கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1978.01

Page 1
an EARLA: Ä, AVEs
CHUNKAM
奥L卯
 

சோவியத் மாசிகை
குத்துழைப்பின் நியதி
சமாதானத்திற்குச் சவால்

Page 2

மார்க்ஸியம் சர்வ வல்லமை படைத்தது, ஏனெனில் அது 'உண்மையானது.
வி. ஐ. லெனின்
இல, 1 1978
 ി

Page 3
உள்ளடக்கம்
மகத்தான பாரம்பர்யம்
வி. ஐ. லெனின்
கல்வி பற்றிய முதலாவது அனைத்து ரஷ்ய காங் 4
கிரஸில் நிகழ்த்திய உரை மார்க்ஸிய-லெனினியமும் இன்றைய உலகும்
ஷ, ஸனகொயேவ் டி. எஸ்ஸி (வரலாறு) சமாதான ஒத்துழைப்பு நியதி ଅଙ୍କ୍ சோ. சோ. கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம்
டி. குணயேவ்
மனிதகுல வரலாற்றிலோர் புதிய யுகம்
历
சோவியத் சமுதாயம் வாழ்வும் பிரச்னைகளும்
எஸ். ரவழிதோவ்
வலிமையினதும் சக்தியினதும் ஊற்றுக்கண் 26
உலக சோஷலிஸ சமாஜம்
ஒ. பொ. கொ. மொலொவ் பரஸ்பரம் நலன் மிக்க ஒத்துழைப்புகள் 36 சமாதானத்திற்கும் இணக்க அமைகிக்குமான போராட்டம்
வி. ஸ்ரயேல்யன் ஆயுதப் பரிகரணத்திற்கான இயக்கத்தின்
முன்னணியில் 42
o
எவ்ஜெனி பயதொரோவ்
நியூட்ரன் குண்டு-சமாதானத்திற்குச் சவால் 47
சோ.சோ.கு.ஒன்றியமும் வளர்முக நாடுகளும்
சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்காக 5 1
வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
வி கொலேசோவ்
'வளர்முக நாடுகளில் பொதுத்துறை. . 5g
பக்கம்

リ
့်် X. , "
နုိင္ကို၊
மகத்தான ? பாரம்பர்யம்
9 கல்வி பற்றிய முதலாவது
அனைத்து-ரஷ்ய காங்கிரஸில் லெனின்நிகழ்த்திய உரை

Page 4
କ୍ଷୌ. ?. ଜୋରରof fit
கல்வி பற்றிய முதலாவது அனைத்து-ரஷ்ய காங்கிரஸில் நிகழ்த்திய உரை
கல்வி, நாம் இப்பொழுது நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தின் ஆக்கக் கூருண பகுதிகளுள் ஒன்ருகும். ஆஷாடபூதித்தனத்தையும் பொய்களையும் பூரணமான, நேர்மையான உண்மைகளைக் கொண்டு நாம் எதிர்த்து நிற்கின் ருேம். பூர்ஷ் வாக்களால் ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தப்படும் * பெரும்பான்மையோரின் விருப்பம்’ என்ற பதத்தின் அர்த்தம் என்ன என்பதை யுத்தம் மிக மிகத் தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டது. விரல்விட்டு எண்ணக் கூடிய பணமூட்டைகள் முழுத் தேசங்களையும் தமது சொந்த நலன்களுக்காக பலிபீடத்திற்கு இட்டுச் செல்கிருர்கள் என்பதை அது எடுத்துக் காட்டியுள்ளது. பூர் ஷ்வா ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் நலன் களுக்குச் சேவை செய்கிறது என்ற நம்பிக்கை இப்போது முற்ருகவே சிறுமைப்பட்டுவிட்டது. ஐரோப்பாவுக்கு புதிய தான, ஆனல் 1905ம் வருட புரட்சியின் அனுபவத்தி லிருந்தே எமக்குப் பரிச்சயமான எமது அரசியல் யாப்பும், எமது சோவியத்துக்களும் மகத்தான கிளர்ச்சியூட்டுகிற, பிரச்சார சாதனங்களாகத் திகழ்வதுடன்; பூர் ஷ்வா ஜன நாயகத்தின் பொய்மையையும் ஆஷாடபூதித்தனத்தையும் முழுமையாகவே அம்பலப்படுத்துகின்றன. நாங்கள் உழைப்பவர்களின்-சுரண்டப்படும் மக்களின் ஆட்சியை பகிரங்கமாகவே பிரகடனப் படுத்தியுள்ளோம்- இதில் தான் நமது பலத்தின், வெல்லற்கரியதன்மையின் ஊற்று வாய் உள்ளது.
 

மகத்தான பாரம்பள்யம்
இது கல்விக்கும் பொருந்தும் பாடசாலைகளால் அர
'சியலுக்கு மேலாக இருக்கவும், சமுதாயம் முழுமைக்கும்
சேவை செய்யவும் முடியும் என்று பிரகடனப்படுத்தும் பூர் ஷ்வா ராஜ்யம் கூடுதல் பண்பாடுள்ளதாக இருக்கும்போது அது மேலும் கூடுதல் நயவஞ்சகத்தன மாகப் பொய் கூறுகிறது.
உண்மையில் பாடசாலைகள் பூர் ஷ்வாக்களினது வர்க்க ஆட்சியின் கருவிகளாகவே மாற்றப்பட்டன. இவை பூர் ஷ்வா சாதி உணர்வில் முற்ருகவே ஊறிப் போனவை யாகும். முதலாளிகளுக்குக் கீழ்ப்படிவுள்ள பாதந்தாங்கிகளை யும், திறமையுள்ள ஊழியர்களையும் உருவாக்கியளிப்பதே இவற்றின் நோக்கமாகும். நவீன தொழில் நுட்பவியலின் உன்னத சாதனைகள் லட்சோப லட்சக் கணக்கான தொழிலாளர்களைக் கொன்று குவிப்பதற்கும், யுத்தத்தின் மூலம் பெரும் அதிர்ஷ்டத்தை அடையும் முதலாளிகள் பிரமாண்டமான லாபத்தை ஈட்டுக் கொள்வதற்குமான கருவியாகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதை யுத்தம் எடுத்துக் காட்டுகிறது. யுத்தம் உள்ளூரவே சிதைக்கப் பட்டுவிட்டது. ஏனெனில் உண்மையைக் கொண்டு பொருதி நாம் அவர்களின் பொய்மையை அம்பலப் படுத்திவிட்டோம். கல்வித் துறையில் எமது பணி பூர்ஷ் வாக்களைத் தூக்கியெறியும் எமது போராட்டத்தின் ஒரு பகுதியே என்று நாம் கூறுகிருேம். வாழ்விலிருந்தும் அரசியலிலிருந்தும் துண்டறுத்துக் கொண்ட கல்வி பொய் யும் அஷாடபூதித்தனமுமானதாகும் என்று நாம் பகிரங்க மாகவே கூறுகிருேம். பழைய பூர் ஷ்வா கலாசாரத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் மேற்கொண்ட சீர்குலைவின் அர்த்தம் என்ன? இந்தச் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்த நபர்கள் கல்வி கற்றலை தமது ஏகபோகமாகவே கருது கிருர் கள் என்பதையும் சாதாரண மக்கள் எனப்படுவோர் மீது தமது ஆட்சியதிகாரத்தைச் செலுத்துவதற்கான ஒரு கருவியாகவே இதை இவர்கள் கருதுகிருர்கள் என்பதை யும் எந்த ஒரு கிளர்வூட்டும் பேச்சாளனிலும் பார்க்க, எமது உரைகள் எல்லாவற்றிலும் பார்க்க, பல்லாயிரக் கணக்கான துண்டுப் பிரசுரங்களிலும் பார்க்க மிகச் சிறப் I IΠ 35 எடுத்துக் காட்டியது. சோஷலிஸ் நிர்மாண ப் பணியை சீரழிக்கவே இவர்கள் தமது கல்வியைப் பயன் படுத்தினர்கள், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரா கப்
பகிரங்கமாகவே முன் வந்தார்கள்.
ரஷ்ய தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்
புரட்சிகரப் போராட்டமே இறுதிப் பாடசாலையாகும்.
எமது அமைப்பு ஒன்றே அவர்களின் உண்மையான ஆட்சியை உத்தரவாதப்படுத்துகிறது என்பதை அவர்கள் கண்டு கொண்டனர், குலா க்குகளினதும் உடைமையாளர் களினதும் முதலாளிகளினதும் எதிர்ப்பை பூரணமாக நிர்

Page 5
6 மகத்தான பாரம்பர் யம்'
மூலமாக்க அது தொழிலாளர்களுக்கு முடிந்த உதவிகள் அனைத்தையும் அளிக்கிறது என்பதை அவர்கள் உணர் கிருர்கள். :و... ن
உழைக்கும் மக்கள் அறிவுத் தாகம் கொண்டுள்ளனர். ஏனெனில் வெற்றியீட்ட இது அவசியமானதாகும். விமோசனத்திற்கான போராட்டத்தில் அறிவு ஒரு வலு வான ஆயுதம் என்பதையும், கல்வியின்மையே தமது தோல்விகளுக்கெல்லாம் காரணமாக இருந்துள்ளது என் பதையும், அனைவருக்கும் கல்விக்கான பாதையைத் திறந்து வைப்பது இப்போது தம்மையே பொறுத்துள்ளது என பதையும் ஒவ்வொரு பத்துத் தொழிலாளர்களிலும் ஒன் பது தொழிலாளர்கள் உணர்கிருர்கள். மக்கள் புதிய சோஷலிஸ் ரஷ்யாவை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ள தால் எமது இலட்சியம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தமது சொந்த அனுபவங்களிலுமிருந்தும், தமது தோல்விகளிலும் தவறுகளிலுமிருந்தும் கற்றுக்கொள்கிருர் கள், தமது போராட்டம் வெற்றிகரமாக நிறைவெய்துவ தற்கு கல்வி தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை அவர்கள் காண்கிருர்கள். பல நிலையங்கள் வீழ்ச்சியுற்ற போதிலும், சீர்குலைவு வேலைகளை செய்யும் அறிவாளிகள் பூரிப்பில் குதித்த போதிலும், தமது தலைவிதியைத் தமது சொந்தக் கரங்களில் எடுத்துக் கொள்ள, போராட்டத்தில் கிடைத் துள்ள அனுபவம் மக்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம் காண்கிருேம். மக்கள் பால் உண்மையி லேயே அனுதாப முள்ளவர்கள் அனைவரும், எல்லா நல்ல ஆசிரியர்களும் எமது உதவிக்கு வருவார்கள். இதுவே சோஷலிஸ் இலட்சியம் வெற்றியீட்டும் என்பதற்கான
உண்மையான உத்தரவாதமாகும்.
 
 
 

மார்க்ஸிய-லெனினியமும் "
இன்றைய உலகும்
* சமாதானத்தின் s
ஒத்துழைப்பின் நியதி
s
s

Page 6
ஷ, ஸனகொயேவ் டி. எஸ்ஸி (வரலாறு)
壁
சமாதானத்தின்,
ஒத்துழைப்பின் நியதி
20ம் நூற்ருண்டானது மாபெரும் அக்டோபர் சோஷ லிஸப் புரட்சியின் சகாப்தமாக வரலாற்றிலிடம் பெறும். புதிய சோஷலிஸ் ஒழுங்கை ஸ்தாபித்த இப்புரட்சி, புரட் சிக்கு முந்திய காலகட்டத்தின் கொள்கையிலிருந்து அடிப் படையில் வேறுபட்ட புதிய உள் நாட்டு, வெளிநாட்டு க் கொள்கையின் ஆரம்பத்திற்கு வழிகோலியது, சுரண்டும் வர்க்கத்தின் கொள்கைக்கு நேரெதிரான இப் புதிய கொள்கை மனிதநேயம், மெய்யான ஜனநாயகம், பரந்து பட்ட மக்களது நலன்களுக்குச் சேவை செய்வது ஆகிய வற்றில் ஊறித்திளைத்ததாகும்.
சுபீட்சத்திற்கு சமாதானம் அவசியம்
சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச ஒத் துழைப்பை அபிவிருத்தி செய்வதற்குமான இடைவிடாப் போராட்டம், 1917 அக்டோபர் புரட்சி வெற்றியடைந்த பின்னர், லெனினது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சமா தான ஆணை பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தில் தோற்றம் பெற்ற சோவியத் வெளிநாட்டுக் கொள்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பாதையாகும். இக் கொள்கை, சோ. க. க. வின் 24வது காங்கிரசின் சமாதான வேலைத் திட்டத்திலும், 1976 ல் நடைபெற்ற 25வது காங்கிரஸ் வகுத்தளித்த சமாதானம், சர்வதேச ஒத்துழைப்புக்கும் மக்களது விடுதலைக்கும் சுதந்திரத்திற்குமான போராட்டத் தைத் தொடரும் வேலைத் திட்டத்திலும் மேலும் விருத்தி செய்யப்பட்டுள்ளது. -

மார்க்ஸிய-லெனினியமும் இன்றைய உலகும்' 9
சோவியத் யூனியனின் புதிய அரசியல் யாப்பிலும் சோவியத் சமாதானக் கொள்கை இடம்பெற்றுள்ளது; முதன் முறையாக சோவியத் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒர் அத்தியாயம் யாப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
சோவியத் நாடு லெனினிய சமாதானக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவதுடன், நாடுகளது பந்தோ பஸ்தையும் பரந்த சர்வதேச ஒத்துழைப்பையும் வலுப் படுத்துவதிலும் உறுதியுடன் நிற்கிறது என்று அரசியல் шгт ц"I L/ வலியுறுத்துகிறது. சோவியத் வெளிநாட்டுக் கொள்கையின் சிறப்பியல்பை, வர்க்க உள்ளுறையை, பிர தான மார்க்கங்களை வரையறை செய்யும் முக்கிய கோட் பாடுகளுக்கு அரசியல் யாப்பு சட்டவடிவம் கொடுக்கிறது: * சோ. சோ. கு. ஒன்றியத்தில் கம்யூனிஸத்தை நிர்மா னிப்பதற்குச் சாதகமான சர்வதேச நிலைமைகளை உத்தர வாதப் படுத்துவதும், சோவியத் யூனியனின் ராஜ்ய நலன் களைப் பாதுகாப்பதையும் உலக சோஷலிஸத்தின் நிலைபாடு களை ஸ்திரப்படுத்துவதையும் தேசிய விமோசனத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்குமான மக்களின் போராட்டத் திற்கு ஆதரவளிப்ப ைதயும் ஆக்கிரமிப்பு யுத்தங்களைத் தவிர்ப்பதையும் உலக வியாபிதமான பூரண ஆயுத பரி கரணத்தை ஈட்டுவதையும் மாறுபட்ட சமூக அமைப்பு களைக் கொண்ட நாடுகளுக்கிடையில் சமாதான சகஜீவனக் கோட்பாட்டை நிலை நிறுத்தியதுடன் செயல்படுத்துவதை u Lh சோ. சோ. கு. ஒன்றியத்தின் அயல்நாட்டுக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.'
சோவியத் நாடு தனது ஆரம்பலாலம் தொட்டு இக் கோட்பாடுகளைப் பின்பற்றி வருகிறது. சோஷலிஸ், கம்யூ னிஸ நிர்மாணத்தின் காலகட்டம் முழுவதற்குமான சோவி யத் வெளிநாட்டுக் கொள்கையின் போருபாயப் பாதையை இக்கோட்பாடுகள் வரையறை செய்வதுடன், அதன் ஸ்திரத் தன்மைக்கும், சமாதானத்தை பேணிப் பாதுகாக் கும் போராட்டத்தின் தொடர்ச்சிக்கும் சிறப்பளிக்கின் றன. '*
சோவியத் தேசத்தின் உயர் இலக்குகளை-வர்க்க பே தங்க ளற்ற கம்யூனிஸ சமுதாயத்தை நிர்மாணிப்பது, உழைக்கும் மக்களது பொருளாயுத, கலாசார தரங்களை உயர்த் துவ து, நாட்டின் பந்தோபஸ்தினை உறுதிப்படுத் துவது, சமாதானத்தையும் ஈர்வதேச ஒத்துழைப்பின் அபி விருத்தியையும் வலுப்படுத்துவது-ஆகிய இலக்குகளை அடைவதையே சோவியத் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கம் என்று அரசியல் யாப்புத் தெளிவாகக் கூறு கிறது.

Page 7
I O மார்க்ஸிய-லெனினியமும் இன்றைய உலகும்.
அனைத்து புரட்சிகர சக்திகளின் ஐக்கியத்திற்காக
உலகப் புரட்சிகர சக்திகளின் வல்லமை மிக்க, வெல்லற்கரிய அரணுக விளங்குவதும், மனித குலத்தின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும் உலக சமாதானத்
தைப் பாதுகாப்பதற்கும் யுத்தத்தைத் தடுப்பதற்குமாகப் போராடும் சகல போராளிகளின் முன்னணிப்படையாக விளங்குவதுமான மாபெரும் வரலாற்றுப் பணியானது உலகின் முதலாவது சோஷலிஸ் நாட்டின் மீது பெருமள வில் தங்கியுள்ளது. இப்பணியை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் அரசும் எப்பொழுதுமே மதிப்புடன் நிறைவேற்றிவருகின்றன. அவை, உலகப் புரட்சிகர சக்தி கள் அனைத்தினதும் ஐக்கியத்திற்காகவும், குறிப்பாக உலக சோஷலிஸ் அமைப்பின் நிலைபாட்டை வலுப்படுத்தவும், ஒருமைப்பாட்டை உயர்த்தவும் அயராது போராடி வரு கின்றன.
சோஷலிஸ் நாடுகளுக்கிடையிலான உறவுகள் பால், அரசியல் யாப்பு, குறிப்பான கவனம் செலுத்துகிறது. அதன் 30வது விதி கூறுவதாவது, ' உலக சோஷலிஸ் அமைப்பினதும், சோஷலிஸ் சமாஜத்தினதும் ஒரு பகுதி என்ற வகையில் சோ. சோ. கு. ஒன்றியம் சோஷலிஸ சர்வதேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் ஏனைய சோஷலிஸ் நாடுகளுடன் நட்புறவையும் ஒத்துழைப்பை யும் தோழமை பூர்வமான பரஸ்பர உதவியையும் வளர்த்து வலுப்படுத்துவதுடன் சோஷலிஸ பொருளாதார ஒருங்கி கணப்பிலும் சோஷலிஸ் சர்வதேச உழைப்புப் பிரி வினையிலும் முனைப்பாகப் பங்கெடுக்கிறது.”*
உலக கம்யூனிஸ், தொழிலாள வர்க்க இயக்கங்களி லும் கம்யூனிஸ், தொழிலாளர் கட்சிகளின் ஒருமைப் பாட்டை உயர்த்துவதிலும் மார்க்ஸிஸ்-லெனினிஸ் சித் தாந்தத்தின் மெய்மையைப் பாதுகாப்பதிலும் பூர்ஷ்வா சித்தாந்தத்துக்கும் (இடதுசாரி), வலது சாரித் திரிபு வாதத்துக்கு மெதிரான போராட்டத்திலும் சோவியத் யூனி யன் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான பாத்திரத்தை வகிக் கிறது. தொழிலாள வர்க்க சாவதேசியக் கோட்பாடுகளின் மீது, உலக கம்யூனிஸ் இயக்கத்தின் இதர பிரிவுகளுடன் தனது உறவுகளைக் கட்டியுள்ள சோ. க. க. தேசியரீதி யாகவும் சர்வதேசிய ரீதியாகவும் தமது நிலை பாட்டை வலுப்படுத்துவதற்காக, சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக அவை நாளாந்தம் தொடுத்து வரும் போராட்டத்தில் உண்மையான நேச அணியாகவும் செயல்பட்டுவருகிறது.

மார்க்ஸிய-லெனினியமும் இன்றைய உலகும்
காலனி நாடுகளிலும் சார்பு நாடுகளிலும் உள்ள தேசிய விமோசன இயக்கங்களைப் பொறுத்தமட்டில், சோவியத் யூனியன், காலனியாதிக்க நவகாலனியாதிக்கத் தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராகத் தமது தேசிய சமுதாய எழுச்சிக்காகப் போராடும் மக்களுடனுன சகோ த ரத்துவ ஒருமைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட நிலையையே எப்போதும் எடுத்துவருகிறது.
பிடெல் காஸ்ட்ரோ சோ: க. க. வின் 25வது காங் கிரஸில் பின்வருமாறு கூறினர்: 'இன்ருே உலக சோஷ லிஸ் சமுதாயம என ஒன்றுள்ளது. இன்று, அக்டோபர் புரட்சியால் உலகத்திற்குக் கொண்டுவரப்பட்ட மாற்றங் களினலும் பாஸிஸத்தின் முறியடிப்பினலும் எல்லாக் கண்டங்களிலுமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட காலனி, அரைக் காலனி நாடுகள் தாம் காலனியாதிக்க மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக் கெதிராக நடாத்தி வந்த உறுதி யான போராட்டங்களில் சுதந்திரத்தை வென்றெடுக்க முடிந்தது.'
தேசிய விமோசன இயக்கத்தின் இன்றைய கட்டத் தில் சோவியத் யூனியனும் இதர சோஷலிஸ் நாடுகளும், வளர்முக நாடுகளும் தமது அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார சுதந்திரத்தை அடைய வும் தமது சர்வதேசிய நிலைபாட்டை மேலும் வலுப்படுத் தவும் உதவியளித்து வருகின்றன.
சமாதான சகஜிவனக் கொள்கை
புதிய சோவியத் அரசியல் யாப்பில் வரையறை செய்யப்பட்டது போல, சோவியத் வெளிநாட்டுக் கொள் கையின் பிரதான மார்க்கங்களிலொன்று ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கெதிரான போராட்டமும், முதலாளித்துவ நாடுகளுடனுன தனது உறவுகளில் சமாதான சகஜீவனக் கோட்பாட்டை இடையருது பின்பற்றுவதாகும்,
முதலாளித்துவ நாடுகளுடனன தனது உறவுகளை சோவியத் அரசாங்கம் கட்டியெழுப்புகையில் இக்கோட் பாடுதான் எப்போதுமே அதற்கு வழிகாட்டியாக விருந்தது. சோவியத் யூனியனின் சமாதானப் போராட்டமானது வேறுபட்ட சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளுக் கிடையில் சமாதான சகஜீவனக் கோட்பாட்டை உறுதிப் படுத்தும் போராட்டத்துடன் மிக நெருக்கமாகப் பிணைந் துள்ளது. .
மேற்குலகின் ஆளும் வட்டாரங்கள் நீண்டகாலமாக
சோவியத் யூனியனுடனன தமது உறவுகளில் சமாதான

Page 8
I 2 மார்க்ஸிய-லெனினியமும் இன்றைய உலகும்
சகஜீவனக் கோட்பாட்டை மூர்த்தண்யத்துடன் நிரா கரித்து வந்தன. அத்தோடு, உலக அரங்கில், ஏகாதிபத் தியத்தின் பழைய பிரித்தாளும் கொள்கையை மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சியில் சகல சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு வந்தன. ஆனல், உலக வர்க்க, அரசியல் சக்திகளிடையே ஏற்பட்ட புதிய சமநிலை, முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களை சமாதா ன சகவாழ்வுக் கொள்கையை அங்கீ கரிக்க வைத்தது. リ
இதன் மூலம், ஏகாதிபத்திய பிற்போக்குச் சக்திகள்
சோவியத் யூனியன், இதர சோஷலிஸ் நாடுகள் பால் கொண்டுள்ள மனே பாவத்தை மாற்றிவிட்டன என்றே, அல்லது சோஷலிஸத்துக்கு எதிரான சித்தாந்த அரசியல் குழிபறிப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதன் மூலமும், இராணுவ வெறித்தனத்தை அதிகரித்து ஆயுதப் போட்டியை உக்கிரப்படுத்தியதன் மூலமும் முதலாளித்துவத் தின் படுமோசமான நெருக்கடிகளைத் தாண்டிவரும் முயற்சி களைக் கைதுறந்து விட்டன என்ருே கருதலாகாது.
மேற்குலக நாடுகளின் அரசியல் மார்க்கம் நிர்ணய மற்றதாகவுள்ளது என்பது வெளிப்படை. இருந்தும் அவை புதிய நிலைபாடுகளில் பழைய கொள்கைகளைப் பயன்படுத்த வும் ஆக்கிரமிப்பு இராணுவக் கூட்டணிகளை உக்கிரப்படுத் துவதன் மூலம் உலக ஏகாதிபத்தியத்தின் நிலையை ஸ்திரப் படுத்தவும் முயலுகின்றன.
நேட்டோவைப் பலப்படுத்த அமெரிக்காவும் அதன் மேற்கு ஐரோப்பிய கூட்டாளிகளும் எடுக்கும் பெருமுயற்சி களும் இந்த ஆக்கிரமிப்புக் கூட்டணியின் உள்ளும் புற மும் அவை மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை களும் அவற்றின் அரசியல் போக் கைப் பிரத்தியட்சமாகக் காட்டுகின்றன.
நவீன நிலைபாடுகளில் சோவியத் கொள்கையானது தெட்டத் தெளிவானதாக உள்ளது; ஏகாதிபத்திய சூழ்ச்சி களுக்கு உறுதியான பதிலடி கொடுப்பதும் வேறுபட்ட சமுதாய அமைப்புகளைக் கொண்ட நாடுகளிடையே சமா தான சகவாழ்வுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்வதுமே அக் கொள்கையாகும். அதன் கோட்பாடுகளை மேலும் தெளிவுபடுத்துவதினதும் பல்வேறு அம்சங்களை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் அரசாங்கமும் ஆக்கபூர்வ மாக வகுத்துள்ளன. ஐ. நா. சாசனம் போன்ற த ஸ்தா வேஜ" க்கள், ஐ.நா.வின் பல முக்கிய தீர்மானங்கள், வேறு பட்ட சமூக அமைப்பைக் கொண்ட நாடுகளுக்கிடையி லான இரு பக்க உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் பலவும், பந்தோபஸ்து ஒத்துழைப்புக் குறித்து ஐரோப்பிய மகா நாட்டின் இறுதி அறிக்கையும் சமாதான சகவாழ்வுக்

மார்க்ஸிய-லெனினிபமும் இன்றைய உலகும் 3.
கொள்கை, காலத்தின் சோதனையை வென்று நிற்பதைக் காட்டுகின்றன. G) a சமாதானத்தை வலுப்படுத் துவதிலும், சோஷலிஸ், முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை வளர்ப்பதிலும் தனது ஸ்திரத்தன் மையை இக் கொள்கை நிரூபித்துள்ளது. இன்று பல்வேறு நாடுகளின் அதிகப்படியான மக்களின் ஆதரவைப் பெற் றுள்ளது.
சோவியத் யூனியனுக்கும் இதர நாடுகளுக்குமிடையி லான உறவுகளுக்கு அடிப்படையாகவுள்ள கோட்பாடு கள், லெனினிய சமாதான சகவாழ்வு, சர்வதேச ஒத் துழைப்புக் கொள்கையின் சர்வதேசியத் தன்மையிலிருந்து முளையிட்டுள்ளன என்பதை புதிய அரசியல் யாப்பு பிர கடனப்படுத்துகிறது. இனவாதம், வன்முறை பயன்படுத் துவதையும், வன்முறை அச்சுறுத்தலையும், பரஸ்பரம் கைது றத்தல், தன்னதிக்க சமயத்துவம், எல்லைகளின் மீற வொண்ணுத் தன்மை, நாடுகளின் பிரதேச ஒருமைப்பாடு, தகராறு களுக்கு சமாதானபூர்வமான தீர்வு, உள்நாட்டு விவகாரங் களில் தலையிடாமை, மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரத்தையும் கெளரவித்தல், மக்களுக்கு சம உரிமை யையும் தமது சொந்தத் தலைவிதியைத் தாமே தீர்மானிப் பதற்கு அவர்களுக்குள்ள உரிமையையும், நாடுகளுக்கு மத்தி யில் ஒத்துழைப்பு, பொறுப்புக்களை நல்ல விஸ்வாசத்துடன் செய்து முடித்தல். இவைதாம் சர்வதேச சட்டத்தின் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகளும் விதிகளு, மாகும். இவைதாம் சோவியத் யூனியன் கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கைகளின் அடித்தளங்கள்.
MK
சகல நாடுகளுமே இந்த அடிப்படைக் கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்றினல் சர்வதேச நெருக்கடி உக்கிர மடைவதும் ஆயுதப் போட்டியும் தடுக்கப்பட்டு, யுத்த மானது மனித குலத்தின் வர்ழ்வினின்றும் என்றென்றைக் குமாக விலக்கப்பட்டுவிடும் என சோவியத் யூனியன் எதிர் பார்ப்பது மிகப் பொருத்தமே.

Page 9
சோ. சோ. கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம்
இ மனிதகுல வரலாற்றிலோர்
புதிய யுகம்

டி. குணுயேவ் சோ. க.க. மத்தியக் கமிட்டியினது அரசியல் குழு உறுப்பி னர் கஸ்ர்க்ஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி, மத்தியக் கமிட்டி யின் முதல்ாவது செயலாளர். '
மனிதகுல வரலாற்றிலோர் புதிய யுகம்
உலகின் முதலாவது தொழிலாளர், விவசாயிகளது அரசின் முதல் சட்டம், லெனினது புகழ்பெற்ற சமாதான ஆணையாகும். இது புதிய யுகத்தின் மகோன்னத சட்டத்தை சோஷலிஸ் மும் சமாதானமும் பிரிக்க வொண்ணுதவை என்ற சட்டத்தைப் பிரகடனஞ் செய்தது. இந்த ஆணையானது வேறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் சமாதான சகவாழ்வுக் கருத்தினை சோவியத் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்ரு க முன்வைத்தது.
மற்ருெரு தஸ்தா வே ஜுவான ருஷ்ய மக்களின் உரிமை கள் பிரகடனம், எல்லாக் காலங்களுக்குமாக, அனைத்து தேசங்களுக்கும் தேசிய இனங்களுக்கு ர விடுதலையை வழங் கிற்று. அது, சுதந்திரம், சமத்துவம், சகோர்தத்துவம் ஆகியனவற்றின் அடிப்படையில் அவை புதிய வாழ்வைத் தொடங்குவதைக் குறித்தது. 3
இவ்வாறு சோவியத் நாட்டின் ஆரம்ப நாட்களின் போதே, கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளுக்கிடையே ஆழ வேரூன்றியுள்ள பிணைப்பு வெளிப்பட்டது. உலகின் துரிதமான முன்னேற்றத்துடன், புதிய சமூக அமைப்பை பலப்படுத்துவதுடனும் சோவியத் நாட்டின் வல்லமையையும் அரசியல்ரீதியான கெளரவத்தை யும் வலுப்படுத்துவதுடனும் இந்தப் பிணைப்பு மேலும் செய

Page 10
I6 சோ. சோ. கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ் சமுதாயம்
லுறுதி மிக்கதாயும் பன்முகப்பட்டதாயும் வளர்ந்து, சோஷலிஸ் அமைப்பினதும் அதனது உயர்ந்த இலட்சியங் களினதும் சாராம்சத்திலிருந்து முகிழும் வர்க்கத் திசை யமைவையும், மெய்யான சோஷலிஸத்தினது வெளிநாட் டுக் கொள்கையின் உறுப்பமைவான சமாதான இயல்பை யும் நிர்ணயித்தது. இந்தப் பிணைப்பு இன்று முன்னெப் போதையும் விட தெளிவாக உள்ளது.
சமத்துவம் நிறைந்த
குடும்பத்தில்
சோஷலிஸமும் சமாதானமும் பிரிக்க வொண்ணு தவை. சோஷலிஸத்தின் சமாதானத்தை உறுதி செய்யும் பயணத்தை இந்த அடியாதாரமான லெனினிய ஆய்வுரை பிரதிபலிக்கிறது. இது நாடுகள் மத்தியில் சமாதானத்தை வலுப்படுத்துவதில் அக்கறை கொள்ளாமலும் பாடுபடா மலும் இருந்தால், ஒரு சமுதாயத்தின் பூரணமான சமூக
சமத்துவமும் தனிநபர் முன்னேற்றமும் சாத்தியமற்ற தாகிவிடும்.
மாபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியானது, முதலாவது உலகப் போரின் கடுஞ் சுழற்சியிலிருந்து நாட்டை விடுவித்ததோடு, அதன் சுதந்திரமான வளர்ச்சி யையும், துரிதமான முன்னேற்றத்தையும் உறுதி செய் தது.
புரட்சியின் போதும் உள்நாட்டுச் சண்டையின் போதும் வெளிநாட்டுத் தலையீட்டின் போதும் எண்ணற்ற இடர்களையும் எதிரிகளின் சதித்திட்டங்களையும் கடந்த தைப் போலவே ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான சோவியத் நாட்டு மக்களின் நெருங்கிய ஒருமைப்பாடும் ஐக்கியமும் நல்லுறவும் முன்னேறி மேலும் பலம்பொருந்தியதாகியது. W
ருஷ்ய மக்களின் சமத்துவத்தையும், சுயாதிபத்தியத் தையும், பிரிந்து செல்லக் கூடிய அளவுக்கு அவர்களின் சுய நிர்ணய உரிமையையும், எல்லா சிறுசிறு தேசியக் கட்டுப் பாடுகளை ஒழிப்பதையும், தேசிய சிறுபான்மையினரதும், இனக் குழுக்களினதும் சுதந்திரமான வளர்ச்சியையும் கட்சி பிரகடனஞ் செய்தது. சமூக மற்றும் மதக் கட்டுப் பாடுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன, பெண்கள் ஆண்க ளுக்கு சமமானவர்களாக்கப்பட்டனர். தமது தாய்மொழியி லேயே கல்விப் போதனை பெறும் உரிமை வழங்கப்பட்டது. தேவாலயத்திலிருந்து பாடசாலையும், அரசிலிருந்து தேவாலயமும் பிரிக்கப்பட்டன. தேசிய கலாசார சின்னங்
 
 

சோ. சோ. கு. ஒ வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம் I 7.
களைப் பேணிக்காக்கும் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட் [ -- ᎶᏈᎢ . .
இந்த அளவற்ற வளர்ச்சிகள் ருஷ்ய மக்களால் நன்றி யுடனும், மகிழ்வுடனும் பாராட்டப்பட்டன. தேசிய அவ நம்பிக்கையையும் குரோதத்தையும் பூரணமாகக் கடப்ப தற்கான சூழ்நிலைகளைக் கட்சி உருவாக்கியது.
1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுதந்திரமிக்க மக்களின் தோழமைச் சமாஜமான சோவியத் சோஷலிஸக் குடியரசுகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டமை, சர்வ தேசியக் கருத்துக்களுக்கான மெய்யான வெற்றியாகும்.
உழைக்கும் மக்களை சர்வதேசியவாதிகளாக ஒருங் கிணைப்பதிலான எமது அனுபவம் விலைமதிக்க முடியாத சொத்தாகும். இதை நாம் யாரிடமும் மறைக்கவோ அல் லது எம்மைச் சிறுமைப்படுத்துவோர் கோருவதைப்போல் இதை சரியானதோர் 'மாதிரி"யாக சர்வதேசியமாக் கவோ இல்லை. எமது புரட்சியின் வெற்றியானது, உலகை சமூகரீதியாகப் புனருத்தாரணம் செய்வதற்கான போராட் டத்தில் எல்லா நாடுகளிலுமுள்ள முற்போக்குச் சக்தி களின் நல்லுறவுக்கு மேலாதிக்கமான முக்கியத்துவத்தைக் கொடுத்தது. − -
லெனின து கருத்துக்கள் நனவாகின் றன
முன்னெப்போதும் கண்டறியாத அளவுக்கு சோஷ லிஸம் உற்பத்திச் சக்திகளை கட்டவித்துவிட்டது, பிரிக்க வொண்ணுத வாறு கட்சியின் ஆளுமையால் ஐக்கியப்பட் டுள்ள மக்களின் மகோன்னதமான சகோதரத்துவத்தினது வியக்கத்தக்க வலிமையால் இந்தச் சக்திகள் முக்கியமான பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன.
கஸாக்ஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள். ஸாரிஸம் கஸாக் மக்களையும் அவர்களின் நிலங்களையும், அவர்களின் பெயர்களையும் கூட திருடியது. வெளிநாட்டு சலுகை பெற்றவர்களால் இயற்கைச் செல்வங்கள் சூறையாடப் பட்டன. லட்சக்கணக்கான நாடோடி மக்கள் தமது கரங்களில் புத்தகத்தை ஏந்தியதில்லை. ஒரு கல்லூரியோ, பல்கலைக்கழகமோ, பேரவையோ, நாடக அரங்கோ அல்லது வாசகசாலையோ எப்படி இருக்கும் என்று அவர்களுக் குத் தெரியாது. புரட்சிக்கு முன்பு 22 கஸாக்கியர்களே, உயர் கல்வி பெற்றிருந்தனர். - ,

Page 11
18 சோ. சோ. கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம்
அக்டோபர் புரட்சி மாத்திரம் நிகழாதிருந்திருந்தால் எமது நாட்டில் உள்ள எண்ணிறந்த மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வது கடினமாகும். புரட் சியின் பின்னரான சில ஆண்டுகளுக்குள்ளேயே, பல நூற் ருண்டுகளுக்குச் சமமான பாதையை இவர்கள் கடந்தனர். எமது கட்சி லெனினியத் தேசிய இனக் கொள்கையைப் பின்பற்றியதாலேயே இது சாத்தியமாயிற்று.
அக்டோபர் புரட்சி நடை பெற்ற பின்னரான ஆண்டு களில், அவர்கள், மர உழுசாலிலிருந்து சக்தி மிக்க் டிராக்டர் களுக்கும், நவநவீனமான இயந்திரங்களுக்கும், பய்கனுார் விண்வெளித் தளத்திற்கும், ஒதுக்குப்புறத்திலிந்து திறநத பிரகாசமான சோஷலிஸ் நகரங்களுக்கும், பூரணமான கல்வியறிவின்மையிலிருந்து தேசியப் பேரவைகளுக்கும், பல்வேறு விவான பிரச்னைகளைக் கையாளும் நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கழகங்களுக்கும் ஏனைய ஸ்தாப னங்களுக்கும், அண்ட நுணுக்கப் பண்டத்திலிருந்து புற வெளிக்கும் தகுதி பெற்றுள்ளனர். எமது குடியரசுகள் ஒன்ரு வது தாமாகவே இந்த நிலையை அடைய முடியுமா? உண்மையிலேயே இல்லை. மக்களின் மெய்யான முன்னேற்ற மும், ஆன்மீக, மற்றும் சமூகப் புத்தெழுச்சியும் தேசிய ஒதுக்கம் தனிமைப்பாட்டுப் பாதையில் எய்தப்படவில்லை. ஆனல், உண்மையான படைப்புணர்வு, அளவில்லா இயக்க ஆற்றலுடன் உருவான ஒரு புதிய வாழ்வை, மகிழ்ச்சி மிக்க, சுதந்திரமான வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கான பொதுவான, கூட்டு முயற்சியின் பெறு பேரு லாலேயே
எய்தப்பட்டன.
பின்வரும் புள்ளி விபரங்களிலிருந்து நிறைவேற்றப் பட்ட செயல் அளவைக் காணலாம்: 1977ம் ஆண்டில் கஸாக்ஸ்தானின் தொழில்துறை உற்பத்தி புரட்சிக்கு முன்னர் இருந்த மட்டத்தைவிட 220 தடவைகளாலும், 1940ம் ஆண்டின் யுத்த முற்கால மட்டத்தை விட ஏறத் தாழ 30 தடவைகளாலும் அதிகரித்துள்ளது. ஏனைய மத் திய ஆசியக் குடியரசுகளும் இதேபோன்ற முன்னேற் றத்தை எய்தியுள்ளன.
சோஷலிஸ் அமைப்பினதும், உற்பத்திச் சக்திகளின் உயர் மட்டத்தினதும் அனுகூலங்கள் கணிசமான வாழ்க் கைத் தர உயர்ச்சிக்குப் பங்களித்துள்ளன: சோவியத்தின் ஆரம்ப ஆண்டுகளில் லெனின் முன்வைத்த கடமைகளை கஸாக்ஸ்தானும் ஏனைய தோழமைக் குடியரசுகளைப் போல
-- ---ы",-+ =-
i. 2,718,000 சதுர மீட்டர் பிரதேசம், ஜனத்தொகை
14, 527, 900. -
 

К3зғ т. சோ. கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம் 19
வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. இன்று, கஸாக்கியர் களில் இருவரில் ஒருவர் கல்வி கற்று வருகின்ருர்,
மத்திய ஆசியாவிலும், கஸாக்ஸ்தானிலும் கலாசாரப் புரட்சியில் ஈட்டப்பட்ட வெற்றியும், அவற்றின் தேசியகலா சார முன்னேற்றமும், கட்சித தலைமையின் கீழும், மக்க ளின் சமத்துவம் மற்றும் நட்புறவு, அவர்களின் தகர்க்க வொண்ணுத சகோதரத் துவக் கொள்கையாலும் மேற் கொள்ளப்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்களின்
பெறுபேருகும்.
சோஷலிஸத்தின் கீழ் மாத்திரமே, தேசியப் பொரு ளாதாரம், மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் மெய்யான முன்னேற்றத்தை மிகக் குறுகிய காலத்திற்குள் எய்த முடியுமென்பதை கஸ்ாக்ஸ்தானினதும் ஏனைய மத்திய ஆசியக் குடியரசுகளினதும் அனுபவம் மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக நிரூபிக்கின்றது. உண்மையிலேயே எமது சாதனைகளைப் பற்றிப் பேசும்போது எமது மனங்களில் பூரண நிறைவை நாம் கொண்டிருக்கவில்லை எமக்கு இன்னும் இடர்களும் பிரச்னைகளும் உள்ளன. ஆனல் அவற்றில் பெரும்பாலானவை; வளர்ச்சி பற்றிய இடர் களும், பிரச்னைகளுமேயாகும். ஆணுல் அவை இரண்டை யுமே நிச்சயமாக நாம் தீர்ப்போம்.
எமது குடியரசுகள் தமது அனுபவங்களைத் தாராள மாகப் பகிர்ந்து கொள்கின்றன. வெளிநாடுகளுடனன சோவியத் யூனியனின் பொருளாதார, விஞ்ஞான, தொழில் நுட்ப, கலாசார பரிவர்த்தனையில் செயலூக்கமுடன் பங் கெடுக்கின்றன. இன்று கஸாக் குடியரசானது 80 நாடுக ளுடன் பொருளாதாரத் தொடர்புகளையும், 96 நாடுக ளுடன் கலாசாரத் தொடர்புகளையும் கொண்டிருக்கிறது என்ற இந்த உண்மையின் மூலம் இது மிகத் தெளிவாக நிரூபிக்கப்படுகின்றது. கடந்த கால நாடோடிகளின் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும், பல ஆசிய ஆபி ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களுக்கு மிகவும் தகுதிவாய்ந்த விஞ்ஞான, தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றனர்.
சர்வதேச உறவில் ஒரு திருப்பம்
மாபெரும் அக்டோபர். சோஷலிஸப் புரட்சியானது சர்வதேச உறவுகளது அமைப்பு முழுவதையுமே தீவிரமாக புனரமைப்புச் செய்யும் பணியைத் தொடக்கிவைத்தது. 1917ம் ஆண்டில், ஏகாதிபத்தியத்தின் பிரிக்கப்படாத ஆதிக்க யுகத்தை, சோஷலிஸத்திற்கும் முதலாளித்துவத் திற்கு மிடையிலான போட்டியும், போராட்டமும் மிக்க

Page 12
20 சோ. சோ. கு. ஒ: வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம்
யுகம் வெற்றி கொண்டது. உலகின் முதலாவது சோஷலிஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையானது, சர்வதேசக் கொள்கைகளைப் புனரமைப்பு செய்வதில் தொடர்ந்தும் மகத்தான பங்குப் பணியை ஆற்றும். இக் கொள்கை யானது, லெனினின் நாமத்துடனும், அவருடைய சக பாடி கள், மற்றும் அவரைப் பின்பற்றியவர்களது நாமங்களுட னும் நேரடியாக இரண்டறக் கலந்துள்ளது. அதனது அடிப் படைக் கோட்பாடுகளாக, பாட்டாளி வர்க்க சர்வதேசிய மும், வேறுபட்ட சமூக அமைப்புகளுடனுன சமாதான சக வாழ்வு மாகவே இருந்துள்ளன, இருந்து வருகின்றன.
இது, எமது சமாதான முயற்சிகள் அனைத்துமே வெற்றிடைந்துள்ளன என்று கூறுவதற்காக அல்ல, அப் படி இருக்கவும் முடியாது. இது இப்படித்தான் இருந் தது. ஏனெனில், முதலாவது தஸாப்தத்தின்போது, சோவி யத் யூனியனும் அதனது தோழமை நாடான மங்கோலி யாவும் மாத்திரமே ஏகாதிபத்தியத்தை எதிர்த்தன. இன் றைய சோஷலிஸ சமாஜம் அன்று இருக்கவில்லை. அன்று. இரண்டாவது உலகப் பேரழிவைத் (1939-1945) தடுத்து நிறுத்தக்கூடியநிலையில் இவை இருக்கவில்லை.
பாஸிஸம் படுதோல்வியுற்றதில் யுத்தம் முடிவடைந் தது. இதற்கு சோவியத் யூனியன் நிர்ணயமாக பங்களிப் பைச் செய்தது. இந்த யுத்தத்தில் சோவியத் யூனியன் 2 கோடிப் பேரை இழந்தது சொல்லொணுத் துன்பத்தையும், அழிவையும் இப்போர் கொண்டுவந்தது. சோவியத் மக் களைப் போல துன்பத்தை அனுபவித்தவர்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. உண்மையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளைப் பெற்றவர்களும், புதிய உலகின் வலிமையில் துணிவையும் நம்பிக்கையையும் பெற்றவர்களுமான மக்களை வென்று அடக்க முடியாது என்பதை உணரத் தவறிய எதிரிகள் தப்புக் கணக்குப் போட்டனர்.
மாபெரும் தேசபக்தப் போரின் பாடங்கள், சோவியத் நாட்டிற்கு எதிரான எந்த ஆக்கிரமிப்பும் நிச்சயம் தோல்வியடைந்தே தீரும் என்று, இராணுவ சூதாட்டங்களை மேற்கொள்ளும் அனைவரையும் எச்சரித்தது. ஏனெனில், சோஷலிஸ், ஜனநாயகச் சக்திகள் அழித் தொழிக்கப்பட முடியாதவையர்கும்.
லெனினது ஆணைகளைப் பின்பற்றும் சோவியத் யூனிய னனது, யுத்த பிற்கால ஆண்டுகளின்போது புதிய உலகப் போரைத் தடுப்பதற்கும், இணக்க அமைதிக்கும், பொது வான பூரணமான ஆயுதப் பரிஹரணத்திற்குமான போராட் டத்தில், அளவிடமுடியாத பலம் கொண்ட சமாதானம்

சோ. சோ. கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ் சமுதாயம் 21
மற்றும் முன்னேற்றச் சக்திகளுக்குத் தலைமை தாங்கியது. சோ. க. க.வின் 24வது காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட சமாதான வேலைத்திட்டமான்து உலகில் பெருமளவில் பிரபல்யமாகிற்று. அது, 25 வது காங்கிரஸால் முன்வைக்கப் பட்ட சமாதானம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு மேலும் போராடுவதற்கான வேலைத் திட்டத்தில் அதனது உறுப்ப ைபட வான தொடர்ச்சியையும், வளர்ச்சியையும் கண்டது.
சமாதான வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற் காக ஆற்றப்பட்டுள்ள எல்லாமே உண்மையிலேயே நிரந் தரமான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டவை என்று கூறி னல் அது மிகை யல்ல. அதனது ஏற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதானது, சர்வதேசச் சூழலை கணிசமாக அபி விருத்தி செய்துள்ளதோடு, வேறுபட்ட அரசியல் அமைப் புகளைக் கொண்ட நாடுகளுடன், பொருளாதார, கலாசார, விஞ்ஞான, தொழில்நுட்ப ஒத்துழைப்பை உத்வேகப்படுத் திற்று. சோஷலிஸ் நாடுகளின் நிலைகளும் பல மிக்க வையாக வளர்ந்துள்ளன. அதைப் போலவே அவற்றின் சர்வதேசக் கொள்கையின் பயன்தரும் தாக்கமும் வனர்ந்துள்ளன. இணக்க அமைதியானது முன்னணிப் போக்காக மாறியுள் ளது. -
சோஷலிஸமானது, தனது லாபங்கள் பின்தள்ளமுடி யாதவை என்று கூறும் அளவுக்கு தனது வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. அதனது வலுப்படுத்தல் உலக அரங்கில் முதலாளித்துவத்தின் செயற்பாட்டுப் பரப் பைக் குறுகலாக்குவதற்கு இட்டுச் சென்றது, தொடர்ந்தும் இட்டுச் செல்கின்றது. அக்டோபர் புரட்சியின் கருத்துக் களால் செல்வா க்கு செலுத்தப்பட்டவர்களும், இயங்கி வரும் சோஷலிஸத்தால் ஆதரவளிக்கப்படுபவர்களுமான, முன்னைய காலனிகளிலும், அரைக் காலணிகளிலும் உள்ள மக்கள் சுதந்திரத்தையும் விடுதலிையையும் வென்றெடுத் துள்ளனர். சர்வதேச உறவுகளில் புதிய தரங்களையும் கோட்பாடுகளையும் அறிமுகஞ் செய்வதற்கு அப்பால், தனது வர்க்கக் கொள்கையின் தன்னிகரற்ற வாய்ப்புகளையும், அது நிர்ணயமாகக் காட்டியுள்ளது. இது, மக்களின் நலன் களையும் அபிலாஷைகளையும் நிவர்த்திக்கிறது. சர்வதேச உறவுகளின் அமைப்பை ஜனநாயகப்படுத்துவதற்கு இட் டுச் செல்வதோடு, நவீல உலகத்தின் மீது, என்றுமில்லாத அளவு ஆழமான தாக்கத்தையும் செலுத்துகின்றது.
புரட்சிகர தந்திரோபாயங்களைப் பற்றி விவாதிக்கும் போது, இரண்டு முக்கியமான அம்சங்களை லெனின் விசேட மாகக் குறிப்பிடுகின்ருர், முதலாவது அம்சம் என்னவெனில் உலகப் புரட் சிகர நிகழ்வுப் போக்கின் மீது சோஷலிஸத் தினது செல்வாக்கின் நெம்புகோலாக இருப்பது அதனது

Page 13
22 சோ. சோ. @j• ጭ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம்
பொருளாதாரக் கொள்கையும், உழைக்கும் மக்களினது, உற்பத்திச் சக்தியின் பொருளாயத நல்வாழ்வு, கலாசாரம் ஆகியவற்றில், முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தைவிட ஒரு உயர்வான மட்டத்தை உறுதி செய்யும் புதிய அமைப் பின் பொருளாதார தொழில்நுட்ப அடிப்படையைத் தோற்றுவிப்பதும் ஆகும். இரண்டாவது அம்சம், வளர்ச்சி யடைந்த நாடுகளிலுள்ள சோஷலிஸ் பாட்டாளிகளது புரட்சிகர இயக்கத்தின் ஆதரவும்,. பொதுவாக, எல்லா நாடுகளிலுமுள்ள விசேடமாக, காலனிகள் மற்றும் சார்பு நாடுகளிலுள்ள ஜனநாயக மற்றும் புரட்சிகர ஆயக் கத்தின் ஆதரவும் ஆகும்.
எமது கட்சியாலும் எல்லா மார்க்ஸிஸ்ட்-லெனி னிஸ்டுகளாலும் இந்தக் கோட்பாடுகள் துரிதமாகச் செயல் படுத்தப்படுகின்றன. உலகின் ஏனைய பிராந்தியங்களிலும் புரட்சிகர நிகழ்வுப் போக்குகளுக்கு சோஷலிஸம் உத்வேக மூட்டுகின்றது. ஆன ல், பூர் ஷ்வா பிரச்சாரர்கள் அவதூறு பொழிவதைப் போல் ' புரட்சியை ஏற்றுமதி" செய்யாமல் வேறு மார்க்கங்களிலேயே மேற்கொள்கின்றது. இதில் சோஷலிஸத்தின் பிரதான ஆயுதமாகத் திகழ்வது, உதா ரணமாக, முதலாளித்துவத்தின் மீதான தனது மேம்பாடே
என்பது மிகவும் தெளிவானதாக உள்ளது.
சமாதானத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்குமாக
மாபெரும் அக்டோபர் புரட்சியானது, மனித குலத் தின் வரலாற்றுப் போக்கில் நிர்ணயமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. கடந்த ஆறு தஸாப்தங்களில் தேசிய விமோசன இயக்கத்தை, தொழிலாளர் வர்க்கப் போராட் டத்துடன் இரண்டறக் கலந்து அதைத் தனியானதோர், புரட்சிகர இயக்கமாக ஆக்குவதே உலக வளர்ச்சியின் தனித்துவமான அம்சமாகும்.
லெனினது ஆணையைப் பின்பற்றும் எமது கட்சி, தேசிய விமோசனம், மற்றும் போராடும் மக்களுடன் சர்வ தேசியவாத நல்லுறவு ஆகியன சம்பந்தப்பட்ட பிரச்னை களுக்குத் தீவிரமான கவனத்தை செலுத்திவருகின்றது. தற்போதைய நிலைமையில், தேசிய விமோசனப் போராட் டத்தின் சமூகத் திசையமைவு பற்றிய லெனினது ஆய் வுரை விசேட முக்கியத்துவமிக்கதாகும்.
* உலகப் புரட்சிக்காக நடைபெறவுள்ள நிர்ணயமான போராட்டத்தில், ஆரம்பத்தில் தேசிய விமோசனத்தை நோக்கி திசைப்படுத்தப்பட்டதும், பூகோளார்ந்த ஜனத்
والمريدي عثر فتجلس في سمسم. يسمح

சோ. சோ, கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயம் 23
தொகையில் ஏகப் பெரும்பான்மையினரைக் கொண்ட இயக்கமானது முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத் திற்கும் எதிராகத்திரும்பி, சிலவேளைகளில் நாம் எதிர்பார்ப் பதை விட மேலும் அதிகமான புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்கவும் கூடும்'2. என்று மூன்ரு வது கொமிண்டன் காங் கிரஸில் பேசும்போது தனது நம்பிக்கையை லெனின் தெரிவித்தார்.
இன்று, இவ்வாறுதான் விஷயங்கள் நடைபெறுகின் றன. சமூக மற்றும் தேசிய விமோசனததிற்கான போராட் டமே இப்போது முன்னணியில் பிரத்தியட்சமாகத் திகழ் கின்றது. லெனின் அவற்றின் வாய்ப்புக்களை வெளிப்படுத் தினரே, அந்த உலக சோஷலிஸத்தினதும், தேசிய விமோ 5F 6 இயக்கத்தினதும் நேயவுறவானது புரட்சிகரப் போக்கை துரிதப்படுத்துகின்றது. மனித குலம் அனைத் தினதும் நலன்களில் உலக வளர்ச்சியின் ஜீவாதார மிக்கப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும் பங்களிக்கின்றது.
சமாதானம், ஜனநாயகம் மற்றும் சோஷலிஸத்திற் கான இயக்கமானது, தேசிய விமோசனத்திற்கான போராட் டத் துடனும், வர்க்கப் போராட்டத்துடனும், ஏகபோக மூலதனத்திற்கும், பிற்போக்கிற்கும் எதிராக ஒன்றிணைகின் றது. உழைக்கும் மக்களின், முற்போக்கு மற்றும் புரட்சி கர சக்திகளின் செல்வாக்கை, யாவற்றுக்கும் மேலாக, பாட்டாளி வர்க்கத்தினதும் அதனது வர்க்க ஸ்தாபனங்க ளினதும் செல்வா க்கை அதிகரிக்கின்ற அதேவேளையில், முதலாளித்துவ நாடுகளில் உள்ள சமூக-அரசியல் சக்திக ளது வலு நிலையிலும் இணக்க அமைதி தனது தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் ஜீவாதார நலன் களுக்கும் அடிப்படையான தேசிய நலன்களுக்கும் நாடுக ளின் சமாதானம், பந்தோபஸ்திற்கு மான போராட்டத் தில் தனது முன்னணிப் பாத்திரத்தை மேன்மேலும் உறுதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளைத் தொழிலாளர் வர்க் கம் கொண்டிருக்கிறது.
變
ல்ெனினிய வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற் றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசும், நீடித்த சமாதானததிற்கான பாதை மலர் மஞ்சம் அல்ல என்பதை நன்கறிந்துள்ளன. சமாதான இலட்சியங்கள் தன்னை வெகுவாக ஆதரிப்பவர்களை மாத்திரமன்றி, தீவிர மாக எதிர்ப்பவர்களை யும கொண்டிருக்கின்றன. சோவியத் யூனியனும் ஏனைய தோழமை மிக்க சோஷலிஸ் நாடுகளும் சமாதானம் மற்றும் சோஷலிஸத்தின் எதிரிகளது சூழ்ச்சி
2. வி. ஐ. லெனின் தொகுப்பு நூல்கள், பா; 32 ப. 482.

Page 14
24 சோ. சோ. கு. ஒ. வளர்ச்சியுற்ற சோஷலிஸ் சமுதாயம்
களை முறியடித்துவரும் அதே வேளையில், சமாதானத்தை, சமூக முன்னேற்ற நோக்கங்களுக்குச் சாதகமாக சர்வதேச நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும் உழைத்துவருT கின்றன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு நீடுறுதி மிக்கது, தெளிவானது. தற்காலிக லாபங்களுக்கு அது உட்படவில்லை; ஏனெனில், சமாதானம் 'மற்றும் சமூக முன்னேற்றத்தின் புனிதமான நோக்கங்களையும் உயர்த் திப் பிடிப்பதற்கும் அதன்மூலம், சோவியத் மக்களினதும் புவியிலுள்ள எல்லா சீரிய மக்களினதும் மகிழ்ச்சிய்ை உறுதி செய்வதற்கும் ஒரே வழி இது மாத்திரமே ,
சமூக வாழ்வை புனருத்தாரணம் செய்வதற்கான, வரலாற்றுரீதியாகவே தவிர்க்கமுடியாத நிகழ்வுப் போக் கைப் பின்தள்ளக் கூடிய எந்த சக்தியும் எமது காலத்தில் இல்லை. வெகுஜன மக்கள் உலகை மாற்றுவதற்கு விழை கின்றனர். அவர்கள் விரும்பினுல் அதை மாற்றியே தீரு {6)] [T .
கம்யூனிஸ்ட் இல. 10, 1977

சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
* வலிமையினதும் சக்தியினதும்
உளற்றுக்கண் * சோவியத் உஸ்பெகிஸ்தான்

Page 15
ଗଗt). ] ରହୁଁଚେଁg1ଗାଁ சோ. யூ. க. க. மத்தியக் கமிட்டி அரசியல் குழுவினது அபேட்சக உறுப்பினர். உஸ்பெக்கிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி முதற் செயலாளர்
வலிமையினதும் சக்தியினதும் ஊற்றுக்கண்
சமூக ஒடுக்கு முறையை அழித் தொழிப்பதாலும் வெகுஜனங்களுக் குச் சாதகமான சமூக மாற்றங்களை மேற்கொள்வதாலும் மாத்திரமே தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று மார்க்ஸியலெனினியம் கருதுகிறது. இந்த நிலப்பாடு, சோ. சோ. கு. ஒன்றி யத்தில், விசேஷமாக சோவியத் மத்திய ஆசியத் குடியரசுகளில் சோஷ லிஸ் நிர்மான நடவடிக்கையின் போது உறுதியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது.
புதிய வரலாற்று நிலைமை, மற்றும் புரட்சிகரமான நடவடிக்கையில் காணப்படும் சமூகப் பரிணும விதிகளி லிருந்து மார்க்ஸ். எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களை லெனின் சாதுர்யமாக விருத்தி செய்தார். தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஒருங்கிணைந்ததும், முரணில்லாதது மான போதனையைத் தயாரித்தார். கட்சியின் தேசிய இனக் கொள்கைக் கோட்பாடுகளை வகுத்தார். தேசிய இனப் பிரச்னை பற்றிய கட்சியின் வேலைத்திட்டச் சுருக்கத்தை லெனின் பின்வருமாறு வகுத்த மைத்தார்:-

சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும் 27.
தேசங்களின் முழுமையான சமத்துவம், அவைகளின் சுய நிர்ணய உரிமை, எல்லாத் தேசங்களையும் சேர்ந்த தொழி லாளர்களினது ஐக் கய ம்--ஆகியவையே. இவை.
சோஷலிஸத் தின் வெற்றி மாத்திரமே பழைய உலகத் திற்கு-தேசிய ஒடுக்குமுறை, தேசியக் குரோதம், மற்றும் தேசியத் தனிமைப்பாடு ஆகியவற்றின் உலகத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கும், எல்லாத் தேசங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஐக்கியத்தினல் ஆன புதிய உலகத் திற்கு வழி சமைக்கும், இத் தேசங்களில் சிலருக்கு மாத் திரமேயான சலுகைகள் இருக்காது, மனிதனை மனிதன் ஒடுக்குவது இருக்காது என்று லெனின் சுட்டிக் காட்டினர். அக்டோபர் புரட்சிதான் சர்வதேசியப் பாத கையின் கீழ் நிறைவேற்றப்பட்ட முதலாவது புரட்சியாகும்.
அக்டோபர் புரட்சியின் கருத்துக்கள்தாம் , எ ல் லா மக்களுக்கும் நெருக்கமானதாகவும் அவர்களின் விருப்பத் திற்குப் பாத்திரமானதாகவும் இருந்தது, புரட்சிகரமான மாற்றங்களுக்கான போராட்டத்தில் அவர்களை அணி திரட்டியது. சுரண்டல் அமைப்பைத் தூக்கிவீசியதிலும், சோவியத் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும் ருஷ்யாவிலுள்ள எல்லா உழைப்பாளி மக்களும் செயலூக் கத்துடன் பங்குபற்றினர்.
சோஷலிஸத்தின் மகத்தான GUDs UTñu ᎯᏏᏍiᎢ
புதிய, சோஷலிஸ் பல்தேசிய ராஜ்யத்தைக் கட்டி எழுப்பும் பணியை அக்டோபர் புரட்சி முன் வைத்தது. சுயாதிபத்தியமிக்க தேசிய சோவிய த குடியரசுகள் தமது ஆரம்ப காலந் தொட்டே, விரிவ1  ைஒத்துழைப்பை ஏற் படுத்தவும், பொருளாயத, ஆன்மீக, தேசிய நலன் களை உறுதி செய்யும் ஸ்திரமான ராஜ்ய ஒன்றியத்தின் வரம் பிற்குள் நெருக்கமான உறவுகளை ஸ்தா பிக்கவும் விழைந் தன. 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப் பட்ட ஒருங்கிணைப்பு இயக்கும் சோவியத் சோஷலிஸ் க் குடியரசு களது ஒன்றி பம ஸ்தாபிக்கப்படுவதில் முற்றுப் பெற்றது.
சோவியத் ஒன்றியத்தினது தோற்றமும் அதனது: வெற்றிகரமான வளர்ச்சியும், மா ம பரும் அக்டோபர் புரட்சியினது இலட்சியங்களின் நேரடியான தொடர்ச் சியையும், மக்களை ஐக்கியப்படுத்துவதில் சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி எடுத்துக் கொண்ட தளராத முயற்சியின

Page 16
28 சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
வெளிப்படையும், லெனினது தேசிய இனக் கொள்கையின் வெற்றியையும், சோஷலிஸத்தின் மகத்தான லாபத்தை யும் பிரதிநிதித்துவம் செய்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் காணப்படும், தேசங்களுக்குள் வர்க்கப் பகைமைகளுடன் சேர்ந்து தேசியக் குரோதமும் மறைந் தொழிந்துவிடும் என்ற தீர்க்க தரிசனமான சொற்களை எதார்த்தபூர்வமானதாக ஆக்கின.
பாதை எளிதானதாக இருக்கவில்லை. கட்சி, சொல் லொணுத் துன்பங்களைச் சகிக்கவேண்டி நேர்ந்தது. மக் களின் தேசிய எழுச்சிப் போக்கை, சோஷலிஸ் வளர்ச்சிப் பாதையில் வழிப்படுத்துவதும், நாட்டின் ஒதுக்குப்புறங் களிலுள்ள மக்களுக்கு செயலூக்கமுள்ள உதவியை உறுதி செய்வதும், சோஷலிஸத்தை நிர்மா னிப்பதில் மக்களின் நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி செய்வதும் தவிர்க்க முடியாததாக விருந்தது.
மத்திய ஆசியாவில் உள்ள சோவியத் குடியரசுகள் நிலப்பிரபுக்களுக்கும், பூர்ஷ்வா தேசியவாதிகளுக்கும் எதிரா ன, பாஸ்மாச்சி கோஷ்டி மற்றும் வெளிநாட்டுத் த லேயீட்டாளர்களுக்கும் எதிரான கடுமையான வர்க்கப் போராட்டத்தில் பிறந்தவையாகும். இந்தப் போராட்டத் தில் இவை தனிமைப்பட்டு இருக்கவில்லை, சோவியத் ருஷ் யாவிலுள்ள மக்களின் தோழமை மிகுந்த ஆதரவையும், பன்மு கப்பட்ட இராணுவ மற்றும் பொருளாதார உதவி  ையயும் பெற்றிருந்தன.
மக்களையும் இன மரபுக் குழு க் +ளையும் உயர்த்துவதில் கட்சி தன்னலான அனைத்  ைதயும் செய்தது; வளர்ச்சி யடைந்த நாடுகளுடைய மட்ட த்தோடு ஒப்பிடுகையில் இம் மக்களும் இன மரபுக் குழுக்களும், அரை-நிலப் பிர புத் துவ மற்றும் குல மரபு உறவுகளின் கட்டத்திலேயே இருந்தன. இவை, தமது பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புவதிலும், தேசிய ஆளணி களைப் பயிற்றுவிப்பதிலும் கலாசார கதை வளர்ப்பதிலும், எ ல் லா தேசிய இனங்களை யும் சேர்ந்த உழைக்கும் வெகுஜனங்களின் அன்பையும் எல்லையில் லா நம்பிக்கை யையும் வென்றெடுத் திரு நத மாபெரும் ருஷ்ய மக்கள் உன்னதமான பாத்திர த்தை வகித்த னர்.
ஏற்கனவே, 1919 ம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது, துணையில்லாமலும், தேவையால் வாடியும் இருந்த ருஷ்யா தனது மிகக் குறைவான வரவு செலவுத் திட்டத்திலிரு ந து. பொன்னன5 கோடி ரூபிள்களை துருக்கெஸ்தானின் 1 நீர்ப் பாசன வேலைகளுக்கு லெனினது ஆணையின் கீழ் ஒதுக்கீடு செய்தது. ருஷ்ய சமஷ்டியில் உள்நாட்டு யுத்தத் தின் போது, கிழக்கத்தைய குடியரசுகளுக்கு நிதியுதவியையும்

சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும் 29
தொழில்நுட்ப உதவியையும், உணவையும் வழங்குவது சம்பந்தமாக ஜீவாதார மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னரான ஆண்டுகளில், உலோகம், சாதனம், பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்த புகை வண்டிகளும், நிபுணர் குழுக்களும், உஸ்பெக்கிஸ்தானுக்கும் ஏனைய குடி யரசுகளுக்கும் வந்து சேர்ந்த வண்ணமே இருந்தனர்; இவர்கள், மாஸ்கோவிலிருந்தும், லெனின் கிராடிலிருந்தும் யூரல் நகரங்களிலிருந்தும், நாட்டிலுள்ள ஏனைய தொழில் துறை கேந்திரங்களிலிருந்தும் வந்தனர்.
இன்று, லெனினது தேசிய இனக் கொள்கையின் சர்வதேசிய குணும்சம், எல்லோரும் காணும் வகையில், ஆழப் பதியத் தக்கதாக உள்ளது. உண்மையிலேயே மா பெரும் அக்டோபரும், சோஷலிஸ்மும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய, மக்களின் நட்புறவுத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. புதிய சமுதாயத்தை நிர்மாணிக்கும் நிகழ்வுப் போக்கில் சர்வதேசியவாத சூழல் முன்னுணரப்பட்டது. கடந்த காலத்தால் வீட்டுச் செல்லப் பட்ட, நாடுகளிடையேயான பராதீனமும் அவநம்பிக்கை யும் அகற்றப்பட்டன, உழைக்கும் மக்களின் முரணில்லாத தோழமை சார்ந்த ஐக்கியம் நிலைநாட்டப்பட்டது.
சோவியத் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அதி யுயர் வளர்ச்சியடைந்ததும், பெருவீதத்தில் இயந்திரமய மாக்கப்பட்டதுமான விவசாயம் தோற்றுவிக்கப்பட்டது. எல்லாக் குடியரசுகளிலும் விஞ்ஞானமும் கலாசாரமும் முன்னேறின. இவ்வாறு தேசங்கள் மத்தியில் இருந்துவந்த முன்னைய ஏற்றத்தாழ்வு அழித்தொழிக்கப்பட்டது. இப் போது சோவியத் ப்ொருளாதாரம் ஒருங்கிணைக்கப்பட்ட தாக உள்ளது. ஒவ்வொரு குடியரசினதும், நாடு முழுவ தினதும் நலன்களை உள்ளடக்கியுள்ள தனியானதொரு அரசாங்கத் திட்டத்திற்கு இசைவான வகையில் வளர்ந்து வரும், இடைச் செயற்பாடுமிக்க தேசியப் பல் திறம் வாய்ந்தவொன்ருக இருக்கிறது. இந்த காலகட்டத்தில், ஒரே தன்மையுள்ள சமூகக் கட்டமைப்பைக் கொண்ட சோஷலிஸ் ராஜ்யங்களின், தேசியு இனங்கள் உருவாகின; தொழிலாளர் வர்க்கம், கூட்டுப்பண்ணை விவசாயிகள். உழைக்கும் அறிவுத் துறையினர் ஆகியோரை உள்ளடக்
1. 1917ம் ஆண்டின் மாபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட்சிக்கு முன்னர், புரட்சிக்கு முன்னரான ஆரம்ப ஆண்டுகளில், இப்போது, உஸ்பெக், துருக்மென், தாஜிக், கிர்கீஸ், என அழைக்கப்படும் பிரதேசங்களும், கஸாக் சோவியத் சோஷலிஸக் குடியரசின் தென் பகுதியும், துருக்கெஸ்தான் என அழைக்கப்பட்டன.

Page 17
30 சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னகளும்
கியதே இச் சமூகக் கட்டமைப்பாகும். சோவியத் மக்கள், தமது அறிவுத் துறை வளர்ச்சியிலும், தம் கலாசாரத்திலும் அளவற்ற முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்; இவை உள்ளடக்கத்தில் சோஷலிஸ் மாகவும், வடிவத்தில் தேசியத் தன்மையாகவும் உருப்பெற்றுள்ளன கலாசார முன்னேற் றத்தின் பயனுள்ள நிகழ்வுப் போக்கும், கலாசாரங்களைப் பரஸ்பரம் செழுமைப்படுத்துவதும் மேலும் நெருக்கமாகக் கொண்டுவருவது இப்போது நடைபெற்று வருகின்றது. மார்க் ஸிய-லெனினிய சித்தாந்தம் உறுதியாக வேர் விட் டுள்ளது.
இவை எல்லா மே, மக்கள் மத்தியில் நட்புறவு தோழமை மிக்க ஒத்துழைப்பு, சமத்துவம், பரஸ்பரம் நம்பிக்கை ஆகியவற்றின் மீது சார்ந்துள்ள அடிப்படை யிலேயே வித்தியா சமான தேசிய உறவுகளின் வடிவம் சோவியத் ஒன்றியத்தில் தோற்றுவிக்கப் பட்டுள்ளது என் பதற்குச் சான்று பகர்கின்றன. இந்நாடுகளின் சமாஜ மானது மிகவும் கடுமையான சோதனைகளில், விசேஷமாக 1941 - 1945ல் நடைபெற்ற மாபெரும் தேசபக்த போரின் போது, சமூக, அரச அமைப்பும், சோஷலிஸ் சித்தாந்த மும், சோவியத் மக்களின் நட்புறவும் தோழமை மிக ஐக் கியமும் தமது மீற வொண்ணுமையை நிரூபித்துக் காட் டின. பாஸிஸ்ட்டுகளின் மீதும், இனவெறி, தேசியக் குரோதம் ஆகியவற்றிலான ஏகாதிபத்தியவாத சித்தா ந் தத்தின் மீதும் வெற்றியை ஈட்டின.
சோவியத் யூனியனது பலத்தின் பிரதான GJ 677 மானது, தோழமைமிக்க ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, மக்களின் ஐக்கியம் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கிறது. மகத்தான நட்புறவின், மீறவொண்ணுத தோழமையின் விளைவால், மக்களின் அர்ப்பணிக்கப்பட்ட பணியின் விளை வால், சோவியத் ஒன்றியத்தில் வளர்ச்சியடைந்த சோஷ லிஸச் சமுதாயம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. சோவியத் வாழ்க்கை முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத் தப்பட்ட பாரிய சமூகப் பொருளாதார மாற்றங்களின் விளைவாலும், லெனினது தேசிய இனக் கொள்கை முர னின்றி செயல்படுத்தப்பட்டதாலும் ஒரு புதிய வரலாற் றுச் சிறப்புமிக்க சமாஜம்-சோவியத் மக்கள்--தோன்றி யுள்ளது. சோவியத்துக்களின் பூமியில் வாழும் லட்சக் கணக்கான மக்களின் உழைப்பாலும், தீரமிக்க, படைப் பாற்றல் மிக்க மேதையினுலும் உருவானவற்றிற்கான தேசியக் கெளரவம்-உன்னதமானதும், பிரமாண்டமான துமான தேசபக்த உணர்வினை க் கொண்டதே இச் சமாஜ மாகும்.

சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும் 3 ]
சோஷலிஸ் அமைப்பின் வெற்றி, மக்களின் வாழ்க்கை முறையிலும் வாழ்க்கை நிலமைகளிலும், தோற்றத் திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதி லும் உள்ள தைப் போலவே உஸ்பெக்கிஸ்தானிலும், தனது சித்தாந்தரீதியான பற்றுறுதி, ஆக்கபூர்வமான ஆற்றல், பரந்த தோற்றம், ஆகியவ ஸ்ருல் சிறப்பு பெற்றுள்ள, உழைப்பிலும், சமூக அரசியல் வாழ்விலும் செயலூக்க முள்ள புதிய மனிதனைக் காண்கிருேம்.
வாழ்க்கையும், புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப் புவதும் சோவியத் மக்களின் பணியைச் சர்வதேசிய மய மாக்குவதை உத்வேகப்படுத்துகிறது. சோவியத் மக்கள் மத்தியில் பெருமளவிலான நட்புறவுக் கருத்துக்களும், உழைக்கும் மாந்தரின் சர்வதேசியத் தோழமையும், சர்வ தேசியமும், 1976ம் ஆண டு பெப்ருவரி 4 மார்ச்சில் நடை பெற்ற சோ. யூ. க. க. வின் 25வது காங்கிரஸினது முடிவு களின் உயிர்ப்பண்பாய்த் திகழ்கின்றன. சோவியத் சோவு லிஸ் சமுதாயத்தின்-உண்மையான நன்னம்பிக்கையும், மக்களின் சமத்துவமும் கொண்ட சமுதாயத்தின்-தார் மீக, அரசியல் இசைவிணக்கத்தை மேலும் வளர்க்கவும் வலுப்படுத்துவதற்குமான வழிகாட்டிகளை இக்காங்கிரஸ் வகை செய்துள்ளது.
வலிமைமிக்க விசை
நாட்டினது வளர்ச்சியின் புதிய கட்டத்தில், கம்யூ னிஸ் நிர்மாணக் கட்டத்தில், சோவியத் தேசபக்த, பாட்டாளி வர்க்க சர்வதேசியம், சோஷலிஸத் தாயகத் திற்கான கெளரவம், குரோதமான சித்தாந்தத்திற் கெதி
ரர்ன சமரசம் காணமுடியாத போராட்டம் ஆகிய உணர்வை உழைக்கும் மக்களுக்குப் புகட்டுவதில் கட்சி ஸ்தாபனங்களின் பணி மேலும் முக்கியமானதாக உள்
உஸ்பெக்கிஸ்தானின் கட்சி அமைப்பானது, மக்க ளுக்கு உயர்ந்த தத்துவார்த்த, அரசியல் தன்மைகளை வழங்கவும், அவர்களின் தேசபக்த மற்றும் சர்வதேசிய வாதக் கல்வியின் வடிவங்கள், உள்ளடக்கங்களை முழு நிறைவாக்கவும், ஆக்கபூர்வமாகவும் கடுமையாகவும் பாடு படுகிறது. ஸ்தாபன மற்றும், அரசியல் பணிகளில் விரி வான அணுகுமுறையைக் காட்டவும் அது விழைகின்றது.
இந்த தோழமையுள்ள நேச அணி, எமது வலிமையை யும், ஆற்றலையும் பல்கிப் பெருகச் செய்கின்றது, தேசியப் பொருளாதாரம் முழுவதினதும் முன்னேற்றத்தை விரைவு படுத்துகிறது.

Page 18
32 சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தின் (1976-1980) ஒவ்வொரு தினத்தையும் புரட்சிகரமான முயற்சியுணர்வு குறித்துக் காட்டுகின்றது. மூலதன நிர் மாணம் அளப்பரிய அளவினை எட்டியுள்ளது, விவசாயம் துரிதமாக வளர்கிறது.
சோவியத் ஆட்சி நடைபெறும் ஆண்டுகளின் போது, தொழில்துறை உற்பத்தி எமது குடியரசில் 240 தடவைக ளால் அதிகரித்துள்ளது என்பதையிட்டு நாம்பெருமையடை கின்ருேம். உலோகவியல், இயந்திரவியல் மற்றும் விசைப் பொறியியல், எண்ணெய், வாயு அகழ்வு, விமான நிர் மாணம், உலக்ரோனிக்ஸ், இரசாயனம். சுரங்கத் தொழில் போன்றவை உட்பட நூற்றுக்கும் அதிக மனே தொழில்கள் எம்மிடம் உள்ளன. இவை எல்லாவற்றையும் மக்களின் சோஷலிஸ்க் குடும்பத்தில் மாத்திரமே எய்தப்பட முடியும் என்பதை நாம் பூரணமாக உணர்கின்ருேம். இதில்தான, எமது தோழமையின் மனநிறைவு தரும் பெறுபேறுகளை நாம் காண்கின்ருேம்.
சோவியத் பொருளாதார வளர்ச்சியில், தனக்கென ஒரு விசேடமான இடம் ஒவ்வொரு குடியரசிற்கும் இருக் கிறது. உஸ்பெக்கிஸ்தானில் பருத்தி உற்பத்தியானது, தேசிய நல்வாழ்வுக்கான அதன் பாரிய பங்களிப்பாகும்.
சோவியத் அரசானது ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் போது எமது குடியரசிலிருந்து 245 லட் சம் தொன் 'வெண் தங்க'த்தைப் பெற்றது; இத் திட் டத்தால் முன்வைக்கப்பட்டதை விட 2300 ஆயிரம் தொன் அதிகமானதாகும். இது, ஆண்டொன்றுக்கான அறுவடைக்கு ஏறக்குறைய சமமானதாகும். ஆகக் கூடிய அளவு நீர்ப் பஞ்சம் இருந்தபோதிலும் கூட, 1976ம் ஆண் டின் மகசூல் 5338 ஆயிரம் தொன்களை எட்டியது.
Y.
சோவியத் ஆட்சியின் தொடக்கத்தில் லெனின் எழுதினர்; எல்லா நாடுகளிலுமுள்ள லட்சோப லட்சம் மக்களின் சொந்த வலிமையில் நம்பிக்கையை எழுச்சியுறச் செய்தோம், அவற்றின் ஆர்வத் தீயைத் தூண்டிவிட் டோம்." 2
புரட்சிகர ஆர்வத்தின், ஆக்க முயற்சியின், நட்புற வின், தோழமையின், பாட்டாளி வர்கக சர்வதேசியத்தின் இந்த நெருப்பை எந்தப் புயலாலும் அணைத்துவிட முடி யாது. சமூக முன்னேற்றத்திற்கும் கம்யூனிஸத்திற்குமான சோவியத் மக்களினதும், உலகம் முழுவதிலுமுள்ள உழைக் கும் மக்களினதும் பாதையில் அது எப்போதுமே ஒளிவீசும்.
2. வி. ஐ. லெனின், தொகுப்பு நூல்கள் தொகுதி 27
i. 60,

புள்ளி விபரங்கள்
சோவியத் உஸ்பெக்கிஸ்தான்
女 அறுபது ஆண்டுகளில் சுமார் 1400 பெரிய தொழி லகங்கள் சோவியத் உஸ்பெக்கிஸ்தானில் நிர் மாணிக்கப்பட்டுள்ளன, இவற்றின் ஆறு நாள் உற்பத்தி, 1918ம் ஆண்டு முழுவதினதும் உற்பத் திற்குச் சமமானதாகும்.
Yk சோவியத் யூனியனின் கச்சா பருத்தி உற்பத்தியில் 65 சதவீதம் உஸ்பெக்கிஸ்தானில் பெறப்படுபவை யா கும். கடந்த ஐந்தாண்டு காலங்களில் பருத்தி அறுவடை 3 மடங்காக அதிகரித்தது, ஹெக்டர் ஒன்றிற்கு 80 சென்ட்னர் சராசரி மகசூலைத் தந் துள்ளது.
大 குடியரசிலுள்ள கூட்டுப்பண்ணையிலும் அரசாங்கப் பண்ணையிலும் 138,000 டிராக்டர்களும், 30,000 பருத்தி கொய்யும் அறுவடை இயந்திரங்களும், ஆயிரக்கணக்கான இதர இயந்திரங்களும், இயந் திர சாதனங்களும் வேலையிலீடுபட்டுள்ளன.
大 சுமார் 30 லட்சம் ஹெக்டர் நிலம் நீர்ப்பாசன மளிக்கப்பட்டவையாகும். விரிவான நில அபிவிருத் தித் திட்டத்திற்கு பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (1976-1980) வகை செய்கிறது. இதில், கார் ஸின்ஸ்கா யா மற்றும் தலிக்காஸ்காயா வெளிகளி லும், அமூ தார்தா தாழ்நிலத்திலும் இதர பகுதி களிலுமுள்ள 500,000 ஹெக்டர் நிலம் அபிவிருத்தி செய்வதும் அடங்கும். -
女 குடியரசில் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய தொழில் பிரிவு - சூரியஒளி இயந்திரவியலாகும். 1977ம் ஆண்டில், புஹாரா விற்கு அருகில் நிர் மாணிக்கப்பட்டுள்ள இத் தொழிலகம், சூரிய சக்தி யைப் பயன்படுத்துவதற்கான சாதனங்களை உற் பத்தி செய்வதில் விசேட கவனஞ் செலுத்துகின் ADSl.

Page 19
34
சோவியத் சமுதாயம்: வழ்வும் பிரச்னைகளும்
1917ம் ஆண்டில் நடைபெற்ற மாபெரும் அக்டோ பர் புரட்சிக்கு முன்னர், உஸ்பெக்கிஸ்தானில் உயர் கல்வி ஸ்தாபனங்களோ, விசேட நடுத்தரப் பள்ளி களோ இருக்கவில்லை. இன்று குடியரசிலுள்ள 44 கல்லூரிகளிலும் கழகங்களிலும் 254,000க்கும் அதிக மான மாணவர்கள் பயில்கின்றனர்.
உயர்தர அல்லது நடுத் தரக் கல்வியைப் பெற்ற 800,000 மக்களை உஸ்பெக்கிஸ்தானின் தேசியப் பொருளாதாரம் வேலைக்கமர்த்தியுள்ளது. இந்த எண்ணிக்கை புரட்சிக்கு முன்னர் ருஷ்கிா முழு வதினதும் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமானதாககும்.
இஸ்வெஸ்தியா செப்டெம்பர், 13, 1977

உலக சோஷலிஸ் சமாஜம்
* பரஸ்பரம் நலன் மிக்க
ஒத்துழைப்புகள்

Page 20
ஒ.பொகொமொலொவ் சோவியத் விஞ்ஞானப் பேரவை துணை உறுப்பினர்
பரஸ்பரம் நலன்மிக்க ஒததுழைபபுகள
ப.பொ. உ. க. நாடுகளுக்கிடையே யான பொருளாதார பந்தங்கள் அவை ஒவ்வொன்றின் பொது முன்னேற்றத் தையும் அபிவிருத்தியையும் ஊக்குவிக் கின்ற புதியவடிவமும் வகையுமாகத் திகழ்கின்றன.
பொருளாதார ஒருமைப்பாட்டிலான சோஷலிஸ சமா ஜத்தின் வெற்றிகள் பெருகப் பெருக பூர் ஷ்வா பிரசாரத் தாக்குதலும் மேலும் வன்மையாகி வருகிறது. சகோதர நாடுகளுக்கிடையேயான நெருக்கமான உறவுகளின் குணும் சம், நோக்கம், பலன்கள் என்பவற்றைத் திரித்துக் கூறும் முனைப்பில் பூர்ஷ்வா பிரசாரமானது, தமது தொழிற் துறை வளங்களில் வித்தியாசப்படுகின்ற பங்காளிகளைப் பொருளாதார ஒருங்கிணைப்பு ஒன்றுபடுத்தி உள்ளது என் பதை விகற்பப்படுத்தவும், அது அவற்றின் நலன்களை திருப்தி செய்யவில்லை என்று கூறவும் எத்தனிக்கிறது.
எல்லாப் பங்காளிகளுக்கும் ஒருங்கிணைப்பு நன்மைய ளிக்கிறது என்ற உண்மைக்கும் இவ்விதக் குற்றச்சாட்டு களுக்கும் எள்ளத்தனை ஒட்டுறவும் இல்லை.
உற்பத்தி ஆற்றலைப் பெருக்குவது, மொத்த உற்பத்
தித் திறனை அதிகரிப்பது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற நோக்கத்தில் சர்வதேச சோஷலிஸ் உழைப்புப் பிரிவினையின் நன்மைகளை நல்லவிதத்தில் பயன்படுத்துவ தில் சகோதர நாடுகளெல்லாம் அக்கறைகொண்டுள்ளன.

உலக சோஷலிய சமாஜம் 37
சோவியத் யூனியனின் வளமும் ஒருமைப்பாட்டிற்கு அதன் பங்களிப்பும்
ப.பொ.உ.க. நாடுகளிடையே பொருளாதார ரீதியில் சக்தி மிக்கதாகத் திகழும் சோவியத் யூனியன் ப. பொ. உ. க. வின் மொத்த தொழில் மற்றும் விவசாய உற்பத்தியில் 70 சதவீதத்தை நிறைவுசெய்வதாகத் திகழ்கிறது. மதிப் பீடு செய்யப்பட்ட இயற்கை வளங்களின் செல்வத்தைப் பொறுத்த மட்டில் உலகின் பெரும்பாலான நாடுகளை சோவி யத் யூனியன் கணிசமாக விஞ்சுவதாகவுள்ளது சோவியத் யூனியனில் உயர்ந்த விஞ்ஞான தொழில்நுட்ப வளமுண்டு, உலக விஞ்ஞான ஊழியர்களிற் காற்பங்கினர் சோவியத் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களுமே யாவர். உலோக வியல், மின்சக்தி உற்பத்தி, விமானப் போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல விஞ்ஞான, தொழில் நுட்பத் துறைகளிலெல்லாம் சோவியத் யூனியன் பெரும் முன்னேற்றமெய்தியுள்ளது.
ஒரே வார்த்தையில் கூறுவதானல் நீண்டகாலமாக ஏனைய ப. பொ. உ. க. நாடுகளுடன் பரஸ்ப்ரம் நலன் மிகு ஒத்துழைப்புகளை ஸ்திரமாக விரிவாக்குவதற்கான சக்தி மிகு வளத்தைக் கொண்டுள்ளது. அதன் அயல்துறை பொருளா தாரப் பிணைப்புகளும் அதிகரிப்பதோடு எண்ணற்ற பொரு ளாதாரத் துறைகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்வதா யுள்ளது. உதாரணமாக 1975ல் சோவியத் யூனியன் 35 சத வீத உருட்டப்பட்ட உலோக சாதனங்களையும், 30 சதவீத பருத்தியையும், 25 சதவீத பாரம் குறைந்த வண்டிகளையும், 19 சதவீத எண்ணெய் மற்றும் இரும்புக் கணிஜங்களையும், 12 சதவீத அச்சுத் தாள்களையும் ஏற்றுமதிசெய்துள்ளது:
சோவியத் பொருளாதாரத்தின் பரிமாணம் ஒரன்பர் கிலிருந்து சோவியத் யூனியனின் மேற்கெல்லைவரையிலான வாயுக் குழாய் போன்ற குறிப்பிடத்தக்க பிரமாண்டமான ஆற்றல்மிக்க கூட்டுத் திட்டங்கள் ஏற்படுவதற்கு உதவி செய்துள்ளது. இவையனைத்தும், ப.பொ. உ. க. வின் எல்லா பிரதான பணிகளிலும் சோவியத் யூனியன் முக்கிய பங்கா ளியாக இருக்க உதவுவதோடு, அவை அதன்மீது விசேட பொறுப்புகளையும் சுமத்தியுள்ளன. சகோதர நாடுக ளுடன் அனைத்தம்ச உறவுகளை அபிவிருத்திசெய்வதில் சோ. க.க.வினதும் சோவியத் அரசினதும் நடவடிக்கைக ளிலும் இந்த பொறுப்புணர்ச்சியானது வியாபித்துள்ளது.

Page 21
38 உலக சோஷலிஸ் சமாஜம்
நம்பகமான பங்காளிகள்
ப.பொ. உ. க. நாடுகளின் ஒத்துழைப்பு அதிக மதிக மான நன்மைகளை ஏற்படுத்துகின்றது. இவற்றிற் பெரும் பாலான நாடுகள் கணிசமான விஞ்ஞான, தொழில்நுட்ப வளத்தைக் கட்டியெழுப்பியுள்ளன. உ த ரா ர ண மா க தொழில்நுட்பப் பொறியியல், இரசாயனம், துணிகள், பாதணிகள், உணவு போன்ற தொழில்களிலான பிரதான பொருட்களின் உற்பத்திகள் சோவியத் யூனியனில் உற் பத்தியாவதைவிட அரைவாசிக்குமதிகமாகியுள்ளன. சோஷ லிஸம், கம்யூனிஸம், பொதுவான சமூக அமைப்பு, நோக்கங்களின் ஒற்றுமை, சகோதரத்துவ நட்புறவு என் பவற்றைக் கட்டியெழுப்புவதிலான எய்தல்கள் என்பன வெல்லாம் சோவியத்யூனியனின் அயல்நாடடுப் பொருளா தாரப் பிணைப்புகளில் இந் நாடுகள் முதலிடத்தை வகிப்ப தையே விளக்குகின்றன. இவ்விதத்தில் தற்போதைய நீண்டகால ஒப்பந்தங்களின் கீழ் ப. பொ. உ. க. நாடுகள் மற்றும் யூகொஸ்லாவியாவுடனன சோவியத் யூனியனின் வர்த்தகப் பண்டப்புரள்வு 1976-1980 ல் 14,500 கோடி ரூபிள்களை எய்தும், இது முன்னைய ஐந்தாண்டுகளின் போதிருந்ததைவிட 79 சதவீதம் அதிகமாகும்.
தமது தேசிய ஐந்தாண்டுத் திட்டங்களை ஒரு நிலைப்ப டுத்துவதில் ப.பொ. உ. க. நாடுகள் இயந்திரங்களையும் பூர ணமாக்கப்பட்ட இயந்திரத் தொகுதிகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன; இது முதலீட்டு நிதிகளை மட்டுப்படுத்த சோவியத் யூனியனுக்கும் ப.பொ. உ. க. நாடுகளுக்கும் உதவும், விசேடமாக பொருளாதா ரத்திலான சில பிரதான கிளைகளை விரிவாக்குவதையும் மற்றும் தொழில்நுட்ப புணர்சாதனப்படுத்துவதையும் ஊக்குவிப்பதாயமையும். இவ்விதத்தில் 1976 -1980ல் சோவியத் யூனியன் ப.பொ. உ. க. நாடுகளிடமிருந்து ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பூரணமாக்கப்பட்ட இயந்திரத் தொகுதிகளைப் பெறும்; இவற்றுள் ஆண்டிற்கு 60 லட்சம் தொன் கார்பமைட் உற்பத்தி ஆற்றல் கொண்ட ஆறு தொழிற்சாலைகளுக்கான சாதனங்களும், ஆண்டிற்கு ஒரு கோடி தொன் உற்பத்திசெய்யவல்ல 21 சல் பியூறிக் அமில இயந்திரத் தொகுதிகளும், 27 பாரிய வடி எந்திரங்களும், 19 நீர்க் கூறகற்றும் பாற் தொழிற்சாலைகளும் இன்னும் பலவும் அடங்கும்.
ஒன்பதாவது (1971-1975) ஐந்தாண்டுத் திட்டத் திற்போலவே ப. பொ. உ. க. நாடுகளிலிருந்து கிடைக்கும் விநியோகங்கள் உற்பத்திப்பொருட்களின் பல ரகங்களுக் கான சோவியத் தேவைகளை ஈடுசெய்யும். இவ் விநியோ கங்களில் புதிய தன்னியக்க தொலைபேசி நிலையங்களுக்கான சாதனங்களிற் பாதிப்பகுதியும் 40 சதவீத புதிய பிரயா ணக் கார்களும், 12 சதவீத பஸ்களும், புதிய \உருட்டப் பட்ட சாதனங்களில் மூன்றிலொரு பகுதியும், 15 சத

உலக சோஷலிஸ சமாஜம் 39
வீதத்திற்குக் குறையாத தளபாடங்கள், பாதணிகள், தயாரிக்கப்பட்ட உடைகள், பழங்கள், தகரத்திலடைக்கப் பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் என்பனவும் அடங் கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் சோவியத் யூனியன் ப.பொ.உ. க. நாடுகளிலிருந்து 3000 லட்சம் சோடி பாதணி களை இறக்குமதி செய்யும்.
சோவியத் யூனியனின் நிரந்தரமான, பெருமளவிலான இறக்குமதித் தேவைகள் எமது பங்காளிகளுக்குப் பெருந் தொகையான உற்பத்திக்கான சிறந்த நிபுணத்துவத்தை உருவாக்கவும் அபிவிருத்தி செயயவும் சந்தர்ப்பங்களை வழங்குகிறது.
திட்டங்களினதும் வர்த்தக பண்டப்புரள்வினதும் சமநிலை
சோஷலிஸ் ஒருமைப்பாடு தன் எல்லா பங்காளிகளுக் கும் நன்மை செய்கிறது. சோவியத் யூனியனைப் பொறுத்த மட்டில் சோ. க. க. வின் 25வது காங்கிரஸால் திட்டமிடப் பட்ட பொருளாதார அபிவிருத்திக் கடமைகளை நிறை வேற்றுவதை எளிதாக்குகிறது. மறுபுறத்தில் 6r%0נש ז ப பொ. உ. க. நாடுகளில் 1976-1980க்கென ஏற்படுத்தப் பட்ட அடிப்படை சமூக மற்றும் பொருளாதார இலக்கு களை எய்துவது பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் சோவியத் யூனியனின் நடவடிக்கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது.
சமீப எதிர்காலத்தில் ப.பொ. உ. க. நாடுகளுக்கு எரி பொருள், சக்தி மற்றும் மூலப்பொருட்களில் முக்கியமான வகைகளை வழங்குவதற்கான பிரதான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தேசியத் திட்டங்களின் சமநிலையே உதவின. 1976 க்கும் 1980க்குமிடையில் சோவியத் யூனியன் இந் நாடுகளுக்குச் சுமார் 78 கோடி தொன் (இப்போதுள்ள) எரிபொருட்களை அல்லது முந்திய ஐந்தாண்டுகளை விட 50 சதவீதத்திற்கு மதிக பானதை வழங்கும். சகோதர நாடுக ளும் சோவியத் யூனியனிடமிருந்து 11 கோடி 40 லட்சம் தொன் இரும்பு செறிந்த உலோகங்களையும், சுமார் -2 கோடி 70 லட்சம் உருட்டப்பட்ட இரும்பு உலோகத்தை யும், 20 லட்சம் கொன்களுக்கு மதிகமான பருத்தி நாரை யும் பெறும். இந்த பெருமளவிலான, உத்தரவாதமான விநியோக அளவு மூலப்பொருள் மற்றும் சக்தி நெருக்கடிக் குள் தத்தளிக்கும் உலக முதலாளித்துவ பொருளாதா ரத்தை வேறுபடுத்திக் காட்டுவதாயமைந்துள்ளது.
இப்போது எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களு ற் பத்தியிலான ப. பொ. உ. க. நாடுகளுக்கிடைப்பட்ட உழைப் புப் பிரிவினையானது நீண்டகால ஒத்துழைப்புத் திட்டங் களின்றியும் வளங்களையும், நிதிகளையும் திரட்டுவதின் றியும் எதிர்கால முன்னேற்ற மில்லை என்ற கட்டத்தை எய்தியுள் ளது. 1976-1980க்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கை

Page 22
40 உலக சோஷலிஸ் சமாஜம்
களுக்கான சமநிலைத்திட்டம் பிரமாண்டமான தொழிற் பேட்டைகளுக்கான சுமார் 900 கோடி ரூபிள்களை ஒதுக்கி யுள்ளது. செலவினத்தில் பாதியும் சோவியத் யூனியனுல் எதிர்கொள்ளப்படும் இத்திட்டங்களெல்லாம் உற்பத்தி யைத் தொடங்கும்போது ப. பொ. உ. க. நாடுகள் தமது முதலீட்டுப் பங்குகளுக்கான மீள எரிப்பாக ஆண்டுதோறும் 1550 கோடி கன மீட்டர் இயற்கை வாயுவையும், 90 லட் சத்திற்குமதிகமான இரும்புசெறிந்த மூலப்பொருட்களை யும், சுமார் 200 000 தொன் இரும்புக் கலப்புகளையும், 2000 00 G) 5T 65T செலுலோசையும், 180 000 தொன் அஸ்பெஸ்டசையும் பெறும்.
வர்த்தகக் கட்டமைப்பும் கூட மாறுகிறது. நாமறிந்த படி அனைத்துக்கூறு உழைப்புப் பிரிவினைக்கான திட்டமான அளவுகள் அல்லது பூரணமாக்கப்பட்ட பொருட்களுக்கான எரிபொருள் மற்றும் மூலப்பொருள் பரிவர்த்தனை என்பன இருக்கின்றன. பல இயற்கை வளங்களின் அகழ்வு, ஏற்று மதியிலான இன்றைய மட்டத்தோடு அவற்றின் கட்டுப் பாடும் புதிதாக்கப்படாததும் மேலும மேலும் சிக்கலாகி வருகிறது. அதே வேளையில் தயாரிப்புத் துறையிலான சர்வதேச உற்பத்தி நிபுணத்துவம். ஒத்துழைப்பு என்ப வற்றிற்கு அளவேயில்லை. சோவியத் யூனியனுக்கும் ஏனைய ப.பொ. உ. க. நாடுகளுக்குமிடையிலான ஒரு முக்கிய தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்கியும், வர்த்தக விரிவாக்க நெம்புகோலும் இதுவேயாகும்.
தற்போதைய ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இந் நாடுகளுக்கான சோவியத் யூனியனின் இயந்திர மற்றும் சாதனங்களின் விநியோகம் 1.8 தடவைகளால் அதிகரிக்கும். அந்நாடுகள் சக்தித் தொழில், உலோகவியல், விவசாயம் போன்ற பல துறைகளை விரிவாக்கவும் நவீனப்படுத்தவும் இது ஏதுவாகிறது. உதாரணமாக நிறுவப்பட்டுள்ள நீர் மின்சக்தி மற்றும் அணுச் சக்தி நிலையங்களின் ஆற்றல் 176 லட்சம் கிலோ வாட்களாகும். சகோதர நாடுகள் பத்தாயி ரக்கணக்கான சோவியத் டிராக்டர்கள், டிரக்குகள், கார் கள், பல்வித உற்பத்திஇயந்திரங்கள் என்பவற்றைப் பெறும். ப.பொ. உ. க. வின் நடவடிக்கைகளும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான உறவுகளும் சோஷலிஸ் சர்வதேசி யத்திற்கான தோர் உதாரணமே. சோ. க.க.வின் 25வது காங்கிரஸில் சோ. க.க. மத்திய கமிட்டி பொதுச் செயலா ளர் எல்.ஐ. பிரெஷ்னேவ் ஒரு புதுர கபொருளாதாரப் பிணைப் புகளின் நன்ம்ைகளைப்பற்றிக் குறிப்பிடும்போது இல்வாறு கூறினர்: "இது, போதியளவு பரஸ்பர பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல, மாரு க மகத்தான அரசியல் முக்கி யத்துவம் மிக்கதாகும். இது எமது சமாஜத்தின் பொரு ளாயத அடித்தளத்தை வலுப்படுத்துவதுமாகும்'.
-- பிராவ்தா, மார்ச் 12, 1977

சமாதானத்திற்கும் இணக்க அமைதிக்குமான போராட்டம்
* ஆயுதப் பரிகரணத்தின்
முன்னணியில்
* நியூட்டன் குண்டு
சமாதானத்திற்குச் சவால்

Page 23
வி. இஸ்ரயேல்யன்
ஆயுதப் பரிகரணத்தின் முன்னணியில்
νακακαρεωκια,
ஆயுதப் பரிகரண நடவடிக்கைகளுக் குத் தடையாயிருப்பதெது? சம்பந் தப்பட்ட தரப்புகளின் நிலைபாடு களை ஒப்பிடுவதன் மூலமும் ஆயு தக் குறைப்பு பற்றிய அரசாங்கங் களின் அறிக்கைகளை ஒப்பிடுவதன் மூலமும் இதற்குரிய விடையை யளிக்கலாம்.
1978 மே-ஜூன் மாதங்களில் ஆயுதப் பரிகரணம் பற்றிய பிரச்னைகள் சம்பந்தமானதோர் விசேட கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் முனைப்பான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1977 இறுதிப் பகுதியில் நடந்த ஐ.நா. பொதுச்சபையின் 32வது கூட்டத் தொடரில் இப் பிரச்னைகளுக்கு அதிக முக் கியத்துவமளிக்கப்பட்டது.
யாதார்த்த பூர்வ அணுகுமுறையை அடியொற்றிய எல்லா ஆக்கபூர்வமான பிரேரணைகளும் போரா யுதங்களைக் கட்டுப்படுத்தல், ஆயுதப் பரிகாரணம் சம்பநதமான பிரச்னை களுக்குத் தம் பங்களிப்பைச் செய்வதாகவே அமைகின்றன. அதேவேளையில் இப்போது நடைபெறும் இப்பிரச்னை (கறித்த பரவலான, அர்த்தமுள்ள பேச்சு வார்தைகள் நல்ல தீர்வைக் காணலாம் என்ற போக்கை வெளிப்படுத்துவதா யிருக்கின்றன. பொறுப்பான பதவிகளிலுள்ளவர்களுட்பட சில மேற்கத்திய அரசியல்வாதிகள், அரசியல் சதுரங்கத் தின் ஒரங்கமாகவே ஆயுதப் பரிகரண சுலோகத்தையும் பிணக்குகளுக்கானதாகப் பா விக்கிரு ர்கள்.

சமாதானத்திற்கும்-இணக்க அமைதிக்குமான போராட்டம் 43,
முடிவமைதியின் நலன்களில்
மனித சங்காரத்திற்காக அணுச் சக்தி கொண்ட ஆயு தங்களை உற்பத்தி செய்வதையும் பாவிப்பதையும் தடை செய்யவேண்டுமென ஒரு நகல் கோரிக்கையை(1946ஜூனில்) முதற் தடைவையாக முன்வைத்தது சோவியத் யூனியனே, அன்றுமுதலே தேசங்களின் ஆயுதசாலைகளிலிருந்து நாச கார ஆயுதங்களை அகற்றுவதற்காகவும் அணுவ யுதங்களைப் பாவிப்பதைத் தடைசெய்வதன் மூலமும் இந்நோக்கம் முன் னெடுத்துச் செலலப்பட்டது. 1972ல், சோவியத் யூனிய னின் முன் முயற்சியினுல் சர்வதேச உறவுகளில் பலப்பிர யோகத்தைத் தவிர்ப்பதையும், அணுவாயுதங்களை நிரந் தரமாகப் பாவிக்காதிருப்பதையும் நோக்க யாகக் கொண்ட ஒரு தீர்மானத்தை ஐ நா - சபை நிறைவேற்றிற்று. 1976 ல், அணுவாயுதங்களுட்பட எல்லாவித ஆயுதங்களே யும் தடைசெய்ய வல்ல சாவதேச உறவுகளில் பலப் பிர யோகம் செய்யாதிருப்பது மீதான ஒரு உலக ஒப்பந்தத் தைச் செய்ய சோவியத் யூனியன் பிரேரணை கொண்டுவந் தது. கடைசியில், ஏனைய சோஷலிஸ் நாடுகளுடனிணைந்து ஐரோப்பாவில் பந்தோபஸ்தும் ஒத்துழைப்பும் பற்றிய மாநாட்டின் இறுதித் த ஸ்தாவேஜில்  ைகச்சாத்திட அனை வரும் ஒரு வ 1 க் கெதிராக மற்றவர் அணுவா யுதங்களை பிர யோகிப்பதை தவிர்க்க வேண்டும் எனற பிரேரணையை 1976ல முன்வைத்தது.இப் பிரச் னகள் சம்பந்தமான பொரு த்த மான நகல் ஒப்பநதங்கள் தயாரிக்கப்பட்டன.
சமீப ஆண்டுகளில் சோவியத் யூனியன் தனது இராணுவ செலவுகளைக் குறைத்துள்ளது. எனவே 1977 அரச பட்ஜெட் விதிக்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளுக் கான செலவு 1,720 கோடி ரூபிள்கள் அல்லது மொத்த செல வினத்தில் 7.2 சதவீதமேயாகும். இது 1976ல் 1740 கோடி ரூபிள்கள் அல்லது 7, 8 சத வீத மும்; 1974ல் 1760 கோடி ரூபிள்கள் அல்லது 9.1 சதவீத முமாகும். -
ஆனல் மேற்குலகிலோ நிலைமை வேரு கவுள்ளது. அமெரிக்கா 1978ல் இராணுவ நடவடிக்கைகளுக்காக சுமார் 11,000 ஆகா டி டாலர்களை செலவிடவிருக்கிறது. ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு பண்டஸ் வரை நவீன ஆயுதங் களால் ஆயுதபாணியாக்குவதற்கு மட்டும் இராணுவ செல வினத் ை 80 சக வீதத் "ால் 1971 ல் அகி கரிக் தது. பிரித் தானியாவில் 1976-1977 ஆண்டிற்சான இராணுவ பட்ஜெட் மட்டும் 100 கோ டி பவுண்களால் அதிக 1 க்கப்பட்டது ஏனய நேட்டோ நாடுகளிலும் இராணுவ பட்ஜட் பெரு, ம ளவு அதிகரித்துள்ளது.

Page 24
4'4 சமாதானத்திற்கும் இணக்க அமைதிக்குமான போராட்டம்
கடந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனே அல் லது வார்ஸோ ஒப்பந்த அங்கத்துவ நாடுகளோ தமது இராணுவ பலத்தை அதிகரிக்கவில்லை.
சோவியத் யூனியன் உருவான இந்த அறுபதாண்டு களில் போராயுதங்களுக்கு முடிவேற்படுத்துவதிலும் ஆயு தப் பரிகரணத்தை மேற்கொள்வதிலுமான போராட்டத் தின் முன்னணியில் அது எப்போதுமே இருந்துள்ளது. சோ. க. க. 25வது காங்கிரஸில் எல். ஐ. பிரெஷ்னேவ் இவ்வாறு கூறினர்: "" போராயுதங்கள் தொடர்ந்தும் இருப் பதினுல் ஏற்படப்போகும் ஆபத்திலிருந்து மக்களை விடு விக்கின்ற போராளிகளின் முன் வரிசையிலிருக்கும் கஷ்ட மான மகத்தான பணியையிட்டு சோவியத் கம்யூனிஸ்டுகள் பெருமித மடைகிருர்கள்."
சோவியத் பிரேரணைகளின் தனித்துவம் என்ன?
ஆயுதப் பரிகரணம் சம்பந்தமான சோவியத் பிரே ரணைகளை உண்மையில் தனித்துவப்படுத்துவதெது?
பேச்சுவார்த்தைகளிலும், ஒப்பந்தங்களிலும் கைச் சாத்திட்ட அனைவர்க்கும் சம பாதுகாப்பு என்ற கோட் பாட்டைக் கண்டிப்பாகக் கடைபிடிப்பதிலேயே அவை தங்கியுள்ளன. பேச்சுவார்த்தைகளிலும், ஒப்பந்தங்களிலும் பங்குபற்றிய எந்தவொரு நாடும் ஆயுதக் கட்டுப்பாட்டின், ஆயுதப் பரிகரணத்தின் பலனுக எவ்வித இராணுவ அனு: கூலத்தையும் பெறுவதை சோ வ யத் யூனியன் வன்மையாக எதிர்க்கிறது. ஆயுதப் பரிகரணப் பிரச்னை உலக வியாபக மானதும், அனைத்து நாடுகளும் மக்களும் அதன் தீர்வுக்கு அக்கறை காட்டுகிறர்கள் என்ற கருத்தினடிப்படையி லேயே சோவியத் ஆயுதப் பரிகரணப் பிரேரணைகளமைந் துள்ளன. எனவே ஆயுதங்களுக்கு முடிவேற்படுத்துவதி லான வழிவகைகள் அனைத்து நாடுகளும் ஆர்வத்தோடு பங்கு பற்றுவதன் மூலமே வெளிப்படமுடியும். ஆயுதப் பரி கரணப் பிரச்னைகளுக் குத் தீர்வு காண ஒவ்வொரு நாடும் தன் பங்களிப்பைச செய்ய வேண்டியதை உறுதி செய்ய வேண்டுமென விரும்பும் சோவியத் யூனியன் ஒரு உலக ஆயுதப் பரிகரண மாநாட்டிற்காக எல்லா உலக நாடுகளும் பங்குபற்றுவதற்கான தோர் பிரேரணையை முன்வைத்துள் ளது. ஆயுதப் பரிகரணம் சம்பந்தமாக ஒரு விசேட ஐ.நா கூட்டத் தொடரை நடத்துவதற்கான தயாரிப்புகளிலும் அது ஆர்வமிக்க பங்கை வகிக்கிறது.

சமாதானத்திற்கும் இணக்க அமைதிக்குமான போராட்டம் 45
ஆயுதப் பரிகரணத்திற்கான சோவியத் யூனியனின் முனைப்பானதும், ஸ்திரமானதுமான போராட்டம் சோவி யத் சோஷலிஸ் அமைப்பின் இயல்பிலேயே வேரோடிய தாகும். சோவியத் யூனியன் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையே சோ. சோ. கு. ஒன்றிய புதிய அரசியல் யாப்பில் இடம் பெற்றுள்ளது. சோவியத் யூனியனில் யுத்தப் பிரசாரம் முற்ருகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
பொதுவானதும் முழுமையானதுமான ஆயுதப் பரி கரணம் என்ற ஈற்று இலக்கை எய்த எத்தனிக்கும் சோவி யத் யூனியன் ஆயுதக் கட்டுப்பாட்டிற்கும் ஆயுதப் பரி கரணத்தை எய்துவதற்குமான தனிப்பட்ட நடவடிக்கை களை மேற்கொள்வதற்கான உறுதியான பிரேரணைகளை முன்னெடுத்து வருகிறது. இவ்வாரு ன பல பிரேரணைகள் அடிப்படை சர்வதேச ஆயுதப் பரிகரண ஒப்பந்தங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இராணுவ அல்லது சுற்ருடலை மாற்றும் நுணுக்கமான நடவடிக்கைகளைத் தடுக் கின்ற ஒப்பந்தம் ஏற்று க் கொள்ளப்பட்டதானது 1974 ல் நடந்த பொதுச் சபையின் 29வது அமர்வில் ஏற்றுக்கொள் வதற்காக சோவியத் யூனியனுல் முன்வைக்கப்பட்ட பிரேரணையாலும் நகல் ஒப்பந்தத்தாலுமே நிறைவேற்றப்
.[L"-L-gj لL
எண்ணற்ற சோவியத் பிரேரணைகளின் மீதான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. தாக்கம் மிக்க பவ ஆயுதப் பரிகரண பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால் அவற்றை ஆக்கபூர்வமான, பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத் தத்க அடிப்படையில் தீர்க்க பொய்யானசாக்குப் போக்குக ளால் மறுதலித்துவந்த தேசங்களின் மீதே எல்லாவற்றிற்கும் மேலாகப் பொறுப்பு தங்சியுள்ளது. ஆயுதக்குவிப்பிலும், சர்வ தேச பதட்ட நிலையைக் கிளர்த்துவதிலும் அக்கறை கொண் டுள்ள இராணுவவாத வட்டாரங்கள் ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்குத் தடையாயிருக்கின்றன. குற்றத்தை வேறு இடத்தில் சுமத்தும் அவை சோவியத் யூனியனின் பாது காப்பு நடவடிக்கைகளுக்குத் தவரு ன அர்த்தம் கற்பிக்க முனைவதோடு மோசமான சோவியத் விரோத பிரசாரத் திலும் ஈடுபடுகின்றன.
இவ்வாருண குரூர அவதூறுகளிலிருந்து உண்மை விடு விக்கப்பட்டுள்ளது. தனது பாதுகாப்பை சீரமைக்க சோவி யத் யூனியனுக்கு வேண்டியுள்ளது. காரணம் ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கட்டுப்பாடற்ற ஆயுதங்களால் - விசேடமாக நேட்டோ நாடுகளில் சோவி யத் யூனியனை எதிர்த்து நிற்கின்றது.
Y.

Page 25
46 சமாதானத்திற்கும் இணக்க அமைதிக்கமான போராட்டம்
தானததற
எனினும் கடந்த 10-15 ஆண்டுகளில் ஆயுதக் குறைப்பு, பரிகரணம் சம்பந்தமாக சுமார் இருபது ஒப் பந்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்ற உண்மை மறுதலிக்க முடியாததே. இந்த எல்லா ஒப்பந்தங்களிலும் சோவியத் யூனியனுனது அவற்றை முன்வைத்ததாக அல் லது அவற்றைத் தயாரிப்பதில் ஆர்வத்தோடு பங்குபற் றிய தேசமாகவே திகழ்கிறது.

எவ்ஜெனி பயதொரோவ்
நியூட்ரன் குண்டுசமாதானத்திற்குச் ச வால்
3D- 6U 5 சமாதானக் கவுன்ஸிலின்
உதவித் தலைவரும், சோவியத் சமா தானக் கட்டி துணைத்தலைவருமான பேரவையாளர் எவ் ஜெனி பயதொ ரோவ் எமது நிருபருக்களித்த பேட் டியை இங்கு வெளியிடுகிருேம்.
ட்ெசக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் பிரதி பலிக்கும் உலக சமாதானக் கவுன்ஸிலானது பேரழிவை ஏற்படுத்தவல்ல புதிய வகை ஆயுதங்களை-நியூட்ரன் அணுவாயுதங்களையும், கப்பல் ஏவுகணைகளையும்-உருவாக் கவும், விஸ்தரிக்கவுமான பாதையை அமெரிக்கா மேற் கொள்கிறது என்ற தகவல் குறித்து கடுமையாக எதிரொ லிக்கிறது.
அமெரிக்காவின் இந் நடவடிக்கைகள் முழு உலகிற் குமே ஒரு சவாலாகும். வாஷிங்டன் ஆயுதப்போட்டியை கட்டுப்படுத்துவதற்கு மாருக அதை முடுக்கிவிடுவதை இவை காட்டுகின்றன. நியூட்ரன் குண்டை "தூய" ஆயு தம் எனக் கூறிய பென்டாகனின் கூற்று மக்களை ஏமாற் றும் அபத்தமாகும். யுத்தகளத்தில்போருபாயஆயுதமாகவே நேரடியாக நியூட்ரன் ஆயுதங்கள் பாவிக்கப்படும் என் பதும் இவர்களின் வாதமாகும். அவற்றைப் பாவித்தா லும் அது பெரியதோர் அணுப்போருக்கு இட்டுச்செல் லாது என அர்த்தப்படுத்தவே இவர்கள் முயற்சிக்கிருர் கள். இவ்வித தர்க்கங்களின் தவறுகளும், அபாயங்களும் வெளிப்படையானவையே. அணுவாயுத போரபாய விளிம்

Page 26
48 சமாதானத்திற்கும் இணக்க அமைதிக்குமான போராட்டம்
புக்கே உலகை இட்டுச் செல்லக்கூடிய நடைமுறை நடவ டிக்கைகளை நியாயப்படுத்தவும், ஆதரிக்கவுமான முயற்சி களை மறைகக அவர்கள் எத்தனிக்கிருர்கள். அமெரிக்க அரசாங்கத்தின் இவ்வாறன நடவடிக்கைகள் சமாதானம், ஆயுதக்குறைப்புப் பாதுகாப்பிற்கான அதன் வாய்ச் சவ L-ITGi பிரகடனங்களுக்கு எதிராகவே அப்பட்டமாக அமைந்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவால் பிரகடனப்படுத் தப்பட்ட அணுவாயுத பரவல் தடையைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்கும் போக்கிற்கு எதிராகவும் இவை இருக்கின் றன. ஆயுதக் கட்டுப்பாடு பற்றிய தற்போதைய பேச்சு வார்த்தைகளுக்கு இப் போக்குகள் ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளைப்பற்றி ஐக்கிய அமெரிக்காவிலேயே பார தூரமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
リ S!, s போரா யுதங்களுக்கு விசேடமாக அணுவாயுதங்க ளுக்கு முடிவேற்படுத்த முனைப்பான போராட்டத்தை மேற் கொள்ளும்படி ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
நேட்டோவின் திட்டங்களுக்கேற்ப அமெரிக்க நியூட் ரன்' ஆயுதங்கள் பரவக்கூடிய அபாயமுள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை யிட்டு பெருங்கவலை ஏற்பட்டுள்ளது. அவ்வாருன நோக் கங்களெல்ல்ாம் ஐரோப்பாக் கண்டத்தில் சமாதானத்தை யும், பந்தோபஸ்தையும் பலப்படுத்தும் கடமைக்கு விரோ தமாகவே , இருக்கின்றன. ஐரோப்பாவின் எதிர்காலத் தைக் கெடுதிமிக்கதோர் ஆபத்து எதிர்நோக்குவதை அவர் கள் உணர்கிருர்கள். எனவே எல்லா ஐரோப்பிய நாடுகளி லும் நியூட்ரன் குண்டுக்கெதிராக விரிவான இயக்கம் உரு வாகிவருகிறது. அதனல் நியூட்ரன் ஆயுத உற்பத்தி, பரவ லாக்கம் என்பதற்கான அமெரிக்க அதிகார வர்க்கத்தின் தீர்மானத்தைக் கண்டிக்கும் உலக சமாதான கவுன்ஸிலின் அறிக்கை பொதுமக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள் ளது.
உலகனைத்திலுமுள்ள லட்சோப லட்சம் மக்கள் இப் புதிய குண்டிற்கெதிரான போராட்டத்தில் அக்கறையோடு
ஈடுபடுகிறர்கள்:
சோவியத் சம்ாதர்னக் கமிட்டி விடுத்த அறிக்கை யொன்று அமெரிக்க இராணுவத்தின் திட்டங்களைக் கண் டிப்பதோடு உலக சமாதான கவுன்ஸிலின் முன்முயற்சிக
ளையும் ஆதரிக்கிறது.
சோஷலிஸ சமாஜ நாடுகளில் நியூட்ரன் குண்டிற்கெதி ராக நடத்தப்படும் பரந்த இயக்கத்தை ஆதரித்து எண்
' ' ' ' + )' ' ' , ༣ ༥༥ " , . في ؟ في .

சமாதானத்திற்கும் இணக்க அமைதிக்குமான போராட்டம் 49
ணற்ற செய்திகளும், அறிக்கைகளும் வந்தபடியேயிருக்கின் றன.
போலந்து, ரூமேனியா, ஜெ. ஜ. கு, செக்கோஸ்லவாக் கியா, பல்கேரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் தொழி லாள மக்கள் இப் புதிய நாசகார குண்டு ** வேண்டாம்’ என மிக அழுத்தமாகக் கூறிவிட்டனர். போராயுதங்களின் விஸ்தரிப்பக் கொள்கைக்கெதிராக மேற்கு ஐரோப்பாவில் பொது ஊர்வலங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. சமாதானத்திற்காக அமெரிக்கா, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் மக்கள் குரலெழுப்புகிமு ர்கள்.
சோவியத் மக்கள் நிரந்தர சமாதானத்தையே விழை கின் ருர்கள். எனவே அவர்கள் போரா யுதங்களை உறுதி யோடு எதிர்ப்பதோடு, சோ. க.க வினதும் சோவியத் அர சாங்கத்தினதும் லெனினிய அயல்நாட்டுக் கொள்கையை முழுமனதோடு ஆதரிப்பதோடு ஏற்றுக்கொண்டுமிருக்கி ருர்கள்.
இக்கொடிய ஜனசங்கார ஆயுதத்தைத் தடுக்குமுக மாக உடனடி நடவடிக்கைகளெடுக்கும்படியும், மனித னின் மகத்தான உரிமையாம் வாழும் உரிமையைப் பேணிப் பாதுகாப்பதன் பொருட்டு உறுதியோடு முன்வரும்படியும் அனைத்து மக்களுக்கும் சோவியத் மக்கள் அழைப்பு விடுக் கிருர்கள்.

Page 27
و ... با هه و
பொருளாதா 5, a v. 大 ற்றத்திற்காக

சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக
தாம் முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதாரக் கடமைகளுக்குத் தீர்வு காணப் பங்களிக்கின்ற ஆசிய, ஆபி ரிக்க, லத்தீனமெரிக்க நாடுகளுடன் விரிவான, பரஸ்பரம் அனுகூலமிக்க ஒத்துழைப்புக்காக சோவியத் யூனி யன் முரணின்றியும் இடைய முதும் போராடி வருகின்றது.
மூன்ரும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ராஜ்ய வாதிகளும் பொதுவாழ்வுப் பிரமுகர்களும் இத்தகைய ஒத் துழைப்புக்கு ஆதரவளிக்கின்றனர். விமோசனமுற்ற நாடு கள் சோவியத் யூனியனை நம்பகமான் பங்காளியாகக் காண் கின்றன. சோவியத் யூனியன் தனக்கென எந்தவிதமான பயன்களையும் அநுகூலங்களையும் விழைவதில்லை. ஆனல், அது தனது உறவுகளை சமத்துவம், அந் நாடுகளின் இறைமை யின் மீது மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டி எழுப்புகின்றது, காலனித்துவத்திடமிருந்து பெற்ற கொடிய பிதுரார்ஜிதத்தைக் கடக்கவும், ஏகாதிபத்திய வல்லரசுக ளின் நிர்ப்பந்தத்தையும் சுரண் டலையும் ஒழிக்கவுமாக அவற்றிற்கான கஷ்டங்களையும் அனுதாபத்துடன் நோக்கு கின்றது.
வரலாறுபூர்வமான நினைவுகள் சோவியத் ரஷ்யா தனது ஜீவிய காலத்தின் தொடக் கத்தின்போதே காலனிகளிலும், சார்பு நாடுகளிமுலுள்ள
மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக இருந்து வந்தது. கிழக்குலகிலும், உலகம் முழுவதிலுமுள்ள

Page 28
52 சோ.சோ.கு. ஒன்றியமும் வளர்முக நாடுகளும்
மக்களுடனன தனது உறவுகளை சுதந்தரம், சமத்துவம், நட்புறவு பரஸ்பர உதவி ஆகிய கோட்பாடுகளின் அடிப் படையில் கட்டி எழுப்பும் என அது பிரகடனஞ் செய் தது, ஏனைய நாடுகளுடன் ஸாரிஸ் அரசாங்கம் செய்து கொண்டிருந்த சமதையற்ற உடன்படிக்கைகளையும் ஒப்பந் தங்களையும் சோவியத் குடியரசு ரத்துத் செய்தது. அவ் வாறு , ஆப்கானிஸ்தான், ஈரான், சீனு ஆகிய நாடுகளின் செல்வாக்குத் துறைகளைப் பிரிப்பது குறித்து பிரிட்டனு டன் ரஷ்யா செய்துகொண்டிருந்த ஒப்பந்தத் தளைகளை அது ரத்துச் செய்தது. ரஷ்ய எதேச்சாதிகாரத்திற்குச் சொத்தமாக விருந்த எல்லாச் சலுகைகளையும், நிலங்களை யும், சொத்துக்களையும் ஈரான், ஆப்பானிஸ்தான், மங்கோ லியா, துருக்கி ஆகியவற்றின் மக்களுக்கு அது மாற்றியது. சோவியத் ருஷ்யா அவற்றிற்குப் பொருளாயத உதவி களையும் வழங்கிற்று. அவ்வாறு. 1920ம் ஆண்டுகளின் போதும் 1930ம் ஆண்டுகளின்போதும் விவசாயத்தை உயர்த்துவதற்காக ஆப்கானிஸ்தானுக்கும், மத்திய் கிழக் கின் அருகாமையில் மிகப்பெரிய புடவை ஆலையை நிறுவுவ தற்காக துருக்கிக்கும் நீண்டகாலக் கடன்களை சோவியத் யூனியன் வழங்கிற்று. அரபு மக்களுடனும், ஆபிரிக்க மக்க ளுடனும், ஏனைய மக்களுடனும் பரஸ்பரம் அநுகூலமிக்க பொருளாதார, வர்த்தக உறவுகளை ஸ்தாபிக்க அது விழைந்தது. ஆனல் யுத்தத்திற்கு முன்னர், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் காலனி களாகவும் அரைக் காலனிகளாகவும் இருந்ததால் இந்த தொடர்புகளையும் உறவுகளையும் விரிவான அளவில் "அபி விருத்தி செய்யமுடியவில்லை.
இரண்டாம் உலகப் போரின் (1939-1945) பின்னர் உலக சோஷலிஸ் அமைப்பின் ஸ்தாபிதம், காலனித்துவத் தின் சிதைவு ஆகியவற்றின் காரணமாக நிலைமை தீவிர மாக மாறியது. முன்னைய காலனிகளும், அரைக் காலனி களும் அரசியல் சுதந்திரத்தை வென்றெடுத்ததுடன், யாருடன், எந்த அடிப்படையில் பொருளாதார, வர்த்தக உறவுகளை வளர்க்க முடியும் என்பதை தாமாகவே தீர் மானித்துக்கொள்ளமுடியும். இவ்வாறு, வளர்முக நாடுக ளுடனுன பொருளாதார தொடர்புகள் துறையில் மேற் குலகின் ஏகபோகம் குலைக்கப்பட்டது. இன்று, பொரு தாரம், வர்த்தகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய வற்றின் பல்வேறு துறைகளில் வளர்முக நாடுகளும், சோஷலிஸ் நாடுகளும். பயனுள்ள முறையில் ஒத்துழைத்து வருகின்றன. சமதை மிக்க இருவகை நாடுகளுக்குமிடையி லான ஒத்துழைப்பானது, புதிய சர்வதேச உழைப்புப் பிரிவை ஏற்படுத்தும் அளவுக்கு அத்தகைய உயர்ந்த விதத்தில் விரிவடைந்துள்ளது. இது எமது காலத்தின் அறிகுறியாகும். சோஷலிஸ் நாடுகளும், வளர்முக நாடு களும் தமது பொருளாதார மட்டத்தின் வித்தியாசமின்றி

சோ.சோ.கு. ஒன்றியமும் வளர்முக நாடுகளும் 53
ஒவ்வொன்றும் தாம் சமூகப் பொருளாதாரத் துறைகளில் முகங்கொடுத்து வரும் கடமைகளை மேலும் வெற்றிகரமாக இப்போது சமாளிக்கமுடியும்.
வர்த்தகம் - முன்னேற்றத்தின் முக்கியக் காரணி
சோவியத் யூனியனுக்கும், விமோசனமுற்ற நாடுகளுக் கும் இடையிலான வர்த்தகப் பொருளாதார உறவுகளும் ஏனைய, தொடர்புகளும், விசாலமானவையா கும், இரு தரப்பு அடிப்படையில் சார்ந்திருப்பவையாகும். இந்த த் தொடர்புகளும், உறவுகளும் பிற்காலத்தில் துரிதமாக வியாபித்துள்ளன. பல்வேறு சர்வதேச ஸ்தாபனங்கள் குறிப்பிடுவதைப்போல் சோஷலிஸ் நாடுகளுக்கும் இடையி லான வர்த்தகம் அதிகரிக்கின்றது, உலகச் சந்தை வளர்ச் சியின் மிகவும் இயக்கவலுமிக்க காரணிகளில் ஒன்ருக மாறியுள்ளது. 1960 -1974 ம் ஆண்டுகளின்போது, மூன் ரும் உலக நாடுகளுடனுன தனது வர்த்தக அளவை சோவியத் யூனியன் ஏழு மடங்காக அதிகரித்தது. 1976ம் ஆண்டில் இந்நாடுகளுடனுன சோவியத் யூனியனின் வர்த் தகம் 650 கோடி ரூபிள்களாகும்.
வளர்முக நாடுகளுடன் சோவியத் யூனியன் கொண் டுள்ள வர்த்தகமானது மிகவும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் திகழ்கின்றது. அதாவது, சமத்துவமும், பரஸ் பர பயனும், அனுகூலமுமே இவற்றின் அடிப்படை யாகும், முதலாளித்துவ நாடுகளால் பிரகடனஞ் செய்யப் பட்டுள்ள ' சமத்துவ வாய்ப்புகள்', 'தேசிய ஆளுகை”* ஆகிய கோட்பாடுகள் நடைமுறையில் மேற்குலகிற்கு அல் லாமல் வேறு யாருக்குப் பயனளிப்பவை அல்ல.
மூன்ரும் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மேற் கத்தைய நாடுகளின் பொருளாதாரங்களுடன் போட்டி யிடும் அளவுக்கு இல்லாத காரணத்தால் "சமமான வாய்ப் புகள்’’ என்ற பிரச்னைக்கு இடமேயில்லை. காலங்காலமாக இருந்துவரும் தமது பின்தங்கிய நிலைமையைக் கடக்கவும், சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய வும் தொழிற்துறைபொருட்களை உற்பத்திசெய்ய வளர்முக நாடுகள் திர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பொரு ளாதாரத்தில் சிக்க வைப்பதற்காகவும் தமது ஆதிக்கத்தை மீண்டும் ஏற்படுத்தவும் மேற்கு நாடுகள் இவற்றைச் சுரண்டுகின்றன. எனவே, சமதையின்மையையும், பின் தங்கிய நிலைமையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற் கான போராட்டத்தில் முக்கியமான ஆயுதமாகக் காணப் படுவது சார்பினைத் ஒழித்துக் கட்டுவதாகும் என்பது தற் செயலானதல்ல. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமேரிக்க

Page 29
54 சோ.சோ.கு. ஒன்றியமும் வளர்முக நாடுகளும்
நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான பண் டங்களுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டினை முதலாளித்துவ நாடுகள் விதிக்கின்றன. இவை அந்நாடுகளின் முன்னேற். றத்திற்குப் பெருந் தடையை விதிக்கின்றன.
மறுபுறத்தில் பார்க்கின்றபோது, சோவியத் யூனிய னும் இதர சோஷலிஸ் நாடுகளும் 1965ம் ஆண் டி ல ஆபி ரிக்க, ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீதான சுங்க வரியை மறுபரிசீலனை செய்து மாற்றியமைத்துள்ளன. இதன் மூலம் பரஸ்பர வர்க்கத் திற்கு புதிய உந்து சக்தியை அளித்துள்ளன.
வளர்முக நாடுகளுக்கான ஏற்றுமதிகளில், அவற்றின் தேசிய பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய மான தொழிற்துறைச் சாதனங்களே பிரதான இடத்தை வகிக்கின்றன. சோவியத் ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங் குக்கு அதிகமானவை இயந்திரங்களும் சாதனங்களுமேயா கும். தனது கொள்வனவுக்கு எளிதான முறையை உருவாக் கும்பொருட்டு, விசேடமாக பூரண ஆலையையும் விநியோ கஞ்செய்யும் பொருட்டு சோவியத் யூனியன் மிகவும் சாத கமான வர்த்தகக் கடன்களை வழங்குகின்றது.
இதற்கு மாருக, வளர்முக நாடுகளிலிருந்து அவற்றின் ஸ்திரமான உற்பத்திப் பொருட்களையும், சோவியத் உதவி யுடன் கட்டப்பட்ட தொழிலகங்களின் தொழிற்துறை உற்பத்திப் பொருட்களையும் சோவியத் யூனியன் இறக்கு மதி செய்கின்றது. அடிக்கடி இவை சோவியத் யூனியனிட மிருந்து பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்கும முகமா கவே மேற்கொள்ளப்படுகின்றன. செய்திஸ்கிர் அலுமினி யம் ஆலையை நிர்மாணிப்பதற்கு சோ.சோ.கு. ஒன்றியம் வழங்கிய கடன்களைத் திருப்பிக்கொடுக்குமுகமாக துருக்கி அலுமினியத்தை விநியோகஞ் செய்கின்றது.
பொருளாதார ஒத்துழைப்பு
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடனன சோவியத் யூனியனின் பொருளாதாரத் தொடர்புகள் வர்த்தகத் தொடர்புகளோடு மாத்திரம் வரையறை கொண்டிருக்கவில்லை. -
- இன்று இந்நாடுகள் பல்வேறு பொருளாதாரத் துறை
களில் விரிவாக, ஒத்துழைத்துவருகின்றன. இந்த ஒத்து
ழைப்பு திட்டமிட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்
டுள்ளன. இளம் சுதந்திர நாடுகளின் தேசிய வேலைத்திட்
டங்களுடன் இசைவானவையாக உள்ளன. வளர்முக நாடு
கக்ளுகு வழங்கப்பட்டுள்ள பொருளாதார தொழில்நுட்ப
'', '్య
· (გაზზუჯ’’** ' *
 

சோ.சோ.கு, ஒன்றியமும் வளர்முக நாடுகளும் - 55
உதவிகளில் முதலிடம் பொதுத் துறைக்குரியதாகும்: இவையே மூன்ரும் உலக நாடுகளில் மேலும் முற்போக் கான மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான பொருளா தார அடித்தளமாக உள்ளன. இந்தத் துறையின் வியாபித மn னது விமோசனமுற்ற நாடுகளின் நலன்களுக்குப் பொருத்தமானவையாக இருப்பதோடு, தமது பொருளா தார ஆற்றல் வளங்களின் வளர்ச்சிக்கும், தமது சொந்த உற்பத்தி வசதிகளைத் தோற்றுவிக்கவும பங்களிக்கின்றன.
பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பானது, மூன்ரும் உலகில் முக்கிய பொருளாதாரப் பிரிவுகளைத் தோற்றுவிக்கும் மார்க்கத்தைக் கொண்டதாகும். இவ் வாறு, சோவியத் யூனியன் அளித்துவரும் நிதியில் 90 சத வீதமானவை உற்பத்தித்துறைக்கும், இதில்70சத வீதத்திற் கும் அதிகமானவை தொழில்துறை மற்றும் மின் உற்பத் தியின் வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொழிற்பேட் டைகள், மின் இயக்கம், நீர்ப்பாசனம் மற்றும் ஏனைய திட்டங்களை நிர்மாணிக்கவும் அவற்றை நவீனப்படுத்தவும் இயற்கை வளங்களைக் கண்டறியவும், தேசிய ஆளணிகளைப் பயிற்றுவிக்கவும் சோவியத் யூனியன் பங்களிப்புச் செய் கின்றது.
பல்வேறு நிர்மாணத் திட்டங்கள் 1 15ஐக் கட்டுவதற் காக சோவியத் யூனியன ஆப்கானிஸ்தானிற்கு உதவிவரு கின்றது. இவற்றில் 69 ஏற்கனவே இயங்கிவருகின்றன. சோவியத்-ஈராக் நட்புறவு, ஒத்துழைப்பு உடன்படிக்கை 100க்கதிகமான நிர்மாணத் திட்டக்களைச் சோவியத் உத வியுடன் கட்டுவதற்கு வகைசெய்கின்றது. இவற்றில் 40க் கும் அதிகமானவை ஏற்கனவே செயல்பட்டுவருகின்றன. தார்த்தார் - ஈஃபரேட்ஸ் கால்வாயின் முதல் பகுதி ஏற்க னவே திறக்கப்பட்டு விட்டது. வடக்கு ரூ கெய்லா வில் எண் ணெய் வயல்களை அபிவிருத்தி செய்ய சோவியத் நிபுணர் கள் உதவி வருகின்றனர். இது, ஆண்டொன்றுக்கு 420 லடசம் தொன் எண்ணெய்யை உற்பத்திசெய்ய வகை செய் யும். இந்தியாவுக்கும் சோவியத்யூனியனுக்குமிடையிலான ஒத்துழைப்பும் வெற்றிகரமாக வளர்ந்துவருகின்றது. பொதுத்துறையைச் சேர்ந்த 70 மிகப்பெரிய தொழிலகங் களைக் கட்டுவதல் சோவியத் யூனியன் பங்கெடுத்துவருகின் றது. இந்திய இரும்பு மற்றும் உருக்குத் தொழில்துறைக் குத் தேவையான 80 சதவீதமான சாதனங்களையும், மின் சக்தி நிலையங்களுக்குத் தேவையான 60 சதவீத ஊதுலை யையும், 30 சதவீத உருக்கையும் உற்பத்தி செய்வதற்கு சோவியத் பொருளாதார, தொழில்நுட்ப உதவியால் நிர் மாணிக்கப்பட்ட தொழிற்சாலைகள் உதவுகின்றன.
சோ.சோ கு. ஒன்றியத்திற்கும், ஆபிரிக்க நாடுகளுக்கு மிடையே பொருளாதார ஒத்துழைப்புவளர்ந்து வருகின்றது.

Page 30
S6 சோ.சோ.கு. ஒன்றியமும் வளர்முக நாடுகளும்
சோவியத் யூனியனின் பங்கெடுப்புடன் அல்ஜீரியாவின் பொதுத்துறையைச் சேர்ந்த 30 தொழிலகங்கள் நிர்மா ணிக்கப்பட்டுள்ளன, அல்லது புனர் நிர்மாணஞ் செய்யப் பட்டுள்ளன.
ஆண்டொன்றுக்கு 25 லட்சம் தொன் அலுமினியம் உள்ள மண்அகழ்வுப் பேட்டையை சோவியத் யூனியன் கினி யாவுக்குக் கட்டிக்கொடுத்துள்ளது. கொங்கோ மக்கள் குடியரசில், சோவியத் யூனியன் பூகர்ப்பவியல் வளங்களை கண்டுபிடிப்பதில் பங்கெடுத்துவருகின்றது. நைஜீரியா வில் எண்ணற்ற பல நிர்மாணத் தி ட்டங்கள் கட்டி எழுப் பப்பட்டுவருகின்றன. ஆண்டுக்கு 13 லட்சம் தொன் உருக் கினை உற்பத்தி செய்யும் உலோக ஆலை ஒன்றுக்கான திட் டத்தை சோவியத் நிபுணர்கள் தயாரித்துவருகின்றனர். ஆண்டொன்றுக்கு 625000 தொன் கொள்வன வைக் கொண்ட எண்ணெய் பதனிடும் ஆலையை ஆஸாப்பில் கட்டி முடிப்பதற்கு சோவியத் யூனியன் எதியோப்பியாவிற்கு உதவிவருகின்றது.
லத்தீன மெரிக்க நாடுகளுடனன வர்த்தகப் பொரு ளாதார உறவுகளில் அண்மைக் காலத்தில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
தேசிய ஆளணிகளைப் பயிற்றுவிப்பது பொருளாதார ஒத்துழைப்பில் முக்கிய இடத்தை வகிக்கிறது. சோவியத் உதவியுடன், வளர்முக நாடுகளில் சுமார் 50 கல்வி நிறுவ னங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன, சுமார் 60 கல்வி நிறு வனங்கள் நிர்மாணிப்பின் கீழ் உள்ளன. இவற்றின் மத்தி யில், ஆப்கானிஸ்தான், கினி ஆகியவற்றில் பல்தொழில்! நுட்பக் கழகமும், பர்மாவில் ரங்கூன் தொழில்நுட்பக் கழ கமும், அல்ஜீரியாவில் எண்ணெய், வாயு, இரசாயனம் ஆகியவற்றுக்கான தேசியக் கழகமும், இந்தியாவில் பம் பாய்த் தொழில்நுட்பக் கழகமும் அடங்கும். எண்ணற்ற பல மூன்ரும் உலக நாடுகளில், தேசியப் பொருளாதாரத் திற்கான தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் கல்விக்கேந் திரங்களை அமைக்க சோவியத் யூனியன் உதவி வருகின்றது. சோவியத் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் பல்வேறு திட் டங்களின் நிர்மாணத்தின் போதும், பின்னர் அவை செயல் படும்போதும்கூட தேசிய ஆளணிகள் பயிற்றுவிக்கப்படு கின்றனர். வளர்முக நாடுகளிலிருந்துவரும் எண்ணற்ற இளம் மக்கள் சோவியத் கழகங்களில் கல்வி பெறுவதோடு சோவியத் தொழிலகங்களில் நடைமுறை பயிற்சியையும் பெறுகின்றனர். இதுவரை சோவியத் யூனியன், வளர்முக நாடுகளுக்கு 500000 தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை யும், நிபுணர் களையும் பயிற்றுவிக்க உதவியுள்ளது.

----
சோ.சோ.கு. ஒன்றியமும் வளர்முக நாடுகளும் 57
வாய்ப்புகள்
மூன்ரும் உலக நாடுகளுடன் சமத்துவம், பரஸ்பரம் பயன் அடிப்படையிலான சோவியத் யூனியனின் பொரு ளாதார ஒத்துழைப்பானது, உலகில் விமோசனமுற்ற நாடு களுக்கான புதிய சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றது. பொருளாதார சுதந்திரத்திற்காகவும்; ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தம், கெடுபிடிக் கெதிராகவுமான போராட்டத்தில் அவை, சோவியத் யூனியனையும் ஏனைய சோஷலிஸ் நாடு களையும் நம்பியிருக்க முடியும்.
சோ. க. க வின் 25 வது காங்கிரஸ் (பெப்ரவரி மார்ச் 1976) வலியுறுத்தியதைப் போல், வளர்முக நாடு களுடன், நியாயமான, ஜனநாயக ரீதியான, அடிப்படை யில் தொடர்ந்து பொருளாதார மற்றும் ஏனையஒத்துழைப்பு களையும் வளர்க்கவும், அவற்றின் விஞ்ஞான, தொழில் நுட்ப முன்னேற்றத்தை உத்வேகப் படுத்தவும் சோவியத் யூனியன் தயாராக உள்ளது. நைரோபியில் நடை பெற்ற நான்காவது உங்டாட் கூட்டத் தொடரில், (மே 1976) வளர்முக நாடுகளுடனுன வத்தகப் பொரு ளாதார ஒத்துழைப்புத் துறைகளில் ஸ்தூலமான நட வடிக்கை வேலைத்திட்டத்தை சோவியத் தூதுக்குழு முன் வைத்தது. தொழில் துறை மற்றும் ஏனைய தொழிகங்களை உருவாக்குவது முதல் விமோசனமுற்ற நாடுகள் தமக் கென விஞ்ஞான அடித்தளத்தை உருவாக்குவது, தொழில் நுட்பத்தை மாற்றுவது வரை பல்வேறு விரிவான பிரச்னை களை அது உள்ளடக்கி இருந்தது. மூற்ரும் உலகம் முகம் கொடுக்கும் பிரச்னைகளின் திட்டவட்டமான சிறப்பம்சங் களை இவ்வேலைத் திட்டம் முழுமையாகக் கணக்கிலெடுத் துக் கொண்டது.
விரிவானதும், பன்முகப்பட்டதுமான இவ்வேலைத்திட் டத்தின் நடைமுறைப் படுத்தல், ஆசிய, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூகப், பொருளாதார முன்னேற் றத்தை விரிவுபடுத்த உதவும்.

Page 31
வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
k 6J6ITĪpa baGa Garfað,
பொதுத்துறை

Gf. 65 TCGDGF 6
வளர்முக நாடுகளில் பொதுத்துறை
அரசியல் சுதந்திரத்தை எய்துவதா னது, பின் தங்கிய பொருளாதாரத்தைக் கடக்கின்றதும், பொருளாதார சுதந் திரத்தை வலுப்படுத்துவதுமான மிக முக்கிய கடமைகளை இளம் நாடுகளின் முன் வைத்துள்ளது. இப் பிரச்னைக் கான தீர்வில் மிகப் பெரும் பகுதியைப் பொதுத்துறையே வகிக்கிறது.
மூன்ரும் உலக நாடுகள் தமது சுதந்திரமான வளர்ச் சிப் பாதையில் அழுத்துகின்றதும் சிக்கலானதுமான அரசி யல், பொருளாதாரப் பிரச்னை கள் பலவற்றை எதிர்நோக்கு கின்றன. பொருளாயத, நிதி மற்றும் ஏனைய வளங்களின் போதாமை, தேர்ச்சிபெற்ற ஆளணிகளின் போதாமை, உள்நாட்டுப் பிற்போக்கு க்கும் தனது ஆதிக்கத்தை மீண் டும் பெற விழைகின்ற ஏகாதிபத்தியத்தின் முயற்சிக்கும் எதிராகப் போதியளவு தாக்குட் பிடிக்க முடியாமை என்ப  ைவே இவை யாகும். இநதச் சூழ்நிலையில் அரசின் பொரு ளாதாரப் பாத்திரத்தை ஆழப்படுத்துவது-தலையாய முகி கியத்துவ மிக்க காரணியா கிறது. பொருளாதாரத்தில் அரசு சம்பந்தப்பட்டுக்கொள்வது விரிவான வாய்ப்புகளைப் பெற்று வருகின்றது, அதனது செல்வாக்கு பொதுவாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வியா பித்து வருகின்றது. "
அரசும் பொ ருளாத ரமும்
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற் றில் அரசே, நிதி, பொருளாயத மற்றுப உழைப்பு வளங் களை விடாமுயற்சியுடன் அணிதிரடடி அவற்றைத் தேசியப் புனருததாரண நலன்களுக்காகவும், மக்களின் நல்வாழ்வை யும் கலாசார மட்டத்தையும் செம்மையாக்கவும் பயன்

Page 32
re,0 வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
படுத்திவருகின்றது. அது, பொருளாதார உறவுகளின் வளர்ச்சியை, நியாயமான, ஜனநாயக அடிப்படையில் இந்த உறவுகளைப் புனரமைக்க விழையும் நாடுகளுடன் நெறிப்படுத்துகின்றது, திசையமைவாக்குகின்றது.
இந்த முயற்சியினதும் பொருளாதார, சமூக, கலாசார வாழ்வில் அரசு வகித்த மிகப்பெரும் பாத்திரத்தினதும் பெறுபேறு, பொதுத் துறையின் எழுச்சியும் வளர்ச்சியுமே யாகும். இந்தப் பொதுத்துறையானது, வெளிநாட்டு ஏக போகங்கள் வெளிநாட்டுத் தனியார் மூலதனங்கள் ஆகிய வற்றிற்கோ அல்லது உள்ளுர் மூலதனத்திற்கோ சொந்த மாகவிருந்த தொழிலகங்களைத் தேசியமயமாக்கியதஞல் மாத்திரமன்றி, புதிய தொழிலகங்களை நிர்மாணிப்பதன் மூலமும் உருவாக்கப்பட்டவையாகும்.
ஐ. நா. புள்ளிவிபரங்களின் படி, மூன்ரும் உலக நாடு களின் மொத்த தேசிய உற்பத்தியில் பொதுத் துறையின் பங்கு 10 சதவீதத்திற்கும் 55 சதவீதத்திற்கும் இடையில் வேறுபட்டதாக இருக்கிறது. கெமரோனிலும் ஈகுவடோ ரிலும் அது 20-25 சதவீதமாகவும், ஈரானில் 35 சதி வீத மாகவும் இருக்கிறது. துருக்கியில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் பொதுத்துறையானது நாட்டின் மொத் தத் தொழிற்துறை உற்பத்தியில் ஏறத்தாழ அரைவாசியை உற்பத்தி செய்கின்றது. இந்தியாவில் 1975 ம் ஆண்டி ன் தொடக்கத்தில் மின்சாரம், நிலக்கரி, இரும்புக் கலப்பற்ற உலோகங்கள், எண்ணெய்ப் பொருட்கள், புகையிரத சாத னங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் முழுவதையும் அல்லது மிகப்பெரும் பகுதியைப் பொதுத்துறையே உற்பத்தி செய் தது; காப்புறுதி அமைப்பு முழுவதையுமே அது கட்டுப்படுத் திற்று. நீர்ப்பாசனத் துறையில் 52 சதவீதத்தையும் வங்கி வைப்புக்களில் 84 சதவீதத்தையும் சொந்தமாகக் கொண் டிருந்தது.
பொருளாதார சுதந்திரத்தை எய்துவதற்கான மிக முக்கியமான சாதனங்களில் ஒன்ருக பொதுத் தறையை வளர்முக நாடுகள் கருதுகின்றன. ஏனெனில், இப் பொதுத் துறையின் வளர்ச்சியானது, இந்த நாடுகளில் மேற்கத்தைய வல்லரசுகளினதும், ஏகபோகங்களினதும் ஊடுருவலுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கனின் ஏகாதிபத்திய விரோத இயக்கத்தில். பொதுத் துறையானது வலிமைமிக்க கருவியாக தும் பணி புரிகிறது. சில நாடுகளின் அரசாங்கங்கள். தேசிய ஏக போகங்கள் தோற்றம் பெறுவதற்கு எதிராக பொதுத் துறையைப் பயன்படுத்துகின்றன. இறுதியில் தனியார் தொழிலகங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதறகு ப் பொதுத்துறை பயன்படுத்தப்படுகின்றது. V

வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்னைகள் 6. I
பொதுத் துறையும்
எனினும்கூட, வளர்முக நாடுகளில் உள்ள பல்வேறு சமூக சக்திகள் தமது நலன்களுக்குப் பணியாற்றும் வகை யில் பொதுத்துறையின் வளர்ச்சியைத் திசைதிருப்ப விழை கின்றன. முதலாளித்துவ வளர்ச்சியை ஆதரிக்கும் சக்திகள், தனியார் தொழில்துறை நலன்களுக்குப் பொதுத்துறை பணியாற்றவேண்டுமென விரும்புகின்றன. மேற்கத்தைய ஏகபோகங்களும், ஏகாதிபத்தியமும் இதேபோன்ற இலட்சி யங்களையே பின்பற்றுகின்றன. சிலவேளைகளில் வெற்றி பெருமலும் இல்லை. மேலும் உறுதியாகத் தம்மை அரண் செய்துகொள்ளும் பொருட்டு தேசிய அரசுகள் அல்லது உள் ளூர் முதலாளிகளின் பங்கேற்புடன கலப்புக் கம்டெனிகளை அமைக்கவும், மேற்குலகிற்கு இலாபம் தரும் வகையில் கிளை களுக்குள் வெளிநாட்டு மூலதனத்தின் உட்பாய்வையும் உத்யேகப்படுத்துகின்றன.
முதலாளித்துவ போக்குகளைப் கடப்பதற்கான சாத னங்களை உள்ளடங்கியதாகவும், எதிர்காலத்தில் சோஷ லிஸ் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு மாறிச் செல்வ தற்கான அடித்தளத்தையிடும் நோக்கங்களுக்காக உற்பத் தியை ஒழுங்கமைக்கும், சமூக நிறுவனங்களைப் புனரமைக் கும் ஒரு வடிவமாகவும் பொதுத் துறையை ஜனநாயக மற். றும் முற்போக்கு வட்டாரங்கள் கருதுகின்றன.
அல்ஜீரியா, ஈராக், கினி, சிரியா, தன்ஸானியா போன்ற சோஷலிஸத் திசையமைவைக் கொண்ட நாடுக ளில் பொதுத்துறையின் தொழில்துறை உற்பத்தி 50-80 சதவீதமானதாகும், அத்தோடு ஏனைய பிரிவுகளிலும் முன் னணி நிலைப்பாடுகளைப் பெற்றுள்ளன. இது, ஜனத்தொகை யின் விரிவான பகுதியினரின் நலன்களில் பல்வேருண முற் போக்குச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு புரட்சிகர ஜனநாயகத்திற்கு உதவுகின்றது. * , з
பொதுத் துறையின் இயக்கம் காரணமாக, சோஷலி ஸத் திசையமைவைக் கொண்ட நாடுகள், முதலாளித்துவத் திசையமைவைக்கொண்ட நாடுகளைப் போலன்றி, மிகப் பெரிய தேசிய பூர்ஷ்வாக்களை, அடிக்கடி நடுத்தர தேசிய பூர்ஷ்வாக்களைக் கட்டுப்படுத்தவும் அகற்றவும் இட்டுச் செல்லும் சூழ்நிலையில் தனியார் மூலதனத்தை இடமமர்த் தும். இதைத் தொடர்ந்து, சுரண்டலுக்கான அடிப்படை பெருமளவிற்குச் சீர்குலைக்கப்பட்டு, சோஷலிஸ் சமுதாயத் தைக் கட்டி எழுப்புவதற்கான முன்தேவைகள் தோற்று விக்கப்படுகின்றன. திட்டமிடல் அறிமுகஞ்செய்யப்படுகின்

Page 33
ܕܐܬ݂DO{o
62 வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
றன, அரசுக் குச் சொந்தமான தொழிலகங்களை நிர்வாகஞ் செய்யும் போக்கில் உழைக்கும் மக்கள் ஈர்க்கப்படுகின்ற னர். சோஷலிஸத் திசையமை வைக் கொண்ட நாடுகளில் தனி யார் மூலதனமானது, பிரதானமாக மென்தொழில், விவசா யம், வர்த்தகம் ஆகியன சிறியதும் நடுத்தர அளவினதுமான வடிவத்திலேயே செயல்படுகின்றது. உதாரணமாக ஈராக் கில், தனியார் மூலதனம் பிரதர்ன் மாக விவசாயத்திலேயே செயல்பட்டுவருகின்றது அதேவேளையில் தொழில் துறை யில் கீழ்நிலையான பாத்திர்த்தையே அது வகிக்கிறது. பொருளாதாரத்தில் முக்கிய பிரிவான எண்ணெய்த் தொழில் உட்பட, ஈராக்கின் தொழில்துறையில் நிர்ணய மான நிலைப்பாட்டினை பொதுத் துறையே வகித்துவருகின் றது. அல்ஜீரியாவில் தனியார் தொழிலகங்களை அரசு ஊக் கப்படுத்தும் அதேவேளையில் அதனது வளர்ச்சியையும் கட் டுப்படுத்துகின்றது.
சோஷலிஸத் திசையமை வைக் கொண்ட நாடுகளில் பொதுத் துறையின் வளர்ச்சியானது, பொருளாதார, அரசி யல் சுதந்திரத்தை வலுப்படுத்துகின்றது, கடந்த கால காலனித்துவப் பிதுரார்ஜிதத்தைத் தகர்த்தெறியவும் வாய்ப்பேற்படுத்துகின்றது. இந்த நாடுகள் பொதுத்துறை ஸ்யக்கொண்டிருக்கின்ற காரண்த்தால் ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களையும், நிர்ப்பந்தத்தையும், அநீதியையும் மேலும் தீவிரமாக எதிர்த்துநிற்கின்றன. உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உயர்த்துகின்றன.
சோவியத் உதவி
வளர்முக நாடுகளின் பொதுத் தறையின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் சோஷலிஸ நாடுகளே பிரதானமாக, சோவி யத் யூனியனே கணிசமான அளவுக்கு உதவியளித்துவருகின் றது . வளர்முக நாடுகளின் பொருளாதாரங்களில் மிக முக் கியமான பாத்திரத்தை வகிக்கின்ற நூற்றுக்கணக்கான தொழில்துறை, வலு மற்றும் ஏனைய நிர்மாணத் திட்டங் கள் இந் நாடுகளின் பொருளாதார சுதந்திர்த்தை வலுப் படுத்துவதற்கு உதவுகின்றன, இவை சோவியத் உதவியி னல் கட்டப்பட்டன, அல்லது கட்டப்பட்டுவருகின்றன. இதோ சில உதாரணங்கள்:
அராக் இயந்திரவியல் தொழிலகம், மேற்குலகிலி ருந்து தனது உணவுத் தொழில்துறைக்குத் தேவையான இயந்திரங்களையும் சாதனங்களையும் இறக்குமதி செய்வதை ஈரான் குறைத்துக் கொள்ள வகைசெய்துள்ளது. ஈராக்கில் சோவியத் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பண்ணே இயந்திர ஆலையானது, நாட்டிற்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் 13 வகையான விவசாய இயந்திர உபகர
 

" (്
வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்னைகள் 63
ணங்களை உற்பத்தி செய்கின்றது. பண்ணை இயந்திரங்களில்
சில வகைகளை இறக்குமதி செய்வதை ஈராக் குறைத்துக் கொள்ளவும், ஏனையவற்றை இறக்குமதி செய்வதை முற்ரு க நிறுத்தவும் வகை செய்துள்ளது.
எகிப்தில் சோவியத் உதவியுடன் நிர்மானிக்கப்பட் டுள்ள தொழில்துறை நிறுவனங்கள் அத்தேசத் தினது பொதுத் துறையின் சிகரமாக விளங்குவதோடுநாட்டின் தொழிற்துறை உற்பத்தியில் 10 சதவீதத் ைக உற்பத்திசெய்கின்றன. 1970ம் ஆண்டில் அவை, 155 லட்சம் எகிப்திய பவுண் களை நிகர லாபமாகத் தந்தன.சோ.சோ.கு. ஒன்றியம் எண் ணெய் உற்பத்தித்திட்டங்களை சிரியா நிர்மாணித்துக்கொள் வதற்கு உதவியளிக்கிறது. சிரியாவின் பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கு எண்ணெய்க் தொழில் நிர்ணயமானதாகத் திகழ்கின்றது. சிரியாவில் எண்ணெய், வாயு வளங்களைக் கண்டுபிடிப்பதில் சோவியக் நிபுணர்கள் பங்கெடுக்கின்றனர். அலியான் என்ற இடத்தி லுள்ள எண்ணெய் வளத்தை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்வதற்கும் அவர்கள் உதவியளித்துள்ளனர். 1976 ம் ஆண்டில், சிரியாவின் பொருளாதாரத்தில் லாபந்தரும் பிரிவான எண்ணெய்த் தொழிலை வளர்த்தெடுப்பதற்கு சோவியத் உதவி சம்பந்தமாக இரு நாடுகளும் உடன் படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படி க்கை 1976-1980ம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தை உள் ளடக்குகின்றது.
பொதுத் துறையையும் அதனது சமூகத் திசையமை வையும் வலுப்படுத்துவதானது, பொருளாதார முகாமை யில் ஜனநாயக கோட்பாடுகளினதும், உழைக்கும் மக்க ளின் விரிவான பங்கேற்பினதும் வளர்ச்சியை உத்வேகப் படுத்துகின்றது.
பொருளாதாரச் சுதந்திரத்தையும் சமூக முன்னேற் றத்தையும் எய்துவதிலும், ஏகாதிபத்தியத்தையும் நவகாலனித்துவத்தையும் தோல்விகாணச் செய்வதிலும் ஒரு முக்கியமான சாதனமாகவுள்ள பொதுத் துறையை இளம் நாடுகளைச் சேர்ந்த முற்போக்குச் சக்திகளும், தொழிலா ளர் வர்க்கமும் வலுப்படுத்தி வருகின்றன. ... "
மாஸ்கோ பல்கலைக்கழக செய்தி. இலக்கம்: 3, 1977.

Page 34
Dobol,
 
 
 
 
 
 
 
 


Page 35
தலேமைத் தபால் நிலே
சோவியத் நாடு சோஷலிஸம் கத்துவமும் நடைமுறையும்
இம்மாத சஞ்சிகையைப பெற பின்வரும் முகவரிக்கு எழுதுங்கள்.
சோவியத் நாடு' சோவியத் தூதரக செய்திப் பிரி 27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா
கொழும்பு-7,
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா
யத் சோஷலிஸ்க் குடியரசுகள்
பிரிவினருக்காக 91/15, கொட்ட அச்சகத்தில் அச்சிட்
 
 
 

@1,
மாவத்த,
சேர வி ஒன்றிய ஸ்தானிகராலய செய்திப் ா ருேட், பொரளையிலுள்ள பிரகதி டு வெளியிடப்பட்டது.