கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய-அறிவியல் நுகர்வுகள்

Page 1
으
S.
| E Ae Kema
୧ C C B
விலை: ரூபா65/
 


Page 2
7.
ܓܠ
101, Colombo Street, Kandy.
Әдолба длЈ2. గిరాజ2ంగ్రిడe
Nüg|୩
0ே0
Designers and Manufact 22 kt S Overeign G old
Quality Jewellery
Te: O81 - 2232545
GENT PER
Suppliers to
DEALERS IN ALL KINDS FooD COLOURS, F CAKE INGRE
76B, Kings St Tel: 081 - 2224187, 081 -
 
 
 

UrerS of
N
لسے
At ESSENGE
SÜPEPIC 03:S
) Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, DIENTS ETC.
reet, Kandy. 2204480,081 - 4471563
N

Page 3
பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞ ஒளி - 13 čLřT - 1
ಲೈಗಿjuf
திஞானசேகரன்
நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன்
@GOD GDI ởffluff ஞானம் ஞானசேகரன் ஓவியர்
சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு ஞானம் அலுவலகம் 3-8, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06. இலங்கை
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 - 777 306,506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் O094 2362862
மின்னஞ்சல் editor(agnanam.info
இணையத்தளம் http://www.gnanam, info http://www.tignanasekaran, lik உள்நாட்டு சந்தா விபரம்
வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள் Swift Code :- HBLLKLX T. Gnanasekaran
A/C No. O09010344631
அனுப்புதல் வேண்டும்
ஆண்டுச் சந்தா : erb LITT 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா ரூபா 5,000/- ஆயுள் சந்தா : Ibu TT 20,000/= வெளிநாட்டு சந்தா ஓராண்டு Australia (AUS) 50 Europe(s) 40 India(Indian Rs.) 1250 Malaysia (RM) 100 Canada($) 50 UK(£) 35 Singapore(SS) 50 Other(US$) 50
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2012
Hatton National Bank, Wellawatha Branch
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை | வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக
ノ
 
 
 

BITCOTID
Ο இ– இதழினுள்ளே .
9 கவிதைகள்
குறிஞ்சி நாடன் 10 ஆரையூர் தாமரை 21 கே. ஆர். திருத்துவராஜா 21 பதியத்தளாவ பாறுரக் 26 எஸ். முத்துமீரான் 34 வல்வை மு. ஆ. சுமன் 34 புலோலியூர் வேல்நந்தன் 38 த. பருத்தி தாசன் 44
9 கட்டுரைகள்
கே. பொன்னுத்துரை 03 எம். எம். ஜெயசீலன் 11 எஸ். ஐ. கே. மஹரிபா 22
சந்திரகாந்தா முருகானந்தன் 35
0 சிறுகதைகள்
அனுராதா பாக்கியராஜா O7
சூசை எட்வேட் 14
9 பத்தி எழுத்து
மு. பொ. 27
கே. ஜி. மகாதேவா 29
வே. தில்லைநாதன் 37
9 நூல் அறிமுகம்
மா. பாலசிங்கம் 42 குறிஞ்சி நாடன் 45
9 சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
கே, பொன்னுத்துரை 39
9 கொற்றாவத்தை கூறும்
குட்டிக் கதைகள் 32
O 6JT8F85ñT & 1 JasraélpTTñT 47
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள், புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப்பெயர், முகவரி ஆகியவற்றைவேறாக இணைத்தல்
வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
O O O "ஞானம்" பதிப்பகத்தி ஞானம் பதிப்பகம் 1999ஆம் ஆண்டு ஐப்பசி இப்பதிப்பகத்தை ஆரம்பித்ததன் நோக்கத்ை நாடன் கவிதைகள்' என்ற நூலின் பதிப்புரை நமது நாட்டைப் பொறுத்தவரை எழுத்தாளர்களே த கித்தல், ஆகிய மூன்று பணிகளையும் ஆற்ற வேண் சிறப்புப் பிரதிகள் பெறுவோரையும், இலக்கிய அ தனிமனிதப் பிரயத்தனங்களிலும் ஈடுபடவேண்டியி எழுத்தாளர்கள் தமது ஆற்றல் முழுவதையும் எழுத் அவர்களது நேரமும் பணமும் வீணே விரயமாகின் அழுத்தங்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இந்நிலையில் எழுத்தாளர்களின் சுமையை ஓரளவ "ஞானம் பதிப்பகம்.
மேற்குறிப்பிட்ட நோக்கத்துடன் நாம் 06-06-2000ஆம் திகதி ஞானம் சஞ்சிகையினை படைப்பாளிகளினதும் வாசகர்களினதும் க( யில் வெளிவந்த சில தொடர்களையும், ! தொகுப்புகளையும், போர்க்காலத்தில் வெளி கையில் எழுதிய எழுத்தாளர்கள் சிலரது வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்த வகையில் வெளிவந்த நூல்கள் பல மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நா மொழிபெயர்ப்பு, ஆய்வு, போர் இலக்கியம், தொகுப்பு நூல்கள் என அவை விரிந்தன.
இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்கள தாளர்கள், ஏனைய பிரதேச எழுத்தாளர்கள், தாளர்கள், பெண் எழுத்தாளர்கள் எனப் பலதி ஞானம் பதிப்பகத்தின் அடுத்து வெளி வெள்ளி வெளியீடாக "அங்கோர் உலகப் பெருங்ே 17-03-13 அன்று வெளிவரவுள்ள இந்நூல் எப நாம் விதந்துரைக்கக் கூடிய அளவுக்கு பெருந்ே பாராட்டினைப் பெற்ற ஒரு பயணத் தொடரா வெளியாகியபோது இத்தொடரே அதிக 6 அமைந்தது.
இத்தொடர் பற்றி பேராசிரியர் சபா. ஜெ எழுதியுள்ள அங்கோர் உலகப் பெருங்கோயில் என்ற தனித்துவமானது. இத்துறையில் ஒரு புதிய முகிழ்கே வெளிப்பருத்துகிறது. என்கிறார். பேராசிரியர் து அத்தனை பயண இலக்கியங்களிலும் வேறுபட்டதாக சேர்ந்த பேராசிரியர் ஆசி கந்தராஜா, இதிலு சற்று விரிவுபடுத்தினால் ஒரு பட்டப் பின் பழப்புக்கு (POS நூல்களின் உதவியுடன் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுை இந்த வகையில் எமது நிறுவனத்தின் வெ வதன்மூலம் தமிழ் இலக்கியச் செல்நெறியில் முறைமையை அறிமுகம் செய்த பெருமையை எமது சஞ்சிகைப் பணிக்கும் நூல் பதிப்பு களுக்கு எமது இதயங்கலந்த நன்றியை தெ இலக்கியப் பணிகளை முன்னெடுத்து ஈழத்து நல்கவேண்டுமென வேண்டுகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ெ வெள்ளி வெளியீடு
த்திங்களில் கண்டி நகரில் ஆரம்பிக்கப்பட்டது. தை அதன் முதலாவது வெளியீடான 'குறிஞ்சி பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்: மது ஆக்கங்களை எழுதுதல், நூலாக்கல், விநியோ டியுள்ளது. அத்தோடு வெளியீட்டு விழா ஒழுங்கு செய்து பூர்வலர்களையும், சுவைஞர்களையும் வரவழைக்கும் ருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற சூழ்நிலையால் துப் பணியிலே பிரயோகிக்க முழயாமல் போய்விடுகிறது. றன. இதன் காரணமாக அவர்கள் பலவாறான மன
ாவது குறைக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே
ஞானம் பதிப்பகத்தினை ஆரம்பித்த போதும் ஆரம்பித்த பின்னர் ஞானத்தின் பரந்து பட்ட ருத்துக்களையும் உள்வாங்கி, ஞானம் சஞ்சிகை போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுகதைகளின் வந்த போர் இலக்கியங்களையும் ஞானம் சஞ்சி ஆக்கங்களையும் நூல்களாக வெளிக்கொணர
ன்முகத்தன்மை கொண்டவையாக அமைந்தன. வல், நாடகம், கூத்து, நேர்காணல், கட்டுரை, சமயம், அரசியல், பயண இலக்கியம், பண்பாடு,
ாக மலையக எழுத்தாளர்கள், வடபுல எழுத் புலம்பெயர் எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத் றத்தினராய் அமைந்தனர். ரிவரவிருக்கும் இருபத்தைந்தாவது நூலாக - கோயில் என்ற பயண இலக்கிய நூல் அமைகிறது. 2து வெளியீட்டுத் துறையில் ஒரு மைல்கல் என தொகையான வாசகர்களாலும் அறிஞர்களாலும் கும். இப்பயணத் தொடர் ஞானம் சஞ்சிகையில் பாசகர்களின் பாராட்டைப்பெற்ற தொடராக
யராசா குறிப்பிடுகையில் திரு. ஞா. பாலச்சந்திரன் பயண இலக்கிய நூல், சுற்றுலா இலக்கியத்துறையிலே லம் (Fashion) தோன்றம் பெறுதலையே இந்நூலாக்கம் துரை. மனோகரன், "இதுவரை தமிழில் வெளிவந்த விளங்குகிறது" என்கிறார். அவுஸ்திரேலியாவைச் 1ள்ள ஜனரஞ்சக விஷயங்களை தவிர்த்து கட்டுரையை f Graduate) சமர்ப்பிக்கக்கூழய வகையில் உசாத்துணை யாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். ள்ளி வெளியீடாக இந்நூலை வெளிக்கொணர் ஒரு புதியவகை பயண இலக்கியப் படைப்பு நாம் அடைகிறோம். ப் பணிக்கும் ஆதரவு நல்கிவரும் வாசக அன்பர் ரிவிப்பதோடு எதிர்காலத்திலும் எம்மாலான இலக்கியத்துக்கு வளம்சேர்க்க ஒத்துழைப்பு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 5
“சத்திய சோதனையின் சாரமதை வாழ்க்கையிலே நித்தியம் கடைப்பிழக்கும் உத்தமர் தான் காந்தி மாஸ்டர்” என்ற ஈழத்து இலக்கியச் சோலை ஸ்தாபகர் த. சித்தி அமரசிங்கத்தின் பவள கவிதைக்கிணங்க தனது 95ஆவது வயதிலும் "பொய்யில்லாத வாழ்வுடனும் போதுமென்ற மனத்துடனும், “காந்தி ஐயா" திருநாமத்துட னும் திருகோணமலையில் வாழ்ந்து வருகிறார் பெரியார் கந்தையா மாஸ்டர்.
இவர் மாதகல் நுணசை என்ற மண்ணில் 1918 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி பொன்னம்பலம், நன்னிப்பிள்ளையின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தமையனார் செல்லையா. சின்னப்பிள்ளை என்ற அன்புத் தங்கையும் தில்லைநாதன் என்ற தம்பியும் கூடப்பிறந்தவர்கள்.
மாதகல் கந்தையா, காந்தி மாஸ்டர், காந்தி ஐயா என்றும் அனைவராலும் அழைக்கப்படுவதற்கு அவரின் தீவிர காந்திய ஈடுபாடு காரணமாகும். எப்படி இவர் தீவிர காந்தியவாதியாக மாறினார்? ஐந்து வயதில் அரிவரி படிக்கும் போது பாடசாலையில் ஒரு ஐயா வந்து பிரசங்கம் செய்தார். "நீங்கள் எல்லோரும் சைவப்பிள்ளைகள் மச்சம் மாமிசம் சாப்பிடக் கூடாது அது பாவமான செயல்” என்றார். பாடசாலை விட்டதும் வீட்டுக்கு போய் அம்மாவிடம் இனிமேல் மச்சம் மாமிசம் சாப்பிடமாட்டேன் என்று கூறி அன்று முதல் சைவபோசகனாக காந்தி மாஸ்டர் வாழ்ந்து வருகிறார். "அன்று நூறு பிள்ளைகள் படித்த பாடசாலையில் எனக்கு மட்டும் அந்தப் பிரசங்கம் பயன்பட்டது. சிறு வயதிலே கடவுள் பெரிய பாவச்செயலிருந்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

2|
என்னைக் காப்பாற்றி விட்டார்” எனக் கூறி மனம் மகிழ்கிறார் காந்தி மாஸ்டர்.
எனது ஐந்து வயதில் தந்தையார் சிங்கப் பூருக்கு தொழில் நிமித்தம் சென்றார். எனது பத்து வயதில் சிங்கப்பூரிலேயே இறந்துவிட் டார். வருவாய் எதுவுமே இல்லை. எனது தாய் அரிசி குற்றி வியாபாரம் செய்தே எங்களைக் காப்பாற்றினார்.
நான் கல்விகற்ற பாடசாலையில் படிப்பித்த சுப்பையா ஆசிரியர் ஒரு நாள் அம்மாவிடம் இவன் கந்தையா நல்லா படிப் பான் அவனைத் தொடர்ந்து படிப்பித்து விடு' என்று கூறினார். ஆங்கிலப் பாடசாலையில் படித்தால் அதிக செலவு என்ற காரணத்தால் தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்கள்.
"எட்டாம் வகுப்பு வரை பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலத்தில் படித் தேன். அதன் பின்னர். மூளாய் சைவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்து சித்தி அடைந்தேன். எனது அதிபர் க.பொ. பண்டிதர் இரத்தினம் பசித்த போதேல்லாம் உணவு தருவார். அவரே எனது குருவாக அமைந்தார். நல்லவர்களை குருவாக கொண்டது நான் செய்த பூர்வ புண்ணிய பயன் என்றே கருதுகிறேன். மூளாயில் படிக்கும்போது நண்பர்களிடம் சத்திய சோதனையை வாங்கிப் படித்தேன். அதில் காந்தியடிகளைத் தரிசிக்க முடிந்தது. சிறு வயதிலே வரவு செலவு கணக்குகளை எழுதி வைக்கவும், நாட்குறிப்பு எழுதவும் காந்தி வழி நடக்கவும் அந்த நூல் எனக்குப் பெரிதும் உதவியது' என்று கூறிப் பெருமைப்படுகிறார்.
இவரின் பணிவையும் படிப்பையும் கண்ட பண்டிதர் ஐயா இவரை மேலதிக ஆசிரியராகப் பணிபுரிய வைத்து மாதம் பத்து
3

Page 6
ரூபா சம்பளமாகக் கொடுத்துள்ளார். இதே காலகட்டத்தில் காந்தி மாஸ்டரும் தனது முயற்சியில் தானாகவே படித்து ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையில் தேறியதால் அதிபர் பண்டிதர் க. பொ. இரத்தினம் உதவி யால் ஆசிரியராகினார்.
தனது பத்தொன்பதாவது வயதில் 1938ம் ஆண்டு ஜனவரி மாதம் வவுனியாவில் உள்ள இருபத்து மூன்றே பிள்ளைகள் படிக்கும் கருங்காலிக்குளம் அரசினர் பாடசாலையில் தனது முதலாவது கடமையை ஏற்றார். அக்குக் கிராமத்திலே தனது திறமையினால் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை விவேகானந்த சபைப் பரீட்சைக்கு அனுப்பிசித்தியடையச்செய்தார்.
ஐம்பதுகளில் திருகோணமலை கோணேஸ் G)IDIT வித்தியாலயத்திற்கு மாற்றலாகி வந்த கந்தையா மாஸ்டர் கழகப் புலவர் சிவசேகரனாரின் "தனசக்தி” இல்லத்தில் தங்குகிறார். அங்கும் தனது நிலை மாறாது வாரத்தில் ஒரு நாள் மெளன விரதத்தையும் வெள்ளிக்கிழமைகளில் உண்ணா விரதத்தை யும் மேற்கொள்வார். இது 1942ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. "சாப்பிட வழியின்றிப் பல நாட்கள் பட்டினி கிடப்பவர்களை எண்ணிப் பார்க்கும்போது எனது உண்ணாவிரதம் பெரிய சாதனை இல்லை” என்றே தோன்றுகிறது. என்கிறார்.
திருகோணமலையில் கழகப் புலவர் சிவசேகரனாரின் சகோதரி பண்டிதை
 

இராசநாயகியைக் கைப்பிடித்தார். அந்தத் திருமணமும் புரட்சிகரமானதாகவே நடை பெற்றது. காந்தியத்தில் புரட்சி இல்லை என்றாலும் தனது திருமணத்தை சர்வோதய முறைப்படி ஆத்மஜோதி ஆசிரியர் நா. முத்தையா திருமுறைகளை ஒத, கவியோகி சுத்தானந்தா பாரதி, பாரதியாரின் பாடல் களைப் பாட கந்தையா மாஸ்டரின் குரு கா. பொ. இரத்தினம் தலைமையில் திரு மணம் இனிதே நடைபெற்றது. மணப்பெண் கூறையாக வெறுமனே கதர்நூற் சேலையைத் தான் அணிந்திருந்தார். விசேடம் என்ன வென்றால் அன்று திருகோணமலையில் திருக்குறள் மகாநாடு நடைபெற்றுக் கொண் டிருந்த காரணத்தால் அம்மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அறிஞர்கள் பலரும் இத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
சாதி, குல வேறுபாடுகளைக்கடந்த சிந்தனைப் போக்குடையவர் இவர். அந்தக் காலத்திலே ஹரிசனங்கள் போகாத கோயில்களுக்கு போவ தில்லை என்று மிகப் பிடிவாதமாக இருந்தார்.
திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றம், திருகோணமலை திவ்ய ஜீவன் சங்கம் போன்ற பல அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு சமூக, சமய பணி யாற்றிவரும் இந்தப் பெரியாருக்கு சிவானந்த மகரிஷி 'சித்தாரத்தினம் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு இறைபணிச் செம்மல்"
"அறிவு குன்றியதால்தான் உலகம் துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. நல்ல நூல்களைப் படிப்பதால் அறிவைப் பெருக்கலாம். இந்த நம்பிக்கையில்தான், நான் தொடர்ந்து புத்தக விற்பனையை ஒரு முக்கிய தொண்டாகக் கருதிச் செயற்பருகிறேனர். வசதி படைத்தோர் நல்ல நூல்களை அச்சிட்ரு, மலிவான விலைக்குக் கொருக்க வேண்ரும்”
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 7
கொழும்புக் கம்பன் கழகம் மூதறிஞர், இலண்டன் சிவயோகம் காந்தியச் சுடர் ஆகிய பட்டங்களை வழங்கிய போதும் எந்தப் பட்டத்தையும் தனது பெயருக்கு முன்னால் போடாத பெருமகன் இவர்.
அதற்குக் காரணம் காந்தி ஐயா தனது இளம் வயதிலே ஏற்றுக் கொண்ட காந்தியச் சிந்தனையும் சுவாமி சச்சிதானந்தாஜி சுவாமி கெங்காதரனந்த, சச்சிதானந்த மாதாஜி ஆகியோரிடம் கொண்டிருந்த ஆன்மீகப் பற்றும்தான் என்கிறார்.
கோயில் திருவிழாக்களில் ஒரு புறமிருந்து அறிவுசார்ந்த புத்தகங்களை விற்பனை செய்வதே தொண்டாக கொண்டு வாழ்ந்து வருகிறார். இதுபற்றி அவரிடம் வினவிய போது "அறிவு குன்றியதால்தான் உலகம் துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. நல்ல நூல்களைப் படிப்பதால் அறிவைப் பெருக்கலாம். இந்த நம்பிக்கையில் தான், நான் தொடர்ந்து புத்தக விற்பனையை ஒரு முக்கிய தொண்டாகக் கருதிச் செயற்படுகிறேன். வசதி படைத்தோர் நல்ல நூல்களை அச்சிட்டு, மலிவான விலைக்குக் கொடுக்க வேண்டும்" என்கிறார்
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்று பேசப்படுகிறது. வீடுகளில் உடுப்புக் குவியல், பணக்குவியல், பவுண்குவியல், தளபாடக்குவியல், ஆடம்பரப் பொருட் குவியல் எல்லாம் உள்ளன. ஆனால் புத்தகக் குவியல் இல்லை. புத்தகங்களை நிறையப் படித்து அதன்படி ஒழுகும் போது, நாட்டில் சமாதானம், சந்தோஷம், ஆனந்தம் நிறையும்” என்பது அவரின் பதிலாக அமைந்தது.
காலத்தை, நேரத்தை முகாமைத்துவம் செய் வதில் மனிதன் சிரத்தை எடுக்க வேண்டும். எப்படி ஒரு வகுப்பறைமுகாமைத்துவத்தை ஒர் ஆசிரியன் தெரிந்துவைத்திருக்கவேண்டுமோ, எப்படி வியாபார முகாமைத்துவத்தை ஒரு வர்த்தக நிறுவனம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமோ, அவ்வாறு காலத்தைச் செவ் வனே முகாமைத்துவம் செய்ய மனிதன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். என்று கூறுவது மட்டுமல்லாது அவ்வாறு கால முகா மைத்துவத்தை நன்கு தெரிந்து இந்த வயதிலும் செயலில் காட்டுபவர் 'காந்தி மாஸ்டர்.
“ஒரு நாளில் இருபத்தினாலு மணித்தி யாலம். இதில் ஆறு மணித்தியாலம் சொந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

வேலைகள் வீட்டு வேலைகள், ஆறு மணித்தி யாலம் நித்திரை, ஆறு மணித்தியாலம் நாட் டுக்குச் சேவை செய்வது.
பகலில்படுப்பதில்லைஎன்றுவிரதம்எடுத்துக் கொள்ள வேண்டும் வைகறைத் துயிலெழு என்பது ஒளவையார் ஆத்திசூடி நித்திரை அவ சியம் அளவுக்கு மீறினால் கெடுதி,
உணவு விடயத்திலும் மிகவும் கவனமாக இருக்கிறார். அவர் நீண்ட காலம் சுகமே வாழ்வதற்கு அவரது உணவுப் பழக்கம் ஒரு காரணமாகும். ஐம்பதுகளில் மிளகாய் சாப்பிடுவது தற்கொலைக்கு சமம் என்று ஒரு செய்தியை அறிந்து அன்றிலிருந்து மிளகாய் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார். உப் பையும் முடிந்தளவு குறைத்து வருகிறார்.
அவருடைய அன்பிற்கினிய வாழ்க்கைத் துணைவி இராசநாயகி அம்மாள் சில காலம் கடுஞ் சுகவீனமாக இருந்தபோது, தனது தள்ளாத வயதிலும் அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை நேர காலத்திற்கு கொடுத்து பணிவிடைகள் செய்து அன் புடன் பராமரித்து வந்தார். இன்று அன்புத் துணையை இழந்து தனிமரமாக வாழ்ந்தாலும் தன் அன்பு மகன் முருகன் என் கிற கதிர்காமநாதன் அவர்களின் ஆறுதல் பேருதவியாக அமைந்து வருகிறது.
அகில இலங்கை காந்திய சேவா சங்கத்தின் ஸ்தாபகப் பொருளாளரான காந்தி ஐயா இதன் ஸ்தாபக தலைவர் பெரியார் ஹெண்டி பேரின்பநாயகத்தின் மதிப்பிற்குரியவர். அகில இலங்கை சர்வோதய சங்கத் தலைவர் கலாநிதி ஆரியரத்தினாவின்பேரன்புக்குரியவர், பெரியார் காந்தி ஐயா என்று மக்களால் அழைக்கப்படும் கந்தையா மாஸ்டர்
“சிரித்தமுகமும் சீரியகண்களும் வெண் தாடி மீசையும் வெள்ளைக்கே தகும் திறந்த நெஞ்சமும் ஆனந்த வார்த்தையும் நடை நடையாய்த் தொண்டும் என்றென்றும் வாழ்க" என கனடாவில் வாழும் சந்திரசேகரம் பிள்ளை பாலச்சந்திரன் காந்தி மாஸ்டர் பற்றி எழுதிய பாடல் போல் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
இவரின் வாழ்க்கை முறை இன்றைய எமது இளைய சமூகத்திற்கு ஒரு படிப்பினையாக அமையட்டும்.
O O. O.

Page 8
விளக்க அக
GEFTEtsi
"ஈழத்து மண்வாசனைச் சொற்களுக்கான வி நோக்குடன் அனைவரையும் ஈழத்து மண்வாச வேண்டுகிறோம். - அனுப்பி வைக்கப்படும் சொற்கள் பரிசில தொடர்ந்து வரும் ஞானம் இதழ்களில் பிரசுரிக் lfairaoTajg-Gi (Lpg56) if - dictionary(CDgnanam.info அஞ்சல் முகவரி - 38 - 46th Lane Colombo - 0 குறிப்பிடவும்)
உதாரணங்கள் :
ஒய்த்தா மாமா,
1. பெயர்ச் சொல் 2. 3. முஸ்லிம் 4. முஸ்லிம் சமூகத்தில் 'சுன்னத செய்பரைக் குறிக்கும் தொழிற் பெயர் 5. "எனக்குப் பெருமையாக இருந்தாலும் மாலை நடக்கவிருக்கும் ஒய்த்தா மாமாவின் அறுப்பை எண்ணி எண்ணி பயந்து கொண்டி ருந்தேன்” (ஒய்த்தா மாமா' தீரன். ஆர். எம். நெளஸாத், ஞானம் 147, பக்கம் 7) I65ITGOTLD, 3B - 46th Lane, Colombo - 06, dictionary(CDgnanam.info, 0112 586 013)
குறிப்பு: இதில் சொல்லின் வேர் (மூலம்) தெரியவில்லை (இலக்கம் 2) தவிர்க்கப் பட்டிருப்பதைக் காண்க)
கொம்மா,
1. பெயர்ச் சொல் 2. அம்மா
அனுப்பப்படும் சொற்களில் கீழ்க்கண்ட கூறுகள் கூறு தெரியாதவிடத்து அதைத் தவிர்த்து அனு பாவனை உதாரணம் ஆகிய கூறுகள் கட்டாயமானை
6ীd্য6ট) 1. சொல்-வகுப்பு - பெயர்ச் சொல், வினைச் ச்ெ 2. சொல்லின் வேர் (மூலம்) - குறித்த சொல் .ே 3. பிரதேசம் / இனம் - யாழ்ப்பாணம், கிழக்கி
முஸ்லீம், . 4. பொருள் - குறித்த சொல்லிற்கான பொருள் 5. பாவனை உதாரணம் - குறித்த சொல்லை
இதற்கு இலக்கிய உதாரணம் விரும்பத்த இடத்து நூலின் விபரங்களும் உள்ளட இல்லாதவிடத்து பொருத்தமான உதாரண உதாரணங்கள் தருதல் விரும்பத்தக்கது. அனுப்பியவர்விபரம்- பெயர், முகவரி, மின்னஞ்ச வேண்டும். சஞ்சிகையில் அனுப்பியவர் பெ.

ராதிக்கான
BIGODLEban
ாக்க அகராதியினை தொகுத்து நூலாக்கும் னைச் சொற்களை அனுப்பி வைக்குமாறு நாம்
னையின் பின்னர் அனுப்பியவர் பெயருடன் கப்படும். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி,
5 (அகராதி / dictionary என்று கடித உறையில்
3. யாழ்ப்பாணம்
4. தாய் 5. "உன்ரைகொம்மாஇதைக் கேள்விப்பட்டால் சண்டைக்கு வந்திடுவா எண்டு சொன்னன்” (புதிய சுவடுகள், தி. ஞானசேகரன், வீரகேசரி பிரசுரம் - 58 பக்கம் 159) I(65ITGOTL), 3B - 46th Lane, Colombo - 06, dictionary(CDgnanam.info, 0112 586 013)
நொட்டல்,
1. வினைச் சொல், 2. 3. மலையகம் 4. இடையூறு தருதலைக் குறிக்கும் 5. "நாம முழிப்பாயிருக்கோம் பாரு நம்மள நொட்டிக்கமாட்டாங்க" ("மூட்டத்தினுள்ளே, சு.சதாசிவம், வீரகேசரி பிரசுரம் - 75 பக்கம் 16) I(alsTGOTLb, 3B - 46th Lane, Colombo - 06, dictionary(CDgnanam.info, 0112586 013)
இடம்பெறுதல் விரும்பத்தக்கது. குறித்த ஒரு ப்பி வைக்கலாம். இருப்பினும் சொல், பொருள், வை. (மேற்கண்ட உதாரணங்களைக் கவனிக்க)
தான்றிய தோன்றியிருக்கக்கூடிய அடி
ழங்கை, மட்டக்களப்பு, மன்னார், மலையகம்,
நடைமுறையில் பாவிக்கக்கூடிய உதாரணம். 5க்கது. இலக்கிய உதாரணம் குறிப்பிடப்படும் க்கப்படல் வேண்டும். இலக்கிய உதாரணம் னம் தரப்படல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட
ல், தொலைபேசி விபரங்கள் உள்ளடக்கப்படல் பர் மட்டுமே பிரசுரிக்கப்படும். - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 9
கிTலைநேரம் ஆறுமணியிருக்கும் கடு அமர்ந்திருந்தான். உள்ளே அந்த ஒலை அன்னமுத்து அப்பச்சட்டியுடன் போராடிச் ஒரு சட்டியில் மாக்கலவையை அளவா விறகடுப்பின்மேல் ஏற்றிவிட்டு அதன்மேல் தூக்கி வைத்தாள். கீழ் அடுப்பில் பச்சை வி என்று ஊதியதில் அவள் கண்களில் இருந்து தாயின் சிரமத்தைச் சகிக்கமுடியாத ச பனங்கொட்டைத் தடத்தடியில் காய்ந்து அள்ளி வந்து தாய்முன் வைத்தான்.
அன்னமுத்துவுக்குப் பெருமைதாங்க மு இரு என்று சொல்லியவள் மகன் கொண்( அடுப்பினுள் திணித்தாள். திகு திகு என்று அடங்கித் தணல் பரப்பியது. அளவான வெ முடிந்துவிட்டன. சுட்ட அப்பங்களையெ மகனுக்குச் சாப்பிடக் கொடுத்தவள் க மெயின் வீதியில் நாய்கள் பலமாகக் குரைக் அப்படி நாய்கள் ஒடி ஒடிக் குரைத்தால் ட ஊருக்குள் திரிகிறார்கள் என்பது எல்லோரு அதுவும் இரவு நேரத்தில் இப்படிக் குரை எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் எல்லா பொது மக்களுக்கெல்லாம் அவ்வளவு பயம் பதினேழு வயதேயுடைய கனகராசுவும் அ மாலையில் ஆறுமணிக்கே வீட்டுக்குள் ட
விடுவார்கள்.
இன்றைக்கு காலைமையோட நாய் பயமாகத்தான் இருந்தது.
அப்பத்தைக் கடையில் கொடுத்துவிட்டு போகிறானே என்ற கவலைதான் அவளைக்க ராசாத்தி அக்காவிடம்தான் சொல்லிவிட்( நினைத்தவள், ராசாத்தியக்கோய், நான் க காப் போட்டு வாறன், கனகராசு மட்டு ஒரெட்டுப் பார்த்துக்கோக்கா, என்றவள்,
"தம்பி கனகராசு, அம்மா கடையில ஒடியாறன். கதவைச் சாத்திக்கொண்டு கவ6 மகனிடம் சொல்லிவிட்டு விடுவிடென்று ெ S. இரவு ஊருக்கை என்ன நடந்ததென்று g தான் அவளுக்குத் தெரியவரும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 
 

னகராசு தன் வீட்டுத்திண்ணையில் நிதானமாக வீட்டின் ஒத்தாப்பில் கனகராசுவின் தாய் கொண்டிருந்தாள். ாக ஊற்றி அதை வட்டமாக ஒருசுற்றுச் சுற்றி ல் தணல் நிரம்பிய இன்னுமொரு சட்டியைத் பிறகு புகைந்து கொண்டிருந்தது. ப்பூ.ப்பூப்பூ
கண்ணிர் பெருகியதுதான் மிச்சம். கனகராசு, மெதுவாக எழுந்துசென்று தனது கிடந்த ஊமக்கொட்டைகளை ஒரு கடகத்தில்
டியவில்லை. 'போதும்ராசா போதும் நீபோய் டுவந்த ஊமக்கொட்டைகளை ஒவ்வொன்றாக எரியத் தொடங்கிய கொட்டைகள் மெதுவாக ப்பத்தில் அவளுடைய வேலைகளும் விரைவாக பல்லாம் பெட்டியில் அடுக்கிவிட்டு மீதியை டையடிக்குப்போக ஆயத்தமானபோதுதான் கும் சத்தம் கேட்டது. ாதுகாப்புப் படையினர் அல்லது போராளிகள் க்கும் புரிந்துவிடும். த்தால் போதும் பூட்டியிருக்கும் வீடுகளுக்குள் ாம் அணைந்துவிடும் (அணைக்கப்பட்டுவிடும்)
D. புவன்தாய் அன்னமுத்துவும் கூட அப்படித்தான் புகுந்து, கதவைச்சாத்தி விளக்கை அணைத்து
குரைப்பதைக் கேட்க அன்னமுத்துவுக்குப்
டு வரும்வரையில் கனகராசு தனியே இருக்கப் 5லக்கியது. பக்கத்துவீட்டு 窓 டுப் போகவேணுமென்று டையடிவரைக்கும் ஒருக் ம் தனியக் கிடக்கிறான்
豪
அப்பத்தைக் குடுத்திற்று னமாக இருராசா என்ன." வீதிக்கிறங்கினாள் அவள்.
கடையடிக்குப் போனால்

Page 10
அம்மா வெளியே போனபின்பும் திண் ணையில் அமர்ந்திருந்த கனகராசு, நிலத்தில் கிடந்த பழைய பேப்பர் துண்டொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு கப்பல் போல் எதையோ திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருந்தான்.
அப்போதுதான் அவன் காலடியில் படுத்துக்கிடந்த 'கறுப்பி எழுந்து நின்று பலமாகக் குரைக்கத் தொடங்கியது.
ச்சைய்.ச்சைய்’ ஏதோ ஒரு நினைவில் நாயை அடக்கியபடியே நிமிர்ந்து பார்த்தான் கனகராசு, அவ்வளவுதான் அவனுடைய உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. குரல்கள் தளரப் பயத்தில் நாவரண்டுபோனது. அவன் முன்னே ஐந் தாறு ராணுவக்காரர்கள் ஆயுதங்களோடு ஆவேசமாய் நின்றனர். கனகராசு கண் களை இறுகமூடிக்கொண்டான். அம்மா சொல்லிக்கொடுத்த கந்தவுஷடி கவசத் தின் இரண்டு வரிகள் மட்டும் அவன் நெஞ்சுக்குள் உருளத்தொடங்கின.
அவனுடைய அந்தச்செயற்பாடுகள்வந்த வர்களுக்குப் பிடிக்கவில்லைப்போலும்.
ஆத்திரத்தில் அவனை அடித்துப் புரட்டி யெடுக்கத் தொடங்கினர். சொல்லுடா குண்டு வச்ச வயர் இந்த வீட்டாலதான் போகுது உங்கட வீட்டுக்கு இரவு யாருடா வந்தான் சொல்லுடா. அப்போதும் கனகராசு வாயைத் திறந்தா னில்லை.
சொல்லுடா. லூசு. சொல்லு திமிர் பிடிச்ச பிசாசே சொல்லித் தொலை யேண்டா இல்லையெண்டால் மவனே இந்தத் தொவக்காலேயே ஒன்மண்டையைப் பொளப்பன்
அரைகுறையாகத் தமிழ் தெரிந்த ஒருத்தன் பயங்கரமாகக் கத்தினான். கனகராசுவின் கண்களிலிருந்து கண்ணிர் பொலபொல வென்றுவடியத் தொடங்கியது. வேதனையில் அவன் துடித்துக் கொண்டிருந்தான்.
அப்பத்தையெல்லாம் கடையில் கொடுத்த அன்னமுத்து காசுக்காகக் காத்திருந்தாள். "இதோ வந்திடுறன் கொஞ்சம் பொறுத்
எஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங்களை அணு
மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை
கைத்தொலைபேசி இலக்கத்தைத் தவறாது குறிப்பி
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவ
8

துக்கோ அன்னமுத்து" என்று சொல்லி விட்டு உள்ளே போன முதலாளியாரை இன்னும் காணோம். பூசை புனஸ்காரம் எல்லாம் முடித்துவிட்டு இனி அவர் வெளியேவர எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
என்ன செய்வது மற்றவர்களுடைய கஷ்டங் களையும், தேவைகளையும், துன்பங்களையும் யார்தான் மதிக்கிறார்கள். பெடியனை மட்டும் வீட்டில் தனியாக இருத்திப்போட்டு வந்திட்டனே என்று மனசு கிடந்து தவிக்க.
கவனத்திற்கு, |ப்புபவர்கள் அவற்றை கணினியில் தட்டச்சு செய்து தபாலிலும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதியில் ருதல் வேண்டும். - ஆசிரியர் f : articles (agnanam.info
器 懿
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 11
பக்கத்தில் பத்திரிகைக் கண்ணோட்டம் படித் துக் கொண்டிருந்த கங்காணியார் அருகே போய் நின்று கொண்டாள் அவள்.
"என்னப்பு பேப்பர் என்ன சொல்லுது?" இது அன்னமுத்துவின் கேள்வி. எதேச்சையாக அவளைப் பார்த்த கங்காணியார் "பேப்பர் நியூஸ் கிடக்கட்டும், ஏனெணை அன்னமுத்து ராத்திரி பெடியளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த சண்டையில் ரெண்டு ரெண்டு பேர் செத்துப் போனானு களல்லே.”
“எனக்கொண்டும் தெரியாதப்பு, கேக்கவே தேகமெல்லாம் நடுங்குது. உதால ஏதும் பிரச்சனைகள் வருமோ அப்பு.”
“என்ன கதைபிள்ளை கதைக்கிறாய்? இழந்த வனுக்கு ஆத்திரம் இருக்கும் தானேயப்பா.”
"அதுதானே அப்பு ஆராயிருந்தாலும் உயிரெல்லே. கவலைப்படுவானுகள் தானே. அவள் கங்காணியாரோடு கதைத்துக் கொண் டிருக்கும்போதே "அன்னமுத்து இந்தா எணை அப்பக்காசு உதில எழுபது ரூபாய் இருக்குது. மாத்தச் சில்லறை இல்ல நாளைக்கு எடுக்கலாம் தானே. ஊருக்குள்ள றவுண்டப் நடக்குதாம் கெதியாய் ஒடப்பா கண்ணில காணுற பெடியளையெல்லாம் போட்டு அடிக் கிறானுகளாம். கெதியாய் ஒடணை” என்றார் முதலாளியார்.
அவ்வளவுதான் காசை வாங்கி இடுப்பில் முடிந்து கொண்டவள், என்ரையப்பனே முருகா என்று சொல்லியபடியே தன்வீட்டை நோக்கிக் காற்றாய் விரைந்தாள்.
ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐ
ஜின்னாவற்வின் இலக்கி நான்கு மாதங்களுக்
1970களில்இலக்கிய ஏற்கனவே அரசாங்கத்த போன்ற நாடுகளின் பல் 'கலாபூஷணம்” “தமிழ் பட்டங்களும், கெளரவ நான்கு மாதங்களுக்குள் பெற்றுள்ளார்.
21.10.2012ல் யாழ்ப் சங்க அறிவிப்பின்படி செய்துள்ளது. 25.11.2 மலர் வெளியீட்டு விழாவின்போது "காவியப் 22.02.2013ல் நடைபெற்ற கம்பன்விழாவில் அவ கெளரவித்துள்ளது. நான்கு மாதங்களுக்கு ஜின்னாஹற்வின் இலக்கியப் பணிக்கான அங்கீக
ஞானம் --கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னமுத்து அரைவாசித்துரம்தான் போயிருப்பாள். "இந்தா எணை அன்னமுத்து வாய் பேசமுடியாத பெடியனை வீட்டில விட்டுப்போட்டு நீ எங்கையடி ஆத்தை போனனி? ஆமிக்காரனுகள் உன்ரை பெடி யனைப் போட்டு அடிச்சதில குற்றுயிரும் குறையுயிருமாய்க் கிடக்கிறான். ஒடிப்போய்ப் பாரணையொருக்கா"சொல்லாச்சிக்கிழவிதான் செய்தியைச் செல்லிவிட்டுத் தன் வீட்டுப் பக்கமாய்ஓடினாள். கண்ணிரும்கம்பலையுமாக வீட்டை அடைந்தவள் அதிர்ச்சியில் ஒருகணம் அப்படியே உறைந்து போனாள்.
"என்ரையப்பு கனகராசு. உனக்கேனடா இந்தக்கொடுமை. கடவுளே என்ர பிள் ளையை இப்பிடிப் போட்டு அடிச்சிருக் கிறானுகளே. தலையில் அடித்துக் கொண்டு அவள் கதறியபோதே. அழாதீங்க அம்மா. பையன ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவம் விலத்துங்கோ விலத்துங்கோ. நாலைந்து பேர் சேர்ந்து கனகராசுவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ச்சேர்த்துவிட்டார்கள்.
எல்லாம் ஐந்துநிமிடம்தான் டாக்டர் கையை விரித்துவிட்டார். உயிர் போய் அரை மணிக்கு மேலாகிவிட்டதாம். "ஐயோ. என்ரமகனே கனகராசு." கதறியபடியே மூர்ச்சித்து வீழ்ந்தாள் அன்னமுத்து.
பாவம் யுத்தம் செய்யாமல் சத்தமும் செய்யாமல் ஒரு அப்பாவியின் உயிர் அவஸ்த்தைப்பட்டே அடங்கிவிட்டது.
O O O
SSqS AMSqS AMSqSqqSASLSASqSqqS ASiqSAAASS AAAASLSASSAASSiSqSAAAA
பப் பணிக்கான அங்கீகாரம்
குள் மூன்று விருதுகள்
த்துறையில்கால்பதித்தஜின்னாஹற்ஷரிபுத்தின் லும் இலங்கை, இந்தியா, அமீரகம், மலேசியா வேறு அமைப்புக்களாலும் "கவிக்கதிரோன்" மாமணி" "காப்பியக்கோ போன்ற பல்வேறு ங்களும் கிடைக்கப்பெற்றிருப்பினும் கட்ந்த தொடர்ந்தும் மூன்றுமுறை கெளரவிக்கப்
பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்
"புலவர்மணி" பட்டமளித்துக் கெளரவம் 012ல் ஞானம் சஞ்சிகை தனது 150வது புலவர் பட்டமளித்துக் கெளரவம் செய்தது. பவாண்டுக்கான"மகரந்தச் சிறகு விருதளித்துக் ள் மூன்று விருதுகள் தரப்பட்டுள்ளமை ாரங்களாகும்.

Page 12
தொழிலகத்தில் மும்முரமாய்
வேலையிலே இருக்கின்ற எழிலான பெண்களையும்
இரசிக்கின்ற தலைவருடன் எழுத்தாளர் கூட்டமதும்
எரிக்கின்ற பார்வையினால் அழுதழுது மாளாது
அசடுகளின் கண்திறப்போம்
கொள்ளிவாய்க் கண்களுடன்
குறுக்கிடும் எத்தர்க்கு 696iraflaj Tuj Darré1JT (5
அரக்ககுணம் அழித்திடுவீர் உள்ளத்தால் ஆடவர்க்கு
உளத்தூய்மை வராதவரை, கள்ளமற்ற கன்னியரின்
கண்ணீரும் ஆறாகும்.
Jabalafégo. 61J Tibé1JTg
பரபரப்பாய் ஏறியவர் பஸ்நகரும் வேளையிலே
முன்னுக்கும் பின்னுக்கும் இடித்திடித்து உராய்கின்ற இழிவான ஈனர்களை துடிதுடிக்க ஊசிகுத்தி
துரத்திடுவோம் மூலைக்கு
திருவிழாக் காலத்தில்
திருக்கோயில் மண்டபத்தில் திருட்டுவிழிப் பார்வையுடன்
திரிகின்ற மைனர்களும் பெரிசுகளும் பேதமின்றி
பேதலித்துத் திரிவதுவும் கரியவிழி கன்னியர்க்குக்
காப்பில்லை எனத்தோன்றும்.
 

மகளிர் தினக் கவிதை
காப்பகம் என்று சொல்லி
கன்னியரை சேர்க்குமடம் தாப்பிட்டு இளசுகளை
கசக்கி அழித்திங்கு ஏப்பமிடும் எத்தர்களை
கழுவினிலே ஏற்றும்நாள் காப்பாகும் காரியர்க்கு
களித்திடவே நாளெல்லாம்.
காவல்தரும் என்றெண்ணி
35TijuTGTi 1560)6OuJ356035 ஆவலுடன் அணுகினாலே
அங்கவர்க்கும் காப்பில்லை போவதினி எங்கென்று
புரியாமல் தவிக்கின்ற பாவையரைக் காப்பதற்கு
பரிகாரம் என்னவுண்டு?
1jngasprij14 6606ölubi-63ij
பஞ்சைப் பராரிகளாய் நாதியின்றி இருப்போரை
நாவினிலே துணிவைத்து நாசப் படுத்துகின்ற
நஞ்சான துரோகியரை வேசமிடும் விலங்குகளை
6ì606)flắ55Tĩ-1 &606öIl-T&IDT?
*目
பள்ளிக்குச் செல்வோரை
பாதியிலே இடைமறித்து முள்ளிவளர் காட்டினிலே
மூர்க்கமாய் கொலைபுரிவார் பள்ளிச்சிறார் படுந்துயரம்
போக்கிடவே ஒன்றாகத் துள்ளி எழுந்திடுவீர் இன்றே
துயரம் கலைந்திடுவீர்.
aa
则
*'-r
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 13
மொழிப் பயன்பாட்டின் பூரணத்துவம் அதன் எடுத்துரைப்பு முறைமையிலேயே தங்கியுள்ளது. "மொழியின் கையாள்கை பற்றிச் சிந்திக்கும் பொழுதும், அதன் தொடர்பு பூரணத்துவம் பற்றி நோக்கும் பொழுதும் ஒரு முக்கிமான அம்சம் மேற்கிளம்பும். அதுதான்குறிப்பிட்ட ஒரு விடயம் எருத்துக் கூறப்பருகின்ற முறைமை. அதாவது எருத்துரைப்பு" முறைமைதான் தொடர்பினை(Communication) நிச்சயப் பருத்துகின்றது. (1)
ஆங்கிலத்தில் Narative எனப்படுவதே இங்கு எடுத்துரைப்பு எனப்படுகின்றது. தமிழ்ச் சூழலில் சிலர் இதனை கதை சொல்லல் கதையுரைப்பு, சொல்லுமுறைமை எனப் பலவாறு விரித்துரைப்பர். நரேசன் (Naration) என்பது கதைக்கு மாத்திரம் உரியதன்று. அது சற்று விரிந்தது. சில பாடங்களை (Subjects) எருத்துக் கூறும் முறைமைகள் வேறு சில பாடங்களை எருத்துக்கூறும் முறைமையிலிருந்து வேறுபருவனவாகும்." (2) அத்தோடு மேலைப்புலத்தில் அமைப்பியல் வாதத்தின் செல்வாக்கினால் எடுத்துரைப்பானது (Narative) எடுத்துரைப்பியலாக (Narrotology) பரிணாமமடைந்துள்ளது. அதாவது சொல்ப வரிடமிருந்து கேட்பவருக்கு ஒரு செய்தியை எடுத்துச் செல்கின்ற ஒருவகையான தகவல் தொடர்பு முறை, விவரித்து விளக்கும் அறிவியல் சார் கருத்தியலாக வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக உலகளாவியரீதியில் கதையின் உருவாக்கத்தை வரையறை செய்வதில் திரும்பத்திரும்ப வரும்மூலக்கூறுகள், கரு, கதைசொல்லும்முறைமற்றும் அதன்பயன்ஆகியவற்றை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பது குறித்த தேருதலாகவே இவ் எருத்துரைப்பியல் கல்வித்துறை அமைகின்றது.13) எனவேதான் எடுத்துரைப்பினுடைய ஆக்கக் கூறுகள் யாவை? என்ன வகைமையான அம்சங்கள் எடுத்துரைப்பினைச் சாத்தியப்படுத்துகின்றன? என்பதற்கு எல்லா வகையான எருத்துரைப்புகளும் ஒரு
ஞானம் --கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

கதையினை வெளிப் பருத்துகின்றது என எளிமையாக விடையளிக்கலாம்.” (4) என்று கூறப்படுகின்றது. இதனையே க. பஞ்சாங்கமும் ஒரு பனுவலில் கதை இடம்பெறுவதும் அல்லது இடம்பெறாமல் போவதும்தான் எருத்துரைப்புஅல்லாத பனுவல்களிலிருந்துஎருத்துரைப்புப் பனுவலை வேறுபடுத்திக் காட்டுவதாகும். இதை மற்றொருவகையில் சொல்வதென்றால் எருத்துரைப்பு பனுவலையும் எருத்துரைப்பு அல்லாத பனுவலையும் எது வேறுபருத்துகின்றதோ அதுதான் கதை. (5) என்கின்றார்.
எனவே, ஏதாவது சொல்லப்படுகின்ற அல்லது வெளிப்படுத்தப்படுகின்ற கதை யினை எடுத்துரைப்பு எனலாம். இது பிரதி, படம், நாடகம் மற்றும் இசையரங்கு அல்லது இவற்றினுடைய இணைப்பு என எதுவாகவேனும் அமையலாம். "தொன்மங்கள், பழமரபுக் கதைகள், புராணக் கதைகள், சிறுகதைகள், காப்பியங்கள், வரலாறு, துன்பியல்நாடகம், நகைச்சுவை நாடகம், அபிநயநாடகம், சுவரோவியங்கள், திரைப் படங்கள், செய்தி அறிக்கை, உரையாடல்கள் போன்ற எண்ணற்ற வகைகளில் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் எருத்துரைப்பானது தெளிவாக இடம்பெறுகின்ற மொழி (பேச்சுமொழி அல்லது எழுத்து மொழி), படங்கள், சைகைகள், குறியீடுகள் போன்ற பல அம்சங்களில் கட்டமைக்கப்பருகின்றது” (6) என ரோலண்ட் பார்த் (Roland Barthes) கூறுகின்றார்.
இதன்படி எடுத்துரைப்புப் பனுவல்கள் என்ற வகைமைக்குள் பல்வேறுவகையான பனுவல்கள் உள்ளடங்குவதைக் காணலாம். அதாவது இலக்கியம் சார்ந்தது - இலக் கியம் சாராதது, வாய்மொழி சார்ந்தது - வாய்மொழி சாராதது, புனைவு - அல் L|G0) ତ0Tତ! எனப் பல்வேறு GIGO)5LLIITGT பனுவல்களும் எடுத்துரைப்புப் பனுவலாக வரையறுக்கப்படுகின்றன. இதனை பின்வரு மாறு நோக்கலாம்.
* , , ..., ଝୁ எம்.எம்.ஜெயசீலன் உதவி விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
11

Page 14
இவ்வாறு பல்வேறு வகையான பனுவல் களை எடுத்துரைப்பியல் கல்வித்துறை ஆய்வுப் பொருளாகக் கொண்டாலும் அடிப்படையில் எடுத்துரைப்பியலானது கட்டமைப்பினை ஆய்வு செய்கின்றது அல்லது கட்டமைப்பினை விரித்துரைத்தலை வெளிப்படுத்துகின்றது எனலாம். அதாவது புலக்காட்சிக்குத் தோன்றுகின்ற எடுத் துரைப்பு மூலக்கூறுகளின் பகுதிகளை நுணுகி ஆராய்வதோடு மூலக்கூறுகளின் இயக் கத்தினையும் அவற்றினுடைய தொடர்பு களையும் எடுத்துரைப்பியல் கோட்பாடு வரையறுக்க முயல்கிறது.
எனவே, ஒரு பனுவலின் எடுத்துரைப்புப் பற்றி ஆராய்வதற்கும் ஒரு பனுவலினை எடுத்துரைப்பியல்ரீதியில் ஆராய்வதற்கும் இடையே வேறுபாடு உண்டு. உதாரணமாக
இலக்கிய வகைப்பாடுகள் (Genr
ഗ~
எடுத்துரைப்புசார் இலக்கியம் கதைவடிவம்
(விவரஜை
எழுதப்பட்டது அச்சிடப்பட்டது நிகழ்த்துகலை
fill biti širajta, a si se, if I stili.
கதைக் கவிதை
ஆவண மூலம் திரை நாடக தட்டெழுத்து
ந:ல் சிறுகதை
LO S LLLSS L L LLLLSLTTTLSS STTTuTLLLLS LL L L LS TTT S
epsoit. : Jahn, Manfred, (2005) Narratology: A Guide to the Theory of Narrativ
கவிதை என்ற இலக்கிய வடிவத்தினை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு கவிதை யும் தனக்கென தனித்துவமானதோர் எடுத் துரைப்பு வகைமையினைக் கொண்டிருக்கும்.
அடிக்குறிப்பு 米 O
எடுத்துரைப்பு என்ற இச்சொல் சொல்பவரிடமிருந்து கேட்ப செய்தியை எடுத்துச் செல்கின்ற ஒருவகையான தகவல் தொ * கதையுரைப்பவரை அடிப்படையாகக் கொண்டு எடுத்துரைப் 01. தன்மை (முதல்நிலை) எடுத்துரைப்பு 02. ஆசிரியர்சார் எடுத்துரைப்பு 03. புறவடிவ எருத்துரைப்பு இங்கு ஆசிரியர்சார் எடுத்துரைப்பு என்பது கதையில் இடம் அமைவதாகும்.
12
 
 
 
 

ஆனால், அக்கவிதைகள் அனைத்தையும் எடுத்துரைப்பியல் நோக்கில் ஆராயமுடியாது. ஏனெனில் எடுத்துரைப்பியல் கருத்தியலின் அடிப்படை, பனுவலானது ஒரு கதையினை கொண்டிருக்க வேண்டும். கதையே எடுத் துரைப்புப் பனுவலையும் எடுத்துரைப்பு அல்லாத பனுவலையும் வேறுபடுத்துகின்றது. எனவே, ஒவ்வொரு கவிதையும் ஒரு கதையினை வெளிப்படுத்தும் எனஏதிர்பார்க்க முடியாது. கதையினை வெளிப்படுத்தும் கவிதைகளே எடுத்துரைப்புப் பனுவலாக (கதைக் கவிதையாக) கணிக்கப்படுகின்றது.
கதைக்கவிதைகளானது (Narrative poems) பெரும்பாலும் சிறுகதையின் அமைப்பினை ஒத்திருப்பதைக் காணலாம். பல்வேறு ஒத்த கூறுகளை இவ்விரு இலக்கியவடிவங்களும் கொண்டுள்ளன. குறிப்பாக பாத்திரங்கள் (Character) காட்சி அமைப்பு (Setting) (Lp TaoirLITG) (Conflict) கதை நெறி (Plot) போன்ற வற்றைக் கூறலாம்.
éᏕ)
அல்லாத இலக்கியம் இந்நிலையில்தான் எம். ஏ. ஐகள் வாதங்கள்) நுஃமான் என்ற கவிஞர் எமது கவனத்தை ஈர்க்கின்றார். அதா
வது தனது கவிதைகளில் பெரும் பாலானவற்றை புனைவுத் தன்மையுடன் தன்னுணர்ச்சிப் பாடல் முன்வைக்கும் எம். ஏ. நுஃ மான், காட்சிப்படுத்தலை தனது கவிதை வெளிப்பாட் டின் முக்கிய உத்தியாகக் கொண்டுள்ளார். இக்காட்சிப்
ÜLäę படுத்தல்களானது அக்கவி தைகளுக்கு இயல்பாகவே "வை ஆவது நாடகத் தன்மையளிப்ப
தோடு அவற்றினை ஒர் எடுத்துரைப்புப் பனுவலாக வும் வடிவமைக்கின்றது. இதற்கு அவரது தாத்தாமாரும் பேரர்களும் என்ற தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். எனவேதான் அத்தொகுப்பில் உள்ள அதிமானிடன் என்ற
வருக்கு அல்லது எழுதுபவரிடமிருந்து வாசிப்பவருக்கு ஒரு ற்பு முறையியலைக் குறிக்கும்
சூழ்நிலையை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்.
பறாத ஒருவர் (ஆசிரியற் கதையினை எடுத்துரைப்பதாக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 15
பனுவல் இங்கு எடுத்துரைப்பியல் நோக்கில் ஆராயப்படுகின்றது.
"மொழி சார்ந்த திறனாய்வாளர்கள் கவிதை சொல்லாடலானது சாதாரணச் சொல்லாடலின் செறிவான கட்டமைப்பு என்பர். பிற திறனாய்வாளர்கள் கவிதை சொல்லாடலின் குணங்களாக முரண்பாரு, வஞ்சப்புகழ்ச்சி, பல்பொருள் தன்மை, கழனத்தன்மை, நேர்த்தி, இறுக்கம் ஆகியவற்றைக் குறிப்பிருகின்றனர். (7) கவிதை எடுத்துரைப்பிற்கு சொல்லப்பட்ட இத் தன்மைகள் அதிமானிடன் பனுவலிலும் வெளிப்படும் அதேவேளை ஒரு கதைக் கவிதைக் (gifu (Narrative poems) எடுத்துரைப்பியல் அம்சங்களைக் கொண்டதாகவும் இப்பனுவல் விளங்குவதைக் காணலாம். இதனால் புனைவுக் குரிய பல்வேறுசாத்தியப்பாடுகள்இப்பனுவலில் வெளிப் படுகின்றன.
புனைகதை எருத்துரைப்பின் அழப்படை அலகு
i5615 01. நிகழ்ச்சிகள்/கதை 02. நிகழ்ச்சிகளுக்கான வார்த்தைக் குறியீடுகள் /
பனுவல் 03. எருத்துச் சொல்லும் அல்லது எழுதும் செயற்பாரு
- எருத்துரைப்பு என்பனவற்றைக் குறிப்பர். 18) இவற்றில் வாசகருக்கு நேரடியாக கையில் கிடைப்பது பனுவல் மாத்திரமே. பனுவலிலிருந்து நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப சுருக்கி எடுத்துக் கொள்ளப்பரும் எருத்துரைப்பு நிகழ்ச்சிகளே கதை என அழைக்கப்பருகின்றது. மேலும், இந்த நிகழ்ச்சிகள் அவை பங்கெடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளோடு தொடர்பு பருத்தப்பட்டு, கால வரிசையில் மறுவுருவாக்கம் செய்துகொள்ளப்பருகின்றன. (9)
எனவே, பனுவல் மொழியிலிருந்து வேறு பட்ட மொழியில் வாசகரின் தேவைக்கேற்ப சுருக்கி உரைக்கப்படும் நிகழ்ச்சிகளே கதை எனப்படுகின்றது. "பொதுவாக ஒரு பனுவலில் கதையை உருவாக்குகின்ற கூறாக நிகழ்ச்சிகள் அமைகின்றன. அருத்தருத்து வரக்கூழய நிகழ்ச்சிகள் கதையை உருவாக்கிக் கொள்கின்றன. அல்லது நிகழ்ச்சிகளை இணைக்கின்ற எருத்துரைப்புகளால் கதை தன்னளவில் உருவாகிக் கொள்கின்றது (10) இதனால் எடுத்துரைப்புப் பனுவல்களில் கதை மாந்தரும், நிகழ்ச்சிகளும் தவிர்க்கவியலாத கூறுகளாக அமைகின்றன. அதாவது "புனைகதை அமைப்பில் கதைப்பாத்திரங்கள் சில செயல்களை நிகழ்த்திச் செல்கின்றனர். அவர்களுடைய செயல் களும் அதனால் உருவாகும் நிகழ்ச்சிகளுமே கதையை கட்டமைத்துச் செல்கின்றன. (1)
இதன்படி அதிமானிடன் பனுவலின் நிகழ்ச்சிகளை பின்வருமாறு சுருக்கி கதையாக வடிவமைத்துக் கொள்ளலாம்.
“காட்டுமிராண்டியாக கற்குகைகளில் வாழ்ந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

மனிதன், ஒருநிலையானஇடத்தில்மந்தைமேய்த்தும் சிறுதானியங்களைப் பயிரிட்டும் வாழ்கின்றான். இதனைத் தொடர்ந்து ஆற்றங்கரையோரங்களில் குழயேறி விவசாயத்தினை தனது வாழ்வாதாரமாக மேற்கொள்கின்றான். இதனோரு வணிகமும் வளர்ச்சி பெறுகின்றது. இதன் பின்னர் ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் கப்பல் முதல் வான்வெளிக்கப்பல் வரை கண்டு பிழக்கப்படுகின்றது. இத்தகைய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் பயன்களை எல்லாம் முழுமையாக அனுபவிக்கும் ஒருபாதி மனிதன் வேற்றுக் கிரகங்களில் வாழ (p60)6OL இவ்வளர்ச்சிக்கு அழத்தளமாக அமைந்த மீதிப்பாதி மனிதனோ வறுமையில் வாழ வீதிகளில் அலைகின்றான். இந்த முரண்நிலை வளர்ச்சியின் உச்சத்தில் வறுமையில் வாழயவன் தன்னை சுரண்டியவர்களுக்கு எதிராக போராருகின்றான். போராட்டமானது அதிகாரவர்க்கத்தினரால் பல்வேறு வகையில் கட்டுப்பருத்தப்படுகின்றது. என்றாலும் தொடர்ந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்ட அவன், சாதாரண மனிதரைக் காட்டிலும் சக்தி படைத்த அதிமானிடனாகி பூமியில் பெரும் போர் புரிகின்றான்." இவ்வாறு கதை என்பது தொடர் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்க பனுவல் என்பது பேசுகின்ற அல்லது எழுதுகின்ற சொல்லாடலாக அமைந்திருக்கின்றது (12) அதாவது வாசகன் என்ன வாசிக்கின்றானோ அல்லதுபிரதியிலிருந்துதனது நோக்குநிலைக்கு ஏற்ப எவற்றைப் புரிந்து கொள்கின்றானோ அது தான் பனுவல் ஆகும்.
(அடுத்த இதழில் தொடரும்)
(01)- செல்வநாயகம்.வி (2000), உரைநடைவரலாறு (மீள் பதிப்பு), கொழும்பு, குமரன் புத்தக இல்லம், பக். 144 - 145 (02)- மேலது. ப. 145 O3- Prad, Gordon, (1984), ERIC Clearinghouse on Reading and Communication Skills Urbana IX
04-Jahn, Manfred, (2005) Narratology: A Guide to the Theory of Narrative. English Department, University of Cologne, p. 02 (05)- பஞ்சாங்கம், க. (2003), நவீன கவிதையியல் எடுத்துரைப்பியல், சென்னை, காவ்யா, ப24
O6) - Roland Barthes and Lionel Duisit, (1975) New Literary History, Vol.6, No. 2, On Narrative and Narratives, p. 237 -
O7 - Chibber, S.D.S., (1987) Poetics Discourse: An Introduction to Stylistic Analysis, New Delhi, Sterling Publication, p 05 (08) - பஞ்சாங்கம், க. (2003),மு.கு.நூ, சென்னை, காவ்யா, L j55 05 — 06 (09) - மேலது. பக். 6 (10) - பழனிவேலு, கே. (2005), கோட்பாட்டியல்திறனாய்வு, தஞ்சாவூர், அகரம், ப. 71 (11) - மேலது. ப. 75 (12) - பஞ்சாங்கம், க, (2003), மு.கு.நூ, சென்னை, காவ்யா,
I, 06
13

Page 16
பேரின்பம் தம்பதிகள் தொலை காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த அமைதியான இரவு வேளையில் நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. நெஞ்சை விட்டு நீங்காத பழைய பாடல்களைக் கண்டு கேட்டு இரசித்துக் கொண்டிருந்தனர்!
அப்போது தொலைபேசி அலறியது தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு தொலைபேசியை எடுத்தனர். இந்த நேரத்தில் எடுப்பது அனேகமாக வெளிநாட்டுக்காரராகத் தான் இருக்கும் முக்கியமாகமகன்இன்பராசாவாகத்தான் இருக்கும், "கடவுளே செல்ல மகன் என்னபாடோ தெரியாது!’ போன மாதம் யேர்மனிக்கு சுகமாகப் போய்க் சேர்ந்ததாக நல்ல செய்தி வந்தது, பிறகு என்ன நடந்ததோ தெரியாது! கடவுளே நல்ல செய்தியாக இருக்கவேணும்'என்ற ஏக்கத்தோடு குரல் கொடுத்தனர்.
மகன்தான் பேசினான். நீண்ட நாளின்பின் இன்பத்தின் குரல் கேட்ச இன்பமாகவே இருந்தது!
"அப்பா, அம்மா எப்படி சுகமா இருக்கிறீங்களா? நான் கொஞ்சம் பரவாயில்ல! நான் இப்ப காவல் துறை யின்ர கட்டுபாட்டில தான் இருக்கிறன் விசாரணைக்காக என்னையும் என்னோட வந்தவங்களையும் தடுப்புக் காவல் கைதி கள் மாதிரித்தான் வைச்சிருக்கிறாங்க! புலன் விசாரணைகள் நடக்குது எங்கயிருந்து வந்தனி ஏன் வந்தனி என்ன உனக்கு நடந்தது? அங்க என்ன நடக்குது, என்ன பிரச்சனை? இப்படிப் பல கேள்விகள்! என்னால் முடிந்தளவுக்கு அவர்கள் வினாவுக்கெல்லாம் பதில் சொல்லி சமாளித்து விட்டேன். எல்லாம் என்னைக் கூட்டிச் சென்ற முகவர்கள்
14
 
 

சினேகிதர்கள் சொல்லித்தந்ததுதான். என்ன கேட்பார்கள், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். ஆகையால் சமாளித்தேன், ஒரளவுதான்! இங்கே மொழிச்சிக்கல்! ஆங்கிலம் உலகமொழி, அதுதெரிந்தால் உலகம் முழுக்கப் போய் வரலாம் எண்டு சொல்லுறது இங்க எடுபடாது! இங்க சரியான மொழிப்பற்று இனப்பற்று இனத்துவேஷம் இருக்கிறது! இங்க ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்ததாக இல்லை! தெரிந்தாலும் காட்டிக் கொள்ளமாட்டார்கள்! ஏதோபோவதற்காக ஆயத்தமாகும் போதே சில யேர்மன் சொற்களை தெரிந்து வைத்திருந்ததால் ஒரளவு சமாளித்து விட்டேன். எனது நாட்டில் உயிர் அச்சுறுத்தல் ஆள் கடத்தல், பாதுகாப்பில்லை! அக்கம் பக்கமெல்லாம் கொலையும் கொள்ளையும் தான் வீடு வாசலும் இல்லை, அகதி வாழ்க்கைதான். இப்படி உண்மையும் பொய்யுமாக சொல்லி என்ர சாமர்த்தியத்தால் சமாளித்துவிட்டேன்.
ஆனால்." என்று கூறி நிறுத்தியவன், மீண்டும் தொடர்ந்தான்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் நான் கெட்டித்தனமாக கதைத்து சொன்னதை எல்லாம் ஆதாரங் களோட அவங்களுக்கு நிரூபிக்க வேணும் ! அதுக்கு நீங்கதான் ஒத்துழைக்கவேணும். எப்படி எண்டா, அங்க நடந்த பயங்கரவாதச் செயல்கள மனித உரிமை மீறல்கள் 6T6Ü6UITLD அனுப்பி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 17
வைக்க வேணும். முக்கியமாக எங்கட ஊர்க் கடற்கரையில பல்கலைக்கழக மாணவர்கள் பத்துப் பேர சுட்டுக் கொன்றாங்கள் எல்லா! அது பேப்பர்கள்ள படங்களோட கொட்டை எழுத்துக்கள்ள வந்தது! அந்த பேப்பர்கள கட்டாயம் அனுப்பி வையுங்கோ!. எங்கட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு புலி ஆதரவாளனைச் சுட்டவங்கள் எல்லே, எல்லாப்பத்திரிகையிலையும் வந்த செய்தி, அந்த பேப்பர் கட்டிங்கோட அவன்ர மரண சேட்டுபிக்கற்றையும் கேட்டு வாங்கி அனுப்பவேண்டும்! அதைவிட என்ர உயிர் சினேகிதன் திலீபன் அவனக் குடும்பத்தோட சேர்த்துச் சுட்டவங்கள், இரண்டு பேர் மரணம், எல்லாரும் காயம் முக்கியமாக அவன்ர மரணச் சான்றிதழ் வேணும்! வேற எத்தனையோ விமானக் குண்டுவீச்சில் எத்தனையோ கட்டிடங்கள் இடிஞ்சு போய்க் கிடக்கு, அதுகள் எல்லாம் பேப்பர்கள்ள வந்து கிடக்கு அதுகள் எல்லாம் திரட்டி கட்டாயம் கெதியாஅனுப்பிவைக்க வேணும்! அப்பதான் என்ன விடுவிப்பாங்க, அகதி அந்தஸ்து தருவாங்க. கெதியா நான் சொன்னது எல்லாம் அனுப்பி வையுங்க!" நீண்ட ஒப்பாரி இராகம் இழுத்து நிறுத்தினான் இன்பராசா
பேரின்பராசா மகனின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு உடனடியாக செயலில் இறங்கினார். முதலில் பல்கலை மாணவர்கள் கடற்கரையிலே சுட்டுக் கொன்ற கோரச் செய்திகளை திரட்டவேண்டும்! அது மகன் போவதற்கு ஒரு வருடத்துக்கு முன் நடந்த சமாசாரம் இவர் நாளாந்தம் பத்திரிகை எடுப்பதில்லை! வாரப்பத்திரிகை மட்டும் தான் வாங்கிப் பார்ப்பவர். தினசரிப்பத்திரிகை எடுப்பவனைத் தேடிப்பிடிக்க வேண்டும்! அதிலும் அவன் பழைய பேப்பர்கள விற்காமல் வைத்துப் பாதுகாக்க வேண்டுமே! துரிதமாக இயங்க வேண்டும்! மூளை தீவிரமாக வேலை செய்தது! நினைவில் வந்தது பாக்கியசோதி முகம்தான். நல் மச்சான் அவன், மனைவியின் தமையன் அவன், நாள் தவறாமல் பத்திரிகை எடுப்பவன்.
ஈருருளியை எடுத்துக்கொண்டு அவன் வீடு ஏகினார். பாக்கியசோதி வீட்டில் இருந்தார், இவரைக் கண்டு முகமெல்லாம் பல்லாக சிரித்தார். “என்னடா மச்சான் கனநாளுக்குப் பிறகு இந்தப்பக்கம், என்ன விசேசம்?"
"இல்லடா மச்சான் நானொரு சின்ன அலுவலாகத்தான் உன்னட்ட வந்தனான். 99
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

"அதுதானே பார்த்தன் நீ விசயமில்லாமல் வரமாட்டியே! என்ன விஷயம் சொல்லு.”
"உன்னட்ட பழைய பேப்பர்கள் எல்லாம் இருக்கா” “
“ஏன் என்ன தேவைக்கு எண்டு சொல்லன்."
"அது என்னென்டா, என்ர மகன் ஒரு மாதிரி யேர்மனி போய்ச் சேர்ந்துற்றான்! ஆனா பொலிசின்ர புலன் விசாரணையிலதான் வைச்சிருக்கிறாங்க! இஞ்ச நடந்த அநியாயங்கள அக்கிரமங்களை சொல்லி மெய்ப்பிக்கிறதுக்குத்தான் இந்தப் பழைய பேப்பர்கள் தேவையாயிருக்கு." பாக்கிய சோதி கொஞ்சம் யோசித்தார்! “பழைய பேப்பர்கள் இங்க கிடந்ததுதான் அவ வித்துப் போட்டாவோஎன்னவோ தெரியாது, பொறு பார்த்துச் சொல்லுறன்” என்றவர் உள்ளே போனார். சிறிது நேரத்தின் பின் வெளியே வந்தார், சொன்னார் "இரண்டு மாதத்துக்கு முந்தித்தான் அவ பழைய பேப்பர்காரனுக்கு வித்துப் போட்டா, வீடெல்லாம் குப்பையா கிடக்குதெண்டுற்று. இதில இரண்டு மாதப் பேப்பர் கொஞ்சம் கிடக்கு இஸ்டமெண்டாப் L JITT... ”
பேரின்பத்தார் வேண்டா வெறுப்போடு அவற்றைப் பார்த்தார். "ஒருவருடத்துக்கு முந்திய பத்திரிகைகள்தான் வேணும் தேவை யான பத்திரிகைகள பத்திரப்படுத்துற பழக்கம் இல்லையா..?” என்று கேட்டுவிட்டு போக எழுந்தார். “ஏன் மச்சான் அவசரப் படுகிறாய், அவ தேத்தண்ணி போடுறா போல கிடக்கு, குடிச்சிற்றுப் போவன்!"
"இல்ல நான் வாறன், கெதியா இந்த அலுவல முடிக்கவேணும்.” என்று சொல்லிக் கொண்டே நடையைக் கட்டினார்.
போகும் வழியில் தன் மச்சானைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டே போனார். அவரும் மகனை வெளிநாடு அனுப்புவதற்காக படாதபாடு படுகிறார். அவன் இன்னும் போன பாடு இல்லை! ஒரு முறை போய் இடை நடுவிலே திரும்பி வந்தவன்! இப்போது கொழும்பிலே நின்று தான் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறான். எனது மகன் போய்ச் சேர்ந்ததே அவர் மனதுக்கு கடுப்பாகத்தான் இருக்கும்! மேலும், அவர் மகன் போய்ச் சேர்ந்தால் இந்தச் செய்தி சேகரிப்பெல்லாம் அவருக்கும் தேவைப்படும்! ஆகையால் ஒளித்து வைத்திருப்பார்!" என்று பலவாறு எண்ணமிட்டவர் வீடு சேர்ந்தார்.
15

Page 18
தன் தங்கை வீட் டில் போய் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்துப் பார்த் தவருக்கு, வேறொரு சிந்தனை வந்து தடுத் தது! "அவர்கள் படிக்கும் பிள்ளைகள் உத்தியோகம் பார்ப் பவர்கள் எல்லாம் இரு கி களிறாார் களர் தான், பத்திரிகைகள் இருக்கும்தான், என் றாலும் எவ்வளவுதான் சொந்த பந்தமாக இருந் தாலும் நம்ம பிள்ளை ஐரோப்பிய நாடு போய் சேர்ந்து விட்டதைக் கேள்விப் பட்டாலே காணும், ஏங்கிப் போகுங்கள், முனிஞ்சு கொட்டுங்கள்! ஆகை ULITTGU சொந்தக்காரர நம்பக்கூடாது! இத தெரியப் படுத்த வே கூடாது! ஆரும் பிறத்தி யாரிட்டத்தான் உதவிகேக்க வேணும், என்று முடிவெடுத்துக் கொண்டார்.
"எங்கள் வட்டாரத்தில் அடுத்த தெருவபில் இருக்கும் சனசமூக நிலையத்துக்குப் போனால் தேவையான பத்திரிகைகள பெற்றுக் கொள்ளலாம். ஏன் வீடுவீடாகப் போய் கெஞ்சுவான்! என்ன, வேலை செய்யுற பொடியளப்பிடிச்சா சரிவரும்! என்று எண்ணமிட்டவர் மாலை மயங்கும் நேரம் சனசமூக நிலையம் நோக்கி நகர்ந்தார்.
அங்கே கலைநேசன்தான் மேற்பார்வை யாளனாக எந்த நேரமும், அங்கிருப்பவன். அவனிடம் போய் விஷயத்தைச் சொன்னார். அவன் தனக்கு இரண்டு நாள் அவகாசம் தந்தால் போதும் தான் எல்லாம் தேடி எடுத்து சேர்த்து வைப்பதாகச் சொன்னான். அவர் உனக்கு ஏதும் தரலாம் கட்டாயம் இதைச் செய்து தரவேண்டும்' என்று கெஞ்சும் பாவனையில் சொன்னார். அவன், தனக்கெதுவும் வேண்டாம் அந்தப் பழக்கம் எனக்கில்லை! இன்பராசாவின் முகத்துக்காக கண்டிப்பாக நான் இந்த உதவியைச் செய்வேன். என்று வாக்குறுதியளித்தான். இன்பராசா தன் சினேகிதனாம். 16
 

எப்படியோ திரு கோணமலைகடற்கரை யில் பல்கலைக்கழக மாணவர்களின் அநி யாயப் படு கொலை உட்பட அரச பயங்கர வாதங்களை எல்லாம் படங்களோடு ஆதார பூர்வமாக கலைநேசன் திரட்டிக் கொடுத் தான்! இனி பக்கத்து வளவிலேயே ஒரு புலி ஆதரவாளனை சுட்டுக் கொன றாா க ள ! இது பக்கத்தில் அரங்கேறிய திகில் சம்பவம் என்பதால் அந்தப் பொடியனின் மரணச் சான்றிதழ் போட்டோ பிரதி யை பெற வேண்டும்! அவன் தாய்வீடு ப ா  ைல யூ ற் று கி குப்
போகும் வழி யில் வருகிறது. ஈரு ருளியை எடுத்துக்
கொண்டு அங்கு போக ஆயத்தமானார்.
அவன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவன் தான், ஆட்டோ குண்டு வெடிப்பை நடத்தி ஆறு இராணு வத்தை சாகடித்தவன் சந்தையிலே கைக் குண்டெறிந்து காயப்படுத்தியவன், இனத்து வேஷம் பிடித்த சிங்களவருக்கும் வேட்டு வைத்தவன்! இவனைத் தேடித் திரிந் தார்கள், வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அவன் அகப்படாது அல்வா கொடுத்துக் கொண்டிருந்தான் தலை மறைவு வாழ்க்கையில் அவர்களின் தலையைச் சுற்றிக் கொண்டிருந்தான்.!
பேரின்பத்தார் வீட்டுக்கு அடுத்த காணியில் ஒருத்தி குடியிருந்தாள் வாடகைக்கு பேரழகி இல்லாவிட்டாலும் மிதமான அழகி இந்தத் தீவிரவாதிக்கு அவள் மீது தீராதகாதல் போலும் அடிக்கடி வந்து போவான். கணவன் வேலைக்கும் பிள்ளைகள் பள்ளிக்கும் போன பின் இவர்கள் பள்ளியறை இன்பம் கண்டிருக்க வேண்டும்! இதெல்லாம் பேரின்பத்தாருக்குத் தெரியாது! அக்கறையில்லை, கவனிக்க வில்லை. ஒரு நாள் நடந்த வெடியோசையோடுதான், இதுநாள் வரை நடந்த வரலாற்று நாடகத்தை அறிந்தார்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 19
'குற்றமே எந்தப் பெரிய மனிதனையும் வீழ்த்தும் பகையாகும். என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். இவனிடம் இருந்த இந்தப் பலவீனம், ஒளிந்து மறைந்து கண் காணாமல் சாமர்த்தியமாக தப்பி வாழ்ந்து திரிந்தவனுக்கு குறிப்பிட்ட இடத்துக்கு கண்ணை உறுத்தும் படியாக போய் வந்தது காட்டிக் கொடுப்பவர்களுக்கு வசதியாகிப் போய்விட்டது! காத்திருந்து தீட்டிவிட்டார்கள்!
ஒரு நாள் காலைநேரம், ஒன்பது மணியிருக்கும், பேரின்பம் வழமைபோல பூங்கன்றுகளுக்கு தண்ணிர் ஊற்றிக் கொண்டி ருந்தார். திடீரென்று துப்பாக்கி வேட்டுக்கள் தீர்ந்தன. அந்த அதிர் வேட்டுக்கள் தந்த அதிர்வில் தண்ணிவாளியோடு விழுந்து போனார்! L I G6) வேட்டுச் சத்தங்கள் கேட்டன! ஒருவனைச் சுட இத்தனை தோட்டாக்களா இவர்களைக் கண்டு அவன் ஒடியிருக்க வேண்டும், துரத்தித் துரத்திச் சுட்டிருக்கிறார்கள் அந்தப்பக்கம் புகை மண்டலமாக இருந்தது! வேட்டு வைத்த வேட்டைக்காரர்கள் ஆறேழுபேர் இருக்கும், வேட்டைநாய்கள் மாதிரி அட்டகாசமாக ஆகாயத்தையும் நோக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கலைந்து போனார்கள்!
அவன் d9FL G6)LIDIT95 வெகுநேரமாக கிடந்திருக்கிறான். ஒருவரும் கிட்டப்போக வில்லை! பேரின்பத்தாரும்தான்! மிக்க
நேரத்தின் பின்தான் படையினர் வந்தனர் வாகனங்களோடு! ஏதோவெல்லாம் அளந்தனர் எழுதினர், அயல் வீடுகளை எல்லாம் விசாரித்தனர் ஒப்புக்கு சிலர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தனர். பேரின்பத்தாரிடமும் வந்தனர். அவர் தனக்கொன்றும் தெரியாது என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
அவனைச் சடலமாக தூக்குக் கட்டிலில் கிடத்தி காவிக் கொண்டு கவசவாகனத்தில் ஏற்றினர்! அவன் கள்ளக் காதலியையும் அடிபோட்டு இழுத்துச் சென்றனர்! எல்லாம் எட்டத்தில் நின்று மிரட்சியோடு பார்த்துக் கொண்டுநின்றனர்பேரின்பம்தம்பதிகள். இதே காட்சியை அன்று தொலைக்காட்சியிலும் பார்த்தனர். இற்றை வரைக்கும் அந்தக் காணிப்பக்கம்தலை வைத்தும் படுப்பதில்லை! பயப்பீதி இரவிலே அழுது கூக்குரலிட்டு சத்தம் கேட்பதாக, நாய்கள் ஊளையிடுவதாக அயல் சொல்லும் ஏன் இவரின் மனைவியே முறையிடுவாள், அந்தப்பக்கம் பேய்களின் அட்டகாசம் என்று!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

அன்று பின்நேரம் அவன் தாய்வீடு தேடிப் போனார் பேரின்பம். விசாரித்து விசாரித்து வீட்டைக் கண்டு பிடித்து விட்டார். ஒரு விளையாட்டு மைதானத்தை அண்டியதாக வளவு. சிறிய கல்வீடு. பக்கத்தில் கரப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இவர் படலையைத் திறந்து கூப்பிட் டுப் பார்த்தார், "வீட்டுக்காரர். வீட்டுக்காரர்."
ஒரு நடுத்தரவயதுப் பெண்தான் வந்தாள். கறுப்பு நிறம், புலுட்டை மயிர், பரட்டைத்தலை சிலிர்த்துக் கொண்டு நின்றது! தடித்த உதடுகள் நீக்கிரோப் பெண் போலிருந்தாள் திருகோணமலை வெள்ளைக்காரர் ஆட்சியில் இருக்கும்போது கடற்படையில் நீக்கிரோக்களும் அடிமைக் கூலிப்படைகளாக இருந்திருக்கிறார்கள். விலங்கு போட்டுத்தான்.அவர்களைக்கொண்டு திரிவார்களாம்!மூன்றுநான்குபேர்எப்படியோ தப்பி ஓடிவிட்டார்கள். தப்பியோடியவர்கள் இங்கே காட்டுப் பகுதிகளில் தலைமறை வாகி குடியேறிவிட்டனர். தமிழரோடு சேர்ந்து கலந்து விட்டனர். இன்று அவர்கள் தமிழ் பேசும் காப்பிலிகள் தமிழராகிவிட்டனர்! ஆனால் எத்தனையோ தலைமுறையாகி யும் நீக்கிரோக்களுக்கே உரித்தான அங்க இலட்சணங்கள் அப்படியே இப்பவும் இருக்கின்றன பேரின்பத்தார்படிக்கும்காலத்தில் எத்தனையோ காப்பிலிப் பிள்ளைகள் சேர்ந்து படித்திருக்கிறார்கள். அவர்களின் தடித்த சொண்டு சுருட்டை முடி கரியநிறம் முரட்டுத் தோற்றம் அப்பவே மனக் கிலேசத்தை உண்டாக்கும் அவருக்கு!
இப்போது பெற்ற மகனை பறிகொடுத்து சோகமே உருவாக காட்சியளிக்கும் அந்தத் தாயை பார்க்கும் போது பரிதாபமாகவே இருந்தது! இரக்கத்துக்குரியவளிடம் போய் எப்படி உதவிகேட்டு யாசிப்பது! அதுவும் பறிகொடுத்த மகனின் மரணச் சான்றிதழை அல்லவா கேட்க வேண்டியிருக்கிறது! தர்மசங்கடப்பட்டார்!
தான் எங்கு இருக்கிறேன் என்று சொன்னதுமே அவளுக்குப் புரிந்து விட்டது! தன் மகனை எண்ணி கண்ணிர் மல்கினாள். “gD LIÉiIgEL வீட்டுக்குப் பக்கத்திலதானே நடந்திருக்கு, இவன் ஏன் அங்கே வந்தவன்? ஆர் சுட்டவன்? ஆர் காட்டிக் கொடுத்தவன்? எப்படி இது நடந்தது. இப்படிப் பல கேள்விகளை அவள் கேட்டு ஒப்பாரி வைத்தாள்!
17

Page 20
பலரின் அவல வாழ்க்கையை தமக்கு எம்மின வரலாறும் தொடர்கிறது! கேவர்
பேரின்பத்தாரின் நிலைமை மேலும் சங்கடமாயிற்று. அவருக்கு எல்லாம் தெரியும், தெரிந்ததை எல்லாம் சொல்லி சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை!
“உங்கட மகன் அந்த வீட்டுல இருக்கிற கனேசோடதான் சினே கிதம், அவரத்தேடித்தான் இவர் அங்க அடிக்கடி வாறவர். ஆரோ சொல்லிக் குடுத்துற்றாங்கள், திடுதிப் பெண்டு வந்து சுட்டுப்போட்டாங்கள்! அநியாயம்! பாவம் நல்ல பெடியன், என்னை எங்க கண்டலும் சிரிக்கும்! எனக்கு இதுக்குமேல வேறொண்டும் தெரியாது பாருங்கோ!” பேரின்பத்தார் சாமர்த்தியமாக கதைத்து முடித்து விட்டார்.
“எங்கட ஊர் அநியாயமாக பறிபோய்க் கொண்டிருக்கு. சிங்களவர்ர ஆதிக்கம் கூடிக்கொண்டு போகுது எண்டுதான் என்ர மகன் வேற பொடியன்களோட சேர்ந்து இதில இறங்கினவன்! இந்தக் காட்டிக் குடுக்கிற அழிவாங்களாலதான் ஒண்டும்
செயேலாம எல்லாம் தோல்வியாப் போகுது எங்கடவங்களே எங்களுக்கு அள்ளிவைக்கிறாங்கள்!" என்று கூறி
நிறுத்தியவர், "அவனும் எத்தனையோஅநியா யப் படுவான்கள சாகடிச்சுப் போட்டுத்தான் போயிருக்கிறான்." என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்! கடைசி வசனத்தை உச்சரிக்கும் போது அப்பெண்ணின் கண்கள் ஒளிவீசியது! பெருமிதத்தில் மிதந்தது!
இதையெல்லாம் இரசிக்கும், விமர்சிக்கும் மனநிலையில் அவர் இல்லை! அவருக்கு வந்தகாரியம் நிறைவேறவேண்டும்! விஷ யத்தை மெல்ல அவிழ்த்துவிட்டார். “பக்கத்தில் இப்படி நடந்ததால என்ர இளைய பொடியன வைச்சிருக்க பயமா இருந்தது. அது தான் ஒரு மாதிரி அங்கால போய் சேர்ந்துற்றார். எங்க எண்டாலும் போய் பாதுகாப்பா இருக்கட்டன்! இனி இஞ்ச பாதுகாப்பில்ல எண்டு நிரூபிக்க வேணும். அதுதான் இஞ்ச பாதுகாப்பில்ல எண்டு நிருபிக்கிறதுக்கு உங்கட மகன்.ர மர.ணச் சான்றிதழ் தேவையாயிருக்கு!” "நானும் எத்தினையோ போட்டோ பிரதி எடுத்து வைச்சிருக்கிறன். இப்படி எத்தினையோ
18

உவய்யான வாழ்க்கையாக்கிக் கொள்ளும் பங்களும் நீள்கிறது!
கேட்டு வாறவங்களுக்கெல்லாம் חLj$) குடுத்து உதயிவிருக்கிறன். என்ர பிள்ளை செத்தாலும் அதின்ர பேரால ஊர்ப் பிள்ளைகள் எண்டாலும் எங்கேயாவது தப்பிப் போகட்டன் என்று சொன்னவள் உள்ளே போய் அவர் கேட்ட பத்திரத்தை எடுத்துக் கொடுத்தாள் அதை வாங்கும் போது பேரின்பத்தாரின் கண்கள் கலங்கின. கைகள் நடுங்கின! மரணத்தறுவாயில் இருக்கும் கர்ணனிடம், செய்த புண்ணியங்கள எல்லாம் யாசித்து வேண்டிய கண்ணனின் நிலைதான் இவருக்கு ஊரில் இருக்கும் பிள்ளைகள எல்லாம் தன் பிள்ளைகளாய் நோக்கும் பரந்ததாயின் மனம் அத்தாய்க்கு! அதை உணர்ந்துதான் போலும் மெளனமாக அம்மாதுவையே கண்கள் கலங்க மெதுமையாக பார்த்துக் கொண்டு நின்றார். புறப்படும் போது சொன்னார், "நீங்க செய்தது பெரிய உதவி என்ன உதவி தேவைப்பட்டாலும் வாங்க நான் செய்வன்.”
அடுத்தது மகனின் சினேகிதன் திலீப னின் பெற்றோரைத் தரிசிக்க வேண்டியது முக்கியமான பணி! இதேதெரு முடி விடத்தில்தான் பெற்றோர் இருக்கிறார்கள்.
அவனும் இலேசுப்பட்டவன் இல்லை! இனக் கலவரங்களின் போது தமிழரைச் சாகடித்த 9ബ_5ബT குறையாடி கொளுத்தி நரவேட்டையாடியோருக்கு தலைமைதாங்கிய வீரச் சிங்களவரையே தேடித் தேடி வேட்டையாடினான்! இவனைத் தேடித் திரிந்தனர் படையினர் தலைமறைவு வாழ்க்கையில் தப்பித்திரிந்தான். இவனை வீட்டை விட்டே விரட்டி விட்டனர்! முக்கியமாக தகப்பனுக்கு இதெல்லாம் துப்பரவாகப் பிடிக்காது! அரசாங்க திணைக்களமொன்றில் உத்தியோகம் பார்ப்ப வர். கிட்டடியில் இளைப்பாறிச் சம்பளம் பெற இருப்பவர். இந்த உதவாக்கரை தன் உத்தியோகத்துக்கே வேட்டுவைத்துவிடுவான் என்பது மாத்திரமல்ல, உத்தியோகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் மற்றப் பிள்ளைகளையும் கெடுத்து விடுவான் என்று தகப்பன் முன்நின்று வீட்டுக்கு வரக்கூடாது என்று கலைத்து விட்டார்! எப்போதாவது மாமன் வீட்டில் தங்கிச் செல்வான். இடைக்கிடை தகப்பன் இல்லாத நேரம் பார்த்து தாயைப் போய் பார்த்து வருவான்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 21
பேரின்பத்தார் மகன் இன்பராசா இந்த திலீபனோடு தான் கூட்டு, நல்ல சினேகிதம்! இவனோடு சேர வேண்டாம் ஆபத்தானவன் என்று எச்சரித்தாலும் கேளாமல் அவனோடு கூடித்திரிவான் இவன் இடைக் கிடை இவர்கள்விட்டுக்கும் வருவான். வந்தால் நிம்மதியில்லை, போகுமட்டும் சறுபுறு என்று புறுபுறுத்துக் கொண்டே இருப்பார் பேரின்பத்தார்! ஆனால் அம்மாவுக்கு மனதுள் ஒருவாஞ்சை. இருவரும் ஒரேதோற்றம்சாயல், நல்ல நிறம் சீனர் போல, ஒஸ்ரேலியாக்காரர் போல நல்ல வளர்த்தி, நீக்கிரோக்கள் போல பரட்டைத்தலை சுருட்டை முடி இருவரை யும் பார்த்தால் சகோதரங்கள் போல, தன் மகனைப் போலிருப்பதால் அந்தத் தாய்க்கு இப்படியொரு மனநிலை மேலும் எல்லாத் தாய்மாருக்கும் பொதுவான குணமொன்று உண்டு. தன் பிள்ளைகளை நேசிப்போரை தாமும் பாசம் கொள்வர்.
திலீபன் அடாவடித்தனங்கள புரிந்தாலும் இன்பராசாவை உள்ளன்போடு நேசித்தான். நல்லாக ஒன்றுபட்டு பழகினாலும் தனது தொழிலுக்கு இவனை அனுமதிப்பதில்லை! “நீ நல்லாகப்படி, தாய் தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக இரு, என்னைப் போல கஸ்ரப்படாத வீடும் இல்லாம எப்ப உயிர் போகப் போகுதோ எண்டு தெரியாம.!
இன்பம் போகும்போது கடுமையாக எச்சரித்துக் கொண்டே இருப்பான், “இன்பம் கவனமடா. பாத்துப் போ. என்று வழிக்கு வழி சொல்லி அனுப்புவான். சில வேளைகளில் தானே பாதுகாப்புக்குக் கூட வருவான், தன்னோடு திரிவதால் அவனுக்கும் ஆபத்துச் சூழும் என்பதால்.’
பேரின்பத்தாரின் வீட்டு வளவு பெரிது. முழுவதும் துப்பரவு செய்வது இயலாது பெரும் பகுதி பற்றைகள் வளர்ந்திருக்கும், பெரு விருட்சங்களாக வேம்பு, புளி, விளாத்தி எல்லாம் ஓங்கி நிற்கும். தெற்குப் பக்க எல்லைக்கப்பால் கடை நிரைகள் இருக்கும். வியாபாரம் நடக்கும், சனம்புழங்கும், பிரதானவீதி நீண்டு செல்லும், வாகனங்கள் ஒடித்திரியும், எல்லாம் இவர்கள் வேலிப்பக்கமாக நின்றுபார்த்தால் தெரி யும். வீதிக்கு அடுத்தாற்போல் பெரிய காவல் அரண் ஒன்று உண்டு வீதிச்சோதனை பயணிகள் சோதனை எல்லாம் நடக்கும். இதுகூட இவர்கள் பக்கம் நின்று பார்க்க துலாம்பரமாகத் தெரியும்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

இவர்களுக்கு பின் பக்கத்தைக் காட்டிக் கொண்டிருப்பது ஒரு சாப்பாட்டுக்கடை படையினர் அடிக்கடி அங்குவந்து போவர். சில போது கூட்டமாயும் வந்து நிற்பர்!
இவன் திலீபன் இங்குவந்தால் இதைக் கூடுதலாக அவதானித்துக் கொண்டிருப்பான்! மரத்திலேறி நோட்டமிடுவான்.
இன்பராசாவிடம் அடிக்கடி ஒன்றைச் சொல்வான், "உன்ர வளவு வேலிக்கரை மரமொன்றில் ஏறிநின்று தாக்குதல் நடத்தினாலே துலைக்கலாம்! நல்ல வசதியான இடம், சனங்கள்ற வளவுக்குள்ளாலேயே வந்து செய்து போட்டு தப்பிப் போகலாம்! ஆனா. ஆனா. உன்ர வீடு குடும்பம் இருக்காது! அழிச்சுப் போடுவாங்கள்!” என்று சொல்லி தன் திட்டத்தைக் கை விட்டிருக்கிறான்.
நல்லவேளை இன்பத்தின் அன்பு இல்லாவிட்டால் பேரின்பத்தார் கூண்டோடு கைலாயம் போயிருப்பார். நண்பனின் சாவின் பின் இன்பராசா வீட்டிலே மனவருத்ததோடு கதைத்திருக்கிறான்.!
ஒரு நாள் பார ஊர்தியொன்று சங்கக் கடைக்கு முன்னால் நின்றது. சங்கக் கடைக்கு சாமான்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சாரதி சிகரெட் புகைத்து இரசித்துக் கொண்டிருந்தான், பொருட்கள் இறக்கப்படுவதை அவதானித்துவிட்டு திடீரென்று உந்துருளியில் வந்து தோன்றினான் திலீபன். அந்தச் சாரதியை பிடித்து இழுத்து சூடு நடத்தி கொன்று ட்டான் பட்டப்பகலில் நடுவீதியில் பகிரங்கமாக இதை அரங்கேற்றினான்! அவன் காட்டிக் கொடுப்பவனாம்! தங்கள் குழுவினர் சிலரின் மரணத்துக்கு காரணமானவனாம்!
உந்துருளியில் வந்தவன் தலைக் கவசத்தோடு நின்றிருந்தால் கண்களை உறுத்தியிருக்காது. இவன் அதை கழற்றி எறிந்து விட்டு இந்தக் கோரக் கொலை யைச் செய்திருக்கிறான். விளம்பரம் தேடி யிருக்கிறான் இதெல்லாம் அவர்களுக்குப் பெருமை!
இந்தப் பலவீனமான குணம்தான் அவனுக்கு ஆபத்தை தேடித்தந்திருக்கிறது! இவர் மாமன் வீட்டில் இராத்தங்கல் போடுவது வழக்கம். ஒரு நாள் இரவு தன் குழுவினருடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று உட்புகுந்த ஒரு கோஷ்டி அவ்வளவு பேரையும் சுட்டுப் போட்டது. இந்த வீட்டில் இருந்த ஒரு சிறுமி யும் மரணம் பலரும் காயம்!
19

Page 22
திலீபனின் மரணச் சடங்குக்குக்கூட g) GöILJUTITFIT போகவில்லை! போகவிட வில்லை! பாதுகாப்புக்காக வீட்டுக்குள்ளேயே பூட்டிவைத்தனர்! அன்றிலிருந்து பேரின்பத் தார் தம்பதிகளுக்கு நிம்மதியே இல்லை! உந்துருளிகள், முச்சக்கரவண்டிகள் போனால் காணும் கலவரப்படுவர்.
காரணமில்லாமல் உந்துருளியோ முச்சக்கரமோ வந்து நிற்கும்! கனநேரமாக காவலிருக்கும் வீட்டை நோட்டமிடு கிறார்களா? வேவு பார்க்கிறார்களா! வெளியிலே எட்டிப் பார்க்கவே பயந்து கலவரப்பட்டுப் போயிருப்பர்!
திலீபன் இல்லாத இந்த ஊரில் இனி நான் இருக்கமாட்டேன் என்று இன்பராசாவும் ஆணித்தரமாகச்சொல்லிவிட்டான்பேரின்பத்தார் தன் தம்பிவிட்டுக்கு அனுப்பிவிட்டார் கொழும்புக்கு அங்கிருந்துதான் வெளிநாடு போய்ச்சேர்ந்தான்
இனி திலீபனின் பெற்றோரிடம் போய் அவன் மரணச் சான்றிதழ் பெற வேண்டும். பேரின்பத்தார் அவ்வீடு போய றியார். அவர்களோடு பழக்கம் இல்லை. அவர் மனைவிக்கு அவர்களைத் தெரியும். திலீபனின் அம்மாவை அடிக்கடி சந்தையில் கண்டு கதைப்பதும் தங்கள் மகன்மாரை எண்ணி கவலைப்படுவதும் σTIILILη இவர்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று அக்கறைப்படுவதும் உண்டு. ஆகையால் பேரின்பத்தார் தன் மனைவியையே அனுப்பி வைததாா.
அவ அங்கு போனபோது காலை நேரமிருக்கும். திலீபனின் அம்மாதான் வீட்டிலிருந்தா, அவர் இல்லை, சுகநலன் விசாரித்து விட்டு, திலீபனின் மரணம் தொடர்பாக கவலை தெரிவித்த பின்பு தான் வந்த விஷயத்தை சொன்னா.
அவ சம்மதம் தெரிவித்தா. ஆனால் அது எங்கிருக்கிறது எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. நாளைக்குப் பின்னேரம்
நூல் அறிமுகத்திற்கு நூல் | அனுப்ப வேண்டும். ஒரு பி அறிமுகம் இடம்பெற மாட்டாது.
அறிமுகத்திற்கு ஏற்றுக் கொள்
 

அவர் வீட்டில் இருப்பார், அப்பவாருங்கோ எடுத்துத் தரலாம் என்று சொல்லி அனுப்பினா.
"உங்கட பொடியன் சொல்லுக்கேட்டு நடக்கிற பிள்ளை எண்ட படியா தப்பி ஒட்டி இப்ப வெளிநாடு போய்ச் சேர்ந்துற்றார். எங்கட பொடிப்புள்ளையையும் வெளி யில அனுப்ப எவ்வளவு பாடுபட்டனாங்க, எங்கட சொல்லுக் கேக்காம தன்ர விருப்பத்துக்கு நடந்து அநியாயமாபோனான்" என்று சொல்லி வாய்விட்டு அழத் தொடங்கிவிட்டா!
மறுநாள் மாலை மிக நம்பிக்கையோடு போன இன்பத்தின் தாய்க்கு ஏமாற்றமாகி விட்டது! அந்த உத்தியோகத்தர், வீட்டில் இருந்தார் அவர் உள்ளே இருந்து கொண்டு பதிலை மனைவியிடம் சொல்லி விட் டிருக்கிறார். இங்கே இருந்ததுதான், ஆனா இப்ப இல்ல! இவர்ர தம்பிட மகன் தனக்கு வேணும் எண்டு சொல்லி எல்லாத்தையும் கொண்டு போயிற்றான். அவனும் வெளிநாடு போறதுக்காகத்தான் கொழும்புல நிக்கிறான்” என்று சொல்லி கதவை மூடிவிட்டார்.
இதை வந்து வீட்டிலே சொன்ன போது பேரின்பத்தார் மனிதரிலே எத்தனை வகை யான குணபேதங்கள் என்று எண்ணிக் கொண்டார். முன்பின் தெரியாதவங்கள் கேட்டவுடனே எடுத்துத் தருகிறார்கள். நன்றாகப் பழகிய துரைமார்கள் புறக்கணிப்பைக் காட்டுகிறார்கள்!
எப்படியோ, இப்படியாக LIGN) அனுபவங்களைக் கண்டு தேவையான தகவல்களைத் திரட்டி அனுப்பி விட்டார். பட்ட பாட்டுக்கு கைமேல் பலன் கிடைத்து விட்டது மகன் போன் எடுத்துச் சொன்னான், அகதி அந்தஸ்து கிடைத்து விட்டது என்று!
பலரின் அவல வாழ்க்கையை தமக்கு உவப்பான வாழ்க்கையாக்கிக் கொள்ளும் எம்மின வரலாறும் தொடர்கிறது! கேவலங்களும் நீள்கிறது!
O O. O.
நளை அனுப்புபவர்கள் இரண்டு பிரதிககளை ரதியை மட்டும் அனுப்பினால் அதற்கான நூல் ஒரு வருடத்திற்குள் வெளிவந்தநூல்களே நூல்
ளப்படும்.
- குறிஞ்சி நாடன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 23
வளையிலே வீடு உண்டு எலிகளுக்கு - தேன் வதையிலே வீடு உண்டு தேனீக்களுக்கு. முதுகிலே வீடு உண்டு நத்தைக்கு - அகதி முகாம்வாசிக்கோ வீடு உண்டு கனவுக்குள் “முக்கியமான மனிதப் பண்புகளின் முதல் பள்ளிக் கூடம் வீடு' என்றான் 'வில்லியம் எலிரிக் கிளானிங்" எனும் அமெரிக்கக் கவிஞன் - இங்கு முதல் பள்ளிக் கூடங்களைத் தொலைத்துவிட்டு முகாம்களில் தொலைந்து கொண்டிருக்கின்றோம். காவலுக்குத் திண்ணையில் படுத்த நாயின்மீது யாரோ கல்லெறிந்தது போல் திடுக்கிட்டு விழித்ததில் - எங்கள் ܕ ܘ சொந்த வீடு பற்றிய கனவுகள் கலைந்து போனாலும் மரக்கிளைக் காதுகளில் தூக்கணங்கள் போலாடும் அந்தத் தரக்கணாங் குருவிக் கூடுகளைப் பார்க்கும் போதெல்லாம் எம் தாயதி வீடு பற்றிய ஏக்கங்கள் மேலும் மேலும் a ឆ្នាំងោយសាឃុb.
சந்தன மல்லியில் விளையாடிய சுந்தரக் காற்று சுகம்தர சாமத்துச் சேவல் - எம்
தாயதி வளவின் வீட்டுக்
கூரையில் நின்று கூவாதோ என்று ஏங்கித்தான் என்ன செய்வது? கஸ்ரப்பட்டுக் கட்டி வைத்தோம் கறையான்களைப் போலவே யாம். களவாடியது எங்கள் கனவுகளை கொல்விஷப் பாம்புகளன்றோ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழயிருப்புக்குள் நுழைந்தபோது பெருமூச்சொன்றினை தவிர (96.6065-. வேறொன்றினையும் உணரமுழயவில்லை
அவனின் உழைப்பின் வியர்வையினால் பசுமையாய் காட்சிதந்த இரண்டு ஏக்கர் நிலமிது
பல அமாவாசைப் பொழுதுகளும் இருள் கெளவி மறைந்தேபோயின நெற்கதிர்களை பரப்பி சூடழக்கும் மாடுகளாய் காணியை சுற்றிவந்தவன் நிழல் மரவெள்ளி ஒன்றின் கீழ் அமர்ந்து கொண்டான்
மணிவாழை ஒன்று ஓரிரு மாதங்களுக்கு முன்பேதான் தளிர்விட்டு தலை நிமிர்த்தியது மெலிதான குரலில்.
உங்களை பாதுகாக்க பதுங்குகுழியிலிருந்தீர்கள் நாட்செல்ல செய்வதறியாது குழயிருப்பை விட்டோழனிர்கள் நாமும். நிமிர முழயாதவர்களாய் மண்ணில் மறைந்திருந்தோம்
ஒலி ஓய்ந்துகொண்ட மணிவாழையின் திசையில் முகம் வைத்திருந்த
அவன். எதையுமே பேசமுழயாதவனாய் மீண்டும். உறுதியோரு குழயிருப்புக்குள் வாழ்வதற்கு தலைநிமிர்த்தி எழுந்தான்.
கே.ஆர்.திருத்துவராஜா
21

Page 24
0
சிறுகதைகள்
சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது
வீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஒர் இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை இலக்கிய வடிவமானது இன்று ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய இடத் தினைப் பிடித்துள்ளது. இத்துறையில் ஆண் எழுத்தாளர்களைப் போன்றே பெண் எழுத்தாளர்களும் தங்களது பங்களிப் புக்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் குறிப்பாக முஸ்லிம் படைப் பாளர்கள்பலரும்தங்களது பங்களிப்புக்களைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முஸ்லிம் பெண் படைப் பாளிகளும் தங்களது ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும் செய்து வருகின்றனர். சிறு கதைத் துறையிலும் இவர்கள் பிரகாசித்து வருவது நோக்கத்தக்கது.
குறிப்பாக 1940களுக்குப் பின் முஸ்லிம் பெண்கள்சிறுகதைகளைனழுதிவந்தாலும்கூட 1980களுக்குப் பின்பே அதிகமான பெண்கள் சிறுகதைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1980களுக்குப் பின் முஸ்லிம் பெண்கள் கற்கும் வீதம் அதிகரித்துக் காணப்படுவதனாலும், பல் துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பதனாலும், உயர் பதவிகளை வகித்து வருவதனாலும், நவீன யுகத்திற்கு ஏற்றாற் போல் சிந்திக்கத் தலைப்
22
 

பட்டதனாலும் பலர் கலைத் துறைகளில் தங்களது பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர். இவ்வாறே சிறுகதை இலக்கியத்திலும் இவர்களது பங்களிப்புக்கள் காணப்படுகின்றன.
ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதை யாசிரியர்களாக, நயீமா சித்திக், புசல்லாவ இஸ்மாலிகா, ஹஸினா வஹாப், கெகிராவ சஹானா, புர்கான் பீ இப்திகார், சுலைமா சமி இக்பால், றியாஸா ஆப்தீன், இர்பானா ஜப்பார், மரீனா இல்யாஸ், எம்.ஏ.ரஹிமா, பாத்திமா ரஜர், ஸனிரா காலித், மளிதா புன்னியாமீன், சுல்பிகா, கலைமகள் ஹிதாயா, றளினா புஹாரி மஸ"ரா, ஏ. மஜித், பெளசியா யாசீன், ஜூனைதா ஷெரீப், பாத்திமா ரஜப், பரிதா, சாஹல் ஹமீத், ஹைருன்னிஸா, நூருல் அய்ன், றுவைதாமதீன், ஸ்மீனாஸஹிட் ரதீமா ஆமர் போன்ற பலர் சிறுகதைத் துறையில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர்.
1980களுக்கு முன்பு பலர் எழுதத் தொடங்கினாலும் அவை நூலுருவில் வராது பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஒலிபரப்புக்களுடன் மட்டுப்பட்டதாகக் காணப்படுகின்றன. முஸ்லிம் பெண்களில் பலர், சிறந்த சிறுகதைப் படைப்புத் திறன்களைக் கொண்டிருந்தாலும் சிஷ்ட குடும்ப சூழ்நிலைகளால் இடைநடுவில் இத்துறையிலிருந்து விலகிவிடும் போக்கு காணப்படுகின்றது. இதுவரையில் குறிப்பிடத் தக்க சிலரின் சிறுகதைத் தொகுப்புக்களே வெளிவந்துள்ளன. ஏராளமான சிறுகதைகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல புதிய எழுத்தாளர்கள் தோன்றிய வண்ணமுள்ளனர்.
குறிப்பாக 1980களுக்குப் பின்பே பல முஸ்லிம் பெண் சிறுகதையாளர்கள் சிறுகதை உலகிற்கு அறிமுகமாகினர். இவர்களின் சிறுகதைகளில் தொகுப்புக்களாக வெளி வந்துள்ளவை சொற்பமானவை. நயீமா
எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 25
சித்திக்கின் வாழ்க்கைச் சுவடுகள் (1987), சுலைமா சமி இக்பாலின் வதங்காத மலரொன்று (1988), மனச்சுமைகள் (1987) போன்ற சில தொகுப்புக்களே எண்பதுகளில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1980களில் வெளியான சிறுகதைகளை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் சமூக அவலங்களே சிறுகதைகளில் வெளிப் படுத்தப்பட்டுள்ளன. பெண்களால் எழுதப் பட்ட இலக்கியம் என்ற வகையில் இவர்கள் பெண்களின் சுதந்திரம், சமத்துவம், கல்வி சமூகப் பாங்கு குறித்த தமது ஆதங்கங்களை சிறுகதைகளினூடாக பிரதிபலித்திருப்பதனைக் காணலாம். இர்பானா ஜப்பாரின் சிறுகதை களில் பெண்ணுரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகளின் பிரதிபலிப்புக்களைக் காணலாம். இதே தன்மைகளுடன் குடும்பப் பெண்கள், சமூகப் பெண்கள் அனுபவிக்கின்ற அவல நிலைகள் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளை கருப்பொருள்களாகக் கொண்டு சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சிறுகதைகளின் கருப் பொருட்கள் குடும்பம், பெண், திருமணம்
இலக்கியம் சமூகத்தின் விழிப்பு முஸ்லிம் பெண்களும் கும்முடை பல்வேறு சிறுகதைகளைப் ப.ை இவர்களது சிறுகதைகளின் எடுத்து சிற்சில குறைபாடுகளும் காணப்படு
குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, கல்வி நடவடிக்கைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு காணப்படுகின்றன. வைகறைப் பூக்கள், மனச்சுமைகள் போன்றவையும் இத்தன்மைகளுடன் காணப்படுகின்றன. மேலும் பெண்கல்விக்கு வரையறையிட்டு வைத்துள்ள சமூகத்துக்கு விழிப்பூட்டும் முகமாக பெண்கல்வியின் அவசியம் வலியுறுத் தப்படுகின்றது. வாழ்க்கைச் சுவடுகள் சிறுகதை களும் பெண் சித்தாந்தங்களைப் பேசுவதைக் காணலாம். 80களில் வெளியானசிறுகதைகளில் பிரச்சாரப்போக்குகள், தீவிரமாககருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கும்தன்மைகள்என்பவற்றி னைக் காணலாம்.
தொண்ணுாறாம் ஆண்டுகளை எடுத் துக் கொண்டால் இம்முயற்சிகள் சற்று
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

அதிகரித்திருப்பதனைக் காணலாம். இக்கால கட்டத்தில் மரினா இல்யாசின் குமுறுகின்ற எரிமலை(1998), ஹஸீனா வஹாபின் வதங் காத மலரொன்று (1992), கெக்கிறாவை ஸ்ஹானாவின் ஒரு தேவதைக் கனவு (1997), முஸ்லிம் மாதர் அமைப்பின் மனச்சுமைகள் (1992), புர்கான் பீ.இப்திகாரின் பிறந்த மண்(1999), இர்பானா ஜப்பாரின் புதுமைப் பெண், காத்தான்குடி பாத்திமாவின் பொய்த் தூக்கங்கள் ஆகிய தொகுதிகள் வெளி வந்துள்ளன.
90களில் வெளியான சிறுகதைத் தொகுப்புக்களை நோக்கின் குமுறுகின்ற எரிமலைகள், ஒரு தேவதைக் கனவு, வதங்காத மலரொன்று என்பன குறிப்பிட்டுக் கூறப் படக்கூடிய தொகுதிகளாகின்றன. இவற்றில் ஹஸினா வஹாபின் கதைகள் அபரிமிதமான உணர்ச்சிகள் இன்றி இயல்பான போக்கில் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கதை யில் பாத்திரங்கள் லாவகமாக, சிறப்பாக நடமாட விடப்படுகின்றன. இலட்சிய நோக்கை இவரது கதைகளில் காணலாம். மரீனா இல்யாசின் கதைகளிலும் பெண்களே
னர்வு ஊடகம் என்ற வகையில் ப சமூகத்தின் விழவை நோக்கி டத்து வருகின்றனர். என்றாலும் துரைப்பு, உருவ, உள்ளடக்கங்களில் கின்றன.
பேசப்படுகின்றனர். சீதனக்கொடுமை உட்பட ஆண்கள் பெண்களை உணர வேண்டும் என்ற நோக்கில் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. பெண்களின் மனவுணவுர்கள் அழகாகப் படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. துன்பங்களை வார்த்தைகளால்வடித்துள்ளார். கெக்கிறாவை சஹானாவின் ஒரு தேவதைக் கனவு என்ற சிறுகதைத் தொகுப்பானது இன்னல்களை சுமக்கும் பெண்களின் இயல்புகளைக் காட்டி நிற்கின்றது. இவர் அற்புதமான புரிதல் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். கதை மரபு சிறுகதை பிரக்ஞை, பாத்திர வார்ப்பு போன்றன சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. நுணுக்கமான முறையில் இயல்பாக மண வாழ்வின் முரண்பாடுகளை, சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளார். வளர்ந்துவரும் ஒரு
23

Page 26
தரமான சிறுகதை ஆசிரியராக கெக்கிராவை சஹானாவைக் குறிப்பிடலாம். சிறுகதை உத்தி களை அழகாகக் கையாண்டுள்ளார். இவரது நடை கூட அழகாகக் காணப்படுகின்றது.
குறிப்பாக தொண்ணுாறுகளுக்குப் பின் 2000ஆம் ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் சலைமா சமி இக்பாலின் திசை மாறிய தீர்மானங்கள் (2003), லரீனா ஏ.ஹக்கின் எருமைமாடும் துளசிச் செடியும் (2003), கெக்கிறாவை சஹானாவின் ஒரு கூடையும் இரு முட்டைகளும் (2009), நயீமா சித்திக்கின் வாழ்க்கை வண்ணங்கள் (2005), மளிதா புன்னியாமீனின் மூடுதிரை (2008), ஜெனீரா அமானின் பிரியமான சிநேகிதி (2009), ஹாறாவின் மல்லிகை இதயங்கள்(2010) போன்ற சில தொகுப்புக்களே இதுவரையில் வெளிவந்திருப்பதனைக் காணலாம். இவர் களில் நயீமா சித்திக், சுலைமா சமி இக்பால் போன்ற பெண்மணிகள் எண்பதுகள் முதல் இன்று வரை சிறுகதைகளைப் படைத்து
வருவது குறிப்பிடத்தக்கது.
2000ஆம் ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிடத்தக்களவு தொகுப்புக்களே
வெளிவந்துள்ளன. சுலைமா சமியின் திசை மாறிய தீர்மானங்கள், சமூக ஒற்றுமை, மனிதாபிமான உணர்வு ஏமாற்றப்பட்ட எதிர்பார்ப்புகள் என்பவற்றை சிறப்பாகக் காட்டுகின்றன. மேலும் சமூகத்தில் புதிதாகத் தோன்றும் பிரச்சினைகள், அநாதையின் அவலம், வெளிநாடு செல்வதால் குடும்பம் குட்டிச்சுவராதல், போன்ற பல கருக்களை மையமாகக் கொண்டு காணப்படுகின்றன. சமூக பிரச்சினைகளே அதிகமாக பேசப்படு கின்றன. முதிர் கன்னியின் மன வுணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
கெக்கிறாவை சஹானாவின் ஒரு கூடையும் இரு முட்டைகளும் என்ற சிறுகதைத் தொகுதியானது வெளிச் சொல்ல முடியாத மனப் போராட்டங்கள், குடும்ப மேலாதிக்க வன்முறைகள், கல்வி தொழில்நுட்ப நிறுவனங் களில் எதிர்கொள்ளப்படுகின்ற பிரச்சினைகள் என்பவற்றை எடுத்தியம்புவதாகக் காணப் படுகின்றது. பெண்கள் சுமுகமாகப் பிற ஆடவருடன் பழகுவதால் ஏற்படும் சிக்கல்கள், அகதிகளின் அவலங்கள் இவைபோன்ற நவீன உலகுக்கு எற்றாற் போன்ற பல சிந்தனை உணர் வுகளை சிறுகதைகளினூடாகப் பிரதிபலித்
துள்ளார். சமூக அடக்குமுறைகளுக்கு தீர்வு 24

காணும் பாங்கில் இவரது கதைப்பாங்கு
காணப்படுகின்றது.
பெண்ணியம் | l6Ն) கோணங்களில் வளர்ச்சிபெற்று வருகின்ற வேளையில், பெண்கள், பெண்ணிய சிந்தனைகளை
உள்வாங்கியவர்களாக அதிகமான சிறு கதைகளைப் படைத்துள்ளனர். 1990களுக்கு முன் வெளியாகிய சிறுகதைகளில் பெண் சமூகத்தின் விழப்புணர்வை நோக்கி உணர்ச்சிவசப்பட்டு கதை கூறப்பட்டிருப் பதனைக் காணலாம். 90களுக்குப் பின் வெளியாகிய சிறுகதைகளில், பெண் பிரச்சினைகள் மாத்திரமன்றி விழிம்பு நிலை வாழ்க்கை, முதுமையின்தவிப்பு, அகதிவாழ்வு, வறுமையின் வடுக்கள், குடும்ப வாழ்வின் வேறு பக்கங்கள் போன்ற பல விடயங்களும் அலசப்பட்டு வந்துள்ளன.
பொதுவாக 80, 90களில் முனைப்புப் பெற்ற பெண்ணிய சிந்தனைகளின் தாக்கம், பெண்ணியக் கொடுமைகள், ஆணாதிக்க வெறிகள், தொழில் நிறுவனங்களில் எதிர் நோக்கும் பிரச்சினைகளின் தாக்கம் என்பவற்றினை வெளிப்படுத்தும் போக்கினை அக்கால சிறுகதைகளிலே அதிகம் காணலாம். 90களுக்குப் பின்பு பெரும்பாலும் சமூக விடயங்கள், பெண்ணிய சித்தாந்தங்கள் கூறப்பட்டாலும் கூட அவை தீவிரமாகவன்றி இயல்பான வாழ்க்கைப் புரிதல்களுடன் GhrGÖ)6). IL JIL எடுத்தியம்பப்பட்டிருப்பதனைக் காணலாம்.இச்சிறுகதைகள்புதியவிடயங்களை நோக்கிய நகர்வின் பிரதிபலிப்புக்களே ஆகும். கதையின் கருக்கள் ஒன்றாயினும் புதிய சிந் தனைகளுக்கு ஏற்ப எடுத்துரைப்பு முறையில் இவர்களது வளர்ச்சி நிலையினைக் காணலாம். பெண் பாத்திரங்களை உயிரோட்டமாகப் படைத்துள்ளனர். ஒரு கரு பலகோணங்களில் ஆராயப்படுவதனைக்காணலாம். பெண்மொழி என்பது, பெண்களது உணர்வுகளை பெண் களே கூறுவதாகும். இப்பெண்மொழி பெண் சிறுகதையாசிரியர்களால் அழகாகக் கையாளப் பட்டுள்ளது.
லரீனா ஹக் தனது சிறுகதைகளில் பெண்மனவுணர்வு போராட்டம், போரி னால் பாதிக்கப்பட்ட பெண்களின் உணர் வுகள், அநாதைச் சிறுவர்களின் பரிதாப நிலை, ஆணாதிக்கம், பெண்களே பெண் களுக்கு எதிரிகளாக இருக்கின்ற நிலை, வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 27
எதிர் நோக்கும் பிரச்சினைகள், சிறுவர் துஷ்பிரயோகம், விதவைகள், கைவிடப்பட்ட பெண்களின் நிலைமைகள் என்பவற்றை அழகிய பாணியில் எடுத்தியம்பியுள்ளார். "கற்பு என்றும் கற்பூரமில்லை', 'வீதிக்கு வந்த சீதை' என்பவை குறிப்பிடத்தக்க இவரின் சிறுகதைகளாகும்.
முற்போக்குச் சிந்தனைகளின் தாக்கம், வர்க்கப் போராட்டம், என்பவற்றின் எதி ரொலிப்புகளையும் சிறுகதைகளினூடாகச் காணலாம். ஒரு கந்தூரி நடந்து முடிகிறது, "ஊமைகள் பேசுகின்றனர், அவனுக்கென்ற ஒரு ஆசை போன்ற நயீமா சித்திக்கின் சிறுகதைகளிலும், இர்பானா ஜப்பாரின் ஒருவன் காத்திருக்கிறான், நிஜங்களின் தரிசனம், போன்ற சிறுகதைகளிலும், சமி இக்பாலின் 'கருணையுள்ளவன்', 'விடியலைத் தேடி போன்ற சிறுகதைகளிலும், ஸஹானா வின், இரு வேறு பார்வைகள், மளிதா புன்னியாமீனின் நெருடல்கள் போன்ற சிறுகதைகளிலும் இத்தன்மைகளைக் காண லாம். இதே போன்று ஆணாதிக்கத்தின் எதிரொலிப்புகளையும் காணலாம். மரீனா இல்யாசின் சிறுகதைகளில் இத்தன்மைகளை அதிகம் காணலாம். ஸஹானாவின் "சந்தேகக் கோடு இத்தன்மைகளைக் கொண்டது. சமி இக்பாலின் வைகறைப் பூக்கள், கருணையுள்ளவன், லரீனாவின் புள்ளிகள் போன்ற பல சிறுகதைகளில் வறுமையின் வடுக்களைக் காணலாம்.
மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்களின் பிரதிபலிப்புக்களும் இவர்களது சிறு கதைகளின்கருப்பொருளாய் அமைந்துள்ளன. நயீமா சித்திக்கின் இவளுக்கென்று ஒர் ஆசை, சமி இக்பாலின் விடியலை நோக்கி, மஸிதா புன்னியாமீனின் முகவரியில்லா முகம், துருவங்கள், லரீனாவின் புள்ளிகள் போன்ற சிறுகதைகளிலே இவற்றைக் காணமுடிகின்றது. மேலும் சாதி இன வேறுபாடுகளைக் கடந்த நிலையை சமி இக்பாலின் புலரும் புதிய உறவுகள், லரீனாவின் வரட்டு வேதாந்தம், மஸிதா புன்னியாமீனின் கரும்புள்ளி போன்ற சிறுகதைகளிலே காணலாம்.
சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள அவலங்களை பெண்கள் தொடர்பான சீர்கேடுகளை வெளிக்கொண்டு வருவதில் முஸ்லிம் பெண் சிறுகதையாளர்கள் அதிக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

அக்கறை செலுத்தியுள்ளமையை அவர்களது சிறுகதைகளின் வாயிலாக அறிய முடிகின்றது. அதாவது பெண்ணிய சித்தாந்தங்கள், பெண்களின் பிரச்சினைகள்(குடும்பம், தொழில் சார்), உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடுகள், வர்க்கப் போராட்டம், புரட்சி தீவிரம், சமயம், மனிதநேயம், சமூக எழுச்சிக்கான உணர்வு பூர்வமானசிந்தனைப்போக்குகள், ஆணாதிக்கக் கொடுமைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், விதவைகளின் அவலங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் அவலங்கள், பெண்களின் சுயாதீனமற்ற நிலை போன்ற இன்னோரன்ன பல்வேறு விடயங்களையும் வெளிக்கொண்டு வருவதாக இம்முஸ்லிம் பெண்சிறுகதையாளர்கள்காணப்படுகின்றனர். பெண்ணிய வேட்கையுடன் அதிகமான சிறுகதைகள் காணப்படுவதுடன் சமூக நடப்புக்களை பாத்திரங்களின் வாயிலாக gD L@Q)TTG6) I விட்டுள்ளனர், தேவைக்கேற்ப பிரதேச வழக்குகளையும், கச்சிதமான வருண னைகளையும் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர். பிரதேசப் பேச்சு வழக்கின் பிரதிபலிப்புக்களை இவர்களது சிறுகதைகளில் காணலாம். பாத்திரப்படைப்பு உருவ உள்ளடக்கங்கள் சிறப்பாகக் கையாளப் பட்டுள்ளன. இவர்களது சிறுகதைகளில் தலைமைப் பாத்திரம் பெண் பாத்திரமாகவே காணப்படுவதனைக் காணலாம். முஸ்லிம் பெண்கள் புதிய விடயங்களையும் தங்களது சிறுகதைகளிலே புகுத்தியுள்ளனர்.
இலக்கியம் சமூகத்தின் விழிப்புணர்வு ஊடகம் என்ற வகையில் முஸ்லிம் பெண் களும் தம்முடைய சமூகத்தின் விடிவை நோக்கி பல்வேறு சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். என்றாலும் இவர்களது சிறுகதைகளின் எடுத்துரைப்பு, உருவ, உள்ளடக்கங்களில் சிற்சில குறைப்பாடுகளும் காணப்படுகின்றன. என்றாலும் இவர் கள் இடைநடுவில் விலகி விடாது தொடர்ந்தும் தரமான படைபுக்களை தரக்கூடியவர்களாகவும், வளர்ந்துவரும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துபவர் களாகவும் திகழ வேண்டியது காலத்தின் தேவையாகும்.
25

Page 28
நிலத்தில் 濫* 嶺 குப்புற விழுந்து கயளிகரமாக்கப்
வீட்டுக்கு முன் ஓட்டைகள் விழு செத்துக் கிடந்த வீட்டுக் கூரை Stjusaflai GTĚLEílů06)é56lé கைகளுக்குள் கழுகின் இறுகப்பற்றிக் கொண்ட QJgillaó uéluflað இருப்பின் அடையாளமாய் வாழ்வை முடித்து ஒரு பிடி மண் கன்னி
கல்லறை
நம்பிக்கை நட்சத்திரத்தை - வாழ்க்கை வானத்தில் அர்த்த ராத்திரி தொலைத்து வாழ்ந்த அடாவடித்தனங் UGU முகம் கொடுத்து இருட்டு இரவுகளின் முன்னே நின்று
இதயத்துடிப்புகள் குண்டுக்குப் பலி நன்றியுள்ள நா ܗܘ
புதைகுழி
சுதந்திர அறிக் hபிக் ககொ
ம்பிக்ை
 
 
 
 
 
 

பட்ட
Brait
துக் கொண்ட Tifli6öII
களின்
களுக்கு
lgi
- பாவரசுபதியத்தளாவ பாறுக்
பால் வார்த்த கொல்லைப் புறத்து
காலணிகள் நடத்திய அதிரடி வதைகளால் தண்டிக்கப்பட்டு gör Görpěš835Ů UČIL வாசலில் வளர்த்திருந்த வெள்ளை ரோஜாச் செடி
வீட்டுអ្វី ៩៣fiលិ மாட்டியிருந்த
9 Iúil IIII 19üUIGilgii
திருமணப் ULih
மருத்துவம் பார்த்த
எல்லையில் இருந்த கிராமத்து
அந்நியமாக்கப்பட்ட
ങേ
டிவுக்கு விடை சொல்லும்
அழிந்து போகாத அடையாளங்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 29
Tó நம்பினாலென்ன, நம்பாவிட்டாலென்ன உணர்மையை மறைத்துவிட முழயாது. நம்பமுழயாத பல விடயங்கள் இனிமேல் நடக்கப்போகின்றன. பார் இந்தச் செய்தியை முந்தி இந்த விஞ்ஞானிகளே இதை நம்பினார்களா? இல்லை. ஆனால், இன்றுநம்பினதோரு அதற்குரிய ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இந்த விஞ்ஞானிகள்கூட எவ்வளவு குழந்தைப்பிள்ளைத் தனமாகச் சிந்திக்கிறார்கள். அருத்த ஞாயிற்றுத் தொகுதிகளிலிருந்து தொடர்புகளை எதிர்பார்க்கும் இந்த விஞ்ஞானிகள், அங்கிருப்பவற்றையும் வளர்ச்சியடைந்தவிஞ்ஞானத் தொழில்நுட்ப நாகரிகங் களாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஏன், அதைவிட வேறு விதமாக இருக்க முழயாதா? வேறு தளங்களில், வேறு சிந்தனை நிலைகளில் வாழும் அதி உன்னத இனங்களாக இருக்கமுழயாதா?
மேலே நீங்கள் வாசித்தது 1965இல் மு.தளையசிங்கம் எழுதி பின்னர் மல்லிகையில் வெளிவந்த மெய்யும் உள்ளும் மெய் என்ற சிறுகதையின் ஒரு சிறு பகுதியாகும்.
இதனை ஏன்நான் இங்கே குறிப்பிடு கிறேன்? எனது தமையனாரைத் தூக்கிப் பிடிக்கவா? அப்படித்தான் ஒரு வாசகர் எனக்கு பட்டியல் இட்டுக் காட்டியிருந்தார். இதற்கு முன்னரும் கவிஞர் இக்பாலும் மூன்றாவது மனிதனில் ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இங்கே நான் சொல்வது உண்மையானவையா? அதன் முக்கியத்துவம் என்ன அதன்கருத்தியல் பின்னணி எத்தகையது என்பவை பற்றி விசாரணை செய்யாது உங்கள் மனம் அண்ணன் - தம்பி உறவு முறையை வைத்துச் சுருங்குமானால் அது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றே. விடுதலையை அடைய ஒருவன் முயலும்போது ஒருவர் அன்பை முன்னிறுத்தி அதைத் தடை செய்வாரானால் அந்த அன்பும் விடுதலைக்கு எதிரான வன்முறை ஆகிறதென்றார் ஒர் அறிஞர். அவ்வாறே இந்த உறவு முறைகள் எல்லாம் உண்மைக்கெதிரான அறியாமையின் வன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

முறைகளே. இன்றுதமிழ் மற்றும்முஸ்லிம்என்ற சிறுபான்மையினருக்கெதிரான ஒடுக்கமுறை யின் போது எம்போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பென்ன? எமது அரசியல், சமூகவியல், மெய்யியல் என்கிற கருத்தியல் சிறகு விரிப்பில் இவற்றையெல்லாம் உள்ளடக்கி எழுத்துலகப் போராளிகளாக எம்மை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோமா? உலக c356Ö)Gl) இலக்கியத்தரத்தோடு ஒப்பிடும் போது நாம் எங்கே நிற்கிறோம்? இவை பற்றி யெல்லாம் நம் இளந்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்காகவும் இவற்றை எழுதுகிறேன்.
மேலே முதளையசிங்கத்தின் வேற்றுலக வாசிகள் பற்றிய வித்தியாசமான சிந்தனைப் போக்கை நான் குறிப்பிட்டது காரணத் தோடுதான். இன்று உலகப் புத்திஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நூல்தான் RICHARD M.DOLAN, BRYCE ZEBEL 6. Tail J61j956 TT6) எழுத்தப்பட்டு வெளிவந்துள்ள A.D.AFTER DISCLOSURE GIGirl 15T(5l n.
A.D.AFTER DISCLOSURE GTGipsigi) 5(55 தென்ன? வெளிப்படுத்தப்பட்டதற்கு பின்னர் என்பதே அதன் கருத்து. எதை வெளிப் படுத்துவது என்பது இயல்பாகவே வரும் அடுத்த கேள்வியாகும்.
வேற்றுலகவாசிகள் இருக்கிறார்கள் என்பதை (அமெரிக்கா அரசு ஒப்புக்கொண்டு) வெளிப்படுத்துதல். அத்தகைய நிலைக்கு இன்றைய அமெரிக்க அரசு தள்ளப்பட்டு வருகிறது என்பதே முக்கியமானது. இந் நூல் வேற்றுலக வாசிகளையும் அவர்கள் பூமிக்கு வந்து போவதையும் மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது மட்டுமல்லாமல் அமெரிக்க அரசு அவர்களு டன் வைத்துள்ள தொடர்பு பற்றியும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் வேற்றுலக வாசிகள் பற்றி எண்ணிறந்த
27

Page 30
கற்பனைக் கதைகளும் விஞ்ஞானக் கட்டுரைகளும் புனைவுகளும் வந்துள்ளன. ஆனால் அவற்றுடன்இதைமாறாட்டம் செய்து கொள்ளக் கூடாது. அதனால்தான் இந்த நூல் அத்தகைய பிரபலத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகால வரை அமெரிக்கா வேற்றுலக வாசிகள் பற்றியும் அவர்கள் பூமிக்கு வந்துபோவது பற்றியும் தொடர்ந்து நிரா கரித்து வந்துள்ளது. ஆனால் இன்று அவ்வாறு தொடர்ந்து நிராகரிக்கும் நிலை போய் அது உண்மைதான்என்பதைக்கசியவைக்கும் காலம் வந்துள்ளது. இந்நூல் பற்றியும் அமெரிக்க உயர்மட்டங்கள் மெளனமாய் இருப்பதும் இதன் அறிகுறியே எனலாம்.
1947gi) GpITGi Galai) (Roswel-New Mexico) என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேற்றுலக வாசிகளின் விமானமும் அதில் உயிர் துறந்த வேற்றுலக வாசிகளின் உடலும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர்களால் கைப்பற்றப்பட்டன என்பது பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அப்போது ஜனாதி பதியாக இருந்த ஹரி ட்றுமன் இதுபற்றி மக்களுக்கு வெளிப்படுத்த ஆவலாய் இருந்தார். ஆனால் தம்மை விட தொழில்நுட்பத்தில் மேலோங்கியவர்களின் இருப்பு பற்றி அறிவிப்பது பற்றி பாதுகாப்புத் தரப்பினர் விரும்பவில்லை. அமெரிக்காவின் AREA51 மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ளும் இரகசிய இடமாகக் கொள்ளப்படுகிறது. இங்கு ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் இங்கிருந்து இரகசியமாகப் பிரிந்து சென்றுள்ளனர். இந்தப் பிரிந்து சென்ற குழு (BREAK AWAY GROUP) Gallafl'ILIG555ugitat விஷயங்கள் சுவாரஸ்யமானவை. எத்த னையோ ஒலியாண்டுகளுக்கப்பால் உள்ள கிரகங்களிலிருந்து எவ்வாறு Gallgil DITS, வேற்றுலகவாசிகள் இப்பூமியை வந்தடை கின்றனர் என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில் எம்மை வியக்க வைக்கிறது. நாங்கள் வெளியென நினைப்பவை வெற்று வெளியல்ல. அவையும் சடப்பொருள்தான் என்பதை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அதனால்தான் வெளிஎன்பது விரிந்து கொண்டு செல்லவும் பின்னர் ஒடுங்கவும் வல்லதாய் உள்ளது. (நமது தேவாரங்களிலேயே ஞானிகள் பிரபஞ்சத்தின் ஒடுக்கம் விரிவு பற்றிப் பேசியுள்ளனர்) வேற்றுலகவாசிகள் தமது விமானங்களுக்கு 28

பாவிக்கும் உலோகம் இந்த விரிந்து செல்லும் வெளியை குறுக வைப்பதாகச் சொல்லப்படுகிறது. தூரத் தூர உள்ள இரண்டுமரக்கிளைகயிற்றினால்இழுத்துவந்து இணைப்பது போலவும் பின்னர் இலக்கை அடைந்ததும் கயிற்றை வெட்டி விட்டால் அவைதம் சொந்த நிலைக்குத் திரும்பும் ஒப்பீட்டைப் போன்றதே இது. 1947இல் சிதறிய வேற்றுலகவாசிகளின் விமானத்தின் ஒரு சிறு உலோகத்துண்டை எடுத்து MEMORY METAL எனப்பேணி வைத்துள்ளனர். இதை உடைக்கவோ சிதைக்கவோ பிய்த்தெறியவோ முடியாது. ஆனால் தட்டையாக்கி நீள வைக்கலாம்.
வேற்றுலக வாசிகளின் உண்மை இருப்பை அறிந்த பல நாடுகள் உள்ளன. இவ்வாறு இது அமெரிக்காவால் கசிய விடப்படும் பட்சத்தில் அவற்றின் எதிர்வினை என்ன?
இவை தமக்குள்ளே இருக்கும் தேசியப் பிரிவினைகளை விட்டு சர்வதேச அரசாங்கத்தை நோக்கி நகரலாம். தமது ராணுவத் தொழில் நுட்பங்களை மறு பரிசீலனை செய்யலாம்.
இந்நூலின் வருகைக்குப் பின்னர் நாம் முன்னர் வரலாற்றை கிறிஸ்துவுக்கு முன்னர் (கி.மு) கிறிஸ்துவுக்க பின்னர் (கி.பி) என்று எழுதியது போல் வெளிப்படுத்தப்பட்டதற்கு fairGoTj AFTER DISCLOSURE (AD) Golgift ILIG5 தப்படுவதற்கு முன்னர் BEFORE DISCLOSURE (BD) என்று குறித்து எழுத வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு இன்று மேற்கைப் புரட்டி எடுக்கும் வேற்றுலகவாசிகள் கதை பற்றி இன்னும் வித்தியாசமான முறையில் 50 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் ஈழத்திலும் சிந்தித்திருக்கிறார் என்னும் போது, அண்ணன் - தம்பி உறவு முறைதான் தங்கள் கருத்தை கவர்கிறதென்றால் அது மரபு வழிவரும் நோய்க் கூறு கொண்ட மனமே.
நண்பர் சோ.ப.வின் கருத்தாடல் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தனது கருத்திலிருந்து சோரம் போகாது அதைக் காத்தவாறே தன் மகிழ்ச்சியைத் தெரிவித்த இலக்கிய நேர்மை நெஞ்சுக்கு இதம் தருவதாய் இருந்தது. இந்த மேன்மைக் குணமே இன்று இலக்கிய உலகில் கருகிப் போயுள்ளது.
O O. O.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 31
தமிழ்நாட்டுக்காரனை இந்த மத்திய அரசை நோக்கி குழு
போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று ஒரே குரலில் வலியுறுத்தி; தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஆர்ப் பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் அடுத்தடுத்து முற்றுகை, ரயில் மறியல், சாலைமறியல்களுடன் கடலூரில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிர் நீத்த சம்பவங்களினால் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது.
"நாங்கள் இந்தியர்களா இல்லையா?" தமிழ் நாட்டின் குரல்
மார்ச் மாத நடுப்பகுதிக்குள் தாக்கலாகும் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால், ஈழத்தமிழர் L JGB கொலைக்கு இந்தியா உடந்தை எனும் திராப்பழி உறுதியாகிவிடும் என்ற சூளுரை களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழன் இந்தியனாக இருப்பதாஅல்லது வேறு எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஐ.நா.தீர்மானம் வழிவகுத்து விடும் போன்ற தலைவர்கள் குரல்களும் தமிழ்நாட்டில் LTG)/Gl)IT35 எதிரொலிக்கத் தொடங்கி விட்டது!
ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி, தமிழகத்தின் அத்தனை மாவட் டங்களிலும் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக சாத்வீகமான முறையில் நடைபெறும் இப்போராட்டங்களில் சில இடங்களில் பொலிஸாரின் தடை நடவடிக்கையால், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக் குமிடையே தடியடி இல்லாத தள்ளு முள்ளு ஏற்பட்டது. சென்னையிலுள்ள இலங்கைத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

55 BT||
நியனாகப் பார்! முறும் தமிழகம்!
துணைத் தூதரகத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள், பல நூற்றுக் கணக்கில் திரண்டு முற்றுகையிட முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், தூதரகத்தை அகற்றாவிட்டால் போராட்டங்கள் புது வேகத்தில் எழுச்சி பெறும் என்று எச்சரிக் கைக் கோஷம் எழுப்பினார்கள்.
ஈழத்தமிழருக்காக உயிர் நீத்த 21வது தியாகி
கட்லுர் மணி!
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், பேரவைகள், சங்கங்களும்; தேசிய ரீதியில் பாரதீய ஜனதா கட்சி, இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று தங்களது தொடர் போராட்டங்கள் மூலம் வலியுறுத்திவரும் நிலையில்; இத் தீர்மானம் பற்றிய இந்திய நிலைப்பாடு தெரியும் வரை தங்களது போராட்டச் செயல் பாடுகள் நிறுத்தப்படமாட்டாது என்று அறிவித்துள்ளன. உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிக்காட்டிவரும் இப் போராட்டங்களில் பல இடங்களில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மைகள், புகைப்படங்கள், இலங்கை தேசியக் கொடிகள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டன. பல்வேறு மாவட்டத்தலைநகர்களில் வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக நீதிமன்றங் களையும் புறக்கணித்து வருகிறார்கள். இந்த எதிர்ப்பு அலைகளில், ஈழத் தமிழர்களுக்காக மற்றுமொரு இளைஞர் உயிர்த் தியாகம்
செய்துள்ளார்.
கடலூர் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி எனும் இளைஞர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, “ராஜபக்ஷ ஒழிக. தமிழீழத்தை மீட்போம்." என்று கோஷமிட்டு, கைவசமிருந்த பெட்ரோலை
29

Page 32
உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அவர் அளித்த LDU6ÕÕT வாக்குமூலத்தில், அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக தமது உடலைத் தீப்பந்தமாக ஒளி கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். ஈழத் தமிழர்களின் விடிவுக்காக தங்களது உடலை எரித்து உயிர்த்தியாகம் செய்தவர்கள் வரிசையில் இருபத்து ஒராவது இடத்தை ஈர்த்துள்ளார் நாற்பது வயதுள்ள மணி தமிழர் கட்சியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளரான இவர், கைப்பட எழுதிய சில கடிதங்கள் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தின் அழுத்தம் ஏற்படுத்தும் மனமாற்றம்!
அமெரிக்கதிர்மானம் சம்பந்தமாக இந்திய அரசின் நிலைப்பாடு அறிவிக்கப்படாத நிலையில், தமிழ் நாட்டிலும், டில்லியில் பாராளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பாக இலங்கை அதிபரை கண்டித்து, கறுப்பு சட்டை அணிந்து, கையில் பிரபாகரன் மகன் கொலையுண்ட பாலச்சந்திரனின் புகைப்படங்களுடன் கண்டன சுலோகம் கொண்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. எம்.பி.க்கள், பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் குரல் எழுப்பினார்கள். இதே மாதிரி, அ.தி.மு.க. எம்.பி.க்களும் இரு சபைகளிலும் கண்டனம் தெரிவித்து, இப்பிரச்சினைகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர். இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்புக்கு வகை செய்யாத மாதிரி இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புக்களும் தமிழ் நாட்டிலும் டில்லியிலும் தொடர்ச் சியாக மத்திய அரசுக்கு கொடுத்து வரும் அழுத்தம் இந்திய நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது.
3000 ஆண்டுகள் பழமையான சங்ககால குகை ஓவியங்கள்
தமிழ் நாட்டில் பழனி அருகே ஆண்டிப்பட்டி மலைப் பகுதியில் சங்ககால மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால குகை ஓவியங்கள் மற்றும் வாழ்வியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆண்டிப்
30

பட்டி மலைப் பகுதியின் மேற்கே உள்ள ஒரு குகையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆர்வலர்கள் பழனிச்சாமி மற்றும் ராஜா ஆகிய நால்வரும் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சங்ககால ஒவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஒவியங்கள்; சுண்ணாம்பு, மூலிகைகள், மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. காதலையும், வீரத்தையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த சங்ககால தமிழ் மக்களின் வாழ்வியல் அற்புதங்களை இந்த ஒவியங்கள் பிரதிபலிப்பதாகத் தெரிவித்த ஆய்வாளர்கள்; சங்க கால மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவர்கள் பயன்படுத்திய ஒடுகள் கிடைத்துள்ளன. நகக் குறி ஒடுகள், கழுத்துப் பகுதியில் வரையப்பட்ட ஒடுகள், கறுப்பு மற்றும் சிவப்பு ஒடுகள், பளபளப்பான செம்மை நிற ஒடுகள் என பலவும் உள்ளன. இந்தக்குகை, இரண்டாயிரம்முதல்மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில், தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருந்துள்ளது” என்று கூறினர்.
இப்படியும் நடக்கிறது
சுவாமி விவேகானந்தரின்பக்தர் இளைஞர் தங்கராஜ் சிறுவயது முதல் விவேகானந்தர் கேந்திரத்தில் படித்து, அவரது கருத்துக்கள், எழுத்துக்கள் அனைத்திலும் பரிச்சயமான இவர் நாகர் கோவிலில் விவேகானந்தா கேந்திரத்தில்வரவேற்பாளராகபணிபுரிகிறார். ஒவ்வொரு ஆண்டும் சுவாமிஜியின் பிறந்த நாளில் ஒரு புதுமை செய்வார். கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதிகன்னியாகுமாரியிலிருந்து சென்னைக்கு சுவாமிஜியின் காலடிபட்ட ஊர்கள் வழியாகப் பயணித்து கடந்த பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி சென்னைவந்து சேர்ந்துள்ளார். அன்றையதினம் சுவாமிஜியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் மட்டுமல்ல, 1897ஆம் ஆண்டு பெப்ரவரி ஆறாம் திகதி தான் சுவாமிஜி சென்னைக்கு முதன்முதலில் வருகை தந்தாராம். இதில் முக்கிய சிறப்பு; தங்கராஜ், போலியோ நோயால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டமாற்றுத்திறனாளி. பயணித்த 995 கிலோமீட்டர் தூரத்தை, பத்தொன்பது நாட்களில் தனது மூன்று சக்கர சைக்கிளிலேயே நிறைவு செய்துள்ளார்!
O O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 33
POOBALASI
IMPORTERS, EXPORTER
STATIONE
பூபாலசிங்கம்
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி இற
gഞ
இல, 202 செட்டியார் தெரு, கொழும்பு-1, இலங்கை தொ. பே.
கிளைகள்: 340, செட்டியார் தெரு, கொழும்பு 1 QR&ು.: 8395665
ඕඹ,309 A-2/3, ආliගී கொழும்பு 06 65, Gu, : 4-515775,
புதிய
புத்தகத்தின் விபயர் பதிப்பாசிரியம்
திருக்குறள் உரை கே.வி.குணசேகர விரல்களற்றவனின்
பிரார்த்தனை அஷ்ரப் சிகாப்தீன் நிர்வான முக்தி ஈழவாணி தெணியானின் படைப்புகள்
மீதான பார்வைகள் பரணிதரன்
ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகள் இறைகுகள் 6 மானசஞ்சாரம்
இந்த நிலம் எனது இருட் தேர் அட்சயவLம் கழுகு நிழல் ஆடம்ஸ்மித் முதல்
கார்ல் மாக்ஸ் வரை தேவதாசியும், மகானும் அர்ச்சுனனின் தமிழ்க்காதலிகள் பசுமைப் புரட்சியின் கதை தமிழ் அழகியல் ஆளண்டாப் பட்சி
• உலகப் புகழ்பெற்ற மூக்கு 9 ஒரு பாதையின் கதை சூரியன் தகித்த நிறம் ‘அங்கோர் உலகப்பெருங்கோயில்
என்.சண்முகநாத முநீ.பிரசாந்தன் கெகிறாவ சஹான கெகிறாவ ஸ்லை கெகிறாவ ஸஹா மாத்தளை பெ.வழ கோவை நந்தன்
எஸ்.நீலகண்டன் வெங்கடகிருஷ்ண அ.கா.பெருமாள் சங்கீதா முநீராம் தி.சு.நடராஜன் பெருமாள் முருகன் வைக்கம் மும்மது குப்பிளான் ஐ.சணர் பிரமிள் ஞா. பாலச்சந்திர

GHAMBOOKDEPOT
S, SELLERS & PUBLISHERS OF BOOKS, RS AND NEWSAGENTS.
புததகசாலை
க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
O60) D : 2422321 தொ நகல் 233733 மின்னஞ்சல் pbdhoஇstnet.lk
வீதி, இல, AA, ஆஸ்பதிரி வீதி,
பஸ் நிலையம், 2504.266 யாழ்ப்பாணம்.
r பதிப்பகம் விலை
th குணம் பிரசுரம் 500,00
யாத்ரா வெளியீட்டகம் 300,00 மித்ரா ஆர்டஸ் 39000
ஜீவநதி வெளியீடு 200,00
ன் Fast Printers 500,00 பூபாலசிங்கம் பதிப்பகம் 750,00 TT ஜீவநதி வெளியீடு 200,00 ஹா ஜீவநதி வெளியீடு 220.00 烹T信 ஜீவநதி வெளியீடு 200.00 வேலன் பூபாலசிங்கம் புத்தகசாலை 350,00 நிச்சாமம் பதிப்பகம் 200,00 சென்னை வளர்ச்சி
ஆராய்ச்சி நிறுவனம் 975, 00 ன் முநீராம் காலச்சுவடு பதிப்பகம் 682.00 காலச்சுவடு பதிப்பகம் G82.00 காலச்சுவடு பதிப்பகம் 780, 00 காலச்சுவடு பதிப்பகம் 93G,00 . காலச்சுவடு பதிப்பகம் 7GO,OO பஹீர் காலச்சுவடு பதிப்பகம் 93G,00 முகன் காலச்சுவடு பதிப்பகம் 370,00 காலச்சுவடு பதிப்பகம் 273,00 aர் ஞானம் பதிப்பகம் 300,00

Page 34
கொற்றாவத்தை க
குட்டிக் கதைக
22 OM)(ea)||
பரமநாதர் - ஒய்வுபெற்ற நீதிபதி. முன்பே பேச்சாற்றல் மிக்கவராகத்தான் இருந்தார். ஒய்வுபெற்ற பின் ஆன்மீகத் துறையில் அதிக ஈடுபாடு தோன்றியதால் கோயில்களில் சமயப்பிரசங்கம் செய் வதில் கூடுதலாக அவரது பொழுது கழிந்தது.
எங்கள் ஊர்க்கோயிலில் பத்து நாட்திருவிழாவிலும் இரவு 700 மணிக்கு இராமாயணத் தொடர்கதை சொல்ல ஏற்பாடு செய்திருந்தோம். வலு சுவாரஸ்ய மாகக் கதை சொன்னார்.
“இராமரையும் இலக்குவனையும் விஸ்வாமித்திரர் வேள்வி முடித்துக் கூட்டிவரும் போது இராமனின் காலில் கல் தட்டுப்பட கல் பெண்ணாக மாறியது. அவள் தான் அகலிகை. முன்னர் அகலிகை கல்லாக மாறியதற்கு ஒரு கதை உண்டு. அது பற்றி நான் பின்பு உங்களுக்கு கூறுவேன்" s இராமனும் இலக்குவனும் ஜனக நாட்டிற்குச்சென்ற கதையைத் தொடர்ந் தார். அங்கேஜனக நாட்டுக் கோட்டையின் கொடி இராமரையும் இலக்குவனையும் வா.வா. என்று அழைப்பது போல்
அசைந்ததென கம்பனின் வர்ணனையை
) சிலாகித்தார்.
,இவ்விடத்தில் ܫܬܐ
"அச்சமயம் கோவலன் பாண்டிய நாட்
டிற்குள் நுழைந்த போது மதுரை மாநகர்க்
கொடி "வராதே வராதே."என்பது போல்
했
 
 
 
 
 
 

சொல்லுகின்ற வர்ணனையை உங்களுக்கு நான் பின்பு கூறுவேன்” என்றார்.
பின்னர் சீதையின் பிறப்பின் இரக சியத்தையும், ஜனகனுக்கு மகளாகிய கதையையும் இன்னொரு தருணம் கூறுவேன் என்றார்.
இவ்வாறு ஒன்பது நாட்களும் இராமாயணத் தொடரில் கைகேயியின் சூழ்வினைப்பயன், அனுமனின் பூர் வீகம், குகனின் கதை, இராவணனின் பூர்வீகம் முதலான வற்றையும் பின்பு கூறுவேன் என்று கூறிக் கூறியே பிற்போட்டுக்கொண்டு சென்றார். பத்தாம் நாள் தொடர் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.பல சுவையான விஷ யங்களை ஏற்கனவே சொன்னபடி கூறிமுடிப்பாரென்று ஆர்வத்தோடு பத்து நாட்களும் கதை கேட்ட ஒருவர் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார்.
“ஒவ்வொரு படலத்திலும் கதை யோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களை இவர் பிறகு சொல்கிறேன் என்று சொன் னார்.அப்படியில்லாமல் இவர் இன்று கதையை முடிக்கப் போகிறாரே” “மற்றவர் சொன்னார். " அட அவர் நீதவானாக இருந்தவர டாப்பா. அப்பவும் அவர் லேசிலை தீர்ப்பு வழங்குவதில்லை. வழக்குகளை ஒத்திவைத்துக்கொண்டுதான்போறவர். அதே போலத் தான் இதுவும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 35
இநீளுனிரு
செல்வராசண்ணை அன்று ஊரில் நெ ஆயத்தமானார். தோட்ட வேலை கார முடியாமலிருந்தமையால் மத்தியானச் ச) வேட்டி கட்ட முன்னர் உள்ளங்கிை பூட்டப்பட்டிருந்தது. அறைத் திறப்பை ! ஏற்கனவே அந்தியேட்டிக்குப் போய் வ ஒரேயொரு உள்ளங்கியையும் அவர் அ தோய்த்துப் போட்டபடியால் அது ஈரம
"பரவாயில்லை. சொல்லிக்கொண்டு வேட்டியைக் க எங்கள் ஊரில் ஒரு வழக்கம். எ அந்தியேட்டி, திவசம் என்பனவற்றுக்கு தான் உணவு பரிமாறுவார்கள்.
நெருங்கிய உறவினர் வீடு என்பதா தயாரானார். தான் உள்ளேயொன்றும் போனார். வேட்டியை முழங்காலுக்கு பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து ( சோற்றை வைத்தார். பந்தியில் இ பார்த்துவிட்டார். அவர் பார்த்ததை செ பெருமித்ததுடன் சொன்னார்.
"அது. என்ரைதம்பிசவுதியிலையிரு இன்னும் இரண்டு வீட்டிலை கிடக்கு”
இதைப் போல இன்னும் இரண்டு வீட் அவர் மூளை குழம்பி யோசித்துக் கொண குந்தியிருந்தபடியே அடுத்தவரிடம் நகர்
స్తోత్రొత్తా
தமிழகத்தில் வெளிவரும் கணையா
2012ஆம் ஆண்டிற்கான படைப்பிலச் சாகித்திய ரத்தினார் செங்கை ஆழியான பெற்றுள்ளார். பரிசளிப்பு விழா டெ திகதி (23.02.2013) சென்னையில் அவ்விழாவில் விருதும் பரிசும் வ ஈழத்தின் பிரபல படைப்பிலக்கிய6 ஆழியான் தனது 73ஆவது அகவையை 25ஆம் திகதி (25.01.2013) ல் கொண்டா அவரை வாழ்த்தி மகிழ்கிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நருங்கிய உறவினரின் அந்தியேட்டிக்குப் போக ணமாக காலைக்கிரியைகளின் போது போக ாப்பாட்டு நேரம் போக வெளிக்கிட்டார். யத் (ஜட்டி) தேடினார். அது இருக்கும் அறை மனைவி எங்கேயோ மறைத்து வைத்து விட்டு பிட்டிருந்ததை உணர்ந்தார். வெளியே இருந்த புப்போதுதான் தோட்ட வேலையால் வந்து ாக இருந்தது.
ட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார். ான்னதான் வசதிவாய்ப்புக்கள் இருந்தாலும் பந்திப்பாய் விரித்து வாழை இலை போட்டுத்
ால் செல்வராசண்ணை தானே பந்திவைக்கத்
அணியவில்லையென்பதை அவர் மறந்தே 5 மேல் மடித்துக் கட்டினார். சோற்றுப் தந்தியிருந்து பந்தியில் முதலில் இருந்தவருக்கு ருந்தவர் இவர் ஒன்றும் அணியாததைப் ல்வராசண்ணை கவனித்துவிட்டார். உடனே
]ந்துவந்தநேரம் எனக்குத்தந்தது.இதைப்போல
-டிலை கிடக்கென இவர் சொன்னதைக்கேட்ட ள்டிருக்க செல்வராசண்ணை பெருமிதத்துடன் ந்தார்.
ழி சஞ்சிகையின் கிெய விருதினை ள் (க. குணராசா) பப்ரவரி 23ஆம்
நடைபெற்றது. ழங்கப்பட்டன. வாதி செங்கை 1 ஜனவரி மாதம் ாடினார். ஞானம்

Page 36
எங்கள் கடையில், இலக்கியப் பட்டங்கள் ஏராளம் உண்டு எல்லோரும் வாருங்கள் மலிவு விலையில், பொழுபொழுத்த பொன்னாடை, சந்தன மாலை சகலதும் உண்டிங்கே - எழுத்துப் பித்தன், இலக்கியக்கோ, சேவைச் செம்மல், வாழ்நாள் வானரம், பந்தக்கோ, பம்மாத்து வள்ளல், தங்கமணி, குஞ்சுமணி, தமிழ்மணி, பூசனம் இந்தப் பட்டங்களெல்லாம் எங்களிடம் உண்டு. எதையாவது எழுதிக் கிறுக்கிவிட்டு வெளியீட்டு விழா தொடக்கம், அறிமுகவிழா வரை ஆட்களை அழைத்து அழகாகச் செய்திடுவோம். மேடையில் உங்களை மேலே உயர்த்திப் பேச மேதாவிகள், பேராசாண்கள், கலாநிதிகள் கைவசம் உண்டு காசோடு வாருங்கள். என்ன பட்டம் வேண்டும்? எங்களிடம் கூறுங்கள். அள்ளித் தருவோம், ஆதரவு தாருங்கள் எல்லா இடங்களிலும் எங்கள் முகவர்கள் பள்ளி கொண்டிருப்பதால், பாருங்கள் உடனே போய் எழுதாத நூல்களுக்கும், ஈயடிச்சான் படைப்புக்கும் பரிசோடு பட்டங்கள் பலவுண்டு எங்களிடம். முதுகு சொறிவதற்கு முதுமாணிப் பட்டங்கள். காக்காய் பிறப்பதற்கு கலை ஞானிப் பட்டங்கள். பந்தம் பிறப்பதற்கு பக்திமான் பட்டங்கள். எங்கள் கடையில் ஏராளம், வாருங்கள். புகழுக்கு நீங்கள் போடுகின்ற கோலத்தை படம்பிடித்து சாதனையாய், பறைசாற்ற எங்களிடம் பத்திரிகைப் பலமுண்டு பயமின்றி வாருங்கள். சாதனையாளர் சாஹித்திய கலாசூரி என்ன பட்டம் வேண்டும்? எழுதுங்கள் எங்களுக்கு இலக்கியத்தைப் புரியாமல், எழுதுகின்ற வெம்பல்கள், தலைக்கணத்தால் தடுமாறும், விட்டமில்லா வட்டங்கள் குரைக்கின்ற காலமெல்லாம் உலகம் அழியாது பட்டங்கள் வேண்டுமென்றால் கடைக்கு உடன்
படைதிரண்டு வாருங்கள் 34
 

மனிதாபிமானம் எங்கே..?
விழந்ததும் விழயாததுமான 55765oសាចសំ நெடுஞ்சாலையில் வீதி மருங்கில் ஓர் உயிர் துழத்தபழ.
வருபவர்கள். போபவர்கள். எல்லோரும். எட்டி நின்று பார்த்து விட்டு ( எட்டமாய் செல்கிறார்கள். சிலர் புதினம் பார்க்கிறார்கள். 莺 சிலர் புதினம் பேசுகிறார்கள் \ சிலர் கேலிக்கை ( செய்கிறார்கள். சிலர் இரக்கப்படுகிறார்கள் - ) ஆனால் )
நெருங்குவதற்கு
தயங்குகிறார்கள். (
சிலர் காரணம் தேடுகிறார்கள். )
இது விபத்தா..? ( கொலையா..? / தற்கொலையா..? இவன் ஏழையா..? கொலைகாரப் பாவியா..? நல்லவனா..? கெட்டவனா..? )
என கேள்விகள் நிரம்பமுன் துழ துழத்த உயிர் பொழயாய் பறக்கிறது. (
ഖങ്വേറ്റ്
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 37
ािौं
iறநி
பெண்ணின் மேம்பாட்டுக்காக கடந்த நூற்றாண்டிலிருந்து மிகத் தீவிரமாக பெண்ணிய அமைப்புக்கள் இயங்க ஆரம்பித்த பின்னர், பெண்ணின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கின்றது என்பது இந்தக் கட்டுரையின் எடுகோளாகும் பெண்ணின் வாழ்வு இன்று மேம்பட்டுள்ளதா? பெண் சமமாக ஆணுக்கு நிகராக ஏற்றுக் கொள்ளப்படுகிறாளா? அவள் இவ்வுலகில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளனவா? பால் நிலை சமத்துவத்தை இன்றைய உலகம் செயற்பாட்டளவில் எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டுள்ளது?
இன்றைய பெண்ணின் வாழ்வை நோக்கும் போது இன்றைய நவநாகரீக உலகில் கூட பெண் முழுமையான சமத்துவத்தை எட்டவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் இதன் உச்சசான்றாகஇன்றும்பெண்கள்பாலியல் வன்முறையுட்பட பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதைக் கூற முடியும். ஆணாதிக்க சமூகம் இன்னமும் பெண்ணை தனக்குச் சமனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
கடந்த சில தசாப்தங்களாக பெண்ணிய வாதிகள், பெண்ணிய சிந்தனைகளையும், பெண்விடுதலை அம்சங்களையும் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பரவலாக்கி வருகின்றனர். பெண் விடுதலையை எட்டும் முயற்சிகள் பரவலாக்கப்பட்டு வருவதனால், பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும் புரிதலும் விடுதலை உணர்வும் மேலோங்கி வருவது சாதகமான அம்சங்களாகும். எனினும் அறுவடைகளை எட்டுவதில் பல தடைக் கற்களையும் அதனால் பின்னடைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

畿
சந்திரகாந்த முருகானந்தன்
இலத்திரனியல்விஞ்ஞானமற்றும்அறிவியல் விரிவாக்கத்தால் உலகமே உள்ளங்கைக்குள் சிறைப்படும்புதுமைஏற்பட்டுள்ள அதேவேளை, பெண்களில் பலர் கல்விவலுவூட்டலினால் உயர் பதவிகளை எட்டிய பின்னரும் கூட இன்றும் பல பெண்கள் அடுப்பங்கரை சிறைகளிலிருந்து விடுபடவில்லை. விளிம்பு நிலையிலுள்ள பெண்கள் தமது அடிமைத் தனத்தைப் புரிந்து கொள்ளாத அறியாமை ஒரு புறமும் அறிந்தும் அதிலிருந்துமீள்வதிலுள்ளஅக்கறையின்மையும் தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்கின்ற பேதமை யும் மத பாரம்பரியங்களில் ஊறிப் போய் அவற்றிலுள்ள பெண் பற்றிய விம்பங்களிலிருந்து விடுபட முடியாமையும் பெண்ணிய மேம் பாட்டில் தடங்கலை ஏற்படுத்துகின்றன. அத்துடன் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஏற்படுகின்ற பின்னடைவுகளினால் சலிப் பும் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள முடி யாத பயமும் மீண்டெழ முடியாத வலிமை யின்மையும் கூட பால் சமத்துவத்தை எட்ட முடியாமல் பின்தள்ளிவிடுகின்றன.
இவ்வாறான எதிர் அம்சங்களுக்குத் தைரியமாக முகம் கொடுத்து மீண்டெழுவதன் மூலம் பால் சமத்துவத்தை எட்ட முடியும். பெண்களிடமுள்ள இயல்பால் போராட்டப் பின் நிற்கும் போக்கும் மனவுறுதியின் தளர்வும் ஆண்களின் வன் போக்கினை எதிர்கொள்ள அஞ்சுகின்றமையும் ஆணாதிக்கத்தை வலிமை பெறச் செய்து விடுகின்றன. தொடர்ந்து வரும் அடக்கு முறைகளுக்கு, கலாசாரப் பண்பாட்டுக் கோலங்களால் முலாமிடப்பட்டிருக்கும் ஒரு சிக்கலான தடையைத் தாண்டி எதிர்த்து நிற்கும் முன் முயற்சிகளின் போது, வாரிஇறைக்கப்படுகின்ற சேற்றினால் வலுமிக்க பெண்கள் கூட சோர்ந்து விடுகின்ற அவல நிலையைக் காணமுடிகின்றது. எனினும்
35

Page 38
பெண்ணிய முன்னெடுப்புக்களை மேற் கொள்வோர் இவ்வாறு சோர்ந்து விடலாகாது.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எமது பெண்களின் வாழ்நிலை ஏறுமுகமாகி வருவதை மறுக்க முடியாது. பெண்களுக்குச் கிடைத்தகல்விவாய்ப்பேஇந்தஆரோக்கியமான நிலைக்குவித்திட்டது. காலம் காலமாகி அடக்கி ஒடுக்கப்பட்டு, வீட்டுக்குள்சிறைப்பட்டவளாய், அடுப்பிலும் நெருப்பிலும் வெந்து கொண் டிருந்த நிலையில் இன்று முன்னேற்றம் தெரிகிறது. கணவர்களின் சொத்துடமை போலும் பள்ளியறைப் பாவையாகவும் ஒரு கொத்தடிமை போல் நோக்கப்பட்ட நிலை இன்றில்லை. எனினும் குடும்பத்துக்காக அயராது உழைத்தல் இன்றும் கூட அவளது கடமை என்பதாகவே இருந்து வருவதில் மாற்றமில்லை. இன்றும் கூட கணவனினதும், குடும்பத்தவர்களினதும், சமூகத்தினதும் அடக்குமுறை இவர்கள் உணராதவாறு இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் பெண்கள் சுயமாக சிந்தித்து, சுதந்திரமாகச் செயற்பட முடியாதவர் களாகவே இருக்கிறார்கள். இன்றும் கூட குடும்ப வன்முறைகளாலும், பாலியல் வன்முறைகளாலும் இவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவது கண்கூடு. எனினும் இந்த அவலநிலையிலிருந்து விடுபட போராடி வருவது மகிழ்ச்சியான விடயம் ஆணாதிக் கத்திற்கு எதிரான எழுச்சிகள் ஏறுமுகமாக ஏற்றம் கொள்வதும் இவ்வாறான எழுச்சிப் பயணங்களில் ஆண்களும் பங்கேற்பதும் ஆரோக்கியமாக உள்ளது.
மனித ஆளுமை என்பது பால் வேறு பாட்டுக்கு அப்பாற்பட்டது. மனிதமும் சுதந்திரமும் இருபாலருக்கும் பொதுவானது. அதாவது ஆண் பெண் என்ற வேறுபாடோ பாகுபாடோ அற்ற பொதுவான உன்னதமே மானுடம் என்பது.
தமிழர்போராட்டம்என்பது, சிங்களவருக்கு எதிரானதல்ல, தமிழரின் விடுதலைக்கேயானது என்பது போலவே பெண்களின் போராட்டம் என்பதும், ஆண்களுக்கு எதிரானதல்ல, அவர்களின் விடுதலையை, சமத்துவத்தைக் குறிக்கோளாகக் கொண்டது என்பதை ஆண்கள் உணர்ந்து இப்போராட்டத்தின் நியாயத் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டோர் தம்மை நிலை நிறுத்த தொடரும் போராட்டமே இதுவாகும் என்ற புரிதல் சமூக மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
36

இன்றைய பெண்கள் படித்து, பட்டம் பெற்று, உயர்பதவிகளை வகிக்கின்றனர். கணிசமானோர் அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பணியாற்றுகின்றனர். விண்வெளி ஆய்வு, பயணம் என்பவற்றில் கூட பெண்கள் ஈடுபடுகின்றனர். இதிலிருந்து பெண்களின் ஆற்றல் ஆளுமை, செயல்திறன் என்பவற்றில் எதுவித குறைவும் இல்லை என்பது புலனாகின்றது. சமசந்தர்ப்பம்கிடைக்குமானால் அவர்களால் சாதிக்க முடியும் இத்தனை திறமைகளை பெண்கள் வெளிப்படுத்திய இன்றைய காலகட்டத்தில் கூட பெண்கள் மிக மோசமாக வயது பேதமின்றி மிருகத்தனமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்து கிறது. அதிலும் சிறுமிகள், பச்சைப் பாலகர்கள் கூட பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப் படும் கொடுமையை எப்படித்தான் ஏற்றுக் கொள்வது? ஒரு பெண்ணை பலர் சேர்ந்து வன்முறைக்கு உள்ளாக்கும் நிகழ்வுகள் எமது நாட்டிலும் அண்டை நாடான இந்தியாவிலும் அண்மைக் G5ITGUL DIT G5 தொடர்கதையாக உள்ளது. இந்த தொடர் வதைக்கு உடனடி முடிவு காண்பது அனைத்துத் தரப்பினரதும் கடமையாகும். பாலியல் வன்முறை புரிவோர் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் தப்புவதற்குரிய ஒட்டைகள் சட்டமூலம் அடைக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பாமல் பார்த்துக் கொள்வது ஆட்சியாளரின் கடமையாகும் பொலிஸில் பெண்களுக்கான பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளமை நம்பிக்கை
அளிக்கிறது.
பெண்களை சக மனிதப் பிறவிகளாக மதிக்கும் பண்பு சிறுவயதிலிருந்தே
குடும்பத்துள்ளும், பின்னர் பாடசாலை மட்டத்திலும் சமூகத்திலும் வளர்த்தெடுக்கப் பட்டவேண்டும் பாலுணர்வுகளைத் தூண் டக்கூடிய விடயங்களில் ஈர்ப்பு ஏற்படாமல் சிறுவயதிலிருந்து வழிநடத்த வேண்டும் சமூக கலாசார அம்சங்களிலும் மத மார்க்க விடயங்களிலும் உள்ள நல்ல அம்சங்களை வலுவடையச் செய்யும் அதே வேளை, பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைப் புறம் தள்ள வேண்டியது காலத்தின் தேவை. முதலில் பெண்கள் பெண்ணியத்திற்கு மாறாக இருத்தலாகாது. முன்னேற்றம் கண்டு வரும் பெண்களின் நிலைமை மேலும் மேம்பட எம்மாலான சகல ஒத்துழைப்பையும் ஒவ்வொரு வரும் வழங்க வேண்டும்
O Ο Ο
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 39
உலக மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய யூலியஸ் சீசர் நாடகத்தில் யூலியஸ் சீசர் படுகொலைசெய்யப்படும்காட்சிவருகிறபோது சீசரைக் கத்திக் குத்துக்கு இலக்காக்கியவர்களுள் அவனது ஆரூயிர்த் தோழனான புரூட்டசும் இருப்பதைக் கண்ணுறும் சீசர்,
“et tu, Brute?" ( jeb 6i, fuļLDT?) 6T60T அவலக் குரல் எழுப்புகிறான்.
ஞானம் போர் இலக்கியச் சிறப்பிதழில் ஜெயகாந்தன் கூறியதாகச் சொல்லப்பட்ட கருத்தைக் கண்ணுற்றபோது "et tu, ஜெய காந்தே" என்று எனக்கும் அலறவேண்டும் போலவே தோன்றியது. "எங்கள் வீரர்கள் அங்கே (இலங்கையில்) தமிழ்ப் பெண்களிடம் தவறாக நடக்கிறார்களாம். நான் இதை ஒரு நாளும் நம்பமட்டேன்” என ஜெயகாந்தன் பொதுக் கூட்டம் ஒன்றில் கூறியிருந்தாராம்.
நம்மவர் நல்லவர் என்ற சித்தாந்தம் நாம் நன்கு அறிந்ததே. குற்றம் சுமத்தப்பட்டவனும் நானே. நீதிபதியும் நானே' எனும் விந்தை மிகு நடைமுறையும் எமது சிந்தையை நிறைத்திருக்கும்இத்தருணத்தில்ஜெயகாந்தனின் கூற்றும் இவற்றுக்கெல்லாம் வலுவூட்டுவதாக அமைந்திருப்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. என்போன்ற புனைகதை எழுத்தாளர் பலருக்கு ஜெயகாந்தன் உள்ளிட்ட சில எழுத்தாளர்கள் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்கள். சத்தியத்தின் காவலராக நாம் மதித்த ஜெயகாந்தனின் வாயிலிருந்து அண்மைக் காலத்தில் உதிர்க்கப்பட்ட இந்தக் கருத்து, முதுமை அவரது சிந்தனா சக்தியைச் சிதைத்து விட்டதோ என்ற ஐயத்தையே தோற்றுவிக்கிறது.
இங்கே எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது. அண்மையில் வோஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையை ஜெயகாந்தன் வாசிக்க வேண்டும். அக்கட்டுரை இந்தியப் படையினரின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

பொட்டுக்கேடுகளைப் புட்டுப் புட்டு வைக்கிறது. கட்டுரையின் சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன. நீண்ட காலமாக நிலவும் பிரிவினை வாதத்தைத் தடுக்கும் முகமாக இந்தியாவின் வடகீழ் எல்லைப் புறத்தை ஒட்டி அமைந்திருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியத் துருப்புகள் நிலைகொண்டுள்ளன. பிரிவினை வாதத்தைத் தடுப்பதற்கான போருக்கு மேலதிகமாக, பொதுமக்களைக்கொல்வதும்கற்பழிப்பதுமான இன்னொரு வகையான போரிலும் இங்குள்ள படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த யுத்தக் குற்றங்களிலிருந்து ஒரு விசேட சட்டம் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.
பாதுகாப்புப் படையினரைப் பாதுகாக்கும் இச்சட்டத்துக்கெதிராக மணிப்பூரிலிருந்து 1500 மைல் தொலைவில் இருக்கும் புதுடில்லியில் குரல்கள் எழுந்தமையால் நீதிபதி வர்மா தலைமையிலான ஆணைக்குழு தரப்பினர் செய்யும் இத்தகைய குற்றச் செயல்கள் சாதாரண சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்தும் இந்திய அரசு சிபார்சினை அமுல்படுத்தாது காலத்தை இழுத்தடிக்கிறது.
ஆயுதப் படையினருக்கான (விசேட அதிகாரங்கள்) சட்டத்தை நீக்குவது குறித்து நிதியமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் பேசும்போது, "இணக்கப்பாடு எட்டப் படாமையால் இதில் முன்னேற்றமேதும் ஏற்படவில்லை. இன்றைய / முன்னை நாள் படைத்தளபதிகள் சட்டத் திருத்தத்துக்கெதிராக எடுத்த தீவிரமான நிலைப்பாடே இதற்கான காரணம்" என்று கூறியிருக்கிறார்.
உள்ளூர் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்றின் அறிக்கையின் படி மணிப்பூரில் கடந்த மூன்றுதசாப்தங்களில் பொலீசாரினாலும்
வேதில்லைநாதன்
37

Page 40
இராணுவத்தினராலும் 1528 சட்டத்துக்குட் புறம்பான கொலைகளும் பற்பல கற்பழிப்புச் சம்பவங்களும் பாலினச் சேஷ்டைகளும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது.
2004ம் ஆண்டு தங்கஜம் மனோரமாதேவி என்ற ஒரு பெண் ஒர் அதிகாலை வேளை துருப்பினரால் கைது செய்யப்பட்டுச் சில மணித்தியாலங்களின் பின்னர் அடிகாயங் களுடனும், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையிலும் அவளது சடலம் தெருவோரம் வீசப்பட்டிருக்கக் காணப்பட்டது. தடயவியல் நிபுணர்களின் கருத்துப்படி அவள் அருகில் வைத்துச் சுடப்பட்டிருந்ததாகவும் கற்பழிக்கப் பட்டிருந்ததாகவும் அறிய முடிந்தது.
இந்தக் கொடுரச் "செயலுக்கு” ஆட்சேபனை தெரிவித்து துருப்பினரின் விடுதிகளுக்கெதிராகத் திறந்த மேனியுடன் குழுமியிருந்த பெண்கள் கூட்டம் "இந்திய இராணுவம் எம்மைக் கற்பழிக்கிறது” என்றெழுதப்பட்ட பெரியதொரு பதாகையைத் தாங்கி ஆர்ப்பாட்டம் செய்து தேசீயப் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்திருந்தும் மணிப்பூரில்அராஜகங்கள்தொடர்கதையாகவே தொடர்கின்றன. எனினும் இவ்வாறான குற்றச் செயல்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. "வடகிழக்கு இந்தியாவில் நடந்து வரும் அட்டூழியங்கள் பற்றி நன்கறிந்த ஹசாறிபா என்ற அறிஞர் அண்மையில் "ஆயுதப் படையினருக்கான (விசேட அதிகாரங்கள்) சட்டம் மாநிலத்திலிருந்து நீக்கப்படுவதற்கிடையில் இன்னும் எத்தனையெத்தனை இறப்புகள், எத்தனை நிர்வாண ஆர்ப்பாட்டங்கள், எத்தனை உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் (எத்தனை ஆணைக்குழுக்கள்) எத்தனை பத்திரிகை ஆசிரியத் தலையங்கங்களும் ஒலிபரப்புகளும் இடம்பெற வேண்டியிருக்குமோ?" என்று தனது அச்சத்தை வெளியிட்டிருந்தார்.
இத்தகைய கொடுரச் செயல்கள் இந்திய இராணுவத்தினருக்கு மட்டுமன்றி எல்லா இராணுவங்களுக்கும் பொதுவானவையே. “எமது இராணுவம் நெஞ்சில் கருணையையும் கையில் மனித உரிமைச்சட்டங்களையும் சுமந்து கொண்டு செயற்பட்டது. பொதுமக்களின் உயிரிழப்பு என்று எடுத்துக் கொண்டால் Zero Casuaty என்று துணிந்து கூற முடியும்” என யாராவதுமார்தட்டினால்வரலாற்றின்இருண்ட
38

பக்கங்களில் சிலவற்றையாவது புரட்டிப் பார்த்தவர்கள் அதை நம்ப வேண்டுமே.
ஒரு காலத்தில் சினிமா டைரக்டர் பாலச்சந்தர் ஒரு தந்திரமான வியாபாரி என்று ஜெயகாந்தன் அவர் மீது பழி சுமத்தியதாக ஞாபகம். அக்குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலில்லை. இப்போ ஜெயகாந்தனை எப்படி அழைப்பது என்பதுதான் புரியவில்லை. மாபெரும் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறாரா அல்லது அறியாமை இருளில் மூழ்கியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
அழமையின் மீட்பில் ஆற்றலின் வழவமானாய் முழந்ததா உனது துயர் பகுவிகளில் சிலர் மட்டும் உயர்ந்திட்டால் போதுமா பெண்னே இன்னும் உன் சேரகுரிகளின் கண்ணீர் வற்றாத តាណាប្តីថាg நாளும் புதுப்புது வழவில்
T656ŪTū வன்முறைத் தாண்டவம் ஆடுகையில் பாரதி கண்ட கனவது மெய்ப்பட்டதென மேடையில் நீயும்
ប្រាge_សាយោ beចាំ தினம் தினம் வகுைபடும் வாழ்வின்றும் தொடர்கையில் மகளிர் தினம் மட்டும் போதுமா உன்துயர் போக்க புறப்படு
VO
i
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 41
கவிஞர் யாழரசின் "மெளன மொழிகள்” வெளியீ
கவிஞர் யாழரசு எழுதிய “மெளன மொழிக தமிழ்ச்சங்கத்தில்பேராசிரியர்சபா. ஜெயராசா கவினாளி பூரீஸ்கந்தராஜாவின் தமிழ்வாழ்த்து அந்தனிஜீவா நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பூரீரெலோ செயலா இந்நிகழ்வில் சிறப்புரையை பேராசிரியர் சோ கதிர்காமநாதன் அவர்களும், வெளியீட்டுரை நிகழ்த்தினர். விமர்சன உரைகளை சட்டத்தரன் ஆற்றினர். தோழர் என். சண்முகதாசனின் "ஒரு கம்யூனிஸ்
இலங்கையின் புரட்சிகர கம்யூனிஸ்ட் என்.சண்முகநாதனின் 20ஆவது நினைவு ; நூல் வெளியீடும் புதிய ஜனநாயக மார் சி.கா. செந்தில்வேல் தலைமையில் கொழும்பு நூல்வெளியீட்டுரையை பேராசிரியர் சபா. ெ கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோ) பிரிவு பொ நினைவுப் பேருரையை பேராசிரியர் எஸ். சிவ பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் நிகழ்த்த வழங்கினார்.
இரா. சடகோபனின் "எங்கள் கிராமம்" வெளியீ இரா. சடகோபன் மொழிபெயர்த்த மr கிராமம்” என்ற பெயரில் வெளியீட்டு விழ எழுத்தாளர் மன்றத் தலைவர் தெளிவத்தை ஜே வரவேற்புரையை திருமதி ஜி. சடகோபன் ஜெயராசா நிகழ்த்த, சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர் சோ. சந்திரசேகரம் பிரதம அதிதி லுணுகலைபூரீபாட, நன்றியுரையை மல்லியப்ட ஜி. சேனாதிராஜா தொகுத்து வழங்கினார்.
ஊடகப்படிகள் வெளியீட்டு விழா
சூரியன் எப் எம். வானொலியின் கெ ஊடகப்படிகள் நூல் வெளியீட்டு விழா ெ கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. நூ சந்தி திலகர் நிகழ்த்தினார். பல அரசியல் பிரழு எப்.எம். சிரேஸ்ட அறிவிப்பாளர் முகுந்தன் சிற
"தமிழ்ச்சூழலில் உளச்சமூகப்பணி எதிர்நோக்கும்
கொழும்புத்தமிழ்ச்சங்கம் புதன்கிழமைகள் நிகழ்வில் “தமிழ்ச் சூழலில் உளச்சமூகப்பணி மருத்துவ நிபுணர் எஸ் சிவதாஸ் சொற்பொழி சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தெ. மதுசூதனன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

கே. \ென்றுத்துரை
ட்டு விழா
ள்” கவிதை நூலின் வெளியீட்டு விழா கொழும்புத் தலைமையில்(09.02.2013) நடைபெற்றது. செல்வி டன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையை களாக பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன், ளர் ப. உதயராசா ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திரசேகரன் அவர்களும், வாழ்த்துரையை மு. rயை திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களும் னி ஜீ இராஜகுலேந்திரா, மேமன்கவி ஆகியோர்
ட்டின் அரசியல் அனுபவங்கள்"
இயக்கத்தின் முன்னோடித் தலைவர் தோழர் தினத்தை முன்னிட்டு நினைவுப் பேருரையும் க்சிய- லெனினிஸக்கட்சிப் பொதுசெயலாளர் த் தமிழ்ச் சங்கத்தில் (10.02.2013) நடைபெற்றது. ஜயராசா நிகழ்த்த, பிரதான உரையை இலங்கை துச்செயலாளர் அஜித் சுரேந்திர ரூபசிங்க ஆற்ற, சேகரம் நிகழ்த்தினார். நன்றியுரையை தினக்குரல் தினார். நிகழ்வுகளை த.வி.ரிஷாங்கன் தொகுத்து
b ாட்டின் விக்கிரமசிங்காவின் அபேகம “எங்கள் ா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மலைநாட்டு ஜாசப் தலைமையில் (17.02.2013) நடைபெற்றது. நிகழ்த்த வெளியீட்டுரையை பேராசிரியர் சபா. திம்பிரியாகம பண்டார கலந்து கொண்டார். பாக கலந்து சிறப்பு செய்யதார். வாழ்த்துக்கவியை புதிலகர் நிகழ்த்தினார். நிகழ்வுகளை சட்டத்தரணி
Fய்தி முகாமையாளர் எம்.இந்திரஜித் எழுதிய காழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் எம். லின் நயவுரையை பாக்யா பதிப்பக மல்லியப்பூ முகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை சூரியன் ரப்பாகத் தொகுத்து வழங்கினார்.
சவால்கள்" ரில்நடத்தும் அறிவோர் ஒன்றுகூடல்(20.02.2013) எதிர்நோக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் உள வாற்றினார். இந்நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் ன் தலைமை வகித்தார்.
39

Page 42
நுட்பம் -இலங்கை நடத்திய மாநாடு 2013
தமிழில் தகவல் தொழில்நுட்பம் வளர்த்த வளர்த்தல், தமிழ் தகவல் தொழில் நுட்பவியலா டாக சகல தமிழ் மக்களும் தகவல் தொழில்நுட் ஆகிய நோக்கங்களை முதன்மையாகக் கொ இலங்கைத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமை 09-03-2013 அன்று ஒருமுழுநாள்மாநாட்டினை சர்வேஸ்வரன் ஆகியோர் முன்னின்று இம்மாநாட அன்றைய நிகழ்வின் சிறப்புரை மொரட்டுவை 3GoT55) flg.ptGirLLLIGi) (Prof. Gihan Dias)-96).j356 திரு. சேரன் சிவானந்தமூர்த்தி, சுபாஷினி அரவி கிருபானந்தா, திரு. கெங்காதர ஐயர் சர்வேஸ்வ கலாநிதி என்.எதிர் வீரசிங்கம், திரு ஞா. பாடு சிவநேசன், திரு. சரண்யன் ஷர்மா, Etisalat பிரதிநி
அல்ஹாஜ் மஸ9ர் மெளலானா அவர்களின்அகவை
கிழக்கிலங்கை மருதமுனையின் மாமனிதர் உறுப்பினரும், கல்முனை மாநகரசபையின் மு மெளலானாஅவர்களின் அகவை எண்பது நிறைவு தமிழ்ச சங்கத்தில் 21.02.2013ந் ஒய்வு பெற்ற உ அவர்களின் தலைமையில் நடத்தினர். பிரதம அத இரா. சம்பந்தன் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் பவுர் சேகுதாவுத் கலந்து கொண்டார். வரவேற்புை வழங்க, கவி வாழ்த்தை கவிஞர் இளநெஞ்சன் முரி நிகழ்த்தினார். நன்றி உரையை கவிஞர் நியாஸ் ஏ. அஷ்ரஃப் சிஹாப்தின் தொகுத்து வழங்கினார்.
"மலையக் கல்வியை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி இயற்கைவளம் நிறைந்த உன்னஸ்கிரிய கி இலவசமாகப் பாடசாலை உபகரணங்களும், இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கும் “மலையக மாணவர்கல்வி மேம்பாட்டு அமையத்; கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதுவரான விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். இவரும்
40
 

ܬܬܐ ܬܐܬܐܬܐܬܐܫܬܐܠܦܘܢܘܬܐ ܢܚܐ .
u - 5G Giulis still தகவல் தொழில்நுட் آئیپی پیصلى الله عليه وسلمy\ \taگلیکن بِأَنَّبِيُّصلى الله عليه وسلم
ல், தகவல் தொழில் நுட்பம் ஊடாக தமிழ் ாளர்களை ஒன்றிணைத்தல், தமிழ் தொழியினூ ப அறிவைப் பெற்றுக்கொள்ள வழி சமைத்தல் ண்டு தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட யம் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடத்தியது. திருவாளர்கள் அனுராஜ், தவரூபன், ட்டை சிறப்புற ஒழுங்கு செய்திருந்தனர். வ பல்கலைக்கழக கணினித்துறைப் பேராசிரியர் ால் ஆற்றப்பட்டது. திரு. முரளிதரன் மயூரன், பிந்தன், திரு. சம்பத் ஹென்னாயக்க, அபர்னா ரன், ஒலிம்பிக்கில் பங்கு பற்றிய ஈழத்து வீரர் லச்சந்திரன், திரு. பாலதாசன் சயந்தன், திரு. தி ஆகியோர் விசேட உரைகள் நிகழ்த்தினர்.
எண்பது நிறைவு விழா
முன்னாள் தமழிரசுக்கட்சி செனட் சபை ன்னாள் முதல்வருமான அல்ஹாஜ் மஸ்ஸீர் விழாவை மருதமுனையின்மக்கள், கொழும்புத் யர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் திெயாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் உற்பத்தி மற்றும், உற்பத்தி திறன் அமைச்சர் ரையை "காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரிபுத்தின் ஷிதீன் பாட கலைஞர் கலைச்செல்வன் உரை சமத் வழங்க, நிகழ்வுகளை “யாத்ரா" ஆசிரியர்
ராமத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பார்வை குறைந்த அவர்தம் பெற்றோருக்கு வைபவம் 20.01.2013ம் திகதி நடைபெற்றது. தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஏ.நடராஜன் அவர்கள் பிரதம ஏனைய பிரமுகர்களும் மலையடிவாரத்தில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 43
இருந்து மலை உச்சியிலுள்ள பாடசாலை வை செல்லப்பட்டமையானது நிகழ்ச்சியின் வெற் "உன்னஸ்கிரிய சிவனேஸ்வரா தமிழ் வித்தியா ஆசிரியர் குழுவினரும் மாணவ மாணவிகளு பெற்றோரும் பொது மக்களுமாக ஐநூறு பேர பிரதம விருந்தினரும் ஏனைய பிரமு உபகரணங்களையும் மூக்குக் கண்ணாடிகளை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றைப் இருந்தது. மேற்படி அமையத்தின் தலைவ பெரியையா செல்லையா, சிறப்பு விருந்தினரா திரு.சிவபாலன், வித்தியாலய அதிபர் திரு.ரவி இரா.அ.இராமன், கல்வி மேம்பாட்டுக்குழுவி சஞ்சிகையின் ஆசிரியர் திரு.ரா.நித்தியானந்தன் தூதுவர் தனது சொற்பொழிவின் போது மன வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப் வானைப் பிளந்தது. பாடசாலை மாணவிகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்கள். அ.ை கவிதையொன்றை வாசித்துச் சபையோரை திறமையான முறையில் நிகழ்ச்சிகளைத் தொகு
பல்துறைக் கலைஞர் கந்தையாவிற்கு ஆரையம்ப அமரர் எஸ்.கந்தையாமட் காத்தான்குடி ம. மகாவித்தியாலயத்திலும், சங்கீத ஒவியம், நாட இவர் தனது கடமைக் காலத்தில் பல ஆரையம்பதியிலும், பிற ஊர்களிலும் நாடகங் ஆரையம்பதியில் பவளக்கொடி, அல்ல அரங்கேறின.
மண்ணின் மைந்தரான இவருக்கு எப்ே இப்போதாவது அது நிறைவேறுகிறது. இதற் வழங்கி உள்ளது. சிலையை கோட்டை கல்லா
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஏற்பாட்டுக்குழுவில், ஆரையம்பதி கலைஞர்க எதிர் வரும் ஏப்ரல் மாதம் இச்சி: ஏற்பாட்டுக்குழுவில், தலைவர் ஆரையூர் இள6 பி.சிவலிங்கம், துணைச் செயலாளர் எஸ். சுரே வழிநடாத்தல் கவிஞர் மூனாக்கானா ஆகியோ
படப்பிடிப்பு: கே. பொன்னுத்துரை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

ர பாண்ட் வாத்திய மரியாதையுடன் அழைத்துச் ]றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. லயம்” விழாக்கோலம் பூண்டிருந்தது. அதிபரும் ரும் எம்மை இன்முகத்துடன் வரவேற்றார்கள். ளவில் கூடியிருந்தார்கள். கர்களும் கட்டம் கட்டமாகப் பாடசாலை யும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிய போது ப் பெற்றுக் கொண்டதைக் காணக் கூடியதாக ர் திரு.பாலசுப்பிரமணியம், செயலாளர் திரு. ன ஊடக அமைச்சின் தமிழ்ப் பிரிவுச் செயலாளர் ச்சந்திரன், அமையத்தின் பிரதான அமைப்பாளர் வின் செயலாளர் திரு.கா.தவபாலன் மனமோகி ஆகியோர் உரையாற்றினார்கள். இந்திய உதவித் லயக மாணவர்களின் இந்திய புலமைப் பரிசில் பதாக கூறியதும் பார்வையாளரின் கரகோஷம் நடன விருந்தொன்றை அளித்து அனைவரையும் மயப் பொருளாளர் திரு.றொபேட் டானியல் அசத்தி விட்டார். திரு.S.S. ராஜேந்திரா மிகத் த்து வழங்கினார். தகவல்: கா. தவபாலன்
தியில் சிலை நிறுவும் முயற்சி (விசேட நிகழ்வு) த்திய மகாவித்தியாலயத்திலும் மட்.ஆரையம்பதி டக ஆசிரியராகக் கடமை ஆற்றி ஒய்வு பெற்றவர். நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றியவர். களைப் பழக்கி அரங்கேற்றியவர். லி அர்ஜூனா, துருவன் முதலிய நாடகங்கள்
போதோ சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் கான அனுமதியை ஆரையம்பதி பிரதேச சபை று சிற்பி கிருஷ்ணபிள்ளை செய்யவுள்ளார். மூத்த எழுத்தாளர் நவம் மேற்கொண்டுள்ளார். ள் பலர் இணைந்துள்ளனர். லை நிறுவப்படவுள்ளதாக தெரியவருகிறது. வல், செயலாளர் அன்புமணி, துணைத் தலைவர், ாஷ் (GSO) பிரதம ஆலோசகர் ஐ.மகேசானந்தம், ர் அங்கம் வகிக்கின்றனர். தகவல் - அன்புமணி
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 08.03.2013 அன்று மகளிர் தின சிறப்பு நிகழ்வை நடாத்தியது. இந்நிகழ்வில் நால்வர் கெளரவம் பெற்றனர். செல்வி சற்சொரூபவதிநாதன், கலாசூரி அருந்ததி பூரீரங்கநாதனுடன் கெளரவம் பெற்ற வைத்தியநிபுணர் கலைவாணி உக்கிரபெருவழுதிப்பிள்ளை, திருமதி பத்மயோகராணி கஜேந்திரதாஸ், செல்வி தர்ஜினி சிவலிங்கம், திருமதி இந்திரா இராஜரத்தினம் ஆகியோரையும், திருமதி பத்மா சோமகாந்தன், திருமதி ராணி சீதரன் ஆகியோரையும் படத்தில் காணலாம்.
41

Page 44
ஏழைகளின் இதய
AT2Gíjraíliái
ஈழத்துப் புனைவு இலக்கியத்துக்குத் தொனிப் பொருளாலும் புனைவுத் திறனாலும் எடுத்துரைப்புச் சாதுரியத்தாலும் மெருகேற் படுத்தியவர்களுள் - நாடறிந்த எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் அதிமுக்கியமானவர். வறு மைக் கோட்டின் கீழ் வாழும் அன்றாடங் காய்ச்சிகளின் அவலங்களைச் சொல்வதில் - சோஷலிச நாடுகளின் - இன்றும் பொச்சடித்துப் பேசப்படும் - புகழ் பூத்த படைப்பாளிகள், தகழி சிவசங்கரம்பிள்ளை, ஜெயகாந்தன்ஆகிய பிரபல கதைஞர்களோடு இணைத்துப் பார்க்கத்தக்க தகைசார் எழுத்தாளர். ஆங்கிலம் போன்ற சர்வதேச மொழிகளில் கே.ஆர்.டேவிட்டின் புனைவுகளை மொழியாக்கம் செய்து வேற்று மொழி வாசகர்களும் அவைகளை வாசிக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினால் நிச்சயமாக இந்தக் கருத்துரைப்பை அவர்களும் ஏற்பர். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வியர்வையில் தேறும் பணத்தை உறிஞ்சி - சொகுசு வாழ்க்கை வாழும் மேற்றட்டுச் சுகபோகிகளின் ஆதிக்கத்தைச் சிதறடித்து - புதியதோர் சமுதாயத்தை அமைக் கும் எழுச்சிக்கு ஊற்றுக்கண்ணாக கே.ஆர். டேவிட்டின் எழுத்துக்கள் மிளிரும்
ஆறு சிறுகதைத் தொகுதி களும் மூன்று குறுநாவல்களும் நாவலொன்றும் அடங்கலாக இதுவரை கே.ஆர்.டேவிட்டின் பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. 1970களில் ஈழத்துப் புனை விலக்கிய நூலகத்தைச் செழிப் படையச் செய்த - கொழும்பு வீரகேசரிப் பிரசுர அமைப்பு வரலாறு அவளைத் தோற்று விட்டது!’ என்ற நாவலை வெளியிட்டு இவரது நூல்கள் வெளியீட்டுக்கு பிள்ளையார்சுழி
இறஇை&இதிலிரு
42
 

களைப் Uேன்கிந்து,
மா. பாலசிங்கம்
யிட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது கொழும்பு 13, கு.வி.அச்சக வெளியீடாக "மண்ணின் முனகல்' என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. சமூக, மனித நேய சிந்தையோடுஅதை வாசித்ததில் ஊறியதை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதே இவ் வெழுத்துருவின் இலக்காகும்.
முற்போக்கான சமூக அக்கறையில் விளைந்த பன்னிரு சிறுகதைகள் இத்தொகுப்பி லுண்டு. எச்சிலைப் போராளிகள், நாற்சார் - மாடி வீட்டு வேலைக்காரர்கள், எடுப்பு மீன் விற்கும் சிறுவன், அப்ப வியாபாரிப் பெண், தேங்காய் விற்பவனின் படித்த மகன், கஞ்சா வியாபாரி, மாட்டைக் கொன்று இறைச்சி விற்பவன், மண்ணின் சங்கை காப்போன் ஆகிய ஒரு நேரக் கஞ்சிக்கு அப்பாடும் மனித தரிசனங்களை இச்சிறுகதைகளில் கண்டு, கசிய முடிகிறது.
சமகாலத் தமிழ் வாழ்வில் சிந்தப்பட்டி ருக்கும் வாழ்வியல் சிந்தனைகளை - தனது ஆழ்ந்த தேடல்களின் மூலமாகப் புடமிட்டுப் புதிய செழுமையான சிந்தனைகளை அடிக்கடி மக்கள்மயப்படுத்திக் கொண்டிருக்கும் சமதர்ம சிந்தனையாளர் கலாநிதி ந. இரவீந்திரன் இத் தொகுப்புக்கு அரியதொரு அணிந்துரையை வழங்கித் தொகுப்பின் கனதியை மேலுயர்த்தியுள்ளார்.
மன்ைனின் முனகல்’ தொகுப்பில் பக்கங்களாலும் பல்வேறு சங்கதிகளாலும் கொழுத்த சிறுதை பாண் போறணை' குறுநாவலுக்கும் ஏற்றதாகவுள்ளது. தொழிலின் நிமித்தமோ இடம் பெயர்ந்தோ படைப்பாளிகள் வெவ்வேறு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 45
பிரதேசங்களுக்குப் போகும் போதெல்லாம் அந்தந்த மண்ணினதும் மக்களையும் படித்து இலக்கியமாக்கி விடுவதுண்டு. அதற்கு விதிவிலக்காகாது இத்தொகுப்பாசிரியரும் பூண்டுலோயா, மூதூர், புத்தளம், தெஹிவளை ஆகிய பிரதேசங்களைக் களமாக்கிச் சிறந்த படைப்புகளைத்தமிழிலக்கியத்துக்குத்தந்துள் ளார். பாண் போறணை இன் நிகழ்களம் புத்தளம். புலமைப் பரிசில் பரீட்சையை எழுத வேண்டிய பத்து வயதுக் குச்சன் மீனவருக்கு உதவுவதன் மூலமாகவும் கழித்து விடும் மீன்களைப் பொறுக்கி விற்பதன் மூலமாகவும் தனது வீட்டுப் பாரத்தைச் சுமக்கிறான். சகோதரிக்கு இவன் சீனி பணிஸ் வாங்க எடுக்கும் எத்தனிப்புகளையும் எதிர்கொள்ளும் நிராசையையும் கதைஞர் உயிரோட்டமாகப் பதிய வைத்து; தினசரி வறுமை என்ற சிலுவை கண்ணிர் என்ற முள்முடி. எங்களைப் பெட்டியுக்கை வைக்கும் வரை இவைகளை இறக்கப் போறதில்லை" (பக்.50) என்ற பஞ்சப்பட்டதுகளின் ஏக்கத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகிறது. மூவின மக்களின் வாழ்விடம் புத்தளம். பாண் வண்டில்காரக் கபிரியேல், குச்சன் மீது காட்டும் பரிவு, வர்க்க உறவுகளையும் தாண்டி புத்தளம் வாழ் இனங்களின் மனித நேயத்தைக் காட்டுவது; இச்சிறுகதைக்கு வலுச் சேர்க்கின்றது.
கே.ஆர்.டேவிட்டின் புனைவாற்றலுக்கு 'மிசின் பெட்டி’ சிறுகதை உத்தரவாதம் செய்கிறது. கதை வார்ப்புக்குக் கையாண் டிருக்கும் உத்தி பிரமாதமானது. சின்னஞ் சிறுசுகளின் குட்டான் சோறு" சமைப்பு விளையாட்டினுடாக, மிகவும் நுணுக்கமாக அச்சிறுசுகளின் குடும்பத்தில் நிலவும் வறுமையைக் கடத்துகின்றது. அத்தோடு வீட்டின் சின்னஞ் சிறுசுகளுக்குக் கிரகிக்கும் ஆற்றல் ஜாஸ்தி என்பதையும் மிகப் பக்குவமாக வாசகனுக்கு உணர்த்துகின்றது.
மிக விறுவிறுப்பாக நகருகின்றது.
பேரினவாத யுத்த நிகழ்வால், வெளி நாட்டுச் சம்பாத்தியம், வறுமையோடு
மல்லுக் கட்டிக் கொண்டிருந்த சிலரது வாழ்வையும் துலங்க வைத்திருப்பது எப்போ தும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற மானுட நேசருக்குப் பேரின்பம்! ஆனால் இந்த எதிர்பாராத வாழ்வின் மாற்றத்தால் தமது இயல்பான சுபாவத்தை இழந்துள்ளோரையும் நாமின்று காணமுடிகின்றது. இத்தகைய ‘புதுப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

பணக்காரருக்குக் கண்ணிர் கொந்தளிக்கும்’ சிறுகதை சுட்டெரிக்கும் தீ ஏற்றிவிட்ட ஏணியைத் தள்ளி வீழ்த்தி திரேசான் மிதிக்கிறான். கத்தரீனாவின் இல்லத்தை எண்ணெய்யூற்றிக் கொழுத்துகிறான். வீடற்ற கத்தரீனா, நாங்கள் விடுகிற கண் ணிர். எண்டைக்கோ ஒரு நாளைக்குக் கொந் தளிக்கும்.? (பக்.107) என அறை கூவல் செய் கிறாள். வறுமையிலும் செம்மையான ஒரு வீராங்கனையை இச்சிறுகதை வாசகர் முன் நிறுத்துகின்றது.
பேரினவாத யுத்த காலத்தில் ஈழத் தமிழர் மீது திணிக்கப்பட்ட தடைகள் தமிழரது கல்வி முன்னெடுப்பையும் பாதித்ததுண்டு. மாணவர் எழுதுவதுக்கும் பேப்பர் கிடைக்காதிருந்தது. வறுமைக்குக் கல்வி தீனியானால். எங்கடை அடுத்த தலைமுறை அடிமைப்பட்டிருக்கும்.' (பக். 33) என்ற தூரநோக்கில் சதங்களை எண்ணி வாழ்வை ஒட்டிச் சென்ற சில குடும்பத் தலைவர்கள் - பதிப்பகங்கள் வெட்டிக் கழித்த - கடதாசி நறுக்குகளைப் பொறுக்கி எடுத்துச் சென்று மாணவருக்கு எழுதக் கொடுத்த சங்கதியைப் போர்க் காலப் பதிவாக 'அதிர்வு' தருகிறது. தமிழன் முதுகை நேராக இன்றும் நிமிர்ந்து நிற்பதுக்கு கல்வியே நெம்பு கோலென்பதையும் உணர்த்துகின்றது. இதயங்கள் கரைகின்றன சிறுகதை புளிஞ்ச கழிவுத் தேங்காய்ப் பூவில் சம்பல் செய்து புட்டோடு தின்றதை உருக்க கூறி இதயத்தைப் பிழிய வைக்கின்றது.
எனக்கு. மனித மூளையை விட. நாய் மூளை தான் பொருத்தம்.' என ஏ. ல், வகுப்பு மாணவன் சுபதீசன் நாய் மூளை' என்ற சிறுகதையில் கூறுவதாகச் சித்திரித்திருப்பது இயல்பானதாகவில்லை முகத்தில் மீசை அரும்பும் பருவத்துத் தமிழிழைஞன் இப்படித் தன்னைத் தாழ்த்துவனா? சுபதீசனை விட ஐம்பது சதத்துக்கு ஊம்பிற நாய் நானில்லை நீ தான்! என உணர்வுகள் கட்டுடைத்தால்..? சிறுகதையில் வெகுண்டெழும் அப்பக்காரி கனகம் சமுதாயத்தை மாற்றி அமைக்கத்தக்க போராளிதான்!
நான் கேவலமானவனல்ல" பேரினவாதத் தின் கோரப் பற்களைக் காட்டுகின்றது. பச்சைக் குழந்தையை வளர்த்துச் சமுதாயத்தில் நடமாட வைக்கும் பெண்ணின் பால் சுரப்பிகளான முலைகளை பேரினவாதிகள்
அரிந்து வீசிவிடுகின்றனர். பாலூட்டத்
43

Page 46
தாய் அலைகிறாள். மாடுவெட்டி இறைச் விற்பனை செய்யும் தொழிலாளி அந் இளந்தாயின் தவிப்பை அறிந்து அவளுக் உதவுகின்றான். தினசரி கொலையோ( தொழிலை ஆரம்பிக்கின்ற நான்தான் இந்: மண்ணில் கேவலமானவனா? என்னை விடக் கேவலமானவர்களும் இருக்கிறார்கள் (பக். 31) என கொல்லாமை போதிக்கு பஞ்சசீலர்களிடம் கூறுகிறான். இத்தகைய அக்கிரமங்கள் நிறைந்த இந்த மண்ணில் தன் தந்தைக்கு நினைவுக் கல்லறை வேண்டாமென 'மண்ணின் முனகல் உணர்ந்த ஒரு சுயமரிய
தைத் தனயன் முடிவு செய்கிறான்.
இத்தொகுப்பின் சிறுகதைகள் சிலதில் கல்வியறிவில் முதிர்ச்சி பெறாத கதை மாந்தர்கள் உட்படுகிறார்கள். இவர்கள்
ളക്ടേെ ശ്രീ.
தாயகத்தில் இருப்பதெல்லாம் தறிகெட்டுப் போனதெனினா ஊரைவிட்டுப் போறிங்க வேர்விட்டுப் போன டிரம் விரும்பினானும் பூக்காது நீர் தந்த நிலத்த விட்டு ប្រកែas GTវិas GUញាកែវិas பாரை உடைச்சு UாடுUட்ட மண்ணை விட்டு பாதங்கள ஏன் எடுக்கிறீங்க ប្រសិញ → வேதங்கள் நாதியறவிட்டு நாடு கடக்கிறீங்க நல்லதில்ல பாருங்கோ சேத்தில வளர்ந்ததால சொத்த நீங்க உண்ணலயோ ஊட்டி வளத்த முண்ணின் உசிர் துடிக்கப் போறிங்க ஆக்கப் பொறுத்த நீங்க ஆறப் பொறுத்தாலெனின? நோக்கமும் கலயல நினைவுகளும் கலயல துTக்கமும் இல்ல துளிர் துலங்காடுனுமில்ல
44

பேசுமொழி - ஜெயகாந்தன், கே. டானியல், எஸ்.அகஸ்தியர், திக்குவல்லை கமால் ஆகியோர் படைத்த இத்தன்மையான கதை மாந்தர்களின் பேசுமொழியில் காணப்பட்ட இயற்றன்மையை உடையதாக இல்லை. சகல பிரதேசத்தவரும் வாசித்துக்கிரகிக்கவேண்டும் என்பதற்காக இந்த உத்தியைப் பாவித்திருக்க லாம். ஆனால் கடும்போக்கு யதார்த்த வாதிகள் கொச்சைப்படுத்துவர்.
ஆக, மனிதம் நசுக்கப்படுவதை "மண்ணின் முனகல் தொகுப்பின் சிறுகதைகள் எண்பிக் கின்றன. இவைகளை ஆழ்ந்து வாசித்து உணரும் ஒரு வாசகன் நிச்சயமாக ஒரு புதிய மனிதனாவதுக்கு இவை உதவும் சக்தி வாய்ந்தவையெனில் தப்பாகாது.
O O O
)
தேக்கம் ஒண்ணு ஏங்கிக் கிடக்குது தேடி எடுக்காடு @gវិ6 Ga GUញាកែវិas அடி நெஞ்சு வலிக்குது அடி புளிளகளா கேளுங்கோ இக்கரைக்கு அக்கரை அவீவளவு நல்லதில்லை அதிலொண்ணும் சொந்தமில்ல முள்ளுக்க பிறந்தானும் நெல்லுக்கு வலி9ை நூாறு வில்லுக்கு நாணி புல்லினும் உண்டு பாரு கல்லுக்குள்ள தானே சிறிUம் வெட்டி எடுக்காடு வேலறங்க போறிங்க வெளிளக்கார வீட்டு முத்தம் ប្រកែខៃ → விரும்பினாலும் சுகம் தராது சொத்த விதிது போன சொந்தம் செத்தாலும் வராது நிதிதம் நிதிதம் நாங்க இங்க நீறாகிப் போனாலும்
GRas சித்தம் கலங்காத இக்கர இது நம்மு கர சொந்தக் கர (கரை)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 47
நூல்: நிஜங்களின் பதிவுகள் ஆசிரியர்: கே.ஜி.மகாதேவா வெளியீடு; மித்திரா பதிப்பகம்
விலை: இந்திய ரூபா 90/= கே. ஜூ. மகாதேவா அவர்கள் இலக்கிய வுலகில் ஐம்பதாண் டுகளாக சேவை செய் பவர். தொழிலகத்தை விட்டுங்கூட ஒய்வு நிலையிலும் எழுத்தை ஒரு தவமாகக் கொண் டுள்ளவர். இவர் பத்திரிகைகளுக்குத் தனது பதினொராவது வயது முதல் எழுதுகிறார். ஆரம்பத்தில் ‘ஈழநாடு அலுவலகத்தில் பயிலுநராகச் சேர்ந்து சேவை செய்தார். பின்னர் கண்டியில் திரு. நாகலிங்கம் அவர்கள் நடத்திய செய்தியில் ஆசிரியராக விருந்தார். அதன்பின் ‘ஈழநாடு’ பத்திரிகையில் சேர்ந்து பணிசெய்தார். இன்று திருச்சியில் இருந்து ஒய்வில்லாது எழுதுகிறார்.
ஞாயிறு தினக்குரலில் எழுதப்பட்ட கட்டு ரைகளே இன்று புத்தகமாக வெளிவந்துள்ளன. இந்நூல் இவரது ஐந்தவாது நூல் முன்னர் நினைவலைகள், Reminisce', 'கதையல்ல நிஜம், தர்மத்தின் குரல்" என்னும் நூல்களை வெளியிட்டு வாசகர்களின் மதிப்பைப் பெற்றவர். இப்புத்தகத்தில் பிரார்த்தனை மூலம் கடவுள், செம்மொழி மாநாடு, அயோத்தி விவகாரம், தஞ்சைப் பெரியகோவில்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 
 

எழுத்தாளர் சின்னப்பபாரதி, அதிபர் ஒபாமா, அண்ணா நூலகம், செய்தியாசிரியர் ரா.மு.நாகலிங்கம், தமிழர் பிரச்சினை என்று தொடர்ந்து இருபது கட்டுரைகளை 168 பக்க நூலில் அமைத்துள்ளார். நேற்றைய, இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு என்பர். மகாதேவாவும் தமது பதிவுகளை ஆவணப் படுத்தியுள்ளார்.
பாபாவின் இறுதிக்கிரியையன்று வானில் தோன்றிய நிலவில் பாபாவின் உருவம் தெரிந்த அற்புதத்தை அழகாக விளக்கியுள்ளார். இராஜ இராஜ சோழர் எழுப்பிய தஞ்சைக் கோயிலுக்கு புகுவாசலைவிட்டு சிவகங்கை பூங்கா வழியாக மதில்களை உடைத்து வாயில் அமைக்கும் பணிக்கு காரணமென்ன என்பதை நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். புதுமையான காரணங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
அயோத்தி விவகாரம் - இராமர் கோயில் - பாபர் மசூதி என்பவற்றின் வரலாறு தெரியாத வர்க்கு கட்டுரை விளக்கம் தருகிறது. பிரபல எழுத்தாளர் சின்னப்பபாரதி டீ, காப்பி, குடிக்காதவர்; புகைத்து அறியார், மாலை மரியாதை, பொன்னாடை போடாதவர், ஒர் அற்புத புருஷர். அவரது நாவல்கள் பலமொழிகளில் வந்துள்ளன. அவரைப் பற்றிய முழு விபரமும் நூலில் கிடைக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை திகைக்க வைத்த கல்லூரி மாணவி அசின் இராணி கேட்ட கேள்வி என்ன என்பதையும் நூலில் காணலாம். கட்டுரைகள் அவரது கூர்ந்த பார்வையைப் பிரதிபலிக்கின்றன. முன்னுரை எழுதிய பிரபலஎழுத்தாளர்எஸ்.பொ.தமிழகப் பத்திரிகைகள் தர்மத்தை விட்டு விலகிச் செல்வதைக் கண்டித்துள்ளார். வாசிப்பதற்கு மிகவும் சுவையாவும் பல விடயங்களை உள்ளடக்கியதாகவும் இந்நூலை ஆக்கித்தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
O O O
நூல்: மருதமுனை முத்து மவு'ர் மெளலானா ஆசிரியர்: ஏ.எச்.எம்.அஸ்வர் வெளியீடு: அஸ்மினா பதிப்பகம் விலை: ரூபா 350/=
மருதமுனை தந்த முத்து; இத்தேசத்திற் கோர் விலையில்லாச் சொத்து. மஷகுர்
A.

Page 48
மெளலானா அவர் கள் பற்றி அஸ்வர் தரும் தங்கப் புதை யல்.
மஷ9ர்-அஸ்வர் உடலால் இருவர்; உயிரால் ஒருவர். ஒரு சிங்கத்தின் வீரச் சாதனைகளை இன் னோர் சிங்கம் உரக்க
முழக்கம் செய்கிறது. முழக்கம் செய்வது யார்?
பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற பேரவை உறுப்பினர், முன்னாள் முஸ்லீம் இராசாங்க அமைச்சர், ஊடக ஆலாட்சி அதிகாரி, ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச். ஏம். அஸ்வர்.
யார் இந்த மருதமுனைமுத்து? - கல்முனை மாநகர சபை மேயர், செனற்சபை உறுப்பினர், ஜனதா பெருந்தோட்டப் பணிப்பாளர், ஹோட்டல் கூட்டுத்தாபன பிரதித்தலைவர், நிறைவேற்றுப்பணிப்பாளர் தேசிய வீடமைப்பு அதிகாரசபை, முதலாவது செயலர் இலங்கைக் கான இந்திய உப தூதுவராலயம் சென்னை. இத்தனை புகழுக்குரியவர்மஷூர் மெளலானா அவர்கள்.
தமிழரசுக் கட்சியின் பீரங்கிப் பேச் சாளர்; தந்தை செல்வா தத்தெடுத்த பிள்ளை. நற்றமிழின் நாவலர். அண்ணாவின் பேச் சாற்றல் சொல்லின் செல்வர் இராசதுரையின் அரவணைப்பு. இவரைதமிழன்னைநாவலராக் கினாள்; நாடு போற்றும் கோமகனாக்கினாள். பூர்வீகம் நபிகள் வழி; முன்னோர் பிறந்தகம் யேமன் நாடு. புகலிடம் ஈழம் - கிழக்கு மருதமுனை. ஆரம்பக்கல்வியை பிறந்தவூரிலும் பின் மட்டக்களப்பு சிவானந்த
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை அனுப்புபவர்கள் 300 சொற்களுக்குள் அடங்கக்
கூடியதாக அனுப்ப வேண்டும். 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்பட இடமுண்டு.
ஆசிரியர்
 
 

வித்தியாலயத்திலும், பின்னர் கொழும்பு ஸாகிராகக் கல்லூரியிலும், சட்டக் கல்லூ ரியிலும் பயின்றவர்.
ஸாகிராக் கல்லூரி உடன் மாணவர்கள் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, இலக்கியச் செம்மல் எஸ்.சமீம், தினகரன் ஆசிரியர் அமரர் சிவகுருநாதன் என்போர். சட்டக் கல்லூரியில் இன்றைய ஜனாதிபதி மாண்புமிகு இராஜபக்ஷ, உயர்நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன், வாசுதேவ நாணயக் கார ஆகியோர்.
தமிழரசுக்கட்சியின்தூண்களில் முதல்வர். நாடெல்லாம் பிரசாரம் செய்த பிரசார பீரங்கி, 1957 தனிச் சிங்கள சட்ட எதிர்ப்புப் போராளி, காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்தபோது பேரையாற்றில் தூக்கி எறியப் பட்டவர். அரச எதிர்ப்பு பிரசாரத்தின் காரணமாக 1960ஆம் ஆண்டு பனாகொடை சிறையில் வாடியவர்.
1947ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக் குழுவால் சிபார்சு செய்யப்பட்ட செனற் சபையில் அங்கம் வகித்தவர்களில் இன்றும் உயிரோடு இருப்பவர் இவர் ஒருவரே.
இவர் சமுதாயத்திற்கு செய்த சேவை அளப்பில, கொழும்பு ஸாகிராக் கல்லூ ரியை அரசுடமை யாக்கியபோது பொங்கி எழுந்து தமிழ்ப் பேசும் மக்களிடை பிரசாரம் செய்தவர்.
இவருக்கு 1954இல் திருமணமாகி ஆறு செல்வங்களுக்குத் தந்தை. பேரப் பிள்ளைகளுக்கு பாட்டனார்.
இவரது வரலாற்றை அழகு தமிழில் தந்த ஏ. எச்.எம்.அஸ்வர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வரலாற்று நூல் தமிழ்பேசும் மக்களுக்கும் முஸ்லீம் சமுதாயத்திற்கும் ஒரு பொக்கிஷம்.
O O O
படைப்பாளிகள் கவனத்திற்கு,
ஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங் களை அனுப்புபவர்கள் அவற்றை கணி னியில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை தபாலி லும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதி யில் பெயர், முகவரி, கைத்தொலைபேசி எண் ஆகிய விபரங்களையும் தருதல் வேண்டும்.
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 49
வழமைபோல அட்டைப்பட அதிதி அ மூத்த இலக்கிய வாதிகளில் ஒருவரான மூதூர் என்பவரை இம்முறை (152) ஞானம் இதழி அறிந்தவனல்ல; என்றாலும் திருகோணமலை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். தமிழ் பேசும் இரு பொழுது அங்கே சகோதர உணர்வு மேே சகலரிடமும் தோன்றவேண்டும். இக்கட்டுை அவதரித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ பிறந்தார் என நல்ல தமிழில் எழுதியிருக்கலாம் எனக் குறிப்பிட்டு அடையாளமிடுகின்றனர். ட பிழையாகவும் இருக்கலாம். என்றாலும் நல்ல இலக்கிய வாதிகளை தேடி அறிமுகஞ் செய்தா
கிழக்கு மாகாண தமிழ் கலை இலக்கிய ஏ.எம்.எம்.அலியின் கட்டுரையை வாசித்தேன். அந்த மொழியில் இடம்பெறுவதே நலமான நடைபெறவேண்டும். ஆதங்கம் வரவேற்கத்தச் நான் முன்பு இப்பகுதியில் சந்தேகப்பட்ட படி, அதிர்ச்சி வைத்தியம் செய்வார்களோ, அறியே கலாபூஷணம் எம்.ஜ.எம்.அப்துல் லதீபி தரமானது. இஸ்லாமிய விழுமியங்களை தவறான கருத்துக்கள்; கற்பனையான சிந்தனை பாதிக்கின்றன. இக் கத்னா முறையை சமய ரீதி சிந்தித்தால் உண்மை நிலை புரியும். சில காலத் ஜயலத் ஜயவர்த்தனா 'கத்னா’ முறை சுகவாழ் சிங்களப் பத்திரிகையொன்றில் எழுதியிருந்த அறிஞர் பலர் கத்னாவைப் பற்றி எழுதியுள்ளன விளக்கம் சில தவறான கருத்துக்களுக்கு முற்று ஒய்தா மாமாக்கள் செய்த வேலையை இன்று ( பத்தியெழுத்தும் குறைந்துவிட்டது. மூத் போன்றவர்களின் பத்தி எழுத்து தொடரட்டு இரசிக்கிறேன். முக்கியமாக படைப்பாளிகள் தட்டச்சு செய்வதை மீள் பரிசீலனை செய்யவும், எனக் குறிப்பிடுவது நலம்.
ஈழத்துப் போரிலக்கியச் சிறப்பிதழைத் முறைகளிலும் வெளியிட்டமைக்காக ஞானம் தகும். போர் ஏன் நடைபெற்றது? அது ஏன் தோ பாடங்கள் எவை? போரின் போது மக்கள் ெ இன்றும் கூடத் துன்ப வாழ்வில் இருந்து மீள விடயங்கள் பற்றிச் சிந்திக்கத் தூண்டும் விதமா மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஞானத்
ஞானம் 152 கிடைக்கப்பெற்றேன். பல வாதிகளைத் தேர்ந்தெடுத்து அட்டைப்பட அ கிறேன். ஞானத்தின் மூலமாகத்தான் மூதூர் க தனது பத்தியில் சில முக்கியமான சமகாலத்த அவருக்கு எனது பாராட்டுக்கள். தற்காலத்தில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013
 

றியாதோரை அறிந்து கொள்ள வைக்கின்றது. கலைமேகம் கவிஞர் ஜனாப் ஏ.எஸ்.இப்றாஹிம் ல் அறிமுகஞ் செய்துள்ளீர்கள். நான் அவரை யைச் சேர்ந்த செ. ஞானராசா என்பவர் அவரைப் இனத்தவர் ஒர் இனத்தவரை அறிமுகஞ் செய்யும் லாங்குவதைக் காணலாம். இப்படியான நட்பு ரயாளர் அறிமுகஞ் செய்பவரின் பிறந்த நாளை தரித்தார் என்பது மறுபிறப்பை குறிப்பிடுகிறது. 5. மேலும் முஸ்லீம்கள் இறந்தவர்களை மர்ஹூம் மர்ஹிம் என எழுதியிருந்தார். சில நேரம் அச்சுப் தொரு அறிமுகம். இலங்கை வாழ் மூத்த கலை ல் மிகப் பயனுள்ளதாக இருக்கும். விழாவைப் பற்றி மூத்த கலைஞர் கலாபூஷணம் ஒரு மொழியில் தொடரும் இலக்கிய விழாக்கள் னது. வேற்று மொழியென்றால் அது வேறாக 5கது. மேல் மாகாண சபை தமிழ் இலக்கிய விழா குறைப் பிரசவத்தில் முடங்கிவிட்டது. இனியார் @OT. ன் கத்னா (விருத்த சேதனம்) பற்றிய கட்டுரை அறியாதோர் நிறையப்பேர் இருக்கின்றனர். னகள் ஒரு சமூகத்தின் உண்மை நிலைமைகளைப் யில் மட்டும் சிந்திக்காது; விஞ்ஞான ரீதியாகவும் துக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் வுக்கு ஒரு ஆதாரம் என பெரியதொரு கட்டுரை தை நான் படித்தேன். அத்துடன் வெளிநாட்டு தயும் நான் அறிவேன். எனவே இக்கட்டுரையின் ப்புள்ளி வைத்திருக்கும் என நம்புகிறேன். அன்று டொக்டர்கள் செய்கின்றனர். த சிந்தனையாளரான மானா மக்கீன், விஜயன் ம், கொற்றாவத்தை கூறும் குட்டிக் கதைகளை எல்லாரும் ஒரே தரத்தினர் அல்லர், கணனியின் முடியுமானோர் கணனியில்தட்டச்சு செய்யலாம்
- பாணந்துறை எம்.பி.எம்.ாகிஸ்வான் திறமையான முறையிலும், மிகத் துணிச்சலான ஆசிரிய பீடத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் ல்வியில் முடிந்தது? போரினால் கற்றுக்கொண்ட Fய்த தியாகங்கள் எவை? பாதிக்கப்பட்ட மக்கள் முடியாமல் தவித்தல் என்பன போன்ற பல்வேறு 5 இச்சிறப்பிதழ் அமைந்துள்ளதை எவ்விதத்திலும் துக்கு எனது வாழ்த்துக்கள்.
- கா.தவபாலன், கண்டி. வேறு பிரதேசங்களில் உள்ள கலை, இலக்கிய திதியாக கெளரவிக்கும் ஞானத்தைப் பாராட்டு லைமேகத்தைப் பற்றி அறிய முடிந்தது. மு.பொ. பிற்கு வேண்டிய விடயங்களைக் கூறி வருகிறார். கதை சொல்லும் முறையில் புதுமை இருக்கிறது. 47

Page 50
நேர்க்கோட்டு கதை சொல்லும் முறை எப்போே இதழில் வெளியான ஆசி கந்தராசாவின் வரகு கதை' என்பவை தற்புதுமை கொண்ட கதைக கவனத்தில் கொள்கிறது என்பதை அறிய முடிகிற ஈழத்து இலக்கியங்கள் வெளிவருவதை இலக்கி தன் கூற்றிலிருந்து தனது கட்டுரையில் முரண்படு பற்றிய கட்டுரையில் ஒரு படைப்பை, ஒரு மெ. வருவதற்கு பல காரணங்கள் உள்ளன எனக்கூறி இந்தி மொழியில் தமது படைப்புக்களை ெ குறிப்பிடுவது ஒரு குறுகிய பார்வையாக எனக்கு முயன்று தனது வாலினை கடலினுள் செலுத்தி அளவுதான் என்றதாம். அதே போன்றுதான் ஒ கொண்டு இலக்கிய தரத்தினை அளக்க முயல்கி அடித்துச் செல்லப்பட்டுவிடும். காலத்தின் க சென்ற 153ஆவது இதழில் ஒரு வாசகர் குறிப்பி விடுபடவேண்டும். இல்லாவிடில் மு. பொ. எ பிம்பம் ஏற்பட்டு விடும்.
தமிழகத்தில் சாகித்திய பரிசு பெற்ற நூல்க உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ளன. அதே வெளிவர வேண்டும். ஈழத்து இலக்கியம் த போக்குடையது. அவற்றை ஏனைய நாட்டில் அதுதானே எமக்குப் பெருமை.
ஐயா வணக்கம்! திரு. மு. பொன்னம்பலம் அ கீழேயிருப்பது தாங்கள் ஞானம் 152 சஞ்சிை "இவ்விடத்தில் ஈழத்து இலக்கிய உலகில் நடைபெறு குறிப்பிடுவது அவசியம். ஈழத்து இலக்கிய உலகில் யாரா மூலம் தம்மை இதுவரைகாலவரை தெரியப்படுத்தாதவ வெளியிட்டு பெரும் சேவை செய்வதாகக் கூறும் இலக்கி வேண்டும். இந்தப் பொய்மைகளை ஊக்குவிக்காது இரு தங்களின் இந்த எழுத்தின் மீதான எனது சில 1. இந்தி மொழியில் ஒருபடைப்பாளின் படை இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்ப 2. இதில் தாங்கள் "இலக்கிய துஷ்பிரயோக வெளிவரும் நூலுக்கும் ஈழத்தில் நடை என்ன சம்மந்தம்? இந்தியில் வருவதால் வராதவை தரமற்றது என்றும் இல்லை. நா6 லங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட வெளியாகின. இதில் 4 நூல்களுக்கு மொ, விருதுகள் கிடைத்திருந்தன. 3. யாரோ ஒரு எழுத்தாளர் தான் இந்திக்கு சொல்லியிருந்தால் அவரின் படைப்பை எடுத் குறிப்பிட்டு எழுதியிருந்தால் இது சம்பர் இடையில் முடிந்திருக்கும். இவ்வாறு திறர் எழுத்தாளர் கைப்பிடிப்பது? 4. இலக்கிய உலகில் யாரையும் எவரும் ஊக்குவி படைப்புகள் தானே எழுந்து நிற்கும். எவரு தடுத்துவிட முடியாது என்ற அரிச்சுவடி உட தங்களுக்கு என் போன்ற இளைய எழுத்தாள எதிர்பார்ப்பதெல்லாம் தங்களிடம் இருந்து எதிர்ப்பது பகிஸ்கரிப்பது முனைப்புக் கொள்வது போ
48

தா கைவிடப்பட்டு விட்டது என்கிறார். சென்ற மான்மியம், ஜிவகுமாரனின் இது இவர்களின் ளே, ஞானம் கதைத் தெரிவில் புதுமையைக் து. மு. பொ. தனது பத்தியில் இந்தி மொழியில் பத் துஷ்பிரயோகம் என்கிறார். ஆனால் அவர் கிறார். "சோ. பா. வின் தென்னிலங்கை கவிதை ழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கொண்டு பிருக்கிறார் மு. பொ.
வளியிடுவதில் இலக்கிய துஷ்பிரயோகம் எனக் படுகிறது. கடலின் ஆழத்தை நரி ஒன்று அளக்க அளந்து பார்த்து கடலின் ஆழம் தனது வாலின் வ்வொருவரும் தத்தமது அளவுகோல்கைைளக் ன்றனர். தரமற்ற படைப்பு கால வெள்ளத்தில் ணிப்புத்தான் சரியான அளவுகோல், மற்றது ட்டது போல மு.த. மாயையிலிருந்து மு. பொ. ழுத்தென்றால் இப்படித்தான் இருக்கும் என்ற
ளும், சில சிறந்த படைப்புகளும் இந்தி மொழி நபோன்று எம்மவர் நூல்களும் பிற மொழிகளில் தமிழக இலக்கியத்திலிருந்து வித்தியாசமான உள்ளவர்களும் அறிந்துகொள்ளவேண்டும்.
- எஸ். தவசீலன், யாழ் பல்கலைக்கழகம் புவர்களே!! கயில் எழுதிய கட்டுரையின் ஒரு சிறிய பகுதி: ம் இன்னொரு "இலக்கியத் துஷ்பிரயோகம்” பற்றியும் லும் அறியப்படாதவர்கள் தமது இலக்கிய ஆக்கங்கள் ர்கள், திடீரென தம் “படைப்புகளை இந்தி மொழியில் ய துஷ்பிரயோகங்கள் பற்றியும் நாம் விழிப்பாக இருக்க க்கவும் முனைப்புக் கொள்ள வேண்டும்." கேள்விகள்: ப்பு வெளிவர வேண்டும் என்றால் அவர் ஈழத்து பட்டிருக்கவேண்டுமா? ம்” என்று குறிப்பிடுவது எதனை? இந்தியில் பெறும் இலக்கியத் துஷ்பிரயோகத்திற்கும் மட்டும் ஒரு நூல் தரமானதும் என்றில்லை. ள் அறிந்தவரை சென்ற ஆண்டு எனது உட்பட 4 புலம் பெயர்ந்த எழுத்தாளரின் 5 நூல்கள் ழி மாற்றம் செய்யப்பட முன்பே வெவ்வேறு
ம் தமிழுக்கும் சேவை செய்கின்றேன் என்று து விமர்சித்து இருக்கலாம். அவரின் பெயரைக் தமான விவாதம் அவருக்கும் தங்களுக்கும் த வெளியில் நீங்கள் அடிக்கும் பந்தை எந்த
க்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. நல்ல ம் கட்சிசேர்ந்து எவரின் முன்னேற்றத்தையும் தேசத்தை வயதிலும் அனுபவத்திலும் உயர்ந்த ர்கள் சொல்லித்தரத் தேவையில்லை. நாங்கள்
தரமான நல்ல இலக்கிய ஆக்கங்களையே. ர்ற கட்சி அரசியலை அல்ல. - வி. ஜீவகுமாரன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மார்ச் 2013

Page 51
ஞானம் ஈழத்து ே
கடந்த முப்பெரு மொழியையும் ஆயுதமாக ஏந் தொடர்பான L ஆவணம் பற்ற பக்கங்களைக்
作
இலங்கையில்
"ஞானம்" அலுவலகத்தில் இவ் தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூ தொடர்புகளுக்கு
அவுஸ்திரேலியாவில் இதழின் வி தபாலில் பெறவிரும்புவோர் தபாற் ( தொடர்புகளுக்கு ܢܬܠ
/キ r O O
ஞானம்" சஞ்சிகை
பூபாலசிங்க 202, 340, செட்டியார்
பூபாலசிங்க 309A/2/3, காலி வி
பூபாலசிங்க 4, ஆஸ்பத்திரி (
துர்
சுன்
ஜீ
அல்வாய். தொன்
லங்கா சென்ற 84, கொழும்
 

N
ார் இலக்கியச் சிறiபிதழ்
ம் தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் அதன் வழியான இலக்கியத்தையும் கலாசார திய பேனா மன்னர்களின் போரிலக்கியம் படைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், றிய பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 கொண்டு வெளிவந்துள்ளது.
இதழின் விலை ரூபா 1500/=
விதழ் ரூபா 1000/= மாத்திரமே! பா 250/= சேர்த்து அனுப்ப வேண்டும். , : Ꭴ777 80Ꮾ50Ꮾ
லை - அவுஸ்திரேலிய டொலர் 25
செலவு வேறாக அனுப்ப வேண்டும்.
OO61) 408 884 263 لئے
கிடைக்கும் இடங்கள்
ம் புத்தகசாலை
தெரு, கொழும்பு-11
N
ம் புத்தகசாலை தி, வெள்ளவத்தை.
ம் புத்தகசாலை வீதி, யாழ்ப்பாணம்.
ாக்கா னாகம்
வநதி
D6)(3Li: 077 599.1949
ல் புத்தகசாலை 니 வீதி, கண்டி.
اسے

Page 52
lucky
i
2420574,242 Email:
0094-081
sae
* 料 © 田 , 圖 桑 환}} ∞ E ∞ * 赛 出 ! @ 圖 ∞ * 恒 ; G) 长 攀 而 < 후지 八 |- GÐ
 

Posts of Sri Lanka under No. ODI43 News/2013
CTURER
UNDASALE, SRI LANKA. 0217. FAX: 0.094-08-242 0740
land(a)sltnet.lk