கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.08

Page 1
.
616EITL
இன்தமி
ஈசன் நெறி பரப்ப
تولا) LD
வெளிவரும்
Ibg)
心配 劍
DGš
 


Page 2

& : x 3-3 . . . . .
。

Page 3
66)
ஐப்பசி-கார்த்திகை
ஒன்றே குலம்! ஒ அன்பு வடிவானவன் இறைவன். உலகிலுள்ள சகல ெ காரணன். அவனை பல வேறுபட்ட பெயர்களில் மானி இணைந்த பாதைகள் அவனை அடைவதற்காக வகுக் பயிரை உருவாக்கிய விவசாயி நீர் பாய வாய்க்கால் வெட் இப்படி இறைவனால் வகுக்கப்பட்ட பாதைகளை மனி பின்பு சமயங்களின் பெயரைக்கொண்டு சண்டையிட ஆ
ஒரு கிறிஸ்தவனை, ஒரு இஸ்லாமியனை அல்லது ஒரு கடவுள்கள் உள்ளனர் என்று கேட்டால் ஒரே ஒரு கடவு
மானிடர்களை மதம் மாறச் செய்யும் முயற்சிகளில் தீவிரட இந்த மத மாற்ற வேகம் ஐரோப்பிய நாடுகளில் குழ மாற்றுகின்ற நிலமை சற்று வேகமாக உள்ளதென, இந்து அ எம்மைப் பொறுத்த வரையில் இந்து அபிமானிகள் இ6 ஒன்றாகும். பொறுமையாக இருத்தலே நன்று. ஏனென்றால் இந் ஆக்கிரமிக்கப்பட்டதில்லை. ஆக்கிரமிப்பினால் அது பாதி அப்படித்தோன்றினாலும் அது ஒரு மாயை என்பதை ஆகவே யாரும் மதப்பிரச்சாரங்களை இட்டு கவலை செ ஆண்டவன் ஒருவனே உலகைப் படைத்தவன் என்பதி அந்த ஆண்டவன் சிவன் என்று நீங்கள் நினைத்தால் சி முயற்சி செய்யுங்கள். இயேசு என்று நீங்கள் நினைத்தால் இயேசுவை அடைய இதுவே சந்தோஷமானதும், இனிமையானதும், அறிவபூர் தன்னுடைய இசையினால் ஆண்டவனை மக்கள் அை அவர்கள் சமாதி அடைந்தமை இட்டு கலசம் கைகூப் நாம் பிறந்தமண்ணில் போர்க்காலமேகங்கள் நகரக்கூடிய உள்ளது. துன்பத்தின் விளிம்பில் இருந்து எம் உடன் இறைவனை மனமார வேண்டி நிற்கின்றோம். ஓம் நமசிவய!
ஆசிரியர் : மு. நற்குணதயாளனர் துணை ஆசிரியர் : க.
பொருளாரத் தொடர்பு : சிவ. அசோகனர் ெ விற்பனை விநியோகம் : இ.முருகதாசனர் ம! வெளியீடு : சைவ முன்னே அச்சமைப்பும் வடிவமைப்பும்: சைவ முனர்னேற்றச் சங்க
KALASAMI , 42
 
 

மிழ் வளர்ப்போம்
6)
-மார்கழி 1994
ஒலி 8
ருவனே தேவன்! பாருள்களின் இயக்கத்துக்கும் இருப்புக்கும் அவனே டர்கள் வழிபடுகின்றார்கள். வழிபாட்டு முறைகளோடு கப்பட்டுள்ளன. இதனை வகுத்தவனும் அவனே!. டிவிடுகின்ற மாதிரி அவனே சகலதையும் செய்கின்றான். தன் சமயம் என்று பெயரிட்டான். ாம்பித்தான். ந இந்துவை அழைத்து வந்து உலகத்தில் எத்தனை ள் தான் உள்ளார் என்று கூறிவிட்டு அந்த ஒரே ஒரு
ஆரம்பித்துவிடுகின்றார்கள். மாக ஈடுபடுகின்றார்கள். மிப்பாக இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு பிமானிகள் கலசத்திற்குக் கடிதமூலம் தெரிவித்துள்ளார்கள். வ்விடயத்தையிட்டுக் கொதித்து எழுவது தேவையற்ற
து மதம், எந்த ஒரு மதத்தாலும் எண்றைக்கும் க்கப்பட்டதுமில்லை. இந்து சமய சரித்திரம் எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. ாள்ள வேண்டாம். ல் அசையாத நம்பிக்கையை வைத்திருங்கள்.
வனை நாளும் நினைந்து அவனை அடைய அயராது
அயராது முயற்சி செய்யுங்கள். வமானதுமான இறைதத்துவமாகும். டையுமாறு இறை பணி புரிந்த சுவாமி ஹரிதாஸ் கிரி பி வணங்கி நிற்கின்றது. சூழ்நிலை உருவாகி வருகின்றதை காணக்கூடியதாக
பிறப்புக்கள் சந்தோஷத்தை அடைய எல்லாம் வல்ல
மு.நற்குணதயாளன்
ஜெகதீஸ்வரணி நிர்வாகத் தொடர்பு : வ.இ. இராமநாதன் ாதுமக்கள் தொடர்பு : மாணிக்கம் சுரேஷ் 1ளிர் பகுதி : திருமதி உமா ஜெயக்குமார் ற்றச் சங்கம்(பிரித்தானியா) (பிரித்தானியா) அச்சுப் பதிவு செல்வம் அச்சகம்
clayIALL, ILFORD IG5 OD

Page 4
egstrasot 888á603 2! Seg
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சுமளிக்கும் அரவுபோல் இருமை வினைக்கும் ஒருவடிவம் எச்சதத்தனர் உளனானான்
சென்ற ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியில் இரு வாரம் தங்கியிருந்த போது சேக்கிழார் பெருமானின் இந்த இரு அடிகள் தான் என் நினைவில் எழுந்தன. அதற்கு முந்திய சில மாதங்களாக தொலைக்காட்சிச் செய்திகளில் அந்நாட்டில் (ஜேர்மனியில்) நடந்த இனப் படுகொலைகள் பற்றி அறிந்திருந்தேன். அதனால் அந்த நாட்டைப்பற்றி மனதிலே ஒரு விதக் கவலை இருந்தது. மனிதனை மனிதன் நாகரிக உலகிற் கொலை செய்கிறானே என று ஆதங்கம் . ஆனால் அங்கு சென்று L] ól) மக்களுடனி முக்கியமாகத் தமிழீழ மக்களுடன் பழகும் வாய்ப்புக் கிட்டியது. அங்கு வாழும்
தமிழ் மக்கள் தமது மொழியையும் சமயத் தையும் பாதுகாத்துப் பேணி வரும் பாங்கைக் கண்டு மனம் புல்லரித்தது. இங்கிலாந்திலே இல்லாத கோயிலா?,வழிபாடா? என்ற கேள்வி எழலாம். அங்குள்ள சூழ்நிலையை அங்கு சென்றுதான், நேரிலே பார்த்துத்தான் அறிந்துகொள்ளமுடியும். மேற்கு ஜேர்மனியில் ஹம் என்ற இடத்திலே அழகிய ஒரு விநாயகர் ஆலயம் புதிதாக உருவாகியுள்ளது. அடியேன் சென்றிருந்த சமயம் இந்தக்கோயில் பிரதிஷ்டை செய்து 80 தினங்களே ஆகியுள்ளன என்று அந்த ஆலய அர்ச்சகள் குறிப்பிட்டர். சிறிய கோயிலாக இருந்தாலும் அழகாக அமைத்து தினசரி இரு வேளை வழிபாடுகளை முறையாகச் செய்து வருகின்றார்கள். அவர்களின் முயற்சியைப் பாராட்டும் அதே வேளை இறையருளால் இவ்வாலயம் பல்லாண்டு நிலைபெற்று அங்கு வாழும் மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டுமென்று விநாயகரை வணங்குகிறேன். ஆகத்திலே ஒரு பாதியை அம்மைக்கு அர்ப்பணித்தவர் சிவபெருமான். அந்தக்கடவுளை முழுமுதற் கடவுளாக வணங்கும் சைவக்குடும்பத்தில் உதித்த அன்பர் ஒருவர் தமது அகத்திலே பாதியை இறைவனுக்கு அர்ப்பணித்திருக்கின்றார். வீட்டிலே ஒரு மூலையில் அல்லது ஒரு ஒரமாக மட்டுமே ஒரு தட்டில் சாமிப்படங்களை வைத்து வழிபடும் பலரைப் பார்த்துப் பழகிப்போன எனக்கு, இந்தக்காட்சி ஒருஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்தது . இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டிலே ஒரு அறையை முழுதாக பூசை அறையாக்கி கோயிலாக்கிவிட்டிருக்கும் அந்த அண்பரை போஹற்க்கும் என்ற ஊரிலே பார்த்தேன். திருமணமாகி ஒரு குழந்தையுடன்
 

திகை-மர்சரி : 2 நகரத்தில் }ầ. Sữigituyế6ổt
இருக்கும் இளவயதினரான இவருக்கு இறைபக்தியில் எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டேன். ஈழத்தில், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு சீவரெத்தினம் அவர்கள் இலங்கையில் அஞ்சல் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் அன்பு மனைவி சண்முக தேவி அவர்கள். இவர்கள் இருவரும் கடவுள் பக்தியுடன் இல்லறம் நடாத்துபவர்கள். சுவாமி இராமதாஸ் அவர்களை தமது குருவாகக் கொண்டு வீட்டிலே இறைவழிபாடு இயற்றுபவர்கள். அது தவிர முன்னேஸ்வரம் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபாடியற்றி வரும் வழக்கமும் இவர்களுக்குண்டு. அங்குள்ள வடிவாம்பிகை இவர்க ளுக்கு இஷ்ட தெய்வம். விநாயகர் இவர்களுக்குக் குல தெய்வம். இந்தத் தம்பதியின் புத்திரர் தாம் போஹற்குமில் நான் கண்ட அந்த இளைஞர். வீட்டிலே உள்ள அறையிலே நீண்ட
பீடமமைத்து, பட்டுத்துணியால் அதை மூடி, விநாயகர், சிவன், வடிவாம்பிகை, முருகன், மகாவிஷ்ணு ஆகிய தெய்வங்களின் திருவுருவச்சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றார்கள் திரு சீவரெத்தினம் அவர்களின் மகனான முகுந்தன் அவர்களும் அவர் மனைவி தேவிகா அவர்களும். அவர்களின் மகன் பெயரும் விநாயகன். இந்தக் குடும்பத்திலே உள்ள சிறப்பு அம்சம், யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கமைய அருகில் உள்ளவர்களையும் நண்பர்களையும் அன்படண் அழைத்து வழிபாடுகளில் கலந்துகொள்ள வைப்பது. இது இவர்களின் தயையையும் நட்பையும் பறைசாற்றுகின்றது. மாத சதுர்த்தி, வெள்ளிக்கிழமை, பூரணை ஆகிய தினங்களில் விசேட அபிசேக ஆராதனையுடன் வழிபாடு நடைபெறுகின்றது. அது தவிர விநாயகள் விரதம், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை, நவராத்திரி என்று தொடர்ந்து நடைபெறும் விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. அங்கிருந்த சமயம் ஒரு பூரணை வழிபாடு கண்டுகளிக்கும் பாக்கியம் கிடைத்தது. முதலில் அங்கு அமைந்த திருவுருவச்சிலைகள் அத்தனைக்கும் பக்தி சிரத்தையோடு அபிஷேகம் செய்கின்றார்கள் . பின் ஆடை அணிகள் என்று அலங்காரம் செய்து பிரசாதத்தோடு தீபஆராதனை தேவாரப் பாராயணம், அர்ச்சனை ஆகியவை நடைபெறுகின்றன. இப்படி விசேட தினங்களில் சிவாச்சாரியார் ஒருவர் வந்து வழிபாட்டை நிகழ்த்துகின்றார். அண்றைய தினம் பூரணை வழிபாட்டோடு திருவிளக்கு வழிபாடும் ஏற்பாடு செய்திருந்தார்கள். சுமார் 20 பெண்கள் 20 குத்துவிளக்கேற்றி அம்பாளுக்குப் பூசை செய்து பின்னர் தாமும் குடும்பமாக பிரசாதம் அருந்தி வீடு சென்றார்கள்.
لس۔

Page 5
கலசம் ஐப்பசி-கார்
பக்தி சிரத்தையோடு நடந்த இந்த வழிபாடு மெய்சிலிர்க்க வைத்தது. திரு முகுந்தன் அவர்கள் 1984 இல் Hotel Management படித்துவிட்டு ஜேர்மனியில் வந்து வேலை பார்ப்பவர். 1989 இல் இவருக்குத் திருமணமானது. அவரின் மனைவியும் கணவ ரைப்போலவே மிகுந்த இறைபக்தி கொண்டவர். இருவரின் பக்தியும் ஈடிணையற்றது. இவர்களின் குழந்தையும் நாலு வயது நிரம்பிய பையன் என்றாலும் தந்தை தாயைப்போலப் பக்தி நிறைந்த சிறுவனாகக் காணப்படுகின்றான். வடமொழிச் சுலோகங்களையும் தமிழிற் தேவாரம், திருவாசகம், திருப்பாவை ஆகியவற்றையும் மனப்பாடமாகப் பாடும் திறமைபெற்ற இக்குடும்பம் வழிபாட்டிற்காக நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கின்றது. காலையில் இருந்து வீடு துப்பரவாக்குவது, கழுவுவது, உருவச்சிலைகளைச் சுத்தப்படுத்துவது, பூவாங்கி வந்து மாலை கட்டுவது, விளக்குகளைச் சுத்தம் செய்வது. பிரசாதம் செய்வது ஆகிய அனைத்து வேலைகளையும் பிரதிபலன் கருதாமல், தாமே செய்து இரவு 11 மணிக்கு மேல் அனைவரும் போன பின்பும் மலர்ந்த முகத்துடன் தமது வாழ்க்கையைத் தொடர்கின்றார்கள். இந்த இனிமையான குடும்பத்தை பார்த்துவிட்டு விடைபெறும்போது தமக்கென வாழா நோன்றாள் பிறர்க்கென ‘வாழுநர்களாக இருக்கும் இவர்களால் உண்டாலம்ம
இவ்வுலகம்" என்று நினைத்துக் கொள்கின்றேன்.
_つでン<こ><う下で下ート一
காந்தி சொன்ன மருந்து இறைவழிபாட்டையும் சமயக் கருத்துகளையும் பற்றி ஓரளவு கற்றுத் தெரிந்துகொள்வது நல்லது. இறை நம்பிக்கை, குருபக்தி ஆகியவை இன்றியமையாதவை என்று ஆன்றோர்கள் நமக்குச் சொல்லிவைத்திருக்கிறார்கள். ஆனாற் சிலவேளைகளில் நமது அறிவு விருத்தியடையாத காரணத்தால் மூட நம்பிக்கைகள் பயங்காரணமாக நம் வாழ்க்கையில் இடம்பிடித்துவிட்டன. அதனால் நாம் பல விடயங்களைப் பயனில்லாது செய்து வருகிறோம். இதற்கு உதாரணமாகக் காந்தி அடிகள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
இந்து முஸ்லிம் ஒருமைப்பாட்டைக் கருதி முன்பொருமுறை காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அப்போது அவர் மிக உடல்நலங் குன்றியிருந்ததால் அவர் பூரண ஓய்வுபெறவேண்டும் என்று மருத்துவர்கள் பணித்திருந்தனர். அதனாற் காந்தியடிகளைப் பார்க்க அண்று யாரும் அநுமதிக்கப்படவில்லை. ஓர் ஏழைக் குடும்பத்தினர் பல மைல் தூரம் பயணஞ்செய்து காந்தியடிகளைப் பார்க்க வந்திருந்தார்கள். பல மக்கள் திரண்ட கூட்டத்தினிடை இவர்கள் ஒருவாறு வாயிலை அடைநீ தார் கள் . காந்தியடிகளைக் காணவேண்டுமென்று வேண்டினார்கள். அவர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டது. அவர்களோ தங்கள் மகன் சுகவீனமுற்று இருப்பதாற் காந்தியடிகளின் பாதங்களைக் கழுவி அந்த நீரை மகனுக்குக் கொடுத்தால் நோய்வாய்ப்பட்ட தம் மகன் சுகமடைவான் என்று தாம் நம்புவதாகக் கூறினார்கள். வாயிற் காவலர் இதைக் காந்தியடிகளிடந் தெரிவித்தார்கள்.

திகை-மார்கழி 1994 3
அந்த ஏழைமக்களின் வேண்டுகோளைக் கேட்ட காந்தியடிகள் மனம்பதைத்தார். அந்த ஏழைகளுக்கு அறிவுரை வழங்க எண்ணி அவர்களை உள்ளே வருவித்தார். அவர்களைப்
பார்த்து உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? ಐಜಿಲ್ಲ! கேட்டார். அவர்கள் உண்டு" என்றார்கள். அப்படியாயின் உங்கள் மகனைக் கடவுள் நம்பிக்கையோடு தக்க மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளியுங்கள். என் பாதங்களைக் கழுவி நீர் எடுத்துக் கொடுப்பதால் உங்கள் மகனுக்கும் நோய் குணமாகாது. எனக்கும் அது இழிவைத் தரும் என்று கூறி அவர்களைப் பணிவாக அனுப்பவைத்தார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால, நம்பிக்கை வேண்டும், அது அறிவோடு அமையவேண்டும் என்பதே மூட நம்பிக்கையால் நமக்கு எவ்விதப் பலனும் இல்லை.
-அநுராதா

Page 6
கலசம் ஐப்பசி-கார்த்
LDணவூர் என்ற நகரைக் குலசேகரன் என்ற பாண்டியன்
ஆண்டு வந்தான். அந்நகரில் தனஞ்சயன் என்ற வாணிகன் பொருளைத் தேடுவது போலப் புண்ணியந் தேடுவதிலும் நாட்டம் கொண்டவன். ஒரு சமயம் பல ஊர்களுக்கும் சென்று வாணிபம் செய்துவிட்டு கடம்பவனத்தின் வழியே வந்துகொண்டிருக்க நேரம் இரவை நெருங்கியது. வழி நடந்த வருத்தம் தணிய ஓரிடத்திலே தங்கினான். அது போழ்து நான்கு கோடுகளையுடைய எட்டு யானைகளின் எருத்தத்தின் மேற் கதிரவனைப் போல் ஒளி வீசும் விமானம் ஒன்றைக் கண்டான். அதன் அருகே சென்று அதன் கண் எழுந்தருளிய சொக்கலிங்கப்பெருமானைக் கண்டான். அளவிலா ஆனந்தித்திடை மூழ்கி இரவு முழுவதும் அங்கிருந்தான்.
அன்று சோமவாரம். நான்கு யாமங்களிலும் தேவர்கள் வந்து சொக்கலிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தினர். இரவு அகன்று பொழுது விடிந்தவுடன் அர்ச்சனை புரிந்த அமரர்கள் அகல, விமானத்தின் கண் தனித்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைக் கணி டான தன ஞ சயன மறுநாட் குலசேகரபாண்டியனிடம் நிகழ்ந்ததைத் தெரிவித்தான். பாண்டியனும் இறைவனது திருவடி மலர்களைத் துதித்தவாறு கண்ணயர, கனவிலே சித்தர் உருவிலே தோன்றிய பிறைசூடிய பெருமான் கடம்ப வனத்திலுள்ள காட்டினை அழித்து அழகிய நகரம் அமைப்பாயாக எனக் கூறி மறைந்தார். கனவினின்றும் விழித்தெழுந்த பாண்டியன் அமைச்சர் முதலானோர்க்கு அறிவித்து மேற்குத்திசை நோக்கிப் புறப்பட்டான். அமைச்சர்கள் புடை சூழக் கடம்பவனத்தை அடைந்தான்.
வனத்தின் நடுவே பொன்னாலாகிய விமானத்திலே சோமசுந்தரக் கடவுள் வீற்றிருந்து அருட்காட்சி வழங்குவதைக் கண்டான். மண்ணிலே வீழ்ந்தான். விழிநீர் ஊற்றெழ இருகரங்களையும் சிரசின் மேற் கூப்பி,
சரணம் மங்கையோர் பங்குறை சங்கர சரணம் சரணம் மங்கல மாகிய தனிமுதல் சரணம் சரணம் மந்திர வடிவமாஞ் சதாசில சரணம்
சரணம் உம்பர்கள் நாயக பசுபதி சரணம்
என்று போற்றினான். காடுகளை வெட்டித் திருத்தினான். நிலத்தைச்
செப்பஞ் செய்தான். இறைவன் அருளியவாறு நகர் எடுப்பது எவ்வாறு என்று சித்தித்தவாறே அமைச்சர்
வித்துவான் திருமதி
 

ைெக-மார்கழி 1994 4.
நகரம் கண்ட திருவிளையாடல்
பெருமக்களோடு உரையாடிக்கொண்டிருந்த குலசேகர பாண்டியனின் முன்னால் வெள்ளிய திருநீற்றுத் தோய்வுடன் மன்னரின் கனவில் முன் தோன்றிய சித்தர் எழுந்தருளினார். சித்தரின் வரவைக் கண்ட பாண்டியன் மகிழ்ச்சி மீதுர, "பெருமானே! அரி, அயன் முதலிய தேவர்களின் கனவிலும் காணவொண்ணாத தாங்கள் திருவடி நிலந்தோய வந்ததற்கு அடியேன் செய்த தவம் என்னே!" என்று அங்கம் புளகமுற அடிமிசை பணிந்தான்.
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி! நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி!
என வரும் திருவாசக வரிகள் சிந்திக்கற் பாலது.
சித்தமூர்த்திகளும் சிவாகம முறைப்படி ஆலயம், கோபுரம் மண்டபம் நகரம் அமைக்கும் முறை கூறி மறைந்தார். உடனே வேப்பந்தாராண் சிற்பநூல் வல்ல சிற்பிகளை அழைத்துத் திருக்கோயிலுக்குரிய பதும மண்டபம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அறுகாற்பீடம், வேள்விச்சாலை, திருமடைப்பள்ளி, சொக்கலிங்க மூர்த்திக்கு வலப்பாகத்தில் மீனாட்சியம்மையின் திருக்கோயில், பரிவார தேவதைகளின் ஆலயம், திருமாளிகைப் பத்தி, மண்டபங்கள் முதலியவற்றை அழகுற அமைக்கச்செய்தான்.
திருவீதிகள், தெற்றியம்பலங்கள், கவர்வழிகள், மாளிகைகள. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் வீதிகள், நாடக சாலைகள், செய்குன்றுகள், நந்தவனங்கள், கல்விச்சாலைகள், அறச்சாலைகள் அமைத்து நகரை அணிபெறச்செய்தான். வடகீழ்த்திசையிலே தனக்கு ஒரு அரண்மனையும் அமைத்துக்கொண்டான். இவ்வாறு அற்புதமாக அமைத்த நகருக்குச் சாந்திசெய்விக்கக் கருதினான். அப்பொழுது சோமசுந்தரக் கடவுள் தனது சடைமுடியின் சந்திரக் கலையிலிருந்து புத்த முகத்தைச் சிந்தினார். நகர் முழுவதும் புனிதமாகி அமுதமயமாகியதால் மதுரா நகர் எனப் பெயர் சூட்டப்பட்டது. மதுரை மாநகரில் கிழக்குத்திசையில் ஐயனாரையும் தென்திசையில் சப்தமாதர்களையும் மேற்குத்திசையில் திருமாலையும் வடதிசையில் பத்திரகாளியையுந் தாபித்தான். சோமசுந்தரப் 'பெருமானுக்கு விதிப்படி பூசை செய்ய வேதாகமம் வல்ல அந்தணப்பெருமக்களை காசிப்பதியினின்றும் அழைத்து வந்தான். சைவநெறியும் அறநெறியும் செழித்தோங்க அரசாண்ட குலசேகரன் மலையத்துவசன் என்னும் தன் மைந்தனுக்கு அரசாட்சி நல்கி சோமசுந்தரக்கடவுளின் திருக்கோயிலை மும்முறை வலம் வந்து சிவத்தோடு இரண்டறக்கலந்தான்.
வசந்தா வைத்தியநாதன்

Page 7
ஐப்பசி-கார்த்தி
جم83ع
பேராசிரியர் சக்திப்புயல்
ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் யான் உரையாற்றச்
செல்லும்போது நம் நாட்டினைப் போலவே நம்முடைய சமயத்தைப் பற்றியும் அவர்கள் வியப்படைகின்றர்கள். நாங்கள் ஒரு மதத்துக்கு ஒரு சாமியை வைத்துக்கொண்டே ஓராயிரம் சண்டை போட்டுக்கொள்கின்றோம். r*r உங்கள் மதத்தில் ஓராயிரம் சாமிகளாமே?. Cெ எப்படிச் சமாளிக்கின்றீர்கள்" என்று ۔۔۔۔ =ح" கேட்கின்றார்கள். அவர்களுக்கு நாம் தரும் பதில் இதுதான்." இந்துசமயம் ஒரு பூக மாகாசமுத்திரம். இதில் எத்தனை Mí ఆ S3. ஆறுகள் வேணடுமானாலுங் T3 கலக்கலாம். அவை எந்தெந்தத் c *
=~ '*' محی."محصری
தணிணிரையும், எந்தெந்த 2
வண்ணத்தையும், எந்தெந்தச் * ( ( {S சுவையையும், எந்தெந்த தீ ட y l தன்மையையும் எடுத்து வரலாம். --- v ༣.། -- ஆனால் அவை அனைத்தும் சமுத்திரத்திலே - சங்கமிக்கும்போது ஆறுகளெல்லாம் கடலாகவே மாறுகின்றன. எந்தக்காலத்திலும் கடல் ஆறாக மாறிப்போகின்ற அச்சம் இல்லை. ஆறுகள் கொண்டு வரும் தண்ணின் தன்மைகளும், சுவைகளும்,
வண்ணங்களும் கடலிற் கலந்து கடலின் வண்ணத்தையுஞ் சுவையையுந் தன்மையையும் பெறுகின்றன.
ஆறுகள் கடலை அடைந்தபின் அவற்றிற்கு ஆறு எண்கின்ற தனிப்பெயர் மறைந்துபோய்க் கடல் என்ற பொதுப்பெயரே நிலைத்து நிற்கின்றது. இதுபோலத்தான் இந்துசமயத்தில் எத்தனை வேறுபட்ட தெய்வநம்பிக்கைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அவற்றிற்குள்ளே பிணக்குகள் இல்லாமல் இயங்க வைக்கின்ற பெருந்தன்மைதான் இந்துமதத்தின் தனிப்பெருமை. சிந்துசமவெளிப் பகுதியிலே தோன்றியதால் "இந்து" எனப் பெயர்பெற்றது இந்துசமயம். சிந்துசமவெளிப்பகுதியிலேதோண்டி எடுக்கப்பட்ட மொகஞ்சதாரோ, கரப்பா, என்னும்,கரங்களில் யோக நிலையில் இருக்கும் சிவனும், அவன் வாகனமாகிய காளையின் உருவமும் காணப்படுகின்றன. எனவே சிவனை வணங்குகின்ற சைவநெறியுடன் தான் இந்து சமயம் தொடங்கி இருக்க வேண்டும். அதனை அடுத்துத் தீயினை வணங்கும் ஆரியர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். இந்த இரண்டு இனங்களுக்குள்ளே பெரும் போராட்டங்கள் நடந்தாலும் இவர்களின் நம்பிக்கைகள் மட்டும் இந்து மதம் என்ற பெயரிலேயே சங்கமித்துக்கொண்டன. திராவிட தெய்வம் சிவனையும், ஆரியர்களின் தெய்வங்களில் அப்போது
 
 

கை-மார்கழி 1994 5
முதலிடம் வகுத்த இந்திரனையும் ஏனைய தெய்வங்களையும் அவரவர் தன்மைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப ஒரு மதத்துக்குள்ளே இணைய வைத்துத் தாமும் இணைந்து வாழக்கற்றுக்கொண்டனர். தமிழகத்திலே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படும் நிலங்களிற் தெய்வமாக இருந்த சேயோன், மாயோன், வேந்தன் என்னும் திணைநிலைத்தெய்வங்களை எல்லாம் திருமால், முருகன், இந்திரன் என்ற பெயர்களிலே இந்து சமயம் தனக்குள்ளே ஐக்கியப்படுத்திக்கொண்டது. பிறப்பு இறப்பு என்னும் இரண்டு நித்தியங்களுக்கிடையே ஏராளமான அநித்தியங்களைச் சந்திக்கின்ற மனிதன் தன்னை மீறிய சக்திகள் தன்னைப் பாதிப்பதையும் கட்டுப்படுத்துவதையும் உணர்கின்றான். தனி அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை அறிய விழைகின்றான். இந்த அறிவூக்கத்தாலும் தன்னை மீறிய சக்திகளின் ஆக்கத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்கின்ற ஆசையாலுந் தான் மனிதனுக்குக் கடவுள் என்கின்ற விஷயத்தின் தேவை ஏற்படுகின்றது. தான் அறியாத , அறியமுடியாத அந்தப்பொருளை, தத்தம் §ණු;};">终 அறிவு நிலைக்கும் உணர்வு நிலைக்கும் - ஏறி பட அறியவும் வணங்கவும் முற்படுவதால் தான் உலகில் வேறுவேறு கடவுட் கொள்கைகள் உருவாகின.
இதில் யாருடைய கடவுள் உயர்ந்தது, யாருடைய கடவுள் தாழ்ந்தது? என்ற கேள்வி அறியாமைக்கெல்லாம் பெரிய அறியாமையாகும். என்றாலும் இந்தக்கேள்விகளின் அடிப்படையிற் றான் உலகில் ஏராளமான மனித இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இந்த இடத்திலேதான் இந்து மதம் உலக ஒற்றுமைக்கும் உலக சமாதா னத்திற்கும் வழிகாட்டி வருகின்றது. அவர வர்களின் அறிவுக்கும் உணர்வுக்கும் தேவைக்கும் ஏற்பத் தத்தம் கடவுளை வழிபடுகின்ற உரிமையை அடிப்படை உரிமையாக இந்துமதம் அங்கீகரிக்கின்றது. இதன் அடையாளமாக "இந்து இதழின் முதல் வெளியீட்டு மேடையிலேயே ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரையும் ஒரு முஸ்லிம் அறிஞரையும் உரையாற்ற அழைத்திருக்கின்றோம். அந்நிய மதத்தைப் பரப்ப வந்த ஐரோப்பிய பாதிரிமார்களுக்கு பெஸ்கி ஐயா, வீரமாமுனிவர் என்று மரியாதை கொடுத்த மண் நமது மண். இங்கே வாழும் கிறிஸ்தவர்களும் இந்துக்களே . ஏனெனில் இந்து மதத்தின் எண்ணற்ற கடவுள்களில் யேசுவையும் ஒரு கடவுளாக ஏற்றுக்கொண்டது இந்து மதம். மேரிக்குப் புடவையும் தாலியும் கட்டி மரியம்மையாக ஏற்றக்கொள்ள நமக்குத் தெரியும். வேளாங்கன்னியிலும் நாகூர் தர்க்காவிலும் மொட்டை போட்டுக்கொண்டு தேங்காய் பழம் படைக்கின்ற பக்குவம் இந்துக்களுக்கு உண்டு. இங்கேயும் ஷார்த்துக்கும் லூர்த்ஸ்துக்கும் போகின்ற ஏராளமான இந்துக்கள் பழனிக்கும் திருப்பதிக்கும் போகின்ற அதே பக்திப்பெருக்கோடு செல்கின்றார்கள். இப்படியெல்லாம் செய்வதால் இந்துமதம் கரைந்துபோய் விடுவதில்லை. மாறாக இந்து மததி தின உண மையான கொள்கையைக் கடைப்பிடிப்பவர்களாகின்றோம். காரணம் இந்துமதம் வெறும் சாமிகளின் பெயர்களில் இல்லை. அதனையும் தாண்டிய
ஆன்மநேயம், தெய்வநேயம், மானுடநேயம் என்னும் உயர்ந்த

Page 8
கலசம் ஐப்பசி-கார்
கொள்கைகளிலேயே உள்ளது. பல நாம ரூபங்களிலே வணங்கப்படும் தெய்வம் ஒன்றுதான் என்னும் ஞானம் தான் இந்து சமயத்தின் மணிமகுடம் , மனிதருள் சமத்துவம் சகோதரத்துவம் சன்மார்க்கம் என்னும் சமுதாய நெறிகள்தான் இந்து சமயத்தின் அடிப்படை. இங்கே தெய்வநேயத்தைவிட மனித நேயமே முதலிடம் பெறுகின்றது. "பித்தர்" என்று இறைவனை அழைக்கின்ற சுந்தரனுக்கு இந்து மதத்திலே இடமுண்டு. "சுந்தரனும் புறம்பு, அவனை ஆட்கொண்ட சிவனும் புறம்பு அடியார் தமக்கு முன்னே" என்று பேசும் உரிமை இந்து மதத்திற்குத் தனிப்பெருமை. நம் கடவுளர்களெல்லாம் பெரும்பாலும் காட்சிக்குறியீடுகள். தண்ணிரைச் சாதாரண மனிதன் தணிணீர் என்றே எழுதுகின்றான். அதையே அறிவியல் வல்லுனன் H20 என்று எழுதுகின்றான். இப்படிப்பட்ட குறியீடுகள் தான் நம் கடவுளர் உருவங்களும் , வடிவங்களும் , புராணக்கதைகளும் ஆகும். படைத்தல் காத்தல், அழித்தல், என்னும் மூன்று செயல்களினால் தான் இயற்கைச் சுழற்சியும் பிரபஞ்சத்தின் இயக்கமும் நடக்கின்றது. இது தான் உலகம் அனைத்திற்கும் அடிப்படை. எனவே தான் மும்மூர்த்திகளை முதன்மைமில்வைத்து வணங்குகின்றோம். இது இயற்கையை அறிந்த ஞானம். மற்றப்படி காசு தேவைப்படுகின்றவன் பொற்காசுகளைக் குடம் குடமாகக் கொட்டுகின்ற கோலத்திலே இருக்கின்ற லட்சுமியை வணங்குகின்றான். கல்வியை மதிக்கின்றவன் வணங்கும் தெய்வத்தின் கையிலே ஏட்டுச்சுவடி இருக்கும். காவல் தேவைப்படுகின்றபோது ஊர் எல்லையிலே உயர்ந்த உருவமும் அகன்ற கண்ணும் நிமிர்ந்த மார்பும் முறுக்கிய மீசையும் கொண்ட முனியப்பனைப் பட்டாக்கத்தியுடன் உட்கார வைக்கின்றோம். அசைவம் விரும்புகின்றவனின் சாமி அசைவம் சாப்பிடும். கள் குடிக்கும். சுத்த சைவன் என்றால் அவன் சாமியும் அப்படித்தான். இதையெல்லாம் நோக்கும்போது மனிதன் எதை எதை மதிக்கின்றானோ அந்த மதிப்புக்களை வணக்கமாக மேற்கொள்ள இந்து சமயம் வழிவகுப்பதை உணரலாம். இந்தச் சாதாரண நிலைகளைத் தாண்டி நாம் ரூபபேதங்களைக் கடந்த நிலையில் இறைவனைக் காண்கின்ற பேரறிஞர்கள் இங்கே பலர் உண்டு. "ஒரு நாமம் ஒருருவம் இல்லா இறைவர்க்கு ஆயிரம் திருநாமம் சொல்லித் தெள்ளேணம் கொட்டோமோ" என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். "நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லுப் பேகமா நாதன் உள்ளிருக்கையில்" என்று கேட்கின்ற சித்தனும் இந்து தான். "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேண்" என்பவனும் இந்து தான். இருவரும் வணங்குகின்ற இறைவன் ஒன்று தான் . இருவரின் ஞான நிலையும் வேறு வேறு. இந்தக்கடலிலே திமிங்கிலங்களும் இல்லாமலில்லை. அவர்கள்தான் சாதிபேதம் கற்பித்துச் சமுதாயத்தைச் சுரண்டியவர்கள். அந்தத் திமிங்கல வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் தான் ஈ.வே.ரா. பெரியாரும் பிற பகுத்தறிவாளர்களும். இவர்களின் சேவையும் இந்து மதத்திற்குத் தேவைதான். . இதில் உள்ள கரணிடல் என்னும் கணிணி வெடிகளையும் திமிங்கிலங்களையும் அழித்து "Danger free zone ஆக்கியவர்கள் பகுத்தறிவாதிகளே. மேலும் பகுத்தறிவுவாதத்தை "உலகாயதம்" என்ற பெயரிற் புறப்புறச்சமயமாக ஒப்புக்கொள்கின்றது இந்து சமயத்தத்துவம். இந்துமாக்கடலில் ஆழப்போய் மூச்சுப்பிடித்து முத்தெடுக்கின்றான் சித்தன். மற்றவனோ மேலோட்டமாக நீந்தி மீன்பிடிக்கின்றான். இருவருக்கும்

த்திகை-மார்கழி 1994 6
ஓர் இந்து, தினசரி காலையிலே அரைமணி நேரமாவது பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும். பெரியவர்கள் இதைத் தவறாமல் செய்வார்கள். இது ஏன்? இன்று எத்தனையோ வியாதிகள் வருகின்றன. அவற்றுக்கு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இரத்தக் கொதிப்பு எண்று ஒரு வியாதி, இதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரை மருந்தே இல்லை. அண்மையில் மகரிஷி மகேஸ் யோகி அவர்கள், டாக்டர்கள் கூட ஒப்புக்கொள்ளும் வகையிலே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதிலே அவர் ஏதாவது ஒரு பொருளை இருபது நிமிட நேரம்
சிந்தித்துக்கொண்டிருந்தால் இரத்தக் கொதிப்பு அடங்கிவிடும் என்று எழுதியுள்ளார். இதற்கு ஏதேனும் ஒனர் றைத் தானர் நினைக்கவேணி டும். அந்த நினைவிலேயே ஒன்றிப்போகவேண்டும். அந்த ஒன்று ஆண்டவனாக இருந்தால் எவ்வளவு நல்லது என்பதை எண்ணிப்பாருங்கள் - கொதிப்பும் அடங்கும். கடவுளினர் அருளும் கிடைக்கும். இதைத்தான் பெரியவர்கள் தினசரிப் பிரார்த்தனை எனர் ற வழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் செய்தார்கள், நமது பெரியோர்களின் செயல் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அர்த்தமுடையது. பொருள் தெரியாமல் நாம் ஒவ்வொன்றாக விட்டு விடுகின்றோம். இது தவறு என்பதை உணர்ந்து திருந்துவது நல்லது. நம்முடைய ஆரோக்கியத்திற்காக தினசரி நம் இஷ்டதெய்வத்தை நினைத்து ஒரு இருபது நிமிடம் பிரார்த்தனை செய்யக் கூடவா நம்மால் முடியாது?.
கவிஞர் கண்ணதாசன்

Page 9
கலசம் ஐப்பசி-கார்த்தி
சிவயோக சுவாமிகள் உண்மை ஞானமே வடிவாக விளங்கிய ஓர் மெய்ஞானத் துறவி. அவள் தமது குருநாதராகிய செல்லப்பா சுவாமிகளைத் தரிசித்து ஞான முதிர்ச்சி பெறுவதன் முன்னர் எங்கே வளர்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்பன போன்ற விடயங்களை நிரற்பட எழுதக்கூடிய ஆற்றல் எவரிடத்திலும் இல்லை எனலாம். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நமது மத்தியில் ஞான ஒளி பரப்பிக் கொண்டு, இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகத் திகழ்ந்த முனியுங்கவரே சிவயோக சுவாமிகள். சுவாமிகளிடம் பட்டினத்தடிகளின் பூரணத்துறவும், கண்ணப்பநாயனாரின் ஒப்பற்ற சிவ அன்பும், சம்பந்தப் பெருமானின் ஞான வீறும், திருமூலரின் திறங்கொள் யோக சித்தியும் ஒருங்கே அமைந்திருந்தன. அவர் திருமுருகாற்றுப்படை சித்தரிக்கும் தமிழ் முனிவர் போன்றும் உபநிடதங்களை மொழிந்த ஈரநெஞ்சினரான இருடிகள் போன்றுந் தோன்றினார். அவர்கள் நீங்காத நின்மல நிட்டையினராய் இருந்ததுடன் குற்றம் சிறிதும் இல்லாத நற்றவ யோகராய்த் தரும நெறி பிசகாது உலகோடு ஒட்டி வாழ்பவராயுந் திகழ்ந்தார். ஆனால் சிவபரம்பொருளின் இலக்கணங்களைப் பொருந்தி "நானே அவன்"என்னும் பேருண்மையைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தார். சுவாமிகளின் நிலை ஞானசிகரம் எனக் கூறக்கூடிய உயர்ந்த நிலை. என்றும், எந்த வேளையும் இறைவனோடு ஒன்றித்து நிற்கும் தெய்வீக நிலை. அம்மையப்பனது திருவடியின்பத்தில் திளைத்து நிற்கும் நிலை. சுவாமிகள், பார்த்தால் உலகத்தவள் போன்றே திரிந்தார். ஆனால் அங்கும் இங்கும் எங்கும் நான, அதையறியும் விசரன் நான்” எனவும் அண்டமும் பிண்டமும் ஆயிருந்தேனே' எனவும் கூறியுள்ளவாறு விண்ணைப்போன்ற வியாபகமுடையவர். சுவாமிகளோடு கூடி வாழ்ந்த அடியார்கள் பெற்ற அனுபவங்கள் அவரைச்சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வம் என நமீபச் செய்தன. அவர்களது நிச சொரூபமோ இவற்றையெல்லாம் அற்பமென எண்ணுமளவு நன்மோன நிறைவாயிருந்தது. சுவாமிகள, மூலையிலிருந்த பல மெய்யடியார்களை முற்றத்தில் கொண்டுவந்துவிட்ட சாலப் பெரியவர். அவர்கள் சொரிந்த கைமாறில்லாத பெருங் கருணையை அளவிட்டுக் கூற முடியாது. ஆருமறியாமல் அந்தரங்கமாக அருள் சொரியும் திறத்தை வர்ணிப்பதற்கில்லை. சுவாமிகளிடம் நேரே தரிசனத்துக்குச் செல்பவர்கள் எல்லோரும் அவர்களைச் சிவமாகவே பாவித்தும் பரவியும் பணிந்து வந்தார்கள். மரநிழலும் அன்பர் உள்ளமுமே எமக்கு உவப்பான உறைவிடங்கள் எனச் சிவயோகசுவாமிகள் ஒரு சமயம் குறிப்பிட்டார். அவர் அன்பளின் இதயமாமலரில் வீற்றிருக்கும் உண்மையை உணர்த்துவதன் முன்னர் சிறிது காலம் கொழும்புத்துறையின் வீதியொன்றில் இலுப்பைமர
 

கை-மார்கழி 1994 7
நிழலில் அமர்ந்திருந்தார்கள். பலரும் வந்து கூடும் நல்லூர்த் தேர் முட்டிப் படியிலே சுவாமிகளின் குருபரனாகிய செல்லப்பன் என்னும் சீமான் அமர்ந்திருந்தது போலவே, பலரும் போக்குவரவு புரியும் தெருச்சந்தியில் சிவயோகச் செல்வர் அமர்ந்திருந்தார். இதுவே சுவாமிகளின் ஆரம்பவாழ்க்கை. இவ்வாறு பல நாட் கழிந்த பின்னரே அண்மையிற் கிடந்த ஒரு கொட்டிலிற் குடியேறினார். சுவாமிகளின் ஞான ஒளி நாடெங்கும் பரவத்தொடங்கியது. அவர்கள் வீற்றிருந்த திவ்வியமான கொட்டிலிலே சாத்திரஞானமும் சைவாசார சீலமும் சாதனை நாட்டமுடைய சைவப்பெரியார் பலர் வந்து சுவாமிகளின் தரிசனம் பெற்றனர். நாட்டுத்தலைவர்களும் கல்விமான்களும் சுவாமிகளை முன்னும் பின்னும் தொடர்ந்து திரியலாயினர். படித் தோரும் படிப்பில்லாதோரும் உயர்தர உத்தியோகம் வகிப்போரும் கூலிவேலை செய்வோரும் இளைஞரும் வயது முதிர்ந்தோரும் ஏழைகளும் செல்வந்தரும் நாஸ்திகரும் குடிப்பழக்கம் உள்ளோருங்கூட சுவாமிகளின் திருவடிகளில் மண்டியிட்டுக்கிடந்தனர். கிறிஸ்தவரும் பெளத்தரும் இஸ்லாமியரும் அவரை அண்டிவரலாயினர். அதிகா லைப்பொழுதிலிருந்து அர்த்த சாமம் வரை அத்திவ்வியமான ஆச்சிரமத்தில் அடியவர் வருவதும் போவதுமாயிருந்தனர். அவரவர்க்கு ஏற்றவாறு உணவும் மருந்தும் பரிகாரமும் வழங்கப்பெற்றன. சுவாமிகளின் திருவாயிலிருந்து மலரும் சொற்கள் அத்தனையும் அவர்களை அண்டிவந்த அனைவர்க்கும் ஒளடதமாகத் திகழ்ந்தன. நாட்டு மக்களுக்கு சுவாமிகள் ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியன. ஒப்பாரும் மிக்காருமில்லாத இம்மகா புருஷர் 92 ஆண்டுகள் ஈழத்திருநாட்டில் சஞ்சாரம் செய்து மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்தார். வடக்கிலும் கிழக்கிலும் சிவதொண்டன் நிலையங்களை நிறுவி சிவப்பணியை வலுப்படுத்திய சுவாமிகள் தாம் பெற்ற இன்பம் இவ் வையகம் முழுவதும் பெறவேண்டுமென்ற பெருநோக்குடன் 1964ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் ஆயிலியத் திருநாளில் மகாசமாதியடைந்தார்கள். வாழ்க யோக குருநாதன் திருவடி மலர்கள். இப்பேரருளாசான் திருப்பெயரால் லண்டன் மாநகரில் ஓர் சிவதொண்டன் நிலையம் அமைக்கப்பெற்றுள்ளது. 1993 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 12ஆம் திகதி அங்குரார்ப்பணம் Qstiutiu'll giflood Guu is 256 B High Street North, Manor Park, London E12 6SB(081552 6381) என்னும் முகவரியில் இயங்கிவருகின்றது. மாதந்தோறும் முதலாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கும் 5.00மணிக்கும் இடையில் கூட்டுப்பிரார்த்தனை இடம் பெறுகின்றது. இதில் சைவத் திருமுறைகள், நற்சிந்தனைப் பாடல்கள், சுவாமிகளிடம் அடியார்கள் பெற்ற அநுபவங்கள் என்பன இடம் பெறுகின்றன. சைவமெய்யண்பர்கள் இப்பிரார்த்தனைகளிற் கலந்துகொண்டு நற்பயனடைவது வேண்டற்பாலது.
- CC-3c N-L

Page 10
கலசம் ஐப்பசி-கார்த்திகை-மா
இறைவா வருக எனைய இதுவே தருணம் புவிமீே
அநுப
நறையாய் எனையே நா6 நாயகனே ! நானிலத்தே
JFU60
கானா இறைவன் உண் காண வேண்டி கவுழுகின் காணாய் என்றனர் நிலை கானுமோர் எணர்ணம் உ
நிலையா வாழ்வை நித்தி நினைந்து யானே நினை களையாய் என்றணி கவ களையுமோர் எண்ணம்
அருளாலே அருளை அ அருள் வேணிடிப் பிதற்று அருளின் அருளே! அரு அருளுமோர் எணர்ணம்
 
 
 
 

後貓
ல்லவி
ர்தருவேன் T
- இறைவா
多 貓 ※
须 * &
&
须 签
TLD
ர்றேனர்
னக்குணர்டேல் - இறைவா
LULOTLů வழிந்தேன் O)6)560)6OT உனக்குணர்டேல் - இறைவா
றிந்தே கின்றேன் TTSLT!! டனக்குணர்டேல் - இறைவா
&
ॐॐ ---------
--- &

Page 11
கலசம் ஐப்பசி-கார்த்
அல்லது மணக்காட்சி என்று பொருள். தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்பது
பொருள். ஞானிகளின் காட்சிக்கு புலப்பட்ட பேருண்மைகளே இத்தரிசனங்கள். முக்கியமாக ஆறு தரிசனங்கள் கூறப்ப டுகினறன. அவையாவன நியாயம், வைசேடிகம், சாங்கியம் யோகம்,
மீமாம்சை,
தத்துவ முறையிலும் உள்ள
கொள்கைகளை முறைப்படுத்தி நூற்பாக்களாக (சூத்திரங்களாக) அமைத்தவர் ஒருவர் உண்டு.
முறைப்படுத்தி அமைத்தார். கன்னடர் (கி.மு.300) வைஷேடிக சூத்திரங்களை அமைத்தார். சாங்கியத்தை முறைப்படுத்தியவர் கபிலர்(கிமு 700) இது பற்றி கிடைக்கின்ற சிறந்த நூல் ஈஸ் வர கிருஷ னர் (கிமு500) எழுதிய சாங்கியக் காரிகை ஆகும். யோக முறையை முதன் முதலில் முறைப்படுத்தியவர் பதஞ்சலி (கிமு 200)
ன்பவர். மீமாம்சையை முறைப்படுத்தியவர் சைமினி (கி.மு 400-கி.மு 300 ) என பவர். வேதாநீத சூத்திரங்களை முதலில் தொகுத்தவர் பாதராயணர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகை-மார்கழி 1994 9
(கிமு 400 ) உபநிடதங்கள், மோட்சம் பற்றிய ஆராய்ச்சிகள் மேலோங்கியதன் பயனாகவே தரிசனங்கள் தோன்றின . பிரபஞ்சம் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிய வேண்டும், துன்பத்தைப் போக்கி இன்பத்தை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லோரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். தரிசனங்களுக்கிடையே பெரிய வேறுபாடுகள் உண்டு. இறைபற்றின்மை தொடக்கம் ஒருமை வாதம் வரை பல வேறு பாடுகள் ஆரம்பத்தில் இருந்தன. பலநூற்றாண்டுகளாக ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. தத்துவக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய விளக்கங்கள் பல கூறப்பட்டன. இந்தியத் தத்துவ ஞானிகள் செய்துள்ள அபாரமான
ஆராய்ச்சிகளும் அவர்கள் விட்டுச் சென்ற அதிநுட்பமான முடிவு களும் மேல்நாட்டவர் உட்படப் பலரையும் பிரமிக்கச் செய்துள்ளன. வேத வழிபாட்டு முறைகள் இக்காலத்தே சரிவடையத் தொட ங்கின. பெளத்தம், சமணம் ஆகிய புதிய சமயங்கள் தோன்றின. செல்வாக்குப்பெற்ற புதிய வர்த்தக வகுப்பினர் தமது ஆதரவினை வேதம் சாராத சமயப்பிரிவினருக்கு நல்கினர். அவருள் சிலர் இச்சமயங்களைப் பின்பற்றினர். பிராமணர்கள், மதகுரு என றிருந்த நிலையில செல்வாக்கைப் பெரிதும் இழந் தனர். பெளத்தம், சமணம் ஆகிய சமயங்களை முறையே தோற்றுவித்த புத்தரும் மகாவீரரும் அரச குடும்ப ங் களிற் பிறந்தவர்கள். அன்றைய காலத்தில் இந்து சமயத்தில் மலிந்திருந்த சீர்கேடுகளையும் பிராமணரின் ஆதிக்கத்தையும் அவர்கள் எதிர்த்தார்கள். உலகில் மக்கள் ஏன் துன்பப்படுகின்றார்கள்? துன்பநிலையில் இருந்து இன்பத்தை அடைவது எவ் வாறு? இந்த வினாக்களுக்கு அன் றிருந்த அறிஞர்கள் கொடுத்த விளக்கம் அவர்களைத் திருப்திப்படுத்தவில்லை. எனவே துறவு பூண்டு, உண் மையை நாடி, கடும் தவம் இருந்து உள்ளொளி பெற் றனர். தாமி கண ட உணி மைகளை மக்களி
டையே அவர்கள்

Page 12
கலசம் ஐப்பசி-ச
பேச்சுமொழியிற் பரப்பினர். காலப்போக்கிற் பெளத்த சமணசமய நூல்கள் மக்கள் வழங்கும் மொழிகளிலேயே எழுதப்பட்டன. வேதங்கள் அதிகாரம் உடையவை, இறையால் வெளிப்படுத் 'தப்பட்டவை என்பதைப் பெளத்தம் -சமணம் ஏற்கவில்லை. கடவுள் உலகைத் தோற்றுவித்தவர் என்னும் நம்பிக்கையும் ஏற்கமறுத்தன. புறத்தே செய்யப்படும் சடங்குகள், சடங்கு விதிமுறைகள் என்பனவற்றை ஏற்கவில்லை. விரதம் இருப்பதன் மூலமோ, கங்கை நதியில் நீராடுவதன் மூலமோ பாவங்களை அகற்ற முடியும் என்பது ஒவ்வாத கருத்து என்றும் பாவங்களைப் பூரணமாகச் செய்யாமல் விடுவதே சிறந்தது என்றுங் கூறின. சாதிப்பாகுபாடு, தீண்டாமை, என்பவற்றை எதிர்த்தன, மறுத்தன. உடலை வருத்துவதன் மூலம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்தி மோட்சம் அடையலாம் என்பதை பெளத்தம் ஏற்கவில்லை. பொசுக்கும் வெய்யிலில் இருத்தல் முட்படுக்கையிற் படுத்தல், உடலில் வேல்பாய்ச்சுதல், என்பவை மூலம் உண்மையை உணர முடியாது என்றும், உடலைத் துன்புறுத்துவதை விட்டு மனத்திலுள்ள மாசுகளை அகற்றுதலில் மிகவும் உறுதியுடன் இருத்தலே ஏற்றது என்றுங் கூறியது பெளத்தம். இவ்வாறே பல நூற்றாண்டுகளாக மக்களால் பின்பற்றப்பட்டு வந்த சமய மூட நம்பிக்கைகளும் கண்மூடித்தனமான விசுவாசமும் பெரிய தாக்கத்துக்குள்ளாயின. பிரமம் என்னும் கருத்தைப் பெளத்தமோ, சமணமோ ஏற்கவில்லை. எனினும், தியானம், யோகம், துறவு, கர்மம் மறுபிறப்பு என்பவற்றை இருசாராரும் ஏற்றனர். கர்மம், மறுபிறப்பு என்பன பற்றி தமது வேறுபட்ட விளக்கங்களையும் தெரிவித்தனர். பெளத்தமோ, சமணமோ, தோன்றியபின், தொடர்ந்த பல நூற்றாண்டுகளில் இந்து சமயத்துக்கும் இவற்றிற்குமிடையே பல கருத்துப் பரிமாறல்கள் ஏற்பட்டு வந்தன. இக்காலப் பகுதியில் கடவுள் நம்பிக்கை ஒரு உன்னத நிலையை அடைந்தது. வேத காலத்தே முக்கியத்துவமில்லாதிருந்த கடவுள்கள் சிவன், சக்தி, விஷ்ணு தலைமையான ஒரு நிலையைப் பெற்றனர். வேதகாலத்தே ஆரியர் லிங்க வழிபாட்டை வெறுத்தனர். லிங்கவழிபாடு செய்தவர்களை ஒதுக்கினர். ஆரம்பத்தில் சிவனுக்கு பிராமணரல்லாதாரே பூசை செய்து வந்தனர். மக்களிடையே சிவவழிபாடு பிரபல்யமடைந்த பின்னர் பிராமணர்கள்தான் பூசை செய்ய வேண்டும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பெயர். அன்புள்ள, ஆதரவுள்ள கடவுளாகவும், ஆக்கல், அழித்தல், யோகம், நடனம், இனவிருத்தி என்பவற்றிற்குரிய தெய்வமாகவும் கருதப்படுகிறார். துர்க்கை ஒரு தாய்த் தெய்வமாக ஆரம்ப காலத்தில் வழிபடப்பட்டது. சக்தி, காளி, தேவி, பார்வதி, உமா மேலும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். சிவன் அறிவின் ஆதாரமென்றால் சக்தி அதன் இயக்கம் சிவன் உலகத் தோற்றத்திற்கு அடிப்படையாய் அமையும்போது சக்தி அதனை இயக்கும் தத்துவமாய் விளங்குகிறாள். அளவிடமுடியாத ஆற்றல், எல்லாப் பொருளுக்கும் இருக்கும் மூலப்பொருள், மிக உயர்ந்த பிரமம். அளவற்ற ஜோதியுடன் பிரகாசிப்பவள், கருணைபுரிபவள். மங்களங்களை அளிப்பவள், சகல செல்வங்களையும் அளிப்பவள், வறுமையைப் போக்குபவள், பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றுபவள், துர்த்தேவதைகளை விரட்டியடிப்பவள். உலகைக் காப்பவள் என்று கருதப்படுகிறது. - விஷ்ணு ஒரு கருணையுள்ள கடவுளாகவும் உலகத்தைக் காக்கும் கடவுளாகவும் கருதப்படுகிறார். உலகில் அதர்மம் ஓங்கும்போது,

ார்த்திகை-மார்கழி 1994 O
தர்மத்தை நிலைநாட்ட, அவதாரம் எடுத்து வருவார், என்ற கருத்தும் உண்டு. இந்த வகையில்தான் கிருஷ்ணர், இராமர், ஏழாம், எட்டாம் அவதாரங்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் இக்கால கட்டத்தே தான் தோன்றின. பகவத் கீதை மகாபாரதத்தில் ஒரு பகுதியாகும். இதிகாசங்கள் என்பன ஒரு நாட்டு வீரப்பெருமக்களின் வீர தீரச் செயல்களை பாடல்வடிவிற் சொல்லும் கதைகளாகும். அதே வேளையில் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பல கதைகளும் உபகதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. வான்மீகி எழுதிய இராமாயணத்தில் இலட்சிய புருடனாகிய இராமனது கதை சொல்லப்படுகின்றது. ஒரு மனிதன் பெரியவர்களோடு எவ்வாறு பழக வேண்டும். சமமானவர்களோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தன்னை விடக் குறைந்த வர்களை எவ்வாறு நடத்த வேண்டும். ஒரு அரசன் தன் நாட்டை எங்கனம் ஆழ வேண்டும். ஒரு சமுதாயம் அமைதியாகச் சச்சரவின்றி எப்படி வாழ இயலும் என்பன போன்ற விடயங்களைச் சொல்கின்றது. நேர்மை, உண்மை, சகோதரபாசம், சக உயிரினங்களிடையே அன்பு செலுத்துதல், கருணை, கற்பு, என்ற பல உன்னத மனித ஒழுக்கங்கள் பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு மக்களுக்கு முன்மாதிரியாகக் காட்டப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதம், ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர், கெளரவர் எண்போரிடையே நடந்த குடும்பச்சண்டைகள் பற்றியது. இவர்களது பகை பெரும் போராய் நடந்தது. தருமத்தைச் சார்ந்து நின்ற பாண்டவர் கிருஷ்ணர் உதவியால் வெற்றி பெற்றனர். நல்லொழுக்கம் தத்துவம் பற்றிய பல உரையாடல்கள் பல உவமைகள் ஏராளமாக மகாபாரதத்தில் உண்டு. பகவத்கீதையும் ஒருவகை உரையாடலே. தன் உற்றாரோடு போர் தொடுக்க மறுத்த அர்ச்சுனனுக்கு நல்லுபதேசம் செய்தார். ஒருவன் தனது கடமையை செய்ய வேண்டும். பலனைக்கருதாது செயலில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே உபதேசத்தின் முக்கிய நோக்கம். மேலும், இந்து சமயத் தத்துவத்தின் சாரத்தை அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார். அழிக்கப்பட முடியாத, அழியாத ஒரு பொருள் ஆண்மா. தன்னை அறிந்துகொள்ளுதல், தன்னை மறந்து அன்பு செலுத்துதல, தன்னலமற்ற சேவை இவற்றின் மூலம் ஆன்மாவால் இறைவனோடு ஒன்றுபட இயலும். நள தமயந்தி சத்தியவான் சாவித்திரி போன்ற கதைகளும் மகாபாரதத்திலே உள்ளன. ஒழுக்கம், ஆன்மீகம், சட்டங்கள், விதிகள் என்பனவற்றை சாதாரண பாமரனுக்கு விளக்கவும் நல்வழிப்படுத்தவும் இதிகாசங்கள் உதவும். இதே வேளையில் இன ரீதியாகவும் சில பிரிவினரை மேம்படுத்தும் வகையிலும் இவை அமையும் போது ஒரு பகுதி மக்களின் எதிர்ப்பு ஏற்படுகின்றது. இராமன் ஒரு ஆரியனாகவும் இராவணன் ஒரு திராவிடனாக கருதப்பட்டதும், இராம இராணுவப்போர் ஆரியருக்கும் திராவிடருக்குமிடையே ஏற்பட்ட ஒரு போராக கருதப்பட்டமையுமே இராமாயணத்திற்கு எதிராகத் திராவிட கழகத்தினரைப் பிரசாரம் செய்யவைத்தது. இறுதியாக இக்காலகட்டத்தின் போது ஏற்பட்ட அபிவிருத்திகள் பின்வருமாறு. வேதகால கேள்விமுறைகள் கைவிடப்பட்டு கடவுள் வழிபாட்டில் பூசை செய்யும் முறை வழக்கில் வந்தது. புராணங்கள் பல தோன்றின. சமயப்பக்தியை பாமர மக்களிடையே உண்டாக்குவதும் சமய அறிவை பரவச்செய்வதும் புராணங்களின் நோக்கமாகும். பதினெட்டுப்புராணங்களும் அதே எண்ணிக்கை உப புராணங்களும் உள்ளன என்று அறிஞர் கூறுகின்றனர். கோவில் கட்டுதல் உருவங்கள் செய்தல் திருவிழாக்கள் யாத்திரை என்பன ஒழுங்கு செய்தல்
ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டன.

Page 13
கலசம் ஐப்பசி கார்த்திை
"அரிது அரிது மானிடராதல் அரிது" என்றார் ஒளவையார்.
எண்ணரிய பிறவிகளில் மானிடப்பிறவியே சிறந்தது என்றார் தாயுமான சுவாமிகள். மணிவாசகப் பெருமானும் சிவபுராணத்தில் மனிதப்பிறவி பற்றி வியந்து கூறியுள்ளார். தற்காலத்தில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து பூரீலg ஆறுமுக நாவலர் பெருமானும் இறைவன் எமக்கு இவ்வுடலைத் தந்தது தன்னை வழிபட்டு முத்தியடைவதற்கேயாகும் " என்று தனது சைவசமயப் பண்பினால் அநுபவித்த அநுபவமூலம் அருளியுள்ளார். தாண்டக வேந்தராம் அப்பர் சுவாமிகளும், " மனித வாழ்வின் நோக்கமென்ன?" என்ற வினாவிற்கு விடையாக
குணித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்தமானிலத்தே என்றும்
வாய்த்தது நம்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின் பார்த்ததற்கு பாசுபத மருள் செய்தவன் பத்தருள்வீர் கோத்தென்று முப்புரத் தீவளைத் தான் தில்லையம்பலத்துக் கூத்தனுக் காட்பட்டிருப்பதற்றோ நந்தங் கூழமையே! என்றும் பாடியுள்ளார்.
ஒரு பேனாவினால் இந்த நாவினால் நல்லதையும் செய்ய முடியும். கெட்டதையும் செய்ய முடியும். நல்லதைச் செய்வதினால் நாடும் மக்களும் தானும் நன்மையடைவதுடன் காலம் முழுவதும் நன்மையே விளைகின்றது. தீமையைச் செய்வதினால் தீமையே எல்லோர்க்கும் விளைகின்றது. இவ்வுடல் அழிந்து போவது என்றும் அழியாதது இவ்வுயிரும் இறைவனுமாகும் என்றும் கூறியுள்ளார். இறைவன் தன்மையை இவ்வுயிர் அடைய வேண்டின் செயற்கரிய செயற்பாடுகளை செய்தல் வேண்டும்.
அழிந்து போகும் போகம் பதவி புகழ் போன்றவற்றிற்காக பொருந்தாத செயல்களை செய்து எடுத்த தேகம் பயனடைய
 

-Lorris's 1994 1.
系、荔、
paiоup zla, ali
8. O 6)QUID
பூரணமாய் பொங்கி ததும்பிக்கிடக்கும் பேரானந்த தேன்வெள்ளம் பருக வரும்படி யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தாயுமான சுவாமிகள் உலக மக்களை உவமான உவமேயம் மூலம் அழைக்கின்றார் அல்லவா? சைவம் என்பது அன்பு. அன்பு தான் சிவம். இதனை திருமூல நாயனார் தமது தவவாழ்வுக்கென்ற அனுபவ மூலம் வெளிப்படுத்துகின்றார். அன்பும் சிவமும் இரண்டெண்பர் அறிவிலார் அன்பே சிவமான தாரும் அறிகிலார் அன்பே சிவமாக ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
திருமூல நாயனார் கண்டு அனுபவித்த அன்பிற்கும் இன்றைய மக்கள் காணும் அனுபவிக்கும் அன்பிற்கும் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் உண்டு. இறையோடு இசைந்த அன்பு என்றும் அசையாது. அழியாது. மாறாது.இவ்வன்பு புனிதம் தூய்மை விசுவாசம் நிறைந்தது. இன்றைய உலகில் காணப்படும் அன்பு தோன்றி மறையும் தன்மையது. என்பதை அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் காண முடிகின்றது. பொதுவாக பலாபலனை எதிர்நோக்கியே இன்று மக்கள் அன்பு செலுத்தி அதனால் தீராப்பகமை பிரச்சனை முதலியவற்றை விளையச் செய்கின்றார்கள்.
திருமூல நாயனார் அண்பையும் சிவத்தையும் ஒன்றாகக் கண்டு அனுபவித்தவர். நெருப்பையும் சூட்டையும் எப்படிப்பிரிக்க முடியாதோ பாலையும் வெண்மையையும் எப்படிப்பிரிக்க முடியாதோ மணியையும் ஒலியையும் எப்படிப்பிரிக்க முடியாதோ அவ்வாறே அன்பையும் சிவனையும் பிரிக்க முடியாதென்று கூறுவர். அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவமும் மணியும் ஒலியும் போன்றவையாகும். அவற்றை வேறு வேறு என்று கூறுவர். சைவசமயத்தில் மெய்யுணர்வு கைவரப்பெறாதவர் களேயாவர். உண்மையின் வழி நின்று ஆன்மீக உணர்வோடு நோக்கினால் அன்பாகிய திருவருள் இன்பமாகிய சிவனுக்குத் திருமேனியாகும். அந்த வழியில் அன்பே சிவமாகும். இந்தப்

Page 14
கலசம் ஐப்பசி-கார்த்தின்
பேருண்மையை உணராதோர் அன்பு வேறு சிவம் வேறு என நினைந்து ஆத்மீக சக்தியை அழிக்கின்றனர். அன்பு தான் சிவமென்ற உண்மையினை சிவனருளால் நன்கு உணர்ந்தவர்கள் இடையறாது இறைவனின் திருவடிகளைச் சிந்தித்து அன்பு மயமாகிவிடுகின்றனர். அன்புறு சிந்தையர் ஆகி அடியவர் நன்புறு நல்லோர் பெருமண மேவிநின்று என்புறு மெந்தை இணையடி ஏத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே!
எண்பர் திருஞானசம்பந்தர் சுவாமிகள். எனவே சிவமும் அன்பும் ஒன்றாய் சைவசமய ஏட்டில் காட்சியளிக்கும் வரை அன்பு விதை விதைக்கப்படுகின்றது. அது மரமாகி அரும்பாகி மலராகி பிஞ்சாகி தாயாகி கணியெனும் சிவமாகின்றது. பார்க்குமிடமெங்கும் அன்பு வெள்ளம் பெருகுவதனால் நாட்டிலும் வீட்டிலும் துன்பங்கள் சுலபமாக அகன்று விடுகின்றன. ஒருமுறை முருகப்பெருமான் பழந்தமிழ்ப் பெருமை மிக்க ஒளவைப்பாட்டியை நோக்கி இந்த உலகிற் பெரியது எது என்று கேட்டார். அதற்கு ஒளவையர் பெரியது கேட்கின் என்று தொடங்கி தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என தொண்டர்களே உலகிற் பெரியவர்கள் என்று பாடினார். அந்த அளவு தொண்டர்கள் சிவ வழிபாட்டிலும் அன்பு வழியிலும் சைவப்பண்பாட்டிலும் மிகுந்து காணப்பட்டமையால் சிவபெருமானே கூலியா ளாகவும் தூதுவராகவும் பல தொண்டுகள் தமது மெய்யன்பர்களுக்கு ஆற்றியுள்ளார். எம்பெருமானுக்கு தொண்டு செய்து பெருமை பெற்ற அருளாளர்களின் அற்புதங்கள் அளப்பரியன. தொண்டர் பெருமை பற்றி கூறுந் நூல் பெரிய புராணமாகும். சைவத்தமிழ் நூல்களில் பல நூல்கள் தோற்றத்திலும் எண்ணிக்கையிலும் மிகவும் பெரிதாகக் காணப்பட்டபோதிலும் சேக்கிழார் சுவாமிகளால் இயற்றப்பட்ட திருத்தொண்டர் புராணம் என்னும் நூலே பெரிய புராணமென அழைக்கப் படுகின்றது. இந்நூலில் நாயன்மார்கள் தமது வாழ்க்கை முழுவதும் செயற்கரிய செயல்களைச் செய்து பெற்ற பெருமைகளை தவத்திரு சேக்கிழார் சுவாமிகள் பக்தி நனி சொட்ட நவரசத்துடன் இணைத்து படிப்போர் மீண்டும் மீண்டும் படிக்கும் வண்ணம் யாத்துள்ளார். தொண்டர் குணப்பண்புகளை
மாசிலாத மணிதிகழ் மேனி மேல் பூகம் நீறுபோல் உள்ளும் புனிதர்கள் தேசிநாலத் திசையும் விளக்கினார்
பேசவொண்ணா பெருமை பிறங்கினார்
பூதமைந்தும் நிலையிற் கலங்கினும் மாதர் பாகத்தர் மலத்தாள் மறப்பிலர் ஒதுகாதல் லுறைப்பின் நெறி நின்றார் கோதிலாத குணப்பெருங் குன்றனார்

கை-மார்கழி 1994 12
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் பொன்னுண் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டார் விறலின் விளங்கினார் எனப்பாடுகின்றார். இறப்பும் பிறப்புமின்றி, ஆதியும் அந்தமுமின்றி, தனக்குத் தானே தலைவனன்றி வேறு தலைவன் இல்லாமலிருக்கும் சிவபெருமானின் அருமை பெருமை பற்றி முழுமையாக அறிந்த நாயன்மார்கள் பற்றிக் கூறும் பெரிய புராணச் செய்திகள் யாவும் உண்மையும் அற்புதமும் கொண்டவை என்பதை, நாள்தோறும் பக்தி சிரத்தையுடன் படிக்கும்போது அறிய முடிகின்றது. மூன்று வயதான குழந்தையை தந்தை தனியே குளத்தின் படியில் இருத்திவிட்டு நீரில் மூழ்கிவிடுகின்றார். தந்தையையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தை விளிக்கின்றது. அங்கு மிங்கும் பார்க்கின்றது. ஊன் உடலைத் தந்த தந்தையைக் காணாத குழந்தை அருள் ஞான உடலைத் தந்த அம்மை அப்பரை வெள்ளை விடைமேல்க் கண்டு கண்களைப்
பிசைந்து அழுத அழுகையை சேக்கிழார் கவாமிகள் ,
வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க பூதபரம் பரைபொலிய புனித வாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலி திருஞான சம்பந்தன் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
எனப்பாடுகின்றார். அமுத பிள்ளைக்கு எம்பெருமான் எம் பெருமாட்டி மூலம் ஞானப்பால் பருகக் கொடுத்து குழந்தையின் ஞானப்பசியை மேலும் வளர்த்துவிடுகின்றார். திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாயிலிருந்து திருமுறைகள் ஞானமழையாகச் சொரிந்து அஞ்ஞானத்தை வளர்த்து வந்த புறச்சமயத்தை அழித்துவிடுகின்றது. மருத்துவர்களாலும் மந்திரவாதிகளாலும் செய்ய முடியாத செயல்களை திருஞானசம்பந்த சுவாமிகளின் தேவாரம் பாடுவதனால் செய்ய முடிகின்றத. என அருளாளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். பொருள் பல செலவழித்து நோய்க்கு வைத்தியம் செய்து நீங்காத நோயும் மந்திரவாதியால் விரட்டமுடியாத கிரகங்களும் ஞானசம்பந்த சுவாமிகளும் கோளறு பதிகத்தை பக்தியோடு பாடுவதால் நீங்கிவிடுகின்றது. பிறவியிலேயே வறுமையுள்ளவனுக்கு யார் உதவி செய்தும் நீங்காத வறுமை இடரினும் தளினும் பதிகம் பாடுவதால் நீங்கிவிடுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு குறைபாடுகளையும் நீக்கி இன்னருள் பெற உதவும் களஞ்சிய அமுதமாக திருமுறைகள் காணப்படுகின.
உலகத்தில் நிலையான பொருள்கள் மூன்று. அவை பதி பசு பாசம் என்பதாகும் பதி கடவுள் , பசு உயிர், பாசம் ஆணவம், ஆணவம் என்னும் மலம் பசுவைப்பிடித்து விடாது தடுப்பவர் வைத்தியநாதராகிய சிவபெருமான். ஆன்மா அறியாமை எனும் மல நோயினால் பீடிக்கப்படாது இருப்பு

Page 15
கலசம் ஐப்பசி-கார்த்தி
தற்காக எம்பெருமான் வேதாகமங்களை எழுதாமறையாக இருடிகளுக்கு அருளினார். சிவபெருமான் அருளிய இவ்வேதசிவாகமங்கள் சைவசமயத்தின் மூலக்கருப்பொ ருட்களாகும். இவற்றை எல்லோரும் விளங்கி அனுப விக்கவே உபநிடதங்கள் 14 சாத்திரங்கள் இதிகாசங்கள் புராணங்கள், திருமுறைகள் மலர்ந்தன. இவைகள் மக்களின் அகம், புறம் ஆகியவற்றைச் சுத்தமாக்கி மன அமைதியையும் ஞான ஒளியையம் தருவனவாகும். மேன்மைகொள் சைவமதத்தின் உண்மை அளப்பரியது ஆழமானது அகலமானது. ஆதியும் அந்தமும் இல்லாதது. இத்தகைய உண்மைகளை வெறும் எழுத்தாலும் பேச்சாலும்
உணர்த்திவிடவோ அனுபவிக்கவோ முடியாது. சாதனை செய்ய வேண்டும். பூரண நம்பிக்கை வைக்க வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் எம்மை சமயவழிப்படுத்தி பெரியோ ராக்கிவிடும் . மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெலாம்.
_ul- o TD><5 G ~
ஒரு கேள்வி ~ ஒரு பதில்
கடவுள் காப்பாற்றுவார் என்றும்- அவர் ஆணைப்படியே எல்லாம் நடக்கும் என்று சொல்லுவதும் நம்புவதும் நம்முடைய தன்னம்பிக்கையைப் பாதிப்பதாக ஆகிவிடும் அல்லவா? இதை எப்படி ஏற்பது?
தன்னம்பிக்கை என்பது எல்லா மனிதர்களுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்றேயாகும்.இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.தன் நிலையை, தகுதியை அறிந்து வைப்பது தான் தன்னம்பிக்கை. தனது நிலையே தெரியாமல் செய்யும் காரியம் தன்னம்பிக்கை அடிப்படையில் அமைய முடியாது. உதாரணமாக மின்சாரக் கம்பியினைத் தொடும் முன்பு கையில் ரப்பர் உறை அணிந்திருக்க வேண்டும். அல்லது மின்னோட்டத்தை முதலில் தடைப்படுத்தவேண்டும்.இந்த இரண்டையுமே செய்யாமல் தன்னுடைய பலத்தில் தன்னம்பிக்கை என்று எண்ணிச் செய்வது ஆபத்தில் தான் முடியும். அதே போல வாழ்க்கையில் அடியெடுத்து வைக்குமுன் நம்மைநாம் உணர்ந்து கொண்டு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.இல்லாவிட்டால் இன்பதுன்பங்களின் பாதிப்பு இல்லாத தன்மையையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் . இவை இரண்டுமே இல்லாமல் ஆணவத்தினால் மட்டுமே சாதிக்க எண்ணுகிறபோது வாழ்க்கை பிரச்சினையாகிவிடும். மதமும் பக்தியும் அவை காட்டும் ஆன்மீக வழியும் இப்படி நம்மைத் தயார் செய்து கொள்வதற்குத்தான் உதவுகின்றன. அவை தருகின்ற தன்னடக்கமும், பற்றில்லாமல் செயற்படும் சக்தியும் நம்முடைய தன்னம்பிக்கைக்குத் துணையாக நிற்கின்றன. அதற்குப் பாதிப்பாக வந்து குறுக்கிடுவதில்லை.
- பெரியவர் இராமமூர்த்தி

கை-மார்கழி 1994 13
GogFr6b G6rbr6īlub 1
1 2 3 4 5 7 10
11 14 6 7 19 20
21 22 23 24 25 27 30
31 34 36 37 38 39 40
42 43 as 46, as 49
54 55 56 57
61 62 63 64 65 66 70
71 74 75 78 80
81 88 90
91 93 94 95 96 97 98 99 100
இடமிருந்து வலம்
1. தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் (5)
18.அரனும் அரியும் அடிமுடி காண இது ஆனாளிலையே
என்கிறார் ஒரு புலவர்.(2)
19.கடவுளின் இருப்பிடம் (2)
21. பொங்கல் நாயகன்(5)
36. பிராமியின் மறுபெயர்(5)
42. சக்தியின் பெயர் (2)
45. செல்வமகள் (2)
48. அபிஷேகம் முடிந்தவுடன் மூலஸ்தானத்தில் போடுவது.(2)
54. ஐந்து பாவங்களில் ஒன்று.(4)
61. உலகைப் படைத்தவர்.(6)
74. முருகனின் சக்தி (2)
93. ஞானசம்பந்தர் பாடியது.(8)
மேலிருந்து கீழ்
1. கருமங்கள் (4)
4. மூலஸ்தானம் (4) 7. திருவெம்பாவைக் காலம் (4) 10. முருகனின் கோயில்கள் அமைந்த இடம் (4) 36. திருமாலின் ஊர்தி (4) 38. தக்கனின் சாபம் பெற்றவன் (2) 39. பக்திக்கு இருக்கக்கூடாது. (2) 45. விஷ்ணுவின் மறுநாமம் (4) 54. அப்பர் சிவனை இப்படி விழிக்கிறார்(3) 81. ஆனைக்காவில் முத்தி பெற்றவர். (4) 70. அழகு உடையவன் (4) 78. அனைத்தும் நீங்கியவன் (3)
இச் சொல்லோவியத்தைப் பிரதி செய்து நிரப்பி 15-12-94 க்கு முனர் அனுப்பி வைக்கவும், சரியான விடையை அனுப்பும் அதிஸ்டசாலிக்கு வேருடங்களுக்கான கலசம் அனுப்பிவைக்கப்படும்,

Page 16
கலசம் ஐப்பசி-கார்த்தி
திரு சவ. இரத்தினம்
முதன் முதலில் நளதீர்த்தம் சென்று அந்தத் தீர்த்தக் குளத்தை வலமாகப் பிரதசஷிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகள் உரு வச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும் . பிறகு நல்லெண்ணெயைத் தலையிற் தேய்த்துக்கொண்டு வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும். பின்னர் பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்கு ளத்திலும் தண்ணிர் தெளித்துக்கொள்ளலாம். பிறகு கோயிலுக்குள் நுழைந்து வலமாக வந்து பூரீசொர்ண கணபதியை முதலில் வழிபட்டு பூரீ சுப்பிரமணியர் சந்நிதியைத் தரிசனம் செய்து கொண டு மூலஸ் தானமாகிய பூரீதர்பாரணியேஸ்வரருக்கு அர்ச்சனை பூசைகள் செய்து பூரீதியாகேசர் சந்நதியைத் தரிசிக்க வேண்டும். பிறகு இரண்டாவது முறை வலமாக வந்து அம்மன் சநீ நதியை அடைந்து அர்ச் சனை பூசைகள் முடித்துக்கொண்டு கடைசியாக பூரீசனிபகவான் சந்நதிக்கு வந்து வழிபடுதல் வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம்வருதல் வேண்டும். அவரவர்களுடைய வசதிக்கும் சக்திக்கும் ஏற்றபடி பூரீசனி பகவானுக்கு அர்ச்சனை, தீபஆராதனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், ரட்ஷை, தானம், பிரீதி, நவநமஸ்காரம், நவப்பிரதட்ஷிணம் முதலியன செய்யலாம். காலை மாலை இருவேளையிலும் பூரீசனிபகவானை நவப்பிரதட்ஷிணம் செய்வதும் நல்ல பயன்தரும். மிக முக்கியமாக இங்கு வருபவர்கள் ஒருநாள் தங்கி வழிபடுவது நல்லதாகும். ஏனென்றால் இந்தத்தலத்தில் பூரீசனிபகவானுக்கு என்ன விசேஷம் உள்ளது, ஆகாயத்தில் உள்ள சனிக்கோளுக்கும் இந்தத் தலத்திற்கும் என்ன தொடர்பு என ஆராய்ந்தால் ஒருவிடயம் ஆச்சரியமாக இருக்கும். பூமத்திய ரேகையிற் சூரியனுடைய கதிர்வீச்சுகள் எப்படி அதிகமாக இருக்கின்றதோ அதே போல சனிக்கிரகத்தினுடைய நீள்வட்டப்பாதையில் உச்சமான சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுகள் இங்கு இத்தலத்தில் அதிகமாக அருகில் கிடைக்கின்றன என்பது விஞ்ஞான உண்மையாகும். இதனை ஞான திருஷ்டியில் உணர்ந்த பெரியவர்களாகிய முன்னோர்கள் சனிபகவானுக்கு இத்தலத்திற் கோயில்
 
 
 

கை-மார்கழி 1994 14
சனிக்கிரகம் விண்வெளியில் இருந்துகொண்டு தன்னுடைய
கதிர்களை இப்பகுதியில் வாரி இறைக்கின்றது. அதனால் ஒருநாள் இங்கு தங்கினால் சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுகள் நம்முடலிற் பட்டு நமக்கு நன்மையான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அப்படி ஒருநாள் முழுவதும் தங்கமுடியாதவர்கள் ஒரு இரவு மட்டுமாவது தங்கிக் காலையிற் பூரீசனிபகவானை வழிபடுவது நல்ல பயனைத்தரும். ஆகையாற் பக்தர்கள் இதனைக் கவனித்து உணர்ந்து பயன் பெறுவார்களாக! நவக்கிரகங்கள் எல்லாருக்கும் பொதுவானது என்ற நிலையில் இங்கு சனிபகவானை எல்லாச்சமயத்தைச் சார்ந்தவர்களும் எந்தவிதழான பேதமும் இன்றி வந்துவணங்குவது மற்று மொரு சிறப்பாகும். இவ்வாறு மொழி,இனம்,மதம், கடந்து சிறந்த தெய்வமாய் விளங்கும் பூரீசனிபகவான் மந்தன் இரு செந்தளிர்த்தாள் பணிந்து நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திட நலம் பலவும்பெற்று வாழ்வோமாக!.
பூனி சனிபகவானுக்கு உகந்த விரதங்கள் 1. பிரதி சனிக்கிழமை தோறும் பூரண உபவாசம் இருந்து காகத்திற்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம். 2.பிரதி சனிக்கிழமை தோறும் ஒருவேளை உணவோடு விரதமிருந்து பூணூரீசனிபகவான் தோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். 3.சிறிது எள்ளைப் பொட்டலமாகக் கட்டித் தினசரி இரவு படுக்கும்போது அதைத் தலைக்கு அடியில் வைத்துப் படுத் திருந்து காலையில் அதனை அன்னத்திற் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம்.(9 நாள் அல்லது 48 நாள், அல்லது 108 நாள் ) 4.ஒரு முழுத்தேங்காயைச் பூரீ சனிபகவானி சன்னதியில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டுத் தீபமாக ஏற்றலாம் , அல்லது திலதிபம் ஏற்றி வழிபடலாம். 5.யூனி சனிபகவானுக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து , கறுப்பு அல்லது நீலவஸ்திரம் சாத்தி எள்ளுச்சாதம் வடைமாலை, செய்து வழிபாடாற்றி , அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர்.

Page 17
கலசம் ஐப்பசி-கார்த்தி
ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். பூேரீசனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து தொடர்ந்து மண்டல பூசை செய்து பயன்பெறலாம். 7.எள்ளைச் சுத்தம் செய்து வறுத்து வெல்லம் ஏலக் காய்ப்பொடியுடன் சேர்த்து இடித்து திலகுரணம் செய்து gவெங்கடேசப்பெருமாளுக்கும் பூரீ சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம். 8.யூரீஆஞ்சனேயர், பூரீதர் மராஜனி, பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம். 9.அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது பூgசனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றைக்கோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத்தரும். 10.தினசரி நவக்கிரகம், மற்றும் பூg சனிபகவான் தோத்திரங் களைப்
பாராயணம் செய்யலாம்.
பூனி சனிப்பெயர்ச்சிக் காலங்களில்
தரிசனம் செய்யும் முறைகள்
பூg சனிபகவான் நவக்கிரகங்கள் ஒன்பதுக்குள் மிகவும் மெதுவாகச் சஞ்சாரம் செய்யும் கிரகமாவார். அதனாலேயே அவருக்கு மந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. வான வீதியில் ஒருபாகை தூரத்தைக் கடந்துசெல்வதற்கு சராசரியாக ஒருமாத காலமாகின்றது. ஆகையால் சனிக்கிரகத்தினுடைய சராசரி தினகதி இரண்டு கலைகள் ஆகின்றன. வக்ரம், அதிசாரம் இரண்டு நிலைகளிலும் இந்தக்காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள்கதிகளின் முடிவாகும். இந்த முடிவின்படி பூரீசனிபகவான் ஒருபாகையைக் கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் ஒருமாதகாலமும் சனிப்பெயர்ச்சி நடைபெறும் காலமாகவே கொள்ளவேண்டும். ஆகையால் சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக்கொண்டு பதினைந்துநாட்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ வந்து பூரீசனிபகவானைத் தரிசனம் செய்யலாம். இது பூரண நற்பலன்களைத் தரும் என்பதில் ஐயம் இல்லை. இரணடாவதாக பூgசனிபகவானுடைய ரசஷாயந்திரத்தை வகுத்திருக்கும் முறைகளைப் பார்த்தால் 45 என்ற இலக்கத்தை மனதிற்கொண்டு அதை ஆராய்ந்து அமைத்திருப்பது விளங்கும்.சோதிட நூல்களிற் சனிபகவான் அடுத்த ராசியின் ஆதிக்கம் மூன்று மாதங்களில் ஏற்பட்டுவிடுவதாகக் கூறப்படுகின்றது. இந்த இரண்டு கருத்துக்களையும் காணும்போது சனிப்பெயர்ச்சி தினத்தில் இருந்து 45 நாட்கள் முன்பாகவோ அல்லது பினி பாகவோ பூரீசனிபகவானை தி தரிசனஞ் செய்யலாம் என்றுமாகின்றது. இது சனிப்பெயர்ச்சிக்காலத்திற் தரிசனம்செய்யும் பலன்களைத் தரும் என்பதில் ஐயம் இல்லை. ஆகையால் ரிஷப ராசி, கன்னிராசி, விருச்சிக ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிக்கு முன்பாகவும் மிதுனம்துலாம், கும்ப ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிக்குப் பின்பாகவும் மற்ற ராசிக்காரர்கள் முன்னும் பின்னும் தரிசனம் செய்யலாம் என்று கருதுகின்றோம்.
 

கை-மார்கழி 1994
15
13-12-9
06-01-95
0-1-9 06-1-94 8-12-94 10-12-94
பிரதோஷ விரத விரதம்
19-12-94
28-12-94 30-1-1
01-01-95 195
12-01-95
14-01-95
குறித்து வைக்கவேண்டிய
சதுர்த்தி விரதம் விநாயக சஷ்டி விரதம்
- திருவெம்பாவைப் பூஜாரம்பம்
காதசி விரதம்
tii, கார்த்திகை
ரணை விரதம்
- - ஆருத்திராபிஷேகம் ; -;エ・'・'・・・・。-ー・リー・。 உதயம் நடேசர் ஆருத்திரா தரிசனம்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
鞑 போதாயன 3|LOThitசை அமாவாசை விரதம் சதுர்த்தி விரதம்
ஷஷ்டி விரதம்
சுவர்க்க வாயிலேகாதசி விரதம்,
கார்த்திகை விரதம்
சனிப் பிரதோஷ விரதம் தைப்பொங்கல் ...
தொகுப்பு- அமுதா

Page 18
கலசம் ஐப்பசி-கார்
ராசி பலன்கள்
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி
V.S. 650656mf
(SLDLib
வீணான மனப்பயம், மனக்கஷ்டங்கள் ஆகியவைகளுக்கு இடமுண்டு. சிலருக்குச் சரும சம்பந்தமான நோய்கள், விஷ ஐந்துக்களால் நோய், முயற்சிக்குத் தகுந்த பலனில்லாமை ஏற்படலாம். சும்மா இருப்பது, அல்லது மாற்றம் செய்யாதிருப்பது நல்லது. குடும்பத்திற் தேவையற்ற மனக் கஷ்டங்கள், மனவேறுபாடுகள் மனைவி மக்களுக்குச் சிறு நோய்கள் ஏற்படலாம். சிலருக்கு நெருப்பு, ஆயுதங்களாற் பயம் விளைய இடமுண்டு. கொடுக்கல் வாங்கல் மனநிம்மதியைக் குலைக்கலாம். வாகனம் ஒட்டுதல், பிரயாணம் இவைகளிற் கவனந் தேவை. தகுந்த பலன் கிடைக்காது. எதிலும் கவனம் தேவை.
இடபம்
மனதும் உடலும் சோர்வடையக்கூடிய வணிணம் விடயங்கள் நடைபெறலாம். தொழில், உத்தியோகம், வியாபாரம் இவைகளில் மூளையை உபயோகித்து நடக்கவும். பொருள் விரயத்திற்கு இடமுண்டு. நட்புகள், உறவுகள் மனக்கலக்கத்தைக் கொண்டுவரலாம். உடற்பலம், நோய் அல்லது கவலையாற் குறையலாம். குடும்பத்தில் மெளனமாக இருந்து அமைதி காப்பது நல்லது.குடும்பத்திற் கலகம் நோய் இவைகள் கவலையைக் கொடுக்கலாம். இடையூறுகள், பணக்கஷ்டங்கள் ஏற்படுமாயினும் புத்திசாலித்தனமாகச் சமாளிக்கப்படும். மாணவர்களுக்கு உயர்வு அபிவிருத்தி உண்டு. சிலருக்கு வாகன சுகம் விருந்துகள் கொண்டாடல் இடமுண்டு.
மிதுனம்
உடல்நலக் குறைவு.மனைவி, மக்கள், குடும்பத்தால் மனக்கவலை ஆகியவற்றிற்கு இடமுண்டு. நண்பர்கள், உறவினர்களுடன் விரோதத்தைத் தவிர்க்கவும் நோய் குணமாகுதல், எதிரிகளை வெல்லும் திறமை ஆகியவை மனமகிழ்ச்சி தரும். மதிப்பு, புதிய உற்சாகம் ஏற்படும். பொருள் வரவு, பூமி சம்பந்தமான விஷயங்களில் நல்ல முடிவுகள் உண்டு. எதிரிகள் தாமாக விலகுவார்கள். உத்தியோக உயர்வு. உறவினர்கள் மூலம் உதவி ஆகியவை ஏற்படலாம்.
கடகம்
செலவுகள் அளவுக்கு மீறிப் போகலாம். சிறு சிறு நோய்கள் ஏற்படலாம். மனைவிக்கு நோய் அல்லது மனைவியால் மனமகிழ்ச்சிக் குறைவு ஏற்படலாம். தொழில், நட்பு குடும்பம் இவைகளாற் தலைகுனிவு ஏற்பட இடமுண்டு. பொதுவாகக் கவனம் தேவை. நண்பர்கள், பிள்ளைகளால், உறவினர்களால்
 

திகை-மார்கழி 1994 16
மனக்கவலைக்கு இடமுண்டு. வீண் பழிகள் உண்டாகலாம். சிங்கம்
மனமகிழ்ச்சி, குடும்பஉறவு, நட்பு மூலமாகக் கிட்டலாம். உத்தியோகத்தில் இலாபம் அல்லது அபிவிருத்திக்கு இடமுண்டு. கெளரவம், பெருமை வந்து சேரும். பகை தானாக நீங்கும். சச்சரவு விவாதங்கள் ஏற்படலாம். நோய் வராது தவிர்க்கவும். மனச்சோர்வு, இடையூறுகள், கவலைகள் ஏற்படலாம். நண்பர்கள் சுற்றம் இவர்களாற் கவலைக்கு இடமுண்டு உடல் நலம் பாதிக்கப்படலாம். அவமானம், கெட்டபெயர் ஏற்படலாம். பிரயாணங்கள் ஏற்பட இடமுண்டு
கன்னி
பொருள் வரவு பூமி லாபம் இவைகளுக்கு இடமுண்டு. புதிய நட்புகள் நன்மை தரலாம். மதிப்பும் கெளரவமும் கூடும். அரசாங்க நன்மை. பலவிதமான பொருட்சேர்க்கைக்கு இடமுண்டு. இடமாற்றம், தவிர்க்க முடியாத பிரிவு, நோய்கள் உண்டாக இடமுண்டு. காரியத்தடை ஏற்படலாம். கண்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். குடும்பத்திலும் நோய்களுக்கு இடமுண்டு மனைவிக்குச் சுகக்குறைவு அல்லது மனைவியாலும் குடும்பத்தாலும் நிம்மதிக்குறைவுக்கு இடமுண்டு.
துலாம்
நண்பர்களுடன் வாதங்களைத் தவிர்க்கவும். மனைவி
உறவினர்களுடன் கவனந் தேவை. உடற் தளர்ச்சி ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல்களிற் கவனந் தேவை. உறவினர்களால் நண்பர்களாற் கவலை, மனத் தாங்கல்களக்கு இடமுண்டு. முயற்சி பயனளிக்காது. வயிற்று, மார்பு நோய்களைத் தவிர்க்கச் சிகிச்சை எடுக்கவும். ஆயுதங்கள் இயங்திரங்களுடன் வேலை செய்வோர் கவனம் எடுக்கவேண்டும். முயற்சி பயனளிக்காது போகலாம். கண் சம்பந்தமான நோய்களுக்கு இடமுண்டு. வீண் பழி கேட்க நேரிடலாம்.
8)
விருச்சிகம்
ஏமாற்றங்கள் அடைவதைத் தவிர்க்கவும். கவனந் தேவை. பொருள் வரவுப்பாதிப்பு, காரியத்தடை ஆகியனவற்றிற்கு இடமுண்டு. கார்த்திகையில் வெற்றி ஏற்படும். நோய் தீர இடமுண்டு. வாக்குவன்மை வரும். பயணம், புதிய வாகனம் வாங்குதல் ஏற்படலாம். மார்கழியில் வாகனங்களால் நஷ்டம், புதிய நட்புக்கள் உருவாகுதல், நோயாற் பாதிப்பு என்பன ஏற்படலாம். பொருட் செலவுகளைத் தவிர்க்கவும்.
தனுெசு
உத்தியோகம், வியாபாரம், தொழில் இவைகளால் நன்மையாயினும் புதிய சிக்கல்கள் ஏற்படலாம் . திறமையான பேச்சு வின்மையால் நன்மை ஏற்படும். பொருள் வரவு உண்டு. நண்பர்கள் தொழிலாளர்களால் நன்மை ஏற்படும். பணவரவு, புதிய உடைகள், நகைகள் சேர வாய்ப்பு உண்டு. வாகனங்கள் கஷ்டம் தரலாம். உடல் நலக்குறைவு ஏற்படலாம். ஆயுதங்களாற் சேதம் ஏற்படலாம். கவனம் தேவை. =====تی

Page 19
கலசம் ஐப்பசி-கார்த்தி
O D35JD
நினைத்த காரியம் நடக்கும். எதிரிகளைப் பணிய
வைக்கலாம். அறிவோடு கூடிய அணுகு முறை தேவை . பெண்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம். நில, பொருள் வரவுக்கு
இடமுண்டு. உடல் நலம் முன்னேறும். புகழ் சேரும். கெளரவம் பெருக இடமுண்டு. வாகன சுகம் உண்டு. அதிர்ஷ்டத்திற்கு இடமுண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உடல் நலம், குடும்பம் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. மனநிறைவு ஏற்படலாம்.
O O (35LDLILD
உங்கள் திறமையும், புத்திசாலித்தனமும் வெற்றி தரும். தருமங்களில், யாத்திரைகளில் ஈடுபடலாம். மாணவர்களுக்குக் கல்வியில் விருத்தி உண்டு. உடல் நலத்தைப் பேண, இலாபங்கள் நற்காரியங்களில் செலவு செய்ய, தானதருமங்கள், புகழ் ஆகியவற்றிற்கு இடமுண்டு நண்பர்கள் புத்திரர்களால் மனக்கவலை ஏற்படலாம். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் கவனித்து வைத்தியம் செய்யவும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி மனப்பயம் ஏற்பட இடமுண்டு. நோய்களாற் குடும்பம் பாதிக்கப்படலாம். ஆயின் மதிப்பு உயரும். பணவிஷயங்களிற் கவனந் தேவை. திடீர் நட்டங்களைத் 'தவிர்க்கவும். பொருள் வரவுக்கிடமுண்டு. எதிரிகள் பணிவார்கள்.
தொழில், வியாபாரம் லாபம் தரும்.
eurey vyt 525 mesfiles-sous supts ! அவர் ஒரு மகரிஷி மிகவும் உக்கிரமமான தவத்தில் ஈடுபட்டிருந்தார். இது இந்திரனின்கவனத்திற்குவந்தது. அவன் ஒருவேடனைப் போன்று உருக்கொணிடு பளபளவென்று மின்னும் ஒரு நீண்ட வாளை எடுத்துக்கொண்டு முனிவரிடம் வந்தான். ஐயா! இந்த வாளைச் சிறிது காலம் பாதுகாத்துத் தரவேண்டும். நாளை நான் திரும்ப வந்து வாங்கிக் கொள்கின்றேன் என்று பணிவுடன் அவன் வேண்டினான். =1 سے ہے۔ ===- ======= ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ === کئع- = முனிவரும் அவ்வாறே செய்வதாகக் கூறி அந்த வாளை வாங்கிக் கொண்டார். வேடன் சென்று விட்டாண்தவமுனிவரின் கைக்கு அந்த வாள் வந்ததிலி ருந்து அவரது சிந்தனையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் அந்த அழகிய பளபளவென்று மின்னும் வாளால் மிகவும் கவரப்பட்டிருந்தார். வெளியில் எங்கு சென்றாலும் அதைத் தம்முடனே எடுத்துச் செல்வார். " ஓ, இந்தக் கூர்மையான வாள் மட்டும் ஒரு மாவீரனின் கையிலிருந்தால் எத்தனை எதிரிகளை வெட்டித் தள்ளும் என்ற சிந்தனைகள் அவர் இதயத்தில் எழலாயின. சில சமயம் அவரே அந்த வாளைச் சுழற்றிப் பார்க்கவும் தவறவில்லை. தவ சிந்தனையிலேயே மூழ்கிக் கிடந்த அவரது போக்கு ஒரு சாதாரண வாளாற் பெரிதும் மாறியது. கையிலிருக்கும் கத்திக்கேற்பவே அவரது புத்தியும் வேலை செய்யத் தொடங்கியது. தர்மத்தின் பாதையிலிருந்து அதர்மத்தின் பாதைக்குச் செல்லலானார் அவர். கத்தியை அவர் கேட்கவில்லை. அது அவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சாதாரணப் பொருள், அதன்பிறகும் கூட அவர் தன் புத்தியை அதன்மீது செலுத்தாதிருந்திருக்கலாம். ஆனாற் செயற்கை பொல்லாதது. எதை விலக்க வேண்டுமோ அதை விலக்காமல் நாம் அருகில் வைத்துக் கொண்டால், மனம் அந்த வழியில் ஈர்க்கப்படும் அதனால் நாம் அறம் பிறழ்ந்து போகநேரும்
நன்றி-ஞானபூமி
 

கை-மார்கழி 1994 17
En M&EADSA IsAdsøtåSUNYa
வெள்ளைத் தாமரை மேல் அமர்வாள்-கையில்
வீணையும் ஏந்திடுவாள்
வெள்ளையுள்ளம் அதைக் கொள்ளை கொண்டே-அவர்
வேண்டும் வரம் கொடுப்பாள்-அவன்
கள்ளம் இல்லாத புலவோர் புனையும் கவிதையிலே இருப்பாள்
பிள்ளைகள் பேசும் மழலையிலே-அவள்
பழகுதமிழ் ஆவாள்
நான்கு வேதமாய் ஆகி நின்றாள்-அவள்
நான்முகன் நாவிலும் நிறைந்திடுவாள் நான் எனும் அகந்தையை அழித்திடுவாள்-அவள்
நாற்கவியை எமக்களித்திடுவாள் காணமழைதனைப் பொழிந்திடுவாள்-நல்ல
கானமயில் போல் நடமிடுவாள் வீணையுடன் இவள் வீற்றிருப்பாள்-தன்னை
வேண்டியவர் வினை போக்கிடுவாள்
கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கும்
கலைமகளைத் தொழுவோம் மல்லிகையில் நல்ல மாலையும் தொடுப்போம்
மாக்கோலம் இடுவோம் துல்லியமாகவே தமிழில் பாடி
தீபமும் ஏந்திடுவோம் எல்லையில்லா இன்பம் பொங்கிடவே-நாம்
ஆடிப் பாடிடுவோம்
ஒன்பது நாளும் இன்பமுடன் -நாம்
ஒளிவிளக் கேற்றிடுவோம் உன்னதமான உயர்நூல் தன்னை
ஊக்கமுடன் படிப்போம் புன்னகையோடு இன்னிசை பாடி
பூஜையும் பண்ணிடுவோம் அன்னவாகினியின் அருளைப் பெறவே
ஆவன செய்திடுவோம்
கற்றவர் போற்றும் கற்பகதருவின்
காலடி வணங்கிடுவோம் நெற்றியிலே திருநீறும் இட்டு
நாமகளை நினைப்போம் சுற்றமெலாம் சூழ்ந்து வந்திடவே-நாம் சரஸ்வதி புகழ் படிப்போம் பெற்றிடுவோம் அவள் அருளை-என்றும்
பார்புகழ் ஏந்திடுவோம்
சின்னராசா சத்தியமூர்த்தி

Page 20
கேதரீஸ்வரர்
T ਨ। கேதாரம் இமாலய பர்வதத்திலுள்ள ஒரு
man
போன்று சிறப்புடன் விளங்குகின்றது. கேதாரீஸ்வரரைக் குறித்து உமை யம்மையர் அநுட்டித்த விரதம் கேதாரீஸ்வரர் விரதமாகும். இது ஐப்பசி மாதத்துக் கிருஷ்ண பட் சத்துச் சதுர்த்தித் திதியில் அநுட்டிக்கப்படுவது . புரட் டாதி மாதப் பூர்வபக்கத்து அட்டமித் திதி முதலி, சந்திரன் கலைகள் குறைந்து போகும் நிலைபேறான • 9Ꮋ LᏝ fᎢ 6Ꮒl fᎢ 6ᎼᏱ Ꭶ வரையுள்ள இருபத்தொரு நாட்கள் * அல்லது, அபரபக்கப் பிரதமை முதல் சதுர்த்த சிமீறாகவுள்ள பதினான்கு நாட்கள், அல்லது அட்டமி முதல் சதுர்த்தசியீறாகவுள்ள ஏழு நாட்களில் இவ்விரதம் அநுட்டிக்கப்படும். கிருஷ்ணபக்கத்துச்சதுர்த்தசியிலன்றும் இவ்விரதம் அநுட்டிக்கப்படும். இவி விரத நாட்களில் இரு பத்தொரு இழையினாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கை யிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ளுதல் வேண்டும். முதல் இருபது நாளும் ஒவ்வொரு பொழுது சூரியாஸ்தமனத்தின் பின் போசனஞ் செய்து இரவிற் தருப்பையிற் சயனித்தல் வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தியிலன்று கும்பந்தாபித்துப் பூசை அருச்சனை புரிந்து கேதார நாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் பாரணை பண்ணுதல் வேண்டும். ஆதிகாலத்திலே திருக்கைலாயத்தில் பார்வதி சமேதராகப் பரமேஸ்வரன் வீற்றிருந்தருளினார். சூரியன், சந்திரன், பிரமா விட்டுணு, முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் , நாரதர் சனகாதி முதலான முனிவர்கள் அட்டவசுகள் முதலான
யாவரும் தினமுங் கூடிப் பார்வதி பரமேஸ்வரனைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க-மார்கழி 1994 8
பிரதஷணஞ் செய்து வணங்கிச் சென்றனர். இங்கனமாக ஒரு நாள் பிருங்கி என்னும் முனிவர் யாவரும் நகைக்கும் வண்ணம் கோணைக் கூத்தாடி
.ങ്ങ് நடித்தார். அங்ங்ணம் நடித்துப் பரமேசுவரனை மாத்திரம் பிரதஷ்ணஞ்
செய்து வணங்கிப் பார்வதியை வணங்காது சென்றார். பார்வதி கோபம் மூண்டு "முப்பத்து முக்கோடி தேவர்கள் முனிவர்கள் யாவரும் நம்மிருவரையும் பிரத விணஞ செய்து வணங்கிச் செல்ல பிருங்கி மாதி திரம் நம் மை வணங்காது ச்ெகின்றானே! இமீ முனிவன
செயலுக்குக் காரண மென ன?’ என ப்
பரமேஸ்வரனைப் பாத்துக் கேட்டார். பரமேஸ் வரன: பாா வ தரி யே 'பரி ரு நு கரி முனிவன் பாக் கியத்தைவிருப் பினவனல்ல. மோட்சத்தைவிரும் பினவன். மெளனநிலை வகித்த பெருந் தவமு டையவன். காரணப்பொருள் ஒன்றேயெனக் கருதுவன். மற்றொன்றிருப்பதாகக் கரு தாதவன். ஆதலின் என்னைப் பிரத ஷிணஞ செய்தானி . உனக்கு அங்ங்ணம் செய்ய வில்லை" எனக் கூறியருளினார். அத்தருணம் சென்று கொண்டி ருந்த முனிவரைப் பார்வதிதேவி விளித்துப் பிருங்கியே உனது உடம்பி லேயுள்ள இரத்தம் மாமிசம் என்பன எனது அம்சமாதலினால் அவற்றைக்கொடுஎனக் கூறினார். தன்னுடம்பிலுள்ள இரத்த மாமிசத்தை உடனே உதறிவிட்டான். அவனது உடல் வலிமை நீங்கிப் போய்விட்டது. அதனால் நிற்க முடியாத நிலைமையனாகி நிற்கும் பிருங்கியை, நீயேன் அசத்தனானாய்?" என இறைவன் கேட்கப் பிருங்கி ஈஸ்வரா, தேவியை விட்டு, தேவரீரை மாத்திரம் வணங்கியமைக்குத் தேவி அளித்த தண்டனை இது" என விண்ணப்பித்து
திருமதி திலகவதி யோகரட்ணம்

Page 21
கலசம் ஐப்பசி-கார்த்
நின்றான்.பரமேஸ்வரன் கருணைகூர்ந்து ஒரு தண்டை ஈந்தருள அதனை ஊன்று கோலாகக் கொண்டு தன்னாச்சிரமம் போயடைந்தான். பர்வதிதேவி இவ்வவமதிப்பைச் சிவபெருமான் பாராது இருந்தனரே என்று திருவுளத்துக் கொண்டு கைலாசத்தை நீங்கிப் பூலோகத்தை அடைந்து கௌதம முனிவரது ஆச்சிரமத்தில் இருந்தருளினார். பன்னிரண்டு வருடம் மாரியின்றி மடிந்தும் ஒடிந்தும் வாடியுமிருந்த ஆச்சிரமத்து நந்தவனமானது துளிர்த்துத் தழைத்துப் புட்பித்துப் பரிமளித்து எங்கும் நறுமணம் வீசியது. விருட்சங்கள் முதலியன பூத்துக் காய்த்துப் பொலிந்து அழகுடன் மிளிர்ந்தன. பஞ்சாக்கரத்தைச் சபிக்கும் நாவினையுடையவரும் மான் தோலாகிய உடையையுடையவரும் ஒட்டையும் செம்பொன்னையும் ஒன்றெனக் கருதியவருமாகிய கௌதமர் தருப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றவள் உமாதேவியர் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்து கொள்ளாதவராய் பூங் காவைக் கண்டதிசயித்தார். அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும் போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். தாயே கைலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு யான் என்ன தவஞ்செய்தேனோ என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அன்றி இந்த ஆச்சிரமம் தான் செய்த புண்ணியமோ? என்று வணங்கி நின்று ஈஸ்வரியே நீர் பூலோகத்திற் கெழுந்தருளிய காரணம் யாதோ? எனக் கேட்டார். பார்வதி தேவி கைலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். முனிவர் கேட்டுச் சிம்மாசனமொன்றின் மீது எழுந்தருளச் செய்து வேண்டு முபசாரங்கள் செய்து வணங்கி நின்றார். இங்ங்னமாகத் தேவி கெளதமரை நோக்கி தபோதனரே! சிவபெருமானுக்கு வாம பாகத்திற் கலந்துகொள்ளும் பொருட்டு இப்பூவுலகில் யான் ஓர் விரதமனுட்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும் அதனை அநுட்டிக்கு முறையையும் உரைத்தல் வேண்டும் எனக் கேட்டார். முனிவர் தாயே பூவுலகில் அநுட்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு கேதரீஸ்வரர் விரதம் என்று அதற்குப் பெயர் எனக் கூறி அதனை அநுட்டிக்கும் முறையையும் கூறினார். இங்ங் னமாகக் கெளரி இவ்விரதத்தை விதிப்படி அநுட்டித்துப் பரம சிவனை மகிழ்வித்தார். சந்திர சேகரனாகிய பரமேஸ்வரன் பார் வதியினி தவத் திற்குக கனிந்து சில கணங்களோடு ஆங்கெழுந்தருளினார். தேவியர், பிரான் திருவடிகளை மணம் நிறைந்த மலர்களாளருட்சித்து துதித்து வணங்கினார். பின்னர் பிரானை நோக்கிச் சுவாமி அடியார் அநுட்டித்த சிறந்த இவ்விரதத்தை யாவர் அநுட்டித்தாலும் அவர்கட்கெல்லாம் இவ்வுலகிலுள்ள ஆயுள்வரையில் சிறந்த புத்திரப்பேற்றையும் வேண்டிய மற்றும் சகல செல்வங்களையும் அளித்து இறுதியில் தேவரீர் திருவடித் தாமரைகளையும் அநுக்கிர கித்தருள வேண்டும் எனப் பிரார்த்தித்தார். சிவபிராண் பிராட்டியார் பிரார்த்தனைக்கு அநுக்கிரகித்துக் கெளதவமுனிவருக்கும் திருக்கணி பாலித்துத் தேவியோடும் அர்த்தநாரீஸ்வரராகிக் கைலாயத்திற்கு எழுந்தருளினார்.

திகை-மார்கழி 1994 19
Y L L LSLSL Y L Y SZ SY Y SS Y SS SS S SLSL LL S LS L S Y LS L L LS LSSS SS Y SS SLS LLSL SS LSL LLLL
காம்பிலிருந்துதான் பால் கிடைக்கும் . அதன் கோலிலிருந்து பெற முடியாது. ஒரு இடத்தில் கிணறு தோண்டி 6 : அங்கிருந்துதான் தண்ணீர் எடுக்கமுடியும், கிணறு இல்லாத : இடத்தில் தண்ணீர் கிடைக்காது. அதுபோலவே ஈசுவரனை හෝ: முறையில்தான் அடையமுடியும். சத்குரு மூர்த்தியின் பாதுகையிலிருந்துதான் அந்த ஓங்கார வடிவை அடையலாம். நீ நேரிடையாக அடைய முடியாது.
ாதசேவைதான் முக்கியம். ராமர், தான் முடி சூடிய கிரீடத்திை
尊 பரதனுக்குக் கொடுக்கவில்லை. தன்னைவிட தன் ●
போதுகைகள்தான் முக்கியம் என பாதுகைகளைக் கொடுத்தார்: நடராஜப்பெருமானும் என்னை அடைய வேண்டுமா ?
- 6என்னிடம் என்ன இருக்கிறது? என் பாதத்தைத்தான் அடைய 3
擊
வேண்டும் 5 TOT 95 காலைத்தூக்கி கையினால் சுடடிக காட்டுகிறார். அதனால் தான் நடராஜர் நடன முத்திரையில் இருக்கிறார். சாதாரணமாக எல்லா தேவதைகளின் மூர்த்திகளும் பாதம்
இதோ இருக்கிறது' என்று இடது கரத்தினாலும் அதைச் : சரணடைந்தவர்களுக்கு அபயம் அளிக்கிறேன் என வலது கரத்தினாலும் அபய முத்திரையையும் காட்டுகின்றன. கால நிலமைக்கு ஏற்றபடி இவ்வுலகில் பல்வேறு ஒளிகள் : இயங்குகின்றன.எனினும் மக்கள் தம் உயிர் ஒளியை : உணரமுடியாமல் மயக்கமுற்றவர்களாகவே இருக்கின்றனர். : உள் ஒளியை உணர்ந்தாலன்றி மக்களின் மயக்க இருள் : ஒளியாது. பிறவிக்கடல் கடந்த பேரினப நிலையைப் பெறுவதும்
z MNF, சாத்தியமில்லை, :-யூனி ஞானானந்தகிரி ஸ்வாமிகள்e
... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

Page 22
கலசம் ஐப்பசி-கா
மதுரை காமராசர் பல்கலை
51ரைக்காலம்மையார் சைவசமய சான்றோர்களில் சிறந்தவராகக் கருதப்படுகின்றார் . காலத்தால் திருஞானசம்பந்தருக்கு முற்பட்டவர். சிவபிராண் மீது மனமுருகிப் பாட்டுக்கள்(பதிகம்) பாடி அதன் மூலம் நம் மனமானது நெகிழ்ந்து, படிப்படியாக ஆசைகள் குறைந்து, முடிந்த நிலையில் ஆசை நீங்கி தொண்டு செய்யும் உயர்ந்த மனதைப் பெறுவதற்கு வழிவகுப்பதை. பதிகப்பெருவழி என்ற சொல்லால் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி குறிப்பர். "பதிகப்பெருவழி" யை பல வழிகளிலும் விளக்கமுறக் காட்டியவர் திருஞானசம்பந்தர். வரலாற்றுக் கண்கொண்டு பார்க்கும்போது பதிகப்பெருவழியைத் துவக் கிவைப்பவர் நம்மாற் போற்றுதலுக்குரிய காரைக்காலம்மையார் அவர்கள். பெரிய புராணத்தில் காரைக்காலம்மையின் பெருமையைத் தெரிந்துகொள்ளலாம். வணிகச் செட்டியார் குலத்தில் தோன்றி பிராமணர் அல்லாதாரும் ஆன்மீகத்தில் உயர்நிலையை பெற்று உயர்வதற்கு முடியுமென்ற உண்மையை அக்காலத்திலே உலகிற்கு உணர்த்திய உத்தம புனிதர். சைவசமயத்தின் தலைவராகிய திருஞானசம்பந்தர் திருவாலங்காடு என்னும் திருத்தணிக்கு அருகில் உள்ள சிவதலத்திற்கு வணங்க வருகின்றார். காரைக்காலம்மையார் திருப்பாதங்கள் பட்ட புனித இடமாகிய திருவாலங்காட்டில் தன் திருப்பாதங்களை வைக்க சம்பந்தருக்கு மனமில்லை. அம்மையார் வணங்கிய திருவாலங்காட்டுத் தலத்தையே அம்மையாருக்கு செய்யும் வழிபாடாக வலம்வருகின்றார். தலத்து எல்லையிலேயே தங்கி சிவபெருமான் அருள் பெறுகின்றார். சம்பந்தரால் இவ்வழியில் போற்றப்பெற்றவர் நம் அம்மையார். சைவத்தில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்து
 
 

த்திகை-மார்கழி 1994 20
சமயங்களில் சிலபிரிவில் பெண்கள் தீட்சை பெற்று வழிபாடு செய்யும் உரிமை பெறவில்லை. நம் சைவத்தில் பெண்களும்
ஆண்களைப்போல தீட்சை பெற்று வழிபாடு செய்யும் உரிமை உண்டு. சிறுவயதிலே இவ்வாறு ஆண்களும் பெண்களும் தீட்சை பெற்று வழிபாடு செய்வது சைவஉணர்வு நம்சிறுவர் மனதில் சிறக்க வழிவகுக்கும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூவர் மகளிர். மங்கையற்கரசியார் பாண்டிமன்னன் மனவியாக இருந்து பாண்டிய அமைச்சர் குலச்சிறையார் உதவியோடு தமிழ்நாட்டில் சைவத்தைக்காத்த பெருமை உடையவர். இசைஞானியர் சுந்தரரை இவ்வுலகிற்குக் கொடுத்த பெருமையால் நாயன்மார் ஆகிறார். நம் அம்மையார் மூன்றாவதாக இடம்பெறும் பெண்பால் நாயனார் இம்மூவரில் அம்மையார் மட்டும் தான் பதிகம் எழுதி சம்பந்தர் போன்ற பெருமக்கள் பதிகப்பெருவழியைக் கடைப்பிடிக்கக் காரணமாயிருந்த பெருமையுடையவர். தமிழ்நாட்டுக்கோயில்களில் அறுபத்து மூவர் திருவுருவங்களைக் கூர்ந்து நோக்கினால் நம் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த கோலத்தில் உள்ளதையும் மற்ற அனைத்து நாயன்மார் நின்ற கோலத்தில் இருப்பதையும் பார்த்து அம்மையாரின் சிறப்பை நோக்கி மகிழலாம்.
11ஆம் திருமுறை திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் அம்மையார் பாடல்கள் இடம்பெற்றாலும் பத்தாம் திருமுறை ஆகிய திருமந்திரமும் நம் அம்மையார் பாடல்களும் மூவர் தேவாரத்திற்கு முற்பட்டவை என உணர்ந்து திருமுறைகளை வாழ்வியல் நோக்குடனும் ஆய்வு நோக்குடனும் பார்த்து பயன்கொள்ள வேண்டும். ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு பதினோராந் திருமுறைக்கு உண்டு. ஆலவாய் அண்ணல் இயற்றிய திருமுகப் பாசுரம் இத்தொகை நூலின் முதலில் திகழ்கின்றது.

Page 23
கலசம் ஐப்பசி
சிவபெருமானால் இயற்றப்பெற்றதாகச் சொல்லப்பெறும் தமிழ் நூல் ஒன்று. இறையனார் அகப்பொருள் என்னும் தமிழ் அகப்பொருள் இலக்கண நூல் அது. அப்பெருமானால் திருவாய் மலந்தருளப் "பெற்ற பாடல்கள் இரண்டு.
ஒன்று கொங்குதேர் வாழ்க்கை என்பது. அது குறுந்தொகை என்ற சங்க நூலில் இரண்டாவது பாட்டாக அமைந்திருக்கின்றது. இரண்டாவது பதினோராம் திருமுறையிலுள்ள திருமுகப்பாசுரம் மதிமலி புரிசை மாடக்கூடல் " என்று தொடங்கும் அந்தப்பாட்டு. வேறு சிலபாக்களும் அப்பெருமானால் அருளப்பெற்றன என்று சில வரலாறுகள் வழங்குகின்றன. ஆயினும் பெரியோர்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்று மதிப்பைப் பெறும் பேறுபெற்றவை இந்த இரண்டு பாடல்களுமேயாகும். பதினோராம் திருமுறையில் சிவபெருமான் பாடலுக்கு அடுத்த படியாக நம் அம்மையார் பாடல் அமைவது அவரின் சிறப்பைக் காட்டும்.
மற்றொரு சிறப்பு பதினோராம் திருமுறையில் கடைச்சங்க காலத்து நூல் ஒன்று உள்ளது. நக்கீரரால் அருளப்பெற்ற திருமுருகாற்றுப்படை இதன் கண் இடம்பெறுகின்றது. சங்க நூல்களைப் பயில்வார் இல்லாமல் தமிழ் உலகம் மறந்திருந்த காலத்திலும் கூட சைவத்திருமுறையில் சேர்க்கப்பெற்றமையின் இந்நூல் மறையாமல் நின்று விளங்கியது. இதிலிருந்து சைவர் ஆகிய நாம் தாய்மொழிப்பற்றுடன் சங்க இலக்கிய நூல்களையும் பயிலவேண்டியதன் இன்றியமையாமை விளங்குகின்றது.
இத்திருமுறையில் பன்னிரண்டு அருளாளர்கள் பாடிய நாற்பது நூல்கள் உள்ளன. ஆயிரத்து நானூறு பாடல்கள் இப்போது கிடைக்கின்றன. ஆனால் சில நூல்களில் இன்னும் சில பாடல்கள் இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவையில் இறுதியில் ஏழுபாடல்கள் இல்லை. சிவபிரான் திருவிரட்டை மணிமாலையில் இப்போது 37 பாடல்களே உள்ளன. இரட்டைப்படையான செய்யுட்கள் இருக்கவேண்டிய இந்நூலில் 40 பாடல்களோ அல்லது 50 பாடல்களோ இருந்திருக்க வேண்டும். திருக்கழுமல மும்மணிக்கோவையில் இப்போது 12 பாடல்கள் உள்ளன. பன்னிரண்டாவது பாடலின் இறுதியும் முதல்பாடலின் முதலும் மண்டலிக்கவில்லை. ஆதலின் இடையே நின்றிருக்கின்றதென்று தெரிகின்றது. இந்நூல் முப்பது பாடல்களை உடையது போலும், ஆளுடையபிள்ளையர் திருக்கலம்பகத்தில் 49 பாடல்களே கிடைக்கின்றன. 50 அல்லது 100 பாடல்களை உடைய பிரபந்தமாக இந்நூல் இருத்தல் கூடும். மண்டல அந்தாதி இதன் கண் அமையவில்லை. சேத்திரத் திருவெண்பாவில் இன்னும் பல தலங்களைப் பற்றிய பாடல்கள் இருந்திருக்க வேண்டும் என று தெரிகின றது. இக் குறிப்புக் களை கி.வா.ஜெகந்நாதன் ( கலைமகள் ஆசிரியர்) 1963ஆம் திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட 11ஆம் திருமுறை என்ற நூலில் கொடுக்கின்றார். திருமுறைகளை ஒதுவதால் நாம் பல பயன்களைப் பெறலாம். தற்போதும் திருமுறைகளை பொருள் உணர்ச்சியுடன் ஓதி தம் அல்லல்களை நீக்குவதை நாம் நடைமுறையில் உணரலாம். "திருமுறைகளைக் கேட்டதனாலாய இன்பத்தை அரசச்செல்வமும் தராது என்று ஐயடிகள் காடவர் கோண் சேத்திரத்திருவெண்பாவில் பின்வருமாறு கூறுகின்றார். "நூற்றனைத்தோர் பல்லுாழி நுணிவயிரவேணர்குடைக்கீழ் வீற்றிருந்த செல்வம் விளையாதே-கூற்றுதைத்தான் ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அங்ான்றனர்

கார்த்திகை-மார்கழி 1994 21
பWடரவன் கேட்ட பகலி இத்திருமுறையில் அமைந்துள்ள நூல்களை இயற்றிய திருவருட் செல்வர்கள் திருவாலவாயுடையார் (மதுரையில் எழுந்தருளி இருக்கும் சிவபிரான்), காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமான் நாயனார், நக்கீரதேவ நாயனார், கல்லாடனார், கபில தேவர். பரண தேவர், இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப்பிள்ளையார், நம்பியாண்டார் என்போர்.
35 A 6 Sony jis JAG T6AoLib 6 ODLADU I Trir
இவர் வரலாறு பெரிய புராணத்து விரிவாகக் கூறப்படுகின்றது. அதிற் காணும் வண்ணம் பேய் வடிவம் தாங்கியதும் பாடியது அற்புதத்திருவந்தாதி. அடுத்துப் பாடப்பெற்றது திருவிரட்டை மணிமாலை. பேய்வடிவத்தை அம்மையார் கொண்டார் என்பதை பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம் என்ற 86ஆவது திருப்பாடற்பகுதியால் அறியலாம். 101 வது பாடலில் "காரைக்கால் பேய் என்றுள்ளது. இவ்விரு நூல்களை அருளியபின்னர் பேயார் தலையினால் நடந்து சென்று கையிலையை நண்ணினார். பரமன் "அம்மையே என்றருள் செய்ய அப்பா என்று அம்மையார் கூறிப்பணிந்து இறவாத இன்பவன்பு வேண்டினார். தொண்டை நாட்டிற் திருவாலங்காட்டிற்கு வந்து அணிடமுற நிமிர்ந்து ஆடுகின்ற பரமனது கோலம் கண்டு "கொங்கை திரங்கி என்று தொடங்கும் மூத்த திருப்பதிகத்தைப் பாடினார். பிறகு இறைவனின் திருக்கூத்தை வணங்கும் காதல் ஓங்க" எட்டிலவம் மீகை என்று தொடங்கிப் பாடியருளினார். "கொங்கை திரங்கி" என்ற பதிகத்தில் ஒன்பதாவது பாட்டில் ஏழிசைகளின் பெயர் கொடுக்கப்படுகின்றது. காரைக்காலம்மையாரின் இயற்பெயர் புனிதவதி என்பது. நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுள்ள அறுபத்து மூவர் திருவுருவங்களின் கீழ் எழுதப்பட்ட எழுத்துக்களில் பூதவதி என்று எழுதியிருக்கின்றது. இது பேயார் என்பதொடு ஒத்துள்ளமை அறியலாம்.
அற்புதத்திருவந்தாதி
நூறு வெண்பாக்களால் அமையும் இந்நூலில் முதல் வெண்பாவின் ஈற்றுத்தொடர் அடுத்த வெண்பாவின் முதற் 'றொடரோடு இணைந்து நிற்கும். திருமூலர் போல சைவசித்தாந்த உண்மைகளை தெளிவாக உணர்த்தும் நூல் இது. இறைவனது திருவருளின் இன்றியமையாமையை நாம் அனைவரும் மனம் கொள்ளும் வகையில் இந்நூல் அருளிச்செல்கின்றது. 1. பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் -நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்பது இடர். இப்பாட்டில் அம்மையார் ஆன்மாக்கட்கு உண்டாகும் துன்பத்தை எப்போது நீக்குவாய் என்ற வேண்டுகோளை விடுக்கின்றார். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலில் அமுதம் வேண்டிக்கடைய முற்பட்டபோது தோண்றிய நஞ்சை உண்ட பெருமான் சிவபிரான். ஆகவே அடியார்கட்கு தற்போது தோன்றும் இடரையும் காப்பது பெருமான் கடன் என்பது போலக் கூறுகின்றார். திருநீல கண்டம் அடியாவின் துயர் தீர்க்கும் அடையாளமாக அமைவது. அது நிறந்திகழ்ந்து அடியார்களைத் தன்னிடம் வருமாறு அழைப்பு விடுக்கின்றது. இவ்வாறு இறைவன் அருள் செய்வதற்கு தான் செய்யும் கடமைகளைப் பற்றியும் சிவபெருமானுக்குக் கூறுகிறார்.

Page 24
ஐப்பசி- கார்த்தின்
தான் பிறந்து மொழி பயின்றது முதற்கொண்டு சிவபிரானிடம்
காதல் கொண்டு அவரது திருவடியைச் சேர்ந்ததாக கூறுகிறார். ஆகவே தன் இடர் களைந்து தனக்கு உதவ வேண்டும்
என்றும் உரிமையோடு கூறுகின்றார். இத்திருப்பாட்டில் பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் சிவபிரானிடம் காதல் சிறத்தல், சேவடியே சேர்தல் என்னும் இரு
தொடர்களைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். கருதல் என்னும்
சால் காதல் என்னும் சொல்லாக மாறுகின்றது என்னும் உண்மையை தருமபுர ஆதீன பல்கலைக்கல்லூரியின் தலைவராக இருந்து பின் காஞ்சி ஞானப்பிரகாச ஆதீனகர்த்தராக வீற்றிருந்த
பரியார் முத்து சுமாணிக்கவாசகர் கூறுவார். மொழி பயின்றது முதல் சிவபிரான் நமக்குச் செய்து வரும் உதவிகளை நாம் தொடர்ந்து கருதி வருவதே நாம் சிவபிரானிடம் காதல் கொள்ள ஏதுவாகும். இறைவன் பால் எப்போது அன்பு மீதூரும்? எத்துணையும் அரிய முதல்வன் எத்துணையும் எளிய நமக்கு அருள் செய்து வரும் திறத்தினை எண்ணும் தோறும் அவனிடத்து அன்பு பெருகும். சிவபிரான் செய்யும் உதவிகளைப்
ரிந்து கொள்ள ஆன்மாவின் மூன்று நிலைகளாகிய கேவலம்,
சகலம், சுத்தம், என்னும் மூன்றையும் புரிந்துகொள்ள
வேண்டும்.
கேவலம் என்ற சொல் தனிமை என்னும் பொருளை உடையது. நமக்குத் தெரியும் ஆன்மா தாயின் வயிற்றில் பத்து மாதங்கள் இருக்குமுன் ஆணவத்தால் மட்டும் கவரப்பட்டு, ஆன்மாவின் அறிவு, விளைவு, செயல் மறைக்கப்பட்டு இருக்கும் நிலை கேவலம் எனப்படும். கேவலத்தில் அறிதற்குரிய கருவிகள் இன்மையினால் நாம் ஆணவத்தால் கட்டுப்பட்டு இருக்கின்றோம் என்ற உண்மையும் நமக்குத் தெரியாது. காரிட்ட ஆணவக் கருவறையில் இருக்கும் கண்ணில்லாக் குழவிபோல் இருக்கிறது ஆன்மா. இவ்வாறு உள்ள ஆன்மாவின் நிலை கண்டு இறைவன் கருணை கொண்டு மாயையில் இருந்து உடல், கருவி உலகம் நுகர்ச்சிப்பொருள் ( தநு , கரண, புவன, போகம்) என்னும் நான்கையும் படைத்து ஆன்மாவின் நுகர்விற்கு உதவுகின்றான். ஆன்மா இந்த நான்குடன் சேரும் நிலையே சகல நிலை எனப்படும். ஆண்மாவுடன் இந்த நான்கைச் சேர்ப்பது, ஆன்மா ஆணவத்திலிருந்து விடுபட வேண்டும் என்னும் கருணையினால் ஆகும். ஆனால் இந்த உண்மையை முதலில் நாம் உணரவில்லை. உடல் முதலியவை உலகை நுகள்வதற்காக எனத் தவறாக எண்ணுகின்றோம். இவ்வாறு தவறாக எண்ணும் எண்ணமே நாம் வினை செய்வதற்குக் காரணமாகின்றது. பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து ஊனினை உருக்கி உள்ளொளி
பெருக்கி உலப்பிலா ஆனந்தமாகிய தேனினை வழங்குகின்றான் சிவன். இந்த உதவியை கட்டுக்காலத்தில் உயிருக்குயிராய் நின்று உலக போகத்தை நுகர்விப்பது போல, கட்டிலிருந்து விடுதலை பெற்ற முத்திக்காலத்திலும் உடனாயிருந்து செய்து வரும் பெரிய உதவியை நினையும் தோறும் அருளாளர்க்கு அவனிடத்தில் இடையறாப்பேரன்பு மேன்மேலும் மீதூர்ந்து விளையும் காதலாகி கசிந்து கணிணீர் மல்கும் நிலை உண்டாகும். இவ்வாறு உருகிப் பெருகும் அன்பினால் சிவத்தின் கணி அழுந்தி நிற்கும் நிலையே சுத்த நிலை எனச் சைவம் கூறும். இதனையே சிவஞான போத பதினொன்றாம் நூற்பா "அயரா அன்பின்
அரண் கழல் செலுமே" என்று அறையும். சிவபிரான் அருளால் ஆண்மா கேவல நிலையில் இருந்து சகல நிலைக்கு வருகின்றது என்னும் உண்மையை மறவாது நினைத்தலே சிவனிடம் அன்பு பிறப்பதற்கு வழி. கடவுள் மீது கொள்ளும் இக்காதல் உணர்வு சிறக்க வேண்டுமென்று அம்மையார் விரும்புகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை-மார்கழி 1994
இவ்வுணர்வு சிறக்கும்போது சிவபிரான் சேவடியே சேர்ந்தேன் என்று அம்மையார் அருள்கின்றார். சேவடியைச் சேர்தல் என்பதன் பொருள் என்ன? இலண்டன் முருகன் சேவடியைச் சேர்தல் எண்றால், நம் முருகன் நம்வீட்டிலிருந்து இலண்டன் முருகன் திருக்கோயிலைச் சேர்ந்து அவன் திருவடியை அடைதல் என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது. இறைவன் திருவருள் எங்கும் வியாபித்துள்ளது. பக்குவமடைந்த ஆன்மா இலண்டன் முருகனின் திருவருளை, கோயிலைத் தவிர வேறு இடங்களிலும் எல்லா நேரத்திலும் உணர்ந்து நுகர முடியும். ஆகவே எங்கும் இருக்கும் இறைவனது திருவருள் வியாபகத்துள் உயிர் வேறு தோன்றாது அடங்கி நிற்றலை திருவடி சேர்தல் அல்லது சேவடி சேர்தல் என்று கூறலாம். சேவடியில் அழுந்தி நின்று நுகரும் இன்பத்தைத் திருவடி இன்பம் அல்லது சேவடி இன்பம் என்றும் கூறலாம். "மலர்மிசை ஏகினான் என்னும் திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதும் போது அடிசேர்தல் -இடைவிடாது தியானித்தல் என்று விளக்குவதை நோக்கலாம். சேவடி சேர்தல் எண்பது சிவபிரானது திருவடியைச் சிறப்பாக அறிதலே -அறிந்து அவன் திருவருளில் நுகர்ந்து நிற்பதே ஆகும் இவ்வுணர்மையை சிவஞானபோதத்தின் பதினோராம் சூத்திரத்திற்கு கருத்துரையாக " பரமேசுவரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று என்று மெய்கண்பர் கூறுவதாலும் அறியலாம். நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமான் என்னும் தொடர் சிவபிரானின் சிறப்பியல்பை விளக்குகிறது. சிவபிரான் யார்? அமுதம் வேண்டித் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த போது யாவரும் அச்சப்படும் நஞ்சு தோன்றியது. அப்போதுதான் சிவபிரான் அருளை வேண்டாமலே தாம் காரியம் செய்ய எண்ணியதை அறிந்து, குறையிரந்து தங்களை மன்னித்து அருளும்படி தேவர்களும் அசுரர்களும் வணங்கினர். அப்போது அங்கு தோன்றிய நஞ்சை உண்டு அவர்களைச் சிவபிரான் காத்தான். தன்னை வேண்டியவர்களின் துன்பத்தை நீக்குதல் சிவபிரானின் முக்கிய இறைமைக்குணம். சிவபிரான் அருள் பெற்றுப் பாற்கடல் கடையும்போது காமதேனு, நினைத்ததை அளிக்கும் கற்பக மரம், கெளத்துவமணி போன்ற பல பயனளிக்கும் பொருள்கள் தோன்றுகின்றன. இவற்றைத் திருமால் முதலிய தேவர்கள் பெற்று மகிழ்கின்றார்கள். இத்தகு நன்மையான பொருள்களில் ஒன்றையும் சிவபிரான் வேண்டிப் பெறவில்லை. ஆகவே தண்ணருளால் தோன்றிய நன்மையான பொருள்களில் யாதொண்றையும் வேணடாமையும் இறைவனது இன்றியமையா இறைமைக்குணம் ஆகும். சிவபிரானுக்குரிய இறைமைக்குணங்கள்
1. பிறர் துண்பம் நீக்குதல். 2. தன்னருளால் தோன்றிய பயனுள்ள பொருள்களை விரும்பாமை. சைவர் என்பவர் யார்? மேற்காணும் சிவபிரானின் குணங்களை தம்வாழ்வில் பின்பற்றுபவரே சைவர். இவ்வுண்மைகளை எல்லாம் நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமான்" என்னும் தொடரில் அம்மையார் சுருக்கி அருளியிருக்கின்றார்கள்.
சிவன் நஞ்சுண்ட நிகழ்ச்சியை நாம் நினைவு கூறும் பொருட்டே சிவாலயத்தில் மாதந்தோறும் இருமுறை (வளர்பிறை திரயோதசி, தேய்பிறை திரயோதசி நாட்களில்) பிரதோஷப்பெருவிழா கொண்டாடப்படுகின்றது பிரதோஷ விழாவில் கலந்துகொண்டு வழிபடும் நாம் சிவபிரானின் இத்தகு குணங்கள் நம் வாழ்வில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை ஒவ்வொரு பிரதோஷத்திலும் எண்ணி, நம்மை ஆன்மீகத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அருட்குணங்கள் நம்வாழ்வில் இடம்பெறாமல் வெறுமனே வழிபாடு மட்டும் செய்து வருவது உண்மையான சைவவழிபாடு ஆகாது. சிவவழிபாட்டின் மூலம் நண்முறையில் நம் வாழ்வு சிறக்க வேண்டுமென்பதை "பழக்கந்தவிர பழகுவதன்றி உழப்புவதென் பெணே உந்தீபற ஒருபொருளாளே என்று உந்தீபற என்று திருவுந்தியர் என்னும் ஞான நூல் கூறுவதை நோக்க வேண்டும்.

Page 25
கலசம் ஐப்பசி-கார்
பதினேழு படிகளைத் தாண்டிய
முத்தமிழ் விழா
கவிஞர் ஞானமணியம்
தினேழு படிகளைத் தாண்டிய விழா பதினெட்டாம்
டியிற் காலை ஊன்றிய விழா ஓம் நமசிவாய மந்திரத்தை மேலைத் தேசங்களிலும் ஒலிக்கச் செய்த விழா ஆமாம் லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தின் ஆண்டு விழா! பதினோராம் ஆண்டின் நிறைவு விழா முத்தமிழ்க் கலைகளும் அரங்கேறிய சித்திரக் கோலாகலக் கலைவிழா குதூகல விழா எல்லோரும் இனிதே களித்து இன்புற்று மகிழ்ந்த விழா ஆண்டு விழா சென்ற 17.09.1994 சனிக்கிழழை அன்று மாலை 630 மணிக்கு ஆரம்பமானது.
திரை நீங்கியது. தாண்டிச்சென்ற ஆண்டுகள் பதினேழுக்கும் பதிலாகப் பதினேழு வெண்கல விளக்குகள் மேடையின் முனி வரிசையாக
வைக்கப்பட்டிருந்தன. பதினேழு சுமங்கலிப்பெண்களால் ஏற்றப்பட்டு மங்கல விளக்குகளாய் மண்டபத்தையும் வண்ணத்திரு மேடையையும் மங்கலமாக அலங்களித்து பொன்னொளி பரப்பின. மின்னொளிக் கிரணங்களும் ஆங்கே மேலும் வியாபித்தன. மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. தெய்வங்களின் திருவுருவப்படங்கள் மூலஸ்தான முறைவழிபாட்டைப் பிரதிபலித்தன. ஆசாரியார் அவர்களாலும் லண்டன் (ஈஸ்ட்ஹாம்) கிழக்கு நகர் பூரீ முருகன் கோவில் பிரதான குருக்களான பூரீ நாகநாத சிவம் குருக்கள் அவர்களாலும் தெய்வங்களுக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சைவ முன்னேற்றச் சங்கத்தின் நியூமோல்டன் தேவார வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகளால் திருமுறை பாடப்பட்டது. தொடர்ந்து நகரமாதா அவர்களையும் அவரது கணவர் அவர்களையும் கெளரவித்து வரவேற்றுச் சபையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார் சங்கத்தின் தலைவரான திரு எளப் சிதம்பரப்பிள்ளை அவர்கள். அடுத்து திரு ச. ஆனந்ததியாகள் அவர்கள் ஆசாரியார் அவர்களைப் பற்றி இரத்தினச்சுருக்கமான ஒரு இன்றியமையாத சொற்பொழிவை ஆற்றினார். திருமுறைகள் பாடிய சந்தான குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிப் பெரிய புராணத்தில் வாசித்திருக்கின்றோம். அவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களைப் பாடித் துதித்திருக்கின்றோம். சைவத்திருஞானிகளும் தெய்வப்பணித் தொண்டர்களும் சிவநெறி ஆசான்களும் இனிதே உரைக்கக் கேட்டிருக்கின்றோம். ஆனால் நேரில் காணும் பாக்கியம் பெற்றிலோம். ஆயினும் அத்தனைப் பித்தனென்று பாடும் அருளைப் பெற்ற அற்புத நாயனாரான சுந்தர மூர்தி தி நாயனாரினி பரம்பரையைச் சார் நீத ஆசாரியாரை நாம் இன்று மேடையில் கானன்பதும் கெளரவிப்பதும் பொன்னாடை போர்த்திப் போற்றுவதும் யாம் பெற்ற பாக்கியமாகும். ஆத்மீக ஞானத்தை அண்டமெலாம் சென்று சென்று அள்ளி வழங்கி அருட்பணி செய்து வரும் ஆசாரியர் அவர்கள் லண்டனிலும் வருகை தந்து இருக்கின்ற சிறப்பினையும் அவரது
 

த்திகை-மார்கழி 1994 23
வருகைக்காக லண்டன் சைவமுன்னேற்றச் சங்கம் செயற்பட்ட முயற்சிகளையும் திரு ஆனந்ததியாகர் தமது சொற்பொழிவில் வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிவாசாரியர் அவர்களுக்கு பூரீ நாகநாதசிவம் குருக்கள் அவர்களால் திருமுடி சூட்டப்பட்டது. பொன்னாடை போர்த்தப்பட்டது. மேடையிலும் சபையிலும் அமர்ந்திருந்த சைவத்தமிழ் மக்கள் அனைவராலும் சிவர்சசாரியார் ஆசீர்வதித்து வாழ்த்தப்பட்டார். அடுத்து மாணிக்கவாசக சுவாமிகளின் திருமுறையான திருவாசகத்தை திரு முத்துக்கந்தசாமி தேசிகள் அவர்களால் பண்ணுறப் பாடிய பாடல் நாடா வெளியிடப்பட்டது. தேசிகர் அவர்களின் பணிணிசை மாணவியான திருமதி பூரீஸ்கந்தராஜா அவர்கள் திரு முத்துகந்தசாமி தேசிகள் அவர்களின் ஆன்மீகப் பணிகளையும் அற்புதமான பண்ணிசை ஆற்றலையும் பற்றி விளக்கினார்கள். ஆசானுக்கு ஆற்றும் நன்றியுடைப் பண்பு திருமதி மாதினி அவர்களின உரையில் பிரதிபலித்தது. இனிக்கப் பாடும் என்னால் சுவைக்கப் பேசவும் முடியும் என்பதாய் அமைந்து சபையோரைக் கவர்ந்தது திருமதி மாதினி அவர்களின சிறப்புரை. தொடர்ந்து நிகழ்ந்தது மனங்கவர் நடனம். செல்வி சுபாஷினி புவனேந்திரம்பிள்ளை அவர்கள் ஆடிய பரதம் சபையோர் அனைவருமே சிறப்பாக இரசிக்கும் படியாக அமைந்திருந்தது. எதிர்கால நர்ந்தனாற்றலைப் புதிராகப் புலப்படுத்தியது. தொடர்ந்து நடந்தது நாடகம். பாரதியின் பாஞ்சாலி சபதம். ஒசையின்றி வாயசைத்து உள்ளபடி கதாபாத்திரங்கள் மேடையேறி நடத்தாலே போதும் பஞ்ச காவியக் கதைகளில் ஓர் கட்டம் பாரதத்தில் ஓர் கட்டம் என்று புரிந்து கொள்வார்கள் தமிழின மக்கள். இருந்தும் தமிழைச் சரியாக உச்சரிக்க முடியாத சிறுவர்களை முடிந்த வரை உச்சரித்து நடிக்கும் ஆற்றலை தமது விடாமுயற்சியின் விளைவாகப் பூர்த்தி செய்ய முயன்றிருக்கும் தயாரிப்பாளர் திரு மு. நற்குணதயாளன் அவர்களின் நாடகவியல் பாஞ்சாலி சபதத்தின் பலகோணங்களிலும் பிரதிபலித்தது. அதில் பங்கு பற்றிய சிறுவர் சிறுமியர் அனைவரும் தத்தமது பாத்திரங்களாகவே செயற்பட்டு நாடகத்துக்கு உயிரூட்டினர். உடையலங்காரங்கள் அனுபவம் வாய்ந்த திருமதி சாந்தினி யோகராசா அவர்களின் கைவண்ணத்தைக் காட்டியது. பின்னணி இசை வழங்கியவர்கள் பிரமாதமாகச் செயற்பட்டனர்யாண்டவர் பகடையில் தோற்றகட்டம் பாஞ்சாலி சபைக்கு இழுத்து வரப்பட்ட கட்டம் துச்சாதனனால் பாஞ்சாலி துகிலுரியப்பட்ட கட்டம் பாஞ்சாலி கண்ணனைக் கைகூப்பி அழைத்த கட்டம் போன்ற சந்தர்ப்பங்களில் நடிப்புடன் பின்னணி இசையும் திகிலூட்டியமை நாடகத்துக்கு மிகவும் பொருத்தமாய் இருந்தது. நல்ல நாடகம், நம்மவர்க்கு இப்பொழுது வேண்டிய நாடகம். பாரதி எழுப்பிய பாட்டொலிப் புரட்சி ஆரெதிர்த்தாலும் அவனி உள்ளவரை தொடரும். லண்டன் மாநகரில் மேலும் பல மேடைகளில் இடம் பெறக்கூடிய நாடகம். அடுத்து நன்றியுரை நடைபெற்றது. இறுதியாக இதுவரை நிகழ்ச்சி நிரலை சபையோருக்கு அறிவித்துக் கொண்டிருந்த திரு மாணிக்கம் சுரேஷ் அவர்கள் நன்றி சொல்ல மறந்த அனைவருக்கும் நன்றி எனக் கூறி முடித்தார். விழா இனிதே நிறைவுற்றது. விழாவின் முடிவில் சபையோருக்கு உணவும் பரிமாறப்பட்டது.
J

Page 26
கலசம் ஐப்பசி-கார்த்தி
சைவநெறி விளக்கம்
வினாத் தொடுப்பவர் இசி Soggigig விடை தருபவர் : திசா. சண்முகம்
சென்னை யூரீ காளிகாம்பாள்)
BUTIT :
இந்து சமயத்தில் எடுக்கப்படும் எண்தானங்களில் 108, 83, 84, 45, 27, 18, 9, 7, 6 போன்றவற்றின் முக்கியத்துவம் என்ன? 108 மந்திரம் என்று
வரையறுக்கப்பட்டதன் அடிப்படை என்ன?
விடை: இந்துமதத்தில் எண்தானங்கள் 108, 83, 54,. போன்றவற்றில் எந்த சிறப்பம்சம் ஏதும் கிடையாது. ஆனால் இந்த எண்ணிக்கைகள் நமது மனதை ஒருமுகப்படுத்துவதற்கு மிகவும் பயன்படுகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் சொல்லலாம் என்றால் ஒரு நாள் பத்து அடுத்த நாள் நாற்பது என ஒரு ஒழுங்கு தன்மை இருக்காது. ஆதலால் நம்மால் நமது சக்திக்கு இயன்றவாறு வரையறுக்கப்பட்ட என களுடைய மந் த ரங் களை தன மும் அனுஷ்டிப்பதனால் விரைவில் பலன் பெறலாம். នាហT: தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி என்ற பழைய வாக்கியத்தை விட்டு ஆதிசிவனே போற்றி சோதி வடிவானவனே இறைவா போற்றி என்று கூறுவது பிழையாகுமா?
விடை: இலண்டன் மாநகரை ஏன் இலண்டன் என்று தான் சொல்ல வேண்டுமா? வேறு ஏதாவது பெயர் சொல்லி அழைக்கக் கூடாதா? வேறு பெயர் வைத்தால் இலண்டன மாறிவிடுமா என்ன! முன் கேள்விக்கு சொன்னது போல் ஒரு ஒழுங்கு முறைக்காகவே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது.ஒரே மந்திரத்தை பலபேர் கூடிச் சொல்லும்போது அதற்குப் பலன் அதிகம், இந்த காரணத்தினால்தான் மந்திரங்கள்கூட வடமொழியிலேயே இயற்றப்பட்டிருக்கிறது.ஒரு குருக்கள் கன்யாகுமரியிலோ அல்லது காஷ்மீரிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்கள் சொல்லும் மந்திரம் ஒன்றே!ஆதலால் தோத்திரமானது பலபேர் சேர்ந்து சொல்லும்போது அதன்மூலம் பலன் பெறலாம் என்பது
நிச்சயம்,
 

கை-மார்கழி 1994 24
វាយោTT: ருத்திராட்சம் எத்தனை முகத்தைக் கொண்டதை தியதனத்திற்கு எடுக்கவேண்டும். முகம் 6 முகம் கீமுகம் எதனை விலக்கவேண்டும்.
விடை: ருத்திராட்சம் என்பது சிவனுடைய கண், இதனை அனைவரும் அணிந்து கொள்ளவேண்டும்.அது சிவச்சின்னம், 4 முகம் கொண்டது பிரம்ம ரூபமாகவும் * முகம் ஈஸ்வர ரூபமாகவும் சி முகம் ஷண்முக சொரூபமாகவும் கொள்ளுதல் வேண்டும்.
5ì6OTT: அஷ்ட சித்திகளை வேண்டுபவர் அஷ்டமி திதியை விலக்கவேண்டுமா?
விடை: சித்திகள் யாவும் சாதாரண மனிதனானவன் பல கடுமையான சாதனைகளை புரிந்து மற்றும் கடவுள் கிருபையும் சேர்ந்தால்தான் கிடைக்கும்.அப்படிப்பட்ட சாதனைகள் புரியும்போது இடையிலே சோதனைகளாக மாறிவிட்டால் அதன் பலன் விபரீதமாகக் கூடும். எனவேதான் எதைச் செய்யும்போதும் நாள் திதி பார்த்துச் செய்யவேண்டும்.ஆதலால் திதி பார்த்தல் மிக அவசியமாகும்.
அட்டைப்படவிளக்கம் ஜெர்மன் நாட்டில் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை ஆலயமாக்கி பக்தர்கள் பலன்பெற வழிசெய்துள்ள | அன்பரின் வீட்டில் உள்ள வினை தீர்க்கும் விநாயகனின் திருவுருவத்தையே அட்டையில் காண்கிறீர்கள்

Page 27
ஐப்பசி-கார்த்தி
இனிய கலசத் தொன
எங் குமே இனிய தமிழ் பண்
எம் சமய கோட்பாடும் வங் கக் கடல் போல் வளமு வானை முட்டும் வளர் தங் கத்தமிழ் கட்டுரைகளும்
தரணியர்க்கு கிடைத்தி இங் கிலாந்து நாட்டின் சைவ இனிய கலச தொண்ை
கண் னைக் கவரும் கருத்
கனிவுடை செந்தமிழ் பண் பினிற் சிறந்த பெரியார் ட பாரிய கட்டுரை தொட வண் ணக் கலர் முன் அட்6 வடிவுறு தெய்வ திரும் லண் டன் மாநகர் சைவ மு
இனிய கலச தொண்ை
வீறு நடை போடும் கலச மி
வியத்தகு விடயங்கள்
ஆறு இதழ் தாண்டி வெற்றி அகமும் உகமும் மகி
பேறு பல பெற்று இன்னும்
பெற்று விடும் கலச மி
வீறு கொண்டு வெற்றி நடை வாழ்த்துகிறேன் லங்கா
(
அன்புடைமீர்,
கலசம் நல்ல மலர்ச்சி. இன்றியமையாமையும் பொழு இனிக்கவேண்டும். நீங்கள் எல்லோரும் அதிக அளவில் ( எதிர்பார்ப்பது தர்ம விரோதம், பிறரது பொய்மை நிறைந்த செய்து மகிழும் தனித்துவமான ஆற்றலைப் பெற - அ தமிழனும் தன்னை சுயநலமனுகாத தூய்மையை ஆபரண புதுமையும் இளமையும் ஒளிர, ஆன்மீகத்துக்கான ஜீவா சகல சீவன்களையும் உய்விக்க வந்த பரதேவதையாகத்
நிகழவே செய்யும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை-மார்கழி 1994 25
ள்டு இப்புவியர் மறவார்.
பும்
நிலைக்க டன்-எம்சமயம் ச்சிதனை பெற சமய அறிவும் ட வேண்டி
முன்னேற்றச் சங்கமதின் டை இப்புவியர் மறவார்.
துக்கள் பல கொண்டு வசனமுடன் பலர் எழுதும் ரும் கொண்டு
5) LLD60:5 வுருவங்களாய் தாங்கி ன்னேற்ற சங்கமதின் ட இப்புவியர் மறவார்.
கழில் என்றும் பல கண்டோம்
தனை கொண்டதில் ழ்வுறு பெற்றோம் பெருவளர்ச்சிதனை தழ் இது திண்ணமாகும்
போட வேண்டி
புரி இந்து மக்கள் சார்பில்
-துண்னையூர் ராம் தேவலோகேஸ்வரசர்மா
நந்திய சிறப்புக்குரியது. வசனநடை இன்னும் முயலுகிறீர்கள். இதற்குமேல் நிராதரவான சூழ்நிலையில்
புகழை யாரும் விரும்பவேண்டாம். தன்னைத்தானே திருப்தி தில் சுகம் காண-கலசம் அமிர்த கலசமாகிவிடும். ஒவ்வொரு ாமாக அணிந்து கொண்டால் எங்கள் தெய்வத்தமிழ்ப் பெண், தார தர்மங்களையும் விளைவித்துக்கொண்டு உலகவரங்கில் திகழ்வாள். இன்றில்லாவிடினும் என்றோ ஒருநாள் அது
கதிசம்பந்தன்,லண்டன்
3. 8. ॐ

Page 28
கலசம் ஐப்பசி-கா
திருவெம்பாவை மார்கழி மாதத்தில் வருகிறது. ஸமஸ் திருவெம்பாவை பத்து நாட்கள் நடைபெறும். திரு திருப்பள்ளியெஞச்சிப் பாடல்கள் பாடியபடி தெருக்கள் வ மக்களை எழுந்திருக்கச்செய்வதேயாகும். இப்பாடல்கள் மாணிக்கவாசகராற் பாடப்பட்டவை. கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி, கோலம் பெண்களுக்கு உகந்தது என்பர். திருவெம்பாவைக் கடைசியன்று இரவு நடேசர் அபிவே தரிசனம் நடைபெறும். இது மார்கழி மாதத்தில் வரும் தி ஆருத்திரா தரிசனத்தின் போது நடேசர் தேரில் உலாவரு
பிராமி ஜெகதீஸ்வரன் , வயது 12 நியூமோல்டன் சைமு.ச மாணவி
எண்
தாயில் சிறந்தொரு கோயிலுமில்லை என்ற ஒரு பழமொழி பாலூட்டி சீராட்டி வளர்த்தாள். என் தாய் என்னை அண்ட பழக்க வழக்கங்களை சொல்லித் தருபவள். என் தாய் எ நடந்து கொள்வாள். தாயைப் பற்றி கவிஞர்கள் பல பாட்டு குருவாகவும் தெய்வமாகவும் இருப்பாள்.
நியூரூஜா இராஜகோபால். வயது 12 பர்க்டோவ் தமிழ்ப் பாடசாலை
சுவிற்சலாந்து
 

த்திகை-மார்கழி 1994 26
ჯoჯჯ$ ჯაჭმჯ82
-
லகில் 鷲鯊畿
DLT66
கிருதத்தில் மார்கழி மாதத்தைத் தனுர் மாதம் என்பர். வெம்பாவையின்போது அடியார்கள் அதிகாலையில், மியே வலம் வருவர். இதன் நோக்கம் அதிகாலையில்
"பள்ளி எழுந்தருளாயே" என்று முடியும். இவை
போட்டு இறைவனை வழிபடுவர். இவ்விரதம் கன்னிப்
கம் நடைபெறும். பின் அதிகாலையில் ஆருத்திரா
ருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும். சிதம்பரத்தில் வார்.
தாய்
உண்டு. தாயானவள் அன்பானவள். என் தாய் என்னை ாகவும் அத்துடன் கண்டிப்புடனும் வளர்ப்பவள். நல்ல எக்கு பாடங்கள் சொல்லித தரும்போது ஆசிரியராகவும் கள் பாடியிருக்கின்றார்கள். தாயானவள் குழந்தைகளுக்கு

Page 29
கலசம் ஐப்பசி-கார்த்தி Hinduism
A to 7,
A is for Aum, the three-syllabled mantra that represents the Sacred Mystery in sound and vibration.
B is for bhakti, deep devotion and love for the Divine which softens even hearts of stone.
C is for culture, the beauty of Hindu music, dance, literature and architecture.
is for dharma, which is righteousness, cosmic order and duty, leading us on the right path.
E is for Earth, our lovely blue planet, which we treat as sacred, protecting all its wonderful creatures.
F is for family, the precious cornerstone of Hindu life, culture, service and tradition.
G is for guru, our enlightened master who, knowing Truth himself, can guide us there.
for hatha yoga, healthful physical science for vitality, energy balancing and meditation.
is for India, Bharata, Motherland to one-sixth of humanity, Holy Land for Hindus everywhere.
is for japa, repetitive, prayerful mantras which quiet emotion and empower the mind.
Kis for karma, the law of cause and effect by which we determine our experience and destiny.
is for lotus the heart's inner shrine, where God dwells, ever perfect.
1. s for mauna, not talking, the inner silence known when words, thoughts and actions are stilled.
NA is for nonattachment, the art of living the simple life, without too many needs or desires.
() is for open-mindedness, the Hindu's tolerant freedom of thought, inquiry and belief
is for puja, mystic worship of the Divine in our home shrine and holy temples and places.
 

கை-மார்கழி 1994 27
is for quest, seeking to know, "Who am I ?Where did I come from? Where am I going?"
Ris for reincarnation, our immortal soul's journey from birth to rebirth. We do not fear death.
S is for samakaras sacraments sanctifying life's passages: name giving, marriage, death and more.
is for tilaka, forehead marks worn in honor of our unique and varied lineages.
is for utsava, our many home and temple festivals, full of bhakti, fun, feasting, and family sharing.
Vis for Vedas, our oldest and holiest book, the word of God recorded in 100,000 Sanskrit verses.
is for wealth(artha), one of life's four goals, along with love, dharma and enlightenment.
X is for xerophily, the ability of certain plants and animals to thrive in India's hot arid plains.
is for yoga, union of the soul with God which brings release from worldly bondage.
Z is for zeal, the fervor with which we perform service, go on pilgrimage and greet our holy religious leaders.
What is the PrO CeSS Of Reincarnation?
Through the ages, reincarnation has been the great consoling element within Hinduism, eleminating the fear of death, explaining why one person is born a genious and another idiot. We are not the body in which we live but the immortal soul which inhabits many bodies in its evolutionary journey through Samsara. After death, we continue to exist in unseen worlds, enjoying or suffering the harvest of earthly deeds until it comes time for yet another physical birth. Because certain karmas can be resolved only in the physical world, we must enter another physical body to continue our evolution. After soaring into the causal plane, we enter a new womb. Subsequently the old manomaya kosa is slowly sloughed off and a new one created. The actions set in motion in previous lives form the tendencies and conditions of the next. Reincarnation ceases when karma is resolved, God is realized and moksha attained. The vedas say, "After death, the soul goes to the next world"
-Dancing with siva

Page 30
கலசம் ஐப்பசி-கார்த்திகை-ம
వ్రెన్స్త===
STORY OF ABHRAM B
What da is city Since he spent histine in tho کینیڈین Mother and was unconcerned world, people thought him to
He worships an unknown. goddess, mad fellow
lle nieves about inlessly, A crak
Mother Mai
ti'Llue
Saave nie. 0 til
Juni pintu
 

கழி 19
ke ily untruth:
anii 2"wise I sail
this fire.
He is a mad mian. " He is a Tantric worshipper Who has no respect for
say about ፰እዩ፨ you iS
స్టీ
O Divine Mother You only should
Ꭶ8ᎥᎳᏋ I11Ꮛ.

Page 31
கலசம் ஐப்பசி
3. The Divine Mother tok
ofer earpendant
andwin the sky. It shone Ha ! Ha ! " billiantice the Mother. You
T 季
to your list
My son,İ made your words conne troue. continue your
The people were astonished to see the moonlight om a new noon day
Муха Wonderfull Strange ܛܵܓ݂ܵܠ ܐ ଜ୍ଞ
It is a miracle of
Xኔ " r
The Diw made E
COne ti
S O revered Bhatta! The great Goddess # * 8. Herself has made your words come
t'Lle.She changed a new noon
S Mysterious
are the ways of the iiwin
Mother
 

கார்த்திகை-மார்கழி 1994
29
As you wish, have added me t of devotees
سعير
ut a miracle ine Mother h Bhatta's words rue. Bring him No, let me go.
Please accept this and enjoy it for generations

Page 32
கலசம்
SDCT66N FORMS (
| BALA (GANIA PATRI
*
*
क्षे
খৃষ্ঠু & ঠু
He bears in his four hands the banana, the mango, the jackfruit and the suger cane. He has in his trunk modak
(rice flour ball wrapped around sweetened coconut bits). He shines like the rising sun.
BIAKTA GANAPATI
83
He carries in his four hands coconut, mango, banana
and pot of sweet rice pudding. He shines like the fullmoon on an autumn night.
 
 
 
 
 

கார்த்திகை-மார்கழி 1994 a
OF UORD GRNCSA
TAIRUNA GANAPATI
Ganapathi has eight hands. He carries rope, ankush (a weapon), sweet meat, villam fruit, blackberry, hi
broken tusk, paddy grains, and suger cane in each hand. He too shines like the rising sun.
This figure has sixteen hands and has a frightening aspect. He carries in his hands various weapons of defence and offence. Demon, spear, arrow, bow, chakra, dagger, shield, hammer, club, rope ankush, snake, trident, lance, axe, flag are what he carries in his hands.
88 (to be continu

Page 33
/% ഗ്രീef KR, OG FTIT SHOP
உங்களுக்குத் தேவையான இந்திய எவர்சில்வர்பாத்திரங்கள் வீட்டுப் பாவனைப் பொருட்கள் சமையற் பாத்திரங்கள்
பூசைத்திரவியங்கள், மின்சாரப் பொருட்கள் ஆடம்பரப் பொருட்கள், திருமணப்பரிசுப் பொருட்கள் பல்வேறுவிதமான பட்டாத வகைகள் வாழ்த்து மடல்கள், ராக்கிகள், கரம் போட்
இந்தியப் புத்தகங்கள், கைக்கடிகாரங்கள்
மைச் சடங்குக்கு
ஆகியவற்றுக்கு நீங்கள் நாடவேண்டிய ஒரே விநியோகஸ்தர்
KR. GIFT sHoP (%) QN 378, ROMFORD ROAD χΥ
LONDON E7 8BS TEL: 081 470 0486
VARSIS FOOD STORE
ஒரு தமிழ்க் நி @
Ա e GLIDIT ஞ் ல் சி
- UA னி హైడ్రొ LD ல் ( Wy
இலங்கையிலிருந்தும் \ V இந்தியாவிலிருந்தும் XV
இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உணவுப் பண்டங்களுடன, மரக்கறிவகைகள் பததிர்ககள், சஞ்சிகைகள், ஒடியோ, வீடியோ, சீடி ஆகியவற்றுக்கு நாடவேண்டிய தரமான
நம்பிக்கையான ஸ்தாபனம்
VAR SHE’S FOOD STOIRE
It):B, HBURLINGTT BN BIE0ARD,
NEW MAHALEDEN. SURRE, AEY KT:3 4 BLIR
(Near Burlington Junior School) TE, s ép:/- :é (P(96 7
 
 
 

VNNEY VIGNES
Certified Accountants &
Registered Auditors
கடைகள் வாங்குதல்-விற்றல் தொடர்பான ஆலோசனைகள். * சகலவித Accountancy / Taxation ஆலோசனைகள்
சட்டபூர்வமான் arguio Tax Savings செய்தல்.
ܬܐܢ ༼7༼ ༽ كنت مسر -
நற்செய்தி" Accountancy/Taxation தொடர்பான இலவச ஆலோசனைகள் (November & December 1994-2 - மாதங்கள் மட்டுமே) -
உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், உங்கள் கேள்வி ஆகிய விவரங்களுடன் கடிதமுலம்
. . . தொடர்பு கொள்ளுங்கள். M T. VGNESWARA F.C.C.A
VINNEY WIGNES 84 LFORD LANE, ILFORD, ESSEX, IG1 2LA
TEL: o81-553 5876 FAx: o81-553 372
MOBILE : 0956. 27.7112
SRI LAKSIMI
/ ENTERPRISES
IMPORTER & EXPORTER, WHOLESALER & RETALER N GENERAL TEXT LE & GIFT TEMS
திருமண வைபவமா ! பூப்பு நீராட்டு விழாவா ! தமிழர் பண்டிகைகளா! எதுவானாலும் உங்களுக்குத் தேவையான காஞ்சிபுரம், மணிப்புரி, பனாறிஸ், மைசூர், காஷ்மீர், பட்டுச் சேலைகள் பட்டுவேட்டி, சால்வை, மேல்சட்டைகள், பட்டுப் பாவாடைகள் பரத நாட்டிய உடைகள், அலங்கர நகைகள், சிங்கப்பூரிலிருந்து தருவிக்கப்பட்ட பல விதமான புடவைகள், கம்பளங்கள் அனைத்தையும் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள மிகச் சிறந்த
ஒரே இடம் (Q ○× Aീഴല്ല 0ീ% 4ý //βάάβρ ീree,
/ിrala 0 ഗ്ഗ4 00ീre്
நீலட்சுமி எண்ரபிரைசஸ்
Unit 11, Broadway Shopping Centre 44-50 The Broadway, Southhall Middlesex, UB1 1 OB
Te: O81 8439495 / 0.831 662824

Page 34
249 Fore Street Edmonton
London
- N18 2TY Tel/Fax 081884. 4979, 08, 345 631 7
 

EDMON
AKA TA'
- ーや 3
Αι \ உங்களுககுத
தேனி.வயான
."தமிழ், ஆங்கில
அ சஞ்சிகைகள்
தமிழ், ஹிந்தி, ஆங்கில
வீடியோ, ஒடியோக்கள்
மற்றும்
இலங்கையிலிருந்து
தருவிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் உடனர் மரக்கறிவகைகள் ஆகியவற்றை மலிவு விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்வதற்கு நம்பிக்கையோடு அணுகவேண்டிய ஒரே ஸ்தாபனம்
25 புது கடை பலாலி வீதி திருநெல்வேலி யாழ்ப்பாணம் இலங்கை

Page 35
sHIPPING - A R | F
UNACCOMPANIED BAGGAGE - PER GOODS, VEHICLES, M
TO COLOMBO AND OTHER W.
MAIN AGENT FOI
VSA: - " PASSENGER TICKETSAND UN, 7 All Your Goods Go to Our Bond
WE WILL ALSO FLY YOU AN SCHEDULED FLIGHT உங்கள் விமானப் பயண ஒழுங்குகளு பூனி லங்காவிற்கு அனுப்புவதற்கும் குறைந்த கட்டல
நீங்கள் நாடவேண்டிய நம்ட்
(9) AB)N GARRI
14, Allied Way, off Warple Way Telephone 081 740 837 Fax: 081 74O 4229 Tel BONDED WA Laksiriseva, 253/3 Avissawella R
SHLAR
ஐரோப்பாவின் தலை
தயாரிப்ப தாலிக்கொடி, பூராணி அ பதக்கம், கைவன குழந்தைகளுக்குரிய நவீன டிசைனர்களில் நெச நகைத்தேை தரமான 22 கரட்டில் உறுதிசெய்து குறித்த தவ:
பொன்னுருக்கலுக்கான ஒழு தமிழ்மொழியிலும் துெ நியாயமான விலைக்கு நீங்கள்
SHLAR
4,STSTEPHEN"S PAR UPTON PARK I
TEC 8
 

REIGHT - TRAVEL
SONAL EFFECTS, HOUSEHOLD ACHINERY ETC.
DRLD WIDE DESTINATIONS
R AIRLANKA
ACCOMPANIED BAGGAGE - 2d Warehouse in Colombo *ష్ట్రా
YWHERE, ANYTIME ON SAT LOW PRICES க்கும் உங்களின் பொருட்களை னத்தில் நிறைந்த சேவையினைப் பெறுதற்கும் க்கையான ஸ்தாபனம்
] RS (NVI (V)})
Acton, London W3 ORQ
9 / 081 749 O595 6) ് ax : 929657 Glenca G @/ s\ REHOUSE Xづ
d, Colombo 14 Tel: 575576
RAIOS
fine jewellers சிறந்த தங்கநகைத் ாளர்கள்
ட்டியல், கல் அட்டியல் ளயல்,மோதிரம்,
அனைத்து நகைகள் 6. லஸ், மற்றும் எல்லாவித N வகளுக்கும் ge அரச முத்திரையுடனர் \u
னையில் கொடுக்கப்படும்.
ங்குகளும் செய்து தரப்படும்
ாடர்பு கொள்ளலாம்
நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
ADS
ADE, GREEN STREET ONDON E7 8LQ
552 5718

Page 36
FREE Loc
M4OO மேர்க்குறி
வோடா
5 L LDí
தொலைடே
நம்பிக்ை
நாடவேண்
() O سمر"
s O PACIFIC
Mercur One2On
D.RY Contact
Te: O181 .
Fax. O181
Mobile : O9
2nd Floor, 194 High Street NC Next door tO East
@
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் செல்வம் அச்சகத்தினரால் இலண்டனில் அச்சிடப்பட்டு சைவ
 
 
 
 
 
 
 

h every phone
நம்பிக்கை நாணயம்
துரிதம்
LECOM
C. E. LLN EL"
ے/
- 552 5○○○ -5527273 5○ 559179
orth, East Ham London E6 2JA
Ham Tube Station
(DO ( s 0INERS CLUB 9ܣ
ம் வடிவமைப்பும் செய்யப்பட்டு, ஐரோப்பாவில் தரமான
முன்னேற்ற சங்கத்தால் 28-10-1994 அன்று வெளியிடப்பட்டது.