப்புப் பற்றி சிந்திக்க நேரமின்றி, சொந்தம் என்று எல்லோருக்காகவும் உரை கல்லாகத் தேய்ந்தும் உயர் கின்றான்.
ஆயுள் வரையறை என வாழ்நாளைக் கணக்கீடு செய்வது சரிதானா? ஆயுள் நீளத்தின் சிறப்பு செயலின் விளைவினால் கருதப்பட வேண்டும். பாதிப்பொழுது தூக்கத்திலும், மீதிப் பொழுது விழிப்பிலும் கழிவதுதான்
வாழ்வா?
- 59

Page 32
கருத்திழ் 00. அர்ஷதர்
சரி விழிப்பு நிலையிலும் உறங்கும் மனிதர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? அதே சமயம் உறக்க நிலையி லும் சதாகாலமும் நித்திய இயக்கத்தில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மெய்ஞானிகள், ஆன்மிக வாதிகள் என்றில்லை. சாதாரண நிலையில் வாழ்கின்ற எத்தனையோ பேர் உடலாலும் உள்ளத்தாலும் ஓய்வின்றி இந்த உலகிற்காக வாழ்ந்து வருகின்றார்கள்.
விழித்தபடி உறங்குவது சமானியரின் நிலை: விழிப்பிலும் உறக்கத்திலும் விழிப்பு நிலையில் எழுச்சியு டன் துலங்குவது அறிவு நிலையில் உள்ள ஞானிகள் நிலையாகும்.
மறுபிறப்பிலாவது நல்ல பிறப்பு எடுக்க வேண்டும். இருக்கும் காலத்தில் புண்ணியம் செய்தால்தான்
பாவவினை அகலும் என்று மனிதன் நல்லன செய்ய விரும்புகின்றான். ஆனால் மறுபிறப்பு, பாவபுண்ணிய
வினைப்பயன்கள் உண்டோ? இல்லையோ? என்கிற
நம்பிக்கை நம்பிக்கையீனம் ஒருபுறமிருக்க செய்யப்படு
கின்ற நற்கருமங்களால் ஏற்படுகின்ற திருப்தி இருக்கி
ன்றதே அது கோடி சொர்க்கத்திற்கும் மேலானதே!
மனம் நல்ல விஷயங்களுக்கே திருப்திப்பட்டுப்பழக
வேண்டும். இதனாலேயே நாம் வாழ்ந்த திருப்தி எமக்குப் பூரணமாகக் கிடைக்கும். இம்மை, மறுமை, பாவம்,புண்ணியம் ஆகிய நம்பிக்கைகள் எல்லாமே
- 60
 

மரணத்தின் பின் வாழ் நல்லவைகளைச் செய்தே தீரவேண்டும் என்பதை அறிவுறுத்தவே என எண்ணினால் ஒருவருக்குமே கெடுதல் நினைக்க விருப்பம் உருவாகாது அல்லவா?
வாழ்க்கையின் நோக்கம் கிடைத்ததை உண்டு களித்து, உடுத்தும், படுத்தும் சுகிப்பது மட்டுமா? அக்கம் பக்கத்து நிலைகளையும் கருணை கொண்டு நோக்க வேண்டும். எமது எதிர்கால நிம்மதிகளுக்கு இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும் நிரம்ப தொடர்பு உண்டு. மனித உயிர்களை மட்டுமின்றிதாவரம் உட்பட சகல ஜந்துக்களும் கூட பூமியின் மதிப்பு மிக்க பொக்கிஷங்கள் என்பதை உணர்வோமாக.
ஆதவன் உட்படஅதனைச் சுற்றும் நவக்கிரகங் களும்தனி உயிரை மையமாகவைத்துப் படைக்கப் பட்டதல்ல வைத்துப் இவைகளின் ஈர்ப்பில் முழு உலகமும் சமநிலையில் இயங்குகின்றது இதை உணர்ந்தால் ஒவ்வொரு தனிமனிதனும் பொது நோக்குடனே வாழத் தலைப்படுவான் என்பது உறுதி.
புதிது புதிதாக சிந்தனைகள் வளர்ந்து வருகின்ற உலகம். தனது எதிர்கால சிறப்புகளை நிலைநிறுத்தியே ஆகவேண்டு மல்லவா? ஒருபொழுது வாழ்ந்து மறைவ தல்ல வாழ்வு இந்த வாழ்வு கூட பலயுகப் பரிணாம வளர்ச்சி தான். திடீர் என முளைத்தவன் மனிதன் அல்ல. பண்பு, கலாசார, வளர்ச்சி என்பது எல்லாமே படிப்படியாக
- 61 -

Page 33
பருத்திபூர் 00:நீ்ரவரர் உண்டானவை என்பதை அறிக. எனவே இத்தகைய வளர்ச்சி
மானுட தர்மத்தினைத் தொடர்ந்து பேணும் நோக்குடன் மென்மேலும் உயிர்ப்புடன் வளரவேண்டும்.
ஒவ்வொரு தனிமனிதனின் நாமமும் அவனது மரணத்தின் பின்னரும் பெயர் சொல்லி அழைக்கப்படல் வேண்டும். இந்த உலகில் எல்லோரும் சம பங்காளிகளே!
எனவே இங்கு எனக்கு மட்டுமே இந்தப்பணி, உனக்கு மட்டுமே இந்தப்பணி எனச் சொல்லிக் கடமை களை பிறர் தலையில் சுமத்தக் கூடாது.
உலகில் வாழ்வதற்கு உரிமை பெற்ற மனிதன், ! எல்லா உயிர்களையும் வாழ்வித்தலுக்கும் உரிமையும் கடமையும் உள்ளவன். இவ்வண்ணம் வாழ்ந்தால் மனிதன் மரணத்தின் பின்னரும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருவான்.
தினக்குரல் வாரமஞ்சரி
14.08.2005
- 62
 

மரணத்தின் பின் வாழ்வு
புகழுடன் திகழு:
"புகழ்" பெறுதலுக்கு எல்லை இல்லை. இது விரிவடைந்துசெல்வதுடன், பலருக்கு இது ஒரு போதையாகவும் இருக்கிறது. உண்மையான பணியாற்றுவோருக்கான தேடிவரும் அங்கீகாரமாகவே புகழ் கருதப்படுகின்றது. தன்னலமற்ற சேவை செய்பவனின் புகழ் நிலைக்கின்றது. குறுக்குவழியில் கீர்த்திகளைப் பெற்றுவிடமுடியாது. தகாத வழியில் பெறும் அனுகூலங்கள் பின்னர் அவமானங்களையே அளிக்கும். புகழ் பெறுதலினால் பெறும் திருப்தி தொடர்ந்தும் மனிதனை இயங்கவைக்கும். பெற்ற புகழ் மேலும் ஒருவரை சாதனையாளராக நிலைத்து வைத்திருந்தால் அது பெரும் பேறு
புகழ் கிடைத்தல் என்பது எமது வாழ்வில் நாம் ஆற்றுகின்ற பணியினை மென்மேலும் தொடர்ந்து செய்வதற்கான அங்கீகாரமேயாகும்.
எனவே புகழடைந்ததும் ஒதுங்கி விடுதல்
சிறப்பன்று. புகழடைவதை விட பெற்ற கீர்த்தியைப்
பேணுவதும் சேவைகளைச் சலிப்பின்றி விருப்புடன் - 63 -

Page 34
மருத்திபூர் 00. ஆயிரவநாதர் செய்வதே சிறப்பானதாகும். புகழ் பெறும் நோக்குடனேயே செயலாற்றப் புகுந்தாலும் கூட நோக்கங்கள் வெறும் சுயநலத்திற்கு அப்பாற்பட்டதாயும், சமூகத்திற்கான அர்ப்பணிப்பிற்குமாய் அமைதலே சாலச் சிறந்தது எனக் கொள்க!
தூய்மையும் வாய்மையும் நிறைந்தவர் வாழ்வில் புகழ் பூப்பது புதுமையே அல்ல. எனினும், பலர் இதனைச் சுலபமாகச் சேர்க்கப் பிரியப்படுவது வேடிக்கையானதும், வினோதமானதுமாகும். இதன் பொருட்டு புகழ் சேர்க்க மார்க்கம் புரியாமல் நேர்மை, உண்மைகளை சேய்மை யாக்கிப் பிறரிடம் எதனைப் பிடுங்கலாம் எனக்குறியாக நோக்குவது மன்னிக்கக் கூடிய செய்கையல்ல.
மற்றவன் முதுகில் பயணம் செய்ய விரும்பினால், சொந்தக் கால் சோர்ந்து போய் நடக்க மறந்து நடைப்பின மாவார்கள். கீர்த்தியைத் தேடி ஓடி அலையாவிட்டாலும், அது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் என்று பேசுபவர்களும் உண்டு.
ஆத்ம சாந்தியும் அமைதியான சுபாவமும் நேர்மை வழியில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் நற்பெயரும்
தானாகவே கைவரும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கிடைக்கின்ற அனைத்தும் முறைப்படி வழங்கப்பட்டு
வரும் போது புகழ்பற்றிச் சான்றோர் அலட்டிக் கொள்ளவே
- 64
 

LDUGOO)556 it lar 6).IIIb6). மாட்டார்கள். செய்கின்ற கருமங்களுக்கு ஏற்ப எல்லோ ருமே அவரவர் பங்கினைப்பெற்றுக்கொள்வார்கள். இது இயற்கையின் நியதி. கொடுப்பதைத்தான் பெற முடியும் கொடுக்காதவைகளை எடுக்க முனைதல் பாவம்.
பதவியில் அந்தஸ்தில் ஒருவன் ஒருநிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர விரும்புவதில் எந்த விதமான தவறும் கிடையாது. இது மனிதருக்குள்ள உரிமையுமாகும். ஏன் கடமையும் கூட ஒரே நிலையில் அப்படியேஉட்கார்ந்து கொள்ள நினைத்தால் முன்னேற்றம் என்பதே முடங்கி விடுமல்லவா?
முயன்று கொண்டிருப்பவனை உறங்கிக் கொண்டி ருப்பவன் முட்டாள் என்று கூற முடியுமா? படிப்படியான வளர்ச்சியின் மூலமே நிலைத்து நிற்கக் கூடியதான உயர்ச்சியைக் காணமுடியும். நாம் தொடர்ந்தும் என்றும் முயன்று கொண்டிருக்க வேண்டியவர்களே!
எனினும் அடுத்தவனை விமர்சிப்பது இஷ்டமான பணியாகி விட்டது. கெட்டவனையும் நல்லவனையும் எதிர்மறைக் கருத்துக்களால், கண்டபடி தூற்றியும், ஏற்றியும் பேசுதல் நாங்கள் எதிர்பார்க்காத நிகழ்ச்சிகள் அல்லவே?
உடலை வருத்தி உழைத்து வேலை செய்வதும் அறிவு பெறுவதற்காக கல்வி கற்பதும் மற்றும் பணிகளை இயன்ற வரை எல்லோராலும் செய்து விட முடியும்.
- 65

Page 35
கருத்திபூர் பல அழிரர் நோயாளர், அங்கவீனர்கள், இயலாதவர்கள் ஆகிய இவர்களை விடுத்து சகல விதமான தேக ஆரோக்கியம் உள்ளவர்கள் போதிய மனவளம் இருந்தும் சமூக அந்தஸ்தில் தம்மை உயர்த்திக்கொள்ள முனையாதது ஏன்?
இருப்பினும் தன்னால் முடிக்கக் கூடியவைகளைத் தானே செய்யாமல் அடுத்தவன் அதனைச் செய்து புகழடைந்தால் மனம் பொருமுகின்றான்.
"என்னோடு ஒன்றாகப் படித்தவன் ஒன்றுமே தெரியாதவன் இப்போது பாருங்கள் அவன் என்ன மாதிரி பெரிய மனுஷனாகி விட்டான். ஹூம். எல்லாம் ஒரு நேரம் விதி. அவன் பக்கம். எங்களைக் கடவுள் எங்கே பார்க்கின்றார். நல்லவனுக்குக் காலமில்லை.” என்று அநாவசியமாகப் பேசிக் காலத்தைக் கரியாக்கி மனத்தை உருக்குலைப்பவர்கள் தங்களைப் பற்றிய சுயதரிசனம் பெற விரும்பாதவர்கள் என்பதே உண்மையாகும்.
விதியைப் பேசி வளைவதும், பழியை அதன் மீது நுளைப்பதும் கையாலாகாத்தனம் என்று உணராத வரை இத்தகைய பேச்சுக்களைத் தொடர்ந்தும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். தடைகளை உடைத்து, பாதை அமைத்துப் புதுப்பாலம் போட்டுத்தான் முன்னேறியவர்கள் புகழைக்குவித்தார்கள்.வேலைசெய்தால்உடல்களைக்கும்
- 66
 

மரணத்தின் பின் வாழ்வு ரவியர்வைவரும், உடல்நலம் பெறும் வெறுமனேசும்மா இருப்பவனுக்கு உஷ்ண காலமின்றியே வியர்வை வந்தால் அது ஏதோ நோயின் அறிகுறியாகும்.
மற்றவன் புகழ்கண்டு வெறுப்புற்று மனம் களைப்பது, சும்மா இருப்பவனுக்கு உண்டாகும் வியர்வை போல் தான். அடுத்தவர் நேர்மை கண்டு துணுக்குறுவதும் துன்பப்படுவதும் ஒரு மனநோய் தான். பொறாமை கூட மன நோயின் வடிவமா?
அதனால் நல்லெண்ணங்களைப் பாய்ச்சினால் மனம் பூவனமாகிவிடும் அல்லவா? ஆனால் அநீதியைக் கண்டு மனம் வெதும்புதல் என்பது தீமைகளைக் கண்டு நாம் தொடுக்கப் போகின்ற போரின் நல்ல சமிக்ஞை யாகும். இந்த உள்ளக் குமுறலினூடாகவே எமது இலட்சியப் பயணங்கள் ஆரம்பமாகின்றன.
இத்தகைய சத்திய உணர்வினால் உந்தப்பட்டு உழைத்த தலைவர்களினாலேயே உலகம் விழித்தபடி இருக்கின்றது. அண்ணல் மகாத்மா காந்தியடிகள், அடிமைத் தழையறுத்த ஆபிரகாம் லிங்கன் போன்ற தேசபிதாக்கள் புகழ் பெறும் நோக்கத்துடன் உழைக்கப் புறப்பட்டவர்கள் அல்ல. இவர்களின் ஒரே சிந்தனை மக்கள் பற்றியதே!
எத்தனையோ பலத்த போராட்டங்கள், தோல்விகள், சவால்கள் மூலமே உலக உத்தமர்களாக போற்றப்
- 67

Page 36
பருத்ரிபூர் 00.2ற்றுதாரர் பட்டார்கள்.இவர்களின் வரலாறுகள் எமதுவாழ்விற்கும் நாம் பெறப்போகும் கீர்த்திகளுக்கும் வழிகாட்டும் உரமேற்றும். ஒருவரது உழைப்பிற் கேற்ற பணம் கிட்டாது போனால் “என்னடா வாழ்வு இது" என மனம் வெதும்பிப் போகிறது. அவனுக்கு வாழ்க்கையே பிடித்தமில்லாமல் போகின்றது.
ஏதாவது ஒரு வெற்றிச் சுவடு தென்படும் போதே வாழ்க்கையின் வெற்றி ஆரம்பமானதாக தெரிய ஆரம்பிக்கின்றது. இந்தத் தூண்டல் உணர்வினை எதிர்பார்த்தே மனிதன் இயங்க விரும்கின்றான். கிடைத்தே தீரும் என்கின்றவைராக்கியமே வேண்டும். இதனால் ஆரம்ப கால சோதனைகளில் மனது களைப்படையவே மாட்டாது. தொடர்ந்துவெற்றிக்கான சில அறிகுறிகள் துலங்கப்பட்டதுமே பயணத்தின் வேகமும் துரிதப்பட்டு விடும்.
இது பற்றிப் பல சிந்தனையாளர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள். தடைக்கதவுகளில் ஒன்று விலக்கப் பட்டதும், அதனுடாகப் பயணம் செய்ய உடன் புறப்படுங்கள். எதிர்ப்படும் சவால்கள் தங்கள் தோல்வி களை ஒப்புக் கொண்டு ஓடி மடிந்து விடும்.
எனவே,
• ஆரம்ப கால அசட்டுச் சந்தேகங்கள்,மாய உணர்வுகள், எதிர்மறைக் கருத்துக்கள், விமர்சனங்களில் போதியளவு கவனமெடுத்து முன்னேறுங்கள்.
- 68
 

LDJIGOUTöbóksör LóksöI GITT Þ6 தடைகளின் சாதக, பாதகத் தன்ைைமயை அறியாமல், அதன் பின் ஓடுவதுவிவேகம் அல்ல! அனுபவ ஞானம் பெற்று அறிவுள்ளவர்களின் ஆற்றல் பற்றிய விஷயங் களை அறிந்து கொள்க.
புகழ் வந்துகொண்டிருக்கும் போதுவாழ்க்கையில் மனிதனுக்கு ஒரு ஒட்டுதல் உணர்வும் மேலோங்குகின்றது. நல்ல பெயரை நியாயமான வழியில் எடுப்பதுதான் புகழ் என்பதன் அர்த்தமாகும்.
எனக்கு வாழ்க்கை பிடித்தமாகிவிட்டது. எல்லாமே கிடைக்கின்றது என்ற நிலையுடன் வாழ்ந்து கொண்டிரு க்கும் போது பல செல்வங்கள் தானாகவே சேருகின்றன. இதனூடே புகழ் எனும் கீர்த்தியும் சேர்ந்திணைந்து விடுகின்றது.
தனக்கென்ற செல்வம் தனிப்பட்ட நலனுக்காக பொருளிட்டுவதற்காகவே பெற்றுக்கொண்ட கல்வி மட்டும் புகழைத் தந்துவிடுமா? உனக்கு பணம், கல்வி இருந்தும் நீ என்ன அடுத்தவனுக்குச் செய்தாய்? என உலகம் கேட்டால் என்ன சொல்ல முடியும்?
இந்தக்கேள்வியை நாம் உணர்ந்துவிட்டால் போதும். பொது நோக்கும் அதற்கான உழைப்பும், செயலாக்கமும் நற் பெயரை எமக்குப் பெற்றுத் தந்துவிடும். தியாக உணர்வுடனான பணியே மேன்மையானது.
- 69

Page 37
பருத்திபூர் 04ல. லுயிரவரர்
நல்ல கருமங்களினூடாக சமூகத்திற்கு எதுவுமே செய்யாமல் எனக்கு இந்தப் பெயர் புகழ் கீர்த்தி எதுவுமே வேண்டாம் என உதட்டளவில் கூறி குறுக்கு வழியில் காரியம் பண்ணுவதும் ஒரு வாழ்வா? இந்தஉலகில் குறுக்குவழியில் காரியமாற்றத்தான் எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே? அரசியல் வாதிகளின் கால்களைப் பிடித்தல் யாராவது சமூகத்தில் பெரிய மனிதராக இருந்தால் அவர் பின்னே சுற்றித் திரிதல் ஏதாவது மன்றங்கள் நிறுவனங்களில் சலுகைகள் கிடைப்பதற்காக மட்டும் இணைந்து கொள்ளுதல் போன்ற கருமங்களில் சிரமம் பாராது உள்நோக்கத்துடன் சேர்ந்து கொள்பவர்கள் சொற்ப காலத்தில் சொகுசாக வாழ்ந்து விடலாம். இது நிரந்தரமில்லை.
வேதனையான விடயம் என்னவெனில், மிகவும் படித்த நல்ல மனிதர்கள் கூட தங்கள் இயலாத் தன் மையினால் இவை பற்றி நன்கு தெரிந்து கொள்ளாமல் போவதும் சிலவேளை அதனுள் உட்புகுதலும் வருத்த த்திற்குரியதே. சொன்னபடி கேட்டால் சொர்க்க வாழ்வு என்பதற்காககுறுக்கு வழியில் செல்வதை நியாயம் கற்பிக்க முடியாது. குறுக்குவழிப் பாதைகள் கத்தரிக்கப்படல் வேண்டும்.
கீர்த்தி பெறுவதே ஒரு புனிதமான யாத்திரை போல நல்ல மனதுடன் ஆரம்பிக்க வேண்டும்.
- 70 -

மரணத்தின் பின் வாழ்வு அத்துடன் புகழ் வரவர மனிதனுக்கு அவதானம் தவைப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பணிவு
ன்றியமையாததாகும்.
புகழ் பெற்றவனைப் பார்த்துப் பொறாமை, சூழ்ச்சி ய்பவர்களும் உருவாகும் சந்தர்ப்பங்கள் உண்டு. எங்கே வர்கள் தப்புச் செய்கின்றார்கள்? என்று கண்ணில் ாண்ணையை விட்டாற் போல் விழித்தபடியே, பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்காவது ஒரு துரும்பு பிழையினைக் கண்டுபிடித்ததும் கறுப்பு வண்ணம் பூசி விடுவார்கள். ாழ்ப்புணர்வினால் செய்யப்படுகின்ற அகழ்வு வேலைகள் ராளம். இவர்களில் பலர்நேரில் தெரியமாட்டார்கள். மாய உருவம் கொண்ட மாயாவியை விட வல்லவர்கள்.
கூட்டம் போட்டுப் பேசி நேரில் வாதிட்டால் பரவாப் யில்லை. ஆனால் எச்சரிக்கையின்றி நுளைந்து தைத்துத் துன்புறுத்தும் இவர்களிடம் கீர்த்தி பெற்றிட்ட நேர்மை யாளரும் படும் அவஸ்தைகள் அநேகம். அத்துடன் யாராவது நல்ல மதிப்பும் மரியாதையும் ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் அவர்களைச் சுற்றி நல்லவர்களும், பொல்லாதவர்களும் சூழ்ந்து கொள்வார்கள். இந்தப் பொல்லாத பேர் வழிகள் காரியமாற்றுவதற்குச் செய்கின்ற தொண்டுகள் ஏராளம். யார் மூலம் எவர் புகழ் வசதிகளைப் பெற்றார்களோ அவர்கள் பற்றியே மட்டமாகப்பேசி படிப்படியாக நல்ல மனிதர்கள் மனதிலும் விஷ விதையினை விதைத்துவிடுவார்கள். முகஸ்துதிக்காக அவர்
- 71 -

Page 38
கருத்தியூர் அ.ை அழிவகுரர் சம்பந்தப்படாத விஷயங்களில் ஈடுபடுத்தியும் அவர்களை அவமானப்படுத்தியும் விடுவார்கள்.
அதுமட்டுமின்றி, உண்மையான அக்கறையுள்ளவர் போல் நடித்துச் சுரண்ட வேண்டியவைகளைக் கால, நேரம் அறிந்து கறந்து விடுவார்கள். மனசை மறுபக்கம் திருப்பும் இவர்கள் விஷயங்களில் நல்ல பெயர் எடுத்தநல்லோர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். புகழ் ஒரு போதையானது என்பார்கள். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நிலையில் மேன்மைகள் உடனே கிடைத்துவிட்டால், மனம் சலனமடையச் சந்தர்ப்பங்கள் வந்துவிடுகின்றன. யாராவது நன்றி செய்தால் பிரதியுபகாரமாக ஏதாவது செய்துவிட மறந்துவிட்வே எண்ணுகின்றனர். கூடிய வரை இவர்கள் பிரதியுபகாரம் செய்தலை நிராகரிக்கும் எண்ணமுடன் நடக்கின்றார்கள்.
திடமான மனம், நல்இலட்சிய நோக்கு, சேவை அச்ச உணர்வின்மை, செய்யும் செயல்சார்ந்த அறிவு, கல்வி, நல்லவர்களைப் பெரியோர்களைத் துணையாக வைத்திருத்தல், தேவையற்ற விடயங்களுக்காக அவாப் படாமை, திட்டமிட்ட எதிர்காலப் பணிகள், காலத்தை விரயம் செய்யாமை போன்ற குணாம்சங்கள் நாம் கீர்த்தி பெறுவதற்குரிய பூரணமான காரணியாகும். ஆற்றல்களை எமதாக்கினால் புகழும் பெருமையும் தானாகவே கிடைத்து
س 72 -
 

மரணத்தின் பின் வாழ்வு விடுகின்றது.பகுத்துணராத செயல்களினால் நாம்
பூரணப்பட்டு விட முடியாது.
பல்திசைக் கருத்துக்கள், சிந்தனைகளைக் கேட்போம். எமக்கு வடிவம் கொடுக்க வேண்டியவர்கள் நாங்களேயாவோம். உலக ஞானஅனுபவம் மூலம் முதிர்ச்சி காணமுடியாமல், அதற்காக முனையாமல் விட்டால் உலகம் எம்மைக் கண்டுகொள்ளுமா?
பரந்த உலகைப் பார்க்க விழைய வேண்டும். அதனூடாக எம் சேவைகளைப் புகுத்த வேண்டும். அப்போது தான் கீர்த்தியும், கெளரவமும் தானாகவே இணைந்து மணம் மிகு வாழ்விற்கு அழைத்துச் சென்றுவிடும்.
உழைப்பதும் உண்பதும் உறங்குவதும் மட்டும் வாழ்வாகுமா? மற்றவர் மெச்சும் படியாக, எவருக்காவது எங்கள் மூலம் நல்லவனவற்றைக் கொடுக்கப்படும் படியாக வாழ வேண்டாமோ?
• சிரத்தையுடன் கூடிய சிரமத்துடனும் ஆற்றுகின்ற பணிக்கு எம்மை இயங்கச் செய்வோமாக! ஒரே விதமாக வாழ்ந்து போக, உங்களுக்கு சலிப்புத் தட்டிவிடாதா?
• கொஞ்சம் விறுவிறுப்பான, உத்வேகத்துடன் புதிதாக எதையாவது செய்ய விருப்பப்பட வேண்டாமா?
- 73 -

Page 39
பருத்திபூர் பல. ஆயிரவதர்
புதியவைகளை, புதிய சிந்தனைகளை புதிய இளைய
உலகம் எதிர்பார்க்கின்றது.
• கொஞ்சம் வேகமாக அதுவும் விவேகமாக, புதிதாகச்
சிறப்பாக
அதனை முறைப்படி ஒழுங்காக பணிவாக ஏற்புடையதாகச்
செய்தால் புகழுடன் திகழுவீர்கள்.அதனூடாக ஏனைய
வர்களையும் உங்களுடன் இணைத்துக் கொண்ட வர்களாவீர்கள்.
தினக்குரல்
ஞாயிறு மஞ்சரி
30.10.2005
- 74
 

மனிதனை அவனது எண்ணங்கள் ஆளுகின்றன. ஒருவரது வாழ்க்கைத்தரத்தை அவர்களது "இயல்புகள்" இயம்பும். தூய மனக்கட்டுப்பாடுகள் செயலில் ஒழுக்கத்தை உருவாக்கும். தவறுகளை ஒப்புக்கொள்ளாதவன் பொய்க்குத் துணை நிற்பவன். தூயவனாக வாழும்போது இறை சித்தத்துடன் நாம் இயைவுபட்டவர்களாவோம். அகங்காரம் அலங்காரமான இயல்பு என்றும் எனினலாகாது. ஆணவமுனைவு அகன்றால் அன்பான இயல்பு அரவணைத்துக் கொள்ளும்,
ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை அவருடைய "இயல்புகள்'இயம்பும். எவர் ஒருவர் சிறப்பாக வாழ்வதும் அன்றி ஏதாவது கண்ணியக் குறைவாக வாழ்வதும் அவர்தம் சொந்த இயல்புகளின் தாக்கத்தால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. "இயல்பு" இயற்கையான குணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.
மனிதனை அவனது எண்ணங்களே ஆளுகின்றன என்றுதான் பெரியவர்கள் அடிக்கடி கூறிக்கொள்வார்கள்.
- 75

Page 40
பருத்ரிபூர் 040. ஆர்வரர்
எங்கள் இயல்புகளை மனக்கட்டுப்பாட்டுடன் ஒழுங்குபடுத்தி செயல் உருவில் ஒழுக்கத்துடன் இயைபு படுத்தினால் எங்களால் சாதிக்க முடியாதது எதுவுமே யில்லை.
ஒழுக்கம் என்பதே ஆன்ம பலத்தை உண்டுபண்ணி விடுகின்றது. எமது உள் மனத்தை பிறர் கண்டு கொள்ள முடியாது. ஆனால் எம்மால் வெளிப்படுத்தும் நடவடிக்கை கள் எல்லாமே எங்களை இனம் காட்டி நிற்குமல்லவா?
எனவே எமது நல் இயல்புகள் எம்மை வெளிக் காட்டும் நல்ல ஆடை அணிகள் போலத்தான் என உணர்க உள்ளே அழுக்கான உள்ளத்துடன் கவர்ச்சிகர மான அலங்காரத்துடன் அகங்காரமாக நடமாடுவதனால் எமது உண்மையான இயல்புகளை மற்றவன் கண்டு கொள்ளமாட்டான் என எண்ணுதலே தப்பானதுதான்.
மனிதர்கள் எல்லோருக்கும் உருவவேறுபாடுகள் இருந்தாலும்கூட அனைத்து மாந்தர்களுமே நற்குணவான் களாகினால் அவர்கள் ஒருவராகி அன்பினால் பிணைந்த வராகிவிடுவர். எனவே நாடுகள் இனங்கள் சாதிசமயங்கள் என்கின்ற பிரிவுகள் எல்லாமே நல்ல இயல்பு உள்ள மாந்தர்க்கு ஒரு பிரச்சனையாகத் தெரிவதே யில்லை.
பேதமறவே எல்லோரையும் நோக்குவார்கள்.
- 76 س
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரணத்தின் பின் வாழ்வு இயல்பாகவே நல்ல பண்புள்ளவர்களையும் பார்க் கின்றோம். ஆனால் எந்நேரமும் தீய சிந்தனையுடன் கீழ்த்தரமானவர்களையும் கண்டு கொண்டிருக்கின்றோம். நாம் பொதுவாக ஒருவரின் நடத்தைக்கு அவர்கள் பரம்பரை இயல்பு சுற்றாடலின் தாக்கம் வளர்ப்பு முறை சமூக அமைப்பு போன்றவைகளே காரணம் எனச்சொல்லி விடுவோம். ஆனால் நல்ல ஒழுக்கமுள்ள தாய் தந்தை யர்க்கும் தறுதலையான பிள்ளைகள் பிறப்பதுண்டு. “என்னதான் புத்திமதி சொன்னாலும் அவன் கேட்பதில் லையே” எனக் குமுறி அழும் பெற்றோரைக் கண்டிருக்கின் றோம். ஆனால் இதற்குக் காரணம் அந்தப் பிள்ளையின் கூடாத நட்பு என்றும் காரணங்கள் கூறப்படுவதுண்டு.
மிகவும் படித்த அறிவாளிகள் கூட எவ்வித ஆராய்வுமின்றி இன்னும் ஒருவரை நம்பி அவரிடம் தம்மை ஆட்படுத்திக்கொண்டு விடுகின்றார்கள். இது கூட ஒரு சரணாகதிபோல், அவரே கதி என்று நம்புவதுடன் தமது சொந்தப் புத்தியை சந்தடியின்றித் தொலைத்தே விடுகின்றனர். இத்தகையவர்கள் யார் என்ன உண்மை யைச் சொன்னாலும் அவர்கள் செவிக்கு எல்லாமே கேட்காது. ஆனால் தான் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர் பேச்சை மட்டும் கேட்கும், இயல்பினராய் மந்த புத்தியில் மதிமயங்கி நிற்பார்கள். பாரதூரமான விஷயங் களைக் கூட ஆராயமல் மற்றவர் சொல்கேட்டுப்பெரும் பழிக்கும் ஆளாகிவிடுவதால் சில சமயம், நகைப்புக் கிடமானவர்களாக, நிரந்தர தோற்றம் கொண்டு விடுவர்.
- 77.

Page 41
aருத்திர் 00. அர4
தன் புத்தியை மறப்பதே இயல்பாகக் கொண்ட வர்கள் ஒருபுறம் இருக்க இன்னும் ஒருசாரார் தமது தவறு களை ஒப்புக் கொள்ளாத இயல்பினராக இருப்பதுடன் அதுவே சரியானது என விதண்டாவாதம் செய்வார்கள். சில சமயம் நல்லவர்கள் சிலர் கூடப் பெரும் தவறு செய்யும் பட்சத்தில் ஏன்"ஐயா இப்படிச்செய்தீர்கள்” என்று கேட்டால் தான் செய்தது தமக்குத் தவறாகத் தெரியவில்லை என்பார்கள். இது ஒரு பரிதாபகரமான நிலை.
ஆனால் பலர் இன்று தங்களது செயல்கள் இன்னது என்று தெரியாமலேயே தவறுகள் எது சரியானது எது எனத்தெரியாமல் குழம்பியபடி ஏதேதோ செய்கின்றார்கள் ஆயினும் வேண்டுமென்றே தவறுகளை ஒருவர் செய்திட் டாலும் கூட அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட வர்களே!
அதிகமான நபர்கள் கூறும் வாசகம் இதுதான் “என்னைப் பொறுத்தவரை இது தான் சரி” என்பார்கள். தங்கள் இயல்பை மாற்றியமைக்க ஒப்புக்கொள்ளாமல் அதே சமயம் செய்கருமத்தில் போதிய விளக்கம் அனுபவம் அதன் பாதிப்பு பற்றிப் புரிந்து கொள்ளாமல் எனது மனச்சாட்சிப்படியே நடக்கின்றேன் என்று ஒருவர் சொன்னால் அதை நாம் எப்படி ஐயா ஏற்றுக்கொள்ள முடியும்? சிலருக்குச் சில விஷயங்களைப் புரிய வைப்பதே
சிரமம் தான்.
- 78.
 

னத்தின் பின்வாழ்
பரந்த ஞானம் உள்ள ஆன்மீகவாதிகள், ஞானிகள், தம்மை நாடி வருபவர்களின் நிலையறிந்து அவர்கள் இயல்புக்கேற்ப உபதேசங்கள் செய்வார்கள். ஒரு துடிப்புள்ள இளைஞனின் இயல்புகள் வயோதிபர்களுக்கு இருக்குமா? ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ப பக்குவநிலைகள் மாறுபாடாகவே இருக்கும். எங்காவது ஓரிருவர் இள வயதில் முதியவர்கள் போல நடப்பதும் முதியவர்கள் வாலிபர்கள் போல் அவர்கள் செய்கைகளையே மேற்கொள்வதுமுண்டு.
ஒரு ஆன்மீக ஞானியிடம் ஒரு அன்பர் தமது மகனை அழைத்து வந்தார். வாலிபனான அந்த இளைஞனை ஞானி முன் நிறுத்தி வணங்கி "சுவாமி இவன் என் மகன் எங்கள் சொற்களைக் கேட்பதில்லை படிப்பதுமில்லை சதா நண்பர்களுடன் கூடிச் சகல கெட்டபழக்கங்களையும் பழகி விட்டான். இன்று இவனை நான் கெஞ்சிக்கூத்தாடி உங்களிடம் அழைத்து வந்துவிட்டேன். நீங்கள்தான் தயவு கூர்ந்து இவனுக்கு நல் வழிகாட்ட வேண்டும்” என்றார்.
அந்த ஞானியோ அருள்கூர்ந்த பார்வையுடன் அந்த இளைஞரை நோக்கினார். அப்பா, உமது தந்தை யார் சொல்வதை நான் ஏற்கவில்லை நீ இயல்பாகவே நல்ல வனாகவே பிறந்திருக்கின்றாய் உன் குறை என்ன” என்று கேட்டவாறே அவன் தலையை வருடியபடி பேச லானார். அவ்வளவு தான் அக்கணமே அந்த இளைஞன் அவர் வசமானான். அவரது உபதேசங்களைச் செவிமடுக்க
- 79

Page 42
பருத்திபூர் 240.9ழிறுததர் லானார். மேலே சொன்ன சம்பவங்கள் போல சகல
மதத்தலைவர்கள் ஞானிகள் தமது அருள் நோக்கினால் ஒருவரது தவறான குண இயல்புகளையே மாற்றிய மைத்ததாக நாம் படித்திருக்கின்றோம்.
பொதுவாக ஒருவரது குணங்களில் தீய குணங்கள் குறைந்தும் நற்பழக்கங்கள் மேலோங்கியும் இருந்தால் அவர் தன் தவறுகளை உணர்ந்து எப்படியும் மேல் நோக்கி வந்துவிடுவார். ஆனால் துஷ்டபழக்கங்கள் மேல்நோக்கி நற்பழக்கங்களை அரிதாக்கி அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்களோ சமூகத்தில் குற்றச் செயல்களைச் செய்யும் நபராக மாறிவருகின்றனர்.
உண்மைகளை நாம் நேசிக்க ஆரம்பித்ததுமே குரூர சிந்தனைகள் சூரியனைக் கண்ட பனி எனக் கழன்று விடுகின்றன. ஒழுக்கமாக வாழுபவனால்தான் நல்ல வசனங்களைப்பேச முடிகின்றது.
பிரார்த்தனைகள் செய்யும் போது நாம் பாடல்களை வசனங்களை உச்சரிக்கும்போது எமது இதயத்தின் ஓட்டைகளை அடைத்து அதனுள் இறை ஒலியை மட்டுமே அடைத்துப் புகுத்திநிலை நிறுத்தினால் எம் உள்ளே சகல நற்பண்புகளும் தானாக உற்பத்தியாகும்.
• எனது தகாத இயல்புகளை நீக்கிட எனக்கு வல்லமை தா! என இறைவனிடம் விண்ணப்பிக்க
- 80 -
 

மரணத்தின் பின் வாழ்வு
• நாம் அனைவருமே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட மேன்மை தகு உற்பத்திகளே என மனதார நம்புங்கள். இந்த நம்பிக்கையே எல்லா வல்லமை யையும் நல்ல சிந்தனைகளையும் வளர்க்கும்!
"வாழ்க்கை”, என்பது, சுவர்க்கத்தை நோக்கிய பயணம் என்று எண்ணுங்கள். சுவர்க்கம் செல்லும், நாம் தீய நோக்கங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை அல்லவா? எனவே "நல்ல வாழ்வை அமைக்க, தீய எண்ணங்களை இல்லாதொழிக்கும், இயல்பினை அருள், தேவா" என இறைவனிடம் இறைஞ்சுவீர்களாக!
* எங்கள் கடமைகளை நாம் ஒழுங்காக நிறைவேற்று வதற்காக நாம் எம்மை திருத்தியமைத்த பிறவியாக மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் எமது குணங்க ளை இனம்கண்டு நல்வழி சார்ந்த ஆன்மாவாக்க முனைவோமாக!
மேலும் நாம் எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வது வாதிடுவது என்று எதிர்மறையாகவே சமூகத்துடன் போராடுவதும் நல்லதல்ல. பலபேர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு நல்ல காரியம் செய்யும்போது ஒருசிலர் இடையில் எழுந்து எந்த சம்பந்தமும் இன்றிக் கண்டபடி எதிர்க் கருத்துக்களை வேண்டுமென்றே சொல்வதுண்டு. இப்படிப்பட்ட பேர்வழிகள் தங்கள் முரண்பட்ட கருத்துக்களையே
-81 -

Page 43
மருத்திபூர் பல ஹஜிரவநாதர்
சொல்வதைத் தமது இயல்பு என்று உணராமல் அது தமக்கான உரிமை திறமை என்று தப்பான எண்ணத்தைத் தம்மகத்தே வைத்திருக்கின்றார்கள். இத்தகையவர்களில் சிலர் தங்கள் வீடுகளில் மட்டும் வாய்மூடி மெளனிகளாக இருப்பார்கள் இன்னும் சிலர் எங்கும் எப்போதும் கண்டபடி பேசுவதே தம் தங்களது வாழ்நாளின் இலட்சியம் என்று கருதிச் செயல்படுவார்கள். எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் ஆதரிக்க வேண்டியன வற்றைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதும் அவசியப் பணியாகும்.
நாம் மட்டும் உலகில் தனித்துவமானவன், எவர் சொல்லுக்கும் நான் ஆட்பட்டவன் அல்ல எனச்சொல்லி எம்மால் வாழ்ந்து விட முடிவதுமில்லை சரியாக ஆராய்ந்து பார்த்தால் மனிதன் வெற்று உடம்புடன் தான் இருக்கின்றான். கடவுள் தந்த உணவும் உடையும் அறிவும் அவனது நிர்வாண நிலையை நீக்கி ஓர் இயங்கும் ஒரு பொருளாக யந்திரமாகச் சீவிக்கச் செய்கின்றது. இந்த லட்சணத்தில் தங்கள் மெய் அறிவு ஞானத்தை வளர்த்து நல் இயல்பினராக வாழாது விட்டால் எமது பிறவிக்கு ஏது அர்த்தம் உண்டு நண்பர்களே!
விலை கொடுத்து வாங்க முடியாத இறைவன் சாம்ராஜ்யத்தினுள் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். இங்கு அன்பு, கனிவு என்கின்ற நறுங்கனிகள் பூத்துக் குலுங்குகின்றன. தெய்வீகப் பேராற்றின் குளுமையில் இவை வளருகின்றன. அருட்காற்றின் சிலுசிலுப்புடன்
- 82 -
 

மரணத்தின் பின் வாழ்வு குளிர்ந்த அருள் நீரைப் பருகுகின்றோம். தேகங்கள் இறை ஒளி, உஷ்ணத்தினால் பளபளக்கின்றன. இந்தக் கடவுள் கடாட்சத்தை உணர்வீர்களாக தோழர்களே!
ஒவ்வொரு தனிமனிதனும் தூயவனாக வாழும் போது இந்த ஜகம் முழுமையும் ஆண்டவன் எண்ணங்களு டன் இயைபுபடுகின்றன. தர்மம் நியாயம் கோலோச்சும் போதுதான் ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரம் பெற்றவனாகின்றான். நாம் எல்லோருமே, ஒரே காற்றைச் சுவாசித்து ஒரே ஒளியினுள் பிரவேசித்து ஒரே தண்ணீரைப் பருகியவராக இருப்போம். அந்த நல் உணர்வு பரிணமித் தால் ஏகமாய் நல் இயல்பு நற்சிந்தனையுள் எல்லை யில்லா பெரும் களிப்புடன் இறை அருள் கூடிவரப் பெற்ற வர்களாகி விடுவோம்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 09.11.2008
-83

Page 44
மருத்திபூர் (40, ஹார்வரர்
* R *
தகுதியின்றித் தந்திரோபாயங்களால் கெளரவம் பெறுதல் நிரந்தரமனதன்று. தூய வாழ்வின் அடையாளம் அவர் பெறுகின்ற கெளரவங்களேயாம். சேவை செய்பவர்கள் தமக்கு மதிப்பு அளிக்கப்படவேண்டுமென எதிர்பார்ப்பதுமில்லை. தகுதியுள்ளவர்களைப் போற்றாமல் விடுவது அழகல்ல. துன்மார்க்கர்களைத் துதி செய்து கிடைக்கும் கெளரவம் வெட்கப்பட வேண்டியது. திறமைசாலிகள் மறைந்து இருப்பது சமூக வளர்ச்சிக்குக் குந்தகமானது. மனிதனின் அதிஉயர் அடையாளம் உயர் பண்பினால் கிட்டும் கெளரவமாகும். "சதி” செய்து மதிப்பு பெறவிழைந்தால் விதி வீழ்த்தும்.
ஒருவர் தமது சுயமுயற்சியால் தூய வாழ்க்கை முறையின் அடையாளங்களால் “கெளரவம்” பெறுதலே அரும் கொடை.
ஆயினும் ஒருவர் தாம் சார்ந்த குடும்பப் பின்னணியி னாலும் மறைமுகமாகவும் தந்திரோபாயங்களாலும் குறை நிரம்பிய மனிதர்களும் கெளரவம் பெறுதல் ஒன்றும்
-84 -
 
 
 
 
 
 
 
 
 
 

மரணத்தின் பின் வாழ்வு அரிதான விஷயங்களே இல்லை என்னுமாற்போல் தகாத காரியங்கள் எல்லாமே அரங்கேறிக் கொண்டிருப்பது தரம் கெட்ட செயல்.
தனக்கு எப்படியாவது மதிப்பு அளிக்கப்பட்டேயாக வேண்டும் என்பதில் குறியாகவும் அதீத தாகமாகவும் கொண்டிருப்பவர்கள் பலரும் தங்கள் தகுதி தராதரம் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கத் தங்களுக்கே அவகாசம் கொடுப்பதில்லை. யாராவது "உங்கள் தகுதி என்ன” என்று துணிந்து கேட்டால் கேட்டவர்களையே துவம்சம் செய்யுமாற்போல் கேள்வி கேட்பதுடன் அவர்களுக்கு என்ன என்ன கெடுதல் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வதற்குத் துணிந்து விடுவார்கள்.
ஆனால் எவருமே, ஒருவர் குறைபாடுகளை அவர்கள் மனம் உடைந்து போகும் வண்ணம் கேட்டு விடுதல் மனித நாகரீகமும் அல்ல. மனித பலவீனங்கள் எல்லாமே பெரும் குற்றங்கள் அல்ல தங்கள் பலவீனங் களை ஒத்துக் கொண்டவர்கள் தங்களைத் திருத்திய மைக்கலாம். எனினும் பெரும்பாலானவர்கள் தமது குறைபாடுகளை ஒத்துக் கொண்டாலும் தொடர்ந்தும் தங்களை மாற்றியமைக்க முன் வருவதுமில்லை.
இதில் குறிப்பிடவேண்டியது என்னவெனில் சிலர் தமது சின்னச் சின்ன தவறுகளை ஒத்துக் கொள்வதை தமது நேர்மையைக் காட்டும் அடையாளம் என்று
-85 -

Page 45
பருத்திபூர் 04ல. லுயிர்வரர் நிரூபிப்பதற்காக ஒரு வீம்புக்காகப் பகிரங்கமாகத் தமது குறைபாடுகளை ஒத்துக் கொண்டு செயலளவில் “பழைய குருடி கதவைத் திறடி" என்னுமாற்போல் நடந்து கொள்வது சமூகத்தை ஏமாற்றும் வேலை அல்லவா? எந்நேரமும் பொய்பேசி உலகில் கெளரவம் தேட விழைவது தங்கள் ஆன்மாவிற்குத் தாங்களே கருமை பூசிக் கொள்வது போல் ஆகும்.
நாம் எமக்குரிய பங்கு எதுவோ அதனை உலகில் இருந்து பெறமுயல்கின்றோம் ஆனால் நாம் எந்த விஷயத்திலும் சமூகத்தில் எமக்கான உரிமைகளை எதிர்பார்க்கும் போது கூடவே மற்றவர்களை விட உயர்ந்த கெளரவம் கிடைத்தேயாக வேண்டும் எனக்கருதுதல் கூட ஒரு அப்பட்டமான சுயநலம் அல்லவா?
சேவை செய்தவன் இருக்க தங்கள் சுயநலத்திற் காகக் கஷ்டப்பட்டதையே ஒரு பொது நலத்திற்கான உழைப்பு என மார்தட்டிப் பேசி அதன் பொருட்டு பெருமதிப்பை எதிர்பார்ப்பது பொருத்தமற்ற அடாவடித் தனமல்லவா?
"நான் அரசியலுக்கு வந்ததே மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தான்” என்பார்கள் சிலர். "நான் இப்போது எடுத்த பதவிகூட எனக்காக அல்ல நலிந்து போயிருக்கும் ஏழை எளியவர்களுக்குத் தான்" என பெரிய பதவிகளைப் பெற்றவர்கள் சொல்லிக் கொள்வார்கள். யார் எவர் எதைச்
-86
 

மரணத்தின் பின் வாழ்வு சொன்னாலும்கூட அவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்யாமல் தங்களை வளர்ப்பதற்காகச் செய்யும் காரியங்களுக்காக மக்களிடம் இவர்கள் கெளரவத்தை பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ கோருவது நியாயமாகுமா?
ஒருவருக்குக் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களை உயர்ச்சிகளைப் பிடுங்குவது குறுக்கு வழியில் ஒருவர்க்குக் கிடைக்கவிருப்பதைத் தாங்களே அபகரிப்பதுடன் பாதிக்கப் பட்டவர்களுக்கான வருமதிகளைப் பெரும் கெளரவத்தைப் பெறுவதையே முனைப்பாகக் கொண்டவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆயினும் கெளரவம் பெறவேண்டிய அருகதை யுள்ளவர்கள் பலரையும் இந்தச் சமூகம் கண்டு கொள்ளாம லேயே இருக்கின்றது. புகழ்பெறும் வித்தை பெரும் திறமை கொண்ட விற்பனர்களிடம்கூட இருப்பதில்லை. நிறை குடத்தை விட குறை குடங்கள் தாங்கள் இருப்பதை வெளி உலகிற்குக் காட்டிநிற்கும்.
மேலும் திறமைசாலிகள் பலர் தாங்கள் கெளரவம் பெற்றேயாக வேண்டும் என எதிர்பார்ப்பதேயில்லை. ஏன் எனில் தங்கள் திறமைக்கேற்ப பட்டம் பதவி வந்தேதீரும் என்பதில் இத்தகையவர்கள் எல்லையில்லாத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே எதற்கும் தேடி ஓடவேண்டிய அவசியமே இல்லை அல்லவா?
-87 -

Page 46
மருத்திபூர் 04ல. ஆயிற்றுதாரர்
உழைப்பவர்களும் பெரும் தியாகிகளும் மெளனமாக இருக்க எவரோ ஒருவர் எந்த சம்பந்தமும் இன்றி சபை நடுவே கனவான் வேடமிடுவது சமூகத்தால் தடை செய்யப்பட வேண்டியதே!
இன்று நாம் காண்கின்ற பொய் முகங்கள் முன் அப்பாவிச் சனங்கள் தெரியாத்தனத்தாலும் வேறு வழியின்றியும் கும்பிடு போடுவது துன்பம்!
மன்னனிடம் பணிபுரியும் சேவகனுக்குக் கூட பணிய வேண்டிய இடத்தில் பணிந்தேயாக வேண்டும். அவர்களுடன் முரண் பிடித்தலாகாது. முரண்பட்டால் அந்த நடவடிக்கை காரிய சித்தியுமாகாது எனச் சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளார். நாம் வேண்டுமென்றே முரண்படுதலுக்கும் நியாயத்திற்காகப் போராடுவதற்கும் நிரம்ப பேறுபாடுகள் உண்டு. எம்மைக் காப்பாற்றக் கண்டபடி வாயைத் திறக்காமல் இருப்பதுகூடச் சாலச் சிறந்தது என்பதில் ஏது சந்தேகம்?
முகஸ்துதி செய்தால்தான் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் எவருக்காவது ஏதாவது உதவிகள் செய்கின்றார்கள். தங்களைப் புகழாதவர்களை வேண்டப் "படாதவர்களாக நோக்குபவர்களே ஏராளமாக இருக்கின் றார்கள். நாம் ஒருவர் திறமை அவர்தம் தகுதிகளைக் கண்ணுற்றால் புகழ்வதில் ஏதும் தவறு இல்லை. ஆனால்
எமது புகழ் மொழிகள் ஒரு காரணத்தை ஒரு தேவையை
- 88
 

DUGOUTöálsvör. 16ör GAITLIþ6 உள்நோக்கமாகக் கொண்டிருந்தால் அச் செய்கை தமது மனதிற்கே விரோதமான செயல் அல்லவா?
கெட்டவர்களுக்குக் கிடைக்கும் கெளரவம் பல தகாத காரியங்களுக்கே வழிசமைக்கின்றன. கெட்டவர்கள் விரிக்கும் மாயவலைக்குள் சாமானியர்களும் உயர் நிலையில் உள்ள பிரமுகர்களும் வீழ்ந்துபோய் கிடக்கின் றார்கள். "அந்தப்பெரிய மனுஷனே இவரிடம் போய் உதவி கேட்கின்றாரே உண்மையிலேயே இவர் ஒரு பெரிய மனுஷன்தான்” எனக் கண்டவர்களுக்கும் நற்சான்றி தழ்களை வழங்கும் மனிதர்களும் உளர்.
ஆனால் துன்மார்க்கர்களிடம் உதவி பெற்று அவர்களுடாகக் கெளரவங்களைப் பெறுவதைவிட வருவது வரட்டும் என்று துணிவுடன் எந்தப் பிரச்சனைகளையும் முகம் கொடுத்தலே வீரமும் புத்திசாலித்தனமுமாகும். உணர்வோம்! வலிந்து வரும் பாவவினைக ளில் இருந்து நாம் தப்பித்தேயாக வேண்டும்.
தான் கற்ற கல்வியைப் பிறர்க்கு ஊட்டுபவர்களுக்கு, தான தர்மம் செய்யும் அறப் பணியாளர்களுக்கு, கலைகளை வளர்க்கும் கலை ஞானிகளுக்கு உரிய பெருமைகள் கிடைக்காமல் விடுமா? ஆயினும் ஒருவர் திறமைக்கேற்ப கெளரவத்தை அவர் வாழும் காலத்தி லேயே சமூகம் கொடுத்துவிடல் வேண்டும்.
- 89

Page 47
பருத்திபூர் அல. லுயிர்வரர்
இன்றும் கூட பல ஒப்பற்ற கலைஞர்கள் உயிருடன் இருக்கும் போது ஏறெடுத்தும் திரும்பிப்பார்க்காத சமூகம் அவர் மரணமடைந்ததும் விழா எடுத்துக் கெளரவம் செய்கின்றார்கள். செத்தவர்களுக்குத் துதிபாடுவதால் அவருக்கு அதனால் என்ன பயன் கிடைத்து விடப் போகின்றது?
நலிவுற்ற கலைஞர்களுக்கு அறிஞர்களுக்குப் பாராட் டுப் பத்திரங்களும் பொன்னாடை போர்த்தி மகிழ்வதை விட அவர் சீவியத்தினையோட்ட என்ன நாம், செய்து கொண்டிருக்கின்றோம்? தினசரி பாவிக்க முடியாத பொன்னாடையை விட உடுத்திக்கொள்ள வேஷ்டி சட்டை கொடுத்தாலும் பரவாயில்லை போல் தோன்றுகின்றது.
ஏதாவது அனுகூலம் பெறும் நோக்கில் வசதி படைத்தவர்களுக்குக்கூடப் பொற்கிழி வழங்கி மகிழும் கூட்டம் தங்கள் செயல்களை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு ஏதாவது வழங்கினால் அது திரும்பக் கிடைக்காது என எண்ணுபவர்களும் இருக்கின்றார்கள்.
திடீரெனப் பணக்காரர்களாக உருவெடுத்தவர் களைக் கேலி பேசியவர்கள்கூட அவர்களைச் சுற்றித் துதிபாடிக் கெளரவிப்பது எல்லாமே மரத்தில் பழம் கனிந்தால் வெளவால்கள் வட்டமிடுவது போலத்தான்.
-90 -
 

மரணத்தின் பின் வாழ்வு இன்று பலரும் தங்கள் உயர்ச்சிக்கும் கீர்த்தி பெறுதலுக்கும் வேண்டிய மூலகாரணங்களைத் தெரியாம லும் இருக்கின்றார்கள். முயற்சியால் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினாலும் தமது நடத்தை நெறி பற்றியும் ஆராயாது வாழ்ந்து வருகின்றனர். பெரும் சம்பாத்தி யத்தை தங்கள் உழைப்பினால் உயர்த்திவிட முடியும். ஆனால் தமக்குள் மக்களைக் கவரும் ஆளுமைத்திறனை வளர்க்காமல் வெளியுலகில் எவரையும் தமது பால் ஈர்த்துவிட முடியாது.
எங்கள் சந்தோஷங்கள் எல்லாம் நான், எனது குடும்பம் என்கின்ற ஒரு வட்டத்தினுள் அமைந்து விடுவதில்லை. அப்படி வாழ்பவர்கள் சுய நலம் மிக்கவர் அல்லது ஒதுங்கி ஏதோ ஒரு அந்நியமாகப் பூமிக்குள் ளேயே தங்களைப் பூட்டி வைத்தவர்களாகவே கருத படுகின்றனர்.
தங்களுக்குள்ளேயே இருக்கும் தனிமைச் சிறையினுள் அவர்களால் களிப்புடன் வாழ்வது கடினம். தனித்திருத்தல் மனதைஒருமுகப்படுத்தி வாழ்தல் என்பதும் எல்லோரையும் இணைத்து வாழும் முறைமை யையும் வெவ்வேறு பார்வையில் நோக்க வேண்டும். எல்லோருமே தனித்து அதனுள் அமைதி பெற்றுவிடலாம் என்றால் நாம் ஒருவருடன் ஒருவர் பேசாமல் இருக்க வேண்டும் என்கின்ற பொருள் அல்ல. மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.
س 91 =

Page 48
மருத்திபூர் அ0. ஆபிரஹதர்
அவ்வண்ணமே உலகை நேசித்தும் வாழ்ந்தால்
மக்கள் எல்லோருமே எம் பக்கமாக இருப்பார்கள் என்பதில்
எதுவித ஐயமும் இல்லவேயில்லை.
சாதாரணமான ஒருவர் இவ்வுலக வாழ்வைவிட்டேகி விட்டால் மேலைத் தேசத்தவர்கள் கொடுக்கும் கெளரவம் வியப்புக்குரியது. இறுதிச் சடங்கு ஊர்வலம் தெருவீதியில் வரும்போது மரணமடைந்தவர்கள் எவரேயாயினும் ஊர்வலத்தைக் கண்டமாத்திரத்தே சிலையென நின்று தமது தொப்பிகளைக் கழற்றி அஞ்சலி செய்வார்கள். ஆனால்நாம் எமக்கு வேண்டப்பட்டவர்களின் மரணத்திற்கு மட்டும் கெளரவமளிப்பதுடன் தெரிந்து கொள்ளாத எந்த மனிதரது மரண ஊர்வலத்தைக் கண்டால் வெறுமனே வேடிக்கை பார்ப்போம் அல்லது விலகிச் சென்று விடுகின்றோம்.
மேலும் சிலர் ஒருவர் உயிருடன் இருக்கும் போது தான் அவருடன் கொண்டாடி மகிழ்வார்கள். அவர் இறந்து போனால் அவர்கள் வீட்டுப்பக்கமே திரும்பிப்பார்க்கவே மாட்டார்கள். கேட்டால் தங்களது சொந்த வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றிச் சுய புராணம் பாடுவார்கள்.
எங்களிடம் இருக்கின்ற திறமைகளை விட அதையும் விட மேலான திறமைகள்மூலம் எம்மை நாமே மிகப் புதிதான மனிதனாக உருவாக்கினால்தான் உலகம் எங்களைக் கண்டு கொள்ளும். யாரோ ஒருவர் செய்ததை நாம் செய்தால் அதில் என்ன புதுமை இருக்கப் போகின்றது?
- 92 -
 

மரணத்தின் பின் வாழ்வு
வெறும் அதிஷ்டம் மட்டும் இருந்தால் ம்ட்டும் ஒருவர் சகல பெருமைகளையும் பெற்றுவிடலாம் எனக் கருதுதலை விட்டுவிடுக! இந்த எண்ணம் வலுப்பெற்றால் எமது சுய முயற்சி ஆர்வத்தை இவை பெரிதும்பாதிப்படையவைக்கும். ஒருவருடைய கீர்த்திகளை வெறும் வார்த்தைகளால் மட்டம் தட்டிப் பேசுதலைவிடுத்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் அவர்கள் எப்படி உயர்வடை ந்தார்கள் என்பதை நல்ல மனதுடன் நோக்க வேண்டும்.
மிக அமைதியாக வாழ்ந்து ஆரவாரம் இன்றிச் சாந்தமுடன் உலகை விட்டு நிம்மதியுடன் மறைவதுதான் பிறவிப் பெரும் பயன். ஆனால் நாம் இங்கு இருக்கும் வரை தூற்றலுக்கும் பழிக்கும் ஆளாகாமல் வாழ்தல் ஒரு சாதனைதான். சாத்வீகமான நல் நடத்தையுடன் நற்சிந்தனையுடன் சீவித்தால் எத்தனை இடர்களுமே பொடிப் பொடியாகும். கீர்த்திகள் யாவும் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாய் அமையும்.
மனிதன் அடையும் அதிஉயர் “கெளரவம்" அவன் மனிதர் மீது நேயங்கொண்ட "தூய ஆத்மா” எனச் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் என்பதனாலாகும். ஏனைய புகழ் யாவும் இதன் முன் ஈடாகாது.
தினக்குரல் ஞாயிறுமஞ்சரி 16.11.2008
- 93

Page 49
மருத்திபூர்வ0. ஆயிரவரஷ்
கொள்கை முரண்பாடுகளால் எதிரிகளை உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. எல்லோருக்குமே ஒவ்வொரு எண்ணங்கள் பல பிரச்சனைகள். அவர்கள் கோணத்தில் அவை சரியானதாக இருக்கலாம். பூரணமான அன்பு நிலையில் எவர் கருத்துக்களையும் ஏற்கும் பக்குவம் வரும். கருத்துக்கள் ஏற்கப்படாதுவிட்டாலும் கூட்அவர்களை முழுமையாக ஏற்பீர்களாக எதிரிகள் உருவாகமல் இருக்க இதுவே வழி"பகை"ஒருவர் தகுதியை இழக்கவைக்கும்.
எதிரிகள் என்பவர்களையே உருவாக்கிக் கொள் ளாத உவப்பான நிலையை நாம் ஆக்கிக்கொள்வோமாக!
எதிரிகள் எமது வாழ்வில் புகுந்திடாத நிலை சாமான்யமான விடயம் அல்ல. பரந்த விசாலமான எதிர்பார்ப்புகள் அற்ற அன்பு நிலை எம்முள் பதிந்திட்டால் “எதிரிகள்” என்ற எண்ணங்கள் கருக்கொண்டு விடுமோ? பகைவர்கள் ஏன் தோன்ற வேண்டும்? என்கின்ற காரணங்
- 94
 
 
 
 
 
 
 

LDg60ØTöś6ör flestöt 6 MITTLÞ6
களை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
●
(X-
● 令
«Ο
&
கொள்கைகளில் முரண்பாடுகள் எந்த விடயங்களிலும் எதிர்மறை எண்ணங்கள்
எமது எண்ணங்களுக்கும் ஆசை அபிலாஷைக
ளுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்குதல். அடுத்தவர்களின் நியாயபூர்வமான பிரச்சனை களைக் கண்டு கொள்ளாமை மற்றவர் வளர்ச்சிகண்டு பொறாமைப்படுதல்
அவாவுறுதல் ... . . . . . . . . . தாழ்வுச் சிக்கல், அதனால் ஏற்படும் காழ்ப்பு உணர்வு சகிப்புத்தன்மையின்மை, எதனையுமே ஆராயாத தன்மை. எல்லாவற்றிற்கும் மேலாக மிதமிஞ்சிய கோப உணர்வு, கோபாவேசம்,
மேற்கூறப்பட்ட காரணங்களுள் அமையாத
இன்னும் ஒரு விசேட காரணம் சற்று வியப்பூட்டுவதாகவும் இருக்கின்றது. அதாவது எந்தவித காரணமும் இன்றிச் சிலர் சிலரை வெறுத்து ஒதுக்குகின்றார்கள். காரணம் கேட்டால் "என்னவோ தெரியவில்லை அவரை எனக்குப் பிடிக்கவில்லை” என்று சொல்லிவிடுகின்றார்கள். ஆனால் ஒருவரால் வெறுக்கப்பட்டவரை நாம் அவர் உங்களை எதற்காக விரும்பவில்லை என்று கேட்டால் "சேச்.சே அப்படி ஒன்றுமில்லை எனக்கு அவர் மீது எந்தக் கோபமும் இல்லையே. எதற்காக அவர் என்மீது கோபம் கொள்கின் றார் என்று தெரியவில்லையே” என்றும் கூறிவிடுவார்.
- 95

Page 50
மருத்திபூர் ம40.அறிலுருந்தர்
காரணம் இன்றி ஒருவரிடம் பகைமைகொள்வது எவ்வளவு தவறான காரியம் தெரியுமா? எவரையும் நேசிக்கும் மனப்பான்மையை உண்டு பண்ணினால் இந்நிலை தோன்றாது. தங்களது முன்னேற்றத்திற்குக் குந்தகம் விளைவிக்க எண்ணுவோர் மீது அல்லது அவர்களுக்கு எதிரான கருமங்களில் சதி நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது வெறுப்பு ஏற்படுவது வியப்பு அல்ல. இன்று பகையுணர்வுக்குப் பிரதான காரணமாகப் புரிந்துணர்வு இன்மை தப்பான அபிப்பிராயங்கள் என்பனவே உள்ளதாகப் பலரும் அபிப்பிராயப்படு கின்றனர். யாரோ சொன்னார்கள் என்பதற்காக உடனே ஒருவர் மீது வெறுப்புணர்வு கொள்வதுபோல் என்ன முட்டாள்தனம் இருக்கின்றது?
எதனையுமே ஆராயாமல் யாராவது ஒருவர் இப்படிச் செய்வாரா என்கின்ற எந்தவிதமான எண்ணமின்றி அவசர முடிவுகள் எடுப்பதானால் ஏற்படும் எதிர்விளை வுகள் பாரதூரமாகவே அமைந்து விடுகின்றது. தீராப் பகைதானே போராய் உருவெடுக்கின்றது?
நீதித்துறை சார்ந்த பெரியவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் சொன்னேன் "எனக்கு எந்த விதமான எதிரிகளும் இல்லை. எனவே எனக்கு எதுவித அச்சமும் இல்லை. எதிரிகள் ஏற்படுவதற்கான காரணங் களும் இல்லை.” என்றேன். அப்போது அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள் என்னைச் சிந்திக்க வைத்தன.
-96 -
 

னத்தின் பின் வாழ்
"நீங்கள் சொல்வது நன்றாகத்தான் இருக்கின்றது. எதிரிகளைச் சம்பாதிக்காமல் இருப்பதுவே பெரும் பாக்கிய மாகும். ஆயினும் நீங்கள் நினைப்பது போல் எல்லா எதிரிகளுமே நேரிடையாக வருவதுமில்லை. கண்ணுக்குப் புலப்படாமலே சிலர் கேடுகெட்ட கருமங்களைச் செய்து விடுவார்கள். நேருக்கு நேர் மோதிக் கொள்பவர்களைப் பற்றி அச்சமடையத் தேவையில்லை. அவர்களுடன் சமாதானமும் செய்து கொள்ள முடியும். ஆனால் முதுகுக் குப் பின் இயங்கிக் கொண்டிருக்கும் பகைவர்களை எங்ங்னம் இனம் கண்டு கொள்ளமுடியும்? எமது அனுபவ அறிவினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்” என்றார் உண்மைதான். மேலும், எதுவித காரணங்களுமின்றியே ஒருவர் மீது காழ்ப்புணர்வினால் கொள்வோருமுண்டு.
எமக்கு எதிரான நடவடிக்கைகளை எவராவது நன்கு திட்டமிட்டுச் செய்வதற்காக வதந்திகளைச் சொல்வோரும் உளர். எனவே காரண காரியங்கள், நம்பகத் தன்மையை முதலில் அறிய வேண்டியவராக நாம் இருக்க வேண்டும். மேலும் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்தும் நாம் நிரபரா திகள் மீது குற்றம் சாட்டிவிட இயலாது. கண்ணுக்கு முன் உத்தமர்களாகவும் முதுகில் குத்திடும் எத்தர்கள் பற்றி எந்நேரமும் விழிப்புடன் இருத்தல் சாத்தியமானதுதானா?
நாம் பலரிடம் வைக்கின்ற அதீதமான நம்பிக்கை களே சில சமயம் எங்களை ஏமாளிகளாக்கிவிடவும் கூடும். பகை வளர்த்தலும் தேவையற்ற குரோதங்களை மனதுள்
س- 97 -

Page 51
மருத்திபூர் (40 ஆழ்நதர்
மூடிமறைத்தலும் ஆபத்தான சங்கதிகளாகும். சிலருடன் நாம் கொள்ளும் சின்னச் சின்னமனஸ்தாபங்களை நாம் கடிதெனக் களைந்து கொள்வோமாக சின்ன விஷயம் தானே என நாம் விகற்பம் இன்றி எண்ணியதைப் பெரும் பூகம்பமாக பூதாகரமாகவே சிலர் எண்ணி தமது மனதினுள் பகைமை யை வளர்த்துக் கொள்கின்றார்கள்.
நாங்கள் எவரிடத்தும் கொள்கின்ற வீணான சந்தேகங் களைக்களைந்தேயாக வேண்டும். நீங்கள் மறந்து போன கசப்பான விஷயங்களைப் புதுப்பிக்கச் சிலர் விரும்பினாலும் அதை முற்று முழுதாகக் களைந்து கொள்ள முழுமுயற்சி எடுப்பீர்களாக சொந்த வாழ்வில் கூட நடிப்பதே சிலருக்கு இயல்பாகி விட்டது. ஆனால் எந்தத் தருணத்திலும் போலியான அன்பு காட்டல் மனித இதயத்தை விரிவுபடுத்தாது. மாறாகக் களங்கமுள்ள இதயங்கள் கனத்த இதயமாகவே இருந்து கொள்ளும்.
எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாது போனால் அதன் பொருட்டு அந்நிலைக்கு யார் மீதாவது பழி போட்டு விரோதத்தை வளர்க்கும் நபர்களும் இருக்கின்றார்கள். ஒருவரது தமது திறமை, முயற்சிகளுக்காகவே பயன்கள் கிட்டுகின்றன. இதனை இவர்கள் முதற்கண் உணரல் வேண்டும்.
“எனக்கு எவ்வளவோ பிரச்சனைகள் எவருமே வந்து உதவுகின்றார்கள் இல்லை. எத்தனை உறவுகள் எத்தனை
- 98.
 

மரணத்தின் பின் வாழ்வு நண்பர்கள் எல்லோருமே இன்று கைவிட்டுவிட்டார்களே” என்று உளமாரத் துன்புறுபவர்கள் ஏராளம் உண்மையில் துன்ப மூட்டும் எதிரிகளும் துன்பங்கள் வந்துற்றபோது உதவாத நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே ஒரே தரத்தைச் சார்ந்தவர்களே!
ஒருவரின் துன்பங்களைக் களைய வலு இருந்தும் அவர் நிலை கண்டு இரங்காமல் துன்பங்களைக்அகற்ற விரும்பாதவராக இருப்பின் அவரும் துன்பங்களை வழங்கியவராகக் கருதப்படுவார்.
எனவே காரணமின்றி பொருதுபவர்களும் நியாய ஈனங்களைக் கண்டும் மெளனிப்பவர்களும் பகை யுணர்வைத் தூண்டி விடுபவர்களும் மனிதநேயத்திற்கும் மானுட தர்மத்திற்கே முரணான வர்களாவர்!
சதா ஒருவருடன் சண்டையிட்டும் வீண்பழிசுமத்திக் கொண்டு இருக்கும் ஒருவர் திடீர் எனப் பாசம் கொண்ட வராக அணுகும்போது எச்சரிக்கையுணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது.
நாம் நம்பிக்கையுடையவராக இருக்கின்றமை யானது உளமார ஒருவருடன் களங்கமின்றிப் பழகுவதே யாகும். நம்பி நடப்பது என்பது தங்கள் சக்தியில் திறமையில் சிறிதும் நம்பிக்கை வைக்காது கண்டபடி பிறரை மட்டுமே நம்புவதாகும். எனினும் தம்மைநாடிவரும்
- 99 است.

Page 52
பருத்திபூர்:40, ஜூரர் ஒருவரது அப்பாவித் தன்மையினை ஏற்று அவர்களை அன்புடன் நேசிப்பவர்களும் இருக்கின்றார்கள். ஒருவரது களங்கமற்ற அப்பாவித்தன்மையினை உணராது இவர்களுக்குக்கடுகளவு ஆயினும் துன்பம் கொடுப்பவர்கள் போல் துர்மதியாளர் வேறில்லை.
நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று உணராமல் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாகச் சிலர் சொல்வதுண்டு. பொதுவாக செல்வம் சேரும்போது துணைக்கு நான் , நீ எனப்பலர் சுற்றிக்கொள்வதும் அதே நபர்கள் நொடிந்து ஒடிந்து போனவர்களைக் கண்டதும் கடிதென மறைந்து ஏகுவதும், புதுமையல்ல.
பாசம், பரிவு, கருணை, காருண்யம் கொண்டோ ரால் பணம் பெரிதென நோக்கப்படுவதில்லை. என்றுமே உறவுகளுக்கு வெளியே மட்டும்தான் குரோதம் பகை உருவாகின்றது என்பதல்ல. உறவினர்களுக்குள்ளேயும் பகைமையுணர்வு நீறுபூத்த பெருநெருப்பாக இருப்பது வேதனை தரும் உண்மை தான். உடலுக்குள் நோய் வரும் போது அதனைக் குணப்படுத்துதல் சாதாரண விஷயம் தான். ஆயினும் பகையை வேருடன் பிடுங்கச் செய்தல் என்பதே சிரமமாக இருக்கின்றதே என வேதனையில் புழுங்குபவர்கள் ஏராளம் ஏராளம்.
மிகவும் சக்திமிக்க அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்
கள் தங்களிலும் தாழ்ந்த நிலையில் உள்ளோரிடம்
*፡ - 100 -
 

மரணத்தின் பின் வாழ்வு பகைமை கொள்வது மிகவும் கீழ்த்தரமான செயல்தான். தங்கள் செல்வாக்கு பணபலத்தினால் இத்தகைய சாதாரண நிலையில் உள்ளவர்களைப் பழிவாங்குவது மனித நீதிக்கே எதிரானதல்லவா?
ஆயினும் சில செல்வாக்கு மிக்கவர்கள் தமக்கு நிகரானவர்களுடன் மட்டுமே மோதிக்கொள்வார்கள். தமக்கு நிகரான அல்லது தம்மிலும் மேம்பட்டோரிடம் சவால் விடுத்து முரண்படுவது தான் தங்களுக்குக் கெளரவமானது என எண்ணுபவர்களும் இருக்கின் றார்கள். சரித்திரத்தில் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன்.
இந்தியாவில் படை எடுத்த மகா அலெக்சாந்தர் மன்னன் ஒருவனைச் சிறைப்பிடித்தான். மிகவும் மமதையு டன் அலெக்சாந்தர் "நீ என்னுடைய கைதி உன்னை நான் என்ன செய்யவேண்டும் என எண்ணுகின்றாய்” எனக்கேட்டான் அவனது எகத்தாளமான பேச்சைக் கேட்ட மன்னன் "நான் ஒரு மன்னன். நீ என்னைச் சிறை செய்தாலும் நான் மன்னனே தான். அரசனான என்னை அரசனாகவே நடத்து" என்று வீரமுடன் அவன் சொன்ன தைக் கேட்டு வியந்துபோன அலெக்சாந்தர் அவனை விடுதலை செய்ததுடன் தான் பிடித்த அவனது நாட்டையும் மீளக்கொடுத்து அவனுடன் நட்புப் பாராட்டிக் கொண்டான்.
பகைமையை மறந்தும் மன்னிக்கவும் அன்புணர்வி னால் மட்டுமே முடியும். மன்னிப்பதற்கு எல்லை இல்லை.
N - 101 -

Page 53
பருத்திபூர் 040 ஆயிரவரர் பகையை வளர்ப்பதால் ஏற்படுகின்ற தீமைகளைவிட நட்புறவினால் கிடைக்கும் வரவுகள், சொல்லொண்ணாத வையன்றோ! ஒருவனை நசுக்குவது ஒன்றே குறிக் கோளாகக் கொண்டு பகை வளர்த்து எதிரியாக விரும்புவது வெட்கங்கெட்டசெயல் மட்டுமல்ல, இது ஒரு தெய்வ விரோதச் செயலுமாகும். ஏன் எனில் இறைவனின் "பண்பு" என்பதே உயிர்களைரட்சிப்பதும் அவைகளுக்கு இரங்குதல், மன்னித்தல் என்பதுமாகும். எனவே தெய்வத்திற்கு விரும்பிய பண்பை நாங்கள் ஏற்காது எமது இஷ்டப்படி வாழுதலை எப்படி இறைவன் ஏற்றுக்கொள்வான் என்பதைச் சற்று சிந்தனைக்கு எடுப்போமாக!
உலகிற்காகத் தன்னையே வழங்கத்தயாராக உள்ளவர்க்குப் பகைமை என்கின்ற உணர்வு உருவாகுவ தேயில்லை. சுயநலம் மட்டுமே நோக்காகக் கொள்பவர்கள் தங்களிடமிருந்து யாராவது எதையாவது திருடிவிடுவார்கள் என ஐயமுடன் வாழ்வது போல வாழ்ந்து வாழ்நாட்களை இழக்கின்றார்கள். எல்லா நன்மைகளும் தமக்கு மட்டுமேயானது பிறர்க்கு எதுவும் கிடைத்தலாகாது என எண்ணி நடப்பதுபோல் முட்டாள்தனம் வேறு உண்டா? இந்த அப்பட்டமான சுயநலம் காரணமான நடத்தைகளா லேயே புதிய புதிய எதிரிகளை இவர்கள் உருவாக்கு வதுடன் தாங்களே சமூகத்தில் எதிர்ப்புக்களையே வரவேற்கும் நபராக நடந்தும் கொள்கின்றார்கள்.
உண்மையில் சுயநலம் என்பது பிறரிடம் இருந்து எதனையும் பிடுங்குதல் அல்லதம்மைத் தமது திறமை
- 102 -
 

மரணத்தின் பின் வாழ்வு யினால் வளர்த்துக் கொள்வதைச் சமூகம் எதிர்க்கப் போவதில்லை. எம்னை நான் வளர்க்க உரிமையுள்ள வராவோம். ஆனால் எமது வளர்ச்சிக்காகப் பிறரை இம்சிப்பதும் பகை பாராட்டுவதும் ஒருவரை அழிப்பதே இலட்சியமாகக் கொள்வதில் எந்தவித நியாயங்களு மில்லை. ஒருவரின் நியாயபூர்வமான ஆசைகள், எதிர்பார்ப்புகள், சத்திய வாழ்விற்கு உட்பட்டதாயின் அவை வரவேற்கத்தக்கதே.
பிறரைப் பகைத்தால் தான் இந்த உலகில் வாழமுடியும். என்றோ அல்லது யாரையாவது அச்சுறு த்தினால் தான் உலகில் எம்மை வாழவிடுவார்கள் என எண்ணுவதும் முட்டாள்தனமான எண்ணமேயாகும். சிலர் சொல்வதுண்டு "கொஞ்சம் அடக்கியாண்டால் தான் இங்கு பிழைக்க முடியும்" என்பார்கள். இந்த நினைப்பு முளைவிட்டாலே, அது விஷக்கிருமிபோல் சிந்தனையை மந்தமாக்கி வாழ்க்கையை வீழ்த்திவிடும்.
பகைமைக்குக் கோபமே மூலகாரணம் என்று சொல்லப்படுவதால் கோபத்தை முழுமையாக இழப்பத ற்குத் தயாராகுங்கள். நியாயமான கோபங்கள் வரும்போது கூட உங்களைக் கட்டுப்படுத்தத் தயாராகுங்கள். எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கமாட்டார்கள். எங்கள் கோபங்களால் மற்றவர்களைக் கோபமூட்டக் கூடாது. நாமாகவே ஒருவரின் வேகமிகு உணர்ச்சிகளுடன் பயிற்சி செய்தலாகாது. உணர்மின்!
س 103 -

Page 54
கருத்திபூர் 04), ஆர்வரர்
எனவே எதிரிகளை நாம் மடக்க வேண்டும் என எண்ணினால் கோபத்தினை விடுத்து அன்பு எனும் பாணத்தைச் செலுத்திப் பாருங்கள். இதன் குளுமை வேகத்தால் எவருமே கட்டுண்டு உங்கள் வசமாவார்கள். அப்புறம் எதிரிகள் எம்மைப் புரிந்து நட்புடன் நெருங்கிவருவர் அன்றோ!
"கூர்மதி” கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவின் ஆண்டு மலர்
2008
 
 
 
 
 
 

ஒப்பீடு செய்வதை தவிர்த்திடுக!
நாம் எமது வாழ்வினை சீரும், சிறப்புடனும் வாழ, அடுத்தவர்களுடன் ஒப்பீடு செய்து தான் வாழ வேண்டும் என்பதில்லை. இருப்பதை வைத்துத் திருப்தியடைய வேண்டும். எம்மை நாம் வளப்படுத்த, நாமே முயற்சிசெய்யவேண்டும். பெரியோர் முதுமொழிகள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். ஆனால் பிறர் பெருமை கண்டு ஏக்கமடையாது அவரைப் போல் நாம் வளர முடியவில்லை என மனம் புழங்க வேண்டியதில்லை. போலியான வாழ்க்கை மேற்கொள்பவர்களின் வாழ்க்கை முறையே உண்மையானது என நம்பி, அவர்களை தம்மோடு ஒப்பீடு செய்வது துன்பத்தை வலிந்து தோழமை கொள்வதாக அமைந்து விடும். நல்லபடி வாழ்ந்தால் எல்லோ ருமே எம்வழி நோக்கி வருவார்கள். أص
மிகவும் அழகான குடும்பம் அவர்களுடையதாகும். இல்லத் தலைவன் அரசாங்க உத்தியோகம் பார்த்து வந்தார். நல்ல மனைவி, அழகான ஆண், பெண் பிள்ளை கள் இருவரும் பாடசாலையின் திறமையான மாணவர்கள்.
வரவுக்கேற்ற செலவு செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.
r
- 105

Page 55
மருத்திபூர் (40. ஆயிரவநாதர்
இது இவ்விதம் இருக்க, அவர்கள் வீட்டிற்கு எதிர்ப்புறமாக புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது, மிகவும் வசதியான அவர்களிடம் முன்னர் நான் குறிப்பிட்ட குடும்பத்தலைவி எதிர் வீட்டுக்குப், புதிதாக வந்திருந் தார்கள் என்பதனால் உடனே சென்று பார்த்தார். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.
அவர்களது பேச்சைக் கேட்டதுமே இவர் ஆச்சரியப்பட்டு விட்டார். "அடேயப்பா எவ்வளவு விளையுயர்ந்த பொருட்கள் இங்கு குவிந்து கிடக்கின்றன. மோட்டார் வண்டி, இரண்டு பிள்ளைகளுக்கும் கணினி, உட்பட அது இதுவென ஏராளம் ஏராளம்!
திகைத்துப் போய்விட்டார். அத்துடன் எதிர் வீட்டுக்காரிதங்கள் வீட்டுப் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போனார். கணவன் பெரிய வியாபாரி. தலைநகரில் சொந்தமாக வியாபார நிலையம் , இந்த வீட்டையும் தாங்கள் விலைக்கு வாங்கியதையும் மறக்காமல் சொல்லிக் கொண்டார்.
இதுவரை எவ்வித சலனமுமற்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு எதிர் வீட்டுக்காரியின் வசதிகள், வாய்ப்புக்கள் பற்றிச் சொல்லிக் கேட்டதுமே குளத்தில் கல் எறிந்த மாதிரி சலனங்கள் சற்று ஏற்படலாயிற்று.
- 106
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDU69orábálsöt likőr 6lnyja! இவர் மனம் ஒப்பீடு செய்யத் தொடங்கி விட்டது "அட நாமும் தான் இருக்கிறோம் எவ்வளவு சிக்கனமாக இருந்தும் பத்துக் காசு சேமிக்க முடியவில்லை. எப்படித்தான் சேமித்தாலும் ஒரு பொருளையாவது இவர்கள் போல் வாங்க முடியமா..? வாழ்க்கை பூராவும் நாங்கள் இப்படித்தான் வாழ வேண்டும்.” மனம் அங்கலாய்க்கத் தொடங்கியது.
அடுத்த ஓர் இரு நாட்களில் எதிர் வீட்டு வசதி படைத்த அம்மாள் இவர்கள் வீட்டிற்கு வந்தார். வீட்டினுள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தார்கள் வீட்டு மேசை பீரோ மீது பிள்ளைகள். கல்வி, விளையாட்டு, கலை நிகழ்வுகளில் வாங்கிய பரிசுப் பொருட்கள், கோப்பைகள், கேடயங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வீடு அழகாகப்பளிச் சென்றிருந்தது. உள்ளே சுவாமி அறையில் ஊதுபத்தியிலிருந்து நறுமணம் வந்து கொண்டிருந்தது.
வீட்டிலிருந்து வந்த இல்லத் தலைவர் தனது மனைவியை "அம்மா.இதோ பார்! பக்கத்து வீட்டு அம்மா! எங்களைப் பார்க்க வந்திருக்கிறார், மகன் உங்களைத்தான், மகள் இங்கே வாருங்கள் எனத் தனது குழந்தைகளையும் மிக அன்புடன் அழைத்தவர் இன்முகத்துடன் வரவேற்றார். இதற்கிடையில் அவரது மனைவியும் வந்து விட இவர்கள் பேச ஆரம்பிக்க, பிள்ளைகள் இருவரும் வீட்டுக்கு வந்தவரை பணிவுடன் குனிந்து வணங்கி எழுந்தனர்.
- 107.

Page 56
பருத்திபூர் 40,ஆயிரதர்
"இன்றைக்கு எனக்கு விடுமுறை மனைவி, பிள்ளைகளுடன் கோயிலுக்குப் போய் வர வேண்டும், மேலும் இன்று குழந்தைகளுடன் எங்காவது சந்தோ ஷமாக சுற்றி வர வேண்டும்” என்று சொன்னவர். மனைவியை நிமிர்ந்து நோக்கினார்.
இவரது பேச்சைக் கேட்டவர்களுக்கு தங்கள் வீட்டுச் சமாச்சாரங்கள் பற்றிய எண்ணங்கள் அலை மோத ஆரம்பித்து விட்டது. "நான் என்ன தான் பெருமை பேசினாலும் இவர்களைப் போலவா வாழுகின்றோம்? என்ன அன்பான கணவன், மனைவி, பிள்ளைகள். எந்நேரமும் வீட்டுக்காரர் அருகிலேயே இருக்கிறார். எனது வீட்டில் எனது கணவரைக் காண்பதே அரிது. ஆனால் இவரோ எந்நேரமும் அன்புடன் பேசுகின்றார். பிள்ளை களை அரவணைக்கிறார் எனது கணவர் சதா எப்போதுமே * டென்ஷன். டென்ஷன் என்று கத்துகிறார்.அது என்னவோ எனக்குப் புரியவில்லை. எப்போதுமே உழைத்தால் மட்டும் போதுமா, அன்பு , ஆதரவு, வேண்டாமோ. என்றைக்காவது ஆற, அமர்ந்து எங்களிடம் கூட இருந்து உணவருந்தினாரா எனது பிள்ளைகள் இவர்கள் போல சமர்த்தாகவா இருக்கிறார்கள். ?
இவ்வாறு மிகவும் வசதிபடைத்த அந்த அம்மணி தன் நிலை பற்றி ஒப்பீடு செய்து மனம் குமைய ஆரம்பித்துவிட்டார்.
- 108
 

மரணத்தின் பின் வாழ்வு பார்த்தீர்களா? மேலே சொன்ன விடயங்கள் வெறும் கற்பனையல்ல. இன்று யதார்த்தமே இப்படித் தான் என எண்ணத் தோன்றுகின்றது அல்லவா? மற்றவர்களைப் பார்த்து ஒப்பீடு செய்து ஒவ்வாத எண்ணங்களால் அல்லல் பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிற இவர்கள் நிலை மிகவும் பரிதாபமும் அறியாமையும் வேடிக்கையுமானதாகும்.
இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதே மேலானது என மனதார எண்ணும்வரை வாழ்க்கை சிக்கலாக, மனம் நிம்மதியிழந்து போவதை எவரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
மற்றவர்களைப் பார்த்து ஒப்பீடு செய்து ஏக்கப்படு வது, ஈற்றில் பொறாமை என்கின்ற மனோ பாவத்தில் மனிதரை இட்டுச் சென்றுவிடும்.
குடும்பங்களில் நடக்கும் குழப்பங்களைப் பாருங்கள். பலரது குடும்பப் பிரச்சனைகளில் பெரும்பாலும் அடுத்தவர்களைப் பார்த்தமையினால் ஏற்பட்ட எதிர் விளைவுகளால் விளைந்தவையாகவே இருக்கின்றன. ":":"
ஒருவரது வளர்ச்சியைக் கண்டு நாமும் அவ்வண்ணமே வாழ எண்ணுதலில் தப்பு இல்லை.அதை விடுத்து மனம் வெதும்பி அது போல் முயன்று காரிய சித்தி அடையாமல் இருப்பது ஏற்புடையது அல்ல! ஒவ்வொருவருமே தமக்கென ஒவ்வொரு விதமாக
- 109 -

Page 57
பருத்தியூ 00:அரஷதன்
வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றார்கள்.
எவ்வண்ணம் நாம் எமது வாழ்க்கையை அமைத் திடினும் அவை சீராக, செப்பமான அறவழியின் அடித்த ளத்திலிருந்து கட்டி எழுப்பப்படல் வேண்டும்.
தத்தமது கலாச்சாரத்தை மீறாது ஆடம்பரத் தையே, இலக்காகக் கொள்ளாது வாழவேண்டும். மிகவும் பகட்டுடன் வாழ்பவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இத்தகைய வாழ்வு முறை அவர்களை மட்டும் பாதிப்பு அடைய விடுவதில்லை.
மாறாகச் சாதாரண மக்கள் இதுவே நிஜம் எனக் கருத அரம்பித்து விடுகின்றார்கள், குடும்ப அமைதி என்பதே எளிமையான வாழ்வில் தங்கியுள்ளது. வீண் செலவு செய்து சந்தோஷங்களை விலை கொடுத்து வாங்க வியலாது.
இன்று குற்றச் செயல்கள் பெருகிய வண்ணம் இருப்பததற்கு பிரதான காரணம் என்ன? சாதாரண குடும்பத்தலைவன் எதற்காகக் குறுக்கு வழியில் புகழ், பிரபல்யம், கெளரவம் போன்றவைகளை ஏன் நாடி ஒட
வேண்டும்? *ーマ
இவர்கள் பணம் பெருகிய, புகழ்படைத்த மற்றவர்களுடன் தம்மை ஒப்பீடு செய்வதும், ஆனால்
- 110
 
 
 

uधव्ठणेதின் பின் வாழ்வு இதன் பொருட்டு நியாயமான வழியில் உழைக்க விரும்பா மையுமே முக்கியமான முதற் காரணங்களாகும்.
கணவன், மனைவி, பிள்ளைகள் எவராயினும் அடுத்தவர்கள் பற்றியே சிந்திக்காது, உங்கள் எண்ணங் களை நற்சிந்தனைக்குள் உட்படுத்துங்கள். எல்லாமே நன்றாக அமையும், நினைத்தது கிடைத்து விடும்.
குடும்பம் குதூகலமாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 21.11.2010
- 111 س

Page 58
மருத்திபூர் (40. ஜலிற்றூதர்
பிறர் துன்பம் களைதலே நாம் அடையும் இன்பம்
(ஒருவரின் துயர் களைய நாம் அவர்கள் சுமைகளைத் தாங்குவது சாமான்யமானதல்ல. ஆயினும் இன்னொருவருக்காக இரக்கப்படுவதும், அவர்களுக்காக எம்மால் இயன்ற உதவிகளை நல்குவதும், இறைவனை வேண்டி அவர் பொருட்டு பிரார்த்தனை செய்வதும், எங்களால் முடிந்த காரியமேயாம். மானிட நேயமுடன் வாழும் மாந்தர்களை ஆண்டவன் இரட்சிப்பதுடன், அவர்கள் தொடர்ந்தும் பணியாற்றும் மாவல்ல மைகளையும் கொடுத்து விடுகின்றான். கடமையை ஒழுங்காகச் செய்தால் மனோ வலிமை தானாகவே சுரந்து வரும். நீங்கள் எல்லோரையும் வெறும் வாயால் உபசரிப்பதிலும் பார்க்க உங்கள் நெஞ்சங்களால் உபசரித்து மகிழ்க! பிறர் துன்பம் களைவதால் எமக்கு
இன்பம் வழங்கப்படுகின்றது. الص
"நான் அழுதால் பிறர் அது கண்டு சிரித்தால், அவர்கள் சிரித்து மகிழ நான் தொடர்ந்தும் அழுது கொண் டிருப்பேன்"
- 112
 
 

LDJesCOrö56öt lilei elnlj5) அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய போது, எனது இல்லத்தில், நான் மாணவப் பருவத்தில் இருந்த போது கண்டெடுத்த அப்பியாசக் கொப்பியில், எழுதியிருந்த வரிதான் மேலே எழுதப்பட்ட வையாகும்.
பிறருக்காக அவர்கள் பொருட்டு அவர்களின் துன்பங்களைத் துடைப்பது தவிர வேறு என்ன கருமம் எமக்கு வேண்டியிருக்கிறது?
பிறர் துன்பங்களை நீ களைய முற்படும் போதே, உனது துன்பங்கள் களன்று போய்க் கொண்டிருக்கும்.
பிறர் சிரிப்பினுள் உனது மனம் பதிந்து அதனுள் நுழைந்து நீயும் சிரித்து மகிழும்போதே உனது துயர்கள் துடைத்து எறியப்படும். துன்பங்கள் யாவும் வறுமையாகி, வெறுமையாகும் .
எவராவது இன்னுமொருவர் துயரங்களில் இன்பம் எய்துவது கூடாது. அப்படி எண்ணிச் சில பொழுது மகிழ்வுற்றால், அது வெறும் மாயை ஆசூசை
ஒருவருக்காக நாம் அவர்கள் சுமையைத் தாங்குவது என்பது சாமன்ய விடயம் அல்ல நல்ல மனப்பக்குவம் வேண்டும்.
- 113

Page 59
மருத்திழ் 040.அற்றுதழர்
எல்லோராலும் அடுத்தவனுக்கு உதவுவதற்கான
வசதிகளும் இருப்பதில்லை. நெஞ்சம் விரிவடைந்தால்,
கஞ்சத்தனத்திற்கு இடமேயில்லை ஆயினும்,
ஒருவரின் துன்ப நிலை கண்டு இரக்கப்படுவதும், அவர்கள் தேறுதல் பெற இரண்டொரு இனிய நல் வார்த்தைகளைச் சொல்வதும், ஆண்டவனிடம் வேண்டு தல் செய்வதும் சிரமமானதும் அல்ல! வருமானம் பெறுத லுக்காக மட்டும் வாழ்வதும் கொடை வழங்கா திருப்பதும் இறை விருப்பத்திற்கு முரணானது.
கிண்டலும், கேலியமாகப் பேசியபடியே யதார்த் தமாக இங்கு நடக்கும் சமாச்சாரங்களைப் பற்றியே இம்மியளவும் சிந்தையிலேற்றாமல் நடக்கும் மனிதர்களின் அந்தகப் போக்கு வெட்கத்திற்குரியது.
ஒருவரின் உணர்ச்சி கண்டு மனம் பூரண திருப்தி யடையும் போது, எமக்குரிய நல்ல கொடுப் பனவுகள் இரட்டிப்பாக்க இறைவன் சித்தமாக்குகின்றான்.
வசதியும், வாய்ப்பும், பணமும், புகழும் உடையவர் களையே தாங்கித் தூக்கி ஏற்றுபவர்கள் ஏன் தாழ்ந்த வனைத் தூக்கி நிறுத்தப் முன் நிற்பதில்லை?
சுய ஆதாயம் மனிதனால் தான் கிட்டும் என எண்ணுபவர்கள், தங்கள் தன்னலமற்ற சேவையினால்
- 114
 

மரணத்தின் பின் வாழ்வு எல்லாமே வலிய வந்து சேரும் என்பதைப் பலர் நம்புவ தில்லை.
உடனடித் தேவைகளையே மனித மனம் நாடிக் கொண்டிருக்கின்றன. அவை கிடைக்கும் இடங்கள் நீதிக்குப் புறப்பான இடங்கள் எனத் தெரிந்தும் அது பற்றி எவரும் கவலைப்படுவதுமில்லை. நீதியைப் புறம் தள்ளி அநீதிக்கான காய்களை நகர்த்துகின்றார்கள்.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்ஸர், மகரிஷி ரமணர், இராமலிங்கவள்ளலார் போன்றவர்களின் வாழ்க்கையைப் படித்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.
பிறர் துன்பு துயரங்களை தமது சிரசில் ஏற்றிக் கொண்ட இவர்கள் அதற்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்கள்.
பிரார்த்தனை, வேண்டுதல்கள் என்பது சாமான்ய விஷயமல்ல. அக்பர் சக்கரவர்த்தியின் தகப்பனார் தனது அருமைச் செல்வன் அரியணை வாரிசு, கடும் சுகயினமுற்று மரணத் தறுவாயில் இருக்கும் வேளை இறைவனிடம் வேண்டுதல் செய்தார்.
“இறைவா. எனது மகன் உயிர் பிழைக்க வேண்டும் அதன் பொருட்டு எனது உயிரை நீ எடுத்துக்
- 115

Page 60
மருத்திபூர் அல.ஐயிரணுகுரர் கொள்!" என்ற படியே உளம் கசிந்து பிரார்த்தனை செய்தார். என்ன அற்புதம் 1 சக்கரவர்த்தியின் உயிர் பிரிந்த அக்கணமே, அவர் மகன் நோய் அகன்று பிழைத்துக் கொண்டான்.
ஒருவரின் மனோ வலிமைக்கு இச் சம்பவம் 69(5 சான்றாகும். எமது பிரார்த்தனையில் தூய்மையும், நேர்மையும் இருக்க வேண்டும். எமது ஆன்மாவின் ஒசைகளை இறைவன் கேட்க எமது வேண்டுதல்களில் ஸ்திரத் தன்மை இருக்க வேண்டும்.
எனவே நாம் பிறர் துன்பம் களைவது எனும் விடயத்தில் எம்மால் அது முடியும் என்பதை நாம் மறுக்க முடியாது.
செய்கின்ற பணிகளில் தூய்மை மேலோங்கும் போது அது இலகுவாக்கப் படுகின்றது.
தமது கல்வியையும், அனுபவங்களையும், ஈட்டிய செல்வங்களையும் தங்களது சொந்தங்களுக்காகவும், தமக்காகவுமே மனிதன் செலவிடுகின்றான், சேமித்து மேலும் மேலும் வசதிகளை வாய்ப்புக்களைப் பெருக்கு கின்றான்.
பிறருக்காக எத்தனை சதவீதம் தமது நேரத்தை யும், செல்வத்தையம் செலவிடுகின்றான்?
உபதேசங்களைப்,பேருரைகளை நாம் கேட்பதற்கு
- 116
 

LDUGUOTöálsó Llsö 6lITije) மட்டுமே நேரத்தை ஒதுக்குகின்றோம். செயல் வடிவில் வாழ்வை உருவாக்க எத்தனை நபர்கள் முன் வருகின்றார்கள்? -
சாதனைகள் பல செய்வதற்காகச் சக்தியைச் செலவிடும் நாம், சாதாரண சாமான்யனின் சோகத்தை சீவி ஏறிவதே பேராற்றல் மிக்கது என உணர்வதேயில்லை.
கனத்த கல்வியை பயின்றும் கூட மற்றவன் ரணத்தை மாற்றும் குணத்தைக் கொண்டுள்ளோமா? தோளில் சுமையோடு உள்ளவனுடன் வார்த்தையாடு வதைவிட அவன் பாரத்தை பகிர்வது மேலானது.
மனித மனப் பாரங்களாலே இந்தப் பூமியின் பாரங்கள் பன்மடங்கு அதிகரித்து விட்டது. மக்கள் மனம் துண்டுபட்டு அல்லலாடினால், பூமியும் தள்ளாடும் மனித நடத்தைகளே உலகை நடாத்துகின்றது.
ஒரு யானையையும், ஒருவன் சுமக்கலாம்ஆனால், ஒரு சின்ன சோகம் சேர்ந்திருந்தால் சித்தம் சிதறி, ஸ்தம்பித நிலையடைந்து ஒரு சின்ன பலூன் கூட மலை போன்ற சுமை எனக் கருதுவான்.
எனவே,
எல்லோருமே, ஒருவரை ஒருவர் தூக்கி நிறுத்த வேண்டியவர்களாவர். உலகத்திற்கு நம்பிக்கைக்குரிய பங்குதாரர்களாக்க சகலரும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
- 117

Page 61
பருத்திபூர் 040 ஆயிரவரர்
மனிதர் தமக்குத் தாமே வைக்கும் உண்மையான நம்பிக்கை மற்றவர்கள் மீதான களங்கமற்ற ஈடுபாடுக ளாலேயே அமைகின்றன. பூமியும், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பரஸ்பரம் அனைவரும் இணைக. வியாபாரச் சரக்கு என வாழ்க்கையை எண்ணல் வேண்டாம்!
இந்த மாசற்ற நம்பிக்கை, எதையுமே தாங்கி நிற்கும் புலனறிவுக்கும் எட்டாத மகா சக்தி நீங்கள் எல்லோரையும் வெறும் வாயால் உபசரிப்பதிலும் பார்க்க உங்கள் நெஞ்சங்களால் உபசரித்து மகிழுங்கள்!
இந்த எண்ணங்களே அடுத்தவன் துயரைத் தாங்கும் வல்லமையைத் தந்துவிடும். ஒருவருக்குத் துயரங்களை வேண்டு மென்றே புகுத்திவிட்டு சாமர்த் தியமாகத் தப்புவதுதான் தனது துன்பங்களை நீக்குவதற் கான வழி எனத் தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடாது.
ஒருவர் மனிதாபிமான பணிகளைச் செய்வதற்கு
வழிவிடுவதும் அவர்களோடு இயங்குவதுமே மேலான ஆன்மீக உயிர்ப்பூட்டலுமாகும்.
தினக்குரல்
ஞாயிறு மஞ்சரி
28.11.2010
- 118
 

ஒட்டுக் கேட்டல் கெட்ட பழக்கம்!
அடுத்தவன் செயலை சதா ஆராய்வது அநாகரீகம். தங்கள் செயல்களை
முடி மறைத்து அடுத்தவர் பற்றி அறிந்து கொள்ள காலத்தை விரயம் செய்வது சந்தோஷங்களை கரைக்கும் வேலை. ஒருவரைக் குறை காண்பதிலேயே குறியாக கொள்பவர்களே ஒட்டுக் கேட்கும் குணங்க ளுடன் இணைங்கி நிற்கின்றார்கள். இது கூட ஒரு திருட்டு முயற்சி தான். அத்துடன் மனித உரிமை மீறல். ஒருவர் அந்தரங்களுடன் நாம் பிரவேசிப்பது அவர்கள் சுதந்திரத்தைக்கூறுபோடுவதாக அமையும். எம்மை நாம் ஆய்வு செய்யலாம். ஆனால் மற்றவர்கள் எம்மை ஆய்வு செய்வதை விரும்புகிறோமா? ஒட்டுக் கேட்டும் துஷ்டத்தனத்தால் உறவுகள் கெடும் . ஒட்டுக் கேட்டல் குணத்தை வெட்டிப் போடுதல்
N2-2525DD: .المص ஒட்டுக் கேட்டல் கெட்ட பழக்கம். அடுத்தவர் என்ன சொல்கின்றார், அதனால் ஏதாவது அனுகூலம் இருக்கி றதோ, இல்லையோ கேட்டேயாக வேண்டும் என்கிற அவா, வெட்கம் பட வேண்டிய செயல்.
- 119

Page 62
கருத்தியூர் அல. தவிர்வரன்
நீங்கள் யாரிடமாவது தனிப்பட்ட முறையில் பேசுகையில், அடுத்தவர் அதைச் செவிமடுக்க விரும்பு வீர்களா? &"、 。
அப்படியாயின் எப்படி பிறிதொருவர் பேச்சை நாம் அவர்கள் அனுமதியின்றி, எவ்விதமான கூச்சமும் இன்றி இரகசியமாகத் தகவல்களை சேகரிக்க முயல்வது சரியாகுமா?
எவர், எவர்களோ எத்தனை, எத்தனை விதமாகப் பேசுவார்கள், செயற்படுபவர்கள். அவைகள் எல்லாவற்றி லுமே எமது புலன்களை உள் நுளைப்பது, சிரசுக்குப் பாரங்களை சுமத்தும் அடாவடித்தனமான காரியம் தான்.
சில சமயம் எங்களைப் பாதிக்கும் விடயங்களை வெகு சாமர்த்தியமாக யாராவது இரகசியமாக மேற் கொண்டால் என்ன செய்வது என்பது கூட நியாய பூர்வமான கேள்வி தான். உங்களை அறிவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடை முறைகளை, எந்த வழியிலாவது தெரிந்து கொள்ள முனைவது தற்காத்துக் கொள்ளும் வழி எனலாம்
நாம் அநாவசியமாக ஒருவரைச் சந்தேகிப்பதும், வீண் பழி சுமத்துவதும் அடுக்காத காரியம். எமது சிந்தையாலும் எவரைப்பற்றியும் வீணான களங்கம் கற்பிப்பதே பாவங்களை உற்பத்தி செய்வது போலாகும். ஆராயாது எவர் மீது பழி போடலாகாது.
- 120 سے
 

LDU 600 ĝ5ślsői ĵ6öī 6JITL:b62] மேலும் நாம் வார்த்தைகளை உதிர்க்கும் போதும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போலியான அன்பைப் பொழிவது போல் பொழிந்து காலை வாரி விடுபவர்களை எப்படிப் புரிந்து கொள்வது?
என்றும், எப்பொழுதும் எவரையும் எம் சித்தத்தி
னால் கடுகளவும் வெறுப்பை உமிழும் காரியத்தைச்
செய்யாதவிடத்து எம்மை எதிரிகள், எனக் கருதுபவர்கள்
எம்மிடமே வந்து சரணடைந்து போவார்கள்.
எதிலும் சந்தேக மனப்பாண்மையுடன் பழக நேர்ந்தால், மற்றவர்கள் நடத்தைகளைக் கண்காணிக்கும் இயல்புகள் கூட வந்து விடுகின்றன.
இன்று உலக நாடுகளில் வல்லரசுகள் எல்லாமே தங்கள் நாட்டின் மீது, பிறநாடுகள் மூக்கை நுழைத்து விடுமோ என்கின்ற அச்சத்தினால் ஒற்றர்களை அனுப்பி வேவு பார்க்கின்றன.
வல்லரசுகள் பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணங்களைத் தம்மகத்தே கொண்டிருப்பதனால் அடுத்த நாடுகளை சுரண்ட விழைவதும் அவைகளைக் கவிழ்க்க ஒற்றர்களை அனுப்புவதும் சகஜம். ஆனால் எல்லா நாடுகளுமே இது விடயத்தில் ஒன்றின் மீது, ஒன்று பழி சுமத்தியவாறே தத்தமது காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இது இராஜதந்திர நடவடிக்கை. இதில் குற்றம் என்பதே இல்லையாம். ஆனால் அவைகள்
- 121 -

Page 63
மருத்திபூர் 040 ஆயிரவநாதர் தங்களைக் காப்பாற்ற எதுவும் செய்வார்கள். ஏனைய நாடுகள் தங்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கை எடுப்பதையும், குறிப்பாக வல்லரசு நாடுகள் விரும்பு வதில்லை. என்ன தாராள மனசு இவைகளுக்கோ தெரியவில்லை! இந்த மேலாதிக்க பேராசையினால் உலக மகாயுத்தம் தான் நிகழும் என்பதை இன்னமும் உணராமல் இருப்பது விந்தை!
இன்றைய விஞ்ஞான உலகில் ஒற்றர்கள் போய் ஒட்டுக் கேட்கத் தேவையேயில்லை. நவீன கணினி யுகத்தில் எல்லாமே நடக்கும். உட்கார்ந்து இருந்தபடியே சர்வதேச வலைப்பின்னலுடாகத் திருட்டுத்தனமாக எல்லா தகவல்களையும் கனகச்சிதமாகக் கைப்பற்றுகின்றார்கள். இதனை கணினி யுத்த முறை என்றும் சொல்லலாம்.
உல்லாசப் பயணி வேடங்களில், தொழில் அதிபர்களாகச், சுவாமிமார்களாக, பொதுநல தொண்டு நிறுவன ஊழியர்களாகச், சமயபிரசங்கிமார்களாக, பல்துறை ஆற்றல் பெற்ற வீரர்களாகக், கலைஞர்களாகப் பற்பல வடிவங்களை எடுத்தவாறு ஒவ்வொரு நாடுகளின் உளவுஸ்தாபன உளவாளிகள் எங்கும் பரந்து வியாபித்த வண்ணமாயுள்ளனர்.
இவையெல்லாம் இரகசியங்களை சேகரிக்கும் ஆவல் மட்டுமல்ல, மனிதனை மனிதன் அடக்கி ஒடுக்கும் பேராசையும் இச்சதி நடவடிக்கைகளில் அமிழ்ந்திரு
- 122 -
 

மரணத்தின் பின் வாழ்வு க்கின்றன. ஆனால் அப்பாவி மக்கள் எல்லோருக்கும் இந்தச் சங்கதிகள் பெரிதாகத் தெரிவதும் இல்லை.
தனி ஒரு மனிதனின் அத்துமீறிய ஒட்டுக் கேட்டல், பிறர் விடயங்களில் அதீத ஆசை கொள்வதால் பல குடும்பங்கள் பிரிந்து, சிதறிச் சின்னா பின்னமாகிப் போகின்றன, "என்னைப் பற்றி என்ன அந்தரங்கமாகப் பேசினாய், விட்டேனாபார்!"எனச் சொல்லி ஆக்ரோ ஷமாகச் சண்டையிட்டுப் பிரிந்து போகும் குடும்பங்கள் எத்தனை எத்தனை!
தகாத பேச்சுக்களைச் செவிமடுக்காது விடுவதே உத்தமமானது. பிறர் அந்தரங்கங்களைச் சுரண்ட ஆரம் பித்தால் அவர்கள் சொந்த வாழ்க்கை தான் சோகமாகப் போகும்.
கனிவான நோக்கும், பேச்சில் இங்கிதமும், நட்பை வேண்டிநிற்கும் குணங்களும் இருந்தால் எங்களைப் பற்றி பேசி, தூஷிப்பதற்கு என்ன இருக்கின்றது?
பொறாமைக்காரர்களையும், அருட்கண்ணுடன் நோக்குக! அவர்கள் தங்கள் செயலுக்காக வருத்தப்ப டுவார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதே. ஆனால் அந்த உணர்வுகளால், மற்றவர்கள் மனம் காய ப்படாமல் பார்த்துக் கொள்க! சந்தேகத்தை பிறர் கொள்ள நாம் காரண கர்த்தாவாக இருக்கக் கூடாது.
- 123

Page 64
மருத்தியூர் (40.99ரதாரர் இதனாலேயே மற்றவர்கள் எம்மைத் தேவையற்ற விதத்தில் ஆய்வு செய்யும் நிலையை ஏற்படுத்தி விடும். திறந்த மனசுடன் பழகுபவர்களுக்குத் துரோகம் செய்ய யாருக்கு மனசு வரும்?
நாம் வாழும் வாழ்வின் எதிரொலி தான் எங்கள் எதிர் காலத்தைத் தீர்மானிக்கிறது. களங்கம் கற்பிக்க எவர் வாழ்வையும் ஆராய்ச்சி செய்வது மகா துரோகம். அன்பான மாந்தர்கள் சிந்தை நோகப் பேசமாட்டார்கள். பிறர் துன்பம் கண்டால் பொறுக்கவே மாட்டார்கள். எப்போதும் மற்றையவர் துயர் களைபவர்கள் அடுத்த வர்கள் அந்தரங்கங்களை எட்டிப் பார்க்கவே மாட்டார்கள்.
தினகரன் ஞாயிறு மஞ்சரி 20.03, 2011
- 124
 

வெற்றிகள் போலவே தோல்விகளும் அற்புதமானவை:
பெற்ற வெற்றியின் மேன்மை தெரியவேண்டுமெனில் ஏற்கனவே தோற்ற எவரிடமாவது கேட்டுப் பாருங்கள். தனது அனுபவங்களைச் சொல்லுவார். நியாய பூர்வமாகப் போராடிப் பெற்ற வெற்றிகளே நிரந்தரமானது. அப்போது பட்ட அவஸ்தைகள் எல்லாமே நல்ல அனுபவமாகி வெற்றிக்கு வழிகோலுகின்றன. ஒரு தனி மனிதனின் தோல்வியைக் கண்டு எவருமே எள்ளி நகையாடத் தேவையில்லை. அவர் நல்ல நோக்கத்திற்காக கண்ட முயற்சிகள் முழு உலகத்துக் குமானதுதான். ஆயினும் தோல்வி என்பது நிரந்தர இழப்புமல்ல. நல்ல விஷயங்களை பெற நாம் எடுத்த முயற்சியிலான வெற்றி அற்புதமானவை. அது போல இவற்றைப் பெற உதவிய தோல்வியி னாலான அனுபவங்களும் நல் ஆசானாகின்றது. எனவே தோல்விகளும் gibLigsLDIT60055 لهر
வெற்றிக்கு எதிர்பதம் தோல்வி என்கின்றோம் ஆயினும் ஒருவருக்கு ஏற்பட்ட தோல்வி என்பது, அவருக்குப் பல அனுபவங்களை நல்கும் வருமான ங்களை வழங்குவதால் அதனைத் தோல்வி என்று சொல்லலாமா?
- 125 -

Page 65
மருத்திபூர் 00. வரதரர்
எதிர்ப்புக்களை சகிப்புத்தன்மையுடன் போராடியும் கண்டதோல்வியினால் சற்றேனும் மனம் துவளாது மீண்டும் மோதிப் பெற்றுக் கொண்ட வெற்றியின் பெருமிதம் அலாதியானதே.
சும்மா கிடைத்தால் அது சுவைக்காது கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பினால் குடிக்கும் கஞ்சி அமிர்தத்திலும் மேலானது. எனவே பெற்ற வெற்றியின் மேன்மை தெரிய வேண்டுமாயின் ஏற்கனவே தோற்ற எவனிடமே கேட்டுப் பாருங்கள்.இந்த அனுபவத்தை நீங்களும் பெற்றிரு
iss6)ntib.
எதையும் நியாயபூர்வமாகப் பெற்றுக் கொள் ளாமல் பலாத்காரமாகக் கொய்ந்து கொள்ளுவது சாமர்த் தியமானது அல்ல, மானக்கேடானது. அவமானத்தையே வெகுமானம் எனக் கொண்டு தன்னைத்தானே அலங்களிப்பது போலாகும்.
வசதி படைத்தவர்கள் பெரிதும் கஷ்டப்படாமல் உழைப்பதைப்பார்த்து எவருமே ஏங்கிடத் தேவையில்லை. சாஸ்வதமான சந்தோஷத்தை இவர்கள் அனுபவிப்ப தேயில்லை. ஓட்டைக் குடிசையில் வாசம் செய்பவர்களின் சுவாசம் சுதந்திரமானது. அது சந்தோஷமாக மூச்சை உள் இழுத்து வெளியே விடும். நல்ல உறக்கம் நிறுத்தாமல் நடக்கும் விழித்த பின் உழைப்பு, சிரிப்பு, ரசனை, இயற்கையுடன் இணைதல் இப்படியாகப் பல சுகானுபவங்கள் கிடைக்கும்.
- 126
 

மரணத்தின் பின் வாழ்வு செல்வம் இல்லை என்பது ஒரு தோல்விக்குரிய சமாச்சாரம் அல்ல, எனினும் செல்வம் மட்டுமல்ல, அதனுடன் கல்வி, ஞானம், வீரம் எல்லாமே மனிதனுக்கு வேண்டியதே.
என்றும் வறுமையுடன் போராடுவதே தொழில் அல்ல. மேலான வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியது மானுடப் பணியுமாகும். ஏன் எனில் ஒவ்வொரு பிரஜை க்குப் பின்னால் பல சக்திகள் உண்டு.
முழு உலகமே ஒவ்வொரு தனி மனிதனின் உழைப்புடன் இணைந்து இருக்கின்றது. எனவே ஒவ்வொ ருவரும் உலகில் அதிவுயர் கெளரவப் பிரஜைகளே.
எனவே ஒரு தனிமனிதனின் தோல்வி இந்த முழு உலகிற்குமான இழப்பு அல்லது தோல்வி என்பதை மனதார எண்ணி அவனை முழு மூச்சுடன் மீளவும், இயக்கி முன்னேற வழிசமைத்திடுக தோழர்களே!
உனது பிரயாசைகள் எனக்குமானது எனது உழைப்பு உனக்கும் உரியது என எண்ணுக. நம்பிக்கை யுடன் ஒருவரை ஒருவர் கை தூக்கி விடுக!
அர்த்த முள்ள துணிவுடன் மட்டும் செயலாற் றினால், அசட்டுத்தனங்கள்நிகழாது. வாழ்க்கைப் பாடங்கள் காலக் கணக்கினுள் அடங்குவதில்லை. சில சமயம் ஒரிரு
- 127

Page 66
பருத்திஆர் 240. ஆர்2ரர் வினாடிகளிலேயே, ஒராயிரம் கோடி பெறும திக்கும் மேலான அனுகூலங்களைப் பெற முடியும்.
தற்செயலாகவே எல்லாமே சாதகமாக நடக்க வேண்டும் என எண்ணுவதைப் போல முட்டாள்தனம் வேறில்லை.
ஆக்ரோஷமுடன் போராடுபவன் முன் துரதிஷ்ட ங்கள் விலகி ஓடும்.கொடுப்பதை வாங்குவதைவிட நாங்களே கொடுப்பவர்களாக மாற வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் ஆரோக்கியமான துணிச்சல் வேண்டும், கடும் உழைப்பு வேண்டும் ஆனால் அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அசட்டுத் துணிச்சல் வேண்டவே வேண்டாம்.
நாம் எல்லோரும் கடவுளின் பிரதிநிதிகள் தான். எனவே கண்டவனிடம் கை கட்டி நிற்க வேண்டியதில்லை. அஞ்சி, அஞ்சி சேவகம் புரிவதோ, தலை வணங்கு வதையோ இறைவன் விரும்புவதில்லை.
தங்களுக்குள் ஆன்மா இருப்பதையே பலர் உணர்வதில்லை. ஆனால் உயிர் பற்றி நிறைய பேசுகி றார்கள். அது என்றும் தூய்மையாக இருக்க வேண்டும், அதுவே நித்ய ஜெயம் பெற வழி என்பதைப் புரிந்தால் ஏது துன்பங்கள் அன்பர்களே!
வெறுமனே நாம் இயங்குவதற்கு மட்டும் ஆன்மா தேவை என எண்ணுகின்றோம் உண்மையுடன் துலங்கி
- 128
 

மரணத்தின் பின் வாழ்வு வாழ்ந்தால் தான் அது ஆன்மீக வாழ்வு ஆகின்றது. இதனையே எம் உள்ளே இருக்கின்ற உயிர் விரும்பு கின்றது. இதனை மீறுதல் ஆன்ம துரோகம்.
பாதக முறையில் அடையும் வெற்றிகளால் ஆன்மா துன்புறுகின்றது. இந்த அவலத்திற்குள் அதனை உட்படுத்துதல் கூடாது. இரகசியமாகத் தவறுகள் செய்வது சாமத்தியமானது என எண்ணுவது, தனது கண்களை மூடியபடி பூனைபால் குடிப்பதைப் போலானது. உலகம் உறங்குவதில்லை உணர்க!
உடல் உறுப்புக்களின் துன்பங்களை விட, உள் உணர்வுகளுக்கு ஏற்படும் ஊறு, தாங்கொணாத்துன்பங் களைத் தந்துவிடும்.
எனவே நற்செயல்களைச் செய்தால் மட்டும் மனம் ஏற்கும் பக்குவ நிலையை நாம் ஏற்படுத்தல் வேண்டும்.
கரிய மனதுடன் செய்யும் காரியங்கள் வெற்றி பெற்று விடுவதுபோல் தோற்றம் காட்டலாம் தீய நோக்குடன் திருப்தி காண்பதும் அதனை மனம் ஏற்குமாறு கட்டாயப்படுத்துவதும் தன்னைத் தானே ஒடுக்கி வதைக்கும் செயல்.
- 129

Page 67
பருத்திபூர் 00. லூயிற்றூர்
உறுதியான வெற்றி பெற பலவீனமான எண்ண
ங்கள், குரோதங்களை நண்பர்களாக்குவது காலில் இரும்பைக் கட்டிச் சமுத்திரத்தை நிந்திக் கடக்க முனையும் முட்டாள்த்தனம்
பல விடயங்களில் அறியாமை காரணமாக, நீண்ட பயணம் செல்ல கோழைத்தனத்தையும் சினேகம் கொள்வதால் ஆரம்ப கட்டத் தூரத்திற்குச் செல்வதே தடைப்பட்டு விடுகின்றது.
சரியான காரியங்களில் இறங்கி விட்டால் வீண் கணக்குப் பார்ப்பதும், மற்றவர் விமர்சனங்களை உள் வாங்குவதும் செய் கருமங்களை கருமையாக்கி விடும்.
பலம் கொண்ட விலங்குகள் பல்லிக்குப் பயப்படுமா? நல்ல கருமங்களை நியாயமின்றி நிறுத்த முயல்பவன் தனக்குத் தான் துரோகியாகின்றான்.நல்லது என்றும் நடந்தே தீரும்.நிறுத்தி வைக்க இறைவன் விடுவதில்லை.
கெடுதல்களைப் புரிபவர் வெற்றிக்கு விரோதிகள். துரோகத்திற்குத் துணைவர்கள், துணிவு இல்லாதவர்கள், கலக்கம், மனக்கிலோசங்களுக்கு உறவினராகின்றனர் வெற்றி, தோல் விகள் எல்லாமே வாழும் வாழ்வு முறைகளுடன் தொடர்புபட்டவை. எங்களை நாம் செப்பனிட வேண்டும். எதனையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவநிலையை உருவாக்க வேண்டும்.
- 130
 

மரணத்தின் பின் வாழ்வு நாம் ஈட்டும் வெற்றிகள் அற்புதமானவை, அது போல் தோல்விகளும் அற்புதமானவை தான். எம்மிடம் துணிவை, நல் ஆற்றலை தோல்வியாலும் உருவாக்க முடியும். நாம் துவண்டு போனால் எப்படி ஆற்றல்களை வளர்க்க முடியும்? சொல்லுங்கள் எழுந்து நின்றால் இன்னல்கள் பணிந்து தொலையும் எழுக!
தினகரன் ஞாயிறு மஞ்சரி 06.03.2011
س 131 -

Page 68
(குர்திபூர் அ.ைஆர்வதர்
சாதனை படைத்த சக்கரவர்த்திகளும், சகலதும் கற்ற பண்டிதர்களும், ஞானிகளும், விஞ்ஞானிகளும் தாயின் முன் சரணாகதியடைந்து விடுகின்றனர். ஒரு பெண் குழந்தையாக, குமரியாக, அல்லது திருமணமாகிக் குழந்தை பெற்றாலும், அல்லது குழந்தைகளே பெற்றுக் கொள்ளாவிடினும் அவள் "தாய்" எனும் கருணைத் தெய்வமாகி விடுகின்றாள். பிறர் துன்பங்களைக் கண்டால் உடன் கண்ணிர் சிந்துவது பெண்கள் தான். பெண்களை இழிவுபடுத்தும் செயலில் ஆண்களில் சிலர் மட்டுமல்ல பெண்களே கூட் தமது இனத்தையே அவமதிப்பது போல் நடப்பது வேதனை. மனித மனதில் நுட்பமான இயல்புகளை உணர்ந்து சாதுர்யமாகப் பெண் இயங்குகின்றாள். தாய்மையிடம் மட்டுமே பூரண தேறுதல்களை உலகு வேண்டி
r
பெண் பிறக்கும் போதே, தாய் எனும் பெருமையைப் பெறுகின்றாள். ༽
நிற்கின்றது. .الم
பெண் என்பவள் பிறக்கும் போதே "தாய்” எனும் பெருமையைப் பெற்றுவிடுகின்றாள். பெண்ணெனும் இனியாள் அன்புக்கும், பாசத்திற்குமே அடிமையானவள் மட்டுமல்ல, உலகம் எனும் கோட்டையைச் சமைக்கின்ற,
- 132 س
 
 

LppGGUTö56ör llgör GAITĖ6.
வீரமிகு ஆளுமையைத் தன்னகத்தே கொண்டவளு மாகின்றாள்.
சாதனை படைத்த சக்கரவர்த்திகளும் தாயின் முன் தனது மமதையை அவித்துவிடுகின்றான்.
இயல்பாகவே பெண்கள் அனைவருக்குமே தாய்மை உணர்ச்சியுண்டு. அரவணைத்தல், அனுசரித்தல், மன்னித்தல், ஏற்றுக் கொள்ளல் என்பது மனதின் விசாலத்தைப் பொறுத்த விஷயம்.
மென்மைப் போக்கும், குழந்தைத்தனமும் உள்ள ஒருத்தி எங்ங்ணம் சூழலுக்கு ஏற்றவாறு நீதிக்காகப் போராடுகின்றாள் என்பதே பெரிய ஆச்சரியம்! ۔۔۔۔
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரங்களைக் கட்டிப் போட எத்தனிப்பவர்கள், அவள் தாய்மை உணர்வின் முன் தோற்றும் போகின்றார்கள்.
பெண் குழந்தையாய் இருந்தாலும் சரி, ஒருத்தி திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றாலும். அல்லது அவள் திருமணமாகாமலே இருந்தாலும், அன்றில் குழந்தைச் செல்வம் இல்லாமலே இருப்பினும் அவளுக் கேயான இரக்க உணர்வு உயிர்களை நேசிக்கும் பாங்கு தனித்துவமானது.
- 133

Page 69
பருத்தில் பல விரவநாதர்
இல்லற வாழ்வில் புகுந்தும், தமது கணவர் சுவாமி இராமகிருஷ்ணரால் தாயாக வணங்கப்பட்டதுடன் தமது ஆன்மீக வாழ்வில் அனைத்து உலகினர்களையும் தமது குழந்தைகளாகக் கொண்ட அன்னை சாரதா தேவியார், கன்னியாஸ்திரியாகத் துறவு பூண்டு முழு உலகத்தின் ஷேமத்திற்காகப் பணியாற்றிய அன்னை தெரஸா போன்ற மகராசிகள் பலர் உளர். அத்தகைய பணிகளில் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்த திருவருட்செல்வி - தங்கம்மா அப்பாக்குட்டி போன்றவர்களின் அருட்பணி களை நாம் அறிவோம்.
குடும்பத்துக்காக மட்டுமன்றி முழு உலகத்தி ற்காகவும் இரங்குவதே தாய்மை யாரோ எவரோ ஒருவர் அவஸ்தைப்படும் போதும் கண்களில் பரிவினைப் பிரசவித்து விடுகின்றாள் பெண்.
தாய்மையில் அந்நியத்தன்மை அறவேயில்லை அந்நியோன்னியமே துலங்கும்.
கதைகளைப்படிக்கும்போதும், திரைப்படங்களைப் பார்க்கும் போதும் கண்ணீர் சிந்துவது பெண்களாகவே இருக்கின்றார்கள்.
எனினும்,
பெண்கள் இதயத்தை கசக்கிப் பிழிதலில்
ஆண்களோடு போட்டி போட பல பெண்கள் முனைவது
நாம் காண்கின்ற துன்பியல் காட்சிகள்!
- 134
 
 

மரணத்தின் பின் வாழ்வு
குழந்தைப் பேறு இல்லாவிட்டால், அல்லது திருமணமாகிய ஒரிருமாதத்தினுள் கர்ப்ப காலம் தாமதித்தால், மாமிமார்கள் செய்யும் அடாவடித் தனங் களே, தற்போதைய கதைகளின் மூலப் பொருளாகி விட்டது. உயிர் அற்ற கருவி போல் இவளை நடாத்துவது கொடும் விலங்கையே கண்கள் கலங்க வைக்கும் நிகழ்வுகள்! 葱、
தாய்மையின் மென்மையுணர்வினை முதற் கண் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்பினைப் பகிர்வது விருப்பமே இல்லாவிடத்து, கொடுமை புரியும் உணர்வுடன் கூடவே பிறபோக்கான சிந்தனைகளும் உதித்து விடுகின்றது.
அடிமைத்தனத்தின் கொடுமைகளை உணர்ந்த வர்களே தங்களை ஒத்த பெண்ணுக்கு எதிரான துன்பங்களுக்கு தாங்களே ஒரு காரணம் என்பதை உணர மறுப்பது வேதனை தரும் விஷயமேயாம்.
தாய்க்குரிய பண்புகள் எது வெனில் தனது பிள்ளைகள் அனைவருக்குமே வழங்குகின்ற அதே சகல உரிமைகளையும், தமது வீட்டுக்கு வந்தவளுக்கும் வழங்க வேண்டும். ஆயினும் இது விடயத்தில் ஒருவர் மீது ஒருவர் சாட்டும் குற்றப்பத்திரிகையால் குழம்பவது முழுக் குடும்பமும் தான். -
- 135

Page 70
மருத்திஆர் பல. லுரிலுருந்தர்
தாய்மை என்றுமே அமைதியானதுதான் இயங்கு வதே உலகத்துக்குத் தெரியாமல் இயங்கு கின்றாள். கணவன், பிள்ளைகள், கணவனின் உறவுகள், தமது உறவுகள் எனப் பின்னப்பட்ட உறவு வலைகளுக்கு ஏற்றபடி இவளால் எவ்வாறு லாவகமாகக் சுற்றிச் சுழல முடிகின்றது?
அன்பானஒருத்தியிடம்பெறுகின்ற நற்பிரசாத ங்களான் பரிவு, பாசங்கள் எந்த விதமான தோல்விகளால் ஏற்படும் துன்பங்களை விரட்டியடிக்கவும், மீண்டும் எழுந்து நடை போடவும் வைத்து விடுகின்றன.
மனித மனத்தின் நுட்பமான இயல்புகளை அன்பானவர்களாலேயே கண்டு கொள்ள முடியும். ஏன் எனில் தன்னுடன் சீவிக்கின்ற உறவுகளின் உணர்வைப் புரியும் அதிநுட்பமான அறிவு தாய்மைக்கேயுரியது.
தாயிடம் இரகசியத்தை சொல்லாத பிள்ளைகள் இல்லை. அதே போல், ஒருவன், சகோதரியாக அல்லது, சினேகிதியாகக், காதலியாக உள்ளவர்களிடம் ஒரு பிரச்சனைகளைச் சொல்லும்போது அவர்கள் அதனைக் கரிசனையுடன் நோக்குவதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருப்பீர்கள்.
ஒரு ஆண் பிரச்சனை என்று வரும் போது தன்மீது அன்பு கொண்டவர்களைத் தேடி ஓடுகின்றான். அதிகம் பழகாத பெண்களிடம் கூடக் கூச்சப்படாமல்
- 136
 

மரணத்தின் பின் வாழ்வு தங்கள் கதைகளைக் கூறி தேறுதல் பெறும் சகல வயதுத் தரங்களையுடைய ஆண்களே ஏராளம், ஏராளம்! “இது தாய்மையைத் தேடுகின்ற ஆண்களின் இயல்பு.
கரிசனைகளும், அன்பும் ஆண்களிடம் இல்லை என்பது அல்ல. வீட்டில் பெண்பிள்ளைகளோ, அல்லது ஆண்பிள்ளைகளோ, தகப்பனிடம் பாசம் இல்லாமலா இருக்கிறார்கள்? ஒரு தகப்பனின் தியாகத்தை இவர்கள் உணராமல் இல்லை. தாயிடம் ஏன் எல்லாவற்றையும் சொல்லிக் கொள்கின்றார்கள்.?
கனிவான அன்பை எல்லோருமே பெண்ணிடம் நாடுவது இயற்கையான நிகழ்வு தான். பெண்கள் சிருஷ் டிக்கப்படும் போதே அவள் எல்லோருக்கும் தேறுதலூட்டும் தேவதையாக்கப்பட்டு விட்டாள்.
அண்மையில் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றினை நடத்தி வரும் தம்பதியினரிடம் நிருபர் இவ்வாறு கேட்டார். * நீங்கள் இந்த இல்லத்தை சிரமத்துடன் நடத்தி வருகின் றிர்களா? என்றார்.
அதற்கு அதனை நடாத்திவரும் இல்லத் தலைவி கூறினார் " எனக்கு எதுவித சிரமமும் இல்லை நிரம்ப மன அமைதியை இதனை நடாத்துவதன் மூலம் பெறுகின் றேன். எங்களுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. எனவே
- 137 -

Page 71
விருத்திபூர்:40. ஆயிரவநாதர் நூற்றுக் கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை நாங்கள் பொறுப்பெடுத்தோம். இப்போது இந்தக் குழந்தைகள் எல்லோருமே என்னை "அம்மா” என்று அழைக்கின்றனர். நாங்கள் பெரிய குடும்பமாகி விட்டோம். இதைவிட வேறு என்ன சந்தோஷமிருக்கப் போகின்றது? ஒரு வேளை எமக்குக் குழந்தைகள் பிறந்திருந்தால்,அவர்களுடன் மட்டுமே வாழ்ந்திருப்போம். ஆனால் இப்போது எல்லாமே எமது குழந்தைகள் என்றாகிவிட்டது. முழு நிறைவான வாழ்வு இது" என்றார்.
ஒருவர் வாழும் நல்ல இலட்சியமான வாழ்வில் தான் சந்தோஷம் முழுமையாகத் தங்கியுள்ளது முழு உலகத்தையே குடும்பமாக எண்ணும் நிலை வந்து விட்டால் உலகில் சண்டை சச்சரவுகள் என்பது ஏது?
தாய்மை உணர்வு எனும் இரக்கம் பெண்களுக்கு மட்டுமல்ல, அவரவர்களுடாக எல்லோருக்குமே வியாபகமாக வேண்டும். உயிர்களுக்கு இரங்குதலில் ஆண், பெண் வேறுபாடுகள் என்பது ஏற்கக் கூடியதுமல்ல.
“பெண்மையைப் போற்றுதல்” என்பது அவளிட மிருக்கும் நல்ல குணாம்சங்களை நாம் முழுமையாக, எவ்வித தன்முனைப்புமின்றி ஏற்றுக் கொள்வதும் அவளிடம் இருக்கின்ற அன்பினைப் புரிந்து, உலகிற்கும்
"நாம் பரிபூரண இரக்கத்தைப் பொழிதலுமாகும்.
வெறுமனே அவர்களைப் போற்றுதலை மட்டும்
- 138 -
 

மரணத்தின் பின் வாழ்வு விடுத்துத் தாய்மைச் சின்னமான இவளுக்கு ஏற்ப புனித ஆசனத்தை வழங்குவது பூமியைப் புனிதமூட்டும் கருமமாகும்.
கேலிக்கும் கிண்டலுக்குமான கருப்பொருளாக மாதர்களை எண்ணுவது தாய்மையை களங்கப்படு த்தவதேயாகும்.
நாம் யாரிடம் இருந்து பிறந்தோம், எவரிடமிருந்து உலகை பார்த்தோம். இன்று ஒரு மனுஷனாக உலாவி வருகின்றோமே என்பதை கடுகளவும் சிந்திக்காது, கண்டபடி தூஷிப்பதும், சதா கண்டனங்களையோ சொல்லித் திருப்திப்படுவதும் நன்றி மறந்த செயல்!
ஏன் எனில் நாம் எந்த ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் ஏனைய பெண்களும் தாய்க்கு நிகரானவளே என்பதைச் சிந்திக்க வேண்டும். அதனை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். தாய்மையின் "மேலான அன்பு" கிடைக்கவே நாம் விரும்புகின்றோம். எனவே எம்மை ஆதரிக்கும் அனைத்துத் பெண்மை எனும் பெரும் கொடைகளைக் கெளரவித்து, வாழ்த்துதலே இறைவன் எங்களைப் பெருமைப்படுத்தும் செயலாகும்.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி -13.03.2011
- 139 -

Page 72
மருத்திபூர் 040, 2றிலுரர்
W.
歌
சமையல் கலையில் கைதேர்ந்தவர்களாகப் பெண்கள் விளங்குவதன் இரகசியம்? (பெண்களின் கூமையல் பக்குவமே மிக அற்புதமானது தாய்கையினால் சாப்பிடுவது போல் நிறைவு வேறு ஏது? அவள் கைப்பக்குவத்தினால் மட்டும் உணவு ருசிப்பதில்லை. அவள் உணவோடு தனது மேலான அண்பையும் கலந்து எமக்கு ஊட்டுகின்றாள். இன்று உலகம் பூராவும் உள்ள உணவுச்சாலைகள், மிகப் பெரிய நட்சத்திர விருதிகளில், சமையல் சங்கதிகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வெறும் ருசிக்காக மட்டும் உணவு அல்ல, நல்ல போஷாக்காகவும்
அவை அமைய வேண்டும். தனது சிக்கன வாழ்க்கை முறையினால் இருக்கிற காய், கறிகளைக் கொண்டு மிக நேர்த்தியாகச் சமைப்பதில் பெண்கள் வல்லவர்கள்.காலம்
காலமாக இயற்கையான முறையில் பண்டைய கலாச்சாரத்தின் வழி நிண்று சமையல் கலையை வளர்ப்பதில் அன்னையரின் பணி அலாதியானது. أص
"என்ன தான் தேவலோகத்து அமிர்தத்தை சாப்பிட்டாலும் அவை யெல்லாம் எனது அம்மாவின் கைப்பக்குவச் சமையலுக்கு ஈடாகுமா?"
- 140 -
 
 

மரணத்தின் பின் வாழ்வு
எனது வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகள் கூட என்றும் மாறாத சுவைமிகு அனுபவத்தினை வாயூறி, சப்புக் கொட்டியபடி சொல்லிக் கொள்வார்கள்.
அது என்ன, அம்மா கைபட்டாலே சமையல் இந்த அளவிற்குச் சுவையேறுகின்றது. அம்மா எல்லோரும் சமைப்பது போலவா உணவு தயாரிக்கின்றாள்?
மிக எளிய உணவை அவர் தயாரித்தாலும், அதனுடன் தனது பூரண பாசம், அன்பைக் குழைத்து அல்லவா எமக்குக் கொடுக்கின்றார்! தாய் உணவை வழங்குவதில்லை, "அன்புடன் ஊட்டுதல்" என்பதே பொருத்தமான வாசகமாகும் மிக வலிந்து ஊட்டி ஊட்டி வளர்த்தெடுப்பாள் "தாய்" என்னும் பெரும் தெய்வம்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் சரி, வறுமையான நிலையில் உள்ளவராளினும் சரி, அந்த காலங்களில் கிடைக்கும் மலிவான காய், கறிகள் மூலம் எவ்வளவு பிரமாதமாக, அமிர்தத்திலும் மேலாகத் தந்து விடுவது அவர்களுக்கேயுரிய அரும் கலை.
முன்பெல்லாம் எம்மவர்கள் முருங்கைக் காய், கீரை வகைகள், கிழங்கு வகைகளைக் காசு கொடுத்து வாங்குவதில்லை. வீட்டின் கொல்லைப்புறம், கிணற் றடியின் வாய்க்கால் வரப்புப் பக்கம் பக்கங்களில் தாமாகவே மிகச் செழிப்பாக வளரும். மேலும் வீட்டுத்
- 141 -

Page 73
பருத்திபூர் பல அறிருந்தர் தோட்டம் அமைப்பதில் அவர்களுக்குச் சிரமம் தோன்று வதுமில்லை. எனவே வீடுகளில் காய்கறி, முல்லை, முசுட்டை, சண்டி, தூதுவளை என எல்லாமே கிடைக்கும். அல்லாது விடின் அக்கம் பக்கத்து உறவுகளிடமிருந்து தாராளமாகவே காய், கறி, கீரை வகைகள் கிடைத்தே தீரும்.
ஆனால் இன்று இந்த நிலை அருகி வருகின்றன. அன்றாடம் உணவிற்காக செலவிடும் பணம் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. கிராமங்களில் , நகர்புறங்கள் போல் மரக்கறி வகை தட்டுப்பாடு அவ்வளவாக இல்லை உடலை வளைக்காமல் விட்டால் உற்பத்தி அருகிப் போகும்.
இருப்பதை வைத்து செப்பமாகச் சமைக்கும் கலையை இல்லத்தரசிகள் தமது மூதாதையரூடாகத் தெரிந்து வைத்திருந்தாலும் கூட நகர்புற வாழ்க்கை மோகம், இந்தச் சிக்கன வாழ்க்கையைத் துறந்து செலவு செய்தலே கெளரவமானது என்கிற எண்ணத்தில் அமிழ்ந்துபோகச் செய்து விட்டது.
உணவு தயாரிப்பதில் பெண்கள் மட்டுமா வல்லவர்கள்? இன்று சமையல் கலையில் பெண்களை விட ஆண்களே வல்லவர்கள் எனச் சொல்லப்படுகின்றது. நகாப்புறம் எங்குமுள்ள உணவுச் சாலைகளில் சமையல் வேலை செய்வது பெரும்பாலும் ஆண்களே!
-- 142 ܗ
 

மரணத்தின் பின் வாழ் பெரிய நட்சத்திர விடுதிகள், விருந்து வைபவங் களில் ஆண்பாலரின் சமையல்தான். நூற்றுக்காணக்கா னோருக்கான சாப்பாடு தயார் செய்தல், சுலபமான காரியம் அல்ல. திருமண வைபவம், விழாக்களுக்கு உணவு தயார் பண்ணுவது கடினமான பணி அல்லவா?
உணவு தயாரித்தல் முறைக்கான கல்வித்துறை உலகம் எங்கும், பயிற்றுவிக்கப்படுகின்றது. வீடுகளில் செய்கின்ற சாதாரண உணவுப் பண்டங்களிலிருந்து. மேற்கத்திய, கீழைத்தேய நாடுகளின் உணவுமுறைகளை எம்மவர்கள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். நட்சத்திர விடுதிகளில் சமையல் வேலையில் ஈடுபடுகின்றவர்கள் கெளரவத்துடன்நடத்தப்படுவதுடன் அதிகூடிய வேதனமும் பெறுகின்றார்கள்.
பெண்கள் தான் அடுக்களைக்கு ஏற்ற இயந்திரம் எனும் நிலைமாறிவிட்டது. இன்று மனம் ஒத்த தம்பதியினர் மனைவியுடன் கூட இருந்து உணவு தயாரிக்கின்றார்கள் இது ஒரு அன்புப் பரிமாற்றம்.
மனைவிக்கு உடல் நிலை சரியில்லாது விட்டால் பிள்ளைகளின் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? உணவுச் சாலைகளில் இருந்து எவ்வளவு நாட்களுக்கு வாங்கி உண்பது? தவிர இவையெல்லாம் தேக நிலைக்கு ஒத்து வருமா?
- 143

Page 74
மருத்திபூர் அல.அழிவகுழர்
எனவே ஆண்களும் சமையல் கலையினைத்
தெரிந்து கொள்வது வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல. தங்களுக்குத் தான் சமையல் செய்யத் தெரியும் என பெண்கள் கர்வம் கொள்ள முடியாத அளவிற்கு காலம் மாறிவிட்டது. மேலும் ஆண்களேயாயினும் தங்களது உணவைத் தாங்களே செய்ய ஏது தயக்கம்!
மனைவி சதா காலமும் அடுக்களையில் இருந்தால். கறுத்துச் சுருங்கி விடுவாள் எனக் கருதி அவர்கள் பணியில் தாங்களும் பங்கு கொள்ளும் கணவர்மார்கள் மனைவியின் அன்பைப் பூரணமாகப் பெற்று விடுவதும் வியப்பில்லை. இதே சமயம் தேனீர் தயாரிக்கத் தெரியாத ஆண்களும் இருக்கிறார்கள்.
என்ன தான் ஆண்கள் உணவு தயாரித்தலில் விற்பன்னராகினாலும் கூட பெண்கள் கைபட்ட உணவு ஏன் பிரமாதமாக இருக்கின்றது?
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் மட்டுமின்றி மாமன், மாமி போன்ற வயது கூடிய அங்கத்தினர்களும் இருக்கின்றார். ஒரு பெண்ணுக்குத் தனது கணவன் விரும்பும் சுவை என்ன, பிள்ளைகள் எதனை விரும்புகிறார்கள். வயோதிபமான மாமா, மாமி, தாய் தந்தையாரின் உடல் நிலைக்கேற்ற சாப்பாடுகள் என்ன, என்ன என்பதை அவளால் தான் உணர முடியும்.
- 144
 
 
 

மரணத்தின் பின் வாழ்வு
எனவே ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதமாக கரிசனையுடன் உணவைத் தயார் பண்ணுவதில் ஒரு பெண்ணுக்கு நிகர் யாருளர்?
பொறுமையும் கரிசனையான அன்பும் இல்லாது விடில் உணவைப் பக்குவமாகத் தயாரிக்க முடியாது. கோப தாப மேலீட்டினால் உருவான உணவு மருந்து போல் கசக்கும். அவிந்தும், கரைந்தும், அல்லாது விடின் அரை குறை அவியலுடன் தயாரித்தால் அது ஒருவரின் சரிசனைக் குறைவு அல்லவா? பெண்ணுக்கு புற அழகு மட்டுமல்ல, செய்கருமங்களை ரசிக்கும் படியாகச் செய்வதை விட வேறேது அழகு இருக்க போகின்றது?
எந்த ஒரு முரட்டுக் கணவனையும், தனது உணவு வழங்கலால் , தனது பக்கம் மனைவியால் கட்டிப் போட முடியும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். “அவனுக் கென்ன அன்பான மனுஷி, விதம் விதமாகச் சமைப்பாள் இதைவிட வேறென்ன வேண்டும்” என்று பலர் பேசுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
"இவர்கள் வீட்டின் அருகே சென்றாலே சமையல் வாசனை தூக்கிப் போடும், எப்படி இவ்வாறு சமையல் செய்கின்றார்கள்” எனச் சில பெண்களின் விசேட திறமைகளை வியந்து பேசுபவர்கள் உண்டு, சமையலின் ருசிக்குக் காரணம் அவர்களின் "கனிவான மனம்” சம்மந்தப்பட்டது என்பதும் நிதர்சனமான உண்மை.
- 145

Page 75
கருத்திழ் வி0:ற்றிருந்தர்
எந்தக்கலையையும் முறையோடு ஒரு வரையறை யினுள் பயில வேண்டும் கண்டபடி எந்தக் கலையையும் கற்றுவிட முடியாது. மிளகாய் தூளுடன் சர்க்கரையைக் கலக்க முடியுமா? ரொட்டியைக் கருக்க வைத்துச் , சட்டியை எரித்துச் சுவையைத் தேட முடியாது. விலை கூடிய உணவு பொருட்களால் மட்டும் சாப்பாட்டைச் சுவைபடச் செய்து விட முடியாது.
鱲 சமையல் பாகம் என்பதே ஒரு பெரிய கலை. முறையுடன் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமானது.
தரமான காய், காறிகள், எண்ணை வகைகள், எனப்பல விடயங்கள் அடங்கியுள்ளன. சுத்தம் மெத்த அவசியம்.
மேலும் எரி பொருட்களைக் கையாளும் விதம், நல்ல நீர் இவைகள் எல்லாவற்றையும் விட நிதானமுடன், பதற்றமற்றுக்காரியங்களைச் செய்ய வேண்டும். உணவுகள் சுவையாகஇருந்தால் மட்டும்போதாது. அவை சத்துமிக்கதாக, உடலுக்கு எவ்விதமான தீங்கு இழையா வண்ணமிருத்தல் வேண்டும்.
இன்று உணவுருசியாக இருக்க உடலுக்கத் தீங்கு விளைவிக்கும் சுவையூட்டிகள்அங்காடிகளில் விற்கப்ப டுகின்றது. கவர்ச்சியாக அவையிருக்க நிற மூட்டிகளும் விற்பனையாகின்றன.
- 146
 
 
 
 
 
 

மரணத்தின் பின் வாழ்வு உணவின் அழகு, வாசனைக்காக வாங்குகின் றார்கள். அதனை உண்பது ஆரோக்கியமற்றது எனத் தெரிந்தும்கூட வாங்கிவிடுகின்றார்கள் சமையல் செய்யச் சிரமப்பட்டு சோம்பேறித் தனத்துடன் சாப்பாட்டுக் கடை களுடன் சங்கமிப்பவர்கள் அனேகர்,நல்ல குடும்பத்திற்கு இது அடுக்காது.
உணவுச்சாலைகளில் தனித்தனியாக ஒவ்வொரு வரின் உடல் நலத்திற்கு ஏற்ற வண்ணம் உணவுகள் தயாரிக்கப்படுவதே இல்லை. செயற்கை முறையிலான இராசாயனக் கலவைகள் மிகவும் மலிவான கலப்பட பதார்த்தங்கள் கொண்டு இவைகளைக் காட்சிப்படுத் துகின்றார்கள்.
இல்லங்கள் தோறும் எமது மாதராசிகள், இயற் கையான முறைகளில், தமது அன்பான கரங்களால், ஆசையுடன், பாசத்துடன் பாரம்பரிய முறையில் புதுமை களைக் கலந்து சமைக்கும் சமையலுக்கு ஈடு இணை ஏது? இது தலைமுறை தலைமுறைகளாகக் கற்றுக் கொண்ட அனுபவ பாடங்கள். அன்பான குடும்பம் வளம் பெற ஆரோக்கியமான சமையல் அவசியமானது.
தினக்குரல் ஞாயிறு மஞ்சரி 08:05.2011
- 147

Page 76
பருத்திபூர் 00. ஜலிரஹதரர்
எமக்குத் தெரியாத நல்ல விஷயங்களை எவர் மூலம் நாம் பயில்கின்றோமோ அவர் எமக்குக் குரு ஆகின்றார். எனவே நாம் மற்றவர்களுக்குப் புதிய நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொருக்கும் போது "குரு' ஆகவும், மற்றவர்களிடம் பயில்கின்ற போது சிவத்ய நிலையிலும் இருப்பதால், எல்லோருமே குரு சிஷ்ய நிலையில் உருவெடுக்க முடிகின்றது. எல்லா உயிர்களிடமும் ஏதோ ஒரு விடயம் எமக்குத் தெரியாமல் புகைத்துள்ளது. அறிவது அறிவு அறிவினைப் பெற மமதை அகல வேண்டும், எல்லாமே தெரிந்தவர் எவர் உளர்? பரந்த பிரபஞ்சத்தில் தெரிந்ததைவிட தெரியாததே அதிகம். இயன்றவரை நல்ல அறிவைதேருதல் திருப்தி
குரு , சிஷ்ய உறவு என்பது நாம் கற்கின்ற கல்வியினால் மட்டும் ஏற்பட்டதல்ல. வாழ்க்கைப் பாடத்தில் எப்பொழுதும், கல்வி, அனுபவம் முதலான தேட்டங்களை பெற்ற வண்ணமாகவேயுள்ளோம்.
- 148.
 
 
 

LDJGOOTšolsõi sõt 6MTö6)
எனவே நாம் "அ" முதல் இந்த உலக அறிவு,
ஆற்றல்களைப் பெற்றுக்கொள்ள ஒரு வரையறை என்பது அறவேயில்லை.
எமக்குத் தெரியாத நல்ல விஷயங்களை எவர் மூலம் நாம் பயில்கின்றோமோ அவர் எமக்குக் "குரு” ஆகின்றார்.
அவ்வண்ணமே எம்மிடம் இருந்து எந்த அந்தஸ் தைச் சார்ந்தோராயினும் அவருக்குத் தெரியாத சங்கதி களைக் கற்றுக் கொண்டால் அவர் எமது சிஷ்யராகக் கருதப்ட வேண்டியவரேயாம்.
எனவே நாம் அனைவரும் எதோ ஒரு சந்தர்ப் பத்தில் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் தோற்றம் காட்டியவாறே இருக்கின்றோம். வெளிப் பார்வைக்குக் கற்றவர்கள் மட்டுமே குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படுவதுவே அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள உண்மைமாகும். ஆயினும் உலக ஞானத்தைத் தேடி அலைபவர்கள் இந்தக் கருத்திலிருந்து விலகி நிற்பார்கள்.
எங்கே உண்மைகள் புதைந்து இருக்கின்றதோ, அதைத் தோண்டி எடுப்பதில் படுதீவிரமாக இருப்பவர்கள் அவைகளை எவர் சொல்லிக் கொடுத்தாலும் ஏற்றிப் போற்றுவார்கள்.
- 149

Page 77
பருத்திபூர் 040. ஹரிஹரர்
புறத் தோற்றம், அந்தஸ்து பணம் செல்வாக்கு என்பதைக்கருதாது, அனுபவ ஞானம் உள்ள ஞானிகள் உண்மைகளைக் கண்டறிய, ஒரு குறிப்பிட்ட வலைய மைப்பினுள் சிக்கிக் கொள்ளவே மாட்டார்கள்.
மெத்தப் படித்த ஒரு அறிவாளி சங்கீதம் கற்க வேண்டுமேயானால், தன்னை ஒத்த தன்மை தகைமை அல்லது இத்துறை அறியாத ஒருவரிடம் சென்று அதனை எப்படிக் கற்றுக் கொள்ள முடியும்? எனவே ஒரு சங்கீத வித்துவானிடம் சென்று முறைப்படி, அவரைக் குருவாக ஏற்று இசையை ஆரம்பம் முதல் கற்றுக் கொள்ள வேண்டும்.
மமதையுடன் கல்வி, ஞானம் கற்க முனையக் கூடாது. அநேகமானவர்களை, நாம் அனுபவரீதியாகவும் கண்டிருக்கின்றோம். இளவயதில் ஒருவரிடம் பயின்று பின்பு தாங்கள் பெற்ற அறிவினால், நல்ல நிலையை அடைந்த பின்னர் தமது குருவிற்கே கல்வி கற்பித்த மாணவர்கள் இருக்கின்றார்கள். கற்றல், கற்பித்தலில் மமதை என்பதேது?
சக வயதில் ஒன்றாகப் படித்தவர்கள் வயதில்
முதிர்ந்தவர்கள் போன்றோர்களுக்குக் கூட தமது திறமை
காரணமாக நல் ஆசானாக முதிர்ச்சியடைந்து அவர்களு
க்கே பாடம் சொல்லிக் கொடுத்தவர்களின் பட்டியல்கள்
மிக நீண்டதாகும். மேலும் தமது தந்தைக்குக் குருவாக
- 150 س
 
 

LDUGGoröSkör Úlsör 6)!!!þ6) விளங்கியவர்களையே மாணாக்கனாகப் பெற்ற பெரியோர்கள் வரலாறும் உண்மை.
கல்வி என்பது பாடப் புத்தகங்களுடன் கட்டுப் பட்டது அல்ல. கலை ஞானம் என்பன சிறுவயதிலிருந்தே பெறப்படுகின்ற அரிய வித்தையுமாகும்.
நடனம், நாட்டியம், சிற்பம், ஓவியம் என்பன தனித்துவமான பிறவிக் கலைகள் என்பார்கள். இது பிறவிகள் தோறும் தொடர்வனவும் என்பர். எல்லை வரையறையற்ற கலைகளைப் பவ்வியமாகப், பணிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.
அக்காலத்தில் குரு,சிஷ்ய முறைகள் என்பத னைத் தெய்வீகத் தொடர்பாகவே கொண்டார்கள். நாடாளும் அரசனின் மகனுடன் சாதாரன பிரஜையின் பிள்ளையும் ஒன்றாகக் காட்டில் ஆச்சிரமத்தில் குருகுல வாசத்தில் கல்வி பயின்றார்கள்.
அன்றியும்,குருவிற்கும்,அவர் தர்மபத்தினிக்கும் அன்றாடம் சேவை செய்தும், சுற்றுப் புறங்களை சுத்தம் செய்தல், பூமரம் நாட்டுதல், விறகு வெட்டுதல், காய், கனி வளங்களை உண்டாக்குதல் போன்றவைகளைச் செய்வது மாணவர்களுக்கே உரிய கடமையாக இருந்தன.
இம்முறையினால் பேதம் என்பதே புரியாது, ஆணவம் அற்று எல்லோருமே சமன் என்ற நிலையில்
- 151 -

Page 78
பருத்திபூர் (40,ஆரர் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் சமூக அமைப்பு அன்று இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. கல்வியூட்டல், வர்த்தகமாகி விட்டமையினால் கல்வி அளித்தவர்கள் காசு பெறுவதானால் அங்காடியில் பொருள் வழங்கும் வர்த்தகராகக் கருதப்படும் நிலையில் உள்ளனர்.
நாம் எந்த நோக்கத்துடன் கல்வி கற்கின்றோம் என்று எவரையாவது கேட்டுப் பாருங்கள். நல்ல வேலை கிடைப்பதற்கு மட்டும் என்பதே சகலரதும் அபிப்பிராயமாகி விட்டது.
பணியுடன் கூடிய கல்வி கற்கும் மாணவர்க ளாலேயே தமது மனதின் விசாலத்தை மேலும் அதிகரிக்க முடியும்.
ஆன்மீகம் என்பதே உள்ளத் தூய்மையுடன், நெஞ்சத்துக்கு வலுவூடுதல். குரு, சிஷ்யர் தொடர்பு என்பது இருவர் மனதும் ஒன்றித்த நிலையில் கற்பிக்கப் 'படுதலும், அதனைச் சிஷ்யன் ஏற்றுக் கற்கின்ற முறையு மாகும். படிக்கும் இடம் கோயில் போன்றது இங்கு பணிவு, பய பக்தியே இன்றியமையாததாகும். கல்வி தவிர வேறு சிந்தனைகளற்ற, நிர்மலமான நெஞ்சில் பாடங்களை புகுத்தாலே இங்கு நடைபெற வேண்டும். ஆன்மார்த் தமான குரு, சிஷ்ய உறவுநிலையே கல்வியை மேம்படு த்தும் .
இவ்வண்ணம் ஆத்மார்தமான உறவு நிலை
- 152 س
 
 

LDJ600, 556 Slair 6 inha சாராத இயந்திரங்களுடன் சங்கமிக்கும் மனிதராகிப் பயிற் றுவித்தால் குருவிற்கும் மாணவனுக்கும் ஒருமித்த சிந்த னையோட்டம் மந்தமாகி விடும். அறிவுடன் சஞ்சாரம் செய்யவே செய்யாது.
படித்தல், கேட்டல் என்பது கல்வி பெறுதலில் முக்கிய அம்சம் என்பார்கள். இதில் கேட்டல் என்பது நாம் அனுபவ மூலமாகக் கேட்டு அறிவதும் உணர்வது மாகும். படித்தல் என்பதனை நாம் அறிவோம்.
நாம் சாதாரணமாகப் படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட கொள் அளவினுள் நிரம்பப் படித்து அறிந்தது எவ்வளவு? அறிந்ததைத் தெளிந்தது எவ்வளவு? முழுமையாகத் தெளிந்துவிட்டோமென எம்மால் பிரகடன ப்படுத்த இயலுமா?
எனவே, பல்துறை சார்ந்தோர் தாம் கற்றவை களைச் சொல்லும் போது ஆழ்ந்து கேட்டறிந்து சிந்திக் கவும் வேண்டும். பன்னெடுங் காலம் தாம் கற்றவை களைச் சுருக்கித் தமது பிரசங்கத்தினூடாக ஒருவர் சொல்லும் போது எவ்வளவு சிரமங்களுடன் எமக்குத் தமது கல்வி ஞானத்தை பகிர்ந்து கொள்ளுகின்றார். என்பதை நாம் நோக்குவோமாக!
ஆயிரம் புத்தகங்களில் சொன்னவற்றினைச்
சான்றோர் எமக்கு ஒன்று திரட்டிச் சாறாகப் பிழிந்து தருவதை ஏற்பதைவிட வேறு என்ன பெரும் பேறு எமக்கு
- 153

Page 79
பருத்திபூர் (40. ஆயிரவநாதர் உளதோ? பரந்த பிரபஞ்சத்தை விடக் கல்வி ஞானம் அகண்டது. கண்களால் நோக்கமுடியாத ஆன்மா வோடிணைந்த எமது ஞானம் மனிதர்களுடன் மட்டுமேந் தொடர்புடையதுமன்று. ሳ.
சகல உயிர்களிடத்திலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உண்டு. இயற்கை யின் உற்பத்திகளில் இருந்து கோடிக்கணக்கான ஜீவன் களை இறைவன் அளித்துள்ளான்.
எமக்கும் எல்லா ஜீவராசிகளுக்குமான சம்பந்தம் இந்த பிரபஞ்ச உற்பத்திகளுடாகக் கிடைக்கின்றது. சகலதுமே எமக்கான அனுபவ ஞானத்தை, ஊட்டவல்லன. நாம் இன்னமும் கற்றுக்கொள்ள அறிவை நாடி ஓடியபடியே இருக்க வேண்டும். தேடல்கள் இன்றி உண்மைகளும், புரிதல்களும் நாடி நம்மை வந்தடையாது.
குருவாக நாம் காணும் திருப்தி நிலை போலவே சீடனாகக் கற்றுக் கொள்ள விழைவதால் உண்டாகும் வேட்கையும் ஆரோக்கியமான சந்தோஷகரமான நிலையே தான்! உணர்வோம் அன்பர்களே!
தினகரன் ஞாயிறு மஞ்சரி 29.05.2011
- 154
 
 


Page 80


Page 81

isBN 978 9550469-18-5
|
| 9||78555 d'Ilf. ó 1978