கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாங்கள் 1985.11.05

Page 1


Page 2
'' "
- . ܕ ܐ
KAU ***
it (?
' . ' ݂ ݂
: i. ദി.-- ..."
 ി , s . ܐ ܐ ܕܙ
ܐ
് i. :ീ kg salse
"
-
ܦ .
t
ി
7 ܐܝܢܐ ܕܡܬܕܢܘܼܬܵܐ
:). ബ
ܠ ܘ ܒ . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O5-1-85
எமது சமுதாயத்தின் ஒழுங்கமைப்பின் மரபுவழி அதா வது பாரம்பரியமான வழக்கங்களில் பாரிய மாற்றங்களைக் காட்டும் சம்பவங்களும், செயற்பாடுகளும் அடிக்கடி நிகழ்கிறது. நாம் அடிக்கடி பார்க்கும் இத்தகைய சம்பவங்கள் ஒரு சமூக மாற்றத்தின் அறிகுறிகள் என்பது நிச்சயம். இந்த மாற்றங்களை ' உய்த்துணர முடியாத பெற்ருேருக்கும் அவர்கள் குழந்தைகளுக் கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி ஏற்பட்டு வருவதனைப் பொதுவாக புரிந்துகொள்ம் முடிகிறது. இதே போல் இந்த சமூக மாறுதலின் சகல விழுமியங்களையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாதவர்களினுல் பல்வேறு மட்டங்களில் கருத்து ரீதியானசெயல் ரீதியால் மோதல்களும் ஏற்பட்டும் போகிறது. இச்சமூக அமைப்பின் மாறுதலே சரிவரப் புரிந்து கொள்ளாமையே. பெற் ருேளிடமிருந்து பிள்ளைகள் விலகிச் செல்வதற்கும், விடுதலையை நாடிய இயக்கங்களிடையே மோதல்கள் உருவாவதற்கும், இயக் கத்திலிருந்து தோழர்கள் தப்பிச் செல்வதற்கும் இன்னபிற செயல்களுக்கும் அத்திவாரமாகிறது.
பெற்ருேருக்கும்-பிள்ளைகளுக்கும் இடையே இதுவரை நிலவி வந்த எழுதப்படாத உடன்படிக்கைகளின் அத்திவாரம் ஆட்டம் கண்டுவிட்டது. அதாவது பிள்ளைகள் என்போர் பெற்ருேருக்கு அடங்கி, அவர்கள் சொன்னவற்றையே செய்து, அவர்கள் திட் டமிட்டபடிதான் வாழவேண்டும் என்றிருந்த நிலை மாறிப்போகி றது பெற்றேர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் எட் -
E. i 4 g UI, AT கும் என்பது குறித்து எதுவித உத்தரவாதமும் வழங்கமுடியா மல் கையாலாகாதோ ராய் உள்ளனர். பெற்ருேகின் இக்கையறு நிலையில் தமக்கென ஒரு எதிர்காலத்தைச் சிருஷ்டிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு ஒவ்வொரு இளைஞனின் தோள்களிலும் வலிந்து சுமத்தப்பட்டுள்ளது. இதனைப் புரியாத பல பெற்முேரும், "இங்கே இருந்தால் இயக்கத்துக்கு போடும் பிள்ளை; ஆனபடி யால் என்ன செலவழிச்சு எண்டாலும் வெளியிலை அனுப்பிப் போடுவம்' என்று படாதபாடு படுவதைப் பார்க்கலாம். உண்மை
,sممبر ܘ
*。 - بی می ۲ مر - پھر ۔۔۔ ستم حتیر -- என்ன எந்த வெளிநாடு போளூலும் முதலில் கோரும் அடைக

Page 3
ಕ್ಲಿ;
லத்திற்கு இங்கே எமது சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடு மைகள், அதில் தானும் சம்பந்தப்பட்டு இருக்கும் விதம் என் பன குறித்துக் கூறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. கொடு மைகளுக்கு பயந்து நெடுந்தூரம் போவதை விடுத்து நேருக்கு நேர் முகங்கொடுக்கும் துணிவு மிக்கோராய் இளைஞர் சமுதா யம் வளரவேண்டியிருக்கிறது.
இந்த துணிவையும், எதிர்ப்பு மனுேபாவத்தையும் பல பெரி யோர்களும் தவழுகவே புரிந்துகொள்கிருர்கள், பகையுணர்வும், வெறுப்பும் விரக்தியும் கொண்டதாக இளைஞர் சமுதாயம் வளர் வதாக இவர்கள் கவலையடைகிறர்கள். சோதனையும், வேதனையும் மிக்க சூழலில் வளரும் இளைஞர் சமூகம், வெளித்தாக்கங்களால் பாதிக்கப்டாமல், வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் அவதானமாக விருந்து தத்தம் எதிர்காலத்தைச் சிறப்பாக்க வேண்டும் எனப் பெரியோர்கள் எதிர்பார்க்கிருர்கள்.
எனினும் இன்றைய இளைஞர்களாகிய நாம், குறுகிய சுயநல வட்டங்களிலிருந்து வெளியேறி சமூகத்தின் ஒரு அங்கத்தவன் என்ற வகையில் எமக்கிருக்கும் கடமைகளையும் பொறுப்புக ளேயும் நிறைவேற்ற வேண்டியவர்களாயுள்ளோம். கேடுகெட்ட இன்றைய சமுதாய அமைப்பின் குறைபாடுகளை அகற்றிப் புதிய யுகத்தைப் படைக்கும் ஆற்றலையும், வலுவையும் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. முழுமன ஈடுபாட்டுடன் எதிர்கால சமுதாய வளர்ச்சிப் போக்கில் எமது பங்களிப்பை நல்க வேண் டியிருக்கிறது. எமது சூழலில் வாழும் சகலரது பிரச்சனைகளிலும் அக்கறை உள்ளவர்களாக இந்தப் பிரச்சனைகளின் தீர்வு குறித்து சரியான கோணத்தில் சிந்திப்பவர்களாக எமது கடமையை உணர்ந்து பொறுப்புள்ளவராக நாம் ஒவ்வொருவரும் மிளிருவ தன் மூலம் புதிய அமைப்புக்கு வித்திடுவோம் என்று இளைஞர் ஒவ்வொருவரையும் அழைக்கிருேம்:
- و است.
 

OTGlobit. Qisë JTIJi JTJA Ipp.
= ஓர் அறிமுகம்
1917-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ரஷ்யாவில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி உலக வரலாற்றில் ஓர் திருப்பு முனையாகும். ரஷ்யத் தொழிலாளிகளும், பாட்டாளிகளும், ஏழை விவசாயிக ளும் இணைந்து எழுச்சி கொண்டு இப்புரட்சியை நடத்தினர்கள், இம்மக்களனிக்கு ரஷ்ய போல்சுவிக்கட்சியே வழிகாட்டியது. இக்கட்சியை நெறிப்படுத்தி வலுவூட்டியவரே லெனின்,
20-ம் நூற்ருண்டுக்கு முன்பு ரஷ்யாவில் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமைமுறை சமுதாயம் காணப்பட்டது. ஜார் என்ற அரசபரம்பரைக்கு அதிகளவு நிலங்கள் சொந்தமாயிருந்தது. ஐந்து லட்சம் விவசாயி குடும்பங்களிடமிருந்த நிலத்திற்கு சமன னவளவு நிலம் ஜாரின் குடும்பத்திற்கு சொந்தமாயிருந்தது. ஒரு கோடி விவசாய குடும்பங்களுக்கு சொந்தமான நிலத்தை 30,00 ே நிலப்பிரபுக்கள் கொண்டிருந்தார்கள்.
ஜார், ஆட்சிக்காலத்தில் தனக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி தன்னிச்சையாக நீதியை கடைப்பிடித்து வந்தான். தனக்கிசைவான அதிகாரிகளையும், அமைச்சர்களையும், ஆயுதப் படைகளையும் வைத்துக் கொண்டான். இவைகள் மூலம் மக்களை மிகமோசமாக அடிமைப்படுத்தி ஆண்டு வந்தான். மக்கள் நிலப் பிரபுக்களின் பெருந்தோட்டங்களில் பசிப்பிணியால் வாடி வதங் {6öTri.
20-ம் நூற்ருண்டின் ஆரம்ப பகுதிகளில் பெரும் தொழிற் சாலைகளும் பாரிய தொழிற்சாலை வலயங்களும் ரஷ்யாவில் தோன் றின. அத்துடன் வெளிநாட்டு மூலதனங்களும் அதிகரித்து பெரு மளவு இலாபங்களை இவை பெற்றுக்கொண்டன. அரசாங்கத்தி லும் நிர்வாக தொழிற்துறையிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கின. இக்கால கட்டத்திலேயே முத லாளித்துவம் இங்கு வளர்ச்சியடையத் தொடங்கியது.
முதலாளித்துவ வளர்ச்சியால் நாட்டில் பொருளாதார நெருக் கடி அதிகரித்தது. தொழிற்சாலைகளிலும் பெருந்தோட்டங்களி லும் உழைத்து வந்த மக்கள் உண்ண உணவின்றி இருக்க இட மின்றி கல்வியறிவின்றி அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு உயிருடன் போராடும் கட்டத்தில் ரஷ்யாவில் வேலை நிறுத்தக்

Page 4
கள், ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகள், கலகங்கள் முளைவிடத் தொடங்கின.
இவற்றின் பின் 1900 - 1904 வரையில் உலக நாடுகளில் தோன்றிய பொருளாதார நெருக்கடிகள் ரஷ்யாவை மேலும் பாதிக்கச் செய்தது. 1904 இல் ருஷ்ய-யப்யானிய போர் தோன் றியதஞல் வேலையின்மை, பஞ்சம், விலைவாசி உயர்வு என்பன அதிகரித்தன. இக்கால கட்டங்களில் இயல்பான மக்கள் எழுச்சி போராட்டங்கள் இங்கு தோற்றம் பெற்றன. ஆனலும் இவை சிறந்த வழிகாட்டலின்மையாலும் ஜாரின் தந்திரங்களாலும் இல குவில் அடக்கப்பட்டு விட்டன,
1905-ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் ஊர்வலமாகச் சென்று ஜார் மன்னனிடம் தம்குறை களை விண்ணப்பமாகச் சமர்ப்பிக்க ஆயத்தமானர்கள். இப்படி சென்றவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீதிகளில் சுட் டுக் கொல்லப்பட்டனர். ஐயாயிரம் பேர் காயமடைந்தனர். இது "இரத்த ஞாயிறு" எனப்பட்டது. அன்றே தொழிலாளர்களின் ஜாராட்சிக் கெதிரான புரட்சியின் தொடக்கமெனலாம். இப்பு ரட்சி வெகு விரைவில் அடக்கப்பட்டு விட்டாலும் 1917-ம் ஆண்டு ஒக்ரோபர் புரட்சியின் வெற்றியில் முக்கியமான பங்கு இதற் குண்டு,
இக்காலத்தில் போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச சமூக ஜனநாயகக்கட்சி தோற்றம் பெற்றது. இதனுள் குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்டோரும் காணப்பட்டனர். சோச லிச சமூக ஜனநாயக கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு களால் இக்கட்சி இரண்டாகப்பிளவுபட்டது. குட்டி முதலாளித் துவ சிந்தனை உடையோர் மென்ஷிவிக்குகளெனவும் சோசலிச ஜனநாயக வாதிகள் போல்ஷிவிக்குகள் எனவும் அழைக்கப்பட்ட னர். இரு சாராரும் ஜாரின் சர்வாதிகாரத்தை ஒழிக்க வேண்டு மென்ற குறிக்கோளை கொண்டிருந்தாலும் போல்ஷிக்கட்சியே பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் ஆட்சியொன்றை மல ரச் செய்யவேண்டுமென்பதில் உறுதியாயிருந்தது.
1914-ம் ஆண்டில் முதலாம் உலக யுத்தம் வெடித்தது இது ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க ரஷ்யாவை பொருளா தாரம், உணவுத் தட்டுப்பாட்டால் அதிகம் பாதித்தது. ரஷ்யப் போர் வீரர்களும் பட்டினியால் வாடினர். வீடுகளில் இருந்த பெண்கள் பட்டினியால் ரொட்டிக்கடைகளை முற்றுகையிட்டனர்.
一。鎮 -

1916-ல் 'இரத்த ஞாயிறு' தினத்தில் "யுத்தம் ஒழிக" என்ற கோஷத்துடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். 1917 மார்ச் 15ம் திகதி ரெயிலில் சென்றுகொண்டிருந்த ஜார் வழிமறிக்கப்பட்டு முடிதுறக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன் பின் ஓர் தற்காலிக அரசு நிறுவப்பட்டது. ஆனல் இவ்வரசு தொழிலாளர், விவசாயிகளினது பிரச்சனை தீர்க்கவில்லை.
1917 ஒக்ரோபர் மாதம் 25, 26-ம் திகதி இரவின் போது தொழிலாளர்கள் மாலுமிகள், போர்வீரர்கள் போல்ஷிவிக்கட்சி யின் தலைமையில் ரஷ்ய சக்கரவர்த்திகளின் பணிக்கால மாளி கையை முற்றுகையிட்டனர். இங்கிருந்த தற்கால அரசின் உறுப் பினர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவே மாபெரும் ஒக்ரோ பர் புரட்சி எனப்படுகிறது. ܐ ܐ ܗܝ
இதன்பின் உடனடியாக ஏனைய நாடுகளுடன் போரை கை விடுதல், சமாதானத்தைப் பேணுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 'நிலம் பற்றிய அரசாணை' பிறப்பிக்கப்பட்டது. நிலம் குடியானவர்கட்கு, உணவு பசித்தவர் களுக்கு, சமாதானம் மக்களுக்கு என்றுகியது.
புதிய அரசினுல் ரஷ்யாவில் வர்க்கபேதங்கள், அந்தஸ்து வேறுபாடு நீங்கியது, பல தேசிய இனங்கள் ஒன்ருக வாழும்
சட்டங்கள் இயற்றப்பட்டது. நாளொன்றுக்கு 8 மணிநேர
வேலையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
சோவியத் ரஷ்யாவால் பெண்கள், இளைஞரது தொழில்கட்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது தொழிலாளர்கட்காகவும், வறுமைப் பட்ட மக்கட்காகவும் கல்விக்கூடங்கள் திறந்து விடப்பட்டன. இவ்வாறு சோவியத் மக்கள் தமது புதிய சமுதாய அமைப்பிற் கான புரட்சியை மேற்கொண்டனர்.
இப்புரட்சியே முதன்முதலில் முதலாளித்துவ சமுதாய அமைப் பிலிருந்து சோசலிச சமுதாய அமைப்பை உருவாக்கி உலகிற்கு வழிகாட்டியது. இப்புதிய சமுதாயம் சுதந்திரமானதும் நீதியான தும் சுரண்டலற்றதுமாக காணப்பட்டது.
ஒக்ரோபர் புரட்சியை தொடர்ந்து பல நாடுகளிலும் இச்ச முதாய மாற்றம் நிகழ்ந்து விட்டது. பல நாடுகளில் அதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ആ , -

Page 5
ஈழமும் அதே போன்ற ஒரு சமுதாய மாற்றத்தை கான விழைகின்றது. இது தென்னசியாவில் சோசலிசத்தின் திறவு கோலாக அமையப்போகிறது.
ஈழவர் தம்மிடர் ஈண்டு தொலைந்திட வெறுமனே சிறிலங்கா அரசின் இராணுவத்தினே அகற்றும் போராட்டம் மட்டும் உதவி புரியாது. இன்று சிறிலங்கா அரசினுல் நடாத்தப்படும் சகல அடக்குமுறைகளுமின்றிய, சமுதாய அடித்தளத்தில் வாழும் மக் களுக்கும் விடுதலையைத் தரக்கூடிய போராட்ட வடிவங்களை தேர்ந்தெடுப்போம். இதற்கென தம் போராட்ட பாதையை வகுத்த, அதன்படி செயற்படுகின்ற சக்திகளை இனம்கண்டு அவற் றின் ஒற்றுமையை உறுதிப்படுத்தி அவற்றுடன் அணி திரள் (36) Irrib.
ஈழத்திலும் உண்மையான, நீதியான சுதந்திரமான, சுரண் டலற்ற சாதி, மத வர்க்க பேதமற்ற சமுதாயத்தை அமைக்க ஒக்ரோபர் புரட்சி ஒர் வழிகாட்டியாய் அமையட்டும்.
ஐரோப்பாவில் GUIYS:
GUSன் இலண்டன் கி&ாயினர் இவ்வருட இறுதியில் ஐரோப்பிய மகாநாட்டினே கூட்டத் தீர்மானித்துள்ளனர். இதற்கு ஐரோப்பிய நாடு கள் பலவற்றிலுமிருந்தும் ஈழத்திலுமிருந்து மாணவ இளைஞர் பிரதிநிதிக ள் அழைக்கப்படுவார்கள். ஐரோப்பிய நாட்டிலுள்ள தமிழ் மாணவ இளேஞர் களை ஒன்றுதிரட்டுவதும், உலகிலுள்ள ஏனைய மாணவ அமைப்புகளுடாக ஈழவர் பிரச்சனைகளே உலகறியச் செய்வதற்கும், ஈழத்திலுள்ள GUYs ற்கு உதவியளிப்பதனையும் நோக்கமாகக்கொண்டு இம்மகாநாடு கூட்டப்படவுள்ளது. மகாநாட்டினைய டுத்து கலைநிகழ்ச்சிகளும், கண்காட்சியும் நடாத் தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- ਅਤ

குயிலின் கூடுகளில்
காகத்தின்
குஞ்சுகள்.
இயற்கைக்கே மாமுன தலைப்பிது என்ருலும் இயல்பாய் போனதிது,
சுதந்திர கீதமிசைக்கப் புறப்பட்ட குயிலின் கூடுகளில் சமூக விரோதக் காகங்கள் சில கள்ளத்தனமாய் முட்டையிட்டதனுல் பூபாளத்திற்குப் பதில் முகாரிகளே முழங்குகிறது.
அநியாயம் முகத்திலறைய அடுத்த கன்னம் காட்ட யேசுபிரான்களா நாங்கள்? கள்ளத்தனமாய் புகுந்த காக்கைக் கூட்டங்களை குத்திக் காட்டியே குட்டிக் கலைத்து குடியைக் காக்க குடிமக்கள் கரங்களோடு கூட்டுச் சேரு!
கல்லறைகள் அத்திவாரமாகின்றன
ஒலைக்குடிலில் எரியும் விளக்குகள்
மாலைப்பொழுதினில் எரியவில்லை வீரிடும் குழந்தை கேட்கிறது வேஇக்குப் போன இம்பா எங்கே ஏன் தாம் அனைவருமே கேட்கிஜேம் எங்கள் அண்ணன்மார்கள் பலர் எங்கே கல்லறைகள் நிறைகின்றன: . அத்திவாரக்கல்லாகின்றன.
يبديهيد " بقيقته

Page 6
பரிபூரணனின்
Lயறியிலிருந்து.
இன்னுயிர் ஈந்தும் ஈழம் அமைத்திட ஏற்ற வர் நாமுண்டு என்கிற இலக்கியத்திற்கு இலக் கணமாக ஈரோஸ் பணிப்பை ஏற்று தானெ டுத்த கடமையை முடிக்க முனையும்போது 22-10-84 இல் தன் உயிரை ஈந்த தோழன் பரிபூரணனின் (அமுதன்) 1-ம் வருட நினை வுக்காக அந்த தோழனின் டயறியிலிருந்து பெற்றவை.
* நாம் மகிழ்ச்கிக்காகவே வாழ்கிருேம் - மகிழ்ச்சிக்காகவே போராட்டத்தில் இறங்கினுேம்
எமது கல்லறையில் துக்க தேவதையின்
சாயலைக்கூட படர விடாதீர்கள்.
* பூமாலை, புதுநிலவு, கோலமயில், கூவும் குயில் என்றெல்
லாம் புகழப்படும் மங்கையர் உலகில்.
சீதையின் சோகம் ..? பாஞ்சாலியின் துயரம்.? அகல்யாவின் வாட்டம்.? சகுந்தலேயின் ஏமாற்றம்." சந்திரமதியின் சங்கடம்.? தமயந்தியின் துக்கம்.? கண்ணகியின் குமுறல். மாதவியின் துறவு. இப்படிக் கண்ணீர் வடிக்கும் பெண் இனததின் நீண்டகால சோக வரலாற்றை நினைவூட்டும் பழந்தமிழ் இலக்கியங்கள்.
ཉ
ご》
* 'எந்தவொரு காரித்தையும் பொதுமக்களுக்காக அல்லது இனத்துக்காகச் செய்யும்போது. பலபேருடன் ஆலோசித்த பின்பே செய்தல் வேண்டும். ஏனெனில் சும்மா இருப்பவனல் பொதுமக்களுக்குத் தொல்லைகள் இல்லாதிருக்கலாம். ஆனல் நாம் செய்யும் காரியம் எதிர்தாக்குதல்களிஞல் தொல்லைகளை அதிகம் விளைவித்து விடும்." * ,。<、
سعاصمة نه دهید.
 
 
 

சாதாரண திறமையும் அசாதாரன விடாமுயற்சியையும் கொண்டு எதையுமே சாதித்து விடலாம். அதற்காக. சாதாரண திறமை தான் எம்மிடம் உள்ளது என தாழ்வு றக் கூடாது.' .1,16 ܥ݂ܬܼ
‘என்னைப்போலவே இன்னும் மனிதர்கள் இருக்கிருர்கள் என்பதை அறிந்தேன். நான் நினைக்கும் எனது உணர்வுகள் அங்குமிருப்பதை உணர்ந்தேன். அதே பாசம், அதே அன்பு. தொடர்ந்து எழுதமுடியவில்லை."
'உண்மையான திறமை ஆழமான ஆற்றைப் போன்றது. ஓட்டமிருந்தும் சத்தம் அதிகமிராது.
in a far and distant land You see the writing of my hand But you can't see my face Thou dear... ... ...
Think of the
'தொன்லதுரத்தில் என் தாயக பூமி
அங்கே எனது கரங்களின் எழுத்தைப் படிக்கலாம் ஆணுல்
எனது முகத்தைப் பார்க்க முடியாது அதஞல் அன்பே என்னே நினைவு கொள்!'
登*蟹墨$

Page 7
சிறுகதை:
"இரவல்."
அதிகாலையின் அமைதியைக் குலைத்துக்கொண்டு பார்வதி மாமியின் அழுகை ஒலி பலமாக ஒலித்தது.
என்ரை ராசா என்னை விட்டுட்டுப் போட்டியளே, இனி நான் என்ன செய்யப் போறன். ' இரவு கந்தையா மாமா இறந்துபோன நேரம் தொடக்கம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தாள்.
பொல பொலவென உதிர்கின்ற கண்ணீரும் சிவந்து வீங்கிப் போன முகத்தையும் பார்க்கும்போது பாவமாக இருந்தது.
'மாமி ராத்திரித் தொடக்கம் நீங்கள் ஒண்டும் குடிக்க மாட் டன் எண்டுட்டியள். இப்பவெண்டாலும் கொஞ்சமாய் இந்தத் தேத்தண்ணிய்ைக் குடியுங்கோ ' பக்கத்து வீட்டு கிளாக்கரின் மகள் தேநீரை அவள்முன் நீட்டியபடி கூறினுள்,
'ஐயோ. எனக்கு ஒண்டும் வேண்டாம்." மாமி தேநீரை வாங்கிக்குடிக்க மறுத்தாள்.
'இல்லை மாமி கொஞ்சமெண்டாலும் குடியுங்கோ. அப்பத் தான் கொஞ்சமெண்டாலும் தெம்பாய் இருக்கும். ' தேநீரைச் குடிக்கச் சொல்லி மீண்டும் அவள் வற்புறுத்தினுள்,
“என்ரை நிலைமை தெரியாமல் சொல்லுறியளே.' மாம் தேநீரை வாங்காது அழுதாள். "ராத்திரித் தொடக்கம் வாய் மூடாமல் அழுது கொண்டிருக்கிருய்' கொஞ்சமெண்டாலும் ஆறியிரன்.' விதானையார் பெண்சாதி அக்கறையோடு சொல் ணுள.
**நான் எப்பிடி ஆறியிருக்கிறது. என்ரை ராசா என்னை நிர்கதியாய் விட்டுட்டுப் போவாரெண்டு நான் நினைக்கேல்லையே. இனி என்னுல் என்ன செய்ய முடியும். எப்பிடி நிலைமையை சமாளிக்கப் போறன். ஐயோ. நேற்றுப் பின்னேரம் கூட ந லாய்த்தானே இருந்தியள். அதுக்குள்ளை உங்களுக்கு காலன் வ தவனே. ' பார்வதி மாமி உச்ச சுருதியில் கத்தினுள்,
عبيد 10 سـ

'பிறந்தவை ஒரு நாளைக்கு சாகிறது இயற்கைதானே. இனியென்ன எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு, அழுதாப்போலை செத்தவர் உயிரோடை எழும்பவே போருர், நீ கொஞ்சமென்டா லும் மனதை ஆத்து பார்வதி. ' விதானையார் பெண்சாதி ஆறுதல் கூறினுள்.
ஒரு இளம் பெண் தனது கணவன் இறந்தால்கூட இப்படி அழ மாட்டாள். எத்தனை வயதாகியும் மாமி மாமா மீது வைத்திருக் கின்ற ஆழமான அன்பின் வெளிப்பாடே இதுவென எல்லோரும் எண்ணி வியந்தார்கள்.
'ஓ ! என்ன இருந்தாலும் கந்தையா ஒவசியர் பார்வ தியை நல்லாய்த்தானே வைச்சிருந்தவர். இந்த வீட்டுக்கு அவை குடிவந்து 20 வருடமாச்சு, ஒரு நாள் பாத்து அவர்கள் இரண்டு பேரும் சண்டை போட்டதை நான் காணேலை. ' விதானையார் பெண்சாதி தனக்குப் பக்கத்தில் இருந்த ஒருவருக்கு கூறிக்கொண் டிருந்தாள்.
விதானையார் பெண்சாதி, எக்கவுண்டன் பெண்சாதி, மணிய காரன் பெண் சாதி, கிளாக்கரின் மனுஷி. இப்படி அந்தக் கிரா மத்தில் உள்ள பணக்காரர் என்ற பெயரோடு வாழுகின்ற விட் டுப் பெண்கள் எல்லோரும் அந்த ஹோலில் இருந்தார்கள். கொஞ்சம் வசதியான வீடுகளில் நடக்கும் இப்படியான இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் மட்டும்தான் இவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் காண முடியும், பணம் பதவி இருந்தால், இல்லாத சொந்தங்களும், அறிமுகங்களும், பிணேப்புக்களும் தானுகவே அவர்களிடம் உருவாகிக் கொள்ளும்.
நேரம் வேகமாக நழுவிக்கொண்டிருந்தது. 'பிள்ளையருக்கு
அறிவிக்க வேணும். ரேடியோவுக்கும் பேப்பருக்கும் மரண அறி
வித்தலுக்கு குடுக்க வேணும். ', அங்கிருந்த ஒருவர் அவசரப் படுத்திக் கொண்டிருந்தார்.
‘மாமிக்கு என்ன குறைச்சல், ஒரு மகள் அமெரிக்காவிலை டொக்டராக இருக்கிருள், மற்றவன் கனடாவிலை எஞ்சினியருக் குப் படிக்கிருன். மற்றவன் ஜெர்மனியிலை. கடைக்குட்டி சவு திக்கு போன மாதம்தான் போனவன். இனி இருக்கிறது ஒரு பெட்டைதானே. அவளேயும் இந்தியாவுக்கு படிக்க அனுப்பியிருக் கிரு. ஓ! அவளுக்கும் எக்கச்சக்கமாய் சேர்த்தும் வைச்சிருப்பா ’ அங்கே இருந்த ஒருத்தி மாமியின் வீட்டு வசதியைப்பற்றி பெரி தாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
- 1 - み***

Page 8
'அப்ட Gir 35tuluait வ்ரும் வரையும் சவம் எடுக்காமல் வைச் சிருப்பினமே.”* "பின்னை பிள்ளையனின்ரை மறுமொழி தெரியா மல் நாங்கள் எப்பிடி எடுக்கிறது. தவிர, இக்க%ன வருடமாய் தகப்பனைப் பார்க்காததுகள் கடைசியாய் இந்த உடலையெண்டா
லும் ஒருக்கா வந்து பார்த்தால் ஆறுதலாய் இருக்கும்.'
*அதெண்டால் மெய்தான் .'
'இப்ப வெளிநாட்டிலை இருந்து வாறெண்டாலும் பிரச்சனை யில்லை. உடனை வந்திடலாம். ஆனல். கொழும்பிலை இருந்து யாழ்ப்பாணம் வாறது தானே பெரிய பிரச்சனையாய் இருக்கு. அங்கை இருந்து வாறதெண்டால் உயிரைப் பணயம் வைச்சல்லே வரவேண்டியிருக்கு."
*ஓ! நிலமை வரவர மோசமாய் போய்க்கொண்டிருக்கு, இனிமேல் நாங்கள் நிம்மதியாய் வாழமுடியாது. அங்கைதான் இருக்கேலாது எண்டு பார்த்தால், அட அறுவாங்கள் எங்கடை மண்ணிலைகூட நிம்மதியாய் இருக்க விடுகிருங்களில்லையே.'
'ஒ. அங்கை போனுல் அவங்கள் வெட்டிக் கொல்லுருங் கள், உஞ்சை இருந்தால் இவங்கள் அது இதுவெண்டு சொல்லி கடத்துருங்கள். மின்கம்பத்திலை கட்டுருங்கள். தங்களுக்கை தாங் களே மோதுப்படுருங்கள். இவர்கள் செய்யிற செய்கையைப் பார்த்தால் கடைசியாய் ஈழமும் கிடையாது. ஒரு இளவும் கிடை யாது. ஒரு தமிழர் கூட இல்லாமல் வீணய் அழியிறதுதான் LÉlő ELb. ''
'நீங்கள் தவருய் புரிஞ்சு கொண்டு கதைக்கிறியள். ஒருசில இயக்கங்கள் செய்யிற சில்லறைத் தவறுகளை வைச்சுக்கொண்டு இப்பிடி ஒரேயடியாய் விரக்தியாய்ப் பேசக்கூடாது.'
*பின்னை எப்பிடிக் கதைக்கிறது சொல்லுங்கோ. வாகனம் கடத்துருங்கள். மனுஷரைக் கடத்துருங்கள். துப்பாக்கி முனை யிலை காசு பறிக்கிருங்கள். நகை கேட்கிருங்கள். இன்னும் காணிப் பிரச்சனை அது இதுவெண்டு எல்லாத்திலையும் தலையிடுருங்கள். இதுவெல்லாம் சில்லறைப் பிரச்சனையே. இல்லைக் கேக்கிறன் சில்லறைப் பிரச்சனையே.? இவை என்னத்துக்கு ஆயுதம் தூக்கி னவை.? அதுகளைக் காட்டி மக்களைப் பயப்படுத்தவோ..? அல் லது விடுதலை பெறவோ..? இப்ப இவை நடந்து கொள்ளுற விதத்தைப் பார்த்தால் அவங்கள் குடுக்கிற கரைச்சலை விட இவங் கள் செய்யிறது பெரிய அடாவடித்தனமாய் இருக்கு ?
حسب۔۔۔%ثر 4 -----

'அவங்கள் செய்யிற எல்லாத்தையும் பிழையெண்டு சொல் லேலாது. உதாரணத்துக்கு ஒண்டு சொல்லுறன். நான் நிறை யக் காசு வைச்சிருக்கிறணெண்டு வைத்துக் கொள்ளுவம் என் னட்டை அவங்கள் வந்து - "அண்ணே எங்களுக்கு கொஞ்ச பண உதவி செய்யுங்கோ.' எண்டு பயந்து தயங்கிப்போய் கேட்டால்- 'அதுக்கென்ன இந்தாங்கோ பிடியுங்கோ.' எண்டு சொல்லி உடனை எடுத்துக் குடுத்துடுவனே ? இல்லையெண்டு கையை விரிக்கத்தான் பாப்பன். அவங்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சால், எப்பிடியும் கொஞ்சமெண்டாலும் குடுப்பன். இனி அவங்கள் இருக்கிறவையைத் தானே போய்க் கேக்கிருங்கள். இத் தனக்கும் அவங்கள் ஆருக்காகக் கஷ்டப்படுகிருங்கள். எங்களுக் காகத்தானே."
‘என்ன இருந்தாலும் அவங்கள் செய்யிற சில செய்கைகள் நல்லாய்ப் படேலை, நாங்கள் செய்யிறது எல்லாம் சரி. நாங்கள் சொன்னல் நீங்கள் கேக்க வேணும் எண்ட அதிகாரத் தோர ணையிலையல்லே நடக்கிருங்கள் , '
"ஒ ! தனிப்பட்ட ரீதியிலை அதிகாரம் செய்யிறதை நானும் எதிர்க்கிறன்தான்."
"இப்ப நடக்கிற பேச்சுவார்த்தை என்ன மாதிரி முடியப் போகுதோ..??
"உது எங்கை சரி வாறது. யுத்த நிறுத்தமெண்டு சொல் லிப்போட்டு - திருகோணமலை, வவுனியாவிலை என்ன நடந்தது ? என்ன நடக்குது. ? சும்மா இந்தப் பம்மாத்துப் பேச்சுவார்த்தை ஒண்டும் சரிவராது. போராட்டம் ஒண்டுதான் இறுதி முடிவாய் அமையும்.'
செத்த வீட்டுக்கு வந்திருந்த ஆண்கள் நாட்டில் இன்று நடக் கின்ற நிகழ்ச்சிகளைப் பற்றி சுவாரசமாக கதைத்துக் கொண்டிருந் தார்கள். ஒன்றுகூடி ஊரில் உள்ள புதினங்களைப் பற்றி அலசி ஆராய்வதற்கு - இப்படியான நிகழ்சிகள் நல்ல சந்தர்பமாக அமைந்து விடுகிறது.
"பார்வதி தாலிக்கொடியைக் எடுத்து கழுத்திலை போடு மோனை. சவம் இருக்கும் வரையும் போட்டிருக்க வேணும் .' விதானையார் பெண் சாதி மாமியின் காதுக்குள் மெதுவாகச் சொன்னுள்.

Page 9
தாலிக்கொடி என்ற பதத்தைக் கேட்டதுமே மாமி தலையில் அடித்துக்கொண்டு பலமாக அழுதாள்.
இனி தாலிக்கொடி போடமுடியாது என்ற நினைப்பில், பூவை யும் பொட்டையும் இழந்து விதவையாகிப் போய்விட்டேனே என்ற வேதனையில் தான் அழுகிருள் என எல்லோரும் எண்ணிக் கொண்டனர்.
நான்கு நாட்கள் விரைந்து சென்றது. பார்வதி மாமியும் அழுது அழுது சோர்ந்து ஒய்ந்து போய் விட்டாள். சவம் எடுப் பதற்கு எல்லாவித ஒழுங்கும் செய்த நிலையில் பிள்ளைகளின் வரவை எதிர்பார்த்து நின்ருர்கள். அமெரிக்காவில் இருக்கும் மூத்த மகன், நான் எப்படியும் வருவேன் பிரேதத்தை எடுக்க வேண்டாமென அறிவித்திருந்தான். கனடாவில் இருப்பவர்- இறு திப்பரீட்சை நெருங்குவதால் வரமுடிய்ாது என்றும், ஜெர்மனி யில் இருப்பவர் - நான் அகதிகள் முகாமில் இருப்பதால் உவ்வி டம் வந்துவிட்டு பிறகு திரும்பபோய் அகதிகள் முகாமில் சேர் வதில் ஏற்படும் தொல்லை குறித்து வரமுடியாத நிலையில் இருப் பதை மறைமுகமாய் குறிப்பிட்டிருந்தான். மற்ற இருவரிடம் இருந்தும் எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை.
நாளை காலை பத்துமணி மட்டும் பார்த்துவிட்டு பிள்ளைகள் வரவில்லையென்ருல் சவம் எடுப்பது என தீர்மானித்திருந்தனர்.
“கந்தையா ஐந்து பிள்ளையளைப் பெத்தும் என்ன பிரயோசனம், கடைசி நேரத்திலை சவத்தைப் பார்க்கவோ, கொள்ளி வைக்கவோ ஒரு பிள்ளை கூட இல்லையே .' அங்கிருந்த ஒருவர் வேதனைப்
பட்டார்.
* ,கந்தையாவுக்கு மட்டுமில்லை. ஈழத்திலை உள்ள முக்காவாசி தாய் தகப்பனுக்கும் கொள்ளி வைக்கிறதுக்குகூட பிள்ள்ையள் இல்லை. எல்லாம் வெளிநாட்டுக்கும் இயக்கத்துக்கும் போட்டுது கள் . ' அங்கிருந்த ஒருவர் அலுத்துக்கொண்டார்.
நேரம் பதினெரு மணியைத் தாண்டி விட்டது.' இனியும் பார்த்துக்கொண்டு இருக்கேலாது. போய் குருக்களைக் கூட்டிக் கொண்டு வாங்கோ. நெருங்கிய உறவினர் முறையான ஒரு வர் அவசரப்படுத்தினுர் .
மறுநிமிடம் குருக்கள் வரவழைக்கப்பட்டார். கந்தையாவுக்கு மகன் முறையான ஒருவர் கொள்ளி வைப்பதற்கு தயாரானார்.
- 14 -

இவற்றைப் பார்க்க பார்க்க பார்வதி மாமிக்கு வயிற்றைப் பற்றி எரிந்தது. "ஐயோ. உங்களே கஷ்டப்பட்டு பெத்து வளத் தம், கடைசியாய் உங்களாலை ஒரு பிரயோசனமும் இல்லாமல் போச்சே, பெத்த பிள்ளையன் நீங்கள் இருக்கத்தக்கதாய் அப்பா வுக்கு கொள்ளி வைக்க இரவல் பிள்ளை தேட வேண்டி வந்திட் டுதே.
டேய் குமார் நீதான் டொக்டராய் நல்ல வசதியாய் இருக் கிருய், உன்னுலைகூட வரமுடியாமல் போச்சேடா. மற்றப் பிள் ளைகள் வாறதுக்கு அதுகளின்ரை கையிலை பணமிராது வரமாட் பாதுகள் எண்டு எனக்குத் தெரியும். ஆனல், நீ ஒரேயடியாய் எங்களை உதைச்சுப் போட்டியேடா.
மூத்த பிள்ளையஸ் இரண்டையும் அதுகளின்ரை விருப்பப் படியே படிக்க வைச்சம். வெளிநாட்டுக்கு மேல் படிப்புக்கு அனுப் பினம். அங்கை போனதும் அதுகள் எங்களை மறந்திட்டுதுகள். அவங்கள் உழைச்சு ஒரு சதமும் தான் எங்களுக்குத் தரேல்லை யெண்டு பார்த்தால் கடைசியாய் தகப்பன்ரை கடமையைச் செய் யவும் பாக்கவும் குடுத்து வைக்கேல்லையே. மூத்த இரண்டு பேரையும் அவங்களின்ரை விருப்பப்படி வெளிநாடு அனுப்பிவைச் சம், மற்ற இரண்டு பொடியனையும் நாங்கள் வற்புறுத்தி அனுப் பினம்.
இஞ்சை இருந்தால் ஆமிக்காரன் சுட்டுப்போடுவான். பொடி பளும் இயக்கத்திலை போய்ச் சேந்திடுவாங்கள் எண்ட பயத்திலை யும். இவங்களெண்டாலும் உழைச்சு பட்ட கடனையும் அழிச்சு பெட்டையையும் கரைசேக்கட்டுமெண்டு அனுப்பினம். ஆனல் நாங்கள் போட்ட கணக்கு தவறிப்போச்சே. ஜெர்மனிக்குப் போனவன் அகதிகள் முகாமைவிட்டு வெளியிலை போய் உழைக் கேலாமல் அவதிப்படுருன், மற்றவனை ஏஜென்சிக்காரன் ஏமாத்தி சவுதிக்கு அனுப்பிப்போட்டான். அங்கை என்ரை குஞ்சு வேலை யில்லாமல், திரும்பி வரமுடியாமல் திண்டாடுமுன். இருந்த வெறும் காணியளையும் பிள்ளையளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் படிக்க அனுப்பவும் வித்துப்போட்டன். இனி எங்களுக்குச் சொந்த மெண்டு ஒரு துண்டு காணியும் இல்லையே.
இஞ்சை உள்ளவை எல்லாம் நான் அழுறதைப் பாத்துட்டு அவரைப் பிரிஞ்ச வேதனையிலைதான் அழுறணெண்டு நினைச்சுக் கொண்டிருப்பினம். ஆனல் உண்மையிலை நான் எங்களின் வீட்டு நிலையை நினைச்சுத்தான் அழுறன்.
مسند 15 مسسيسه

Page 10
வெளியிலை பணக்காரர் எண்ட போர்வையிலே பிச்சைக்கா ரர் போலேதான் வாழுறம், நாங்கள் படுகிற கஷ்டம், பட்ட கடன், எல்லாம் வெளியிலை தெரியப்படாது எண்டதுக்காக நானும் அவரும் பட்ட பாடு கொஞ்சமே. எங்கட்ை நிலைமை தெரிஞ்சால் எங்களின் ரை மதிப்புக்குறைஞ்சு போகும், பணக் காரர் என்ற முத்திரை கிழிபட்டுப்போகும் எண்டதுக்காண்டி நாங்கள் போடுற போலி வேஷங்கள். ஓம்- மற்றவை எங்களை டெரிசாய் நினைக்கவேணும் எண்டதிற்காகத்தான் - என்ரை மக ளைக்கூட கடன் பட்டு படிக்க அனுப்பி வைச்சம்.
எங்களிட்டை நிறையப் பணமிருக்கிறதாய்தான் இஞ்சை எல்லாரும் நினைச்கக் கொண்டிருப்பினம், ஆணுல்- என்ரை தாலிக் கொடிகூட அடைவு - நான் கழுத்திலை போட்டிருக்கிறது - வெளி யிலை பவுண்தண்ணியாலை பூசின போலி நகையெண்டு அவைக்கு எப்பிடித் தெரியும்.
இண்டைக்கு நாங்கள் இருக்கிற இந்த வீடு இரவல், நான் போட்டிருக்கிற தாலிகட நிரந்தரமில்லாத இரவல் தாலிக் கொடி. இப்ப அவருக்கு கொள்ளி வைக்கப் போறதும் இரவல் மகன். ஒ , ! இப்பிடி எல்லாமே இரவலாய் போச்சே எண்டதை நினைச்சு நினைச்சுத்தான் நான் அழுறன். பார்வதி மாமி மன துக்குள்ளே மெதுவாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள்.
a fil3T-DT3)Tali சம்மேளனத்தின் ஆதரவு
“எமது இயக்கம் நீதிக்காக மேற்கொள்ளும் தமிழர்களின் போராட்டத்தை பூரணமாக ஆதரிக் கிறது. அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டிக்கிருேம்.
83-ம் ஆண்டு ஜூலையில் வெலிக்கடைச் சிறைச் சாலையில் கொலை செய்யப்பட்ட தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணை மறைக்கப்பட்டுவிட்டது. தங்காலைச் சிறையிலும் தமிழ்க்கைதிகள் இம்சைக் குள்ளாகியுள்ளனர். இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும் என வேண்டி நிற்கிருேம்’ என லங்காமாணவர் சம்மேளனம் ஜனதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் தெரிவித்துள்ளது.
. ആ 1് 4

ஒரு வித்தியாசமான அகராதி.
姆·
ಇಲ್ಲೇ
*
*
மின்கம்பம். சமூகவிரோதி அல்லது தேசத்துரோகிகளுக்குத்
தண்டனை வழங்கப்படும் இடம்.
போர்நிறுத்தம்
மாநிலச்செய்தி
Libíč -
பகிஷ்கரிப்பு.
துப்பாக்கி
தளம்
பெடியன்கள்.
பேச்சுவார்த்தை
லங்காபுவத்"
ஊர்காவல் படை=
பசைவாளி.
அடுத்த தாக்குதலுக்கு தயாராக எடுத்துக் கொள்ளப்படும் அவகாசம்.
அழுகிற பிள்ளைக்கு அம்மா காட்டும் அம் புலி,
இயக்க கருத்து வேறுபாடுகளால் போராளி களே மறு உல கி ற் கு அனுப்பிவைக்கும் செயல்,
பரீட்சைக்கு படிக்க விரும்பாத மாணவர் நடத்தும் பகிரங்கப்போராட்டம்.
அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் அற் புத சாதனம்,
கருத்து வேறுபடும் இளைஞர்கள் விசார ணேக்காக இயக்கங்களால் அழைத்துச் செல் லப்படும் இடம்.
விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகள்
அநியாயமாய் உயிரிழந்த ஆத்மாக்கள் அகா லத்தில் கை காலை நீட்டும் இடம்.
காலத்தை கடத்த கையாளப்படும் புதிய
உக்தி.
அவிச்ச மீனையும் துடிக்கவைக்கும் அற்புத
செய்தித் தாபனம்,
அரசின் உத்தியோகபூர்வ காடையர்கள்.
சுவரொட்டிகளை மட்டும்ஒட்டும் போராட்ட
வீரர்கள்.

Page 11
TüyüCırgin tipi பொருளாதார சுமையைத் தாங்குமா?
நீர்வளம்
எலலா வகையான இயற்கை வளங்களோடு பார்க்கும்பொ ழுதும் எங்கும் காணக்கூடிய ஒரு வளமாக நீர் காணப்படுகின்ற பொழுதிலும், மனித வாழ்க்கையைப் பொறுத்தவரையில இது மிகவும் அரியதும், பெறுமதி மிக்கதுமான ஒரு வளமாகக் காணப் படுகின்றது. இதற்குக் காரணம் கிடைக்கும் நீரை எல்லாவகை யான தேவைக்கும் பயன்படுத்த முடியாதிருப்பதாகும். நீரின் றேல் உயிரினங்கள் வாழமுடியாது. அத்துடன் இதன் பெறுமதி யும் அளவிடமுடியாததாகும்.
மனித வாழ்க்கையில் குடிப்பதற்கும், கழுவும் தேவைகளுக்" கும், சமைப்பதற்கும் கழிவுப் பொருட்களை வெளியில் தள்ளுவ தற்கும், பயிர்ச் செய்கைக்கும், உணவுற்பத்திக்கும், தொழிற்சா லைகளை இயக்குவதற்கும் இன்னும் பல தேவைகளுக்கும் நீர் அத் தியாவசியமான ஒரு வளமாகக் காணப்படுகின்றது. மக்கட் குடி யிருப்புகளும், பரம்பலும் இத்தகைய காரணங்களினுற்ருன் நீர் வளங்கள் உள்ள பாகங்களை நோக்கி அமைந்தது.
இலங்கையில் தமிழர் வாழும் பாரம்பரிய பகுதிகளின் நீர் வளங்களைப் பற்றி மேலோட்டமாக ஆராய்வதுதான் இக்கட்டு ரையின் நோக்கங்களாகும். தமிழர் வாழும் பிரதேசங்களில் நீர் வளங்களை மதிப்பீடு செய்தலும், கண்டறிதலும் இப்பாகங்களின் பொருளாதார விருத்தியின் ஒரு முன்னேடித் தேவையாகும்.
இவ்வகையில், எமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீர்வளங் களை அடிப்படையாக இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
(1) மேற்பரப்பு நீர் மூலாதாரங்கள் (2) நிலநீர் மூலாதாரங்கள்
நீர் பெறப்படும் மூலாதாரங்கள் இவ்வகையில் இரு பிரிவுக ளாகப் பிரிக்கப்படுகின்ற போதிலும், இவையிரண்டும் ஒன்றுக் கொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதாவது மேற்பரப்பு
- 18 -

நீர் மூலாதாரங்களிலிருந்து நிலநீரும், நிலநீர் மூலாதாரங்களிலி ருந்து குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நீரைப் பெறுவதுண்டு.
நிலநீர் வளங்கள் அமைவற்கு பாறையமைப்பில் சில சிறப் பியல்புகள் இருக்க வேண்டும். அதாவது எல்லா வகையான பாறைப்படைகளிலும் நிலநீர்த்தேக்கங்கள் காணப்படமாட்டா. இவ்வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கும் பாகங்களில் சில குறிதத பகுதிகளிலேயே நிலநீர்த்தேக்கங்கள் அமைவதற்கேற்ற வாய்ப்பான பாறையமைப்புக் காணப்படுகின்றது.
அவையாவன:-
(1) யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் (2) புத்தளம் - வனத்தவில்லு பிரதேசம் (3) மன்னுர் - பூநகரி வலையம் (4) பரந்தன் - முல்லைத்தீவு வலையம்
மேற்குறித்த வலையங்களைத் தவிர தமிழர் வாழும் ஏனைய பிரதேசங்களில் நிலநீர் மூலாதாரங்கள் காணப்படுகின்ற போதி லும், இவற்றின் மூலம் பெருமளவு நீரை பலவிதமான தேவை களுக்கும் பெறக்கூடியதான புவிச்சரிதவியற் சாத்தியக்கூறுகள் இல்லையென்றுதான் கூறவேண்டும். எனினும் இதுபற்றிய மேலதிக ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாடு: யாழ்ப்பாணக் குடாநாடும் அதற் கடுத்தாயுள்ள தீவுக்கூட்டங்களும் நிலநீர்த்தேக்கங்களைப் பொறுத் தவரையில் சாதகமான புவிச்சரிதவியல் அமைப்பைக் கொண் டுள்ளன. மயோசீன் காலத்தில் உருவாகிய இக்குடாநாட்டின் பாறைகள் சுண்ணக்கல் வகையைச் சார்ந்தனவாயிருப்பதனுல், இவை நீரை உட்கசியச் செய்யக்கூடியனவாயிருக்கின்றன. மழை யின்மூலம் கிடைகின்ற நீர் இப்பாறைப் படைகளினூடாகக் கீழ் நோக்கிச் சென்று நிலநீர்த்தேக்கமாக அமைகின்றது. சண்னக் கல் கரையக்கூடிய தன்மையுடையதாயிருப்பதால் நிலநீர் தேங்கு கின்ற குகைகளும் (Aquifers) படிப்படியாகப் பெருத்து பெரும் "ளவு நீர் தேங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. யாழ்ப்பானத் "தில் வருடத்தில் மூன்று மாதங்களில் கிடைக்கின்ற ஏறத்தார்
50 அங். மழைவீழ்ச்சியின் ஒரு பகுதியே மண்படையினூடாக
வும், சுண்ணும்புக்கல் படையினூடாகவும் ஊடு வடிந்து நிலநீர்த் தேக்கமாக மாறி யாழ்ப்பாண்க் குடாநாட்டின் மக்கள் வாழ்க் கைக்கு உயிர் நாடியாகத் திகழ்தின்றது. இந்நீர்தான் கிணறுக
ـ 19 سنة

Page 12
ளின் மூலம் எடுக்கப்பட்டு பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத் தப்படுகின்றது.
வருடத்தில் மூன்று மாதங்களில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சி யின் ஏறத்தாள அரைவாசிக்கும் குறைந்த பகுதிதான் இவ்வாறு நிலநீராகச் சென்றடைகின்றது. மிகுதியான நீர் ஆவியாக்கமா கவும், ஆவியுயிர்ப்பு இழப்புகளாகவும் ஏற்படுவதுடன், இன்னெரு பகுதி பல்வேறு வாய்க்கால்களின் மூலம் கடலையும் சென்ற டைகின்றது. குடாநாட்டின் மோற்பரப்பில் காணப்படுகின்ற குளங்கள் ஒரு சிறு பகுதி நீரைத்தேக்கி வைக்கின்றனவாயினும், மழைக்காலம் முடிந்ததும் இவை மிக விரைவில் வற்றி விடுவத ல்ை இவற்றினல் ஏற்படும் பயன்பாடு மிகக்குறைவாகும். ஆயி னும் நிலநீர்ச் சேமிப்புக்கு நீர் சென்றடைவதற்கேற்ற புனல்கள் போன்று இவை செயற்படுவதனல் இவற்றைத் தூரவிடாது தொடர்ந்து இயங்கும் தன்மையில் வைத்துக்கொள்வது அத்தியா வசியமாகும். இவ்வகையில் இவை நிலநீர்ச் சேமிப்புக்கு உதவு கின்றன. இவைதவிர மழைக்காலத்தில் மட்டும் செயற்படும் ஓர் சிறு அருவியாக வழுக்கையாறு காணப்படுகின்றது. இக்குடாநாட் டின் அமைப்பின் காரணமாக நிலநீர்த்தேக்கத்திலும் சில சிறப் பியல்புகள் காணப்படுகின்றது. குடாநாடு அதன் அமைப்பைப் பொறுத்தவரையில் வடமேற்கு நோக்கி சற்று சரிவடைந்திருப்ப துடன் நிலநிரீத்தேக்கமும் ஓர் வில்லின் அமைப்பையொத்ததாக வும், நன்னீர்ப்படையின் கீழ் உவர்நீர்த்தோற்றப்பாடும் காணப் படுகிறது. ஒரு தீவின் அமைப்பில் இக்குடாநாடு காணப்படுவத ணுலேயே சூழவுள்ள கடல்நீர் நன்னீர்ப்படையின்கீழ் அமைந்து காணப்படுகின்றது. வில்லின் அமைப்பில் நிலநீர்ப்பீடம் அமைந் திருப்பதஞலேய குடாநாட்டில் கரையோரப் பாகங்களில் கிணறு கள் ஆழம் குறைந்தவையாகவும், மத்திய, வடமத்திய பகுதிக ளில் ஆழம் கூடியனவாகவும் காணப்படுகின்றன.
கடந்தகாலங்களோடு பார்க்கும்பொழுது சமீப காலங்களில் இக்குடாநட்டின் நீர்த்தேவை அதிகரித்து வந்துள்ளமையைக் காணக்கூடியதாயிருக்கிறது. மக்கள் தொகை அதிகரித்து வந்த மையும், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஏனைய தொழில் முயற். சிகள் அதிகரித்தமையும் நீர்ப்பயன்பாட்டை அதிகரிக்கச் செய் துள்ளன. மேலதிக நிலங்களும் பயிர்ச்செய்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே கடந்த காலங்களைவிட இன்று குடா நாட்டில் நீர்ப்பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது எனலாம். இதைவிட நீரை வெளியேற்றும் முறைகளிலும் இன்று பல மாற் றங்களேற்பட்டுள்ளன. அதிகளவு நீர்ப்பயன்பாட்டினுலும் நீரைக்
- 20 --

கிாறுகளின் மூலம் வெளியேற்றும் முறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களினுல் நீர்த்தன்மையில் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நம் முன்னேரால் மேற்கொள்ளப்பட்டுவந்த நீரிறைக்கும் முறைகள் கிணற்றில் நீர் ஊறுவதற்கேற்பனவாக இருந்தன. துலாமூலமும், மாடுகளைக்கொண்டு இழுக்கும் பல் வேறு சூத்திரங்கள் என அழைக்கப்படும் முறைகள் மூலமும் நீர் வெளியேற்றப்பட்டபொழுது இது கிணற்றுக்கும், நிலநீர்த்தாங் விக்கும் தீமை பயப்பதாக இருக்கவில்லை. ஆனல் சமீப காலங்க வில் மின்சக்திமூலம் இயங்கும் பம்பிகள் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பெரும்பகுதியில் பாவனையில் இருப்பதனுல் இவைமுலம் சிறியளவு நேரத்தில் பெருமளவு நீர் வெளியேற்றப்படுகின்றது. இதல்ை நன்னீர்ப்படை உறிஞ்சப்பட்டுவிட அதன்கீழ் இருக்கும் உவர்நீர் மேல்நோக்கி எழுந்து கிணறுகளில் ஊடுருவுகின்றது. குடாநாட்டின் நீர்ப்பீடத்தின் தன்மை ஓர் வில் போன்றிருப்ப தால் இத்தகைய உவர்நீர் ஊடுருவல் முதலில் கரையோரப் பகு திகளையடுத்த கிணறுகளிலும், உவர்நீர் ஏரிகளையடுத்த பகுதிகளி லுள்ள கிணறுகளிலுமே முதலில் ஏற்படுகின்றது. இந்நிலையினல் காலப்போக்கில் உட்பாகங்களில் உள்ள கிணறுகளும் உவர்நீரைப் பெறுவதற்கு ஏதுவாக இடமுண்டு. அத்துடன் பல பயிர்ச்செய்கை நிலங்களில் நீரை வெளியேற்றும் நேரத்தைப் பொறுத்தும், அத னைக் கிணற்றிலிருந்து பயிர்வரை கொண்டுசெல்லும் வாய்க்கா லின் தன்மையைப் பொறுத்தும் அதிகளவு நீர் பயிர்வளர்ச்சிக் குப் பயன்படாது ஆவியாக்கத்திற்கு உட்படுவதனைக் காணக்கூடி யதாயிருக்கின்றது. இத்தகைய தன்மைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து நீர் வீணுக வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
யாழ்ப்பாணக் குடநாட்டில் நிலநீர் சம்பந்தமாகச் சமீப காலங்களில் ஏற்பட்டுவருகின்ற இன்னெரு பிரச்சனை நீரில் கலந் துள்ள நைதரசனின் அளவாகும். பயிர்ச்செய்கைப் பகுதிகளில் அளவுக்கு மிஞ்சிய யூரியா போன்ற வளமாக்கிகளின் மேலதிகப் பயன்பாட்டினுலும், அடர்த்தியாக மக்கள் வாழுகின்ற பாகங்க ளில் நீரடைப்பு மலசலகூடங்களிலிருந்து நிலநீரைச் சென்றடை யும் மாசுக்களினலும் நிலநீரில் ஏனைய மாசுக்களுடன் நைதரச னின் அளவு பெருமளவு அதிகரித்து வருகின்றது. வருங்காலத் தில் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தோற்றப்படாக இது உருவெடுக்கக்கூடும்"
எனவே சில குறித்த பாகங்களில் கிணறுகளிலிருந்து அள வுக்கு மிஞ்சிய நீரை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றுவதைக்

Page 13
கட்டுப்படுத்துதல்" ஆவியாக்கத்தின் மூலம் வீணுகும் நீரைக் குறைத்தல், நீரில் நைதரசனின் கலப்பைக் குறைத்தல், வேறு பல வழிகளில் நீர் அசுத்தமடைவதைத் தடுத்தல், நகரப்பகுதிக ளில் குழாய்மூலம் விநியோகிக்கப்படும் நன்னீர் குறித்த பயன் பாட்டுக்காகவல்லாது, வேறு தேவைகளின் மூலம் விரமாக்கப் படுதல் என்பன யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய உடனடி நடவடிக் கைகளாகும். இவை சம்பந்தமாகவும், இவற்றினல் ஏற்படக் கூடிய தீங்குகளின் பலாபலன்களை மக்களுக்கு எடுத்துரைத்து இவற்றின் தீய விளைவுகள் தடுக்கப்படவேண்டும். வருடத்தில் மூன்று மாதங்களில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியினுல் நிலத்துக் கடியில் சென்றடையும் நீரை இயன்றவரையில் சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும், பகுத்தறிவுடனும் பயன்படுத்துவதன் மூலமே குடாநாட்டில் வருங்காலத்தில் மக்கள் வாழ்க்கையை சுபீட்க முடையதாகப் பேணமுடியும். குடாநாட்டின் உட்பகுதியில் இருக் கும் உவர்நீரேரிகளை யாழ்ப்பாணக் கடனீரேரியுடன் இணைத்து நன்னீரேரிகளாக்கும் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தினுல் குடாநாட்டின் நன்னீர்ச்சேமிப்பு அதிகரிக்க வழிவகை ஏற்படுவ துடன் வருடத்தில் சில மாதங்களுக்காவது இவ்வேரிகளையும் பல தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். (தொடரும்
மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் வன்மையாகக் கண்டிக்கின்ருேம்.
மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையிலான அத் தியாவசியமற்ற பகிஸ்கரிப்புகளுக்கு மாணவரை வற்புறுத் தல், பாடசாலை உபகரணங்களைக் கொள்ளையிடல், பாடசாலை வகுப்பு நேரத்தில் அனுமதியின்றி பலவந்தமாக அரசியல் வகுப்புக்களை நடாத்துதல் போன்ற அராஜகமான நடவடிக் கைகள் தொடர்ந்தும் நடைபெற்றவண்ணம் இருக்கின்றன,
கடந்த 22-07-1985 அன்று மூதூர் அந்-நகார் மகளிர் ம்கா வித்தியாலயத்தில் அத்துமீறி நடந்த சம்பவம் மாணவர்க ளின் கல்விக்கு ஒரு அச்சுறுத்தல் நிகழ்ச்சியாக அமைந்ததைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்தும் இத்தகைய எமது எதிர்கால சிற்பிகளின் கல்வியைப் பாதிக்கும் எந்தவொரு நிகழ்ச்சி யையும் தொடர வேண்டாமென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுகிருேம்; தொடர்ந்தும் இத்தகைய செயல் கள் இடம் பெற்ருல் ஒன்றுபட்ட மாணவ இளைஞரின் எழும் சியை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்ருேம்.
(மூதூரில் 6UWS இல்ை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்)
一器露一

காதலிக்கு ஓர் தொடர்கடிதம்.
கோலூன்றி நடைபயிலும் தள்ளாத படுகிழமும் கோலெறிந்து துப்பாக்கி தனை ஏ ந்தத் துடிப்பதுவும் பாலர் பலர்சுடடிப் 'பம்ஸ்' செய்து பார்ப்பதுவும் கோலோச்சி யாள்வோரின் கெடுபிடியால் வந்த வினை கால் கொண்ட ஆதிக்கப் பேயின் கொடுமைகளை வேல் கொண்டழிக்கின்ற காலமல்ல வேல் விழியே கல்லாக்கி உன்நெஞ்சக் கோட்டைக் கதவுகளை நில்லாதே ஈரமென நீ விரட்டிச்சாத்திவிட்டு புல்லர் தமையொழிக்கப் புனல் பாய்ந்த நெஞ்சத்தை அனல் பொங்கும் ஆலையென மாற்றிவிடு அப்போது கால்வயிற்றுச் கஞ்சிக்காய் ஆயுதங்கள் ஏந்தியவர் கோல்பிடித்த சட்டத்தின் ஆணைதன மறுத்து கால்பதித்துச் சரணடைவார் இல்லையெனில் சவமாவார் களத்தில் மடிந்திடுவார் கனலான உன் விழியின் தணலால் அவ்வுடல்கள் தமையெரித்து பொசுக்கிடுவோம் இல்லையெனில் இவ்வுலகில் நல்லாட்சி நமதென்று நச்சரிக்கும் நயவஞ்சப் பொல்லாண்மை வல்லரசுப்பேய்கள் தமை விடுத்து நல்லபடி வாழ்வதெனில் நடக்காது, வரலாற்றை சற்றே திருப்பிப்பார்! தெருக்கூத்துக்காட்சியல்ல தியாகங்கள் தமக்கஞ்சாப் போராளர் தம்மாலிப் பாரில் பலவிடத்தே சமந்தி பொங்குதடி எல்லோர்க்கும் எல்லாமும் ஏற்றவழி காணுதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தந்தவற்கு நன்றி சொல்வோம் வல்லவர்கள் எலலோரும் ஒன்றுய் திரண்டெழினும் இல்லார்தம் தியாகங்கள் இடுப்புடைத்து வென்றுவிடும் கால்பதித்து நாம் படைக்கும் சமதர்ம நாட்டினிலே நாளைய நம் வாரிசுகள் நடைபோடும் இன்றே நாம் கண்டு கொள்ள வாய்த்த தருணமிதை வென்றெடுக்க வேண்டுமடி வேதனைகள் தமை விடுத்து சாதனைகள் செய்துவிட்டுச் சரித்திரத்தைப் படையுமென போதனையை நீ செய்து புதுப்பரணி பாடாமல்

Page 14
வேதனையைக் கொட்டி எனே வீட்டிற் கழைப்பதிலே நீதி இருப்பதென்று எனக்குப் புரியவில்லை காலத்தை வெண்றெடுத்த கண்மணியாய் ஞாலத்தின் கோலத்திருவிளக்காய் குலமகளே நீ திகழ்ந்து ஞாலத்து மக்களுக்கே வழிகாட்ட வேண்டுமடி இல்லார் தம் எண்ணமது ஈடேறும் மார்க்கமதை வென்முக வேண்டுமெனில் மேதினியில் நீவிரெலாம் வீணுகவே எழுந்து நமது பகைமைதன்னை நாமே தான் ஒழித்திடவும், வெண்முகவும் வேண்டும் இங்கிருந்து பகை முடிக்க எண்ணுது சென்றெங்கோ காடுமலைகளிலே மறைந்திருத்தல் ஏனென்று கோடிட்டு நீ வரைந்தவரிகள் எனப்பார்த்து வேட்டுச்சிரிப்பொலியாய் வேதனைதான் செய்ததடி வீட்டில் உனக்கருகே உன்னேடு தானில்லை- ஆனலும் நாட்டில் தான் நானிருக்கேன் சத்தியமாய் என நம்பு பக்கத்திருந்துன்னைப் பார்க்காதிருந்தாலும் என் விழிகள் உனைச்சுற்றியே இருக்கும் உண்மை தனை உணராய் இந்நாடுதனை விட்டு நமெங்கும் செல்லவில்லை முன்னுளின் மன்னவர் போல் அஞ்ஞாதவாதமதை இன்னுளில் செய்வதெல்லாம் போராளர் மட்டும்தான் இந்நாட்டை ஆள்வோரால் "பயங்கரவாதம்' எனும் திருநாமம் சூட்டியதால் விடுதலை வீரரெல்லாம் பயங்கரவாதியென்ற பட்டத்துள் வாழ்கின்மூர் எட்டப்பன் பணியாற்றி எவருமிந்த வாதிகளை காட்டிக்கொடுப்பதற்கு லட்சங்கள் பரிசென்று நீட்டி முழக்குகின்ற நீசமதி அரசினர்க்கு ஒட்டுக்காயுதிரமிதை இழக்காத தீரரென்றும் பாட்டுக்காய் புரட்சியினைப் பாடாத வீரரென்றும் சீட்டுக்கணக்கில் சொல்வதற்கு ஆளிருந்தும் பட்டாளச்சிப்பாய்கள் படைபெலங்களாயிருந்தும் கூட்டாட்சி முதலாளி ஏகாதிபத்தியங்கள் எல்லாமே எதிரெதிராய் எதிர்த்திட்ட வேளையிலும் ஏழை தொழிலாளர் பாட்டாளி விவசாயி மக்களெல்லாம் வல்லாண்மை தனக்குவித்து வரலாற்றை வெண்றெடுப்பர் விடிவெள்ளி காண்பதற்கு விரைந்திட்ட தோழரெல்லாம் முடிவொன்று வைப்பார்கள் மிக விரைவில் அதுவரையில் கடிதென்று எண்ணுது காத்திருப்பால் கண்மணியே
(முற்றும்)
一器4一

தமிழ் தேசிய இனப்பிரச்சனையும், ஈழத்து எழுத்தாளர்களும்,
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையென்பது இன்றைய காலகட் டத்தில் முனைப்புள்ள ஓர் விடயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சமகால உலக அரசியல் வரலாற்றில் உயிர்ப்புள்ள ஒரு பிரச்சினையாக சர்வதேச ரீதியில் ராஜதந்திர மட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு விடயமாகவுள்ளது. இருந்தும் கடந்த நாற்பது வருடங்களாக ஈழவர்களுடைய வரலாற்றில் பல் வேறு அரசியல் மாற்றங்களே பல படிப்படியான வளர்ச்சிகளே யும் கண்டுள்ளது,
இலக்கியமென்பது சமூகப் பொருளாதாரக் கட்டுமானத்தின்
வெளிப்பாடே. அதாவது சமூக பொருளாதாரக் கட்டமைவு
கட்சு டாகவே இலக்கியம் உருவாகிறது. அல்லாவிட்டால் உருவாக் கப்படுகின்றது. ஆகவே இங்கு இலக்கியம் சமூகப் பிரச்சினேகளே பும் அதற்கான தீர்வுகளையும் மக்கள் முன் வைக்க வேண்டிய அவ சியத்தைப் புெறுகின்றது. இத்தகைய ஒர் அடிப்படையில் ஈழத் துத்தமிழர் இலக்கியங்கள் சமகாலப் பிரச்சினைகளே அவ்வவ்காலத் திலேற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களைப் பிரதிபலித்தனவா என்ற கேள்வி எழுகின்ற பொழுது இதற்கான விடையை எம்மால் சரியான முறையில் கூறமுடியாது.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் பொழுது தமிழ் நாட் டிலுள்ள இலக்கியத்தைப் போல சங்ககாலத்திலிருந்து ஒரு
தொடர்ச்சியான வரலாற்றைப் பார்க்க முடியாது. இருந்தும் சில ஆய்வாளர்கள் ஈழத்துப் பூதத்தேவனருடன் எமது இலக்கிய
வரலாற்றை ஆரம்பிப்பர். ஆனலும் 13-ம் நூற்ருண்டிலிருந்தே
ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்று சொல்லக்கூடிய வகையில் தொடர்ச்சியான ஒரு பாரம்பரியத்தை நாம் பார்க்க முடியும்.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் காலமாற்றத்துக்கு ஏற்ப இலக்கிய வடிவங்களையும் மாற்றிக் கொண்டு இலக்கியங்களைப் படைத்த போதும் சமகால அரசியல் பொருளாதார நிலைமைக
ளைப் பிரதிபலித்தார்களா? என்பது சர்ச்சைக்குரிய விடயமே.
கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் என்ற இதீத இலக்கிய வடி வங்கள் மூலம் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை ஈழத்துஎழுத் தாளர்கள் எங்ங்ணம் எடுத்துச் சொன்னுர்கள் என்பது எல்லாம்
a- 25 as

Page 15
ஆய்வுக்குரிய விடயங்கள், கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய நவீன தமிழ் இலக்கியங்கள் 29-ம் நூற்றுண்டுத் தமிழ் இலக்கி யத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டன. இதேபோல ஈழத்துத் தமிழ் இலக்கியத்திலும் இவ்விலக்கிய வடிவங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த நூற்ருண்டின் ஆரம்பத்தில் பாரதியினுடைய தமிழ்க் கவிதைகள் இந்தியத் தேசிய விடுதலையையும் அத்தோடு தமிழ் இன உணர்வையும் வெளிப்படுத்தி நின்றது. இதேபோல ஈழத்தி லும் பாவலர் துரையப்பாப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் போன்றவர்கள் இலங்கைத் தேசிய நோக்கம் கொண்ட பாடல்களாகப் பாடினர்.
ஈழத்துத் தமிழ் தேசிய இனப்பிரச்சினையென்பது 1921-ல் சேர் பொன் அருணுசலம் தமிழர் மகா சபையை ஏற்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு ஒரே வழி தனிநாடுதான் என்று கூறியபோது அந்நாளைய தமிழ் அரசியல் தலைவர்கள் அதை அவ்வளவாக வர வேற்கவில்லை. 1936ல் தனிச்சிங்கள மந்திரிசபை அமைக்கப்பட்ட போது கூட தமிழ்த் தேசிய உணர்வு முனைப்புள்ள பிரச்சினை யாக அமையவில்லை. ஆனல் 1956 தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு தமிழ்த் தேசிய உணர்வு படிப்படி யாக மேலோங்கத் தொடங்குகின்றது. 1949-ல் தமிழரசுக் கட்சி பின் ஆரம்பம் தமிழ் மக்களிடையே ஓர் விழிப்புணர்வை ஏற்ப படுத்தியதென்ருல் அது மிகையாகாது. 1956 வரை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இந்தத் தமிழ் மக்களுடைய பிரச்சினை களை தங்களுடைய இலக்கியங்களில் என்ன வகையில் கையாண் டார்கள் என்று பார்க்கின்றபோது மிகக்குறைந்த விகிதத்திலேயே காணப்படுகின்றது.
1950 களில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த புதிய எண் ணம் கொண்ட மாணவர் குழுவொன்று தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை வேறுபடுத்திப் பார்க்காமல் சிங்கள மக்களுடைய பிரச்சினைகளோடு தொடர்பு படுத்தி இலங்கை முழுமைக்குமான தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார்கள். அதனடிப் படையிலேயே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1960 களில் உருவாக்கப்பட்டது. இது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தினுடைய போக்கை அகில இலங்கை ரீதியான வழிகாட்டலுக்குத் தலைமை யேற்கின்றது. ---- - T
தமிழ் நாட்டில் பாரதியும், பாரதிதாசனும் ஏற்படுத்திய கவிதைத் தாக்கம் ஈழத் தமிழ் எழுத்தாளர்களையும் பாதித்ததில்

வியப்பில்லை 1947ம் ஆண்டில் நடேசையரை ஆசிரியராகக் கொண்டு கதந்திரன் வெளிவருகிறது, பல தேசிய பத்திரிகைக ளின் மத்தியில் சுதந்திரன் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் அவர்களது அரசியல் செயற்பாடுகளையும் பிரதிபலிக்கும் ஒர் பத் திரிகையாக மலர்ந்தது. 1948 க்குப் பின்பு தமிழரசுக் கட்சியின் தோற்றம் இப்பத்திரிகைக்கோர் எழுச்சியை ஏற்படுத்தியது. இக் காலகட்டத்தில் மகாவலி, முருகையன் போன்ற கவிஞர்கள், தமிழ்த்தேசிய இனப்பிரச்சனை சம்பந்தமான கவிதைகள் சுதந்தி ரன் பத்திரிகையில் வாராவாரம் எழுதி வந்தனர். இவர்களுள் மலையகத்தைச் சேர்ந்த ஏ. வி. பி. கோமஸ் அவர்களும் குறிப் பிடத்தக்கவர் ஆவார். பிற்காலத்தில் பிரபல்யமான இக் கவிஞர் களைவிட ஒவ்வொரு வாரமும் பல புதிய புதிய கவிஞர்கள் இப் பத்திரிகையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனை சார்பாக பல கவி தைகளைப் படைத்தனர், மலையக மக்களுடைய வாக்குரிமை பறிக் கப்பட்டமை மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை என் பனவும் இக்கவிதைகட்குப் பொருளாய் அமைந்தன.
1956-ல் ஏற்படுத்தப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களிடையே என்றுமில்லாதவாறு ஒரு தேசிய உணர்வை ஏற் படுத்தியதென்ருல் மிகையாகாது. அநாகரிக தர்மபாலா தொடக் கம் சிங்கள மக்களிடையே சிங்கள பெளத்த தேசியவாதம் படிப் படியான ஒரு வளர்ச்சியில் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனல் அதற்கேற்ப ஒரு தமிழ்த்தேசியவாதம் வளர்த்தெடுக்கப்படவில்லை. ஆனல் 1956-ல் ஏற்படுத்தப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் தமிழ் மக்களிடையே ஒரு தேசிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இது தமிழ் எழுத்தாளர்களிடையேயும் தாக்கத்தையும் ஏற்படுத் தியதா? என்று நாம் கேட்கின்றபோது இதற்கான விடை சிரம மானதொன்ருகவேயுள்ளது. ஏனெனில் அரசியல் ரீதியில், தமிழ் மக்களுடைய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் இருந்த போதி லும் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குறியே?
1958 ஐத் தொடர்ந்து 1958-ல் நாட்டில் உருவாகிய தமிழ் இனக்கலவரம் மேலும் தமிழ்த் தேசிய உணர்வானது ஓர் வலு வுள்ள சக்தியாக உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 1960 களில் உருவாக் கப்பட்ட முற்போக்கு எழுதாளர் சங்கம் பல்கலைக்கழகப் பத்தி ஜீவிகளின் வழிகாட்டலில் தனது வழிகாட்டலைத் தொடர்ந்தது. இக்காலகட்டத்தில் தினகரன் பத்திரிகை முற்போக்கு எழுத்தா ளர்களுக்கு ஒரு களமாக அமைந்தது. இவர்கள் மர்க்சிச, லெனி
ം 87 ഞ

Page 16
னிச கொள்கைகளை பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வந்து அவற் றைத் தமது, நடைமுறை இலக்கியங்கட்கு வழிகாட்டல்களாக அமைத்துக் கொண்டனர். -
தமிழ் பேசும் மக்களின் தேசிய இனவுணர்வை, அதனப்படை யிலான தேசிய இனப்பிரச்சனையை வெறும் வகுப்புவாதமெனக் கணித்த இவர்கள், இன அடிப்படையிலான கோஷங்களைப் பிற் போக்குத்தனம் என்றே வர்ணித்தனர். ஆணுலும் தமிழ் பேசும் மக்களிடையில் நிலவிய சாதிமுரண்பாடுகளையும், பொருளாதார ஏற் றத்தாழ்வுகளையும் கருப்பொருளாகத் தாங்கிய சமூகப் பிரஞ்ஞை உடைய பல இலக்கியங்கள் படைக்கப்பட காரணமாகினர் என்பது மறுக்கப்படமுடியாதது. வியாபார நோக்கில் வெளிவந்து ஈழத்து இலக்கியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்திய தென்னிந்தியக் குப்பை இலக்கியங்களுக்கு எதிராக ஓங்கிக் குரலெழுப்பிய இவர்கள் தமது படைப்புகளில் யதார்த்த நோக்கைக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக் கது. சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார முட்டுப்பாடுகள், என் பன பற்றிப் பேசுபவைகளே முற்போக்கு என்று முத்திரை குத்திக் கொண்ட இவர்கள் தமிழ் பேசும் மக்களின் இனவுணர்வினே பின் னிருந்த தேசிய எழுச்சியை இனம்காண முடியாமற் போனமை துரதிட்டவசமானதே. (மீதி அடுத்த இதழில்
மாணவர்களின் கவனத்திற்கு
ஈழவர்களின் தேசிய விடுதலைப்போராட்டமானது கூர் மையடைந்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில் பாட சாலை மாணவர்களிடையே அரசியல் தெளிவினை ஏற்ப டுத்துமுகமாக முழுக்க முழுக்க மாணவர்களிடமிருந்து வரும் விவாதங்கள், ஆய்வுகள், ஆக்கங்களே நாங்கள் தாங்கி வருகின்றது. அந்த அடிப்படையில் கடந்த இதழ் களில் பிரசுரமாகிய 'மழலையர் மனங்களில் மறைந்து கிடப்பவை' என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரைகள் வாசகர்களின் பராட்டை பெற்றுள் து. இதே அடிப்பு : டையில் இன்றைய போராட்ட முன்னெடுப்புக்கு அத்தியா வசியமானது அரசியல் முதிர்ச்சியா? ஆயுதங்களா? என்ற தலைப்பிலான விவாத மேடைகளை பாடசாலைகளில் ஏற் படுத்தி அது சம்பந்தமான ஆய்வுகளின் பிரதிகளே நாங் கள் வந்த வழியிலேயோ அல்லது தெரிந்த UேYS அங் கத்தினர் மூலமாகவோ எமக்கு அனுப்பி வைத்தால் அவற்றை தொடர்ந்துவரும் இதழ்களில் பிரசுரிக்கக்கூடி யதாக இருக்கும்
بسيبيين 28 جيمس.

பிலிப்பினே மாணவ அணி (LFS) மீதான அடக்கு முறைக்கெதிரான GUYS ன் குரல். ஜனுதிபதி பேர்டினண்ட் மார்க்கொஸ்,
மலாக்கானங் மாளிகை மெற்ருே மணிலா பிலிப்பைன்ஸ்.
ஜனதிபதி அவர்களே,
ஈழம் மாணவ இளைஞர் பொதுமன்றத்தினராகிய நாம் யூலை 4-ம் திகதி ரொறிஸ் டவோ நகரிலுள்ள கினே கடற்கரை விடுதியில் பலமான ஆயுதம் தாங்கிய 439 வது P. C. கொம்பனியைச் சேர்ந்த பிரிவுகளால் கைது செய்யப்பட்டுள்ள 21 மாணவர்களை பிட்டு மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.
பிலிப்பைன்ஸிலுள்ள சகல ஜனநாயக மாணவ இயக்கங்களுக்கு எதிராக, அவர்களுடைய சுதந்திரத் திற்கும் உரிமைக்குமான சட்டபூர்வமான போராட்டங் களே அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து ஒடுக் கும் உங்கள் ஆட்சியின் கொடுமைகளை நாம் வன்மை யாகக் கண்டிக்கிருேம்.
சட்டத்திற்கு முரண்பட்ட நிலையில் கைதுசெய்யப் பட்டு, உறவினரையோ அணுகமுடியாமல் தடுப்புக்காவ லில் வைக்கப்பட்டுள்ள எமது சகோதர சகோதரிகளே உட னேடியாக விடுதலை செய்யும்படி கேட்டுக்கொள்கிருேம். பிலிப்பைன்ஸில் சுதந்திரத்தையும் ஜனநாயகத் தையும் மீளப்பெறுவதற்கான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பிலிப்பினே மாணவ கூட்டணி (பின் சட்டபூர்வமான சகல செயற்பாடுகளுக்கும் எமது ஒருமித்த ஆதரவை இதனுல் தெரியப்படுத்துகிருேம்.
பிலிப்பினுே மாணவ அணியுடன்
ஒருமித்து நிற்கும்
பிரதிகள்: GleFuu av T6Ti (GUYS)
1. ஆசிய மாணவர் கழகம் கொங்கோங், 2. பல்கலைக்கழக மாணவர் கழகம் நியூஸிலாந்து,
--سیسی۔ 230 میسے

Page 17
கொங்கோங் நகரில் நடைபெற்ற ஆசிய மாணவர் கழகத்தின் (ASA) மகாநாட்டின் பிரதிநிதிகளால் இ ல ங்  ைக ஜனதிபதிக்கு அனுப்பப்பட்ட கண்டன கடிதத்தின் தமிழாக்
ό ζύ.
யூலியஸ் றிச்சார்ட் ஜயவர்த்தன, ஜனதிபதி அலுவலகம், பொதுச்சதுக்கம்,
கொழும்பு-1. பூரீலங்கா.
ATTŘIGDIGIT 6 ESTIGNjf Ö352
ஆய்வரங்கு
YNM ve
தமிழ் மக்களுடைய வாழ்க்கையும், தாகங்களும்.
ஜனதிபதி அவர்களே,
கொங்கோங்கில் இன்று நடைபெற்ற மேற்படி ஆய்வரங் கில் பங்குபற்றிய நாங்கள், பரீ லங்காவில் இன்று பெருந்தொகை யாகத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையிட்டு சர்வதேச ரீதி யாக நடைபெறும் கண்டனங்களுடன் எமது கண்டனங்களேயும் சேர்த்துக்கொள்கிறுேம்.
நாங்சள் பார்த்த வீடியோ படங்களிலிருந்தும் புகை' படங்களிலிருந்தும் ஒரு உண்மை தெளிவாகியது. சமூக நீதியை யும் சுதந்திரத்தையும் நாடும் தமிழ் மக்களுக்கு பூரீ லங்கா ஒரு சொர்க்கமல்ல, நரகமே. ஈழம் மாண இளைஞர் பொதுமன்றத்தின் (GUYS) பேச்சாளர் ஒருவரும், கொங்கோங்குக்கு வருகை தந்தி ருந்த ஒரு தமிழ்ப்பேராசிரியரும் உங்கள் நாட்டின் யதார்த்த நிலைபற்றி தெளிவாக எடுத்துக்கூறிஞர்கள். தமிழ்மக்களுக்கெதி ராக உங்கள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை அறியும்போது நாம் மிகுந்த அதிர்ச்சியும் கோப மும் அடைகிருேம். எவருமே இதிலிருந்து தப்பவில்லை. ஆயுதப் படையினரின் நடவடிக்கைகளின்போது ஆயிரக்கணக்கில் தமிழர் கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைதுசெய் யப்பட்டு, சிறைக்கூடங்களில் தள்ளப்பட்டு, பலாத்காரமாகத்
جیلینیم... 800. =..................ے

துன்புறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர், தங்கள் கிரா மங்களை விட்டு மக்களே வெளியேற்றும் வகையில் வீடுகள் எரிக்கப் பட்டு சொந்த மண்ணிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
நாங்கள் நாட்டிற்கு இதுவரை வருகைதராத போதிலும் நாங்கள் கேள்விப்படுபவை யாவும் எமக்குப் போது மான தரவுகளாக உள்ளன. நாங்கள் ஈடுபாடு கொள்ளவும் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக எழுச்சி கொள்ளவும் இக்கருத்த ரங்கு எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளது.
மனித வாழ்வின் பெறுமானங்கப்பும் மாண்புகளேயும் இனம் கண்டு கொள்பவர்கள் என்ற வகையில், நிதியான இந்தத் தாகங் களுக்கு எமது பூரண ஆதரவும் அவர்களுடன் ஒருமித்த தன் மையும் உரியதாகும். சுயநிர்ணயத்திற்கான அவர்களுடைய தொடர்ச்சியான போராட்டத்திற்கு எமது ஆதரவை தெரிவித் துக் கொள்கிருேம்.
தமிழ்ப்பிரதேசங்களில் ஆயுதப்படையினரின் நடவடிக்கைகளே வாபஸ் பெறும்படியும், தமிழ்மக்களுடைய மண்ணை ஆக்கிரமிப் புச் செய்வதை நிறுத்தும்படியும் உங்கள் அரசை நாம் கேட்டுக் கொள்கிருேம். தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மீறச் செய்யும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (1978) அவசரகால நிலைமை 15 A, இவற்றுடன் ஏனைய தடைச் சட்டங்களையும் நீக்கும் படி கேட்டுக்கொள்கிருேம். எவ்வித நிபந்தளைகளுமின்றி சகல அரசியற் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யும்படி மனுச் செய்கிருேம். மனித உரிமைகளை மதித்து தமிழ் மக்களுடைய உரிமைகளை மேலும் நகக்காமலிருக்கும்படி உங்கள் அரசைக் கேட்கிமுேம்,
இறுதியாக, தமிழ் மக்களை பாதுக்காக்கும் வகையில் தங்கள் பலத்தை ஒன்று திரட்டும்படி நீதியையும் சமாதனத்தையும் விரும் பும் சகல மக்களையும் கேட்டுக்கொள்கிருேம். விழிப்படைந்த சகல சிங்கள மக்களையும், தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுக்கும் படி அழைக்கிருேம், தமிழ் மக்களின் போராட்டத்திற்கான ஒரு மித்த அதரவு தமிழ்ப்பிரதேசங்களிலும் வெளிநாடுகளிலும் மட்டு மல்ல, சிங்கள சமூகங்களுக்கிடையேயும் உள்ளது என்பதை விணு வில் அறியும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.
எங்கள் உரிமைகளுக்காக எழுந்து போராடுவோம்!
- 3 -

Page 18
ஒரு பார்வை.
நாடகங்கள், வில்லுப்பாட்டுகள் தெருக்கூத்துகள், கவிதா நிகழ்வுகள்
போர் நிறுத்தத்தின் பின்னர் யாழ் குடாநாட்டின் பல பாகங் களிலும் நாடகங்கள், வில்லுப்பாட்டுகள், தெருக்கத்துகள், கவிதா நிகழ்வுகள் பரவலாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இன்றைய பிரச்சனேகளே பிரதிபலிக்கக்கூடிய கலே, இலக்கிய வடிவங்கள் தோன்றிவரும் வேளையில் இம்முயற்சிகள் அவற்றை மெருகூட்டுகின்றன. ஏனைய கலை, இலக்கிய வடிவங்களான நாவல் கள், சிறுகதைகளிலும் பார்க்க கவிதைகளும் நாடகங்களும் பொது மக்களைப் பெருமளவில் சென்றடைந்துள்ளது. சில தெருக்கூத்து கள் நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் ஆடப்பட்டுள்ளன.
எனவே இவை வெளிப்படுத்தும் அம்சங்கள் ஆழ நோக்கப் படவேண்டியவை. இக்கலை, இலக்கிய வடிவங்கள் எமது பிரச்ச னைகள் பற்றிய ஒர் தெளிவான விளக்தை அதாவது அரசியல் அறிவினை மக்களுககு ஊட்டக்கூடியதாக அமைதல் அவசியம், மக்கள் பார்வையாளர் என்ற நிலை மாறி பங்காளரே என்ற கருத்துக்கள் ஊட்டப்படவேண்டும். இன்றும் நம்மிடையே உள்ள போலிகளை இனம் காட்டுபவையாக, சுய விமர்சனங்களை முன் வைப்பவையான இக்கலை வடிவங்கள் அமைதல் அவசியம். ஆனல் குழப்பமான கருத்துகளை முன்வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
இவற்றைவிட வெறும் வீரப்பிரதாபங்களை வீரவரலாறுக ளென கூறி கூடிமுழக்குவது ‘விசிலடிகளைப் பெற்றுத்தருமே தவிர விளக்கங்களை அல்ல. தங்களின் விளம்பரத்திற்காக வேறு அமைப்புகளை சாடுவதும் தவிர்க்கப்படவேண்டியதே. வெறும் உணர்ச்சிகளை கொட்டித்தீர்ப்பதாகவும் பலிகொடு பலிகொடு" என கொலைவெறியை ஊட்டுவதாக அமையும் தெருக்கூத்துகள் தவிர்க்கப்படவேண்டியவை. கருத்தாளம் மிக்க படைப்புகள் கூட
சில சமயங்களில் கலைத்துவத்தை இழப்பதால் வெற்றியளிக்காமல்
போய்விடும்.
‘மண் சுமந்த மேனியர்', "மலரும் புதுயுகம் போன்ற நாட கங்களும் ‘மாயமான்', 'விடுதலைச் சாமியார் போன்ற தெருக்
--محمد ‘‘ جیسے

கூத்துகளும் எங்கள் மண்ணும் இந்த நாட்களும் கவிதா நிகழ் வும் விடுதலைப்புலிகளின் வீரவரலாறு ‘யாமார்க்கும் குடியல் லோம்’ ஆகிய வில்லுப்பாட்டுகளும் நாவுக்கரசர் சிறைவாசம் என்ற கதாப்பிரசங்கமும் அண்மையில் வெளிவந்த படைப்புக எrாகும்.
‘மண் சுமந்த மேனியர் ஓர் பிரமாண்டமான தயாரிப்பு. 60 தடவைகள் மேடையேற்றப்பட்டது. ஒரு வீடாக, கிராமமாக, நாடகமேடை பாவிக்கப்பட்டுள்ளது. பல விடயங்க% தொட்டு தடவிச் சென்றுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பியோடல், தாக்கு தல், வீட்டுக்கஷ்டங்கள், படிப்பவர்களுக்குள்ள கஷ்டம், சுயநலக் கும்பல்கள், மூடநம்பிக்கைகள், வெளிநாட்டு உதவி GTSri Lurrritu புகள், போதியளவு நகைச்சுவை இறுதியில் போர்ப்பிரகடனம் வரை பல விடயங்களே கொண்டுள்ளது. இதனுல் விடயசிக்கல் தன்மையினே இதில் காணமுடிந்தது. கருத்துகளை சொல்வதில் பாவிக்கப்பட்ட குறியீடுகள், நாடக அம்சங்கள் வெகுசிறப்பாக
பாடல்களும், இசையமைப்பும், புதுக்கவிதைகளும் அவை வெளிக்கொணரப்பட்டவிதங்களும் நன்றுக இருந்தது. மேடை முழுவதிலும் ஒரு கூட்டு முயற்சி (Team Work) நடிகர்களிடையே காணப்பட்டது. எல்லாப் பாத்திரங்களுமே மனதில் பதிந்துவிடக் கூடியனவாக இருந்தது. இதனுல் நாடகம் பார்த்த பலரின் வாய் களில் சிலநாட்களாக சில வசனங்களும் பாடல்களும் ஒலித்ததை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. இறுதியில் போர்ப்பிரகடனமும் மக்கள் அணிதிரளவேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது சிறப்பாயிருந்தது. மொத்தத்தில் ஓர் முன்னுேடியான சிறப்பான முயற்சியாகும்.
"மலரும் புதுயுகம்' - இதன் கருப்பொருள் நெருப்பு. அது மக்களைப் பற்றிக்கொண்டால் நடப்பது எரிப்பு.
மாணவர், இளைஞர், பெண்கள், விவசாயி, மீனவன், மலை யக தோட்டத்தொழிலாளி இவர்களின் பிரச்சனைகளை பாத்திரங் கள் பிரதிபலிப்பனவாக அமைந்திருந்தது. இறுதியில் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டிய அவசியத்தையும் வர்க்கக்கூட்டினையும் வலியுறுத்தியமை சிறப்பாயிருந்தது. கருப் பொருளை பொறுத்தவரை சிறப்பானது. கலைத்துவத்தில் வெற்றி யளிக்கவில்லை. ஒவ்வொரு பாத்திரமும் வேண்டுமென்றே அபிநயம் செய்து கொண்டிருந்ததாக தோன்றியது. பாடல்களின் எண்ணிக்
- S3 -

Page 19
கையும் நீளமும் பழைய சினிமா படங்களை நினைவூட்டியது. படைப்புகளில் தொய்வு காணப்பட்டால் கொடுக்கும் கருத்து கள் பார்வையாளரை தைக்காது, நாடகம் ஆரம்பத்திலேயே தனக்குத்தானே முற்போக்கானது என சான்றிதழ் வழங்கிவிட் டது. ஆயினும் தேர்ச்சி பெற்ற நடிகர்களை மட்டுமன்றி சாதா ரண தொழிலாளர்களையும் நடிகர்களாக கொண்டிருந்தது L. IIi DJ IT L' டப்பட வேண்டும். நல்ல முயற்சி, மாற்றங்கள் அவசியம்.
தெருக்கூத்துகளில் 'மாயமான் ஓரளவு நன்முக இருந்தது. 100 தடவை ஆடப்பட்டது, போர்நிறுத்தத்தையும், பேச்சுவார்த் தையையும் 'மாயமான்' ஆக சித்தரித்தது. போர்நிறுத்தத்தின் போது சிலருக்கு வரக்கூடிய ஆசைகளை வெளிநாட்டு பயணத்தை சாடியுள்ளது. ராஜிவின் காலில் விழுதல் போன்ற காட்சிகளில் மிகைப்படுத்தல் அதிகமாக காணப்படுகிறது. சில கருத்துக்கள் குழப்பத்திலாழ்த்துபவையாக தெளிவான தீர்வை சொல்லாதவை யாகவும் அமைந்துள்ளது. இந்தியாவுக்கு எமது பிரச்சனையிலுள்ள பாத்திரம் பற்றி குழப்பமான கருத்துக்கள் காணப்படுகிறது. கலேயம்சங்கள் நன்முக இருந்தது.
விடுதலைச்சாமியார் ஏதோ செய்யவேண்டும் என்பதற்காக செய்யப்பட்டதுபோல தோன்றுகிறது. மிக விரைவிலேயே ஒரம் போய் விட்டது. கொலைவெறியும் இரத்தவாடையும் வீசுகிறது.
வில்லுப்பாட்டுகளில் "யாமார்க்கும் குடியல்லோம்’, ‘நாவுக்கர சர் சிறைவாசம் கதாப்பிரசங்கம் என்பன சிறையில் நடக்கும் சித்திரவதைகளை எடுத்துக்கூறுவனவாக அமைந்திருந்தன, ஒரளவு மனதைத் தொடக்கூடியதாயமைந்தது.
‘விடுதலைப்புலிகளின் வீர வரலாறு" விசிலடிகளைப்பெற்றுத் தரக்கூடியதாயிருந்தது. வெறும் தாக்குதல்களுக்கு விளம்பரமா யமைந்தனவே தவிர வரலாறு அல்ல.
"எங்கள் மண்ணும் இந்த நாட்களும் கவிதா நிகழ்வு மிக அருமை. சிறந்த கவிதைகளும் சிறந்த இசையமைப்பும் கொண்டி ருந்தது. இதைக்கேட்டவர்களின் வாய்களில் அடிக்கடி இவை முணுமுணுக்கப்படுவதே இதைப்பற்றிய அளவுகோலாகும்.
எனவே தொடர்ந்து இவ்வாருன, கலை இலக்கிய படைப்பு கள் வெளிவரவேண்டும். இவை மக்கள் சிந்தனையை தூண்டுவன
வாக இருக்கவேண்டும்.
--------- 534 مس.........

Lg Jo ão ( J, Ĵ, #5áirt 1Daŭridŝo ŝi )6)I... e pri eraoa.
வன்னிப் பிரதேசத்தில் காட்டை அண்டிய வறிய கிரா மம். இக்கிராமத்தில் 40 குடிகள் வசித்துவருகின்றது. இதில் வேலனின் குடும்பம் ஒன்று வேலனின் குடிசையில் அவனும் அவ னது மனைவியும் ஐந்து குழந்தைகளும் வசித்துவருகிருர்கள். மூத் தவன் 8 வயது நிரம்பிய சிறுவன் கந்தன், இரண்டாவது 6 வயது நிரம்பிய சிறுவன் ராசா, மூன்ருமவள் 4 வயது நிரம்பிய பாக் கியம், நான்காவது குழந்தை 3 வயதுடைய அர்ச்சுனன், ஐந்தா வது 1 வயதுடைய கடைக்குட்டி புனிதம்.
வேலன் பத்து வருடங்களுக்கு முன் இரண்டு ஏக்கர் காட்டை அழித்து களனியாக்கித்தான் இதில் அவன் உழுந்து, பயறு மிளகாய், மரவெள்ளி போன்ற பயிர்களைச் செய்து வந் தான். இதன் மூலமும் மாடு வளர்ப்பின் மூலமும் தனது குடும்ப சீவனப்பாட்டை சிரமத்தின் மத்தியில் ஒட்டினன். மூத்த இரு சிறுவர்களும் அக்கிராமத்திலுள்ள பாடசாலைக்குச் சென்று ஆரம் பகல்வி கற்றுவந்தார்கள். வேலன் தனது மூத்த மகனின் படிப்பை இடைநிறுத்தி தனக்கு ஒத்தாசையாக வைத்துக்கொள்ள எண்ணி னை.
அப்பொழுதுதான் அந்த இனக்கலவரம் (77) நடைபெற்றது. இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தமது உடன் பிறந்தவர்களையும், உடமைகளையும் இழந்து வெட்டுக்க பங்களுடன் வன்னிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் அகதி களாக வந்து சேர்ந்தார்கள். இதுபற்றி கந்தன் தெரிந்துகொள்ள ஆவலாய் தனது தகப்பனிடம் கேட்டான் 'இவர்களை யார் அப்பா அடித்துத்துரத்தினர்கள்? இதற்கு வேலன் 'சிங்களவர் கள்தான் இவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்துவிட்டு இவர் களின் உடன் பிறந்தவர்களையும் கொலை செய்துவிட்டு இவர்களை அடித்துத்துரத்தியுள்ளார்கள்' எனக் கூறினன். அதற்கு கந்தன் "ஏன் அப்பா அவர்கள் அடித்துத்துரத்தினர்கள்' வேலன் சிறிது நேரம் யோசித்துவிட்டு 'தங்களுடைய கிராமங்களில் இருத்தி ஞர்கள் என்று' எனக் கூறினன். கந்தன் அடுத்த கேள்வியைக் கேட்க வாயைத் திறந்தபோது 'டேய் நீ போய் உனது வேலை யைக் கவனி' எனச் சத்தமிட்டான்.
பாடசாலையில் குடியேறிய அகதிகளில் சில குடும்பங்கள் அக்கிராமத்தை அண்டிய காட்டுப்பகுதியில் குடியேற்றப்பட்ட
35 " س

Page 20
னர். அப்பொழுது கந்தன் மூன்ரும் வகுப்பு படித்துக்கொண்டிருந் தான். இக்கலவரத்தின்பின் சில மாதங்கள் பாடசாலைகள் நடை பெறவில்லை. வேலனுடன் ஒத்தாசையாக வேலை செய்வதற்காக கந்தனுடைய படிப்பு (பாடசாலை நடைபெருததைச் சாட்டாக வைத்து) இடைநிறுத்தப்பட்டது.
இதன்பின் காலையில் தனது தகப்பனுக்கு ஒத்தாசையாக தோட்டவேலையில் ஈடுபட்டு, காலை ஆகாரமாக பழங்கஞ்சியைக் குடித்துவிட்டு, மத்தியானத்திற்கென தாயார் சமைத்து வைத்த சோத்துப் பொட்டலத்தையும் எடுத்துக் கொண்டு மாடுகளை மேய்ச்சலுக்காக சாய்த்து சென்று பிற்பகல் வீடு திரும்புவதே இவனது நாளாந்த வாழ்க்கையாக இருந்தது. மாடுகளை புல் வெளியில் மேயவிட்டுட்டு மரநிழலின் கீழ் குந்தியிருக்கும் இவ னது சிந்தனை பலவழிகளில் செல்லும். அடிக்கடி பாடசாலையில் தங்கியிருந்த அகதிகள் பற்றியும் அவர்கள் கூறிய கலவரத்தை யும் பற்றி எண்ணி தனக்குள்ளே பல கேள்விகளை தொடுத்து சிந்தனை செய்வான்.
இவனது கிராமத்தில் அகதிகள் குடியேற உதவி செய்த சில இளைஞர்கள் (இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) தொடர்ந்து அக்கிராமத்தில் பண்ணே செய்வதில் ஈடுபட்டுவந்தனர். இவ் இளைஞர்கள் அக்கிராமப் பகுதி மக்கள் மத்தியில், அவர்களுக்கு இவ் அரசாங்கங்களால் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளையும். இன்று நிலவும் பொருளாதார அமைப்பின் சீர்கேடுகளையும் பற்றி எடுத்துக் கூறினர்கள். இவ்விளைஞர்கள் அக்கிராம மக்களுடன் நன்கு பழகுவதிலும், அம்மக்களின் சுகதுக்கங்களில் பங்கு கொள் பவர்களுமாகி அக்கிராம மக்களுடன் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். இவ்விளைஞர்கள் அக்கிராமத்திலுள்ள சிறுவர் களுக்கு மாலை வேளையில் எழுத, வாசிக்க ஆரம்ப கல்வியை கற் றுக்கொடுத்தார்கள். இளைஞர்களின் செயற்பாடுகளும், நடை முறைகளும் கந்தனைப்போன்ற சிறுவர்களே அவர்களுடன் இணைத் தன. கந்தனைப்போன்ற ஒருசிலர் இவ் இஃாஞர்களிடமிருந்து எமது நாட்டுப் பிரச்சனை பற்றியும், மக்களின் பிரச்சனை பற்றி யும் போராட்ட வழிமுறைகள் பற்றியும் தாக்குதல்கள் கேள்வி கள் பற்றியும் கேட்டுப் புரிந்து கொண்டார்கள்.
கந்தன் தனது படிப்பு இடைநிறுத்தப்பட்டதற்கான உண்மைக் காரணம் குடும். வறுமையே என்பதை உணர்ந்தான். இதுபோல் தனது கிராமத்திலுள்ள இளைஞர்களின் கல்வியும் இடையில் நிறுத்தப்பட்டதற்கான காரணமும் அவரவர் குடும்ப

வறுமையே என்பதை உணர்ந்த அவன், இந்த சமுதாய அமைப்பே இதற்கான அடிப்படைக் காரணம் என்பதையும் புரிந்துகொண் டான் பதிஞ்று வயதே நிரம்பிய சிறுவணுகக் காணப்படும் சுந்
தன் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையும்,
இன்றைய அரசாங்கத்தின் கெடுபிடிகளையும் ந ன் கு புரிந்து கொண்டு தர்க்கீக ரீதியில் செயற்படத்தொடங்கினன்.
கந்தன் தனது கிராமம் போன்ற அயல் கிராமங்களுக்கு கருத்துக்களைக் காவிச் சென்று இளைஞர்கள் மத்தியில் விதைத் தான். புரட்சிக் கருத்துக்களைப் புரிந்து கொண்ட இளைஞர்கள் புரட்சி அமைப்புடன் தம்மையும் இணைத்துக் கொண்டார்கள்.
இவ்விளைஞர்கள் தமது தாய்தந்தையாருக்கு இன்று தமிழ் பேசும் மக்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களி லும் மலையகத்திலும் வாழுகிருரர்கள் என்றும் அவர்கள் எதிர் நோக்கும் இன அடக்குமுறைகளையும், வர்க்க ஒடுக்குமுறைகளை யும் தெளிவுபடுத்தி, போராடிப் பெறப்போகும் ஈழம் எவ்வாறு அமையும் என்பதையும் அங்கு மக்கள் எவ்வித கூட்டுறவு அடிப் படையில் வாழ்வார்கள் என்பது பற்றியும் எடுத்துக்கூறி அவர்க ளையும் புரட்சியின் பங்காளிகளாக இணைத்துக்கொண்டு வருகிறர் கள். புரட்சிக்கருத்துக்கள் காட்டுத்தீபோல் பரவத்தொடங்கி யுள்ளது. ஆயிரமாயிரம் புரட்சி மலர்கள் மலரத்தொடங்கியுள் எாது.
முகப்பு சொல்லும் கதை.
ΕΤουαί, όσουφισιό
Θα σουφισιέν
உயிர்துறக்கும்
அப்பாவி ஈழவனின்
கபாலக் குவியலில் நரபலி அரசு
இனவெறிக் கொடியேற்றி
னேநாயக முரசொலிக்கும்

Page 21
96iii)T65) ID JISTI a) fil 35afā IsùLDT Jsill GIITiilii' (6 வரும் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை பற்றி
8- ஆம் வகுப்பு மாணவனின் சிந்தனையில் - உருவாகிய சித்திரங்கள் -
 

அகதிமுகாம்
கவலையை மறந்திருந்த
கால்ருத்தல் பாணுக்காக
கால்கடுக்க கியூவில் நிற்கும் எம்சிறர்கள் கால்வயிறும் நிரம்பாமல் 'அம்மா இன்னும் வேணும்' என்றே அடம்பிடிக்கும் சிறுவனத்தேற்ற வழியறியா அன்னை விழிநீரைச்
சிந்தவில்லை தர்மிஸ்டரின் தம் இஷ்ட ஆட்சியினுல் மூன்று மாதத்தின் முன்பு இழந்த வீட்டை முன்னூறு ஆண்டின் முன்பு இழந்த நாட்டை மூன்றே நாள் முன்பு இழந்த கணவனை
எண்ணி எண்ணி கண்ணிரெல்லாம் வற்றிற்போயிற்று'
'கஸ்டத்தின் மத்தியிலும்
வாழ்க்கையிலே.--
விடியலுக்காக
ஓர்
மைந்தன் புறப்படுகின்ருன் அவ்வேளை
உண்டியல் நிரப்ப
விமானத்தில் ஏறி
பறக்கின்றன்.
ஆம்.
விடியலுக்காக பிறந்தவர்கள் காட்டிலும், மேட்டிலும் உறங்குகின்றனர்.
உண்டியல் நிரப்பு
பறந்தவர்கள்
கட்டிலும் மெத்தையிலும்
சயனம். விடியல் தேடுபவன் இதயத்தில்
GT slil 655 GMT gol Gð) f) எங்கள் சுதந்திரம் எங்கள் நாடு, என்ற
சிந்தனை
ஆணுல்
அவன் மனதில் உல்லாசம், உழைப்பு Փւմն]ri பிழைப்பு என்ற ஆசை. சிந்தித்தால்.
- 39 ationage

Page 22
kr ܐܐܠܵܐ ...வேறென்றையுமல்ல?.
*பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை' என்று தலைப்பிட்டு வெளி யிடப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம் சில தினங்களாக யாழ்நகரத் திலும் சுற்றுப்புறத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கேலிக் கூத்தாக அமைந்தது. டடுபிற்போக்குத் தனமானதும், கேலிக்கிட மானதுமான அம் சங்களை உள்ளடக்கிய பத்துக்கட்டளைகளை நன்மை விரும்பித் (?) தமிழ் மக்கள் எனக் குறிப்பிட்டுள்ளோர்
அதில் பிறப்பித்துள்ளனர். உதாரணத்துக்கு:
* ஒழுக்கமான பிள்ளைகளாய் இருந்தால் வாலிபர்கள் சீதனம்
இன்றியும் திருமணம் செய்வார்கள். * 10 பிள்ளைகள் வீதியில் போனுல் ஒரு பெண்தான் குமர்ப்பிள்ளை, * கல்யாணம் செய்தவர்கள் கணவன் மாருடன்தான் சைக்கி
ளில் செல்லவேண்டும்.
ஆகா! என்ன அழகான பொன்மொழிகள்,
பால்ரீதியாகவும், இனரீதியாகவும், வர்க்கரீதியாகவும் இன்று எமது தமிழ்ப்பெண்கள் மோசமான அடக்குமுறைகளுக்கும், பலாத்கா ரங்களுக்கும் உட்படுத்தப்படுகிறர்கள். இன்று வயது வந்தும் வசதியின்மையால் வாழாவெட்டிகளாக இருக்கும் பெண்கள் எத் தனபேர். அவர்கள் யாவரும் ஒழுக்கம் கெட்டவர்களா? தெரு வில் நடமாடாமல் வீட்டிற்குள் அடங்கி வாழும் பெண்கள் இன்று அரசபயங்கரவாதிகளால் தெருவிலிமுக்கப்பட்டு மானபங்கப்படுத் தப்படவில்லையா? எத்தனை பெண்கள் கணவன்மார்களின் கண்க ளுக்கு முன்பே பலாத்காரப்படுத்தப்பட்டனர். V.
பெண்கள் மீது கையாளப்படும் ஒவ்வொரு அடக்குமுறை யும், பலாத்காரங்கள் ஒவ்வொன்றும் நிச்சயம் அம்பலப்படுத்தப் படவேண்டும். கற்பு, மானம் பறிபோய்விட்டதாக மனமுடைந்து தற்கொலை செய்வதோ அல்லது அதை ஒரு அவமானமாகக்கருதி மூடிமறைக்க முயல்வதோ முட்டாள்த்தனமாகும். ஏனெனில் இவை பெண்களுக்கு மட்டும் இழைக்கப்படும் அவமானம் அல்ல. எமது இனத்துக்கு இழைக்கப்படும் அடக்குமுறையினதும், பலாத் காரத்தினதும் ஒரு வெளிப்பாடாகும். எனவே எமது சமுதாய விடுதலையுடனேயே பெண்களின் சுதந்திர வாழ்வும் இணைந்துள் ளது. இதை உணர்ந்து விடுதலைப்போராட்டத்தில் தம்மை முற்முக அர்ப்பணிக்க பெண்கள் விழிப்புற்று முன்வந்து கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்திலே மேற்குறிப்பிட்ட இத்தகைய 10 கட்டளைகள் பத்து நூற்றுண்டுகள் பின்னுேக்கிப் பாய்ந்துவிட்ட அவர்களது அறி வுத்திறத்தையே அம்பலப்படுத்துகிறது. வேருென்றையுமல்ல.
一4●一


Page 23