கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வியக்க வைக்கும் பிரபஞ்சம்

Page 1


Page 2


Page 3
நதியில்
கவிதைகள் நீலா பாலன் த.ஜெயசீலன் அலெக்ஸ் பரந்தாமன் மன்னார் அமுதன்
យម្បិ.5យថាលទ
வெலிப்பன்னை அத்தாஸ் செல்வராசா குர்சினி ஆ.முல்லைதிவ்யன்
கட்டுரைகள் ஏ.எல்.மனாரா ஆபூர்வன் எஸ்கிருஸ்ணமூர்த்தி சுப்ரபாரதிமணியன் இ.சு.முரளிதரன் ச.முருகானந்தன் கெகிறாவ ஸிலைவரா அந்தனிஜீவா មើយហៅថីយ១លី១uffi ៩វិចាយ៉ាំjöរាមក្រំ
அட்டைப்படம் - நன்றி இணையம்

சிறுகதைகள் சூவை எட்வேட்
மூதூர் மொகமட் ராபி ப.விஷ்ணுவர்த்தினி
கலை இலக்கிய நிகழ்வுகள்
பேசும் இதயங்கள்

Page 4
ஜீவநதி
2012 மார்கழி இதழ் - 51
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துவஜ்யந்தன்
பதிப்பாசிரியர்
கலாநிதி கு.கலாம60ரி
தொடர்புகளுக்கு : கலை அகம் சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி
அல்வாய் வடமேற்கு
அல்வாய்
ඕ60|Füරැවාභී.
ஆலோசகள் குழு:
திருதெணியான் திரு.கி.நடராஜா
விதாலைபேசி 0775991949 O2 12262225
E-mail :: Jeevanathy (a).yahoo.com
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan
Commercial Bank
Nelliady A/C - 810802 1808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக் களுக் குடம் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை 2 600T(B.
(0լ களும் அ வந்துள்ள6 உந்நதமாக சிந்தனை( சிந்தனைய கட்டுப்படு செய்து ம கொள்ளவ
ஆ கொள்ளப் சுருங்கியும் அச்சுறுத்த அவா, ெ சொல்லல் என நீள அச்சுறுத்த இடம் மணி
(Օ{ உளவியல் நுண்மைக அவை இ இருப்பு இ மொழி, ெ அவசியம்
(Օլ அலகிலிரு லிலும் ஆ முடியும். நல்லன பேசுதல், வறியோர் என்றவாறு "குடும்பம்" கொள்ள உணர்ந்து சாத்தியமு.
 
 
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
மனத்துக் கண் மாசிலனாதல்
ானிடப் பிறவியின் மேன்மையை சமய இலக்கியங் றச்சார்பு நூல்களும் பலவாறாக எடுத்துரைத்து ன. ஏனைய உயிரிகளிலிருந்து மனிதப் பிறவியை க் காண்பதற்கு ஆறாம் அறிவாகிய மனித யே காரணமாகக் கொள்கின்றோம். மனித பின் விரிவில் இயற்கையைவென்று, சூழலைக் த்தி, புதியன படைத்து, விந்தைமிகு சாதனைகளை னித வர்க்கத்தின் பேராற்றலை நாமே மெச்சிக் /ம் செய்கின்றோம். பூனால், மனிதமனம் என்பது எளிதில் விளங்கிக் பட முடியாததாய், எந்தக் கட்டுக்கும் அடங்காது விசுபருபம் கொண்டும் மானிட ஆற்றுலுக்கு லாகவே என்றும் இருந்து வருகின்றது. அழுக்காறு, வகுளி, இன்னாச் சொல், புறங்கூறல், பொய் களவு, கொலை, காமம், கள்ளுண்ணல், சூதாடல் ம் பட்டியலில் இடம்பெறும் மனித வாழ்வுக்கு லாக விளங்கும் தீமைகள் பலவற்றினதும் உற்பத்தி தமனமே ஆகும். னிதமனம் குறித்த தத்துவார்த்த விசாரணைகளும்
ஆய்வுகளும் இன்னும் பிறவும் மனித மனத்தின் ளை வெளிக்கொணர முயன்றுள்ளனவெனினும் ன்னும் முற்றானதாய் இல்லை. ஆனால், மனித ன்று கேள்விக் குறியாகியுள்ள நிலையில், மனம், மய் என்பவற்றைக் கட்டுக்குள் வைத்திருத்தலின் உணரப்பட வேண்டும், உணர்த்தப்படவேண்டும். னித சமுதாயத்தின் வாழ்வு குடும்பம் என்ற ந்தே ஆரம்பித்ததால், மனித மனத்தைச் செப்பனிட ற்றுப்படுத்தலிலும் குடும்பம் பெரும்பங்கை ஆற்ற மனம், வாக்கு, காயம் என்பவற்றை அடக்குதல், நினைத்தல், செய்ந்நன்றி அறிதல், இனியவை
உண்மையுரைத்தல், பயனுடையன சொல்லல், க்கு உதவுதல், விருந்தோம்பல், ஆபத்திலுதவுதல் ) பல்வேறு அறச்சார்புடைய பண்புகளையும்
என்ற அலகிலிருந்தே மனித சமுதாயம் கற்றுக் முடியும். இவ்வகையில் குடும்பம் தன் பொறுப்பை கொள்ளும்போது, மனதுக்கண் மாசிலனாதல் டைத்தே.
க.பரணிதரன்
இதழ் 51

Page 5
ஏ.எல்.மனாரா
யாழ் அஸிமி கவிதைகளின்
புலம்பெயர் &
இலங்கையில் முஸ்லிம்களும் தமிழர்களும் நீண்டகா உறவினைக் கொண்டுள்ளளர், இன்றும் இந்த உற நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு விடயம் ஆகு ஒ வ் வொரு வரும் மிக வும் ஒற் று  ைம யு ட6 தங்களுக்கிடையிலான தொடர்புகளை வைத் ருந்தனர். இவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி நிகழ்வாக அமையப்பெற்றது இலங்கையில் 30 வரு காலமாக நடைபெற்ற இனப்போராட்டம் ஆகும். இந் இனப் போராட்டத்தின் காரணமாக மக்கள் மத்தியி சிங்களம், முஸ்லிம், தமிழ் என்கின்ற இனத்து அடையாளம் வலுவடைந்தது. இலக்கியம் என்பது ச கால சமூகத்தின் வெளிப்பாடு என்ற வகையில் 1970 ஆ ஆணர் டு காலம் தொடக் கம் இலங்கை யரி 6 பெரும்பான்மையான இலக்கியங்கள் போர்க்கா இலக்கியங்களாகவே வெளிவந்துள்ளன. குறிப்பா உரிமை மீறல், அடக்குமுறைகள், போர் அவலங்கள் விடுதலை இயக்கங்களின் அடக்குமுறைகள் என் வற்றை வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன.
இவற்றுள் புலம்பெயர்வு என்கின்ற கரு பொருளானது இலக்கியத்தில் மிகுந்த செல்வாக்கை செலுத்தியது. "புலம்பெயர்வு" என்கின்ற சொல்லா லானது இரண்டு வகையில் நோக்கத்தக்கது. அதாவது பிற நாடுகளுக்கிடையிலான புலம்பெயர்வு, குறிப்பிட் நாட்டிற்குள்ளேயே இடம்பெறும் புலம்பெயர்வு என்பன வாகும். இன்றைய இலக்கியகர்த்தாக்கள் சிலர் உ6 நாட்டிற்குள்ளே நடைபெறும் புலம் பெயர்வை "இட பெயர்வு" என்கின்ற சொல்லாடலைக் கொண்டு அழைப்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும் இப்புலம்பெயர்வானது இலங்கையைப் பொறுத் வரையில் விருப்பத்தின் பெயரிலும் இடம்பெற்றுள்ளது
வந்தி
凌
 
 

கருத்துக்கள்
அத்தோடு விருப்பமில்லாத பலவந்தத்தின் பெயரிலும் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் வரலாற்றுப் பின்புலத்தை எடுத்து அவதானிப்போ மாயின் குறிப்பாக 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்திலேயே பெரும்பாலான இடப்பெயர்வுகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இலங்கை யில் ஏற்பட்ட யுத்த மேற்கத்தைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சூழ்நிலை காரணமாக பெரும் பான்மையான தமிழர்கள் சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் தாம்பெற்ற பல்வேறு விதமான பாதிப்புகளையும் புதிய அனுபவங் களையும் தமது மன உணர்வுகளையும் வெளிப் படுத்தும் வகையில் பல படைப்புகளைப் படைத்தனர்.
இலங்கையின் இனமுரண் பாடு தீவிர மடைந்த சூழ்நிலையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்-முஸ்லிம் முரண்பாடு தீவிரமாக வளர்ச்சி யடைந்ததொரு சூழ்நிலை ஏற்பட்ட போது 1990 ஆம் ஆண்டில் தமிழ் விடுதலைப் புலிகளினால் வடபுலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்டனர். இச்செயற்பாடு இம்மக்களின் வாழ்க்கையில் வரலாற்றில் கறை படிந்த நிகழ்வாகப் பதிந்தது. அவர்களும் தமது அனுபவ வெளிப்பாட்டை யதார்த்தபூர்வமான முறையில் வெளியிடத் தொடங்கினர். இவர்களது இலக்கியங்களின் போர்க் கால அனுபவங் களுடன் இணைந்து புலம்பெயர் கருத்துக்கள் மேலோங்கத் தொடங்கின. குறிப்பாக கவிதை இலக்கியங்கள் எதிர்ப்பலைகளாக எதிர்க்கத் தொடங்கின. இவ்வாறு கவிதை படைத்தவர்களுள் யாழ் அஸிமின் கவிதைகளில் இப் புலம்பெயர் கருத்துக்கள் மிகவும் வெளிப்படையாகவே பிரதி பலித்தன. யாழ் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமது சமூகம் நோக்கிய அவலங்களை தனது கவிதைகள் வாயிலாக எடுத்துரைத்தார். இவர் தனது கவிதைகளில் எவ்வாறெல்லாம் புலம் பெயர்
இதழ் 5

Page 6
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதை
அவதானிப்போம்.
யாழ் அஸிம் என்று அழைக்கப்படும் அப்துல் காதர் அஸிம் ஈழத்து முஸ்லிம் படைப்பாளிகளுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து இலக்கிய உலகில் யாழ் அஸிம், யதார்த்தன் ஆகிய பெயர்களில் நன்கு அறிமுகமான எழுத்தாளரும் அறிஞரும் ஆவார். 1985 ஆம் ஆண்டில் அவரது கன்னிக் கவிதை ஈழ நாடு பத்திரிகையில் "வாடகை இதயம்" எனும் தலைப்பில் பிரசுரமானது. அதிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட கவிதை களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் ஈழநாடு, தினகரன், எங்கள் தேசம், சரிநிகர், நவமணி, அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. மேலும் இவரது கவிதைகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையிலும் ஒலிபரப்பாகி யுள்ளன. 1990ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளி யேற்றப்பட்டனர். இதனை அனுபவரீதியாக உணர்ந்த இவர் இந்த விரட்டப்பட்ட பின்னணியையும் மக்களின் அவலங்களையும் தனது கவிவரிகளினூடாகப் படம் பிடித்துக் காட்டுவதினூடாக வாசகர் மனதில் ஆழமாக இடம் பிடித்து விடுகிறார்.
1996, 1997, 1998, 1999 ஆம் ஆண்டுகளி லிருந்து வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் இவரால் எழுதப் பட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட நெடுங்கவிதை களான "தாயகமே எம் தாயகம்", "குறித்துக் கொள் முகவரியை" "விடியலைத் தேடி நாம்", "கனவுகள் உன் கையில்" ஆகியன நேயர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.
இவ்வாறான கவிதைகளை அவதானிப் போமாயின் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் எவ்வாறு வெளியேற்றப் பட்டனர், இதன் போது தம்முடைய உரிமைகளை இழந்து தாம் அனுபவித்த கஷ்டங்கள், அகதி வாழ்க்கை, மீண்டும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தாய் மண்ணின் மீது கொண்ட ஏக்கம், தமிழ் - முஸ்லிம் இன உறவு, தமது முன்னைய வாழ்க்கை மற்றும் விடுதலை உணர்வு என்பவற்றை யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்துகின்றன.
வடபுலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் குறிப்பிட்ட மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். இதன்போது இவர்கள் தனது உயிரைத்தவிர உடமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவரது "உயிர்மொழி, "தொண்ணுறில் வைத்தாய் தீ", "விழி நீருக்கொரு வழி சொல்", "இது எங்கள் வரலாறு", "இது கவிதையல்ல" "தாய்மண்ணின் காலடிக்கு" போன்ற கவிதைகள்
 
 

பெரும்பாலும் இதனையே எடுத்துரைக்கின்றன.
புயலொன்று வந்தது பூகம்பம் வெடித்தது. உயிரோடு உடல் மட்டும் ஒட்டியிருக்க உழைத்து வைத்த செல்வமெல்லாம் பறிக்கப்பட்டு வேரோடு பிடுங்கி வீசப்பட்ட நாள்.
என தாம் வெளியேற்றப்பட்ட அந்த நாளை நினைவுகூறுகிறார்.
தாம் விரட்டப்பட்ட போது இங்கிருந்து வெளியேறிய மக்கள் தான் நடந்து சென்ற பாதையில் உயிர் மீது கொண்ட அச்சம், கால்நடையாக நடந்து சென்றமை, குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் பட்ட வேதனை, உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி மறைந்து காட்டுப் பகுதிகளினூடாக வெளியேறியமை, உயிரிழப்புகள் என்பவற்றை வெளிப்படுத்துவதோடு தாம் செல்லும் போது கையில் எந்தப்பொருட்களையும் கொண்டு செல்லவில்லை தன்னுடன்,
இவ்வாறு வெளியேற்றப்பட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்தனர். இதன்போது பல இன்னல்களும் அவர்களது கதவைத் தட்டின. வடபுல அகதி என்கின்ற ஒரு சமுதாயம் g) (56)JTËluJ6OLOGOU,
ஈழப்போராட்டமிங்கு முறைகேடாய் ஈன்றெடுத்த வடபுலத்து அகதியெனும் புதியதொரு சமுதாயம்-நாம் விடியலுக்காய் ஏங்குகிறோம். எனக்குறிப்பிடுகிறார்.
அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் வடபுல முஸ்லிம்கள் நிஜமான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிழலான வாழ்க்கை வாழ்வதை,
பிறந்த மண்ணின் முகவரி இழந்த அகதிமுகாம்களில் அடையாளம் காட்டுகிறேன்
?
வாருங்கள்!
நிஜமான வாழ்வைத்
தொலைத்துவிட்டு நிழல் வாழ்க்கை வாழும் எம்மைப் பாருங்கள்!
நிழலூரில் ஆடும் எமைப் பாருங்கள் எனப் பாடுகிறார். இவரது கவி வரிகள் அகதி வாழ்வின் அகோர

Page 7
நிலைமையினையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. குறிப்பாக அகதி முகாம் வாழ்க்கை, அங்கிருக்கும் குடிசைகளின் அமைப்பு, வெயிலில் காய்ந்தமை, மழையில் நனைந்தமை, காற்றில் அடிபட்டமை, ஒரு வேளை உணவுக்காக வரிசையில் காத்துக் கிடந்தமை, தாம் அனுபவித்த துயர் மிகுவாழ்க்கை, செழிப்பாக வாழ்ந்தவர்கள் உழைத்த செல்வமிழந்து உண்ண உணவின்றி, தங்க இடமின்றி பிறரிடம் கையேந்தியமை, அன்பாக வளர்த்த தம்முடைய பிள்ளைகள் படும் வேதனைகளையும் யதார்த்த புர் வமானதாக எடுத்துரைத்துள்ளார்.
மேலும் சொந் த மண னரின மது கொண்டிருக்கும் அன்பையும் மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தையும் பலவாறெல்லாம் பாடியுள்ளார். தன்னுடைய சொந்த மண்ணில் தாம் வாழ்ந்த பசுமையான நினைவுகள், சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தமை, முதலிய அனுபவங்களைத் தனது கவி வரிகளினூடாக எம் முன்னே காட்சிப்படுத்தும் கவிஞர்,
பொன் போன்ற மண்தூசு எம்மேனி படிய வேண்டும்! பிறந்த எம் மண்ணிலே எம் மேனியடங்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
பிறந்த மண்ணைப் புறக்கணித்துப் பிரிந்து நாம் வரவில்லை. அங்கு வாழ்வதே தமக்குப் பெருமை, மீண்டும் நாம் அங்கு வருவோம். உறவுகளை உயிர்ப்பிக்க வருவோம் என்பதை
இனிய தமிழ்ச்சோதரரே ஆழமாய் வேரோடிய நம் அன்புப் பிணைப்பு- அது என்றும் அழிக்கமுடியாதது என்றும் பிரிக்க முடியாதது இதயத்தோடு இதயம் சேர உயிரொடு உயிர் சேர உறவுகளை உயிர்ப்பிக்க நாம் வருவொம் மீண்டும் வருவோம் இடம்பெயர்ந்த தாம் புதிய சூழ்நிலையில் புதிய தொழில் கொண்டிருப்பதை,
புத்தளத்து மண்ணிலே அகதிமுகாம்களில் ஆயிரம் அவலங்கள்! உப்புச் சுமக்கும்-என் உடன்பிறப்புகளின் கண்ணிரிய் ஈரம் இன்னும் காயவில்லை. என வெளிப்படுத்துகிறார்.
ஜீவந்தி
 
 

பல்வேறுவிதமான அடக்குமுறைகளுக்கு உட்பட வடபுல வாழ் முஸ்லிம்கள் தம்முடைய விடியலுக்காக ஏங்குகின்றனர். தம்முடைய பழைய வாழ்க்கையை எதிர்பார்க்கின்றனர் என்பதை,
வழியறியாப் பயணமதில் வாழ்க்கைப் படகுதனைத் துடுப்பின்றி ஒட்டுகிறோம் இதயத் துடிப்பின்னும் இருப்பதனால் ஒட்டுகிறோம் வெளிச்சமே தெரியாத எம் வாழ்க்கை வானில் - ஒர் விடியலுக்காக ஏங்குகிறோம் எனப் பாடுகிறார்.
பெரும்பாலான கவி வரிகள் இலங்கையில் இனப் போராட்டம் நீங்கி சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற விடியலக்கான எக்கத்தை தாம் வாழ்கின்ற அவல வாழ்க் கையின் பின்னணியிலிருந்து வெளிப் படுத்துகிறார்.
மேலும் வட புலத்தில் வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் நீண்ட காலமாக சகோதரர்களாகவே வாழ்ந்தனர். மதத்தாலும் கலாச்சாரத்தாலும் வேறு பட்டாலும் மொழியால் ஒன்றிணைந்திருந்தனர். ஒரே பாடசாலையில் கல்வி கற்று, ஒன்றாக விளையாடி, சுகதுக்கங்களில் பங்கு கொண்டு இஸ்லாமியர்களின் பண்டிகையாக இருந்தாலும் சரி இந்துக்களின் பணி டிகையாக இருந்தாலும் சரி ஒன்றாகவே கொண்டாடி இன, மத பேதமின்றி வாழ்ந்தனர். இவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்திய முக்கிய காரணியாக விளங்குவது இப்பலவந்த வெளியெற்றம் ஆகும். இதனையும் யாழ் அஸிம் தான் வெளியேற்றப் பட்டவன் என்ற பின்னணியிலிருந்து முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகவே வாழ்ந்தனர் என்பதை தனது கவிவரிகளினூடாகப் புலப்படுத்துகிறார்.
"இது கவிதையல்ல" எனும் கவிதையில், ஒரு தாயின் பிள்ளை போல் உயிருக்கம் உயிராய் ஒன்றாக வாழ்ந்திருந்த இனிய தமிழ்ச் சோதரரே இதயத்தால் இணைந்திருந்தோம் இன்பத்தில் துன்பத்தில் இரண்டிலுமே இணைந்திருந்தோம் தீபாவளி எங்கள் பெருறாள் ரம்ஸான் உங்கள் பெருநாள் பிரிவில்லை என்றிருந்தோம். பேதங்கள் மறைந்திருந்தோம். பேய்க்காற்று வீசியது பேரிடியும் வீழ்ந்தது

Page 8
இணைந்த நம் கரங்கள் நம் கரங்களாலேயே வெட்டப்பட்டன என தமிழ் முஸ்லிம் உறவின் நிலைமையைக் குறிப்பிடுகிறார். மேலும் பயங்கரவாத இயக்கத்தினால் மக்கள் வெளியேற்றப்பட்ட போதிலும் தம்முடன் நெடுங்காலமாக ஒன்றோடு ஒன்றாக இணைந்திருந்த தமிழ் நெஞ்சங்கள் செய்வதறியாது வாயடைத்து நின்றமையையும் கவிஞர்,
நஞ்சு கலவா நெஞ்சுடனே வஞ்சமில்லாதமிழ் நண்பன் நெஞ்சதிணைந்து ஒடிப்பிடித்ததும் கூடிப்பழடித்ததும் கல்லூரி வாழ்க்கையில் கையசைத்துப் பிரிகையில் நீ கோவென்றுகதறியதும் மண்ணோடினைந்த எம் தொப்பூள் கொடியறுத்துத் தூர எரிகையில் நீ நாவசைக்க உரிமையின்றி வாயடைத்து நின்றதும் குமிழிட்டு வரும் நினைவுகளாய். வழிபீறிட்டுதரும் கண்ணிர்துளிகளாய்.
நாயோட்டமும் அத்தனையும் சில்லறைப் பாய்ச்சலுமமாக வேர் அறுந்த வி பதுங்குகிற காற்றைக் யார் அறிவார். காட்டிக் கொடுத்தது
கிடுகுவேலி 變 விதை இழந்த ம எத்தனைபேர் அ.
பச்சைத் தளிர்களைத்
தொட்டுத் தடவி அறிந்தவர்களிட இளமைப் பசிதீர்த்துக் யாரையுமே அறி கொள்ளுகிற தடுப்பதில் காற்றினால். ஆர்வத்தோடிரு
முற்றும் இழந்து கம்பீரம் பேசிக் ( முறிந்து சிதைந்தவர்கள் அயல்ெலாம் எத்தனை. பட்டுக் கம்பள வ
திளைத்து மகிழு
 
 
 
 
 

என்றவாறு முப்பது வருடங்களுக்கு முன்பு இன பேதமற்ற நட்பு எவ்வாறு ஒருவரை ஒருவர் பிணைத்து வைத்திருந்தது என்பதை வெளிப்படுத்து வதனூடாக மெய் சிலிர்க்க வைக்கின்றார். அத்தோடு தமிழ்-முஸ்லிம் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு,
நட்பு, பரிந்துணர்வு என்பன காணப்பட்டன. காலப் போக்கில் ஏற்பட்ட அரசியல் பின்புலம், சந்தேகம் கொண்ட பார்வை என்பன மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தின என்பதையும் எடுத்துக் கூறும் வகையில் இவரது கவிதைகள் அமைந்துள்ளன.
இவரது கவிதைகள் பெரும்பாலும் நெடுங் கவிதைகளாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க தொரு விடயமாகும். எளிய நடையில் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலும் சிறந்த எதுகை மோனை பயில்வுகளுடன், கருத்துச் சிதைவில்லாமல், "வட புல முஸ்லிம்களின் வெளியேற்றம்" என்றால் என்ன என்பதை அறியாத ஒருவருக்கும் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவிதைகள் அமைந்திருக் கின்றன. இவ்வாறான புலம்பெயர் கருத்துக்களை உள்வாங்கியுள்ள கவிதைகளைப் பொதுவாக நோக்குகின்றபோது வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் குரலாக எதிரொலிக்கின்றது எனக் குறிப்பிடலாம்.
காகத்தால் விழுந்த தங்களை பனம்பழத்தைப் பற்றி p தம்பட்ட மடிப்பதிலேயே
காற்றின் காலம் கரையுது Tங்களை காலத்தைக் கரைக்குது. றிவார்?
காற்றின் பலத்தைக் மிருந்து ஆருமே. கடலறியும் யவிடாது ---
கைகோர்த்த குரங்குகளை. க்குது காற்று. பதிவுத் தபால்களை.
வானம் அறியும் கானர்டு அலைகளின் முழக்கம்
மொழிபெயர்க்கப் படும்போது ரவேற்பில் காற்றின் gil. கட்டுக் காசும் சுஹாகா.
லாபாலன்
இதழ் 51

Page 9
கசூசை எட்வேட்
என்னதான்
குணசேகரம் வெளி கூடத்தில் படுத்துக்
கிடந்தார். நேரம் நள்ளிரவையும் எட்டப் போகிறது. இன்னும் அவருக்குத் தூக்கம் வர வில்லை! மனையாள் நடு அறையில் படுத்திருக்கிறாள் பிள்ளைகளோடு இரண்டும் பெண்பிள்ளைகள், ஒருத்தி குமர்ப்பிள்ளை.
முன்பெல்லாம், சின்ன அறையில் தனியாகத் தான் சம்சாரக் கட்டிலில் படுத்துக்கிடப்பர் இருவரும் இப்போது கொஞ்சக் காலமாகத்தான் இந்த ஏற்பாடு - அவர் தனியாவே கிடக்கிறார்! தனியாக கிடந்தால் தூக்கம் அணுகாதா என்ன?. அவர் நெஞ்சில் பல போராட்டம், சிந்தனை அலைகள் எப்படி தூக்கம் கிட்ட வரும் ? இப் படியாக நித் திரையில் லாமல் பல பொழுதுகள் சித்திரவதைப்பட்டிருக்கிறார்
குணசேகரம் ஐம்பது வயதைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறார். அரசாங்கத்தில் நல்ல உத்தி யோகம் சம்பளமும் தாராளம் செலவுக்கு போதாது, அது இல்லை இது இல்லை என்ற புறுபுறுப்பு வீட்டில் இல்லை இன்னும் நான்கு வருடங்கள் போனால் இளைப் பாறிச் சம்பளம் பெற்று சுகமாக இருப்பார்! ஆகையால் எல்லோரையும் போல பொருளாதாரச் சிக்கல் முக்கல் என்று கவலைப்படத் தேவையில்லை பிள்ளைகள் இருவரும் நன்கு படிக்கிறார்கள். பல்கலைக்குப் போவார்கள் என் பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. இரண்டு பெண்களுக்கும் சீதனம் தாராள மாக தேடி வைத்திருக்கிறார்! ஆகையால் அதையிட்டும் இவருக்கு யோசிக்க வேண்டியதில்லை!
அயலும் சொந்த பந்தங்களும் இவர் குடும்பத் தோடு பரவாயில்லை படித்தவர் என்பதால் விண்ணப்பப் படிவங்கள், நிவாரணப் படிவங்கள், அரசாங்க அலுவல்கள், அடையாள அட்டை, கடவுச்சீட்டு. என்று பல அலுவல்களுக்கு அவருதவியை நாடிவருவர் பண உதவியும் செய்திருக்கிறார்! ஆகையால் அயல்
ஜீவந்தி
 
 
 
 
 
 
 

பிரச்சினைகளும் இல்லை!
இப்படியிருக்கையில் தனியறையில் துயில் சுகம், தாம்பத்திய சகவாசம் கண்ட இத் தம்பதிகளுக்கு அப்படி என்ன சகவாசக்கேடு வந்துற்றது கொஞ்ச காலமாக அவருக்கு ஆண்மைக்குறைவு- வீரிய சக்தி இல்லாமல் போவதை உணர்ந்தார்! படிக்காதவனும் படித்தவன் போல, பணமில்லாதவனும் பணக்காரன் (3LJT60 (36)JLLồ (3LJTL60[TLñ! co960T[T6Ủ, e560ỦT60)LD குறைபாடுற்றவன் கட்டிய மனைவியிடம் கட்டிலில் நடிக்க முடியாதே அவளாகவே "சீ நீயும் ஒரு ஆண் பிள்ளையா!" என்று பேசும் முன்னமே, இவராகவே படுக்கையை வேறாக்கிக் கொண்டார் இப்போது இவர் கவலை யோசனை எல்லாம் இதைப்பற்றித்தான் அவர் மனைவி குணசீலி, பேருக்கேற்றவாறு நல்ல பெண் தான். பக்தாவுக்கேற்ற பதிவிரதையாக வாழ்ந்தவள் தான்! யாரும் பிள்ளை பெற வேண்டும், பாலூட்டி சீராட்ட வேண்டும்; படிப்பிக்க வேண்டும்; சீதனம் தேடவேண்டும். என்றா கலியாணம் செய்கின்றனர்! என்னதான் நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மேளம் கொட்டி தாலி கட்டி னாலும் பாலியல் இச்சை தீர்க்கவே திருமணம் என்ற பேரில் இணைகின்றனர். இது தான் உண்மை யிலும் உண்மை குணசீலிக்கு வயது இன்னும் நாற்பதைத் தாண்டவில்லை இளமை இன்னும் ஊஞ்சலாடுகிறது ஆகையால். அவளது உணர்ச்சிக்கு ஈடுகட்ட அவரால் இயலவில்லை எத்தனையோ இரவுகள் அவமானப் பட்டிருக்கிறார் கூனிக்குறுகியிருக்கிறார்!
ஆகையால் இப்போது தனிமையை ஏற்படுத்தி வாடுவதில் ஒன்றும் புதுமை இல்லையே! முன்

Page 10
பெல்லாம் படித்த மன்மதலீலைகளை எல்லாம் பிரயோகித்து மனைவியை திருப்தியடையச் செய்தவருக்கு இன்று இந்த இழிநிலையா
குணராசா இப்போதும் திடகாத்திரமாகத்தான் இருக்கிறார்! பூமரங்கள் முதல் கொண்டு மாமரங்கள் வரையில் நீர் வார்ப்பார் வீட்டுத் தோட்டம் செய்கிறார். கொத்துதல் வெட்டுதல் பசளையிடுதல் என்று அதிகாலை யில், விடுமுறை நாட்களில் தோட்டத் தொழிலாளி போல பாடாய்ப்படுவார் விறகு முதல் கொண்டு கொத்திக் 6.5|LTL660 666 ਉ6ਹੀ LD60606.ju6ਹੀ உடுப்புகள் ஈறாகத் தோய்த்துக் கொடுப்பார்! ஏன் அடுக் களை வேலைகள் கூடச் செய்து கொடுப்பவர், இடித்தல் அரைத்தல் துருவுதல் என்று மனைவி குணசீலிக்கு எப்போதோ இழுப்பு வருத்தம் ஏற்பட்டதிலிருந்து இந்தத் திருத்தொண்டை எல்லாம் ஆற்றிவருகிறார்! இவர் அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார். "இருபத்திரெண்டில் நான் செய்த வேலைகள ஐம்பத்தி ரெண்டிலும் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருக் கிறேன்! ஆராலையும் ஏலுமோ?!"
இப்படியாக உடல்பலத்தில் நலத்தில் குறை படாமல் இருக்கும் இவருக்கு, பள்ளியறையில் பாலியல் உறவில் மட்டும் பலவீனம் ஏற்பட வேண்டியதென்ன இவர் சிந்தியாமல் கவலைப்படாமல் இருக்கலாமா என்ன மனைவிக்கு இளமை மாறவில்லை! உணர்ச்சி இன்னும் அதிகரிப்பது போல் காணப்படுகிறது! பிள்ளைகள் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றோ, பார்ப்போர் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காகவோ என்னமோ, பகலில் மெதுமையாக பதுமையாக கோவில் சிலை போல் இருப்பாள்! அர்த்த இராத்திரியில் பள்ளியறையில் துள்ளி எழுவாள்! இவர் புள்ளிமான் போல் மிரண்டு தள்ளி ஓடுவார்! இது என் மனைவி மட்டும்தான் இப்படியா, பெண்களின் இயற்கைக் குணமே இப்படியா என்ற கேள்விக்கு விடைகாண இயலவில்லை e)|G)||TITGb|
‘எப்படியும் மனைவியின் விரகதாபத்துக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்! நானும் ஒரு ஆண்மகன் என்று நிரூபிக்க வேண்டும்! மேலும் எனக்கு மட்டும் ஆசாபாசங்கள் அற்றா போயிற்று மனதில் அது விரவியிருக்கிறது எனக்கென்ன வயதா போயிற்று அப்படி யிருக்க அதில் மட்டும் பலவீனம் என்ன வேண்டி யிருக்கிறது! இதற்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும்'
இப்படியெல்லாம் சிந்தித்து அவர் தனது பிரத்தியேக வைத்தியரை சந்தித்தார். அவர் இதை ஒரு பிரச்சனையாகவே எடுக்கவில்லை! அவர் இந்தக் காலத்தில் இந்த வயதில் இதுவெல்லாம் சர்வசாதாரணம் என்றார்! அவர் சில குளிசைகளை எழுதிக்கொடுத்தார். ஒரு ஊசிமருந்தும் ஏற்றினார். வாரம் ஒரு முறை இந்த ஊசி போட வேண்டும் என்றும் சொன்னார். இது
 
 
 

வெளிநாட்டு பிரத்தியேக மருந்து என்றும் சொன்னார்! மணித்தாள் பறந்தோடியது தான் மிச்சம், பலன் பூச்சியம் தான் சுப்பிரமணியம் அசும்புகிறானில்லை! நாட்டு வைத்தியம் இதற்கு கை கொடுக்கும் என்று சிலரின் ஆலோசனை! பரியாரி மார்க்கண்டுவிடம் போனார் கைகொடுக்கும் என்று அவர் கைநாடி பார்ப்பதில் பெரும் நிபுணர் நாடிபிடித்தார் என்றால் உள்ள வருத்தம் எல்லாம் சொல்லியே போடுவார்
அவர் நாடிபிடித்து இந்தக் குறைபாடு மட்டும் தான் இவர் உடலில் உள்ள ஒரேயொரு குறைபாடு இதைத் தன்னால் தீர்க்க இயலும், எத்தனையோ பேருக்கு ஆண் மைக் குறைவை நீக்கியதாகவும் பகர்ந்தார் ஆண்மை விருத்திக் குழம்பு தன்னிடம் இருப்பதாகவும், அதைப் பாவித்தால் எத்தனையோ பொம்புளைகள் வேணும்' என்று சொல்லி சிரித்து அதைக் கொடுத்ததோடு, வேர்க்கொம்பு சூரணம் கடுக்காய் தூளும் இன்னும் சில சரைகளையும் கொடுத்தார். காலையும் மாலையும் பாவிக்க வேண்டுமாம்! சொன்ன ஒழுங்குப் படி பாவித்தார்தான். ஆனால் பலனில்லை வீடுகளில் இருக்கிறவர்கள் கைவைத்தியம் தெரிந்தவர்கள், வாகடம் படித்தவர்கள் அவர்களும் சில வைத்திய ஆலோசனைகளைச் சொன்னார்கள். முக்கியமாக மொடக்கொத்தான் (துடக் கறுத்தான்) கீரையை பாவிக்க வேண்டுமாம். அதைச் சாப்பிட்டால் அறுபது வயதுக் கிழவனும் குமரியைத் தேடுவானாம்! பாக்கியராஜின் படமொன்று பார்த்தார். அதில் பாராமுகமாக இருக்கும் கணவனை, தன்பால் ஈர்க்க முருங்கைக்காய் குழம்பு, முருங்கையிலை வறை. என்று முருங்கைப் பண்டங்களையே பாகம் செய்து படைக்கிறாள்! அதைத் திண்ட அவன் இருண்ட நேரத்தில் திரண்ட உணர்ச்சியோடு மனைவியை இரண்டு கரங்களாலும் வாரி அணைக்கிறான்! இப்படி யொரு காட்சி பாக்கியராஜாவின் நடிப்பைப் பார்த்த குணராசாவும் அவ்வாறே செய்து பார்த்தார் மனைவி யின் அனுசரணையோடு இதையெல்லாம் செய்து தின்று பார்த்தார், விழி பிதுங்க வியர்க்க விறுவிறுக்க வெளியே வந்தார் அவமானத்தால் குன்றிப்போனார். முகத்தைப் பார்க்க கன்றாவியா யிருந்தது என்றாலும் அவர் முயற்சியைக் கைவிட வில்லை! பத்திரிகைகளில் விளம்பரம் வரும் அஜமாமிசலேகியம், ஆண்மை விருத்திலேகியம் என்று எல்லாம் வாங்கிப் பாவித் தாயிற்று எல்லாம் பலமாக இருந்தும் அதுமட்டும் பலவீனமாக இருக்கிறது, ஏனோ!
பிரான்சில் இருந்து இவரின் நண்பன் வந்தான். குணராசாவோடு ஒன்றாகப் படித்தவன். அவனை அவன் வீட்டிலே கண்டு உரையாடினார். பள்ளிக்காலம் முதல் பள்ளியறைக் காலம் வரை இந்த நாட்டுப் போராட்ட வாழ்வையும், மேல்நாட்டு ஆடம்பர

Page 11
வாழ்வையும் என்று பலதும் பத்தும் பகிர்ந்து மகிழ்ந்தனர். சில அந்தரங்கங் களையும் பகிர்ந்து கொண்டனர். அப்போது குணராசா தன் பிரச்சனையைச் சொன்னார் வெளிநாட்டு நண்பர் இலேசாகச் சிரித்தார். அதற்குத் தகுந்த பரிகாரம் பாரீசில் கண்டுபிடித்து வெற்றி யளித்து பலன் கிடைத்து வருவதாக பிரஸ்தாபித்தார் மரபணுப் பரிசோதனை செய்து இவருக்குப் பொருந்தும் வீரியமுள்ள இளம் மரபணுக்களை இவர் மரபணுக் களோடு சேரவிட்டு விருத்தியாக்கி வீரிய சக்தியைப் பெற வைக்க இயலுமாம்! இளமை திரும்புமாம்! என்று சொன்னார். ஒரு சின்ன அறுவை சிகிச்சையோடு ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெறவேண்டும். அவ்வளவுதான் நீ ஆண்மையுள்ள ஆண்பிள்ளை ஆகிவிடுவாய்! உனக்கு இன்னுமொரு கலியாணமும் கேட்கும் என்றவர் UGOLDT), fiflisg|TÜl
குணராசாவுக்கு இதையெல்லாம் கேட்க மிக்க மகிழ்ச்சியாகவே இருந்தது! இதற்கு ஆகும் செலவைப் பற்றி விசாரித்தார். விசனமாகவே இருந்தது! பிரான்சுக்கு போகும் வரும் செலவு வேறு எல்லாச் செலவையும் சேர்த்துப் பார்த்தால் இவர் சொத்துப் பூராவும் விற்றாலும் தேறாது ஆகையால் அந்த எண் ணத் தை காற்றில் கலந்த கதையாகவே கைவிட்டார்! வேலை செய்யும் அலுவலகத்தில் இவருக்கு மூத்த நண்பர் ஒருவர் இருக்கிறார் அவர் பல நூல்களை கற்றவர். வாசிப் பதிலேயே பெரும் பொழுதைப் போக்குபவர் மிக்க அனுபவபூர்வமாக வாழ்க்கைப் பிரச்சினை பலவற்றுக்குத் தீர்வு சொல்பவர் மனோத்த்துவ ரீதியாகவும் கருத்துச் சொல்வார். இவர் மெல்ல அவரை அணுகலானார். அவர் இவர் பிரச்சினை களையும் சிகிச்சைகளையும் மன ஆதங்கத்தையும் கண்டு முறுவலித்தார். சற்று சிந்தனையில் ஆழ்ந்தார் சற்று நேரத்தின் பின் ஒவ்வொரு சொல்லாக மிக்க நிதானமாக பேசலானார். "இது இளமையைக் கடந்து செல்லும் பலருக்கு இருக்கும் பிரச்சனைதான் பலர் இதை வெளிப்படுத்துவதில்லை. இதைத் தீர்க்க எந்தப் பிராயத்தனமும் எடுப்பதில்லை வேறு வேறு பிரச்சனை கள் வந்து விசயத்தை அமுக்கிப் போடுகின்றன வேறு வழிகளில் தங்கள் இன்ப சுகங்களை அடையப் பார்க்கின்றனர். கெளரவத்திற்கு ஏற்றது என்று அனுமதித்து ஏற்றுக் கொள்வார்கள் உம்மைப் போல் வெகு சிலர்தான் இக்குறையை நீக்க மிக்க பிரயத்தனப் படுகிறார்கள் என்று கூறி நிறுத்தியவர் சற்று யோசனை யின் பின் மீண்டும் தொடர்ந்தார். "இது மருந்துகள் சாப்பாடுகளை விட மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி இது பெண் தொடர்பே இல்லாத காலத்தில் இருந்த உணர்ச்சிப் பெருக்கின் வேகம், மணமாகி கண்டுணர்ந்த பின் படிப்படியாக குறைவடைந்து கொண்டே போகிறது! அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக்
 
 

கொண்டிருப்பதால் ஒருவித 6) ਪੰL ஏற்பட்டு இதில் என்னதான் கிடக்கிறது என்ற விரக்தி நிலை, அதாவது பற்றற்ற துறவு ஞானம் வந்து விடுகிறது! பலர் வேறு வகையில் மனதைச் சாந்திப்படுத்திக் கொள்கிறார்கள் நீர் வள்ளுவர் சொன்னமாதிரி பெண்ணால் ஏற்பட்ட இந்நோய் பெண்ணாலேயே தீர வேண்டும் என்று நிற்கிறீர். உடலில் எந்தப் பலவீனமோ குறையோ உமக்கில்லை, மனம்தான் சலிப்படைந்து களைப் படைந்து பலவீனப் பட்டு நிற்கிறது! இங்கே பாரும், சாதாரணமாக ஒரு பெண்ணைப் பார்க்குங்கால் உண்டாகும் உணர்ச்சி மனைவியைப் பார்க்கும்போது உண்டாவதில்லையே ஏன்? இங்கே தான் நம் மனக் கோளாறு - மனநோய் இருக்கிறது. காம இன்பம் எந்தப் பெண்ணிடம் போய் வந்தாலும் ஒரே மாதிரி யானது தான் என்று உணர வேண்டும் "பள்ளி போகம்
வேறோ, பறச்சி போகம் வேறோ, இறைச்சி எலும்பு தோலில் இலக்க மிட்டிருக்கோ1?" என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. இதை உணர்ந்து நடக்க வேண்டும். எனது மனைவி மற்றப் பெண்களைவிட ஏதோ ஒன்றில் சிறந்தவள் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் மனைவியைப் பார்க்கையில் ஒரு புதுப் பெண்ணைப் பார்ப்பது போல புதுமையாக பார்க்க வேண்டும்! அப்போது புதுவெள்ளம் போல் உணர்ச்சி பெருக் கெடுக்கும் உமது பலவீனம் மாயமாய் மறையும் மனதின் மாய வித்தைதான் எல்லாம்" என்றார்.
நல்லதொரு பிரசங்கத்தைக் கேட்ட திருப்தியில் குணராசா போக எழுந்தார். இலகுவான வழி காலடி யில் கிடக்க, எங்கெங்கோ அலைந்தேனே என்று சிந்தித்தார் அவர் போக எத்தனிக்கையில் நண்பர் சொன்னார் "என்றாலும், இதை நடைமுறைப்படுத்துவது

Page 12
அவ்வளவு எளிதல்ல உடல் நோயைத் தீர்ப்பது போல மன நோயைத் தீர்ப்பது இலகு அல்ல! சலித்துப்போன ஒன்றில் மீண்டும் விருப்பத்தை ஏற்படுத்துவதை ஏற்குமா மனம் ஆனாலும் மனதைத் தளரவிடாதேயும் நம்பிக்கை யோடு முயற்சி செய்யும். வெற்றி கிடைக்கும்!"
புது மனிதனாக புறப் பட்டார் குணராசா, மனையாளை புதுமைப் பெண்ணாக பார்க்கும் புதுப்புது கற்பனைகள் பூத்துக் குலுங்க புறப்பட்டார். வீடேகி யதும், வீட்டில் ஒரு புதுப்பெண்தான் வீற்றிருந்தாள் இளமை அழகு பூத்துக் குலுங்கியது அவளிடம் கட்டான மேனி, தொட்டுவிடத் தூண்டும் இவரைக் கண்டதும் மரியாதைக்காக எழுந்து நின்றாள்! ஒரு நாணப் புன்னகை குணராசாவுக்கு அவள் யாரென்று அறிய அதிகநேரம் செல்லவில்லை. மனைவி குணசீலியின் தங்கைதான் அவள் சிங்காரவல்லி என்பது அவள் பெயர். ஆனால் வல்லி என்றே எல்லோரும் அழைப்பர். சிருங்காரமான ஒரு பெயரை ஏன்தான் இப்படி மலினப்படுத்துகின்றனரோ
குணராசா குணசீலியை கரம்பற்றும் போது இவள் பக்குவப்படாத சின்னப்பெண். அதன்பிறகு நாட்டில் எவ்வளவோ நடந்து பலர் வாழ்க்கையையும் புரட்டியெடுத்தது சொந்தங்கள் பந்தங்கள் இங்கும் அங்குமாக அலங்கோலப்பட்டு அலைந்தனர். இருபது முப்பது வருடமாக உறவுகளை கண்ணாலும் காணாமல், ஏன் என்ன ஆனார்களோ என்ற சேதியும் தெரியாமல் உறவுகளைத் தொலைத்தோர் ஏராளம் நம் இனத்தில்
ஆனால் சிங்காரவல்லியை பத்துவருடங்கள் தான் கண்ணால் காணவில்லை. ஆனாலும் அவளைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன. இவள் "சாமர்த்தியமான" அடுத்த வருடமே யாரோ ஒருவருடன், ஆனால் தன் மனதுக்குப் பிடித்தவனுடன் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டாள் அவனைப்பற்றி எதுவுமே தெரியாது எவருக்கும் காதலுக்குக் கண்ணில்லை என்பது சரிதான். எதைக்கண்டு, எதில் நம்பிக்கை கொண்டு அவனை மணாளனாக கொண்டாள் இந்தக் கேள்விக்கு அவளுக்கே விடை தெரியாது. பாலியல் வெறி அவள் கண்ணை மறைத்து விட்டது. பாலியல் இன்பத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத பிறவி அவள் எல்லோரும் எதிர்பார்த்தது போல மூன்றே மாதத்தில் இவளைக் கைவிட்டு அவன் எங்கோ போய் விட்டான். மோகம் முப்பது நாள் என்பது சரிதான்! அது எல்லோருக்கும் உரிய மனநிலைதான்! ஆகையால்த் தான் ஊரைக்கூட்டி, மேளம் கொட்டி தாலிகட்டி கட்டாய மாக்கி குடும்பஸ்தன் ஆக்கிவிடுகின்றனர். பெரியவர் களின் சம்மதம் இல்லாமல் ஆசி இல்லாமல் நிறை வேறும் திருமணங்களின் முடிவு இப்படித்தான் அமையும் என்பதற்கு இவளின் வாழ்க்கை நல்ல எடுத்துக்காட்டு
இடப்பெயர்வின் போது வன்னி போய்ச் சேர்ந்த
 
 

Gung அங்கேயும் ஒருவனைக் கொளுவிக் கொண்டாள். அவன் இயக்கத்தோடு தொடர்புபட்டவன். நாள் கணக்கில் கிழமைக் கணக்கில் ஆளையே காணக் கிடைக்காது. கட்டிய மனைவியிடமும் ஒன்றும் சொல்ல மாட்டான். எல்லாம் மூடு மந்திரமாகவே இருக்கும்.
ஆனாலும் மனைவியை அன்புடனே நேசித்து வந்தான். வேறு எந்தக் கெட்ட குணமோ, துர்ப் பழக்கமோ அவனுக்கு இல்லை. சமீபத்தில் பெற்றோரை யும் இழந்த அவளுக்கு அவனே எல்லாமும் என்றாகி விட்டது.
இப்படியிருக்கையில் கடைசிச் சண்டையின் போது அவன் சடலமாகிவிட்டான். இவள் சிறு காயங் களோடு செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டாள். இனம் காணாமல் இருப்பதற்காக தெரிந்தவர் குடும்பங் களோடு சேர்ந்திருந்தாள். செட்டிகுளம் முட் கம்பி முகாமில் பட்ட அவஸ்தை எல்லாம் சொல்லி முடித்தாள். வீடுகட்டகாசுதருவார்கள் இழப்பீடுதருவார்கள் நிவாரணம் தருவார்கள் என்று பார்த்திருந்து காத்திருந்ததுதான் மிச்சம், ஒன்றுமே நடக்கவில்லை. நடக்கப் போவதும் இல்லை என்று புரிந்து கொண்டாள்
ஏன் வீணாக அடிப்படை வசதிகளும் இல்லாமல் கிடந்து வாடுவான், சொந்த இடமும் போகவிடு கிறார்கள் இல்லை. நீங்கள் வன்னியைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று பதில் வந்த பின்புதான் அக்காள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தாள்.
இந்தக் கதையெல்லாம் அக்காளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அத்தான் குணசேகரம் வந்து சேர்ந்தான். சின்னப் பெண்ணாகக் கண்ட சிங்கார வல்லியை இப்போது பார்க்கையில் சிங்காசனத்தில் இருத்த வேண்டும் போலிருந்தது. அப்படியொரு எடுப் பான தோற்றம், பல பெண்கள் கோடியொரு வெள்ளை, கன்னியொரு பிள்ளை என்று ஆகிவிடுகிறார்கள். ஆனால் அபூர்வமாய் சிலபேர் எல்லாம் இழந்தாலும் அழகை மட்டும் இழக்காமல் வயதுக்கொரு அழகோடு கொலுவீற்றிருக்கிறார்கள், மச்சாள் சிங்காரவல்லியை நோக்குகையில் குணராசாவுக்கு இப்படித்தான் சிந்திக்கத் தூண்டியது. மேலும் அவள் பிள்ளை பெறாத தேகத்தாள் அழகு சுமந்திளைத்த ஆகத்தாள் கேட்கவா வேண்டும். அவளைக் காண்கையில் இவருக்கு இனம் புரியாத பரவசம் ஊர்ந்து பரவுகிறது. என்னென்னவோ ஆகிறது. என்றாலுமவர் விழித்துக் கொண்டார். ஒழுக்கத்தை மேலாகக் கருதுபவர். ஊரிலே இப்படி யாக எத்தனையோ கேவலங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இவற்றையெல்லாம் இழிவாகப் பேசி பழிக்கும் அவர், இழிசனர் வழக்கை மேற்கொள்ள லாமா? படித்தவர் உத்தியோககாரர் கெளரவமானவர் என்ற மகிமை எல்லாம் என்னாவது? வீண் சபல புத்திகளுக்கு ஆளாகாது, கந்தோர் நண்பர் சொல்லிய

Page 13
,
ஆலோசணையை அறிவுரையை மேற்கொள்வதெ6 திடம் கொண்டார். மனைவியை புதுப்பெண்ணாக6ே நோக்கலானார். மணமாகுமுன் அவளைக் காண்ை யில் எப்படியெல்லாம் உணர்வெழும், புதுவெள்ளL பாயும் அப்படியொரு கிளர்ச்சியை எதிர்பார்த்தே தன மனைவியை அணுகினார்! அவள் போகும்போதுப் வரும்போதும் வேலைகளில் ஈடுபடும் போதும் குனியுப் போதும் நிமிரும் போதும் அங்க அசைவுகளை அங்கலாவண்யங்களை கூர்ந்து நோக்கினார். ஏதும் கதை பேசும் போதும் உரசுமாப்போல் நின்று சரசமாகச் கதைப்பார். முரசு தெரிய சிரிப்பார். பதிலுக்கு வெண்பல் வரிசை தெரிய சிரிக்கும் அழகை வெகுவாக இரசிப்பார் குணசீலிக்கு இவரின் புது நடவடிக்கைகள் பிடித்திருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. ஏதோ இந்தளவில் என்றாலும் சந்தோசப்படுத்துகிறாரே என்று திருப்திப்படுவாள். என்றாலும் அதை வெளிக்காட்டாமல் விரும்பாதது (3 UITGò (BLUTGIÓNU JITG5 5ọŮJUTGIT. “G)Jabaló), அங்காலபார்த்துக் கொண்டிருக்
கிறாள் எல்லே! புருசனையும் பறி கொடுத்துப் போட்டு ஏக்கத்தோட இருக்கக்குள்ள அவளுக்கு முன்னால இப் படி நடக் கிறது நல் லா வா இருக கும் " என று பொய க கோபத்தோடு சிணுங்குவாள். இவர் எப்படித் தான் மாரடித்தாலும் கட்டி லறையில் நல்லபேர் எடுக்க முடிய வில்லை. சிங்கார நாச்சியாரைப்
பார்க்கும் போது உண்டாகும் உணர்வு
குணசீலியைப் பார்க்கையில் மாண்டு
போவது ஏன்? இது அவர் குற்றமா? படைத்தவன் குற்றமா? மனதின் மாய வித்தையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாமல் அவர் தடுமாறி அல்லாடிக் கொண்டிருந்தார் இந்த மன குழப்பத்தோடு அலுவலகத்தில் இருந்து வழக்கத்தை விட வீடுவந்து சேர்ந்தார். அப்போது குணசீலி வீட்டில் இல்லாதது போல் தெரிந்தது. பிள்ளைகளும் வீட்டில் இல்லை. குளியலறை மூடியும் மூடாதது போல் இருந்தது. அது பூட்டுச் சரியில்லை. தண்ணீர் சலசலக்கும் சத்தம் கேட்டது. குணசீலிதான் குளிக்கிறாளா. "குணசீலிகுணசீலி" என்று கூப்பிட்டுக் கொண்டே லேசாக கதவைத் தள்ளினார். அங்கே அவர் கண்ட காட்சி திகைக்க வைத்தது. அங்கே. சிங்கார வல்லிதான் நின்றாள். அவள் நின்ற கோலம், கண்களின் யாலம் காணக்கண் கூசுதே! இல்லை கண் கோடி வேண்டுமே! மெல்லிய சிறுதுண்டை இடையிலே கட்டிக்கொண்டு, ஈரத்துணி ஒட்டிநின்று அங்க அழகை எல்லாம் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது. பெண்மையிடம் இப்படியும் ஒரு அழகா| மயக்கும் சக்தியா விஸ்வாமித்திரனை
- |
 
 
 

மேனகை இந்தக் கோலத்தில் நின்றுதான் Լ0Այ&ë) னாளா குணசேகரத்துக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை. அவர் இந்த உலகத்தில் இல்லை. கந்தர்வ உலகில் சஞ்சரித்தார். அவளும் அதை அனுமதிப்பவள் போலானாள். மோகனப் புன்ன கையை உதிர்க்கிறாள். வித்தாரக்கள்ளி அப்போது அவர் எதுவும் செய்திருக்கலாம். பச்சை விளக்குக் காட்டியாயிற்று. ஆனாலும் இப்போதைக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். எப்போதாவது இதை ஒரு கை பார்க்கலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். அப்போது தான் கவனித்தார் தான் ஆண்மை யுள்ள ஆண்மகன்தான். எந்தக் குறைபாடும் இல்லை எனக்கு அன்று இரவு கூடத்தில் வழமைபோல படுத்துக் கிடந்தார் குணராசா, நித்திராதேவி அருகில் வர மறுக்கிறாள். வேறு தேவியை அருகணைக்க நினைக் கிறாரா மனைவி படுக்கையறையில் ஆழ்ந்த துயிலில் கிடக்கிறாள் பிள்ளைகளை அனைத்த படி, வல்லிக் கொடியாள் சின்ன அறையில் தனித்துத்தான் கிடக்கிறாள். அவளுக்கும் தூக்கம் பக்கம் வர மறுக்கிறது போலும், ஈனக்குரலில் ஏக்கத்தை விடுக்கிறாள். இவரை தூது விட்டு அழைக்கிறாள். இவருக்கு இருப் புக் கொள் ளவில்  ைல. படுக்கையில் கிடக்கவும் முடிய வில்லை! பொல்லாத கற்பனைகள்
கதவைப் பார்க்கிறார் அது சாத்தி இருக்க வில்லை. இன்று இலேசாக திறந்தே கிடந்தது. அவள் மானசீகமாக அழைக்கிறாள். இவர் மெள்ள மெள்ள பூனைபோல அடியெடுத்து வைக்கிறார். அவள் இவர் வருகையையே எதிர்பார்த்து வாயிலையே பார்த்திருந் தாளா என்ன? கட்டிலில் இருந்து எழுந்து நின்று நாணப் புன்னகை யோடு தலை கவிழ்ந்து நின்றாள். மரியாதையா, அரியாசனமா?
அவர் தலையை வருடினார். அவள் படுக்கை யிலே சாய்ந்தாள்.
அத்தான் இன்றைக்குத்தான் என் வாழ்க்கையில் எனக்கு உண்மையான இன்பம் கிடைத்தது. நீங்கள் தான் உண்மையான ஆண்மகன்! அவள் காதோடு கிசுகிசுத்தாள்.
குணராசாவுக்கு இந்தக் கற்பனைக் கனவு கலைந்தது. கடவுளே, இப்படி ஒருநாளும்நடக்கக்கூடாதே என் துணைவிக்கு துரோகம் மனதாலும் நினைக்கக் கூடாது. இன்பமோ துன்பமோ இலாபமோ நட்டமோ இழப்போ பிழைப்போ எல்லாம் கட்டிய மனைவி யோடுதான் அமைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் இந்த ஒழுக்கசீலர்

Page 14
களி
ు
இயக்குநரின் எண்ணங்களுக்கு அமைவாக நிகழ் களத்தையும் காலத்தையும் சிருஷ்டித்து சுவைஞனை நம்பகத் தன்மைக்கு வெகு அருகில் அழைத்து வருவதாக கலை இயக்கம் (Art Direction) அமைந்துள்ளது. எனினும் தமிழ் சினிமாவில் கலை இயக்குநரின் உழைப்பு பார்வையாளனின் புரிதல் வியூகத்தை விட்டு விலகி விடுவதால் உரிய அங்கீ காரத்தைப் பெறுவதில்லை. யதார்த்தம் சாராத மனோரதியக் காட்சி விதானிப்பே தமிழ் சினிமாவில் முனைப்புப் பெற்றுள்ளது. நுட்பமான சித்திரிப்பால் புனைவையும் இயற்பண்பென மயங்கச் செய்யும் ஆளுமைமிகு உன்னத கலை இயக்கத்தை தமிழ் மகாசனங்கள் வெறுமையென ஒதுக்கிவிடுகின்றனர். மிகை வெளிப் பாடான பேரரங்கு வனப்பியலே காத்திரமான கலை இயக்கமென்று சொப்பன சஞ்சாரம் புரிகின்றனர். நம்பகத் தன்மையை அறவே தகர்த்து அதீத நிறம் பூசும் இயல்பினையே நெறியாளர்களும் விரும்புகின்றனர். தமிழ் சினிமாவில் கலை இயக்குநர் சுயமான சுதந்திரத்தோடு செயலாற்ற முடியாத சூழலே காணப்படு கிறது. இயக்குநருக்கும் கலை இயக்குநருக்குமான இடைத் தொடர்புகளில் ஆரோக்கியமின்மை தென்படு கிறது. கதை விவாதத்தில் கலை நெறியாளருக்கான இடம் பல சந்தர்ப்பங்களில் மறுதலிக்கப்படுகிறது. வேண்டாத விஸ்வரூபக் காட்சி விதானிப்பு நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்திக் கொச்சைப்படுத்தி விடுகின்றனர். நெறியாளர் ஷங்கர் கதை விவாதத்தில் கலை நெறியாளர் தோட்டாதரணியை உள்ளீர்த்துத் திருத்தங் களை உளமார ஏற்பதாகக் கூறப்படுகிறது. எனினும் "நாயகன்" திரைப்படத்தில் மும்பை தாராவிப் பகுதியை தத்ரூபமாக உருவாக்கிப் புதிய அத்தியாயத்தைத்
 
 
 
 

தொடக்கிவைத்த தோட்டாதரணியை நெறியாளர் ஷங்கர் "சிவாஜி திரைப்படத்தில் பிரமாண்டத்தின் பின்புலத்தில் மிகை மனோபாவக் கல்லைஞராக அடையாளப்படுத்தியது அபத்தமாகவேயுள்ளது.
கூத்து, நாடகம் என்பவற்றிலிருந்து நீட்சி பெற்ற வடிவமாக சினிமா அமைந்துள்ளது. சமஸ்கிருத நாடக மரபில் சந்திமம், வியாஜிமம், வேஷ்டிமம் என அரங்கப் பொருள்கள் மூவகையாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், யப்பானிய மரபு நாடகக் கலைகளில் சிறப்பிடம் வகிக்கும் கபுக்கி நாடக மரபு மேடை அலங் காரத் தைக் கட்டாய இலட்சணமாகக் கொண்டமைந்துள்ளது. அரச மாளிகை, நதி போன்றன 'செட் போடப்படுவதோடு பல்லக்கு வாகனங்கள் என்பனவும் பயன்படுத்தப்படும்.
ஆங்கிலமொழி வணிக சினிமாக்களில் கூட கலை இலக்கியம் பல படங்களில் விதந்துரைக்கப்
பட்டுள்ளமை அவதானத்திற்குரியது. 1959இல் வில்லியம் எ. ஹோனிங், எட்வர்ட் கார்ஃபேக்னா,

Page 15
ஹஹேன்ட் என்போரின் கலை இயக்கத்தின் பிரமாண்ட வெளிப்பாடான "பென்ஹர், 1974 இல் டீன் டவுளரீஸ் கலை இயக்கத்தில் வெளிவந்த தி கோட் பாதர் 11, 1982 ஸ்டுவர் க்ரைக் பாப் லைங், மைக்கேல் ஸிர் டன் என்போரின் கலை இயக்கத்தில் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தை அற்புதமாகச் சிருஷ்டித்த காந்தி, 1997 இல் பீட்டர் லாமண்ட், மைக்கல் ஃபோர்ட் என் போரின் கலை இயக்கத்தில் வியக்கவைத்த "ரைற்றானிக்" போன்ற வணிக சினிமாக்களில் நேர்த்தியான கலை இயக்கத்தை நோக்கலாம்.
தமிழ் சினிமாவில் முகிழ்நிலைக் காலத்தில் பிரமாண்டமான அரண்மனைகளும், பெரு மதில்களும், திருவோலக்க மண்டபமும், அமர்க்கள காண்பிய மூலகங்களும் கலை இயக்குநரின் கைவண்ணத்தில் பார்வையாளரை வசீகரித்தன. புராணப் படங்களில் தேவலோகம் - வைகுண்டம் - கைலாசம் - நரகலோகம் - சத்தியலோகம் போன்ற புனைவுக் களங்களை கற்பித உடை விதானிப்பின் உதவியோடு உருவாக்கினர். 1939 இல் வெளிவந்த சிவகவி திரைப்படத்தில் M. வர்மாவின் அரங்குகளும், 1945 இல் வெளிவந்த அபிமன்யு திரைப்படத்தில் கலை இயக்குநர்களான செளத்திரி, குட்டியப்பா என்போரின் கலை இயக்கமும் அக்காலத்தில் சிலாகித்துப் பேசப்பட்டன. அதேபோல 1955 இல் கலை இயக்குனர் அங்கமுத்துவின் ராஜதேசிங் திரைப் படத்தின் அரங்க அமைப்பும் கலை இயக்குனர்களான கங்கா, செல்வராஜ் என்போரின் "காத்தவராஜன்" திரைப்படக் கலை இயக்கமும் பார்வையாளரை வெகுவாகக் கவர்ந்தன. பிற்காலத்தில் பாரதிராஜாவின் திரைப் படங்களில் கிராமங்களும், பாலச்சந்தர் திரைப் படங்களில் மத்தியதர வகுப்பினரின் இல்லங்களும் திரையில் விரிய கலை இயக்குநர்கள் உறுதுணை யாகினர். இயக்குநர் அமீரின் "பருத்தி வீரன்" சினிமா வின் வருகையோடு பாரதி ராஜாவின் கிராமங்கள் அமச்சூர்த்தனமானவை என்ற விமர்சனங்கள் கூர்மை யடைந்தன. இயக்குனர் மகேந்திரனின் "முள்ளும் மலரும்" படத்தில் இடம் பெறும் ராலி கதைப் பின்னலோடு இரண்டறக் கலந்து (கலை - ராமசாமி) திரைப்படத்திற்கு வலுச் சேர்த்துள்ளது.
பாரதி, மதராசப் பட்டினம், பழசிராஜா, பொக்கிஷம் போன்ற படங்கள் வரலாற்று மீட்டுருவாக்கக் கலை இயக்கத்தை நேர்த்தியாகப் பிரதிபலித்தன.
கலை இயக்கம் நான்கு பரிமாணங்களில் வகைப்படுத்தப்படுகிறது. 1. யதார்த்த வாதப் படங்களுக்கான கலை இயக்கம் 2. பொழுதுபோக்கு அம்சம் நிறை படங்களுக் கான
கலை இயக்கம் 3. வரலாற்றுக் காலப் படங்களுக்கான கலை இயக்கம் 4. எதிர்காலப் புனைவுப் படங்களுக்கான கலை இயக்கம்
ஜீவந
 
 

தோட்டாதரணி, பி. கிருஸ் ண மூர்த் தி, T முத்துராஜ், சமீர்சந்தா, சாபுசிறில், ராஜீவன், வீரசமர், செல்வக்குமார், ஜே. கே. விதேஷ், சீனு, மகி, ராகவன், A. அமரன், M பிரபாகர், B, சாய்குமார், மணிராஜ், ஐக்கி, ரெம்போன் என்போர் (இப்பட்டியல் முழுமையான தன்று) அண்மைக் காலத் தமிழ்த் திரைப்படங்களில் கலை இயக்குனர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாயகன் திரைப்படத்தின் யதார்த்தக் கலை இயக்கத்திற்காக தேசிய விருது பெற்றிருந்தாலும், தோட்டாதரணி என்ற பெயரை பாமரப் பார்வை யாளரும் உச்சரிக்க சிவாஜி திரைப்படத்தின் புனைவுப் பாடலில் இடம்பெறும் பிரமாண் டக் கண்ணாடி
மாளிகையே காரணமாயிற்று. அர்ஜூன் என்ற மாற்று மொழிப் படத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சந்நிதி, பொற்றாமரைக்குளம், சுற்றியுள்ள நீண்ட பிரகாரம், கற்றுண்கள் என்பவற்றை 3 கோடி செலவில் செட் போட்டு வியக்க வைத்தார். (அந்த 'செட் படப் பிடிப்பு முடிந்த பின்னரும் மக்களின் காட்சிக்கு விடப் பட்டது). சந்திரமுகி திரைப்படம் மூன்று தீபாவளி தாண்டி ஓடியதற்கு நடிகர் ரஜனிகாந்த் காரணமன்று! தோட்டாதரணி என்ற மெய்நாயகன் (Real Hero) பிரதான பின்புலம். எனினும் இவ்வுண்மை இறுதிவரை ரசிகர்களால் உணரப்படாமை பெருஞ்சாபக்கேடாகும். இரவுக்காட்சியில் சந்திரமுகி மாளிகையின் முகப்புத் தோற்றம் திரைப்படத்தில் பல தடவை இடம்பெறுகிறது.

Page 16
ஒவ்வொரு தடவையும் அத்தோற்றம் ஏற்படுத்தும் நுண்ணதிர்வே மூடு மர்மத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் முதன்மைக் கதவும் மூடுமர்மக் கதவும் தரும் விடுப்பார்வமே கதையோடு ஒன்றச் செய்கின்றன. ரஜனிகாந்த் - வடிவேலு இருவரும் பாழடைந்த அரண்மனைக்குள் நுழையும்போது ஒளிப்பதிவாளர் High angle mid shot 36 UT60601,5555, 5(6535(5 இடையே அவ்விருவரையும் காட்சிப்படுத்துகிறார். கணநேரமே திரையில் தோன்றி மறையும் இக்காட்சி இயக்குநர் - ஒளிப்பதிவாளர் - கலை இயக்குநர் மூவரையும் ஒரே குவிவுமையத்தில் இணைத்துள்ளது. (சிவாஜி படத்தில் பல்லேலக்கா பாடலில் இயக்குனர் - கலை இயக்குநர் - ஒளிப்பதிவாளர் மூவரும் திரையில் தோன்றும் காட்சியைப் போலல்லாது பெறுமதிமிக்கது)
கலை நேர்த்தியான வணிக சினிமா வில் பணியாற்றும் வேட்கை மிகுந்தவர் கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி மத்வாச்சாரியார் (கன்னடம்), ஒரு வடக்கன் கதா (மலையாளம்), பாரதி (தமிழ்) ஆகிய படங்களுக்காக மூன்று முறை தேசிய விருதினைப் பெற்றவர். "நான் கடவுள்" திரைப்படத்தில் தத்ரூபமான கலை இயக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார். காசியில் அகோரியான ருத்ரனை தந்தை இனங்காணுங் காட்சியில் சுற் றரி வரப் பரிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் களம், பிதிர்க்கடன் - நீராடல் என்பன நிகழும் படித்துறை, மாற்று வலுவுடையோர் வசிக்கும் தாண்டவனின் பாதாள கூடம் போன்றன அதிர்வுகளை
 
 

நிகழ்த்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன. "பாண்டவர் பூமி திரைப்படத்தில் செடிகள் வளர்ந்து காணப்படும் சிதைந்த வீடும், பாழடைந்த சமாதியும் நம்பகத் தன்மையோடு அமைந்துள்ளன. ஜீவலெட்சுமி யின் 3ம் வகுப்புத் தமிழ் நோட்டுக்கூட காலத் தேய்மானத்திற்குரிய நேர்த்தியோடு வெளிப்படுத்தப் படுகிறது. இம்சையரசன் 23ம் புலிகேசி திரைப் படத்திற்கு கலை இயக்கமே மிகப்பெரிய அத்திபாரம் என்பதை உணர்ந்து Title card இல் நாயகனான வடிவேலுக்கு அடுத்ததாக கலை ஆடை வடிவமைப்பு - P. கிருஸ்ணமூர்த்தி என இடம்பெறச் செய்த இயக்குநர் சிம்புதேவன் பாராட்டுக்குரியவர். அம்பு, வாள் என்பவற்றின் தோற்றத்தில் சிறுபிள்ளைத்தனம் தெரிந்தாலும் ஆயுத ஊழல் என்ற கருத்தியலின் பின்னணியில் அர்த்தபுஷ்டியான கலை இயக்கமாக மாறிவிடுவது அவதானத்திற்குரியது. 'பாரதி திரைப் படத்தில் பாரதியார் வாழும் வீட்டின் களம் ஏழ்மையின் அவலம் பார்வையாளனிடமும் சுவறும் வகையில்
அமைந்துள்ளது. எட்டயபுரம் சமஸ்தானம், காசி, ஆலயச் சூழல், அச்சுக்கூடம், "இந்தியா பத்திரிகையின் பிரதிகள், வீட்டிலுள்ள தளபாடங்கள், கதவு, ஊஞ்சல் என அனைத்தையும் P.கிருஸ்ணமூர்த்தி அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.
திரை விம்பங்கள் உலாவும் வெளியை கலை இயக்கத்தின் ஊடாகப் பார்வையாளரிடம் சுவறச் செய்தவர்களில் கலை இயக்குனர் T.முத்துராஜ் குறிப்பிடத்தக்கவர். "அற்புதத்தீவு திரைப்படத்தில் வாமன புரி அரணர் மனையினையும் விநோத இருக்கைகளையும், கந்தர்வன் கோயில் சார்ந்த களத்தையும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்" திரைப்படத்தில் Cowboy கதாபாத்திரங்களை தென்னிந்திய நிகழ் வெளியில் அலாதியாக நடமாட வைத்த இயக்குநர் சிம்புதேவனின் முயற்சிக்கு தக்க துணையாகியுள்ளார். மரவீடுகள், தூக்குமரம், நீதிமன்றம், தொப்பி, இரும் புப் பட் டி என அனைத் தும் 0 0 W b 0y

Page 17
கலாசாரத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளன. "பொன்னர் - சங்கர்" படத்தில் ஏராளமான கேடயங்களும் கொம் புகுழல் வாத்தியங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. "கிரோன் ஷோட்டில்" பெரு மேளங்களின் மீது ஆடும் நடன மாதர் "சந்திரலேகா காட்சியினை நினைவுபடுத்துகின்றனர். கணினி வரைகலைத் தொழில்நுட்பம் கைவரப்பெறாத காலத்தில் "சந்திரலேகா வெளிப்படுத்திய பிரமாண்ட உணர்வை "பொன்னர் - சங்கர்" பாடலினால் தந்துவிட முடிய
வில்லை, பழசிராசா திரைப்படம் 1796 இன் கேரளத் திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அரண்மனை, flubŁOTEGOTLb, LTT6Ub, கட்டில், அம்பு, வில், கேடயம், ஊஞ்சற் சங்கிலி, பல்லக்கு, குதிரை வண்டில், களரிப் பயிற்றுக்களம், பழசித் தம்பிரானின் வசிப்பிடம் அனைத்துமே நம்பகத் தன்மை மிக்க செதுக்கலாக கச்சிதமான கால வெளிப்பாட்டோடு அமைந்துள்ளன. சிலவகையான காண்பிய மூலகங்கள் வாடகைக்கு எடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்திலும் பொருத்தமான வற்றினைத் தேர்வு செய்யும் ஆளுமை கலை இயக்குநர்கள் அனைவரிடமும் பொருந்தி அமைவ தில்லை என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.
கலை இயக்கத்தை கலாபூர்வமான அனுபவமாகச் சுவறச் செய்பவர்களில் சமீர் சந்தாவும் விதந்து குறிப்பிடத்தக்கவர். "தசாவதாரம்" திரைப்படத்தில் 12ம் நூற்றாண்டுக் காட்சிகளுக்காக பணியாற்றியுள்ளார். (U.S.A காட்சிகளை M.பிரபாகரும் ஏனையவற்றை தோட்டாதரணியும் வடிவமைத்துள்ளனர்) பெயர்த் தெடுக்கப்படும் அரங்கநாதர் சிலையும், ரங்கராஜ நம்பியை சங்கிலியோடு பிணைக்குமிடத்தில் போடப் படும் பழங்காலப் பாணியிலான பூட்டும் சமீர்சந்தாவின் திறமைக்கு தக்க சான்றுகளாகும். "இராவணன்" திரைப் படத்தில் வீரய்யன் வாழும் பகுதியும், இராமர் சிலையும் மிக நேர்த்தியாக வடிவமைக் கப் பட்டுள்ளன. "ஆளவந்தானில்" பாழடைந்த வீடும் "கஜனியில் குறுநேர நினைவிழப்பிற்கு உள்ளான சஞ்செய் ராமசாமி (சூர்யா)
 
 
 
 
 

வாழும் அறையும் அங்குள்ள வரைபடமும் கதைக்கு வலுச் சேர்க்கிறது. எனினும் சஞ்செய் ராமசாமி தனக்குத்தானே பச்சை குத்திக் கொள்ளுமிடத்தில் எழுத்துரு (Font) மாறுபட்ட வகையில் அமைவது முரணான கலை இயக்கமாகும். மேலும் தொழிற் சாலையில் மருத்துவ மாணவி (நயன்தாரா) கை பேசியில் உரையாடும் காட்சியில் அருகிலே சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரமொன்றின் குறுவட்ட நிழல் களோ அசைவின்றி காணப்படுகின்றன. இக்காட்சி கணினி வரைகலை நுட்பத்தால் சக்கரத்தின் சுழற்சி நிகழ்வதை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழ் சினிமாவின் வணிக ரீதியான வெற்றிக்குத் துணைபுரியும் முதன்மைக் கலை இயக்குனர்களில் சாபுசிரில் விதந்துரைக்கத்தக்கவர். பாய்ஸ் (Boys) திரைப்படத்தில் போத்தல், மின்குமிழ், குளிர்பான வெற்றுப்பேணி போன்ற பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரங்கம், எந்திரன் திரைப் படத்தில் உலோகத் தாலான அசையும் இரட்டைச் சிங்கம் என்பன இவரது புனைவு (Fantasy) கலை இயக்கத்திற்கு சான்றுகளாகும். புவியியல் வெளிக்கு அந்நியமான பொருள்களை அழகியல் நோக்கில் பயன்படுத்தும் தன்மையும் இவரது பலவீனமாகும். "ரெட்" திரைப்படத்தில் தேர், "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில் தெய்வம் தந்த பூவே பாடலில் மரம் போன்றன புவியியற் கழலோடு பூரணமாகப் பொருந்தாது நெருடலான கலைப் பொருளாகவே காட்சி தருகின்றன. "லேசா லேசா" திரைப்படத்தின் மரவீடும், "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் 'மாங்குளம் மைல் கல்லும் சாபுசிரிலின் ஆளுமையின் குறிகாட்டிகளாகும்.
கலை இயக்குநர் ராஜீவன் வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என்றவாறாக இயக்குநர் கெளதம்
(வாசுதேவ) மேனனின் திரைப்படங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தில் பார்வையாளனின் கோணத்தில்

Page 18
நகரும் படிக்கட்டு மாகில்ஸ் (புழுக்கள்) மண்ணுள் புதைந்திருக்கும் பிணங்கள், தொங் கவிடப் பட்ட விரல் என்பன கதையின் மூடுமர்மத்தினை சிறப்புற வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன. "வாரணம் ஆயிரம்" திரைப் படத்தில் "முன்தினம் பார்த்தேனே" பாடலில் தமிழ்நாட்டின் பழைய பேருந்து, உந்துருளி, மகிழுந்து (Car) என்பன நேர்த் தியாக இடம் பெற்றுள் ளன. அதேபோல "இராணுவப் பயிற்சி முகாம்" காட்சியும் நம்பகத் தன்மையோடு அமைந்துள்ளது.
காதல், வெயில், பூ முதலிய திரைப்படங்களில் கலை இயக்குநர் வீரசமரின் பங்களிப்பினை இனங் காணலாம். காதல் திரைப்படத்தில் பூப்புனித நீராட்டு விழாக் காட்சி வெகு யதார்த்தமாக இடம் பெறுவதற்கு வீரசமரின் கலை இயக்கம் உறுதுணை யாகியுள்ளது.
மேலும் சிறுநீர் கழிக்கும் ஓடை "சேவல் பண்ணை விடுதிக் காட்சிகள், உந்துருளிச் சீர்களம் என்பனவும் நம்பகத்
தன் மையோடு காணப் படுகின்றன. "வெயில்” படத்தில் கிராமம் சார்ந்த காட்சிகளை அழகுற வடிவமைத்துள்ளார். உதிர்சுவர் கொண்ட பாண்டியின் வீடு, காய வைக் கப் பட்ட தீப் பெட்டிகள் சாக்குகளை உதறிக் கொண்டிருக்க எழும் தூசி அனைத்துமே அற்புதமான வகையில் பதிவாக வீரசமரின் கலை இயக்கமே கைகொடுத்துள்ளது.
மதராசப்பட்டினம், ஈ முதலிய திரைப்படங்களில் கலை இயக்குநர் செல் வக் குமாரரின் காத் தரமான பங்களிப்பினை அவதானிக்க முடிகிறது 1940களில் சென்னை நகரை "மதராசப் பட்டினம்" வெகு நேர்த்தியாக வெளிக் கொணர்ந்துள்ளது. பழங்கால மவுண்ட் ரோட், சென்ரல் நிலையம், ட்ராம் வண்டிகள், நீராவி என்ஸ்லின் ரயில், அன்று ஒடிய தூய நதி போன்ற அனைத்தும் வரலாற்றுக் காலப் படங்களுக்கான கனதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளன "ஈ" திரைப்படத்தில் நெல்லைமணியை (பசுபதி) மறைத்து வைக்கும் பாழடைந்த மேல்மாடித் தொகுதி மாவாட்டும் கல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GT 60 L| 60া செல்வக்குமாரின் éj560Ꭰ 6Ꮣ0 இயக்கத்தினை சிறப்புற வெளிப்படுத்தி யுள்ளன.
1970களின் வரலாற்றைத் தத்ரூபமாக மீட்டுருவாக்கம் செய்த படமாக "பொக்கிஷம்" அமைந்துள்ளது. திண்டுக்கல் பூட்டு, பழைய பாணியி லான கீதாஞ்சலி நூல், எழுபதுகளின் நாட்குறிப்புகள், பழங்கால முகப்பு அட்  ைட எழுத் துரு வோ டா ன தமிழிலக்கிய நூல்கள், துறைமுகத் தொழிலாளியின் நீலநிறச் சீருடை (5[[) (8 L! IT g! Oir a ngle ) (8 L! T60i []) அனைத்துமே அற்புதமான வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
"பொல்லாதவன்” படத்தில் (B.
ருக்கும் உதிரிப்பாகங்கள், ஆடுகளம் படத்தில் (ஐக்கி) சேவல் சண்டைக் களம், தவமாய் தவமிருந்து படத்தில் (ஜே. கே) அச்சகம், "மகாநதி படத்தில் (ஜே. கே) சிவப்பு விளக்குப் பகுதியும், மண்ணாங்கட்டி (தலைவாசல் விஜய்) வாழும் பகுதியும், வாகை சூடவா |படத்தில் (சீனு) செங்கற்களை என்பன கதைக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அலாதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கலை இயக்குநருக்கு திரை விம்பங்கள் நடமாடும் காலங்குறித்த புரிதல் அவசியமானது. "உளியின் ஓசை" திரைப்படத்தில் குந்தவை நாச்சியார் தொடங்கி ஆடு மேய்க்கும் அழகி கதாபாத்திரம் வரை மேற்சட்டை (blouse) அணிந்து நடித்திருப்பது சோழர் காலம்சார் கருத்தியலைச்
வெளிக் கொணர்கிறது. 1980களில் நிகழ்வதாக "சுப் பிரமணிய புரம்" கதைக்களம் அமைகிறது. அறிமுகக் கலை இயக் குநர் ரெம் போன் அக் காலத் தோடு பார்வையாளன் பொருந்திப் போகும் வகையில் களத்தினை வடிவமைத்துள்ளார். எனினும் "கண் கள் இரணர் டால்" பாடலில் சோதிட நிலையம்

Page 19
பெயர்ப்பலகையில் லை என்பது எழுத்துச் சீர்திருத்த வடிவில் அமைந்து காலக் கட்டுமானத் தைத் தகர்த்துவிடுகிறது. நுண்நோக்குடன் கலை இயக்குநர் பங்காற்ற வேண்டியது முக்கியமானதாகும். மேலும் காலத் தேய்மானங் குறித்த புரிதலும் கலை இயக்குநருக்கு இன்றியமையாததாகும், 7ம் அறிவு திரைப்படத்தில் போதிதர்மனால் எழுதப்பட்ட நூலானது சில நூற்றாண்டுகளின் பின்னரும் சிறு வெளித் தேய்மானங்கூட இல்லாமல் அருங்காட்சியகத்தில் காணப்படுவது நம்பகத்தன்மைக்கு முரணானது. "சிவாஜி திரைப்படத்தில் தேநீர்க் கடையிலுள்ள சிவப்புநிறத் தொலைபேசி பளபளக்கிறது. ஏலவே பலரின் பாவனைக் குள்ளானது போன்ற தோற்றமே மேம்பட்ட கலை இயக்கம் என்பதை தோட்டாதரணி நன்கு அறிந்தவர் எனினும் இயக்குநர் ஷங்கரின் 'பளபளக்கும் படங்களில் புத்தம்புதியவற்றைக் கையாண்டு விடுகிறார். "முத்து" திரைப்படத்தில் (கலை இயக் குநர் - மக) "குலு வாலி" என்றெழுதப்பட்ட பெயர்ப் பலகையின் பெயின்ற் வாசம் பார்வையாளனின் நாசியிலும் வீசுகிறது. மேலும் அம்பலத்தார் பாத்திரத்தின் காரின் முகப் பிலுள்ள எருமைத்தலை அந் நியமான 溪 பொருளாகி நெருடலைத் தருகிறது. கில்லி திரைப் படத்தில் (கலை - மணிராஜ்) ஆதிவாசி என்பதை ே அதிவாசி எனக் கல்வி அறிவு குறைந்த நண்பன் எழுதியதாக நாயகனான வேலு (விஜய் ) குறிப்பிடுகிறான். (ஒட்டேரி நரி என்பதும் ஒட்டேரி நரி என்றே எழுதப்பட்டுள்ளது. வசீகரமும், வடிவ நேர்த்தியும் கலந்த 'அ' என்ற எழுத்துரு தவறுகளோடு தன் பெயரை எழுதக்கூடிய ஒருவரால் எழுதப்பட்ட தல்ல என்பதைத் தெளிவாக விளக்கு கிறது. (தனது பெயரின் முதல் எழுத்தை மொழியின் உயிரெழுத்தில் முதன்மையானதை - அழகிய எழுத்திலே தவறாக எழுதுவதில் தர்க்கம் இடிக்கிறது)
ஒளிப்பதிவாளருக்கும் இயக்குனருக்கும் கலை இயக்குநருக்குமான அலைவரிசை சிறப்பாக அமையும் போது தான் திரைப்படம் அற்புதமான கலையனுபவமாக வெளிப்படும். எனது சிறுவயதில் சாவி திரைப்படத்தில் நடிகர் மோகன் Tea ray யின் கீழ் கைத்துப்பாக்கியைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்தது. நான் திருவிழாவிலே வாங்கிய பொம்மைத் துப்பாக்கியை விட அது கேவல மானது. ஒளிப்பதிவாளர் அதீத அண்மைக் காட்சியில் காட்டியதால்தான் அதன் முழு வடிவமும் வெளித் தெரிந்தது. தாண்டவம் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கையிலேந்திய நவீனரக துப்பாக்கியினையும் அதீத அண்மைக் காட்சியில் பார்த்தபோது புன்னகையினைப் புதுப்பித்துக் கொண்டேன். பார்வையாளன் நகக்கணு வைக் கூட உற்றுநோக்குவான் என்பதை நன்கு புரிந்து
滚
ஜீவந
 
 
 
 

கொண்டே கலை இயக்குநர் செயலாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக கிரீடம் திரைப்படத்தில் Motor Cycle shot இல் (பாடற் காட்சியில்) த்ரிஷாவின் விரலில் நகப் பூச்சு இன்மையும் நகப்பூச்சும் அடுத்தடுத்து இடம் பெறுவது இயக்குநரால் அவதானிக்கப்படாத போதும், பன்முறை நோக்கும் பார்வையாளனின் வியூகத்தில் எள்ளலாகவே பதிவாகிவிடும். ஒப்பனையாளரின் தவறாக இருப்பினும் ஒளிப் பதிவாளரும் இயக்குனரும் விழிப்போடு செயலாற்றியிருப்பின் தேவையற்ற விமர்சனங்களைப் புறந்தள்ளியிருக்கலாம்.
வணிக வெற்றியின் சாத்தியப்பாடுகளைச்
செதுக்குவதில் கலை இயக்கத்திற்குப் பெரும் பங்குண்டு. "திருடா திருடி" திரைப்படத்தில் இடம்பெற்ற "மன்மதராசா” பாடலின் நடன அசைவின் துரிதத் தன்மைக்கு பின்னணியில் ஆடிக் கொண்டிருந்த நீண்ட கறுப்புத்துணி வலுவூட்டுவதாக அமைந்திருந்தது. கதை நிகழ்களத்தினை உயிர்ப்புடன் வெளிக் கொணரும் கலை இயக்குநர்களின் வகிபாகம் பாமர மக்களாலும் விதந்துரைக்கப்பட வேண்டும். பேரரங்கு வனப்பியலே உன்னத கலை இயக்கமென்ற மாயை தகர்ந்து, யதார்த்தவாதக் கலை இயக்கம் குறித்த விழிப்புணர்வு சுவைஞனிடமும் சுவற வேண்டும். நகரும் படிமங்கள் நம்பகத்தன்மையோடு உருவாக்கப் படுவதற்கு ஆளுமைமிகு கலை இயக்குநர்களே அத்திபாரமாக அமைகின்றனர். நுண் தரிசனத்தோடு யதார்த்தவாத கலை இயக்கத்தில் பற்றுக் கொண்ட கலை இயக்குநர்களின் வருகையே தமிழ் சினிமாவுக்கு மாறுபட்ட முகத்தினை வழங்க முனையும் என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்.

Page 20
ஆய்வுகூடத்திலிருந்து வெளியேறி கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு நான் வந்து சேர்ந்த போது எதிர்பார்த்தது போலவே அது * ଓ ଗ୍ରାID It" ର ରା ଗଠୀ ର ରା, [di] F ଓ ଓF T 126 கிடந்தது.
எங்கள் சிறுவர்களும் சிறுமிகளும் நூற்றுக் கணக்கில் இரைச்சலோடு ஒடியாடித்திரிந்த மண்டபம் இன்று வெறும் மின் குளிரூட்டிகளின் ரீங்காரத்தோடு மனித சஞ்சாரமேயின்றி இருப்பதைப் பார்த்ததும் உணர்ச்சிமிகுதியால் மார்பில் லேசாய் வலித்தது. புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த பேஸ்மேக்கர் சிறிது இடையூறு செய்வது போலிருக்கவே சிறிது நேரம் அழுது பார்க்கலாமா என்றுகூடத் தோன்றியது எனக்கு
"ஹலோ தாத்தா! நான் மைக்." ஜியோபோனில் கரகரத்தான் எனது இளைய மகன். எங்கள் விண்ணியல் ஆய்வு மையத்தின் முப்பத்தியெட்டு வயது நிரம்பிய துடிப்பான உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரி மைக் எனப்படும் 60)LDö53560 UGUL6ÖT LGJ6ÖTG)J.
இந்தப் புதிய கிரகத்தில் மனிதக்குடியிருப்பு களுக்கு வழிகாட்டிய எங்கள் மரியாதைக்குரிய ப்ரொபஸர் பெஞ்சமின் ட்ரென்வர் குடும்பத்தில் எனக்குப் பின்பு எஞ்சியிருக்கும் ஒரே வாரிசு, சரியாக முப்பத்து மூன்று மணிநேரத்திற்கு முன்புதான் எனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தனது நண்பர்கள் மற்றும் GUITAIÓlųjųUGOTGITÜG56řT EF355b Space Planet Kab 5ọ6ÖTJÓlað பூமியை நோக்கி மத்திய அரசாங்க ஒப்புதலின்றிய தனது இரகசிய பயணத்தை மேற்கொண்டிருந்தான்.
அவர்களுக்கு முன்னரே என்னையும் சில விஞ்ஞானிகளையும் தவிர இங்கிருந்தவர்கள் அனை வரையும் பூமிக்கு அருகாமையில் விண் வெளியிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் எங்களது வானியல் ஆய்வுகூடமான "மியூறியன் மிதக்கும் மாளிகைக்கு" அனுப்பி விட்டிருந்தோம். எங்களது இரகசியத் தாக்குதல் திட்டம் ஒருவேளை அம்பலமானால் வடக்குவாசிகளின்
அரசாங்க நெருக்கடிகளுக்கு எங்களது அப்பாவி
மக்களும் குழந்தைகளும் உள்ளாகிவிடக்கூடாது எனும்
முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான் அது.
"ஹலோ மைக், சொல்லு சொன்னபடியே
 
 
 

%.
மூதூர் மொகமட்ராபி
போய் சேர்ந்திட்டீங்களா என்ன? இப்ப என்ன நடக்கின்றது அங்கே.?" பரபரப்புடன் கேட்டேன்.
"ஆம் ஆனால் எனக்குச் சிறிது பயமாயிருக்கு டாட். நீங்க சொன்னபடி எங்களால அவுஸ்திரேலி யாவுக்கு போய் இறங்க முடியல்ல. அங்க இருந்து தாக்கினா ஜப்பானிலுள்ள ஜிவியோ டெர்மினல் வேவ்ஸ்கள் மூலமாக டெர்மிட்ஸ்க்கு தெரிஞ்சுடுமாம் என்று ப்ரொபஸர் காப்ரியோவும் டாக்டர் சில்வியா அண்டர்ஸனும் சொல்லிட்டிருந்தாங்க. என்னால மறுக்க முடியல் ல அதனாலதான் இப் ப எல் லாருமே அண் டாட்டிக் காவிலதான் இறங்கிக் கொணர் டி ருக்கிறோம். ஆனா." என்பதோடு மைக்கின் தொடர்பு விட்டுப்போனது.
அடச்சே! சிறிது நேரமான பின்புதான் இனிமேல் தொடர்பு கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு தென்துருவப்பகுதியிலே தாக்கிய ஓர் பாரிய எரிகல் மோதலரினால் தொலைத் தொடர் பு வலையமைப்பில் பாதிப்பேற்பட்டிருந்தது. அதனால் சமிக்ஞை வாங்கிகள் அவ்வப்போது செயலிழப்பதும் பின்பு இயங்குவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன.
"சே! ஏன்தான் நான் சொன்னபடி செய்யாமல் தங்களிஷ் டத்துக்கு குழப் பியடிக்கின்றார்களோ, அண்டாட்டிக்காவில் இருந்து தாக்கினால் அது கொக் ரோச்சுகளுக்கு பெரிய சேதத்தையும் கோபத்தையும் உண்டுபண்ணாதே. இந்தச் சின்னப் பையன்களையும் பெண்களையும் நம்பி இத்தனை பெரிய காரியத்தை ஒப்படைத்ததுதான் எனது தவறோ?" என்று ஒருபுறம் மனசாட்சி வாட்டி வதைத்தது.
ஜியோ போனை மீண்டும் முயன்று பார்த்தேன். ம்ஹம், அது அமைதியாயிருந்தது. அவர்கள் தொடர்பு கொண்டால்தான் உண்டு.
வேறுவழியில்லை. எனது திட்டம் நிறை

Page 21
வேறாது போனால் மனித இனம் இன்னும் ஆயிரக்கணக் கான ஆண்டுகள் நசிந்து போய்த்தான் வாழ்ந்தாக வேண்டும். அதைவிட இந்த வாழ்வா சாவா முயற்சியிலே மோதிப்பார்த்து விடுவதுதான் சரியாக இருக்கும்.
ஆம், நான் செய்ததுதான் சரி. அவ்வளவு தூரம் போனவர்களை இனிமேல் திருப்பியழைக்கவும் முடியாது. யோசனையோடு மெல்ல நகர்ந்து மண்டபத்தின் இடதுபுறத்திலிருந்த மிசைட்லக் பந்தாட்டத் தளத்தினைக் கடந்துசென்று மின்தூக்கி உலோகப் புழையினுள் நுழைந்ததும் அதன் தானியங்கிக் கதவுகள் சட்டென மூடிக்கொண்டன. அதன் உலோகச் சுவரிலிருந்த டிஜிட்டல் பட்டையில் பழக்கப்பட்ட எனது விரல்கள் இரகசிய எண்களை ஒற்றியதும் பரிசோதனைக் குழாய் போன்ற பிரமாண்டமான கண்ணாடிக்கூண்டு ஒன்று என்மீது கவிந்தது. மறுகணம் அந்த கட்டிடத்தின் 176 தளங்களும் சில வினாடிகளில் கால்களின் கீழே நழுவிச் சட்டென நின்றது. மெல்ல இறங்கி ஓர் பிரமாண்டமான கண்ணாடி உருண்டையொன்றினால் கவசமிடப் பட்டிருந்த மொட்டை மாடி போன்ற மேல்தளத்திற்கு வந்தேன்.
உச்சியில் நின்றபடி சுற்றிலும் ஒருதடவை பார்த்தேன்.
மெலிதான செம்மஞ்சள் நிற வானம் எங்கும் பரந்து விரிந்து கிடந்தது. உச்சியிலிருந்து சரிந்திருந்த சிறுபொட்டுச் சூரியன் வெகுதூரத்திலிருந்த ஷார்ப் மலைமுகட்டை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான்.
எப்போதாவது மனசு கனத்திருக்கும்போது இந்த இடத்திற்கு வந்து வெகுநேரம் நின்று கொண்டிருப்பதுண்டு. இங்கிருந்து பார்த்தால் தெரியும் பள்ளத்தாக்கையும் தொடுவானத்தையும் என்னால் மறக்கவே முடிவதில்லை. இங்கு இப்போதுள்ள கட்டிடங்களையும் பிரமாண்டமான காற்றாடிகளையும் விண்ணியல் ஆய்வுகூடங்களையும் பார்க்கும்போது, 160 வருடங்களுக்கு முன்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் சிறியதும் பெரியதுமாய் இரும்புத் துருவேறிய பாறைக்கற்கள் மட்டுமே பரவிக் கிடந்த புழுதி மணல் பொட்டல் வெளியா இது என்று ஒவ்வொரு முறையும் எனக்கு வியப்பாகவே இருப்பதுண்டு.
தொடுவானக் கீறலையும் ஆங்காங்கே அதை மறைக்கும் மணல்மேடுகள் தவிர எதுவுமே இல்லாதிருந்த இடத்தில் ஓர் அறிவியல் சொர்க்கத்தையே உருவாக்கிய எங்கள் முன்னோர்களின் உழைப்பின் வலிமையை இப்போதுள்ள ஒவ்வொரு சென்ரிமீற்றரும் பேசிக் கொண்டிருந்தன. அந்த உழைப்.
மீண்டும் ஒளிர்ந்தது ஜியோபோன். "ஆங். சொல்லுங்க, உதவி கட்டுப்பாட்டு அதிகாரி திரு. மைக் பஸ்டன் அவர்களே!"
"டாட், நீங்க கோபமா இருக்கிறீங்க.சரிதானே?" "ம். அதெல்லாம் இருக்கட்டும் நீ இப்ப அங்க நடக்கிறதைச் சொல்லு மைக். அது போதும்"
"அவுஸ்திரேலியாவில் இறங்காதது தவிர நீங்க
 
 
 

சொன்னபடியேதான் எல்லாம் செய்திட்டிருக்கிறோம். தூரம் தான் ஒரு பிரச்சினை. ஆனால் BMA அளவை 29734GF லிருந்து 30286GF வரைக்கும் கூட்டி வச்சிட்டா அட்டாக்கிங் பவர் உங்க அவுஸ்திரேலியக் கணிப்புக்கு சரியாயிடும் என்று ப்ரொபஸர் காப்ரியோ போல்ட் சொல்லிட்டிருக்கிறார்."
"ஆமா. கிழிச்சான் அந்தச் செம்பட்டைத் தலையன்! அந்த ரேஞ்ச் எல்லாம் அதுகளுக்குப் போதாது. குறைஞ்சது BMA ரேஞ்சை 43570 GF க்கு மாற்றச் சொல்லு, க்ளைமேட் எப்படியிருக்கு?"
"அது ஓரளவு சாதகமாத்தான் இருக்கு. ஆனால் வானம் தெளிவா இருந்தா அதுகள் மீது பயோ மிசைல் அட்டாக் தாக்குதல் நடத்திறது எங்களுக்கே ஆபத்தாயிடாதா டாடி.."
"அப்படி ஒண்ணும் ஆகாது என்றுதான் நம்புறேன். ஆனால் ஒன்று. இன்னும் சரியாக நூற்றி எண்பத்திநாலு மணிநேரம்தான் உங்களால அங்கே தங்கியிருக்க முடியும், மைக், ஒண்னு சொல்லட்டுமா உங்களுக்கு?"
"சொல்லுங்க” "நீங்களெல்லாம் பூமிக்குப் போயிருக்கிறது ஒன்றும் பிக்னிக்குக்காக அல்ல. அத்தோட இப்ப இருக்கிறது நம்ம தாத்தாவும் அவரோட ஆட்களும் எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு கைவிட்டு வந்தபோது இருந்த பழைய பூமியும் கிடையாது. அதை ஞாபகத்துல வச்சிருங்க. ஒகே?
"அதுசரி இதுவரைக்கும் எத்தனை தடவை பீஎம்ஏ தாக்குதல்களை நடத்தியிருக்கிறீங்க?"
" ஒருநிமிஷம் இருங்க டாட் ட்ரயல் அட்டாக் ஒன்றிரண்டு பழைய ரேஞ்ச் 29734 GF யில இரண்டு அனுப்பினோம். ஆனா அதுக்கு இதுவரை பதில் எதுவும் தெரியல்ல. அப்படியிருந்தா கூட அதை கிலான் கிட்டதான் கேட்க வேணும், கிலான் இங்கிருந்து 40 கிலோமீற்றர் தள்ளியிருக்கிறான். இங்க ஜியோ போனைத் தவிர வேற போன் எதையும் யூஸ் பண்ண முடியல்ல. அப்படிச் செய்தா இந்தோனேஷியன் தீவுகள்ல இருக்கிற டேர்மிட்ஸ்களுக்கு நாங்க இருக்கிற இடம் தெரிஞ்சுடுமாம். அதனாலதான். அவனைத் தொடர்பு கொள்ளவே முடியல்ல."
"சரி, அவன் நேரடியாக என்னோட பேசினால் பார்ப்போம். நீங்க அங்க இறங்கின ஸ்பேஸ் ப்ளனட் கேப்பை என்ன செஞ்சீங்க. பத்திரமா மறைச்சு வச்சிருக்கீங்கதானே.?"
"ஆங் அது. இருக்கு டாட் பனிப்பாளங்களால தான் மூடி வைச்சிருக்கிறோம். அதோட டெர்மினல் பெனல் பற்றரியெல்லாம் கூட கழற்றித்தான் வச்சிருக்கோம். டோண்ட்வொரி"
"ஓகே மிகக் கவனமாயிருங்க. அவங்களுக்
犯

Page 22
கிடையில சண்டை தொடங்கியதும் நீங்க உடனே தயாராகி வெளியேறிடணும். திரும்பி வரும்போது வட துருவத்தை விலக்கியே வந்திடுங்க. லேண்ட் டேர்மிட்ஸ் கொக்ரோச்சைவிட பயங்கரமானதுகள். அதுகள் அபார மூளைவளர்ச்சியும் சேர்ந்துதான் விகாரமடைஞ்சிருக்கு. கவனம். எனிவே உன்னோட டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மைக்"
"தேங்க்யூ டாடி, அங்க எப்படியிருக்கு.?" "இங்க ஏறத்தாழ ஒரு வீட்டுச்சிறை வைக்கப் பட்ட கைதிபோலத்தான். கொஞ்சம் பெரிய வீடு அவ்வளவு தான். ரொம்பத் தனிமையாயிருக்கு மைக், சாப்பாடு மெடிசின் எல்லாம் வழக்கம் போல. இந்த புதிய பேஸ்மேக்கர்தான் கொஞ்சம். உங்களை நினைச்சு சிறிய உணர்ச்சிகள் காட்டினா உடனே மக்கர் பண்ணுது. பார்க்கலாம். ஒருதடவை மனசுவிட்டு அழுதிட்டா சரியாயிடும்."
"டோண்ட் வொறி டாட், உங்க பெஞ்சமின் தாத்தாவோட காதலியின் கதையை எழுத ஆரம்பிக்கப் போறதா சொல்லிட்டிருந்தீங்கதானே? எப்படி ஆரம்பிக் கலாம் என்று யோசிச்சிட்டே இருங்க. இன்னும் ஒரே வாரத்தில திரும்பி வந்து நானும் ஏதாவது ஐடியா தாறேன் என்ன?." என்றான் மைக் உற்சாகமாக,
ஆனால் அதுதான் நானும் எனது மகனும் பேசிக்கொள்ளும் கடைசி வார்த்தைகள் என்று புரியாமல், "அடி வாங்குவேடா நீ. திரும்பி இங்க வருவாய்தானே அப்போ உனக்கு.வச்சுக்கிறேன்டா" என்றேன்.
கி.பி. 2352 டிசம்பர் மாதம் 26ம் தினம். பூமிக் கிரகத்திலிருந்து பெஞ்சமின் ட்ரென்வர் என்ற விண்வெளி அகதி இந்த ஆளரவமற்ற கிரகத்திற்கு தன்னந்தனியாக வந்திறங்கிய நாள்.
அன்று எங்கே செல்வது அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் வரும்போது கொண்டு வந்த அற்ப சொற்ப நவீன கருவிகளை (இப்போது அவையெல்லாம் எங்கள் அருங்காட்சியகத்தில் இருக்கும் அதரப் பழசுகள்) வைத்துக்கொண்டு ட்ரென்வர் திணறியபோது எப்படியும் உயிர் வாழ்ந்தே ஆகவேண்டும் என்று மானசீகமாக அவரை உந்தியது பூமியிலே அவரோடு வாழ்ந்து இறந்துபோன அவரது காதலியின் நினைவு ஒன்றுதானாம். பெஞ்சமின் ட்ரென்வர் இந்தக் கிரகத்தில் வந்திறங்கியபோது கிடைத்த அனுபவங்களையெல்லாம் தனது எதிர்கால வாரிசுகளான எங்களை நினைத்து காட்சிப் பதிவுகளாகத் தொகுத்துத் தந்து விட்டுத்தான் இறந்திருந்தார். நிலக் கறையான்களின் ஆரம்பகாலத் தாக்குதல் ஒன்றிலே அவரது காதலியாகிய மியூறியன் மரியா படுகாயமுற்று செத்துப்போகும் தறுவாயிலே கூட எனது தாத்தா பெஞ்சமினைத்தான் காப்பாற்ற நினைத்தாவாம். ஆம் தாத்தாவைப் பார்த்து பாட்டி உச்சரித்த கடைசி வார்த்தைகள் : "நீங்களாவது உயிர் வாழவேண்டும். பெஞ்சமின் நீங்களாவது உயிர்
 
 
 
 
 
 

வாழ்ந்தாக வேண்டும்" என்பதுதானாம்.
அன்று என் தாத்தா பெஞ்சமின் ட்ரென்வர் விரக்தியடைந்து உயிர் வாழும் போராட்டத்தைக் கைவிட்டிருந்தால் இன்று இந்தக் கிரகமே மனித சஞ்சாரத்திற்கு வழியின்றி பாழடைந்து போயிருக்கும். உயிரைக் கருவிகளில் பிடித்து வைத்துக் கொண்டு அவர் பூமியிலிருந்த தனது சகாக்களுக்கு அனுப்பிய தகவல் களால்தான் பின்னாளிலே அவரைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கானவர்கள் பூமியிலிருந்து வெளியேறி இங்கு வந்தார்களாம். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து போராடி அயராது உழைத்து உருவாக்கிய இடம்தான் இந்தப் புதிய கிரகத்தின் மியூறியன் க்ரேட்டர் குடியிருப்புகள் வளாகம் விண்ணியல் ஆய்வுமையம் GTabgu)T(3LD.
"ஹலோ! டாக்டர் ஜாக் ட்ரென்வர் ஐம் கிலான் ஹியர்!"
ஆங்! நான் கேட்கிறேன் சொல்லு கிலான்." "டாக்டர் சக்ஸஸ் நாம எதிர்பார்த்தபடியே ஆப்ரிக்காவிலேயிருந்து இப்போ கொக்ரோச்சுகள் டேர்மிட்ஸ்ஸை நோக்கி தாக்குதல்களை ஆரம்பித் தாயிற்று. கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக அது நடந்து கொண்டிருக்கின்றது. நாங்க எங்க தாக்குதல்களை நிறுத்திட்டோம். ஆனா இன்னும் டேர்மிட்சுங்களுக்கிட்ட இருந்து கொக்ரோச்சுகள் மீது பதில் தாக்குதல் ஆரம்பிக்கவேயில்ல. அதுதான் புரியல்ல." கிலானின் குரலில் கலவரம் தெரிந்தது.
"அப்படியா ஆச்சரியமாயிருக்கே.? பதில் தாக்குதல் இல்லையா..? அதுவும் ஒரு மணி நேரமாகவா? அப்படியானால் ஒன்றில் அவை எல்லாமே ஏற்கனவே அழிந்து போயிருக்க வேணும். அல்லது. அல்லது. மை காட் கிலான் ஹரியப். ஹரியப் உடனே போய் எல்லாரும் பீஎஸ்கேயில ஏறுங்க கமான் யாரும் தாமதிக்க வேணாம்.புறப்படுங்க"
"ஏன் டாக்டர்?" "ஐயோ கிலான் புரியல்லயா உங்களுக்கு? அவை டேர்மிட்ஸ் உங்களோட இடத்தை ஸ்மெல் பண்ணிட்டுது. உங்க இடத்தை நோக்கித் தாக்குதல் நடாத்தப் போகுது நிற்க வேண்டாம் மைக் GTI ĦJG35?"
"சரி, டாக்டர் நாங்க கிளம்புறோம்.மைக் இங்க தானே இருந்தான். அடக்கடவுளே! இது என்ன கஷ்டம்டா"
"ஏன். மைக்குக்கு என்னாச்சு?" "ஒண் ணு மில் ல. திரும் பவும் தாக் .
மீண்டும் அறுந்தது தொடர்பு! "இது ஒரு சனியன் சே!” கோபத்தில் ஜியோ போனைத் தூக்கியடிக்க ஓங்கினேன். ஆனால் அடிக்க ഖിൺങ്ങാണു.
எங்கள் முன்னோர்களுக்குப் பின்னர் பல வருடங்கள் கழித்து பூமிக்கிரகத்திலிருந்து இங்கே வந்த

Page 23
வீடவரைக்கோளத்திலே குடியேறியவர்கள்தான் எங்களது நிம்மதியைக் குலைத்தவர்கள். அவர்கள் இந்தக் கிரகத்திலே வந்திறங்கும் வரை இன்று இவ்வளவு பிரச்சினையாகிப் போய்விட்டிருக்கும் தொலைத் தொடர்பு களைக்கூட நாங்கள் சீராகத்தான் வைத்திருந்தோம்.
தென்பகுதியில் நாங்கள் குடியிருக்கும் இந்த ம்யூறியன் பெரும்பள்ளத்தைத் தவிர இந்தக் கோளின் முழுப்பகுதியையும் வடக்குவாசிகள் கைப்பற்றினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் தங்களது அதிநவீன ஆயுதங்களையும் கருவிகளையும் கொண்டு தெற்குவாசி களாகிய எங்களை வெகுசுலபமாக வெற்றி கொண்டிருக்க முடியும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் எங்கள் மீது இதுவரையிலே எதுவித தாக்குதல்களும் புரியாமல் விட்டு வைத்திருக்கின்றார்கள். ஒருவேளை அவர்களைவிட முன்னோர்களான எங்களிடம் தகராறு வைத்துக் கொண்டால் உரிமைப் பிரச்சினைகள் ஏதும் வந்து விடக்கூடும் என அவர்கள் நினைத்தது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அதற்காக எங்களோடு இணக் கமான போக்கையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. மாறாக ஒருவித நட்புமின்றிய விரோதமுமின்றிய இடைநிலைப் போக் கையே கடைப் பிடித்து வருகின்றார்கள். எப்போதாவது ஓரிரு தடவை இந்த ம்யூறியன் பெரும் பள்ளத்தைக் கடந்து செல்லும் அவர்களது விண்கலங்களி லிருந்து எங்கள் விண்ணியல் ஆய்வுமையங்களையும் அறிவியல் கல்லூரி வளாகங்களையும் அலட்சியமாக பார்த்தபடி செல்லும் அவர்களது விஞ்ஞானிகளையும் அரச பிரமுகர்களையும் தவிர வேறு தொல்லைகள் எதுவும் இருந்ததில்லை. நாங்களும் அவர்களோடு முட்டிக்கொள்வதில்லை. ஆகமொத்தத்தில் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை.
எனது முன்னோர்கள் இந்தக் கிரகத்திற்கு வந்திறங்கிய காலத்திலே அன்றைய காலத்துக்குரிய கவச உடைகள் ஒக்ஸிஜன் உறைகள் போன்றவற்றை அணிந் திருந்தாலும் நீண்டகாலத்திற்கு அவற்றின் பாதுகாப்பை அவர்களால் பெறமுடியாதிருந்தாம். காலப்போக்கிலே அவர்களது சில கருவிகள் பழுதுபடலாயின. பின்பு வேறுவழியின்றி மெல்ல மெல்ல இந்தக் கிரகத்தின் புதிய சூழலுக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளுவதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் சிலர் இறந்தனர் நோய்வாய்ப்பட்டனராயினும் அதிஷ்டவசமாக அன்றிருந்த தட்பவெட்ப நிலையிலே சில சாதகமான விளைவுகள் ஏற்பட்டதாம். இதனால் அவர் களது உடல் உள்ளுறுப்புகளிலும் ஆயுட்காலத்திலும் பல நம்ப முடியாத மாற்றங்கள் உருவாகியிருந்தன என்று எங்கள் முன்னோர்கள் தெளிவாகக் குறிப்பெழுதி வைத்துள்ளனர்.
பூமியைவிடக் குறைவான ஈர்ப்புவிசை மற்றும்
காற்றழுத்தம், அடர்த்தி குறைவான வளிமண்டலம், வேறு
 
 

3. 貓 : - பட்ட வாயுச்சேர்மானம், போன்றவற்றிற்கு ஏற்ற வகை யிலே உடல் இசைவாக்கங்களைக் கொண்டிருந்ததால் அவ்வப்போது வந்து விழும் விண்கற்களின் தாக்குதல்கள் தவிர அவர்களால் சுதந்திரமாக நடமாடவும் இயன்றதாம். ஆனால் புதிதாக வந்திருந்த வடக்குவாசிகளால் அப்படியிருக்க முடியவில்லை. எப்போதும் தலையைச் சூழ ஒர் கண்ணாடிக் கூண்டும் கவசஉறையும் வைத்திருந் தார்கள். அவர்களால் எங்களைப் போல சரியாக நடக்கத்தானும் முடியாதிருந்தது.
எத்தனை காலத்துக்குத்தான் அவர்களால் கண்ணாடிக் கூண்டுகளுடனும் உடலைச்சுற்றியுள்ள குழாய்களுடனும் அலையமுடியும்.? அதனால் பூமியி லிருந்து கொண்டு வந்து சேர்த்த நவீன கருவிகள் மூலம் இங்குள்ள மொத்த வளிமண்டலத்திலிருந்த வாயுக் களின் சேர்மான விகிதங்களை தமக்கு வசதியானபடி மாற்றியமைக்கத் தொடங்கினார்கள். வளிமண்டலத்தின் அடர்த்தியை செயற்கையாக அதிகரித்தார்கள். துருவப் பகுதியிலே உறைந்து கிடந்த பனிக்கட்டிகளை உருகச் செய்து வடவரைக்கோளம் முழுவதும் உள்ள பெரும் பள்ளங்களையெல்லாம் படிப்படியாக நிரப்பி சிறிய கடல்களை உருவாக்கினார்கள்.
இதனால் கோளின் மொத்த தட்பவெட்பமும் படிப் படியே மாறத் தொடங்கியது. ம் யூறியன் க்ரேட்டர்ஸில் மட்டுமே வாழ்ந்து வந்த தெற்குவாசிகள் எங்களது நிலைமை கவலைக்கிடமானது. காலக் கிரமத்தில் சுவாசிக்கவே சிரமப்பட ஆரம்பித்தோம். ஒரு கட்டத்திலே அவர்களுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்தோம். அவர்களோடு பேச்சு நடாத்தினோம். ஆனால் குடித்தொகையிலும் அறிவியல் அபிவிருத்தி யிலும் வலுவான நிலையிலே இருந்த அவர்கள் எங்களது வேண்டுகோள்களைச் சுலபமாக நிராகரித்து விட்டார்கள்.
இறுதியில் அவர்கள் ஏற்படுத்திய புதிய வளிமண்டத்திற்கேற்ப நாம்தான் மாறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்து இந்த ம்யூறியன் க்ரேட்டர் பள்ளத்தாக்கை கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பினாலும் மாற்றியமைத்த அறிவியல் முன்னோடிகளாகிய நாங்கள் அனைவரும் ஏறத்தாழ அவர்களின் அடிமைகளானோம். வெளியுலகத்திற்கு வர இயலாமல் முற்றிலும் வளியடைப்புச் செய்யப்பட்ட கட்டிடங்களுக்குள் மட்டுமேதான் வாழ நிர்ப்பந்திக்கப் UÜG3LITLb.
அவசியமான வெளிப்புற நடமாட்டங்கள் கூட ம்யுறியன் க்ரேட்டர் பெரும் பள்ளத்தினுள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டது. வாழ்நாள் முழுவதும் தலைக் கவசங்களுடனும் சுவாசக்குழல் இணைப்புகளுடனும் வாழவேண்டிய மக்களாக நாங்கள் அனைவரும் மாற்றப்பட்டோம் என்பதுதான் வேதனை. எங்களுடைய
இதழ் 51

Page 24
புதிய கட்டிடங்களையும் வாகனங்களையும் முற்றிலும் வளியடைப்புச் செய்ய வேண்டிய நிலை,
அவர்களின் அனுமதியின்றி கோளைவிட்டு வெளியேறவோ விண் ணியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ தடைவிதித்திருந்தார்கள். சுருக்க மாகச் சொன்னால் இந்தக் கோளின் சகலவற்றையும் கட்டுப்படுத்தும் அரசாங்கமாக அவர்கள்தான் இருந்து வந்தார்கள்.
எத்தனை காலம்தான் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியும்.
இப்படி அடிமைகளாக வாழ்வதைவிட வடக்கு வாசிகளின் அரசை எதிர்த்து போராடி அழிந்து விடுவதே மேல் என்று எங்களது அரசியல் தலைவர்கள் முடிவெடுத்தனர். அந்த முடிவினைச் செயற்படுத்துவதற் காக எமது விண்ணியல் குழு கூடி பல திட்டங்களை முன்வைத்து ஆராய்ந்தது. எம்மை ஆக்கிரமிக்கும் வடக்கு வாசிகளை எதிர்த்துப் போராடுவது அல்லது மீண்டும் எமது முன்னோர்கள் வாழ்ந்த பூமிக்கே சென்றுவிடுவது என்பதுவும் அவற்றிலே ஒன்று. இப்போதுள்ள பூமியின் வளிமண்டலம் எங்களுக்கு உகந்த வகையிலே இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து எமது விண்ணியல் ஆய்வாளர்கள் குழுவின் பெரும்பாலான வர்கள் பின்னைய முடிவினையே பரிந்துரைத்தனர்.
ஆனால் அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. நீண்ட காலத்திற்கு முன்பு பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றங் களால் ஒருகாலத்தில் அங்கு சின்னஞ்சிறு பூச்சிகளாக இருந்துவந்த நிலக்கறையான்களும் கரப்பான்களும் விகாரமடைந்து படிப்படியாக மனிதனையே எதிர்க்கக் கூடிய பெரும் ஆற்றல்வாய்ந்த உயிரினங்களாக மாறி விட்டிருந்தன. அவற்றின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் இலட்சக்கணக்கிலே அழிந்தவர்கள் போக மீதிப்பேர் அகதிகளாகி இங்கு வந்து விட்டனர். பூமியிலே தற்போது இருக்கும் மனிதர்களும் கூட அங்குள்ள அறியப்படாத சின்னஞ்சிறு தீவுகளில் மட்டுமே மறைந்து வாழ்ந்து வருகின்றனராம் என்ற தகவலும் கிடைத்தது.
அமெரிக்க கண்டங்களிலும் ஆபிரிக்காவிலும் விகாரமடைந்த கரப்பான்கள் உடலமைப்பிலும் எண்ணிக் கையிலும் நம்பமுடியாத வளர்ச்சி கண்டுள்ளனவாம். மனிதர்கள் கண்டுபிடித்த நவீன ஆயதங்களைக்கூட இயக்கக்கூடியளவு தமது திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளதாம். அதேபோல ஆசிய ஐரோப்பிய நாடு ආoffiල්බ கறையான்கள் உடல்வலிமையுடன் கூடிய மூளை வளர்ச்சியையும் பெற்று மிகுந்த பலத்தோடு உள்ளன வாம். தொலைத்தொடர்புகள் போன்ற நுணுக்கமான விடயங்களைக்கூட திறம்படக் கையாள்கின்றனவாம்.
எங்களது ஆய்வின்படி அவுஸ்திரேலியா மற்றும் அண்டாட்டிக்கா துருவப்பகுதியில் மட்டுமே அவற்றின் ஆதிக்கம் இல்லாதிருப்பது தெரிய வந்தது. பூமிக்கிரகத்தின் இருவெவ்வேறு பாகங்களில் தீவிரமாகப்
 
 
 
 
 

பெருகிவரும் கரப்பான்கள் மற்றும் கறையான்கள் நிச்சயம் ஒருநாள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு முற்றாக அழியவேண்டிய நிலை உருவாகும் என்பது எமது கணிப்பு. ஆனால் அதுவரை காத்துக் கொண்டி ருக்க முடியாது. எனவேதான் நாங்களே அங்கு சென்று மோதலை ஆரம்பித்து வைக்கத் தீர்மானித்தோம்.
இறுதியாக ESO எனும் (பூமி மீட்பு நடவடிக்கை) இரகசியத் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டு உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.
OOO
"சியர்ஸ் போய்ஸ் அண்ட் கேள்ஸ்" பளபளக்கும் சென்ட்லியோன் விளக்குகளின் பளிச்சீடுகளிலே இசைவெள்ளம் வழிந்தோட பூமிக் கிரகத்தை கறையான் மற்றும் கரப்பான்களிடமிருந்து மீட்டெடுத்த முதலாவது ஆண்டு நிறைவு வெற்றி விழாக் கொண்டாட்டம் களைகட்டியது. வெளிர் ஆரஞ்சு நிறத்தில் ரொலேட்ஸ் பானம் எல்லோருடைய கைகளிலும் நுரைததும்பித் தள்ளாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று இசை வலுக்குறைந்து ஒலித்தது.
நண்பர்களே! உங்கள் மகிழ்ச்சிக் களிப்பிலே குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்." என்றபடி மேடையேறினான் எனது பேரன் மைக்கின் நண்பன் கிலான். கருநீலநிற கோட் சூட்டில் படு கம்பீரமாக இருந்தான்.
முதலில் பூமி மீட்பு நடவடிக்கையின் போது தனது இன்னுயிரைத் தியாகம் செய்த மியூறியன் விண்வெளி ஆய்வு மையத்தின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரி நமது அன்புக்குரிய மைக் பஸ்டன் அவர்களது தியாகத்தினை நினைவுகூரும் விதமாக 120 வினாடிகள் மெளனம் காண்பிப்போம்." என்று விட்டு அமைதி UIT6OTT6öT.
சன்னமான ஒரு நிசப்தம் நிலவ மைக்கை நினைத்து என் மனம் தேம்பியது. "மைக் ஓ.மை ஸன் ஐ ரியலி மிஸ் யூ!"
"ஏன் தாத்தா அழுறிங்க. அழாதீங்க ப்ளிஸ்" என்று என்னை உலுப்பினான் என்னருகே நின்றிருந்த மைக் பஸ்டனின் 16 வயது மகன் மைக் ஜூனியர். துக்கம் தாளாமல் அவனது தலையை வருடிக்கொடுத்தபடி அனைத்துக் கொண்டேன்.
"மெளனம் காண்பித்தமைக்கு நன்றி நண்பர் களே! இந்த வெற்றியை நாம் கொண்டாடுவதற்குக் காரணமாக இருந்த நமது மியூறியன் க்ரேட்டர்ஸ் விண்வெளி ஆய்வுக்குழுவினருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தாக்குதல் திட்டத்தை வடிவமைத்துதவிய டாக்டர் ஜாக் ட்ரென்வர் ஜூனியருக்கு நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
பூமியை ஆக்கிரமித்த கரப்பான்களையும் நிலக்கறையான்களையும் வெற்றிகொண்ட முதலாவது ஆண்டு விழாவை இந்தக் கிரகத்தில்தான் கொண்டாட

Page 25
வேண்டும் என்றும் அவ்வாறு கொண்டாடிய பின்புதா6 பூமிக்கே செல்வோம் என்று அடம்பிடித்து இன்னு இங்கேயே தங்கியிருக்கும் எமது விஞ்ஞானிகளாகிய
உங்களது உறுதியான எண்ணத்தைப் பாராட்டுகின்றேன்.
அத்துடன் பூமியை மீட்டெடுத்ததன் காரணமா வெகுநாட்கள் வரை ஒருவருக்கொருவர் எதிரிகள் போ6 நாம் கருதி வந்த நமது கோளின் வடக்குவாசிகளுட நம்முடன் ஒன்றிணைந்திருப்பது பெரு மகிழ்ச்சியையுL ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது. இதோ. வடக்கு வாசிகளின் சார்பிலே நமது வெற்றிவிழாவிலே கலந்து கொள்ள வந்திருக்கும் டாக்டர் க்ரேலண்ட் மார்வி அவர்கள்." என்று கிலான் விலகிக்கொள்ள, அவ தொண்டையைச் செருமிக் கொண்டு,
நண்பர்களே! நான் க்ரேலண்ட் மார்ஷ், சீனியர் செகரட்டர் ஜெனரல் ஒவ் நொதர்ன் கவர்ண்மண்ட் எத்தனை காலL ஆனாலும் தெற்குவாசிகளாகிய உங்களது அபா துணிச்சலையும் திறமையையும் நிச்சயம் நான பாராட்டியே ஆகவேண்டும். நீண்டகாலமாக பூமியை கலவரப்படுத்தியதும் நாமெல்லாம் இங்கு வந்து குடியேறு வதற்கு காரணமாக இருந்தவையுமான நமது பொது எதிரிகளை பூமிக்குச் சென்று தந்திரமாக அழித்தொழித்த உங்கள் வீரதீரத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் நினைவி கூர்ந்து வரவேற்கின்றேன். மிகவும் போற்றுகின்றேன்.
அதனால்தான் உங்களைப் போலவே எமது வடக்குவாசிகளும் பூமியிலே மீண்டும் குடியேறுவதற் குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையிலே பல வேலைகளைக் கூட ஒத்திவைத்து விட்டு உங்களது வெற்றிவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன்.
(பலத்த கரகோஷம்) அதேசமயம் நீண்ட காலமாக நாம் ஒருவரை யொருவர் மறைமுக எதிரிகளாகக் கருதி ஒதுங்கியிருந்த பழைய நாட்களை எண்ணி நான் இப்போதும் கூட வருந்துகின்றேன். வெட்கமடைகின்றேன். நம்மிடையே வடக்கு வாசிகள் தெற்குவாசிகள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பூமிக்கிரகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்ற வகையிலே சகோதரர் களே. பூமியிலும் சரி இந்த விண்வெளியிலும் சரி இனிமேல் எங்கு சென்றாலும் சரி நாம் பிரிந்து வாழ வேண்டியதில்லை."
இதை அவர் கூறியதும் "ஹோ!" எனும் இரைச்சல் ஒலி பின்னணி இசையோடு எழுந்தது.
"பூமியிலே நமது கூட்டு முயற்சியுடன் நிகழ்ந்து வரும் புனர்நிர்மாணப் பணிகள் அனைத்தும் ஏறத்தாழ
இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. ஏற்கனவே இங்கிருந்து 98 வீதமானவர்கள் பூமிக்குச் சென்று விட்டனர். மற்றும் சிலர் நமது "மிதக்கும் மாளிகை” யில் இடைத்தங்கலாகவுள்ளனர். ஆனால் அனைவரும் அங்சே
 
 

பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனர் என்பதால் எஞ்சியுள்ள விஞ்ஞானிகளாகிய நாமும் வெகுவிரை விலே அங்கு சென்று குடியேறவேண்டிய நாள் நெருங்கி விட்டது."
"தாத்தா அவர் சொல்வது எல்லாமே உண்மை தானா?" என்று கேட்டான் அருகே அமர்ந்திருந்த 60)LD5356T60)UUJ60T.
"ஆமாம்டா என் குட்டிப்பையா!" "நீங்களும் பூமிக்குப் போகப் போறிங்களா?" "நிச்சயமாக நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த மண்ணைப் பார்த்தாக வேண்டும் எனக்கு. ஆனால் இப்போதே அங்கு போகும்படி எவரும் உன்னை வற்புறுத்த மாட்டார்கள் என்றுதான்நம்புகின்றேன்"
"ஒருவேளை நம்மையெல்லாம் அங்கே அனுப்பிவிட்டு வடக்குவாசி விஞ்ஞானிகள் மட்டும் இங்கே முழுமையாக இருந்துவிடும் திட்டமோ ଗTଭୌଗ01($ରjit..."
"சே! நீயும் உன் குறுக்குப் புத்தியும்.பேசாமல் அவர் சொல்வதைக் கேள்!"
"..எனவே முழுக்க நாம் அனைவரும் அங்கு சென்று குடியமர்ந்ததும் இந்தக் கிரகத்தை நமது சுற்றுலாவுக்குரிய வாசஸ்தலமாகவோ அல்லது விண்வெளி ஆராய்ச்சிக்குரிய மையமாகவோ மாற்றி விடலாம் என்று நமது இணைந்த விண்ணியல் ஆய்வுக் குழுவினர் ஆலோசித்துள்ளனர். இதற்கான தீர்மானம் நாளை நடைபெறும் அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டிலே எடுக்கப்படும்"
விழா முடிவடைந்து டாக்டர் க்ரேலண்ட் மார்ஷ் அவர்கள் வடமுனைக்குச் செல்ல புறப்படலானார். வெளியில் நின்றிருந்த அவருடைய விமானம் வரைக்கும் நானும் மைக் ஜூனியரும் சென்றோம்.
"டாக்டர் ட்ரென்வர், சாப்பிடும்போதுஇந்தக் குட்டிப் பையன் என் பக்கத்திலிருந்து உங்க பாட்டியை மியூறியன் மெரீனாவைப்பற்றி நிறையப் சொல்லிட் டிருந் தான். அவ ைவ உங்களுக்கு நிறையப் பிடிக்குமோ..?"
"ஆமாம். அவங்க என்னோட தாத்தா பெஞ்சமின் ட்ரென்வரோட பூமிக் காதலி"
"அவங்களோட நினைவாதான் என்னோட தாத்தாவின் தாத்தா இந்தப் பெரும்பள்ளத்துக்கு "மியூறியன் க்ரேட்டர்" என்று பெயர் வச்சார் டாக்டர்?" என்றான் மைக்,
"fluJG5).?" "ஆமாம். ஹி இஸ் வெரி க்ரேஸி என்ட் ஸென்டிமென்டல் எபெளட் ஹேர்."
"ஆனா.இந்த இடத்துக்கு 400 அல்லது 500 வருஷங்களுக்கு முன்னால பூமியிலிருந்து வெறும் ஒற்றை டெலஸ்கோப்பில் பார்த்துக் கொண்டிருந்த நமது முன்னோர்கள் வச்சிருந்த பேர் வேறு ஒன்று என்று

Page 26
தெரியுமா உங்களுக்கு?
"அப்படியா டாக்டர்.? என்ன பெயர் அது?" என்று மைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில் எனது காதில் விழுவதற்குள் திடீரென ஒரு புழுதிப்புயல் வேகமாய் வீசத்தொடங்கிவிட்டது. உடனடியாகப் புறப்பட்டால்தான் புழுதிப் புயலின் வேகம் அதிகரிப்பதற்கு முன்பு வடபகுதிக்கு செல்லமுடியும் என்று டாக்டர் மார்ஷின் விமானிகூறவே அவர் அவசரமாக கிளம்பிவிட்டார்.
அவரது விமானம் சென்ற பின்பு ஏறத்தாழ அன்றைய இரவு முழுவதும் புயல் பயங்கரமாக வீசிக் கொண்டேயிருந்தது. அப்படியொரு மணற் புயலை வாழ்நாளில் நான் அங்கு கண்டதேயில்லை. ஆனாலும் அத்தகைய ஒன்றை தாங்கக்கூடியதாகவே எங்களது சகல கட்டிடங்களும் விண னியல் கோபுரங்களும் நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் அதுபற்றி நான் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.
OOO கடைசி மனிதனும் கூடப் பூமிக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் அன்று.
பூமிக்குச் செல்லும் கடைசியாகச் செல்லும் ப்ளண்ட் ஸ்பேஸ் கேப் வாகனம் வெளியே காத்திருந்தது. நாங்கள் புறப்பட்டுச் சென்றதும் இந்தக் கிரகம் மனிதனில்லாத ஒன்றாக மாறிவிடும் என்று நினைக்கும் போதே மனதை ஏதோ பிசைவது போலிருந்தது. ஏறக்குறைய அனைவரும் உள்ளே ஏறி அமர்ந்து விட்டிருந்தனர். நானும் மைக்கும் மட்டுமே இன்னும் ம்யுறியன் வளாகத்தினுள்ளேயே நின்று கொண்டிருந் தோம். என்னால் அத்தனை சுலபமாக அங்கிருந்து புறப்பட்டுவிட முடியவில்லை. வளாகத்தின் வெளியி லிருக்கும் அந்த மண்மேடுகளின் மீது ஒடியாடித் திரிய வேண்டும் போலிருந்தது. ஓடுவதற்கு இயலவில்லை. நடந்தேன். நடந்தேன் நடந்து கொண்டேயிருந்தேன். இத்தனை காலமும் எத்தனை கற்பனைகளுடன் வாழ்ந்த இந்த மண்ணைவிட்டு அத்தனை சுலபமாகப் பிரிந்து செல்ல முடியவில்லை.
"தாத்தா, இத்தோடு எத்தனை கடைசித் தடவைகள். இன்னுமா கடைசியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். வாங்க போகலாம்." பொறுழையிழந்து கூவினான் மைக் ஜூனியர்,
"மைக், உண்மையைச் சொல் நாம் இத்தனை காலம் வாழ்ந்த இந்தக் கிரகத்தை விட்டுச் செல்வதிலே உனக்கு வருத்தமே இல்லையா?”
"என்ன கேள்வி தாத்தா இது? இல்லாம லிருக்குமா. ஆனால் இதைவிட மனிதன் வாழ்வதற்கு வசதியான கிரகமாக பூமி இருப்பதால் இதுபற்றி என்னால் ஓரளவுதான் கவலைப்பட முடிகின்றது."
"ஒருவேளை நீ இங்கு மீண்டும் வர நேர்ந்தால் இந்த ம்யுறியன் க்ரேட்டர்ஸ் பள்ளத்தாக்கு இப்படியே இருக்கப்பே ாவதில்லை தெரியுமா?"
ܩܬܬܪ
 
 
 
 
 
 
 
 
 

"ஆமாம் தாத்தா, முந்திய நாளிரவு வீசிய மணல்புயலின் அகோரத்தைப் பார்த்த பின்பு எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது."
"எல்லாமே மாறிவிடும் இடங்களின் பெயர்கள் கூட. அதுசரி, நம்ம இடத்திற்கு முன்னைய பூமிவாசிகள் ஏதோ பெயர் வைத்திருந்ததாக டாக்டர் மார்ஷ் அன்றிரவு உன்னிடம் சொன்னாரல்லவா?
"ஆமாம். ஏதோ "கேல் க்ரேட்டர்" என்று சொன்னதாகத்தான்தான் ஞாபகம்"
"நோ. இது என்றைக்குமே மியூறியன் க்ரேட்டர்தான். முன்னைய பூமிவாசிகள் முட்டாள்கள்!"
"ஒகே, டேக் இட் ஈஸி தாத்தா, இந்த பள்ளத்தாக்கு முழுவதையும் நடந்தே பார்க்கப் போறிங்களா என்ன? போதும் வாங்க திரும்பவும் மணல் புயல் வந்துவிடும் சாத்தியமிருக்கிறதாம்."
"சரி போகலாம் போய் ஏறு. நான் பின்னால் வருகின்றேன்!" என்றேன் மனமில்லாமல்,
"இனி போக வேண்டியதுதான்" என்று முணுமுணுத்தபடி நான் நின்றுகொண்டிருந்த மணல் மேட்டிலிருந்து இறங்கி வந்தேன். அப்போது காலிலே ஏதோ ஒன்று இடறவே நின்று குனிந்து பார்த்தேன். முதலில் அது ஒரு நீண்ட உலோகத்தாலான தட்டுப் போலத்தான் இருந்தது. காலால் சற்றுக் கிளறியதும் அதன் பெரும்பகுதி மணலில் புதையுண்டு கிடக்க மேற்புறம் சூரியக்கிரணங்களில் பளபளத்தது.
"ஹேய் மைக் இங்கே வா ஒருநிமிஷம்!" அதனருகே முழங்காலில் மண்டியிட்டு அமர்ந்து நன்கு உற்றுப் பார்த்தேன்.
"ஏன் தாத்தா? உங்க மியூறியன் பாட்டியோட பெரும்பள்ளத்தின் மண்ணைப் பூமிக்குக் கொண்டு போய் வணங்கப்போகிறீங்களா?" கேலி பேசியபடி திரும்பி வந்தவன் என்னருகே நின்று குனிந்து பார்த்தான். அவன் விழிகளும் ஆச்சரியத்தில் அகல இருவரும் புதையுண்டு கிடந்த அந்த உலோகத்தட்டின் மீதிருந்த மணலைக் கைகளால் வேக வேகமாக விலக்கிப் பார்த்தபோது அதிலே.
"க்-யூ-ரி-யோ-சி-ட்-டி ரோவர் கி.பி. 2012 " என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.

Page 27
1. எஸ். கிருஸ்ணமூர்த்தி (அவுஸ்திே
இப்போதைய அவசர வாழ்க்கையில் துரிதகதி யில் செயல்பட வேண்டியுள்ளது. உணவு தொடக்கம் உடைவரை அவசரத்துக்குரியதாக மாறிவிட்டது. உண்பதற்கு ஃபாஸ் பூட் (fast food) உணவும், உடுப்பதற்கு சுடிதார் உடையு மாக சுருங்கிவிட்டது. இதே போல இரசனையும் அவசரத் திற்கு ஏற்றால் போல மாறி விட்டது. மூன்று, நான்கு மணித்தியாலங்களாக இருந்த திரைப் படங்கள், இரண்டு மணித்தியாலங்களாக குறைந்து விட்டன. திரைப் படங்கள் வியாபாரிகளின் கைகளுக்குள் போய் விற் பனைப் பொருளாகிவிட்டதால் , திரைப்படங்களில் கலையும் காணாமல் போய் விட்டது. இதனால் ஒரு இடை வெளி ஏற்பட்டுள்ளது. எப்போதும் இடைவெளிகளை நிரப்ப இன்னொன்று வரும் அவசர வாழ்க்கைக்கு ஏற்ற தாகவும் வர்த்தக நோக்கத்திற்கு அப்பால் மாற்றுச் சிந்தனையுடன் உருவாகின்றன கு று ம ப ட ங் க ள
அண்மைக்காலங்களில்தான் குறும் படங்கள் எனக்கு அறிமுகமனது, குறும் படங்களைப் பார்த்தபோது பிரமிப்புக் குள்ளாகினேன். ஒரு நிமிடம் நீளம் கொன ட குறும் படம் முதல் அரைமணித்தியாலம் நீளமுடைய குறும்படம் வரை பல்வேறு வகையான குறும்படங்களைப் பார்த்தேன்.
எனது மனதைவிட்டகலாத இரு குறும் படங்களைக் குறிப் பிடுகிறேன். மறைபொருள் என்றொரு குறும் படம், மூன்று, நான்கு
 
 
 
 

நிமிட நீளமுடையது. படத்தில் வருவது ஒரேஒரு அழகிய இளம் பெண் கண்ணாடி முன்னால் நின்று தனது கூந்தலை அழகாக சீவி தலைக்கு பூச்சரம் அணிகிறாள். முகத்துக்கு பூச்சு, கண்ணுக்கு மை, இதழுக்கு சிவப்புச் சாயம் என்று தன்னை அலங்கரிக் கிறாள். காது, மூக்கு கழுத்து என அழகிய நகைகளை அணிகிறாள். பின்னர் அழகிய சு டிதார் அணிகளிறாளர் கண்ணாடியில் தனது அலங் காரத்தில் ஏதாவது குறை இருக்கிறதா எனப் பார்க் கிறாள். இறுதியில் முழு நீள கறுப்பு அங்கியை அணி கிறாள். தலைக்கு கறுப்பு முக்காடு போடுகிறாள். கண்கள் மட்டும் வெளியில் தெரிய வெளியே போகிறாள் அந்த முஸ்லீம் யுவதி. படத்தில் ஒரு வசனம் இல்லை. ஆனால் பட ம ஆழமான கருதி  ைத ச் சொல்லுகிறது.
இன்னொரு குறும்படம் இலங்கை யில் தயாரிக்கப்பட்டது. பெயர் செருப்பு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக் கதை ஒரு பாடசாலையில் படிக்கும் இரு மாணவிகள் ஒருவர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர் வச த ப  ைடத் த குடும் பத் தைச் சேர்ந்தவர். இருவரும் நண்பிகள். வசதி படைத்த சிறுமி செருப்பு அணிவாள். ஏழைச் சிறுமியிடம் செருப்பு இல்லை. தந்தையிடம் செருப்பு வாங்கித் தரும்படி அடம்பிடித்து அழுவாள். தந்தையும் பல தடவை காசு சேமிப்பார் ஒவ்வொரு தடவையும்
இதழ் 5

Page 28
ஒவ்வொரு பிரச்சினையால் செருப்பு வாங்குவது தாமதமாகும். இறுதியாக, தந்தை செருப்பு வாங்கிக் கொண்டு வருவார். தூரத்தில் அவரதுமகள் பள்ளிக் கூடத்திலிருந்து வருவதைக் கண்ட தந்தை வாங்கிய செருப்பை காட்டுவார். தந்தை செருப்பு வாங்கி வருவதைப் பார்த்த மகள் குதூகலத்துடன் தந்தையை நோக்கி குறுக்கு வழியான ஒற்றையடி பாதை யூடாக ஓடி வருகிறாள். ஒரு கணம் பெரும் சத்தத்துடனும் புகையுடனும் வெடியொன்று வெடிக்கிறது. ஆம் மிதி வெடி, அந்தச் சிறுமி தனது கால் ஒன்றை இழக்கிறாள்.
இத்துடன் அந்தப் படத்தை இயக்குனர் முடித்தி ருந்தால் அது ஒரு சாதாரண குறும் படமாகத்தான் இருந்திருக்கும். படம் தொடருகின்றது. இழந்த காலுக்குச் சிகிச்சை செய்து வீடு திரும்புகிறாள் அந்த ஏழைச் சிறுமி அவளைப் பார்ப்பதற்கு அவளது நண்பி வருகிறாள். வீட்டு வாசலில் தனது இரண்டு செருப்புக்களையும் கழற்றி வைத்து விட்டு தயங்கித் தயங்கி உள்ளே வருகிறாள். நண்பியைக் கண்ட ஏழைச் சிறுமி இரண்டு கைகளிலும் ஊன்று கோலை ஊன்றிய படி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறாள். அந்த ஏழைச் சிறுமிக்கு தந்தை வாங்கிய ஒரு சோடிச் செருப்புக்கள் அந்த வீட்டின் ஒரு மூலையில் கிடக்கின்றன. நண்பியை கூட்டிச் சென்று அந்தச் சிறுமி தனது ஒற்றைக் காலுக்கு செருப்பை அணிந்து நடந்து காட்டுகிறாள். ஏழைச் சிறுமி யின் முகத்தில் தான் செருப்பு வாங்கி விட்ட பெருமிதம் காணப்படுகிறது. எமது கண்கள் பனிக்கின்றன. இதை விடக் கண்ணிவெடியின் பாதிப்பை ஏன் யுத்தத்தின் கொடுமையைச் சொல்லியிருக்க முடியுமா?
ஆனால், தமிழ் திரைப்படங்கள் போல வெற்றி பெற்ற படத்தை தழுவி இன்னொரு படம் எடுப்பது போல செருப்புக்கு பதிலாக துவிச்சக்கர வண்டியை கதையில் இணைத்து எடுத்த குறும்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. இதேவேளை நான் பார்க்காத குறும் படம் ஒன்று, எனக்குப் பிடித்தது இருக்கிறது. எனது இலக்கிய நண்பர் ஒருவர் இந்தக்குறும் படத்தைப்பற்றி விபரித் திருந்தார். இது எந்த மொழியும் பேசாத வேற்று மொழிப் படம் சில நிமிடங்களே நீளமுடைய இந்தப் படம், என்னை பிரமிக்க வைத்தது. கதை இதுதான்.
ஒரு டாக்சி ட்றவைர் தனது வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார். பின் ஆசனத்தில் பயணி ஒருவர் அமர்ந்துள்ளார் டாக்சி ஒட்டுனர் ஒரு சந்தியில் சிவப்பு சமிக்ஞையைக் கண்டதும் வாகனத்தை நிறுத்துகிறார் ஒரு பிச்சைக்காரன் அந்த வாகனத்தின் கண்ணாடி யன்னலைத் தட்டி காசு கேட்கிறான், பின்னால் உள்ள பயணி காசு கொடுக்கிறார். டாக்சி ஒட்டுனரிடமும் காசு கேட்கிறான் பிச்சைக்காரன். ஆனால் ஒட்டுனர் பணம் கொடுக்க மறுக்கிறான். இந்தச் செயலைப் பார்த்த பயணி அந்த ஒட்டுனர் மீது கோபம் கொள்கிறார்.
鄒 線
。裘
 
 
 
 

படத்தைப் பார்ப்பவர்களுக்கும் அவன் மீது கோபம். பச்சை சமிக்ஞை வர டாக்சி கிளம்புகிறது. பின்பு பெற்றோல் நிரப்புவதற்காக பெற்றோல் நிலையத்தில் நிற்கிறது. டாக்சி ஓட்டுனர் நடக்கச் சிரமப்பட்டு தனது ஊனமுற்ற காலுடன் தாண்டித் தாண்டி செல்கிறார். இதை ஆச்சரியத்துடன் பார்க் கிறார் பயணி. ஊனமுற்ற இவனால் கூட உழைத்து வாழமுடியும் என்றால் திடகாத்திரமான நீ ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்கிறது இந்தக் குறும்படம். இந்தப் படத்தில் இடம் பெற்ற மூன்று கதாபாத்திரங் களும் வேவ்வேறு வாழ் நிலைகளைச் சேர்ந் தவர் கள். ஆரம் பத் தில் பிச்சைக்காரன் பரிதாபத்துக்குரிய வனாகவும் பயணி நல்லவனாகவும், டக்சி ஓட்டுனர் கொடியவனாகவும் ரசிகர்களுக்குத் தெரியும், முடிவில் எல்லாம் தலை கீழான உணர்வு மாறியிருக்கும். டாக்சி ஒட்டுனர் உயர்வானவனாகத் தெரிவான்.
மேலும் சில குறும் படங்களை ஒரு குறும்பட விழாவில் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒன்று மெல்பனில் தயாரிக்கப்பட்டது. ஏனையவை ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை. ஆர்வக் கோளாறு களால் எடுக்கப்பட்ட இந்தப்படங்கள், கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போல பாடல்கள், சண்டைகள் இல்லாத றிமோட் கொன்றோலினால் துரத்தப்பட்டு பார்க்கும் தமிழ் சினிமாவைப் போன்று படத்தை எடுத்து குறும்படத்தின் தனித்துவத்தையே சாகடித்துவிட்டனர்.
குறும்படம் தயாரிப்பவர்களுக்கும் ரசிகர் களுக்கும் குறும்படம் பற்றிய தெளிவான பார்வை இதனால் இல்லாததாக்கப் படுகிறது. மேடையில் காண்பிக்கப்படும் ஓரங்க நாடகத்தை திரையில் காட்டுவதும், விவரணப்படத்திற்கு உப்பு, புளி போட்டு சுவையாக தருவதும் விளம் பரப் படங் களாக இருப்பதும் குறும்படமல்ல. சில குறும் படங்கள் நான் சிறுவனாக இருக்கும் காலங்களில் காண்பிக்கப்பட்ட கிராமத்தவரால் ஊமைப் படம் என அழைக்கப்படும் குடும்பக் கட்டுப்பாட்டுப் படங்கள் போல் உள்ளன.
ஜீவநதியின் வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
அவர்களுக்கு மணிவிழா ஆண்டாகும். அவரது
இலக்கியப்பணிகள், கல்விப்பணிகள் சிறக்க ஜீவநதி
அவரை வாழ்த்துகிறது
26
23 கடல்பம்.
- இதழ் 51

Page 29
நான் செய்த ஆயிரம் நன்மைகள் மறந்து போகும். நான் தந்த நூறுதவி நும் நினைவை விட்டகலும், நான் சரியாய்ச் செய்தவைகள், நான் என்னால் இயன்ற மட்டும் உங்களுக்காய் ஈந்த உணர்மையான பொருள், சக்தி, உங்களுக்காய் யார்க்கும் உரைக்காது சுமந்த சுமை. உங்களுக்காய் உங்களுக்குத் தெரியாமல் LւL- 956)ԳLLի, உங்களுக்காய் உமக்கு மறைத்த எனது இடர், உங்களுக்காய் தற்துணிவு கொணர்டெடுத்த பலமுடிவு, யார்க்கும் உரைக்காமல் உமக்காகச் செய்த சேவை, தீக்குள் நான் இருந்து உமக்கிறைத்த மிகுகுளுமை, உங்களுக்காய் பிறரிடத்தில் உற்ற அவமதிப்பு, உங்கள் நினைவோடு, உமக்காம் கனவோடு, உங்களது வாழ்வுக்காய் உங்கள் வளர்ச்சிக்காய், உங்கள் உயர்வுக்காய் உளமார நேர்ந்த நேர்த்தி, எல்லாம் மறந்து போகும்! சின்னஞ்சிறு தவறும் என்னுடைய காரணத்தை என் ஆதங்கம் தன்னை என்னுடைய நியாயத்தை எது என்று அறியாமல் என்மீது சுமத்துகிற ஏற்கவொணர்ணாக் குற்றமதும் சின்னப் பிழையை புறக்கணிக்கத் தக்க. அதன்
教 線
 
 
 
 

உணர்மை நிலையை உருப்பெருக்கி மிகத்துக்கிப் பிடித்ததனை விமர்சித்து பிழை என்று கோஷித்து குமிறிக் கொதிக்கையிலென் ஓரிரு குறைகள் தான் உமக்குப் பெரிதாகும் நன்மையென்றும் சொல்லாத நானென்ன செய்தாலும் நன்றி பகராத என்னாலே பெற்ற பலன் என்னாலே பட்ட கடனர் என்னாலே உற்ற புகழ் எல்லாம் மறந்து.எனது
சின்னத் தவறை சிறிய நிஜக் கோபத்தை ஏற்கும் மனநிலமையோடு நீர் எனக்குச் சிலை வைப்பீர் என்று சிறிதளவும் எணர்ணலை நான்! எனது பதிவேட்டில் எண்சரிகள் நானறிவேன்! எண் நீதிமன்றில் என் நியாயங்கள் நான் சொல்வேனர்!
எனது மனச்சாட்சி எனும் நியாய ஆயத்தில் எனது நிலை அறிவேன் என்பதனால் உம் தீர்ப்பு என்னையெதுஞ் செய்யாது என்று நடக்கின்றேன்.
த.ஜெயசீலன்
இதழ் 51

Page 30
வழுவா வழி
IBடக்கினும்.
இறந்தகால தனித்துப்போன வாழ்வைத்தினம் ருசித்துப்பார்த்த கணங்கள் ஒவ்வொன்றும் இன்றும் கூட என்னுள்நிழற்படமாக, ஒருநிலைக் கொள்ளையற்றவனென்ற
உதவாக் கெளரவத்தைப் போர்த்தி ஒவ்வொரு நாளும் அழகு பார்க்கிறது எனது அயலகம்,
உறுதிப்பிடிப்போடு ஓர் வரியாய் நடக்க முனையும் பொழுதில் “கையாலாகாதவன்.” இவனென்றே காட்சிப்படுத்தப்படும்தருணங்களில் பற்றிப்பிடித்துநிமிர; எனக்கு பக்கத்தில் எதுவுமேயில்லை. விழுந்து போன முதுகு மீது விழக்கிநகிக்கும் முகமறியாப்பாதங்கள் இப்பொழுதும் எக்காளித்தபடி. தமக்கேயுரித்தான இயல்போடு பயணிக்கின்றன.
பரிகாசப் புன்னகையுடனர்.
வழுவா வழிநோக்கிய எண் கொள்கை மீது கொடுந்தனல்கள் தூவினாற் போல் ஒர்மத்தைக் குறுக்கிட வைப்பதே அழுந்தி வாழ்வதற்கான விதியென எனக்காய் ஆரெவன் சொல்லிவைத்தான்? மணர்ணுள் புதைந்து கொணர்டிருக்கும் மனிதத்தை என்னைப் போல் இன்னொருவனால் எப்படித்துக்கிநிறுத்த முடியும்? மனிதத்தைத் தொலைத்தவர்கள் தங்களுக்கான
மரணத்தை மறந்தவர்களாய் எண் அயலில் நின்றவணர்ணம் ஒருநிலைக் கொள்ளையற்றவன் இவனென்று
எப்படிச் சொல்ல முடிகிறது எண் மீது உரத்து?
அலெக்ஸ் பரந்தாமன்
 
 
 
 
 
 
 

நான் யாராய் இருந்திருப்பேன் அக்காவின் உலகில்
பொட்டிட்டும் பூவைத்தும் அழகு பார்த்தவள்
தெருச்சணர்டைகளில் எனக்காய் வாதிட்டவள்
பாவாடை மடிப்புகளில் எனைப் பாதுகாத்து அப்பாவின் பிரம்படிகளை அவளே வாங்கியவள்
பந்திகளில் முந்தி எனக்காய் பலகாரம் சேமித்தவள்
கட்டிக் கொள்பவனை எனக்கும் பிடிக்கவேணர்டுமென மீசை வைக்கச் சொன்னவள்
அவள் உலகில் யார் யாராகவோ நான்
யாருடைய உலகிலும் தம்பியாக முடியாமல்
மூத்த மகன்
மன்னார் அமுதன்

Page 31
ப.விஷ்ணுவர்த்தினி
இரண்டு மணித்தியாலப் பயணத்தின் பின், தாய் அவளை ஓர் புதிய இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறாள்.
ஒரு தகரக் குடிலைத் தவிர, கண்ணுக்கெட்டிய தூரம் வரை அங்கு வேறு வீடுகளே இல்லை. மனிதர் களின் நடமாட்டமும் மிகக் குறைவாகவே இருந்தது. ஏழெட்டு மாடுகள் மட்டும் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன.
இத்தனை வருடங்களில் பிருந்தாவின் தாய், அவளை இவ்வாறு அழைத்துச் சென்றதே இல்லை. வருகிற வழி முழுக்க, "நாங்கள் எங்கே போகிறோம்?" என்ற கேள்வியை பல தடவை கேட்டு கொண்டே வந்தாள் பிருந்தா, "வாயை மூடிக் கொண்டு பேசாமல் வா" என்பதைத் தவிர தாயின் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் அவளின் முகம் மட்டும் ஏனோ கடுகடுத்துப் போயிருந்தது.
பத்து நிமிடங்களாக பிருந்தாவும் தாயும் அந்த வீட்டின் முன் புறத்திலுள்ள வாங்கிலில் அமர்ந்து
 
 

கொண்டிருக்கிறார்கள். பிருந்தாவிற் எரிச்சல் எரிச்சலாக இருந்தது. பள்ளிக்
கூடம் போக விடாமல் தன்னை தாய் இங்கு
கூட்டி வந்ததை நினைக்க,
நேரம் சென்று கொணர் டே யிருந்தது. தாயும் மகளும் இருந்த இடத்திலேயே அப்படியே இருக்கிறார்கள். பிருந்தாவிற்கு பசி எடுத்தது. திரும்பி வீட்டுக்கு சென்று விடலாம் போலிருந்தது. தாயின் முகத்தைப் பார்க்கிறாள்; ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். பாவம், தாய் ஐந்தாறு நாட்களாக இப்படித்தான் இருக்கிறாள். முகமெல்லாம் வாடி ஒரமாயிருந்தது.
அவளால் ஒரே இடத்தல் தொடர்ந்து இருக்க முடியவில்லை. எழும்பி அங்குமிங்குமாக நடந்து திரிகிறாள். அவர்கள் வந்து அரை மணித்தியாலத்தால் தான் அந்த வீட்டின் முகப்புக் கதவு திறக்கப்படுகிறது.
ஐம்பது அல்லது அறுபது வயது மதிக்கத் தக்க ஒரு அம்மா கதவைத் திறந்த படி வந்தாள். பிருந்தா வைத்த கண் எடுக்காமலேயே அந்த அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டினுள் ஏதோ வேலை செய்துகளைத்தவள் போலிந்தாள்.
பிருந்தாவின் தாய் அந்த வயதானவளிடம் போய் பிருந்தாவைக் காட்டியபடி ஏதோ சொல்கிறாள். அதற்கு அவளும் தலையை ஆட்டுகிறாள். ஐந்து நிமிடத்திற்கு மேல் இருவரும் உரையாடுகிறார்கள். பின், பிருந்தாவின் தாய் தன் கைப்பையிலிருந்து சில தாள்களை எடுத்து நீட்டுகிறாள். கணிகள் கலங்குகின்றன. தன் சாறித் தலைப்பால் மூக்கைத் துடைத்துக் கொள்கிறாள். பணத்தை வாங்கியபடியே அந்த வயதான அம்மா வீட்டினுள் செல்கிறாள்.
பிருந்தா நிற்கும் இடத்திற்கு வந்து அவளைக் கூட்டிக் கொண்டு போய் தன்னருகில் இருத்தி விட்டு அவள் தலையை அன்பாகத் தடவிக் கொடுத்தாள். அந்த இதமான தொடுகை பிருந்தாவிற்கு ஏதோ ஒர் அமைதியைக் கொடுத்தது.
சில நிமிடங்களின் பின் அவ் வீட்டினுள் இருந்து இருபது வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணை, யாரோ கூட்டி வந்தார்கள். அப்பெண் நடக்க முடியாமல் கஸ்ரப்படுவது தெரிந்தது. பிருந்தாவிற்கு பக்கத்தில் அப்பெண்ணை இருக்க வைத்து விட்டு, கூட வந்த பெண் யாருக்கோ போன்” பண்ணுகிறாள். ஐந்து நிமிடத்தின் பின் அவ்விடத்தில் ஓர் ஒட்டோ வந்து நிற்கிறது. திரும்பவும் அப்பெண் நடக்க முடியாமல்

Page 32
நடந்து சென்று ஒட்டோவில் ஏறுகிறாள்.
அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. திடீரென, அந்த வயதான அம்மா வந்து கையசைக்க, பிருந்தாவை தாய் உள்ளே கூட்டிச் செல்கிறாள்.
அந்த அறைக்குள் ஒரு படுக்கை விரிக்கப் பட்டிருக்கிறது. அருகே சைக்கிள் சில்லுக்கம்பி, பப்பாசிக் குழல், துணி போன்றனவும் பிருந்தாவால் அறிந்து கொள்ள முடியாத வேறு பல பொருட்களும் அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை வைத்து இங்கு என்ன செய்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளுவதற்கு பிருந்தாவிற்கு அறிவில்லை, சட்டென்று அவளைப் அப்படுக்கையில் படுத்திவிட்டு தாய் வெளியே சென்று விட்டாள்.
"ஐயோ அங்கு என்ன நடக்கிறது வயதான அந்த அம்மா அவளுள் என்ன செய்கிறாள்." அதிர்ச்சியில் அவள் மயங்கி விட்டாள்.
米米米
பிருந்தாவிற்கு எட்டு வயதிருக்கும் போதே வன்னிப் போருக்குள் தந்தை இறந்துவிட்டார். இளம் விதவையான அவளது தாயப் க் கும் இரணர் டு தங் கைகளுக்கும் பாதுகாப்பு தேவையெனக் கருதி மாலினி யின் பெற்றோர் அவளுக்கு மறுகல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.
பிருந்தாவின் சித்தப்பாவிற்கு ஒரு கால் போரோடு போய்விட்டது. இதனால் வேறிடங்களில் வேலைக்குச் செல்ல முடியாது
என்பதால் வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து தான் குடும்பத்தை நடத்தினான். அந்த வருமானத் தைக் கொணர் டு பிள்  ைளகளின் செலவுகளைச் சமாளிக்க முடியாததால் மாலினி எங்கேயாவது கூலி வேலைக்குச் செல்வது வழக்கம்.
மாலினிக்கு இம்முறை வேலை, யாழ்ப் பாணத்தில் கிடைத்திருந்தது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து போவது பெரிய கஸ்ரத்தை கொடுக்கவில்லை என்பதால் மாலினி அவ்வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் வீதிப் புனரமைப்புப் பணியில் மாலினி வேலை செய்தாள். இவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு அவளுக்கு உடல் பலம் இல்லையாயினும் குடும்பத்தை மனதில் கொண்டு கற்களை சுமக்கத் தொடங்கினாள். தான் மட்டுமின்றி தன்னைப் போல் எத்தனையோ பெண்கள் இந்த வேலை செய்யுமளவிற்கு கடவுள் தமிழ் பெண்களின் தலைவிதியை இவ்வாறு எழுதி விட்டானே
 
 
 
 
 

என்று எண்ணிகடவுளை நொந்து கொள்வாள்.
அதிகாலை நான்கு மணிக்கு எழும்பி காலை, மதியச் சாப்பாடுகளைச் செய்து முடித்து ஆறு மணி பஸ்ஸை கிளிநொச்சியிலிருந்து எடுத்து எட்டு மணிக்கு வேலைத்தளத்தை அடைந்து விடுவாள்.
மாலினிக்கு அவளது சொந்த இடத்தில் மீள் குடியேற்றம் கொடுக்கப்படாமையால் புதிய ஒரு இடத்திலேயே தகரத்திலான வீடமைத்து வாழ்ந்தாள். இதனால் அக்கம்பக்கத்தில் நெருங்கிய உறவினர்கள் TTOT L OT Ha L u LT TO OO T TO OOSJOTO OTT TO பொறுப்பிலேயே விட்டுச் செல்வாள்.
ஆரம்பத்தில் சிவநேசனும் தன் சொந்தப் பிள்ளைகள் போலவே அவர்களை வளர்த்தான். காலம் செல்லச் செல்ல அந்த வன்ம புத்தி எங்கிருந்து
வந்ததோ தெரியவில்லை, பிருந்தாவின் அப்பாவித்
தனமான அன்பை தன் காம வேட்கைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.
பிருந்தாவை மடியில் இருத்தி அன்பு காட்டுவதாகப் பாவனை செய்து தன் காம இச்சையைத் தீர்த்துக் கொள்வான். இப்படியான வேளைகளி லெல்லாம் இதை உணர்ந்து கொள்ள முடியாத பேதைப் பெண் அவள்
பிருந்தா தாயிடம் இது பற்றி எதுவுமே கூறிக் கொள்ளவில்லை. மாலினியும் தன் புருஷனைச் சந்தேகித்துக் கொள்ளவில்லை.
பதின்மூன்று வயதில் பிருந்தா பருவ மடைந்து விட்டாள். கண்கவரும் அவளுடைய உடலழகு சிவநேசனை தடுமாற வைத்துவிட்டது.
வழமை போல் அன்றும் மாலினி வேலைக்குச் சென்று விட்டாள். சனிக்கிழமை என்ற படியால் பிருந்தா வீட்டில் இருக்க நேர்ந்துவிட்டது. தற்செயலாக வீட்டின் பின்புறம் சென்ற சிவநேசனின்

Page 33
3 கண்களில், அரை ஆடையுடன் குளித்துக் கொண்டிருந்த
பிருந்தா தென்பட்டுவிட்டாள். அவனது சபலபுத்தி அவனைச் சும்மா விடவில்லை. குளித்து முடித்து உடை மாற்றும் அறைக்குள் சென்று அவள் வரவிற்காய் காத்திருந்தான்.
வேலியே பயிரை மேய்ந்து விட்டது! பிருந்தா என்ற அழகிய பூகசங்கிவிட்டது. இந்நிகழ்வு பற்றித் தாயிடம் சொன்னால் OO TY T OS0S OTTT BB OTO C OO O T TL S OsO Saa வைத்திருந்தான். அவளும் பயத்தில் மூச்சுக்கூட விடவில்லை. பிருந்தாவின் அறியாமை, பேதைத் தனத்தைப் பயன்படுத்தி, ருசி கண்ட பூனை போல், சிவநேசன் தான் விரும்பும் நேரங்களிலெல்லாம் அவளைப் பயன்படுத்திக் கொண்டான். அறியாத வயதில் இவ்விடயத்தைப் பெரிது படுத்திப் பார்க்க அவளுக்குத் தெரியவில்லை.
சிவநேசன் விதைத்த விதை, வினையாகி விட்டது. ஆம் பதின்மூன்று வயதிலேயே பிருந்தா கர்ப்பமாகி விட்டாள்.
இந்த உண்மையை எத்தனை நாள் தான் மறைப்பது பிருந்தாவின் நடத்தை சோம்பல்தனம், எதிலும் பிடிப் பற்ற வெறுப்பு நிலை, உடலியல் மாற்றங்கள் என்பன அவளை காட்டிக் கொடுத்து விட்டன.
மாலினி, சிவநேசனை திட்டக்கூடியவரை திட்டித்தீர்த்து அவன் முகத்தில் காறித்துப்பியும் விட்டாள். அவனைத் திட்டுவதால் எந்தப் பயனும் இல்லை; அவனுக்கு எந்தத் தண்டனையும் கிடைத்து விடப் போவதுமில்லை. தண்டனை முழுக்க தன் மகளுக்குத்
ஜிவநதி
துனியிரதி - 60/= ஆண்டுச்சந்தா -
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்த அனுப்ப வேண்டி
K. Bharaneetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா
K. Bhara
Commerc
Nelliady
A/C No. - 810802
 
 

தான் என்பதை நினைத்து தன்னைத்தானே வருத்திக் கொண்டாள். பாடசாலையில் பிள்ளை களுக்கு பாலியல் கல்வியை பன்னிரெண்டு வயது தொடக்கம் ஆரம்பித்து இருந்தால் இவ்வாறு என் பிள்ளைக்கு ஏற்பட்டு இருக்குமா என நினைத்து பெருமூச்சும் விட்டாள்.
இரவு முழுக்க யோசித்து ஒரு முடிவை எடுத்த பின்தான் அவள் தூங்கினாள். அம்முடிவுதான் இது; பிருந்தாவின் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும். அதற்காகத்தான் அதிகாலையிலேயே நித்திரைப் பாயால் எழும்பியவுடன் இங்கு வந்து விட்டாள். ஆனால் இது பற்றி பிருந்தாவிற்கு எதுவுமே சொல்லவில்லை.
米冰米
வயதான அந்த அம்மா தன் கைமருத்துவ திறனால் பிருந்தாவின் பிறப்புறுப்பில் பப்பாசிக் குழலை செருகி அதன் வழி சைக்கிள் சில்லுக் கம்பிகளை செலுத்தி சிசுவின் தலைப்பகுதியை "குத்தி குத்தி கருவைச்சிதைத்தாள், "என்ன கொடூரம்" வலிதாங்க முடியாது பிருந்தா கத்தினாள். வேதனையில் அவள் மயங்கி விட்டாள். பிருந்தாவின் கர்ப்பத்தைக் கரைத்து வயிற்றைக் கழுவுவதில் வயதான அந்த அம்மா ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. மயக்கத்திலிருந்த பிருந்தாவை அவள் எழுப்பினாள். எத்தனையோ தரம் தட்டி எழுப்பியும் பிருந்தாவின் மயக்கம் தெளியவே இல்லை.
பிருந்தா அழகியதொரு புது உலகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
ந்தா விபரம்
1ΟΟΟ/= Θolof BT(Β - $ 45U.S
நில் மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். ய பெயர்/முகவரி
am, Alvai North west, Alvai.
செலுத்த விரும்புவோர்
heetharan
ial Bank -
Branch
808 CCEYLKLY

Page 34
சுப்ரபாரதிமணியன்(இந்தியா)
Οιευσηώως δε
கொல்லும் பெண்கள்
குழந்தைகளின் அழுகுரல்கள், கர்ப்பம் கலைந்த பெண்களின் கண்களில் தென்படும் கண்ணிர்த் துளிகள் ஆகியவற்றின் பிம்பங்கள் திரும்பத்திரும்ப மனதை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது.
அயர்லாந்தில் பிறந்து வளர்ந்த் டேவிட் கின்செல்லா என்பவர் ருஸ்யப் பெண்களின் கருக் கலைப்புப் பற்றி எடுத்திருக்கும் படம் " கில்லிங் கேர்ஸ்” பல வகைகளில் அதிர்ச்சி தரத்தக்கது. கைவிடப் பட்டோர், கர்ப்பம், யாருக்கு அக்கறை, யார் தருவது நீதி, இறந்த பிணங்கள், தன்னை விற்றது யாருக்காக, வெறும் பாலுணர்வா, தப்பித்தலா என்று படத்தின் ஆரம்பத்தில் தென்படும் தலைப்புகளின் பின்னணியில் தென்படும் பிம்பங்களும் அதிர்ச்சிதருகின்றன.
இந்த ஆவணப்படத் தலைப்பு பீல்ட்ஸ்" என்ற எண்பதுகளில் வந்த ஒரு படத்தின் தலைப்பை ஞாபகப்படுத்துகிறது. அதில் இரண்டு ஆங்கிலேய பத்திரிக்கையாளர்கள் கம்போடியாவில் நடைபெறும் போர் பற்றி எழுதச் செல்கிறார்கள். அந்நாட்டின் தேசிய ராணுவத்திற்கும், பொதுவுடமைக் காரர்களுக்கும் நடக்கும் உள் நாட்டு யுத்தத்தினைப் பற்றி எழுதவே செல்கிறார்கள், அவர்கள் பிணைக் கைதிகளாகவும் ஆக்கப்படுகிறார்கள்.
கில்லிங் கேர்ஸ் படம் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கின் ஒரு சாதாரண கிளினிக்கில் மூன்று இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்வதில் துவங்குகிறது. மருத்துவமனையின் பின்புறவாசல் வழியே ஒரு வார இறுதி நாளில் வந்து வார விடுமுறையைக் கழித்து விட்டு அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்கிற
 
 
 
 
 
 

ஆயத்தத்துடன் இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொன டு செ ன று வரி டு கலி ற T T க ள பெரும்பான்மையோர் சிதைந்து போன இரத்தத் துண்டுகள், சிதைந்த தங்கள் கருக்களை யாரும் பார்க்க விரும்புவதில்லை. ஏழு மாதக் கருவை ஒரு இளம் பெண் கருக் கலைப் பு செய்யும் கதையும் இதிலிருக்கிறது.
குறைந்த சம்பளத்தில் வேலை செய்வது, கர்ப் பத்திலிருந்து தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்காமலிருப்பது போன்றவை இவர்களை இங்கு தள்ளி விடுகிறது. ருஸ்யாவில் காணப்படும் வேலை யில்லாத் திண்டாட்டம் பெண் களையும் பாதிக்கிறது. 1946ல் ஸ்டாலின் ஆட்சி கால சட்டமொன்று கருக் கலைப்பைத் தடை செய்திருக்கிறது. ஆனால் அச்சட்டம் 1955ல் நீக்கப்பட்டு விட்டது. 54 நிமிட இப்படத்தில் இடம் பெறும் குழந்தைகளின் அழுகைக் காட்சிகளும் அதிர்ச்சி தரத் தக்கவை. குழந்தை பிரசவம் சாதாரணத் தரையில் நடப்பதும், கருக்கலைப்பும் வெறும் தரையில் நடப்பதும் காட்டப்படும் காட்சிகளும் கூடத்தான். மேற்கத்திய நாடுகளின் பாதிப்பில் சுதந்திரப் பெண் களின் நடவடிக்கையும், அழகான இளமைக் காலங் களை தனியே கழிக்கும் பெண்களின் துயரமும் பொருளா தாரச்சிக்கல்களால் அவர்கள் தடுமாறுவதும் தெரிகிறது.
80 % ருஸ்யப் பெண்கள் ஒரு தடவையாவது அபார்சன் செய்து கொள்கிறார்கள். இரண்டு முதல் பத்து தடவை வரை அபார்சன் செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய குறிப்புகள் அதிர்ச்சிதருகின்றன.
கருக்கலைப்பை மீறி குழந்தைகளின் பிறப்பு விகிதம் ருஸ்யாவில் வெகுவாகக் குறைந்து வருகிறது. அதிகப்படியான எய்ட்ஸ் பிரச்சினையும் காரணமாக இருக்கிறது.
அங்கு கருக்கலைப்பு செய்வது அரசு சார்ந்த மருத்துவமனைகளில் இலவசச் சிகிச்சையாகும். குடும்பக் கட்டுப்பாடு என்பது செலவு வைக்கும் சமாச்சாரமாக இருக்கிறது. எனவே கருக்கலைப்பிற்கு சாதாரணமாக வந்து விடுகிறார்கள். அதிகபட்ச் 15 மணி நேர சிகிச்சை தங்களுக்கு ஏதுவானது என்று நினைக் கிறார்கள், 25 சென்டிமீட்டரில் 500 கிராம் எடை கொண்ட சதைத் துணுக்குகளை தங்கள் உடம்பி லிருந்து வெளியேற்றி விடுவதைச் சுலபமாக இளம் பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள், பாலியல் நடவடிக்கைகள் இல்லாத வாழ்க்கையை சுவாரஸ்ய மாக எடுத்துக் கொள்வதில்லை. பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்பது பற்றியும் சிலர் இப்படத்தில் பேசுகிறார்கள். பெத்ராஸ்கா மாற்றம் தந்திருக்கும் முதல் தலைமுறைப் பெண்களின் கதி இது என்கிறார்கள்.
"எல்லாவற்றுக்கும் ரேசன். டாய்லட் பேப்பர்கள், உருளைக்கிழங்கு, கருத்தடைச் சாதனங்கள் வாங்க

Page 35
ဓlဂံ ரேசந்தான். க்யூதான். இதை விட கருக்கலைப்பிற்கு காத்திருப்பது பெரிதாகப் படவில்லை" என்கிறார் காத்திருக்கும் ஒரு பெண்மணி.
கருக்கலைப்பை சட்டரீதியாக அனுமதிக்கும் முறை இந்தியாவில் 1971 ல் நடைமுறைக்கு வந்தது. சென்றாண்டில் இருபத்தைந்து லட்சம் பேர் சட்ட ரீதியான அனுமதியுடன் கருக்கலைப்பு செய்திருக் கிறார்கள், 80 லட்சம் பேர் சட்டத்திற்குப் புறம்பான முறையில் செய்து கொண்டிருக் கிறார்கள். பெண் குழந்தைகளை நிராகரிப்பது, திருமணம் அல்லாத உறவுகள், அதிகக் குழந்தை வளர்ப்பின் சிரமம் என்று பல காரணங்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற முறை யில் இது இங்கு அனுமதிக்கப்படுகிறது. பெரும்பான்மை யான நாடுகள் இதை அனுமதிக்கின்றன. அயர்லாந்து போன்ற நாடுகள் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில்தான்
கலையுணர்வு என்னில் கட்டுக்கடங்காமல் தளிர்விட்ட போது. என்னை எண் கலையுணர்வை ஊக்குவிக்கவும் எண் கவிப்பூக்கள் பூக்கும் போதெல்லாம் பார்த்து ரசிக்கவும் எண் கவிப் பயணத்துக்கு ஏணிப்படிகளாய் நின்று என்னை உயர்த்தி எண் படைப்புலக பவனிக்கு பாதை அமைக்கவும் எனக்கு யாருமேயில்லாத போதும்.
உள்ளத் தீப்பெட்டியில் உணர்ச்சித் தீப்பெட்டிகள்
డ్జ్
உரசிய போது. கவித் தீச்சுடர் உயர்ந்து எழுந்தபோதெல்லாம் அதில் குளிர்காய்ந்து சுகம் பெற யாருமேயில்லாத போதும்.
மீட்டத் தெரியாத விரல்களிடம் வீணை நான் ராகத்தை எதிர்பார்ப்பது எவ்வகையிலும் நியாயமில்லை
அது விரல்களின் குற்றமுமில்லை இதனால், சில போது உணர்மைகள்
 
 
 
 

攀 இதை அனுமதிக்கின்றன. முஸ்லிம் நாடுகளில் மறைமுகமானதாகச் செய்யப்படுகிறது.
எங்கள் திருப்பூர் நகரில் கருக்கலைப்பு மாத்திரைகளை அனுமதியின்றி விற்றதற்காக சென்றாண்டு 10 மருத்துக்கடைகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கடைகளின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டன. இடம் பெயர்ந்து வந்து இங்கு பனியன் தொழில் புரியும் தொழிலாளர்களின் மத்தியிலான பாலியல் தொடர்புகள் நிறைய கருக்கலைப்பிற்கும், மாத்திரைகளின் உபாயத்திற்கும் வழி வகுத்திருக் கின்றன. கருக்கலைப்பு மாத்திரைகள் தடை செய்யப் பட்ட பின் அதன் தொடர்ந்த மாதங்களில் மனநல மருத்துவர்களிடம் வந்து சிகிச்சை பெற்ற இளம் பெண் களின் எண் ணிக்கை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊனமாகியதுமுணர்டு எனது உணர்வுகள் ஊமையாகியதுமுணர்டு
எண் மனசென்னும் விளை நிலத்தில் முளைவிட்ட
கவிநாற்றுக்களெல்லாம் பலபோது அறுவடையாகமலே இ அழிந்து போனதுமுண்டு
எண் கவிப்பூக்கள் எத்தனையோ பூத்தும் அவை மாலையாகமலே அந்தியில் கருகியதுமுணர்டு அதே அழகுடன் மீண்டும் அவை மலர்வதாயுமில்லை
*岳
S கவிஞனே! ୫ உன் அறிமுகம், ஆதரவு, பாராட்டுக்கள் დO இத்தனைக்கும் பின்னர்தான் Θ மீண்டும் எண் கவிக்குழந்தை *添 தவழ்கின்றது ଦିଛି। "ஜீவநதியிலும்" நீந்துகின்றது QO அது நடைபயின்று
நாளை எண் கவிகளால் விடியல்கள் தோன்றும் வரை உன்னை, என்னோடு கைகோர்த்து
பயணிக்க வேணர்டுகிறேன்.

Page 36
2003ம் ஆண்டின் ஒரு இரவு வேளையில் வானொலியின் அலைவரிசையினை மாற்றிக்
கொண்டிருந்த போது உணர்வுகளைக் கிறங்க வைக்கும் குரலொன்று காதுள் நுழைந்து இதயத்தின் ஆழம் வரைக்கும் ஊடுருவியது. "எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே" என்ற ஏக்கம் ததும்பும் வரிகளை உச்சரித்த விதமே நரம்புகளுக்குள் புகுந்து ஏதோ வேதியல் மாற்றத்தினை நிகழ்த்தியது. வரிகளில் ஆத்மாவைப் புரிந்து அலாதியான உணர்ச்சியை சுவற வைக்கும் வகையில் பாடிய மோகினிப் பிசாசு யார்? என்ற தேடலில் இறங்கினேன். "என் செல்லம் என் சிணுங்கு" என "அல்பம்" திரைப்படத்தில் கொஞ்சிக் குழைந்த குரலழகி "ஸ்ரேயா கோஷல்" என்னும் தகவல் கிடைத்தது. மயிலிறகால் இதமாக வருடும் மெலொடிக் குரலாளின் ஏனைய பாடல்களைத் துருவிய போது, அந்தக் கால்கோள் நிலைக் காலத்தில் தமிழில் இரு பாடல்களை மட்டுமே பாடியிருந்தார் என்பதை அறிந்து ஏமாற்றமடைந்தேன். நண்பன் ஒருவன் தேவதாஸ் (ஹிந்தி) திரைப்படப் பாடல்களின் இறுவட்டினைக் கொடுத்தான் கேட்ட போது காந்தக் குரலும், தனித்தன்மையும் நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சியது. மூன்றாந்தர சினிமாப் பாடல்களில் கிறங்கிப் போவதை நண்பர்கள் சிலர் கிண்டலடித்தனர். உளநெருக்கடிகளில் ஆறுதல் தருவதாகவும் எந்தச் சூழ்நிலையில் செவிமடுத் தாலும் உறை நிலைக்கு நகர்த்திச் செல்வதாவும் ஸ்ரேயா கோஷலின் குரல் தோன்றியது. அந்த தேவதை யின் குரல்வழி ஸ்பரிசம் என் எழுநூறு மில்லியன் சுவாசச் சிற்றறைகளிலும் கொண்டாட்டத்தினை
நிகழ்த்தியது.
 
 
 

ஸ்ரேயா கோஷல்"
இ.சு.முரளிதரன்
தேன் மழை தூவும் தேவதை
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பகரம்பூரில் 1984 மார்ச் 12 இல் ஸ்ரேயா கோஷல் பிறந்தார். தந்தையான பிஸ் வாஜின் கோஷல் அணுசக்தி இயந்திரவியல் பொறியியலாளராவார். இலக்கியப்பட்டதாரியான தயாரின் வழிநடத்தலில் நான் கு வ ய த லேயே ஸ் ரேயா கோ ஷல் ஹார்மோனியம் வாசிக்கத் தொடங்கினார். மகேஸ் சந்திர சர்மா என்பவரிடம் இந்துஸ்தானி பாரம்பரிய இசையினைப் பயின்றார். SARE GAMA (தற்பேதைய SAREGAMAPA) போட்டியில் வெற்றியீட்டி இயக்குன ரான சஞ்சைலீலா பன்சலியின் கவனத்தை ஈர்த்து "தேவதாஸ்" திரைப்படத்திலே பாடும் வாய்ப்பினைப் பெற்றார். அத்திரைப்படத்தில் பாடிய ஐந்து பாடல்களில் "பயிரி பியா” பாடல் தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்தது. ஹிந்தி, அசாம், வங்காளி, குஜராத், கன்னடம், மராத்தி, ஒரிசா, மலை யாளம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். கசல், இந்துஸ்தானி என்பவற்றில் ஆளுமை மிக்கவராகத் திகழ்கிறார்.
இயக்குனர் வசந்த பாலனின் "அல்பம்" திரைப்படத்தின் "என் செல்லம்" பாடலினூடாகத் தமிழில் அறிமுகமானார். மாற்று மொழிப் பாடகிகள் தமிழை இயல்பாக உச்சரிப்பது இலகுவானதன்று. ஸ் ரேயா கோஷலின் வெளிப்பாட்டிலும் சில நெருடல்கள் இருக்கவே செய்கின்றன. "நினைத்து நினைத்துப் பார்த்தேன்" (7G ரெயின் போ காலனி) பாடலில் "நானே" என்பதை "நானே" எனவும், "வளையலின்" என்பதை "வலையலின்" எனவும், சரணத்தின் இறுதியில் இடம்பெறும் "உன்னுள் வாழ்கிறேன்" என்பதை "உன்னுல் வாழ்கிறேன்" எனவும் பாடியுள்ளார். "உருகுதே மருகுதே" (வெயில்) பாடலில் இடம் பெறும் நாட்டார் வழக்கு ਪਾ

Page 37
யான "ஒலகமே" என்பதை "ஒளகமே" எனவும், "சொக்கித்
தானே" என்பதை "சொக் கித்தானே" எனவும் பாடியுள்ளார். (அப்பாடலில் இணைக் குரலான சங்கர் மகாதேவன் சீர்மையோடு உச்சரித்துப் பாடுகிறார்) "யாரது யாரது இடைவிடாது"(இங்கிலீஸ்காரன்) தேன்தேன் தேன் (குருவி) முன்பே வா (சில்லென்று ஒரு காதல்) சாமிகிட்ட (தாஸ்) நீயும் நானும் (மைனா) காதல் அணுக்கள் (எந்திரன்) உன் பேரைச் சொல்லும் போதே(அங்காடித்தெரு) ஏடி கள்ளச்சி(தென்மேற்குப் பருவக்காற்று) போன்ற பாடல்கள் ஸ்ரேயா கோடிவழின் வசீகரமான குரலுக்கு வளமான எடுத்துக் காட்டுகளாகும். "விருமாண்டி" திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து பாடும் "உன்னை விட இந்த" என்ற பாடலை உயிரைக் கொல்லும் வகையிலே பாடியுள்ளார். சைந்தவியுடன் இணைந்து பாடிய "அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடல் பெரும் புகழ் தேடிக் கொடுத்தது. மேலும் பவதாரணி - ஸ்ரேயா கோஷல் - சாதனா சர்க்கம் - ஹரிஹரன் கூட்டணியின் "காற்றில் ରାଏ୬lid #5Gld" util...) மழைச்சாரலாய் மனதை நனைக் கிறது. விரசக்குரலில் பாடிய தழுவது நழுவது(அன்பே ஆருயிரே) மஸாமஜா (சில்லென்று ஒரு காதல்) பாடல்கள் சிறப்பாக அமையாததால் அப்பாணியினைத் தமிழிலே தவிர்த்து விட்டார்.
தென் திறவுகோலால் தடிப்பான இடது இதய அறையைக் கூட இலகுவாகத் திறக்கும் ஆற்றல் மிகு ஸ்ரேயா கோஷல் மாற்று மொழிகளிலும் மகத்தான பாடல்களைப் பாடியுள்ளார். தேவதாஸ் (ஹிந்தி) திரைப்படத்தில் இடம்பெற்ற "டோலாரே". 3 இடியட்ஸ்( ஹறிந்தி) திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜூபிடுபி, லகே ேைஹா முன்னாபாய் (ஹிந்தி) திரைப்படத்தில் இடம் பெற்ற "பல்பல்ஹர்பல்", பனாரஸ் (மலையாளம்) திரைப்படத்தில் இடம்பெற்ற "சந்துத் தொட்டில்லே" போன்ற பாடல்கள்
காலத்தால் அழியாத கானங் களாக நின்று நிலைக்கும் ஆற்றல் மிக்கவை.
இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினை மிகக் குறுகிய காலத் தல நா ன கு முறை
பெற்றிருக்கிறார்.
● “LJU If u JIT” LUFTL GO 2 OO3
(தேவதாஸ் - ஹறிந்தி)
@ "தீரா ஜல்னா" பாடல் 2006
பஹேலி - ஹிந்தி)
● "யே ஹற் இஸ்க் ஹாயே"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடல் 2008 (ஜல் வீ மெட்-ஹிந்தி)
● "ஜீவிரங்காலா" பாடல் 2009 (ஜோக்வா மராத்தி) & "பெராரிமான்" பாடல் 2009 (அந்த ஹீன் பெங்காலி)
2012 இல் சிறந்த பாடகிக்கான குளோபல் விருதினை "ஊ லா லா(த டர்ட்டி பிக்சர்) பாடலுக்காகப் பெற்றார். மேலும் ஃபிலிம்பேர் விருது, தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது போன்றவற்றையும் பல தடவை வென்றுள்ளார். தமிழில் முன்பே வா(சில்லென்று ஒரு காதல் - 2006) உன் பேரை சொல்லும் (அங்காடித் தெரு - 2010) பாடல்கள் தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதினைப் பெற்றன. 2011 இல் விஜய் இசை விருதை "மன்னிப்பாயா" (விண்ணைத்தாண்டி வருவாயா) பாடல் பெற்றது.
அன்வர் (Anwar) திரைப்படப்பாடலானது கேரளாவிலும் வாராந்தம் நடத்தப்படும் பாடல் தொகுப்பு பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. 2010 இல் When Harry to marry என்ற ஆங்கிலப் படத்திலும் LJITIọ60ITff. U.S.State of Ohio eb(G|5|5ff 6ìUỦeröffė,56ADTGUÖTÜ (Ted Strick land) 6ùGBUTLLUIT கோஷலைக் கெளரவித்து யூன் 26ம் தக தயை ஸ ரேயா கோ ஷ ல 560TLb (Shreya Ghosal Day) GT60Tů பிரகடனப் படுத்தினார். காமாந்தர முக்கல் முனகல்களும், உச்சஸ்தாயி குத் துப் பாடல்களும், ஆண் குரற் பாணியில் பெண் பாடகிகளின் அட்டகாச அலற ல களு க கும இ ைடயரி ல மிருதுவான "மெலொடி"யால் சொக்க வைக் கும் ஸ் ரேயா கோஷலின் செல்லமான குரல் நீண்ட காலம் ஒலிக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்.

Page 38
G5T。 ԼO եւ ԼD IT ԵԴ Gչի L- |-
இன்றைய உலகில் ஆண் பெண் நட்புமுறை தவிர்க்க முடியாதது மட்டுமன்றி அவசிய மானதாகவும் வளர்ந்துவருவதை தரிசிக்க முடிகிறது. பாலியல் வேறுபாடு என்பதற்குப் பால், அந்த ஈர்ப்புக்களின் அழுத்தங் களையும் தாண்டி ஆண் - பெண் நட்பு சுமுகமாக இயங்குவதையும், இயங்குவதற் கான தேவை இன்றைய அறிவியல் சார்ந்த உலகில் உள்ளதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். ஆண் பெண் நட்பில் மரபார்ந்த நெருடல்களையும் தாண்டி இன்னொரு புறம் பரஸ்பர உளவியல் அனுகூலமும் உண்டு இரு பாலினரும் உடலியல் ரீதியில் மாத்திரமன்றி உளவியல் ரீதியிலும் மாறுபட்டவர்கள் என்பது யதார்த்தமானது. தம் பாலினரிடம் கிடைக் காத பாலியலுக்கு அப்பாற்பட்ட இன்னும் சில விசயங்கள் எதிர்ப்பாலின் நட்பில் கிடைப்பதால்தான் இன்றைய உலகில் அவ்வாறான நட்பு ஏற்படுவதுடன் அது பிறழ்வடையாமலும் இருக்கின்றது. எனினும தொடர் ந து வருக ன ற சமூக விழுமியங்களாலும் அதன் உள் முரண் காரணமாகவும் ஆண் - பெண் நட்பு எவ்வளவு தூய்மை யானதாக இருந்த போதிலும் அது ஒரு சங்கடமான உறவாகவே இருந்து வருகிறது.
தனது பாலினத்தில் ஏற்படுகின்ற ஆண் - ஆண், பெண் - பெண் நட்பைப் போலன்றி ஆண் - பெண் நட்புக்குள் எப்போதும் ஒரு வித்தியாசமான உணர்வு அல்லது ஒரு இயல்பற்ற தன்மை நெருடலாய் உள்ளதை மறுப்பதற்கில்லை. எதிரும் புதிருமான இரு வேறுபட்ட உணர்வு நிலைகள், சிந்தனைகள், எண்ணங்கள், செயற்பாட்டு முறைகள் கொண்ட ஆண் - பெண் இருவரும் தங்கள் பாலினத்துக்குள் பழகும்போது புரிந்துணர்வுடனான ஒரு பாதுகாப்பை உணர்கின்றனர். கூட்டுனர்வான இந்த நெருடலற்ற தன்மை ஆண் - பெண் நட்பில் எந்தளவுக்கு இருக்கின்றது என்பது ஆய்வுக் குரியதே. ஒரு இயல்பான சமூக மயமாக்கமாக ஆண் பெண் நட்பு அங்கீகாரம் பெற இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கான காலம் கனிந்து இயல்பு நிலையாக மாற்றம் காணும் வரை ஆண் - பெண் நட்புக்கான தளங்கள் சமூகரீதியாக மிகவும் குறுகிப் போயே உள்ளமை கண்கூடு.
நட்பு ஒன்று ஏற்படும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான கவர்ச்சியும் கிளர்ச்சியும் எத்தனை தூரம் இந்த நட்பை சாத்தியமாக்குகிறது அல்லது அசாத்தியமாக்குகிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. இக் கிளர்ச்சியே சில இனிய தூய
 
 
 

காம இச்சைக்கு சமாதி கட்டும்
நட்புக்களுக்கு வித்திடுகின்றபோதிலும் இன்னொரு புறம் இக் கிளர்ச்சியின் உந்துதல்களால் நட்புகள் மாசுபடவும் முறிவடையவும் சந்தர் ப் பங்கள் ஏற்படுகின்றன. இதனால்தான் இன்றுவரை எமது தமிழ்ச் சமூக மட்டத்தில் உள்ள முரண் காரணமாக ஒரு திரிசங்கு நிலையிலேயே இருந்து வருவதாக சிலர் கருதுகிறார்கள்.
எமது கலாசார பண்பாடு சார்ந்த, பெண் தொடர்பான சில இறுக்கமான அம்சங்கள், ஆண் - பெண் நட்பில் பல சந்தர்ப்பங்களில் பெண் பாலினரைப் பாதித்து விடுவதை காணமுடிகிறது. ஆண் - பெண் நட்பு என்றதும் அங்கே காமம் முற்றுமுழுதாக விடைபெற்று விடும் என்று வாதிடுவதும் அபத்தமானதுதான். ஆனால் இது எந்தளவு தூரம் நட்புக்கு இடராகும் என்பதை பரஸ்பரம் இருவரும் தான் தீர்மானிக்க வேண்டும். பரஸ்பர கவர்ச்சி கிளர்ச்சிக்காகவேனும் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். மேலும் காமம் மேலெழும்போது நட்பை முறிப்பதா தொடர்வதா என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு. குறிப்பாக இன்றைய ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதால் இவ்வாறான நிலை ஏற்படும்போது பெண்களே உசாராகின்றார்கள்.
யதார்த்தத்தில் ஒரு நட்பில் காமம் மேலிடும் போது அது காதலாக மாறிவிடுவதைக் காண்கிறோம்.

Page 39
அல்லது அந்த நட்பு சிலரில் முறிவடைவதையும் காண்கிறோம். நட்பு என்ற கோணத்தில் பார்க்கும் போது இவை இரண்டுமே அவசியமற்றவை. இவ்வாறான உந்துதல்கள் ஏற்படுகின்றபோது அவை பற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசி விவாதித்து காமத்தைப் புறம் தள்ளி, தொடர்ந்தும் நட்பாகவே இருக்க முடியும் நடைமுறையில் இது அரிதாகவே உள்ளது. மேற்கத்தைய கலாசாரத்தில் இவ்வுறவுகள் இவ்வாறான வேளைகளில் தடம்புரண்டு போவது போலவே இங்கும் அரிதாகவேனும் நட்பு என்ற எல்லையைக் கடந்து பாலுறவுப் பங்காளியாகி விடுவது முண்டு இவ்வாறான சில சிதைவுகளால் தான் ஆண் பெண் நட்பை எம்மவர்கள் இன்னமும் ஏற்புடையதாக கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் ஆண் பெண் நட்பின் தூய்மையால் பரஸ்பர காம இச்சைக்கு சமாதி கட்டி இனிய நட்பைத்தொடரமுடியும் அல்லவா?
ஆண் பெண் நட்பில் திருமணத்திற்கு முந்திய நட்பு திருமணத்திற்குப் பிந்திய நட்பு என்ற இரு வகையாக நோக்க வேண்டியுள்ளது. திருமணத்திற்கு முந்திய நட்புகளை விட பிந்திய நட்புக்கள் அதிக நெருடல்களை எதிர் கொள்கின்றன. பெண்கள் வெறும்
வாழ்வில் வையகத்து வாழ்வு மரணத்தின் மதங்கள் மனிதனை மற்றொரு வாழ்வு உ
உலகில் யாவும் அழி
உயர்ந்த வாழ்வும் ஒ (5Gofa IIT355, உயிர் பிரிந்து உயிரி உயிர் எங்கே சென்றி
மனித அறிவுக்கு எட மாண்புறு ஆய்வுகள் மனிதனின் விஞ்ஞா மெஞ்ஞான அறிவின்
வானம் எவ்வாறு நி சூரியன், பூமி எங்ங் சுமையாகச் சிந்திக்க சுவையான விளக்கப்
காற்றின் பயன்பாடு காற்றின் முதல் தோ பூமியின் தோற்றம் பூமியின் பூர்வீகமன்
மரணத்தை தடுத்திட மண்ணில் வரும் நே கண(ம்) வாழ்வு மை கனமான வாழ்வதன
ای
 
 
 
 
 

குடும்பப் பெண் களாக இருந்த நிலை மாறி இன்று வீட்டுக்கு வெளியே கல்வி, வேலைவாய்ப்பு என தடம் பதித்துள்ள நிலையில், ஒன்றாக பணிபுரியும் ஆண்களுடன் பழகுவதும் நட்பு கொள்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆண் பெண் நட்பில் கூட ஆண்கள் தான் அதிகாரம் செலுத்தும் நிலை உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் சமத்துவமாகத் தோன்றினாலும் இன்னும் பயணிக்க வேண்டிய இடைவெளி இருக்கவே செய்கிறது. எனினும் இரு பாலரிடையே ஏற்படும் நட்பானது, குடும்ப உறவில் தொடருகின்ற ஆணாதிக்கத்தைக் குறைப்பதிலும் பங்காற்றுகிறது எனலாம். தம்முடன் ஒத்த போக்கை யுடைய ஒருவருடன் நட்பாக பழகுவதன் மூலம் ஒருவரின் மன இறுக்கம் தளர்ந்து அமைதி கிட்டுகிறது.
ஆண் பெண் நட்பின் மூலம் எந்த அனுகூலமும் கிட்டாது என்றும் அது தவறான உறவுக்கே இட்டுச் செல்லும் என்றும் தப்பாக எண்ணுவதால் தான் இவ் உறவு வரவேற்பைப் பெறாதிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே பல ஆண் பெண் நட்புகள் காமத்திற்கு சமாதி கட்டி ஆத்மார்த்தமான நட்பாக இன்றைய நவீன உலகில் பரிணமிக்கிறது.
துடன் எல்லாம் முற்றுப்பெறுமா? பின் உளதா? கண்டிடல் அவசியம் நல்வழிப்படுத்தியே நிற்பன -ண்டென மதங்கள் பகர்கின்றன.
ந்ெதே படும் உண்மை, ருநாள் மறைந்திடும் என்பது கண்கூடு னம் மரணத்தை தழுவிடும் என்பதால் விடும்? என அறிந்திடல் தேவை.
ட்டா நிகழ்வுகள் இன்றும் உளவே.
நிகழ்ந்தேறி நிற்பினும் ன ஆய்வுகள் கூறமுடியாதவை உளவாம் எால் தேர்ந்திட முனைந்திடல் நன்றே!
லை பெற்று நிற்பது? னம் சுற்றிச் சுழல்வது? அனந்தம் உள்ளனவாம்
விஞ்ஞானம் தந்திட்டால் .?
விஞ்ஞானம் சொல்லுதுதான் ற்றம் எவ்வாறு? என்பதை அறியோம் ஆய்வு வடிவினில்விரிவாகக் கற்கிறோம். று. ஆரம்பம் - முடிவு தெளிவு தான் உண்டா?
மனிதனால் முடியுமா? 1யையே தடுத்திடல் ஆகாது. றவதை எஞ்ஞான்றும் சிந்தித்தே னக் கனிவாகக் கழித்திடுக!

Page 40
கெகிறாவ ஸ°லைஹா
தமிழியல் 纥 விருது வழங்கல் 20
மூன்றாவது முறையாக விமரிசையா நடைபெறுகின்ற "தமிழியல் விருது வழங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவென மட்டக்களப்பு எழுத்தாள ஊக் குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர் ஓ.கே.குணநாதன் அவர்களது அழைப்பையேற்று, நாட தமிழ் மணக்கும் மட்டக்களப்பு நகரை நோக்கி கடந்த 2012.09.23 அன்று புறப்பட்டுப் போயிருந்தமை இஃது இரண்டாம் தடவையாகும். எனது "பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் கவிதை நூல் சிறந்த மொழி பெயர்ப்புக்கான தமிழியல் விருதை வென்றிருந்ததில் 2011.03.29 அன்று முதற் தடவையாக அவ்வைL வத்துக்குப் போய் வந்த அனுபவம் உண்டு எழுத்தாளர் உயர்திரு. ஜெயகாந்தன் அவர்களது படைப்புகள் பற்றி அக்கா ஸஹானா எழுதியிருந்த "சூழ ஒடும் நதி இலக்கிய ஆய்வுக்கான தமிழியல் விருதை இம்முறை வென்றிருந்தமையால் குடும்ப சகிதம் எல்லோரும் போயிருந்தோம்.
நல்வரவு கூறி நமை வரவேற்ற "மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது வழங்கல் 2011" பதாகை பெரிய எழுத்துக்களில் கண் சிமிட்டியதில் மட்டக் களப்பு மஹா ஜனா கல்லூரியைக் கண்டுபிடிப்பதில் ஒன்றும் பெருத்த காரியச் சிரமம் இருக்கவில்லை. டாக்டர்.ஓ.கே குணநாதன் கனகச்சிதமாக அனைத்து ஆயத்தங்களை யும் செய்து முடித்திருந்தார் இம்முறையும். நிகழ்ச்சி இம்முறை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கல்லூரியின் வணபிதா, சிறிதரன் சில்வெஸ்டர் அரங்கு அறிஞர் பெருந்தகைகள், இலக்கிய ஆர்வலர் கள், அதிதிகள், ஆகியோரோடு பணிவுடன் எதிர்காலத் தின் நம்பிக்கைச் சுடர்களை விழிகளிலும், பொக்கிஷங் களெனப் புத்தகங்களைக் கைகளிலும் ஏந்தியிருந்த இளம் மாணவியர் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தமை ஒரு வித்தியாசமான அழகின் தரிசனமாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மாணவனது மெல்லிய குரல் நெடுநேரம்வரை நெஞ்சில் நின்றது
議
நி
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லூரி அதிபர் திருமதிதவத்திருமகள் உதயகுமார் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா தலைமையுரை நிகழ்த்த வந்திருந்தார். இலங்கையில் வழங்கப்படுகின்ற வேறெந்த விருதுகளையும்விட, ஏன் அரச சாகித்திய விருதையும் விட தமிழியல் விருது மேலோங்கியே
இருக்கிறது என்பதை பல உதாரணங்களோடு சுட்டிக்காட்டினார். இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆய்வு யாவுமே நானாவித இலக்கியம் எனும்
பிரிவிற்குள் அடக்கப்படுவதை அவர் கண்டித்துப் பேசினார். 28.10.2011 அன்று மஹவ விஜயபா மத்திய கல்லூரியில் கடந்த வருடம் அரச இலக்கிய விருது வழங்கல் நடைபெற்றது. இதன் போது "ஈழத்துக் கலை இலக்கிய உலகு" என்ற கலாநிதி கந்தையா அவர்களது விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூலும், ஜெயகாந்தன் அவர் களது படைப் புகள் பற்றிய கெகிறா வ ஸஹானாவின் "சூழ ஒடும் நதி ஆய்வு நூலும், அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாகிய "ஒரு குடம் கண்ணிர்" நூலும் வகைமை படுத்தப்படாமல் வெறுமனே நானாவித இலக்கியமென்ற பிரிவில் உள்ளடக்கப்பட்டு எவ்வித இலக்கியப் பிரக்ஞையுமின்றி விருது வழங்கப் பட்டமை நாம் அவதானித்த அம்சம் ஆகும்.
ஒரு கல்லிலே இருமாங்காய் பறிப்பது போல, ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றியுள்ள ஒருவரது பெயரால் இன்னொரு படைப்பாளிக்கு விருது வழங்கப் படும் முறையும் தமிழியலில் மட்டுமே காணக்கிடைக்கிற உன்னதம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். அனைவருமே வியந்து போற்றத்தக்க வகைகளில் என்னென்ன விதத்திலெல்லாம் அவர்களது இலக்கியப் பங்களிப்பு இருந்திருக்கிறது என்பதை தனது உரையில் தெளிவுற சொல்லிச் சென்றார் மேலாளர் குணநாதன் அவர்கள். மட்டக்களப்பு மஹாஜனா கல்லூரியின் குறித்த அரங்கிற்கு வணபிதா,சிறிதரன் சில்வெஸ்டர் அவர்களது நாமத்தைச் சூட்டுவதில் இருந்த நியாயத்தை அவர் விளக்கியபோது வியப்பு மேலிட்டது. சுனாமி போன்ற இயற்கை அனர்த்த நிகழ்வுகளின் போதும், மற்றும் நஷ்டஈடுகள் வழங்கப்படல் போன்ற வற்றில் அவர் ஆற்றியிருக்கும் சமூகப் பணிக்கான கெளரவமாகவே அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது அறிந்து உள்ளம் நெகிழ்ந்தது. கலாநிதி. அகளங்கன் சிறப்புரையாற்ற வந்திருந்தார். நா.தர்ம ராஜா என்கிற இயற்பெயருடைய அகளங்கன் அவர்கள் சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை, நாடகம், ஆய்வு என பல துறைகளில் கால் பதித்திருப்பவர். இதுவரை 39 நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். பல இலக்கியப் பரிசுகள் பெற்றவர். இலக்கியப் பணிக்காகக் கலாநிதி பட்டம் பெற்றவர். பழந்தமிழ் இலக்கியத்தில்
鄒

Page 41
அவருக்கிருக்கிற ஆழ்ந்த ஞானம் வியப்பூட்டத்தக்கது. ஆதலினால், அவர் தனது சிறப்புரையில் இன்றைய இளைஞர்கள் அவசரம் அவசரமாகப் புத்தகங்கள் போட்டு இலக்கியப் பணி(?)புரிவதில் தமிழ் படும்பாடு பற்றிச் சொன்னது அவர்தன் இலக்கிய கம்பீரத்தை இயம்பி நின்றதெனலாம்.
இலண்டன் நிதிப்பணிப்பாளரும், எழுத்தாளரு மாகிய வவுனியூர் இரா.உதயணன் அவர்கள் புலம் பெயர் தேசங்களிலே இனிவரும் தலைமுறையின் தமிழ் மொழி தேர்ச்சி பற்றிய தனது கவலையைத் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர் சமூகம் ஒன்றே இனி இல்லாது போமோ என்கிற அவரது ஆதங்கம் நம்மையும் சூழ்ந்து கொண்டது.
மூத்த ஊடகவியலாளர் இனிய, வி.தேவராஜ் அவர்கள் மாகாணசபைகளுக்கூடாக வருடந்தோறும் ஐந்நூறு புத்தகங்களேனும் கொள்வனவு செய்யப்பட்டு வாசிகசாலைகளுக்கு விநியோகிக்கப்படுமாயின் எழுத்தாளர்களது இன்னல் ஓரளவுக்கேனும் நீங்கலாம் எனக் கருத்து நவின்றபோது, அதிலுள்ள நிஜத்தைப் புரிந்து கொண்டு எல்லோரும் பலத்த கைதட்டல் செய்தார்கள். வர்க்க பேதமற்ற சமூகத்தை உருவாக்கப் பாடுபட்டு தோல்வி கண் டதைப் பற்றியும் இனி மேலாகினும் தமிழ்பேசும் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டி யதன் அவசியம் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.
மிக இளம் வயதிலேயே இருதய நோய்க்கான வைத்திய ஆலோசகராகவும், கலாநிதியாகவும் உயர்ந்துள்ள கனகசிங்கம் அருள்நிதி தன் பணிவின் காரணமாகவே இத்தனை உயர்நிலைக்குப் போனாரா என்று வியப்பு மேலிட்டது. இலக்கியத்தை தான் மிகக் கற்றுத்தேர்ந்த பண்டிதன் அல்லவாயினும், இருதய நோயைத் தவிர்க்க இலக்கியம் எப்படியெல்லாம் உதவ முடியும் என்பதை அவர் சுட்டிய விதம் அழகு,
எல்லாமும் தீர்மானித்தபடியும் திட்ட மிட்ட படியும் நடைபெற்றுக் கொண்டிருக்க திடீரென்று தான் ஏதோ அவசரத்திலிருப்பதாகக் அறிவித்து தனக்கான சிறந்த வெளியீட்டகத்துக்கான சோல மலைத்தேவர் தமிழியல் விருதை புகைபடப் பிடிப்பாளர் பட்டாளம் சகிதம் வந்து இடைநடுவே வாங்கிக் கொண்டு போன புரவலர் ஹாசிம் உமர் அவர்களால் சட்டென ஒரு அரசியல்வாதி வந்துபோன அடையாளம்போல அலட்டல் சாயலொன்று தமிழியல் விருது வைபவத்துக்கு வந்துபோனதில் ஒரு வாட்டம் பிறந்தது நெஞ்சோரம்,
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் இம்முறை ஓ.கே. பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறுனராக அறிவிக்கப்பட்டிருந்தார். கெளரவத்துடன் ஒரு ஆசனத்தே அமர்த்தப்பட்டு, பிரதம அதிதியவர் களால் பொன்னாடையும், தலைப்பாகையும் அணிவிக் கப்பட்டு அவரது விருதினை கைகூப்பிக் கும்பிட்டு திரு.குணநாதன் அவர்களும் சேர்ந்தே வழங்குகையில்
 
 
 
 
 
 

நமக்கு நெஞ்சு கசிந்து கண்ணீர்த் துளிர்விட்டது கண் னோரம் , தனது விருதினைப் பெற்றுக் கொண்டவர் ரொம்பப் பணிவாய் பேச வாரம்பித்தார். "எனது சேவைகளை அங்கீகரித்து." என்று கூடக் கூறாமல், ஜாக்கிரதையாய் "எனது செயல்களை ஏற்றுக் கொண்டு தாங்கள் வழங்கி யிருக்கும் கெளரவம் குறித்து நெகிழ்ந்து போகிறேன்" என்று பகர்ந்தபோது அவரது பணிவும் எளிமையும்உள்ளத்தைஏதோ செய்தது.
வித்தியாசமாய் வெயில் காலநிலையைக் கருத்திற்கொண்டு இளநீர் வெட்டிப் பகிர்ந்தார்கள். அருந்தப்பட்டான பிறகு அவை சூழலில் எந்த பங்கத்தை யும் ஏற்படுத்தாமல் கவனமாய் அப்புறப்படுத்தப்பட்டன. கடந்த வருஷ அரச சாகித்திய விழாவிலே விருது பெறுநர்கள் கூட உட்கார ஆசனங்களின்றி இறுதிவரை நின்றிருந்தே விருது பெற்றுப்போனதைப்பற்றியும், கதிரையில் அமர்ந்திருந்த என் பத்து வயது மகளை மடியில் தூக்கி வைத்துக் கொள்ள நான் பணிக்கப் பட்டதைப்பற்றியும், ஒரு குடிபானம் கூட விருது பெறுனர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை பற்றியும், நீர் வசதிகள் எதுவும் செய்து தரப்படாததினால் துர்வாடை வீசியபடியிருந்த கழிவறைகள் பற்றியும் மெல்ல அக்காவின் காதோடு முணுமுணுத்தேன் நான். உண்மையில் குணநாதன் அவர்கள் "ஓ.கே."யேதான். இதையே கிழக்கிழங்கை பாலர் பாடசாலை கல்விப் பணியகத் தலைவர் திரு.பொன்.செல்வநாயகம் அவர்களும் தனது அழைப்பு அதிதியுரையில் கூறிச் சென்றார்கள் "நேற்றிரவு வரை திரு.குணநாதன் அவர்களுடன் இருந்தும், இத்தனை அழகாய் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்று நான் எண்ணியிருக்கவில்லை." என்று.
தமிழியல் விருது ஒருபுறம் இருக்கட்டும். அங்கே விருதினைப் பெற வந்திருந்த அல் அஸ்மேத் திரு.ஜின்னாஹற் சரிபுத்தீன், திருமதி. அன்னலட்சுமி ராஜதுரை என பலர்போக மைக்கல் கொலின் , நந்தினி சேவியர், அந்தனி ஜீவா என்று ஒரு எழுத்தாளர் பட்டாளத்தையே நாம் கண்டுகொள்ள முடிந்தது நம் பேரதிஷ்டம். "உங்களது ஜெயகாந்தன் நூலுக்குப் பரிசு கிடைத்ததில் ரொம்ப ஆனந்தம்" என்று ஸஹானாவிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார் திரு.அந்தனி ஜீவா அவர்கள். ஜெயகாந்தன் அவர்களது பரம ரசிகனாம் அவர், அக்கா சொன்னாள்.
எல்லாம் நிறைவுற்று வெளியேற ஆயத்த மானோம். “புறப்பட்டாயிற்றா?" கேட்டபடியே வந்தார் ஒருவர். சிரித்தபடியே தன்னை அறிமுகமும் செய்து கொண்டார். அவர் வித்தியாகீர்த்தி நசந்திரகுமார் அவர்கள். "தரம் ஒன்று முதல் பதினொன்று வரை நம் பிள்ளைகள் கையில் உங்கள் புத்தகங்கள் உள்ளனவே." என்று வியக்கிறோம். பணிவுடன் சொன்னார், "இல்லை உயர்தர கணித, விஞ்ஞான

Page 42
பிரிவிற் கற்கும் மாணாக்கருக்காவும் நூல்கள் தயாரிக் கிறேன். "நேரம் எப்படி ஒதுக்குகிறீர்கள்?" கேட்டபோது சொன்னார், ஒரு அதிபராக இருப்பதில் இது இலகுவாக இருக்கிறதாம். இரவு வரை பள்ளிக்கூடத்திலிருந்தபடியே அனைத்தையும் திட்டமிடவும் முடிகிறதாம். அக்காவுக்கு கிடைத்த இலக்கிய ஆய்வுக்கான தமிழியல் விருது ந.சந்திரகுமார் அவர்களது பெயராலேயே வழங்கப்பட்ட தென்பது குறிப்பிடத்தக்கது.சிறுவர் இலக்கியத்துக்கான வ.இராசையா தமிழியல் விருதை தனது "தங்க மீன் குஞ்சுகள்" நூலுக்காகப் பெற்றுக் கொண்டார் கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. இலக்கிய உலகுக்குட் புது அறிமுக ம . இனி றைய இளைஞர் கள் சினிமாப் படமோகத்தில் தம்மையே அழித்துச் கொண்டிருக்கிற இக்காலத்தே இளைஞர்களுக்கே ஒரு முன்மாதிரியாய் வந்து அடக்கத்துடன் அமர்ந்திருந்து துறையூர் தமிழியல் விருதை பெற்றுக் கொண்டு போன அக்கறைப்பற்று சாஜித் இலக்கியத்துக்கு ஒரு நல்வரவு.
இம்முறையும் பகலுணவு ஏற்பாடுகள் செய்யட் பட்டிருந்தன. அருமையான கவனிப்பும், சுவைமிகு சைவ உணவும் நெஞ்சையும், வயிற்றையும் நிறைக்க விடைபெறுதற்கு ஆயத்தமாகிறோம். "அம்மா" என்று நமை கனிவுடன் விளிக்கின்ற குணநாதன் அவர்கள் அருகே போய் அளவளாவுகிறோம். ஐந்து முறை சாகித்திய மண்டலப்பரிசு பெற்றவர். இந்தியாவில் அக்டோபர் O2 இல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது பெற்றவர் "ரொம்பச் சிம்பிளாய் ஒரு பத்திச் சேர்ட்டை அணிந்து வந்து பரிசை தட்டிக் கொண்டு போய் விடுகிறீர்களே ஐயா" என்கிறோம் நகைச்சுவையாக "அது எனக்கு ரொம்ப ராசியான சேர்ட் புது வருஷத்துச் காக வணபிதா, சிறிதரன் சில்வெஸ்டர் அவர்கள் வாங்கித் தந்தது" என்று விடை வருகிறது திரு ஓ.கே குணநாதன் அவர்களிடமிருந்து,
இதுவரை நாம் கண்டிராத காத்தான்குடி கடற் கரைக்குச் சென்று வரலாம் என்று ஒரு அபிப்பிராயாம் நிலவவே குடும்பத்தினர் எல்லோருமாய் போனோம் அங்கே நண்டுகள் சித்திரம் வரைந்தன மணல்மீதில் அழகான கடற்கரைதான். எனினும் மணல்தரையையே மூடிவிடுகிறாற்போல நிரம்பிக்கிடந்தன குப்பைகள், பொலிதீன் பாவனை பற்றிய பிரக்ஞை எதுவுமின்றி கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் சிதறிக் கிடந்தன ஸொப்பிங் பேக்குகள்.
"சிறுநண்டு மணல்மீது படம் ஒன்றுகீறும். சிலநேரம்அதைமெல்லகடல்கொண்டுபோகும்" மஹாகவியின் கவிதை நெஞ்சுள் வந்து போயிற்று. நுரைகக்கி ஓடோடி வரும் கடலலைகளுடன் கடலுள் அள்ளுண்டு போகும் குப்பைகள் துயரம்தர தமிழியல் வைபவம் தந்த சுகாந்தத்தையும், சூழல் மாசடைவு தந்த பாரத்தையும் ஒருங்கே தாங்கிய இதயத்தோடு இல்லம் வந்தடைகையில் இரவு 11.00 ೧೯ಾಗಿurá விட்டிருந்தது.
 
 
 
 

புதுபடனல
செல்லி செல்வராசர குர்சினி மு/முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் 2014 கலைப்பிரிவில் கல்வி பயில்கிறார். சிறுவயதிலிருந்தே கவிதையில் நாட்டமுடையவர். இவரை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் ஜீவநதி பெருமையடைகிறது.
ஆறாத் துயரம்
நந்திக்கடல் ஒரத்திலே நடுச்சாம நேரத்திலே நடுங்கல் சத்தம் கேட்கையிலே நாவறண்டு போனதையா
உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி
வாயிருந்தும் பேசாத ஊமைகளாய் வாயடைத்து போனோமே
முள்ளி வாய்க்காலில் முணங்கல் சத்தம் திரும்பிப் பார்க்கையில் முண்டங்கள் கோடி கால் இழந்தோம் கையிழந்தோம் தெருவோரங்களில் அநாதைகளாய்க்கிடந்தோம்
சோற்றரிசி கிடைக்காமல் சோர்வாய் இருக்கும் நேரத்திலே என் உறவின் உடலின் ஒரு பாகம் என் அருகில் துடிதுடித்தது.
வீட்டுவாசல் கரைமீது வற்றாத நீர் மீது என் உறவின் செந்நீரோ சலசலத்து ஓடியது
என் தங்கை பசி போக்க கையளவு அரிசி இல்லை மண்ணிற்கு உணவாக என் தங்கை புதைந்தாளோ
அன்போடு அரவணைத்து அச்சம் வேண்டாம் எனக் கூறிய என் குடும்பத்தை உருக்குலைய வைத்தனரே
தனிமரமாய் நிற்கின்றேன் சிறகுடைந்த பறவைபோல இழந்த எண் உறவுகளை மீண்டும் என் அருகில் தருவாரோ.

Page 43
மலையக கலை இலக்கியப் பேரவையின் முழுநாள் இலக்கிய விழாவில் மாலை நிகழ்வு மத்திய மாகாண இந்துமாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் செ.இராசையா கலந்து சிறப்பித்தார். விழாவில் சிறுகதைச்சிற்பி என்.எஸ்.எம். இராமையா, திருமதி நயீமா சித்திக், எழுத்தாளர் சாரல்நாடன், பத்திரிகையாளர் "மலைமுரசு" க.ப.சிவம், பண்ணா மத்துக்கவிராயர், கவிஞர் குறிஞ்சி தென்னவன், திருக்குறளை சிங்கள மொழியில் மொழி பெயர்த்த மூதறிஞர் சார்ள்ஸ் சில்வா ஆகியோர் கெளரவிக்கப் பட்டனர். விழாவிற்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் களான வழக்கறிஞர் ஜெயா பெரி.சுந்தரம் , திரு.அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தனர். இறுதியில் நாட்டிய தாரகை கலைச்செல்வி நிர்மலாவின் பரத நாட்டியம் இடம்பெற்றது. விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் செ.இராசதுரை "இங்கு கெளரவிக்கப்பட்டவர்களை கொழும்பில் அழைத்துக் கெளரவிப்பேன்." என்று பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் சொன்னார்.
அதே போல அமைச்சர் இராசதுரையின் பிரதேச அபிவிருத்தி அமைச்சு நடத்திய எழுத்தாளர் களை கெளரவித்த நிகழ்வில் மலையக எழுத்தாளர் களுக்கு கெளரவமும் பணப் பரிசும் வழங்கியது. "அமைச்சு மட்டத்தில் முதன்முறையாக அங்கீகாரம் பெற்ற மலையக எழுத்தாளர்கள் புத்தூக்கம் பெற்றனர். அப்புத்தளை, கட்டன், மலக்குலோயா, கண்டி, நாவலப் பிட்டி, கொழும்பு போன்ற நகரங்களில் கூடி நமது இலக்கிய முயற்சிகளுக்கு நூல் வடிவம் தந்தனர். 10.q4.1988 இல் கண்டியில் பேராசிரியர் சிதில்லை
 
 
 

நாற்றாண்டு அனுபவங்கள்
ாடியின் கதை
நாதன் அவர்களை சிறப்புரை ஆற்ற வைத்து கவிஞர் சு.முரளிதரன் "கூடைக்குள் தேசம்" என்ற நூலை வெளியிட்டார். இலங்கையில் வெளியான முதன் "ஹைக் கூ" நூல் இதுவேயாகும். இவ்வாறு எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரல்நாடன் "புது இலக்கிய உலகம்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.எமது மலையக கலை இலக்கியப் பேரவையின் முயற்சிகள் அனைத்தும் காற்றில் கதை பேசிய கதையாக போய்விடாமலிருக்க, மலையக கலை இலக்கியப் பேரவை 5ஆம் ஆண்டு விழாவை ஒரு முழுநாள் விழாவாக நடத்த திட்டமிட்ட பொழுது "மலையக வெளியீட்டகம்" என்ற அமைப்பை உருவாக்குவது சம்பந்தமாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைந்தோம். எங்களோடு அப்போது பேராதனைப் பல் கலைக் கழகத்தில் பட்டப் படிப் பை மேற் கொண்டிருந்த சுமுரளிதரனும் இணைந்து கொண்டார். மலையக வெளியீட்டகத்தின் முதல் வெளியீடாக சாரல்நாடன் எழுதிய சி.வி.சிந்தனைகள் என்ற நூலும், சு.முரளிதரனின் புதுக்கவிதைகளைக் கொண்ட "தியாக யந்திரங்கள்" என்ற நூலும் பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் வெளியிடப் பட்டது. மலையக மக்கள் கவிமணி என்றழைக்கப்பட்ட சி.வேலுப்பிள்ளை அவர்கள் மரணிக்கும் வரை அவர் இணைந்து செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் செய்யாத பணியை நாங்கள் செய்தோம்.
அது மாத்திரமல்ல சி.வி உயிருடன் மறைந்த பொழுது, தலைநகரான கொழும்பில் அவருக்குரிய மரணச் செய்தியை ஊடகங்களுக்கு கொடுப்பதற்கு என்னோடு உடனிருந்து செயற்பட்டவர், தமிழறிஞரான வி.கே.நவசோதி, இது பற்றி விரிவாக நான் எழுதியுள்ள "சி.வி சில சிந்தனைகள்" என்ற நூலில் குறிப்
(BGTC36T6T.
1986 க்குப் பின்னர் மலையக கலை இலக்கியப்பேரவை ஆக்க இலக்கியப் பணிகளை முன்னெடுக்க முனைந்தது. இதற்காக மலையகத்தின் பல பகுதிகளிலும் எழுத்துப் பயிற்சி பட்டறைகளை நடத்தியது. மலையகத்திலிருந்து ஒரு இலக்கிய சஞ்சிகை வெளிவரவேண்டும் என்று ஆசைப்பட்டோம். "கொழுந்து" என்ற பெயரில் சஞ்சிகை ஒன்றினை

Page 44
ଗିରାଗୀ୩uil முடிவு செய்தோம்.
கொழுந்து சஞ்சிகையின் முதல் இதழ் 1988 ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்தது. இதன் முதல் இதழில் ஆசிரியர் தலையங்கத்தில்:
அன்புள்ளங் கொண்டவர்களே! நீண்ட நெடுநாட்களாக நாங்கள் கண்ட கனவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேயிலைக்கு பசுமையும் தேநீருக்கு சாயத்தையும் தந்த பாரம்பரியத்தின் வழித்தோன்றல் நாங்கள் மலை முகடுகளிலும் தேயிலை காடுகளிலும் மானுடம் பாடும் வானம் பாடிகளின் எண்ணங்களுக்கு இதயதாகங்களுக்கும் கொழுந்து களம் அமைக்கும் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு சமூகப் பார்வையுடன் கொழுந்து வளமும் பொழிவும் ஊட்டும் புதிய விடியலில் முகம் காட்ட விரும்புகிறவர்கள் எங்களோடு இணைந்து பரணி பாட வரலாம் சமுதாய பார்வையுள்ள அனைவரையும் அனைத்துக் கொண்டு செயல்படுவோம் மலையக எழுத்துலகின் பழைய பரம்பரையும் புதிய தலைமுறையும் எங்களோடு இணைந்து பயணம் போக வந்துள்ளார் கேள் பாதை தெரிகிறது பயணம் தொடர்கிறது. இவ்வாறு எழுதியிருந்தேன். கொழுந்து அட்டையில் பசுமை மிகுந்த தேயிலைக் கொழுந்து இடம்பெற்றது. முதல் இதழில் அமரர் மக்கள் கவிமணி எழுதிய "கோநடேசய்யரின் சாதனைகள்" என்ற கட்டுரையும் , நடேசய்யர் பற்றி கவிஞர் பெரியசாமி எழுதிய "உன் குருநாதன்" என்ற கட்டுரை யும் இடம் பெற்றது. மற்றும் கவிஞர் சுமுரளிதரன், தமிழோவியன், வெலிமடை ரபீக், மாத்தளை வடிவேலன், புசல்லால இஸ்மாலிகா, குறிஞ்சி தென்னவன் ஆகி யோரின் கவிதைகளுடன் மூத்த படைப் பாளி கே.கணேஷின் மொழிபெயர்ப்பு கவிதையும், மலையக இளைஞர் களின் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தாவான இர.சிவலிங்கம், சாரல் நாடன், மலேசிய கவிஞர்சா. அன்பழகன், விருா.பாலச்
சந்திரன், மொழிவரதன், கருணா பெரேரா படைப்புகள்
முதல் இதழில் இடம்பெற்றன.
சிறு சஞ்சிகைகளுக்கு ஏற்படும் மரணம் போல்
கொழுந்து ஏழு இதழ்களுடன் தன் பயணத்தை நிறுத்திக்
之
 
 
 
 
 
 
 
 
 

ހައީ
VUN
கொண்டது. அதன் பின்னர் (DeುಖL5 கலை இலக்கியப் பேரவையின் 15ஆவது ஆண்டு விழாவின்போது கொழுந்து மீண்டும் வெளிவந்தது. அதன் பின்னரும் எனது பொருளாதார சூழ்நிலை காரணமாக 12 இதழ்களுடன் தன் பயணத்தை தொடர முடியவில்லை.
கொழுந்து சஞ்சிகை வெளிவராத கால கட்டத்தில் கண்டியில் இயங்கிய அரசு சார்பற்ற நிறுவன மான தோட்டப்பிரதேசங்களின் கூட்டுச் செயலகம் வெளியிட்ட "குன்றின் குரல்" என்ற சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்டுச் செயலகத்தில் பணியாற்றிய இலக்கிய ஆர்வ மிக்க ஜே.ஜேஸ்கொடி குன்றின் குரல் சிறப்பாக வெளிவர ஒத்துழைப்பு நல்கினார்.
வெறும் நான்கு பக்கங்களில் துண்டு பிரசுரம் போல் வெளிவந்த “குன்றின் குரல்" சஞ்சிகையை காத்திரமான படைப்புகளைக் கொண்ட இலக்கிய சஞ்சிகையின் மாற்றத்துடன் வெளிவந்தது. குன்றின் குரலில் "காலத்தை வென்ற கதைகள்" என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளர்களின் மலையக சிறுகதை தேடி பிரசுரித்தேன். தெளிவத்தை ஜோசப், பூரணி, மரியதாஸ், மலரன்பன், பன்னீர் செல்வம், நூரளை சண்முகநாதன், மாத்தளை வடிவேலன், மு.சிவலிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றன.
மீண்டும், "கொழுந்து" ଗରାଗୀରା୬ ($ରାଗ0ଏଁt(Sub என்று நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க "எளிய" சிற்றிதழ்களாக வெளிவந்தது. பின்னர் கொழும்புக்கு வந்து வாழவேண்டிய நிலைமை கண்டியில் நான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து விலகி, கொழும்பு வந்து கலை இலக்கியப்பணிகளில் ஈடுபட்ட பொழுது "கொழுந்து" இதழை கொண்டு வந்தேன். இதுவரை கொழுந்து 38 இதழ்களை கொண்டு வந்துள் ளேன். அதன் பணிதொடரும் என்ற நம்பிக்கை உண்டு, பாதை தெரிகி றது என் பயணம் தொடருகிறது.
நான் கண்டியில் வாழ்ந்த பொழுது நல்ல பல பணிகளை செய்துள்ளேன். இதனை பதிவு செய்ய வேண்டியது அவசிய
மாகும். மலையக மக்களின் விடி வுக்காக குரல் எழுதிய பத்திரிகை யாளரும், மலையகத்தின் முதல் தொழிற்சங்கவாதியான தேச பக்தன் லோ.நடேசய்யர் என்ற மகத்தான மனிதனைப் பற்றிய தகவல்களை தேடிப் பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்தோம். அது எவ்வாறு வெளிவந்தது.
தொடரும்.

Page 45
கதைகள்தா6
வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தலை நகருக்குக் கொண்டு செல்லப்பட்டதால் வாடிக்கையாளர் எதிர்கொண்ட பிரச்சினைகளை மீளவும் இம்முறை UITÜÜGBLJTL b.
அடகு வைத்துப் பெற்ற பணத்தை வட்டியுடன் செலுத்தியும் அடகு வைத்தோர் தமது நகைகளை மீளப் பெறமுடியாது தவித்த நிலை நீண்டுகொண்டே சென்றது. தனித்தனியாக வங்கியிடம் தம் கஷ்டங்களை எடுத்துக் கூறிப் பயனேதும் கிட்டாத நிலையைக் கண்ணுற்ற அடகு வைத் தோர் ஒன்றிணைந்து அடகு வைத் தோர் சங்கமொன்றை உருவாக்கினர்.
அச் சங்கம் விண் ணப் பங்கள், பேச்சு வார்த்தைகள் என எடுத்த முயற்சிகள் பயனளிக்காது காலம் கடந்துபோனது. எனவே இப் பிரதேசத்திலிருந்த அடகு நகைகளை மீளத்தராத வங்கிக் கிளைகளை இயங்கவிடாது தடுக்கும் போராட்டமொன்றை இச் சங்கம் ஆரம்பித்தது. வங்கி ஊழியர்கள் உட்செல்ல விடாது அடகு வைத்தோர் மறியற் போராட்டம் நடத்தினர். வங்கிக் கிளை களைத் திறந்து ஊழியர்கள் சென்று பணிபுரிய இயலாது போகவே வங்கி இயங் கமுடியாத நிலையொன்று தோன்றியது. இதற்கும் ஆரம்பத்தில் வங்கி அசைந்து கொடுக்கவில்லை.
போராட்டம் மாதக் கணக்கில் தொடர்ந்து செல்லவே நகைகளை மீளக் கொடுப்பதற்கு வழி யொன்று காண்பது அத்தியாவசியமாகியது. நகை களைக் கொடுக்கக்கூடாது என்பது வங்கியின் எண்ண மல்ல. நகைகள் கொள்ளை போய்விடக் கூடாது என்பதிலேயே அதன் கவனம் பிணைந்து கிடந்தது. சிறிது
 
 
 

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
ji GleFITabeilGujair
காலத்தில் பாதுகாப்பு நிலை சீரடைந்துவிடும். அதன்பின் வழமை போன்று வங்கியில் அடகு சேவையைச் செய்யலாம் என்று மேலதிகாரிகள் எதிர்பார்த்திருக் கவுங் கூடும். இதைவிட, ஒரு பிரச்சினை நாடளாவிய ரீதியில் ஏற்படும்போது அதில் முழுமையாகக் கவனம் செலுத்தி, தீர்க்க முனைவார்கள். எமது பகுதியில் மட்டும் ஏற்படும் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்ற தீவிரம் அவர்களிடமிருக்காது. இவ்வாறு ஏதாவது காரணங்கள் அவர்கள் நகைகளை மீளக் கொடுப்பது பற்றி ஒரு முடிவுக்கு வராததற்கு இருந்திருக்கலாம்.
பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை கலந்து அவர்கள் ஒரு புதிய நடைமுறையைக் கடைப்பிடிப்பதெனத் தீர்மானித்தனர். அடகு வைத்துப் பெற்ற பணத்தை வட்டியுடன் மீளச் செலுத்தியோரது நகைகளைக் கொழும்பிலிருந்து எடுத்து வந்து உயர் பாதுகாப்புப் பிரதேசத்தில் வைத்து உரிமையாளரிடம் கையளிப்பதென்பதே அந்தப் புதிய நடைமுறையாகும். அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்த பின்னர் அவ்வாறு நகைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு கிளையிலுமுள்ள நகைகளுக்கான பொறுப்பதிகாரி மேலிடம் குறிப்பிடும் திகதியில் அதுவரை பணம் செலுத்தியவர்களின் விபரங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு சென்று நகைகளை எடுத்து வந்து பாதுகாப்புப் பகுதியில் வங்கிக்கென ஒதுக்கப் பட்ட இடத்தில் வைத்த பின்னர் நகைக்குரியவர்களை அழைப்பர்.
அந்த இடத்திற்கு அனுமதியின்றி எவரும் செல்லமுடியாது. போர் நிகழ்ந்த காலத்தில் வானூர்தி யில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றவர்கள் பல கெடுபிடிகள் பாதுகாப்புகளுக்கு மத்தியிலேயே பலாலிக்குள் பிரவேசித்தார்களல்லவா? அத்தகைய சிரமங்கள் இவர்களுக்கும் ஏற்பட்டன. கொண்டு வரப் பட்ட நகைகளின் உரிமையாளர்கள் குறித்த ஓரிடத் திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு வைத்து அழைக்கப் பட்டவர்கள்தானா என்பதை உறுதிசெய்து உடற் பரிசோதனை அடையாள அட்டைப் பரிசீலனை எனப் பல்வேறு நடைமுறைகளின் பின் வாகன மொன்றில் படையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு

Page 46
நகைகள் ஒப்படைக்கப்படும். அனைவருக்கும் நகைகள் கொடுக்கப்பட்ட பின் ஒன்றாக வாகனத்தில் திரும்ப அழைத்து வந்து புறப்பட்ட இடத்திலே இறக்கிவிடப்படுவர். இந்த ஒழுங்குமுறை அவர்களது ஒரு முழுநாள் நேரத்தைத்தின்றுவிடும். ஒருநாள் அடகுநகை மீட்போர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் உலங்குவானூர்தியொன்றால் இலக்கு வைக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்ததாக ஒரு ஞாபகம்.
அடகு நகைகளை எடுத்து வருவதற்காகச் சென்ற உத்தியோகத்தர் அப்போது கொழும்பில் நடந்துவந்த திடீர் வேட்டைகளுள் அகப்பட்டு, காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டவர்களுடன் அள்ளப்பட்டுச் சென்று, பகீரதப் பிரயத்தனம் செய்து மீண்ட சம்பவங் களும் இதன்போது இடம்பெற்றதாகவும் நினைவு. ஆம், அப்போது கொழும்பில் தங்கிநிற்கும் வெளியிடத்தவர் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டு வந்தனர். அத்தகைய நடவடிக்கை களில் வங்கி ஊழியர்களும் அகப்பட்டனர். கிளிநொச்சி வங்கி கொள்ளையிடப்பட்டபோது அங்கு பணி
தமிழர் கதைஞர் சிறுகதை மதிப்பீ
எழுத்தாளர்
முதலாம் இ
முதலாம் இடம் வி.ஜிவகுமாரன் இரண்டாம் இடம் பா.தனபாலன்
மூன்றாம் இடம் மு.அநாதரட்சகன்
இரண்டாம் இடம்
ஆசை எட்வேட்
மூன்றாம் இடம்
சுதர்ம மகாராஜன்
ဖုများလmးကြီ” @ t:
இரண்டாம் இடம் களுவாஞ்சிக்குடி
யோகன்
மூன்றாம் இடம் தேவமுகுந்தன்
சிறப்புப் பாராட்டு
எம்.எஸ்.அமானுல்ல
விஜீவகுமார இரண்டாம் இடம் எஸ்.முத்துமீரான் மூன்றாம் இடம் யோகேஸ்வரி
சிவப்பிரகாசம்
 
 
 
 
 
 
 
 

வட்டம் (தகவம்) ட்டு முழவுகள் 2011
யாற்றியவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டார். சிறையிலிருந்தபோது குற்றம் ஏதும் நிரூபிக் கப்படுமுன் வெலிகடை சிறை அனர்த்தத்தில் கொல்லப் பட்டதும் இச் சந்தர்ப்பத்தில் நினைவில் தலைநீட்டு கிறது. இது மட்டுமல்ல பல்வேறு தரப்பினராலும் சொல்லப்பட்ட எமது சக ஊழியர்களது மரணங்கள் பற்றியே ஒரு நூல் எழுதலாம்.
இத் தொடரின் நோக்கம் அதுவல்லவே, வங்கி நடைமுறை போர்ச் சூழலில் எவ்வாறெல்லாம் மாறுபட்டு வாடிக்கையாளருக்கு வங்கிச் சேவை என்ற இலக் கையடைய முயன்றது என்பதே இதில் கூறப்படுகிறது.
போர்ச் சூழலால் கடினமான பாதையில் வங்கிச் சேவை நடை பயின்றபோதும் வாடிக்கையாளரும் சகிப்புத் தன்மையுடன் அந்தப் பாதையில் நடந்தனர். 'இதுதான் எமது விதி" என்று சகித்துக் கொண்டார்களா? "இந்தச் சூழலில் இந்த அளவாவது நடை பெறுகிறதே" என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. அடுத்து அவர்கள் சந்தித்த திருப்புமுனையை அடுத்த இதழில் பார்ப்போம்.
அப்பாவேனும் ஜீவநதி
திருப்பம் மல்லிகை
பொய்மையும் வாய்மையிடத்து ஜீவநதி
பக்தர்கள் செய்த பாவம் தினக்குரல்
அவன் என் நண்பனாக ஞானம்
இருந்தான்
மன்னிப்பீர்களா அம்மா தினக்குரல்
இவன் கலைமுகம் ஒரு பெண்ணின் கதை ஜீவநதி
TudoměEGöUÈ தந்துதானே ஞானம்
முதியான் கண்டுத்தயிரு ஞானம்
LDU163 3760óLub ஞானம்

Page 47
ཕྱ5
() முருங்கனில் கலைஞர் குழந்தையைக் கெளரவித்து முருங்கனைச் சேர்ந்த கலைஞர் செ. செபமாலை குழந்தை அ அனுபவங்களை அவருடைய கலையுலக நண்பர்கள், ! பதிவுசெய்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் எழுதி பெயரில் இந்தக் கலைப்பணி நயப்பு மலர் வெளிடப்பட்டது. 3 எழுதியுள்ளனர். முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் ஏற்ப 7,10,2012 மாலை 2.30 மணிக்கு முருங்கன் மகாவித்தி அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமை தாங்கினார் அவசித்தைக் குறித்து அவர் உரையாற்றினார். இந்நிகழ்வில் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் நூல் மதிப்பீட்டுரையை யாழ்.தி ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் வழங்கினார். இந்ந கலைப்பயணத்தில் இணைந்து பயணித்த கலைஞர்கள் முருங்கனைச் சேர்ந்த நாடக நடிகர் திரு. செ. சீமான் அவர்கள் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் திரு.செ.இயேசுதாசன் அவர்க சேர்ந்த திரு.செ.வேதநாயகம் அவர்கள் "ஒப்பனைச் ெ அமரர்களான முருங்கனைச் சேர்ந்த திரு.ப.அந்தோனிப்பு இம்மானுவேல் ஆகியோரும் கெளரவ விருதுகள் வழங்கி கெ இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்ச கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், மன்னார் வலயக் கல் யாழ் மாகாண முதல்வர் எம். போல் நட்சத்திரம் அடிகளார் பேராசிரியர் ஞா. பிலேந்திரன் அடிகளார், பேராசிரியர் அகள் அ. சந்திரஐயா ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.
கெளரவ விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பி நோகராதலிங்கம் ஆகியோரும் நானாட்டான் பிரதேசசபைத் கலந்துகொண்டனர். இம்மலர் தொகுப்பு முயற்சியையைய அடிகளார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்
2) நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரியின்(0வது ஆ6 கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள நடே நிறைவையயொட்டி கடந்த 13.10.2012 அன்று கலைவிழா ந மண்டபத்தில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இவ்விழா6 தலைவரும், மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் அமைப்பின் இயக்குனரும், "மன்னா" என்ற மாதாந்த கத்தோ நேசன் அடிகளார் கலந்துகொண்டார்.
தலைநகரிலே கலை வளர்க்கும் கல்விக்கூடங்களில் இக்கல்லூரியில் ஏறக்குறைய 400ற்கும் அதிகமான மாணவர் திருமதி மாலதி சிவகுமார் அவர்களின் திறமையான வருடங்களாக பல நூறு மாணவர்களை உருவாக்கியுள்ள
கற்கின்ற வாய்ப்பு இங்கு உண்டு. நடேஷ்வராலயா நுண்கலை
 
 
 
 

ے @ | |
பநிகழ்வுக
S கலைத்தவசி" கலைப்பணி நயப்பு மலர் வெளியீடு வர்களின் கலைப்பணியைப் பாராட்டி அவரைப் பற்றிய சக கலைஞர்கள், அறிஞர் பெருமக்கள் எழுத்தில் ய கட்டுரைகளின் தொகுப்பாக “கலைத்தவசி" என்ற 00 பக்கங்களைக்கொண்ட இந்நூலில் நூறு பேர் வரை ாட்டில் நடைபெற்ற இம்மலர் வெளியீட்டு விழா கடந்த யாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு வரலாற்றுப் பதிவுகளை மேற்கொள்ளவேண்டியதன் மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை
ருமறைக்கலாமன்ற பதில் இயக்குனர் திரு.ஜே.ஜே. நிகழ்வின்போது கலைஞர் குழந்தை அவர்களின் சிலரும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். "அரங்க வேந்தன்” என்ற பட்டத்தையும், முருங்கனைச் ள் "லய வேந்தன்” என்ற பட்டத்தையும், ஆவணத்தைச் சம்மல்" என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டனர். பிள்ளை, காத்தான்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் சீ. ளரவிக்கப்பட்டனர். கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ், விப் பணிப்பாளர் திரு. எம். எம். சியான், அமதிகளின் , யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவத் துறைத் தலைவர் ஸ்ரின் சூசை, நானாட்டான் பிரதேச செயலாளர் திரு. க.
னர்கள் கெளரவ சிவசக்தி ஆனந்தன், கெளரவ வினோ தலைவர் திரு. ஏ. ரீ. அன்புராஜ் லெம்பேட் அவர்களும் |ம், விழா ஏற்பாடுகளையும் அருட்திரு. அன்புராசா
ண்டு நிறைவுக் கலைவிழா
ஷ்வராலயா நுண்கலைக் கல்லூரியின் 10வது ஆண்டு டைபெற்றது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் வில் பிரதம விருந்தினராக மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், மன்னார் மறைமாவட்ட "கலையருவி" லிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு தமிழ்
நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரியும் ஒன்றாகும். கள் கல்வி கற்கின்றனர். இக்கல்லூரியின் பணிப்பாளர் நிர்வாகக் கட்டமைப்பில் இக்கல்லூரி கடந்த பத்து து. ஒரே கூரையின்கீழ் சகல கலைப்பாடங்களையும்
5 கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் பாரம்பரியம்

Page 48
வழுவாது கலைகளை காத்து வளர்க்கவேண்டும் எ
வயலின், மிருதங்கம், புல்லாங்குழல், கீ போட் ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகின்றன. இக்கலை ஏறக்குறைய 200 பேர் தமது திறமைகளை மேடையி
சங்கீதப் பரீட்சைகள், உள்ளுர், சர்வதேச Lே தவறாது அனுப்பப்படுகின்றார்கள். மாணவர்கள் 100 வழிநடத்தலில் பல மாணவர்கள் தங்கப் பதக்கங்கள், !
வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சையி கலாவித்தகர் பட்டத்தையும் பெற்று இந்த நுண்கலைக்
3) ព្រំប្រេះ ឆ្នាំ-យួគ៌ា ហ្រ្វាយ ១៥ថ្ងៃយ៍យ៉ា ஞாயிற்றுக்கிழமை நீர்வேலி திருமுருகன் திருமண இ.குணநாதன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் ம.பிரதீபன் ஆகி கலாசாலை விரிவுரையாளர் சலலிசனும் நயப்புரை ப.சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்), யோகேள ஆசிரியர் க.நிரஞ்சன் நல்கினார். வலிகாமம் கிழக்கு பிரதியை நீர்வேலி தொழிலதிபர் பொ.இராசலிங்கம் வாழ்ந்த சங்கிலியனின் சகோதரனாகிய பரநிருபசிங் என்ற வரலாற்றுக் குறுநாவல் வெளிவந்துள்ளமை குறி
4) அவை கலை இலக்கிய வட்டத்திண் 43 ஆவது எழுத்தாளர் தெணியான் தலைமையில் நடைே விரிவுரையாளர் திருமதி மதன் கோசலை வருகை தலைப்பில் உரையாற்றினார். கருத்துரைகளை கவா சிறப்பு சிகழ்வாக பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டி வகித்தார். "பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுச் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பெண்க6ே திரு.த.ஜீவராஜா ஆகியோர் வாதிட்டனர். ஆண்கே திரு.க.சத்தியசீலன் ஆகியோர் வாதிட்டனர். நன்றியுை
5) குருமண் அருள் வெல்வநாயகம் நினைவுப்
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் த உதவிக்ல்விப்பணிப்பாளர் திரு இரத்தினம் பாஸ்கரன்
 
 

ன்பதற்காகவே இங்கு கர்நாடக இசை, பரதநாட்டியம், வீணை, சித்திரம், யோகா போன்ற கலைப்பாடங்கள் திறமைமிக்க விழாவின்போது இந்தக் கலைகளைப் பயிலும் மாணவர்கள் ல் சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர். மலைத்தேய கீபோட் பரீட்சைகள் போன்றவற்றிக்கு மாணவர்கள் வீதம் திறமான சித்தி எய்துகின்றார்கள், கீ போட் ஆசிரியர்களின் வெள்ளிப் பதக்கங்கள் போன்றவற்றைப் பெற்றுள்ளனர்.
ல் 6 பேர் பரதகலாவித்தகர் பட்டத்தையும், 4 பேர் சங்கீத கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
TT mmTmmMM mm mm mmS rLLm Lm00mTTM S S mmTmMmmlmm SS mmmmmL 00S00S00L00 மண்டபத்தில் யாழ். கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வாழ்த்துரைகளை மேலதிக பதிவாளர் நாயகம் ந.சதாசிவஐயர், யோர் வழங்கினர். நூல் வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரிய ரகளை மூத்த எழுத்தாளர்களான சி.சிவசரவணபவன் (சிற்பி), ஸ்வரி சிவப்பிரகாசம் ஆகியோர் வழங்கினர். நன்றியுரையை பிரதேச செயலர் ம.பிரதீபன் நூலை வெளியிட்டு வைக்க முதற் தம்பதியர் பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாண அரசர் காலத்தில் பகனை கதைத்தலைவனாகக் கொண்டு "அபிராமியின் காதலன்" ப்ெபிடத்தக்கது.
ஒன்றுகூடல் அல்வாயில் உள்ள கலை அகத்தில் 2012.10. அன்று
பெற்றது. இந்நிகழ்வில் யாழ்பல்கலைக்கழக சட்டத்துரை யாளராக கலந்து கொண்டு "திருமணமும் சட்டமும்" என்னும் சுதேவன், சி.பரம்சோதி, மு.நடேசன் ஆகியோர் தெரிவித்தனர். மன்றத்திற்கும் திருமதி கோசலைமதன் அவர்களே தலைமை 5கு பெரிதும் காரணம் ஆண்களே? பெண்களே?" என்னும் ள அணி சார்பாக திரு.வை.விஜயபாஸ்கர், திரு.சி.சஜீவன், ள அணிசார்பாக திரு த அஜந்தகுமார், திரு.சீ.அமரஜோதி, ரயை கலாநிதி த.கலாமணி அவர்கள் நல்கினார்.
பேருறையும் சிறுகதைப்போட்டி பரிசளிப்பும் 18.11.2012 அன்று திருமதி மண்டூர் அசோகா, திரு அன்புடீன் முன்னிலையில் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரைகளை “வளரி" ஆசிரியர் திரு அருணா சுந்தரராசன், கவிஞர் மே மனி க வரி, வி.ஜெயக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர். "சமகால ஈழத்துச் சிறுகதைப் போக்கு கள்" என்னும் தலைப்பில்
நினைவுப் பேருரையை (8L! TJ Téfrflu_Jf† 65. Gu_J (T5 ராசா நிகழ்த் தினார். நன்றியுரையை திரு மு. வடிவேல் நல்கினார்

Page 49
6) ஜீவநதி சஞ்சிகையின் 50ஆவது இதழ் வெளி தெணியான் தலைமையில் 2012.11.10 அன்று நடைெ வெதுஷ்யந்தனும் வாழ்த்துரைகளை அதிபர் திருந சதர்மரத்தினமும் நிகழ்தினார்கள். வெளியீட்டுரையை கி.நடராஜா அவர்கள் நிகழ்த்தினார். தனது உரையின் வெளிவந்துள்ளது. இது பரணிதரன் என்ற ஒரு வெளிமுதற்பிரதியை பருத்தித்துறை உபதவிசாளர் மதிப்பீட்டுரையை கிளநொச்சி மாவட்டவலயக்கல்வி ஏற்புரையை க.பரணிதரன் நிகழ்த்தினார். அதனைத் தெ யாழ்பல்கலைக்கழக சமூகவியற்துறை விரிவுரையாளர் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்கள் ஆண்களே! பெண ஆண்களே! என்னும் அணி சார்பாக திரு.வை.விஜயபாஸ் வாதிட்டனர். பெண்களே அணி சார்பாக திரு.அ.பெள வாதிட்டனர்.
7) @60ចំUច6០ឆ្នាំ ៤១០០០០០f 6Uយក្លាយំយ៉ាប់យ៉ា6 பொது நூலக கேட்போர்கூடமண்டபத்தில் புலவர்மணி நடைபெற்றது. கவிதா நிகழ்வில் கவிஞர் தேனூரான், கவி பங்குபற்றி சிறப்புற நிகழ்தினார்கள். நினைவுப்பேருரை நிகழ்த்தினார். நன்றியுரையை திரு.பெ.சத்தியலிங்கம் நல்
8) ஆ.மு.சி.வேலழகனின் மூண்று நூல்களின் வெளி புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் 27.10.2012 தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கிழக்கு ம அமைச்சுச் செயலாளர் சி.அமலநாதன் பிரதமவிருந்தின தொல்லியல் ஆய்வாளர் செல்வி, கதங்கேஸ்வரி உட்பட கலந்து சிறப்பித்தனர். "தொன்மை மிகு திராவிட இன வழி(வள்ளுவம்), "உள்ளத்தனைய உயர்வு"(நாவல்) என் நயவுரைகளை கோட்டக்கல்விப்பணிப்பாளர் பூபாலச் ஆகியோர் நிகழ்த்தினர். அதனைத் தொடாந்ந்து நூலாசிரி அடுத்து பிரதம விருந்தினர் உரையும் அதைத்தொடர்ந்து நு கதிரவன் கலைக்கழக உபதலைவர் ததயாபரம் நல்கினார்.
ஒரு மரம்
அந்த மரத்தின் இருந்தெல்லாம் பச்சை இலைகள் UTT UT(3TT. உதிர்ந்திருக்கின்றன வந்து போகிறார்.
பார்ப்பதற்கு உயிர்ப்பை பட்டது போல் இழந்து விட்டத காட்சியளிக்கிறது கதைத்துக் கொள்
அந்த மரத்தினை மரத்தின் கதை பார்ப்பதற்கு முடிந்து விட்டத
வேறு தேசத்தில் GFTនោbគោល់ឆ្នាំ Garភារ៉ា
 
 
 
 

யீட்டுவிழா அல்வாயிலுள்ள கலைஅகத்தில் எழுத்தாளர் பற்றது. வரவேற்புரையை ஜீவநதியின் துணையாசிரியர் ா.விமலநானும், ஒய்வுபெற்ற இ.போ.ச.உத்தியோகத்தர் ஜீவநதியன் ஆலோசகரும், நாடறிந்த தமிழாசனுமாகிய போது "ஜீவநதி சஞ்சிகையின் 50 ஆவது இதழ் இன்று இளைஞனின் தனிமனித சாதனை” எனக் கூறினார். திரு.மா.லோகசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். ப்பணிப்பாளர் சி.இதயராஜா அவர்கள் நிகழ்த்தினார். Tடாந்து சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இ.இராஜேஸ்கண்ணன் தலைமைவகித்தார். வீட்டுக்கும் ர்களே! என்னும் தலைப்பில் Utę மன்றம் இடம்பெற்றது. கர், திரு.வேல்நந்தகுமார், திரு.ஈ.சர்வேஸ்வரா ஆகியோர் நந்தி, திரு.வே.சிவராஜா, திரு.க.தர்மதேவன் ஆகியோர்
tளையின் 34 ஆவது நினைவுதின நிகழ்வு மட்டக்களப்பு
திரு சி.சந்திரசேகரம் தலைமையில் 2012.11.04 அன்று ஞர் எஸ்.புஸ்பானந்தன், கவிஞர் கா. சிவலிங்கம் ஆகியோர் rயை போராசிரியை சித்திரலேகா மெளனகுரு அவர்கள் 9560াTিIT.
யிட்டுவிழா புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் 2 அன்று கதிரவன் கலைக்கழகத் தலைவர் திரு இன்பராசா ாகாணசபை சுகாதார சுதேச வைத்திய சமூக சேவைகள் ராக கலந்து சிறப்பித்தார். மூத்த எழுத்தாளர் அன்புமணி,
பல கலைஇலக்கிய பிரமுகர்கள் சிறப்புவிருந்தினர்களாக ம்"(வரலாற்று ஆய்வு), " வள்ளுவன் சொல்லே வாழும் பவற்றை கவிஞர் நிலா தமிழ்தாசன் வெளியிட்டுவைத்தார். சந்திரன், அதிபர் க.பிரபாகரன், அதிபர் ச.மணிசேகரன் யருக்கு பலர் பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்தனர். நூலாசிரியரால் ஏற்புரையும் இடம்பெற்றது. நன்றியுரையை
காலச் சுழற்சி
நீண்டு
கள் செல்கிறது
ஒருவேளை
Tag அந்தமரம்
கிறார்கள் தனது துளிர்ப்புக்கான
காலநிலையை
எஎதிர்பார்த்திருக்கக் கூடும். ாகவும் கிறார்கள்
ஆ.முல்லைதிவ்யன்

Page 50
பேசும் 8
1) ஜீவநதி 50 ஆவது இதழ் (சிறப்புமலர்)என்னை கனவு கொழுந்து இதழை இப்படி ஒரு மலராக கொ6 நேசிக்கும் ஜீவநதி மலராக வெளி வந்ததில் எல்லான காரணம் உங்களுக்கு ஓர் நல்ல இலக்கிய தந்தை, ந அத்தோடு உங்கள் பாசத்துணைவியார், இவை உங்களின்
2) ஜீவநதி 50 ஆவது இதழ் கிடைத்தது. மிகமிக மலர்கள் போன்று மிகப் பிரமாதமாக மலர் அமைந்துள் மலரை வடிவமைப்பதில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது UGOof,
3) ஜீவநதி 49 ஆவது இதழில் பிரசுரிக்கப்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இந்த மடலை வரை வேண்டும் என்று எண்ணிய பேதிலும் பல்வேறு கார சிறுகதையை வாசித்த பின் எழுதாமலிருக்க முடியவில்ை
"Reading between lines" GTGirp (35fréd முப்பரிமாண அர்த்தங்கள் நிச்சயம் புரியும், பல ஆ நிகழ்வுகளும் சமகால மாந்தரோடும் நிகழ்வுகளோ( நேர்த்தியாகக் கோர்த்து அழகான ஆழமான மொழி "இராமன் வாகை சூடிய பேருவகையின் சிலிர்ப்பில். மறுபடியும் மறுபடியும் பொய்மானுக்குப் பின்னால் பயன முதல் இறுதி வரை வரிகளுக்கிடையே வாசிக்க வேண் மறைந்திருப்பவற்றில் சில வாசிக்கும்பேதே பளிச்சிடுச் வெளிச்சத்துக்கு வருகின்றன.
எப்போதோ வாசித்த ஒரு துணுக்கு என் நி அழகான சிலையொன்றை செதுக்கிக் கொண்டிருக்க கேட்கிறார் ஒருவர் "இந்தக்கல்லுக்குள்ளே இந்தச் சிற்ப அவர்களை அவ்வாறான சிற்பியுடன் ஒப்புநோக்கி விய விடயங்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்வதில் போடுவதுடன் நின்று விடாது சிந்திக்கவும் வைக்கின்றன "துன்பியல் நாயகன்" சிறுகதை ஜீவநதியின் அடியேனது தாழ்மையான கருத்தாகும்.
 
 

இதயங்கள்
ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. நான் நீண்ட நாட்களாக கண்ட ன்டு வர வேண்டும். பரவாயில்லை எனது காலத்தில், நான் ரயும் விட மகிழ்ச்சி அடைந்தவன் நான் மலர் வெற்றிக்கு ல்ல ஆலோசகர் தெணியான், நல்ல இலக்கிய நண்பர்கள், ள் வெற்றிக்கு படிக்கட்டுகள். உங்கள் பணி தோடரட்டும்.
என்றும் அன்புடன் அந்தணிஜிவா
மகிழ்ச்சி. இது ஒரு பாரிய முயற்சி கல்கி, விகடன், தீபாவளி ளது. ஆக்கங்கள் அனைத்துமே கனதியானவை. தங்களுக்கும் து மனம் நிறைந்த பாராட்டுக்கள். தொடர்க தங்கள் இலக்கியப்
இரா.நாகலிங்கம் (மட்டக்களப்பு
உருந்த துன்பியல் நாயகன்" சிறுகதை தொடர்பான எனது ாகின்றேன். முன்பும் பல சந்தர்ப்பங்களில் தங்களுக்கு எழுத ணிகளால் கைகூடவில்லை. ஆயினும் "துன்பியல் நாயகன்"
O 60, உள்ள வாசகர்களுக்கு வரிகளுக்கிடையே மறைந்திருக்கும் ;ண்டுகட்கு முன் நாம் சந்தித்த கதை மாந்தர்களும் கதா டும் எவ்வாறு திருத்தமாகப் பொருத்தப்படலாம் என்பதை நடையில் அற்புதமாகத் தந்திருக்கின்றார் இ.சு.முரளிதரன். " என்று ஆரம்பிக்கும் முரளிதரன் "பாவம் பாமர மாந்தர் ரிக்கிறார்கள்" என்று கதையை நிறைவு செய்கிறார். ஆரம்பம் ஒய தேவை வாசகனுக்கு ஏற்படுகின்றது. வரிகளுக்கிடையில் ன்றன. வேறு சில நின்று நிதானித்து நினைத்துப் பாாத்தால்
னைவுக்கு வருகிறது. சிற்பி ஒருவர் பெரியதோர் கல்லிலே கிறார். அதைப் பார்த்து வியந்து பாமரத்தனமாக வியந்து ம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்" இ.சு.முரளிதரன் க்கிறேன். பால் வண்ணவாகனம் பவனிவரும் பாரில் பலர் பல லை. இவ்வாறாக ஆக்கங்கள் வாசகனின் ரசனைக்குத் தீனி
கீரிடத்தில் பதிப்பிக்கப்பட்டள்ள மற்றொரு முத்து என்பது
எல்.தேவராஜா (சுகந்தம், உடுப்பிட்டி)

Page 51


Page 52