கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்த்தம் 2012.06

Page 1

鬣
踝

Page 2
உள்ளே ட
சத்தியம்
(ஆசிரியர் தலையங்கம்)
SAK
கல்வியமைச்சும் கலேவளர்ச்சியும்
பேட்டி - பூந்தான் யோசேப்பு
செகப்பிரியரின் நாடக அரங்கு
(அறிமுகக் கட்டுரை)
செய்திகள்
சிறுவர் அரங்குக்கு
டிச்சுக்காரரின் உதவி
உலக நாடக, அரங்க வரலாறு

* அர ங் கம்’ ‘ Arankamo
நாடக சஞ்சிகை DRAMA MAGAZINE * தாயகம்' Thayaka m” திருநெல்வேலி வடக்கு, Thirunel vely North,
யாழ்ப்பாணம். JAFFNA.
حصر حصصہ حصہ حصص 'حسر حسصے حصص حتصر حسصر حسصر حسنصہ ( வேண்டியவாறு வேண்டிய விளைக்கும்
வேட்கையில் வீறுடன் முயல்வோம்.
( -மஹாகவி
¿് $സ്ത് 'ൈ'യുള്ള്",'Sള്ളീ Sജ്ഞീ'ൈ","ണ്ണ്' Sജ്ഞ","ടുത്തുീ Sഞ്ഞ്
፫›8ዶŸõÖዘ፱፱፻፶፰ ፳፫
நாடக, அரங்கக் கல்லூரி வெளியீடு 4
* சத் தி யம் *
அவசரம்
ஆசிரியர்: வீ. எம்: குகராஜா
宽 எங்கும் - எப்பொழுதும் - எதிலும்
அவசரம். துணை ஆசிரியர்: காலம் அப்படித்தான் இருக்கின் எஸ். ஜே. குமார் |[Dტl
**இதற்குள் - கண்டறியாத நாடகமும், கலை இலக்கியமும், அரங்கமும்.' -
எல்லா நெஞ்சங்களும் கொள்ளக் கூடாத பிழையான எண்ணங்களேக் கெ ன் டு - தள்ளக்கூடாதனவற் றைத் தள்ளித் தூர வைத்து - துயர ஒப்பாரி பாட
¥.
f
| { ( (
( (
( ( ( ( ( f
(
நிர்வாகப் பொறுப்பு; ம. சண்முகலிங்கம்
*
நிர்வாக உதவிகள்: செல்வ. பத்மநாதன் சோ. தேவராஜா
நாமோ..?
உள்ளது இதுதான். இதனை க் காத்து, வளர்த்து, இல்லாதன வற்றை இதன்மூலம் எய்துதற்காய்த்
her, தனிப்பிரதி 2-00 துடிக்கின்ருேம்.
எம்மைப்பொறுத்தவரை அவசரங் வருடசந்தா 16-00 களல்ல-அவசியங்களே.
)
- ஆசிரியர்

Page 3
ஒரு நோக்கு
கல்வி அமைச்சும்
கலை வளர்ச்சியும்
1977 இலிருந்து கல்வி
அமைச்சு கடந்த ஐந்து வருடங்க ளாக வட்டார, மாவட்ட, அகில இலங்கை ரீதியாகப் பாடசாலை களுக்கிடையே நாடகம் நாட்டுக் கூத்துப் போன்ற போட்டிகளை நடாத்திவருவது வரவேற்கத்தக்க தொன்ருகும்.
“ “ Għair Gori ” ” Liu nr l - gir nr 2éano e Garf) லிருந்து"பெரிய' வசதிபடைத்த கல்லூரிகள் வரை இதில் பங்கேற் பதைக் காண்கின்ருேம்.
நாடகத் துறையிலே நம்மவர் கள் மத்தியில் சினிமாத்தாக்க மும்; எமது பாரம்பரியத்தோடு ஒட்டாத போக்குகளும்; சமூககலைத்துவ பாங்கில் பிற்போக்கு நிலைமைகளும் "இன்றைக்கும்" மண்டிக்கிடக்கும் நிலையில் இந்தப் பாடசாலைகளுக் கிடையிலான **போட்டி' இளம் சந்ததியினர் மத்தியில் அடித்தள நாடக வேட் கையையும் அதன் உண்மையான பரிமாணத்தையும் அறிமுகப்படுத் துவதற்கு சிறந்த வாய்ப்பை அளிக்கின்றது. கல்வி அமைச்சு நாடக அரங்கியலுக்கென்றே பல்கலைக்கழகப் பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.
ஆஞல், இந்தப் பாடசாலைகளுக் கிடையிலான போட்டிகளில்
வரும் நாடகங்கள்; நாடகத்தி னுாடாக கலை - கல்வி வளத் தையோ, அல்லது கல்விப் பரப் பினுாடாக செழுமையான நாடக அனுபவத்தையோ புகட்டுவதாக இல்லை: சிறுவர் நாடகத்தைப் பொறுத்தவரை சிங்கள நாடகங் களில்கூடப் பிரமிக்கத்தக்க முன் னேற்றங்கள், புதிய உத்திகள், பரீட்சார்த்தங்களைச் செய்துவரு கிருர்கள். ஆணுல் எமது பாட சாலைகளோ இந்தப் புதிய "தாக் கங்களை" அறியாத குருடரி களாக வெறும் "கோமாளிக் கூத் துக்களை" நாடகம் என்று போட் டுப் பாழடிக்கின்றன.
இந்தப் பாடசாலைப் படைப்புக் களைப் பார்க்குமிடத்து - இராமா யணமும்; மஹாபாரதமும், பிற இதிகாசங்களும்தான் எமக்குள்ள *ஒரே" மூலமுதல் என்று எண் ணத் தோன்றுகின்றது. ஆனல் இவற்றையாவது அ  ைம ச் சி ன் சுற்றுநிருபத்திலுள்ளது போல் **ஆக்கம், இசைக்குறி, சமர்ப் பணம், கரு, மனேபாவத்திற் கேற்ப" அமைக்கப்படுவதாக இல்லை.
மேலும் நடுவர்களால் அளிக் கப்படும் தீர்ப்புக்கள் மேற்குறிப் பிட்ட இயல்புகளுக்கமைவதாக வும் இருப்பதில்லை. பலசந்தர்ப்பங்
徽
 
 

களில் சங்கீத நாட்டிய ஆசிரியர் கள் நாடகத்திற்கு நடுவர்களாக அமர்ந்து - தரமான நாடகங்கள் பாழடிக்கப்பட்டு, பக்க இசை: நாட்டியம்; (வசதிபடைத்த கல் லூரிகளின்) மேடை அலங்காரம் போன்ற புறக்காரணிகளுக்குப் புள்ளிகள் போடும் அவலநிலையை யும் காண்கின்றேம்.
இந்த இடையூறுகளையெல்லாம் கடந்து, சில கல்லூரிகள் தரமான நாடகங்களை இப்போட்டிகளில் மேடையேற்றியமை ஒர் ஆரோக் கியமான எதிர்காலத்தை உரு வாக்கியுள்ளது. எடுத்துக்காட் டாக, கடந்த ஐந்து வருடங்க ளாக நாடகத்தில் முதலிடங் களைப் பெற்றுவந்துள்ளஇளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி நா ட க த் துறை யி ல் பயிற்சி பெற்ற திரு. அ. தாசீசியஸ் திரு. ம. சண்முகலிங்கம், திரு. க. சோமசுந்தரம் போன்றவர்களின் கருத்தரங்குகளையும், பயிற்சிகளை யும் பெற்றமையாலும், நாடக அரங்கியலை ஒர் காலத்தில் செயற் றிட்ட பாடமாக மேற்கொண்ட  ைம யாலும் செழுமையான பாதையொன்றைத் தழுவி வருவ தைக் காண்கின்ருேம்.
இவ்வாறு ஆர்வங்காட்டி இயங் கும் இத்தகைய அனுபவம்பெற்ற கல்லூரிகளை, அதன் ஆசிரியர்களை நாடகப் பட்டதாரிகளைப் பயன் படுத்தி "நாடக செயற்கள நிலை யங்களை" (கல்வி வள நிலையங்க ளைப் போன்று) அமைப்பது ஆசிரி யர்களுக்கும் மாணவர்களுக்கும் நாடக அரங்கியலைப்பற்றிய அறி  ைவ யு ம், செயற்பாடுகளையும் கற்பிக்க வாய்ப்பளிக்கும்.
3
இந்தத்திசையில் சிங்களச்சகோ தரர்கள் அரங்கியல் துறையில், வீறுநடைபோடத் தொடங் கி யிருக்கிருர்கள். கல்வி அமைச்சர் துணை அமைச்சர் ஆகியோர்சிறு வர் நாடகத்துறையில் ஆர்வம் காட்டி, கொழும்பில் சிறுவர் களுக்கான நாடகப் பிரதி எழுது தல்; நெறிப்படுத்தல் ஆகியவற் றுக்கு அமைச்சில் தனிப்பிரிவை அமைத்து; அதற்குப் பணிப்பாள ராக திருமதி சோமலதா சுப சிங்கN என்பவரை நியமித்துள் ளார்கள். இவர் முன்பு ஆசிரியை யாகக் கடமையாற்றியவர். "கத் தாந்தர தெக்கக்" என்ற பிரபல் யமான நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர். இச் சிறுவர் நாடகத்தை நகரத்திலும், கிரா மப்புறங்களிலும் 80,000 சிறுவர் கள் கண்டுகளித்தார்களாம். இவ ரின் முயற்சிக்கு அமைச்சு பூரண ஆதரவு அளித் த தோடல்லா மல், நாடகத்திற்கென்று ஒரு பிரிவை - அமைத்து இவரைப் பணிப்பாளராக்கியுள்ளது. இன்று அவர் முழுநேர நாடக அரங்கியல் வகுப்புகளை நடாத்தி வருகின்ருர்,
எனவே எமது மாவட்டத்தி லும் கல்வி அமைச்சு இந்த ரீதி யில் சிந்தித்துச் செயலாற்றலாம். தற்போதய கல்வி இலாகாவின் நுண்கலைப்பிரிவு வெறுமனே இந் நிகழ்ச்சிகளை நடாத்தி உயர்மட் டத்திற்குப் பட்டியல்களை அனுப் புவதில் திருப்தியடையலாம். ஆஞல் அது நாடகத்தின் வளர்ச் சியைத் தூண்டுவதாகாது. தற் போது ஆரம்பித்து இயங்கிவரும் வட்டாரக் கல்வி வள நிலயங்க ளாவது தங்கள் அமைப்பில் ஒரு பகுதியை ஒதுக்கி ஆர்வமுள்ள ஆசிரியர்களின் சே  ைவ களை ப் பயன்படுத்துவது சிறந்த செயற் runi" (Tölis ə9760)LDuyub.

Page 4
*^KỳXXXXXXXằXỳXằKỳ
ஐம்பத்தைந்து ஆண்டுகள் தாண்டும் நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் ம. யோசேப்பு
பேட்டி தருகிருர்
KỳXXXXXXXXXXXXXXXề
கேள்வி: நாட்டுக்கூத்தில் நீங் கள் ஈடுபடுவதற்குக் காரணமாக இருந்த தென்னவென்று கூற (pg.ttf 1 porr?
பதில்: எனது பேரனும்-பெரிய தகப்பனும்-மாமனும் நான் சிறுவ ஞக இருந்த காலத்தில் கூத்துக்
கலேயில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கூத்துக்களைப் பழகும் போதும் - மேடையேற்றும்போ
தும் அவற்றைப்பார்த்து ரசிப்ப தற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த ரசிப்புத்தன் மையே நாளடைவில் நாட்டுக் கூத்தில் என்னை ஈடுபடுத்தக் காரணமாக இருந்ததெனலாம்.
கே. உங்கள் குருவாக யாரைக் கருதுகிறீர்கள்?
ப3 முதன்முதலில் கூத் தில்
பாடவும் நடிக்கவும் எனக்குப் பழக்கித் தந்தவர்கள் சுண்டிக் குளி புலவர் பொன்னே!பா அவர் களும் அண்ணுவியார் பஸ்தியாம் பிள்ளை அவர்களும்தான். அவர் களே எனது ஆரம்பகால வழி காட்டிகள்,
கே. கூத்து என்னும்போது ஓர் ஆட்ட முறையே எமது கருத் தைத் தட்டுவது இயல்பு. நீங்கள் நிகழ்த்துகின்ற கூத்துக்களில் ஆட் டங்களும் இடம்பெறுவதுண்டா?
ப; ஆட்டமில்லாமல் கூத்துக் கிடையாது. என்னுடைய இரு பத்தோராவது வயதில் ஆட்டத் துடன்தான் எனக்குக் கூத்துப் பழக்கித் தந்தார்கள். ஆணுல், இன்று ஆட்டத்துடன் கூத்துக் களே நிகழ்த்தமுடியாத நிலையில்
 
 
 
 
 
 

எமது இளம் கலைஞர்களும் இளம் ரசிகர்களும் மாற்றம்பெற்றுள் ஒளார்கள். கூத்தின் ஆட்டங்களை ரசிப்பதற்கு எவ்வாறு இளந்தலை முறை விரும்புவதில்லையோ-அதே போலவே ஆடவேண்டிய இளங் கூத்துக் கலைஞர்களும் ஆட்ட மென்றவுடன் புறமுதுகு காட்டு கிருர்கள்.
கே: கூத்துக்கே உரிய லாவக மான ஆட்டங்களை நீங்கள் இன் றும் ஆடுவீர்கள் என்று நாம் நம்புகின்ருேம். அதுபற்றி?.
ப; உங்களுடைய நம்பிக்கை சரியானதே. பல மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சிப் பகுதியில் எமது கூத்தொன்றை மேடை யிடச் சென்ற சமயம் . ஆட்டம் எமக்குத் தெரியாத ஒன்றென்று அங்கே பேசப்பட்டபோது - எம் மால் ஆடிப்பாடி நடிக்கமுடியு மென்பதை நான் தோன்றிய காட்சிகளில் ஆடி நடித்து நிரூபித் துள்ளேன்.
கே: இன்று நீங்கள் நிகழ்த்து கின்ற கூத்துக்களில் ஆட்டங்கள் இடம்பெறுவதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளும் அதே வேளையில் கூத்தில் நீங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கி றிரீகள் என்று கருதுகின்ருேம். நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை விரித்துக் கூறுவீர்களா?
உ1: கூத்துக்களில் ஆடுவது ரசிப்பதற்கும் நடிப்பதற்கும் ஏற் றதல்ல என்ற கருத்துப்பரம்பல் ரசிகர்களிடையேயும் கலைஞர்க ளிடையேயும் ஏற்பட்டதை அவ தானித்த நான் ஆட்டங்களில்
5
லாமல் கூத்துக்களைப் பழக்கி மேடையிட்டேன். கத்தோலிக்க க  ைத களை ப் பொறுத்தவரை தீர்க்கதரிசிகள் ஞானிகள் போன்ற பாத்திரங்கள் ஆட்டத்திற்குரிய வையல்ல; எனவே அதனையும் கருத்திற் கொண்டேன். பல பழைய நாடகங்களைப் புதுப்பித் திருக்கின்றேன். உதாரணமாக கூறுவதாயின் இரண்டு இரவு களில் நிகழும் நாடகத்தை ஒரு இரவுக்குத் தக்கதாக மாற்றி யமைத்திருக்கின்றேன். அதனைப் போலவே முழு இரவு நாட்டுக் கூத்துக்கள் பலவற்றை மூன்று மணித்தியாலத்திற்கும், இரண்டு மணித்தியாலத்திற்கும், ஒரு மணித்தியாலம் அரை மணித்தி யாலம் என்ற நேர அளவிற்கும் அந்தந்தச் சரித்திரத் தொடர்பு துண்டிக்கப்படாமல் மேடையிடு வித்திருக்கிறேன்.
கே; எமது பாரம்பரியக் கூத் தானது இனிமையான இசைவடி வங்களைக் கொண்டது. இதனைப் பாடி நடிக்கின்ற உங்களுடைய இசைத்துறை ஆற்றல் அறிவுபற் றிக் கூறுவீர்களா?
t I: 5sipistL5 சங்கீதத்தை இங்கும், இந்தியாவிலும் சென்று கற்றிருக்கின்றேன். இதனுல் சுரு தியும் லயமும் பிசகாமல் பாட முடிவதுடன், பல புதிய நாடகங் களுக்கு இசைவடிவம் கொடுக்க வும் உதவியாக இருக்கின்றது.
கே! உங்களது கலைப்பணிக்கு
அன்றும் இன்றும் சமுதாயத்தில்
எத்தகைய ஆதரவு இருந்து வரு கிறதென்று கூறுவீர்களா?

Page 5
அன்றும்சரி இன்றும்சரி,
நாட்டுக்கூத்துக் கலைக்கு மக்கள்
வழங்கிய ஆதரவு போ தா தென்றே துணிந்து கூறலாம். 1925ம் ஆண்டு தொடக்கம் 1940 வரை ஒரு கூத்தின் மொத்த மேடையேற்றச் செலவு இருபத் தைந்து, முப்பது ரூபாவுக்குள் ளேயே அடங்கி இருந்தது. இந்த முப்பது ரூபாவைச் செலவுசெய்வ தற்கும் அன்றைய கூத்துக் கலை ஞர்கள் வசதியற்றிருந்தார்கள். இன்று ஒரு கூத்தை மேடையிடுவ தானுல் ரூபா 2500 வரை செல வாகிறது. இதனையும் செலவு செய்யமுடியாமஜே இருக்கிறது. கே: அக் காலத்திலிருந்தே ஏராளமான கூத்துக்களை மேடை யேற்றிவரும் நீங்கள், அந்தக் காலத்தில் உங்களது மேடையேற் றங்களுக்கு எவ்வாறு நிதிதிரட்டி 60frissoir?
ப; எமது கூத்துக்குக் காட்சித் திரைகள் (சீன்கள்) 1940க்குப் பிறகுதான் பாவனைக்கு வந்தது. அதற்குமுன் காட்சித்திரைகளோ இன்றுள்ள ஒளியமைப்பு. ஒலி பெருக்கி வசதிகளோ கிடையாது. பழகிய கூத்தை எப்படியாவது மேடையேற்றிவிட்டால் - மேடை யேற்றம் முடிந்த இரண்டொரு தினங்களில் எமது சுற்ருடலில் உள்ள பணம்படைத்த, உயர் பதவி வகிக்கும் கனவான்களின் வீடுகளுக்குச் சென்று, உடுப்புப் போட்டு எமது கூத்தை ஆடிக் காட்டுவோம்: அத்த வீட் டுக்காரர் ஐந்து ரூபா கொடுத்தா ரென்ருல் அன்று அது எமக்கு மிகப்பெரிய நிதியுதவி. அவ்வாறே
வேறும் பலரிடம் செல்வோம். ஆடிக்காட்டுவோம். கிடைக்கும் நிதியைக் கொண்டு அ டு த் த வாரமே மீண்டும் கூத்தை மேடை யேற்றுவோம் அன்றும் இன்றும் பணங்கொடுத்துக் கூத்தை ரசிக்க விரும்புகின்ற கூட்டம் மிகக்குறை வானதே.
கே; உங்களது திறமைகளைத் தொடர்ந்தும் பார்வையாளர்கள் காணத்தக்க வகையில் பணியாற் றும் ஆற்றல் வாய்ந்த உங்களது வாரிசென்று யாரைக் கருதுகிறீர் கள்?
ப; அவ்வாறு உருவாகத்தக்க வர்கள் இல்லையென்று நான் கூற மாட்டேன். பலர் இருந்தாலும் அவர்களிடத்தில் அந்த ஆர்வமும் உந்தல்களும் இல்லையென்பதே எனது கருத்து. என்னிடமுள்ள வற்றை இளைய தலைமுறைக் ஞர்களுக்கு வழங்க நான் ஆயத்த மாக இருந்தும் - பெற்று க் கொள்ளவேண்டுமென்ற உணர்
வுடையோரைக் காண்பதரிதா கவேயுள்ளது.
கே: எழுபத்தெட்டு வயதான
உங்களது வரலாற்று நூல் வெளி வந்ததையிட்டு நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
ப: ஒரு கலைஞன் இறந்தபின்பு அவனுக்குச் சிலை எழுப்புவதனல் அவனைத் திருப்திப்படுத்த முடி யாது. வா மும் போதே ஒவ் வொரு கலைஞனது உழைப்பும் கெளரவிக்கப்பட வேண்டுமென்ற எனது எண்ணத்தை அதனை எழு திய எஸ். அகஸ்தியரும் வெளி பிட்ட நவரச நாட்டுக்கூத்துக்
 

கலாமன்றமும் நிறைவுசெய்திருக் கின்றனர்.
கே: நாட்டுக்கூத்தின் எதிர் காலம் எப்படியானதாக இருக்கு மென்று நினைக்கிறீர்கள்?
ப: என்னைப் பொறுத்தவரை ஏ ராளமான பாடசாலைகளில் நாட்டுக்கூத்தைப் பயிற்றுவித்து அது வளரத்தக்க அளவுக்கு விதை துரவியுள்ளேன்,
கே: உங்களது மிகப்பிரபல நாட்டுக்கூத்துக்களை வ ரி  ைச ப்
படுத்துவீர்களா?
ப: இருபது நாடகங்கள் வரை பாடுவித்திருக்கிறேன். அ வ ற்
றில் ‘கருங்குயில் கு ன்ற த் து க் கொலை” 100 தடவைக்குமேல் என்னுல்மட்டும் மேடையிடப்பட் டிருக்கின்றது. முப்பது கிராமங் களில் இதனேப் பயிற்றுவித்தும் உள்ளேன். "யாழ்ப்பாண மன் னன் சங்கிலியன்’ 500 தடவை களுக்குமேல் - "எஸ்தாக்கியார்” 100 தடவைகளுக்குமேல் மேடை யேறியவை.
கே: நாட் டு க் கூத்து வடி வத்தை, சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கிய க  ைத களு க் கு வழங்கி மேடையிடுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
7
ப; கூத்துப் பண்புக்கு ஏற்ற வகையில் சமூகக் கதைகளை மாற்றியமைக்காவிடில் பொருந்
தாதென்பதே எனது கருத்து. உடையலங்காரமும், பாத்திர வார்ப்புகளும் கூத்து வடிவத்
தோடு இசைவுறக்கூடிய விதத்தில் அமைக்கப்படுதல் பொருத் த மாகவிருக்கும்.
கே: இன்றைய இளங்கலைஞர் களுக்கு - நீங்கள் எமது மண் ணில் மூத்த் கலைஞர்களில் ஒருவர் என்ற வகையில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
ப; ஒலித் த ட் டு க் க ளே ப்
போட்டு - ஒடிப்பிடித்தும் வாய சைத்தும் நடிக்கிற நடிப்பை விடுத்து "கழுதையாகக் கத்தி
ஞலும், நீ பாடு' என்பதுதான் எனது வேண்டுகோள். குரல் வளமில்லாதவர்கள் பாடத்தக்க இசைமரபுகள்கூட எமக்குச்சொந் தமாகவுள்ளன என்பதை இவர் கள் உணர்தல்வேண்டும்.
கே: இன்றும் நீங்கள் ஆடத் தக்க உடல்நிலையோடிருப்பதற் குக் காரணம்?.
ப: மது அருந்துதல்போன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்படா هزینش) قوی
இப்பேட்டியைத் தந்த பூந்தான் யோசேப்பு அவர்கள் கூறிய அரிய பல கருத்துக்கள் இடவசதியீனங் காரணமாக இதற் குள் அடங்கவில்லை. அக்கருத்துக்கள் யாவும் அவ்வப்போது அரங்கத்தில் பிரசுரிக்கப் படுமென்பதை வாசகர்களுக்கு அறி
யத்தருகிருேம்.

Page 6
அறிமுகக் கட்டுரை
செகப்பிரியரின் நாடக அரங்கு
ஆக்கியோன்: "சோம்"
எமது மண்ணுக்கும் தமிழுக்கும் சொந்தமான நாடகக் கலைஞர்களின் பங்களிப்பையும்-அவற்ருல் நாடக அரங்கில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நாம் அறிந்து வைத்திருக்கவேண்டியது எவ்வளவு அவசியமோ-அவ் வளவு அவசியமானது - பிறமொழி, பிறதேச நாடகக் கலைஞர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பையும் அறிந்துவைத்திருக்க வேண்டியது, அறிந்துவைத்திருப்பதனுல் எமது அரங்க அறிவு வளர்ச்சியடையவும் சந்தே கங்கள் தெளியவும் நிச்சயமாக வாய்ப்பேற்படுமென்று நம்புகின்ருேம்.
இந்த வகையில் சேக்ஸ்பியரின் நாடக அரங்கினைப் பற்றி - அதனுேடு மிகப் பரிச்சயமான - பலருக்குப் பரிச்சயப்படுத்திய திரு. கே. கே, சோம சுந்தரம் அவர்கள் இவ்விதழிலிருந்து தொடர்ந்து எழுதி வருகிருர்- செகப் பிரியர்” என்பது சேக்ஸ்பியரின் தமிழ்ப்படுத்தலே. (-p4, rr)
* பழகிப் பயிலினும் பருவம் பெயரினும்
அவள் எழிலோ அநந்தம்'
செகப்பிரியரின் அந்தோனியும் கிளியோபெத்ரா'வும் என்ற அவல நாடகத்தில் கிளியோபெத்ராவின் இன்ப இயல்புகள்பற்றி அளவிட் டுக்கூறும் அந்தோனியின் மேற்குறிப்பிட்ட வார்த்தைகள், செகப்பிரி யரின் நாடகங்கள் ஒவ்வொன்றிற்குமே பொருந்தும்.
தமது வாழ்நாளில் எத்தனை நாடகங்களை சேகப்பிரியர் எழுதினர். தமது சக ஆசிரியர்கள் சிலருடன் கூடி எத்தனை நாடகங்களைப் புதுக்கி யும், மாற்றுருவிலும் அ  ைமத் தார் என்பது எமக்குத் திட்ட வட்டமாகத் தெரியாவிடினும், அவர் எழுதிய நாடகங்களில் 36 இன்று எமக்குக் கிடைத்திருக்கின்றன. போமன்ற், பிளெச்சர் என்ற தமது நண்பர்களுடன் சேர்ந்து அவர் யாத்த இரண்டு நாடகங்களும் இப்போது இலக்கியவுலகிற்குக் கிடைத்திருக்கின்றன.
இவை தவிர, நாடக இலக்கியங்கள் அல்லாத படைப்புக்களாகிய நீண்ட குறுங்காவியங்கள் இரண்டு, பதிஞன்கு வரிகள் கொண்ட தனி வடிவமாகிய “சொனற்’ எனப்படும் கவிதைகள் நூற்றி ஐம்பத் தைந்து (155) வேறு கவிதைகள் சிலவும் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தவைகளாகும்.
இவர் தாம் வாழ்ந்த சமகாலத்திலேயே தலைசிறந்த நாடகாசிரி யர் எனப் புகழ்பெற்றவர். செகப்பிரியருக்கு எதிராக நாடகவரங்கி னைப் பொறுத்தமட்டில் என்றுமே போர்க்கொடி காட்டிப் போட்டி யிட்டுக்கொண்டு தாமும் நாடகங்களை எழுதி மேடையேற்றுவித்த "பென்ஜோன்சன்" என்பவர், செகப்பிரியர் அமரத்துவமெய்திய

9
ஏழாண்டுகட்குப் பின் அவருடைய நண்பர்கள் செகப்பிரியரின் நாட கங்களில் இருபத்திமூன்றை அச்சேற்ற முனைந்தபோது, பின்வருமாறு செகப்பிரியருக்கு என்றுமே அழியாத புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.
"ஒரு யுகத்திற்கு மட்டுமல்ல, எல்லா யுகங்களுக்கும் உரியர். ஒரு தேயத்தில் மட்டுமல்ல எல்லாத் தேயங்களிலும் வாழ்பவர் செகப்
9ff)tturi” ” .
இதனைக் காலம் நிரூபித்துவிட்டது. காலம் செல்லச் செல்ல அன் ஞரின் கீர்த்தி கடந்த 400 ஆண்டு காலத்தில் உலகின் மூலை முடுக்குக ளெல்லாம் ஊடுருவிப் புகுந்து, கற்ருேரையும் மற்ருேரையும் வியப்பி லாழ்த்திப் பரந்து நிற்கிறது. செகப்பிரியரின் நாடகமொன்று உலகில் எங்கேயாவது ஒரிடத்தில் நடைபெருத நாள் இல்லவே இல்லையென்று யாம் துணிந்து கூறலாம். அவரது நாடகங்களை நடித்தும் இயக்கியும் அன்ஞர்பற்றி நூல்கள் எழுதியும் விமர்சித்தும் அதன்மூலம் தம் வாழ்க்கையின் ஊதியத்தினைப்பெற்று வாழ்பவர்கள் உலகில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உளர் எனக் கணக்கிடப்பட்டிருக் கிறது. ஆனல் அவரது நாடக ங் க ளை க் கண்டு களித்தும், வாசித்து நயக்கும் மாந்தர்கள் எண்ணிலடங்கார்.
அரசியல் நோக்கு, பொருளாதாரப் பிணக்கு, சமயப்பூசல் இன் னுேரன்ன உலகியல் இடர்ப்பாடுகளினல் தம்முள் மாறுபட்டு விரோ தித்து நிற்கும் வெவ்வேறு தேச, இன, சமயத்தவர்களும்கூட உதா ரணமாக ரூஷ்யா, அமெரிக்கா தேயத்தவர்கூட ஏகோபித்து ஏற்றுக் கொள்ளும் நிலை செகப்பிரியருக்கு எங்ங்ணம் கிட்டியது என்பதை ஆராய்தல் நன்று.
நவில்தொறும் நூல்நிலையம் போல-அன்னரின் நாடக இலக்கியச் தவைகள் மடுக்குந்தோறும் தெவிட்டாதவை என்ற கருத்தினை செகப் டிரியரின் சிறப்பிற்குப் பிரதான ஏதுவெனப் பெரும்பாலும் கொள்வது வழக்கம். இது உலகின் தலைசிறந்த இலக்கிய கர்த்தாக்கள் அனைவருக் குமே பொருந்தக்கூடிய கூற்றுகும். எனவே அவருக்கென அமைந்த இறப்பியல்புகள் எவை என்பதைக் காண்பாம்.
மாற்றங்கள் என்றுமே நிகழ்ந்துகொண்டிருக்கும், மாற்றந்தான் விதி என்ற கோட்பாட்டிற்கமைய நிலவுவதே இவ்வுலகம். மனித ஞல் ஆக்கப்பெறும் பண்பாடு, நாகரிகம், அவற்றின் சின்னங்களாகிய அழகிய கட்டிடங்கள், கோபுரங்கள், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் நிலைகள் யாவுமே அழிந்தொழியுந் தன்மையன. ஆனல் கால ஒட்டத்தினுல் அடித்தொதுக்கப் படாததாகவும் என்றுமே நிலைபே றுடையதாகவும் உள்ள ஒன்று மனிதனது "இயற்கை' என்பதைச் செகப்பிரியர் கண்டார். புறவுலகும் சூழலும் மாறிக்கொண்டிருக்க வும், மனிதனதுஅந்தரங்க அகவுலகானது மாறுத தன்மையுடையதாக மாந்தரிடத்தில் நிலவுவதை அவர் உற்றுணர்ந்து, பெரும்பாலும்

Page 7
O
எளிதிற் புலப்படாத இந்த அகவுலகினைச் சித்திரித்தலே நாடகம் ஆற் றக்கூடிய பெரிய கைங்கரியம் என்ற முடிவிற்கு வந்தார்.
கலைப்படைப்புகள் இருவகைக் கூறுடையன. மனிதனுக்கும் அவ னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலுக்குமுள்ள தொடர்பு, மனிதர்கள் இருவருக்கிடையிலுமுள்ள பரஸ்பரத் தொடர்பு ஆகியவற்றை விளக் குவது ஒரு கூறு. மனிதனுடைய பகுத்தறிவின் காரணமாக அவஞல் ஆக்கம்பெற்றுத் தோன்றி வளர்ந்துவரும் சமூக அமைப்பிற்கும் மனித னுக்குமிடையிற் காணப்படும் தொடர்பினை விளக்குவது மற்றைய கூறு. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுதல் இயல்பு. எனவே மாறிக் கொண்டிருக்கும் சமூகாதார அமைப்புக்க்ளுக்கும் மனிதனுக்குமிடை யில் நிலவும் தொடர்புகள் பற்றி செகப்பிரியர் அதிகம் சிந்திக்காது விடுத் தார். இதற்கு மாருக, மனிதனுடைய சொற்கள், செயல்கள் ஆகிய வற்றுக்குப் பின்னல் மறைந்துநின்று அவற்றை ஊக்குவித்துத் தோற்று விக்கும் மாருத நிலைபேறுடையதும், மனிதனின் உள்ளக்கிடக்கை களுக்கு மூலாதாரமாக நிற்பதுமாகிய மனித "இயற்கை”யின் கூறு பாடுகளை விளக்குவதையே செகப்பிரியர் தமது நாடகங்களின் பெரு நோக்காகக் கொண்டார். மனிதர்களுக்கிடையில் நிலவும் பரஸ்பரத் தொடர்புகளைத் தமது சிருஷ்டிகளில் வடித்துத்தந்தார்.
செகப்பிரியரின் தலைசிறந்த அவலநாடகம் எனக்கொள்ளப்படும் 'ஹம்லத்’ நாடகத்தின் நாயகனின் வாய்ச்சொற்கள்மூலம் இக்கருத் தினை அவர் பின்வருமாறு வெளியிடுகிருர்,
"The purpose of playing, whose end, both at the first and now, was and is, to hold as it were the mirror up to nature’.
"இயற்கையினைக் கண்ணுடியிற் காட்டுதல்போல, படம் பிடித் துக் காட்டுதலே நாடகத்தின் பெருநோக்கமாக அன்றும் இன்றும் இருந்துவந்திருக்கிறது.
இங்கு "இயற்கை’ என்பது எமக்கு எளிதிற் புலப்படாத மனித னின் அந்தரங்க உலகாம். மனிதனின் கட்புல செவிப்புலன்களுக்கு எளிதில் புலப்படக்கூடிய புறவுலகின் அம்சங்களை மேடையில் வடித்தல் அநாவசியம். இவற்றின் பின்னுல் மறைந்து காணப்படும் அகவுலக இயற்கையினை வடித்துத்தருதலே உண்மை நவிற்சி அல்லது தத்ரூப நாடக வடிவாம் என்பது செகப்பிரியரின் சித்தாந்தம்,
"அயன் செய்வதனைத்தின் குறிப்புணர் தேவியருட் கவிதை" என்று கவிதைக்கு வரைவிலக்கணம் கூறும் பாரதியின் அடியினையும் இங்கு உற்றுநோக்குதல் நலம்.
 

அகவுலகினைத் தத்ரூபமாகச் செகப்பிரியர் காட்டும் திறத்தா
லேயே நாடகத்தினை நயக்க விரும்பும் கற்ருேரும்,
பொழுதுபோக்கிற்
காக நாடகத்தினைக் காணச்செல்லும் மற்ருேரும் ஒரே நேரத்தில் அவர் நாடகங்களைக் கண்டின்புற முடிந்தது. இருபாலாரும் தத் தமக்குள்ளே
பொதிந்து கிடக்கும்.அந்தரங்க வியந்து களித்தனர்.
உலகினை நாடகமேடையிற்
கண்டு
உலகம் கண்ட உணர்வினில் வல்லோராகிய மகாகவிகள் பலருள்
கற்ருேரும் கல்லாத மாந்தரும் ஒருங்குகூடி ஒத்தனுபவிக்கும்
பெரும்
பேற்றினை அடைந்த இலக்கிய கர்த்தாக்களுள் செகப்பிரியரைத் தவிர
வேறு யாருளர்? வேத்தியலும் பொதுவியலும்
புலமைக் கடல் செகப்பிரியர்.
சங்கமித்த பெரும் (வளரும்)
张毕未恶学崇味串味味味采 செய்திகள்
எஸ். ஜே. குமார்
崇崇来张采味来崇味恶采味 மாவட்டப் போட்டி
கல்வித் திணைக்களம் யாழ். மாவட்ட ரீதியில் அண்மையில் நடாத்திய இசை, நடன,நாடகப் போட்டியில், நாடகப் போட்டி யைப் பொறுத்தவரை நாட்டிய நாடகத்தில் முதலாமிடத்தை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி யும், மானிப்பாய் இந்துமகளிர் கல்லூரியும் பெற்றன. சாதா ரண நாடகத்தில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி யினர் அளித்த ஹம்லெற்’ என் னும் நாடகம் முதலாம் இடத் தைப் பெற்றது. மத்திய பிரிவு இசைநாடகப் போட்டியில் காங் கேசன்துறை நடேஸ்வராக் கல் லூரி அளித்த "நட்பின் சிகரம்" என்னும் நாடகம் முதலாம் இடத் தையும், கீழ்ப்பிரிவுக்கான நாட கத்தில் யாழ், டொன்பொஸ்கோ
கல்லூரியினர் அளித்த "பிள்ளை கள் பாவனை செய்யும்" என்னும் நா ட கம் முதலாமிடத்தையும் பெற்றன. மேற்படி நாடகங்க ளின் தயாரிப்பில் நவீன உத்தி கள் கையாளப்பட்டமை, காத் திரமான பயிற்சி அளிக்கப்பட் டமை போற்றப்படவேண்டிய அம்சங்களாகும். வழிப்போக்கன்
லூஜ"சன் என்னும் சீனதேசத்து எழுத்தாளரின் நூற்ருண்டு தின விழா தேசிய கலை இலக்கியப் பேரவையினரால் யாழ். றிம்மர் மண் ட பத் தி ல் 26-9-1981ல் கொண்டாடப்பட்டபோது,விழா வின் இறு தி நிகழ் ச் சி யாக லூஜ"ன் எழுதிய "வழிப்போக்
கன்" என்னும் நாடகம் மேடை
யிடப்பட்டது. எம். ஏ. நுஃமான்
மொழிபெயர்த்த இந்நாடகத்தை சோ. தேவராஜா நெறிப்படுத்தி யிருந்தார். கலைவிழா
அண்மையில் காங்கேசன்துறை வட்டாரக் கல்விப்பகுதி கலைவிழா (21ம் பக்கம் பார்க்க)

Page 8
சிறுவர் அரங்குக்கு டச்சுக்காரரின் உதவி
**பல நூற்றண்டு eig60LD வாய்ந்த பாரம்பரியங்களையும் கலாச்சாரத்தையும் கொண்டு, அதிசயிக்கத்தக்க வ ள மிக்க நாடாக இலங்கை விளங்குகிறது. இருப்பினும், உங்கள் நாடு இத் துறைகளில் எத்தகைய பிரதி பலிப்பைக் கொண்டுள்ளது என் பதை நீங்கள் காட்டத் தவறிய தால், பல மேலைத்தேய நாடுகள் இவைபற்றி அறியாது இருக்கின் கின்றன. இவ்வுயர் க லே களை நீங்கள் வெறும் புராதனச் சின் னங்களாகமட்டும் தொடர்ந்து பாது காத் து வைத்துள்ளமை யால், இப்பாரம்பரியமும் கலா சாரமும் எவரது அனுதாபத்தை யும் மதிப்பையும் புக  ைழ யும் பெருது விரைவில் அழிந்தொழிந் துவிடும்.'
அரங்க, ஒப்பேரா (Opera) நெறி யாள்கையிலும் சிறுவர் அரங்கத் துறையிலும் நிபுணராகவுள்ள பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த றடி கொறென்ஸ் (Ruddy Corens) என்பவர், ஒருமாதகாலம் இலங் கையில் இருந்தபின்னர் இவ்வலி மையான கருத்தினைத் தெரிவித் தார்.
இவர், அன்ட்வேர்ப் (Antwerp) வேத்தியல் சிறுவர் அரங்கத்தி னதும் வேத்தியல் ‘ஒப்பேரா? அரங்கத்தினதும் அரங்க நெறி யாளராகவும், வேத்தியல் இசைக் காப்பு நிலையத்தினதும் அம்ஸ்ர டாம் (Amsterdam) நாடகக் கல் லூரியினதும் விரிவுரையாளராக
வும் உள்ள அதேவேளையில் சிறு வர் அரங்கத்துறையில் துறை போனவராகவும் உள்ளார். காத்திரமானது
ஒருநாட்டின் பாரம்பரியத்தை பும் கலாச்சாரத்தையும் வெளி யுலகுக்குக் காட்ட உதவும் மிகக் காத்திரமான கருவி சிறுவர் அரங் கமாகும், என றடி கூறுகிருர், மக்களின், முக்கியமாகக் கிரா மப்புற மக்களின் நா ளா ந் த வாழ்வு, இசை, நடன வடிவங் கள், நாடகங்கள் ஆகியவற்றின் உயர் பாரம்பரியப் பண்புகள், தமது கலாச்சாரத்தில் கொண்டுள்ள அக்கறை, ஆகிய வற்றைக்கண்டு வியப்பைத் தெரி விக்கும் இவர், இத்தகைய எல்லை யில்லா உயர்நிலைப் பண்புகளை யுடைய ஒரு நாடு தனது அரங்கத் தேவைக்கும் மற்றும் கலைகளின் தேவைக்கும், ஏன் மேற்கு நாடு களை நாடியது என்பதை அறி யாது ஆச்சரியப்படுவதாகக் கூறி ணுர், உங்கள் நாட்டு மக் கள் தமது கலாச்சாரம், அரங்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து எதற்காக மேலைத்தேய கலாச் சாரம், அரங்கம் ஆகியவற்றை அலாவவேண்டும். என்று அவர் Gogol mri.
பெளத்தமதத்தைச் சூழப் பின் னப்பட்டுள்ள ஏராளமான இலக் கிய, நாட்டாரியற் பொக்கிஷங் கள்கூட இன்னமும் பயன்படுத் தப்படாமல் இருக்கின்றன என அவர் கவலைப்பட்டார். "உங்க ளது கலாசாரத்தைப் பற்றிப்
மக்கள்
 

பெருமை கொள்வதோடுமட்டும் நின்று, அதனை ஒரு தொல் பொருட் சின்னமாக மாற்று வதை விடுத்து, நீங்கள் அதனைப் பார்க்கவும் உணரவும் வேண்டும். உங்கள் கலாசாரத்துக்கு உயிரும் தனித்துவமான நிலை ப் பா டு ம் உண்டு", என்று அவர் மேலும் சொன்னுர்,
நடியைப் ஒருநாடு எதனைப்
பொறுத்தளவில், பிரதிபலிக்
கிறது என்பதை மற்றையோர் அறியச்செய்ய உதவும் சிறந்த சாதனம் சிறுவர்களே. அவர்
இந்த நாட்டில் மேற்கொண்ட ஆரம்ப ஆய்வுகளனைத்தும் நல்ல ப டி யாக த் தொடருமாயின், இலங்கை, பெல்ஜியம் ஆகிய நாடு களின் அரசாங்கங்களினது ஆசி யுடன் அடுத்த வருட ஆரம்பத் தில் ஒரு பரீட்சார்த்த சிறுவர் அரங்கினை ஆரம்பிக்கலாமென நம்புகிருர்,
தனி மனிதனிடத்தில் த ன து நாட்டின் பாரம்பரியம், கலா சாரம் ஆகியவற்றில் பற்றை ஏற் படுத்துவதற்குகந்த சிறந்த பரு வம் இளமைப் பருவமேயாகும். காலங்கடக்குமுன் , செயற்கரிய இச்செயலை நாம் செய்யத்தவறின் இச்செழுமை மிக்க பாரம்பரியம் தேய்ந்து தேய்ந்து முற்ருகஅழிந்து போக அனுமதித்த தவறுக்காக வருங்காலச் சந்ததியினர் இன் றைய சந்ததியைக் கண்டிப்பர்g
பிள்ளைகளோடு சேர்ந்து அசை வுகள், வெளிப்பாடுகள், சைகை கள், பேச்சு, நடிப்பு வெளிப்பாடு இசை, ஓசை ஆகியவற்றைத்
13
தோற்றுவித்தலால் ஏற் படும் மகிழ்ச்சி, ஆகியவற்றின் மூலம், அவர்கள் தம்மை வெளிப்படுத்த உதவுவதே அவரது நோக்கமா கும், பிள்ளைகளை, மூக்கியமாக வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பிள்ளைகளை அழைத்து அவர்கள் தமது உள் ளார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்ய உதவக்கூடிய ஒரு பயிற் சிப் பட்டறையை அமைப்பதே
அவரதுபோதனை முறை  ைம
க ளு க் கு இன்றியமையாததாக அமைகிறது. இந்த ஆரம்ப ஆய் வுகளிலிருந்து அனு கூ ல மா ன பெறுபேறுகள் பெறப்படுமாயின் இங்கு இல்லாத, ஆனல் வேறு பலநாடுகளில் பிரபல்யம் பெற் றுள்ள புதிய சிறுவர் அரங்கத்தை மேலும் விருத்திசெய்ய உதவும் அடித்தளமாக அமையும் எனக் கூறுகிருர்,
இத்துறையில் ஏற்கனவே ஆர் வம் பிறந்திருப்பதாகவும் அவர் கூறினர். "ஆனல் இது பரந்த அளவில் செய்யப்படவேண்டு மென நான் கருதுகிறேன். கற் றல் முறைமைக்கு இது உதவியுள்
ளது என்பது அனுபவபூர்வமாகக்
கண்டறியப்பட்டுள்ளதால், இத னைப் பாடசாகைளின் பாடவிதா னத்திலும் சேர்க்கவேண்டும்."
சிறுவர் அரங்கினை அலட்சியப் படுத்தும் மனப்போக்கினை அவர் கண்டித்தார். தமது கலைத்துறை சார்ந்த பொழுதுபோக்கிற்காக வெளிநாடுகளை நாடி நிற்பவர் களே வழமையாகச் சிறுவர் அரங் கினை அலட்சியம் செய்பவராக இருப்பர்.

Page 9
4.
'பிள்ளைகளின்  ைச  ைக க ள், பாவனைகள், பாவங்கள், வெளிப் பாடுகள் மேலெழுந்த வாரியான சேட்டைகளாக இருக்குமாயின் நாம் தொல்லையை விலைகொடுத்து வாங்குபவராவோம்' எ ன் று றடி கூறுகிருர், "பின்னர் கட் டிளமைப் பருவத்தில் மூர்க்கத் த ன மு ம் அமைதியின்மையும் நிலவ, இது மறைமுகமாக ஒரு காரணமாக அமைந்துவிடும். பல மேலைத்தேய நாடுகளில் இழைக் கப்படும் மிகப்பெரிய தவருக இது உள்ளது. இத்தவறுகள் காலகதி யில் தேசியப் பிரச்சினைகளாக மாறியுள்ளன."
வெளிப்பாடு
* பிள்ளைகள் தாம் காண்பவற் றையும் கே ட் பவ ற் றை யு ம் பேசுபவற்றையும், த ம க் கே இ ய ல் பா ன மு  ைற யி ல் வெளிப்படுத்துகின்றனர் ரை ஒன் பதை நாம் மறந்துவிடுகிருேம். நாம் அவற்றுக்குச் செவிசாய்க்க வேண்டியது மிகவும் அவசியமா கின்றது. ஏனெனில் இவற்றின் மூலந்தான் பிள்ளைகள் நுண்ணிய முறையில் வெளியுலகு பற்றியும்
தங்கள் நாட்டங்கள் பற்றியும் வெளிப்படுத்கிருர்கள்."
சிறுவர்களது ஆற்றல்களைப்
பயன்படுத்த ஆரம்பித்தால், அது சிறுவர்களுக்காக நாடக ங் கள் எழுதும் நாடகாசிரியர்களுக்குப் பலதுறைகளில் உதவும். இத் த  ைக ய எழுத்தாளர்களுக்கு மேற்கு, கிழக்கு ஜேர்மனிகளி லும் அமெரிக்காவிலும் சிறந்த கணிப்பு வழங்கப்படுகிறது என்று அவர் கூறிஞர்.
இது இலங்கைக்கு றடியின் ஒன் பதாவது வருகையாகும் சிறுவர் அரங்கத் திட்டத்தை ஆரம்பிக் கத் தேவைப்படும் உதவிபற்றித் தனது அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்காக அவர் அம்ஸ்ரடாமுக்குப் புறப் LIL-L-ГТП.
இப்பரீட்சார்த்த அ ரங் கம் ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும் பின்னர் சிங்களத்திலும் தமிழி லும் நடாத்தப்படும் என்றும், இவை அனைத்தும் ஆரம்ப ஆய் வின் வெற்றியிலேயே தங்கியுள் ளன என்றும் இந்த டச்சு நிபுணர் கூறி ஞ ர். 'அதிஷ்டவசமாக இப்பயிற்சித் திட்டத்தில் மொழி ஒரு தடையாக இல்லை. ஏனெனில் வளர்ந்தோரைவிடச் சுலபமாகப் பிள்ளைகளால் இத்தடைகளைக் கடக்க முடியும். இது பிள் ளை களைப் பொறுத்தவரை உலக ளாவிய உண்மையாக உள்ளது. இவ்வுண்மை என்ன ஆச்சரியத்
தில் ஆழ்த்தியுள்ளது. ' என்றர் அவர்.
இலங்கையை விட்டு வெளி
யேறுவதற்கு முன்னர், இவர் க லா சார அமைச்சர் திரு. ஈ. எல். பி. ஹ"றுல்ல அவர்களை யும் கலாசார அமைச்சு, கலா சாரத் திணைக்கள அதிகாரிகளை யும் சந்தித்து, இத்திட்டம்பற்றிக் கலந்துரையாடியுள்ளார்.
30-8,81 'சண்டே ஒப்சேவர்" பத்திரிகையில், பீட்டர் பால சூரிய என்பவரால் எழுதப்பட்ட இப்பேட்டிக் கட்டுரை பிரசுரிக்கப் பட்டது;
 

உலக நாடக, அரங்க வரலாறு
- ம. சண்முகலிங்கம் -
கிரேக்கத்தில் நாடகம்
உலக நாடக வரலாற்றில் கிரேக்கத்தின் பங்கு முக்கியமா னது. ஏறக்குறைய 2500 ஆண் டுகளுக்கு முன்னரே அங்கு ஒழுங் கான நாடகங்கள் நடிக்கப்பெற் றன. கி. மு. ஐந்தாம் நூற்ருண் டிலேயே ஆண்டுதோறும் நாடகப் போட்டிகள் வைக்கப்பட்டுப் பரி சில்கள் வழங்கும் நிலை இருந்த தெனில், அங்கு நாடகம் மிகப் புராதன கா ல ந் தொட் டே இருந்து வ ள ர் ந் துவ ந் தி ருக்க வேண்டும் என்று கருதுவதில் தவ றில்லை. ஒழுங்கான முறையில் நாடகங்களை வழங்கிய முதல்நாடு என்ற வகையில், கிரேக்கம் உலக நாடக வரலாற்றில் முதன்மை பெறு கிற து. ஐரோப்பாவின் நாடகப் பாரம்பரியத்துக்கு வித் தாக அமைந்தது கிரேக்கமே.
இரு ப் பி னு ம் கிரேக்கத்தின் ஆரம்பகால நாடகங்கள் எவ் வாறு தோன்றி வளர்ந்தன என்று எவரும் கூறி வைக் க வி ல் லை. கிரேக்கத்தின் அதென்ஸ் நகரத் தின் உன்னத காலமெனக் கருதப் பட்ட கி. மு. 5ம் நூற்ருண்டில் வாழ்ந்த எந்தவொரு எழுத்தாள னும் அக்காலத்துக்கு முற்பட்ட நாடக வரலாற்றைக் கூறிவைக்க வில்லை. முந்திய வரலாறு தெளி வாகத் தெரியாததால், அதீனிய அரங்கம் திடீரெனத் தோன்றி
எம் கண்முன் பளிச்சிடுவதுபோல்
உள்ளது.
கிரேக்க நாடகத்தின் உன்னத
கால வரலாற்றை எமக்கு ஒரள
வேனும் அறிமுகப்படுத்துவதற்கு உதவுவனவாகப் பின் வரு வ ன
உள்ளன: (1) நாற்பத்திநாலு நாடகப் பிரதிகள். (நூற்றுக் கணக்கானவற்றுள் எஞ்சியவை
இவையே. உ-ம் ஏ. ஈ. ஸ்கலஸ் 67 6ör Lu 6 u rit எ மு தி ய 90 நாடகங்களில் 7 மட்டுமே உள் ளது. (2) C. பூச்சாடிகளில் தீட்
டப்பட்டுள்ள நாடகம் சார்ந்த காட்சிகள். (3) ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பின்னர்
அரிஸ்டோட்டல் நாடகம்பற்றி எழுதிய கருத்துக்கள். (4) தற் கால புதைபொருள் ஆய்வாளர் களின் நுட்பமான யூகங்கள். (5) சீசர் காலத்து ருேம் கட்டடவிய லாளரான விட்றுரவியஸ் (Vitru. vius) என்பாரின் எழுத்துக்கள். (6) இரண்டு நூற்ருண்டுகளின் பின் ஒரு கிரேக்க அகராதியை ஆக்கிய பொலக்ஸ் (Pollux) என் பார். இறுதியாகக் கூறப்பட்ட இருவரது சான்றுகளையும் நாம் உறுதியானவையாகக் கொள்ள முடியாது. காரணம், அவர்கள் தமதுகாலத்து அரங்கினுல் பாதிக் கப்பட்டிருக்கவும் கூடும். அரிஸ் டோட்டல் கூட அ வ ல ச் சு  ைவ நாடகங்களின் கலைத்துவத்துள் ஆழ்ந்துவிட்டாரேயன்றி. அத் தகைய உயரிய நாடகங்களைப் பிர

Page 10
6
சவித்த அரங்கத்தினைப்பற்றி எது வும் கூறிவைக்கவில்லை.
அன்றைய அரங்குக்கும் இன் றையஅரங்குக்குமிடையில் அரங்க அமைப்பு, நடிப்பு, நாடக வடிவம் ஆகியவற்றில் மிகுந்த வேறு ப்ாடு இருந்தபோதிலும், கிரேக்க அரங்கிலிருந்து இன்றைய அரங்குவரை ஒரு தெ விரி வா ன மலர்ச்சிப் (வளர்ச்சி) பாதையை இனங்காணக்கூடியதாக உள்ளது. கதைப்பொருளை உருவமைத்துக் காட்டுவதில் நாம் சோபோகிலி சின் "ஈடிப்பஸ்றெக்ஸ்" சுக்கும் இப்சனின் "ஏ டொல்ஸ் ஹவுஸ்" சுக்கும் இடையில் இயைபு இருக் கக் காணலாம்.
தயோனீசியஸ்
அனைத்து நாடுகளிலும்போல் கிரேக்கத்திலும் நாடகம், சமயக் கரணங்களிலிருந்தேதோன்றியது. கிரேக்கத்தின் நாடகக் கடவுளாக தயோனீசியஸ் கருதப்பட்டார். தயோனீசியஸ் கருவளத்தின் கட வுளாகவும். "வைன்" கடவுளாக வும், கேளிக்கைகளின் கடவுளாக வும் கருதப்பட்டார். நிலத்தைப் பெண்ணுகக் கருதிக் கருவளச் சடங்குகள் நிகழ்த்துவது பண் டைச் சமூகங்களின் மரபாக இருந் தது. தயோனீசியஸ் ஆரம்பத் தில் பெண்களின் தெ ய் வமாக இருந்தவர். பின்னர் சமுதாயத் தில் ஆண்களின் ஆதிக்கம் ஓங்க இவர் ஆண்களின் தெய்வமாக மாற்றப்பட்டார். நிலத்  ைத உழுதல், அறுவடை செய் த ல், ஆகியன யாவும் கருவளச் சடங்கு களாகக் கருதப்பட்டு, நிகழ்த்தப்
பட்டன. சடங்கு சம்பிரதாயங் களுடனும் ஆடல் பாடல்களுட னும் கூடிய "புனிதக் கலவியாகக்" கருதப்பட்டு விளைவை வேண்டி நிலம் உழப்பட்டது. இ  ைவ அனைத்துக்கும் கடவுளாக இருந்த தயோனீசியஸ், அடிநிலை மக்க ளின் கடவுளாக விளங்கினர்.
தயோனீசியசின் வணக்கத்தில் தியோசொஸ்" (Thiosos) என்ற குழுவே முதன்மை பெறும். ஆட் டத்தை நிகழ்த்தியவர் இக்குழு வினரே. தயோனீசியஸ் வணக் கத்துக்குரிய விழாவில், மக்கள் கூட்டமாகச் சென்று வேருே ரிடத் தில் சில சடங்குகளைச் செய்து மீண்டும் வருவர். இவ்விழாவின் அமைப்பைப் பொறுத்தவரையில் செய்தல்" குறிப்பிட்ட ஆட் டத்தை ஆடுதல்", "திரும்பி வரு தல் ஆகியன முக்கியத் துவம் பெறுகின்றன. ஒருகுலக்குழுச் சமூகம், பருவமடைந்த ஆண் பிள்ளைகளைக் குலச்சம்பிரதாயத் துக்கமைய தமது குழுவுள் சேர்த் துக்கொளஞம்போது நிகழ்த்தும் சடங்கு முறைகளுக்கும், இங்கு காணும் மேற்கூறிய தயோனிஸ் வ ண க்க முறைக்குமிடையில் நெருங்கியதொடர்புண்டு. 'தயோ னிசிய தியோசொஸ்" என்ற குழு மாயவித்தைகள் நிரம்பிய குலக் குழு நிலையிலிருந்து வளர்ச்சி யடைந்த ஒரு மக்கள் கூட்டத் தினரைக்கொண்டதாகும். அக் குழு வளர்ச்சியடைந்த போதி லும் தனது குலக்குழு அமைப்புக்க ளையும்செயல்களையும் சிற்சிலமாற் றங்களுடன் தொடர்ந்து தன்ன கத்தே வைத்திருந்தது. ஒரு ஆண்

குழுவின் தலைமையில் பெண்களைக் கொண்டதாக இக் குழு இருந்தது குலக்குழுவுள் ஒருவரைச் சேர்த் துக்கொன்ஞம் நிகழ்ச்சியிலிருந்து பெறப்பட்ட அதன் பிரதான கர ணம் மூன்று அம்சங்களைக்கொண் டதாக இருந்தது. (1) திறந்த வெளியை நோக்கி வெறியாட் டத்தோடு வெளியேறுதல். (2) பலிகொடுக்கப்படுபவர் துண்டு துண்டாகப் பிய்க்கப்பட்டுப் பச் சையாக உண்ணப்படுதல். (3) வெற்றிப் பெருமிதத்தோடு மீழு தல், தயோனீசிய உணர்ச்சிக ளின் ஐதிகமாக இக்கரணம் நிலை நிறுத்தப்பட்டது. மண் ணி ன் கருவளத்தை விருத்தி செய்தல் இதன் நோக்கமாக இருந்ததால் இக்கரணம் உழுவோர் மத்தியி லேயே நின்று நிலைபெற்றது. அத் தோடு, பிற்காலத்தில் நிலப்பிர புத்துவத்துக்கெதிரான பிரபல இயக்கமாக இது இனங்கானப் பட்டது. கிரேக்கத்தின் சில பகுதிகளில் ஆண், பெண் சமூக உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட் டபோது இக்கரணம் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த து. அதன்பின் மேலும் மாற்றங்களுக் குள்ளாகியது.
இக்கரணம் கிரேக்கத்தின் பல் வேறு பகுதிகளிலும் பல் வேறு வகையில் வளர்ச்சியடைந்தது. உ-ம். பெலொப்பனிஸ் என்ற பகு தி யி ல், வெறியாட்டுடன் கூடிய ஊர்வலம் பக்திப்பாடலாக வளர்ச்சியடைந்தது. அட்டிக்கா என்ற பகுதியில் பலியிடுதல், துன்பங்களை ஏற்கும் நிகழ்ச்சியாக (Passion Play) a 6TriégGufi spg).
7
விரிவஞ்சி முடிவைக் கூறுவதா யின், மூன்று வகையான நாட கங்களான "திறஜெடி' (அவலச் சுவை) 'கொமெடி' (மகிழ்நெறி) *சட்டயர், (அங்கதம்) ஆகியன த யோ னி சி ய இறைவணக்கத் துடன் தொடர்புடையனவாக உள்ளன என்பதை உறுதியாக ஏற்பதற்கான சான்றுகள் உள் ளன. பிற்காலத்தில் (கி. மு. 5ம் நூற்ருண்டில்) கிரேக்கத்தில் உல கப் பிரசித்திபெற்ற நாடகங்கள் அனைத்தும் தயோனீசிய விழாவில் நடந்த போட்டிகளிலேயே அரங் கேற்றப்பட்டன,
*திறஜெடி” (அவலச்சுவை நாட கங்கள்)
இன்று நாம் அவல ச் சுவை மிகுந்த நாடகங்களே "திறஜெடி" என்கிருேம். ஒரு உயர் பண்பு மிக்க பாத்திரத்தின் நற்பண்பு கள் நலிவடைவதே "திறஜெடி" என பிருட்லி என்பார் கூறிய வரைவிலக்கணத்தை இ ன் று Sy 3 possGt5 Lib GT sib Luff. (The waste of good) 'திறஜெடி'க்கு மிகச் சிறந்த உதாரணமாக கிரேக்க நாடகாசிரியர் சோபோகிலிசின் ஈடிப்பஸ்ரெக்ஸ்" என்ற நாட கத்தைக் கொள்கிருேம். உலகி லேயே மிகச்சிறந்த திறஜிக்' பாத்திரமாக ஈடிப்பஸ் என்ற பாத்திரம் கருதப்படுகிறது. "அவ லச்சுவை” என்ற பொருள்தரும் வகையில் 'திறஜெடி" என்ற பதம் வளர்ச்சியுற்ற போதிலும், அப் பதத்தின் ஆரம்பம் கரண அடித் தளத்தில் ஊற்றெடுத்துப் பல வழி பாய்ந்துவந்துள்ளது.

Page 11
8
திேறஜெடி" என்ற சொல் "திற G3 ass mtr lıqı ulu fir” (Tragodia) 6:Tair p சொல்லிலிருந்தே தோன்றியது. "திறகோடியா' இரு சொற்களின் சேர்க்கையால் வந்தது. அவை யாவன, "திருகொஸ்" (Tragos) ஒட் (Ode) 'திருகொஸ் என்ப தன் பொருள் "ஆடு'. 'ஒட்" என் முல் பாடல்; எனவே "திறகோ டியா" என்ருல் கிரேக்க மொழி udi) 'gy, Gilburt Lai (goat song) எனப் பொருள்படும்.
ஆடு தயோனீசியசின் சின்ன மாகக் கருதப்பட்டது, மேலும் கிரேக்கத்தில் தயோனீசிய விழா வில் நடைபெற்ற போட்டி நாட கங்களுக்கு ஆடு பரிசாக வழங்கப் பட்டது என்று நம்பப்படுகிறது. "திறகோடியா' என்ற ஆட் டுப்பாடல் தயோனீசியஸ் வழி பாட்டுடன் தொடர்புடையதாய் இருந்த "டித்திராம்" (Dithyramb) எனப்படும் கூட்டுப் பக்திப்பாடலி லிருந்து தோன்றியதாகக் கூறப் படுகிறது. இந்த "டித்திராம்" பின்னர் ஒரு இலக்கிய வடிவமாக அதாவது கவிதை வடிவமாக வளர்ந்தது. எனவே 'டித்திராம்" இலக்கிய நிலையிலும் நாடக நிலை யிலும் நிலவியதை அவதானிக்க
ஆர ம் பத் தி ல் "டித்திராம்" தயோனீசியசைப்பற்றிப் பாடி யது சேயசின் (Zeus) பிள்ளையாக மானிடனகப் பிறந்த தயோனீசி யஸ், மனிதனுக்குத் திராட்சை யையும் மற்றும் பழங்களையும் உணவு வகைகளையும் பயிரிட்டு வ ள ர் க் க ப் பயிற்றியதாகவும், பின்னர் அவர் அழிக்கப்பட்டதாக
வும், அதையடுத்து அவர் கடவு ளாக அவதரித்ததாகவும் இப் பாடல் கூறியது. இப்பாடலி லிருந்து "திறஜெடி ஆரம்பமா கக்கூடியதாக இருந்த காலகட் டத்தில், "டித்திராமில் தயோ னிசிய புராணம் பாடுவதற்குப் பதிலாகத், தத்தம் இனத்தின்வீரர் கள்பற்றிப் பாராட்டப்பட்டு வந் தது5 அன்றிலிருந்து கி ரே க் க "திறஜெடி தயோனிசியசின் புகழ் பாடுவதைவிட்ட போ தி லும், அவரது வழிபாட்டின் பிரதான காட்சியம்சமாக நா ட க ங் கள் இடம்பெறவாரம்பித்தன.
மேற்கூறிய அடிப்படையில் தான் திறஜெடி ஆரம் பித்த தென்று கூறப்பட்ட போதிலும் வேறு காரணங்களைக் கூறுவாரு முளர். ஒரு வருடத்தின் பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங் களைக் குறிப்பிடுவனவாக திற ஜெடி "கொமெடி என்பன தோன்றியதாகக் கூறு வாரு ம்; இறந்தோரை வழிபடும் சுதேச முறையிலிருந்து "தி ற ஜெ டி? ஆரம்பித்தது என்பாரும் உளர். இவை அனைத்துள்ளும், கரண அடிப்படையாகவே இவ்வடிவங் கள் தோன்றின என்றும் பேராசி ரியர் தொம்சனின் கருத்தே பெரி தும் ஏற்கப்படுகிறது. முதல் நடிகன்
திறஜெடியின் வளர்ச்சியில் தெஸ்பிஸ் (Thespis) என்பாரது பணி மிக முக்கியமானதாகக் கரு தப்படுகிறது. கிரே க் க திற ஜெடி'யை ஆர ம் பித் த வர். அவரே. கிரேக்க "திறஜெடி" யின் முதலாவது பெரிய வளர்ச்சி

இவரிடமிருந்தே ஆரம்பித்தது. "ஒரு குறித்த குறிச்சியில் சமயக் கரணமாக இருந்த 'திறஜெடி யை ஒருவர் இலக்கிய வடிவமாக உயர்த்தியதன்காரணமாகஅவரே (தெஸ்பிஸ்) அவலச்சுவைக் கலை வடிவத்தை அறிமுகஞ்செய்தவ ராவார்' என்று வி ல் லி ய ம் றிஜ்வே கூறுகிருர், உலகின் முத லாவது நாடக ஆசிரியராகவும் நடிகராகவும் தெஸ்பிஸ் கருதப் படுகிருர், கோரசிலிருந்து", அதா வது ஆடுனர் குழுவிலிருந்து முத லாவது நடிகனத் தோற்றுவித்த வர் இவரே. தெஸ்பிஸ் கி. மு. 534ல் சிட்டி தயோனீசிய நாடக விழாப் போட்டிகளில் முதன் முறையாக வழங்கப்பட்ட பரிசி னைத் தமது திறஜெடி" நாடகத் துக்காகப் பெற்றர். இவர் 'திற ஜெடி’யின் அமைப்பிற்கு வடிவம் கொடுப்பதில் பிரதான
பங்கு  ெக ர ண் ட ஈ ர்.
ஆரம்பத்தில் கூட்டுப்பாடலாக இருந்த பகுதி
யும் பேச்சையும் இணைத்தார். முதலாவது நடிகன்மூலம் நாட கத்துக்கே உரிய முக்கிய மாற் றத்தை ஏற்படுத்தினர். "கோர சிலிருந்து நடிகனைப் பிரித்தெ
டுத்துநாடக நிகழ் வுகளை த் தோற்றுவித்தார். கிரேக்கத்தில் *கோரஸ்" என்பது ஆட்டத்
தையே குறிக்கும்.
முதலாவது நடிகன் ஆரம்பத் தில் தனது முகத்தில் வெள்ளை பூசித் தன்னை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக்கொண்டான். பின் னர் முகத்தில் கோடுகளையும் இட்டுக்கொண்டான். அ  ைத
19
யடுத்துப் பொய்முகம் பயன்படுத் தும் நிலை தோன்றியது. பலநடி கரைப் பயன்படுத்தாது, ஒருவரே பல பாத்திரங்களை ஏற்று நடிப்ப தற்கு உதவவே பொய்முகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
தெஸ்பிஸ் வண்டியில் சென்று பல இடங்களில் நாடகம் நடத்தி யதாகவும் கூறப்படுகிறது. தெஸ் பிசின் வண்டி என்பது நடிகரை யும் நாடக, அரங்க வளர்ச்சியை யும் குறிக்கும் நாற்ருெடராக இன்று பயன்படுத்தப்படும் சிறப் பினைப் பெற்றுள்ளது.
கிரேக்கத்தின் தலைசிறந்த "திற ஜெடி நாடகாசிரியர்களாக ஈஸ் கலஸ் (Aeschylus) சோபோகிலிஸ் (Sophocles) gyffL Guq. Giv (Euripides)
ஆகிய மூவரும் கருதப்படுகின் றனர். *கொமெடி
மகிழ்நெறி நாடிகம்
கி ரே க் கத் தி ன் அட்டிகா (Attica) நகரில் நிகழ்த்தப்பட்ட *கோமஸ்" (Comus) என்ற ஒரு வகைக் கேளிக்கைப் Lurr GÓ) லிருந்தே கொமெடி தோன் றியது இக்கோமஸ் நிகழ்ச்சியின் போது கேளிக்கைப் பாடல்களைப் பாடிய கூட்டத்தினர், தயோனிசி யசின் பெயரிலேயே பாடினர். அப்பாடல்களின் செம்மைபற்றிய ஐயப்பாடு உள்ளது. காரணம் இதை நிகழ்த்தியவர் கேளிக்கை யாளர். எனவே கேளிக்கை என் றதும் உடம் பைப் பற்றி ச் சிந்திக்கத் தொடங்கிவிடுவது மெய்தான்; உடைகள், அணி

Page 12
20
கலன்கள் மூலம் உடலின் சில உறுப்புக்களைப் பூதாகாரப்படுத் துவது "கோமுஸ்" நிகழ்ச்சியின் ஒரு பண்பாக இருந்தது. கேளிக் கையாளர் தமது முகங்களில் வைனைத் தடவிக்கொள்வர் அல் லது விசித்திரமான பொய்முகங் களை அணிவர். பறவை, குதிரை தவளை ஆகியவற்றின் பொய் மு க ங் க ளே அணியப்பட்டன: "கோமுசிலிருந்து இலக்கிய மகிழ் நெறி வளர்ச்சியடைந்தபோதி லும், பொய்மூகம் அணி யும் பண்பு பேணப்பட்டஆle
தயோனீசியசின் சிலை எலுசிஸ் என்ற இடத்திலுள்ள தேவால யத்திலிருந்து அதீனிய அக்ருே போலிசுக்கு எடுத்துச் செல்லப் படும் ஊர் வலத் தி ல் தான் *கோமுஸ்’ நிகழ்த்தப்பட்டது. இந்த ஊர்வலத்தின்போது இக் கருவளக்கடவுளின் உற்சாகம் கேளிக்கையாளருள் பு குந் து விடும். அவர்கள் தெய்வீகத் தன்மைவாய்ந்த போதை நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள். இக்கிறக் கத்தின் பயனுக, ஊர்வலத்தின் இறுதியில் கருவளத்தின் கருவி கள், சின்னங்கள், குறிகள் யாவும் தாராளமாகக் களிநடம் புரியும்.
மேகரா (Megara) என்ற கிரேக்க நகரிலும் மக்கள் மகிழ்வுக்காக அகடவிகடம் நிறைந்த கேலிக் கூத்து நிகழ்ச்சிகள் இடம்பெற் றன. கோர்டக்ஸ் (Kordax) என் னும் பாலியல் மலிந்த, உற்சா கம் மிகுந்த நடனங்களும் சேர்ந்து பின்னர் மகிழ்நெறி நாடகமாக வளர்வதற்கு வழிவகுத்தன.
இவை அனைத்தினதும் பெறு பேருக 'ஒல்ட் கொமெடி" (Old Comedy) என அழைக்கப்படும் நாடக வகை கிரேக்கத்தில் உரு வாகியது அவை விசித்திரம், முரட்டுத்தனம், கொச்சைத் தனம், காமாந்தகக் கேளிக்கை, கூர்மையான குத்தல் பேச்சு, செழுமைவாய்ந்த கவிதை ஆகிய அனைத்தும் நிரம்பியவையாக இருந்தன. பாலியற் க ட லை க் கடைந்து பண்பற்ற பரிகசிப்பைத் திரண்டெளச் செய்வதே ஒல்ட் கொமெடியின் நோக்காக இருந் தது. இவற்றின் மத்தியிலும் இலக்கிய அமுதம் முற்றிலும்
இல்லாமல் போய்விடவில்லை.
மகிழ்நெறி நாடகங்கள் 'ஆண் (gnózů Lurt L. 6iv 5 6ör ’ ” (Phallic Songs) என்பவற்றிலிருந்து தோன்றின என அரிஸ்டோட்டல் கூறியுள் ளார். அவரும் முன்னைய கருத் தையே உறுதிப்படுத்துகிறர்.
சட்டயர்: (Satyr)
நாடகத்தில் "சட்டயர்' பற் றிச் சொல்லப்படவில்லை. அகட விகட நாடகங்களை சட்டயர் (Satre) எனப்படும். ஒரு திற ஜெடி? "நாடகத்தை அடுத்து ஒரு சட்டயர்' நாடகம் நிகழ்த்தப் படவேண்டும் என்ற விதி பின்னர் வந்த தயோனீசிய நாடக விழா வில் விதிக்கப்பட்டது. இந்த "சட்டயர்' நாடகங்கள் மிருகங் களைப் பாத்திரமாகக் கொண்ட தாக இருக்கும். இவை பற்றிய அறிவு எமக்கு ஈஸ்கலஸ் காலத் தில்தான் கிடைக்கிறது.

*சட்டயர்' என்பன காடுகள், மலைகள் ஆகியவற்றிலுள்ள வன விலங்குகளின் ஆவிகள் என்றும், அவை தமது நடத்தை, விருப்பு ஆகியவற்றில் மிருகங்களின் பண் பினையே கொண்டிருக்கும் என் றும் கருதப்பட்டது. அதாவது ஒரு குதிரையின் அல்லது ஆட் டின் பண்பினை அவை பெற்றிருக் கும் எனக் கருதப்பட்டது. ஆடு, குதிரை என்பன தமது கருவளச்
சேட்டைக்கு இன்றும் பெயர் பெற்றவைதானே. ஈடிப்பஸ் அறியாமல் செ ய் த  ைத க்
"கிடாய்க் குட்டிகள்' ஆடுவது அறிவின்மையால் செய்வதை நாம் இன்றும் காண்கிருேம்; எனவே
2
அனைத்து நாடகப் பிரிவுகளும் ஒரே ஊற்றிலிருந்து எழுந்து கிளைவிட்டன என்று கருத இட முண்டு.
மேலும் சட்டயர் (Satyr) என் பது, கிரேக்கக் கேளிக்கை கடவு ளான "பச்சஸ் (Bachus) என் பாரது வழிவந்த வனத்தில்வாழ் உயிரினங்களிலொன்று என்றும், அவை பாதி மனிதப்பண்பும்,
பாதி மிருகப் பண்பும் கொண்
டவை என்றும் கூறப்படுகிறது. காமாந்தக அல்லது மிருகத்தன முள்ள மனிதனைக் குறிப்பதாக வும் கிரேக்கத்தில் கருதப்பட்டது5
செய்திகள் (11ம் பக்கத் தொடர்) தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யில் இடம்பெற்றது. பிற்பகல் இரண்டு மணிக்கு மாணவர்கள் காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந் தது. பெருந்தொகை மாணவர் கள் பார்வையாளர்களாக வந்த தனல் மூன்று அரங்குகளில் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. இரவு பொதுமக்களுக்கானகாட்சி இடம் பெற்றது. மாவட்டப் போட்டி யில் முதலிடம் பெற்ற இசை, நடன, நாடக நிகழ் ச் சி க ள் மேடையேற்றப்பட்டன. எதிர்க் கட்சித்தலைவர் திரு. அ. அமிர்த லிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஏணிப்படிகள்
விஜயதசமி தி ன த் தன் று
(தொடரும்)
தெல்லிப்பழை மகாஜனுக் கல் லூரியில் இல்லங்களுக்கிடையி
லான நாடகப்போட்டி நடை பெற்றது.
அரைஇறுதிப்போட்டியில் பங்கு பற்றி அதற்குள்ளிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட மூன்று நாடகங் கள் அன்றைய இறுதிப்போட்டி யில் பங்குபற்றின.
* ஊருக்கு விளங்கப்படாது', *தம்பி சிங்கப்பூரிலை”, “ஏணிப் படிகள் ஆகிய இம்மூன்று நாட
கங்களுக்கிடையே "ஏணிப் படிகள்'முதலாம் இடத்தைப் பெற்றது.
ஏனைய இரு நாடகங்களும் உரையாடல்களைப் பேசுவதையே முக்கியமானதாகக் க ரு தி ன. *ஏணிப்படிகள்' அரங்க உணர்
வோடு தயாரிக்க முற்பட்டிருந் ததை அவதானிக்க முடிந்தது.

Page 13
22
இப்போட்டியின் நடுவர்குழுத் தலைவராக திரு. ஏ. ரி. பொன் னுத்துரை கடமையாற்றினர். ஞானசெளந்தரி
வசாவிளான் ஒட்டகப்புலம் அமலோற்பவ மக்கள் மன்ற மாதர் பிரிவினரால் 23-8-81 ஞாயிறு இரவு "ஞானசெளந்தரி? நாட்டுக்கூத்து மே  ைடயி டப் பட்டது:
முற்றிலும் இளம் பெண்களே பாத்திரங்களைத் தாங்கி நடித்த இந்த நாட்டுக்கூத்தை மு து
பெரும் நடிகரும் இளம் அண் ணுவியாருமாகிய எம். எஸ். அந்தோனிப்பிள்ளை நெறி ப் படுத்தியுள்ளார்.
தருமராசாவாக செ ல் வி
ச. அல்போன்ஸ் உஷாவும்,பிலேந் திரணுக செல்வி அ. சாந்திகாவும், முன் ஞானசெளந்தரியாக செல்வி சு. எமறென்சியாவும், பின் ஞான செளந்தரியாக செல்வி அ. கலா வும், லேனுளாக செல்வி அ. பிரே மாவும், சிமியோனுக செல்வி பொ. இந்திராவதியும் பாத்திரங் களையேற்று மிகத்திறமையாக நடித்தார்கள். ஏனைய பாத்திரங் களை ஏற்று நடித்த செல்விகள் கு. சிந்தியா, பெ. மொறின் விஜயா, யோ. இராசமலர், எ. ருேஸ்மலர் ஆகியோரும் தாம் பங்கெடுத்த பாத்திரங்களை மிக நேர்த்தியாக நடித்து நாடகத் திற்கு மெருகூட்டினர். சா. பீ: சந்திராஸ் என்னும் சிறுவனும் தனது நடிப்பால் சபையோரின் பாராட்டைப் பெற்ருர்,
மாருதம்
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் 23.8-81 ஞாயிறு மாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் "மாருதம்‘ என் னும் பெயரில் பல்சுவை நிகழ்ச்சி யொன்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குறிப் பி ட த் தக்க நிகழ்ச்சிகளாக அன்ரன் செக்கோவின் "கரடி' நா. சுந்தர
லிங்கத்தின் "விழிப்பு நாடகத் தின் ஒரு பகுதியான "லங்குறு சிம்பிலி சாலா" "விஜயராசனூர்
சரிதம்' என்ற நாட்டுக்கூத்து (எழுதியவர்கள் டாக்டர் மதி சந்திரகுமார், எஸ். ஏ. ஞானேந் திரன்) ஆகியவை இடம்பெற்றன
"கரடி" நாடகத்தை ச. பிரேமச்
சந்திரனும் மாலதி சிதம்பர நாதனும் நெறிப்படுத்தியிருந் தார்கள். "ல ங் குறு சி ம் பி லி
சாலா" நாடகத்தை கி. சந்திர சேகர் நெறிப்படுத்தியிருந்தார். விஜயராசஞர் சரிதம் என்னும் நாட்டுக்கூத்தைத் த யாரித் து நெறிப்படுத்தியுள்ளார் சரவண முத்து ஆதர் ஞானேந்திரன்.
இம்மூன்று நாடகங்களும் மிக நேர்த்தியாகவும் அரங்க நுணுக் கங்கள் பிசக க் கூடாதென்ற ஆழ்ந்த அக்கறையுணர்வோடும் தயாரிக்கப்பட்டுமேடையிடப்பட் டிருந்தன.
ஈழத்துத் தமிழ் நவீன நாடக மொன்றையும் பிற மொழி நா ட கத் தி ன் மொழிபெயர்ப் பொன்றையும் - எமது பாரம்பரி யக் கூத்து வடிவமொன்றையும் கண்டானந்தித்தோம் எ ன் ற

நிறைவோடு பார்வையாளர்கள்
அரங்கைவிட்டு வெளியேறுவதை
அவதானிக்கக் கூடியதாகவிருந்
தீது)
திருவிழா
கடந்த 7-10-81 விஜயதசமி
தினத்தன்று அளவெட்டி வடக்கு
23
ஞானேதயா வித்தியாசாலையில் மாவை நித்தியானத்தனின் திரு விழா என்னும் நாடகம் மேடை யேற்றப்பட்டது. நவீன உத்தி களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தை க. ஆத வ ன் நெறிப்படுத்தியிருந்தார்,
சொன்னது என்னுச்சு?
அ ண்  ைம யி ல் ஓர் நாடக மேடையேற்றத்திற்காகச் சென்றசமயம், இன்னுமொரு நாடகக் குழுவில் எனது நண்பர் ஒருவர் வந்திருந்தார். எனது பக்கத்தில் நின்ற இன்னுெரு நண்பர் அந்த நடிக நண்பரிடம் "நீங்கள் நடிக்கவிருக்கும் நாடகத்தின் பெயரென்ன?' என்று கேட்டார். தென்னிந்திய மண்மணம் கமழும் நீண்ட பெயரொன்றைக்கூறி அதுவே தங்கள்நாடகத்தின்பெயர் என்ருர், நடிக நண்பர். நாடகம் தொடங்கும்போது அறிவிக்கப்பட்ட பெயரைக் கேட்டபோது நாம்மட்டு மல்ல அந்த நடிக நண்பருங்கூட "திருதிரு' வென்று
விழித்தார்.
(ஒருவர்)
மோதிரக்கையால் பட்ட குட்டால், குட்டு வெளிப்படுகிறதோ? அல்லது கைப்புண்ணைக் கண்ணுடி கொண்டு பார்க்கிருேமோ? அல்லது இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையென்ருல், அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சையாக இருக்குமோ? அக்கறையுள்ளவர்கள்
சிந்தியுங்கள்.

Page 14
-
- ο 76/σ7
அரங்கம் = நாடக சஞ்சிகை AR
క్రైళ్లపల్లిబెర్లపజెపల్లెపల్లెపటైన
மில்க்வைற் உற்பத் மேலுறைகளைச் சே
பெறுமதி பரிசில்களைப் ப்ெ
asis En. क्ला
மில்க்வைற் உற்பத்தி நீங்கள் கொடு நாட்டின் நற் உதவுகி
பார்த்து வ
鐵
螺上
ද්‍රි:$8.3838 දීසි:83%28. நாடக, அரங்கக் கல்லூரிக்கா
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில்
ܢܝܓܒܔ
 

ANKAM ఔపకపక్ష2222222222వస్థ
திப் பொருட்களின் கரித்துக் கொடுத்து வாய்ந்த பற்றுக்கொள்க.
நிப் பொருட்களுக்கு க்கும் ஆதரவு ' பணிகளுக்கே கிறது.
అ_
க எஸ். ஜே: குமார் அவர்களால்
அச்சிட்டு வெளியிடப்பெற்றது.
ாங்குங்கள் 醫