கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Essentials of English Grammar

Page 1

eVV State of the UN

Page 2
“யாத்ரா?
கிடைக்குமிடங்கள்
இளப்லாமிக் புக் ஹவுளப் 77, ருநீ வஜிரஞான மாவத்தை தெமட்டகொட றோட், கொழும்பு - 09
2684851, 2669197
பூபாலசிங்கம் புத்தகசாலை 2O2, செட்டியார் தெரு, கொழும்பு - 11
2422341, 2435713
மினா பிரிண்டர்ளப் மெயின் வீதி, ஓட்டமாவடி
O77 163315 O
கவிஞர் றகுமான் ஏ ஜமீல் - மருதமுனை
O779689392
எம்.ரி. சஜாத் - கிண்ணியா
O77 9787 OO2
நாச்சியாதீவு பர்வீன் - அனுராதபுரம்
O77 18アア876
பிரதேச ரீதியாக “யாத்ரா"வைப் பகிர்ந்தளிப்பதில் உதவுமாறு இலக்கிய நெஞ்சங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த இதழ் வெளிவர நிதியுதவி புரிந்த அனைவருக்கும் குறிப்பாக மாத்தனை பீர்முகம்மது, ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
யாத்ரா 22

கலை, இலக்கிய இதழ் ISSN - 1391 - 8907
ஜூலை - டிஸம்பர்- 2012
ஆசிரியர் బ్రిస్తుశిని சிறலுதீஷ் O777303818
உதவி ஆசிரியர் വേ69േ 9شمحا O771633 150
நிர்வாக ஆசிரியர்
AJAY2ణ 9్సల్డ్ “རི་
O77 1877876
மின்னஞ்சல் ashroffshihabdeenOgmail.com
தொடர்புகள்
YAATHRA 37, Sri Sidhartha MaWatha, (Dhankanatha Road) MABOLA-WAT TALA, SRI LANKA.
பகிர்தல்
பத்திரிகை, சஞ்சிகைகளில் வருவது போல இணையத்திலும் இலக்கியம் பயிலப்பட்டு வருகிறது. அனுபவக் குறைவானவையும் முழுமையும் அற்ற படைப்புக்களும் வீச்சும் தாக்கமும் தரக்கூடிய படைப்புக்களும் அங்கு பதியப்படுகின்றன.
சஞ்சிகைகளில் வெளிவரப் பொருத்த முள்ள, வெளியிடுவதற்குப் பத்திரிகை கள் தயங்குகின்ற பல காத்திரமான எழுத்துக்களை நாம் இணையத்தின் வாயிலாகத்தான் படிக்க முடிகிறது.
ஒரு மாற்றுக் கருத்தை வெளியிடுவ தற்கு வாய்ப்பற்ற கவலைக்குரிய நிலை நீண்டகாலமாக நிலவி வந்திருக்கிறது. இணயத் தளங்களும் முகநூலும் இன்று அதைத் தீர்த்து வைத்திருக்கின்றன.
பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவரு கின்ற பொருத்தமானவற்றை இணையத் துக்கும் இணையத்தில் வெளிவருகின்ற பொருத்தமானவற்றை பத்திரிகை, சஞ்சிகைகளுக்கும் பகிர்ந்து கொள்வது அவசியமான ஒரு விடயமாக உணரப் படுகிறது.
அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படும் படைப்பு எட்டும் எல்லை விசாலமான தாக இருக்கும் என்பதற்காக இம்முயற்சி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இதழிலும் இணையத்தி லிருந்து சில பொருத்தமான படைப்புக் கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக் கின்றன.
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்

Page 3
штфTт 99
O2
கூவத்தில் குளிக்கும் குதிரைகள்
O எஸ்.எம். அலீ (தாழை மதி0வன்)
வக்ஃப் வாரியர் வாசலில் வளர்ப்ப நாய்கள் ஐந்து - இஸ்லாமியக் கல்லூரி நிறுவனருக்கு எட்டுக் குதிரைகள் கிண்டியில் - கீழுர் ஜமாஅத் முத்தவல்லிக்கு கிரஸண்ட் ஒயின்ஸில் பங்கு - ஹஜரத் ஹஜ்ஜூக்கு செல்கிறார் அவர் மகன் கைக்கூலிப்பணத்தில் -
கவிராட்சகன் காதர் பாஷா காஸ்மோUாலிடன் பாரில் -
கறுப்பபர்தா கழற்றிய மும்தாஜ் காபரே டான்ஸ் களத்தில் - தலைமைத்துவம் பெறவேண்டிய இமாம்கள் தலையாட்டும் பொம்மையாய் மிம்பரில் - விரோதிகளின் விழிகளைத் தோண்டாமல் விரலாட்டும் விமர்சனங்கள் வீதியிலே - ஜிஹாதுக்குப் பொருள் சொல்லியே சீமான்கள் ஆனோர்கள் மாடிகளில் - கயிற்றைக் கொடுத்துக் கரையேற்றாமல் கழுத்தில் மாட்டுவோர் மேடைகளில் - எதுவுமே தெரியாத எங்கள் இளைஞர்கள் இருபக்க முகபடாம் அணிந்து - பட்டுத்துணி போர்த்திய குர்ஆன்
படிக்கப்படாமல் பரணில்,
நன்றி : நூல் காஷ்மீர் பெண்ணின் கவலைகள்

O3
அரச தேசிய சாஹித்திய விருது
இவ்வருட அரச தேசிய சாஹித்திய விழாவில் பத்துத்தமிழ்நூல்கள் இது விருதுகளைப் பெற்றுள்ளன. வருடாவருடம் தேசிய சாஹறித்திய rn விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் ஏற்படும் அதிருப்தி அலைகள்(نئی تھی وہا
இம்முறை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
2011ம் ஆண்டுதேசிய விருதுகள் வழங்கப்பட்டபின்னர் சஞ்சிகைகள், இணையம், மேடைகள் ஆகியவற்றில் அவ்வாண்டு விருதுகள் குறித்துச் சர்ச்சைகளும் அதிருப்திகளும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டடிருந்தன.
இந்த நாட்டில் வெளியிடப்படும் நூல்களில் ஏறக்குறைய 50 வீதமானவை முஸ்லிம் படைப்பாளிகளால் எழுதி வெளியிடப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் தேசிய சாஹித்திய விருது வழங்கல்களின் போது இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்களின் நூல்களே விருதுகளுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழில் எழுதும் முஸ்லிம் படைப்பாளிகள் இந்த நிலை குறித்து மிகவும் மனக்கிலேசம் அடைந்திருந்தார்கள். வாய்திறந்து வெளியே சொன்னால் எப்போதாவது கிடைக்கும் ஒரு வாய்ப்புத் தமக்கு மறுக்கப்படலாம் என்ற பயத்தில் உள்ளக் குமுறலுடன் பலர் மெளனம் காத்து வந்துள்ளனர். இதனால் இவ்விடயம் குறித்து அரச மட்டத்துக்கு எடுத்துச் சொல்வது பற்றியும் முஸ்லிம் படைப்பாளிகளின் நூல்களுக்குத்தனியே விருது வழங்குவது பற்றியும் ஆலோசனைகள் நடந்ததை நாம் அறிவோம்.
சில தனி நிறுவனங்களும் அமைப்புக்களும் தமது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நூல்களுக்கும் தமக்குப்பிடித்த படைப்பாளிகளுக்கும் வருடாவருடம் ஒரு வகைப்படுத்தலை மேற்கொண்டு விருது வழங்குவதில் அக்கறை காட்டுகின்றன. நூல்கள் அனுப்பப் பத்திரிகைகளில் தரப்பட்ட இறுதித் திகதி முடிவதற்கு முன்னரே சில அமைப்புகள் விருதுகளைத் தீர்மானித்துவிட்டு அறிவித்த வேடிக்கைகளையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததுண்டு.
இவ்வாறான வெட்கக்கேடுகளுக்குள் அரச தேசிய சாஹித்திய விருது வழங்கல் நேர்மையாக நடைபெறவேண்டும் என்று இந்தத்தேசத்தின் பிரஜையான ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பதில் எந்தத்தவறும் கிடையாது.
இம்முறை இலங்கைப் படைப்பாளிகளுள் ஐந்துதமிழருக்கும் ஐந்து முஸ்லிம்களுக்குமாக மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் முஸ்லிம் படைப்பாளிகளிகளின் நீண்டநாட் கவலை தீர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகக் கலாசார அமைச்சையும் கலாசாரத் திணைக்களத்தையும் பாராட்டுகிறோம்.
அதேவேளை, அடுத்தவருடம் வேதாளம்மீண்டும்முருங்கையில் ஏறாமல் அவர்கள்பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.
22 யாத்ரா ہلچر

Page 4
штфЈт 92
04
1990களில் முஸ்லிம்கள் உயிர் வாழ்வதற்கான உத்தரவாதமற்ற நிலை இருந்தது. ஆட்கள் கடத்தப்படுதல், கப்பம்பெறல், உயிர் அச்சுறுத்தல், பொருளாதார அழிப்பு எனப் பல்முனைத் தாக்குதல்களை எதிர் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்தது.
ஒட்டமாவடியில் இருந்து 12 மைல் தொலைவில் எனது பாட்டனின் பூர்வீகத் தோட்டம் இருந்தது. சுற்றி வர வயல், மாந்தோப்பு, கடை, ஆட்டுப்பட்டி என விசாலமான இடம். 90க்குப் பின் வசந்த காலங்கள் உதிர ஆரம்பித்து விட்டன. தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசல்களையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் விடுதலைப்புலிகளும், அவர்களின் ஊது குழலாய்ச் செயற்பட்ட அரசியல்வாதிகளும்.
அவர்கள் போட்ட விதை இன்றும் தழைத்து வியாபித்துள்ளது வேதனையிலும் வேதனை. ஒன்றாய்க் கூடி வாழ்ந்த முஸ்லிம் மக்களைப் புலிகள் விரட்டியடித்த போது ஊமையாய் இரத்தக் கண்ணி வடித்து நின்ற தமிழ் சமூகத்தின் கண்ணிக் கசகசப்பில் முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கி எறியப்பட்டனர்.
பூர்வீகமாக வாழ்ந்த இடங்களை விட்டு, சொத்துக்களைத் துறந்து உடுத்திருந்த ஆடைகளுடன் வந்தவர்களில் எங்கள் குடும்பமும் அடங்கும். வயல், தோட்டம், கடை, கால் நடை எல்லாவற்றையும் புலிகளுக்குத் தாரைவார்த்து விட்டு வந்துவிட்டோம். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தோம். இருக்க இடமின்றி, தொழிலின்றி ஏன் ஒரு பிடி சோறின்றியும் அலைந்தோம். கடவுள் இருப்பதற்கான மிகச் சிறந்த சான்றாக முள்ளிவாய்க்காலை நினைத்துப்பார்க்கின்றேன். 'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதற்குப் புலிகளின் சாவு ஒரு சரித்திரச் சான்று. சுமார் இருபது வருடங்களுக்குப்பின் சுதந்திரத்தைச் சுவாசிப்போம் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் கனவல்ல நிஜம். அந்த நாள் வந்தது. நான் விளையாடிய, என்னைத்தூக்கி வளர்த்த மண்ணில் கால் புதைத்து நிற்கின்றேன். பரந்த விசாலமான எங்கள் தோட்டத்தில் பல என்.ஜி.ஒக்களின் புண்ணியத்தில் முளைத்த வீடுகள். சோலார் மின்சார வசதிகள். செப்பனிடப்பட்ட வீதிகள். எங்கள் இடம் என்பதற்கான அடையாள மற்ற நிலை.
ܓܥܬܐ

05
* 畿鲇 翡、 臀 踝u 、 砷鲇,鞘、 、鲇
இருந்தும் பரவசம். ஒவ்வொரு திடலாக ஏறிப்பார்க்கின்றேன். புளியமரம் வானளாவ உயர்ந்து கிளை பரப்பி ஏகத்திற்கும் நானே என்பது போல் நிற்கிறது.
கிணற்றடியில் நின்ற தோடை மரங்களில் இலை தெரியாக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கிணறு தூர்ந்து போய் அடியில் ஒரு சொட்டு நீர் பளபளத்துத் தெரிந்தது. செல்லனின் மக்கள் காணியைச் சூழவும் புதிய கல்வீடுகளில் வசித்திருப்பது தெரிந்தது. சிலரை அடையாளம் காண முடிந்தது. சிலருக்கு என்னையும் அடை யாளம் காண முடிந்தது.
செல்லர் செத்து விட்டார் என்றார்கள். சர்வசாதாரணமாக அம்மக்கள் இரண்டு மூன்று மனைவிகளை வைத்திருப்பர். செல்லருக்கும் மூன்று மனைவிகள். நான் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு வரும் போது செல்லன் நேர்மையான வேட்டைக்காரர், மந்திரவாதி. குலத் தலைவர் என மதிப்புப் பெற்றவர்.
எனது வாப்பாவின் தோழர்களில் மிக முக்கியமானவர். அவரின் பிள்ளைகளை யும் அப்படித்தான் யோக்கியமாக வளர்த்து விட்டிருக்கின்றார். பிள்ளை களில் சிலர் அப்பாவை அடியொட்டிப்
ܬܡܐ
பெண்களை எடுத்திருந்தனர். ஒரே வளவுக்குள் அதெப்படிச் சக்களத்திகள் சண்டை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கையில் ஆச்ச ரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது இழந்து போன நாங்கள் வாழ்ந்த மண் எங்கள் கைகளுக்குத் திரும்ப வராது என்று நிராசையடைந்திருந்தோம். ஏனெனில் எங்கள் கடையில்தான் புலி களின் சென்றி பொயின்ட் ஒன்று இருந்தது. மூன்று ஏக்கர் தோட்டத்தையும் அவர்கள்தான் பங்கு போட்டு என்.ஜி. ஒக்களுக்குக் கொடுத்திருந்தார்கள். எனினும் அவர்கள் கையகப்படுத்திய சிறு இடத்தில் அதனைச் சூழவும் யாரையும் குடியேற அனுமதிக்கவில்லை. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மக்களை அண்ட விடாமல் தடுத்திருக் கின்றார்கள். டவுனுக்கு வரும் செல்லனின் மக்கள் கதைகதையாய்ச் சொன்னார்கள். வயலை
ULUMTģUIT 992

Page 5
தங்கராசா செய்து கொண்டிருந்தார். புலிகளின் ஆளுகைக்குட்பட்ட அந்த மண்ணிலிருந்து வருடா வருடம் வயல் செய்கை பண்ணுவதற்கான அனுமதியை அவர் வாப்பாவிடம் பெற்றுச்செல்வார். குத்தகையும் வந்து விடும். புலிகள் விட்டுச் சென்ற இடத்தைப் பலர் ஆக்கிரமிக்க வந்தபோது இது முஸ்லிம் ஆக்களின்ர நிலம். இதையாவது நாங்க காப்பாத்தி அவர்களின்ர கைககளில் கொடுக்க வேண்டும்? என்று விரட்டிய வர்கள் சூதுவாதறியா அப்பாவிகளான அவர்கள்தான். நாங்கள் எங்கள் நிலத்தைப் பார்க்கச் சென்ற போது கடை அத்திவாரம் மட்டும் இருந்தது. யுத்தமும் இனவாதமும் சப்பித் துப்பிய மீதமுள்ள எலும்புத் துண்டாகக் கட்டடங்களின் எச்சங்கள். என்னைக்கண்ட மாத்திரத்தில் தங்கராசா ஓடி வந்தான். கூடவே அவன் நாயும்.
வந்திட்டிகளாகாக்கா.
வார்த்தைகள் தளுதளுத்து அதரத்தில் துடித்துநின்றன.
இத மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது, இதயும் சுருட்டிப்போக எத்தின பேரு விடுவமா? எங்கட அப்பாட ஆச. இத எத்துன வருசமானாலும் உங்கட கையில ஒப்படைக்கணும். இப்பதான் நிம்மதி. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என எங்களைச்சுற்றிப் பெருங்கூட்டமே கூடி நின்றது. எல்லோர் முகத்திலும் ஆச்சரியம், புதுமை! தங்கராசா அறிமுகப் படுத்தினான்.
ஆடைகளும் உடலும்தான் அழுக்கு. மனமோ பால்போன்ற வெண்மை, தூய்மை. இந்த மனங்களிலா இனவாத நஞ்சைவிதைத்தார்கள்? அதனாலென்ன,
ԱյՈégՈ ջջ
O6
தோற்றுப்போனது வினை விதைத்தவன் தானே.
வயற்பரப்பையும் எஞ்சிய தோட்டத்தின் விசாலத்தையும் பார்த்தபடிநிற்கின்றேன். செல்லனின் மக்களிலும் அந்த அப்பாவிச் சனங்களிலும் ஒரு கோடி மதிப்பு பல்கிப் பெருகி வழிகிறது. உண்மையில் இது மனிதர்களும் மகாத் மாக்களும் வாழும் மண், நான் இனி இந்த மண்ணில் வந்து புரள வேண்டும். இவர்களின் சுக துக்கங்களில் பங்கெ டுக்கவேண்டும். மீண்டும் என் குளத்தின் நுரைகளில் கால் புதைய ஆக்காண்டி களின் அட்டகாசங்களைக் கேட்டபடி உலா வர வேண்டும். எனினும் ஏதோவொன்று நெஞ்சுக்குள் வந்து பாரமாக அழுத்துகிறது.அது அவ நம்பிக்கையா?நிராசையா? பூ விலங் கினை அகற்ற முடியா அவசத்தில் ஆதி மண்ணின் புழுதியை மட்டும் அப்பிக் கொண்டு வீடு திரும்புகின்றேன். '
 
 

O7
நிலாவெளியில்.
O கெகிறாவ லலைஆநா
காலடி தேடி கடலலைகள் ஒடியோடி வந்தன நுரைகக்கி. பேரலையின் பெருத்த ஒசையூடு காற்றில் கலந்த உன் காதல் வாசகங்கள் பரந்த வெளியெங்கிலும் முழங்க நீ பேசினாய். உடைக்க முடியா என் மெளனப் பெட்டகத்தைத் தகர்த்து உள் நுழையம் வெறியோடு நீ பேசிக் கொண்டே நடந்தாய். அலைச்சுழி வாரிச் சுருட்டிப் பிடிக்க, என் பெண்மையின் தளமெங்கிலும் அதிர்வுகள். உனைவிட்டுத் தப்ப வேண்டுமெனில் நான் இறக்க வேண்டுமோ? கேள்விகளில் மனம் குமைந்தபடியிருக்க, என் எல்லை பற்றிய பிரக்ஞையின் உணரலில், உனை விட்டு என் பயணப் பாதையில் தனியே நான் திரும்பி நடந்தேன். எனை மன்னித்து விடு. உன் அழகுபூமி காதலின் மாணிக்கப் புதையலையே உள் புதைத்து வைத்திருந்தாலும், ஆவல் இல்லை எனக்கு. மீண்டும் ஒருமுறை காதலுணரவும், அடிபட்டுக் கதறியழவும் மனசில்லை எனக்கு. ஆதலினால், காதலை வேண்டாதே இடைச்சாதிக் கண்ணா என்னிடம், துரோகத்தின் எரிவையும், பிரிவின் கனதியையும் உணருதல் இன்னும் எத்தனைத் தடவைக்கு.?
штфTт 99

Page 6
நிவேதிகா கே.பி.
ஊர்விட்டு ஓடோடிப்
போனவர்கள்,
கடைசிப்
பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை
மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்,
பிள்ளைகள்
மூவரையும் பான்ரோம் காரில் பப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்,
நேற்று வந்திருந்தனர்.
** ডোঠোঠো வரமாட்டன். வரமாட்டன் என்டீங் கள். கடைசியில இந்தப்பக்கம்? 'இனியென்ன வரலாந்தானே பிள்ளைக் கும் விடுமுறை ஒரே Bore என்றான் அதுதான் ஒருக்காச் சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று.?
'ஒ. எங்க போறதா உத்தேசம்? 'நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள். தம்பி list எடு. ஒ பிறந்த இடம். தவழ்ந்த இடம். அப்பா படித்த
ULJETé35TIT 29
பள்ளிக்கூடம். அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம். கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன். கழுவிக்கொள்ள ஒரு கடற் கரை. இன்னும். இன்னும்.' 'அதற்கேன் கடதாசி பனியில் குளித்தா லும் புழுதி மணம் மறந்து போகுமோ? "மறந்து போனாலும் என்டு எல்லாம் எழுதியே வைத்திருக்கிறம். ம்ம்ம். போகும் போல்தான் உள்ளது. நமக் கென்ன அனுபவமா?
 

அங்க கட்டாயம் கூட்டிக் கொண்டு போவீங்கதானே?
உரக்க வினவியது பிள்ளை!
'அப்பா சொன்னா சொன்னதுதான்! கட்டாயம் கூட்டிக்கொண்டு போவன் முதல் Trip அங்கதான்!
ஒரு கோடி பிரகாசம் பிள்ளை முகத்தில்.
και έστευσε PPP και ν
மெல்லக் கேட்டேன்.
அப்பா சொன்னார்.
வலித்தது, ஒவ்வொரு அணுவும்!
Trip Β2 και ν
‘என் புனித பூமியே! அவர்கள் உன்னைச் சுத்திப் பார்க்க வருகிறார்களாம். எந்த மனதுடன்.? எந்த உணர்வுடன்.?
'மூன்று வருசத்துக்கு முந்தியே TV பாத்திட்டுச் சொல்லிட்டான், சிலோ னுக்கு போகேக்க அங்க கூட்டிக் கொண்டு போகோனும் என்று. நானும் அப்பவே வாக்குக் கொடுத்திட்டன்.?
மூன்று வருசத்துக்கு முந்தி!! எப்போது? விளங்கியது அந்தக் கோரத்திற்கும் கொடுமைகளுக் கும் நடுவில் சுத்திப் பார்க்க இடம் Select பண்ணிய நீவீர் நீடுழி வாழ்க..!
'நீதான் எங்களைக் கூட்டிக் கொண்டு போக வேணும்!?
'
நானா? அங்கு. முடியுமா ? என்னால்? இன்றுவரை எனது தலையணை ஈரம் காயவில்லை. என் கண்ணின் ஊற்றுக் கண்
ܢܸܬ2.
நோக்கி. எனது ஈடு செய்ய முடியா இழப்பின் இருப்பிடம் நோக்கி. நிச்ச ամ) (փլգաng).” 'அது வந்து. எனக்கு வேலை."
'அதெல்லாம் லீவு எடுக்கலாம். அவள் வருவாள்.'
டையில் க்கிட்டு உறுதிமொ
குறு
வழங்கினாள் அன்னை.
‘எப்பபார். வேலை வேலை! மணிசர மதிக்கத்தெரியாம என்ன வேலை? எவ்வளவு காலத்திற்குப் பிறகு வந்த gGOTưb ???
குசினிக்குள் காதோரத்தில் கடுகடுப்பு வேறு 1 ம்ம்ம். உன்னாலும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது அம்மா. மனுசன், பிள்ளை, கோயில், அடுப்படி, அயலவர் தாண்டாத உன்னுலகம்!
'உன் பிள்ளைகள் உயிருக்கு உத்தர வாதமின்றி இருந்த காலத்தில் ஒரு
வார்த்தை கேட்காத உன் உறவுகள், ஒரு
யாத்ரா 22

Page 7
கவளம் கொள்ளாத உன் வயிற்றை உணராத உறவுகள், நீ காலனுடன் பயணப்பட்டுக் கடைசி நேரத்தில் மறுத்துத் திரும்பி வந்ததைச் சிரிப்புடன் பகிர்ந்த உன் உறவுகள். ஒருநாள் தங்கவென வந்தவுடன் எப்படி உன்னால் மட்டும் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது?
அவர்களது முதல் Trip மாங்குளம் சந்தி திரும்பித் தொடர்ந்தது. மன்னித்துக்கொள்ளுங்கள், என் உறவு களே. உங்கள் ஒலங்களை உங்கள் உதி ரப் பெருக்குகளை நிறுத்த முயலாதவள், உங்கள் கண்ணி துடைக்க ஒற்றை விரலையேனும் நீட்டாதவள், உங்கள் உடலங்கள் மீது ஒரு மலரேனும் தூவாத வள் வருகிறாள்! உறவுகளை உதிர்த்து மனதளவில் மரணித்துப் போனவள், உல்லாசப் பயணமொன்றில் ஓரங்கமாகி. மறைக்கும் நோக்கமற்ற மேலாடைகளும் முழங்கால் தாண்டாத முக்கால் காற் சட்டைகளும் ஆளுக்கு ஒரு கமெராவும். ஆன்சி மானேயின் அனல் பறக்கும் பாடல்களும்!
முட்டாள்களே புரிந்து கொள்ளுங்கள், நீ ங் க ள்
২৪
மரத்துப்போன ஒரு இடத் தை நோக்கி. ஒரு தேசியம் தீயிட்டு க் கொளுத்தப் பட்ட தேசம்
штфTт 99
10
நோக்கி, எங்கள் கற்புகள் கன்னமிடப் பட்ட களம் நோக்கி. சுட்டிக் குழந்தை களின் சுடலை நோக்கி, துரோகம் வடித்த துன்பியல் நாடகத்தின் இறுதிக்காட்சி இடம்பெற்ற இடம் நோக்கி, இறுதி வரை தாளாத இயல்பு நோக்கி, ஒப்பற்ற ஓராயிரம் மரணங்களை நோக்கி. இன்னும் இன்னும். மயானத்தின் அமைதி சிலவேளை மனிதர் களுக்குப் புரியலாம். இவர்களுக்கு? நிச்சயமாக இல்லை!
உங்கள் வலிகளை அவர்கள் தெரிந் திருந்தார்கள். உணரவில்லை ! உங்கள் மரணங்களுக்கு அவர்கள் சாட்சியாக இருந்தார்கள். உறுத்தவில்லை!
உருக்குலைந்த வீடுகள், ஒட மறந்த வாகனங்கள், மரத்தோடு இரண்டறக் கலந்து விட்ட சேலைத்தொட்டில், காலில் தடக்கிய ஒட்டை விழுந்த பந்து, மண்ணி லிருந்து முளைத்துப் பறந்த ஒரு துண்டு சீருடை, குண்டுச் சிதறல் தாங்கிய பானைகள், நடுவே குண்டு துளைத்த அந்த சிறு சப்பாத்து, சிதைந்து கிடந்த யுனிசெப் கூரைகள், வாழ்வைத் தொலைத்துவிட்ட வளமான குடும்பத் தின் எச்சங்களும் எலும்புக்கூடுகளும். கமெரா பிடித்துக் கொண்டது, காட்சி களை கண்குளிர உறுத்தலின்றி. வலி களின்றி. கண்ணை மறைக்கும் கண் னித் திரையின்றி ஓவென்று அழச்சொல் லும் உணர்வின்றி. எனக்கு மட்டும் எல்லாமே எதிர்மறை աՈւն.
முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் உயரத் தூக்கிய கற்களுக்கு முன்னாலும் ஒளிர மறுக்கவில்லை கமெராக்கள்
அவர்கள் கடைவாயில் கசியும் இளக்
اپ
 

காரத்தையும் கண்களில் வழியும் வெற்றிச் செருக்கையும் ஒரமாய்த் தெரியும் காமத்தையும் ஒட்டுமொத்த குரூரத்தை யும் ஏன்தான் உங்களால் உணரமுடிய வில்லை?
'மாத்தயா யாப்பனே த?
No.No. We are From Europe.'
இப்படி ஒரு நாள் என் வாழ்வில் மீண்டும் வராமல் போகட்டும். வருமெனில் என் வாழ்வே இல்லாமல் போகட்டும்! மீண்டும் ஆன்சி மானேயின் அனல்
பறக்கும் பாடல்கள். அட்டகாசமாய்!
“How was the trip today???
“Supppppeeerrrrrrrr. dad. Excellent. Really nice. Thanks dad'
'ம்ம்ம்ம். எனக்கும் தானடா.'
வலித்தது!
வார்த்தைகள் தந்த ரணம்! உள்ளம் உள்ளவர்களுக்கு மட்டும்! ‘போய் வருகிறேன் என் உறவுகளே! உங்கள் ஏக்கப் பார்வை என்னைத் தொடருவதையும் உங்கள் பாசப்பார்வை என் பிடரியை வருடுவதையும் கடந்து போகும் உங்கள் உஷ்ண மூச்சையும் என்னால் உணரமுடிகிறது.
திரும்பிப் பார்க்கவும் திரும்பி வரவும் ஆசைதான். ஆனால் இப்போதல்ல. இன்னொரு தடவை மனிதர்களுடன் வந்தால் வருகிறேன்!
இது ஒருமுகநூல் பதிவு 25.07.2012நன்றி. முகநூல், படைப்பாளி மற்றும் நண்பர் துரைசிங்கம் ஜயந்தன்.
ܕܬܡܢ܂
11
○
வேப்பமரம், அடர்ந்த 杰 நிழல், அது இனித் தது. கீழே நானிருந் தேன். கரத்தில் 'u T5 DIT. 49b ué855 தில் அவரைக் கண் டேன். அடுத்த பக்கத் தில் அவரது நெடுங்
கதை ஆசிரியம் பிரசுரமாகியிருந் தது. அவர் என நான் குறிப்பிட்ட அந்தக் கனவான் மருதமுளை மஜீத் என்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்த போதுதான் தெரிந்து கொண்டேன். 2011ம் ஆண்டு காயல்பட்டணத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் அவரைச் சந்தித்தேன். அப்போது அவருடைய பெயர் மருதமுனை மஜித் என்று எனக்குத் தெரியாது. அவரோடு உரையாடிப் பெயரையும் ஊரையும் தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது. ஆனால் அது முடியாது போயிற்று.
மருதமுனை மஜீத் எழுதிய ஆசிரி யம் நெடுங்கதையைப் படித்த போது கதை, நெஞ்சை நெருடி, விழியோரத்தைக் கசிய வைத்த துண்மைதான். நல்லதொரு கதை யை நமக்கு எழுதி நல்கிய அன் னார் இப்போது நம்மோடில்லை. அவரது வபாத்துச் செய்தியை நீங்கள் எழுதிய குறிப்பின் மூலம் தான் அறிந்து கொண்டேன். இறைவன் அன்னாருக்குச் சுவர்க் கத்தை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.
。
s
ܠܹܐ) -() N
- கிண்ணியா ஏ.எம்.எம். அலி
штфДт 92

Page 8
ରାଷ୍ଟ୍ யாத்ரா 21 வது S இதழ்கிடைத்தது.
இப்போதெல்லாம்
பாவாடை தாவணி யும் முக்காடுமான  ெப ண் க  ைள ப் பார்க்க ஆசையாகத் தான் இருக்கிறது. அட்டையில் நிற்கும் முகம் தெரியாத அந்த முக்காட்டுக் காரிகளது காற்சிலம்புகள் கண்கனை உறுத்துகின்றன. கவிதை - கட்டுரை - சிறுகதை - பத்தி - புள்ளி - நெடுங்கதை - நாடகம் - அரசியல் - இணையம் - செய்தி - அஞ்சலி மட்டுமா? அஜமியின் கல்லு, முள்ளு, லொள்ளு, மல்லு, சொல்லு. ஆ. மூச்சு வாங்குகிறது. போதாக் குறைக்கு இவைகளுடன் சங்கதியும் Ց6) եւ--
பெரும்பான்மையின் வல்லமை இரண்டு சிறுபான்மை இனங்களையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விடும் - என்ற யாத்ராவின் குரல் எச்சரிக்கையானது அல்ல. அதுதான் யதார்த்தம். சாதுவான ஒரு பூனையை யாரோ ஒருவன் இருட்டறையில் பூட்டி வைத்து அடித்தானாம். பொறுக்க முடி யாத பூனை அவன் முகத்தில் பாய்ந்து அவனது விழிகளைக் குருடாக்கிவிட்டுத் தப்பித்து விட்டதாம் என்று எங்கேயோ வாசித்த ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. இக்கதை வெறும் கதை யல்ல. இந்தக் கதைதான் யாத்ராவின் தலைப்பை வாசித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது. மருதமுளை மஜீத்தின் ஆசிரியம் கதை
штфTт 99
12
அஷ்ரஃபுக்கு மாத்திரம் அல்ல, வாசித் தால் எல்லோருக்கும் பிடித்தமான கதை தான் அது. ஓர் ஆசிரியனின் அரவணைப்பு மாத்திர மல்ல, புறக்கணிப்பும் மாணவர்களை உருவாக்கும் எனும் சேதியை "ஆசிரி யம் புடம் போட்டுள்ளது. கருவை விடக் கதையோட்டம், காலப்பதிவுகள், நிகழ் வுகள், வரலாற்றுச் சிறப்புகள் கமராக் காட்சிகளாக பாலுமகேந்திராப் பாணியில் எழுத்தில் படம் பிடித்துத் தந்துள்ளார் மஜீத் சேர். ஆர்.எம்.நெளஷாத்தின் அணில் கதையை அணிலே அணிலே ஓடிவா என்ற பெயரில் 1977ல் இதயம் சஞ்சிகையில் வாசித்த ஞாபகம் இருக்கிறது. அக்கதை யாத்ராவில் கருவை அப்படியே வைத்துக் கொண்டு அதன் உருவமும் வடிவமும் மிக அழகாக மெருகூட்டப்பட்டு மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. புதிய நடையும் எடுப்பும் நெளவாத் நேரே கதை சொல்வதைப்போல் இருக்கிறது. மருதமுளை மஜீத்தின் ஆசிரியம் கதை யில் வரும் நாயகனின் வக்கிரமும் வெறியும் வேறு. நெளஷாத்தின் அணில் கதையில் வரும் நாயகனின் வக்கிரமும் வெறியும் வேறு. ஜூனுவும் அணிலும் பாவப்பட்ட ஜீவன்கள். அதிலும் அந்த அணிலின் வதை மனதை மிகவும் வதைக் கிறது. - காரணம் இல்லாமல் மாணவனை வதைக்கும் ஆசிரியர், காரணத்துடனேயே அணிலை வதைக்கும் தபாலதிபர். இவர்கள் இருவரையும் விட சட்டியோடு வழிச்சி வழிச்சி விழிங்கி விட்டு விழுந்து கிடக்கும் இந்திக்க. இந்த மூன்று பாத்திரங்களையும் நினைக்க, நினைக்க
மனசு நெருப்பாக எரிகிறது.ஆசிரியம்,
ܥ̇ܬܐ

அணில் இரண்டு கதைகளையும் ஒன்றாக வாசிக்காமல் விட்டிருக்கலாம் நான்.
யார் இந்த லரீனா அப்துல் ஹக்?
பிய - செக்க - சங்கா - தொலைக் காட்சி நாடகம் பற்றிச் சொல்ல வந்த லறினா அதனூடாக கம்பராமாயணம், நளவெண்பா என்று பாளி, சிங்களம், சமஸ்கிருதம் தமிழ் என மொழிகள் வேறு பட்டாலும் அவற்றில் தோன்றிய இதி காசங்களிலாகட்டும் புராணங்களிலாகட் டும் பிற இலக்கியங்களிலாகட்டும் - பெண் பற்றிய புனைவு பல்வேறு பொதுமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டுள்ளதை அவர் விளக்கும் விதம் அபாரம், சீதையை ராமன் சந்தேகிப்ப தைப் போல ஏன் ராமனைச் சீதை சந்தே கிக்கக் கூடாது என்று கேட்கும் இடம் சபாஷ்!
இன்றைய சினிமா, சின்னத்திரை இணை யம் எல்லாவற்றிலும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டுப் பெண் இனம் வர்ணிக் கப்படுவதைத் தனது கட்டுரையில் விளக்க முற்பட்டுள்ளார் லறினா. அவரது விசாலித்த, எடுத்தாளத்தக்க சிந்தனை விரிப்பு அக்கட்டுரை. அவருக்கு எனது வரவேற்புகள்.
சில்மியா ஹாதியின் பறக்கும் சிறகுகள் நாடகம் வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதைப் போல கிராமத்துக்குக் கிராமம் நடக்கும் நிகழ்வுகளை அந்நாடகம் காட்சிப்படுத்துகிறது. எல்லா இடங்க ளிலும் மேடையேற்றப்பட வேண்டிய நாடகம் அது. இந்தச் சின்னத் திரைக் காரர்களுக்கு இப்படியான கதையம் சங்கள் ஏன் கண்ணில் படுவதில்லை யெனத் தெரியவில்லை.
நமது நாட்டில் எஸ்.டபிள்யு. ஆர். டி.
بالحر
13
பண்டாரநாயக்க நட்ட சிங்களம் மட் டும் சட்டம் விதை வி ரு ட் ச ம கி விளைந்து நிற்கும் s செய்தியைப் பேரா.  ெற |ா ஹ ன பில குண வர்தன வின் செய்தி சொல்கிறது.
உங்களுக்குப் பரம விரோதியாக இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்களிலும் சரி, நீங்களும் சரி -
ந  ைக ச் சு  ைவ
மறந்தும் சிரித்து விடக் கூடாது. சமகால எழுத்தாளர்களை விமர்சனம் செய்வது, அவர்களில் அதிகப் பிரபல்யம் உள்ளவர் களை எழுத்து வியாபாரி என்று வைவது, மக்களைச் சென்றடைந்த எல்லாமே குப்பை என்று எழுதுவது இப்படி இணை யத்தில் வெளிவந்த நவீனத்துவம் பகுதி யை வாசித்த போது இங்கே கல்முனை யில் எனக்குத் தெரிந்த இரண்டு எழுத் தாளப் பீரங்கிகளது முகங்கள்தான் எனக்கு முன் நிழலாடின. ராஜா மகளின் பனிக்கட்டியாறு போதாது. ஆனாலும் வைரமுத்துவின் இந்த மாளி கையை விட அவரது சாலிக்கிராம இல்லத்தில் ராஜா மகளுக்கும் வைரமுத்து வுக்கும் நிகழ்ந்த சந்திப்பை அவரது மொழிபெயர்க்கப்பட்ட மெளனத்தில் பனிக்கட்டிப் பிரவாகமாக வாசித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு.
யாத்ரா - 21 எல்லாக் கவிதைகளும் கரும்புதான். ஜெமீலின் இரண்டு கவிதை களிலும் இனிக்கிறது தேன்! G)
കേഖഞ്ഞb ஆசுகவி அன்புடீன்
штфTт 99

Page 9
14
லண்டன் தமிழ் வானொலியும் அறியப்படும் இலக்கிய ஆளுமைகளும்
9 UD5ốog Tå, Ög AT&šir:Goðorð
இந்தப் படைப்பிலக்கிய உலகம் சாலப் பரந்தது. இங்கே எதிர்பார்ப்புகளிற்கும் சாதனைகளிற்குமான இடைவெளி மிக விசாலமானது. எழுத்தாணியைக் கையில் எடுக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு தங்கள் படைப்பாக்கல் பணிகளை ஆரம்பிக் கின்றனர் இந்த இலக்கியப் பரப்பிலே. எல்லா எழுத்தாளர்களினதும் போய்ச்சேர வேண்டிய இலக்கு பெரும்பாலும் ஒன் றாகவே இருக்கிறது. அது இலக்கிய உலகின் சிறந்த படைப்பிலக்கியவாதிக் கான அந்தஸ்தும், நிலைப்புத் தன்மையு மாகும். இந்த இலக்குகளை நோக்கியே எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் தளத் தைத் தயார் செய்கின்றனர். அதுவும் புதிதாக எழுத்துக் கனவுகளோடு அறிமுக மாகும் இளம் படைப்பாளிகளின் எதிர் பார்ப்பும் இலக்கு நோக்கிய அவர்கள் ஒட்டமும் இதன் அடிப்படையில் வேக மானது, தவிர்க்க முடியாதது.
ஒவ்வொரு படைப்பாளியினதும் படைப் புக்கள் அவர்களது விரல்களைத்தாண்டி வாசகர்களின் கைகளைச் சேரும் பொழுது தான் அவர்களது எழுத்துக்கள் பூப்பெய்த ஆரம்பிக்கின்றன. இதன் பின்னரே படைப்பாளியினது முதல் இலக்கு பூர்த்தி செய்யப்படுகிறது. இன்றைய
UTéJT 22
அவசரமான வாசிப்பு உலகில் இது எந்த ளவிற்குப் படைப்பாளிகளிற்குச் சாதக மாக அமைகிறது என்றால் அது மிகவும் போராட்டம் நிறைந்தது. தனது எழுத் துக்களை வாசகனிடத்தில் கொண்டு செல்லும் வரை அந்தப் படைப்பாளிகள் படும் கஷ்டங்கள் சொற்கள் தாண்டி யவை. இதற்கு வாசகர்களின் புதிய யுகம் நோக்கிய வாசிப்புப் பழக்கம் இன்மை யும், மிக முக்கியமாகப் படைப்புக்களை வாசகனிடத்தில் சரியாகக் கொண்டு சேர்க்கும் ஊடகப் பற்றாக் குறையுமே காரணங்கள் எனலாம்.
எனவே, படைப்பாளியினதும், அவர்கள் படைப்புக்களினதும் வெற்றி யதார்த்த மாக அவற்றை வாசகனிடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஏதோ ஒரு ஊடகம் சார்ந்ததாகவே இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த ஊடகங் கள் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத் தளம், வலைப்பூ, முகப்புத்தகம் எனப் பரந்து கிடக்கிறது. இருந்தும் இந்த ஊடகங்கள் இந்தப் படைப்பாளிகளின் படைப்புக்களை வாசகனிடத்தில் சரியாக விளம்பரப்படுத்தும் பணியைப் பொறுப் புடன் செய்கின்றனவா என்றால் அதற் கான பதில் முழுத் திருப்திகொண்டதாக
ܥܰܬ݂ܟ݂

அமையாது என்பதே எனது கருத்து. இருந்தும் அந்த வரிசையில் சில ஊட கங்களின் பங்கு மிகப் பாராட்டுதற்குரி யது.இன்றையக் காலகட்டத்திலே இதை மிகச் சரியாகச் செய்யும் ஊடகங்கள் என்கின்ற வரிசையில் முதலாவதாக என்னால் மட்டுமல்ல, பல ஈழத்து எழுத் தாளர்களால் உறுதிபடச் சொல்லக் கூடியது லண்டன் தமிழ் வானொலி ஆகும்.
1996 Go segub Sléial Jullu First Audio நிறுவனமானது 'அடுத்த தலைமுறையை நோக்கி." என்கின்ற தீர்க்கதரிசனத்தோடு 1998ம் ஆண்டு ஆனி மாதம் 10ம் திகதி லண்டன் தமிழ் வானொலி என் கின்ற தனது வானொலி அங்கத்தை உலகிற்குக் கொடுத்தது. அன்றிலிருந்து இற்றைக்குச் சுமார் 15 ஆண்டுகளாக முழுநேரப் பணியாகத் தனது வானொலிச் சேவையைக் காற்றிலே வியாபித்திருக் கிறது. பல வித்தியாசமான நிகழ்ச்சி நிரல்களுடன் தங்கள் நேயர்களைத் திருப் திப் படுத்திச்செல்லும் இந்த வானொலி யின் மிக முக்கியமான மூன்று நிகழ்சிகள் முழுமையான இலக்கியம் சார்ந்தவை. அவை எழுத்தாளர்களையும் ஏனைய
15
கலைஞர்களையும் உலகத்திற்கு அறி முகப்படுத்திவைக்கும் கீதாஞ்சலி, சிறுகதை எழுத்தாளர்களின் வானொலிச் சிறுகதைகளிற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் பேசும் இதயம், மூத்த இளம் கவிஞர்களின் குறித்த தலைப்புப் பற்றிப் பேசும் கவிதைகள் இடம்பெறும் வியாழன் கவிதை நேரம்’ என்பனவாகும். இந்த மூன்று நிகழ்சிகளையும் பற்றிப் பேசுகின்றபொழுது அனைவரிற்கும் முதலில் ஞாபகம் வருவது இந்நிகழ்ச்சி தொடர்பான இரண்டு ஆளுமைகள். ஒன்று இந்த மூன்று நிகழ்சிகளையும் தனது செல்லக் குரலால் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஷைபா மலீக் மற்றும் இவ்வானொலியின் பணிப்பாளர் திரு நடா மோகன் அவர்கள். இவர்களின் இலக்கியம் சார்ந்த அர்ப்பணிப்பு மகத் தானது. இந்த மூன்று நிகழ்ச்சிகளுமே ஈழத்து எழுத்தாளர்களிற்கும் படைப் பாளிகளிற்கும் தகுந்த களத்தை அமைத் துக் கொடுத்தல், புதிய இளம் தலை முறைப் படைப்பாளிகளை இனம்கண்டு அறிமுகம் செய்து தட்டிக்கொடுத்தல், தமிழ்ப் படைப்பாளிகளிற்குத் தேவை யான அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தல்
அடுத்த தலைமுறை நோக்கி
www.first audio.net
LONDON
خضر
யாத்ரா 22

Page 10
போன்ற உயரிய நோக்கங்களை அடிப் படையாகக் கொண்டே பயணிக்கின்றன. லண்டனில் இருந்துகொண்டு இலங் கை, இந்திய, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்ப் படைப்பாளி களை வலைவீசிக் கண்டுபிடித்து அவர் களை இந்த நிகழ்ச்சிகளிற்கு அழைத்து வரும் இந்நிகழ்ச்சிகளின் தயாரிப்பாள ரும் தொகுப்பாளருமான ஷைபா மலீக் அவர்களைப் பாராட்டாமல் இருந்துவிட முடியாது. இவரது இந்த சேவை பிரமாத மானது.
கீதாஞ்சலி நிகழ்ச்சியானது ஆரம்பத் திலே படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப் பட்ட ஒன்று அல்ல. வெறுமனே 5 அல்லது 6 பாடல்களை ஒலிபரப்பி அவை பற்றிப் பேசும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே இது ஷைபா மலீக்கி னால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த வருடமே இது படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஒரு பயன் மிக்க நிகழ்ச்சியாக உருவெடுத்தது.இது பற்றி ஷைபா மலிக்கிடம் கேட்டபோது சுவாரஸ்யமாக ஒரு விடயத்தைச் சொன் னார். 'ஆரம்ப காலத்திலேயே எல்லா மொழியில் இருந்தும் இனிமையான பாடல்களை எடுத்து இந்த நிகழ்ச்சியை நகர்த்தினேன். அதிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நம்மவர் பாடல் ஒன்றை யும் இணைத்துக் கொண்டேன். 5 அல்லது 6 பாகங்களைத் தான் பாடல் களோடு நகர்த்தியிருப்பேன். உண்மை யில் எனக்கு இதில் ஒரு திருப்தியை உணர முடியவில்லை. தவிர, சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதிலும் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. காரணம் அதற்கு ஒரு ஒலிபரப்பாளர் தேவை யில்லை. இணையத்தில் போனாலும் ,
штфДт 29
16
கைத்தொலைபேசியை எடுத்துக் கொண் டாலுமே இப்போது எல்லாத்தரப் பாடல்களையும் கேட்கக் கூடிய வசதி இருக்கிறது. நிறைய நான் யோசித்ததில்
என்னுடைய நீண்டகாலத்துக் கனவைச்
செயற்படுத்தலாம் என்ற ஒரு எண்ணம்
என்னில் தோன்றியது. உண்மையில் வளரும் படைப்பாளிகளுக்குக் களம் கொடுக்க வேண்டும் என்பதும், அவர் களை உலகுக்குக் காட்ட வேண்டும் என்பதும் என்னுடைய கனவாக இருந் தது. நீண்டகாலக் கனவாக இது மனதிற் குள் இருந்தாலும், பதிவு செய்யும் வசதி களை அறியாததாலும், கால நேரம் கை கொடுக்காததாலும் அப்படியே பூட்டி வைத்துக் கொண்டிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு இதைப் பண் னியே ஆக வேண்டும் என்ற எண்ணம் நிறையவே என்னை ஆட்கொண்டதால் என் மனதோடு கனவாக இருந்த விடயத் தை நான் அதிபரிடம் சொன்னபோது, மிக உற்சாகத்துடன் என்னைத் தட்டிக் கொடுத்து, தாராள சுதந்திரமும் தந்தார் அதிபர் நடாமோகன் அவர்கள். அவர் அன்று கொடுத்த தைரியத்தில்தான் இற்றை வரைக்கும் ஆத்மதிருப்தியோடு நிகழ்ச்சியை நகர்த்திக் கொண்டிருக் கிறேன்.?
படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் கீதாஞ்சலி நிகழ்ச்சியிலே இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட ஈழத்து இந்திய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அறிமுகம் செய்திருப்பதாகப் பெருமை யுடன் கூறுகிறார் ஷைபா. உண்மை யிலேயே இது அவரின் மிகப்பெரிய சாதனை என்றே என்னால் சொல்ல முடிகிறது. இதுவரை இந்நிகழ்ச்சியிலே அறிமுகம் செய்யப்பட்டவர்களில் முஹம்மட் சமீல் (இசையமைப்பாளர்),
ܢܬ

பிருந்தன் (இசையமைப்பாளர்), எலிசபெத் தங்கராஜ் (ராஜ் சுகா) (கவிஞர்), மன்னார்.அமுதன் (கவிஞர்), அமல்ராஜ் பிரான்சிஸ் (கவிஞர்), சம்சுடீன் ஜனுஸ் (கவிஞர்), கந்தப்பு ஜெயந்தன் (இசையமைப்பாளர்), கந்தப்பு ஜெயரூபன் (பாடகர்), கெளரி பிருந்தன், சதீஸ்காந்த் தம்பிரட்ணம் (பாடலாசிரியர்), கீர்த்தனா குணாளன், சிப்லி அஹமட் (கவிஞர்), கலாநெஞ் சன் சாஜஹான் (கவிஞர்), கவிஞர் அஸ்மின், மன்னூரான் ஷிஹார் (கவி ஞர்), துஸ்யந்தன் வெற்றிவேல் (கவி ஞர்), இர்பான் ஹாபிஸ் (கவிஞர்), கவிஞர் ராஹில், ராஹிலா ஹலாம் (கவிஞர்), சமிதன் தனேஸ்வரன் (குறும் பட இயக்குனர்) ஆகியோர் இலங்கை யைச்சேர்ந்த படைப்பாளிகள்.
இரண்டாவதாக பேசும் இதயம்’. சமீலா யூசுப் அலி, ராஹிலா ஹலாம், அமல்ராஜ் பிரான்ஸிஸ், வதனி சிவபாலசிங்கம், ஏ.எப். ficham, ஜெயம் தங்கராஜா, எலிச பெத் தங்கராஜ், ஜெயா நடேசன் ஆகிய வானொலிச் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் அண்மைய காலங்களில் பேசும் இதயம்' நிகழ்ச்சியில் இடம்பிடித்திருந் தன. இந்த நிகழ்ச்சியின் வெற்றி எனப் படுவது பிரதானமாக இரண்டு தளங் களில் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்று வானொலிக் கதைகளிற்குப் பொருத்த மான கதைகளைத் தெரிவுசெய்து ஒலி பரப்புவது, இரண்டாவது அக்கதை களிற்கு மிக அழகாக, நேர்த்தியாக உயிர் கொடுக்கபடும் ஷைபா மலீக்கின் குரல். இந்நிகழ்ச்சியானது லண்டன் தமிழ் வானொலியின் ஆரம்பகால நிகழ்சிகளில் ஒன்றாக இருந்தபொழுதும் இடைப் பட்ட காலங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிஷைபா
ܬܡ.ܶ
17
மலிக்கின் மீள்வருகையின் பின்னர் மீண் டும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றி நடை போடுகிறது.
அவ்வாறே, அநேகரினது எதிர்பார்ப்பை யும் ரசனையையும் ஏற்படுத்திக் கொண் டது லண்டன் தமிழ் வானொலியின் வியாழன் கவிதை நேரம்”. மூத்த புதிய எழுத்தாளர்கள் என்கின்ற வட்டத்தைத் தாண்டிச் சகல கவிஞர்களின் குறித்த தலைப்புத் தொடர்பான கவிதைகளோடு வியாழன் தோறும் இனிமையாக நிகழ்ச் சியை நகர்த்துகிறார் ஷைபா மலீக், 15 வருடங்கள் வயதைக்கொண்ட இந் நிகழ்ச்சி இதுவரை சுமார் 1OOOஇற்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளை ஒலிபரப்பியிருக்கிறது. மன்னார் அமு தன், எலிசபெத் தங்கராஜ், கலாநெஞ்சன்
"இது லண்டன் தமிழ் வானொலி.
வியாழன் கவிதை நேரம். இப்போ
அமல்ராசு கவிதை கேட்போமா?
штфДт 92

Page 11
சாஜஹான், றாஹிலா ஹலாம், சுகைதா மசூர், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, கலைமகன் பைரூஸ், அமல்ராஜ் பிரான் சிஸ்,நிசாம் பாருக், வி. யோகேஸ், சிப்லி அஹமட், சமீலா யூசுப் அலி, சம்சுடீன் ஜனுஸ், அபூபக்கர் முகம்மது அஸ்கர், சுரையா புஹாரி, நிலாக்கவி மணியம், பஸ்லி ஹமீட், ஏ.எப். ரிஸ்னா, ரிம்சா முஹம்மட், மன்னூரான் ஷிஹார்போன்ற ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளை இந்த வியாழன் கவிதை நேரத்திலே அடிக்கடி கேட்க முடிகிறது. ஆக, விசேடமாக இளம் தலைமுறைப் படைப்பாளிகளிற்கு லண்டன் தமிழ் வானொலி நல்லதொரு ஊடகம் என்ப தை யாரும் மறுப்பதற்கு இல்லை. இன் னும் சொல்வதெனில், ஈழத்திலே அறி முகமான புதுமுக எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து அவர் களுக்கான ஒரு அந்தஸ்தை ஏற்படுத் திக்கொடுத்த பெருமை இந்த வானொ லிக்கும் அதைத் திறம்பட நடைமுறைப் படுத்தும் ஷைபா மலீக்கையுமே சேரும். அதேபோல, உள்ளூர் இலத்திரனியல் ஊடகங்களிற்கும் லண்டன் தமிழ் வானொலி ஒரு சிறந்த உதாரணம். வெறுமனே தென்னிந்தியப் பாடல் களோடு பிழைப்பு நடாத்தும் இவர்களை வரும் காலங்களிலே கொஞ்சம் பொறுப் புணர்வோடு சிந்திக்கத் தூண்டியிருக் கிறது லண்டன் தமிழ் வானொலி. இவ்வானொலியின் சேவை என்றுமே இலக்கிய உலகில் மதிக்கப்படும், போற்றப்படும் ஒரு விடயம் என்பதில் ஐயமில்லை. இலக்கிய வரலாறு இதை என்றுமே மறந்துவிடப்போவதும் இல்லை. சகல ஈழத்துப் படைப்பாளி களும் லண்டன் தமிழ் வானொலிக்கு
штфTт 29
18
நன்றியுடையவர்களாகவே இருப்பார்கள். 'என்னைப்போன்ற வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளின் இலக்கியப் பயணத்தில் லண்டன் தமிழ் வானொலி யின் பங்கு மகத்தானது. எங்களைப் போன்றவர்களின் இலக்கியப் பிரவேசம் இவ் வானொலியினாலேயே அங்கீகாரம் பெற உதவியிருக்கிறது. மற்றும் எங்கள் படைப்புக்களை நாடு கடந்து உலக மறியும் வண்ணம் எடுத்துச்சென்று எங்களிற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்ப டுத்திக்கொடுத்த இவர்களின் இலக்கி யப் பணிக்கு நாங்கள் என்றும் நன்றி யுடையவர்கள்." என்கின்ற தற்கால வளர்ந்து வரும் இளம் பெண் எழுத்தாள ரான எலிசபெத் தங்கராஜா (ராஜ் சுகா) அவர்களின் வாக்குமூலம் இதற்குக் கட்டியம் கூறி நிற்கிறது. இறுதியாக, ஈழத்து எழுத்தாளர்களின் விசேடமாக இளம் தலைமுறை எழுத் தாளர்களின் நம்பிக்கையாக மாறிப் போயிருக்கிறது இந்த லண்டன் தமிழ் வானொலி, அவர்களின் நம்பிக்கையை வென்றிருக்கிறார் இந்நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான ஷைபா மலிக், இவர்கள் பணி தொடர வேண்டும். இன்னும் பல புதுப் படைப் பிலக்கிய ஆளுமைகளை இந்த வானோலி இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். ஈழத்துப் படைப்பாளிகளிற்கும் வாசகர்களிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இவ்வானொலி இன்னும் சேவைகள் செய்ய வேண்டும். கடல் கடந்து கண்காணாத் தூரத்தில் இயங்கிய போதும் வானலையூடாக ஒரு வரலாற்றைப் பதிவு செய்கிறது லண்டன் தமிழ் வானொலி. ള്
ܓܵܬܟ݂
~

19
புரிதலின் பக்கம்
ஈழத்து முஸ்லிம் படைப்பிலக்கிய மாநாடு
சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடலுமே இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த செந்நெறி (Classics) நூல்கள் என ஆரவார மில்லாமல் அறிமுக விலாசம் பெற்றதுதான் நமது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம். பின்னர் விபுலானந்தர் காலத்தில் தொடங்கப் பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் புதையல் தோண்டும் பணியின் பேறாக இன்று இரண்டாயிரத்துக்கும் மேலான அருந்தமிழ் இஸ்லாமியப் படைப்புகள் நம் கைகளில் உள்ளன. இவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடுகளை மாரிக்கொன்றும் கோடைக்கொன்றுமாக நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் நடாத்தும் வல்லமை பெற்ற அரசு பிரதானிகளின் ஆதரவு பெற்ற இலக்கியக் காலாட்படைகளும் நம்மிடம் உண்டு. நல்ல விடயம் தான். பாராட்டுக்கள். இருந்தாலும் சமகால முஸ்லிம் வாழ்வியல் பற்றிய தான இலக்கியப் பங்களிப்புகள் பற்றிக் கண்டுகொள்ளப்படாத ஒரு கறுப்புப் பக்கமும் நம்மிடம் உண்டு. நமது படைப்பிலக்கியம் பற்றி எங்காவது பெரிதாகப் பேசுகின்றோமா? ஈழத்து முஸ்லிம் படைப்பிலக்கியங்கள் பற்றிப் பிரக்ஞை பூர்வமான தெளிவை ஏற்படுத்த ஒரு கூட்டமாவது கூட்டியிருப்போமா? தமிழ் இலக்கியம் மட்டும் போதுமா? ஆரம்பக் கட்டமாக ஈழத்து முஸ்லிம் படைப்பிலக்கிய மகாநாடு ஒன்று பற்றி யோசித்தால் என்ன?
ஈழத்தின் முதல் தமிழ் நாவலை நாமே வெளியிட்டோம் என்ற பெருமை உள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தனக்குப் பின்னர் இவர்தான் என்று பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் பெயரைத் தான் சுட்டிக்காட்டினார் என்ற சங்கதியும் உள்ளது.
எனவே இலக்கியம்பற்றியதான முஸ்லிம் படைப்புகள் பற்றிய வரை விலக்கணத்தை அறிமுகம் செய்தல், இஸ்லாமியத் தமிழிலக்கியத்தி லிருந்து முஸ்லிம் படைப்பிலக்கியத்தை வேறுபடுத்தும் சூத்திர (வாய் பாட்டை)த்தை வெளிப்படுத்தல், காத்திரமான முஸ்லிம் படைப்புகளைச் சுட்டி முத்திரை குத்தல், கனதியான முஸ்லிம் படைப்பாளிகளைப் ப்ட்டியல் படுத்தல், சர்வதேசத் தரத்தை நோக்கிப் படைப்பிலக்கியத்தை ஆற்றுப்படுத்தி அதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்தல் என உருப்படியான கைங்கரியங்களின் வலையமைப்பொன்றின் தேவையே இப்பக்கத்தின் இன்றைய பிரேரணையாகும். )ே
0 ஏ. பீர்முகம்மது
22 யாத்ரா الحر

Page 12
штфTт 99
ஆங்கிலத்தில எட்னா யாகி தமிழில அஷ்ரஃப் சிஆாப்தீன்
6ானது பெயர் ஹதா. நான் குஃப்ர் சுமே என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இந்தக் கிராமம் சிரியாவுக்கும் ஜோர்தா னுக்குமிடையிலான எல்லைப் பிரதேசத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.
சிறிய வயதில் நான் எங்களது ஆடுகளை பேய்ப்பதற்காக ஆழ் பள்ளத்தாக்கில் ஓடுகின்ற யர்மூக் ஆற்றுக்கு மேலாகத் தெரிகின்ற மலைப் பகுதிக்குச் செல்வதுண்டு. மேற்குப் புறக் கலிலீ கடலிலிருந்து வீசும் தென்றல் ஞாபகத்துக்கு வரு கிறது. அது எனது முகத்தில் பட்டு எனது தலை முடிகளைக் கலைத்து விளையாடுவது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
ܢ̄ܬܟ ܐ
 
 
 
 

அந்தத் தென்றலை ஆழ உள்வாங்கிச் சுவாசித்து அன்றைய நாளைச் சுறு சுறுப்பாக்கிக் கொள்வேன். சிரியா வின் பக்கமாக மிதமாக இறங்கிச் செல்லுகின்ற மனதைக் கொள்ளை கொள்ளும் பசிய நிலப்பரப்பையும் சிறிய மலைப்பிரதேசங்களையும் கண்ணாரக் கண்டு அனுபவிப்பேன். அந்தப் பசிய நிலப்பரப்பில் உள்ள புல்லிதழ்களை எமது ஆடுகள் ஆர் வத்துடன் மேய்ந்தபடியிருக்கும்.
ஆடுகளுடன் திரிவது பாடசாலைக் குச் செல்வதை விடச் சுதந்திரமான தாக இருக்கும். கோடை விடுமுறை முடிந்த பிறகு பாடசாலைக்குச் செல்வ தற்கு வெறுப்பாக இருக்கும். குஃப்ர் சுமே பெண்கள் பாடசாலையில்தான் நான் படித்து வந்தேன். எமது பாடசா லையின் எனது வகுப்புப் பெண் பிள்ளைகள் என்னைக் கேலி செய்து பேசுவது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
'நொண்டி ஹதாவைப் பார்த்தீர் களா? அவளது சொத்திக் கையைப் பாருங்கள். என்ன ஒரு விகாரம்."
- அவர்கள் என்னைப் பார்த்துப்
பரிகசிப்பார்கள்.
முழுமையற்ற எனது கரத்தை மறைப்பதற்கும் நொண்டாமல் நடப்ப தற்கும் நான் பகீரதப் பிரயத்தனம் செய்வேன். ஆனால் கிடைப்பது தோல்விதான். எனது வேதனைகள் அனைத்தையும் எனது படிப்புக்குள் ளேயே எரித்தேன். பட்டப்படிப்பில் முதல்தரத்தில் சித்தியெய்தினேன். அதன் பின்னர் தாதியர் கல்வியைத் தொடர்ந்து சிறப்புச் சித்தியைப் பெற்
الصر
2.
றேன். எனது டிப்ளோமாவைப் பெறுவ தற்கு நான் மேடையேறிய போது எனது நொண்டி நடையை மறைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனாலும் இயல்பாகவே அது வெளித்தெரிந்தது. பல்கலைக்கழக உபவேந்தர் எனக்குரிய டிப்ளோமாச் சான்றிதழை எனக்குக் கையளித்த போது எனது முழுமையற்ற கரத்தை நான் அணிந்திருந்த கறுப்பு அங்கிக் குள் மறைத்துக் கொண்டு மற்றக் கரத்தால்தான் பெற்றுக் கொண்டேன். உபவேந்தர் வாயிலிருந்து என்னை மகிழவிக்கும் வார்த்தைகள் வெளி வந்தன.
'நல்ல முயற்சி ஹதா! உன்னையி ட்டு நாங்கள் பெருமைப்படுகிறோம்!”
விண்ணப்பித்த உடனேயே உள்ளூர் வைத்தியசாலையில் எனக்குத் தொழில் கிடைத்து விட்டது. எனது முழுமையற்ற ஒற்றைக் கரமோ நொண்டி நடையோ அங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை. நான் முழுமை யாகத் தொழிலில் கவனம் செலுத்தி னேன். பெரிய சம்பளம் இல்லை. என்றாலும் பெரிய எனது குடும்பம் என்னில் தங்கியிருக்கும் நிலை உரு வானது. எனக்கு மூத்த ஐந்து சகோத ரர்கள் கொண்ட குடும்பத்தில் ஒரே யொரு பெண்பிள்ளையான நான் கடைசிப் பிள்ளை. பெரிய எனது குடும்பம் வறுமைப்பட்டது. ஆனால் அனைவரையும் படிப்பிக்க எனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு உழைத் தார். -
தந்தையாருடன் எனது மூத்த சகோ தரர்களும் குடும்ப நண்பர்களும் சீட் டாடுவதைப் பார்ப்பதிலும் கேட்பதி
யாத்ரா 22

Page 13
லுமே எமது மாலை வேளைகளைக் கழிப்போம். நானும் தாயாரும் அவர் களுக்குத் தேநீரும் அரபுக் கோப்பி யும் தயாரிப்பதில் ஈடுபட்டிருப்போம். யாரும் எனது அங்கவீனம் பற்றிக் கவனங் கொள்ளாத அந்த நாட்கள் மிக இனிமையானவை.
கிராமங்களில் உள்ள கன்னிப் பெண்களுக்கு 30 வயதுக்குள் திரு LD 600TLb ஆகவில்லையென்றால் அவர்கள் வயதான பணிப்பெண்க ளாகவே கணிக்கப்பட்டனர். எந்த வொரு இளைஞனும் வீட்டுக் கதவைத் தட்டி என்னைத் திருமணஞ் செய்து கொள்ளக் கோரவில்லை. அப்படியொருவன் வருவான் என்று நாங்களும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். எனது அங்கவீனமே அதை அறியும் தானே!
ஆனால் நாங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விட் டோம். எனக்கு இப்போது ஒரு தொழில் உண்டு. நான் சம்பாதிக்கி றேன். உண்மையில் இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு மனைவியைத் தேடும் இளைஞன் அங்கவீனமான, அன்பான ஒரு பெண்ணைத் திரு மணம் செய்து கொள்வதற்கு இது முக்கியமானது அல்லவா? இதற் காகத்தான் பரீத் என் தந்தையாரை அணுகினார்.
ஒரு நாள் இரவு எனது தந்தை யாரும் சகோதரர்களும் நண்பர்களும் கோப்பி யை உறிஞ்சிக் கொண்டு புகை வளை யங்களுக்குள் மேசையில் சீட்டுக் களை ஓங்கி அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது பரீத் எமது
штфTт 92
22
வீட்டுக் கதவைத் தட்டினார். கை நிறையப் பரிசுப் பொருட்களுடனும் காதுவரை வாய் கிழிந்த இளிப்புடனும் அவர் நின்றிருந்தார். அவர் உயரம் குறைந்தவராக இருந்தபடியால் அவர் அணிந்திருந்த ஆடைகள் பெரிதாக விருந்தன.
தந்தையார் என்னைச் சமையல றைக்குச் செல்லப் பணித்தார். ஏனெ னில் எமது குடும்பத்துக்காக முடிவெ டுப்பதெல்லாம் அவர்தான். என்னைச் சமையலறைக்குள் அனுப்பிய போதும் பரீத் என் தந்தையாரிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுகோள் விடுப்பது, திறந்தி ருந்த சமையலறைக் கதவூடாக எனக் குக் கேட்டது. பரீதின் குரல் அமுங்கிப் போயிருந்தது. தந்தையாரின் குரல் சத்தமானதாகவும் தெளிவானதாகவும் இருந்தது. சகோதரர்களை இப்பேச்சு வார்த்தையில் ஈடுபட அவர் இடங் கொடுக்கவில்லை.
"சரி. உனது கோரிக்கையைப் பற்றி நான் யோசிக்கிறேன். ஒரு வாரத்துக் குப் பிறகு வந்து மீண்டும் கேள்!”
- தந்தையார் பரீத்திடம் சொன்னார். என்னைத் திருமணம் செய்ய விரும்பி, யாரும் எங்களது வீட்டுக் கதவை உடைத்துத் திறந்து கொண்டு வரப் போவதில்லை என்பதை நானும் எனது தந்தையாரும் அறிந்தேயிருந் தோம். எனக்கு வழங்கப்பட்ட சீதனப் பொருட்களில் ஒரு தங்கமாலை, இரண்டு ப்ரேஸ்லட்டுகள், ஒரு சோடிக் காதணிகள் ஆகியன அடங்கி யிருந்தன. எனது உடலியல் நிலைமை காரணமாகத் தந்தையார்
ܓܥܬܐ

திருமணத்துக்காகப் பெரிய ஏற்பாடு கள் எதனையும் மேற்கொள்ள வில்லை. தேன்நிலவு இல்லை. ஆரவாரம் மிக்க கொண்டாட்டங்கள் எதுவும் கிடையாது.
திருமணம் நடந்த அன்றிரவு எனது கணவனால் உண்டான உடலியல் ரீதி யான துன்புறுத்தல் மறக்க முடியாதது. என்னைத் திருமணம் செய்த கணவன் என்பதால் அனுசரித்தே போக வேண் டும் என்பதை நான் உணர்ந்தேன். பரீத் நிரந்தரத் தொழில் ஏதும் இல்லா மல் அலைந்து திரிந்து சிறிய சிறிய வேலைகளைச் செய்து வந்ததால் எனது உழைப்பு முக்கியமானதாக இருந்தது. எனது சந்தோஷக் கனவு கள் மறைந்தன. முதிர்கன்னி என்ற நிலையிலிருந்து என்னைக் காக்க வந்த மீட்பரும் மறைந்தார்.
இரண்டறைக் குடிசை, எனது புகுந்த வீடாயிற்று. என்னால் முடிந்த அனைத்தையும் சிறப்புறச் செய்தேன். ஒரு வருடத்துக்குப் பின்னர் முதலா வது குழந்தை பிறந்தது. நான் செய்து வந்த தொழில் மூலம் எனது சிறிய குடும்பத்துக்குத் தேவையான பணம் எனக்குக் கிடைத்தது. நான் வாழ்ந்து வந்த கிராமத்தில் திருமணமான பெண் மற்றும் ஒரு தாதி என்ற மரி யாதை எனக்குக் கிடைத்தது.
தனது எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் கிடைத்தாலோ கோபம் ஏற்பட்டாலோ பரீத் என்முகத்தில் அறையவும் அடிக்க வும் ஆரம்பித்தார். அடிகளால் கன்றிப் போன கை, கால்களுடன் சில வேளை நான் தொழிலுக்குச் சென்றிருக்கி
றேன். வீங்கிய கண்களால் பார்க்க
ولجر
23
முடியாத நிலையில் ஒன்றுக்கு மேற் பட்ட முறை வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதைப் பற்றி நான் நீண்டகாலமாக என் குடும்பத் தாருக்கு எதுவும் சொல்லவில்லை. துன்புறுத்தல்களைப் பொறுத்துக் கொண்ட அதே வேளை, கடுமையாக உழைத்தபடி யாவற்றையும் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சித்தேன்.
நான்கு வருடங்களுக்குள் மூன்று பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியி ருந்தது எனக்கு அவர்களே எனது வாழ்க்கையாக மாறியிருந்தார்கள். ஆனால் துன்புறுத்தல்கள் தொடர்ந் தன. எனது உழைப்பு மொத்தத்தையும் பரீத் எடுத்துக் கொண்டு சூதாட்டத் திலும் மற்றும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். இதனால் பிள்ளை கள் பாதி வயிற்றுடன் தவித்தார்கள். அவர்களே அவர்களது விளையாட் டுப் பொருட்களாக மாறியிருந்தார் களே தவிர, அவர்களுக்கு வேறு எதுவும் இருக்கவில்லை.
தொழிலுக்குச் செல்வது, பிள்ளை களைக் கவனிப்பது என்று நான் ஓய்வின்றி இயங்கிய போதும் ஒரு வகைத் தனிமையை நான் உணர்ந் தேன். எனது பிள்ளைகளை நித்திரை யாக்கிய பின்னர், இரவுக் காற்று எமது சிறிய வீட்டுக்கு நிழல் தரும் வில்லோ மரத்தின் இலைகளை அசைத்துச் செல்லும் ஒலியைக் கேட்டுக் கொண் டிருப்பேன். இரவுக் குளிரில் நடுங் கும் வேளை சாம்பல் நிறப் புறாக்க ளின் கொஞ்சும் ஒலி காதில் விழும். அந்த ஒலி எனது மனதுக்கு மிகவும் ஆறுதல் தருவதாக இருந்தது.
штфДт 99

Page 14
ஒரு நாள் மாலை வேளை கடுங் கோபம் கொண்டவராக பரீத் வீட்டுக் குள் நுழைந்தார். பிள்ளைகள் அறைக் குள் தங்களது பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. எனக்கு ஞாபகம் இருப் பது, அவரது வாயிலிருந்து கோபத்து டன் வெளிவந்த வார்த்தை கள்தாம்.
"நீ பொருத்தமற்ற ஒரு மனைவி. நீ ஒரு நொண்டி, நீ அசிங்கமானவள்!”
பரீத் தனது முஷ்டியை மடக்கி என்னைத் தாக்கினார். அதற்குப் பிறகு அவசர சிகிச்சை அறைக்குள் நான் இருந்ததுதான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. பரீத்தை அங்கே எந்த இடத்திலும் நான் காணவில்லை. என்னைச் சுற்றிச் சுற்றி வந்த டாக்ட ரின் முகத்தை நோக்கினேன்.
'ஒஹ். விழித்து விட்டாயா? ஆதரவற்ற ஒரு பெண்ணைச் சாகடிக் குமளவு தாக்குவதென்றால் அந்த ஆள் எந்தளவு மோசமானவராக இருக்க வேண்டும்?
நான் வாய் திறக்கவில்லை. எனது உடம்பு முறிந்து விட்டது போல் வலித் தது. இரத்தம் வேறு கசிந்து கொண்டி ருந்தது. பரீத் மீது குற்றம் சுமத்த நான் விரும்பவில்லை. நான் வாய் திறந் தால் அவர் கம்பி எண்ண வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும். மூன்று தினங்கள் நான் வைத்திய சாலையில் இருக்க நேர்ந்தது. என்னில் கருணை கொண்ட டாக்டர் களில் ஒருவர் என்னை எச்சரித்தார்.
"உன்னைத் தாக்கியது யார் என்று
யாத்ரா 22
24
நீ சொல்லாவிட்டாலும் அது உனது கணவர்தான் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். உனது மெளனம் இன்னும் கடுமையாக உன்னைத் தாக்குவதற்கு உன்கணவ ரைத் தூண்டக் கூடியது என்பதை மறந்து விடாதே. இப்படி நீ மெளனம் சாதித்துக் கொண்டிருந்தால் ஒரு நாள் உன்னை அவர் கொலை செய்யவும் கூடும்.”
அன்றிரவு எனது வீட்டுக்குச் செல் லாமல் தந்தை வீட்டுக்குச் சென்று அன்றிரவை அங்கேயே கழித்தேன். தந்தையார் முணுமுணுத்துக் கொண் டிருந்தார்.
'இதெல்லாம் உனது பிழைதான். உனது கணவனை எப்படிக் கவனித் துக் கொள்வதென்று உனக்குத் தெரிய வில்லை ?
உம்மா தலையை ஆட்டியபடி எனது காதுக்குள் குசுகுசுத்தார்.
"ஐயோ. ஹஸ்தா. நீ என்ன செய் தாய்? ஏன் பரீத் உன்னை இவ்வளவு மோசமாகத் தாக்கினார்?"
கணவரிடம் செல்வதற்கு நான் மறுத் தேன்.
"நான் அங்கு போகமாட்டேன். பரீதுடன் சென்று வாழ நீங்கள் என்னை நிர்ப்பந்திக்க எந்த நியாய மும் கிடையாது!”
இரண்டு வாரங்கள் கழிந்த நிலை யில் ஒரு நாள் தந்தையாரின் வீட் டுக்கு அண்மித்தாக உள்ள காட்டுப் பகுதியில் கழுதைப் புலியின் சத்தம் கேட்டது. அயலவர்கள் சேர்ந்து தீ
ܓܵܬܕ݂

மூட்டிக் குழுமியிருந்திருக்க வேண் டும். ரோஸ்ட் உருளைக் கிழங்கு மற்றும் நெருப்பில் வாட்டப்பட்ட இறைச்சி வாசனை காற்றில் மிதந்து எனது அறை யன்னலூடே நுழைந் தது. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. நிலவு அமைதியாகப் பால் பொழிந்து கொண்டிருந்தது. இறைச்சி வாட்டப் படும் நெருப்பைச் சூழ அமர்ந்தி ருந்தவர்களின் சிரிப்பொலி என்னைக் கேலி செய்வது போல் உணர்ந்தேன். பரீத் ஏன் என் அயலவராக நாடகமாட வேண்டும்? ஏன் எப்போதும் அவர் ஒரு வெறுக்கத்தக்க மிருகத்தைப் போல நடந்து கொள்ள வேண்டும்?
யாரோ வீட்டுக் கதவைத் தட்டினார் கள். தந்தையாரின் குரல் தெளிவாகக் கேட்டது.
'பரீத் உள்ளே வாருங்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது?
கோப்பி தயாரிக்குமாறு தந்தையார் என்னைப் பணித்தார். எனக்கு வேறு வழியில்லை. கோப்பியைத் தயாரித் துக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்ததும் என்னருகே வேகமாக நெருங்கிய பரீத் சொன்னார்:-
'ஹுதா. நீ இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது. பிள்ளைகள் உன்னைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். வீட்டுக்கு வா!'
பரீத் பிள்ளைகளை ஞாபகமூட்டிய தும் நான் அழ ஆரம்பித்தேன். அவர் கள்தாம் இப்போது எனது வாழ்க்கை. மூன்று வாரங்களாக அவர்களை நான் காணவில்லை. நான் வீட்டுக்குப் போக வேண்டும். தந்தையாரைப்
الحر
25
பார்த்துச் சொன்னேன்:-
"நான் இப்போது போக வேண்டும். எனக்குப் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும்!”
பின்னால் வந்த பத்து வருடங்களாக பரீத்தை விட்டு ஓடுவதும் பிறகு திரும்பி வருவதுமாகக் காலங் கழிந் தது.எனது தந்தையார் புற்று நோயால் இறந்தார். எனது விதி எனது சகோத ரர்களுக்கும் கொடுமைக்காரக் கண வனுக்குமிடையில் கொண்டிருந்தது. எனது சகோதரர் களும் தாயாரும் என்னால் பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் கள். எனக்கே என்ன செய்வது என்று புரியவில்லை. பிள்ளைகளின் சட்ட பூர்வ உரிமையை பரீத் கோரினார். பிள்ளைகள் பரீத்துடன் இருக்கட்டும் என்று நான் சொல்லி விட்டால் சரி என்றானது.எனக்குத் தனியாக ஒரு வாழிடம் ஏற்படுத்தித் தருவதற்குச் சகோதரர்கள் தீர்மானித்தார்கள். எனது மூத்த சகோதரர் முஸ்தபா, தாயாரி டமும் மற்றைய சகோதரர்களிடமும் சொன்னார்:-
26.1.86) Tlgés
"இதை இப்படியே விட்டுப் பார்த் துக் கொண்டிருக்க முடியாது. ஹதா ஒரு நாளைக்கு இங்கிருக்கிறாள். பிறகு பரீத்திடம் சென்று விடுகிறாள். எல்லாருமாகச் சேர்ந்து ஒரு சிறிய இடத்தை எடுத்துக் கொடுப்போம். தேவையான தளபாடங்களையும் வாங்கிக் கொடுப்போம்."
பரீதை விடத் தாம் எத்தனையோ மடங்கு தாராளத் தன்மையுடையவர் கள் என்பதை எனது சகோதரர்கள் நிரூபித்தார்கள். தாயாரின் வீட்டுக்கு
யாத்ரா 22

Page 15
அண்மையிலேயே எனக்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தந்தார்கள். தளபாடங்கள், விசாலமான திரைத் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, மின்னடுப்பு என்று யாவும் புதிதாக வாங்கப்பட்டன. செலவைச்
சகோதரர்கள் பங்கிட்டுக் கொண்டார்
கள். வீட்டின் முகப்பில் இரண்டு ஒலிவ் மரங்கள் நாட்டப்பட்டன. கோடைகால நிழலுக்காக வீட்டின் பின்புறம் செர்ரி மற்றும் மல்பரி மரங் கள் நாட்டப்பட்டன. தக்காளி, வெள் ளரி, கீரை வகைகளை நட்டு நான் ஒரு சிறிய தோட்டமும் செய்தேன். ஏராளமான மலர்ச் செடிகளையும் நட் டேன். அவை கண்ணுக்கு அழகாக வும் வாசனையும் தந்து மனதுக்கு இதமான சூழலை ஏற்படுத்த உத வின. எனக்குத் தேவையான எல் லாமே எனக்குக் கிடைத்தன, எனது பிள்ளைகளைத் தவிர!
ஒரு நாள் வேலை முடிந்து வரும் வழியில் தாயாரின் இல்லத்துக்குள் நுழைந்தேன்.
'உம்மா. எனது பிள்ளைகளைப் பிரிந்தது எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. எனக்கு அவர்களோடு இருக்க வேண்டும்!”
நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாயாரின் முகம் நிறம் மாறு வதை அவதானித்தேன்.
'ஹ'தா, இந்தக் கிறுக்குக் கதையை யெல்லாம் நிறுத்து. உனது பிள்ளை கள் இப்போது வளர்ந்து விட்டார்கள். நீ இல்லாமலே அவர்களால் சமாளித் துக் கொள்ள முடியும். பரீதின் துன்பத் திலிருந்து விடுபட்டு விட்டாயல்
штфДт 92
26
லவா? சும்மா அலைக்கழியாமல் இரு. உனது சகோதரர்கள் உன்னுடன் எவ்வளவு அன்பாக நடந்து கொள்கி றார்கள். இங்கேயும் அங்கேயும் ஒடித் திரியாமல் உன்னை ஒரு வீட்டில் குடிவைத்திருக்கிறார்கள் அல்லவா..!"
ஆனால் உண்மையில் தாயாரின் பேச்சை நான் காதிலெடுக்கவில்லை. எனது எண்ணமெல்லாம் எனது பிள் ளைகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. மீண்டும் பரீதின் வீட்டுக்குச் செல்வ தும் பிறகு அவரது கொடுமைகளால் எனது வீட்டுக்குத் திரும்பி வருவது மாக இருந்தேன்.
ஒரு நாள் எனது வீட்டுக் கதவை உம்மா வந்து தட்டினார். அவருடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவரது கைகளில் அந்த நடுக்கம் அதிகம் இருந்தது. அவர் சொன்னார்:-
'ஹுதா, இந்தக் கிறுக்குத் தனத்தை நிறுத்து என்று எத்தனை தரம் உனக் குச் சொல்லியிருக்கிறேன். நான் சொன்னதை நீ கவனத்தில் எடுக்கவே யில்லை. இப்போது உனது வாழ்க்கை அபாயத்தை நெருங்கி விட்டது. குடும்பத்தின் நற்பெயருக்கு உன் னால் அவமானம் என்று சொல்லி உன்னைத் தொலைத்து விடுவது என்று உனது சகோதரர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தவர் களும் அயலவர்களும் உன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்
கள். '
உம்மா சொல்வது உண்மைதான். பிள்ளைகள் பற்றிய விடயம் இனி முக்கியமானதல்ல. இப்போது எதிர் நோக்குவது வாழ்வா, சாவா என்ற
ܥܰܬܐ
 

பிரச்சினைதான். எனது சகோதரர்கள் என்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரி யும். ஆனாலும் சிரித்துக் கொண்டே உம்மாவிடம் கேட்டேன்:-
‘என்னை எப்படிக் கொல்வது என்று திட்டம் வைத்திருக்கிறார்கள் g) LbLDT ?”
"ஓஹோ. இது ஒரு ஜோக் மாதிரி யல்லவா சிரிக்கிறாய்? ஒரு நாள் எலிப்பாசாணம் வாங்கிக் கொண்டு வந்த முஸ்தபா, இது ஹ"தாவுக்கு. அவளின் பிரச்சினையை முடித்து விட லாம். இதுக்குப் பிறகும் சனங்களை வெட்கத்துடன் எதிர்கொள்ள முடி யாது, என்று சொல்லிக் கொண்டிருப் பது என் காதில் விழுந்தது."
"ஆனால் என்னைக் கொல்லுபவர் ஜெயிலுக்குப் போக வேண்டி வருமே
2 LibLDI ?'
'சின்னப்பிள்ளை மாதிரிப் பேசாதே! ஆமா. ஐந்து அல்லது ஆறு மாதம்! அதோடு முடிந்தது. அதற்குப் பிறகு கொலை செய்தவன் உயிரோடு வெளியே வந்து விடுவான். நீ அடை யாளம் தெரியாத இடத்தில் அடக்கம் செய்யப்படுவாய். குடும்ப மானம் காப்பாற்றப்படும். ஆனால் உனது பிள்ளைகளைக் காண்பதற்கு நீதான் உயிரோடு இருக்கமாட்டாய்!”
உம்மா சொன்ன ஒவ்வொரு சொல் லும் நிச்சயமான உண்மை. கெளரவக் கொலைகள் இன்னும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. எனது நண்பியொருத் தியும் அவளது சகோதரனால் கெளர வக் கொலை செய்யப்பட்டாள். திரு
المصر
27
மணம் செய்த ஒருவனுக்கு அவள் கடிதம் ஒன்றை எழுதினாள் என்ற சந்தேகத்தில் அக்கொலை நடந்தது. ஆனால் அந்தக் கடிதத்தை அவள் எழுதவில்லை என்பதையும் அவளை வஞ்சம் தீர்ப்பதற்காக வேறொரு பெண்ணால் அக்கடிதம் எழுதப் பட்டது என்பதையும் பொலிஸ் தாமத மாகத் தான் கண்டு பிடித்தது.
உம்மாவின் உபதேசத்தை மனதிற் கொண்டேன். நான் பாதுகாப்பான வேறு ஒரு வீட்டில் வாழ ஆரம்பித் தேன். நான் எங்கிருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. உம்மாவுக்கும்
56.L.
உம்மாவையோ பிள்ளைகளையோ தொடர்பு கொள்ள நான் முயற்சிக்க வில்லை. எவ்வளவு காலம் இப்படி மறைந்து வாழ முடியும் என்று எனக் குத் தெரியவில்லை. எனது பிள்ளை களை இழந்ததுதான் குரியது.
கவலைக்
(Ꮛ)
யாத்ரா 22

Page 16
28
புதிதாக இயற்றிப் பாடுகிற தேசிய கீதம்
O
6rb.6f 6.6tö. GlasföOM
வசிக்கிறாயா இலங்கையில் நீ நமோ நமோ மாதாவை அழித்து விட்டு பசி பசி ஐயாஎன்று தேசிய கீதம் இயற்றிப் பாடிவை
ங்காங்கா என்றழும் உன் குழந்தையின் கதறல் பரிதாபம் பால்மாக்களின் காதுகளில் விழ சந்தர்ப்பமே இல்லை இனி
штфTт 92
 

29
சரிந்து செல்லும் வருமானத்தின் கட்டுமானத்தை நிமிர்த்தி வைப்பதில் உனது உழைப்பு சத்தியமாகத் தோற்றுப் போயிருக்கிறது. உனது வியர்வை துருப்பிடித்து உதவாததாகக் கிடப்பதைக் காணுகிறாய்
ஒரு கையால் போர் அணைத்து வைக்கப்பட்டது. பசி நெருப்பைக் கொளுத்தி நாடெங்கும் பற்றவைத்திருக்கிறது
மறு கை
பள்ளி விபரங்களின் மாயக் கணிப்பை பொருளாதார வளர்ச்சிக்கு அழகு தேய்த்து பெருமை கதைத்துக் கொண்டிருக்கிறது மத்திய வங்கி
கால் இறாத்தல் பாணைக் கூட
வாங்கியண்ண முடியாதவனாய் உன்னை ஆக்கி
ஏறிப் போய் நிற்கிறது விலைவாசி அலரி மாளிகையின் கூரை உச்சியில்
கழிக்கும் மலம் துப்புகிற எச்சிலுக்கும் விலைகள் நிருணயிக்கப்பட்டு நள்ளிரவு (2.00 மணி முதல் அமுலாகும். மறுநாள் அவை பல ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை முடிவுகள் தெரிவிக்கும் இதுதான் உனது நாடு
எரிபொருள் பால்மா கோதுமை எரிவாய பஸ் கட்டணம் எல்லாமே உன்னை மிதித்து உதைத்துக் கொண்டே செல்லுகிற பஞ்சம் பற்றியெரியம் தணலில் ஆசியாவின் ஆச்சரியம் குளிர்காய்ந்து அனுபவிக்கிறது.
(○。○う。2○ (2
штфДт 99

Page 17
30
வேர் விடும் விதைகள்!
(pĝGO°Ð 9LD.ŞT6W(t&sr(t
கவிதைகளின் தீந்தையினால் இதயச் சுவர்களுக்கு வண்ணமடிக் கிறேன், பாவச்சுமைகளின் கறைகளி னால் என் இதயம் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக, நிஜமாகவே அதற் காகத்தான் நல்ல கவிதைகளைத்
சில கவிதைகள் அழகானவை. சில கவிதைகள் அற்புதமானவை. சில கவிதைகள் புனிதமானவை. தூய்மை யில் புரண்டு கிடந்து அழகின் குளிய லில் ஞான நீராடி மெய்யியல் அற்பு தங்கள் நிறைந்த கிரகங்களுக்கு யாத்
தேடிப்படிக்க ஆசைப்படுகிறது மனது. திரை செய்துவிட்டு வந்து புனிதத்தின்
штфЈт 92
ܢ̄ܬܲܟ݂
 

பாலமுதைப் புகட்ட வருவதே நான் தேடுகின்ற கவிதைகள்.
என் இதயத்தின் ஓசைகளுக்குச் சீரான சந்தங்களை வழங்கும் ஆன்மீக இசையின் கருவிகளாகவே சிறந்த கவிஞர்களைப் பார்க்கத் தோன்று கிறது.
கலீல் ஜிப்ரான், எனது கவிதைகள் மீதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்த உலக மகாகவி, மானுட வாழ்வில் தோற்றுப் போன மனிதர்கள் எந்த வகை ஒடுக்கு முறையின் சக்திக் கட்டமைப்பினால் வஞ்சிக்கப்பட்ட வர்கள் என்பதை அரசியல் தெளிவுட னும் இறையியல் தத்துவங்களுட னும் உண்மையின் வரலாற்றுத் தத்து வங்களுடனும் ஆன்மாவின் அழுகுர லுடனும் உரத்துச் சொன்ன உண்மை யான கவிஞன் கலில் ஜிப்ரான்.
மனிதனின் பாடல்
3.
(Song of man) LD6sflg56ofilesisT LI ITL6io எனும் ஜிப்ரானின் கவிதை என்னுள் ஏற்படுத்திய பதிவு, மூன்றாம் உலக மகா யுத்தம் நடந்ததன் பிற்பாடு எழுத வேண்டிய கவிதைக்கான பாடு பொருளை ஆழ்மனதில் பதியம் போடு கிறது. அப்போது நேரவிருக்கும் அழிவுகளின் அகோரங்களுக்காகவும் சிதைவுகளின் சீரழிவுகளுக்காகவும் மெழுகு திரிகளின் மெல்லிய வெளிச் சங்களுடன் அவலம் பாடும் கவிஞர் களின் அணி வகுப்பு என் கண் முன்னே வருகிறது. அன்றைய மானு டத்தின் வீழ்ச்சிக்காக மானசீகமாய்க் கண்ணி சொட்டி இறைவனின் தர்மத் திற்காக அடுத்த சந்ததிக்கு நம்பிக் கையின் விதைகளைத் தூவி நீர் பாய்ச்சுவதற்காக ஜிப்ரானின் கல்ல றைக்கருகில் சபதம் எடுப்பதே சாலப் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.
நான் தொடக்கத்தின் மணிப்பொழுதிலிருந்தே இங்கிருக்கிறேன், இன்னும் இங்கேதான் இருக்கிறேன். இந்த உலகின் இறுதிவரை நான் எஞ்சி இருப்பேன். ஏனெனில் என் துயரம் தோய்ந்த வாழ்வுக்கு முடிவேதும் கிடையாது.
முடிவற்ற வானில் அலைந்து திரிந்தேன். இலட்சிய உலகில் உயரப்பறந்தேன். பிரபஞ்சவெளியின் வழியே மிதந்து கிடந்தேன்.
ஆனால் நான் இங்கே அளவையின் கைதியாய்
கன்பூசியஸின் போதனையைக் கேட்டேன் பிரம்மாவின் ஞானத்தைச் செவியற்றேன் பத்தரின் போதி மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தேன் இன்னும் இங்கே அறியாமையுடனும் முரண்பாட்டுடனும்தான்
இருந்து வருகிறேன்.
штфЈт 22

Page 18
32
பரிசுத்த ஆவி மூசாவை அணுகியபோது, நான் சினாய் மலையின் மீதிருந்தேன். ஜோர்தானில் ஈசாவின் அற்புதங்களை நான் கண்ணுற்றே இருந்தேன். இன்னும் நான் இங்கே திகைப்பின் கைதியாய். நான் பாபிலோனியாவின் வல்லமைக்குச் சாட்சி பகர்ந்தேன் எகிப்தின் கீர்த்தியை அறிந்து கொண்டேன். ரோமாபுரியின் போர்தொடுக்கும் பேராற்றலையும் பார்த்திருந்தேன். இன்னும் எனது முந்தைய போதனைகள், அத்தகைய சாதனைகளின் பலவீனத்தையும் சோகத்தையும் எனக்குக் காட்டித் தந்தன. ஜன் டோரின் மாயஜாலக்காரருடன் உரையாடினேன் அஸ்ரியாவின் மதகுருமாருடன் வாதம் பரிந்தேன். பாலஸ்தீனத்தின் தீர்க்கதரிசிகளிடமிருந்து ஆழமிக்க அறிவினைச் சேகரித்தேன். இன்னும் நான் நிஜத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அமைதியான இந்தியாவிடமிருந்து ஞானத்தைச் சேகரித்தேன் அரேபியாவின் தொன்மையை ஆராய்ந்தேன். செவியறத்தக்கவற்றை எல்லாம் செவியற்றேன். இன்னும் என் இதயம் செவிடாயம் குருடாயம்தான் கிடக்கிறது. நான் ஒடுக்கியாளும் ஆட்சியாளர்களின் கரங்களில் சிக்கித் தவித்தேன். மதிகெட்ட ஆக்கிரமிப்பாளர்களின்கீழ் அடிமைத்தனத்தைச் சகித்திருந்தேன். கொடுங்கோன்மையால் திணிக்கப்பட்ட பட்டினியால் வாடியிருக்கிறேன். ஒவ்வொரு தினத்தையும் வரவேற்கப் போராட இன்னும் சிறு உள்ளார்ந்த சக்தியை வைத்துக்கொண்டுதாணிருக்கிறேன். நான் தொடக்கத்தின் மணிப்பொழுதிலிருந்தே இங்கிருக்கிறேன், இன்னும் இங்கேதான் இருக்கிறேன். இந்த உலகின் இறுதிவரை நான் எஞ்சி இருப்பேன். ஏனெனில் என் துயரம் தோய்ந்த வாழ்வுக்கு முடிவேதும் கிடையாது.
штфДт 22

உலக வரலாறுகளின் பக்கங்களின் எழில் முகங்களையும் இழிமுகங்களை யும் ஒரே ஒரு கவிதையில் வரைந்து விட்ட ஜிப்ரானைப் பார்த்து நான் வியக்கிறேன். நிகழ்காலத்துடன் சமர சம் செய்யாமலும் இறந்த காலத்தின் கறை படிந்த கதாபாத்திரங்களுக்குப் புனிதம் எனும் திரைச் சீலை போடா மலும் தொடர்ந்து பயணித்த அந்த இறவாக் கவிஞன் இறுதி நாள்வரை எஞ்சியிருப்பேன் என்று கூறுவது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
துயரம் தோய்ந்த வாழ்வியலைக் கைப்பொம்மையுடன் விளையாடு வது போன்ற விடயமாக நினைக்கத் தக்க பரீட்சார்த்தமான உளவியல் கலில் ஜிப்ரானிடம் இருந்தது. போருக் குப் புறப்படு முன் அவனால் புல்லாங் குழல் இசைக்கவும் முடியும். வீரமர ணத்தின் பொழுது அவனால் அமரர் களுடன் அளவளாவவும் முடியும். அத்தகைய நிர்பீடணம் அந்த மகாகவியிடம் தாரளமாகவே காணப் பட்டது.
நாகரீகங்களின் வரலாற்றுச் சுவடிகளின் தத்துவார்த்த வியலை இழையோடு கோத்து s மெய்யியல்
33
வெளிச்சத்தின் கீழ் ஆழமாய் நோக் கும் ஜிப்ரான் அத்தனை தீர்க்கதரிசி களின் போதனைகளையும் உற்று நோக்கிய ஜிப்ரான் தான் இன்னும் தடுமாற்றத்தின் கைதியாகத் தவிப்ப தாகச் சொல்லுகிறார். பாபிலோ னியாவின் மாட்சிமையும் எகிப்தின் ஏற்றமிகு கீர்த்தியும் ரோமாபுரியின் போர் தொடுக்கும் பேராற்றலும் ஜிப்ரானை ஆச்சரியத்தில் ஆழ்த்த வில்லை.
மாறாக அந்த வியத்தகு சாதனைகள் எல்லாம் கவலைகளின் கல்லறை களாகவும் பலவீனத்தின் அட்டை முகடுகளாகவுமல்லவா ஜிப்ரானுக்குத் தோற்றமளிக்கின்றன. செயலிற் செயலின்மையைக் காணும் யோகி யாகவன்றி வேறெப்படி அவனைக் காண்பது?
கலீல் ஜிப்ரானின் இந்தக்கவிதை ஒடுக்குமுறைக்கெதிரான குரலாகவும் போராளிகளுக்குப் பிராண வாயுவாக வும் வரலாற்று வாசகனுக்கு அமரர் களின் சாட்சியாகவுமல்லவா தோன் றுகிறது. கலில் ஜிப்ரானின் இந்தக் க வி  ைத யி ன் வி  ைத யி  ைன க் கர்பலா நிகழ்வின் 888 பாலை மனலில் T விதைத்த போது கீழ்வரும் கவிதை என்னுள் வேர் விட்டது.
x
штфTт 29

Page 19
34
இன்னுமா உனக்காக அழுகிறாரில்லை, கர்பலா ?
வெட்கம்கெட்ட அந்த யூப்ரட்டிஸ் நதி இன்னுமா ஓடிக்கொண்டிருக்கிறது?
நம் வற"சைனுக்கு நீர்புகட்ட மறுத்த அந்த நதியசீத்துக்கா கட்டுப்பட்டுக்கிடந்தது? ஸைனப் நாயகியின் கண்ணிரால் நனைந்த முந்தானை நமையெல்லாம் அழைக்கிறது நீதிகேட்டு, இமாம் ஹுசைனைக் காவுகொடுத்த விரக்தியில்தான் முனகி முனகிக் கணைக்கிறது அந்த வெள்ளைக்குதிரை. வெட்கம்கெட்ட அந்த யூப்ரட்டிஸ் நதி இன்னுமா ஓடிக்கொண்டிருக்கிறது? டமஸ்கசின் டாம்பீக டம்பத்தின் பறை ஒசையில் மயங்கிக் கிடந்ததா அந்த மடச் சமூகம்? யஸித் இப்னு முஆவியாவின் குண்டர்படை பாத்திமாவின் பாலகர்களையல்லவா பதம்பார்த்துவிட்டது ஹசனுக்கு நஞ்சூட்டி யசீதுக்கு முடிசூட்டி அழகுபார்த்த அவசரத்தில் அசுரமாய் நேர்ந்ததே கர்பலாப் படுகொலை, வெட்கம்கெட்ட அந்த யூப்ரட்டிஸ் நதி இன்னுமா ஓடிக்கொண்டிருக்கிறது? உமய்யாக் கோத்திரத்தின் அதிகாரவெறிக்கெதிராய் அமையாது போராட உம்மிநபித் திருப் பேரர் உறுதி பூண்டார். கூபாவும் கூடவில்லை, கஅபா நகரத்து மக்களும் தேறவில்லை. அபூஜஷ்றலை அழித்தொழித்த மதீனத்துதீன்தாரிகளும் ஷாமுக்கும் ரோமுக்கும் படை தொடுத்த தளபதிகளும் கோழையாகிப் போகினரே உமையா வம்சத்தின் ரத்தக்காட்டேரிகளுக்கு பனுவறாசிம் குலத்தாரின் ரத்தம் கொட்டி மடை வைத்தது நம் உம்மத் இத்தனையும் நடத்த பின்னும் போராடத்திராணியற்று
штфДт 22

35
வாளுறைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தது அன்றைய மடச்சமூகம். வெட்கம்கெட்ட அந்த யூப்ரட்டிஸ் நதி இன்னுமா ஓடிக்கொண்டிருக்கிறது? கர்பலாவின் அழுகுரல் இன்னும் ஓயவில்லை. அரபுலக மன்னராட்சிக்கு சலாம்போடும் அறிஞர்களும் இல்லாமலில்லை. யசீதை நியாயப்படுத்தும் மிம்பர்களும் ஓயவில்லை.
அண்மைக்காலமாய்ச் சில குரல்கள்
கர்பலா யசித்துக்கும் வறeசைனுக்கும் இடையிலான தனிப்பட்டயத்தம் என்று ஓங்கி ஒலித்தது . இஸ்லாத்தின் எழுச்சிக்காய் வற°சைன் சிந்திய ரத்தத்தை
பூமிகூடச் செரிக்கவில்லை.
இவர்களெல்லாம் எப்படித்தான் செரித்தார்களோ!
வெட்கம்கெட்ட அந்த யூப்ரடிஸ் நதி இன்னுமா ஒடிக்கொண்டிருக்கிறது? எங்கள் அறிஞர்களின் வசனப் பெருக்கிணைப்போல்?
இறைத்தூதருக்குப்பின் இஸ்லாமிய அரசியல் என்ற தொனிப்பொருள் பற்றிய கருத்தாழம் தொடர்பாக இமாம் ஹசைன் (ரழி) அவர்களைத் தவிர அன்றைய கால கட்டத்தில் யார்தான் அவரைவிட அதிகம் அறிந்திருப்பார்?
அறிவுலகின் தலைவாயில் இமாம் அலி (ரலி) அவர்களின் அந்த ஞானக் குழந்தை இமாம் ஹசைன் (ரழி) அவர்கள் கொல்லப்படுகின்றார் என்பது இன்றைய நிகழ்காலத் தலைப்புச் செய்தியாக இருந்தால் எமது உணர்வலை என்ன?
நாம் யார்மீது இயல்பாகவே அனுதா பம் கொள்வோம். யசீதின் வீரதீரச் செயலைப் பாராட்டி டமஸ்கஸ் அரண் மனைக்கு ரோஜாப் பூத்தட்டுக்க
خص
ளோடு பயணித்து யசீதுக்கு கைலாகு கொடுப்போமா? தளபதியைச் சந்தித் துத் தங்கவாள் பரிசளிப்போமா ? செங்கம்பளத்திற்குச் செந்நிறம் பாய்ச்ச ஹ"சைனின் ரத்தத் துளி களைக் கம்பளத்தில்தான் தெளிப் போமா? யசீதின் மணிமகுடத்திற்கு வைடூரியம் பதித்து அழகுபார்க்க ஆசாரியை அழைப்போமா?
இல்லை ஸைனப் நாயகியின் அழுகையைத் தணித்துவிடத் துடிப் (3LuITLDIT?
ஹ"சைனின் வெட்டுண்ட தலை கண்டு பதறித்தான் போவோமா? ஏனிந்தக்கதி என்று ஏங்கித்தான் தவிப்போமா ? இறைத் தூதர் முத்த மிட்ட ஹ"சைனாரின் வதனத்தைப் போக்கற்ற போர் வீரன் அவமதிக்கத்
யாத்ரா 22

Page 20
36
துணிந்து விட்டால் அமைதிதான்
காப்போமா?
கைபரில் அலியாரைத் தோற்காமல் துணை புரிந்த ஜிப்ரீலை அழைத்தே னும் முறையிடாது போவோமா? பத்ரி லும், உஹதிலும் உண்மைக்காய்த் துணிந்து நின்ற சஹாபாத் தோழரைச் சாட்சிக்கு அழைத்து விடத் துடிக்காதா நம் நெஞ்சம்?
யசீதின் படைவீரர்கள் இறை தூதரின் பரிசுத்த குடும்பத்தாரின் கூபா நோக் கிய பயணத்தைத் தடை செய்து யூப்ரட்டிஸ் நதியைத் தமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து இமாம் ஹசைனின் கூட்டத்தாரைத் தண்ணி அருந்த விடாமல் தடுத்த கர்பலா காவியம் உலக வரலாற்றில் இடம் பெற்ற ஒட்டு மொத்த ஒடுக்கு முறையின் சின்னம் என்றால் அது மிகையாகாது.
ஜிப்ரான் உலக வரலாற்றின் சுருக்கத் தினை மனிதனின் பாடல் எனும் கவிதையின் வாயிலாக விளக்கியி ருந்தார். நானோ கர்பலா ஒரு பாலை நிலத்தில் மனிதம் தொலைத்த சோகக் கதைக்காகக் கண்ணிர் சொட்டப் பாத்திரம் கேட்கிறேன்.
யாத்ரா 22
குறுந்தகவல் தத்துவங்கள்
O
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புத்தான் கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புத்தான் வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில்
உள்ளது வாழ்க்கை
O
காதலிக்கத் தெரியாத பெண்ணின் கூந்தலில் இருப்பதை விட காதலிக்கத் தெரிந்த ஆணின் கல்லறையில் இருப்பது மேலானது
O
g) 600T60)LDUIT60T அன்புக்கு மட்டுமே கண்ணிர்த்துளிகள் தெரியும்
虚 மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட
O விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவுதான் என்று முடியும் வரை தெரிவதில்லை வாழ்க்கை எப்படி என்று
 

37
செங்குருவி
O எம். நிஷான் ஷரீப்
மான்கள் துள்ளும் அவ் வனத்தில் செங்குருவிக்கென இருந்ததோர் மரம் தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம் செங்குருவிக்குப் பிடித்தமானது
அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம் சொட்டு நீருறிஞ்சி வரும் கணங்களில் குளத்தில் விட்டு வரும் செங்குருவி கிளையில் அமர்ந்திருக்கும்
தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு சொன்ன கதைகளையெல்லாம் கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி வானவில் விம்பம் காட்டும் தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால் அருந்தித் திளைத்திருக்கும்
அச் செங்குருவிக்கின்று எந்தத் தும்பி இரையோ இல்லை எக் கிளைக் கனியோ
நடுநிசியொன்றில் அகாலமாய் செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின் அதன் ப்ரியத்துக்குரிய மரத்திலேறிய சர்ப்பம் குறித்த செய்தியை அறிந்துகொள்ளும்
அல்லிப் பூக்களும் குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன மேகங்களும்
பின்னர் துயரத்தில் கதறும்
யாத்ரா 22

Page 21
38
ଦ୍ବିଡ (୬
ஸலாம்
என் வாழ்வை மாற்றியது!
நான் ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரி யாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத் தினேன்.
ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டுக் கத்தோலிக்கப் பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்றத் துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை, நல்ல மனிதர்களோடு பணி யாற்றிக் கொண்டிருந்தேன்.
என்னைப் பார்த்துச் சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் “சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பி
விட்டீர்கள். என்னவொரு மாற்றம்!
நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கை யைத்திரும்பிப் பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின் றேன்.
செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகிய வற்றைப் பற்றிஅன்று ரோமில் படித்துக் கொண்டிருந்தது, இன்று உங்களுடன்
штфДт 22
ஒரு முஸ்லிமாகப் பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.
பாதிரியாராக வர எனக்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாகப் பேசுவ தற்காகவே பயிற்சியளிக்கப்பட்டதாக நான் எண்ணுகின்றேன். சரி, ஏன் பாதிரியார் பணியைத் துறந் தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்தப் பிரச் சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோ லிக்கக் கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்குத் தோன்றியதில்லை. தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னைப் பாதிக்கப்படச் செய்து நேர்வழி காட்டி னான் அவன்.
நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோ லிக்கப் பாதிரியார் மணம் முடித்துக் கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஓர் அங்கமாகத் தொடரும் அதே வேளையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிகக் கடினமான முடிவு இது. என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு.
ܮܳܬܟ݂

இதிலிருந்து விடுபட வேண்டுமென் றால் எனக்குப் புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிகப் பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர் நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து. மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆ. இன்னொரு பிரச்சனையும் இருக் கின்றது.முஸ்லிம்கள். நான் இதுவரை ஒரு முஸ்லிமைக் கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க் கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களைப் பற்றி அறிந்தி ருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக் கலாம்.
என்னிடம் அப்போது பணமும் இல்லை. வேறு வழியும் இல்லை. எகிப்திற்குச் செல்லுவதென முடிவெடுத்தேன். எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமைச் சந்தித்தேன். நான் முதன் முதலாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக் காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு
முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளைத் துடைத்துக் கொண்டி ருந்த அந்தச் சிறுவனால்தான். سميس**
அன்று அந்தச் சிறுவனைத்து கடந்து சென்று கொண்டி ருந்தேன். الحر
39
அலைக்கும்!”
அவன் என்னை நோக்கிக் கூறிய வார்த் தைகள் இவை.
உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்தி லிருந்து வந்த வார்த்தைகள். என் ஒட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனைக் கடந்துதான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தை களைக் கற்று கொண்டேன். அவனைக் கடந்து செல்லும்போது ‘எப்படி இருக்கின்றாய்? என்று கேட் பேன்.
அவன் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)?
பதிலளிப்பான்.
என்று
ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது,
யாத்ரா 22

Page 22
அந்தச் சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும் மற்றும் அல்ஹம்து லில்லாஹ்” என்ற வார்த்தைகளால் தான். விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்குத் திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்துத் தெரிந்திருக் கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது
போன்று இல்லை.
கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiqhas a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். குறும்புக்காரச் சிறுவர் களைக் கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள். அந்தச் சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்துப் பாடம் எடுப்பது. கிருத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்த வன் நான். யூத மதத்தைப் பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்த வன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது. இஸ்லாம் குறித்து இந்த மாணவர் களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்துப் படிக்க ஆரம்பித்தேன். நிறையப் படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.
ԱյՈégՈ ջջ
40
மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும். நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாகரித்துக் கொள் வேன்.
ரமலான் மாதம் வந்தது. இந்தச் சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில்தான் தரைவிரிப்பும் CCarpetD, Guncis Guagub CWash basin) உள்ளன. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா? அனுமதித்தேன் சிறுவர்கள் தொழுவதைப் பின்னால்
உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ (குனிவது) செய்வது என இவை என்னை வசீகரித்தன. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகை யில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன். ரமலான் முடிவில், இந்தச் சிறுவர்கள் மூலமாக எப்படித் தொழவேண்டுமென் பதை அறிந்திருந்தேன். அது போல, ரமலான் மாத ஆரம்பத்தி லேயே இந்தச் சிறுவர்களிடம் கூறியிருந் தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ் விற்காக அல்ல, இந்தச் சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக! ஆக, ராமலான் மாத முடிவில், எப்படித் தொழ வேண்டுமென்பதை அறிந்திருந் தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.
 

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந் திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்குச் செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்குச் சொல்லிகொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள,
சில வாரங்களுக்குப் பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற் பொழிவை அந்தப் பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.
'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள
41
வேண்டுமென்பதற்காகக் கேட்கின்றேன்,
ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்? அவர் கூற ஆரம்பித்தார். 'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம் கள்.??
'எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.? 'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர் அதள்??
'உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால், அரபியில் எப்படித் தொழ வேண்டுமென்று எனக்குத் தெரியும்." என்னைப் புதிராகப் பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார். "முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு
والضر
நோற்பார்கள்.?
'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்.?
என் கண்களை நேரடியாகப் பார்த்த யூசுப் இஸ்லாம், "சகோதரரே, நீங்கள் ஏற்க னவே முஸ்லிம்தான். யாரை முட்டா ளாக்கப் பார்க்கின்றீர்கள்??? என்றார்.
பின்னர், 'அல்லாஹ9 அக்பர் (இகாமத்) என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப் பைக் கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காகச் செல்ல ஆரம்பித்தார்
éᏏᎶᎱᎢ.
நான் மது அருந்தியவனைப் போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தன. தொழுகை நடக்கும் இடத்திற்குச் சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக் காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந் தேன். தொழுகை ஆரம்பித்தது. மிக மிக அழகான தருணம் அது. குர்ஆனின் வசனங்கள் ஒதப்பட. அழ ஆரம்பித்தேன். அழுது கொண்டே இருந்தேன். அழுது கொண்டே இருந்தேன். சிறு குழந்தையைப் போல அழுது கொண்டிருந்தேன்.
அந்தத் தருணத்தில் நான் உணர ஆரம் பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது என்று. தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன். 'சகோதரரே, நான் முஸ்லிமாக வேண்டு
யாத்ரா 22

Page 23
மென்று விரும்புகின்றேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்." அவர் சொன்னார், 'நான் கூறுவதைத் திரும்பக் கூறுங்கள். வணக்கத்துக்குரிய வன் அல்லாஹ் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின் றேன்.?
அவரைப் பின் தொடர்ந்து கூறினேன், *வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள், அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.' அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது. முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லி மாக வாழ விரும்புகின்றேன்.
நான் இப்போது மிகுந்த மன அமைதி யுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்துக் கூடப் பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கின்றான். என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல் லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம் களையும் குறிப்பாக இளைஞர்களைக் கவர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தரு கின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருப்பேன்.
யாத்ரா 22
42
சுபுஹானல்லாஹ். இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ் லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது. முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்புப் பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒர் அழகிய உதாரணம்.
இஸ்லாம் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக், இவை மட்டுமல்லாது பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்து வருகின்றார்.
உலகம் முழுதும் பயணம் செய்து அழைப் புபங் பணியில் ஈடுபட்டு வருகிறார் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்கள்.
Brother Idris Towfiq's website:
1, idristawfiq.com. link
My sincere thanks to: 1. Canadian Dawah Association.
This article translated from (nota Word to Word translation): 1. Irish priest embraces Islam & Canadian Dawah Association website. link
2. IQRAA TV & British Catholic priest converted to Islam. link
நன்றி: The Message Of Islam. Upsi(SLIITLD GlaruebLIGG36 uТLb = ஆவழிக அகமட்

43
மனதோடு ஒரு வனம்
&Ové855.
இருள் கசியம் பெருவனத்தில் ஆங்காங்கு ஊடுருவும் ஒளித்திவலைத் துணையோடு
பறந்தலையது மனப்பட்டாம் பூச்சி
வெண்முத்தாய் நுரைத்தோடும் காட்டாற்றில் கலந்தோடி அல்லிச் செண்டு நீட்டும் குளமொன்றில் அமிழ்ந்தெழும்பி பச்சைக் கேசமொன்றாய் நீண்ட புல் வெளியில்
பரண்டு, இறகுலர்த்தி அடர் வனமொன்றில் அலைந்தோடுது மனப்பட்டாம் பூச்சி
பொய்மையால் போர்த்தியள்ள வெளியலகப் பிரக்ஞையற்று முகமூடி மனிதர்களின் மூச்சுக்காற்றுத் தீண்டலற்று காட்டுக் கொடியொன்றில் இன்னும் ஊஞ்சலாடி உவகை கொள்கிறது மனப்பட்டாம் பூச்சி!
ԱյՈégՈ ջջ ܬܡ.ܶ

Page 24
44
ඌlඛශ්‍රී[Jöal] சிஹாப்தீனின்
‘ഉന്ദ്ര, 8DIങ്ങ8)
61fចំgbយឃ្លា&6r
Uஸ்லி ஆகுமீட்
ஒரு சமுதாயத்தின் நடைமுறை வாழ் வியல், வரலாறு என்பவை பெரும்பாலும் இலக்கியங்களிலும் ஆவணப்படுத்தப் படுகின்றன. ஓர் எழுத்தாளனின் எழுத் துக்களில் ஏதோ ஒரு வகையில் அவன் வாழும் புறச் சூழல் பிரதிபலிக்கப் படுவதனால் அது நடைமுறையிலும், பிற்காலத்திலும் அவனது சமுதாயத்தை அறியப் பயன்படும் தடயங்களாக அல்லது வாழ்வியல் அத்தாட்சிகளாக மாறிவிடுகின்றன. எனவே வித்தியாச மானசிந்தனை, வாழ்க்கை அணுகுமுறை களைக் கொண்ட பல்வேறு சமுதாயங் களுக்கிடையில் பொதுவான அம்சங் களை மேம்படுத்துவதில் இந்த மொழி பெயர்ப்புக்கள் முக்கிய பங்காற்று வதனால் இன்று மொழிபெயர்ப்பு நூல் கள் மிகப் பரவலாக வெளிவருவதுடன் அவை பெருமளவில் வரவேற்கவும் படுகின்றன.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனிக் கலையாகும். அதனை யார் வேண்டுமா னாலும் செய்துவிட முடியாது. ஒரு மொழிபெயர்ப்பாளன் தான் எந்த மொழி யிலிருந்து எந்த மொழிக்கு மொழி பெயர்க்கிறானோ அந்த இரண்டு மொழி களிலும் சம அளவிலான பரிச்சயம் உள்ளவனாய் இருத்தல் வேண்டும். ஒரு
ULUMTģŠATIT 22
யத்தை மொழிபெயர்ப்புப்
சினிமாவை மொழிபெயர்ப்பது போல ன்றி எழுத்து இலக்கியத்தை மொழி பெயர்த்தல் என்பது சவாலான ஒரு விடயமாகவே இருக்கும். மூலப் பிரதி யின் எழுத்துக்கள் வரைந்த அதே ஒவி பிரதி வரையுமா என்பதில்தான் மொழிபெயர்ப் பாளனின் ஆளுமை அளவிடப்படுகின் றது. இன்று உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டதாகப் பேசப்படும் நிலை யில் ஒரு கலாச்சாரப் பின்னணியில் உள்ள ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தின் கலாச்சாரத்தை விளங்கிக் கொள்வதில் மொழியே முக்கிய முட்டுக் கட்டையாக நிற்பதைக் காணலாம். இதனால்தான் உலகம் தனிக்கிராமம் என்று உணரப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகளின் அவசியம் மேலோங்கி நிற்கின்றது. அந்தவகையில் மிக அண்மையில் பிரபல எழுத்தாளரும், கவிஞருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களினால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள 'ஒரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்’ எனும் அரபுச் சிறுகதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு நூல் இலக்கிய உலகில் மிகுந்த அவதானத்தைப் பெற்றிருப் பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ܓܵܬܟ݂

உலகளவில் அறியப்படுகின்ற அரபு எழுத்தாளர்கள் ஒன்பது பேரின் பத்துச் சிறுகதைகள் வழிமொழியான ஆங்கி லத்திலிருந்து அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களால் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வித்தியாசமான வெளியீடுகளை இலக்கிய உலகிற்குத் தந்து கொண்டிருக்கும் அவரின் இம் முயற்சி அரபிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக உலகத்தின் கவனம் அரபுத் தேசத்தின்பால் திரும்பியுள்ள நிலையில் இதயத் துடிப்புகளின் சில அதிர்வு களை இத் தொகுப்பில்
அம்மக்களின்
உள்ள கதைகள் துல்லிய மான தமிழில் விளக்கி நிற்கின்றன. இக்கதைகள் | அரபுப் பிராந்தியத்தின் வெவ்வேறு நாடுகளில் நீண்டகால இடைவெளி களில் எழுதப் பட்டவைகளா யிருந்த போதிலும் தொகுப் பினை வாசிக்கும் போது சமகாலத்தில் எமது சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டி ருக்கும் சம்பவங்கள் என்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன.
'மஹ்மூம் சயீத் அவர்களின் விசர்நாய்க் கடி" என்ற கதை, தொகுப்பில் முதல் கதையாக இருப்பதுடன் அது ஈராக்கில் சதாம் ஹ?ஸைனின் ஆட்சிக் காலத்தை மையமாக வைத்து மிகவும் அருமையாக வரையப்பட்டுள்ளது. மஹ்மூத் சயீத் அவர்களின் கதை சொல்லும் ஆற்றலை, விறுவிறுப்பாக நகரும் இக்கதையில்
لهجر
45
ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்
மிகச் சிறப்பாய் அவதானிக்கலாம். இக்கதை அதிகாலைத் தொழுகைக்கான அழைப்புடன் ஆரம்பிக்கின்றது. தொழுகை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகும். தொழுகை யில்லாதவன் இஸ்லாத்தில் இல்லை என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் கதையில் வரும் தம்பதியினரைக் கொண்டு அவர்களைத் தொழுகையில் சிரத்தை காட்டாத ջe(b சமுதாயத்தினரா கவே அறிய முடிகின்றது. அவர்கள் தொடர்ச்சியான துன்பங்களுக்கு முகங் கொடுக்க இதுவும் ஒரு காரணம் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் மஹ்மூத் சயீத் அவர்கள் அதிகாலைத் தொழுகை அழைப்பைக் கதைக்குள் புகுத்தியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அதே போன்றே தொகுப் பில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ள 'புகையிரதம் என்ற கதையும் மஹ்மூத் சயீத் அவர்களால் எழுதப் பட்டதே. இக்கதையில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிந்திய சொல்லியிருக்கிறார் கதாசிரியர். ஒரு புகையிரதத்தில் பயணிக் கும் நான்கு சிறார்களைப் பற்றியதே கதை. இக்கதையைச் சொல்வதற்காகப் புகையிரதத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமாகத் தெரிகின்றது. கதை முழுதிலும் சிறார்களின் குறும்புத் தனமான செயல்கள் நிரம்பியிருக்கின்ற போதிலும் அவற்றைச் சிரித்து இரசிக்க
முடியாமல் வாசகர்களினது உணர்வு
ஈராக்கையே
களைக் கட்டிப்போடும் கதாசிரியர் ஈராக்கில் நடந்தேறிய கொடிய யுத்தத்தின்
யாத்ரா 22

Page 25
46
விளைவுகளை யுத்தம் பற்றி எதுவுமே கதைக்காமல் கண் முன்னே படம்போட் டுக் காட்டியிருக்கிறார். இதே போன்றே தெளஃபீக் அல்ஹகீம், தையிப் ஸாலிஹ், ஸ்கரிய்யா தாமிர், கஸ்ஸான் கனஃபானி, யாஸர் அப்தல் பாக்கி, ஒமர் எல் கித்தி மற்றும் பெண்களான ராபியா ரைஹான், ஜூக்ஹா அல் ஹார்த்தி போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற கதாசிரியர்களின் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம் பெறுவதனூடே இவர்கள் தமிழ் வாசகர் களுக்கு அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர் களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள னர்.
கஸ்ஸான் கனஃபானி அவர்களின் காஸாவிலிருந்து ஒரு கடிதம் கவசப் பீரங்கிகளின் மீது எறியப்படும் சிறிய கற்களின் வலிமையைச் சொல்லும் மற்றுமொரு கதை. ஒரு கடிதத்தின் வடிவில் எழுதப்பட்டுள்ள இக்கதையை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவரும் அது தமக்கே வந்த கடிதம் என்ற உணர் வைப் பெறுகின்றனர். பொதுவான சில பிரச்சினைகளிலிருந்து தம்மை மட்டும் தப்பவைத்து ஒட நினைப்பவர்களைக் கதைக்குள் கட்டி இழுக்கிறார் கஸ்ஸான் கனஃபானி அவர்கள்.
அதே போன்று சுமார் 15 பக்கங்கள் வரை நீளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிக் கதையான நெடுநாள் சிறை வாசி? ஒமர் எல் கித்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் மிகச் சாதாரண வரிகளைக் கையாளும் கதாசிரி யர் ஒரு சிறைச்சாலை பல்கலைக்கழக மாக மாறும் விதத்தை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். நாகரிக மோகம் கொண்ட ஒர் இளைஞன் ஒரு பெண் ணைக் கிண்டலடித்த காரணத்திற்காக
யாத்ரா 22
சிறைபிடிக்கப்படுகிறான். சந்தர்ப்ப சூழ்நிலை அவனுக்கு எதிராகவே அமைந்துவிடுவதால் சுமார் 25 வருடங் களை அவன் சிறையில் கழிக்கவேண்டி வருகிறது. இந்தக்காலப்பகுதியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங் களை மிகவும் தத்ரூபமாகத் தான் அனுப வித்ததைப் போன்று சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.
அதே போன்று இத்தொகுப்பில் இரண்டு பெண் எழுத்தாளர்களின் கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்று மொறு விடயமாகும். ராபியா ரைஹானின் 'சிவப்புப் புள்ளி' என்ற கதையும் ஜூக்ஹா அல் ஹார்த்தியின் 'திருமணம்’ என்ற கதையுமே அவை. இவ்விரண்டு கதைகளிலும் அரேபியப் பெண்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இரு கதைகளுமே திரும ணத்தைப் பற்றிக் கதைக்கின்ற போதி லும் அவை இருவேறு கோணங்களில் வாசகர்களைச் சிந்திக்க வைக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இத்தொகுப்பினை வாசித்து முடிக்கும் போது அது ஏற்ப டுத்தும் அதிர்வுகள் மிக முக்கியமான வையாக உள்ளன. ஒவ்வொரு கதையும் வாசகர் மனங்களில் நீண்ட நேரம் பதிந்திருக்கின்றன. உணர்வுகளோடு கதைக்கின்றன. கேள்விகளை எழுப்பு கின்றன. உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இக்கதை களை நிரப்பியிருக்கும் சாதாரண எழுத் துக்களில் உள்ள அழகு அவற்றை உலகளவில் பேசச் செய்துள்ளன. உதார ணத்திற்கு ஒமர் எல் கித்தி அவர்களின் நெடுநாள் சிறைவாசி கதையில் ஸாலிஹ் ஒரு பெண்ணைத் தொந்தரவு
ܢܬܼܵܐ

செய்தமைக்காகச் சிறைப் பிடிக்கப்படும் போது நிலத்தில் விழுந்து கிடக்கும் அப் பெண்ணின் காதணியைக் கையில் எடுத்துக்கொள்கிறான். 25 வருடங்க ளுக்குப் பின்னர் அவன் விடுதலை யடைந்து வெளிவந்த பின்னர் அந்தக் காதணியை மீண்டும் கதைக்குள் கொண்டுவந்து வாசகர்களின் உணர்வு களைத் தொட்டிருப்பதைக் கூறலாம்.
அதே போன்றே ஜூக்ஹா அல் ஹார்த்தி யின் திருமணம் கதையில் ஸலாமா என்ற பிரதான பாத்திரத்தை ஒரு கதிரை யில் உட்காரவைத்தபடியே முழுக் கதை யையும் கொண்டு சென்றிருக்கும் விதமும் அரபுக் கதாசிரியர்கள் எழுத்துக் களில் கையாளும் அழகை எடுத்துக் காட்டுகின்றன. ஒன்றை வைத்து ஒன்றைச் சொல்வது இத் தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் அவதானிக் கக்கூடிய பொதுவான விடயமாக உள்ளது. ஒரு கதைக்குள் வாசகரை ஆழமாக நுழையவிட்டு அதற்குள் இருந்து இன்னும் பல கதைகளை வாசகர்களுக்கு உணரச் செய்வதே இக் கதைகளின் மிக முக்கியமான சிறப்பு எனலாம்.
அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் மொழி பெயர்ப்பை நோக்கும் போது அது அவரின் மொழி வல்லமையை மீண்டும் ஒரு முறை பறைசாற்றி நிற்கின்றது. இத் தொகுப்பில் ஒருவரால் எழுதப்பட்ட கதைகள் அல்லாமல் ஒன்பது கதாசிரி யர்களின் கதைகளைத் தெரிவு செய்தி ருக்கும் முறையும் அவ்வொன்பது பேரின் ஒன்பது விதமான உரைநடைகளுக் கேற்பத் தனது பேனாவை வளைத்துள்ள விதமும் அவரின் திறமையைத் தனித்து வமாகக் காட்டும் அம்சங்களாகும். இந்த
ܕܬܬܐ
47
ஒன்பது விதமான உரைநடைகளின் வித்தியாசங்களைப் பேணுவது என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு மிகவும் சவாலான விடயமாகவே இருக்கும். இந்த வித்தியாசத்தைக் காட்டுவதற்காகத் தானோ அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மஹ்மூத் சயீத் அவர்களின் இரண்டு கதைகளைத் தெரிவு செய்து அவ்விரு கதைகளிலும் ஒரேவிதமான உரை நடையையும் ஏனைய கதைகளில் உரை நடைகள் வித்தியாசப்படுவதை அவதா னிக்கும்படியும் கதைகளைத் தேர்ந்தெடுத் துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.
அடுத்து அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் கதை சொல்லியிருக்கும் விதம் இக் கதைகள் வழி மொழியான ஆங்கிலத்தி லிருந்து அன்றி மூல மொழியான அரபிலிருந்தே மொழி பெயர்க்கப் பட்டிருப்பது போன்ற உணர்வையும் தருகின்றது. ஒவ்வொரு கதையிலும் அவர் சொற்களைப் பயன்படுத்தியிருக் கும் விதம் வியக்க வைக்கிறது. கதை களை உற்று வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம்.
புகையிரதம் கதையில் பல இடங்களில் விளக்குகள் பற்றிய வர்ணனைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரே சொல்லைக் கையாளாமல் வித்தி யாசமான சொற்களைக் கொண்டு வர்ணித்துள்ளமையை உதாரணமாகக் காட்டலாம். இப்படியான சின்னச் சின்ன விடயங்களில் கூட நுணுக்கங்களைக் கையாண்டிருக்கும் நூலாசிரியர் தன்னை ஒரு தலைசிறந்த மொழிபெயர்ப்பாள ராக அடையாளப்படுத்தியுள்ளார்.
'அவர்கள் நால்வரும் ஒன்றாகவே நடந்து சென்றார்கள். அவர்களில் மூவர் பாட சாலைச் சிறார்கள் போலப் பைகளை
யாத்ரா 22

Page 26
முதுகுகளில் தாங்கியிருந்தனர். பன்னி ரண்டு வயது மதிக்கத்தக்க அவர்களில் மூத்தவளாகத் தெரிந்தவள் மட்டும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரயாணப் பெட்டியை இழுத்தபடி நடந்து கொண்டி ருந்தாள். அவர்கள் கொஞ்சம் நடப்பதும் கொஞ்சம் தரிப்பதுமாயிருந்தனர். ரயில் நிலைய மின் விளக்குகளின் வெளிர் ஒளியைப் பார்த்து வியந்து தமது நடை யைத் தாமதித்தனர்" என்று தொடரும் 'புகையிரதம்" என்ற கதையைப் போன்றே அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இலகு வான, இனிமையான எழுத்துக்கள் ஒவ் வொரு கதையிலும் படர்ந்து விரிவத னால் ஒரு கதையை வாசிக்க எடுத்ததும் அது முடியும்வரை தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டும்படியாய் உள்ளது. அதே போன்றே ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும் கதாசிரியர் பற்றிய குறிப் புக்களைத் தந்திருப்பதினூடாக வாசகர் களுக்கு அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்குமிவும் வாய்ப்பாக உள்ளது. அரபுலகச் சிறுகதைகளை முதன்முறை யாகத் தமிழுக்கு மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் வாசகர்களின் அரபு இலக் கியத்தின் மீதான ஒரு பிணைப்பை நீண்டஇடைவெளிக்குப் பின் ஏற்படுத்தி யிருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் இத் தொகுப்பின் மூலம் மீண்டும் இலக் கிய உலகின் கவனத்தினைத் தன்பால் ஈர்த்துள்ளார். இருந்த போதும் இதற்கு முன் அவர் வெளியிட்ட ஒரு குடம் கண்ணீர்? என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பின் பாதிப்பு இன்னும் அவரை விட்டுப் பிரியவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. இத் தொகுப்பின் தலைப்பு முதல் கதைகள் வரை இப் பாதிப்பினை உணரக் கூடியதாய் உள்ளது.
UnTģignT 292
48
நூலுக்குப் பொருத்தமான அழகிய அட்டைப்படம் டெலன்ட் பிரின்டெக்7 கின் பஞ்சு போன்ற காகிதத்தில் அற்புத மான அச்சுப்பதிப்பு மற்றும் புத்தகக் கட்டமைப்பு என்பன பார்த்த பார்வை யிலேயே நூலுக்குச் சர்வதேசத் தரத்தி னைக் கொடுத்து நிற்கின்றன.
திருமணம் என்ற கதையில் அரபுச் சொற்களுடன் இலக்கங்களைச் சேர்த்தி ருப்பது முதலில் படிக்கும் வாசகர்களுக் குக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. நெடுநாள் சிறைவாசி என்ற கதையில் இப்போதுதான் சேர்த்தின் கோவேறு கழுதையுடன் ஏற்பட்ட விபத்தில் ஒரு நூலில் தப்பி வந்திருக்கிறேன். இப் போது நீயும் வந்து மோதிவிட்டாய்!? என்று வரும் இடத்தில் இப்போது இப்போது என்று தொடர்ந்து வருவதால் ஒர் இடத்தில் சற்றுமுன் என்றோ அல்லது அது போன்ற ஒரு சொல்லையோ பயன் படுத்தியிருக்கலாம் என்று எண்ணம் வருகிறது. மிகவும் சிரமப்பட்டுத் தேடிய தில் நூலின் 8ம் பக்கத்தின் கடைசி வரி யில் ஓர் எழுத்துப் பிழை இருப்பதாய்த் தெரிவதோடு 1Oம் பக்கத்தின் இரண் டாம் பந்தியில் ஒரு சொல் தவற விடப் பட்டுள்ளதோ என்ற சிந்தனையும் வரு கின்றது.
உலகத் தரத்திலான அரபுக் கதைகளின் சுவையை அனுபவிப்பதற்குத் தமிழ்
வாசகர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்
தித் தந்த அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர் களைத்தமிழ் இலக்கிய உலகம் என்றென் றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளதுடன் அவரின் நூல்களை இன்னுமின்னும் எதிர்பார்த்து நிற்கிறது. அதற்கான சக்தியையும், ஆற்றலையும் அல்லாஹ் அவருக்கு வழங்குவானாக. d
ܓܵܬܕ݂

C
드 Գ3 :3
S. S
歴
நன்றி. மூன்றாம் கோணம்
49
அவள் வருவாள் என்பது இலக்கணத்தில் எதிர்காலம்! அவள் வருவாள் என்பது இலக்கியத்தில் எதிர்பார்ப்புக் காலம்! அவள் வருகிறாள் என்பது இலக்கணத்தில் நிகழ்காலம்! அவள் வருகிறாள் என்பது இலக்கியத்தில் மகிழ்காலம்!
நிலவே நேரில் வந்தது என்பது இலக்கணத்தில் உருவகம்!
நிலவே நேரில் வந்தது என்பது இலக்கியத்தில் உருகும் மணம்
பூவைப் போன்ற முகம் என்பது இலக்கணத்தில் உவமை பூவைப் போன்ற முகம் என்பது இலக்கியத்தில் அடிமை!
அவள் காதலிப்பாளா என்பது இலக்கணத்தில் வினா! அவள் காதலிப்பாளா என்பது இலக்கியத்தில் கணா!
அவள் பார்க்க மாட்டாள் என்பது இலக்கணத்தில் எதிர்மறை அவள் பார்க்க மாட்டாள் என்பது இலக்கியத்தில் ഗ്രഖങ്ങെ' கண்களில் பொலபொலவென்று என்பது இலக்கணத்தில் இரட்டைக் கிளவி கண்களில் பொலபொலவென்று என்பது இலக்கியத்தில் இரட்டை அருவி! அவள் போனாள் என்பது இலக்கணத்தில் இறந்த காலம் ! அவள் போனாள் என்பது
இலக்கியத்திலும் இறந்த காலம்!
штфДт 99

Page 27
யுத்தரங்கள்
செய்வத.
சுதாறrத்
நேட்டோ விமானங்கள் குண்டு வீசிய போது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன் னும் தூங்கியிருக்கவில்லை. சட் டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகு தூரம் வரை பார்க்கக்கூடியதாயிருக் கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடி வந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மை யான இடங்களில் நடந்திருக்குமோ. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம்.
நேட்டோ படையினரின் குண்டு வீச் சுக்களும். அவற்றைத் தொடர்ந்து லிபிய அரசப் படையினரின் வான் நோக்கிய விமான எதிர்ப்பு வேட்டுக் களின் சத்தங்களும் சில இரவுகளாகத் திரிப்போலி நகரின் இரவுகளைக் கலக்கிக் கொண்டிருந்தன.
என் அறைக் கதவு அவசர கதியிற் தட்டப்பட்டது.
штфTт 92
அழைப்பொலியை விசைக்காமல் இப்படி நாலு வீடுகளை எழுப்புவது போலப் படபடப்புடன் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதவின் கொளுக் கியை விடுவித்துத் திறப்பதற்கு முற் படும்போதே, அதைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள். பிரியசாந்தவும் சந்திரசேனவும்.
நான் பணியாற்றும் கம்பனியின் ஊழியர்களான இவர்களும் இதே கட்டடத்தின் இன்னொரு அறையிற் தங்கியிருந்தார்கள். விமானக் குண்டு வீச்சுத் தொடங்கிய நாளிலிருந்து குழம்பிப்போயிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, 'இலங்கைக்குப் போகவேண்டும். அதற்கு ஒழுங்கு செய்யுங்கள்." என நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
யுத்தம் உக்கிரமடைந்து வான்வழி தடை வலயமாக்கப்பட்டிருக்கும் கட்ட டம் இது. லிபியாவிலிருந்து நினைத்த வுடன் இலங்கைக்குப் போவதென்பது இயலுமான காரியமல்ல என்பது இவர் களுக்கும் தெரிந்திருந்தது. எனினும் ஒவ்வொரு குண்டு வீச்சின்போதும்
ܥܰܬܐ

எனது அறைக்கே வந்துவிடுகிறார்கள்.
இவர்களை விட நான் மிகவும் குழம் பிப்போயிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். கிரீஸ் நாட்டைத் தலைமை அலுவலகமாகக் கொண்ட கம்பனியின் லிபிய நாட்டில் ஆரம் பிக்கப்பட்ட புறஜெக்ட்டிற்கு முகா மையாளராக இங்கு வந்திருந்தேன்.
இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டு பெப்ரவரி மாதம் லிபிய நாட்டின் கிழக்குப் பகுதியான பெங் காசி நகரில் ஆரம்பித்த கிளர்ச்சி, பின்னர் உத்வேகம் பெற்று ஒவ்வொரு நகரமாகப் பரந்துகொண்டிருந்தது.
அதைத் தொடர்ந்த யுத்த நடவடிக் கைகளும், அதனால் பாதிக்கப்பட்ட கம்பனியின் தொழிற்தல அலுவல்கள் மற்றும் உள்நாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள். அவற்றைக் கையாள
51
முடியாது இடை தடைப்பட்டு அல்லது துண்டிக்கப்பட்டுக் கொண்டி ருந்த தொடர்பு வசதிகள், இந்த நிலைமையிலும் இவற்றையெல்லாம் தலைமை அலுவலகத்துடன் பரிமாறி பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கடமைகள். இப்படி இப் படி நிறையப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது இவர்களை எப்படிச் சமா ளிப்பது என்ற பிரச்சினை எனக்கு.
கம்பனியில் பணியாற்றிக்கொண்டி ருந்த இலங்கையர்களை வான்வழி தடைவலயமாக்கப்படுவதற்கு முன் திரிப்போலியிலிருந்த இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்கள் ஒழுங்கு செய்திருந்த விசேட விமானமூலம், மார்ச் மாத ஆரம்பத்தில் நாட்டுக்கு அனுப்பியி ருந்தோம்.
штфTт 99

Page 28
அப்போது பயணித்த இருபது தொழி லாளர்களுடன் சேர்ந்து போகாமல் பிரியசாந்தவும் சந்திரசேனவும் தாங்க ளாகவே வேண்டி நின்றது எனக்காகத் தான். கம்பனியின் வேலைத் திட் டத்தை இடைநிறுத்துவதற்கு முன் சில ஒழுங்குகளைச் செய்ய வேண்டி யிருந்தமையால் எனக்கு உடன் வெளியேற முடியாமலிருந்தது. அதற்கு இன்னும் சில நாட்களாகலாம். வான்வழி தடை செய்யப்பட்டாலும் பின்னர் வேறு மார்க்கமாகப் பாதுகாப் பாக அனுப்பிவைப்பதாகக் கம்பனி கூறியது. அப்போதுதான் இவர்கள், “உங்களைத் தனியே விட்டுப் போவது சரியல்ல. உங்களுக்கு உதவியாக நிற்கிறோம்.’’ என நின்றுகொண் டார்கள்.
'வாடிவென்ட, ரீவீயெகென் பலமு. பொம்பெய வடுனே கொஹேட்டத கியலா (இருங்கள். குண்டு எங்கே விழுந்திருக்குமென்று foSuS 6) பார்ப்போம்.) - பதற்றப்பட்டுக் கொண்டு நின்ற இருவரையும் ஆறு தற்படுத்தும் நோக்கில் அமரவைத் தேன். அதிர்ச்சியில் ஏங்கிப்போனவர் களாக, பதிலேதும் பேசாமலிருந்தார்
Ց56/T:
சர்வதேசச் சனல்களில் குண்டு வீச்சு நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே துல்லியமாக விபரங்களைத் தெரிவித் துக்கொண்டிருந்தார்கள். அவர்களது ஊடகச் செய்தியாளர்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் நடக்கும் கிளர்ச் சிப் போராட்டங்களையும் குண்டு வீச்சுத் தகவல்களையும் அவ்வப் பகுதிகளிலிருந்து அவ்வப்போதே தந்துகொண்டிருந்தார்கள். சற்று முன்
штфлт 99
52
இராணுவத்தினரின் ஆயுத ஸ்டோருக் குத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த விபரங்களை ரீவீ காட்டிக் கொண்டிருந்தது. லிபியாவின் விமான எதிர்ப்புத் தளங்கள், இராணு வத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள், அரச தரப்பினரின் கட்டடங்கள் மற்றும் கடாபியின் மாளிகைகள் எனக் குண்டு வீச்சுத் தொடங்கிய நாளிலி ருந்து தாக்கி அழிக்கப்பட்டன. தாக்கு தல் நடத்துபவர்கள் அப்படித்தான் கூறிக்கொண்டிருந்தாலும் எல்லா யுத்தங்களையும்போல இங்கேயும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படும் தகவல்களும் வந்து கொண்டிருந்தன.
'பார்த்தீங்களா. யுத்த நிலைமைகள் பற்றிய நேரடி ஒளிபரப்புப் போல என்ன நடக்குதென்று உடனுக்குடன் அறியக்கூடியதாயிருக்கு. இலங்கை யில் யுத்தம் நடந்தபோது செய்தி யாளர்களை யுத்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கவில்லை. அங்கு என்ன நடந்ததென்றே இன்னும் சரியாகத் தெரியாது.”
இவர்களது கவனத்தைத் திருப்புவ தற்காக அப்படிக் கூறினாலும் எனக்கு அந்த வேளையிற் தோன்றிய உணர் வும் அதுதான். ஆனால் இருவருமே அதற்குக் காது கொடுக்கவில்லை. பயந்த நிலையிலிருந்து இன்னும் தெளியாமலிருந்தார்கள்.
ஏற்கனவே யுத்தப் பிரதேசங்களிலி ருந்த அனுபவமற்றவர்களாதலால். இவர்களுக்கு ஏற்படும் பய உணர்வு இயல்பானதுதான். இலங்கையில் வட பிரதேசத்தைச் சேர்ந்தவன் நான்.
ܢܬ̇ܬܲܟ݂

அங்கு யுத்தம் ஆரம்பித்த காலத்தி லிருந்தே ஒவ்வொரு காலகட்டத் திலும் வெவ்வேறு விதமான குண்டு வீச்சுகளுக்குளெல்லாம் நேர்ந்த அவலங்களுக்குள் அகப்பட்ட அனுப வங்கள் எனக்கு உண்டு. இருண்ட இரவுகளில் கோர இரைச்சலுடன் வரும் விமானங்கள் குடிமனைகளின் மீது குண்டுகளைத் தள்ளிவிட்டுப் போகும். படை முகாம்களிலிருந்து ஏவப்படும் ஷெல்கள் எந்த இட மென்றில்லாமல் விழுந்து அழிவுகள் செய்யும்.
' ' (8 g fी . . கெதற லமயி பயவெலா. என்ட கியலா அன்டனவா." (வீட்டில் பிள்ளைகள் பயந்து. வரச்சொல்லி அழுகிறார்கள்.)
'பிரியசாந்த. பயவென்ட எப்பா. ஒய கொல்லன்ர மொக்கக்வத் வென்ன நே.' (பயப்படவேண்டாம் உங்க ளுக்கு ஒன்றும் நடக்காது.)
யுத்தமும் குண்டு வீச்சும் சஜமான விஷயம் என்பது போல, நான் பட்ட யுத்த அனுபவங்களைக் கூறத்தொடங் கினேன். அதைக் கேட்க இவர்க ளுக்கு எரிச்சல்கூடத் தோன்றலாம். எனினும் வேறு வழி இல்லை. இவர் களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
يخضر
53
நானும் குழம்பிப்போயிருக்கிறேன். இந்த நடு இரவில் யுத்தச் சூழ்நிலை யால் குழம்பிப்போனவர்கள் எல்லாம் சேர்ந்து வேறு எதைத்தான் பேசுவது? அப்போது மலைகளே இடிந்து விழுவதுபோல இன்னொருமுறை தொடர் குண்டுவீச்சின் சத்தத்தில்
கட்டடம் அதிர்ந்தது. வெளியே எல்
லாப் பக்கங்களிலுமிருந்து வான் நோக்கி ஏவப்படும் விமான எதிர்ப்பு  ேவ ட் டு க் க ள் செந்த ண ல் களாக விண் ඊඞ.6']ණි .  ெக ர ன் டு , சென்றன. அது
് ഥ ഉ) b
பயத்தை அதிகரித்தது.
'தவம மெஹே இன்ன.எக்க மோட வெடக் சேர். கோம ஹறி லங்காவட்ட யன்ன ஒனே. (இன்னும் இங்கே இருப்பது மோட்டுவேலை. எப்படி யும் இலங்கைக்குப் போகவேண்டும்)
பிரியசாந்தவின் குரல் நடுக்கத்துடன் அரைகுறையாக வெளிவந்தது. எப்போதும் சிரித்த முகம் கொண்ட சந்திரசேன விழி பிதுங்கிக்கொண்டு நின்றான். எனக்கு இவர்கள்மேல் ஏற்பட்ட இரக்கத்தைவிட, எப்படி
யாத்ரா 22

Page 29
54
இவர்களது நச்சரிப்பை நிறுத்தலாம் னால் நியமிக்கப்பட்டு, சாரதியாகக்
என்ற அலுப்பே மேலோங்கியது.
"மங் ஹெட்ட ஒஃபீசியட்ட கத்தா கறலா மொனவஹறி பிலிவெலக் கறன்னங். பயவென்ன எப்பா." (நான் நாளைக்கு அலுவலகத்துடன் கதைத்து ஏதாவது ஒழுங்கு செய்கி றேன். பயப்படவேண்டாம்.)
உண்மையில் அடுத்த நாள் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது எனக்கு நிச்சய மில்லை. தொலைத் தொடர்பு வசதி கள் எப்போதும் தடைப்பட்டு, எப்போ தாவது இயங்கும் நிலையிலிருந்தன. நாள்முழுதும் முயற்சித்தாலும் ஒரு அதிர்ஷ்டமுள்ள தருணத்திற்தான் தொடர்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் என்பது தொடர்பு கிடைக்கும் விஷயத் தில் மட்டும்தான். மற்றப்படி இந்த இடத்தை விட்டு இப்போதைக்கு அசையமுடியாதென்பது எனக்கு நன் றாகவே தெரியும். அந்த அளவிற்கு யுத்த நிலைமைகள் மோசமடைந்து, வான் மார்க்கம், கடல் மார்க்கம் எல்லாம் மூடப்பட்டிருந்தன. எனினும் இவர்களது ஆறுதலுக்காகவேனும் சும்மா கதை விட்டுக்கொண்டிருந் தேன்.
அறையில் அழைப்பிசை ஒலித்தது.
கதவைத் திறந்தபோது கமால் சயிட் றபியா உள்ளே வந்தான். இந்த வேளையில் அவன் வரவேண்டிய தேவையே இல்லை. அவனது டியூட்டி மாலை ஐந்து மணியுடன் முடிந்து விடும். கமால் சயிட் றபியா, லிபிய சேர்ந்தவன். கம்பனியின் உள்நாட்டு ஏஜண்ட்டி
நாட்டைச்
штфTт 99
கடமையாற்றினான்.
கமாலைக் கண்டது எனக்கு சற்றுத் தெம்பாயிருந்தது. பிரியசாந்தவினதும் சந்திரசேனவினதும் மனநிலையை ஆற்றுவதற்கு அவன் ஏதாவது ஆறு தல் வார்த்தைகள் சொல்லக்கூடிய வன்.
'என்ன கமால் இந்த நேரத்தில் வந்திருக்கிறாய். ? ஏதாவது நியூஸ்?” 'நெள ரூ மச் பொம்பிங். லைக் ரு சீ யூ. எனி ப்றொபிளம். ? (அவன் ஆங்கிலத்திற் கூறிய விஷயத்தை இவ்வாறு விளங்கிக்கொள்ளலாம். இப்போது குண்டுத் தாக்குதல் கடு மையாக நடப்பதால். உங்களைப் பார்க்க வந்தேன். ஏதாவது பிரச்சி னையா..?)
ஆங்கிலத்திற் பேசிப்பழகும் ஆர்வ மும் அவன் என்னோடு நெருக்கமா னதற்கு ஒரு காரணமாயிருந்தது. ஆரம்பத்தில் பொறுக்கியெடுத்த சில சொற்களை வைத்துக்கொண்டு தனது கைப் பாஷையையும் சேர்த்துச் சொல்ல வேண்டிய சங்கதியை ஒப் பேற்றி விடுவான். பின்னர் அவனது ஆங்கில ஞானம் கொஞ்சம் கொஞ்ச மாக விரிவடைந்துவந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் புதுப் புது வார்த்தைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
நான்கு வருடங்களுக்கு முன்பு லிபி யாவுக்கு முதலில் வந்தபோது, விமான நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தவன் அவன்தான். அப் போது தொடங்கிய அறிமுகம் அது. உள்ளே குடிவரவு அதிகாரிகள் கரும
ܢܬܝܕ݂

பீடத்தில் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் அரட்டை அடித்துக் கொண் டும் சிகரட் ஊதிக்கொண்டும், நேரத் தையும் பயணிகளையும் சுணக்கிக் கொண்டிருந்ததால் வரிசையிற் காத்தி ருந்து. காத்திருந்து, எரிச்சலுணர்வு டன் வெளியே வந்தபோது முதற் சந்திப்பிலேயே எனது மனதைத் தொட்டவன் கமால் சயிட் றபியா.
அட்டையொன்றில் எழுதப்பட்ட எனது பெயரைக் கையுயர்த்திப் பிடித் துக்கொண்டு நின்றவனிடம் எனது பயணப் பொதிகளையும் தள்ளிக் கொண்டு சென்றேன். நெடுநாட் பழகியவரைத் திரும்பக் காண்பது போன்ற மலர்ச்சியுடன் கை கொடுத் தான். எனது பொதிகளை வற்புறுத்திப் பெற்றுத் தானே சுமந்துகொண்டு, வாகனத்திற்கு அழைத்துச் சென்றான். பொதிகளை வாகனத்துள் வைத்து விட்டு அதே வேகத்தில் சட்டெனக் கதவைத் திறந்து, "ப்ளிஸ்.' என வாகனத்துள் அமருமாறு சைகை காட்டினான். வெளிநாட்டவர்கள் வரும்போது அனுசரிக்கும் முறை பற்றி அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட் டிருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் போகப்போக, அவன் பழகிய விதத்திலிருந்து அவனது இயல்பான சுபாவம்தான் அது என்பது தெரிய வந்தது. அப்போது மிசுரட்டா நகரில் ஆரம்பிக் கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்திற்கு, எங்கள் கம்பனி சிமெந்து விநியோ கிக்கும் தொழிற்தல வசதியை வழங் குவதற்கு ஒப்பந்தமாகியிருந்தது. அதற்குரிய இயந்திராதிகளைப் பொருத்துவதற்கும் தொழிலாளர்
ܕܬܬܐ
55
களைப் பயிற்றுவிப்பதற்குமாக வந்தி ருந்தேன். பின்னர் திரிப்போலியில் இன்னொரு புறஜெக்ட் ஆரம்பிக்கப் பட்டபோது அதையும் கவனிக்க வேண்டியிருந்தது.அங்கேயும் இங்கே யும் ஓடவேண்டிய நிலையில் கமால் எனக்குரிய முழு நேர சாரதியானான்.
சற்றுநேரம் ஏதும் பேசாமலிருந்த கமால், பின்னர் ஏதோ நினைத்துக் கொண்டவன்போல, 'ஒவ்வொரு இரவும் கடுமையாகக் குண்டுவீச்சு நடக்கிறது. இங்கேயுள்ள குழந்தை களை அவர்கள் யோசிக்கவில் லையா..?' என்று கேட்டான். அப் பொழுதுதான் கவனித்தேன். அவனி டத்தில் வழக்கமாக் காணப்படும் உற்சாகம் இல்லை. குண்டு வீச்சில் அவனது பிள்ளைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ?
'என்ன கமால். ? ஏதாவது பிரச்சி னையா..?
'என் மகன் சரியாகப் பயந்து போயி ருக்கிறான். “பொம்ப்” சத்தம் கேட்ட தும். கட்டிலிற்குக் கீழே ஒடிப்போய் படுத்துவிடுகிறான். வெளியே வர மறுக்கிறான். '
குண்டுவீச்சில் சிறுவர்கள் மனோ ரீதியாக எவ்வாறு பாதிக்கப்படுகிறார் கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கு என் பிள்ளைகளின் நினைவு வந்தது. அப்போது எனது மகள் நாலு மாதக் குழந்தையாயிருந்தாள். வானத் தில் வட்டமிடும் விமானத்தின் அகோரமான இரைச்சலில் பிள்ளை மிரட்சியடைய, அவளைத் தூக்கி நெஞ்சுடன் அனைத்துக்கொண்டு ஒதுக்குப்புறமாக ஓடினேன். குண்டு
штфTт 22

Page 30
வீச்சின் முழக்கத்தில் குழந்தை அதிர்ச்சியடைந்து வீரிட்டு அவல மாகக் கத்தினாள். என் கையணைப் பிலேயே மூத்திரமும் போனது. அப்படி அவலக்குரல் எழுப்புமளவிற் குப் பச்சைக் குழந்தைகளையே யுத்தம் அங்கு கலக்கி வைத்திருந்தது. எதிரிகளைக் கண்டதும் தங்கள் குட்டிகளுடன் பொந்துகளுக்குள் ஓடி ஒளிக்கும் பிராணிகளைப்போல, குண்டு வீச்சு விமானங்கள் இரைந்து வரும்போது பிள்ளை குட்டிகளுடன் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளிந்த காலங்கள் நினைவில் வந்தன.
தனது இரண்டு வயது மகன் பற்றிய கவலையில் கமால் உடைந்துபோயி ருந்தான். அவனது மனநிலையை எனக்கு உணரக்கூடியதாயிருந்தது.
"கவலைப்படவேண்டாம் கமால். எல்லாம் சரியாகும்.’’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறினேன்.
"சேர். நீங்கள் உங்கள் நாட்டுக்கு போய்விடுங்கள். இங்கு பெரிய
பிரச்சினை வரக்கூடும்.”
கமால் தன் மனோதைரியத்தை இழந்து விட்டான். ஏற்கனவே ஏனைய தொழிலாளர்களுடன் நான் பயண மாகாமல் நின்றபோது, சந்தோஷம டைந்தவன் கமால். இப்போது இங்கி ருந்து தப்பிப் போய்விடுமாறு கூறு கிறான்.
"சரி. நாங்கள் எப்படியாவது போய் விடலாம். நீ என்ன செய்வாய்.? எனக் கமாலிடம் கேட்டேன்.
“துனிசியாவுக்குப் பல மக்கள் போகி றார்கள். நாங்களும் போக யோசிக்
யாத்ரா 22
56
கிறோம். என் பிள்ளைக்காகத்தான் எல்லாக் கவலையும்.”
இளம் மனைவி, குழந்தை. குடும்பம் என யுத்தத்திற்கு முன்னதான கமா லின் வாழ்வையும் அவனது கல கலப்பான சுபாவத்தையும் எண்ணிப் பார்த்தேன். அது அவன்மீது அனுதா பத்தை ஏற்படுத்தியது. அவனது குடும்ப வாழ்வும், இனி அங்கும் இங் குமென அலைச்சற் பட்டுப்போய் விடுமோ எனக் கவலையாயிருந்தது. அவனது வீட்டிலிருந்து கைபேசியில் அழைப்பு வந்ததும் கமால் விடை பெற்றுச் சென்றான். எனக்கு இவர் களது பிரச்சினை மீண்டும் தொடங் கியது.
'கமால் துனிசியாவுக்குப் போய் விட் டால் எங்கள் நிலைமை கஷ்டமாகி விடுமே.” என்றான் பிரியசாந்த,
அது உண்மைதான். இங்கு எங்கள் கம்பனியின் தேவைகளைக் கவனிக் கும் ஏஜண்ட்டின் அதிகாரிகள் எவரை யும் காணக் கிடைக்கவில்லை. கமால் மட்டுமே எங்கள் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அவர்கள் மாயமா கியிருக்கலாம்.
'கமாலிடம் கேட்டுப் பாருங்கள். எங்களைத் துனிசியாவுக்குக் கொண்டு போய் விடமுடியுமா என்று.”
சந்திரசேன இப்படியொரு ஐடியா வைக் கூறினான். யுத்த நெருக்கடிகள் தொடங்கிய நாட்களில், கடும் சமர் நடந்துகொண்டிருந்த மிசுரட்டா நகரில் உள்ள தொழிற்தளத்தில் அகப் பட்டிருந்த எங்கள் தொழிலாளர்கள்
ܓ݁ܰܬ݂ܟ݂
 

சிலரை மீட்டுக் கொண்டுவந்தவன் கமால். அந்த நினைவிற்தான் சந்திர சேனவிற்கு அப்படியான யோசனை தோன்றியிருக்கும்.
இன்னும் திரிப்போலியில் சிக்கியி ருந்த வெளி நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், லிபிய நாட்ட வரான பல குடும்பங்களுமாக போட ரைக் கடந்து துனிசியாவிற்கு இடம் பெயர்ந்துகொண்டிருப்பதை 'ரீவீர் க்கள் காட்டும் செய்திகள் தெரிவித் தன. துனிசிய போடரில் நாட்கணக் காக இறுகிப்போயிருக்கும் வாகனங் களின் நெருக்கடிகளுள் மக்கள் அடை பட்டுக் கிடந்தார்கள். அந்தப் பக்கம் போனவர்கள் வீதி ஓரங்களிலும், மணல்வெளிகளில் தற்காலிகக் கூடா ரங்களிலும், வெயிலிலும் புழுதிக் காற்றிலும் தவித்துக் கொண்டிருந் தார்கள். 'அந்தமாதிரி நீங்களும் போய்க் கஷ்டப்படப் போகிறீர்களா? எனச் சந்திரசேனவிடம் கேட்டேன். ஆரம்பத்திலேயே அந்த யோசனை
57
யை ஆர்வமிழக்கச் செய்யும் நோக்கம் தான். அல்லது இவர்கள் அதை ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டு என்னை நெருக்கக்கூடும். "நீங்கள் இப்போது போய்த் தூங்குங் கள். காலையில் இதைப் பற்றிப் பேசலாம்." என அவர்களை அனுப்பி வைத்தேன்.
படுக்கைக்குப் போனபோது, மீண்டும் விமானக் குண்டுவீச்சு நிகழக் கூடுமோ என மனப்பயம் ஏற்பட்டது. நேரம் கடந்துவிட்டாலும் தூக்கம் வர மறுத்தது. வீட்டு நினைவு வந்தது. பிள்ளைகள் மனம் கலங்கக்கூடு மென்பதால், இங்குள்ள எனது கஷ்டங் களை அவர்களுக்குச் சொல்வ தில்லை. ஆனால் படுக்கைக்குப் போனதும் அவர்களது நினைவு வந்துவிடும். இங்கு யுத்த நிலை மைகள் எப்படியெல்லாம் மாறப் போகிறது. எவ்வளவு காலம் இழுபடப் போகிறது. அதற்குள் வீட்டுக்குப்
штфДт 22

Page 31
போய்ப் பிள்ளைகளைப் பார்க்கச் சாத்தியப்படுமா. என்றெல்லாம் யோசனைகள். இந்த நினைவுகளுடன் உறங்கிப் போன நேரம் தெரிய வில்லை.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் சடசட எனக் கேட்டன. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் தொடர் தொட ரான வேட்டுக்கள் தீர்க்கப்படும் சத்த வித்தியாசத்தையும் உணரக்கூடிய தாயிருந்தது. எல்லாம் கனவில் நடப் பதுபோல. தூக்கத்துக்கும் விழிப்புக் கும் இடைப்பட்ட ஒரு குழப்பநிலை. யாழ்ப்பாண நகரத்திற்குள் ஆமிக்காரர் மூவ் பண்ணி வருகிறார்கள். மக்கள் வீடுகளை விட்டு ஓடிக்கொண்டிருக் கிறார்கள். பாதைகளெல்லாம் சன நெருக்கம். என் மனைவியும் பிள்ளை களும் அதற்குள் சிக்கிப்போயிருக்கி றார்கள். அவர்களைக் காணமுடியாது தேடுகிறேன். சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. நெஞ்சு பதைக்கிறது. கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன். முடிய வில்லை. உடலை அசைத்து எழ முயற்சிக்கிறேன். முடியாமல் தூக்கம் அழுத்திப் பிடித்திருக்கிறது. ஒரு தருணத்தில் குண்டொன்று வெடிக் கும் பெரும் சத்தம் திடுக்குறச் செய்ய, சட்டென விடுபட்டு எழுந்து கொண்டேன்! கண்கள் விழித்துக் கொண்டன. உறக்க நிலையில் தொலைவிற் கேட்ட சத்தங்கள், காத டைப்பது போல மிக அண்மையாகக் கேட்டன. நான் எங்கே இருக்கிறேன் என்று அனுமானிக்கச் சற்று நேரம் பிடித்தது. பல்கணிப் பக்கம் வந்து வெளியே பார்த்தேன்.
360T60) L
штфДт 99
58
நிஜமாகவே நடந்துகொண்டிருக் கிறது. கீழே வீதியிலும் கட்டடங் களின் இடைவெளிகளிலும் துப் பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எதிரெதிராக பதிலுக்குப் பதிலாக சூடு நடப்பதை, அந்த இருள் அகலாத அதிகாலைப் பொழுதில் நெருப்புத் தணல்களாகப் பறந்துகொண்டிருக் கும் சன்னங்கள் காட்டின. தூரத்தே வீதியில் வாகனமொன்று முளாசி எரிந்துகொண்டிருப்பதும் தெரிந்தது. பல்கணிக் கதவை இழுத்து மூடி விட்டு உள்ளே வந்தேன். படபடப்பு இன்னும் அடங்காமலிருந்தது. இந்த அமர்க்களத்தில் பிரியசாந்தவும் சந்திர சேனவும் ஓடிவரக்கூடும் என்றே பார்த்திருந்தேன். இன்னும் காண வில்லை. உறக்கத்தில் ஆழ்ந்து போயிருப்பார்களோ..? அல்லது இந்த நேரத்தில் வந்து எனது உறக்கத்தைக் குழப்பக்கூடாது என நினைத்திருக் கலாம். இப்போது, நான் அங்கு போய்விடுவோமா என்றுகூடத் தோன் றியது. யாராவது பக்கத்திலிருந்தால் ஆசுவாசமாயிருக்கும். கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தேன். துப் பாக்கி வேட்டுக்கள் ஓயவில்லை. அரசபடையினருக்கும் எதிர்க் கிளர்ச்சி யாளர்களுக்குமிடையிலான மோதல் திரிப்போலி நகருக்குள்ளும் வந்து விட்டதோ என்று பயமேற்பட்டது. ஆயுதபலம் கொண்டவர்கள் எதிராளர் களெனச் சந்தேகிப்பவர்களைச் சுட்டுத் தள்ளியதெல்லாம் ஞாபகம் வந்தது. அந்த நிலை இங்கும் வந்து விடுமோ..?
நிலம் வெளித்து விடியும் வேளை துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் ஓய்வு
ܥܰܬܐ

நிலைக்கு வந்தன. வெளியே எட்டிப் பார்த்தேன். எரிந்த வாகனத்திலிருந்து கரும் புகை மேலெழும்பிக்கொண் டிருந்தது. இன்னும் சரியாக சன நடமாட்டமோ வாகன ஓட்டங்களோ தொடங் கி யிருக் க வி ல்  ைல . அப்போதுதான், “என்ன நடந்தது?" என்ற கேள்வியுடன் சந்திரசேனவும் பிரியசாந்தாவும் எனது அறைக்கு வந்தார்கள். இவர்களைப் பிடித்து உதைத்தால் என்ன என்று எனக்குக் கோபம் கூட ஏற்பட்டது. அந்த அளவுக்குப் போர்த்து மூடிக்கொண்டு தூங்கியிருக்கிறார்கள்!
இந்த நேரத்தில் கமால் வந்தால் நல்லது என்று தோன்றியது. அவ னால் வரக்கூடியதாயிருக்குமோ என்று தெரியவில்லை. அதிகாலையில் என்ன நடந்திருக்கும் என அறிய “ரிவீ சனல்களைத் திருகினேன். கமாலிட மிருந்து கோல் வந்தது, “சற்றுச் சுணக்கமாக வருவேன். வெளியே எங்கேயும் போகவேண்டாம்.” எனத் தகவல் தந்தான்.
மதியநேரம் கமால் வரும்வரை என் மனம் ஒரு நிலையிலில்லை. காலை யில் நடந்த சம்பவம்பற்றிக் கேட் டேன், "என்ன பிரச்சினை கமால். அரச எதிர்ப்புக் கிளர்ச்சியா..? “சரியாகத் தெரியாது. கிளர்ச்சி இங்கே யும் பரவி விடாமலிருக்க. மக்களைப் பயப்படுத்தி அடக்கிவைக்கும் செய லாகவும் இருக்கலாம். '
கம்பனியின் தலைமை அலுவலகத் துடன் தொடர்புகொண்டு, நிலைமை கள் கட்டுப்பாடற்று வருவதால் சீக்கிரம் வெளியேறவேண்டுமெனத்
ہلچر
59
தெரிவித்தேன். திரிப்போலியிலிருந்து அண்மையிலுள்ள நாடான மால்ட் டாவிற்கு அடுத்த வாரம் பயணிகள் படகுச் சேவையொன்று செயற்பட இருப்பதாகவும், அதில் பயணப்பட லாம் என்றும் கூறினார்கள். அதை நான் சற்று மாற்றி, "இன்னும் இரண் டொரு நாட்களில் படகுச் சேவை ஆரம்பிக்கிறது.இங்கிருந்து போய் விடலாம்' என இவர்களிடம் கூறி னேன். ஆனால், படகுச் சேவை ஆரம்பிக்க உத்தேசித்துள்ள ஏஜண்ட் டைத் தொடர்பு கொண்டு கேட்டால், அதற்கு இரண்டு வாரமளவில் ஆகலாம் என்றும், அதுகூட இன்னும் ஊர்ஜிதமில்லை என்றும் தகவல் தந்தார்கள். அந்தத் தகவலை இவர் களிடமிருந்து மறைத்தேன்.
நாளாக ஆக, விமானக் குண்டுவீச்சுக் கள் இரவில் மட்டுமின்றி, பகல் வேளைகளிலும் நிகழ்த்தப்பட்டன. கூலிப் படைகள் எனச் சந்தேகத்தில் கைது செய்யப்படுவதும், கொல்லப் படுவதுமான காரியங்கள் திரிப்போலி நகருக்குள் மேலும் அதிகரித்தன. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டு முகம் குப்புற விழுந்து இறந்து கிடப் பவர்களை "ரீவி சனல்கள் காட்சிப் படுத்திக்கொண்டிருந்தன. பிரிய சாந்தவின் கஷ்ட காலம், ஒருநாள் அவனும் இந்த அவலத்தில் மாட்டுப் பட நேர்ந்தது. அன்று தொழிற்தளத் தில் சில அலுவல்களுக்காகச் சென் றிருந்தோம். அப்போது பிரியசாந்த வுக்கு அவனது வீட்டிலிருந்து கைபேசி அழைப்பு வந்திருந்தது. உள்ளே சிக்னல் சரியாக இல்லை யென வெளியே சென்று பேசிக்
UT5UT 92

Page 32
கொண்டிருந்தான். ஜிப்பிலும் பிக்அப் வாகனங்களிலும் ரோந்து வந்த வர்கள். சட்டென ୬ ର160)/601 வளைத் துக் கொண் டார் கள் . வாகனத்திலிருந்து துப்பாக்கிகளுடன் குதித்தவர்களைக் கண்டதும், இவன் கைகளிரண்டையும் உயர்த்தினா னாம். அவர்கள் அரபு பாஷையிற் கேட்டது ஒன்றும் இவனுக்குப் புரிய வில்லை. "சிறீலங்கா. சிறீலங்கா." என்றுமட்டும் நடுக்கத்துடன் கூறிக் கொண்டு நின்றிருக்கிறான். அவர்கள் வீ.எச்.எஃப் கருவியில் (தங்கள் அதிகாரி யு டனா யிருக்கலாம் ) பேசியபின், இவனை விட்டுப் போய் விட்டார்கள்.
இதன் பிறகு இவர்கள் இருவரும் அறையை விட்டு வெளிவரவே மறுத்துவிட்டார்கள். "இலங்கைக்குப் போகும்வரை சாப்பிடமாட்டோம்” என அடம் பிடித்தார்கள். இன்னொரு வகையிற் சொல்வதானால், என்னை இன்னும் நெருக்குவதற்காக மேற் கொள்ளும் உண்ணாவிரதம் அது! விசித்திரம் என்னவென்றால் உண் ணாவிரதம் அனுஷ்டிப்பது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்! எங்களுக்காக உணவு வகைகளைத் தேடிக் கொண்டுவருவதற்குக் கமால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டி ருந்தான். அவனுடன் சேர்ந்து நானும் மார்க்கட்டுக்களெல்லாம் அலைந்து வந்திருக்கிறேன். அநேகமாக எல்லாம் வெறுமையாகவே கிடந்தன. சாப்பாட் டுச் சாமான்கள் விற்றுத் தீர்ந்தனவா அல்லது பதுக்கப்பட்டனவா என்பதும் தெரியாது. எனக்கென்றால், அலைச் சலும் இவர்களது கரைச்சலும் உச்சத்
ULJETé3(JIT 99
هير Ն)
C
துக்கு ஏறி, அலுத்துப்போய்விட்டது. கமாலுக்கும் அது புரிந்திருந்தது.
'உங்களைத் துனிசியாவுக்குக் கொண்டு போய் விடுகிறேன். அங்கி ருந்து இலங்கைக்குப் போகலாம். கம்பனியுடன் பேசி முடிவெடுங்
கள்."
'கமால். இந்த நேரத்தில் உன் குடும்பத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைக் கவனி. எங்களுடைய வழியை நாங்கள் பார்க்கிறோம்.”
'நானும் துனிசியா போய்விட்டால். உங்களுக்கு உதவ யாரும் இல்லை. பிரியசாந்தவும் பயந்துபோயிருக் கிறான்.”
- கமால் கூறுவதும் சரிதான்.
தரை மார்க்கமான பயணத்தின் பாது காப்பின்மையைக் கருதி, அந்த யோச னையைக் கம்பனி விரும்பவில்லை. எனினும் ரிஸ்க் எடுத்துப் பயணப் படவேண்டிய கட்டத்திலிருப்பதை விளக்கிக் கூறினேன். தூனிசியாவில் 'போடருக்கு அண்மையிலுள்ள ஜேர்பா நகரிலிருந்து விமான ஒழுங்கு செய்யப்பட்டது. ஜேர்பா - துனிஸ் - டோகா - இலங்கை.!
காலை ஏழு மணிக்குத் திரிப்போலியி லிருந்து புறப்பட்டோம். பாதையில் பல இடங்களில் படையினரின் சோத னைத் தடைகள். சில இடங்களில் பயணப்பொதிகளை இழுத்துக் கொட் டினார்கள். நாடு எதுவாயிருப்பினும்; படையினரின் மனோநிலை ஒரே மாதிரியானதுதான்போலும் யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிப்பிழைத்துப் போகிறவர்களிடம் அப்படி எதைத்
本

61
தான் பிடுங்கப்போகிறார்கள்? கை ருக்க முடியவில்லை. ஒவ்வொருவரா பேசிகள் பறிக்கப்பட்டன. கக் கட்டித் தழுவி விடைபெற்றான் 9, lسي கமால். அவனைப் பிரியும்போது பிரியசாந்தவிற்குக் கண்ணீர் ததும்பி அதிகாரிகளால் சொல்லப்பட்டது. வழிந்தது. பிரிவாற்றாமையோ..? விமான ரிக்கற் விபரங்கள் சமர்ப்பிக் °5 இவ்வளவு தொல்லைக கப்பட்டும் அதுபற்றிய உறுதித்தன் இருக்கு பிறகு விட்டுக்குப் போய் மைகள் கோரப்பட்டன. அங்கிருந்து சேரப்போகிறோம் எனற ஆனநதக கம்பனியுடன் தொடர்பு கொள்வது. கண்ணிராகவும் இருக்கலாம்.
ஈ-ரிக்கற் விபரங்களை உறுதி செய்வது போன்ற சமாச்சாரங்களை இலங்கை வந்ததும் ஓரிரு தடவைகள் மேற்கொள்வதற்கு, அவர்களுக்குக் கமாலுடன் தொடர்புகொள்ள முயற் கணிசமான நேரம் தேவைப்பட்டது. சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. அதன் பின்னரும் நேரம் கடத்தப் அவனும் தன் குடும்பத்துடன் துனிசி பட்டது. அவர்களது கைகளுக்கு யாவிற்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஏதாவது கொடுக்கும்வரை.! சில நாட்களில் வேறு அலுவல்கள். 'போடரிலிருந்து புறப்படும்போது பிரச்சினைகளில் இயல்பாகவே இரண்டு மணி, மாலை ஐந்து கமாலை மறந்திருந்தேன். மணிக்கு ஜேர்பாவிலிருந்து ஃபிளைட் இருநூறு கிலோமீட்டர்கள் போகவேண்டும். கமால் வாகனத்தை ஸ்ரார்ட் செய்ததுதான் தெரியும். மரண ஓட்டம் ஓடினான். கரணம் தப்பினால் மரணம். அந்தமாதிரியான
யுத்தம், கடாபியின் அரசாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. மீண் டும் நவம்பர் மாதமளவில் லிபியா வுக்குப் போகவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. திரும்பவும் வேலைகளைத் தொடங்குவதற்கான
ஓட்டம்.1 விமான நிலையத்தை ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அடைந்தபோதுதான் எனக்கு மூச்சு கம்பனி பணித்திருந்தது. வந்தது.
திரிப்போலி விமான நிலையத்தில் நேரம் மட்டுமட்டாக இருந்தபடியால் கமால் எனக்காகக் காத்திருப்பான் கடைசியாக ஏதும் பேசிக்கொண்டி என்ற நினைவுடன் வந்து இறங்கி MMMMMMMMMMMM XXXXXXXXX னால். அவன் இல்லை. எனக்காகப் பார்த்து நின்றவர், ஏற்கனவே லிபிய ஏஜண்ட்டில் கடமையாற்றிய எனக்கு அறிமுகமானவர்தான். அவரிடம் கமால் பற்றி விசாரித்தபோது கிடைத்த பதில் இதுதான்:
யுத்தகாலத்தில் கமால் கொல்லப் பட்டுவிட்டான்! ()
22 யாத்ரா المصر

Page 33
62
காணாமல்போன என் நண்பன்
ć906g (też Östersóbö
நண்பா,
என் ஒவ்வொருநரம்பிலும் நீதான் | துடிக்கிறாய்.
鳄 எங்கிருக்கிறாய்?
விளையாட்டில் கூட உன்னைத் தொலைக்க மணமற்று நின்றவன் நான். இப்போ இரக்கமின்றி எனக்குத் திரைபோட்டவர் யார்??
யாத்ரா 22
கள்ளன் - போலீஸ்
 

2_érୋ)ର୪rá கடத்தியவர்களை விட கடவுளிடமே எனக்கு அதிகம் கோபம். கடவுளுக்காவது மனிதாபிமானம் இருந்திருக்கலாம்.
உன் பேச்சில் கூட பத்திரம் பார்ப்பவன் நீ. அப்படியிருக்க உன் செயலில் மட்டும் எப்படிக் கண்டனர் பிழை?
எனக்குத்தெரியம். இப்பொழுதெல்லாம் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கொட்டான் தடிகள், கெட்டமொழிகள், மட்டுமே உன்னைச்சூழ ஏராளமாய் இருக்கும்.
உன்னைச்சூழ அதிகாரமும் அநியாயமும்
அளவிற்குமேல் இருக்கும்.
என்ன செய்வது, நம் தேசத்தில் பிள்ளைப்பூச்சிகளுக்கும் கொடுக்கு முளைக்கும்
6T6t Ustä as8st (st?
63
சிங்கக்கூட்டை சிலந்திகள் ஆளுமென யார்தான்
நினைத்தார்?
முடிந்தால் அவர்களுக்கு அன்பைப்பற்றி பாடம் நடாத்து.
உரிமை பற்றி ஊர்க்கதை பேசு.
தேவைப்பட்டால், ஒட்டப்பந்தயத்தில் ஆமைதான் வென்றது எனச்சொல்லு.
ஆனால், மனிதாபிமானம் பற்றி மட்டும் பேசிவிடாதே - உன்னை மீண்டும்
பயங்கரவாதி என்றுவிடுவார்கள்.
ஒன்று செய்,
2_ଞtୋ)ରs[ விடுவிக்கும் நாள் வந்தால், அவர்களில் ஒருவனை வீட்டிற்கு அழைத்துவா. மனிதம் என்ன என்பதைக் காட்டுவோம்.
யாத்ரா 22

Page 34
64
6 β.
இந்தச் சுவர் முழுவதும் தென்படுகின்ற காட்சிகளில் இருப்பவர்கள் தற்போது உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று நினைப்பதே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. இத் திரைப்படங்களில் நான் நேற்று. இன்று நடித்தது போல் எனக்குத் தோன்றுகிறது. எத்தனை நாட்கள் கடந்திருக்கக் கூடும்? நான் மட்டும்தான் இன்றும் உயிருடன் இருக்கின்றேன். என்னைச் சந்திப்பதற்கு வருகின்றவர்கள் அனைவரும் இக் காட்சிகளில் தோன்றியிருப்பவர்கள் குறித்து என்னிடம் கேட்கிறார்கள். நானும் மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்களைப் பற்றிய விபரங்களைக் கூறுகின்றேன். அவர்கள் இன்றும் இறக்கவில்லை போல் தோன்றுகிறது. எல்லோரும் உயிருடன் இருப்பதைப் போல் தோன்றுகிறது. நான் இறந்த பிறகும் இப்படித்தான் இருக்கும் போல் தோன்றுகிறது.
9 9
"Golden Slumbers' விவரணத் திரைப்படத்தினூடாக
காம்போச்சிய (கம்போடிய) திரைப்படத்துறை
O
இப்னு அலசிமத்
штфДт 29

காம்போச்சிய திரைப்படக் 3,60)GoGignat Davy Chou Gilgit
"Golden Slumbers" GigiDJub CSlag || னத் திரைப்படத்தில் காம் ! போச்சிய திரைப்படத் துறை யின் முதலாவது நடிகையான தய் சவெத் முன்கண்டவாறு
கூறுகிறார்.
சிட்னி திரைப்பட விழாவின்
விவரணத் திரைப்படப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள
"Golden Slumbers" SGOD JÜ ULLD (TGolgi) 196O - 1975
65
கால கட்டத்தினுள்ளான காம்
போச்சிய திரைப்படத் துறை யின் கடந்த கால நினைவுகளு டன் பேசுகின்றது.
15 வருட கால கட்டத்தினுள் சுமார் 4OO திரைப்படங்களை உருவாக்கி முன்னேற்றம் கண்டிருந்த காம்போச்சிய திரைப்படத்துறையின் பழைய நினைவுகளுடன் தனது படைப் பினை முன்வைத்துள்ள Davy Chouவினது இந்த முயற்சி யானது பழைமையான நினைவு கள் மாத்திரம்தானா? என்கின்ற கேள்வியை நாம் எழுப்புகின்ற போது அந்த விவரணத்திரைப் படத்தை அப்படிக் கூற இய லாது என்றே விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலகத் திரைப்பட விழாக்க ளில் மிக அதிகளவில் விமர்ச கர்களினதும் இரசிகர்களின தும் அவதானங்களை வெகு வாக ஈர்த்துக் கொள்வதிலும் இத் திரைப்படம் வெற்றி
والضر
Davy Chou
பெற்றுள்ளதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
Davy Chouதனது விவரணத்திரைப்படத்தினூடாக தேடிச் செல்கின்ற யுகத்தின் அநேகமான நபர்கள் மற்றும் சொத்துக்கள் கடந்த கால விசேடத்துவமற்ற ஞாபகங்களாக மாத்திரமே இருந்து, பயங்கர மானதும் அதே போன்று தற்போதைய காம் போச்சிய குடிமக்களை ஞாபகப்படுத்துவதற்கும் விரும்பாத தொடர் நிகழ்வுகள் மறைக்கப்பட்டி ருப்பதே இதற்குக் காரணமாகும்.
அதுவே இத்திரைப்படம் பொல்பொட் ஆட்சி யினுள் கரைந்து போனதும் கொலை செய்யப்பட்ட துமான அழகிய திரைப்படத்துறையின் கதையை எமக்குக் கூறுகின்றது. அது மட்டுமல்ல, அரசியல் கிளர்ச்சிக்கு அகப்பட்டுவிட்ட மனித நாகரிகத்தின் கதையாகவும் இது அமைந்துள்ளது.
யாத்ரா 22

Page 35
இத்திரைப்படத்தின் ஆரம்பமானது மிகச் சிறந்த காட்சிப்படுத்துகையின் மூலம் ஒரு கால கட்ட ஆரம்பம் குறித்த காட்சி களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் காம்போச்சிய திரைப்படத்துறை குறித்த ஞாபகங்களை மீட்டிப் பார்க்கின்ற ஒரு சில நபர்களது குரல்கள் பின்னணியில் ஒலிக்கின்றன. இக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பவர்களது கோணத்திற்கு அமைவாக ஒளிப்பதிவுக் கருவி பொருத் தப்பட்டிருப்பதுடன், நாமும் அக் கலந் துரையாடலில் ஈடுபட்டிருக்கின்ற நபர் களுடன் அவர்கள் பயணிக்கும் லொறி யிலோ அன்றி கெப் வண்டியிலோ ஏறிப் பயணிக்கின்ற உணர்வு எமக்குள் ஏற்படு கின்றது.
அந்த வாகனத்திற்குப் பின்னால் செல் கின்ற வீதியின் காட்சி எமக்குக் காண் பிக்கப்படுகின்றது. இக் கலந்துரை யாடலின் இடைநடுவில் திரைப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற நாமும் இந்த வாகனத்திலே ஏறிச் செல்கின்றதொரு உணர்வு நிலையில் இருக்கின்ற போது, ஏதோ ஒரு விதமான புதுமையான உணர்வு எமக்குள் பிறப்பெ டுக்கின்றது.
வாகனத்தின் தெரிந்தும், தெரியாமலும் செல்கின்றதுவிச்சக்கர வண்டி
பின்னால்
கள், வாகனங்கள், பாதசாரிகள் குறித்துப் பார்த்துக் கொண்டி ருக்கும் போது அந்த வாகன மும் நபர்களும் நாமும் பாதை யின் பின்னால் செல்கின்ற தைப் போல் உணர்த்தப் படுகின்றது. நாம் இவ்வளவு நேரமும் " கண்டவையும் காண்பவையும் கடந்த
штфTт 99
66
காலத்தை நோக்கிப் பயணிக்கின்றன என்ற விடயம் உணர்த்தப்படுகின்ற வேளை, Davy Chou வடைய கடந்த காலத்தை நோக்கிய பயணத்தின் பங்காளிகளாக நாமும் உள் வாங்கப்
பட்டு விடுகின்றோம்.
வாகனத்தின் பின்னோக்கிய பயணம் நிகழ் கால இரவில் ஆரம்பிக்கின்றது. எனினும் திரைப்படத்தின் பெயர் திரை யில் வருகின்ற போது சூரியோதயம் ஆரம்பித்து விடுகின்றது.
பிரான்ஸ் நாட்டின் காலனித்துவ ஆட்சி யின் கீழ் இருந்த காம்போச்சியா, சுதந் திரம் பெற்று நொர்டம் சிஹனுக் எனும் மன்னரின் ஆட்சியின் கீழ் வந்த போது அந்நாட்டின் திரைப்படத்துறை ஆரம்பிக் கப்பட்டுள்ளது. அதாவது 1960ம் வருடம் என்ற போதிலும் அதற்கு முன் பிருந்தே தலைநகரான நொம் பென் மற்றும் அதனை அண்டிய நகரப் பகுதிகளில் ஹொலிவுட் மற்றும் இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
காலனித்துவ ஆட்சிக் காலத்தின் போது பிரான்ஸ் நாட்டவர்களுடன் இருந்து, பிரான்ஸ் மொழி அறிந்திருந்த மக்கள்
படமொன்றின் பெனர் சி
*
 

சமூகத்திற்காக இடையிடையே பிரான்ஸ் நாட்டுத் திரைப்படங்களும் திரையிடப் ul GditGrigrid, "Golden Slumbers" $gogu) படம் திரையிடப்பட்டதன் பின்னர் கருத் துத் தெரிவித்த Davy Chou கூறியி ருந்தார்.
இதுவரை காலமும் தாங்கள் கண்டிருந்த ஹொலிவுட் மற்றும் ஹிந்தி திரைப்படங் களில் இருந்து தாம் பெற்ற பாதிப்புக் களினால் எழுந்த உத்வேகத்தினால் முன்வந்த காம்போச்சிய திரைப்படக் கலைஞர்கள் ஒரு சிலரது முயற்சிகள் காரணமாக 1960ம் தசாப்தத்தில் காம் போச்சிய திரைப்படத்துறை ஆரம்ப மாகியது. திரைப்படத்துறை சார்ந்த எந்தவொரு கல்லூரிகளிலும் கற்றிராத கலைஞர்கள் தங்களது சினிமாப் பைத்தி யம் காரணமாகவே திரைப்படத்துறை சார்ந்து காலடி எடுத்து வைத்திருந்தனர். மாயாஜாலம், காதல் கதைகள், SJUG) இசை, பாடல்கள் போன்றவற்றால் நிரம்பி இருந்த இத் திரைப்படங்களைக் காம்போச்சிய மக்கள் பெரிதும் வரவேற் றிருந்தனர்.
'அந்தக் காலத்தில் நடனமாடுவதும் திரைப்படங்கள் பார்ப்பதும் மட்டுமே பொழுதுபோக்கு என்று இருந்தது. என்றாலும் நடனமாடுவதில் பல தடை கள் இருந்தன. எனவே திரைப்படங்கள் பிரபலமடைந்து விட்டன. மக்கள் திரைப் பட அரங்குகளை நோக்கிப் படையெ டுக்க ஆரம்பித்துவிட்டனர்? என "Golden Sumbers" திரைப்படத்தில் காம்போச்சிய நாட்டு முதியவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கின்றார்.
இவ்வகையிலான பிரபலம் காரணமாக 15 வருட காலத்திற்குள் சுமார் 4OO திரைப்படங்கள் காம்போச்சியாவில்
المجر
67
தயாரிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் இரசிகர்களின் மனம் கவர்ந்திருந்த தய் சவென் போன்ற நடிகைகளுக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப் புக்கள் தேடி வந்துள்ளன. சில வேளைக ளில் ஒரே நாளில் வெவ்வேறு திரைப் படங்கள் பலவற்றில் நடிக்க வேண்டிய சூழ்நிலையும் இந்த நடிக, நடிகை களுக்கு ஏற்பட்டிருந்ததாக மேற்படி திரைப்படம் சுட்டிக் காட்டுகின்றது.
இந்த நிலையில் 1970 கால கட்டம் ஆரம்பமான போது, பொல்பொட்டின் தலைமையிலான கெமரூச் கெரில்லாக் கள் தங்களது கிளர்ச்சியை முன்னெடுத் திருந்த போது, காம்போச்சிய திரைப் படத்துறையின் பொற்காலம் அழிவுற ஆரம்பித்து விட்டது. 1970களில் காம் போச்சியாவின் ஆட்சியாளர்களால் பொழுது போக்கு அம்சங்கள் அனைத் துக்கும் தடைவிதிக்கப்பட்டுக் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்த போதிலும் அதற்கு எதிராக எழுந்து நின்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் 1975ம் வருடம் அரங்குகள் மூடப்படும் வரையில் தங்களது படைப் புக்களை மக்கள் மத்திக்கு எடுத்துச் சென்றனர்.
திரைப்பட
1975ம் வருடத்தின் பின்னர் பொல் பொட்டின் தலைமையின் கீழ் ஆரம்பமா கிய கெமரூச் ஆட்சிக் காலத்தின் போது திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது அனைத்துக் கலைகளுக்கும் கலைஞர் களுக்கும் மிகப் பயங்கரமானதொரு நிலை தோற்றம் பெற்று விடுகின்றது. நடைமுறையில் இருந்துவந்த பல்வேறு கலைகள் தடை செய்யப்பட்ட போது திரைப்படத்துறையும் அதனுள் அடக் கப்பட்டதுடன் சமூக விரோதிகள் என
யாத்ரா 22

Page 36
இனங்காட்டப்பட்ட திரைப்பட நடிக, நடிகைகள், இயக்குநர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் போன்றோர் கெமரூச் படைகளால் கொல்லப்பட்டனர். இதிலி ருந்து உயிர் தப்பிய மிகச் சிலரில் ஒருசாரார் தமது பழைய ஆட்சியாளர் களான பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பி னைப் பெற்றனர். நான்கு வருட காலப் பொல்பொட்டினது ஆட்சியின் கீழ் காம்போச்சியாவிலேயே தங்கியிருந்து உயிர் பிழைப்பதற்கான அதிர்ஷ்டத் தைப் பெற்ற திரைப்படத்துறை சார்ந்த வர்கள் மிகச் சிலர் மட்டுமே ஆவர்.
1979ம் வருடத்தின் பின்னர் மீண்டும் திரும்பிப் பார்க்கும் இவர்களுக்குத் தங்களது திரைப்படப் பிரதிகள் கிடைக்க வில்லை. சுமார் 4OO திரைப்படங்களில் எஞ்சி இருந்தவை 15 திரைப்படப் பிரதிகள் மாத்திரமே ஆகும். திரையரங்கு களும் திரைப்பட ஸ்டூடியோக்களும் தரை மட்டமாக்கப்பட்டதுடன் ஒரு சில திரையரங்குகள் பாழடைந்த நிலையில் காணப்பட்டன. இவை எல்லாவற்றையும் விடத் திரையில் உலாவிய அழகான நடிக, நடிகையர் எப்போது, எந்த இடத்தில், எவ்வாறு கொல்லப்பட்டார் கள் என்பதை அறிந்த எவரும் இல்லை. இதிலிருந்து 31 வருடங்களுக்குப் பின்னர், முன்னாள் பிரதான திரைப்படத் தயாரிப்பாளரான எவன் கானின் பேரனான, இளைஞர் Davy Chouதனது பிரான்ஸ் நாட்டினது கல்வியறிவுடன் மீண்டும் தனது தாய் நாட்டிற்கு வருகை தருகின்றார். இவரது இந்தப் பயணம் புதையுண்டு போன காம்போச்சியத் திரைப்படத்துறையின் உன்னதமான அந்த யுகத்தைத் தேடுவதற்கானதாக அமைந்து விடுகின்றது. இவரது இப்
யாத்ரா 22
68
பயணத்தின் போது இவரால் கண்டு பிடிக்கப்பட்ட வேதனையுடன் கூடிய ஞாபகங்கள் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி சிட்னி நகரில் இவைன்ட்
திரைப்பட மாளிகையில் காட்டப்பட்டது.
2010ம் வருடம் காம்போச்சியாவிற்குச் சென்றிருந்த Davy Chouவிற்குத் தனது திரைப்படத்திற்குரிய பின்னணியோ கடந்த காலத் திரைப்படங்களினது காட்சிகெரோக்கே கேளிக்கைவிடுதிக ளாக, “கராஜ்'களாக மாறியுள்ள UGÖD4pUU திரையரங்குகளையும் நாட்டிய ஆசிரி யையாக மாறியுள்ள முதிய தய் சவென், தனது மனைவி மற்றும் பிள்ளைகள் அனை வரும் இறந்து விட்டதாக தகவலால் மாத்திரம் அறிந்து கொண்ட திரைப்படக் கலைஞரான யுவொன் ஹெம், பிரான் ஸ9க்கு தப்பியோடிப் பின்னர் செல் வந்தராகித் தனது நாட்டில் தனது இறுதிக் காலத்தைக் கழிப்பதற் காக வந்திருக்கும் திரைப்படக் கலைஞ ரான லி.யு. ஸ்ரென்க், உட்பட்ட சிலரை யும் தனது நாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் எதுவும் ஒழங்காக அறிந்திராத இளைஞர்கள் கூட்டத் தையுமே Davy Chou சந்திக்க நேரிடுகின்றது. என்ற போதிலும் Davy Chou தனது ஒளிப்பதிவுக் கருவியை இயக்க மறந்திருக்கவில்லை.
இந்த வகையில் தய் சவென், யுவொன் ஹெம், லியு ஸ்ரென்க் உட்பட்ட சிலர் தங்களது கதைகளை நமக்குக் கூறுகின் றனர். அக்கால கட்டத்துத் திரைப்படங் களினது பாடல்களும் இசையும் நமது செவிகளில் வந்து விழுகின்ற நிலையில் மாற்றமடைந்து காணப்படுகின்ற பழைய திரையரங்குகளும் அக் கால கட்டத்தில் திரைப்படங்களைக் கிரகித்
ܓ݂ܶܬ݂ܟ݂

துப் பார்த்த இன்றைய முதியவர்களும் (சினிமாப் பைத்தியங்கள்) காட்சிப் படுத்தப்பட்டுள்ளனர்.
திரைப்படம் ஆரம்பித்து சில நிமிடங் களிலேயே 40 வருடங்களுக்கு முன்ப தாகக் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட திரைப்படத்துறையானது எங்கள் முன்பாக மீண்டும் உயிர் பெறுகிறது. பயங்கரமான கடந்த காலத்தின் வேதனை மிகுந்த நினைவுகளை மீள ஞாபகப் படுத்துவதற்கு இவர்களிடமுள்ள விடயங்கள் போதுமானதாக இல்லை என்ற உணர்வு ஏற்படுமளவிற்கு அந்த பயங்கரத் தன்மையை மட்டும் நம்மால்
உணர்ந்து கொள்ள முடிகின்றது.
காதல் மற்றும் நினைவுகளுடன் கூடிய அடைப்பின் இறுதியானது சாம்பலில் இருந்து எழுகின்ற பீனிக்ஸ் பறவையை ஞாபகப்படுத்திய வாறு காம்போச்சிய திரைப்படத் துறையின் கடந்த காலத்தை எங்களது மனதுகளில் உலாவ வைப்ப g5ff)(3) Davy Chou 5(BGOLDuJITGOT (pus) சியை மேற்கொண்டுள்ளார்.
ஞாபக மறைவுகளுடன் கூடிய கதை களை மிகவும் ஜாக்கிரதையாகக் கட்டி எழுப்புவதன் மூலம் நல்லதொரு கதையினை உருவாக்க இயலும். இதன் போது Davy Chou வக்கு கிடைக்கப் பெற்றுள்ள பழைய திரைப் படங்களி னது பகுதிகள் யாவும் மிகவும் பழுத டைந்த வீ.சீ டீ. மற்றும் வீ.எச்.எஸ். பிரதிகளினூடாகக் கிடைக்கப் பெற்ற வையே ஆகும். இதனூடாக அவர் கடந்த காலத்தை நோக்கிச் செல்வதற் கான அழைப்பினைப் பழைய மனிதர்க ளின்பால் விடுக்கின்றார். இவர்கள் பழைய திரைப்படங்களின் ஞாபகங்களி
னுாடாக நிகழ் காலத்தில் நடந்து
والحر
69
செல்கின்றவாறே எங்கள் முன்பாக வருகின்றனர். சுமார் 4, 5 தசாப்தங் களுக்குப் பின்னர் இவர்களுக்காக மிஞ்சி இருப்பது என்ன? கூறுவதற்கென இருக்கும் கதை என்ன? இத் திரைப்பட இயக்குநர் இது தொடர்பில் தனது அவதானத்தைச் செலுத்தியுள்ளார்.
தனது தங்கையின் அழுத்தம் காரண மாகவே யுவொன் ஹெம் திரைப் படத் துறைக்கு வந்துள்ளார். பிரபல ஆங்கிலத் திரைப்படக் கலைஞரான டெல்மர் CLG)JGh) @uJöélu "Bird of Paradise" திரைப்படம் காம்போச்சியாவில் ஒளிப் பதிவு செய்யப்பட்ட போது ஹெம்மின் தங்கைக்கு அத்திரைப்படத்தில் ஒரு துணைப் பாத்திரம் கிடைத்திருந்தது. இதனால் ஏற்பட்ட அனுபவம் காரணமாக மகிழ்வுற்றிருந்த அவரது தங்கையின் அழுத்தம் காரணமாக பிற் காலத்தில் யுவொன் ஹெம் திரைப்படத் துறைக்கு வந்துள்ளார். இவரால் கட்டப்பட்ட álgo).gÚULGio(5aGuTGSDe "Bird ofParadise" என இவரது தங்கை பெயர் வைத் துள்ளார். தனது திரைப் படத்துறை சார்ந்த பயணத்தை விபரிக்கின்ற
சர்வாதிகாரி பொல்பொட்சி
штфTт 99

Page 37
uClourici Gondub ScioT(Bub "Bird of Paradise" இற்கு அழைத்துச் செல்கின்றார். கெமரூச் தாக்குதல்கள் காரணமாக அது த ரை மட்ட மாக் கப் பட்டுள்ளது. இடையிடையே காணப்படுகின்ற சீமெந் துத் தரை, எஞ்சியிருக்கின்ற கட்டிடத் தின் மிச்ச சொச்சங்களின்பால் யுவொன் ஹெம் மெளனமாகத் தனது பார்வையைச் செலுத்துகின்றார். அந்த நிலையில் அவரது பழைய திரைப்படமொன்றின் ரம்மியமான பாடலொன்று பின்னணியில் ஒலிக்கின்றது.
யுவான் சானின் புதல்வி அல்லது மேற்படி விவரணத் திரைப்படத்தின் இயக்குநர் Davy Chouவின் மாமியாரான கொஹன்க் ஸ்டெலின்க் எங்கள் முன் வருகின்றார். தனது தந்தையின் முதல் திரைப்படம் 1964ம் வருடம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்து அவர் கூறுகின்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டிற்குத் தப்பியோடி உயிர் பிழைத்துக் கொள்கின்ற அவர்கள், பிறகு 1979ம் வருடம் தாய் நாட்டிற்குத் திரும்புகையில் அவர்களால் தயாரிக்கப் பட்ட திரைப்படங்களுக்குப் பதிலாக அத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட 15 புகைப்படங்கள்
மாத்திரம்ே கிடைக்கின்றன.
1970களில் காம்போச்சியாவில் தாக்கு தல்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் லியு ஸ்ரென்க் தனது மனைவியை (இவர் லியுவின் திரைப்படங்களில் நடித்த நடிகையாவார்) பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சித்திர வதை முகாம்களில் கூடத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் ஒருவாறு உயிர் பிழைத்துக் கொண்டு மூன்று வருடங்களின் பின்னர் பிரான்ஸ் நாட்டில் தஞ்ச மடைந்துள்ளார். அந்நிலையில்
штфЈт 92
பொணி ஸலக்குத் தனது மனைவியைப் பார்ப்பதற்கு இவர் சென்ற போது தான் இறந்து விட்டிருக்கக்கூடும் என நினைத்த இவரது மனைவி முழுமை யாகவே மேலைத்தேயக் கலாசாரத்திற்கு உட் பட்டு இன்னொருவரைத் திரு மணம் செய்து கொண்டிருக்கும் நிலை யைக் காண்கின்றார்.
அவள் மீண்டும் அவரை ஏற்றுக் கொண்ட போதிலும் அங்கிருந்து வெளியேறிய லியு, பரிஸ் நகரில் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் டெக்ஸி நிறுவ னங்கள் மூன்றினது உரிமையாளராகி விடுகின்றார். பின்னர் தனது வாழ்நாளின் இறுதிக் கால கட்டத்தைத் தனது தாய் நாட்டில் கழிப்பதற்காகக் காம்போச்சியா விற்கு வருகை தரும் லியு, மேற்படி விவரணத்திரைப்படத்தில் தனது திரைப் படத்திற்கான பின்னணியை வழங்கி யிருந்த புனிதப் பொய்கையைத் தேடி எங்களையும் அழைத்துச் செல்கின்றார். அந்தப் பொய்கை இன்று மிகவும் அசுத் தமான, பச்சை நிற நீரைக் கொண்ட பொய்கையாகக் காட்சிதருகின்றது. தான் திரைப்படங்களை இயக்கியபோது அத னைப் பார்வையிட வந்திருந்த சில பெண்கள் லியுவைச் சந்திக்கின்றனர். அப்பெண்கள் இன்று வயோதிப நிலை அடைந்தவர்களாகக் காணப்படுகின் றனர்.
காம்போச்சிய திரைப்பட இரசிகர்களி டையே மிகவும் பிரபலமாகியிருந்த காதலும் யுத்தமும் (Love and War), *நாகராஜனின் மனைவி (The Snake King's Wife) Curcino Saogluliigasco நடித்த பிரபல நடிகையான தய் சவென் தனது நாட்டிய வகுப்பின் இடைநடுவில் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றார்.
ܓܵܬܐ
 

அவரது வீட்டின் சுவர்களில் காணப்படு கின்ற பழைய திரைப்படங்களின் சுவரொட்டிகளில் காணப்படுகின்ற தனது சகோதர நடிக, நடிகைகள் நேற்றுக்கூடத் தன்னுடன் இருந்ததான ஒர் உணர்வு தோன்றுவதாக அவர் கூறுகின்றார். உண்மையிலேயே அவர்கள் இருந்த தைக் கண்ட எவருமே இல்லை. அவர் களது கல்லறைகள்கூட எங்குமே கிடையாது.
சிறுகதை ஆசிரியரும் திரைப்படக் கலைஞருமான லியு பென் யெம், தான் எழுதிய பன்னிரண்டு சகோதரிகள்? (Twelve Sisters) பற்றிக் கூறுகின்றார். அதே போன்று ஒக் சிலாயுத், லிம் ஆன் போன்ற பழைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளவர்களும், திரையரங்குகளுக்கு அக் கால கட்டத்தில் படையெடுத்திருந்த இன்றைய முதிய வர்களும் தங்களது நினைவுகளைப் இவை அனைத்துக்கும் மத்தியில் கெமராவும் பயணிக்கிறது.
பகிர்ந்து கொள்கின்றனர்.
Uryp60)usbg) CustudiTGT "Bird of Paradise" ஸ்டூடியோ, 10 குடும்பங்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் பழைய திரையரங்காக இருந்த கட்டிடம், இளை ஞர், யுவதிகள் உண்டு மகிழ்கின்ற ஸ்னூகர் விளையாடுகின்ற, கெரோக்கே பாடி மகிழ்கின்ற பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ள பழைய திரையரங்கு உட்பட்ட பழைய ஞாபகக் களஞ் சியங்களின் இன்றைய பிரதிபலிப்புக் களை நோக்கி Davy Chou வின் கெமரா பயணித்துக் கொண்டிருக்கின்றது. பின்னணியில் ஒலிக்கின்ற சின்சியமவுன், ரொஸ் செரிகொத்தா போன்ற திரைப் படங்களின் பழைய பாடல்கள் மீண்டும்
ܕܬܬܐ
71
ஒரு முறை இந்தப் பழைய ஞாபகக் களஞ்சியங்களுக்கு உயிரூட்டுகின்றன. sé. Göstu- G|EguDMS "Golden Slumbers" திரைப்படத்தின் ஊடாக எங்களுடன் கலந்துரையாடுகின்ற லியு ஸ்ரென்க் மாத்திரம் திரைப்படத்தின் இறுதியில் அழுது புலம்புகின்றார். தன்னால் இழக் கப்பட்ட தனது மனைவியின் ஞாபகங் களால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எத்தனையோ விடயங்கள் மாறி விட்டன. எத்தனையோ எங்களிடம் இருந்து இல்லாது போய் விட்டன என இறுதியில் அவர் கூறுகின்றார்.
யுவான் ஹெம், தய் சவென் போன்ற இவர்களது கண்ணி வற்றிப் போய் நீண்ட காலமாக இருக்கக்கூடும் என எண்ணத் தோன்று கிறது.
வர்கள் அழவில்லை.
4 - 5 தசாப்தங்களுக்கு முன்பதாகப் புதையுண்டு போன காம்போச்சிய திரைப்படத்துறையின் வேதனைமிக்க ஞாபகங்கள் பார்ப்போர் அனைவரையும் ஊமையாக்கி விடுகின்றன.
பழைய திரையரங்குகளில் தற்போது வசித்துவரும் இளைஞர்கள் சிலர் அக் கட்டிடத்தின் உடைந்து சிதைந்த சுவர் களை வெறிச்சோடிப் பார்த்துக் கொண்டி (bůugJLGöT "Golden Slumbers" 660)Jů படம் முடிவுறுகிறது. அசுத்தமடைந்துள்ள அந்தச் சுவர்களினூடாகப் பழைய திரைப் படங்களின் காட்சிகள் தோற்றம் பெறுவதை அவர்கள் காண்கின்றனர். காம்போச்சிய திரைப்படத்துறை மீள உயிர் பெறுவது தொடர்பிலான மறைந் திருக்கும் எதிர்பார்ப்பு இதனூடாகத் தெரிகிறது. à
штфЈт 92

Page 38
யாத்ரா 22
72
மஞ்சள் குப்பைகள்
O
Grb.5.6.5Tib. 9.bibiotti
துவேசம் மூட்டிய அடுப்பில் கொதித்து வழிந்தது பெளத்த தர்மம். செருப்புப் போடாத கால்களால் மிதிபட்டு தம்புள்ளை வீதியில்
பத்தரின் பஞ்சசீலம் ஊத்தையானதைக் கண்டேன்
2O ( 2 - O4.2O வெள்ளிக் கிழமை குத்பாவை காவிப்புடவையால் துடைத்தெறிந்த வெறி மகிழ்ச்சியை சிங்கள மொழியில் வறாய் கூய் போட்டதொரு கும்பல். மஸ்ஜிதின் கூரை ஓடுகள் மீது பெளத்த கொடிக் கம்பங்களின் அடையாளம் இருக்கிறது
அவர்களது முகத்தில் எரிந்த புனித பூமியென்ற பெருங்கோபம் நமது அடையாளங்களை இன்னும் பல இடங்களில் சாம்பலாக்கி விடுவதற்காகக் கொளுத்தப்பட்ட ஆரம்பம் என்றே அஞ்சுகிறேன்

73
இந்தப் பெரும்பான்மை மஞ்சள் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டி நமது புனிதங்களை அவ்வப்போது நாசப்படுத்துகிறது விபச்சார விடுதிகள் சாராயக் கடைகள் புனித பூமியின் அரச மரங்களாக ஓங்கி வளர்ந்திருக்கையில் அல்லாஹ்வின் இல்லங்களை மாத்திரம் அடித்து நொருக்கி அப்பறப்படுத்த ஆவேசம் பொங்குகிறார்கள்
இனவாதம் பெருவளர்ச்சி கண்ட உலகின் முதல் தேசம் இது விகாராதிபதிகள் நியமனத்திற்கு பெருஞ்சண்டியர்கள் தேவையென்று தகுதி கோரப்பட்டிருக்க வேண்டும் காவித் துணி களைந்து காட்டி கொம்பிய சத்தம் ரங்கிரியில் ஒலிக்கிறது
இன்று ஹைரியா பள்ளிவாயலை கட்டடத்தோடு தூக்கி எங்காவது எடுத்துச் சென்று விடுங்கள் என்று விரட்டியடிக்க கும்பல் சேர்த்து வந்திருக்கிறார்கள். சம்மாங்கோட்டுப் பள்ளியை சாய்த்து நாசமாக்கும் ஒரு திட்டம் ரஜமஹா விகாரையில் ரகசியம் செய்யப்படும்
st sta)6C
குறைந்தது புனித யத்தம் கடமையாவது எச்சந்தர்ப்பத்தில் என்ற மார்க்க அறிவாவது
நமக்கு இருக்கிறதா?
2Cs ( 2.04.24
யாத்ரா 22

Page 39
பாஹிம் ஹாஜி 'வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காரர்' என்று இனங்கண்டு விட்டால், அவர் வேறு நாட்களில் தொழாதவர் என்று பொருளல்ல.
இராப்பகலாக ஒரே பிஸ்னஸ், பிஸ் னஸ் என்று ஓயாமல் உழைப்பில் திளைக்கும் போது மட்டும் சில நாட் கள் தொழுகைகள் தவறிப்போகும்.
ஒடி ஒடி உழைக்க வேண்டும் என்ற உந்துதல் ஊன், உறக்கம், உறைவிடம் என்று எல்லாவற்றையும்மழுங்கடிக்கச் செய்து விடும். அப்படி ஓர் அசுர உழைப்பு. அது அவருடைய அலாதி யான தேடல் முயற்சி. முடிகிற காலத்தில் உழைத்துவிட் டால், முடியாத கால கட்டத்தில் காலுக்கு மேல் கால்போட்டு ஒய்வெ டுத்து அனுபவிக்கலாம் என்பது அவ ரது அசைக்க முடியாத குறிக்கோள். விடாப்பிடிவாதமும் அதுவேதான்.
இந்த வருடம் நோன்புப் பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் ஓடி விட்டன.
குடும்பத்தில் மனைவி மக்கள் தூர இடங்களில் உள்ள நெருங்கிய உறவு களைச் சந்தித்து சலாம் கொடுத்து முசாபஹா’ச் செய்யச் சென்றிருக்கி றார்கள். பாஹிம் ஹாஜியின் முழு
74
அனுமதியுடன்தான். இன்ஷா அல் லாஹ். இன்றக்கி நாளக்கி வரக் கூடும். வரட்டுமே இப்ப இங்கே என்ன தலைபோற வேலை கிடக்கு
எத்தனை நாள் போனாலும் பாஹிம் ஹாஜி எதிர்க்கப் போவதில்லை. வருடத்திற்கு ஒருமுறை அவர், அவர் களுக்கு வழங்கியிருக்கும் சுதந்திரம். தன்னால் அவர்களை விரும்பிய இடங்களுக்கு அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்க முடியாது தானே!
அவர்களும் புத்தாடை அணிந்து சுற்றித் திரியும் போது தென்றல் காற்று அவர்களது மேனியையும் தழுவிச் செல்ல அது ஒரு அரிய வாய்ப்புத் தானே! பாவப்பட்ட ஜென்மங்கள்! ஒரே வீட்டில் அடைப்பட்டுக் கிடப்ப தில் என்ன சுகம் கண்டுவிட்டார்கள், வேளா வேளைக்குச் சமைத்துக் கொட்டுவதைத் தவிர.
நோன்பு காலங்களில் அவர்களுக்கு விதம் விதமான ஒஜிபனம் வெளியில் அமைந்திருக்கும் போது, அவர்கள் அவசரப்பட்டுத் திரும்ப வேண்டுமா?
இன்று பாஹிம் ஹாஜி வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின் வீட்டில் வேலைக்காரன் சமைத்து
ஒரு வேளை சோறு
ப. ஆப்தீன்
штфДт 99

வைத்ததைச் சாப்பிட்டு விட்டு, வெளியூருக்கு வெளியேறியவர்தான். சும்மாவா..? இலாபம் மட்டும் கிட்டத்தட்ட கைக்கு மேலே ஐம்ப தாயிரம் தேறுமாம். விட்டுவிடு 6) ΠΠΠ 2
பாஹிம் ஹாஜி அன்று இரவு வீட்டுக் குத் திரும்பும் போது இரவு பத்து மணி பிந்திவிட்டிருந்தது. கடுமையான பசியுடன் வந்ததும் வராததுமாக.
'அப்துல் சலாம், டெலிபோன் கோல் ஏதும் வந்திச்சா..?
வீட்டில் சொந்தக்காரர்கள் இல்லாத போது வீட்டில் காவல் காப்பதிலிருந்து சமையல் தொடக்கம் சகல வேலை களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகப் பிரகாசிக்கும் அப்துல் சலாமிடம் வினவினார். வீட்டில் குடும்ப அங்கத் தவர்கள் அனைவரும் வந்ததும். அப்துல் சலாமுக்கு வேலை பாஹிம்
لهجر
ஹாஜியின் கடையில்தான். அது வரைக்கும் அவர் சுதந்திரப் பறவை.
'கோல் ஏதும் வரல்ல ஹாஜி.”
ஹாஜி குளியலறைக்குப் போய் முகம் கை கால்கள் அலம்பிவிட்டு, உடை மாற்றிக் கொண்டு வந்து முன் அறை யின் சோபாவில் அமர்ந்து டி.வி.யை முடுக்கிவிட்டார்.
அவன் வந்து நின்றான். 'சாப்பிட என்னப்பா இருக்கு.
பசியாய் கிடக்கு.”
அப்துல் சலாம் அசையாமல் அப்ப டியே நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவர் ஊகித்துக் கொண்டு விட்டார்.
சமைத்து வை, சாப்பாட்டுக்கு வந்து
штфЈт 99

Page 40
விடுவேன் என்று ஒரு டெலிபோன் கோல்கூட கொடுக்க மறந்துவிட்டுப் போய். இப்ப இப்படித் திடீரென்று வந்து சாப்பாடு போடு என்றால் அவனால் என்ன செய்ய முடியும்? சமைப்பதற்கு நேரமெடுக்கும் அது வும் போக சமையல் பொருட்கள் சிலவும் தட்டுப்பாடு."
'ஓட்டலுக்குப் போய் மீன் சாப்பாட் டுப் பார்சல் எடுத்துவிட்டு வரு வியா..??
'பத்து மணி பிந்திருச்சி. சாப்பாட் டுக் கடைகள் எல்லாம் மூடி வெறிச் சோடிக் கிடக்கும். அது ஹாஜிக்கு விளங்காது. இருந்தாலும் சொல்கி றார். என்பதற்காக சரி பார்த்துட்டு வருவமே. என்று பழைய 'றலி சைக்கிளை வேகமாக உழக்கினான். என்ன இருந்தாலும் றலி, றலி தான்.
штфTт 99
76
பதினைந்து நிமிடங்கள் கரைந்து விட்டன. அலைந்ததுதான் கண்ட பலன். மீண்டும் திரும்பினான்.
- - - - - கடைகள் எல்லாத்தையும் நேரத்தோட மூடிவிட்டாங்க. பெரு நாள் சீசன், எல்லாரும் ஊர்களுக்குப் போய்ட்டாங்க. சமையலுக்கு ஆட்கள் இல்லை."
'அப்படியா. நீ. 6া6ঠা6তো
சாப்பிட்டே..??
'நா. நேரத்தோட வீட்ல சாப்பிட்டு வந்திட்டன்."
'ஜும் ஆவுக்குப் பின் வெளியேறிய ஹாஜி, வீட்ல மனைவி மக்கள் இல்லை என்று தெரிந்தும் முன்னேற் பாடு எதுவும் செய்யாம ரொம்பச் சுணங்கி வந்து பழக்க தோசத்தால் சாப்பாடு தேடுவது அவருக்கு ஒரு புதிய அனுபவம். பட்டுத்தான் பாடம் படிக்கணும்." "சலாம் 1. ஸ்ரோங்கா டீ ஒன்னு போடு. பிரிஜ்ல பிஸ்கற் பக்கற் கிடக்கும். எடுத்துட்டு வா.”
தேங்கா இருக்கு, ஒரு பத்து நிமிஷத்தில ரொட்டி ஒண்டு சுட்டு.”
SSSS SSSSSSMSSSSSSS S S S SMSSSSMSSSSSSS S S S S SSS SS SS SS மாவு எல்லாம்
'அதெல்லாம் தேவ இல்ல
சலாம் தயங்கித் தயங்கி. ஒரு கணம் யோசித்துக் கொண்டிருந்தான்.
'6T6T60T F6) Th?’”
'ஹாஜி. நீங்க விரும்பினா. எங்கட வீட்டில. இண்டக்கி. உறவினர்க ளுக்குச் சாப்பாடு. விசேஷம். ஒடிப் போய் ஒரு பார்சல் கொண்டு
ܐܶܠܽܬܐ
 

வரட்டா. நீங்க எப்பவும் இரவுக்கு சோறு சாப்பிட்டுத்தானே பழக்கம். அதுதான் கேட்டேன்' பாஹிம் ஹாஜிக்கு அது விருப்பக் குறைவு என்பதை அவரது மெளனம் அவனுக்கு உணர்த்தியது.
'வீட்டாள்களுக்குக் குடுக்க வானாம்.'
கரைச்சல்
சலாம், பாஹிம் ஹாஜியின் உள்மன தைப் புரிந்து கொண்டான். சலாம் மிகுந்த கரிசனையுடன் நடு அறைக் குப் போய்க் கொண்டிருந்தவன், பட்டென்று அவனுக்கு 9 (5 யோசனை. ஹாஜி ஏசினாலும் பரவாயில்ல. ! என்று அவன் திரும்பி வேகமாக வந்தான்.
'என்ன சலாம்.
'நா ஒரே ஒரு ஓட்டல மறந்துட்டன் ஹாஜி. பிளொஸ் ஓட்டல், ஒரு டெலி போன் போட்டுப் பார்க்கட்டா ? இருந்தா ஒரு பத்து நிமிஷத்தில் போய் வந்திடுவன். சாப்பாடு திறம், நா அங்கே சாப்பிட்டும் இருக்கிறன்.”
என்ன இருந்தாலும் சாப்பிட்டாத்தான் திருப்தி, தூக்கமும் வரும்.
"அப்பதே போன நீ. எடுத்துட்டு வந்திருக்கலாமே. ஒனக்கும் மறதி. கூட. சரி. சரி சுருக்கா வா."
சலாமுக்கு மறதியும் இல்லை. பதட்ட மும் இல்லை.
கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மீண்டும் சைக்கி ளில் பறந்தான். சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த பாஹிம் ஹாஜிக்கு பசி வயிற்றைக் கிள்ளிக்
يخضر
77
கொண்டிருந்தது. சே! யாரையும் குறை கூறி என்ன பிரயோசனம்.சலா முக்கு கோல் பண்ணியிருந்தால் சுவையாக சமைத்து வைத்திருப் சா. இப்பவும் என்ன பணத்தை வீசினால் சாப்பாடு மேசைக்கு வந்து விடும். ஆனால் கொஞ்சம் லேட், அதனால் என்ன..?
பசித்தும் அந்தத் திமிர் மனோபாவம் அவரைவிட்டு விட்டு மாறவில்லை.
வெளியயூருக்குப் போயிருக்காவிட் டால் அந்தப் பெரிய லாபம். யாரு தரப் போறது. பிஸ்னஸ் பேச்சு வார்த்தை முடிந்ததும் மாலை நான்கு மணிக்கு ஒரு பட்டீசும் டீயும் சாப்பிட் டதுதான். ஆறு மணித்தியாலமா. சாப்பாடு தண்ணி ஒன்னுமில்ல."
ஹாஜி யோசனையில் ஆழ்ந்திருந்த
'ஹாஜி சாப்பாடு கிடைச்சிருக்கு. என்று சலாம் மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே வந்த போது, பாஹிம் ஹாஜியின் முகம் மலர்ந்தது. "பாத் தியா சலாம் என்றால் சலாம் தான்!” அவன் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்து மேசை யில் பரத்தினான். நெய்ச் சோற்றைத் தனியாகவும், கறிகளை வெவ்வேறாக பாத்திரங்களிலும் பரத்தினான். இறைச்சிச் சமையல், இறைச்சிப் பொரியல், கிழங்கு கத்தரிக்காய் பொரித்து சமைத்து. சின்ன வெங்காயம் அச்சாறு, வட்டிலப்பம்
இப்படியாக பாஹிம் ஹாஜிக்கு பெருநாள் சாப் பாடு சுப்பர். வெள்ளிக்கிழமை ஸ்பெசல்.
தனிக் கோப்பையில்
штфДт 92

Page 41
78
"சலாம். விலை எப்படி?
மிகவும் திருப்தியாகச் சாப்பிட்டு. 'அல்ஹம்துலில்லாஹ்” என்று இறை வனைப் புகழ்ந்து, "சலாம். சாப்பாடு ஏ வன் எதிர்பார்க்கவே இல்லை.” என்று பாராட்டினார்.
சாப்பாட்டு காசை. மறந்துவிடாம செட்டில் பண்ணி 6SG)....'
'சரி ஹாஜி அத நா பார்த்துக்கிறன். '' நேரம் போய்க் கொண்டிருந்தது. பாஹிம் ஹாஜிக்கு நித்திரை கண் களைச் சுழற்றியது. 'பாஹிம் ஹாஜி. நான் ஒன்று சொல்ல நினைக்கிறன். பிழையாயி ருந்தா மன்னிக்கணும். இல்லாட்டி விட்டுவிடுங்க."
‘என்ன? என்ற தோரணையில் ஹாஜி புருவங்களை உயர்த்தி, காதுகளை கூர்மையாக்கிக் கொண்டார்.
'பணத்தை வீசினால் சோறு மேசைக்கு வந்துவிடும். என்று நாங்க சொல்றம். விவசாயிகளின்
штфTт 92
சார்பில் ஒரு புதுக் கவிஞன் என்ன சொன்னான் தெரியுமா..?'நாங்க சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கைவைக்க மாட்டீர் கள் என்று. அந்த ஞாயம் ஒரு பக்கம் கிடக் கட்டும். எரணம் ஒவ்வொரு வருக்கும் அளந்திருக்கு . ஹாஜி. புரிவு இருந்தா அது கிடைச்சே ஆகும். பணம் கொடுத்தாலும் சரி.
கொடுக்காட்டாலும் சரி. இப்ப பாத்தீங்கதானே. எங்கெல்லாமோ அலைந்ததுதான். உலகில் வாழும்
சகல ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பவன் அவன்தான். அவன் உங்களுக்கு ரிஸ்க” எங்க அளந்தி ருக்கிறான் எண்டு பாத்தீங்கதானே..!
அதற்கு மேலும் ஒன்றும் குழப்பாமல் தன் அலுவல்களைக் கவனிக்கச் சலாம் அவ்விடத்திலிருந்து மறைந் தான்.
பாஹிம் ஹாஜி சிந்திக்கத் தொடங்கி 60TT.
சற்று முன் அவர் கண்களைச் சுழற்றி நித்திராதேவியும் அவரைக் குழப்
பாமல் மறைநதுவிட்டாள்.
ܓ݁ܰܬ݂ܟ݂
 

79
யாத்ராவின் 21 ம்இதழ் கண்டேன் அட்டைப் படம் தொட்டு விகடக் குறிப்புவரை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. புகழ்பெற்ற எழுத்தாளர் ஷேக்கோ அவர்களின் இழப்புச் செய்தியை யாத்ரா மூலமே அறிய முடிந்தது. தான் எழுத்துலகில் பேர்பெற்றுத் திகழ்ந்ததோடு, மற்றவரும் உயர வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணங் கொண்டவர் அவர். இதற்கு உதாரணமாக எனது புனித பூமியிலே காவியத்தைப் படித்துவிட்டு அவர் கைப்பட எனக்கு எழுதி அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி இது. அதனை யாத்ரா வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பு கின்றேன். அக்கடிதத்தை நான் இன்னும் ஒரு பொக்கிஷம்போல் பாதுகாத்து வருகின்றேன்.
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.
எஸ்.எம்.எஸ்.முஹம்மது காசீம் (ஷேக்கோ) புனித பூமியிலே காவியம் பற்றி
முதற்காவியம் (மஹ்ஜமீன் காவியம்) போலவே அதன் தொடராகிய இதுவும் அமைந்து, பாக்கள் படிப்பதற்குச் சிரமம் தராத அளவில் எளிமையாக உள்ளன. பொதுவாக தாங்கள் செய்திருக்கும் இந்த அருந்தொண்டு வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்று என்று துணிந்து கூறலாம். (சாரணபாஸ்கரனாரின் யூசுப் ஜூலைகா கூட சிறு அளவில் உள்ளதுதான்) அந்த வகையில் தங்களை எவ்வளவு பாராட்டினாலுந் தகும்!
வரலாற்றினைக் காவியமாக அமைத்துத் தந்த பெருமை தங்களுக்கு உண்டு. இடையிடையே தங்களது உவமைகளும் ஊடாடிக் காவியத்தை நாவினிக்கச் செய்துவிடுகின்றன. "கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் போரின் உக்கிரம் பற்றி வர்ணித்துச் செல்லும் பாங்கு தங்களின் சில பாடல்களில் (அஹமதின் வெற்றி) அமைந்து, படிக்கச் சுவை கூட்டுகின்றன.
இப்படியே ஒவ்வொரு பாடலைப் பற்றியும் கூறிச் சிறப்பிக்கக் கூடிய அளவில் தங்களது காவியங்கள் அமைந்து, தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்ல காவியங்களைத் தந்த பெருமை யைத் தங்களுக்குத் தேடித் தந்துள்ளன.
எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், துஆக்களும் தங்களுக்கு என்றென்றும் உண்டு வாழ்க தாங்கள்! வளர்க தங்கள் எழுத்துப்பணி.
2O.O. 1998
யாத்ரா 22

Page 42
ஒற்றையடிப்பாதை
கடையநல்லூர் பி.எம். கமால்
as65 Drtசுவனத்தின் நெற்றியில் ஆண்டவன் எழுதிய ஆதி வாசகம் !
பள்ளிகளே இல்லாத இந்தப் புனித வாசகம்தான் ஏகத்துவ மாளிகையை எல்லோரும் திறக்கின்ற அதிசயச் சாவி !
கலிமாபலதெய்வப் பாஷாணத் தூசியைத் துடைத்தெறியம் ஒட்டடைக்கோல் 1
கலிமாவின் உட்பொருளைக் கண்டு உணர்ந்து கொண்டவரையே ஞானிகள் என்று நானிலம் போற்றும் !
கலிமாஆன்மா சுவனத்தை அடைய நடக்கின்ற ஒற்றையடிப்பாதை 1
aჩ66ზup(T– நாத்திகத்தில் தொடங்கி ஆத்திகத்தில் முடிகிறது !
| யாத்ரா 22
ஏனம் கழுவிப் பானம் ஊற்றுவதற்காக !
மனிதக்
கடிதங்களில்
இந்த
முத்திரை குத்தப்படவில்லைஎன்றால் ஆண்டவணைச் சென்று அடையவே முடியாது !
இந்த
ஒளிவிளக்கை ஏந்திக் கொண்டுதான் இருண்டு கிடக்கும் ஆன்மக்காட்டில் ஞானிகளின் ஒப்பற்ற பயணம் உள்நோக்கித் தொடர்கிறது !
கலிமாவின் முன்னிரண்டு வார்த்தைகளை மொழிந்து விட்டால் மட்டுமே *தெளவறிது? அங்கே தரிபட்டு விடாது !
பின்னிரண்டு வார்த்தைகளும் பேசப்பட்டால்தான் ஏக இறைக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படும் !

81
கலிமாசுவனத்தில் வேர்விட்டு இதயத்தில் கிளை பரப்பும் அதிசய மரம் 1
இந்த மரத்தின் இனிய நிழலில்தான் ஞானிகளின் தவத்திற்கு வரமளிக்கப்படுகிறது !
கலிமாஒரு அதிசய ஆடை
இதை உடுத்திக் கொண்டால்தான் 26t(Dst நிர்வாணம் அடையம் !
முன்னோக்கி ஓடினால் பந்தயத்தில் அடையலாம் வெற்றி !
ஆனால் கலிமாவைப் பற்றி
*நின்றால்? தான் வெற்றி கிடைக்கும் !
ஈமான் முழுமை பெற்ற சீமானாய் ஆவதற்கு கலிமாவில் தான் மனதைக் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும் ! அப்போதுதான்சுவனத்தை இலாபமாய் சுலபமாய்ப் பெறமுடியம் !
இணைய இதழ்களில், வலைப் பூக்க ளில் பதிவிடப்பட்ட எந்தவொரு படைப் பையும் “யாத்ரா'வுக்கு அனுப்ப வேண் டாம் எனப் படைப்பாளிகளிடம் விநய மாகக் கேட்டுக் கொள்கிறோம். “யாத்ரா" வில் பிரசுரமான பின்னர் இணையத் தில் பதிவிட்டுக் கொள்ள முடியும்.
யாத்ரா தனிப்பிரதி 1OO.OO மட்டுமே. வருடச் சந்தாவைச் செலுத்த விரும்பு (36). TÚ Ashroff Shihabdeen 6T 6UTAD பெயருக்குக் குறுக்குக் கோடிடப்பட்ட 5OO.OO ரூபாவுக்கான காசோலை யைக் கீழ் உள்ள முகவரிக்குத் தபாலி (BIFáJa56iT. «96öb6Vog5I M.S.A. M. Ashraff Ali சேமிப்புக் க/கு - 72618033 என்ற “யாத்ரா" வின் இலங்கை வங்கி, கொலன்னாவைக் கிளைக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்ட பின் ஆசிரிய ரை அல்லது நிர்வாக ஆசிரியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவியுங்கள். உங்களுக்குச் சஞ்சிகை மீது அபிமானம் இருந்தால் அதைவிட அதிகமாகவும் அனுப்பி வைக்கலாம்.
YAATHRA
37, Sri Sidhartha MaWatha, (Dhankanatte Road) MABOLA - WATTALA SRI LANKA
யாத்ரா 22

Page 43
82
a_Hចចាត់ចាធំEng_Hចលីលាចេ០Lu_ឯ பின்நவீனக் கவிதையும்
கடலைக் கவி
மேற்படி தலைப்பில் ஒரு பதிவை இணையத்தில் படிக்க நேர்ந்தது. பொருள்விளங்கா உருண்டை என்பது என்ன எனத் தெரியாமல் அதைப் பற்றித் தேடிய போது அது ஒர் உணவுப் பண்டம் என்பதை அறிந்தேன். தலைப்பு சொல்லும் விடயத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் பொருள்விளங்கா உருண்டைபற்றித் தெரிந்து கோள்ள வேண்டும். எனவே முதலில் அதைப் படித்து விட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்லுங்கள்.
தேவையான பொருட்கள்: வேர்க்கடலை 2 கப், வெல்லம் 1 1/2 கப்(ஒன்றரை கப்), பொட்டுக்கடலை 1/2 கப், எள் 2 டீஸ்பூன், அரிசி மாவு 1 கப்.
செய்முறை:
வேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து வைக்கவும். பொட்டுக் கடலை, எள் இவற்றை மிதமான சூட்டில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய் பொடித்துக்கொள்ளவும். இவை எல்லாவற்றையும் வெறும் வாணலி யில்தான் வறுக்க வேண்டும். வறுத்த பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
штфTт 22 ܥܰܬܐ
 

83
பாகு காய்ச்சுதல்: கல்பதம் கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு தண்ணி ஊற்றி அடுப்பிலேற்றவும்.வெல்லம் கரைந்து நுரைத்துக் கொண்டு வரும்.சிறிது கவனமாக இருக்கவேண்டும்.இல்லை என்றால் பாகு தீய்ந்துவிட வாய்ப்புண்டு. ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணி எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூனால் பாகிலிருந்து சிறிது எடுத்து தண்ணில் விட்டு கைகளால் உருட்டி எடுத்து ஒரு
எவர்சில்வர் தட்டில் போட்டால் டங்கென்று சத்தம் வரவேண்டும். அதுதான் கல்பதம்.
இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கிக் கடலைக் கலவையில் ஊற்றி மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிளற வேண்டும். நல்ல சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்க வேண்டும். அவ்வாறு பிடிக்கும்போது வெல்லம் பிசுபிசுவென கையில் ஒட்டும். மேலும் கலவை சூடாகவும் இருக்கும். எனவே அரிசி மாவைத் தூவிக்கொண்டே உருண்டை பிடிக்க வேண்டும். இப்போது நல்ல சத்தான, சுவையான சுமார் 15 உருண்டைகள் தயார்.
பின்நவீனத்துவ கவிதைக்கும் பொருள்விளங்கா உருண்டைக்குமான ஒரு அடுப்படி வாசகியின் புரிதல்கள்.
பொருள்விளங்கா உருண்டை பின்நவீனத்துவக் கவிதை
முப்பாட்டிக்கும் மூத்த தமிழ்ப்பாட்டிகள் இன்னமும் எழுத்தாளர்களே இன்ன
செய்துவந்த உருண்டை. தென்று விளங்க முடியாத சண்டை.
எங்குமே அதிகம் காணக் கிடைப்ப சிறுபத்திரிகைகளில் மட்டும் தில்லை. விலைபோகும்.
உடல்நலத்திற்கு ஏற்றது. மனநலத்தைக் கெடுப்பது.
செய்தவன் தவிர ருசிப்பவனுக்கு எழுதியவன் தவிர படிப்பவனுக்கு உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல உள்ளிருக்கும் பொருளைச் சொல்ல (tptԳայՈՑl. (ՄՋԼԳայՈ35).
கடிப்பதில் தேங்காய் ஒன்று மட்டுமே படிப்பது தமிழ் என்று மட்டுமே புரியும். புரியும்.
வழமையாக உபயோகிக்கும் தானியங் வழமையிலேயே இல்லாத களில் வகைக்குக் கொஞ்சமாக அள்ளிப் வார்த்தைகளாக வகைவகையாக போட்டுக்கொள்ள வேண்டியது. அகராதியிலிருந்து அள்ளிப்
போட்டுக்கொள்ள வேண்டியது.
22 штфTт المصر

Page 44
84
பொருள்விளங்கா உருண்டை
பின்நவீனத்துவக் கவிதை
தானியங்கள் சிவக்க வறுக்கப் பட்டிருக்க வேண்டும்.
எண்ணம், பொருள், ஏவல் எல்லாமே சிவப்புச் சாயம்தான். (காதல்கவிதைகள் பரீட்சார்த்தத் தோல்வி என்று கேள்வி.)
அரிசி, பருப்பு, கோதுமை அடிப்படையில் முக்கியம்.
அல்குல், யோனி, முலை, குறி அதிமுக்கியம்.
பாகு முற்றும்முன் துரிதமாக உருண்டைகளைப் பிடித்து முடித்து விட வேண்டும்.
மனநிலை முற்றியபின் மிகத் துரிதமாக எழுத ஆரம்பித்து முடித்தும் விட வேண்டும்.
தாமதமாக்கினால் பாகு மாவுடன் பிடித்துக்கொண்டு உருண்டை பிடிக்கவராது.
தாமதமாக்கினால் எழுத்தாளனே தன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு
எழுதவராது.
கடப்பாரையால் உடைத்தல் அவசியம்.
கட்டுடைத்தல் அதன் குணாதிசயம்.
உருட்ட முடிந்தால் மட்டுமே அது பொருள்விளங்கா உருண்டை
படிக்க முடியாவிட்டால் அது பொருள்விளங்கா மரமண்டை.
(இந்த வாசகி மாதிரி!)
156i5: chitrasundarS.wordpress.com & chitrasundars.Wordpress.com
கேட்டது:-
"ஃபாஸ்ட் ஃபூட்!"
ஃபாஸ்ட் ہائیlgاو
இரண்டு புலிகள் ஒரு பெரிய மரத்தின் கீழ் அமைதியாகச் சாய்ந்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தன. புதருக்குள்ளிருந்து சட்டென வெளிப்பட்ட ஒரு முயல் அதி வேகமாகப் புலிகளின் முன்னால் பாய்ந்து ஓடி மறைந்தது.
ஏதோ ஒன்று வேகமாகக் கடந்ததை உணர்ந்த ஒரு புலி மற்றப் புலியிடம்
"ஏதோ கடந்து போனதே. என்ன அது?" மற்றைய புலி ஒரு புன்முறுவலோடு சொன்னது.
யாத்ரா 22

85
ஒரு திராட்சைக் கொடி தேம்பியழுகிறது!
O கிண்ணிut ஏ.எம்.எம். அலி
அடிக்கு நீரூற்று, கேட்கின்றது அது வளர்ந்து வருகையில் ஏனெனில் நான் கவிஞன் கொடிக்குக் கொழுகொம்ப வை! மரஞ்செடிகொடிகளுடன்கூடப் படரப் பந்தலிடு வளரப் பசளையிடு பேசுபவன் அவற்றின் மித்திரன்! அதன் தேவை இவைதாம்! அறஞ்செய்ய விழைபவன்!
கெட்டியாகப் பற்றிப் பிடித்தற்கு தலையை நீட்டி, நீட்டித் அக்கொடிக்குக் தத்தளிக்கின்றது கொழுகொம்பைக் கொடுத்தல் அத்திராட்சைக் கொடி உளது பொறுப்பு வெற்றிச் சுவரை அதனால் எப்படிப்
பற்றிக் கொள்ள முடியும்? அது கட்டியாகக் குலை போடணும் வாசலின் ஒரத்தில் காய்த்துக் குலுங்கணும் எனின் வைத்த திராட்சைக்குப் கட்டியாக வேண்டும் பந்தல் பாசமுடன் பந்தலிடு! கட்டும் கடமை உனதே! பந்தலிலே படர விடு!
புனல் மொண்டு ஊற்றும் நாட்டினோம் என்பது மட்டும் 85.63) (O65) (U போதுமா? மனங்கொண்டு ஆற்று! நாளாக நாளாக அக்கொடிக்குத் தேவை அதன் அகன்ற பந்தல் தேவைகளை நிறைவேற்றத் உறுதியான கொழுகொம்பு திராணியற்ற உனக்குத் உண்ணத் தண்ணீர்! தேவைதானா திராட்சை? ஊட்டந் தரும் நல்லெரு நாட்டினேன் என்பது மட்டும் போதாது
அக்கொடி இவனென்ன
அதன் ே
தன் தேவை இவைதாம் நொட்டினான் என்று மட்டும்
தேவையைத் தீர்த்து விடு நோகக் கூடாது திராட்சை தேம்பாது! ၅|6)&;t&of(ဓါÚ தேம்பமொலி எனக்குக் - அதற்குமுண்டு ஜீவிதம்!
22 யாத்ரா لهجر

Page 45
சாதனை என்பது எல்லோருக்கும் இலகுவானதாக இருப்பதில்லை. சாதிக்கத் துடிப்பதென்பது எல்லோ ருக்கும் இலகுவாகத் தோன்றக்கூடிய உணர்வு. அந்த சாதிக்கத் துடிக்கின்ற உணர்வில் எந்தனைப் பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது.
இற்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் - தன் வாழ்வில் சாதிக்கத் துடித்துக்கொண்டிருந்த ஓர் இளைஞ னைக் காணும் வாய்ப்பு எனக்கும் கிடைத் தது. "இடி பத்திரிகையில் என்னுடைய தொழிலைத்தொடங்கிய காலமது. வழமைபோல் ஒருநாள் காரியாலயத்திற் குச் சென்றபோது ஒரு புதுமுகம் வந்தி ருப்பதைக் கண்டேன். அந்தப் புதுமுகம் தானுண்டு தன் வேலையுண்டென ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. சம்பிரதாயத் திற்குச் சிரித்துவிட்டு மறுபடியும் வேலை யில் மூழ்கியது அந்தப் புதுமுகம்.
அன்று அங்கு புதுமுகமாக இருந்தவர் இன்று எனது அன்புக்குரிய நண்பனாக, O சகோதரனாக இருக்கிறார். இப்படி என் சாதி ಆಾಠಾಆ உள்ளத்தோடு இணைந்துவிட்ட அந்த
நண்பர்தான் டிரோன் பெர்னாண்டோ,
O D எல்லா இளைஞர்களுக்கும் இருக்ارت)sنتہGالفت கின்ற ஆசை, குறும்பு எல்லாமே டிரோனி டமும் இருக்கிறது. ஆனாலும் தேடல் இளைஞன் என்ற பெரும் பலம் அவருக்கு அதிக மாகவே காணப்படுவதுதான் சிறப்பு. டிரோன் என்பவனை என்னால் குறுகிய வட்டத்திற்குள் முடக்கிவிட முடிய வில்லை. ஆழ்ந்த அமைதி கொண்ட நபராகத்தான் நமது முதல் பார்வைக்கு ஏ.பி. மதன் அவர் தோற்றமளிப்பார்.
டிரோன் எந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று கோடிட்டுக் காட்டுவ
டிரோன் பெர்னாண்டோ
штфTт 99 ܓ̣ܬܕ݂
 
 

தற்கு எனக்குத் தயக்கம் அதிகம். டிரோ னோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம் சக எழுத்தாளனாக, பழகத் தொடங்கியதன் பின்னர்தான் தெரிந்துகொண்டேன் டிரோனுக்குள் இருக்கின்ற திறமைகளை.
நல்லதொரு இசையமைப்பாளர், சவுன்ட் என்ஜினியர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக் கலைஞர், மொழி பெயர்ப்பாளர், குரல்பதிவுக் கலைஞர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என இப்படிப் பல முகங்களைத் தன்னகத்தே கொண்டு அமைதியாக இருப்பவர்தான் டிரோன். பல திறமைகளைத் தன்னகத்தே கொண்டி ருக்கும் டிரோனுக்கு பிடித்தமான துறை இசை
இப்பொழுது எல்லா இசையமைப் பாளர்களும் இலகுவாகக் கணினி உதவியுடன் இசைத் தொகுப்புகளை வெளியிடுகிறார்கள். கணினி உதவி யுடன் இசையமைக்கின்ற கலாசாரம் இலங்கையில் பரவத் தொடங்கிய காலத் திலேயே அதனுள் ஆழமாகச் சென்று புதுமைகளைத் தேடியவர் டிரோன். மிக நுணுக்கமாக எதனையும் ஆராய்ந்து, அதன் ஆழம்தனை அறியு மட்டும் அவருக்கு ஓய்வு கிடைப்பதில்லை. இதனை நான் அனுபவ ரீதியாகவும் உணர்ந்திருக்கிறேன்.
ஏராளமாகக் கிறிஸ்தவப் பாடல்களை இசையமைத்துப் பாடிவந்த டிரோன் - தனது பெயர் சொல்லும் விதத்தில் 'Dimensions என்னும் இசைத் தொகுப் பொன்றையும் 2006ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்த அல்பத்தில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்துமே வித்தியாசமான முறையில் அமையப் பெற்றுள்ளமை சிறப்பானதாகும். இந்த இசையல்பத்தில் தனது இசைநுணுக்கங்
ہلچر
87
கள், குரல் வளம், எழுத்தாக்கம் என அனைத்தையும் காண்பித்திருக்கிறார் இவர். இலங்கை மற்றும் இந்தியப் பாடகர்கள் அதில் பங்களிப்புச் செய்தி ருந்தார்கள்.
Dimensions இசை அல்பத்தினை உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில் டிரோனும் நானும் அடிக்கடி அவரது வீட்டுக் கலையகத்தில் சந்தித்துக் கொள்வதுண்டு. ஒரு பாடலை இன்று எனக்குப் போட்டுக் காண்பிப்பார். அதே பாடலை மறுதினம் வேறு வடிவில் மாற்றிக் காண்பிப்பார். இப்படி அனைத் துப் பாடல்களையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி எடுத்திருந்தார் டிரோன். அந்த அயராத முயற்சிக்கு முழுப் பயனும் கிடைக்காவிட்டாலும் ஏகோபித்த ஆதரவு அவருக்குக் கிடைத்ததென்னமோ உண்மைதான்.
தன்னுடைய படைப்புகள் என்ற வட்டத்தை விட்டு அனைத்து இசைக் கலைஞர்களும் கைகோத்தால் மட்டுமே இலங்கைத் தமிழ் இசைத்துறைக்கு நல்லதொரு எதிர்காலம் உண்டென உறுதியாக நம்பும் டிரோன் சக கலைஞர் களோடு நல்ல நட்புறவைப் பேணி
UTöJT 92

Page 46
வருகின்றார். மூத்த கலை ஞர்களும், இளைய இசைத் தலைமுறையினரும் இசைத் தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களுக்கு இவரை நாடி வருவதை நான் அறிவேன். தகுந்த இளையவர்களைத் தெரிந்தெடுத்து அவர்க ளுக்கு இசைத் தொழில்நுட் பங்களைக் கற்றுக்கொடுத் தும் வருகின்றார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்ய விருந்த பாடகர் ஹரிஹரனது வருகை இந்திய அரசியல்வாதிகளால் தடைப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கலைஞன் என்ற வகை யில் தனது கருத்தைத் தமிழ் மிரர் இணையத்தளத்தில் பகிர்ந்தது பலரது கவனிப் பைப் பெற்றது.
'சிங்கள மொழி பேசும் சகோதர மொழிக் கலைஞர் கள் தமிழ்க் கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு படைப் புகளை இங்கு செய்து வரு கின்றபோது தமிழ் நடிகைகள் சிங்களத் திரைப் படத்தில் தோன்றுவதை அவர்கள் வர வேற்கும் போது தமிழக அரசி யல்வாதிகளுக்கு மட்டும் எதற்கு இந்த குறுகிய போக்கு? கலைஞர்களை கேடயமாகவும் பகடைக்காய் களாகவும் மாற்றும் போக்கு மாற வேண்டும். அல்லது நாம் அதனை மாற்ற வேண்
டும்.?
யாத்ரா 22
88
இலங்கை இசைத்துறை என்ற பார்வையை விஸ்தீரணப்படுத்தி சினிமா சாராத சர்வதேச தமிழ் கலைப் படைப்புகளுக்காய் ஸ்ருதி எப்.எம் என்னும் இணையத்தள வானொலி ஒன்றைப் பரீட்சார்த்தமாக ஆரம்பித்துத் தற்போது உத்தியோகபூர்வமாக வெகு விரைவில் ஒலிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் டிரோன் ஊடகம் சார்ந்த அனைத்து வகைப் படைப்புகளையும் உருவாக்கு வதற்கும் விநியோகிப்பதற்குமாகப் புதிய நிறுவன மொன்றின் நிர்வாக இயக்குனராகப் பொறுப் பேற்கவுள்ளார்.
இதன்மூலமாகச் சர்வதேச ரீதியில் நம் கலைப் படைப்புகளை இணையத்தளம் மூலமாகவும் மற்றும் பல வழிகளிலும் விநியோகிப்பதற்கான ஆயத்தங் களைச் செய்து வருகின்றார்.
தன்னுடைய 14 ஆண்டுக் கால இசைத்துறை அனுபவத்தை மூலதனமாக இட்டு அவர் முன்னெ டுத்திருக்கும் தூரநோக்குச் சிந்தனையுடைய செயற் றிட்டங்கள் வெற்றிபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது என் உறுதியான நம்பிக்கை.
டிரோனைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ளவும் அவரைத் தொடர்புகொள்ளவும் -
WWW.dirononline.com
 

89
வீதியில் விட்ட தவளை
O 986ắsåss VTG) EF23 UTGISTAT
சப்பாத்து முனையில் குடியிருந்த தவளையை சற்றும் எதிர்பார்க்கவில்லை நான் சப்பாத்துகளைத் தூக்கிக்கொண்டே வண்டியில் அவசரமாக ஏறியபோது. வண்டி நகர்ந்து செல்ல, நடுவீதியின் முச்சந்தியில் சப்பாத்தைத் தூக்கினேன் அணிவதற்காக, தொப்பென்று விழுந்தது. நாலுபறமும் வாகனங்கள் கிறீச்சிடும் பிரதான வீதியின் நடுவில் ஐயோ அதைப் போட்டுவிட்டேனே!
நகர முடியாமல் நின்றது மனது, வண்டியில் நகர்ந்து சென்றது உடம்பு. என்ன நடந்திருக்கும்? வாகனங்கள் மீதேறி சின்னாபின்னமாய்ப் போயிருக்குமோ? குடல் பிதுங்கிக் கோரமாகச் செத்திருக்குமோ? நகர் காவலர் நிலையத்தின் முன்னால் தவித்து நின்ற தவளையை நகர் காவலர் பெண்ணொருத்தியாவது தூக்கிச் சென்று காப்பாற்றியிருக்க மாட்டாளா? எத்தனையோ நாளாக அந்த இடத்தைக் கடக்கையில் தவளையைத் தொடருமென் மனசு.
штфДт 92

Page 47
90
காலக் கணிதம
O ஜின்னாலும் ஒரித்தீன்
பாடசாலை விட்டுவந்த என்து பேத்தி, வழமை போல் நான் அவள் எதிரே வராதது கண்டு, எங்கே அப்பா? என்று அவள் தாயிடம் கேட்டாள். என் மகளும் அவளைக் குழப்பத்திலாழ்த்த அப்பா ஊருக்குப் போய்விட்டார் என்றாள். அதனைத் தாங்கிக் கொள்ளாத குழந்தை அடம் பிடித்து அழத் தொடங்கி விட்டாள்.
தொழுகையில் இருந்த எனக்கு இடைநடுவில் விட்டு விட்டு வரமுடியாத இக்கட்டு, குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ஒருவாறு தொழுகையை முடித்துக் கொண்டு அவளிடம் ஓடிவந்து சமாதானம் செய்துவைத்தேன்.
என்னைக் கண்டது மட்டுந்தான். என்னை விட்டு விட்டு அவள், அவளது கருமங்களில் கண்ணானாள். என்ன இது? எனக்காக ஏங்கிய குழந்தை, நான் வீட்டில் இருப்பது நிச்சயமானதும், மனத்திருப்தி கொண்டு விட்டதே என நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் யதார்த்தம் குழந்தைக்குப் பாட்டன் தன்பார்வைக்குள் இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
யதார்த்தத்தை மறுக்க முயல்வது, எதிர்வினையைத் தரலாம். எனவே அதை முழுமையாக ஏற்றுகொள்வதே புத்திக்கூர்மை யாகும். இது அனுபவத்தால் ஏற்பட்ட நிலைப்பாடு.
ஒருநாள் எனது மூத்தமகன் பேச்சு வாக்கில் 'தம்பி இங்கிலாந்து செல்ல விரும்புகின்றான், அவனைத் தடுக்க முயல வேண்டாம்' என்றார். அது நான் அப்போது அறிந்திராத புதுச்செய்தி. கேட்டதும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. வருத்தமாகவும் இருந்தது. உறவுக் குள் ஒரு தொலைதூரம் வரப்போகின்றது என்ற மன உணர்வால். என் இளமைக் காலத்தில் இருந்து உறவுகளைப் பிரிந்து வாழ்வது எனக்குப் பழகிப்போன ஒன்றுதான். என்றாலும், அவ்வப்போது ஏற்படும் பிரிவுகளால் சற்று மனச்சலனம் ஏற்பட்டுக் கலங்கிப் போகின்றேன். இவ்வாறுதான் கடைசி மகன் இங்கிலாந்து செல்வது பற்றிக் கூறியதும் ஏற்பட்டது.
நான் கிழக்கில் தொழில்செய்துவிட்டு, மீண்டும் கொழும்புக்கே வர முடிவு செய்தபோது, குடும்பத்தில், விசேடமாய்த் தந்தையார் விரும்பவில்லை. ஆணும் பெண்ணு மாய்ப் பிள்ளைகள் தம்மோடு
ܓܵܬܘܼܵ
 
 

9.
அதிகம் இருந்தும், நாங்களும் அவர்களுடன்தான் இருக்க வேண்டும் எனப் பெற்ற மனங்கள் அவாவுற்றன. என் தாயாருக்குப் பெண்பிள்ளைகளோ ஆண்பிள்ளைகளோ திருமணம் செய்தாலும் குடும்பங்கள் தன்னைச் சுற்றியே வாழவேண்டும் என்னும் எண்ணங் கொண்டவர். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். அன்று நான் எடுத்த முடிவு மிகச் சரியானதாக அமைந்ததை, இன்று என் மக்களின் வளர்ச்சியிலும், எனது உயர்ச்சியிலும் நான் காண்கின்றேன். அவ்வாறு அன்று நான் வராது இருந்திருந்தால், என் தனிப்பட்ட வாழ்வில் நான் ஒரு சாதாரணமானவனாகவே இருந்திருப்பேன். என் வளர்ச்சிக்குக் கொழும்பே கரந்தந்தது. இதுபோல் என் உடன்பாடு இல்லாமல் எனது மக்கள் எடுத்த சில முடிவுகள் அவர்களுக்கு மட்டும் அல்லாது பெற்றோருக்கும், பிறருக்கும் கூட நன்மை பயப்பதாய் அமைந்துள்ளன.
காலகட்டத்திற்கு ஏற்ப, எதிர்காலத்திற்கான சரியான முடிவுகளை எடுக்க, அக்காலகட்டத்தில் வாழும் இளைய தலைமுறையின ருக்கே இயலுமாகும். இதனை மூத்த தலைமுறையினர் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஆகுமான அறிவுரைகளைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்வது நல்ல பயனளிக்கும்.
பெற்றோரைக் கண்கலங்காமல் பாதுகாக்கும் முழுப் பொறுப் புக்கும் ஆண் மக்களே கடமைப்பாடு உடையவர்கள். இந்நிலை யில் வயதான பெற்றோர்களும், தங்கள் மக்கள் நலத்திலும் அக்கறை கொள்ளும் கடமைப்பாடு உடையவர்கள் ஆகின்றனர். இளைய தலைமுறையினருடன் சார்ந்து போகும் மனப்பக்குவம் இயல்பாக அமைவதில்லை. அதனை நாமாகவே ஆக்கிக்கொள்ள வேண்டி ஏற்படும். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். வேறு வழியில்லை. இன்று, தவிர்க்க முடியாத காரணங்களால், பிள்ளைகள் வெளிநாடுகளில் தொழில் தேடிக்கொள்ள வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சொந்தமண்ணில், பெற்றோ ரின் இறுதி நாள் வரை அவர்களைப் பேணிப் பாதுகாக்கும் நிலை இதனால் கைநழுவிப் போகின்றது.
பெற்றவர்களோடு, தத்தமது பிள்ளைகளின் ஏதிர்காலத்தை எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயக் கடமைப்பாடு, அவர்களை இருதலைக்கொள்ளி எறும்பின் இக்கட்டுக்குள் தவிக்கச் செய்கின் றது. வாழ்ந்து தீர்த்துவிட்ட பெற்றோரா? அன்றி எதிர் காலத்தை நோக்கி எதிர் நீச்சல் அடிக்கத் தயாராகும் பிள்ளைகளா?
பெற்றோரைப் புறந்தள்ளும் பிள்ளைகள் பற்றிப் பேசுவதில் பயனில்லை. இங்கு பெற்றோரைப் பேண விரும்பும் பிள்ளைகள்
992 ULUMTéŠAJIT خضر

Page 48
92
பற்றியதே பேச்சுக்கானதாகும். சிலர் தம்மோடு தமது பெற்றோரையும், தாம் வாழும் நாட்டோடுவைத்துப் பாலிக்க விரும்புகின்றனர். பாதுகாக்கவும் செய் கின்றனர்.
ஆனால் சிலர், தாமிருவரும் வேலைக் குச் செல்லப் பிள்ளைகளின் பாதுகாப் புக்கான பணியாட்களாகவும் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். இதனால் நீண்ட காலம் ஒருவருக்கொருவராய் வாழ்ந்த தம்பதிகள், சேர்ந்து வாழ வேண்டிய முதிர்ந்த காலத்தில், பிள்ளை களின் தேவை கருதிப் பிரிந்து வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர்.
இதுபெரும் துர்ப்பாக்கியமே.
மற்றொரு புறத்தில் பிறநாட்டில் வாழும் பிள்ளைகள், தமது பெற்றோரைச் சகல செளகரியங்களுடனும் தம்மோடு வைத்துக் கொள்ள விரும்பினும், பெற் றோர் அதற்கு உடன்படுவதில்லை. இதற்கு ஏற்றுக் கொள்ளத்தக்க பல காரணிகள் உண்டு. -
புகுந்துவாழப் புறப்படும் நாட்டின், ஒத்துக்கொள்ளாத சீதோஷ்ண நிலை, சொந்த நாட்டில் தமக்குண்டான போக்கு வரத்துச் சுதந்திரத்தை இழந்து, நான்கு சுவர்களுக்குள் அடங்கிப்போகும் நெருக் கப்பாடு, சொந்த பந்தங்களை முற்றாகப் பிரிந்து, தனித்து வாழவேண்டிய கட்டா யம் என்பனவோடு, பிறந்த மண்ணில் பேரும் புகழோடும் வாழ்ந்தவர்கள், அந்நியநாட்டில் அறியாப்பேர்களாய் ஆகிப்போவதும் உடன்படாமைக்கான நியாயமான காரணங்களாகும்.
இளைய இரத்தம், இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் உடற்பலமும், மனப் பக்குவமுங் கொண்டாலும், முதுமை
UT3TT 22
முரண்டுபிடிக்கும். தவிர்க்க முடியாதது.
பெற்றோரைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதால், தமது சுகபோக வாழ்வுக்கு இடையூறு ஏற்படும் என்றெண்ணி, அனாதை மடங்களில் தமது பெற்றோ ரைச் சேர்த்துவிட்டுப் பணத்தை மட்டும் அனுப்பி வைத்து, அத்தோடு தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணும் பிள்ளைகளும் இன்று உள்ளனர். இவர் கள் பாவப் பிரகிருதிகள்.
பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை எண்ணி, எல்லாப் பெற்றோருமே தம் மால் இயன்ற அனைத்தையும் செய்யவே செய்கின்றனர். அவரவர் சக்திக்கு ஏற்ப அது வித்தியாசமாகலாம். எவ்வாறா யினும் அது அவர்களின் முயற்சியின் முழுமையான வெளிப்பாடாகவே அமை யும். தம்மை உருக்கித் தமது மக்களைச் சிலைகளாக வடிப்பவர்கள் பெற்றோர் கள். இந்த உண்மை ஒவ்வொரு பிள்ளையும் தாம் தந்தையாகவோ, தாயாயாகவோ மாறும்போது புரிந்து கொள்வர்.
இந்நிலையில் தமது இயலாத முதுமைக் காலத்தில் தம்மைத் தாங்க, தாம் தாங்கிவளர்த்த பிள்ளைகளை எதிர்பார்ப்பதில் முற்றிலும் நியாயம் உண்டு. இருப்பினும் முன்னர் தாம் வாழ்ந்த வாழ்வை, அதேபோல் தொடர, அனைத்துச் செளகரியங்களையும் அவர் கள் கட்டாயம் செய்தாக வேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாய மானதாக அமையும். சில பெற்றோர் அவ்வாறு எதிர் பார்ப்பதை நான் அறி வேன். பிள்ளைகளின் இயல்புக்கேற்ப வும் பெற்றோர் இணங்கிப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். التاريع "
ܓܵܬܐ
 

93
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று வர்ணத் திரைச்சீலைக்கப்பால் சமையலறையில் உறைகிறது வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள் யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு ஏறிச் செல்லப் பாதங்களில்லை
கூடத்தில் வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று காலணி தாங்கும் தட்டு தடயங்களைக் காக்கிறது
ஒரு தண்ணீர்க் குவளை தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு என்னவோர் எழில் சேர்க்கின்றன. இவை
பிரகாசிக்கும் கண்கள் செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென ஆகாயம் எண்ணும்படியாக பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும் கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம் எந்த விருந்தினரின் வருகையையோ எதிரொலிக்கிறது காகம் அவர் முன்னால் அரங்கேற்றிடவென
வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள் ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது
奖
இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன காதலின் பெருந்தீபம் சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு மெளனத்தைப் பிணைத்திருக்கிறது என்னிலும் உன்னிலும்
22 யாத்ரா والحر

Page 49
94.
அவதூறுகளின் ராஜாக்களிற்கான
ஈழபாடம்
காலையில் நண்பரொருவர் தொடர்பு கொண்டு, இணையம் பார்த்தீர்களா என விசாரித்தார். காலையும் மாலையும் கணனியின் முன் உட்கார்ந்து புரட்சி செய்யும் வாழ்க்கையின்னும் வாய்க்க வில்லையென்றேன். தமிழகத்தைச் சேர்ந்த சீரியல் நடிகரான அருள்எழிலன் என்பவர் என் குறித்த அவதூறுக் கட்டுரையொன்று எழுதியுள்ளார் என்றார். சீரியல்,சினிமா நடிகர்கள் எழுத்துப்பக்கம் திரும்புவது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்திதான் என்ற போதிலும், பொது வாகவே ஈழம்பற்றிய புரிதல் இல்லாத அருள்எழிலன் வகையறாக்களின் அவ தூறுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏற்கனவே சில இடங் களில் அவர் சொறிய முற்பட்டபோதும், பதிலளிக்காமைக்கு இதுதான் காரணம். சன்தொலைக்காட்சியினால் மட்டுமே ஈழப்பிரச்சனையைத் தெரிந்து கொண்ட வர்களுடன் உரையாட முற்பட்டால், இரத்தக்கொதிப்பு
வேறென்ன ஏற்படும்?
GЈfђLL Tupolo
நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, துரையப்பா பொலீசை வைத்து ஆறு தமிழறிஞர்களைச் சுட்டுக் கொன்றார்,
கடந்த முப்பது வருடங்களில் இராணு வம் வன்னிக்குள் நுழைந்ததேயில்லை என்றெல்லாம் சொல்பவருடன் கதைக்க முற்பட்டால் நமது கதி என்னவாகும்? நாளைக்கு, தமிழரசுக்கட்சியில் செல்வ நாயகத்திற்கு முன்னரேயே பிரபாகரன் இணைந்துவிட்டார் என்றோ, அமிர்த லிங்கம் அரசியல்த்துறைப் பொறுப்பாள ராக இருந்தார் என்றோ, யாழ்ப்பாணத்தி லிருந்து வடக்காக மூன்று கிலோமீற்றர் களிலிருக்கும் கொழும்பும் தமிழீழத்தின் பகுதியென்றெல்லாம் சொல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது? அருள்எழிலன் வகையறாக்கள் இதுவரை எழுதிய பலபத்தாயிரம் லூட்டிக் கட்டுரை களிற்கும் இதற்குமிடையில் ஆகக் கூடியது ஐந்து வித்தியாசங்கள் கூட இல்லாதிருந்த பொழுதும், மினைக் கெட்டு இதற்கொரு எதிர்வினையை எழுதுவதற்கு ஒரேயொரு காரணமே யுள்ளது. அது கவனத்தில் கொள்ளப் படக்கூடிய உடனடிப் பிரச்சினையும் கூட இலங்கைக்கு வெளியிலிருக்கும் புரட்சியாளர்கள் (இவர்களை இணையப் புலிகள் என்று முன்னரொரு தடவை குறிப்பிட்டதையும் நினைவூட்ட விரும்பு
80ா. கர்னலர்
штфДт 22

கிறேன்) ஆபத்தான புதியதொரு கலாச் சாரத்தை இணையப்பரப்பில் உருவாக்க முனைந்து கொண்டிருக்கின்றனர். இதற் கெதிரான வலுவான குரல்களை {BՈւb பதிவிடுவது அத்தியாவசியமான தென நான் கருதுகிறேன்.
முன்னர் புலிகள் அமைப்பு இயங்கு நிலையிலிருந்த சமயத்தில், எல்லா விமர்சனங்களிற்குமப்பாலும் அவர்கள் களத்திலிருந்தார்கள், செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்கள் இணையத்தளங்களில் தனிநாட்டையும் எந்த எத்தனங்களிலு மீடுபடவில்லையென்பது மிக முக்கிய மானது. குறைந்த பட்சம், நாம் தமிழர் கட்சி செய்திருந்த கொள்கை விளக்க அறிக்கை மாதிரியான ஐயிற்றங்களை கூட நிகழ்த்தியிருக்கவில்லை. அவர் களிற்குப் போராளிகள் மட்டுமே தேவை யாக இருந்தனர். மற்றவர்களைப் புறந் தள்ளினார்கள். நம்மிடமொரு பொற்கால மிருந்தது? எனக் கண்களை மூடி
95
ஆகாயத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடும் இந்தகையினரெல்லோருமே முதலில் தமது கடந்த காலங்கள் பற்றிய சுயவிமர்சனத்தைத் தமக்குள்ளேயே நிகழ்த்துவது அத்தியாவசியமானது. இப்பொழுது மிருகக்காட்சிச்சாலையில் இருக்கும் புலிக்குக்கூட சலூட் செய்யும் இவர்கள், அப்பொழுது எங்கிருந்தோம்? எனத் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆனாலும் புலிகள் அமைப்பு இல்லாமல் போனதும் ஏற்பட்ட சடுதியான அரசியல் வெற்றிடம் நமக்குள் ஏற்படுத்திய பலவித வேடிக்கை வினோத காட்சிகளில் ஒன்றுதான், அதுவரை குற்றணர்ச்சியுட னிருந்த தரப்பு, போராடும் பிரதான தரப்பாகத் தன்னை முன்னிறுத்திக் காட்டியபடி அட்டைக்கத்திகளுடன் துரோகிகளை அட்டவணைப்படுத்த வெளிக்கிட்டது.
முன்னரே குறிப்பிட்டது போல அதனை வேடிக்கை விநோதக் காட்சியென்று
யாத்ரா 22

Page 50
அழைப்பதைவிடச் சிறந்த உதாரண மெதனையும் தமிழ்மொழி இதுவரை கொண்டிருக்கவில்லையென்றுதான் நினைக்கிறேன். (ஆனாலும் இந்த வேடிக்கை விநோதக் காட்சிக்குப் பின்னால் வெளிப்பட்டது ஈழத்தமிழர் களின் கையறு நிலையும், எதிர்கால அரசியல் குறித்த அவநம்பிக்கையும் தான்) இந்தக் கலகலப்பில் நம்மவர் களிற்கு எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்ற பேதம் தெரியவில்லையென்ப துடன், பெரும்பாலான சமயங்களில் தாம் யார் என்பதே தெரியாமலிருந்தது பெரிய அவலம்தான். இந்த வகையான காட்சிகள் புலம்பெயர் அரங்கிலும் தமிழக அரங் கிலும் தாராளமாகவே நிகழ்ந்தன. யார் யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என் பது நிற்பவர்களிற்கே தெரியவில்லை. நண்பர்கள் யார் என்பது தெரிய முன்ன ரேயே எதிரிகளைத் தீர்மானித்தனர். எண்பதுளின் ஆரம்பத்தில் நாற்பது இயக்கங்கள் இருந்தன என்ற நிலை மாறி, அடுத்த முப்பது வருடங்களில் நூற்றிற்கும் சற்றே அதிகமான அணிக எளிருந்தன. எல்லோரது கைளிலும் முன் னுாற்றறுபது பாகையும் சுழற்றவல்ல அறக்கத்திகளிருந்தமைதான் மேலும் அச்சமூட்டுவதாக இருந்தது.
இந்த அணிகளிற்கு உயிர்வாழ்வதற்குக் கொள்கை, கோட்பாடெதுவும் தேவை யாக இருக்கவில்லை. ஆனால் கட்டாயம் எதிரிகள் தேவையாக இருந்தனர். விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால கட்டத்தில் "துரோகி என்ற வாசகம் அணிவிக்கப்பட்டு மரணதண்டனை நிகழ்த்தப்பட்டதை அச்சொட்டாகவே பின்பற்றினார்கள். துரோகிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மரணதண்டனைகளினால் இ  ைண ய வெளி க ளெ ல் லா ம்
96.
இரத்தநெடியடித்துக் கொண்டேயிருந் தது. குறிப்பாக, துரோகிகள் என்ற வகைக்குள் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் உள்ளடக்கப் பட்டனர். யுத்தப் பிரதேசங்களில் வாழாத வர்களும், குறைந்தபட்சம் ஒரு சூட்டுச் சத்தத்தையேனும் கேட்டிராதவர்களும், தம் வாழ்நாளில் ஒரு நாளையேனும் அர்ப் பணித் திருக்காதவர்களும் , சரணடைந்த விடுதலைப் புலியுறுப்பினர் களை ஒருவிதமான அசூசை பொங்கப் பார்க்கத் தொடங்கினார்கள். இதுவரை ஒளிவீச்சிலும், தமிழீழதேசியத் தொலைக்காட்சியிலும், ஒயாத அலைகள் 1-5 வரையான ஒளிநாடாக்களிலும், சன் தொலைக்காட்சியிலும் மட்டும் விடு தலைப்புலிகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருந்த பிம்பம், சனல் 4 இன் காட்சிகளையும், பிற ஊடகக் காட்சி களையும் நம்ப மறுத்தது. சன் தொலைக் காட்சியில் மட்டும் விடுதலைப் புலி களைப் பார்த்தறிந்து கொண்ட அருள் எழிலன் வகையறாக்கள் யதார்த்தைப் புரிந்து கொள்ள மறுத்ததுடன், ஈழத் தமிழர்களிற்கே வகுப்பெடுக்க ஆரம் பித்த கொடுமையெல்லாம் நடந்தது. நல்ல வேளையாக இப்படியான சிக் கல்மிகு பிரச்சினையிலிருந்து பிரபாகரன் தப்பித்ததே அதிர்ஷ்டவசமான ஒன்று தான். இந்த பிம்ப மனநிலை, அவர் இறந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, எங்காவது தேகசுகத்துடன் மனைவி பிள்ளைகளுடன் அடுத்தகட்ட யுத்தத் திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருக் கிறார் என்ற ரீதியில் நம்ப வைத்துக் கொண்டிருந்தது. அவர் இறந்ததைத் தெளிவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்பொழுதுதான் தெரியும், அவர்களிடம் அவரது எதிர்காலம்.

இப்படியான மனநிலையுடனிருந்தவர் கள், சரணடைந்த போராளிகளைக் கண்டு அசூசை கொண்டதில் ஆச்சரிய மேதுமில்லை. அவர்கள் ஒவ்வொரு வருமே அரசாங்கத்தின் இரகசிய எஜெண்டுகளாகத்தான் இயக்கத்திலிருந் தார்கள் என்பது மாதிரியான எண்ணங் களுடனிருப்பவர்களுமிருக்கத்தான் செய்கிறார்கள். இது ஒரு சிறு பகுதி தானெனிலும், இலங்கையிலிருப்பவர் களெல்லோரும் மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள்தான் என்றே இன்றும் பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது, யதார்த் தம் தெரிந்தாலும் தமது குற்ற உணர்ச்சி களிலிருந்து தப்பிக்கவும், பொறுப்புக் களிலிருந்து தப்பிக்கவும் இலங்கை யிலிருப்பர்களை நோக்கித் துரோகியெ னச் சுட்டுவிரல் நீட்டும் கலாசார மொன்றை உருவாக்கப் பிரயத்தனப்படு கிறார்கள். இதற்கெதிராக நாம் உடனடி யானதும், வலுவானதுமான எதிர்க் குரல்களைப் பதிவிடுவது அவசியமா னது. ஏற்கனவே நாம் சிங்கள அரசாங்கத் தின் நெருக்குவாரங்களினால் மூச்சுமுட் டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசுக்குச் சாதகமான விளைவை ஏற்ப டுத்தும் முயற்சியில் இவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தாயகத்திலிருப்பவர் களை மனஅளவில் சிதைவடையச் செய்யும் அரசநிகழ்ச்சி நிரலொன்று நூதனமாக செயற்படுத்தப்படுவதாகவே நான் கருதுகிறேன்.
அருள்எழிலன் வகையறாக்கள் அந்த வகைக்குள் இருப்பதற்கான சாத்தியங் கள் நிறையவேயுள்ளன. மாறுவேடத்தில் (புலிவேடமணிந்து) வந்த இந்தப் ‘புல்லுருவிகள்? இந்தகக் காரியத்தைக் கச்சிதமாகவே செயற்படுத்துகின்றன.
97
இவர்கள் அரச நிகழ்ச்சி நிரலில் இயங்கு பவர்கள் என்பதனால்தான் களத்தில் செயற்பட முடியாதவர்களாக, இணையப் பரப்பில் மட்டும் செயற்படுபவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
இலங்கையிலிருக்கும் தமிழர்களையெல் லாம் துரோகிகள் என உங்களால் சுட்ட முடிந்தால், நீங்கள் இப்பொழுது அடைய நினைக்கும் இலட்சியம் இலங்கைக்கு வெளியிலா உள்ளது? ஒருவேளை இவர்கள் ஈழத்திற்கு வெளியே தனி நாடோ, சமஷ்டியோ, மாகாணசபையோ அடையும் முடிவுடனிருக்கிறார்களோ தெரியவில்லை. சரி. அப்படித்தான் வைத்துக் கொண்டாலும், அதற்காக என்னவிதமான போராட்டங்களில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? (யாரும் முகப்புத்தகத்தில் நிலைத்தகவலிட்ட தைச் சொல்லிவிட வேண்டாம்!)
இந்த வகையான போராட்ட முன்னெடுப் புக்களின் மூலம் நாம் செல்லவுள்ள பாதை குறித்துச் சிந்திக்கவே அச்சமாக வுள்ளது. எது எப்படியோ இந்த இடத்தில் எஸ். ஜே.வி. செல்வநாயத்தை ஒரு தீர்க்க தரிசியாக ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சேபனைகளெதுவுமிருக்கப் போவ தில்லை. ஈழத்தமிழர்களை ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டுமென அவர் அப்பொழுதே சொல்லியிருந்தார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் அண்மையில் இலங்கை வந்து திரும்பியதைத் தொடர்ந்தும், தான் கண்ட காட்சிகளைப் பற்றிய அவரது கட்டுரையைத் தொடர்ந் தும் இணையப்புலிகள் அம்பறாத்தூணி களைக் கொளுவிக் கொண்டு போராடப் புறப்பட்டிருந்தனர். குறிப்பாக பிரபாகர னது புதுக்குடியிருப்பு வாசஸ்தலம் பற்றிய படங்களும், குறிப்புக்களும்

Page 51
போராளிகளை அதிகம் பதட்டமடையச் செய்திருந்ததையும் காண முடிந்தது. அந்த வசிப்பிடமொரு ஆடம்பர வதிவிடமென்பது மாதிரியான மனப் பதிவு இவர்களெல்லோரிடமுமிருக்க வேண்டும் என நம்புகிறேன். வன்னிக் குடில்களையும், அந்த வசிப்பிடத்தையும் சமநேரத்தில் காணநேர்கையில் அவர்கள் பெரும் பதட்டத்திற்குட்படுவதை அவதானிக்க முடிகிறது. இதுவுமொரு வகையான குற்றவுணர்ச்சிதான். அதனா லேயே அந்தப் படங்கள் வெளிவருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் அதுவொரு ஆடம்பர மாளிகையல்ல, பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளித்துக்கட்டப்பட்ட வசிப் பிடமென அவர்களது பதட்டத்தைக் குறைக்கும் விதமாக மார்க்ஸ் எழுதி யிருந்ததெதனையுமவர்கள் கவனிக்கவே அவகாசம் கிட்டவில்லை. உண்மையில் எனது அபிப்பிராயமும் அதுதான். பிரபா கரன் இருந்த காலத்திலேயே, அந்த இருப்பிடம் குறித்த அதிருப்தி எந்தப் போராளிக்குமிருந்ததில்லை (இருப் பிடம் தெரிந்தவர்களிற்கு). அவரது பாதுகாப்பிற்கு அது அவசியமானதென்ற கருத்து எல்லோரிடமுமிருந்தது. ஆகவே நண்பர்களே மனதைச் சாந்தப்படுத்
98
ԱյՈՅՍՈ ջջ
பொதுவாகவே இணையப்புலிகளினால் எழுதப்படும் கிசுகிசுகளிற்கென்றே பொதுவான அம்சங்கள் சில உள்ளன. அருள்எழிலன் எழுதும் அவதூறுகளிலும் அதற்கான சாமுத்திரிகாலட்சணங்கள் தூக்கலாகவேயிருக்கும். ஏற்கனவே அவரெழுதிய பேரினவாதத்தின்ராஜா என்ற புத்தகத்தின் ന്ധ്ര ഓ്ഥ (19 தன்னையொரு அவதூறுகளின் ராஜா வென்பதை நிரூபித்துமிருக்கிறார். வரலாற்றுப்பிழை, காலப்பிழை, அரசி யல்பிழைகளுடன் குத்து மதிப்பாக அவரெழுதும் கட்டுரைகளினால் நமக்கே அவர் ஈழபாடம் நிகழ்த்த முற்படுவது எத்தனை அபத்தமானது? அதனை விடவும், லண்டனில் நடந்த கூட்ட மொன்றில் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமென புலிகளிடம் கோருவது அநீதியானது என்றும் பேசியவரவர். சன் தொலைக் காட்சியிலும், ஆங்கிலப் படங்களிலும் மட்டும் யுத்தகளங்களைக் கண்டவர் இப்படித்தான் கதைப்பார் என்றாலும், அந்தக் கதையை வவுனியா அகதி முகா மொன்றில் கதைத்திருந்தால் அவரைச் சனங்கள் அடித்தே கொன்றிருப்பார்கள் என்ற யதார்த்தத்தையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வகையான இயல்புகளுடன் புதிதாக எழுதிய இந்தக் கட்டுரையைப் பிரித்து மேய்வதினால் ஏதொன்றும் ஆகப் போவதில்லை. ஆனாலும் அதிலுள்ள அபத்தங்கள் சிலவற்றையாவது அவர் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற் காகவும், ஈழவிடயங்களில் அவர் மேலும் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக வும் சிலவிடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மார்க்சின் யாழ்ப்பாணக் கூட்டத்தைத் தலித்துக்கள் புறக்கணித்
ܓܵܬܟ݂
 

ததாகவும், ஒரு தலித்தும் பங்குபற்ற வில்லையென்றும் இருநூற்றைம்பது கிலோ எயார் சொட் குண்டொன்றை வீசியிருக்கிறார். மார்க்ஸ்சினது யாழ்ப் பாணக் கூட்டத்தைத் தலித்துக்களே புறக்கணித்ததாக அவரெழுதிய கட்டுரை யில், பார்வையாளர்களைக் காண்பிக்கும் படமொன்றும் பிரசுரமாகியுள்ளது. அதில் வெள்ளை வேட்டி சட்டையுடனிருப்பவர் தான் மூத்த தலித் எழுத்தாளர் தெணியான் என்பதை அவரறியவில்லை என்பதுதான் துயரமானது. ஆனாலும் குத்துமதிப்புக் கட்டுரையாளர்கள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுப்பதில்லைதான்.
அடுத்தது வெகு சுவாரஸ்யமானது. எனது ஆதிரையும் நாற்பது ஆமிக்காரர்களும் என்ற கதை விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாம். உண்மையில் இந்தநாட்களில் சயனைட் குப்பி மட்டும் என் கையில் இருந்திருந் தால் நான் கடிப்பதற்கும் தயங்கியிருக்க மாட்டேன். அந்தக் கதையிலுள்ள சம்ப வத்தை எனக்குச் சொன்னவர் எழுத்தாள ரும், மாலதிபடையணிப் போராளியுமான மலைமகள். சரணடைந்தவர் இப் பொழுது காணாமல் போனவர் பட்டிய லிலிருக்கிறார். களத்திலிருக்கும் பெண் போராளிகள் பற்றிய ஆவணத் திரட்டலிற் காக முன்னரண்களில் தங்கி அவர் திரட்டிய தகவலது. ஒரு உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். இதனையொத்த வேறு பல எண்ணற்ற சம்பவங்களை நான் கண்ணாலும் கண்டிருக்கிறேன். பின்னர், மலைமகள் தனது புதிய கதைகள் தொகுதியில் அதனை எழுதியு மிருந்தார். அந்தத் தொகுதியை வசதி யுள்ளர்கள் படிக்க வேண்டும். அதனை விடுதலைப்புலிகளின் மகளிர்படையணி
வெளியீட்டகமான கப்டன் வானதி
ܬܡ.ܶ
99
பதிப்பகம் வெளியிட்டுமிருந்தது. அதனையொத்த சம்பவங்களை நான் ஏற்னவே கண்டிருந்ததினாலும், புலி களின் பழைய வெளியீடுகள் இனிக் கிடைக்காமல் போய்விடுவதற்கான வாய்புள்ளதாலும், இது மாதிரியான சாதாரணப் போராளிகளின் பதிவுகள் அழிந்து விடுமென்பதாலும் நான் அதனை மீள்பதிவாகத்தான் செய்திருந் தேன். சன் தொலைக்காட்சியிலும், கன்னத்தில் முத்தமிட்டால் (குப்பி படத்தையும் பார்த்திருக்ககூடும்) திரைப்படத்தாலும் புலிகளை அறிந்த அருள் எழிலன் அதனை எதிர்த்ததில் ஆச்சரியமொன்று மில்லைதான். தளபதி தீபனையும் கண்டித்து அருள் எழிலன் ஒரு பதி வெழுதினாலும் ஆச்சரியமில்லை. அவர் களும் இப்படித்தான், ஆனந்தபுரத்தில் சுற்றிவளைக்கப்பட்ட களமொன்றில்தான் மரணமடைந்திருந்திருந்தார்கள். அருள் எழிலன் நம்பிக் கொண்டிருக்கக்கூடும், விடுதலைப்புலிகள் எதிரியின் ரவை பட்டு இறக்கவேமாட்டார்கள். ஒன்றில் தற்கொலை செய்வார்கள். அல்லது, ஆண்டவர் அப்படியே எடுத்துக் கொள் வார் என சுற்றிவளைக்கப்பட்ட களங் களிலிருந்து சில விதிவிலக்குகளைத் தவிர யாராலும் தப்பமுடியாது அருள் எழிலன். நீங்கள் விஜயகாந்த் படங்க ளிலும், அர்ஜூன் படங்களிலும் பார்க்கும் சண்டையல்ல நாங்கள் பிடித்த சண்டை. தலையை அசைத்தெல்லாம் தோட்டாவை விலத்திவிட முடியாது அருள். விடு தலைப்புலிகளின் வாழ்வின் யதார்த் தத்தை வியாபாரிகளினால் புரிந்து கொள்ளவே முடியாது. அடுத்தது, மார்க்ஸ் தான், ஓமந்தை யிலிருந்து எந்தச் சோதனை நடவடிக்
штфДт 99

Page 52
100
கைக்குமுட்படாமல் சென்றதாக எழுதி யதைக் கண்டித்திருக்கிறார். ஓமந்தை யில் முன்னர்போல இப்பொழுது சோதனை நடவடிக்கையில்லையென்ப தில் ஒரு ஈழத்தமிழனாக நான் இந்த நாட்களில் உண்மையிலேயே பெரு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். எனக்கு இந்த இடத்தில் உண்மையிலேயே பெரிய சந்தேகம் வருகிறது. ஓமந்தை சோதனைச் சாவடி இயங்குவதைத்தான் அருள்எழிலன் விரும்புகிறாரா? தொடர்ந்தும் யுத்த நெருக்குவாரங்களில் தமிழ்ச்சனங்கள் சிக்கியிருப்பதைத்தான் அவர் விரும்புகிறாரா? அப்படியொரு சூழல் நிலவினால்தான் அவரால் நமது இரத்தத்துளிகளை விற்பனை செய்ய (plգպքit? இவற்றின் அர்த்தம், இலங்கையில் நாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பதல்ல. நாங்கள் வரையறுக்கப்பட்ட உலகத்தில்தான் வாழ்கிறோம். இலங்கை இனப்பிரச்சினைக்கான காரணங்களில் ஒன்றுகூடக் களையப்படவில்லை. பிரச்சினைகளின் விளைவான, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டும் தான் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது மாறாக மதம், மொழி, பண்பாடு, கலா சாரம், வாழ்வுரிமை எனச் சகலதுறை களிலும் முன்னரைவிடவும் அதிகமாக நெருக்கு வார ப் படு கிறோம் . அதிலெல்லாம் சந்தேகமேயில்லை. இருக்கின்ற எல்லைகள்வரை இவற்றிற் கெதிராகச் சனங்கள் போராடிக் கொண்டு தானிருக்கிறார்கள். ஆனால் யுத்தகாலத்திற்கும் யுத்தமற்ற காலத்திற்குமான பேதங்களையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அது உலகமெங்கிலுமுள்ள பொதுநடை முறை. இரண்டுதரப்பும் துவக்குகளை штфTт 22
பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு திரிந்த ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்திலேயே, சோதனைச்சாவடிகளிற் கூடாகவேனும் கண்டிவீதி திறக்க வில்லையா? சனங்கள் கொழும்பிற்குச் செல்லவில்லையா? யாழ் இடப்பெயர் வில் வன்னிக்குச் சென்ற குடும்பங்கள் திரும்பவும் யாழ்ப்பாணத்தில் குடியேற வில்லையா? யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்திட்ட பின்னர், இந்த இறுக்கங்கள் இன்னும் சற்றுத் தளர்ந்து விட்டதை ஏன் நம்பமறுக்கிறீர்கள்? யுத்தகால நடமுறைகள் பல இப்பொழு தில்லை. சுற்றிவளைப்புகளில்லை. பத்தாயிரத்திற்குமதிகமான முன்னாள் போராளிகள் வீடுகளிற்கு வந்து விட்டனர். (அதன் பின்னரான பிரச்சினை கள் தனிக் கதைகள்). இன்னும் நடை முறையிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங் கள் தவிர்ந்த இடங்களிற்கு யாரும் பயணம் செய்ய முடிகிறது. இதனை யெல்லாம் உவப்புடன் அரசாங்கம் ஏற்படுத்தியதென்று சொல்ல முடியாது. சிலபல அரசியல்காரணங்களினால் நமக்கது வாய்த்தது. குறிப்பாக எந்தத் தீர்வையேனும் முன்வைக்க தயாரில்லாத அரசு, இயல்புநிலையை ஏற்படுத்து வதன் மூலம், இந்த கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யலாமென நம்பி யிருக்கலாம். அல்லது, பிராந்தியத்தில் நிகழும் இழுபறிகள் தந்த வரமாகவு மிருக்கலாம். எப்படியோ இதெல்லாம் வாய்த்திருக்கிறது. நமக்கு தமிழீழம் கிடைத்தவிட்டதென்றா சொன்னோம்? அல்லது இவ்வளவே போதுமென்றா சொன்னோம். இல்லையே. தமிழீழ விடு த  ைல ப் புலி க  ைள விமர்சிப்பவர்கள் தமிழீழத்திற்கு எதிரான வர்கள் என நினைப்பவர்கள் அரசியல்
ܥܰܬ݂ܝܼܕ݂
 

101
பேசுவது அபத்தம். தமிழ்த் தேசியமென் பது புலிகளைக் குறிக்கும் ஒத்த கருத்துச் சொல் எனக் கதைப்பவர்களைத் திருத்து வதற்கு ஒரேயொரு வழி மட்டுமேயுள் ளது. விடுதலைப்புலிகளின் சீர்திருத்தப் பள்ளியில் விட்டுத்தான் அவர்களைத் திருத்தலாம். இலங்கையிலிருக்கும் இன்றைய நில வரங்களை நம்பினால், நமக்குத் தமிழீழம் கிடைக்காமல் போய்விடும் என நினைக் கும் விசித்திரப் பேர்வழிகளின் மூளை யை ஏதாவது ஆராய்ச்சிச்சாலைக்குக் கொண்டு சென்று ஆய்ந்து பார்ப்பதில் தப்பேதும் கிடையாது. பூந்கிருஷ்ணர் பதினோராவது அவதார மெடுத்தால் அல்லது மாட்டுத் தொழுவத் திலொரு பாலன் யேசு தோன்றினால் தவிர, மற்றும்படி ஈழத்தில் உடனடியாக ஓரிரவு மாற்றங்களேதும் நிகழப் போவ தில்லை. கிடைத்த இடைவெளியில், சிறு தளிரேனும் முளைத்தால் அதனை நாம்தான் பேணிப்பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன இடை வெளிகளில்தான் நாம் வாழ வேண்டி யிருக்கிறது. ஈழத்தமிழர்களின் வாழ்க் கையே காலம்காலமாக இதுதான். இவற்றை அடக்கப்பட்ட சூழலில் வாழ்ந்தவர்களினால் மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும். மேட்டுப்பகுதியை விலத்தி விலத்திப் பரவும் நீரோட்டத் தைப் போலத்தான் நாம் வாழ்க்கையைக் கற்று வைத்திருக்கிறோம். சவர்க்காரத் தடை நேரம் பனங்காயைப் பயன்படுத்தி யிருக்கவில்லையா? அவ்வளவு பிரச்சி னைக்குள்ளும், மின்சாரத் தடைக்குள்ளும் 1996 உலகக்கோப்பை பார்த்திருக்க வில்லையா? குடாநாட்டு முற்றுகை, பத்திரிகையாளர் கொலை என்பன விருந்த போதும் கிருசாந்தியினதும்,
ہولمز
"தமிழீழவிடுதலைப்புலிகளை விமர்சிப்பவர்கள் தமிழீழத்திற்கு எதிரான வர்கள் எனநினைப்பவர்கள் அரசியல் பேசுவது அபத்தம். தமிழ்தேசியமென்பது புலிகளை குறிக்கும் ஒத்தகருத்துச்சொல் எனக் கதைப்பவர்களை திருத்துவதற்கு ஒரேயொரு வழிமட்டுமேயுள்ளது. விடுதலைப்புலிகளின் சீர்திருத்தப்பள்ளியில் விட்டுத்தான் அவர்களைத்திருத்தலாம்."
இன்னும் கொல்லப்பட்ட நூற்றுக் கணக் கானவர்களதும் விபரங்களைப் பத்திரிகை கள் வெளிக்கொணர்ந்திருக்கவில் லையா? குடாநாட்டில் அந்தநேரம் வந்த பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக இதனையெல்லாம் போட்டிருக்கவில் லையா? அதிக மேன், அடைந்தால் தமிழீழம் என இணையங்களில் எழுதி வரும் போராளிகள் இப்பொழுதும் கட்டு நாயக்காவினூடாகப் பயணம் செய்து கொண்டிருக்கவில்லையா? அரச விருது களை இங்கிருந்தபடியே உதாசீனம் செய்தவர்களில்லையா? காரணங்களின்றிக் கைது செய்யப் படவும், கொல்லப்படவும், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படவும் வாய்ப் புள்ள நாட்டில்தான் மேற் சொன்ன வற்றுக்கும் வாய்ப்புகளுள்ளன. வாழ்வு மீதும், சுதந்திரம் மீதும் ஆர்வங் கொண்ட வர்கள், கூரைகளிற்குள்ளிருந்தாலும் சின்னச்சின்ன பொட்டுக்களினூடாக வேனும் நிலவொளியைக் கண்டு விடு கிறார்கள். இப்படித்தானிருக்கிறது நமது வாழ்க்கை. எங்களால் சுதந்திரமாகப் பேச முடிகிறதென யாரும் சொன்னால் அதனை நான் மறுப்பேன். அதேநேரம், штфДт 29

Page 53
102
இராணுவம் நிகழ்த்தும் அட்டூழிய மொன்றை எங்களால் வெளிப்படுத்தவே முடியாதென்றால் அதனையும் மறுப் பேன். எங்களால் சுதந்திரமாக எதனையும் பார்க்க, பேச, படிக்க, முடிகிறதா என்றால் இல்லையென்பதே எனது பதில். ஆனால் நான் பார்க்க விரும்பிய மத்தியவங்கி குண்டிவெடிப்புச் செய்தியைப் பார்க்க முடிந்தது. மின்சாரத்தடை, தொலைக் காட்சி வசதியின்மை, அன்ரனா வசதி பிரயத்தனப்பட்டு அதனைப் பார்க்க முடிந்தது. அப்படியெ னில் எங்களிற்குச் சுதந்திரமுள்ளதா? இல்லையா? இப்படியாக இருப்பிற்கும் இல்லாமைக்குள்ளாலும் ஊடாடித் திரியு மொரு வாழ்வைப் பழக்கப்படுத்தியி ருக்கிறோம். இப்படியான சின்னச்சின்னகாரியங்களின் தரத்திற்கு மகத்தான விடயங்களைக் கீழி றக்கவேண்டாமென்பதே எனது வேண்டு கோள். இலங்கையில் பேச முடிகிறது, பார்க்க முடிகிறது, திரிய முடிகிறதென்ப தெல்லாம் இப்பொழுது பிரச்சினை களில்லை. சீமான் மாதிரித் தமிழகத்திற்கு வந்தால் அடிப்பேன், மகிந்தபடத்தைக் கிழிப்பேன் என்பது மாதிரிமட்டுமிருந் தால் ஒருவிதமான கிளுகிளுப்புமட்டுமே நமக்கு எஞ்சும். நமது பிரச்சினைகள் வேறு நண்பர்களே. முடிந்தால் அதில் கவனம் செலுத்துங்கள்.
யின்மைக்குள்
தமக்கு எதிரானவர்கள் நாட்டுக்குள் நுழையவும், மக்களைச் சந்திக்கவும் அரசு அனுமதிக்காதென அருள்எழிலன் குறிப்பிட்டுள்ளார். நிமல்கா பெர்னான் டோ கூறினாராம். அப்படியிருக்க மார்க்ஸ் எப்படி வந்து போனார் என்ற கேள்வி வேறு. இதற்குள் குமார் குணரட் ணம் விவகாரம் சாட்சிக்கு அழைக்கப் பட்டுள்ளது. அருள் எழிலனை மிகச்
யாத்ரா 22
சரியாக நிமல்கா புரிந்து கொண்டதனால் அப்படிக் கூறியிருக்கலாம். அல்லது இரண்டு மூன்று வருடங்களின் முந்தைய கதையைக் கூறியிருக்கலாம். இரண்டில் எந்தக்காரணத்தை எடுத்தாலும் நிமல்கா சரியாகத்தான் நடந்து கொண்டுள்ளார். நானறிந்த வரையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் எதிரிகளையும், துரோகிகளையும், நண்பர்களையும் வகை பிரித்தறியும் கருவியெதனையும் அரசு இன்னமும் பொருத்தியிருக்கவில்லை. அப்படியில்லாதபடியினால்தான் பல்வேறு ஊடகவியலாளர்களும், மனித உரிமை வாதிகளும் நாட்டிற்குள் சத்த மில்லாது வந்து தகவல்களை எடுத்துப் போக முடிகிறது. இந்த இடத்தில் ஒரு மனக்கசப்பான உண்மையைச் சொல்லித் தான் ஆக வேண்டும். உண்மையில் அரசாங்கத்திற்கு அ.மார்க்சையோ, யோ, கர்ணனையோ, அருள்எழிலனையோ, தீபச்செல்வனையோ தெரியாது. அவர் களிற்குத் தெரிந்ததெல்லாம் பிரபாகரன், கபிலன், குழந்தைவேல், பட்டாபி வகைய றாக்கள்தான். (இவர்களில் பலரை அருள்எழிலனிற்கும் தெரியாது.) யாரும் வரும்போது அவர்கள் ஆதரவானர்களா எதிரானவர்களா என்ற விசாரணை யெதுவும் விமானநிலையத்தில் நடை பெறுவதுமில்லை. விமானநிலையத்தில் இறங்கி, ஏ. ராஜபக்ச உன் குரல் வளையைக் கடிப்பேன். நீ போர்க்குற்ற வாளி. நான் அருள்எழிலன். புலம்பெயர் தமிழர்களிடம் ஆட்டையைப் போட்டு ஐரோப்பாவரை சென்று வியாபாரம் செய்தவன்' என்று வீரவசனம் பேசாத வரையில் அருள் எழிலனும் தாராள மாகவே வந்து போகலாம். அருள்எழிலன் விருப்பப்பட்டது மாதிரி யாக மார்க்ஸ் எழுதவில்லை என்ற
ܥܰܬ݂ܝܼܕ݂
 

103
கவலையில் இந்த கட்டுரையை எழுதி யிருக்கிறார். உண்மையில் அவர் ஒரு நேர்மையாளனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இலங் கைக்கு வந்திருக்க வேண்டாமா? நிலவரங்களைப் பார்த்து, கேட்டுவிட்டு, அதன்பின் இலங்கையரசின் செவிளில் நாலு விட்டிருக்க வேண்டாமா? ஏன் அதனைச் செய்யவில்லை? யாரும் ஸ்பொன்சர் செய்யவில்லையென்பதால் உண்மைக்கான தனது 'தேடலை ஒத்தி வைத்துவிட்டு, இணையப் போராட் டத்தை மட்டும் நடத்துகிறாரா? யாரோ கொடுத்த காசில் லண்டன் வரை சென்று, யுத்தவலயத்தில் அகப்பட்டிருந்த நாலு இலட்சம் சனத்திற்கெதிராகக் கதைத்தவர், இப்பொழுது யாரும் காசு தந்து இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனிருக்கிறார்கள்? எனச் சொல்லச் சொன்னால், சொல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
குணரட்ணம் விவகாரத்தை அருள் எழிலன் சரியாகவே புரிந்து கொள்ள
வில்லை. அவர் மட்டுமல்ல பலரிடமும் அந்தக் குழப்பமிருப்பதை இணைய வெளிகளில் அவதானிக்க முடிகிறது. குணரட்ணத்தை கிட்டத்தட்ட ஒரு விடு தலை வீரனாகச் சித்தரிக்கவும் முயல்கின் றனர். இலங்கை விவகாரங்களில் இந்த நண்பர்கள் மிகவும் வீக் ஆக உள்ளனர். உண்மையில் அவர் இணைய ஜே.வி.பி காரனாக அல்லாமல் செயல்வீரனாகவே இருந்துள்ளார். அதனால்தான் மேற்கு நாடுகள் அவரைப் பயன்படுத்த முயன்
றன. இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்த மேற்கு நாடுகள் நடத்தும் முயற்சிகளிற்கும், அரசாங்கத்தின் தக்கவைக்கும் முயற்சிகளிற்குமிடையி லான ஊடாட்டங்களை அருள்எழிலன் போன்றவர்கள் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். குணரட்ணம் விவகாரம் அப்படியானதொன்றுதான். பொதுவாகவே அரசினது பிரச்சினை
யெல்லாம், தனது இருப்பிற்கு ஆபத்தை உண்டாக்கும் செயற்பாட்டாளர்கள்தான்.
யாத்ரா 22

Page 54
104
இதுதான் உலகமெங்குமுள்ள நிலை. நன்றாகப் பார்த்தீர்களெனில், தமிழீழத் தில் ஒரு இஞ்சு குறைந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் எனக்கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி இன்றும் இங் கிருந்து போராட்டங்கள் செய்கின்றனர். நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளைத் தயார் செய்து வையுங்கள் எனப் பாராளு மன்றத்தில் அரசை எச்சரித்த கஜேந்திர னும் இன்று இங்குதானிருக்கிறார். நிமல ரூபன் அடித்துக் கொல்லப்பட்டதும் இந்த தேசத்தில்தான். அதற்கெதிரான போராட்டங்கள் நடப்பதும் இந்த தேசத் தில்தான். தமிழீழத்திற்காக போராடிய எண்ணற்ற இளைஞர்களும், யுவதிகளும் கொல்லப்பட்டதும் இந்த தேசத்தில்தான். தமிழீழத்தில் ஒரு இஞ்சு குறைந்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என இன்றும் போராட்டம் நடத்தும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியிருப்பதும் இந்த தேசத்தில் தான். இன்னும் ஒரு வழியில் புரிய வைத்தால், இந்தியாவில் விடியல் சிவாவிற்கும் அருள்எழிலனிற்குமிடை யிலுள்ள வித்தியாசம். இந்த பேதங் களையும் இடைவெளிகளையும், வாய்ப்பு களையும் புரிந்துகொள்ள நிச்சயம் அதிக ஈடுபாடு தேவை. அருள் எழிலன் போன்றவர்கள் தொடர்ந்தும் பயிற்சியும் முயற்சியும் செய்து தெளிவடைய வேண்டுமென்பது என தாழ்மையான விண்ணப்பம்.
ஈழவிடுதலையென்பதோ அல்லது அதற் கான முயற்சியென்பதோ ஈழத்திலிருந்தே பிறக்க வேண்டியது. இங்குள்ள கள யதார்த்தங்களினூடாக அது உருவாக வேண்டியது. இதனை அருள்எழிலன் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண் டும். அருள்எழிலன் படமெடுக்க வேண்டுமென்பதற்காகவோ லண்டன்
штфTт 99
போக வேண்டுமென்பதற்காகவோ இங்கே இரண்டுபேர் இறக்க முடியாது. முக்கியமாக இலங்கையிலிருப்பர்களை இராணுவ உளவாளிகள் எனக்கூறித் தமது பொறுப்புகளிலிருந்தும், குற்ற வுணர்ச்சிகளிலிருந்தும் தப்பிப்பவர் களை நாம் வெளிப்படுத்த வேண்டியவர் களாக இருப்பதுடன் அவர்களது கடமை களை நினைவுபடுத்த வேண்டியவர் களாகவுமிருக்கிறோம். ஈழத்திலிருப்பவர்களைத் துரோகியாக் கும் புதிய எத்தனங்களிற்கெதிராக எமது வலுவான ஆட்சேபணைகளைப் பதிவு செய்வதுடன், மறுவளமாக ஈழத்தவர்கள் அருள்எழிலன் போன்றவர்களிடம் சில கேள்விகள் கேட்பதற்கான சந்தர்ப்பங் களிருப்பதனையும் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். குறிப்பாக, இவ்வளவு தீவிரத் தேசிய வகுப்பெடுக்கும் அருள்எழிலன் நீங்கள் ஒரு முத்துக்குமாரா ?இன்னும் கூடவிருந்து லூட்டியடிக்கும் அக்கா தங்கைகள் ஏன் செங்கொடியாகவில்லை? நீங்கள் யாருமே ஜெனிவா முன்றிலில் தீக்குளித்த முருகதாசன் அல்லதானே? குறைந்தது, ஈழஆதரவு கூட்டமொன் றிற்கு வந்திருந்து, கொழும்பில் குண்டு கள் வெடிக்கின்றன. மக்கள் சாகின்றனர்? என்ற நமீதாவாகக்கூட உங்களால் ஏன் ஆக முடியாமல் போனது?
இது மாறிமாறிக் குற்றம் சுமத்தும் தருணமல்ல என்பதால், அருள்எழிலன் போன்றவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து நடந்து கொள்ளவேண்டும். குறிப்பாக இப்பொழுது வகிக்க முற்படும் நாட்டா மைப் பாத்திரத்தைக் கைவிட்டு, உருப் படியான காரியங்களில் ஈடுபடவேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன். ஈழ விடுதலைக்குப் பிரதான தடைக்கல்லான இந்தியாவிலிருக்குமிவர், இதற்கெதி
ܓ̣ܬܐ
 

I05
ராக ஏதாவது உருப்படியான முயற்சி களில் ஈடுபட வேண்டும். தமிழீழ உருவாக்கத்தில் பிரதான தடைக்கல்லான இந்திய தேசியம் குறித்த அருள்எழில னது நிலைப்பாடென்ன? அந்த நிலைப் பாட்டிற்காக என்ன விதமான செயல்களில் ஈடுபட்டுள்ளர் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். இதேதும் நடவாதது என்பதையும் நானறிவேன். ஏனெனில், துணைநடிகர் களினால் நாயகர்களிற்குப் பின்னால் கைகட்டிக் குழைந்து கொண்டிருக்க மட்டுமே முடியும். எல்லைமீறினால் சகிக்க முடியாத அவலக்காட்சியாகி விடும். ஆகவே, முத்துக்குமார் விசய மெல்லாம் எறும்பின் மீது ஏரோப் பிளேனை வைத்த கதையாகிவிடும். குறைந்தபட்சம், இரண்டு விசயங்களை யாவது அவர் செய்ய வேண்டும்.
முதலாவது, ஈழவிடுதலை தொடர்பாக அவர் என்ன விதமான போராட்டம் நடத்தினார் என்பதை விடுவோம். இனி யென்ன நடத்தப் போகிறார் என்பதையும் விடுவோம். குறைந்த பட்சம் அவரது துறையிலாவது, ஏதாவது செய்ய வேண் டும். எழுத்தால் விடுதலைத் தவமாற்று வதாகப் பீலாவிடுமிவர், அதனை வைத்து வியாபாரம் செய்யாமல், தன் துறையில் தியாகத்தைச் செய்ய வேண் டும். ஈழவிடுதலைக்கான உலகளாவிய தமிழர்களின் பங்களிப்பில் ஓரங்கமாக, அருள் எழிலன் ஊதியம் வாங்காமல் எழுதத் தயாராக இருக்கிறாரா?
தாயக விடுதலையின் பெயரால் திரட்டப் பட்ட கணக்கற்ற நிதி வெளிநாடுகளி லுள்ள சில அணிகளிடமுள்ளது. தார்மீக அடிப்படையில் அந்த நிதி வன்னி அகதிகளிற்கும், நடுத்தெருவில் நிற்கும்
ܕܬܡ.ܶ
முன்னாள் போராளிகளிற்குமே சென்ற
டைய வேண்டியது. நாற்பது வயதைக் கடந்தும் திருமணம் முடிக்க முடியாமலி ருக்கும் எண்ணற்ற பெண்போராளிகள் உள்ளனர். அடுத்தவேளை உணவிற்கும் வழியற்ற எண்ணற்ற போராளிகள் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நிதிகளை இலக்கு வைத்துப் பல வியாபாரிகள் செயற்படத் தொடங்கியுள் ளனர். இந்த வகைக்குள் அடங்கும் அருள்எழிலன், புலம்பெயர் தேசங்களி லிருந்து பெற்றுக் கொண்ட நிதியை முன்னாள் போராளிகளின் மறுவாழ்விற்கு வழங்க வேண்டுமென்பதும் என்னுடைய இரண்டாது தாழ்மையான வேண்டு கோள்.
அருள்எழிலன் மற்றும் மேலே குறிப் பிட்ட வகையறாக்கள் தீர்ப்புகளுடனும் தண்டனைகளுடனும் உலாவருவதை நிறுத்திவிட்டு, அதனைப் பேசுவதற்கான குறைந்தபட்சத் தகுதிகளை உருவாக் குவதில் முயற்சி செய்ய வேண்டும்.
நன்றி
(yokarnan.com/?p=300O8. August 2012)
штфДт 99

Page 55
106
ཛོད༽
அரச தேசிய சாஹித்திய விருதுகள் - 2012
நானாவித இலக்கியம்
நாவல சொடுதா எஸ்.ஏ. உதயன்
சிறுகதை நூல் - 1 வெள்ளி விரல் ஆர்.எம்.நெளஷாத்
ଗmbରି சிறுகதை நூல் - 2 நல்லி மரத்துப் நந்தினி சேவியர்
L6ireflássia LLD
5T6iluLb தோட்டுப்பாய் மூத்தம்மா பாலமுனை பாரூக்
கவிதை நிலம் பிரிந்தவனின் சுஜந்தன் கவிதை
ஆய் இந்துக் கணித வானியல் - -
ULI ど牙。 60T 6) LDULI முகுறித
- - கந்தையா 5ITLESLD கருவறையில் இருந்து முநீகந்தவேள்
6)LDITLÓ16)LILLITi
பரபபு அம்மாவின் ரகசியம் எம்.ரிஷான் ஷரீப் اليا நாவல
6LDITL56LILLID)
ழிபெயர்ப்பு ତ୬ சுறங்கைப அஷ்ரஃப் சிஹாப்தீன் சிறுகதை பேரீச்சம்பழங்கள்
மொழிபெயர்ப்பு - - - - - இளையோர் இலக்கியம் காட்டுப்புற வீரர்கள் திக்குவல்லை கமால்
மொழிபெயர்ப்பு பர்மியப் பிக்கு
சொன்ன கதைகள்
சோ. பத்மநாதன்
штфTт 99
இறுதிச் சுற்றுக்கு வந்த மேலும் பத்து நூல்களும் நூலாசிரியர்களும் விபுலானந்தர் காவியம் - சு. சிவலிங்கம், வாத்தியார் மாப்பிள்ளை -ஜின்னாஹ் ஷரிபுத்தீன், அலைக் குமிழ் - அகளங்கன், காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன், அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்-தாட்சாயணி நேற்றுப்போல் இருக்கிறது-கே.எஸ். பாலச்சந்திரன், மீண்டு வந்தநாட்கள் - வதிரிசிரவீந்திரன், ஓவியம் செதுக்குகிற பாடல்-முரீபிரசாந்தன், குறுங்கூத்துக்கள்- கலையார்வன், முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
ン少
ܥܰܬܐ

107
அவனொரு புதிய தமிழன்
2_ୋtୋ0(d୭,[[ସ୍କୋ( ! நான் ஒருசிங்களவன் ஆம், சிங்களவன் நான் ஒரு சிங்களவன் சுத்தச் சிங்களவன்
தமிழ்க் கனவெனில் தமிழிலேயே காணுதல் வேண்டுமென விழைந்ததால் தாய்த் திருநாட்டில் வாழ்தல் மறுக்கப்பட்டேன்
நான் சிங்களத்திலேயே சிந்திக்கிறேன் ஈழத் திருநாட்டிலிருந்து துடைத்தெறியப்படும் கடைசித் தமிழனைப்பற்றியம் கவி வரைவேன் சிங்களத்தில்
சிங்களவனாய் இருப்பதாலேயே கவிதைஎழுதும் - என் கரங்களிலும் இரத்தம் எழுதுகோலின் வழியே ஊறுவதும் இரத்தம்தான்!
சிங்களத்தில் சிரிக்கத்தான் விருப்பம் எனக்கு அதனாலேயேதான்
அது எனக்குச் சாத்தியப்படவே இல்லை
சைவக் கடையில் சாப்பிட்டபடி முல்லைத்தீவைக் கைப்பற்றுவதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் என்னுடைய நண்பன் மின்னஞ்சல் வழியே உழுந்து வடையொன்றை அனுப்பி வைத்திருந்தான்
தோழனே, சொந்த நாட்டுக்குள்ளே துரத்தப்பட்டோராய் வாழ்வதிலும் வாழ்வை வேற்றிடத்தில் கழிப்பது பரவாயில்லைதான்!
புதியதொரு கவிதை - என் இதயத்துள் ஜனிக்கிறது அதுவும்கூட ஒரு தமிழனைப் பற்றியதே! அவனோர் பதியதமிழன் சிங்களத்தைப் பார்த்துச் சிரிக்கின்ற தமிழன்
அவனை நான் சிங்களத்தில் வாழ்த்துகின்றேன்.
சிங்களத்தில மஞ்சுள வெடிவந்தன தமிழில லரீனா அப்துல் ஆக்
யாத்ரா 22

Page 56
மலாய் மொழிக் கவிதைகள்
பா.அ. சிவத்தின்
பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது தொகுப்பை முன் வைத்து.
O &DDs ass) உலக மொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க் கப்படும் முயற்சிகள் நீண்ட காலம் தொடக்கம் நடை பெற்று வருகின்றன. அவை பெரும்பாலும் ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரப்பெற்ற வையாகவே அமைந்தன. இம்முயற்சிகளில் ஆங்கில மொழி இலக்கியங்களும் அடங்கும். ஆங்கிலம் தவிர்த்த மொழிகளின் இலக்கியங்கள் பெரும்பாலானவை ஆங்கில மொழியிலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டவையாக இருந்தன. மிக அபூர்வமாக பிரான்ஸ் மொழியிலிருந்தும், ஒருநிறுவன முயற்சியாக(மாஸ்கோ பதிப்பகம்) ரஷ்ய மொழியிலி ருந்து பல இலக்கியங்கள் தமிழ்பேசும் சமூகத்தின ராலும், ரஷ்ய தமிழ் அறிஞர்களாலும் நேரடியாக மொழி
பெயர்க்கப்பட்டன.
ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வுக்குப் பின் (குறிப்பாக ஐரோப்பிய பிரதேசத்திற்கான புலம்பெயர்வு) அவர்கள் ஐரோப்பிய மொழிகளைக் கற்றதும், அந்த மொழி களிலும் அவர்கள் எழுதியதோடு, அந்த மொழி இலக்கி யங்களை நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளும் பரவலாகியது எனலாம். உதராணத்திற்கு பிரான்ஸ், ஜெர்மன், டேனிஷ், நோர்வீஜியன் இப்படியாக பல மொழிகளைச் சொல்லாம். இதன் காரணமாக உலகின் பல மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட அளவுக்கு இல்லை என்றாலும் அதற்கு இணைவாக உலக மொழி இலக்கியங்கள் நேரடியாக அந்தந்த மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கும் முயற்சிகள் பரவலாகியது எனலாம். இடைப்பட்ட காலத்தில் இந்தியச் சூழலில் இந்திய மொழி இலக்கியங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும்
ܢܥܬܗ
 

109
முயற்சிகளும், இலங்கைச் சூழலில் சிங்கள மொழி இலக்கியங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் முயற்சிகள் நிறு வன ரீதியாகவும் (இந்திய சாகித்திய அகடமி) தனிநபர் ரீதியாகவும் நடை பெற்றுக் கொண்டிருந்தையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டி யுள்ளது. ஆனபோதும், இத்தகைய மொழி பெயர்ப்பு முயற்சிகளில் ஐரோப்பிய, லத்தீன்-அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க இலக்கியங்கள் நேரடியாகவோ, ஆங்கி லம் வழியாகவோ மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுக ளான ஜப்பான் மலேசியா, இந்தோனே சியா, பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளின் மொழிகளின் இலக்கியங்கள் ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு, தமிழில் அவை நேரடியாகவோ ஆங்கி லத்திலிருந்தோ மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடைபெறவில்லை எனலாம். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள், ஜென் மதக் கதைகள் மட்டும் விதிவிலக்கு. அவை கூட, ஜப்பானிய மொழியிலி ருந்து நேரடியாக அல்லாமல் ஆங்கிலத் திலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டன. மலேசியாவைப் பொறுத்தவரை அங்கு வாழும் தமிழ்ப்பேசும் சமூகத்தினர் மலாய் மொழி கற்றதும், அம்மொழியிலே எழுதி யது தொடக்கம், அம்மொழி இலக்கியங் களைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் தொடக்கம் பெற்றன என லாம். மலாய் மொழி இலக்கியத்தின் மறுமறுமலர்ச்சித் தந்தை எனப் போற் றப்படும் மலேசிய தமிழ் முஸ்லிம் சமூகத் தினரான முன்ஷி அப்துல்லா(MunSy Abdullah) முதற் கொண்டு இன்றைய நாளில் மலேசிய மொழியில் புதுக் கவிதைகளை எழுதியும் அம்மொழிக் پلار
கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வரும் ஜோசப் செல்வம் மற் றும்,ஆங்கில வழியாக மலாய் தமிழில் மொழி பெயர்த்து வரும் மலே சியாவைச் சேர்ந்த கே. பாலமுருகன் போன்ற வர்களை உதாரணமாகச்
ിstേ.
இந்தோனேசிய, மலாய் மொழி இலக் கியங்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அளவுக்குத் தமிழில் மொழிபெயர்க்கப்டவில்லை. நான் அறிந்த மட்டில், விரைவில் தமிழகத்தின் அடையாளம் வெளியிடாக வெளி வர இருக்கும் பேராசியர் எம். ஏ.நுஃமான் அவர்கள் ஆங்கில மொழி வழியாக மொழிபெயர்த்த இந்தோனேசிய மலாய் மொழியின் மிக முக்கிய கவிஞராகத் திகழ்ந்த சைறில் அன்வர் (19221949) அவர்களின் கவிதைகள் அடங் கிய தொகுப்பே இந்தோனேசிய இலக்கி யம் ஒன்று தமிழில் வெளிவரும் முதல் முயற்சியாக அமையப் போகிறது. அதேவேளை மலேசிய மொழிகக் கவிதை கள் அதுவும் நேரடியாகவும் ஆங்கில மொழி வழியாகவும் மலேசியா சார்ந்த பா.அ. சிவம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பாக மலேசியாவின் வல்லினம் சஞ்சிகையின் வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள பின்னர் அப் பறவை மீண்டும் திரும்பியது' எனும் தொகுப்பு ஒரு முக்கிய தொகுப்பாக அமைந்துள்ளது.
பா.அ.சிவம் அவர்கள் மலேசியாவில்
மொழிபெயர்ப்புச் செய்தித்துறையில்
யாத்ரா 22

Page 57
III 0
பணியாற்றி வருபவர். தமிழில் கவிதை களையும் எழுதி வருபவர். இத்தொகுப்பில் மொத்தமாக 18 கவிஞர் களின் 45 கவிதைகள் இடம்பெற்றுள் ளன. இதில் 40 கவிதைகள் சிவம் அவர் களால் மலாய் மொழியிலிருந்து நேரடி யாகவும், 5 கவிதைகள் ஆங்கிலத்திலி ருந்தும் மொழிபெயர்க்கபட்டுள்ளன. அடுத்து மலாய் மொழியிலிருந்து நேரடி யாக மொழிபெயர்க்கபட்ட கவிதைகளுக் குரிய கவிஞர்களின் விபரங்களை அந்த நூலின் இறுதிப் பகுதியில் இணைத்தி ருப்பது மிகப் பயன்மிக்கதாக அமைந் துள்ளது. அதே வேளை ஆங்கில மொழி யிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவி தைகளுக்குரிய கவிஞர்களைப் பற்றி எந்தவொரு குறிப்பும் காணப்பட வில்லை என்பது ஒரு குறையாகும். மொத்தமாக, இத்தொகுப்பில் அடங் கியுள்ள 48 மலேசியக் கவிதைகள் எந்த அளவுக்கு மலேசிய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன என்பதை இனிப் பார்ப்போம்.
2
அ.பா.சிவம் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்த மலாய்க் கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்னதாக மொழிபெயர்ப் புப் பணி பற்றிச் சிறிது இங்கு சொல்ல வேண்டும்.
மொழிபெயர்ப்புப் பணி என்பது மிக சிரமமிக்கதும், சவால் நிறைந்ததுமான ஒரு பணி என்பதை அத்துறையில் ஈடு பட்டு வருபவர்கள் அறிவார்கள். என்ன தான் மூலமொழியிலும் சரி, இலக்கு மொழியிலும் சரி, ஒரு மொழிபெயர்ப் பாளனுக்கு ஆழ்ந்த பரிச்சயம் இருப்பி னும், ஒரு படைப்பு இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யப்படும்
யாத்ரா 22
பொழுது, அதன் அசல் தன்மையின் ஒரு சில கூறுகள் இழக்கப்பட்டு விடு கின்றன என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளும் கருத்து. இது மூல மொழி யிலிருந்து இரண்டாம் மொழிக்குப் பெயர்க்கும் பொழுது ஏற்படும் இழப்பு என்றால், மூன்றாம் மொழிக்கு பெயர்க் கப்படும் பொழுது ஏற்படும் இழப்பு இன்னும் அதிக அளவானதாகவே இருக் கும். இத்தகைய நெருக்கடியை மனங் கொண்டே ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பை வாசக உலகம் உள் வாங்கு கிறது. இத்தகைய சூழலில் ஒரு மொழி பெயர்ப்பாளன் தான் தேர்ந்தெடுக்கும் இரண்டாம் அல்லது மூன்றாம் மொழி மீதான அதீத அபிமானத்தின் காரணமாக மூலப்படைப்பை, தான் தேர்ந்தெடுக் கும் இரண்டாம் மொழி அல்லது மூன் றாம் மொழிமயப்படுத்துவது என்பது ஒரு மொழிபெயர்ப்பு படைப்பைப் படிப் பதற்கான நோக்கத்தை இழக்கச் செய்து விடுகிறது. அதாவது, மூல மொழிப் படைப்பு சார்ந்த சமூக விழுமியங்களை, அச்சமூகத்தின் யதார்த்தத்தை, அதன் சுயத்தை அறிந்து கொள்ளத்தான் மொழிபெயர்ப்புப் படைப்புகள் வாசக உலகத்தினால் பயிலப்படுவதற்கான நோக்கமாக இருக்கிறது. ஆனால், மொழிபெயர்ப்பாளனின் மேற்குறித்த முறைமையால் அந்த நோக்கம் பிழைத்து விடுகிறது. இக்கருத்து மொழிபெயர்ப் புப் பணியில் ஈடுபடுவோர் கவனத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒன்றா கும்.
நாம் இங்கு பேச எடுத்திருக்கும் அ.பா. சிவம் அவர்கள் மொழிபெயர்த்த மலாய்க் கவிதைகள் தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளின் முதல் வாசிப்பில் அக் கவிதைளில் பெரும்பாலாவை, அவரே
ܓ݁ܶܠ ܐܬܐ

III
தனது இத்தொகுப்பின் தன்னுரையில் குறிப்பிட்டு இருப்பது போல் 'இக்கவி தைகளை வாசிக்கும் போது மொழி பெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கிறீர்கள் என்பதை உணராத வகையில், அசல் தமிழ்க்கவிதைன் போல் சில கவிதைகள் அமைந்துள்ளன. அதாவது அக்கவிதை களை அவர் தமிழ்மயப்படுத்தித் தந்தி ருப்பதன் மூலம், அவர் அதே தன்னுரை யில் பிறிதொரு இடத்தில் குறிப்பிட்டது போல் 'மலாய்க் கவிஞர்களின் சூழல், சொற்கள், சிந்தனை, கற்பனை, நுட்பம், ஆளுமை, ஆகியவற்றைச் சரியாகவும், ஆழமாகவும் நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. இவர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதை களில் ஆங்கிலத்தில் எழுதும் மலேசியக் கவிஞர்களின் கவிதைகள் மூலம் தெரியும் மலேசியக் கவிதையின் வளர்ச்சி, இவர் தேர்ந்தெடுத்திருக்கும் மலாய் மொழியில் எழுதும் கவிஞர்களின் கவிதைகளின் ஊடாகக் குறைவாகவே தெரிகிறது. ஆனாலும், நாம் மேற்குறித்த ஒரு படைப்பு இரண்டாம், மூன்றாம் GlւOու5) களுக்கு மொழிபெயர்க்கப்படும் பொழுது இழக்கப்படும் மூலமொழிப் படைப்பின் அசல் தன்மையின் சில கூறுகள் சிவம் அவர்கள் மலாய் மொழி யிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துத் தந்துள்ள பல கவிதைகளிலும், ஆங்கிலத் திலிருந்து மொழிபெயர்த்துத் தந்துள்ள சில கவிதைகளிலும் இழக்கப்படிருப் பினும், அக்கவிதைகளைப் படிக்கும் பொழுது அவை தமிழ்க் கவிதைகள் அல்ல என்ற ஓரளவுக்கான உணர்வுக்கு நாம் ஆட்படுவதற்கு அக்கவிதைகளுக் காக அவர் கையாண்டு இருக்கும் நடை காரணமாக அமைகிறது. பெரும்பாலான கவிதைகளை அவர் தமிழ்மயப்படுத்தித்
لوتھر
தந்திருப்பதற்கு அப்பால் மலாய் மொழிக் கவிதைகளைத்தான் வாசித்துக் கொண்டி ருக்கிறோம் என்ற உணர்வை ஏற்ப டுத்தும கவிதைகள், சிவம் அவர்கள் மலாய்க் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்த பணிக்கான வெற்றிகரமான இடங்களாக அமை கின்றன எனலாம்.
மேற்குறித்த குறை-நிறைகளைக் கடந்து பார்க்குமிடத்து சிவம் அவர்களின் மலாய்க்கவிதைகளின் இத்தொகுப்பு பல வழி களில் முக்கியத்துவம் பெறுகிறது. இது வரை காலம் மொழிபெயர்ப்புப் பணி வழியாகத் தமிழில் நமக்கு கிடைக் கப் பெறாத மலாய் மொழிச் சமூகத்தின் கவிதைகள் என்ற வகையிலும், இத் தொகுப்பின் கவிதைகளைப் படித்த பின் மலாய் மொழிச் சமூக இலக்கியங்களைப் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தையும், தேடலையும் தூண்டி விட்டது என்ற வகை யிலும் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு தொகுப்பாக அமை கிறது. அந்த வகையில், பா.அ.சிவம் அவர்கனின் இப்பணி பாராட்டத்தக்கது.
3
இத்தொகுப்பில் லிம் ஸ்வீதின், அவாங் அப்துல்லா, கெமலா, எ.சாமட் சைட், சித்தி சைனுன் இஸ்மாயில், சுரினா ஹசான், நோர்.எஸ்.எம், ஏ.வஹாப் அலி, அஹ்மட் சார்ஜூ, ஷாபி அபு பக்கர், சல்மியா இஸ்மாயில், அப்துல் கபார் பஹாரி ஆகிய மலாய்க் கவிஞர்களின் கவிதைகளை நேரடியாக மலாய் மொழி யிலிருந்து சிவம் அவர்கள் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். அத்தோடு, மலேசியாவில் ஆங்கிலத்தில் எழுதும் சில கவிஞர்களின் கவிதைகளையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
யாத்ரா 22

Page 58
112
அவ்வாங்கிலக் கவிதைகள் மலேசியா வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த Dr. Malachhi Edwin Vethamani Glgrgég "IN - SHIGHTS’ Gigjub Glgrgul SloS ருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிசையில் ஒமர் முகமட் நூர் COmar Mohamed NoorO , Qq, ñaScồT UIT GiggsbśS UIT O Charlene Rajendra D, Gluficilato Glactos)(Berince Chauly), Qf6ìQòíì 9, Tửb(CHilary Tham), Qơếìảo grGiggsbágriCCecil Rajendra), 9.5Gust ரின் ஆங்கிலக் கவிதைகளையும் சிவம் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இக்கவிஞர்களில் பலர் மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாவும், பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும், பலர் சமூகப் பணிக்கான களப்பணியாளர் களாகச் செயற்படுபவர்களாகவும் இருப் பதோடு, மலேசியாவின் பல்வேறு இனக் குழுமங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களில் மலாய் மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரும். சீன -இந்திய வம்சா வழியினரும் அடங் குவர். சித்தி சைனுன் இஸ்மாயில், சுரினா ஹசான், சல்மியா இஸ்மாயில், ஷர்லின் ராஜேந்திரா, பெனிஸ் செளலி, ஹிலரி தாம் போன்றவர்கள் மலேசியாவின் முக்கிய பெண் கவிஞர்களாகத் திகழ்கி றார்கள். இக்கவிஞர்களில் செசில் ராஜேந்திரா, நோபல் பரிசுக்குப் பரிந்து ரைக்கப்பட்டவர். என்பது குறிப்பிடத் தக்கது. சிவம் அவர்கள் மலேசியாவின் முக்கிய மான மேலும் சில கவிஞர்களையும் சேர்த்து இருக்கலாம். உதாரணத்திற்கு மலேசியாவின் முக்கிய கவிஞர்களாகக் 5(Cb5ŮUGub Latiff Mohidin, Usman
штфЈт 99
Awang போன்ற சில கவிஞர்களையும், மலாய் மொழியில் கவிதை எழுதும் மலே சியத் தமிழ்க் கவிஞர்களையும், உதார ணத்திற்கு ஜோசப் செல்வம் மற்றும் எம். சண்முகலிங்கம் போன்றவர்களின் கவி தைகளையும் சேர்த்திருந்தால் இன்னும் முழுமையாக மலேசியக் கவிதையின் வளர்ச்சியையும், போக்கினையும் நாம் அறிந்து கொள்ளக்கூடியாக இருந்தி ருக்கும். இக்கவிதைகள் சிவம் அவர்களின் தமிழ் மயப்படுத்தல் தன்மையின் காரணமாக மலேசியத் தன்மை இழக்கப்பட்டிருப் பினும், அதனை மீறியும் அக்கவிதை களை வாசிக்குமிடத்து அக்கவிதைகளை உலகக் கவிதைகளுடன் ஒப்பிடும் பொழுது, அக்கவிதைகளின் பாடு பொருள்கள் கவனத்திற்குரியவையாக வும், புதிய பார்வையுடன் கூடியதாகவும் அமைந்துள்ளன. அதாவது அவை கொண்டிருக்கும் பொதுத் தன்மையின் காரணமாக அவை இன்றைய கவிதை களாக அடையாளமாகியுள்ளன என்பதை மறப்பதற்கில்லை.
மலாய் மொழியிலிருந்து மொழிபெயர்க் கப்பட்ட எல்லாக் கவிதைகளிலும் பற வை-பறத்தல் என்பது திரும்பத் திரும் பக் கையாளப்படுகிறது. இத்தொகுப் பின் தலைப்பிலே அத்தன்மையினைக் காணலாம். இது தற்செயல் நிகழ்வா? அல்லது மொழிபெயர்ப்பாளரின் திட்ட மிட்டதெரிவா? அல்லது மலேசியக் கவி தையின் ஒரு போக்கா? (ஜப்பானிய ஹைக்கூவில் அடிக்கடிவரும் வண்ணத் துப் பூச்சி, நிலவு என்ற மாதிரி) போன்ற கேள்விகள் எமக்குள் எழுகின்றன.
பெண்ணினத்தின் அகக் குரல், நகரமய மாக்கல் என்பதின் காரணமாக ஏற்படும்
ܢܝܰܬܐ
 

113
சுற்றுப் புறச் சூழலில் எழும் மாற்றங்கள் ஏற்படுத்தும் மன உணர்வுகள், இயந்தி ரத்தன்மையின் காரணமாக மனித உறவு களிடையே ஏற்படும் இடைவெளியின் காரணமாக அந்நியமாகிப் போகும் தன்மை, தலைமுறை இடைவெளி, இயற்கை மீதான மனிதனின் ஆதிக்கம், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் போன்ற உலக மனித சமூகத்தில் நிலவும் பொதுவான பல பிரச்சினைகள் அக் கவிதைகளின் பாடுபொருள்களாகக் காணப்படுகின்றன. இனி உதாரணங்களாகச் சில கவிதை களைப் பார்க்கலாம்.
மலேசியாவில் ஆங்கிலத்தில் எழுதும் பெண் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த் திருக்கும் முறைமையின் காரணமாக அக்கவிதைப் பிரதிகளில் உள் ஒலிக்கும் பெண்மயக் குரல் நீக்கம் செய்யப்பட் டுள்ளமை அக்கவிதைப் பிரதிகளின் கனதியினைக் குறைத்து விடுகின்றன. அதற்கு உதாரணங்களாக இரு கவிதை களை எடுத்துக் காட்டலாம். ஒன்று, இத்தொகுப்பில் இடம்பெற் றுள்ள மலேசியாவில் ஆங்கிலத்தில் எழுதி வரும் முக்கியமான பெண் கவிஞரான ஷர்லின் ராஜேந்திராவின் கட்டுமானப் பொறுப்பாளர்களுக்குத் திரு அல்லது திருமதிக்கு’ எனும் கவிதை நகரமய மாக்கல் என்பதால் இறந்த காலத்தின் ரம்மியங்களின் ஸ்தூல வடிவங்கள் அழிக் கப்பட்டு, உருவாக்கும் நகரமயமாக் கலை விசாரிக்கும் கவிதையாக அமை கிறது. இக்கவிதையின் தமிழ்த் தலைப்பில் இடம்பெற்றுள்ள திரு அல்லது திருமதி க்கு என்ற விளிப்பு, மூலக் கவிதையின்
يجر
தலைப்பில் இடம் பெறவில்லை. மூலக் கவிதையோ அவ்விளிப்புடனே கவிதை தொடங்குகிறது. அந்த விளிப்புக்கு பின் அக்கவிதை இப்படித் தொடர்கிறது. *நான் பிறந்து வளர்ந்த இடங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் இடமில்லை எனக்கூறி நவீனமடைந்து வருகிறோம் - வருகிறோம்
எனத்தொடங்கும் கவிதையின் இடையில் "Why should the mega - mall be at 218 ampang
where I used to swinging 'moneyplant?" என விசாரிக்கிறாள் அந்தப் பெண். ஆனால், அவ்வரிகளை மொழிபெயர்ப் பாளர் இப்படி மொழிபெயர்த்து தருகி றார்.
நண்பர்களுடன் சீட்டுக்கட்டு விளையாடிய அம்பாங்கின் 2 (8ல் ஏன் வாணிப மையத்தை? அதாவது, மலேசிய மண்ணில் வளரும் ஒரு கொடியான moneyplantஇல் ஊஞ்ச லாடிய 218 ampang இல் ஏன் வாணிப மையம் என்று அப்பெண் கேட்பதை நண்பர்களுடன் சீட்டுக்கட்டு விளை யாடிய என்று ஏன் மொழிபெயர்த்தார் எனத் தெரியவில்லை. அத்தோடு அவ்வாறு மொழிபெயர்த்ததன் காரணமாக இன்னு மொரு இழப்பும் அக்கவிதை வரிகளில் ஏற்படுகிறது. அதாவது அவ்வரிகளில் வெளிப்பட்ட மலேசிய மண் வாசனையை யும் அக்கவிதை இழக்கிறது. மேலும் அக்கவிதையை மின்னஞ்சல் வடிவில் வடிவமைத்திருக்கும் கவிஞர் இறுதியாக அப்பெண்ணின் மின்னஞ்சல் முகவரியைக் கூட ஆழமான அர்த்தத்து டன் அமைந்திருக்கிறார். அம்மின்னஞ் சல் முகவரி இப்படி அமைகிறது.
யாத்ரா 22

Page 59
II 4
A city girl(a)Urbanses இவ்வாறாக அம்மின்னஞ்சல் முகவரியை அமைத்ததன் மூலம் கவிஞர் சொல்ல முனைவது என்னவென்றால் இன்று ஒரு நகரப் பெண்ணாக வாழும், தான் பிறந்து, வளர்ந்த நகரத்தின் புறச்சூழலை நகரமயமாக்கல் மூலமாக இழந்து நிற் கும் ஒரு பெண்ணின் விசாரணையுடன் கூடிய ஏக்கக் குரல்தான் அக்கவிதை. அத்தோடு அம்மின்னஞ்சலின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுயிருக்கும் DOt my என்ற சொல் வழமையாக மின் னஞ்சல், மற்றும் இணையத்தள முகவரி களைக் குறிக்கும் ஒரு குறியாகும். அதாவது குறித்த மின்னஞ்சல், இணை யத்தள முகவரியின் அடையாளத்தை எடுத்துக் காட்டும். உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சல்-இணையத்தள முக வரி ஒரு நாட்டை குறிப்பதாயின் அந்த நாட்டின் சுருக்கக் குறியும் (இலங்கை என்றால் Do Ik) ஒரு நிறுவனத்தைக் குறிப்பிப்பதாயின் Dot Org என்றும் தனிப்பட்ட மற்றும் வர்த்தக சம்பந்தமா யின் Dot com என்றும் குறிப்பிடுவது உண்டு. அக்குறி மின்னஞ்சல் அல்லது இணையத் தளங்களின் Domain ஐ வகைப்படுத்தி காட்டும் குறியாகும். ஷர்லின் ராஜேந்திரா தனது அக்கவிதை யின் இறுதியில் அமைந்திருக்கும் மின்னஞ்சல் முகவரியில் Urbanses என்ற சொல்லாடலின் மூலம், நகர மயமாக்கலின் காரணமாக இழந்து போன அந்த உலகைப் பிரதிநிதித்துவப்படுத் துபவளின் மின்னஞ்சல் முகவரி என்பதை எடுத்துகாட்டவும், Dof my என குறிப் பிடுவது(myஎன்பது மலேசியாவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்க குறியாகும்) கவிதைச் சொல்லியான
அப்பெண் மலேசியாவைச் சேர்ந்தவள்
(UTé/TIT ඉ2
என்பதை எடுத்துக் காட்டவும், கவிஞர் அம்மின்னஞ்சல் முகவரியை அவ்வாறு அமைத்திருக்க, மொழிபெயர்ப்பாளரோ அம்மின்னஞ்சல் முகவரியை ஒரு நகரப் பெண் ; கிராமம்.காம் என்று மொழி பெயர்த்துக் கவிஞர் அம்மின்னஞ்சலில் வெளிப்படுத்திக் காட்டிய தேச அடை யாளத்தை நீக்கம் செய்து விடுகிறார். இது மின்னஞ்சல் முகவரியையும் மொழி பெயர்க்கப் போனதால் ஏற்பட்ட இழப்பு எனலாம். (பொதுவாக மின்னஞ்சல் முகவரிகள் மொழி பெயர்க்கப்படுவ தில்லை.) அடுத்து இத்தொகுப்பில் அமைந்துள்ள மலாய் மொழியிலும் ஆங்கிலத்தில் எழு தும் மலாய்ப் பெண் கவிஞரான பெனிஸ் செளலியின் கவிதையைப் பார்ப்போம். பெனிஸ் செளலி பாலியல் தொழிலாளி கள், அகதிகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்காகப் பணியாற்றுபவர். சீனபஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்த இவர் ஒரு நடிகையும் கூட இவரது கவிதை யான 'பழங்களைப் பொறுக்குதல் என்பதை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து தந்துள்ளார். பெனிஸ் செளலி பெண் கவிஞராக இருப்பதனால் அக் கவிதையில் பெண்ணின் குரலாக வெளிப்படுகிறது. ஆனால் ஆங்கிலத் $go When I was child GTGolg, Glgrillsigib அக்கவிதை வரிகளை மொழி பெயர்ப் பாளர், "நான் சிறுவனாக இருந்தபோது என மொழி பெயர்த்தன் மூலம் அக் கவிதையில் ஒலித்துக் கொண்டிருக்கும் பெண் குரலையும் நீக்கம் செய்து விடு கிறார். அடுத்து, சிவம் அவர்கள் மொழிபெயர்த் திருக்கும் ஆங்கிலத்தில் மலாய்க் கவிஞ ரும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டவருமான செசில் ராஜேந்திராவின்
يعطي

115
தலைப்பிலாக் கவிதை ஒன்றினைப் பார்ப் போம். அக்கவிதையினைச் சிறப்பாக மொழிபெயர்ந்திருப்பினும் மூலக் கவி தையில் பின் வரும் வரிகளை மொழி பெயர்க்க அவர் ஏன் தவிர்த்தார் என்பது புரியவில்லை. Love is riot and love is ripple Love is whisper and love is wirlpool
காதல் ஒரு கலவரம் காதல் ஒரு சிற்றலை காதல் ஒரு இரகசியம் காதல் ஒரு நீர்ச்சுழி என அர்த்தப்படும் வரிகளை மொழி பெயர்க்கத் தவறியதுதன் மூலம், செசில் ராஜேந்திராவின் காதலைப் பற்றிப் புதிய பார்வை கூடிய உருவகங்களை வாசகர் கள் அனுபவிக்கத் தவறி விடுகிறார்கள். இறுதியாக, மேற்கண்ட குறைகளுக்கு அப்பாலும் சிவம் அவர்கள் மொழி பெயர்த்துத் தந்திருக்கும் மலாய்க் கவிதைகளை நமக்குப் புதிய அனுபவங் கள்தான் என்பது மறுப்பதற்கில்லை. எதிர் காலத்தில் சிவம் அவர்கள் மேலும் மலாய் மொழி இலக்கியங்களை மொழி பெயர்த்துத் தரும் பொழுது, தமிழ் மொழிச் சமூகம் மலாய் மொழி இலக்கிய வளர்ச்சியைப் பற்றி பரவலாக அறியும் வகையிலான தேர்வுடன் அம்மொழி பெயர்ப்பு முயற்சியில் ஈடுபடுவது, அவரது பணிக்கான நோக்கம் பூரண நிறைவேறக் கூடியதாக இருக்கும் . பிற்குறிப்பு- சிவம் அவர்களின் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எல்லாக் கவிதைகளையும் பற்றி இக்கட்டுரையில் பேச முடியாத சூழலில் வாசகர்களின் இரசனைக்கு அவற்றில் ஒரு சில கவிதைகள் பின்
ணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ܕܬܡܐ
அரசியல் மலாய் மொழியில்- நோர் எஸ்.எம். அதிகாரம் என்பது கூர்மை கூர்மை என்பது கத்தி கத்தி என்பது பிடித்திருப்பது உனது கையில் பிடித்திருக்கிறாய்
ஆனால்
உன்னையே குத்திக் கொள்ளும் அளவுக்கு ଶ୍ରେୋ[?
நகர்ச்சி மலாய் மொழியில்- லிம் ஸ்வீதின் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு ஒரு இரகசியத்திலிருந்து இன்னொரு இரகசியத்திற்கு நகரும் நகர்ச்சியின் ஒரு பகுதிதான் நாம்.
கடல் என்பது நீலமல்ல மலாய் மொழியில்- அவாங் அப்துல்லா 1)
இங்குதான்
எனக்குத் தெரிந்தது கடல் என்பது நீலமல்ல என்பது. ஆனால்
அதன் வண்ணமோ சாம்பல் இடையிலான சிவப்பு. ஆனால்
டிசம்பர் மாதத்தில் உடனடியாகக் கறுப்பாகி விடும்.
2)
இங்குதான் எனக்குத் தெரிந்தது கடல் என்பது
சிலருக்கு வீடு என்பது.
யாத்ரா 22

Page 60
16
YAATHRA
Featuring Muslim writers in Lanka
By K. S. Sivakumaran
SivakumarankSOyahoo.com
Writers in Tamil include Muslims, Malays and Thamilians. Most Muslim Writers hail from the Eastern province, A good many are living in the WesternandSOuthern and a few from north Central, northWesternand the hill COUntry. Although their Writing find a plaCe in national newspapers and magaZines there are no exclusive literary journals or newspaperstofeature their Contributions. There is a Weekly neWSpaper Called Navamani which COVers the political and Cultural Scene almost exclusively of the Muslims in Lanka. ltWOuld not be impertinent to say that this reviewer had been its pioneer editor in Chief.
Yathra (a pilgrimage or a journey), a literary magazine edited by Ashroff Shihabdeen maintained good standard reading material for sometime but fell on the Wayside after a short period of existence. Reasons are obvious: readership for serious Writing became limited, lack of advertisements, printing Cost and the like. After publishing 20 issues the journal
штфЈт 22
Was heard no more. But suddenly the 21st issue was launched recently in Kolumbu Thamil Sangam with a new format and spreading its Wings beyond poetry and poetry Criticism. It's now a magazine that COvers arts and literature. We understand that it is a quarterly journal with a new editorial board. The poet, essayist, Critic, travel Writer, broadcaster, and television personality-Ashroff Shihabdeen from OddamaWadi in the Battical Oa district remains the editor with Nachiya Theevu Farween functioning as the Managing Editor, Vaalaichenai Amar is the Assistant Editor. The April–June issue is available from 37, Sri Sidhartha Mawatha (Dhankanatta Road), Mabola, Wattala.
This 96 page journal has the following features; poetry, articles, short stories, Columns, shOrtifiction, play, politics, Internet, NeWS and appreciations of deceased. Admittedly there is a spectrum of varied reading material.
Tome the fontsize of the printis small
ܢܥܬܝܕ݂
 

117
to read and enjoy the journal. The editorial expresses fear that Our Country Could turn to be another Somalia if the different Communities in the island clash as the One that happened recently in Dambula. There is an interesting expose on the storming of Writing in the name of poems On the Websites. Yet another piece I liked Was On the fiction of feminine gender by Larina Abdul Haq. A lyric of Bob Dylan is translated into Tamil by Mani.
A Sinhala story by Anushka
Thilakaratne is rendered into Tamil by M. Rishan Sharif. Black and White photographs of the launching of the journal COvering three pages is another feature. A short fiction by the late Maruthamunai Majeed and a tribute to him by the editor too could be mentioned here.
LOt of Lankan Tamil and Muslim Writers living here and abroad have their OWn blogs and very often enter into discussions and quips in the Face book these days, Yaathra has posed the question "In the future politics of Lanka, WOuldn't political parties of the
minorities be redundant?" In re
sponse, NinthaVOOr Shibly, Fathima Sherine, Razana Manaf, S Begum, Mohammed Faiz, Mohammed Fazi, Mohammad FaZnath, A Halim Sulaima Lebbe, Rauf Hazir, Manas Mohammed and Shakir Mafas A.R.
يظهر
had responded.
To know What they have said, please read the magazine. One notices that mOSt Of the COntributions to the Current issue of the journal are from newComers to the field of Writing.
There is a Satire On Modernism based On the entries One finds as COmments and Contributions On the FacebOOK. A short piece by Prof. Rohan Gunaratne On "Becoming a Lankan' is also found in translation. Another tribute by the editor of another Muslim Writer "Sheiko" who passed away also finds a place in the journal. A playlet featuring all Muslim characters is also interesting.
It is good to know that Muslim Writers in Tamil are being encouraged and finding a place in this newly reborn
journal Yathra. ള്
Thanks: The Island.lk - July 24, 2012, The Islandon 25th July 2012
யாத்ரா 22

Page 61
118
“நெருப்பு வாசல்” சிறுகதைகள் அன்புடீன் பெருவெளி ബൈണിu്
660)6): 3OO.OO தொடர்பு
O7 7 8624255
ஒரு கவிஞனாகவே அறியப்பட்ட அன்புடீனின் சிறுகதைத் தொகுதியின் பெயர் "நெருப்பு வாசல்."
அவரது பதினான்கு சிறுகதைகளைக் கொண்ட இந்நூலைப் "பெருவெளி" வெளியிட்டுள்ளது.
"அன்புடீன் மாமூலான கதைகளிலி ருந்து சற்று வித்தியாசமான முறையில் சிறுகதைகளைச் சுதந்திரமான முறை யில் எழுத வேண்டும் என்ற தேவை யை உணர்ந்திருக்கிறார்” என்கிறார், சண்முகம் சிவலிங்கம். தென்கிழக்கு முஸ்லிம்களது வாழ்வி யலின் கடந்த காலத்தின் வெட்டு முகமாகவும் ஒரு வகையில் சித்திர மாகவும் அன்புடீன் கதைகள் அமைந் திருக்கின்றன.
அநேகமாகவும் எழுபது, எண்பது களில் எழுதப்பட்ட இக்கதைகளில் சித்தரிக்கப்படும் வாழ்வியல் முறை மைகள் மாறிய போதும் அவலங்கள் அப்படியே இருப்பதை இச்சிறுகதை கள் உணர்த்தி நிற்கின்றன. நூலின் அட்டைப்படத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்!
கவிஞர் றாபிக் அண்மையில் நம்மைப் பிரிந்தார்.
சமாதானக் கல்வி இணைப்பாளராகக் கல்முனை கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்த றாபிக் இலக்கிய ஆர்வம் மிக்கவராக இருந்தார்.
கல்முனை ஊடகவியலாளர் ஒன்றி யத்தின் ஸ்தாபக அங்கத்தவராகவும் அதன் பொருளாளராகவும் இயங்கிய
வலயக்
வர். புகவம் - கலை, இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் இயங்கிப் பிரதேச கலை, இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்.
எழுத்தைப் போலவே வாழ்வையும் பொதுமக்களுடனான நல்லுறவையும் பேணிவந்தவர். அவரது பேச்சும் செயற்பாடும் யாரையும் நோகடித்த தாக நாம் இதுவரை கேள்விப்பட்ட தில்லை. நிரந்தரமான அமைதியும் புன்னகையும் அவரிடம் இருந்தன. "ஒரு சைக்கிளில் கடமைக்குச் சென்ற கல்வியதிகாரியென்றால் அது நமது றாபிக்தான்” என்று நண்பர் ஒருவர் சொன்னபோது மனசு வலித்தது.
யாத்ரா 22
 
 
 

II 9
அஜமிலின் அஞ்சறைப் பெட்டி
கல்லு!
வங்க தேசத்தில் இந்துக்களைத் தாக்கிய முசுலீம் மதவெறியர்களை எதிர்த்து லஜ்ஜா" (அவமானம்) என்ற நாவலை எழுதினார் தஸ்லிமா நஸ்ரீன். அதனால் மதவாதிகள் அவருக்கு மரணதண்டனை அறிவித்து நாட்டை விட்டு விரட்டி னாலும் தஸ்லிமா தனது போராட்டத்தைக் கைவிடவில்லை. "பம்பாய்க் கலவரத்துக்குக் காரணம் பால் தாக்கரேதான் என்று பத்திரிகைகளும், நீதிமன்றமும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன. ஆனால், பம்பாய்க் கலவரம் நடந்த புழுதி மறைவதற்குள் பம்பாய் திரைப்படத்தின்மூலம் வரலாற்றை மாற்றி, முசுலீம்கள்தான் காரணம் என்று கதை சொல்லி, பால் தாக்கரேவிடம் ஆசியும், அனுமதியும் வாங்கினார் மணிரத்தினம். மாநில, தேசிய விருதுகள், த.மு.எ.ச. உள்ளிட்ட மதச்சார்பற்ற அறிஞர்களின் பாராட்டு, தொலைக்காட்சி களில் 3 மாதத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பு என பம்பாய்' படத்துக்குக் கிடைத்த சீராட்டும், பாராட்டும் பட்டியலிட்டு மாளாது. வங்கதேசம் இசுலாமிய நாடு என்றாலும் ஒரு தஸ்லிமா நஸ்ரீனுக்காக அந்நாடு பெருமைப்பட முடியும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டாலும் ஒரு மணிரத்தினத்துக்காக நாம் வெட்கப்படவே இயலும்.
- வினவு இணையத்தளம்
முள்ளு!
'ஒரு இனத்தையோ மொழியையோ அடிமைப்படுத்தி வேறு இனமோ மொழியோ சுபீட்சம் பெற முடியாது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு ஜனநாயகத்தீர்வு காணப்படல்வேண்டும். அப்பொழுதுதான் இலங்கை யில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்.'
'ஒரு தமிழ்ப்பெண்ணை ஒரு சிங்கள ஆடவர் திருமணம் முடித்தால் அல்லது ஒரு சிங்களவரைத் தமிழ்ப்பெண் மணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறந்துவிடும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் நான் அப்படிச்சொல்ல மாட்டேன். அவ்விதம் திருமணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறக்காது, பிள்ளைதான் பிறக்கும்."
- பண்டிதர் ரத்னவண்ஸ் தேரோ
சொல்லமறந்த கதைகள் -O8 – காவி உடைக்குள் ஒரு காவியம்
- லெ. முருகபூபதி
ULJIT ġEJT 29

Page 62
120
லொள்ளு!
காதல் என்பது மழை மாதிரி. நனையும்போது சந்தோஷம். நனைந்த பிறகு ஜலதோஷம் -
காதல் என்பது பனை மரம்போல. ஏறினா நுங்கு விழுந்தாச் சங்கு
காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, காகம் தூக்கிக் கொண்டு போயிடும். நட்பு என்பது ஆயா மாதிரி. எவனும் தூக்கமாட்டான்!
பெண்ணே நீ மெளன விரதமெனில் கண்களை மூடிக் கொள். உன் உதடுகளை விடக் கண்கள்தாம் அதிகம் பேசுகின்றன.
மும்தாஜ் ஞாபகமா ஷாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டினாரு முட்டாப் பய. நானாயிருந்தா அவ தங்கச்சியக் கட்டியிருப்பேன்.
மல்லு! "ஹலோ. ஹலோ.
எவ்ரிதிங் அண்டர் கொண்ட்ரோல் சேர். ஆமா சேர். நாங்க எல்லாரும் டொப் லெவல்லதான் இருக்கோம் சேர்."
சொல்லு!
எமது மூதாதையர்கள் தமிழைத் தாய் மொழியாக வரித்துக் கொண்டது அவர்கள் செய்த மகா தவறு என்பதுதான் எனது அபிப்பிராயமாகும். முஸ்லிம்கள் தமிழ் மொழிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் அதனை அங்கீகரிப்பதில்லை. எத்தனையோ அறபுச் சொற்கள் தமிழ் மொழியில் அவை தமிழ்ச் சொற்களென நினைத்துப் பயன்படுத்தப்படுகின்றன.
- கவிஞர் ஏ. இக்பால்
இச்சஞ்சிகை இல 37, பூீ சித்தார்த்த மாவத்தை, மாபோளை, வத்தளை என்ற முகவரியைச் சேர்ந்த அஷ்ரஃப் சிஹாப்தீன் என்பவரால் கொழும்பு - 15, 20/4, மாதம்பிட்டிய வீதி என்ற முகவரியிலுள்ள “டெலன்ட் பிரின்டெக்” அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 
 
 

அஷ்ரஃப் சிஹாப்தீனின் “யாத்ரா" ஒரு புதுப் பொலிவுடன் தனது இரண்டாவது வருகையை ஆரம்பித்துள்ளது.
கவிதைகளுக்கான காலாண்டிதழ் என்னும் அடையாளத்துடன் இரண்டாயிரமாம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பமான இதழ் யாத்ரா Poetry Journal என்றே பொறித்துக் கொண்டு வந்தாலும் கவிதைகளுடன் இலக்கியத்தையும் கலந்து தந்த இதழ் இது.
யாத்ரா என்ற பெயரிலேயே ஒரு கவிதை மனம் இருப்பதைப் போலவே அதில் பங்கு கொண்ட, படைப்புகள் தந்த அனைவரிலும் ஓர் இலக்கிய மணம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு பழைய இதழை வேண்டுமானாலும் கையிலெடுத்து வாசித்துக் களிக்க, சிந்திக்க - திகைப்புறச் செய்கின்ற அதன் தன்மை விசேஷமானது, முக்கியமானது.
மு.பொ, சு.வில்வரத்தினம், அல் அஸ்சிமத், ஜின்னாஹற், ஷம்ஸ், சோலைக்கிளி, சிவசேகரம், ஓட்டமாவடி அறபாத், இஸ்மாயில், பண்ணாமத்துக் கவிராயர், சிதம்பரப்பிள்ளை சிவகுமார், பஹிமா ஜஹான், அனார், அமீர் அலி, நாச்சியாதீவு பர்வீன், எஸ்.நளிம், முரீதர் பிச்சையப்பா, ஸதக்கா, அஷ்ரஃப் சிஹாப்தீன் இன்னும் இன்னும் எத்தனை படைப்பாளர் அணிவகுப்பு யாத்ராவின் யாத்திரையுடன்.
இடையில் தடைப்பட்டுவிட்டயாத்ராவின் மீள் வருகை ஒரு உத்வேகத்துடன் 2012 ஜனவரி - மார்ச்சில் ஆரம்பித்து ஏப்ரல் - ஜூன் என்று தொடர்ந்து புதுப் பொலிவுடன் இலக்கிய முகம் காட்டுகின்றது.
இதழ் - 20, இதழ் - 21 இரண்டு காலாண்டிதழ்களும் முன்னை விடவும் காத்திரமாகவும் கனதியாகவும் கணிப்புடனும் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. அலை, களம், மூன்றாவது மனிதன் என்று நெஞ்சில் நிலைத்தளத்தனையோ இதழ்கள் தடைப்பட்டுத் தடைப்பட்டு மீள்வருகை செய்தவைதான். ஈழத்து இதழியல் வரலாற்றில் கவிதைகளுக்கான இதழ்களுக்கென்று ஒரு தனித்துவமான இடம் ஒன்று உண்டு, யாத்ரா உட்பட.
கவிதைக்கான இதழ் என்பதிலிருந்து “கலை, இலக்கிய இதழ்" என்ற பெருவெளி நோக்குடன் மலர்ந்திருக்கும் 20ஆம் 21ஆவதுமான இதழ்கள் இலக்கியக் கனதி மிகக் கொண்டவையாக மிளிர்கின்றன.
வாசிக்கவும் பாதுகாத்து வைத்திருக்கவும் வேண்டிய இதழ் யாத்ரா!
தெளிவத்தை ஜோஸப (இலக்கியத் தகவல்கள் - வீரகேசரி - சங்கமம் - செப்டம்பர் 8, 2012
22 யாத்ரா لخير

Page 63
*。 ܕ ܪ
Salman Trading No. 229-1/14, Santhosh Plaza,
Main Street, Colombo 11.
O11 2394 512, O779OΟ 1828
Factory Outlet No: 105-E, King Street,
Matale.
Ο66 2223 4Ο6, O77 666 1336
E-mail: reshmaetiQyahoo.com
 
 
 

Zoée caoto casto sité
Like Us On facebook 口总、
facebook.com/reshma.designer.jewellery
Website: www.reshmalk.com