கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேம்படி ஒரு நூற்றாண்டு வரலாறு 1988

Page 1


Page 2
Neli KaraVE Te: O2 || 2
 

CO N^) CN NO ÇO 刀
·

Page 3


Page 4


Page 5
ஈழத்துக்கவி g.6egយខ័bar g.651លrb எம்.கே.முருகானந்தன் எல்.வளியீம் அக்ரம் 6យfiយ នgEar
63.61DT35ajJTse குற8ஜீபன் éഖണ്ഡങ്ങങ്ങ് ജൂൺ நெடுந்தீவு செந்தூர் வதிரி சி.ரவீந்திரன் இ.ஜீவகாருண்யன் செ.குணரத்தினம் வெற்றி, துஷ்யந்தன் ഖൺങ്ങഖ ധ്രുp.e,81pങ്ങ് சித்திரா சின்னராஜன் மன்னூரான் ஷிஹார் (31 D1 pair 356)
கமல சுதர்சன் JóleoTaöT கே.எம்.செல்வதாஸ் செல்லக்குட்டி கணேசன் (335.3, 1j Tajib
வே.ஐ.வரதராஜன் ໒9186um1ງ நாச்சியாதீவு பர்வீன் அல்வாயூர்.சி.சிவநேசன் ஆரையூர் தாமரை
முருகானந்தன் ல்லைத்தில்யன்
திக்குெ ଗଅ5ଅଶop]
அருள் தந்தை 6
35。3
ෆිෆි.ර
(3
தா
ඕ:
στιν.
தேவ
5600.
éu JT6856ta
சுதர்1 கார்த்திக
é
இர.ச
ලීෂී.6
 
 
 
 
 
 
 
 

&Ofuj Tajir ருகபூபதி T&T 63-35Jajr வகுமாரன் .நிசார்
JGoa D&D 351DTGo
JGU 60ADT60III இராசேந்திரம் ஸ்ரலின்
11-5 Tg565 obÎ.61625)ï. jந்தவை Lз пијаоf.
5uЈЈл8ғ6јї Tib... 1 pajjrassir பமுகுந்தன் மகேஸ்வரன்
Jrf) &#l6JJ1ĴOJ 8578youb
Dupas Ty Tagajr 5ாயினி சுபேஷ் ஆனந்தி ந்திரசேகரன் ாஸ்.சுதாகர் 56OT1D6 of
முரளிதரன் ர்மதேவன் la Das Gegu T
ானல்கள்
3ணசலிங்கன்
வரதராஜன்
(31.jpg|Taffluff 31 JT.683 up Tay
ந.இரவீந்திரன்
3.6 uJ&JT&T célairgupa of ຫຼ1bL ຫລບຫນ້ນມີຫມaoມີແມນ່ມີ
af).Jéupato அநாதரட்சகன் கனகசபாபதி நாகேஸ்வரன் கே.எஸ்.சிவகுமாரன் கெகிறாவ எ0°லைஹா அருட் திரு தமிழ்நேசன் அபூர்வன் 6JUTýrflují 63.6ujTa5JT3-T புலோலியூர் வேல்.நந்தகுமார் உடப்பூர் வீர சொக்கன்
திரவியம் சர்வேஸ்வரன் அந்தனி ஜீவா கே.ஜி.மகாதேவா வெற்றி.துஷ்யந்தன்
த.அஐந்தகுமார் லெனின் மதிவானன் இ.இராஜேஸ்கண்ணன்

Page 6
ர்த்திகை இதழ் - 50
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துவஜ்யந்தன்
பதிப்பாசிரியர்
கலாநிதி கு.கலாம6Dரி
தொடர்புகளுக்கு : ආඛ්‍යාඛ්‍ය ඌló5||5 சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய்
இலங்கை,
ஆலோசகள் குழு:
திரு.தெனியான்
திரு.கி.நடராஜா
லதாலைபேசி 0775991949 0212262225
E-mail: jeevanathy (@yahoo.com
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan
Commercial Bank Nelliady A/C - 810802 1808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக் களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர்
ஜீவநதி
அன்பான ଚୋ)
'ള് இதழைச் 5 சென்ற வரு கு. சினி ன. அனர் மைய உங்களைச் ஜீவநதியின் தரும் ஊக் காட்டும் அ நான் அறிே எண் நன்றிக
(LD9 வெளிவந்த இதழாக ெ பூர்த்தி செய கொணர்டு வ ஒரு நீண்ட ஈழத்தில் நீ சஞ்சிகைக துள்ளது ( "ஜீவநதியில் LILLQuum) LIG தாயினும், ச்
இந் அடங்குகின் பார்க்கிறே6 பெ சிறு கவி
 
 
 

ஜீவந
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை வமாண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
உள்ளம் உவகையுற.
IT9F9SŤ95G36YT. நதியின் இலக்கியப் பயணத்தில், 50ஆவது சிறப்புமலராக வெளியிடும் இவ்வேளையில், நடத்துக்கான(2011) சிறந்த சஞ்சிகைக்கான ப் பபாரதி அறக் கட்டளை விருதினை சில பெற்றுக் கொணர் ட உவகையுடனர் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேனர்.
தொடர் வருகைக்கு வாசகர்களாகிய நீங்கள் கமும் என்மீதும், "ஜீவநதி மீதும் நீங்கள் புண்புமே அடிப்படைக்காரணிகள் என்பதை வன். அதற்காக வாசகர்கள் அனைவருக்கும்
6T.
ல இருவருடங்களில் இருமாத இதழாக ஜீவநதி மூன்றாவது ஆணர்டிலிருந்து மாத நாடர்ந்து வெளிவந்து, ஐந்து ஆண்டுகளைப் து 50 ஆவது இதழை சிறப்பு மலராக வெளிக் ருவதென்பது ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் பயணம் தான். இந்நீண்ட பயணத்தில், ணர்டகாலமாக வெளிவந்து கொணர்டிருக்கும் ள் சாதிக்காதவற்றை 'ஜீவநதி சாதித் ானக் கூறுவது தற்புகழ்ச்சியினாலன்று. ர் இலக்கியப் பயணத்தின் சிறப்பம்சங்களை த்ெதிப் பார்ப்பது இங்கு பொருத்தமற்ற லவற்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
த 50 இதழ்களுள் வெவ்வேறு சிறப்பிதழ்கள் 1றன என்பதை மலைப்புடன் நினைத்துப் i.
ணர்ணியச்சிறப்பிதழ் கதைச் சிறப்பிதழ் தைச் சிறப்பிதழ்
இதழ் 50

Page 7
O
2011ம் ஆணர்டின் சர்வதேச எழுத்தாள உளவியற் சிறப்பிதழ் இளம் எழுத்தாளர் சிறப்பிதழ் கே.எஸ்.சிவகுமாரனி மணிவிழாச் சிறப் அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் கனடாச்சிறப்பிதழ்
ஜீவநதி சஞ்சிகை வெளியீட்டோடுப
இதுவரை மூன்று சிறுகதைத்தொகுதிகளை கட்டுரைத்தொகுப்பு நூல்களையும், G315 ffig சித்திரங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளோம்
(960)GTU தலைமுறையைச் சேர்ந்த அளித்தும் வருவதில் ஜீவநதி என்றும் மு குறிப்பிட்டாகத்தான் வேணர்டும். ஜிவநதியின அதிகமான படைப்பாளிகளில் பலர் இன்று நூ
இளைய தலைமுறையினருக்கு ஐ அதேவேளை மூத்த படைப்பாளிகளுக்கும் படைப்புக்களைப் பெற்று ஜீவநதியில் இடம்ெ குழுவாத நிலையைக்கடந்து பல்வேறு மூத் புலம்பெயர் படைப்பாளிகளும் ஜீவநதியில் எழு
ஜீவநதியின் வாழ்வியலில், ஜீவநதிக்கு
9 2010ம் ஆணர்டின் சிறந்த சிற்றிதழுக்க
இனியமணா இலக்கிய விருது'
* 2011ம் ஆணர்டின் சிறந்த சஞ்சிகைக்க
ஜீவநதி அடைந்து கொணர்டிருக்கும் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடவி குடும்பத்தினர், தெணியான் சேர், கி.நடராஜா ( த.கலாமணி என இப்பட்டியல் நீளும்.
ஈழத்து இலக்கியச் சஞ்சிகை வரல களையும் எதிர் நீச்சல்களையும் கூட பாட பசளையாகவும் உரமாகவும் மாற்றி விடுகின்ே செலுத்திவருகின்றோம்.
ஜீவநதிக்கென எதிர்காலத் திட்டங்க கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், ஆய்வு பதிப்புச் செய்தல் போன்றன அவற்றுட் சில, பொருத்தமுடைத்தன்று.
ஜூவநதியினர் 50 ஆவது சிறப்பி வரவேற்கின்றோம். வாசகர்களுக்கு எமது வாழ
ஜீவநதி
 
 
 
 
 
 

ர் மாநாட்டுச்சிறப்பிதழ்
பிதழ்
பட்டும் நின்று விடாது நூல் பதிப்பு முயற்சிகளாக பும், ஏழு கவிதைத் தொகுப்புக்களையும், நான்கு ாணல் தொகுப்பு நூல் ஒன்றையும், உரைச் பும், வாழ்பனுபவ குறிப்பு நூல் ஒன்றையும்
படைப்பாளிகளை அறிமுகம் செய்தும் ஊக்கம் முன்னணியில் நிற்கின்றது என்பதையும் இங்கு மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இருபதிற்கும் ல் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.
ரீவநதியில் 'களம் அமைத்துக் கொடுக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களிடம் இருந்து பறச் செய்வதில் அதிக கவனம் எடுத்துள்ளோம். த படைப்பாளிகளும், முஸ்லிம் படைப்பாளிகளும் முதிவருகிறார்கள்.
கிடைத்த இருவிருதுகளும் பெறுமதியானவை;
ாக வழங்கப்பட்ட உலக சிற்றிதழ்ச் சங்கத்தின் -
ான கு.சின்னப்ப பாரதிஅறக்கட்டளை விருது'
ம் வெற்றிகளுக்குப் பின்னால் பலர் பக்கபலமாக லலை. வாசகர்கள், எழுத்தாளர்கள், எனது சேர், அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின், அப்பா
)ாற்றில் பல்வேறு சஞ்சிகைளினதும் சாதனை மாகக் கொணர்டு ஜீவநதியின் வளர்ச்சிக்கான றாம். ஜீவநதியின் வடிவமைப்பில் அதிக கவனம்
ள் பல உணர்டு ஜீவநதி நூலகம் ஆரம்பித்தல், அரங்குகள் ஏற்பாடு செய்தல், அரிய நூல்களைப் இன்னும் எவற்றைச் சாதிப்போம் என்று கூறுவது
தழ் பற்றிய வாசகர்களினர் கருத்துக்களை 2த்துக்கள்!
பிரதம ஆசிரியர் க.பரணிதரன்
3 இதழ் 50

Page 8
மேலைப்புலத்துச் சமூகவியல் மற்றும் கலை இலக்கிய ஆய்வுகளில் முன்வைக்கப்படும் ஒரு சிறப்பார்ந்த கருத்தாக்கமாகப் "பிந்திய நவீனப்பாடு (LATE MODERNTY)" அமைந்துள்ளது. அக்கருத் 5T35lb (56160TGig01556.55ggub (POST MODERNISM) வேறுபட்டது.
உலகளாவிய முறையில் வளர்ச்சி பெற்று வரும் பின்னைய முதலாளிய நிலைக்கும் அதன் வழியாகத் தூண்டப்பட்டு வரும் பன்மை நுகர்ச்சிப் பண்பாட்டுக்கும் துணை நிற்கும் ஒரு கருத்தியலாகப் பின்னவீனத்துவம் அமைந்துள்ளது. பெருங்கோட்பாடு களையும் பெருங்கதையாடல்களையும் நிராகரித்தல் அதன் அடிப்படைக் கருத்தாக அமைகின்றது.
பிந்திய நவீனப்பாடு என்ற கருத்தியலானது சமகாலத்தைய உலகினை வேறொரு கண்ணோட்டத்தில் நோக்குகின்றது. உலகின் இன்றைய பொருளாதார சமூக நிலையும் அரசியல் வாழ்க்கையும் நவீன சமூகத்தில் அடிப்படை மாற்றங்களை உருவாக்கிக் கொள்ளாத நவீனத்துவம் தொடர்ச்சியாக நீண்டு செல்வதை அது விளக்குகின்றது.
அதாவது, முன்னைய கட்டமைப்பு அடியோடு மாற்றம் பெறவில்லை. முதலாளியம், வர்க்க அமைப்பு, கைத்தொழில்மயமாக்கல், அரசுகளின் இராணுவ மயப்பாடு, அரச வன்செயல் முதலியவை தொடர்ந்து நீட்சி கொள்ளல் நவீனப்பாட்டின் பிந்திய தொடர்ச்சி யாகக் கொள்ளப்படுகின்றது. சமகாலத்தைய நிலவரங் களை விளக்குதலும் விபரித்தலும் பிந்திய நவீனப்பாடு மற்றும் பின்னவீனத்துவம் ஆகியவற்றின் அறிவு நோக்கங்களாகவுள்ளன.
உலகின் சிந்தனை உருவாக்கத்திலும் நடத்தைகளை இயக்குவதிலும் ஊடகங்களின் வகிபாகம் சிறப்பாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது. மனித நடத்தைகள் நிலைத்தவை அல்ல என்பதும் மாற்றமடைந்து கொண்டிருக்கும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.
ஜீவநதி
 

豹 அவ்வாறு உறுதி குலைந்து அசைவு நிலையில் உள்ள நடத்தைகளை இழுத்துச் செல்வதில் ஊடகங்களின் படிமங்கள் எத்தகைய செல்வாக்குகளை ஏற்படுத்து கின்றன என்பது பிந்திய நவீனப்பாட்டின் நோக்கிலும் பின்னவீனத்துவ நோக்கிலும் ஆராயப்படுகின்றன.
நவீன கைத்தொழில் வளர்ச்சியும் நவீன ஊடகக் கைத்தொழிலும் வன்போக்குடையதாக மனித மனங்களை மாற்றி வருகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. அதன் தொடர்பில் "ஊடக 656061T6.5GT (MEDIAEFFECTS)" GT6TD Liguelujaj, துறை வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட உலகச் சமூக நிலவரங்களை அடியொற்றிப் "பெரும் திரள் (MASS) சமூகக் கோட்பாடு" உருவாக்கப்பட்டது. அக்கோட்பாடு பொது மக்களை எதிர் நிலையாகத் தரிசித்துள்ளது. அதாவது, பொது மக்கள் தாழ்ந்த பணி பாட்டுக் கோலமுடையவர்கள் என்பதும் தனித்துவம் அற்றவர்கள் மற்றும் அறிவு நிலையிலே தாழ்ந்தவர்கள் என்பதும் அதன் கருத்தாக அமைந்தது.
தீவிர கைத்தொழில்மயப்பாடு, பெருநகரங் களின் வளர்ச்சி பன்முகமாகிய சுரண்டலுக்கு உள்ளாகி அன்னியமாகிய மனித வாழ்க்கை முதலியவற்றின் இயங்கியலை மார்க்சியம் தவிர்ந்த ஏனைய கோட் பாடுகள் மேலோட்டமாகவே அணுகியும் விபரித்தும் வருகின்றன.
தனிமைப்பட்டுத் திரண் டெழுந்த தனி மனிதர்களை உள்ளடக்கிய தொகுதியாகவே பெரும் திரள் சமூகக் கோட்பாடு புதிய வளர்ச்சிகளைக் கண்டறிந்தது. அக்கருத்தின் நீட்சிகள் பின்வந்த கோட்பாடுகளிலே பல நிலைகளிலே வெளிப்பாடுகள் கொண்டன. நவீனத்துவத்தின் வளர்ச்சிகள் சமூகத்தில் எதிர் நடத்தைகளை உருவாக்கின, விலகிய நடத்தைகள் வெளிப்படையாகக் காட்சியெடுத்தன. பொது மக்களுக்கும் பணியாட்சிக்குமிடையேயுள்ள நெருக்கு வாரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. குற்றச் செயல்களின் பெருக்கத்தைச் சிறிய சிறிய சீர்திருத்தங்
இதழ் 50
U6
O
866)
蠶
鐵

Page 9
T6া
ীি6ঠো ႕g| றும்
601 ரித T6
L5
ட்ட
ரும்
கத ந்த தும்
(86)
ரங் 厅ö
566t 5ITL"
தும்
3)Այ
560T.
றச் தங்
50
களாற்கட்டுப்படுத்த முடியாமலிருந்தது. அந்நிலையில் பின்னவீனத்துவம் அடிப்படையான மாற்றங்களை முன்னெடுக்கும் பெருங்கோட்பாட்டினை நிராகரித்தமை ஊன்றிய அவதானிப்புக்குரியது.
பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்ட நடத்தை உளவியலின் வளர்ச்சியானது மனித இயக்கங் களைக் "கட்டுப்படுத்திய சூழலில் ஆராயத் தொடங்கியது. அந்த வகையில் ஊடக விளைவுகளும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவர்கள் மேற்கொண்ட வகை மாதிரியான பரிசோதனை ஒன்று வருமாறு:
சிறுவர்களிடத்துப் பலவகையான பொம்மைகள் கொடுக்கப்பட்டு விளையாட விடப்பட்டனர். சிறு நேரத்தின் பின்னர் அவர்களுக்கு வன்செயல் தொடர் பான காட்டுன் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொம்மை விளையாட்டு மீளத் தொடக்கிவிடப்பட்டது. அந்நிலையில் அவர்களின் செயற்பாடுகள் வன் செயல்களோடு இணைந்த விளையாட்டுக்களால் அமைந்தமை கண்டறியப்பட்டது. அந்த ஆய்வு சிறுவர்களின் நடத்தைகளை உருவாக்கும் g60) 60TU காரணிகளையும் பிற மாறிகளையும் கருத்திலே கொள்ளத் தவறியமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் படிமங்களுக்கு பல கருத்துக்களைப் பார்ப்போரும் கேட்போரும் கொள்வார்கள் என்ற அவதானிப்பைப் பின்னவீனத்துவம் முன் வைக்கின்றது. அதாவது ஊடகப் படிமங்களுக்குரிய பொருள் பன்மை நிலைப்பட்டது என்று குறிப்பிடப்படுகின்றது. அதே வேளை ஊடகங்களின் புதிய படிமங்களை நவீனத்து வத்தின் நீட்சியாகப் பிந்திய நவீனத்துவம் கருதுகின்றது.
மேற்குறித்த இரண்டு கோட்பாடுகளுக்கு மிடையே சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. அவை நுண்ணிதான சிதறல்களையும், துணிக்கை களையும் தவறி வீழ்ந்தவற்றையும் ஆழ்ந்து நோக்கு கின்ற வேளை அவற்றை உருவாக்கும் அடிப்படை நிலவரங்களையும் அடிப் படை விசைகளையும் கண்டறியத் தவறி விடுகின்றன. அதேவேளை அடிப்படை அமைப்பியலை மாற்றியமைப் பதிலும் கவனம் செலுத்தவில்லை, சமூகத்தின் மீதான நிராகரிப்புக் களையும் அவை ஆழ்ந்து நோக்கவில்லை.
சமகாலத்தைய கோளமயப் பண்பாடு மேலாதிக்க நிலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் அது சராசரியான மக்களின் வாழ்க்கைக்கும் தரிசனங் களுக்கு அன்னியமாகி விடுகின்றது. சமூகத்தின் அடிப்படை நிலவரங்களை நோக்க விடாது கவனத்தை திசை திருப்பும் பண்பாட்டு நடவடிக்கைகளும் கலையாக்கங்களும் மக்களுக்கு அன்னியமாகியவையாய் இருக்கின்றன.
பண்பாட்டு நிறுவனங்களினாலும், ஊடகங் களினாலும், கல்வி முறைமையாலும், கலையாக்க முயற்சிகளினாலும் மேலாதிக்கமானது மக்களை நடப்பு நிலையறியாது திசை நிறுத்திய வண்ணமுள்ளது.
ஜீவநதி
 

அவ்வாறான செயற்பாடுகளைப் பின்னவீனத்துவமும் பிந்திய நவீனப்பாட்டு அணுகுமுற்ையும் உற்றறிந்து கொள்ளத் தவறி விடுகின்றன.
அனுபவங்களின் சிதைவும், மனங்களின் பன்மை இயல்புகளும் நுகர்ச்சி வகைகளின் மீப் பெருக்கமும் என்ற நிலைகள் புறவயமான விதிகளாலும், விஞ்ஞானத் துலுக்கங்களாலும் அணுகப்பட முடியாதவை என்பதை அந்தக் கருத்து வடிவங்கள் வலியுறுத்துகின்றன. புறநிலைவாயிலான சிந்தனைகள் அபத்தமானவை என்ற நம்பிக்கை வரட்சியில் அவை காலூன்றிநிற்கின்றன.
அரசியலினதும் பொருளியலினதும், கருத்தி யலினதும் ஒன்றிணைந்த ஊடாட்டங்களின் வழியான மேலாதிக்க நிலவரத்தை வெளிப்படுத்தும் புறநிலைத் தருக் கத் தை மார்க் சியத்துக் குப் புறம் பான கோட்பாடுகள் ஏற்றுக் கொள்வதில்லை.
புதிய சமூக நிலவரங்களைத் தனித்துவம் மிக்க ஒரு தோற்றப்பாடாகப் பின்னவீனத்துவம் கருது கின்றது. ஆனால் பிந்திய நவீனத்துவம் அதனைத் தனித்துவம் மிக்க தோற்றப்பாடாகக் கருதவில்லை. புதிய கைத்தொழில் முறைமையினதும் கண்டு பிடிப்புக் களினதும் நீட்சியாகவே பிந்திய நவீனத்துவம் கருது கின்றது. இரண்டு அணுகுமுறைகளும் சமூக நிர்மாணத்தைத் தீர்மானிக்கின்ற அடியாதாரமான காரணிகளாகிய பொருளுற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுமுறை, சொத்துரிமை முதலியவற்றின் பால் கவனத்தைச் செலுத்தாது மேலமைந்த தோற்றப்பாடுகள் மீதும் உதிரியான சிதறல்கள் மீதும் அதீத கவனக் குவிப்பை ஏற்படுத்தியுள்ளன.
வர்க்க அடிப்படையில் சமூகம் அதிகார அடுக்கமைப்பைக் கொண்டுள்ள நடப்பியலையும் அவை கண்டு கொள்ளத் தவறி விடுகின்றன. சமூக இயல்பை தத்தமது நிலைகளில் நின்று அக்கோட்பாடு கள் விளக்கமுயலும் போது பல புதிய சொற்களை அறிமுகம் செய்துள்ளன. "பெருங்கதையாடல்" "கட்டுமான குலைப்பு", "வேற்றமைவு", "கருத்து வினைப்பாடு", "மொழி விளையாட்டு" முதலிய பல எண்ணக்கருக்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் அவலம் மிக்க சமூகநிலவரத்தை மாற்றி யமைக்கும் தர்க்கத்தை அக்கோட்பாடுகளினாலும் கருத்தமைவுகளினாலும் தந்து கொள்ள முடியவில்லை. பிந்திய நவீனப்பாடு சமூக நீட்சியைக் காட்டு கின்றது. அதேவேளை நிலையை மாற்றியமைக்கும் தர்க்கத்தை வலியுறத்தவில்லை. மேலும் பொல்லாமை கொண்ட சமூகத்தை மாற்றியமைக்கும் உபாயங் களைப் பின்னவீனத்துவம் கொண்டிருக்கவில்லை. இரண்டும் மட்டுப்பாடுகளைக் கொண்ட கருத்தாக்கங் களாகவேயுள்ளன. நிலவரங்களை விளக்குதல் மட்டும் முக்கியத்துவம் பெறுதல் இல்லை. அவற்றை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற வினாவுக்கு மீண்டும் செல்ல வேண்டியுள்ளது.
இதழ் 50

Page 10
தெணியான்
காக்கும் தெய்வங்கள்
நான் நல்லாச் சுணங்கிப் போன என்ற பரபரப்பு அவசரமாக வந்து கதிரையில் அமர்கிறேன். அருகில் இருந்தவரிடம் "ஐயர் வந்திட்டாரோ?" என விசாரிக்கின்றேன்.
“வந்திட்டார்” அவர் முகம் திருப்பவில்லை. சுருக்கமாகச் சொல்லுகிறார். பேச்சை வளர்க்க அவர் விரும்ப வில்லைப் போலும், நான் அவரை விளங்கிக் கொள்ளுகிறேன்.
வீட்டுக்கு வெளியே வீதியோரமாக வரிசை யாகக் கதிரைகள் பெருந்தொகையாகப் பலர் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
வீதியின் இரு பக்கங்களையும் ஒரு தடவை நோட்டமிடுகிறேன்.
அந்த வீதி நீண்டு வளைந்து திரும்பும் இடத்தில் ஐயரின் வடிவாகனம் நிற்கிறது. கறுத்த "கூட்" போட்டது.
பெரிய ஐயர் தான் வந்திருக்கிறார். முன் வண்டி பெருத்த கட்டை உருவம், தோள் வரை தொங்கும் கிறாப்புத்தலை, தடித்த பச்சை, சிவப்புக் கரைகள் போட்ட ஆந்திரா வேட்டி உடுத்தி, அதன் மேல் சுருக்கிக் கட்டிய ஆந்திராச் சால்வை. மார்பில் துலங்கும் தடித்த பூனூல், பளிச்செனத் தெரியும் வண்ணம் தண்ணீரில் குழைத்து நெற்றியிலும் உடலெங்கும் பூசிய திரிபுண்டரப் பூச்சு. அதன் மேல் நெற்றியில் பெரிய சந்தனத் திலகம். அதன் மீது அப்பிய குங்குமம். அவருக்கே இயல்பான மெல்லிய துள்ளல் நடை
ஐயர் எங்கோ ஒரு பெரிய ஆலய மகோற் சவத்துக்குப் பூசை பண்ணப் போய்க் கொண்டிருக் கின்றார் என்னும் மயக்கத்தைக் காணர் பவர் உள்ளங்களில் உருவாக்கும் தோற்றப் பொலிவு.
மரண வீட்டில் ஈமக் கிரியைகள் செய்வதற்கு ஐயர் வந்து கொண்டிருப்பார். அவர் பின்னே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எடுபிடி ஒருவர் வருவார்.
ஜீவநதி -

அபரக் கிரியைக்குத் தேவையான சகல சம்பத்துக்களும் ஒரு உரப்பையில் போட்டு எடுபிடி கையில் தூக்கி வருவார். கிரியை செய்யும் சமயம் ஐயர் இருப்பதற்கு அவசியம் தேவையான "குண்டிப் பலகை"யும் எடுபிடி கையோடு கொண்டு வருவார்.
இவர் முதல் தரமான ஐயர். இவரைக் குறைந்த கூலிக்கு அமர்த்த இயலாது. ஐயரைக் கொண்டு மரண வீட்டாரின் தரத்தை அளந்து விடலாம்.
வசதி குறைந்தவர்களுக்கு இன்னோர் ஐயர் இருக்கிறார். -
மெலிந்த கறுத்த ஐயர். பூனூலைக் கழற்றி விட்டால் அவரை ஓர் அந்தணர் என்று எவரும் சொல்ல மாட்டார்கள், உரப்பை ஒன்றைச் சயிக்கிளின் பின்னே கட்டிக் கொண்டு அவர் வந்து சேருவார்.
எங்கள் ஊர் மரணச் சடங்குகளில் இப்ப பறை இல்லை. “பான்டு"மில்லை.
சமய, சடங்காசாரங்கள் முக்கியம். மரண வீட்டில் ஐயர் இல்லாமல் அது எப்படி
நடக்கும்!
ஒவ்வோர் வீட்டாரும் ஐயரைக் கொண்டு வந்தாக வேண்டும்.
இன்று சைவாசாரசீலர் சிவகடாட்சத்தின் தாயார் காலமாகி விட்டார்.
மரணம் ஒன்று ஊரில் சம்பவித்து விட்டால் பிரேதம் சுடுகாடு போகும் வரை வாயில் பச்சைத் தண்ணியும் ஊத்த மாட்டார்களாம்.
இப்ப என்ன நடக்கிறது! சுடுகாட்டுக்குள் நின்று சோடாப் போத்தல் மூடி திறந்து தருகிறார்கள்.
அப்படி வெகுகடான காலம்! மனிதர்கள் பட்டினி கிடக்கலாம். ஆனால் ஊர் நடுவே எழுந்தருளி இருக்கும் ஐங்கரன் பசி இருக்க சிவகடாட்சம் பார்த்திருக்க மாட்டார். அவர் இதயம்
இதழ் 50

Page 11
ஒளும்
ற்கு பிடி
றந்த
T600T
ற்றி 6b6)
னே
றை
ILL2
ண்டு
நின்
சத்
தல்
U Lib
50
அந்த வேதனையில் துடியாய்துடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரவு சிவகடாட்சத்தின் தாயானவ6 35TGOLOIT60TTGT,
ஆனைமுகத்தானுக்கு மாலை நேரப் படை லுடன் பூசை முடிந்த பிறகு இப்படி நிகழ்ந்தது அவ6 அற்புதம் என்று சொல்லிச்சொல்லி கடாட்சம் ை எடுத்தார்.
ஊரில் பிரேதம் கிடக்கப் பேழை வயிற்றோ6 பசியாற மாட்டான்.
இன்று காலை லம்போதரன் பட்டினி தான். மதிய காலம் அந்தப் பானை வயிற்றோன் ப தீர்த்து வைக்க வேண்டும். பூசை நடந்தாக வேண்டும்.
எங்கள் கடவுள்களுள் ஆகாரப் பிரியன் இந் ஆறுமுகன் அண்ணன். அதால் தான் இத்தனை பெரிய GJU ÍgDJ.
அறுகம்புல்லில் அமர்பவன்; பட்டினி இருக்க கூடாதென எண் ணித் தவியாய்த் தவிக்கிறார் சிவகடாட்சம்,
முற்பகல் பதினொரு மணிக்குப் பிரேத சுடுகாடு போய்ச் சேர்ந்து விட்டால் மதிய நேரட பெருவயிறன் பசி போக்கலாம்.
ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி அய6 கிராமங்களுக்குச் சென்று மரணச் செய்தி அறிவித்து விட்டார்கள்.
ஊரவன் நான், தாமதமாகிப் போனேன் என் அந்தரிப்பில் ஓடோடி வந்தேன்.
ஆனால், ஐயர் கிரியைகள் இன்னுப ஆரம்பிக்கவில்லை.
காரணம் என்னவாக இருக்கும்? வீட்டு முற்றத்தில் தகரப் பந்தல் ஒன்று போட்டிருக்கிறார்கள்.
நான் மெல்ல எழுந்து உள்ளே வருகின்றேன். பந்தலின் கீழ் கதிரைகளில் பலர் அமர்ந்திரு கிறார்கள்.
நான் ஒரு கதிரையில் உட்காருகின்றேன். உள்ளே வந்து சிறிது நேரத்தின் பின்னர் அந்த சூழ்நிலையை விளங்கிக் கொள்ளுகின்றேன்.
ஐயர் கிரியைகளை இன்னும் ஆரம்பிக்காது இருப்பதற்கான காரணம் புரிகிறது.
சிவகடாட்சம் தாயானவளுக்குச் செய்ய வேண்டிய கொள்ளிக் கடன் செய்ய மறுத்து நிற்கிறார்.
ஊரிலுள்ள அறிவாளிகள் பார்த்துக் கொண்டு இருப்பார்களா! எங்கள் ஊருக்கு ஒரு மகத்துவம் உண்டு ஊர் மண்ணில் அறிவாளிகளாகவே அனை வரும் வந்து பிறக்கிறார்கள். இந்த அறிவாளிகள் சிலர் சிவகடாட் சத்தைத் தனித்தனியே அழைத்துப் பேசுகிறார்கள்.
நீண்ட நேரமாகப் பேசியும் சிக்கல் தீர்ந்த பாடாக இல்லை.
ஜீவநதி

சிவகடாட்சம் ஒரு சைவப்பழம், ஆசாரசீலர். திறந்த மேனியுடன் அவர் ஊருக்குள்ளே சுற்றி உலா வருவது மற்றவர் கண்களில் அந்தத் திருக்கோலம் படவேண்டும் என்பதற்காகத்தான். எப்பொழுதும் நீறணி நெற்றியராக விளங்குவார். "நீறில்லா நெற்றி பாழ்' என வாய் விட்டு இடையிடையே திருவாய் மலருவார். நீறில்லாத நெற்றியதைக் கண்டு விட்டால் சுடுகாடு என நெஞ்சில் சுடுவார். அவர் அவர் அனுஷ்டிப் பதற்குத் தினமும் ஏதொ ஒரு விரதம் இருந்து கொண்டி ருக்கும். தீட்டுத் துடக்கு ஆசௌசம் வெகுநுணுக்க மாகப் பார்த்து நடப்பார். மனைவி மாத விலக்கானால் மனைவி சமைத்த உணவு தான் உண்பதில்லை என்பார். எங்கள் ஊர் எப்பொழுதும் சைவ மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி என்று வாய்க்கு வாய் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்.
சிவகடாட்சம் பெற்றவர்களுக்கு அருமை பெருமையான ஒரே பிள்ளை. தகப்பனானவர் கஷ்டப் பட்டுக் கள்ளிறக்கி உழைத்து மகனைப் படிக்க வைத்தார். சிவகடாட்சம் கற்ற கல்விக்கு அரசாங்கத்தில் எழுது வினைஞர் பதவி கிடைத்தது அவர் அதிஷ்டம். கந்தோரில் வெளியில் அவரைப் பலரும் "சிவம்" என்றே அழைத்தார்கள். அது அவருக்கொரு தனிப் பெருமை. "பரம்பரைச் சைவர்களும் என்னட்டைத் தான் சமய விஷயங்களைக் கேட்டறிகிறார்கள்” என்று தனக்கொரு நற்சான்றுப் பத்திரம் ஊரில் வாசித்துக் காட்டுவார். ஐயர்மாரும் என்னிடம் வந்து சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வார்கள் என்றும் சொல்லிப் பெருமை கொள்வார்.
சிவகடாட்சம் எங்கள் ஊரில் மிக ஐஸ்வரிய மான பிரமுகராகி விட்டார்.
அவர் வீட்டு மரணச் சடங்கில் கலந்து கொள்வ தற்கு வந்து கூடி இருக்கும் பெரும் சனக்கூட்டத்தைப் பார்த்து அதை விளங்கிக் கொள்ளலாம்.
சிவத்தின் ஒரு மகன் சுவிசில்; மற்றவன் லண்டனில், மகள் கனடாவில்,
பிறகென்ன சிவகடாட்சத்தின் பவிசைச் சொல்லவா வேணும்!
இவர் தாயானவளுக்குக் கொள்ளிக் கடன் செய்ய மறுத்து நிற்கின்றார்.
தாயானவள் நடமாடித் திரிந்த காலத்தில் சில சமயங்களில் தம்பி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடுவா. வீட்டுப் படலை திறக்கும்போதே"பிள்ளை"எனக் குரல் கொடுப்பா,
"வாங்க மாமி." என தம்பி மகளின் அன்பான குரல் வரவேற்கும்.
மகள் அங்கு இல்லாத வேளைகளில், "வா. அக்காத்தை. வா." எனத் தம்பி உரிமையுடன் குரல் குடுப்பார்.
இதழ் 50

Page 12
இவ பொல்லை ஊன்றி ஊன்றி மெதுவாக மெதுவாக நடந்து உள்ளே வந்து சேருவாள்.
தம்பி குடும்பம் அன்றாடம் காட்சிகள், கூலி வேலை செய்து சமைத்து வாயில் போடுகின்ற குடும்பம். தாங்கள் ஆக்கின உணவில் தகப்பனுக்குக் கொடுப்பது போல, மாமிக்கும் முகம் கோணாமல் கொடுத்து மனநிறைவுடன் உண்பார்கள்.
சிவகடாட்சம் குடும்பம் தாயானவள் பற்றி அப்போது எதுவும் விசாரிப்பதில்லை.
"எங்கே, தாயை வீட்டில் காணன்?" என்று யாராவது விசாரிப்பார்கள்.
"தம்பியின்ரை சோட்டை வந்திட்டுது. போய் விட்டா, வருவா” என்பார் சிவகடாட்சம்,
மூன்று நான்கு தினங்கள் கழிந்து போகும்.
அதன் பிறகு தாயானவள் மெல்ல வீடு வந்து சேருவாள்.
இறந்தவர் இறந்து போக, இந்தத் தருணத்தில் சிவகடாட்சம் தனது பெருமைகளை ஊருக்குப் பறை சாற்றாமல் விட்டு விட முடியுமா?
அதற்குள் தான் ஒரு சிக்கல். இந்த ஆண்டு ஐங்கரன் ஆலய நிருவாக சபையில் மிகத் தந்திரமாகத் தன்னைப் பிரேரிக்கச் செய்து, மனேஜராகச் சிவகடாட்சம் வீற்றிருக்கிறார்.
ஆலயத்தில் பதினைந்தாம் திருவிழா தீர்த்தோற்சவம், சிவகடாட்சத்தின் குடிகோத்திர குடும்பக் குழுவைச் சேர்ந்தவர்கள் தீர்த்தத் திருவிழா உபயகாரர். இந்தத் தடவை தீர்த்தோற்சவத்தில் தர்ப்பை தரித்து,
ஜீவநதி 8
 

சங்கற்பம் செய்ய இருக்கிறார் மனேஜர் சிவகடாட்சம்.
ஆலய உற்சவ காலம் அணி மித்துக்
கொண்டிருக்கிறது.
அதற் கு மு னி னர் தாயான வளி ன அந்தியேஷ்டி முடிந்து போய் விடும்.
ஆனால், கொள்ளிக் கடன் செய்தவர் இந்த ஆண்டு ஆலயக் கடன்கள் செய்வது அபத்தம், குற்றம். ஆண்டுத் திவசம் முடிந்த பிறகே அதனைச் செய்யலாம்.
சிவகடாட்சத்துக்காக ஐங்கரனின் ஆலயக் காரியங்கள் அனைத்தையும் பின் போட முடியுமா?
சிவகடாட் சத்துக் கு ஒரே மார்க்கம் கொள்ளிக் கடன் செய்வதைத் தவிர்த்துக் கொள்வது தான்!
அங்கு வந்திருக்கும் பரமகுருவைக் நான் தற்செயலாகக் காண்கிறேன். அவர் ஒரு பக்கத்தில் ஒதுங்கிப்போய் இருக்கின்றார்.
பரமகுரு அயல் கிராமத்தைச் சேர்ந்தவர். நான் அவரைப் பார்ப்பதை அவரும் கண்டு கொண்டார்.
என்னை நோக்கி உதட்டுக்குள்ளே மெல்லிய சிரிப்பு.
அந்தச் சிரிப்பு ஏளனமா..? அல்லது.? எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பரமகுரு தாடி வளர்த்திருக்கிறார். அன்னை இறந்து இன்னும் ஒரு மாதகாலம் கழிந்துபோகவில்லை.
அன்னைக்கு அந்தியேஷ்டிக் கிரியைகள் செய்யும் வேளையில் வளர்த்த தாடியை மழித்துக் கொள்வார்.
பரமகுருவுக்கு உடன்பிறப்பாக ஒரேயொரு தங்கை,
அந்தத் தங்கை மீது வெகுபாசப் பிணைப் புள்ள அண்ணனாகவே அவர் வாழ்ந்து வந்தார்.
இருவருக்கும் மிக நெருக்கமாக இருந்த அந்த உறவு இடையில் முறிந்து போயிற்று.
அன்னை மரணப் படுக்கையில் கிடப்பதாகத் தங்கை ஆள் அனுப்பினாள்.
பரமகுரு தங்கை வீடு சென்று அன்னையைப் பார்த்து வந்தார்.
மறுநாள் விடிகாலையில் அன்னை மரணித்து விட்ட செய்தி அவருக்கு வந்து சேர்ந்தது.
பரமகுரு புறப்பட்டு அங்கு போனார். போகும்போது, மனத்தில் ஒரு தீர்மானத் துடனேயே போனார்.
அன்னைக்குரிய கொள்ளிக் கடனைத்தான் செய்தால் தங்கை வீட்டில் தங்கி இருக்க வேண்டும். காடாற்று, எட்டுச் செலவுக் கடமைகளைச் செய்ய வேண்டும். அந்தியேஷ்டி கிருயைகள் செய்ய வேண்டும். படையல்கள் கொள்ளிக்காரன் உண்ண
இதழ் 50

Page 13
வேண்டும். யாவையும் தவிர்த்துக் கொள்ள அவ விரும்பினார்.
கொள்ளிக் கடன் செய்வதற்கு மறுத்து வீட்டுக்கு வெளியே வீதியில் அமர்ந்து விட்டார்.
இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான "செத்த வீட்டுச் சாமான்கள் வாங்கி வருவதற்குச் சிலர் கிளம்பிட் போகிறார்கள்.
நான் நடக்கின்றவற்றை அவதானித்துச் கொண்டு வீதி ஒரத்தில் கிழித்துப் போட்ட பச்சைத் தென்னோலை மீது உட்கார்ந்திருக்கின்றேன். எனக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. மெல்ல எழுந்து பரமகுரு இருக்குமிடம் நாடி வருகின்றேன். அவர் முன்னே வந்து நின்று "அண்ணே. என மெல்லக் குரல்-கொடுக்கின்றேன்.
“என்ன தம்பி.?" கேட்டுக் கொண்டு அவர் எழுந்து வருகின்றார்.
அவர் முகத்தைக் குறிப்பாக ஒரு கணம் நோக்குகின்றேன். அன்னையை இழந்த புத்திரனின் சோகம் அவர் விழிகளில் தளும்பிநிற்கிறது.
"அண்ணே. உங்கடை அம்மாவுக்குப் பிறகு எப்ப கொள்ளி வைக்கப் போறியள்?" என மெல்ல வினவுகின்றேன்.
எனது கண்களைத் தீர்க்கமாகச் சில கணங்கள் நோக்குகின்றார். அவர் விழிகள் தேங்கி வடிகின்றன. அவர் பதறிக் கொண்டு நிற்கின்றார். அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு சந்தைச் சாமானுக்குப் போய்க் கொண்டிருக்கிறவர்கள் பக்கம் திரும்புகின்றார்.
"நான் தான் கொள்ளி வைக்கிறது. வேட்டி சால்வை வேண்டிக் கொண்டு வாருங்கோ" அவர் உரத்துக் குரல் கொடுக்கின்றார்.
இந்தப் பரமகுரு இப்ப என்னைப் பார்த்து ஏன் சிரிக்கின்றார்?
சிவகடாட்சம் பரமகுருவைச் சந்திக்கும் வேளைகளில் "காளிதாசன்" என நையாண்டியாக அழைப்பார்.
பரமகுரு வழிபடும் தெய்வம் காளி பரமகுருவின் பாட்டனுக்கு முற்பட்ட காலம் முதல் அவர்கள் குடும்பம் காளியை வழிபட்டு வருகிறது. வீட்டு அண்மையில் ஓங்கி வளர்ந்து விரிந்து பரந்த ஓர் ஆலமரம். அந்த மரத்தின் அடியில் ஒரு சூலத்தை நாட்டி வழிபாடு செய்து வருகிறார்கள்.
பரமகுரு வெள்ளி, செவ்வாயில் மச்சமாமிசம் உண்பதில்லை. மது அருந்துவதில்லை. மாலை வேளை தலையில் நீர் ஊற்றித் தோய்ந்து, அரையிற் கட்டிய ஈரத் துணியுடன் காளிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வார்.
வருடத்தில் ஒரு நாள் காளிக்கு மடை வைத்து வேள்வி
சேவற்கோழிகளுக்குப் பதிலாக, காளிக்குப்
ஜீவநதி

பேட்டுக் கோழிகள் நேர்த்தி செய்து கொண்டு வருவார்கள்.
ஆட்டுக்கடாக்கள் சிலவும் வந்து சேரும். ஆடு, கோழி கழுத்து வெட்டிப் பலி இடுவ தில்லை. பதிலாக, தலையில் மஞ்சள் கரைத்த நீர் ஊற்றுவார்கள்.
"வேடுவர் மாதிரி இப்பவும் நீங்கள் வேள்வி போடு கிறியள்” எனச் சிவகடாட்சம் நக்கலாகக் கூறுவார்.
ஆனால் எங்கள் ஊரில் குடும்பக் குழுக்கள் ஒவ்வொன்றும் வழிபாடு செய்யும் தெய்வங்கள் பல. வீட்டுக்கு அண்மையில் நிற்கும் ஒதிய மரம், பூவரச மரம், வேப்பமரம் என்பன வழிபடும் தலங்கள். வருடத்தில் ஒரு நாள் இறைச்சி, மீன், பிட்டுகள், மது வைத்துக் கும்பிடுவார்கள். பின்னர் நிறைவாக உண்டு களிப்பார்கள். இந்த உண்மை களைச் சிவகடாட்சம் வெளியில் செல்லாது மறைத்துக் கொள்ளுவார்.
பரமகுரு செய்வது போன்று வேள்வி செய்யும் கோவிலும் இல்லாமலில்லை. சிவகடாட்சம் வீட்டில் வளர்த்த கடா அந்த வேள்விக்கு வந்து நல்ல விலை போகும். சில தருணம் மறி ஆடு சினைப்படுத்தக் கொண்டு வருவார்.
பரமகுருவுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அவர் வாய் திறப்பதில்லை.
சிவகடாட்சத்திடம் வட்டிக்குக் காசு வாங்கி இருக்கின்றவர். அவர் எப்படி வாய் திறந்து பேசுவார்?
"காளி ஆச்சி அகோரம் கொள்ளுவாள். அம்மை, சின்னமுத்து, பொக்கிளிப்பான் ஊரெல்லாம் அள்ளி வீசிப் போடுவாள் அதுதான். பரமகுரு பயபக்தியுடன் எடுத்துக் கூறுவார்.
இப்ப சிவகடாட்சம் துடியாய்த் துடித்துக் கொண்டு நிற்கிறார். பெருவயிறன் மதிய காலப் பூசையும் நடக்காது போய் விடுமோ என்ற ஏக்கம் அவருக்கு
காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. கொள்ளிக்குரியவரை வைத்துத் தான் ஈமக்கிரியை செய்ய வேண்டுமென ஐயர் பிடிவாதமாக நிற்கின்றார்.
"கொள்ளிக்காறன் நில்லாமல் ஆரும் கிரியை செய்கிறதில்லை"
எல்லோரும் பேசிக்களைத்துப் போனார்கள். யார் பேச்சுக் கேட்டும் ஐயர் உடன்பட்டு வருவதாக இல்லை.
சிவகடாட்சமும் இணங்கிப் போவதாக 36b606).
கிரியை செய்வதற்கு தயாராக தட்டையான தகரப் பந்தல் ஒன்று போட்டு, அதற்கு வெள்ளை கட்டி விட்டிருக்கிறார்கள்.
இதழ் 50

Page 14
அந்தப் பந்தலுக்குக் கீழ் ஐயர் பலகையில் அமர்ந்திருக்கின்றார்.
பந்தலுக்கு வெளியே ஒரு மூலையில் சிவகடாட்சத்தின் தாய்மாமன் பெரும் துயரத்துடன் தலைகுனிந்து நிலத்தில் உட்கார்ந்திருக்கின்றார்.
வேறு வழியில்லை. சிவகடாட்சம் இறுதியாக ஐயரைத் தனிமை யில் அழைத்துப் போகின்றார்.
"ஐயா, எனக்குள்ள நெருக்கடி உங்களுக்கு விளங்குமெண்டு நினைக்கிறேன்"
"எல்லாம் விளங்குது" "நீங்கள் எனக்கு உதவ வேணும்" "உதவுவன். ஆனால், இது சமயச் சடங்கு. இதை மாற்றேலாது"
“guJIT...!”
"ଗtଗitଗ0].?” "சரி. நான் பேசினதை விட ஐயாயிரம் கூடத் தாறன்"
"காசல்ல. இப்பிடிச் செய்யிறது முறையில்லை" "ஐயா. என்ரைநிலைமையைப் புரிய வேணும்" "அதுக்கு நானென் செய்கிறது?" "சரி. முடிவாகச் சொல்கிறன் பதினை யாயிரம் கூடத்தாறன். மறுப்புச் சொல்ல வேண்டாம்"
சிவகடாட்சம் சொல்லிக் கொண்டு பந்தலுக்கு வேகமாகத்திரும்பி வருகின்றார்.
ஐயர் அவர் பின்னே மெல்ல வந்து பலகையில் அமர்ந்து மணியைத் தூக்கிக் கிலுக்குகின்றார்.
ஈமக்கிரியைகள் ஆரம்பமாகின்றன. நடக்கின்றவை யாவற்றையும் வெறுப்புடன் அவதானித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் சிவகடாட்சத் தின் தாய்மாமன், பொல்லை ஊன்றிக் கொண்டு கொதித்தெழுகின்றார்.
"ஐயா, கிரியை செய்ய விட மாட்டன் என்ரை அக்காத்தையைக் கொண்டு போய் மண்ணை கிண்டி தாள்க்கிறதுக்கு முடிவு செய்து போட்டியள். அவள் என்ன அநாதைப் பினமே! உங்கடை போலி ஆசாரங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரியும், அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வமெண்டு வாத்திமார் சொல்லித் தரயில்லையே! என்ரை அக்காத்தைக்கு நான் தான் கொள்ளிக் கடன் செய்யப் போகிறேன்" சீறிக் கொண்டு பொல்லை ஊன்றி ஊன்றி மெல்ல நடந்து வந்து கிரியைப் பந்தலுக்குள்ளே நிமிர்ந்து நிற்கின்றார்.
"சரி. சரி. இதுதான் சரி." ஐயரின் வாய் முணுமுணுவென மந்திரம் ஜெபிக்கிறது.
அவர் கையில் பிடித்த மணி கிணுகினுவென மீண்டும் ஒலிக்கிறது.
ஜீவநதி

முல்லை மலை உச்சியிலே நரபலிக்காக குழந்தைகளை கூரிய கத்திகளால் வெட்ட வெட்ட பீரிட்டுப் பாயும் இரத்த வெள்ளம் போல *சூரிய செந்நாயின் வாயினின்று கனல் மாரி வழிகின்றது.
முல்லை நில எல்லையிலோ யுத்தப் பிசாசின் வயிறு வெடித்து இரத்தம் பிரளயமாய் கொட்டுகிறது "குவர்ணிகா" ஓவியம் நிஜமாகி தொலைகிறது
முதுவேனிற் காலமும் கரைந்து போக வேனிற் பாசறை முழுமையாய் சிதைகிறது.
** "மாரி இரீஇ மான்றன்றால் மழையே”
முப்பது வருட சயன இருத்தலிலிருந்து முல்லையில் ஒருத்தி விழிக்கிறாள் *** வேம்பின் கரிய காம்புகளில் உள்ள அழகிய மலர்கள் அவள் கூந்தலில் பூக்கின்றன.
வரவை நோக்கிய எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க ****கரைமோதி ஒடுகின்ற ஆற்றின் இடிகரையிலுள்ள வேர்கள் எல்லாம் அசைக்கப்பட்டு காற்றினால் அசையும்
மாமரத்தின் தளிர் போல அவள் உள்ளம் நடுங்குகின்றது.
- அவளின் காத்திருத்தல் s இறந்தொழிதலாகும் வேளையிலே སྐྱེ་ வெளியே ஒரு சத்தம் 응
S g ཟློན་ཟུར་ ஜண்னல் திறந்து பார்க்கிறாள் ཕྱི་ ਹੈ வஞ்சிப்பூ சூடி வீரமாய்ப்போன སྤྱི་ தன்னுடைய தலைவன் வாசலில், శ్లో * s
3 “கைகளும் கால்களும் 影 இல்லாமல்.’ (2010) ஒரு இரவில்) 翻醫黑
ஈழத்துக்கவி
இதழ் 50

Page 15
Uோனது 3 چغا(تریزوبیولوکه
முடிந்த அவல முகாரி மழை ஒல மின்னும் வடிந்த பாடில்லை;
“வாய்க்காலி" வழியோடி ஆழக்கடலில் அமிழ்ந்தது இரத்த ஆறு புதைந்ததனைத்தும் புதையலா?
தொலைந்தது சனி அவரவர் தம்தம் அலுவ எவரையும் கணக்கெடாமல் "விலை" யாரும் மதியாமல், பெறுமதியைக் குறைத்துக் காட் நிறுத்து விற்கத் தராசுகளோடு தயாரானார் தரகர்க எடுப்பார் “கைப்பிள்ளை” என்றானே 'திணிப்புக்களைத் தடுக்கவோ குறைத்துத் தணிக்கவோ ந அற்பராகிப் போனோம்." எனும் கவலை மனம் அரிக்க எப்படித்தானி மீட்போம்? எரிந்த நம் குடிசைகளை :- எப்படித்தான் கட்டி எதிர்கால வெய்யில் மழை தப்பிப் பிழைப்போம்? தெரியாமல். SEITL ÖLJGDGiGif? துப்பரவு நாம் செய்ய 3) Gö6)TEFL ULLIGOOfl56TTü பற்றி எரிந்தும் எரியாதும் கிடக்குமெங்கள் சொந்தக் குடில்களிலே 'சுகமில்லை” GIGOTj: GJET6565) வெந்தவற்ற மீட்க உதவாமல் கையுதவி தந்து விழுந்தவரைத் தாங்காமல் தளதளக்கும் SS தம் செழிப்பைக் காட்டி புரியாத பாஷைகளில் தம்பெருமை சேய்களுக்குச் சாற்றி இந்தச் சாம்பலூரில் இ கூழ்காய்ச்சிக் குளித்துக் கூத்தா உரித்தான காணிகளை விற்றுக் கணக்கு சாட்டுக்கு. எஞ்சியோர்க்குத் திருவிழாவில் போட்டோ பிடித்து விட்டுப் போகி புலத்துறைவோர்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த. ஜெயசினிைன் 2 கவிதைகள்
சொல் ஒன்று சொல் தோழா அந்தச் சொல் நெருப்பினது துணர்டொன்றாய். ஆற்றல் சுடரும் படிவிளங்க சொல்லொன்று சொல் தோழா அந்தச் சொல் எந்நீரும் விழுந்தணைக்க முடிய விளங்க வேண்டும்.
கொழுத்த வேண்டும்; குடியிருக்கும்
தை அந்தச் சொல் எரித்தகற்றி டும்! சால்லொன்று சொல் தோழா. | அந்தச் சொல் அமிலத்தின் ی
துளியொன்றாய் வீழ்ந்து கரையாத கற்கிளையும்
ங்கள் சேர்வையையும்
உருக்குலைத்து உருத்திரித்து
f (3LIT6) சிந்தனையை
கி விடவேணர்டும்! ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
நோயை அடித்துத் துரத்தி தில் ஆரோக்யம் - - -
ஆறாத காயத்தை ஆற்றி அருளவே சொல்லொன்று சொல் தோழா.

Page 16
வீடு மாறுவதைப்போல் சிரமமான வேலை
வேறு எதுவும் இல்லை என்பது எனது மனைவியின் அனுபவம். வீட்டுத்தளபாடங்களை அடுக்கிக்கட்டி சுமந்து ஏற்றி ட்றக்கில் அனுப்பினாலும், புதிய வீட்டுக்குச்சென்றதும் அவற்றை இறக்கிப்பிரித்து வைக்க வேண்டிய இடங்களில் வைத்து புதிய வீட்டை சீர்செய்வ தற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதும் சரிதான். அனுபவித்துப்பார்த்தால் உண்மை புரிந்து விடும்.
இன்னும் இரண்டு வாரத்துக் குள் புதிய வீட்டுக் குச் செல்ல வேண்டும் . அதற் கிடையில் அத்தியாவசிய சமையல் பாத்திரங்கள் மற்றும் உடைகள் தலையணைகள், போர்வைகள், சோப்பு, சீப்பு, ஷம்பு, டவல் முதலான குளியலறை சாதனங்கள் தவிர்த்து ஏனைய அனைத்தையும் பெட்டிகளில் அடுக்கினோம்.
நகருக்கு சமீபமாக ஷொப்பிங் சென்டரில் இருக்கும் பாமஸியில், மருந்துகள் வரும் கார்ட்போட் பெட்டிகள் மூடிகளுடன் கச்சிதமாக இருக்கும். அங்கே சொல்லிவைத்து பல வெற்றுப்பெட்டிகளை வீட்டில் களஞ்சிய அறையில் சேகரித்து வைத்திருந்தேன்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனைவி
ஜீவநதி 12
 

சமையலறை பாத்திரங்கள் உட்பட கண்ணாடிப் பாத்திரங்களையெல்லாம் சீராக பெட்டிகளில் அடுக்கி மூடி அவற்றின்மீது உள்ளே என்ன இருக்கின்றன என்பதை தடித்தமைபேனையினால் எழுதிவைத்து விடுவாள்.
அவளது சாரிகள், பிளவுசுகள், உள்ளாடைகள், மற்றும் குளிர்கால, கோடைகால உடைகள் யாவும் அவளுடைய பிரத்தியேகமான விரல்விட்டு எண்ணத் தக்க பல பெரிய பேக்குகளினுள் எப்படியோ நுழைந்து விட்டன. -
"உங்கட உடுப்புகளை எப்போது அடுக்கப்
போறிங்க.?" எனக்கேட்டாள்.
கதைத்தொகுப்பின் கதை
"எனக்கு ஒரு பேக் போதும், எஞ்சியிருப் பவற்றை சல்வேஷன் ஆர்மிக்கு கொடுத்துவிடுவேன். நீரும் ஏதும் தருவதென்றால் தாரும்." என்றேன்.
பழைய சாரிகள் கொஞ்சம் இருக்கு. ஆனால் சல்வேர்ஷன் ஆர்மி எடுத்துக்கொள்ளுமா?" எனக் கேட்டாள். ও
" விசாரிப்போம்" என்றேன்.
"எல்லாவற்றையும் அடுக்கிவிடலாம். ஆனால் உங்கட புத்தகங்கள்தான் பெரிய லோட் குறைஞ்சது முப்பது பெட்டியாவது தேறும். எப்போது அடுக்கப் போறிங்க.?"
"அதில் தெரிவுகள் இருக்கு நான் படித்து முடித்தவற்றை நண்பர்களுக்கு கொடுக்கப்போறன் அந்த வேலை இப்போது தொடங்கவேண்டாம் பிறகு பார்க்கிறன்"
" நீங்கள் புத்தகங்களை அடுக்க முன்னம் ஒருதடவை நானும் பார்க்கவேணும். நீங்கள் படித்து முடித்த எனக்குப்பிடித்தமான நான் இதுவரையில் படிக்காத புத்தகங்கள் இருந்தால் தரமாட்டேன். அவை எனக்கு வேணும். அதனால் முதலில் நான் புத்தகங்களைப் பார்க்கிறன்" என்று சொல்லிக் கொண்டு, நான்கு பெரிய Book Shelfகளில் சீராக அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஆராய்வதற்காக அலுவலக அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
களஞ்சிய அறையிலிருந்து சில வெற்றுப் பெட்டிகளை புத்தகங்கள் அடுக்குவதற்காக எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, வீட்டின் பின்புறம் புதராக வளர்ந்திருந்த புல்லை வெட்டுவதற்கு தயாரானேன். மெல் பனில் தினமும் நான்கு பருவகாலங்கள் கலையும் மேகங்கள் போன்று
H இதழ் 50

Page 17
БШ
5)
நகருவதனால் நல்ல வெய்யிலிருக்கும்போது புல்6ை வெட்டிவிடவேண்டும். முதல்நாள் இரவு பொழிந்: பனியில் புற்களில் ஈரலிப்பு. காயும் வரையிெ காத்திருந்துதான் வெட்டவேண்டும். இல்லையே6 புல்வெட்டும் இயந்திரம் பழுதடைந்துவிடும்.
இயந்திரத்துக்கு எரிபொருள் நிரப் ப வானத்தையும் ஒருதடவை பார்த்துவிட்டே புல்லை வெட்டும் இயந்திரத்தை கராஜிலிருந்து வெளியே எடுத்து நகர்த்திக்கொண்டு வந்தபோது உள்ளிருந்து மனைவி குரல்கொடுத்தாள்.
" வந்திட்டுப்போங்க." "எந்த வேலையையும் ஒழுங்கா செய்யவிட மாட்டாள்" முணுமுணுத்தவாறே வீட்டுக்குள் வந்தேன்.
அவள் கையில் ஒரு புத்தகம். அட்டை கிழிந்த சிறிய பழைய புத்தகம்,
"இது யாருடைய கதைத்தொகுப்பு? முன்னுக்கும் பின்னுக்கும் அட்டை இல்லை. யார் எழுதியது என்பதும் தெரியவில்லை. பதிப்புரிமை விபரம் உள்ள பக்கமும் கிழிஞ்சிருக்கிறது. மிகவும் பழைய புத்தகம் போலத்தெரியுது. பழுப்பு நிறமாகி விட்டது. சொல்லுங்க இது யார் எழுதினது?"
" அட. இது சுந்தரி ரீச்சரின் கதைப்புத்தகம் மறந்தேபோய்விட்டேன். எங்கே இருந்தது." நான் அதிர்ச்சியும் வியப்பும் மேலிட வாங்கிப்பார்த்தேன்.
"ஒரு மூலையில் கிடந்தது. இதுவரைக்கும் எனது கண்ணிலும் தென்பட்ட புத்தகமாகத் தெரியவில்லை. அதுதான் கேட்கிறன்." என்றாள் மனைவி.
ஒரு குழந்தையை பரிவோடு தடவி உன்னிப் பாக பார்ப்பதுபோன்று, அந்தப்புத்தகத்துடன் அமர்ந்து விட்டேன். புல்வெட்டும் வேலையையும் மறக்கச் செய்துவிட்டது அந்த அட்டைகள் இல்லாத புத்தகம்,
"யார். சுந்தரி ரீச்சர். எங்கே இருக்கிறா?" மனைவியின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லாமல், அந்தப் புத்தகத்தின் பக்கங்களை புரட்டினேன்.
மனைவி என்ன நினைத்தாளோ, என்னையே நேரடியாகப் பார்த்துக்கொண்டு என்முன்னால் அமர்ந்து கொண்டாள்.
சுந்தரி ரீச்சர்பற்றிய பல்வேறு ஊகங்களுடனும் கற்பனைகளுடனும் அவள் அவ்வாறு அமர்ந்திருக்கக்
கூடும்.
\;
எங்கள் ஊர் பாடசாலையை விட்டு அந்த கொதிமாஸ்டர் இடமாற்றலாகிச்சென்ற பிறகு வந்தவ தான் சுந்தரி ரீச்சர். அழகான சிவந்த நிறமுடைய ரீச்சர். சிவகாமசுந்தரி என்ற அவவுடைய இயற்பெயர் சுருக்கமாகி சுந்தரி ஆகியது.
ஜீவநதி
 

தூயகணித பாடத்தை இலகுவாக புரியும்படி சொல் லிக் கொடுத்தா. வீட்டுப் பாடம் செய்யா விட்டாலும் அதற்காக முன்பிருந்த கொதிமாஸ்டர் நாகராஜா போன்று விரல்களில் அடிமட்டத்தினால் அடிக்காமல், ஏன் செய்யவில்லை என்று கேட்டுவிட்டு வகுப்பில் செய்தபின்பு பாடத்தை தொடருவது சுந்தரி ரீச்சரின் இயல்பு.
அட்சர கணிதத்தில் தேர்ச்சியுள்ள மாணவர் களுக்கு கேத்திர கணிதம் வேம்பாக கசந்தது. கேத்திர கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு அட்சரகணிதம் ஏனோ பிடிக்கவில்லை. இரண்டு கணிதங்களையும் சமச்சீருடன் நாங்கள் கற்றுத்தேருவதற்கு பக்குவமாக சொல்லிக்கொடுத்த சுந்தரி ரிச்சர், மாணவர் உளவியல் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும்.
அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி இல்லாத காலம் வகுப்பில் எம்.ஜி.ஆர் ரசிகர், சிவாஜி ரசிகர் மோதல்கள் உக்கிரமாக நடந்த காலம்.
மக்கள் திலகம், கொடை வள்ளல் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கட்சி நடிகர்திலகம் போன்று நவரசத்தையும் காண்பிக்க எவராலும் முடியாது என்று சொல்லும் மற்றுமொரு கட்சி. நான் "வாத்தியார்” ரசிகன், மக்கள் திலகம் எப்படி கையை நீட்டி விசுக்கி பாடுவார் என்று அபிநயம்பிடித்து ஆடிக் காட்டுவேன். அப்படி ஒருநாள் ஆடியவேளையில்தான் சுந்தரிரீச்சர் வகுப்பறைக்குள் பிரவேசித்தா,
எனது பெயரைக்கேட்டுவிட்டு மீண்டும் ஒருதடவை ஆடிக்காட்டும்படி சொன்னா,
மாணவர்கள் சிரித்தார் கள். நான் வெட்கத்தினால் தலைகுனிந்து நின்றேன்.
"பரவாயில்லை. ஒருதடவை ஆடும். அதன் பிறகு பாடம் தொடங்குகிறேன்." என்றா சுந்தரி ரீச்சர். அப்படி ஒரு ரீச்சரை எனது பாடசாலை நாட்களில் வேறு எந்த வகுப் பிலும் நான் மட்டுமல்ல சகமானவர்களும் பார்த்ததில்லை.
ஆயிரத்தில் ஒருவனில் வரும் "அதோ அந்த பறவைபோன்று வாழ வேண்டும்." என்று வலது கையை எம்.ஜி.ஆர். போன்று சுழற்றி நீட்டி உயர்த்தி பாடவும் சுந்தரி ரீச்சர் கலகலவென சிரித்தா. வகுப்பறையில் முத்துக்கள் உதிர்வதுபோன்றிருந்தது. கலகலப்பு அடங்க சிலகணங்களாயிற்று. -
அன்றுமுதல் ரீச்சர் எனக்கு வைத்தபெயர் மக்கள்திலகம்
எங்கள் பாடசாலைக்கு சுந்தரி ரீச்சர் மாற்றலாகி வந்து ஒரு மாத காலத்துள்ளேயே அவ எங்கள் வகுப்பு ஆசிரியராகவும் அதிபரினால் நியமிக்கப்பட்டது எங்களுக்கு வரப்பிரசாதம்தான்.
வகுப்புக்கு மொனிட்டர் தெரிவு நடந்தபோது என்னையே ரீச்சர் முன்மொழிந்தார். கணிதபாடத்தில்
இதழ் 50

Page 18
அக்கறை காண்பிக்காத மாணவர்களை மாலைவேளை களில் வீட்டுக்கு அழைத்து விசேட கரிசனையுடன் எந்த ஊதியமும் வாங்காமல் சொல்லிக்கொடுத்தா,
சுந்தரி ரீச்சர் வீட்டில் அவவுடைய அப்பா, அம்மா, ஒரு அண்ணன் மாத்திரம் இருந்தனர். அண்ணன் கொழும்பில் ஒரு கம்பனியில் வேலையிலிருந்தார். தினமும் பஸ்ஸில் போய்வந்தார். அப்பா ஒய்வுபெற்ற தபால் அதிபர் என்பது தெரிந்தது. ரீச்சர் வீட்டில் எங்களுக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கும்போது, ரிச்சரின் அம்மா வீட்டில் செய்யும் வடை, அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள் தருவார்கள்.
எங்கள் உறவினர் வீட்டுக்குச்செல்வது போன்று உரிமையுடன் சென்றுவருவோம். ரீச்சருக்கு தம்பி, தங்கைகள் இல்லாத குறையை நாங்கள்தான் போக்கியிருக்கிறோம் என்று ஒருநாள் ரீச்சரின் அம்மா, ரீச்சர் வீட்டில் இல்லாத நேரத்தில் எங்களிடம் சொல்லியிருக்கிறா.
நான் கண்வைத்திருந்த சகமாணவி சுகந்தி, "பார்த்தீங்களா..? சுந்தரி ரீச்சர் எங்களையெல்லாம் தன் சகோதரங்களாகத்தான் நேசிக்கிறாங்க. அப்படி யெண்டால் நாங்கள் இரண்டுபேரும் சகோதரங்கள் தான். அதனால் இந்த சைட் அடிக்கிற வேலையை இனிமேல் விட்டிடுங்க." என்று சொன்னாள்.
இப்போது சுகந்தி எங்கே இருக்கிறாளோ தெரியாது.
சுந்தரி ரீச்சர் கதைகளும் எழுதுவாங்க என்பது முதலில் எங்களுக்குத்தெரியாது. ரீச்சர் சொன்னதும் இல்லை. ரீச்சரின் அணி ணன் கொழும் புக்கு வேலைக்குப்போய்வரும்போது ரீச்சருக்காக கல்கி, குமுதம், ஆனந்த விகடன், சிரித்திரன், மல்லிகை எல்லாம் வங்கிவருவார். ரீச்சர் வீட்டின் வரவேற்பறை யில் அவற்றை பார்த்திருக்கிறேன். என் அக்கா ஒரு புத்தகப்பூச்சி. காலப்போக்கில் அக்காவும் சுந்தரிரீச்சரின் சிநேகிதியாகிவிட்டாள்.
ரியூஷன் முடிந்துவரும்போது சுந்தரி ரீச்சர் தான் படித்து முடித்த சஞ்சிகைகளை அக்காவுக்காக தந்து விடுவா. சுந்தரி ரீச்சரின் சிறுகதையொன்று வாரப் பத்திரிகையில் படித்த தகவலை அக்கா சொல்லித்தான் அறிந்துகொண்டேன். தெரிந்த ரீச்சர் என்பதனால் நானும் அந்தக்கதையை படித்தேன்.
ஒரு விதவைத்தாயின் வாழ்வை சித்திரித்த கதை. பெரும்பாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு கதை ரீச்சர் எழுதியிருப்பா. இடைக்கிடை இலங்கை வானொலியிலும் ரீச்சரின் சிறுகதை, நாடகம் ஒலிபரப்பாகும்.
ரீச்சர் எழுதிய கதைகள், நாடகங்களில் கூடுதலாக பெண்களின் துயரம்தான் விஞ்சியிருக்கும்.
"ரீச்சர் ஒரு பெண்ணிலைவாதி" என்று ஒருநாள்
ஜீவநதி 1.

அக்கா சொன்னாள்.
அதற்கு நான், "ஆண்ணிலைவாதிகள் யார்? " என்று துடுக்குத்தனமாகக்கேட்டுவிட்டேன்.
"ரீச்சரிடமே கேள்." என்றாள் அக்கா, ரீச்சரிடம் கேட்டேன். " முதலில் படிப்பை கவனியும், ஏ.எல். பரீட்சை எழுதியபின்பு சொல்லித்தருகிறேன்" என்றா சுந்தரி
ஆனால் சொல்லித்தராமலேயே போய்விட்டா.
ரீச்சருக்கு எங்கள் ஊரிலேயே திருமணமும் நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் பணக்காரர். பல பிஸினஸ்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். நகரத்தில் புடவைக்கடை, பலசரக்கு மொத்த விற்பனைக்கடை, அடவுக்கடை, நகைக்கடை இருந்தன. கொழும்பில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்பும் முகவர் நிலையமும் நடத்திக்கொண்டிருந்த செல்வச் செழிப்புள்ள குடும்பம்.
ரீச்சரின் அண்ணன்தான் அந்த சம்பந்தத்தை பேசிக் கொண்டு வந்தவர். ஒரு தைப் பொங்கல் பண்டிகையின் போது அக்காவுடன் அவர்களின் புடவைக்கடைக்கு ரீச்சர் சாரி வாங்கப்போனபோது தான் அந்த மாப்பிள்ளை, ரீச்சர் மீது கண்வைத்து விட்டார். எப்படியோ ரீச்சரின் அண்ணனை நண்பனாக்கிக்கொண்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக வேறு நம்பிக்கை அளித்துவிட்டார். பாடசாலை அதிபர் ஊடாகவும் வீட்டுக்கு தூது அனுப்பினார்.
"தேடிவரும் செல்வத்தை விட்டுவிடவேண்டாம்" என்று அதிபர் சினிமா வசனம் பேசினார் என்றும் அக்கா சொல்லக்கேள்விப்பட்டேன். அந்த அதிபர், அவர்களின் கடைகளில் நிரந்தர வாடிக்கையாளர்.
முதலில் ரீச்சருக்கு அந்த சம்பந்தத்தில் விருப்பமில்லை. கலவரம் வந்தபோது ரீச்சரின் அண்ணா கொழும்புக்கு வேலைக்குச் செல்லப் பயந்தார். வேலையையும் விட்டுவிட்டார். அந்த சம்பந்தம் செய்தால் தனக்கு அவர்களது ஏஜன்ஸி மூலமாக வெளிநாடு செல்ல முடியும் என்றும் சொல்லி ரீச்சரை சம்மத்திக்கவைத்தார் அந்த அண்ணன்.
ரீச்சரின் அழகுதான் அந்த தனவந்த இளைஞனைக் கவர்ந்திருக்கவேண்டும். அத்துடன் ரீச்சரின் கதைகள், நாடகங்கள் கொழும் பு பத்திரிகைகள், வானொலியில் வெளியாவதனால் ரீச் சரின் அந்த பிரபலமும் அவருக் குப் பிடித்திருக்கலாம். -
எப்படியோ சுந்தரி ரீச்சரின் திருமணம் தடல் புடலாக நடந்தது. முழுச்செலவையும் மாப்பிள்ளை வீட்டார்தான் ஏற்றிருக்கவேண்டும். நானும் வகுப்பு
இதழ் 50

Page 19
008
தரி
நண்பர்களும் இரவுபகலாக மண்டபம் சோடித்து அலங்காரம் செய்தோம். ரீச்சரின் உறவினர் கள் வெளியூரிலிருந்து வந்ததனால் அவர்களை தங்கவைப் பதற்காக மாப்பிள்ளை உல்லாசவிடுதி ஹோட்டல்களில் சில அறைகளையும் வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருந்தார்.
"பிடித்தாலும் பிடித்தாய் பெரிய புளியங் கொப்பாகத்தான் பிடித்திருக்கி றாய்" என்று ரீச்சரின் உறவினர்கள் ரீச்சரின் அம்மாவிடம் சொன்னது எனக்கும் கேட்டது. ரீச்சருக்கு தம்பி இல்லாதமை யினால் என்னையே மாப் பிள்ளைத் தோழனாக்குவோம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொன்னார்கள்.
அந்த தற்காலிக பதவியினால் எனக்கு கிடைக்கவிருந்த மோதிரம் கிடைக்கவில்லை ரீச்சரின் உறவுமுறையான ஒரு சின்னப்பெடியன் உறவினர் களுடன் திருமணத்திற்கு வந்திருந்தான் இரத்த உறவினன்தான் மாப்பிள்ளை தோழனாக முடியும் என்பது அந்த உறவினர்களின் வாதம், ரீச்சரின் அண்ணனை அந்த வேடத்திற்கு தெரிவுசெய்திருக்கலாம் ஆனால் திருமண வேலைகள், விருந்தனர் உபசரிப் புகளை கவனிக்க வேண்டியிருந்ததால் அண்ணன் அதனை ஏற்கவில்லை.
எனக்கு கிடைக்கவிருந்த மாப்பிள்ளை தோழன் உடைகளும் அந்த மோதிரமும் கிடைக்கவில்லை
என்பது எனக்கு அப்போது வருத்தமாக இருக்கவில்லை ரீச்சரை திருமணத்தின் பின்பு வேலையால் நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் எனக்குத் தீராத கவலையாக இருந்தது.
இலட் சக் கணக் கில் பணம் படைத் த குடும்பத்திற்கு ரீச்சரின் சில ஆயிரம்கொண்ட மாதச் சம்பளம் சிறுதுசுதான். ஆனால் ரீச்சர் தனது தொழிலையும் மாணவர்களையும் எப்படி நேசித்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிபந்தனைக்கு கட்டுப்பட விரும்பாமல்தான் ரீச்சர் முதலில் அந்தத் திருமணத்திற்கு சம் மதிக்கவில்லை என்பதை அக்காவிடமிருந்து தெரிந்துகொண்டேன். அந்த மாப்பிள்ளை எனது அக்காவுக்கும் ஒரு வரன் பார்த்துவைத்திருந்தார். அந்த மாப்பிள்ளையும் அவர்களின் ஏஜன்ஸி மூலம் விரைவில் வெளி நாடொன்றுக்கு செல்லப்போகிறார் என்றும் எங்கள் அப்பா, அம்மாவுக்கு தகவல் சொல்லியிருந்தார் ரீச்சருக்கு நிச்சயிக்கப்பட்ட அந்த செல்வக்குடும்பத்து LDITSairgO)6T.
சுந்தரி ரீச்சரின் திருமணம் முடிந்து மறுநாள் அவர்கள் தேன்நிலவுக்காக சிங்கப்பூர் சென்று
ஜீவநதி
 

5
ஒருவாரத்தில் வந்தார்கள். ரீச்சரின் அண்ணன் சில நாட்களில் துபாய் சென்றுவிட்டார். அக்காவுக்கு ரீச்சரின் கணவர் பார்த்துப்பேசியிருந்த மாப்பிள்ளை வீட்டாரும் ஒருநாள் அக்காவை பெண்பார்க்க வந்து சில நாட்களில் நிச்சயார்த்தமும் செய்துவிட்டனர்.
ரீச்சரின் கணவர், ரீச்சர் மீதிருந்த அளவற்ற பிரியத்தினாலும் தனக்கிருக்கும் செல்வாக்கினாலும் வாக் குத் தவறாமல் சொன்னவற்றை செய்து கொண்டிருப்பதாக வீட்டில் பேசிக்கொண்டார்கள். உயர்தர வகுப்பு முடிந்ததும் என்னையும் லண்டனுக்கு மேல்படிப்பு படிப்பதற்கு அனுப்புவதற்கு ஒழுங்குகள் செய்யவிருப்பதாகவும் சொல்லி என் அம்மா, அப்பா, அக்காவை அவர் குளிரவைத்தார்.
அப்பாவுக்கு ஊரில் ஒரு சைவஹோட்டல் இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறைநாட்களில் நான் தான் கஷியர். அப்பா அன்றைய தினம்தான் வீட்டில் ஓய்வு எடுப்பார். "அப்பா ஆனந்தமாக வீட்டில் தண்ணி போடும் நாட்கள் அவை. சுந்தரி ரீச்சர் அரசாங்கம் கொடுத்த ஆசிரிய வேலையை விட்டதுடன் எங்களுக் கெல்லாம் இலவசமாக ரியுஷன் கொடுக்கும் பணியையும் நிறுத்திவிட்டா கதை எழுதுவதும் குறைந்துவிட்டது.
நான் அறிந்த மட்டில் ரீச்சரின் ஒரே ஒரு சிறுகதைத்தொகுப்புத்தான் புத்தகமாக வெளியாகி யிருந்தது.
ஆனால், அது ரீச்சரின் திருமணத்திற்கு ஒருவருடத்திற்கு முன்புதான். பாடசாலை அதிபரின் தலைமையில்தான் ஊர் கலாசார மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடந்தது. கொழும்பிலிருந்து பெரிய உருவமுள்ள ஒரு பேராசிரியர், வேறும் சில எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். GJITGGGTTGÚN நிலையத்திலிருந்தும் வந்து நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து பின்னர் வானொலியில் ஒலிபரப்பினார்கள்.
அந்த கதைப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவும்
இதழ் 50

Page 20
ரீச்சரின் வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி யிருக்கவேண்டும். விழாவில் முதல் பிரதி பெற்றுக் கொள்வதற்கு வந்தவர்தான் அந்த மாப்பிள்ளையின் தனவந்த அப்பா, அதற்கான ஏற்பாடு செய்தவர் அதிபர்தான். அந்த வருங்கால மாமனாருக்கும் ரீச்சரை தனது மகனுக்கு மனைவியாக்கவேண்டும் என்ற எண்ணம் அந்த நிகழ்ச்சியில்தான் துளிர்த்திருக்க வேண்டும்.
"ரீச்சரின் கதைகளில் பெண்ணிலைவாதம் உச்சத்தில் ஒலிக்கிறது" என்ற ஒருமித்த கருத்துச்சாரப் பட பேராசிரியரும் இதர பேச்சாளர்களும் பேசிய போது, அதிபரின் காதுக்கு அருகில் நெருங்கி, " அதென்ன சேர் பெண்ணிலை வாதம்" என்று கேட்டாராம் அந்த முதலாளி.
இந்தத் தகவலை பின்னர் அதிபர்தான் ரீச்சரிடம் சொல்லிச்சிரித்தார்.
ரீச்சரின் திருமணம் முடிந்த பிறகு ஒரு மாத சஞ்சிகையில் ரீச்சருக்கு வாழ்த்து தெரிவித்து அதன் ஆசிரியர் ஒரு சிறிய குறிப்பும் வெளியிட்டிருந்தார். அதனை ரீச்சர் தனது கணவரிடம் காண்பித்தபோது, இவங்களுக்கு வேறை வேலை வெட்டி இல்லை யாக்கும்" என்று எரிச்சல்பட்டதாக ரீச்சர் அக்காவிடம் சொல்லி வருத்தப்பட்டாவாம்.
சில நாட்கள் ரீச்சரை நகைக்கடையில் அல்லது புடவைக்கடையில் பார்த்திருக்கிறேன். அந்நாட்களில், அவர் கடைகளுக்கு சாமான் கொள்முதல் செய்வதற்கு கொழும்புக்கு சென்றிருப்பதாக அறிந்துகொண்டேன்.
ஒரு நாள் ரீச்சர் என்னை நகைக்கடையில் சந்தித்தபோது அவ கவழியராக காட்சி அளித்துக் கொண்டிருந்தா.
தம்பி. நீர் உங்கட அப்பாவின் சைவ ஹோட்டல்ல கவழியர், நான் இங்கே நகைக்கடை கவழியர்" சிரித்துக்கொண்டு சொன்னாலும் அந்த முகத்தில் வாட்டம் தெரிந்தது.
" எப்படி இருக்கிறீங்க ரீச்சர்?" என்று கேட்டேன்.
ஏதோ இருக்கிறன். உங்களையெல்லாம் ஸ்கூலையெல்லாம் மிகவும் மிஸ்பண்ணிட்டு இங்கே இருக்கிறன், எல்லாம் துபாய்க்குப்போன அண்ணனுக் காகத்தான்." என்றபோது ரீச்சரின் கண்கள் மின்னியதை கண்டேன். இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்தபோது நான் முகத்தை திருப்பிக்கொண்டு நகைக்கடையின் ஷோகேஸைப்பார்த்தேன். அதில் நகைகள் லைட் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தன. ரீச்சர் எனக்கு குளிர்பானம் தந்தா, அந்த நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத்தரும் குளிர்பானம் அன்று எனக்கும் கிடைத்தது.
ஒருவருடம் ஓடிவிட்டது. நான் ஏ.எல். பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தி பெற்றது
ஜீவநதி

ரீச்சருக்கு வருத்தம்தான். தரப்படுத்தலினால் அந்தத் தடவை பல்கலைக்கழக அனுமதி சில மாணவர்களுக்கு கிடைக்காததும் ரீச்சரை வாட்டியிருக்கவேண்டும்.
ரீச்சரின் வெற்றிடம் பாடசாலையில் பெரிதாகப் பேசப்பட்டது. என்னை மீண்டும் ஒரு தடவை பரீட்சை எழுதுமாறும் மீண்டும் வீட்டில் பாடம் சொல்லித்தருவ தாகவும் ரீச்சர் சொன்னா, ஆனால் எதிர்பாராதவிதமாக ரீச்சர் கொழும்பில் பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதால் ரீச்சரின் விருப்பம் நிறைவேற வில்லை.
ஒருநாள் இரவு சாப்பாட்டுக்குமேல் ரீச்சர் சத்தி எடுத்திருக்கிறா. கர்ப்பினியாகியிருக்கவேண்டும் என்ற மகிழ்ச்சியுடன் டொக்டரிடம் அழைத்துச் சென்றிருக் கிறார்கள். ஒரு நாள் அந்த தனியார் மருத்துவ மனையில் இருந்துவிட்டு வந்தா. கர்ப்பத்துக்கான சத்தியல்ல என்பது சோதனைகளிலிருந்து தெரிந்த பிறகு வீட்டுக்கு வந்து மீண்டும் தொடர்ச்சியாக சத்தி எடுத்தா, அம்மாவும் அக்காவும் அடிக்கடி சென்று பார்த்தார்கள். அப்போது ரீச்சரின் பெற்றோர்கள் தங்கள் ஊரில் இருந்தார்கள். ரீச்சரின் அண்ணன் துபாய் சென்றதும் ரீச்சர் புகுந்த வீடு சென்றதும் அவர்களின் பெற்றோருக்கு அவர்கள் முன்பிருந்த வாடகை வீடு அவசியமற்றதாகிவிட்டது.
ரீச்சர் சத்தி எடுக்கும் தகவல் அறிந்து தாங்கள் பேரப்பிள்ளை காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தான் அவர்கள் திரும்பியிருப்பார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல ரீச்சரின் கணவர் உட்பட அனைவருக்கும் பேரிடியே காத்திருந்தது என்பது ரீச்சர் கொழும்பில் அந்த பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சோதனை முடிவு வந்த பிறகே தெரியவந்தது.
அந்த புன்னகை தவழும் முகத்தில் மரணத்தின் ரேகைகள் படியத்தொடங்கிவிட்டன. புற்றுநோய் சுந்தரி ரீச்சரின் உயிரை சிறுகச்சிறுக குடித்திருக்கிறது. டொக்டர்களின் சோதனையின் பிரகாரம் ரீச்சருக்கு ஒருவருடத்திற்கு முன்பே அந்த நோய் தொடங்கி யிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார் கணவர். அவர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு நடமாடினார். ரீச்சருக்கான எந்தச் சிகிச்சையும் பலனளிக்காமல் எங்களையெல்லாம் நாட்களை எண்ணவிடாமலேயே ரீச்சர் ஒருநாள் இரவு மருத்துவ மனையிலேயே கண்களை மூடிக்கொண்டார்.
ரீச்சரின் திருமணம் போன்று அவரது இறுதிச் சடங்குகளும் தடல்புடலாகத்தான் நடந்தன. கொழும்பு பத்திரிகைகளில் அரைப்பக்க கண்ணிர் அஞ்சலி மரண அறிவித்தல் விளம்பரங்கள் வந்தன.
பஜார் வீதியில் ரீச்சர் ஒரு தனவந்தரின் மனைவி என்ற பிம்பமே இருந்தமையால் கடைகள் பலவற்றின் வாசல்களில் ரீச்சரின் புகைப்படத்துடன்
இதழ் 50

Page 21
தத் ங்கு
கப்
நவ
T5
வ
ଶ୍ରେଗାଁt
ந்கு தம் 1ી6b
திக்
சுவரொட்டிகளும் வெள்ளைக் கொடிகளும் காணL பட்டன. அந்தப்படத்திலும் ரீச்சரின் மாறாத மந்திர புன்னகை,
எங்கள் பாடசாலையிலிருந்து மாணவர்களுப் ஆசிரியர்களும் ஊர்வலமாகச்சென்று ரீச்சரின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். வானொலியும்
மரண அறிவித்தலை ஒலிபரப்பியது.
ரீச்சரின் அண்ணா லீவு எடுக்க முடியாத
காரணத்தை துபாயிலிருந்து அழுதழுது ரெலிபோனில் சொன்னதாக தெரிந்துகொணர் டேன். ரீச்சரின் திருமணத்தின்போது மாப்பிள்ளை தோழன் வேடம் தரித்து மோதிரம் பெற்றுக்கொண்ட அந்தச்சிறுவனும் வரவில்லை.
ரீச்சரின் அபிமான வாசகர்கள் என்று சொல்லிச் கொண்டு பலர் வந்திருந்தார்கள். அந்த வாசகர் கூட்டத்தில் சில எழுத்தாளர்களும் இருந்ததாக அதிபர் சொன்னார்.
ரீச்சரின் புத்தக வெளியீட்டு விழாவுக்குதலைமை தாங்கிய அதிபரே நா தழுதழுக்க இரங்கலுரை நிகழ்த்தினார். சில எழுத்தாளர்களின் இரங்கல் செய்திகள் வாசிக்கப்பட்டன. ரீச்சர் தகனமானார். எல்லாம் கனவுபோலாகிவிட்டது. தினமும் ரீச்சர் கனவில் வந்துபோய்க் கொண்டிருந்தா, நான் பல்கலைக்கழகம் செல்லத் தவறியது ரீச்சருக்கு பெரிய கவலையாக இருந்ததை அறிவேன்.
சில வருடங்களில் அக்காவுக்கும் திருமணம் நடந்து அக்கா தனது கணவருடன் கட்டாருக்குப் போய் விட்டாள்.
வருடாவருடம் ரீச்சரின் அந்த செல்வந்த கணவர் ரீச்சரின் நினைவாக கலாசார மண்டபத்தில் ரீச்சர் இறந்த
ஜீவநதி
 

தினத்தன்று அன்னதானம் கொடுத்தார். ஆனால் அந்த நடைமுறை மூன்று வருடங்களுக்குத் தான் நீடித்தது.
அந்தக்கணவர் அந்த மூன்று வருடத்தில் படிப் படியாக மாறிவிட் டிருந்ததையும் என் னால் அவதானிக்க முடிந்தது. ஒரு நாள் அவருக்கு கொழும்பில் மறுமணம் அமைதியான முறையில் நடந்ததாக கேள்விப் பட்டேன். ஒரு நகைக்கடை உரிமையாளரின் மகளை அவர்
༣
மணம் முடித்துவிட்டதாக அப்பா சொல்லி தெரிந்துகொண்டேன்.
எங்களுக்கு அழைப்பு இருக்க வில்லை. வந்திருந்தாலும் போயிருப்போமா என்பது நிச்சயமில்லை.
ரீச்சரின் அந்த முன்னாள் கணவருக்கு கொழும்புக்கடையே சீதனமாக கிடைத்து விட்டதனால் அவர் அங்கே செல்வந்தர்கள் வாழும் ஒரு பிரதேசத்திலேயே வீட்டோடு மாப்பிள்ளையாகி விட்டதாக பின்னர் அறிந்தேன்.
எங்கள் ஊரில் அவர்களின் கடைகள்
காலமாக மூடப் பட்டிருக்கிறது. ஒரு காவலாளியை அந்த இடத்தில் அவ்வப்போது 35|T600T(3LJ60s.
ஒரு நாள். அப்பா வீட்டில் தாகசாந்தி எடுக்கும் ஓய்வு நாள். நான்தான் எங்கள் சைவஹோட்டலில் கவியராக இருந்தேன். ஹோட்டலில் வாடிக்கை யாளர்கள் சாப்பிட்டு கைகழுவியபின்பு ଗ0085 துடைப் பதற்கு தேவைப் படும் காகிதங்கள் குறைந்துவிட்டதாக ஒரு சர்வர் சொன்னார். பஜாரில் மறுமுனையில் ஒரு நாடார் கடை இருக்கிறது. அங்குதான் கைதுடைக்கும் காகிதங்கள் கிலோ கணக்கில் வாங்குவோம். சர்வரிடம் காசு கொடுத்து வாங்கிவரச் சொன்னேன்.
அவரும் வாங்கிவந்தார். இரண்டு நாட்களின் பின்பு சமையல்கட்டுப்பக்கம் சென்றபோது கழிவுப் பொருட்கள் எச்சில் இலைகள் கொட்டப்படும் பெரிய தகர ட்ரம்மை சுத்தம் செய்யுமாறு அங்கிருந்து பணியாளிடம் சொன்னபோதுதான் இந்தப் புத்தகம் அட்டை இல்லாமல் கிடந்ததைக் கண்டேன்.
எடுத்துப்பார்த்தால் அது சுந்தரி ரீச்சரின் கதைப்புத்தகம். எனக்கு திகைப்பாகியது. அது எப்படி இங்கே வந்தது. இப்படி தரையில் கிடக்கிறது என்று சற்று அதட்டலாகவே கேட்டுவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த நாடார் கடையில் பழைய காகிதங்கள் வாங்கிவந்த சர்வர் ஓடி வந்தார்.
"ஐயா. நீங்க சொல்லித்தான் வாங்கிவந்தேன்.
இதழ் 50

Page 22
இந்தப்புத்தகம்போல நிறைய புத்தகங்கள் அங்கே அட்டைகள் இல்லாமல் கிழிஞ்சு கிடந்தது. வாங்கிட்டு வந்தேன்." என்றார்.
எனக்கு நெஞ்சு அடைத்தது. ஒரு கிளாஸ் தண்ணிர் குடித்துவிட்டு சர்வர் காண்பித்த பக்கம் சென்றேன். வாழை இலைக்கட்டுகள், உருளைக் கிழங்கு வெங்காய மூடைகளுக்கு நடுவில் சுந்தரி ரீச்சரின் அந்தக்கதைப்புத்தகத்தின் பல பிரதிகள் அட்டைகள் இல்லாமல் அலங்கோலமாகக் கிடந்தன.
அனைத்தையும் எடுத்து ஒரு பேக்கில் போட்டுக் கட்டி வீட்டுக்கு எடுத்துவந்தேன். அன்று மட்டுமல்ல அதனைத்தொடர்ந்து வந்த பல நாட்களும் சுந்தரி ரீச்சரின் நினைவுகள் என்னை அரித்தவாறு தொடர்ந்து வந்தன.
ரீச்சர் சித்திரித்த பல பெண்பாத்திரங்கள் எங்கள் ஹோட்டலின் சமையல் கட்டுத்தரையில் கிடந்து அழுதுபுலம்புவதாகவும் தலைவிரிகோலமாக ஒப்பாரி வைப்பதாகவும் இனம்புரியாத கனவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.
நீண்ட நாட்கள் அந்த சொப்பனாவஸ்தையில்
இத்யேவும்
வேகமாய் விணர்ணிலே விரையும் மேகங்களுடே மென்மையாய்த் துவணர்டு தாகத்துடனே தவறி விழுகின்ற ஊகமே மனதுள் நிறையும்!
வேகமதனால் விளைந்தெழுந்து ஏகமாயானதால் முன்னேறி நாகமாய் வளைந்து நானிலமிது மோகமானதால் முளைத்த முன்னேற்றம்!
முன்னேற்றம் முறை தவறுதலாகினும் பின்னோக்குதலாகுதலானதால் எந்நேரமும் இழந்திடாதிருந்திட நந்நோக்குடன் பார்ப்பவர் குறைவே!
தூரத்திருந்தே பார்ப்பவ ரெல்லாம் நேரத்தாலே கால மளப்பர் ஊரைத் திருத்திடப் பார்ப்பவரெல்லாம் வேரைப் பிடுங்கா விளைநிலம் பார்ப்பவர்!
ஜீவநதி 一璽

துனர் பப் பட் டேனி , அ ட் டைகள் இல் லாத அந்தப்புத்தகங்கள் இருக்கும் பேக் எங்கள் வீட்டில் இருப்பதனால்தான் எனக்கு அடிக்கடி கெட்ட கனவு வருவதாக அம்மா சொன்னார்கள்.
பின்னர் அம்மாவே அவற்றை ஒவ்வொன்றாக எனது நண பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துவிட்டார்கள்.
எனக்கு ஒரு பிரதி சுந்தரி ரீச்சரின் ஞாபகமாக இருக்கட்டும் என்று இந்த ஒன்றை மாத்திரம் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
"ஏனைய பிரதிகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது போனாலும் இந்தப்பிரதி என்னிடம் சுந்தரி ரீச்சரின் நினைவுகளோடு எப்போதும் இருக்கும்." என்று மனைவியிடம் சொன்னபோது அவளிடமிருந்து நீண்ட பெருமூச்சு வந்தது.
குழந்தையுள்ளம் படைத்து குழந்தைகளை நேசித்த அந்த செளந்தர்ய சுந்தரி ரிச்சரின் பெருமூச்சு அடங்கிவிட்டாலும் நினைவுப்பெருவெளியில் அந்த மூச்சு அடங்காமல் பரவிக்கொண்டிருக்கும்.
ஆளையாள் ബ്രങ്ങ ஆளிலா விமானம் அழித்திட முனையும் வேளைக்கேற்ப விளைந்திடும் செயலால் ஆளிலா உலகை ஆக்கிடுமாமே!
ஆளிலாயுலகை ஆட்டிப் படைப்போர் நாளெலாம் காத்தும் ஆள்வதெதனை கூளுக்கா மீசைக்கா கூர்ந்து கவனி
தாளிட்ட கதவை திறந்திடத்தட்டுவர்!
- கவிஞர் ஏ.இக்பால்
இதழ் 50
LO
GT
岳
f
ଗT
LO
U
(通
60

Page 23
p Tத ['' [၃60
5ଗ0Tରା
6OGT
முச்சு அந்த
ந.இரவீந்திரன்
இங்கு எமது பிரதான பேசுபொருள் தமிழில்
மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் சவால்கள் எனும்வகையில், அதற்கான வரலாற்றோட்டத்தை மிக சுருக்கமாகப் பார்த்து, இன்று முகங்கொள்ளுப பிரச்சனைகளை (அது கண்ணோட்டம் சார்ந்தது எனும்வகையில் அதனை) விரிவாகப் பார்ப்பது உகந்தது மார்க்சியத் திறனாய்வு தமிழியலுக்கு வழங்கிய பங்களிப்பை முதல் பகுதி பேசும். இரண்டாம் பகுதியில் இந்தச் செல்நெறிக்கான நெருக்கடியை அலசுவோம் பிரச்சனைகளும், அதன் பேறான இடர்ப்பாடுகளிலிருந்து மீளக் கண்டடைந்து வரிக்கவேண்டிய பார்வை: தெளிவும், அதன்வழியேயான செயற்பாட்டு வடிவமுL குறித்து இறுதியில் அலசுவோம்.
1)சாதனைகள்
உண்மையில் மார்க்சிய ஆய்வுகள் தமிழியலில் பெறும் முக்கியத்துவத்துடன் ஒப்பிடும்போது மார்க்சிய நோக்கிலான விமரிசனங்கள் போதிய அளவு இல்லை எனும் குற்றச்சாட்டு கவனிப்புக்குரியது. இங்கு ஆய்வைக் காட்டிலும் விமரிசனமே அதிக அக்கறைக்குரியது அதேவேளை, விமரிசனப் பார்வைக்கு உதவிய வகையில் மார்க்சிய ஆய்வுக் கண்ணோட்டமும் கவனிப்புக குரியது.
தொ.மு.சி.ரகுநாதன், முத்தையா, வானமாமலை கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரது மார்க்சியத்
ஜீவநதி
 

திறனாய்வு பிரயோகிக்கப்படுவதற்கு முன்னர்
இலக்கியத்தை ரசனை அடிப்படையில் அணுகுவதே திறனாய்வாகக் கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாகக் கொண்டு கூட்டிப் பொருள் கூறுவதும் இதன்பாற்பட்ட தாய் இருந்தது. ரசிகமணி டி.கே.சிதம்பரனார் முதல் ரசிகமணி கனகசெந்திநாதன் வரை இவ்வகைத் திறனாய்வில் கைதேர்ந்தவர்களாய் இருந்தனர். பழம்பெரும் இலக்கியப் பனுவல்களை மட்டுமன்றி நவீன படைப்புகளையுங்கூட அவற்றின் ரசனையை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதோடு அமைதி கொள்வது இவர்களுக்குப் போதுமானதாக அமைந்தது.
இத் தகைய ரசனை மோகம் அனர் று மேலோங்கிவந்த ஆதிக்கசக்திகளது இந்தியத் தேசியத்தை ஏற்புடையதாக்குவதாக அமைந்தது. இதனை முறியடிக்கும் எதிர்த்தேசிய மனப்பாங்கோடு எழுச்சியுற்ற திராவிட அரசியலும் மாற்றுப் பிரதி களைத் திராவிட உணர்வோடு முன்வைப்பதாக அமைந்ததேயன்றி ரசனை மனப்பாங்கைக் கடந்து புதிய தளங்களுக்கு விரிவாக்கம் கொள்ள இயல வில்லை. முந்தியவர்களுக்கு கம்பராமாயணம் பிரதான பிரதியெனில் திராவிடர் இயக்கம் சிலப்பதி காரத்தை முன்னணிக்குரிய படைப்பாக நிறுத்தியது. இவர்கள் போற்றும் நவீன படைப்புகளும் அடுக்கு மொழிகளுடன அலங் கார நடையை ப் போற்றுமளவுக்கு சமூகப் பிரச்சனைகளுக்கோ
இதழ் 50

Page 24
பெறுமா னங் களுக் கோ அதக அழுத் தம கொடுத்ததில் லை(ஒப்பீட்டுரீதியில் பிராமணத் தேசியத் தைவிட திராவிடத் தேசியம் சமூக ஊடாட்டங்களை அதிகமாய் வெளிப்படுத்தியிருந்ததை வலியுறுத்துவது அவசியம்),
இத்தகைய போக்குகள் நிலவிய சூழலில் தொ.மு.சி.ரகுநாதன், முத்தையா, வானமாமலை போன்றோர் சிலம்பின் பின்புலத்தையும் - கம்ப ராமாயணம் இலங்கையைச் சோழர் ஆக்கிரமித்திருந்த காலப்படைப்பாக எவ்வாறு வெளிப்படக் காணலாம் என்பதையும் பட்டவர்த்தனமாய்க் காட்டுகிறவர்களாக இருந்தனர். பழம்பெரும் படைப்புகளையும் நவீன ஆக்கங்களையும் அவையவற்றுக்கான சமூகப் பின்புலத் தோடும் வரலாற்றுக் கட்டங்களோடும் இணைத்துப்பார்க்கும் ஆய்வு முறையியலை இந்த மார்க்சியத் திறனாய்வாளர்கள் முன்வைத்தனர். இதன்பேறாக நெசவுத் தொழிலாளர்களது வாழ்வையும் போராட்டங்களையும் பேசும் தோ.மு.சி.யின் "பஞ்சும் பசியும்" எனும் தொழிலாளி வர்க்க முதல் நாவல் தோன்ற இயலுமாயிற்று.
தமிழகத்தில் பிராமணத்தேசியம், திராவிடத் தேசியம் என்பவற்றின் வெளிப்பாடான ரசனைத் திறனாய் வுகளின் போதாமைகளை வர் க் கப் பார்வையில் மார்க்சியத் திறனாய்வாளர்கள் இவ்வகை யில் வெளிப்படுத்தியபோது இளைய தலைமுறையினர் அதன்பால் ஈர்க்கப்பட்டு புதிய செல்நெறியொன்று வளர ஏதுவாயிற்று; இருப்பினும், வரலாற்றின் எழுச்சி நிலையில் இந்தியத் தேசியம்(பிராமணத் தேசியம்), தமிழ்த் தேசியம் (திராவிடத்தேசியம்) என்பனவே காணப்பட்டன. இதனோடு ஒப்பிடும்போது ஐம்பதாம் ஆண்டுகளில் இலங்கையில் தோற்றம்பெற்று வளர்ந்த மார்க்சியத் திறனாய்வு தமிழியலின் பிரதான செல் நெறியாக இங்கு வெளிப் பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன் விமர்சன-ஆய்வியல் ஆளுமைகளாக வெளிக்கிளம்பிய கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழகத்திலும் கூட முதன்மைக் கணிப்புக்குரியவர்களாய்த்துலங்கினர்.
எந்தவொரு படைப் பையும் எந்த வகை (மதத்துக்குரிய பிராமணத்தேசிய அல்லது தமிழ்த்தாய் வணக்கத்துக்கான திராவிடத் தேசியப்) புனிதங் களுக்குள் மட்டுப்படுத்திப் பார்க்காமல் பாட்டாளிவர்க்க உலக நோக்கில் பகுத்தாராய்ந்து அதன் சமூக உள்ளடக்கங்களை வெளிக்கொணர்வதாக மார்க்சியத் திறனாய்வு அமைந்தது. தமிழரின் முதற் பொற்காலம் எனத் திராவிடரியக்கம் புளகாகிதங்கொண்ட சங்க
ஜீவநதி 2.

இலக்கியம் என்பது, தீயிடலும் கொலைகளும் மலிந்து ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம் பெற்ற படைப்பு வெளிப்பாடு எனக் காட்டினர் மார்க்சியத் திறனாய்வாளர்கள். பக்திப் பரவசத்துக் குரியது எனப் பிராமணத்தேசியம் கொண்டாடிய திருமுறைகளும் பிரபந்தங்களும் நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம்பெறப் போராடிய சமூகமாற்ற அரசியல் பண்பாட்டு இயக்கத்தின் இலக்கிய வெளிப்பாடுகள் எனக்காட்டினர்.
பாரதி முதல் வானம்பாடிகள் வரையானோர், சோமசுந் தரப் புலவர் முதல் முருகையன் வரையானோர் தேசிய உணர்வோடு நவீன இலக்கிய வெளிப்பாட்டை வழங்கியவாறினை - பாரதிதாசன் முதல் மஹாகவி வரை தமிழ்த் தேசியத்தை முற்போக்கு அடையாளங்களுடன் வெளிப்படுத்த முனையும்போது தேசியவாத முடக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும் மார்க்சியத் திறனாய்வு வெளிச்சம் போட்டுக் காட்டி யிருந்தது. இந்த விமரிசனப் பட்டைதீட்டல் வாயிலாக மக்கள் இலக்கியம் விருத்திபெறுவதற்கு அடிகோலினர். இலங்கையில் ஐம்பதாம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற முற்போக்கு இலக்கிய இயக்கம் தமிழ்ப் படைப்புலகத்துக்குப் புதிய பரிமாணங்களை வழங்கு வதற்கு இந்த மார்க்சியத் திறனாய்வு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது. மார்க்சியர்கள் வெறும் வர்க்கம் பற்றி மட்டுமே அக்கறை கொள்வர் என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை மார்க்சியர்கள் தலைமை யேற்று இங்கே நடாத்தியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மைத் தமிழர் மஹாசபை என ஒரே அமைப்பாக்கம் கொள்ளலும், சாதியத் தகர்ப்பை இலட்சியமாகக் கொள்ளத்தக்க ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கம் பெறத்தக்க தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் இங்கே உருவாக இயலுமாயிற்று. இதற்கும் சரி, எந்தவொரு சாதியும் எதிராகக் கருதப்படாமல் சாதியம் தகர்க்கப்படுவதே இலட்சியம் என வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை முன்னெடுக்க இயலுமானதற்கும் சரி மார்க்சிய வழிகாட்டலே இங்கு அடிப்படையாக அமைந்தது என்பது அழுத்தியுரைக்க அவசியமான ஒன்று. சாதிய வாதம் தலை தூக்காமைக்கு அதன் பாட்டாளிவர்க்க உலக நோக்கே அடிப்படைக் காரணமானது(அத்தகைய பார்வையற்று இந்தியாவில் பெரியாரியமும் அம்பேத்கரியமும் செயற்பட்டபோது, சாதிமுறைமையை வரலாற்றுப் பொருள் முதல் வாதக் கண ணோட்டத்தில்
இதழ் 50
L

Page 25
அணுகத்தவறினர்; சாதியத்தைப் புரிந்துகொள்வதற்கு அவை பங்களிப்பை நல்கியபோதிலும், இந்த எல்லைப்பாட்டுடன் சாதியொழிப்புக்காக முனைந்த போது) பிராமணியத்தை எதிரியாக முன்னிறுத்தவும் தவிர்க்கவியலாதவகையில் பிராமணர்கள் எதிரி களாகப் பார்க்கப்படும் நிர்ப்பந்தம் நடைமுறையில் நிதர்சனமாயிற்று. ஆகவும் ஒவ்வொரு சாதியும் அருகிலுள்ள மற்றொரு சாதியை எதிரியாகக் காணும் நிலை ஏற்பட்டது. இதன்பேறாக, சாதியத் தகர்ப்புச் குறிக்கோள் திசைமாறிச் சாதியம் வலுப்பெறவே பெரியாரிடமும் அம்பேத்கரிடமும் வழிகோலின).
சாதியத் தகர்ப்புக்கான போராட்ட்ங்களை இங்கே படைப்பாக்கம் செய்கையில் சாதியவாதம் மேற்கிளம்புமாயின் அதையுங் கூட மார்க்சியத் திறனாய்வு தோலுரித்துக் காட்டத் தவறியதில்லை. "பஞ்சமர்" முதல் "பஞ்சகோணங்கள்” நாவல்கள் வரை டானியல் படைப்பு முயற்சிகளில் சாதியவாதம் தலைதூக்குகிறது எனும் விமரிசனத்தை மார்க்சிய விமரிசகர்கள் முன்வைத்தனர். சாதியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அனுபவங்களை ஒரு கொம்யூனிஸ்ட்டாக அவர்களோடு பங்கேற்று வாழ்ந்து இயங்கிப் பட்டறிவு பெற்றவன் என்கிறவகையில் பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் நாவல்களாக எழுதுகிறேனேயல்லாமல் சாதியவாத அடிப்படையில் அல்ல என மீண்டும் மீண்டும் டானியல் வலியுறுத்தத் தவறவில்லை. இருப்பினும் இந்த விமரிசனங்களில் உண்மையில்லாமலும் இல்லை; அதனை மனங் கொண்டு எவ்வகையிலும் சாதியவாதம் தலைதூக்காத வகையில் தனது சொந்தக் கிராமத்தின் சமூக அசைவியக்கப்போக்கை 'கானல்" எனும் நாவலாக டானியல் படைப்பாக்கித் தந்தமையை அவதானிக் கலாம். அவரது உன்னத பங்களிப்பாக அந்த நாவல் அமைந்துள்ளது.
இலங்கையில் இவ்வகையில் மார்க்சியத்துக் கான பரிமாணத்தை ஏற்படுத்தித் தந்த அந்த இயங் காற்றலுக்குரிய இலங்கை மார்க்சியர்கள் பின்னர் பிரதான செல்நெறியாக வளர்ந்த தமிழினத் தேசியம் பற்றிய புரிதலின்றி இருந்தனர். தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் இங்குபோல் பிரதான நிலையில் கவனிக்கப்பட்டதில்லை. இதன் பேறாக இங்கே இனத்தேசியமும், அங்கே தலித்தியமும் (சாதித் தேசியமும்) மார்க்சிய இயக்கங்களுக்கு சவாலாக மாறி, எண்பதுகளின் புதிய எழுச்சிகள் மார்க்சியத்தைக் கேள்விக்குள்ளாக்குவனவாக அமைந்தன.
ஜீவநதி

மரபுப்பிடிக்குள் கட்டுப்பட்டு புழைமை பேணும் பாரம்பையத்தில் மூழ்கியிருந்த தமிழ்ச் சமூகத்தையும் இலக்கியத்தையும் அதிர்வுக்குள்ளாக்கிய மார்க்சிய இயக்கம் இவ்வகையில் “பழைமையாகும்" நிலை எண்பதுகளைத் தொடர்ந்த செல்நெறியாக ஆனது: தலித்தியம், இனத்தேசியம், பெண்ணியம் என்பன எண்பதுகளைத் தொடர்ந்து பிரதான பேசுபொருள் களாயின. அறுபதாம் ஆண்டுகளில் பழைமை வாதத்துக்கு எதிரான மரபுப் போராட்டமும் தேசிய இலக்கியமும் பிரதான இலக்கிய விவாதப் பொருள் களாகும். இதன்பேறாக வாழ்வோடு சம்பந்தமின்றி இயற்கை எழிலைப் பாடுபொருளாகக்கொள்வதும் ரசனை மனப்பாங்கில் திழைப்பதும் தகர்க்கப்பட்டு, வாழும் சொந்த மக்களைப் பேசுபொருளாக்கும் படைப்பாக்கங்கள் எழுச்சிபெற்றன. பொதுப்படையான இலக்கியம் என்பதைக் கடந்து பிரதேசிய இலக்கியங்கள் - மண்வாசனைப் படைப்பாக்கங்கள் தோற்றம் பெற்றன. இதைச் சாதித்த மார்க்சிய இயக்கமும் புதிய போக்குகளின் வீச்சில் தன்னைப் புடமிடுவது அவசியமாயிற்று.
2) நெருக்கடி
எண்பதாம் ஆண்டுகளில் இலங்கையிலும் தமிழகத்திலும் மட்டுமல்ல, உலக அளவிலேயே மார்க்சிய இயக்கம் நெருக்கடியை முகங்கொண்டது. அறுபதுகளின் இறுதிக்கூறில் பிரான்சில் மாணவர் போராட்டங்கள், பாட்டாளி வர்க்கமல்லாத தலைமைச் சக்திகள் பற்றிப் பேசுகிற நிலையை உருவாக்கிற்று. அதற்கான நீடிப்பில் இங்கே, வர்க்கங்கள் பற்றிப் பேசுவது பொருளற்றது - இனத்தேசியம், தலித்தியம், பெண்ணியம் போன்றன பற்றியே இலக்கியங்களும் விமரிசகர்களும் சமூக இயக்கங்களும் கவனங் கொள்ள அவசியமேற்பட்டுள்ளது என வலியுறுத்தப் பட்டது.
எமது சமூக அமைப்பில் சாதிமுறை பெறும் முக்கியத்துவத்தை(கோட்பாட்டு அளவிலன்றி நடை முறையிலேனும்) விளங்கிக்கொண்ட இலங்கையில் இனத்தேசியம் கவனிக்கப்படாமையும், தமிழகத்தில் சாதி இழிவுகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் மார்க்சிய இயக்கங்களில் இருந்த தவறென்பதை ஏற்கனவே கண்டுள்ளோம். இதன்பேறாக, இங்கே இனத்தேசியம் யுத்தமாக பரிணமித்தமையும் - தமிழகத்தில் தலித்தியவாதம் சாதி மோதல் களையும் சாதிக் கட்சிகளை வளர்த்தமையும் எத்தகைய வளர்ச் சிகளை
இதழ் 50

Page 26
ஏற்படுத்தின? முன்னர் மூன்று தசாப்தங்கள் மார்க்சியத் திறனாய்வு ஏற்படுத்திய சாதனைகளுடன் ஒப்பிடக் கூடியவாறு இதற்குரிய மூன்று தசாப்தங்களில் எதுவும் எட்டப்படவில்லை; மட்டுமல்லாமல் தோல்விகளும் பின்னடைவுகளுமே ஏற்பட்டன. இலங்கையில் யுத்தத்தின் தோல்வி வெளிப்படையானது. அவ்வாறே தமிழகத்திலும் தலித்தியம் தோல்வியுற்றமை குறித்து தலித் சிந்தனையாளர்களே இன்று விமர்சிக்க முற்பட்டுள்ளனர். தலித்தியத்தினால் குறைந்தபட்சம் தலித் சாதிகளையேனும் ஐக்கியப்படுத்த இயலவில்லை, ஒரடிகூட முன்னேற்றம் ஏற்படவில்லை, மதவாதஇனவாத சக்திகளோடு தலித் கட்சிகள் கூட்டமைப்பதைத் தடுக்க இயலவில்லை என்ற விமரிசனங்கள் தலித் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையில் நாற்பதாம் ஆண்டுகளில் இருந்தே ஒடுக்கப்பட்ட(தலித்) மக்கள் மார்க்சிய வழிகாட்டலுடன் ஒரே அமைப்பாக ஒன்றிணைய இயலுமானதோடு, மதவாத இனவாத சக்திகள் எவற்றுக்கும் விட்டுக் கொடுக்காமல் மக்கள் விடுதலை என்ற இலக்கோடு அவை இயங்க முடிந்தமைக்கு வர்க்கப் பார்வை சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறது. அதேவேளை இந்த நோக்குடன், வர்க்க இருப்பு-வர்க்கப்பிரச்சனை என்பவற்றைக் கடந்து, சாதி-தேசம் என்பவற்றின் இருப்பு இன்னொருவகையானது, அவ்வாறே பெண் ஒடுக்கு முறை வர்க்க பேதங்களுடன் மேலதிகமாயுள்ள இன்னொரு பரிமாணத்துக்குரியது என்பவற்றைக் காணத்தவறுகிற அவலம் இங்கும் நேர்ந்தது. மார்க்சிய இயங்கியல்- பொருள்முதல்வாதச் சிந்தனைமுறை என்பதை மறந்து ஏதோ சில முடிந்த முடிவான பெறுமானங்கள் மார்க்சியத்திடம் உண்டு என்ற தவறான முன்முடிவு காரணமாக எமது சமூக நிதர்சனங்களைச் சரியாக இனங்காண இயலாத தடைகள் எம்மிடம் உண்டு. வர்க்கப்போராட்டம் ஏடறிந்த வரலாறு முழுமை யிலும் இருந்துள்ளது; இதனை, இழப்பதற்கு எதுவுமற்றதான பாட்டாளி வர்க்கம் முடிவுக்குக் கொண்டுவரும். பெரும்பான்மையினரான பாட்டாளி களின் உழைப்பால் பெருகிய மூலதன விருத்தியே முதலாளித்துவத்தின் அபார வளர்ச்சிக்கு அடிப்படை அந்தவகையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திசாதனங்கள் ஒருசில முதலாளிகளால் அபகரிக்கப்பட்டுள்ள முறையற்ற சமூக நியதி இன்று நிலவுகிறது - அதனைத் தகர்த்து, சமூகப் படைப்பான உற்பத்திசாதனங்களைச் சமூகத்துக்குரியதாக்கும் பணியையே அரசுடைமையாக்கும் செயற்பாடு வாயிலாக பாட்டாளிவர்க்க அரசு நிறைவு செய்ய
ஜீவநதி - 22

வுள்ளது. சுரண்டல் நிலவிய காலம் முழுமையும், மிகச் சிறுபான்மையினரான சுரண் டலாளர்கள் மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களை ஒடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கருவியே அரசு அதனைத் தலைகீழாக்கி, சுரண்டலாளர்களான மிகச் சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்கள் சார்பாக ஒடுக்கும் அரை-அரசை நடைமுறையாக்கி, சுரண்டல் முடிவுக்கு வருகிறவரை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து, பூரண பொதுவுடைமை சாத்தியமானதும் அரசு உலர்ந்து உதிர்ந்துபோக வகைசெய்து மண்ணில் நல்ல வண்ணம் மாந்தர்கள் பரஸ்பர புரிந்துணர்வோடும் நல்லிணக்கங்களோடும் வாழ ஏற்றதான வர்க்கபேத ஒழிப்பு முயற்சியே பாட்டாளிவர்க்க முன்னணிப் படையான கொம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பது மார்க்சியத்தின் அடிப்படை தனது பங்களிப்பு எது என்பதைக் குறித்து மார்க்ஸ் பேசும்போது இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஆயினும், தொடர்ந்த ஆய்வு முயற்சிகளில் (குறிப்பாக, மூலதனம் பற்றிய ஆழமான தேடலில்) வர்க்கப் பிளவுறாத சமூக முறை குறித்து அவர் கண்டு காட்டியுள்ளார். ஐரோப்பாவில் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவுற்று ஏற்றத்தாழ்வுச் சுரண்டல் சமூக அமைப்பாக்கம் நடந்தேறியது; அவ்வாறன்றி ஆசியாவில், முன்னேறிய இனமரபுக்குழுக்கள் மலாண்மை பெற்று சுரண்டுவதற்கு ஏற்றதாக ஏனைய இனமரபுக்குழுக்கள் ஒடுக்கப்பட்டன; அதன் பேறானதே சாதிகள் என்பது மார்க்ஸ் எடுத்துக்காட்டியிருந்த உண்மை. வேறு சந்தர்ப்பங்களில் ஆசிய உற்பத்தி முறையின் தனித்துவப் பணி புகள் குறித்துப் பேசியுள்ளார். ஆசியாவில் மதங்கள் பெறும் முக்கியத்துவம் குறித்தும், முகமது நபியால் மதம் வாயிலாக சமூகமாற்றம் ஒன்றைச் சாதிக்க இயலுமா யிருந்தது எப்படி எனும் கேள்வியையும் எழுப்பி, அதுகுறித்து ஆய்வு செய்யவேண்டுமென மார்க்ஸ் வலியுறுத்தியிருந்தார்.
இவற்றைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்யும் அவகாசம் மார்க்சுக்கு அமையவில்லை. வர்க்கப் பிளவடைந்து, கூர்மையான அரசியல் புரட்சிகளூடாக சமூகமாற்றங்களைச் சாத்தியமாக்கி வந்த ஐரோப்பா வில் புத்திய சமூக சக்தியான பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தைச் சாதியமாக்கும் வாய்ப்பு இன்னும் இருந்தநிலையில், வர்க்கங்கள் குறித்தும் - அரசியல் புரட்சிகள் பற்றியும் மென்மேலும் ஆய்வுகளை விருத்தி செய்ய வேண்டியிருந்தமையால், சாதிகள் குறித்தோ
இதழ் 50

Page 27
LOT
Iւմ,
56b
பும்
கப்
|LJ T
கம்
றும் U6)
த்தி
தா
50
மதங்கள் வாயிலாக(பண்பாட்டுப் புரட்சியூடாக) சமூக மாற்றச் சாத்தியம் குறித்தோ ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள இயலாமற்போயிற்று. அவரது எதிர் பார்ப்புக்கு அமைவாக ருஸ்யப்புரட்சி சாத்தியமாகி யிருந்த போதிலும் அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுமையையும் பாட்டாளிவர்க்கப் புரட்சி சோசலிச மாக மாற்றும் என்ற எதிவுர்கூறல் நிகழவில்லை.
UTLLTelfle) i 535L LDLöf 3 (3DTL LT676 சுரண்டலை ஒழித்துக்கட்டும்போது குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்று அங்கும் சோசலிசத்துக்கான வாய்ப்
பிருப்பதைக் கூறிய அதேவேளை, முன்னதாக அந்தக் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் வெற்றியீட்டத்தக்க சாத்தியத்தையும் மார்க் ஸ் கூறியிருந்தார். இருப்பினும், ஏகாதிபத்திய வளர்ச்சி ஏற்பட்டு லெனினிசப் பரிணமிப்பைப் பெற்ற நிலையில் தேசிய விடுதலைப் புரட்சிகள் நேரடியாக சோசலிசக் கட்டுமானங்களை ஏற்படுத்த இயலும் என்ற முன்முடிவை லெனின் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்த வளர்ச்சி நிலையை மார்க்ஸ் காண இயல வில்லை. அந்தவகையில் மார்க்சியத்தின் அடிப்படை கோசமாக "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்பது அமைய, அதன்பரிணமிப்பான லெனினிசம் "உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்" எனப் புதிய சூழல் மாற்றத்தில் சமூக மாற்ற சக்தியாக பாட்டாளிவர்க்கப் புரட்சியோடு தேசிய விடுதலைப் புரட்சியையும் இணைத்துக்கான வகையேற்பட்டது.
தேசவிடுதலைப் போராட்டம் வாயிலாக சோசலிசத்தைக் கட்டமைக்கும் நம்பிக்கையோடு 1945 இல் முதல் சுதந்திரப் பிரகடனத்தை ஹோசிமின்
ஜீவநதி
 

தலைமையில் வியட்நாம் பாட்டாளி வர்க்க முன்னணிப்படை முன்மொழிந்தது; தொடர்ந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளால் வியட்நாம் சிக்கல்களை எதிர்நோக்கியபோது 1949 இன் மக்கள் சீனப் பிரகடனம் பல சாதனைகளை எட்ட வாய்ப் பளித்தது. உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட சோசலிச சீனாவும், உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பையுடையதும் முதலாவது சோசலிச நாடுமாகிய சோவியத் யூனியனும் கோட்பாட்டுப் பிளவுற்று அறுபதுகளின் நடுக்கூறிலிருந்து சோசலிச முகாம் இருமுகப்பட்ட போது மார்க்சியம் ஆரோக் கரியமான வளர்ச் சரியை எட்டுவதற்குமாறாக, எரிந்த கட்சிஎரியாத கட்சி விவாதத்துக் குள் மாட்டுப்பட்டுப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்தது.
உண்மையில் மார்க்சியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துவ தாக சோவியத்-சீனப் பிளவு அமைந்தது. சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி வலது திரிபுவாதத்தை முன்னிறுத்தியபோது அதற்கு எதிராக மார்க்சிய-லெனினி சத்தைப் பாதுகாக்கும் கோட்பாட்டு விவாதத்தை முன்னிறுத்திய சீனக்
கொம்யூனிஸ்ட் கட்சி காலவோட்டத்தில் அதிதீவிர இடதுசாரித் திரிபுவாதத்தைச் சரிவைச் சந்தித்தது. உலகநாடுகள் எங்கும் பாராளுமன்றம் வாயிலாக சோசலிசத்தை வென்றெடுத்தல் அல்லது வன்முறை வழிபாடு எனப் புரட்சிகர சக்திகள் பிளவுண்டு போயின. சோவியத் சார்பு-சீன சார்பு என்பன விகாரப்பட்டு ஒவ்வொரு வரும் ருஸ்யப் புரட்சி அல்லது சீனப் புரட்சி பற்றிய வியாக்கியானங்களில் கைதேர்ந்தவர்களாக ஆகினரே யல்லாமல், தத்தமது நாட்டு புறநிலை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சிகள் பற்றி ஆராய்வதில் அக்கறையற்றவர்களாயினர்; அந்த நாடுகள்போல இங்கில்லையே என்ற பிலாக்கணம் வேறு. சொந்தச் சமூக சக்திகள் பற்றிய புரிதலின்றி, ஏற்கனவே நடந்தேறிய அந்த நாடுகளின் புரட்சிகள் குறித்து வித்துவக் காய்ச்சல் விவாதம் புரிவோரால் தமது சொந்த நாடுகளில் சமூக மாற்றப் புரட்சியை எவ்வாறு முன்னெடுக்க இயலும்? ஓரளவுக்கு சாத்தியப்பட்ட சில நாடுகளின் சாதனைகளையும் அந்த நாடுகளின் விவாதமும் போட்டாபோட்டியும் முடக்கிப் போட்டது. இன்று தென்னமெரிக்க நாடுகளின் மார்க்சிய அணிகள் இப்பின்னடைவிலிருந்து மீண்டு புதிய வளர்ச்சிகளை
இதழ் 50

Page 28
எட்டும் நம்பிக்கை ஒளிக் கீற்றுகளைக் காட்டி நிற்கின்றன. தவிர, மார்க்சியத்திலிருந்து விலகி முன்னெடுக் கப் பட்ட எந்தவொரு முயற்சியும் படுமோசமான பின்னடைவுகளையே தந்த அனுபவம் காரணமாக, மீண்டும் மார்க்சிய-லெனினிசத்தைச் சரியான புரிதலுடன் கற்றுக்கொண்டு தத்தமது நாட்டு நிதர்சன நிலைமைகளுக்கு ஏற்ப அதனை எவ்வாறு பிரயோகிப்பது எனும் தேடலுக்குரிய ஆரோக்கியமான நிலை உலகெங்கும் இன்று ஏற்பட்டுவரக் காண்கிறோம்.
3)பிரச்சனைகளும் தீர்வுகளும் மார்க்சியத்தை மிகுந்த பற்றுறுதியுடன் கையேற்று, இயலுமான தளங்களில் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வீறுமிக்க போர்க்குணத்தையும் அர்ப்பணிப்பு களையும் வெளிப்படுத்தியதன் வாயிலாக செழுமை மிக்க வரலாற்று அனுபவங்களை இலங்கை, இந்தியா போன்ற எமது நாடுகளின் மார்க்சிய முன்னோடிகள் எமக்கு வழங்கிச்சென்றுள்ளார்கள். அதன் இணை வளர்ச்சியாகப் புலமைத் தளத்திலும் இலக்கியக் களத்திலும் மார்க்சியத் திறனாய்வு ஆரோக்கியமான வளர்ச்சி நிலைகளைச் சாத்தியமாக்கியிருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவங்கள் எமது சமூக அமைப்பைப் புரிந்துகொள்வதில் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை முன்னிறுத்தியுள்ளது.
சாதிப் பிரச்சனை அடிப்படையில் தேசியப் பிரச்சனை எனக் கைலாசபதி காட்டியிருந்தார். தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுக் கிறோம் என்றவர்கள் அந்தச் சாதியப் பிரச்சனைக்கு எதிர்முகம் காட்டியபோது எமது தேசியம் ஆளும் சாதியினதும் ஒடுக்கப்பட்ட சாதியினதும் எனப் பிளவுபட்டிருக்கும் யதார்த்தத்தை உணர்த்தியது. ஈழத் தமிழ்த் தேசிய முன்னெடுப்பு ஆளும் சாதித் தேசியமாக(யாழ் வெள்ளாளத் தேசியமாக) வடிவம் பெற்றமையால் ஐக்கியப்படுத்த வேண்டியவர்களைப் பகைவர்களாக்கிக் கொண்டு, இறுதியில் அவலமான முடிவைச் சந்திக்க நேர்ந்தது. இந்த வரலாற்றுப் படிப்பினையின் பேறானதே இரட்டைத் தேசியக் கோட்பாடு,
இந்த அனுபவத்தோடு இந்திய சுதந்திரப் போராட்ட கால வரலாற்றை மீட்டுப்பார்க்கலாம். இந்திய கொங்கிரஸ் கட்சி உதயமானபோது, அதனைப் பிராமண தேசியமாய் ஜோதிராவ் புலேயும் அயோத்தி தாசரும் அடையாளப்படுத்தியமையை இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும், முப்பதாம் ஆண்டுகளில் அம்பேத்கர் முன்னெடுத்த தலித்
ஜீவநதி 2.

அரசியலையும் பெரியாரின் திராவிடரியக்கத்தையும் எதிர்த் தேசியமாக விளங்கிக் கொள்வோம். இவ்வகையில் முன்னெடுக்கப்படும் இரட்டைத் தேசியக் கோட்பாடு ஆரோக்கியமான விவாதப் பொருளாக இனி று ஆக யுள் ள போதும் நடைமுறைப் பிரயோகத்துக்கான சக்தியெனும் வகையில் மார்க்சியக் கட்சிகள் இதனைப் பாராமுக மாக ஒதுக்கிவைத்து மார்க்ஸ், லெனின், மாஒ சேதுங் போன்றோரது வசனங்களைப் பாராயணம் செய்வதிலேயே காலங்களிப்பதைக் காண்கிறோம்.
வர்க்கப்பிளவடைந்த ஐரோப்பாவின் தேசியக் கட்டமைப்பைப் போலன்றிச் சாதிச் சமூகத்தில் தேசியம் பிளவடைந்துள்ளது என்பதை மார்க்சிய மூலவர்கள் எழுதிவைத்துவிட்டு போகவில்லைத்தான்; புனித நூலில் கண்டுள்ளவாறு ஒழுகுவதற்கு மார்க்சியம் இன்னுமொரு மதமல்ல, மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங்களில் நேரடியாக இல்லாத போதிலும் மார்க்சியச் சிந்தனை முறை எமது சமூகங் களில் ஆதிக்க சாதி-ஒடுக்கப்பட்ட சாதித்தேசியங் களாகப் பிளவுபட்ட யதார்த்த நிலையைக் கண்டுணர வழிப்படுத்தி, இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வந்தடைய ஆற்றுப்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஆசிய உற்பத்திமுறை என்பது இனமரபுக்குழு மேலாண்மையால் சுரண்டலைச் சாத்தியமாக்கி சாதி அமைப்புத் தோற்றம்பெற்றதன் பேறு என மார்க்ஸ் கண்டு காட்டியபோதே, வர்க்க ஒடுக்குமுறை மட்டு மன்றி சமூக வர்க்கமாக ஒடுக்கப்படுதலும் மற்றொரு நியதி என வெளிப்படுத்தியிருந்தார். சமூக வர்க்க மாய்ச் சுரண்டப்படுகின்ற ஒடுக்கப்படும் தேசம் விடுதலைப் போராட்ட வெற்றிவாயிலாக சோசலிசப் புரட்சியை சாத்தியமாக்க இயலும் என லெனின் காட்டியபோது எமது சமூக அமைப்புச் செல்நெறி களைப் புரிந்து கொள்ளும் இனி னுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.
மார்க்ஸ் ஆய்வுக்குட்படுத்த விரும்பிய முகமது நபி குறித்த பிரச்சனை, சாதியச் சமூகத்தில் காணப்படும் இனமரபுக்குழுத் தொடர்ச்சியானது தமக்கேயுரித்தான பண்பாட்டுக் கோலங்களில் சாதிக்குச் சாதி வேறுபாடு நிலவுதல் மற்றும் பண்பாட்டு நீடிப்பு நிலவுகிற காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை எனும் வேறுபட்ட கட்டமைப்பு பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே சாத்தியமாகும் சமூக அமைப்பு மாற்றங்களுக்கான வேறுபட்ட புரட்சியின் வடிவம் ஒன்று பற்றிக் கருத்துரைக்க வழிகோலியிருக்கும். அந்த முடிவினை மார்க்ஸ் கூறாதபோதிலும், அவர்
இதழ் 50
6)

Page 29
5եւկլb
ujë,
STTg5
LFG)
OT5
SOTLö
SUT5
p 50
எழுப்பிய வினாவும் தொடக்கிவைத்த சிந்தனை முறைமையும் எமக்கான சமூக மாற்ற வடிவம் பண்பாட்டுப் புரட்சி வகைப்பட்டது என நாம் கண்டடைய வழிப்படுத்துகிறது.
அரசியல் தீவிரத்துடன் இயங்கும் கட்சி அணிகள் கிரேக்க-ரோம் புரட்சியிலிருந்து பிரான்சிய-ருஸ்யசீனப் புரட்சிகள் வரையானவை குறித்த கற்றலுக்கு அழுத்தங் கொடுக்கும் அவசியம் ஏற்படுத்தியுள்ள தோற்ற மயக்கம் காரணமாக வர்க்க இருப்பை மட்டுமே பார்த்து சாதியமைப்பின் பிரத்தியேகத் தன்மை குறித்தும், இதன் மாற்றியமைத்தலுக்கு பண்பாட்டுப் புரட்சி அவசியம் என்பதையும் காண இயலாதவர் களாயுள்ளனர். புலமைத்தளத்திலும் பண்பாட்டுக் களங்களிலும் இயங்குவோருக்கு அத்தோற்றமயக்கத்தி லிருந்து மீண்டு எமது நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு விளக்கம்பெற்று புதிய மார்க்கத்தை வகுத்துக் காத்திரமான செயலாற்றலைச் சாத்தியமாக்கி ஏற்படும் அதிர்வினால் கட்சிகளும் தோற்ற மயக்கப் பின்னடைவைத் தகர்த்துக்கொண்டு புதிய வரலாறு படைக்கும் ஆற்றல் கைவரப்பெற இயலும்,
மார்க்சியக் கருத்தியல் உயிர் எனில், அதன் வழி நின்று சமூகமாற்றத்தை வென்றெடுக்கும் கட்சி அமைப்பு உடலாகும். புத்தூக்கம் பெறும் உயிர்த்துடிப்பு இல்லை யெனில் உடல் செத்த பிணமாகும், அல்லது அந்நிலை நோக்கிச் செல்லும் நோய்க்கூறுக்குரியதாகும். அந்த வகையில், சேடமிழுக்கும் நோய்க்கூறுடன் வறட்டுச் சுலோகங்களைப் பாராயணம் செயப் வோரை உயிர்த்துடிப்புமிக்க புதிய வளர்ச்சிக்கு இட்டுவர ஏற்ற பண்பாட்டு இயக்கங்கள் இங்கே உடனடி அவசியமாகும்.
கட்சி அமைப்புத் தொடர்பில் மார்க்சியத்துக்கு புது இரத்தம் பாய்ச்சும் தென்னமெரிக்க மார்க்சியர்கள் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்து, ஏற்ற புதிய மாற்றங்களையும் சாத்தியமாக்கி வருகின்றனர் ஜாரிஸ் ருஸ்யாவின் கொடுங்கோலாட்சிச் சூழலில் வடிவமைக்கப்பட்ட கட்சி வடிவம், குறைந்தபட்ச ஜனநாயகம் நிலவும் காலத்தில் அப்படியே பின்பற்றத் தக்கதல்ல என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் பண்பாட்டுப் புரட்சியைப் பிரதான வடிவமாகக் கொண்டுள்ள எமது சூழலுக்கு அமைவான கட்சி அமைப்புக் குறித்து எமக்கு மேலும் விரிவான ஆய்வுகள் அவசியமாகும். அதனை நடைமுறை அனுபவம் வாயிலாகக் கண்டறிய ஏற்றதாக, சாத்தியமான புதிய பண்பாட்டுத் தளங்களைக் கட்டமைக்க ஏற்ற காலம் முழுதாய்க் கனிந்துள்ளது.
ஜீவநதி

ஒரு பொழுதில். கண்ணிமைக்கும் பொழுதொன்றில்.
மலர் சொரிந்து உளம் சிலிர்த்த வசந்தம் மனதுறைந்து உடல் விறைக்கும் பனிவனமானது. பிணம் சிதைந்து நினம் ஒழுகும் பாணர் கிணறாயிற்று. சலிக்காத உழைப்பாளி, சாமர்த்தியம் கைகூட இன்முகம் மென்மொழியாக பொருள் காட்டி நயங் கூறி
உளம் நிறைத்து விலை போகச் செயும் தொழில் ஞானி
மாதுளை வித்தும், மாயப் பெருவிழியும் இதழ் பிரியா மென்மொழியும் உளம் மாய்க்கும் முறுவலும், மந்த மாருத மணமும் அந்தகார அம்மணத்தில் இமைசோர்ந்து துயர் சொரிந்தன. தொடர்ந்திருந்தால் தொலைந்திடும் டிசிபிலின் தொழிலக நாமம் நாறும் தொழிலார்க்குப் படிப்புணர்த்த தொழில் நீக்கி வீடனுப்பினர். ஸ்டோர் ரூமில் இவளோடு களிமேவிச் சூடேறி இணை சேர்ந்து சூல் சிந்தியவன் கறையற்றவனாம் மறுநாளும். ஒரு நாளும் தொழில் பறிபோகவேயில்லை இன்னும் அவ்விடத்தே அவன். சிந்தியவன் சுற்றவாளி கொணர்டவள் படுவேசியாம் இதுதான் உலகநீதி
எம்.கே.முருகானந்தன்
இதழ் 50

Page 30
"ஹலோ." எதிர்முனையில் பெண்குரல்.
எங்கேயோ எப்போதோ கேட்டகுரல். அவளாக இருக்குமோ?
அவள்தான் எப்போதோ வெளிநாடு சென்று 6LTC36IT
"கருணாகரன் தானே பேசுறீங்க? யார் பேசுற தெண்டு சொல்லுங்கோ பாப்பம்."
அவள்தான். அவளேதான். கண்டுகொண்டது
LD6019
"கிளிதானே?" "ஒமோம், கிளியேதான் லண்டனில் இருந்து வந்திருக்கிறேன். எங்கள் கல்லூரிக்கும் சென்றேன். கல்லூரி நூற்றாண்டு விழா மலரில் உங்கள் கட்டுரை இருந்தது பார்த்தேன். அந்தக்காலத்துக் கல்லூரி நாட் களை நினைவு மீட்டியிருக்கிறீர்கள். அதிபரிடமிருந்து உங்களது "ரெலிபோன்" நம்பரையும் பெற்றுக் கொண்டேன்."
அவளது பெயர் கண்ணம்மா, அந்தக் காலத்தில் எங்களது கல்லூரியில் எவருக்குமே இல்லாத பெயர் . அவளது தகப் பண் ஓர் ஆசிரியர் கவிஞர். பாரதிமேல் கொண்ட காதலால் அந்தப்
ஜீவநதி
 

தி.ஞானசேகரன்
பெயரைத் தனக்குச் சூட்டியதாக அவள் ஒருமுறை எனக்குச் சொன்னாள். பேசும்போது அவளது குரல் கீச்சிடும். அதனால் "கிளி" என்ற பட்டப் பெயர் அவளுக்கு வந்து விட்டது.
காலம் அவளது குரலில் மாற்றம் எதனையும் ஏற்படுத்திவிட
ପୌର୍ଗ060୬ରd.
கல்லூரியில் அவளுடன் ஒரேவகுப்பில் படித்த காலத்தில் அவளைச் சந்திக்கும் அநேகமான தருணங்களில் பாரதியாரின் கண்ணம்மா பாட்டில் உள்ள கவிதா வரிகளை சற்றே மாற்றிப் பாடி அவளைச் சீண்டுவேன்.
"கோலக் கிளியோசை உனது குரலினிமை யடி. வாலைக்குமரியடி கண்ணம்மா."
"இதென்ன, பாட்டின் ஒரு வரியை மட்டுமே மாத்தி மாத்தி உடைஞ்ச "றைக்கோட்" மாதிரி திரும் பத்திரும்பப் பாடுறியள். மீதியையும் பாடிக்காட்டுங் கோவன்" என்பாள்.
தொடர்ந்துவரும் அந்த வரிகளை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளுக்கு முன்னால் பாடியதில்லை.
அந்த நினைவுதான் இப்போது எனக்கு ஏற்பட்டது.
பாரதியாரின் அந்தக் கவிதா வரிகளை இப்போது இந்த முனையிலிருந்து பாடிக்காட்டலாமா?
மனசு ஒருகணம் துடித்தது. சீச்சி, இந்த வயசிலுமா. அவள் என்ன நினைப்பாள். மனசைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
"நான் எனது கண வருடன் இங்கு
இதழ் 50
ଗ|
ö门

Page 31
୨ରାଗୀt
SITT GñT.
FGLb. LJU JÜ
திவிட
படித்த
LOT 60T
LL26b
506|Të
faOLD
டுமே ாதிரி
j եւ Լճ
எந்தச்
06),
னக்கு
560) 6T.
DT?
இந்த
சைக்
p 50
வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் நாங்க லண்டன் திரும்புகிறோம். உங்களையும் ஒருக்கா வந்து பார்க்கலாமெண்டு நினைக்கிறன்."
கிளி அப் படிக் கூறியபோது, இந்திர பார்த்தசாரதி எழுதிய "கிருஷ்ணா கிருஷ்ணா” என் நாவல்தான் என்நினைவில் வந்தது. அந்த நாவலி கடைசிக்கட்டத்தில், கிருஷ்ணன் வயோதிபகாலத்தி இருக்கிறார். தான் இளமையில் சல்லாபித்து மகிழ்ந் ராதையை சந்திக்க விரும்பி பிருந்தாவனம் வருகிறா மந்தை மேய்த்துக் கொண்டிருந்த பிருந்தாவனத்து சிறுவர்களிடம் இராதையின் இருப் பிடத் ை விசாரிக்கிறார்.
"இராதைப் பாட்டியையா தேடிவந்தீங்க? தாத்தா?" என அந்தச் சிறுவர்கள் கேட்கின்றனர்.
கிருஷ்ணனுக் குப் பொறிதட்டுகிறது இளமையும் அழகும் நளினமும் நிறைந்த இராை இப்போது பாட்டியாகிவிட்டாளா?
"இல்லே, நான் தேடிண்டு வந்தது ஒரு சின்ன பொண்ணு, பாட்டியில்லே" என்று சொல்லிக்கொண்ே கிருஷ்ணன் இராதையைப் பார்க்காமலே திரும் விடுகிறார். அவளைப் பாட்டிக்கோலத்தில் பார்ப்பதற் அவரது மனசு இடந்தரவில்லை.
"மூப்பு, இளமை இவையெல்லாம் சரீரத்துக்கு தான். ஆத்மாவுக்கு இளமையில்லை, மூப்பில்லை அ நித்தியமானது" என்று கீதோபதேசம் செய் கிருஷ்ணனுக்கே இந்தத் தடுமாற்றம் என்றால்.
நான் கிளியிடம் கூறினேன், "நாளைக்கு காலைமை நாங்கள் குடும்பமாக வெளியே போகிறோ திரும் பி. வர இரண்டு நாளாகும். இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம்"
அடுத்த முனையில் பதில் இல்லை. ரிசீவை படீரென வைக்கும் சத்தம் கேட்டது.
அன்று இரவு சாப்பாட்டு மேசையில் நானு ம  ைன வ யு ம ம க ஞ மாக உ ன வ ரு நீ தரி 8 கொண்டிருந்தோம். "அப்பா, நாளைக்குக் காலைை கிளி அன்ரி உங்களைப்பார்க்க வருவா. நீங்க? அவவுடன் கதைச்சது என்ரை காதிலும் விழுந்தது ஒருநாளும் பொய்பேசாத என்ரை அப்பா, ஏன் பொ பேசினார் எணர் டு எண் ரை மனசு குடைஞ் கொண்டிருந்தது. நீங்கள் வெளியே போனபிற ரெலிபோனில விழுந்திருந்த நம்பருக்கு நான் எடுத்து கதைச்சன். அந்த அன்ரி உங்களோடை படிச்சவவாம். நான் அவவை நாளைக்கு வரச் சொல்லியிருக்கிறன்."
"மகள், நீதான் இப்ப என்னைப் பொ காரனாக்கியிருக்கிறாய்."நான்கடுப்புடன் கூறினேன்.
ஜீவநதி
 

υ
5
அவள் உடனே சாப்பாட்டு மேசையை விட்டெழுந்து எனது முதுகுப்புறமாக வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். "சொறி அப்பா, நீங்கள் பொய்க் காரனாய் இருக்கத் தேவையுமில்லை, நான் உங்களைப் பொய்க்காரனாக்கவுமில்லை."
மகள் செல்லங் கொட்டினாளர். மகள் சுமதிக்கு வயது இருபத்தேழாகிறது. எங்களுக்குத் திருமணமாகி நீண்ட நெடுங்காலத்தின் பின்பு பிறந்த குலக்கொடி. அதனால் செல்லமாக வளர்த்து விட்டோம்.
"அம்மா, நாளைக்கு அப்பாவின்ரை "கேர்ள் பிரண்ட்" வாறா, வடிவாறிற்” பண்ணவேணும்"
"என்னடி சொல்லுறாய், அப்பா எண்ட மரியாதைகூட இல்லாமல்." தாய், மகளின் தலையில் செல்லமாகக் குட்டினாள்.
சுமதி சிணுங்கினாள். "அம்மா, இதுவரை காலத்திலை அப்பாவோடை படிச்சவை யாரெண் டாலும் அப்பாவைத் தேடி வந்திருக்கினமே, அப்பா வோடை படிச்ச "போய்ஸ்" யாராவது வந்தவையே. இப்ப ஒரு அன்ரி- ஒரு பெம்பிளை அதுவும் ஐம்பது வருஷத் துக் குப் பிறகு அ ப் பா ைவத் தேடி வாறதெண் டா. அது ஆச்சரியம்தானேம் மா. அப்பாவின்ரை கொலிஜ்மேற்றாம். அப்பாவோடை கூடப்படிச்சவவாம். அப்பிடியெண்டா அப்பாவின்ரை கேர்ள்பிரண்ட்தானே."
"சரி, சரி, இப்ப வாயை மூடிக்கொண்டு சாப்பிடு. கொப்பர் குடுக்கிற செல்லம் உனக்கு வாய்த்துடுக்கு மெத்திப்போச்சு. உன்னைக் கட்டப் போறவன்தான் இனிவந்து உன்னைத் திருத்தி எடுக்க வேணும்"
மனைவி என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
அன்று இரவு வெகு நேரமாக நித்திரை வர மறுத்தது. கல்லூரி நாட்கள் என் மனதில்வந்து அலை மோதிக்கொண்டிருந்தன.
அப்போது நாங்கள் எச்.எஸ்.சி. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். விஞ்ஞானப் பிரிவில் பதினைந்தே மாணவர்கள்தான். அதில் நால்வர் மட்டுமே பெண்கள். அவர்களிலே ஒருத்திதான் கண்ணம்மா.
கலைப்பிரிவில் அதிகமான மாணவர்கள் இருந்தார்கள், கலைப்பிரிவு மாணவர்களையும் விஞ்ஞானப்பிரிவு மாணவர்களையும் ஒன்று சேர்த்து "மாணவர் தேர்ச்சிச் சங்கம்" இயங்கும். மாணவர் களுக்குப் பேச்சுக்கலை, விவாத அரங்கு போன்ற ஆளுமைகளை வளர்ப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட
இதழ் 50

Page 32
அமைப்பு அது அதிலே இடம்பெறும் ஒவ்வொரு விவாத அரங்குகளிலும் நான் பங்கு பற்றியிருக்கிறேன். பேச்சுப் போட்டிகள் பலவற்றில் பங்கு பற்றியிருக்கிறேன். இப்படியான விவாதங்கள் பேச்சுப் போட்டிகளில் கண்ணம்மாவும் ஆர்வமுடன் கலந்து கொள்வாளர். பல சந்தர்ப்பங்களில் எதிரும்புதிருமான அணிகளில் நாம் விவாத அரங்களில் பங்கு பற்றியிருக்கிறோம்.
இந்த மாணவர் தேர்ச்சிச் சங்கத்தின் தலைமைப் பதவிக்கான தேர்தல் வந்தபோது அதிலே போட்டி இடும்படி என்னை உற்சாகப்படுத்தியவள் கண்ணம் மாதான். கண்ணம் மாவுக்கு மாணவர் களிடையே செல் வாக்கு இருந்தது. அவளைத் தலைமைப் பதவிக் குப் போட்டியிடும் படி பல மாணவர்கள் வற்புறுத்திய போதும் அவள் நான் தலைவ னாகத் தேர்ந்தெடுக்கப்படுவதையே விரும்பினாள். அவ்வேளையில் கலைப்பீடத்திலிருந்தும் தலைமைப் பதவிக்கு ஒரு மாணவன் போட்டியிட்டான். நேரடிப் போட்டியாக மாறியது தலைவர் பதவிக்கான போட்டி, நான் அதிலே கூடுதலான வாக்குகளால் வெற்றி பெற்றேன். எனது வெற்றிக் காக அதிகமாக மாணவர்களிடையே பிரசாரம்செய்தவள் கண்ணம்மா தான்.
நான் தலைவராக வெற்றி பெற்றபின் முதலில் நன்றி தெரிவித்தது கண்ணம்மாவுக்குத்தான்.
அவள் ஆயிரம் சூரியப் பிரகாசத்துடன் புன்னகைத்தாள்.
"சோலைமலரொளியோ உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கடலலையே உனது
நெஞ்சின்
elé06)56ITL2
கோலக்கிளியோசை உனது
குரலினிமையடி.."
வெற்றிக் களிப் பில் நான் மெய்மறந்து பாடினேன். கண்ணம்மாவும் அதனை இரசித்தாள்.
"அடுத்த வரியையும் பாடுங்கோ கருணா." அவளது குரல் கெஞ்சியது.
பாடசாலைகளில் உயர் வகுப்பு மாணவர் களிடையே பொதுவாக இடம்பெறும் வழக்கமான கேலிப்பேச்சுக்கு நாங்கள் இருவரும் ஆளாகினோம். எங்கள் இருவரையும் சோடி சேர்த்து மாணவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். அவளது தோழிகள் என்னைக்கண்டால் "கண்ணம்மா" என்றார்கள். எனது நண்பர்கள் அவளைக்கண்டால் "கருணா" என்றார்கள்.
ஜீவநதி 2.

கண்ணம்மா இதனைத் தவறாக நினைத்து விடுவாளோ என நான் முதலில் பயந்தேன். ஆனால் அவள் இதனைச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. நானும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அதிபர், ஆசிரியர்களுக்கும் இந்தக் கேலிப் பேச்சுக்கள் எப்படியோ தெரியவந்தன.
அன்றொருநாள் கல்லூரி வருடாந்தப் பரிசளிப்பு விழா.
கண்ணம்மாவுக்கு சில பாடங்களுக்கான சிறப்புப் பரிசுகள் கிடைத்தன. எனக்கு அந்த ஆண்டின் சகலதுறைக்குமான சிறந்த மாணவனுக்கான பரிசு கிடைத்தது.
பரிசளிப்பு விழாவுக்கு உயர் வகுப்பு மாணவிகள் சாறி உடுத்து தலைக்குக்கொண்டை போட்டுத் தம்மை அழகுபடுத்தி வந்திருந்தனர். கண்ணம்மா கருநீலப்புடவையில் தேவதையாகக் காட்சியளித்தாள். அன்றொருநாள் உங்களுக்குப் பிடித்த கலர் எதுவென்று அவள் என்னைக்கேட்டது என் நினைவில் வந்தது.
"பட்டுக் கருநீலப்புடவை பதித்த நல்வைரம் நட்டநடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி." அன்று கண ணம் மா அளவில் லாத மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.
"டின்னர் இடம்பெற்ற வேளையில் அவள்
ஒரே மேசையில் என் எதிரே அமர்ந்துகொண்டாள்.
"கருணா, நான் உங்களை ஒன்று கேட்பேன் பதில் சொல்வீர்களா?"
"இதென்ன பீடிகை, பதில்சொல்ல முடியாத கேள்வியாக இருந்தால் சொல்லமாட்டேன்.
அவள் செல்லமாகச் சிணுங்கினாள். "சரி, சரி கேள் கண்ணம்மா." "கருணா, நீங்கள் யாரையாவது காதலிக் கிறீங்களா?"
"இதென்ன கேள்வி. இதற்கு நான் பதில் சொல்ல முடியாது." அவளது பார்வையை எதிர் கொள்ள முடியாது எனது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன்.
"பதில்சொல்ல முடியாதா? சொல்லத் தயக்க மாயிருந்தால் எழுதியா தரப்போகிறீர்கள்?
ஆம் , அவளுக்கான பதிலை நான் எழுதித்தான் கொடுத்தேன் - அது எவ்வளவு விபரீதமாகப் போய்விட்டது
அன்புள்ள கண்ணம்மா, யாரையாவது காதலிக்கிறீர்களா என்று
இதழ் 50

Page 33
தப்
ப் பு
600|-
50T্য,
T355
குப்
GT60া
JTg5
6ીઠં
தில் திர்
5கம்
பக்க
T 60
ଗTର!
ன்று
D 50
என்னை ஏன் கேட்டீர்கள்? உங்களது நெஞ்சி6ே கைவைத்துச் சொல்லுங்கள். அதற்கான பதில் உங்களுக்குத் தெரியாதா? அதை நான் சொல்லித்தான தெரிய வேண்டுமா? இந்தப் பருவ வயதில் எமக்கு ஏற்படும் உணர்வுகளை காதல் என்று எப்படிச் சொல்ல விடமுடியும்? இது, பருவக்கிளச்சியினால் ஏற்படுL "36óT3, UTöGUGBUGęGöt"(Infactuation)głólejbD (BLDT5L. உரிய காலம்வரும்வரை காத்திருப்பதுதானே நல்லது அதற்குமுன் ஏன் அவசரப்படவேண்டும்?
- அன்புடன் கருணாகரன் ஆனால் கண்ணம்மா அவசரப்பட்டுவிட்டாள் நான் தனக்குக் காதல்கடிதம் எழுதியதாகத் தனது பாங்கிகளிடம் சொன்னாள். சகமானவர்கள் பலரிடL சொன்னாள். நான் அவளுக்குக் காதற்கடிதப எழுதினேன் என்று சொல்வதில் அவள் என்ன பெருமையைக்கொண்டாள்?
மாணவத் தலைவனாகத் தலைநிமிர்ந்து நடந்த என்னைச் சிறுமைப்படுத்தினாள். சின்னத்தனமானவன் என்று மற்றவர்கள் எண்ணும்படி செய்துவிட்டாள ஆசிரியர்கள் என்னைப் பார்த்த பார்வையில் நான கூனிக் குறுகிப் போனேன்.
என்னைத் தூக்கி உயரத்தில் வைத்தவள "பொத்”தென்று கீழே போட்டுவிட்டாள்.
". நேர்மை தவறிவிட்டாய் கண்ணம்மா, என நெஞ்சு துடிக்குதடி.."
நான் எழுதியது காதற்கடிதம் அல்ல என்று சொன்னாலும் அதனை நம்புவதற்கு எவருமே தயாராக 36b606).
அதன் பின் கல்லூரிக் குச் செல்வதை நானாகவே நிறுத்திக்கொண்டேன்.
米米米
மறுநாள் காலையில் கண்ணம்மா எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவள் இப்போது கல்லூரி நாட்களில் பார்த்த கண்ணம்மாவாக இல்லை. முதுமைக் கோலம், குறுநரை இளையோடிய கேசம். உடலிலே தளர்ச்சி. ஆனால் அவளது அந்தக்குரல் - கோலக்கிளியோசை அப்படியேதான் இருந்தது. வாசலில் வரும்போதே அவளை வரவேற்றவள் மகள் சுமதிதான்.
"வாங்கோ கிளி அன்ரி, எங்கை அங்கிள்
6)(3U6b60)6O(3UIT?"
"இல்லை, அவருக்குக் கொஞ்சம் வேறை வேலை இருக்கு. அதனாலை வரமுடியேல்லை. என்றவள் ஸோபாவில் அமர்ந்துகொண்டு என்பக்கம் திரும் பி, "கருணா, எப் பிடி இருக் கிறியள் ? கனகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறம்" என்றாள்.
ஜீவநதி

ᏓᎧ
g
நான் பதில் ஏதும் சொல்லாமலே எனது மனைவியையும் மகளையும் கண்ணம்மாவுக்கு அறிமுகம் செய்தேன். தான் கொண்டுவந்த சிறிய பார்சல் ஒன்றை அவள் சுமதியிடம் கொடுத்தாள்.
"அன்ரி, இருங்கோ என்ன குடிக்கிறியள்?. கோப்பி தரட்டோ அல்லது ஸொஃப்ற் டிறிங்ஸ் ஏதாவது குடிக்கிறியளோ?
"ef60flulatba)TLD6ů (35TŮLÝ(3ujT f(8uUT... எதுவெண்டாலும் பரவாயில்லை."
"அதுசரி அன்ரி, உங்களுக்கு கிளியெண்டு ஆர் பெயர் வைச்சவை. பொருத்தமாய்த்தான் வச்சிருக்கினம்"
"சுமதி, கொஞ்சம் (BUSETTLDGö இருக்க மாட்டியே. அன்ரி வந்ததும் வராததுமா உப்பிடிக் கேட்டா அவ என்ன நினைப்பா. வாயாடி எண்டு நினைக்கப்போறா."
"அப்பிடி ஒண்டும் நான் நினைக்கமாட்டன். இது படிக்கிறகாலத்திலை பொடியள் வைச்ச பட்டப் பெயர். அது நிலைச்சிட்டுது. என்ரை மிஸ்ரர்கூட என்னை கிளி எண்டுதான் கூப்பிடுகிறவர்."
"அப் பிடியெண் டா அந்தக் காலத்திலை அப்பாவும் சேர்ந்துதான் உங்களுக்கு இந்தப் பட்டப்பேர் வைச்சிருப்பார்."
பதிலேதும் பேசாது புன்னகைத்தபடி என்பக்கம் திரும்பியவள்.கருணா, என்ன பேசாமல் இருக்கிறியள்? உங்களைப் பற்றிச் சொல்லுங் கோவன். நீங்கள் தனியார் கொம்பனி ஒண்டிலை மனேஜரா இருந்து றிற்ரயர் ஆனனிங்கள் எண்டு கேள்விப் பட் டண் . உங்களுக்கு எத் தினை LairgO)6ITUGir?"
"இவள் சுமதி ஒரு பெம்பிளைப் பிள்ளை தான். கலியாணம் முடிச்சு கனகாலமாய் பிள்ளை யில்லாமல் பிறந்ததாலை அவளுக்கு நாங்கள் கொஞ்சம் செல்லம் குடுத்து வளர்த்திட்டம் கொஞ்சம் குறும்பு. கொஞ்சம் வாயாடித்தனம். கொஞ்சம் பிடிவாதம். கொஞ்சம் கலையார்வம். இசையிலை கொஞ்சம் ஈடுபாடு."
நான் கேட்காமலே கண்ணம்மா தன் குடும்பத்தைப்பற்றிக் கூறத்தொடங்கினாள் "எனக்கு நாலு பிள்ளையஸ். முதல்மூண்டும் பெம்பிளைப் LefroCDGITUGir. Gog00TL60fg06)(3U 51606).Juj6ft 3565uT600TL b முடிச்சு செற்றில் ஆகிவிட்டினம். நாலாவதுதான் ஆம் பிளைப் பிள்ளை, ஐ. ரி எண் ஜினியராயப் இருக்கிறான். எங்களோடைதான் இருக்கிறான
"இருந்து கதையுங்கோ நான், கோப்பி போட்டுக்கொண்டு வாறன்" என்று சொல்லி மனைவி
இதழ் 50

Page 34
S_6fr(36|T GLIT60IIT6Í.
"அன்ரி நீங்கள் சொல்லுங்கோ. அப்பா பள்ளிக்கூடக் காலத்திலை எப்பிடி? குழப்படியோ, பெட்டையஞக்குப்பின்னாலை சுத்தித்திரிஞ்சவரோ?
"இந்தக் குறும்புத்தனம் எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு." என்று சொல்லி அவள் சுமதியின் கன்னத்தில் கிள்ளினாள்.
"அப்பா இடைநடுவிலை படிப்பைக் குழப்பிப் போட்டாராம். இல்லையெண்டா பெரிய உத்தியோகத் திலை இருந்திருப்பாராம் இதை அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவார்."
கண்ணம்மா தடுமாறினாள். அவளது குரல் கரகரத்தது. தன்னைச் சுதாகரித்துக்கொண்டாள்.
"உங்க அப்பா பள்ளிக்கூடத்திலை பெரிய ஹிரோ. மாணவத் தலைவன், பெரிய பேச்சாளர், கவிதை எழுதுவார், நீர் கேட்கிறமாதிரி பெம்பிளை யளுக்குப் பின்னாலை அவர் போனதில்லை. ஆனா, பெம்பிளைப் பிள்ளையளின் ரை வாக்குகள்தான் அவரை ஒவ்வொரு தடவையும் மாணவத் தலைவனாய் தேர்ந்தெடுக்கும்."
சுமதியின் முகத்தில் அப்பாவைப் பற்றிய பெருமை வழிந்தது.
"அன்ரி, உங்களுக்குத் தெரியுமே அப்பா பெரிய எழுத்தாளர், சிறுகதை, கவிதை, நாவல் என்று நிறைய எழுதியிருக்கிறார். அவர் எழுதினதுகளை நீங்கள் வாசித்துப் பார்க்கவேணும்."
"ஓ, உங்கடை அப்பா பெரிய எழுத்தாளர் எண்டு எனக்குத் தெரியும். நான் அவர் எழுதின சில கதையளை வாசிச்சும் இருக்கிறன். உங்கடை அப்பாவுக்கு பிரசெண்ட் பண்ண அருமையான பிரெஞ்ச் நாவலொன்று வைச்சிருக்கிறன் இந்தியாவுக்குப் போயிருந்தபோது வாங்கினனான்"
தனது ஹான்பாய்க்கிலிருந்து ஒரு புத்தகத்தை வெளியே எடுத்து என்னிடம் தந்தாள் கண்ணம்மா.
புத்தகத்தின் தலைப்பு "Forgive me" "மன்னிக்க வேண்டுகிறேன்."
நூலின் உள் அட்டையில், "எனது பள்ளித் தோழன் கருணாகரனுக்கு, அழியா நினைவுகளுடன் - கிளி" என்று எழுதப்பட்டிருந்தது
என் இதயத்திலே ஏற்றிய முள்ளை அவள் மெதுவாகக் கழற்றி எடுக்கத் தொடங்கினாள்.
நான் நாவலின் பக்கங்களைப் புரட்டினேன். அப்போது என் மனைவி அவளுக்கு கோப்பி கொணர்ந்து கொடுத்தாள்.
"உங்கடை மகள் வலு கெட்டிக்காரியாய்
ஜீவநதி s

இருக்கிறாள்.அப்பாவைப் போலத்தான் குணம் நடை
பேச்சு எல்லாம் இருக்கு. எனக்கு இவளை நல்லாய்ப் பிடிச்சிருக்கு."
"நீங்கள் தான் இவளைப் பற்றி ஏதோ பெரிசாய்ச் சொல்லுறியள், எனக்கெண்டா இவளின்ரை போக்கு சரியில்லாதமாதிரி இருக்கு." மனைவி தனது வழமையான புலம்பலைத் தொடங்கினாள்.
". இவளுக்கு வயசு இருபத்தேழாகுது. கலியாணம் ஒண்டும் சரிவருகுதில்லை. பாத்துக் கொண்டுதான் இருக்கிறம். படிப்பு படிப்பு எண்டு சொல்லி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். பேசிற சம்பந்தங்களும் தட்டுப்பட்டுக் கொண்டே போகுது.இப்ப சங்கீதத்திலை டிப்ளோமா கோர்ஸ் ஒண்டு செய்யிறாள். அதை முடிச்ச பிறகுதான் கலியாணம் எண்டு சொல்லுறாள். தகப்பனும் கண்டிக்கிறது இல்லை. அவள் நினைச்சபடிதான் எல்லாம் செய்யிறாள்"
"இப்ப வெளிநாட்டு மாப்பிளையளைத்தானே இங்கையுள்ளவை பேசிச் செய்யினம். நீங்களும் அப்பிடி முயற்சிக்கலாம் தானே."
அப்போது நான் எழுதிய புத்தகங்கள் சிலவற்றை சுமதி எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள். அத்தோடு "இது என்னுடைய "அல்பம்" நான் பாடிய பாடல்கள் இதிலை இருக்கு" எனக்கூறி இறுவெட்டு ஒன்றையும் கொடுத்தாள்.
"சுமதி நீர் சங்கீதம் படிக்கிறீரெல்லே. ஒருபாட்டுப் பாடிக்காட்டுமன்."
"அப்பாவுக்குப் பிடிச்ச பாரதியார் பாட லொன்று பாடுறன் அன்ரி" என்று கூறிவிட்டு சுமதி பாடத்தொடங்கினாள்.
இதழ் 50
ஜீவ

Page 35
b60DL
ாய்ப்
தோ াৈe0্য
தனது
குது. த்துக் ண்டு )[T6া..
গো (BL
T্যGাb தான்
தான்
TG360T
J35 Gir
5T6াঁ,
TIQUJ வட்டு
Li ] [ TIL
சுமதி
p 50
"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமைகொல்லோ
கோலக் குயிலோசை உனது (5UGÓlafleGOLDu JLę. வாலைக் குமரியடி கண்ணம்மா மருவச் காதல்கொண்டேன் சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி ஆத்திரங் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி.." சுமதி பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடியதை கண்மூடி இரசித்தாள் கண்ணம்மா.
பாட்டு முடிந்ததும், "அருமையாய் பாடுறாய் சுமதி. நீர் சொன்னமாதிரி இந்தப்பாட்டு உங்கடை அப்பாவுக்கும் அந்தக்காலத்திலை ரெம்ப விருப்பமான பாட்டு. இதைத்தான் அடிக்கடி பாடித்திரிவார்." என்றாள் சுமதி என்னை வியப்புடன் பார்த்தாள்
"சரி, நேரமாகுது. நான் போகவேனும் இனி சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. என்றவள் மெதுவாக எழுந்தாள்.
“கொஞ்சம் இருங்கோ வாறன் என்று கூறி சுவாமி அறையிலிருந்து குங்குமச் சிமிழை எடுத்து வந்தாள் மனைவி.
"என்ன இது?"
இரவின் மூக்குக் கண்ணாடி வழியே விழி பிதுங்கி செந்நிற வார்த்தைகளால் ஒலமிடுகின்ற அனல் காலம்
நீரில் கரைய நேர்கின்ற பொழுதுகளை கானல் கயிற்றில் கட்டி மனங்கொள்கின்றது வானம்
உயிர்த்திருக்கும் அனைத்துக்குமாக ஒரு மிரட்டல் வளி அகமிருந்தும் புறமிருந்தம் அமுக்கம் கொள்கிறது
எனதன்பின் பூக்களை
எல். வளி
ஜீவநதி
 

"இது எங்களுடைய வழக்கம், குங்குமம் எடுத்து பொட்டு வச்சுக்கொள்ளுங்கோ."
சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்துத் தனது நெற்றியில் இட்டுக்கொண்ட கண்ணம்மா, பக்கத்திலே நின்றிருந்த சுமதியின் நெற்றியிலும் பொட்டிட்டாள்.
கண்ணம்மாவை வாசல்வரை சென்று வழி அனுப்பினர் மனைவியும் மகளும்.
" லண் டனுக் குப் போனதும் போன் பண்ணுங்கோ அன்ரி"
கண்ணம்மா வந்த ராக்ஸி வெளியே காத்து நின்றது. நான் ராக்ஸிவரை சென்று அவளை வழியனுப்பினேன்.
"கருணா." அவள் காதில் கைத்தொலை பேசியைப் பிடித்தபடி அழைத்தாள்.
என்னைக் கூப்பிடுகிறாளா? "GT6060T 560ör600TLibLOT? "நான் உங்களைக் கூப்பிடவில்லை. லண்டனி லிருக்கும் எனது மகனுக்கு கோல் எடுத்தனான். அவனைத்தான் கூப்பிட்டனான்"
தொடர்ந்து அவள் கைத்தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தாள்.
வேகமாகக் கிளம்பியது ராக்ஸி. ஒரு கணம் நான் தடுமாறித் தள்ளாடினேன். எனது கண்களுக்கு இப்போது அவள் சென்று கொண்டிருந்தராக்ஸிமங்கலாகத்தான் தெரிந்தது.
) f
s
O
மீதமாய் வளர்கின்ற முட்களும் புதர்களும் நீர்ப்பாசனங்களை அருந்திவிட்டு பூஜை செய்கின்றன
பாலை நில வாடை நில வெளியெங்கும் வீசிற்று
இமைகள் படர மறுக்கின்ற கடுங்கோடையின் இரவுகளையும் பகற்பொழுதுகளையும் சிறையிலே சிலுவையிலோ அறைந்துவிட
இரத்தப்பசி வேண்டி வண்ணத்துப் பூச்சிகளும் விரதமிருக்கின்றன ம்ே அக்ரம்
31 இதழ் 50

Page 36
சங்கார யோகம் - 0 ஆண்மைமிகு வீரனே ஆள் வேறுபாடின்றி அடித்துதைத்துத் துன்புறுத்து அனைவரையும் முழுநிர்வாணமாக்கு அங்கங்களை பரிசோதனை செய் ஒரு பிடி மூச்சுக்கூட தப்பியோட முடியாத வண்ணம் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்திரு எப்பொழுதும் விழித்திரு முப்பொழுதும் கடமையே கண்ணாயிரு உன் விரல் நகத்திற்கு ஊறு உண்டானால் வீறுகொண்டு விரைந்தெழு எல்லோரையும் சுட்டுப்பொசுக்கு அச்சம் தவிர்
சங்கார யோகம் - 02 மரணத்தை மட்டுந்தான் கொடுக்கவேண்டும் என்பதல்ல காயத்தையும் நீதாராளமாகக் கொடுக்கலாம் படுகாயமாக இருந்தால் இன்னும் நல்லது மருந்துத்தடை அமுலில் உள்ளதால் வருந்தி வருந்தி அழுந்தி அழுந்தி இருந்து இருந்து மெல்ல மெல்லச் சாகட்டும் மருந்துத்தடை யுத்தகாலம் முழுவதும் அமுலில் இருக்கும் என்பதால் நீ படுகாயத்தைக் கொடுப்பதே நாட்டிற்கு நலமிக்கதுமாகும்
ខាងើយ ទើយរាយ - 03 அடிக்கப் போகிறாயா அடி
( சுடப் போகிறாயா சுடு
புணரப் போகிறாயா புணர்
புதைக்கப் போகிறாயா புதை எப்பொழுதும் நீ 綠 யாரையும் என்னவும் செய்யலாம் அதற்குரிய முழு அதிகார பலமும் ஆயுத வளமும் உனக்கு உண்டு எதனையும் நீ செய்யவில்லை என்று மறுத்துரைப்பதற்கும் எதனையும் நீ செய்யக்கூடியவன் அல்லன் என்று அறிக்கை விடுவதற்கும் நான் இருக்கும் வரை நீயாரையும் எப்பொழுதும் என்னவும் செய்யலாம்
என்றைக்கும் செய்துகொண்டே இருக்கலாம்
செய் செய்வன திருந்தச்செய்
சங்கார யோகம் - 04 தணிக்கை என்பது உள்ளவரை தேசத்திற்கு எதுவுமே தெரியவராது ஊடகவியலாளர்களும் உலகத்தின் பார்வையும்
ஜீவநதி 32
 
 

உள்ளே இம்மியும் நுழைய முடியாது அரச சட்டத்தையும் மீறி பரம இரகசியத்தை வெளிக்கொணர்வோரின் சிரசு கொய்யலாம் கதை முடிக்கலாம் இன்னும் என்னென்னவோ செய்யலாம்
இன்னும் கேள்
பயங்கரவாதச் சட்டமும் அவசர காலச் சட்டமும் உன்னிரு தோழர்கள் உன்னிரு தோழர்களின் கரங்களைப் பற்றி இன்னும் இன்னும் நீழுகர்ந்து நுகர் அவர்களின் முந்தானையில் துயில்
அவர் தம் அருமேனியை அணைத்து உச்சி மோர்ந்து இணையிலா மோட்சம் காண்
சங்கார யோகம் - 05 அரசமரம் நிற்கும் இடங்களில் எல்லாம் புத்த பெருமானை வைத்துச் பூசி புத்த பெருமானை வைத்த இடங்களை எல்லாம்
புனிதமானதாக நேசி அவரை சூழவுள்ள பிரதேசங்களை சுத்தம் செய் அருகில் உள்ள சுடலைகளையும் பிணங்களையும் அப்புறப்படுத்தி அலங்காரம் செய் --- பிணவாடையை இல்லாதொழித்து மலர்வாடையை உற்பத்தி செய் எக்காலத்திலும் எந்நேரத்திலும் புத்தபெருமானின் விழிகளுக்கு புலப்படாத வண்ணம் அலைந்துதிரியும் அவல ஒலங்களை ஆயிரம் அடிகளுக்கு அப்பால் புதைத்துவிடு எஞ்சியிருக்கும் எலும்புக் கூடுகளை மஞ்சளில்
குளிப்பாட்டி சிரிப்புமுலாம் பூசி பஞ்சுப்பெட்டிக்குள் பக்குவமாய் வைத்து கொஞ்சிக்குலாவ தொண்டர்களை குடியமர்த்து T(BLJU பெற មជ្ឈិយm unoff - 05 மருத் சந்தேக நபர்களை உடனே கைதுசெய் இருவ சந்ததமும் அடி உதை இடி குத்து வெட்டு olUDJo
மேனியை தலைகீழாய் கட்டித்தூக்கு மூச்சுத் திணறத்திணற நீருக்குள் அமிழ்ந்து மீசையை ஒவ்வொன்றாய் பிடுங்கு பற்களை இடித்து நொறுக்கித்துளாக்கு பால் உறுப்பை வெட்டித்துண்டாக்கு 3. எலும்புகளை உடைத்துப் பொடிப் பொடியாக்கு எதிர்காலம் இல்லாதபடிக்கு நடை பிணமாக்கு
ஜீவநத

Page 37
உலகப் புகழ் பெற்ற சுவீடன் நெறியாளர் இங்மார் பெர்க்மனின் "வைல்ட் ஸ்ட்ரோபெரீஸ்'(காட்டு ஸ்ட்ரோபெரிகள் - 1957), வங்காளத்தைச் சேர்ந்த சத்யஜித் ரேயின் நாயக் (கதாநாயகன் - 1966), கெளதம் கோஷின் ‘யாத்ரா(பயணம் - ஹரிந்தி, 2007) ஆகியவற்றைச் சில வருடங்களின் முன்னர், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்தேன். முதலிரண்டும்
கறுப்பு வெள்ளைப் படங்கள்; மற்றது இங்oார் வர்ணத்தில் அமைந்தது. மூன்று திரைப்படங்களும் கலைப்படைப்பு என்ற வகையில் முக்கியமானவை தான்; ஆயினும், வைல்ட் ஸ்ட்ரோபெரீஸ் கூடுதலாய்க் கவர்கிறது! கட்டமைப்பு, உள்ளடக்க அம்சங்கள் என்பவற்றில் இம்மூன்றிலும் ஒத்ததன்மைகள் சில இருந்ததான மனப்பதிவு: அண்மையில் 7 அவற்றை அடுத்தடுத்துப் பார்த்தபோது, முந்திய மனப்பதிவு உறுதிப்பட்டது
1. விருது
மூன்று படங்களிலும் கதாநாயகர்கள், தாம் ஈடுபட்ட துறைகளில் சாதனை புரிந்ததற்காக விருதுகள் பெறப் பயணிக்கிறார்கள். ஒருவர் மருத்துவத்துறைக்காகவும், ஏனைய இருவரும் கலைத்துறைக்காகவும் விருது பெறுகின்றனர்.
அ) வைல்ட் ஸ்ட்ரோபெரீஸ் இல், 78 வயதான பேராசிரியர் 'ஐசக்
போர்க்', மருத்துவத்துறைக் கெளரவ
ଘ6ଗII
விருது பெறுவதற்காகப் பயணிக்கிறார்.
ஆ) நாயக் திரைப்படத்தில் கதாநாயகனான அரிந்தம்' என்ற நடிகன், திரைப்படத்துறை விருது
ஜீவநதி -
 
 
 
 
 

(6). C&L I3 DITFT
ன்று திரைப்படங்கள்
ܓܡ
பெறுவதற்காகப் பயணிக்கிறான்.
இ) யாத்ரா திரைப் படத்தில் கதாநாயகனான 'தஸ்ரத் ஜொக்லேகர் என்ற
எழுத்தாளன், தான் எழுதிய 'ஜனாஸா' என்ற நாவலுக்கு, ஒரு தனியார் உருக்குக் கைத் தொழில் நிறுவனம் வழங்கும் சிறந்த நூல் விருது பெறுவதற்காகப் பயணிக்கிறான்.
2. Uយ១០០ឃុំ
பயணம்தான் கதையாக விரிகிறது. கார், ரயில் என்பவற்றில் ஸ்தூலமான பயணம்; அதேவேளை பாத்திரங்களின் அகவயாtதியான பயணமும், வெளிப் பயணம் வாழ்க்கைப் பயணத்தின்
குறியீடாகவும்மாறுகிறது
அ) வைல்ட் ஸ்ட்ரோபெரீஸ் இல் ஐசக் போர்க் ஸ்ட்ரொக் கோமி லிருந்து லுண்ட் என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்துக்குத் தனது காரில்
யஜிக் ரே பயணிக்கிறார்; அவரது மருமகள் மரியான் கூடப் பயணிக்கிறாள். பயணத்தின் இடையில் தரித்து, முன்னர் இருபது ஆண்டுகளாய் கோடையைக் கழித்த வீடொன்றுக்கு மரியானுடன் சென்று பார்க்கிறார்; பழைய நினைவுகள் மீட்கப்படுகின்றன. பயணம் தொடர்கையில் அன்டர்ஸ்,
விக்ரர் என்னும் இரு இளைஞர்களும் சாரா என்ற இளம் பெண் ணும் இவர்களது காரில் ஏறிப் பயணிக் கின்றனர். இம்மூவரும் ஐசக்கினதும், சகோதரன் சீக் ஃவிறரிட்டினதும் , தம் கோவர் மைத்துனியான 'சாரா'வினதும் குறியீடு களாகவுள்ளனர். பிறகு, இடைவழியில் தாயாரின் வீட்டுக்கு மரியானுடன் சென்று, தாயாருடன் கதைத்துத்
33 இதழ் 50

Page 38
திரும்பிப் பயணத்தைத் தொடர்கிறார். இடையில், தம்முள் அடிக்கடி முரண்படும் ஒரு கணவன் மனைவியான ஜோடியும் கொஞ்சத் தூரத்துக்கு இதே காரில் ஏறி வருகின்றனர்; அவர்கள் சச்சரவுப்படுவ தால் இடையில் இறக்கி விடப்படு கின்றனர். இந்த ஜோடியும், ஐசக்கினதும் மனைவியினதும் குறியீடுதான்.
ஆ) நாயக் திரைப்படத்தில் அரிந்தம் கல்கத்தாவிலிருந்து புது டெல்லிக்கு ரயிலில் பயணம் செய் கிறான். அவனது பெட்டியில் அரச அதிகாரியான கணவன், மனைவி, சுகவீனமடைந்துள்ள சிறுமியான மகள் ஆகிய மூவருள்ளனர். அவர்களுடனும், வேறு பெட்டிகளிலுள்ள - பத்திரிகையில் விமர்சனங்கள் எழுதும் சட்டர் ஜி, ரயில்வே ஊழியர் முதலியோருடனும் எளிமையாகப் பழகி இணக்கமான தொடர்பைப் பேணுகிறான். பிரபல நடிகன் என்ற பிரமிப்பு மற்றவர்களிடம் தெரிகிறது. கன்ரீன் அமைந்துள்ள பெட்டியில், பெண்ணியப் பத்திரிகை யொன்றில் ஆசிரியராகவுள்ள அடிற்றி சென் குப்தா அரிந்தமுடன் பரிச்சய மேற்படுத்தி, நேர்காணல் கட்டுரை எழுத உரையாடுகிறாள். படத்தின் பெரும்பகுதி ரயிலில் இருவரினதும் உரையாடல் - அவனது நினைவுகள் என்பவையாக உள்ளது.
இ) யாத்ராவில், எழுத்தாள னான தஸ்ரத் ஜொக்லேகர், அடில்லா பாத்திலிருந்து புதுடெல்லிக்கு ரயிலில் பயணம்செய்கிறான். அவனது பெட்டி யில், விவரணத் திரைப்படங்களை உருவாக் கவரும் இளைஞனான மோகன் பயணிக் கிறான். அவன், தான் ஏற்கெனவே படித்துள்ள ஜனாஸா நாவல் பற்றி இவனுடன் உரையாடுகிறான். ஜனாஸாவின் உண்மைத்தன்மை பற்றிய அவனது கேள்விகள் - இவனது விளக்கங்கள், கலை பற்றியும் நிறுவனங் களின் விருது வழங்கும் முயற்சிகள் பற்றியுமான கருத்துகள் பரிமாறப்
ஜீவநதி
JBITU
 
 

": "A
PSTRAWBERRIES
படுகின்றன; எழுத்தாளனுடைய வாழ்க்கைப் பகுதிகள் மீட்கப்படு கின்றன. படத்தின் அரை வாசி நேரத்தை ரயில் பயணம் எடுத்துக் கொள்கிறது; ரயில் பயணம் முடிந்த
பின்னரும் கதை தொடர்கிறது.
3. கனவு மூன்று படங்களிலும் கதா
நாயகர்கள் கனவு காண்கின்றனர்;
e 60 GJ (Upë 5luJLOTGOTGO GJU TE GJLë உள்ளன. வைல்ட் ஸ்ட்ரோபெரீஸ் இல் மூன்று கன வுகளும் , ஏனைய இரணர் டில் ஒவ்வொரு கனவும் வருகிறது.
அ) ஐசக் போர்க் தனது வீட்டில் முதற் கனவைக் காண்கிறார். காலை நடையின் போது வழி தவறியதில் வெறுமையான வீதிகள் - வீடுகள் கொண்ட பகுதியில் தெரு விலுள்ள மணிக் கூட்டில் காலங் காட்டும் கம்பிகள் இரண்டும் இல்லை; தனது காற்சட்டைப் பையிலுள்ள மணிக் கூட்டை எடுத்துப் பார்க்கிறார் - அதரிலும் க ம பரிகள் இல்  ைல! நடக்கையில் எதிரில் தனிமையாய் நிற்கும் ஒரு மனிதனை நெருங்கித் தோளில் தொடுகிறார்; அவன் சரிந்து நிலத்தில் விழ, தலைப்பகுதி கரைந்து இரத்தம் பரவுகிறது. அவ்வேளை வந்த குதிரைகள் பூட்டப்பட்ட சவ வண்டி விளக் குக் கம் பத்தில் மோத, சில்லொன்று கழன்று இவரை நோக்கி வேகமாய் வருகிறது; வண்டியிலுள்ள சவப்பெட்டியும் வெளியே வருகிறது. அதிலிருந்து கையொன்று நீண்டு இவரைப் பற்றி இழுக்கிறது; பீதியுடன் விடுபட முயல்கிறார் - பிணத்தின் முகத்தைப் பார்த்தபோது, அதுதானே யெனக் காண்கிறார்
தாயாரின் வீட்டிலிருந்து திரும் பிச் செல் கையில், காரில் இரண்டாம் கனவைக் காண்கிறார். அதில் மைத்துணி சாரா, இவரது முதுமைநிலையையும் துயரையும்
இதழ் 50
ஜீவ

Page 39
D. L.
ப் படு
|
த்துக் டிந்த
D 6)
UTLÜ
வகித் சிந்து ரந்து வந்த
ாத, Tக்கி
6গTGIT
றது. ண்ைடு |டன்
தின்
ந்து f) Gò
DTT,
Jரது யும்
50
குறித்துக் காட்டுகிறாள்; தானும் அவர்மீது நேசா கொண்டிருந்ததில் மறைமுகமாகத் துன்புறுத்த விட்டதாயும் கழிவிரக்கப்படுகிறாள்.
அடுத்து, இவரைப் பரிசோதனை செய்யு ஒருவர், இவரிடமுள்ள குற்றவுணர்வையும், மனைவி இவர்மீது முன்வைத்த - உணர்ச்சி மரத்துப்போனவர் சுயநலவாதி, இரக்கமற்றவர் என்ற குற்றச்சாட்( களையும் கூறி, மனைவிக்கும் இன்னொருவருக்கு மிடையிலிருந்த கள்ள உறவை இவர் கண்ட அந் நாளை நினைவூட்டுகிறார்; அவளது பிறழ்வுக்கு இவே காரணர் என்றும் சொல்லப்படுகிறது.
கெளரவ விருது பெற்றபின் மகனின் வீட்டி: தங்கிய போது, மூன்றாவது கனவு வருகிறது. அவ காட்டு ஸ்ட்ரோபெரிப் பழங்களைத் தேடுகிறார். சார அவரிடம் வந்தபடியே, "ஐசக், அங்கு ஸ்ட்ரோபெரி பழங்கள் ஒன்றும் மிச்சம் விடப்படவில்லை" என்று சொல்கிறாள். மேலும், தாங்கள் கடற்பயணம் போவதாக வும் தீவின் மறுபக்கத்தில் அவரைச் சந்திப்பதாகவும் கூறி அவரது தாயையும் தந்தையையும் பார்த்துக கொள்ளும்படி கேட்கிறாள். அவர்கள் எங்கேயென்று கேட்க, அவரை அழைத்துச் சென்று காட்டுகிறாள். சிறு தொலைவில் அவர்கள் இருவரும் கடலோரத்தில் தூண்டில் போட்டபடி உள்ளனர்; இவரைப் பார்த்துக் கையசைக்கின்றனர். அவர்களை இவர் வாஞ்சையுடன் பார்த்து நிற்க கனவு மறைகிறது.
ஆ) நாயக் திரைப்படத்தில், ரயிலில் அசதியுடன் உறங்கிய அரிந்தம் கனவு காண்கிறான். பிரபல நடிகனாகக் கம்பீரமாக நடந்து செல்கையில் பண நோட்டுக்கள் அவன்மேல் வந்து விழுகின்றன; ஆங்காங்கே கைவிரல் எலும்புகள் தொலைபேசியைத் தாங்கியவாறு, பணத்தின்மேல் நடந்துசெல்கையில்
ஜீவநதி
 
 
 
 

சிறு சிறு பணக் குன்றுகள்; அவற்றின்மேலும் ஏறி நிற்கிறான். பிறகு, காசுப் புதைகுழியில் புதைந்து கொண்டிருந்தபோது, சற்றுத் தொலைவில் நிற்கும் ஷங்கர்தாவை உதவிகோரி அழைக்கிறான். அவர் அருகில் வந்து கையை நீட்டியபோதும் இவனால் பற்றிக் கொள்ள முடியவில்லை; புதைந்துபோகிறான்.
இ) யாத்ராவில் தஸ்ரத் ஜொக்லேகர் சிறிய கனவொன்றைக் காண்கிறான். புதுடெல்லியில் விருது பெற்றபின், தனது வீட்டுக் குச் செல்லாமல் ஹைதராபாத்துக்குச் சென்று, முன்பு புல்லாரெட்டி என்ற நிலக்கிழாரிடமிருந்து தான் காப்பாற்றி உதவிய லஜ்வந்தியின் வீட்டுக்குச் சென்று தங்கியிருக்கிறான்.
அவள் சிறந்த பாடகியும் நடனக்காரியுமாவாள்; இருவரிடையிலும் நேசம் நிலவுகிறது. அங்கு காணும் கனவில் மனைவி ஷாரதா நடனமணியின் உடையில்,
b
UTIQULIL2 6l(55.pTGirl
T,
4. கண்டடைதல் புறத்தில் நிகழ்ந்த நிஜப் பயணம் - கூடவே நிகழ்ந்த உள்மனப் பயணம் என்பவற்றால், கடந்த கால
வாழ்க்கை நிகழ்வுகள், அனுபவங்கள் வழியாகத் தம்மைப் பற்றிய புரிதலையும் மதிப்பீட்டையும் தற்போதைய உண்மை நிலையையும் மூன்று பாத்திரங்களும் கண்டடைகின்றன.
அ) சாவு அண்மிக்கும் முதுமை நிலையையும், தனது ஒதுங்கிய - குளிர்ந்த - அமைதியான குணநலனால் முன்பு சாராவையும் இழந்து (துடியாட்டமான இவரது சகோதரன் சீக்ஃவிறிட்டே
அவளை மணக்கிறான் - "காதல் அநேகமாய் ஒரு விளையாட்டுப் போட்டியாய் எமக்கு உள்ளது" என, சாரா ஓரிடத்தில் சொல்கிறாள்), மனைவியுடனான உறவிலும் விரிசல் ஏற்பட்டதையும் ஐசக் போர்க் தெளிகிறார். தன்மீதான சாராவின் நேசத்தையும் உணர்கிறார்; அதுவே ஆறுதலளிக்கிறது. எதிரே, குழந்தையைப் பற்றியணைத்தபடி அதை நோக்கிச்
சாரா சொல்வதைக் கேட்கிறார்.
"காற்றுக்கோ, பறவை களுக்கோ, கடலின் அலை களுக்கோ பயப்பட வேண்டாம்! உன்னை இறுக்கமாய்ப் பற்றிய படி இங்கே, உன்னுடன் நான் இருக்கிறேன்!"
இது அவருக்கே சொல்லப் பட்டதுபோலிருக்கிறது.

Page 40
ஆயினும், மூன்றாவது கனவில் சாரா, "ஐசக்,
அங்கு ஸ்ட்ரோபெரிப் பழங்கள் ஒன்றும் மிச்சம் விடப்படவில்லை" என்று சொல்வது, அவளையும் - சந்தோஷத்தையும் அவர் நிரந்தரமாய் இழந்ததை உணரும்படி செய்கிறது; அதுதான் யதார்த்தம்' என்றவாறு
ஆ) நாயக் கில் , தனது நாடக உலக வழிகாட்டியான ஷங்கர்தாவின் ஆட்சேபத்தையும் மீறித் திரை உலகிற்குள் நுழையும் 'அரிந்தம், பணமும் புகழும் அடைகிறான். பிரமச்சாரியாக இருக்கிறான்; இன்பங் களைத் துய்க்கிறான். பிரமிளா என்ற திருமணமான பெண்ணுடனுள்ள இரகசிய உறவால், அவளது கணவனுடன் பகிரங்கத்தில் சச்சரவுப்பட நேர்கிறது; அது பத்திரிகையில் செய்தியாகவும் வருகிறது. அவனது புதிய திரைப்படம் வர்த்தகரீதியில் தோல்வியடையும் என்ற எதிர்வுகூறலும் மனநெருக்கடியை ஏற்படுத்து கிறது. நாயக் ஆக - கதாநாயகனாக - இருந்த போதும், தனிமை உணர்விலும் சுயபச்சாத்தாபத்திலும் உழலும் ஒரு சாதாரண மனிதனாகவே தன்னை உணர்கிறான்; தற்கொலை உணர்வாலும் தூண்டப்படு கிறான். ஒரு கட்டத்தில் அடிற்றி சென்குப்தாவுக்குச் சொல்கிறான்.
"வேதனை எனக்குள் இருக்கிறது. ஆனால் அதைச் சொல்வதற்கு, எனக்கு ஒருவருமே இங்கு இல்லை. இங்கும் சிலர் இருக்கிறார்கள். உனக்குத் தெரியும். எனக்கு ஏதேனும் நடந்தால், அப்போது ஒருவருமே இருக்க மாட்டார்கள்."
இ) கிராமத்தில் சாதாரண ஆசிரியனாக இருக்கும் சதீஸ், புல்லாரெட்டி என்னும் நிலக் கிழாரினால் பாதிக்கப்பட்ட லஜ்ஜோபாய் என்ற பெண்ணைப் பாதுகாத்து, ஹைதராபாத்தில் தங்க
ஜீவநதி
 
 

வைக்கிறான். இசையிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் அவள் லஜ்வந்தியாக மாறுகிறாள்.
"வீதியோரக் கல் நான்; நீங்கள்தான் என்னைச் சிற்பமாக்கினீர்கள்" என அவனிடம் சொல்கிறாள். இருவருக்கிடையிலும் நேசம் மலர்கிறது. பின்னாளில் சதீஸ், தஸ்ரத் ஜொக்லேகர் என்ற பெயரில் பிரபல எழுத்தாளராகிறான்.
"காதல் இவ்வுலகத்தின் அழியா உணர்வு, காதல் உனக்கு வாழ்வைத் தருகிறது; நீ காதலுக்காக இந்த வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாய்; காதல் உயர் பெறுமதி உடையது."
என, ஜனாஸா நாவலில் எழுதுகிறான். மனைவி, இரண்டு பிள்ளைகள், தாய் எனவுள்ள குடும்பம் - இந்தக் காதல் உறவு என்பவற்றுக்கிடையில் தத்தளிக்கிறான்.
"காலத்தின் பாதைவழியில் வெகு தொலைவுக்கு எங்குவேண்டுமானாலும் நீ பார்த்தாலும், நினைவுகளின் பயணம் சமுத்திரத்தில் அலைகளைப் போல் உன்னோடு வருகிறது."
எனச் சொல்கிறான். முஜ்ரா நடனத்தில் பேர் பெற்ற லஜ்வந்தி, காலமாற்றத்தில் இப்போது ‘லிஸா எனப் பெயர் மாற்றி, திரைப்படப் பாடல் களுக்கேற்ப உடலைக் குலுக்கி ஆடும் பாலுணர்வுக் கிளர்ச்சி நடனத்தைத் தனது வாடிக்கையாளருக்காக ஆடுகிறாள்!
"இவ்வுலகம் ஒரு பெரிய சந்தை. இங்கு காதல், கனவு, உணர்வுகள் எல்லாம் விற்கப்படு கின்றன. சந்தை தான் எம்மைக் கட்டுப்படுத்து கிறது; யாருமே இதிலிருந்து தப்பியோட
(UDL2UT5).
இங்கு இதயம் பொம்மையாகும்; GT6bGUTC8LD GLUTu J.“
என, தஸ்ரத் ஜொக் லேகர் இறுதியில் உணர்கிறான்!
-இதழ் 50
திரு பிர
அ

Page 41
சிறந்து
றாள்.
6060ਰੰ
கிறாள்.
TTGlfgo
LÍNUTUGO அன்று நரகமயானத்தின்
திருவிழா
பிரதான அதிதியாக
இறைவனை
அழைத்திருந்தனர்
கிறான். பிசாசுகள்
ରୋଗୀtଗt
DLU 56b GLUTL LLö
பிசாசுகளின் நடனம்
மனித மணர்டையோடுகளில்
路 கரப்பந்தாட்டம்
b
5 தாக சாந்தி
நிலையங்களாய்
芯 G山前 குருதிக்கேணிகள்
எலும்பும், சதையுமாய்
கேற்ப கடித்துக் குதறிநடத்தும்
பேய்களின் ராப் போஷணம்
றாள்! 犯
இறைவனை வரவேற்க பிசாசுகளின் தலைவி மனித எலும்புகளால் செதுக்கிச் செய்த சிம்மாசன இருக்கையில்
இருத்தி ஒரு அப்பாவிப் பெண்ணின் தலையை திருகி குருதி வடிய கொடுத்தாள் இறைவன் கையில்!
இறைவனோ சிரித்துக் கொணர்டே திண்று முடித்தார்.
5 3
;]եւ Ո6ծ
இப்படி நடந்து முடிகிறது பூமியின் ஒரு பக்கத்தில்!
நாங்களோ.
கோயில்கள் கோபுரங்கள்
D 50 ஜீவநதி
 
 
 
 
 
 

நேர்த்திகள் அர்ச்சனைகள் அபிஷேகங்கள் திருப்பலிகள் பாவசங்கித்தனங்கள் மன்றாட்டுக்கள் தொழுகைகள் தேர் ஓட்டங்கள்
என்று இறைவனைத்தேடி இருவிழிகருகுகிறோம்!
அவனோ. பிசாசுகளின் கணகுளிர ஆடுகின்றனர்.
நாங்கள் எல்லோரும்
நாஸ்திகர் என்று | ll:рталд56f6.ji தேசத்தில் ஆஸ்தீகம் பாடுகிறார்
ஒருவர் பிணத்தை ஒருவர் தின்போம் விலங்குகளை விட்டு
கசாப்பு கடைகளில் மனிதனை தொங்க விடுவோம் ஒருவரைப் பிய்த்து ஒருவர் பசியாற நரகமாக்குங்கள் இப்பூமியையும்
அதன் பின் இறைவனையும் அழையுங்கள் பிரதான அதிதியாக..!
இதழ் 50

Page 42
ஒட்டை விழுந்த நாணயங்க
இன்று எங்கள் ஸ்கேன் (Skagen)நகரில் மிகப்
பெரிய தமிழ்க் கல்யாணம்.
ஸ்கேன் (Skagen) நகரின் கடற்கரைக்கு உலகத்தில் எந்தக் கடற்கரைக்கும் இல்லாத மிகச் சிறப்பு உண்டு. வரைபடத்தில் மூக்கின் நுனி போல அமைந்திருக்கும் இந்த நகரத்தின் இரு பக்கத்திலும் இரண்டு வெவ்வேறு கடல்கள் உண்டு. ஒரு பக்கத்தால் ஒரு அலை வந்து போக அடுத்த கணம் மறுபக்கத்தால் மறு அலை வந்து போகும். முதல் அலை மணலில் வரையும் வர்ணத்தை மறு அலை வந்து அழித்து விட்டு தனது வர்ணத்தைப் போட்டுச் செல்லும், காலைத் தண்ணீரில் வைத்துக் கொண்டும் அலைகளின் அழகைப் பார்த்துக் கொண்டும் மணிக்கணக்காக நிற்கலாம். அலைகளின் வீச்சுக்கு ஏற்ப புவியியல் அமைப்பே மாறும் என இங்குள்ள ஆதி டென்மார்க்வாசிகள் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.
மாப்பிள்ளை டெனி, பெண்பிள்ளை டென்சி. இருவரின் பெற்றோர்களும் இருபத்தைந்து வருடங் களுக்கு முன்னால் என்னுடனும் எனது மனைவி சுமதி யுடனும் ஒரே அகதி முகாமில் அகதி அந்தஸ்த்திற்காக காத்திருந்தவர்கள் தான்.
பின்பு அனைவரும் இதே நகரத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பதால் இந்தப் பிள்ளைகளின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சந்தோசங்கள், துக்கங்கள் அனைத் திலும் எங்களுக்கும் பங்கு உண்டு. எங்களுக்கு அதிக
ஜீவநதி 3.
 

வி.ஜீவகுமாரன் - டென்மார்க்
காலம் பிள்ளைகள் இல்லாததால் எல்லாத் தமிழ் குழந்தைகளும் சுமதிக்கு அவளின் பிள்ளைகள் தான் - ஏதோ ஒரு நாள் அவர்கள் அவளது பிள்ளை இல்லை என அவள் உணரும் வரை, அதனை அந்தப் பிள்ளைகள் அவளுக்கு உணர்த்தியிருக்கும். அல்லது அவர்களின் பெற்றோர்கள் உணர்த்தியிருப்பார்கள். இரண்டு நாட்கள் வீட்டில் மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பாள். பின்பு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். ஆனால் நான் எந்த உறவுகளையும் வலிந்து தேடவோ தேடிய உறவுகளின் இழப்பால் எனக்குள் வலியை வளர்த்துக் கொள்ளவோ எனக்கு நான் இடம் கொடுப்பதில்லை. எனவே என்னை விட இந்த பிள்ளைகளின் முழு உயிரியல் பதிவுகளும் சுமதியின் நுனி விரலில் அத்துப்படியாய் இருந்தது.
பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னால் தான் அடுத்தடுத்து எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பிறந்தார்கள். அதுவரை ஊர்ப் பிள்ளைகளை தத்துப் பிள்ளைகளாய் பார்த்து வந்த அவளின் வேதனை எனக்கு நன்கு தெரியும், எங்கள் பிள்ளைகளும் நகரத்தில் உள்ள எல்லாத் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் தம்பியும் தங்கச்சியுமானார்கள்.
டெனிக்கும் டென் சிக்கும் பதினெட்டு வயதாகிய பொழுது இவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் என அவர்களும் அவர்களின் குடும்பமும் தீர்மானித்து விட்டது. அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாளின் பொழுதே இரு வீட்டாரும் டெனிஸ்காரர் போல அவர்கள் "மனமொத்த காதலர்கள்" என அனைவருக்கும் முன்னால் பெருமையுடன் பிரகடனப் படுத்தினார்கள்.
இந்தப் பிரகடனம் உண்மையில் ஒரு தற்பாதுகாப்பு உத்தி சாதி, சனம், இனம் பார்க்காமல் தம் பிள்ளைகள் கண்ட இடத்திலும் போய் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பெற்றோரால் முன்
-இதழ் 50
DT
இரு
ஐயர்
66
լ 1661
GUri
LOՑ56
ஜீவா

Page 43
5T6 -
(6)6OD 6) அந்தப் |ൺബg TT5GT. ந்திக் ரத்தில் |ளயும் 'J UITGò னக்கு |T. @ါL_
d5(GDLD
T60TTa) *னும் தத்துப்
56ಝ60T களும் நக்கும்
னட்டு ருக்கு பமும்
-Tவது }5|ाg|
ଚTର01
5L60T
ஒரு ல் தம் முந்து முன்
D 50
மொழியப்பட்டு பெற்றோராலேயே வழிமொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட உத்தி,
இந்தப் பிரகடனத்தின் பின்பு டெனியும் டென்சியும் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கம்பியூட்டர் துறையில் கல்வி கற்பதற்காக போய்
ਪੰLT.56.
"பார்த்தீங்களா செலவை மீதப்படுத்த அதுகள் இரண்டும் ஒரே வீட்டில் இருக்குதுகளாம்" சுமதி எண்ணையில் போட்ட அப்பளத்தை கருக விட்டபடி என்னுடன் அழத் தொடங்கினாள்.
"இருந்து விட்டுப் போகட்டுமே" என நானும் இலங்கையில் இருந்து வந்த மல்லிகையுள் மூழ்கினேன்.
எங்கள் நகரத்தின் அத்தனை குசினிகளிலும் அன்று அந்தக் குசுகுசுப்பு நிச்சயமாக இருந்து விட்டு போய் இருக்கும்.
ஆனால் அடுத்த மாதத்தினுள் நாற்பது வயதான டெனியின் தந்தையான சதாசிவத்திற்கும் அவரின் கந்தோரில் வேலை பார்த்த ரீட்டாக்கும் இடையில் எழுந்த காதல்(?) அந்தக் குசுகுசுப்புகளை திசை மாற்றி விட்டது. -
சதாசிவமும் ரீட்டாவும் வேறு நகரத்திற்கு போய் விட்டார்கள். எனவேதான் தகப்பன் கலந்து கொள்ள முடியாத திருமணத்தில் டெனியின் பெற்றோர் ஸ்தானத்தில் நின்று இன்று இந்த திருமணத்தை நானும் சுமதியும் நடாத்திக் கொண்டு நிற்கின்றோம்.
டெனியின் தாய் வந்து எங்களை கேட்ட போது நான் எவ்வளவோ மறுத்த போதும், சுமதி தான், அவனும் நான் தூக்கி வளர்த்த பிள்ளைதானே" என தன் பழைய பல்லவியைப் பாடத் தொடங்கியிருந்தாள். பின்பு வென்றது அவளின் கட்சிதான்.
சதாசிவம் இல்லை என்பதைத் தவிர எந்தக் குறையும் இல்லாது திருமணம் நடந்து கொண்டிருந்தது.
மணவறையில் மாப்பிள்ளையின் பக்கத்தில் நானும் சுமதியும் டெனிசியாவின் பக்கத்தில் அவளின் பெற்றோரும் நின்றிருந்தார்கள்.
ஐயர் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.
இப்பொழுது கன்னிகாதானம் நடந்து கொண்டு இருக்கின்றது.
"டென்சியா என்ற இந்தக் கன்னிகையை.", ஐயர் சொல்லிக் கொண்டிருக்க என்னையும் அறியாது என் நினைவுகள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் சென்றது.
米米米
அப்பொழுது எனக்கு இருபது வயது. துTரத்து உறவு முறையான காரைநகர் பெரியம்மா ஆட்கள் என்னை அவர்களது இளைய மகனின் திருமணத்திற்க ஒரு கிழமைக்கு முதலே வந்து
ஜீவநதி
 

நின்று ஒத்தாசை செய்யுமாறு கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அப்பா அம்மாவும் எனது மற்றைய சகோதரர்களும் திருமணத்தன்று காலை அங்கு வருவதாக ஏற்பாடு
அவர்கள் மலைநாட்டில் பெரிய வர்த்தகர்கள். வீட்டின் ஒரு கரையில் வெய்யில் காலத்தில் காற்று வேண்டிக் கொண்டு இருப்பதற்காக போடப்பட்டிருந்த மாலுக்குள் ஒரு நாள் மதிய உணவுக்குப் பின் இருந்து கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது பெரியம்மா சொன்னா, “உன்ரை காலுக்கு கீழை தான் எங்கடை முழு நகையும் இருக்கு" என்று. அவ்வாறே அவர்களது பணமும் வீட்டின் வெவ்வேறு இடங்களில், அவ்வளவு பணக்காரர்கள். ஆனால் பள்ளிக் கூட பக்கம் சென்றதில்லை. எல்லாம் அனுபவம் தந்த உழைப்பு,
அவர்களது திருமண வீட்டிற்கு முதல் கிழமையே மலைநாட்டில் இருந்து வந்திருந்த சிங்கள மற்றும் பெரும் பணக்காரர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடி அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து அவர்களை உபசரிப்பதே எனது வேலையாய் இருந்தது.
எனக்கு ஆங்கிலமும், சிங்களமும், தமிழும் தெரியும் என்பது தான் என் பிரத்தியோகத் தகமை, மேலாக அப்பா அம்மா நல்ல பிள்ளையாக வளர்த்ததால் கிடைத்த பெயர். இந்த இரண்டைத் தவிர எனக்குள்ளே யும் சரி, வெளியேயும் சரி எதுவுமே இல்லை.
அங்கு போன அடுத்த நாளே பெரியம்மா எனக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பெரியப்பா ஒரு தங்க செயினால் ஆன கை மணிக்கூடும் தந்தார்கள். அசந்து போய்விட்டேன். தங்கள் வீட்டுப் பிள்ளை அப்படித் தானாம் இருக்க வேண்டுமாம். ஆனால் ஊரில் அவர்கள் யாரும் செருப்பு போட்டுக் கொள்வதில்லை. ஏன் எனக் கேட்ட பொழுது செருப்பு போட்டு நடந்தால் தங்களைப் பணக்காரர் என மற்றைய ஊரவர்கள் சொல்லி விடுவார்களாம். ஒரு பத்து மைல் இடைவெளி யினுள் இத்தனை கலாச்சார வேறுபாடா என அதிசயித்து விட்டேன்.
வந்தவர்கள் அனைவருக்கும் யாழ்ப்பாணம், நல்லூர், சன்னதி எக்செற்றா எக்செற்றா எனக் காட்டி அவர்களை அவர்கள் விரும்பிய இடங்களில் புகைப்படங்கள் எடுத்து மிக நன்கு கவனித்துக் கொண்டேன். காலைச் சாப்பாட்டிற்கு பின் அவர் களுடன் புறப்படும் எங்கள் மினிபஸ் அன்று மாலை தான் வீடு திரும்பும், அவர்களின் வழிச் செலவுக்கு என பெரியய்யா என்னிடம் தினமும் ஐந்நூறுரூபாய் தருவார். வந்தவர்களை ஒரு போத்தல் சோடா கூட வேண்ட விடக்கூடாது என்பது பெரியப்பாவின் கட்டளை, அந்த வேளையில் தலைமை ஆசிரியரான எனது அப்பாவின் சம்பளமே ஆயிரம் என்று தான்
இதழ் 50

Page 44
நினைக்கின்றேன்.
அந்த ஒரு கிழமையும் எனக்கு அவர்கள் அளித்த இராஜ மரியாதையும் என்னில் காட்டிய பாசமும் வந்திருந்த மற்றவர்களை உபசரித்த விதமும் என்னை வேறு ஒரு உலகத்தில் வாழ வைத்துக் கொண்டு இருந்தது. எல்லோருக்கும் பந்தி வைத்து உணவு பரிமாறும் பொழுது பெரியம்மா மெதுவாய் வந்து சொல்லுவா, "நீ பொறு, நாங்கள் ஒன்றாக சாப்பிடுவோம்" என்று. எனக்கு விளங்காமல் விழித்த பொழுது, தானாக சொன்னா, "நீ வாழுற வளர்கிற பிள்ளை. யாரின் கண்ணும் பட்டு விடக்கூடாது" என்று. என்னையும் அறியாது அன்று என் கண்கள் கலங்கியது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.
பல்கலைக்கழகத்தில் சுமதியின் காதல் பற்றி திருமணமாக இருந்த அண்ணனுக்கு மட்டும் தெரியாது இருந்திருந்தால் இன்று நான் ஒரு பெரிய கல்லாப் பெட்டிக்கு பின்னால் கண்டியிலோ, கம்பாந்தோட்டை யிலோ நாலைந்து கடைகளுக்கு சொந்தக்காரனாக இருப்பதற்கு அவர்கள் வழி செய்து இருப்பார்கள். 83 யூலைக் கலவரத்திலும் இறந்து போயிருக்கலாம். அது வேறு விடயம்.
திருமண நாளும் வந்தது. பெரிய பந்தல். கூரைப் பந்தல் கெளரக் குறைச்சல் என்பதால் பெட்டிப் பந்தல் போட்டு வெள்ளை யும் கட்டி வர்ண நிறங்களில் கரைவேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் ஒவ்வோர் தூணிலும் மலைநாட்டில் உள்ள அந்தூரிப் பூக்களைக் கட்டி விட்டால் அழகாக இருக்கும் என பேச்சுக்கு சொன்னது தான் அடுத்த நாள் காலை மெயில் வண்டியில் கூடை கூடையாக பூக்கள் வந்து இறங்கியது.
யாழ்ப்பாணத்தில் இருந்த அத்தனை தலை சிறந்த மேளச் சமாக் காரரும் சொல் லாமலே வந்திருந்தார்கள். அதில் தான் பெரியப்பாவின் கெளரவமே தங்கியிருந்தது.வீட்டில் இருந்து மெயின் றோட்டு வரை குலை வாழை மரங்களும் செவ்விளணி மரங்களும் நாட்டப் பெற்று அத்தனையிலும் ரியூப்லைற்றுகள் மாட்டப்பட்டு இருந்தன. ஒரு லைற் மெசின் கைவிட்டாலும் என இரண்டு லைற் மெசின்கள் மாறிமாறி வேலை செய்து கொண்டு இருந்தன.
எங்கள் வீட்டாரும் அதிகாலையில் முதல் பஸ்சில் வந்து விட்டார்கள். அவர்கள் வந்தது தொடக்கம் பெரியம்மா எனது அப்பா அம்மாவிடம் எனது புகழ் படலம் தான், "தம்பியன் இல்லாவிட்டால் இவ்ளவவு பேரையும் எப்பிடிச் சமாளித்து இருப்பம். தம்பியன் சொல்லித்தான் பந்தல் முழுக்க பூவாலை ஜோடித்தது" என கட்டாயம் அப்பா, அம்மாக்கு மனதுள் சந்தோசமாய்த்தான் இருந்திருக்கும்.
ஜீவநதி

மாலை ஏழு மணிக்குத்தான் கலியாணம்,
ei.60TITGö 5ITGOGDuilGa)(8U GU60ös Gis LITs வந்து மாப்பிளைக்கு பால், அறுகு வைத்து தோய வார்த்து காலை உணவு உண்ட பின்பு பெண்ணிற்கு பால், அறுகு வைக்கும் சடங்கிற்காக மதியத்திற்க்கு கிட்டவாக பெண் வீட்டிற்கு நானும் சென்றிருந்தேன். அண்ணனின் மனைவியை கட்டாயம் எனக்கு காட்ட வேண்டும் என்பதும் என்னைப் பற்றி நாலு பேரிடம்
பெருமையாக பேச வேண்டும் என்பது பெரியம்மாவின் (3UUG)J.T.
பெண்ணை பெண்ணின் தோழிக்குப் பதிலாக பெரியம் மாவே அழைத்து வந்து மனையில் உட்கார்த்தினார்கள். அது அவர்களதுசம்பிருதாயமாம். பின்பு வழமைபோல எல்லோரும் பால் அறுகு வைக்க எனது ஜசீக்கா கமெராவும் அவர்களை தன்னுள் அடைத்துக் கொண்டு இருந்தது.
அடுத்து நடந்தது தான் எனக்கு ஆச்சரியத்தை தந்தது.
மணப்பெண்ணுக்குப் பக்கத்தில் பெரியம்மா வையும் உட்கார வைத்து இருவருக்கும் ஒன்றாக தலையில் தோய வார்த்தார்கள்.
"ஏனம்மா" என பக்கத்தில் நின்ற ஒரு ebLDIT6LLb (335 (3L60T,
"அது கன்னிப் பொம்பிளையை பெரியம்மா கையிலை பிடித்து கூட்டி வந்தவா தானே. அதுதான் அவாக்கு கன்னியைத் தொட்ட துடக்கு போக அவாக்கும் தேய வாக்கினம்", அம்மா எனக்கு விளங்கப்படுத்திக் கொண்டு நின்றா.
நினைவுகள் டென்மார்க் திருமண மண்டபத் தினுள் திரும்ப நான் எதுவும் பேச்சவற்றனாய் நின்றிருந்தேன். -
சுமதியினதும் எனதும் கையினுள் கன்னிகா தானம் செய்யப்பட்டு தரப்பட்ட வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், எலுமிச்சம்பழம்,தங்க நாணயத்திற்குப் பதிலாக டென்மார்க் சில்லறைக் காசுகள் ஆகியவை இருந்தன.
ஓட்டை விழுந்த அந்த ஒரு குறோன், இரண்டு குறோன், ஐந்து குறோன் நாணயங்களை என் கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றன.
இதழ் 50
ਕੁੰ6)

Page 45
ශීඝ්‍රඹීණිRöÜrස්තී
செ.கணேசலிங்கன்
சந்திப்பு - பரணி
செ.கணேசலிங்கன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்குடம் மூத்தபடைப்பாளி. மாக்ஸிய சித்தாந்த தெளிவுடன் எழுதி வருபவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைமைகளிலும் பல நூல்களை வெளிக்கொணர்ந்த சாதனையாளர். இவரது நீண்ட பயணம் நாவல் சாகித்தியமண்டலப் பரிசு பெற்றது. பதிப்புத் துறையில் இன்று முன்ணனியில் திகழும் குமரன் பதிப்பகம் இவர் பெயர் சொல்லும்,
ஜீவநதி
 

பரணி - ஈழத்தின் மூத்த படைப்பாளியாகிய நீங்கள், ஆக்க இலக்கிய கர்த்தாவாக இலக்கிய உலகில் பிரவேசித்த வேளை அக்காலத்தைய இலக்கிய சூழல் எவ்வாறிருந்ததென சுருக்கமாக கூறுவீர்களா?
செ.கணேசலிங்கன் - தமிழகத்து சஞ்சிகைகள் எழுத்தாளரின் ஆதிக்கம் நிலவிய வேளை, இலங்கையிலும் மறுமலர்ச்சி எழுத்தாளராக வரதர், இலங்கையர்கோன், வைத்திலிங்கம் ஆகியோர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதத் தொடங்கி இருந்தனர். இவர்களுடன் டானியல், இளங்கீரன், பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா போன்றோரும் எழுதத் தொடங்கினர். வெறும் கற்பனையை விட்டு இலங்கை மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக நானும் எழுதத் தொடங்கினேன்.
பரணி - நீங்கள் படைப்பாளியாக வருவதற்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் பற்றியும் உங்கள் குடும்பப் பின்ணனி பற்றியும் குறிப்பிடுவீர்களா?
செ. கணேசலிங்கன் - தமிழக, இலங்கை எழுத்தாளரின் வழிகாட்டலைத் தொடர்ந்தே எழுத முயன்றேன். எனது கிராமம் உரும்பிராய். அதன் சாதி மத எதிர்ப்பே அவ்வேளை எனது எழுத்துகளில் முதன்மை பெற்றது.
பரணி - சாதிய எதிர்ப்புக் கருத்துக்களை உங்கள் படைப்புக்களில் சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணம்
உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
செ. கணேசலிங்கன் - மனித உரிமை, இடதுசாரி அரசியல் கொள்கை, சமூக ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்துவதோடு முறியடிக்க வேண்டும் என்ற எண் ணம் என்பவையே இவ் வெண்ணத்தினை ஏற்படுத்தின. மேலும் எழுத்தில் மட்டுமல்லாது செயலாற்றவும் தூண்டியது.
பரணி - தலித்தியப் படைப்பாளி' என உங்களை அடையாளப்படுத்துவது பொருத்தமானதெனக் கருதுகின்றீர்களா?
செ. கணேசலிங்கன் - தலித்தியம் என்ற வார்த்தை, தலித் இலக்கியம் என்பவை தமிழகத்தில், 1980க்குப் பின்னரேயே தோன்றியது. மகாராஷ்ரத்தில் ஆரம்பிக் கப்பட்ட வார்த்தை, பின்னர் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று விளக்கவும் கூறப்பட்டது. தலித்தியப் படைப்பாளி எனப்
இதழ் 50

Page 46
பின்னர் அடக்கினும் நா இலங்கையில் ஆரம்பித்தே கூறுவதுண்டு. என் எழுத பொன்னுத்துரை, என். ே எழுத்துக்களும் இதில் அடங்கு
பரணி - நீங்கள் எழுதி பார்க்கின்றபோது 'சாதியம் பெண்ணியம்' என்ற கருப்
அவதானிக்க கூடியதாக உள்ள
அந்நாவல்கள் ஊடாக என்ன
சுருக்கமாக குறிப்பிட முடியுமா?
செ. கணேசலிங்கன் - இதுவும் மனித உரிமை
எதிராகவுள்ள உள்ள குரலே. ஆணுக்குள்ள உரிமைகள் வேண்டும் என்ற கோட்பாடே பெண்ணியம். பரவலான வர்க் பெண்ணியம் சார்ந்தும் எழுதுகிறேன். மார்க்சியத்தின் முத ஒற்றுமையும் போராட்டமும் என்பதன் கீழ் அண்மையில் நா6 அக்கோட்பாட்டின் வாயிலாக முரண்பாடுகள் வரும்; முர6 பகைமையற்ற முரண்பாடு என மாவோ விளக்குவார். அ பகைமையற்ற முரண்பாடாக பேச்சு, சமரசம், விவாகரத் சச்சரவுடன் தொடரலாம். பகைமை முரண்பாடாக அழித்தெ உதை மட்டுமல்ல கொலைகளும் நடைபெறுகிறன. பெண் நடைபெறுகிறது. இவற்றை பகைமை முரண்பாட்டில் அடக்கு
பரணி - எழுத்தாளர் கே. டானியல் பற்றிய உங்கள் மதிப்பீடு எ
செ. கணேசலிங்கன் - டானியல் தமிழின் முற்போக்கு ஆங்கிலம், பிறமொழி இலக்கியம் கற்றல் தொடர்புண்டு மேம்பட்ட பெருமை டானியலுக்கு உண்டு வாழ்வின் கன் பின்னரே தேசிய இனப் போராட்டம் எடுக்கப்பட வேண்டும் அன்னாரின் கடைசி நாட்கள், தகனக் கிரியைகளில் ரே பங்குபற்ற முடிந்தது ஒரு சோக முடிவே.
பரணி - குமரன்' என்ற சஞ்சிகையை மாணவர் சஞ்சிை வெளியிட்டு வந்தீர்கள். பின்பு அச்சஞ்சிகையை தொடர்
காரணமென்ன?
செ. கணேசலிங்கன் - ஆரம்பத்தில் குமரன் இதழ்கை முயன்றேன். பின்னர் வளர்ச்சிப் போக்கில் மார்க்சிய இதழா தமிழகத்திலும் கணிக்கப்படுகிறது. 87 இதழ்கள் வெளியிட்( கதைகள், கவிதைகளை 1000 பக்கத்தில் தொகுதியாக வெளி
பரணி - குமரன் சஞ்சிகை மூலம் நீங்கள் எதனைச் சாதித்துள்
செ. கணேசலிங்கன் - மார்க்சிய அறிவை, முற்போக்க
ஜீவநதி 42
 

மே அவர்களுக்கு முன்னரே ாம் என தமிழகத்தில் நான் ந்துகளும் டானியல், ஜீவா, க. ரகுநாதன் ஆகியோரின்
Ls),
|ய நாவல்களின் வரிசையைப் என்ற கருப்பொருளில் இருந்து பொருளை நோக்கிச் செல்வதை து. பெண் ஒடுக்கு முறை பற்றி
கூற விரும்பினீர்கள் என்பதை
மீறலுக்கும் ஒடுக்குமுறைக்கும் அனைத்தும் பெண்ணும் பெற கப் போராட்டத்திற்கு உள்ளேயே ற் கோட்பாடான எதிர்மறைகளில் வல் ஒன்று எழுதினேன். ண்பாடுகள் பகைமை முரண்பாடு, ஆண், பெண்ணின் குடும்ப உறவு து என குடும்ப வாழ்வு சண்டை ாழித்தலும் நடைபெறுகிறது. அடி, என அறிந்ததும் கருக்கலைப்பு ६)|T,ि
ன்ன?
5 எழுத்தாளரில் ஒருவர். எமக்கு இவை எதுவுமற்று தனித்துவமாக டைசி நாட்களில் சாதி ஒழிப்பின் என்பதில் உறுதியாக இருந்தார். நரடியாக என்னால் தஞ்சாவூரில்
கயாக ஆரம்பித்து நீண்ட காலம்
ாந்து வெளிக்கொணராமைக்கான
ள மாணவர் சஞ்சிகையாக ஆக்க 5 மாற்றினேன். இவ்வாறே இன்றும் டேன். அவற்றுள் தேர்ந்த கட்டுரை, US C3L6GT.
ளதாகக் கருதுகின்றீர்கள்?
ான என் சிறுகதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள்,
இதழ் 50
༅

Page 47
புதுவை இரத்தினதுரை, சாருமதி கவிதைகள் யா இலக்கியத்தின் முற்போக்கான கருத்துக்களைக் ெ என்பதே என் முடிவு இன்றும் தமிழகத்தில் எங்கும் படிக்க
பரணி - நீங்கள் காணவிழைந்த சாதி விடுதலை, பென என்பவற்றின் இன்றைய நிலை பற்றிய உங்களின் அபிப்பி கூறுங்கள்?
செ. கணேசலிங்கன் - முற்போக்கான சிந்தனைக் பரவிய அளவிற்கு விடுதலை கிட்டவில்லை. நிலப் கருத்துகளை அத்தனை எளிதில் ஒழித்து விடமுடியா சிந்தனையில் கருத்துகள் நிலைபெற்று நீதிப்ப( கவனிக்கலாம்.
பரணி -இன்றைய இலக்கிய உலகு குறித்து உங்களி முதிர்ச்சியின் பின்னணியில் எண்ணிப் பார்க்கின்ற போது ஆரோக்கியமாகத் தெரியும் அம்சங்களையும் நெரு தெரியும் அம்சங்களையும் குறிப்பிட முடியுமா?
செ. கணேசலிங்கன் - கலை, இலக்கிய வளர்ச்சி நவீன தொழில் நுட்ப ஊடகங்கள் தடை செய்து முதலாளித்துவத்தின் வணிகமயப்படுத்தல் தொடர் திருப்புகிறது. உதாரணமாக நாவல் எழுதுவது, ெ படிப்பது குறைந்து வருகிறது. நுகர்பண்ட வணி: விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சோப் ஒப் டி.வி. தொடர்கதைகள் நாள்தோறும் தமிழகத்தில் சனல்களில் 50-55 தொடர்கின்றன. மக்கள், சிறப்பாக இவற்றில் ஆர்வம் காட்டும் சூழலை காண்கிறே நெருடல்கள்.
பரணி - குமரன் பதிப்பகம் உங்களின் கனவுகளை எவ்: நிறைவேற்றி வருகின்றது?
செ. கணேசலிங்கண் - குமரன் பதிப்பகம் பரந்த பதிப்பு பங்கே, அதன் பாதிப்பையும் மேலே கூறப்பட்ட 2 இணைத்துப் பார்க்கலாம்.
பரணி - ஈழத்து தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை 6 அதீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?
செ. கணேசலிங்கன் - ஈழத்துத் தமிழ் இலக்க பெயர்ந்தவரால் உலகெங்கும் பரந்து வருவதைக் க ஆயினும் அடுத்த பரம்பரை எவ்வாறு எடுத்துச் செல் கேள்விக்குறியே.
ஜீவநதி

ഖു(8ഥ 5ങ്ങബ
கொண்டவை
ப்படுகின்றது.
ன் விடுதலை
ராயங்களைக்
கருத்துக்கள்
பிரபுத்துவக் து. ஆயினும் டுத்துவதைக்
ன் அனுபவ பொதுவாக
ருடல்களாகத்
|ப் போக்கை வருகின்றன. rந்து திசை வளியிடுவது, கம் சார்ந்த பரா எனும்
வெவ்வேறு ,["] ଗuଗ0it85ଗit
Tլի. 960) 6):
வளவு தூரம்
புலகில் சிறிய ஊடகத்துடன்
ாத்துறையில்
Slu Jub, цеоub
ாண்கிறோம்.
லும் என்பது
இதழ் 50

Page 48
உ. நிசார்
GOOGOODigió
மன்சூர் துரை மண்ணாசை மிக்கவராக இருந்தார். அதனால் அவரின் காணிகளுக்குப் பக்கத்துக் காணிச் சொந்தக்காரர்களுடன் அவருக்குச் சதா பிரச்சினைகள் இருந்தன. அவற்றுள் ஒரு சில வேலிகள் சம்பந்தமானதாக இருந்திருக்கலாம். அல்லது பக்கத்துக் காணிகளில் உள்ள உயர்ந்த மரம்மட்டைகளின் நிழல் சம்பந்தமானதாக இருந்திருக்கலாம். அதுவும் இல்லா விடின் பக்கத்துக் காணியை அல்லது அதில் ஒரு பகுதியை தனதாக்கி கொள்வதற்காகப் பேசிய பேரம் சம்பந்தமானதாக இருந்திருக்கலாம். இப்பிரச்சினை களுக்காக அவர் சில நேரங்களில் அடுத்தவர்களுடன் முரண் பட்டிருக்கிறார். சண் டை சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறார். வழக்குப் பேசியிருக்கிறார். அதிகாரி களுக்கு இலஞ்சம் கொடுத்திருக்கிறார். இவை பலிக்காத சந்தர்ப்பங்களில் தந்திரமாகச் செயற்பட்டு, சுமுகமான முறைகளில் மற்றையவர்களின் காணி பூமிகளை அபகரித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் செய்வதற்கு அவருக்குப் பண பலம் இருந்தது. ஆட்பலம் இருந்தது. அரசியல் பலம் இருந்தது. அத்துடன் பள்ளிவாசல் நிர்வாகசபையின் அங்கத்துவமும் இருந்தது. அதனால் அவரை எதிர்த்துப் பேச அங்கு எவரும் முன்வரவில்லை. ஆனால் மன்கர் துரையின் மனைவி மக்களும் குடும்ப உறவினர்களும் அவரை நல்வழிப்படுத்த சதா முயற்சி செய்து கொண்டே இருந்தனர்.
ஒரு நாள் மன்கர் துரையின் மகன் அகீல் மிகவும் ஆத்திரத்துடன் தனது தாயிடம் வந்தான்.
“gD LLÖLDT, GJITÜLJT GD3FučjuÚNU G36)J GD56TTIGD எங்களுக்கு ஊர்ல மொகம் நீட்ட ஏழாம ஈக்கு அதனால, அவர இந்த மொறயாவது ஹஜ்ஜூக்கு அனுப்பி வச்சப் பாருங்கோ. அவர் ஹஜ்ஜூ செஞ்சிட்டு வந்தத்துக்குப் பெறகாவது திருந்துவாரா என்டு செல்லிப்பாப்போம்."
அதன்படி ஒரு நாள் இரவு மன்கர் துரை உணவருந்தி விட்டு ஒய்வாக இருக்கும் போது, அவரது
ஜீவநதி

மனைவி ஆத்திபா நோனா அவரிடம் வந்தாள். அவளுடைய கைகளில் சுடச்சுட கோப்பி ஒரு கோப்பை இருந்தது. அதை அவள் மேசை மீது வைத்து விட்டு, அவருக்கு எதிரே இருந்த கதிரையில் உட்கார்ந்து கொண்டாள்.
"கூலி வேல செய்ற ஜெமால் நானா கூட ஹஜ்ஜூ செய்யப் போறாராம். அதனால அடுத்த வருஷமாவது நாங்களும் ஹஜ்ஜூக்குப் போக நிய்யத்துவச்சிக் கொள்வோமே."
“36TGçT 36bGJIT (3UTC36) TLD, 3UTC36JITLD." "நான் எப்ப ஹஜ்ஜூப் பயணத்த ஞாபகப் படுத்தினாலும் நீங்க இதே பதிலத்தான் செல்லுரீங்க இங்க கேளுங்கோ, நாங்க மகள் ரெண்டு பேரயும் நல்ல எடங்களுக்குக் கலியாணம் கட்டிக் குடுத்திட்டோம். மகனுக்கும் கலியாணம் முடிச்சி வச்சிட்டோம். பேரன் பேத்திகளயும் கண்டுட்டோம். இந்த உலகத்துல எத்தனயோ வசதி வாய்ப்புகள அனுபவிச்சிட்டோம். மறுமக்கிச் செய்ய வேண்டிய எத்தனயோ கடமகளயும் செஞ்சிச்டோம். அதனால ஹஜ் கடமயையும் நெற வேத்தினாத் தானே அதெல்லாம் சம்பூர்ணமாகும்."
"சரி, ஆத்திபா சரி. தீர்ப்பு வாரத்துக்கு இன்னும் மூனே மூனு வழக்குத்தான் ஈக்கு அந்த மூனு தீர்ப்பும் வந்தத்துக்குப் பெறகு நாங்க ஆறுதலா ஹஜ் பயணத்த வச்சிக் கொள்வோமே."
"நீங்களும் ஒங்கட வழக்குத் தீர்ப்புகளும், அது சரி இப்ப ஈக்கிற மூனு வழக்கும் யார் யாருக்கு எதிராவேன்?"
"ஏன்ட தம்பி ஈக்கிறானே மம்ம ஹாசீம்.
இதழ் 50

Page 49
அவனுக்கும் எனக்கும் எடயில எங்கட ஊட்டுப் பங்குகளுக்கு ஈக்கிற வழக்கு அடுத்தது, அக்கரேெ ஈக்கிறானே சாதிகீன். அந்தக் கபுரு வெட்டித்திரியிறவன் அவன, அவன்ட ஊட்டுள ஈந்து வெளியே போடுற வழக்கு மத்த வழக்கு இனி ஒன்ட தங்கச்சி அனிசாவோட ஈக்கிற ரோட்டு வழக்குத்தான்."
“யா அல்லா இது என்னத்தென் நீங்க? ஷதான் விரும்புறத்தத்தான் தன்ட சகோதரனும் விரும்புறான்; என்டு ரசூல் நாயகங்கள்ட ஹதீஸ் ஒன்டும் ஈக்க எங்களுக்குள்ளேயே நாங்க வழக்குக் கணக்குட் பேசினா எப்பிடியென்? ஒங்கட தம்பி நாலஞ்சி கொமரு குட்டி உள்ள மனிசுஷன், அந்தக் கபுரு வெட்டுற சாதிகீன் நானர் கூலி வேல செஞ்சி குடும்பம் காப்பாத்துறவரு எங்கட தங்கச்சிதான் பெரிய சீமாட்டியா? என்னமே அவட மகன் ஒத்தன் சவூதீல ஈக்குறான். அவளவுதானே எங்களுக்கு ஈக்குற காணி பூமி, சொத்து சொகம், காசி பணம் போதாதா? அதனால இனி வழக்குக் கணக்கு ஒன்டும் தேவ இல்ல. எல்லாரோடயும் சமாதானம் ஒன்டுக்கு வந்து, வழக்குக் கணக்குப் பேசுறத்த உட்டுட் போடுங்கோ. அப்ப அல்லா எங்களுக்கு இன்னும் பரகத்துச் செய்வான், நாங்க அடுத்த வருகூஓமாவது ஹஜ்ஜூக்குப் போக நிய்யத்து வச்சிக் கொள்வோம்."
"அல்லாட கிருபயால அடுத்த வருகூடிமாகக் குள்ள இந்த மூனு வழக்குகளுக்கும் தீர்ப்பு வந்திடும் ஆத்திபா ஒனக்கொரு விகூடியம் தெரியுமா? நான் இதுவர அறுபத்தேழு வழக்குப் பேசி அறுபத்தேழு வழக்குலயும் வெத்தி எடுத்த ஆள். இந்த ஊர் ஜனங்கள் என்ன சென்னாலும் நான் வழக்குப் பேசுற விக்ஷயத்துல அல்லா என்னோட தான் ஈக்கிறான். அதனால இந்த மூனு வழக்கிலயும் நான்தான் வெத்தி எடுப்பேன். அப்ப, நான் எழுபது வழக்குப் பேசி, எழுபது வழக்குலயும் வெத்தி எடுத்த ஆளாயிடுவேன். இதுல ஈந்து நீ ஒண்டு வெலங்கிக் கொள்ள வேணும், நியாயம் ஏன்ட பக்கத்துலதான் ஈக்கு என்டத்த அது எனக்குப் போல ஒனக்கும் பெருமதான்."
"காசி பணத்த வீசிச் செலவழிச்சிறத்தாலயம் பெருக்கோர்மார்ட கெட்டித்தனத்தாலயம் பொய்ச்சாச்சி செல்லவச்சிறத்தாலயம் நீங்க எடுத்த வெத்திகளுக்கு நான் பெருமப்படுறத்த விட, இந்த ஊர் மணிகூடிர் கதச்சிற கதகளுக்கு வெக்கப்படுறேன்."
"ஊருவாய மூட ஒல மூடி இல்ல என்டது. ஒனக்குத் தெரியாதா? அது சரி, ஊருல என்னப்பத்தி அப்பிடி என்னதான் கதச்சிறாங்க?"
"நாங்க மவ்தானா எங்களக் கொண்டத்து அடக்கம் செய்யிறது ஆரடி நீட்டமுள்ள கபுரொன்டுக் குள்ளயாம். அப்பிடி ஈக்க, நீங்க ஊரு மனிஷர்ட காணி பூமிகள வழக்குக் கணக்குப் பேசி அபகரிச்சுக் கொண்டது, அல்லா ரசூலுக்குப் பொருத்தம் இல்லியாம்.
ஜீவநதி

இன்னுமொரு விகூடியமும் செல்லுறாங்க, ஒங்கட மொகத்தப் பாத்துக் கொண்டு நான் அந்த விகூடியத்த எப்பிடித்தான் செல்வேனோ எனக்குத் தெரியா?"
"இங்க பாரு ஆத்திபா நான் இந்த ஊரு மனிக்ஷர்ட கதகளுக்கெல்லாம் பயப்புடுற ஆள் இல்ல. அதனால அவங்க கதச்சிற எந்த விஷயத்தயும் எனக்கிட்டதாராளமாகச் செல்லு"
அதைச் சொல்வதற்கு ஆத்திபாவின் வாய் கூசியது. அதனால் அவள் ஒரு முறை தனது கணவரின் முகத்தை கீழ் கண்களால் நோட்டமிட்டுக் கொண்டாள்.
"ஆத்திபா, என்ன இன்னும் யோசிச்சிறாய்? இப்ப நீ செல்ல வந்த விகூடியத்த இனி பயப்புடாமச் செல்லு புள்ளே”
"நீங்க மவ்தாகி கபுரொன்டுல அடக்கம் செஞ்சா, அந்தக் கபுரு ஒங்கள நாலு பொறத்தாலயம் நெருக்குமாம். அப்ப, ஒங்கட இரு பொறத்து விலா எலும்புகளும் ஒன்டோடு ஒன்டு மோதுமாம், கபுரு செய்யிற அந்த வதய ஒங்களால தாங்கிக் கொள்ள ஏழாமப் போகுமாம். அடுத்தவங்கட காணி பூமிகள அபகரிச்சிறவங்களப் பத்தி ஹதீஸ்ல அப்பிடிச் செல்லப்பட்டு ஈக்குதாம்."
"ஹதீஸ்ல அப்பிடிச் செல்லப்பட்டு ஈந்தத்துக்கு நான் யார்ட காணி பூமிகளயும் அபகரிச்சிக் கொள்ள இல்லயே. அந்தக் கபுரு வெட்டி சாதிகீன்தான் இந்தக் கதயெல்லாத்தயும் கதச்சிக் கொண்டு திரியுறான் (3UTG)."
"ஐயோ, பாவம் அந்த மணிகூடின். அவர் கூலி வேல செஞ்சி குடும்பம் காப்பத்துறவரு”
"ஆத்திபா, அளவுக்கு மிச்சமா நீ அவனுக்கு வெள்ள வெச்சிறாய். சாதிகீன, அவன்ட ஊட்ட உட்டு வெரட்டாட்டி நான் மன்கர் தொரயல்ல."
மன்சூர் துரை அன்று சபதமிட்டது போல் அவருக்குச் சாதகமாகவே சாதிகீனுக்கு எதிராக இருந்த வழக்கில் தீர்ப்புக் கிடைத்து விட்டது. அதன்படி பிஸ்கல் அதிகாரிகளை வரவழைத்து, சாதிகீன் வீட்டுச் சாமான் சட்டிகளை வெளியே தூக்கி எறிந்து, அவனின் குழந்தை குட்டிகள் பதறப்பதற, அவனை வீட்டை விட்டு வெளியே துரத்துவதற்கே, மன்சூர் துரை திட்டம் வகுத்து இருந்தாலும் வழக்குத் தீர்ப்புக் கிடைத்த ஒரு சில தினங்களில், சாதிகீன் தனது வீட்டை விட்டு அமைதியாக வெளியேறி விட்டான்.
மன்சூர் துரையின் சூழ்ச்சியொன்று பழிக்க, பரம்பரை பரம்பரையாக சாதிகீன் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் இருந்து அவன் வெளியேறும்போது, அவனின் மனைவி மக்கள் கதறி அழுததை அவனால் சகிக்க முடியவில்லை. ஏற்கனவே மன்கர் துரையை எவ்வாறு சரி பலி தீர்க்க, அவன் வைத்திருந்த வைராக்கியம் அந்தக் காட்சியைக் காண, மேலும் ஒரு படி கூடி
இதழ் 50

Page 50
விட்டது.
"மன்கர் தொர, நீங்க பணக்காரன். நான் ஏழ. கருங்கல்லுல தலய மோதினா தலதான ஒடஞ்சி போகும். அதனால நான் வெலகிப் போறேன். எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும். அப்ப நான் பாத்துக் கொள்றேன்."
வீட்டை விட்டு வெளியேறும் போது அவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்ட சாதிகீன், ஊர் மக்கள் சேர்ந்து மையவாடியின் ஓர் எல்லையில் அமைத்துக் கொடுத்த சிறு குடிசையொன்றில் தனது மனைவி மக்களுடன் அன்று குடியேறி விட்டான்.
அன்றிரவு மன்சூர் துரை ஆத்திபா மூலமாகவே அந்தச் செய்தியை அறிந்து கொண்டார்.
"பாவம் சாதிகீன் நானா, அவர் ஈந்த ஊட்ட அவருக்கே உட்டுக் குடுக்க ஈந்திச்சி. இப்ப மையவாடியில பெய்த்து புள்ள குட்டிகளோட அவர் என்னபாடு படுகிறாரோ தெரியா?
"ஆத்திபா, கபுரு வெட்டுறவனுக்கு மையவாடி தான் பொருத்தமான எடம். அதனால நாங்க என்னத்துக்கு அதப்பத்திக் கவலப்படவேணும்."
சாதிகீன் மையவாடியில் குடியிருந்ததைப் பற்றி மன்சூர் துரை கவலை கொள்ள வில்லை என்பது உண்மைதான். எனினும் அங்கே சாதிகீனின் குடிசையில் குடியிருந்தவர்களுக்கு அது 5©6ರಾಣು அளிப்பதாகவே இருந்தது. அன்று மாலை இருளோடு குளிரும் சேர்ந்து வந்து அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டது. இடையிடையே வீசிய காற்றோடு குப்பி விளக்கின் சுடர் போராடிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு வெட்டுக் கிளிகளின் சத்தம் காதைத் துளைத்தது. ஆந்தையொன்று தொடரந்து அலறிக் கொண்டிருக்க இடையிடையே நரியொன்று ஊளையிட்டது. அவற்றுக்கு மேலதிகமாக அவர்களது பிள்ளைகளின் உள்ளங்களில் பயம் குடிகொண்டு விட்டது.
"உம்மா, எனக்குப் பயமா ஈக்கு உம்மா, பேய், பிசாசுகள் வந்து எங்கட கழுத்த நெறிச்சிக் கொன்டு (3UTCBC3LDIT G.5 fluJIT 2 LibLDIT?"
சாதிகரீனின் மனைவியிடம் ஓடி வந்த அவர்களது மூத்த சிறுவன் அவளது கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது அவள் ஈரமான சமையலறையில் பச்சை விறகுக் கட்டைகளுடன் அடுப்பு நெருப்புக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.
"ஏன்ட வாப்பா, நீ ஒன்டுக்கும் கவலப்படாதே வாப்பா. படச்ச நாயன் எங்களக் காப்பாத்துவான். நீ வா, நான் ஒனக்கு ஆயத்துக்குரிஷி கரத்த ஓதி ஊதி உடுகிறேன்."
அவள் தனது மைந்தனை மடியில் அமர வைத்து, ஆயத்துக் குரிஷி சூரத்தை மூன்று முறை ஓதி, தலையில் இருந்து கால் வரை ஊதி விட்டாள். அதன் பிறகு அவள் மீண்டும் அடுப்புடன் போராட அங்கே
ஜீவநதி

சாதிகினின் துணைக்கு வந்திருந்த அவனின் நண்பர்கள் இருவர் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
"மன்கர் தொர அடுத்தவன ஏமாத்தி, வழக்குப் பேசி, பொய் சாக்கி செல்லவெச்சி இப்பிடிக் காணிபூமி சம்பாரிச்சத்துக்கு போகக்குள்ள அவர் அதெல்லாத்த யும் கபுருள்ளுக்குக் கொண்டு போவாரா?”
"அவர் மவ்தான அன்டெய்க்கு நாங்க, நீங்க ஹயாத்தோட ஈந்தா, அவரக் கபுரு நெறுக்கிறத்த எகட கண்ணாலயே பாக்க ஏழுமாயிக்கும்."
"இப்பிடி மனிஷர் உலகத்துல ஈக்கத்தான் வேணுமா? மன்சூர் தொர அவர்ட தம்பி ஹாசீம் காக்காவோடயும் காணி வழக்குப் பேசுறாரு"
"நான் அஸரு நேரம் பள்ளிக்குப் போகக் குள்ள ஹாசீம் காக்கா, மன்கர் தொர ஊட்டுப்பக்கமா பெய்த்துக் கொண்டீக்குறத்தக் கண்டேன்."
அவர்கள் கதைத்துக் கொண்டவாறு, அன்று மன்கர் துரை வீட்டுக்கு, ஹாசிம் செல்வதற்கு காரணமொன்று இருந்தது.
சகோதரர்களான தமக்குள் வழக்கு வம்புகள் இருந்தாலும் தனது வீட்டில் நடக்கும் முதலாவது திருமணத்திற்கு, தனது சகோதரனுக்கு அழைப்பு விடுப்பதை ஹாசீம் பெருமிதமாக் கொண்டார். அதன் படி, அவர் தனது சகோதரன் ஒய்வாக இருக்கும் ஒரு நேரம் பார்த்து, மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக மன்கர் துரையின் வீட்டுக்குச் சென்றார்.
"G5 Tě535T 594 Grübau)GADITQUp eeH6ODGDě5g5L b.” "வஅலைக் குமுஸ் ஸலாம். ஆ. இது மம்மஹாசீம் அல்லேன். ஹயாத்துக்கு ஹஜ்ஜூ செய்ய வந்தீக்குறாய் போல, ஆத்திபா இங்க வா. வந்தீரது ஆரெனென்டு செல்லிப் பாக்க ஓடி வா."
அஸர் நேரத் தொழுகையை முடித்து, துஆ ஓதிக் கொண்டிருந்த ஆத்திபா, ஓடிவந்து கதவுத் திரைக்குப் பின்னால் நின்ற வண்ணம் வந்திருப்பது யார் என்பதை அவதானித்தாள்.
"காக்கா, மூத்த மகள்ட கலியாணத்துக்கு நாள் குறிச்சி, அதுக்கேத்த எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டோம். நீங்களும் மதினியும் புள்ளகளும் நேர காலத் தோட வந்து கலியாணத்த செறப் பா நெறவேத்தித் தர வேணும்."
"மம்ம ஹாசீம், ஒன்ட ஊட்டுக் கலியாணத்த செறப்பாக செய்ய நான் வராம வேறு யாரு வரவென். அது சரி, கலியாணம் ஒன்டு எடுக்கிறத்துக்கு ஒனக்கு 6TIfJG5ITSDSIS)/6ITS), G5TeflLJ60OTLö?“
"காக்கா, ஏன்ட ஊட்டுப் பங்க ஈடுவச்சி, ஒரு தொகப் பணம் கடனுக்கு எடுத்துத்தான் நான் மகள்ட கலியாணத்துக்கு செலவழிச்சிறேன்."
இதழ் 50

Page 51
அதன்பிறகு ஹாசீமைத் தீர விசாரிக்க மன்சூர் துரை வீட்டை ஈடெடுத்தவர், கடன் தொகை, வட்டி வீதம் என்பவற்றை அறிந்து கொண்டார்.
தம்பி, நானும் நீயும் வழக்குப் பேசுறது உண்ம ஆனா ஊட்ட ஈடு வச்சிறத்துக்கு முந்தி எனக்கிட்ட ஒரு வாத்த கேக்க ஈந்திச்சி. அந்த ஊடு எங்கட உம்மா வாப்பா வாழ்ந்த ஊடு. அத எழக்கிறதாக ஈந்தா அது எங்கட உம்மா, வாப்பாக்குச் செய்யிற துரோகம், தம்பி அதனால நாங்க இப்பிடிச் செய்வோம். நீஊட்ட ஈடு வச்சி எடுத்த பணத்தப் போல நாலு மடங்குப் பணத்த, நான் ஒனக்குத் தாரேன். நீஈட்ட மீண்டு ஊட்டுப் பங்க எனக்குச் சொந்தமா எழுதித் தா, அதுக்குப் பெறகு நாங்க வழக்க வாபஸ் வாங்கிக் கொள்வோம். உம்மா, வாப்பா வாழ்ந்த ஊட்டுக்கு காக்கா, தம்பி அடிச்சிப் புடிச்சிக் கொள்றதும் வழக்குக் கணக்குப் பேசுறதும் பாக்கிற மனிசுடிருக்கு அழகில்ல ராஜா. அதோட, நான் ஒன்னோட வழக்குப் பேசுறத்துக்கு ஒன்ட மதினியும் என்னக் கொற செல்லுறா. இந்த வழக்குக் கணக்குப் பேசுற விக்ஷயங்களுள ஈந்து நானும் விடுபட்டு, அடுத்த வருகூடிமாவது ஹஜ்ஜூக்குப் போக வேணும்."
"காக்கா, ஒங்கட யோசன என்டா நல்லம். ஏன்ட ஊட்டுப்பங்க ஒங்கட பேருல எழுதித் தந்திட்டு நான் GTril 5 (3LT3566)6(TP"
"ஐயோ தம்பி, நீ நல்ல கத கதச்சிறாய். நானும் நீயும் ஒரு உம்மாட கொடலப் பிச்சிக் கொண்டு பொறந்த சகோதரங்கள். அப்பிடி ஈக்க, ஒன்ன நான் ரோட்டுல எறக்குவேனா? ஊடுதான் ஏன்ட பேருல ஈக்கும். மத்தப்படி ஊட்டுட ஆட்சி ஒன்ட கையில தான் ஈக்கும். அதனால் ஒனக்கு விருப்பமான காலம் வர, நீ அந்த ஊட்டுல, புள்ள குட்டியோட சந்தோக்ஷமா இரி, அதோட நீ
ஜீவநதி
 

புள்ள குட்டிக் காரன். கஷ்ட நஷ்டப் பட்டவன். ஒன்ட நன்மக்கித்தான் நான் இதெல்லாத்தயும் சென்னேன். கடன் பட்டா வட்டி குடுக்க வேண்டி வரும். அந்த வட்டி குட்டி போடும் என்டொரு கதயும் ஈக்கு அதனால ஊட்டுக்குப் பெய்த்து, மதினியிடமும் இது சம்பந்தமாக கதச்சி, ஆர அமர யோசிச்சி, ஒரு நல்ல முடிவுக்கு வந்து எனக் கிட்ட செல்லு, அதுக்குப் பெறகு நாங்க விகூடியங்கள முடிச்சிக் கொள்வோம்."
அப்போது ஆத்திபா வாழைப்பலம், பலகாரம் என்பவற்றுடன் தேநீர் ஒரு கோப்பையையும் தட்டொன் றில் வைத்து எடுத்துக்கொண்டு அங்கே வந்தாள்.
"ஆத்திபா, தம்பிக்கும் எனக்கும் இனி வழக்குக் கணக்கு இல்ல. இப்ப நாங்க ரெண்டு பேரும் சுல்ஹாயிட்டோம்."
அதைக் கேட்ட ஆத்திபா மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள்.
"அல்ஹம்துலில்லா, அப்ப இனி எங்கட தங்கச்சியோட ஈக்கிற றோட்டு வழக்கு மட்டுந்தான் ஈக்கு அவவோடயும் ஒரு சமாதானத்துக்கு வந்து, வழக்குப் பேசுறத்த இனி உட்டுப்போடுங்கோ, நாங்க ரெண்டு பேரும் அடுத்த வருஷம் ஹஜ்ஜூக்குப் போக நிய்யத்து வச்சிக் கொள்வோம்."
ஹாசீம், தேநீர் விருந்துபசாரத்தின் பின் மிகவும் சந்தோசத்துடன் அவருடைய வீட்டுக்கு வந்தார். தனது சகோதரன் சொன்ன விடயங்களை, மனைவி நூஹாவுடனும் கலந்துரையாடினார். அவளும் அதற்கு விருப்பப்பட, மகளின் திருமணத்துக்கு முன்பே, அவர்கள் முடிவெடுத்ததன் பிரகாரம் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது. வீட்டை அடகு வைத்த பணத்தைப் போல் நான்கு மடங்கு ஹாசீமுக்குக் கிடைக்க, வீட்டுப் பங்கு மன்சூர் துரைக்குக் கைமாறியது. பெருந்தொகைப் பணம் தமக்குக் கிடைத்ததையிட்டு ஹாசீம் மகிழ்ந்ததை விட மொத்த வீடும் தனக்குக் கிடைத்ததையிட்டு மன்சூர் துரை மகிழ்ச்சியடைந்தார்.
"ஊர் மணிகூஓர் ஒவ்வொரு கத கதச்சத்துக்கு மன்சூர் மச்சான் நல்ல மணிகூடின், இந்த ஊட்ட நாங்க அவருக்கு வித்தத்துக்கு பெறகும் ஊட்டுள எங்களுக்கு தொடர்ந்து ஈக்கச் சென்னது எவளவு பெரிய விக்ஷயம்."
"நூஹா, அது மட்டுமல்ல, ஊட்ட ஈடு வச்சத்தப் போல நாலு மடங்குப் பணமும் எங்களுக்குக் கெடச்சீக்கு அதனால ஊட்ட மீண்டுட்டு, மிஞ்சிற பணத்துக்கு யாவாரம் தொழில் ஒன்டச் செஞ்சி சரி, பொழச்சித் தின்னலாம், நாங்க நெனச்ச மாதிரி இல்ல, எங்கடகாக்கா நல்ல மணிக்ஷன்."
ஹாசீமும் தனது சகோதரனைப் பற்றி பெருமைப் பட்டுக் கொண்டார். ஆனால் அந்தப் பெருமை வெகுநாட்கள் நீடிக்க வில்லை.
7- இதழ் 50

Page 52
"நூஹா, காக்கா பெருக்கோர் நோட்டீஸ் ஒன்டு அனுப்பி வச்சீக்குறார்."
"நோட்டிஸ்ல என்ன ஈக்கு என்டு அவசரமாப் படிச்சிப்பாருங்கோ."
"நூஹா. இதுல ஈக்கு, நாங்க இன்னும் மூனு மாசத்துக்குள்ள இந்த ஊட்டுள ஈந்து வெளியேற வேணுமாம்."
"அல்லாட காவல், நாங்க இந்த அவசரத்துல GITT HJ55 G8 UT5566)J6ÖT? "
"நான் காக்காவச் சந்திச்சி, இது என்ன, ஏது என்டு கேட்டிட்டு ஓடி வாரேன்."
உடனே ஹாசீம், மன்சூர் துரையின் வீட்டுக்குச் சென்றார்.
"ஆ. இது. மம்ம ஹாசீமல்லேன். வா. வா. நான் நெனெச்சேன் நீ வருவாயென்டு."
"காக்கா, என்ன இது? நீங்க பெருக்கோர் மூலமா எனக்கு நோட்டீஸ் ஒன்டு அனுப்பி வச்சீக்கிறது?" தம்பி, நீ ஈக்கிற ஊடு இப்ப எனக்குச் சொந்தமான ஊடு நீ இன்னும் மூனு மாசத்துல ஊட்ட உட்டு வெளியேற வேணும் என்டு, அந்த நோட்டீஸ்ல ஈக்கும்தான். அது ஏன்ட பெருக்கோர் அவர்ட வேலயச் செய்யப் பெய்த்து நடந்தீக்கிற வேலயொன்டு அதப்பத்தி நீ கவலப்படாதே. நீ என்னோட கூடப் பொறந்த தம்பியல்லென். அதனால மூனு மாசத்துக் கதய மறந்திடு நீ இன்னும் ஆறு மாசத்துல எனக்கு ஊட்டக் காலி பண்ணித் தந்திடே"
"காக்கா, நான் புள்ள குட்டிகளோட எங்க போகவென்?"
தம்பி போறத்துக்கா எடமில்ல. அந்த கபுரு வெட்டி சாதிகீனே மய்யவாடியில பெய்த்து ஊடுகட்டிக் கொண்டு சந்தோசமா ஈக்குறான். அது போல ஒனக்குப் புரிச்ச எடமொன்டு, இந்த ஊரில எங்க சரி ஈக்காதென்?"
"ஐயோ காக்கா, நான் அன்டு ஒங்கட பேச்ச கேட்டத்தால இன்டு மோசம் பெய்த்திட்டேன்."
'தம்பி, அல்லா ஈக்கிறான். அதனால நீ ஒன்டுக்கும் கவலப் படாதே. தாயும் புள்ளயுமாய் ஈந்தாலும் வாயும் வயிறும் வேற என்டு கதயொன்டு ஈக்கு, நாங்க அது மாதிரி நடந்து கொள்வோம். அது எனக்கும் நல்லம், ஒனக்கும் நல்லம்."
தனது சகோதரனிடம் அதற்கு மேல் எதையும் கதைக்க ஹாசீம் விரும்பவில்லை. அதனால் மிகவும் மன வேதனையுடன் அவர் வீடு நோக்கி வந்தார். அது அவ்வாறிருக்க மன்சூர் துரைக்கும் ஹாசீமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை, ஆத்திபா திரை மறைவில் நின்று அவதானித்துக் கொண்டுதான் இருந்தாள். அங்கிருந்து ஹாசீம் அகன்று செல்ல, ஆத்திபா மன்கர் துரைக்கு முன்னால் வந்து நின்று கொண்டாள்.
ஜீவநதி ■4換

"பூசணிக் காய வெட்டுற கத்தியால சொறக்காய யும் வெட்டிட்டீங்க. பாவம், ஹாசீம் மச்சான், நாலஞ்சி புள்ள குட்டிகளோட அவர் இப்ப எங்க போவாறோ தெரியா?"
"ஆத்திபா, கடல்ல பெரிய மீனும் ஈக்கு சின்ன மீனும் ஈக்கு பெரிய மீனுக்குச் சின்ன மீன் எரயாக வேணுமே தவிர, சின்ன மீனால பெரிய மீன ஒரு நாளும் எரயாக எடுக்க முடியாது. அதுபோலத்தான் காணி, பூமி விஷயங்களும், அதை நீ வெளங்கிக் கொண்டா அடிக்கடி வந்து இப்பிடி என்னோட LJörg looTI LILLOTU LITU."
" நீங்க செல்லுர பெரிய மீன், சின்ன மீன்
கதையெல்லாம் எனக்கு வெலங்க இல்ல பாவம் அந்த ஏழ எளிய மனிஷர்."
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. மன்சூர் துரை, ஹாசீமுக்குக் கொடுத்த ஆறு மாத சலுகைக் காலமும் நெருங்கி விட்டது. அதனால் எங்கு போவேன், என்ன செய்வேன் என்ற நிலை ஹாசீமை வருத்தியது. அவர்களின் நிலை அவ்வாரிருக்க, மன்சூர் துரை திடீரென ஒரு நாள் நோய் வாய்ப்பட்டு விட்டார். அவருக்கு வந்ததோ மாரடைப்பு தனியார் வைத்திய சாலையொன்றில் அனுமதிக்கபட்ட அவர், அன்றே காலமாகி விட்டார். அவர் என்ன குறை குற்றங்களை ஊர் மக்களுக்குச் செய்திருந்தாலும் ஊர் வழமைக்கு ஏற்ப அன்று ஊரே அவரின் வீட்டுக்கு திரண்டு வந்து விட்டது. மய்யத்தைக் குளிப்பாட்ட கபனிட சந்தூக்கை கொண்டு வர, கபுரு வெட்ட மீசான் பலகை செய்ய என மக்கள் நான், நீஎன முத்திக் கொண்டனர்.
சாதிகீனும் அவனுடைய சகாக்களும் கூட அங்கு வந்து விட்டனர். அவர்களுக்கு சாதிகீனே தலமை தாங்கவும் செய்தான், கபுரு வெட்டுவதற்காக அவர்களுக்கு கூலியொன்று கொடுக்கப்படுவதில்லை. அதே போல அதற்காக அவர்கள் கூலியொன்றை எதிர்பார்ப்பதுமில்லை. இறந்தவர்களுக்குச் செய்யும் ஒரு நன்றிக் கடனாகவே அவர்கள் அந்தக்
- இதழ் 50
__
s

Page 53
கடமையைக் கருதினார்கள்.
சாதிகீன் எப்போதும் செய்வது போல, மன்ச துரையின் மையத்தின் நீளத்தை அளந்து கொண் தமது சகாக்களுடன் மையவாடியை நோக்கிச் சென்றா6 குறிப்பிட்ட நேரத்துக்குள் கபுரு வெட்டும் பணி முடி மையத்து ஊர்வலம் மையவாடியை வந்தடைந் விட்டது.
ஊர் வழமைப்படி கபுருக்கு மேலால் மேல் கட் பிடித்து, பன்னீர் தெளிக்க குடும்ப உறவினர்க மையத்தை கபுருக்குள் வைக்க ஆயாத்தமானார்கள் அவர்களுடன் ஹாசீமும் இருந்தார். என்ன புதுமை! மையத் தை உள் வாங்குவதற்கு கபு ( போதுமானதாக இருக்கவில்லை, கபுரைச் சுற்ற யிருந்தவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள, எங்கும் சலசலப்பொன்று ஆரம்பித்து விட்டது அதை மீறிக் கொண்டு ஹாசீமின் குரல் ஒலித்தது. தனது சகோதரன் தந்திரமாகச் செயற்பட்டு தனக்கு துரோகமிழைத்திருந்தாலும் அவரின் சகோதர பாசL அவரை விட்டுக் கொடுக்கவில்லை.
"கபுரு வெட்டுறத்துல ஏதோ தப்புத்தவறு நடந்தீக்கலாம். அதனால நாங்க கபுருட நீள அகலத் கூட்டி மய்யத்த அடக்கிப் போடுவோம்."
"உலகத்துல அவரவர் செஞ்ச காரியங்கள அவரவர் அனுபவிச்சத்தான் வேணும். அதனால, கபுருL நீள அகலங்களைக் கூட்டி கபுரத் திரும்ப வெட்ட ஏழாது அதுக்கெல்லாம் எங்கலுக்கு நேரமில்ல. அதனால கபுரு ஈக்கிற மாதிரிதான் மய்யத்த அடக்கம் செய்ய வேணும் அது மத்தவங்களுக்கும் ஒரு பாடமாக ஈக்க வேணும்."
பெரிய மத்திசத்தின் பேச்சை எதிர்த்துப் பேச அங்கு எவரும் முன் வரவில்லை. அதனால் ஏற்கனவே வெட்டிய கபுருக்குள் மன்கர் துரையின் மையத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் ஆயத்தமானார்கள் அந்தக் காட்சியைக் காண பலரும் முயற்சி செய்ய GOLDU JOJT9 ен6036ОТОo 560036ОтGOLDGOLђg 6l Lg5 அதுமட்டுமல்ல அவர்கள் பலதையும் பத்தையும் கதைத்துக் கொள்ளவும் முற்பட்டார்கள்.
"அங்க பாருடாகபுரு நெறுக்குரத்த" "இது அல்லாட சோதன. மத்தவங்களுக்கு ஒரு UTLLb."
"மண்ணும் மனிசன வத செய்யும் என்டது இப்பதான்டா வெளங்குது"
வியப்பு, அதிர்ச்சி, எள்ளல், பரிதாபம் என பல்வேறு உணர்ச்சிகள் அங்கிருந்தவர்களின் முகங்களில் துள்ள, உறவினர்கள் மையத்தை கபுருக்குள் வைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைக் கண்ணுற்ற மன்சூர்
ஜீவநதி

துரையின் மாமனாரான அப்துல் காதர் ஹாஜியாரை ஒரு புறம் வெக்கமும் மறு புறம் கோபமும் வாட்ட அவரின் குரல் ஓங்கி ஒலித்தது.
"மருமகன் மத்தவங்கட காணி பூமிய அபகரிச்சி, மணிகூடிருக்குச் செஞ்ச அநியாயங்கள இப்ப அனுபவிச்சிறாரு டேய், இனி கையக் கால ஒடச்சிச்சரி அவனகபுருக்குள்ள வைங்கடா."
அதனால் மையத்து அரை குறையாக கபுருக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அந்தக் காட்சி மன்சூர் துரையின் உறவினர்களுக்கு ஒரு குறையாக இருந்தாலும் அது சாதிகீனுக்கு ஒரு நிறைவாகவே இருந்தது. அவன் மண் வெட்டியை தனது கழுத்தில் வைத்தவாறு கூட்டத்தோடு கூட்டமாக கலைந்து சென்றான்.
கபுரின் நீல அகலம் குறைந்ததா? இல்லை குறைக்கப்பட்டதா? என்பதை அவர்களுள் சாதிகீன் மட்டும்தான் சரியாக அறிந்து வைத்திருந்தான்.
மண்வளச்சொற்கள்
நிய்யத்து-எண்ணம் காக்கா - மூத்த சகோதரன் இன்ஷா அல்லா - இறைவன் நாடினால் அஸரு - தொழுகை நேரம்
ஈக்கு - இருக்கு ஹயாத்துக்கு-ஆயுளுக்கு
பொறகு - பிறகு துஆ -பிரார்த்தனை ஒகட - உங்களுடைய
சுல்ஹாயிட்டோம் - நட்பாகிவிட்டோம் ஈக்கிற - இருக்கும்
ஹயாத்தோட - உயிருடன்
ଗT85L - எங்களுடைய
மய்யத்தை- பிரேதத்தை
கபுரு - புதைகுழி
காரணிக்க - காரணம் யாஅல்லா - எனது அல்லாஹற்வே
ரெண்டகம்-தீங்கு ரகல்நாயகங்கள் - முஹம்மதுநபி பரகத்து - விருத்தி பெருக்கோர் - வழக்கரிஞர் ஒலமூடி - உலை மூடி ஆச்சினை - அநியாயம் மவ்தானா - இறந்தால் வெள்ள வெச்சிறாய் - சுத்தப்படுத்துதல் ஹதீஸ் - நபிகளார் சொன்னவையும், செய்தவையும் ஆயத் துக் குரிஷி சூரத் - குர் ஆனில் ஓர் அத்தியாயம் அல்ஹம்துலில்லா - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
இதழ் 50

Page 54
அன்புமணி
ஈடு இணையற்ற
தழிழறிஞர் ஈழத்துப் பூராடனார் இலக்கியமணி கதா.செல்வராச கே
(1) அறிமுகம்
ஒருவர் தமிழில் நூறு நூல்கள் வரை எழுதினால் அவரை தழிழறிஞர் என்போம். அவர் 250 நூல்களை எழுதினால் அவரை எப்படி அழைப்பது? ஈடு இணையற்ற தமிழறிஞர் என அழைக்கலாம் அல்லவா? அப்படிப்பட்டவர் தான் ஈழத்துப் பூராடனார் இலக்கிய மணி கதா.செல்வராச கோபால்,
இலக்கிய உலகின் எல்லாத்துறைகளிலும் அவர் நுல்களை எழுதியுள்ளார். வரலாறு, ஆய்வு, பழந்தமிழ், இலக்கியம், சமூகவியல், கவின் கலைகள் என எல்லாத்துறைகளிலும் அவர் நூல்களை எழுதியுள்ளார். அவை சாதாரண நூல்கள் அல்ல. ஒவ்வொன்றும் 250 - 300 பக்கங்களைக் கொண்டவை.
அப்படியானால் அவர் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா..? கிடையவே கிடையாது. அவர் ஒரு சாதாரண பயிற்றப்பட்ட தழிழ் ஆசிரியர். மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் 1948களில் படித்தவர். இவருடைய மாணக்கர்கள், பிரபல எழுத்தாளர் வ.அ.இராசரெத்தினம், பிரபல கவிஞர் ராஜ பாரதி (வி.கி.இராஜதுரை), எழுத்தாளர் முனாக்கானா, ஆசிரிய சிரோமணி த.செல்வநாயகம் இன்னும் பலர். சுயமாக நூல்கள் இயற்றியதைத்தவிர ஆங்கில மூலங்களில் இருந்து பல மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வாறு மொழி பெயர்த்து எழுதிய நூல்களில் கிரேக்க நாடகங்கள் முக்கியமானவை. கிரேக்க அறிஞரான ஹோமர் எழுதிய "ஒடிசி இலியட் உட்பட 16 நூல்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். அதுவும் கவிதை நடையிலேயே அவ்வாறான மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது.
ஜீவநதி

(2) வாழ்க்கைக்குறிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் செட்டிபாளையம் கிராமத்தில் நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு 13.12.1928 இல் மூத்த மகனாக இவர் பிறந்தார். மட்குருக்கள் மடம் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மட், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் ஆசிரியராகப் பயிற்சி பெற்று மலையகப் பாடசாலைகளில் தழிழ் ஆசிரியராகப் பணியாற்றி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார். பியட்றீஸ் பசுபதிப்பிள்ளை என்னும் தமிழ் ஆசிரியையை திருமணம் செய்தார். அத்துடன் மருதானைத் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை தடந்தை தமிழ்க்கல்லூரி ஆகியவற்றில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார். செட் டிபாளையத் தரில் இவரது பாட்டனார் இ.வ.கணபதிப்பிள்ளை, பெரியப்பா வரகவி சின்னவப் புலவர் ஆகியோரின் ஏடறியாப் புலமையைப் பெரிதும் போற்றினார். குருக்கள் மடம் புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களிடமும் தமிழ் கற்றார். தனது 17 ஆவது வயதில் எழுத்துத் துறையில் இறங்கி ஈழத்தில் உள்ள பல பத்திரிகைகளுக்கு தனது ஆக்கங்களை அனுப்பி பெரும் புகழ் பெற்றார்.
தேற்றத்தீவில் "மனோகரா அச்சகத்தினை நிறுவி உள்ளூர் நூல்கள் பலவற்றை வெளியிட்டவர். அவற்றுள் முக்கியமானது "யார் இந்த வேடர்" என்னும் ஆய்வு நூல் ஆகும். இந்த ஆய்வு நூல் மூலம் RLSPTEL என்னும் ஆங்கில நூல் ஆசிரியரின் நட்பு இவருக்கு கிடைத்தது. தமிழ் ஆசிரிய சேவையில் 30 வருடங்களைப் பூர்த்தி செய்த இவர் 1984 இல் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து கனடா சென்றார்.
இதழ் 50

Page 55
حدة
(3) கனடாவில் ஆற்றிய பணிகள்
இவருடைய மக்கள், இதயமனோகர் முதலியோர் ஏற்கனவே கனடாவுக்கு சென்று கணனியில் பயிற்சி பெற்றிருந்தனர். அவர்கள் உதவியுடன் "றிப்ளெக்ஸ்" அச்சகத்தை நிறுவி தமிழ் கணனி அச்சமைப்பில் தமிழ் நூல்களை இவர் வெளியிட்டார். முதலாவது தமிழ் கணனி நூல் "இயேசு காவியம்" என்பதாகும். கனடாவில் உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் கிளையை நிறுவினார். கனடாவில் வதியும் தமிழ் மக்களின் பிள்ளைகளின் நன்மை கருதி ஒரு தமிழ் வகுப்பை ஆரம்பித்து நடத்தினார் . வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற தழிழர்களுக்காக "தழிழ் பண்பாட்டு இலக்கியவியலர்" என்னும் நூலினை வெளியிட்டார். அவர்களது குழுந்தைகள் தமிழைக் கற்க (36)|Goir(BL) GTGirugs)3, T3, "SPOKEN TAMIL" GTGig) Lib நூலையும் ஆக்கி அளித்தார். தழிழகத்தின் மின் கணனிப் பொறியியாளாரான பிரபல எழுத்தாளர் "சுஜாதா, இவர்களது தமிழ் கணனி வடிவை பெரிதும் பாராட்டியுள்ளார். அத்துடன் தோழமை பூண்டு செயற்பட்டுள்ளார். இவருடைய ஒரு மகன் இதய மனோகர் சினிமாத்துறையில் ஈடுபட்டு "தமிழ்மகன்" என்னும் தமிழ்ப்படத்தைத் தயாரித்து வெளியிட் டுள்ளார். இவர் கனடாவில் வாழ்ந்த காலத்தில் "நிழல்" என்னும் மாத சஞ்சிகையையும் சிறிது காலம் வெளியிட்டார். இச்சஞ்சிகை கீழைத்தேய பண்பாட்டுப் பாரம்பரியங்களை உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறி "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை" செய்வதில் முனைப்பாகச் செயற்பட்டது.
(4) வெளியிட்ட நூல்களின் வகைகள்
இவர் வெளியிட்ட நூல்களின் பட்டியலை இங்கு விபரமாகத் தருவது சாத்தியமில்லை. எனவே நூல் வகைகளை மட்டும் தருகின்றேன். அவை
(1) தமிழ் வரலாறு-2 நூல்கள்
மட்டக்களப்பு:தமிழ் அறிஞர்கள்-13 நூல்கள் மட்டக்களப்பு சொல் அகராதிகள்-7 நூல்கள் மண்வாசனைக் காவியங்கள் -4 நூல்கள் மட்டக்களப்புக் கலைகள்-14 நூல்கள்
) ) ) ) 6) பிரபந்த இலக்கியங்கள் - 4 நூல்கள்
) பரணி நூல்கள் - 2 நூல்கள் ) கலம்பகங்கள்-3 நூல்கள் ) குறவஞ்சிகள் -4 நூல்கள் 10) பிள்ளைத்தமிழ்-2 நூல்கள் 11) கோவைகள்-2 நூல்கள் 12) பள்ளு - 1 நூல்கள் 13) அம்மானை - 1 நூல்கள்

(14) சதகம் -1 நூல்கள் (15) மாலைகள்-6 நூல்கள் (16) புராணம், காதை-4 நூல்கள் (17) குறள், வெண்பா - 8 நூல்கள் (18) கூத்துக்கலை பற்றிய நூல்கள்-4 நூல்கள் (19) நாடக நூல்கள்-2 நூல்கள் (2O)கிரேக்க நாடகங்கள்(தமிழ் ஆக்கம்) - 16
நூல்கள் 21) சமய நூல்கள்-11 நூல்கள் 22) தமிழ் இலக்கணம் -5 நூல்கள்
24) சினிமா கலைக்களஞ்சியம் - 60 நூல்கள் 25) தமிழழகி காவியம் - 16 தொகுதிகள் -
12000 செய்யுள்கள் (26) பழந்தமிழ் இலக்கிய ஆய்வு-6 நூல்கள் இதிலிருந்து ஒரு உண்மை புலனாகின்றது. தமிழில் உள்ள 96 வகைப் பிரபந்தங்களிலும் இவர் நூல்களை ஆக்கவல்லவர் என்பது தான் அந்த
( ( (23) பயண நூல்கள் - 3 நூல்கள் ( (
D 600T60)LD.
(5) bយាញ៉ាម៉ាហាំបុផ្ផាចសំយចាំ
இவர் கிரேக்க நாடகங்கள் வரிசையில் 16
நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றின் விபரங்கள்
GJCDLDTD):
(1) ஹோமரின் ஒடிசி
2) ஹோமரின் இலியட்
3
4.
5
(2) (3) அயிலிநாடகம்-1 (4) அயிலிநாடகம்-2 (5) சோபோக்கிளிஸ் நாடகம் -1 (6) சோபோக்கிளிஸ் நாடகம் -2 (7) யூரிப்பிடிஸ் நாடகம்-1 (8) யூரிப்பிடிஸ் நாடகம்-2 (9) யூரிப்பிடிஸ் நாடகம்-3 (10) யூரிப்பிடிஸ் நாடகம்-4 (1) யூரிப்பிடிஸ் நாடகம்-5 (12) அரிஸ்ரோபான்-1 (13) SiflasöGuTLT6ö – 2 (14) erfaröCBUTITLU FT6őT — 3 (15) அரிஸ்ரோபான்-4 (16) மெனாட்டரின் நாடகம்
இம்மொழிபெயர்ப்பின் விசேடம் என்ன வென்றால் மூலப்பிரதியில் உள்ள கவிதை நடையில் (Blank verse) மொழிபெயர்ப்பும் அமைந்து இருப்பது தான். கதா.செ. எல்லா வகையான யாப்பு வகை களிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதால் ஆசிரியப்பா, வஞ்சிப்பா வகையில் அவர் மிக இலகுவாக இந்த
51 இதழ் 50

Page 56
மொழி பெயர்ப்பை செய்து இருக்கின்றார். இந்த மொழி பெயர்ப்பு நாடகங்களே இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டத்தைத் தேடிக் கொடுத்தன. கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் இவற்றை மதிப்பீடு செய்த பின்னரே இவருக்கு இலக்கியக் கலாநிதிப்பட்டத்தை அங்கீகரித்தனர்.
(6) திரைப்படக்களஞ்சியம்(50 நூல்கள்)
தமிழ்த் திரைப் படங்களின் தாயகமான தமிழகத்திலேயே இப்படியொரு முயற்சி எவரும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தமிழறிஞரான ஈழத்துப்பூராடனார் இம்முயற்சியில் ஈடுபட்டு ஆரம்ப காலத்தில் இருந்து வெளிவந்த தமிழ்த்திரைப்படங்கள் அனைத்தையும் ஒரு encyclopedia போல் தொகுத்து இருக்கிறார். ஒரு பக்கத்தில் திரைப்படத் தயாரிப்பாளர், டைரக்டர், கதைவசன கர்த்தா, பாடலாசிரியர் ஒளிப் பதிவு, ஒலிப்பதிவு, இசை அமைப்பு மற்றும் நடிகர்கள் நடிகைகள், கதாநாயகன், கதாநாயகி. படம் வெளிவந்த திகதி முதலியன இடம் பெறுகின்றன. அதற்கு எதிர்ப் பக்கத்தில் அத்திரைப்படத்தின் காட்சிகள் இடம்பெறுகின்றன. அந்தப்படத்தில் எந்த விபரத்தைக் கேட்டாலும் உடனே சொல்லக் கூடிய வகையில் இந்த விபரங்களை அடக்கியுள்ளார். எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் மேற்கொள்ளப்படாத முயற்சி இது என்பதில் சந்தேகம் இல்லை.
இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகின்றது தழிழறிஞரான ஒருவருக்கு தமிழ் சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? அதுவும் ஒரு திரைப்படக்களஞ்சியம் உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி? ஆம் அவர் ஒரு சகலகலாவல்லவர். எல்லாத்துறையிலும் திறமை பெற்றவர் என்பதை இம்முயற்சி நிரூபிக்கிறது அல்லவா.
(7) தமிழ் அழகி (காவியம்), தமிழ் இலக்கிய ஆய்வு இரண்டு முக்கியமான நூல் வெளியீட்டு முயற்சிகளை இங்கு குறிப்பிட வேண்டும். தமிழழகி -16 காண்டங்கள், 12000 செய்யுள்கள் இது ஒரு பாரிய முயற்சி. எவராலும் கிரகிக்க முடியாத சங்கதி தமிழ் மக்களின் வரலாற்றை சங்ககாலத்துக்கு முன் பிருந்தே கட்டங்கட்டமாக சொல்லும். இந்நூலில் தமிழர்களின் பூர்வீக வரலாறு, மொழி, இலக்கியம், போர், சமாதானம், காதல், இல்லறம், வாழ்வியல் முதலிய சகல விடயங்களையும் உள்ளடக்கிய நூல் இது 12000 செய்யுள் என்னும்போது நமக்கு ஒரே மலைப்பாக இருக்கின்றது. ஆயிரம் செய்யுள்கள் இயற்றுவதே பெரும் பாடு, கவிஞர்களுக்கு அது ஒரு வாழ்நாள் சாதனை. ஆனால் நமது ஈழுத்துப் பூராடனாருக்கு அது ஒரு மாமூல் விடயம். மற்றொரு ஆய்வு முயற்சி - பழந்தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற 4 நூல்களை
ஜீவநதி

சாங்கோ, பாங்கமாக ஆய்வு செய்திருப்பது நைடதம் முதலிய 4 பழந்தமிழ் இலக்கியங்கள் இதில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் செய்யுள் நூல்கள். இந்த செய்யுள்களைப் படித்துப் புரிந்து கொள்வதே நமக்குப் பெரும்பாடு. ஆனால் ஈழத்துப் பூராடனார் அநாயாசமாக இந்த செய்யுள் நுட்பங்களை எல்லாம் ஆய்வு செய்து வகுத்துத் தொகுத்து தந்திருக்கின்றார். இவற்றைப் படிக்கும் போது நாம் அசந்து போகின்றோம். பலர் இந்த நூல்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.
(8) பிரயணிகள் இவர் பழைய நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டது ஒரு முக்கியமான பணியாகும். மட்டக்களப்பு வித்துவான் - சபூபாலபிள்ளை (பண்டிதர் செபூபால பிள்ளை அல்ல) செய்யுள் வடிவில் எழுதிய "சீமந்தினி புராணம்" மற்றும் வித்துவான் அ.சரவணமுத்தன் எழுதிய "மாமாங்கேஸ்வரர் பதிகம்" ஆகிய செய்யுள் நூல்களுக்கு அருமையான உரை எழுதி அவர் வெளியிட்டுள்ளார். இடையில் ஒரு முறை அவர் மட்டக்களப்புக்கு வந்திருந்தார். அப்போது அவர் மட்டக்களப்பு நகரில் (கல்வித்திணைக்களத்துக்கு முன்பாக) புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் சிலை நிறுவ ஏற்பாடு செய்தார். தேற்றத்தீவு R.C.T.M.S பாடசாலைக்கு தண்ணீர் தாங்கி வழங்கி பாடசாலைக்கு நீர் விநியோக ஏற்பாடு செய்தார். அவர் தான் முன்பு படிப்பித்த திக்வெல்லைப் பாடசாலைக்கு செல்ல விரும்பினார். அப்போதைய மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அவரை அழைத்துக் கொண்டு சென்றார். திக் வெலையில் அவருக்கு பெரும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு கொழும்பில் ரூபவாகினி கூட்டுத்தாபனம், அமரர் விஜயரத்தினம் இல்லம்(புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளையின் மகன்) முதலிய இடங்களுக்கு செல்வி கதங்கேஸ்வரி அழைத்துச் சென்றார். 20.12.2010 இல் ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார். அப்போது
அவருக்கு வயது 82 அன்று வரையும் எழுதிக்
கொண்டே இருந்தார். அவரது நினைவு தினமும் 31ம் நாள் அஞ்சலியும் அவரது இல்லத்தில் கொண்டாடப் பட்டது. ஏராளமான இலக்கிய நெஞ்சங்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அவர் பற்றிய ஒரு ஆய்வரங்கு 11.12.2011 இல் மட்.கழுதாவிள மகாவித்தியாலயத்தில் கலைஞர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது.
இதழ் 50
¬

Page 57
=
பெரும் புலவர்களின்
சிறார் கல்விச் சிந்த6
குழந்தைகளுக்கான உளவியல் மயப்பட்ட கல்வி இயக்கத்தின் நவீன சிற்பிகளுள் ஒருவராக மொன் ரிசோரி அம்மையார் விளங்குகிறார் குழந்தைகளை நடுநாயகப்படுத்திய கல்வி முறையில் புலன்களுக்கான பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அம்மையார் வலியுறுத்தினார். அதாவது பொருத்தமான முறையில் குழந்தைகளின் புலன்களுக்கு பயிற்சி தந்தால் அவர்கள் அறிவில் மேம்பாடு அடைந்து கொண்டு செல்வார்கள் என்பதை அவர் கண்டறிந்தார். கற்பித்தலில் குழந்தை உளவியலின் பிரயோகத்தை முன்னெடுத்த உளவியலாளர்களுள் அம்மையார் தனித்துவம் பெறுகின்றார்.
மறைபொருளாய் அகத்தே மலர்ந்துள்ள குழந்தை உள்ளத்தை வளப்படுத்தும் ஆற்றல் மிக்க கருத்துக்களை அம்மையார் முன்மொழிந்தார். அவரின் குழந்தைக் கல்வி இயக்கம் உலக நாடுகள் எங்கும் விரைந்து பரவலாயிற்று. இலங்கையிலும் இக்கருத்துச் கள் படிப்படியாக பரவலாயின. யாழ்ப்பாணத்தில் வேம்பஸ்தானில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத் திலும், பின்னர் றிம்மர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும் அம்மையாரின் குழந்தைச் கல்விக் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
குழந்தைகளின் கல்வியில் அவர்களால் திரட்டிக் கொள்ளப்படும் மொழி விருத்தியானது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. "எந்தப் பாடத்தை யும் எந்தப் பிள்ளைக்கும் எத்தகைய விருத்திப் படிநிலை களிலும் அறிவுசார் நேர் அமைப்பில் கற்பிக்கலாம் என்று குழந்தை உளவியல், குழந்தைக்கல்வி, அறிகை உளவியல் முதலாம் துறைகளில் அதீத ஈடுபாடு கொண்ட புறுனர் விளக்கியுள்ளார்.
" குழந்தைக்கல்வி என்பது ஒரு மகிழ்ச்சி தரும் பூங்காவாகவும், உற்சாகம் தரும் நந்தவனமாகவும் இருத்தல் வேண்டும்." என்ற இலட்சியப் போக்கைக் கொண்டிருந்த பிரெட்றிக் புரோபல் குழந்தைகள்
ஜீவநதி

ர் பாடல்களில்
5
தம்பு சிவசுப்பிரமணியம்
கல்வியிலும் குழந்தைகளுக்கான பிரயோக உளவியல் புலத்திலும் தனித்துவமான பங்களிப்பை வழங்கி யுள்ளார்.
"குழந்தைக் கல்வியில் பேச்சுக்கு முக்கியத் துவம் வழங்குதல், பேச்சுக்கு பின்னரே எழுத்தைக் கற்பித்தல் ஏற்புடையது” என்று சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன் மொழிந்தவரான பெஸ்டலோசி என்பவர் தெளிவு படுத்தியுள்ளார்.
இத்தகைய பின்புலத்தில் நின்று கொண்டு தமிழர் மரபில் சிறார் கல்விச்சிந்தனைகளை நோக்குவோம். தென்னிந்தியாவைப் பொறுத்த அளவில் தமிழகத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலக் கல்வி முறையும், புதுச்சேரியில் இயங்கிக் கொண்டிருந்த பிரெஞ்சுக் கல்வி முறையும் சிறார் தொடர்பான அணுகுமுறைகளில் புதிய புலக்காட்சி களை ஏற்படுத்தின. சிறார் அனைவருக்கும் கல்வி, சிறாருக்குரிய கற்பித்தல் உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள், இலக்கிய ஆக்கம் முதலாம் துறைகளில் மேலெழுந்த முன்னேற்றங்களைப் பாரதியார், பாரதி தாசன், தேசிகவிநாயகம்பிள்ளை, அழ.வள்ளியப்பா, சோமசுந்தரப்புலவர் முதலானவர்களின் ஆக்கங் 56ff)(3G) 5T600T (UDIQU|Lň.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியக் கல்வி முறையிலே நன்கு இனங்காணக் கூடிய இருவகைத்தன்மைகள் காணப்பட்டன. ஒரு புறம் வளமாக கட்டுமானங்களுடன் கூடிய ஆங்கிலக் கல்வி ஒழுங்கமைப்பு, மறுபுறம் நலிவுக்குள்ளாக்கப்பட்ட சுதேச கல்விமுறை, இந்த முரண் பாடுகளை விளங்கியும் உணர்ந்தும் பாரதியாரின் சிந்தனைகள் சிறப்பாக சிறார் கல்விச் சிந்தனைகள் முகிழ்த் தெழுந்தன. தமிழகத்து மக்களின் கல்விப் பங்கு பற்றல்
பின்னடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட பாரதியார்
"விதி" என்ற தமது கட்டுரையில் தெளிவாகச் சுட்டிக்
இதழ் 50

Page 58
காட்டினார். கல்விப் பரவலும் பங்குபற்றலும் சிறார் கல்வியில் இருந்தே கால்கோள் கொள்ளல் வேண்டும் என்று அவர் கருதினார். தாய் மொழியை ஊடகமாகக் கொண்ட கல்வியே பயன்மிக்க கல்வியாகவும் விளைநிறன் மிக்க கல்வியாகவும் சிறார்களிடத்தே கூடிய விளக்கத்தை ஏற்படுத்தும் கல்வியாகவும் அமையும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். அத்துடன், சிறாருக்கான கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பணம் படைத்தோர் ஆங்கிலக் கல்வியை கற்று அந்நிய மயப்படுத்திக் கொண்டிருந்த அவலங்களைக் கண்டு ஆங்கில மொன்றையே கற்றார். அதற்கு ஆக்கையோடு ஆவியும் விற்றார். தாங்களும் அந்நியர் ஆனார்” என்று துணிந்து எழுதினார்.
பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஏழ்மைக்கும் கல்விக்குமிடையே இருந்த இடை வெளியை தமது பட்டறிவு வாயிலாக அறிந்து கொண்ட பாரதியார்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" சிறார்கள் வீரமும் உறுதியும் கொண்டவர் களாக மலர்ச்சி கொள்ள வேண்டும் என்பது பாரதி யாரின் குழந்தைக் கல்விச் சிந்தனைகளுள் மேலோங்கிய வீச்சாக அமைந்தது.
"அச்சம் தவிர் ஆண்மை தவறேல்" என்பதும் "ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா" என்ற வரிகளும்
ஜீவநதி
 

" பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ UUsij65TGTGTGDITSETSUITUUT மோதி மிதித்துவிடு பாப்பா முகத்தில் உமிழ்ந்து விடுபாப்பா ஆகியவற்றை உதாரணத்திற்கு கொள்ளலாம்.
சிறுவர்கள் ஆளுமையைத் துலங்க விடாது தடுத்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனப் பலவீனப்படுத்தியும் அவர்களது புத்தாக்கதிறன்களை முறியடித்தும் வந்த கல்விச் சூழலுக்கு எதிரான கிளர்ச்சி யாக பாரதியாரின் கல்விக் கருத்துக்கள் அமைந்தன.
பாரதியாரின் குழந்தைக் கல் விச் சிந்தனைகள் பாப்பா பாட்டில் உரத்து வெளிப்படு கின்றன. குழந்தைகளுக்காக கலைத்திட்டத்தில் கற்றல் அழகியல் செயற்பாடுகள்- விளையாட்டு ஆகியவை ஒன்றிணைத்தலின் சிறப்பினை பின்வரும் பாடலில் விளக்கியுள்ளார்.
"காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா" பாரத யாாரின குழ நீ  ைதக கல விச் சிந்தனைக்குள் முகிழ்ந்தெழும் பிறிதொரு விசை யாகக் காணப்படுவது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் நெறியாகும். மேலும் அறக்கல்வி, ஒழுக்கக் கல்வி பாரதியாரின் சிறார் கல்விச் சிந்தனைகளிலே பரக்கக் காணப்படுகின்றன.
"பொய் சொல்லக் கூடாது" “புறம் சொல்லலாகாது" என்ற வரிகள் அதை உணர்த்தி நிற்கின்றன.
மேலும் மொழிப்பற்று நாட்டுப்பற்று என்ப வற்றை நேரடியாக உணர்த்தி கற்பித்தல் வேண்டுமென அவர் விரும்பினார்.
"தமிழ்த்திரு நாடுதனைப்பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா" என்ற பாடல் அதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
ஒரு கவிஞர் என்ற நிலையிலும் ஒரு ஆசிரியர் என்ற பாத்திரத்திலும் நின்று தமிழ் மரபில் சிறார் கல்விச் சிந்தனைகளினை முன்மொழிந்தவர் களுள் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் தனித்துவமானவர். பறவைகள் மற்றும் விலங்குகளை குழந்தைகள் விழித்துப் பேசும் பொழுதும், பாடும் பொழுதும் குழந்தைகளின் கற்றல் ஈடுபாடு தீவிரம் அடையும் என்பது புலவரின் கருத்தாக அமைந்தது.
"காக்காய் காக்காய் பறந்து வா, கண்ணுக்குமை கொண்டு வா: கோழி கோழி கூவி வா,
இதழ் 50
rܢ

Page 59
குழந்தைக்குப் பூக் கொண்டு வா!" என்னும் பாடலை எடுத்துக் கூறலாம்.
தாம் காணும் காட்சிகளை எளிமையான முறையில் விபரித்துக் கூறும் திறன்களை வளர்த்தல் என்ற கலைத்திட்டச் செயற்பாடு சிறார் கல்வியிலே முன்னெடுக் கப்பட வேண்டும் என்ற கருத்தும் கவிமணியிடம் நிலை கொண்டிருந்தது. தோட்டத்தில் நிகழும் காட்சியை பின்வரும் கவியில் தந்துள்ளார்.
"தோட்டத்தில் மேயுது
G616T60GTLJцај енгBIG385
துள்ளிக் குதிக்குது
கனறுக குடடி" கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை பேச்சுத் தமிழின் இயக்கப் பண்பை நன்கு அறிந்தவர். சிறாரின் அறிகையை வளர்ப்பதில் பேச்சுமொழி வலிமை மிக்க ஊடகமாகும் என்பதை அறிந்த அவர் சிறார் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், உரையாடல்களிலும் பேச்சமொழியைப் பொருத்தமாகப் பயன்படுத்தினார்.
குழந்தை இலக்கியங்கள் வாயிலாக சிறார்க் குரிய கல்விக்கருத்துக்களை தமிழ் கல்வி மரபில் முன்மொழிந்தவர்களுள் அழ.வள்ளியப்பா விதந்து குறிப்பிடத்தக் கவர். தேசப் பற்று, மொழிப் பற்று, நல்லொழுக்கம், இயற்கை நயப்பு முதலாம் சிந்தனை களை குழந்தைகளின் உளக்கோலங்களுக்கு ஏற்ற வாறு எளிமையாகக் கற்பிக்க வேண்டும் என்பதே அழ.வள்ளியப்பாவின் கருத்தாகும். சிறார்க்கான அறிவுட்டல், நகைச்சுவையுடன் இணைந்த மனவெழுச்சி சார்ந்த கற்பித்தலாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தும் இவரிடத்து இழையோடியிருந்தது. மிக எளிமையான
)
இன்னும் திருப்பிக்கொடுக்காத காலத்திடம்
இனி!
எதைக்கேட்பது வழக்காறுகள் சுமந்து சுமந்தே வளைந்து போனோம் செவிப்பறைகள் அதிர்ந்து ஒய்ந்த நிசப்தத்தில்
ஜீவநதி

அனுபவக் கட்டமைப்பிலிருந்து இவரது குழந்தைக் கவிதைகள் முகிழ்ந்தெழுகின்றன.
“அணிலே அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா” சிறார்க்கு நாட்டுப் பற்றுடன் கூடிய தாய் மொழி வாயிலான கல்வி இன்றியமையாதது என்பது இவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழ் மரபில் சிறப்பாக ஈழத்துச்சிறார் கல்வி மரபில் பல்வேறு கல்வியியற் சிந்தனைகளை தமது கவிதைகள் வாயிலாக உதித்தவர்களுள் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் தனித்துவமாகக் குறிப்பிடத் தக்கவர். இலங்கையில் இலவசக் கல்வி விரிவாக்கம் பெற்ற காலகட்டத்தில் சிறாரை நடுநாயகப்படுத்தும் கல்வி நோக்கங்கள் முனைப்புப் பெற்ற பின்புலத்தில் இவரது பங்களிப்பைக் காணலாம். சோமசுந்தரப்புலவர் அவர்களது சிறார் கல்விச் சிந்தனைகள் இயற்பண்பு நெறி தழுவி மலர்ச்சியடையத் தொடங்கின. சிறாருக் கான கற்பித்தலில் குழவிப் பாடல்களின் முக்கியத்துவம் சோமசுந்தரப்புலவரினால் வலியுறுத்தப்பட்டது.
சிறார் கல்வியில் குழுநிலைக் கற்பித்தல், குழுச்செயற்பாடு முதலியனவும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை புலவர் தமது குழந்தைப் பாடல்களிலே குறிப்பிட்டுள்ளார்.
சிறார் இலக்கியப் பரப்பில் தடம் பதித்த பெருங்கவிஞர்கள் தம் பாடல்கள் மூலம் சிறார் கல்விச் சிந்தனைகளை முன் வைத்து கற்றலுக்கு வழி காட்டியுள்ளார்கள். "
உழவு
எவரும் கல்லெறியாதீர்கள் துாங்கிப் போனது உனது வீரவாள்
இன்னும் துருவேறாது இருக்கிறது எமது கண்கள் உனது வரம்புகளையும்
வாய்க்கால்களையும் அழித்துக் கொண்டு
இன்னொரு உழவு தொடங்கியிருக்கிறது.
றஜீபன்
- 55
இதழ் 50

Page 60
சிங்கள மூலம் : ஜயதிலக கம்மல்லவீர தமிழாக்கம்: திக்குவல்லை கமால்
நான் சிவரமணிக்கு அவளது பெயரைச் சிங்களத்தில் எழுதச் சொல்லிக் கொடுத்தேன்.
f. . . 6).J. . . UT. . . LO. . . 60of
அவளது மென்மையான கைவிரல்கள் வலிக்கும் அளவுக்கு எனது வலது கையால் அழுத்தியபடி "ம" எழுதும் விதத்தைச் சொல்லிக் கொடுக்கையில் "ஓம் ஓம் உங்க பாஷை எனக்கு விளங்குது" என்று சொல்லுமாப் போல் சிவரமணி என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
LD. . . LD {?}UT60öT(B LD. . . LD..LD
LDLp fig) ULD600f?
நான் சிவரமணி
மம சிவரமன்ட
நான் சிவரமணியை
"ம்.ம். நான் சிவரமணியை காதலிக்கிறேன்"
என் கண்களை நோக்கிய அவளது பார்வை வீச்சு நிலைத்தது.
"?...?... ?"
"GUITU) (63. Toba) (616)|GOTLITLb"
"நான் பொய் சொல்வதில்லை"
"நீங்க எல்லாருமே சொல்வது பொய்" என்ற சிவரமணி, பேனாவை மேசை மீது வைத்து. பின்பக்கமாக கதிரைக்கு பலம் கொடுத்து சாய்ந்து அவளது பார்வையை தொலைவில் எங்கோ பாழடைந்த உலகொன்றுள் செலுத்தி அதில் லயித்தாள்.
ஒரு நாளும் வாய் திறந்து சொல்லாத போதும் சிவரமணி என்னைக் காதலிப்பது எனக்குத் தெரியும். அவளது அன்பு பயத்தாலும் சந்தேகத்தாலும் அவளது கண மடலுக் குள் ஒளிந் திருப் பதை நான் அவதானித்துள்ளேன்.
"யூ ஆஹேண்ட்ஸம்"
ஜீவநதி
 
 

உண்மை தான் நிலைக்கண்ணாடி அதை எப்போதும் எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்.
"சிவரமணி அழகானவள்”
"GLITU"
அந்த அழகிய சிவரமணி எனக்கே பொருத்த மாவனள். அவளைப் போன்ற இளம் யுவதியொருத்தி எந்த அங்கலட்சணமுமில்லாத சிவதாஸன் போன்ற முரட்டுப் பேர் வழிக்கு எவ்வகையிலும் பொருத்தமே unabé06).
இருந்தும் அந்த அழகிய சிவரமணி எந்தப் பொருத்தமுமில்லாத சிவதாஸனுடன்தானே போனாள்.
சிவரமணி எங்கள் அலுவலகத்தில் தொழில் பார்ப்பதற்காக கொழும்பிற்கு வரவில்லை. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே வந்தாள். சிவதாஸனும் அப்படித்தான்.
சிவரமணிக்கு என்னைப் போல் நிரந்தரமான தொழில் தான் கிடைத்திருந்தது. இருந்தும் அவள் வேலை செய்ததும், சாப்பிட்டதும் குடித்ததும், வந்து போனதும் மட்டுமல்ல, கதைத்தது கூட தற்காலிக அடிப்படையில் தான். எந்த விடயத்திலும் ஒட்டுற வில்லாத, தங்கி நிற்காத பாங்கு, அந்தத் தற்காலிக தன்மையினால்தான்.
நாங்கள் யுத்தத்தினால் அனாதையாகிப் போன பிள்ளைகளின் சுகநலனுக்காக இயங்கும் நிறுவனமொன்றில் வேலை செய்தோம். அந்த அகதி முகாம்களுக்குப் போய், அந்தப் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களைத் தேடிப் பார்த்தோம். எனக்கு அந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்போது பொறுக்க முடியாத உணர்வேற்படுகிறது. நாங்கள் கொண்டு போகும் உணவு, ஆடையணிகள், புத்தகங்கள் என்பவற்றைப் பகிர்ந்து கொடுத்த பின் அந்தப் பிள்ளைகளில் ஒருவனை அருகழைத்து தலையைத் தடவுவேன்.
இதழ் 50

Page 61
ஆனால் சிவரமணியோ கொண்டு வந்ததைப் பகிர்ந்து விட்டு விரைவாக அவர்களிடமிருந்து தூரமாக விடுவாள். தொலைவிலிருந்து அவர்களைப் பார்த்து கொண்டிருக்கும் அவளது உணர்வு எங்களை வி அதிகமென்பதை நான் விளங்கிக் கொண்டேன்.
ஒரு நாள் அவள் என்னைக் கூட அே பார்வையில் பார்த்துக் கொண்டிருந்த பாங்கை நான கண்டேன். அப்பொழுது எனக்குள்ளும் அகதியுணர்வே மேலிட்டது. உணர்மையான யுத்த அகதியான சிவதாஸனை அவள் அவ்வாறாகப் பார்ப்பதை நான் ஒரு நாளும் காணவில்லை. சிவரமணி சிவதாஸ்னை எவ்வாறாகப் பார்த்தாள் என்பதை என்னால் நினைவூட்ட முடியவில்லை. அப்படியொன்று எனது ஞாபக ஏட்டில் பதிவாகியதில்லை.
சிவரமணியின் தாய் தனது வீட்டின் மீது விழுந்த செல் தாக்குதலால் இறந்து போனதையும், ஒரே தம்பி காணாமல் போனதையும், அந்தச் சோகத்தில் தந்தை நோய்வாய்ப்பட்டிருப்பதையும், நான் எனது அம்மா, அப்பாவிடம் எடுத்துச் சொன்னேன்.
"மகனே! நீ அந்தப் பிள்ளைய கல்யாணம் செய்யவா எண்ணியிருக்கிறாய்?" அம்மா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவளாகக் கேட்டாள். எனது அம்மா, நடுநிலைப் போக்கானவள் என்பதை நன்கறிந்திருந்த நான், அம்மா உணர்ச்சிவசப்பட்டது எனக்காகவல்ல என்பதை விளங்கிக் கொண்டேன்.
"உங்கட எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான். ஒன்றாக யோசித்துப் பார்த்து ஒரு முடிவெடுங்க"
அப்பா பெரும்பாலும் மென்மையானவர். இருந்தும் மற்றைய நாட்களை விட ஆழமான குரலில் ଗ8FITଗiରot[t].
"ஐ வில் மெரியூ" நான் சொற்களாலும் தொட்டும் சிவரமணி uĵILLb GhayFIT6ÖTG36ŬT6ÖT.
அவள் எனது கையை விடுவித்துக் கொள்ள முயற்சிக்காமல் "நடக்காத விஷயங்களப் பேச வேண்டாம்" என்று எனக்கு நன்கு விளங்கக் கூடிய சிங்களத்தில் சொன்னாள்.
எங்களோடு கொழும்பில் வாழ்வதற்கு அவசியமான சொற்ப சிங்களத்தைக் கற்றுக் கொள்ள அவளுக்கு ஆறு மாதத்திற்கும் குறைந்த காலமே எடுத்தது. நானும் கூட அந்தக் காலத்திற்குள் மிகுந்த சிரமத்தோடு தமிழ்ச் சொற்கள் சில கற்றுக் கொண்டேன்.
"ஒயா ஹரி லஸ்ஸனய்-நீங்கள் மிகவும் அழகானவர்"
"மம ஒயாட ஆதரய்-நான் உங்களை விரும்புகிறேன்"
"எய் அன்டன்னே?-ஏன் அழுகிறீங்க?"
ஜீவநதி

"அபிபந்திமு-நாம் கல்யாணம் செய்வோம்" சிவதாஸ்னி முதன் முதலில் எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, நான் சிவரமணியிடம் தமிழ் கற்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
"உங்களுக்குத் தமிழ் படிக்க வேண்டிய தேவையிருந்தால் நான் படிப்பிக்கிறன். நான் ஒரு காலத்தில் ஆசிரியராக வேலை செய்தன்”-சிவதாஸன் ஆங்கிலத்தில் இவ்வாறு எனக்குச் சொன்னான்.
"அப்படியென்றால் நான் உங்களுக்குச் சிங்களம் கற்பிக்கிறேன்" நான் பதிலாகச் சொன்னேன்.
"இல்லை. அவசியமில்லை. நான் கனடா போவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறன்"
"கனடாவுக்கா?" சிவரமணி கண்களை விரித்துக் கேட்டாள்.
"ஒம். எனது தம்பிமார் இருவர் அங்கே இருக் காங்க" சிவதாஸன் அப்போது எங்கள் இருவருக்கும் கூறினான்.
"உக்காருங்க"-சிவரமணி அவனைத் தனது மேசை முன்னாசனத்திற்கு அழைத்தாள்.
அதன் பின்னர் அவர்கள் நீண்ட நேரம் தமிழில் கதைத்துக் கொண்டிருந்ததை நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். புத்துயிர் பெற்றதே போன்று சிவரமணி தொடர்ந்து வேகமாகக் கதைத்தாள். எனக்கு எதுவுமே விளங்கவில்லை.
அன்று வேலை முடிந்த பின் முன்பு போலவே பஸ்ஸில் ஏற்றி விடுவதற்குப் பதிலாக, அவளோடு அவள் தெஹிவளையில் தங்குமிடம் வரையில் சென்று சேர்த்து விட்டேன். பஸ் வண்டியில் அமர்ந்து செல்கை யில் அவளது இடக்கை விரல்களைத் தொடர்ந்து தடவிக் கொண்டிருந்தேன். அவள் யன்னலுக்கு வெளியேயான உலகைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டி ருந்தாள்.
"நான் சிவதாஸனிடம் நன்றாகத் தமிழ் கற்றுக் கொள்கிறேன். சிவரமணிக்கு நன்கு சிங்களம் பேசக் கற்றுத் தருகிறேன். அப்போது நாங்கள் கல்யாணம் செய்து கொண்டு, அங்கோ இங்கோ சந்தோஷமாக 6)յTԱք (Լplջեւկլb"
அந் நாட்களில் எனது உணர்மையான தாழ்மையான சிந்தனை அப்படியாகத் தானிருந்தது. இரண்டு குண்டு வெடிப்புக்கள்
1.
நாங்கள் வேலை விட்டு கிருலப்பனை பஸ் தரிப்பில் நிற்கும்போது அந்தச் சத்தம் கேட்டது. சந்தேகமில்லாமல் அது குண்டு வெடிப்புச் சத்தமென்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எங்கள் அனைவருக்கும் அறிவிருந்தது. எமது சுற்றாடல் எறும்புக்கூட்டுக்குத் தீ வைத்தது போல் குழம்பியது.

Page 62
சிவரமணி முதற் தடவையாக எனது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவளது நெற்றிப் பொட்டைத் துடைத்து விட சேட்டிலிருந்த கைக்குட்டை எனது கைக்கு வந்தபோதும், மிகுந்த சிரமத்தோடு நான் அந்தக் கையைத் தடுத்துக் கொண்டேன். அவள் என் கையை விடாமலே பிடித்துக் கொண்டிருந்தாள். பாதையில் அங்குமிங்குமாக ஓடும் பஸ்களில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மனிதர்கள் எங்கள் இருவரையும் பார்த்தனர். இருதயம் இவ்வளவு வேகமாகத் துடிப்பதை இதற்கு முன்பு நான் அனுபவித்ததில்லை.
"மஹரகமயில். சரியாக அரச மரத்துக்கு முன்னால்."
"இருபது முப்பது பேர் சரி"
இந்த இடத்தில் இப்படி நிற்பது ஆபத்தானது. என்ன தான் செய்யலாம்? ஒன்றுமே விளங்கவில்லை. நான் பாதை நெடுக வேகமாக நடக்கத் தொடங்கினேன். சிவரமணி பற்றிப் பிடித்த என் கையை விட்டு விடாமல் இழுபட்டு வந்தாள். அவ்வாறு போகும்போது பாதையில் ஒடும் அத்தனை முச்சக்கர வண்டிகளுக்கும் கை காட்டினேன். ஒன்று எங்களருகே வேகத்தைக் குறைத்தது. நான் உடனே அதற்குள் புகுந்து கொண்டேன். எனது பின்னால் சிவரமணியும் நுழைந்து கொண்டாள்.
தெஹிவளைக்கு. தெஹிவளை சந்திக்கு"
'மஹரகமையிலாமென்ன?"
"ஓம். மஹரகமையிலாம். நிறையப் பேர் செத்திட்டாங்களா?" நான் அவனுக்குப் பதில் கொடுத்துக் கொண்டு கேட்டேன்.
"எப்படியோ தெரியாது சேர்"
"நீங்க முஸ்லிமா?"
"இல்லை"
"தமிழ்?"
"பிறந்ததும் கொழும்பில்"
“LJ u JLólesbGDu JT?”
"நாங்க யாருக்கும் பிழை செய்யல்ல சேர்"
"அது சரி"
எனக்கு எண்பத்துமூன்று கறுப்பு ஜூலை ஞாபகம் வந்தது. இது எல்லாமே அங்கு தான் ஆரம்பித்தது. பாதையில் போகும் வாகனங்களை நிறுத்தி. வாளால் வெட்டி. தீவைத்தாங்க.
"இந்த நோனாவ தெஹிவளையில விட உங்களால் முடியுமா?"
எனது இடது கை மணிக்கட்டு கடுமையாக நெருக்கப்படுவது விளங்கியது.
"பிரச்சினையில்ல சேர்"
"அப் படியென்றா நான் இறங்கினால் LJUTGJ TulebaDu_JIT?”
"ஸேர் எங்க போகணும்?"
"கம்பளைக்கு"
ஜீவநதி ■

"ஐயோ சேர் ரொம்பத் தூரம், சரி இறங்கி
ஒடுங்க”
சிவரமணியின் கை தளர்ந்தது. "சரி, நீங்க போங்க. கவனம்" அவள் சொன்னாள்.
நான் முச் சக் கர வணர் டியரிலிருந்து இறங்கினேன். இறங்கும்போது சிவரமணியின் இடது தோளைத் தடவினேன். "டேக் கெயா"
ஐயோ! அப்பாவி அவளுக்கு எந்தத் தொல்லையும் நடந்து விடக் கூடாது"
2. கடந்த மாத முன்னேற்ற அறிக்கையைத் தயார்ப்படுத்தி முடிக்கவேண்டியிருந்ததால், நானும் சிவரமணியும் காரியாலய நேரத்தின் பின்னரும் கொஞ்ச நேரம் வேலை செய்தோம். வெடிச் சத்தம் சரியாக ஐந்து பத்திற்குக் கேட்டது. அதன் எதிரொலி ஐந்தாறு நிமிடங்கள் காதின் அடியாழம் வரை சென்றது. மேசை இரு பக்கமாகவும் அமர்ந்திருந்த நாங்கள் பரஸ்பரம் முகம் பார்த்தபடி சிலையாகிப் போனோம். எனதுடலில் தலையுச்சியிலிருந்து கால் கைகளில் விரல் நுனிவரை விறைப்பு பரவிச் சென்றது.
பாதை நெடுக அங்குமிங்குமாக ஓடும் மனிதர்களின் மனதில் இவ்வேளை சுற்றிச் சுழலும் கேள்வி என்னவென்று நானறிவேன்.
ஆனால் என் மனதில் எழுந்த கடுமையான கேள்வி அதுவல்ல. இப்பொழுது நான் எப்படி சிவர மணியை தெஹிவளைக்குக் கொண்டு சேர்ப்பேன்?
எனக்கு மீண்டும் எண்பத்துமூன்று ஞாபகம் வந்தது. வாள், தடி, பெற்றோல் பேணி என்பவற்றைக் கையிலெடுத்த மனிதர்கள் பாதையில் இறங்கி நின்றனர். "இறங்கடா வெளிய, நீ தான்டா பேயா. இனத்தைக் காட்டிக் கொடுப்பது"
அவதாரமொன்று இறங்கியது போன்று எனக்கும் சிவரமணிக்குமிடையே சிவதாஸன் தோன்றினான்.
"நான் பாதையில் நின்றன். வெடிச் சத்தம் கேட்கும்போது எனக்கு ஞாபகம் வந்தது. நான் உங்களைக் கூட்டிக் கொண்டு போறன், அவசரப் படுத்துங்க, நாங்க போவம்" அவன் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு சென்றான்.
"நீங்கள்?-சிவரமணியின் பயந்த கண்கள் என்னிடம் கேட்டன.
"சரி நான் எப்படியாவது போறன். நீங்கள் சிவதாஸ்னோட போங்க"
எந்தப் பக்கம் போவதென்று நிச்சய மில்லாமல், ஹோன் ஒலித்தபடி, வீதிச் சட்டம் அனைத்தையும் மீறிக் கொண்டோடும் வாகனங்களில்
இதழ் 50

Page 63
ஒன்று கூட கை நீட்டும் எவருக்காகவும் நிறுத்தாததால் நூற்றுக்கணக்கானவர்களின் உடலில் மோதிக் கொண்டு அந்தப் பக்கமாகவும் இந்தப் பக்கமாகவும் அல்லாடியபடி அங்குமிங்கும் நுழைந்து சென்று, மருதானை புகையிரத நிலையம் வரை வேக நடையில் செல்ல வேண்டி நேர்ந்தது எனக்கு நான் புகையிரதப் பெட்டியொன்றின் வாயிலண்டை கட்டியிருந்த மனிதத் தேன் கூட்டில் தொங்கியபடி வீட்டுக்குச் சென்றேன்.
米米米
கொழும்பில் தங்குவது கூட பாதுகாப்பற்ற தாகக் கருதிய அவர்கள் இருவரும் வவுனியாவுக்கு தற்காலிகமாக வசிக்கச் சென்று இப்போதைக்கு இரண்டு வருடங்களாகி விட்டன. வவுனியா சென்று அடுத்த நாளே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், கூடிய சீக்கிரம் கனடாவுக்குப் போவதாகவும் எனக்கு சிவதாஸன் கடிதம் எழுதி யிருந் தான். இருந்தும் இப் பொழுது யுத்தம் முடிந்துள்ளதால் விருப்பமாயின் வவுனியாவுக்கு வந்து செல்லுமாறு கேட்டு, சென்ற வாரம் எனக்குக் கிடைத்த இரண்டு வரிக் கடிதத்தை சிவரமணியே எழுதி யிருந்தாள். அந்த ஆங்கில வாக்கியங்கள் இரண்டின் கீழாக "சிவரமணி" என்று அவளுக்கு நான் கற்பித்த சிங்களத்திலேயே கையொப்பமிட்டிருந்தாள்.
"உங்களைக் காணக் கிடைத்தது பெரிய சந்தோஷம், கடைசி நேரத்தில எங்க ரெண்டு பேருக்குமே விசா கிடச்சிருக்கு அடுத்த வாரம் நாங்க
எம் உறவுகளே எங்குற்றிர் கரைகளில் உங்கள் கால்தடங்கள் காணவில்லை வலை வீசும் உங்கள் வன்குரல்கள் கேட்கவில்லை மீன் அள்ளும் போது தேன்சிந்தும் உம்குரலின் அம்பா
பாடல்
இன்று ஒலிக்கவில்லை போர் சுமந்து வளமிழந்து வாழ்வழிந்து போனிரோ
என்மேனிமேலேறி தினமும் வருவோரே மீன்கள் தனை கொள்ள மீள வருவிரோ
உம்மை நினைத்தேன் ஆழமறியாத அகல கடல் நான் நினைக்கின்ற போது என் நீருக்கும் வேர்க்கிறது
ஏலேலொ பாட்டோடு
35
இணைந்திருந்த செங்குருதி சிந்த வெடிவந்து தன போது என் மடிமீது உ மறப்பேனா,
உறவுகளே உம்மை சுமந்த பாவியர்கள் பட கேடொன்றே கு விரைந்தவர்கள் சுடுகலன் சுமந்த பழிசுமந்தேன்
அனுதினமும் க
எம்மவர்கள் உடலம் சிதைத்
குடித்தார் பேசாதிருந்தேன்
ਸੁੰiBਹੁੰ
 

கனடா போறம்"
சிவதாஸனின் வதனம் சுதந்திரச் சிரிப்பால் ஒளி பெற்றிருந்தது. நான் அவர்கள் வாழும் சின்ன அறைத் துண்டில் சிறு கதிரையொன்றில் குறுகிப் போய் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அறையை இரண்டாகப் பார்த்து குறுக்கே போடப்பட்டிருந்த திரைக்குஅப்பால்குழந்தையொன்றின்அழுகுரல்கேட்டது.
குழந்தையை அணைத்தபடி என் முன்னே தோன்றிய சிவரமணி இப்பொழுது இரண்டு மடங்கு அழகாகத் தோற்றமளித்தாள். என்னால் அவளது முகத்தைப் பார்க்க முடியவில்லை. நான் அவளது மென்மையான பாதங்களைப் பார்த்தேன். செருப்புக் களோடு அந்தப் பாதங்கள் எவ்வளவு அழகு
எனக்குத் திடீரென்று இந்தச் சந்தர்ப்பத்தோடு எந்த வித சம்பந்தமுமில்லாத ஒரு விடயம் ஞாபகம் வந்தது.
"இப்பொழுது சிவரமணியின் பாதங்கள் வியர்ப்பதில்லையா?”
"இல்லை"- அவள் கேட்டும் கேட்காத சோகக் குரலில் சொன்னான்.
சிவரமணி எங்களோடு வேலை செய்த காலத்தில், அவ்வப்போது தனது ஹேன்பேக்கிலிருந்து பெரிய கைக்குட்டையொன்றை எடுத்து, கதிரைக்குக் கீழே குனிந்து தனது இரு அடிப்பாதங்களையும் துடைத்துக் கொள்வாள்; அவை வியர்வையினால்
ஈரமாவதால் தான்.
பெரும்பாவம் நான் செய்தேன்
2Ug. என் உறவுகளே எங்கொளித்தீர் தோழர்களே - - -
60უჩ தி சிதைந்தீர்கள் தணணராய இருந்து லமிக வி(மகின் என்தலைமேல் பகை சுமந்து து வழுகனற உம்கண்ணிரை பெருக்கி
கவலை பெரிதானேன் பிர் தந்தீர்
தாய் மடியாய் என்னில் தவழ்ந்த குழந்தைகளே SSSSLSSS நீர்மடியில் அலைக்கரத்தில் உங்கள் உயிரற்ற உடல் -கு படர விட்டேன் உடல்சுமந்தேன் நறியாய் நீருக்குள் எரிகின்றேன்
ஒரு நாள் படகுகளை தாங்கி ஆழிபுயலாகி அலைவீசி எழுவேன்
கூடோடு சேர்த்து
குருவிகளை கொழுத்தி மகிழ்ந்தாரை
நீர் மடியில் இட்டு மனம் நிறைவேன்.
வேலணையூர்-தாஸ்
இதழ் 50

Page 64
1980களுக்குப்பின் தமிழ்க் க
ஈழத்து தமிழ் இலக்கியப் பயில்பரப்பில் 1980 களின் ஆரம்பத்திலிருந்து நவீன கவிதையானது புதிய பரிமாணங்களையும் பெறுமானங்களையும் பெற்று வளர்ச்சியடையலாயிற்று. மொழியை ஆழுமைத்திறனுடன் கையாளும்தன்மையும் புதுமையைக் கண்டாய்ந்து சோதனை செய்யும் ஆற்றலும் இக்கால முஸ்லிம் கவிஞர் களுக்கு இருந்தமையால் என்றுமில்லாத அளவில் எளிமை யான, வடிவ நேர்த்தியுள்ள ஆழமான கவிதைகளை இவர் களால் படைக்க முடிந்தது. அத்துடன் அக்காலப் பகுதியில் தமிழ்க் கவிதையை சூழ்ந்திருந்த அலெளகிக அந்தகார நடையையும் இவர்களால் ஓரளவுக்கு உள்ளடக்க முடிந்தது.
ஈழத்து முஸ்லிம் தமிழ்க் கவிஞர்களால் நவீன தமிழ்க் கவிதை அர்த்தம் நிறைந்ததாகவும் வீறுமிக்க தாகவும் தேசிய பிரக்ஞையுடையதாகவும் வளர்ச்சி அடைய லாயிற்று. சமகால அரசியல் பொருளாதாரப் பிரச்சினை களை அவாவும் ஈழத்து முஸ்லிம் தமிழ்க் கவிதைகள் இஸ்லாமிய மக்களின் உணர்வுகளையும் அபிலாசை களையும் மனக் குமுறல்களையும் பிரதிபலித்தன. 1980களில் பாரம்பரிய இஸ்லாமிய கவிவழி யாப்பை உடைத்து புதிய மாற்றங்களுக்கூடாக புதிய உருவ உள்ளடக்கங்களை உள்வாங்கிக் கொண்ட நவீன கவிதைகள் அதன் பின்னரும் மரபின் தாக்கத்திலிருந்து முற்றாக விடுபட்டதெனக் கூறமுடியாது. நவீன கவிதை யாக்கத்துக்கு ஏற்ப புதிய கவிதை உள்ளீடுகளை முகாந்தர மாகக் கொண்டு, நெகிழ்ந்து கொடுக்கும் வடிவமாக இக்காலப் பகுதியில் மரபுக்கவிதை தன்னைத் தகவமைத்துக் கொண்டமையால் கலைத்துவமும் கருத்தாழமும் கொண்ட மரபுக்கவிதைகளும் இக்காலப்பகுதியில் எழுந்தன.
இக்காலப் பகுதியில் எழுந்த பெரும்பாலான முஸ்லிம் தமிழ்க் கவிதைகள் முன்னைய பாரம்பரிய முறையை உள்வாங்கி, வாய்மொழி வடிவிலும் யாப்பு வடிவ செய்யுட்களிலும் பாடப்பட்டதாக இருந்தன. பாக்களைப் பொறுத்தவரை அகவலும்,வெண்பாவும் விருத்தமும் கவிதைக்குரிய பாவினங்களாகக் கருதப்பட்டு வழக்கிலிருந்தன. அத்துடன், இக்காலப் பகுதியில் எழுந்த முஸ்லிம் தமிழ்க் கவிதைகள் சிந்து, கும்மி, காவடிச்சிந்து,
ஜீவநதி
 
 

-ԺԲ.ԱնլDaչի
ஈழத்து முஸ்லிம் விதைகள்
கீர்த்தனை, கண்ணி முதலிய யாப்பு வடிவங்களையும் நவீன கவிதைக் கேற்ற வகையில் தமக் குள் g) G35T600TL60T.
பாக்களில் அந்தணப் பாவெனப்படும் வெண்பா, தொன்மையும் தலைமையும் செறிவும் வாய்ந்த வடிவமாகும். செவ்விலக்கிய வழக்கில் காணப்படும் வெண்பாவை இக்காலப் புலவர்களில் ஒருவரான புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் பாடுவதில் கைவந்தவராகக் காணப்பட்டார். புலவர்மணி அவர்களின் கவிதைகளில் பெரும்பாலானவை வெண்பாவில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. புலவர்மணி பாடிய "முதுமொழி வெண்பா சொற்செறிவும், ஓசைநயமும், பொருட் புலப்பாட்டு உவமைகளும் நிறைந்த கருத்தாழமிக்க தமிழ் நூலாகும். எளிமையான தமிழில் யாவரும் படித்து உவந்து உய்த்துணருமாறு "மூதுரை", "நல் வழி", "நன்னெறி", "பழமொழி நானூறு', "நான்மணிக்கடிகை" முதலான பழந்தமிழ் நூலுக்கொப்பாக இந்நூலைப் புலவர் இயற்றியுள்ளார். ஆ.மு ஷரிபுத்தீனின் புதல்வர் களுள் ஒருவராகிய ஜின்னா ஷரிபுத்தீனும் தந்தையின் காலடிச் சுவட்டில் தடம் பதித்த கவிஞர்களுள் ஒருவர்.
1965 - 1970 களுக்கு இடைப்பட்ட காலத்தில் தினகரன் ஊடாக அறியப்பட்ட ஜின்னா ஷரிபுத்தீன் மரபுக்கவிதைகளுக்கூடாக வாழ்வின் இயற்பியலைச் சாத்தியமாக்கியவர். நபிகளாரின் வாக்கினையும், வாழ்வினையும், இஸ்லாத்தின் வரலாற்றுப் பாதையில் நடந்த தியாக சம்பவங்களையும் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட "பாலையில் வசந்தம்" இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. இதனை அடுத்து 1989 இல் வெளிவந்த "முத்துநகை” கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வாண்டு முதற் பரிசையும் பெற்றுக்கொண்டது. சமூகப் பண்பாட்டுச் சிந்தனைப் புலத்தில் விழுமியக் கருத்துக்களை முக்கியத்துவப்படுத்தி இவரால் எழுதப் பட்ட "நல்ல மனையாள்", "சமத்துவம்", "அன்புமகனே" "தாய்க்குலப் பெருமை" முதலான கவிதைகள் நீதியின் பாற்பட்ட அறப் போதனைகளாகவும் காணப்படுகின்றன.
H இதழ் 50
ܫ .

Page 65
மார்க்கப் போதனைகளை மையப்படுத்தி எழுப "புவியாழும் வல்லோன்" முதலான கவிதைகளுப இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இயற்கையின் எழிலை இதமாகவும் மனம் நுகரும் வண்ணம் வெளிப்படுத்திய முக்கியமானவர்களுள் ஜின்னாவும் ஒருவராவார். இவரின் "ஈழவளநாடு", "மாலைப்பொழுது","உச்சிமலைச் சாரலிலே முதலான கவிதைகள் சமூக வாழ்வுடன் இணைத்தே இயற்கையைப் பாடுகின்றன.
"புண்டரீகப் பூவமர்ந்து புதுத்தேனுண்டு புந்தியழிந் தேமயங்கி சோர்ந்திருந்த வண்டதுதன் உணர்வுறுமுன் அருணன் ஏக வருந்தியுளந்தாளாது விதழ்கள் மூடிக் கொண்டனவம்மலரிடையிற்பொதிந்தவண்டு குற்றுயிராய்க்குரலெழுப்பும்நிலைமை கண்டு தண்டலையில் அல்லிமலர்ந்தனவே யாங்கு தாவிவிழுந் தேமகிழும் மீன்களம்மா” - (முத்துருகை பக்-27) நவீன கவிதை இயங்கியலுக்கு அமைய வெண் பா ைஎளிமையும் இனிமையும் கொணர் L பாவினமாகப் பயன்படுத்தியவர் அல்-அஸிமத் என்னும் முகமது அஸிஸ் ஆவார். மாத்தளையான், புல்வெட்டித் துறைப்புலவர், விருச்சிகன் என அழைக்கப்படுமிவர் "புலராத பொழுதுகள்" என்னும் உருவக வரலாற்றுக் கவிதையில் இதனை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் "காடு" முதல் "காட்டரசனிட்ட சபதம்" ஈறாகவுள்ள பதினொரு பகுதிகளில் நேரிசைவெண்பா, இன்னிசைவெண்பா இன்னிசைப் பஃறொடை வெண்பா, இன்னிசை கலி வெண்பா என வெண்பா விகற்பங்கள் பலவற்றை கையாள்கிறார். ஈழத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக மலையகத்தில் காடு வெட்ட முயன்ற வெள்ளையரின் ஆரம்பகால நிகழ்வை எடுத்துரைக்கும் இவ்வுருவக்கவிதை ஈழத்து நவீன கவிதைப்பரப்பில் புதிய உருவ, உள்ளடக்க முறைகளுக் கூடாகத் தன்னை முன்னிறுத்தியது. அல்.அஸிமத்தின் பிறிதொரு தொகுப்பான "அல்-அஸிமத் கவிதைகள் (மலைக்குயில்) என்னும் தொகுப்பு மரபுக் கவிதைகள் பலவற்றையும் ஒரு சில புதுக்கவிதைகளையும் தன்னகத்தே கொண்டு வெளிவந்த தொகுப்பாகும். மலையக மக்களின் வாழ்வியலையும் அவர்கள் தம் வாழ்வில் எதிர் நோக்கிய அவலங்களையும் தத்ரூபமாகப் பதிவு செய்யும் இத்தொகுப்பு "தொழிலாளித் தோழா”, முதற் கொண்டு "சதியின்முடிவு" ஈறாக முப்பது கவிதைகளை உள்ளடக் கியது. இத்தொகுப்பில் இடம்பெறும் "தொழிலாழித் தோழா", "தம்பி மலையாண்டீ", "மலைப்பள்ளி எழுச்சி" "பிரஜாயுரிமைத்தூது" முதலான கவிதைகளில் கூலித் தொழிலாளராக ஈழத்துக்கு கொண்டு வரப்பட்ட மலையக மக்கள் தம் ஜீவனாதாரத்துக்குப் போராடுவதும் அவர்கள் அதிகார வரம்புக்குட்பட்டு நசிவுறுவதும் கருத்துருக்களாக வன்றி புலக்காட்சிக்கூடாக எடுத்துரைக்கப்படுகிறது.
இத்தொகுப்பில் ஆரம்பகாலச் சிற்றிலக்கிய
ஜீவநதி
 

வடிவங்களில் ஒன்றான தூது", நவீன உருவ, உள்ளடக்க முறைகளை உள்வாங்கி "பிரஜாவுரிமைத் துாதாக" வெளிப்படுத்தப்படுகிறது. அல்-அஸிமத்தின் இக்கவிதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றுக்குச் சற்று முன்னர் ஈழத்தின் கோப்பி, தேயிலைத் தோட்டங் களுக்குத் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கூலித் தொழிலாளிகளின் பிரஜாவுரிமை 1948 இல் குடியுரிமைச் சட்டத்தால் பறிக்கப்பட்டு அவர்கள் அரசியல் அநாதை ஆக்கப்பட்டதை எடுத்துரைக்கிறது. குடிலிழந்து நிர்க்கதியாக்கப்பட்ட ஒருவன் தன்துணைவியாரின் ந ைல யை யதார் த் த வாழி வியலுக் கூடாக எடுத்துரைக்கிறது.
"பிள்ளைகள்அணைத்துப்பெரியன நினைத்தே அல்லலில் வாடும் அகமுடையாளைக் காற்றே நீபோய்க் காற்றாய்க் கண்டு சாற்றுக இதனைச் சங்கடம் எனக்கோ எட்டாம் ஷரத்தின் இழிந்த பிரிவால் தட்டப்பட்டது தங்கள் உரிமை என்றொரு கடதாசி எனக்காய் இன்றுதான் வந்தென இயம்புக காற்றே" பிரஜாவுரிமைச்சட்டத்தால் தன் சுற்றத்துக்கும் தனக்கும் ஒன்றுமே கிடைக்காது நொந்து நொடிந்து வாழும் தலைவனின் நிலை "பங்குச் சேற்றில் அனர்த்திக் கொண்டு படுத்துறங்கும் அடைக் கோழிக்கு ஒப்பிடப்படுகிறது. 10.08.86 இல் வீரகேசரியில் வெளிவந்த ஏ.எஸ்.நஜீமுதீ னின் "எங்கள் வாழ்வு" என்னும் கவிதையும் பிரஜா உரிமை பற்றியே பேசுகிறது. மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தால் எவ்வித இலாபமும் இல்லை. அது உரிமையுடன் சாவதற்காக மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட அரச பத்திரம் என பதை ஏ. எஸ் .நஜீமுதனின் இக் கவிதை எடுத்துரைக்கிறது.
இத்தொகுப்பில் இடம்பெறும் "தம்பி மலை யாண் டீ", "போறினுக்குப் போறனாம்" முதலான கவிதைகள் உரையாடல் வடிவில் நாடகப்பாங்கில் அமைகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கூலித் தொழிலாளிகளின் வாழ்வியலும் அவர்கள் தம் ஜீவனோபாயத் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் படும் அவலங்களும் மிக நேர்த்தியாக இக்கவிதைகளில் பதிவு செய்யப்படுகின்றன.
ஏ.எஸ்.நஜீமுதீனின் "மாறதோ கவிதையும் மலையக மக்களின் நடைமுறை வாழ்வியலைப் பேசுகிறது. தேனீக்கள் போல் ஒரு கூட்டில் அல்லலுற்று வாழும் மக்களின் அவல வாழ்வைக் கோடிட்டுக் காட்டுகிறது.
"பத்தடி லயத்தினிலே பாட்டன் பூட்டன் வாழ்வு பாவம் இன்னும்
பருவமடைந்த தங்கையும்

Page 66
இன்னும் பலரும்"
(பதி) மொட்டுக்கள்.பக்-27)
இக்காலப்பகுதியில் மலையகத்தைப் பிரதிநிதித் துவப் படுத்திய முஸ்லிம் கவிஞர்களாக தலவின்ன சிபார், ரிஷானா ரவுட் கலதெனியா நளிம், கலைமகள் ஹிதாயா, தமீம் அன்சார் அக்குறாணை எஸ்.எம். ரிஸ்வான் மஸிதா புன்யாமீன் முதலானோரைக் கூறலாம்.
மரபுக் கவிதைகளில் புதுமை படைத்த அல்-அஸிமத்தைப் போன்று மரபுக் கவிதையை எளிய சொல்லாடலுக்கூடாக நவீனமயமாக்கியவரில் ஒருவர் அன்புமுகைதீன் ஆவார். அன்றாட வாழ்வியல் அநுபவங் களைப் புலக்காட்சிப் படிமங்களுக்கூடாக உணர்வின் செறிவாக வெளிப்படுத்திய அன்புமுகைதீன் "கவிச்சுடர், "நஜ்முஷ்ஷிஅரா" என்னும் பட்டங்களால் கெளரவிக்கப் பட்டவர்.
1980களில் ஹஜ்ரி விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமயக்கலாச்சார அமைச்சு தேசிய மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற இவர் 1996 இல் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி, உயர்கல்வி அமைச்சு நடாத்திய கவிதைப் போட்டியிலும் முதற் பரிசைப் பெற்றவர். 1998,1999 ஆண்டுகாலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகம் நடாத்திய அகில இலங்கைத் தமிழ்க் கவிதைப் போட்டியிலும் பரிசில்களைப் பெற்றவர்.
1980களில் மாதருக்கு வாழ்வளித்த மகான் என்னும்
கவிதைத் தொகுப்பை அடுத்து “மாதுளைமுத்துக்கள்" (1984), "எழுவாக்கதிர்கள்"(1986), "புதுப் புனல்" (1988),"அரசியல் வானில் அழகிய முழுநிலா" (1997),"உத்தம நபி வாழ்வில்"(2000) "வட்டமுகம் வடிவான கருவிழிகள்"(2001) முதலான தொகுப்புக்கள் வெளிவந்தன.
ஆரம்பத்தில் குழந்தைக் கவிதைகளைப் பாடிய இவர் பின்னர் இஸ்லாமிய மார்க்க சிந்தனைகளை வலியுறுத்தும் வகையில் பாடல்களைப் பாடினார். நபிகளாரின் வாழ்வின் சம்பவங்களைக் கவிதையாக்கி இவரால் பாடப்பட்ட "உத்தமநபி வாழ்வில்" என்னும் நுால் ஞானத்தேடல்கள் மிக்க பக்திச் சுவைமிக்க கவிதைகளாகக் காணப்படுகின்றன. நபிகளாரின் வாக்கினையும் வாழ் வினையும் இஸ்லாத்தின் வரலாற்றுப்பாதையில் நடந்த தியாகச் சம்பவங்களையும் கருப்பொருளாகக் கொண்டு இவரால் எழுதப்பட்ட இந்நூல் ஜின்னா ஷரிபுத்தீனின் "பாலையில் வசந்தம்" நூலுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
அன்பும் கருணையுமிக்க மனிதாபிமானமுள்ள
கவிஞனின் ஈர உணர்வுகளின் வெளிப்பாடே அன்பு முகைதீன் கவிதைகள், மனித உறவுகளுக்குள் நிகழும் அன்பின் நுண்ணிழைகளை அதன் பரிமாணங்களை தாய்குழந்தை, தந்தை-பிள்ளை, ஆசிரியர்-மாணவன், காதலன் - காதலி என பல் வேறு நிலைகளிலிருந்தும் வெளிப் படுத்தியுள்ளார். மனித மனத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பு பேரூற்றாய் கவிதையெங்கும்
ஜீவநதி -
 
 

பொங்கிப் பிரவகித்துச் செல்கிறது.
வைத்தியசாலையில் உணவளித்து விட்டு தினமும் பாடசாலைக்குப் பிந்தி வரும் மாணவன் ஒருவனை ஆசிரியர் அறியாமல் தண்டித்து விடுகிறார். மாணவனின் உண்மைநிலையை அறிந்தபின் ஆசிரியரின் மென்னுள்ளம் துடிக்கிறது.அதனை நினைத்து அல்லலுற்று மனம் புழுங்குகின்றது. அதன் வெளிப்பாடே இதயம் அழுகிறது"
சின்னதோர் குற்றம் தான் செய்தாய் அதற்காக பென்னம் பெரிய பிரம்பாலே உன்னுடைய பொன்னான கைகளினை புண்ணாக்கிவிட்டேனா
- (புதுப்புனல்,Uக் -07) வெம்பியழும் ஆசிரியரின் இளகிய உள்ளத்தை அறியாத மாணவன் "மன்னிக்க வேண்டும், சேர் / மறுபடியும் பாடத்தை / படிப்பிக்கவேண்டும்" என வேண்டுகிறான். இதைக் கேட்ட ஆசிரியர் மனம் மேலும் நொந்து நொடிகிறது.
".உன்மேல்எனக்கென்றும் உயிர்அதனால்தான் பாடத்தை மீண்டும் படிப்பிக்க முயல்கின்றேன் என்னால்படிப்பிக்க இயலாதுகுமைகின்றேன் நாளை படிப்போமென நம்பிக்கை ஊட்டிவிட்டு எழுந்து நடக்கின்றேன் இதயம் அழுகின்றது."
(புதுப்புனல்.பக் -09) இக்கவிதையைப் போன்று மென்னுணர்வுத் தளத்தில் இயங்கும் கவிதைகளாக "பிஞ்சு மனத்துக்குள் பெருக்கெடுக்கும் ஓர் உணர்வு"ஒரு தந்தையின் தாகம்", "மானுடம் பூத்தது", "இடி இன்னும் விழவில்லை", "பக்கத்து வீட்டு பரிதா", "சின்ன நிலவே சிரி" முதலானவற்றைக் கூறலாம்.
சமூகச்சூழற்பொருட்புலத்தில் உருப்பெறும் கவிதைகள் கவிஞரின் கவித்துவ வீச்சுக்கு பதச்சோறாக அமைகின்றன.அவ்வகையில் "ஏழைவாத்தியாரின் ஏக்கப் பெருமூச்சு", "நம்பிக்கை", "திருத்த வேண்டிய வீடுகள்", "பாதைகள் திருந்த வேண்டும்", "தடித்த ஆசைகளும் தகர்க்கும் ஓசைகளும்" இனிமையான இரவுகளும் இழந்து போன நினைவுகளும் முதலான கவிதைகள், இத்தளத்திலேயே இயங்குகின்றன.ஆழமான சிந்தனை களை எளிமையானச் சொற்சேர்க்கைகளுக்கூடாக வெளிப் படுத்தும் அன்புமுகைதீன் கவிதைகள் மனிதாபிமான உணர்வுகளின் வெளிப்பாடாகவும் சமூக உணர்வின் கலகக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கிறது.
1970களினைப் பிரதிநிதித்துவப்படுத்திய
இதழ் 50

Page 67
முஸ்லிம் கவிஞர் பலர், இத்தளத்தில் தொடர்ந்தும் இயங்கி மருதூர்க்கனி, பண்ணாமத்துக் கவிராயர், சரணா கையூம், முஸ்லீம் எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி), அன்புடீன், அன் ஈழத்துநூன், அனலக்தர், பாலமுனை பாரூக், ஜமாலி 8 குமரன்), ஏ.கே.எம்.நியாஸ், செந்தீரன் எம்.பி இராஜ்தீன் முகைதீன, மேமன்கவி, கல்கின்ன எம்.சி.எம்.சுபைர், L பக்கீர்த்தம்பி, பாலமுனைஆதம்,அக்கறைப்பற்று நஜீமு, மருதுார் ஏ.மஜித், முல்லைஅமுதன் என ஏராளமான முஸ் அவர்களின் கவிதை வீச்சும் ஈழத்துத் தமிழ்க் கவிதையைப் சென்றன. 1987 ஆடிமாதம் கொழும்பில் நடைபெற்ற பன்னிரண்டு முஸ்லீம் எழுத்தாளர்களது நுால்களு கெளரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கவிதைத் துறைக்குரிய முகையதின், மர்ஹீம் ஈழமேகம் முதலியோர் பெற்றனர்.
இலங்கை சாகித்திய மண்டலப்பரிசைப் பெற்ற ஒ கவித்துவமும் கலைத்துவமும் மிக்க சிந்தனைக் கனதிமிக்க மனிதத் தளத்தில் நின்று சமூகநிலைக் கவிதைகளைப் பகுதியில் சிந்தாமணி, தினகரன் ஊடாகப் பரவலாக வெளியான "நல்வழிகாட்டல் கடன்" (15.181), "உ வஞ்சகி(25.02.85), "சின்னமரம்(29.06.84), "சீரழிவு"(19 மனித நடத்தைகளின் சிக்கல்களையும் அதன் சூட்சுமத்தையு சமுதாய சூழ்நிலையையும் சமூக யதார்த்தத் கொண்டு வந்தவர்களுள் முக்கியமானவர் பாலமுனை பாரூ பிரத்தியேக தன்மைகளை தன் அநுபவங்களின் தேறல்களா பாறுக்கின் ஆக்கங்கள் எண்பதுகளில் பரந்து விரிந்தன."பதம் அறியப்பட்ட இவர் தினகரன், அக்னி, வெற்றிமணி, மலர், யா இலக்கியம் முதலான சஞ்சிகைகளில் ஆரம்ப காலங்களில் எ என்னும் சிறுவட்டத்துக்குள் மாத்திரம் கவிதையை முடக்க உணர்வோட்டங்களை உயிர்த்துடிப்புடன் கிண்டலும் கேலி பாரளுமன்ற அரசியற் கூத்துக்களை பகிரங்கமாக அம்பலப் அரசியல் நாடங்களை வெளிப்படுத்தி யும் அவர்களின் போ கவிதைகளை வரைந்தவர்.உரிமைப் போராளிகளுக்கு சமத்துவத்தை வலியுறுத்தி இவர் வரைந்த கவிதைகள் பிறி (3G) 600TL2U606).
ஏறாவூரில் புரட்சிக்கமாலைத் தொடர்ந்து இளந் ஆசானாக அமைந்தவர் ரி.மீராலெவ்வை ஆசிரியர் எ6 தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளுக்கூடாக அறியப் கோணங்கியார், நையாண்டிக் கவிராயர், குணச்சித்தன் என் அறியப்பட்டவர். ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்க கரு கொடுத்து கவிதைகளை யாத்த இவர் இயற்கை, சமூகம் ( கவிதைகளை வடித்தார். அக்காலத்தில் முனைப்பு பெற் முன்வைத்து இவரால் எழுதப்பட்ட கவிதைகள் குமரன் இதழி 1980 களில் சிந்தாமணிக்கூடாக அதிகம் அறிய ஏ.எம்.எம்.அலி முக்கியமானவர். சமூகச் சீர்கேடுகளைக் கவிதைகளை எழுதிய ஏ.எம்.எம்.அலி மார்க்க சி கவிதைகளையும் எழுதியவர். அதனுடாகப் பரவலாகவும் கவிதை மூலம் இலக்கிய உலகில் ஆரோக்கியமான தடத்தை ஆகவே, சிற்றிதழுக்கூடாகக் கவிஞராகவும் அறியப்பட்ட ஐபார் காயம்பட்ட இருண்ட நாட்களின் துயர "திறக்கப்படாத தீ பெட்டிகள்"(1986) புரட்டாதியில் பே முன்னுரையைத் தாங்கி வெளிவந்தது.இத்தொகுப்பில் இ
ஜீவநதி
 

னர். எம்.ஏ.நுஃமான், ஏ.இக்பால், நிக்கு வல்லை கமால், அளுத்கம பு ஜவாகர், எம்.எச்.எம்.கூஓம்ஸ், ஜவாத் மரைக்கார் (சோலைக் ஜெளபர் மெளலானா, மூதூர் ஸில் காரியப்பர், ஈழமேகம், அப்துல் குத்துாஸ், அறநிலா, லீம் கவிஞர்களின் எழுச்சியும் பிறிதொரு தளத்துக்கு இட்டுச் மகாகவி இக்பால் விழாவில் க்குப் பரிசில்கள் வழங்கி பரிசினை அல்-அஸிமத், அன்பு
ருவராக அறியப்படும் இக்பால் கவிதைகளைத் தந்தவர்.பொது படைத்த இக்பால் இக்காலப் அறியப்பட்டவர். தினகரனில் உண்மை சுடும்"(25.10.85), 06.88) முதலான கவிதைகள் ம் ஆழமாகப் பார்க்கின்றன. தை யும் நவீன கவிதையில் நக் தனது பண்பாட்டுச் சூழலின் க வெளிப்படுத்திய பாலமுனை " என்னும் தொகுப்பின் ஊடாக ாழ்பிறை, பிறைத்தேன், புதுமை ழுதியவர். மார்க்கநெறிகாதல் ாது நிகழ்கால சமூக அரசியல் வியுமாக காட்சிப் படுத்தியவர். படுத்தியும் அங்கு அரங்கேறும் லிமுகத் திரைகளை கிழித்தும் ஆதரவு தெரிவித்து சமூக தொரு தளத்தில் நோக்கப்பட
தலைமுறைக் கவிஞர்களுக்கு எப்படும் அனலக்தர் ஆவார். பட்ட இவர், தாம்பூலவாயனார், னும் புனைபெயருக்கூடாகவும் நத்துகளுக்கு முக்கியத்துவம் ானப் பன்முகத் தளங்களிலும் ) சமதர்மக் கொள்கைகளை லும் வெளிவந்தன. பப்பட்டவர்களுள் கிண்ணியா கண்டித்து அறவழிவயப்பட்ட ந்தனையை வலியுறுத்தும் அறியப்பட்டவர்,யாப்பமைந்த
பதித்தவர்.
சிறுகதையாசிரியராகவும் ங்களைப் பாடியவர். இவரின் ராசிரியர் கா.சிவத்தம்பியின் டம்பெறும் பெரும் பாலான
எம்.ஏ.நுஃமான்
இதழ் 50

Page 68
கவிதைகள் வானம் பாடிக் கவிதைகள் போன்று வெற்றுக்கோசங்களாகவும் ஆக்ரோசமான முழக்கங் களாகவும் காணப்படுகின்றன.
இனப்படுகொலைகளைத் தொடர்ந்து தமிழீழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக முனைப்பு பெற்ற சூழலில் தோன்றிய தொகுப்பே "திறக்கப்படாத தீ பெட்டிகள்" அப்பின்னணியை மையமாகக் கொண்டு எழுந்த ஐபாரின் ஒரு சில கவிதைகள் நம்பிக்கை யளிக்கிறது. கடித உத்திக்கூடாக விரியும் "நண்பனுக்கு" கடந்த காலத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளை யுத்த சாட்சியாய் நின்று ஆவணப்படுத்துகிறது.
"பிரியமுள்ள அஜித்
உன் கடிதம்கிடைத்தது
கொஞ்சநாட்களுக்கு முன்னால்
தாலிகட்டி
இரண்டே இரண்டு
மணித்தியாளங்களில்
ஒரு மணப்பெண்ணிடமிருந்து
மாப்பிள்ளை ஒருவன்
பறிதெடுக்கப்பட்டான்
அவள்கதறிக்கதறி அழுதது
இன்றும் என் இதயத்தைப்
பிழித்தெடுக்கும் நிகழ்வு.
எல்லைப் புறங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டெழுதியிருந்தாய் அங்கங்கள் வெட்டப்பட்ட அனைத்து சடலங்களினதும் எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு ஏங்கியே போய்விட்டேன்.
.அப்பாவி மக்கள்
எத்திசையில்
இறப்பினும் அவர்கள்
அனைவருமே
எம்மக்கள்தான்
அப்புறமென்ன
அடிக்கடி கடிதம் எழுது
அடுத்த மடலில்
சந்திப்போம்"
-(திறக்கப்படாத தீயெட்டிகள்-89-40)
எண் பத் தேழுகளின் முற்பகுதியிலிருந்து எண்பத்தெட்டுகளின் பிற்பகுதி வரையில் ஐபாரால் எழுதப்பட்ட கவிதைகள் "தரப்பட்டுள்ள அவகாசம்" என்னும் பெயரில் 1996 இல் நுாலுருப் பெற்றது.அந்நிய ஆக்கிரமிப்பினால் தமிழ்ப்பிரதேசம் துண்டாடப்பட்ட நிலையில் அரசியல் அநீதி கண்டு கொதிப்புற்ற ஒருவனின் மனவேக்காடே ஐபாரின் இத்தொகுப்பாகும். அவலங்களின்
ஜீவநதி ■
 
 
 

மத்தியில் உணர்வுகளின் வர்ணங்களைக் காட்டும் ஐபாரின் கவிதைகள் கலைச்சிருகூழ்டி கொண்டவை. கலைஞன் ஒருவனின் மனஅவஸ்தை களையும் ஆத்மீக தேடல்களையும் ஐபாரின் கவிதை களில் தரிசிக்கும் ஒருவன் தமிழ் ஈழப் போராட்டப் பிரச்சினைகளின் உள்வாங்கலாகவும் நிகழ்காலப் பதிவுகளின் கூட்டு விம்பங்களாக ஐபாரின் தொகுப்புக்கள் வெளிவந்திருப் பதை உணர்ந்து கொள்வர்.
"மயானத்தின் மேல் முகவரியிழக்கும் புல்வெளியில் தனித்து மேய்தபடி ஒர் ஆட்டுக்குட்டி மயானத்தைக்கடக்கும் பமின்சாரக்கம்பிகளில் தேடலில் சோர்ந்துபோன ஒரு செண்பகம் வெறுமை படர்ந்திட அதையும் மீறிப் பறக்கிற பருந்தின் வட்டத்துள் சிக்கிய மனம் வானமிழந்த வீட்டு நினைவோடு" -(தரப்பட்டுள்ள அவகாசம் பக்-06) வன்மங்களுடன் கூடிய நடைமுறை வாழ்வி யலை மென்னுணர்வுத் தளத்தில் காட்சிப்படுத்தும் இக்கவிதை உயிர் வாழ்வதற்குரிய பிரபஞ்சத்தின் பிரயத்தனத்தை புறக்காட்சிப் படிமங்களுக்கு ஊடாக வெளிப்படுத்தி நிற்கிறது.
அடக்குமுறைச்சட்டங்களும் அரசபயங்கர வாதமும் தமிழரை நோக்கி பிரயோக்கிக்கப்பட்ட சூழலில் மரணஒலங்களையும் அவலக்குரல்களையும் நிகழ் கவிதையில் சாத்தியமாக்கியவர் பசீர், "காக்கும் நிலைக்கு உயிராகி" தொகுப்புக்கூடாக அறியப்பட்ட பசீர் தான் அனுபவித்தவற்றை, தான் உணர்ந்தவற்றை சம்பவங்களின் கோர்வையாய் அன்றி உணர்வின் கலவையாய் பதிவு செய்தவர். மனித சமத்துவத்தை வலியுறுத்தும் போராளியாய் தான் சார்ந்த சமூக விடுதலைக்குப் போராடும் சகமனிதனாய் வெளிப்படும் பசீர் தன் சகவீரன் சுட்டுக் கொல்லப்பட்ட போது உள்ளம் கொதிக்கிறான். அவ்வுணர்வின் வெளிப்பாடே "பொன் அம்பலத்திலே ஆடி"
"பொன்னம்பலம் என்ற புரட்சிப் போராளி இறந்து விட்டானென்று அரச கூலிப்படைகளின் துப்பாக்கிகள் சாட்சி கூறின உந்தன் பெயரைக் கேட்டு உடம்பெல்லாம் நடுங்க உதிரமெல்லாம் உறைந்தவர்கள் உன்னைக் குறிபார்த்துச்சுடவோ உன் உதிரத்தைச் சிந்த வைக்கவோ முடியாது உன்னை அழித்துவிட்டதாக எண்ணி
- இதழ் 50
مجs"

Page 69
எக்களித்து அவர்கள் ஏமாந்து கிடக்கின்றார்கள் ஈழவர் இன்னல் கண்டு கொதித்தஃ உன் குருதி சீறிப்பாய்ந்து மானிடத்தின் வைரிகளை அழிக்கும்." எண்பதுகளின் சமகால ஈழத்துத் தமிழ்க்கவிதை புலத்தின் பொதுஇயல்பினை புதியபடிமச் சேர்க்கையாலும் கற்பனைத்திறன் கொண்ட சிந்தனை ஆற்றலாலுL முற்றிலும் வேறுபடுத்தி அமைத்தவர் சோலைக் கிள ஆவார். கருத்துச் செறிவுமிக்க ஆழமான இவர் படிமங்கல பிரமிப்பூட்டுபவை, அதிர்ச்சியூட்டுபவை. அநுபவ உணர்வு நிலையில் இயங்கும் சோலைக்கிளியின் கவிதையுலகL தனக்கேயுரிய தனித்துவமான மொழியினால் கட்டுண்டது பிரதேச சமூகமொழி வழக்குடன் பின்னிப் பிணைந்து பேச்சுவழக்காற்றுச் சொற்களுக்கூடாகத் தன்னை முன்னிலைப்படுத்தும் சோலைக்கிளியின் கவிதைமொழி பன்முகத்தன்மை கொண்டது. சமகால சமூக நிகழ்வுகளை மாற்றங்களை அஃறிணைப் பொருட்களுக்கூடாக அணுகும் சோலைக் கிளியின் கவிதையை சாதாரண வாசகனால் நேரடியாக அணுகமுடியாது.
"ஒவ்வொரு இரவும் இப்படித்தான், நாய்க்கறுப்பும். நரிக்கறுப்பும். இனிவரும் இரவாச்சும் இந்த மனிதனுக்காய் வெள்ளை பூசிக்கொண்டு வரட்டும்."
-(எட்டாவது நரகம்-03-04) சோலைக்கிளியின் "வெள்ளை இரவு" என்ற இக்கவிதை சப்தங்கள் நிறைந்த தரிசிக்கமுடியாத அமைதி யற்ற பொய்மையால் மூடியிருக்கும் புன்மையுலகை காட்சிப்படுத்துகிறது
சமூகம் தனிமனிதன் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கள்.அவதூறுகள் சோலைக்கிளியின் கவிதை களாக உருப்பெறுகின்றன. மென்னுணர்வுத் தளத்தில் இயங்கும் இக் கவிதைகளில் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை. வன்முறையோடு இணையப் பெற்ற மனிதவாழ்வின் அபத்தத்தை வெளிப்படுத்தும் சோலைக் கிளியின் "எனது தாய்ப்பால்" புதிய சொல்முறை,புதிய வெளிப்பாட்டு முறைக்கூடாக தன்னை நவீன கவிதையாக உருவகப்படுத்துகிறது.
"எனது தாய்ப்பால் ஒரு ஈயக் குழம்பாக இருந்திருக்க வேண்டும் எப்படி முடியும் ஃமிகவும் பசுமையாக, இன்னொரு முலையும் இல்லையா என்பதைப்போல் அந்தப்பாலில் குளிர்மை நிறைந்திருந்தால் ஃஇன்று oό சுற்றி வரவும் அக்கினிக்குள்ளே வாழ்ந்து தொலைக்க? அப்போது நான் மெதுமெதுப்பான
 

முலைகளின் கறுத்த காம்புகளைச் சப்பியிருக்க நியாயமில்லை"
– (95)Rotb.Uä-73) ஈழத்து தமிழ்க் கவிதைப் புலத்தில் கொழும்பைத் தளமாகக் கொண்டு எழுதும் கவிஞர் களுள் 1980 களில் மல்லிகைக்கூடாக ஆழமாக முகம் பதித்த ஒருவர் மேமன்கவி. சமூகத்தில் தான் கண்டு,உணர்ந்து, அனுபவித்த ஆள்நிலைப் பட்ட, தனிநிலைப்பட்ட அனுபவங்களை, மனக்குமுறல்களை அழகியல் கவிதைகளாக வெளிப் படுத்தியவர்களுள் மேமன்கவி முக்கியமானவர். உலகப் பொருளா தாரத் துக் கு எதிரான சுரணர் டலை உணர்வு நிலைக்கப்பாற்பட்டு, தனிமனிதசிந்தனைப் புலத்துக் கூடாக வெளிப் படுத்தியவர். "ஹரிரோசிமாவின் ஹீரோக்கள்", "இயந்திரச்சூரியன்" ஆகிய தொகுப்புக் களில் இடம் பெறும் பெரும்பாலான கவிதைகள் இத்தளத்திலேயே இயங்குகின்றன.
சமுதாய உணர்வின் நிலைப்பட்ட கவிஞன் மரபுவழிவந்த வடிவங்களைப் பயன்படுத்தி புதிய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் வெளிப்படுத் தினான். இதற்குத் தக்கசான்று மேமன்கவியின் "கொழும்புப் புராணம்" ஆரம்பகால இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் சமயப் பொருளையே புராணங்களில் பாட மேமன்கவி கொழும்பின் நிகழ் பரப்பைப் அங்கதமாகப் பாட இவ்வடிவத்தைக் கையாள்கிறார். கொழும்பு நகர மையத்துக்குள் இயங்கும் விடிகாலையின் பொதுவெளி காட்சி-1, காட்சி-2 இல் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது. இரவு வேளையில் கொழும்பு நகரைத் தரிசிக்கும் ஒருவனின் மனோநிலைக் கூடாக விரியும் நிகழ்வுகளின் சித்திரிப்பே காட்சி-3 ஆகும். "சட்டைக்குள் தெரியும் நிர்வாணத்தை மற்றொரு வெள்ளைக்காரன் வெறிக்கபாசிமணிமாலைகளைக் காசாக்கிய பெண் வியாபாரிநடப்பாள்! நேற்றிரவு படுத்த இடத்தை தேடி. லைட் வெளிச்சத்தினுாடக ரூபவாகினி நிகழ்ச்சியைத் தவற விடக்கூடாத எண்ணத்தில் பஸ் பிடிக்க ஒடும் நான்”
- (pல்லிகை,நவம்பர்-1982.Uக்-6-8) இக்காலப்பகுதியில் வெளிவந்த மல்லிகை இதழானது சோலைக்கிளி மேமன்கவி ஆகியோருக்கு மாத்திரமன்றி அப்துல்ஸமது, புண்யாமீன், அன்பு

Page 70
ஜவர்ஹர்ஷா, அன்பு முகைதீன், ஏ.கே.எம்.ஏ.ஹலாம் முதலான முஸ்லீம் கவிஞர்கள் பலருக்கும் களம் அமைத்து கொடுத்தது. சோலைக்கிளி, அன்பு முகைதீன் முதலான ஒருசிலரின் கவிதைகளைத் தவிர ஏனைய வரின் கவிதைகள் உணர்வுப் புலத்தில் இருந்து விலகி அழகியல் தன்மைக்கூடாக தான் வாழும் யதார்த்த வாழ்வைப் பார்க்கிறது. அலங்காரச் சொற்களை அடுக்கி அதனைக் கவிதையாக வேர்கொள்ளச் செய்யும் முயற்சியே இக்காலப்பகுதியில் மல்லிகையில் நடந்தேறியுள்ளது.
1980களுக்குப் பின் ஏற்பட்ட பெண்ணியச் சிந்தனைகளின் விளைவாக பெண் தொடர்பான விழிப்புணர்வுமிக்க கவிதைகளை ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் எழுதினர். ஆண்,பெண் உணர்வு சார்ந்த பார்வைகளை விமர்சனத்துக்குட்படுத்திய பெண்கள், பெண் விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணுழைப்பு, காதல், மனித நேயம் முதலானவற்றை பாடுபொருளாகக் கொண்டு கவிதைகளைப் பாடினர். இவ்வகையில் குறிப்பிடத்தக்க வர்களாக மசூறா ஏ.மஜித், பாத்திமா நஸிரா, சித்தி ஜெரீனா கரீம்,கலைமகள் ஹிதாயா, மீறாவோடை பாத்திமா முதலான பலரைக் கூறலாம். அத்துடன் இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலுள்ள வாழைச்சேனையிலிருந்து வெளிவந்த "மின்னல்" என்னும் சிறுசஞ்சிகை, பெண் கவிஞர்களை முக்கியத்துவப்படுத்தி நவீன கவிதைகள் சிலவற்றைப் பிரசுரித்தது.குறிப்பாக முஸ்லிம் பெண் கவிஞர்களின் ஆக்கங்களை முன்னிலைப்படுத்தி வெளி வந்த இவ்விதழில் மீறாவோடை ஆயிக்ஷா, பாத்திமா நளிரா, வெள்ளை மணல் சலீமா, சித்தி பெளசியா, எம்.எல்.எம்.அன்ஸா முதலானோர் எழுதினர். இவ்விதழில் வெளியான கவிதைகள் பெண்ணுணர்வு களையும் பெண்ணிய கருத்துருவாக்கச் சிந்தனையைப் பிரதிபலிப்ப தாக அமைந்தாலும்,பெரும்பாலான கவிதைகள் ஒற்றைத்தன்மையைக் கொண்ட தட்டையான கவிதை களாகவே காணப்படுகின்றன.
ஈழத்தில் 1986 இல் வெளிவந்த முதலாவது பெண் கவிதைத் தொகுப்பான சொல்லாத சேதிகளில் இடம்பெற்ற ஒரேயொரு முஸ்லிம் கவிஞர் மகறா ஏ.மஜித் ஆவார். பெண்ணிருப்பை உயிர்ப்போடும் உணர்வோடும் பதிவு செய்யும் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான மகறா முஸ்லிம் பெண்விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். காலம் காலமாக பெண்ணுக்கு இடப்பட்டிருக்கும் அடிமை விலங்கு அறுத்தெறியப்பட வேண்டும் என்பதை இவரின் "ப்ரிய சினேகா" மென்னுணர்வுத் தளத்தில் பதிவு செய்கிறது.
". யாரோ திறந்த பாதையில்
என்னை நடை பழக்க
நினைக்கிறார்கள்
என்னால்தான்
ஆமாம் போட
முடியவில்லையே. இழுத்துப்போனால்
 

நானென்ன செய்வது
ବTଜdit
கால்களைக் கட்டிவிட்டாய்
அவிழ்த்து விட்டாலாவது
கால் போன போக்கில்
நடந்தாலும் திரிந்திருப்பேன்
பாதையில் அழைத்துச் செல் அன்றேல்
அவிழ்த்து விடேன்"
-(சொல்லாத சேதிகள்.பக்-52)
சமூகத்திலுள்ள போலிவேடதாரிகளின் முகத்திரைகளைக் கிழிக்கும் ஆற்றல் பேனாவுக்குண்டு. பேனாமுனை கொண்டு எதனையும் தாக்கலாம், தகர்கலாம். முடையுண்டுபோன எவ்வுணர்வையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்ட பேனா எதனையும் சாதிக்கும்.
காணாமல் போன
யதார்த்தங்களை
காணத்தேடுங்கள்
அவை - எம்
பேனாவுக்குள்ளிருக்கும்.
ஒளித்துக்கொண்ட
நிஜங்களை கூப்பிடுங்கள்
எங்கள்
பேணாமுனைக்குள்ளிருந்து
பதில் கிடைக்கும்
பேனாவைத்
துாணாய் நிறுத்தும்
வேள்வியிலிருக்கும் எங்களை
மறவாதீர்கள்
உங்கள் வேகூyங்களை உரிய
நடுச்சந்திக்கே
இழுப்போம்
- (தினகரன்.1986.8.5.0க் 5)
மகசூறா ஏ.மஜித்தினால் எழுதப்பட்ட "எச்சரிக்கை" என்னும் இக்கவிதை "பெண்ணிருப்பை" அடியுண்டு, புதைந்து போயிருக்கும் ஆழ்மனஉணர்வை பேனா என்ற குறியீட்டுக் கூடாக வெளிப்படுத்திநிற்கிறது.
உஸானார் ஸ்லீமை ஆசிரியராகக் கொண்டு இலக்கம் 42 மீரா நகர் நிந்தவுரில் இருந்து "புன்னகை" என்னும் ரோணியோ இதழ் 1986 மார்ச்சில் வெளிவந்தது.12 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்த இவ்விதழில் றம்ஸான் மன்கர், கிண்ணியா றமிலா, பாத்திமா மரிக்கார், கலையருவி பசீல் ஏ.மஜீத் நிஹாறா கபூர்,சுஸானா ஜீனைட், சீனன் கோட்டை மில்ஹர் முஸாம்மில், பைஸால் எம்.அஸ்ரப், பானுஹசன்றபீக், ஏ.எச்.என்.எஸ்.ஜீனையா, ஒலுவில்அமுதன் முதலானோர் புதுக் கவிதைகளை எழுதினர்.இத் தொகுப் பில் வெளியான பெரும்பாலான கவிதைகள் துாலத்தன்மை கொண்ட அழகியல் கவிதைகளாகவே காணப்பட்டன.
1985 இல் சாய்ந்தமருது புதுயுக கலை
H இதழ் 50

Page 71
இலக்கிய வட்டத்தால் "புதுயுகம்" என்னும் சஞ்சிை கொண்டு வரப் பட்டது.கவிதைக் காக வெளிவந் இச்சஞ்சிகையும் முழு அளவில் முஸ்லிம் கவிஞர்களையே பிரதிநிதித்துவப் படுத்தியது. ரஹ்மட் மன்கர் என்பவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இச்சஞ்சிகையி: கலையுள்ளம் ரம்ஸான் மன்கர், எஸ்ஸெல்லாம் இப்ற முகமட் நகீபு, திக்குவல்லை ஸ்வ்ப்வான், ஏ.ஏறஹறிப் எம்.எச்.எம். ஹஃமந், ஏ.எம்.நளtர் முதலானோர் எழுதினர்.
தமிழ்க் கவிதையுலகம் புத்துணர்ச்சியுடன் செழிக்கத் தொடங்கிய 1980களில் ஈழத்துக் கிழக் மாகாண முஸ்லீம்களின் கவித்துவ ஆளுமைகளை அறி "மின்னல்", "புன்னகை", "புதுயுகம்" ஆகிய இதழ்களுட உதவுகின்றன என்றால் அதுமிகையில்லை.
யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு வெள வந்த சஞ்சிகைகளில் முஸ்லிம் இலக்கிய கர்த்தாக் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த சஞ்சிகை "மருதாணி ஆகம். இலக்கிய காலாண் டிதழாக வெளிவந்: மருதாணியில் இடம்பெற்ற "கவிதைக் கூடம்" வளாந்து வரும் இளைய தலைமுறைக் கவிஞர்களுக்கு களப அமைத்துக் கொடுத்தது. எம்.எச்.இக் பால் கான் ஆர்.எம்.நெளசாத், ஏ.கே.மெஹருன் நிஹர்,ஹிதாய மஜீட்(தடாகம் ஆசிரியர்).அன்பிதயன் சிராஜ், மருதுா றிஸ்மி மஜீட்றலீனா கூஜாஹிப், ஏ.யூ.எம்.கரீம், சம்சுை நிஷா, நிதானிதாசன், யாழ் ஜொஸி அக்பர், கலைத் தாமரை பரீதா முதலான பலர் மருதாணி சஞ்சிகைக்கு ஊடாக அறியப்பட்டவர்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்டவர்களான இப்னு அளிமத் முதலானோரும் இச்சஞ்சிகைக்கூடாகப் பிரகாசித்தார்கள்.
தாகம் கலை இலக்கிய புரட்சிகர முற்போக்கு இதழ் அறிமுகப்படுத்திய புதுயுகக் கவிஞர்களுள் இப்னு அஸிமத் குறிப்பிட்டுக்கூறத்தக்கவர். மொழிபெயர்ட் பாளராகவும் கவிஞராகவும் விளங்கிய இவர் தாகம் தாயகம், மருதாணி, மல்லிகை, தினகரன் முதலான சஞ்சிகைகளுக்கூடாகவும் அறியப்பட்டவர்.இனங்களின் ஒற்றுமைக்கு பாலமாக இருந்த இப்னு அளிலிமத் அதனைச் கவிதைக்கூடாகவும் சாத்தியமாக்கினார்.
"அரசடிப் பிள்ளையார்த் தெருவில்
அனுதாப விதைகளை
தொலைத்துவிட்டு
அழுததாக நீசொல்லும் வேளை
நான்
மத்துமலத் தெருவில் ஒரு
பன்சாலையில்இருந்தேன் கையில்
கண்ணதாசனின்
அர்த்தமுள்ள இந்துமதம்
சீதைக்கும் கூடிாஜகானுக்கும்
என்ன உறவு என்பார்கள்
எங்களைப் பற்றி
தெரியாத ஜென்மங்கள்
தேவீ
ஜீவநதி

前
அரளிய மரத்தடிகளில் நின்றாலும்
நான்
மல்லிகைப் பூக்களையே அதிகம்
விரும்புகிறேன்"
-(மருதாணிபக்-16-17 சித்திரை,வைகாசிஆனி-1986)
சீனா ஹவுஸ் யோனா புரவில் இருந்து திக்குவல்லை ஸப்வானால் கொண்டு வரப்பட்ட "கவி மஞ்சரி” கவித்துவமுடைய கவிதைகள் சிலவற்றைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டது. நற்பிட்டிமுனை பளில், மருதுர் ஜமால்தீன்,சித்திஐெரீனாகரீம் அன்பிதயன் சிராஜ் , வெலிப் பண  ைண பரீதா, ஏ.ரகுமான் முதலானோரின் கவிதைகளைத் தாங்கி இச்சஞ்சிகை வெளிவந்தது.
கொழும்பு ஒடக்கரை வீதியில் இருந்து வெளிவரும் 'தினகரன்" பத்திரிகை இக்காலப்பகுதியில் எம்.எச்.எம்.ஷம்ஸ், ஆ.மு.ஷரிப்புத்தீன், அன்பு முகைதீன், பஸில் காரியப்பர், மேமன்கவி, அல்-அஸிமத் முதலான மூத்த தலைமுறை முஸ்லீம் கவிஞர்களை உள்வாங்கிக் கொண்டதைப் போல் றிஸ்வியூ முகமத் நபீல்,மாகோ ஷா.மஜீத் சம்சுதீன் எஸ்.சிராஜ்த்தீன்,நிந்தவுர் உஸனார் ஸ்லீம், எம்.ஐ.எம்.அன்வர். இறக் காமம் பக்கீர், மு.ஹ.ஷெய்கு இஸ்லீத்தீன், டி.எம்.சுபைர்கான், மு.பஷர், வெலிமடை ராபிக், ஓட்டமாவடி நிஷமுகமட்கமருண்ணி ஸா, எம்.நஜீபுல்லாஜ், ஸசிபியா நஜீமுதீன், மகறா மஜீத். ரீ. எல் ஜவ்பர் கான் , ஓட்டமாவடி இஸ் மாயரில் , எஸ்.எச்.எம்.ரபீக், சஹிரா ரஜீடின், எம்.இஸட் ஷஜகான், கலைமகள் ஹிதாயா, ஸெய்னுல் ஏ.நியாஸ்,இப்னு அகமத், போன்றோர் இவ்வகையில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பரால் தினகரன் வார மஞ்சரியில் தொகுத்து அளிக்கப்பட்ட கவிதைச்சோலை காத்திரமான முஸ்லிம் கவிஞர்களை ஈழத்து இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது. மருதூரன், மருதூர் றிஸ்மி மஜீத், மிஸ்ரியா ஏ.மஜீட் பம்பலப்பிட்டி அஸ்வர், ஷர்மிளா மருதுார் ஏ.ஹசன், முர்கூஜிதீன், தலவின்ன நவ்வீர், ஒட்டமாவடி ஜமால்.கே.எம் பெளஸ், ஷரீன் எம்.பாரூக், கேமுகமட் ஜமீல், எஸ்.எம்.எம்.அஜ்வாத், வாழைச்சேனை அமர், முதலான பலர் கவிதைச்சோலை ஊடாக அறியபட்டவர்கள்.
தினகரன் பத்திரிகையில் 1980களின் நடுப் பகுதியில் எஸ்.அருளானந்தத்தினால் தயாரித்து அளிக்கப்பட்ட "இதய கோலங்கள்” ஈழத்தில் நவீன கவிதை இலக்கிய முன்னோடிகள் சிலரை அறிமுகம் செய்தது. ஏ.யூ.எம்.கரீம், கலீலா, பாத்திமாநஸிரா வி.எம்.நஜிமுதீன், கவிநேசன் நவாஸ், ஓட்டமாவடி இஸ்மாயில், உஸ் மாட் மரிக் கார் முதலானோர் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள்.
1986களில் தினகரன் வாரமஞ்சரியில் "நடைப்பா" ஊடாக தமிழ், முஸ்லிம் இலக்கிய கர்த்தாக் களை அறிமுகப்படுத்தியவர் அல்அளிமத்தொடர்
இதழ் 50

Page 72
கவிதை நவீனமாக வெளிவந்த இத்தொடரில் கனல் வாரிதி காலிப், ராணி கதம்பவனம், நச்சியார் மைந்தன், விண்மீன் ஹீசைனார், கலைக்கண்காமில், மழலைச்சொல் இளங் கண்ணன், விஸ்வ கலாநாயர், தெற்கெல்லை ஜமான், இப்னு அசமந்தம், ஐயன் அச்சுதன், பாமணி முழுமதி, பாவுர்ப் பசுங்கனிகுண்டூர் குண்டலக்கிழார் முதலான பல, இலக்கிய ஆளுமைகள் அல்-அஸிமத்தால் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர் கலைஞரை அறிமுகப் படுத்தும் அழகே தனி
"சிறுகதைகள்,கட்டுரைகள்,சிறு நடைகொள் திறனாய் வெண்பலவாய் தீட்டி சிறந்தாலும் அன்னார் கவிதையிற்றான் ஆழக்கால் ஊன்றினராம்."
- (தினகரன் - O2.03.1986) சவ்வாது மரைக்கார் சிறுகதைகள், கட்டுரைகள், திறனாய்வு முதலான துறைகளுக்குள் கவிதையில் சிறந்து விளங்கியமையை எளிமையாகவும் இயல்பாகவும் எடுத்துரைக்கிறார்.
தினகரன் முஸ்லிம் கவிஞர்கள் பலரை அறிமுகம் செய்தாலும் அவர்களால் எழுதப்பட்ட கவிதைகளுள் தேறுபவை மிகச் சிலவே, அநுபவத்தளத்திலிருந்து விலகி அழகியல் தன்மைக்குள் முகம் கொள்ளும் இக்கவிதைகள் வெற்றுக் கோசங் களாகவும் வார்த்தை ஜாலங்களாகவும் இயங்குகின்றன.
1980களில் சிந்தனைகளையும் உணர்வு களையும் பரிமாறும் வகையில் கலாபூர்வமான முற்போக்கு கவிதைகளை எழுதிய எம்.ஏ.நுஃமான், சமூக அரசியல் பின்னணியில் தன்வாழ்வியல் அநுபவங் களைக் கவிதையாக்கியவர். எழுபதுகளின் நடுப்பகுதி யிலிருந்து ஏற்பட்ட அரச இராணுவ ஒடுக்குமுறை எண்பதுகளில் இனப்பிரிவினைவாதமாக மாறியபோது எதிர்ப்பின் குரலாக, தமிழ்முஸ்லிம் இனத்தின் ஐக்கியத்தின் குரலாக எம்.ஏ.நுஃமானின் குரல் ஒலித்தது. 01.06.1981 அன்று தென்னாசியாவில் சிறந்த நூல்நிலையங்களில் ஒன்றான யாழ்நூல்நிலையம் எரிக்கப்பட்ட போது நுஃமானால் எழுதப்பட்ட "புத்தரின் படுகொலை" மிகச்சிறந்த ஈழத்துக் கவிதைகளில் ஒன்றாகும்.
"நேற்று என் கனவில் புத்தபெருமான் சுடப்பட்டிறந்தார் சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது. சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். தொண்ணுறாயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடிமறைத்தனர். சிகலோகவாதச் சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர்.
ஜீவநதி 68
 
 

புத்தரின் சடலம் அஸ்தியானது தம்ம பதமும்தான் சாம்பரானது"
- (Dழை நாட்கள் வரும் -Uக்.79-80) இக்காலப்பகுதியில் காத்திரமான கருத்துச் செறிவுமிகுந்த கவிதைகளைத் தந்த சஞ்சிகைகளில் ஒன்று "திசை"யாகும். நிகழ்கால சூழ்நிலைக்கமைய நடைமுறை வாழ்வியலை இயல்புறக்காட்டி ஆழமான கவிதைகள் பலவற்றைத் திசை தந்தது.நற்ப்பிட்டிமுனை பளில்,எஸ்எச்.எம்.ரபீக், அல்-அஸிமத் திசை இளவட்டம் பகுதிக்கூடாக அறிமுகமான மு.மு.முபாசீல், ஏ.ஸி.சறுாக், ஜெஸ்மின் அன்ஸார், வெலிமடை ஜாங்கீர் முதலானோர் இவ்வகையில் குறிப்பிட்டுக் கூறத்தக்கவர்கள்,
இன அரசியலால் துண்டாடப்பட்ட இரு சமூகங்களின் துயருறு நிலையை எஸ்.எச்.எம். ரபீக் மிக
நுண்மையாகப் பதிவு செய்கிறார்.வானம்பாடிக் கவிதை களின் சாயலை இக்கவிதை கொண்டிருந்தாலும் ஈழத்துக்கே இயைபான தனித்துவமான மனநிலைக் - கூடாகவே இக்கவிதை தன்னை முன்னிலைப்படுத்துகிறது.
"அங்கங்களுக்கிடையே அடிதடிச் சண்டை நிகழ எங்களுக்கு நாங்களே எதிரிகளாக்கப்பட்டோம் நம் தாய்மண்தீப்பிடித்துச் சாம்பலாச்சி ஒற்றுமைச்சங்கிலிகள் அறுக்கப்பட்டதால் கற்ப்பிழந்தவர்களாய் கதறுகிறோம்" - (ஒரு மனிதனின் பிரகடனம் - திசை 20.10.1989.0க்o7) நாவுகள் கட்டப்பட்டு துப்பாக்கிகள் முனைப்பு பெற்ற எண்பதுகளின் பிற்பகுதியில்அச்சுறுத்தலுக்குள் ஒடுங்கி வாழும் மக்களின் அவல வாழ்வை நற்பிட்டி முனை பளிலின் "அறிந்த சுருக்கம்" உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது.
"எம்மைச்சூழ தடியுடன் பலபேர் நான் சாகப் பயந்தேன். நண்பர்களும் சாகப்பயந்தார்கள். அயலவர்களும் சாகப்பயந்த சந்தர்ப்பங்களில்" ஒழிந்து கொண்டார்கள். இப்போது சாகப்பயந்த அனைவருமே ஒவ்வொருவராகச் செத்துக்கொண்டிருக்கிறோம்"
- (திசை-27.10.1989.0க்-1.) அப்துஸ்ஸமது ஆலிம் புலவரின் பேரப்பிள்ளை
ம
களில் ஒருவரான ஓட்டமாவடி அஸ்ரஃப் சிஹாப்தீன் எழுபதுகளின் இறுதியில் உருவான புதுக்கவிதை யாளர்களுள் ஒருவர்.1976 இல் "ஜூம்ஆ' என்ற பத்திரிகையில் புதுக்கவிதையுடாக எழுத்துலகிற்கு பிரவேசித்த இவர் தினபதி கவிதா மண்டலத்துக்கூடாக நன்கறியப்பட்டவர்.உணர்வின் நுண்ணுணர்வில் கட்டுறும்
இதழ் 50

Page 73
கவிதைகளைப்பாடிய சிஹாப்தீன் ஓட்டமாவடிஅஸ்ர என்னும் பெயருக்கூடாகவும் அறியப்பட்டவர்.
முஸ்லிம் எல்லைக்கிராமங்களில் மக்களுக் எதிராக ஆட்கடத்தல்கள்,வழிப்பறி எனத் தமிழ்ச்சிங்க விரோத சக்திகளால் வன்முறைகள் கட்டவிழ்த்து விட பட்ட போது வாழ்வின் இழப்பின் ஒலத்தையும் இரு பின்மையின் கையறுநிலையையும் துயருறு சொற்களு கூடாகக் காட்சிப் படுத்தியவருள் முக்கியமானவர் முதன்மையானவர் அஸ்ரஃப் சிஹாப்தீன், இந்நித்தி வேதனையின் அநுபவப் பகிர்வே "ஸெய்துான்" கலவரா களின்போது காணாமல் போன சகோதரிகளின் நினைவா எழுதப்பட்ட இக் கவிதை இழப்பின் கொடுமைை வேதனையின் வடுவை புறக்காட்சிப் படிமங்களுக்கூடா எடுத்துரைக்கிறார்.
சற்றுத்தாண்ட
சேலை இருந்தது
மேல் சட்டை இருந்தது
இரத்தம் இருந்தது
ஸெய்துான் இருக்க வில்லை”
அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றாய் இருந் இரு இனங்களுக்கிடையே இழையோடியிருந்த அன்பு உறவும் சிதைக்கப்பட்டு துண்டாடப்பட்டதை "நெருடுL நினைவுகள்" உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது இனம்,மத உணர்வுகளைக் கடந்து மனிதனை மனிதன் நேசிப்பதையும் ஆரோக்கியமான உறவு அழிவுக குள்ளாக்கப்பட்ட தருணத்தில் தனிமனித மனதில் ஏற்பட்ட மாறுதல்களையும் இக் கவிதை உணர்வுபூர்வமாகக் சித்திரிக்கிறது.
முஸ்லிம் சமூகம் குறித்தான விழிப்புணர்வை பேசும் அஷ்ரப் சிஹப்தீன் கவிதைகள் தமிழ்ச் சிங்களத் தேசியம் குறித்தான அதிருப்தியையும் அவர்களால் இழைக்கப்பட்ட அநீதியையும் வெளிப்படையாகப் பேசுகின்றன. சேரன் கூறுவதைப் போல "இன்றைய தமிழ் - முஸ்லிம் இனத்துவ உறவுச் சூழலில் பாதிக்கப்பட்டவர் களின் தாக்கமிக்க குரலாக அஷ்ரபின் கவிதைகள் இருக்கின்றன".
கல் குடாவில் இருந்து வெளிவந்த முதல் அச்சிதழான "மின்னல்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக அறியப்பட்ட வாழைச்சேனை அமர், 1985 இல் "விடுதலை நிகழ்வுகள்" என்னும் கவிதைத் தொகுப்பினூடாகப் பரவலாகப் பேசப்பட்டவர். வன்செயல்களாலும்,அதிகாரத் துஸ்பிரயோகங்களாலும் கிழக்கு மாகாணம் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட வேளையில் அதற்கான தார்மீகக் குரலாக ஒலித்தது வாழைச்சேனை அமரின் கவிதைகளாகும் ஸதக்கா கூறுவது போல தனது மனரணங்களை துயரங் களை, இழப்புக்களை, இடம்பெயர்வுகளை இழந்து போகாத நம்பிக்கைகளை கவிதைகளாகப் படைத்தவர் சமூகத்தில் போலி முகத்திரைகளுடன் அலையும் வெளிவேஷக்காரர்களை இவருடைய கவிதைகள்
ஜீவநதி
 
 
 

பகிரங்கமாகவே கண்டித்தன. "அன்று வெள்ளி பள்ளியில் சனப்புள்ளிகள் ஐவேளைக்கு ஆண்டவனை நினைக்காதவர்கள் அந்த வெள்ளியில் மாத்திரம் அழுது வடித்து ஆண்டவனுக்குப் பயப்பட ஆசைப்படுகிறார்கள். கொம்பியூட்டர் மனிதர்கள் தொழுகை முடிந்தவுடன் விரைந்து வெளியேறினர் அவர்களில் பழைய செருப்புடன் பள்ளிக்கு வந்தவர்கள் புதிய செருப்புடன் புதிய செருப்புடன் வந்தவர்கள் Լ1607լքա5յLOrTՅ: சிலரோ செருப்பில்லாமலே ஃதோற்றுப் போயினர்"
(தினகரன்.25.07.1986.Uக்-6) எண்பதுகளில் மண்ணில் வேர் கொண்ட போராட்டம் இளைய தலைமுறையினரைப் பாதித்தது. இதன் பாதிப்பு உணர்வும், உக்கிரமும் நிறைந்த உயிர்த் துடிப்பு மிக்க கவிதைகளை ஈழத்துக்கு அளித்தது. அவ்வகையில் ஒட்டமாவடியில் ஹமீட் ஆசிரியரின் தலைமையில் உருவான கலைக்குயில் கலாமன்றம் ஏராளமான கலைஞர் களை உருவாக்கியது. இப்பண்ணையிலிருந்து எழுந்த உணர்ச்சிக் கவிஞர் களுள் ஒருவரே ஏ.ஜி.எம் ஸதக்கா, மக்களின் கண்ணிரை, கவலையை, கஷ்டத்தை, உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை கவிதைகளாக வடித்தவர்களுள் ஸதக்காவும் ஒருவர். மென்னுணர்வுத் தளத்தில் இயங்கும் இவர் கவிதைகள் வன்கொடுமைக்குள் சிக்கி உழலும் மனித வாழ்வைப் பேசுபவை. இவரின் "இமைக்குள் ஒரு இதயம்" என்னும் தொகுப்பே கல்குடாத் தொகுதியிலிருந்து வெளிவந்த முதல் தொகுப்பாகும். சமூகமாண்பும் மனித நேயமுமிக்க கவிதைகளை இத்தொகுப்பில் காணலாம்.
ஈழத்துத் தமிழ்க் கவிதை இலக்கியப் புலத்தில் இடதுசாரிச்சிந்தனைகள் மேலோங்கிய காலப்பகுதியில் எளிமையான முறையில் இனிய ஓசைநயமிக்க தமிழ்க் கவிதைகளைத் தந்தவர்களில் இன்றும் பேசப்படுபவர் ஆசுகவி அன்புடீன், 1981 ஆம் ஆண்டு சம்மாந்துறை மக்கள் கலை வட்டத்தினரால் அம்பாறை மாவட்டக் கவிஞர் களுக்கு இ ைடயரில் நடைபெற் ற மேதினப்போட்டியில் "ஏழைத்தாயின் வீரத் தாலட்டு" என்னும் கவிதை மூலம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அன்புடீன் 1982பெப்ரவரி 12 ஆம் திகதி கல்முனைமாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவுத்தின
இதழ் 50

Page 74
விழா கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றார்.1988 காலப்பகுதியில் வெளிவந்த இவருடைய "முகங்கள்" என்னும் கவிதைத் தொகுதி தளிருடலை நெளியாதே" முதற் கொண்டு "புலரும் ஒரு புதுப்பொழுது" ஈறாக 31 கவிதைகளை கொண்டுள்ளது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், வர்க்க முரண்பாடுகள், சுரண்டல்களைப் பல கோணங்களில் தரிசிக்கும் இத்தொகுப்பு முஸ்லிம் சமூக வாழ்வியலுக் கூடாகவே அன்றாட வாழ்வாதாரப் நடைமுறைப் பிரச்சினைகளை ஆராய்கிறது.
"முப்பது நாட்கள்
நோன்பு நோற்பவர்
வாழும் பூமியில்
முன்னுாறு நாட்கள்
நோன்பாய் இருப்பவர்
வாழுதல் சரியா?"
(முகங்கள் -Uக்.50)
1970களில் முனைப்புபெற்ற பொது உடமைச் சிந்தனை "முகங்கள்" தொகுப் பில் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்யப்படுகிறது.1980களில் இன அரசியலும் ஆயுதக் கலாசாரமும் கூர்மையடைந்த நிலையில் அன்புடீனின் கவிதைகள் வன்முறைகெதிராகக் கிளர்ந்தெழுந்தது. "நிறுத்துங்கள் நரபலியை முதலில்" என்னும் கவிதை இத்தளத்திலே இயங்குகிறது. இலட்சிய நோக்கும் சமூகப் பார்வையும் கொண்ட மனித நேயமிக்க கவிஞராகவும் தன்னை தமிழ் இலக்கியத்தில் முகம் பதித்துக் கொள்கிறார் அன்புடீன்,
1969இல் "தியாகச்சுடர்" என்னும் இமாம் ஹைேசன்(ரலி) அவர்களின் சோக வரலாற்றுக் கூடாக அறியப்பட்ட கவிஞர் கல்ஹின்னை எம்.எச்.எம். ஹலீம்தீன், மனித வரலாற்றின் துன்பியல் நிகழ்வுகளை "காலத்தின் கோலங்கள்" என்னும் தொகுப்பின் ஊடாக வெளிப் படுத்தியவர். "கல்லூட்டுக் கவிராயர்" என்ற புனைபெயரில் இவரெழுதிய கவிதைகள் தனிமனித சீர்திருத்தத்தை வலியுறுத்துவதாக அமைகின்றன. பொதுவுடமை சமுதாயத்தின் மீது நம்பிக்கையும் அதனை வரவேற்பதில் அக்கறையும் கொண்ட எம்.எச்.எம். ஹலீம் தீன் தொழிலாளியை எய்துப் பிழைக்கும் முதலாளியை "நாங்கள் தான் உயர்ந்தவர்கள்" என்னும் கவிதையின் ஊடாகச் சாடுகிறார்.
"எங்களின் வியர்வைத்துளி ஒவ்வொன்றும்
ஈடில்லாமுத்தாகும் தெளிவீர்கள்
தங்கக் கிண்ணத்தில் நீங்கள்
தேனமிர்தம் அருந்தி மகிழ்ந்தாலும்
எங்களின் வியர்வை முத்துக்களே
இவைகளுக்கெல்லாம் காரணியாம்
உங்களுக்கும் இவ்வுண்மை புரிந்திடுமோ
உயர்சாதி யல்லவோ நீங்கள்"
(காலத்தின் கோலங்கள்.Uக்-69)
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் வர்க்க
வேறுபாடுகள் கூர்மைப்பட்டு வரும் நிலையில் மக்களின்
ஜீவநதி
 

அன்றாட வாழ்வியற் துன்பங்களை இக்கால முஸ்லிம் கவிஞர்கள் கவிதைகளாக வடித்தனர். சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட இக்கவிதைகள் சுரண் டலுக்கும் ஆதிக்க ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானவை.
வறுமையின் துயர் மனித உணர்வைக் கொல்லும்,மனதின் ஒரு மூலையில் பூக்கும் காதலை கருவோடு அழிக்கும்,ஏழ்மையின் இருளோடு கலக்கும் மனித வாழ்வை கமருண்ணிஸாவின் "அணைந்த விளக்கு" கண்முன் நிறத்துகிறது.
"உன் நீங்கா நினைவின் - சின்னமாக
பேனாவைக் கையில் எடுத்தேன்
கவிதை ஒன்று வடித்து வைக்க.
சிந்தனை விண்ணிலே வட்டமிட
தன்னை மறந்திருந்தேன்
குப்பி இலாம்பும் வண்டும் மோத
தோல்வி கண்ட இலாம்பு
அணைந்து விட்டது."
(தினகரன்o7,051986.0க்-4)
வாழ்வின் அஸ்தமனத்தை இலாம்பென்னும் குறியீடு இக்கவிதையில் துல்லியமாக வெளிப்படுகிறது.
பொருளின்றி, பணமின்றி, வரனின்றி வாடும் முதிர் கன்னியரின் துயரவாழ்வினை கண்ணிர் இழை யோட இக்காலத்தில் எழுந்த ஈழத்து முஸ்லிம் கவிதைகள் வெளிப் படுத்தி நிற்கின்றன. வரதட்சணைக் கொடுமை யால் திருமணவயதைக் கடந்தும் மணமாகாது முதிர் கன்னியராய் நிற்கின்ற, முஸ்லிம் பெண்களின் அவல வாழ்வை இபுனு அகமத்தின் "தினஒளி"உணர்வின் வெளிப்பாடாய் முகம் காட்டுகிறது.
"அன்று -
நேற்றோடு சென்று விட்டது
கனத்த இருள்
முக்காடிட்டு ஒரு புறமாய்
முழங்காலில்
முகம் புதைத்து
எங்கள் - வயது வந்த
வறுமையின் புதல்விகள்
காத்திருக்கிறார்கள்
காலம் வர
அன்று
ந்ேறோடு சென்று விட்டது ஃ
கனத்த இருள்.
எப்போதும்."
(தினகரன். 1986.Uங்குனி09.Uக்-02)
வரதட்சணைக் கொடுமையை அங்கதமாகச் சாடுகிறது தலவின்னை சிபாரின் கவிதை,
"நாம்
பெண் பார்க்க வந்து
பேச்சு வார்த்தைஅபூரம்பித்தபோது
இதழ் 50
>
లో

Page 75
எனதம்மா
இருபத்தைந்து பவுண்
நகை என்றாள்
இல்லை
இருபது
பவுண்தான்
என்று
அடித்துச்சொன்னார்
(LDL-624.
ஐந்து பவுண்களினால்
அன்பே
உன்னை நான்
இழந்துதவிக்கின்றேன்."
(தினகரன் 18.05.1986.Uக்-O)
மருதமுனை ஹசனின் "ஒரு நடுநிசியும் சப்பாணி நிகழ்வுகளும்" முதிர் கன்னியரின் வாழ்வை மாத்திரம் சித்திரியாது வறுமையின் நிமித்தம் புலம் பெயர்ந்து வெளிநாடு சென்று வரும் முஸ்லிம் வனிதையரின் அவல வாழ்வினையும் அவ்வாழ்வின் மூலம் அவர்கள் படுகின்ற துயரங்களையும் எடுத்துரைக்கிறது.
"களனி விளையுமென்று
கல்யாணப்பந்தலிட்டார்
உழவர் அறக்கொத்தி வந்ததென்று
ஆண்டவனை நொந்தழுதார்
அவர்கள்
வரனை வேண்டி நின்ற
வனிதையரின் சேல் விழிகள்
தலையணையில்
மழை பொழியும்
ԼյՈ6)յւb
நேற்றுத்தான் பூத்திருந்த
பூவரசம் பூவொன்று
சிணுங்கிச் சிணுங்கி
கடல் கடந்து போகிறது
முறிந்து விட்ட வாழ்க்கைக்கு
நொந்துழைக்கப்பார்க்கிறது
அங்கு மஞ்சள் நிறம் வெளிறும்
சேக்குகளின் மெல்லனையில்
இளைய இதழ் உதிரும்
தொட்டிலிலே கண் மலர்ந்த
தங்க மகள் விழி மலர
தூர ஒரு குண்டொலிக்கும்
தாலாட்டாய் இதுகேட்கும்"
(pல்லிகை1987.Uெப்ரவரி மார்ச்.பக்-47)
குடும்பத்துக்காக வாழ்வு சிதைக்கப்பட்டு, ஏதிலிகளாகும் அப் பாவி முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் அநுபவங்களின் வலியாக இங்கு உருப் பெறுகிறது.
1980 களுக்குப் பின்னரான ஈழத்து முஸ்லிம் தமிழ்க் கவிதைகள் அவர்களுடைய அன்றாட நடைமுறை
ஜீவநதி
 

வாழ்வியலை அதன் இயல்புநிலை கெடாது உயிரோட்ட மாகக் காட்சிப்படுத்துகின்றது. தனக்குரிய தனித்துவமான பண்புகளை கொண்டுள்ள இக்கவிதைகள், அக்காலத் துக்கேயுரிய தமிழ்க்கவிதைகளின் பொதுப் பண்புகளைக் கொண்டிருந்தாலும் முஸ்லிங்களுக்கே உரித்தான பிரதேச பண்பாட்டையும் வட்டார கிளை மொழிகளையும் நவீன சொல்லுத்திகளையும் கொண்டு இயங்குகின்றன. வரலாற்று பண்பாட்டு கருவூலங்களாக விளங்கும் ஈழத்து முஸ்லிம் கவிதைகளின் கருத்துருவம், அதன் இயங்கு மொழி, அம்மொழிக்குள் ஒளிரும் அமைவுகள் முதலான இன்னபிற கூறுகள் தமிழிலக்கியப் பரப்பில் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய நிலையுள்ளது. இனிவரும் காலங்களில் இம்முயற்சிகள் தொடரப்படும் போது ஈழத்து இலக்கிய உலகு செழுமை பெறும்.
சிதறல்
கனவுகள் சிதைக்கப்பட்ட அந்த நாட்கள் மீண்டும் வெறுமை உணர்த்தும்
துயின்ற போதிலும் கண்களுக்குள் பதுங்கிய கனவுகள் ஆழ்கடல் மனப் பதிவுகளாய் உயிரோடு ஒன்றும் வேளையில் மாற்றாரால் பறிக்கப்படும் பல தடவைகளில்.
தூரத்தே தெரியும் எட்டாத வெளி ஒன்றுக்கு நத்தையாய் நகர்ந்து ஸ்பரிசம் அறிந்த வேளை எதிர் பாராத புயல் எடுத்தெறியும் காலத்தில்.
மாலைகளுக்காக ஏங்கவில்லை ஓரிதழாவாது காலிற்பட்ட வலி தீர்க்குமென்று தேடிய போது மரங்கள் வன்னிக்காடுகளாய் மாறிவிட்ட நேரங்களில்.
நீயும் நானும் நீண்ட ஆயுள் இணைந்திருப்போம் என்று நிலவின் மேல் ஆணையிட்டு அமாவாசை இரவொன்றில் ஆள்மாறாட்டம் நிகழ்த்திய கோரக்கணங்களில்.
கனவுகள் சிதைக்கப்பட்ட அந்த நாட்கள் மீண்டும் மீண்டும் வெறுமை உணர்த்தும்.
- நெடுந்தீவு செந்தூர்
இதழ் 50

Page 76
ଜୋ ற்றோரை எதிர்த்துவிட்டுத் திருமணம் புரிகின்ற ஒருத்தியின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு நானே ஒரு உதாரணமாகப் போனேன். ஆரம்ப காலங்களில் அப்படி ஒன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. அவர் கூலிவேலை செய்து கொண்டு வருகின்ற பணத்தில் குடும்ப வண்டி சுமாராக ஓடிக் கொண்டிருந்தது. குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என்று பிறந்த போது தான் விழி பிதுங்கத் தொடங்கிற்று. ஆனால், என்ன கஷ்டம் வந்தாலும் என் சொந்த வீட்டுக்குத் திரும்புவதில்லை என்ற வைராக்கியத்தோடு இருந்ததால் எப்படியோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டேன்.
பொதுவாக உணவுப்பஞ்சம் என்று எப்போதும், எதுவும் எனக்கு ஏற்பட்டதில்லை. அவர் ஹோட்டலில் சமையல் கூலி வேலையில் சம்பாதிக்கும் பணத்தோடு அன்றாடம் கைநிறைய ஏதாவது தின்பண்டம் கொண்டு வருவார். பிள்ளைகள் பாடு சரியாகிவிடும். அத்தோடு அவரது குடும்பத்தினர் என்னோடு ரொம்பவும் அனுசரணையாகப் பழகினார்கள். நல்ல குடும்பத்திலே வாழ்ந்த பெண் இப்படி கூலிவேலைக்காரனைக் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் புரிந்து வந்திருக்கிறது என்ற பிரமிப்பு, தனது பெற்றோரிடம் எதற்காகவுமே மீண்டும் செல்வதில்லை என்ற பிடிவாத உணர்வு குறித்து அவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பு, தங்களை நம்பி வந்த பெண்ணைத் தம் மால் இயன்றவரை மனம் நோகாது கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற அன்பு . இவை காரணமாக வேளாவேளைக்கு அவர்கள் பொங்கும் அன்னத்தில் ஒரு துளியாவது இந்த ஏழையின் சிறு குடிசைக்கும் வந்து கொண்டிருந்தது.
தனது தாயின் காணியில் அவரது நான்கு பிள்ளைகளும் சம அளவு பிரித்து தமக்கென சின்னச்சின்ன வீடுகளைக் கட்டியிருந்தார்கள். இல்லை யில்லை.தமது குடிசைகளை அமைத்திருந்தார்கள். இவற்றுள் ஒரு குடிசைதான் என்னுடையது. அதாவது என் கணவருக்குரியது. சமயங்களில் எந்த தலைவிதி என்னை இழுத்து வந்து இங்கே சேர்த்ததோ என்ற கவலை தோன்றும், எனது வீட்டு முற்றத்தில் நின்று ஏனைய மூன்று குடிசைகளையும் ஒரு வட்ட வடிவப் பார்வையில் நோக்கும்போது விதியை யாரால் வெல்ல முடியும்.? நாம் தப்பித் தப்பிப் போனாலும், எம்மைத் துரத்தித் துரத்தி விளையாடி வந்து கண்ணாமூச்சி காட்டி இறுதியில் வெற்றி கொள்கின்ற தோழனல்லவா அவன்? அவனை வெல்வது எங்ங்னம் சாத்தியம் என்று தோன்றும். இந்த நாலு குடிசைகளில் ஏதாவது ஒன்று
ஜீவநதி 72
 

கெகிறாவ ஸஹானா
கொஞ்சம் பெரிதாக, வசதியாக, கல் வீடாக இருந்திருக்கக் கூடாதா என்று சமயங்களில் தோன்றும் ஒரு சின்ன ஆறுதலுக்காகவாவது அதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமே.
பிறகு சின்னதாக அந்த நினைவு தேய்ந்து தேய்ந்து அப்படியே சிறு புள்ளியாகப் போய்விடும். ஆனாலும் முற்றாக அழிந்து விடாது.
"வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்ற வைராக்கியக் குரல் மீண்டும் ஒலிக்கும். ஏதாவது செய்து மேலே வந்தே தீரவேண்டும் என்ற பிடிவாத உணர்வு மீண்டும் என்னை அலைக்கழிக்கும். தையல் மெஷின் ஒன்று இருந்தாலாவது ஏதாவது செய்து சம்பாதிக்கலாம்.
சின்னப் பிள்ளைகளுக்கென உடைகள் தைத்து விற்பேன். கையினால் அவற்றின் ஓரங்களை யெல்லாம் அழகாகத் தைத்தபின் வர்ணப் பூச்சுகளை பூப்போல பரவவிட்டு அப்ளிக் வேலைகள் செய்வேன். என் அலங்கார வடிவங்களைப் பார்த்த பெண்கள் "ச்சா. எவ்வளவு அழகு..!" என்று புகழ்வார்கள். "மெஷின் இல்லாமல் நானே கையால தச்சது." என்பேன். வாயைப் பிளப்பார்கள். நல்ல விலை தந்து சட்டைகளை வாங்குவார்கள். எனக்கு மலை உச்சிமீது நின்று பூமியைப் பார்ப்பது போலகர்வமாக இருக்கும்.
இதழ் 50

Page 77
நிலா பொங்கும் இரவு கூடவே மினுமினுக் கென்று ஒரு நட்சத்திரம், வாசற்படியில் உட்கார்ந் திருக்கேன். கார்த்திகை மாதத்துக் குளிர் உடம்டை உரசிச் செல்கின்றது.
இப்போதெல்லாம் மாலை நான்கு மணிக்சே குளிரத் தொடங்கி விடுகிறது. இரவு நடுச்சாமத்தில் தாளமுடியாத குளிர் வெறுந்தரையில், பிளாஸ்டிக் பாயில் துணியை விரித்துப் படுப்பதன் கஷ்டம், குப்பி விளக்கில் உயிர் வாழ்வதன் கஷ்டம் இந்தக் குளிருக்குத் தெரியப் போகிறதா? காற்றுக்குத் தெரியப் போகிறதா? காலையில் விழித்தெழுந்ததும், பாயை மடித்து வைக்கும்போது அதன் கீழிருந்து ஊற்றாக வடியும் ஈரத்தைப் பார்க்க வேண்டுமே. எங்கிருந்துதான் பாய்க்குக் கீழே இவ்வளவு தண்ணீர் வந்து சேர்ந்ததோ என்று தோன்றும்.
மகள் குப்பி விளக்கிலே படித்துக் கொண்டி ருக்கிறாள். நாலாம் வகுப்பு படிக்கிறாள். இன்னும் ஓரிரு வருடங்களில் மூலையில் உட்கார்ந்து விடுவாள் அவளுக்கென்றாரு ஒளிவு உண்டா? மறைப்பு உண்டா?
இரண்டாமவன் மூன்றாம் தரம் படிக்கிறான் அவனுக்கும் எங்களது கஷ்டங்கள் தெரிந்திருக்கின்றன. ஏதும் வாய்திறந்து கேட்க மாட்டான். வாய் பிளந்து தொங்கும் சப்பாத்தை எந்த முணுமுணுப்பும் இன்றி போட்டுக்கொண்டு ஸ்கூல் போவான். கடைக்குட்டிக்கு இப்போதுதான் நாலு வயசு, அடுத்த வருடம் முன் பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆரம்ப செலவுகள் சீருடை என்று ரூபா இரண்டாயிரத்தைத் தாண்டும் என்று என்னுள்ளம் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
சின்னவன் என்னருகே அமர்ந்து நட்சத்திரங் களை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறான். மகளும், மகனும் உரத்து படித்துக் கொண்டிருக்கிறார்கள் பகல் பெரிய மதினி கொண்டுவந்த சாப்பாடு கொஞ்சம் இருக்கிறது. சமாளித்து விடலாம் என்ற நினைப்பில் வாசலில் உட்கார்ந்திருக்கிறேன். அவர் வந்து விடட்டும்.
ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாமல் நகரும் வாழ்வு. ஆனால், நிறைவேற்றப்படாத அடிப்படைத் தேவைகள் இன்னும் ஏராளம் உண்டு. இந்தக் குளிரில், விழுந்து கிடப்பதற்கு ஒரு கட்டில் இல்லை; நாலு பேர் வந்தால் உட்கார்வதற்கு பிளாஸ்டிக் கதிரைகள்கூட இல்லை. எல்லாருக்கும் பாய்தான்.
அவர் வந்துவிட்டார். வழக்கமாக ஹோட்டலி லிருந்து வரும்போது கையில் ஒரு சிறு பொட்டலத்தை யாவது கொண்டு வருவார். இன்று அதையும் காணோம். சின்னவன் ஓடிச்சென்று அவரது கையைப் பற்றிக் கொள்கிறான். "எங்க வாப்பா வட.?" என்று கேட்கிறான். "இனிமே வட இல்ல மகன். இண்டையோட கடைய மூடிட்டாங்க. சரியான நஷ்டமாம்." என்கிறார் அவர். இவன் ஒன்றும் புரியாமல் அவன்
ஜீவநதி

முகத்தைப் பார்க்கிறான். 316) fr தொடர்ந்து சொல்கிறார். 綠
"இனி வாப்பா வேற ஒரு வேல தேடிக்கொள்ளக் காட்டியும் வட இல்ல மகன்." 来来米
அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் பட்டினியாகவே கழிந்தன. யாரிடமும் இல்லை என்று கேட்டுப்போய் எனக்குப் பழக்கமில்லை. ஒருநாள் வெறும் பலாக்கொட்டைப் பொரியலும், மரவள்ளிக் கீரைச் சுண்டலும்; இன்னொருநாள் பானும், தேங்காய்ப்பூவும், சீனியுமாக அடுத்தநாள் ரொட்டியும், சம்பலுமாக நாலாவது நாள் என்னசெய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோது, பகல் பதினொரு மணியளவில் அவர், ஒரு பையில் நிறைய சாமான் களுடன்வந்து சொன்னார். "எனக்குவேலகெடச்சிருச்சி. ... ."
ஒரு ப்ளாஸ்டிக் கொள்கலன் கடையில் வேலை கிடைத்திருந்தது. எண்ணெய் வியாபாரிகள் ப்ளாஸ்டிக் பூளிகளை வாங்கிச் செல்வதற்கு தோதாக அவற்றைக் கழுவி காய வைத்துக் கொடுப்பது இவர் வேலை. அது தவிர அந்தக் கடையில் சாக்குகள், பழைய பேப்பர் என்பனவும் விற்பனைக்கு உண்டு.
நான் கொஞ்சம் வசதியான இடத்துப் பெண் என்பதால் என்னைப்பற்றி அவரது மனதில் எப்போதும் ஒரு கருணையுணர்ச்சி இருந்து வந்ததை என்னால் உணர முடிவதுண்டு என் மனதில் குறை ஏதும் ஏற்பட்டு
விடக்கூடாது என்று அவர் கவலைப்படுவதையும் நான்
அறிந்து வைத்துள்ளேன். அவருக்காக நான் இயலுமான வரை என் மனதின் கவலைகளை அடக்க முயன்றாலும், எங்காவது ஒரு மூலையில் நான் அநியாயத்திற்கு இந்த வாழ்க்கையைத் தேடிக் கொண்டதாக ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. பிள்ளைகளின் முகங்களைக் காணும் போது சிலவேளை அந்த எண்ணம் பட்டுப்போய் விடுவதுமுண்டு.
தனது முதல் மாதச் சம்பளத்தில் ஒரு கட்டில்
வாங்கித் தருவதாக அவர் வாக்களித்திருந்தார். தரையில், குளிரில், சுருண்டு படுத்திருக்கும்போது நான் வீட்டை நினைத்துக்கொண்டு கவலைப்படக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ?
நானும், எனது தையல் வேலைகளில் மும்முர மாக ஈடுபட்டு வந்தேன். குழந்தை உடைகள் மட்டுமன்றி, அவர்களுக்கான தொப்பிகள், தலையணைகள், துவாய்கள் என்பவற்றையும் நான் கைகளினாலேயே தைக்கத் தொடங்கினேன். அவரது சம்பளம் அப்படி, இப்படி ஆகிவிட்டாலும் எப்படியாவது சமாளித்து ஒரு கட்டில் வாங்கிவிடவேண்டும். தவிரவும், அன்றாடம் வீட்டுச் செலவுகளையும் சமாளிக்கணுமே.
பல்வேறு யோசனைகளுடன் இன்று முடிக்க வேண்டிய உடைகளைத் தைத்துக் கொண்டிருக்கிறேன். நேரம் பகல் பன்னிரண்டு மணியைத் தாண்டியிருந்தது.
இதழ் 50

Page 78
இனி சமைக்கத் தயாராக வேண்டும். எப்போதும் பதினொரு மணியளவில் டவுனிலிருந்து சாமான்கள் வாங்கிக்கொண்டு வருவார். இன்னும் காணவில்லை.
தைத்த உடைகளை அப்படியே அள்ளி பக்கத்தில் உள்ள காட்போட் பெட்டியில் போட்டுவிட்டு நிமிர்கிறேன். வாசலில் சைக்கிள் ஒன்று வந்து நிற்கிறது. ULIITC 5?
கொஞ்சம் யோசித்தபின்தான் ஞாபகம் வருகிறது. கடையில் இவரோடு வேலை செய்யும் சிறுவன்.
அவன் வாசலில் வந்து இறங்கியதைக் கண்டதும் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் ஓடி வருகின்றன.
"தாத்தா. பாயிஸ் நானாவுக்கு கண்ணுல எசிட் பட்டுருச்சி. ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க. முதலாளி உங்ககிட்ட சொல்லச் @i©FT6ঠা60াTিCচি. . . ."
"GL.?"
நான் அதிர்ந்து போய் அவனை நெருங்கு கிறேன்.
"ப்ளாஸ்டிக் கேன கழுவுறதுக்கு தொறந்து பாத்திருக்காரு. அதுக்குள்ள எசிட் இருந்தது அவருக்குத் தெரியா. கேஸ் வந்து அப்புடியே கண்ணுல பட்டுருச்சி."
குழந்தைகள் "வாப்பா.வாப்பா."என்று
அலறத்தொடங்குகின்றன.
தகவல் சொல்லிவிட்டுப் போகக் கிளம்பிய வனிடம், தம்பி. எனக்கொரு ஆட்டோ அனுப்புடா." என்று கூறிவிட்டு பின் கதவை மூடுகிறேன். குழந்தைகள்
கண்ணிர் சொரியாத குறையாய் கலங்குகிறாய் துயரங்களை சந்தித்தவனாய்! மக்கள்துயரை எங்கும் சொல்கிறாய். அழிவுகளின் காரணர்களை விமர்சிக்கிறாய். எல்லாதுயர்களின் பங்காளிபோல நடிக்கிறாய். நீ என்னசெய்தாய்? பேச்சு பல்லக்கு போல. பேசிக்கொண்டே இருக்கிறாய். காணியற்றவர்களுக்கு உன்நிலத்தை காட்டு! பசியில் அழுவோனுக்கு பணத்தை கொடு! நீயும் பெரிய நிலக்கிழார் நீ முன்னே வா. நீ எல்லாவற்றிலும் பலசாலி நாம் பின் தொடர்வோம்.
ஜீவநதி 7.

தாமும் வருவதாக அடம்பிடிக்கத் தொடங்குகின்றன.
என்ன செய்வது, ஏது செய்வதென்று தெரிய
வில்லை. ஒருகணம், அந்தச் செய்தி நம்பமுடியாத பொய் யாகத் தோன்றிற் று. மறுகணம், அந்த
உண்மையை உணர்ந்த பலவீனத்தில் கால்கள் தோய்ந்து விழுகின்றன. "ஐயோ பெரிய காயமோ.
யாஅல்லா. அவர்ட கண்ணுக்கு ஏதும் ஆகிடாம
காப்பாத்து."
ஆட்டோ வந்து நிற்கிறது. ஒரு மரக் கட்டையைப்போல ஏறி அமர்ந்து கொண்டேன்.
" ஹொஸ்பிட்டலுக்குப் போங்க." என்கிறேன்.
பிள்ளைகளும் தாவி ஏறிக் கொள்கின்றன.
அங்கெல்லாம் அடிக்கடி போன பழக்கம் இல்லை. குழந்தைகளுக்கு ஒன்று என்றால் அவர்தான்
போய் மருந்து எடுத்து வருவார்.
ஆட்டோ எப்படி ஓடி வாசலில் போய் நின்றது
என்று தெரியவில்லை. குழந்தைகள் என் பின்னால்
ஓடிவர, இதுவரை காணாத ஒரு அசுரபலம் என்னைப் பிடித்துத் தள்ள, விழிகளை சுழற்றித் தேடியபடி ஒவ்வொரு கட்டிலாகத் தேடுகிறேன்.
வார்டின் கடைசி மூலையிலுள்ள கட்டிலில் அவர் படுத்திருக்கிறார். வலது கண்ணை மூடி பஞ்சு வைத்திருக்கிறார்கள். முகம் கறுத்துப் போயிருப்பது
இங்கிருந்தே தெரிகிறது. மேலே ஏதோ க்ரீம் பூசினாற்
போலிருக்கிறது.
மூத்தவள் அங்குமிங்கும் மிரட்சியுடன் தேடி அப்போதுதான் வாப்பாவைக் கண்டுபிடித்தாள் போலும் என்னருகே நெருங்கி, முகத்தை மலரப் பார்த்து ஒாப்பாவுக்கு கட்டில் கெடச்சிருச்சிம்மா."
izjavili.
உனது கொள்கையை நாமறிவோம். நீ எதிரியிடம் எதுவும் கேளாதே! தந்தாலும் பெற்றுக்கொள்ளாதே; ஏனெனில் நீதனித்துவம் கொண்டவன். உன் மக்களோடு சேர்ந்துவாழு அதுவே நிறைவாகும். உன் கருத்திலே மயங்கிய நாம் மயக்கம் கலைந்து உன்னை தேடினோம்.
அடபாவி நீ வெளிநாட்டில் நிற்கிறாயாம். உன் தனித்துவம் தனித்து தனியனாய் நிற்கிறது!
இத
Ц)
5
O
37
ܝܵܠ

Page 79
جمحی
LOITÁdáluö –
மனித இனம் மனிதப் பண்புகளுடன் கூடி வாழ்வதற்கு அவசியமான வாழ்க்கை நெறி, ஒழுகலாறு என்பவற்றைச் சுட்டியதே அறம் எனப்படுகின்றது.
மனிதன் கூட்டாக வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே சமூகம் தனக்கென ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளது. ஒழுக்கம் என்ற அறநெறி வாழ்க்கை சமூக உணர்வின் மிகத் தொன்மையான வடிவம் என்று கருதப்படுகின்றது. உலகில் மதமும், கலை களும் தோன்றுவதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே ஒழுக்கம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதனைச் சில சாரார் இயற்கை வாதம் என்பார். இன்னுமொரு சாரார் இதனை இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பர். பிற்காலத்தில் இந்நிலமை இறையியலோடு பிணைக்கப் பட்டுவிட்டது. அதாவது இவ்வுலகைப் படைத்த இறைவனே ஒழுக்கத்தையும் அறநெறிகளையும் படைத்தான், வகுத்து தந்தான் என மதவாதிகள் கூறினர்.
இவ்வாறு இயற்கையோடு இயைந்த மனித இயல்போடு கூடி மனிதன் செல்ல வேண்டிய நெறி என்பதைச் சுட்டிய அறம் என்பது பிற்காலத்திலே முதலாளித்துவ சமூக அமைப்பில் பொருளிழந்து போயிற்று. சுரண்டல் அடிப்படையிலான வர்க்க சமூகத்தில் "ஒழுக்கம்" என்பது உரிய அர்த்தத்தை இழந்து விட்டது. அது சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்து வோரினால் விதிக்கப்பட்டது. சுமத்தப்பட்டு திணிக்கப் பட்டது என மார்க்சியம் கூறுகின்றது. அத்துடன் இயற்கைக்கு முரணான ஒழுக்கம் மனிதனுக்கும் முரணானது எனக் கூறுகின்றது.
சமூகத்தை ஆளும் மேலாதிக்க சக்திகளால், ஒழுக்க நெறிகளும், இலட்சியங்களும் வரையறுக்கப்
பட்டதுடன், இயற்கைக்கும் வரலாற்றுக்கும் அப்பாற்பட்ட
புனித உரிமைகளாகவும், கடமைகளாகவும் நிலை நாட்டப்படுகிறது. இதனை மார்க்சியம் மறுப்பதுடன், மனிதன் எப்போதும் கூட்டாகச் செயற்படுபவன், அவன்
ஜீவநதி
 
 

அநாதரட்சகன்
ஒழுக்கம் - அறம்
ஒரு சமூகப்பிராணி என்ற வகையில், கூட்டு வாழ்வில் இருந்து தோன்றிய இயல்பான பழக்கவழக்கங் களினால் "அறம்" நிலை நிறுத்தப்படுகின்றது என்பதை முதன்மைப்படுத்துகின்றது.
இது வரை காலமும் வர்க்க வேறுபாட்டு டனேயே சமூகம் இயங்கி வந்துள்ளதனால், ஒழுக்க நெறி என்பது எப்போதும் வர்க்க நலன் சார்ந்ததாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும், நலன்களையும் அது நியாயப்படுத்தி வந்துள்ளது. வர்க்க வேறுபாடற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகத்தில் தான் உண்மையான மானிட அற ஒழுக்க நெறி பேணப்படும் என மார்க்சியம் வலியுறுத்துகிறது.
அத்துடன் அறநெறிப் பண்புகள் சமூக நிலை மாற்றத்திற்கேற்ப மாற்றத்துக்குள்ளாகுபவை. நன்மை தீமை, உண்மை பொய், அறம் மறம், ஆக்கம் அழிவு எனும் கருத்தாக்கங்கள் யாவும் மனித தேவைகளை ஒட்டியே உருவாக்கம் பெற்றவை மாறுதலுக்கு இட மளிக்காத இன்றும் சாசுவதமான ஒழுக்க விதிகள் என்று எதுவுமில்லை என்பதுடன் அத்தகைய அற நெறியை மானிட ஒழுக்க நெறிச் சூத்திரமாக மனிதனிடம் திணிக்கும் முயற்சியை மார்க்சியம் வலு வாக நிராகரிக்கின்றது. காரணம் காலத்துக்குக் காலம் அவ்வவ் காலத்துக்குரிய பொருளாதார நிலைமை களின் விளைவாகவே அறநெறிக் கொள்கைகள் உருவாகின என மார்க்சியம் கூறுகின்றது.
மார்க்சியம் கூறுகின்ற அறம் என்பது சமதர்மம் என்ற சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது. மனிதர் மத்தியில் நிலவும் இன, மத, சாதி அடிப்படையிலான எல்லாவகையான ஏற்றத்தாழ்வு களும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதனை முன்மொழி கின்றது. சமூகம் வர்க்கங்களாக பிளவு பட்டதில் இருந்து தான் மனித சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளும்,
இதழ் 50

Page 80
போட்டி பொறமைகளும், பொய்யும் களவும், சுரண்டலும் தோன்றின என்ற உண்மையைக் கூறுகின்றது.
வரலாற்றுக் கு முற் பட்ட ஆதிகாலப் பொதுவுடைமைச் சமூகத்தில் தனி உடமை இல்லை. மேலாதிக்க மனோபாவம் இல்லை. சமூகப் பிளவுகள் இல்லை, ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இதனால் அச்சமூகத் தில் வாழ்ந்தவர்களுக்கு மனச்சிக்கல் இருக்கவில்லை. கூட்டு வாழ்வில் அனைவரும் சேர்ந்து உழைத்தார்கள்.
உற்பத்தியைப் பகிர்ந்து உண்டு வாழ்ந்தார்கள். அங்கே அறம் என்பது இயற்கையுடன் இணைந்து சிக்கல் ஏதும் அற்றதாக இருந்தது. அச்சூழலில் போட்டி பொறமை களுக்கு இடமிருக்கவில்லை. மனிதன் இயற்கையோடும், சமூகத்தோடும் ஒன்றிச் செயற்பட்டான். தான் பிறர்காக வும், பிறர் தனக்காகவும் அனைவரும் சமூகத்துக்காகவும் வாழ்ந்தார்கள், உழைத்தார்கள் வெளியில் இருந்து இவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேவைப்பட வில்லை. அவ்வாதிகால பொதுவுடமைச் சமூகம் மறையவே குடும்பம், தனியுடமை, அரசு என்பன தோற்றம் பெற்றன. இயற்கையின் வளங்களைச் சிலர் தம்வசப்படுத்த முயன்றனர். அதற்கு ஆயதங்களும் படைகளும் தேவைப்பட்டன. கூடவே அரசு தோன்றி அதனிடம் அதிகாரங்கள் குவிந்தன. தமது இருப்பைத் தேட ஆளும் வர்க்கத்திற்கு சார்பான அறஒழுக்க நெறிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டது.
மார்க்சியம் கூறும் அறம் என்பது மானிட நேயத்தினை அடிப்படையாகக் கொண்டது. மனித நேயம் என்பது எல்லா மனிதர்களுக்கிடையிலும் சமத்துவம் தேவை என்பதை வலியுறுத்துகின்றது. அத்துடன் படைப்பாற்றலும் தன்னுணர்வும் கொண்டவன் தான் மனிதன். கூடவே சுதந்திரத்திற்கான விருப்பையும் இயல்பாகக் கொண்டுள்ளான். இவை அனைத்திலும் மனிதனின் தேவைகளை முன் நிபந்தனையாக கொள்வது தான் மனித நேயம் என்பது. அத்தகைய
ஜீவநதி 7.
 

மனிதநேயம் இல்லாமல் அறவியல், ஒழுக்கம், மானிடப் பண்புகள் குறித்து பேசுவதில் எவ்வித அர்த்தமும் இல்லையென மார்க்ஸ் கூறியுள்ளார். அத்துடன் குறித்த வரலாற்றுக்கட்டத்தின் சூழலில் நிபந்தனையோடு செயல்படுகின்ற நெறிகளே அறநெறிகள் எனக்குறிப்பிடு கின்றார். அந்நியமான மனிதன் என்ற வகையில் சமூகம் அவனுக்குள் திணிக்கப்படுகின்ற ஒழுக்க நெறிகளே இதுவாகும். அதாவது புறநிலைத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்த தனி மனிதச் செயற்பாடுகளையே ஒழுக்க நெறி என மார்க்ஸ் கருதினார்.
அறம் சார்ந்து மார்க்சியம் கூறும் இன்னொரு கருத்து விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளில் இருந்த தன்னைத் துண்டித்துக் கொள்ளும் அறவியல் ஒழுக்க நெறியானது மத அடிப் படை வாதத் தவிற கும் , மூடநம்பிக்கைகளுக்கும் வழிவகுப்பது என்பதாகும். அது விஞ்ஞானத்தில் இருந்து அறிவியலை பிரித்துப் பார்ப்பதை
வரலாற்றுச் சூழலில் இருந்து பிரித்து அறம் பற்றிப் போதிப் பவர்களை வரட்டு உபதேசிகள்” என மார்க்ஸ் கடுமையாகச் சா டியுள் ளார் . இத் தகைய உபதேசங் கள் போலியானவை எனவும், அறிவியல் முறையில் ஆய்வு செய்வதன் மூலமே மனிதன் உண்மைகளைக் கண்டறிய முடியும். இந்த உண்மை குறித்த மனிதனின் தேடல் இடையீடு இன்றி தொடரப்படவேண்டும். சமூகம் குறித்த உண்மைகளின் அடிப்படையிலேயே அறிவியல் குறித்து நாம் பேச வேண்டும் என்பதை மார்க்ஸ் கூறியுள்ளார்.
இன்றைய முதலாளித்துவ உலகில் சுய நலமும், இலாப வேட்கையும், கொலை கொள்ளை களும், இனமத வெறிகளும், சாதி வேறுபாடுகளும், தீண்டாமையும், போரும், சுரண்டலும்தான் சமுதாய ஒழுக்கநெறிகள் என்றால் இத்தகைய ஒழுக்க நெறிகளுக்கும் அவற்றையே அறம் எனக் கொள்ளும் சமூக அமைப்புகளுக்கும் அச்சமூக அமைப்பே நாகரிகமானது என நியாயப்படுத்தும் மதங்களுக்கும், சிந்தனைத்தனங்களும் மார்க்சியம் எதிரானது. அன்பு, கருணை, சமத்துவம், சமவாய்ப்பு, புறம் கூறாமை, கள்ளாமை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, உங்கமுடைமை எனும் சீரிய ஒழுக்கநெறிகளை எல்லா
நிலைகளிலும் வலியுறுத்துவதே மார்க்சிய அறநெறி
யாகும். அது மனிதனை மனிதனாக நற்பண்புகள் நிறைந்த வனாக காண விளைகின்றது. அத்துடன் மானிடப் பிறவியின் பயன் என்பது சுதந்திர வாழ்வு, ஆனந்தமான இன்ப வாழ்வு என்ற உச்சமான மானிட அறத்தை வேண்டி நிற்கும் தத்துவமே மார்க்சியம் ஆகும்.
இதழ் 50
மறுக்கின்றது. அத்துடன் சமூகம் மற்றும்
52
P్న

Page 81
அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின்
$ళ ఖ
༤༽ மீள எழுந்து புது வாழ்
སྔོ་
絮
கீர்த்தி நேர்த்தியாக உடுத்தியிருந்தாள் முகத்தில் சோகம் தெரிந்தது. சற்றுத் தயக்கத்தோடு காணப்பட்டாள். இருங்கோ என்று கதிரையைச் சுட்டிக் காட்டினேன். சில நாட்கள் நித்திரை கொள்ளவில்லை யென்பதை அவளது கண்குழியில் படர்ந்திருந்த கருமை வெளிப்படுத்தியது.
"அவன் இப்படியானவன் என்று எனக்குத் ரியாமல் போச்சே என்ர படிப்பும் குழம்புது, நித்திரை யும் கொள்ள முடியாமல் கிடக்கு ஒரே தலைவலியும், சாப்பிடவும் மனமில்லை. என்ன செய்யிறதெண்டு னக்குத் தெரியாமல் இருக்கு" என்று கூறி அழுதபோது அவளின் வேதனையின் ஆழங்களைப் புரிந்து
கொண்டேன்.
கீர்த்திகா வைத்தியத்துறை மாணவி. அதே துறையில் கற்றுக்கொண்டிருந்த சதீசனைக் காதலிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாகிவிட்டன. இவளுட னான அவனது காதல் இரண்டு வருடம் நீடித்தது விதிவிலக்குத்தான். அவளின் ஒழுக்கமான வாழ்வுதான் அதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்.
சதீசனுக்குக் காதல் என்பது பெண்களின் 徽 உடலில் தன் மோகத்தைத் தணிப்பதுதான். ஒவ்வொரு பெண்ணையும் அனுபவித்துவிட்டுச் சக்கையாக எறிந்து ہی 1றைத் தேடுவதே அவனது வாழ்க்கைப் பாணி ளக் கவரும் நுட் பத்தில் அவன் வன். பெண்கள் பாராட்டு மற்றும் அன்புச்சாய த்தைகளால் இலகுவில் ஏமாந்து விடுவார்கள் என்பது இவனது உறுதியான நம்பிக்கை, அவன் அப்பாவும் "சேறு கண்ட இடத்தில் மிதித்துத் தண்ணி கண்ட இடத்தில் கழுவிற" வகையைச் சேர்ந்தவர்தான். னது அம்மாவும் அப்பா இல்லாத நேரத்தில் பக்கத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீட்டு மாமாவோடு "பம்பல்” அடிக்கும் குணம் கொண்டவர். அதனால் நல்லொழுக்கம் என்றால் என்ன என்பதைச் சரியாகக் கற்றுக்கொள்ளும் குடும்பச் சூழல் கிடைக்கவில்லை. "இனம் இனத்தோடுதான் சேரும்" என்பது போல தன் நடத்தைக்கும் சிந்தனைக்கும் ஒத்தவர்களையே நண்பர்களாக்கிக் கொண்டா
கீர்த்திகாவுக்கோ காதல் என்றால் புனிதமானது, உண்மையானது, அது திருமணத்தில் நிறைவேறுவது திருமணத்திற்கு முன்னர் "அப்படி இப்படி நடக்கிற பெண்களை இவளுக்குப் பிடிக்காது. இதனால் இவளை ஒரு மொடல் மாணவியாகவே ஏனைய மாணவிகள் பார்த்தார்கள். உடலைக் கொடுத்துத் தம் காரியம் பார்க்கும் சில மாணவிகள் மாத்திரம் இவளை ஏளனம் செய்வார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் அவள் அலட்டிக்கொள்வதில்லை. நல்ல கொள்கையோடு வாழவேண்டும், நல்ல இலட்சியத்தோடு வாழவேண்டும் என்பதே இவளது ஆவல். பெற்றோர் சகோதரர் இவளையிட்டுப் பெருமையாகப் பேசிக்கொள்வர். இவள்மீது நிறைந்த பாசம் மாத்திரமல்ல, இவளின் ஒழுக்க வாழ்வுபற்றி அதீத நம்பிக்கையும் அவர்களுக்கு அவ்வாறுதான் இவளது விரிவுரையாளர்களும்,
கார்த் தகா அழகும் துடிதுடிப் பும் நுண்ணறிவும் நிறைந்தவள். ஆண்களுடன் கலகலப் பாகப் பழகுபவள் என்றாலும் ஒழுக்க வரம்புகளை மீறுவதில்லை. தன் காதலனுக்கும் என்று

Page 82
விசுவாசமானவள். திருமணத்திற்கு முன் "அப்படி இப்படி" நடப்பது தப்பு என்று நினைத்து நடப்பவள். அவன் பல முறை வற்புறுத்தியும் அவள் மறுப்புச் சொல்லியே வந்தாள்.
சதீசனின் கவர்ச்சியான தோற்றமும் அதீத பாராட்டும் கேட்க இனிக்கும் அன்புமொழிகளும் இவனையே இறைவன் தந்த இலட்சியக் காதலனாகக் கார்த்திகாவை எண்ண வைத்தது. இவன் சகமாணவிகள் மத்தியில் பிரபல்யமானவன். சிறந்த மேடைப்பாடகனும் கூட இவன் நல்லவன்போலத் தோன்றியதாலும் அவன் ஒருநாள் டாக்டராக வருவான் என்பதால் தன் சமூக அந்தஸ்து உயரும் என்ற நினைப்பும் அவனை முழுமை யாக நம்பிக் காதலிக்கத் தூண்டியது.
இவனோடுள்ள காதல் உறவில் தன் சிந்தனை யும் நடத்தையும் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது, ஏனைய மாணவர்களது காதல் வாழ்விற்குத் தன் நடத்தை ஒரு முன் மாதிரியாக இருக்கின்றதா என்றெல்லாம் ஒவ்வொரு இரவும் இறைவன் முன் மதிப்பீடு செய்வாள். இவள் பக்தியாகத் தியானம் செய்யும்போது சதீசன் மனக்கட்டுப்பாடும் பொறுப் புணர்ச்சியும் இல்லாதவன். இவனை விட்டு விலகு." என்று உள்ளுணர்வு அடிக்கடி சத்தமிடும். ஆனால் அவனது பசப்பு வார்த்தைகள் மனத்திரையில் தோன்றி, அவள் உள்ளுணர்வை மழுங்கடித்துவிடும். சில நண்பிகள்கூட "அவன் நல்லவனில்லை. உனக்கு அவன் பொருத்தமான
வனில்லை. கவனமாய்ப் பழகு" என்றார்கள். அவனது உண்மைக் குணம் தெரிந்த வேறு மாணவிகளும் இவளுக்கு உண்மையைச் சொல்ல விரும்பியும் இவள் அவனுக்குச் சொன்னால் தங்களைத் துன்புறுத்துவான் என்ற அச்சத்தில் மெளனம் சாதித்தார்கள். ஆனால் இவள் பார்வையில் அவன் எந்த ஒரு குறையுமே இல்லாதவன்.
அன்று வியாழக்கிழமை. அவள் வழமைபோல
றுநாள் ஊருக்குச் செல்வாள் என்பதால் சதீசன் காண வந்தான். "கீர்த்தி. நாளைக்கு வீட்டை போகாதையும், பிக்னிக் போவம்." என்றான். "நான் அம்மாக்குப் போன் பண்ணிப்போட்டன் நாளைக்கு வீட்டை வருவன் என்று. "இது பெரிய விசயமா? அம்மாக்கு ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லுமன்" என்று டக்கென்று பதில் சொன்னான். "கீர்த்தி. நாளைக்குக் காலமை ஒன்பது மணிக்கு றெடியாக இருங்கோ" என்று அவன் கூற | "ஒகேயடா’ எனச் சினிமாப் பாணியில் கூறித் தலையசைத்தாள். அவன் விரும்பும் அந்தப் பார்வையை வன்மீது பாய்ச்ச, அவன் குதூகலிப்போடு தன் பல்சரை
முறுக்கியல் ாறு மின்னலென மறைந்தான்.
சொன்னதுபோலவே வெள்ளிக்கிழமை காலை
சரியாக ஒன்பது மணிக்கு தன் மோட்டார் சயிக்கிளில் வந்திருந்தான். இவளுக்குப் பிடித்த நீல ஜீன்சும் றோஸ் சேட்டும் அணிந்து எடுப்பாகக் காட்சியளித்தான். அவள்
ஜீவநதி–
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனம் குதூகலித்தது, ஆனால் அதை அவள் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அவளும் அவன் விரும்பிய சிவப்புச் சுடிதார் அணிந்து அடக்கமாக வந்தாள்.
"கீர்த்தி, நடிகைகள் உன்ர வடிவிலை தோர்த்துப் போடுவாளவே. நான் ஒரு இயக்குனராயிருந்தால் என்
படங்களுக்கு நீதான் கதாநாயகி. வழமையான அவனது பாராட்டுத்தான். உள்ளே மகிழ்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாதவள்போல "அது சரி நாங்கள் எங்கை போறம், யார் யாரோடை போறம் என்று சொல்லேலையே." என்று ஆர்வத்தோடு கேட்டாள். நீர் என்னோடை பைக்கிலை வாருமன் அந்த இடத்திலை கொண்டுபோய்விடுவன். அங்கை வேறை ஆட்கள்
நிற்பினம் அவயோடை போவம். இப்ப எல்லாம்
சஸ்பென்ஸ்" என்றான். "நான் தாலி கட்டினாப் பிறகுதான் உங்களோடை பைக்கிலை வருவன்" என்று உறுதியாக மறுத்துவிட்டாள். "சரி. அப்ப நீர் வீட்டை போம். பிறகு சந்திப்பம்" என்றான் அவனுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. இவனது உள் நோக்கத்தைப் புரியும் அளவுக்கு மனிதரை அறியும் திறனில் இவள் வளர்ந்திருக்கவில்லை. அவன் நல்லவன் என்றே நம்பிக்கொண்டிருந்தாள்.
திங்கட்கிழமை காலை விரிவுரைக்கு
நிற்கவேண்டும். பஸ்சில் மூலை இருக்கையில் அமர்ந்து இயற்கையை இரசித்துக்கொண்டே வந்தாள்.
காதல் ஜோடி ஒன்று ஹோட்டலைவிட்டு வெளியே வந்து பல்சரில் ஏறுவதைக் கண்டாள். சதீசனைப்
போலவே அவனும் இருந்தான். "இல்லை. அது என் சதீசனாய் இருக்காது. என் சதீஸ் அப்பிடியான ஆள் இல்லை. அவர் எனக்குத் துரோகம் செய்யமாட்டார்” என்று தன் மனத்தைச் சமாதானப்படுத்த முயன்றாள்.
பஸ் வேகமாக வந்ததால் இருவரையும் அவளால்
தெளிவாக அடையாளம் காண முடிந்தது. அது சதீசன்
தான். அவனது பல்சரில் ஏறியவள் வேறு யாருமில்லை, அவளோடு படித்துக்கொண்டிருக்கும் சித்திராதான்.
ஹெல்மெற்றின் ஊடாகவும் அவர்களைச் சரியாக அடையாளம் காணமுடிந்தது. இவளுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. அவர்கள் காணாதபடி தன் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
கீர்த்தி முதல் முறையாகச் சதீசனை வித்தியாசமாக நோக்க ஆரம்பித்தாள். இப்படி இவன் வேறு எந்தெந்தப் பெண்களோடு வந்து போனானோர். இவன் வேறு பெண்களோடு நெருக்கமாகப் பழகு வதும், இவன் விடும் கெட்ட பகிடிகளும் அவள் முன் இப்போதுதான் விஸ்வரூபம் எடுத்தன. கூசாமல் பொய் சொல்வதும் தன்னைப் பொய் சொல்ல வைக்க முயற்சித்துத் தோற்பதும் இப்போதுதான் அவளுக்குப் பெரிய விடயங்களாகத் தோன்றத் தொடங்கின. கொண்டோம் பாவிக்கிறதிலை என்ன பிழை, புளூ
H இதழ் 50
-
2.

Page 83
பில்ம் பார்க்கிறதிலை என்ன பிழை என்று ஏனைய மாணவர்களோடு இவன் வாதாடியபோது இவன் ஒழுக் கம் கெட் டவன். என்றதை உணராமல் போயிட்டனே. அவனைப் பற்றி அவள் கொண்டிருந்த உயர்வான எண்ணங்கள் புயல் காற்றில் அகப்பட்ட மரங்கள் போல ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன.
மறுநாள் மதிய உணவின்போது அவன் கண் ரீனில் தனித்திருந்து உணவு சாப் பிட்டுக் கொண்டிருந்தான். "சனி, ஞாயிறு எப்பிடிப் போச்சுது என்று கேட்டவாறே அவன் முன்பாக அமர்ந்தாள். எதுவும் நடக்காததுபோல, "நான் என்ர பிறண்ட்சோடை ககர்நா பீச்சுக்குப்போய் வந்தன். என்று கூசாமல் பொய் சொன்னான். "நீங்களும் சித்திராவும் நிவேதா ஹோட்டலுக் காலை வந்து ஒன்றாய் உங்கடை பல்சரிலை வரேக்கை நான் பஸ்சிலை இருந்து வடிவாய்ட் பார்த்தன். உங்கடை பொய்யை உங்களோடை வைச்சுச் கொள்ளுங்கோ" என்றாள் பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு. "என்ன கீர்த்தி, உமக்கு நான் துரோகம் செய்வனே. கண்ணகி மாதிரி நீ இருக்க சித்திராபோல ஆட்டக்காரியளோடை போவனே. என்ன
أخي .
விசர்க் கதை கதைக்கிறீர்." அவள் கீழே பார்த்த வண்ணம் அழுது கொண்டிருந்தாள். கிட்ட வந்து தொட்டு ஆறுதல்
சால்ல முனைவதுபோல நெருங்க, "உங்களைப்போல கட்ட மனிசரின்ரை கைபட்டாலே என்ர உடம்பு கெட்டுட் போய்விடும். போய் உம்மடை செயரிலை இரும்." என்று
கோபத்தோடு சொன்னாள். "சா. எத்தினைபேர் உம்மைட் பற்றிச் சொல்லியும் கேட்காம விட்டது என்ர பிழைதான் அன்றைக்கு உம்மோடை வந்திருந்தால் சித்திராவேடை நடந்த மாதிரித்தான் நடந்திருப்பீர் கடவுள்தான் என்னை அந்தளவுக்கு நடக்காதபடி காத்திட்டார்."
"கடவுளாவது கத்தரிக்காயாவது, இந்த உடம்ட இருக்கிறது அனுபவிக்கத்தானே. அதைவிட்டிட்டுக் கலியாணம் மட்டும் காத்திருக்கிறது பேய்த்தனம், நான் গোল্টোনো নোটো பிறண்டஸ்மாரும் அப்பிடித்தானே. அதிலை என்ன தவறு" என்று தத்துவம் பேசினான். "உங்களைட் போலதானே உங்கடை பிறண்ட்சும் இருப்பினம் உங்கடை பிறண்ட்ஸ்மாதிரித்தான் நீங்கள் இருப்பியள் என்று எத்தினை பிள்ளையஸ் சொன்னவளவே. நான் தான் உன் போலி அன்பிலை மயங்கி ஏமாந்திட்டன். நீ இப்பிடியே வாழ்ந்தால் உன்ர வாழ்வு ஒரு நாள் நரகமாய்த்தான் மாறும். நீ இப்பிடி நடக்கிறதுக்கு உன்ர 6066 இல் ாட்டிப் பிள்ளையளிட்டை இருந்து பலனை அனுபவிப்பாய், இனிமேல் எனக்கும் உமக்கும் கதை யில்லை. என்று ஆத்திரத்தோடும் கவலையோடும் அழுதவாறு எழுந்து சென்றாள். "நல்ல ஒரு பழத்தைச் சுவைக்கக் கிடைக்கேலையே என்ற ஆதங்கத்தோடு அவன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கீர்த்திகா சில நாட்கள் அழுதுகொண்டுதான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தாள். அடிக்கடி பல்கலைக்கழகச் சிற்றாலயத் தில் இருந்து நிறையச் செபிப்பாள். தன் கவலை நண்பி சுபாசினியுடன் கலந்து கொண்டாள் t புரிந்துணர்வு அவளுக்குப் பேராதரவாக இருந்தது. இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட --- என்ன என்று அடிக்கடி சிந்தித்தாள். தான் ஒழுக்கத் தோடு நடந்து கொண்ட சந்தர்ப்பங்களை எண்ணி மகிழ்ந்தாள்.இவனுடனான உறவில் தான் எங்கெங்கு பிழைவிட்டேன் என்று சிந்தித்துப் பார்த்து எதிர்கால உறவுக்கான பாடங்களை மனத்தில் நிலைநிறுத் தினாள். எனினும் இத்தகைய முதல் காதல் அனுபவத் தின் பாதிப்பிலிருந்து அவளால் முற்றாக மீள முடிய ପୌର୍ଗଠ60୬ରd.
புரிந்துணர்வு நிறைந்த நண்பிகளும் இவளது அன்பு அப்பாவும் பலரிடம் விசாரித்து விட்டுத் தான் என்னை அவளுக்குப் பரிந்துரைத்திருந்தார்கள். என்னுடனான அனுபவங்கள் அவளது கவலையை நீக்கியது மட்டுமல்ல அவளது வாழ்வின் திருப்பு முனையாகவும் அமைந்தது. அவளது ஒழுக்க வாழ்வையும், தன் கவலையைத் தீர்க்க அவள் தானாக எடுத்துக் கடைப்பிடித்த நல்ல முயற்சிகளையும் சுட்டி காட்டி அவளைப் பாராட்டினேன். எனது துணையோடு,
தான் உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் எவை? செய்துமுடிக்கவேண்டிய வேலைகள் எவை? தன் எதிர்காலத்தை எப்படி இனி அமைப்பது? ஆண்களுடனான உறவில் எப்படி நடந்து கொள்வது? என்பவைபற்றிப் பல புதிய தீர்மானங்கள் எடுத்தாள். பிறரைப் புரிந்துகொள்ளும் திறன்களை யும் அவளுக்குக் கற்றுக்கொடுத்தேன். அவள் "நன்றி" என்று உணர்வு பூர்வமாக மரியாதையோடு கூறியது எனது உளஆற்றுப்படுத்தல் எவ்வளவிற்கு அவளுக்கு நன்மையளித்துள்ளது என்பதை உணர்த்தியது. மகிழ்ச்சியோடு விடைகொடுத்தேன். ப

Page 84
5லைகள் மக்களது உணர்வையும் சிந்தனையையும் ரசனையையும் கற்பனையையுந் தூண்டி விடும் தன்மைகளைக் கொண்டவை. உணர்ச்சிவசப்படும் தன்மையையுந்தரவல்லன. கலைச் சாதனங்கள் பெருவாரியாகவும் பெருமள விலும் செப்பமான முறைகளிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன; கிடைக்கின்றன. மலர்ந்திருக்கும் பூ, காலைச் கரியோதயம், பறவைகளின் உலாவல், மரஞ்செடி கொடிகளின் இலைகள், கொப்புகள், கிளை களின் அசைவுகள், மிருகங்களின் அசைவியக்கம், குருவிக் கூடுகள், வீடுகள், மலைகள், ஆறுகள், அருவிகள், குளங்கள், கடல், வான், மண், விண், முகில், ஆலயங்கள், வாகனங்கள், தெய்வ விக்கிரகங்கள், வர்ணப் பூச்சுகள்,
ஆணர் பெண மனித வர்க்கத்தினர், குழந்தைகள், மழை, இருட்டு, நிலவு, இசை, சிற்பம், ஒவியம், நடனம், கட்டடம், சிரிப்பு, அழுகை, மரணம், ஊர்வலம் என்ற அனைத்திலுமே “கலைத்துவம்" என்பது பொதிந் துள்ளது. உலகம் உருண்டை என்பதும் சூரியப் பிரகாசம் என்பதும் கூடக் கலைகளிலேயே அடங்கும். மருத்துவம் என்பதும் ஒரு பெருங்கலையேயாம்; சோதிடம், விஞ்ஞானக் கலை என்றும் கூறும் வழக்காறுண் டல்லவா? அறிவுக்கும் மனதிற்கும் அனுபவத்திற்கும் இடந்தரும் தன்மை கலைகளுக்குண்டு இயற்கையின் படைப்புகள் கலைத்துவமிக்கனவென்பது காணத் தக்கது. ஆகக் கலைத்துவ மேதாவிலாசமென்பது அதனைச் சுவைப்போன் பெறும் இன்பத்திலேயே தங்கியுள்ளது. இங்கு கலைக்கும் கலைஞனுக்குமுள்ள அத்யந்தத் தொடர்பு துலக்கம் பெறுகிறது. கலையின் பரிணமிப்பு, கலையின் எழுச்சி, கலைப் படைப்புகளின் நுட்பம் பற்றிய அறிவு, கல்வி, அனுபவம் வாசகனொருவனது உணர்வுகளை ஆக்கத் திறனை,
ஜீவநதி 80
 
 
 
 

படைப்பு நுட்பத்தை மேன்மையுடைய தாக்குமென்பது அனுபவ உண  ைம காட் சரியற  ைவ யு ம கருத்தியலறிவையும் கோட்பாட்டு நோக்கையும் ரசனை முறை நயப்பையும் நல்குந்திறன் கலைகளுக் குண்டு. கலாவிமர்சகர்கள், ஆக்க இலக்கியப் படைப் பாளிகள், சிற்பிகள், இசைவாணர்கள், கற்பனையிலே ஓவியம் தீட்டும் ஒவியர்கள், எழுத்து வாண்மைமிக்க படைப்புப் பிரம்மாக்கள், மேதைகள், சிந்தனை யாளர்கள், விமர்சகர்கள் அனைவரும் கலை பற்றிய பிரக்ஞையும் கலாபூர்வமான நோக்கும் கொண்டவர் களென்பது தரும், கலை பற்றிய பன்னெடுங்காலத்துச் சிந்தனைத் தடம் நம் மனக் கண் முன் விரிகிறது. பழம்பெரும் நாகரிகங்களிலேயும் மூடுண்டு கிடக்கும் புவி மேற்பரப்பில் ஆழப் பகுதியிற் கிடக்கும் நாகரிகங் களினதும் இடிந்த கட்டடங் களினதும் சிலைகளினதும் தொல் பொருட் சின்னங் களினதும் கூறுகள்,
ஆக்கத்திறன்கள்:
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
சிதைவுகள், கண் விழிப்புகள் என்பன கலைத்துவப் பெறுமானங்களைப் புதிது புதிதாகவே நல்கவல்லன. விக்கிரகவியல், நாணயங்கள், மட்பாண்டங்கள், அழிந்த நகரத்தின் எச்சங்கள் கலைக் கொள்கையை விசாலித்து நம்மை வியப் பார் வத்திலாழ்த்துப் பெற்றியன.
கல்லிலும் மண்ணினாலும் மரத்தினாலும் அமைக்கும் கலைகள் ஒரு வகையின. மனிதனிடத் திலே இயற்கையாயுள்ள குரலினாலமையும் இசை வளம், குரல் ஒசை, சங்கீதம் என்பது பிறிதொரு வகை மொழியையும் சிந்தனையையும் கற்பனையையும் எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையும் புனைவுகள் பிறிதொரு வகையானவை. அழகுணர்ச்சியும் நயப்புணர்வும் வாசனை விருப்பை யும் நல்க வல்லவை படைப்பிலக்கியங்கள். வெறுமனே காட்சியனுபவத்தில் கண்டு விட்டுப் போய் விடும் தன்மை இலக்கியக் கலைக்கு இல்லை. இலக்கிய விமர்சனம், இலக்கியத் திறனாய்வு, இலக்கியச்
இதழ் 50
ܐܝ

Page 85
e
சிந்தனை என்பதில் "எண்ணங்களின் விரிவு" தொக்க நிற்கிறது; வளர்ச்சிப் படிநிலை தென்பட வேண்டும் உயர்ச்சியான வளர்ச்சிக்கான நிலைமை ஏற்ப வேண்டும். மரங்களிலே உயர்வான மரம் நிற்பது போல மலைகளில் மிகவுயர்ந்த சிகரங்கொண்டவை உலக படத்திலே குறிக்கப்பட்டிருப்பது போல நீண்ட ஆறு உயர்ந்த மனிதன், எடையுள்ள மனிதன் கண்டுபிடித்து கூறுப்படுவது போலவே "எண்ணங்களின் உயர்ச்சி"யை மெயப் ப் பித்து வெளிப் படுத்துவது இலக்கியச கலையாகும். அதனால் தான் படைப்பாளி எழுத்தாளன் நூலாசிரியன், சஞ்சிகையாசிரியன் திரும்பத்திரும் மீட்டுருவம் செய்யப் படுகிறான். ஏனெனில "சிந்தனையின் விரிவாழம்" விளக்கமுற விளக்கமுற எழுத்தாளன் பெரும் நேசிப்புக்குரியவனாகிறான் படைப்பு நிலையில் கெளரவம் பெறுகிறான்: நேசிப்புக் குள்ளாகிறான். கல்வியும் அறிவும் சிந்தனையும் கணத்துக்குக் கணம் மாற்றமடைந்து வளர்ச்சி நிலையை எய்தும் வேளைகளிலெல்லாம் மனதிற்கும் அறிவுத் தேடலுக்கும் "தீனி வேண்டப்படும். அத்தீனியைத் தங்குவன இலக்கிய எழுத்துருவாக்கங்கள் தான் இவ்விடத்திலே ஒரு நிகழ்முறையை-மாறும் புதிய போக்கையும் - மனங்கொள்ளல் அவசியமாகும் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஆசிரியனது எழுத்தாளனது படைப்பில் வெளிவரும் 'களமும் எப்போதும் மாறுபடத்தக்கதென்ற பேருண்மையே அதுவாகும். இலக்கியக் கலையின் நுட்பமான நோக்கு இதில் அடங்கும் காலத்தின் பின்னணியில், களத்தின் தன்மைக்கேற்பவே இலக்கியத்தின் பாடுபொருள் உள்ளடக்கம் இயலும். இம்மாற்றம் ஒப்பீட்டு ரீதியில் ஏனைய கலைகளுக்கு பொருந்தாதென்றே குறிப்பிட லாம். "காதல்" எனும் உள்ளடக்கம் கவிதையிலும் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் திரைப்படத்திலும் கட்டுரைகளிலும் இடம்பெறுவதுண்டு தமிழிலக்கிய மரபில், "புதுமை காணும் எழுத்தாளர் களில் அனேகர் இக்காதலை முதன்மையாகவே கைக்கொண்டு படைப்பிலக்கியம் செய்கின்றனர். அது வற்றாத உள்ளடக்கம் தான்: அதன் விகச்சிப்பும் வண்ணங்களும் ஆளுக்காள் வித்தியாசமானதும் கூட ஒரு சிறிய உயர்வலையை சபலத்தை சலனத்தை ஏற்படுத்த வல்ல இந்த உள்ளடக்கம் பற்றிய சர்ச்சைவாதப்பிரதிவாதம்-இன்று இலக்கிய விமர்சன உலகிெே வேறொரு புதிய பரிணாமம் பெற்று விட்டதென்றே எண்ணத் தோன்றுகிறது. காதலியை "பெண்” என்பவள் முதன்மை பெறும் நிலை ஒரு காலத்திலிருந்தது இன்றைய பெண்ணிலைவாதிகளின் ஆக்ரோஷமான கோஷம் "பெண்” உடலால், உணர்ச்சிகளால், பாலியல் தன்மையால், மனவோட்டத்தால் வேறுபட்டவளாக விட்டாள் என்பது. இது இலக்கியம், சமூகம், எதிர்காலம்
ஜீவநதி

வளர்ச்சிநிலை, கலைக் கொள்கை, இயற்கை நியதி, யதார்த்தம் என்பவற்றை மறுதலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆகவே எது சரியானதெளிவான - உறுதியான உண்மையான தடம் என்பதனைக் கண்டு காட்ட வேண்டிய தேவை களவிமர்சகர்களுக்குத் தான் உண்டு. ஆயினும் முடிந்த முடிவுகள் ஒன்று ஒன்றில்லை; கால மாறுதல்களுக் கேற்பக் கருத்தோட்டங்களும் மாறுபடும் என்பதே நியதி, "விதிகள்" தான் சரி என்பதுமில்லை, விதிகள் மீறப்படுவதும் மிகச்சரி என்றில்லை என்பதனையே உறுதிபட நெஞ்சிருத்திக் கொள்ளவேண்டியுள்ளது. உடைந்த உள்ளங்களினது வக்கிரம்-வன்மம்-வசைவாண்மை பொது நியதியுமல்ல; சிறப்புக் கோட்பாடு மல்ல, அளவையீடு செய்வதில் மதிப்பீடு பண்ணுவதில் தடம்-நிலைதவறாதிருத்தல் நன்மை தரத்தக்கது. உண்மை புனிதமானது. விரும்பியவர்கள் விரும்பிய வாறு வியாக்கியானஞ் செய்யலாம். ஆயினும் உண்மையே சாகடிக்கும் நிலை வருந்ததத்தக்கது. வெட்கப்படத்தக்கது. அங்கீகரிக்க முடியாதது; ஆதரிக்கப்படவும் முடியாது என்பதே இலக்கிய விமர்சனத்தின் உயர் கொள்கை. t
இலக்கியக் கலையில் மொழியின் பங்குப் பணி மிகப் பெரிது. மொழியே கருத்துத் தொடர்பை
வாசகனிடத்திலே ஏற்படுத்துவது இன்று மொழி
நடையின் வகைமைகள் ஆக்க இலக்கியங்களினூடே அபரிமிதமாகவே பெருக்கெடுத்து ஓடுகிறது. எனினும் எது சிறந்தது? என்று காணும் "தரநிர்ணயம்" என்று ஒன்று இல்லாமற்போக முடியுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. மொழியியலாளர்கள் கூறும் பேச்சு மொழி, எழுத்து மொழி, கிளை மொழி வகைமைகள் குறித்த சிந்தனைத் தெளிவும் இலக்கிய வாசகனுக்கு அத்தியாவசியமானதெனினும் சராசரிச் செம்மொழி ஆக்கப் பண்பினை எழுத்துவல்லான் கொள்ள வேண்டும் என்பது சரியான கருத்தாகவே படுகிறது. மொழியின் பொதுமையியல்புகள், இலக்கணப் பெறுமானங்கள், எழுத்து நடையின் இலட்சணங்கள், தாற்பரியங்கள் என்பன பற்றிய அக்கறை-பிரக்ஞை ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்கு-படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டுமென்பது அவர்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகாது. எனவே மொழியைக் கருவியாகவும் தொடர்புச் சாதனமாகவும் கொண்டு உருவாக்கப்படும் படைப்பிலக்கியங்கள் தரமும் தீரமும் திட்டமும் நுட்பமும் பயனும் பக்குவமுமானதாக அமைவது வரவேற்புக்குரியது. இலக்கியக்கலை நின்று நிலைக்கும் ஆவணமாகும். எழுத்துருவாக்கம் என்பது உன்னதமான பெரும்பணி எங்கு செல்கிறோம்? என்று சிந்திப்பதுதான் இன்றைய அவசர தேவை. ப
இதழ் 50

Page 86
க. சட்டநாதன்
விெந்து தணிந்:
"பெட்டையளில பெடியளுக்குச் சரியான விருப்பம்." சொன்ன வசந்தன், உன்னிலையும் எனக்கு. என்று சேர்த்துச் சொன்னான்.
“GT6őT60'îleSODGADU JIT. SD 60Të5G5IT,...?" "முளைக்க முந்தி என்ன முத்தல் கதையள். பதிமூண்டு, பதினாலு வயசில சாய்ச்சு மேய்க்கிற கதையளே."
அஞ்ஞா வில் மிளகாயப் பிடுங்க வந்த நாகாத்தையின் குரல் அவளை நிதானப்படுத்த, விசுக்கென எழுந்து, வீட்டினுள்ளே சென்றாள்.
அவள் வெளியே வருவாளென, ஒரு சில நிமிஷங்கள் காத்து நின்ற வசந்தன் ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தான் ஜன்னலில் அவளது நிழல் தெரிந்த மாதிரி இருந்தது. ஆள் எதுக்கும் சுளுவாய்ப்படிவாள் போலக் கிடக்கு. நினைவுகள் ததும்ப, வீட்டுப் பக்கமாக நடந்தான்.
தொலைவில் போய்க்கொண்டிருந்த அவனுக்கு, "ஸ்கூலுக்கு வருவ தான." என்ற அவளது குரல் மெலிதாகக் கேட்டது.
திரும்பி ஜன்னலைப் பார்த்தான். அவளைக் காணவில்லை. கேற்றுக்கு வெளியே வந்து, கையசைத்த படி அவள் நிற்பது தெரிந்தது. இவனும் கையசைத்து அவளிடம் விடை பெற்றுக்கொண்டான்.
வசந்தனுக்கு அவளைப் பிடித்திருந்தது. அந்த ஒடிசலான உடம்பு, பூசி, மெழுகிய வயிறு, லேசான திரட்சி காட்டும் மார்பு, பூப்போன்ற கீறலான உதடுகள், கண்களில் வழியும் உயிர்ப்பு, காணும் போதெல்லாம் - பாந்தமாய் ஒட்டிக்கொள்ளும் இயல்பு என்று எல்லாமே அவனை மருள வைத்தன.
கோவியப்பெட்டை என்ற தயக்கம் இருந்த போதும் அவளை அளைந்து பார்க்கவேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு இருந்தது.
சாமத்தியப்படாத பெட்டை, பிசக்கினாலும் பிழையேதுமில்லை. இந்தத் தறுதலைத்தனத்தைக்
ஜீவநதி 32

།
*啶 காதல் கீதல் எண்டு அவள் மயங்கி மிதப்புக் கொண்டு விடுவாளோ. மிதக்கிற வரைக்கும் மிதக்கட்டும். জதொட்டுப் பார்க்க வேணுமெண்டால் தொட்டுப் பார்க்க வேண்டியதுதான். அதற்குக் காலநேரம் பார்க்கேலுமா GT60া60া... ?”
மனதில் திரளும் எண்ணங்களை அவனால் தடை செய்ய முடியவில்லை.
அவள், அவனை நெருங்கிவந்த சந்தர்ப்பங்கள் தான் எத்தனை நெருங்கி வரும்போதெல்லாம் அவளது காந்தும் உடலும் குப்பெனச் சிவக்கும் முகமும் - அவனது கள்ளப்பட்ட மனசை என்னமாய் அலைக் கழிக்கிறது. "தொட்டுப்பார்ப்போமா என்று நெருங்கும் போது மனசு சோர்வுகொண்டு, பதகளித்து விடுகிறதே. படபடப்பும் இனிமையும் மிகுந்த அந்தச் சந்தர்ப்பங் களை இனிமேலாவது தவறவிடாமல் வசமாக்கிக் கொள்ளவேணும்"
தளர்ச்சி ஏதுமில்லாத நம்பிக்கையுடன் வெளியே பார்த்தான்.
மாலை மயங்கிக் கிடந்தது. இறுகிக் கிடந்த காற்றில் லேசான குளிர் மழைத்தூறலும் இருந்தது; பன்னீர் தெளிப்பது போல,
வாழைத் தோட்டப் பக்கம் ஏதோ பளிச்செனத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தான். கவிதா தான் வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் இயல்பான துள்ளல். நெருங்கி வரும்போது, மணிப்புறாவின் மொடமொடாப்பும் சிறகுவிரிப்பும் அவளிடம் இருந்தது. "சமூகக்கல்விநோட்ஸைத் தாரும் பள்ளிக்கூடத் திலை கொண்டுவந்துதாறன்" “.
பக்கத்திலை, மகேஸிட்ட வாங்கலாமே." "அவளின்ரை எழுத்து, கோழி கிளறின மாதிரி இருக்கும். படிக்கேலாது. உம்மடை எழுத்து வடிவு."
"எழுத்து மட்டுமா, நான். நானும் வடிவு ਲੁT60.? நுனி நாக்கில் வந்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். K.

Page 87
ܥܡ3
உள்ளே படி ஏறி வந்தவளின் அருகாக வந்தவன்: "என்ன தலையெல்லாம் நனைஞ்சுபோய்க் கிடக்குது"
கூறியவன், அவளது தலையைத் துடைத்துவிடக் கைகளைத் தூக்கினான். அப்பொழுது அவனது கைகளை அவள் வேகமாகத் தட்டிவிட்டாள்.
ஏன் என்பது போல அவனது பார்வை இருந்தது. "வசந்தன் கெட்ட பழக்கம்." "கெட்ட பழக்கமா..?" "ஒம். தொடிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது" "போடி ஒல்லிப்பாச்சான். பெரிய அழகி எண்ட கெப்பர் இவவுக்கு 'கோ'வன்னாத் தானே நீ. உன்னை ஆர் தொடுவின."
அவளது நானைக் கீறியதான உணர்வில் திளைத்தவன், சற்று உரக்கவே சிரிக்கவும் செய்தான்.
மனதில் விழுந்த அடி தாங்காது தவித்தவள், அவனது சமூகக்கல்வி நோட்ஸைக்கூட வாங்கிக் கொள்ளாமல், வாழைத் தோட்டப் பக்கமாக ஓடினாள். அவள் ஓடுவதையே பார்த்தபடி நின்ற அவன்;
இவளை. இந்த வாழைப்புதருக்குள்ள மடக்கி, விழுத்தி, ஆசைதீர அணைத்து. அனைத்து.
பீறிட்டு வந்த காம உணர்வு அவனது உடலின் அணுக்கள்தோறும் பிரவகித்து அவனைச் சதிராட வைத்தது.
தூரத்தில் அம்மா வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் இறுகிக் கிடந்த அவனது உடல், தளர்ச்சி கொண்டு லேசாகியது. உணர்வுகளும் உடலும் குளிர்ந்த நிலையில் அம்மாவைப் பார்த்து அவன் மெலிதாகச் சிரித்தான்.
"என்ன. என்னடா வடுவா. என்ன கள்ளம் பண்ணிப்போட்டு நிக்கிறா.?"
அம்மாவுக்குக் கிட்டவாக வந்தவன், அவளை அனைத்தபடி "ஒண்டுமில்லையம்மா..!" என்று கூறினான்.
அம்மாவின் அணைப்பும் தொடுகையும் அவனுக்கு அப்பொழுது இதமாக இருந்தது.
இரண்டு வருஷகாலமாக - சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் - அவன் செய்யும் சின்னச் சின்ன சில்மிஷங்கள் அவளுக்குக் கூச்சம் தருவதாய் இருந்தபோதும் - கூடவே, உடலில் ஒரு மலர்ச்சியையும் வெதவெதப்பையும் தரத் தவறவில்லை.
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவளைப் பார்த்ததும் அவன் கேட்டான்: "வித்தியாசமான புது Gil60)6ITUITỦ_6ìLIT60ỦT(B Gil60)6ITU J[T(B6)]LDIT.?"
அந்தக் கேள்விக்கு "ம்" சொன்னவள், அவனுக்குப் பின்னால் இழுபட்டுச் சென்றாள்.
இதுக்கெல்லாம் ஸ்ரோர் ரூம் தான் வசதி என்று
ஜீவநதி

நினைத்தவன், ரூமுக்குள் வந்து, லேசாகக் கதவைச் சாத்திக் கொண்டான். ஒரளவு இருள் அடர்த்தி கொண்டிருந்த அந்த அறையில் அவளையே விழுங்கிவிடுவது போல விடுத்துவிடுத்துப் பார்த்தான்.
"என்ன.?" என்று அவள் சின்னச் சிரிப்புடன் கேட்டாள்.
"என்ரை கவிதா நல்ல வடிவு." "6)IgG36)IT.” அவளை மேலே பேசவிடாமல் அவளது உதடுகளை விரல்களால் கசக்கி நெரித்தான்.
"நோகுதடா..!" நோகாதென்றவன், மெதுவாக அவளது உதடுகளை தனது விரல்களால் வருடினான்.
"இப்ப உன்ரை விரல்கள் வெல்வெற் மாதிரி சோக்கா இருக்கு"
"இப்படியெல்லாம் சேட்டை விடுறை. என்னைச் சடங்கு முடிப்பையாடா..?"
"FLI) (85T...?" அவனது கேள்வியில் இழையோடிய கேலி அவளைக் கலங்க வைத்தது.
"ஸ்ரோர் ரூமில என்னடா நடக்குது..? அவனது அம்மாவின் குரல் தொலைவில் கேட்டது.
நடுங்கியவன், ரூமைவிட்டு வெளியே வந்தான். கவிதாவும் அவன் பின்னால் மசிண்டியபடி வந்தாள்.
"கெட்ட பழக்கம். குமராகப்போற பெட்டையை ஏனடா கூட்டிக் கொண்டு திரியிற."
"இல்லை. ஒண்டுமில்லை அம்மா! கவிதாவுக் குப் பொரிஅரிசிமா எடுத்துக்கொடுத்தனான், அதுதான்."
"என்னடா புலுடாவிடுறை. அவளின்ரை வாயில மாவையும் கானேல் லை ஒரு மண்ணையும் காணேல்லை."
கவிதா கண்கலங்கியபடி, வாழைப்புதர்ப் பக்கமாக நழுவி, அவளது வீட்டைப் பார்த்து ஓடினாள். அவளைத் தடுத்து நிறுத்துவதற்கு வழி ஏதும் தெரியாமல் தவித்தவன், அவள் போவதையே பார்த்த ULę JólaốTADT6ÖT.
நாலு நாள் கழித்து, ஒரு மாலை நேரம் இவன் கவிதாவின் வீட்டுப் பக்கமாகப் போனான். கவிதா மட்டும்தான் வீட்டில் இருந்தாள். அவளது அம்மா ஆரவயல் பக்கம் போயிருக்கவேனும் - ஆள் சில மனில்லை. கவிதா ரீவி. பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன பார்க்கிற.? இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் சுட்டியும் சித்திரமும்தான்பார்ப்பையா.?" கேட்டவன், அவளது கையில் இருந்து ரிமோட்டைப் பறித்துஸ்ரார் மூவீஸ் வைத்தான்.
ரீவி திரையில் ஒரு இளமையான நீக்ரோத் தேவதையும் வெள்ளை வெளேரென்ற செம்பட்டைத்

Page 88
தலையனும் நின்றார்கள். மிக நெருக்கம் பேணிய அவ்விருவரும் எக்கணத்திலும் முத்தமிடக் கூடுமென அவன் எதிர்பார்த்தான். அவனது எதிர்பார்ப்பை மெய்ப்பிப்பது போல அந்தச் செம்பட்டைத் தலையன் அவனுக்கு அருகாக நின்ற அந்தக் கறுப்புத் தேவதையின் உதடுகளைக் கவ்வி, தனது நாவினை அவளுடைய வாயினுள் நுழைத்து, அழுத்தமாக முத்தமிட்டான்.
அதிர்ச்சியுடன் அதனையே பார்த்தபடி இருந்த கவிதா உடலைச் சிறிது நெகிழ்த்தி, செற்றியில் சரிந்து படுத்துக் கொண்டாள் வாகாகக் கிடந்த அவளை நெருங்கிய வசந்தன், அவள் எதிர்பாராத வேளை அவளது உதடுகளை லேசாகத் தனது உதடுகளால் வருடி முத்தமிட்டான்.
ஒரு கணம் சிலிர்த்த கவிதா, அடுத்த கணம் உள்ளுணர்வின் அழுத்தத்தால் உந்தப்பட்டு, அவனது மார்பில் தனது கைகளைப் புதைத்துத் தள்ளினாள். அவளது இடது காலும் அவனை உதைக்கத் தவற வில்லை. எதிர்பாராத அவளது அந்தத் திடீர்த் தாக்குதல் அவனை அலக்க மலக்க நிலத்தில் விழுத்தியது.
சுதாரித்துக் கொண்டு எழுந்தவன், அவளது முகத்தைக்கூடப் பார்க்க விரும்பாதவனாய், அவளது வீட்டைவிட்டு வேகமாக வெளியேறினான்.
தூரத்தில், கவிதாவின் அம்மா தலையில் புல்லுக்கட்டோடு வந்துகொண்டிருந்தாள்.
அவளது பார்வைப்புலத்தினுள் அகப்படக்கூடாது என்ற கவனத்துடன், அவன் தாவாடி வயலில் இறங்கி வேகமாக நடந்தான்.
அந்த நிகழ்ச்சியின் பின்னர் ஒரு மாத காலத்துக்கு மேலாகவே அவர்கள் பேசிக் கொள்ள வில்லை. பள்ளிக்கூடத்தில் கூட ஒருவரை ஒருவர் அதிகம் கண்டுகொள்ளாமலே இருந்தார்கள்.
கணித பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க வேண்டும் என்ற சாட்டில் அவளை அவன் மீளவும் அணுகினான். அவனைக் கண்டதில் அவள் சிறிது மகிழ்ச்சியடைந்தாள். அவனுடன் அளவோடு பேசியவள், கணக்குப் பாடத்தில் உள்ள சிடுக்குகளை மட்டும் நீக்க உதவினாள்.
எல்லாப் பாடத்திலும் இவள் கெட்டி. என்றாலும் கணித பாடத்தில் புலி. நினைப்பதோடு நில்லாது, அவளை மனந் திறந்து பாராட்டவும் செய்தான். குலைந்து கிடந்த அவர்களது நெருக்கம் மீளவும் துளிர்ப்புக் கொண்டது. இருவருக்குமிடையிலான சரச சல்லாபம் திரும்பவும் தீவிரம் கொண்டது.
உடலோடு உடல் ஒட்டிக்கிடப்பது மலர்ச்சி யடைந்து நெகிழ்ந்துபோய்க் கிடக்கும் அழகை ரசிப்பது, கண் இமைகள், காதுச் சோணைகள், உதடுகள் என எல்லா இடங்களிலும் விரல் நுனியால் ஸ்பரிசிப்பது என்று அவர்களது சேட்டைகள் தொடரவே செய்தன. ஒரு நிதானமும் கவனமும் அவனைவிட அவளிடம்
ஜீவநதி

அதிகம் இருந்தது. கட்டுப்பாடுகளை மீறிவிடக்கூடாது என்ற எண்ணம் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தன்நிலை மறந்த அவன், அவளது மார்புகளில் முத்தமிட்டான். பரபரத்த அவனது கரங்கள், அவளது அடிவயிறுவரை சென்று தடவியது. அதற்குக் கீழாக அவனது கரங்கள் இயங்க முற்பட்டபோது அவள் அவனது கரங்களைத் தட்டிவிட்டதோடு, மனம் கூசிய வளாய், அவனைவிட்டு விலகவும் செய்தாள்.
அந்த விலகல் மிக நீண்டதாகவே இருந்தது. பொசுபொசு பூனைக்குட்டிகளது அந்த ஒட்டுதலும் உரசுதலும் ஒரு முடிவுக்கு வந்தது போல ஆகியது.
அதன் பின்னர், அவள் அவனது வீட்டுப் பக்கம் மட்டுமல்ல, பாடசாலைப் பக்கமும் வரவில்லை. இரண்டு கிழமைக்கு மேலாகவே அவளைக் காணாத வசந்தன் கவிதாவின் சிநேகிதி மகேஸ்வரியைப் பார்த்துக் கேட்டான்:
“கவிதா பள்ளிக்கூடம் வரேல்லை. என்ன விஷயம்."
கொடுப்புக்குள் குமிழிட்ட சிரிப்பைப் பதுக்கி வைத்தபடி, மகேஸ் அவனுக்குக் கிட்டவாக வந்து, ரகசியம் பேசுவது போலச் சொன்னாள்:
"கொஞ்சநாள் அவள் பள்ளிக்கு வரமாட்டாள். அவள் இப்ப பெரியவள்."
"பெரியவள்.?" "அவள் சாமத்தியப் பட்டிட்டாள். சடங்கெல் லாம் முடிஞ்சுதான் பாடசாலைப் பக்கம் வருவாள்."
தனியாக விடப்பட்ட வசந்தன், காற்றில் மிதந்து, மேலே மேலே பறப்பதான உணர்வில் திளைத்தான். ஏதேதோ கற்பனையின் சடைவு அவனுள் படர்ந்தது.
'உலர்ந்து போய்க் கிடந்தவள். இனி. இனித் தேன் சொரியும் மலராய். மலரை நெருங்கவிடாத முட்கள் இருக்கவே செய்கின்றன, அவற்றைக் கெல்லி எடுத்து விட்டால் போகிறது. அவளது உடலை, அந்தப் பொன்பூவை வளைத்து, மடித்து, பிழிந்து. சாறாய். அட, அதெல்லாம் முடியுமா." முடியும். இந்தப் பித்தந்
ரசமாய்த் துளிர்க்கும் எண்ணங்களால் அவன் அலைப்புண்டான். அதே சமயம் மூன்று மாதங்களுக்கு OT tLLLCLTSOLO S TTLSL S SL T ST SY T0 S S C CTLLS 0 L OOO தொடர்புகள் அறுபட்டுவிடக் கூடாதென்ற பரிதவிப்பும் அவனிடம் இருந்தது.
காலம் கனியும் என அவன் காத்திருந்தான். ஆனால், அப்படி இல்லாமல் - நாட்கள் அசமந்தமாக,
சாலங் காட்டியபடி நகர்ந்தன. •
கவிதா ஊரில் உள்ள மத்திய மகா வித்தியால
யத்தில்தான் உயர்தர வகுப்புவரை படித்தாள். பின்னர், யாழ்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பட்டதாரி
雪 -இதழ் 50

Page 89
ܥܡܼ
يحمي .
யானதும் - மறு வருஷமே, பயிலுநர் ஆசிரியராக நியமனம் பெற்றாள். ஊரோடு உத்தியோகம் எல்லாமே அவளுக்கு மகிழ்ச்சி தருவதாய் இருந்தன.
புதிய நம்பிக்கைகளுடன் ஆசிரியத் தொழிலை ஆரம்பித்தவளுக்கு, கடந்து போனவை கடந்து போனவையாகவே ஆகிவிட்டன. வாழும் முறையிலும் ஒரு ஒழுங்கும் நிதானமும் அவளது முயற்சி ஏதுமில்லாமலே கூடிவந்தது.
உடலையும் உள்ளத்தையும் கருகவைத்த வசந்தனின் தொந்தரவு, அவன் மலைநாட்டுப் பக்கம் உத்தியோகம் என்று போனதனால் இல்லாமல் போனது அவன் எப்பொழுதாவது ஊர்ப்பக்கம் வந்தால், அவளை எட்டிப் பார்க்கவே செய்தான். அந்தச் சமயங்களில் அவள் பிடிகொடாமலே நடந்துகொண்டாள்.
அவள் ஏ.எல்.இல் இருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. மிகவும் நம்பிக்கை தரும் வார்த்தை களை அவன் பேசியபோதும் - ஒரோர் சமயம் அவளது சாதி பற்றிய இழி நிலையைச் சுட்டிக்காட்டியதோடு, அவளது உடலைத் துய்க்க சகல அதிகாரமும் தனக்கு உண்டு என்பது போலவும் நடந்துகொண்டான். அத்துடன் அவள் இணங்கிவராத பட்சத்தில் அவனுக்கும் அவளுக்கு மான அந்த உறவை, ஊர் முழுவதும் கொட்டிச் சிந்தி விடுவதாக வேறு அச்சுறுத்தினான்.
அவனது அந்தப் பிதற்றல்களை அவள் உள் வாங்கிக் கொண்டபோதும் - மனசின் உள்ளோரத்தில் ஒருவகைக் கவர்ச்சியும் கசிவும் அவன்பால் இருந்ததை அவள் அறிந்திருந்தாள். அதனை அவனும் உணர்ந் திருந்தான். எல்லாமே அச்சொட்டாகப் பொருந்திவர, சாதகமான ஒரு சூழ்நிலையில் அது அவர்களிடையே அரையும் குறையுமாக நடந்தது.
ஓரளவு பிரக்ஞை தப்பியபோதும் - லேசான விழிப்பு நிலையில் அவள் அவனைப் பார்த்துக் (855LL LITIGT:
"இதெல்லாம் இப்ப வேணுமா..? சடங்கு முடிச்ச பிறகு பார்க்கலாமே. ஆசையா இருந்தாத் தொடுங்க. கிஸ் பண்ணுங்க. அது போதும்."
"போதுமா..? போதாது. இண்டைக்கு ஒரு எல்லை வரை போகவேனும் தப்பொண்டுமில்லை. இப்படி இருக்கேக்கை பாதுகாப்பா மட்டும் இருந்தாப் போதும்."
"பாதுகாப்பா. அது இருக்கா." "ம்." கொட்டியவன், அவசர அவசரமாக அவளை நெருங்கிவந்து, அவளது கண்களிலும் உதடுகளிலும் முத்தமிட்டான். அவளது மார்புச் சட்டையை நெகிழ்த்திய போது அவன் சற்றுத் தடுமாறியது போலத் தெரிந்தது.
"என்ன?" என்பது போல அவள் அவனைப் பார்த்தாள்.
இறுக்கம் கொண்டிருந்த அவனது உடல் தளர்ச்சி கொண்டதை அவள் சடுதியாக உணர்ந்தாள் விழிகள்
ஜீவநதி

பிதுங்கிய நிலையில், ஆழ்ந்த பெருமூச்சு விட்டவனாய், சோர்வுடன், அவளை விட்டுச் சற்று விலகிநின்று கொண்டான். அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. லேசான சிரிப்புடன் கேட்டாள்:
"என்ன. என்ன மூச்சுப்பறிஞ்சு போச்சுபோல." கண்களைச் சிமிட்டியவளின் உதட்டோரம் ஓடிய சுழிப்பும் நெளிப்பும் அவனைக் கூனிக்குறுக வைத்தன.
"நீயும் ஒரு ஆம்பிளை.! உனக்கெல்லாம் உந்த ஆசையள். உன்னாலை எதுவுமே முடியாதடா.you are impotent...."
ஓசை எழாத வண்ணம் முனகினாள். அந்த முனகல் அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும். செத்த
கொஞ்சம் பொறும். திரும்பவும் பார்க்கலாம்." GT6র্টা!pT6টো,
"nonsense. உன்னாலை எதுவுமே ஏலாதடா." கூறியவள் - தளர்ந்து கிடந்த தனது மேல் சட்டையைச் சரிசெய்தபடி, அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவள் பின்னால், வெளியே வந்த வசந்தன், அடிபட்ட மிருகம் போல நெடுமூச்செறிந்தான். அவளை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூடத் திராணியற்றவனாய்க் கூச்சத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அவமானப்பட்ட அந்த நிலையிலும் அவனது கண்களில் படர்ந்திருந்த வன்மமும் குரலில் இழைந்த குரோதமும் அவளை அச்சுறுத்தின. அது அவளுக்கு மிகுந்த பய உணர்வை தந்தது. ஒரு கணம் திடுக்கிட்டவள், தன்னை ஓரளவு நிதானப்படுத்திக் G135T600TLITGT:
இனிமேல். இவனோடு இந்த இரண்டும் கெட்டானோடு. எந்த சங்காத்தமும் வேண்டாம். ஏதோ மயக்கத்தில் இப்படிக் கிறுக்குத் தனமாக நடந்து கொள்ள வேண்டி வந்துவிட்டது. இது பிழையா. அவனிடத்திலான பயமா..? அல்லது. அல்லது அவனது துஷ்டத்தனமான தூண்டுதலால் இப்படி அள்ளுண்டு இழுபடும் நிலை வந்ததா.?"
அவளது மனம் இது விஷயத்தில் அதிக அளவு அலட்டிக் கொள்ளவில்லை. ஏதோ, இந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டதான உணர்வே அவளுக்கு அப்பொழுது ஏற்பட்டது.
இருசிரிய அறையில் இருந்தபடி, மாணவர்களது பயிற்சிக் கொப்பிகளைத் திருத்திக் கொண்டிருந்தவள், எல்லாவற்றையுமே உதறித்தள்ளியதான உணர்வுடன் நிமிர்ந்தாள். லேசாகச் சிரித்துக் கொள்ளவும் செய்தாள்.
"என்ன கவிதா. மெளனமும் சிரிப்புமாய் இருக்கு. எதை நினைச்சு..?
அகிலா ரீச்சர்தான் அவளை அணைத்தபடி (335 LT6T,

Page 90
தொடர்ந்து அகிலா சொன்னாள்: "நான் கேட்டதுக்கு இன்னும் பதில் இல்லை. இன்னும் போயிக்கேல்லையா..? அம்மாட்டக் கேட்டுப் பாரும் பரந்தாமனுக்கு உம்மில ஒரு கண் விழுந்திட்டுது. அந்தப் பெட்டை எவ்வளவு வடிவு. எண்டு வாயூறி ஊறிச் சொல்லிக் கொண்டு திரியிறார்"
"சாதி சனம் இல்லாத பெடியன்; இருந்தாலும் நல்ல பிள்ளை ஆள் வன்னிப் பக்கம், பயமா..? வன்னியை விட்டு வந்தவர், இஞ்ச யாழ்ப்பாணத்தில தான் செற்றிலாகப் போறார்."
"உம்மைக் கேட்டுப் பார்க்கச் சொன்னவர். உம்மடை இறுக்கமும் பிடிகொடாத போக்கும் ஏன் எண்டு எனக்குத் தெரியும் ஆனால் அவருக்குத் தெரியாது. உம்மை நேரடியாகக் கேக்கக் கொஞ்சம் தயங்கிற மாதிரித் தெரியது. ஆள் உமக்கு நல்ல பொருத்தம், அவற்ரை மனம் குளிர்ரமாதிரி ஏதென் யோசிச்சுச் சொல்லுமன்."
முதிர்ச்சியும் காலம் கற்பித்துத் தந்த பாடமும் அவளைத் தீர்க்கமாகச் சிந்திக்க வைத்தது.
"யோசிக்கிறன் ரீச்சர். எதுக்கும் நான் ஒருக் கால் அம்மாவோடை கதைக்கவேணும். பரந்தா மனிட்டையும் பேசிப் பார்க்கிறது நல்லம், சின்ன வயசில "செக்ஸ் விஷயத்திலை சொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் - வயது வந்து உசாரான பின்னர் எந்த ஆம்பிளையையும் முழுசா நம்பிறகில எனக்கு தயக்க மிருக்கு ரீச்சர். இந்த ஆளும் பத்தோட பதினொண்டு அத்தோட இதொண்டென்று இல்லாமல் இருந்தால் சரி."
மறு நாள், பாடசாலையில் கடைசிப் பாடவேளை மணி அடித்தபோது, பக்கத்து வகுப்பிலிருந்த அந்த நெடிதுயர்ந்த உருவம் அவளுக்கு அருகாக வந்தது. அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
ஒரு ஆணுக்குரிய தோற்றமும் பொலிவும் அவனிடம் தொகையாகவே மண்டிக் கிடந்தன. அவனது கண்களில் ததும்பி வழிந்த கருணையும் பட்சமும் அவளை ஈர்த்தன.
உட்கார்ந்திருந்தவள், மரியாதை கருதி எழுந்துகொண்டாள்.
"இருங்க ரீச்சர்." என்று கூறிய பரந்தாமன், பக்கத்தில் இருந்த கதிரையை இழுத்துப் போட்டபடி, தானும் உட்கார்ந்து கொண்டான்.
“அகிலா உங்களைப் பார்க்கச் சொன்னவ. அதுதான்."
"பார்த்தாச்சு. பிறகென்ன.?" "பார்க்க மட்டுமா..? கதைக்க வேணும்." "கதைச்சாப் போச்சு." "இல்ல. நீங்க ஒரு முற்றுச் சொல்ல வேணும் ரீச்சர். வாற ஆவணியில நல்ல நாளாப் பார்த்து, எளிமை யாச் சடங்கை வைச்சிடலாம். நீங்க அதை விரும் பேல்லை எண்டா, திருமணப் பதிவோட முடிச்சிடலாம்."
"என்ன அப்படி அவசரம். ஆளைப் பார்க்கேக்க
ஜீவநதி

அவசரக் குடுக்கை மாதிரித் தேரியேல்லை. இது விஷயத்தில கொஞ்சம் நிதானமாயிருந்தால் என்ன..? அம்மாட்டை கதைச்சனான், அவ முடிவேதும் சொல் லேல்லை. இதுக்கெல்லாம் அவவின்ரை முடிவு அவசியம்."
"அப்பஉங்களுக்கு விருப்பமெண்டுசொல்லுங்க." சிரித்தபடி பரந்தாமன் எழுந்துகொண்டான். "இன்னுமொரு விஷயம் ரீச்சர். வசந்தனைப் பற்றியது."
"உங்களுக்கு அவனைத் தெரியுமா..?" "தெரியுமாவா..? இஞ்ச. இந்தப் பள்ளிக் கூடத்துக்கு வரமுந்தி, கட்டுகளில்தோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தில. ஒரு வருஷம் வரையில அவனோடதான் படிப்பிச்சனான்."
"ஏதாவது தொணதொணத் திருப்பானே என்னைப் பற்றி தனது கையாலாகத் தனத்தை மறைக் கிறதுக்கு - காதடைக்கிற வரைக்கும் விளக்கம் தந்திருப்பானே."
"உங்களைப் பற்றி அசிங்க அசிங்கமா திட்டினான் ரீச்சர். அவன்ரை பேச்சில நிதானம் தப்பின. பயமுறுத்திற ஒரு தொனிதான் இருந்தது.
"வசந்தன் தொட்டது. முத்தமிட்டது. சந்திச்ச கடைசிச் சந்தர்ப்பத்தில அடிச்ச கூத்தென்று எல்லாமே இவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ. தெரிஞ்சுமா என்னை இவன்."
நினைவுகளால் அலைப் புண் டவளுக்குக் கண்கள் கலங்கிவிடுகின்றன.
“என்ன ரீச்சரிது. அழுறயளா..? ஸிலி. வளரிளம் பருவத்தில. சின்னச்சின்னதாய் ஏதென் இப்படி நடக்கத்தான் செய்யும். இதெல்லாம் ஒரு வகையில infaluationதான். இந்த நவீன வாழ்க்கைக்கு முகங் கொடுக்கிற எந்த ஒரு இளம் பெண்ணும் ஆணும் தளம்பத்
தான் செய்வின. இதையெல்லாம் தாண்டி வர
வேணும். அப்படி வாறதுதான் எல்லாருக்கும் நல்லது."
இப்படிக் கதகதப்பாய் அனைத்துக் கொள்வது 姿。
போலப் பேசும் இவன். இந்தப் பரந்தாமன் வித்தியாச மானவன். சராசரிகளைப் புறம்தள்ளி மேலே மேலே நிமிரக் கூடியவன். இவன் பெண்ணை, பென்மையை அதனதன் தாற்பரியங்களோடு புரிந்து வைத்திருப்பவன். அவளைப் படுக்கையறைப் பதுமையாக மட்டும் பார்க்காமல், அவளிடம் ஆத்மார்த்தமாயும் சற்று ஆழமாயும் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என நினைப்பவன். இவன் நல்ல துணையாக மட்டுமல்ல, நல்ல தோழனாயும் இருக்கக்கூடியவன்.?
இனிய நினைவுகளில் திளைத்தவள். அவனை நெருங்கி வந்து, அவனது இரு கரங்களையும் தனது
கைகளில் ஏந்தி அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்.
அவளது கொந்தளிக்கும் வாழ்க்கை சமனப்பட
அவனது அந்த ஸ்பரிசமும் இதமும் அவளுக்கு
அப்பொழுது தேவையாக இருந்தது.
இதழ் 50
se
s

Page 91
ܥܡܐ
یجیے۔
த.அஜந்தகுமார்
அனுபவங்களின் ஊ தேவமுகுந்தனின் க
இலங்கைத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் 2000 ஆண்டிற்கு முற்பட்ட6ை யாகவே இருந்து வருகின்றன. 2000 ஆண்டின் பின்னரான சிறுகதைகளின் வளர்ச்சி ஆழமாக நோக்க படவில்லை. தனிப்படைப்பாளிகளின் தொகுதிகளை புகழ்ந்துரையாக அல்லாமல் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்திக் செல்கின்ற போது அப்பணி ஓரளவு பூர்த்தி யாவதை அவதானிக்கலாம். அந்தவகையில் 1992இல் ஒரு சிறுகதையை எழுதியிருந்தபோதிலும் 2008 இல் இருந்து சிறுகதைத் துறையில் இயங்குகின்ற நிர்மலன் என்ற புனைபெயரை உடைய தேவமுகுந்தனின் சிறுகதை களை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இலங்கைத் தமிழ்ச்சிறுகதைப் பொருட்பரப்பில் தேசிய இனப்பிரச்சினை சார்ந்த கதைகளுக்கு பெருப் முக்கியத்துவம் இருக்கின்றது. இன்றுவரையான இது சார்ந்த சிறுகதைகளின் போக்கை பின்வருமாறு வகை படுத்தலாம். 1. போராட்டத்திற்கு ஆதரவான கதைகள் 2. தமிழர் சார்ந்த தேசியத்தை முதன்மைப்படுத்தும்
கதைகள் 3. இனப்பிரச்சினையினதும் போரினதும் விளைவுகளை
பேசும் கதைகள் 4. போர் சார்ந்த இருபிரிவினரையும் விமர்சிக்கும்
கதைகள் 5. போர் முடிவுற்றதான இச்சூழலில் கடந்த காலங்களில்
பேச முடியாத விடயங்களையும் புனிதமாக நம்பப்பட்ட விடயங்களையும் மீள்விசாரணை செய்கின்ற கதைகள் இவ்வாறான தமிழ்ச் சிறுகதைகளின் வெளிப் பாட்டினை பின்வருமாறு கூறிச் செல்லலாம். 1. நாடகத்தன்மையான சாதாரண மொழியில் அமைந்த பத்திரிகைக் கதைகள் 2. அனுபவத்தினை சாதாரண மொழியில் வெளிப்படுத்தும் சிறுகதைகள் 3, அனுபவத்தினை நேர்த்தியாக வடிவச் செம்பை
ஜீவநதி
 

டே எழும் அறச்சீற்றமாய்
தைகள்
T
—ပြုကြီးဂျူဂျို၊ #
யுடனும் மொழியாற்றலுடனும் வெளிப்படுத்தும் சிறுகதைகள், 4. சிறு அனுபவம் ஒன்றினைத் தனது கற்பனா ஆற்றலுடன் சங்கமிக்க வைத்து மாயா யதார்த்தத்தினை சித்திரிக்கும் தற்புதுமைசார்ந்த சிறுகதைகள், 5. சில நிகழ்வுகளை கதையாக அல்லாமல் புதுமையாக "கட்டுடைப்பு" என்ற ரீதியில் அட்டவணை, வினாவிடை என்று அமைக்கும் மீகதைகள்,
இவை யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, புகலிடம் என்ற இடங்களிருந்து எழுதப்படும் போது அவ்விடத்தின் உணர்வுகளுடனும் உள்வாங்கல் களுடனும் அனுபவங்களுடனும் வெளிவந்து புதிய வாசிப்பை தருகின்றன.
இந்தவகையில் அனுபவங்களை நேர்த்தியாக நல்ல மொழியில் சித்தரிக்கும் தன்மையன என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய - தமிழ்
இதழ் 50

Page 92
நோக்கிலிருந்து பெரும்பான்மையும் கொழும்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளைக் கொன ட தேவ முகுந் தனின் சிறுகதைகளை உள்ளடக்கிய "கண்ணிரினூடே தெரியும் வீதி" என்ற தொகுதி காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. இத்தொகுதிக்கான பின்னுரையினை பேராசிரியர் எம்ஏ நுஃமான் எழுதியுள்ளார்.
"என்னைப் பாதித்த அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தச் சிறுகதைகளை எழுதினேன்" என்று கூறும் தேவ முகுந்தனின் சிறுகதைகள் பெரும்பாலும் கொழும்பை மையமாகக் கொண்ட கதைகள், ஒரு கதை யாழ்ப்பாணத்தைக் களமாகவும் இன்னொரு கதை மலேசியாவைக் களமாக வும் கொண்டிருக்கின்றன.
இவருடைய கதைகள்,
1. கொழும்பில் சிங்களவர் மத்தியில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால் மிகுந்த வாழ்க்கை.(இடைவெளி, சிவா, இவன், ஒரு சுதந்திர நாள்)
2. தமிழ் இனம், மொழி சார்ந்த இருப்பை, தான் வாழும் இடத்தில் நிலைப்படுத்த எண்ணும் வேட்கை (இடைவெளி)
3. போரின் அவலங்கள் எழுதும் கண்ணிரை இனங்கடந்து நோக்கும் மனிதாபிமானம் (கண்ணீரினூடாக தெரியும் வீதி)
4. இலக்கிய உலகின் போலிகளைத் தோலுரிக்கும் எண்ணம் ("சின்ன" மாமா)
5. கல்வி உலகில் நிகழும் முறைகேடு களையும் விழலுக்கு இறைக்கும் செயற்பாடு களையும் அம்பலப்படுத்தல் (வழிகாட்டிகள்)
6. வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்க்கை (இவன்)
7. ஒடுக் குமுறைக்கு புரட்சி தவிர்க்க முடியாதது என்ற நிலை (மரநாய்கள்)
8.கொழும்பில் வாழும் பணக்கார வர்க்கத் தினரின் மனோபாவக் கோளாறுகளையும் கேளிக் கையையும் எள்ளுபவை(கூட்டத்தில் ஒருவன்)
இக் கதைகளில் பெரும் பாலான  ைவ கொழும்பை மையமாகக் கொண்ட அனுபவங்களாக விரிவதனால் அங்குள்ள சிங்களவர்களுடனான ஊடாட்டத்தைக் கொண்ட ஓர் இளைஞனின் பதிவு களாகவும் கோபங்களாகவும் விளங்குகின்றன. தான் வாழுகின்ற இடத்தில் சந்திக்கின்ற இடத்தில் வந்து சேர்வன தனக்கு எதிரானதாகவும் தான் சரியாக இருந்தும் தன்னைப் பிழையான மதிப்பீட்டுக்கு ஆளாக்குவதாகவும் இருக்கின்ற போதும் எழுகின்ற அறச்சீற்றத்தினை முகுந்தனின் பெரும்பாலான சிறுகதை களில் காணமுடிகின்றது. மேலும் கல்விமுறைகளிலும்,
ஜீவநதி

சமுதாய நடைமுறைகளிலும் பிழையான வழிகளில் பயணம் நடக்கின்ற போது தானும் ஒருவனாய் இருந்து கொண்டு சகிக்க முடியாமல் எழுகின்ற கோபத்தையும் இக்கதைகள் பேசுகின்றன. ஆயினும் அறச்சீற்றம் எதையும் சாதிக்க முடியாமல் இயலாமைப் பரப்பிலே தான் பெரும்பாலும் இயங்குகின்றது. சில இடத்திலேயே அது சாத்தியப்படச் செய்கின்றது(வழிகாட்டிகள் கதை) ஆயினும் எள்ளல் மதிப்பீட்டை செய்து அவர்கள் மீதான தனது சீற்றத்தைத் தனித்துத் கொள்கின்றார். அதை எங்களில் அழகாகத் தொற்றவைக்கவும் செய்கின்றார்.
இவரது முதலாவது கதை மரநாய்கள் 1992 இல் எழுதப்பட்டது. இது தமிழர்கள் இராணுவத்துக்கு எதிராக கிளரவேண்டும். என்பதைக் கூறுகின்ற கதை. கோழி, மரநாய் என்பதை வைத்துக் கொண்டு "மரநாய்களைத் துரத்த வேண்டும்" என்று குறியீடாகப்
பேசுகின்றது. ஆரம்பகாலக் கதை என்பதாலும் யாழ்ப்
பாணச் சூழலின் குறித்த காலத்தில் எழுதப்பட்ட கதை என்பதாலும் ஏனைய கதைகளில் இருந்து இது தனித்து நிற்கின்றது.
கண்ணிரினூடே தெரியும் வீதி, இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம், ஒரு சுதந்திர நாள் ஆகிய சிறுகதைகள் போர் வாழ்வின் விளைவுகள், இனமுரண் பாட்டின் தருணங்கள், தமிழர்கள் கொழும்புச் சூழலில் அனுபவித்த துன்பங்கள் ஆகியவற்றைப் பேசுகின்றன. இதில் இரட்டைக்கோபுரம் தவிர்ந்த ஏனைய கதைகள் கொழும்பையே களமாகக் கொண்டவை.
கிளிநொச்சியில் இருந்து கொழும்பில் பல்கலைக்கழகப்படிப்புக்கு வந்த ஒருவன் தான் கிளிநொச்சி என்பதால் அனுபவிக்கும் துன்பங்களை யும் இயக்கத்தில் இருந்த தன் தம்பி இறந்து போவதையும் கொழும்பில் தான் வாழ்ந்த இடத்தில் இராணுவ இளைஞர்கள் இறந்துபோன நிகழ்வுகளை யும் கூறி எல்லோருக்கும் போர் மரணத்தையும் கண்ணிரையும் பொதுவாக பரிசளிப்பதை நடுநிலை யில் நின்று மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்துள்ளார்.
"அவருக்குத் தெரிய பிறந்து வளர்ந்து இறந்த L]]6T60D6া956াঁ”
என்று கூறுவதில் உள்ள வலி உணரத்தக்கது. தனது தம்பி இறந்ததுக்கு கதறி அழ முடியாமல் குமுது அங்கிளோடு பக்கத்தில் நடக்கிற இராணுவத் தினரின் செத்த வீடுகளுக்குப் போகவேண்டும் என்று ஆசிரியர் கூறுவது நகுலனுக்காக வெளியே அழ முடியாமல் அங்கே சென்று அழத்துடிப்பதையும் எங்கும் இளைஞர்களின் மரணம் ஏற்படுத்தும் வலியையும் இனங்கடந்து கண்ணிர் வீதியில் யாவரும் பயணப் படுவதையும் பதிவு செய்கின்றார்.
"இடைவெளி" என்ற சிறுகதை தான்
- இதழ் 50
అ
ང་ཚོ་

Page 93
ح۔
அலுவலகத்திற்கு சமூகமளிக் காத நாட்களில் கொழும்பில் குண்டுவெடிப்பு நிகழ்வதற்கான நிகழ்தகவு மிகவும் உயர்வாக இருக்கின்ற தமிழ் அலுவலர் ஒருவர் சிங்கள அலுவலர்களின் சந்தேகத்துக்கு ஆளாகி இறுதியில் பொலிஸ் விசாரணைக்கு செல்வதைக் கூறுகின்றது.
லண்டனில் இருந்தபோது எழும்ப இயலாமல் காய்ச்சலில் படுத்தபோது தானே உணவு பரிமாறிய விக்கிரம, ஏ9 வீதியால் வரும் போது போரழிவுகள் கண்டு கண்கலங்கிய பிரேமசிறி,அலுவலகம் வந்த முதல்நாள் தொடக்கம் ஒன்றாய் கன்ரீனுக்கு வந்த ஐயந்த யாவரும் இறுதியில் இவனை சந்தேகப் பார்வை பார்ப்பது மனதைப் பாதிக்கின்றது. நெருக்கத்தில் இருந்த உறவு இடைவெளி ஆகி நிற்கின்ற சூழலை அலுவலகம் ஒன்றினை மையமாக வைத்துப்பேசுகிறது.
தமிழன் என்பதை நிலைப்படுத்தவும் இங்கு அவர் தயங்காமல் செயற்படுகின்றார். அதாவது இன நல்லுறவு வலுப்பட வேண்டும் என்று நினைக்கும் இவர் இதில் தமிழர் என்று ஒதுக்கப்படுவதைப் பொறுக்க முடியவில்லை.
சிங்களப்பேப்பர் எடுக்கும் அவர்கள் தமிழ்ப் பேப்பர்களை எடுப்பதில்லை. இதை வலியுறுத்தி போராட்டத்தின் பின்னே பெறமுடிந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டுநாட் சம்பளத்தை கழிப்பதாய் முடிவு எடுத்து சிங்களப்பகுதிக்கு மட்டும் செல்வதை அனுமதிக்கமுடியாமல் தமிழ்பகுதிக்கும் கொடுக்காவிட்டால் தமது சம்பளத்தைக் கழிக்க வேண்டாம் என வெளியேறுகின்றனர். இச்சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் சாந்தனின் "கிருஷ்ணன்தூது" சிறுகதையை ஞாபகப்படுத்துகின்றன. இக்கதையில் சாந்தனின் பாதிப்பு முகுந்தனில் சுவறியுள்ளது. சாந்தனின் தொடர்ச்சியாக தனது அனுபவம் வாயிலாக முகுந்தன் இயங்க முற்பட்டுள்ளார்.
தமிழ்ப் பேப்பர் போடவேண்டும் என்று வலியுறுத்தும் போது "தீவிரவாதி" என்று சொல்லும் சூழலிலும் தமிழ்ப்பகுதிகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற போது "முழுஇனவாதி" என்று பச்சை குத்தப்படுவதுமான சூழலின் பயங்கரம், இறுதியில் சிங்கள அலுவர்களால் பொலிஸ் விசாரணைக்கு ஆட்படுத்தி விடும் அவலத்தைப் பதிவு செய்கின்றது.
சிவா என்ற கதை ஆறுவருடமாய் பயங்கரவாத தொடர்புடைய ஒருவன் என்று சிறையில் அடைக்கப் பட்டு வெளியில் வந்த ஒருவனை ஏனையவர்கள் முகம் கொடுத்து கதைக்க அஞ்சும் அவலத்தையும் இறுதியில் மீண்டும் அவன் காணாமல் போய்விடுவதையும் பேசுகின்றது. இடைவெளி கதைபோலவே சிவாவுடன் நெருக்கமாக இருந்த சிங்கள நண்பர்களும் ஏன் சிங்களக்காதலியும் இறுதியில் அவனை பயங்கர
ஜீவநதி

மானவன் என்று நம்புவதைப் பதிவு செய்கின்றார்.
"எப்படிச் சொன்னாலும் இவங்கள் இனி நம்பப் போவதில்லை இனி இவர்களின் கதைகளில் புத்தகம் துப்பாக்கி ஆகும். துப்பாக்கி கைக்குண்டாகும். கைக்குண்டு. இங்கு படிக்கும் எல்லாத் தமிழருக்கும் வால் முளைத்திருப்பதாயும் நான்கு கால்கள் உள்ளதாயும் நம்புவார்கள்? நம்பாதவர்களை சிங்கள ஊடகங்கள் நம்பச் செய்யும்."
"இரட்டைக் கோபுரம்" என்ற கதை என்னதான் சிங்களவர்கள் தமிழர்களோடு மிகுந்த தாராளத்தோடு இயங்கி - அவர்கள் துயரில் நாம் கலந்து நின்றாலும் சந்தர்ப்பம் வருகின்றபோது தமிழர்கள் பற்றிய எதிர்மனப்பாங்கு அவர்களிடம் இருந்து பீறிட்டு "நான் வேறு நீவேறு" என்பதைக் கூறுவதாக எழுதியுள்ளார்.
சுனில் தனது மகனின் மரணச் சடங்கிற்கு போக முடியாமல் கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல் அமைந்துவிட்ட போது தனக்கு உதவியாக இருந்தது தமிழர் என்பதை யோசிக்காமல் ஒட்டு மொத்தமாக "பற தெமரிஞ" என்று சொல்லி விடுகின்றான். கதையின் இறுதிப் பகுதியில் ஆசிரியர் இந்தக் கோபத்தில் குறியீடாக சொல்லும் விடயம் மிக முக்கியமானது.
"விமான நிலையத்தின் சுவரில் மலேசிய சுற்றலாத்துறையினரால் வரையப்பட்டிருந்த அடியில் இணைக்கப்பட்டும் மேலே தனித்தனியாகவும் இருக்கும் இரட்டைக் கோபுரத்தின் பெரிய படம் கண்ணிற்பட்டது" இது தமிழர் சிங்களவர் உறவு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டிவிடுகிறது.
இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம் ஆகிய மூன்று கதைகளும் நெருங்கிப் பழகிய சிங்களவர்கள் இறுதியில் தமிழர் தொடர்பான எதிர் மனப்பாங்கையே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறுகின்றன. கொழும்புச் சூழலில் வாழ்ந்த ஒருவரிற்கு கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்கள் இவை என்று கூறலாம். ஆயினும் "பறத்தெமிளு" என்று சுனில் சொல்வது போல தனது அனுபவங்கள் வாயிலாக ஒட்டு மொத்த சிங்களவரையும் குற்றவாளிக் கூண்டில் முகுந்தன் ஏற்றி விடுகின்றார் என்ற தோரணையும் தோன்றிவிடக் கூடும்.
"ஒரு சுதந்திரநாள்" என்ற சிறுகதை சுதந்திரதினம் ஒன்றில் இந்த நாட்டின் பிரஜைகள் என்று கூறப்படுகின்ற தமிழர்களில் ஒருவன் கொழும்பில் சுதந்திரமற்று இருக்கும் தன்மையை அழகாகப் பேசுகின்றது. மூன்றுவருடமாகியும் ஒருதரம் கூட பெற்றோரைப் பார்க்க வன்னிக்குப் போக முடியாமல் வீதியில் வெயிலிலும் கடும் சோதனை, கட்டாய பொலிஸ் பதிவு என்று முடங்கித் கிடக்கும் சூழலை சுதந்திரதினம் ஒன்றினை வைத்து சொல்வது சிறப்பாக
இதழ் 50

Page 94
உள்ளது.
"இவன்" என்ற சிறுகதை பல்கலைக்கழகத்தால் வெளியேறி ஐந்து வருடமாகியும் வேலை இல்லாமல் திண்டாடும் இளைஞனின் துன்பத்தையும் வேலை யில்லாத தமிழ் இளைஞர்களுக்கு அறை வாடகைக்கு கொடுக்க அஞ்சுவதால் வேலை செய்கிறேன் என்று "ரிப்ரோப்பாக" வெளிக்கிட்டு நூலகம் சென்று நேரம் கடத்தும் பரிதாபத்தையும் இது அவனுக்கு "தட்டிவிட்டது" என்று நினைக்கும் நிலைக்கும் இட்டுச்செல்வதையும் பேசுகின்றது. இதிலும் தமிழ் இளைஞர்கள் கொழும்புச் சூழலில் சந்திக்கும் அவலம் ஆழமாகப் பேசப்படுகின்றது. வழிகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய இரண்டு சிறுகதைகளும் நுஃமான் கூறுவதைப்போல் இனமோதல் சூழலில் சமூகப்பிரக்ஞையற்ற உயர் வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தையைக் கிண்டலோடு விமர்சிக்கும் கதைகளாக அமைந்துள்ளன. தமிழர் கல்விக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், தமிழர்களில் சிலர் கஷ்டப்பட்ட பிரதேச கல்விநிலையை கெளரவ பீற்றல் பேசுவர்களாக இருப்பதையும் எள்ளலோடு விமர்சிக்கின்றார். பாடநூல் தாமதம், அலுமாரியோடு முடங்கும் பிரயோசனமற்ற ஆய்வுகள் தமது நலனை மட்டுமே சிந்திக்கும் கல்வி அதிகாரிகள் என்று பலரையும் கறாராகப் பேசுகின்றார். இதில் வெளிப்படும் எள்ளல் மிக முக்கியமானது.
"கூட்டத்தில் ஒருவன்" பாதை பூட்டப்பட்ட சூழலில் யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு உணவளிக்க அதிபர் உதவிகோரிய போது பழைய மாணவர்கள் கேளிக்கை நிகழ்வுகளில் தம்மைக்கரைத்து இறுதியில் மிகக்குறைந்த பணத்தை அனுப்புவதைக் கடுமையாக விமர்சிக்கிறது.
"பலருக்கும் அலங்காரப் பொருள் போல் ஆகிவிட்ட பாலன் யேசு, மந்தைகள் சூழ நிற்க கன்னி மரியாளின் மடியில் உறங்கியிருந்தார். யாழ்ப் பாணத்தில் உள்ள இவனின் கல்லூரியில் மயங்கிவிழும் சிறார்களின் நினைவு மனதில் வந்தது; என்று ஆசிரியர் கூறுவது மனதைத் தொடுகின்றது.
"சின்னமாமா என்ற கதை இலக்கியவாதி ஒருவரின் போலி முகத்தினைப் தோலுரிப்பதாக அமைகின்றது. இலக்கியம் இன்று புகழ்ந்துரைகளினதும் பொய்யுரைகளினதும் கூடாரமாக அமைவதைக் கூறுகிறது. எழுத்தாளர் திருநாவுக்கரசு பற்றிய அஞ்சலி நிகழ்வை விட உணவு பழக்கவழக்கம் பற்றி ஒரு ஆசிரியரைப் பேச வைத்திருக்கலாம் என்பது அத்தகைய பொய்யுரை நிகழ்வுகள் மீதான பலத்த சாட்டையடி எனலாம்.
தேவமுகுந்தனின் இவ்வாறான கதைகளைப் பார்க்கின்ற போது முகுந்தன் அவர்கள் மிக நேர்த்தியான ஒரு சமன்பாட்டை உருவாக்கி அதன்படி தனது முடிவைத்
ஜீவநதி

தருவதைக் காணலாம் அதாவது,
தமிழர்கள் இப்படி இப்படி எல்லாம் விட்டுக் கொடுப்புடனும் சினேகிதத்துடன் இருந்தார்கள். அச்சந்தர்ப்பங்களில் அவ்வாறே சிங்களவர்களும் இருந்தார்கள். ஆனால் இறுதியில் தமிழர்கள் சிங்களவர்கள் நேர்மையாக இருக்கவில்லை என்பதாக அமைப்பதைக் காணலாம். கதையின் முடிவுக்கான பலதகவல்களை ஆதாரங்களை சில இடங்களில் முகுந்தன் அதிகமாகக் கூறுவது பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது.
கூட்டத்தில் ஒருவன் என்ற கதையில் 1300 ரூபாதான் எஞ்சியது அதை மகிழ்ச்சியோடு அனுப்பினார்கள் என்பது யதார்த்தமாக இல்லை. தனது கோபத்தை வெளிப்படுத்துகின்றபோது இவ்வாறு செய்துவிடுகிறாரோ என எண்ணத்தோன்றுகின்றது.
அதேபோல "சின்ன மாமா” என்ற கதையும் இறந்து போன எழுத்தாளர் மீதான கடுஞ்சீற்றத்தில் எழுதப்பட்ட கதையாகத் தோன்றுகின்றது. தந்தை இறந்ததற்கு வராத எழுத்தாளரை விமர்சிக்கின்ற போது,
"தலைமன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரணச்சடங்கிற்கு வந்து போகும் நேரத்தில் சில சிறுகதைகளை எழுதலாம் என்று நினைத்தாரோ" என்பது கேலியின் உச்சமாகவும் யதார்த்த முரணாகவும் உள்ளது.
தான் நினைப்பது எல்லாவற்றையும் கூறிவிட வேண்டும் என்பது முகுந்தனிடம் இருப்பதைக் காணலாம். வழிகாட்டிகள் கதையில் அவர் கூறும் விடயங்கள் பல இதற்குச் சான்று பகர்கின்றன.
ஆனால் முகுந்தனின் கதைகள் தமது கருப்பொருளை நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளன.
"சின்னமாமா" கதையில் அஞ்சலியுரை - பழைய நினைவுகள் என்ற ரீதியில் கதையைக் கூறிய விதம் நல்ல உத்தியாகும். சிவா கதையில் திருமணக் காட்சி - உரையாடல் என்று கதை இடம்பெற்று உள்ளமையும் அழகாக வந்துள்ளது.
மரநாய்கள், இரட்டைக்கோபுரம் என்ற குறியீடுகளும் கதைகளுக்கு அழகாகப் பொருந்து கின்றன.
முகுந்தன் நல்ல கதைசொல்லி என்பதற்கு இவரது கதைகள் சாட்சியாக நிற்கின்றன. தனது அனுபவங்களை - தனக்கே உரித்தான அறச்சீற்றத் துடன் வெளிப்படுத்துகின்றார். அந்த அறச்சீற்றத்தை இன்னும் சற்று நிதானத்துடன் இறுக்கத்துடன் பேசுகின்றபோது தேவமுகுந்தனின் கதைகள் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் வல்லபத்தைப் பெற்றுவிடும்.
இதழ் 50
5

Page 95
6. நத்தார் திருநாள்.
றத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு க்களின் ஆத்மீக விடுதலைக்காக மட்டுமல் அனைத்து மக்களின் ஆத்மீக விடுதலைக்காகப் போரா சிலுவையில் மரித்த யேசுநாதனின் பிறந்ததினம்.
யேசுநாதர் ஒரு ஆத்மீகப் போராளி
றிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுட கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யேசுவின் பிறந்த தினத்தைக் கொண்டாடிவருகின்றனர்.
இப்போது பதினொரு மணி இன்னும் ஒரு மணித்தியாலத்தில் யேசுவின் பிறந்த தினம். கிராமடே குதுகலத்தில் மூழ்கிக் கிடக்கின்றது. நிசாகரன் மட்டும். அவனது வீட்டில் சுவர்க்கரையோடு போடப்பட்டிருக்கு g]]|''[[ဝုဓါ၍ படுத்திருக்கின்றான்.
ਨੀਲ ਲਉ। கிறீஸ்தவன்தான். ஆனா6 அவனிடம் எந்தக் குதுகலிப்புணர்வும் இல்லை.
நிசாகரனும் இக்கிராமத்தைச் சேர்ந்தவன் பூரணமான கத்தோலிக்கனாகவே வளர்க்கப்பட்டவன் இவன் சிறுவனாக இருந்தபோது இக்கிராமத்துக்குரிய தேவாலய பங்குத் தந்தையான பாதிரியாருக்கு உதவியாளனாகவும் இருந்திருக்கிறான்.
திருமணத்தின் பின்பு. இவனிடம் ஏற்பட்டிருந் மதவெறுப்புணர்வு சிறுகச் சிறுக வளர்ந்து இப்போ நிசாகரன் ஆலயத்திற்குச் செல்வதை முற்றாக நிறுத்தி கொண்டுவிட்டான். இப்படியொரு மாற்றம் இவனி ஏற்பட்டுப் பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
இவனது மனைவியோ அல்லது இவனது இரண் பெண் பிள்ளைகளோ இவனோடு முரண்பட்டுக் கொள் தில்லை. அதேபோல இவனும் மத விஷயங்கள் தொட பாக குடும்பத்தினருடன் முரண்பட்டுக் கொள்வதில்லை நிசாகரனின் மனைவியும் இரண்டு பென பிள்ளைகளும் நத்தார் பூசை காண்பதற்கா தேவாலயத்திற்குச் செல்வதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.
வீதிகளெல்லாம் சோடனைகள், சந்திக்குச் சந்
ஜீவநதி
 
 
 
 

l f
b
ஒலிபெருக்கிகளில் கிறீஸ்தவப் பாடல்கள், அநேகமான வீடுகளில் வர்ண பல்புகளில் அலங்காரம், பலகார 6)]]T©F€060া956T. ※※※
நிசாகரனின் வீட்டிலும். பாலன் பிறப்புப் GUITLb6ODLD56T 60D6Jë,55ÜLJ LLGB சவுக்கு LDUĞ, கொப்புகளில் வர்ண பல்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
நிசாகரனின் மனைவியும் ஏதோ பலகாரங்கள் செய்திருந்தாள் புது ஆடைகளும் வாங்கியிருந்தாள்.
இந்த நத்தார் ஏற்பாடுகள் பற்றி நிசாகரனுக்குச் சகலதும் தெரியும். ஆனால் அவர்களின் சுதந்திரத் திற்கு என்றுமே அவன் தடையாக இருந்ததில்லை.
நிசாகரன் நாஸ்திகனல்ல, அதேவேளை ஆஸ்திகனுமல்லவென்றுதான் கூறவேண்டும்.
கே.ஆர். டேவிட்
ஏனெனில் மத போதனைகளிலுள்ள தர்ம சிந்தனை களை அவன் ஏற்றுக் கொள்கிறான். அந்தப் போதனைகள் பற்றியெல்லாம் தனது குடும்பத்தவர் களுடன் பேசிக் கொள்வான். ஆனால், ஆலயத்திற்குச் சென்று முளந்தாளிட்டு கைகளை அகல விரித்து. கண்ணிர்விட்டு இறைவனிடம் யாசிப்பதில் மட்டும் அவனால் உடன்பட்டுச் செல்லமுடியவில்லை.
தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகக் கூறிக்கொள்வதிலும் அவன் தயங்குவதில்லை.
வழமைபோல் இன்றும் நிசாகரன் படுத்திருக் கின்றான். மனைவி பிள்ளைகள் அணிந்திருக்கும் புதிய ஆடைகளின் சரசரப்பு ஒலி அவனது இதயத்தை வருடுகின்றது. அந்தச் சரசரப்பு ஒலிக் குள் புதைந்திருக்கும் குடும்ப சுகத்தை அவனது மனம் அனுமானிக்க, படுத்திருந்தவன் மெதுவாக எழும்பி யிருந்து மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்கிறான். பாசம் தளும்பும் பார்வை
"அம்மா இண்டைக்கு நத்தார் பூசைக்கு எந்தப் பாதர் வாறாராம்" மூத்த மகள் சங்கீரணி தாயிடம் கேட்கிறாள்.
ஒவ்வொரு தேவாலயத்திற்கும் பொறுப்பாக ஒரு பங்குத்தந்தை இருப்பார். தேவாலயம் சம்மந்த மான சகல பொறுப்புக்களையும் அவரே பார்த்துக்
இதழ் 50

Page 96
ன்சன் பாதர் வா ாராம். தாய் கூறுகிறாள். வின்சன் பாதரின் ரை பூசையெண் டால் சலிக்காமல் UTigarh. அவற்றை பிரசங்கம் திறமாயி ம். மகள் இப்படிக் கூறுவது நிசாகரனுக்கும் வாகக் கேட்கின்றது.
நிசாகரனுக்கு வின்சன் பாதரை நன்கு தெரியும். ாடு நேரடியான தொடர்புகளும் அவனுக்கிருந்தன. வின்சன் பாதர் பற்றி கத்தோலிக்க சமுகத் தினரிடம் உயர்ந்ததொரு அபிப்பிராயம் இருப்பதென்பது உண்மைதான்.
வின்சன் பTதர கத தாலிக்க மதக் கருத்துக்களை தனித்து மதமாக உருக்கி வார்க்காமல் சமுக விஞ்ஞான அசைவியக்கங்களுக்கேற்றவாறு எண்ணக்கரு சிதை ாமல் எடுத்துரைப்பதில் வல்லவர் நல்லவர் என்றும் கூறலாம்.
அரசியல் நடைமுறைகள் பற்றிய விளக்கங் களும் அவரிடம் நிறைந்திருந்தது.
சராசரி உயரம், உயரத்திற்கேற்ப கணக்கான LG), பொது நிறம், உருண்டைத்தலை, அடர்த்தி குறைந்த தலைமயிர் பசுமையான முகம், தீட்சண்யமான கண்கள் வின்சன் பாதரின் தோற்றம் நிசாகரனின் மனதில் தெரிகின்றது.
அண்மையில் லூர்துநாயகி தேவாலயத்தில் வின்சன் பாதர் ஆற்றிய பிரசங்க உரையைக் கேட்டு நிசாகரன் ஆச்சரியப்பட்டிருக்கின்றான். தனது வாழ்த்துக்களையும் அவருக்குத் தெரிவித்திருந்தான்.
தனது மனைவி மூலம் வின்சன் பாதரின் வருகையைக் கேள்விப்பட்ட நிசாகரனுக்கு இன்று நத்தார் பூசைக்குச் சென்று வின்சன் பாதரின் பிரசங் கத்தைக் கேட்கலாமா என்றொரு எண்ணம் முளை விடுகின்றது. இ ".நாங்கள் போட்டுவாறம்.” மனைவியும் பிள்ளைகளும் விடைபெற்றுக் கொண்டு புறப்படு கின்றனர். படுத்திருந்த நிசாகரன் எழும்பி அவர்களோடு வீட்டுப் படலையடி மட்டும் வந்து அவர்களை வழியனுப்பிவிட்டு வாசலில் நிற்கிறான்.
புது ஆடைகள் அணிந்து மக்களோடு மக்களாய் செல்கின்ற தனது மனைவி பிள்ளைகளைப் பார்க் கின்றபோது அவனது மனம் உள்ளூர ஆனந்தப்பட்டுக் கொள்கிறது. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், முதியவர்களுமாய் கொடிவிட்டுச் செல்கின்றனர்.
சங்கக்கடைச் சந்தியில் குழுமிநின்ற வாலிபர்கள்
ஜீவநதி 9.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெடி சுடுகின்றனர். நீண்ட காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையும் ஷெல் குண்டுச் சத்தங்களையும் கேட்டுப் பழக்கப்பட்ட அனுபவ உணர்வுகளின் மீது பட்டாசு வெடிகளின் ஒசை. நிசாகரன் தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.
நிசாகரன் வீட்டுப் படலைக்கு எதிராகவுள்ள ஆசைப்பிள்ளை வீட்டில் எண்ணைக்குள் பொரியும் அரியதரத்தின் வாசனை காற்றில் கலந்துவந்து. நிசாகரனின் வாயில் நீரூறவைக்கின்றது.
".இண்டைக்கு வின்சன் பாதர்தான் வாறாராம். அருமையான பாதர். அவற்றை பிரசங்கத்தை மணித்தியாலக் கணக்காய் கேக்கலாம். நிசாகரனைக் கடந்து நடந்து கொண்டிருந்த திரவியமும் அவனது மனைவி புலோமினாவும் வின்சன் பாதரைப் பற்றிப் பேசிக் கொள்வது நிசாகரனுக்குக் கேட்கின்றது.
வின்சன் பாதரின் பிரசங்கத்தைக் கேட்கப் போனாலென்ன என்ற நிசாகரனின் மனதுள் இருந்த சிந்தனை விரிகின்றது. வீட்டுப் படலையடியில் நின்ற நிசாகரன் நத்தார் பூசைக்குப் போவதென்ற முடிவுடன் தனது வீட்டை நோக்கி நடக்கிறான். வீட்டுக்கு வந்த நிசாகரன் முகத்தைக் கழுவி, அவனுக்காக அவனது மனைவி வாங்கிவைத்த புதிய உடுப்புகளை அணிந்து கொண்டு புறப்படுகின்றான்.
நிசாகரன் சராசரி உயரத்தைவிடக் குறைந்த உயரம், ஒழுங்கான உடற்பயிற்சி செய்யப்பட்ட ஆரோக்கிய மான உடல், உருண்டைத் தலை, அடர்த்தி குறைந்த தலைமயிர், கனதியான முகம், சம்பவங்களை ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான கண்கள், இப்பகுதி யில் இயங்குகின்ற வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுவதால் பலதரப்பட்ட உறவுகளுள்ளவன்.
வீட்டிலிருந்து புறப்பட்ட நிசாகரன், ஆலயத்தை நெருங்கிவிட்டான். தேவாலய கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் ஒசையிலிருந்து பூசை ஆரம்பமாகிவிட்டதை நிசாகரன் உணர்கிறான்.
உயர்ந்து நிற்கும் தேவாலய கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கிறான். அனைத்து மின்சார பல்பு களும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. தேவாலயத்தின் பிரமாண்டத் தோற்றம் தெளிவாகத் தெரிகின்றது.
பிரித்தானியர் இலங்கையை ஆக்கிரமித்திருந்த போது அரசியல் லாபம் கருதி அவர்களால் கட்டப்பட்ட ஆலயம் பலம் மிக்கதும், கலைத்துவம் மிக்கதுமான கட்டிடங்கள்.
ஆலய எல்லைக்குள், ஆலயத்தை மருவினாற் போல் ஒரு கத்தோலிக்க பாடசாலையும் அமைந் திருக்கின்றது.
பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறி
- @g, 50
>
墅
5

Page 97
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகுகின்றது. ஆனா அவர்கள் விட்டுச் சென்ற அரசியல் எச்சங்கள் ம் தலை நிமிர்ந்துதான் நிற்கின்றன னின் அடிமனம் இப்படிக்கூறுகின்றது.
- ாகரன் பொதுவாகவே முக்கியமான விஷய அரசியல் முதன்மைப்படுத்தித்தான் சிந்திப்பான். ஆலயத்தின் முன்பக்கத்தில் பிரமாண்டமா தொரு மண்டபம் அமைந்துள்ளது. நிசாகரன் அந் மண்டபத்துள் வந்தமர்கின்றான்.
பிரசங்கம் ஆரம்பமாகின்றது.
மாபிள் தரையில் வசதியாக அமர்கின்றனர். வின்சன் பாதர் பலிபீடத்தில் நிற்கிறார். 雛 அவரது தலைக்குப் பின்னால், ஏறத்தாழ ஆ மீற்றர் ք այլOman சிலுவையில் அறையப்பட்ட (3U36. உருவத்தோடுள்ளதொரு சிலுவை அமைந்துள்ளது. ப சித்திரவதைகளுக்குள்ளாகி, மின்சாரக் கம்பியில் சிக் இறந்து தொங்கும் வெளவால் போல் சிலுவையி தொங்கும் யேசுவின் பரிதாப கோலம்.
--- த்மீக விடுதலைக்காகப் போதித்து சிலுை றந்து மிகக் கொடூரமாகக் கொலை செய்ய பட்ட ஆத்மீகப் போராளியான அந்த யேசுவின் சிலைமீ நிசாகரனின் பார்வைக்கோடு சில விநாடிகள் தரித்
வின் சனி பாதர் தனது பிரசங்கத் ை ஆரம்பிக்கின்றார்.
அன்பானவர்களே. அனைத்து மக்களி ஆன்மீக விடுதலைக்காகப் போதித்து. சிலுவையி அறைந்து கொலை செய்யப்பட்ட தேவமைந்த யேசுநாதர் பிறந்த தினம் இன்று மார்கழி மாத இருபத்தைந்தாம் திகதி நள்ளிரவு பன்னிரண் மணிக்கு. யூதேயா நாட்டிலுள்ள ஜெருசலே நகரத்தில் அமைந்துள்ள பெத்தலகேம் கிராமத்தில் ஒ .மாட்டுத் தொழுவத்தில் யேசுபாலன் பிறந்தார் و
உலக நாடுகளில் நடந்த போராட்ட வரலா களைப் படித்திருக்கின்றோம். நமது மண்ணில் நட போராட்டங்களையும் பார்த் திருக்கிறோம். அனைவருமே மனிதர்களாகப் பிறந்து வளர்ந்து. சமு அரசியல் அடக் குமுறைகளில் நெருடல் களு குள்ளாகி. அவலப்பட்டு, அநீதிகளுக்கெதிராக போராடப் புறப்பட்டதாகவே வரலாறுகள் கூறுகின்றன. நமது மண்ணின் போராட்ட வரலாறுசு அப்படித்தான் கூறுகின்றது. இந்தப் போராளிகளி வரிசையில் யேசுநாதர் வேறுபட்டவர்.
"தேவ பண்புகளுடன் மனித சாயலில் போரா
അ
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t
莎
而
D)
யாகவே பிறந்தவர் யேசுநாதர்" இப்படிக் கூறிய வின்சன்
பாதர் சில விநாடிகள் மெளனமாக நிற்கின்றார்.
அவருடைய மெளனத்துள் ஏதோவொரு
உணர்வு கனப்பதை நிசாகரன் உணர்கிறான். 缀
ஆலயத்துள் பெரும் அமைதி வின்சன் பாதர் தனது பிரசங்கத்தைத் தொடர்கிறார்.
"உரோமையரின் ஆட்சிக் காலமது. யூதேயா நாட்டை ஏரோது அரசன் ஆட்சிபுரிந்தான். யூதமக்கள் அடிமைகள் (BUITGö நடத்தப்பட்டனர். இப்படியானதொரு நெருக்கடியான சூழ்நிலையில்தான் யேசுபாலன் பிறந்தார். -
தேவபண்புகளுடன் பிறந்த யேசுபாலனின் பிறப்புப்பற்றி ஜெருசலேம் ஞானிகள் "யூதர்களின்
அரசனாய் போகின்றவன் பிறந்துவிட்டான்" என
எதிர்வுகூறினர்.
ஞானிகளின் எதிர்வுகூறல், ஏரோது அரசனின் காதுகள் வரை நீண்டது. தனது ஆட்சிக்கு உட்பட்டு வாழும் யூத மக்கள் மத்தியில் ஒரு தலைமை உருவாவதை ஏரோது மன்னன் வெறுத்தான்.
ஆட்சி அதிகாரத்திலுள்ள சகல தலைப் பீடங்களிலுல் காணப்படுகின்ற இப் பொதுப்பண்பை வரலாறுகளில் நிறைய அவதானிக்கலாம்.
ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள், அந்த அதிகாரங்கள் மூலம் தாங்கள் பெறுகின்ற உயர் கெளரவங்களை இழக்க என்றுமே விரும்புவதில்லை. அதற்காக எதையுமே அழிக்க அவர்கள் தயங்குவ தில்லை என்பதைத்தான் வரலாறுகள் நமக்குக் கூறுகின்றன.
ஏரோது அரசன் தனது மந்திரி பிரதானிகளை அழைத்து மந்திராலோசனை நடாத்தினான்.
யூதர்களை நாங்கள் அரவணைத்துச் சென்றால், எங்கள் அரசு மேலும் பலம் பெறும் என்றோ.
யூதர்களும் மனிதர்கள்தான் அவர்கள் தங்கள் வாழ்வியல் உரிமைகளைத்தான் கேட்கின்றார்கள் என்றோ.
நாங்கள் எங்களுடைய ஆட்சியைத் தர்மப் படுத்துவோம், யூதர்களே யேசுவின் தலைமையை நிராகரிப்பார்கள் என்றோ, ஏரோது அரசனோ, அல்லது அவனது மந்திரி பிரதானிகளோ பேசவில்லை.
யேசுபாலனை எப்படி அழிக்கலாம் என்றே ஆலோசித்தனர். ஒரு யேசுபாலனை அழிப்பதற்காக யூதர்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள இரண்டு வயதுக் குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொலை செய்யும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது!
இப் படிக் கூறிய வின்சன் பாதர் தனது பிரசங்கத்தை நிறுத்திக் கொண்டு தலைகுனிந்து மெளனமாக நிற்கிறார்.
இதழ் 50

Page 98
Lււ குழந்தைகளைக் - يمنغنيمنغنيمتنچ&gن
சய் வித்த ஏரோது அரசன் போலவே,
போஞ்சியு பிலாத்துவும் இருந்தான்.
போஞ்சியு பிலாத்து யேசுநாதரை அழித்துவிடத் திட்டமிட்டான். போஞ்சியு பிலாத்துவின் சூழ்ச்சி
வலைக்குள் யேசுநாதரின் பன்னிரண்டு சீடர்களில்
முக்கியமானவனாகக் கருதப்பட்ட யூதாஸ் கரியோத்
முப்பது வெள்ளிக்காசுக்கு யூதாஸ், யேசு ாதரைக்காட்டிக் கொடுத்தான்.
போஞ்சியு பிலாத்துவின் வீரர்களால் யேசு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அரச வீரர்களால் யேசு கைது செய்யப்பட்டார். அரச நிர்வாகத்திற்குட்பட்ட நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.
அரச விசுவாசிகளே விசாரித்தனர். யேசுநாதரை கல் வாரி மலை உச்சியில் சிலுவையில் அறைந்து கொல்லும்படிதீர்ப்பிடப்பட்டது
வின்சன் பாதர் பலிபீடத்தில் ஒலிவாங்கிக்கு
ஜீவநதி 94.
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னால் மீண்டும் மெளனமாக நிற்கிறார்.
அந்த மெளனத்துள் மனிதத்தின் முனகல் ஒலி. பக்தர்கள் கண்ணிமைக்காமல் இருக்கின்றனர் மண்டபத்துள் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி 956াীি6ঠো மந்தமான ஓசை மட்டும் கேட்கின்றது.
சில விநாடிகளின் பின்பு. ဗွို நீண்டதொரு நெட்டுயிர் ப் போடு தன மெளனத்தைக் கலைத்துக் கொண்டு வின்சன் பாதர் மீண்டும் பேச ஆரம்பிக்கின்றார்.
கரும்பை முட்கொடியைப் பிடிங்கி சிறு வட்டமாகச் சுருட்டி எடுத்து யேசுவின் தலையில் இறுக்கி, யூதர்களின் தலைவன் எனப் பரிகசித்தனர்.
கரும்பை முட்கூர்கள் யேசுவின் கபால ஒட்டில் தைத்து நின்றன.
மிகப் பெரிய சிலுவையை அவரது தோளில் சுமத்தி கல்வாரி மலையின் உச்சியை நோக்கி நடக்க வைத்தனர். சவுக்கால் அடித்தனர்.
மாடுகளின் கால்களை கயிற்றால் பிணைத்து. இறுக்கி மாட்டை வீழ்த்தி. அதன் கால்களில் லாடன் அடிப்பார்களே. அதேபோல யேசு என்ற மனிதனை சிலுவைமிது வீழ்த்தி. சுவரில் ஆணி இறுக்குவதுபோல. அவரது கைகளையும் கால்களை யும் சிலுவை மரத்தோடு சேர்த்து ஆணி இறுக்கினர்.
ஒரேயொரு முறை அந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். யேசுநாதரின் தசைகளைக் குத்தி, எலும்புகளை உடைத்தது ஆணி. சிலுவை மரத்தைத் தைத்தது.
யேசுநாதர் துடிதுடித்து இறந்தார். யேசுநாதருக்குத் தீர்ப்பிட்ட போஞ்சியோ பிலாத்து மன்னன் பெருமைப்பட்டான்.
.பாவம். யூதமக்கள். ஒரு சொட்டுக் கண்ணிர் சிந்துவதற்குக் கூட உரிமையற்றவர்களாய் மனதுக்குள் இரத்தக் கண்ணிர் வடித்துக் கொண்டனர். இப்படிக் கூறிய வின்சன் பாதர் தலைகுனிந்து மெளனமாக நிற்கின்றார்.
அவரது மெளனத்தில் துயரம் கசிகின்றது. ஆலயத்துள் துயரம் மூட்டம் கட்டி நிற்கிறது. ஆலயம் கல்வாரி மலையாகி. பக்தர்கள் யூத
LDਰੰ56TT.
வின்சன் பாதர் தொடர்கிறார்.
"அன்பானவர்களே. இதுவரையில் நாம் எத்தனையோ நத்தார் பூசைகளையும், நத்தார் பிரசங்கங்களையும் கேட்டு விட்டோம். கேட்டதோடு நத்தாரைக் கொண்டாடி மகிழ்ந்தோமே தவிர. நாம் நமது சிந்தனையை விரிவாக்கவில்லை.
யேசுவின் வரலாற்றின் மூலம் பரமபிதாவின் தீர்க்கதரிசனங்களையும் நற்போதனைகளையும் மட்டுந் தான் ஆண்டாண்டு காலமாக உச்சாடனம்
இதழ் 50
s
9ܐܸܗ݈ܝ
ܗ.

Page 99
யேசுவின் வரலாற்றினுள் கூறப்படாத பல செய்திகள் உண்டு. அவைகளும் நமக்கு மிக அவசிய மானவைகள். அவைகளைத் தேடுங்கள் கண்டடை வீர்கள். வின்சன் பாதர் தனது பிரசங்கத்தை முடித்துக் கொண்டு பூசையைத் தொடர்கிறார்.
ஆலயத்துள், பெரும் அமைதி ஆலயத்தின் முன் மண்டபத்தில் சப்பாணி கொட்டியமர்ந்து பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்த நிசாகரனின் சிந்தனைக் குருத்தை ஒரு கருவண்டு கடிக்க ஆரம்பிக்கின்றது.
“அவைகளும் நமக்கு மிக அவசியமானவைகள் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற பாதரின் பேச்சே சிந்தனைக் குருத்தை
பூசை முடிந்து மக்கள் எல்லோரும் வெளியேறிக்
கொண்டிருக்கின்றனர். நிசாகரன் எழும்பி மண்படத்தை விட்டு வெளியே வந்து நிற்கிறான். இரவு ஒரு மணி. வின்சன் பாதரைச் சந்தித்தால் என்ன என்றொரு எண்ணம் நிசாகரனின் மனதில் துளிர்க்கிறது. இரவு ஒரு மணி, பூசை வைத்த அலுப்போடு பாதர் இருப்பார். இப்போது சந்திக்கிறது சரியா. நிசாகரனின் சிந்தனையை அவனது மனம் மறுத்துரைக்கின்றது.
நிமிடங்கள் நின்றவன் முடிவுக்கு வந்தவனாய் பாதரின் விடுதியை நோக்கி நடக்கிறான்.
விடுதியின் முன் மண்டபத்தில் தூணுக்கருகில் கன்வஸ் கட்டிலில் கண்களை முடியபடி வின்சன் பாதர் படுத்திருக்கிறார். போதகருக்குரிய 66)||6া60D6া ভHIটjéী யோடு அவர் படுத்திருப்பதால் அவர் தூங்கவில்லை என்பதை நிசாகரன் அனுமானித்துக் கொள்கிறான்.
பாதர்" மிகவும் அடக்கமாக நிசாகரன் அழைக்கிறான். -
நிசாகரனா. வாங்கோ. கண்விழித்த பாதர் நிசாகரனை உள்ளே அழைக்கிறார். நிசாகரன் உள்ளே சென்று அமர்கின்றான். இருவருக்குமிடையே சம்பிரதாயபூர்வமான உரையாடல் நடந்து முடிகின்றது.
"பாதர்." நிசாகரன் மிகவும் பணிவோடு அழைக்கிறான். அவனது அழைப் பொலியில் உள்ளுறைந்திருக்கும் உணர்வுகளை வின்சன் பாதர் உணர்ந்துகொண்டு நிசாகரனைப் பார்க்கின்றார்.
"என்ன நிசா. சொல்லுங்கோ" "பாதர். உங்கடை பிரசங்கம் எனக்குப் புரியா மல் இருக்கு” நிசாகரன் நேரடியாகப் பிரச்சினைக்கு வருகின்றான். நிசாகரன் இப்படிக் கூறியதும் வின்சன் பாதர் கண்ணிமைக்காமல் நிசாகரனைப் பார்க்கின்றார்.
உணர்வுத் துடிப் புள்ள இரு பார் வைக் கோடுகளின் சந்திப்பு
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 

"நிசா. என்னைப் போன்ற போதகர்களை நமது மதத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுமே மிகவும் உயர்வாகவே பார்க்கின்றனர். அதற்கு மேலாய் எங்களை நம்புகின்றனர். எங்களை நம்புகின்ற இந்த மக்கள் இப்போது சமுக ரீதியில் சகலதையும் இழந்து காயப்பட்டுப் போய் நிற்கின்றனர். எங்களை நம்புகின்ற இவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தரக்கூடிய ஏதாவது செய்தியைச் சொல்ல வேண்டுமென்பதுதான் எனது ஆவல்.
நான் ஒரு போதகர். நத்தார் பூசை. ஆலய மண்டபத்துள் போதகருக்குரிய விதிகளை மீறி. GТ60160TT606D (Bшg dupligu JollaboОGD, ୬|353ରାଗ୦ ଗt பேசாமலும் இருக்க முடியவில்லை." இப்படிக் கூறிய வின்சன் பாதர் மெளனமாக இருக்கிறார்.
கனதியான மெளனம் அந்த மெளனத்துள் முதுகெலும்பற்ற நாக்கிளிப் புழுக்களாய் நெளியும் உணர்வுகள். ※
"சொல்லுங்கோ பாதர்” நிசாகரன் யாசிப்பது போல் அடிக்குரலால் கூறுகின்றான்.
'. நிசா. யேசுவின் பாடுகளைத் தனித்து மதத்திற்கூடாக மட்டும் பார்த்துவிட்டு நிறுத்திக் கொள்ள என்றால் முடியாமல் இருக்கின்றது.
மானிடத்துக்கெதிரான அடக்குமுறைகளுக்கும், கொடூரங்களுக்கும் கல்வாரி மலையில் யேசுநாதரை சிலுவையில் அறைந்து கொல்லும்படி தீர்ப்பிட்ட உரோம மன்னனை போஞ்சியு பிலாத்து எப்படி உதாரணமாக இருக்கிறானோ.
"முடிந்தவரை செய்வதல்ல; முடியும் வரை செய்வதுதான் தலைமைப் பண்பு என்பதற்கு யேசுநாதர் எப்படி உதாரணமாக இருக்கிறாரோ.
இவைகளுக்கு மேலாய். கல்வாரி மலையில் யேசுவை சிலுவையில் அறைந்து மனிதப் படுகொலை செய்தபோது. அழுகின்ற உரிமையைக் கூட இழந்து வெந்து துடித்த யூதமக்கள். பிற்பட்ட காலத்தில் தங்களுக்கென்றொரு வரலாற்றை வரைந்த உயிர்ப்பு நிறைந்த வரலாறும் நமக்கு முன்னாலுண்டு.
கையில் நூறு சதங்கள் இருந்தன. காலத்திற்குக் காலம் ஒவ்வொரு சதமாக இழந்து. தொண்ணுற் றொன்பது சதங்களையும் இழந்து. இப்போது ஒரு சதக்காசுடன் திசை தெரியாமல் ஏங்கிப்போய் நிற்கும் எமது மக்களுக்கு.
ஒரு கோடி ரூபாவும், ஒரு சதத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றதென்ற நம்பிக்கையைத்தான் நான் கூறவிரும்புகின்றேன்." வின்சன் பாதர் கூறுகிறார்.
நிசாகரனின் உடலிலுள்ள உரோமங்கள் குத்திட்டு நிமிர்ந்து நிற்கின்றன. வின்சன் பாதரின் பேச்சுக்கள் கண்ண பரமாத்மாவின் கீதையாய் நிசாகரனின் செவிப்பறையில் அதிர்கிறது.
இதழ் 50

Page 100
கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வாரம் தோறும் கலை/இலக்கியப் பத்தி(COLUMNS) நான் எழுதி வருவதை உங்களில் சிலர் அவதானித்திருக்கக் கூடும். அத்தகைய பத்திரிகைகளில் ஒன்று Daily News, அப்பத்திரிகையில் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் எனது எழுத்துக்களைப் படிக்கலாம். : -- :- செவ்வாய்க்கிழமைகளில் Punch என்ற பெயரில் ஓர் அனுபந்தம் வெளியாகும். புதன்கிழமைகளில் Artscope என்ற அனுபந்தமும் வியாழக்கிழமைகளில் (கிரமமாக அல்லாவிட்டாலும்) இந்து சமய அனுபந்தமும் வெளி யாகும். இவற்றை விட The Island பத்திரிகையில் புதன் கிழமைகளில் Mid week Review என்றும் சனிக்கிழமை களில் Samag என்றும் அனுபந்தங்கள் வெளியாகும். அவற்றிலும் எனது எமுத்துக்கள் இடம்பெறுவதுண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் The Nation, LakbimaNews ஆகியனவற்றிலும் இடையிடையே Ceylon Today பத்திரிகையிலும் எனது பத்தி எழுத்துக்கள் வருவதுண்டு. அவற்றை எல்லாம் இங்கு நான் ஏன் தெரிவிக்கின்றேன் என்று கேட்டால் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற உயர்கல்வி, பல்கலைக்கழக மாணவர்கள் எனது பத்திகள் மாத்திரமன்றி ஏனையோரின் கட்டுரைகளையும் படித்துப் பயன் பெறலாம் என்பதற்காகவே. தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களை விட சிங் கள, ஆங்கில மொழிகளில் பயிலும் மாணவர்களே அதிகம் இவற்றைப் படித்து வருவதுடன் e-mail மூலம் சில சந்தேகங்களைக் கேட்டு எனது உதவியையும் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர். முதியவர்களும் கூட அவ்வாறு செய்து வருகின்றனர். தமிழனாகிய என்னிடம் தமிழ்பேசும் மாணவர்கள் இவ்வாறு கேட்டுப் பயன்பெறுவதே இல்லை. அதனால் எனக்கு மனவருத்தமும் ஆதங்கமும் உண்டு. என்னை வளம்படுத்த இவ்வாறு நான் எழுதுகின்றேன் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. தகவலுக் காக. இதனை என்னைப் புரிந்து கொண்டு கெளரவித்த "ஜீவநதி பரணீதரன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத இதழில் என்னை விளம்பரப்படுத்திய பெருந்தன்மையை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
நிற்க, நன்றாக எழுதுதல் தொடர்பாக ஆங்கி லத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையின் சாரம்சத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். (p5656) William Zinsser GT6(TUG) fr GTCup;5u Writing well என்ற புத்தகத்தையும், James Reeves என்பவர் எழுதிய The
ஜீவநதி
 
 
 

Critical sense என்ற நூலையும் தேடிப் படித்து பாருங்கள் தமிழிலும் கூட நன்றாக எவ்வாறு எழுத முடியும் என்பதற் கான வழிகாட்டல்களை நாம் ஊகித்தறிய முடியும்.
துறையினர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் அனைவருமே Communication எனப்படும் தொடர்பாடலில் பாண்டித்தியம் பெற வேண்டியது சொல்லாமலே விளங்கும்.ஸின்ஸிர் தமது நூலில் அடிநாதமாகக் கூற வருவது என்னவென்றால் - தெளிவாகச் சிந்திக்கக் கூடிய எவருமே எந்த பொருள் பற்றியேனும் தெளிவாக எழுத முடியும் என்பதே நல்ல எழுத்து எப்போதுமே அது எழுதும் முறையில்(craft) தங்கியுள்ளது. ஒரு பந்தியி லிருந்து மற்றைய பந்திக்கு வாசகனை ஆர்வத்துடன் இழுத்துச் செல்லும் பாங்கு அந்த எழுத்தின் நடையைப் பொறுத்து அமையும். அந்த நடையில் தெளிவு இருத்தல் வேண்டும். எளிமையாக ஒருவர் எழுதினால் அதில் ஆழமில்லை, அவருக்கு வார்த்தைப் பஞ்சம் உண்டு என்று ஏளனம் செய்யும் விமர்சகர்கள் நம் மத்தியிலும் இருக்கிறார்கள். பரவாயில்லை அவர்களுக்குத் தெரியாததைத் "சுருங்கச் சொல்லி விளக்க வைத்தல்", "கூறுவது மீண்டும் கூறுல்" போன்ற அறிவுறுத்தல்கள் பயனற்றவை அல்ல என்று தெளிவாகச் சிந்திக்கும் போது தெளிவாக நாம் பரிவர்த்தனை செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதனால் வழவழா என்று எழுதாமல் எழுத்து நுட்ப முறைகளை அவதானித்து நாம் எழுத வேண்டிய கடப்பாடு நமக்கு ஏற்படுகிறது. நல்ல எழுத்தின் இரகசியம் என்னவென்றால், நமது எழுத்தின் ஒவ்வொரு வசனமும் தெளிவான சிறு சிறு வசனங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிக்கலான நீண்ட வசனங்கள் தெளிவை ஏற்படுத்த LDT LIT. Simple sentence are always letter than complex sentence, ஐயப்பாடுகளுக்கு இடம் ஏற்படாமல் நமது எழுத்து அமைய வேண்டும். வசனத்தின்வாக்கியத்தின் ஒவ்வொரு சொல்லும் தொழிற்பாடு கொண்டு உரிய இடத்தில் அமைய வேண்டும். செயற்பாட்டுவினையிலும் பார்க்க செய் வினையில் அமைந்த வசனங்கள் வாசகனை கவரும். Style in the man என்பார்கள். எனவே எழுத்து நடை எமது ஆளுமையைப் பிரதிபலிக்கின்றது எனலாம். எவ்வளவு தூரம் நாம் நேர்மையாகச் சிந்தித்து எழுதுகிறோமோ அவ்வளவு தூரம் நமது எழுத்து நடை சிறப்பாக அமைந்து கருத்துப் பரிவர்த்தனை இலகுவாக அமைய வகை செய்கிறது. இந்த எழுத்து நடை பற்றி விரிவாக அறிந்து கொள்ள E.B. White GT6ð LISIf William strunk GT6ör LJG)l(5L6ör 360600Tibg GTOLpg5u. The elements of Style GT6TD DIT606bulb தேடிப்படித்துப் பயன் பெறுங்கள்.
தமிழிலும் தமிழ் நாட்டில் நல்ல தமிழில் எப்படி எழுதுவது என்று பல நூல்கள் வெளிவந்துள்ளன. நீண்ட கட்டுரைகளை எழுதுதல் தவிர்க்கப்பட வேண்டியது. அதனால் இதுவும் குறுகத் தறிக்கப்பட்ட கட்டுரையாக அமைந்துள்ளது.
இதழ் 50
抄
堂
se

Page 101
குந்தவை
ஆழ் ந் த நசித் தரையரினுT டே செல்போன் அலாரம் அலறியது.
நல்ல தூக்கக் கலக்கத்திலிருந்த பிரதீபாவிற்கு தலைமாட்டில் அலறும் செல்போனை நிறுத்த கையை உயர்த்தவே விரும்பமில்லாதிருந்தது.
இப்பொழுது நாலரை மணிதானே ஆகிறது. இன்னும் ஐந்து நிமிஷத்திற்குப் படுத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் இமைகள் மூட நித்திரை எங்கோ இழுத்துக் கொண்டுபோயிற்று.
இந்த சத்தத்தில் அம்மா எழும்பி விடுவா என்ற எண்ணம் ஊடே தோன்ற நித்திரையை உதறி எழுந்து நின்றாள். செல்போனை அமுக்கிவிட்டு, படுத்திருந்த பாயை சுருட்டி வைத்து அறையை விட்டு வந்தாள். முன் விறாந்தையில் மங்கலாக எரிந்த யூ பல்ப் வெளிச்சத்தில் அண்ணா படுத்திருந்தான். அவன் தலைமாட்டில் செல்போனை வைத்துவிட்டுத் திரும்பிய பொழுது குசினிக்குள் எரிவது தெரிந்தது. குசினிக்குள் போன பொழுது பெரியக்கா கேத்தல் ܝܗ ܲܢ கொதிநீரை சட்டியிலுள்ள மாவிற்குள் ஊற்றி, அகப்பைக் காம்பினால் கிளறிக் கொண்டிருந்தாள்.
அக்கா வெள்ளன எழும்பி தனக்காக புட்டு அவிக்கிறாள் என்று தோன்றியதும் உண்டான நெகிழ்ச்சி யுடன், நான் தேங்கா திருவட்டா அக்கா? என்று கேட்டாள்.
கையில் பல்பொடியைக் கொடுத்துக்கொண்டே கொதி தண்ணி இருக்கு முகம் கழுவிப்போட்டு வந்து
ஜீவநதி
 
 
 
 

கோப்பி ஊத்திக் குடிச்சிட்டுப் போய் வெளிக்கிடு ஐந்தரைக்கு முதலே பஸ் ஸ்ரான்டிலை நிக்கோணும் என்றாள்.
பின் விறாந்தைக் கதவைத் திறந்தபொழுது லேசான குளிர்காற்று வீசியது. வானில் இருட்டு இன்னும் கட்டுக் குலையவில்லை. பிரதீபா பின் கதவின் பின்னாலிருந்த ஸ்விட்சைப் போட்டாள். வெளிச் சுவரின் லயிட் எரிந்தது.
அந்த வெளிச்சத்தில் கிணறு, பத்தல், வாளி என்று எல்லாம் தெரிந்தன. முகம் கழுவுவதற்குப் பதில் ஒரேயடியாகக் குளித்து விடலாமே என்று தோன்றியது.
அ  ைற க குளிர் செனி று உடுத்துக் குளிக்கும் துண்டு, துவாய், சோப், சட்டை என்று எல்லாவற்றை யுமெடுத்து வந்தாள். உடுத்துக் குளிக்கும் துணியைச் சுற்றிக் கொண்டு, சட்டையைக் கழற்றிக் கொடியில் போட்டாள். கையில் சோப் பெட்டியுடன் பின் வாசல் கதவோரம் வந்து நின்றாள். வெளியே போக சற்று தயக்கமாக பயமாக இருந்தது.
GTÜLIL?? இன்று முதல் வேலைக்குப் போக போகிறவள், இனி ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் குளிக்க வேண்டியவள் - இப்படிப் பயப்பட்டால்
பெரியக் கா, குசினிக் குள் அலுவலாக இருக்கிறாள். சின்னக்கா நல்ல நித்திரை, ஒருவரும் அவளின் துணைக்கு பக்கத்தில் வந்து நிற்கமாட்டார்கள் இப்பொழுது.
அவள், உடுத்து குளிக்கும் துணியைச் சுற்றிக்கொண்டு சட்டையைக் கழற்றிக் கொடியில் போட்டாள். அந்த வேகத்தில் வெளியே வந்து கிணற்று வாளியை கையிலெடுத்தான்.
கிணறு, இருட்குகை மாதிரித் தெரிந்தது. வாளி நீரைத் தொட்டதோ நீரைக் கோலியதோ ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் வாளியின் கனம் நீர் கோலப்பட்டு விட்டதைச் சொன்னது. இரண்டு மூன்று இழுவைகளுக்குள் மேலே வந்த வாளியின் நீரை அதே வேகத்தில், மேனியில் ஊற்றிக் கொண்டாள்.
இரண்டு வாளிகளுக்குப் பின் நிக்கரைக் கீழே கழற்றிவிட்டு, சோப்பை எடுத்து உடம்பில் தேய்த்தாள். தண்ணிர் ஊற்ற தாமதித்த அந்த நேரத்தில் உடம்பு வெடவெட என நடுங்கியது.
இதழ் 50

Page 102
சோப் போட்ட பின் மூன்று வாளித் தண்ணீர் சரி மொத்தம் ஐந்து வாளித் தண்ணிர் போதும்,
சோப்பையும் நிக்கரையும் எடுத்துக் கொண்டு பின்னால் யாரோ துரத்தி வருவது போன்ற கற்பனை யோடு திரும்பிப் பாராது ஒரே ஒட்டமாய் வீட்டிற்குள் வந்தாள்.
ஈரத் தை பெயருக் குத் துடைத் துவிட்டு சட்டையைப் போட்டுக் கொண்டு உடம்போடு ஒட்டி யிருந்த ஈரத்துணியை உருவி கொடியில் போட்டாள்.
சட்டையை அவசரமாக கீழே இழுத்துவிட்ட பொழுது, இந்த இருட்டு மூலைக்குள் யார் தன்னை உடை மாற்றுவதை பார்த்துவிட போகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற.
குசினிக்குளிருந்த நீற்றுப்பெட்டிக்குள் புட்டு அவியும் மணம் வந்தது. சின்னக்காவும் எழுந்து வந்து விட்டிருந்தாள், உருளைக்கிழங்கு சீவிக் கொண்டி ருந்தாள். சம்பல் இல்லையா எனக் கேட்டபொழுது சம்பல் மத்தியானத்துக்குப் புளித்துப் போடும். பொரியல்தான் கட்டிக் கொண்டு போகச் சரி, கத்தரிக்காயும், உருளைக்கிழங்கும் என்றாள் சின்னக்கா,
பெரியக்கா சுடச்சுடக் கோப்பி போட்டுத் தந்தாள். வேர்க்கொம்பு போட்டு இடித்த கோப்பி விடிகாலையில் எழும்ப முடியாமல் நாரிநோ, முதுகு நோ என அவதிப் படும் அம்மாவிற்கு இந்த வேர்க்கொம்புக் கோப்பிதான் சற்று ஆசுவாசத்தை தரும், மாரி காலத்தில் அவள் ஆஸ்துமா வினால் கஷ்டப்படும் பொழுதும் இந்தக் கோப்பிதான் நல்லது.
"உடுப்பு போட்டுக் கொண்டு வா கொஞ்சமாவது புட்டுச் சாப்பிடு”
அறைக்குள் போய் பெட்டியைத் திறந்தாள். உள்ளே மண் நிறத்தில் அரைப் பாவாடையும் கொலர் வைத்த வெள்ளை அரைக்கை சட்டையும் இரண்டு சோடி யிருந்தன. கீழே மடித்து வைத்த அவளின் சற்றுப் புதிதான நிக்கரும் பிராவும் இருந்தன. அவளை வேலைக்கு அமர்த்தி இருக்கும் அந்த தொண்டர் நலன்புரி நிறுவனமே பாவாடைக்கும் சட்டைக்கும் ஆன துணி களை வாங்கித் தந்தார்கள். அவற்றைத் தைப்பிப்ப தற்கும் "அலவன்ஸ் என்ற பெயரில் காசுதந்தார்கள்.
சட்டைகளை அணிந்து கொண்டதும், தலை இழுத்து கொண்டை மாதிரி பன் போட சின்னக்காவின் உதவியை நாட வேண்டியிருந்தது. தலைமயிரை ஒழுங் காக முடியவேண்டும். சிலும்பவிடக்கூடாதென்பது அவர்களின் விதி.
கண்ணாடியில் பார்த்த பொழுது இது நான் தானா என்ற பெருமிதமும் திருப்தியும் உண்டாயிற்று.
அக்கா தந்த புட்டு, தொண்டைக்குள் இறங்க வில்லை. இப்ப இதைச் சாப்பிடு, பிறகு மத்தியானத் s துக்குக் கட்டிக் கொண்டு போறதைச் சாப்பிடலாம்.
ஜீவநதி -
 
 
 
 
 

"இப்ப தானை கோப்பி குடிச்சனான் வேண்டாம்" என்றாள் பிரதீபா,
ஸொக்ஸைப் போட்டுக் கொண்டு, சப்பாத்திற் குள் கால்களைத் திணித்துக் கொண்டாள். நல்ல மிருதுவான லெதர் சப்பாத்து கால்களை லேசாகக் கவ்விப் பிடித்தன.
பெரிய அக்கா, சாப்பாட்டுப் பார்சலோடு வந்தாள். அதை அவளின் கைப்பைக்குள் வைத்துவிட்டு கையில நூறு ரூபாய் நோட்டையும் கொடுத்தாள்.
வானம் வெளிறிக் கொண்டு வந்தாலும் நிலத்தில் இருளின் பிடி இருந்தது. பாதை லேசாகத் தான் தெரிந்தது.
"பஸ் ஸ்ராண்டிற்குத் தனியா போவியா? அண்ணாவை எழுப்பட்டுமா? என்று கேட்டாள் சின்னக்கா,
அதற்குள் அண்ணாவே எழும்பிவிட்டான். துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவளோடு கூட நடந்தான்.
வழியில் இருவரும் பேசவில்லை. முந்தாநாள் பெய்த கோடை மழையில் அறுவடைக்கு காத்திருந்த புகையிலைச் செடிகள் பழுதாகிவிடுமோ என்று அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். பாவம் குடும்பப் பொறுப்பு எல்லாம் அவனோடுதானே தோட்டத்தில் என்னதான் பயிரிடவில்லை அவன்? புகையிலை, வெங்காயம்,காய்கறிகள்.
அவளும் தான் இன்று முதல் உழைக்கப் போகிறாள். அவளின் சம்பளமும் கொஞ்சமாவது குடும்பச் செலவைக் கொண்டு ஒட உதவும் இனி
அண்ணா பஸ் நிறுத்தத்தில் அவளைக் கூட்டிக் கொண்டு விட்டுவிட்டுப் போய் விட்டான். அவளோடு கூட நின்ற ஒரு சிலர் நின்றாலும் ஆண்கள் முகம் தெரியாத இருட்டு,
முந்தா நாள் மழை பெய்தாலும் நேற்று மீள கடும் வெய்யில், அது கக்கியதன் எச்சம், புதிதாகப் போடப்பட்ட றோட்டில் இரவு கடந்தும் லேசான வெக்கையாய் பரவியிருந்தது.
இந்த இடத்தில் நல்ல நிழல் மரங்களிருந்தன. கொதிக்கும் வெய்யிலிலும் இந்த இடம் தண் என்றிருக்கும். மதிய நேரத்தில் பஸ் ஸிற்குக் காத்திருப்பவர்களுக்கு வெய்யிலின் கொடுமை,
பஸ்களிலிருந்து இறங்கும் பயணிகள் கூட இந்த மரநிழல்களில் தம்மை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு செல்வதுமுண்டு. மாலை நேரங்களில் குருவிகளின் கொண்டாட்டம்.
இன்று அம் மரங்கள் ஒன்றுமே இல்லை. எல்லாவற்றையும் வெட்டி வீழ்த்தியாயிற்று. றோட்டு அகலிப்பிற்காக வரண்ட வெறுமையான றோட்டின் அருகே நின்று தவிக்கும் பஸ்ஸிற்குக் காத்திருக்கும்
இதழ் 50
5

Page 103
மக்கள்.
இரு பிரகாசமான ஒளிக் கண்களோடு ப நெருங்கி வந்து நின்றது. காத்து நின்றவர்கள் ஏற கொண்டார்கள். பிரதீபா தன் சப்பாத்துகள் ஏறுகையில் மற்றவர்களுடையதைப் போல் தடக்த என சத்தமெழுப்பவில்லை என்பதை அவதானித்தாள். LJ Grö Gmül Gö ee- 6) 6)J GTG) | F 60Ts bij 35 Glf) Gü 60) இப்பொழுதுதான் நெல்லியடியிலிருந்து புறப்பட
நடு சீற் ஒன்றில் சசிகலாவும் தோழி ரேணுகாவ இருந்தார்கள். பயிற்சி வகுப்புகளுக்குப் போகையி இவர்களைக் கண்டு பழக்கம்,
அவர்களின் எதிர்சீற்றில் போய் அமர்ந் கொண்டு, தலையைத் திரும்பி அவர்களைப் பார்த்து சிரித்தாள்.
"புதிசா வேலைக்குப் போறாய் பயமாயிருக்கா என்று கேட்டாள் சசி
சீ எனக்குப் பயிற்சிகளுக்குப் போய் பழக்க தானே" என்றாள் பிரதீபா, சிறிது நேரம் அவர்களோ கதைத்துவிட்டுதலையைத் திருப்பிக் கொண்டாள்.
ஆட்கள் இல்லாத பல பஸ் நிறுத்தங்கள் வாகனக் குலுக்கங்கள் அதிகமற்ற தெரு. LU ( தங்குதடையின்றி விரைந்து கொண்டிருந்தது. அர் விடிந்தும் விடியா காலைப் பொழுதில்
ஜன்னல் வழியாக குபுகுபு என வீசிய இள காலைக் காற்று. பிரதீபாவிற்கு நித்திரை நித்திரையா வந்தது.
இரண்டு மூன்று முறை தூங்கி தூங்கி விழுந்தா பக்கத்தில் ஒருவருமில்லாதது நல்லதாய் போய்விட்ட அல்லது ஒவ்வொரு தூங்கி விழலுக்கும் அவர்களிட திட்டு வாங்கியிருக்க வேண்டும்.
பஸ் நகர எல்லையைத் தொட்ட பொழு நன்றாக விடிந்துவிட்டிருந்தது.
ஆஸ்பத்திரி வாசலில் அவர்களோடு பஸ்6 லிருந்து இறங்கியவர்கள் வெளி நோயாளர் பிரிவி காட்டுவதற்காக வெள்ளனவே துண்டு எடுக் வந்தவர்களாக இருக்கவேண்டும்.
ஆஸ்பத்திரிக் கட்டிடத்தைச் சுற்றிக் கொண் அவர்களைப் பணியில் அமர்த்தியிருக்கும் அந் தொண்டர் நிறுவனத்தின் முன்றலுக்குப் போனார்க அந்த இவர்களை ஒத்த இளவயதினர் - ஆண்களு பெண்களுமாய் குழுமியிருந்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாள களை கூட இருந்து கவனித்துக்கொள்ள அவர்களி உறவினர்களால் இயலாத நிலையில் இந்த நலன்ட நிறுவனம் தன் பணியாளர்களைக் கொடுத்து உதவுகிற ஒரு பகல் பொழுதிற்கு ஐந்நூறு ரூபாய் இரவு பொழுதிற்கு ஐந்நூறு என அவ் உறவினர்களிடமிருந் வாங்கி அவற்றில் நூறு நூறு ரூபாய்களை, தன் நிர்வாக
ஜீவநதி
 
 
 

செலவிற்காகப் பிடித்துக் கொண்டு பணி செய்தோருக்கு நானூறு ரூபாய்களைக் கொடுக்கிறது.
கிளார்கு, வரவு புத்தகத்தில் கையெழுத்திட்டவர் களுக்கு அவர்கள் போகவேண்டிய வார்ட் இலக்கத்தை யும் நோயாளிகளின் படுக்கை எண்ணையும் சொல்லிக் கொண்டிருந்தார். அவற்றுக்கேற்ப அவர்கள் திக்கு திக்காய் சிதறிக் கொண்டிருந்தனர். س
பிரதீபா வரவு புத்தகத்தில் தன் வரவைப் பதிவுசெய்து நிமிர்ந்த பொழுது கிளார்கு இரண்டாம் வார்ட் பதினேழாம்நம்பர் என்றார்.
★女★
பதினேழாம் நம்பர் கட்டிலோடு நின்ற நிர்மலா, அவளைக் கண்டதும் கப்போர்டுக்குள் சாப்பாடு இருக்கு எடுத்துக் குடு என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டாள்.
கட்டிலில் வெளுத்த தலை, வெள்ளை பெட் ஜாக்கெட், வெள்ளைப் பாவாடை, சின்ன உருவம்தான்.
கட்டிலில் கால் நீட்டிக்கொண்டு அவளை ஏறிட்டுப் பார்த்தாள் அந்த கிழவி
“எந்த ஊர் பிள்ளை நீ?" “நெல்லியடி, குஞ்சர்கடை" கொய்யா என்ன செய்யிறார்? அப்பா இல்லை. அண்ணாதான் தோட்டம். கொம்மா, இருக்கிறவோ? நீங்க எந்த பகுதி அம்மா கொஞ்சம் சாப்பிடுறிங்களோ அம்மா? கொஞ்ச நேரத்தில பெரிய டொக்றர் வார்ட் பாக்க வந்திடுவா. அதுக்குள்ளை சாப்பிட்டுவிட வேணும்"
கிழவி தலையசைக்கவே, கப் போர்டுக் குள்ளிருந்த தட்டை எடுத்துக் கழுவி வந்தாள். கப்போர்டுக்குள் ஒரு சிறு பேசினுமிருந்தது. அதில் நீர் பிடித்து வந்தாள். அதற்குள் கிழவியின் கையை அமிழ்த்தி கழுவ வைத்தாள். சாப்பாட்டுப் பார்சலை அவிழ்த்து ஒவ்வொரு இடியப்பமாக எடுத்து தட்டில் வைத்தாள். முடிச்சிட்ட ரிச்யூ பைக்குள் சொதி ಜ್ಞ இருந்தது. அதை இடியப்பங்கள் மேலூற்றி, கிழவியைச் சாப்பிட வைத்தாள்.
டம்ளரில் மினரல் வார்டரை நிரப்பி, குடிக்க என கப்போர்டின் மேல் வைத்துவிட்டு சற்று விலகி நின்றாள். சாப்பிட்டு முடிந்ததும் சாப்பாடு சுற்றிவந்த பேப்பரை டஸ்ட் பின்னுக்குள் போட்டு சாப்பிட்ட தட்டையும் கழுவி மறுபடியும் பேசினில் தண்ணிர் பிடித்து வந்து சாப்பிட்ட கையை கழுவ வைத்தாள்.
சிறு துண்டு எடுத்து நனைத்து கிழவியின் வாயைச் சுற்றி துடைத்துவிட்டாள்.
கிழவியைப் படுக்க வைத்து கால் பகுதியை போர்வையால் மூடிவிட்டாள்.
சற்று ஆசுவாசப்பட்ட பின் கிழவி கூப்பிட்டாள். ஒண்டுக்கு இருக்கவேனும்,

Page 104
வராந்தாவில் தேடிப்போய், சக்கர நாற்காலியை எடுத்து வந்தாள். சேர்ந்திருந்த அதன் மிதிபலகைகளை பிரித்து தள்ளிவிட்டு கிழவியை அணைத்துப் பிடித்து வந்து, நாற்காலியில் செளகர்யமாக இருக்க வைத்தாள். உருட்டினாள்.
பாத் ரூம் வெளிப்புற வாசலருகே சக்கர நாற்காலியை நிறுத்திவிட்டு கிழவியை உள்ளே அழைத்துப் போனாள். சொல்லி வைத்தாற் போல் பாவனைக்குகந்த கழிவறைகள் எல்லாம் சாத்தி யிருந்தன. கடைசிக் கழிவறையில் கொமோட் உடைந்திருந்தது. மற்றதில் ஏதோ அடைத்துக் கொண்டு நிரம்பியிருந்தது.
மூடியிருந்த கழிவறை ஒன்றின் முன் காத்து நிற்கையில் கிழவி பாவாடையோடு ஒன்றுக்கு இருந்துவிட்டாள். சற்றுத் தள்ளி நின்று தொட்டியிலுள்ள நீரை மொண்டு கால்களைக் கழுவிவிட்டாள்.
பின் வெளியே அழைத்துவந்து, சக்கர நாற்காலியில் இருத்தி வார்ட்டுக்கு கொண்டுவந்தாள். கிழவியைக் கட்டிலில் இருத்திவிட்டு பெட்டியைத் திறந்து மாற்றுப் பாவாடையை எடுத்தாள். |5Tջg|L|D(ԼՕւն திரைச்சீலையை இழுத்துவிட்டு, நனைந்த பாவாடையை அவிழ்த்து மாற்றுப் பாவாடையைக் கட்டிவிட்டாள். லேசாக மூத்திரவாடை அடித்த பழைய பாவாடையை ரிஸ்யூ பையில் திணித்து கட்டிலின் கீழ் வைத்தாள்.
அதற்குள் இளம் டொக்றர்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு கட்டிலாகப் போய் பைல்களைப் புரட்டிப் பார்த்து, எத்தனையோ கேள்விகள் கேட்டு ஏதேதோ குறிப்பு எடுத்து கொண்டிருந்தனர். இந்த கட்டிலுக்கு வந்த இளம் டொக்றரின் இடது கையில் சின்ன விரலுக்கு அடுத்த விரலில் புதிதாய் மோதிரம் பளிச்சிட்டது. அவனிடம் கிழவி காத்து நிற்கையில் பாவாடையோடு ஒன்றுக்குப் போனதைச் சொன்னாள். அவன் அதையும் குறித்து வைத்திட்டான் போலிருந்தது.
பிறகு பெரிய டொக்றர் இளம்டொக்றர்கள் புடைசூழ ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக் கொண்டு வந்தார். ஒவ்வொரு கட்டிலின் மேலுள்ள பைலை திறந்து வைத்துக்கொண்டு இளம் டொக்றர்களுக்கு ஏதேதோ விளக்கமளித்தார். கிழவியிடம் சும்மா படுத்திருக் கைக்கை காலை சுழற்றி சுழற்றிப் பாருங்கோ, கொஞ்சம் கொஞ்சம் நடவுங்கோ என்று சொல்லி வைத்தார்.
பெரிய டொக்றர் தன் பரிவாரங்களுடன் போனபின்பு கிழவி ஏதாவது மா கரைச்சு தா பிள்ளை, களையாக் கிடக்கு" என்றாள்.
பிளாஸ்கில் சுடுநீர் இருக்கவில்லை. ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு கன்ரினுக்கு சுடுநீர் வாங்கப் போனாள். பிளாஸ்கை சுடுநீர் நிரப்பக் கொடுத்துவிட்டு அடுக்கியிருந்த லைப்போய் சோப்புகளையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவளின் பயிற்சிக் காலத்தில் கை
ஜீவநதி 100
 
 

கழுவுதல் என்ற ஒரு தனி வகுப்பே நடாத்தி யிருக்கிறார்கள். ஒரு லைப்போய் சோப் வாங்கிக் கொண்டு போய் கைகளை எல்லாம் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்று தோன்றியது. பெரியக்கா தந்த காசில, ஒரு வழிப் பயணமாக பஸ் செலவிற்கு அறுபது ரூபாய் போக மீதி நாற்பது ரூபாய் அவளிடமிருந்தது. அது சோப் வாங்க மட்டுமட்டாகக் காணும் என்பது நெரிந்ததினால் காசைக் கொடுத்து சோப்பை வாங்கிக் 65T60LT.
கிழவிக்கு நெஸ்ரமோல்ட் கரைத்துக் கொடுத்த பின்பு குடித்த கோப்பைகளை கழுவி வைத்துவிட்டு சோப்பை எடுத்துப்போய், கைகளை நன்றாக கழுவி வந்தாள். கைகள்ை கழுவியதும்-சாப்பிட வேண்டு மென்று தோன்றியது. பசிக்கவும் செய்தது. ஒயில் பேப்பரில் சோப்பை சுற்றி எடுத்துவந்து தன் கைபையில் வைத்துவிட்டு சாப்பாட்டுப் பார்சலை எடுத்துக் கொண்டாள். கிழவியிடம் சொல்லிவிட்டு கோடியி லிருந்த சாப்பிடும் அறைக்குப் போனாள். அந்த நேரத்தில் புட்டும் உருளைக்கிழங்கும் பொரியலும் அமிர்தமாயிருந்தன. சுற்றிவந்த பேப்பரை டஸ்ட் பின்னுக்குள் போட்டு கை கழுவித் திரும்பியபொழுது சற்று ஆயாசத்துடன் படுத்திருந்த கிழவி அவளைக் கண்டதும் கக்கூஸ்விக்குப் போகவேனும் என்றாள்.
தாமதிப்பது மோசமாக்கும் எனத் தெரிந் திருந்தமையால் அவசரமாக சக்கர நாற்காலியைக் கொண்டு வந்தாள் பிரதீபா,
இந்த முறை கழிவறைகள் எல்லாமே திறந்திருந்தன. கிழவியை ஒன்றிற்குள் போகவிட்டு பாவாடையை தொடைகளுக்கு மேலாக உயர்த்தி சுருட்டி அவள் கையில் கொடுத்துவிட்டு வெளியே வந்து கதவைச் சாத்திக் கொண்டு நின்றாள்.
சிறிது நேரத்தில் கிழவி கூப்பிட்டாள். பிரதீபா உள்ளே போனாள். கிழவி நின்றவாக்கிலே கழித்து
விட்டிருந்தாள். தண்ணீர் அள்ளி அள்ளி ஊற்றி
பேஸினையும் காலில் சிந்தியிருந்த மலத்தையும் கழுவி விட்டாள். கிழவியால் இடது கையைத் தாழ்த்தி அதிகமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பிரதீபா தான் பிரஷ்டத்தின் பிளவுகளில் கைவிட்டு நீர் ஊற்றிக் கழுவ வேண்டியிருந்தது.
கிழவியின் பாவாடையை தழையப் பதித்து, வெளியே கூட்டி வந்தாள். ஆனாலும் ஒரு சிறு ஆறுதல், பாவாடை நனைந்திருக்கவில்லை.
கிழவியைக் கட்டிலில் இருத்திவிட்டு தானும் கழிவறைக்குப் போய்விட்டு வந்த கை கால்களை நன்கு கழுவி வந்தாள். அவளுக்கும் இந்த நேரத்தில் போவதுதான் பழகிவிட்டிருந்தது.
அவள் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவி தன் அடுத்த கட்ட செயல்பாட்டைச் சொன்னாள்.
@g, 50

Page 105
ཁོང་
"குளிக்கோணும்"
"என்னம்மா இது? காலையில அல்லோ குளிக்க வேணும். இந்த நேரத்தில
"நான் இந்த நேரத்தில வெய்யில் ஏறின பிறகுதான் குளிக்கிறனான் - இதுதான் பழக்கம்"
சரி மாத்தும் பாவாடை இல்லையே - ஒண்டு அழுக்கா இருக்கும். உடுத்திக்கிறதையும் கட்டிக் குளிச்ச அதுவும் ஈரமாய் போயிடும்.
கிழவி தலையணைக்கு கீழிருந்த செல் போனைக் காட்டினாள். மகளுக்கு அடிச்சுச் சொல்லு மத்தியானம் வரக்கை ரெண்டு சோடி உடுப்பு கொண்டு Gਪਰੰ6ਰTCDeਮਲੀGDT66ਹਹੀBL
ஒரு தட்டு அகிலாவின் பெயரும் இலக்கமும் வந்துவிட்டது. நம்பரை குறித்து வைத்துக் கொண்டு எண்களை அழுத்தினாள்.
மறுமுனையில் அகிலாவின் குரல் கேட்டது. தன்னை அறிமுகப்படுத்திவிட்டு "அம்மா குளிக்க வேணுமாம், உடுப்பு எல்லாம் ஈரமாயும் அழுக்காய மிருக்கு - மத்தியானம் வரக்கை இரண்டு சோடி உடுப்பு கொண்டு வாங்கோ,
சற்று நேரத்தில் மகள் சொல்வது கேட்டது. நான் லஞ்ச் ரைம் வீட்டைப் போய், உடுப்பும் சாப்பாடும் எடுத்துக் கொண்டு நேரே ஆஸ்பத்திரிக்கு வாறன், கொஞ்ச நேரம் செல்லும். ஒரு மணி அப்படி,
சொல்லி வைத்தது மாதிரி ஒரு மணிக்கு ஐந்து நிமிசம் இருக்கையில் மகள் அரக்க பரக்க வந்தாள் இரு பார்சல்களுடன்,
"அம்மா குளிக்கிறதெண்டா கன நேரம் ஊற விடாதை, நாலைஞ்சு வாளி தண்ணி காணும். கெதியா ஈரம் எடுத்துக் கூட்டிக் கொண்டு வா" என்று சொல்லி விட்டு போகப் புறப்பட்டவளிடம் "அழுக்குப் பாவாடை இருக்கு அதைக் கொண்டு போறிங்களா?" என்று கேட்டாள் பிரதீபா,
"நான் இப்ப ஒவ்விஸக்ேகுப் போறன், அங்கை இதை என்னண்டு கொண்டு போறது. ஒண்டு செய்.
உடுத்தியிருக்கிற பாவாடை நனையத்தானே போகுது. அதோடை இதையும் போட்டு நனைச்சு எடுத்துப் போட்டு
பின் கதவால கீழே இறங்கி பார் கல்லுகள்
அடுக்கியிருக்கும். அதுகளை மேலே இதுகளை காயப்
போட்டுவிடு" என்றாள்.
விஸிட்டர்களை வெளியேறுமாறு கேட்கும்
சிக்குறிரி காட்டின் குரல் பலத்துக் கேட்டது. மகள்காரி
அம்மா பின்னேரம் வாறன்" என்று சொல்லி அவசரமாக
வெளியே நடந்தாள்.
அந்த மகள்காரி சொன்னது மாதிரி கிழவியை
எட்டு சட்டி தண்ணிரில் குளிக்க வார்த்து ஈரமெடுத்து
மாற்று உடை அணிவித்து வார்ட்டிற்கு கூட்டிவந்தாள். அந்த மூத்திரப் பாவாடையை எடுத்துப் போய் நீர்
ஜீவநதி
 
 
 
 
 

தொட்டியருகே கிழவி கழற்றி விட்ட பாவாடையோடு போட்டு, தண்ணீரை அள்ளி அள்ளி ஊற்றி புரட்டி எடுத்து பிழிந்து எடுத்துப் போய் பின் வாசல் வழியாக கீழிறங்கி அந்த கல் அடுக்கின் மேல் காயப் போட்டாள்.
கை கழுவிக் கொண்டு உள்ளே வந்து சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்து அப்படியே தட்டில் வைத்து கிழவியைச் சாப்பிட வைத்து பின் பேஸினில் தண்ணிர் பிடித்து வந்து அதில் கையை அமிழ்த்தி கழுவிவிட்டு கைலேஞ்சி ஒன்றை எடுத்து நனைத்து கிழவியின் வாயைச் சுற்றி துடைத்துவிட்டாள்.
கிழவி அயர்ச்சியுடன் படுத்துக் கொண்டாள். அவள் நித்திரையானதும் சற்று ஒய்வு கிடைத்த நினைப்பில் பிரதீபா வெளியே வந்துநின்றாள்.
பக்கத்து வார்டிலிருந்து ரேணுகா வெளியே வந்தாள். "வாவன் அப்பாகன்ரீன்லரீ குடிச்சு வருவம்,
பிரதீபாவிற்கு தன்னிடம் காசு இல்லை என்பது நினைவுக்கு வந்தது. 'நாலு மணியாகப் போகுது. இனி வீட்டை போறதுதானே - இப்ப என்னத்துக்கு ரீ?" என அவள் சமாளிக்கப் பார்த்தாள்.
ரேணுகாசிரித்தாள். "இஞ்சையிருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு பஸ் ஸ்ராண்டிற்குப் போக நாலரை ஆயிடும். சனங்களை எல்லாம் அடிச்சு நிரப்பிக் கொண்டு பஸ் வெளிக்கிட ஐஞ்சு மணியாயிடும். வீட்டை போக ஆறு மணிக்கு மேல் ஆயிடும். அதுவரை என்னணி டு பசியோட இருக்கிறது? வாப்பா கன்ரினுக்கு"
"என்னட்டை இப்ப காசு இல்லை" "நான் வாங்கித் தாறன். சம்பளம் வந்த பிறகு தா” விடாப்பிடியாக ரேணுகா கன்ரினுக்கு அழைத்துப் GBUNTGOTTIGT,
கன்ரீனில் வடை ஒன்று பதினைந்து ரூபாய். ஒரு கோப்பை தேநீர் பதினைந்து ரூபாய் மொத்தம் ஆளுக்கு முப்பது ரூபாய்,
அதிகாலை பொழுது தட்டில் புட்டை தந்து பெரிய அக்கா சொன்னாள். "இப்ப இதைச் சாப்பிடு. கட்டிக் கொண்டு போறதை மத்தியானம் சாப்பிடலாம்" ஆனால் அந்த அதிகாலைப் பொழுதில் அவளால் சாப்பிட முடிய வில்லை. அதுவும் கோப்பி குடித்த பிறகு பெரியக்கா சொன்னபடி செய்திருந்தால் இந்த முப்பது ரூபாய் செலவைத் தவிர்த்திருக்கலாமோ? கட்டி கொண்டு வந்த சாப்பாட்டை காலை பத்து மணிக்கு சாப் பிட்டிருக்காமல் மதியம் ஒன்றரைக் குச் சாப்பிட்டிருந்தால். -
கன்ரீனிலிருந்து வெளியே வந்து வராந்தாவில் நின்று சிறிது நேரம் கதைத்து விட்டு உள்ளே வந்தாள். கிழவி நித்திரை கொண்டு எழும்பியிருந்தாள். தலை குழம்பியிருந்தாள். சீப்பு எடுத்து தலைமயிரை இழுத்து வாரி ஒரு சின்ன குடும்பியாய் முடிந்துவிட்டாள்.
101- இதழ் 50

Page 106
கையில் பவுடரைக் கொட்டி அவள் கன்னத்தில் லேசாக பூசிவிட்டாள்.
"நாலு மணிக்கு வேறை பிள்ளை வருவா, அவ உங்களுக்குமா கரைச்சு தருவா"
பிரதீபா காயப் போட்ட பாவாடைகளை எடுத்து வந்து மடித்து வைத்துவிட்டு தன்னை விடுவிக்க மாற்றுப் பிள்ளை வருவதைப் பார்த்து நின்றாள். அவள் வந்ததும் புறப்பட்டுவிட்டாள்.
பிரதீபாவும் ரேணுகாவும் சேர்ந்து நடக்கையில் வழியில் அவர்களோடு சசிகலாவும் சேர்ந்து கொண்டாள்.
மூவரும் நலன்புரிநிலைய வாசலுக்கு நடந்தனர். பணி முடிந்த நேரத்தைக் குறித்து கையெழுத்திட்டனர். பிறகு சம்பளம் பெற்றுக் கொண்டதற்கான ஒரு கையெழுத்து.
பஸ் நிலையம் வந்த பொழுது நாலரை ஆகி விட்டிருந்தது. அவர்களின் பஸ் எழுநூற்றி ஐம்பது பருத்தித்துறை ஷெட் அருகே வந்து நின்றிருந்தது. ஆட்கள் ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பஸ்ஸில் ஏறியபொழுதும் பஸ்ஸில் நல்ல இடமிருந்தது. முன்னும் பின்னுமாக இரு சீற்றுக்களில் அமர்ந்து கொண்டனர்.
மேற்கு சரியும் சூரியன் வெப்பத்தையும் புழுக்கத்தையும் பஸ்ஸிற்குள் வீசிக் கொண்டிருந்தான். பிரமிளா முன் சீற்றின் முதுகின் மேலிருந்த கம்பியில் தலையை கவிழ்த்துக் கொண்டாள். பஸ்ஸின் மிதி படிகளில் ஏறி தடதட என ஆட்கள் வரும் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.
ஆட்கள் அடைத்துக் கொண்டு நின்றனர். கொண்டக்றர் பஸ்ஸில் ஏறி டிக்கட் கொடுக்கத் தொடங் கினான். அவன் அவர்களருகே வந்தபொழுது பிரதீபா ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினாள் மிச்சமாக ஒரு இருபது ரூபாய் தாளும் இரண்டு பத்து ரூபாய் தாளும் அவளுக்குக் கிடைத்தன. அதில் ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்துக் கொண்டு மற்ற முப்பது ரூபாய் களையும் ரேணுகாவிடம் கொடுத்து கன்ரீன் கடனைத் தீர்த்தாள். 毅 ஒருவாறு பஸ் புறப்பட்டது. புழுக்கத்தை மீறி நடுவில் அடைத்து நின்ற பயணிகளையும் தாண்டி இதமான காற்று வீசியது.
பிரதீபா மனத்திற்குள் கணக்குப் போடத் தொடங்கினாள். இப்பொழுது கையில் இருப்பது முந்நூற்றிப் பத்து ரூபாய், போன உடனே பெரியக்கா விடம் காலையில் வாங்கிய நூறு ரூபாயைத் திரும்பிக்
கொடுக்க வேண்டும். மீதி இருநூற்றிப் பத்து ரூபாய்
நாளைக்கு திரும்ப பஸ்ஸிற்கு அக்காவிடம் காசு கேட்க முடியாது. போக - ஒரு வழிப் பயணத்திற்காவது காசை - அறுபது ரூபாயை எடுத்து வைத்துவிட வேண்டும். இன்றையைப் போல கன்ரீன் செலவு ஒன்று ஏற்பட்டால்
 
 
 
 
 

அதற்கொரு முப்பது ரூபாய் மொத்தம் தொண்ணுறு ரூபாய். மீதி இருப்பது நூற்றி இருபது ரூபாய், ஒரு சோப்கேஸ் வாங்க வேண்டும். அல்லா விட்டால் சோப் கைப்பையை பழுதாக்கிவிடும். அதற்கு ஒரு இருபது ரூபாய்.
பிரதீபா அன்று எத்தனை தரம் சோப் போட்டு கை கழுவினோம் என எண் ணிப் பார்த்துக் கொண்டாள்.
அதிகாலையிலெழுந்து தனக்கு சாப்பாடு கட்டித் தருவதற்காக புட்டுக்கு மா குழைத்த பெரிய அக்காவை நினைத்துக் கொண்டாள். வழக்கத்திற்கு மாறாக வெள்ளன எழும்பி தனக்கு உருளைக்கிழங்கு சீவிப் பொரித்து தந்த சின் னக் காவை நினைத்துக் கொண்டாள். பாதி இருட்டில் தன்னோடு பஸ் நிறுத்தம் வரை வந்த அண்ணனை நினைத்துக் கொண்டாள்.
கையிலிருந்த நூறுகளில் மிஞ்சி நிற்கப் போகும் ஒரே ஒரு தாளைப் பார்த்துக் கொண்டாள்.
மனம் கசந்து போய்விட்டது.
கவிதை அல்ல
இன்றைய உலக நியதி
எதுவும் நிரந்தரமில்லை என்றுணர்த்துவது இடப்பெயர்வு.
அழுதாலும் குழறினாலும்
ஆவது
ஆம்
போது தன்போக்கில் போம்
என்றுணர்த்துவது
G3L UITft.
தந்திரங்களால் சிலருக்கு வெற்றி பலருக்கு துயர், தொல்லை,
ԺIT6ւլ,
முடிந்தால் தந்திரம் செய், --- ஏமாற்று, s அல்லது ్య அழிந்து போ. S
S இது தான் (බී) இன்றைய 款
gᎠ Ꮆu)ᏯᏐ5 6"
நியதி.
இதழ் 50

Page 107
ܢܡ
ده
تحدة
தாட்சாயணி
விடியவிடிய மொட்டை மாடியில் நின்றிருந் தாள். நிலவு, தெறித்துத்தெறித்து இலைகளூடு பாலாய் வழிந்து கொண்டிருந்தது. கடலின் இரைச்சல் மோதி, மோதி மனதை ஒரு பாறையென எண்ணி அடித்து விலகியது. ஒரு பேயெனத் தோற்றம் காட்டியவாறு தன்னை எண்ணிக் கொண்டாள். ஆட்களற்ற நள்ளிர வின் பொழுதில் கீழே வீதி வெறிச்சோடியிருந்தது.
ஜன்னலூடு தெரிந்த மரங்களின் கிளைகள் நிலவில்
அசைந்து திகில் ஊட்டின. திகில் என்பதன் அர்த்த மெல்லாம் கடந்து, ஏதோ ஒரு சடம் போல் நின்றிருத் தலில் என்ன ஆறுதல் இருந்ததோ..? இதற்கு மிஞ்சி அவள் அனுபவித்து விடப்போவதில்லை எந்தவதையை யும். நேரம்ஆக, ஆக தனிமை ஒரு சுருக்குக் கயிறு போல் அவளை இறுக்கத் தொடங்கிற்று. இது ஒன்றும் புதினமாய் இருக்கப் போவதில்லை அவளுக்கு. எப்போதும் அவளைச் சுற்றித் தனிமை தன் கோட்டினை வரைந்தபடிதான் இருந்தது. ஆனால், இந்தத்தனிமை கொடுமையாய் இருந்தது. மனதின் வதையைப் பகிர முடியாதபடி கொடுமையாய் இருந்தது. சிலவேளை தனிமையைப் பகிர நினைத்ததன் பலன் தான் இந்தக் குரூரவதையின் ஆரம்பப் புள்ளியாய் இருக்குமோ..?
இன்னும் கொஞ்ச நேரம் அங்கே நின்றால் கீழே குதித்து விடுவாள் போலிருந்தது. இப்போ தெல்லாம் அடிக்கடி அப்படி நேர்கிறது. மனதின் கட்டுப்பாட்டை மீறி ஏதாவது நடந்து விடுமோ என்கிற பயம் வந்து விடுகிறது. கீழே பச்சைப்புல்லின் கீழ் மறைந்திருக்கின்ற கல் துணிக்கைகளில் அடியுண்டு குருதி பீறிட்டால் கூட அவளுக்கு வலிக்காது எனும் எண்ணம் ஏற்பட்டிருந்தது. இன்னும் முற்றாகக் காணாமல் போயிருந்த அறிவின் மீதம் மூளையை அருட்டிக் கொண்டிருந்ததால் எங்கே தன்னை மீறி எதுவும் நடந்து விடுமோ எனும் பயத்தின் முன்னெச்சரிக்கையோடு அவள் உள்ளே வந்தாள்.
ஜீவநதி
 

எதுவும், யாருக்கும் நினைத்தபடி நடந்து விடுவதில்லைத்தான். நினைத்தபடி நடந்து விடுவதற்கு அவள் எதுவும் பெரிதாய் எதிர்பார்த்து விடவும் இல்லை. அவள் நினைத்ததெல்லாம் அவளுடைய அம்மாவோடு கடைசிவரை இருக்க வேண்டுமென்பது தான். அவளுடைய கனவுகள் எல்லாம் நடக்காமல் போனதைப்பற்றி அவளுக்குக் கவலை இல்லை. ஏனென்றால் அவை கனவுகள்.
கனவுகள் எல்லாம் நனவாவதில்லை என்பதை அவள் கனவு காணத்தொடங்கிய போதே அறிந்துதானிருந்தாள். ஆனால், அவள் இப்போது கேட்பது சாதாரண வாழ்க்கை. அந்தச் சாதாரண வாழ்க்கையை அவள் சாதாரணமாகவே வாழ்ந்து முடித்து விடக்கூடும். ஆனால், இந்த உலகம் அதற்குக் கூட அவளை விடவில்லை.
அவளுடைய கனவு பல்கலைக்கழகத்தை நோக்கி அவாவியிருந்தது. பாடசாலையில் படிக்கிற காலத்தில் எல்லாரதும் கனவுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம் பல்கலைக்கழகம், இரண்டொரு புள்ளிகள் குறுக்கே நின்று தடைப்பட்டது அவளது கனவு தளர்ந்து போகாமல் போட்டிப் பரீட்சை எழுதி ஆரம்பக்கல்வி ஆசிரியை ஆனாள். அம்மாவைப் பார்த்துக் கொண்டு பாடசாலை போய் வருவதற்கு இடைஞ்சல் கொடுத்தது இருபது மைல் தள்ளி அமைந்திருந்த பாடசாலை, அந்தக் கனவிலும் சின்னக் குறுக்கம். அலைந்துலைந்து பள்ளிக்குப் போய்வந்து அம்மாவைப்பார்த்தாள்அவள் அம்மாவுக் கொன்றும் பெரிய வருத்தமில்லை. பிரெஷர் அடிக்கடி ஆளை விழுத்தும். அது அவளது தம்பியை நினைத்து ஏற்படு கின்ற வருத்தம், அது இந்தப்பிறவியில் தீரப் போவ தில்லை அம்மாவுக்கு.
அக்கா பக்கத்தில் தான் இருக்கிறாள். அக்காவுக்குத் தன் மூன்று வாண்டுகளுடனும்
(6.5D 50

Page 108
அல்லாடவே பொழுது சரியாகப்போகிறது. அத்தோ( அக்காவுக்குப் பொறுமையில்லை. அம்மா தம்பியைக் குறித்து அரற்றும் அரற்றல்களுக்கு அவளுக்குத் தேறுதல் சொல்லத் தெரியாது. உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அக்காவுக்கு எப்போதும் இருந்த தில்லை. அதனால் தானோ என்னவோ அத்தானோடு அக்காவுக்கு ஏற்படும் சச்சரவுகளில் பெரும் பாலானவை அக்காவாலேயே ஏற்படுகின்றன என அவளுக்குத் தோன்றும்.
அணி னன் கள் இருவரும் எப் போதோ பிரான்சுக்கும், சுவிசுக்கும் புலம்பெயர்ந்து போய் விட்டார்கள். அவர்கள் போனதனால் தான் அக்காவை ஊருக்குள்ளேயே கட்டிக்கொடுக்க முடிந்தது. அதற்குப் பின் அவர்களும் இங்கிருந்து பெண்எடுத்து திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றபின் அம்மாவையும் தங்கள் நாட்டிற்குக் கூப்பிட்டார்கள். அம்மா மறுத்து விட்டாள். அவளுக்கு அங்கே எந்த இடமும் தேவையில்லை. இங்கேயிருந்த தம்பியை அவர்கள் எப்போதோ அங்கு எடுத்திருந்தால் எந்தச்சிக்கலும் வந்திருக்காது. அவன் போகவில்லை. கொழும்புக்குப் போகவென்று போனவன் அப்பால் கொழும்புக்குப் போகாமலேயே வன்னியிலேயே நின்று கொண்டான். அதற்குப் பிறகு அவனோடு ஒரு தடவை கூடப் பேசும் சந்தர்ப்பம் அவர் களுக்குக் கிடைக்கவில்லை. கடைசியில் அவனுக்கு என்ன நடந்தது என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. அம்மா இப்போது ஒருவரிடமும் பேசுவதுமில்லை. எத்தனை பிள்ளைகள இருந்தாலும், அம்மாவை வருத்த அவன் ஒருவனின் நினைப்புப் போதுமானதாயிருந்தது.
இவளுக்குக் கிரகத்தில் ஏதோ கோளாறு இருப்பதாய்ச் சொன்னார்கள். ஒவ்வொரு தடவை கல்யாணம் பேசிவருகின்ற போதும், ஏதேதோ சாட்டு களில் கைநழுவிப்போனது. அண்ணன்கள் வெளி நாட்டில் பார்க்கவா. என்றபோது, இவள் மறுத்து விட்டாள். அம்மா பாவம் தனித்து விடுவாள். அக்காவை நம்பி அம்மாவை விட்டுப்போக முடியாது. இருக்கிற ஆயுளில் பாதிக்குமேல் அக்காவின் சொற்கேட்டே அம்மாவுக்கு இல்லையாகி விடும்.
அக்கா கொண்டு வரும் குறிப்புக்களை இவள் அக்கறையின்றிப்பார்ப்பாள். எந்த ஒரு முடிவுமின்றி எதற்காக அதைப் பார்க்க வேண்டும் என்பது போலிருக்கும் அவளது பார்வை, ஒரு பெண் தனக்குப்பார்க்கும் ஒவ்வொரு வரனிலும் அக்கறை கொள்ள ஆரம்பித்தாள் என்றால் எத்தனை பேரோடு தான் அவள் வாழ்ந்து தீர்ப்பது.? அதனால் எந்த ஒரு அக்கறையையும் காட்டுவது குறித்து அவளுக்கு ஆர்வம் இருந்ததில்லை. -
என்னடி உனக்குத்தானை பாக்கிறம், நீ என்ன ஆருக்கோ வந்த விருந்து போலையிருக்கிறாய்."
ஜீவநதி

அக்கா பொரியும்போது இவளுக்குச் சினமாயிருக்கும். "சரிவந்தாச்சொல்லக்கா. அதுக்குப் பிறகு கேக்கிறன் ஆர், எவர், என்ன செய்யிறார். எண்டெல்லாம்."
அக்கா அதற்கு மேல் பேசமாட்டாள். அவளுக்குத் தெரியும். இவளது தீய்ந்து போன கனவு களில் அதுவும் ஒன்று.
மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது அது. அவனைப்பேசி முற்றாக்கி இருந்தார்கள். வேறொரு பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தான். ஏதோ அலுவலாய் வருவது போல இவளது பாடசாலைக்கு வந்து இவளைப்பார்த்தும்போயிருந்தான். இவளும் அவனைப் பற்றி அறிந்திருந்தாள். குறைப்பட எதுவு மில்லை. சம்மதித்து விட்டாள். நாள் குறிக்க வேண்டியது தான் மிச்சமாக விருந்தது. இவளது நண்பிகளும் ஓரிருவர் விடயமறிந்து கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
திடீரென்று தான் அத்தான் அந்த செய்தியைச் சொன்னார். வீடு சின்னதாய் இருக்கிறதென்றும் அதனால் இன்னும் பத்து லட்சம் சீதனம் அதிகமாய்த்தர வேண்டுமென்றும் கேட்டார்களாம். இவளுக்குச்சுரீரென்றது. "அண்ணாக்கள் வெளிலை எண்டு அறிஞ் சிட்டுக் கேக்கினம் போலை. அக்கா பொருமினாள்.
"என்னெண்டாலும். பாத்துச் செய்யத் தானைவேனும்." அம்மா கட்டிலில் எழுந்திருந்தபடி கொஞ்சம் முனகினாள்.
"இல்லையம்மா. எனக்கிதுவேண்டாம்." அவளுக்குத் துண்டறப் பிடிக்காமல் போயிற்று.
ஏன்.? எதற்கு.? யாரும், எதுவும் கேட்க
அண ண ன் களர் விடயமறிந்த போது தங்களிடம் ஏன் சொல்லவில்லை என்றார்கள். அவர்களும் குடும்பம், குழந்தை என்றான பின் அவர்களிடம் இனி எதையும் எதிர்பார்க்கக் கூடா தென்பது அவளுடைய இப்போதைய கொள்கையாய் இருந்தது. அக்காவின் கல்யாணத்துக் கென்று அவர்கள் எவ்வளவு கொடுத்தார்கள். இந்த வீடு கூடஅவர்களின் உழைப்புத்தானே.? இதற்குப் பிறகும் அவர்களிடம் எதிர்பார்ப்பதென்றால் அதற்கு அவளது மனச்சாட்சி இடம் கொடாது.
கையில் வேலை இருக்கிறது. வருகிற வனும் வேலையோடு தானே வரப்போகிறான். இருவரின் உழைப்பு சாதாரணமான ஒரு குடும்பத்தை நடத்தப் போதாதா..? அவள் ஒன்றும் ஆடம்பரமான செலவு செய்பவள் இல்லையே.? கொஞ்சம் பெரிதாய் வீடு தேவைப்பட்டால் கடனுக்கு விண்ணப்பித்து, கடன் பெற்று வீடுகட்டலாம் தானே? வீடு கட்டத்துப் பில்லாமல், வருபவளிடம் வீட்டை எதிர்பார்ப்பவன்
இதழ் 50
 ̄-܂
ܠܠܼܿܨ
ܦܝ

Page 109
ܥܒ
எப்படி நாளைக்குக்குடும்பத்தைக் கட்டி இழுக்க போகிறான்.?
இவளுக்கு அதற்குப் பிறகு எந்த ஒரு திருமணப்பேச்சையும் நின்று கேட்க இஷ்டமில்லை எல்லாம் சரி ஆகி வந்து கல்யாணத்துக்கு நாள் குறிக்க ரெடி என்றானால் தன்னிடம் விபரம் தெரிவிக்குமாறு அக்காவிடம் சொல்லியிருக்கிறாள். யாரோவாய் இருப்பவர்களை எல்லாம் தனக்குப் பக்கத்தில் நிறுத்திப்பார்க்க இப்போது அவள் தயாரில்லை.
அக்கா அடிக்கடி தூதனுப்பி விடுவது விநோத னிடம் விநோதன் இவளிடம் சின்ன வயதிலிருந்து பாடம் கேட்டுப்படிக்க வந்து கொண்டிருந்தவன். இவளை விட நாலு வயது குறைவு. போன வருஷத்தில் கூடப்படித்த "ஷிரோமியைத் தான் காதலிப்பதாக தயங்கித்தயங்கி இவளிடம் போட்டுடைத்தவன்.
வழிரோமி நாகரிகச் சின்னங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவள். ஆடைவகையில் வருகின்ற புதுவகை எல்லாம் அவள் போட்ட பிறகு தான் அவள் ஊரில் புழக்கத்துக்கு வரும் கொஞ்சம் தூரத்தில் வரும் போதே கமகமக்கும் "செண்டும்" வித விதமான கிரீம் வகைகளும் அவளைக் காட்டிக் கொடுக்கும். எந்தக் கிரீமை அவள் பாவிக்கிறாள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தடவையும் தொலைக் காட்சியில் என்னென்ன காட்டப்படுகிறதோ அதெல்லா
வற்றையும் அவள் பரீட்சித்து விடுவாள்,
அவளுக்கும், விநோதனுக்கும் எப்படி ஒத்து வரப்போகிறது என்பதில் இவளுக்குக் குழப்பம் தானிருந்தது. ஆனால், காதல் இதொன்றையும் பார்த்து வருவதில்லை என்பதும், காதலிக்கும் தருணங்களில்
எவர் பேச்சையும் புறந்தள்ளும் நிலையிலேயே
காதலர்கள் இருப் பார்கள் என்பதையும் அவள் அறிந்தேயிருந்தாள்.
"விரோமரிக் குத் தெரியுமா நீ GD 6) பண்ணுறது.?" என்றாள் இவள், இ
சுத்துறது. நானாய்இன்னும்சொல்லேல்லை "என்னமோ பாத்து நடந்து கொ நம்பித்தான் உன்ரை தாய், தகப்பன் இருக்கினம்." என்பதோடு அவள் நிறுத்திக் கொண்டாள்.
உயர்தரம் முடித்தவுடன் எழுதுனர் பரீட்சை ஒன்றிற்குத் தோற்றி விரைவிலேயே அரச உத்தியோகம் பெற்றுக் கொண்டான். அவன் அடிக்கடி அம்மாவுக்கு மருந்து வாங்கித்தருவதற்கும், இவளுக்கு ஏதும் சிரம மான காரியங்கள் செய்து கொடுப்பதற்குமென வந்து GBUNTGOTT6ŐT. SEHÜLJUọu JT60T aflauo G36).J60D6Tē56f6ò eglijs35T
அவனிடம் சில குறிப்புகளைக் கொடுத்தனுப்புவாள்.
ஒருநாள் அவளுடைய அக்கா கொடுத்து விட்டிருந்த குறிப்பினையும் கொண்டு வந்தான். இவள்
ஜீவநதி
 
 
 
 
 

அவன் புறம் திரும்பாமலேயே கொண்டு போய் அக்காவிடம் கொடுக்கச் சொன்னாள். வினோதன் கொஞ்ச நேரம அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னான். 滚
“எனக்கு வீட்டிலை கலியாணம் பேசீனை." "ஷிரோமி என்னவாம்.? நான் அவளுக்குத் தூது போகனுமோ..?" என்றாள்.
"விஜிரோமியை நான் எப்பவோ மறந்திட்டன்." என்றான்.
"அப்ப இப்ப வேறை யார்.?" என்றாள் (33565uJIT35.
"இப்ப மட்டுமில்லை, எப்பவும் நீங்கள் தான்." என்றான்.
சட்டென்று அனல் துண்டுகளைக் கொட்டி னாற் போல அதிர்ந்து போனாள் அவள். அப்போது தான் கவனித்தாள். அக்காவென்று சொல்வதைஅவன் எப்பவோ நிற்பாட்டியிருந்தான். அது எப்போதென்பது தான் அவளுக்குப் புரியவில்லை.
"விசர்க்கதை கதையாமல் அம்மா, அப்பா சொல்லுறபடி கேள். போ." அவள் உள்ளே போய் விட்டாள்.
இவளுக்கு, வழிரோமி அவனை எதிர் பார்ப்போடு திரும்பிப் பார்த்தபடி போவது கண்ணில் தெரிந்தது. ஷிரோமி இவள் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தாள். இவனது நினைப்பைப் பற்றி அறிந்தால், இவளைப் பற்றி அவள் என்ன நினைப்பாள். இவளை நம்பி இவளது வீட்டுக்கு அவனை அனுப்புகிற அவனது பெற்றோர்கூட அவளைப் பற்றிக் கேவலமாக நினைத்து விட மாட்டார்களா..? அவர்களென்ன நினைப் பது. அவளுக் கென் றொரு மனம் இல்லையா..? தம்பியென நினைத்துப்பழகிய அவனை ஒருகணமேனும் வேறு நினைக்க அவள் மனம் ஒருப்படுமா..? தெரியாத ஒருவன் என்றாலும்
முற்றாக்கு முன் அவனைப்பற்றி அறிய விழையாத
அவள் எப்படி ஒரு கணத்தில் அவனது உறவுமுறையை மாற்றச் சம்மதிப்பாள். ஒரு பெண் எந்தக்காலத்தில் என்றாலும் தனியே வாழ விடமாட்டார்களா இவர்கள். தனியே வாழ்தல் எனும் வலியைவிட இப்படியான தொந்தரவு களின் வலிதானே அதிகமாய் இருக்கிறது. தனியே இருக்கிறாள் என்பதற்காக அவள் கேட்பவனை எல் லாம் வரித் துக் கொள்ள முடியுமா..? அவளுக்கென்று ஒரு மனம் இல்லையா..?
சீ.யென வெறுத்துப் போயிற்று எல்லாம். இப்போதெல்லாம் அவன் வருவதில்லை வீட்டுக்கு இவள் வர வேண்டாம் எனச் சொல்லி யிருந்தாள். அவளது அம்மா இடைக்கிடையே வரும் போது புறுபுறுப்பாள், அவன் இப்போது வீட்டுக்கே வருவ தில்லையாம். எங்கெங்கோ சுற்றி விட்டு
-இதழ் 50

Page 110
அகாலத்தில் தான் வருகின்றானாம். பள்ளிக்கூடத்தில் சக ஆசிரியை சொன்னாள். ஏதோ ஒரு பாழடைந்த கொட்டிலில் கோல்ட்லீவை இழுத்தபடி முகட்டைப் பார்த்த படி படுத்திருக்கக் கண்டாளாம். இப்போ தெல்லாம் ஷிரோமி தன் அலங்காரம் குறைத்து கொஞ்சம் ஏக்கத்தோடு வலம் வருவதுபோல் தோன்றியது இவளுக்கு தாளாமலே போக அவள் ஒரு நாள் அவனிடம் போனாள்.
"இதென் னகூத்து.?" அவன் எதுவும் (3UF66b6O)6),
"நீ என்னிலை வச்சிருக்கிறதுக்குப் பேர் இரக்கம் வினோதன். அது காதல் இல்லை. ஷிரோமி பாவம். நீ அவளை ஏமாத்தாதை."
"நான் ஷிரோமியிலை வச்சது தான் வயதுக் கோளாறு. இது தான் உண்மையான காதல்." அவன் புதிதாய்க் கண்டுபிடித்தது போல் தத்துவம் கதைத்தான்.
"போடா, நீயும் உன்ரை காதலும்." அவள் அவனைத்திட்டிவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
UGb006).5 கடித்துக் கொண்டிருந்தாள். அவன் புறம் கொஞ்சமேனும் மனம் இரங்கக்கூடாதென்பதில் உறுதியாய் இருந்தாள். இரக்கம்வேறு. காதல்வேறு. இரண்டுக்கும் இடையில் இருக்கின்ற கோட்டை அவன் இன்னும் பிரித்தறியவில்லை. அவளை ஒருவன் இரக்கப் பட்டுக் கல்யாணம் கட்டுவதை அவள் வெறுத்தாள். அவ்வளவு காலமும் மனதில் இருந்த அமைதி கழன்று காணாமல் போனது. அவளது மனதில் எந்த விருப்பமும் இல்லாமல் இருந்தாலும் மனம் குழம்பிச் சலனித்தது.
திடீரென ஒரு நாள் அவன் வந்த போது ۔۔۔۔۔۔۔۔۔ அவனது மனம் மாறியிருக்கக்கூடுமென்றே அவள் நினைத்தாள். எல்லாம் மறந்து அவனை உள்ளேவா வென்று அழைத்தாள். உள்ளே வந்தவன் அம்மா உறங்கியிருக்கக் கண்டு அவளது கையைப் பிடித்து இழுத்தான். இவளுக்குச் சட்டென்று மனம் கொதித்துப் போயிற்று. எப்படியாவது திருத்தி விடலாம் என்று பார்த்தால் அவன் வர வர மோசமாகிக் கொண்டு போகிறான். எப்படியாவது போகட்டும் என்று விட்டு விடவும் முடியவில்லை. ஒரு பிள்ளையைப்போல அந்த ၉ါட்டில் உலவி அவர்களுக்கு அன்பு காட்டியிருக்கிறான்.
"விடடா. கையை." கையை உதறி அவனை வெளியே விட்டுக் கதவைச் சாத்தியபடி சொன்னாள்.
"இனிமேல் இந்தப் பக்கம் வந்திடாதை." அவன் பிடிவாதத்தோடு இவளையே பாத்துக் கொண்டிருக்க கதவை அறைந்து சாத்தி விட்டு உள்ளே வந்தாள்.
அதற்குப் பிறகு அவளுக்கு வீடு பிடிக்க வில்லை. ஊர் பிடிக்கவில்லை. யாரையும் பிடிக்க வில்லை. எங்கேயாவது அவனது கண்ணில் படாத
ஜீவநதி 10
Es-amm

தூரதேசத்திற்குப் போய்விடவேண்டும் போலிருந்தது.
ATTTTuBYTT OTBuBBBBBT0LLBLBBS ATT0BBuBLO00LLDuTuuSL LL L சொல்லி வெளிநாட்டில் ஏதாவது வரன்கள் பார்க்கச் (GFTabab.
"என்னடிசொல்லுறாய்.?" "இவ்வளவு காலமும் இஞ்சை பாத்தது காணும்."
அவள்தானோ இப்படிச் சொல்கிறாள் எனும் ஆச்சரியத்தோடு அக்கா, கண்வெட்டாமல் அவளைப் பார்த்தாள். அதில் கொஞ்சம் இரக்கம் இருந்ததோ..?
அணி னா மார் இவளுக்காக அமளி துமளியாகக் கல்யாணம் பேசத் தொடங்கினர்.
அவன் காதில் இந்நேரத்திற்கு விடயம் கசிந்திருக்கும். கசிந்திருக்க வேண்டுமென்றே அவளும் விரும்பினாள். ஏதோ ஒருவிதத்தில் அது அவளுக்குத் திருப்தியாகவிருந்தது. அப்படி அவன் நினைக்கும் விதமாக அவள் தான் இடம் கொடுத்து விட்டாளா..? என சிறியதொரு குற்றஉணர்வு குறுகுறுத்தது. அதொன்றும் பெரிதாயில்லை. அவளது வாழ்வே தலை கீழாக மாறப்போகிறது. அப்படியிருக்க இதென்ன பெரிய விடயம்.
அவள் ஊரிலிருந்து புறப் பட்டபோது வினோதன் கடுப்போடு அவளைப் பார்த்தான். அவள் அதனைப் பொருட்படுத்தவில்லை. இந்தக் கடுப்பு கொஞ்ச நாளில் ஆறிப்போகும். அவனது குடும்பம் விரும்பும் விதமாக அவன் எதிர்காலத்தில் வாழக்கூடும். இவள் மனதில் இரைச்சல் கூடுகட்டத் தொடங்கியது. யார் என்றே முகம் தெரியாத ஒருவனை திருமணம் செய்ய எந்தக் கணத்தில் சம்மதித்தோம் என்பதே புரியாத புதிராகவிருந்தது. அம்மாவுக்காக ஊரைவிட்டுப் போகக் கூடாதென்றிருந்த அவள் அம்மாவை விட்டு ஒரேயடியாகத் தூரம் போகப் போகிறாள்.
அம்மாவை இனி அக்கறையோடு யார் LUFTfLŮ U TřT56ñT ? LJ6ODUÜLJ GJ6ÖT LJLQ 9 GT55 TLD GOTT GSUTGJITGÖT...?
அவனது அம்மாவும், அக்காவும் அவளைப் பார்ப்பதற்கு வருகின்றார்கள். அதற்காகத் தான் அவளைக் கொழும்பிற்கு வரச்சொல்லியிருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கலாம். 6) JoigbéOGO,
இவளுக்கும் அதுவே நல்லதாய்ப்பட்டது. இனி விநோதனின் கண்பட இவளது நல்லது, கெட்டது எதுவுமே நடக்கவேண்டாம்.
நட்சத்திரங்கள் ஒன்றொன்றாய் உதிரத் தொடங்கிய விடிகாலைப் பொழுதில் அவள் திரும்பித் தூங்குவதற்குப் போனாள். ப
இதழ் 50
ܘܐܸ-܂

Page 111
>།
கெகிறாவ ஸ°லைஹா
தலித் இலக்கி ஒரு பார்ை
அஜித் கோர், கே.சச்சிதானந்தன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு சார்க் எழுத்தாளர்களது இலக்கியக் காலாண்டு சஞ்சிகையாக டெல்லியிலிருந்து GGIGifold 5b "Beyond Borders' 6th 35up - 2010, 565); இலக்கியத்துக் குச் சிறப்புக் கவனம் கொடுத்து வெளிவந்திருக்கிறது. கண்டி- இந்திய உதவி ஸ்தானிகரது கருணையால் என் கரம் கிட்டிய அந்நூலை வாசித்தபோது, தலித் இலக்கியம், அம்மக்களது வாழ்வுமுறை, அவர்களது போராட்டம் இன்னபிற பற்றியெல்லாம் பெரு வியப்பும், மரியாதையும் ஏற்பட்டது என்னுள். அந்நூலில் நான் தரிசித்த உணர்வை தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியதன் விளைவே இந்தக் கட்டுரையாகும்.
திருமதி.அஜித் கோர் தனது குறிப்புரையில் ஆத்மாமீது நீடிக்கும் வடுக்களாக எங்ங்னம் சில பழையதும், அவ்வளவு பழையதுமில்லாத காயங்கள் ஆகின என்று தம் வாசகருக்கு தெரியப்படுத்தவென்று சில சம்பவங்களை உதாரணங்களாகக் காட்ட விழைகிறார்.
லாகூரில் 1939-40 களில் தனதான சிறுபால்யத்தின் வாயிலில் மிக அழகான பெண்மணியாக தன்னுள் பதிந்து கிடக்கும் மன்ஜா எனும் பெண்மணி பற்றிக் குறிப்பிட்டு, தனது வீட்டின் கழிவறைகளையெல்லாம் துப்புரவு செய்து தருகின்ற அந்தப் பெண்மணிக்கு தனது வீட்டு வேலைக்காரியால் நாய்க்கு வீசப்படுவது போன்று உணவு வீசப்படும் விதம் தான் இப்போதும் நினைத்து வெட்கப்படுமளவு- கடவுளிடம் மன்னிப்புக் கோருமளவுதன்னை வதைத்தது பற்றியும், லண்டனில் 1978 களில் ஒரு உயர்குலச் சீக்கியப் பெண்மணியால், ஒரு தாழ்ஜாதி யெனக் கருதப்பட்ட இன்னுமொரு சீக்கியப் பெண்மணிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை நேரில் கண்டு அடைந்த சொல்லொணா வெட்கம் பற்றியும் கூறி "நம்மைச் சுற்றிலும் ஒரு தவறான மனித சமூகமாகவே கருதப்பட்ட பெரும்பாலான இந்தத் தாழ்ஜாதி மக்கள் நமது வீடுகளைத் துப்புரவு செய்வோராக, வீதிகளில் குப்பை அள்ளுவோராக
ஜீவநதி
 

இருந்து கொண்டிருக்கின்றனர். இத்தகையதொரு பெரும்பான்மை சமூகத்தின் துயரங்கள், மனநோ பற்றியெல்லாம் எந்தளவு குருடாக இருந்துவிட்டோம் என்பதில் பிறக்கும் எனது தனிப்பட்ட கவலையின் காரணமாகவே, என் ஆன்மாவை துப்புரவு செய்யுமுக மாகவே இந்த இதழை தலித்துகளுக்காக இலக்கிய இதழாகக் கொணர விழைந்தேன்" என்கிறார் அவர்.
"பெளத்தர்களும், சைன இலக்கியவாதிகளும் இந்தியாவின் சுதந்திரமான பாரம்பரிய இலக்கியத்தை வளப்படுத்தியவர்களாகக் கருதப்பட்டனர். 1970 களில் இந்தவகை இலக்கியங்கள் சமூகத்தின் கட்டுகளை உடைத்து முன்னொருபோதுமில்லாதவாறு புறப்பட்டு வர ஆரம்பிக்க, தலித் இலக்கியமும் கன்னட, மராத்திய, குஜராத்திய மொழிகளில் வீரியம் கொண்டு எழுந்தது. பஞ்சாபி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளம், மலையாளம் என பல மொழிகளில் பல எழுத்தாளர்களை தலித் இலக்கியம் தோற்றுவித்தது. இயற்கையும், கலாசாரமும், வரலாறும் அவர்களது ஆக்க இலக்கியங் களில் அதிகம் இடம்பிடித்துக் கொள்ள இந்தியாவின் குலச் சமூகமாகிய இவர்கள் தமக்கான வாழும் நிலத்திற்கான உரிமையையும், வாழ்க்கைக்கான உரிமையையும் கோர இலக்கியத்தை ஊடகமாக்கிக் கொண்டனர்" என்கிறார் கே.சச்சிதானந்தன் தனது ஆசிரியர் குறிப்புரையில்,
பகத் சிங்-சஹிட் அவர்களின் தீண்டத் தகாதோர்" எனும் தலைப்பிட்ட கட்டுரை பின்னோக்கிய கடந்த காலத்தைய சம்பவங்களை மீட்டுகிறது.
"நமது நாடு உண்மையில் தீயதன் வடிவமாகவே யிருக்கிறது. இங்கே பல வினோதமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அவற்றிலே பெரும்பான்மையான கேள்விகள் சுமார் முப்பது கோடிசனத்தொகையில் சுமார் ஆறு கோடியாகயிருக்கும் தீண்டத்தகாதோர் பற்றியே ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால், "ஒரு தீண்டத்தகாதவர்- ஹரிஜனுடன் தொடர்பு
இதழ் 50

Page 112
கொள்வது என்பது உயர்சாதியினரின் கட்டுப்பாட்டுக்குள் நாமில்லை என்று அர்த்தம் தருமா?" "கோயிலில் வாழும் தெய்வங்கள் தாழ் ஜாதியினரின் கோயிலுக்கான வருகையினால் கோபம் கொள்ள மாட்டார்களா?", 'ஹரிஜனங்கள் நீரள்ளுவதால் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்த நிலை என்கிற அந்தஸ்திலிருந்து நீங்கித் துப்புரவு கெடாதா?" இருபதாம் நூற்றாண்டில் கூட இவைபோன்ற கேள்விகள் கேட்கப் படுவது எத்தனை பெரிய தலைகுனிவு" என்கிறார் அவர், "இந்தியர் நாம் நம்மை மேன்மைச் சமூகம் என்று பீற்றிக் கொள்கிறோம்" எனினும், நமது போலவே மற்றவர் நிலையை, சகமனிதனைப் பார்ப்பதற்குத் தயங்குகிறோம்." என்று கவலையுறுகிறார் அவர்,
"மேலைத்தேய நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர் கள், இந்தியர்களாகிய நம்மைச் சமத்துவமான சமூகமாகக் கருதவில்லையெனக் குறிப்பிட்டு எதிர்ப்புக் குரலெழுப்ப நமக்கென்ன தகுதியிருக்கிறது?" என அவர் வினவுகிறார். 1926 இல் சிந்தி முஸ்லிம் ஒருவராகிய திருநூர் மொஹமட் பம்பாய் சட்டப்பேரவையில் குரலெழுப்பியதை அவர் ஞாபகமூட்டுகிறார். "இந்து சமூகம் சக மனித இனம் ஒன்றை பொதுப் பள்ளிக்கூடத்துக்குள் நுழைய அனுமதிக்காவிடின், ஒரு கிணற்றில் நீரள்ள அனுமதிக்காவிடின் அவர்களுக்கு தமது உரிமையின் பொருட்டு குரலெழுப்ப எந்த உரிமையும் கிடையாது." என்கிறார் அவர்.
"எத்தனை வெட்கக்கேடு பாருங்கள். நமது மடிமீது நாயைக் கூட தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சு கிறோம். அது நமது சமையலறையில் சுதந்திரமாய் உலவும். ஆனால், நம் சகமனிதன் ஒருவன் நம்மைத் தொட்டால் எமது தர்மம் அதற்கு இடம் கொடாமல் சினம் கொண்டு எழும்பும், தாய்மார் தமது குழந்தைகளைத் துப்புரவு செய்ய என்னென்ன கடமைகளையெல்லாம் செய்கிறார்கள். ஆயின், அவர்கள் அசுத்தமானவர்களா? நீங்கள் மட்டுமே தேசத்தின் தூண்கள். தூங்கும் சிங்கங்களே எழுந்திருப் பீர்களாக" என அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
"கீர்த்தியில் ஜூன் 1929இல் பஞ்சாபி மொழியில் வெளியான இக்கட்டுரையை பேராசிரியர் மல்விந்தர் ஜித் சிங் மொழிபெயர்த்திருக்கிறார்.
"தலித் இலக்கியம் ஏன் முக்கியத்தவம் பெறுகிறது?" என்கிற எஸ்.ழுநீனிவாசன் அவர்களது கட்டுரை, எல்லா இலக்கியங்களும் ஒன்று என இருக்கை யில் தலித் இலக்கியம் என தனியொரு பிரிவாக ஏன் இது இருக்க வேண்டும் என்பது பற்றியும், உன்னத இலக்கியங் களின் தரத்தையும், அவற்றினது கற்பனை வளத்தையும் தலித் ஆக்க இலக்கியம் கொண்டுள்ளதா என்பது பற்றியும் அற்புதமாக ஆராய்கிறது.
அவர் கூறுகிறார்:-"தலித்துகள் தீரா வறுமையை அனுபவிக்கிறார்கள். கற்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கப் படுவதாகயில்லை. பொருளாதாரச் சீர்குலைவுகள், சாதியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைகள், மனித உரிமைகளுக்கான முடிவுறா மறுதலிப்பு என்றெல்லாம் வேதனையை தாமுணர்ந்த விதமாய் இலக்கியத்திற் கூடாக
ஜீவநதி 108

முன்வைக்கிறார்கள். அது அவர்கள் உள்ளிருந்து அனுபவித்த கசப்பூட்டும் பதிவுகளின் அறிக்கையாக இருக்கிறது. ஒரு மிதியுண்ட பெரும் மக்கள் திரளின் விழிப்பூட்டுகின்ற விடுதலையின் குரலாக அது தன்னை பிரதிநிதித்துவப் படுத்திக் கொள்கிறது."
அந்தவகையில் தலித் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக மராத்தியில் எழுதிய சரண் குமார் லிம்பாலே, ஹிந்தியில் எழுதிய ஓம் பிரகாஷ் வால்மீகி, தெலுங்கு மொழியில் எழுதிய கொலகலூரி இனோச் கன்னட இலக்கியம் தந்த தேவனூர் மஹாதேவ், பஞ்சாபி இலக்கியம் கண்ட இலக்கியவாதிகள் பல்பிர் மதோபூரி, குர்தியல்சிங் இன்னும் பலரை பட்டியற் படுத்தும் இவர், "இவர்களே நீண்டகால மெளனத்தை, நீண்டநாள் துயரத்தை உணர்ச்சி கலந்த மனசின் குரலாக முன்வைத்தவர்கள்" என்கிறார்.
போலவே, தலித்திய நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சரித்திரங்களாகத் திகழ்கின்றன. உதாரணமாக, வினோதினி தெலுங்கு பாஷையில் படைத்த "கறுப்பு மை" எனும் சிறுகதை ஒரு உயர் குலத்தில் பிறந்த சின்னஞ் சிறுமி தலித்துகளை வெறுத்து ஒதுக்க கொடூரமாகப் பயிற்றுவிக்கப்படுவதை உணர்வு பூர்வமான கவிமொழியில் முன்வைக்கிறது. இதுபோல பல உதாரணங்களைக் கூறி, சமூகத்தின் ஒரு பகுதியான இம்மக்கள் அனுபவித்த கீழ்த்தரமான அவலத்தை வாழும் உதாரணங்களுக்கூடாகக் காட்டி, தலித்துகளின் சிறுகதைகள் என்னவாய் அவர்களது ஆக்கத்திறனை கண்முன்தருவிக்கின்றன என வியக்கிறார் அவர்.
"தலித்தியக் கவிதைகளோ ஆழ்மன உணர்வு களின் தன்னிச்சையான வெளிப்பாடுகளாகும். அதனூடாக சாதி முறைக்கான எதிர்ப்பையும், சினத்தை யும் காட்டி சுதந்திரத்துக்கும், நீதிக்கும் அவர்களது மனங்கள் அவாவுறுவதை அக்கவிதைகள் இயம்பி நிற்கின்றன. இந்து புராணங்களில் ஏகலைவன், துரோணாச்சாரியார், அகலிகை போன்ற பாத்திரங்கள் தலித் கவிதைகளின் நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுகின்றன.
அகலிகை உயர் குல ஆண் வர்க்கத்தால் குரூரமான முறையில் சிதைக்கப்பட்ட பெண்ணாக, பாலியல் சுதந்திரத்துக்கு ஏங்கும், அநீதியை எதிர்க்கும் ஆன்மா வாக துரோணாச்சாரியார் ஏமாற்றுக் குணமுடைய குரூர குருவாக பிரதிநிதித்துவப்படுத்தப் படுகிறார்கள். மல்கான் சிங்கின் ஹிந்திக் கவிதை "ஓ! கேளும் பிராமணரே தயானந்த் படோகியின் துரோணாச்சாரியாரே, இக்கவிதைகளை செவிமடுங்கள் மற்றும் பல்பிர் மதோபூரியின் கவிதைகள், சிவசாகரின் "நடைமுறைச் சரித்திரம்", வத் தே போயரினா ருநீனிவாசனின் "இன்னு மொரு தாஜ்மஹால்" போன்ற கவிதைகள், குரூர புத்தியால் ஒரு இனத்தை அடிமைப்படுத்தி அடக்கு முறைக்கு ஆளாக்கும் உயர் குலத்தாரை, தனது பழைய துருப்பிடித்த வில்லை கட்டில் வெப்பமாக்கிப் பழிதீர்க்கப் புறப்பட்டிருக்கும் ஒரு நவீன
H இதழ் 50

Page 113
>
ج
جی
ஏகலைவனை நமக்கு அறிமுகம் செய்கின்றது.
ஹிந்தி கவிஞையான பெண்ணிலைவாதி ராஜட் ராணி மீனு எழுதிய "ஏன் ஒரு இலைதானும் அசையவில்லை?" எனும் தலைப்பிட்ட இக்கவிதையைப் பாருங்கள்.
"நாம் கற்பழிக்கப்பட்டபோது, ஒருகும்பலே கூடிநம்மைக் கற்பழித்தபோது ஏன் ஒரு இலைதானும் அசையவில்லை?" இப்படி நீளும் இக்கவிதை உயர்குலப் பெண் களுக்கு இது நடந்துவிட்டால் பாராளுமன்றமே ஆட்டம் காணும் எனவும், பெண்ணிலைவாதிகள் புரட்சிக் கொடிகள் தூக்குவர் எனவும், கற்பழித்தவனுக்கு மரணதண்டனை கூடக் கொடுத்துவிடுவர் எனவும் எடுத்துக்கூறி, ஒரு கும்பலே கூடித் தம்மைக் கற்பழித்தபோது அனைவரும் மெளனம் காத்ததை வன்மமாய்ச் சாடி நிற்கிறது. அதற்கான காரணம் மொழிந்து கவிதை இவ்வாறு நிறைவு செய்யப்படுகிறது ஏனெனில் நீங்களோ உயர்குலத்தார்" நானோ வெறும் தலித்"
இழிசனரினது துயரங்களையும், வலியையும் அப்படியப்படியே எடுத்துரைத்து, சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப அவர்கள் செய்திருக்கும் காத்திரமான பங்களிப்பின் காரணமாக அவ்விலக்கியம் குறிப்பிடத்தக் களவில் முக்கியத்துவம் பெறுகிறது." என்கிறார் எஸ்.ருநீனிவாசன்.
"தலித் இலக்கியமும் அழகியலும்" என்ற சரண்குமார் லிம்பாலேயின் கட்டுரை அடுத்து தொகுதியை அலங்கரிக்கிறது. தலித் இலக்கியமானது தனியொரு இலக்கியப் பிரிவு எனக் கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிற சில விமர்சகர்களது கருத்தைப்பற்றிக் குறிப்பிடும் அவர், அது பற்றிய பரவலான கருத்துக்கள் பலவற்றை முன்வைக்கிறார்.
1967 இல், தலித் இலக்கியம் சம்பந்தமான கருத்தரங்கொன்று மஹாராஷ்திரப் பகுதி சாகித்திய மண்டல இலக்கிய மாநாட்டின் ஒரு பகுதியாக மஹாபாலேஷவர் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாம். தலித் எழுத்தாளர்கள் பலரோடு தலித் பேச்சாளர்களல்லாத பிம்ராவ் குல்கர்னி, வி.டி.ஞாதே வித்தியாதர், கவி அனில் போன்றோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்களாம். தனது கருத்தை முன்வைத்துகவி அனில் பேசுகையில், "தலித்துகளின் வாழ்வு பற்றி அனுதாபச் கண்ணோட்டத்தோடு எழுதப்படுபவை தலித் இலக்கியங் களாகும்." என்கிறார். முதற்பார்வையில் இந்தக் கருத்தானது பெருந்தன்மையானது போலத்தான் தோன்றுகிறது எனினும், இதற்குப் பின்னே வேறொரு வித்தியாசமான கருத்து கண்ணுக்குத் தெரியாமல் இயங்க ஆரம்பிக்கிறது தலித்துகள் மட்டுமே தலித் இலக்கியத்தை எழுத முடியும் என்பதை மறுக்கிற கவி அனில், தலித் அல்லாதோரும் தலித் இலக்கியம் படைக்கலாம் எனவும், அது தலித்துகளின் ஏகோபித்த ஆளுமைக்கு உட்பட்டதொன்றுமல்ல என்கிறார். வித்யாதர் முன்வைத்துள்ள கருத்தின் படி
ஜீவநதி

தலித்துகள் மட்டுமே தலித்துகளின் துயரறிவர் எனும் கருத்து ஓரளவுக்கு மாத்திரமே உண்மையாகும் என்கிறார். கற்பனைத் திறனோடு தலித்துகளின் அனுபவங்கள் கலந்து கொடுக்கப்படுபவையாகவும் அது இருக்க முடியும் என்கிறார் அவர். எனினும், இன்று வரை தலித்தியர்கள் அல்லாத இம் முதல் வர்கள் தம் கற்பனாசக்தி எங்கு சென்று ஒளிந்து கொண்டுள்ளது என்பது பற்றிய தெளிவுகள் ஒன்றும் அவரது உரையில் கிடையாது எனக்கூறும் லிம்பாலே "இறந்த விலங்குகளது உடல்கள் வெட்டுவது அகற்றுவது என்பவற்றையெல்லாம் தலித்தியரல்லாத படைப்பாளி ஒருவர் எங்ங்னம் தன் கறி பனை கலந து கொடுத் தவிட முடியும் ? தீண்டத்தகாதோரின் ஹிருதயங்களில் துளிர்க்கும் கோபத்தின் கனலை இவர்கள் தம் நாதியற்ற கற்பனைத் திறன் எப்படிக் கொணரும்? தன் கிராமத்தின் எல்லையை விட்டு தானே வெளியேறி வராத வித்யாகரது கற்பனைத் திறன் மட்டும் வெளியேறி வந்து விடுமா?" என வினா தொடுக்கிறார்.
"தலித் இலக்கியம் என்பது பிறப் பால் தலித்துகளானோரால் எழுதப்படும் புறக்கணிப்பினது காயங்களை எடுத்தியம்பும் தலித்துகளின் மனசாட்சியின் வெளிப்பாடுகளேயாகும். தலித்துகள் அனுபவிக்கும் இனம்சார்ந்த துயரம் கப்பிய அம்சங்கள் மற்றும் அனுபவங்களை கற்பனை கலந்தெல்லாம் கொடுப்பது என்பது ஒருபோதும் சாத்தியப்படாது. தமதான பிரச்சினைகளையும், வினாக்களையும், வலியினையும் சுமக்கும் வாகனமாக இலக்கியத்தை அவர்கள் கண்டார்கள்" எனக்கூறும் சரண்குமார் லிம்பாலே, "அவர்களது இலக்கியமே அவர்களது வாழ்வாக இருந்திருக்கிறது. அது வெறுமனே சந்தோசத்துக்காக மட்டுமே படைக்கப்படும் இலக்கியம் என்று தான் கருத வில்லை எனவும், அதனாலேயே தலித் இலக்கியத்தின் அழகியல் மற்ற இலக்கியங்களது அழகியலிலிருந்து வேறுபடுகிறது. கூடவே, அம்பேத்காரினது எழுச்சியூட்டும் சிந்தனை தலித் இலக்கியத்துக்கு வீரியம் கொடுத்தது. " எனவும் தன் கருத்தை முன்வைக்கிறார்.
மனித இனத்தவர்கள் என்ன அழகின் மீதான பித்து மட்டும் கொண்டவர்கள் தானா என வினவும் அவர், சமத்துவத்தையும், நீதியையும், நேஸத்தையும், விடுதலையையும் வேண்டுகின்றவை அவர்களது எழுத்துக்கள் எனவும், அவற்றின் பொருட்டே அவர்கள் தம்மையேதான் தியாகம் செய்திருப்பவர்களும் கூட என்ற கருத்தையும் முன்வைக்கிறார். அழகினை நாடியும், சந்தோசத்தினை நாடியும் உலகில் இதுவரை புரட்சிகள் எதுவும் நடந்ததுண்டா என வினா எழுப்பும் சரண்குமார் அவர்கள், பெரும்பாலான இராச்சியங்களோ நீதி, சமத்துவம், விடுதலையின் காரணத்தால் மாற்றம் கண்டிருப்பதையும் சுட்டுகிறார். சந்தோசம் நாடி எழுதப்படும் இலக்கியங்கள் நம்முள் குதூகலத்தையும், அனுதாபத்தையும் தோற்றுவிக்கிறதென்றால் புரட்சி
இதழ் 50

Page 114
இலக்கியங்கள் மனிதனின் சுயமரியாதையினது மனசாட்சி யினைத் தட்டி எழுப்பிய பணியைச் செய்திருப்பதாக அவர் வாதம் செய்கிறார்.
பி.பி.அஜய்குமார் அவர்களது கட்டுரை தலித் பெண் படைப்பாளிகள் பற்றியும், அவர்களது இலக்கியங்கள் பற்றியும் ஆராய்கிறது. பாமாவினது "கருக்கு(2000), "சங்கதி(2005), மற்றும் சிவகாமியின் "மாற்றத்தின் மீதான பிடிப்பு, தலித் ஆர்வலர் சீ.கே.ஜானுவின் "தாய் வனம்" போன்றவை ஆரம்ப அலையை ஏற்படுத்திய ஆக்கங்கள் எனவும், தலித் பெண்களின் எழுத்துகளில் அவை பெரும் சீர்த்திருத்தத்தைக் கொணர்ந்தவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அடிமைத்தளையின் அனுபவங்களிலிருந்து வெளிப்படவிரும்பும் குரல்களாக அவை ஒலிப்பன. ஒன்றை நாம் காணுகின்ற, நாம் கதைகூறுகின்ற பழைமையான பாணியிலிருந்து அவர்களது எழுத்துகள் வேறுபட்டு நின்று சவால் விடுப்பன. மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு அவர்தம் பிரச்சினைகளை அவை தெளிவுற முன்வைப்பன வாகவும் உள்ளன. இவ்விழிசனப் பெண்களின் எழுத்துக்கள் ஏனைய உயர்குலப் பெண்களின் எழுத்துகளைவிட வேறு பட்டு நிற்க யாது காரணம்? தமக்கான தனித்துவமான கதை கூறும் பாணியொன்றை அவர்கள் எல்லாவிதத்திலும் தேர்ந் தெடுத்தது எப்படி? இவ்வெல்லா வினாக்களுக்கும் தலித் பெண்கள் சிலரின் எழுத்துக்களிலிருந்தே விடைகளைத் தேடி உதாரணங்களாக முன்வைக்கிறார் அஜய்குமார்,
பாமாவின் "சங்கதி" தலித் பெண்களின் முடிவில்லாப் போராட்டத்தை முன்வைப்பது அதிலே பாட்டியின் விமரிசனம் ஒன்று தலித் பெண்களின் துயர் நிலையைச் சொல்லும் இப்படி:- "பெண்கள் தாம் நெனச்சமாதிரியெல்லாம் தம் நிலை மறந்து இந்த இடத்துக்கெல்லாம் வரக் கூடாது. மேல்சாதியினரின் கண் உன்மேல பட்டுட்டா போதும் நீ முடிந்தாய். இழுத்துப்போய் உன்னை கற்பழிச்சு சூறையாடிடுவாங்க, இப்படிப் பாட்டி யாகவும், தாயாகவும் ஒளிரும் பாத்திரங்களின் ஒலிக்கின்ற ஆக்ரோஷக் குரல்கள் பல சேதிகளை முன்வைக்கின்றன. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அதன் கருத்துகளை அப்படியப்படியே முன்வைக்கத் தவறி விட்டதாகவும் வாதம் செய்யப்படுகிறது."பொம்புள","பொட்டச்சிக" போன்ற சொற் களை அடையாளப்படுத்த வெறும் "வுமன்" என்கிற சொல் லாட்சி போதுமா எனக் கேள்வியெழுப்புவர் விமர்சகர்கள்.
தலித் சமூகப் பெண்கள் பள்ளி செல்ல அனுமதிக் கப்படவில்லை. கலாநிதி.சுசீலா தாக்பூர் ஹிந்தியில் எழுது கின்ற தலித் பெண்ணிலைவாத எழுத்தாளர் ஆவார். அவரது தன் வரலாறு கூறும் நூலில் தன் தாய் பள்ளி செல்ல விடாமல் வீட்டில் தடுத்து வைக்கப்பட்ட குரூர அனுபவத்தை அற்புதமாக விளக்குகிறார்.
"என் தாய் பன்னாபாய் அவர்களால் பள்ளி செல்ல முடியவில்லை. பெண்பிள்ளைகள் படிச்சு என்னத்த செய்யப்போகுதுகள்?" என்கிற மாதிரி மனோபாவமே அங்கு காணப்பட்டது. அத்தகைய மனோபாங்குடன் தீண்டாமையின் அகோரக்கரம் அவர்களது கல்விக்கான
ஜீவநதி 110

சகல கதவுகளையும் அடைத்தே வைத்துவிட்டது." எனக்கூறும் அவர் மேலும் சொல்கிறார். "சாதியும், கண்மூடித்தனமான அடக்குமுறைகளும் ஆழமாக வேரூன்றியிருந்த மத்திய பிரதேசக் குடும்பங்களிலிருந்து அவர்களை எதிர்த்து வெளிக்கிளம்புகின்ற சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை."
சில ஹரிஜனப் பெண்கள் பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் அதிருஷ்டவசமாக பாமாவின் தன் வரலாறு கூறும் நூலாகிய கருக்குவில் அவரது அனுபவம் இப்படிப் பேசுகிறது.
"எப்போதுமே நமது வகுப்பாசிரியர் மற்றும் உடற்பயிற்சிக்குப் பொறுப்பான ஆசிரியர் ஹரிஜனப் பிள்ளைகளை நிற்கச் சொல்லியே பணிப்பார். பாட வேளையோ, காலைக் கூட்டமோ நாம் நின்று கொண்டேயிருப்போம். அவர்கள் எப்போது நம் பெயரை அடையாளப்படுத்துவரோ அப்போதே நாம் உட்கார அனுமதிக்கப்படுவோம். மிகப் பாதிக்கப்பட்டதாய் உணர்ந்தோம். ஏறக்குறைய இரண்டாயிரம் பிள்ளைகள் முன்னே வெட்கத்தில் தலைகுனிந்து ஏதோ தவறு செய்துவிட்டமாதிரி நிற்போம். ஆம் அது பெருத்த அவமானம் வறுமையுடன் இந்த அவமானம் ஏராளமான பள்ளி மாணாக்கரை கல்வி நிறுவனங்களைவிட்டு பாதியில் இடைவிலகுமாறு செய்து விட்டிருந்தது."
சுசீலா தாக்பூர் மாறுபட்டதொரு கதை வைத்திருக்கிறார் சொல்லுவதற்கு
"நான்காம் வகுப்பு. உயர்சாதிப் பிள்ளை களுக்கு ஆசிரியர் சங்கீதமும், நடனமும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் அக்குழுவில் அனுமதிக்கப் படவில்லை. ஒருநாள் நடனப் பயிற்சியில் எனக்கும் கலந்து கொள்ள ஆசை பிறக்கவே குழுவில் நானும் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தேன். சாந்தி பெஹன்ஜி(ஆசிரியர்) குழுவை விட்டும் என்னைத் துரத்தியடித்து "நீ எப்படி இவர்களிடையே வர முடிந்தது? நீ ஆடக்கூடாது இவர்களோடு" என்கிறார். எனக்கு அவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்கிற காரணம் புரிய வில்லை. "சிலவேளை அவர்கள் உயர்சாதியினர் என்பதனால் இருக்கும்."
"தாழ் ஜாதியில் பிறந்துவிட்டால் நாம் இழிசனர் என்றே மரணம் வரை கருதப்பட்டோம்" எனத் துயருறும் பாமா, "மரணத்தின் பின்னும் அந்நிலைபாடு முற்றாக மறைந்து விடுவதில்லை." என்கிறார். "சாதிப்பிரினை எல்லா மூலைமுடுக்குகளையும் ஊடுருவி, நம்மைப் பைத்தியங்களாக்கி அலைய விடும் வரை ஓயாதிருந்தது. இந்த மனப்பாங்கு கல்வியில் முன்னேற்றம், கல்விக்கான வழிவகைகளைத் தேடல் என்பதிலிருந்தெல்லாம் நம்மை சதாவும் அப்பால் வைத்திருந்தது." என்கிறார் "கருக்கு'வில்.
தலித் தெலுங்குக் கவிஞை சல்லாப்பல்லி ஸ்வோருப்பரணி தனது கவிதை ஒன்றிலே தலித் பெண்கள் சமூகத்தில் கட்டுண்டு வைக்கப்பட்டிருக்கும்
இதழ் 50
ܡܶܢ

Page 115
இழிநிலை குறித்துச் சொல்கிறார். அக்கவிதையின் இடைநடு வரியொன்று இப்படி நீளும்.
"அந்த அபாயம் என்றென்றைக்குமாகச் சூழ்ந்தேயிருக்கிறது. கிணற்றடிக்கும் குழிக்குமிடையே நம்மை நசுக்கிவைத்து. நான் என் சொந்த வாழ்வை வாழ்ந்தது எப்போதுநிகழ்ந்தது. ஒரு கன்னத்தே அறைந்து ஆண் வீட்டிலே நம்மைக் கட்டுப்படுத்த வீதியில் மறுகண்ணத்தே அறைந்து சாதி நம்மைக் கட்டுப்படுத்துகையில். ?” தீண்டாமையின் புது வடிவங்கள்" என்றொரு செய்தித் துணுக்கு பல அதிர்வு தரும் சேதிகளை முன்வைக்கின்றது. 後
மயிர் சிரைக்கும் நாவிதன் கடையிலே கூட "மற்றையது" எனக் குறிப்பிட்டு வேறாக ஒரு கதிரை இருக்குமாம் இவர்களுக்காக தமிழ்நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் கூட
மதுரை மாவட்ட தணியமங்கலம், ஆண்டார் கோட்டாரம் போன்ற கிராமங்களில் தபால்காரன் தலித் குடியிருப்புகளுக்குள் செல்ல மறுப்பதால் காசோலையோ, தந்தியோ, கடிதமோ பெற அவர்கள் தாமாகவே தபாலகங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளதாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் உயர் ரக நாய்களை வளர்ப்பதற்கும் தலித்து களுக்கு அனுமதி கிடையாது; மாட்டுவண்டி, சைக்கிள் ஒட்டவெல்லாம் அனுமதி கிடையாது; பண்டிகை நாட்களில் மத்தாப்பு கொளுத்த அனுமதி கிடையாது; பொதுப் பஞ்சாயத்துக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்க இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை; லொண்டரிகளில் தனியாக அலுமாரிகள் வைக்கப்பட்டு இருக்குமாம் இவர் களுக்காக அருந்ததியார் இன மாணாக்கர் மட்டுமே பள்ளிக் கூடங்களில் கழிவறைகள்துப்புரவு செய்தாக வேண்டுமாம்.
"மாடசாமி”, “முனியசாமி” போன்ற பெயர்களை உடையோர் "சாமி எனப்படும் சொல்லானது மரியாதைச் சுட்டாக இருப்பதால், அதைத் தவிர்த்து "மாடன்” என்றோ, "முனி" என்றோதான் அழைக்கப் பட்டாக வேண்டுமாம். மனித மலத்தை உண்ண அவர்கள் வற்புறுத்தப்படும் நிலையும் உள்ளதாம். இவை பற்றி மாவட்டக் கலெக்டருக்கு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலும் வெற்றி காண்பதில்லை என அறிவிக்கும் அரசதரப்புச் செய்தியாளர் "பெரும்பாலும் உயர் குலத்தாருக்கு மறைமுக ஆதரவு காட்டுவோராக பொலிசார் இருப்பதே இதற்குக் காரணம்" என்கிறார்.
கலாநிதி. ஈ.வி.ராமகிருஷ்ணன் "சுயமும் சமூகமும்" என்ற தனது கட்டுரையில் தலித்திய தன் வரலாறு கூறும் கதைகள் பற்றி ஆராய்கிறார். "தலித்தியதன் வரலாறு கூறும் கதைகளின் மாதிரிகள் இதுவரை காணாத புது மாதிரி களாக உள்ளன." எனக்கூறும் இவர், உதாரணங்கள் பலதை முன்வைக்கிறார். "அக்கார்மாஷி" எனப்படும் சரண்குமார்
ஜீவநதி
 

லிம்பாலேயின் வாழ்வியல் நூலானது வறுமைக்கும், இனப் புரட்சி பாகுபாடு என்பவற்றுக்குமிடையே நடைபெற்ற போராட்டங்களின் ஆவணம் என்று கூடச் G3. TobgloGOTL).
"பாகாரி" எனப்படும் ஒருவகை உணவுப் பண்டத் திருட்டைப் பற்றி அவர் வர்ணிப்பார் இப்படி:- " "பாகாரி மனிதனைப் போலவே விசாலமானது. அது வானம் போல பரந்தது. சூரியனது பிரகாசம் போல இருக்கும். பசி மனிதனைவிடப் பெரியது. நரகத்தின் ஏழு வளையங்களை விடவும் பெரியது. மனிதன்"பாகாரி"யின் அளவு அல்லது அவனது பசியினது அளவே பெரியவன். பசி அவனைவிடச் சக்தி வாய்ந்தது. ஒரு தனி வயிறு இந்த அண்டத்தைப் போல." நாளாந்த வாழ்வுக்கான அவர்தம் போராட்டத்தை அற்புதமாகத் தொடங்கிச் செல்வார் அவர் இப்படி,
லக்ஷ்மன் மானே அவரது வாழ்வியல் நூலான "உபாரா”வில் மத்தியதர வர்க்கத்தினரான மகாராஷ்டிரி யருக்கும், "காய்காடி" சமூகத்தினருக்குமான இடை வெளியைக் காட்டுகிறார். "நான் உள்ளார்ந்து பொங்கிய கோபத்தில் கொதித்தேன், இன ரீதியாக தரக்குறைவாக நடத்தப்பட்டபோது, அந்த வயதிலும் என்னால் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்தது." என்கிறார். இந்த வாழ்வியல் நூல்கள் அச்சமூக அமைப்பின் பண்புத் தரத்தை அற்புதமாக விபரித்துநின்றன.
சங்காரு காரத் தனது நூல் ஒன்றில் தனது தந்தை அழுகி நாறும் சடலமொன்றைக் கிணற்றுக் குள்ளிருந்து எடுக்குமாறு ஒரு பொலிஸ் கான்ஸ்டபிலால் பலவந்தப்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறி, "ஓரளவேனும் நம் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ளவே நான் சட்டத்தரணியாகவும் ஆனேன்." என்கிறார். பொது உலகுக்கு முகம் கொடாத ஒரு புறப்பிரதேசத்திலே தாம் வாழ நேர்ந்த அவலத்தை அவர் அதிலே அடிக்கடி மீட்டிச் செல்கிறார்.
சித்திலிங்கையா தனது நூலில் புதைகுழிக் கருகே தாம் வாழ நேர்ந்தது பற்றி விபரித்துச் செல்கிறார். நண்பர் தன்னைப் பற்றி விசாரித்து வந்தால், "அவன் புதைகுழியில்" என்று அம்மா சுருங்கக் கூறுவாராம். ஒருதடவை அம்மா அப்படிக் கூறியதை ஒரு நண்பன் தவறாக விளங்கிக் கொள்ள நேர்ந்து, "ஏன் அவன் இறந்து விட்டானா?" எனக் கேட்டு அதிர்ந்து போனதை ஞாபகிக்கிறார்.
பாமா "கருக்குவில் எழுதுகிறார். "நாயக்கர் குடும்பம் வீச ஆயத்தப்படுத்தியிருந்த உணவை பாட்டி எடுத்துக்கொண்டு வருவதை நான் முன்னமேயே
அறிந்திருந்தேன். ஒருநாள் பாட்டியோடு நானும்
சென்றிருந்தேன். தன் வேலைகளை முடித்து தான் கொணர்ந்த பாத்திரத்தை பாட்டி கழிவுநீர்க் கானருகே வைக்கிறார். நாயக்கர் பெண் வந்து தூரமாய்த் தள்ளி நின்று பாட்டியின் பாத்திரத்தில் உணவைப்போட்டார். நான் அதை எதிர்த்தபோது பாட்டி இப்படிச் சொன்னார்,

Page 116
"இவர்கள் மஹாஜனங்கள். இவர்கள் இல்லையெனில் நாம் உணவின்றிச்சாக வேண்டியதுதான்."
ஓம் பிரகாஷ் வால்மீகி தனது வாழ்வியல் நூலுக்கு "வீசப்பட்டவை” என்றே பெயரிட்டிருக்கிறார். வீசப்பட்ட பூரிகள் மழைக்காலம் கருதி காய வைக்கப்படும் அனுபவத்தை அதிலே அவர் விபரிக்கிறார்.
சரன்குமார் வாழுதற்காக குப்பை சேகரித்த அனுபவத்தைச் சொல்வார். குப்பையில் பொறுக்கும் காகிதங்களை தான் வாசிக்கவென்று நின்று தாமதிப்பதை ஞாபகமூட்டுகிறார். "ஒரு கையில் குப்பை இருந்தது. மறு கையில் நமதான பசியை நாம் சுமந்திருந்தோம். அவர்கள் நாம் சேகரித்த குப்பைகளின் பாரத்தை அளவிடுவர். குப்பைக்கு பதிலாக நமது பசி அளக்கப்பட மாட்டாதா என நான் ஏங்குவதுண்டு அப்போதுதான் நம் பசியின் கனம் தெரியலாம். சிலவேளை நமது பசியை மட்டுமன்றி, நம்மையே அளக்கத்தராசிலே நிறுத்த வேண்டுமென்று நான் விரும்பினேன். நாள் முழுக்க நாம் தேடிய குப்பைகளின் அளவுக்கேனும் நாம் இருக்க மாட்டோமா..?
பாமாவின் இன்னொரு அனுபவம் இப்படி நீண்டு செல்கிறது. ஒருதடவை பள்ளியில் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டதாம் பாமாவுக்கு "நீ உண்மையான பறையர் களது தன்மை என்னவென்று நிரூபித்து விட்டாய்.” என்று ஆசிரியர் ஏசியிருக்கிறார். அன்று அழுததைச் சொல்லி அவர் தொடர்ந்து எழுதுகிறார் "இன்னமும் அந்த அழுகை தொடர்கிறது."என்பதாக,
ஓம் பிரகாஷ் வால்மீகி வகுப்பறையைக் கூட்டிப் பெருக்க எப்போதும் பலவந்தப்படுத்தப்படுவாராம். ஆனால், வகுப்பறையில் அமர உரிமை கிடையாதாம் அவருக்கு. கிராமத் தலைவரிடம் இது பற்றித் தன் தந்தை முறைப்பாடு செய்தபோது, "வகுப்பைக் கூட்டத்தானே கேட்க்கப்பட்டான். அது என்ன பெரிய விடயமா?" என்று கேட்டாராம் கிராமத்தலைவர்.
சமூகத்தில் சேர்க்கப்பட்ட இவ்வாறான அனுபவங் களின் தொகுப்பாக இந்த சுயவரலாறு கூறும் நூல்கள் உள்ளன. "நான் துடைத்து அழிக்க முயன்ற இனப் பிரச்சினைகளின் கறை இருட்டுச் சூழ்ந்து கிடந்தது. நான் உடைந்து போனேன். ஒரு குரூர நோயால் பாதிக்கப்பட்ட மனிதன் நோயிலிருந்து மீண்டு வந்தால் இருக்க முயலு வானே அது போல முயற்சித்து என்னை நான் நிலை நிறுத்தினேன்." என்கிறார் மானே. "வெட்கக்கேட்டினதும், கீழ்த்தரத்தினதும், புரட்சியினதும் சேகரிக்கப்பட்ட அனுபவங்களாக மிளிர்ந்து, ஏனைய சாதாரண சுயவரலாறு கூறும் கதைகளிலிருந்து அவை மாறுபட்டு நிற்பதைக் காண்கிறோம்." என்கிறார் ராமகிருஷ்ணன் அவர்கள்.
அடுத்து பாமாவுடனான நேர்காணல் ஒன்று இடம்பெறுகிறது. பாமா 1958ல் மதுரைக்கருகில் புதுப்பேட்டையில் பிறந்தவர். 18ம் நூற்றாண்டுகளில் அவரது குடும்பம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொள்கிறது. அவரது தந்தை கசைராஜ் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். தன் முழுச் சம்பளத்தையும் தன் குழந்தைகளின் கல்விக்காகவே செலவழித்தார். தாயாரது
ஜீவநதி 11:

பெயர் செபஸ்தியம்மா. பாமா தூத்துக்குடியிலுள்ள சென்.மேரி கல்லூரியில் தன் கற்கை முடித்து, கல்விமாணி கற்கையின் பின்னர் ஆசிரியையாகக் கடமை புரிந்து, சில காலத்தின் பின்னர் ஒரு கொன்வன்டில் கன்னியாஸ்திரி யாக வரவேண்டுமென்ற கனவில் இணைந்து கொண்டு ஏழு ஆண்டுகளின் பின் அங்கும் பாகுபாடு நிலவுவதைக் கண்டு உளம் கொதித்து, அதையும் கைவிட்டு மறுபடியும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர். இப்போது காஞ்சிபுரம் அருகே ஒரு பாடசாலையில் பணியாற்றுகிறார். 1992ல் அவர் எழுதிய "கருக்கு" வாழ்வியல் நூலானது, அவரை ஒரு கவனத்துக்குரிய சிறந்த எழுத்தாளராக உலகுக்கு இனங்காட்டியது. "சங்கதி", "வன்மம்", "குசும்புக்காரன்", "ஒரு தாத்தாவும், எருமையும்" போன்றவை அவரது இதர படைப்புகளாகும். "நான்" என்கிற கோபாவேசத்துக்கும், பொது வான தலித் பெண்களுக்குமிடையேயான மனமுரண் பாட்டைத் தணிக்கவே "கருக்கு" எழுதப்பட்டதா?" என்கிற கேள்விக்கு பாமா இப்படி பதிலளிக்கிறார்.
"கருக்கு" உண்மையில் என் வாழ்வில் என்னை மிக வருத்திய வலிகளினால் உண்டான படபடப்பிலிருந்து தணியச் செய்து கொள்ள எனக்கு நானே எழுதிக் கொண்டதுதானே தவிர, பிரசுரம் கருதி எழுதப்பட்டதல்ல. "கொன்வன்டை" விட்டுச் சென்றபோது, ஜீவிதம் எப்படி யிருக்குமென்று நான் அறிந்திருக்கவில்லை. என்னிடம் எந்தக் கனவுகளோ, நம்பிக்கைகளுமோ அறவே இருக்கவில்லை. வாழவேண்டும் ஆதலால், துணைக்கு யாரும் இல்லையாதலால் முதலில் ஒரு தொழில் தேவைப்பட்டது எனக்கு அம்மா அன்பாய்த்தான் இருந்தாள். ஆனால், அவளாலும் எனக்கு உதவ முடியாத நிலை அப்போது தொழிலும், உதவிகளுமின்றிநாதியற்ற நிலையுணர்ந்தேன். கொன்வன்ட் பயிற்சிகளிலிருந்தும் தப்ப முடியாதிருந்தது. என்னை நான் மறுபடி இனம் காணவே "கருக்கு"வை எழுதினேன். "சங்கதி" மாறுபட்டது. இந்நாவல் தலித் பெண்கள் மீது கவனத்தை ஈர்ப்பது. தலித் கலாசாரத்தை விபரிப்பவராகிய "நான் இற்கும், தலித் என்கிற நிதர்சனத்துக்குமிடையே குழப்பங்கள் இல்லை. எல்லாக் கெரக்டர்களையும்கதாபாத்திரங்களையும் திரட்டுகிற"நானாக" இங்கே நான் வெளிப்படுகிறேன். தலித் கலாசாரத்தின் புரட்சிப் போக்கை வெளிக்கொணருவதே என் எழுத்தின் பிரதான இலக்கு வன்முறையை அனுபவிக்கிறபோது தலித்து களின் குரல் எங்ங்னம் ஒலிக்கிறது, எதிர்க்கிறது என்பதையே நான் எழுதுகிறேன். "கருக்கு" என் வாழ்வியல் கதைதான். ஆயினும், என் சமூகத்தின் வாழ்வோடு என் கதையும் சேர்ந்தே இருக்கிறது. "நான்" என்கிற அடையாளம் நாவலில் இருந்தாலும், தலித் பெண்களது இருப்பை விபரிக்கவே இரண்டும் எழுதப் பட்டன. ஒவ்வொரு பெண்ணும் தலித் அடையாளத்தை நிலைநிறுத்தவே முயல்கிறாள்.
பெண்கள் எப்போதும் இரண்டாம் தர
இதழ் 50

Page 117
《་
குடிமக்கள் உலகில், தலித் பெண்களுக்கோ அதைவி ஆழமான இரண்டாம் பட்ச நிலை. தலித் என்கி அடையாளம் வேறுபட்ட பிரச்சினைகளை அவர்களுக்கு தருகிறது. மற்றப் பிரச்சினைகள் எல்லோருக்கும் பொ, என்றிருக்க, தலித் பெண்களோ வாழுவதற்காக சா வேண்டியி ருக்கிறது. அதையே என் கதையி: விபரித்துள்ளேன்."
தமிழ் தலித் பெண் எழுத்தாளர்கள் பற்ற பாமாவின் அவதானிப்பு இப்படி அமைகிறது. "தமி நாட்டிலே தலித் பெண் எழுத்தாளர்களாக சிலே உருவாக்கம் பெற்றிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஏஅதிகரியா?
அவர்களுள் சிலர் எல்லா வீடுகளிலும் ஆண்கள் கற் அனுமதிக்கப்படுகிறார்கள், பெண்பிள்ளைகள் வீட் வேலைகள் செய்வதற்காக 毅 நிறுத்தப்படுகிறார்கள். கல்ல இல்லையாதலால் அவர்களிடமிருந்து ஆக்கத்திற:ை எதிர்ப்பார்ப்பது எப்படி? ஆனால், நீங்கள் கேட்டுப்பார்த்தா தெரியும். நல்ல கதை கூறுவோர் நிறைய பே இருக்கிறார்கள் சரியான கல்வி இல்லையாதலால் அவற்றைச் சிறந்த கதைகளாக முன்வைக்கிற சாமர்த்திய அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. பாதியில் கல்விை கைவிட்ட பெண்களது எண்ணிக்கை தலித் சமூகத்தில் மி உயர்வு, அவர்களது அனுபவங்கள் எல்லாமு 1 தனித்துவமானவை. தலித் பெண்கள் தனித்துவமானவர்கெ ஆயினும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. "மலையாளத்தில் உங்கள் எழுத்துக்கள் மூல கருத்து சிதைவுறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா? என்கிற கேள்விக்கு பாமாவின் பதில் இப்படி அமைகிறது 'மூலக்கருத்து முழுக்க இழக்கப்படவில்லை. மலையா? மும், தமிழும் ஒனறுபோலிருப்பதால், மலையாளத்துக் மொழிபெயர்ப்பது சாத்தியமாக உள்ளது. ஆங்கில அப்படியல்ல. மூலக்கருத்து சற்று மாறியுள்ளது. எனினும் மொழிபெயர்ப்பு மிக அவசியமானது. தன்னைத் தா:ே அறிய வைத்தல் என்பது ஒருவருக்கு மிகவும் கடினம் எ6 புத்தக பிரசுரத்துக்காக நான் நிறைய சிரமங்கள் பட்டா வேண்டியிருந்தது. தலித் இலக்கியமானது முன்பு பிரபல்ய பெற்றிருக்கவில்லை. மிக நீண்டகாலமாகவே தலித்தி ரல்லாதோர் தலித்துகளை மங்கிய வெளிச்சத்திலேே அடையாளம் காட்டி வந்திருக்கிறார்கள். எனது நூ ஆங்கிலத்தில் பிரசுரமானபின்னேதான் கவனத்தை பெற்றது. செய்தித்துறை, அச்ககப் பணி புரிவோ எல்லோருமே உயர்குலத்தினரோடேயே இருக்கிறார்கள் தலித் எழுத்துக்களை தலித் சமூகத்திலிருந்து வருவோே மொழிபெயர்த்து வழங்கும் நிலை வர வேண்டும்."
கிறிஸ்தவ மதத்தில் இனப்பாகுபாடுகள் நிலவுத பற்றி பாமா இப்படிப் பேசுகிறார், "கடவுளின் முன் அனைவரும் சமம் என்று கிறிஸ்தவம் சொன்னாலும், இ பூரணமாக நடைமுறையில் இல்லை. தலித் கிறிஸ்தவர்க இதன் பொருட்டு போராடுகிறார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவம் சற்று இதை வரவேற்கிறது. தலித்தி
ஜீவநதி
 

s
இந்துக்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்குமிடையில்
முடிவற்ற பகையுணர்வு உள்ளது. இயக்கத்தலைவர்கள் இரு சாராரையும் இணைத்திடப் போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எண்பது வீதமானோர் ரோமன் கத்தோலிக்க தலித்துகள். ஆயினும், தமிழ்நாட்டுக் கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்களில் தலித்தியர் களுக்கு உயர் அந்தஸ்துக்கள் எதுவும் கொடுக்கப் படுவதில்லை. தலித் கிறிஸ்தவர்களின் போராட்டங்கள் காரணமாக சில மாற்றங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான கொன்வன்டுகளில் இனப்பாகு
பாடு அதிகமாக் காணக் கிடக்கிறது என் அனுபவத்தின்
படி, எல்லா மட்டங்களிலும் இனப் பாகுபாடு உள்ளது. பல தலித் கன்னியாஸ்திரிகளுடன் பேசிப் பார்க்கும்
சந்தர்ப்பங்கள் எனக்கு வாய்த்தன. அவர்கள்தாம் சமமாக நடத்தப்படவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்
கொன்வென்ட் வாழ்க்கை நரகமாக உள்ளது. பலர்
தப்பித்துச் செல்ல முயலுகிறார்கள். எனினும், மதத்தின்
கட்டளைகளுக்குள்ளும் கூட தலித் சமூகத்தின் உணர்வு
களைப் புரிந்து கொண்ட தனிநபர்கள் இருக்கவும்
செய்கிறார்கள்"
"ஏன் உங்கள் எழுத்துகளில் அன்பு-காதல் என்பவற்றுக்கான கவனிப்பு மிகக் குறைவாக உள்ளது? எனக் கேட்கப்பட்டபோது, "நாம் அன்போடு போராடு கிறோம். தலித்தியக் கலாசாரத்தே அன்பென்பது பொதுவாக அற்புதமான காட்சி என்"சங்கதி, மற்றும் பல சிறுகதைகளில் அன்புக்கான கவனிப்பு இருக்கவே செய்கிறது." என விடைபகர்கிறார் பாமா. ---
"சமூகத்தோடு தலித்துகள் இணைந்து வேண்டியிருப்பதன் தேவையை நீங்கள் உணர வில்லையா?" என்கிற வினா எழுப்பப்பட்டபோது, "சமூகம்
நமக்கு சில எல்லைகளை வகுத்தே வைத்துள்ளது. நாம் முயன்று நடுப்பகுதிக்கு வர முயற்சிக் கிறபோதெல்லாம்
இன்னும் மோசமாக ஓரங்கட்டப் படுகிறோம். நமக்கு
ஆதரவு காட்ட வேண்டிய ஒரு முக்கியமான பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது. தலித்து களுக்காக எழுதுவது கூட அவர்தம் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியே." என மறுமொழி பகர்கிறார் அவர், ---
அந்தப் பேட்டியிலே பின்வரும் கருத்துக்களை பாமா மேலும் முன்வைக்கிறார்.
"நான் ஒரு சாதாரண கிராமத்துப் பள்ளிக்கூட ஆசிரியை. மக்கள் என்னை ஒரு தலித் பெண்ணாகவே பார்க்கிறார்கள் வாடகைக்கு ஒரு வீடு கொடுக்கக்கூட பின்வாங்குகிறார்கள் கொன்வன்டில் கற்பிக்கிற போது, நிர்வாகம் என்னை உயர்குலப் பெற்றோருடன் மோத
வைத்துக் கூத்துப் பார்த்தது. தலித் என்பதால் "பறையா
டீச்சர் என்கிற அடைமொழி ஒன்று உள்ளது. அதை மாற்ற
முடியவில்லை எனக்கு
"கருக்கு வெளியானபோது பிழையான
கருத்துக்கள் கிராமத்து மக்களிடம் இருந்தன. தம்
-இதழ் 50

Page 118
வாழ்வின் இரகசியமான விடயங்களையெல்லாம் GT60ান্ত । அந்த நூல் அம்பலத்துக்குக் கொண்டுவந்து விட்டதாக அவர்கள் என்னைக் குற்றஞ் சாட்டினார்கள் என் இல்லத்துக்குக் கூட ஆறு மாதங்கள் என்னால் அடியெடுத்து வைக்க முடியவில்லை. அப்பாகூட கடுஞ்சினத்துட னிருந்தார். என் சமூக இளைஞர்கள் சிலரது உதவியோடு நான் அவர்களை எந்தவித அவமானத்துக்கும் ஆளாக்க வில்லை என்பதைத் தெளிவுற எடுத்துரைத்த பின்பே என் உண்மை நிலைப்பாடு புரிந்தது அவர்களுக்கு இப்போது அவர்கள் எனக்கு நிறைய உதவுகிறார்கள். என் சமூகத்துக்குள் நான் போகிறபோது, ஒரு மீன் மீள நீருக்குத் திரும்புவது போல உணர்கிறேன். என் சமூகத்தைவிட்டுத் தள்ளியிருத்தல், என்னை கதிகலங்க வைத்து நிம்மதியற்ற நிலைக்கு ஆளாக்குகிறது. அந்த விடுதலையுணர்வை வேற்று மனிதர்களுடனான கூட்டுறவில் என்னால் ஒருபோதும் உணர முடியவில்லை. 猪
தலித் எழுத்தாளர்கள் தமது கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம் பெயர வேண்டும் தத்தமது எழுத்துக்களை உலகறியச் செய்ய முயல வேண்டும். ஒருதடவை என் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையொன்று நான் எழுதி, அது பிரசுரமாகி விட என் கிராமத்தே அது பற்றி அறிய வந்தபோது, ஒரு பெண் சொன்னாள் மற்றவளைப் பார்த்து "பாமா முன்னால் நாம் ஒன்றும் பேசக்கூடாது. பார். அனைத்தையும் அவள் கதைகளில் கொணர்ந்து விடுகிறாள்."என் ஊரவர்களே எனக்குக் கருதருவோர்.
"கருக்கு" வெளியானபின் தலித் பெண்களைப் பற்றி நான் எழுத வேண்டுமென்று பலரும் என்னை வற்புறுத்தியதன் பேரில் "சங்கதியை எழுதினேன். அவர்தம் வாழ்வு முறைகள், கலாசாரம், கனவுகள், பலங்கள், பலவீனங்கள், ஆவல்கள், போராட்டங்கள் அனைத்தையும் மூன்று தலைமுறைப் பெண்களை-பாட்டி, அம்மா, மகள்வைத்து வரைந்தேன். நாளாந்தம் அவர்கள் அனுபவிக்கும் உளைச்சல்கள், வேதனைகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்விலே அவர்கள் கொண்டிருந்த உறுதியை நான் சொல்ல வேண்டியிருந்தது.
இன்னும் நிறைய திட்டங்கள் உள்ளன. ஒரு தனி மாது தனியே வாழுவதன் போதான அவளது சுதந்திர உணர்வு, அப்படி வாழுவதற்கு அவள் நிகழ்த்தும் போராட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவல் எழுதி வருகிறேன். மேலும் ஒரு ஆசிரியையாக இருந்து பெற்ற அனுபவங்கள், அவை இரு வகையானது ஒன்று மக்களுக்குக் கற்பிப்பது மற்றையது அவர்களிடத்தே நான் கற்றது அவற்றையும் வைத்து எழுத எண்ணம் உள்ளது. தலித் பெண் எழுத்தாளர் என்ற அடிப்படையில் நிறைய மாநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். பல அனுபவங்கள். சில இடங்களில் நல்ல வரவேற்பு வானத்தே இறக்கைக் கட்டிப் பறந்ததாய் உணர்ந்தேன். சிலவிடத்தே படுபயங்கரப் புறக்கணிப்பு நோகடிக்கும் விமர்சனங்கள் தேவையற்ற வினாக்கள் என்பவற்றுக்கு முகம் கொடுத்து மிக அந்நியமாய், தாழ்வாய் உணர்ந்தும் உள்ளேன் சில
ஜீவநதி –፪፻፲!
ത്തുക്കു-=

மாநாடுகளில்
"உங் களது அனுபவங் களினுடாக
இவ்வெழுத்துக்கள் வாயிலாக சமூகத்தில் ஏதேனும் மாற்றங்களைத் தோற்றுவிக்க இயலும் எனும் நம்பிக்கையுண்டா?" என்று பாமாவிடம் கேட்கப்பட்ட தற்கு அவர் இப்படி பதிலளிக்கிறார். "ஆமாம், நிச்சயமாக, என் எழுத்துக்கள் இளம் தலைமுறையினரிடையே புது நம்பிக்கைகளைத் தோற்றுவித்துள்ளன. தலித்துகள் உறுதிபெற்றுள்ளனர். தலித்தல்லாதோர் பீதியுற்றுள்ளனர். "ஏன் எழுதுகிறீர்கள்? சுருக்கமாகச் சொல்லுங் களேன்." என்று இறுதியாக ஒரு வினா எழுப்பப்பட்ட போது, "எனது வித்தியாசமான பாத்திரப் படைப்புகளினூ டாக நான் சக்தி பெறுகிறேன் ஆதலால், நான் எழுது கிறேன். அதுவே என்னை வாழ வைத்துள்ளது. பலவீனர் களது ஆயுதமாக என் எழுத்தை பாவித்தாக வேண்டிய கடப்பாடும் உள்ளது. எழுதுதல் என்னைச் சுகப்படுத்து கிறது. சுதந்திரமாய் உணரச் செய்கிறது ஆதலால், நான் எழுதகிறேன்." என்று விடையளிக்கிறார் பாமா,
அடுத்தும் ஒரு நேர்காணல் இடம்பெறுகிறது. கலாநிதி.ஜெய் பிரகாஷ் கர்தம் ஹிந்தியில் எழுதும் ஒரு தலித் எழுத்தாளர். அவரைப் பேட்டி காண்கிறார் கலாநிதிநிலன்சுகுமார் அகர்வால் அவர்கள். கலாநிதி ஜெய் பிரகாஷ்கர்தம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் காசியாபாத் எனும் ஊரில் ஒரு ஏழைக்குடும்பத்தில்
பிறந்தார். தொழிற்சாலைகளில் ஒரு கைத்தொழிலாளி
யாக ஆரம்ப காலங்களில் வேலை செய்திருக்கிறார். பல அரச மாநில வங்கிகளில் பணியாற்றிவர். இந்திய மத்திய செயலகத்தே மொழித்துறை சேவைப்பகுதியில் உதவிப்
பணிப்பாளராக இருந்து பின்னர், மொரிசியவழின் இந்திய
உயர் ஸ்தானிகரின் செயலாளராக தற்போது கடமை
யாற்றுகிறார். 1999இலிருந்து வெளிவருகின்ற தலித்
சாகித்யா வருடாந்த சஞ்சிகையின் ஆசிரியரும் கூட தலித் இலக்கியம் பற்றிய தனது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொள்கிறார். ---
"இந்திய இலக்கியங்களில் தலித் இலக்கியம் இன்று பெரும் இடம் பிடித்துள்ளது. எனக்கூறும் அவர், "அதன் எதிர்காலம் வெகு பிரகாசமாக மிளிர்கிறது." என மகிழ்ச்சி தெரிவிக்கிறார். அமெரிக்காவில் கறுப்பினத்த வரது பிரச்சினைகளோடு தலித் பிரச்சிகைளை ஒப்பீடு
செய்யும் அவர், சில விடயங்களில் தலித்தியர்களது
பிரச்சினைகள் வித்தியாசமாக இருப்பதையும் சுட்டுகிறார். "கறுப்பர்களுக்கு தீண்டத்தகாதவர் என்ற பிரச்சினைகள் எதுவும் கிடையாது. அவர்களுக்குள்ளது இனப்பாகு பாட்டுப் பிரச்சினைகள் மட்டுமே. ஆதலினால், தலித் இலக்கியம் கோபாவேசம் கூடியது" என்கிறார் அவர்
மேலும் அவர் கூறுகிறார். "இந்திய இலக்கியங் கள் எனக் கூறப்படும் சிலவகை இலக்கியங்கள் தலித்தியர்
களை எப்போதும் நசுக்கி வதை செய்வதாக உள்ளன.
கடவுள் விதி என்கிற பெயரில் தலித் துஷ்பிரயோகத்துக்கு
ஆளாகுதல் நிகழ்கிறது. சுயநலமற்ற பணி புரிய கீதை
இதழ் 50
 ̄ܨ
ܬܹܐ

Page 119
སྐྱེ་
ܓ̣ܗ
எதிர்ப்பார்க்கிறது எனக்கூறி, அவர்தம் கடின உழைப்புக்கு எதையும் கோராதிருக்க அவை கற்பிக்கின்றன. எஜமானனால் எது பகரமாகத் தரப்படினும் அது கடவுளின் விருப்பம் எனக்கூறி, அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ள ଔରାଗ0if(b[b."
ஏனைய துறைகளில் தலித்துகளது ஈடுபாடு பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, "நாடோடி இலக்கியம், இசை, பாட்டு சங்கீதம், ஓவியம் என பல துறைகளில் தலித் இன்று கவனம் செலுத்துகிறது. தலித்திய உணர்வுகளை பெருத்த குரலோடு வெளிப்படுத்தி அவை இவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகங்களை ஒரளவுக்கு உலகறியச் செய்து வருகின்றன." என்கிறார் அவர்.
"தலித்தியர் படைக்கும் தலித் இலக்கியம், தலித்தியரல்லாதோர் படைக்கும் தலித் இலக்கியம் இரண்டுக்குமிடையே என்ன வேறுபாடுள்ளது எனக் காண்கிறீர்கள்?" என்ற வினாத் தொடுக்கப்பட்டபோது, ஹிந்தி விமர்சகர் மவாயிலாகக் கிடைத்து விடுகிறது. தலித் இலக்கியங்கள் உலகமயப்படுத்தப்படல் அவசியம், பல பல்கலைக்கழகங்களில் தலித் இலக்கியங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. ஒக்டோபர் 2006இல் ஜெர்மன் ப்ராங்பார்ட் உலக புத்தகச் சந்தையில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது, தலித் இலக்கியங்கள் பொன், ஹம்பர்க் பல்கலைக் கழகங்களில் கற்பிப்பதைக் கண்டு வியப்புற்றேன். நிறைய மாணவர்கள் தலித் இலக்கியங்கள் சம்பந்தமாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து தலித் இலக்கியங்கள் சம்பந்தமாக ஆய்வில் ஈடுபடும் பலர் அடிக்கடி என்னோடு தொடர்பு கொள்கிறார்கள்." எனக்கூறும் இவரது நூல் ஒன்று ஜி.டபிள்யு.பிரிஜ்ஸ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"இந்திய இலக்கிய பாடத்திட்டத்தில் தலித் இலக்கியம் உள்ளடக்கப்பட என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியும்?" என்கிற வினா எழுப்பப்பட்ட போது, அவர் பின்வருமாறு தன் கருத்துகளை முன் வைக்கிறார். "எழுத்தாளரது பணி எழுதுவது மட்டுமே. பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவது பற்றி மற்றவர்கள்தான் யோசிக்க வேண்டும். இந்திய பல்கலைக்கழகங்களில் தலித்துகள் எவரும் உயர்பதவிகளில் இல்லை. பாடத் திட்டத்தை வரைகிற குழுவிலும் அவர்கள் அங்கத்தவர் களாக இல்லை. அதனால், அவர்களால் இதை செய்ய முடியாது. எனது "ச்சாப்பர்” நாவல், மற்றும் அநேக சிறுகதைகள் பல பல்கலைக்கழகங்களில் கலைமாணி, முதுமாணி கற்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. என் வாழ்வும், பணியும் பற்றி கிட்டத்தட்ட பதினைந்து கல்வியியலாளர்கள் தமது மேற்படிப்புகளுக்கான ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தலித் இலக்கியத்தில் என் மேற்சொன்ன நாவல் முதலாவதாகக் கருதப்படுகிறது."
மேலும் அவர் கூறுகிறார். " "தலித் சாஹறித்தியா" சஞ்சிகையின் ஆசிரியராக சமூகப் பொருளாதார, அரசியல், மதப்பின்னடைவுகள், தலித்துகளுக்கெதிராக துஷ்பிர
ஜீவநதி

யோகங்கள் அனைத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறேன். தலித்துகளின் வாழ்வில் வேரோடியிருக்கும் அறியாமை, வேலையற்ற நிலை, வறுமை, சமூகப் பின்னடைவு என்பவற்றைச் சுட்டுகிறேன். இது தவிர சிறுவர்களுக்காகவும் இலக்கியங்கள் படைத்து வருகிறேன்."
ஒரு கூலித் தொழிலாளியாக இருந்து ஒரு நாட்டின் உயர் ஸ்தானிகரது செயலாளராக இன்றிருக்கும் அசாதாரண வளர்ச்சியைக் காட்டும் இவரது தொழில் வரைபு பற்றியும், எது அதில் பொறுப்பு வகித்தது என்பது பற்றியும் கேட்கப்பட்டபோது, "என் மன விருப்பம் தவிர வேறில்லை. என் அப்பா 1976ல் இறந்தபோது என் வாழ்வு முழுதும் இருளே இருந்தது. பதினோராம் தரம் கற்றுக் கொண்டிருந்தேன். மூத்தவன் நான் என்பதால், குடும்பத்தை நடாத்திச் செல்ல அம்மாவுக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம், பள்ளி செல்லாமல் வேலைக்குப் போனேன். நாளாந்தம் ஐந்து ரூபாய் கூலியாகக் கிடைத்தது. சிறிய தந்தையும், அவரது தோழர்கள் இருவரும் என்னை எப்போதும் ஊக்குவித்தார்கள். சக்தியும், நேரமும் தவிர மூலதனம் எதுவுமில்லை. கிராமத்தவர்கள் சிலரும் உதவி புரிந்தார்கள். ஒரு இயந்திரவியலாளராக வர ஆசை 1977ல் 140.00 அனுமதிக்கட்டணம் செலுத்த வழியில்லை ஆதலால், விஞ்ஞானத் துறையில் சித்தியடைந்தும், அடுத்த வருடம் 1978இல் கலைப்பிரிவில் இணைந்து கொண்டேன். வறுமை துரத்தியது. ஒழுங்கான உடை யில்லை. சப்பாத்துகள் இல்லை. ஆகவே, கல்லூரி செல்ல முடியவில்லை. இரும்புத் தொழிற்சாலையில் 180.00 ரூபா மாதாந்தச் சம்பளத்தில் சேர்ந்தேன். டியூசனும் கொடுத்தேன். என் முதல் அரச தொழில் 1980இல் விற்பனை அரசவரித் திணைக்களத்தில் சேர்ந்தேன். பிறகு, அதே நிறுவனத்தில் எழுதுவினைஞராக ஆனேன். 1980ல் விஜயா வங்கியில், 1988ல் மத்தியச் செயலக மொழித்துறையில் மொழிபெயர்ப்பாளராக இணைந்தேன். 1989இல் உதவிப் பணிப்பாளராக பதவி உயர்வு 1996ல் கலாசாரத் திணைக் களத்திலும், பிறகு கிராம அபிவிருத்தித் திணைக்களத்திலும் பணி 2006இலிருந்து மொரிஷியஸ் உயர் ஸ் தானிகரது இரண டாம் செயலாளராக ஆனேன். கல்வியைத் தொடந்தேன். தத்துவவியல், ஹிந்தி, சரித்திரத்தில் முதுமாணி முடித்து, கலாநிதிப்பட்டம் ஹிந்தியில் என் எழுத்து அனுபவங்கள் இன்றைய தொழிலில் நிறைய உதவுகின்றன." என்று விடை வருகிறது அவரிடமிருந்து.
ஓம் பிரகாஷ் வால்மீகியை சுரேஷ் சந்ரா த்விவேதி நேர் காணல் செய்கிறார். அவரது பிறப்பு, வாழ்வு பற்றி கேட்கப்பட்டபோது, "உத்தரப் பிரதேச முஸாபர் நகரிலே 1950 ஜூன் 30ல் கீழ்மட்ட தலித் குடும்பம் ஒன்றில் பிறந்தேன். என் குடும்ப உறுப்பினர்கள் வாழும் பொருட்டு கடின உழைப்பை மேற்கொண்டார்கள் ஆறு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ள குடும்பத்திலே நான் மட்டுமே பள்ளிக்கூடம் அனுப்பப்பட்டேன். என்
இதழ் 50

Page 120
பெற்றோர் கற்றவர்கள் கிடையாது. ஆயினும், அவர்களிடம் ஆழமான அவதானிப்பு இருந்தமையால் என்னை கற்க வைத்தார்கள். நாடு சுதந்திரம் பெற்று 7, 8 ஆண்டுகள் கடந்திருந்தது. பள்ளி செல்லும் தலித்துகள் மீது தடைகள், கெடுபிடிகள், அவதானிப்புகள் தொடர்ந்தாலும் நான் கற்க அனுப்பப் பட்டேன். பள்ளி செல்லும்போது வீட்டிலிருந்து பாய்த்துண்டு ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் அதில்தான் உட்கார வேண்டும் ஆழமான மறுதலிப்புகள் வறுமையின் கோரத்தாண்டவம் இருந்தாலும் பெற்றோர் கல்வியில் உந்துதல் காட்டினார்கள்."
தொடந்து தன் கல்விசார் அடைவுகள், தோல்விகள் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். "என் ஆரம்பக்கல்வியை கிராமப்புறப் பாடசாலையொன்றில் பெற்றேன். பாடங்களில் அதிக புள்ளிகள் பெறுபவனாக நான் எப்போதும் இருந்தேன். இனரீதியிலான வதைகள் காரணமாக ஒவ்வொரு கணமும் நெருப்பின் மீது நடப்பதாக உணர்ந்தேன். என் ஞாபகத்தில் என் ஆசிரியர்கள் படுபயங்கரமாகவே இன்றும் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் மோசமான சொற்பிரயோகங்களைப் பயன் படுத்தியே நம்மை எப்போதும் அழைத்தனர். வகுப்பில் முதலாம், இரண்டாம் ஆளாக வந்தாலும், பின் வரிசையிலேயே நாம் அமர நிர்ப்பந்திக்கப்பட்டோம். பாடசாலை நீர்க்குழாயில் நீரருந்த நான் என்றும் அனுமதிக்கப்பட்டேனில்லை. ஆசிரியர் கேட்டும் கேள்வி களுக்கு தப்பித்தவறி விடையளித்துவிட்டால் பிரம்படி விழும். இன்னும், என் முதுகிலும், பின்புறத்திலும் அந்த வடுக்கள் அப்படியே உள்ளன. இரசாயனவியல் செய்முறைப் பரீட்சையில் வேண்டுமென்றே என்னை பெயிலாக்கியது என் வாழ்வையே திசைமாற்றிப்போட்டது. ஊரைவிட்டு டெஹ்ராடூன் வந்தேன். மறுபடி மறுபடி முயற்சித்தும் கல்வி தடைபட ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். இடையில் கலைக்கூடங்களிலும் பணிபுரிந்தேன். கவிதை, கதை, தலித் இலக்கியம் மீதில் முனைப்புடன் ஈடுபட்டேன். கல்விபூரணமடையாத கவலை துரத்தியது. மறுபடி கற்றேன். ஹிந்தி இலக்கியத்தில் முதுமாணிமுடித்தேன்.
கலாநிதி அம்பேத்காரின் முன்மாதிரிகள் என் கவிதைகளுக்கு மூலம் தந்தன. கெளதம புத்தரின் கருத்துக்கள் விடயங்களைப் புரிந்து கொள்ள வைப்பதில் எனக்கு உதவிற்று மாக்ஸியக் கருத்துக்கள், கொள்கைகள் பால் ஏற்பட்ட ஈடுபாடு மனித உறவுகளைப் புரிந்து கொள்வதில் எனக்கு மிக உதவிற்று கோர்க்கி, செக்கோவ், ஜேம்ஸ் போல்ட்வின், ரிச்சர்ட் ரைட் போன்றோரின் எழுத்துகளில் மிக ஊடுருவல் செய்தேன். என் வாழ்வின் நோக்கக்கூற்றாக, தத்துவமாக அம்பேத்கார், புத்தர் ஆகியோரை வரித்தேன். அம்பேத்காரின் சிந்தனை களிலிருந்து என்னால் ஒரு அங்குலம் அளவேனும் பிசகி நடக்க முடியவில்லை. அவரது 22 வாக்குறுதிகள் தனை உள்வாங்கி, அறியப்படாத தலித்திய வாழ்வியல் பக்கங் களை என் கதைகளினூடாகக் கொண்டு வந்தேன். புது வடிவம், மொழி என்பவற்றோடு கலந்து ஹிந்திக் கவிதை
ஜீவநதி 11

களுக்கு புதுத்திசைகாட்டியவன் நான் என நம்புகிறேன்."
பஞ்சாபி தலித் இலக்கியம் பற்றிய ஹரிஸ் கே. பூரி அவர்களது கட்டுரை நிறைய தகவல்களை முன் வைக்கிறது. சதீஸ் சந்தரின் வாசகம் ஒன்றோடு கட்டுரையை ஆரம்பிக்கிறார் அவர் "நான் என் இடுப்பிலே அழகான அமைப்பிலுள்ள வார்பட்டியொன்றைக் கட்ட விழைகிறபோது, யாரோ ஒருவர் என் பின்புறத்தே என்னைக் கொண்டே என் வரலாறைக் கூட்டித் தள்ளிப் பெருக்கி வீச விழைகிற பிரயத்தனத்துடன் ஒரு தும்புத்தடியை கட்ட முயற்சிப்பதுபோல உணர்கிறேன்." என்ற வாசகங்கள் மனதை வதை செய்கின்றன.
பால் பிர் மதோபூரி அவர்கள் பஞ்சாபி
இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இந்து சமூக கட்டளைகளால் களவாடப்பட்ட தலித்துகளின் நிலையை அவர் தலை முதல் கைகால்களென்று துண்டிக்கப்படுகிற ஒரு மரத்துக்கு உவமையாகக் காட்டுகிறார் தனது வாழ்வியல் நூலில், "இலையற்ற மரங்கள் என் சொந்தங்களைப்போல தோற்றமளிக்கின்றன. அவை என் சகோதர சகோதரியர் போல, தம் வளர்ச்சியைத் தொடங்குகிற போதே அவர்களது தலைகள் கொய்யப் படுகின்றன கருணையே இல்லாமல், கைகால்கள் வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட துண்டிக்கப்பட்ட மரங் களினது எஞ்சிய பிண்டப் பகுதிகள் என் தந்தையினது, மாமாமார்களினது, அவர்தம் மகன்களது வடிவத்தை ஒத்தருப்பதாகக் காணுகிறேன்." எனக்கூறும் மதோபூரி பலதரப்பட்ட அமெரிக்கர்களது வாழ்வியல் கதைகளை இங்கு மேற்கோள் காட்டுகிறார். மார்டின் லூதர் கிங் 1958ல் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது, கேரளாவில் ஒரு கூட்டத்தில் பேசினாராம் இப்படி:- "ஆமாம் நானும் ஒரு ஹரிஜன்தான். ஒவ்வொரு அமெரிக்கா வாழ் கறுப்பனும் ஒரு தீண்டத்தகாதவனே யாவான். சில அம்சங்களில் வேறுபாடு நிலவினாலும், கறுப்பின நீக்ரோவின் வலி, தலித்தினதை ஒத்தது எனப் பகர்கிறார் மதோபூரி 1955ல் ஹரிஜனக் குடும்ப மொன்றில் பிறந்த மதோபூரி பஞ்சாபி இலக்கியம் தந்த அற்புதக் கவிஞர். இந்திய அரசின் சிவில் சேவையில்
பணிபுரிகிறார். "யோஜனா' மாதாந்த இலக்கிய சஞ்சிகை
யின் ஆசிரியர் ஆங்கிலத்திலிருந்து பஞ்சாபிக்கு பல
நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவரது
சுயவரலாறு கூறும் நூல் ஐந்து வருடத்துள் ஆறு பதிப்புகள்
கண்டுள்ளனவாம். 2007ல் அது ஹிந்தியில் மொழி
பெயர்ப்பு செய்யப்பட்டமை பெரும் அங்கீகா ரத்தை இவரது எழுத்துகளுக்கு ஈட்டித்தந்துள்ளது. சமஸ்கிருத
மொழியில் தீண்டத்தகாதவர்" என்ற அர்த்தம் தரும்
"தலித்" என்ற பதத்தை அம்பேத்கார் அவர்களே முதலில் பிரயோகிக்க ஆரம்பித்தள்ளார். "கடவுளின் குழந்தைகள்
என அர்த்தம் தரும் 'ஹரிஜன்"எனும் பதத்தை மகாத்மா
காந்தியவர்கள் பிரயோகித்ததாம். இந்தியாவில் கிட்டத்தட்ட 170 மில்லியன் தலித்துகள் உள்ளனர்.
-இதழ் 50

Page 121
༤
ہے۔
ஒவ்வொரு 5 தலித்துகளுக்கும் நால்வர் இந்தியக் கிராமங் களில் சொந்த இடம் கூட இன்றி வாழ்வோரே. இந்தியாவுக் கென எப்போதும் நன்கறியப்பட்ட வறுமையின் உண்பை முகங்கள் இவர்களிடமுள்ளன. இவர்களுக் கெதிரான அடக்குமுறைகளைக் கற்றவர்கள் ஒருபோதும் கண்மூடி பார்த்திருக்கக்கூடாது என்பதே அவரது ஆதங்கமாக உள்ளது
தலித்தியக் கவிதைகளுக்கு இதழ் கவனம்
கொடுத்துள்ளமையைக் காண முடிகிறது. "கடவுளின்
மரணம்" என்ற மோஹனதாஸ் நாமிஸ்ரே அவர்களது கவிதையை ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் அர்ச்சன குமார் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.
"கடவுள் இறந்து போகிறான்
அன்றி,
ஏமாற்றுகின்ற,
திருடித்தட்டிப்பறிக்கின்ற, பிழையாய் வழிநடத்துகின்ற ஆண்கள் ஆளும் மடம் ஒன்று கட்டியெழுப்பப்படல் நிகழ்ந்து விடுகின்றது. கடவுள் இறந்து போகிறான், பெண்ணொருத்தி தேவதாசியாய் மாறி விபசாரம் செய்யத் தூண்டப்படுகையில், கடவுள் இறந்தே போகிறான் எந்தத் தாயின் கருவறையில் கடவுள் பிறந்தான் என்றும், கடவுளின்தந்தையார் என்றும் எனக்குள் வினாவெழும்பும் அக்கணத்தே கடவுள் இறந்தே போகிறான்." "ஒரு தாசியின் மகள் தனக்குள் பேசிக்கொள்வது
என்கிற கன்னட மூலம் சுகன்யா மாருதி எழுதிய கவிதையை ஆங்கிலத்தில் ஜீ.எஸ்.அமூர் மொழிபெயர்த்துள்ளார்.
ஜீவநதி
"என் தொலைந்துபோன காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன் மாலைப்பொழுதின் இருட்டு பகல் பொழுதுக்குள் தானாகவே பரவுகையில்.?
ஒரு தந்தை இல்லாமலேயே எனக்கு ஜனனம் தந்த என் தாயின் மார்புக் காம்புகளிலா?
என் தாயின் பெயரோடு தந்தையின் இடத்தையும் சேர்த்தே நிரப்பிப்போன தந்தையின் சப்பாத்துகளிலா?
என் தொலைந்துபோன காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன்?
என்னோடு கூடி விளையாட வரும்
தத்தமது மகள்மாரை இழுத்தெடுத்து அப்பால் கொண்டு செல்லும்

தாய்மாரின் வெறுப்பினிலா? காமம் கொப்புளித்து வாயில் எச்சிலுற எனைப்பார்க்கும் அச்சிறுமியரின் தந்தைமார் தம் உதடுகளிலா? என் தொலைந்துபோன “ಷ್ರ காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன்? நகர்ந்து அடியெடுக்கவிடாமல் 纖 என்னை தடுத்து நிறுத்திய தெருநாய்களின் பயமூட்டும் பார்வைகளிலா? தமது பாவங்களை எனக்குள் கடத்தி ஏதேதோ பேசிய மனித நாவுகளிலா? என் தொலைந்துபோன காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன்? இருள் மண்டிய மங்கலான காலைப்பொழுதொன்றில் நான் பிறந்திருக்க வேண்டும். என் கண்கண் வெளிச்சத்தைக் காண்பதற்கில்லாதபடி, பரவும் தன் சூட்டைத் தானே தாங்கவொண்ணாமல் சூரியனது திணற, நான் அறிந்தேன் இது பகல் பொழுதென. சூரியக் கதிர்களின் தகிக்கும் சூடு என் தலையைச் சுடுகையில் நான் பயணித்தாக வேண்டிய பாதை மிகத் தொலைவென்பதையும் அறிந்தேன். பூமியின் மீது நான் வாழ்ந்த வாழ்க்கையும் கேலியும் கிண்டல் பேச்சும் எனக்குப் போதும். கர்ச்சிக்கும் ஆழ்கடல் தன் பெருவயிறு திறந்து எனை விழுங்கிக் கொள்ள மாட்டாதா? இங்குமங்கும் இருப்பிடமும், சிறு நம்பிக்கையும் காணுகிறேன் நான் ஆயினும், இந்த இருட்டோ அடர்ந்தது எனவும் என் கண்களைத் திறந்திருத்தல் - பிரயோசனமற்றது எனவும் நானறிவேன். இந்த இருட்டினது வாழ்வு என்றேனும் முடிவுக்கு வந்துவிட்டால் அது என் விடுதலையாயிருக்கும்.
"பசி" எனும் கவிதா மஹஜன் அவர்களது கவிதை இப்படி நீள்கிறது.
"ஆமாம் நான் உனது அடிமை sigldrigor(Boot, எனக்கு இந்த எல்லாப்பிணைப்புகளும் வேண்டும். நானே முன் வந்து ஏற்கிறேன் இழந்த சுதந்திரத்தின் உணர்வினை என் சங்கிலி உன் கரத்தே. நீபாராட்டுப்பெற வேண்டி என்னை நீகாட்சிப்படுத்துகிறாய்; நானும் எனதான காட்சிப்படுத்தப்படலை அனுமதிக்கிறேன். ... எனக்கான முழுமையான காதலுக்குப்பின்னாலும்,
இதழ் 50

Page 122
எனக்கு விடுதலை வழங்கல் பற்றி என்றும் பேசாதே.
எஜமானனே, வெளியில் எண்ணிக்கையற்ற சங்கிலிகள்; எண்ணிக்கையற்ற சிறைக்கூடுகள் எண்ணிக்கையற்ற சாட்டையடிகள்; எண்ணிக் கணக்கிட முடியாத கரங்கள் நாட்பட்டதால் நாறிப்போன அன்னத்தோடு காத்திருக்கின்றன. எஜமானனே,
வினவுகிறேன்.இதனை. என்பாதம் உன் பூமியில் பட்டுவிட்டால் அதை துப்புரவாக்கிடக் கருதி சாணம் கரைத்த புனிதநீர் தெளித்துவிடுகிறாய். வாடகைக்கு உன் வீட்டைக்கேட்டுவந்தால் என்னை இகழித்துவிரட்டி விடுகிறாய் பறையாநாயொன்றைத் துரத்தியடிப்பதுபோல. சிலவேளைநீஅறியாமலேயே இருக்கிறாய் என் அழுக்கான மூச்சுக்காற்றால் நிரம்பியிருக்கும் வளிமண்டலத்துச்சூழலிலே உனதில்லம் நிமிர்ந்துநிற்கின்றதென்பதையும், உன் வீடு கட்டநீபயன்படுத்திய செங்கற்களோ எனது எளிய குடில் அமைந்திருக்கும் ஆற்றோரத்தே குடைந்தெடுத்தமண்கொண்டு ஹரிஜன் என கேலியாய்ப்பெயர்சூட்டிநீயழைத்த ஆண் பெண்டிர் கைப்பட உருவானது என்பதையும், இப்பொழுதுநீநகர்கிறாய் உன் புதுமனைக்கு. நீபோதிக்கிறாய் ஹரிஜனங்கள் மனிதர்களேயல்ல என்றும், வெறுப்பூட்டும் விலங்குகளைவிட இழினர் என்றும்.
அன்பான ஐயனே, உம்மிடத்தே உள்ளார்ந்தநன்னெறியும் தைரியமும் இருந்தால் சுவர்களைக் கிழித்து உள்ளேபாருங்கள் ஒவ்வொரு செங்கற்களினது அணுவும், மண்துணிக்கையும் தீணி டாமையினர் இனிய வாசனையைச் சுமந்திருக்கும் என்பதனை." தாகம்" எனும் கவிதையை மராத்தி மொழி
யிலிருந்து ஆங்கிலத்தில் சாந்தா கொக்ஹாலே மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார்.
ஜீவநதி
"என் துயரங்களின் மூலம்தாகமே. கெளதம புத்தர் என் துயரங்களின் மூலம் தாகமே. பெண் துயரத்தின் மூலம் தாகமே. கவியினது கவலையின் மூலம் தாகமே. என் மனவேதனையின் கூரான கத்தியும் தாகமே.

என்உணர்வுகளின் வேதனை நிரம்பிய எதிரொலியின் மூலம்தாகமே. உள்ளார்ந்த என் இருப்பிலெல்லாம் தாகம் வியாபித்துக்கிடக்கிறது. என்னாகிறது என் மூலமாதிரிக்கு தாகம் சவால் விடுத்துப் போட்டிக்கு அழைக்கையில்? என்னாகிறதுதாகம் என்கண்களிலிருந்து துடைக்கப்படுகையில்?என்ன நடக்கிறது அந்த இருள்படர் அடர்தனிமைக்கு ஒரு பருவ வயதினனின் தழுவலில் தாகம் என்னிடம் ஒட்டிக் கொள்ளுகையில்? மெதுவாய்,நிச்சயமாய்தாகமதன் விளையாட்டு வளர்கிறது அகோரமாய்.என் மடியோ வேதனையின் எண்ணற்ற புஷ்பங்களால் நிரம்பிவழிகிறது. பெர்ரியின் கறுப்பாய் இருக்கின்றன அந்த வேதனையின் புஷ்பங்கள். அந்த வேதனையின் பூக்களுக்கு நான் குருதியினது ஈரலிப்பைக் கொடுத்துவிடுகிறேன். அந்த வேதனையின் பூக்களிலிருந்துநான் பூந்தாதுகளை பறித்துத் தூவுகிறேன். நான் என்நெஞ்சோடு இறுக அணைக்கிறேன் அந்த வேதனையின் பூக்களது வம்சாவழிப்பரம்பரையை. நான்புத்தரின் இரங்கும்பிச்சைத்தட்டின் பசியாய் உருமாறுகிறேன். இந்த முதுமையின் வேதனை அனைத்து வாழ்வையும் ஊடுருவிச்சென்று தாக்குகிறது எல்லா மீத இருப்புகளையும். இந்தநித்தியதாகம் என்னில் என் மரணத்தோடெல்லாம் ஒன்றும் மாண்டுபோக வாய்ப்பேயில்லை." இப்படி தலித்துகளது வேதனையின் குரல்களாக ஒலிக்கும் இன்னும் பல கவிதைகள் நூலில் காணக் கிடக்கின்றன. தொடரும் பக்கங்கள் தலித் சிறுகதைகள் சிலதை நமக்கு தரிசிக்கிற வாய்ப்பை வழங்குகின்றன. பாமாவின் "கிசும்புக்காரன், சாருப் சிவாலியின் பஞ்சாபிச் சிறுகதை"இருளில் வாழ்வோர், புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் சுராஜ்பால் சவ்ஹானின் "அந்தப் புது பிராமணன், மராத்தி எழுத்தாளர் அர்ஜூன் தங்லேயின் "பதவியுயர்வு, கன்னட எழுத்தாளர் தேவனூர் மஹாதேவ் எழுதிய "விற்கப் பட்டது" போன்ற பல சிறுகதைகள் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், பால்பிர் மதோபூரி, சியோராஜ்சிங்கின் வாழ்வியல் கதைகள் இரண்டும் காணக்கிடக்கின்றன. அவைகள் தனிவேறு அலகுகளாகப் பகிர்ந்து கொள்ளப்படத் தக்கவை என்பதால் இக்கட்டுரை யில் அவற்றை நான் சேர்க்கக் கருதவில்லை.
இதழ் 50
ܠ .
ܘܝ
ܕܝܢ

Page 123
ஆடிமாத வெய்யில் நெருப்பாகக் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. தண்ணிர்த் தாகத்தில் ஆடுமாடு உள்ளிட்ட வீட்டுப் பிராணிகளுடன், காட்டு விலங்குகளும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டி ருக்கின்றன. தூரத்தே தென்படும் நீர்நிலையில் நீர் அருந்துவதற்காக ஒடிச்சென்ற மாடுகள் அவ்விடத்தில் ஒன்றும் இல்லாமல், மீண்டும் தாம் நின்ற இடத்தில் நீர்நிலை இருப்பதைக்கண்டு, திரும்பி ஓடிவந்து பார்த்து, ஒன்றுமில்லாமை கண்டு மிரள்கின்றன. வயல் ஓரத்தி லுள்ள சதுப்புநில நீருக்காக மாடுகள் எல்லாம் முண்டி யடித்து உழக்கியதனால் எல்லா நீரும் சேற்று நீராக, குடிப்பதற்கு நீரில்லாமல் ஏமாற்றத்துடன் மாடுகள் சேற்றுநீரை மோந்து, மோந்து பார்க்கின்றன. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் இரண்டொரு எருமைகள் சேற்றுநீரில் மூழ்கிச்சுகித்துக்கிடக்கின்றன.
இதனை எல்லாம் கண்டும் கருத்துக் கெடுக்காமல் என்பாட்டில் நடந்துகொண்டிருக்கின்றேன். இற்றைக்கு முப்பது வருடங்களாக ஒவ்வொரு கோடை காலத்திலும் காண்கின்ற காட்சிகள்தானே வடக்குக்கு மகாவலியைத் திருப்புகிறம் என்று, தேர்தலில் வாக்குக் கேட்டவர்களும் மண்ணோடு மண்ணாகி விட்டனர். ஆனால் "மகாவலி" தொடர்ந்தவண்ணமே உள்ளது.
சிறுபோக நெற்பயிர்கள் எல்லாம் செழித்து வளர்ந்து பொத்திகுடலைப்பருவம், இரணைமடுக் குளத்தில் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. முறை வைத்து வாய்க்கால்களில் அருந்தலாக நீர்பாய்கின்றன. ஆனால் எனது வயலுக்கு மட்டும் நீர்பாயவில்லை. இன்றுடன் பத்துநாட்களாக முயன்று பார்க்கின்றேன் நீர் வந்தபாடில்லை. இந்தக் கவலையுடன் பயிரைப் பார்க்கும் போதெல்லாம் வயிறு பற்றி எரிகிறது.
எனக்குரிய தண்ணிபாச்சும் முறையைத் தந்திரமாகத் தட்டிப்பறித்து, தமது வயலுக்குப் பாய்ச்சி
ஜீவநதி
 

இதயராசன்
யவர்கள் சொல்வதெல்லாம் எனக்குத் திறமை இல்லை யாம். அடுத்தவன் வயல்வரம்பிலை மண்வெட்டிப் பிடியால துழையிட்டு நீர் திருடிவிட்டு, குளநண்டுமீது பழிபோட எனக்குத் தெரியாதுதானே.
எமது வயல் பிரதான வாய்க்காலில் இருந்து குறுக்கு வாய்க்காலில் உள்ளுக்குள் இருப்பதால், குறுக்குவாய்க்காலில் உள்ளவர்கள் சிலர் சேர்ந்து, பிரதான வாய்க்காலில் காவல் இருந்தே நீர்பாய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் பிரதான வாய்க்காலில் உள்ளவர்கள், நாம்போட்ட பலகையை எடுத்துவிட்டால் நீர் பாயாது. அப்படியான தருணத்தில் நானும் காவலுக்கு இருபபேன். அப்பொழுது என்னுடன் இருப்பவர்கள் என்மீது பாவப்பட்டு,
"அண்ணை நல்லாக் களைச்சுப் போனியள், நுளம்புக்கடியும் வேற வீட்டபோங்கோ நாங்கள் பார்க்கிறம்"
என்று மனமுருகக் கதைத்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நான் போன கையோடு, எனது வயலுக்குப் பாய்ந்த நீரை மறிச்சுக்கட்டி, தமது வயலுக்குப் பாய்ச்சிப்போட்டு விடிய நல்லபிள்ளை யாய் மீண்டும் எனது வயலுக்கு நீரைப்பாயவிடுகிற "தகடுதத்தம்" எனக்குத் தெரியாததால, நான் திறமை இல் லாதவன் எணர் டு சொல் லிறது மிகப் பொருத்தமானதே!
இன்றைக்கும் வயலுக்கு நீர்பாய்ச்ச முடியாத நிலை, என்றும் இல்லாதவாறு மனக்கொதிப்பை ஏற்படுத்துகிறது. பொத்திகுடலைப் பயிருக்கு நீரில்லாதது, பெறுமாதப் பிள்ளைத்தாச்சியைப் பட்டிணி போடுவது போல என்பது, நீர்ப்பாசனப் பகுதியில் உள்ள பொறியியலாளரிலிருந்து திட்டக்குழுவரை யாருக்கும் விளங்குவதாய்த் தெரியவில்லை.
வரம்பில் கிடந்த பூவரசம்தடி ஒன்றினை
119 இதழ் 50

Page 124
எடுத்து, வரம்பில் வளர்ந்திருக்கும் புற்களை ஓங்கி அடித்து, எனது மன வெப்பிசாரத்தினைத் தீர்த்தபடி, வீட்டுக்குத்திரும்பிவந்து கொண்டிருக்கின்றேன்.
என்னை அறியாமல் அடித்த ஒரு அடி வரம்புப் புல்லுக்குள் படுத்திருந்த நாய்குட்டி மீது விழுந்திருக்க வேண்டும். கத்துவதற்குக்கூட தெம்பில்லாமல் மெல்லிய குரலில் வீச்சு, வீச்சு என்று கத்துகிறது. உற்றுப் பார்க்கின்றேன். கன்னங்கரேலென்ற கறுப்புநிறக்குட்டி முதல் பார்வையிலேயே எனக்குப் பிடித்துவிட்டது. அத்தோடு அப்பிராணியை அடித்துவிட்டேனேlஎன்ற மன ஏம் பல் வேறு. ஆசையுடன் வாரி எடுத்துக் கொள்கின்றேன். இப்பொழுது கத்துவதை நிறத்திவிட்டு, பயத்துடன் மிரண்டுமிரண்டு பார்க்கிறது. அதன்மிரண்ட பார்வையுடன் கூடிய அழகு, என்னைக் கொள்ளை கொள்கிறது. இதனைத்தான் பாரதியார் "காக்கைச் சிறகினிலே நந்தலாலா." என்று பாடிவைத்தாரோ தெரியவில்லை.
எனது வீட்டில் இதுவரை நாய் வளர்த்தது இல்லை. எனது நண்பன் கொழும்பு போய்வர 10, 15 நாட்கள் செல்லும் என்றும் அதுவரை வீட்டையும் தனது நாயையும் பார்க்கும்படி கூறிச்செல்ல, மதிய நேரமும், இரவும் மிஞ்சிய சாப்பாட்டுடன் சென்றுவருவது உண்டு. ஒருநாள் நடந்த ஷெல்லடியில் நண்பனின் வீடு தரைமட்டமாகிவிட்டது. செய்தியறிந்து ஒடிச்சென்று பார்த்தபொழுது, நாய்மட்டும் "பங்கரில்" பத்திரமாக இருந்தது. மிஞ்சின சாமான்களுடன்,நாயையும் அழைத்துவந்து, நண்பன் வரும்வரை வீட்டில்வைத்துப் பார்த்ததுண்டு. அதுவும் ஒரு இருபது நாட்கள் மட்டும்தான். அது தவிர வீட்டில் நாய் பூனை என்று எதுவும் இல்லை. மனைவிக்கு வீட்டுக்குள் நாய் பூனை செல்வது துப்பரவில்லை என்ற சுகாதாரக் காரணத்தால் விருப்பம் இல்லை. அதனால் நாய் வளர்ப்பது பற்றி நானும் கவனம் எடுக்கவில்லை.
சரி இதனை வீட்ட கொண்டுபோய் என்ன எதிர் விளைவு என்று ஜோசித்தவாறே வீட்டினை அண்மிக் கின்றேன். திடீரென ஒரு ஜோசனை. போன கிழமை மகள், கிளி ஒன்று பிடித்துக்கொண்டு வந்த போது, மகளிடம் ஒன்றும் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. வீட்டின் பின்பக்க வேலியருகில் நின்றபடி, மகளை உரக்கக் கூப்பிடுகின்றேன். எனது குரல்கேட்டு விழுந்தடித்து ஓடிவந்த மகள், எனது கையில் நாய்க் குட்டியைக் கண்டு
"ஹாய் நாய்க்குட்டி" என்று செல்லமாகச் சொல்லி தனது கரங்களை நீட்டி, நாய்க்குட்டியை வாரி அணைத்துக்கொண்டாள். அப்பாடி எப்படிச் சமாளிப்பது என்பது சரியாகிவிட்டது. தாய் எப்படிச் சத்தம் போட்டாலும் இறுதியில் மகளின் விருப்பத்தில் ஐக்கியமாகிவிடுவாள்.
ஜீவநதி 12

அதுதானே தாய் உள்ளம். இந்தக் கறுப்பு நாய்க்குட்டியும் அனாதையாகத்தானே இருக்கிறது. இப்படி எத்தனை குழந்தைகள் எடுப்பார் கைப்பிள்ளை யாய் அவர் அவர் தாளத்திற்கு நானும் மகளும் கறுப்பு நாய்க் குட்டி அழகானது, என்பதை மட்டுமே பார்த்தோம். ஆனால் மனைவி நாய்குட்டியைப் பார்த்த பார்வையே வேறுவிதமாக இருந்தது. அவளின் அபிப்பிராயத்திற்காக நாம் இருவரும் காத்திருந்தோம்! "என்ன, ஊத்தைப் பெட்டைக்குட்டியை வைச்சு இரண்டுபேரும் கொஞ்சிறியள்”
மனைவி முதல்முதலாய் திருவாய் மலர்ந்தரு ளினார். அப்பொழுதுதான் அது பெட்டைக்குட்டி என்பது தெரியவந்தது. அந்தப் பெட்டைக் குட்டி வளர்ந்து, குட்டி போட அதைவைத்துப் பாராமரிக்க யாருக்காவது கொடுக்க, அல்லது வேறு இடத்தில் கொண்டுசென்று, களவாக விடவேண்டும் என்ற இன் னோரன்ன பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரும் என்பதை, மனைவி இப்பொழுதே யோசித்துவிட்டார். இதனால் தான் போலும் "பெண் புத்தி பின் புத்தி" என்று, நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அதுவும் ஒரு ஜீவன். அதனை ஆதரிக்க வேண்டும் என்பதனைவிட அதனை வைத்திருந்து எதிர்காலத்தில் வரும் கஷ்டங் களை நினைத்து, முன்னேற்பாடாக ஓரங்கட்டுவதே மனித சம்பிரதாயமாக இருக்கிறது. இதற்கு எனது மனைவிமட்டும் விதிவிலக்கா? பெண்கள் என்ன வகையில் குறைந்தவர்கள், அவர்களால் உழைக்க முடியாதா என்று பேசுபவர்கள், எழுதுபவர்கள் அனைவரும் அதன்படி நடப்பதில்லைத் தானே? பிரச்சினையை எதிர்கொள்ளாமல் பின்வாங்கு வதிலேயே, வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ளது என்பதே, பலரின் வேதவாக்காக இருக்கின்றது.
மகளின் சாதனையால் அந்தக் கறுப்பு நாய்க்குட்டி இல்லை இல்லை இப்போது "கண்ணன்" ஆங்கிலத்தில் "Blacker" என்று இரண்டு மொழிகளிலும் மகள் செல் லமாக அழைத்துக் கொள் வாள். (கண்ணம்மா என்ற எனது திருத்தம், பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதை எப்படி நான் உங்களுக்குச் சொல்வது)
இப்பொழுது புதிய ஒரு பிரச்சினை. அது என்னவெனில் கண்ணனுக்கு விருப்பமான உணவு எது என்பதுவேயாம். மகள் விரைவாகவும் சரியாகவும் சொல்லியது,
“el Lj LJT எங்கட "செல்லத்தின்ர" பால் இருக்குத்தானே?"
மகள் "செல்லம்" என்று குறிப்பிடுவது, எங்கள் வீட்டில் நிற்கும் பசு மாடு அது இப்போது கன்று ஈன்று நிற்கிறது. கன்றும் குடித்து, நாங்களும் குடித்து தயிர், மோர் எனத் தாராளமாக இருக்கிறது. மகளின் தேர்வு
இதழ் 50
ܕܘܢ

Page 125
ܨ
《།
சரியானதே. அத்துடன் கண்ணனின் போஷாக்குக்கு பால் மிகமிகப் பொருத்தமானதே.
இதில் செல் லத்தைப் பற்றிய கதை சொல்லியே ஆகவேண்டும். எங்கள் வளவு அவ்வளவு பெரியதில்லை. பயிர் பச்சையென வளவெங்குப் காணப்படுவதால், ஆடு, மாடு வளர்ப்பது பற்றி நாங்கள் முயற்சித்தது இல்லை. ஆனால் இப்பொழுது கண்ணன் கிடைத்ததுபோல் ஒருநாள் சிகப்பு நிற பசுக்கன்று ஒன்று தென்னங்கன்றுக்குள் நின்றது. ஒரு நாளும் இல்லாமல் மாடு நிற்கிறதே என்று நினைத்தவாறு, துரத்தியபோதும் அது நகர மறுத்தது. கிட்டச்சென்று பார்த்தபொழுது அதன் காலில் எதோ பிரச்சினை இருப்பது தெரியவந்தது. பாவம் நிற்கட்டும் என்று அப்படியே 65' (B6 GL6,
மறுநாட் காலையில் பார்த்த போது, எழுந்து நடமாடமுடியாத நிலையில் படுத்திருந்தது. உடனடி யாக மிருகவைத்தியரை அழைத்து வந்து காட்டிய போது, அதன் காலில் விஷமுள் குத்தியிருந்தது தெரிய வந்தது. வேறுவழியின்றி வைத்தியம் பார்த்தோம் தண்ணரும் புல்லும் வைத் தோம். இவ்வாறு ஒருவாரத்தினையும் தாண்டிவிட்டது. பசுக்கன்றின் உரிமையாளர் யாரும் தேடிவரவே இல்லை. கன்று நடமாடக்கூடிய நிலைக்கு வந்ததும், வளவுக்கு வெளியில் சென்று புல் மேய்ந்தபின், திரும்பவும் தென்னை மரத்தின் கீழ்ப் படுத்திருந்தது. துரத்திய போதிலும் ஏது பயனும் இல்லை. ஏதோ பூர்வ வினைப்பயனென அதன் பாட்டில் விட்டுவிட்டோம்.
பசுக் கனர் று மகளுடன் செல் லமாக விளையாடியபடியால், மகள் "செல்லம்" என்றே அழைத்தாள். அவ்வாறே நாமும் செல்லம் என்று அழைத்தோம். இப்பொழுது செல்லம் எமது குடும்ட உறுப்பினராகி விட்டாள். செல்லத்தின் கழுத்தில் இதுவரை கயிறுகட்டியதே இல்லை. கன்று ஈன்ற பின்னர் பால் கறப்பதற்கும் காலில் கயிறு கட்டியதில்லை. பால் கறக்கும்போது, பாலினைக் கன்றுக்கு என்று மடியில் ஒளித்ததும் இல்லை. வீட்டில் உள்ள மீதமான மரக்கறிகள் எல்லாம் செல்லத்தின் பிரியமான உணவாயின. செல்லத்தின் இன்னொரு விசேடம் தோட்டத்தில் நுழைவதும் இல்லை, புல்தவிர வேறு எதையும் மேய்ந்ததும் இல்லை. செல்லத்திற்கு குஷி வந்துவிட்டால், எம்முடன் உரசி விளையாடத் தவறுவதேயில்லை. காலையில் முற்றத்தில் என்னைக் கண்டால் ஓடிவந்து, என்னுடன் விளையாடும். என்னமோ, காலையில் எழுந்தவுடன் செல்லத்தின் தலையைத் தடவி, முதுகில் தட்டிக் கொடுப்பது எனது வழமையான கடமைகளில் ஒன்றாகி விட்டது.
米米米
காலை, மாலை மகள் முகம் கழுவும் போதும்,
ஜீவநதி

குளிக்கும்போதும் கண்ணனும் சேர்ந்துகொள்வதால் கண்ணனுக்கு வீட்டின் எல்லா இடங்களிலும் தாராளமாக நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. சொல்லப் போனால் என்னைவிட கண்ணனுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. வாசலில் தூய்மை யாக விரிக்கப்பட்டிருந்த "சாக்கு" அவரின் துயில் கொள்ளுமிடம், அதுவும் அரைக்கண் நித்திரைதான் எந்தச்சத்தம் கேட்டாலும் "அலேர்ட்” ஆகிவிடுவார். கண்ணன் பிள்ளை, வீடு வளவு எல்லா இடங்களிலும் துள்ளி விளையாடியது. அவனது அனுமதி இல் லாமல் யாரும் வளவுக் குள் கால்வைக்கமுடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
கண்ணன் வீட்டுக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. மகளுக்கு பொதுப் பரீட்சை நெருங்க நெருங்க மகளின் படிப்பு மீதான எமது கரிசனை அதிகரித்தது. அதன் ஒரு அங்கமாக காலை ஐந்து மணிக்கு மகள் எழுந்து படிக்கவேண்டும். அதற்கு முன்பே நாம் எழுந்து, மகளுக்குத் தேநீர் தயாரித்து, மண்ணெண்ணைய்த் தட்டுப்பாட்டால், போர்க்கால விளக்குடன் துயிலெழுப்பும் படலம் ஆரம்பமாகி விடும்.
இதனை என்றும் பார்த்தபடி இருந்த கண்ணன் எமக்கு வேலைவைக்காமல் காலை ஐந்து மணிக்கு மகளின் போர்வையினை வாயினால் கவ்வி இழுத்து, தனது அமுத மொழியால் துயிலெழுப்பத் தொடங்கி விட்டான். எம்மைத்திட்டமுடியாத மகள் இப்பொழுது தாராளமாகக் கண்ணனைத் திட்டித்தீர்த்தபடி எழுவது. எமக்கு இப்பொழுது வேடிக்கையாகிவிட்டது.
எனக்கு இடமாற்றம் மன்னாருக்கு என்று முடிவானபோது, எப்படி இருவரையும் விட்டுச் செல்வது என்று யோசிக்கும்போது கண்ணனே, கண்ணுக்குள் நின்றான். அவன் இருக்கும் போது என்ன பயம், அவனின் கண்ணில் படாமல் யாரும் உள்ளுக்கு வரவும் முடியாது, வெளியே போகவும் முடியாது.
Gilla)laf TULJČJ LJ60ÖTLPřJ560D6ĪT (66).J6fALDT6)JÜLIñJ களுக்கு எடுத்துச் செல்லமுடியாத போர்க்காலத் தடையினால்,விவசாயம் செய்து முன்னேறமுடியாத நிலையில், மாதச் சம்பளம் இல்லாமல் எப்படி 6)ITԱք(ԼՕւջեւվւք?
மன்னாருக்குச் சென்றபின்பு மாதம் ஒருமுறை வீட்டுக்குவருவது வழமையாகிவிட்டது. அதுவும் பல சோதனைச் சாவடிகளைத் தாண்டி, பாஸ் காட்டி, மூட்டை அவிட்டுக்காட்டி, தலையில் சுமந்தபடி அணிநடை பயின்று, மத்தியானம் 12 மணி பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குவந்து சேரமுடியும்,
இதனை மோப்பம் பிடித்த கண்ணன், நான் வரும் நாளை கணக்கிட்டு 12 மணிக்கு பஸ் தரிப்பிடத்தில் காவல்நின்று, காலை நக்கி வாலை
இதழ் 50

Page 126
ஆட்டித் தனது அன்பை வெளிப்படுத்தும். வீட்டுக்கு வந்தவுடன் மிக்ஸரும், பிஸ்கற்றும் கொடுத்தபின்பே வீட்டுக் குள் நுழைய விடும் இல் லாவிட்டால் காற்சட்டையை கவ்விப்பிடித்தபடி நிற்கும். மகள் கூட இப்படி ஏதாவது வாங்கிவர வேண்டும் என்று அடம்பிடித்தது இல்லை. கண்ணனுக்கு அவ்வளவு 2_f}60)LD 6TLöLÖlLLĐ GT606DITLD. -
கண்ணனின் புகழ் அயல் அண்டை வீடுகளுக்கு எல்லாம் பரவியதால் கண்ணன் ஊரில் “கீரோ" ஆகிவிட்டான்.
“எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான்."
என்ற பாரதி வரிகள் எங்கள் கண்ணனுக்கும் மிகச்சரியாகப் பொருந்தியது.
மனைவி எதிர்பார்த்த எந்தப் பிரச்சினைகளும் இதுவரை வரவில்லை. மழைபெய்யத் தொடங்கி வளவெல் லாம் புற்கள் வளரத் தொடங்கின. ஒருகாலமும் இல்லாமல் பாம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்பட்டன. காண்கின்ற பாம்புகளைத் தடியினால் அடிப்பதைப் பார்த்த கண்ணனுக்குப் புதிய உற்சாகம் ஒன்று தோன்றத் தொடங்கிவிட்டது. பாம்புகளை எங்குகண்டாலும் அவற்றினை வீட்டு முற்றத்துக்கு விரட்டிவந்து, வேறு எங்கும் நகரவிடாமல் காவல் நின்று, எம்மைப்பார்த்து குலைப்பது, அங்கு சென்று பாம்பை அடிக்கும்வரை காவல் காப்பதையும், குரைப்பதையும் நிறுத்தாது.
இது ஒரு வகை யரில் நன் மை யாக இருந்தபோதிலும் பக்கத்துவீட்டு வேலிக்குள், எங்கோ தொலைவில் உள்ள நல்ல பாம்பு, புடையன் பாம்பு. என்று எல்லா விஷப்பாம்புகளையும் வீட்டுமுற்றத்துக்குச் சாய்த்துவருவது ஆபத்தான விடயமாக இருந்தது. இருப்பினும், கண்ணன் அதை நிறுத்துவதாகவும் இல்லை. நான் மன்னாருக்குப் போன நேரங்களில் கண்ணன் திருவிளையாடலால் பாம்பு அடிக்க, அக்கம் பக்கத்தவர், இயக்ககாரப் பெடியள் என எல்லோரையும் அழைத்து வர வேண்டியதாயிற்று.
மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பித்து மன்னாரில் இருந்து எல்லோரும் இடம்பெயரந்ததால் நானும் வீட்டுடன் நிற்கவேண்டியதாயிற்று.
இடப்பெயயர்வு கிளிநொச்சியையும் தாண்டி உடையார்கட்டுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாய நிலை. இரண்டு மூன்று பேராகக் சேர்ந்து லொறிபிடித்து வீட்டுச்சாமான் எல்லாம் ஏற்றி ஆட்கள் ஏறமுடியாத நிலையில் தவிக்கும்போது, எதிர்பாராத ஷெல்வீச்சு ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் பங்கரில் பதுங்கி இருந்து, ஷெல்வீச்சு ஓய்ந்த தருணம்பார்த்து, முண்டி யடித்து ஒருவாறு லொறியில் ஏறி உடையார் கட்டுக்குச் சென்றாயிற்று. அப்பொழுதுதான் எங்கள் கண்ணனும்
ஜீவநதி 122

செல்லமும் மிஸ் ஸிங் கானது தெரியவந்தது. கண்ணனுக்கும் செல்லத்திற்கும் என்ன நடந்தது. எப்படித்தேடுவது. கண்ணன், செல்லம் என்ற மகளின் குரல் ஒய்வதற்கு மீண்டும் தொடர்ந்த ஷெல் வீச்சுக்களே தேவைப்பட்டது.
மீண்டும் இடப்பெயர்வு முன்பு கேள்விப் படாத புதிய புதிய இடங்களுக்கெல்லாம் சென்று இறுதியாக, கைப்பையுடன் முள்ளி வாய்க்காலில் படைவீரரிடம் சரணடைந்ததுடன்,நீண்ட பயணம் ஒருவாறு நிறைவு பெற்றது.
ஒருவருட அகதிமுகாம் வாழ்க்கையில், முன்பு அனுபவிக்காத இரண்டாம் பாகத்தினையும் அனுபவித்தே வீட்டிற்கு வந்துசேர்ந்தோம்.
வீடு சிறு சேதத்துடன் இருந்தது. ஆனால் கண்ணனும் செல்லமும் இல்லை. வெறுமையாக இருந்தது. கண்ணனுக்கும் செல்லத்திற்கும் என்ன ஆயிற்று, மரணித்தோர் பட்டியலில் சேர்ப்பதா? காணாமற்போனவர் பட்டியலில் சேர்ப்பதா? எவ்வித மான முடிவும் எடுக்க முடியாத நிலையில் நாம் திணறிக்கொண்டிருந்தோம். - 米米米
மீளவும் வீட்டிற்குவந்து இரண்டாம் நாள் வளவினைச் சுற்றி வருகின்றேன். என்னுடன் மனைவியும் மகளும் கதைத்தபடி தென்னைமரம், வேப்பமரம், குசினிக்கொட்டில், மாட்டுக்கொட்டில் எனப் பலவற்றினையும் பார்த்தபடி பின்வேலி யோரத்தில் நிற்கின்றோம்.
என்ன ஆச்சரியம், எங்கிருந்து எப்படி வந்தது என்று தெரியாது."செல்லம்" என்னை உரசுகிறது. "என்னடி செல்லம் உன்னைத்தானே வந்ததில இருந்து தேடுறம் வந்திட்டியோ!"
என்று, செல்லத்தின் தலையைத் தடவியவாறு எனது அன்பின் பிணைப்பினை வெளிப்படுத்து கின்றேன்.
நான் செல்லத்துடன் பேசுவதைக் கேட்ட மனைவியும் மகளும் ஓடிவந்து, செல்லத்துடன் செல்லம் கொஞ்சுகின்றனர்.
செல்லம் மட்டும்தான் நிற்கிறது. அதன் கன் றினைக் காண வில் லை. பிள்ளையைப் பறிகொடுத்த மனிதர்களின் நிலை செல்லத்திற்குமோ! என்று பச்சாதாபப்படுகின்றேன். வேறு என்னதான் செய்ய முடியும், செல்லம் இப்பொழுது நிறைமாத கன்றுத்தாச்சி.
என்ன ஆச்சரியம் தனது வளர்ந்த கன்றினை யும் செல்லம் அழைத்து வருகின்றது. எமது மகிழ்ச்சிக்கு அளவில்லை. இரண்டு நாளில் ஒரு பசுக்கன்றினை ஈனுகின்றது. எதுவுமே இல்லாமல் வந்த எமக்கு இப்பொழுது பால், தயிர், மோர் மீண்டும்
இதழ் 50

Page 127
s
《།
பழைய நிலை.
செல்லத்தினை நாதியற்று விட்டுச் சென்று, எமது உயிரையும், செளக்கியத்தினையும் மட்டுமே சிந்தித்த எமக்குச் செல்லம் தேடிவந்து பாலாபிஷேகம் செய்கிறது, எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், ஆறறிவா, ஐந்தறிவா? எது உன்னதமானது? எம்மைச் சிந்திக்கவைத்தது செல்லம்,
மீண்டும் வீட்டிற்கு வந்து ஒருமாதம் சென்றிருக்கும் என்று நினைக்கின்றேன். வீட்டில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் எனது உந்துருளி நிறுத்தப் படுகிறது. பிறேக் பிடித்து கீழே இறங்குகின்றேன். சம்பிரதாயபூர்வமான "குசலம்" விசாரிப்புக்களின் பின், மீண்டும் உந்துருளியை உருட்டியவாறு நடக்கின்றேன்.
என்னை விலத்திச் செல்லும் ஒரு படை வீரனின் உந்துருளியைப் பின்தொடர்ந்து, ஒரு கறுத்த நாய் ஒடிச்செல்வது, எதேச்சையாகப் பார்வையில் படுகின்றது.
இது கண்ணனாக இருக்காதா? என்ற ஆதங்கத்தில் உற்றுப்பார்க்கின்றேன். கண்ணன் நீண்டு வளர்ந்து மெலிந்திருக்கும். இது நீண்டு வளர்ந்து கொழுத்திருக்கிறது. எதற்கும் ஒரு நப்பாசையில் "கண்ணன்" கூப்பிடுகின்றேன். நாய் நிற்கவில்லை. மகள் கூப்பிடும் "Blacker" ஞாபகத்திற்குவர அவ்வாறு கூப்பிடுகின்றேன். போன நாய் திரும்பிப்பார்க்கிறது. என்ன ஆச்சரியம் அது கண்ணன்தான். சரியாக
அடையாளம் கண்டு கொள்கின்றேன். மீண்டும் "கண்ணன்" என ஆவலுடன் அழைக்கின்றேன்.
கண்ணன் இப்பொழுது நிற்கிறது. அது நிற்கும் நிலையும் என்னைப்பார்க்கும் பார்வையும் வித்தியாச மாக இருக்கின்றது. வாலை ஆட்டவில்லை.கண்களை உருட்டி ஆழமாக ஊடுருவிப் பாரத்தபடி,
இரண்டு நிமிடம் அசையாமல் நிற்கிறது. அடுத்த கணப்பொழுது தூரத்தில் செல்லும் படை வீரனை நோக்கி, மிடுக்குடன் வேகமாக ஒடிச் செல்கின்றது.
நான்திகைத்துப்போய் நிற்கின்றேன்.
ஜீவநதி
 

செல்வமே! எனதினிய
சிங்காரத் தமிழமுதே! உள்ளமெலாம் இனிக்குமடா
உண்மழலை மொழி கேட்டால், கள்ளமொன்றும் அறியாத
கற்கணர்டே எனது பேரா, மெல்லமலர் விழிமூடி
மெய்மறந்து துரங்கு ராஜா!
வன்னியிலே தழிழர் குலம்
வதை வாதைப் பட்டழிந்து செந்நீரில் மிதந்த கதை
செல்வமே நீயறிந்தா கணர்னிருண் நிலா முகத்தை
குளிப்பாட்டக் கதறுகின்றாய்? பொன் மகனே, கணர்ணுறங்கு
பொங்கு தமிழ் மங்காது.
எண் மகனே, நீயழுதால்
எண்முதுகில் உண்பாட்டி அமாங்குவாள் ஓடிவந்து
மதிய நேரச் சாப்பாடும் பிந்திவிடும் அதனால் நீ
பேசாமல் கணர்ணுறங்கு அந்தி சாயும் முன்னாலுன்
அம்மாவும் வந்திடுவாள்.
கடப்படிக்கு முன்னாலே
கல்லூரியிருந்தாலும் இடமாற்றம் செய்ததினால்
"இலுப்பையடி"ச் சேனைக்கு படிப்பிக்கச் செல்லும் அம்மா
படும்பாட்டை அறிவாயா? அதிவிரைவில் நீயாற்றும்
அமைச்சராகி ஆறுதல்தா.
கவிதையொன்றை நான் எழுத
கனநாளாய் பொறுமை காத்து தவியாய் தவிக்கின்றேன்
தங்கமே, எனது பெயரால் துயிலப்பா கொஞ்ச நேரம்
தூங்காமல் நீஅழுதால் தவிக்கின்ற எனது மனம்
தாங்காது; கணினுறங்கு.
செ.குணரத்தினம்
இதழ் 50

Page 128
-அருட்திரு தமிழ் நேசன் அழகளார்
6awäâlwŷaf 2offa DIT GoîIL {
இந்தக் கட்டுரையை நான் மூன்று பிரிவுகளாக வகுத்திருக்கின்றேன். முதலாவதாக தமிழ் இலக்கியத் தில் இடம்பெற்றுள்ள மானிட உண்மைகள், மானிட விழுமியங்களை மேலெழுந்தவாரியாக சுட்டிக்காட்டு கின்றேன். இரண்டாவதாக இன்றைய நுகர்வுக் கலாச்சார சூழ்நிலையில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறு தமிழ் பண்பாட்டு சூழ்நிலைக்கு ஆபத்தாக, அச்சுறுத்தலாக இருக்கின்றது என காட்ட முயல்கிறேன். மேலை நாடுகளில் இருந்து தமிழ்ப் பண்பாட்டு சூழ்நிலைகளுக்கு எதிராக வந்துகொண்டிருக்கும் இலக்கியங்கள், திரைப்படங்கள், இணையத்தளங்கள் போன்றவற்றின் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டுகின்றேன். மூன்றாவதாக நீண்ட நெடிய மனித நேயப் பண்பாட்டுக்குச் சொந்தக் காரராகிய நாம் இன்றும் நாளையும் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் என்ற கேள்விக்கு விடைகாண முயல்கின்றேன்.
இன்றைய உலக சூழ்நிலையில் - இன்றைய நுகர்வுக் கலாச்சார சூழ்நிலையில் - எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கின்ற விரைவான உலக மாற்றத்தின் மத்தியில் நமது தமிழ் சமூக விழுமியங் களை நமது இலக்கியத்தின் ஊடாக காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
1) தமிழ் இலக்கியமும் மானிட உண்மைகளும்
2 LIITIS SIGERJőčilUITŘičñGlfleiðLOITSTÍL 2 GUŠTEVILOő5677 நிறைந்திருக்கும் ஓர் இலக்கியத்தின் இன்றியமையாத கூறுகளில் 9[[j]G|8. Ging] (Intellectual Element) GI 6ởi Lig} முக்கியமானதாகும் அறிவுக்கூறு என்பது சீரிய கருத்து, மானிட உண்மை அல்லது வாழ்வியல் உண்மை,
ஜீவநதி
 
 
 
 

fLTS 69 GODDW Gol/Gotyw DaiOD6 of
உயர்ந்த நீதிநெறி போன்றவற்றைக் குறிக்கும். சிறந்த இலக்கியம் இவைகளை அடிப்படையாகக்கொண்டு அமைதல் வேண்டும்.
உணர்ச்சியைப் பெருக்கெடுக்கச்செய்யும் ஆற்றலே ஓர் இலக்கியத்திற்கு "இலக்கியத் தரத்தினை (Literary Quality) 5U 6.65 Gog T(5Lib. GT60fig) Li) இவ்வாற்றலை மட்டும் கொண்டு ஓர் இலக்கியத்தின் தரத் தை மதிப் பிடக் கூடாது; அவ் விலக்கியம் உணர்த்தும் செய்திகளையும், உண்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்து ஒரு இலக்கியத்தை மதிப்பீடு செய்தல் வேண்டும்.
மிக உயர்ந்த கவிஞர்கள் பரந்துபட்ட வாழ்க்கை அனுபவமும் நடுநிலையுணர்வும், தாம் எடுத்துக் கொண்ட விடயங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவும் வாய்ந்தவர்களாவர். அவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களில் அவர்கள் காலத்தில் நிலவும் சூழ்நிலை, எண்ணங்கள், சிந்தனைப்போக்குகள் போன்றவற்றை நாம் காணலாம்.
இளங்கோவடிகளும், திருத்தக்க தேவரும், கம் பரும் தத்தம் காப் பியங்களில் மானிட வாழ்க்கையை விளக்கியுள்ள அத்துணை அளவு தத்துவ அறிஞர்கள் எவரும் விளக்கவில்லை என்று கூறப்படுகின்றது. தத்தம் காலத்தில் மேலோங்கி விளங்கிய சூழ்நிலைப் பண்பினை இப்புலவர்கள் விளக்கியுள்ளமைபோல எந்த வரலாற்றாசிரியனும் விளக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. (வரலாற்று ஆய்வில் இலக்கியமும் சேர்க்கப்படுவதை இங்கு மனங்கொள்ளவேண்டும்)
எனவே உயர்ந்த இலக்கியங்களில் சீரிய கருத்துக்களும் மானிட உண்மைகளும் நிறைந் திருத்தல் வேண்டும் என்பது இதனின்றும் நன்கு புலனாகிறது எவ்வளவுக்கு எவ்வளவு ஓர்
-இதழ் 50

Page 129
ܓܸܡ
இலக்கியத்தில் உயர்ந்த கருத்துக்கள் ஆழ்ந்தகன்று நிறைந்துள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு அந்: இலக்கியத்தின் மதிப்பு உயர்ந்து விளங்கும்.
உயர்ந்த இலக்கியங்கள் உணர்த்துப உண்மைகள் புதியனவாக இருத்தல் வேண்டுப் என்பதில்லை. வரலாறு, அறிவியல் போன்ற நூல்கள் அறிவிக்கும் செய்திகள் புதியனவாக இருத்தல் வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அவைகள் உணர்த்தும் புதிய செய்திகளை ஒட்டியே அவற்றின் தரப் மதிக்கப் பெறும். ஆனால் இலக்கியம் இதற்கு மாறுபட்டதாகும். அதில் அமைந்துள்ள உயர்ந்த உண்மைகள் அல்லது எண்ணங்கள் புதியனவாக இருத்தல் வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. இலக்கியம் புனைந்துரையாக அமைய மாயின் அதன் கண் அமைந்துள்ள செய்திகள் புதியனவாக இருத்தல் வேண்டும். ஆனால் அதன்கண் உள்ள மானிட உண்மைகள் பழமையும் நமக்குத் தெரிந்தவையும் ஆக இருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்களில் காணும் பல உயர்ந்த உண்மைகளே அவற்றிற்குப் பின்பு தோன்றிய சிலப்பதிகாரத்திலும் சிந்தாமணியிலும், கம்பராமாயணத்திலும் வெவ்வேறு வடிவில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
தமிழ் இலக்கியம் காட்டுகின்றமானிட உண்மைகள் அல்லது விழுமியங்கள் தமிழின் மிகத்தொன்மையான இலக்கியமாக நமக்குக் கிடைத்திருப்பது சங்க இலக்கியமாகும். இந்தச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் இரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பு நூல்களில் உள்ள பாடல்களை தொல்காப்பியர் அகம், புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரித்து இலக்கணம் செய்தார். இத்தகையதொரு இலக்கணப் பாகுபாடு உலகில் எந்த ஓர் இலக்கியத் g5!ggub 36b606) GT6TD) The History of Tamil Literature என்ற நூலில் ரி.பி. மீனாட்சிசுந்தரம் கூறுகின்றார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சங்க இலக்கியத் தின் உள்ளடக்கத்தை ஆய்ந்து இலக்கியக் கொள்கை வகுத்த திறனாய்வாளர்கள் ஒரு கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார்கள். அதாவது சங்க இலக்கியம் உயர்வு நவிற்சி மிகைப்படாமல் இயல்பாக, வாழ்வையொட்டி அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த வேற்று மொழி இலக்கியங்கள் சமயத்தையே மையப்படுத்தி எழுந்தன. ஆனால் நமது தமிழ் இலக்கிய மான சங்க இலக்கியம் மக்களையும் மக்கள் தலைவர் களான மன்னர்களையும், மக்கள் வாழ்வு முறைகளை யும் கொடை வீரம், காதல், போன்ற விழுமிய உணர்வு களையும் தன்னுள் அடக்கியதாக எழுந்துநிற்கிறது.
ஜீவநதி -
 

உலகம் அளாவிய பொதுமைக் கருத்துக்கள்
உலகம் அளாவிய பொதுமைக் கருத்துக் களையும் மானிட உண்மைகளையும் தமிழ் இலக்கியம் தன்னுள் கொண்டுள்ளது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகள் தமிழர் களின் உலகப் பார்வைக்கு ஓர் உதாரணம். தனிநாயகம் அடிகளார் பல்வேறு மொழிகளில் இவ்வார்த்தையை மொழிபெயர்த்து வெளிநாட்டு அறிஞர்களுக்கு எடுத்துக்காட்டியபோது அவர் களுடைய கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன என்று அடிகளார் தமிழ்த்துது என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
The Universal Brotherhood GT6ổi [[]] சொல்லப்படுகின்ற "உலகளாவிய சகோதரத்துவம்" பற்றிய சிந்தனை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது மனிதன் நாகரீக வளர்ச்சி அடைவதற்கு முன்னமே தமிழ் மொழியில் இருந்துள்ளமை உலக மொழியியல் அறிஞர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா" அதாவது "தீமையும் நன்மையும் மற்றவரால் உருவாக்கப்படு வதில்லை. அதற்குக் காரணம் நாம்தான் " என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று அடிகளும்,
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற திருமூலரின் திருமந்திர வாக்கும்,
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற திருநாவுக்கரசரின் பக்தி இலக்கியக் கூற்றும்,
"சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற ஒளவைப் பிராட்டியின் வாக்கும், இன்னும் பலவும் தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட உலக மனப்பான்மை யின் வெளிப்பாடுகளாக உள்ளன.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரும்,
"காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" என்ற பாரதியாரும்
இன்னும் இன்றைய வாலி, வைரமுத்து மேத்தா, போன்ற கவிஞர்களும் இதில் அடங்குவர். மானிட உண்மைகளையும், மானிட விழுமியங் களையும் முன்னிறுத்திப் பாடிய கவிஞர்களின் இந்தப் பட்டியல் நீளும்,
திருக்குறள் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று மகாகவி பாரதி பாடிய அந்த வள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் எழுந்த ஒப்பற்ற ஓர் இலக்கியமாகும். உலக அரங்கில் தமிழின் பெருமையை உயர்த்திக்காட்டும் மிகச்சிறந்த நூலாகும்.
இதழ் 50

Page 130
திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட ஒரு நூலாக இருந்தாலும் "தமிழ்" என்ற மொழியின் பெயர் அதில் எங்குமே இல்லை. "தமிழர்" என்ற இனத்தின் பெயரும் அதில் எங்குமே இல்லை. "தமிழ்நாடு" என்ற நாட்டின் பெயரும் அதில் இல்லை. எந்த ஒரு சமயத்தின் பெயரோ அல்லது கடவுளின் பெயரோ அதில் இல்லை.
ஆக, ஒரு மொழிக்கோ, ஓர் இனத்திற்கோ ஒரு நாட்டிற்கோ ஒரு சமயத்திற்கோ உரிய நூலாக இல்லாமல் உலகம் அனைத்திற்குமாக எழுதப்பட்ட "உலகப் பொது நூல்" திருக்குறள். அதனால்தான் அது உலகப் பொதுமறை என்று போற்றப்படுகின்றது. மனித குலத்திற்கே பெருவிளக்காக எழுந்து வழிகாட்டும் ஒப்பற்ற நூலாக - ஒழுக்கவியல் மற்றும் நன்னெறிக் கோட்பாடு பற்றி எழுந்த பெரும் உலக இலக்கியங்களில் ஒன்றாக திருக்குறள் விளங்குகிறது. "மானிட வர்க்கத்தின் மாபெரும் தத்துவப்பேழை" என்று அது உலகோரால் போற்றப்படுகின்றது.
வியப்பார்ந்த இலக்கியங்களும் |DIgsll- 2 (UÚCllslöEÍhlí
தாம் நோக்கும் வகையில் எழுத்தாளர் வாழ்க் கையை கற் பனையரில் படைப் பதே இலக்கியமாகும். அக்கற்பனைப் படைப்பு நிலை பேறுடைய வாழ்வியல் உண்மையின் அடிப்படையில் அமைதல் வேண்டும். வாழ்க்கையில் காணும் நடைமுறைகளை நிகழ்வன போலவே இலக்கியம் படைத்துக் காட்டவேண்டும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையின் உள்ளீடான உண்மைகளையும் நெறி முறைகளையும் உணர்த்துவது அதன் கடமையாகும்.
Romantic Literature GTGÖTgO GEFITGÖGIDÜLJCBeflaöTAD வியப்பார்ந்த நிகழ்ச்சிகள் அமைந்த இலக்கியம் ஆயினும் வாழ்க்கை நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் அமைந்த இலக்கியமாயினும் அவையும் நிலையான வாழ்வியல் உண்மைகளைத் தம் உள்ளீடாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
முழுமையான விந்தையும் மாயமும் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட சிறந்த இலக்கியங்கள் மேனாடுகளில் தோன்றின. இவ்விந்தை நிகழ்ச்சிப் படைப்புக்களில் மன்னனைச் சார்ந்த பெருவீரர்கள் (Knights), UUGOTItil 3, Gif, Adventures GT6 (D) சொல்ல்படுகின்ற வீரதீரச் செயல்கள், போர்கள், உடல் பலம் மிக்க பேருருவினர், குள்ளர்கள், மந்திரவாதிகள், மாயச் செயல்கள், மாய மாளிகைகள் போன்ற செய்தி கள் இந்த வியப்பார்ந்த இலக்கியங்களில் இடம்பெறும்.
இன்றும் கூட மேலைநாடுகளில் இதுபோன்ற
விந்தையும் மாயமும் நிறைந்த வியப்பார்ந்த இலக்கி யங்கள் நாவல்கள், திரைப்படங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன, மேலைநாடுகளில் குழந்தைகளை பெருமளவில் ஈர்த்த குழந்தைகள்
ஜீவநதி

நாவலான ஹரி பொட்டர் (Harry Poter) இன்னும் குழந்தைகளுக்கான காட்டுன் பாத்திரங்களான சுப்பர் LDT67 (Superman) as LUL LOT66 (Spiderman) பென்ரென் (Benten) போன்றவைகள் உலக அளவில் குழந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய இலக்கியங் களாகும்.
பழந்தமிழ் இலக்கியங்களில் நடைமுறைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள்
நமது பழந்தமிழ் காப்பியங்களில் நடை முறைக் குப் பொருந்தாதனவும் , இயற் கைக்கு அப்பாற்பட்டவையுமான நிகழ்ச்சிகளும், செயல்களும் ஆங்காங்கே அமைந்திருக்கக் காணலாம். சிலப்பதி காரத்தில் மதுராபதி தெய்வம் தோன்றுவதும், இறந்து பட்ட கோவலன் விண்ணிழி விமானத்திலிருந்து இறங்குவதும் அவனோடு கண்ணகி விண்ணுலகு செல்வதும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி களாகும்.
இவ்வாறே மணிமேகலையில் மணிமேகலா தெய்வம் தோன் றுவதும் மணிமேகலையை மணிபல்லவத் தீவிற்கு கொண்டுசேர்ப்பதும் இன்னும்பல நிகழ்வுகளும் இயற்கைக்கு அப்பாற்பட்டவையாகும். கம் பராமா யணத்தில் அனுமான் மலையைப் பெயர்த்துகொண்டு சென்ற காட்சிகள் போன்றவை இயறி கைக் கு அ ப் பாற் பட்ட  ைவயாகும் , இக்காப்பியங்களில இவைபோன்ற நிகழ்ச்சிகள் கதை இயக்கத்தில் ஏற்படும் சில சிக் கல் களைத் தவிர்ப்பதற்கும் உண்மைகளை உணர்த்து வதற்கும் இடம் பெற்றுள்ளன எனலாம்.
ஆனால் இக்காப்பியங்களும் ஏனைய தமிழ்க் காப்பியங்களும் என்றும் நிலைபேறுடைய பல மானிட உண்மைகளை தம்மகத்தே கொண்டுள்ளமையை அவற்றைப் பயில்வோர் உணர்வர். அப்பேருண்மை களை அறம் பொருள் இன்பம் என்று தொல் காப்பியமும், அறம், பொருள் இன்பம் வீடு எனப் பிற்கால இலக்கியங்களும் மக்களுக்கு நன்மை பயக்கும் உறுதிப் பொருள்களாகக் குறிப்பிடுகின்றன.
11.தமிழ் பண்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் ஊடகங்களின் தாக்கம்
Lülយ៨ មឿងង៉ាយកំពែង ៣៣L a_យប័យាយពីទ្រិយ៍
முன்னர் யதார்த்தவாதம் என்று குறிப்பிடப் பட்ட இலக்கியக் கோட்பாடு தற்போது நடப்பியல் என அழைக்கப்படுகின்றது. யதார்த்தம் என்ற வட சொல்லானது ஆங்கிலத்தில் Reality எனப்படுகின்றது. இதன் நேரடி தமிழ் வடிவம் "உண்மை நிலை" என்பதாகும். இதனடியாக உருவான நடப்பியல் (யதார்த்தவாதம் - Realism) என்ற கலை இலக்கியக்
இதழ் 50

Page 131
s
み
கோட்பாடானது சமுதாயத்தை அதன் இயல்புநிலையில் பிரதிபலித்தல் என்ற பொருளில் பயில்வது நடைமுறை வாழ்வியல் உண்மைகளுக்கும் அறிவுசார் சிந்தனை களுக்கும் தொடர்பற்ற கற்பனைகளின் தளத்தில் கெை இலக்கியங்களைப் படைத்தும் சுவைத்தும் நின்றவர் களைச் சமுதாய உண்மைகளை நோக்கித் திசை திருப்பும் வகையில் உருவான கோட்பாடு இது என்பது 6)JU6IDIT(Dj.
இலக்கியங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்று கூறும்போது வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நிகழ்ந்த வாறே கூறுவது இலக்கியத்தில் நடப்பியல் (Realism i Literature) எனக் கூறப்படுகின்றது.
புதினங்களில் திரைப்படங்களில் நடப்பியல் இருத்தல் வேண்டும் என கூறப்பட்டு வருகின்றது வாழ்க்கையில் நடைபெறுவனவற்றை உள்ளவாறே புதினத்தில் படைக்க வேண்டும் என்பதுவே இந்நடப்பியல் கொள்கை உடையவர்களின் கருத்தாகும். இதன்படி வாழ்க்கை நடைமுறையில் காணும் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தரத்தக்க நிகழ்ச்சிகளும் செயல்களும் புதினத்தில், திரைப்படத்தில் இடம்பெறுவதை ஏற்றுச் கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது இத்தகைய நடப்பியல் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட (LOIջեւ IIT55l. உதாரணமாக தொடர் நாடகங்கள் : சூழ்ச்சிகள் நம்பிக்கைத் துரோகங்கள் அடிக்கடி வரும் நுாடகத்தின் முடிவில் அறம் வெல்லும் என்ற அடிப்படையில் முடிெ சரியாக இருந்தாலும் முடிவை மட்டுமே மக்கள் பிடித்துக்கொள்வார்கள் என்பதல்ல.
நடப்பியலில் தீவிர பற்றுக்கொண்டவர்கள்கூட வாழ்க்கையில் நேரிடையாகக் காணும் காட்சி நிகழ்ச்சி ஆகியவைகளையே தம் புதினங்களில் கதைகளாக அமைக்க முடியாது. புதினங்களிலும் கதைகளிலும் திரைப்படங்களிலும் கூறப்படுவதைப்போல முழுபை யாக வாழ்க்கையில் நடைபெறுவதில்லை.
உதாரணமாக தமிழ் சினிமாவில் வரும் காத6 பாடல் காட்சிகள் - யாரும் ஒடி பாய்ந்து கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு காதல் செய்வதில்லை.
சண்டைக் காட்சிகளில் மனித உடல் என்ன றபரா என நினைக்கும் அளவுக்கு ஒருவன் மற்றவனை தூக்கி எறிகின்றான் . அவன் தூரத்தே போய விழுகின்றனர். ஆனால் விழுந்தவன் எழுந்து வந்து திருப்பி அடிக்கிறான்.
நம்முடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் க.ை களில் அமைவதுபோல ஒன்றோடொன்று இணைந்து கதைக்கோப்பாக உருவாவதில்லை. வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி சிறிது நேரம் நிகழ்ந்து பின்பு முடிந்துவிடுப் புனைகதைகளில், திரைப்படங்களில் வருவதுபோ அந்நிகழ்ச்சியே தொடர்ந்து பின்னலாக வருவதில்லை.
ஜீவநதி

மனித இனம் முழுமைக்கும் எக்காலத்தும் பயன்படும் உண்மைகளைக் கொண்ட இலக்கியம் தரத்தில் உயர்ந்ததாகும். ஆனால் அவ்வுண்மைகளை விளக்கும் செய்திகளும், நிகழ்ச்சிகளும் வாழ்வியலை ஒட்டியனவாய் இருத்தல் வேண்டும்.
மேலைநாட்டு விழுமியச் சீரளிவும் தமிழ் இலக்கியங்களும் இன்றைய நவீன தொலைத்தொடர்பு சாதனங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சி, இணையம், செல்லிடத்தொலைபேசி போன்றவை வழியாக இன்று மக்கள் பெற்றுக்கொள்கின்ற விழுமியங்கள் எதிர்ப் பண்பாட்டை தவறான பாதைகளைக் காட்டுவதாக இருக்கின்றது.
மேலை நாடுகளில் இன்று மிக வேகமாக கலாச்சார விழுமியச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன. மத நம் பிக் கையை, வழிபாடுகளை புறக் கணித்தவர்களாக பெரும்பாலான மக்கள் வாழ் கின்றனர். இணையத் தளங்கள் மூலமாக ஆபாசக் காட்சிகள் வகைதொகை யின்றி நம் வீடுகளுக்குள் வந்துவிட்டது. கைத்தொலை பேசி வழியாக பல தீமைள் இளையவர்களின் கைகளுக்குள் வந்து விட்டது. இளையவர்கள் இதற்கு பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனர்.
நமது புனித மான பண பாட் டு ப் பாரம்பரியங்களுக்கு முரணான திருமண வாழ்வு குடும்ப வாழ்வு, பாலியல் வாழ்வு போன்றன நவீன ஊடகங்கள் மூலமாக வெளிக்கொணரப்படுகின்றன. கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெறவேண்டிய புனிதமான பாலுறவை தந்தை மகள், தாய் - மகன், சகோதரர்களுக்கிடையில் காட்டப்படுகின்றது.
கருக்கலைப்பு, ஒத்த பால் திருமணங்கள் சில நாடுகளில் சட்டமாக் கப் படுகின்றன, நியாயப்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் நமது தமிழ் சமூகத்திற்குள் இன்று ஊடுருவி உள்ளன. நமது தமிழ் ஊடகங்களுக்குள், இலக்கியங்களுக்குள் நுழைய ஆரம்பித்துவிட்டன.
III. ESöğěř ÖFGUITGANGAJ GÜLILg2 எதிர்கொள்ளப்போகின்றோம்? நீண்ட நெடிய மனித நேயப் பண்பாட்டுக்குச் சொந்தக்காரராகிய நாம் இன்றும் நாளையும் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது. -
இன்றைய கணனி யுகத்தில் வாசிப்புப் பண்பாடு அருகி வருவது கண்கூடு தொலைக்காட்சி, வானொலி, கணனி அலைபேசி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இன்றைய இளைய தலை முறையினரின் வாசிப்புப் பழக்கத்தை பின்னோக்கி

Page 132
இழுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே நாளைய தலைமுறையினருக்கான ஈழத்து இலக்கியம் பற்றி நாம் அதிக சிரத்தையோடு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
மாறாத மானிட உணர் மைகளை. விழுமியங்களை நமது இலக்கியத்தின் ஊடாக நாம் கொடுக்க முனையும்பொழுது இலக்கியத்தின் எந்த வடிவத்தின் ஊடாக நாம் இவற்றைக் கொடுப்பது? என்ற கேள்வி எழுகின்றது. காரணம் இனி வருகின்ற அடுத்த தலைமுறை நாவலை, சிறுகதைகளை, நீண்ட கவிதைகளை வாசிப்பார்களா? என்ற கேள்வி உள்ளது. சிலவேளை ஒரு நிமிடக் கதை, கைக்கூ கவிதைகள், துளிப்பாக்கள், எஸ். எம். எஸ். என்று சொல்லப்படுகின்ற குறுஞ்செய்திகள் போன்ற வடிவத்தின் ஊடாக நாம் கொடுக்கின்றபோதுதான் அடுத்த தலைமுறை அவற்றை உள்வாங்கும் என நாம் நம்பலாம். இதுபோன்ற புதிய தளங்களையும், களங்களையும் காலத்தின் தேவைக்கு ஏற்ப கண்டுபிடிப்பது நமக்கு முன்னாள் உள்ள சவாலாகவும், சமூகக் கடமையாகவும் உள்ளது.
நிறைவுரை Gg3T5TGöt (86) Tab5TTEJ 65TC85 (Johann Wolfgang von Goethe) என்ற அறிஞர் சொல் வார் "இலக்கியத்தின் வீழ்ச்சியானது ஒரு இனத்தின் வீழ்ச்சியை சுட்டிக் காட்டுகின்றது" என்று. இந்நிலையில் "இன்றைய யதார்த்தங்கள் தவிர்க்க முடியதவை" என்றும், "நாம் விரும்பினாலும் வசி ரு ம ப ா வரி ட டா லு ம அ வ ற  ைற ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றும் என்று சொல்லிக்கொண்டு இவற்றை நம் சமூகங்களுக்குள் அனுமதிக்கப்போகின்றோமா?
"உயர்ந்த இலக் கியத்தின் சிறப்பு என ன வெ னில் அ நி த இலக கசிய த தை வாசிக்கின்றவரை அதை எழுதியவரின் நிலைக்கு மாற்றிவிடுகின்றது." என்கிறார் - ஈ. எம். வொர்ஸ்ரர் என்ற அறிஞர். "மக்கள் எதை விரும்புகின்றார்களோ அதைக் கொடுக்கின்றவர் சிறந்த எழுத்தாளராக இருக்க முடியாது. மக்கள் எதை விரும்ப வேண்டுமோ அதைக் கொடுக்கின்றவரே சிறந்த எழுத்தாளர்", எனவே ஊடகங்களின் அதீத பாவனை யால் துரிதமாக மாறிவரும் உலக சூழ்நிலையில் நாம் நூற்றாண்டுகாலமாக காத்துவந்த மானிட உண்மை களை விழுமியங்களை நமது இலக்கியத்தின் உள்ளீடுகளாகக் கொண்டு இன்றும் நாளையும் இலக்கியம் படைப்போம்.
ஜீவநதி,
 
 

எங்கள் நிம்மதிகள் போல, எங்கள் சந்தோசங்கள் போல எதுவுமே எங்களிடம் நிரந்தரமாய் இருந்ததில்லை இதுவரை.
நிரந்தரமாய் இருக்கக்கூடாத பல துன்ப நிரந்தரங்களை - காலம் உங்களிடம் தருவித்திருக்கின்றது.
சுடுகாடாய் கிடக்கும் எங்கள் நிலம் நிறம் மாறிப் போய் இருக்கும் எங்கள் இனம் என்றெல்லாம் பலபல கொடும் நிரந்தரங்களை காலப் பரிசில்களாக நாம் வேணர்டியிருக்கின்றோம்.
எங்கள் மன்றாட்டங்கள் எங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் உம் இருப்பிடம் நோக்கி நகர்வலம் செல்ல ஆயத்தமாகிவிட்டன எல்லாம் வல்ல பிதாவே.
| நிரந்தரமற்ற வாழ்வில்
நிரந்தரமான துன்பங்கள் எங்களுக்காக மட்டும்
இந் நிலவொளிதனில்,
நிர்க்கதியாக்கப்பட்டிருக்கும் நாங்கள் இனியும் எதையும் நிரந்தரமாய் கருதப் போவதில்லை.
எதுவும் எப்படியும் இருக்கட்டும் யாரும் எதுவும் கூறட்டும் ஆண்டவரே எம் மன்றாட்டங்களை ஏற்றுக் கொள்வீராக. உரக்கச் சொல்கின்றோம் ஒன்றாய் மன்றாடுகின்றோம் எம் வாழ்விலும் சரி எம் மனங்களிலும் சரி என்றும் எல்லாம் வல்ல இறவைா
"நீயே நிரந்தரம்"

Page 133
s
Ny. Νς
பட்டியின் கணவன் அவளைவிட்டுச் செல்லும் போது அவன் மூலமாக ஒன்பது மாத ஆண் குழந்தை ஒன்றும் ஐந்து மாதங்கள் நிரம்பிய கரு ஒன்றுக்கும் சொந்தக்காரியாக அவள் இருந்தாள். அவளின் கணவன் கொழும்பில் வீடொன்றில் வீட்டு வேலையில் இருந்து விட்டு அலுத்துப் போகவே ஊருக்கு வந்தவன். திரும்ப வேலைக்குபோகாமல் அப்படியே தங்கி விட்டான். இளைஞனான அவன் நண்பர்களின் கூட்டு, அவனது கையில் இருந்த பணம் அனைத்தையும் அரைத்தபோது கூலி வேலைகளில் ஈடுபடலானான். மரமேறுவது, சில வேளைகளில் களவுவேலைகளில் ஈடுபடுவதுதான் அவனது தொழில் ஆகிப்போய் விட்டது. கொழும்பில் இருக்கும்போது பணக்காரவிட்டுப் பெண்பிள்ளைகளும் இளைஞர்களும் கைகோர்த்து காதல் சல்லாபங்கள் செய்வதைக் கண்டு தானும் அவ்வாறு நடந்து கொள்ள ஆசைப்பட்டதன் விளைவு கொழும்பில் கைகூடாமல் போன காரியம், ஊருக்கு வந்தவுடன் பட்டி என்ற யுவதியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் நிறைவேறியது.
பட்டி சிறுவயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால் பாட்டியின் அரவரணைப்பில் தான் வளர்ந்தாள். சிறிய குடிசை ஒன்று தான் அவர்களது மாளிகையாக இருந்தது. பரம்பரைத் தொழிலான வீட்டுழியம் தான் அன்றாடம் அவர்களது வயிற்றைக் கழுவியது. நெல்லைக் குத்திக் கொடுத்தால் அரிசி கொஞ்சமும், சமையலுக்கு உதவினால் ஒரு வேளைச் சாப்பாடும், வயல் வேலைகளில் ஈடுபட்டால் சிறிதளவு நெல்லும் அவர்களுக்கு கிடைத்து வந்தது. வயல் வேலை கள் அற்ற காலத்தில் ஒரு பலாக்காய், ஒரு தேங்காய் பலாக்கொட்டை என ஏதாவது கிடைத்து வந்தது.
பியதாசாவின் பொருளாதார பலம் பட்டியின் உழைப்பை விட இரண்டாவது இடத்தில்தான் இருந்தது அப்படியானலும் அவனுக்கு சொந்தக்காரர் என பலபேர் இருந்ததனால் உழைப்பில் பாதி அவர்களுக்கென ஆகிட்
ஜீவநதி
 
 
 
 
 

缀蕊 AFFANYA ఛీ リ
தமிழில் : எம்.எம.மன்ஸ9ர்
$/). ഡ്രാൾ Gဗီး.....8=#alအိုဂ်မှလa.
போனது. அவனுக்கு சிறிய ஒரு தொகைப் பணமே உழைப் பின் எச்சமாகும். இவ்வளவு பெரிய கொழும்பில் உழைத்தவனுக்கு அடுப்பை அலங் கரிக்கக் கூடிய ஓர் இடத்தில் பெண் எடுக்க முடியாமல் போனது அவனது துரதிஷ்டம் தான். உழைப்பு இல்லாத நாட்களில் வயிற்றில் புழுக்கள் கரணம் அடிக்கத் தவறாது.
தமது முகத்தில் கறுப்பை பூசிக்கொள்வது ஒரு புறம் இருந்தாலும் எமது முகத்திலும் கூடத்தான் பூசப்படுகிறது. :--
இதற்கு முன்னரும் அவர்கள் பியதாசவுக்கு பல கதைகள் கட்டியதோடு பட்டியின் குறைபாடுகளைக் கூறாமல் இருக்கவில்லை. இதனால் பியதாச பட்டியின்
வீட்டிலேயே தங்கிக் கொண்டான். அவர்களுக்கும் அது
பலமாக அமைந்து விட்டது.
பியதாச பட்டியுடன் தங்கிய சில மாதங்களில் அவள் கருவுற்றாள். பியதாச கொழும்பில் கண்ட உல்லாச உலகத்திலே பட்டியுடன் உலாவரவேண்டும் என்று ஆசை கொண்டானே தவிர, பிள்ளை குட்டிகளை உருவாக்குவதல்ல. தனக்கே வாழ வருமானம் கம்மி யாகக் கிடைக்கும் போது அவளையும் வாழ வைப்பது என்பது அவனுக்குப் பெரும் சவாலாகக் காணப்பட்டது. துரதிஷ்டவசமாக வசமாக வந்து ஒட்டிக் கிட்ட இந்தப் பிரச்சினையை மனதுக்குப் பாரமாக நினைக்காமல் பொறுத்துக் கொண்டான். ஆனால் முதலாவது குழந்தை கிடைத்து இரண்டாவது குழந்தைக்கான தாய்மை அடையாளங்கள் வெளி யானதும் அவனது பொறுமைக்கும் ஒரு முடிவு வந்தது. ஒரு குழந்தைக் காக வேண்டிய சகலதையும், சகல செலவுகளையும் செய்வதோடு மாத்திரமல்லாமல் இது இரட்டிப் பாகியதும் மனதில் கோபம்தான் மேழோங்கியது.
"இதென்றால் பிரச்சினைதான் ஒரு குழந்தையையே வளர்க்கப் பாடுபடும் நாம் எவ்வாறு
இதழ் 50

Page 134
இன்னொரு குழந்தையை வளர்ப்பது? ஒரு நாள் பரியதாச தனது மனைவியுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது குறிப்பிட்டான்.
"அதுதானே! நாம் என்னசெய்வது? நாம் கொடுத்து வைத்திருக்கும் விதம் அப்படித்தான்" பட்டி பதில் அளித்தாள்.
அவளது பதில் பியதாசவுக்கு திருப்தியைத் தரவில்லை. அவன் கருக்கலைப்புப் பற்றியும் வைத்தியர்களைப் பற்றியும் பேசத் தொடங்கினான். அவன் சொல்வது எதுவும் புரியாமல் பட்டி வாயைப் பிளந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள். தான் சொல்வதைப் புரிந்து கொள்ள அவளால் முடியாததை அறிந்து கருக்கலைப்பு செய்யும் ஆலோசனையைச் சொன்னான். பட்டி திகைத்து நின்றாள். தான் கொழும் பில் இருக்கும் போது இத்தகையதொரு பிரச்சினை தனது நண்பன் ஒருவனுக்கும் ஏற்பட்டபோது அவன் இவ்வழியைத்தான் கையாண்டான். அப்படியா னாலும் ஒரு கிராமியப் பெண்ணுக்கு இதை நினைத் தாலும் மேனி கூசத்தான் செய்தது. அவளுக்கு கற்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லாவிட்டாலும், தன்னைப்பற்றிய அச்சமும் பாரம்பரிய நம்பிக்கைகளும் கலந்த ஒரு களப்பு உணர்வை ஏற்படுத்தியது.
"ஐயோ அம்மா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அப்படி ஒரு காரியத்தை என்னால் நினைத்தும் கூடப் பார்க்க முடியவில்லை. எமது கருமத்துக்கு வந்து சேரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதைத் தவிர எம்மால் வேறு என்னதான் செய்ய முடியும்?"
யோசனை அப்படியே அடிபட்டுப்போனதன் பின்னர் அவர்களுக்கிடையில் சிறு சிறு பிரச்சினைகள் எழலாயின. இவ்வாறு பல மாதங்கள் கழிந்த பின்னர் ஒரு நாள் பியதாச இரவு வழமையான நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை. அவன் அப்படி வராமல் இருப்பதும் இல்லை. கணவன் வரும்வரை மனைவி கண் விழித்துக் காதுதுக் கொண்டிருக்கும் பழக்கம் அவர்களிடம் காணப்படவில்லை. அப்படியே வந்தாலும் எவருக்கும் பிரச்சினைப்படாமல் வந்து வெளி விராந்தாவில் போடப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்குவது தான் வழக்கம். எனினும் பியதாசாவின் வரவை எதிர்பார்க்காமல் பட்டியும் பாட்டியும் பிள்ளையும் படுத்துறங்கினார்கள். காலையில் எழுந்து பார்த்த பொழுது வெற்றுக் கட்டில் இருப்பது கண்டு திகைத்துப் போனார்கள். என்றாலும் மறுநாள் விடியும் வரை கண்விழித்துக் காத்திருந்தபோதும் அவன் வராததால் பதற்றமடைந்த அவர்கள் அந்தக் கிராமம் முழுவதும் தேடுதல் நடத்தியும் பலரிடம் விசாரித்தும் பலனில்லாமல் போனதால் பட்டி அழத்தொடங்கி விட்டாள். "பியதாச பட்டியை விட்டுட்டுப் போயிட்டான்" என்று அந்தக்
ஜீவநதி 1.

கிராமத்தவர்கள் சொன்னபோதும் அதனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனவேதனையைத் தவிர வேறு எதுவும் மிஞ்ச வில்லை. ஆனாலும் நாளுக்கு நாள் அவன் வருவான் என்ற நம்பிக்கை சிறுகச்சிறுக இதயத்தை நெருங்கவே பட்டியும் அவளது பாட்டியும் அந்தக் கிராம மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு பியதாச லொரிக்கு சமான்கள் ஏற்றும் ரொலி ஒன்றில் சென்றதைத் தான் கண்டதாக நிதமும் கொழும்புக்குச் செல்லும் பூகொட முதலாளி மூலம் அவர்களுக்கு தெரிய வந்தது. பியதாசவை சந்தித்து சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்குக் கூட்டிவர பட்டி நினைத் தாலும் பிள்ளைத்தாச்சியாகிய அவளால் தெரியாத இடங்களில் சென்று தேடுவது சாத்தியம் இல்லை என அநேகம் பேர் சொன்னதால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டாள்.
"அந்த மனிதனுக்கு உண்மையில் உன்மீது அன்பிருந்தால் இப்படி தவிக்க விட்டுச் செல்ல மாட்டான், கொழும்பில இருந்த காலத்தில அவனுக்கு அபணி டாட்டி ஒருத்தி இருந்ததாக கேள்வி, இப்பொழுது அவளிடத்தில்தான் போயிருப்பான்" என அவளது நெருங்கிய நண்பியான கொஸ்கமி அவளை அதைரியமூட்டும் விதத்தில் சொன்னாள். அதேவேளை பியதாச பட்டியை விட்டுப் பிரிந்ததில் கொஸ்கமிக்கு ஒரளவு சந்தோசம் ஏற்படச் செய்தது. பியதாசவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவள் கூறியது வெறும் கற்பனை, தான் சொல்வதை மேலும் உறுதிப்படுத்தத்தான் அவள் அவ்வாறு சொன்னாள்
காலம் செல்லச் செல்ல ஒவ்வொருவரும் சொல்லும் கதைகள் பியதாச மீது அவளுக்கு வெறுப்பையே ஏற்படுத்தியது. முதலாவது குழந்தை கிடைத்தபோது செலவீனங்களை மேற்கொள்ள கணவன் இருந்தான். இப்பொழுது அவளுக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் பிள்ளை பெற்றுக் கொள்வதும், உண்டாக்கிக் கொள்வதும் ஆரம்பத்தில் ஒரு பிரச்சினையாக அவளுக்குப் படவில்லை. அத்தகையதொரு ஆசையை அவளது உள்ளத்தில் விதைத்தது பியதாசதான். இப்பொழுது நினைக்கும் போதும் கோபம்தான் கூடுகிறதே தவிர குறையவில்லை. இதனால் அவளது உள்ளம் இறுகிப்போய் விட்டது.
கற்பத்தை நினைக்கும்போது அவளது உள்ளத்தில் ஒரு வகை வேதனை கலந்த கோபம் தான் ஏற்படுகிறது. தனக்கு தானாகவே கற்பம் கரைந்து போனால் நல்லது என அவள் நினைத்தாள். தனது எண்ணம் நிறைவேறாதவிடத்து அதனைப் பலவந்த மாகக் கலைத்து விடவும் நினைத்தாள். ஆனால் அதைப் பற்றிய அறிவு இல்லாததால் வைத்தியர் ஒருவரை
இதழ் 50

Page 135
s
அணுகச் செல்வதற்கும் பயமும், வெட்கமும் கொண்டாள் பிஞ்சு அன்னாசியை சாப்பிடுவதால் கற்பம் கரைந்: போகும் என பெண்கள் கதைத்துக் கொள்வது அவளது காதுகளிலும் விழுந்திருக்கிறது. அவள் பிஞ் அன்னாசிப்பழங்களைச் சாப்பிட்டுப் பார்த்தாள், அவளது துரதிஷ்டம் முற்றியிருந்த கருவை அது எந்த விதத்திலு பாதிக்கவில்லை. பின்னர் அதே போன்று கொள்ளு கொஞ்சம் எடுத்து அவித்துக் குடித்துப் பார்த்தால் அதுவு UGOatfaba) TLDGb (3UT6015).
நிறைமாதம் ஆனவுடன் பட்டிக்கு பென குழந்தை ஒன்று பிறந்தது. மெலிந்த உடலமைப்பை கொண்ட அக்குழந்தை மெல்லிய தன் கைகளையும் கால்களையும் உதறி அழும்போது அவளது கோபL எங்கோ ஓடி மறைந்து பிள்ளையின் மீது அனுதாபமும் அன்பும் ஏற்பட்டதனால், சகல துன்பங்களும் மறந்து (3LJT60Ig]].
" ஐ யோ இத் த ைகய ஓர் அழ கசிய குழந்தையையா நான் கருவிலே அழிக்க முற்பட்டேன் என அவளது மனம் அழுது புலம்பியது.
பிள்ளை கிடைப்பதற்கு முன்னால் சேமித்து வைத்திருந்த அரிசி, பணம் என்பவற்றைத்தவிர அவள் வேலை செய்யும் வீடுகளில் இருந்து சிற்சில உதவிகளும் அவளுக்கு கிடைத்தது. இவ்வாறு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க, அவர்களின் உதவிகளைத் தொடர்ந்து பெறவேண்டும் என்ற எண்ணம் பட்டிக்கோ இல்லை இதனால் பிள்ளை கிடைத்த சில நாட்களுக்குள்ளேயே அவள் தனது பழைய தொழிலையே ஆரம்பித்தாள்.
முன்னென்றால் அவள் வேலைக்குச் செல்லும் போது பிள்ளையைப் பராமரிக்க பாட்டியிடம் கொடுத்து விட்டுப் போவாள். பாட்டி மிகவும் சிரமத்துடன் பாது காத்து வந்தாலும், இப்பொழுது இரு பிள்ளைகளைப் பார்ப்பது மிகவும் சிரமமானது. இப்பொழுது போகும் இடமெல்லாம் பட்டிதன் கையோடு பையனை அழைத்துக் செல்லலானாள். அதுவும் பாட்டிக்கு சுகயினம் ஏதும் ஏற்பட்டால் இரண்டு பிள்ளைகளையும் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. சிறுபிள்ளைகளை அங்கும் இங்கும் கூட்டிச்செல்வது அவளுக்கு பெரும் பிரச்சினை யாக இருந்தது. பிள்ளைகளைக் கொழுவிக் கொண்டு செல்லும்போது சிலர்
"ஏழையானாலும் மாப்பிள்ளைத்தனம் போச வில்லை." என அவளுக்கு கேட்கும் படி சொல்வார்கள்.
"இன்னுமொருவரிடத்தில் வேறுயொருவனை கூட்டளியாக்கிக் கொண்டு இன்னுமொன்றைப் போடுவாள் அதுகேட்டு இன்னுமொருவன் சொன்னான் அவள் பெரும் வேதனையுடன் நிலத்தைப் பார்த்தபடி நடையின் வேகத்தை கூட்டினாள்.
"பட்டி, உன்னால் இரண்டு பிள்ளைகளை வளர்க்க முடியாது ஒரு குழந்தையை எவருக்காகவது
ஜீவநதி

வளர்ப்பதற்குக் கொடுத்து விடு" என அவளது நண்பி கொஸ்கமி உட்பட அவளை வற்புறுத்தி வந்தனர். நாலுபேர் சொல்வதில் ஏதோ நன்மை இருக்கு மென்பதை அவள் உணர்ந்திருந்தாலும் அதை எப்படி செய்வது என்பது அவளுக்கு விளங்கவில்லை.
"அது தான் கொஸ்கமி அக்கா நானும் சிந்திக்கின்றேன். யாருக்கு கொடுப்பது? யார் குழந்தையை ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்?
ஒருநாள் தனக்கு புத் திமதி சொல்ல வந்
கொஸ்கமியிடம் கூறினாள்.
"தேடிப் பார்த்தால் கிடைக்காமலா போய் விடுவார்கள்? பிள்ளைகளைத் தத்து எடுத்து வளர்த்துக் கொள்ளக் கூடியவர்கள் பலபேர் இருக்கிறார்கள்
"ஆனாலும் இங்கு உள்ளவர்கள் வெளியிடங் களில் தான் பிள்ளைகளைப் பெற விரும்புகிறார்களே” "அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதற்கு விரும்பாததற்கு காரணம்,அடிக்கடி பிள்ளையைக் காண நேருவதால் அழைத்துச் செல்வார்கள் என்ற பயம் தான். அதுவுவல் லாமல் பிள்ளைக்கும் சரியில்லைத்தானே! அதனால் வெளியிடத்தைச் சேர்ந்த எவருக்காவது கொடுப்பதுதான் நல்லது."
இந்த அபிப்பிராயம் பட்டிக்குத் திருப்தியைக் கொடுக் கவில் லை. கண் முன் னே அடிக் கடி காணக்கூடிய தாக ஊரில் உள்ள ஒருவருக்கு
கொடுப்பதுதான் நல்லது என அவள் நினைத்தாலும் அத்தகையவர்கள் அந்த ஊரில் எவருமில்லை
என்பதால் பிள்ளையைக் கொடுக்கக் கூடிய ஒருவரைத்தேடும் அவளது முயற்சி நிற்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்கள் தேடுதலின் பின் பொல்கஹாவெல எனும் ஊரில் உள்ள ஆசிரியர் குடும்பம் ஒன்று பட்டியின் பிள்ளையை எடுத்து
வளர்க்க முன்வந்தனர். அந்த ஆசிரியைக்கு குழந்தைச்
செல்வம் பெற வாய்ப்புக்கள் இல்லாததால் எத்தனையோ மருந்து வகைகளை உட்கொண்டும், கோயில் குளம் என பல இடங்களுக்குச் சென்ற போதும் குழந்தை கிடைக்க வாய்ப்புக்கள் இல்லை என்பதை டாக்டர்கள் உறுதி யாகக் கூறியதன் பின்னர் இறுதியாக குழந்தையை எடுத்து வளர்த்துக் கொள்வது
என்ற இறுதி முடிவோடு அவ்வூரில் உள்ள பட்டியின்
உறவுமுறைஒருவரின் மூலம் அறிந்து பட்டியின் வீடு தேடி வந்து விட்டனர்.
பெண் எப்பொழுதும் ஆண் பிள்ளையையே விரும்புவாள் என்பதையும் பட்டியும் கேட்டிருக்கிறாள். பட்டியைப் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கு பெண்பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகள் இருப்பது தான் நல்லது. அதுவுமல்லாமல் நீண்டகாலம் வளர்த்துப் பெருப்பித்த ஆண் பிள்ளையின் மீது அவளது பிணைப்பு அதிகமாக இருந்தது. அதனால் பெண்
இதழ் 50

Page 136
பிள்ளையை அவர்களுக்கு கொடுக்க சம்மதித்தாள். மிகவும் சிறியதாக இருந்ததால் அந்த ஆசிரிய தம்பதியினரும் மிகவும் மனம் விரும்பினார். சிறிய பிள்ளையாக இருப்பதால் எமது விருப்பப்படி வளர்த்து ஆளாக்கிக் கொள்ளலாம் என அவர்கள் எண்ணினர்.
நேரடியாகச் சொல்லாவிட்டாலும் பாட்டி குழுந்தையை வளர்க்கக் கொடுப்பதையிட்டு உள்ளுர விரும்பினாள். பியதாசவின் மீது தனக்கு ஏற்பட்டிருந்த கோபத்தை பட்டி மீது காட்டதவறவில்லை அவள்
"ஆமாம், பிள்ளைகள் எவ்வளவு இருங்தாலும் போதாது தான் என்றாலும் என்ன செய்வது?" பிள்ளையை அவர்கள் எடுத்துச் செல்லும் போது கண்ணிர் மல்கக் கூறினாலும் ஓரளவு மகிழ்ச்சியும் காணப்பட்டது.
பிள்ளையைக் கொண்டு சென்றதன் பின்னால் பட்டிக்கு ஏக்கமும் தனிமையும் தாழ முடியவில்லை. அதனை மறக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை பெற்றவள் அல்லவா? அவள் மகனை அணைத்து நீண்ட நேரம் கொஞ்சி விளையாடினாள். ஆனாலும் இரண்டு கண்களில் ஒன்றை இழந்தது போல் இருந்தது. எனவே தனது ஊரில் உள்ள அந்த ஆசிரியரின் உறவினரான கல்யாண ரத்தின ஆசிரியரிடம் போய் குழந்தையைப் பற்றி விசாரித்தாள். குழந்தையைப் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிப்பதில்லை என ஆசிரியரிடம் உறுதி மொழி அளித்திருந்தாலும் தனது உறவினரிடம் நற்பேர் எடுப்பதற்காக அந்நதக் குழந்தை ரொம்ப நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறி விட்டு அவர்களுக்கு உள்ள சொத்துப்பத்துக்கள், காசு பணத்தைப் பற்றியெல்லாம் அவர் விபரிக்கத் தவறவில்லை. இது கொட்டு பட்டி நிம்மதி அடைந்தாள். பிள்ளையின் செல்வாக்கைப்பற்றிச் சொல்வதை பட்டியுடன் மாத்திரம் நிறுத்தாமல் அக் கம் பக் கத் தவர்களிடமும் பெருமையாகக் கூறி இன்பம் காண அவர் பின்நிற்கவில்லை.
"அந்தப் பிள்ளைக்கு ஒரு குறையுமில்ல அங்கே ராஜபோக உபசரிப் புத்தான். பிள்ளையைக் கவனிக்க ஒரு வேலைக்காரியும் இருக்கிறாள். அதுமாத்திமைா? கடல் போன்ற சொத்தக்கள் எல்லாம் அந்தப் பிள்ளைக்குத் தானே! ஒருநாள் கொஸ்கமியைச் சந்தித்த பொழுது அவர் சொன்னார்.
"அது தானே அதிஷ்டம் எங்கே இருக்கிறது? உங்களால் தானே அந்த அதிஷ்டம் அவளுக்குக் கிடைத்தது" என்றாள்.
கொஸ்கமி சில சமங்களில் பட்டிக்கு கிடைத்து
உள்ள அதிஷ்டம்தைப் பற்றி சொல்வாள்.
"நான் என்றால் பிச்சை உடுத்தாலும் சரி உனது
ஜீவநதி 1.
 

பிள்ளையை வளர்ப்பதற்காக இன்னொருவருக்குக் கொடுக்க மாட்டேன். நான் கூலி வேலைதான் செய்கிறேன். ஆனாலும் இது மாதிரி செய்ய மாட்டேன்"
என்றாள் மெத்தேகமாக,
"GT66T60T (616) 35 Lib கெட்டதனமடி ஏழ்மை
யொரு பக்கம் இருக்கட்டும். நான் என்றால் எனது க் கொடக்க
பிள்ளையை ராஜாவுக்கென்றாலும் வளர் LDIT' (8L6GT"
அது அவ்வளவு பெரிய விஷயமல்ல"
இவ்வாறு பெண்கள் கதைத்துக்கொள்வது பட்டி கேள்விப்படாமல் இல்லை. அவர்கள் பொறாமை
"நெஞ்சுரம் இல்லாத பெண்களுக்கென்றால்
யால்தான் அப்படிச் சொல்கிறார்கள் என நினைத்தாள்.
“ S 60ör60)LDufeb LJLQ sö g-flu T60 GLITLDLj60
தான். பிள்ளையை வளர்க்கக் கொடுத்தாலும் கொடுத்தாய் ஒருதரமாவது போய் பிள்ளையைப்
பாாத்து வரவேண்டும் என்று தோனலியா?" கொஸ்கமி
நேரடியாகவே பட்டியிடம் கேட்டாள்.
“என் அப்படிச் சொல்லுகிறீர்கள்
அக்கா? நீங்கள் தானே சொன்னீர்கள் பிள்ளையைக்
கொடுத்துவிட்டு அவர்களைத் தொந்தலவு பண்ணக்
கூடாது" என்று
வில்லை; சரி நான் சொன்னதாகவே
கொள்வோமே! ஆனாலும் ஒரு தாயிக்கு
இருக்க முடியுமா?"
அவர்களது பிள்ளைகளை வளர்க்கக் ဗွို கொடுக்க முடியாமல் போன பொறாமையால்தான் அவ்வாறு சொல்லுகிறார்கள் என நினைத்த பட்டி தொடர்ந்து கொஸ் கமி முன்னர் ਰਯਘ ਸੁ66ਪਲ 66 L
(63FTab6)6OT60TTGT.
நாக் குகள் இருக் கக்
கல்யாணரத்தினவின் புகழாரம்
"ஹற்ம் . அப்படி என்று நான் சொல்ல வைத்துக் Ց|նաձեւվլք
"உண்மையில் மனிதனுக்கு இரண்டு
கூடாது.
பிள்ளையை வளர்க்கக் கொடு கொடு
என கொஸ்கமி தான் வற்புறுத்தி
வந்தாள். இப்ப எவ்வாறு அவளால் எப்படிப் பேச முடிகிறது?"
பொறுக்க
முடியாமல் மக்கள் வேறு வேறு கதைகளைச் சொல்லத்
துணிந்தனர். "கல்யாணரத்ன சொல்வதையா நம்புவது பிள்ளையை வேலைக் காரத் தனத்துக்குத்தா
எடுத்திருக்கிறார்கள்" எனச் சொல் மெப்பிக்கப்பலகாரணங்களையும் கூறினர் "இல்லை, கோட்டை யுகத்தி ※ ல் குமாரனும் வளர்த்
சரி பொறுத்திருந்து பார்ப்போம் எமது
இதழ் 50

Page 137
ی
சபுமல் குமாரியும் ஒருநாள் குதிரை மீது ஏறி வருகிறாளா? என்று"
பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதும் பட்டி கல்யாணரத்னவைப் போய் சந்தித்து அந்த ஆசிரியரின் முகவரியைக் கேட்டு நின்றாள். எனினும் சொந்தக்காரர் என்பதால் அதனை நிராகரித்தவர் அவர்.
"நான் பிள்ளையை மறுபடியும் திருப்பிக் கொண்டுவரல்ல ஒவ்வொருவரும் சொல்லுகிற கதை கேட்ட பின், போய் பிள்ளையைப் பார்த்து விட்டு வரத்தான்" என்று அவள் சொன்னாள்.
"ஒவ்வொருவரும் சொல்வதை நீ நம்பினால் கழுதையைத் தூக்கி தோளில் வைத்து நடந்த அப்பனும் மகனும் மாதிரி இருக்கும்"
எவ்வளவு சொல்லியும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதால் கல்யாணரத்தினவைக் குற்றஞ் சொல்லத் தலைப்பட்டாள் அவள்.
"நீங்கள் தான் செய்த வேலை என்னை ஏமாற்றி என் பிள்ளையைக் கொண்டு சென்று கொன்று (3UTLLITsT5(3GTIT GT6öTGOTC36)JIT UITT 560öTLGOTs”
கல்யாணரத்னவுக்கு இப்படிச் சொன்னதும் கோபம் வந்து விட்டது.
"உன்னை ஏமாற்றிக் கொண்டு சென்றதாகத் தானே நினைக்கிறாய்?நீ நினைத்ததைச் செய்து கொள். இந்த உனக்கு அட்ரஷ்தானே வேண்டும் எடுத்துக் கொள்" என அந்த ஆசிரியரின் முகவரியை எழுதி அவள் முன் வீசி எறிந்தார் கல்யாணரத்ன.
மிகவும் கஷ்டப்பட்டு வழிச்செலவைத்தேடிக் கொண்டு பஸ் ஏறி கம்பஹாவுக்கு வந்து ரயிலேறி பொல்கஹாவெலைக்கு வந்து கல்யாணரத்ன தந்த முகவரியில் உள்ள வீட்டைக் கண்டு பிடிக்க அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
அவள் அந்த வீட்டை நோக்கி வரும் வேளை ஆசிரியர் தம்பதியினர் வெளிவராந்தாவில் அமர்ந்த பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். பிள்ளையின் வயிற்றில் ஆசிரியர் தனது உதடுகளை வைத்து புர். என்று ஊதவே, பிள்ளை கூச்சம் தாங்க மாட்டமல் கல கல வெனச் சிரித்தது. வயதுத்தம்பதி யினரின் தனிமை போக்கும் அந்தக் குழந்தையுடன் விளையாடுவது பொழுதுபோக்காக இருந்தது அவர் களுக்கு தூரத்தே பட்டி வருவது கண்டு அவர்கள் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் போய் விட்டனர். பட்டி சமையலறைப் பக்கமாக வந்து நின்றாள். சிறிது நேரத்தில் ஆசிரியை அங்கு வந்த பொழுது அவளது முகத்தில் கரு மேகங்கள் குடியிருப்பதை கண்டாள் பட்டி
"என் வந்தாய்?" விருப்பமின்றிக் கேட்டாள் ஆசிரியை,
ஜீவநதி

ਯL5 LDਸੁ560 (ਯੰਥ @ নেতা DD5@山 பிள்ளையைப் பார்த்துவிட்டுப் போக நினைத்து
"உமக்குத் தெரியாதா நாம் குழந்தையை எடுக்கும் போதே சொன்னது? குழந்தையை எமது குழந்தையாகத்தான் வளர்க்கப் போகிறோம் உமக்கு : நினைத்த நேரம் வரவோ போகவோ முடியாது என்று 3.
"ஆனாலும் நான் பிள்ளையைக் கொண்டு G3LJITG5 6DJU66b6ODGD LGEğFGFñT. GIFLÖLDIT UTITġ5565) "GÜ போகத்தான் வந்தேன்"
"முடியாது முடியாது, பழகிப்போனால் அது
ਰੰ6060"
"டீச்சர், நான் இனி வரமாட்டேன் டீச்சர் பெற்றதாய் தானே டீச்சர் ஆசை இருக்காதா?
"இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. சரி பரவாயில்லை இதோ இதை எடுத்துக் கொண்டு போ இனி வரவேண்டாம்" என ஆயிரம் ரூபா நோட்டு ஒன்றை பட்டியின் கையில் வைத்தாள். ---
*cé于f arā色 5mā @aā Turó . பிள்ளையைப் பார்க்க வேண்டும்" என்கூறி அந்தப் பணத்தை நிரகரித்தாள் அவள்.
"EHILIPUT60ITGö (SLITUG)(B பிள்ளையைப் பார்க்க முடியாது" எனக் கோபத்துடன் அந்த ஆசிரியை உள்ளே சென்று விட்டாள். 3:
பட்டி ஒன்றும் பேசாது ஒரு ஒரமாக நின்று 6ਲ5T60LT6.
ஆசிாரியத் தம் பதவியரினர் பெரும் செல்வந்தர்கள் என்பது வீட்டைப் பார்க்கும் போதே விளங்கியது. யன்னலில் தொங்க விடப்பட்டிருந்த திரைச்சீலைகள் காற்றில் அசைந்தாடும் போது அதனூடே வீட்டின் உள்ளே போடப்பட்டிருக்கும் பெறுமதி மிக்க தளபாடங்கள் பளிச்செனத்தெரிந்தன. கல்யாணரத்ன சொன்னது உண்மைதான். &ରା । அத்தனையும் ஏழை என் வயிற்றில் உதித்த எனது மகளுக்குத்தானே! என்று எண்ணிய போது ஒரு புறம் சந்தோஷமும், பிள்ளையைக் கொண்டு வந்து கொஞ்சிக் குலாவுவதைக் காணும் போது 305 வகைப் பெறாமையாகவும் இருந்தது அவளுக்கு பிள்ளையைப் பார்க்க விடாதவர்கள் பிள் பெரியவள் ஆகினதற்குப் பிறகு பார்
போகிறார்கள்? அடுத்தவருக்கு அம்மா அப்பா என்று 滚
சொல்லி பெற்றவளையே மறந்து விடமாட்டாளா? என எண்ணிக் கொண்டிருக்கும் போது சமையல்காரி தேநீர் ஒரு கோப்பையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
"உன் பிள்ளை நல்ல அதிஷ்டக்காரி, அதனை கொண்டு வந்த நாளில் மாஸ்டருக்கு இரண்டாயிரம் ரூபாவுக்கு சுவீப் அதிஷ்டம் ஒன்றும் கிடைத்தது" (அன்றைய பெறுமதியில் இரண்டு லட்சம் ரூபா மதிப்புப் பெறும்) என்று பட்டி தேநீர் பருகும் போது வீட்டின்
-இதழ் 50

Page 138
உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சமையல்காரி கூறினாள்.
"ஆ." என்று அதிசயமாக சமையற்காரியை பார்க்கும் போது அவள் தனது ஏனைய வேலைகளைச் செய்வதற்காகச் சென்று விட்டாள். பிள்ளை தன்னிடம் இருந்திருந்தால் அந்தப் பணம் தனக்குத்தானே கிடைத்திருக்கும், பிள்ளை அதிஷ்டக்காரிதான். அது தான் எனக்குப் பிள்ளையைக் காட்ட முடியாது என்கின்றனர் என பட்டி நினைத்தாள்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசிரியர், இங்கே பார் பட்டி நீர் அடிக்கடி பிள்ளையைப் பார்க்க வந்தால் எமது பிள்ளையை வளர்ப்பது மிகவும் சிரம மாகி விடும், அப்பொழுது பிள்ளையை உனக்குத் திருப்பி தரவேண்டி வரும். அப்படியானால் பிள்ளை யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைச் சிந்தித்துப்
பார்?" எனக்கூறி இருபது ரூபாவை அவளுக்குக் கொடுத்தார். அவள் அதனை ஏற்க மறுத்தாள். "எனக்கு காசு வேண்டாம் பிள்ளை தான் வேண்டும்” பட்டி அடம்
பிடித்தாள். மறுகணம், சமையல்காரியை அழைத்து LJU 1960) u Golof)(8u olt (B) (8 LJU-60L ен60L6855 GeFT6öT60TITT eleflrfu JÍT.
சமையல்காரி வருவது கண்டு "ஐயோ என்னைக் கொல்லப் பார்க்கிறார்களே!” என உரக்கக் கத்தியதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களிடம் நடந்த விடயத்தைச் சொல்லி பிள்ளையை வாங்கித் தருமாறு சொன்னாள். ஆசிரியத் தம்பதியினருக்கு அவமானம் தாங்க இயலவில்லை. அவர்கள் சிறிது நேரத்தில் பிள்ளையைத் தூக்கிக் கொண்ட உள்ளே சென்றனர். ஏதொ இருவரும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் சிறிது நேரத்தில் பிள்ளையைக் கொண்டு வந்து பட்டியிடம் கொடுத்தனர். ஆந்த ஆசிரியையின் கண்களில் இருந்து கண்ணிர் வழிந்தோடியது. புலம்பலை நிறுத்திய பட்டி, பிள்ளையைத் துTக் கிக் கொணர் டு திரும் பி நடக்கலானாள்.
ஜீவநதி
 

"நீங்கள் அவசரப் பட்டு @)fluo டீர்கள் அந்தப்பெண்ணை ஏசி விரட்டாமல், இன்னும் கொஞ்சம் அமைதியாகப் பேசி இருந்தால் பிள்ளையை வைததக் கொள் முடிந்திருக்கும் பட்டி சென்றதற்குப் பிறகு ஆசிரியை கண்ணிர் வடித்த வண்ணம் சொன்ன
உண்மையில் அது தவறுத உள்ளத்தை உறுத்தினாலும், தனது தவறைத் ஏற்றுக் கொள்வது பொருத்தமில்லை.
"என்ன பைத்தியம்? பிள்ளையை விட்( போவதாயிருந்தால் நாம் சொன்னவை போதாத மற்றது நாம் இருக்கும் இடத்தை அவள் தெரிந்து கொண்டதன் Långör60TTG) gooit இத்தோடு நின் விடுவாளா என்ன? இப்படி நடந்ததும் நல்லது தான். என்னா இன்னும் பழக்கமானால் எமக்குத்தான் பிரச்சினை" அவர் பெருமூச்சு விட்டபடிே
கூறினார்.
கல்யாணரத்தினவின் வாயும் சரியில்லை. அவ்வளவு சொல்லியும் அவன் அவளுக்கு பாதையைக் காட்டி விட்டானே!" என்று
சொன்ன வண்ணம் கதிரையில் அமர்ந்து கொண்டாள். அழகிய மலர்கள் பூத்துக் குழுங்கும் வீட்டுத் தோட்டத்தைக் கூட அவளால் பார்க்க முடியாதிருந்தது.
"இந்தா பிள்ளை உனது தங்கை" பட்டி பிள்ளையை தனது மகனின் முன்னால்
கொண்டு வந்து வைத்தாள். "ஆ. தங்கச்சி" என மகிழ்ச்சியால் துள்ளிக் வணர் ணம் பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்ததோடு அதனைச் சுற்றி சுற்றி கூத்தாடினான் அவன் பட்டியும் பாட்டியும் அவர்களது செயலைக் கண்டு மகிழ்ந்தனர். 溪缀 சிறிது நாட்களில் அக்குழந்தை அசுத்த மாகத்தொடங்கியது. அச்சிறிய குழந்தை ( யாக இருந்த காலத்தை விட இப்பொழுது கவனிப்பும் குறைந்து விட்டது. ஆண்பிள்ளையும் அடிக்கடி குழந்தையை அடிக்கத் தொடங்கினான். ட்டி பாட்டிக்கும் மீண்டும் அவ்விரு பிள்ளைகளும் சுமையாகத் தொடங்கினார்கள். 鄒
பிள்ளைகளின் தொந்தரவு அதி பட்டி மீண்டும் கல்யாண ரத்னவை Loiré06T60)uj என்றைக்கும் அந்த ஆ fu கொடுத்து வீடும்படி கேட்டுநின்றாள். --------------
நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நீ அங்கே போனது இப்போது விளங்கிறதல்லவா?
இல்லை. நான் கொஞ்ச நாட்களுக்குத்தான் பிள்ளையை அழைத்து வந்திருக்கிறேன்."
" நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள், நான் ஒன்றுக்கும் முன்வர முடியாது" என்று அவள் மீது சீறி விழுந்தார். அந்தப் பிள்ளையை மறுபடி கொடுப்ப
-இதழ் 50

Page 139
தற்கு வேறு ஒருவர் மூலமாக முயற்சித்தபோதும் அந்த ஆசிரியர் தம்பதியினர் மீண்டும் ஏமாறத்தயாரில்லை என்பது தெரிய வந்தது.
பிள்ளைகள், பகல்ப்பொழுது போதாமல் இரவில் கண்விழித்து அழத்தொடங்கினர் அடம் பிடிக்க தொடங்கினர். இதனால் அவளுக்கு தூக்கமில்லா இரவுகள் பல வந்து போனதால் இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளை இறந்து போனாலும் நல்லது தான் என்ற முடிவுக்குக் கூட அவள் வந்தாள். கோபம் வரும்போது அவள் அப்படி நினைத்தாலும் பின்னர் அடிக்கடி இரக்க வேண்டிய நிலை அவளுக்கு ஏற்பட்டது.
இருள்மேகம் சூழ்ந்த ஒரு நாள், நேரகாலத் தோடு பட்டி வீட்டுக்குவந்தாள். அப்பொழுது மகளுக்கு உடம்பு சூடாகி இலேசான காய்ச்சலும் இருந்தது அந்நிலையிலும் அவள் தனது அண்ணாவுடன் உருண்டு புரண்டு விளைாயடிக் கொண்டிருந்தாள்.
பட்டி இரவு சமையலுக்காக கிழங்கு ஒன்றைக் சீவிக்கொண்டிருந்தாள். பாட்டி அடுப்பை மூட்டினாள் மகன் குசினிக்கு வரவே சிறுமியும் அவனுடன் விளையாடுவதற்காக அவனது பின்னால் போனாள் இலேசாக மழைத்தூறல் விழுந்து கொண்டிருந்தது. பட்டி சிறுமியைத் தூக்கி மடியில் இருத்திக் கொண்டு வேலைகளில் ஈடுபட்டாள். என்றாலும் சிறுமி அண்ணனுடன் விளையாடிய வண்ணம் வெளியில் சென்று விட்டாள். அடைமழை பிடித்துக் கொண்டதால் சிறுமி மழையில் நனைந்திருந்தாள். பட்டி துவாயினால் தலையைத் துவட்டி விட்டாள்.
இரவுவேளை காற்றுடன் கூடிய அடைமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறுமியின் உடல் நன்றாகவே மழையில் நனைந்து பாதிக்கப்பட்டு கடும் காய்சலாக மாறியது. இடி மின்னல் வேகம் அவர்களை
ஜிவநதி தனிபிரதி - 60/= ஆண்டுச்சந்:
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தி வேண்டிய
K. Bharaneetharan, Kalai வங்கி மூலம் சந்த i K. Bha
Comm
Neli
A/C No. 8108
ஜீவநதி
 

5 அச்சத்துக்குள்ளாக்கியது. பாட்டியையும், பிள்ளை ) களையும் தவிர வேறு மனித வாசனையே அங்கு இல்லை. சிறுமி படுக்கையில் போட்ட மாதிரியே ) கிடந்தாள். பட்டி,குப்பி விளக்கைத் தூண்டி விட்டு நீண்ட 5 நேரம் விழித்துக் கொண்டிருந்தாள். அவளது உள்ளம் 5 சலனமுற்றிருப்பதை அவள் அறிந்தாள் எல்லோரும் 5 நித்திரை கொண்டதன் பின்னால் உள்ளத்தில் ) பாழடைந்த நிலையில் பல காட்சிகள் தோன்றுவ
தாயிருந்தது. அவள் கண்களை மூடினாள். 5 சற்றுக் கண் அயர்ந்து கொண்டு வரும் பொழுது இரவு பன்னிரண்டு மணி அளவில் ஏதோ ஓர் 5 உணர்வில் கண் விழித்தாள் பட்டி, சிறுமியின் உடல் 5 மரக்கட்டையாய் காணப்பட்டது. கண்கள் விழி திற்நத வண்ணம் மேனோக்கிக் காணப்பட்டது. குப்பி விளக்கின் ஒளியில் கண்ட அந்தக் காட்சியில் தன்னை அறியாமலே உரக்கக் கத்தினாள். அந்தச் சப்தத்தில் பாட்டி விழித்துக் கொண்டாள். மழை காரணமாக அந்த ஒலம், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்குக் கேட்க நியாயமில்லை. பட்டி அழுது சப்தமிட்டபடியே வெளியில் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ஓடிச் சென்று பச்சை இஞ்சி செடி ஒன்றை தோண்டி எடுத்து வந்து தனது வாயில் போட்டுச் சப்பி அதன் சாற்றை சிறுமியின் வாயில் ஊற்ற முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை. சிறுமியின் பற்கள் D பூட்டுப்பட்டுக் காணப்பட்டது. அது அச்சிறுமியின் D துரதிஷ்டவசம்தான்.
என்னதான் செய்ய முடியும்? எமது தரத்துக்கு ஏற்ப எம்மால் முடியுமான சகலதையும் நாம் செய்யவில்லையா? கருமம், நாம் கொடுத்து வைத்தது ) அவ்வளவுதான். பட்டி கண்ணிர் நிறைந்த கண்களுடன் ) பாட்டியின் முகத்தைப் பார்த்துக் கூறினாள்.
5.535T 6) LITLD ா-1000/= வெளிநாடு- S 45 U.S
臀 அனுப்பி வைக்கவும். அனுப்ப பெய்ர்/முகவரி
aham, Alvai North west, Alvai. ா செலுத்த விரும்புவோர் raneetharan
Percial Bank -
ydy Branch )2 1808 CCEYLKLY
135 இதழ் 50

Page 140
வன்மத்தின் வாசனை வீசிய அதிபயங்கர நிகழ்வுகள் குறித்த ஆழமான புரிதல் இன்றி, வணிக வெற்றின் சமன்பாடுகளுக்கு கச்சிதமான கலவையாக தென்பட்டதனால் ஈழத்தின் வலிகள் தமிழ் சினிமா மேய்ப்பர்களின் வாத்சல்யத்திற்கு உள்ளாகின. தமிழர் களின் பண்பாட்டுக் காப்புப் போலிமையின் இறுக்க இடைவெளிக்குள் நுழைந்த உச்ச நிலை மகிழ்நெறிக் கொண்டாட்டமாக சினிமாவே திகழ்கிறது. போர்ச் சூழலில் பன்னாடுகளிலும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் நீர்த்துப் போன உணர்ச்சிகளை உரசிப் பங்காதாயம் தேடும் நுட்பத்தோடு சில தமிழ் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புரையோடிப் போய் சீழ் வடியும் புண்ணை சலன படிமங்களில் நுண் தரிசனமின்றி வெளிக்கொணர்ந்து விழுமிய அந்தஸ்தை அவாவி நிற்கின்றன. உலக சினிமாக்களில் யுத்தம் சார் படைப்புக்களின் வெளிப்பாடுகள் மனித தர்மங்களின் மதிப்பீடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அதிகார அரசி யலின் கோர முகமூடிகளை கிழித்துக் கொண்டிருக்க, ஒற்றைக் சாளரப் பார்வையில் சலவை செய்யப்பட்ட சமரச நிகழ்வுகளையும், எதிரியின் தனித்துவத்தை அங்கீகரிக்காத இனத்தூய்மை மேதா விலாசங்களையும் போரியல் சினிமாவாக முன்னிறுத்து வது கலையின் இருப்பினை கேலிக்குரியதாக்கி விடுகின்றது. சிங்கள சினிமாவில் நிகழ்ந்து வரும் அற்புதங்களை உலக அரங்கில் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழின் மிகை மனோபாவக்காரர்களோ "போர்க் களத்தில் நின்று கொண்டு புல்லாங்குழல் வாசிக்க முடியாது" (படம்-காற்றுக்கென்ன வேலி) என காவிய வசனம் புனைகிறார்கள், ஈழம் குறித்த பாசாங்குத்தன மற்ற படைப்புருவாக்கம் நிகழாத சூழலில், இது வரையான விண்ணான விம்பங்களின் வீயத்தை இக்
ஜீவநதி 136
 

கட்டுரையில் பதிவு செய்ய முயன்றுள்ளேன்.
கருப்பொருளாக, துண்டுக்காட்சிகளாக, வசனங்களாக, பாடல்களாக, பாத்திரங்களாக பல்வேறு பரிமாணங்களில் ஈழத்தின் கவர்ச்சிகரத் துன்பியல் தமிழ் சினிமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்றுக் கென்னவேலி, உச்சிதனை முகர்ந்தால், இராமேஸ்வரம், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுதப் போராட்டம் ஆகிய படங்களில் முதன்மைக் கருவாக ஈழம் குறித்த வெளிப்பாடுகள் அமைந்துள்ளன. நந்தா, தெனாலி, புன்னகை மன்னன், நான் அவனில்லை 2, பில்லா 2 ஆகிய படங்களில் துண்டுக் காட்சிகளாக இடம் பெறுகின்றன. பாலை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் மாறுபட்ட நிகழ் களத்தில் விபரிக்கப் படுகின்றன. 7ம் அறிவு திரைப்படத்தில் வசனங்களாக வணிகமாக்கப்பட்டுள்ளது. குப்பி, குற்றப்பத்திரிகை என்பவற்றில் ஈழ ஆயுததாரிகள் தமிழ் நாட்டில் இந்திய அரசியல் தலைவர் மீது நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல் என்னும் கோணத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. மேற் குறித்த திரைப் படங்களின் அளிக்கைகள் சுவையினைச் சலனப்படுத்தும் எழில் ததும்பும் தருணங்களின் தொகுப்பாக அமையாததால், நமத்துப் போன தீக்குச்சி போல் பலரது ஞாபகப் பரப்பி லிருந்து தூக்கியெறியப் பட்டிருக்கும் என்பதில் ജuഥിൺങ്ങാണു.
1) ஈழம் முதன்மைக் கருவாக உள்வாங்கப்பட்ட திரைப்படங்கள்
(அ) காற்றுக்கென்ன வேலி பரந்தன் தாக்குதலில் காயமடைந்த மணிமேகலை தமிழகத்தில் சிகிச்சை பெறுகிறாள். தகவல் அறிந்த
இதழ் 50
¬ܐ .

Page 141
இ
காவல் துறையினர் மருத்துவரான சுபாஸ் சந்திர போஸை (Uரீமான்) கைது செய்து "பொலிஸ்" பாணியில் விசாரிக்கின்றனர். காவல் துறையினரிடம் பிடிபடாது மணிமேகலை இலங்கைக்கு புறப்படுவதோடு படம் முடிகிறது. "அண்ணல் காந்தியே இப்ப உயிரோடு இருந்தாலும் நான் என்ன செய்தனோ அதைத் தான் செய்திருப்பாரு" என மருத்துவர் கூறும் அரை வேக்காட்டு வசனங்கள் உட்பட பல்வேறு காட்சிகளை இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் பலவீனத்தோடு பதிவு செய்துள்ளார்.
சங்கீத ஆசிரியை (குஷ பு) பாரதியார் பாடலைப் பாடும் போது பாடல் எழுதப்பட்ட காகிதம் காற்றில் பறந்து போராளி ஒருவனின் (அருண் பாண்டியன்) கரங்களில் சிக்க, அவன் தொடர்ந்து பாடுகின்றான். போராளி யின் பாடும் திறனை சங்கீத ஆசிரியை பாராட்டுகிறார். "எங்களுக்கு பாடுற THANGARAJ துக்கு நேரமில்லை" என அவன் குறிப் பிடுவது நெருடலாகவே அமைகிறது. மெல்லிசைப் பாடல்களின் வழியே கட்டியெழுப்பப்பட்ட நிறுவனமொன்றின் உறுப்பினர் அனைவரையும் பொதுமைப்படுத்திப் பேசுவது பொருத்தமாக அமைய GlobaOGO,
காயம்பட்ட காலை வெட்டி அகற்ற வேண்டாம் என மணிமேகலை பிடிவாதம் கொள்கிறாள். எரிச்சலூட்டும் தர்க்க விவாதம் ஒன்றையும் முன் வைக்கிறாள். ஈழத்தில் இருந்த காலத்தில் போராளிக்கு அடைக்கலம் வழங்கியதால் சங்கீத ஆசிரியை படையினரின் வன்புணர்வுக்குள்ளாகி தற்கொலை செய்ததாகவும் உடன் இருந்த தன்னால் ஓடக் கூடியதாக இருந்ததால் தப்ப முடிந்ததாகவும் கூறுகிறாள். மாற்றுத் திறனாளியான ஆசிரியையால் செயற்கைக்காலோடு ஒடமுடியவில்லையாம் மணிமேகலை ஒடித்தப்புவதே யதார்த்தத்துக்கு முரணானது. நிஜமான கால் இருந்திருந்தால் ஆசிரியை தப்பியிருப்பார் என நியாயப்படுத்துவது எவ்வகையில் ஏற்புடையது? மேலும் தமிழ் சினிமா கற்புக்கோட்பாட்டிற்கு கொடுத்து வரும் அழுத்தமே வன்புணர்வின் பின்னராக தற்கொலைக்கு முகாந்திரமாகியுள்ளது. இத்தகைய அனுதாபம் சம்பாதிக்கும் காட்சிகளை விட்டு விடுதலையாதல் சாத்தியமில்லைப்போலும்
சேதுமாதவன் என்ற அமைதிப்படை வீரர் ஈழத்தை சகோதர பூமியாகக் கருதி() கண்ணிவெடியை அகற்றும்போது நிகழும் விபத்தில் பார்வையினை இழக்கிறார். விழிப்புலனற்றதால் அத்தை மகளும் மணம் செய்ய மறுத்து விடுகிறாள். இச்செய்தியை அறிந்த மணிமேகலை விசும்பத்தொடங்குகிறாள். "பயங்கரவாதி
ஜீவநதி
 

யில்லை போராளி" என்றெல்லாம் "பஞ்ச் டயலொக்" புனைந்து விட்டு ஒட்டுமொத்தமாக கொச்சைப்படுத்தி விடுகிறா, மணிமேகலையினின் விசும்பல் ஒரு தனி மனிதனுக்கு நிகழ்ந்த விபத்துக் குறித்த மனிதாபிமான அழுகை அல்ல. இந்திய அமைதிப்படை மீதான போராளிகளின் தாக்குதல் நியாயமற்றது என்னும் அடிப்படையில், அந்தப் பாவங்களுக்கு நிகழ்த்தும் கழுவாயாகவே கண்ணிர் சுரக்கிறது. போராட்டத்தில் முதன்மைப் பிரதிநிதிகளுக்கு உரிமமான காதல், இதுநிலை ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற தவறான புரிதலையும் படம் உருவபன்ன முனைகிறது.
"காற்றுக்கென்ன வேலி"யில் இத்தனை அபத்தங்களுக்கிடையிலும் நேர்த்தியான சில காட்சிகள் இருக்கவே செய்கின்றன. சிறுமியின் உல்லாச உலகின் குறியீடாக வரும் ஊஞ்சலும், போராளிகளின் நிர்ப்பந்தத் தலை முழுகலின் பின் ஊஞ்சலில் ஆயுதம் ஆடும் காட்சியும் விதந்து பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல்வாதியிடம் வெளிப்படும் போராளிகள் குறித்த தரிசனமும் சிறப்பாகவே அமைந்துள்ளது.
ஆ) உச்சிதனை முகர்ந்தால்
"காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் மற்றொரு படைப் பே உச்சிதனை முகர்ந்தால் இலங்கை மட்டக்களப்பு பிரதேசத்தில் படையினரின் குழுவன்புணர்வால் கர்ப்பமடைந்த 13 வயதுச் சிறுமியின் கருக்கலைப்பிற்கு உள்ளூர்க் கிராமிய வைத்தியம் பலனளிக்காத சூழலில்
D. ELOİT GÜT இ  ைச யி ல்
journey of an eternai
@
Ø_3ණීරනණං"
முகர்ந்தால் டு
தாயாருடன் சட்டவிரோதமான முறையில் தமிழகம்
செல்கிறாள். பேராசிரியர் நடேசன் (சத்யராஜ்) அடைக்கலம் கொடுக்கிறார். தந்தை மரணம், தாய்
இதழ் 50

Page 142
காணாமல் போதல், நடேசனின் மாமியாரின் வெறுப்பு, ஆரோக்கியமற்ற மேனியால் வயிற்று உபாதையைப் பொறுத்துக் கொள்ள முடியாததிருத்தல், H.I.V தொற்று என்று அவலங்கள் வியூகம் வகுக்க ஈற்றில் மரணத்தைத் தழுவுகிறாள். சிறுமியான புனிதவதியை (நீநிதிகா) மையப்படுத்தி துயரங்கள் தொடர்ந்து குவிவது கதையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது. அதேபோல அனைத்து கதாபாத்திரங்களும் (நடேசனின் மாமி யாரைத் தவிர) புனிதவதியை அதீத வாஞ்சையோடு அணுகுவதும் இயல்பாக இல்லை.
பேராசிரியர் நடேசனின் பாத்திரப் படைப்பு சீமானை நினைவுபடுத்துகிறது. அதே நேரம் சீமான் காவல்துறை அதிகாரி வேடத்தில் வருகிறார். புனிதவதியின் சட்டவிரோத வருகையினை அறிந்த பின்பும் அமைதியோடு இருக்கிறார். புனிதவதி மீது அளவு கடந்த அன்பினை பொழிகிறார். இயக்குனரைப் பொறுத்தவரையில் அவர் "சாள்ஸ்" என்னும் பொலிஸ் அதிகாரி இல்லை."அக்கினிப்புயல்" சீமான்தான்.
புனிதவதி புத்திக்கூர்மையோடு உரையாடு கிறாள். "பதுங்கு குழிக்குள் நிலவொளியில் புத்தகம் படிக்கணும்" எனப்பாடுகிறாள். நடேசனின் மனைவியின் (சங்கீதா) வயிற்றிலுள்ள குழந்தையை கற்பனையில் வரைகிறாள். இருந்தபோதும் அறிவு வளர்ச்சியடையாத மழலையாகவே சில இடங்களில் சுட்டப்படுகிறாள். பெண் போராளிகளோடு பின்வருமாறு உரையாடுவது பாத்திர முரணை உணர்த்துகின்றது.
"இன் டைக்கு எங்கட வீட்டில சாப்பிட வாஹீங்களா?"
"எங்கள சாப்பிடக் கூப்பிட நீங்க யாரு?" "எங்களகாப்பாற்றசண்டைபிடிக்கநீங்கயாரு?" "எங்களுக்கு சாப்பிடுறதுக்கு நேரமில்லை" "அப் ப உங்களுக்காக வேற ஆக்கள் FITIĊI L 5(B6) JITFJU5GITT?"
பாதிப்படத்திலேயே முடிவு தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் அகன்று விடுவதோடு, புனிதாவின் மரணம் பார்வையாளனிடம் சிறு சலனத்தைக் கூட நிகழ்த்தாது போய் விடுகிறது.
பாடற்காட்சிகள் படத்திற்கு பெரும் பலவீன மாக அமைந்துள்ளன. பாலியல் வன்முறையின் போதும் பாடல் இடம்பெறுவது அக்காட்சியின் அழுத்தத்தை சிதைத்து விடுகிறது. "சுட்டிப்பெண்ணே பாடலில் பெண் போராளிகளை உடற்பயிற்சி நடனம் புரிய வைக்கும் இயக்குனரின் மேதாவிலாசம் அருவருப்பிற்குரியது.
புனிதாவின் தந்தை மீது நிகழ்த்தப்படும் வன் மத்தில் சிறு தீவிரத்தை உணரமுடிகிறது. தற்கொலைப் போராளியின் பிரிவுநேர முகபாவம், திருநங்கை குறித்த காட்சிகள், இனவாதங் கடந்த புனிதவதியின் சிசு மீதான பற்றுதல் போன்றவற்றில்
ஜீவநதி -188.

இயக்குநரின் ஆளுமை வெளிப்படுகின்றது. நான் வன்னிப்பிரதேசப் பாடசாலை ஒன்றில் 13 வயதுப் பிரிவினருக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். விமான இரைச்சல் கேட்டது. மாணவர்களின் விழிகளில் மிரட்சி தெரிந்தது. பதற்றமடைந்தனர். எனினும் மறுகணமே யுத்தம் முடிவுற்ற சூழலை உணர்ந்து இயல்பிற்கு திரும்பினர். "உச்சிதனை முகர்ந்தால்" படத்தில் புனிதவதியிடமும் இப்பண்பு வெளிப்படுகிறது. மிகைப்படுத்தலை நீக்கிவிட்டுப் பதிவு செய்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
இ) இராமேஸ்வரம்
யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல் என்ற உப தலைப் போடு "இராமேஸ்வரம்" என்ற தலைப்பு திரையிலே தோன்ற நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஈழத்தவரை 'இராவணன்" என்று ஏசிவிட்டு, பார்வை யாளனை கும்பகர்ணனாக்கும் பெருமுயற்சியோடு அதரப்பழசான காதல் கதையினை நகர்த்தி வெறுப் பேற்றிப்படம் முடிவடைந்தது. ဗွို
யாழ்ப்பாணம் நல்லூரில் வசிக்கும் கனகசபை சிவசங்கரன்பிள்ளை (மணிவண்ணன், பேரனான ஜீவனுடன் (ஜீவா) இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதியாக வருகிறார். ஊர்ப் பெரும்புள்ளி (லால்) சீதையம்மன் கல்லறைக் கோயிலில் தஞ்சமளிக்கிறார். தஞ்சங் கொடுத்தவரின் தங்கையான வசந்திக்கும் (பாவனா) ஜீவனுக்குமிடையே வளரும் காதல் எவ்வாறு வெற்றியடைகிறது என்பதே படத்தின் கதையாகும்!
யாழ்ப்பாண அகதியான ஜீவன் "பொலிஸ் ரேசனை" அடித்து நொருக்குகிறான். நம்ப முடிகிறதா? இயக்குனரைப் பொறுத்தவரையில் அவன் Mass Hero! இயக்குனர் அமைத்த "செட்டுக்குள் துணைத் நடிகர்கள் அடிவாங்கி விழுகிறார்கள். அவ்வளவு தான் ஈழ அகதி ஒருவருக்கு இராமேஸ்வரத்தில் உறக்கம் வரவில்லை. "கண்ணி வெடிச்சத்தத்திலும் துவக்குச் சூட்டுச் சத்தத்திலும் உறங்கிப் பழகிப்போச்சு" என்று கூறிச் சிரிக்கிறார். என்ன கொடுமை? மயான தேச வாழ்வின்
இதழ் 50
ܥ3
s

Page 143
கணங்களை இப்படியாமலினப்படுத்துவது?
"ஒரு நாள் ஒரு பொழுத கூட நீங்க தாங்க மாட்டீங்க. எங்க வாழ்க்கை அவ்வளவு கொடுமை யானது"
TVயிலயும் பேப்பரிலயும் பார்க்கிற மாதிரி இல்ல வந்து அனுபவிச்சாத்தான் தெரியும்"
நாயகிக்கு Hero, class"() எடுக்கும் காட்சியில் - பரவாயில் லை! இருபது விழுக் காடாவது இயக்குனருக்கு தெரிந்திருக்கிறதே என வியக்க, நாயகியின் பதிலில் அனைத்துமே அடிபட்டுப் போகிறது! சிறிய கத்தியால் கையை கிழித்துவிட்டு "எனக்கு வலிக்காது. பயமில்லை. உங்க ஊரில குண்டு வெடிச்சா, சண்டை நடந்தா பயப்படாமல் இருப்பேன்" என்கிறாள். இதைவிட யுத்தபூமி குறித்த மோசமான புரிதல் யாரிடமாவது இருக்குமா? "துக்கத்தையும் வேதனையை யும் அனுபவிச்ச எனக்கு வசந்தியோட காதல் ஆறுதலாக இருந்திச்சு" ஜீவனது காதலின் உரைகல்)
எ) கன்னத்தில் முத்தறிட்டால்
இலங்கை மாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த திலீபனுக்கும் சியாமாவுக்கும் திருமணம் நிகழ்கிறது. காதல் வாழ்வில் போர் குறுக்கிட துவக்குச் சத்தம் சப்பாத்துச் சத்தமும் கேட்கக் கூடாது" என்று முடிவெடுத்த திலீபன் வனம்புகுகிறான். யுத்த சூழலால் இராமேஸ்வரம் செல்லும் சியாமா(நந்திதாதாஸ்) முகாமில் குழந்தை
ஒன்றினைப் பெற்றெடுத்து, அங்கேயே விட்டுவிட்டுத் தாயகம் திரும்புகிறாள். எழுத்தாளர் இந்திரா(மாதவன்) அக் குழந்தையை தத் தெடுத்து வளர்க்கிறார்.
குழந்தையை தத்தெடுப்பதற்காகவே நிஜ இந்திராவை (சிம்ரன்) திருமணம் செய்கிறார். சிறுமியின்
ஒன்பதாவது பிறந்த நாளின் போது தத்தெடுத்த உண்மையை அவளிடம் தெரிவிக்கின்றனர். சிறுமியான அமுதா(கீர்த்தனா) தாயைப் பார்க்க வேண்டுமென அடம்பிடிக்க இலங்கை வருகின்றனர். ஹெரால்ட் விக்ரமசிங்கே(பிரகாஷ்ராஜ்) ஆற்றுப்படுத்த பல இடர்களைக் கடந்து யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் சந்திப்பு நிகழ்கிறது. தாயாரான சியாமா
போராளியாக காணப்படுகிறார். தேசத்தில் அமைதி
திரும்பிய பின் மீள வருமாறு கூறி விடை கொடுத்து
அனுப்ப படம் முடிகிறது.
ஜீவநதி- -
 
 

ஈழத்தினை முதன்மைப் படுத்திய படங்களில் ஆறு தேசிய விருதினைப் பெற்ற படமாக காணப்படுகிறது. இந்திய சினிமா வின் முதன்மை இயன்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் மணி ரத்தினத்தின் படைப்பாக அமை கிறது. எனினும் முற்குறிப்பிட்ட LJ L Ibij 35 60 GT U (3 LJ IT Gl) மேம்போக்கான பார்வைத் தளத்தினைக் கொண்ட முயற்சியெனத்துணிந்து கூறலாம்.
ஆயுத வியாபாரிகளாலேயே ஈழப்போர் நிகழ்வதாகவும், முன்னேறிய நாடுகளின் ஆயுதப் பரிசோதனை வேட்கையின் பிரதிமையே யுத்தம் எனவும் சொதப்பலான விடயங்களை உரைத்து வரலாற்று அபத்த வாதங்களின் வழியே நிஜங்களை மழுங்கடித்து விடுகிறார். "எல்லா ஆயுதங்களையும் கடலில் தூக்கிப் போட்டால் அமைதி உருவாகும்" என்று சிறுபிள்ளைத் தனமான தீர்வொன்றையும் கூறுகிறார். கரந்தடிப்படை அமரில் வெற்றிதோல்வி முடிவிலிப் பெறுமானத்யுடையதென தீர்க்கதரிசனமற்று கருத்து ரைக்கிறார். சமகால சூழலில் அவரது கருதுகோள் பொய்ப்பிக்கப் பட்டுள்ளது.
யுத்த இடப்பெயர்வின்போது ஹெரால்ட் விக்ரமசிங்க ஏதோ ஊர்வலக் கலவரத்தில் தேடுவது போல மிக எளிதாகவே இந்திரா குடும்பத்தினரைக் கண்டுபிடித்து விடுகிறார். பகடிக்குரிய இந்நிகழ்வு இடப்பெயர்வுக் காட்சியின் உயிர்ப்பினைச் சிதைத்து விடுகிறது. அதே போல முதல் நாள் தாக்குதல் நடந்த பூங்காவில் மறுநாள் சந்திப்பு நிகழ்வது போர்க்கால யதார்த் தத்திற்கு முரணானது, "மரணத்துள் வாழ்வோம்" தொகுப்பிலிருந்து சண்முகம் சிவலிங் கத்தின் கவிதை ஒன்றும் எடுத்தாளப்பட்டுள்ளது.
உ) ஆயுதப்போராட்டம்
3b5uJIT65ci) go airGIT Field Weapon Factory
இல் ஊழியம் புரியும் ஜெய்(ஜெய் ஆகாஷ்) தனது குழுவினரோடு இலங்கை வருகிறார். நிகழ்ந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்திற்கு FWF ஆயுதம் வழங்கியதால் ஜெய் உடன் வந்த குழுவினர் போராளிகளால் கொல்லப்படுகின்றனர். ஜெய் தன் காதலியோடு தப்பி விடுகிறார். FWF தமிழர்களைக் கொல்ல ஆயுதம் வழங்கியதை அறிந்து கவலை கொள்கிறார். கடலில் வழிமறிக்கும் போராளியிடம் (போராளியும் ஜெய் தான்! - இரட்டை வேடம்) யுத்தத்தை நிறுத்த தமிழகத்தில் மாணவர்கள், அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் செய்த அரும்பணிகள் குறித்து சொற்பொழிவு ஆற்றுகிறார். 18 ஈழ அபிமானிகளின்
39 இதழ் 50

Page 144
தீக்குளிப்பை ஆதாரங்காட்டி இந்தியாவையே.(1) புனிதப்படுத்த முயல்கிறார். நாயகியின் Walkman Tape இல் "தோல்வி நிலையென நினைத்தால்." என்ற சினிமாப் பாடல் ஒலிக்க "உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரணகளமாய்ப் போச்சு" என்ற வடிவேலின் வசனம் ஏனோ நினைவுக்கு வந்தது. Tapeஐ தானமாகப் பெற்ற போராளி இருவரை யும் தப்பிச்செல்ல அனுமதிக்கப் படம் முடிகிறது.
ஈழத்தை மையப்படுத்திய திரைப்படங்களில் அதி உச்ச கோமாளித்தனங்களின் வெளிப்பாடாக "ஆயுதப்போராட்டம்" திகழ்கிறது. படத்தின் இறுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தினரின் உண ணா நோன் புக் காட்சி இடம்பெறுகிறது. "உரிமைகளுக்கு உத்தரவாதம் இல் லாத போது தீவிரவாதம் பிறந்தே தீரும்" என்ற கமலஹாசனின் பேச்சும் பதிவாகி யுள்ளது. சுய முரண் பாடுகளின் தொகுப் பாகத் தகழி கறார் கமலஹாசன், "குருதிப்புனல்" திரைப் படத்தில் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார். "மெளனத்தின் வலி நூலில் ஈழக்கவிதை புனைந்தார்.
காக்க ஒரு கனக (ஏ.கே) 47 நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம் தோற்கவும் அதே கண நேரம் தான் ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த காயம் தொட்டுக் கையை நனைத்து விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்.
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து மாட்டுத் தோலின் தாய் மண் அறைபட பூட்ஸ்பிக் கால்களால் கடந்தனர் பகைவர் விட்ட இடத்தில் கதையைத் தொடங்கச் சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும் அதுவரை பொறுத்திருதாயே, தமிழே உதிரம் வடியும் கவிதை படித்து காணாமல் போகும் படப்பிரதிகள்" என்று தன் பங்கிற்கு எழுதிய பேனாவின் மூடியைப் பொருத்திவிட்டு, A Wednesday படத்தை
ஜீவநதி- -140
 
 

நகலாக்கம் செய்து "உன்னைப்போல் ஒருவனில்" திரும்பவும் தீவிரவாதம் குறித்துப் பேசினார். "2 GörgogOTŮ GUTC) ஒருவனில் தீவிரவாதிகளுக்கு எதிராக சீனிவாச ராமானுஜன் நிகழ்த்துவது ஹீரோயிசம் என்றால் அரச தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு என்ன பெயர்? இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதம் வேறுபட்ட அர்த்தத்தினைத் தருவதாக கமலஹாசன் அறிய வில்லையா? செப்ரெம்பர் 11இற்கு பின்பு அரசு சாராத ஆயுதக் குழுவினர் அனைவரது செயற்பாடும் தீவிரவாதந்தானே? கமலஹாசன் போன்ற நடிகர்களின் பேச்சை ஆதார சுருதியாக அவாவும் "ஆயுதப் போராட்டம்" அபத்தத்தின் உச்சமாக அமைந்ததில் ஆச்சரியமேதும் இல்லை மேலும் உன்னைப்போல் ஒருவனில் சீனிவாச ராமனுஜன் அரசுக்கெதிராக நிகழ்துவதும் தீவிரவாதம் தான் தீவிரவாதத்தை எவருமே ஆதரிக்கத் தேவையில்லை. ஆனால் அதன்
அடிப்படையினை தெளிவாகப் புரிந்து கொள்வது
மிகமின அவசியம்,
2) ஈழத்தின் துன்பியல் துண்டுக்
5TL flgfaÜ g) GTGITIä5LL JL "L
திரைப்படங்கள்
அ0ருந்தா
இயக்குனர் பாலாவின் நந்தாவில் நாயகி ஈழத்து அகதியாக வருகிறாள். குழந்தை குட்டிகளுடன் சிலோனிலிருந்து வந்தோர் நடுக்கடலில் தத்தளிக்கும் தகவலறிந்து பெரியவர்(ராஜ்கிரண்) படகேறிச் சென்று இராமேஸ்வரம் அழைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் சூத்திரத்திற்கு அமைவாக அகதியான கல்யாணி(லைலா) பெரியவரின் அடியாளான நந்தாவை (சூர்யா) காதலிக்கிறாள். இலங்கைப் பிரச்சினையில் ஆதாயம் தேடும் தரகரான அரசியல் வாதி ஒருவரையும் படம் வெளிக்காட்டுகிறது. ஈழ யுத்தத்தின் கோர முகத்தினை வானொலிச் செய்தி யூடாக பின்வருமாறு பதிவாக்கியுள்ளார்.
"இலங்கை மட்டக்களப்பிலுள்ள கிரான்குளம் இராணுவமுகாம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை விமானப்படை விமானங்கள் கழுவாஞ்சிக் குடி, அக்கரைப்பற்று, திருக்கோயில், வீரமுனை, விநாயகபுரம் ஆகிய இடங்களில் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இதனால் பெரும்பாலான வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் சேதமடைந்தன. நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தோர் மட்டக்களப்பு கல்முனை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்."
இதழ் 50

Page 145
இ
※s
ஆ) தெனாலி
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல ஹாசன் யாழ்ப்பாணத் தமிழ் (1) பேசி நடித்த படம். அச்சமயமான அதிர்வுகளால் மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை "தெனாலி கட்டவிழ்க்க முயன்றுள்ளது. விசரன், ஒமோம், குசினி, மனிசி, இஞ்சாருங்கோ என யாழ்ப்பான சொற் களின் பரவுகையினை வசனங் களில் அவதானிக்க முடிந்தாலும், வட்டார மொழி உச்சரிப்பில் "படம்" சற்றே சறுக்கி விடுகிறது. ஈழத்தில் நிகழ்ந்த போர் AUDIO AL/ வன்முறையில் தாயார் படையினரால் வன் {{M o புணர்வுக்கு உள்ளாக, தந்தை படுகொலை செய்யப்பட நாயகன் உளப்பாதிப்பிற்கு ஆளாகின்றான். நாயகனின் சிறுபருவத் தில் நடந்த இச்சம்பவத்தில் படையினர் அவனது தலையினைக் கல் லிலே மோதியதால் மனநிலை பிறழ்வுக்குள்ளாகிறான்.
இ) நான் அவனில்லை - உ
இலங்கையைச் சேர்ந்த மகா (சங்கீதா) புலம்பெயர் தேசத்தில் ராஜ் என்ற இளைஞனைக் காதலித்து மணம் செய்கிறாள். இலங்கையில் உறவுகள் படும் துன்பங்களை இறுவட்டு ஒன்றைப் பார்த்து அறிந்த பின், இருவரும் மருத்துவப் பணியாற்றத் தாயகம் விரைகின்றனர். ராஜ் தனது அண்ணனிடம் பணத்தைக் கடனாகப் பெறுகிறான். மகனான ச ஞ சுவை தந்தையிடம் ஒப்படைத்து செல்கிறான். ஈழத்தில் குண்டு வெடிப்பில் ராஜ் கொல்லப் பட, மகனின் மரணத்திற்கு மகாவே காரணமெனக்கூறி "சஞ்சுவை" மீள உப்படைக்க ராஜின் தந்தை மறுத்து விடுகிறார். நீதிமன்றமும் அவருக்கு ஆதரவான தீர்ப்பினையே வழங்குகிறது. ராஜின் அண்ணன், பணத்தை வட்டியோடு கொடுத்தால் குழந்தையை மீளளிக்கச் சம்மதிக்கிறான். மகாவால் விபத்தொன்றி லிருந்து காப்பாற்றப்பட்ட நன்றிக்காக நாயகன்(ஜீவன்) பிறரை ஏமாற்றி உழைத்த பணத்தை மகாவின் வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்ய, மகாகுழந்தையைமீட்கிறாள்
G) ÜĪGõGoar - 9. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வரும் பில்லா(அஜித்) நம்பகத் தன்மைக்கு முரணான சாகசங்களைப் புரிந்து மாஃபியாக் கும்பலின் தலைவனா கிறான். "தீவிரவாதிக்கும் போராளிக்கும்
 
 
 

ஒரே ஒரு வித்தியாசம் தான் வெற்றி "ஜெயிக்கிற | வரைக்கும் தீவிரவாதி. ஜெயிச்சிட்டா போராளி என்று
பில் லா பேசும் வசனங்களில் ஈழப் போர்"
எதிரொலிக்கிறது.
0 ) {qগেগোতে)60 toগারোকোঁ சேது வின் (கமலஹாசன் ) நடனப்பள்ளியில் கற்கும் துரைசிங்கம் என்ற இலங்கை அகதியால் ஈழத்துத் துன்பங்களின் நினைவின் துரத்தலால் sk&t: நடனத்தோடு ஒன்றிப்போக முடிய வில்லை. புதிதாக நடனப்பள்ளியில் ܬܪܢܓ, * ILL ALAY, இணைந்த மாலினி(ரேவதி) "அனே " " தெய்யோ" என்ற வார்த்தையை உச்சரிக்க, தமிழினத்தை அழிக்கும் சாதியில் ஒருத்தி என துரைசிங்கம் மாலினி மீது வெறுப் பினை வெளிப் படுத்துகிறான். சம்பந்தப்பட்ட இடத்தில் அரசியலைக் வராதே" என சேது அறிவுறுத் துகிறான் துரைசிங்கத்தின் உணர்வுகளை புரிந்து ஐ கொள்கிறாள். ஆனாலும் துரைசிங்கம் மாலினியை கடத்தி சென்று சித்திரவதை செய்ய முயல, தனிப்பட்ட முறையில் எந்தச் சிங்களவர் மீதும் எங்களுக்குக் கோவம் இல்லை" என அகதிகளில் ஒரு வராக கவிஞர் சிலோன விஜேயேந்திரன் அவளை விடுவிக் கிறார். எனினும் காழ்ப்புணர்வின் உச்சத்தில் இறுதிக் காட்சியில் காதலர்களான சேது மாலினியின் மரண த த ல து ைர சரிங் கமு ம பங்காளியாகின்றான். (80களில் பலாலியிலிருந்தான யாழ் மக்களுக்கான ஒளி பரப்பில் அதிக தடவைகள்
ஒளிபரப்பப்பட்ட படம்)
3) மாறுபட்ட தளத்தில் ஈழத்தைப் பதிவு செய்த படங்கள்
அ0 ஆயிரத்தில் ஒருவன்
கி.பி. 1279இல் தஞ்சாவூரில் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே போர் நிகழ்கிறது. பாண் டியரின் குலதெய்வச் சிலையோடு சோழர்குல இளவரசன் தீவொன்றுக்கு தப்பிச் செல்கிறான். சோழரின் இருப்பிடத்தை அறிய முடியாமல் பாண்டிய பரம்பரை நீண்ட காலம் தவிக்கிறது. சமகாலத்தைச் சேர்ந்த அனிதா பாண்டியன் என்ற பெண்,
65D 50

Page 146
தமது பரம்பரை சார் அரச ஊழியர் உதவி யோடு கூலியாட்களையும் அழைத்துக் கொண்டு தீவினை நோக்கிச் செல்கிறாள். சோழர்களின் பொறிகளைக் கடந்து சோழ குழுமத்தை முற்றுகையிட்டு நவீன கருவிகளோடு போர் தொடுத்து சோழர்களை சிறைப்பிடித்துச் சித்திரவதைக்குள்ளாக்கு கின்றனர். சோழ மன்னன் மடிய, சோழ இளவரசன் தப்பித்து விடுகிறான். இயக்குனர் செல்வராகவனின் இருண்மை சுவறிய படைப்பாக கருதப்பட்டாலும் சில காட்சிகளில் ஈழம் குறித்த குறியீட்டுப்படிமங்களை அவதானிக்க முடிகிறது.
(9) Uggo) Go தமிழ்ப் பெருமிதத்தின் பெருவெளியில் போரியல் சூட்சுமங்களின் வகிபாகத்துோடு தொன்ம வாழ்வியலின் பதிவை சமகால நிகழ்வின் குறியீட்டு அளிக்கையாக "பாலை" திரைப் படம் பேச எத்தனித்துள்ளது. எனினும் அகலித்த அனுபவக் கோவையாக அமை யாமல் பிசுபிசுத்த காட்சிப் படிமங்களாகவே காணப்படுகிறது.
பழங்காலத்தில் "ஆயர் குடி என்ற பகுதியில் தமிழ் பேசும் குழுமம் வாழ்ந்து வருகிறது. வந்தேறு குடிகளான பிறமொழி யாளர்களால் ஆயர்குடி தீக்கிரை யாகிறது. தமிழர்கள் பாலை நோக்கி புலம்பெயர்ந்து முல்லைக்குடியில் வாழ்வைத் தொடர்கின்றனர். பாலையின் வரட்சி ஜீவிதத்தை கேள்விக்குறியாக்க, இழந்த ஆயர் குடியை மீட்கப் போர் தொடுக்கின்றனர்.
காயாம்பூ(ஷட்மு) என்ற தமிழ் மறத்தி எழுதி வைத்த ஒலைச்சுவடியின் கதையாக படம் விரிகிறது. "பிழைப்போமா? அழிவோமா? என்பது தெரியாமல் எங்கள் இனத்தின் வரலாற்றை எழுதத் தொடங்கினேன்" என ஆரம்பிக்கிறாள் படம் பின்வருமாறு முடிவடைகிறது. 'காயாம்பூவின் ஒலைச்சுவடியில் தரலவர் விருத்தி ரனுக்கு என்னாச்சு என்ற எந்த விபரமும் இல்லை. கடைசிப்பக்கத்தில் இவ்வாறு சொல்கிறாள் - நீங்கள்
ஜீவநதி 14:
 
 

வாழும் ஒவ்வொரு அடி மண்ணுமு உங்களுக்குக் கிடைப்பதற்காக உங்கள் முன்னோர்கள் போராடி யிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
இயக்குனர் செந்தமிழன் பழந்தமிழ் வாழ்வின் பக்கங்களை அற்புதமாகப் பதிவு செய்யத் தவறி விட்டார். திருமணத்தில் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துதல் உட்பட பல காட்சிகள் சொதப்பல் ரகம் படத்தில் "ஈழம்" குறியீடாகியுள்ளது. --
4) ஈழத்தின் துன்பியலை வசனங்களில் வெளிப்படுத்திய படம்
ஏழும் அறிவு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் போதிதர்மன் பற்றிய வரலாறும் புனைவும் அத்வைதமான பின் புலத்தில் இனப் பெருமிதத்தினை இயங்குதளமாகக் கொண்டு புலமைப்பகிர்வின் பூமராங் விளைவினை வெளிப்படுத்துவதாக "ஏழாம் அறிவு" திரைப்படம் அமைந்துள்ளது. தமிழ் பெளத்தனான போதி தர்மனிலிருந்து பெளத்தத்தைப் புறந்தள்ளிவிட்டு இனக் கர்வத்துள் கரைந்து பார்வையாளரை சொப்பன சஞ்சாரத்திற்கு அழைக்கிறது. இறுதிக்காட்சியில் ஆயிரக்கணக்கான அபூர்வ நூல்கள் இருந்த யாழ்ப் பாண நூலகத்தைப் பேரினவாதிகள் திட்டமிட்டு எரித்த வரலாற்றினை வசனமொன்றில் வெளிப்படுத்தி யிருக்கிறது.
நாயக ஒனு க கு ம (கா யா) நாயகிக்கும்(ஸ்ருதி) இடையே நிகழும் உரையாடல் ஒன்றில் (வணிக நோக்கிலான திணிப்பாக) ஈழம் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.
நாயகி - "வீரம், வீரம் என்று தானே சண்டை போட்டோம் நம்ம பக்கத்து நாட்டில. ஜெயிக்க முடிஞ்சுதா? செத்துத் தானே போனாங்க"
நாயகன் - "வீரத்துக்கும் துரொகத் திற்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ. ஒரு தமிழனை 9 நாடுகள் சேர்ந்து கொல்வது வீரம் இல்ல துரோகம்" ン
இந்திய தேசியப்பற்று என்ற வட்டத்தில் இறுதியில் படம் சுருங்கி விடும்போது மேற்குறித்த வசனம் வலுவிழந்து போகிறது.
5) திரையிசைப்பாடல்களில் ஈழம் குறித்த பதிவுகள் காலத்தால் அழியாத ஜீவிதத்தன்மையோட சில திரையிசைப்பாடல்கள் திகழ்ந்தாலும் சமீப காலப் பாடல்களின் ஆயுள் அற்பமாகவே தென்படுகிறது.
இதழ் 50

Page 147
ܓܵܘܵ
உலகத்தரமான இசை, ஆத்மாவை வருடும் குரல் என்பன ஊட்டமாக அமையும் பட்சத்திலும் நோமிகு சொற்களின் அடுக்காகவே பாடலின் வெளிப்பாடு காணப்படுகிறது காமத்தின் உச்சம் தணிக்கைக்குப் பலியாகி விடுவதால் அதற்குச் சமாந்தரமான விரசத்தை வார்த்தைக் கோலங் களில் வெளிக் கொணர இயக் குனர் விரும் புகலிறார். இயக் குநரின் வேட் கைக் கு சுயகெளரவமிழந்த சுரணையற்ற பாடலாசிரியர்கள் பலியாடுகளாகிப் போகின்றனர். இந்நிலையில் ஈழத்தின் சங்கதிகளை திரையிசைப் பாடல் எவ்வகையில் வெளிப்படுத்தி யிருக்கும் என்பதை ஊகித்துக் Gd5TGTGITGOTL).
9 இலங்கையில் நடக்கிற யுத்தம் நிறுத்து 9 ஈழத்தில் போர் ஓய்ந்த கொடி முல்லை
பூப்பூக்கும் 9 சிறீலங்கா நீயானால் எல்.ரி.ரி.ஈ நானானால்
அய்யய்யோ வாயை கொஞ்சம் மூடு 9 அந்த சந்திரிக் காவும் பிரபாகரனும்
சம்மந்தியாகணும் 9 நிலவு சாயும் நேரம் மீன்கள் பாடும் தேன்நாடு உநல்லூரின் வீதியெங்கும் திரிந்தோமடி 9 விடைகொடு எங்கள் நாடே கடல் வாசல்
தெளிக்கும் வீடே இவ்வாறான வரிகளை எண்ணற்ற பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. பொதுமையான புரட்சிப் பாடல்களும் ஈழத்துச் சூழலோடு பொருந்திப் போயுள்ளன. (தேர்தல் நிகழும் காலங்களில் எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் பெறும் முக்கியத்துவமும் அவதானத்திற்குரியது.)
தமிழ்த் திரைப்படங்களில் நாயகனின் தோழனாக விதூஷகப் பாணியில் வலம் வரும் பாத்திரமொன்றினை எப்போதுமே தரிசிக்கலாம். "சிவாஜி திரைப்படத்தில் இப்பாத்திரத்தினை ஏற்கும் விவேக் - பண்பாட்டு அடையாளங்களோடான மகளிரை யாழ்ப்பாணத்திலே தான் பார்க்க முடியும் என பகிடி (?) செய்கிறார். "நான் அவனில்லை" திரைப் படத்தில் "மட்டக்களப்பு யோகராசா” என்ற பாத்திரத்தில் விவேக் ஈழத்தமிழ் பேச முயல்கிறார். (பாயும் புலி படத்தில் மனோகரம்மாவும் இலங்கைத்தமிழை ஒரு வழி பண்ணியுள்ளார்)
மாற்று சினிமாவுக்கான வருகையினை வணிக முனைப்பு சினிமா தகர்த்துக் கொண்டிருக்கின்ற சூழலில் ஈழத்தின் இனமோதுகைச் சித்திரிப்பினை எதிர் காலத்தில் கனதியான படிமங்களில் உயிர்ப்புடன் வெளிப்படுத்துதல் சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது இதுவரையான முயற்சிகளும் ஆர்வக்கோளாறுகளில் அவதரித்த ஆரோக்கியமற்ற படைப்புக்களேயாகும்
ஜீவநதி

மூன்றாந்தரப் பார்வையாளனுக்கு, இந்தியாவின் அடையாளமாக உணரப்படும் மணிரத்தினம் என்ற ஆளுமையை சகட்டுமேனிக்கு விமர்சித்ததாகத் தோன்றலாம். நுண் தரிசனத்தோடு "கன்னத்தில் முத்தமிட்டாலை" மீள்வாசிப்பு செய்தால் உறங்கிக் கிடக்கும் பலவீனங்கள் புலப்படும். ஆங்கில வணிக சினிமா வில் இயக் குனர் ஜேம் ஸ் கமரூன் கடற்கலமொன்று மூழ்கிய அவலத்தை உலகம் முழுமைக்கும் சுவறச் செய்தார். அடித்தட்டு மக்களின் உயிரை மேட்டுக்குடி வர்க்கம் அற்பமாகக்கருதி பலி கொடுத்தமை பார்வையாளனிடம் பதியவில்லை. மாறாக ஜாக் - ரோஸ் இருவரின் மன்மதமயக்கமே பாதித்தது. அந்நிலையிலும் Titanic சில அதிர்வுகளை ஏற்படுத்தியது. "Titanic" ஏற்படுத்திய அதிர்வுகளில் பத்து விழுக்காட்டையாவது ஈழம் குறித்த துன்பியல் வெளிப்பாட்டு சினிமா ஏற்படுத்த முனையவில்லையே என்ற ஆதங்கத்தோடு நிறைவு செய்கிறேன்.
واقعه علیه ارو3)
வாழ்க்கையின் சில தேடல்கள் நம்பிக்கையூட்டும்.! சில தேடல்கள் வெற்றியின் படிக்கட்டுக்களை எட்டிப் பார்க்கும் சில தேடல்கள் வலிகளின் உச்சத்தில் முடியும்.! சில தேடல்கள் மணர்னோடு மணர்னாய் அஸ்தமனமாகும்.! ஆனால் உன்னைப் பற்றிய தேடல் மட்டும் காற்றலையில் தேன் தூவும் மெல்லிசைபோல் எங்கேயும் எப்போதும் இனித்துக் கொணர்டிருக்கிறது.
வல்வை மு.ஆ.சுமண்
இதழ் 50

Page 148
866 கொழும்பில இருதி
ဓါ၅ குழம்பிப் போயிருந்தது. முதலாவது அறையை ஒதுக் கசி சேந் தனி ன் குடும் பத் தறி குக் கொடுத்ததில், இவனது குடும்பத்தவர் எல்லோரும் இரண்டாவது அறையையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
இப்போது இரண்டாவது அறையிலிருக்கும் சாமான்களை எடுத்து முதலாவது அறைக்குள் அடுக்க வேண்டியுள்ளது. இனி இரண்டாவது அறையைத் துப்பரவாக்க வேண்டும்.
குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முதுகு
உளைந்தது. வியர்த்துக் கொட்டியது. அவர்களை ஊருக்கு அனுப்ப அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இரத்மலானை விமான நிலையத்திற்குச் சென்றிருந் தான். இப்போது நித்திரை தூக்கியடிக்கின்றது. வருடாந்தம் சுமார் பத்துப் பன்னிரண்டுதரம் இப்படிப்பட்ட வேலை வந்து சேர்ந்து விடுகின்றன. மகனும் மகளும் பாடசாலைகளிலிருந்து இரண்டு மணிக்குப் பின்புதான் வருவார்கள். மனைவி வர ஐந்து மணியாகும். இந்த ଓ ରା, ଗ0) ରd 5, 60) ଗୀt (lp ? $ ଅଣ୍ଡା பத் தரைக் கு முன் பு அலுவலகத்துக்கு போய்ச் சேர்ந்தால் "ஷோர்ட் லீவிலை சமாளிக்கலாம். இல்லாவிட்டால் அரைநாள் லீவு போட வேணர் டியிருக் கும் லீவுகள் முடிந்து கொண்டிருக்கின்றன.
வந்தவர்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவர ஒருநாளும், அவர்களுடன் வங்கி, பொலிஸ் நிலையம், கடைகள் என்று திரிய இன்னொரு நாளுமாய் இரண்டு நாட்கள் "லீவெடுத்தாயிற்று. இன்னும் இரண்டு வாரத்தால் அவர்கள் திரும் பி வரும் போது, கூட்டித்திரியவும் கட்டுநாயக்காவுக்குப் போகவுமாய் இருநாட்கள் லீவு எடுக்க வேண்டி வரலாம்.
ஜீவநதி
 
 

தேவமுகுந்தன்
*
அவனது வீடு ஊரிலோ வெளிநாடுகளிலோ இல்லாமல் இடையில் கொழும்பில் இருப்பதனாற்தான் இந்தச் சிக்கல், இரண்டு அறைகளையும் கூடத்தையும் சமையல் அறையையும் கொண்ட இந்த வாடகை வீட்டில் வேறு ஆட்கள் தங்குவதென்பது சிரமம்தான். பிள்ளைகளின் படிப்புக் குழம்பும். இவனது எழுத்து வேலைகள் வாசிப்புக்கள் குழம்பிப் போகும். தனிப்பட்ட சுதந்திரம் தொலைத்தவர்களாக இவர்கள் நான்கு பேரும் அந்த நாட்களில் உணர்வார்கள்.
வருபவர்களை பொலீஸில் பதிவு செய்வ தற்காய் அவர்களையும் வீட்டுச் சொந்தக்கார பெரேராக் கிழவனையும் கூட்டிக் கொண்டு பொலீஸ் நிலையத்திற்கு அலைய வேண்டும். பெரேராக் கிழவன் முகம் சுழிப்பான், புறுபுறுப்பான். அந்த மாத வாடகையைச் செலுத்தும்போது இரண்டாயிரமோ மூவாயிரமோ கூடுதாலாக அவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதப் பட்டியல்கள், நீர்
அளவீட்டுமானியும் மின்சார அளவீட்டுமானியும்
சிக்கன எல்லைகளைத் தாண்டிச் சுற்றியிருப்பதைத் சுட்டிக் காட்டும். தொலை பேசிக் கட்டணம் உயர் திருக்கும். அடுத்த மாதச் செலவுகள் கையைக்கடிக்கும்.
இவற்றை தவிர்க்கவே அசோகன் முயற்சிக் கிறான். ஆனால் தவிர்க்க முடியாமல் தடுமாறுகிறான். வெளிநாடுகளில் இருக்கும் இவனது-மனைவியினது நெருங்கிய உறவினர்கள்-சிறுவயதில் ஒன்றாய்ப்
இதழ் 50
.28

Page 149
ܓ݁ܶܦܵ
s
படித்த- விளையாடிய நண்பர்கள் எந்தவொரு தொடர்புமற்று இருப்பார்கள். இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரத்திற்கு முன்பு திடீரென தொலைபேசியில் அன்பொழுகத் கதைக்கத் தொடங்கி பின்னர் தாங்கள் இலங்கைக்கு வரும் தினம், விமானத்தின் இலக்கம் என்பவற்றைக் கொடுத்து கட்டுநாயக்காவில்
வந்து தங்களைக் கூப்பிடும்படி கூறுவார்கள்.
மகனின் புத்தக மேசையை இழுத்து வந்து முதலாவது அறைக்குள் வைத்தவன், புத்தகங்களை அள்ளிக் கொண்டுவந்து அதில் குவித்தான். இனி மகளின் மேசையை இழுத்து வரவேண்டும். பாடசாலைகளில் பெற்றோர்ஆசிரியர் சந்திப்புக்களில் ஆசிரியர்கள், பிள்ளைகள் வீட்டுவேலைகளை ஒழுங்காகச் செய்து வருவதில்லைவீட்டில் படித்துக் கொண்டு வருவதில்லை என இவனிடம் முறைப் பாடுகள் செய் வார் கள் . இவனால் பிள்ளைகளைக் கண்டிக்க முடிவதில்லை. தனது வீட்டில் படிக்கும் சூழல் இல்லையென்பதை ஆசிரியர்களிடம் சொல்ல இவனுக்கு வெட்கமாக இருக்கின்றது.
வருபவர்கள், தங்களுடன் இவர்கள் முழு நேரமும் இருந்து கதைக்க வேண்டுமென எதிர் பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது, மகனோ மகளோ தங்கள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்காகப் புத்தகம் கொப்பிகளை எடுத்தால், "இவரின் மகனுக்கு பெரிய லெவல் எங்களோடை சேருறான் இல்லை. எந்த நேரமும் புத்தகங்களோடை இருக்கிறான்." என்றோ "மகளுக்கு தான்தான் பெரிய படிப்புப் படிக்கிறா என்ற நினைப்பு, எங்களைக் கணக் கெடுக் கறா இல் லை" என் றோ ஊரிலுள்ள உறவினர்களுக்கு சொல்வார்கள்.
"இஞ்சத்தைப் படிப்பு "ஸ்ராண்டட்" காணாது. அங்கை என்றால்." என்று தங்கள் பெருமைகளை வீட்டுப்பாடம் செய்ய கொப்பியையும் பேனாவையும் எடுக்கும் பிள்ளைகளிடம் விளக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகள் கொப்பி, புத்தகங்களை மூடிவைத்து விட்டு கொட்டாவி விட்டபடி அவர்களின் அலட்டல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்குத் தர்ம சங்கடமாயிருக்கும்.
米米米
சாப்பாட்டு மீதிகள், சிகரெட் அடிக்கட்டைகள், ரொபி மேலுறைகள். என குப்பைகள் அறையினுள்ளே பரவியிருந்தன. அடிக்கடி கனடா நாட்டின் சுத்தத்தையும் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களையும் பெருமை பொங்கக் கதைக்கும் அவர்களுக்கு கழிவுப் பொருட் களை குப்பைக் கூடைக்குள் இடவேண்டுமென்ற அடிப் படைப் பண்பு கூட இல்லாதது இவனுக்கு ஆச்சரியமா யுள்ளது.
ஜீவநதி
 
 

இவனது குடும்பத்தவர் கொதித்தாறிய குழாய் நீரையே வழமையாகப் பருகுவார்கள். அந்த நீர் சுத்தமானதல்ல என்று சேந்தன் ஆட்கள் கருதியதால் இவன் போத்தலில் அடைக்கப்பட்ட "மினரல் வோட்டர்" வாங்கி வைத்திருந்தான். அப்படியெல்லாம் சுத்தம் பார்த்தவர்களின் குப்பைகளை அள்ளி பெரிய கறுப்பு நிற பொலித்தீன் பையில் இட்டுக்கட்டி வெளிவாசலில் வைத்தவன், ஈரத் துணியால் நிலத்தைச் துடைக்கத் தொடங்கினான்.
இவனது வீட்டிலுள்ளோர் வீட்டுக்குள் காலணிகள் அணிவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருவோர் குளியலறை, மலகூடம், சமையல் அறையென வீடு முழுதும் இறப்பர் செருப்புக்களை அணிந்தபடி திரிவார்கள். அவர்களுக்கு ஒன்றும் Gld TGoGo (LDL2UTg).
米米米
கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான பாதை மூடப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் வசிப்போர், கொழும்புக்கு வந்து "கிளியரன்ஸ்",விமானப் பயணச் சீட்டு என்பவற்றைப் பெற்றே யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கொழும்பில் ஒருவாரமளவில் தங்க வேண்டியுள்ளது. அவர்களிடம் இருக்கும் வசதிக்கு பெரிய நட்சத்திர விடுதிகளில் கூடத் தங்கலாம். ஆனால் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்குகின்றனர். கொழும்பில் தங்கள் தேவைகளுக்காக கூட்டிச் செல்ல நண்பர்கள், உறவினர் களை அழைக்க இது வசதியெனக் கருதகிறார்கள்.
3ද 3දී හුද
சேந்தன் இவனது உறவினன். தூரத்து உறவு வழியில் சகோதரன் முறை, சமவயதினன். உறவினன் என்பதிலும் பார்க்க இருவரும் நண்பர்களாகவே பழகியிருக்கிறார்கள். சிறுவயதில் ஒன்றாக விளையாடித்திரிந்தவர்கள்.
சேந்தன் பத்தாம் வகுப்புக் கடைசியில் கனடா
இதழ் 50

Page 150
போனதன் பின்னர் அவனுக்கும் இவனுக்கும் தொடர் பறுந்து போயிருந்தது. இருபத்தைந்து வருடங்களாக எந்தத் தொடர்புமில்லாதிருந்த சேந்தன், திடீரென தொலை பேசியில் தொடர்பு கொண்டு தான் அடுத்த வாரம் குடும்பத்துடன் இலங்கை வருவதாகவும் தங்களை கட்டு நாயக்காவுக்கு வந்து கூட்டிச் செல்லுமாறும் கூறி விபரங்களைக் கூறிபோது இவனால் மறுக்க முடியவில்லை.
இந்த வீட்டில் மேலதிகமாக ஒருவரை தங்க வைப்பதே சிரமமாயுள்ள போது நால்வரைக் கொண்ட சேந்தனின் குடும்பத்தினரை தங்க ஒத்துக் கொண்டது தவறெனப் புரிகின்றது. ஆனால் மறுத்திருந்தால், அசோகன் இப்ப மாறிப் போய்விட்டான் என்று சேந்தன் பலரிடம் சொல்லித் திரியலாம்.
அவனின் குடும்பம் வந்து நின்ற நாட்களில் பிள்ளைகளுக்கு தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்த பிள்ளைகள் சிரமப் பட்டதை இவன் அவதானித் திருந்தான். வந்தவர்கள் நடுக்கூடத்தில் இருந்து தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு கத்திக் கும்மாளமிட்டார்கள்.
சேந் தனி னிர் குடும் பத் தவர் களுடன் புறக்கோட்டைக்குச் சென்றிருந்தான். சேந்தனும் மனைவியும் ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு பேரம்பேசியது இவனுக்கு ஆச்சரிமாயிருந்தது.
சேந்தன் சிறுவனாக இருந்த காலத்தில், கொழும்பில் தொழில் புரிந்த தகப்பன் வங்கியொன்றில் அவனின் பெயரில் சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்திருந்தார். அந்தக் கணக்கை மூடி பணத்தை மீளப் பெற வேண்டுமென சேந்தன் இவனைக் கூட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனையில் இருந்த அந்த வங்கிக் கிளைக்கு வெள்ளவத்தையில் இருந்து பஸ்ஸில் சென்றான்.
தொடர் ச் சியாக பல வருடங்களாக நடவடிக்கைகள் ஏதுமற்றிருந்த அந்தக் கணக்கு அரசின் புதிய சட்டதிட்டங்களின்படி மூடப்பட்டு பணம் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அசோகன் வங்கி முகாமையாளருடன் கதைத்துப் பார்த்தான். அவர் இவனுக்கு புதிய சட்டதிட்டங்களை தெளிவாக விளக்கினார். ஆனால் சேந்தன் முகாமையாளரை ஏசியபடி வந்து, இவனை மத்திய வங்கிக்கு வருமாறு கூப்பிட்டான். அங்கு சென்றாலும் இந்த பணத்தை பெறமுடியாது என்பது இவனுக்குப் புரிந்தது. ஆனால் சேந்தன் இவனை விடுவதாயில்லை. இருவரும் அங்கு
போய் அலைந்ததுதான் மிச்சம்.
米米米
ஜீவநதி 14

யாழ்ப்பாணம் சென்று திரும்பியவர்கள் சற்றுக் கறுத்திருந்தார்கள், பிள்ளைகளில் வாட்டம் தெரிந்தது. யாழ்ப்பாணக் காலநிலை ஒத்துவராமல் பிள்ளைகளுக்கு வருத்தம் வந்ததாகச் சேந்தன் சொன்னான். அந்த வெக்கைக்குள்ளை எப்படித்தான் மனிஷர் சீவிக்கிறார்களோ என ஆச்சரியப்பட்டுக் கதைத்தான்.
இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பித் திருந்ததால் அசோகனின் பிள்ளைகளும் சேந்தன் குடும்பத்தினருடன் காலையில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர்களுடன் பொருட்கள் வாங்க பல கடைகளுக்கு அலைய வேண்டியிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்த - கொழும்பில் வாங்கிய பொருட்களை சேந்தன் சூட்கேஸ்களில் அடுக்கிக் கொண்டிருந்தான். அவர் களது விமானம் அடுத்தநாள் காலையில் புறப்பட விருந்தது.
米米米
அதிகாலையில் கட்டுநாயக்கா விமான நிலைத்துக்குச் சென்று சேந்தனின் குடும்பத்தவர்களை வழினுப்பிவிட்டு வந்தான். இனி அவர்கள் கனடா போய்ச் சேர்ந்ததை அறிவிக்க ஒருமுறை தொலை பேசி எடுக்கக் கூடும், பிறகு அடுத்தமுறை இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாக கட்டாயம் அழைப்பு எடுப்பார்கள்.
இப்போது வீட்டைச் சுத்தம் செய்ய பாடசாலை விடுமுறையில் நிற்கும் பிள்ளைகள் அசோகனுக்கு உதவினர்.
தொலைபேசி ஒலித்தது. சேந்தனின் அம்மாஇவனுக்கு தூரத்துப் பெரியம்மா கதைத்தார். சேந்தனாக்களை விமான நிலையத்துக்கு கூட்டிச் சென்ற விபரங்களை முதலில் விசாரித்து அறிந்தவர், ".அசோகன், நீ வடிவாக சேந்தன் ஆட் களைக் கவனிக்கேலையாம். கனகாலமாய் கொழும் பிலை இருக்கிறனி நினைத்திருந்தால் அவன்ரை "பாங்" கணக்கை மூட உதவி செய்திருக்கலாமாம். உன்ரை பெண்சாதி பிள்ளைகள் அதுகளோடை வடிவாய்ச் சேரேலையாம். சொந்தக் காரன் அசோகன் கொழும்பில இருக்கிறான் என்றுதானே உன்னைத் தேடி அதுகள் வருகுதுகள்." என்று தொடர்ந்து
"மார்கழியிலை இளையவன் வசந்தன், குடும்பத்தோடை லண்டனிலிருந்து வாறான். அதுகளை ஒருக்கா கவனமாய் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுராசா” என்று முடித்தார்.
இதழ் 50

Page 151
(ysis).Si. Solouri; கவனிக்கப்படவேண்டிய
ஈழத்து முற்போக்குக் கவிதை வரலாறு ஏறத்தாழ நாற்பதுகளிலிருந்து ஆரம்பிக்கின்றது. அ.ந.கந்தசாமி, கே. கணேஷ் ஆகியோர் அவ்வரலாற்றின் ஆரம்பப் புள்ளிகளாகின்றனர். ஏறத்தாழ அறுபதுகளின் முன்பின்னாக பசுபதி, இ.முருகையன், நுஃமான், சண்முகம் சிவலிங்கம், சில்லையூர் செல்வராசன், சுபத்திரன், சாருமதி முதலான பலர் அவ்வரலாற்றினுள் பிரவேசிக்கின்றனர். இக்காலப்பகுதியில் முற்போக்குக் கவிதைகள் எழுத ஆரம்பித்தாலும் தமது தொகுப்பு வராமை காரணமாக இவ்வரலாற்றில் இடம் பெறாதிருக் கின்ற ஒருவரே சம்மந்துறை வாசியான தோழர் இஸ்மாயில் என்றழைக்கப்படுகின்ற யூ.எல்.எம். இஸ்மாயில், அண்மையில் வெளிவந்த அன்னாரது கவிதைத்தொகுதியான "கூன் நிமிர்கிறது" (2007 ( மேற்குறிப்பிட்ட முற்போக்குக் கவிஞர்கள் பலரிட மிருந்தும் தனித்துவ ஆளுமை கொண்ட கவிஞராக அவரை இனங்காட்டுகிறது.
முற்போக்குக் கவிஞர் பலரும் தொழிலாளர் நிலை பற்றி பாடுவது இயல்பானது தான். எனினும் பொதுவான அவர்கள் நிலை பற்றிப் பாடுவதே அவர்கள் வழக்கமாகும். மாறாக, இஸ்மாயில் பல்வகையான தொழிலாளர்களையும் மனங் கொண்டு அவர்கள் பற்றி பாடியிருப்பது கவனிக்கத்தக்கது.
விவசாயி ஒருவன் தன் துயரத் தைப் பின்வருமாறு கூறுகின்றான்;
"ஆறேழு மாதங்களாய் அயராது உழைத்து விட்டு கூலியினைக் கேட்ட போது குதிக்கால் உதைத்தான் கா.
வயல்வெலை செய்து விட்டு வளவுக்குள் வந்த எனக்கு போடியின் கட்டளையை பொறுத்திருக்கக் கூடுதில்லையே
போடியின் கூலியாய், நான்
ஜீவநதி

(ELDITFrfluff Ghaf. (BurrabLITFT
ஈழத்து முற்போக்குக் கவிஞர்
147
போய்ச் சேர்ந்தநாள் முதலாய் பொல்லாத ஊழியத்தால் -எனைக் போட்டடிக்கான் மாடது போல்.
நெசவுத் தொழில் கிழக்கிலங்கையில்
முக்கியத்துவம் பெற்றிருந்ததாயினும் நெசவாளர் துயரம் பற்றி எவரும் பாடியிருக்கவிருக்கவில்லை.
" காலத்தாலெழுந்து வந்து கம்பதில் குந்தியிருந்து தறியினிலே காலடிக்க அல்லாஹற் தலைவிதியே எங்களுக்கு
தறியினிவே குந்தியிருந்து தரையினிவே உள்ளவருக்கு உயர் உடைகள் நெய்தவருக்கு ஒன்றுமில்லை உணர்பதற்கு" மீனவர் நிலை பற்றியும் கவிஞர்
பேசுகின்றார்:
வடக்குக் கிழக்குக் கவிஞர்கள் கண்களுக்கு
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தென்படுவ தில்லை. இஸ்மாயில் அத்தகைய கவிஞர் அல்லர்:
“தேயிலையையும் இறப்பரையும் திறனான கொக்கோவையும் நாட்டி எடுத்தவர்க்கு சலமேதும் இல்லியாகா.
உச்சிமலை ஏறி உயர் மரத்தில் பாலெடுக்கும் தோட்டத்தொழிலாளர்களின் துயரம் எப்போதிருவது?
தோட்டத்துத் தேயிலையை தொழிலாளர்குடிக்காமை வேலையேதும் செய்யாத
இதழ் 50

Page 152
வெள்ளையனோ குடிக்கிறது?
கொக்கோ தோட்டத்திலே கோரமுடன் உழைக்கும் தோட்டத் தொழிலாளிகளின் துயரம் எப்போநீங்குவது?" மலையகத் தொழிலாளர் பற்றி பாடுவோரும் தேயிலைத்தோட்ட தொழிலாளர் பற்றியே பாடுவதுண்டு. மாறாக, இஸ்மாயில் தேயிலைத்தோட்டத் தொழிலாளர் களோடு இறப்பர், கொக்கோ தோட்டத் தொழிலாளர்கள் பற்றியும் பாடுவதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் பற்றிப் பாடுவோரும், பெண் தொழிலாளர் நிலை பற்றி அவதானிப்பதில்லை. இஸ்மாயிலின் கவிதைகளில் பெண் தொழிலாளர்களின் அவலங்களும் இடம்பெறுகின்றன. "சூடு அடிக்கவென்று சுவஹகுக்கு முன்னெழுந்து கம்பொடு பாயெடுத்துநாங்க கால்நடையாகச் செல்கின்றோம்.
சூடு துளைத்து அதைத் துரத்தியெடுத்த பின்னால் கூலியளக்கும் வேளையிலே போடி குழிபறிக்க எண்ணுறாங்க
காலத்தால எழும்பி கம்போடுநின்றுழைத்துவிட்டு மாலையில் நாங்கள் படும் மனவேதனையை யார் அறிவார்.” என்கின்றனர் சூடு அடிக்கும் பெண்கள்.
பின்வரும் பாடல்ப்பகுதி, கதிர் பொறுக்கும் பெண்களின் துயரங்களை வெளிப்படுத்துகின்றது:
"கதிருபுறக்கவென்று கம்போடு பாயயெடுத்து கால்நடையாநாங்க கன தூரம் செல்லுகனிறோம்.
காகம் கரைய முன்னே கணர் விழித்து எழுந்தநாங்கள் காத்தாண்ட வட்டைக்கு கால்நடையில் செல்லுகனிறோம்.
கதிரு புறக்குமிந்த கைம்பெனர்கள் எல்லோரையும் காசினென்னும் போடி வந்து கம்பெடுத்து அடித்தானகா, கதிரைப்புறக்கி கந்தை கட்டும் வேளையிலே உப்பட்டித்திருடி என்று
ஜீவநதி

உடைத்தானகா உதுமான் போடி! தொழிலாளர்களின் நிலை பற்றி பெருமளவு பாடியுள்ள இஸ்மாயில் ஏனைய சமூகப் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைப்பதில் கவனத்தைச் செலுத்தியிருப்பது குறைவு. எனினும் பெண் தொழிலாளர் நிலை பற்றி கூறும் போது அவர்களது சீதனப் பிரச்சினைகளை மறந்து விடவில்லை.
" சீதனக் கொடுமையினால் சீரழிந்த பெணர்களெல்லாம் சூடு துவைத்து வாழும் தொழிலே சொந்தமெனத் தொடங்கிவிட்டார்” என்று ஒரு கவிதையிலும்,
"வாலிபரும் சீதனத்தால் வாழ்விழந்த மங்கையர்கள் புகையும் பசிபோக்க போகிறார்கள் புல் புடுங்க." என்று பிறிதொரு கவிதையிலும் எடுத்துரைக்கின்றார்.
அவ்வாறே சாதிப் பிரச்சினையையும் பேச முற்பட்டுள்ளார். "நாளதிக தூரமில்லை" என்ற கவிதை யின் ஒரு பகுதி கீழே இடம் பெறுகின்றது.
“சீலை துவைக்கும் இந்த சிறப்பான தொழிலாளிகளை கட்டாடிய கூறி கழித்து வைத்தல் ஆகுமோ கா"
முடிவெட்டி வடிவமைக்கும் முத்தான தொழிவாளிகளை அம்பட்டனென்று கூறி அவதூறு பேசுகின்றார்.
மூடை சுமக்கும் இந்த முத்தான தொழிலாளிகளை நாட்டிமை என்று கூறி நங்கு சுங்கு பேசுகின்றார்.
சாவிட்டிலும் சடங்கு வீட்டிலும் சங்கையுடன் பறை சாற்றும் சிறப்பா தொழிலாளிகளை பறையனென்று கூறி படுதூறு பேசுகின்றார்.
காலத்தால் எழும்பி கழித்திருக்கும் மலமத்தனையும் அள்ளிவெளிசாக்கும் அன்பா தொழிலாளிகளை சக்கிலியன் என்று கூறி சாக்கடையில் தள்ளுகின்றார்.
சாதிகுலம் பேசும் இந்தச்
இதழ் 50

Page 153
ܨ
خ۔
சணர்டளார் கூட்டத்தினை நாம் சமரில் சந்திக்கும்நாள் அதிக தூரமில்லை. மேற்கூறியவாறெல்லாம் தொழிலாளர் அவலங்களையும், பிற சமூகப் பிரச்சினையையும் பாடுகின்ற சம்மாந்துறைக் கவிஞர் பார்வை சர்வதேசப் பார்வையாக விரிந்து செல்வதும் கவனத்திற்குரியது:
"அந்நியனந்த அமெரிக்கநாயிடம் போய் அள்ளியெடுத்து வந்த மாவோடு சீனி மற்றுமுள்ள பொருளத்தனையும் மனம் கேட்காதுகா எங்களுக்கு
ஏகதிபத்தியத்தின் எதேச்சதிகாரமதை எப்போதும்நாங்கள் ஏற்றெடுக்கப் போறதில்லை
நாடு பிடிக்குமந்த நாய் வெளியர் கூட்டத்தாரை நாமெல்லோரும் ஒன்றிணைந்து நசக்கிடுவோம் தோழர்களே!
வளர்ந்து வரும்நாடுகளின் வாழ்வுகளை சீரழிக்கும் சின்னக் குணம் படைத்த அந்த சீமையனை சீவிடுவோம் தோழர்களே!” முற் குறிப் பிட்டவாறான தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் ஏனைய சமூகப் பிரச்சினை களுக்குமான தீர்வாக, இஸ்மாயில் எதனை முன் வைப்பார் என்பதனை நாமே ஊகித்து விட முடியும்,
"அடுத்தடுத்து வருமிந்த ஆகாத்தலைவர்களால் எங்கள் விடுதலைக்கு ஏதும் செய்ய ஏலாதுகா" என்ற, நடைமுறை அரசியல் அவதானிப்பு தரும் ஞானமும் காலங் கற்பித்த பாடங்களும் புகட்டும் வழிகள் இவைதாம்:
"கம்போடு கத்திகொணர்டு களம்பூர சென்றோமானால் கதிரு புறக்குவோர் வாழ்வு கட்டாயம் சீர் பெறுங்கா"
"அறுவடை செய்துழைக்கும் அன்பான தோழர்களே எங்கள் பிரச்சினை தீர இணைய வேணும்நாமோரணியாய்” ஏனைய முற்போக்குக் கவிஞர்களிடம்,
ஜீவநதி

போடிமார், முதலாளிகள், வல்லரசுகள் மட்டுமே எதிர்ப் புக்குள்ளாவது வழக்கம். அவர்களோடு இஸ்மாயில் பார்வையில் படைப்பாளிகளும் எதிர்ப்புக்குள்ளா கின்றமை குறிப்பிடத்தக்கது:
“பாட்டாளி மக்கள் படும் துயர மத்தனையும் புத்தகத்தில் படைத்துவிட்டால் போய் விடுமோ ஏழ்மைநிலை?
புத்தகத்துக்கள் புகுந்து புரட்சியிலே மூழ்குமிந்த வித்தகரை விட்டுவிட்டு விழியுங்கள் தோழர்களே
மாநாடுநடத்தி மக்களாட்சி வந்ததென்று சரித்திரங்கள் சொல்லும் சாட்சியங்கள் எதுவுமில்லை
மக்கள் புரட்சியால்தான் மக்களாட்சிமலர்ந்ததென்று சரித்திரங்கள் பலதும் சாட்சியங்கள் கூறுதுகா
புத்தகத்தில் படைத்து விட்டு போர்வையினுள் போய் விடாமல் போட்டியிட்டுப் போராட புறப்படுங்கோ எங்களுடன்
இஸ்மாயில் கவிதைகளின் உள்ளடக்கம் சார்ந்த தனித்துவம் மேற்கூறியவாறமைய, வெளிப் பாட்டு முறை சார்ந்த தனித்துவமும் கவனத்தைக் கோரி யுள்ளது. இஸ்மாயிலின் பெரும்பாலான கவிதைகள் மரபு சார்ந்த நாட்டார் பாடல் வடிவங்களை சிறப்பாக "கவியை ஒத்ததாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. "கவி வடிவத்தைக் கவிஞர் தமது வசதிக்கேற்ப மாற்றியே தருகின்றாா" என்பது கவனத்திற்குரியது. விவசாயிகளுள் ஒருவரான இஸ்மாயிலின் கவிதைகள் அவ்வாறு வெளிப்படுவதில் வியப்பில்லை. நமது நவீன கவிதை பற்றிய கண்ணோட்டம் மேனாட்டு நவீன கவிதை மரபுகளை மட்டுமன்றி, எமது விருத்தம், அகவல் முதலான பாடல் மரபுகளை மட்டுமன்றி, எமது நாட்டார் இலக்கிய மரபுகளையும் உள்வாங்க வேண்டும் என்றே கருதுகின்றேன்.
கவிஞர் இஸ்மாயில் பிறிதொரு விதத்திலும் விதந்து பேசப்பட வேண்டியவர். அவர் ஏழைத் தொழிலாளி என்பதோடு அதனை விட முக்கிமாக சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கியவரென்பது மனங் கொள்ளப்பட வேண்டியதொன்று. இளம்பராயத்தில்
இதழ் 50

Page 154
பொருளாதாரப் பிரச்சினை காரணமாகக் கல்வி வாய்ப்பைப் பெறாத கவிஞர் தமது சொந்த முயற்சியால் அறிவை வளர்த்தவர் தொழிலாளர் அவலங்களையும் பிரச்சினைகளையும் நேரடியாக உணர்ந்தவர். போராட்டம் நடத்தத் துணிந்தவர். சம்மாந்துறை முஹம்மதியர் இளைஞர் விவசாயக் கழகத்தை ஆரம்பித்து அதன் செயலாளராகி இளைஞர்களை ஒன்று திரட்டி போடிமார்களுக்கெதிராக கோரிக்கை முன் வைத்து சிலவற்றில் வெற்றியும் கண்டவர். (வாழ்க்கை நிலை அவ்வாறிந்த சூழலிலே தான் பொதுவுடமைச் சிந்தனைகள் அவரைப் புடம் போட்டன!) தமது வாழ்க்கை நிலை காரணமாக போராட்ட குணாம்சங்கள் பெற்ற படைப்பாளர்கள் பலர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலே இருந்துள்ளனரென்பதை இவ்வேளை மனங்கொள்வதவசியமாகின்றது. அத்தகையவர்களுள் முதன்மையான ஒருவர் இஸ்மாயில், மேற்கூறிய தடத்தில் சென்று முற்போக்குப் படைப்பாளரானவர்கள் பலரிடம் ஆன்மீக நாட்டம் நிரம்பியிருப்பதும் இயல்பானதே. இஸ்மாயிலின் கவிதைத்தொகுப்பின்
DGOT
எங்கள் வானத்தில் G 5
சமாதானப் புறாக்களையே
محم۔
பறக்க விடுகின்றோம் ஆனால் எங்கிருந்தோ வந்த கழுகுகள் புறாக்களைத் துரத்தி விட்டு வானம் முழுவதும் கணினி வலைகளை விரிப்பது ஏனோ?
இயற்கையின் செழிப்பால் எழில் கொஞ்சி முத்துக் கொழிக்கும் எங்கள் தேசத்தில் திராட்சைச் செடிகளைப் LJUîrfL G3 LITLÖ.
இதற்குள்
நச்சு மரங்களை நாட்டி வைத்த நாட்டாணர்மைக்காரர் யாரோ?
சித்திரா சி
ஜீவநதி 15
 

முதற் கவிதை "இறை காப் பு" என் பதனை இப்பின்னணியிலேதான் புரிந்து கொள்ளவேண்டும்!
அறுபுத, எழுபதுகளிலே, பொதுவுடைமைச் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்ட இஸ்மாயில் போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகளுள் சிலர் எண்பதுகளின் தொடக்க மேற்பட்ட மாற்றங்களால் எவ்வாறான நிலைக்குட்பட்டார்களென்பது பற்றியும் இறுதியாகக் குறிப் பிடுவது பொருத்தமானது. இக்கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய பிரபல படைப்பாளரொருவர் தனக்கும் இக்கவிஞருக்கும் நிகழ்ந்த உரையாடல் பற்றி இவ்வாறு குறிப்பிடு கின்றார்: " . தேசிய அலை எவரை எவரை எல்லாமோ, எங்கெங்கோ கொண்ட சேர்த்திருக்கிறதே ஆனந்தன் தரணம் கூட இந்த தேசிய அலைக்கு செலுத்திய மிகப் பொழய விலை அல்லவா? தேசிய அலை மட்டுமல்ல சர்வதேச விலைகளும். எல்லாம் போக என்னிட்ட மிஞ்சினது இது ஒன்று தான்" தன் கைப்பையிலிருந்த மஞ்சள் நிற முகப்பைக் கொண்ட தொகுப்பை நீட்டினார் தோழர் இஸ்மாயில், து
சோரு
வே T ம் காற்றுக்கு மொழியில்லை ஆற்றுக்கு மதமில்லை இனச் சேற்றுக்குள் நீயேன் நீராடத் துடிக்கின்றாய்!
உங்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்ட நரிகளைத் துரத்தி விட்டு வாருங்கள் தோழர்களே தேனும் பாலும் கலந்த இந்தப் பொங்கலை எல்லோரும் பகிர்ந்து உணர்போம்.
துப்பாக்கி மொழிகளால் GSL3) C3Lif
நாடெங்கும் ஒப்பாரிகளே நீணர்டு செல்கின்றன.
எல்லோரும் வாருங்கள் மனசோடு பேசுவோம் மனந்திறந்து பேசுவோம்!
இதழ் 50
s

Page 155
ی
ܣ̣ܨ
நTன்கு வருட இல்லற வாழ்வில் கெளதமி அனுபவித்த இன்பத்தின் ஊற்று நேற்றைய இரவுடன் அஸ்தமித்து விட்டது தான் மிகப்பெரிய (8g-T35),
ஒன்றே ஒன்று கண்ணே கண்ணேயென்று இரண்டு வயதுப் பாலகியை அவளுக்குத் துணையாக விட்டுவிட்டு பார்த்திபன் கண்களை மூடிக் கொண்டான்.
பாாத் தரி பனி குடும் படம் பகட்டான வாழ்க்கை வாழவில்லை. சாதாரண ஒரு ஏழைக்குடிமகனாக, ஆறாம வகுப் புடனர் பள ளரி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, தன் பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் ஒன்றி விட்டான் இருக்கின்ற ஒரேயொரு தோட்ட நிலத்தில் ஒரு போகப் மட்டுமே பயிர் காணும் வரண்ட பூமியில், இரண்டு ஏக்கர் வயல் நிலத்திலும் மாறி மாறி உழைப்பதிலேயே சுகப் கண் டான் இடைக் காலத்தில் ஏதும் கூலி வேலைகளுக்குப் போவான்.
ஏழையே ஆனாலும் சுறுசுறுப்பான கமச் காரன், தோட்டம் கொத்துவது, வயலை உழுது விதைப்பது என்று தன் முன்னோர் செய்த தொழிலை அவர்கள் செய்வது போலவே மண்வெட்டி கலப்பை சகிதம் செய்து வந்தாலும், கால ஓட்டத்தில் "லாண்ட் மாஸ்டரால் உழுதும் செயற்கை உரங்கள் போட்டுப் பயிரிடும் நவீன முறையில் அவனும் மாட்டிச் கொண்டான்.
காளைகளை வளர்ப்பதும் பராமரிப்பதுப அதிக செலவென்பதோடு, அவற்றை அபகரித்து செல்லக்கூடிய கள்வர் பயமும் அவனை அப்படி இயங் வைத்தது. ஒரே தடவையில் கூடிய முதலீடின்ற அவ்வவ்போது ஏற்படும் செலவும், அரச மானியமுL அவனுக்கு ஆறுதலளித்தன.
அந்த வேளையில் தான் கருங் காலிக கறுப்பான உரமேறிய அவனை நம்பி, அவனது முறைமாமன் மகளான அழகேயுருவான கெளதம காதலித்துக் கரம்பிடித்தாள்.
அன்னையை இழந்தும், வயோதிபத்தில் தளர்ந்தும் போன தகப்பனின் வருமானம் போதமையுட அவளை அவனோடு இரண்டற இணைத்தது. பன்னிரண் வயது மூப்பான அவனை அவள் மணமுடித்தபோது அவளுக்கு வயது இருபத்திரண்டு மட்டுமே.
நாட்டின் யுத்த சூழலில் அவனுடலில் பாய்ந் ஒரேயொரு துப்பாக்கி சன்னம் உயிரைக் கா: கொண்டதில் அவள் குழந்தையுடன் அநாதையான
ஜீவநதி
 

தடம் (ரளும் மரபுகள்
கண.மகேஸ்வரன்
தான் பரிதாபம்.
இன்று அந்த இளம் விதவை வீட்டிற்கு மரணச்சடங்கிற்காக வந்திருப்போரின் அலங்காரங் களைப் பாாத்தாலே அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
கணவனை இழந்த சோகம் என்னதான் இதயத்தை அழுத்திப் பிழிந்தாலும், வந்திருப் போரோடு கூடி அழவும் துயர் பகிரவும் வேண்டிய கட்டாயம் இருந்ததால், இடையிடையே வந்திருப் போரின் பால் கவனத்தைச் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கவே செய்தது.
முன்பெல்லாம் இப்படி எவரையும் அவள் கண்டாளில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன் அம்மா இறந்தபோது, அந்த இயற்கை மரணவேளையிலும் கூட வெள்ளையும் கறுப்புமாக சோகம் பிரதிபலிக்கும் ஆடைகளுடனேயே அந்த இழவு வீட்டை அவர்கள்
கொண்டாடினார்கள். பார்க்கப் பார்க்க அழுகை
தானாக வந்து சோகச் சுமைகளைக் கூட்டுவதன் மூலமே ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தது.
ஆனால், இந்தப் பேரிழப்பின் சுமை பகிர, கழுத்திலே மின்னும் தாலி போதாதென்று நகைக்கடை விளம்பரம் போல் ஆபரண மாயை காட்டி, பட்டுடுத்தி
151 இதழ் 50

Page 156
திருமண வீட்டிற்குப் போவதுபோலல்லவா இங்கு பாதிப் பெண்கள் வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் களல்லர் என்பது போல் ஆண்களும் மங்கல காரியங் களுக்குச் செல்வது போல் இரட்டைக் கலரிலேயோ, ஒற்றை "போட"ரிலோ சரிகைக்கரை வேட்டி கட்டி வந்திருப்பதும், "ஒசி"யில் கிடைப்பது என்பதற்காக வெற்றிலை பாக்கை அள்ளிப் போட்டு மெல்லுவதிலும் பீடி சிகரட் புகைப்பதிலும் கண்ணாயிருக்கிறார்கள்.
கணவனின் மரணச் செய்தி சுமந்த வந்த ஞாயிறு பத்திரிகைகளை, அதற்குமப்பால் அக்குவேறு ë,60Of)(36). DT 5 (9 apör6)Jg5) (36)(3U U6off (35 stijl UIT 5 இருக்கிறார்கள் சிலர் சிரித்துக் கதைப்பதும் வியப்பாக இருந்தது.
இத்தகைய நாகரிகம் தெரியாத ஐடங்கள் மத்தியிலே சிலரது முகங்களில் வழியும் சோக விழிகளைக் கண்டபோது துக்கத்தை அடக்க முடியாமல் தவிக்கத்தான் செய்தாள். அப்போதெல்லாம் அவளும் விம்மி விம்மி அழவே செய்தாள்.
கள்ளங்கபடமறியாத அவளது இரண்டு வயது மகளோ எதுவுமே புரியாமல் தன்பாட்டில் துள்ளிக் குதிப்பதும், அணைத்தெடுத்து அவளுக்காக இரங்கும் பெண்களின் மடிகளில் மாறி மாறியிருப்பதும், "அப்பா சாமிகிட்டப் போட்டார்" என்று மழலை சிந்தி ஓடுவதை யும் பார்த்தபோது துக்கம் தொண்டையை அடைக்க அவதிப்பட்டாள். யார் யார் எவ்வளவு சொல்லியும், சொட்டுத் தண் ணிர் கூட அருந்த அவள் மனம் மறுதலித்தது.
இந்த இக்கட்டான நிலையிலும், எப்பேதோ எங்கோ ஒரு மரண வீட்டில் பகைமை மறந்து கலந்து கொண்டவளான ஒரு பெண்ணின் புலம்பலில், வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்திருந்த புடோல் கொடிகளில் தொங்கும் காய்கள் மீது கண் விழுந்ததால் தன்தோழியை விளித்து போகும்போது அவற்றைக் களவாடும் நோக்கம் பாடலாக வெளிவருவதாகவும், அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பாடலாலேயே எச்சரிப்ப தாகவும், பாடப் புத்தகத்தில் படித்த நாட்டார் பாடலொன்று ஞாபகத்தில் வந்து தொலைத்தது. ஆயினும், அந்தக் கவியின் எள்ளல் வரிகளெதுவும் துக்கத்தில் துவண்டு துடிக்கும் அவள் நினைவில் வரமறுத்தது.
இதெல்லாம், பஞ்சபூதங்களின் சினத்தோடு கூடிய சீற்றத்தால் நீதி நியாயமற்ற அராஜகங்களின் உச்சத்தால் -வெகு விரைவில் அழிந்து போகப் புொகிற இந்தக் கலியுகத்தின் கைங்கரியங்கள் தாமென்று. பதிகோராம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்ட அவள் புத்திக்கு உறைத்தபோது எதையுமே மனதில் 6995T6া ளாமல், கணவனின் பிரிவால் துயலுறப்போகும் தன் வான்வை எண்ணிக்கலங்கும் அவள் நெஞ்சுகனத்தது.
அந்த நினைவுகளோடு அவள் நினைவிழந்து மயங்கி சுருண்டாள். ப ჯ. ბ. ་་་་་་་་་ ་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་ ஜீவநதி H152
 

விஞ்ஞான விருட்சங்கள் வேர்விட்டு விண்தொட்டு எண்ணாத கருமமும் எளிதாக ஆற்றுகையில் கண்ணில்லா மாந்தரைப்போல் > காட்சி தடுமாறுகின்றோம் - அந்த நுண்ணிய ஞானம் வந்தால்
இநுண்ணி అకా பின் நமக்கேது தீது?
SS செல்வங்கள் ஏராளம் 6 சிதறுண்டு சீரற்று OO வல்லோர் சிலருக்கே o68 வாய்க்கின்ற நிலைமாறி & எல்லோரும் இன்புற்று இருக்க வகைசெய்யும் ༧ཊི།། நல்ஞானம் வந்தால் பின்
oS3
རྒྱུ༽ S
நமக்கேது தீது?
பாரி, மனுச்சோழன்
பரிவுள்ள சிபி மற்றும்
பேர்கொண்ட மன்னர் பலர் O
சீர்கண்ட நம்மரபில் கீரியும் சர்ப்பமுமாய் கெடுமதி கொண்டு தம்முள்
S)
ཡོད། போரிடா ஞானம்வந்தால் St பின் நமக்கேது தீது?
தன்னலம் கொண்டு மாந்தர் தம்மவர் மற்றோர் என்று ܣܛ-ܐ܂ அந்நியம் காட்டி வாழும் அவலங்கள் நீங்கி - மண்ணில் நன்னெறி கொண்டுநாளும் நாமெலாம் கூடிவாழும் உன்னத ஞானம் வந்தால் பின் நமக்கேது தீது?
மன்னுரான் ஷிஹார்
-இதழ் 50

Page 157
“இது கட்டணம் செலுத்தப்பட்ட
៣gThU]*
செவிகளை அரித்து. அரித்து வழியும் குருதியை
அருந்தும் ஜனநாயக கோர உதற்கள்.
“இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்"
எல்லோருக்கும் ஒரே குல்லா இங்கு தோற்றது ஆயிரம் தலைகள் வாங்கிய அபூர்வ சிந்தாமணி கதை.
"இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்”
GTGIsGIslaULEös பூமாலைகள்.பொன்னாடைகள். புகழாரங்கள்.வாக்குநுதிகள். அதிகம் மூளையினர் நிலம், {{3}{GEDIGU Galwfial]]iff L'Îltab இனிறுேமொரு சுனாமி.
“இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்"
உடனர் பிறப்புகளின் CBGjafluLJğ (35 GADGalUGADOLU
ஜீவநதி
 

வர்த்தகச் சேவையாக்கும் விநாடி கையொப்பங்கள்.
"இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்"
புனித தெரு அங்காபுத் தெருவாக. வீசும் துர்நாற்றம் சாக்கடைப் பாடலுக்கான பக்க வாத்தியம்.
"இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்"
2. "செய்திகள் வாசிப்பவர்."
EsiBGULđidfila ILCELLU கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம்.
அதே துர்நாற்றம்
மீண்டும் தொடரும்.
"இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்"
- 2011
இதழ் 50

Page 158
மாணிக்கநேசன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். இன்னும் சரியாக ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. அதற்குள் பேருந்து வந்து போய்ச் சேரலாம் போல் அவருக்குத் தெரியவில்லை.
சரியான நேரத்திற்கு அது புறப்பட்டிருந்தால் இருபது அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாவது வந்திருக்கவேண்டும். இதுவரை வராதபடியால் பேருந்து பழுதோ என்னவோ? எத்தனை புதியவை வந்தாலும் இது ஒரு பிரச்சினை. வீதிகளும் அப்படி, கவனிப்பும் அப்படி,
எதுவோ? இனி அது வருவது சந்தேகமே. இடம்பெயர்ந்து நீண்ட காலத்தின் பின் ஏதோ அடி பட்டுப் பிடிபட்டு, கெஞ்சி தத்தமது காணிகளில் குடிய மர்ந்தவர்களுக்கு அத்துடன் பிரச்சினைகள் தீர்த்த பாடில்லை. மேலும் மேலும் கூடுகின்ற பிரச்சினை களோடு போக்குவரத்தும் சேர்ந்து வதைக்கிறது.
தத்தமது வாகனங்களில் பயணிப்போன் பாடு LJU 6)J TUJÚN6ò60D6D, பொதுப் போக்குவரத்தை நம்பி யிருப்போர் இப்படிக் கஷ்டப்பட வேண்டியதுதான். ஒன்றைத் தவறவிட்டால் அடுத்தது வர நெடுநேரமாகும்.
"அதோ தனியார் சிற்றுந்து ஒன்று வருகிறது. அதில் ஏறிப் போகவேண்டியதுதான் என மாணிக்க நேசன் தீர்மானித்தபோது அவரினுள்ளே ஓர் இதமின்மை ஏன் பொறாண்மை என்றுகூடச் சொல்லலாம். புகை கக்கியது.
ஏறியதும் அவர் இருப்பதற்கு ஓர் இடந்தேடினார். ஏற்கனவே ஓரிரண்டு பேர் நின்று பயணித்துக் கொண்டிருந்தனர்.
"எங்கள் பஸ்காரரோ ஒருவருமில்லாமல் ஓடவேண்டியிருக்கிறதென்கிறார்கள், ஏன் எங்களால் இது இயலவில்லை
ஜீவநதி 15
 

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
மாணிக்கநேசனின் பொருமல், தெல்லிப்பளை வந்துவிட்டது. இனி மளமள
வெனச் சனம் ஏறும்.
"ஐயா, யாழ்ப்பாணந்தானே? தயவுசெய்து பின்னுக்குப் போங்கோ"
நடத்துனர் பையன் பயணிகளை அடுக்குவ தற்குத் தயாராகிவிட்டான்.
"அட, இவன்களின்ரை வாயிலும் தயவுசெய்து எண்ட சொல்லும் வருகுதே! மாணிக்கநேசனுள் எழுந்த சிரிப்பு முகத்திலும் சிறிது காட்சிகொடுத்தது.
"எங்களின்ரை வாயிலும் வாறத்தில்லைத்தானே" என்ற எண்ணம் உடனே வந்து அந்த நகைப்பைத் துடைத்தெறிந்தது.
இன்றைக்கேன் அவர் தங்களைப் பற்றி அதிகம் கவலை கொள்கிறார்? காலையில் பேருந்து வராது இதில் பயணிக்க நேர்ந்ததாலா? அல்லது இன்று அவர் முக்கிய பங்கேற்கும் நேர்முகப் பரீட்சை ஏற்படுத்தும் அதிர்வு களா? அது ஒரு நாடகம், இலகுவான நடிப்பு ஏற்கனவே எழுதப்பட்ட முடிவு. அதனால் அவருக்கென்ன பாதிப்பு?
"ஐயா, இன்னும் கொஞ்சம் பின்னாலை (8LJ Tijg,6T6ör"
அந்த நடத்துனர் அவரது கவனத்தைத் தன் பக்கம் திருப்பி விநயமான வேண்டுகோள்களைத் தொடர்கிறான்.
"அக்கா, உப்பிடி நிக்காமல் ஒடுற பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நில்லுங்கோ. அம்மா, கொஞ்சம் LairgOTT606) (3LTI) (8.35|T"
"நான் சுன்னாகத்தில் இறங்கவேணும்" "அம்மா, உங்களைத்தான், நீங்கள் யாழ்ப் பாணந்தானே? அந்தம் மாவுக்குப் பின்னாலை போங்கோ, நீங்கள் மருதனாமடமெல்லே? அந்தச் சுன்னாகம் அம்மாவுக்குப் பின்னாலை போங்கோ"
"அட, இவன் வித்தியாசமான பெடியனாயி ருக்கிறான். அந்த அம்மா சொன்ன உடனை 'சுன்னாகத்
இதழ் 50

Page 159
ܫܬܐ
یہ
திலை உங்களை இறக்காமல் போகமாட்டம். இப்ட LÚNGÖT 60T IT60D6D (BUIT háJG335 T' GT6OCTOB (63FT6ò6ÓNÜGBLUTLIGE சுன்னாகம் வரேக்க முன்னாலை வரேலாதோ? எண்டு பிறகு பேசுறதுதானே தனியார் நடத்துனர்களுக்கே யுரித்தான வழமை
மாணிக்கநேசன் அருகில் நின்றவரிடம் கூறி வியந்தார். இன்று ஏனோ உடனே தங்களையும் ஒப்பிட மனம் தொடங்குகிறது. அவர் கண்ட தங்களது நடத்துனர் ஒருவரின் செயல் நினைவிற்கு வருகிறது.
அந்த நடத்துனர் பயணச்சிட்டை போடுவதும் பக்கத்தில் நின்ற பையனுடன் அளவளாவுவதும் வேலை யாக நின்றான். அந்தப் பையன் நண்பன் போலும், ஒரே கதையளந்து கொண்டு வந்த நடத்துனர் இடையே பேருந்து ஒட்டுனரிடம் ஒடிச்சென்று ஏதோ கூறிவிட்டு வந்தான். ஆனைப்பந்தி பேருந்து தரிப்பிடத்திற்கு சற்றுமுன் பேருந்தின் வேகம் குறைந்தது. அந்த நண்பன் பின்புற வாயிலால் குதித்து இறங்கிவிட்டான்.
அதேவேளை பேருந்தின் கடைசி இருக்கையின் மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயோதிபத் தாய் எழுந்துநின்று மணியை அடிக்க முடியாது தடுமாறியபடி தம்பி ஆனைப்பந்தி இறக்கம்" என்றாள். நடத்துனரும் மணியடித்தார். பேருந்து நிற்கவும் அவள் பின் வாயிலால் இறங்குவதற்கு படியில் கால் வைக்கவும் பேருந்து ஏனோ புறப்பட்டுவிட்டது.
நடத்துனர் வந்து கூறியதும் இறங்கிவிட்டான் என ஒட்டுனர் நினைத்திருக்கலாம். திரும்ப மணியடித்து அந்தப் பெண் இறங்குவதற்கு நடத்துனர் உதவப் போகிறார் என மாணிக்கநேசன் எதிர்பார்த்தார் ஆனால் "இறங்கிறது எண்டால் முன்னாலை இறங்க வேணும். பின்னாலை இறங்கினால் இப்பிடித்தான், போய் முன்னாலை இறங்குங்கோ" என நடத்துனர் கட்டளை யிட்டார். அவள் அந்த நெரிசலைக் கடந்து முன்னே போய்ச் சேரும்போது ஆரியகுளம் சந்தி வந்து விட்டது.
பணியாளர்களைத் தெரிவுசெய்யும் போது பணிக்கு ஏற்றவர்களாய் பார்த்துத்தேர்ந்தெடுக்க வேண்டும்.
தனது மனஓட்டத்தைப் பார்த்தபோது 'சாத்தான் வேதம் ஒதியது போல என்ற பழமொழிதான் அவரது நினைவிற்கு வந்தது, அதனோடு அந்தப் பட்டியலின் நினைவும்.
என்ன இருந்தாலும் தனியார் துறை பொதுசன நன்மையைக் கருதாவிட்டாலும் தமது இலாப நோக்கில் கண்ணாயிருக்கும். அரசதுறையினர் பொதுமக்களை யும் கவனிக்கமாட்டார்கள். தமது துறைக்கு நன்மை ஏற்படவேண்டும் என்றும் எண்ணமாட்டார்கள்
"இந்த அக்கா இரண்டு பிள்ளையளோடை வாறா ஆராவது இடம் குடுங்கோ"
ஒரு பெண் குழந்தையைத் தான் வாங்கி வைத்திருக்க முற்பட அக்குழந்தை தாயின் சட்டையை
ஜீவநதி

இறுகப் பற்றியபடி கதறுகிறது. மற்றப்பிள்ளை தாயின் பாவாடையில் தொங்கிக்கொண்டு விம்முகிறது.
தங்கச்சி, நீங்கள் யாழ்ப்பாணம் போறனிங்கள் தான். எண்டாலும் அந்த அக்கா பாவந்தானே. உங்கடை அக்கா மாதிரி நினைச்சு ஒருக்கா இருக்க விடுங்கோவன்"
மீண்டும் அந்த நடத்துனர் மாணிக்கநேசனின் பாராட்டைத்தட்டிக்கொள்கிறான்.
மூச்சுவிட முடியாத நெரிசலில் குழந்தைகள் பாவந்தான். இப்படி ஆட்களை அடுக்க எப்படித்தான் பழகுகிறார்களோ? ஆனால் எங்களுடைய ஆட்களிலே இப்படிச் செய்யக்கூடியவர்கள் ஓரிருவரே. மற்றவர்கள் முன்னுக்குப் போங்கோ மட்டுந்தான்.
மாணிக்கநேசனின் மனம் ஏனோ இன்று இந்த ஒப்பீட்டிலேயே போய் ஒட்டிக்கொள்கிறது.
அந்தக்காலத்து பழமொழியொன்று 'கதை யிலையே வயிற்றுப் பிள்ளை வழுவி விழும் என்றது இந்தப் பையன் போன்றவரின் உரையாடல் திறனைப் பார்த்துத்தானோ?
"இந்த ஐயாவைக் கொஞ்சம் இருக்கவிடுங்கோ, பாவம், ஏலாதாம்"
யார் அந்த ஐயா? என்று திரும்பிப் பார்க்கிறார் மாணிக்கநேசன்,
'e'L, öfle)LD!' ஆளை அடையாளம் கண்டதுமே மனம் சுவாலித் தெரிகிறது.
மாணிக்கநேசன், நேற்றுத்தான் இந்தச் சிவம் அலுவலகப் பணி செய்யத் தகுதியானவனென்று சிபாரிசு செய்து பணியின் கால எல்லை நீடிப்பதற்கான விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார்.
இவர் வேலையில் சேர்ந்த காலம் முதலே இந்தச் சிவம் பல்வேறு வியாதிகளின் ஒட்டுமொத்த உருவ மாகத் தன்னைக் காட்டிக்கொண்டு பணியிலிருக் கிறான். ஒன்றில் வேலை செய்ய இயலவில்லையென்று ஏதோ ஒரு வியாதியின் பெயரைக் கூறிக் கொண்டு பணியகத்தின் ஒரு மூலையிலிருப்பான். அல்லது ஒரு நோயின் காரணமாக வீட்டுக் கோ வைத்திய சாலைக்கோ போய்விட்டு இதோ வருகிறேன் என்று போனால் போனதுதான். லீவும் எடுக்கமாட்டான். வேலையும் செய்யமாட்டான். ஓய்வுபெறும் வயது வந்த பின் இது மூன்றாவது சேவை நீடிப்பிற்கான சிபாரிசு
அந்தக் காலத்திலே ஊரில் பிரசித்திபெற்ற ஒருவரின் மகனாம். அதனால் உள்ளே புகுந்தான். வேலை செய்யத்தான் நோயாளி. பிள்ளைகள் ஆறு.
'பாவம் வருத்தக்காரன் 'பாவம் பிள்ளைகுட்டிக்காரன் அனுதாப அலைகள் அவன் சேவைக்காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
155 இதழ் 50

Page 160
இதையெல்லாம் சிந்திக்கத் தனக்கென்ன தகுதி? என்ற சந்தேகமும் அவருக்கேற்படுகிறது.
தானுண்டு தன் வேலையுண்டு என்று வேலையை அர்ப்பணிப்போடு செய்துவந்த மாணிக்க நேசனை நெருங்கிவர பதவி உயர்வு மறுத்தது.
அவருக்குப் பின் நின்றுவிட்டு அவரைப் பின்தள்ளிய சுந்தரேசன் ஒருநாள் கதையோடு கதையாகக் கூறியது அவருள்ளே புகுந்த கறையானாகி சிறுவயது முதல் கட்டியெழுப்பப்பட்டிருந்த கடமை யுணர்வினை மூடி புற்றெடுத்தது.
"ஒவ்வொரு அலுவல் செய்யவும் கையாலை விசிறவேணும். காசும் விசிறவேணும். அவைக்கு விசிறியும் விசிறவேணும்"
இந்த நல்லுபதேசத்தின் பின் மாணிக்கநேசனும் மேலேயுள்ளவர்களின் சொற்கேட்கும் நல்ல பிள்ளை யானார். அடுத்த தடவை பதவி உயர்வும் வசமானது.
அவரை அறியாமல் கை சட்டைப்பையைத் தடவிக்கொண்டது. இன்று நேர்முகத்தேர்வில் தெரிவாக வேண்டியவர்களின் பெயர் விபரம் அதனுள்ளே அமர்ந்திருந்தது. பெரியவரின் திருவாக்குச் சீட்டு,
நேர்முகத்தேர்வு ஆரம்பமாகியது. வந்திருந்த ஒவ்வொருவரும் பெரும் எதிர்பார்ப் போடு தம் திறமைகள் பற்றிய விபரங்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளை தேர்வை நடத்திக்கொண்டிருந்த மூவருமே அனுதாபத்தோடு கவனித்துக்கொண்டிருந்தனர்.
திறமைசாலிகள் பலர். அவர்களுள் சிலரைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினந்தான்.
ஆனால் இந்தக் கஷ்டம் அவர்களுக்கில்லை. அவரது சட்டைப்பையிலிருந்து வெளியே வந்து அந்தப் பட்டியல் மேசையில் அமர்ந்து அவர்களுக்கு எந்தக் கஷ்டமுமில்லாமல் செய்துகொண்டிருந்தது.
அந்தப் பட்டியலிலும் திறமையற்றவர்களுடன் அதீத திறமைசாலிகளும் காணப்பட்டனர்.
இந்த நடத்துனர் வேலைக்கு இத்தகைய திறமைசாலிகள் அவசியமா?
தேர்வுசெய்து பயிற்சியளித்தபின் தகுதியான வேறு வேலை கிடைத்தால் விட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.
தேர்வு ஆரம்பமாகுமுன் இந்தப் பட்டியலை எடுத்து மற்றிருவரின் முன் வைத்துவிட்டு காலையில் பயணத்தின்போது மனதில் எழுந்த உணர்வுகளை அவர் களுடன் பகிர்ந்துகொண்ட வேளையில் இதைப்பற்றியும் மாணிக்கநேசன் சுட்டிக் காட்டியிருந்தார்.
இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்த
"உங்களுடைய பெயர்?" ரவீந்திரன்
ஜீவநதி 156

அவர் அவசரமாகப் பட்டியலைப் பார்த்தார்.
நல்லவேளை அந்தப் பெயரிருந்தது. மனதிற்கு ஒர் ஆறுதல்.
எந்த இடம்?
'ஏழாலை
இடப்பெயர் இடறியது.
முழுப்பெயர் என்ன? கேட்டுக்கொண்டே அவனது விபரங்களைப் பார்வையிட்டார்.
சண்முகம் ரவீந்திரன்
கஷ்டகாலம் பட்டியலிலிருந்தவன் காசிநாதன் ரவீந்திரன்.
இவனைத் தேர்வுசெய்யாது விடுவதா?
அவனைத் தேர்வு செய்தேயாக வேண்டும்.
அவருக்கு இதுவரை சோறுபோட்ட ஸ்தாபனத் திற்கு அவர் செய்யும் பிரதியுபகாரம்,
கறையான் புற்று சிதைக்கப்பட எஞ்சியிருந்த அத்திவாரம் உள்ளே உயிர்த்தது.
ஆவணங்களால் ஆதாரப்படுத்தத் தேவையற்ற அவனது திறமை, அவர் மனப்பூர்வமாகச் சிலாகித்த திறமை. அந்தச் சிற்றுந்தின் நடத்துனர் முன்னே நின்று கொண்டிருந்தான்.
நிராகரித்தலின் ബീ
எனது குவளையை ஏந்திய வணர்ணம்
உன்னிடம் வருகின்றேன். புறங்கையால் எத்தித் தள்ளுகின்றாய் கற்களில் விழுந்த குவளை என உன் சொற்களால் சிதறுகின்றேன். கை நிறைய மலர்களைக் கொணர்டு உன் வாயிலை வந்தடைகின்றேனர். திறவா நெடுங்கதவாய் இரட்டைத் தாழ்ப்பாள்களோடு இருக்கும் நிலையை என்னவெனர்பேனர்? மதியம் கடந்தும் மாலைப் பொழுதாகியும் வாடிய மலராய் வீழ்ந்தே கிடக்கின்றேன். என்னை மிதித்து விட்டு குதித்தோடுகிறது காலம்
கமல சுதர்சன்
H
இதழ் 50
2.

Page 161
ی
லெனின் மதிவானம்
கே.ஆர். டேவிட்ழ6
இரு சிறுகதை தெ
ஒரு மதிப்பீடு
முற்போக்கு இலக்கியத் தளத்தில் தனித்துவமா பதித்தவர் கே. ஆர். டேவிட் சுமார் நாற்பது ஆண்டுகளு அவரது இலக்கிய கொள்கை என்ன என்பதும் சு: இலக்கியம் உண்மையை சொல்ல வேண்டும். அது ம சொல்ல வேண்டும். அதற்கும் மேலாக மனிதர்க6ை வாழ்க்கையின் நாகரிகம் பற்றி வாசகர்களின் உள்ள டேவிட்டை பொறுத்தமட்டில், ஒரு மனிதன் இன்னொ திருடி வாழும் சமூகவமைப்பில் உண்மையின் பக்கம் படைப்பாக்க வேண்டும் என்பதே அவரது மனிதாயம அவரது வாழ்வும் படைப்புகளும் உணர்த்தி நிற்கிற் எல்லோரும் பாராட்டும் படைப்பாளியாக இருக்கி இலட்சியங்களையும் கொள்கைகளையும் காப்பாற்றி காணப்படுகின்றது என துணிந்து கூறலாம். அவர் அவ் எழுதி வந்திருப்பினும் "வரலாறு அவளைத் தோற்றுவிட்ட இலக்கிய உலகில் அவரை கணிப்புக்குரியவராக்கியது காலத்தில் அதிகம் பேசப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க களை தொகுத்து "மண்ணின் முனகல்", "பாடுகள்" என் துள்ளார். இவ்விரு தொகுப்புகளையும் நோக்குகின்ற ே மாற்றங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
இலங்கையில் நவீன காலத்தே எழுந்த இலக்கிய அவதானிக்கலாம். அண்மைக் காலத்தில் இலங்கையிலி இலக்கிய வெளியீடுகள் என்பனவற்றை அவதானித்தால் வேண்டியதில்லலை. கடந்த காலத்தில் வெளிவந்த ஈழத்து நீர்வை பொன்னயன் கதைகள், நிமிர்வு, காலவே ஒடுக்கப்பட்டவர்கள் இதயராசனின் முரண்பாடுகள், தப் நெல்லிமர பள்ளிக் கூடம், யோகர்ணனின் தேவதைகளி சுபேஸின் தாய் மடி தேடி, மு. அநாகரட்சகனின் நிமிர்வு, ! கோடாங்கி, பிரமிளா பிரதீபனின் பீலிக்கரை, பாக்குப் இன்னும் இது போன்ற பலருடைய ஆக்கங்களையும் அ இவ்வுண்மை புலப்படாமல் போகாது. இந்த பின்னணி தொகுப்பும் கவனத்தில் கொள்ள வேண்டியவையா செல்நெறியாக கொள்ள முடியாதுள்ளது என்பதை தட அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக தமிழ் நாட்டில் இ6 அதனை விடவும் கூடுதலான அங்கீகாரமும் மதிப்பும் நா
ஜீவநதி

ன ஆளுமைச் சுவடுகளைப் நக்கு மேலாக எழுதிவரும் வாரசியமான வினாதான். னித வாழ்க்கையை பற்றி ா பற்றி - அந்த மனித Tத்தை தொட வேண்டும். ரு மனிதனின் உழைப்பை நின்று அம்வம்சங்களை ாக இருந்து வந்துள்ளதை ]கின்றன. அந்தவகையில் ன்ற அவரிடத்தே தனது க் கொள்ளும் உறுதியும் வப் போது சிறுகதைகளை து" என்ற நாவலே ஈழத்து து. இந்நாவல் வெளிவந்த 5 ஆசிரியர் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட சிறுகதை ற தலைப்புகளில் இரு தொகுப்புகளை வெளிக்கொணர்ந் பாது அவரது உலக நோக்கில், படைப்பாளுமையில் பெரிய
வடிவங்களில் சிறுகதைக்கான மவுசே அதிகரித்துள்ளதை விருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகள், இணைய தளங்கள், இவ்வம்சம் புரியும். உதாரணம் தேடி வெகுதூரம் அலைய முற்போக்கு சிறுகதை தொகுப்பு, நீர்வை பொன்னையனின் Tட்டம், தெணியானின் இன்னுமொரு புதிய கோணம், ம்பு சிவாவின் சொந்தங்கள், முதுசம், நந்தினி சேவியரின் ரின் தீட்டுத் துணி, சேகுவேரா இருந்த வீடு, கார்த்தியாயினி வசந்தி தயாபரனின் காலமாம் வனம், சிவனுமனோஹரனின் பட்டை, தேவ முகுந்தனின் கண்ணிரினூடே தெரியும் வீதி து பற்றி வெளிவந்த ஆய்வுகளையும் நோக்குகின்ற போது யில் நோக்குகின்ற போது டேவிட்டின் இவ்விரு சிறுகதை கும். இந்த போக்கினை பொதுவான தமிழ் இலக்கிய மிழ் நாட்டின் இலக்கிய போக்கோடு ஒப்பிடுகின்ற போது ன்று சிறுகதைக்கு சம அளவில் அல்லது சில வேளைகளில் வலுக்கு உண்டு என்பதை அவதானிக்கலாம். சுமார் ஆயிரம்
-இதழ் 50

Page 162
பக்கங்களை கொண்ட நாவல்களும் வெளிவந்து அவை வாசகர்களின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளன. மிக அண்மையில் வெளிவந்த பா.வெங்கடேசனின் "காவல் கோட்டம்" என்ற நாவல் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். அந்தவகையில் தமிழ் நாட்டின் இலக்கிய செல்நெறியிலிருந்து இலங்கையின் இலக்கிய செல்நெறி மாறுப்பட்டிருப்பதன் சமூகப் பின்னணி என்ன என்பது பற்றிய தெளிவுணர்வு இலக்கிய ஆராய்ச்சி மாணாக் கருக்கும் வாசகருக்கும் அவசியம் வேண்டப்பட்ட தொன்றாகும். இவ்வினாவுக்கான விடை தேட முனை கின்ற போது நாவல், சிறுகதை ஆகிய இலக்கிய வடிவங்களின் தோற்றத்திற்கும் சமூகபின்னணிக்குமான உறவு குறித்த பார்வை அவசியமானதாகின்றது. இக்காரண காரிய தொடர்பு பற்றி பேராசிரியர் எம்.ஏ நுஃமான் பின்வருமாறு கூறுவார்:
1) நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் உடைவில் இருந்து முதலாளித்துவ சமூகம் தோன்றும் போது அத்தகைய பாரிய சமூக மாற்றத்தின் விளைவாக புதிய நிலை களைப் பிரதிபலிக்கும் இலக்கிய வடிவமாக நாவல் தோன்றுகின்றது. 2) முதலாளித்துவ சமூக அமைப்பு வேரூன்றி, மத்தியதர வர்க்கம் நிலைபேறு அடையும் போது புதிய சமூக வமைப்பின் அமுக்கம் தனிமனிதர்களின் வாழ்க்கையில் தோற்றுவிக்கும் நெரிசலும், மனமுறிவும், சலனங்களும் இறுக்கமாக வெளிப்படுத்தப்படக்கூடிய இலக்கிய வடிவமாக சிறுகதை செல்வாக்கு பெறுகிறது. 3) முதலாளித்துவ சமூக அமைப்பின் அமுக்கம் அதிகரிக்க அதிகரிக்க, சமூக முரண்பாடுகளும் மோதல் களும் அதிகரிக்க அதிகரிக்க அவைபற்றிய எழுத்தாளனின் பிரக்ஞையும் விரிவடைந்து அவனது மன உலகம் அகல நோக்குப் பெறுகிறது. சமூக மாற்றங்கள் இயக்கங்கள் கருத்தோட்டங்கள். வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றையெல்லாம் முழுமை யாகவும் காரணகாரிய தொடர்ச்சியுடனும் தெளிவாக்க வேண்டிய தேவை அழுத்தம் பெறுகின்றது. இதற்கு நாவலே தகுந்த சாதனமாதலால் அது இலக்கிய முதன்மை பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது."
இவ்வகையில் நோக்குகின்ற போது நாவலே சிறந்த வடிவம் என்பதோ அல்லது சிறுகதை சமூக போராட்டங்களை சித்திரிக்காத இலக்கிய வடிவம் என்றோ நாம் முடிவுக்கு வர வேண்டிய அவசியமில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியமாகும். இன்றைய நசிவு தரும் சூழலில் நாவல் எவ்வாறு ஜனரஞ்சகம் என்ற பெயரில் குடும்ப கதைகள், மர்மக் கதைகள், சரித்திரக் கதைகள் என பொதுமக்களிடையே விரக்தியையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகின்றதோ அவ்வாறே சிறுகதையும் அத்தகைய
ஜீவநதி

பண்புகளை அடிப்படையாக கொண்டு வெளிந்திருக் கின்றது. மறுப்புறத்தில் மக்கள் படைப்பாளிகள் நாவல் சிறுகதை ஆகிய இலக்கிய வடிவங்களை கொண்டு வெகுசன போராட்ட உணர்வை வெவ்வேறு தளங் களில் வடிவங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் அது தோற்றுவிக்க கூடிய தனிமனித நெரிசல்கள், தனிமனித முரண்பாடுகள் கூடவே இவற்றையெல்லாம் மூடி மறைத்து அதிகாரத்திலிருப்பவர்களின் செளகரியத்திற் காக தன்னலம் பேனி இழி தொழில் காக்கும் மனிதர்களின் ஈனச்செயல்கள் தனிமனிதர்களுக் கிடை யிலான நெரிசல்களை முனைப்படைய செய்திருக் கின்றன. மேலும் கடந்த முப்பது வருடங்களாக எமது நாட்டில் இடம் பெற்ற இனவிடுதலைப் போராட்டம் பற்றிய ஆழ்ந்த நேர்மையான ஆய்வுகள் வெளி வராமையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத் தக்கதே. ஆங்கில மொழிக்கு அடுத்த நிலையில் தமிழ் மொழியிலேயே இணையத்தள வளர்ச்சி காணப்படு கின்றது. இதற்கு மிக முக்கியமான அடிப்படை எமது நாட்டில் இடம் பெற்ற இனவிடுதலைப் போராட்டமும் அதனை அடியொட்டியெழுந்த புலம் பெயர்வு வாழ்க்கையுமே காரணம் என்பதை தமிழ் இணைய தளங்களில் வெளியாகியுள்ள ஆக்கங்கள் சான்றாக அமைந்திருக்கின்றன. இத்தகைய பின்னணி நாவலை விட சிறுகதை தோன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கியிருக்கின்றன என அமைதி கொண்டாலும், இன விடுதலைப் போராட்டமும் அது தோற்று வித்திருக்கும் சமூக மாறுதல்கள்-பன்மைத் துவம் என்பனவற்றை முழுப் பரிமாணத்துடன் சித்திரிக்க கூடிய வடிவமாக நாவல் திகழ்ந்த போதும் இலங்கை யில் இனவிடுதலைப் போராட்டத்தை சித்திரிப்பதில் நாவலை விட சிறுகதை ஏன் முனைப்புப் பெற்றுள்ளது என் பது முக் கசியமான வினா. இது பற்றி இக்கட்டுரையின் முடிவில் விவாதிப்போம்.
மண்ணின் முனகல் என்ற தொகுப்பில் "ஊர்வலம் செல்கின்றது"(1971), "கஸ்தூரி(1973), "இதயங்கள் கரைகின்றன(1975), "அதிர்வு(1995), "பாணன் போறனை (2010), "உணர்வுகள் கட்டுடைந்தால்.?"(1977), மிசின்பொட்டி"(1982), "நாய்மூளை"(2009), "சிறைக் கதவுகள் திறந்துக் கிடக்கின்றன"(1978), "கண்ணிர் கொந்தளிக்கும்"(1974), "மண்ணின் முனகல்"(1999), " நான் கேவலமானவனல்ல"(1985) என பன்னிரெண்டு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே பாடுகள் என்ற தொகுப்பில் "தாய்மையின் விலை"(1978), "ஆசைச் சாப்பாடு"(1982), "கண்ணிர் எப்ப முடியும்" (1982), "சுடுகாடு"(1982), "சூடுகள்"(1983), "மண் வாசனை"(1985), "பாடுகள்"(1986), "சிறுவாணம்"
இதழ் 50

Page 163
H -
ܟ
(1994), "இருள்"(1994), "ஒல்லித் தேங்காய்கள்" (1995) "குறுணிக்கல்"(1995), “விபச்சாரங்கள்"(2002) என பண்ணிரெண்டு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இச் கதையாசிரியரின் கதைகளை வாசித்த போது சில செய்திகள் முனைப்பாக தோன்றுகின்றன.
டேவிட்டின் சிறுகதைகளைத் தொகுத்து நோக்கு கின்ற போது கடந்த மூன்று தசாப்தங்களாக எமது நாட்டில் நடைப்பெற்ற இனவாத யுத்தம் எமது நாட்டின் சமூகப் பொருளாதாரம், கல்வி, கலை , பண்பாடு சமூகக் கட்டுக் கோப்பு போன்ற அம்சங்களில் எத்தகைய தாக்கங் களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவரது சிறுகதைகள் அழகுற எடுத்துக் காட்டுகின்றன. கடந்த காலங்களில் தான் அனுபவித்த துன்பதுயரங்கள், இதனால் அவர் பெற்ற தாக்கங்களும் மனவெழுச்சிகளும் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்துக்களில் தொண் ணுறு சத வீதமான பாத்திரங்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஆவார். மேலும் தமது வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியதாகவும் அக்கதைகள் அமைந்து உள்ளன ஒரு ப் புறமான இனவாத அடக்கு முறைகளும் மறுப்புறமான தமிழ் பாஸிசத்தின் நசிவு தரும் அரசியல் பயங்கரவாதமும் இம்மக்களின் வாழ்வை சிதைவுக் குள்ளாக்கியது. இத்தகைய வாழ்வின் கொடூரங்களை யும் அவற்றினிடையே வாழும் மனிதர்களையும் இவரது கதைகள் வெவ்வேறு வகையில் சித்திரித்துக் காட்டுகின்றன. இனவெறிக்கு பலியாகி தன் குழந்தைக்கு பாலூட்ட கூட மார்பு இல்லாத நிலையில் தவிக்கும் தாயை நாம் "நான் கேவலமானவனல்ல" என்ற கதையில் சந்திக்கின்றோம். இவ்வாறே இனவாத யுத்தத்தின் பாதிப்புகள் பற்றி கூறும் கதைகளாக அவரது அதிர்வு பாண்போறணை, கண்ணிர் கொந்தளிக்கும், மண்ணின் முனகல், சிறுவாணம், குறுணிக்கல், விபச்சாரங்கள் ஆகிய கதைகள் அமைந்துள்ளன.
தமிழ் தேசிய போராட்டம் முனைப்புற்றிருந்த சந்தர்ப்பத்தில் மக்கள் இயக்கங்கள் பின் தள்ளப்பட்டு தமிழ் பாசிச இயக்கப் போக்கு முனைப்படைந்திருந்தது இதன் பின்னணியில் அழகியல் வாதம் ஈழத்து இலக்கிய அரங்கில் மீண்டும் அரியணையேறியது. அதனையும் மீறி யதார்த்தப்படைப்புகள் தலை காட்டிய போது தமிழக்கதில் ஜெயமோகன் போன்ற வகையறாக்கல் ஈழத்து படைப் பாளிகள் தமது முதுகொடிய யதார்த்தத்தை சுமர்க்கின்றார் எனவும் அதனால் ஈழத்தவர்களின் படைப்புகளில் கலைத்துவத்தை விட அரசியல் பிரசார வாடையே அதிகரித்துள்ளது என்ற கண்டுபிடிப்பையும் நிகழ்த்தி ஆகவே ஈழத்து படைப்புகள் யாவும் வெறும் வெம்பல்கள் என்ற தீர்ப்பையும் வழங்குகின்றார். ஈழத்தில் ஒரு காலக்கட்டத்தில் மார்க்சிய விமர்சகர் களாக திகழ்ந்து பின் அழகியல்
ஜீவநதி

வாதத்திற்குள் முடங்கியவர்களும் இக்கருத்தை ஆதரித்திருந்தனர் (இன்று இந்நிலைப்பாட்டில் மாற்றம் எற்பட்டுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்). அப்படியாயின் அவர்களின் பிரகடனம் தான் என்ன? இலங்கையின் தமிழ் தேசிய போராட்டத்தை அமெரிக்க மேலாதிக்கவாதிகளிடம் அல்லது உள்ளுர் பிற்போக்க வாதிகளிடம் ஒப்படைத்து விட்டு படைப்பாளி யொருவர் அரசியல் பாதிப்பின்றி கலைத்துவத்தில் கவனமெடுக்க வேண்டும் என்பதன் பின்னணியில் உள்ள அரசியல் நயவஞ்சகத்தை எம்மால் அறிய முடியாமல் இல்லை.
டேவிட்டின் கதைகளை நோக்குகின்ற போது இந்த போக்கிற்கு மாறாக யதார்த்தவாதத்தை துணைக் கொண்டே தமது படைப்புகளை ஆக்க முனைந்திருக் கின்றார். அவரது கதைகளில் வரும் வகைமாதியான பாத்திரங்கள் யாவும் சமூகத்தில் நடமாடும் மனிதர் களே, அந்த வகையில் யதார்த்த நிலை நின்று பாத்திர படைப்புகளை படைப்பதில் இக்கதையாசிரியர் வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே கூற வேண்டும்.
டேவிட்டின் கதைகளில் முக்கியமாக சமூகப் பிரச்சினையாக விளங்குவது கல்வியாகும். இன்றைய கல்வித் திட்டம் சமூக வளர்ச்சிக்கான முழு பரிமாணத்தை கொண்டிருக்கவில்லை என்பதை ஆசிரியர் தயவு தாட்சண்யமின்றி விமர்சனத்திற்குட் படுத்துகின்றார். ஓர் ஏற்றத் தாழ்வான சமூகவமைப்பில் கல்வியமைப்பிலும் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதை வளர்ச்சியடைந்த நாடுகளின் புள்ளிவிபரங்களும் காட்டுகின்றன. ஓர் உதாரணத்திற் காக அமெரிக்காவில் அரைமில்லியன் மாணவர் களிடத்தே செய்யப்பட்ட ஆய்வறிக்கையின்(கோல்மன்) பின்வரும் விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கது:
ஒரே தன்மையான கல்வி வாய்ப்புகள் அளிக்கப் பட்ட போதினும் கூட எந்த விதமான சமூக ஏற்றத்தாழ்வு களுடன் மாணவர்கள் பள்ளியில் நுழைந்தார்களோ, அவற்றில் எவ்வித மாற்றமும் ஏற்படாமலே அவர்கள் பள்ளியை விட்டு செல்கின்றார்கள், ஏழ்மையான மற்றும் பின்தங்கிய பின்புலத்தில் இருந்து வந்த மாணவர்கள் மோசமாக படித்தார்கள் என பின்னடைந் தார்கள் என எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. வேறுசில ஆய்வுகள் வெறும் ஐந்து சதவீத மாணவர்கள் மட்டுமே தாங்கள் படித்த சமூகக் குழுவின் படிநிலையை தங்கள் கல்வியின் மூலம் தாண்டியுள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அந்தவகையில் வணிகமய மாகிவிட்ட கல்வி முறையில் மாணவர்கள் பரீட்சை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்களாகவே காணப்படு கின்றனர். இது பற்றி "பாண்போறனை" என்ற கதையில் இச்சிறுகதையாசிரி யரின் உணர்வுகள் இவ் வாறு பிரவாகம்
இதழ் 50

Page 164
கொண்டிருக்கின்றன:
"கல்விக் கூடங்கள் என்பன பரீட்சை வினாக்களுக் கான விடைகளைத் தயார்ப்படுத்தும் நிலையங்களே தவிர வாழ்க்கைக்கான போதனைகளையோ சமூக முடிச்சு களை அவிழ்க்கும் அல்லது அறுக்கும் போதனை களையோ செய்யும் சமூக நிறுவனங்கள் அல்ல.
என்ற உண்மையை. மிக நீண்ட கயிற்றில் "கல்வி மேய்ச்சல்" நடத்தி மிகப் GLIJLð 56ö6Íslu JeDTGITü 56ITT(86DC3u_1 L|[flu JÚ LILITLDeb இருக்கும் போது வறுமை என்ற ஒரு முழக் கயிற்றில் "சமூக மேய்ச்சல்" நடத்திய கபிரியேலால் புரிந்துக் கொள்ள முடியுமா?
என இன்றைய கல் வியன் போக்குகளை விமர்சனத்திற்குட்படுத்துகின்றார். அவரது "நாய் மூளை" என்ற கதையில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து உங்கள் முன் சில முளைகளை வைத்தால் நீங்கள் UTCD60)LU மூளையை எடுப்பீர்கள் என வினவ ஆசிரியர் குறிப்பிட்ட மூளைகளில் மாணவரொருவன் டாக்டரின் மூளை எடுப்பேன் எனவும் வேறொரு மாணவன் மந்திரியின் மூளையை எடுப்பேன் எனவும் கூறி நிற்க ஏழ்மையின் காரணமாக வகுப்பில் பின் தங்கிய நிலையிலிருக்கும் மாணவ னொருவன் எவ்வித பதிலும் கூறாமல் இருக்க, பின் ஆசிரியர் தனியாக அழைத்து வினவும் போது தனக்கு நாய் மூளை வேண்டும் என அவன் கூறும் வரிகள் குருதி குழாய்களில் இரத்தத்தை உறையச் செய்துவிடுகின்றன. இக்கட்டத்தை படிக்கும் போது என் உள்ளம் உருகி கண்ணிரும் வந்து விட்டது.
இன்றைய கல்வி முறையை விமர்சனத்திற்குட் படுத்தும் டேவிட் சமூக அசைவியக்கத்தில் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறத் தவறவில்லை. "முழுமையான சமூகமாற்றத்துகானதாய் அமையாத போதினும், அதற்கான தேடலை ஏற்படுத்துவதும், சமூக அசைவியக்கம் வாயிலாக சிறு முன்னேற்றத்தை அருட்டுணர்வாக்கவல்லதாகவும் கல்வி அமைகிறது. இந்தப் படைப்பாளியும் கூட சமூகப் புறக்கணிப்புகளை யும் வறுமையையும் கல்வி வாயிலாகப் புறங்காணச் செய்தவர் தான். அவரை கட்டமைத்த மோகனதாஸ் சனசமூக நிலையம் கல்வி குறித்த மயக்கங்களுக்கு இடமளிக்காமல், அதன் சமூக அசைவியக் கப் பாத்திரத்தைப் புரிந்துக் கொண்டு இயங்கியதன் வாயிலாக மட்டுவிலின் முன்னேற்றத்தை கல்வியூடாக ஏற்படுத்தியிருந்தது"(நஇரவீந்திரன், மண்ணின் முனகல், தொகுப் பின் அணிந்துரையில்). இவ்விடத்தில் முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டியது யாதெனில் இன்று நிலவுகின்ற கல்வியினூடாகவே இந்த சமூக அமைப்பை மாற்றி விடலாம் என கனவு கண்டவர்கள் வெறும் கற்பனை லோகத்திலே சஞ் சரிப் பவர்களாக
ஜீவநதி 160

இருந்தார்கள். மறுப்புறத்தில் தாங்களை புரட்சியின் புனிதர்கள் காட்ட முற்பட்ட அதிதீவீரவாதிகள் சிலர் முதலாளித்துவ சமூகவமைப்பில் நிலவக் கூடிய கல்வியை புறக்கணிப்போம் என்ற போர்வையில் (சில சமயங்களில் தங்களது கல்வித் தகுதியை உச்சமாக வளர்த்துக் கொள்வதில் கூடுதல் கவனமெடுத்த அதேசமயம், ஏனையோர் கல்விப் பெறுவதற்கு தடையாக இருந்த கோசம் எழுப்பியவர்கள் நம்மத்தியில் இல்லாமலில்லை) கல்வியை புறக் கணித்த அவலம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. டேவிட்டை பொறுத்த மட்டில் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டவராகவும் நேர்மையானவராகவும் இருந்தமையால் அவரால் கல்வியின் இரு பக்கங் களையும் பார்க்க முடிந்தது. இது இப்படைப்பாளியின் தனிச் சிறப்பு எனக் கூறலாம்.
இவ்விடத்தில் முக்கிய செய்தியொன்றினைக் கூற வேண்டியுள்ளது. ஒரு படைப்பாளி சமூகத்தில் அடித்தட்டில் உள்ள மாந்தர்களைப் படைப்பாக்கி விட்டார் என்பதற்காக அவர் முற்போக்குவாதியாகி விடமுடியாது. பல படைப்பாளிகள் தமது வர்க்க நலன் காரணமாக அறிந்தோ அறியாமலோ உழைக்கும் மக்களை கீழானவர்களாகவும் சில சமயங்களில் அவர் களை கிண்டலடிக்கும் பாணியிலும் பாத்திரங்களாக்கி யுள்ளனர். அவ்வகையில் டேவிட் அடித்தள மக்களின் வாழ்வினை படைப்பாக்க முனைகின்ற போது இவர் அம்மக்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டவராகவோ அல்லது உயர் குழாத்தினருக் குரிய மேட்டிமை மனோபாவத்துடனோ படைப்பாக்க வில்லை. மாறாக இதய உணர்ச்சி உள்ள மனிதனொரு வனாக அவர் இப்பாத்திர படைப்புகளை உருவாக்கி யிருக்கின்றார். எடுத்துக்காட்டாக "சிறைக்கதவுகள் திறந்து கிடக்கின்றன" என்ற கதையில் வரும் கனகம் என்ற பெண் கஞ்சா விற்று சிறைக்கு செல்கின்றாள். அவள் திரும்பி வரும் போது அவளது தவறு தொடர் கின்றது. விபச்சாரங்கள் கதையில் பால் தொழிலாளி யாக வரும் கமலா, தாய்மையின் விலை வாழ்வுக்காக பால் தொழிலாளியாக மாறிவிட்ட பொன்னம்மா இவ்வாறு இக்கதையாசிரியரில் வெளிப்படும் எண்ணற்ற பாத்திரங்கள் யாவரும் ஆடம்பர வாழ்க்கைக்காவோ அல்லது மாடமாளிகைக்காகவே இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டவர்கள் அல்லர். அந்தவகையில் மக்களின் அடிப்படை பிரச்சினையான பசி பிரச்சினையை - அதனால் உருவாகின்ற சமூக பொருளாதார பிரச்சினையை - அதனையொட்டி மனித உறவுகளில் ஏற்படுகின்ற சமூகப் பிரச்சினைகளை வாழ்வியலுக்கூடாக அவர் படைப்பாக்கியிருப்பது சிறப்பானதாகும். இச்செயல்களுக்காக இம்மனிதர் களின் மீது கோபத்தைவிட அவர்களை உருவாக்கிய
இதழ் 50
ܣ.

Page 165
சமூகவமைப்பின் மீதான கோபத்தையே வாசகனின் தோற்றுவிக்கின்றது. வாழ்வாதாரத்தை உத்திரட் படுத்தாத சமூகத்தின் விளைவுகள் எத்தகையதாக உள்ளது என்பதை உணர்த்தி அவனது ஆன்மாவை உலுக்கிவிடக் கூடியதாக அப்பாத்திரப் படைப்புகள் உள்ளன.
படைப் பாளியொருவர் என் ன கருத்தை கூறுகின்றார், அவர் எப்படி சொல்கின்றார், அவர் கூறுவது வாழ்வாதாரத்துடன் எந்தளவு ஒத்துப் போகின்றது என்ற விடத்தில் தான் படைப்பாளியொருவரின் வெற்றி தங்கியிருக்கின்றது. அந்தவகையில் தனக்கு முன் யாரும் கண்டிராத அறிந்திராக ஒரு விடத்தினை படைப்பாளி யொருவர் அறிந்தும் கண்டும் கூறுவாராயின் அதுவே உண்மையான படைப்பாகின்றது. வாழ்க்கையை நாம் புரிந்துக் கொள்வதற்கு மேலாக அவ்வாழ்க்கையின் இருண்ட பகுதியை நுண் ணயத்துடன் அறிந்து கொள்வதற்கு உணர்ந்து கொள்வதற்கு அப்படைப்பாளி நமக்கு துணைப்புரிகின்றார். இவ்வகையில் நாம் டேவிட்டின் கதைகளை நோக்குகின்ற போது பல படிநிலைகளின்றும் வரம்புகளின்றும் அல்லற்படுகின்ற மனித வாழ்வு பற்றி தரிசனத்தை நாம் அறிந்துக் கொள்வதற்கு துணைநிற்கின்றார்.அதனால் தான் அவரது படைப்புகளில் சமூகம் பற்றிய அறிவும் அதனடியாக தோன்றும் உணர்ச்சிகளும் உள்ளடக்கமாக இருக் கின்றது. மேலும் அதனை பொருத்தமான வடிவத்தில் வெளியிடுகின்றார். கருத்தை கதையாக சொல்லும் ஆற்றல் அவரிடத்தே சிறப்புற்றிருக்கின்றது என்பதற்கு அவரது சிறுகதைகள் தக்க ஆதாரமாக அமைந்துள்ளன.
பல எழுத்தாளர்கள் வாசகனை சிந்தனையற்ற வராக கருதி படைப்பில் இடையில் அல்லது பாத்திரங் களை தமது கருத்து பிரச்சாரர்களாக்கி தன் கலைப் படைப்பில் தானே செய்தியை வெளியிடுகின்றார்கள். டேவிட்டின் கதைகளில் வாழ்க்கை அனுபவங்கள் படைப்பாக்கப்பட்டுள்ளன. இவ்விரு தொகுப்பிலும் அடங்கியுள்ள கதைகளை வாசித்த போது கலைப் படைப்பு பற்றி ஃப்டையேவ் கூறிய கூற்று ஞாபகத்திற்கு வருகின்றது:
"ஒரு கலைப் படைப் பின் இதயத்தில் ஆழ்ந்திருக்கும் கருத்து, சிந்தனை, உணர்ச்சிகளை எப்படி வெளியிடுவது என்று கலைஞன் எண்ணிப் பார்க்கும் போது, இந்நோக்கத்தை நிறைவு செய்ய எந்தச் சம்பவங்கள் பயன்படும், அச்சம்பவங்களின் செயற்பாடு எந்தப்போக்கில் போகும், சம்பவங் களின் வரிசைத் தொடர் எப்படியிருக்க வேண்டும் என்ற வினாக்களுக்கு விடை காண்பதற்காகச் சிந்தனை செய்கின்றான்."
இவ்வகையில் புறவய யதார்த்தமும் அகவய உணர்வும் இணைந்தே டேவிட்டின் சிறுகதைகள்
ஜீவநதி

தோற்றம் பெற்றுள்ளமையால் இயல்பாகவே உள்ளடக் கத்திற்கு ஏற்ற உருவம் பெற்று விளங்குகின்றது. படைப்பாளியின் உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சியும் சிந்தனையும் அதேயளவு வாசகனிடத்தில் பதிவதாக அமைவது இப்படைப்பாளியின் தனித்துவமாகும்.
மேலும் டேவிட்டின் கதைகளில் காணப்படு கின்ற சிறப்புகளில் என்று தான் இலங்கை மண்ணின் பல்வேறு களங்களும் அவரது கதைகளில் இடம் பெறுகின்றது. அவ்வாறு அவ்வாழ்வை படைப்பாக்கும் போது அவ்வவ் பிரதேசத்திற்குரிய வாழ்வியல் அம்சங்களுடன் வெளிக் கொணரப்படுகின்றது. அவர் ஆசிரியராக மலையகத்திலும் மூதூரிலும் கடமை யாற்றிருக்கின்றார். பின் உதவிக் கல்விப் பணிப்பாள ராக பதவியுயர்வு பெற்று, தமது சொந்த ஊரான யாழ்ப்பாணத்தல் கடமையாற்றி ஓய்வு பெற்றிருக் கின்றார். இக்கால சூழலில் அவர் பெற்ற அனுபவங்கள் இங்கு படைப் பாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக "சுடுகள்" என்ற கதையில் வருகின்ற வேலைகார சிறுவனின் பாத்திரத்தின் ஊடாக மலையகத்தின் வறுமை, வேலைக்காக செல்லும் சிறுவர்களின் உழைப்பு சுரண்டல், ஏஜமான வர்க்கத்தின் கர்ணக் கொடூரமான வதைகள் என்பனவற்றை அழகுற எடுத்துக் காட்டியிருக்கின்றார். அவ் வாறே "பாண்போறனை", "மண்வாசனை" ஆகிய கதைகளில் | மூதூர் பிரதேச வாழ்க்கை காட்டப்படுகின்றது. ஏனைய அனைத்துக் கதைகளிலும் யாழ்பாண பிரதேச வாழ்வு படைப்பாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெவ்வேறு பிரதேச வாழ்வை படைப்பாக்க முற்படுகின்ற போது அம்மண்ணின் மனங்கமழும் பேச்சு வழக்கை சிறப்பாக கையாளு கின்றார். அவற்றில் யாழ்பாண பேச்சு வழக்கு அம்மக்களிடையே காணப்படுகின்ற பழமொழிகள் என்பனவற்றை கையாளுவதில் தான் அவர் முழுமை யாக வெற்றிபெற்றிருக்கின்றார் என்பதை அவரது சிறுகதைகளை வாசிப் பதன் மூலமாக அறிய முடிகின்றது.
இவ் வகையில் அவரது படைப்புகளில் பலமான அம்சங்களை சுட்டிக்காட்டிய அதேசமயம் அதன் பலவீனமான அம்சங்களையும் குறித்துக்காட்ட வேண்டியதும் அவசியமானதாகும்.
இவ்விடத்தில் இவர் பொறுத்து பிறிதொரு மதிப்பீட்டை செய்வதற்கு இன்னொரு படைப்புடன் ஒப்பு நோக்குவது பொருத்தமானதாக அமையும், நீர்வை பொன்னையன் தனது கதைகளில் புதிய சமூக எழுச்சியை காட்டுகின்றார். தனித்தனியாக பிரிந்து நிற்கும் உழைப்பாளி சக உழைப்பாளியொருவருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக எவ்வாறு ஒன்று பட்டு போராடுகின்றார்கள் என்பதை சித்திரித்துக்
161 இதழ் 50

Page 166
காட்டுவதில் அவரது மேடும் பள்ளமும் என்ற கதை குறிப்பிடத்தக்கதொன்றாகும். பாழடைந்து போன மேட்டு நிலத்தில் விவசாயம் செய்வதற்காக உடையாரிடம் நிலத்தை பெற்ற கணபதி, தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தாரைவார்த்து இந்நிலத்தை பாலைவன மான அம்மண்ணை பசுமை நிறைச் சோலையாக மாற்றுகின்றார். அவ்விவசாயின் உழைப்பையும் அந்நிலத்தையும் அபகரிப்பதற்கு திட்டமிட்ட உடையார் தனக்கு வரவேண்டிய மொத்த கடனையும் ஒரே நேரத்தில் தருமாறு உத்தரவிடுகின்றார். கணபதியால் முடியாமல் போகவே அவரையும் மீறி அவரது தோட்டத்தில் உள்ள மரக்கறிகளை பிடுங்குகின்றார். நியாயம் கேட்க சென்ற கணபதியை உடையார் தாக்கு கின்றார். இரத்த காயங்களுடன் கணபதி கீழே விழ அவர் மீது அனுதாபம் கொண்ட சக விவசாயிகள் ஒன்றிணைந்து போராட முற்படுகின்றார்கள். அவர்கள் படையெடுத்து மேட்டு நிலத்தை நோக்கி செல்கின்றனர். அக் கூட்டத்தில் யாரோ ஒருவருடைய தோளில் கணபதியும் தூக்கி செல்லப்படுகின்றார். இங்கு விவசாயிகள் தமது அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து உடையாரின் கட்டளையை மீறி போராடுகின்றார்கள். சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் உணர்ந்து அதனை எதிர்த்து உடையாருக்கு எதிராக விவசாயிகள் தாங்கள் ஒரு வர்க்கம் என்பதை உணர்ந்து போராடுவதை சிறப்பாக படைப் பாக் கிருக்கின்றார் நீர் வை பொன்னையன், இவ்வம்சம் கோட்பாடாக விபரிக்கப் படாமல் மனித உறவுகளின் அடிப்படையில் அவற்றை படைப்பாக்கியிருப்பது நீர்வையின் படைப்பாளுமைக்கு தக்க எடுத்துக் காட்டாக அமைகின்றது.
இவ்வகையில் டேவிட்டின் கதைகளை ஒப்பு நோக்குகின்ற போது அவை ஏற்றத்தாழ்வான சமூக மைப்பில் அது தோற்றுவிக்க கூடிய முரண்பாடுகள் துயரங்களை கண்டு கவலைப் படுவதாகத் தான் தோன்றுகின்றது. பசி மட்டுமே புரட்சியை கொண்டு வந்து விடாது. சில சமயங்களில் பசி பத்தையும் பறக்கச் செய்து விடும் (இவ் வம்சம் டேவிட்டின் கதைகளிலும் படைப்பாக்கப்பட்டுள்ளது). சுரண்டலும் ஒடுக்குமுறை களும் அது தோற்றுவிக்கும் வர்க்க முரண்பாடுகளும் மக்களின் ஒற்றுமைகளும் ஒரு தத்துவார்த்த பார்வைக்குள் ஒழுங்கமைக்கின்ற போது அது சமூக மாற்றப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது என்ற உண்மையை உணர்ந்து தமது சிறுகதைகளை டேவிட் படைப்பாராயின் இன்னும் காத்திரமான படைப்புகளை அவரிடமிருந்து நாம் எதிர் பார்க்கலாம். இவ்வம்சம் ஒருபுறமிருக்க அவரது படைப்புகளில் வெளிப்பட்டு நிற்கும் சோக உணர்வு கூட வாசகனை விரத்தியில் மூழ்கடிக்க செய்யாமல் சமூக அசைவியக்கத்தை முன்னெடுப்பதாக அமைந்துள்ளமை டேவிட்டின்
ஜீவநதி • 162

பலமான அம்சமாகும் இவ்விடத்தில் குறித்துக்காட்ட வேண்டியதொன்றாகும்.
இந்நாட்டின் அதிகார வர்க்கமும் பேரினவாதி களும் ஆரம்ப கால முதலாகவே தமிழர்களின் இனத்தனித்துவத்தை சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர். ஆரம்ப காலப்பகுதியில் வட-கிழக்கு சார்ந்த அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும் இலங்கைத் தேசியம் குறித்து கவனம் செலுத்தியிருந்தாமையினால் பேரினவாதம் பற்றி சிந்திக்க தவறிவிட்டனர். (38FñT.G) UmT6öT. é9H([560OTIT&FGDLíb (3LJIT6öT (3pDITñf (3LJrfla0T வாத்தை அடையாளம் கண்டிருந்த போதும் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அவர் இறந்துவிடுகின்றார். பின் வந்த தலைவர்கள் அதனை கவனத்திலே எடுக்கவில்லை. உயர் மத்திய தர வர்க்க வாழ்க்கை முறைகள், அரசியல் சிந்தனைகள், அரச சலுகைகள் காரணமாக பேரினவாதம் குறித்து அவர்கள் சிந்திக்க தவறிவிட்டனர். தமிழ் தேசியம் குறித்து முற்போக்கான சிந்தனையை கொண்டிருந்த தமிழரசுக் கட்சி அதில் அங்கம் வகித்திருந்தவர்களின் வர்க்க நலன் காரணமாக தமிழர் சமூகவமைப்பில் புரையோடிப் போயிருந்த சாதிய ஒடுக்கு முறையை கவனத்திலெடுக்க தவறினர். அக்கட்சியில் பின்வந்த காலங்களின் தமிழ் தேசியத்தை வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்குள் இட்டு சென்றமை இன்னொரு துரதிஷ்டமான வரலாற்று நிகழ்வாகும். மறுபுறத்தில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன போராட்டத்தை முன்னெடுத்த கம்யூனிஸ்டுகள் தமிழ் இனவொடுக்கு முறைக்கு எதிரான தெளிவான தீர்க்கமான போராட்டத்தை முன்வைக்க தவறி விட்டனர். இந்த சூழலில் தமிழ் முதலாளித்துவ சக்திகள் தமிழ் தேசியவாத போராட்டத்தை இனவாத போராட்ட மாக முன்னெடுத்தனர். இந்த அரசியல் அடிப்படையுடன் தோன்றிய ஆயுதம் தாங்கிய தமிழ் தேசிய போராட்ட மானது இராணவாதத்திற்குள் மட்டுமே முடங்கி போனது. அது தன்னலவில் ஒர் பாசிச இயக்கமாக உருப்பெற்ற போது மக்களின் நலனிலிருந்து அந்நியமாகியதுடன் ஆண்ட பரம்பரை பெருமைக்குள் மூழ்கி வெகுசன விரோத செயற்பாடுகளில் தன்னை கட்டமைத்துக் கொண்டது.
யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இளைஞர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கதைகளை எழுதியவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில்
இதழ் 50
ܝ݂ܵܐ

Page 167
ܬܐ
நமது எழுத்தாளர்களின் நெருக்கடியான சூழலை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இன்று இந்த நெருக்கடியான சூழல் களையப்பட்டுள்ளது என்பதற்கு யோ.கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்த தனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக அவரது அதிர்வு கதையில் வரும் விறகு சுமந்து விற்கும் தொழிலாளி ஜெயராமன் கல்வியின் முக்கியத்துவம் பற்றி மகேசன் என்பவருக்கு கூறுவதாக அமைந்த பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்க தாகும்:
"அதுக்கு இரண்டு காரணங்கள். ஒன்று தமிழன்ரை கல்வி. அடுத்தது தமிழன்ரை வீரம்.! வறுமைக்கு கல்வி தீனியானால். எங்கட அடுத்த தலைமுறை அடிமைப்படும்."
இவ்வாறு தமிழரின் கல்விப்பெருமை வீரம் என்பன இக்கதையாசிரியரால் எடுத்துக் கூறப்படு கின்றது. டேவிட்டின் எழுத்துக்களில் பேரினவாதம் அம்பலப் படுத்தப்படுகின்ற அளவுக்கு தமிழ் தேசியத்தின் அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் அம்பலப்படுத்த தவறுவது காலத்தின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கலாம் என அமைதி கொண்டாலும் சில சமயங்களில் தமிழ் தேசிய போராட்டத்த்தின் பிழையான பக்கங் களை அழகுப்படுத்திக் காட்ட முனைகின்ற பண்பினையும் அவரது கதைகளில் காணக் கூடியதாக உள்ளது. இலங்கையில் இனமுரண்பாட்டினடியாக தோன்றிய குறுந் தமிழ் தேசியமும் பேரினவாதமும் சமூக முரண்பாடுகளையும் மோதல்களையும் அதிகரிக்க செய்துள்ளன. இந்த சூழலில் வாழ்வின் பன்முகத் தன்மையை முழுமையாக காரண காரியத் தன்மையுடன் எடுத்துக் கூற கூடிய இலக்கிய வடிவமாக நாவல் இருந்த போதினும் இலங்கையில் சிறுகதைக்கான அந்தஸ்து அதிகரித்திருப்பதற்கான பின்னணி என்ன என்பதும் சுவாரசியமான வினா தான்.
நடந்து முடிந்த தமிழ்தேசிய போராட்டத்தில் தமிழ் பாசிசத்தின் பரிமாணத்தை பொது மக்கள் அனுபவித்து உணர்ந்திருந்த போதினும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்கள் நேர்மையாக முன்னெடுக்கப்படாத நிலையில் பொது மக்கள் மீண்டும் குறுந் தமிழ் தேசிய அரசியலுக்குள் முடங்குவதாக அமைந்திருக்கின்றது. இந்த சூழலில் தமிழ் தேசியத்தின் குறுகிய அரசியல் போக்குகளை விமர்சித்தால் தாங்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டு போவோம் என்ற அச்சம் நாவல் தோன்றாததற்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது. இந்த அச்சம் களையப்பட வேண்டும். தமிழ் தேசியவாத போராட்டத்தின் இருவழிப் பாதை பற்றி அதன் பன்முகத் தன்மையை வெளிக் கொணரும் வகையிலான நாவல்
ஜீவநதி
 

வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இவ்விடத்தில் இத் தொகுப்புகளில் காணப்படு கின்ற மிக முக்கியமான குறைப் பாடுதான, இடையிடையே காணப்படுகின்ற எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளாக வாசகனை குழப்ப கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. பக்க வடிவமைப்பிலும் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. மண்ணின் முனகல் என்ற தொகுப்பில் ந. இரவீந்திரனின் அணிந்துரையின் பக்க வடிவமைப்பின் போது அத்தவறு ஏற்பட்டுள்ளது (i, iV, V, Vi, Wii, Vi என பக்கங்கள் சரியாக இடப் பட்டிருந்தாலும் அதன் ஒழுங்கு முறை மாறியுள்ளது). எனவே அணிந்துரையை வாசிக்கின்ற போது தொடர்ச்சியின்மை காரணமாக குழப்பங்களை விளைவிக்க கூடிய அபாயம் இருக்கின்றது.
முடிவாக நோக்குகின்ற போது டேவிட் அவர் களின் சிறுகதைகள் காலத்தின் பதிவாக அமைந்திருக் கின்றது. அது பேரினவாதம் ஏற்படுத்திய வாழ்க்கைப் போக்குகளை சிறப்பாக கேள்விக்குள்ளாக்குகின்றது. அவ்வாறே தமிழ் தேசியப் போராட்டம் இழைத்த தவறையும் விமர்சன அணுகு முறையோடு கற்று வளர்திசையின் படிக்கற்களாக மேலும் அவரது படைப்புகள் வெளிவரவேண்டும் என்பதே காலத்தின் தேவையாகவுள்ளது.
பூதங்களும் பூக்களும்
அச்சக்கீற்றுக்குள் முகம் புதைத்துக் கொணர்டிருக்கின்றன பூக்கள்.
விஷவாளினால் அவை கொய்யப்படுகின்றன. பூமரங்களின் விசும்பல் பூமியைப் பிளக்கின்றன - ஆனாலும் பூகம்பம் நேராமல் அது அமைதியாய்ச் சுழல்கின்றது. பூதங்களின் புணர்கள் இன்னமும் எரியூட்டப்பட்டுக் கொணர்டிருக்கின்றன. இரத்தத்தின் நெடி எல்லை தாணர்டி அடிக்கின்றது. பூக்களின் முனகல்கள் பூதங்களிற்கு எட்டவில்லை. ஆனால். பூக்களிற்கு முனக மட்டும் தான் தெரியுமென்றில்லை.
நிலான்
இதழ் 50

Page 168
தோட்டத்திலே இருக
உஸ்ஸென்று சுழன்றடிக்கும் பனிக்காற்று அவன் மயிர்கலடர்ந்த நெஞ்சில் பட்டுத் தெறித்து விலகியது. ஊரே குளிரின் ஈட்டி முனைக்கு அஞ்சி போர்வைக்குள் முடங்க, அவன் மட்டும் புஷ்சு புஷ்சுவென்று மூச்சு தெறிக்க சிவந்த கண்களை உருட்டியபடி திண்ணையில் குந்தியிருந்தான். வாயோரம் துப்பிய எச்சிலின் ஒரு பகுதி தாடியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தது. அவனைச் சுற்றி கசிப்பின் நெடி காற்றோடு கலந்து இருட்டில் நகர்ந்தது.
வீட்டுக்குள்ளிருந்து விடாது கேட்ட விசும்பல் அவனை எரிச்சலூட்டியது. பாப்பாத்தி விடாது அழுத படியே இருந்தாள். அடி வயிற்றில் அவன் உதைத்த உதை இடிபோல் வலித்தது. அடி வயிற்றை பிடித்தபடியே விறாந்தையில் சுருண்டு, வலியை அழுது போக்கிக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் மூன்றும் உள் காம்பரா வில் அவன் பார்வைக்கு படாதுபடுத்துக் கொண்டிருந்தனர். ராணி தோட்டத்தின், காட்டு லயத்தின் தொங்கல் காம்பறா அவன் வீடு தொங்கலுக்கமைய யாருடனும் தொடர்பற்று வாழும் அவனைக் கண்டாலே தோட்டத்து சனம் எட்டடி தள்ளி நடக்கும். நிமிர்ந்த பார்வையும், விரைந்த நடையும், கசிப்பில் ஊறிய சிவந்த கண்களும், அவன் ராணி தோட்டத்தின் தனி மனிதனாக திரிந்தான். தொடைவரை தூக்கிக் கட்டிய சாரம், ரோமங்கள் நிறைந்த பருத்த தொடைகளை கண்டாலே தோட்டத்து பெண்களுக்கு பயம்,
அவன் அம்மா ராமாயி இருக்கும் வரை தோட்டத்து சனத்தோடு, ஒட்டி உறவாடிக் கொண்டி இருந்தாள்.
அவள் புருஷன் இறக்கும்போது அவனுக்கு பத்து வயது. புருஷனின் சாவுக்கு பின் ராமாயின் வாழ்க்கை திக்கற்று ஓடியது. அவள் தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற பின் அவன் வீடு தங்காது, பள்ளிக்கூடம் மறந்து, மேடு மலையாய் சுற்றித் திரிந்தான். ராமாயிக்கு
ஜீவநதி 16.

مي چ**** கட்டுப்படாது சோறு கண்ட இடத்தில் படுத்து திரிந்தான்.
வயது ஏறி வாலிபம் எட்டிப் பார்க்கும் பொழுதில் அவன் நாட்டுக்குள் கசிப்புக் காட்டில் கசிப்பு வில்சனுக்கு ஒத்தாசையாய் வேலை செய்யத் தொடங்கினான். கசிப் பின் மயக்கம் அவனை அங்கேயே அலைய வைத்தது. கிழமைக்கு ஒரு முறை லய பக்கம் போய் ராமாய் முன் நிற்பான். ராமாய் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்ப்பாள் ஒன்றுமே விளங்காத எருமைமாடு போல் நிற்பான். பின் குசினிக்கு சென்று சட்டியை கொட்டி இருக்கிறதை தின்று விட்டு, விறாந்தையில் படுத்து குறட்டை விடுவான்.
கசிப்புக் காட்டுக்கு செல்லாத இரவுகளில் முயலுக்கும், பன்றிக்கும் வலை கட்டுவான். முயல் மாட்டினால் தோட்டத்திலேயே யாருக்கும் விற்று காசு பார்ப்பான். பன்றியென்றால் உரித்து கொஞ்சத்தை வற்றல் போட்டு தனக்காக வைத்துக்கொண்டு மீதியை நாட்டுக்கு விற்றுவிடுவான். கொஞ்சம் பன்றியிறைச்சி வில்சனுக்கும் போய்சேரும்,
அவனுக்கு கசிப்பு வில்சன் என்றால் பயம் கலந்த மரியாதை வில்சன் எதை சொன்னாலும் செய்வான். கபுலயத்து 3ம் காம்பறா அம்மிணிக்கும் வில்சனுக்கும் இருக்கும் உறவு அவனுக்கு தெரியும், பல நாட்களில் வில் சன் கொடுத்த பணத்தை அம் மிணிக்கும் கொடுத்திருக்கிறான். அம்மிணி ஒரு மாதிரி அவனது முறுக்கேறிய உடம்பு அவளை கிறங்க வைக்கும். அதை சாடைமாடையாய் அவள் உணர்த்தியுமிருக்கிறாள். அதிலெல்லாம் அவனுக்கு நாட்டமில்லை. கண்டு கொள்ளாதுநகர்ந்து விடுவான்.
அம்மிணியின் புருஷன் பெருமாளை தோட்டக் காட்டில் காணும்போதெல்லாம் அவனுக்கு, அவள்
இதழ் 50

Page 169
2.
வில்சனோடு கசிப்புக் காட்டில் படுத்தெழும்புதே ஞாபகம் வரும், ஆனால் சொல்லமாட்டான். அது தன் வேலையில்லையென திரிவான்.
ராமாயிக்கு வயதாக ஆக அவன் பற்றிய ஒரு பயம் தொற்றிக்கொண்டது. திடீரென தான் செத்துக்கித்து போய்விட்டாள், அவன் தனியனாகி விடுவானே? என்று அடிக்கடி லயத்து சனங்களிடையே அங்கலாய்ப்பாள். பக்கத்து காம்பறா முனியம்மா தான் ஐடியா கொடுத்தாள் அவனுக்கு ஒரு கால்கட்டை போட்டுவிட்டாள், இப்படி வீடு தங்காது திரிவது சரியாகிவிடுமென. ராமாயிக்கு அதுவும் சரியென பட்டது. அன்றிலிருந்து அவனுக்கு பொண்ணு தேட தொடங்கினாள்.
பாப்பாத்தியை பொண்ணு பார்க்க போகும் போதுதான் முதன்முதலாக மேல்சட்டை அணிந்தான். ராமாயிக்கு பாப்பாத்தியை பிடித்துப் போய்விட்டது. கறுப்பானாலும் லட்சணமானவள், பாப்பாத்திக்கும் ஏனோ அவனை பிடித்துப் போய்விட்டது. கல்யாணம் தோட்டத்து கோயிலில் சின்னதாக நடந்தது. அவன் கல்யாணம் கட்டி பாப்பாத்தியை லயத்துக்கு அழைத்து வரும்போது தோட்டமே வாயில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தது. ராமாயிக்கு பெருமிதம், அதை அவள் தன் நடையில் காட்டினாள்.
கல்யாணம் கட்டிய அன்று வீட்டிலேயே திண்ணையில் படுத்துக் கிடந்தான். பின் பழையபடி மேல் சட்டை இல்லாது காடு வழிய திரியத் தொடங்கினான். தோட்டத்துக்கு வந்த இரண்டாவது நாளே பாப்பாத்திக்கு அவன் சுபாவம் புரிந்துவிட்டது. தன் தலைவிதியென்று கலங்கி நின்றாள். ராமாயிதான் ஆதரவாக இருந்தாள். பாப்பாத்திக்கு அவனை திருத்தி வழிக்கு கொண்டு வரலாமென நம்பிக்கையிருந்தது.
அவனது கல்யாணம் வில்சனை சந்தோஷப் படுத்தியது. அம்மிணி சாடை மாடையால் அவன்முதலிரவை பற்றிக் கேட்டாள். அவன் விழித்தபடி நின்றபோது கைகொட்டிச் சிரித்தாள். பின் அவளது ஏளனப் பேச்சும், GiGögrafes Léeの5千山TGT G5Té6の字山Ló さ Glaのem உசுப்பேற்றிவிட கல்யாணம் கட்டி ஐந்தாவது நாள் இரவு கசிப்பின் வெறியில் பாப்பாத்தியுடனான அவனது முதலிரவு கிட்டத்தட்ட ஒரு கற்பழிப்பாய் முடிந்தது.
காமம் கொடுத்த போதை சில நாட்கள் இரவானதும் வீடுவரும் பழக்கத்தை அவனுக்கு கொடுத்தது. பாப்பாத்தி இணங்கினாலும் இனங்கா விட்டாலும் ஒவ்வொரு இரவும் அவளை புணர்ந்து தீர்த்தான். பின் தின்று களைத்த மிருகமாய் மறுபுறம் திரும்பி மூச்சு சிதற குறட்டை விடுவான்.
நாளுக்கு நாள் கசிப்பின் போதையும், காமத்தின் சுகமும் அவன் உடலை ஒரு சுற்று பெருக்க வைத்து அஜானுபாகுவான தோற்றத்துடன் திரிந்தான் மேல்சட்டையுமில்லாது காடு மேடுகளில் சுற்றியலையும்
ਉB
 

போது தூரத்தில் கரடியை போன்று காட்சியளித்தான்.
பாப்பாத்தி மூன்றாவது பிள்ளை பேறுக்காக தோட்டத்து ஆஸ்பத்திரியில் நின்றபோது ராமாய் படுத்த படுக்கையாய் கிடந்தாள். அவளுக்கு குணப்படுத்த முடியாத வியாதியென்று ஆஸ்பத்திரி கைவிரித்துவிட அவள் எழ திராணியற்று திண்ணையிலேயே சுருண்டு கிடந்தாள். தோட்டத்து சனம் அவனுக்கு பயந்து பயந்து ராமாயை பார்த்துவிட்டுச் செல்லும், அவன் லயத்தில் இருக்கும் நாட்களில் ஒரு சனம் எட்டிப் பார்க்காது. இந்த நேரம் பார்த்து பாப்பாத்தியும் பிள்ளை பேறுக்காக, ஆஸ்பத்திரியில் நிற்க, ராமாய் மூன்று நாட்களாய் பீ மூத்திரத்தோடு படுக்கையிலேயே கிடந்தாள்.
அவளிடம் வீசிய கவிச்சு, அவனை ஆத்திர மூட்டியது. கசிப்பின் மப்பில் முழு தோட்டமே கேட்க அவளை செத்து தொலையும்படி கத்தித் திட்டுவான். பிள்ளைகள் மிரண்டபடி அறைக்குள் ஒடுங்கிக் கொள்ளும். அவன் திட்டு பலித்தது. பாப்பாத்திக்கு மூன்றாவது பிள்ளை கிடைத்த மறு நாள் ராமாய் செத்துப் போனாள்.
ராமாயின் இறுதிச் சடங்குகளை செய்யக்கூட முடியாதபடி கசிப்பு போதையில் திரிந்தபடி கிடந்தான். வில்சனின் செலவு ராமாயியை மரியாதையோடு காடனுப்பி வைத்தது. தோட்டத்து சனம் வில்சனை வாயாற புகழ்ந்தது. அவனை உள்ளுக்குள் திட்டித் தீர்த்தது. பாப்பாத்தியையும் பிள்ளைகளையும் கவலையோடு பார்த்தது.
பல முறை வில்சனுக்காக பொலிசில் மாட்டி ஜெயிலுக்கு சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் அவன் வீட்டுச் செலவை வில்சன் கவனித்துக் கொள்வான்.
தோட்டத்தில் பல பொம்பளைகளுக்கு
பாப்பாத்தி மேல் சந்தேகம், 66866606 வைத்திருப்பதாக கொழுந்து மலையிலும் பீலிக்கரை களிலும் பேசித்திரிந்தார்கள்.
பாப்பாத்திக்கு கிடைத்த மூன்றாவது பிள்ளை வில்சனுக்கு கிடைத்ததாகவே அவர்களுக்குள் விவாதித்துக் கொண்டார்கள்.
பொலிசில் பிடிபட்டு பதினாலு நாட்களின் பின் பிணையில் அவன் இன்றுதான் வெளியில் வந்திருந்தான். பதினாலு நாட்கள் தவித்த வாயில் நமநமப்பு நீங்க சில கசிப்பு போத்தல்களை உள் இறக்கி உச்சத்தில் இருந்த வேளையில் தோட்டத் து பொம்பளைகளின் பேச்சு மேல லயத்துசின்னதம்பியின் மூலமாக அவன் காதுகளுக்கு எட்டியது. மூன்றாவது பிள்ளை அச்சு வார்த்தாற்போல அப்படியே வில்சனை உரித்து வைத்திருப்பதாக சின்னதம்பி கூறிய பாங்கு அவனை ஆத்திரத்தில் நடுங்க வைத்தது.
அவனுக்கு வில்சனை பற்றித் தெரியும். பல
இதழ் 50

Page 170
பொம்பளைகளோடு அவனுக்குள்ள தொடர்பெல்லாம் அத்துபடி, தன் வழிக்கு வராத சில தோட்டத்து பொம்பளைகளை வில்சன் வழியில் மறித்து பயங்காட்டி பலாத்காரமாய் காட்டுக்குள் இழுத்து புணர்ந்து விட்டிருக்கிறான். பல பேர் பயத்தில் வெளியில் விடாது மறைத் து விடுவார்கள்.
ஒருமுறை அப் படித் தான் மேடிவிஷன் கோமதி திடீரென தூக்கில் தொங்கி இறந்து போனாள். முழு ஊரே காரணம் தெரியாது திகைத்து நின்றது. ஆனால் அவனுக்கு தெரியும், காரணம் யாரென்று.
வில்சனை பற்றி முழுமையாய் அறிந்தவனென்ற படியால் ஊருக்குள் உலவிய அந்த பேச்சு, அவனுக்கு அதன் உண்மை உறைய உள்ளுக்குள் ஒரு பயத்தை கொடுத்தது. உடல் நடுங்க வேடுவேகென்று கசிப்பு காட்டை விட்டு காடுமலை தாண்டி தன் தோட்டத்தை நோக்கி நடந்தான்.
தன் லயத்தின் மூலை திரும்புகையில் நடை ஓட்டமாக தன் காம்பறா நோக்கி விரைந்தான். ஆத்திரத்துடன் கதவை தள்ளி உள் நுழைந்தவன் விறாந்தையில் படுத்திருந்த பாப்பாத்தியின் வயிற்றில் உதைத்தான், பின் ஒரு மிதி மிதித்தான்.
எதிர்பாராத அந்த தாக்குதல் பாப்பாத்தியை ந ைலகுலைய வைத்தது. அலறி அடித் து எழும்பிய வளின் முடியை கொத்தாய் பிடித்து மறுகையால் முகத்தில் குத்தினான்.
"சொல்லுடி பற வே. சின்னபய வில்சனுக்கா
பொறந்தா..?
ஓங்கி உதைத்த உதையில் சுவரோடு சாய்ந்து விழுந்தாள்.
"ஐயோ. என்ன கொல்லுறானே." அலறியவளை பொருட்படுத்தாது காம்பறாவுக் குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சின்னவனை இழுத்தெடுத்து கழுத்தை நெரித்தபடி
"இவே அவனுக்கு பொறந்தவனா." அலறிய சின்னவனை தூக்கி வீசினான். சின்னவன் கத்தியபடியே பாப்பாத்தியின் மடியில் புதைந்தான்.
பாப்பாத்தியினதும் பிள்ளைகளினதும் ஓயாத அலறல் முழு தோட்டத்தையே உசுப்பிவிட்டது. ஆனால் எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள்.
“ஒன்ன வைக்கமாட்டேண்டி பறவே." கத்தியபடியே வெளி திண்ணையில் அமர்ந்து கொண்டான். உள்ளுக்குள் உருண்ட ஆத்திரம்
ஜீவநதி 16
 

வார்த்தைகளாய் வெளிப் பாய்ந்து ஊர்ந்தோடியது.
"நா இல் லாத நேரம் பார்த்து அவனோடு படுக் கிறியாடி. வே.
LD5C36.T.."
விடாத அவனது அரற்றல் கேட்டுக் கொண்டிருக்க, நேரம் போகப்போக தோட்டம் கண்டுகொள்ளாது இரவுக்குள் அடங்கியது. பாப்பாத்தியின் அவன் உதைத்த அடி வயிற்றின் வலி விசும்பலாய் குறைந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் பயந்தபடியே, அழுது ஓய்ந்து உள் காம்பறாவில் சுருண்டுகொண்டன.
உள் மனதின் நடுக்கம் அவன் தூக்கத்தை துரத்தியடித்தது. இருட்டை வெறித்தபடி இருந்தான். அதற்குள் ஊடுருவிய அவன் நினைவுகளில், பாப்பாத்தியும் வில்சனும் படுத்துப் புரளும் காட்சி தோன்றி மறைந்தது.
உள்ளிருந்து வெளிப்பட்ட கோபம் சுழன்று மூக்கு புடைக்க மூச்சாய் புஷ்சு புஷ்சு வென்று வெளிப்பட்டது. "க.ரா.ஸ்" என்று காறி துப்பினான். அந்த காரலின் ஓசை சுற்றத்தை திடுக்கிட வைத்தது. நாயொன்று உறுமிவிட்டு குரைத்துக் கொண்டே இருந்தது.
ஆத்திரத்தின் அதிர்வு குறையக் குறைய அப்படியே திண்ணையில் சாய்ந்து படுத்தான். சொருகும் கண்களிடையே தன் பொண்டாட்டியை புணரும் வில்சனையும் பின் தான் ஒரு நாயாய் வில்சனை பார்த்து குறைப்பதையும் கனவாய் கண்டான்.
கனவின் வேகம் பலமாய் மூச்சு வாங்க, மேலும் கீழும் மார்பு விரிந்து சரிய குறட்டை அடித்தான்.
அதிகாலை சூரியன் எட்டிப்பார்க்கும்வேளை,
சின்னதம்பி அவன் லயத்தின் முன் நின்று திண்ணையில் காலாட்டி படுத்திருக்கும் அவனை உசுப்பினான்.
விறாந்தா கதவை திறந்து பாப்பாத்தி எட்டிப் பார்த்தாள்.
"மாரிணி னே. வில் சனி முதலாளி காலையிலேயே கூட்டியார சொன்னாறு"
சின்னதம்பியின் உசுப்பலில் வில்சனின் பெயர் அவனுக்குள் நுழைத்தவுடன் பதறியடித்துக் கொண்டு எழும்பினான். தளர்ந்திருந்த சாரத்தை கட்டிக் கொண்டு, லயத்துக் காணில் நின்றவாறே மூத்திரம் பெய்தான். பின் கசிப்புக் காட்டை நோக்கி நடையை கட்டினான். பின்னாலேயே சின்னதம்பியும்.
ஒட்டமும் நடையுமாய் போகும் அவனை, பாப்பாத்தி பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இரவில் கசிப்பு போதையோடு வீடு வரும் ஞாபகம் வந்தது. அடிவயிறு விண் விண்னென்று வலித்தது.
இதழ் 50

Page 171
தமிழில் அகராதிகளின் 635 Tipp guariri-sub FFLpš5356 vir 356:flatör
Uយefiយយុb
19ம் நூற்றாண்டிலே ஈழம் பல துறைகளிலும் பல சக்திகளின் தாக்கத்திற்குட்பட்டு சிறந்த முன்னோடி யாளர்களை முன்னோடி முயற்சிகளை தமிழ் உலகிற்கே வழங்கி உள்ளதை வரலாறு சொல்கிறது இக் காலத்தில் தனி மனித சரித்திரங்களாக வாழ்ந்த பலரும் ஆற்றிய பல்துறைப் பணிகள் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டதைப் போல தமிழகத்தை ஈழத்திற்கு கடமையாக்கி 19ம் நூற்றாண்டு ஈழத்திற்குரியதே எனக்கூறவைத்தது இக்காலத்தில் ஈழம் இவ்வாறு தமிழிலும் இலக்கண இலக்கிய சிந்தனைகளிலும் சிறக்க இங்கு நிலவிய மரவுவழி கல்விப் பாரம்பரியமும் ஆங்கில ஆட்சிவழி வந்த நிறுவனவழி கல்விப்பாரம் பரியமும், மிசனெறிகளின் செயற்பாடுகளும் சுதேசி களிடம் காணப்பட்ட தமிழ்மொழிப் பற்றும் காரணங் களாய் அமைந்தன. இந்தவகையில் தோன்றிய ஒன்றே அகராதித் துறையாகும். உலகில் மொழிக்கு சொற் பொருள் விளக்கம் அளிக்கும் அகராதிக்கலை மெதுவாக வளர்ந்தது போலவே தமிழ் அகராதிக் கலையும் மெதுவாக வளர்ந்தது. இதன் தொடக்க நிலையை தொல்காப்பியத்தில் காணலாம். தமிழிலக்கணத்தைக் கூறும் தொல்காப்பிய நூலில் சொற்களுக்குப் பொருள் தருவது நோக்கமில்லாதவிடத்தும் இடையியலில் இடைச் சொற்களுக்கும் மரபுச் சொற்களுக்கும் ஆங்காங்கு பொருள் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிற இயல்புகளில் இலக்கணக்குறியீடுகள், மரபுக்குறியீடுகள் ஆங்காங்கு விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் உரியியலைப் பொறுத்த வரையில் முழு இயலும் சொற் பொருள் விளக்கப்பகுதியாகும். இப்பகுதியில் 120 சொற்களுக்கு தொல்காப்பியர் பொருள் கூறியுள்ளார்.
"வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" என்பதன் மூலம் வெளிப்படையாக எளிதில் பொருள் தெரியும் சொற்களை விட்டு அரிய
ஜீவநதி
 

சொற்களுக்கு (தொல்காப்பிய கால வழக்கில்) மட்டுமே பொருள் தரப்பட்டுள்ளது என்கிறார் தொல்காப்பியர்,
தொல்காப்பியத்துக்குப் பின்னர் எழுந்த நன்னூல் அனேக இலக்கண நூல்களில் சொற்பொருள் விளக்கப்பகுதி இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தொல்காப்பியக்காலத்தில் சொல்லிலக்கணப் பகுதியி லிருந்து பிரிந்து அது ஒரு தனிக்கலையாயிற்று தொல் காப்பிய உரியியலின் வேலையைப் பிற்காலத்தில் திவாகரம், பிங்கலம், சூடாமணி முதலிய நூல்கள் தனியே எடுத்துக் கொண்டன. இந்நூல்கள் நிகண்டு” என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டன. "நிகண்டு” என்ற பொதுப் பெயரை முதலாவதாக தனதாக்கிக் கொண்ட பெருமை சூடாமணி நிகண்டையே சாரும். நிகண்டு என்பது வேதாகமத்தில், வேதச்சொற்களின் பொருளை ஆராயும் நிருத்தத்தின் ஒரு பகுதியாகும். இது ஒரு வடமொழிச் சொல் இதனைத் தொடர்ந்து பல நிகண்டுகள் 20ம் நூற்றாண்டுத் தொடக்க காலம் வரை எழுந்த வண்ணம் இருந்தன. இன்று ஆராய்ச்சி யாளர்கள் 30-35 வரையான நிகண்டுகளை இனங் கண்டுள்ளனர். ஈழத்திலும் சூடாமணி நிகண்டு, உரிச் சொல் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு போன்றவை பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளதையும் அப்பதிப்பு முயற்சிகளில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறுமுக நாவலர், வல்வை வைத்தியலிங்கப்புலவர், சுன்னாகம் குமாரசாமிப்புலவர் போன்றோர் ஈடுபட்டதையும் அறிய முடிகிறது. இங்குள்ளவர்கள் சொற்களின் கருத்தை அறிவதற்கு நிகண் டை ராகத்துடன் LOGOTULLITLLb GJUGJITËT356T GT601 65 6Tef(3GOT 9Lib6OLO யார் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாய் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவற்றுக்கு மேலாக வ.ஜெயதேவன் அவர்கள் தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு" எனும் தமது நூலில் ஈழத்தில் பதிப்பிக்கப்பட்ட 15ற்கும் மேற்பட்ட நிகண்டு
இதழ் 50

Page 172
நூல்களின் பதிப்புகளை நிரற்படுத்தியுள்ளார். ஆயினும் 19 நூற்றாண்டில் தமிழில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சி மாற்றமானது நிகண்டுகளால் அவ்வுரைநடைமொழிக்கு விளக்கம் தர முடியாத நிலையை ஏற்படுத்தியது. அவை ஒரு பொருள் குறித்த பல சொற்களையும் ஒரு சொல் குறித்த பல பொருட்களையும் தொகைப்படுத்தி செய்யுள் வடிவத்தில் கூறின. இவ்வகையில் புலியூர்ச் சிதம்பர இரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு என்பதிலேயே முதன் முதலாக சொற்களை அகர வரிசைப்படுத்தி நோக்கியுள்ளார். இவ்வகையில் அகரவரிசை அமைப்பை சுட்ட இவர் பயன்படுத்திய அகராதி என்ற பெயரே இன்று அகராதிக்குரிய நூற் பெயராக அமைந்துவிட்டது. அகரம் ஆதி என்பதில் அகரம் என்றால் "அ" ஆதி என்றால் முதல் அ எனும் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கிச் செல்வதால் அகராதி எனப்படுகிறது.
அகராதிகளில் பல வகைகள் உள்ளன. ஒரு மொழி அகராதி, இரு மொழி அகராதி, கலைக் களஞ்சியங்கள் எனப் பலவகைப்படும். முனைவர் கு.தமிழ் குடிமகன் வை.கதிரைவேற்பிள்ளையின் அகராதி மீள்பதிப்பு (1998) அணிந்துரையில் இதுகாறும் 64 வகையான அகர முதலிகள் வெளிவந்துள்ளன எனக்குறிப்பிடுகிறார். இவ்வகையில் தமிழில் அகராதிக் கலையை வளர்த்த பெருமை மதம் பரப்ப வந்த மேலைத்தேய மிஷனெறிகளைச் சேர்ந்த அறிஞர் களையே சாரும். இவர்களுக்கு இத்துறையில் உதவிய பெருமை ஈழத்து தமிழறிஞர்களையே சாரும், பத்தொன் பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்ப்பிரதேசங் களில் கடமையாற்றிய மிஷனறிமார் தமிழ் மொழியை ஐயந்திரபுற கற்றாலொழிய தமிழ்ப்பிரதேசத்தில் சேவை செய்ய முடியாது என்ற உண்மையை நன்குணர்ந்தனர். அத்துடன் தமது அரச நிர்வாக உத்தியோகத்தவர்களின் நீதி, நிர்வாக, நிதி நடவடிக்கைகளுக்கும் இங்குள்ள மக்களின் மொழி, அவற்றின் பொருள் அதனூடாக வெளிப்படும் அவர்களின் பண்பாடு பற்றிய அறிவு அவசியமானது என்பதையும் உணர்ந்தனர். எனவே ஒருமொழியைக் கற்பதற்கு அத்தியவாசியமாகவிருந்த அகராதிகள் பற்றிய சிந்தனை அவர்கள் உள்ளத்தில் இயல்பாக எழுந்தது. தமிழ் மக்கள் அகராதி என்ற வடிவத்தை அறிந்திருக்கவில்லை ஆனால் மேலைத் தேசத்தில் இது சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்தது. மொசப்பத்தோமியாவில் கி.மு 7ம் நூற்றாண்டில் அக்காடியன் சொற்களின் சிறுபட்டியல் கிடைத்து உள்ளது. இது கிரேக்கத்தில் பழங்காலம் முதலே அகராதி மரபு இருந்தது என்பதற்று சான்றாகிறது. "காலெபின" என்ற சொல் அங்கு அகராதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன முறையிலான உலகின் முதல் அகராதி 1621ல் இத்தாலியில் உருவாக்கப்பட்டது.
ஜீவநதி 16

தமிழில் நவீன முறையிலான அகராதியை இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியாரான வீரமாமுனிவர் 1732ல் உருவாக்கினார். இது சதுர் அகராதி என அழைக்கப்படுகிறது. இது நான்கு அகராதி என்றும் பொருள்படும். முதல்பிரிவு பெயர் பற்றியது. இரண்டாம் பிரிவு ஒரு சொல்லுக்குரிய பல பொருள் களை தொகுத்தது. மூன்றாம் பிரிவு பல்வேறு துறைக் குரிய கலைச்சொற்கள் பற்றியது. நான்காம் பிரிவு தொடை அகராதி ஆகும். அகராதி என்ற சொல்லின் பொருளுக்கேற்ப தலைப் பில் அகராதி என்ற சொல்லைப் பெற்றிருப்பது சதுரகராதியே என்று கூறப்படுகிறது. இவ் அகராதியின் தோற்றத்திற்கு முன் அகராதி ஒலைச்சுவடி ஒன்று அகராதி மோனைக் ககராதியெதுகை என்ற பெயரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்ல் வெளிவந்த முதல் அகராதியாக தமிழ் போர்த்துக்கேய அகராதியே குறிப்பிடப்படும் போதும் அது இன்று எம் கைகளுக்கு கிடைக்கவில்லை. கி.பி 1679ல் அச்சிடப்பட்ட இதனை ஆந்தெம்புரோ யென்கா தொகுத்தார் என்பர். இதனை திம்பு சுல்த்தான் ஆணையால் எரித்து விட்டதால் இது பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. கி.பி 1712ல் பார்த்த லோமியோ சீவன் பால்கு "டிக்சனரியம் தமுலியம்" எழுதினார். ஆனால் இது அச்சாகவில்லை. இதனை விட கி.பி 1666ல் இக்னேசியோபுறுதோ என்பவர் தமிழ் சொற் தொகுதி ஒன்றை யாழ் பாணத் தில் வெளியிட்டார் என்று கூறப்படுகிறது. Alastin fergusan என்பவர் 1878ல் வெளியிட்ட தமிழ் சொற்றொகுதியின் பெயர் இங்கே வா என்பதாகும். இதே போல யேக்கம் கொன் கால் வெஸ் என்ற மிசனறிபோதகரால் எழுதப்பட்ட போத்துக்கீஸ் தமிழ் இலத்தீன் அகராதி (1742) தமிழ் - பிரெஞ்சு அகராதி (1744) போர்த்துக்கேய - இலத்தீன் - தமிழ் அகராதி ஆகிய வற்றையும் தொகுத்தார் என்பர் முதல் தமிழ் - ஆங்கில அகராதி கி.பி 1779ல் வெளிவந்தது. சாம்பிலிப் பெப்ரீசியசும் சான்கிறித்தியான் பெரெய்தாப்டும் இணைந்து இவ் அகராதியை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக பல தமிழ் - தமிழ் அகராதிகளும் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதிகளும் பின்னாளில் வெளிவந்தன.
அகரவகைக் குறியீட்டு எழுத்து முறையில் இருந்து தோன்றியதே அகராதி ஆகும். இது பல்வகையாகப் பரந்துபட்ட பார்வை நூல் வகைகளைக் குறிக்கும். அடிப்படை நிலையில் அகராதி சொல் தொகுதிகளைக் நிரல்பட அளிக்கும் பின்னர் அவற்றிற் குரிய பொருள்களை கூறும் சிறந்த பேரகராதி ஒப்பீட்டுற்குரிய சொற்பட்டியலைத் திரட்டித் தரும், ஆங்கிலத்தில் லெக்சிகன் என்பது சொற்றொகுதியைக் குறிக்கும் மொழியிலில் இது ஒரு மொழி அமைப்புக்
இதழ் 50

Page 173
குரிய பகுப்புக் கூறுகளைக் குறிக்கும். இதனா6 இலக்கியம் எழுத்து வடிவில் தோன்றுவதற்கு முன்னே சொற்றொகுதிகள் இருந்தன என்பர். அவற்றின் பின்னே அகராதிகள் உருவாகின என்பர். அகராதிக்கும் கலை களஞ்சியத்திற்குமுள்ள வேறுபாட்டை அறிவது எளிது அகராதி சொற்களை விளக்கும் கலைக்களஞ்சிய பொருட்களை விளக்கும் எனினும் நடைமுறையில் இவற்றைக் கண்டுணர்வது அரிது. ஒரு மொழ அகராதியில் அம்மொழியின் சொற்பட்டியலுப அதற்குரிய விளக்கமும் அந்த மொழியிலேயே அமையும். இருமொழி, பன்மொழி அகராதி ஆகிய வற்றில் ஒரு மொழிச்சொற்களுக்கு வேற்று மொழ யிலோ மொழிகளிலோ விளக்கம் அமையும். பொதுவா அகராதி என்பதன் பொருளை அகர நிரலிெ சொற்பதிவுகளமைந்த ஒப்பு நோக்கீட்டு நூல் எனலாம் இதற்கு வாழ்க்கை வராலாறு அகராதிகள், கவின்க6ை அகராதிகள் ஆகியவை தக்க சான்றுகளாகும்.
ஈழத்து அகராதி முயற்சிகள் பற்றி இன நோக்குமிடத்து 19ம் நூற்றாண்டானது பல துறைகளிலுL தமிழகத்திற்கு வழிகாட்டக் கூடிய புலமையாளர்களை கொண்டிருந்தது போலவே அகராதித் துறையிலும் ஈழL இங்கு மிஷனரிமாரினாலும், இங்கிருந்த தமிழ் புலமையாளர்களாலும் மேற்கொள்ளப்பட்ட அகராதி முயற்சிகள் மூலம் தமிழகத்திற்கு வழிகாட்டியது. 19ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திற் பணிபுரிந்த வெஸ்லியன், மிஷனறிகள், ஆகியோர் வேதாகப மொழிபெயர்ப்பு, துண்டுப்பிசுர ஆக்கம் போன்றவற்றிெ ஒருமித்து கருமமாற்றியபோதும் தமிழ்மொழியை ஐயந்திரிபுறக் கற்றாலொழிய தமிழ்ப் பிரதேசங்களில் சேவை செய்ய முடியாது. மதம் பரப்ப முடியாது என்பதை நன்குணர்ந்தனர். எனவே ஒரு மொழியை கற்பதற்கு அத்தியாவசியமாகவிருந்த அகராதி பற்றிய சிந்தனை அவர்கள் உள்ளத்தில் இயல்பாக எழுந்தது. இதனோ( யாழ்பாணத்தவரின் ஆர்வம் பரம்பரை பரம்பரையா வளர்ந்துவிட்ட ஆராய்ச்சி மனப்பான்மை 19ப நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இருந்த சிறந்த தமிழ் புலமையாளர்களின் ஒத்துழைப்பு போன்றனவுப ஈழத்தில் அகராதி முயற்சிகள் சிறப்பான முறையில் மேலைத்தேசத்தவரால் முன்னெடுக்கப்பட்ட காரணா களாலாய் அமைந்தன. ஆரம்பத்தில் மேலைத்தே கிறிஸ்தவ மிஷனறிகளே இவ்விடயத்தில் வழிகாட்ட அவர்களுக்கு உதவியாக பணியாற்றிய யாழ்பாண தமிழ் அறிஞர்கள் பின்னர் காலப் போக்கில் தாடே தனித்து நின்று தனி அகராதிகளை ஆக்கக் கூடிய வல் ல மை யைப் பெற்றனர் . இவ் அகராத முயற்சிகளினுடாக ஈழத்தமிழ் மொழியின் சொற பொருள் அமைப்பு என்பதற்கு அப்பால் அவர்களது பண்பாடு பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள்
ஜீவநதி
 

b
)
),
சமயநிலை, பிறமொழிச் செல்வாக்கு போன்ற பல்வேறுப் பட்ட விடயங்களையும் இனங்கான முடிகிறது. ஆயினும் இவை பற்றிய முழுமையான ஆய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
19ம் நூற்றாணர் டில் தொடக் கத்தில் வீரமாமுனிவரின் சதுரகராதியும் 1841ல் உறொட்லரின் தமிழ் - ஆங்கில அகராதியின் 4ம் பாகமும் வெளிவந்தன. ஆயினும் அவை கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களின் தேவையை முற்று முழுதாக நிறைவேற்றவில்லை. இந்நிலையில் வணபிதா நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பின் சந்திரசேகர பண்டிதரால் பூர்த்தியாக்கப்பட்ட யாழ்ப்பாண அகராதி அல்லது மானிப்பாய் அகராதி என்பது 1842ல் முழுமையாக வெளிவந்தது. ஈழத்தில் எழுந்து எமக்குக் கிடைக்கும் முதலாவது தமிழ் அகராதி இதுவேயாகும். இதிலும் நான்கு பகுதிகள் உள்ளன. அத்துடன் 58500 சொற்கள் இதில் திரட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன. இது தற்போது சேமமடு புத்த நிலையத்தினரால் மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்து 862ல் வன உவின் சிலோவின் தமிழ் ஆங்கில பேரகராதி வெளிவந்தது. இதற்கும் கறோல் விசுவநாதபிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை போன்ற ஈழத்து தமிழ் அறிஞர்கள் உதவியுள்ளனர். இதில் வானசாத்திரம், சோதிடம், விவசாயம், பெளதீகம், இரசாயனம், விலங்கியல், புராணம் போன்ற பல துறைப்பட்ட கலைச்சொற்கள் தேடித் தொகுக் கப் பட்டுள்ளன. அத்துடன் தமிழிலக்கியத்தை நுணுகி ஆராய்ந்து தமிழ்குடி மக்களின் சமயம், வழிபாடு, சாஸ்திரங்கள், பழக்க வழக்கங்கள் என்பன பற்றிய சொற்களும் தொகுத்து கருத்தும் வழங்கப்பட்டுள்ளன. பேச்சுவழக்கு வட மொழிச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிற்காலத் தில் எழுந்த மற்றாஸ் லெக்கிகனுக்கு இதுவே வழிகாட்டியாய் அமைந்ததென்பர்.
இதேபோல வட்டுக்கோட்டை மிஷனறியில் கற்ற வைமன் கதிரவேற்பிள்ளையவர்கள் ஒரு பாரிய தமிழ் அகராதியை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு துறைச் சொற்களை தொகுத்தார். துரதிஸ்ட வசமாக தன்கராதி புத்தக வடிவம் காணாமலே அவர் மரணித்துப் போனார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கம் இதனைத் தொகுதிகளாக வெளியிட்டது. முதலாம் பாகம் 17600 சொற்களையும், இரண்டாம் பாகம் 18100 சொற்களையும் , மூன்றாம் பாகம் 28 2010 சொற்களையும் கொண்டது. தமிழ் நாட்டில் தன் வாழ்வின் அதிக காலங்களைக் கழித்த ஈழத்துத் தமிழ் அறிஞரான புலோலியைச் சேர்ந்த சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையவர்களால் தொகுக்கப்பட்டு 1879ல் தமிழ்ப் பேரகராதி என்பது உருவாக்கப்பட்டது. தமிழில் தோன்றிய முதற் பேரகராதி என்ற
169 இதழ் 50

Page 174
பெருமையும் இதற்குண்டு. இதனால் இவர் அகராதிப் பேராசான் என்றும் போற்றப்பட்டார். 63700 சொற்கள் கொண்ட இவ் அகராதி பின்னர் 1911ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டு தற்போது புதிய பதிப்பாகவும் வெளி வந்துள்ளது. இதேபோல நாவலர் (: 85 |t L' L LD' ஆ மு த து த' தம்பிப்பிள்ளையவர்கள்அபிதானகோசம் எனும் தமிழ்ச் செஞ்சொல் அகராதியையும் ஒரு ஆங்கிலத் - தமிழ் அகராதியையும் வெளியிட்டார் இது மாணவர் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. இதில் ஒரு ஆங்கிலச் சொல்லுக்குரிய பல கருத்துக்கள் தரப்பட்டு உள்ளதுடன் ஆங்கில மரபுச் சொற்றொடருக்கும் இவ் அகராதி விளக்கம் கொடுத்துள்ளமை சிறப்புக்குரியது. அபிதானகோசமே அகராதியியல் பிரிவில் கலைக் களஞ்சியங்களுக்கான முதல் நூலாக கொள்ளப்படுகிறது.
1914ல் சுன்னாகம் குமாரசாமிப்புலவர் எழுதிய இலக்கியச் சொல்லகராதி வெளிவந்நது. இது இலக்கண இலக்கிய அறிவு பெற்றவர்க்கே பெரிதும் பயன்பட்டது. இராமாயண, மகாபாரத, கலித்தொகை, சிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களிலுள்ள பெயர்ச் சொற்களே இதனுள் பெரும்பாலும் தொகுக்கப் பட்டுள்ளன. தாம் சேர்த்துக் கொண்ட புதுச் சொற்களை உடுக்குறியினாற் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர், பருத்தித்துறையில் வாழ்ந்த சுப் பிரமணிய சாஸ்திரியார் 1924ல் சொற்பொருள் விளக்கமென்னும் ஒரு கையடக்க மான அகராதியை வெளியிட்டார். இது அளவிற் சிறிதெனினும் மாணவர்க்கு நல்ல பயன்தரவல்லதாய் உள்ளது. இதனை விட மானிப்பாயில் வாழ்ந்த டாக்டர் கிறீன் அவர்கள் தொகுத்தளித்த மருத்துவ அகராதிகளும் பிற்காலத்தில் இத்தகைய அறிவியற்றமிழ் அகராதி முயற்சிகளுக்கு வழிகாட்டி ஈழத்திற்கு சிறப்புச் சேர்த்தது. நீர்வேலி சங்கர பண்டிதரால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தாதுமலை என்னும் அகராதியில் வட மொழிச் சொற்கள் கிரந்தவரி வடிவத்தில் அகர நிரலில் அமைக்கப்பட்டு இவற்றின் தாதுக்களின் பொருள் வேறுபாடுகள் தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இது 1908ல் யாழ்ப்பாணத்தில் பதிக் கப் பட்டதாக தெரிகிறது. இதே போல சைமன்காசிச்செட்டி ஆங்கில தமிழ், சமஸ்கிருத தமிழ் அகராதிகளை ஆக்கியுள்ளார் எனும் தகவல் கிடைப்பினும் அவை கிடைக்கவில்லை. இவர் தொகுத்த சமஸ்கிருத தமிழ் அகராதியே இத்துறையின் முதல் முயற்சியாக கருதப்படுகிறது. மலை அகராதி எனும் தாவரவியல் அகராதி ஒன்றையும் இவர் தொகுத்துள்ளார்.
தமிழுலகில் அகராதி அமைப்பில் ஒரு புதுமையை ஏற்படுத்தியவர் நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகளாவர். இவரது வாழ்வின் பெரும்பகுதி மொழி யாய் விலும் தமிழின் தொன்மையை எடுத்துக் காட்டுவதிலுமே கழிந்தது. இவர் தமிழ் மொழியின் பல
ஜீவநதி

சொற்களை சொற்பிறப்பு அடிப்படையில் ஆராய்ந்து மகிழ்ந்தார். இவ் ஆராய்ச்சி தமிழ் உலகின் தாய்மொழி என்ற கருத்தை அவர் உள்ளத்தில் பத்தித்தது. 1938 - 1946ற்கும் இடையில் இவரது சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி ஆறு பாகங்கள் வெளிவந்தது. இவர் இறந்த பின் இவர் பணியை தொடர்ந்த தாவீது அடிகள் இவ் அகராதியின் மேலும் மூன்று பாகங்களை வெளி யிட்டார். இவர்களைவிட வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, நா.சி.கந்தையாபிள்ளை, வரதர், பண்டிதர் பரந்தாமன் குலசிங்கம் எனப் பல்வேறுபட்ட ஈழத்து அறிஞர்கள் இவ் அகராதி ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அறியமுடிகிறது. இவ் அகராதிகள் பற்றிய ஆய்வுகளில் பேராயர் கலாநிதி.எஸ். OO000S O OOO u TT S YY uT u SS J T a TT BuS பேராசிரியர் சி.சிவலிங்கராசா பேராசிரியர் சுசீந்திர ராசா, பேராசிரியர்.எம்.ஏ.நுகுமான், கலாநிதி. சுபதினி ரமேஸ், கணனி விரிவுரையாளர் ஞா.பாலச்சந்திரன் போன்ற பலர் ஈடுபட்டு வருவதையும் காணமுடிகின்றது.
இவ்வாறு தமிழ் அகராதித் துறை வளர்ச்சிக்கு ஈழத்தவர்கள் காலத்திற்கு காலம் பணி செய்வதாலும் இன்றைய நிலையில் ஈழத்தை பொறுத்தவரை ஒரு தேக்க நிலையையே அவதானிக்க முடிகிறது. ஆயினும் புலம்பெயர் தேசங்களில் ஈழத்தவர்களால் இன்று அந்தந்த நாட்டின் மொழிச்சூழலுக்கமைய புதிய தமிழ் பிறமொழி அகராதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை காண முடிகிறது. அவற்றினூடாக அங்கேயே பிறந்து வளரும் பிள்ளைகள் தமது தாய்மொழிச் சொற்களை விளங்கிக் கொள்வதுடன் பிறநாட்டவர் தமிழ் மொழியை விளங்கிக் கொள்ளவும் முடிகிறது. காலணித்துவவாதிகள் எப்படி எமது தமிழை அகராதிகள் ஆக்கினார்களோ அதே வழியில் இன்று நாம் அவர்களது மொழியை அகராதிகள் ஆக்கு கிறோம் என்பது ஈழத்தமிழருக்க மட்டுமல்ல முழுத் தமிழ் இனத்திற்கும் பெருமை தரும் விடயமாகும். இந்தவகையில் ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ் அகராதி ஆக்க முயற்சிகள் இன்று ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வகையில் ஜேர்மனி யில் ஜேர்மனியரால் தமிழுக்காக வெளியிடப்பட்ட மொழி வழிகாட்டியும் ஜேர்மன் தமிழ் அகராதியும் தமிழ்-ஆங்கிலம், ஜேர்மன் - ஜேர்மனி, ஆங்கல தமிழ் சொல் அகராதியும் குறிப்பிடத்தக்கன. இதே வேளை ஜேர்மனியல் வாழும் கனகசபாபதி சரவணபவன் என் பவர் இன்று வரை ஐந்து மொழியியல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். இந்தவகையில் இவர் அண்மையில் வெளியிட்ட பாரிய ஜேர்மன் - தமிழ் அகராதியானது சுமார் 2302 பக்கங்களில் அமைந்து சுமார் ஒரு இலட்சம் சொற்களுக்கான
இதழ் 50
ہے۔

Page 175
பொருள் விளக்கங்களை கொண்டு உள்ளமை சிறப்புக்குரியது. சுசீந்திரன் அவர்களும் அங்கு அகராதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதே போல் டென்மார்கில் பல தமிழ் அறிஞர்கள் சேர்ந்து டெனிஸ் - தமிழ், தமிழ் - டெனிஸ் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதே போல டென்மார்கில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளியான நிலக்கிளி தந்த பாலமனோகரன 1993ல் டெனிஸ் - தமிழ் அகராதி ஒன்றை தொகுத்தளித் துள்ளார். இது அந்நாட்டின் 11வது அகராதியாக அந்நாட்டு அரசினாலேயே பதிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை லண்டனிலுள்ள நூலகவியலாளர் என் செல்வராசா அவர்கள் வழங்கியுள்ளார். இவற்றைவிட இன்னும் பல அகராதி முயற்சிகளும் அங்கு மேற்கொள்ளப்படு கின்றன. தமிழ் நாட்டிலும், இவ் அகராதி முயற்சிகள் புதிய திசைகளில் வளர்த்தெடுத்துச் செல்லப்படுவதை காணமுடிகிறது. இவ்வகையில் கிரியாவின் அகராதி முயற்சிகள், மணவை முஸ்தபாவின் அறிவியற்றமிழ்ச் சொல்லகராதி போன்றவற்றை குறிப்பிடலாம். குதிரியா இப்போது ஈழத்துச்தமிழ்ச் சொற்களையும் இணைத்து உலகத் தமிழ்ச் சொல் அகராதியை வெளியிட்டு வருவதுடன் உலகிலேயே முதன் முதலாக கண் தெரியாதவர் களுக்கும் உதவக்கூடிய பிரெய்லர் எழுத்து வடிவிலான அகராதியையும் தயாரித்து வழங்கி யுள்ளமை சிறப்புக்குரியது.
இதேவேளை ஈழத்தைப் பொறுத்தவரை அண்மையில் சேமமடு புத்தகநிலையத்தினால் யாழ்ப் பாணத் தமிழ் அகராதி மீள்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன் யாழ். பல்கலைக்கழக மொழியியல் துறை விரிவுரையாளர் கலாநிதி.சுபதினி ரமேஸ் அவர்கள் "ஈழத்துச் சிறப்புச் சொற்றொகுதி" என்ற நூலினை வெளியிட்டுள்ளார். அத்துடன் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபனேசன் அவர்கள் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் இலங்கையில் தோன்றிய தமிழ் அகராதிகள் என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். பேராசிரியர் எம்.ஏ.நுகுமான், இது.குலசிங்கம் போன்றோர் ஈழத்துச்சொல் ஆய்வு முயற்சிகளுக்காக கிரியாவுக்கு உதவியுள்ளனர். பேராசிரியர்அ.சண்முகதாஸ், சுசீந்திரராசா, சி.சிவலிங்க ராசா போன்றோர் இது சார்ந்த சில ஆய்வுக் கட்டுரை களைத் தந்துள்ளனர். இதே போல கவிஞர் துரைசிங்கம் அவர்கள் தமிழ் இலக்கிய களஞ்சியம் என்ற நூலை தந்துள்ளார். ஈழத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகராதி தொடர்பான ஆய்வு, ஆய்வு கட்டுரைகளுக்கான உசாத்துணைகளாய் பின்வருவன அமைகின்றன.
9 நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலரில் பேராயர் எஸ்.ஜெபநேசன் எழுதிய ஈழத்து அகராதி முயற்சிகள் பற்றிய கட்டுரை. 9 பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின்
ஜீவநதி

விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரை. 9 கு.சி.குலரத் தினம் எழுதிய வைமன்
கதிரைவேற்பிள்ளை பற்றிய கட்டுரை 9 பேராயர் எஸ்.ஜெபநேசனின் பணி ஓய்வு மலரில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் 96JřTG5GT GTQLpgifluLU "Contribution by Srilankan scholars to lexicography" GTGÖTAD 35LCB6ODU, 9 சி.கணேசையர் எழுதிய ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரித்திரத்தில் அகராதி முயற்சிகளில் ஈடுபட்ட புரவர்கள் பற்றி கூறியுள்ள கருத்துக்கள். 9 கலாநிதி மனோன்மணி சண்முகதாசின்
"அகராதி தந்த சதாவதானி" என்ற நூல். 9 மு.கணபதிப்பிள்ளை எழுதிய ஈழநாட்டு தமிழ்ச் சுடர்மணிகள் என்ற நூலில் அகராதி முயற்சிகளில் ஈடுபட்ட ஈழத்து அறிஞர் பற்றி கூறியுள்ள கருத்துக்கள். 9 19ம் நூற்றாண்டு ஈழத்துக் கல்விப் பாரம்பரியம் என்ற நூலில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்கள் ஈழத்து அகராதி முயற்சிகள் பற்றி கூறியுள்ள கருத்துக்கள். 9 ஞானம் நூறாவது இதழில் (செப்டெம்பர் 2008) ஞா.பாலச்சந்திரன் எழுதிய ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் 1939 வரை என்ற கட்டுரை. 9 2008 நவம்பர் மல்லிகையில் பா.ரகுபரன் எழுதிய கரியாவின் தற்கால தமிழ் அகராதியில் குலசிங்கத்தின் பங்களிப்பு என்ற கட்டுரை. 9 ஈழத்துத் தமிழ்ச் சொற்களும் பேரகராதியும் என்ற கலாநிதி சுபதினி தமிழ் அவர்களின் கட்டுரை. 9 தமிழ் அகராதிகளில் இலங்கை தமிழ்ச் சொற்களும் சொற்பொருள்களும் என்ற கலாநிதி சுபதினி ரமேஸ் அவர்ளின் கட்டுரை, (அரிமா நோக்கு 2010 ஏப்றல்) ஈழத்தை பொறுத்தவரை தமிழகத்தோடு ஒப்பிடுகையில் இவ் அகராதி முயற்சிகளில் இன்னமும் செய்ய வேண்டிய பல பணிகள் இருப்பதாகவே தெரிகிறது. தோன்றிய அகராதிகளை ஒன்றிணைத்தல், அவற்றின் மொழி பண்பாட்டு, சமூக, வரலாற்றுக் கூறுகளை ஆய்வு செய்தல், பேச்சு வழக்கு தமிழை ஆவணப்படுத்தல் போன்றன அவற்றுள் சிலவாகும். மேலும் அகராதிகளை அழியாது காக்க அவற்றை இணையதளங்களில் சேமித்தல் தனித்துறைகளுக்கான அகராதிகளை தோற்றுவித்தல் உதாரணமாக நாட்டாரியல் அகராதி அறிவியல் தமிழ் அகராதி பேச்சு
71 -இதழ் 50

Page 176
வழக்கு அகராதி கலைச் சொல்அகராதி போன்றவற்றை குறிப்பிடலாம். அத்துடன் மாணவர் மட்டத்தில் அகராதி தேடல் வாசிப்புக்கான விடயங்களை முதன்மைப் படுத்தல் பிறமொழி கலப்பிலிருந்து தமிழைக் காக்க துய தமிழ் சொல்அகராதி முயற்சிகளிலும் ஈடுபடலாம். அத்துடன் அகராதி சிந்தனையை சொற்பொருள் தவிர்ந்த ஏனைய துறைகளிலும் பயன்படுத்துவது பற்றிச் சிந்திப் பதும் அவசியமாகும். அந்த வகையில் புதுமைப்பித்தனியல் பாரதியியல் மகாவியியல் என படைப்புக்களையும் படைப்பாளிகளையும் நோக்கும் முறையே இதன் ஒரு தொடக் கப் புள்ளியாக கொள்ளலாமா என்பது சிந்தனைக்குரியது.
எதிர் காலத்தில் ஈழம் தமிழகம் புலம்பெயர் தேசம் என்ற வெளிகளைக் கடந்து இவ் அகராதி ஆக்க முயற்சிகளில் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதும் அவசியமாகும்.
பின் இணைப்பு ஈழத்தில் தோன்றிய தமிழ் அகராதிகள் ஒரே பார்வையில் 1.தமிழ் போர்த்துக்கேய அகராதி (கிடைக்கவில்லை) 2. போர்த்துக்கேய தமிழ்-சிங்கள அகராதி 3. யாழ்பாண அகராதி அல்லது மானிப்பாய் அகராதி (ஜோசப் நைற் சந்திரசேகர பண்டிதர் சேனாதிராச முதலியார்) 4. வன உலின்ஸ்லோவின் தமிழ் - ஆங்கில அகராதி ( தொடர்ச்சிதாவீது அடிகள்) 5. டாக்ரர் சாமுவெல்கிறீனின் மருத்துவ அகராதிகள், 6. வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளையின் ஆங்கில தமிழ் அகராதி. 7 சைமன் சாசிச்செட்டியின் ஆங்கில தமிழ் சமஸ்கிருத தமிழ் அகராதிகள் தாவர அகராதி (கிடைக்கவில்லை) 8.நீர்வேலி சங்கரபண்டிதரின் தாதுமாலை அகராதி. 9. நாசி கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதி, தமிழ்புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, கால குறிப்பகராதி. 10. வைமன் கு.கதிரவேற்பிள்ளையின் தமிழ்ச்சொல் அகராதி. 11. சுண்ணாகம் குமாரசாமிப்புலவரின் இலக்கியச்சொல் அகராதி 12 ஆமுத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதானகோசம் அல்லது தமிழ்செஞ்சொல் அகராதி. 13. பருத்தித்துறை சுப்பிரமணியசாஸ்திரிகளின் சொற்பொருள் விளக்க அகராதி. 14. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் சொற்பிறப்பு ஒப்பில் அகராதி. 15. புலோலி சதாவதானி நா.கதிரை வேற்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி.
ஜீவநதி

2
16. வரதரின் செந்தமிழ் அகராதி 17. அறத்தமிழ் அகராதி. 18. பண்டிதர் பரந்தாமனின் வடசொல் - தமிழ்சொல்
ஒப்பிட்டுச்சொல் அகராதி. 19. கிரியாவின் தற்கால தமிழ் அகராதியில் ஈழத்துச்சொற்கள். 20. கலாநிதி.சுபதினிரமேசின் ஈழத்துத் தமிழ் சிறப்புச்சொற்தொகுப்பு.
முஸ்லீம் தமிழ் அறிஞர்களும் ஈழத்து தமிழ் அகராதித்துறைக்கு பங்களிப்பு செய்துள்ளனர் இக்கட்டுரை முடிந்த முடிவல்ல பல விடயங்கள் தவற விட பட்டு இருக்கலாம் இயன்றவரை பதிவு செய்ய முயன்றுள்ளேன் இதற்கு வழிகாட்டிய ஞா.பாலசந்திரன் அவர்களையும் நன்றியோடு நினைத்து ஜீவநதியின் வெற்றி பயணத்துக்கு வாழ்த்து கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
"சிந்தனைச்சிறகால் புதிய வடம் பிடிப்போம் சீரிளமைத்தமிழ் உலகில் வெல்ல சேர்ந்துழைப்போம்"
சுடுதியற்ற வீணைகள்
diLLs pibg5 மணர்ணிடையே சுருதியற்ற வீணைகள் பல மேனியெங்கும் புழுதி சுமந்து மீட்பவரை இழந்து மீள முடியா வாழ்வியல் வடு சுமந்து ஏங்குகின்றன தனிமையில். ஏக்கங்களே
தேக்கங்களாகிவிட்ட தாக்கங்கள் நிறைந்த இவ்வினைகள் கருவடைந்த போர்விதைகள் உமிழ்ந்து விட்ட
எச்சங்கள்.
கே.எம்.செல்வதாஸ்
இதழ் 50

Page 177
ܕܬܐ
மீண்டு(ம்) 6
கார்த்திகாயி
",
கிணற்றடிக்கு வந்த கணேசனின் பார்வை
எதேச்சையாக முருங்கை மரத்தின் பக்கம் திரும்பியது. அது மீண்டும் சரிந்து விழுமாப்போல் இருந்தது. நேற்றுத்தான் சரிந்து நின்ற அந்த முருங்கை மரத்தை நிமிர்த்தி மண்போட்டு அணைத்து நீரும் ஊற்றி விட்டிருந்தான். இன்று மறுபடியும் அது சரிந்து போய் நின்றது. கொளுத்தும் வெயிலில் அதன் இலைகள் கருகி ஒரிரு இலைகள் மட்டுமே கிளைகளில் தலை நீட்டிக் கொண்டிருந்தன. சாவிற் கும் உயிர் ப் புக் கும் இடையிலான போராட்ட நிலையில் இந்த மரம் அல்லாடிக் கொண்டிருந்தது.
சண்டை முடிந்து இரண்டு வருடங்கள் நெருங்கும் நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான். இந்த கிராமத்தை இராணுவம் பொது மக்களிடம் கையளித்திருந்தது. அவனது மாமியார் கோகில வல்லியும் மனைவியின் தங்கையான உஷா நந்தினியும் தன்னந்தனியே பாழடைந்து வெறுந்தரை யாகக் கிடந்த இடத்தை துப்புரவு செய்து குடிசை போட்டு ஆங்காங்கே நான்கைந்து மரங்களைநாட்டியிருந்தனர். யாரோ கொடுத்த முருங்கைத்தடியை மாமியார் தான் கிணற்றடியில் நாட்டியிருந்தார். ஆரம்பத்தில் அது தளைத்து துளிர்த்து நின்றாலும் கொஞ்ச நாட்களாக சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே அல்லாடிக் கொண்டு நிற்கிறது. அவவைப்போல,
இந்த ஐந்தாறு வருடங்களுக்குள் அவன் வாழ்வு எப்படியெல்லாமோ மாறிவிட்டிருந்தது. மனைவி நிஷாந்தினியை பெண் பார்க்கத்தான் முதன் முதலாய் இந்த கிராமத்துக்கு வந்திருந்தான். பச்சைப் பசேல் என குளுமை நிறைந்திருந்த இந்த கிராமமும் இந்த கிராமத்து மக்களின் மனங்களும் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. பெண் பார்க்க வந்தபோது இரு பெண்களும் ஒரே மாதிரி இருந்ததைப் பார்த்து இதில் யார் தனக்குரியவள் என்றுதடுமாறி நின்றமையும் பின்னர் இருவரும் இரட்டைச்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 

சகோதரிகள் என்பதை அறிந்து வெகுளித்தனமாய் சிரித்துச் சமாளித்ததையும் இன்று வரை அவனால் மறக்கவே முடியாது.
திருமணம் ஆனதும் விசுவமடுவில் இருந்த அவனது தாய்க்குத் துணையாக அங்கு சென்று வாழத் தொடங்கினார்கள். விவசாயத்தோடு வியாபார செய்து வந்ததால் பணத்துக்கு ஒரு குறையுமிருச் வில்லை. சந்தோஷமாகப் போன வாழ்வில் சடுதியா வந்த மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை அந் மாற்றங்கள் தந்த விளைவுகள் தான் எத்தனை எத்தனை, 鄒
சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன் கிணற்றுக் குள் விட்ட வாளியின் கயிற்றை கப்பியில் இருந்து
960) 60 UU60) 60 u Tu) நினைவுகளும் தான்.
தெளிந்த நீர் நிலையில் கல்லெறிந்தது போல் ஆகிவிட்டது அவனது வாழ்க்கை மட்டுமல்ல அவன் இனத்மதின் வாழ்க்கையும் தான். தாம் வாழ்ந்த 鄒 வாழ்க்கையின் சின்னமாய் நிஷா கருவுற்ற போதே பிரச்சினைகளும் உக்கிரம் பெறத் தொடங்கி விட்டது. சண்டைகளுக்குள்ளும் ஷெல்லடிகளுக்குள்ளும் பிள்ளையைப் பெத்து மாதக்கணக்கில் அங்கே இங்கே என்று அலைந்து இடையில் தாயையும் பறிகொடுத்து முள்ளிவாய்க்காலில் வந்து நிற்கும் வரை நிஷாவும் மூன்று மாதங்களே நிரம்பிய குழந்தை பூஜாவும் கூடவே தான் இருந்தார்கள். அங்கிருந்து இராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வரும்போது தான் மழைபோல் பொழிந்த ஷெல் வீச்சுக்களில் இருந்து தப்புவதற்காக திக்குத் திக்காக சிதறி ஓடிப்போனதில் மனைவி பிள்ளைகளை விட்டுப் பிரிந்து விட்டான். எப்படியும்
இதழ் 50

Page 178
ளைக் கண்டுபிடிக்கவோ அல்லது அவர்களைப் ளை அறிந்து கொள்ளவோ முடிய
3:~
தொழிலைச் செய்து கிடைக்கும் வருமானத்தை யரிடம் கொடுத்து விட்டு கடனே என வாழ்ந்து ண்டிருக்கிறான். 緣 3:
பல நேரங்களில் மை பிள்ளையின் சிந்தனையில் கட்டுண்டு தன்னிலை மறந்து நிற்கும் மருமகனின் நிலையை கண்டு கலங்கி நிற்பாள் கோகில வல்லி, திருமண வயது கடந்து போய்க் கொண்டிருக்கும் மகளை நினைத்து ஒரு புறமும் காணமல் போன மகளை யும் பேரப்பிள்ளையையும் நினைத்து மறுபுறமும் மருமகனை நினைத்து இன்னொரு புறமும் ତTର01 வருந்துவதே அவளுக்கு வாழ்வாகிப் போனது. இப்படி யோசித்த பொழுதொன்றில்தான் “குமர் பெட்டையையும் மருமகனையும் ஒரே வீட்டுக்க வைச்சுக் கொண்டு எத்தின காலத்துக்கு இருக்கப் போறாய், ஆரும் எதுகும் சொல்லுறதுக்கு முன் அவளுக்கு ஒரு கலியாணத்தை காலா காலத்திலை பண்ணி வை" என அருகில் இருக்கும் இராசம்மா கிழவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
அவளுக்கு மட்டுமென்ன பெத்த பிள்ளைக்கு கலியாணம் செய்து வைக்க விருப்பமில்லாமலா?
வயசும் வறுமையும் குறுக்கே வந்து நிற்குதே!.
米米米
அன்று காலை விடிந்த போது அவர்கள் வாழ்விலும் விடிவு ஒன்று வருமென அவர்கள் நினைத்து இருக்கவில்லை. காலைத்தென்றல் வீசும் போது அவர்கள் வாழ்விலும் புதிய தென்றல் வீசும் என அவர்கள் நம்பவில்லை.
வாயில் வேப் பங்குச்சியுடன் குடிசைக்கு முன்னால் உள்ள கல்லில் குந்தியிருந்த படி வழமை போல சிந்தனையில் மூழ்கியிருந்தான் கணேசன், உஷா விளக்குமாறும் கையுமாக நிற்கிறாள். கோகிலவல்லி தேநீர் போடுவதற்காக குசினிக்குள் அடுப் போடு போராடிக் கொண்டிருந்தாள்.
கேற்றடியில் ஆளரவம் தென்பட கணேசனைக் கூப்பிட்டாள் உஷா. சிந்தனையில் இருந்தவனுக்கு அவளது அழைப்பு விளங்கவில்லை.
"அத் தா. ர்ை ஆரோ கேற்ற டியரி ைல நிக்கினம். ஆரெண்டு பாருங்கோ" என்று சத்தமாக அவள் சொன்ன போது தான் திகைத்து எழுந்தவன் கேற்றை நோக்கி நடந்தான். இந்த விடியக் காலமையே யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு உட்பக்கமாகப்
ஜீவநதி 17.
 
 
 
 

பூட்டியிருந்த கேற்றைத்திறந்து ஆவலுடன் பார்த்தான்.
"நீங்கள். நீ.’ "அஜந்தனடா நான். என்ன மறந்திட்டியே. "இல்ல தாடி வைச்சு ஆளே மாறிப்போய் அதுதான்"
சரி சரி. அதைவிடு ஒரு முக்கியமான விசயமாத்தான் வந்தனான் உள்ளுக்கே 6).T. . . சொல்லுறன்" என்று சொன்னபடியே அவன் விறு விறு என நடந்து வந்து குடிசை வாசலில் அமர்ந்து (6.35|T600TLT60T.
"டேய் என்னடா விசயம்." பதட்டத்துடனே கேட்டுக் கொண்டே அவன் பின்னால் சென்றான் கணேசன்,
விசுவமடுவில் இருக்கும்போது அஜந்தனும் கணேசனும் நெருங்கிய நண்பர்கள். கணேசனுக்கு பிள்ளை பிறந்த போது அவனும் அவனது மனைவியும்
தான் ஒடியோடி வேலை செய்தார்கள். பிள்ளையின்
வலதுபுற கழுத்தின் பின்பக்கம் ஒரு பெரிய மச்சம் இருந்தது. பிள்ளையால பார்க்க முடியாத இடத்தில மச்சம் இருப்பதால் உன் பிள்ளை அதிஷ்ட காரப்பிள்ளையடா’ என அடிக்கடி சொல்லி பெருை பட்டுக் கொள்வான்.
இடம்பெயர்ந்து உயிரைக் கையில் մlջ։
ஒடியபோது ஆளுக்காள் பிரிந்து விட்டார்கள். அன்று பிரிந்தவர்கள் இன்றுதான் சந்திக்கிறார்கள். எப்படி யிருக்கிறாய். எங்கு இருக்கிறாய் மனைவி பிள்ளைகள்
எப்படியிருக்கிறார்கள், எப்படி இங்கு வந்தாய், என்று என்னென்னெல்லாமோ அவனிடம் கேட்க வேண்டும்
என மனம் தவியாய் தவிக்க. அவனோ எதையுமே
பொருட்படுத்தாமல் அவசரமாய் இப்படி வந்தமர்ந்தது அவனுக்க ஆச்சரியத்தைக் கொடுத்தது.
கையிலிருந்த விளக்குமாற்றைப் போட்டு
விட்டு உஷாவும் அவசரமாய் அவ்விடத் நின்றாள். பேச்சுக் குரல் கேட்டு கோகிலவல்லியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
"மச்சான். நான் சொல்லப்போற விடயம் உனக்கு ஒருபக்கம் சந்தோஷத்தைத் தந்தாலும் மறுபக்கம் துன்பம் தான். அதற்கு ஏற்ற மாதிரி உன்ரை மனதைத் தயார்ப்படுத்திக் கொள்ளு." --- "டேய் என்னடா சொல்லுறாய். எனக்கு ஒண டுமா விளங் கேலே. நீ இப் ப எங்க இருக்கிறாய். என்ன செய்யிறாய்..?"
"என்ரை கதையை விடடா மச்சான் அதைப் பிறகு கதைக்கலாம். உன்ரை பிள்ளை கிடைச்சிட்டு தடா. அவள் இருக்கும் இடமும் எனக்குத் தெரியு மடா. என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னமே.
"என்ன. என்ரை பிள்ளை. பிள்ளை. எங்கையடா" என்று எதிர்பாராத சந்தோஷத்தில்
இதழ் 50
வந்து

Page 179
و
டுமாறியவன் சற்று நிதானமாகி என்ரை மனிசி
பிள்ளையஸ் காணமல் போனது உனக்கு எப்படித்
- - -
தெரியும். அவையளை எங்க கண்டனி, எங்க
இரு ങ്ഥ. எப்படியிருக்கினம். வா போய் கூட்டிக் ਓਲ6 சத்தில் கதறினான் கணேசன்,
! அவசரப்படாதை மச்சான் 嘉 ܢ ܠ ܐ கொஞ்சம் பொறுமையாய் இரு நான் சொல்லுறதை
முதலிலை கேள் பிறகு நானே உன்னைக் கூட்டிக் கொண்டு போறன். பதட்டப்படாமல் இந்தக் கல்லில இரு." அவன் கையைப் பிடித்து இழுத்து கல்லின் மேல் இருத்தினான் அஜந்தன், ! "
தம்பி என்ரை LaTeport பேரப்பிள்ளையும் எங்கையிருக்கினம். அவையளைச் சந்திச்சனிங் களோ.." பொறுமையிழந்தவளாய் கேட்டாள் Bਸੰ60
6.16565).
"அம்மா. உங்கட பேரப்பிள்ளையை மட்டும் தான் நான் கண்டனான். சண்டையில எங்கட குடும்பத்தில யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படேல. ஆனால் மனுசிக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியிலை வச்சிருந்தனாங்கள். இப்ப விசுவமடுவிலை எங்கட வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் தான். இப்ப நான் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறன். அருவி வெட்டு கட்டடிப்புக்கு ஆட்கள் தேவையெண் டாப் போல இங்காலை வந்து நிற்கிறன். நான் சூட்டடிப்புக்காக போன வீட்டிலை பிள்ளையைக் கண்டனான். அவையளிட்டை பிள்ளையைப் பற்றி மெல்லமா விசாரிச்சனான். அந்த வீட்டுக்கார மனுசியின்ரை தங்கைச்சியார் வன்னிப் Ligjërafia06OTëgjoit (36T LDITL (BULJL (B இப்ப தமக்கை யோடை இங்கு வந்திருக்கிறா வாம். பிள்ளை யளில்லையாம். புருஷனுக்கும் ஷெல்லடியில ஒரு கால் இல்லாமல் போய்ச்சு. கடைசி நேரச் சண்டையில நந்திக்கடல் ஏரியைக் கடக்கேக்கை நிஷா காயப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு பிள்ளையைக் கையில் வைச்சபடி தவிச்சுக் கொண்டு நிண்டவாவாம். காயப்பட்ட புருஷனைத் தூக்கிக்கொண்டு அவவும் தாயும் தப்பி ஓடி வரேக்கை இவையிட்ட பிள்ளையைக் குடுத்து "எப்படியாவது என் ரை பிள்ளையைக் காப்பாற்றுங்கோ என்று சொல்லியிருக்கிறா, இவை யளும் அவவைக் காப்பாத்தத்தான் முயற்சி செய்தவை யாம். ஷெல்லடியும், துவக்குச் சூடும் சராமாரியா வந்து கொண்டிருக்க என்னை விட்டிட்டு என்ரை பிள்ளைய எப்படியாவது காப்பாத்துங்க என்று கையெடுத்துக் கும்பிட்டவாவாம். கடைசி நேரம் ஒண்டும் செய்யே லாமல் நிஷாவை அப்படியே விட்டிட்டு வந்திட்டினமாம்.
"ஐயோ. நான் பெத்த மகளே யாருக்கும் தெரியாமல் இப்படி அநியாயமாய் செத்துப் போனியே கடவுளே எங்கையாவது இருப்பாய் எண்டு தானே நினைச்சுக் கொண்டிருந்தம். இப்படி ஏமாத்திட்
ஜீவநதி
 
 
 
 

(3UITL"Ig2(3LLJIg?..."
மண்ணில் விழுந்து அழுது குளறிய தாயை அணைத்தபடி உஷாவும் சேர்ந்து அழுது கொண்டி চেjট95T6াঁ,
கணேசன் கல்லின் மேல் கல்லுப்போல அமர்ந்திருந்தான். கண்களில் இருந்து கண்ணிர் பெருகிக் கொண்டிருந்தது.
கணேசனின் அருகில் சென்று அவனின்
கையைப்பிடித்தபடி அருகில் அமர்ந்து கொண்டான் .
அஜந்தன்.
சற்று நேரம் அமைதியாக இருந்த அஜந்தன், "அதுகள் நல்ல ஆக்கள் மாதிரித்தெரியது. உன்ரை பிள்ளையை அவைதான் வளர்க்கினம். முகாமிலையும் தங்கட பிள்ளை எண்டு தான் பதிஞ்சு இருந்தவை இப்ப சரசாலையிலை அவையின் ரை தமக்கையோட இருக்கினம். நானும் பிள்ளையின்ரை மச்சத்தை வைத்து உன்ரை பிள்ளை எண்டதை உறுதிப்படுத்திப் போட்டன் அதை விட அவள் உரிச்சு வைச்சு உன்ரை மனுஷி போலத்தான் ரா இருக்கிறாள். எல்லா விஷயத்தையும் அவையிட்ட சொன்னான். அவையள் பிள்ளையைத் தர சம்மதிச்சிட்டினம் எனக்கு நீ எங்கையிருக்கிறாய் எண்டும் தெரியாது. என்னோடை வேலை செய்த சந்திரன் இஞ்சத்தைய ஆள். உன்னைத் தெரியுமெண்டு இடத்தையும் சொன்னார். அது தான் உன்னைக் கூட்டிக் கொண்டு போக வந்தனான். என்ன செய்யுறது செத்தவள் செத்துப் போனாள். பிள்ளை யாவது இருக்கிறது எண்டு சந்தோஷப்படுங்கோ, நடந்ததையே நினைச்சுக் கொண்டிராமல் கெதியிலை போவம் வெளிக்கிடு. எண்டு அவசரப்படுத்தினான்.
கோக ல வ ல் லி அழு குரல் கேட்டு அயலவர்கள் கூடியிருந்தார்கள். உஷா அழுதழுது வந்தவர்களுக்கு விஷயத்தைச் சொல் லிக் கொண்டிருந்தாள்.
இதழ் 50

Page 180
பிள்  ைள யை ப் பார் க் குடம் ஆவ லரில் ரவிலேயே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அஜந்தனுடன் புறப்பட்டுவிட்டான் கணேசன்,
霹米米米
{ ಆಂಗ್ಲರ್ಕ್ போது குழந்தை கையில் ஒரு F60LD601 606 த்து விளையாடிக்கொண்டிருந்தது. b ஒரு பெண் அமர்ந்திருந்தாள். குழந்தையைக் கண் டவுடன் ள் என்னமோ உணர்வுகள் ஊற்றெடுத்தன. நிஷாவின் மறுஉருவமாகவே அவள் தெரிந்தாள். ஒடிச் சென்று வாரி எடுத்து அணைத்துக் கொண்டான். குழந்தை சற்றுத்திகைத்து அழுதாலும் பின்னர் அவனுடன் சேர்ந்த்து கொண்டது. இரண்டு வயது நிரம்பிய அந்தக் குழந்தையை பூஜாக்குட்டி, பூஜா செல்லம் GT60T GT6öTG60TGö GUITC3LOT சொல்லிக் கொஞ்சினான். இவனது கொஞ்சலுக்கு குழந்தையும் சிரித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியது. தந்தை மகள் பாசப்பிணைப்பிற்கு பங்கம் விளைவிக்காமல் சற்றுத் தள்ளியே நின்ற அப்பெண், நாம் அவளுக்கு வினோதா எனப் பேர் வைச்சிருக்கிறோம் என்றாள். அப்போதுதான் வீட்டிலுள்ளவர்களை கவனித்த அவன்தன்குழந்தையைக் காப்பாற்றி தன்னிடமே தந்தமைக்கு பல தடவைகள் நன்றி சொன்னான். நடந்த சம்பவங்கள் பற்றி முழுமையாகக் கேட்டறிந்தான். நீண்ட நேரம் மனதை விட்டுப் பேசினார்கள். குழந்தையைப் பற்றி பேசினார்கள். பேச்சிலும் செயலிலும் அவர்களது நல்ல மனம் தெரிந்தது. குழந்தையைப் பாக்க வேணும்"
செ. கணேசனின்
1) நாங்கள் வீசியது வலையைத்தான் அகப்பட்டது மீனல்ல
P...?....
2) அறுத்துப் பாருங்கள்
வெறுத்துப் போகும் நம்ம ஏரி மீன்களை கிடைக்கும் பணமும் பிணமும்,
3) எல்லா நாடுகளிலும் தோணி போகிறது துறைமுகம் நிற்கிறது. இங்கேதான்
துறைமுகமும் போகப்போகிறது
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 

எண்டால் நீங்கள் எப்ப வேணும் எண்ட்ாலும் வந்து பாருங்கோ. நானும் அடிக்கடி இஞ்சை கூட்டிக்கொண்டு வாறன் என்று கூறிக் குழந்தையுடன் புறப்பட்டான். வாசல்வரை வந்து வழியனுப்பியவர்களின் கண்கள் பிரிவால் பனித்தன.
米米米。
குழந்தை வீட்டுக்கு வந்ததும் வீடே குதூகல மானது நிஷாவைப்பிரிந்த துயரம் ஒருபுறமிருந்தாலும் பிள்ளையின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் துயரில் இருந்து அவர்களை மீட்டுக் கொண்டிருந்தது. குழந்தைக்கு எல்லாமுமாகி நின்றாள் உஷா. குழந்தை யால் உஷாவின் வாழ்ககை மட்டுமல்ல, கணேசன் கோகிலவல்லி என மூவரின் வாழ்க்கையும் மாறிப்போனது.
காலம் கரைந்து கொண்டிருந்தது.
உஷா, குழந்தை, மருமகன் மூவரின் நலத்தையும் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு கணேசனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த கோகிலவல்லி உறவினர்களுடன் கலந்தாலோசித் தாள். இதனால் மூவரின் வாழ்கையும் சிறப்பாக
இருக்கு மென்பதால் எல்லோருமே அவளது முடிவை
வரவேற்றனர்.
நேற்று மேற்கே மறைந்த சூரியன் இன்று கிழக்கே உதயமாகத் தொடங்கியது. பூத்துச் செழித்து நின்ற கிணற்றடி முருங்கை மரத்திலிருந்து குயிலொன்று குரலெடுத்து கூவத்தொடங்கியது.
I gញUTüüüរី
4) өтпБJaБ6й
வீதி விஸ்தரிக்கப்படுகிறது போக்குவரத்துக்காக அல்ல "போவதற்காகத்" தான்.
15) புலனாய்வில்
புலமை பெற்றது
புலனாய்வு "நாங்கள்” இறையிருந்ததால்.
6) எங்களை
படம் பிடித்தது "பஞ்சம்" தீர்க்கவல்ல "வஞ்சம்" தீர்க்க.
6 இதழ் 50

Page 181
உடப்பூர் வீரசொக்கன்
2 Lil 1955oil காதலோடு தொ
கிராமப் புறங்களில் முன்னோர்களால் பாடப்பட்ட வாழ்மொழி இலக்கியங்கள் என்று சொல்ல படும் முதுகலை இலக்கிய வடிவங்கள் தேடி ஆவணம் படுத்தும் கைங்காரியங்களில் பின்னால் வரும் ஆய்வாளர்கள் தேடும் வடிவங்களில் மீள் கண்ணோட்டம் செலுத்தி வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இதில் கூடுதலானவை வாய்மொழிப் பாடல் களாகவே காணப்படுகின்றது. அந்தந்த பிரதேசங்களில் அவ்வவ் வாய் மொழிப்பாடல்கள் சான்றாதாரமாக திகழ்வது என்பதற்கு இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்றே கூறலாம்.
இலக்கியவாதிகள் கிராமிய பண்பாட்டு கலை இலக்கிய தேடலை ஆய்வு முறைகளில் மேற்கொள்ள உந்தப்படுகின்றனர். இவை பாடசாலை மேல்நிலை கற்கைநெறி மட்டங்களில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற கிராமிய கலை அம்சங்களில் பிரதேசத்துக்கு ஏற்ப பல நிகழ்வுகள் வேறுபடுகின்றன. இருப்பினும் இதன் செந்நெறிகள் கிராமிய பண்பாட்டின் கோலங்களில் பொது தன்மையை ஒத்ததாகவே அவதானிப்பதாக இருக்கின்றது. இதற் கிணங்க, உடப்பு பிரதேச தமிழ் மக்களின் நாட்டார் இலக்கிய தன்மையானது தென்னிந்திய சாயலையும் சார்பையும் ஒத்ததாகவே இருந்து வருகின்றது. கடற் தொழிலை மையப் பொருளாகக் கொண்டு வாழும் உடப்பு மக்களால் கடல் வலை வேலைகளிலும், மற்றும் பொது இடங்களிலும் மகிழ்ச்சி, குதூகலமும், குறிப்பாக கரை வலை இழுக்கும் போதும், வலை முடிக்கும் போதும் வள்ளம் கடலில் பாய்ச்சும் வேளையிலும், மேலே இழுக்கும் சந்தர்ப்பத்திலும், களைப்பு, "மாச்சல்", சோர்ெ உடம்பைத்தழுவும் வேளையில் கிண்டல், கேளிக்கை வினோத வேடிக் கையுடன், விரசம் கொண் L அம்பாப்பாடல்களையும், சுமைகளை போக்க வேண்டியும் காதல் இன்ப ரசனையுடன் நேர்த்தியான மெய்ப்பாடு களுடன் அம்பாப்பாடல்களைப் பாடி மகிழ்வார்கள்.
மற்றும் இம்மக்களினது தாலாட்டு ஒப்பாரி கும்மி, காவடிச் சிந்து, கரகாட்டப்பாடல், நாடக
ஜீவநதி
 

ந்தில் ர்பான அர்பார்பாடல்கள்
பாடல்கள் என்பன தனித்துவம் கொண்டதாகவும், மரபு சார்ந்ததாகவும் இருக்கின்றது. தென் இந்தியாவி லிருந்து புலம் பெயர்ந்து மக்கள் குழுமமாக 6Indքլb இவ்வூர் உடப்பு மக்கள் தமது மனக் காயங்கள் ஆற்றாமைத் துயர்கள் நெந்தி மணலில் கடும் வெயில்: குளிர் காலங்களில் அவதி நிலை ஏற்படும் நிகழ்வு களிலும் தனது எண்ண ஏக்கங்களை வெளிப்படுத்தவும், தான் நேசித்தவளைக் கடல் கரை மணலிலிருந்து தான் எழும்பும் இன்பரசம் கொண்ட காதல் உணர்வை அன்பு சொட்டும் அம்பாப்பாடல்கள் மூலம் மனம் நெகிழ்ந்து வெளிப்படுத்துவார்கள்.
இப்பாடல்கள் மகிழ்ச்சியும், இனிமையும் கொண்டவை. கவி வடிவில் அமையப் பெற்ற இப்பாடல்கள் எதுகை, மோனை வீச்சுத் கட்டமைப்புடன் திகழ்பவை. இந்த அம் இப்பகுதியின் தனக்கே உரிய கவிதை ஆற்றலை இப் பாடல்கள் மூலம் அறியக் கிடக்கின்றது. இப்பாடல்கள் இன்ப ரஸமாகவும், முன்பு வெளிப் பாடாகவும், சோகம் இளையோடினாலும் FLb சொட்டும் காதல் வரிகளைக் கொண்ட அம்பாப் பாடல்களை கேட்கும் போது இன்பரசத்தையும், காதல் ஊடலின் பரிமாணத்தையும், உணர்வையும், உணர்ச்சி யையும் ஊட்டும் பாணியில் அமைந்திருப்பதை கேட்டு Udd535GDTL). ৪৪
இந்த அம்பாப்பாடல்களை களவொழுக்கம் கொண்ட காதல் ஒழக்கத்தை கூட்டாகவும், தனியாகவும் ஒருமித்தும் தமக்கு உரிய கிராமிய சந்தப்பாடல்களா கேட்கும் போது ஓர் இன்ப உணர்வையும் கிளுகிளுப் பையும் ஏற்படுத்துகின்றது. வாழ்க்கைக்கு மூலாதாரம் காதல், இது இல்லாவிட்டால் இல்லற வாழ்வு ஏது ஜீவராசிகள் தொட்டு மனித குலம் வரை இக்காதல் பொதுவான தன்மையைக் கொண்டது. தெருவில் போகும் பெண்களைக் கண்டால் ஓர் ஆடவனுக்கு ஒருவகையான உணர்வுகள் ஏற்படுவது இயற்கை. உடப்பில் தண்ணீர் எடுக்க வேண்டி ஊற்றுக்கு சென்றே குடிதண்ணீர் எடுக்கப் போகின்ற பெண்கள் இயற்கை அழகுடன் இரண் டு குடங்களைக் கொணர் டு
இதழ் 50

Page 182
செல்வார்கள். அந்த ஆசையின் வெளிப்பாட்டை அம்பாப்பாடலில் வெளிப்படுத்துவார்கள்.
"கண்ணனும் ஏலேலோ தெருவெங்கும் ஏலேலோ கண்டு கொள்ள ஏலேலே காட்சி இங்கே ஏலேலோ கன்னி ஆசஏலேலோ மன்னனுக்கு ஏலேலோ களையா ஏலேலோ வருகுதையா ஏலேலோ விடலைப்பருவம் காட்டாறு போன்றது இப்பருவம் வயதுக் கோளாறை வெளிப் படுத்தும். தன்னை அழகுபடுத்தி ஆண்கள் மனதை கொள்ளை கொள்ளும், இதில் "மாரு முலை. கைப்பருவம்" என்ற வரிகள் தனது பருவநிலையை நாட்டார் பாடல்கள் மூலம் நேர்த்தியான முறையில் தெரிவிக்கும், கன்னி இளம் பருவத்தின் எழில் கோலங்களுடன் தனது ஆசை வெளிப்பாட்டை பருவ மனச்சுமையை கீழ் வரும் கிராமியக்கவியின் மூலம் எவ்வளவு தத்துரூபமாகக் காட்டுகின்றாள் என்பதைப்பாருங்கள்:
மங்கை ஏலேலோ. இ இவள் பருவம் ஏலேலோ. மாரு முலை ஏலேலோ. கைப்பருவம் ஏலேலோ.
ஊருக்குள்ள ஏலேலோ. பெண்ணிருந்தா ஏலேலோ. ஒயாத ஏலேலோ. தொல்லையடி ஏலேலோ. குடிநீரை பருக இருகுடங்களில் தண்ணிரை எடுத்து வருவது எமதுரின் வழக்கம். மாலை வேளையில் நடை பெறும் இந்த அற்புதக்காட்சி மனதுக்கு மகிழ்வைத் தந்தாளும் இளைஞர்கள் தண்ணீர் எடுத்து வரும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை இந்த கிராமிய கவி இவ்வாறு எடுத்துச் சொல்லுகிறது.
“மால ஏலேலோ. மங்காதோ ஏலேலோ. மஞ்சள் ஏலேலோ. வாடாதே ஏலேலோ. தொல்லை ஏலேலோ. படுத்தி ஏலேலோ. தொந்தரவு ஏலேலோ. செய்யவாரான் ஏலேலோ. என்று சொல்லி தனது முனத்துயரை வெளிப்படுத்து கின்றாள். அந்த ஊடலின் இன்பத்தை மறக்காமல் அவளின் வருகைக்காக எங்கி நிற்பதை
"வருவேன் ஏலேலோ. சடுதியே ஏலேலோ. வந்து நிற்பேன் ஏலேலோ.
ஜீவநதி
 
 
 

ண்டாளன் ஏலோலோ. சண்டாளி ஏலேலோ. சாஞ்ச மனம் ஏலேலோ. சந்தனமும் ஏலேலோ. சோறாச்சி ஏலேலோ. கண்டாங்கி ஏலேலோ. சேலக்காரி UGUT. கண்டு விட்டா ஏலேலோ. புன்சிரிப்பு ஏலேலோ. காதலர்களிடத்தில் ஏற்படும் பிரிவுத்துயர், வேதை யின் துயருக்கே கொண்டு போகும். வேதனையி தாக்கத்தால் இடம் மாறினாலும் 岳L எண்ணங்கள் ஊடலின் இன்ப சுகங்க கற்பனைகளாக வெளிப்பட்டு நிற்கும். இன்ப உணர்வை நினைத்து தாளா வெளிப்படுத்துகின்றான்.
பேசினஏலேலோ. பெண்ணிருக்க ஏலேலோ. ஏன்ைடா போனாள் ஏலேலோ பேசாலைக்கு ஏலேலோ. பெண்ணே ஏலேலோ. உனது மனம் ஏலேலோ. பிரியமனம் ஏலேலோ. எப்படியோ ஏலேலோ.
என்றும்
கண்டேன் ஏலேலோ. கனவு கண்டேன் ஏலேலோ. காதலி மேல் ஏலேலோ. ஆச கொண்டேன் ஏலேலோ, ஆசை என்பது யாரைத்தான் விட்டது. அடிபணியாதவர்கள் எவரும் உண்டா. ජී.,60| மறியாத கிராமப் புறத்தவர்களுக்கு இதைதாங்கத்தா முடியுமா? அந்தத் துயரை.
உன்னை விட்டால் ஏலேலோ. வேறொருத்தி ஏலேலோ. உற்ற துணை ஏலேலோ. யாருமில்ல ஏலேலோ.
உன்னால் ஏலேலோ. நான் உருகிஏலேலோ.
இதழ் 50

Page 183
拿
மண்ணாகி ஏலேலோ. போறனடி ஏலேலோ. உடனே அவன் அவளருகில் வந்து ஆசுவாசப்படுத்துப் நோக்கில்,
மங்கைக்கு ஏலேலோ. தங்கரதம் ஏலேலோ. மாப்பிள்ளைக்கு ஏலேலோ. வெள்ளிரதம் ஏலேலோ. இத்துடன் அவன் விடவில்லை. காலையானதும் கடல் வேலையை ஞாபகப்படுத்துகின்றான்.
வெள்ளி ஏலேலோ. வெளிச்சத்திலஏலேலோ. மீன்கழுவ ஏலேலோ. போன பிள்ளை ஏலேலோ. கேலி கிண்டலுக்கு பேர் என எமதுரில் அவனிடம் காணப்படும் அரும்பு முலையின் இடது தேமல் மச்சத்தை நினைவுபடுத்துகின்றான்.
வள்ளி என்ற ஏலேலோ. பெண் பிள்ளக்கு ஏலேலோ. வலது முலை ஏலேலோ. இடது தேமல் ஏலேலோ. கோபம் ஒருபுறம் இளையோடினாலும் மச்சு உறவுமுறை நீடித்து வருகின்றது என்பதற்கு இணங்க மச்சாளை மீனுக்கு உவமித்துப்பாடும் மரபு கிராமப் புறங்களில் இருப்பதற்கு இது எடுத்துக் காட்டாக இருக்கின்றது.
மச்சாள் ஏலேலோ. அவுச்சபுட்டு ஏலேலோ. கொச்சாளை ஏலேலோ. மீனம் போட்டு ஏலேலோ. கிரமப்புற சூழலில் தாம்பத்திய உறவு என்பது பொழுது போக்காக இருக்கின்றது. இந்த உறவில் களவில் பிள்ளை வரம் கிடைத்தால் அதனை அழிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவனின் அவமான வெளிப்பாட்டை எடுத்துச் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது.
கொஞ்சு ஏலேலோ. முகம் தருவேன் ஏலேலோ. குழந்தை வந்தா ஏலேலோ. என்ன செய்வேன் ஏலேலோ. என்ற அச்சஉணர்வும்
என்ன செய்ய ஏலேலோ. போறேண்டு ஏலேலோ. ஏங்குதடி ஏலேலோ. மனங்கொடந்து ஏலேலோ. அத்தோடு மட்டும் விட்டு விடவில்லை. பய பீதியை ஏக்கத்தை அவ்வாறு தெரிவிக்கின்றார்.
ஏக்கம் ஏலேலோ. கொடுக்குதடி ஏலேலோ. ஏழெட்டு ஏலேலோ.
ஜீவநதி

ஒன்பதிலே ஏலேலோ. ஒன்பதாம் ஏலேலோ. திங்களிலே ஏலேலோ. உமையாள் ஏலேலோ. இ. வயிறு நொந்து ஏலேலோ. மீண்டும் தன் இரங்கல் நிலையை வெளிப்படுத்தி நிற்கின்றான். ஒரு பெண்ணின் ஏக்க நிலையையும், காதலன் மீது கொண்ட பாச சிறப்பியலையும், அவள் அடையும் வேதனையையும் மிகத்துலாம்பரமாக எடுத்துக் காட்டும் இக் கிராமியக் கவிதை போற்றக் கூடியது. ஒரு பெண்ணின் ஏக்கத்தை படம்பிடித்துக்காட்டுகின்றது.
வழியிலே ஏலேலோ. ဗျွိ မှိ வயிறு நொந்து ஏலேலோ. வடிவானஏலேலோ. பிள்ளை பேத்து ஏலேலே. உன்னைவிட ஏலேலோ. போறதில்லை ஏலேலே. உன்முலைக்கு ஏலேலோ. 缀 தேமலுக்கு ஏலேலோ. இத்துடன் நில்லாமல் தன் துயரத்தைக் காட்டி நிற்கின்றான். ※
தேமல் ஏலேலோ. படர்ந்த கொங்கை ஏலேே திருநாட்டான் ஏலேலோ. குத்துமுலை ஏலேலோ. கிராமப் பகுதி மக்கள் கோயில் 6 சிறந்தவர்கள். தமக்கு ஏற்படும் துன்ப துயரங்களை ஆலயங்கள் சென்று தீர்ப்பார்கள். தனது காதலிக்கு ஏற்படும் துன்பியல் நிகழ்வை இறைவனிடம் சென்று முறையிடுவதை இக்கவிமூலம் உணர்கின்றோம். குத்துமுலை ஏலேலோ. கோரியரேஏலேலோ. கூட்டிப்போக ஏலேலோ. நேரமில்ல ஏலேலோ. வேடிக்கையாகக் கூறிக் கொண்டு
உனக்கும் ஏலேலோ. எனக்கும் கண்ணே ஏலேலோ. எட்டு நாள் ஏலேலோ. விரதம் கண்ணே ஏலேலோ. எமது துயர் ஏலேலோ. தீர்ப்பன் கண்ணே ஏலேலோ. இவ்வாறு உடப்பு பகுதி மக்களிடத்தில் காணப்படும் காதல் உணர்வையும் உள்ளக்கிடக்கைகளையும் காதலரின் பிரிவையும் வேதனைகளையும் காதலன் காதலிகளிடத்தில் ஏற்படும் கருத்து மோதல்களையும் காதல் இன்பரசனைகளையும் கடற்தொழிலாளர்கள் இவ் அம்பாப்பாடல்கள் மூலம்வெளிப்படுத்துவதைக்காணலாம் ஒவ்வொரு பிரதேச மண் வாசனைக்கும் அவர்களின் கலாசாரப் பின்புலத்தையும் அதன் பாரம் பரியங்களையும் அறிந்து உணர்ந்து கொள்ளலாம்.
இதழ் 50

Page 184
(ο 55Πει GFTLJ Lò GBLUTGD,
மலரின் கழுத்தில் வந்து விழுந்த கல்யாண விலங்கு கட்டி முடித்த தாலியின் புனிதம், திருமண தாம்பத்திய உறவின் தாற்பரியமான பவுத்திர உணர்வுகள் எதுவுமே எடுபட முடியாமல் போன ஒரு வரண்ட நிலைக்கு அவள் ஆளாகியிருந்தாள். அன்பு நதி வற்றிப்போன வரட்டு சமூகத்தின் கருமை இருள் படிந்த பாவப்பட்ட மனிதர்கள் நடமாடு கின்ற வாழ்க்கை யுகமே, அவள் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்த புதியகளம், கல்யாணமாகி முதல் நாளன்றே அவளைக் கருவறுக்கத் தொடங்கி விட்டார்கள்.
கல்யாணமானால் ஒரு பெண்ணுக்கு எத்தனையோ கனவுகள். நல்லவேளை, அவளுக்குக் கனவுகளே வந்ததில்லை. சராசரி GILI GÜT956ÜDGİTÜ G3LITCD, gd_GöGDTö-LDT60T 561flü பூட்டக்கூடிய கல்யாணக் கனவுகள் அவளுக்கு வந்ததில்லை. அப்படியொரு கனவுகான நேர்ந் திரு தால் அவள் நிலை என்னவாகியிருக்கும். கல் "” GOOTLDTGŪT முதன்நாளன்றே, பிரச்சினைப் பூதம் அவளை விழுங்கப் பார்த்தது எப்படியெனில் அது ஒரு விபரீத விவகாரம்
அவளுடைய வீட்டில்தான் அவர்களுடைய முதலிரவு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதற்குக் காரணம் நிமலனுடைய வீட்டின் விபரீத சூழ்நிலை, அவனுக்கு இன்னும் கல்யாணமாகாத ஓர் அக்கா இருக்கிறாள். இது தவிர மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை வேறு. இப்படிச் செல்லரித்த பெரிய குடும்பம், இந்தச் சூழ்நிலையில் முதலிரவு எடுபடாது என்று கருதியே மலரின் வீட்டில் அது நடக்க ஏற்பாடாகியிருந்தது. அதிலும் ஒரு சகுனப் பிழை; முதலிரவைக் கொண்டாடுவதற்கென்று, அவர்கள் அறைக்குள் புகுந்த பொழுது, "கேட்" வாசலில் உறுமிக் கொண்டு ஒரு கார் வந்து நிற்பது தெரிந்தது. நிமலன் அதை வேடிக்கை பார்ப்பதற்காகக் கதவைத் திறந்து கொண்டு (66)|Gif(3U போனான். காரிலிருந்து ஒரு பட்டாளமே இறங்கிற்று. அவன் வீட்டிலிருந்துதான் உடன் பிறப்புகளோடு சோர்ந்து வாடிய முகத்துடன் அம்மா வந்திருக்கிறாள். அவனுக்கு இடி விழுந்த மாதிரி மனம் கனத்தது.
அவர்களை வரவேற்கக்கூட நா எழவில்லை. வாசலிலேயே வைத்துப்பதற்றமாகக் கேட்டான்.
"என்னம்மா இந்த நேரத்திலை.?" "எல்லாம் உன்ரை மனுவழியாலை வந்த வினை. அங் கை கொப் பர் பெரிய சணர் டை, துணி மணியெல்லாம் கொளுத்துகிறார்."
ஜீவநதி 180
 
 
 
 

"ஏனம்மா? இவள் என்ன செய்தவள்? சீக்கிரம் சொல்லுங்கோ."
"நேற்று வீட்டை வரேக்கை ஐநூறு ரூபாய் அவளுக்குக் கொடுத்தவர்தானே, அது இரவு பார்த்தால் கட்டிலிலை கிடக்குது. தான் கொடுத்த காசைத்திருப்பிக் கொடுத்துத் தன்னை அவமானப் படுத்திய தாக, அவர் கொதிக்கிறார். நீ வந்து தான் அவரைச் சமாதானப் படுத்த வேணும். உவளையும் கூட்டிக் கொண்டு வா."
வெளிக்கிடு மலர்" என்றான். அவன் முதலிரவையும் மறந்து 篷
அப்பாவித்தனமாக அவள் கேட்டாள், "நான் வந்து மன்னிப்புக் கேட்க வேணுமே?” "பின்னே, வேணுமென்று தானே இதைச் செய்தனி உனக்குப் பணத்திமிர், ஒ! நீங்கள் பெரிய ஆட்கள்தான்."
அதற்கு அவள் அழாக்குறையாகக் கூறினாள். "மறந்து போய்வைச்சிட்டு வந்திட்டன் இதற்கு அவன் ஒன்றும் கூறவில்லை. அவர்கள் அந்தக் காரிலேயே புறப்பட்டுப் போனார்கள். அவன் விரும்பியவாறே, அந்தப் பெரியவரின் காலில் விழுந்து, அவள் மன்னிப்புக்கோரினாள். அவர் ஒரு சூத்திரதாரி போல நின்று கொண்டிருந்தார். அப்படி யொரு மனிதனை அவள் கண்டதில்லை. கண் வழித்துப் பார்த்தாலே கண்களில் அனல்பொறி தெறிக்கும் குரூரப் பார்வை கொண்ட ஒரு காட்டு மிராண்டி மனிதன் பொல அவர் தோன்றினார். புகையிலைத் தரகு வேலை அவருக்கு அச்சு வார்ப்பாக, அவரின் கைப்பொம்மை மாதிரியே நிமலனாகி யிருப்பதாக அவளுக்குப்பட்டது.
இதழ் 50

Page 185
அதுவே சூடுபட்ட அவளுடைய முதல் அனுபவம்.
அவளை அவன் மனித உணர்வுகளுள்ள ஒரு பெண்ணாகவே மதிக்கவில்லை. அவளுக்கென்று ஒரு மனமிருப்பதாவே அவனுக்கு யோசனை வரவில்லை. அவளைப் பொறுத்தவரை ஒரு பகையாளியை விட மோசமான நடத்தைகளையே அவள் கொண்டிருப்பதாக அவனுக்குப்படும். எந்த நிமிடமும் அவளைப் பழிவாங்கவே, அவன் துடித்துக் கொண்டிருப்பதாய் அவளுக்கு உணர்வுதட்டும்.
செல்லரித்த அவர்கள் குடும்பத்துடனேயே கரைந்து உருவொழிந்து போன, உயிர் வற்றிப்போன வெறும் நிழல் போலவே அவள் ஆகியிருந்தாள் ஒன்றரை வருடம் வரை அந்த வாழ்க்கை அப்போது நிமலன் கச்சேரியில் கிளார்க்காக இருந்தான். தினமும் அம்மா வீட்டிலிருந்து ரவுன்வரை சைக்கிள் பயணம் அந்த விபரீத சூழலும் செல்லரித்துப்போன வீட்டு வாடையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. இதன் நடுவே புருஷன் அன்பு இருந்தாலாவது ஓரளவு ஆறுதல், அதுவும் கிடைக்க வில்லை. அவனைப் பொறுத்தவரை, அவள் ஒரு மூன்றாவது மனுஷி தான். அவள் மீது, அவனின்
கட்டறுந்த தேடலெல்லாம் இரவில் தான். அப்படி ୬llଗUTଔର) மட்டும் தான், என்னவொரு வாழ்க்கை நரகம் 3: அவளுக்கு இதை யாரிடம் போய்ச் சொல்லி அழுவது, பிறந்த வீட்டிலேயும் போய்ச் சொல்லி அழத் திராணி யில்லை. அங்கு போக விட்டால் தானே. மனதளவில்
அவர்கள் பிரிந்து போக அந்த வீடு தான் ஆடுகளம் அவர்கள் சொல்லும் புத்திமதியே, அவனுக்குத் வேதவாக்கு. ஆனால், அவள் மட்டும் அவனுடைய உடல் பசிக்காக இரவில் ஒரு கருவி போலப் பயன்படுகிறாள். அதன் பயனாக அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இரண்டும் ஆண், இரண்டாவது பையன் பிறந்த போது, நிமலன் மட்டக்களப்புக்கு மாற்றலாகிப் போன காரணத்தினால், மலர் இரண்டாவது பிரசவம் பார்க்கத் தாய் வீட்டிலேயே தங்கியிருந்தாள். மனதாலும் உணர்வு களாலும், உடலாலும் நிமலனையே உலகமென்று நம்பி அவள் ஏற்றுக்கொணடு விட்ட நிலையில், அவனின் மனோ நிலையோ வேறு விதமாக இருந்தது. அன்பு வரண்ட போன, அவளை எல்லா வழிகளிலும் பங்கப்படுத்தும், அவனின் நேர்மை தவறிய நடத்தைக் கோளாறுகள், அவளைப் பழிவாங்கும் கொள்கைப் பிரகடனத்துடனேயே, அவன் கடிதம் எழுதும் போதுகூடக் கொடிகட்டிப் பறக்கும். அந்தப் பறத்தலின் உச்சக்கட்ட விளைவாக, உயர்வுகள் மரத்துப் போன கேட்பாரில்லாத நாதியற்ற பேதை போல அவள் ஆகிவிட்டிருந்தாள்.
அவனுக் குப் பொறுப் பு வர வேணர் டு மென்பதற்காக மலரின் அப் பா, அவளுடைய சீதனக்காணியை விற்று அவர்கள் வீட்டுக்கு பக்கத்துக் காணியிலேயே, ஒரு வீடு கட்டி முடித்திருந்தார். அதற்கு
ஜீவநதி

மின்சாரம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான செலவை நிமலனிடம் வாங்கித் தருமாறு அப்பா கேட்டிருந்தார். மலர் அதைப் பற்றிக் கடிதம் எழுதியபோது அவன் பதில் கடிதம் இப்படி வந்தது. முறைமை தவறினால், வறுமை பகைமை எல்லாம் வரும். அதுமட்டுமல்ல லைட் இல்லாமல், உங்களால் இருக்க முடியாதா என்று ଓ ରାତ୍ରା கேட்டு எழுதி யிருக்கிறான். அவளுக்கு அப்பாவிடம் இது பற்றி என்ன சொல்வதென்றே புரியவில்லை. பிளவுபட்ட ஒரு மனோநிலையில், அவன் எதைச் செய்தாலும் விபரீதமாகவேபடும். அவன், அவள் விடயத்தில், அனுகூலமாக ஒன்றையும் சிந்திப் பதில்லை. அப்பாவிடம் இதைப்பற்றிக் கூற முற்பட்டால், அவரும் உடைந்து போய் விடுவார். நான் உடைந்தது என் இதயம் பங்கமுற்றது என்னுடனேயே கரைந்து போகட்டும். இப்போது புனிதமான இல்லற தர்மங் களுக்கு விரோதமாக, நான் இப்படியெல்லாம் கழுவாய் சுமக்க நேர்ந்தாலும், அப்பா அம்மா முன்னிலையில் வாழ்ந்து சிறக்கிற சராசரிப் பெண் போன்றவள் தான் நானும், நான் கருவறுந்துபோன வெறும் நிழல் தானென்றாலும், நான் வாழ்வதாகக் காட்டிக் கொண்டி ருக்கும், இந்தப்பொய் வேடமே, என்னைக் காக்கும் கவசமாக இருக்கட்டும் என்று கருதி மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவள் கூறினாள்.
"அப்பா! கடன்பட்டுத்தான் காசு எடுக்க முடியுமென்கிறார். அதுவும் நாளாகுமென்பதாலே பலனில்லை." என்றுதான் அவர் பதில் கடிதம் போட்டிருக்கிறார் அப்பா, என்று தொண்டை வரண்டுபோய்க் கூறினாள். 3.
"அவருக்குக் கஷ்டமென்றால் தொந்தரவு செய்யாதே, நாங்கள் வேறு வழியிலை, இதைப் பற்றி (3UJToft JLJLib."
இப்படி அவரை நம்ப வைத்ததை எண்ணி அவளுக்கு உள்ளூர மனவருத்தமாக இருந்தது. என்னதான் மனமொட்டாமல் போனாலும், அடிக்கடி லீவு போட்டுக் கொண்டு அங்கு வந்து போகின்றான். அது அவள் மீது கொண்ட காதலில்லை. குழந்தைகள் மீது கூட அவன் பாசம் வைக்கவில்லை. பின் இந்த முரணான வருகை ஏன்? அவளைச் சந்தோசப் படுத்தவா? தன் உடற்பசி தீர்க்கவே, அவன் அவளை நாடி வருவதெல்லாம்.
அதன் விளைவாக மூன்றாவது குழந்தையும் ஜனனித்துவிட்டது. அப்பாவுக்கு வருகிற பென்ஷனில், இது மேலும் ஒரு சுமை. இதற்காகவாவது, அவள் காசு அனுப்புவானென்று அவள் எதிர் பார்த்துக் கொண்டி ருந்தாள். காசு வரவில்லை. பதிலாக ஒரு கடிதம் வந்தது. தனக்குக் கொடிய வயிற்றுவலி என்று கூறி, ஆபரேஷனுக்கு அவர்களை காசு அனுப்புமாறு அவன்
இதழ் 50

Page 186
எழுதியிருக்கிறான். சாகப்போற ஆத்மா காசு கேட்பதாக வேறு எழுதியிருக்கிறான். அதைப் படித்ததும் அவளுக்குச் சீ என்றாகி விட்டது. தர்மத்துக்கு உடன் பாடற்ற இந்த விடயம், அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அப்பா நம்பிக் கொண்டிருப்பது போலத் தனது புருஷன் மிகவும் கெளரவமான, நன்னடத்தைகள் கொண்ட உத்தமரல்ல. எனக்கொரு யோக புருஷனு மல்லன். முற்றிய அயோக்கியத் தனத்தின், கறை பூசப் பட்ட இக்கேவலமான கடிதத்தைப் பற்றி அப்பாவிடம் எப்படி எடுத்துக் கூறுவென் கூற முடிந்தால் நான் போட்டுக் கொண்டிருக்கிற வேடமே கலைந்து போகும். அன்பு சாதிக்கத் தவறிய, ஒரு கொடியோனை மணந்து, எல்லாச் செளபாக்கியங்களும் இழந்து, இதயம் தொலைந்து நானொரு மொட்டை மனமாக, இருண்ட யுகத்திலே வாழ நேர்ந்த கொடுமையை அறிந்தால், அப்பா வாய்விட்டு அழுதே விடுவார். இனி இதை மூடி மறைப்பதில் பலனில்லை எல்லாம் அப்பா போட்ட கால்விலங்குதான். அவரிடமில்லாமல் வேறு யாரிடம் கூறுவேன். இந்தக் கொடுமை பற்றி அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு நிர்மலமான வானத்தை ஏறிட்டுப்
ர்த்தவாறே. குரல் கம்மிக் கூறினாள்.
"அப்பா நான் ஒன்றையும் மறைக்க ம்பேலை. கல்யாணமென்ற கறை முற்றாக என்னை
‘விடியல்!
விடி
பூமிப்பந்தின் புதிய வெளிச்சம் உதயமாகும் அறிவியல் பிரவாகம் அச்சம் துறந்து மடமை ஒழித்து புதமைகள் உள்நுழையும் உத்வேக யாத்திரை கல்வியால் அகிலம் வெல்லும் உண்மையின் அறைகூவல் இயற்கையோடு ஒன்றிணைந்து நாளைகளின் செழுமைக்காய் இன்றைக்கே மதிவரையும் அதிஸய அரங்கேற்றம் தூரநோக்கு இலட்சியங்கள் இணைசேர்ந்து மாற்றங்காண் வையகத்தின்
மாயைகள் விலத்தி
 
 

எரித்துக் கொண்டிருக்கு அவரை இதுவரை முழுசாக நீங்கள் நம்பியிருப்பியள். என்னோடு எல்லா உணர்வு களையும் பகிர்ந்து கொண்டு எனக்கு உடன்பாடாக, அல்லது நான் சந்தோஷப்படும் படியாக, என்றைக்குமே அவர் இருந்ததில்லை. என்னைப் பழிவாங்கும் எண் ணமே, அவரைக் குடிகொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, மனமொடிந்த நிலையில், கழுவாய் சுமந்தே பழக்கப்பட்டுவிட்டவள் நான் இன்றைக்குப் பூதாகரமாய் வார்த்தெடுக்கப்பட்ட பொய்யிலே ஒரு கடிதம் வந்திருக்கு.
அவருக்கு வயிற்று வலியாம். அதற்கு
நாங்கள் காசு அனுப்ப வேணுமாம். ஆபரேசன் செய்ய, சாகப்போற ஆத்மா காசு கேட்கிறதாம். எப்படி இருக்கு?
"நீ என்னசெய்வதாக உத்தேசம்."
அதற்கு அப்பா சற்று உறுத்தலாகவே கேட்டார்.
"அனுப்பித்தொலைக்க வேண்டியது தான். பிள்ளைப்பேறுச் செலவுக்குக் காசு அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை. இப்பிடி ஒரு பொய் வேண்டாமே" என்றாள். அவள் மனமொழிந்து போன விரக்தியுடன், அவளை விழுங்கிவிட்ட இருண்ட யுகம், கண்களுக்குள் கரித்தது.
UGVO
மடைதிறக்கும் அற்புத வெளிப்பாடு மழலை முதல் முதுமை வரை காலமாற்றத்தில் கைகோர்க்கும்
நிதர்சன புத்தாக்கங்கள்
ஒன்றாக்கற் கோட்பாடு போர்கள் விலத்தி பகமை துறந்து அறிவியல் சிந்தனை ஒளியேற்றிக்கொள்ளும் விடியலின் யாகம் வருங்காலத்தை வளமாக்கிட எழுத்தாணி எழுதும் குருதிசிந்தாப் போராட்டம் உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கைகள் ஆட்சிசெய்யும் எண்ணங்களின் விடியல்.
கே.எஸ். சுபாஸ்
இதழ் 50
○
ང་
三

Page 187
ܡ
وة
இர. சந்திரசேகரன்
னைவின் நி நிழல்கள்
எங்களூர் நெல்லிக்காடு சிவன் கோவிலின் மூலஸ்தானத்தில் நின்று பார்த்தால் வெகு தூரத்தில் வயல் வெளிக்கப்பால் மயானம் தெரியும். பூவரசு மரங்களும் அந்த மண்டபமுமாய்ச் சேர்ந்து ஒரு தோற்றம் கொடுக்கும்.
தேர் நிற்கும் இடத்தை ஒட்டி ஒரு குளம், ஈசான மூலையில் பூந்தோட்டம், மேற்கு வீதியில் தெற்கு வடக்காக ஒரு தெரு செல்கிறது. இந்தத் தெருவின் மேற் கே தான் ஊர் இருக்கிறது. கோவில குருக்கள்மாருக்குத் தெருவுக்கு அப்பால் கோவில் காணியில் வீடுகள் இருக்கின்றன. சில கல் வீடுகள், ப6 ஒலை வேய்ந்த வீடுகள்
எங்கள் வீடு வளைந்து தெருவில் மே6 உயர்ந்து நிற்கும் பெரிய வேப்பமரத்தடியில் இருந்து செல்லும் ஒழுங்கையின் கடைசியில் இருக்கிறது. பனை ஒலை வேய்ந்த சிறிய வீடு
கோவிலில் பத்து நாள் பூசை முை அப்பாவுக்கு இருந்தது. மற்ற நாட்கள் மற்ற இரண்( குருக்கள்மாருக்கும் உரியது. பத்தாம் நாள் இர6 வேலிக்கு மேலாக அடுத்த வீட்டுக்காரரிடம் கோவி: சாவியைக் கொடுத்துவிடுவோம். அப்படியே இருபது நாட்களின் பின்னர் மற்றப் பக்கத்து வேலியின் மேலா கோவில் சாவி எங்களுக்கு வந்து சேரும், ஒரு குருக்களுக்கு முடியவில்லை என்றால் மற்றவர் பூை செய்து கொடுப்பார். இவர் பின்னர் அவரின் பூை நாட்களைச் செய்து ஈடுகட்டி விடுவார். வருடாவருட பெரும் சிறப்பாக நடக்கும் திருவிழாக்களும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கென மாறி வரும்.
அப்பா தமிழ், சமஸ்கிருதம், (கிரந்தம், நாகரம் என்பவற்றில் ஆழமான அறிவுள்ளவர். அடுத்த ஊரி
ធ្វើការប្រព្រឹ

前
5后D
5
}
இருந்த ஒரு புலவர் ஒருவரைக் குருவாகக் கொண்டவர். கோவில் பூசை முடிந்ததும் சமஸ்கிருதப் புத்தகங்களை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப் பார் பனையோலை ஏடுகளையும் வாசித்துக் கொண்டிருப்பார். பூசை முறை இல்லாத நாட்களில் வெளியூர் திருவிழாக்களுக்கும் சென்று விடுவார். சில கோவில்களில் ஒவ்வொரு வருடமும் கொடியேற்றும் உரிமையைப் பெற்றிருந்தார்.
அப்பா அம்மா அண்ணன் நான் இரண்டு தம்பிகள் கொண்டதே எமது குடும்பம். நான் பூசை நாட்களில் அதிகாலையில் எழுந்து கோவில் குளத்தில் குளித்துவிட்டு பூஞ் சோலையில் பூக்களைப் பூக்கூடையில் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வேன். சுவாமிகளுக்கு அபிகூேஓகம் செய்து பட்டு, பூ சாத்திவிட்டு மடப்பள்ளிக்குப் போய்விடுவேன். கூட்டி சுத்தமாக்கி விட்டு நைவேத்தியம் வைக்கும் பாத்திரத்தில் பச்சை அரிசி ஒரு சுண்டு எடுத்து தீர்த்தக் கிணற்றில் எடுத்த தண்ணீரில் கிளைந்து கைவிரல் நிறை காட்டி அடுப்பில் வைத்துவிட்டு அசையா மணியை அடிக்கச் சரியாக இருக்கும்.
அப்பா சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு வருவார். நைவேத்தியத்தை கிண்ணங்களில் போட்டு மூடிக்கொண்டு போனவுடன் பூசை நடக்கும். ஒரு சிலர் வந்திருப்பார்கள். அப்பா விபூதி, தீர்த்தம், சந்தனம், குங்குமம், பூ கொடுக்க, நைவேத் தியத்தைத் தலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குப் போவேன். அம்மா து ைவயல் அரைத்து வைத்திருப்பா,
இதழ் 50

Page 188
சாப்பிட்டுவிட்டு ஒரு மையிலுக்கு அப்பால் இருக்கும் பள்ளிக் கூடத்துக்கு ஓட்டமும் நடையுமாக செல்வோம். பள்ளிக்கூட வாசலில் பிரம்பு வைத்துக் கொண்டு அதிபர் கேட்டார்.
"ஏன் லேற்? "கோவிலுக்கு போட்டுவர கொஞ்சம் நேரம் போட்டுது." "(335|T66b (36)6O)6)6. UJ600TL Tab (335|T66b (86)6O)6) (63Fu Ju வேணும், படிக்கிறதெண்டால் படிக்க வேணும்"
முகம் வாடிப்போய் நின்ற எனது கையில் ஒர் அடி அடித்தார்.
"போம் வகுப்புக்கு" அப் போது ஆறாம் வகுப் பு படித்துக் கொண்டிருந்தேன். சில நாட்களில் வகுப்பில் எனக்குப் பின் வரிசையில் இருந்த குலசிங்கம் வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்த போது என்னைக் கேலி G3-uj6)ITGöT.
* பச்சைப் புக்கை " என்பான், "வாழைப்பூ" என்பான்.எனது தலை முடியை வாரி பின்னால் ஒரு கொந்தாலிக் கொண்டை அம்மா போட்டிருப்பா, அதைத்தான் அவன் வாழைப்பூ என்பான். முன் தலை வேறு நெற்றிக்கு மேல் அரை வட்டமாக சவரம் செய்யப்பட்டிருந்தது.
மாலையரில் பள்ளிவிட்டு வந்ததும் இரவுப்பூசைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அடுத்த ஊரிலிருந்து இரண்டு பேர் நடந்து வந்து கோவில் வாசலில் தொங்கும் விளக்கை எண்ணெய் விட்டு ஏற்றி கும்பிட்டு விட்டுச் செல்வார்கள். வெயிலோ, மழையோ நாள் எப்படி இருந்தாலும் அவர்கள் வருவது தவறாது.
இரவுப்பூசை முடிந்தவுடன் மேற்கு வீதியில் சிறிய கடை வைத்திருந்த காசித்தம்பி கடையின் முன் பகுதியில் இருந்து இராமாயணம் வாசிப்பார் வசனமாக இருந்ததால் பலர் கூடியிருந்து கேட் பார்கள். அவருடைய வீடும் பின்னாலேயே இருந்தது.
இரவில் மண்ணெண்ணெய் லாம்பிலும் போத்தல் விளக்குகளிலும் படிப்போம். நான் பாடங் களை நன்றாகப் படிப்பேன். ஒரு நாள் தமிழாசிரியர் கோவில் வீதியில் கண்டபோது "ஐயர் நீரெல்லாம் படித்தால் கோவிலுக்குப் பூசை பண்ணுகிறதார்.? ஐயருக்கு என்ன படிப்பு?"
அவர் இப்படிக் கேட்டபோது மனக்கவலையாக இருந்தபோதும் எனக்கு இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே ஏற்பட்டது.
கோவிலை அப்போது ஒரு நிர்வாக சபை பொறுப்பேற்றது. காலப் போக்கில் அப்பாவின் நேர்மையான போக்கு, ஆழ்ந்த, அறிவு, நிர்வாக சபைக்குச் சங்கடமாக இருந்தது. கந்தசசுஷ்டி காலங் களில் கந்தபுராணப்படலத்தில் அப்பா இராகத்தோடு
ஜீவநதி

பயன் சொல்லுவார். அதனைக் கேட்க வென்றே சனம் கூடும். ஆறு நாட்களும் இந்த விளக்கமான பயன் சொல்லும் பாங்கு எல்லோரையும் கவரும்,
புதிய நிர்வாக சபை அப்பாவுக்கு கோவிலில் பூசைமுறை இனிமேல் இல்லை என்று தீர்மனித்தது. அப்பா முதலில் கவலைப்பட்டபோதிலும் ஊரை விட்டுப் போவதற்குத் தீர்மானித்து விட்டார். முன்னர் ஒருமுறை மலைநாட்டுக்குப் போனபோது செட்டியார்களின் கோவிலில், அப்பாவை ஏற்க முடியுமா என்று கேட்டிருந்தார்கள். கோவிலை ஏற்றால் இருக்க வீடும் வெளி வேலைகளுக்குப் போவதற்கு அனுமதியும் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். இந்த விகூடியத்தை இப்போது அப்பா அம்மாவிடம் சொல்லி பிள்ளைகளை யும் அங்கே உள்ள நல்ல பள்ளிக்கூடங்களில் படிப்பிக்கலாம் என்றார்.
பள்ளிக் கூடத் தில் விலகுவதற்கான பத்திரங்களைப் பெறுவதற்கு அதிபரிடம் சென்று சொன்னேன். "இப்போது தான் நல்லாய்ப் படிக்கத் தொடங்கியிருக்கிறீர். அதற்குள் விலகிறீரா?" ஊரைவிட்டுப் போகிறோம். என்று சொல்லிவிட்டு வெளியில் வந்த போது வகுப்பில் எனக்குப் பின்னால் இருந்த குலசிங்கம் "என்ன பச்சைப் புக்கை பள்ளிக்கூடத்தை விட்டுப் போறியாம்" என்று நக்கலடித்தான்.
ஒன்றும் பேசாமல் வெளியே வந்து விட்டேன். அவன் ஒரு நாள் வகுப்பில் கதிரைச் சட்டத்தோடு எனது காற்சட்டைப் பட்டியை ஒரு பூட்டினால் பூட்டிவிட்டான். வகுப்பு நேரம் முழுவதும் ஆசிரியர் கேள்வி கேட்டால் எப்படி எழும்புவது என்று மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. நல்லவேளை ஆசிரியர் ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. வகுப்பு முடிந்த பின்னர் தான் திறந்துவிட்டான்.
இது எனக்கு இப்போது ஞாபகம் வந்தது. ஒரு நாள் மாலை புறப்பட்டுவிட்டோம். வீட்டுச் சாமான்களை ஒரு பெரிய மாட்டு வண்டியில் ஏற்றி புகையிரத நிலையத்துக்கு அனுப்பி விட்டு நாங்களும் ஒரு பழைய யு-40 காரில் புறப்பட்டோம்.
இப்போது முப்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த ஊரைப் பார்ப்பதற்கு திரும்பி வந்திருக்கின்றேன். பட்டப் படிப்பெல்லாம் முடித்து ஆசிரியராகி, கல்விப்பணிப்பாளராகி, ஒய்வு பெற்ற பின்னர் நான் பிறந்து வளர்ந்த இடத்தைப் பார்ப்பதற்கு வந்தேன்.
கோவிலில் பூசையைப்பார்த்து விட்டு வரும் போது அந்தக் காலத்தில் எங்கள் வயலில் வேலை செய்த கந்தசாமி என்னை அடையாளம் கண்டு" என்ன ஐயா எங்களையும் ஊரையும் மறந்திட்டியள்.இங்கை வந்திருக்க மாட்டியளோ?" என்று கேட்டார்.
இதழ் 50

Page 189
s
མ། །
و
"எப்படி இருக்கிறீங்க கந்தசாமி? உங்கை நாங்கள் மறக்கவே இல்லை. நாங்கள் அங்கேே இருந்து பழகிவிட்டம் இனி இங்கை இருந்து என் செய்யிறது?"
"ஐயா உங்களோடு படித்த குலசிங்கம் படிப்ை விட்டுவிட்டு சந்தியிலை கடை வைத்திருக் கிறா (65 flu (3LDIT?"
"அப்படியா எனக்குத் தெரியாதே"
மேற்கு வீதியில் காசித்தம்பியி: வீடு இருந்த இடம் தெரியாமல் மண் மேடாக இருந்தது அவர் இராமாயணம் வாசித்த இடம் வெறும் தரையா இருந்தது. அவர் சில வருடங்களுக்கு முன் காலமா விட்டதாக அவரது மகன் எனக்கு அறிவித்திருந்தார்.
எங்கள் வீடிருந்த காணிக்குள் சென்ற போ வீடிருந்த அடையாளமே இல்லை. கிணற்றுக்கு அப்பா இருந்த ஒருவருக்கு சொந்தமான காணியின் வே6 கோவில் காணி தானே என்று கிணற்றுச் சுவர் வை நடந்தது வந்திருந்தது.
குலசிங்கத்தைச் சந்திக்கலாமோ என் எண்ணத்தில் சந்திக்கு சென்று கடையைக் கண் பிடித்தேன். சிறிய பெட்டிக்கடையாக இருந்தது. உள்:ே சென்ற போது, சிறிது நேரம் என்னைப் பார்த்து என்6ை அடையாளம் கண்டு கொண்டான்.
"ஐயா வாருங்கோ நான் உங்களைப் பற்றி கேள்விப் பட் டனானர் . கல் விப் பணிப் பாளரா இருந்தனீங்கள் என்று சொன்னவை, பேப்பரிலையும் சி நேரம் பார்க்கிறனான் உங்களோடை படித்தனான் என் எல்லோருக்கும் சொல்லிறனான்." என்று சொல்லி கொண்டே என்னை இருக்கவைத்து ஒரு சோடாை திறந்து தந்தார்.
"எப்படி இருக்கிறாய் குலசிங்கம்" என் கேட்டுக்கொண்டே சோடாவைக் குடித்தேன்.
"என் னையா செய்யிறது வியாபார சரிவருகுதில்லை"
ஏன் நம்பிககை இழக்கிறாய்? வங்கிக் கடன்க எடுக்கலாம் தானே , கடையைப் பெரிதாக்க சரியா? திட்டத்துடன் வியாபாரத்தை விரிவாக்கி நம்பிக்ை யோடு செய், அடுத்தமுறை நான் வரேக்க நீயொ சுப்பமாக்கட் போட்டிருக்க வேண்டும், சரிதானே." என் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டேன். என்னை கூட்டிக் கொண்டு வந்த நண்பரும் காருடன் வந் விட்டார். கார் வரை வந்த குலசிங்கம் "உங்களை
கண்டதால ஒரு நம்பிக்கை வருகுது, சந்தோசம் ஐய
என்று மலர்ந்த முகத்தோடு சொல்லிக் கையசைத்தான்.
நானும் கையசைத்து விடைபெற்றேனர். நினைவுகளின் சுமைகளோடு கார் சிவ
கோவிலைத்தாண்டிச் சென்றது.
ਕੁੰiBਹੁੰ

ബ
உருக்கம்
ஆழ்ந்த உறக்கம் எனக்குப் பிடிக்கிறது விழிப்பிலும் பார்க்க;
நீணர்ட துயில் மரணம் எனவும், ஜனனம் விழிப்பு எனவும், யாரோ கூறிய ஞாபகம்;
ஆனாலும், உறககம எனனை விழிக்கச் செய்கிறது: உறங்கிய நிலையில் காணர்பவை எல்லாம் தேடலாய் விரிகிறது:
உடுக்களின் மண்டலத்தில் நீரினைத் தேடுகின்றேன் காடுகள் மலைகளில் தேவதைகள் வருகின்றன SFTSELDTLQUILLQ;
வானவில்லை வளைத்து அம்பினை எய்கின்றேன் அம்பு பாய்ந்து மாலையாய் விழுகிறது. மாலைகள் நடுவே பிணமாயும் காணர்கின்றேன் கூடி அழுவோர் குரல்களும் கேட்கின்றன;
வேறு உலகத்தின் அணர்மையும் தெரிகிறது கபாலமும் என்பும் மாலையாய் கோாத்தோர் கைதட்டி ஆர்ப்பரிக்கும் ஒலிகளும் மோதுகின்றன.
விழிப்பு வராதபடி கணர்கள் இறுகிக் கொள்ள ஆட்கொள்ளும் உறக்கத்துடன்
தொடர்ந்திடும் நாட்கள்.
வே.ஐ.வரதராஜன்
இதழ் 50

Page 190
திரவியம் சர்வேச
ஜீவநதி, செப்டம்பர் 2012 கனடா சிறப்பிதழில் வெளிவந்த நேர்காணலின் கேள்வி ஒன்றிற்கான விடை: "படைப்பூக்கமானது பரம்பரை வழியாக அல்லது புறச் சூழலின் பாதிப்பு காரணமாக அல்லது உண்மையான சுயதேடுதளினுடாக அல்லது இவை போன்ற பல கூட்டுக்காரணிகளின் பெறுபேறாக
ஒருவரை வந்தடையலாம்."
உண்மைதான். புறச்சூழலின் பாதிப்பு படைப் பாளியின் மனதை எப்பவும் வதைத்துக்கொண்டே இருக்கின்றது என்பதை இப்போதெல்லாம் அடிக்கடி உணர்கிறேன். சில நேரங்களில் தாங்க முடியாத கோபம் வருகின்றது. சிலவேளை அழுகையும் வருகின்றது. ஏன் இப்படி ஒரு மனம்? அல்லது ஏன் அப்படி ஒரு புறச்சூழல்? என்ற வினாக்கள் அடிக்கடி மேலெழுகின்றன. பல விடயங்களைச் சகிக்க முடியவில்லை. "அம்மா." என்று வாய்விட்டுச் சொல்லிக் கவலை அடங்குவதை தவிர வேறொன்றும் செய்துவிட முடியாத கையறு நிலை புறச் சூழலின் பாதிப்பினால் படைப்புள்ளம் அல்லாடுவதன் யதார்த்தம் புரிகிறது.
உயர்தரக் கணிதத்துறையில் என்னுடன் படித்த ஒரு நண்பனைப் பல வருடங்கள் கழித்து கனடாவில் கண்டேன். நல்ல முன்னேற்றம் ஊரில் அவன் இருந் திருந்தால் இப்படி வந்திருப்பானா என்பது சந்தேகம் தான். இந்த பாழாய்போன மனம் இப்படி ஏதாவது ஒன்றை திடீரெனக் கண்டால், அது சம்பந்த மான பழையனவற்றை எல்லாம் ஒருமுறை கிண்டிப் பார்க்கிறது. அது மட்டும் அல்லாது, பழையனவற்றை தற்போதய நிலையுடன் ஒப்பிட்டும் பார்க்கிறது. இப்பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சிலவேளைகளில் அது கைகூடுவ தில்லை!
உயர்தரம் படித்த காலத்தில் படிப்பை குறைத்து பிற விடயங்கள் செய்தவை இப்பவும் மனதில் தோன்றி LD60DADēŠl6őTAD60T. GB5fluLJ é9H6ODLUUTGIT SHÜL6ODL6ODULJ GITÜLJGJLb பொக்கற்றில் சுமந்தபடி "சும்மா நோக்கின்றிச் சுத்தித் திரிந்தது. கதைத்த பகிடிகள், ஏதோ நாங்கள்தான் அந்த பகிடியை கண்டு பிடித்த மாதிரி ரியூசனை கட் பண்ணி முந்தானை முடிச்சு படம் ஏபீ பிரதியில் பார்த்தது. அந்த முருங்கைக்காய் தியரி பற்றி பல கட்டுக்கதைகள்
ஜீவநதி
 
 
 

உருவாக்கியது எல்லாம் இப்பவும் ஞாபகம். அப்ப & வழமைக்கு மாறான புதிய சூழல், எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? என்ன முடிவு எடுக்க வேண்டும்? என்று தெரியாமல் இருந்தது. இந்த குழப்பமான சூழலில் படிப்பவர்கள் படித்தார்கள், கொஞ்சம் விஷயம் தெரித்தவர்களும் பணம் படைத்தவர்களும் அல்லது பணம் கடனாக மாறக்கூடியவர்களும் கொழும்புக்கோ அல்லது வெளிநாடுகளிற்கோ சென்றார்கள். இன்னும் சிலர் "உசாராக" வேறு திசையிலும் சென்றார்கள்.
இப்படித்தான் எனது நண்பனும் படிப்பை இடையில் நிறுத்தி வெளிநாடு செல்ல நேர்ந்தது. பாவம், பணம் இல்லாதவர்களும் அல்லது கடன் வாங்க தகுதி இல்லாதவர்களும்! இவர்கள் தம் சீவியத்தில் எக்காரணத்திற்காகவும் வவுனியாவை தாண்டாத வர்கள். இவர்களிடம் கொடுப்பதற்கு உயிரைத் தவிர வேறொன்றும் இருந்ததில்லை. அதையும் கொடுத் தார்கள் நல்ல மலிவான விலையில் உயிரை கொடுத்து வெளிநாடு போகலாம் என்றால் அவர்களும் போயிருப்பார்களோ?
வெளிநாடு போன நண்பனிடம் இருந்து சில கடிதங்கள் கிடைத்தன. அவன் பல போட்டிருப்பான். ஆனால் எமக்கு சிலதான் கிடைத்தன அதுவும் ஒவ்வொரு கடிதமும் அனுப்பிய தேதியில் இருந்து சில மாதங்களின் பின் வந்து கிடைத்தன. கடிதத்திலிருந்து விளங்கியது அவன் உலகம் சுற்றுகிறான் என்று. அவனது நோக்கம் எந்தவொரு வசதிபடைத்த நாட்டிலா வது பிரசாவுரிமை எடுத்துவிடவேண்டும் என்பதே. இவருக்கு பிரசாவுரிமை கிடைப்பதில் ஏதோ இழுபறி நடந்துள்ளது என்பது இவரது கடிதங்களை பார்க்கும் போது தெளிவாக விளங்கியது. இப்படியே சிறிது காலம் ஒடிற்று
இப்போது நான் கொழும்பு வந்தாயிற்று. இப்போது அவனிடம் இருந்து கடிதங்கள் வருவது நின்று தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அவனது பேச்சுக்கள் எப்போதும் ஊர் பற்றியதாகவே இருக்கும். இவ்வளவு காலமும் அவனது கடிதத்தை ஒரு வாசகன் போல் வாசித்து கொண்டிருந்த எனக்கு இப்போது அவனது பேச்சைக் கேட்கும்போது வேறு மாதிரி எண்ணத்தோன்றியது. ம்ம்ம்ம். ஒருவர் பேசாமல் இருக்கும்வரை அவரைப் பற்றி நாம் எப்படியும் மனகோட்டை கட்டலாம். ஆனால் அவர் வாய் திறந்து பேசும் போதுதான் உண்மை தெரிய வரும். நாம் அவர் குறித்து எழுப்பிய கோட்டையுடன் அவரும் ஒத்து போகின்றாரா என்று அப்போதுதான் தெரிய வரும். அதனால்தான் பேசாமல் இருந்தால் பெறுமதி அதிகம் என பெரியவர்கள் சொன்னார்களோ? எனது மனக்கோட்டையும் சற்று வெடித்துப் பிளக்கின்றதே
இதழ் 50
で
న7 میچ

Page 191
s
என்று என் உள் மனம் கூறியது. அதனை உறுதி செய்ய சிறிது காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.
திடீரென நாட்டில் யுத்த நிறுத்தம் நண்பனிடம் இருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு சாதாரண பேச்சு, ஆனால் பேச்சில் அவ்வப்போது சிறு பிசிறு அதைப் பேசி, இதைப் பேசி.கடைசியில் யுத்த நிறுத்ததிற்கு வந்தான். யுத்த நிறுத்தத்தின் பெறுமதியை நாம் நன்கு அறிவோம். கிடைக்கின்ற சிறு பெறுமதியையும் ஏன் வீணாக்குவான் என்பது எமது ஏக்கம். ஆனாலோ என் நண்பன்?
அவனது பேச் சில இருந்து நான விளங்கிக்கொண்டது - "யுத்த நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமிருக்கக் கூடாது." இவ்வளவு காலம் கடந்தும் அவன் ஊரில் இருந்த அதே புத்தியுடனேயே இருப்பதை உணர்ந்தேன். (இந்த யுத்த நிறுத்தம் பல நாள் நீடிக்கமாட்டாது) என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இறுதியில் அவன் எனக்கு உண்மையைக் கக்கவேண்டி ஏற்பட்டது.
"மச்சான், எனக்கு இங்கை பிரசாவுரிமை கிடைச்சு, என்ரை எல்லா சகோதரங்களையும் இங்கை கூப்பிட்டு எடுக்கும் மட்டும் உங்கை அமைதியோ சமாதானமோ வரக்கூடாது. அழிவுகள் தொடர்ந்தும் இருக்க வேணும். அதோடை சனம் அங்கை இங்கை சாகவும் வேணும். நான் எவ்வளவு காசு குடுத்து, எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கை வந்தனான் தெரியுமோ? என்ரை பிரசாவுரிமை விண்ணப்பத்தைத் துரிதப்படுத்த எனக்கு நீ உங்கை ஆராவது இளந்தாரிப் பொடியன் செத்த நோட்டிசோ அல்லது கல்வெட்டோ ஒண்டு எடுத்து அனுப்ப வேணும். நீ எனக்கு இந்த உதவியைச் செய்துதரவேணும், மச்சான்" என்றான்.
பார்க்கலாம் என்று சும்மாதலையாட்டினேன். அட, இது என்ன பிழைப்படா மனம் குமுறியது. இதை யாரிடமாவது சொல்லி அழவேணும் போலை இருந்தது. எனக்கு இப்படி ஒரு நண்பனா? நல்லாகத் திட்டினேன் மனதுக்குள் உன்னால் இயலுமாயின், உனக்கு விருப்பமாயின் எங்கேயும் போ, என்னத்தையும் செய், மற்றவரை பாதிக்காதவரை, ஆனால் இவனோ மற்றவர்களைக் கொன்றல்லவா முன்னேற நினைக் கிறான் பிணங்களை அடுக்கி அவற்றின் மீதேறித் தான் உயர நினைக்கிறான். அதுவும் தன் உடன் பிறப்புக் களைக் கொன்று
யுத்த நிறுத்தம் முடிவடைகின்றது. மீண்டும் தொலைபேசி அழைப்பு, அவனிடம் இருந்துதான். இப்ப நண்பன் என்று சொல்வதை வலிந்து குறைத்துள்ளேன். அவனது பேச்சில் சிறு உற்சாகம் கஷ்டப்பட்டு அதனை மறைக்கின்றான். யுத்த நிறுத்தம் முடிவடைந்ததையிட்டு அவனுக்கு மகிழ்ச்சி "அட இவங்களே இந்தப் பிரச்சனையை முடிக்க விரும்புகிறார்கள் இல்லையே. அப்ப எப்பிடி வேறொரு வனுக்கு அந்த நல்லெண்ணம் வரும்? மச்சான், நான்
ஜீவநதி

கேட்டதை அனுப்ப முடியுமா? என்ரை சகோதரங்கள் உங்கை இருக்க முடியாது. கெதியாக வெளிநாட்டுக்கு எடுங்கோ என்டு சொல்லுதுகள், பாவங்கள், சரியில்லைத்தானே"
ஆமாம், அவன் சகோதரங்கள் சொல்வது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரியும், அதற்காக நாளாந்தக் கூலிகளை, வவுனியாவைக் கனவிலும் கடக்காதவர்களை, தாழிக்க விரும்பு கிறான் இவன்!
சீ.வெளிநாட்டில் உள்ளவரே எல்லோரும் சுய நலம்..ம்ம்ம்.நானும் சுய நலம். எனது படிப்பை கவனிக்க வேண்டும். நானும் எனது வழியை பார்க்க வேண்டும். பாவம், அந்தச் சகோதரங்களுக்காவது உதவட்டும் என்று, இவன் கேட்டதை தேடி எடுத்து அனுப்பிவிட்டு, இந்த கறுமத்தை எனது மண்டைக்குள் இருந்து எடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
தேடினேன், விசாரித்தேன் அகப்பட்டது, ஒரு கல்வெட்டு அதுவும் ஒரு இளைஞனுடையது. அந்த கல்வெட்டோ ஒரு பெரிய சோகக் கதையை தாங்கி நின்றது. அதனை பற்றி தனியாக அழவேண்டும். ஒரு பெரிய நிறுவனத்தின் ஆண்டு மலர் போலிருந்த அந்த கல்வெட்டை அவனுக்கு அனுப்பிவைத்தேன். அதன் பின் எனது காலமும், அவனது காலமும் அவரவர் சுயநலன்களில் கழிந்தது. சிறிது காலத்தில் அவனது சகோதரங்கள் வெளிநாடு கிளம்பிவிட்டதாக அறிந்தேன். நண்பன் வென்று விட்டான் என்று நினைத்துக் கொண்டேன். எங்களுக்கும் யுத்த நிறுத்தங்கள் வந்த போயின.
இப்ப, நானும் என் நண்பன் வாழும் நாட்டில் வசிக்கிறேன். (சொன்னேன்தானே, நானும் சுயநலம் என்று.) எனது நண்பன் உண்மையில் நன்றி மறவாதவன்தான் என்னை எப்ப சந்தித்தாலும் எமது ஊர் மக்களின் சுக துக்கங்களையே பேசுவான். அதனை நிறுவியும் காட்டினான். போர் உக்கிரமாக நடந்த காலங்களில், எம்மவர்க்காக உலகு முழுவதும் எமது குரல் ஓங்கி ஒலித்தபோது, இவன் குரலும் சேர்ந்தே ஒலித்தது. நகரப் பெருந்தெருவில் நின்றும் நியாயம் கேட்டான்.
மெய் சிலிர்த்தேன். ஆனால் என் மனவேதாளமோ மீண்டும் முருங்கையில் ஏறியது. இவன் உண்மையில் குரல் கொடுக்கின்றானா? அல்லது இன்னும் யாரையாவது வெளிநாடு எடுக்க வேண்டும் என்பதற்காக யுத்தம் தொடர வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறானா? அல்லது "முன்னர் தமிழ் மக்களின் அழிவை வேண்டி நின் றேனே" என் பதற்காக பிராயச் சித் தம் செய்கிறானா?
உண்மையைக் கண்டறிய, மனம் தலையைப் பிய்த்துக்கொண்டது.
கடைசி வரைக்கும் கண்டு பிடிக்கவே uSabóODGo!
இதழ் 50

Page 192
கே.எஸ்.சுதாகர்
இாீசிடு
பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். "ஹோல்" மகிழ்ச்சியும் சிரிப்புமாககளை கட்டியிருந்தது.
விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவுனியாவி லிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை.
குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் "ஷேவ்" செய்து கொண்டிருந்தான். முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறைய வில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில் ஒரே ஒரு வடு மாத்திரமே தங்கும் என சொல்வார்கள். ஆனால் முப்பது வருடங்களாகியும் வடுக்கள் பத்திரமாக, அதே இடத்தில் அப்படியே இருந்தன. அவை நிலைக்கண்ணாடியில் இப்போது விஸ்வரூபமாகத் தெரிகின்றன.
"மன்னிக்கிற மனப்பான்மை இன்னும் எங்கடை ஆக்களுக்கு வரேல்லை எண்டுதான் சொல்லுவன்" வந்திருக்கின்ற நண்பருக்கு, மாமா சொல்லிக் கொள்கிறார். வந்தவருக்கு அடியும் விளங்கவில்லை; நுனியும் விளங்கவில்லை.
"அமிர். கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன்" என்றவருக்கு வாயில் கைவிரலை வைத்து"உஷ்" என்று சைகைகாட்டிவிட்டு,
தன் கைகளை குளியலறை நோக்கி விசிறிக் காட்டுகிறார் அமிர் வந்தவர் தனது இடுப்பை இரண்டாக மடித்து, பார்வையை குளியலறை நோக்கி எறிகின்றார்.
பாலாவின் முகத்திலே சரேலென்று "ஷேவிங்
ஜீவநதி
 
 

றேஷர்" பதிந்தது. மெல்லிய கீறலாக இரத்தம் கசிந்தது.
"பாலா எத்தனை மணிக்கு உங்கடை ஃபிரன்ஸ் வாறதெண்டு சொன்னனியள்? மனைவி செல்வி அவனுக்குப் பின்னால் வந்து நின்று கேட்டாள். "டவலி னால் முகத்தை ஒற்றியபடியே "ஆறு மணிக்கு" என்று சொல்லிவிட்டு நிலாமுற்றத்திற்கு விரைந்தான்
UTGT,
நிலாமுற்றம் - இரண்டு பூச்சாடிகள், ஒரு உடுப்புக் காயப்போடும் "குளோத் றாக்", மற்றும் மூன்று மனிதர்கள் நிமிர்ந்து நிற்கக்கூடிய இடம், "கென்னடி றோட்டில்” இருக்கும் அந்த "பிளற்றின்" பத்தாவது மாடியி லிருந்து பார்க்கும்போது ஸ்காபரோவின் பெரும் பாலான பகுதிகள் தெரிகின்றன. திட்டமிட்டு அமைக்கப் பட்ட போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நீள்சதுர வடிவில் விரிந்து கொண்டே அழகு காட்டுகின்றன. எங்குமே "சிக்னல்" விளக்குகள், மருந்துக்கும் "றவுண்ட் எபவுற்" ஐக் காணமுடிய வில்லை.
"தம்பீ" என்று இழுத்தபடியே மாமாவின் நண்பர் பாலாவிடம் வருகின்றார்.
"தம்பி. "தெமட்டகொட அங்கிள்" கான்சர் எண்டு ஆறேழு மாதமாப் படுத்துக் கிடக்கிறாராம். இனி னும் இரண டோ மூன்று கிழமைகள் இருந்தாரில்லை. உம்மை ஒருக்கால் பாக்கவேணு மெண்டு ஆசைப்படுகிறாராம். ஒருக்கால் போய்
இதழ் 50
○

Page 193
பாரும், வாய்விட்டுக் கேட்டாப் போலும் பாக்காம இருக்கிறது சரியில்லை."
"நாங்கள் கனடாவுக்கு வந்தது எப்ப அவருக்குத் தெரியும்? மாமாதான் சொல்லியிருக்கிறா அவர் என்னைப் பாக்க வேணுமெண்டு சொல்லுறது கூ மாமாவின்ரை இட்டுக்கட்டின கதை, அவரைப் போய் பாக்கப் பண்ணுறதுக்கு மாமா செய்யிற தந்திரம் அவனுடைய பதிலில் வந்தவர் விறைத்துப் போனார்.
"இஞ்சாரும். இஞ்சை வாரும் காணுப அவையள் "என் ஜொய்" பண் ணுறதுக் கெண் இலங்கையிலையிருந்து இஞ்சை வந்திருக்கினம். அந் மனிசனை ஏன் போய்ப் பாக்க வேணும்?" மாமா த நண்பரைக் கூப்பிட்டார்.
பாலாவிற்கு "தெமட்டகொட அங்கிளுடன் பழகிய ஞாபகங்கள் நினைவுக்கு வந்தன. "தெமட் கொட அங்கிள்" அமிரின் உற்ற நண்பர். அவ எப்பொழுதிலிருந்து அமிருக்கு நண்பரானார் என்ப பாலாவுக்கு என்றுமே வியப்புத்தான். இருவரும் இரண் துருவங்கள் அமிர் - அன்பும் அமைதியு எல்லோருக்கும் உதவும் மனப்பான்மையும் கொண் கலகலப்பான மனிதர், "தெமட்டகொட அங்கிள சிடுமூஞ்சியும் "நான்" என்ற அகம்பாவமும் கொண் கஞ்சன். அவர் சிரித்து எவருமே பார்த்திருக் மாட்டார்கள். அவர் கதைப்பதுகூட குதிரை கனைப்ப போன்றிருக்கும். வேண்டுமென்றால் தோற்றத்தி இருவருமே ஒரே "தினுசு" எனலாம்.
"தெ.அ" குடிக்கும்போது மிகவும் வாஞ்ை யுடன் மாமாவுடன் பழகுவார். அதை நேரில் ப தடவைகள் பாலா பார்த்திருக்கின்றான். குடி தவிர்ந் நேரங்களில் தன்னை ஒரு கனவானாகக் காட்டி கொள்ளுவார். அவரை யாரும் எளிதில் சந்தித்துவி முடியாது. காலையில் விடிவதற்கு முன்பு வேலைக்கு போய்விடுவார். மாலையில் இருள் கவிந்த பிற்பாடுதா வேலை முடித்து வீடு திரும்புவார். எப்போவா "ஃபிளட்"டிலிருந்து(Fat) கீழிறங்கி கடைக்குப் போகு தருணங்களில் அவரைக் காணலாம். உடம்பை "சி ஷாக்காக அசைத்து பூமிக்கு உதை கொடுக்கும் கம்! நடை மடிப்புக் கலையாத ஆடை கண்ணைக் கொஞ்ச கீழிறக்கி உற்றுப் பார்க்கும் பார்வை. இவை அவரை ஒ கனவானாக பார்ப்பவர் மனதில் நிலை நிறுத்தும்.
1990 ஆவது ஆண்டளவில் இருக்கு ëUGUTCup 656ö60ITLö UITGDIT (36)|6060 9gg|6||607 வவனியாவில் இருந்து கொழும்பு போய் வருவா குறைந்தபட்சம் இரண்டுகிழமைகளுக்கு ஒரு தடை
ஜீவநதி
 

ପୈଠ
5)
யாவது. அப்பொழுது கலைச்செல்வி "கொட்டஹேன என்ற இடத்தில் படிப்பித்துக் கொண்டிருந்தாள். கொட்டஹேனவும் தெமட்டகொடவும் கொழும்பில் உள்ள இரண்டு நகரங்கள் கொழும்பில் அப்பொழுது பதற்றமான காலம் ஆண் பெண் வயது பேதமற்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தெமட்டகொட அங்கிளின் வீடுதான் பாதுகாப்பு என உணர்ந்தான். அவருக்கு பொலிஸ் செல்வாக்கும் இருந்தது. அவரது வீட்டில் இவர்களை விட இன்னுமொரு குடும் பத்தினரும் வாடகைக் கு இருந்தார்கள்.
"தெ.அ" இற்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவள் அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டி ருந்தாள். அவரது மனைவி அவருடன் வாழப் பிடிக்காமல் எப்போதோ பிரிந்து போய் விட்டாள். பிரிவின் பின்னர் அவர்கள் இருவருமே வேறு திருமணங்கள் செய்ய வில்லை. அவரை விட்டு மனைவி போனபின் மகளை வளர்ப்பதற்கு அவர் மிகவும் கஸ்டப்பட்டுப் போனார் என்று மாமா சொல்லுவர். சிலவேளைகளில் அவரில்லாத சமயங் களில் "அந்த அம்மா" தனது மகளைப் பார்ப்பதற்காக வருவார். வீட்டிற்குள் வரமாட்டார். வெளியே நின்று கதைத்துவிட்டு பணமும் குடுத்துவிட்டுப் போவார். சில பொழுதுகளில் அந்த அம்மாவுடன் பாலா கதைத்திருக்கின்றான். எந்தவித மாசு மறுவற்ற தங்கமான பெண் அவர், அவர்களுக் கிடையே என்ன பிரச்சனை என்று மாமாவிடம் கேட்டால், "கொடி களிலை கூட இரண்டு வகை இருக்கு ஒன்று மரம் தடிகளில் படரும். மற்றது நிலத்திலை படரும். அது அது அந்தந்த இடத்திலேதான் வளர முடியும்" என்று இப்படி விளக்கம் தருவார்.
ஒரு சனிக்கிழமைதான் அது நடந்தது. அப்பொழுது அமிர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்திருந்தார். நீண்ட நாட்களின் பின்பு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதால் "கைபிடி" போட்ட போத்தலொன்றை இறக்கினார் தெமட்டகொட அங்கிள் கைபிடி போட்ட போத்தலை எவர் விருந்தில் வைக்கின்றாரோ அவர் அமிருக்கு பெரும் கனவான் ஆகிவிடுவார். குடி நீண்டு கொண்டு சென்றது. குடி முற்றி, பாலாவையும் உள் வாங்கியது. வீட்டின் மற்றொரு அறையில் வாடகைகு இருந்த ஆண்மகன் மூலையிலே விழுந்து கிடந்தார். அறை சின்னா பின்னமாகிக் கிடந்தது. அமிர் கையிலே தட்டித் தட்டி பாடத் தொடங்கினார். அங்கிள் தனது திருமண அல்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு புலம்பினார்.
இதழ் 50

Page 194
"உங்கள் மனைவி இப் போது எங்கே இருக்கின்றாள்? அமிர் தூண்டில் போட்டார்.
"அவள் இப்ப கனடா யூனிவர்சிட்டியில் லெக்ஷரராக இருக்கின்றாள்" என்றார் கண் கலங்கிய UL2(8U.J.
இரவு பதினொரு மணியாகியும் வெய்யில் அகோரம் தாளாமல் ஜன்னலை திறந்து வைக்க வேண்டியிருந்தது. மேலேயிருந்து பார்க்கும்போது "தெமட்டகொட நகரத்தின் ஒரு பாதி தெரிந்தது. திறந்து கிடந்த கடைகளிலிருந்தும், கலையும் இரவுச் சந்தையி லிருந்தும் மக்களின் பேச்சொலிகள் கேட்டன. விதவித மான மனிதர்கள் கைகளில் பைகளுடன் நடந்து திரிந்தனர். கொத்து ரொட்டிக் கடையிலிருந்து வரும் "கட புடா" சத்தத்திற்கு "பங்காரா” (Bhangra) மியூசிக் சுருதி சேர்த்தது. கொலன்னாவ எண்ணெய்க் கூட்டுத் தாபனத்திற்கு விரையும் வாகனங்களில் சில அவ்விடத்தே தரித்து விட்டுப் போயின.
இரவு முழுவதும் அந்த பன்ஞாப் (Punjab) நாட்டு நடனப்பாட்டை ரசித்தவாறே படுக்கையில் இருந்தான் பாலா. செல் விக்கு இவையெல்லாம் பிடிப்பதில்லை. பாடக்குறிப்புகளைத் தயார் செய்வ திலும் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதிலும் நேரம் போய்விடும். நேரத்துடன் தூங்கி விட்டாள். விடிந்து எழுந்தபோது தனது உடலில் சில கொப்பளங்கள் போட்டிருந்ததை பாலா கண்டான். பின்னர் அவை அமீபாக் கலங்கள் போன்று வேகமாகப் பெருகத் தொடங்கியது. "சிக்கன் ஃபொக்ஸ்" (chicken pox), நோய் முற்றி தெமட்டகொட அங்கிளின் கோபம் முற்றுவதற் கிடையில் வவனியா திரும்புவது நல்லதெனப்பட்டதால் திரும்பி விட்டான். அங்கே வேலை செய்யுமிடத்தில் அவனுக் கொரு அறை ஒதுக்குப்புறமாக இருந்தது.
பருக்கள் முதலில் மார்பிலும் பின்னர் வயிற்றிலுமென ஆரம்பித்து உடம்பின் எல்லாப் பகுதி களிலும் வட்டமடித்துப் பரந்தன. மண்டையோட்டையும் விட்டு வைக்கவில் லை. சித் திரை மாதத்தின் அகோரத்திற்கு ஈடாக காய்ச்சல் அடித்தது. கொள்ளை நோய், உயிர்க்கொல்லி என்று சொல்வது சரிதான். எல்லாரும் ஒடி ஒளித்தார்கள். வலி, வேதனை, எரிச்சல், தூக்கமின்மை. அந்த அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை, குளிர்ச்சியான உணவுகள் பழங்கள்தான் சாப்பாடு, வேப்பங்குருத்தும் மஞ்சளும் தான் மருந்து, அவனுடன் வேலை செய்யும் ஒருவனது வீட்டு வேப்பமரம் மொட்டையாகிப் போனது. பலசரக்குக் கடைகளில் மஞ்சள் தீர்ந்து போனது.
ஜீவநதி 190

மூன்று மாதங்களின் பின்பு கொழும்பு சென்ற போது அங்கிளின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அவர் பாலாவுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. போன வுடன்களைப்புத்தீர ஆசையாக"ஷவரில்" முழுகினான். அறைக்குள்ளிருந்து தலையைத் துவட்டிக் கொண்டு இருக்கும்போது ஒரு உருவம் விறுக்கென்று பாத் றுாமிற்குள் போனது போல இருந்தது. மறைந்து நின்று அவதானித்தான். அங்கிள் ஒரு முழு "டெற்றோல்" போத்தல் ஒன்றை பாத்றுமிற்குள் கவிட்டு ஊற்றினார். தனக்குள் புறுபுறுத்துக் கொண்டே குளியலறையை தும்புத்தடி கொண்டு கழுவினார். குளித்துவிட்டு தனது அறைக்குள் சென்று பலமாகக் கதவை அடித்து இழுத்து மூடினார். ஜன்னலையும் இழுத்து மூடும் சத்தம் கேட்டது. அன்று முழுக்க வெளியே வரவில்லை. மெளன விரதம் அனுஷ்டிப்பவர் போல அறைக் குள்ளேயே முடங்கிக் கிடந்தார். அம்மை வைரசினால் ஏற்படும் தொற்றுநோய் என்றும், அயலவர்கள் பாலாவைப் பார்த்துப் பயப்படுவ தாகவும் கலைச் செல்வியிடம் சொன்னார் தெமட்ட கொட அங்கிள்.
அந்த நிகழ்வின் பின் மனைவிக்கு வவுனியா விற்கு மாற்றம் எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினான் பாலா. அடிக்கடி கொழும்பு செல்வதைத் தவிர்த்துக் கொண்டான். சில மாதங்களில் செல்விக்கு வவுனியாவிற்கு மாற்றம் கிடைத்தது. பாலா அடிக்கடி கொழும்பிலிருந்த தலைமையகத்திற்கு செல்லவேண்டி இருந்ததால், அங்கிள் வீட்டு அறையை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினார்கள்.
ஒருநாள் வேலை செய்யுமிடத்திற்கு அங்கிளின் தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்களது அறையை விடும்படியும் பொருட்களை அங்கிருந்து அப்புறப் படுத்துமாறும் சொன்னார். அவருக்கு என்றுமே சுற்றி வளைத்தோ, மனிதரை நோகடிக்காமலோ பேசத் தெரியாது. நேரடியாகவே கதைத்தார். பாலா ஒருமாத தவணை கேட்டான். கட்டில், மேசை, கதிரை, ஃபான், இரண்டு மூன்று "பாக்ஸ் (Bags) வேறும் சில பொருட்களும் அவரது வீட்டில் இருந்தன.
மாத முடிவில் ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்து கொண்டு பொருட்களை எடுப்பதற்காக அங்கிளின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்போது அங்கிள் அங்கு இருக்கவில்லை. அவர்களது கட்டில் மேசை என்பவற்றில் "இன்பெக்சன்" (infection) இருந்த தால், அவற்றைக் கொத்தி அங்கிள் எறிந்துவிட்டதாக அங் கிருந்தவர்கள் சொன்னார்கள், ஏங் கிப் போனார்கள் பாலாவும் செல்வியும். அவற்றை வாங்குவதற்கு எத்தனை மாதத்து சம்பளப்பணத்தில்
இதழ் 50
E

Page 195
ܟ.ܶ
s
ܒ
மிச்சம் பிடித்தார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும், அம்மை நோயின் கொடூரத்தை பாலா அன்றுதான் உணர்ந்தான். அவருடைய மகளிற்கு இப்படியொன்று நடந்திருந்தால் கொத்தி எறிந்திருப் பாரா? மிகுதிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வவனியா திரும்பி விட்டார்கள்.
சகிப்புத்தன்மையும் காருண்யமும் இல்லாத அந்த மனிதரால் எப்படி ஒரு அரசாங்க உயரதிகாரியாக இருக்க முடியும் என சில வேளைகளில் எண்ணுவ துண்டு மாமா தொடர்ந்தும் அவருடன் பழகினார். நண்பராச்சே மாமா கூட - அவரிடம் ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம் குடியும் கும்மாளமும் தான். எப்போதுமே அவரை "ஒரு மேலுலகத்தில் இருந்து வந்தவர் போல நினைத்துக் கொள்வார். அந்தச் சம்பவத்தின் பிறகு அவர்கள் வவுனியாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள், தெமட்டகொட அங்கிள் என ஒரு மனிதர் இருந்தார் என்பதையே மறந்து விட்டார்கள். இப்பொழுதுதான் அவர் கனடாவில் இருக்கின்றார் என்பதை அறிந்தார்கள்.
米米米
மாமாவின் விருந்தாளி போய் விட்டார். மாமா இருப்புக் கொள்ளாமல் ஹோலிற்குள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்தார். அவருக்கு எட்டு சகோதரங்கள் கனடாவில் இருக்கின்றார்கள். எட்டுப் பேருக்கும் குறைந்தது நாற்பது பிள்ளைகளாவது இருப்பார்கள். பேரப்பிள்ளைகளைக் கணக்கெடுத்தால் வாண்டுகளில் இருந்து பெரிசுகள் வரை அறுபதாவது தேறும். ஆக மொத்தம் உறவினர்களில் நூறு பேர் வரை கேட்கும் கேள்வி இதுதான்:
"தெமட்டகொட அங்கிளைப் போய் பார்த்து 65 Le T356TIT?"
ஒரு மனிதருக்கு வருத்தம் வருகின்ற வேளையில் அன்பு காட்டி, ஆதரவு செலுத்தத் தோன்றாத அந்த மனிதரைப் போய் ஏன் பார்க்க வேண்டும்? பாலாவின் மனதில் இப்பொழுது எழுகின்ற கேள்வி இதுதான்.
"ஹோலிங் பெல்" சத்தம் கேட்டது. நண்பன் வந்து விட்டான். பாலாவின் பள்ளி நண்பன், அவர்களை றெஸ்ரோரண்டில் சாப்பிட அழைத்திருந்தான். "டின்னர் முடிந்து திரும்பும்போது - வயது முதிர்ந்தவர்கள் வசிக்கும் தனியார் நர்சிங் ஹோமில் இறக்கிவிடும்படி நண்பனிடம் கேட்டிருந்தான் பாலா, நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றார்கள். கூட ஒரு பெண்ணும் அவர்களுடன் சென்றாள்.
ஜீவநதி

"உங்களைப் பார்க்க விசிட்டேர்ஸ்" என்று சொல்லிவிட்டு இரண்டு கதிரைகளை அவரருகே (3LJTLLITGỉT. G3LJTUIGffìLLITGiĩ.
அந்த “ஆஜானுபாகுவான" தோற்றம் "சிங்கிள் பெட்" என்ற அந்தச் சடப்பொருளிற்குள் சுருண்டு கிடந்தது. அவரைப் பார்க்க பாலாவிற்கும் செல்விக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கம்பீர நடையும் அனல் வீசும் பார்வையும் கொண்ட தெமட்டகொட அங்கிளா இவர்? தலைமுடி கொட்டி உடல் இழைத்து ஒடுங்கிப் போயிருந்தார். இத்தனை கால இடைவெளியில் இவ்வளவு மாற்றமா? அல்லது நோயின் தீவிரமா? ஒரு காலத்தில் ஒரு இடத்தின் பெயரையே சுட்டி நின்ற அந்த மனிதரின் கண்கள் மாத்திரம் விழித்திருந்தன.
"என்னைத் தெரிகிறதா?" பாலா வாஞ்சை யுடன் அவரைக் கேட்டான்.
"இல் லை" முகம் வலியில் சுருங் க தலையாட்டினார்.
"என்னை?” மனைவி கேட்டாள். அவர் அவளின் கைகளைப் பற்றி எடுத்து முத்தமிட்டார். கைகள் குறண்டி நடுங்கின.
"நீ அமிரின் பிள்ளை." "கலைச்செல்வி" என்றாள் அவள். அவரும் “ஓம் ஓம் செல்வி" என்றார். திரும்ப வும் அவள் கைகளைப் பற்றி எடுத்துமுத்தமிட்டார்.
"இவரைத் தெரியுதா எண்டு - நல்லா ஞாபகப் படுத்திப் பாத்துச் சொல்லுங்கோ" கலைச்செல்வி கேட்கின்றாள்.
"இல்லைப் பிள்ளை, உன்ரை தம்பியே?" மீண்டும் தலையாட்டினார்.
வேண்டுமென்றே நடிக்கின்றாரா என்ற சந்தேகம் வந்தது. மூப்புடன் தணியும் ஆசை, கோபம், குரோதம் போன்ற உணர்ச்சிகள் அவருக்கு இன்னமும் அப்படியே இருந்தன. காலம் அவருக்கு உடல் ரீதியான மாற்றத்தைக் கொடுத்ததே தவிர உணர்வு ரீதியாக எதையும் செய்யவில்லை. இவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். இவர்களையிட்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? பாலா கவலை (6.35|T600TLT6.T.
"எப்படி இருக்கின்றீர்கள் அங்கிள்?" கலைச் செல்வி அவரைச் சுகம் விசாரித்தாள்.
"ஏன் எனக் கென்ன பிரச்சினை? எனக் கொணர் டு மரில் லையே! நான் நல் லாத் தானே இருக்கிறேன்" என்றார் "தெஅ",
அம்மா உங்களை வந்து பார்த்தார்களா?" கலைச்செல்வி கேட்டாள். "இல்லை" என்று கவலை
இதழ் 50

Page 196
யுடன் தலையாட்டினார். அவள் "அம்மா" என்று கேட்டது அவரின் மனைவியைத்தான். "மகள் - யாமினி?" "அவளும் கணவனும் ஒரு தடவை வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள். அவள் இப்பொழுது சுவிசில் இருக்கின்றாள்."
சிறிது நேரம் கதைத்தார்கள். மருந்துகளின் கொடூரத்தில் சிறிது நேரம் கதைப்பதற்குள் அவர் களைத்துப் போனார். விடைபெறும் தருணத்தில் பாலா எதிர்பாத்திராத வகையில், அவன் கைவிரல்களை இறுகப் பிடித்து அமுக்கினார். ஒரு அசுரப்பலம் அவன் நாடி நரம்புகளிடையே ஊடுருவியது. பாலா மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு இன்னமும் தணிய வில்லை என்பதை அவனுக்கு அது உணர்த்தியது. பின் மெதுவாக கையை விட்டார். அவர்கள் இருவரையும் தன்னருகே வரும்படி அழைத்தார். தனது வலது கையை அவர்களை நோக்கி நீட்டினார். சுருக்கங்கள் விழுந்த அவர் கையை, மந்திரக்கோலைத் தொட்டு நிற்பவர்கள் போல அவர்கள் இருவரும் பற்றி நின்றார்கள். அவர் ஏதோ சொல்வதற்கு விழைந்தார். குரல் பிசறியது. கண்களிலிருந்து கண்ணிர் வடிந்தது.
அவரைப் போய் பார்த்த விஷயம், அவரால் மற்றவர்களுக்குத் தெரிந்தாலொழிய - தாங்கள் இருவரும் ஒருவருக்கும் சொல்லுவதில்லை என வீடு திரும்பும் போது இருவரும் முடிவெடுத்துக் கொண்டார் கள். இரவு முழுவதும் பாலா தனது "லப்ரொப்" கொம்பி யூட்டரில் இருந்தான், "கூகிளில்" எதையோ தேடினான். படுப்பதற்கு இரண்டு மணியாகிப் போய் விட்டது.
அதற்கடுத்த மறுநாள் இரவு தெமட்டகொட அங்கிள் இறந்துபோய்விட்டதாக மாமா சொன்னார்.
"தம்பி அந்தாள் உயிரோடை இருக்கேக்கை தான் பார்த்து நாலு ஆறுதல் வார்த்தை சொல்லேல்லை. செத்தவீட்டுக்காதல் வாங்கோ" மாமா நினைவு படுத்தினார்.
"என்னாலை முடியாது, வேணுமெண்டா நீங்கள் போகேக்கை கலைச்செல்வியையும் கூட்டிக் கொண்டு போங்கோ" விறைப்பாகப் பதில் தந்தான் பாலா. அவள் பாலா வராமல் தான் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.
"அவருடைய வீட்டிலை இரண்டு வருஷமா இருந்தியள். ஒரு நன்றிக்கடன் இல்லை? தம்பி! நல்ல காரியங்களுக்கு சொல்லிப் போக வேணும். துக்ககர மான நிகழ்வுகளுக்கு சொல்லாமல் போக வேணும்." "உதையே இன்னும் எத்தனை வருஷங் களுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கப் போறியள்? சீ.
ஜீவநதி 1.

அந்தாளும் ஒரு மனிசனா?" பாலா கத்தினான்.
"உன் ரை புருஷன் இரக்கமேயில் லாத சரியான கல் நெஞ்சுக்காரன்" இருந்த நாற்காலியை வேகமாகத் தள்ளிவிட்டு குசினிக்குள் நுழைந்தார் அமிர், குசினிக் குள்ளிருந்து வெளியே வரும்போது ஒரு கையில் "ஜொனி வோக்கர்" போத்தலுடனும் மறு கையில் கிளாசுடன் வந்தார். ஹோலிற்குள் இருந்த செற்றிக்குள் தலையைக் கவிழ்த்தபடியே புதைந்தார் 36) if,
"பிள்ளை செல்வி உனக்கொரு விஷயம் தெரியுமா? தெமெட்டகொட அங்கிளின்ரை மனிசி வந்து அவரைப் பாத்திட்டுப் போன பிறகுதான் அவர் இறந்திருக்கிறாராம். இவ்வளவுகாலமா வருத்தம் வந்து இரு கேக் கை அந்த அம் மாவுக் கு சொல் ல வேணுமெண்டு ஒருத்தருக்கும் யோசனை வரேல்லை. இரங்கல் பா பாடுறதுக்குத்தான் இஞ்சை உள்ளவை எல்லாரும் சரி. எப்பிடியோ அந்த மனிசி கேள்விப்பட்டு வந்திட்டா" வாயைப் பொச்சடிச்சுக் கொண்டே சொன்னார் அமிர்.
கலைச் செல்வி பாலாவைத் திரும்பிப் பார்த்தாள். அவன் உதட்டிற்குள் புன்முறுவலிட்டபடியே கொம்பியூட்டரில் மூழ்கிப் போயிருந்தான்.
திட்டமிட்டபடியே மறுநாள் பாலாவும் கலைச் செல்வியும், நண்பர்களுடன் "நயகரா" நீர்வீழ்ச்சிக்குப் புறப்பட்டார்கள். ஏழு பேர் இருக்கைகள் கொண்ட அந்த வாகனத்தின் பின்புறத்தில் பாலாவும் செல்வியும் அமர்ந்தார்கள்.
"நாங்களும் செத்தவீட்டுக்குப் போயிருக்க
வேணுமோ?" கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் பாலா வின் தோள் மீது சாய்ந்தபடியே செல்விகேட்டாள்.
நான் என்ன கல்நெஞ்சுக்காரனா? எனக்கும் விருப்பம்தான். ஆனா நீ இன்னும் உலகத்தைப் புரிஞ்சு கொள்ளவில்லை. இவர்களுக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கும் இப்படி ஒரு வீராப்புக் காட்ட வேணும்" கோபத்துடன் GAGFT6ÖTGOTT6ŐT UITGADIT,
“e) 'J LJT LI ITGDJ LD6b(36oll CHFF, Je560D6ITIĊI (BLI Tul LI பார்த்ததையாதல் சொல்லியிருக்கலாம் தானே!" பாலாவின் காதிற்குள் கிசுகிசுத்தாள் செல்வி, பாலா திடீரென்று செல்வியை உதறிக் கொண்டே சிலிர்த் தெழுந்தான்.
"நாங்கள் எங்கே போய்ப் பாத்தோம் அவரை" சீறினான் பாலா. செல்வி திடுக்கிட்டுப் போனாள். அவர்களின் சச்சரவில் வாகனமும் ஒரு தடவை பிறேக் அடித்து பின்னர் வேகம் எடுத்தது. ம
இதழ் 50

Page 197
s
s
நேர்காணல்
உமா வரதராஜன்
čfýbjlŇI\! – VJVJQJň
எழுத்தாளர் உமா வரதராஜன்
ஈழத்தின் சிறுகதை ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கதொருவர். இவரது
என்னும் சிறுகதைத் தொகுப்பு நவீன
படைப்பாளியான இவர் பழகுவதற்கும்
சிறுகதைகள் ஈழத்துச் சஞ்சிகைகளிலும் தென்னிந்திய
சஞ்சிகையிலும் இடம்பெற்றுள்ளன.
இவரது "உள் மன யாத்திரை"
இலக்கியகாரர்களால்
பேசப்படுவதாகும். ஆளுமையுள்ள
ஜீவநதி
இனியவர். தொகையளவில் படைப்புக்கள் தருவதை விடுத்து
தரம்பமிக்க படைப்புக்களை எழுதுபவர்
என்ற பாராட்டைப் பெற்றுக் GħasT6OOTGB6iresTTTTT.
Good பற்றிக்
Ց5[TՄ600
பரணி
L660
2 DJ
e616)
அபிம
குறிப்பு UT600s
ஏனெ கிடை வித்து முழக்
GOULLIT
G5ITGi
LOT600T அத்த6 என்ற GNOBLÍ
UUG)IT
எழுத் G5T6
5(6(3. நண்ட கெT
நான
எழுத்
 

- நீங்கள் படைப்பிலக்கியத் துறைக்குள் பிரவேசித்தமை கூறுங்கள்.
வரதராஜன் - சிறு வயதில் எனக்கிருந்த ஆர்வங்கள் ஒன்று திரைப்படங்கள் மற்றையது நூல்கள். வாசிப்பு தான் ஒரு கட்டத்தில் எழுத்து நோக்கி என்னை உந்தித் பிருக்க வேண்டும்.
1973 என்று நினைக்கிறேன். அப்போது நான் கல்லூரி வன். தமிழ் நாட்டிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்ததீபம்" |ய இதழ் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள் க்கு விமர்சனக் கட்டுரைகளைக் கோரியிருந்தது. ஓர் அசட்டுத் சலில் நான் எழுதி, அனுப்பி வைத்தேன். அதைப் பிரசுரித்த அல்லாமல் அதன் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள் ன வாழ்த்தி, உற்சாகப்படுத்தி தன் கைபட எழுதிய கடித றை அனுப்பி வைத்திருந்தார்.
பைத்தியம் என்னைப் பற்றிக் கொண்டதன் முக்கிய ம் இதுதான்.
- நீங்கள் படைப்பிலக்கியத்துறையில் பிரகாசிப்பதற்கு ணியாக இருந்த காரணிகள் யாவை?
வரதராஜன் - "பிரகாசிப்பது" என்ற வார்த்தையில் எனக்கு ளவு உடன்பாடல்ல, ஆனால் அதை உங்கள் அன்பின், ானத்தின் வெளிப்பாடாகப் புரிந்து கொள்கிறேன்.
என் சிருஷ்டித்துவம் சார்ந்து சில விஷயங்களை இங்கே பிடத் தோன்றுகின்றது. முக்கியமாகக் கதை சொல்லல் யில் ஒரு தனிப் பாணியை நான் கையாள விரும்பினேன். னில் நான் எழுத வந்த காலத்தில் எனக்குப் படிக்கக் த்த ஈழத்து எழுத்தாளர்கள் பலரும் வானொலி நிலைய வான்கள் போல் அலுப்படித்துக் கொண்டிருந்தார்கள். நீட்டி குவது, உரையாடல்களைக் கொண்டு கதையை நிரப்புவது, ர வழக்கு என்ற பெயரில் தலையில் இரண்டு அந்தர் ளியை ஒரேயடியாக சுமத்துவது, வாசகர்களை அரிச்சுவடி வர்களாக நினைப்பது, சற்று உரத்த தொனி, தான் உதிர்த்த னை சொற்களும் முத்துக்கள் என்ற அஞ்ஞானம், எடிட்டிங் லே மருந்து குடிக்க அடம் பிடிக்கும் குழந்தை போல் ஆகி மனப் பான்மை. இப்படிப் பல குறைபாடுகள்
எனக்கு ஒரு வாசகன் கிட்டா விட்டாலும் கூடப் யில்லை, ஆனால் இந்தக் குறைபாடுகளை எல்லாம் என் நில் தவிர்த்து விட வேண்டுமென்று நான் தீர்மானித்துக் டேன். அவ்வளவுதான்.
இன்னொரு விஷயம், படைப்புக்கும், என் வாழ்க்கைக்கும் இடைவெளியை அவ்வளவு பேணியதில்லை. என் சமகால கள் சிலர் வியட்நாமையும், சீனாவையும் பற்றி எழுதிக் டிருந்த போது அப்பிராணியாகக் கல்முனையைப் பற்றி Iழுதிக் கொண்டிருந்தேன்.
இன்னொரு விஷயம். தமிழின் புது வரவுகளான இன்றைய நாளர்கள் பலரின் படைப்புகளையும் ஓரளவு தேடி நான்
193 இதழ் 50

Page 198
படித்து விடுவதுண்டு. எது அசல், எது போலி, எது நகல், எது பாசாங்கு என்பதை ஒரு மோப்ப நாய் போல் அறிந்து கொள்ள இந்த நீண்ட கால வாசிப்புப் பழக்கம் எனக்குப் பெரிதும் உதவு கின்றது.
சூழல் பற்றிய ஓர் அவதானம் கலைஞனுக்கும், இலக்கியவாதிக்கும் எப்போதும் தேவை. இல்லா விட்டால் அவன் காலாவதியாகி விடுவான். அல்லது தான்தான் இலக்கிய உலகில் பேனாவையே கண்டு பிடித்தவன் என்று பிதற்றிக் கொண்டிருக்கும் பரிதாபகரமான நிலைமையில் இருப்பான்.
பரணி - சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்து என பல்வேறு இலக்கிய வகைமைகளில் ஈடுபாடுள்ள உங்களுக்கு, எந்த இலக்கிய வகை உங்களை “வித்தியாசமான” படைப்பாளி என இனங் காட்டியுள்ளது?
உமா வரதராஜன் ~ அதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் எந்த இலக்கிய வகை என்றாலும் சிரத்தை எடுக்காமல் நான் எழுதியதில்லை. ஒப்பேற்று வதற்காக நான் ஒரு போதும் எழுத மாட்டேன். perfection என்ற செய் நேர்த்திக்கு முழுமைக்கு நான் முக்கியத்துவம் அளிப்பவன்,
பரணி - இலக்கியச் சிற்றிதழ்களில் ஆசிரியராக இருந்த உங்கள் அனுபவங்களைக் கூறுவீர்களா?
உமா வரதராஜன் - 74 இல் "காலரதம்", 88 இல் "வியூகம்" 90 களில் 'களம்"ஜ அன்ரனி பால்ராஜ் என்ற பெயரில் இணையாசிரியராக இருந்தேன். இவை நான் சம்பந்தப் பட்ட சிற்றிதழ்கள்.
காலரதம் வெளி வந்தகாலத்தில் இலக்கியத் தரம் பற்றிய தெளிவான பார்வைகள் எனக்கு இருக்க வில்லை. பலருடைய பல தரப் பட்ட படைப்புகளையும் கொண்டு பக்கங்களை நிரப்புவதுதான் ஓர் ஆசிரியனின் பணி என்று எண்ணியிருந்தேன். ஆனால் வியூகம் காலத்தில் எனக்கு ஓர் இலக்கு இருந்தது. படைப்பு களைத் தேர்வு செய்யும் போது கறாராக இருந்தேன். படைப்புகளுக்கு கூட நான் அங்கே முக்கியத்துவம் அளிக்க வில்லை, மதிப்பீடுகள், பத்தி எழுத்துகள் மூலமாக ஒரு ரசனை மாற்றத்தை, வாதப் பிரதிவாதத்தைக் கொண்டு வர முயற்சித்தேன். அபூர்வமாக சில கதைகள், கவிதைகள் வந்தன.
களம் சஞ்சிகைக்கான முழு முதலீடும் நண்பர் வாரித்தம்பியினுடையது. நான் இணை ஆசிரியராக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
ஜீவநதி 194
 

படைப்புகள் தேர்வில் அவருடைய தலையீடு இருக்கக் θυ).ί Πέ5 என்ற நிபந்தனையுடன் அவருடன் இணைந்து கொண்டேன். ஆனால் நாளடைவில் சங்கடங்கள் ஏற்பட்டன. சிலர் அன்பளிப்புத் தொகையுடன் கவிதை களையும் அவரிடம் கொடுத்தனர். தமிழைக் கொடுமைப்படுத்தியதற்கான தண்டப் பணம் என்று இதை உங்கள் வரவில் இட்டுக் கொள்ளுங்கள் என அவருக்குக் கூறி விடுவேன். ஆனால் என்னையும் மீறி அந்தக் கவிதைகள் களத்தில் வரத் தொடங்கின. அன்பளிப்புத் தொகையை யாராவது சற்று அதிகம் கொடுத்து அவர்களுடைய புகைப்படம் அட்டையில் இடம் பெறும் முன்னரேயே நான் அவரிடமிருந்து விடைபெற்று விட்டேன். -
இந்த சிற்றிதழ்கள் சார்ந்து முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று போட்ட முதலீடு அப்படியே ரொக்கமாக கைக்கு வராது. உண்டியலில் சிறுகச் சிறுக சேர்ந்து நிரம்பும் வரை நாம் தாக்குப் பிடிப்போமா என்பதில் சிற்றிதழின் ஆயுள் தங்கியுள்ளது. சிற்றிதழ்களை விற்பனை செய்ய நாம் நாடுகின்ற கடைக்காரர்களும் பெருந் தன்மையுடன் பஸ் டிக்கெட் ஒன்றின் பின் புறத்தில் "இத்தனை பிரதிகளைப் பெற்றுக் கொண்டோம்" என எழுதித் தருவது வழக்கம். எப்படியாவது அதை நாம் தொலைத்தே ஆவோம் என்பதில் அவர்களுக்கு அசாத்திய நம்பிக்கை.
மிக முக்கியமான மற்றைய பிரச்சினை. சிறந்த படைப்பாளிகள் படு சோம்பேறிகள் ஆக இருப்பது அல்லது எழுதத் தயங்குவது, அல்லது இழுத்தடிப்பது 12 வருடங்களுக்கொரு முறை குறிஞ்சிப் பூக்களையாவது நாம் காண முடியும், ஆனால் 12 வருடங்கள் ஆகியும் அசைந்து கொடுக்காத படைப்பாளிகள் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு நெருக்கடியான - படைப்பாளிகள், விற்பனையாளர்கள், வீட்டார் ஒத்துழைக்காத -சூழலில்
இதழ் 50
ལོ་

Page 199
ܨ
ཆེ་
தான் சிற்றிதழ்களை வெளிக் கொணர வேண்டி இருந்தது.
பரணி - ஈழத்து இலக்கியத்தின் தற்போதைய போக்குப் பற்றிய உங்கள் மதிப்பீடுயாது?
உமா வரதராஜன் - எனக்கு அவ்வளவு திருப்தி தரவில்லை. ஈழத்தின் படைப்பியக்கம் முன் நகர்ந்த தாகத் தெரியவில்லை. அபூர்வமான வாழ்பனுவங்கள் பலவற்றுடன் வெறுமனே கைகளைப் பிசைந்து கொண்டி ருக்கிறோம். அல்லது அரசியல் உள் நோக்கங்களுடன் சமநிலை இழந்து படைப்புகளைத் தயாரித்துக் கொண்டி ருக்கிறோம். அல்லது படைப்புகளைப் பார்க்கின்றோம்.
இளைய தலைமுறையினரிடம் பரந்துபட்ட வாசிப்பு வேகம் அருகி விட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் நாம் பெருமைப்படக் கூடிய இலக்கிய ஆளுமைகள் ஈழத்தில் இருந்தனர். க.கைலாசபதி, சிவத்தம்பி, நுஹற்மான், எஸ்.பொ. வ.அ. மஹாகவி, நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், முத, சு.வில்வரெத்தினம் போன்றோரால் நாம் பெருமைப் பட்ட மணன் இது. இன்றைக்கு அப்படிப்பட்ட ஆகிருதி களை நான் காணவில்லை. சுய விளம்பர இரைச்சல் களால் நம் காதுகள் செவிடாகிப் போய்க் கிடக்கின்றன. கூனிக் குறுகி முதுகு வளைந்தவர் களைக் காண்கின்றேன்.
விதிவிலக்குகளாக படைப்புக்கு விசுவாசமாக, ஆர்ப்பாட்டமற்று இயங் கும் சில படைப்பாளிகள் தான் இந்த பாலைவன சூழலிலும் நம்பிக்கை தரும் நீரூற்றுகளாக இருக்கிறார்கள்.
8:3
பரணி - ஈழத்தில் சிற்றிதழ் சூழல் èG町Töá山LDT5 g_af6T莎T5
bi bшаопшт?
உமா வரதராஜன் - உரிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக சிற்றிதழ்கள் வெளி வந்து கொண்டி ருப்பது மட்டும் ஆரோக்கிய நிலை ஆகாது. சிற்றிதழ்கள் என்பது இலக்கியத்துக்கான ஓர் இயக்கம், சி.சு. செல்லப்பாவின் "எழுத்து" மற்றும் கொல்லிப்பாவை, கசடதபற ஈழத்தில் அலை. இப்படிப் பல உதாரணங்கள்
666
சிற்றிதழ்களுக்கு ஒரு நோக்கம், பார்வை, இலக்கு அவசியம் இருக்க வேண்டும். "யாவருக்கும் புகலிடம் பாணியில் ஒரு சரணாலயம் நடத்திச் செல்ல வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அவற்றுக்குத் தான் இந்த நாட்டில் தேசியப் பத்திரிகைகள் இருக் கின்றனவே அவர்களுடைய பார்வைக்கும், நம்முடைய
ஜீவநதி
 

பார்வைக்கும் வேறுபாடுகள் தேவை. பொதுப் புத்தி ஒன்றுக்கான மாற்றுக் கருத்துகளை முன் வைக்கும் வெளியை சிற்றிதழ்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வெகு சிரமத்தின் மத்தியில்தான் இங்குள்ள வர்களின் சிற்றிதழ்கள் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் கறாரும், வடிகட்டலும் போதுமானவையாக இல்லை.
இங்குள்ள சிற்றிதழ்களின் முன் முக்கிய பணி இருக்கிறது. அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை அவர்கள் உருவாக்க வேண்டும். மூத்த எழுத்தாளர்கள் கசக்கி வீசும் காகிதக் குப்பைகளின் கூடைகளாக சிற்றிதழ்கள் இருக்கக் கூடாது.
LT500 - எமது கலாசாரச் சூழலில் பாலியல் சார் அம்சங்கள் கொண்ட படைப்புகளை எவ்வளவு தூரம் (66)J6flö, (65 T6OOTU GOTTLD?
உமா வரதராஜன் - நேற்றைய நாம் இன்றில்லை. நம் சூழல், சிந்தனை, நடையுடை பாவனைகள் எல்லாமே நாளாந்தம் மாறிக் கொண்டே வருகின்றன. பாலியல் சார் அம்சங்கள் கொண்ட எழுத்துகளை எழுதுவதும், எழுதாமல் விடுவதும் ஒரு படைப்பாளியின் சுதந்திரம். அதைப் படிப்பதும், படிக்காமல் விடுவதும் ஒரு வாசகனின் உடல், மன நலம் சார்ந்த உரிமை. ஆனால் பாலியல் சார் அம்சங்கள் எழுத்தில் எவ் விதம் வெளிப் படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கின்றது. கி.ராஜ நாராயணனின் படைப்பையும் , வா.மு.கோமுவின் எழுத்தையும் ஒப்பிடும் ஒரு தேர்ந்த வாசகன் எது இலக்கிய எழுத்து, எது கிளுகிளுப்பூட்டும் வியாபார எழுத்து என்பதைப் புரிந்து கொள்வான்.
வெகுஜன ரசனை சார்ந்து நமது அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் கட்டி எழுப்பும் கலாசாரப் பிரமைகள் அநேகம், ஆனால் நம்முடைய யதார்த்தம் அவ்வா றில்லை. நாம் பல விஷயங்களைக் கலைத்துப் போட வேண்டியிருக்கின்றது. விமர்சகர்களைப் பொய்த் தூக்கத்திலிருந்து எழுப்பவும் வேண்டி இருக்கிறது.
நீங்கள் என்ன கேட்டீர்கள்? பாலியல் சார் அம்சங்கள் கொண்ட படைப்பு களை எவ்வளவுதூரம்வெளிக்கொணரலாம் என்றல்லவா? ஓர் எழுத்தாளனின் அல்லது எழுத்தாளினியின் பாலுறுப்புகள் சரிவர இயங்கும் வரை என்பதுதான் பொருத்தமான பதிலாக இருக்கும்.
இதழ் 50

Page 200
பரணி - ஈழத்துப் படைப்பிலக்கிய முயற்சிகளில் பின் நவீனத்துவத்தின் செல்வாக்கு எவ்வளவு தூரம் உள்ளது?
உமா வரதராஜன் - எனக்கு இந்த லேபல்களில் எல்லாம் பெரிய மரியாதை கிடையாது. முதலில் அது இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டும். வாசகனின் மனதில் எந்த பிரதிபலிப்புகளையும், சலனங்களை யும் ஏற்படுத்தாத சொற் கூட்டங்களுக்கு என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது இலக்கியப் படைப்பாகாது.
என்னுடைய வாசிப்பனுபவத்தில் பல பூச்சாண்டிகளைக் கடந்து வந்திருக்கிறேன்.
உங்கள் கேள்விக்கு மிகவும் சரியான பதில் தேவையென்றால் சில மாதங்களுக்கு முன்னர் உயிர்மை யில் வெளியான சுரேஷ்குமார் இந்திரஜித்தின் "பின் நவீனத்துவக் கதை"யைப் படிக்கவும்.
பரணி - உங்கள் முதலாவது நாவலை பின் நவீனத்துவநாவலெனக் குறிப்பிடலாமா?
உமா வரதராஜன் - நிச்சயமாக இல்லை. அது இலகு தமிழில் பலருக்கும் புரியும் படியாக எழுதப் பட்ட ஒரு நாவல். "நீ எனக்கு ஐந்து செய்தால் பதிலுக்கு நான் உனக்கு பத்து செய்வேன்" என்ற ஓர் ஆணின் வலியை, வெஞ்சினத்தை அந்த நாவல் பதிவு செய்ய முயன்றிருக்கிறது.
"இப்படி அதை எழுதி இருக்கலாமே, அப்படி அதை எழுதி இருக்கலாமே" எனக் கூறுபவர்களுக்கு ஒன்றை மாத்திரந்தான் என்னால் சொல்ல முடியும். "உனக்கு விருப்பமான நாவலை நீதான் எழுத வேண்டும். நானல்ல"
பரண' - உங்கள் படைப் பாளுமையரின் உருவாக்கத்தில் செல் வாக்குச் செலுத்திய படைப்பாளிகளாக யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
உமா வரதராஜன் - என் தனிப் பட்ட ஆளுமையில் சண்முகம் சிவலிங்கம், நுஹற்மான், யேசுராசா போன்றவர்களுக்கும் சில பெண்களுக்கும் முக்கிய பங்குண்டு என் ரோஷநரம்பு ஓரளவு சரியாக இயங்கு வதற்கு ஏதோ வகையில் இவர்கள் காரணம்.
படைப்பாளுமையில் சுரா, ஆதவன் ஆகிய இரண்டு பேருக்கும் பங்குண்டு மொழியின் பயன்பாடு சுராவிட மிருந்து கற்றது. ஆதவனுடைய எழுத்துகள் என்னைப் போன்ற மத்தியதர வர்க்கத்து நகர்ப் புறத்து இளைஞனுக்கு ஒரு காலத்தில் சில வாசல்களைத் திறந்து விட்டன.
ஜீவநதி

காலத்தால் காவு கொள்ள முடியாக் காவியம்
காவு கொள்ளப்பட்ட தாயொரு மாயை
மாயையால் மண்ணில் வந்தோரெல்லாம்
மாயையுள் மூழ்கித் திளைத்தனரே!
(l
சரித்திரம் சிதைத்தோர்க்கு முதல் மரியாதை
சரித்திரமனோருக்கு ஏது மரியாதை? வேள்வித் தி அது கேள்வித் தி ஆக
வேர்த்தொழுகும் நெஞ்சாங்கூடு சுடுகிறது! புறத் தீ அணைந்து போக அகத் தி எழுந்ததால்,
ஆருயிர் அணல் வாய் இரும்பாயானது! கடத்தல், களவு, கற்பழிப்பு - இரகசிய
கருக்கலைப்பு, கழுத்து நெரித்துக் கொலை! கோஷ்டி பார்க்கச் சென்ற இளைஞர்களிடையே
கோஷ்டி மோதல் பலர் படுகாயம் ! சிறுவனை மோதித்தள்ளி விட்டுச்
சிறிப்பாய்ந்தது ஹிரோகொண்டா! புதினத்தாள்களின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட
புடமிட்ட வாழ்வியல் பாகங்கள் ஒவ்வொன்றாய்க் கழரத் தொடங்கின.
இந்நிலை தொடர்ந்தால் எம் நிலை.?? மதுபானச் சாலைகள் மகிழ்வூட்டும் சோலைகளாய்
உருமாறிப்போன மண்ணில் உருவாகுமா நல்லதொரு சமூகம்? - தெருவில்
தொலைத்திட்ட பொருளாமோ வாழ்வு! காய்தல், உவத்தலின்றி ஆய்தலே
ஆய்வுத் தர்மம் என்பார் - பக்கஞ் சாய்தல் செய்து ஆய்கின்றார் - அது ஆய்வல்ல வெறும் வாய்வு! இன்று வரும் விமர்சனங்கள்
தின்று வரும் உண்மைகளை! தொன்று தொட்டுப் பேணி வந்த
கட்டிறுக்கம் என்னவாச்சு? குறைப்பிரசவங்களின் மிகை கண்டு
நிறை சவமாகிப் போனதுவோ? - இல்லை இலக்கியக் கவிவு நிலை என்று
கடிந்திரைந்து சகித்துக் கொள்கிறதோ? அடிக்கட்டுமானத்தில் விழுந்த அடி,
ஆட்டங்காண வைக்கிறது யாவற்றையும் தாண்டவங்கள் பல கண்டு மாண்டு போகாதவர்,
சீண்டும் காற்றுக்கா பயப்படுவர். எதையுந் தாங்கும் இதயங்களே!
இதையும் கொஞ்சம் கேளுங்கள் சிதை மூட்டிக் கொள்ளுங்கள்,
சிறுமைகளுக்குக் கொள்ளியிடவே! உண்மை நேர்மை செம்மை பெற்றுலகில்
உயிர்மை வலிதாய் வாழ்ந்திடவும்! சீருஞ்சிறப்பும் மிகுந்து யாவும் நலம் பெற்றிடவும்!
சினங்கொண்டு சிறிப்பாய்ந்திடுவீரே!
(65&LLIT
இதழ் 50
3

Page 201
வியப்பாக இருந்தது. பேரழகியாய்த் தெரிந்தாள். கூடத்தின் வழியே தான் வந்தாள். சொரசொரப்பான தரை விரிப்பிலும் காலடி ஓசை, இருபுறங்களிலும் கணினிகளோடு அலுவலர்கள். ஒயிலாகத்தான் அசைந்தாள். ஆனாலும். இவளை எவரும் பொருட்படுத்தவே இல்லை.
D
அருகில் வந்து முறுவலித்தாள் செயற்கையை உணர்ந்தேன் யாராக இருப்பாள்? 'என்ன விசாரிப்பாள்? என் உள் மன ஓட்டமும் பதிவாகியதோ, என்னவோ. இவளது சட்டை ஒளிர்ந்தது. ஆங்கிலத்தில். டோலி உளவுத்துறை
D
கணினியை இயக்கினாள். இரு பக்கங்களிலும் திரைகள். என்முன்னாலுள்ளதிரையில் என்னைப்பற்றிய விபரங்கள் நான் கைதாகி ஒரு மணிகடந்திருக்காது. எப்படி, இவ்வளவு விரைவாக? இவர்களின் வேகம் மலைப்பைத்தந்தது.
உள்ளுக்குள். நெஞ்சு படபடத்தது.
D
பேச ஆரம்பித்தாள். "ஆச்சரியமாக இருக்கிறதா?”
திரையிலுள்ள என் முகத்தில் அது தெரிந்தது. "உன் உலகிலிருந்து வந்த முதலாவது பெண், நீ" திரையில் மேலும் சில உருவங்கள். "இவர்கள் நீங்கள் அனுப்பி வைத்த ஒற்றர்கள்." என் விழிகள் விரிய. கூண்டுகளுள் அடைபட்டு, எமது ரோபோக்கள்.
D
ஜீவநதி
 

த.கலாமணி
என்னை உற்றுப் பார்த்தாள். "எம் உலகைச்சுற்றிப் பார்ப்போமா?" என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. திரையில் சலனம். பல்வேறிடங்களையும் கடந்துஇலத்திரனியல் நுட்பங்களைக் காட்டிஆய்வு மையங்கள். அதிசயிக்க வைத்தன.
டோலிஅட்டகாசமாகச் சிரித்தாள். "இன்று முதல் நீஎம் பிரஜை: முதலில் சில சோதனைகள்: உன் மூளையின் சில பிரிவுகள் செயலிழக்கும் மூளையைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்படும். எம் உலகின் சட்டதிட்டங்கள் அறிவிக்கப்படும். அதன் பின்பு.
எம்முள் ஒருத்தி ஆகிவிடுவாய்."
D
உடம்பு உதறியது. உதறலை இவள் கண்டு கொண்டிருக்க வேண்டும். (335'LT6T:
"எதுவும் தெரிந்து கொள்ள வேண்டுமா? தலையசைத்தேன். "உங்கள் உலக மக்களுக்கு ஆசாபாசங்கள் இல்லையா? என் கேள்வியில்.
அவள் திகைத்தாள்.
D
மையநிலையத்திலிருந்து சமிக்ஞை. 'எம் உலகைப் பாழாக்கி விடுவாள். பூமிக்கே எறிந்து விடுங்கள். என் வாய் முணுமுணுத்தது: நீங்கள் இயந்திரங்கள் உங்களுக்கு வாழ்வியலே இல்லை நாங்கள். ஆசாபாசங்களில் திளைக்கும் மனிதர்கள்!
D D D
H197 இதழ் 50

Page 202
NZ) Alatlhika,
Hi SH6OITg5 a5 IT! HW r u? ur 4n Nom LDITÖJDġ5f5fb5 d 6řTGITTEOT35|| ரத்தாகி விட்டது. உங்கள் சிறிய தந்தையை தற்செயலாக கிடைத்தது. பெரு இடைவெளிக்குப்பின் Sms அனுப்புகிே அதிர்வுக்கு உள்ளானேன். எவருக்கும் கெடுதலற்ற விரு பாவனைப் பின்புலம் புதிராகவே உள்ளது. கதை சொல்லிக நிஜத்தை அணுக முடியாதுள்ளது. pls வில்வமரம் தறிக்கப்ட சொல்லுங்கள்
Hai LDCB6OTIT I'm 5n, ur 4n Nom save LJ60ÖT60 of 60)6)ģ5g5 c5f5GBg நிம்மதியாக வாழ்கிறீர்கள். நாய் குரைக்கும் கணம் ஒன்றி திணிக்கப்பட்டுள்ளது. மெளனமாக இருப்பவர்களின் இ கூறுபவர்களின் கதி என்ன ஆகும்? வன்மத்தின் வாசனை உரையாடல் யாவும் பதிவு செய்யப்படுவதாகவும்
ஆரோக்கியமானதன்று. Sry Sms அனுப்பவே அச்சமாக உள்:
Alath
NZ) Alatlhika,
EIGVITSlot pls pls pls GLOGOTG0ör6OLDu loði LOTsog)|OL அச்சங்கொள்வதில் அர்த்தமுண்டு. மேலும் குறுந்தகவல்க மொழி நகைச்சுவைகள், அர்த்தம் தகர்த்த அரட்டைகள், வ போன்றனவே அனுதினமும் பரிமாறப்படுகின்றன. அவற்ை நெரிசல் நிறைந்தனவாக மாறிவிடும் அபாயமுள்ளதால் மு5 கைவிட்டுள்ளனர். எனவே வில்வமரத்தின் குறிப்புக் குறித்து
ஜீவநதி 釜 19:
 

இ.சு.முரளிதரன்
| Abc
ால் இருவருக்கிடையிலான தொடர்பும் நீண்டகாலமாக 5 வெள்ளவத்தையில் சந்தித்த போது புதிய இலக்கம் றன். வில்வ மரம் குறித்து செய்தித்தாளில் வாசித்து ட்சத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட கொடூர கருவிகளின் ள் ஒவ்வொரு கோணத்தில் விளம்புவதால் நிலைபெற்ற Iட்டதற்கான துல்லியமான முகாந்திரத்தை நீங்களாவது
ika
7.45 PM
ன். தவறுதலாக அழிந்து விட்டது. நீங்கள் கொழும்பில் ல் நரம்புகள் அதிர்வுற்று ஏங்கும் வாழ்வே எங்கள் மீது }ல்லக்கதவைக் கூட மரணம் தட்டுகிறது. கருத்துக் விரவிய காற்றே மரங்களைத் தழுவுகிறது. கைபேசி அறிகிறேன். வில் வமரம் குறித்த கருத்தாடல்
Tது
O3/02/2009 7:43:05 PM
Abc
0ாழிப் பரிச்சயம் குறித்து நுணுகி ஆராய்ந்த பின் 1ளில் வாழ்த்துக்கள், பாடபேதக்கவிதைகள், இரட்டுறு பிற்றைக்குமட்ட வைக்கும் அந்தரங்கக் கதையாடல்கள் றப் பதிவு செய்து வாசிப்பதால் மனநலக் காப்பகங்கள் Tளம் பன்றி மேய்ப்போர் அத்தகைய செயற்பாடுகளைக் துணிவோடுSms இல் தெரியப்படுத்தலாம்.
H இதழ் 50

Page 203
Ala
மனோ நீங்கள் என்ன சொன்னாலும் அச்சம் அ உறுத்தல்களோடுதான் இயம்புகிறேன். யாழ்ப்பாணத்தி புதினத்தாளில் வாசித்தறிந்திருப்பீர்கள். தறிக்கப்பட்ட பி துரித முளைவிடும் காரணங்கள் அரிதாரமிட்டு அரங் எறியப்பட்டிருந்தால், அதற்கும் ஏதோவொரு வியாக்கி வில்வமரத்தறிப்பிற்கான முகாந்திரம் அழுத்தமானது. ட வானில் சிறகடிக்கும் பட்சிகளுக்கு இருப்பிடம் வழ வில்வமரத்தின் நிழலில் பட்சிகள் பழந்தின்று இை குடும்பத்தினர் உறுதிபடக் கூறுகிறார்கள். நானும் நம்புகி
N/ Alatlhika,
அலாதிகா வில்வமரத்தோடான என் உறவு ஆத்மா காலத்திலிருந்து நட்பு ஏற்பட்டது. யாழ்பல்கலைக்கழ மழையிலும் புயலிலும் வெயிலிலும் திடமாகே சலனப்படுத்தினாலும் ஞானி போலக் காட்சி தரும் என்று இருண்மைத்திரை தழுவிய பதில் பகிர்வு வியப்பாக உள்
Ala S乙
நிஜம் நிர்வாணத்தோடு பதுங்கியிருக்கிறது. வெளிச் ஒழுங்கில் அமையும் நம்பிக்கை அடுக்குகளின் நிய தொடங்கும் அந்திப் பொழுதொன்றில் வில்வமரம் வீழ்த் தான். சம்பவ களத்திலிருந்து சற்றுத் தள்ளியுள்ள
தலையாட்டி முள்ளி வீதியை கடந்து மண்டான் பக்கமாக உபயம் செய்த மரங்களின் அடையாளம் வெளித்ெ வில்வமரத்தின் அடைக்கல ஆற்றுகை அறிவு பூர்வமான நிறைவு செய்கிறேன். ஆண்டவர் ஒருவரே அனைத்தும்
0783
N/
Hi mano Hw ru? அலாதிகாவிடமிருந்து உங்கள் கைபே ஊர்ப்பக்கம் வருவதில்லை. முறுக்கு மீசை நிராகரித் பன்றிகளுக்கு வெகு நெருக்கமாக சினத்தில் சிலிர்த்துவ வாழ்க்கை நகர்கிறது. வில்வமரம் வளர்ந்து நின்ற காணி ஊடுருவல் தவிர்க்க முடியாது நிகழ்கிறது. இறைவனுக் உதிர்க்கும் சருகுகள் கூட மித மிஞ்சிய தொலைவி வில்வமரம் குறித்து வெளியிடும் சார்புநிலை நியாயங்க
ஜீவநதி

thika
8.04 P. M
அகலவே இல்லை. Ok. சொல்கிறேன். இனம்புரியாத ல் அண்மைக்காலமாக மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை lன் புதிதுபுதிதான ஊகங்களின் செவியளிப்பும் நிகழ்கிறது. கேறுகின்றன. கிளுவ மரமொன்று வேலியோரம் பிடுங்கி யானம் சொல்லி நியாயப்படுத்தி விடுகிறார்கள். எனினும் ற்றோடு மண்ணில் ஆழ வேரூன்றிய வில்வ மரம் சுதந்திர ங்கியுள்ளது. அட்சய பாத்திரமாகத் தொழிற்பட்டுள்ளது. )ளப்பாறியதே மரந்தறிப்பிற்கு காரணமென்று எங்கள் றேன்.
03/02/2009 8:03:36 PM
Abc
ாத்தமானது. கரவெட்டி விக்னேஸ்வரக்கல்லூரியில் கற்ற கத்தில் பயின்ற போதும் தினசரி தரிசித்து இன்புறுவேன். வ நிற்கும். காரணமின்றிக் காற்று கிளைகளைச் றுமே அதன் கொப்புகளில் பட்சிகளை நான் பார்த்ததில்லை.
[ଗT୬).
thika
8.12 PM
சம் விழும் போது ஒவ்வாமையாகி விடுகிறது. அழகிய மங்களைக் குழப்பி விடுகிறது. பகலை இருள் தின்னத் நதப்பட்டது. Mbike இல் வந்த ஆயுததாரிகளின் கைவரிசை அண்ணாசிலையடிக்கிராமத்தை ஊடறுத்துப் பயணித்து புகுந்து மர்மமாகி விட்டனர். பட்சிகளுக்கு பழமும் நிழலும் தரிந்தால் வெட்டப்படுவதை நன்கு அறிந்த பின்னரும் தன்று. Ok மனோ அச்சத்தைத் தருகின்ற இக்கதையாடலை 35556)JřT. 4nil balance no. bye
03/02/2009 8:12:33 PM
2 -
()|1,5566ଏ ।
4:07 PM
சி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். விடுமுறைக்குக் கூட து கொழும்பு வாசியாகவே மாறிவிட்டீர்களாம். முள்ளம் டுமோ என்ற உச்சக்கிலியில் நரகமாகவே யாழ்ப்பாணத்து யைத் தாண்டிச் செல்லும் தருணத்தில் உங்கள் ஞாபகங்கள் கான பூஜையில் புனிதமாகத் தொழிற்பட்ட விருட்சம் அது ல் சப்தித்ததில்லை. நடப்பியல் பற்றிய தரிசனமற்றோர் ளை நம்பிவிட வேண்டாம்.
05/02/2009 3:55:22 PM
199 இதழ் 50

Page 204
NZ) 07830 15566;
Hi அநாமிகன் I'm 5n. Hw r u? வில்வமரம் குறித்த கை உள்ளேன். ஊன் புசிக்காத சிறுத்தையின் ஒப்பனை கேட்டுப்புளித்து விட்டது. யாழ்ப்பாண நிகழ்வுகளின் கட்டு அனைத்தும் அறிந்தவர் என உரைத்து நழுவி விடுகிறா சொல்லுங்கள்.
O7830
N1
Im 5n. மிகப்பெரிய அபத்த நாடகம் நடந்தேறி விட்டது வாகைமரம் அகவையில் மூத்தது என்பது நீங்கள் அறிந்த மரத்தின் வீழ்கைக்கு வழி வகுத்தன. கருக்கலான நே அடையாளக் குழப்பம் நேர்ந்து விட்டது. வாகை மரத்துக்கு கணத்திலிருந்து வாகை மரத்தை மறைத்து பாதுகாத்து விட் மெளனத்துள் புதைத்தோம். வாகை மரமே பட்சிகளுக்கு வாகைமரத் தறிப்பிற்கு வழிகோலியது என்பதால் வ மனோரதியப் பாங்கான புனைவுகள் மலிந்து விட்டன. ம நிறுத்தவேயில்லை. நீங்கள் எங்களில் ஒருவர் என்பதால் 8
NZ) kotaVan;
Hi கொற்றவன்! உங்கள் சகோதரியின் விவாக நாள் க விட்டதாக அநாமிகன் தெரிவித்து அறிந்தேன். எம்மன கேட்டுக்குள்ளாகி விட்டது. முள்ளம்பன்றிகளின் நடமாட்ட
GaleFuji,CEppgör. Ok. Bye. pls Rly
kotti
N/
Hai மனோ அண்ணா! Sms அனுப்பியதற்கு நன்றி முள்ள
அன்றாட நிகழ்வுகள் தான். பட்சிகளின் வேட்கையோ முள் உள்ளது. புண்களில் சீழ்வடியும் வேளையில் முள்ளம் அமரும் மரங்களைப் பதம் பார்க்கின்றன. சில மரங்கள் தம் பட்சிகளுக்கு அறிவிக்கின்றன. இவ்வாறான மரங்கள் திரட்டப்படும். அவசர ஆய்வின் முடிவின் படி உதவுமரங் காணாமல் போனதற்கும் வில்வமரம் தறிக்கப்பட்டமைக் நிகழ்த்தியதே ஏக நியாயமாக கொள்ளப்படுகிறது
ஜீவநதி
2.

Abc
தயாடலில் மெய்யை அண்மிக்க முடியாத நெருடலோடு
எவ்வாறு பொருந்தியது? போலித் தர்க்கங்களைக் மான இயங்குநிலைபற்றி வினவினால் கடவுள் ஒருவரே ர்கள். நீங்களாவது புனைவுகள் தழுவாத காரணத்தை
1556
4.15 PM
1. வில்வமரத்தைவிட அருகே தளைத்து வளர்ந்திருந்த தே. வாகை மரத்தின் முனைப்பான அசைவுகளே வில்வ ரமொன்றில் மரம் வெட்டுனரின் சிந்தனைப் புலத்தில் பதிலாக வில்வ மரத்தை காவு கொண்டு விட்டனர். சம்பவ ட்டோம். வாகை மரத்தின் எதிர்காலம் கருதியே மெய்யை கனியும் நிழலும் நல்கியது. இம்மெய்யை பிறர் அறிவது தந்திகளின் பரவலாக்கத்தை மறுதலிக்காதிருந்தோம். ரம் வெட்டுனர் வாகை மரம் தொடர்பான புலனாய்வை இரகசியத்தை பகிர்ந்து கொண்டேன்
05/02/2009 4:12:18 P.M.
Abc
ன்னிக்காலான முள்முருங்கை மரம் காணாமல் போய் ன்னில் துன்பியல் நாற்றம் சுமந்த காற்று தூய்மைக் ம் குறித்து அவதானமாக இருங்கள். பேருந்தில் பயணம்
aVal
0.06 A.M.
Tம்பன்றிகளின் சிலிர்ப்பும், மரந்தறிப்பும் யாழ்.மண்ணில் ளம் பன்றிகளின் காயங்களை கொத்திக் குதறுவதாகவே பன்றிகள் சிலிர்த்துக் கொள்கின்றன. முட்கள் பட்சிகள் கிளைகளை அசைத்துமுள்ளம்பன்றிகளின் வருகையை குறித்த விபரங்கள் முள்ளம்பன்றி மேய்போரால்
கள் வெட்டப்படும். என் சகோதரியின் முள் முருங்கை
கும் முள்ளம்பன்றிகளின் வருகை குறித்து முன்னறிப்பு
08/02/2009 10:02:41 A.M
இதழ் 50
ー

Page 205
இ.இராஜேஷ்கண்ணன்
படைப் பாக்கத்தின் மீதான விமர்சனத் தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியை யாவரும் அறிவர். அமைப்பியல் தளம், இருத்தலியல் தளம், யதார்த்தவாத தளம், மார்க்ஸியத்தளம், பின்னவீனத்துவத் தளம் என்று நீளும் தளங்கள் யாவற்றினுள்ளும் இலக்கியங்களின் வாழும் பாத்திரங்களான மனிதர் களின் வாழ்வியல் தான் பொதுமையாகி எஞ்சுகின்றது. மனித வாழ்வின் போக்குகளை தரிசிக்கும் - பிரதிபலிக்கும் படைப்பாக்கத்தினை திறனாய்வாளன் பார்க்கும் நியமங்களாய்- அளவுகோல்களாய் இந்த "வாதங்கள்" கோலோச்சி வருகின்ற நிலையில் இன்னொரு புறத்தில் இந்த அளவுகோல்கள் மீதான வெறுப்பு மிக்க பொதுப்பார்வைகளும் இல்லாமலில்லை. இவை இரண்டும் கூட ஆபத்தானவை அல்ல. மாறாக திறனாய்வாளன் ஒருவன் படைப்பை ஒரு பக்கத்தில் தூக்கிப் போட்டுவிட்டு" படைத்தவனின் புகழைப்பாடி படைத்தவனை "புழகாங்கித பரவச நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டுமென்ற அவா வளர்ந்து செல்வது கவனிக்க வேண்டியதே. இந்த அவாவுக்கான ஒரு "வரலாற்றுப் படிமலர்ச்சி உண்டு என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால் இன்றைய நிகழ் போக்கின் யதார்த்தம் இதுவாகவே உள்ளது. இது தான் இன்றைய இலக்கியப் போக்கின் பேராபத்தாய் முன் நிற்கின்றது.
"அநாதரட்சகன்" இந்த அளவுகோல்கள் தொடர்பான தெளிவான புரிதல் உள்ளவர். முப்பது வருடகால இலக்கிய அனுபவம் உள்ளவர் தன்னை முனைப்புப்படுத்தி தனக்குத் தானே மாலை சூடிக் கொள்பவர்கள் மத்தியில் வித்தியாசமானவர். படைப்பு, படைப்புத்தளம் என்பவற்றுக்கு அப்பால் ஒரு மனித சமூகம் உள்ளது என்பதை ஆழப்புரிந்து கொண்ட ஒருவர். அந்த மனித சமூகத்தின் ஆரோக்கியம் தான் படைப்பாக்கத்தின் உண்மையான இலட்சியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். படைப்பு மனித சமூகத்தில் புரையோடிப்போன வாழ்வின் பிணக்குகளை வெளிக் கொணர வேண்டும் என்பதை அசையா நம்பிக்கையுடன்
ஜீவநதி
 

வெளிப்படுத்தும் படைப்பாளியாக நிற்கின்றார்.
முதிர்ந்த படைப்பாளியான தெணியான் அநாதரட்சகன் பற்றிக் குறிப்பிடும் வரிகள் முக்கிய மானவை. "சுமார் முப்பதாண்டு காலம் அமைதியாக இருந்து ஆக்க இலக்கியம் படைத்து வரும் அநாதரட்சகன் தனது முதற் சிறுகதையை 1982இல் எழுதினார். தொகையளவில் அதிக படைப்புக்களை எழுதிக் குவிப்பதில் ஆரம்ப காலம் முதல் ஆர்வம் காட்டாத இவர், தனது நெஞ்சில்பட்ட காயம் தரும் வலியைத் தாங்க இயலாத வேளைகளில் மாத்திரம் கையில் பேனாவைத் தூக்குகின்றார். இவரது இடதுசாரிக் கருத்தியல் இவரின் படைப்புக்களுக்கு அடித்தளமாக அமைகின்றது. துன்பப்படும் இடிநிலை மக்களின் பிரச்சினைகளைக் கண்டு, உணர்ந்து பரிவடன் இலக்கியம் படைப்பது இவரது பண்பாகக் காணப்படுகிறது" என்ற வரிகள் அநாதரட்சகன் பற்றிய ஒரு படைப்பாளுமைப் படிமத்தினைத் தருகின்றது.
உலகமயமாக்கத்தின் சுரண்டல் தளவிரி வாக்கப் பின்னணியில் இருந்து வந்த இலக்கியக் கோட்பாடுகள் எதிர் கொண்டுள்ள சவால்களையும், மாக்ஸிய இடதுசாரிய இலக்கியப் போக்கு பயணிக்க
@g 50

Page 206
வேண்டிய திசைகளையும் முன்வைத்து அநாதரட்ச கனின் கதைகளை அறிமுகம் செய்யும் ஆழமான சிந்தனைகளைத் தூண்டி விடும் லெனின் மதிவாணன் அவர்களின் முன்னுரையுடன் இந்தத் தொகுதி வெளியாகியுள்ளது. முற்போக்கு இலக்கியத் தடத்தில் அநாதரட்சகனின் கதைப் பொருள்களின் தவிர்க்க வியலா இடத்தினையும், எதிர்கால நிலையில் அநாதரட் சகனின் திசையமை வினையும் கூறும் ஒரு முன்னுரையை லெனின் மதிவாணன் எழுதியுள்ளார்.
"நிமிர்வு" என்ற முகவரியுடன் வந்துள்ள இந்தத் தொகுப்பில் 128 பக்கங்களில் 12 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் கதைகள் கூறும் பொருளை முதன்மைப்படுத்தி பின்வரும் ஐந்து வகைப் பாடுகளைச் செய்ய முடியும். 1. கல்வியுலகை விமர்சனம் செய்யும் கதைகள்
உ-ம்: நிமிர்வு ஆறா அவலம், சீருடை இழப்பு 2. சாதியம் மற்றும் வர்க்கப் பிரச்சினையை பேசுவன.
உ-ம்: திருப்பம், வைராக்கியம் 3. போரின் வடுக்களைப் பேசுவது உ-ம்: சிதைவு 4. மனித உறவாடல்களிலான சிக்கல்களைப் பேசுவன.
Đ —Lb: GFLUGDL b, Gilesi)ULð 5. előLOGOTelepjeОПЕЈЗБGODGT GODIGiflöGöT600TTGOJGOT.
உ-ம்: பசித்த மனம், தவிப்பு, மனச்சிறை. பொருள் அடிப்படையில் அநாதரட்சகனின் சிறுகதைகளை வகைப்படுத்துமளவிற்கு வடிவத்தில் வகைப்பாட்டுப் பன்மைகள் இல்லை. இது பற்றி மதிவாணன் கூறும் போது "புதிய திசை வழியைக் கைக் கொள்ளாது பாரம்பரிய முறையில் தமது கதைகளைப் படைத்திருப்பது அவரது கதை சொல்லும் பாணியின் ஓர் அம்சம் என்ற நாம் அமைதி காணலாம்" என்று குறிப்பிடுகின்றார்.
இனி, அநாதரட்சகனின் நிமிர்வு" தொகுதி யிலுள்ள சிறுகதைகள் கூறும் கருத்து நிலைகள், சித்திரிப்புத் திறன்கள், பாத்திரப் படைப்புக்கள் போன்றன தொடர்பான சிறப்பம்சங்களை நோக்கலாம்.
கல்வியுலகை விமர்சிக்கும் கதைகள்
அநாதரட்சகன் அடிப்படையில் ஆசிரியராய், அதிபராய் இன்று கல்வித்திணைக்கள அதிகாரியாய் பதவிநிலை வகித்துள்ளார். இதனால் இவரின் கல்விப்புலம் சார்ந்த அனுபவம் முதன்மை பெறுகிறது. அதிகாரம், சிற்றுாழியர் நிலை , மாணவர் பிரச்சினைகள் என்று இவர் கருப்பொருட்கள் விரியும். நிமிர்வு, ஆறா அவலம், சீருடை இழப்பு போன்ற சிறுகதைகள் இத்தகையவை.
"நிமிர்வு" கல்வியுலகத்தின் அதிகாரத்தின் பயனாக ஒரு பெண் தொண்டராசிரியர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள முறைகேட்டினைத் தட்டிக் கேட்க முனைந்த
ஜீவநதி 2.

வேளையில், அவள் ஒரு மூடை சுமக்கும் தந்தையின் மகள் என்பதால் "போ வெளியிலை. அந்த புத்தியை காட்ட வந்திட்டாய்." என்று அதிகாரத்தால் வெளியேற்றப்படுவது காட்டப்படுகின்றது. ஒரு "புறமொதுக்கப்பட்ட சமூகத்தின் குரலாய் அவள் விடும் சவாலுடன் கதை முடிவுக்க வருகின்றது. அதிகார வர்க்கப் பிரதிநிதியான கல்வி அதிகாரி பாத்திரம் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் நிலவும் இறுக்கங்கள், அலுவலர்களின் அலட்சியமான போக்குகள் என்பன விலாவாரியாக விளக்கப்பட்டு உள்ளன. யாழ்ப்பாணத்துக் கொட்டடிப் பிரதேசம் பற்றிய களவர்ணனை காட்சிப்படிமமாகி நிற்கின்றது. பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியையில் எழுச்சி அதிகாரத் துக்கு எதிரான ஒரு சமூகத்தின் நிமிர்வாகவே புலப்படுகின்றது.
“ஆறாஅவலம்” கல்வியுலகில் பாடசாலையில் சிற்றுாழியராகக் கடமை புரிகின்ற ஒருவரின் வாழ்வின் அவலங்களைப் பேசுகின்றது. அலுவலகம், வீடு என்பவற்றுக்கிடையே சிக்கித் தவிப்பதுடன் அதிகாரி களின் வேகத்திலும் சிக்கித்தவிக்கும் சிற்றுாழியர் களின் வெளித் தெரியா வாழ்வியல் முகத்தை வெளிக்கொணரும் கதை அது.
இந்தத் தொகுப்பிலுள்ள மனதை அறைந்த கதையாக "சீருடை" என்பது உள்ளது. தம்பியின் சுகவீனத்துக்கு மருந்தெடுப்பதற்காக பாடசாலையில் தந்த இலவச சீருடைத் துணியை தாய் விற்று விட்டதால் தண்டிக்கப்பட்ட ஒரு அண்ணனான மாணவனின் கதை இது தண்டித்த ஆசிரியர் உண்மையறிந்த பின்னர் கொள்ளும் கழிவிரக்கத்தையும் வேதனையையும் சொல்லும் கதை. பிள்ளைகளின் பிரச்சினைகள் பெரியவர்களால் செவிமடுக்க வேண்டும் என வலியுறுத்தும் கதை. இலவச சீருடை இலவச பாடப் புத்தகம், இலவசக்கல்வி என்பவற்றுக்கு அப்பால் ஒரு சமூகத்தின் தேவையாக உள்ளவை எவை? என்பது குறித்து ஆழமான சிந்தனையைத் தூண்டுகின்றது. “பாடசாலையில் சிறு வளவில் நான்கு பக்கமும் ஆக்கிர மித்த படி இருக்கின்ற மாடிக்கட்டிடங்கள். அவை காற்றின் வரவை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற கங்கணத்தில் நிமிர்ந்து நின்றன” என்று கூறும் வரிகள் கல்வி அபிவிருத்திக்கும் வாழ்வுக்குமான இடைவெளி குறித்துப் பேசும் விமர்சன வரிகளாய் உள்ளன.
இந்தக் கதையின் தொடர்ச்சியாகவே "இழப்பு" என்ற சிறுகதையை நோக்கலாம. "கல்வியுலகு ஓயாது உரைக்கும் இலவசக்கல்வி, கட்டாயக்கல்வி என்பதன் அர்த்தம் தான் என்ன? நடைமுறை யதார்த் தங்களை எட்டாத கோட்பாடுகளால் யாருக்கு என்ன பயன்! அவனைப் போல இன்னும் எத்தனை இங்கிதை களின் ஆளுமைகள் பாழடிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்ற வரிகளின்
2. இதழ் 50

Page 207
பின்னே வறுமையாலும் துயர்களாலும் சந்தை வியாபாரத்திற்கு தள்ளப்பட்டுக் சிலுவை சுமக்கும் இங்கிதை என்ற சிறு பிள்ளையின் கதை விரிகின்றது.
ஒரு ஆசிரியன் எப்படி ஒரு இலட்சிய மனிதனாக இருக்க வேண்டும்? அவன் எப்படி இருந்துவிடக்கூடாது என்பது பற்றிய சிந்தனைகள் ஆசிரியராக இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களால் எடுத்துக் காட்டப்படுகின்றன. மனித வாழ்வியலின் ஆதார சுருதியாகக் கல்வியைக் கருதிப் போற்றி வரும் ஒரு சமூகத்தில் அதிகாரம், புறக் கணிப்புக்கள் செவிமடுப்பிய்மை, வறுமை, சிறுவர் ஊழியம் போன்ற வற்றால் நலிவுறும் கல்வியின் உன்னத இலக்குகளைட் பற்றிய ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் கதைகளாய் இவையமைந்தன.
சாதியம் மற்றும் வர்க்கப்பிரச்சினை பற்றிப் 6U or 62560 சாதியம் பற்றிப் பேசும் கதைகளில் ஒன்று "வைராக்கியம்". இது மலையகத்து மக்கள் வாழ்வின் சாதியப் பிடிமானத்தைப் பேசுகின்றது. மிக எளிமையாக நகரும் இந்தக் கதையின் கலைத்துவம் தொடர்பில் தளர்வு காணப்பட்டாலும் அதன் பேசு பொருள் ஒட்டுமொத்த சிறுபான்மைகளில் நிலவுகின்ற ஒரு சாதிய மனோபாவத்தை பிரதிபலிக்கின்றது. சாதி நிலையில் கீழ்ப்படுத்தப்பட்டவனுக்கும் தனது மகளுக்கு மான காதலை நிராகரிக்கும் இராமைய தேவர் தன் மகளை தாரமிழந்தவனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்கத் தயாராக உள்ளதைப் பேசுகின்றது. தோட்டத்து தொழிலாளர்களின் பிரதிநிதி யாய் குரலெழுப்பும் குமாரு என்ற இளைஞன் என்ன தான் வர்க்கத்தின் பிரதிநிதியாக தொழிற்பட்ட போதிலும் காதல்-திருமணம் என்று வந்துவிட்டால் அவன் சாதியின் பிரதிநிதியாகத்தான் கருதப்படுகிறான் என்ற சமூகப் போக் கரினை இந்தக் கதை பிரதிபலிக்கின்றது.
"என் ன. அவனுக் குப் பெண  ைணச கொடுக்கிறதா, அந்த கீழ் சாதி லயத்துப் பயலுக்கா. என்று முழங்கும் இராசையதேவரின் குரல்,
"தேவர் குலமடி நாங்க. எங்க இருந்தாலுL நம்ம பரம்பரைக்கு தனியிடமிருக்கு தெரிஞ்சுக்கோ. என்றும் பேசுகின்றது.
இங்கு, "எங்க இருந்தாலும்" என்ற சொ பிரயோகம் தனித்து கவனிக்க வேண்டியது. அது மலைநாட்டுத் தமிழர்களின் இருண்மை வாழ்வின் வரலாற்றை திரும்பிப்பார்த்து அதனுள் சாதிய உணர் பற்றிய வினாக்களை எழுப்புகின்றது. அநாதரட்சகன் தான் நம்பிக்கை கொண்டுள்ள கோட்பாட்டின் பின் புலத்தில் சமூகத்து நிகழ்வுகளை தரிசிப்பதற்கான ஒரு வடிகாலாக இந்தக் கதையினை பயன்படுத்தியுள்ளார்.
ஜீவநதி

பின் முதலாளிய சமூகமொன்றில் சாதியம் பற்றிப் பேசும் சிறுகதை "திருப்பம்" இது ஒரே நேரத்தில் சாதியம் மற்றும் வர்க்க மனோபாவத்தைச் சாடும் ஒரு படைப்பாக்கம். சைக்கிள் கடை நடத்தும் ஒரு தொழிலாளியின் மகன் பட்டதாரி ஆன போதும் கூட குடும்பத்தின் வறுமையினாலும் சாதி அடையாளங் களாலும் சுரண்டலுக்கு உட்படும் நிலையினைப் பேசுகிறது. கல்வியின் வழியாக ஒருவன் சாதி அடையாளத்தை இழந்து விடுவதில்லை. சாதி அதிகாரத்தை நிலை நாட்டும் தந்திரோபாயங்கள் சமூகத்தில் தன்னை மீளமைத்துக் கொண்டு நகரும் என்று பேச முற்பட்டுள்ளார். இந்த வேலையற்ற பட்டதாரியைப் பார்த்து அதிகார மனப்பான்மையுடன் பேசும் சிவஞானத்தார்,
"உம் மோடை தானே என்ரை மேனும் படிச்சவன். உதயனைத் தெரியுமெல்லே ஸ்ரூடன்ற் விசாவிலை லண்டனுக்கு அனுப்பி விட்டன். இப்ப அவன் அங்கை படிப்போடை, பாட்ரைம் வேலையும் செய்து கொண்டிருக்கிறான்"
என்று கூறவதுடன் நின்று விடவில்லை. அந்த ஏழைக்குடும்பத்து பட்டதாரியின் சாதி அடையாளத்தை யும் சாடுகிறார்.
"ஒமோம் தெரியும். பல்மேறா போட்வேலை விசயமாகத்தானை, அது தான் உம்மைப் போல ஆக்களுக்கு சரியான உத்தியோகம். அந்தப் போட் பிரசிடன்ரோடையும் கதைச்சனான். அவரும் உங்கடையாள்தானை தெரியுமோ?"
என்று வரும் வார்த்தைகள் கல்வியால் சாத்தியமாகும் தொழில்சார் சமூக அசைவியக்கத்தைக் கூட சாதிய சமூகம் தந்திரோபாயமாக தடுத்துக் கொள்ள முனையும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந்தக் கதையின் மூலம் கல்வியின் வழியான சாதிய அடையாள இழப்பு, சாதிய தொழில்சார் சமூக அசை வியக்கம், சாதியை நிறுவனமயமாக்குதல் போன்ற எண்ணக்கருக்களை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுச் செல்ல முற்படுகின்றார் அநாதரட்சகன்.
போரின் வடுக்களைப் பேசும் கதைகள்
போர்க்காலத்துக் கதைகளில் போரை நியாயப் படுத்தி எழுந்த கதைகளும் போரின் வடுக்களையும் - சுமைகளையும் பேசும் கதைகளும் தோன்றின. அநாதரட்சகன் போரை நியாயப்படுத்துபவரல்ல. (BLJITf6ÖT GF6ODLD556f6ò 35 IT GOOTITLDGò G3 LUFTGOTGJ TG56f6ÖT நினைவுகளோடு வாழ்பவர்களின் மன உளைச்சலை "சிதைவு" என்ற கதை மூலம் விளக்கியுள்ளார். போர்க்காலத்தின் வடுக்களின் ஒரு மிகச்சிறந்த வெட்டு முகமாக இந்தக் கதை அமைந்து விட்டது. சொற் செட்டோடு அமைந்த மொழிநடை மென்மையான உணர்வின் சித்திரிப்பு போர் கொண்டு போன மகனை
இதழ் 50

Page 208
தேடும் குடும்பத் தலைவன் அந்த மகனின் நினைவு களால் பைத்தியமான மனைவியையும் இழந்த சோகம் செம்மையுற இந்தக் கதையில் கூறப்படுகின்றது. மகனை பறி கொடுத்ததால் வாழ்வின் அர்த்தங்கள் பொய்த்துப் போய் படிப்படியாக வாழ்விலிருந்து அந்நியமாகி சித்த சுவாதீனம் அற்றுப் போன ஒரு தாயின் துயரம் மிக உணர்வுபூர்வமாக அலங்காரத்தைத் தவிர்த்து சித்திரிக்கப்படுகின்றது.
மனித உறவாடல்களின் சிக்கல்களைப் பேசுவன
"சபலம்" என்ற சிறுகதை பாலியல் சுரண்ட லுக்குத் தயரான ஒரு ஆணின் சபலத்தை காட்டுகின்றது. போரின் கொடுமையால் கணவனை இழந்துவிட்ட ஒரு வாழத் துடிக்கும் பெண்ணின் வாழ்வியல் தேவை களுக்குத் துணையிருந்து அவளைப் பாலியல் ரீதியாக மெல்ல சுரண்ட எத்தனிக்கும் ஒரு ஆணின் சிக்கல் நிறைந்த மனோபாவத்தை இக்கதை வெளிப்படுத்தி யுள்ளது. அணிந்துரையில் லெனின் மதிவாணன் கூறுவது போல் இந்தக் கதை "பால் கவர்ச்சி காட்டி" எழுதப்பட்ட கதை அல்ல. இங்கு கூட அநாதரட்சகன் "சுரண்டலுக்கு எதிரான குரலைத்தான் வெளிப்படுத்தி யுள்ளார். இளவயது விதவைகள் வாழ்வுக்காகத் தவிக்கும் இன்றைய காலகட்டத்தில் இக்கதையில் வரும் மாஸ்ரர் சுரண்ட முற்படும் ஒரு வர்க்கத்தின் பிரதி நிதியே. இந்தக் கதை சித்திரிப்பில் சீர்மை கொண்டது. உணர்வின் வெளிப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
"விகற்பம்" என்ற கதை வெளிப் படைப் பொருளில் "சாதி" பற்றிக் கூறுகிறது. ஆனால் நெருங்கிய உறவுகள் கூட தமது இலாபத்திற்கு மற்றைய மனிதர் களின் இயல்பாக நகரும் வாழ்வினை எப்படிக் குறைத்து விடுகின்றனர் என்பதைக் கூறும் கதையாகும்.
அகமண அவசங்களை வெளிக்கொணரும் கதைகள் மன அவசங்களை வெளிக் கொணரும் கதைகளில் கதாசிரியரின் மனத்தின் அகத்தே நுழைந்து பார்க்கும் ஒரு போக்குத் தெரிகிறது. "பசித்த மனம்" என்ற கதையில் "சுருதி கலைந்த பாடலாகி" நிற்கின்ற ஒரு முதிர் கன்னியின் "மனப்பேதலிப்பு" அல்லது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார். மலைநாட்டு தோட்டச் சூழலில் வாழும் முதிர் கன்னியிடத்தில் மங்கிப் போகாத காதலுணர்வின் வெளிப்பாடும், எதிர்பார்ப்பும் எப்படி அமைகின்றது என்பதை மெல்லிய உணர்வுத்தளத்தில் வைத்துப் பேசுகின்றார்.
"தவிப்பு" என்ற கதை பரம்பரை இடை வெளியைப் பேசும் கதை, ஒரு முதியவரின் உளப் போராட்டத்தின் சித்திரிப்பு அது. இளமையை தொலைத்துவிட்டவர்களின் ஏக்கங்களுக்கு முக்கிய
ஜீவநதி 204

மளிக்காத இளைஞவர்களைச் சாடும் கதை. எனினும், கோசங்கள் எதுவுமில்லாமல் முதியவரின் இளமைக் கால மெல்லுணர்வுகளை ஒரு சுவர்மணிக்கூடு பாவனைக்கு உதவாமல் போகும் சம்பவத்தில் ஏற்றி விளக்குகின்ற கதையாகும். முதியோர் உளநிலை குறித்து அதிக அக்கறை எடுத்துச் சித்திரிக்கின்றார் அநாதரட்சகன்.
"மனச்சிறை" ஒரு வார்த்தைச் சிக்கனமான கதை. கணவனை காவுகொடுத்த ஒரு பெண்ணின் உணர்வுகளை மாமியார் மருமகள் முரண்நிலையின் பின்புலத்தில் வைத்துக் கூறும் கதை. இலாவகமான மொழியின் துணையுடன் பெண்மையின் உணர்வுக்கு முதன்மை கொடுத்துப் படைக் கப்பட்டுள்ளது. அநாதரட்சகன் சமூக விடுதலைக்காக குரலெழுப்பும் ஒரு போராளியாக படைப்புக்களைத் தரும் கொள்கை யுடையவரெனினும் அவரின் படைப்புகளில் அக உணர்வுக்கு முதன்மை கொடுத்து சித்திரிக்கும் பண்பும் விரவிக்கிடக்கின்றது.
நிமிர்வின் பலங்கள் எவை? இத்தொகுதியின் வழி அநாதரட்சகனை எப்படி அடையாளப்படுத்த முடியும் என்பதை முன்னர் குறிப்பிட்டிருந்த போதிலும், அவற்றைப் பின்வருமாறு பட்டியற்படுத்த முடியும்.
1. எளிமையான தெளிந்த நீரோட்டமான இலாவகமான சித்திரிப்பு முறையை வெளிப்படுத்தும் கதைகள், 2. குறித்த கொள்கைப் பற்றுறுதியை கைவிடாது படைப்பாக்கம் செய்ய முனைவதால் அது எங்கும் ஓங்கி ஒலிக்கின்றது. 3. போராட்ட நிலைப்பட்ட உணர்வுடன் கூடிய எல்லாவித சுரண்டலையும் எதிர்க்கின்ற போக்குகள் அமைந்த போதிலும், மெல்லிய உணர்வின் வெளிப்பாடும் சம அளவில் முதன்மைப்படுத்தப்படுகின்றது. 4. தொழில் ரீதியில் தான் சார்ந்த துறையின் சீர்கேடுகளைக் கூட விமர்சிக்கும் துணிவும் பணியிடத்து வாழ்வுடன் நெருக்கமான இசைவை வெளிப்படுத்தும் பண்பு. 5. சிறுகதைகளில் தொடக்கம் குறித்து கொண்டுள்ள அதிக அக்கறையும் கள வர்ணனைக்கு வழங்கும் முக்கியத்துவமும், ஆயினும், சிறுகதைகளின் வடிவம் தொடர்பிலான புதிய அணுகுமுறைகளிலான தேவை, கதை மொழியில் வரும் துறைசார் பாண்டித்திய மொழியை தவிர்த்தல், கதையின் முடிவில் கோசத்திற்கான இடத்தை தவிர்த்தல் போன்ற சில விடயங்கள் தொடர்பில் மேலும் அக்கறை கொள்ள வேண்டிய இடைவெளிகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.
இதழ் 50
. 6

Page 209
ق.
அவ்வூ. ஆெ. அவ்வூ. ஆெ.ஆெ. அடிச் சனியனே கத்தாதே வந்தனென்றால் ஒரே GLIT(B...
தற்போதைய எனது எஜமானின் உறுக்கலைச் கேட்டு என் சத்தத்தை சற்று அடக்கிக் கொள்கிறேன் அப்போதும் என்னால் என் அழுகையை அடக்கிச் கொள்ள முடியாதுள்ளது. சத்தத்தைக் குறைத்துச் கொண்டு விம்முகிறேன்.
அவ்வூ.வு. அவ்வூ. என் குரல் ஈனமாய் ஒலிக்கிறது. எனக்கு கதைப்பதற்குத் தான் முடியாவிடினும் அழுவதற்குக் கூட go flaOLDU labeO)6)LLJIT?
"அண்ணே உந்த நாயை அடிச்சுக் கொல்லு (36) T(3LDP"
"வேண்டாமடா தம்பி உதை இங்கே வைத்துச் கொன்றால் பிறகு கண்டவன் நிண்டவன் எல்லாம் கேள்வி கேப்பான். அது எங்களுக்கு கரைச்சலாய்ப் போகும்."
"அப்ப உதை உப்பிடியே விடுகிறதோ?" (தம்பி எதையும் பிளான் பண்ணித்தான்ரா செய்ய வேணும்)
"என்னண்னை சொல்றாய் அப்ப நான் ஒண்டுப் யோசிக்காம செய்யிற ஆள் எண்டே நினைச்சே நான GLOTLeir 36b60)G) 35600TL2(3UT!"
"அப்படிச் சொல்லேல்ல தம்பி உன்னை எப்பவுL காப்பாற்ற வேண்டியது என்ர பொறுப்பும் கடமையுL அதை நான் எப்பவும் மறுக்கேலாது. உன்ர எதிர்காலL எனக்கு முக்கியம்."
"ஓம் அண்ணே நீ சொல்லுறதிலயும் நியாயL இருக்கு உங்கட ஆலோசனையும் உதவியும் இல்லாட்டில் என்னால எதுவும் செய்திருக்க ஏலாது. இனியும் செய்யே லாது அது தான் உண்மை. அதை நான் மறப்பேனே? அது இருக்கட்டும் இப்ப இந்த நாயை என்ன செய்வம்?"
"உது இப்ப நல்லா நொந்து போட்டுது. உ:ை அப்படியே விட்டால் தன்ர பாட்டில செத்துப் போயிடுL உனக்கும் சோலி வராது எனக்கும் சோலி வராது கண்டவன்நின்டவன் ஒருவனும் கேள்விகேட்க மாட்டான்."
ஜீவநதி
 

என்று கூறிக் கொண்டே பக்கத்து வீட்டு நாராயணன் என்னைப் பார்த்து நக்கலாய் சிரிக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பத்திக் கொண்டு வருகுது. நான் மட்டும் பழைய ஆளாய் இருந்தால் பாய்ந்து பிடித்திருப்பன். அவன் தன்னுடைய நாயை ஒருக்கால் ஏவி விட்டவன். அவன்ர நாய் அல்சேஷன் இனமாம். சிங்கத்தின் நிறமிருக்கும். வெள்ளைத்தோல் பார்க்க நல்ல கவர்ச்சியாய் இருக்கும். வெள்ளைத் தோலுக்கு ஆசைப்பட்டு எனக்கு முப்பாட்டி முறை யானவள் சோரம் போன கதையும், அதனால் எனது இனம் பட்ட துன்பத்தையும் எனது அம்மா கதையாய்ச் சொல் லுவாள். அந்தக் கதையைக் கேட்கும்
72, and
போதெல்லாம் எனக்குப் பத்திக் கொண்டு வரும். தன்னுடைய ஆசைக்காக தன் இனத்தையே அடைவு வைத்தவள் அவள். இன்றைக்கு எங்கள் இனத்தின் இழிநிலைக்கு அவளும் ஒரு காரணம் தான்.
அல்ஷேசன் முதன்முதலாக வீடு தேடி வரும் போது நானும் கொஞ்சம் மயங்கித் தான் போனேன். ஆனால் கொஞ்ச நாளிலேயே அதன் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. எனது செல்லக்குட்டிகளை ) கடிக்கத் தொடங்கிவிட்டது. எனது பெட்டைக்குட்டி T களை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியது. எனக்கும் ஒரு நாள் கடித்துவிட்டது. அதனால் காலில் பெரிய காயம் ) வேதனையால் துடித்தேன். இதைப் பார்த்துக் ) கொண்டிருந்த இளையவன் பதுங்கிக் கொண்டு ஒரே ) பாய்ச்சலாகப் பாய்ந்தவன், கழுத்துப்பிடி அல்ஷேசன்
ஸ்தலத்தில் உயிர்துறந்தது. ) அந்த நாளிலிருந்து நாராயணனுக்கு ) என்னையோ எனது இளையவனையோ பிடிக்காது போய்விட்டது. ஜென்ம விரோதியாய் மாறி விட்டான். இந்த நேரத்தில் எனது இளையவனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லத்தான் வேணும். எனது இனத்தின் வரலாற்றை யாரும் எழுத முற்பட்டால் அவனை விலக்கிவிட முடியாது.
அவன் இளையவனாய்ப் பிறந்தாலும் தலை
205 இதழ் 50

Page 210
மகனாய்த்தான் வாழ்ந்தவன். அவன் ஒன்றுக்கும் பயப்பட LDITLLT6ði. LJuJ(8LD E6)]6060Tö, 560ör (B | JuJÚ LJ(BLó. கட்டையன், அகண்டவன்,கறுப் பன். ஆம் அவனை எல்லோரும் "பிளாக்கர்" என்று தான் அழைப்பார்கள். அவனைவிட எத்தனையோ மடங்கு பலம் கொண்ட நாராயணனின் அல்ஷேசனை ஒரே கடியில் முடிச்சதால அந்த ஊரவர்கள் மட்டுமன்றி அயல் ஊரவர்களும் வியக்கும் அளவிற்கு அவன் புகழ் பரவி விட்டது. இந்நிலையில் எனது இனத்தின் தலைமைப் பொறுப்பை அவன் வலிந்து ஏற்றுக் கொண்டான்.
நானும் அவனை என்ர வயிற்றில் பிள்ளை யாய்ப் பெற்றதையிட்டு எவ்வளவு பெருமைப்பட்டன், அவனால் என்ரை அடிமை வாழ்வு முடிவுக்கு வரும் நாளையே நடக்குமென்ற அசையா நம்பிக்கையோடு இருந்தன். ஆனால் அவனும் என்னை ஏமாற்றிப் போட்டான். என்னைத் தாக்கி அடக்கி ஆளவந்த அன்னியனைக் கடித்தவன். காலம் செல்லச் செல்ல என்ர சொல்லை தட்டத் தொடங்கியதுடன் என்னையும் அடக்கி யாள முற்பட்டான். தாய்மை உணர்வுடன் எல்லாவற்றை யும் பொறுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவனோ என்னை அடக்க முற்பட்டதோடு நிற்காமல் தன் சகோதரங்களையும் கடிக்கத் தொடங்கிவிட்டான். இதை நான் யாரிடம் சொல்லி அழமுடியும், என்ர இனசன மெல்லாம், அவன் என்னை கடைசி வரைக்கும் கண் கலங்காமல் வைத்துப் பார்ப்பான்என்ற நம்பிக்கையில் தான் என்னை விட்டுவிட்டு தொலை தூரம் போனதுகள் எனக்கு நோய்நொடிகள் ஏற்படாமல் வடிவாக கவனிக் கிறதிற்காக அவனுக்கு எவ்வளவு வசதிகளையெல்லாம் செய்து கொடுத்ததுகள், அவ்வளவும் வீணாய்ப் போய்ச்சுது. அதுமட்டுமே அவனுக்காகவும் எனக்காகவும் உயிரைக் கொடுப்பதற்காக எத்தனை எத்தனை இளம் நாய்க்குட்டிகள் இருந்தன. எல்லாம் இருந்தும் என்ன? தன்னந்தனியனாய் யாருமற்ற அனாதையாய் வலி களுடன் வாழ்கிறேன்.
உவன் மகேந்திரனும் நாராயணனும் சேர்ந்து செய்த கூட்டுச் சதியால் தான் இந்தநிலை ஏற்பட்டது என்பது இப்போது எனக்கு பூரணமாக விளங்குகிறது. மகேந்திரனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும். எனது வளவுக்குள்ள வசிக்கிற ஒரு மனிதன் தான் அவன். அவன் வசிக்கிறான் என்பதைவிட குடியேறி வசிக்கிறான் என்பது தான் மிகப் பொருந்தும்.அவனும் ஏழு நாய்க்குட்டிகளை வளர்த்தவன். அதுகள் பல்கிப் பெருகி பெரும்பான்மையாய் பெருகிவிட்டுதுகள். அது களுக்கும் நாராயணன் வளர்க்கின்ற அல்ஷேசன் இனத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு உரோமம், நிறம், குரைக்கின்ற முறை, தோற்றம் எல்லாம் ஒத்துப் போகும். ஆனால் எங்களுடைய இனம்அவர்களிலிருந்து முற்றாக வேறுபட்டுத்தானிருந்தது. அடர்ந்த உரோமம், கறுப்பு நிறம், உரத்த குரல். எங்களை வளர்த்து விட்டவர்
ஜீவநதி 20

என்று ஒருவருமில்லை. கல், மண் தோன்ற முன்னரே நாம் தோன்றி விட்டோம். குடியேறி மகேந்திரன் வருவதற்கு முன்னரே அந்த வளவுக்குள் நாங்கள் தானிருந்தனாங்கள். எங்களின் தனித்துவத்தையும், பெருமைகளையும் பார்த்த மகேந்திரனுக்கு எங்கள் இனத்தின் மீது ஒரு பயம் ஏற்படத் தொடங்கிவிட்டது. அதனால் தான் வளர்த்த நாய்களில் சில விசர்ப்பிடித்த குட்டிகளை, எனது குட்டிகளை அழித்து ஒழிப்பதற்காக ஏவிவிட்டான். அதனால் நாங்களும் திருப்பிக் கடிக்கத் தொடங்கினாங்கள். எங்கட கரந்தடி பாய்ச்சலுக்கு முன்னால் அவர்களால் நின்ற பிடிக்க முடியவில்லை. என்ர ஒரு குட்டி அவனது பத்துக்குட்டிகளை சமாளிப்ப தற்கு போதுமானதாகவிருந்தது. அப்போது எனது குட்டிகளெல்லாம் ஒற்றுமையாயிருந்து என்னைப் பாதுகாத்தன. அப்போதெல்லாம் நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
எனது குட்டிகளின் வேட் டையாடும் திறனையும் ஓர்மத்தையும் பார்த்து மகேந்திரன் மட்டு மல்ல நாராயணனும் கொஞ்சம் பயந்து தான் போனான். அவர்கள் அப்போதே கூட்டாகச் சேர்ந்து சதி செய்யத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் மனிதர்கள் என்பதால் எங்களை விட ஒரு அறிவு கூடியவர்களாம். அதாவது அவர்களுக்கு ஆறாம் அறிவு இருக்கிறதால எங்கள் இனத்தின் ஒற்றுமையை இலகுவாகக் குலைத்து விட்டனர். உண்மையிலே எங்கட இனத்தின் வரலாற்றில் ஏழாம் அறிவு படைத்தவர்களும் வாழ்ந்திருப்பதாக இப்போது நான் கேள்விப்படு கிறேன். அப்படிப்பட்ட பரம்பரையில் வந்த எனது இனம் எப்படி இந்த ஆறறிவு படைத்தவர்களின் சூழ்ச்சிக்கு இலகுவாகப் பலியாகியது என்பது எனக்கு இன்னும் புரிந்து கொள்ள முடியாத, புரிந்தாலும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகமாகத்தானிருக்கிறது.
எனது குடும்பத்தின் ஒற்றுமை குலைந்ததும், குடும்பத்திற்குள் குழப்பம் வந்ததும் இளையவன் தலைமகனாகியதும் , அவன் நாராயணனின் அல்ஷேசனை ஒரே பாய்ச்சலில் கடித்துக் குதறியதும் நாராயணன் ஜென்ம விரோதியாய் மாறியதும் உங்களுக்கு நான் சொல்லிப் போட்டன் இளையவன் மீது கொண்ட அசையாத நம்பிக்கையால் எனது இறைமையே அவனிடம் ஒப்புக் கொடுத்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.அவன் நிற்கச் சொன்ன இடத்தில் நின்றேன். போகச் சொன்ன இடத்திற்குப் போனேன். குரைக்கச் சொன்ன போது குரைத்தேன். மொத்தத்தில் எனக்காக நான் வாழாமல் அவனுக்காக நான் வாழப் பழகிக் கொண்டேன்.
இப்படிப்பட்ட ஒரு நாளில் என்றுமில்லாத வாறு கருமேகங்கள் வானை மறைத்துக் கொண்டு நின்றன. கடும் இருட்டு, வானத்து இடியோசை என் காதைப் பறித்தது. மின்னலின் தெறிப்பில் என் கண்கள்
இதழ் 50

Page 211
قو
குருடாயின. நா வரண்டு போனது. ஊன் உருகிய புனல் குடிநீரானது. பூதங்களின் வாயிலிருந்து எஞ்சி வீழ்ந்த நரத்துண்டுகள் உணவாயிற்று. அப்போதும் அவன் வாலைப்பிடித்தபடி நான் ஓடிக்கொண்டிருந்தேன். ஓடி ஓடிக் களைத்து நீண்ட ஒடை போன்ற ஒரு வாய்க்கால் பகுதியில் இறுதியாக தஞ்சம் புகுந்தேன். புலன்கள் ஒடுங்கி, உணர்வுகள் மங்கி, ஜடமாகிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் ஏதோ ஒரு சக்தி என் உயிரைக் காத்தபடியே இருந்தது.
இடி, மின்னல், கடும் மழை தொடர்ந்தது. அந்தக் கொடிய இரவு விடிந்த போது எங்கும் ஒரே அமைதி, மழை நீரில் முழ்கியும், இடியில் கருகியும் எனது குட்டிகள் இறந்து போய்க்கிடந்தன. சில தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு என் கண் முன்னே உயிரை மாய்த்தன. இளையவனைத் தேடுகிறேன் அவனையும் காணவில்லை. கண்கள் இருட்டிக் கொண்டு வருகிறது. இப்போது எல்லாமே மாறிவிட்டது. எனது உரோமங்கள் உதிர்ந்து விட்டன. என் கணிர் குரல் ஈனமாய் ஒலிக்கிறது. என் நடை தளர்ந்து என் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து
நாச்சியாதி
கேட்டுப்பாருங்க தெரிந்தவர்கள் ெ
என்னூரின் மாண்பியத்தை எப்படிச் சொல்வேன்
கண்மூடி யோசித்தால் மாடு வளர்ப்பில்
கனகதைகள் இருக்குது.
பனை வயல் பாசுமடு பசுமையான கிராககாடு தொன்மையான கிராமத்தின் தொடக்கப்புள்ளிகள்
அரசன் வந்துபோன அடையாளம் சுமந்ததினால்
எங்களுர் மீது
அரசாங்கத்திற்கும்
ஒரு கண்ணிருக்கு
பெருக்கு வெட்டையில் பெரிய பெரிய நாவல்மரம் சறுக்கு கல்லருகில் சடையாக கூல்மரம் கொளத்து பண்டுல குடியிருககும் புளியமரம் இதில் வைரவன் இருப்பதாக பலநூறு சேதிவரும்
நாட்டுப்புறமிலலை நடு நிலையான ஊரிது
ஜீவநதி
எங்களுருக்கு மக இடமுண்டு
காடு வெட்டி சே காலமொன்றும்ப
பாடுபட்டு உழை விவசாய மக்கள்த எங்கள் ஊரின்
பாரம்பரிய வாரி
ஊருக்கு வந்தால் பச்சை வயல்கள் : உங்களை பாசத்ே வரவேற்கும்
வானுயர்ந்த மர வடிவான தென்ன தேன் சுரக்கும் அ அதில் தெறித்தே
சின்னலையும் டெ சிறப்பாக ஒடுது
அது பண்பலையி

வருகிறேன்.நாராயணனுக்கும், மகேந்திரனுக்கும் வலு சந்தோசம், தங்களின் விருப்பப்படி என்னை எதுவும் செய்யலாம், ஆட்டுவிக்கலாம். நான் பாதுகாப்பாக வசிப்ப தற்கு கூடு செய்து கொடுக்கப் போவதாக நாராயணன் ஊர் எல்லாம் அறிவித்துக் கொண்டு திரிகிறான். மகேந்திரன் எனது வளவுக்காரன் என்பதால் எனது காயங்களைக் காட்டி தான் போற வாற இடங்களி லெல்லாம் பிச்சை எடுத்துக் கொழுக்கிறான். அதைவிட மாமா, சித்தப்பா, பூட்டன் முறையானவர்களெல்லாம் புதுச்சொந்தம் கொண்டாடிக் கொண்டு வருகினம், என்னைத் தத்தெடுக்கிறதிலை அவைக்குள்ளை கடும் போட்டியும் நடக்குது. புதிய எசமானர்களின் கதையைக் கேட்க இந்த நிலையிலும் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. உங்கட பசப்பு வார்த்தைகளைக் கூறி மீண்டும் மீண்டும் ஏமாற்றாதேங்கோ, உங்கள் ஒருத்தரையும் நம்ப இனி நான் தயாரில்லை.என்னைக் காப்பாற்றுகின்ற சக்தியும் தகுதியும் உங்களிடமில்லை. மேலேயுள்ள ஒரு அபூர்வ சக்தியால் தான் அது முடியும். இப்ப நான் கொஞ்சம் ஒய்வெடுக்கப் போறன். சரியான வலியாய் இருக்கு. (அவ்வூ. பூெ.வூெ.)
வு மான்டூயடு
ள் எம்மூரின் சிறப்பைத்தான் பாடுது
சாலவார்கள் பள்ளி முன்றலிலே -
பாதை அருகினிலே-பெரும்
வாகை மரமொன்று
ததான ஊரின் வரலாற்றை சொல்லுது
னைசெய்த குசவை பாண்டியன்குளம்
மிருந்தது அழுத்கொலு மதுரங்குளம்
l o மூன்றுாரை இணைத்துத்தான்
க்கின்ற முழுதாக நாச்சியாதிவு
5|Tତ0T
ஏழு குடும்பங்களின்
சுகள் எச்சங்கள்தான் இன்று
தெரியும் ஆயிரத்து முன்னூராய்
அதிகரித்து இருக்குது
5T60T
தோடு வாழுந்தோட்டத்து அப்பாவின்
பச்சைக் கபுறடி
முன்னுாறு ஆண்டுகளை
五só历@T முழுமையாக கொண்டவையாம்
5) GTGT
லைகள் இன்னும் பல இருக்குது சொல்ல
ாடும் மீன்கள் என்னூரின் மான்மியத்தை
பரியலையும்
ல்
எப்படிச் சொல்வேன் கண் மூடி யோசித்தால்
நாச்சியாதீவு பர்வீன்
இதழ் 50

Page 212
அந்தனி ஜீவாவின் அரை
இலங்கைத்தமிழ் இலக்கியத்திற்கு மலையகம் புது ரத்தம் பாய்ச்சியது என பேராசிரியர் கைலாசபதி பெருமையுடன் குறிப்பிட்டார். மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர், மலையக இலக்கிய முன்னோடியும் முதல்வருமான தேசபக்தன் கோ.நடேசய்யர். இவரது இலக்கியப்பத்திரிகைப் பணி களுக்கு பெரும் இலக்கிய தொழிற்சங்கப் பத்திரிகைப் பணிகளுக்கு பெரும் துணையாகவும் தூண்டுகோலாக வும் விளங்கியவர் அவரது துணைவியார் திருமதி L560TTL deb6OLOUTT.
இதேபோல மலையக கவிதைத்துறைக்க முன்னோடியாக திகழ்ந்தவர் அருள் வாத்தி அப்துல் காதர் புலவர். மலையக இலக்கியத்தின் தோற்று வாயைப் பார்த்தால் நூற்றாண்டு பெருமைமிக்க வாய் மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களுடன் தொடர் கிறது. 1820களில் தான் மலையக மக்களின் வருகை யுடன் தொடங்குகிறது இவர்களின் ஆக்க இலக்கிய முயற்சிகள். இவர்கள் புலம் பெயர்ந்து வந்த ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் தொடர்கிறது. இவர்களின் இலக்கிய முயற்சிகள் ஆரம்ப காலங்களில் மேடைப் பாடல்களாக துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்கள் கூடி நிற்கும் இடங்களில் பாடி விற்பனை செய்யும் சிறுபாடல்களாக, பத்திரிகை களாக பிரசுரிக்கப்பட்டன.
1930களுக்கு பின்னர் அத்தகைய முயற்சி களுக்கு முன்னோடியாகவும், முதல்வராகவும் பிதா மகனாகவும் திகழ்கிறார் கோ.நடேசய்யர். 1950களுக்கு பிறகு மலையகத்தில் புதிய வேகம் பிறக் கத் தொடங்கியது. இதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை யாவார். 1960களுக்கு பின்னர் மலையக இலக்கியத் துறையில்
ஜீவநதி 2.
 
 

நாற்றாண்டு அனுபவங்கள்
புதிய பார்வையும், புதிய வீச்சும் உதய மாகியது. இங்கு வெளிவந்த தேசிய தினசரிகளான வீரகேசரி, தினகரன் மலையக எழுத்தாளர்களின் படைப் புக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
மலைநாட்டு நல் வாலிபர் சங்கம், மலையக இளைஞர் முன்னணி, மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், இலங்கை திராவிடர் கழக செயற்பாடுகள், மலைமுரசு போன்ற சஞ்சிகைகள் மலையக எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தன. மலையக எழுத்தாளர்களின் பணிகள் தொடர்ந்தன. "அறுபதுகளில் ஓர் ஆத்திரப் பரம்பரை தோன்றியது" எனக் குறிப்பிடும் இர.சிவலிங்கம் அறுபதுகளில் எழுச்சி படையாகப் புறப்பட்ட இளைஞர் பட்டாளத்திற்கு தலைமை தாங்கினார். அவருடன் இரட்டையராக இணைந்து செயல்பட்டவர் திருச்செந்தூரன். இவர்கள் இருவரும் கல்வி அறிவுட்டும் ஆசிரியப் பெருந்தகைகள் என்பதால் அவர்களின் பின்னால் இலக்கிய ஆர்வம் கொண்ட இளைஞர் கூட்டமே திரண்டது. அறுபதுகளில் ஏற்பட்ட இலக்கிய எழுச்சி எழுபதுகளில் மெளனமாகிவிட்டது. பெருந்தோட்டத் துறையிலிருந்த பலர் கொழும்புக்கு புலம்பெயர்ந்தனர். இன்னும் சிலர் உத்தியோகம் காரணமாக ஒதுங்கிக் கொண்டனர்.
மீண்டும் மலையக கலை இலக்கியத்துறையில் மறுமலர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாக என் இதயத்தில் குடி கொண்டி ருந்தது. அறுபதுகளின் இறுதியில் இடதுசாரி இயக்கமொன்றில் தோட்டத் தொழிலாளர்களுக்காக செயற்பட்ட தொழிற்சங்கத்தில் முழுநேர ஊழியம் செய்த காரணத்தால் மலையகத்திற்கு பல பகுதிகளுக்கு வானம் பாடியைப் போல சுற்றி சுற்றி வந்தேன். மலைமுகடுகளும், தேயிலைக்காடுகளும் என்னை மிகவும் கவர்ந்தன. என்னை தோட்ட தொழிலாளர்கள் அவர்களில் ஒருவனாக விரும்பி வரவேற்றனர். அந்த காலகட்டத்தில் மலையக இளைஞர் தளபதி என்று அழைக்கப்பட்ட இரசிவலிங்கத்தின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. பின்னர்
8. இதழ் 50

Page 213
மலையக மக்களின் இலக்கிய பேரரசரும் தொழிற்சங்க வாதியுமான மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப் பிள்ளையின் தொடர்பு எனக்கு மலையகம் பற்றியும் மலையக இலக்கியத்திற்கு ஆரம்பகால உரமிட்டவர்கள் பற்றிய தகவலையும் தந்தது. அது மாத்திரமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை திராவிடர் முன்னேற்றகழக பொதுச் செயலாளர் நாவலர் ஏ.இளஞ்செழியனின் தொடர்பு அவரது இயக்கத்தோழர்களின் உறவு மலையகத்தோடு நெருக்கமான உறவு ஏற்பட வழிவகுத்தது.
அகில இலங்கை ரீதியில் எழுத்தாளர்கள் மத்தியில் வீரியத்துடன் செயற்பட்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து செயற்பட்டேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி உனக்கு வழிகாட்டும் ஆசானாக அமைந்தார்.
1978ம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் நடத்திய மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக கலந்து கொண்டேன். நாடு திரும்பிய பின்னர் கண்டி மாநகரில் இலக்கிய ஆர்வம் கொண்டவர் களுடன் ஒன்று சேர்ந்து "மலையக கலை இலக்கியப் பேரவை" என்ற அமைப்பை உருவாக்கினோம். மலையகத்தின் மூத்த கவிஞரான சி.வி.வேலுப்பிள்ளை, "டெயிலி மிரர்” செய்தி பத்திரிகை அதிபர் பொ.கிருஷ்ண சுவாமி, இலக்கிய ஆர்வலர் எம்.ரெங்கநாதன் ஆகி யோரின் ஆலோசனையுடன் "மலையக கலை இலக்கியப் பேரவை கண்டியை தலைமையகமாகக் கொண்டு இயங்கத்தொடங்கியது.
மலையக கலை இலக்கியப் பேரவை கண்டி கேகாலை, கம்பளை, மாத்தளை, ஹட்டன், கொட்ட கலை, தல வாக் கலை, அக் கரப் பத்தனை, நுவரெலியா, அப்புத்தளை, பதுளை போன்ற இடங்களில் இலக்கியச் சந்திப்பு நூல் அறிமுகம், கருத்தரங்கு எழுத்துப் பயிற்சிட் பட்டறை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
பேரவை அறுபதுகளில் தீவிரமாக எழுதிய எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்து எழுதத் தூண்டியது இதன் விளைவாக பத்தாண்டுகளாக எழுத்துலகிலிருந்து விடுபட்டு வனவாசம் செய்த சாரல்நாடன் மீண்டும் புதிய உற்சாகத்துடன் எழுதத் தொடங்கினார். கவிஞர் குறிஞ்சி தென்னவன், பன்னாமத்து கவிராயர் புதிய உற்சாகத் துடன் எழுதினார்கள். இப்படி பழையவர் களுடன் புதியவர்களையும் ஊக்குவிப்பதில் பேரவை முன்னின்று செயற்பட்டது.
இளைஞ தலைமுறையைச் சேர்ந்த கவிஞர் எஸ்.முரளிதரன், வெளிமடை ரபீக் போன்றவர்களின் படைப்புக்கள் வியந்து பாராட்டப்பட்டன. இன்னும் பல புதியவர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். மலையக மக்கள் கவிமணியான சி.வி.வேலுப்பிள்ளை அவர் களின்
ஜீவநதி

அரைநூற்றாண்டு எழுத்துலக பணியினை கெளரவிக்கு முகமாக மலையக கலை இலக்கியப் பேரவை சி.வி. அவர்களை அவர் வாழும்போதே கெளரவித்து பெருமைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தது. அவரை கெளரவிக் கும் பொழுது அவரது படைப்புக்களைப் பற்றிய பேருரை ஒன்றிணை நிகழ்த்துமாறு பேராசிரியர் கைலாசபதியைக் கேட்டுக் கொண்டது.
1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு மாநகரில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.சிவகுருநாதன் தலைமையில் விழா எடுத்து கெளரவித்தது. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் சி.வி படைப்புகள் பற்றி சுமார் ஒரு மணிநேரம் பேருரை ஒன்றை நிகழ்த்தினார். நாவலாசிரியர் எஸ்.இளங்கீரன், பேராசிரியர் சபா.ஜெயராசா, வாழ்த் துரை வழங்க, கவிஞர்கள் பெரியசாமி, பானா, தங்கம் கவி வாழ்த்துப் பாடினார்கள், இலக்கிய ஆர்வலர் எம்.ரெங்கநாதன், கலைச்சங்கச் செயலாளர் கே.பாலச் சந்திரன் பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்தார்கள். பேராசிரியர் கைலாசபதி தந்த "மக்கள் கவிமணி" என்ற பெயர் பொறித்த வெள்ளி தட்டை வழங்கினார்.
1986ம் ஆண்டில் கலை இலக்கியப் பேரவை தனது ஐந்தாவது ஆண்டு விழாவை கண்டியில் ஒரு முழுநாள் விழாவாக கொண்டாடியது. காலை நிகழ்வு கண்டியில் சத்தியோதய கருத்தரங்கு மண்டபத்தில் நடந்தது. காலை நிகழ்வில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்ஜியும், மக்கள் எழுத்தாளர் முன்னணியின் பொதுச் செயலாளாருமான சிங்கள எழுத்தாளர் குணசேன வித்தானவும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். காலை நிகழ்வில் எழுத்தாளர் சாரல் நாடன் எழுதிய "சி.வி. சில சிந்தனைகள்” என்ற நூல் வெளியிடப்பட்டது. அதன் முதற்பிரதியை சி.வி.வேலுப் பிள்ளையின் துணைவியார் பெற்றுக் கொண்டார். அடுத்து பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவனான எஸ்.முரளிதரன் எழுதிய "தியாக யந்திரங்கள்" என்ற கவிதைத்தொகுதியை பேராசிரியர் சிவராசா வெளியிட கவிஞர் பன்னாமத்துக் கவிராயர் பெற்றுக் கொண்டார். பேரவையின் விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தவரும் "திருக்குறளை" சிங்கள மொழியில் மொழிபெயர்த்த மூதறிஞர் சார்ள்ஸ் சில்வா சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் பிரேம்ஜி ஞான சுந்தரனும், குணசேனவித்தானவும் கருத்துரை வழங்கினர். பதிலுரைக்கு பின்னர் கவிஞர் குறிஞ்சி தென்னவன் தலைமையில் கவியரங்கு நடைபெற்றது. கவியரங்கில் கவிஞர்கள் பன்னாமத்துக் கவிராயர், அல் அஸ்லிமத், மாத்தளை வடிவேலன், தேவதாசன் ஜெயசிங், மேமன்கவி, புசல்லாவ இஸ்மாலிக ஆகியோர் பங்கு பற்றினார்கள். மாலை, பொது நிகழ்வாக மத்தியமாகாண
இந்து மன்றத்தில் நடைபெற்றது.
(கி)தாடரும்)
இதழ் 50

Page 214
நல்லதோர் உலகம் செல்வோம் நலம்சேர் விதிகள் சமைத்தே இல்லை இதுபோல் உலகெனும் இறையாணர்மை நிலைபெற ஆள்வோம்
யுத்தமதை ஆளும் கொள்கை சித்தத்தில் ஊன்றா வண்ணம் புத்தர் யேசு அணர்னல் நபிகளர் போதம் ஏற்போம் புத்தியை குலைக்கும் பேத(ப்) பிணக்குகள் குரோதம் காழ்ப்பு மெத்த நல் வாழ்வை மாய்க்கும் மேதினி உயர்வை தீய்க்கும் நித்திய வழிகள் காட்டும் S நெறிகளை ஓம்பிக் காத்தால் சத்தியம் தர்மம் சாந்தி
திடும் செகத்தி கி 路 தளைத்திடும் செகத்தில் ஓங்
கொன்றிடும் கருவி காவும் 99 கொள்கையை அறவே நீக்கி மனிதத்தில் நேசம் மேவும் மாணர்பினை மனத்தில் பதிப்போம்
கல்லாமை நீங்கு மாயின் கல்வியும் ஓங்கும் எங்கும் இல்லாமை நீங்கு மாயின்
எல்லோரின் வாழ்வும் பொங்கும் C
கற்போம் பன்மொழிகள் யாவும் சொல்லிடும் மொழிகள் சேர்கலை கலாசாரம் குன்றாது வளர்ப்போம் உழுநிலப் பரப்பில் எல்லாம் 雄。 செழுநிலை ஆக்கிச் சேர்வள(க்) கொழிப்பினில் ஓங்கிச் செகத்தில் கொடும் பசி இடும்பை வெல்வோம்.
பொல்லாப்போர் இன ஒழிப்பு படுகொலைத்தனங்கள் போக்கி நல்யுகம் படைப்போம்மணர்ணில் நிலைகொள நீதி நேர்மை பொல்லாங்கு கொலைகள் இன்றேல் பொலிவுறும் ஞானம்: சீலம் நல்லதோர் உலகம் செய்வோம் நலம்சேர மனிதம் வாழ
என்னுள் தெரியும் தேசம் இது ܀ ܠ ܐ என்றுதான் அமையுமோ வாழ்வதற்கு வென்றுவருமோ காலமொன்று விழிகள் காணும் கனவும் இதே
அல்வாயூர் சி.சிவநேசன் ܕܠ ܐ
ஜீவநதி 2.

後
மூங்கில் தான் பிரசவிக்கின்றது மேடையோரம் புல்லாங்குழலையும் அடுப்போரம் பிட்டுக் குழலையும் நோகாமல் வேகாமல் பாடி பாராட்டு மழையில் நனைந்து தினமும் கைதட்டல்களில் களித்தபடி மேடையோரம் வாழும் புல்லாங்குழல. ' அடுத்தவர்கள் பசிதீர்க்க . ܓܠ ܐ அந்த சீதைபோல் தினமும் ܢܠ அடிக்கடி அக்னிப் பிரவேசித்தபடி அடுப்போரம் அழுது வடியும் பிட்டுக்குழல் சீதைக்கோ ஒரு தடவை தான் ( அக்கினிப் பிரவேசம் - ஆனால் பிட்டுக் குழலுக்கோ பாவம் அடிக்கடி அல்லவா அக்கினிப்பிரவேசம்.
ஒவ்வொரு முறையும் தீக்குளித்து மூன்றுமுறை கணிணிர் விட்டுக் கதறியழுதபின் தானி -நன்கு பிட்டு அவிந்ததாக குழலுக்குக் கொஞ்சம் கருணை காட்டும் உலகு . " என்னதானி சீதனக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் வந்தாலும் காலம்காலமாகப் பிட்டுக் குழல் போல் கணர்னிருடன் ஒவ்வொரு வரனும் கைவிட்டுப் போகும் போதும் அக்கினிப் பிரவேசம் செய்யும் ஏழைக் கன்னிகள்.
-% 합9
ஒரு கருவறைக் குழியில் தான் இருவேறு விதிகள் படைத்தான் அந்த ஆண்டவன். ஒரு உலகில் தான் இரு ஜாதிகள் விதித்தான். ஆம், எழை, பணக்காரன் எனும் இரு விதிகள்! காலங்கள் கழியக்கழிய நாகரிகங்களும் மாறும். ஆனால், ஒவ்வொரு காலங்களிலும் 藥 சீதனத்தின் அளவுகள் அல்லவா கூடிக் கொள்கிறது. பிட்டுக் குழலின் விதியைப்போல் ஏழைக் கன்னிகளின் விதிகளும்
மாறுகின்ற இவ்வுலகில்
மாற்றங்கள் இன்றி அக்ளிச்சி.ஆரையூர் தாமரை
- - -இதழ் 50

Page 215
கே.ஜி.மகாதேவா
நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை யின் சார்பில் கடந்தமாதம் இரண்டாம் திகதி நாமக்கல் நகரில் இலக்கிய உணர்வாளர்கள் மத்தியில் மிக சிறப்பாக நடைபெற்ற நான்காவது ஆண்டு 2012 இலக்கிய இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் , கல்விமான்களினால் முன்னெடுத்து வைக்கப்பட்ட உயரிய கருத்துக்கள் தமிழ்மொழிக்கு வளமும், புத்துயிரும் சேர்ப்பதாக அமைந்திருந்ததுடன் தமிழால் மட்டுமே தமிழன் அடையாளம் காணப்படுவான் என்றும், நாம் மட்டுமல்ல நமது குழந்தைகளும், குழந்தை களிடமும் தமிழில் பேசுவதை கண்டிப்பாக, அதுவும் உடனடியாக வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும் ஓங்கி ஒலித்த குரல்கள், மண்டபம் நிறைந்த ஆயிரக் கணக்கான தமிழ் உணர்வாளர்களைப் பரவசப்பட வைத்தது.
"ஆரம்"எனும் பழம்பெயரைக் கொண்டு, பின்னர் "ஆரைக்கல்" ஆகி, இப்பெயர் ராமக்கல்" எனும் வடிவம் பெற்று, இறுதியில் நாமக்கல் என்று நிரந்தர நாமம் கொண்டு விட்டது. ராமாயண காலத்தில், போரில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க ஆஞ்சநேயர் தனது இடது கையில் தூக்கி வந்த சஞ்சீவி (மருந்து) மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதியே, 65மீட்டர் உயரமும், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்ட நாமக்கல் மலை என்பது, நாமக்கல்லின் ஒரு வரலாற்றுச் சிறப்பாகும். இங்கு தான் 2008 இல் நடைபெற்ற குசின்னப்ப பாரதியின் இலக்கிய படைப்புக்களுக்கான அகில இந்திய கருத்தரங்கின் இறுதிநாளில் கு.சிபா அறக்கட்டளை உதயமானது.
விழா மலருக்கு திரட்டப்பட்ட நிதியில் செலவுகள் போக, மிகுதியாகவிருந்த ஐந்து இலட்சம் ரூபா பணமுடிப்பை விழாக்குழு சார்பில் குசின்னப்ப பாரதிக்கு விழாத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் வழங்கியபோது, கு.சி.பா. அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், சிறிது நேரத்தில், திடீரென பணமுடிப்பை வாங்கி விழாத்
 
 
 
 
 
 

தலைவரிடமே திருப்பிக் கொடுத்து அதற்கான விளக்கத்தை குசின்னப்பபாரதி அன்று வெளியிட்ட போது, விழாவில் கலந்து கொண்டவர்கள் மெய் சிலிர்த்துப்போனார்கள்.
"இந்த நிதி, கு.சிபா எனும் தனி நபருக்கு திரட்டப்பட்டதல்ல. எனது எழுத்துக்காக வகலிக்கப் பட்டது. இந்த நிதி முழுவதும் எழுத்துக்காகவே பயன் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதும் விழாக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். முடிவில், கு.சி.பா. பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் ஈட்டுத் தொகையை படைப்பாளிகளுக்கு பரிசாகக் கொடுத்து, சிறந்த படைப் பாளிகளை உருவாக்க வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. இதன் அறுவடையே கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வருடம் தோறும் காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி பரிசளிப்பு விழா நடைபெற்று வருகின்றது. இதுவரை நடைபெற்ற நான்கு பரிசளிப்பு விழாக்களிலும், இலங்கைத் தமிழர்களும், புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களும் அதிக அளவில் தெரிவாகி சிறப்பு விருதுகளுடன் பொற்கிழியும் வழங்கப் பட்டு கெளரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் நாளைய இலக்கிய முன்னோடிகள்
கு.சிபா அறக்கட்டளை விருது வழங்கும் விழாவுக்கு தலைமை வகித்த அறக்கட்டளைத் தலைவர் பொ. செல்வராஜ்: இலங்கைத்தழிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பை பெரிதும் பாராட்டி, இதற்கு ஒரு காரண கர்த்தாவாக செயற்பட்ட இலங்கை "கொழுந்து" சிற்றிதழ் ஆசிரியர் எஸ்.அந்தனிஜீவாவுக்கு நன்றி கூறி, புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்களே நாளைய தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று புகழாரம் சூட்டியபோது, கூட்டத்தினரிடையே மட்டுமல்ல மேடையிலும் பலத்த வரவேற்பு கரகோஷம் அதிர்ந்தது.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி.இராம சுப்ரமணியன் தனது சிறப்புரையில்: "தமிழரின் பழம் பெருமையை பேசிப்பேசி, நாட்களைக் கடத்தாமல், தமிழ்மொழிக்கு நாளை ஏற்படப்போகும் பெரும் ஆபத்தை தவிர்க்க இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும். நாள்தோறும் புதுப்புது தமிழ்சொற்களை உருவாக்க வேண்டும். இது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நாளேடுகள், வெறுமனே செய்திகள் விமர்சனங் களுடன் நின்றுவிடாமல், மொழி வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான பணியை தினமும் செய்ய வேண்டும். தமிழர்களிடையே இன்று வழக்கத்தில் மறைந்துபோன மயங்கொலிச் சொற்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும். (எந்தச் சொல் ஒருவரை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறதோ அதை மயங்கொலிச் சொல் என்று கூறுவர்.) உலகம் தட்டையானது என்று மேலை நாட்டினர் கருதிக் கொண்டிருந்த எட்டாம் நூற்றாண்டில்

Page 216
கம்பன் பூமிப்பந்தை ககன முட்டை என்று கூறியுள்ளார். "மிராஜ்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் கானல் நீரை பாரதியார் காட்சிப்பிழை என்றும் தோற்ற மயக்கம் என்றும் புதிய தமிழ்ச்சொல்லில் குறிப்பிட்டார். இவ்வாறு தமிழ், புதிய பொலிவை புதுச் சொற்களால் பெற வேண்டும். நாளேடுகளின் பார்வை திரும்பட்டும். தமிழ் கலைக் களஞ்சியம் 1966-க்குப்பின்னர் வெளியிடப்பட வில்லை. பல்கலைக்கழகங்கள் இது குறித்து ஏன் சிந்திக்கவில்லை? என்று நெற்றிக் கண்ணைத் திறந்ததும், மேடையிலிருந்த "தினமணி" ஆசிரியர் கே.வைத்திய நாதன் மட்டுமல்ல, பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முத்துச்செழியனும் சில நிமிடங்கள் சிந்தனையில் மூழ்கிவிட்டனர்.
சிந்திக்க தூண்டிய "தினமணி ஆசிரியர் கருத்து
அறக்கட்டளையின் முதன்மை விருது மற்றும் ரூபா 15 இலட்சம் பொற்கிழி பெற்றுக் கொண்ட "தினமணி" ஆசிரியர் கே.வைத்தியநாதன் தனது ஏற்புரையில்; நீதியரசர் குறிப்பிட்டது போல், புதிய தமிழ் சொற்களை ஆய்ந்து தருகின்ற பணியை பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டும் என்று கருதி பத்திரிகைகள் அதில் முனைப்புடன் இறங்குவோம். புதிய தமிழ் சொற்கள் இனிமேல் "தினமணி"யில் தொடரும்" என்று சத்தியவாக்கு கொடுத்து: "தமிழர்கள் எங்கு வாழ்ந் தாலும் வீட்டுமொழி தமிழ் மட்டும் தான். தமிழ்க் குழந்தைகள் எந்தமொழி கற்றாலும், தாய்மொழியாம் தமிழ் மொழியில் பேசுவதை கட்டாயமாக்க வேண்டும். தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொண்டால் மட்டுமே, தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று காப்பாற்ற முடியும்" என்று: "தமிழா விழி, எழு. ஒவ்வொரு நாளும் தமிழ்ச்சிறப்பாக இருக்கட்டும்" என உணர்வுகளைக் கொட்டினார். உலக தமிழர்களை ஒன்றிணைக்க, டில்லி தமிழ்ச்சங்கமும் "தினமணி"யும் கூட்டுச் சேர்ந்து கடந்த செப்டெம்பர் மாதம் 15,16ம்திகதிகளில் இந்திய தலைநகரில் அனைத்து இந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டை வெற்றிகரமாக நடாத்திய போது தமிழ்க்குழந்தைகளை கண்டிப்பாக தமிழில் பேசவைக்க வேண்டியதற்கு, தமிழர்தம் மொழித் தூக்கத்தை கலைத்து, நாளைய நமது மொழிப் பண்பாட்டைப்பற்றியும் சிந்தியுங்கள் என்று "தினமணி" ஆசிரியர் கே.வைத்தியநாதன் முழக்கமிட்டு, அந்தச் செய்தி தமிழகத்தில் தமிழர் தம் செவிப்பறையை தட்டியநிலையில், கடந்த மாதம் நாமக்கல் லில் நடைபெற்ற கு.சிபா அறக்கட்டளை விருது வழங்கும் விழாவிலும் கே. வைத்தியநாதன் மீண்டும் ஓங்கி குரல் கொடுத்திருப்பதன் மூலம் நமது தமிழ் மொழியை நோக்கி எத்தன்மையான ஆபத்து மேகம் சூழ்ந்திருக் கிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக் கிறார்! வருமுன் காப்போம், தனித்தமிழில் சந்திப்போம், உணர்வுகள் மெய்ப்பட வேண்டும்.!
ஜீவநதி

மீண்டும் தமிழ்க் கலைக்களஞ்சியம்: பல்கலைக்கழக துணைவேந்தர் உறுதி
நீதியரசர் வி.இராமசுப்ரமணியனின் பல்கலைக்கழகங்கள் மீதான குற்றச் சாட்டுக்கு, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முத்துச் செழியன்: "தமிழ்க் கலைக்களஞ்சிய தொகுப்புகள் 1966ம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்படவில்லை என்று நீதியரசர் கவலை தெரிவித்தார். நானும் வருத்தப்படுகிறேன். இனிமேல் எந்தத் தவறும் நிகழாத வகையில் தமிழை வளர்க்கும் பணியில் பல்கலைக் கழகங்கள் முனைப்புடன் பணியாற்றும். தமிழ்க் களஞ்சியத்தின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியாகும்." என்று உறுதியளித்ததும் பலத்த கரகோஷம் கேட்டது.
ஜீவநதிக்கு விடைத்த இலக்கிய அங்கீகாரம்
எல்லா நதிகளும் கடலில் சேர்வது போல? இலங்கையின் வடக்கே அல்வாயிலிருந்து கடந்த நாற்பத்தொன்பது மாதங்களாகப் பெருக்கெடுத்த "ஜீவநதி, கு.சி.பா. அறக்கட்டளையின் அங்கீகாரத்தின் மூலம் தனது ஐம்பதாவது "அகவையில் அடி எடுத்து வைத்து, தமிழ் இலக்கியப் பெருங் கடலில் சங்கமித்திருக்கிறது.
கு.சி.பா.அறக்கட்டளை. இவ்வருடம்தான் சிற்றிதழுக்கான பரிசை அறிமுகப்படுத்திய நிலையில், "ஜீவநதி எடுத்த எடுப்பிலேயே விருதினையும், ரூபா 10000 பொற்கிழியையும் தட்டிச் சென்றிருக்கிறது. நேற்றுப் பெய்த மழைக்கு முளைக்கும், தோன்றி மறையும் "காளான்களை கணக்கிலிருந்து தவிர்த்தால் தமிழ் நாட்டில் இருபத்து ஐந்துக்கு குறையாத சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்கிறது
ஒரு மதிப்பீடு. தவிர, இலங்கை, புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் வெளியாகும் சிற்றிதழ்கள் எண்ணிக்கை நிச்சயம் சிகர்டதைத் தொட்டு விடும் கலை, இலக்கிய மாத இதழான "ஜீவநதி கு.சி.பா. அறக்கட்டளையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தனது சர்வதேசப் பார்வையைப் பதிவு செய்து விட்டது.
இதழ் 50
ܒ݁ܶܢ

Page 217
பொலிகை ஜெயா
வாய்க்கு எட்டா
மீன் குழம்
நாக்கு செத்துப் போச்சு, தினமும் உப்பு சப்பு, ருசி இல்லாது சாப்பிட்டு மீண்டும் "குழம்பு வைச்சு சாப்பிட்டால் எப்படி இருக்கும் என தன் மனமுள் எண்ணிவாறு மனைவி பாறுவதத்தை ஒருதரம் மீன் குழம்பு ஆக்கித்தருமாறு கேட்டான் கணபதி.
ஆமா காசு நிறைய இறங்குப் பெட்டிக்குள் பூட்டிக் கிடக்கு, அதை திறந்து எடுத்துப்போய் நான் மானாண்டி சந்தையில் மீன் வாங்கி வந்து நாக்குக்கு ருஷியா சமைத்து போட என்றவாறு சினந்தாள் பாறுவதம். மனைவி பாறுவதத்தின் வசை கணபதிக்கு உள்ளூர கோபத்தை உண்டாக்கியது. இருந்த போதும் அதை வெளிக்காட்டாது தமது வறுமை நிலையில் மீன் குழம்புக்கு ஆசைப்படுவது பேராசை என தெரிந்து கொண்டு அமைதியானான்.
கணபதி காலை, மாலை "கள்" இறக்குவான். காலைச் சீவலை ஒன்பது மணிக்கு முடித்து விட்டு, அக்கள்ளை கொண்டு பொய் கோப்பரேசனில் கொடுக்கும் படி தனது உற்ற நண்பன் வீரகத்தியிடம் கொடுத்து விட்டு அவசர அவசரமாக திண்டது பாதி, தின்னாதது பாதியாக தச்சு வேலைக்கு புறப்பட்டு விடுவான். தச்சு வேலையை 5 மணிக்கு முடித்து விட்டு மீண்டும் அதே அவசரமாக மாலைச்சீவலையும் முடித்து தவறனைக்கு தானே கள்ளை கொண்டுபோய் கொடுப்பான்.
கணபதியும், வீரகத்தியும் சிறுவயதிலிருந்தே கொற்றாவத்தை ஆரம்பப்பள்ளியில் படித்தவர்கள். படிப்பு மக்கு மூளைக்குள் ஏறாததால் சீவல் தொழிலில் ஈடுபட தொடங்கினர். அதேநேரம் வீரகத்தி குடும்பம் வறுமை யில் வாடும்போது கணபதி தனது விடா முயற்சி, கெட்டித் தனத்தால் இரு தொழில்கள் செய்து சம்பாதிக்கும் பணத்தில் அப்பப்போ வீரகத்திகுடும்பத்திற்கு கொடுத்து உதவுவார்.
இதனால் வீரகத்தி கணபதியின் கள்ளையும் தனது ஒட்டைச் சைக்கிளில் மிதித்துக் கொண்டு தவறனைக்கு கொண்டு செல்வார்.
கணபதி சம்பாதிக்கும் பணத்தை அப்படியே மனைவி பாறுவதத்திடம் கொண்டுவந்து கொடுத்து விடுவார். அவள் பிள்ளைகள் இருவரின் பள்ளி செலவு, உடுதுணி, போக்குவரத்து, வீட்டுச் செலவு என
ஜீவநதி

அனைத்தையும் கவனிப் பாள். சுட்டெரிக்கும் வெய்யிலுக்குள் காலுக்கு செருப்பில்லாது, தலைக்கு சேலைத்தலைப்பால் முக்காடு போட்டபடி, வேர்த்து விருவிருத்து திக்கம் மானாண்டி சந்தைக்கு சென்று மீன், அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், வெண்காயம், காய்கறி எல்லாம் வாங்கி வந்து குடும்பத்திற்கு வாய்க்குருசியாக சமைத்து போடுவாள் பாறுவதம்.
அவள் சமையலில் அவள் வைக்கும் மீன் குழம்பு மீது தான் கணபதிக்கு அலாதிப் பிரியம், "மூக்கு நாசித் துவாரத்தால் மணந்து மணந்து நாக்கைச் சுழட்டிச் சுழட்டி ஒரு பிடி பிடிப்பார்."
அவர் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து வாரத்தில் இரு தடவை கொத்தமல்லி, பூடு, சீரகம், வெந்தயம், சின்னவெங்காயம், கராம்பு, இஞ்சி, பாதாம்பருப்பு எல்லாவற்றையும், பலகையில் கால்கள் இரண்டையும் அகட்டி இருந்தவாறு அம்மியில் களியாக அரைத்து மணக்கமணக்க ஆக்குவாள்மீன்குழம்பு,
ஆனால் இப்போது அந்த நிலமைமாறி ஆறுமாதங்கள் கடந்தோடி விட்டது. கட்டடமொன்றில் கோப்பிச வேலை செய்யும்போது கால்கள் இடறுப்பட்டு கீழே விழுந்தபோது "முழங்காலின் முட்டி உடைந்து விட்டது" கூட வேலை செய்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று நான்கு மாதங்கள்
இருந்தும் கால்கள் இயங்க மறுத்து விட்டது. இதனால்
நொண்டியாக வீட்டிலேயே முடங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. கள்ளு கோப்பரேஷன் அவனது சம்பளத்தில் பிடித்த பணத்துடன் தாமும் சிறு தொகையைப் போட்டு அவனிடம் கொடுத்தது. அப்பணம் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை உதவியது.
வீட்டிற்கு வந்ததும் பாறுவதம் ஒதுக்கி வைத்திருந்த பணமும் வைத்தியம் மற்றும் குடும்பச் செலவில் கரைந்து போனது. ஈற்றில் சாப்பாட்டுக்கே பிறர் கையேந்தும் நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டது. அக்கம் பக்கம் இவர்களைக் கண்டாலே ஒதுங்கிப் போகும் நிலை காணப்பட்டது. வறுமை! அக்கம்" பக்கத்தவர்களது மனிதத்தை தூர விலக்கி விட்டது.
தற்போது குடும்பத்தின் சுமை பூராகவும் பாறு
இதழ் 50

Page 218
வதத்தின் தலையில், எனவே அவள் தோட்டவேலை, மண்சுமப்பது, பன்னை வேலை என அவள் அனைத்தை யும் செய்யத்தொடங்கினாள். பெண்கூலிகளுக்கு 100 தொடக்கம் 200 ரூபா வரை மட்டுமே நாளாந்தம் கூலி கிடைக்கும். இதை வைத்து ஒரு கிலோ அரிசி, மீன் கூட வாங்க முடியாது. பிள்ளைகளுக்கு வயிறு நிறைய சமைத்துப்போட்டு பல நாட்களாகி விட்டது. புதிய உடுப்பு வாங்க வேணும் தீபாவளிக்காவது பிள்ளைகளுக்கு வாய்க்கு ருசியாக மீன் குழம்பு வைக்க வேண்டும். வயிறு நிறையும் படி சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காசுக்கு என்ன செய்வது என்ற மனக் குழப்பத்தில்தவித்தாள். சின்னவனின் ரியூசன்காசு வேறு.
சீட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரம் சிலவற்றை எடுத்துக் கொண்டு பருத்தித்துறை சென்று இரு பித்தளைப் பாத்திரம் விற்கும் முஸ்லிம் சகோதரர்கள் கடைகளில் முடிந்தவரை பேரம் பேசி வெள்ளிப் பாத்திரங்கள். மீன், அரிசி, புளி, மிளகாய், காய்கறி, கழுசான், சட்டை என உருமாற்றம் பெற்றது.
கணபதி இன்றாவது மணக்க மணக்க மீன் குழம்பு சாப்பிடலாம் என நாவுற மனைவி வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பருத்தித்துறையில் இருந்து வீடு திரும்பியவள் கொண்டு வந்த பொருட் களை வீட்டுத்தாவாரத்தில் வைத்து விட்டு அவசர அவசர மாக மீன் பழுது பட முன் உடுப்பை மாற்றி, வீட்டின் பின்புறம் படர்ந்து நிற்கும் செம்பாட்டு மாவர நிழலில் மீனை நன்றாக செதில் அகற்றி அளவான துண்டுகளாக வெட்டி, வெட்டிய துண்டுகளை நன்றாகக் கழுவி, கழுவிய மீன் செதில் உள்ள நீரை வேலியோரத்தில் பூவரசிற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் கறிவேப்பம் கண்டின் அடியில் ஊற்றிய பின் குசினிக்குள் எடுத்துச் சென்றாள். வழமையை விட பெரிய சட்டியாக அடுப்பில் வைத்து பனம் மட்டையை நன்றாக இடுக்கி பற்ற வைத்து, புளியை போதுமான அளவு கரைத்து, உப்பு, கறி வேப்பிலை, பால், சீரகத்துடன் கொதிக்க விட்டு ஏலவே அரைத்த, அரைத்தகூட்டை கொதிச்சட்டியினுள் போட்டு நன்றாக துலாவி கதகதவென குழம்பு வந்தவுடன் மீன் துண்டுகளைப்போட்டு குழம்பு ஆக்கினாள் "மீன் குழம்பு" வாசனை வீட்டுப் படலை வரை மணந்தது.
கணபதி குழம்பு வாசனையில் "இன்று மீன் குழம்பு, இன்று மீன் குழம்பு" எனப் பரவசமடைந்தான்.
புதுக்குடியிருப்பு புதிய மாத்தளணில் இருக்கும் பாறுவதத்தின் பெற்றோர் மருமகன் காலுடைந்தபோது அவர்களால் உடனடியாக பார்க்க வரமுடியவில்லை. அன்று தீபாவளி சொல்லாமல் கொள்ளாமல் பெரிய பலாப்பழத்துடன் வேறு உறவுகள் சிலருடனும் கொற்றா வத்தையிலிருக்கும் மகள் பாறுவதம் வீட்டிற்கு வந்து நின்றனர்.
பாறுவதம் பெற்றோர் உறவினரை உட்கார
ஜீவநதி

வைத்து உணவு பரிமாறுவதை கணபதி பாத்தவாறே யிருந்தான். அவள் சோற்றைப்போட்டு சோற்றின் மேல் ஆவி பறக்க மீனோடு குழம்பை ஊற்றி, அருகில் கத்தரிப் பொரியலையும் வைத்தாள்.
நல்ல வெயிலின் ஊடாக பயணம் வந்த வர்கள் பசிதீர மீன் குழம்பை குழைத்தக் குழைத்து ஒரு பிடி பிடித்தனர். சோற்றுப் பானையும், குழம்புச் சட்டியும் காலியானது வந்தவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வயிறு நிரம்பியது.
ஆனால் பாறுவதம், கணபதி இருவர் வயிறும் மீன் குழம்புவாசத்துடன் காலியாகவே இருந்தன. ப
ஆழ்ந்துறங்கும் அர்த்த சாமத்தில் அடுக்கடுக்காய் தோள் தட்டி அருண்டெழுந்து ஒட வைத்த எறிகணைகள் இன்றில்லை.
ஆனாலும்,
தீர்வற்ற தீவுதனில் தொடர்ந்திடும் அவலங்களும் எல்லையில்லாத துயரங்களும் எப்போதும் தொடர் கதை தான்.
ஒசையில்லா ஆயுதங்கள் ஒடுக்கியெம்மை வைத்திருக்க ஒரு பொழுதும் நிம்மதியின்றி ஒன்றிற்கும் வக்கின்றி ஒப்பாரி தொடர்வதுவாய்.
மர்மமனிதர் பயம் காட்ட
மாய'வான்" ஆட்கடத்த
மண்ணிற்கும் உரிமையின்றி \ <= மரணபயம் நீங்கிடாமல் 3.
மாரடிக்கும் நிலையிங்கு!
எழுவோம் என நிமிர்கையில் எப்போதும் எங்கேயும் வீழ்த்திடவே எண்திசையும் எப்போது நிம்மதியாய் இம்மண்ணில் மீண்டெழுவோம்?
ச. முருகானந்தன்
இதழ் 50

Page 219
வெற்றி துஷ்யந்தன்
தமிழக பயண அனு தவிர்க்கமுடியாத ப
தமிழகத்தின் பிரபல நாவலாசிரியர் குசின்னப்பாரதி ஏலவே ஈழத்து எழுத்துச் சூழலுக்கு பழக்கப்பட்ட ஒரு நாமம்தான் அவருடைய படைப்பின் கனதி, அண்மைக்கால இலங்கை விஜயங்கள் என அவர் ஏலவே ஈழத்துப் படைப்புச் சூழலுக்கு நன்கு பரீட்சயமான ஒருவரே ஆனாலும் இவை எல்லாவற்றையும் மீறி கடந்த நான்கு ஆண்டுகளாக உலகத்தமிழ் படைப்பு நூல்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் முகமாக கு.சின்னப் பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சார்பாக பல விருதுகளை வழங்குகின்ற உயரிய பணியையும் செய்துவருகின்றார். இவ்வாறு கடந்த மூன்று வருடங்களாக தனது அறக்கட்டளை சார்பாக விருதுகளை வழங்கிவரும் இவ் நிதியத்திடமிருந்து தான் 15.03.2012 இல் ஜீவநதியின் பிரதம ஆசிரியர் க.பரணிதரனுக்கு அந்தச் செய்தி வந்து சேர்ந்தது தபால் மூலமாக 2011ம் ஆண்டுக்கான மிகச்சிறந்த சஞ்சிகையாக "ஜீவநதி" தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இவ் விருது விழா 02.10.2012இல் தமிழ்நாடு நாமக்கல்லில் நடை பெறுகிறது என்றும் இந்தச் செய்தி விரிவடைந்து சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த சந்தோச அலைகளும் பரணியின் மனதைவருடிச் சென்றது அன்றைய பொழுதில் என்னோடும் அந்த சந்தோசச் செய்தியை மிகப்பூரிப்புடன் பகிர்ந்து கொண்டார். முகத்தில் எவ்வளவு சந்தோசம்? இருக்காதா ஒரு இலக்கிய பிரவாகத்திற்காக சிறு வயதிலேயே தன்னை அர்பணித்து பணியாற்றும் அந்தப் பக்குவம் எத்தனையோ நெருக்குவாரங்கள் என இத்தனைக்கு மத்தியிலும் இலக்கியத்தின் மீது கொண்ட அதீத மோகம் என எல்லாவற்றையும் தனக்குள் வைத்து பணியாற்றும் "ஜீவநதியின் ஊற்று க.பரணிதரன் அந்தச் செய்தியை கூறியபோது உண்மையில் மனம் ஒரு முறை அடைமழையில் நனைந்து தான் பேயிற்று. இந்த ஐந்து வருடங்கள் எத்தனை சாதனைகள் ஜீவநதியிடத்தே உண்மையில் பூரிப்புத்தான். நாமக்கல்லில் தான் விழா என்ன துஷி போறது தானே? என்று கேட்டபொழுதில் "இன்பத்தேன் வந்து பாய்ந்தது தான் காதில் ஒருதரம்." காரணம் இலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கிய காலம் முதலாய் இந்தியா செல்லவேண்டும் என்பது எம்மிருவ ரினதும் அவா. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு 2010 இல் "ஜீவநதி குற்றாலத்தில் இடம் பெற்ற
ஜீவநதி
 

பவங்கள் லவற்றை முன்வைத்து
"இலக்கியமணா” என்ற உயரிய விருதினை பெற்றுக் கொள்வதற்கு கடவுச்சீட்டை எடுத்து கொழும்புவரை சென்று அப்போதைய சூழ்நிலையில் விசா கிடைக்கப் பெறாமையால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி யிருந்தோம். இம்முறை இந்த சந்தர்ப்பத்தை தவறவிடும் உத்தேசம் எம் இருவருக்கும் இல்லை உடனடியாகமுடிவு செய்தோம் இம்முறை நாம் நிச்சயம் தமிழகம் செல்வது என்று இம்முறை எம்மோடு பரணியின் பாரியார் விஷ்ணு வர்த்தினியும் தமிழகப் பயணத்தில் இணைந்து கொண்டார். மூவருமாக யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலய காரியத்தில் சென்று விசாவிற்காக எமது படிவங்களை சமர்ப்பித்திருந்தோம் ஐந்து நாட்கள் கழித்து வரும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தோம். இந்த ஐந்து தினங்களும் என் வேண்டுதல் எல்லாம் "அப்பனே எப்படியாவது கிடைச்சிடனும்" என்பதாகத் தான் இருந்தது வேண்டுதல் நிறைவேறியது போல சரியான காலத்தில் விசா கிடைத்தமையால் உடனடியாக விமானச் சீட்டையும் யாழிலேயே பெற்றுக் கொள்ள முடிந்திருந்தது. அதன்படி 30.09.2012 12:40 இற்கு இந்தியன் எயர் லைன்ஸ் விமானத்தில் எமது பயணம் என விமானப்பயணச் சீட்டு எமக்கு அறிவுறுத்தியது. கையில் விமானச் சீட்டு கிடைத்தது முதலாக எத்தனை முறை அதை விரிப்பதும் மூடுவதுமாக பார்த்திருப்பேன் மீண்டும் மீண்டுமாக பூரிப்பில்,
அதன்படி கொழும்பில் சில வேலைகள் இருந்த தனால் நான் 28ஆம் திகதியும், பரணியும் விஷ்ணுவும் 29ஆம் திகதி கொழும்புக்கு சென்றிருந்தோம். 30ஆம் திகதிகாலை நான் தங்கியிருந்தது எனது நண்பர், எழுத்தாளர் பி.அமல்ராஜ் அறையில். வெள்ளவத்தையில் பயணப் பொதிகளுடன் ஆயத்தமானேன். நண்பர் அமல்ராஜ் இன் உதவியுடன் மீற்றர் டக்ஸி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி மூவருமாக விமான நிலையத்தை நோக்கி பயணிக்க ஆரம்பமானோம். உள்ளூர் விமான சேவையில் பயணித்திருந்தாலும் முதன் முறையாக வெளிநாடு ஒன்றிற்கு செல்வது எனக்கும், விஷ்ணுவிற்கும் இதுவே முதல் தரம் ஆகையால் என்னவோ எனக்குள் விமானம் குறித்த எதிர்பார்ப்பும், விமானநிலையம் குறித்த நினைப்பும், செல்லும் வீதிகளில் மனத்தில் நிறையத் தொடங்கின. சரியாக 10.30 மணியளவில் விமான
இதழ் 50

Page 220
நிலையத்தை அடைந்தோம் உண்மையில் எழில் கொஞ்சும் மரங்கள், பூக்கள் என்பன வாயிலை அலங்கரித்துக் கொண்டிருந்தன. எத்தனையோ பல விதமான கம்பிகளாலான பாதுகாப்பு, யாருமே நுழைய முடியாதபடி சுற்றுவட்டாரம் அமைக்கப்பட்டி ருந்தது. தனியாக பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பார்த்தும், கேள்விபட்டிருந்தும் இருந்த எனக்கு விமான நிலைய பாதுகாப்பு அரணை முதன்முறை யாக பார்த்த போது வாயிலில் மனம் உண்மையில் இனம் புரியாத ஏதோ ஒன்றை நினைத்து பெருமூச்சை மாத்திரம் விட்டுக் கொண்டிருந்தது. உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி பிரதான வாயிலை அடைந்தோம். நேராக சென்று விமானநிலைய பணிகள் அனைத்தையும் முடித்து சரியாக 12 மணிக்கு வாயில் இலக்கம் 14 இற்கு அனுப்பப்பட்டோம். பல விமானங்கள் வந்து இறங்குவதும், செல்வதுமாக இருந்தன. சரியாக 12.30 இற்கு விமானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டோம் விமானம் புறப்படத்தயாரானது பல இந்தியர்கள் எம்மோடு பயணம் செய்திருந்தனர். வானில் பறந்துகொண்டிருந்தோம் சில உணவுப் பண்டங்கள் பரிமாற்றப்பட்டன சரியாக ஒரு மணித்தியாலங்களில் 01.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை அடைந்திருந்தோம். முதல் முதலாக தமிழகம் வந்திருக் கின்றோம் சென்னை விமான நிலையத்திலேயே எனது பார்வை ஆரம்பமானது தமிழகம்மீது.
விமான நிலைய நடைமுறைகள் எல்லாவற்றை யும் முடித்து வெளியே சென்றோம். ஏலவே தொடர்பு கொண்டு எம்மை பொறுப்பேற்க ஒருவரை பரணியின் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். சரியாக அடையாளம் கண்டு கொண்டு எம்மை பொறுப்பேற்ற அவர் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு எமக்காக ஒதுக்கப் பட்ட இடம் நோக்கி விரைவில் சென்றோம். வாகனத்தில் ஏறிய பொழுது முதலாய் சிங்காரச் சென்னையை என் கண்கள் தரிசிக்க ஆரம்பித்தன.
வாகனப் பிரயாணங்களில் திரையிசை பாடல் களை மாத்திரம் கேட்டுப் பயணித்த எமக்கு சற்று எதிர் பார்க்காத வகையில் அந்தவாகனத்தில் "நீ விழிமூடி மறைந்தாயோ முத்துக்குமாரா" செவியில் இதமாய் ஒலிக்கத் தொடங்கியது. முதலில் முத்துக்குமாரா என்ற போது ஏதாவது முருகன் பாடலாக இருக்கும் என்ற எனது எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் அதன் பின்னர் வந்த வசனங்கள் தான் அவை ஈழத்தமிழினத்திற்காக தீயில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட முத்துக்குமரனின் நினை வலைகள் குறித்த பாடல் என உணரமுடிந்தது. நாங்கள் சென்னை வளரசரவாக்கத்திலுள்ள ருநீதேவி குப்பத்தில் உள்ள ஒரு வீடு ஒன்றில் தங்கவைக்கப்பட்டோம். மொட்டை மாடியில் நின்று ஒரு தரம் சுற்றுப்புறத்தை அவதானிக்கின்றேன் எங்கு பார்த்தாலும் அம்மா, வைகோ, கலைஞர், தளபதி, கேப்டன் என அரசியல் பிரபலங்களின் நாமங்களால் நகரத்து சுவர்கள் வர்ணம் பூசப்பட்டிருந்தது. நாம் தமிழகத்தில் நிற்கப் போவது
ஜீவநதி
|-

நான்கு நாட்கள் மட்டுமே ஆகவே கிடைக்கின்ற ஒவ்வொரு நிமிடங்களும் பிரயோசனப் படுத்தப்பட வேண்டும் என்று ஏலவே போடப் பட்டதிட்டத்தின் படி முப்பதாம் திகதி மாலை எம்மை கூட்டவந்த அண்ணனின் அறிவுறுத்தல் படி வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆட்டோ ஒன்றில் நண்பர் ஒருவரை சந்திக்கும் முகமாக T. நகருக்கு செல்ல ஆயத்தமானோம். அங்கு உள்ள சைவ உணவகத்தில் உணவை அருந்தி அதன் பின் வீதியில் நடக்க ஆயத்தமானோம். அப்பாடா என்ன ஒரு கூட்டம் நம்மூர் வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கரையை போலான கூட்ட நெரிசல் எதுவுமே புரியவில்லை மேலே அண்ணார்ந்து பார்த்தபோதுதான் வானை தொடும் கட்டடங்கள் என எல்லாமே இருந்தன.
சரவணாஸ் செல்வரத்தினம், ஜெயச்சந்திரன், லலிதா ஜீவல்லறி, ஆரெம்கேவி என அத்தனை ஜவுளிக் கடைகளும் உள்ள தெருஅதுதான். சில்க் பொருட்களை
கொள்வனவு செய்யும் முகமாக மூவரும் சரவணாஸ் ஜவுளிக் கடையினுள் உள்நுழைந்தோம். கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இந்தியா என்பது சேலைகள், ஜவுளிகள் என்வற்றை மலிவாக பெற்றுக் கொள்ளலாம் என்ற புளித்துபோன வாசகங்கள் என்னுள் நினைவுகளாய் படர்ந்தன. எங்கு பார்த்தாலும் வழக்கம் போல பெண்கள் புடவைகள், சுடிதார் என கொள்வனவு செய்து கொண்டிருந்தனர். விதம் விதமாக கண்கவர் நிறங்களின் புடவைகள் அங்குமிங்குமாய் சிரித்தபடி இருந்தன. சன்டிவியில் வரும் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் அள்ளிக்கோ" என்ற விளம்பரத் தில் வரும் சினேகா ஒரு முறை கண்களுக்குள் விம்பமாய் படரத்தொடங்கினாள். தேவையானவற்றை மூவரும் கொள்வனவு செய்து கொண்டு மீண்டும் ஆட்டோ ஒன்றில் வளசரவாக்கத்திற்கு சென்றோம்.
இரவு படரத்தொடங்கியது முதன் முறையாக வீட்டை விட்டு வெளிநாடு ஒன்றில் தங்கும் இந்த இரவு தூக்கம் வருவதாக இல்லை ஒருவாறு கண்களை இறுக்கமூடி தூங்கிக் கொண்டேன் புலர்ந்தது காலை,
தமிழகப் பயணத்தில் மிக முக்கியமான இருவரை சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்டகால
H இதழ் 50
نے
ෆි.
ܓܠ̈ܐ

Page 221
அவா. அதில் ஒருவர் வித்தகக்கவிஞர் பா.விஜய், மற்றவர்
கவிஞர் யுகபாரதி. நான் எழுதத் தொடங்கிய காலம் முதலாய் நான் விரும்பி படிக்கும் எழுத்து, மனதுக்கு மிகவும் பிடித்தமான ஒருவர், நான் கேட்டவுடனேயே எதவித மறுப்புமின்றி என் இரண்டாவது நூலுக்கு வாழ்த்துரை எழுதித்தந்தவர் அண்ணன் பா.விஜய் ஆகவே மேற்குறித்த காரணங்களாலும் எனக்கும் அவருக்கும்
இடையே நெருக்கமான ஒரு தொலைபேசி வழி தொடர்பு உண்டு. நான் இங்கு வருவதற்கு முதலே அவருக்கு அறிவித்துவிட்டேன் உங்களை சந்திக்கவேண்டும் என. அன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் 'தம்பி 11 மணிக்கு வாங்க என தனது விலாசத்தை தந்திருந்தார். எனவே அன்றைய நாள் 11 மணிக்கு பா.விஜய் அவர்களை சந்திப்பதற்கென நேரம் என எமது நேர சூசியில் ஒதுக்கிக் கொண்டோம்.
இரண்டாவதாக நான் விரும்பிப்படிக்கும் கவிஞர் யுகபாராதி மிகச் சிறந்த பாடலாசியரும் கூட யுகபாரதி யுடன் முகப்புத்தகத்தில் உண்டான அறிமுகம் காரணமாக அன்று தொலைபேசியில் இணைந்தபோது உமக்கு அருகில் தான் இருக்கின்றேன் வருமாறு விலாசத்தை வழங்கி யிருந்தார். உடனடியாக ஆட்டோ ஒன்றில் புறப்பட ஆயத்தமானோம். நான், பரணி, விஷ்ணு மூவரும் யுகாரதி யினுடைய வீட்டினுள் நுழைந்தோம் வாசலிலேயே எம்மை இன்முகத்துடன் வரவேற்றவர் யுகபாரதியின் அன்பு மனைவியாவார். வீட்டில் நுழைந்து இருக்கையில் இருந்து அவதானிக்கின்றோம் புத்தக அலுமாரியினுள் சிலப்பதி காரம், மணிமேகலை என பண்டைத்தமிழ் இலக்கிய நூல்கள் அவரது புத்தக அலுமாரியை நிறைந்திருந்தது. சற்று நேரத்தில் எமக்கு அருகில் வந்து அமர்ந்து கனிவாக பேசத்தொடங்கினார். நாம் தமிழகம் வந்ததன் நோக்கத்தை கூறிய போது உண்மையில் அன்பாக எம்மை பாராட்டி யிருந்தார். ஜீவநதியின் ஐப்பசி மாத இதழை கொடுத்த போது உள்ளடக்கம், மற்றும் பக்கவடிவமைப்பு என்பன மிகச்சிறப்பாக இருப்பதாக பரணியிடம் கூறினார். இதன் பின்னர் தமிழக மற்றும் ஈழத்து படைப்புச் சூழல் பற்றி அளவளாவியிருந்தோம். சற்று நேரத்தில் அங்கு தேனீர் கொண்டுவந்த மனைவியையும், மகளையும் மிகுந்த
ஜீவநதி
 

அன்போடு எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனது "மொழிபெயர்க்கப்படாத மெளனங்கள்" தொகுதியை மேலோட்டமாக பார்த்து கவிதைகளின் தலைப்புகளை பார்வையிட்டு சில தலைப்புகள் குறித்த தனது விருப்பை எதுவித வேறுபாடுகள் இன்றி சகஜமாக பேசியபடி குறிப்பிட்டார். மேலும் "யாப்பிலக்கணத்தை படியும் தம்பி" என்று தனது அன்புக் கோரிக்கையையும் முன்வைத்தார். நேரம் நகரத்தொடங்கியது அண்ணன் விஜய் அவர்களை பதினொருமணிக்கு சந்திக்க இருக்கின் றோம் என்று கூறியவுடன் நல்லது சந்தோசம் எனக் கூறி வீட்டின் வெளியே வந்து எம்மை அன்போடு அனுப்பி வைத்தார்.
ஆட்டோ ஒன்றில் ஏறி கவிஞர் பா.விஜய் இருக்கும் நெசப்பாக்கம் நோக்கி சென்று கொண்டி ருந்தோம் ஆட்டோ சரியாக அவரது வீட்டு வாயிலை அடைந்தது. எழில் கொஞ்சும் அந்த இல்லம் மனதை அழகால் வருடிச் சென்றது. வாயிலில் "தேசிய விருது பெற்ற கவிஞர் பா.விஜய்" அவர்களின் இல்லம் என்று எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. நாம் வெளியில் நிற்பதை அவதானித்த உதவியாளர் நீங்கள் யார் என்று வினாவிய போது நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கின்றோம் கவிஞருக்கு சொல்லுங்கள் புரியும் என்றோம் உடனடியாக உள்ளே போய் வந்து வாயிலை திறந்து எம்மை உள்ளே அழைத்து கவிஞரின் பிரத்தி யோக அறையினுள் அமரச் செய்தார். அறை எங்கும் பிரபல்யமானவர்களுடன் நிகழ்வுகளின் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பெரிதாக்கி அறை முழுவதும் வைத்திருந்தார். கலைஞர், ரஜனிகாந், கமல், சரோஜா தேவி, மு.பாக்கியராஜ் என எல்லா பிரபலங்களை யும் சந்தித்ததான ஒரு உணர்வு அந்த அறையினுள் இருந்த போது எம்மிடையே தொற்றிக்கொண்டது. ஒரே படபடப்பு சற்று நேரத்தில் அறையினுள் நுழைந்தார் சாதுவாக
இதழ் 50

Page 222
எண்ணெய் தோய்ந்த கேசம், செவியில் குடிகொண்டுள்ள பென்சில் என எம் முன்னே வந்து ஆறமர்ந்தார்.
வந்தவர் பேசத் தொடங்கினார் ஈழத்து படைப்பு சூழல், சமகால நிலவரம் என்பன பற்றியும் தமது "சமர்" நூல் பற்றியும் பல விடயங்களை எம்மோடு பேசினார். பரணியிடம் ஜீவநதியைப் பெற்றுக் கொண்டு வெகுவாக பாராட்டினார். சற்றுநேரத்தில் தனது வாழ்த்துரையை எழுதிய எனது நூலை அவருக்கு வழங்கியிருந்தேன். உடல் மெலிவு தொடர்பாக பரணி கேட்டுக் கொண்டதற்கு அடுத்த படம் குறித்த தனது நடிப்பனுபவத்தை நகைச்சுவை ததும்ப பேசியிருந்தார். உண்மையில் நம்ப முடியாத கணங்கள் அவை, மிக்க அன்புடன் பேசியிருந்தார் திருப்திகரமான மனநிலையோடு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.
என்னவொரு பொறுமை, எதுவித பந்தாவும் இல்லாமல் எப்படி சகஜமாகப் பேசுகின்றார்கள் இருவரும் என்று நானும் பரணியும் மெய்சிலிர்த்து பேசிக்கொண்டு விரைந்தோம் 02.10.2012 அன்று நாளை நாமக்கல் நிகழ்வு இன்று இரவு செல்லவேண்டும் ஆதலால் உடனடியாக இருப்பிடம் நோக்கி விரைந்தோம் S.R.M. ட்ரவல்ஸ் என்கின்ற பஸ்ஸில் எமக்காக பதிவுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக எம்மை அழைத்து வந்த நண்பர் எம்மிடம் பயணச் சிட்டையை வழங்கியிருந்தார். வண்டி 10 மணிக்கு புறப்படும் என்று சிட்டையில் போடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து ஆயத்தமாகி முதலில் இரவு உணவிற்காக "ஆந்திரா மீல்ஸ்" என்கின்ற உணவகத்தினுள் நுழைந் தோம். இரவு உணவை அருந்திய பின் கோயம்பேடு பஸ் தரிப்பிடம் நோக்கி ஆட்டோவில் பயணமானோம்.
வெறும் திரைப்படங்களில் மாத்திரம் கேள்வி யுற்ற கோயம்பேடு பஸ் நிலையத்தை அடைந்தபோது பிரமித்துத்தான் போய்விட்டோம். பென்னாம்பரிய பஸ்கள், மக்கள் கூட்டம் என நிறைந்து போயிருந்தது. நேரம் பத்து மணியானதும் பஸ்ஸினுள் ஏற்றப்பட்டோம் சிலிப்பர் வசதி களை கொண்ட அதிஉயர் சொகுசு வண்டி பார்த்தவுடன் ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்ச்சி மனதில், எல்லோருமே படுத்தபடி பயணம் செய்யும் படியான இரண்டடுக்கு படுக்கைகளை கொண்ட வண்டி அது.
ஏ.சி குளிர் காதினுள் செல்லத்தொடங்கியது எங்கள் நாட்டில் இப்படி வசதி கொண்ட பஸ்வண்டிகள் இன்னும் இல்லைத்தான் ஆதலால் இந்த அனுபவமும் புதிதுதான், காலை 5.30 மணியளவில் நாமக்கல் பஸ்நிலையத்தை அடைந்தோம். சற்று தூரத்தில் எமக்கான அறைகள் ராதா பிரசாத் ஹோட்டலில் ஒதுக்கப்பட்டிருப்ப தாக நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் அறிவுத்தலுக்கு அமைய ஹோட்டல் சென்றோம். நிகழ்ச்சிக்காக எம்மை தயார்படுத்தி செல்ல ஆரம்ப மானோம். வெளியில் எம்மை அழைத்துச் செல்ல பஸ் வண்டி ஒன்று காத்திருந்தது. சற்று நிமிடத்தில் வெளியில் சென்ற போது தெரிந்த முகங்கள் அங்கேபுன்னகையுடன் நின்றிருந்தன. வழமைபோல அந்தனி ஜீவா சேர் ஓடிவந்து எம்மை கைலாகு கொடுத்து
ஜீவநதி
2.

வரவேற்றார். மேலும் இலங்கையை சேர்ந்த சக எழுத்தாளர்களான 0.K குணநாதன், தமிழ்மணி அகளங்கள், VT இளங்கோவன் மற்றும் தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் உபாலி லீலாரத்னா ஆகியோரும் நின்றிருந்தனர். அப்போது தான் நாம் எல்லோரும் இங்குதான் ஒன்றாக நின்றிருக்கின்றோம் என்ற உண்மை புரிந்தது. உண்மையில் தழிழக, ஈழத்து இலக்கிய பாலத்தின் பாரிய ஒரு செயற்பாட்டாள ராக இருக்கின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி அந்தனிஜீவா அவர்கள் தனது பணியை மிக வேகமாக செய்து கொண்டிருந்தார். உண்மையில் எமக்கான அனைத்து தேவைகளையும்
லக்கிய விருதுகள்
பூர்த்தி செய்து வைத்தார். பஸ்வண்டியில் எல்லோரும் ஏறி நிகழ்வு நடைபெறும் செல்வம் பொறியியற் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தோம். இடையில் காலை உணவிற்காக சாலையில் உள்ள ஒரு கடையில் வண்டி நிறுத்தப்பட்டது. உணவு அருந்திய பின்னர் சற்றுதூரம் நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கே பென்னாம் பெரிய ஒரு மலை ஒன்று காணப்பட்டது. ஏறவேண்டும் போலான உணர்வு தொற்றிக் கொண்டது. என்ன மலையாக இது இருக்கும் என்ற போதுதான் உபாலி அவர்கள் இதைத்தான் நாமக்கல் என்று சொல்வார்கள், இராமாயண இதிகாசத்தோடும், அனுமானின் வருகை யோடும் தொடர்புடையது என்று மிக அற்புதமாக அந்த
வரலாற்றை சொற்பநொடியில் கூறி முடித்தார்.
மீண்டும் பயணம் ஆரம்பமாகியது வண்டி செல்வம் பொறியியற் கல்லூரியை அடைந்தது. உள்ளே சென்றபோது மண்டபம் விழாக்கோலம் பூண்டு காணப் பட்டது சரியாக 9.45 அளவில் நிகழ்வு ஆரம்பமானது.
இதழ் 50
ܒܥܓܠ
کرܠܶܝ.

Page 223
事、
ܓܥܓܠܐ 를
விருந்தாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பரணியும் விஷ்ணுவும் அமர்ந்து கொண்டனர். நிகழ்விற்கு தினமணியின் பிரதம ஆசிரியர் வைத்தியநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். தலைமையை திரு பொன் செல்வராஜ் ஏற்று மிகச் சிறப்பாக தனது தலைமையுரையை ஆற்றினார். மண்டபம் பல இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பிப் போயிருந்தது. தலைமையுரையை ஆற்றிய பொ.செல்வராஜ் அவர்கள் "தமிழ்மொழியை ஒரு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள் ஈழத்தமிழர் களே என்று பூரிப்புடன் கூறினார். உண்மையில் ஏதோ ஒரு உணர்வு தொற்றிக் கொண்ட பெருமிதத்துடன் ஒரு வகை உற்சாகத்தோடு காணப்பட்டோம்.
விருந்தினர்கள் உரைகள் நிகழ்வு முடிவுற்று விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது. இலங்கை எழுத்தாளர்கள் OK குணநாதன், உபாலிலீலாரத்னா, இரா. உதயணன் ஆகியோர் விருதுகளைப்பெற்றுக் கொண்டனர். சிற்றிதழுக்காக வழங்கப்படுகின்ற விருது ஈழத்தைச் சேர்ந்த ஜீவநதி சஞ்சிகைக்கு வழங்கப்படுகின்றது, என அறிவித்தபோது பரணி அவர்கள் மேடையில் அழைக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்க்பட்டார்.
உண்மையில் மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வாக அமைந்தது. அரங்கமே கைதட்டல்களில் அதிர்ந்தது. சிற்றிதழுக்காக விருது வழங்கும் போட்டிக்கு ஈழத்தில் இருந்து ஏழு, எட்டுக்கு மேலான சஞ்சிகைகள் அனுப்பப் பட்டிருக்கின்றன. என்ற செய்தி எமக்கு மேலும் ஒரு பெருமையை அள்ளி வழங்கியிருந்தது வீறு கொண்டு இன்று ஐந்தாவது இதழிலேயே இம் மிகப் பெரிய கெளரவத்தை பெற்றுக் கொள்வது உண்மையில் சாதாரணமான தொன்றல்ல. விருது வாங்கும் கணம் உண்மையில் பரணியின் முகத்தை பார்க்கின்றேன் சந்தோசக் களிப்பில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
விருது வாங்கியவர்கள் உரையாற்றுவதற்கான நேரம் ஆரம்பமாகியது எல்லோரும் பேசிக் கொண்டி ருந்தனர். நிகழ்வின் கதாநாயகர் குசின்னப்பாரதி அவர்கள் பல அரிய விடயங்களை கூறினார். அந்தனி ஜீவா அவர்கள் ஈழத்து படைப்புகழல் பற்றி சிறப்பாக கூறினார்.
நிகழ்வு முடிந்ததும் வவுனியா இரா.உதயணன் ஜீவகுமாரன் ஆகியோரோடு சில மணிநேரம் பேச முடிந்தது. ஜீவநதியின் சில பிரதிகளை பெற்றுக்கொண்டு அதன் சில அம்சங்கள் குறித்து பேசியிருந்தார். சரியாக 200 மணியளவில் மதிய உணவிற்காக அழைக்கட் பட்டோம். தமிழகத்துக்கு உரித்தான தயிர்சாதம் உணவாக எமக்கு வழங்கப்பட்டது. நிகழ்வின் முடிவில் கு.சின்னட் பாரதி எமது வருகையை குறித்து தாம் மகிழ்வதாகவும் தமது இல்லத்திற்கு வருமாறு அன்புக் கோரிக்கையை இட்டிருந்தார். கால அவகாசம் போதாமை யினால் செல்லமுடியாத நிலைக்கு ஆளாகினோம். நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு நேரடியாக பஸ் பிரயாணம் இல்லாமையினால் நாமக்கல்லில் இருந்து சேலம் சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்லும்படி திரு ராப
ஜீவநதி
 

கிருஷ்ணன் மற்றும் தமிழக எழுத்தாளர் கே.ஜி மகாதேவா ஆகியோர் எம்மை கோரியிருந்தனர். அதன் பிரகாரம் எல்லோரிடமிருந்தும் விடைபெற்று ஜீப் வண்டி ஒன்றில் நான், பரணி, விஷ்ணு, அந்தனிஜீவா, உபாலி லீலாரத்னா ஆகியோர் . நாமக் கல் பஸ் நிலையம் நோக்கி விரைந்தோம். எம்மை பஸ் ஏற்றுவதற்காக திரு அந்தனி ஜீவா அவர்களும் உபாலி அவர்களும் மிகுந்த சிரமத்தின் அடிப்படையில் எம்மை பாதுகாப்பாக ஏற்றி சேலத்திற்கு அனுப்பிவைத்தனர். உண்மையில் தமிழக பயணத்தில் மட்டுமன்றி, பயண ஒழுங்குகளிலும் மூத்த படைப்பாளி அந்தனி ஜீவா அவர்களின் சேவை அளப்பரியது தான். எமக்கு பிற்பகல் 4மணியளவில் சேலத்தை அடைந்து மீண்டும் 4.30 இற்கு சென்னை புறப்படும் பேருந்தில் ஏறிப் LJUGOOTLDITG360TTLb.
இரவு ஒரு மணியளவில் சென்னையை அடைந்தோம். அந்த நேரத்தில் ஆட்டோ ஒன்றை சரியான தொகைக்கு அமர்த்துவதில் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டோம். ஒருவாறு வளசரவாக்கத்தை அடைந் தோம். பிரயாண களைப்பு, விருது பெற்ற இன்பக் களிப்பு என இரண்டும் கலக்க தூங்கப்போனோம், 03.10.2012 அன்று காலை மறுபடியும் வடபழனி முருகன் கோயிலை தரிசிப்பதற்கு தயாரானோம். ஆட்டோ ஒன்றில் சென்று கோயில் வாயிலை அடைந்தோம். மனதை வருடும் மல்லிகை வாசம் ஒரு புறமாயும், ரோஜாப் பூவாசம் மறுபுறமாயும் பூக்கடைகள் குவிந்து காணப்பட்டன.
உள்ளே சென்று ஆறமர்ந்து பழனிவேல் முருகனை தரிசனம் செய்து கொண்டோம். திருநீறு, சந்தணம், பழனிபஞ்சாமிர்தம், லட்டு என்பவற்றை கொள்வனவு செய்து திரும்பும் வழியில் அருகிருந்த ஒட்டல் சரவணபவனுக்குள் மதிய உணவிற்காக புகுந்தோம். கமகம வாசனை கமழ மதிய உணவை உட் கொண்டோம். தொலைக்காட்சி விளம்பரங்களில் மாத்திரம் கேள்வியுற்ற ஒட்டல் சரவணபவனை உட் பிரகாரம் இருந்து உணவு அருந்தும் போது ஏதோ ஒரு அலாதியான விருப்பு என்னுள் ஒட்டிக்கொண்டது.
மதிய உணவை உட்கொண்டபின் பரணியும், விஷ்ணுவும் மண்திட்டி என்ற இடத்திற்கு "பரணி புத்தகக் கூடத்திற்கான பொருட்களை கொள்வனவு செய்ய புறப்பட்டுச் சென்றனர். இவ் இடைவெளியில் நான் ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர் களை சந்திப்பதற்கு கோடாம்பக்கம் சென்றிருந்தேன்.
இசை ஒலிப்பதிவு ஒன்றை மேற்கொண்டிருந்த இசைப்பிரியன் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஏலவே யாழில் பல தடவை சந்தித்திருப்பினும் தமிழக பயண சந்திப்புக்களில் தவிர்க்கப்பட முடியாதவர் அவர் என்ற மட்டில் அவருடைய சந்திப்பு மிகவும் மகிழ்சிகரமாக அமைந்தது. அதன் பின் இன்னொரு இளம் இசையமைப்பாளராக இருக்கும் என் அன்பு மிகு நல்நண்பர் தர்ஷன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தர்ஷன் வேறு யாருமல்ல ஈழத்து இசையுலக
இதழ் 50

Page 224
மாமேதை இசை வாணர் கண்ணன் அவர் களுடைய புத் தர னே. தர் ஷ ன அவர் களின் இல் லம் சென்ற போது அங்கு ஏலவே நன்கு பரீட்சயமான LJпGOфLOTj LITLGOTolff யரையும் சந்திக்கமுடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சற் றும் எதர் பாராத விதமாக கண்ணன் மாஸ்ரரை சந்தித்து உரையாடும் அதில்
எனக்கு கிட்டியது. புகைப்படங்களை எடுத்ததன் பின்பு மடிட் இருப்பிடம் நோக்கி பஸ்ஸில் பயணமானேன். தனது கா கொண்டு வந்து பஸ்சில் மிகவும் பாதுகாப்பாக தர்ஷன் அ அண்ணையும் வழியனுப்பி வைத்தனர்.
மண் ணடிக்கு சென்று இன்னும் திரும்பிவர விஷ்ணுவையும் காத்திருந்தபடியே எமது வீட்டிற்கு அருகேயுள் கத்தில் கொத்து ரொட்டி ஒன்றை உண்டபடி அவர்களும் எமது ம என்றபடியால் சில நடப்புகளை பேசிக் கொண்டிருக்க பரணி வந் இரவு 8 மணியாகியது உடனடியாக வீட்டினுள் செ இற்கு விமானம், ஆகவே கொண்டுவந்த பொருட்களை, பொருட்கள் என்பவற்றை பொதியிட்டு பின்னர் சரியாக 12 மணி 04.10.2012 விரைவாக எழுந்து எல்லா ஆயத்தங்கே விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. நான்கு தினங்கள் தா வருட நினைவுகள் போலான பல அரிய நினைவுகள் கண்ணே ஒருபுறம் மனம் ரணமாக இருந்தபோதும் தாய் நிலத்திற்கு என்ற நினைப்பு ஒட்டிக் கொண்டது. விமான நிலையத்தை அ இற்கு ஆயத்தமாகியது. புறப்பட்டவிமானம் 11.30 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்தோம். அன்றைய இரவே யாழ்ட யிருந்ததனால் வாடகை அறைகள் ஏதும் எடுத்துக் கொள்ள ராஜின் பம்பலப்பிட்டியில் உள்ள வேலைத்தளத்தை பிற்பகல் 2 எமது எல்லா உடமைகளையும் அங்கு வைத்துவிட்டு மீண்டும் வெளியே சென்று மறுபடியும் 7மணியளவில் எம்மை வாகனத்தில் ஏறிக் கொண்டோம் மிகவும் இக்கட்டான சூழலில் நண்பர் அமலிடம் விடைபெற்று யாழ்நோக்கி ஆரம்பித்தோம் ப அன்று விடிகாலை 5.30 மணியளவில் எங்கள் வீடுகளை அடை ஒரு கனதியாக சிற்றிதழை ஈழத்தில் கொண்டுவருட எங்கள் ஜீவ ஊற்று பெற்றுக் கொண்ட இந்த விருது எம்மை பெ சாதனை தான். இந்த ஐந்து வருடங்கள் என்பது சஞ்சிகை தவி இரண்டு மிகப்பெரிய விருதுகள் என்று பார்க்கின்ற போது எம் இமாலய சாதனைதான். இந்த விருது வழங்கும் நிகழ்வில் நேரடி எம் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு மைல்கல் நிகழ்வு ஆகும். மிகைப்படுத்தல்களும் இன்றியே இப்பயண அனுபவத்தை 2 எழுதி முடிக்க முடிந்தது. ஆகவே இந்த நான்கு நாள் தமிழக பய6 மாத்திரம் மகிழ்வாக நிறையாது ஜீவநதியின் ஒவ்வொரு வாசக வேண்டும் என்பதற்காகவே இவ் ஐம்பாதாவது இதழில் இத்தமிழக பயணம் மற்றும் இவ் அனுபவம் மேலும் எமக்கு வித்தியாசமான சிந்தனையையும் ஒருபடி மேலே தந்திருக்கின் அது மிகையாகாது.
ஜீவநதி 22
 

3LG)JēFLDT6ŪT G) TuŪLļLD
பாக்கத்திலிருந்து என் ர்வண்டியில் என்னை
DI6OöT6UD60OT uL|Lb, LJITGDIT
ராத பரணியையும், Tள "யாழ்வரன்" உணவ ண்ணை சார்ந்தவர்கள் து சேர்ந்தார். ன்று, விடிந்தால் 10.20 கொள்வனவு செய்த க்கு தூங்கினோம். ளாடும் வண்டியில் ஏறி மறுபடியும் பாடல்கள் ான். ஆனாலும் நான்கு ாரம் வந்து குவிந்தன. செல்லப்போகின்றோம் டைந்து சரியாக 10.20 மீண்டும் கட்டுநாயக்கா பாணம் செல்லவேண்டி Tமல் நண்பர் பி.அமல் 2.30ற்கு அடைந்தோம். சில தேவைகளுக்காக ஏற்றவந்த ஹையஸ் எம்மை அரவணைத்த யணத்தை 05.10.2012 ந்தோம். பவர்கள் என்ற ரீதியில் ாறுத்தவரை இமாலாய ர்ந்த 18 வெளியீடுகள், மைப் பொறுத்த வரை 2யாக பங்குபற்றியமை ஆகவே எதுவிதமான உள்ளதை உள்ளவாறு ண அனுபவம் எமக்குள் ர்களும் மகிழ்வைத்தர பதியபட்டிருக்கின்றது. த புதிய தெம்பையும், றது என்று சொன்னால்
அந்தக் குருவிகளைப் Jaå
காலம் காலமாய் அந்தக்குருவி இனம் கூடு கட்டி வாழ்ந்த மரம்
அங்கும் இங்கும் .ܠܐܒ பறந்து சிறந்து வாழ்ந்த குருவியினம்
பருந்துகள் மரத்தை முற்றுகையிட்டு
பறக்கும் எத்தனிப்போடு தத்தி திரிந்த குருவிகளைக் கூட கொத்தி.
துரத்தின
இருந்தும் குருவியினம் தங்கள் முயற்சியாலும் ஒன்றுபட்ட எழுச்சியாலும் மிண்டும் அந்த மரத்தில் சந்தோஷமாய் .ܒ̣
______తి
ܣܛܢ
L
குருவிகளின்
வாழ்வு தென் சூடான் மக்களை ஞபாகப்படுத்துகிறது
گنالهام ك6”شاؤنعمومیت الأقاموتوى
இதழ் 50

Page 225
கொடிக
நெ தொ.போ. இ6
 

ரிப்பாகங்கள் tரும், முகவரும்
MRF Tyre, Plug
நன்கறிந்த us gui ཁཞི་ p பற்றுக்கொள்ளலாம்.
O77 6 5272

Page 226
SATHY
X-RAY (Approved
For
56 act as L. தேவைகளுக்கு
 

༤
ANARAAYAANIA
DAGNOSIS CENTRE y Atomic Energy Authority)
your X-ray needs
2, Main Street, Neliyady, Karaveddy. O K. O77 6688 182 : BogБUBTIJTUGGOTT
(எக்ஸ் கதிர் நோப் ஆய்வறிவு நிலையம்)
E2, TESTICUT CASE, GIGGŐurg, 35Casing
-●

Page 227

1ain Street, Nelliyadi.
O2 2264-9

Page 228
ww۷ Digit Prop. V. Sivaraj
I Tel: O77 5953346 ဒို့စို့ဖွံ့နွံvara) @yahဝဝ
Mr. V. Krishnasamy тазва Mobile: 0777 297476 og Resident: 02 I 32 16148
Raj Qტ%
O No. 143, Main Street, Nellia
T.P. 021 226284 I
Eαχ 02 Ι 2262842
Email: abinetcafe20II(ayah
O O

tal Printing
C(Cuai Sauts,
COm "l'athiu.
I Photo copy FER E, lemineting W Binding
Typing Printing Scanning All relocids All Phone cards logal calls, IDD calls Fox, Video Calls
lly, Internet Calls
Browing, Email
OO. COV71 3D Games

Page 229
கிழக்கிலங்கைச் சடங்குகள் - 6
இந்நூல் கிழக்கிலங்கை மக்களின் சடங்குகள் பற்றியதாக அமைந்து நிகழ்த்தப்படுகின்றன. இவை பிரே வழிபாட்டை நிகழ்த்துவதன் நோ செயற்பாட்டில் சடங்குகள் பெறு காணப்படுகின்றன. இந்நிலையில் 8 கலை, அழகியல் கூறுகள் பற்றிய ஒ: சமூகம் பற்றியும், அச்சமூகத்தின் வாசகர்களுக்கு வழங்குகின்றது.
ISBN 978-955-659-323-5
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வேறுபட்டு பல்வேறு புதிய த விபரங்களையும் தரும் இந்நூல் அதனால் ஈழத்தில் உருவான ப; இலக்கிய முக்கியத்துவம் பற்றியு
ISBN 978-955-659-333-4
ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள் சமூகம், ஆன்மீகம், கல்வி, சமூ ஈழத்துப் பெண் ஆளுமைகளி வெளிவருகின்றன: சுன்னாகம் மாசிலாமணி (1884), கலாநிதி நடேசைய்யர், செல்லம்மா ந (1903-1978), இராசம்மா கனகசை நவரத்தினம் (1910-1993), செளந்த கந்தையா (1917-1993), பண்டி அப்பாக்குட்டி (1925-2008), பத்ம
ISBN 978-955-659-331-0
ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர் "ஈழத்து நாடகங்களின் வரலா கட்டுரைகள் வரைந்துள்ளனர். வரலாற்றினை முழுமையாக 6 கருத்துக்களை அநுசரணையாக தொடக்கம் 1977ஆம் ஆன மேடையேற்றப்பட்ட மகாகவி ஈழத்துத் தமிழ் நாடக வரலாற் பொதுவாகவும் நாடகக் கலையு
ISBN 978-955-659-322-8
lombo 06, Tell 01: 236 gai Vinayagar Stree
39, 36th Lane
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடிவேல் இன்பமோகன் தனித்துவமான வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் |ள்ளது. கிழக்கிலங்கையின் பல பிரதேசங்களிலும் சடங்குகள் ? தேசத் தனித்துவங்கள் சிலவற்றைக் கொண்டு விளங்கிய போதும் க்கம், வழிபடப்படும் தெய்வங்கள், மக்களின் நம்பிக்கை, சமூக லும் முக்கியத்துவம் என்னும் விடயங்களில் ஒத்த போக்கே கிழக்கிலங்கை மக்களின் சமூகப் பின்புலத்தின் ஊடாக சடங்குகளின் ரு குவிந்த பார்வையை இவ்வாய்வு நூல் தருவதுடன் கிழக்கிலங்கைச் சமயம், கலை, அழகியல் செயற்பாடுகள் பற்றியும் தெளிவை
விலை 975,00 பக்கங்கள்: xi + 345
841 - 1950) - றயீஸ் அப்துல்லா
நகள் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களிலிருந்து கவல்களையும், அறியப்படாத பல பத்திரிகைகள் பற்றிய , இதழியல் பற்றியும் அச்சு ஊடக தோற்றம், கோட்பாடு, த்திரிகைகளின் (1841-1950) பின்னணி அதன் சமூக, அரசியல், ம் விரிவாக விபரிக்கின்றது.
ഖിഞ്ഞു. 650,00 Jä,5ějšGiti: xii * 259
r - பத்மா சோமகாந்தன்
முகசேவை முதலாந்துறைகளிலே ஊறி எழுந்த பின்வரும் ன் எழுத்துக்கு வராத பரிமாணங்கள் இந்நூல் வழியாக செல்லாச்சி அம்மையார் (1863-1926), மங்களம்மாள் முத்தம்மா தில்லையம்பலம் (1885-1976), மீனாட்சியம்மாள் கேந்திரர் (1990-1989), பண்டிதை பத்மாசனி அம்மாள் பை (1904-1992), கண்மணி பூரீஸ்கந்தராஜா (1909), இரத்தினா ரம் சந்தனநங்கை கந்தப்பு (1917-1993), பண்டிதை கங்கேஸ்வரி 1தை சத்தியதேவி துரைசிங்கம் (1922-1986), தங்கம்மா ா இராமநாதன் (1926-1987).
விலை 400.00 பக்கங்கள்: xi + 113
ர்ச்சி - க. சொக்கலிங்கம் (சொக்கன்)
று, பண்புகள் ஆகியன பற்றிக் காலத்துக்குக் காலம் பலர் இவ்வாறான உதிரிக் கட்டுரைகள் ஈழத்துத் தமிழ் நாடக ாமக்கு அளிப்பனவாயில்லை. அவற்றிலே கூறப்பட்டுள்ள க் கொண்டு பண்டைய ஈழத் தமிழர் நாட்டுக் கூத்துக்கள் ண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண வளாகத்திலே யின் புதியதோர் வீடு' என்னும் நாடகம் வரையிலான றை முழுமையாக அளித்துள்ள சொக்கனுக்குத் தமிழுலகம் லகம் சிறப்பாகவும் கடமைப்பட்டுள்ளன."
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
alignal 650.00 பக்கங்கள்: xi +218
4550.0113097608, E-mail kumbhikagmail.com t, Chenni 60 26, 2362 2680
இந்த அறிவிற்கா

Page 230


Page 231


Page 232


Page 233


Page 234
We certas, cate
jasa
ങ്ക 繼
R, Ο s
இச் சஞ்சிகை அலீவா இலையக ஜிெடுஇயிலுரிஇைஇ இற
 

aim Street, Nefady
Kara wedd y
Jafna
on 21 2262,323
ஜிஇஜிஜிஇஜிடுறுவதிஇடுவிலு