கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 1998

Page 1

ത്തിക വം
ഷ്ട്ര

Page 2


Page 3

நாம் பயணித்த புகைவணன்டி
ப. ஆப்டீன்
\:/67 LANNOGALLJIGNJ
201-1/1, ரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி: 320721 E-Mail: panthal(asltnet.lk

Page 4
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
முதற் பதிப்பு: செப்டெம்பர் - 2003
(C) ஆசிரியருக்கே
6606): 150/=
பக்கங்கள் ; 122 + XVi
அட்டை ஓவியம் எஸ்.தர்மசீலன் அட்டை வடிவமைப்பு: எஸ். திவாகரன் கணினி அச்சமைப்பு: எஸ். சித்திராங்கனி
ISBN: 955-8250-25-2
அச்சிட்டோர். யு. கே. பிரிண்டர்ஸ், 98 A, விவேகானந்த மேடு, கொழும்பு - 13. தொலைபேசி: 344046, 074-614153

படைப்பது என்பதும் ஓர் ஆத்மார்த்த வெளிப்பாடே!
டொமினிக் ஜீவா
தனிமையாக இருந்து, ஆறுதலாகச் சிந்திக்கும் வேளைகளில் நான் இப்படி யோசித்துப் பார்ப்பதுண்டு.
மல்லிகை ஆரம்பிக்கப்பட்ட அந்தக் காலத்திலிருந்தே பலர், பலவகைப் பட்ட இலக்கிய நண்பர்கள் என்னோடு சேர்ந்து வரிசை கட்டிக் கூட வந்து
கொண்டிருப்பதை நான் அவதானித்து வைத்திருக்கிறேன்.
இதில் பலர் மல்லிகை மீது ஏதோ தனி அபிமானம் கொண்டவர்களைப் போலக் காட்டிக் கொள்வதுமுண்டு. வேறு சிலரோ எனது தனிப்பட்ட வாழ்வின் மீது அதீத அக்கறை காட்டுவது போல நடந்து கொள்வதுமுண்டு.
இவர்கள் பற்றி எனக்கென்றொரு தனியான பார்வையுமுண்டு.
நான் இதுவரை நடந்து வந்துள்ள பாதையை விட்டு விலகாமல், முன் கூட்டியே தீர்மானித்திருந்த வழித் தடத்திலேயே தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
இதில் சாதகங்களுமுண்டு - பாதகங்களுமுண்டு.
இடையே ஒய்வு கொள்ளும் நிமித்தமாகச் சற்று நின்று திரும்பிப் பார்க்கிறேன்.
என்னுடன் தோழமை பூண்டு தொடர்ந்து வந்தவர்களாகக் காட்டிக் கொண்ட
பலரைக் காணவேயில்லை. அதே சமயம் புதியவர்கள் பலர் சேர்ந்து கொண்டார்கள்.
இப்படி ஆரம்ப காலத்திலிருந்தே என்னுடன் தொடர்ந் வந்தவர்களில்
L- ருந0த ணு தாடாநது 西西 குறிப்பிடத்தக்கவர் ப. ஆப்டீன்.
நாம் பயணித்த புகைவணி டி ( iii D

Page 5
எனக்கு ஏற்கனவே ஒன்று நன்றாகத் தெரியும்.
என்னுடன் கடந்த காலங்களில் இலக்கியம் பேசி வந்தவர்கள் இறுதி வரை என்னுடன் இதே திசை வழியில் தொடர்ந்தும் நடை போட்டு வரமாட்டார்கள் என்பது எனக்குத் தெளிவாகவே விளங்கும்.
ஆனால், நானதைக் காட்டிக் கொள்வதில்லை.
எனவே, மயங்காமல், தயங்காமல் என் திசை வழியே போய்க் கொண்டிருக்கிறேன்.
இந்தச் சிரமம் மிக்க, பாரிய சங்கடமான இலக்கியப் பிரயாணத்தில் இழப்புக்கள் தான் ஏராளம். இருக்கக் கூடிய வசதி வாய்ப்புக்களை இழக்க வேண்டி வரலாம். குடும்ப உறவுகளில் சிதைவுகள், வீட்டில் பிணக்குகள் தோன்றலாம். இடையிடையே பொருளாதாரச் சங்கடங்களுக்கு உட்பட்டும் விடலாம். தொழிற்றுறைகளில் கவனிப்புக் குறையும். சலிப்பும் விரக்தியும் இடையிடையே தலை காட்டும்.
நெருக்குதல்களுக்கும் ஏச்சுப் பேச்சுக்களுக்கும் செவிமடுத்துக் "கொஞ்ச நாளைக்கு இதிலிருந்து விடுபட்டுத் தான் இருந்து பார்ப்போமே!" எனத் தப்பித்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டு, இயங்கா நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம்.
இந்தத் துறையைக் கைக் கொண்டு ஒழுகிவருபவர்களுக்கு இப்படிப் L6) இடைநிறுத்தங்கள் இடம்பெறும்.
இது இலக்கிய உலகில் ஏற்பட்டு வரும் இயற்கையின் களையெடுப்பு.
இதையும் மீறித் தன்னை ஒப்பக் கொடுத்த இலட்சியத்தில் தீவிர ஆர்வம் கொண்டு எவனொருவன் தன் துறையில் நிமிர்ந்து நிற்கக் கற்றுக் கொள்ளுகிறானோ அவனே முடிவில் முத்திரை குத்திப் பேசப்படுபவனாவான்.
அப்படிப் பத்தோ பன்னிரண்டு பேர்வழிகள் தான் நின்று நிலைப்பார்கள்.
பின்னாடி வரலாற்றில் பேசப்படுபவர்கள் ஆவார்கள்.
நிச்சயமாக நம்புகின்றேன், அப்படிப் பேசப்பட போகின்றவர்களில் நண்பர், ஆப்டீனின் பெயரும் இடம்பெறும் என்பது சர்வ நிச்சயமாகும்.
ஈழத்து இலக்கிய உலகில் நாளை பேசப்படுவதற்கு இன்றே தம்மைத் தயாரித்துக் கொள்ளாதவர்கள் தான் இடை நடுவே காணாமல் போய்விடுவார்கள். இப்படியாகத் தத்தளிப்பவர்கள் இங்குமற்று, அங்குமற்றுத் திரிசங்கு நிலையில் தான் நின்று அல்லாடுவார்கள். -
அப்படியான தத்தளிப்பு நிலையற்று, தனக்கெனத் தெளிவான நீண்ட காலக்

கொள்கையைக் கைக்கொண்டு ஒழுகிவருவதால் தான் ஆப்டீன் இன்று இலக்கிய உலகில் பேசப்பட்டு வருகின்றார்.
இவரது செயற்பாடுகளை வெகு உன்னிப்பாக அவதானித்துவிடுபவன் என்கிற முறையில் இதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.
இவரது முதற் சிறுகதைத் தொகுதியான "இரவின் ராகங்கள்" தொகுப்பை 1987ம் ஆண்டு மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளியிட்டு வைத்தேன். இது இரண்டாம் பதிப்பாகச் சென்னை "நியூசெஞ்சரி புக் ஹவுஸ்" நிறுவனத்தினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இப்பொழுது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான "நாம் பயணித்த புகைவண்டி" என்ற இத்தொகுதியை வெளியிட்டு வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்தத் தொகுதியில் 12 சிறுகதைகள் இடம் பெறுகின்றன.
படித்துப் பாருங்கள்.
தமிழ்மொழியைத் தாய்ப் பாஷையாகக் கொண்டிராத, மலாய் மொழியை வீட்டுப் பாஷையாகக் கொண்டிருக்கும் ஒரு மலையகத்து முஸ்லிம் சகோதரன் தமிழ் மொழி மூலம் இப்படிச் சிந்தித்து, இப்படி எழுதியிருக்கிறார் என்பதைத்
தமிழுலகம் புரிந்து கொள்வதற்காகவே இந்த இரண்டாவது தொகுதியையும் வெளியிட்டு வைத்துள்ளேன்.
இவரது நாவல் சென்ற ஆண்டு வெளி வந்து, பரபரப்பாகப் பேசப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வந்துள்ளதை இலக்கிய உலகம் நன்கறியும்.
தனக்கென இயல்பாக வரித்துக் கொண்ட இலக்கியக் கோட்பாட்டைப் பின்பற்றி வருபவர் ஆப்டீன். அதே சமயம் இந்தத் தேசத்தின் சகல பிரதேசங்களிலும் வாழ்ந்து, எழுதி வரும் பல்வேறு வகைப்பட்ட சகோதர எழுத்தாளர்களிடம் நட்பையும் நேசத்தையும் பேணி வருபவர்.
இலக்கியம் சம்பந்தமாக நடைபெறும் சகல இலக்கியக் கூட்டங்களிலும் இவரது முகத்தைக் காணலாம். அத்தனை தூரம் இலக்கியப் பற்றுக் கொண்டவர்.
இந்த நூல்வெளிவரப் பலர் பங்காற்றியுள்ளனர். அட்டையை வரைந்து தந்துதவிய ஓவியர் தர்மசீலன் அவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நாம் பயணித்த புகைவணர் டி

Page 6
கயல்வா
கதை என்னுரைப்பேன்
இத் தொகுப்பில் 1990 தொடக்கம் ஜனவரி 2003 வரைக்கும் பிரசுரமான பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றுள் எட்டுச் சிறுகதைகள் மல்லிகை சஞ்சிகைகளில் வெளியானவை.
நாடளாவிய ரீதியில் இன்று வரைக்கும் அபூதாலிப் அப்துல் லத்தீப் அவர்களின் 'இன்சான்' சஞ்சிகைக்குப் பின் கணிசமான அளவு முஸ்லிம் இளைஞர்களுக்கு மல்லிகை களம் அமைத்துக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில் எனது பெரும்பாலான சிறுகதைகள் மல்லிகையிலேயே பிரசுரம் பெற்றுள்ளன.
சிறுகதைத் துறையைப் பொறுத்தவரையில் பழைய கருத்துக்களைத் தவிர்த்து சமகால மக்கள் வாழ்க்கையை ஊன்றிப் படித்து, மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தழுவியதாக புதிய கருத்துக்களைப் பகைப் புலமாகக் கொண்டு எழுதிய சில கதைகள் இத் தொகுப்பில் இடம் பெற் று ள் ளன. அதே நேரத் தில் ஒரு நல்ல படைப் பின் சிறப்பியல்புகளுக்கும் காத்திரமான தொனிப் பொருளுக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதுமையான மொழிப்பிரயோகத்துடன் மானுட நேய அணுகுமுறையுடன் எழுத முயன்றுள்ளேன்.
சிறுகதைத் துறையில் ஆழ்ந்த ஞானமும் அனுபவமும் பெற்றவர்கள் கூறுவது போல, சிறுகதைக்கு ஒரு நிரந்தரமான வரைவிலக்கணம் விதிக்கப்படவில்லை. ஒரு கருவை மையமாக வைத்து புனையப்படும் போது கதாபாத்திரங்களை. நடமாட விட்டு, வாசகரைக் கவரும் விதத்தில் சொல்ல வேண்டிய செய்தியைச் சிந்தனைக்கு விட்டுவிடும் சாணக்கியம் அது அவரவரது தனித்துவம் வாய்ந்த ஆளுமையைப் பொறுத்துள்ளது.
ய
ப.ஆப்டீன்

கதாசிரியனுக்குச் செய்தி என்னும் அந்தச் சுமையை இறக்கி வைக்கும் போது இனம் புரியாத ஆத்ம திருப்தி ஏற்பட வேண்டும்.
ஒரு கருவுற்ற கதை பிறப்பதற்குக் கால வரையறை இல்லை. கருவைப் பல காலம் சுமந்து. சுமந்து அது பிரசவ வேதனை அடைகிறது என்று சொல்லப்படுவது மூத்த எழுத்தாளர்களின் அநுபவ உண்மை. இது எக்காலத்திற்கும் பொருத்தமான ஓர் உண்மை என்பதில் சந்தேகமில்லை.
எதையும் வாசகரின் உள்ளங்களில் திணிக்காமல் நுணுக்கமாகத் தொட்டுக் காட்டி, ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்திவிட்டாலே ஒரு நல்ல சிறுகதைக்கு வெற்றி தான் என்றெல்லாம் கூறப்படுகிறது.
நிற்க, தொழில் காரணமாகப் பல பிரதேசங்களைத் தரிசித்தவன் நான் படைப்பிலக்கியத் துறையில் நகர்ப்புறங்களை விட எனது இலட்சியங்களுக்குச் சாதகமான சூழலும், ஏற்ற தளமும் கிராமப் புறங்களில் தான் கிடைத்திருக்கின்றன. தேவையான கதாநாயகப் பிரகிருதிகளைத் தரிசித்து அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை அடியிலிருந்து ஆழமாக அவதானிக்க முடிகிறது. கல்லும் மண்ணும், மேடும் பள்ளமும் கதைகளாகின்றன.
மனுக்குலத்தை நேசிக்கும் ஒருவனுக்கு அவன் வேறு, அவன் கதைகளில் வரும் செய்திகள் வேறல்ல. கதா பாத்திரங்களின் ஊடாக அவனைப் புரிந்து கொள்ளவோ இனங்காணவோ முடியும்.
மூத்த தலைமுறையினர் புனை கதை சம காலக் கண்ணாடி’ என்று மிகவும் பொருத்தமாகக் கூறியிருக்கிறார்கள். கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பங்கள் எள்ளளவேனும் வேறுபடாது.
ஒரு கால கட்டத்தில் சமூகத்தில் நிலவும், எரியும் சம்பவங்கள் இலக்கிய உள்ளங்களில் கருக்களாகப் பதிந்து அவை கலைத்துவம் மிகுந்த இலக்கியங்களாக உருவெடுக்கும் போது, அப்பதிவுகள் பிற்காலத் தலைமுறையினர்க்கு தகவல்களாக அமைகின்றன.
வரலாறு சில வேளைகளில் உண்மையைத் திரித்து விடக் கூடும். ஆனால் இலக்கியம் காலத்தை யதார்த்த பூர்வமாகப் படம்பிடித்துக் காட்டிவிடும். இலக்கியக் கண்ணின் லென்ஸ்', 'கெமராவை விடச் சக்தி வாய்ந்தது.
உத்தி முறைகளை அதிகம் கவனியாது வாசகர்களைக் கவரும் முறையில் எழுத முயன்றிருக்கிறேன்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன் வைத்த தெளிவான
15 m. Lò பயணித்த புகைவணி டி

Page 7
இலக்கியக் கொள்கையும் இலட்சியமும் என்னைக் கவர்ந்தன. சோசலிச யதார்த்தக் கண்ணோட்டம் என் மனதில் ஆழப்பதிந்திருந்தது. இலக்கியம் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும் படைக்கப் பட வேண்டும் என்னும் மகத்தான இலட்சியம் எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று.
| சூழல் இலக்கிய நெஞ்சங்களை உருவாக்குகின்றது. அந்த வகையில் நான் பிறந்து வளர்ந்த சூழலில் தேயிலைத் தோட்டப் பாட்டாளி வர்க்கத்தின் அவலங்கள் நிறைந்த வாழ்க்கை என் உள்ளத்தை நெகிழ வைத்தது. தோட்ட மண்ணில் வேரூன்றிய இந்த நெகிழ்வு பின்னர் தொழில் ரீதியாக கடமைக் குப் போகும் இடங்களிலெல்லாம் அவலங்களுக்குள் அகப்பட்டு, ஒடுக்கப் பட்டு, நசுக்கப் பட்டுக் கிடக்கும் மக்கள் பிரச்சினைகளையே என் மனம் சுமக்க வைத்தன. என் புனை கதைகளுக்குத் தொனிப் பொருளுமாயின.
கலைத்துவமான படைப்புக்களின் மூலமும் கணிசமான படைப்புகளின் மூலமும் கணிசமான அளவு சமூகத் தை மாற்ற முடியும் என்று நினைக்கிறேன். சிருஷ்டிகளில் வாசகரைச் சிந்திக்கத் தூண்டுகின்ற செய்தி எதுவும் இல்லாவிட்டால் எழுத்துக்களில் பிரயோசனம் கிடைக் காது. தமது சிருஷ்டிகளில் மிகவும் நுணுக்கமாகவும், நாசூக்காகவும் வாசகனுக்குச் சமூகச் செய்தியை எட்ட வைக்கும் இலாவகமான உரை நடை இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் பலரிடம் கை வந்த கலையாகப் பிரகாசிக் கின்றதை நான் காண்கிறேன். அத்தகைய ஆக்கங்களைப் படைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும் கூட. 'இலக்கியப்பணி' என்னும் கூற்றுக்கு ஒரு முழுமையான கருத்து இருக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்து முடித்த பிறகு வாசகனுக்குள் ஓர் உறுத்தல் உருவாகி அவன் சிந்தனை விரிய வேண்டும்.
இத் தொகுப்பில் 'வட்டத்திற்கு வெளியே' என்னும் சிறுகதை பல பொதுத் தொகுப்புகளில் இடம் பெற்றதோடு, காலஞ்சென்ற எம். எச். எம். சம்ஸ் அவர்களால் சிங்களத்தில் மொழி பெயர்க்கப் பட்டுச் 'சிலுமின' பத்திரிகையின் 'பாலம்' பகுதியில் வெளியிடப் பட்டதாகும்.
இனி, எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1987ம் ஆண்டு மல்லிகைப் பந்தல் மூலமே வெளியாகியது.
யாழ் கலை இலக்கிய வட்டத்தின் பரிசு பெற்ற இத் தொகுப்பினை 1990ஆம் ஆண்டு தமிழகத்தின் நியூ செஞ்சரி புக் ஹவுஸ்' மறு பதிப்புச் செய்தது.
1960 தொடக்கம் இன்று வரைக்கும் கடந்த நான்கு தஸாப்தங்களுக்கு மேலாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுடன் எனது
ப.ஆப் டீன்

இலக்கியத் தொடர்பு நீடித்திருக்கிறது.
மல்லிகை ஆசிரியரின் மானுடநேயம் மிக்க தூண்டுதல்கள் எனது இலக்கியப் பாதையைச் செழுமைப் படுத்தி என்னை வளரச் செய்தன.
இக்காலப் பகுதியில் ஆக்க இலக்கியத் துறையில் பேராசிரியர் நந்தி அவர்களின் ஊக்குவிப்புக்களுக்குப் பிறகு மல்லிகை சஞ்சிகையின் வருகையும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்புகளும் மிக முக்கியமானவை.
இறுதியாக எனது இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை இத்துணை சிறப்பாக மல்லிகைப் பந்தல் வெளியீடாக வாசகர் கைகளில் தவழச் செய்துள்ள மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும், முன்னுரை வழங்கிய எனது மதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் சுதாராஜ் அவர்களுக்கும், எப்பொழுதும் எனது இலக்கிய முயற்சிகளுக்குத் தம்மை வெளிக்காட்டாது உதவிக் கரம் நீட்டும் அன்பு நெஞ்சங்களுக்கும், மல்லிகை படிகளை ஒப்பு நோக்குவதில் மேலதிக கரிசனை காட்டி எனது கதைகள் சிறந்த முறையில் வாசகரைச் சென்றடைய உதவியாக இருந்த நண்பர் மா.பாலசிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகள். மற்றும், அலுவலக நண்பர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றி.
ப. ஆப்டீன்
131/9, தெமட்டகொட வீதி, கொழும்பு - 9
- நா ம் பயணித்த புகைவண டி

Page 8
முன்னுரை
மூத்த எழுத்தாளரும் இலக்கிய நண்பருமான ஆப்டீனின் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். அவரது இரவின் ராகங்கள் எனும் சிறுகதைத் தொகுதி ஏற்கனவே வெளிவந்து இலக்கிய ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றது இங்கு நினைவு கூரத்தக்கது. இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கருக் கொண்ட மேகங்கள் எனும் நாவலில் புதியதொரு களத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர், ஆப்டீன் அமைதியான சுபாவம் கொண்டவர். இலேசில் தானாகக் கதைக்க மாட்டார். ஒரிரு வசனங்களில் உரையாடுவார். இன்முகம் மனிதர்களிடத்தில் அவர் கொண்டுள்ள நேசிப்பபையும் சமூக அமைப்பிற் கொண்டுள்ள கரிசனையையும் அவரது கதைகளிற் தரிசிக்க முடிகிறது.
- முனாஸ் மாஸ்டர், அனுராதபுரத்திலிருந்து ஹொரவப் பொத்தான ஊடாக வரும் கடைசி பஸ்சில் திருமலை வந்து சேர்கிறார். ஹொரவப் பொத்தானை சந்திக்கு அண்மையிலுள்ள ஒரு கிராமிய முஸ்லிம் பாடசாலையில் கடமையாற்றுபவர், அவர். இப்போது, ஊருக்குப் போவதற்காக, மட்டக்களப்பு ரெயிலைப் பிடிப்பதற்கு வந்திருக்கிறார். அவர் வந்த நேரத்தில் மழை துTறுகிறது. இருட் போர்வை மூடியிருக்கிறது. வீதியில் ஆள் நடமாட்டம் இல்லை. இடி முழங்குகிறது. முனாஸ் மாஸ்டருக்கு அது இடிதானா அல்லது வேறு ஏதாவதா? என்று கலக்கமாயிருக்கிறது. பிரகடனப்படுத்தாத ஊரடங்கு போல, வீதி காட்சி அளிக்கிறது. அதனால் ஒருவித பயம். இரண்டுங்கெட்ட நேரத்தில் என்ன ஏது நடக்குமோ? எனும் திகில்.
- வட்டத்திற்கு வெளியே' எனும் இக்கதையை ஒரு மதிய இடைவேளையில் வாசித்தேன். பல அலுவல்களுக்கு மத்தியிலும் நேர நெருக்கடிக்கு இடையிலும்தான் கதையைக் கையில் எடுத்தேன். முதற் சில வரிகளிலேயே என்னைக் கதைக்குள் கொண்டு வந்துவிட்டார்
ப. ஆப் டீன ○○
سمې

தங்க விடவேண்டாமென்று ரஸ்டிமார் முடிவு. F60 OTTE J55 ITLD (3LI TIEJIE6
ஆப்டீன். ஆள் நடமாட்டமற்ற அந்த இரவு வீதியும், பதட்டத்துடன் நடந்து கொண்டிருக்கும் முனாஸ் மாஸ்டரின் தோற்றமும் என் மனக்கண்ணில் விரிகிறது. எனது மற்ற சொந்த அலுவல்கள் மறந்து (3LI[Töfgi.
ஊருக்குப் போகும் ஆவலில் வந்த முனாஸ் மாஸ்டருக்கு இரவு ரெயில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியும் கிடைக்கிறது. இனிக் காலையிற்தான் போகலாம். இரவு எங்கே தங்குவது?
கதையோடு கதையாக முனாஸ் மாஸ்டரின் உள் மன ஒட்டங்களையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சொல்லிக்கொண்டு செல்கிறார் ஆப்டீன். பயிற்சி முடிந்ததும், அவரது சொந்த மாவட்டத்துக்கே கிடைத்த மாற்றத்தை ரத்துச் செய்து, எந்த ஊரென்றாலும் பரவாயில்லை ஒரு முஸ்லீம் பாடசாலைதான் வேண்டும் எனக் கடுமையாக நின்று பெற்றுக்கொண்ட இடம்தான் அவர் தற்போது கற்பிக்கும் பாடசாலை. தனது சமூகத்துக்குச் சேவை செய்யவேண்டும் எனும் நியாயமான விருப்பம் கொண்டவர்தான், அவர். அவருடைய வட்டம் அது.
பெரிய எடுபாடு எதுவுமின்றி கதையை மிக எளிமையாகச் சொல்கிறார் ஆப்டீன். வாசகரின் கையைப் பிடித்துக்கொண்டு முனாஸ் மாஸ்டருடன் கூட்டிச் செல்கிறார். ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் காட்டுகிறார்.
இராத் தங்கலுக்காக முனாஸ் மாஸ்டர் பள்ளி வாசலை நோக்கி நடக் கிறார். அங்கு சென்று, தொழுகைகளை செவி வனே நிறைவேற்றிவிட்டு சுவரில் சாய்ந்தவர், இலேசான நித்திரையில் ஆழ்ந்துவிட்டார். அதற்குள் அந்த மனிதன் வந்துவிட்டான்.
'இது யார் இங்க..? எழும்புங்க1. எழும்புங்க. பத்து மணிக்கு ஊரடங்குச் சட்டம். நேர காலத்தோட இடத்தைக் காலி பண்ணுங்க!”
"தொழுது போட்டு. விறாந்தையிற் தங்கி காலையில போகத்தான் வந்தன். முந்தியும் இப்படித்தான் தங்கி போறது வழக்கம்’
இந்தாங்க. அந்தக் காலமெல்லாம் இப்ப இல்ல. யாரையும் יין
முனாஸ் மாஸ்டர் வெளியேறி நடக்கிறார். தூறல் மழையாகப்
பொழிகிறது. ஒரு வீட்டுத் தாழ்வாரத்தில் ஒதுங்குகிறார். வீட்டிலிருந்த பெண்மணி அவரை உள்ளே அழைக்கிறாள். தலையைத் துடைத்துக் கொள்ளுமாறு துவாயைக் கொடுக்கிறாள். தேநீர் கொடுத்து
நிர்ம் பயணித்த புகைவணி டி -Oxi)

Page 9
உபசரிக்கிறாள். ''நாங்க மலை நாட்டு சிங்கள ஆக்கள்..... தமிழ் பேச ஏலும்” என அங்கிருந்த முதியவர் கூறுகிறார். இந்தச் சிறிய வீட்டில் இத்தனை பெரிய உள்ளங்களா?' எனப் பிரமித்துப்போகிறார் முனாஸ் மாஸ்டர்.
அங்கிருந்து விடைபெற்று ரெயில் நிலையத்துக்குப் போகிறார். ஸ்டேசன் மாஸ்டர் கண்ணிற்பட்டு; உரையாடுகிறார். அவர் ஒரு தமிழர். அவர் பேசும் தொனியைப் பார்த்தால் அவரும் தன்னை அங்கிருந்து வெளியேற்றிவிடுவாரோ எனும் கலக்கம் ஏற்படுகிறது, முனாஸ் மாஸ்டருக்கு. ஆனால் அவர், முதலாம் வகுப்புப் பயணிகள் தங்கும் அறையை அவருக்கு வழங்குகிறார்.
''உள்ளே... உங்களுக்கு நல்ல வசதிகளும் கிடக்கு! உடுப்பை மாற்றி பயமில்லாமல் நித்திரை கொள்ளுங்க... விறாந்தையில் குளிர்... பாதுகாப்பும் இல்ல...''
முனாஸ் மாஸ்டர் அதுவரை தான் வாழ்ந்து வந்த வட்டத்தை நினைத்துப் பார்க்கிறார். அதற்கும் வெளியே மனிதர்கள் எனும் ஒரு பெரிய வட்டத்தைக் காண்கிறார். மனிதனை மனிதன் நேசிக்கும் உன்னதப் பண்பு, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்தது என்பதை இக்கதை மூலம் ஆப்டீன் உணர்த்துகிறார்.
இந்த ஏழெட்டு நாட்களில் இத்தொகுதியிலுள்ள எல்லாக் கதைகளையும் வாசித்துவிட்டேன். ஆப்டீனின் கதாபாத்திரங்கள் ஏதோ வகையில் மனதைப் பாதிக்கவே செய்தனர். அவர்களை மறக்க முடியவில்லை. ஆப்டீன் படைத்த உயிரோவியங்கள் என அவர்களைக் குறிப்பிடலாம். நான் எனது அன்றாட அலுவல்களிலும் அதையொட்டிய பிரச்சினைகளிலுமிருந்து வேறு ஒரு வட்டத்துக்குள் வந்து விட்டது போலிருந்தது. அவர்களது நினைவுகள் வேறு வேறு நேரங்களில் தோன்றிக் கொண்டிருந்தது. அவர்களுக்காகக் கருணையும் கனிவும் சுரந்தது. தான் வாழும் சூழ்நிலை, அனுபவங்களைப் பொறுத்து, ஏற்பட்ட மனப்பாதிப்புக்களை சிறுகதைகளாகப் புனைந்து, அவற்றை வாசகர் மனங்களிலும் தொற்ற வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் ஆப்டீன்.
'மனிதம் இன்னும் வற்றவில்லை' எனும் கதையில் பிக்பொக்கட்' காரனின் மனிதாபிமானத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
புதிய ஊற்றில் ரமீஸ் எனும் சிறுவனின் மனோநிலை வெகு அழகாகச் சித்தரிக்கப்படுகிறது. வறுமை நிலையிலும் மற்றவர்களிடம் கையேந்த விரும்பாத அச்சிறுவனின் தன்மான உணர்வு, 'உம்மா
ப ஆப் டீன

நான் ஒங்களுக்கு ஒண்டு சொல்றன்,.... நீங்க யாரும் தாரத நம்பிக் கொண்டிருக்காதீங்க....... சரியா...'' என அழுத்தம் திருத்தமாகக் கூறும்
வார்த்தைகளிற் தெறிக்கிறது. தாள்
அடுத்தது, சொந்தத்தில் வீட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு 'எக்கவுண்ட்ஸ் கிளார்க்' ஆக வெளிநாடு பயணமாகும் ராபியாவின் கதை. இக்கதையில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிக்காரர்களின் தில்லு முல்லுகளும் கிழித்துக் காட்டப்படுகிறுது.
'மின்னொளிக்காக ஏங்கும் மினாராக்களில்' சில பிரமுகர்களின் போலி விளம்பரத்து உத்திகளையும், இவர்கள் மத்தியிலும் நிதானமாகச் சிந்தித்து வெளிச்சத்துக் கு வர எத்தனிக்கும் இளம் தலை
முறையினரையும் காணமுடிகிறது.
அந்த அழகிய செவ்வந்திப் பொழுதை விழுங்க இருள் மிக வேகமாகத் துரத்திக்கொண்டிருந்தது... என ஆரம்பிக்கிறது எஞ்சிய நாட்கள் எனும் கதை. ஒரு கட்டத்தில் வேலையிலிருந்து ஒய்வு பெறுவது என்பது எல்லோருக்கும் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த நிலைமையை எதிர் கொள்ளும் பக்குவம் இல்லாது பலர் மன அவஸ்தைக்குட்படுகிறார்கள். நிதானமும் தெளிவும் எஞ்சிய நாட்களைப் பயனுள்ளதாக வாழ வழி செய்யும் என விளக்குகிறார், ஆப்டீன். தேயிலைத் தோட்டத்தில் கடமை... கடமை என்று கடமையுணர்விலேயே லயித்துப்போய் மூன்றரை தசாப்தங்களாகக் கடமை ஆற்றிய தாஹா சாமத் 'பீல்ட் ஓபிசர்' எனும் பதவி பட்டங்களையும் 'பெரியையா” என்ற சிறப்பு கௌரவத்தையும் இருளோடு இருளாக இழந்து ஓய்வு பெறப் போகிறார்.- எஞ்சிய நாட்களைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் கதை இது.
ஜீவ தரிசனம் மனித நேயத்தை மென்மையான உணர்வுகளால் புலப்படுத்தும் இன்னோர் அருமையான சிறுகதை. ஆசிரியராகக் கடமையாற்றும் அவருக்கு வீட்டிலிருந்து அவசரக் கடிதம் வருகிறது. சமராவுக்கு சுகயீனமாம். சமரா அவரது வீட்டில் வேலை செய்த முதியவர். அவரைப் போய்ப் பார்த்து வருவதற்காக ஆசிரியர் லீவுக்கு விண்ணப்பிக்கிறார்.
'என்ன மாஸ்டர்... சமரா ஒரு சாதாரண சிங்கள ஆள். அவருக்காகப் போய் லீவையும் வாரண்டையும் வீணாக்கிறீங்களே?” என அதிபர் ஒரு வகையான ஏளனச் சிரிப்புடன் கேட்கிறார். இவர்கிட்டே ஏன் போய்ச் சொன்னோம்?” என்றிருக்கிறது ஆசிரியருக்கு. 'சமரா ஒரு
in)
நாம் பய ணி த்த புகைவண டி

Page 10
சிங்கள பெளத்த ஆள் என்று மட்டும்தானே இவருக்குத் தெரியும். அதற்கு மேல் இவருக்கு என்ன தெரியும்? என மனம் குமுறுகிறார் ஆப்டீன். உண்மைதான் ஆப்டீனின் பார்வையில் வித்தியாசம் இருக்கிறது. சுமாரான மனிதர்களின் பார்வைக்கும் மேலாக ஆப்டீனின் பார்வை மனிதர்கள் மேல் கருணையுடன் விழுகிறது. மனிதர்களையும் சமூகத்தையும் மிகக் கரிசனையுடன் நோக்குகிறார். இது அவருடைய பல கதைகளிற் தென்படுகிறது.
'நாம் பயணித்த புகைவண்டி' - சில்மி முஹமட் சக ஸ்டெல்லா ராணி ஆகிய ஆசிரியர்களைப் பற்றிய கதை. அவர்களுக்குள் மென்மையான காதலுணர்வு அல்லது பரஸ்பர விருப்பம் ஒழிந்திருப்பது போலவே, கதையிலும் இது சொல்லாமல் சொல்லப்படுகிறது, என்றே கருதுகிறேன். நாம் பயணித்த புகைவண்டி எனும் தலைப்புக்கு அப்பால் சொல்லப்படாத ஒரு சோகம் தொங்கி நிற்பது போலிருக்கிறது. பயணித்த புகைவண்டிக்கு என்ன நடந்தது?. அல்லது இப்படி ஆகிவிட்டதே எனும் சோகம், இனக் கலவரத்தின் கோர முகத்தை ஒரே ஒரு வரியில் வெளிப்படுத்தி காட்டுகிறார், ஆப்டீன்.
இன்னும், காப்புக்காக, ஞானம், குட்டிம்மா போன்ற கதைகளிலுள்ள ரசனை உணர்வுகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
தண்டனை எனும் பெயரில் சில ஆசிரியர்கள் மாணவச் சிறுவர்களைப் பலவித சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறார்கள். இந்தக் கொடுமைகளையும் அதனாலான பாதிப்புக்களையும் வெளியே காட்டும் கதை “ஞானம.
வேலை நிமித்தம் வெளிநாடு சென்றவன், திரும்ப வரும் போது எயிட்ஸ் நோயையும் காவி வந்துவிட்டான். அவனோ ஒர் அப்பாவி. ஒழுக்க சீலன், எப்படி இந்நோய் தனக்குத் தொற்றியது என்பது அவனுக்கே புரியாதிருக்கிறது. அவனை மனைவி பிள்ளைகளும், வெளி ஆட்களும் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். அவர்களது விமர்சனங்கள்தான் அவனைக் கொல்ல வந்த கிருமிகளை விடக் கொடியதாக இருக்கிறதாம். அவன்தான் காயப்பட்டவன். உறவுநிலை, நேசிப்பு போன்ற பாசப் பிணைப்புகள்கூட சுயநலக்கண்களும் குறுகிய மனமும் கொண்ட மனிதர்களிடையே போலியாகிப் போவதை இக் கதை மூலம் உணர்த்துகிறார், ஆப்டீன்.
ஆப்டீனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பாடம், கதைகளைக் கூறும்போது சமூக, தனிமனித விமர்சனங்களையும் பொருத்தமான இடங்களில் வைக்கிறார். தனக்குத் தெரிந்ததும், தான் அனுபவம்
っ一○○
ப ஆப் டீன

அனுபவம் பெற்றதுமான ஆசிரியத்தொழில், மலையக மாந்தர், முஸ்லீம் சமூகம் பற்றிய கதைகளையே அவர் கூறினாலும், அவற்றில் மனித மேம்பாட்டை வலியுறுத்தும் பொதுமைப்பாடான கருத்துக்கள் நிறைய உள்ளன.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இவை போன்ற ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். அல்லது இப்படியானவர்களைச் சந்தித்திருக்கக்கூடும். அப்போது ஏனோதானோ என்று பெரிதாக மனதைத் தொடாமல் விட்டிருக்கலாம். ஆனால் ஆப் டீனின் சிறுகதைகளை வாசித்த பின்னர் அவை நிச்சயம் மீள் சிந்தனைக்குட்படும். ஒரு நல்ல சிறுகதையின் பயனும் அதுதான்.
நண்பர் ஆப்டீன் இன்னும் நிறைய எழுத வேண்டும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத்துறையை அணி செய்ய வரும் இத்தொகுதியைப் படைத்தமைக்காக ஆப்டீன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தல் வெளியிடுகிறது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜிவா அவர்கள் இதுபோன்ற நல்ல பல சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- "சுதாராஜ்
/"நாம் பயணித்த புகைவணி டி ー○○

Page 11
៣ថៃចាបំលាប់ Ug
VSN467 rណ៍បច្ច័យ "பி" வெளியிட்டுள்ள நூல்கள்
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு விலை: 250/=
(இரண்டாம் பதிப்பு புதிய அநபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் ബിജ്ഞ: 140/-] அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் விலை: 180/=) கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் விலை:175/=
மண்ணின் மலர்கள் ~ (யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ மாணவியரது சிறுகதைகள்) விலை: II os6. நானும் எனது நாவல்களும் ~ செங்கை ஆழியான் விலை 80/-)
கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாஹற் விலை 100/= முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா விலை 110/= 9. முனியப்ப தாசன் கதைகள் - முனியப்பதாசன் (விலை 150/-) 10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) ~ பாலரஞ்சனி விலை 60/= 11. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ சிரித்திரன் சுந்தர் விலை: 175/-) 12. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) விலை: 175/-) 13. சேலை முல்லையூரான் விலை: 150/=)
14 மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் விலை: 275/-)
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. நிலக்கிளி ~ பாலமனோகரன் விலை 140/= 16. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் தொகுப்பு:
டொமினிக் ஜீவா விலை: 150/=) 17. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) வெளிவந்து விட்டது விலை 350/=
தொகுப்பு - செங்கை ஆழியான் 18. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) - ப.ஆப்டீன் விலை 150/=) 19. தரை மீன்கள் ச.முருகானந்தன் விலை 150/=) 20. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் ~ செங்கை ஆழியான் (விலை: 250/= ーエーてエ>
ப. ஆப் டீனர்
 


Page 12

1. வட்டத்திற்கு வெளியே . Ol
2. மனிதம் இன்னும் வற்றவில்லை . 11
3. புதிய ஊற்று . 18
4. சொந்தத்தில் ஒரு வீடு . 23
5. மின்னொளிக்காக ஏங்கும் மினாராக்கள். 33
6. எஞ்சிய நாட்கள்.43
7 ஜிவ தரிசனம் . 55
8. நாம் பயணித்த புகை வண்டி . 69
9. காப்புக்காக . 86
10. ஞானம் . 95
11. (5.19 budT .................................................................................. O4
12. காயப்பட்டவன். ............................... 14
"நாம் பயணித்த புகைவணி டி" --ட- Cavii)

Page 13
W
.
 
 
 
 
 

வடட் டத்திற்கு
G6) i 6 rí POSLIL
சனசஞ்சாரமற்ற, ஊரடங்கு உத்தரவு அமுலிலிருக்கும், ஒரு
茄 ருமலைப் பிரதேசம் இருட் போர்வைக்குள் குடங்கி,
பிரதேசமாகக் காட்சியளித்தது.
அந்த நேரத்தில், அது -
அநுராதபுரத்திலிருந்து ஹொரவப் பொத்தான ஊடாக வந்த கடைசி பஸ், நிலையத்திற்குப் போய் ஆறுதலாக நிற்க முன்னமே மூட்டை முடிச்சுகளுடன் விழுந்தடித்துக் கொண்டு இறங்கிய, அந்த விரல் விட்டு எண்ணக் கூடிய பிரயாணிகளுக்கு எப்படித் தான் இறகுகள் முளைத்தனவோ!
அப்படி என்ன அவசரம்?
பஸ்ஸை விட்டு இறங்கிய முனாஸ் மாஸ்டர் கிட்பேக் சுமையுடன் கடைத் தெருவை நோக்கி வெறுப்புடன் நடந்து கொண்டிருந்தார்.
அவரால் வேகமாக நடக்க முடியவில்லை.
வானத்திலிருந்து இலேசான தூறல், தொடர்ந்து ஒரு மின் வெட்டு, பாதைக்கு 'டோச் அடிக்க மறுகணம் எங்கோ இடி முழக்கம் அது இடி முழக்கமா அல்லது வேறு எதுவுமா? ஆசிரியருக்குப் பிரமை
۔۔۔ ---------------------------ص~~~~-------------------محمحب۔--سس۔رے "நாம் பயணித்த புகைவன்ை டி 一○

Page 14
தட்டியது. இடிமுழக கம் தான் என பதற்கு மினி ன ல சாட்சியமளித்துள்ளதால், அவர் உள்ளத்தில் எழுந்த ஐயத்தை அந்தக் கணமே பொசுக்கிக் கொண்டார்.
எனினும் ஜன சந்தடியற்ற ரோடு
உள்ளம் பதட்டப் படாமல் இல்லை.
ஹய். ய். என்ற இரைச்சலோடு சுகாதாரப் பகுதியின் அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் அம்புலன்ஸ் வண்டியின் திகிலோசை வேறு.
இனம் புரியாத ஒரு டென்ஷன் தான்! மூடியிருந்த கடையோரங்களில் சற்று நின்று. நிதானித்து தூறல் நின்றவுடன் போக அவருக்குத் தைரியமில்லை.
நிலைமை சூழலை மாசடையச் செய்து விட்டிருந்தது.
நடையில் சறறு வேகத்தைக் கூட்டி விட்டோம் என்ற நினைப்பில் அதே ஆமை வேகத்தில் தான் நடக்கிறார். நனைந்துகொண்டே.
தொழுகைக்காகப் பாவிக்கும் வெள்ளைத் தொப்பியை இழுத்தெடுத்து தலையில் போட்டிருந்ததால் உச்சந் தலைக்கு மட்டும் ஒரு சிறு பாதுகாப்பு அவ்வளவு தான். -
நிலைமை இப்படி ஆளைக் கொல்லும் என்றிருந்தால், நாளைக்குக் காலையில் ஆறுதலாகப் புறப்பட்டிருக்கலாமே!
இப்படியும் அடிமனம் குத்திக்காட்டுகிறது. அத்தோடு, "இனிமேல் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தால், இரண்டுங் கெட்ட நேரத்தில் புறப்படக் கூடாது காலங் கெட்டுப் போயிருக்கிற சங்கட வேளையில்:
ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தாகி விட்டது.
என்ன செய்வது? காசோலை மூலம் ஆசிரிய வேதனம் - என்ற நிலை வந்ததும் முனாஸ் மாஸ்டரின் பாடு படு சிக்கல் தான். பெரும் அலைச்சல்களுக்குள்ளும் ஆக்கிவிட்டிருந்தது.
பாடசாலையிலிருந்து பல மைல் தூரத்திலுள்ள வங்கியில் தமது சேமிப்புக் கணக்கில் காசோலையைப் போட்டு விட்டு 'இன்று போய் நாளை வா’ என்று எத்தனை அலைக்களிப்பு இருபது வருடங்களுக்கு மேலாக இருபதாம் திகதியையே மையமாக வைத்து, சம்பளப் பணத்தைப் பெற்றுத் தமது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்
一○
--ایس-ایس---------محص~-------------------صصحساس ہی سبیلے سے r 15 ft (D பயனரி 8Ꮟ ;35 Ꮏ.| 6Ꮌ2 ᏧᏏ 6Ꮑ! 6ᎼᏈᏓ tvl

கொடுக்கும் அவருக்கு, ஊரில் உள்ள கொடுக்கல் வாங்கல் உட்பட எதையுமே திட்டமிட்டுக் கருமமாற்ற முடியாத சங்கடங்கள்.
ஹொரவப் பொத்தான சந்தியிலிருந்து சில மைல் தொலைவில் ஒரு கிராமிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில், ஒரேயொரு விசேஷ பயிற்சி பெற்ற கணித ஆசிரியரே முனாஸ் மாஸ்டர்.
பயிற்சி முடிந்ததும் சொந்த மாவட்டத்திற்கு வந்த மாற்றல் கடிதத்தை ரத்துச் செய்து நாட்டின் எப் பகுதியாயிருந்தாலும் பரவாயில்லை. தனக்கு ஒரு முஸ்லிம் LITT LEFT GODIN) மட்டுந்தான் வேண்டும் என்று காரசாரமாய் நின்று வெற்றி கொண்ட மகாவித்தியாலயம் இது.
பின் தங்கிய கிராமப் பாடசாலைகளில் விசேஷ தராதரம் பெற்ற ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது கடினமானதால், அதிபரின் பூரண அனுசரணையும். ஏனைய ஆசிரியர்கள், ஊர் மக்கள் போன்றோரின் ஒத்துழைப்பும் உதவிகளும் அவருக்கு எப்போதும் காத்திருந்தன.
அதே கிராமத்தைச் சார்ந்த அதிபருக்குப் பெரிய கல்வீடு இருப்பதால் விடுதியை இரு ஆசிரியருக்கு ஒர் அறை என்ற விகிதத்தில் பகிர்ந்தளித்திருந்தார். முனாஸ் மாஸ்டருக்கு மட்டும் வசதி கூடிய ஒரு தனி அறை.
ஆனால், புதிதாக மாற்றலாகி வந்த தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ரவீந்திரனுக்கு அறைப் பிரச்சினை வந்தபோது.
முனாஸ் மாஸ்டர் ஊர் பள்ளிவாசலில் ஓர் அறையைப் பெற்றுக்
கொள்வதாக, தனது தியாக மனப்பான்மையைக் காட்டி ஒதுங்கிக் கொண்டார்.
இரு த ஸாப்தங்களுக்கு மேலாக அதே ஊரில் காலம் கடத்தியதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது.
வருடா வருடம் இரண்டு ஏக்கர் வயல் உழுவதற்கு நெருக்கமான சிலர் கைகொடுத்து உதவுகின்றனர்.
வருடத்திற்கு ஒருமுறை மேலதிக வயல் வருமானம் ஒரு
வரப்பிரசாதம்.
ஆனால் முனாஸ் மாஸ்டர் வயலுக்குப் போனதாகச் சரித்திரம் இல்லை. உரிய முதலீடு செய்து விட்டால் எல்லாமே அவரது
一○
-- ܝܚܚܚܚܚܚܚܗܗܗܗ ܗܝ**------ ܗܝ•

Page 15
நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவியால் வெற்றிகரமாக நடந்து முடியும்.
விதை நெல், கிருமி நாசினி உரம், உழவு இயந்திரம் அது இதுவென்று, கணித ஆசிரியர் மனக்கணக்குப் போட்டுப் பார்ப்பதோடு சரி ஒரு காலத்திலும் நட்டம் போனதில்லை. காலத்தை கணிப்பீடு செய்து இந்த வருஷம் பருவ மழையை நம்பி அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்' என்று சொல்லி விட்டால் அது அச்சொட்டாக இருக்கும். பழுத்த விவசாயிகளாலும், அது முடியாத காரியம். ஆகவேதான் அவர் கிராம மக்களின் விவசாய ஆலோசகர்
ஒரே வித்தியாலயத்தில் இரு தஸாப்தங்களுக்கு மேலாக கடமையாற்றுவதற்கு அவர் எந்த வித யுக்தியையும் கையாளவில்லை. அவரிடம் ஒர் ஆசிரியனுக்கேயுரிய, மிக நேர்மையான யுக்தி பிறவிப் பலனாக அமைந்திருந்தது
தனது கணித பாட போதனையை மிக அற்புதமாகச் செய்து, சில வேளைகளில் இலவச வகுப்புகளையும் வைத்து, ஒவ்வொரு வருடமும் நல்ல பெறு பேறுகளை ஈட்டிக் கொண்டிருந்தார். முஸ்லிம் இளைஞர்கள் கணித பாடத்தில் பின் தங்கிவிடக் கூடாது என்பார். அது அவருக்கே உரித்தான, அவரது உள்ளத்தில் ஊறிப்போன சம்பவம்.
பிறந்த ஊருக்கு மாறிப்போக வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை.
சொந்த ஊரில் போட்டியும் பொறாமையும், இன சன விரோதங்களும் தவிர வேறு என்ன இலாபம்
சொந்த வீடும். வீட்டைச் சுற்றிய வளவும் தான் அவருடைய பரம்பரைச் சொத்து
இது போன்ற பின் தங்கிய கிராமங்களில் ஆசிரியனுக்கு எப்போதும் மந்திரிக்குரிய கெளரவம் தானே!
கல்வி முடிந்ததும் வெறுமனே இரண்டு வருடங்கள் தான் சொந்த ஊர்ப்பாடசாலையில் சேவை செய்துள்ளார். பின்னர் இரண்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் முடங்கிக் கிடந்த பின்னர் கிடைத்த இந்த "ஹொரவப் பொத்தான மாற்றத்தைத்தான் அவர் வாழ்க்கையில் விமோசனமாகக் கருதி வருகிறார். அது தவிர மாஸ்ட்ருக்கு வெளியூர் அனுபவங்கள் கிட்டவில்லை.
一○
一ーム一ーエー "நாம் பயணித்த Ꮏ | 6Ꮌ2 ᏧᏏ 6Ꮒ1 60ᏡᎢ lᎸ

பல இன மக்கள் வாழும் இடங்களில் சேவை செய்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. அவருடைய ஆசிரிய உள்ளம் ஒரு சிறு வட்டத்தினுள்ளேயே அமிழந்துவிட்டது. இது துரதிர்ஷ்டம் தான்
சூழல் அவல அப்படி ஆளாக்கிவிட்டிருநதது. i r
சுமையோடு நடந்து கொண்டிருந்தவருக்கு மீண்டும் ஒரு மினவெட்டு அவர் பாதை:ைத் தெளிவாக்கியது. இங்கேயோ இடி முழக்கம்
கேட்டது.
(~) - r. ~\ -
ஒரு சிறுவன் அரைக் குடையில் வந்து கொண்டிருந்தான்.
- - - O ། தம்பி உன் பேர்?
"முஹம்மது ரிஸ்வி
"நானெனச்சேன். சரி மெடீனா ஒட்டல் திறந்திருக்கா .?”
‘நான் காணல் ல சேர். பக்கத்தில் சைவக் கடை റ . A - தறந்தருக்கு.
பையன் எதிர்த் திசையில் நடந்துவிட்டான். - ” . .. ܋ ܙ ܵ
'சை ஒட்டல் திறந்திருந்தால் நிச்சயம் மெனோவும் திறந்திருக்கும்'
சில நிமிடங்கள் நடை
அவர் எதிர்பார்த்தது போல் மெடீனாவும் திறந்திருந்ததைக் கண்டு. மனம் பூரித்தார்.
மிக நீணட தேநீர்க்கடை அவருக்குப் பழக கப்பட்டதால்,
உள்ளுககே நுழைநது ஈர கிட் பேக்கை மேசை மீது வைத்துக் களைப்பாறினார். முகம் கைகளைக் கழுவி, நனைந்த பாகங்களைத்
துடைத்து விட்டு தலையைச் சீப்பினால் வாரிச் சுவரில் தொங்கும் கண்ணாடியில் பார்ததார். அவர் அவராகத் தான் இருந்தார்.
வெயிட்டர் வந்து என்ன சாப்பிடப் போறிங்க ? என்ற தோரணையில் முன்னால் நின்றான். வயிற்றுக்குள் "கர்முர்னெறு போர் தொடுத்த கோரப்பசிக்கு. கோதுமை ரொட்டியும், மின கறியும் கொடுத்து சமாதானப்படுத்தி தேநீரும் அருந்தி இராப் போசனத்தை முடித்து விட்டு, பணம் செலுத்த வந்த போது
வெளியில் முற்றாக ஓய்வு எடுத்திருந்த தூறல் மீண்டும்
ܡܫܝܚ. ------ش "حصص سے۔ "நாம் பயணித்த பு ைகவன டி ---

Page 16
மாஸ்டருக்குப் பன்னீர் தெளிக்க ஆரம்பித்தது மட்டக்களப்பு மெயில் ரெயில் இன்றைக்கு.?”
காஸியராக இருந்த இளைஞனுக்கு எந்த வித அக்கறையுமில்லை. தெரியாது” என்ற சொல்லை மட்டும் உதிர்த்தான். மேசையின் பக்கத்தில் ரெலிபோன் பூட்டப்பட்டுக் கிடந்தது.
முனாஸ் மாஸ்டர் புகைவண்டி நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
மீண்டும் ஒரு மின்வெட்டு
வானம் 'சோவென்று கதற ஆரம்பித்தது. சோகமாக,
நிலையத்தை அடைவதற்குள் தூறலில் ஊறித் தெப்பமாகிவிட்டார்.
”. இரவு ரெயில் இன்றைக்கு இல்லை. நாளை காலை ஐநது முப்பதுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் இருக்கு."
ஸ்டேஷன மாஸ்டரின் அழுத்தம் திருத்தமான மறுமொழியால் நிலை குலைந்து நின்றவர். மேலும் தாமதிக்கவில்லை.
இராத் தொழுகைக்கும். இராத் தங்கலுக்காகவும் தக்கியா' என்னும் பள்ளி வாசலை நோக்கி நடந்தார்.
அந்தச் சிறு ஆலயம் தான் இப்போதைக்குத் தஞ்சமளிக்கக் கூடிய ஒரேயொரு புகலிடம.
முனாஸ் மாஸ்டருக்கு என்றால் இன்றைய பிரயாணம் சீயென்று வெறுத்துவிட்டது.
ஆனால், அடுத்த மாதத்திலிருந்து இந்தப் பிரச்சினை இருக்காது கரன்ற் அகவுன்ற் வைத்திருப்பவர்கள் அடுத்த மாதம் தொடக்கம் உதவுவதாக வாக்களித்துள்ளார்கள் செக்கை ஒப்படைத்த மறுகணமே பணத்தைத் தருவார்களாம்.
அப்படியே அவர்கள் தந்தாலும், இப்படியான இரண்டுங் கெட்ட நேரத்தில் புறப்பட்டு வந்து மாட்டிக் கொள்ளக் கூடாது.
முன் யோசனையற்ற மடத்தனமான அவசரச் செய்கையை மனம் இடித்துக் கண்டித்தது.
வானத்தின் சோககிதம் சற்று அடங்கியிருந்தது.

நன்றாக நனைந்ததாலும், நிறைய நடந்ததாலும் களைத்துப் போய் அந்தப் புனிதமான வணக்க ஸ்தலத்தை அடைந்தார்.
கூட்டுத் தொழுகை முடிந்து நீண்ட நேரமாகிவிட்டிருந்ததை பள்ளிவாசலின் சுவர்க் கடிகாரம் படீரென்று அறைந்து உறுத்தியது.
தன்னைத் தொழுகைக்காக சுத்திகரித்துக் கொண்டு. உள்ளே நுழைந்தார்.
தொழுகைகளைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டுச் சுவரில் சாய்ந்தவர். இலேசான நித்திரையில் சில கணங்கள் தன்னை மறந்துவிட்டார்.
அதற்குள் அந்த மனிதன் வந்து அந்த ஆட்டம் ஆடுமென்று அவர் எதிர்பார்க்கவில்லைத்தான்.
வார்த்தைகளைப் பிரயோகிப்பதற்கும் ஒரு இங்கிதமான முறை இருக்கிறது தானே!
'இது யார் இங்க..? எழும்புங்க. எழும்புங்க பத்துமணிக்கு ஊரடங்குச் சட்டம் நேர காலத்தோடை இடத்தக் காலி பண்ணுங்க."
"தொழுது போட்டு, விறாந்தையில் தங்கி காலையில் போகத்தான் வந்தன் முந்தியும் இப்படித்தான் தங்கிப் போறது வழக்கம்.”
"இந்தாங்க. அந்தக்காலமெல்லாம் இப்ப இல்ல. யாரையும் தங்கவிட வேண்டாமென்று ரஸ்டிமார் முடிவு சுணங்காம போங்க."
மரியாதையாக வெளியே போ - பிளிஸ் கெட்டவுட் என்று சொல்லாமல் சொல்கிறான்.
முனாஸ் மாஸ்டரின் உள்ளத்தில் எரிமலை வெடித்தது.
இது ஒரு ஜடம், இதனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை.
இவன்களெல்லாம்.?
முனாஸ் மாஸ்டரின் உள் மனம் முதன் முறையாகக் கேள்வி எழுப்பியது.
மீண்டும் ஒரு மின் வெட்டு
பாதை தெளிவாகிறது. இலேசான தூறல், சமீபத்தில் எங்கோ இடிமுழக்கம் தான்.
"நா டம் பயனளித்த புகை வர்ை டி 一○

Page 17
அவருடைய கால்கள் மீண்டும் புகைவண்டி நிலையத்திற்குத் திரும்புகின்றன. எதிர்பாராத விதமாகத் தூறல் மழையாகப் பொழியத் தொடங்கியது. Va
அவர் கண்ணுக்கெட்டிய ஒரு வீட்டுத் தாழ்வாரத்தில் ஒதுங்கினார். இருந்தாலும் மழையிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை. மிக ஒடுங்கிய தாழ்வாரம் அது சற்று நேரத்தில் அரை குறையாகத் திறக்கப் பட்ட வாசல் ஊடாக ஒரு பெண்மணியின் முகம் தெரிந்தது
மட்டுமல்ல 'என்ன. பெரும் மழை அடிக்குது. உள்ளுக்கு வாங்க. என்றதும் அவரிடம் கேளாமலே அவரது கால்கள் அவ்வழைப்புக்குக்குக் கட்டுப்பட்டன. “எங்களுக்கு உள்ளுக்க இருக்க முடியல்ல. நீங்க அங்க நிக்கிறீங்களே! இந்தாங்க தலை துடைங்க." என்றவாறு ஒரு துவாயை நீட்டினாள்
அந்தச் சிங்களப் பெண்ணின் செய்கையால் அதிர்ந்து போனார்.
தலையை இலேசாகத் துடைத்தவாறே அவரது கண்கள் துழாவின. தரையில் ஒரு சிறுவன் ஆழ்ந்த நித்திரை பக்கத்தில் ஒரு பருவமாது பத்திரிகையில் மூழ்கியவாறு அடிக்கடி இருமியபடி ஒரு முதியவர். தலைக்கு மேல் கொடியில் தொங்கும் ஆடைகள், ஒரு சின்னஞ்சிறிய டிரான்ஸிஸ்டர் ரேடியோ சத்தமிட்டுக் கொண்டிருந்தது. நான்கைந்து கதிரைகள் அந்த அறை தவிர அதை ஒட்டினாற் போல ஒரு சிறு அறை. அது சமையலறையாக இருக்க வேண்டும் இதற்கிடையில் முதியவரின் வேண்டுகோள் தம்பி நிக்கிறது. உட்காருங்க." என்றவாறு ஒரு சிறிய ஸ்ரூலை காட்டினார்.
அவர்களுக்கு அரைகுறையாகத் தமிழ் தெரியும் அவருக்கோ அறவே சிங்களம் தெரியாது.
குசினிப் பக்கமாக இருந்து எட்டிப் பார்த்த ஒரு புதிய முகம் நல்லா நனஞ்சிட்டீங்க. போலிருக்கு." என்று முடிக்க முன்பே,
என்றவாறு ஒரு கப்பை நீட்டினாள் மாஸ்டருக்கு வார்த்தைகள் திக்குமுக்காகின. முதியவர் சொன்னார், நாங்க மல நாட்டு சிங்கள
ஆக்கள். தமிழ் பேச ஏலும். மாஸ்டர் சாயத்தை உறிஞ்சினார். மலை நாட்டுச் சாயம் போலிருக்கே. என்று பாராட்டினார். ஒ.
தம்பி அனுப்பியிருந்திச்சி."
இந்தச் சிறிய வீட்டுக்குள் இவ்வளவு ஜீவன்களா..? எப்படி வாழுதுகள்? அவரது மனம் அங்கலாய்த்தது.
۔۔۔۔۔۔--سسحسس~--------~~~~ ---ལ--ཡཕ------ صحصص سب سے つエリ "b 'b t | 68 ) ("E, 6) | 68 OT Iq 一○
 

தம்பி இந்த நேரம் எங்க போறிங்க?" என்ற முதியவரின் வினாவுக்கு -
"ஸ்டேசனுக்கு” என்றார் மாஸ்டர்.
“இந்த நேரத்துக்கு எந்தக் கோச்சியும் இல்லையே..! இனி காலயில தான். இன்னும் கொஞ்சத்தில ஊரடங்கு போடுவாங்க. ம். ம். என்ன செய்யிறது பாருங்களே எங்கட வீடு இவ்வளவு தான். உங்கள நிக்கச் சொல்லவும் வழில் லயே!” என்றவாறு யோசித்தாள் அந்த மாது.
இதற்கிடையில் மழையும் ஒரளவு தணிந்திருந்தது. "இல்ல வேண்டியதில்ல. நீங்க செஞ்ச இந்த உதவியே வாழ்க்கையில் மறக்க ஏலாது. நான் இன்னொரு நாளக்கி வாறன்." என்று தனது நன்றியைத் தெரிவித்தவாறு அவரது பயணம் மீண்டும் ஸ்டேஷனை நோக்கித் தொடர்ந்தது.
“சிங்கள மனிதராயிருந்தாலும், எவ்வளவு பண்பான மனிதர்கள்." அவரது உள்ளம் பள்ளிச் சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தது. தான் இதுவரை வாழ்ந்த வட்டத்தை நினைத்து வெட்கினார். வெறிச்சோடிக் கிடந்த நிலையத்தை வந்தடைந்து மீண்டும் தலைமயிரை கையால் நீவி விட்டுக் கொண்டிருக்கும் போது -
தற்செயலாக ஸ்டேசன் மாஸ்டரின் கண்களில் பட்டு விட்டார்.
"ஒ. நீங்களா? நல்லா நனஞ்சி போட்டீங்கள் போலிருக்கு. சாப்பிடப் போனிங்களே..?
"சாப்பாடும் முடிந்து விட்டது. குளிப்பும் முடிந்து விட்டது” என்று நகைச்சுவையாகக் கூறிய முனாஸ் மாஸ்டர் துவாயை இழுத்தெடுத்து மீண்டும் தலையைத் துடைத்தார்.
இருவரும் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
"இருங்க மாஸ்ரர் ஒரு நிமிஷத்தால வாறன்’ என்று அப்பால் நகர்ந்தார் எஸ்.எம்.
நொந்து போன முனாஸ் மாஸ்டருக்கு எரிச்சலாக இருந்தது. மீண்டும் வெளியேற்றினால் எங்கே போவது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.
"மாஸ்ரர் வாருங்கோ.

Page 18
ஒன்றும் புரியாமல் சற்றுத் திகைத்துப் போன அவர் கிட்பேக்குடன் அவர் பின்னால் நடந்தார்.
வெளியில் மின் வெட்டு
"மாஸ்ரர் இதைக் கவனமா வைத்திருங்க. இது முதலாம் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறைத் திறப்பு உள்ளே உங்களுக்கு எல்லா
வசதிகளும் கிடக்கு உடுப்பை மாற்றி பயமில்லாம நித்திரை
கொள்ளுங்க விறாந்தையில் குளிர் பாதுகாப்பும் இல்லை. காலையில் அறையைப் பூட்டித் திறப்பைத் தர மறந்துவிடாதீங்க."
அந்தக் குளிரிலும் முனாஸ் மாஸ்டருக்கு வியர்த்து விட்டது. நிம்மதியான நித்திரைக்குப் பின் விடியல் பிறந்தது.
புகை வண்டி நிலையக் கன்ரீனில் ஆள் நடமாட்டம் காணப்பட்டது. பிரயாணிகள் மிகச் சிலரே.
மாற்றுடையில் முனாஸ் மாஸ்ரர் தூய்மையாக, புது மலர்ச்சியுடன் காணப்பட்டார்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து, ஸ்ரேஷன் மாஸ்டருக்குத் தமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பித்துத் திறப்பை ஒப்படைத்து தயங்கித் தயங்கி -
“உங்களது பெயர்.?” "தியாகராசா." வானம் தெளிவாக இருந்தது.
இதுவரைக்கும் தான் வாழ்ந்த வட்டத்தை நினைத்துப் பார்த்தார் ஒரு கணம் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
விசேஷ கடுகதிப் புகைவண்டி ஒரு புதிய மனிதரைச் சுமந்து கொண்டு புதுப் பொலிவுடன் கிழக்கு மாகாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
மல்லிகை
ஏப்ரல் - 1990
--------------------------- "־על־-------------- "நாம் பயணித்த புகைவர்ை டி 一て10>

மனிதம் இன்னும்
வற்றவில்லை !
யில் நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது. அந்தச் ெ சுட்டெரிப்பில் நின்று நின்று கால்கள் கடுகடுத்து மனமும்
சலித்துவிட்டது.
அலுவலகம் சம்பந்தப் பட்ட வெளிவேலை ஒன்றின் நிமித்தம் இன்று அரைநாள் கடமை லீவு காலை பத்து மணிக்கே அவ் வேலையைச் செவ்வனே செய்துவிட்டு வந்து, ஒரு மணிநேர ஒய்விற்குப் பின் குளித்து ஆற அமரப் பகலுணவை முடித்து. பதினொன்று முப்பதுக்கு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி வந்த கோலம் தான் இது.
அரை மணி நேரத்திற்கு முன் வெறிச்சோடிக் கிடந்த இந்தப் பஸ் ஹோல்டில்
அவன் மட்டுந்தான் நின்று கொண்டிருந்தான். கருப்பு சேர்ட், கறுப்பு மூக்குக் கண்ணாடி வெள்ளை வெளேரென்ற களிசான் இந்த ஒப்பனையில் கண்ணாடியை இடித்து வெளியே படர்ந்த பார்வையை பல திக்குகளில் அலையவிட்டுக் கெண்டிருந்தான்.
அவனுடைய நண்பர்கள் போல இருவர் திடீரென்று தோன்றினார்கள். ஒருவன் சிறிய குடையை விரிக்கிறான். கருப்பு சேர்ட் குடைக்குள் புகுந்து கொள்ள மற்றவன் கையிலிருந்த காவி
۔۔۔۔بمب~---------سّسسضح - مم------------ ع ---صصصص۔-----۔ "நாம் பயணித்த புகைவணiri ------ -CID

Page 19
நிற பேப்பர் உறையை தலைக்கு மேலால் உயர்த்திப் பிடித்து உச்சி வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு பிரயத்தனம்
கறுப்புக் கண்ணாடி சிகப்பு நிறப் பக்கட் ஒன்றை நீட்டினான். ஏககாலத்தில் மூன்று கோல்ட்லிவ் சிகரட்டுகளுக்குத் தீ மூட்டிக் கொள்கின்றனர். -
பிரயாணிகள் கூடக் கூட கறுப்புக் கண்ணாடியின் பிரிய நேசர்களான - கோல்ட் லீவ்கள் இருவரும் பிரிந்ததை அவதானிக்க முடியவில்லை.
"இந்த ரூட்டுக்கு பிரைவெட் பஸ் இல்லையோ? இது ஒர் அப்பாவி கிராமவாசியின் தவிப்பு
'அபூர்வமாக சீரிபிவரும் அவசரங்களும் சீசன் டிக்கட்டுகளும் முண்டியடித்துக் கொண்டு தொங்கிக் கொள்ளும்” என்று நான் சொல்வதற்குள் ஹோல்டிற்கு முன்னால் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்த கூல் ஸ்பொட்டிற்கு நடந்துவிட்டார். நானும் வெறுப்பாகச் செவ்விளநீர்க் குரும்பை ஒன்றை வெட்டச் செய்து அண்ணாந்து குடிக்கிறேன். அதுவும் இதமாக இல்லை என் மனம் போல.
சகுனங்கள் இன்று சரியில்லை!
தெமிலிக்கு நான்கு ரூபா ஐம்பது சதம் வீண் மனம் குமைந்து வெம்புகிறது. ஒரு பஸ்ஸையும் இன்னும் காணலியே.
சற்று அருகிலேயே கறுப்புக் கண்ணாடியும் குளிர்ந்த கொக்கோ கோலாவை உறிஞ்சிக் கொண்டிருந்தான். கறுப்புச் சேர்ட்டுக்கு வெள்ளைக் காற்சட்டை? நிறப் பொருத்தம் தலைகீழாக இருக்கிறது. நாற்பதுக்குள் மதிக்கலாம். மா நிறம் என்று சொல்வதற்கு இல்லை. ஆள் யாரோ? எப்படிப் பட்டவனோ? என்ன உத்தியோகமோ?
தேவையற்ற ஆராய்ச்சியை விட்டு விட்டு, தோள் பையிலிருந்து குடையை எடுத்து விரித்து மீண்டும் கூட்டத்தில் வந்து நிற்கின்றேன்.
ஆவலைப் பூர்த்தி செய்யுமாப் போல, ஒரு பிரைவேட் பஸ் வந்து நின்றது. ஒரிருவருக்கு ஒற்றைக் காலை வைத்துத் தொங்கிக் கொள்ளத் தான் ஒரு சந்தர்ப்பம் ஒவ்வொருவரது உள்ளத்துடிப்புக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல், சிரிபி வந்து நின்றது. இதையும் தவறவிட்டால், இனிச் சீசன் டிக்கட்களைக் கிழித் தெறிவது தான்
தண்டனை.
ג_2 C ------- حس سے۔۔۔۔۔۔۔۔۔ ---------------------------------------------سص------------------------ -------- − حسمسیحی つエ பயணித் 85 | | 6Ꮱ2 ᏧᏏ 601 6ᏡᎼ1 1il -

முண்டியடித்துக் கொண்டு ஏறுவதில், மிதிபட்டு இடிபட்டு. யார் யாருக்கு என்னென்ன அவசரங்களோ?
வண்டிக்குள் நெருக்கம், புழுக்கம், வியர்வை நெடி, இஸ்ஸராட்ட
யன்ன. என்னும் கண்டக்டரின் ஓயாத ஒலம் சிகரட் புகை, மூச்சுத்
திணறல்.
இந்த லட்சணத்தில் பஸ் ஒடிக் கொண்டிருக்கிறது. கறுப்புக்
கண்ணாடியின் நண்பர்கள் எங்கிருந்து எப்படித்தான் ஏறிக்
கொண்டார்களோ?
கறுப்புக் கண்ணாடிக்கு நல்ல பிரயான அனுபவம் நெளிந்து வளைந்து ஊடுருவி எனக்குப் பக்கத்திலேயே வந்துவிட்டான். நெரிசலைவிட இந்த மனிதனின் அநாகரிகப் புகைபிடித்தல் தான் அருவருப்பைத் தருகிறது. அவனுடைய சகாக்களில் ஒருவன் வலது புறத்தோள் கட்டையும் மற்றவன் முதுகையும் நெருக்குகின்றனர். இந்த உபத்திரவத்தில் முன்னால் இடது புறத்தில். இரண்டு வரிசைக்கு முன்னால் சாளரத் தோடு ஒட்டிய இருக்கையில் சொகுசாகப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தவர் அடிக்கடி திரும்பி என்னைப்
புன்முறுவல் செய்கிறார்.? ஏதோ சொல்லப் போகிறாரா. இதற்கு முன் நான் அவரைச் சந்தித்த ஞாபகமே இல்லையே.
அவருடைய முகபாவம் ஒன்றும் புரியவில்லை. பஸ்வண்டி ஒவ்வொரு தரிப்பிலும் இருவரை இறக்கிவிட்டு மூவரை ஏற்றிக் கொள்கிறது.
நடத்துநரின் குரலும் ஆவேசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆளின் சீரியஸான கண் ஜாடை.
எனது முதுகை அமுக்கிக் கொண்டிருந்த கறுப்புக் கண்ணாடியின் நண்பனின் ஒரு பொல்லாத பார்வையால்
அந்த மனிதனின் நயனமொழி, புருவங்களின் நெளிப்பு ஊமைப்பாஷை அனைத்தும் அடங்கி ஒடுங்கி விட்டன. சற்று நேரத்திற்கு முன் எள்ளும் கொள்ளுமாக வெடித்துக் கொண்டிருந்த அந்த முகம் வாடி வதங்கிவிட்டது.
கறுப்புக் கண்ணாடி முன் இருக்கைக் கம்பியைப் பிடிக்க
"நாம் பயணித்த புகைவர்ை டி -CIS)

Page 20
எத்தனித்த போது, அவனுடைய நீண்ட முழங்கை சேர்ட் என் பார்வைக்கு திரையிட்டுவிட்டது.
றிங் என்ற மணியோசையைத் தொடர்ந்து ஒரு பிரயாணி முன் வாசலால் இறங்கும் அந்த ஒரு செக்கனில்.
அந்த மனிதனும் மின் வேகத்தில் எழுந்து எதையோ இழந்துவிட்டதைப் போல், பொல்லாத முறைப்பு முறைத்துவிட்டு, இருக்கையை எனக்குத் தானம் வழங்கிவிட்டு இறங்கி நடந்துவிட்டார்.
மறுபக்கம் இறங்கிய கறுப்புக் கண்ணாடியும் நண்பர்களும் வெற்றிநடை போடுகின்றனர்.
யன்னலூடாக வீசிய மென் காற்று இதமாக இருந்தது.
2
மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து வெளிக்கிளம்ப எத்தனித்த போது தான் பகீரென்று பொறி கலங்கியது.
டிரெளசர் பின் பொக்கட்டில் செருகிய கவரைக் காணவில்லை.
ஐடென்ரி காட்டும் இருநூற்றைம்பது ரூபாவும்.
இன்று வீட்டை விட்டு வெளியேறிய போது மனைவி கொடுத்திருந்த நூறு ரூபாவும் அவருக்கு வாங்க வேண்டிய பொருட்களின் லிஸ்ட்டும் அந்தக் கவரில் அடங்கும்.
பஸ்தரிப்பிற்கு வந்ததிலிருந்து அலுவலகம் வந்து சேர்ந்த அந்த வெப்பமான ஒன்றரை மணித்தியாலப் பகற் பொழுதில் நடந்தவற்றை மீண்டும் பின்னோக்கிப் பரிசீலனை செய்து பார்க்கிறேன்.
கறுப்புக் கண்ணாடி பூதாகரமாக மனக்கண்முன் தோன்றி ஏளனம் செய்கிறான். -
பஸ்ஸில் பிரயாணம் செய்ய உனக்கு அனுபவம் காணாது என்று குத்திக் காட்டுவது போல் தோன்றுகிறது.
கறுப்புக் கண்ணாடி படீரென்று அறைந்து உணர்த்தும் உண்மை என் முகத்தில் எழுதி ஒட்டினாற் போல இருக்குமோ?
. ... --C4D
Ib த த பு ls

அந்த ஜன்னலோரப் பிரயாணியின் கனன் ஜாடைகள், சைகைகள் முகபாவங்கள் ஒவ்வொன்றின் அர்த்தங்களும். . புரிகின்றன.
கறுப்புக்கண்ணாடியின் கை தேர்ந்த கைவண்ணத்தை அவர் அனுபவித்திருக்கக் கூடும்
மாலை ஆறரைமணிக்கு இல்லம் நுழைந்தேன்.
முப்பது நாள் உழைப்பின் ஒரு பகுதியை ஒரு செக்கனில்
சுரண்டப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மன உழைச்சல் கூட அவ்வளவாக மனதை உறுத்தவில்லை.
ஆனால்.?
ஐடென்ரிகாட்?
இன்றைய கால கட்டத்தில் அது எங்கள் உயிருக்குச் சமமானதல்லவா?
இந் நாட்களில் ஆள் அடையாள காட் இன்றி ஆகக் குறைந்தது, வீதிகளில் தாம் நடமாட முடியுமா?
எமது குடியரசு நாடான பூரீலங்காவின் ஒரு பிரஜையிடம் இருக்க வேண்டிய விலை மதிக்க முடியாத பொக்கிஷம் - உயிர் நாடி
ஒரு சாதாரண காசுக்கட்டளை. அது கட்டளையாக இருந்தால் தான் என்ன? அது நிறைவேறிக் காசாக மாற வேண்டுமானால் இது சாட்சியம் கூற வேண்டும்.
நாடு விட்டு நாடு செல்ல ஒரு பாஸ்போர்ட்டுக்காக இது பக்கத்
துணையாக நிற்க வேண்டும்.
இப்படி எத்தனை எத்தனையோ. மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு இது ஆற்றும் இமாலய பங்களிப்புக்கு ஈடிணை இல்லை.
என்னைப் பொறுத்தவரையில் இன்னொன்றைப் பெற்றுக் கொள்ளும் வரை. நான் நடைப் பிணம் தான்.
இந்தப் பாழாய்ப் போன பிக்பொக்கட்டுக்கள் சமூகத்தில் ஏன் தான் உருவானார்களோ? -
-CIS)
ܢܝܚܚܚܚܚܚܚܗܘܗ-----------ܚܚܚܚܚܚܚܚ
is

Page 21
நேர்மையான மன உந்துதலோ இல்லாத இந்த ஆட்களுக்கும் அடையாள அட்டை ஒர் ஒப்புயர்வற்ற பொருள்தானே!
பார்க்கப் போனால் நான் விட்டதும் தவறுதானே!
தண்டனையாக நான் தான் என் தலையைக் கல்லில் மோதிக் கொள்ள வேண்டும்.
அவசர நிமித்தம், கவனயீனமாகவும், ஞாபக மறதியாகவும், ஐரென்டி கவருக்குள் அந்தப் பணத்தைத் திணித்ததோடல்லாமல், ஏன் பொக்கட்டில் செருக வேண்டும்? அந்தக் கணமே லெதர் பேக்குள் போட்டிருந்தால்.
அது என் தவறு தான். தெளிவாகத் தெரிந்திருந்தும், இதற்கு முன்னர் அனுபவப்பட்டிருந்தும் செய்ததற்குப் பாடம் படிக்கத்தான் வேண்டும்.
பொதுவாகப் பார்க்குமிடத்து -
வருமானங்கள் தேடும் மார்க்கங்கள் இல்லாமையினாலேயே, மனிதனைச் சூறையாடும் இந்த நாசகாரத் தொற்று நோய் பரவி, வாழ்க்கையில் பிழையான அஸ்திவாரங்கள் போடப்பட்டுவிடுகின்றன.
இனங்காணப் பட்டு, அடி உதை சிறை போன்ற தண்டனைகள், தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தரவா போகின்றன.
தொழில் வாய்ப்பும், வாழ்க்கை வசதிகளும் கிடைக்குமானால், இப்படியான சீரழிவுகள் தோன்றாது தானே!
அப்படியானால்.
பிக்பொக்கட்டுக்கள் என்ற முத்திரையுடன் சமூகத்திலிருந்து தள்ளப்பட்டு, இருளில் வீழ்ந்து கிடப்பதும், விடியல்களுக்குத் தானோ?
சில நாட்களாக குமைந்து கொண்டிருந்த மனச்சஞ்சலங்கள் ஒய்ந்த பின், ‘இனி நடக்க வேண்டிய காரியங்களைப் பார்ப்போம்" என்ற எண்ணம் வலுவடைய அடையாள அட்டை காணாமற் போன கதையைப் பொலிசில் முறைப்பாடு செய்து விட்டுப் புதிய ஐடென்ரி ஒன்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து ஒய்வான நாளொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
. . .-Cl6)
---- -- "நாம் பயணித்த புகைவர்ை டி

வழக்கம் போல், அன்று காலை நான் அலுவலகத்திற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது தான் -
"மிஸ்டர் ஈ. எம். எம். மீரான்." தபாற்காரனின் குரல் கேட்டு வெளியே வந்தேன். அவசரமாக அந்தப் பதிவஞ்சலைப் பிரிக்கிறேன்.
ஒரு கணம் என் சர்வாங்கமும் சிலிர்த்து, என்னை நிலை குலையச் செய்து விட்டது.
கல்லுக்குள்ளும் ஈரம் கசியும் என்பதற்கு உதாரணமாய்க் கறுப்புக் கண்ணாடி
ஒரு பிக் பொக்கற் மீது பொங்கி வழிந்து சுரப்பது - அது தான்
பச்சாதாபமா?
பிக் பொக் கட்காரர்களும் மறுவாழ்வு பெறுவார்களென்ற வெளிச்சத்தில் நனைந்தேன்.
பஸ் தரிப்பை நோக்கி நடக்கிறேன்.
பதிவஞ்சலில் வந்த இழந்து போன என் ஆள் அடையாள அட்டை என் நடைக்கு உசார் கொடுக்கிறது.
ஏப்ரல் - 1990
(இச் சிறுகதை விடியல் இன்னும் இருளில் என்ற தலைப்பில் வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமானது)
ーエー一 r bпій LI u II 60 offli, ೨) || 6ಕ) :5616ರೌ1 ॥ .______–-C_17 כ

Page 22
புதிய ஊற்று
翌 வலுடன் எதிர்பார்த்து, எதிர்பார்த்திருந்து. ரமழான்
தலைப் பிறை கண்டு நோன்பு நோற்றவர்கள் அவர்கள்.
மாலை ஐந்து மணியிலிருந்தே தலை நோன்பு துறக்கும் வேளை, களை கட்டியிருந்தது. சேரியில் அந்த நெரிசலான குடில்கள் எங்கணும் கலகலப்பாக ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.
"ரமீஸ் எழும்புங்க மகன், நேரம் சரி”
ரஷிதா மூன்றாம் முறையாக ரமீஸை எழுப்பினாள் பள்ளியில் அஸர் தொழுது விட்டு வந்து படுக்கையில் சற்று சாயப் போய் நித்திரையில் ஆழ்ந்து போயிருந்தான் அவன்.
தூக்கம் கலைந்தவுடன், எழுந்து சென்று எதிர் வீட்டுச் சுவரில் தொங்கும் கடிகாரத்தைப் பார்த்ததும் அவனுக்கு எரிச்சலாகவே இருந்தது. -
"என்னம்மா நீங்க. இன்னும் அஞ்சரை கூட இல்லியே." ரமீஸ் அலுத்துக் கொண்டான்.
நோன்புக் காலங்களில் அவன் நித்திரையில் காலம் கழிப்பதில்லை. ‘சகர் செய்தபின் சுபஹ"க்கு ஸ்பீக்கரில் அழைப்புக் குரல் கேட்கும் வரைக்கும் குர் ஆனை திருத்தமாக ஒதுவான். கல்விக்காக நேரத்தைச் செலவிடுவான். அப்புறம் வீட்டு வேலைகள் சிலவற்றை அவனே செய்வான் வீட்டுச் சாமான்கள் வாங்குவற்காகத் துர உள்ள கடைகளுக்குச் செல்ல வேண்டியதும் அவனது பொறுப்பு
-- つエリ புகைவர்ை டி
 

மற்றும் படி டியூசன்' வகுப்புகளுக்குத் தவறாமல் செல்வான். அவனுக்கு விளையாட்டு, பொழுது போக்கு என்று ஒன்றுமே இல்லை. அவனுக்கு ஒரேயொரு தங்கை, ஜெசீலா. வயது பத்து. இன்னும் விளையாட்டுச் சிறுமி. அதுவும் ரஷீதா சமைக்க உட்கார்ந்து விட்டால். நினைத்து நினைத்து விடும் ஏவுகணைகளை ஏற்று. சின்னச் சின்ன பொருட்களை கொணர்வதற்காகக் கிட்டவுள்ள சில்லறைக் கடைக்குப் பத்து முறைகளுக்கு மேல் ஓட்டமும் நடையுமாகச் செல்வாள். நோன்பு இல்லாத காலங்களில், 'ம்மா எனக் கொரு கிரிடொப்பி' என்று பிடிவாதம் பிடிப்பாள்.
ரஷிதா மீண்டும் குரல் கொடுத்தாள். "ரமீஸ் நீங்க ரெடியாகி ஆடி அசஞ்சி போறதுக்குள்ள நேரம்
சரி.
நோன்பு துறப்பதற்குப் பள்ளிக் கஞ்சி இல்லா விட்டால் வெறும் பச்சைத் தண்ணீரும் ஒரு சுளை ஈச்சம் பழமும் தான் என்ற நிலை.
அதற்கு மேல் ரமீஸ் ஒன்றும் பேசாமல். எழும்பிக் கைகால் அலம்பி, பள்ளிவாசலுக்குப் போக பிரத்தியேகமாக வைத்துள்ள வெள்ளை டிரௌசரை உடுத்தி. அரைக் கைச் சேட்டை அணிந்து. தொப்பியை மடித்து சேர்ட் பொக்கட்டிற்குள் செருகி, தயாராக நின்றான்.
அதற்குள் துப்பரவாகக் கழுவிக் கொண்டு வந்த பெரிய அலுமினியக் கோப்பையை ஒரு ஷொப்பிங் பேக்கிற்குள் திணித்து:-
"ரமீஸ் இண்டக்கி தலை நோன்பு, கஞ்சி எடுக்க நெறைய புள்ளகள் வந்து கெடக்கும்..... கவனம் சரியா..
நோன்பு துறக்க பள்ளியிலிருந்து கஞ்சி கொண்டு வர வேண்டும் என்று காலையிலிருந்தே எத்தனை முறை ஞாபகப்படுத்தியிருந்தாள் அவள்.
"பாவம். புள்ள வெள்ளெனக்கி கொஞ்ச நேரம் தூங்க மாட்டிச்சி. எதையாவது எழுதி எழுதி படிச்சிக் கொண்டிருக்கும் வாப்பா இல்லாத பெரிய கொற..." ரஷீதாவின் தாய்க் கிழவி சதா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ரஷீதாவுக்கு வயது முப்பத்தேழு. இரண்டு வருடங்களுக்கு முன்பு விதவையானாள். அவளது கணவன் முஜீப் பேவ்மென்ட் வியாபாரியாக இருந்தாலும் குடும்பப் பொறுப்புடையவனாக இருந்தான். 'சீதேவிக் குணம்' என்று பலரும் பாராட்டுவார்கள். பிள்ளைகளின் கல்வியிலும். ஒழுக்கத்திலும் மிக.... மிக அக்கறை காட்டுவான்.
1)
நா ம் ப ய ணித்த புகைவண டி

Page 23
ரமீஸ் என்னப் போல பேவ்மென்டில் திரியப் படாது' என்று அடிக்கடி ரஷிதாவிடம் வலியுறுத்திக் கூறி இருக்கின்றான். அவனது அயரா முயற்சியின் பயனாக ரமீஸ் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து நல்ல பாடசாலையும் உதவிப்பணமும் கிடைத்திருந்தது.
ஆனால் இப்பொழுது அவனுக்கு இக்கட்டான பதினான்கு வயதில், ஆண்டு ஒன்பது கற்கும் போது -
தந்தையின் வழிகாட் டல இல லாத அனாதை யாக க காட்சியளிக்கின்றான். ஆனால் ரஷிதா அவனது கல்விக்காக மட்டுமல்ல. அவனை ஒரு நல்ல பிரஜையாக உருவாக்குவதிலும் தூண்டு கோலாக இருக்கிறாள்.
முஜிபின் வருமானம் இல்லாமல் போனதும். நாளாந்த செலவுகளுக்கு ஈடு கொடுப்பதற்காக அவள் எதிர் வீட்டு ஜெசிமாவுடன் கூட்டாக இணைந்து விடியற்காலையில் பிட்டு இடியப்பம் அவித்து. உழைத்து உருக குலைந்து, தன் னை நெருப் பில வாட் டிக கொண்டிருந்தாள் என்ன செய்வது? ரமழான் மாதத்திலாவது வசதியுள்ளவர்களிடமிருந்து கட்டாய தானதர்ம நிதியம் திரட்டி வசதியற்ற கைம்பெண்களுக்கும். அநாதைகளுக்கும் பகிர்ந்தளித்து. வறுமைத் தீயிலிருந்து காப்பாற்ற முடியுந்தானே?
எப்படியோ, புனித நோன்பு வந்ததும் இந்த வெள்ளென கடையப்ப பிஸ்னஸிற்கு முப்பது நாட்கள் முற்றுப் புள்ளி பலகாரமாக மாலையில் நோன்பு துறக்கும் வேளையில் ஏதோ செய்ய வேண்டும் என்று
எடுத்த முயற்சிகள் எல்லாம் படுதோல்வி
ஒரு புறம் பள்ளி வாசலில் நோன்பு துறந்து மட்றிப் தொழுகையை "ஜமாத்துடன் கூட்டாக நின்று நிறைவேற்ற ஆட்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
மறுபுறம் பள்ளி வாசலின் நீண்ட வெளி விறாந்தையில் பகிர்ந்தளிக்கப் படும் அரிசிக் கஞ்சியை வீடுகளில் நோன்பு துறப்பவர்களுக்கு எடுத்துச் செல்வதில் சிறுவர்கள் சிறுமிகள் பாத்திரங்களை ஏந்திய வண்ணம் எனக்கு முந்தி ஊற்று உனக்கு முந்தி ஊற்று' என்று போட்டா போட்டி போட்டுக் கொணடு முனடியடிக்கின்றனர். சிறுவர்கள் என்றால் அப்படித்தான். சின்னச் சின்ன விசயங்களைப் பெரிது படுத்தக் கூடாது.
அத்துடன் பல்வேறு அலுவல்களுக்காகத் தைைலநகர் வந்து நேரத்திற்கு ஊர்களுக்குப் போய்ச் சேரமுடியாத தவிப்பில், பள்ளி வாசலில் நோன்பை விடலாம் என்று பலர் காத்திருக்கின்றனர்.
நாம் பயணித்த புகைவண டி -CO

சிறுவர்களுக்கு மத்தியில் ரமீஸ் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
இதற்கிடையில் சில சிறுவர்கள் முன்னுக்குப் பின் முரணாக வரம்பு மீறப் பார்க்கின்றனர். இரைச்சல்கள் வேறு. இந்த மீறல்களைக் கண்ணுற்றதும் கஞ்சி பங்கிட்டுக் கொடுப்பவர்களுக்கு நிதானம் தவறி. பொல்லாத கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது.
"யார்டா அங்க மாடுமாதிரி பாய்ரவங்க. போலிங்கில வந்தா தான் கெடைக்கும் தெரிமா. ”
இது ஒருவருடைய மனதில் புஷ்' சென்று தெறித்த ஆவேஷம் மற்றவரையும் தொற்றிக் கொள்கிறது. அவரும் பட்டாஸ் வெடித்தாற் போல -
"சொல்ராரே காது செவிடா, கியூல வந்து தொலைங்கடா. படபடக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ‘என்னமோ இவர் தான் பெரிய ஒழுக்க சீலர் என்ற உளப்பாங்கில் உபந்நியாசம்.
”டேய் நாங்களும் சொல்லிக்கிட்டே இருக்கோம் என்னடா இது மீன் மார்க்கட்டா..? ஒழுக்கமில்லாம. கழுத கத்து கத்திக்கிட்டு இருக்கீங்களே. மனிசர் பள்ளிக்குள்ள தொழுதுகிட்டு இருக்கிறாங்க. தெரீதில் லயா. மூளை இல்லாத மிருகங்க மாதிரி. எனக்கு என்னத்துக்கு வாய்க்கு வருது. நோன்பெண்டு பாக்கிறன்.”
மாறி மாறித் தொடர்ந்து வார்த்தைகள் குத்து ஊசிகளாய்க் குருத்து இதயங்களை ஒராயிரம் முறை சுரீர் சுரீரென்று குத்தி விடுகின்றன.
பிள்ளைகள் அனைவரும் 'கப் சிப் ஆகின்றனர். ரமீஸ் போன்றவர்களுக்கு ஏன்டா வந்தோம் என்றிருந்தது. குடும்பத்தின் வறுமை நிலை அவனைத் துளைத்தெடுக்கிறது. சற்று நேரத்தில் கஞ்சி விநியோகிக்கும் வேலை நின்று விட்டது.
ஏந்திய வண ன மிருந்த பல பாத்திரங்களுக்குக் கஞ்சி ஊற்றப்படவில்லை.
"கஞ்சி முடிஞ்சிருச்சி புள்ளகள். கிடைக்காதவர்கள் நாளக்கி நேரத்தோட வந்து குழப்பம் பண்ணாம முன் வரிசையில நில்லுங்க. grfu u IT... ?”
சற்று முன் கொதித்துக் கொண்டிருந்த வார்த்தைகள் ஆறின கஞ்சியாகிவிட்டன.
வெறுங் கோப்பையுடன் திரும்பும் சிறார்களின் வதனங்களில்
உ-'--ட "நா டம் பயணித்த புகைவண டி 一○

Page 24
பதிந்து விட்ட வாட்டம், கஞ்சி கிடைக்காததனாலோ, தலை நோன்பின் களைப்பினாலோ ஏற்பட்டதல்ல.
ரஷிதா முன் வாசலில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள். நோன்பு துறக்க இன்னும் அரை மணி நேரம்தான்.
"ரமீஸ் என்ன வெறுங் கோப்பையோட கிடைக் கலியா..? அதுதானே ரமீஸ் நேரத்தோட போக சொன்னது.”
ரஷிதா கோப்பையில் தான் கண்ணுங் கருத்துமாய் இருந்தாளே தவிர அவன் கொண்டு வந்திருந்த ஒரு பார்சலைக் காணவில்லை.
அவன் வலது கையிலுள்ள அந்தப் பொலித்தின் பேக்" பொதியை நீட்டினான்.
அவள் ஆவலுடன் அதைப் பிரித்தாள்.
"ஆ. என்ன இது?. பச்சையரிசி, தேங்கா. ஈச்சம்பழம் பெக்கட். கஞ்சி காய்ச்ச எல்லா சாமான்களும் இருக்கே. யாரு மகன் தந்த.'
அவன் மெளனம் சாதித்தான்.
அவள் மீண்டும் மீண்டும் வினாவினாள்.
"ரமீஸ், பார்சல் யாரு தந்தது.”
'உம்மா நான் ஒங்களுக்கு ஒண்டு சொல்றன். நீங்க யாரும்
தாரத நம்பிக்கொண்டிருக்காதீங்க. சரியா.’ என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லிவிட்டு.
"இதும்மா. நீங்க ஸ்கூல் தொடங்கினதும், தெஹிவல ஸ" பாக்கப் போக, தந்த அம்பது ரூபா சல்லிக்கி வாங்கினன். நான் தான் இங்கயே சில மிருக சாதிகள பாத்துட்டேனே. தெஹிவல ஸாவில பாக்க வேண்டிய மிருகங்கள எப்பவும் பாத்துக் கொள்ள ஏலுந்தானே LDLDIT...”
இவ வார்த்தைகளைக் கேட்ட ரவrதா சிலையாக நின்று கொண்டிருந்தாள்.
6jਰੰਗ, ਰ ஜூன் - 1993
நாம் பயணித்த புகைவணி டி n-—

சொந்துத்தில்
ஒரு விடு
66 ந்த மனிசன் ஒரு மாதிரி. இவர நம்ப ஏலா' நின்று நின்று கால்கள் மரத்துப் போன நிலையில் தன் தாயாரின் செவிகளில் போட்டு வைக்கிறாள். ராபியா,
"இண்டைக்கி என்ன இப்படிக் கூட்டம். இதெல்லாம் எப்ப முடியுமோ?”
அவளுக்கும் சலிப்புத் தட்டிவிட்டது.
ஞாயிற்றுக் கிழமை. ஒய்வு நாள் என்பதாலோ என்னவோ, அல்லது எப்பவும் இப்படித்தானோ! ஆண்களும் பெண்களுமாகப் பெரும்பாலும் இளைஞர்களே முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அழகிய முகப்பைக் கொண்டது அவ் வீடு உள்ளேயிருந்து அழைப்புக் குரல் வருமோ வராதோ? கால் கடுக்க நின்று கொண்டிருந்த பல ஆண்கள் ரோடு என்றும் பாராமல், ஒரமாய் கால்வாயிலிருந்து கமழும் வாடையை உள்வாங்கினாலும் பரவாயில்லை என்று மனம் புழுங்கிச் சபித்தவர்களாய் அப்படியே உட்காந்து விட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் தூர இடங்களிலிருந்து வந்திருப்பார்கள் போல தெரிகிறது.
"ராபியா நாங்களும் ஓரிடத்தில இருந்து கொள்வமா.”
།། ------------ m--─────────-- ------------------- مصصص--صum..............................سب "நாம் பயணித்த புகைவணி டி 一○

Page 25
‘எங்களுக குக் கூட உள் ளுக்கு போக ஏலாதா?. கொஞ்சமிருங்கம்மா தாரோ வாரமாதிரி இருக்கு."
சே. எப்பவோ அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு நடுத்தர வயது ஆள், வெளியே வந்தவுடன் திடீரென்று கூட்டத்தில் ஒரு சலசலப்பு சற்று நேரத்தில் அது ஒரு பூகம்பமாக மாறி முகவர் நிலையத்திற்கு முன்னால் பெரும் இரைச்சலுடன் வெடித்தது.
கோபமும் ஆவேசமும் நிறைந்து வழிய ஏஜன்சியுடன் சிக்குப் பட்ட நபர் தகாத வார்த்தைகளால் சாடத் தொடங்கிவிட்டார். பத்துப் பதினைந்து பேர் அவருக்குப் பக்கபலமாகி விட்டனர். ஆள் கூடக் கூட அவருக்கு உசார்தான் முகவர் நிலைய கனவானின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் இலவசமாக விளம்பரப் படுத்தத் தொடங்கி விட்டார்கள்.
அந்தச் சல சலப்பில் இப்படியும் ஒரு குரல் - "ஏற்றத் தாழ்வு நிரம்பிய ஒரு சமூக அமைப்பில வறுமைக்கோடு தன் சுவடுகளை ஆழப் பதித்துக் கொள்வதால் தான் இதெல்லாம். பெரிய மீன்கள் எப்பொழுதும் சின்னதுகளை விழுங்குவதால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் மேலே வரவும் மேலே உள்ளவர்கள் இன்னும் மேலே மேலே போகவும். நம்மால் ஒன்றும் கத்திப் பிரயோசனமில்ல. நாமும் எதிர் நீச்சல் போடக் கற்றுக் கொள்வதைத் தவிர. எதுக்குச் சொல்றேன்னா. ፵ )
ராபியாவுக்கு இந்தக் குரல். இல்லை இந்தக் கருத்து கேள்விப் பட்ட மாதிரி இருந்தது. பிடித்தமாகவும் இருந்தது. ஆறுதலாகவும் இருந்தது. தக்க சமயத்தில் ஆலோசனையாகவும் இருந்தது. அந்த ஆள் யார்? யாராயிருந்தால் என்ன? படித்ததோடு “சமூகத்த நல்லா அவதானிக்கிற” மனிதன் கோடி நன்றிகள் சொல்ல வேண்டும் போலிருந்தது.
உச்சத்திற்கு வந்து கொண்டிருந்த கதிரவனின் சுட்டெரிப்பைத் தாள முடியாமல் தவிக்கின்றார்கள்.
ராபியா அவள் தாய் சல்மா உம்மா. தந்தை அப்துல் ரகுமான். மூத்த சகோதரன் நஜிம் முழுக் குடும்ப அங்கத்தவர்களுமே படையெடுத்து வந்து தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வெளியே இரைச்சல் சற்றுக் குறைந்திருந்தாலும் ஏஜன்சிகாரனின் சுயமரியாதையைக் கிழிக்கும் சொற் கூட்டத்திலிருந்து கமழும் அசுசை ரோட்டோர வாய்க்காலிலிருந்து வீசும் வாடையை விட மோசமாக இருந்தது. பலரும் தலை குனிந்த வண்ணம் நெகிழ்கின்றனர்.
... --C24)
--— -நாம் பயணித்த புகைவண டி

உரையாடல களிலிருந்து தெறிக் கும் சொல் லம் புகளைச் செவிமடுத்து, அலுவலக அறையிலிருந்து வெளியேறி நியாயம் பகர்வதற்கு ஒரு ரோசமுள்ள கனவானாவது வெளி வந்திருக்க
வேண்டுமே!
"நஜீ நாநா ம்மாவுக்கு கால் வலி. இப்ப என்ன செய்ற. இன்டக்கி அந்த மனிசனோட பேச ஏலுமா. ' பொறுமை இழந்து குரல்
கொடுக்கிறாள் ராபியா,
- - வயதான தாய் தந்தையருக்கும் ஒரே பதட்டம் தான். கத்தல்கள்
ஓய்ந்து தணிவது போல் தென்படுகிறது. 'வந்தது வந்தாச்சி.
கொஞ்சம் இருந்துதான் பாப்பமே. இன்னுமொரு நாளக்கி வந்தாலும்
- - - - - அலைச்சல் தானே. இவன்ட மருவாதி கப்பலேறி முடியட்டும்.”
-
நஜிமின் கருத்திலும் ஒரு நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது.
சல்மா உம்மாவும் குறுக்கிடுகிறாள்.
"பரவாயில்ல மகன். மறுவா வாறதும் போறதும், இண்டக்கே இரண்டில ஒண்ட பாத்துட்டு போவம்.”
... `ွ).............. ஒ. இனி என்னால வர ബ് அபதுல ரகுமான திடமாகச் சொல்லிவிட்டார்.
- - காலமயும் தின்னல்ல. தாகமா இருக்கு ஏதும் குடிச்சாலும் நல்லம் போலிருக்கு. சல்மா பிரேரித்தாள்.
மெதுவாக நடந்து தேநீர்க்கடை ஒன்றை அடைந்தார்கள் சூடான
மரக்கறி ரோல்ஸ் சாப்பிட்டு தேநீர் அருந்தி சற்று நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் : Lis) քա இடத்திற்கே வந்து
- சேர்ந்தார்கள்.
இதமாக இருந்தது. ஆனால் ரஹற்மானுக்கு ஒரே யோசனை. புலம்பினார்.
”. என்னதான் புரொக்டர் மூலம். எக்ரீமனன்ட் எழுதி எடுத்தாலும்
ஆள கிளப்புறது கஷ்டம் தான்.'
கிழவரின் கண்கள் ஏஜன்சி கட்டிடத்தையே இமை கொட்டாமல் விழிக்கின்றன.
அந்த அழகிய கல்விடு -
நீள் சதுர வடிவிலான முன் விறாந்தைக்குள் நுழைந்தால் எதிராக
− حسسسس つ高両 LI) LI LI J ளிைத்த [ | 6Ꮱ2 ᏪᏏ 6Ꮒ1 6ᏡᏡᎢ t

Page 26
அமைந்திருப்பது, விசாலமான நடுக்கூடம். அதன் வலது இடது புறங்களில் இரு பெரிய படுக்கை அறைகள்
கூடத்தைக் கடந்ததும் சாப்பாட்டறை. அதன் இரு புறங்களிலும் குளியலறை மலசலகூடம் என்று சகல வசதிகளையும் உள்ளடக்கிய வசந்த மாளிகை, ராபியா மன்ஸில்'
ராபியாவுக்கு புரோக்கர் மூலமாக கல்யாணம் பேசி வந்திருக்கு. மாப்பிள்ள வீட்டாரும் ஒரே பிடியாகப் பிடிக்கிறார்கள்.
"எங்களுக்கு சீதனம் வேணாம். கொழும்பில சொந்தத்தில வசதியான ஒரு வீடு இருந்தால் போதும்.'
மாப்பிள்ள வீட்டார் திட்ட வட்டமாகச் சொல்லியிருந்தார்கள்.
அப்துல் ரகுமான் சல்மாவைக் கைபிடித்த காலத்தில், அவளது பங்கிற்கு இருந்த பணத்துடன் அவரது நீண்ட கால உழைப்பும் இணைய வாரிசுகளின் பிற்காலத்தை யோசித்து அவ்வீடு வாங்கி முற்றிலும் நவீன முறையில் திருத்தியமைக்கப் பட்டது. பின்னர் குடும்பத்தில் மூத்தவன் என்ற முறையில் நஜிம் முறைப் பெண் மும்தாஜை மணம் முடித்து அவளுக்குச் சொந்தமான புதுமனை புகுந்ததும், குடும்ப வீடு ஒரே மகள் ராபியாவுக் கே என்று முடிவாகியதும் அனைவரும் பூரித்துப் போனார்கள்.
கிழவரும் நோய் வாய்ப்பட்ட பிறகு, சொந்த வீட்டைக் கொஞ்சக் காலத்திற்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர்களும் மகனின் வீட்டிற்கே குடியேறினர்.
ராபியாவின் திருமணம் முடிந்தவுடன் அவள் தனது வீட்டில் தனிக் குடித்தனம் நடத்தவேண்டும் என்பது தான் அனைவரதும் அபிலாஷை
எனினும் அது நிறைவேறும் வரைக்கும். பெற்ற மனம் பித்து தான். அந்த மனச் சுமைக்குப் பால் வார்த்தது போல் ராபியா மன்சிலுக்கும் ஒரு சோதனைக் காலம்
அனைத்துமே முந்தநாள் நடந்ததுபோல் இருக்கிறது.
ஐந்து நீண்ட வருடங்களுக்கு முன் வீட்டை வாடகைக்கு எடுத்தவன் இப்படி ஏஜன்சி போடுவானென்று யாருக்குத் தெரியும்.
வெளியில் காத்திருந்து நெரிசல் கலைந்த பின்னர் சொந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்கள்.
ஏஜன் சி கனவான அவர்களது வருகையைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
一○○
-ா'"ப.-டி. "நாம் பயணித்த புகைவணி டி

`
ளிப்படுத்தி ஆத்திரத்தைக்
அவர்கள் தமது மனக்கிடக்கையை வெ
.. 。 கெ TTL. LQ த் தீ த தா T 556T.
.
அனைத்தையும் அவன் பொறுமையுடன் உள்வாங்கிக் கொனன்டான்.
لك معد இனிமேலும் மூடிவைத்திருப்பதில
.
- די "חזיר לא" ச்சவிம்க்க எக்கனிக்கின்றான். (ԼՔԼԳ LP தத
"முதல்ல எல்லாருமா இருங்க. வெய்யில்ல நிண்டு $GD៣Tùdì
வி ェ上 (3 - அவனுடைய வயாபார மூளை சுறுசுறுபபாக и от நகக வண்டும். பயனில்லை என்பதை
உணரநதான
இற்றை நாள்வரை மனதில் பதுக்கி வைத்திருந்த முடிவை மெல்ல
D IT Sh] த ருநத மு LC)
நி }? " اس ö கிறீங்க. - -
- . . - பணியாள் மூலம் எல்லாருக்கும் குளிர்பானம் கொடுக்க ஏவினான்.
, , ମ: , , , , ', ) ெ நீண்ட கால இடை ளகருப பlன சாநத G)ILLC) 307 முன அறையில்
, , அமர ந து 。 ண ன ல களின் ஊடாகத் தமது பார்வைகளைச்
செலுத்துகின்றனர்.
.. . ;) ,' : مہتمم .................... بہرہ
"இங்க பாருங்க மிஸ்டர் ரகுமான். நீங்க வயசில மூத்த மனிதர்.
- - - - இங்க வாரவங்க எல்லாம் வாய் கிழிய கத்தினா எல்லாம் சரியெண்டு
○ நினைக்கிறாங்க. @@@ಿತಿಯೂ எனனுடைய நிலைமையில இருந்து யோசிச்சிப் பார்க்கிறதில்ல.
மிக்க மரியாதையோடு ஆரம்பிக்கின்றான் "இப்ப ஓங்கட விசயத்த
- - - பாப்பமே. நானும் இடந்தேடி பறக்கிறன் எங்க? கிடைச்ச பாடில்லயே.
- . . . . . . . . . . . . ب. م , so - கிடைச்சாலும் லட்ச ரூபா - கம்மா கீ மணியாக கேட்டா நா எங்கே
- ܕܹ ܟ போறது எபடி குடுப்பன் - - - - - - -
- - 946) 1607 பேச்சையே அவர்கள் கூர்ந்து அவதானிக்கின்றனர்.
t - - ০ে, ৮ܪ
ஆனா. ஒங்கட நிலம எனக்கு நல்லாத் தெரியும். இந்த விட்ட
. - - குடுத்தா தான் மகள்ட கல்யாணம் நடக்கும். SELLIT LLULÊ நடதத
,
வேண்டியது. தாய் தகப்பன் நானா என்கிற மொறையில ஓங்கட பொறுப்பு.
- . . . - - - அவர்களது உள்ளங்கள் சிலிர்த்துப் போகின்றன.
c o - 'ஆ யிரம் பேருக்கு தொழில் தார ஒரு ஏஜன்சிய டக்கென்று மாத்த முடியாத நெலம எனக்கு
O . . கொஞ்ச நேரத்திற்கு முன் அவர்கள் நெஞ்சங்க
T ۔ ۔۔۔۔۔۔۔
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
"- گمگی | ||||||||||||||||||||||||||||||||||||||||||
س---------- T
| * 75 m tù t + u_I 6öbY] த த புகை வன டி
-
-

Page 27
கொண்டிருந்த ஆவேச உணர்வுகள் முற்றாகச் சிலிர்த்துப் போய் விட்டன.
"மகளுக்கு அப்படி ஒன்றும் பெரிய வயசு இல்லாவிட்டாலும், நல்ல இடத்தில முடிச்சு வைக்கனும், சீதனம் இல்லாம. குறைஞ்சது சொந்தத்தில ஒரு வீடு இருக்கணும் எண்டு பேசி வந்திருப்பது நல்ல விசயம். சொனக்காம முடிச்சுப் போடுங்க”
மன எரிச்சலைக் கிளப்பிவிடுமாப் போலிருக்கிறது அவர்களுக்கு.
"அதுக்குத் தானே வீட்ட திருப்பித்தாங்க எண்டு மாசக் கணக்கா
"இப்ப அதுக்கு என்ன. தர ஏலாதெண்டு எப்பவாவது சொன்னனா..? இது உங்கட வீடு, நீங்க நாளக்கே வேணும் எண்டாலும் எடுங்க. ஆனா ஒண்டு சொல்றன். நான் ஒரு லட்சம் கேக்கல்ல. எண்ட நஷ்டத்தில கொஞ்சம். ஒரு எழுபத்தஞ்சாயிரம் ரூபா தந்திங்க எண்டா போதுமானது. நாளக்கே ஏஜன்சிய மூடிப்போடுவன். மனம் வச்சா இந்தக் காலத்தில இது பெரிய சல்லியில்ல."
அவர்கள் அசடு வழிய அசந்து போய் விழிக்கின்றனர். "நீங்க யாருக்கிட்ட போய் யோசின கேட்டாலும். இதுதான் நியாயமான முடிவு எப்ப நீங்க பணம் தாரிங்களோ உடனே உங்களுக்கு வீடு 'சுவரா கிடைக்கும். வேறு யாருமா இருந்தா வழக்கு புரொக்டர் செலவு அது இது என்று எவ்வளவு கரைச்சல். எவ்வளவு செலவு. LD............. '?ʼ
சற்றுத் தடுமாற்றம் அடைந்தவர்கள். அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க முடியாமல் எதற்கும் ஆற அமர யோசித்து ஒரு முடிவுக்கு வர அவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள்.
வீட்டை அடைந்ததிலிருந்து அனைவருக்குமே பெரிய மனப் போராட்டம்.
தந்திரமாக விழுங்க வரும் ஒரு சுறாவிலிருந்து தப்ப எதிர் நீச்சல் போடுவது எப்படி?’ என்று ராபியாவின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.
வயதான தாய் தந்தையருக்கு ஒரு புதிய ஞானோதயம் பிறக்காமல், உணர்ச்சிவசப் பட்ட நிலையில் புலம்பிக் கொண்டிருந்தனர். நஜீமும் தீவிரமாகச் சிந்தித்து. இனியும் ஆதங்கப் பட்டு ஒன்றும் ஆகப் போறதில்ல' என்ற முடிவுக்கு வந்துவிட்டான். "நாம் பயனளித்த புகைவணி டி -C8)

பக்குவமாகத் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொன்னான்.
இராப் போசனத்திற்குப் பிறகு மும்தாஜ் கோப்பி பரிமாறினாள்.
அனைவரும் கிட்டத்தட்ட ஒரே முடிவிற்கு வந்துவிட்டனர்.
"ஏஜன்சிகாரனுக்கு அவன் கேட்டதைக் கொடுத்து வீட்டைத் திருப்பிக் கொள்றது தான் புத்தி.”
"ஆனால் எப்ப இந்தப் பணத்தைத் தேடுகிறது”
அவர்களது தலைகளை இமாலயம் அழுத்துகிறது.
"ஈட்டுக் கடையில இருக்கிற மும்தாஜ்ட நகையை வித்து, ராபியாட பேங் புத்தகத்தில உள்ளதையும் புரட்டினாலும், தாலிக் கொடிக்கு என்ன வழி? கலியாணம் எண்டா கையிலேயும் இருக்க வேணும் இல்லியா.’ என்றான் நஜிம்.
"... கல்யாணம் இப்ப முக்கியம் இல்ல. வீட்ட திருப்ப வழியப் பாருங்க. வழக்குப் போட்டு எடுக்கிறது இன்னுமின்னும் செலவு' என்றாள் ராபியா
அனைவரும் நித்திரைக்கென்று தத்தமது அறைகளுக்குச் சென்று விட்டனர்.
ராபியாவும் நித்திரையின்றி மனம் குழம்பிக் கொண்டிருந்த போதுதான் அவளுக்கு அந்த நம்பிக்கைப் பொறி மெல்லிதாகச் சுடர் விடத் தொடங்கியது.
காலைத் தொழுகைக்கு அழைப்பு ஒலிபெருக்கியில் ஒலித்ததோடு பளிரென்று ஒரு விடியல்,
தகப்பனாரும் இரவெல்லாம் விழித்து நொந்து போய் இப்பொழுது தான் அயர்ந்து துரங்கிக் கொண்டிருக்கிறார். தொழுகைக்கும் எழும்பவில்லை. யாரும் எழுப்பவுமில்லை.
காலை தொழுகைகளை முடித்துவிட்டு வந்ததும், தாயின் சோகம் படிந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் ராபியா,
".ம்மா நீங்க ஒண்டும் யோசிக்காதீங்க. நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறன்.
"..ம்மா நான் எட்டு மணிக்குப் போல முனிருன்னிசாவைப் பார்த்திட்டு வரப்போறன். சரியா.'
ܡܫܝܚ ----سسس----------------------سسسس-----------------------------------ے つエ高 [ | 6ᏡᎠ ᏧᏏ 6Ꮒ16ᏈᏈ1 tq. AAAASMSiMMMMSMSAqSASSSLSL S SS -OOD

Page 28
அவள் எந்த வித மறுப்பும் சொல்ல வில்லை.
.
... c. : ս, سر ہے۔( ...............................: ராபியாவின் நெருங்கிய தோழி அட்வான்ஸ் லெவல் வரைக்கும்
. தி -
r t அவளுடன் படித்தாள் ஓரளவு வசதி படைத்தவள் பரீட்சைகளுக்கு நிறைய நோட்ஸ் புத்தகங்கள் கொடுத்துதவியவள் இருவருமே
, - , O பல கலைக் கழகம் செல்ல வேண்டிய புள்ளிகள் பெ LD) , ou, " LD . LQ) ற ()
ராபியாவுக்குத் தாய தந்தையர் தடைபோட்டதும் இருவரது மேற்படிப்பும்
' "ر
. , , நின்று விட்டது. ராபி UUT எவ்வளவே ா வறபுறுத தியும் அவள்
- 2. - பல்கலைக்கழகத்திற்கு தனியே செல்ல மறுத்துவிட்டா 67 | ...,0,..., බෝග, ඛ .......e.,, , ...,...,ه. ق. به ن
ö லந த 5FGỦ GJIT ff)
. ப்பட்டபோதும்,
குளித்து விட்டு கருநிலமும் குங்கும நிறமும் தாவணியணிந்து. "நா வாறேம்மா." என்று LJD
,岁 . . - அவள் ஒன்றும் விபரமாகச் சொல்ல வில்லை. بم |
நஜிம் அ குப்
போயிருந்தான். அவன் மனைவி மும்தாஜ்
சிறிசுகளுடன் மெனக்கெட்டுக் கொண்டிருந்தாள்
ராபியா மிகுந்த நம்பிக்கையுடன் நடந்தாள். குடும்ப வாழ்க்கையில்
- yo - - - 't பிரச்சினைகள் தோன்றும் போது, ஆக்கபூர்வமான தீர்மானம் எடுப்பதில்
S SS SS LLLLLLL SS . , , ,
குடும்பத்தில் அவள் தான் சமர்த்து முனிருன்னிசா மட்டும் உதவி
%),',
விட்டாளோ, அவள எடுத்திருக்கும் தீர்க்கமான முடிவில்
-
மாற்றமும் இராது.
தடைக்கற்களுக்குப் பயந்து, எதையும் உடைக்காமல் மிக்க துணிச்சலுடன் 6163, ATTTSuSuSuSuuSuSuSuu
து
LD 67)) { 9. so 1 செப்
) ன  ைய ம ப க வேண டிச சில மற ல கள் செய்ய
போட்டு
உந்தப்பட்டிருக்கிறாள்.
| 412 : Lussa annul, Qalnul, zoo, Lili : la ՖTւ Ֆ Ֆւ 16 छ । ருபடி வறுப புக களைப பாரக கும
's தருணமில்லை இது
'மாப்பிள வீட்டாரைப் பற்றி அவளுக்குத் துளியேனும் கவலை இல்ை ᎶᏄ) .
ராபியா முனீருன்னிசாவின் இல் லத்தை அடைந்த போ
- . . . . . . கீழ்வானில் மிக வேகமாக ஏறிவரும் இளங்கதிரவனின் சுட்டெரிப்பிற்
கொன
- 9. - - வாடிவிடாமல், பூஞ்செடிகளுக்கு நீர் வார்த்துக்
p6) 6076OTI FIT,
னருன6
. . . هي
2& - - - ,,[0جگہ L_l II 60 6) IIT - - - - - - - - - |L| |f([]) LD LC) T (6) ழி
முனீருன்னிசா இன்முகத்துடன்
. سیاست -------
سیمبیسی
காட்டினது.
"நாம் ! யணித்த |65 660
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனது பிரலாபத்தையும், நோக்கத்தையும் சற்று விரிவாகவே விளக்கி மனப்பாரத்தைக் குறைக்க முயன்றாள்.
எதிர்பார்த்தது போல் முனிருன்னிசாவின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டிவிட்டதில் ராபியா களிப்புக் கடலில் மூழ்கிப் போனாள்.
துரத்திவரும் சுறாவை விரட்டியடிக்கத் தெம்பும் பக்கபலமும் கிடைத்துவிட்டது. தோழியின் பிடிவாதத்தால் மதிய உணவை முடித்துக் கொண்ட ராபியா வீடு திரும்பிய போது மாலை மூன்று மணி பிந்திவிட்டிருந்தது.
சல்மா உம்மா பதறிப் போயிருந்தாள்.
"என்னம்மா நீங்க. நா முனிருன்னிசா வீட்டுக்குத்தானே போனன். இதுக்கே இப்படிப் பதறிப் போனா..?”
தாய் மகளைக் கூர்ந்து நோக்கினாள்.
மகளின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி என்றுமில்லாதவாறு இனம் புரியாத சுறுசுறுப்பு தாய்க்கு ஒன்றும் விளங்கவில்லை. ராபியா அப்படி ஒரு நாளும் இருந்ததில்லை.
ராபியா எதைச் சொல்லப் போகிறாள்.
முன்பு முனிருன்னிசா கேம்பஸ் போக மிகவும் விரும்பி ராபியாவை அழைத்தாள். ராபியாவிற்குத் தடை பிறப்பித்தும் இருவருமே போகவில்லை. ஆனால் இப்பொழுது ராபியாவின் தேவைக்கு அதே முனிருன்னிசா காம்பஸ் என்ன அதற்கு அப்பாலும்.
இப் படிக் குத் திக் காட்டி தாயுள் ளத் தைப் புண படுத்த விரும்பவில்லை அவளுக்கு.
... ம்மா நாளக்கி முனிருன்னிசா எங்கட வீட்டுக்கு வாரா. அவளே உங்களுக்கு விளக்கமா சொல்வா. ஆனால் நான் ஒண்டு சொல்வன். நீங்க குழம்ப வேணாம். வாப்பாவுக்கும் நஜிநானாவுக்கும் சொல்லுங்க. பயப்பட வேண்டிய தேவ இல்ல."

Page 29
முனிருன்னிசாட வாப்பா, றஸ்வி ஹாஜியார் எங்களுக்கு பணம் தருவார். அவரே ஏஜன்சிகாரன் கேட்ட அந்தத் தொகையைக் கட்டி அவனிடமிருந்து விட்ட எடுத்து தருவார். ஒரு கிழமையில் அவர் நரேன் புரொக்டரோட வந்து கூப்பிட்டா வாப்பாவும் நஜிநானாவும் போகணும். ஹாஜியார தவிர ஏஜன்சிகாரனோட யாரும் ஒண்டும் பேசத் தேவையில்லை. -
மறுநாள் முனிருன்னிசா வந்து குட்டை உடைத்த போது -
ராபியா மன்சில் உடைந்து விழுந்து அழுது கதறியது.
வீடு ஏஜன்சிகாரனுக்குப் பறிபோகாமல் இருக்க வேறு மார்க்கம் இல்லை என்பதை ராபியாவும் முனீருன் னிசாவும் தெளிவு படுத்தினார்கள். ஆபத்துக்கு பாவமில்லை'
ஒருவராலும் ஒன்றும் பேசமுடியாத நிலைமை.
அடுத்த சில நாட்களாக ராபியாவும் முனிருண் ணிசாவும் ஒடித்திரிந்தார்கள். ஒரு நாள் றஸ்வி ஹாஜியாரே வீட்டிற்கு வந்து அப்துல் ரகுமானுக்கும். சல்மா உம்மாவுக்கும் ஆறுதல் கூறினார்.
ராபியாட வாப்பா நீங்க பயப்படத் தேவையில்லை. நான் முனிருன்னிசாவையும் கூட அனுப்புறன்தானே இரண்டு பேருக்கும் முழுப்பாதுகாப்புடன் "எக்கவுன்ட்ஸ் கிளார்க்' வேலை கிடைக்கும். இருபதாயிரத்துக்கு மேல் சம்பளம் இரண்டு வருஷம் போதுந்தானே.
ராபியா, அந்தக் கொடி ராபியா மன்சிலில் படருமா” முனிருன்னிசா வாஞ்சையுடன் வினவினாள்
"நிச்சயமா ஆனா, ஒரு பெயர் திருத்தம் முனி பிளஸ் ரா முனிரா மன்சில்'
முனிருன்னிசாவையும் ராபியாவையும் சுமந்த வண்ணம் ஆகாய விமானம் ஓமானை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
மல்லிகை
ஏப்ரல் - 1995
"நாம் பயணித்த januari ——————— ————-C32D

மின்னொளிக்காக ஏங்கும் மினாராக்கள்
ருதவயல் முஸ்லிம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் 66
வைபவம் மிகவும் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
விசேஷ அதிதியாக இப்பிரதேசத்து முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிவரும், ஒரு பிரபல சங்கத்தின் தலைவர் வந்து கனெக்ஷன் கொடுப்பார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் சிராஜ் எழுதிய நிருபத்தின் ஆரம்ப வரிகளே இது.
அத்துடன் ஓர் அழைப்பிதழ். அது மருதவயல் கிராமத்தைச் சார்ந்த உத்தியோக பூர்வமான அழைப்பு.
இரண்டையும் மாறி மாறிப் படித்துச் சிராஜ் எழுதிய வரிகளில் ஊறித்திளைத்து அன்றெல்லாம் எனது 'மூட்' கிராமத்திலேயே மூழ்கிப்
போய்க் கிடந்தது.
அக்கிராமத்து அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமை புரிந்த, அந்தப் பசுமையான கால கட்டத்தை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்கும் போது -
கிராமத்தின் வயலோரக் காற்றில் உலாவி - தேசத்தின் அரசியல், சமூக, கலை, இலக்கியம் தொடர்பாக கலந்துரையாடிய நாட்கள்
எப்படியெல்லாம் அலை மோதுகின்றன.
: நா ம் பயணித்த புகைவண டி

Page 30
அந்தப் பிரதேசத்தில், மிகப் பிரபலமான நகரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் அமைந்திருப்பது தான் இந்த மருத வயல் கிராமம். அங்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. அது புராதன கட்டிடம். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள அதன் மினாரா எடுப்பாகத் தோற்றமளிக்கிறது.
அந்தக் கிராமத்திற்கும், அங்குள்ள பொதுக் கட்டிடங்களுக்கும், பொதுக் கட்டிடங்கள் என்ற வகையில் அந்தப் பள்ளிவாசலுக்கும் மின்சாரம் வழங்கல் என்பது...... சிராஜ் அப்புனித பிரதேசத்தைச் சார்ந்தவர். அங்கு பின்னிப் பிணைந்துள்ள கிராமங்களைப் பற்றி வரலாற்று ரீதியாக, முழுமையாக அறிந்து வைத்திருப்பவர்.
ஐந்து வருடங்கள் மட்டுமே ஏதோ 'மானுட நேய பூர்வமான சேவை' என்று ஊரார் உள்ளங்களில் முத்திரை குத்திவிட்டு, பின்னர் அவர்கள் எவ்வளவோ தடுத்தும், கொஞ்சம் சுயநலம் கலந்த பிடிவாதத்தால் தலை நகருக்கு இடமாற்றம் பெற்று விட்ட பிறகு தான் அக்கிராமத்தின் அருமை பெருமை எனக்குப் புரிந்தது. பின்னர் நண்பரும் நகரின் மகாவித்தியாலத்திற்கு மாற்றம் பெற்றுவிட்டார். தனது இல்லத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரம்.
மருதவயல் கிராமத்திலுள்ள முக்கிய கட்டிடங்களுக்கு எல்லாம் மின்சாரம் வழங்கப் போகும் அப்புனித வைபவத்தைப் பற்றி சிராஜ் சற்று மிகைப்படுத்தி விபரித்துள்ளார்.
முதன்முதலில் மின்சாரத் தொடர்பு கொடுக்கும் பிரமுகருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு, நகரத்தின் மகளிர் கல்லூரி மாணவிகள் 'பேன்ட் வாத்தியம் முழங்க , மகாவித்தியாலய மாணவர்கள் தேசிய கீதம் இசைக்க....... பள்ளிவாசல் தர்ம கர்த்தாக்கள் 'அல்லாஹு அக்பர்' கோசத்துடன் மதிப்பிற்குரிய பிரமுகர் முக்கிய கட்டிடங்களுக்கு மின்சார ஒளி ஏற்றி வைப்பதை நினைத்துப் பார்க்கும் போது மனம் சிலிர்த்துப் போகின்றது.
சுற்று வட்டார பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரசியல்; வியாபார பிரமுகர்கள், பொது மக்கள்...... இப்படியான ஜன வெள்ளம் புடை சூழ்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.
சிராஜின் கடிதத்தை வாசித்து முடித்ததும் கிராமமெங்கும் நூறு வால்ட் பல்ப்கள் பிரகாசிப்பது போலவும், பள்ளிவாசலின் முகப்பு - மினாரா உச்சி, மின் குளிப்பில் பளிச்சிடுவது போலவும் மனதில் சித்திரமொன்று விரிந்தது.
- நா ம் பயணித்த புகைவண்டி
34)

காலங்காலமாய் இருளோடிப் போய்க் கிடந்த கட்டிடங்கள் அவை.
மருதவயலின் முன்னேற்றம் கண்டு என் உள்ளத்தில் ஒரு புத்தொளி பிறந்திருந்தது.
"கட்டாயம் வாருங்கள், எங்கள் இருவரையும் சந்திப்பதில் கிராம வாசிகள் பூரித்துப் போய்விடுவார்கள்."
சிராஜ் வலியுறுத்தி மடலை முடித்திருந்தார்.
அழைப்பு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு விழாவிற்குப் போக ஆயத்தமாகிவிட்டேன்.
நானும் நண்பரும் கிராமத்து முஸ்லிம் வித்தியாலயத்தின் வாயிலுக்கு வெளியேயும் கிராம முன்னேற்றத்திற்கு சரிசமமாகப் பங்களிப்புச் செய்துள்ளோம்.
சுமார் இரு தஸாப்தங்களாக கிராமத்தின் டிரஸ்டிமார் இருவரின் முற்றிலும் தனிப்பட்ட குரோதங்களுக்காக ஊர் இரண்டு பட்டிருந்தது. ஆயினும் 'பெண் கொடுப்பதிலும் மாப்பிள்ளை எடுப்பதிலும் கனிந்த ஒரு புதிய உறவு, இரு டிரஸ்டிமார்களையும் இணைத்துவிட்டது.
பணமும் பணமும் ஒன்று சேரும் போதும், பிளவுபடும் போதும் மோதப்படும், சில்லறைகள், தாம் சிதறிப் போய்விடுகின்றன. இது மரபு.
பிளவு பட்டிருந்த கிராமத்தில் ஒருமைப்பாட்டுணர்வை ஊட்ட நாம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன.
கிராமத்தின் முக்கிய கட்டிடங்களும், இதயத்தானமாக விளங்கும் பள்ளி வாசலும் உட்பட முழுக்கிராமமுமே மின்சார வெளிச்சத்திற்கு வருவது எவ்வளவு பெருமை.
இவ்விழிப்புணர்ச்சிக்கு வித்தியாலய ஆசிரியர்கள் ஆற்றிய மகத்தான சேவையும் மெருகேற்றியுள்ளதே! என்று எண்ணும் போது ஆசிரியப் பெருமக்கள் உட்பட கிராம முன்னேற்றத்திற்கு பங்காற்றிய அனைத்து உள்ளங்களும் புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியவில்லை.
அதனால் தான் என்னவோ பல வருடங்களுக்குப் பின்னும் பொறுப்புணர்வுடன் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். அதனை
3 - நா ம் பயணித்த புகைவண்டி

Page 31
உதாசீனம் செய்யாமல், ஒருவகைப் பெருமையுடன் விழாவில் கலந்து கொள்ளப் புறப்பட்டேன்.
பனி னரிர ண டு மனித தயா லங்கள் தலைநகரின் இரைச்சல்களிலிருநுது விடுதலையாகிக் கிராமிய அமைதியில் சுற்றிச் சுழலவே மனம் அவாவுகிறது.
முதலில் சிராஜின் இல்லத்திற்குச் செல்ல வேண்டும், என்பதால் காலை ஏழு மணிக்குச் சன நெரிசல் இல்லாமல் நின்றிருந்த எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் ஏறிச் சீற் பிடித்துக் கொண்டேன். சரியாகத் தொடங்கினால் இரண்டு மணித்தியாலங்களில் சிராஜின் இல்லத்தை அடைந்து விடலாம் ஒரு சில முக்கிய இடங்களில் மட்டும் தரிக்கும்.
“முதலில் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்கள். ஒய்வு கலந்துரையாடல் முதலியவற்றிற்குப் பிறகு மதிய போசனம் விழா மாலை நான்கு மணிக்குத் தான் ஆரம்பம் பிரமுகர் நாலரைக்கு வருவார். நாங்கள் மூன்று மணிக்கு பஸ் எடுத்தால் போதும்.”
சிராஜ் திட்டமிட்டு கருமமாற்றும் பேர்வழி எக்ஸ் பிரஸ் சுவாரஸ்யமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இடையில் மற்றுமொரு முக்கியமான நகரில், அரை மணி நேரம் தாமதித்தபோது கொஞ்சம் போரடித்தாலும், அப்புறம் வண்டி அசுர வேகமாகப் போய்க் கொண்டிருந்தது மனமோ மின்சார வேகத்தில் மருதவயலில் உலாவிக் கொண்டிருந்தது.
கிராமம் மின்சாரத்தால் பொலிவடைந்ததும், ஒரு தனி மெளசு பிறந்துவிடும். இதுவரைக்கும் எத்தனையோ கட்டிடங்கள் இருந்தும் வெளிச்சமின்றி அவை சோபையற்றுக் கிடந்து விட்டன. மக்களும் இருளிலேயே வாழ்ந்து விட்டார்கள். ஆனால் இனித்தான் அவர்களது அன்றாடத் தொழிற்றுறைகளிலும் அபிவிருத்திகளை எதிர்பார்க்கலாம்.
சரியாக ஒன்பதே முக்காலுக்குச் சிராஜின் இல்லத்தை அடைந்து விட்டேன்.
அந்த அமைதியான சூழலில் அதே சிறிய தென்னந் தோப்பில், தோற்றத்தில் மிகவும் எளிமையாகக் காட்சியளித்த, விசாலமான அறைகளைக் கொண்ட அந்தக் கல்வீட்டின் நீண்ட விறாந்தையில் நண்பர் சிராஜ் ஏதோ ஒரு நூலில் மூழ்கிப் போயிருந்தார். எனது வருகை சட்டென்று அவரது பார்வையில் விழுந்ததும் -
"அஜ்மீர் வாருங்கள், உங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்."
ܝܝܝܝܢܝ ܗܝܗܝܗܝܗܝܗܝܗܝܗܝܗܝܗܝܗܝܗܝܗܝܗܝ "நாம் பயணித்த புகைவணி டி

அவரது மனைவி மக்களுடன் வழக்கமான சம்பிரதாயக் குசலம் விசாரித்தலில் தொடங்கிப் பேச எவ்வளவோ இருந்தன.
மதிய உணவு முடிந்ததும், நீண்ட நேரம் தாமதிக்காமல், நின்று நின்று செல்லும் 'லோக்கல் பஸ் ஏறினோம். இன்று சேவை விஸ்தரிக்கப் பட்டிருக்கிறது. சிராஜ் பழமையையும் புதிய மாற்றங்களையும் சுட்டிக் காட்டினார்.
பாதையில் பள்ளங்கள் திருத்தப்பட்டு ஆங்காங்கே தார்பூச்சுக்கள் மின்னுகின்றன.
பஸ்ஸிற்குள் நீண்ட காலதிற்குப் பிறகு பல தெரிந்த முகங்களின் தரிசனங்கள்.
தரிப்புகளில் நின்று, நின்று பிரயாணிகளை ஏற்றிய வண்ணம் ஊர்ந்து கொண்டிருந்தது வண்டி. என்னைப் பொறுத்த வரையில் சலிப்புத் தட்டவில்லை.
கிராமத்தின் நுழைவாயிலில் அலங்காரம் பிரமாதமாகக் கண்களுக்கு விருந்தளித்தது. ஒரு புறம் ஒலிபெருக்கி அலறிக் கொண்டிருந்தது. முழுக் கிராமமுமே பெருநாட்கோலம் பூண்டிருந்தது.
ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கல் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விடயம். முதன் முதலில் பள்ளிவாசலுக்கு என்று தொடங்கி, வசதியுள்ளவர்களும் எடுத்துக் கொள்வார்கள். பின்னர் பொதுக் கட்டிடங்கள் ஒவ்வொன்றுக்கும். காலப்போக்கில் அதில் ஒன்றும் புதுமை இராது. அனைவரும் மின்சாரம் பெற்றுக் கொள்வார்கள்.
மினாராக்கள்' எனும் பள்ளிவாசலின் தூபிகள் வெளிச்சம் குளிக்கக் காத்திருக்கின்றன.
சரியாக மாலை மூன்று முப்பதுக்கு, அவ்விடத்தில், பல்லாண்டுகள் மக்களுக்குச் சேவையாற்றிய பிரமுகருக்குச் செங்கம்பள வரவேற்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
விவசாயிகள் அன்று வேலைக்குப் போகவில்லை. சிறு ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களும் அன்றைய வருமானத்தைத் தியாகம் புரிந்து ஆங்காங்கே ஒவ்வொரு பணிகளிலும் பொறுப்புகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பஸ் வண்டியை விட்டிறங்கித் தொடர்ந்தும் இனிய முக
37 - நா ம் பயணித்த புகைவணடி

Page 32
தரிசனங்களுடன் நடந்து கொண்டிருந்தோம். நண்பர் சிராஜ் உரையாடிக் கொண்டே வந்தார்.
பத்துப் பன்னிரண்டு வயதினராய் இருந்த மாணவர்கள் இளைஞர்களாய் வளர்ச்சியுற்றும் பலருக்கு எம்மை இனங்காண முடியாமலும், கிராமத்திற்கே உரிய தனித்துவமான சங்கோஜ பாவத்துடனும், கனிவுடனும், பணிவுடனும் எம்மை அணுகினார்கள்.
"சேர்மாருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்களுக்குத் நினைவிருக்கும் என்று என்று நினைக்கிறேன்........
நான் உங்கள் பழைய மாணவன் ரிஸ்வி"
தென்னை மரம்போல் நெடிது வளர்ந்து, பளிச்சென்று வெள்ளை சாரனும் சேர்ட்டும் அணிந்திருந்தான். உற்றுப் பார்த்த நான், “ஓ.... நல்லா தெரியுமே..." என்றேன்.
"சிராஜ் சேரையும் நீண்ட நாளா சந்திக்கல்ல....... எங்க வாப்பா போன மாசம் மௌத்தாப் போனார். அவருக்கு பதிலா என்னை பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியிலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திலும் சேர்த்திருக்கிறாங்க."
"அப்படியா....
அதுதான் எங்களுக் கெல்லாம் அழைப்பு வந்திருக்கு....."
“அப்படி ஒன்றும் இல்ல சேர்... உங்கள எல்லாம் இந்த ஊர் மறக்காது....'
ரிஸ்விக்குப் பக்கத்தில் உறுதுணையாக ஜெமீல், சவாஹிர், ரிசான் போன்ற இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். எல்லாருமே தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.
'எப்படியோ..... கிராம முன்னேற்றத்திற்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் முன் வந்து பொறுப் போடு தொண்டு செய்யணும்...
"நன்றி சேர்... நிறைய வேலை இருக்கிறபடியால் உங்கள் விழா முடிஞ்சி சந்திக்கிறம்... சேர் இராச் சாப்பாடு. எங்கட வீட்டில ஒழுங்கு செய்யிறன்...'' என்று அன்புடன் அழைத்த ரிஸ்வி எங்கள் பதிலுக்குக் கூட, நில்லாமல் நண்பர்களுடன் பறந்துவிட்டான்.
பள்ளிவாசலில் விஷேட ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. பாடசாலையின் ஒன்பதாம் ஆண்டு மாணவர்களின் 'களிம்பு
-(38)
- நா ம் பயணித்த புகைவண் டி

விளையாட்டுக் கவர்ச்சியாக இருந்தது. மாணவர்கள் தமது கை வண ன த தைப் பள்ளிவாசல மு ன்ற லில் காட்டிக கொண்டிருந்தார்கள்.
பொதுக் கூட்டம் நடைபெறவிருக்கும் வித்தியாலயப் பிரதான மண்டபம் வெகு விமரிசையாகக் காட்சியளித்தது.
"அஸ்ஸலாமு அலைக்கும் மாஸ்டர்" மற்றுமொரு அன்புக்குரல். "வ அலைக்கும் சலாம். யாரு அப்துல்லாவா? எப்படி..?”
அப்துல்லா கிராமத்தில் ஒரு சாதாரண தொழிலாளி சற்று நேரம் உரையாடியதிலிருந்து, எம்மிடம் கல்வி கற்ற அவன் மகன் ரஹற்மான் இப்பொழுது வெளிதேசத்தில் நல்ல தொழிலில் இருப்பதாக அறிய முடிந்தது.
தான் பிறந்த மண்ணில் பொதுக் கட்டிடங்கள் மின்சாரம் பெற்றுப் புத்தொளி பெறட்டும் என்ற பரந்த நோக்கில் அவன் அனுப்பிய நன்கொடையைப் பரிபாலன சபை பரிசீலிக்கும் என்பதையும் தெரிவித்தான். ரிஸ்வி உறுதியளித்திருந்தான். அவன் மூலம் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப் படும் என்ற நம்பிக்கை அப்துல்லாவுக்கு இருந்தது.
ரிஸ்வி உறுதியளித்ததோடு ஒரு பொருத்தமான யோசனையையும் அப்துல்லாவிடம் முன் வைத்திருந்தான்
அப்துல்லாவின் மகிழ்ச்சிக்கு ஒர் அளவே இருக்கவில்லை. ‘எப்படியும் ஒரு சாதாரண தொழிலாளியின் பணத்தைக் கொண்டு பொதுக் கட்டிடங்களுக்கு மின் இணைப்புக்கள் கொடுத்துவிட்டால் அவனது புகழ் பரவி கிராமத்தில் நிலைத்துவிடும். நாளைக்கு அவன் டிரஸ்டியாகவும் வந்துவிடுவான். அப்புறம் எங்கள் பாடு.?
அண்மையில் ஒன்றிணைந்த இரு டிரஸ்டிமாருக்குத் தலையிடி! தட்டிக் கழிக்கவே திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
எமது மாணவர்களான ரிஸ்வி, ரஹ்மான், ஜெமில் போன்றவர்கள் பாடசாலை நாட்கள் தொட்டே இணைபிரியாத சிநேகிதர்கள்
பள்ளிவாசலுக்கு வெளியே கோலாட்டமும், இன்னிசைகளும் முழங்குகின்றன. தூபிகளெல்லாம் அதிருமாப் போல அவற்றுள் நடமாடும் இரு பழம் பெரும் தூபிகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் வெற்றிகரமாக முடியும் வரைக்கும் அவற்றின் நெஞ்சங்களும் 'கோலாட்டம் போலத்தான். பட் பட் பட்டென்று அடித்துக் கொள்ளும்

Page 33
மாணவிகளின் பான்ட் ஒசை அவற்றுடன் இணைந்து கேட்போர்
உள்ளங்களில் கிளுகிளுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
வரவேற்பாளர்கள் எம்மை விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
வாணவெடியொன்று வானைப் பிளந்தது. விஷேட அதிதி சரியான நேரத்திற்கு வந்துவிட்டாராம்.
எங்கும் ஒரு வகைச் சுறு சுறுப்பு விஷேட அதிதி இன்னுமொரு வைபவத்திற்குச் செல்ல வேண்டிய தர்மசங்கடமான நிலையில் இருப்பதாக வரவேற்பாளர்கள் தெரிவித்தார்கள்
கோஷங்கள் உச்சக் கட்டத்தை அடைந்து விட்டன. பிரமுகருக்குப் பின்னால் காக்காய் பிடிக்கவே ஒரு பெருங்கூட்டம்!
பொதுத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஒடியோடிக் களைத்துப் போன குதிரையை ஒய்வெடுக்க விடாமல் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தவே பிரமுகர் ஆலாய்ப் பறக்கிறார்.
சம்பிரதாய பூர்வமான வரவேற்புபசாரங்களை முடித்துக் கொண்டு பிரமுகருடன் மற்றவர்களும் மண்டபத்தினுள் நுழைந்து இருக்கைகளில் அமர பிரமுகரின் கழுத்திலிருந்து தலையையும் பார்வையையும் மூடிக் கொண்டிருந்த வண்ண மாலைகளை மேசை மீது இறக்கி வைக்கப் பெரும் பாடு பட்டார். மேலும் மேலும் மாலைகள் குவிந்த வண்ணம் இருந்தன.
. விழாத் தலைவர், 'மெளலவியின் கிறாத் ஒதல். என்று குறிப்பிட்டதும் எங்கும் நிசப்தமே நிலவியது. பின்னர் தலைவர் தொடக்கி வைத்தல், வரவேற்புரை முதலிய சம்பிரதாயங்களை நிறைவேற்றிய பின், பிரமுகர் தமது சிறப்புரையை ஆரம்பிப்பதற்கு முன், ஒரு விசையைத் தட்டினார்.
மண்டபத்திலும் அக்கம் பக்கத்துப் பெரிய வீடுகளிலும் மின்சார ஒளிப் பிழம்பு பளிரென்று பாய்ந்தது.
மக்களின் கரகோசம் மண்டபத்தை நிறைத்தது பிரமுகர் சிறப்புரை முடிந்ததும் மன்னிப்புக் கோரலுடன் பரிவாரங்கள் முன்னும் பின்னும் தொடர வெளியேறினார்.
"அவருக்காக வேறொரு வைபவம் காத்துக் கொண்டிருக்கும்.” என்றார் சிராஜ்.
- நாம் பயணித்த புகைவண டி டட-4ெ)

கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆறுமணிக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க அவகாசம் இல்லை.
எங்களுக்கு பஸ்ஸைப் பிடிக்கும் பரபரப்பு ரிஸ்வியும் நண்பர்களும் வந்து நின்றனர். இராப் போசனத்திற்காக அவனது இல்லத்திற்கு பலதும் பத்தும் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.
பெரிய பங்களாக்களில் மின் விளக்குகள் இருளை விழுங்கி, பகல் வேஷம் போட்டுக் கொண்டிருந்தது.
நடந்து கொண்டிருந்த ரிஸ்வி சட்டென்று நின்று -
"சேர் பள்ளிவாசலைப் பார்த்தீர்களா..? என்று ஒரு புதிரைப் போட்டான்.
நானும் சிராஜூம் பள்ளிவாசலை எட்டிப் பார்த்தோம்.
அப்படியே திகைத்துப் போய்விட்டோம்
அரைவாசி வயரிங் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொங்கிக் கொண்டிருப்பதை சிராஜுக்குக் காட்டினேன்.
தற்காலிக மின் இணைப்புக்களை கழற்றிக் கொண்டிருந்தார்கள்.
தூபிகளை அண்ணாந்து பார்த்தோம்.
அவை எம்மைப் பார்த்துச் சிரிப்பது போல் ஓர் உணர்வு
பள்ளிவாசலுக்கும் பாடசாலைக்கும் தர்மகர்த்தாவின் வீட்டிலிருந்து தற்காலிக மின் இணைப்பு தான் போடப் பட்டிருந்தது.
ரிஸ்வியின் குரலில் அழுத்தம் தோய்ந்திருந்தது.
"அப்ப அப்துல்லாவின் மகன் ரஹ்மான் அனுப்பிய நன்கொடை.? அது ஒன்றே போதுமே.” என்றேன் சற்று உணர்ச்சிவசப்பட்டு
"புதிய நிதியாண்டு தொடங்க இன்னும் மூன்று மாதகால
தொடர்ந்து விளக்கம் கூறினான் ரிஸ்வி
"இன்னும் மூன்று மாதங்களில் பள்ளிவாசல் நிர்வாக சபையில் மாற்றங்கள் வரலாம்.
一ー・エTエT口エ・一・一_ "நா டம் பயணித்த புகைவணர் டி

Page 34
பல்லாண்டுகள் ஒடிக் களைத்த குதிரைகளுக்குக் கட்டாய ஒய்வு நிச்சயம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திலும் புதிய முகங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் அப்படியே நாங்கள் நிர்வாக சபைகளுக்கு வந்துவிட்டால், மிக்க ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் போட்டி போடும் பழைய விடாக்கண்டர்களுக்கு ஒட இடமிராது.
“உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்."
'நிதானம் தவறாமல் திட்டமிட்டு வேலை செய்வதில் குருவை மிஞ்சிய சிஷ்யர்.” என்று மெள்ள நண்பர் சிராஜிடம் கூறினேன்.
"அத்தோடு அவர்களின் மறை முகமான முயற்சியால் எவ்வித விளம்பரமோ ஆரவாரமோ இல்லாமல் அப்துல்லாவின் மகன் ரஹற்மான் அனுப்பிய நன்கொடையைக் கொண்டு ஊர்ப் பாடசாலைக்கு மின்னொளி கொடுக்க ஒழுங்குகள் நடக்குது. பள்ளிவாசலுக்கு எப்படியும் கொடுக்கத்தானே வேணும்' என்றார் நண்பர் சிராஜ்
ரிஸ் வியின் வீட்டில் இராப் போசனத்தை முடித்தவுடன் வெளியேறினோம்.
புதிய தலைமுறையினர் நிதானமாகச் சிந்தித்து வெளிச்சத்திற்கு வர எத்தனிக்கிறார்கள். நிச்சயமாய்க் கிராமத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் தென்படுகிறது.
அவர்களை வரவேற்பதற்காகப் பள்ளிவாசலில் வழக்கமான அகல்விளக்குகள் கண்சிமிட்டிப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. எம்மை ஏற்றிச் செல்வதற்காகப் பஸ் வந்து கொண்டிருந்தது.
வீரகேசரி
28-04-1996
SqSqSqSqSqS つエ பு ைகவனிடி -C42

எஞ்சிய நாட்கள்
மிக வேகமாகத் துரத்திக் கொண்டிருந்தது. பீல்ட் ஒபிசர்
தாஹா சாமத் கொழுந்து மடுவத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஏனோ அவரது நடையில் மிகுந்த சோர்வு கொஞ்ச நாட்களாய் அது அவர் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
9. ந்த அழகிய செவ்வந்திப் பொழுதை விழுங்க இருள்
பாவம்! எப்படி இருந்த உடம்பு என்னமாய் உருக்குலைந்து ஒல்லியாகிப் போய். ஐந்தரை அடி உயரம் அதற்கேற்ற அந்த வட்டமான மொங்கோலிய - மலாய் முகம் வாடி விட்டதே! அந்தச் சிவந்த முகத்தில் வெட்டி ஒட்டினாற் போல வாட்டசாட்டமாக, கறுத்த முறுக்கு மீசையும். மூப்பினால் நிறம் மாறி வெளிறிப் போய்! இனியும் அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோசனம்? தொழிலாளரை மிரட்டி அச்ச மூட்டி வேலை வாங்க முடியுமா? ஒன்றுக்கும் உதவாத தேங்காய்த் தும்பாய்க் கொஞ்ச நாளாக. ஒரு காலத்தில் இலங்கையை
ஆண்ட அந்த டச்சுக்காரர்களைத்தான் கண்டபடி ஆங்கிலத்திலும்
மலாய் மொழியிலும் திட்டிக் கொண்டிருந்தார்.
கொஞ்சத் தூரம் நடந்தாலும் உடம்பில் ஒரு தளர்வு மலை ஏறினால் அந்தப் பொல்லாத களைப்பு எல்லாம் மனிதனுக்கு சொல்லிக் கொண்டாவருகிறது! வந்துவிட்டதே!
55L60) D..... 55L60)LO... கடமையுணர்விலேயே லயித்துப் போய்.

Page 35
அப்பாடா. எவ்வளவு வேகமாய் மூன்றரை தஸாப்தங்கள் நகர்ந்திருக்கின்றன. இரு வாரங்களுக்கு முன்புதானே அந்தச் சம்பவம் நடந்தது. அதைச் சற்று மீண்டும் இரை மீட்டிப் பார்க்கிறார் தாஹா,
அவரது பொல்லாத காலத்திற்குத் தான் அன்றைக்குத் தத்தி தத்தி மலை ஏறிய போது, இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி. முக்கோணவடிவம் காட்டப் போய். அல்லது பரத நாட்டியத்திற்கு ஆயத்தமாக, அபிநயம் காட்டப் போய். சற்று மேலே ரோட்டில் நின்று கொண்டிருந்த தோட்டத்து சுப்றின்டனின் கழுகுப் பார்வைக்கு இரையாகி விட்டார். முழங்காலுக்கு மேல் காக்கி நிறத்தில் காற்சட்டையும் அதே நிறத்தில், அரைக்கைச் சேர்ட்டும் முழங்கால் வரை ஸ்டொக்கிங்ஸ"ம் பட்பட்டென்று பூமியை அறையும் அந்த
அவருக்கு இது வரை காலமும் ஒரு தனி பர்சனலிட்டியை அளித்தது.
ஒரு சின்னஞ் சிறிய விளையாட்டுப் படகு போல் தலையை மூடியிருந்தது. அந்த போட் தொப்பி யார் வைத்ததோ. பொருத்தமான காரணப் பெயர் தான். அந்த அகன்ற தொப்பியைக் கழற்றி கக்கத்தில் செருகி மரியாதை செலுத்தப் போய். அந்தப் படகு தரையில் மோதி. கவிழ்ந்து கிடக்க. ஒரேயொரு செக்கனுக்குள். எப்பவும் இல்லாமல் என்ன இப்படியொரு அபசகுனம்' என்று மனம் குமைந்து, அதைப் பொறுக்கி எடுத்து இடது புறக் கக்கத்தில் அடக்கிக் கொண்டு மூச்சிரைக்க, இரைக்க துரைக்கு முன்னால் பவ்வியமாக கைகட்டி
நின்றார் தாஹா,
பெரிய துரை வானத்தைப் பார்த்துச் சிரித்தார். தாஹாவுக்கு ஒன்றும் புரியாமல் கூனிக் குறுகி விழித்துக் கொண்டிருந்தார்.
"மிஸ்டர் தாஹா இட் இஸ் றைற் பொர் யுவர் ரிட்டையர் மெண்ட்
இஸ். இன்ட் இட்?" சம்பிரதாயத்திற்காகத் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டார் மனமோ திடீரென்று காடு பற்றி எரிவது
நீ இனி ஒன்னுக்கும் உதவ மாட்டே மலை ஏறி இறங்க லாயக்கில்ல. என்பதைத்தான் குத்திக் காட்டுகிறார்.
"டிட் யூ சீ மிஸ்டர் தாஹா' இந்த உடம்பு பழசானதும். அணிகலன்கள் கூட நம்மை உதறித் தள்ளி விடப் பார்க்கின்றன.
ܝܝܝܝܝ ܚ ܗܗܗܗܗܗܗܗܗܗܗܝܗܝܗܝܗܝ நாம் பயணித்த புகைவணி டி

துரைக்கு நல்ல மூட் தத்துவம் பேசுகிறார்.
ஒரு சாதாரண மூத்த தலைமுறை பீல்ட் ஒபிசருக்கு துரையின் கருத்தை வெட்டி எதிர்த்துப் பேச முடியுமா..? யேஸ் சேர். யேஸ். சேர் என்று சொல்வதைத் தவிர.
இவரும் என்றுமே கண்மூடித் தனமாகக் கருத்துக்கள் தெரிவித்து மாட்டிக் கொள்ள விரும்பமில்லை. துரைக்கு வந்த புதிதில் பீல்ட் வேர்க் கற்றுத் தந்ததே தாஹாதான். ஆனால், அதையெல்லாம் யார் இப்பொழுது பேசப் போகிறார்கள்?
எப்படியோ துரையின் மனத்திரையில் தாஹாவுக்கு இனி பீல்ட் வேர்க் செய்ய முடியாது என்ற கருத்து பதிந்து விட்டது.
சில நாட்களுக்குப் பிறகு துரையும் ஹெட் கிளார்க்கும் அவரது பர்சனல் பைலை துருவிக் கொண்டிருந்து விட்டு -
எக்ஸ்டென்சன் பீரியடையும் கடந்து விட்டார். சட்ட திட்டங்களை மீறி இனியும் சேவையை நீடிக்க முடியாது. வயது அப்படி என்ற முடிவுக்கு வந்தனர்.
தேர்ட்டி சிக்ஸ் யியர்ஸ் ஒவ் சேர்விஸ். வெரி சின்சியர். ஒனஸ்ட் அன் ஹார்ட்வர்க்கிங். டெல் ஹிம் டு கம் அன் சீ. மி.”
தாஹாவுக்கு நம்பிக்கையான ஆள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. அடுத்த நாள் அலுவலகத்தில் துரை. கிளார்க், தாஹா ஆகிய மூவரும் கலந்துரையாடினர்.
தாஹா எத்தகைய உதவியும் கேட்டுத் தலை சொறிந்து கொண்டிருக்கவில்லை.
அறையுமாப் போல, எதற்கும் எந்த நேரத்திலும் தாம் வெளியேறத் தயாராக இருப்பதாக மிகுந்த தன்மான உணர்வுடன் ஆணித்தரமாக ஆங்கிலத்தில் கூறி வைத்தார்.
ஒரு கணம் அசந்து போன துரை மிகுந்த அக்கறையை வரவழைத்துக் கொண்டு.
"அவரர் யுவர் டர்மினேசன் யூ நீட் நொட் வெக்கேட் தி குவார்ட்டர்ஸ். ரில் யூ சோல்வ் ஆல் யுவர் பர்சனல் ப்ரொப்லம்ஸ். அத்துடன் அந்த அழகிய செவ்வந்தி மாலைப் பொழுதை விழுங்க
"நாம் பயணித்த பு ைகவனிடி -C45)

Page 36
மிக வேகமாகத் துரத்திக் கொண்டு வரும் இருளரக்கன் முப்பத்தைந்து வருடங்களாக வசித்து வந்த பீல்ட் ஒபிசர்’ எனும் உயர் பதவியையும், இன்னும் ஒரு மணித்தியாலயத்தில் விழுங்கி ஏப்பமிட்டுவிடுவான்.
இனி விடிந்தால். ஆட்டம் குளோஸ்.
அன்று பரத நாட்டியத்திற்கு அபிநயம் காட்டி நின்றவர் நாளை முதல் , தமது ததிங்கின தோம் தத்தம் ஆட்டத்தை எப்படி ஆடப்போகிறாரோ.?
ஆழ்ந்த சிந்தனையோடு, கொழுந்து மடுவத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவருக்கு தொழில் ரீதியாக. எல்லாம சரியாக இயங்குகின்றனவா என்று சுற்றும் முற்றும், மலை உச்சிகளையும் மரங்களையும் அண்ணாந்து அண்ணாந்து நோட்டமிடும் பழக்க தோசம் விட்டுப் போகாது போலிருக்கிறது.
திடீரென்று அவரது பார்வைக்குப் பட்டுப்போன அந்தச் சவுக்கு மர உச்சிதான் குத்தியது. அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார் ஒரு கணம். தமக்கென ஒரு கூடு கட்டுவதற்கு, மெல்லிதான நீண்ட குச்சிகளைக் சொண்டில் கெளவிச் சுமந்து எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பறவைகள்
இந்தப் பட்டுப் போன மரத்தை எவரும் வெட்டப் போவதில்லை என்பதை அந்தக் காகங்கள் முன் கூட்டியே அறிந்து கொண்டனவா? எப்படிக் கண்டு கொண்டன?
மேலதிகாரியான சுப்றின்டன்டனைத் தவிர வேறு எவருக்குமே தொப்பியைக் கழற்றாதவர் இப்போது அந்தக் கிரீடத்தைக் கழற்றி - மரத்தின் உச்சியில் அவை கூடு கட்டும் விந்தையை நீண்ட நேரம் நின்று உற்று நோக்கியவருக்குப் பொறாமையாக இருந்தது.
அட காகங்கள் கூட ஒரு பாதுகாப்பான தளத்தில் கூடு கட்டுகிறதே! பீல்ட் ஒபிசர் தாஹா சாமத். இல்லை. சற்று நேரத்திற்கு முன் பீல்ட் ஒபிசர் என்ற பட்டமும் பதவியும் பெரியையா என்ற சிறப்பும் கெளரவமும் இருளோடு இருளாய், காற்றோடு காற்றாய்ச் சங்கமித்து விட்டதே! விடிந்தால் -
எல்லா அதிகாரங்களும் இழந்த வெறுமனே தாஹா சாமத். அவ்வளவுதான்.
பொக்கட் செக்ரோலில் முதலாம் ஆளிலிருந்து நாநூற்று
ー○
ܢܝܚܚܚܚܚܓܚ==-ܚܚܚܚܚܚܚܚܚܢ--------------- - நாம் பயணித்த புகைவண் டி

நாற்பத்தெட்டாவது ஆள் வரைக்கும் அதட்டி ஏசிப் பேசி. ஏன் அன்பு செலுத்தக் கூட ஓர் ஈக்குஞ்சு கூட இருக்காது.
விடிவதற்குள் அவருக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய சீனச் சுவர் முளைத்து விடும். இந்த வயதும் தள்ளாமையும் மனிதனை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுகிறதே!
வந்ததும் வராததுமாக பிளாஸ்க்கிலுள்ள தேநீரை ஊற்றிக் குடித்துவிட்டு மனைவியிடம் சம்மா சொ அப்பிஸ். எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறினார். மலாய் மொழியில்
தாஹா சாமத்தின் குடும்பப் பின்னணி இதுதான்; அவரது குடும்பம் சிறியது. இரண்டு ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள் சொந்த மண் மாத்தளை அங்கு அவருக்கு பரம்பரையாக சொந்தம் கொண்டாட ஒரு ஐந்து பேர்ச்சஸ் காணியில் ஒரு சிறிய வீடு அவ்வளவுதான் பூர்வீகச் சொத்து தற்பொழுது மூத்த மகன் ம. ரூப்தான் குடும்பமாக அவ்வீட்டில் வசிக்கிறான். அவனுக்கு மாத்தளைப் பிரதேசத்து. பன்விலயில் தொழில் அதற்கடுத்த மகள் பர்வீன் ஹட்டன் யூலிபீல்டில் குடும்பமாகியிருக்கிறாள். தன்னோடு இருக்கும் மூன்றாவது மகன் ரசின் வருட முடிவில் ஓ.எல் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். நான்காவது அவனுக்கும் இளையவள் யெஸ்மின்
படித்துக் கொண்டிருக்கிறாள்.
சற்று நேரம் ஒய்வெடுத்து விட்டு, வியர்வையால் தோய்ந்து போன தன் உடம்பைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டு வந்து முன் விறாந்தையில் அமர்ந்தார். கையோடு வளைந்த 'பைப் குழாயையும். புகையிலை டின்னையும் ஏந்தி வந்தவர். அந்த டின்னைத் திறந்த போது கமகமவென்று புகையிலையின் மணம் வீசியது. விரல்களால் புகையிலையை எடுத்துக் குழாயில் திணித்து. இரண்டு மூன்று தீக்குச்சிகளைக் கீறி பக் பக்கென்று தீ மூட்ட ரம்மியமான அந்தப் புகையிலையின் வாசம் சூழலில் பரவியது.
சற்று நேரம் அப்படி அமர்ந்திருந்து புகைப்பது அவரைப் பொறுத்த வரையில் சிறிது நேர ரிலெக்ஸ் அந்த நேரத்தில் டீவி. ரேடியோ செய்திகள். அன்றைய ஆங்கிலப் பத்திரிகை என்று மூழ்கிவிடுவார். ஆனால் இன்று -
டியூசன் வகுப்புக்குப் போயிருந்த மகன் ரசீனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மனைவியின் முணுமுணுப்பில் தொடங்கும் வாய் ச் சணர் டை கூட வலுவடைய வலி லை வேறு
நாட்களாயிருந்தால்.
—
tվ, 一○

Page 37
“இப்படிக் கட்டுக் கட்டா சுருட்டும் "பைப்'பையும் இழுத்துக் கிட்டு இருந்தா........ ரிட்டயர் ஆன பிறகு எப்படிக் காலம் போகப் போகுது” என்று முணுமுணுப்பில் தொடங்கி உச்சக் கட்டத்திற்குப் போயிருக்கும்.
தாஹாவைப் பொறுத்த வரையில். டீ.வி.ரேடியோவைப் போல்.. அதுவும் ஒரு ராகம். நிகழ்ச்சி சரியில்லாவிட்டால் டீ.வியையும் ரேடியோவையும் போட்டு உடைப்பதில்லையே! காது கொடுக்காமல், அல்லது சும்மா அலறி ஓயட்டும் என்று விட்டு விடுவது தான் அவர் கடைப்பிடிக்கும் பண்பு. ஆனால் அதற்கும் ஒரு புரிந்துணர்வும் மனப்பக்குவமும் வேண்டுமே! அது அவருக்கு இருந்தது.
மரம் நாட்டினவனுக்கு தண்ணீர் ஊற்றத் தெரியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. வகுப்புக்குப் போயிருந்த ரசீன் வந்த சிறிது நேரத்தில் "அங்க குசினியில எல்லாரும் என்ன செய்றீங்க...? எல்லாரும் முன் விறாந்தைக்கு வாங்க........" என்று மலாய் மொழியில் உரத்து கூப்பிட்டார்.
மனைவியின் ஓயாத நச்சரிப்புக்கு...... இன்று தன் முடிவுகளைப் பிரகடனப் படுத்தப் போகிறாரே! இது வரை காலமும் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடத்தி பதுக்கி வைத்திருந்த தீர்வுகளா அவை? “ஏன் இப்படி மலைக்காட்டில் ஆளுங்களுக்கு மிரட்டிக் கத்துற மாதிரி.... சத்தும் போடுறீங்க?” என்று அவள் கேட்கவில்லை.
குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வந்து விறாந்தையில் அமர்ந்ததும் சிறிது கலந்துரையாடினார். அதிகம் பேசாத வீட்டின் தலைவரான அவருக்கு மனைவி பெரும் பாலும் ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்தாள். ஆனால் இன்று தாஹா எல்லோருடனும் நீண்ட நேரமாக அன்புடன் கலந்துரையாடியது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. மனைவியும் பொறுமையின் சின் ன மாகக் கேட் டுக் கொண்டிருந்தாள். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு தீர்க்கமான
முடிவெடுத்தனர்.
ரசீன் ஆண்டிறுதி வரைக்கும் ராஜன் ஹாஸ்டலில் தங்கியிருந்து பரீட்சைக்குத் தோற்றவேண்டும். தாயும் யெஸ்மினும், தனது, மாத்தளை இல்லத்தில் 'தாஹாஸ் ஹட்'டில் நிரந்தரமாக குடியிருக்கலாம். குடும்ப அங்கத்தவர் இருவர் தங்குவதில் மட்ருபிற்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. யெஸ்மினது விடுமுறை காலங்களில் ஹற்றனுக்குச் சென்று மகளோடு தங்கியிருந்து அவளுக்கு உதவ வேண்டும். குளிர் காலங்களில் அவள் தனியே இரண்டு பிள்ளைகளோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாள்.
நா ம் பயணித்த புகைவண்டி

...அடுத்து தாஹா சாமத்தின் புரொவிடன்ட் பன்ட் வந்து விட்டால்? முடிந்த வரைக்கும் மாத்தளை வீட்டைச் சிறிது திருத்தவும். மேலதிகமாக ஓர் அறையைக் கட்டவும் யெஸ்மினை எதிர் காலத்தில் கரை சேர்க்கவும் அல்லது அவளது பெயரில் ஒரு பிக்ஸ்' டிபொசிட் செய்யவும் போதுமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். திருமதி சாமத்துக்கு. கணவர் இன்னுமின்னும் உழைக்க வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால், தாஹா இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதை
ஆட்சேபித்து ஒன்றும் முணுமுணுக்க வில்லை.
அன்றிரவு ரொட்டியும் மீன் கறியும், உறைப்பான தேங்காய்ச் சம்பலுடனும் இராச் சாப்பாடு முடிந்ததும். சற்றுப் பொறுத்து ஒரு தம்ளர் பாலுடன், நித்திராதேவியின் வருகைக்காகப் பேப்பரில் மேய்ந்து கொண் டிருந் தார். சற்று நேரத் திற் கெல் லாம் கண் ணயரத் தொடங்கியதும் கர்முர்ரென்று குறட்டை ஒலி கிளம்பியது. பழக்க தோசத்தால் விடி காலையில் விழித்ததும் 'மஸ்டருக்குப் போக வேண்டிய கடமை இல்லாததால், படுக்கையை விட்டு எழும்பாமல் இருந்து விட்ட பின்னர், 'அட சாமான்களை மூட்டை கட்டுவதற்கு, இரண் டொரு தொழிலாளர் வருவார்களே' என் ற எண் ணம் உதயமானதும் சட்டென்று எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளிப்பதற்கு ஆயத்தமானார். அதற்குள் அந்தப் புதுமை நடந்து விட்டது. இதுவரை காலமும் கட்டிக்காத்த அந்த முறுக்கு மீசையைக் காணவில்லை. அதனை முற்றாகச் சவரம் செய்து விட்டிருந்தார். உருண்டையான அந்த முகத்திற்கு இப்பொழுது ஓர் இளமைத் தோற்றத்தைத் தந்தது.
அதனைக் கண்டதும் முதலில் மனைவி மக்கள் எல்லோரும் கண்டும் காணாமலும் நகைத்தனர். சரியாக ஏழு முப்பதுக்கு வந்த அந்தத் தொழிலாளர்களும் மலைத்துப்போய் நின்றனர்.
"ஏம்பா மலச்சிப் போய் நிக்கிறீங்க...? நா இந்த முறுக்கு மீசை வச்சதே ஒங்களயெல்லாம் பயமுறுத்தி வேல வாங்கத் தான்.... சில சமயங்களில் நா ரொம்ப கடுமையா பேசியிருப்பேன்... அதுக்கெல்லாம் மன்னிச்சிக்குங்க.... இனிமே நீங்களும் நானும் ஒன்று தான்...'' ஒரு கணம் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தொழிலாளர்கள் அவரது வீட்டு முன்றலில் கும்பலாகக் கூடி நின்றனர். மஸ்டருக்கு நிற்பதுபோல ஆனால் கண் கலங்கியவாறு.
அப்பொழுது அவர் மனந்திறந்து சில கருத்துக்களைச் சொல்ல முற்பட்ட போது தான் துரை அவர்களின் கார் வந்து நின்றது. பீல்ட் ஒபிசர் பதட்டப் படாமல் வீடு தேடி வந்த நிர்வாகியை தரிசிக்கச்
49)
- நாம் பயணித்த புகைவண டி

Page 38
சென்ற போது துரையவர்கள் அப்படியே திகைத்துப் போய் "யூ சீம்ஸ் டு பி வெரி யங். ’ என்று பாராட்டி விட்டு. “டேக் யுவர் டைம் அண்ட்பினிஸ் வித் தெம்.அய் வில் ரிலெக்ஸ் போர்
அவர் நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் வந்து சேர்ந்தார்.
"அப்ப ஐயா தோட்டத்துக்கு வந்து எவ்வளவு காலங்க.? இனி போய் என்ன செய்யப் போறிங்க.?
இப்படிப் பல கேள்விகள். அப்பாவித் தொழிலாளர்கள் பாச மேலீட்டால் அறியத் துடித்தனர்.
"நா இந்தத் தோட்டத்துக்கு வந்து முப்பது வருஷம் முடியப் போகுது. இங்க வாரத்துக்கு முந்தி பதுளையில் ஆறு வருஷம். எல்லாமாக முப்பத்தாறு வருஷ சர்வீஸ். இப்பதான் தலை நிமிர்ந்து யோசிச்சிப் பார்க்கிறேன். நாளக்கி நா தோட்டத்து பெளண்டறிக்கு வெளியே நின்னு என்ன செய்யப் போறேனோ..? மிச்ச நாட்கள் எப்படிப் போகும். ? நீங்க கேட்ட கேள்வியத் தான் நானும் என னையே கேட் கிறேன் ஆம் புள புள்ளங் க எப்படியும் தலைதுாக்கிட்டாங்க. பிரச்சினை இல்ல. ஆனா ஒரு பொம்புள புள்ள இருக்கு முறைப்படி நல்ல இடத்தில கட்டிக்குடுக்கத் தான் பிரவிடன்ட் பண்ட் போதுமா..?
சரிதான்னு அதையும் சமாளிச்சிட்டாலும் மிச்ச முள்ள காலத்துக்கு எங்களுக்குச் சாப்பிட வழி.? தோட்ட நிர்வாகமா குடுக்கப் போகுது..? என்னுடைய சேவைக்குக் கிடைக்கும் கிரட்டியூட்டி பணந்தான் எவ்வளவு நாளக் கி? அந்தக் காலத்தில் அரச ஊழியனாகச் சேர்ந்திருந்தாலும், ஒடம்பு தளர்ந்து போன இந்தக் காலத்தில கஞ்சி குடிக்கவாவது மாதா மாதம் பென்சன் கிடைக்கும். நீங்க நினைக்கிற மாதிரி ரிடையர் மெண்ட்டுக்குப் பொறகு சாய்வு நாற்காலியில் சுகம் தேடக் கிளம்பல்ல. வாழ்க்கையில கடைசி நிமிஷம் வரைக்கும் தொழில் தான் எங்க தலையெழுத்து. இந்த மெஷின் பழசாகிட்டா மலை ஏறுவது கஷ்டம் கராஜிலே போட்டு வைக்க வேண்டியது தான். திருத்த முடியல்லேன்னா, அப்படியே கிடந்து தானாகவே துருப்பிடிச்சித் தனது முடிவைத் தேடிக் கொள்ளும்
அவரது முப்பத்தாறு வருட அனுபவ முத்திரை அது!
"ஓங்க பரம்பரை பூமிக்கு அடியில தங்கம் தோண்ட வந்திச்சி எங்க பரம்பரைய டச்சுக்காரன் படை வீரர்களா கொண்டாந்தான்.
AA A JAYYSu S S SS AAAASLSSASSS 一○ "நாம் பயணித்த புகைவணி டி SMMSSSSSqqSqSqqqqqSSSSSBMS

நா ஒன்னும் சம்பாரிச்சி கொட்டல்ல. எங்க மூத்த பரம்பரை எனக்குன்னு அஞ்சி பர்ச் காணிய வச்சிட்டுப் போயிருக்கிறாங்க. அதில ஒரு வீடும் கெடக்கு. இரண்டு பையன்களும் தலை யெடுத்துட்டாங்க மூத்த பெண்ண நல்ல இடத்தில எப்படியும் கட்டிக் குடுத்து குடும்பமா இருக்கா. வேறே என்ன செய்யலாங்க. இனி மேலே என்னால குடும்ப பாரத்த சுமக்க ஏலாது."
"சரி. தொரே காத்துக் கிட்டு இருக்காரு. நா அவரெ சந்திச்சி என்னன்னு பார்த்துட்டு ஒடியாந்திடறேன். மிச்ச வேலைய முடிச்சிருங்க."
ஐயாவின் உருக்கமான பேச்சுத் தொழிலாளர்களை உலுக்கி விட்டிருந்தது. சற்று நேர மெளனத்திற்குப் பிறகு எல்லாருமாகச் சேர்ந்து தேவையில்லாத மூட்டை கட்டிக் கொண்டு போகுமளவுக்கு முக்கியத்துவம் இல்லாத பொருட்களை எல்லாம். வீட்டின் பின் புறத்தில் குவித்தார்கள்.
அன்றைய தினம், சாமான் சட்டி முட்டிகள் உடுதுணி.. என்று கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மிகக் கொஞ்சமாகத் தானிருந்தன.
சிலவற்றை வந்து உதவிய தொழிலாளர்களுக்கு அன்பளிப்புச் செய்திருந்தார். இறுதியாக அவரைச் சந்தித்துப் போக பலர் வந்து கொண்டிருந்தனர்.
அந்தப் பழைய போட் தொப்பி காக்கி உடைகள் அனைத்தும் தேவையற்ற பண்டங்களுக்குள் முடங்கி ஒய்வு பெற்றுக் கொண்டன. அந்தப் போட் தொப்பி ஒரு மூலையில் எறியப்பட்டு கவிழ்ந்து கிடந்தது.
ஒரு தோட்டத்தின் பெரிய துரை சாதாரண உத்தியோகத்தர் வீட்டுக்குள் புகுந்து உரையாடுவது அந்தஸ்துக் குறைவு என்று பேணப்பட்டு வரும் மரபை துரை அவர்களால் மீற முடியாததால் காரை விட்டு வெளியே இறங்கியிருந்தார்.
"என்னடா இது அதிசயமாயிருக்கு. எப்பவும் இல்லாம மாதிரி இறங்கிவிட்டாரே!” என்று தொழிலாளர்கள் அங்கலாய்த்தனர்.
ஒபிசரும் சுப் றின் டனும் சினேக பூர்வமாக உரையாடினர். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே,
"நான் அந்த நாலாம் நம்பர் மலைய பத்தித்தான் அபிப்பிராயம் கேட்க வந்தேன். ஆனா உங்க பேச்சைக் கேட்ட பிறகு என் மனம்
"நாம் பயணித்த புகைவண டி - -C5D

Page 39
குழம்பிப் போச்சு. இப்ப எனக்குத் தெளிவா தெரீது நான் ஒரு பக்கமா இருந்து தான் சிந்திச்சிருக்கிறேன்னு'
"வருஷக் கணக்கா உங்க வாழ்க்கையைத் தியாகம் பண்ணி, நீங்க வெளியேறும் போது உங்களுக்கு கிடைக்கிற வருமானமெல்லாம் மீதமுள்ள வாழ்க் கையை ஒட்டுவதற்கு போதுமா? என்று கேள்வியெழுப்பி நீங்க சுருக்கமா சொன்னது என் மனசை அப்படியே.
துரையின் கார் ஊர்ந்து சென்றதும் தாஹாசாமத் விரைந்து வந்தார்.
வேலைகளை முடித்துவிட்டு காத்திருந்த தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த நன்றி தெரிவித்தார். "நாளை காலை பத்து மணிக்கு பன்வில லிருந்து மகன் வேனைப் பேசி எடுத்துக் கொண்டு வருவான். டெலிபோன் செய்தி கொடுக்கப் பட்டிருக்கு. எஸ்டேட் லொறியைக் கேட்க எனக்கு விருப்பமில்ல. பெளன்றியை விட்டு வெளியேறும் போது எனக்கும் எஸ்டேட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது.
அடுத்த நாள் காலையில் எல்லாரும் சுறுசுறுப்பாக நித்திரையை விட்டு எழுந்திருந்தனர். ஒவ்வொரு வேலையாகச் செய்து முடித்துவிட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் நேற்று மாலையே குடும்பமாகப் போய்த் தரிசித்துக் கண்ணிரும் கம்மலையுமாக விடை பெற்றுத் திரும்பினர்.
மூன்று தஸாப்தங்களின் பிணைப்பு அது!
இன்று காலையில் கூடச் சில நெருக்கமானவர்கள் வழியனுப்ப வந்திருந்து உதவி ஒத்தாசைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
தஹாவுக்கு காலை எட்டு முப்பதுக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.
இறுதியாகத் துரையைச் சந்திக்க வேண்டும். வழக்கமாக வெள்ளிக்கிழமை நாட்களில், ஜம்மாவுக்கு அணியும் நீண்ட வெண்ணிறக் காற்சட்டையையும் வெள்ளை சேர்ட்டையும் அணிந்து சேர்ட்டை வெளியில் விட்டிருந்தார். லெதர் செருப்பை மாட்டிக் கொண்டு நடந்தார். தலையில் மலாய்த் தொப்பி கிரீடமாகப் பளிச்சிட்டது. அவரை அலுவலகத்தில் உள்ளவர்களுக்குக் கூட அடையாளங்காண முடியாதிருந்தது. நீண்ட நிமிடங்களுக்குப் பிறகு தான் இலிகிதர்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து,

"நேற்று நான் உங்கள சந்தித்து வந்ததிலிருந்து எனக்கு மனம்
“இட் ஈஸ் வெரி ஸ்ட்ரேஞ்” “யூ ஹேவ் சேஞ்” என்று பல அபிப்பிராயங்கள் பீறிட்டன. "யேஸ் அப் கோர்ஸ். தெயர் சுட் Li. எ சேஞ்.” என்று தாஹா நிதானமாகக் குறிப்பிட்டார்.
அப்பொழுது அலுவலகத்திற்குள் துரை நுழைந்தார். தாஹா
சாமத் மலாய் 'கொங்கோ தொப்பியுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.
அவருக்குக் கூட தாஹாவை முதலில் இனங்காண முடியாமல், நாம் நேற்று சந்தித்த தாஹாவா?” என்று திணறினார்.
"g நெவர் எக்ஸ் பெக்டட் தெட் யூ வில் லீவி அளில் சோ
99.
கு ன் - - - - - -
- - துரை தொடர்ந்தார் -
சரியில்ல. தீரயோசிச்சேன். பக்கத்து எஸ்டேட் சுப்றின்டன்களுடனும் டெலிபோனில் அபிப்பிராயம் கேட்டேன். நம்ம அட்மினிஸ்ட்ரேஷன் செட் அப் கம்பனியினால் உருவாக்கப் பட்டிருக்கிறது.
மெக்சிமம் எங்களால் செய்யக் கூடியது இதுதான் -
உங்களுக்கோ பென்சன் வயது கடந்து விட்டது. எக்ஸ்டன்சனில் தான் கடமை செய்றிங்க. உங்களுக்கு மகன்மார் இருந்தா பொருத்தமான தொழில் கொடுக்கலாம்.
மூன்று மாதம் குவார்ட்டசில் தங்கவைக்கலாம். இன்னும் இரண்டொரு மாதத்தில நம்ம எஸ்டேட்டையும் ஜனவசம எடுத்துக்
கொள்ளும் அதற்குப் பிறகு யார் யாருக்கு என்னென்ன உரிமைகள்
இருக்கோ. இல்லாமல் போகுதோ தெரியாது வயது காரணமாக
உங்களையும் டிஸ்மிஸ் பண்ணினாலும், நாங்க குடுக்கிற சலுகைப்
பனங்கள் கிடைக்கமா என்பகம் சங்கேகம் கான், னால், ģgu LDT
கு து
அரச ஊழியருக்குக் கிடைக்கும் மாதாந்த பென்சன் இல்லை.
தாஹா சாமத் பேசத் தொடங்கினார். "சேர் எனக்காக நீங்க அக்கறை எடுத்து எதுவும் செய்ய வேண்டாம். விதிப்படி என் தலையெழுத்து இப்படித்தான் முடியட்டும். நான் உங்களிடம் எந்த விதமான சலுகைகளையும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் எனக்குப் பின்னால் வரும் இளைய பரம்பரையினரை, முப்பது வருட சேவைக்குப் பின் வீதியில் விடாம அவர்களுக்காவது ஆயுட் காலம்
முழுவதுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கட்டும்"
"நாம் பயணித்த புகைவணி டி -پس سیست

Page 40
“யெஸ் மிஸ்டர் சாமத். அத நீங்க நேற்று உணர்ந்திட்டீங்க. வரப்போற ஜன்வசம'வுக்கு எல்லாருமாச் சேர்ந்து ஒரு மகஜர் கொடுத்துப் பார்ப்போம்.'
மனம் இரங்கிப் போன துரை அவர்கள் ஏதோ பேசிக் கொண்டே
இனி தாஹா சாமத அவர்களுக்குச் சேர வேணி டிய கொடுப்பனவுகள் அனைத்தையும் உத்தியோக பூர்வமாக வழங்குவது. துரை பல திருத்தங்களை செய்திருந்தார்.
மிஸ்டர் தாஹா சாமத் நாலாம் நம்பர் மலையைப் பற்றி. உங்கள் ஆலோசனை.
“ஐ எம் சொரி சேர். சற்று நேரம் மெளனம் சாதித்த சாமத் இப்படிக் கூறினார் - "என் உடம்பு பழசாகி விட்டதும் எனது பீல்ட் உடைகள் கூட என்னை உதறித் தள்ளி விட்டன.
எனது பிளான்ரேசன் அறிவு கூட என் தொப்பியோடு கவிழ்ந்து விட்டது. எப்படியிருந்தாலும். நீங்கள் என்னை தேடி வந்து கேட்டதனாலே. ஐ ப்ரொமிஸ் யூ. நான் தபாலில் அனுப்பி வைப்பேன். (3ig T. குட். பாய்.”
துரை வெல வெலத்துப் போய் மெளனியாகி நின்றார். தாஹா விறுவிறுவென்று நடந்து இல்லத்தை அடைந்தபோது, ம.றுTப் வாகனத்தோடு வந்திருந்தான்.
"நான் முதலில் ஹற்ரனுக்குச் சென்று. பிறகு உறவினர்களைப் பார்க்கப் பதுளைக்குப் போய்த்தான்.” என்று கூறி மனைவி மக்களை வேனில் ஏற்றினார். ரஸினும் அவர்களுடன் போய் பின்னர் ஹாஸ்டலுக்குத் திரும்புவதாகக் கூறியிருந்தான்.
தொழிலாளர்கள் கண்ணிர் சொரிந்து நிற்க வேன் புறப்பட்டுச் சென்றது.
தாஹா சாமத் பிரயாணப் பையைத் தோளில் மாட்டி நிதானமாக நடந்து கொண்டிருந்தார்.
மல்லிகை
ஒகஸ்ட் - 1998
-----------------דר-ורדרדר"ת "זמר--------------
நாம் பயணித்த புகைவணி டி __________همس54گسسسسسسسسسسس


Page 41

o
· የሮo டடிலருந்து வநது ஒர இர வும ஒரு பகலும S பிந்திவிட்டது. எதிர்வரும் வியாழன். வெள்ளி ஆகிய
, - OL இரண்டு நாட்கள் லிவு கோரி ரெயில்வே வரண்டுக்கும்
.. 。 . சேர்த்து விண்ணப்பம் எழுதிக்
1 ން கொடுத்தேன். ஊருக்குப் போய் ஞாயிற்றுக் கிழமை நைட் மெயில் ஏறினால் திங்கள் காலை ஏழுமணிக்குக் கடமைக்குத் திரும்பிவிடலாம் என்ற திட்டத்துடன்
லீவுக்கான காரணத்தை விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அது என் தனிப்பட்ட விடயம். எனினும் கேட்டதற்காகச் சொன்னேன். அதிபரின் இதழ்கடையில் ஒரு வகையான சிரிப்பு. “என்ன மாஸ்ரர் GFLDUIT (15 சாதாரண சிங்கள ஆள். அவருக்குப் போய் லீவையும் வரண்டையும் வீணாக்குறிங்களே. ' அதிபரின் சொற்க ள் என்
இதயத்தைக் கிழித்தது. இவர் கிட்டே போய் ஏன் சொன்னோம் என்றிருந்தது.
வாக்குவாதப் பட்டு கசப்புணர்வுகளுக்கு ஆளாகிவிட்டால் நிச்சயமாக கவர் டப் பிரதேசத்தில் இதை விட மோசமான ஒரு
பாடசாலைக்கு மாற்றம் வந்துவிடும் ஏன் இந்த வம்பெல்லாம்.
சமரா ஒரு சிங்கள பெளத்தர் என்று மட்டுந்தானே தெரியும். அதற்கு மேல் சமராவைப் பற்றி இவருக்கு என்ன தெரியும். என்று மனம் ஓயாது குமுறிக் கொண்டிருந்தது. "அப்படி இல்ல சேர்.
--------------- ってエ عن ---- 11 bft D. Lu 60) த் ಕ್ಲಿ) || 6ಕ) 56) 6001 ॥இது முக்கியம். என்று விளக்கம் கூறினேன். புண் பட்ட மனதை ஆற்றிக் கொள்ள பாடசாலை வேலியில் நின்ற உயரமான தென்னை மரத்திலிருந்து, காய்ந்த தொன்னோலையொன்று சரேலென்று தரையில்
விழுந்ததும் அதிபரின் சிந்தனை திசை . திரும்பியது. “சரி. 5. உங்கட லிவு உங்கட விருப்பம்’ என்று கூறி அனுமதி வழங்கினார்.
வயதான பின்னும் மீண்டும் ஒரு குழந்தையின் தன்மையைக் காட்டும் சமராவின் அந்தப் பால் வடியும் முகமும், பொன்னிற வெற்றிலை உரலும் தான் மனக் கண்முன் வட்டமிட்டது. அது ஒர் அலாதியான முகம் கறுப்பில் வெள்ளை கண்டு விட்ட தலைமயிர் என னை யரின் மினுமினுப் புடன் பரின னா ல வலித் து வாரிவிடப்பட்டிருக்கிறது. முழுக்கை பெனியன் மாதிரியே இளஞ்சிவப்பு நிறச் சேர்ட் பெல்ட்டின் கட்டுப்பாட்டில் இடுப்போடு ஒட்டியிருக்கும் பிஜாமா சாரத்திற்கு வெளியே விடப்பட்டிருக்கிறது. ஐந்தடி நான்கு அங்குலம் மதிக்கலாம். முதுகில் இலேசான கூன் பொது நிறம். ஆழ்ந்த அனுபவம் பளிச்சிடும் பார்வை வயதை மீறிய சுறுசுறுப்பு ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கவாதி. அப்புறம் ஒன்றிலுமே இல்லை.
சமரா வைப் பற்றிய சிந்தனையிலேயே சிறிது நேரம் மூழ்கிவிட்டிருந்த போது -
பாடசாலை விட மணி ஒலித்தது.
விடுதி வசதிகள் இல்லாத பாடசாலைக்கு முன்னாலேயே ஒரு பெரியவரின் வீட்டில் வசதியான தனி அறையும் வேளா வேளைக்கு உணவும் கிடைத்தது.
பாடசாலை விட்டதும் அறைக்குச் சென்று கெரியரில் வைத்திருந்த பகலுணவை அவசரமாகச் சாப்பிட்டு விட்டு தயாராக வைத்திருந்த பிரயாணப் பையைத் தோளில் மாட்டிக் கொண டு. வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு விறு விறுவென்று பறந்தேன்.
இனம், மதம், மொழி இவற்றிகு அப்பாலிருந்து தான் நாம் இன்றைய சமுதாயத்தை நோக்க வேண்டும் என்பதை அதிபர்களாலேயே ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே!
சரியாகப் பதினைந்து நிமிட நடைக்குப் பிறகு ஆனைக்கட்டி சிங்கள கிராமத்துக் கடையைத் தரிசித்தேன். முதலாளியின் மகன். முத்து பண்டாவும், விகாரையின் இளம் பெளத்த பிக்குவும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
... --C56)
--------- - நாம் பயணித்த புகைவணர் டி
 


Page 42

'ஹதிசி க மனக் த. 9 என்ற கேள்வியுடன் என்னை வரவேற்றார்கள் பிக் கு சரளமாக ஆங்கிலம் பேசத தொடங்கியிருந்தார்.
".நான் முந்தி சமராவைப் பற்றிச் சொல்லியிருந்தேனே. என்று தொடங்கி விபரமாகச் சொல்லி விட்டு
பிறகு. 99
“உங்கட சம்பள செக்? முத்துபண்டா வினவ, "பேஷீட் இன்னும் வரல்ல." என்று நான் முடிக்கும் முன்பே. "மாஸ்டர் துரந் தொலைக்குப் போற பயணத்தோட இந்தாங்க. 5F LÒ LIGIT LI பணத்தைக் கொண்டு போய்க் கொடுங்க. நீங்க போய் வந்த பிறகு பார்த்துக் கொள்வோம்”
இவையெல்லாம் நான் கேட்காமலே செய்யும் மகத்தான உதவிகள் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு விசாலமான மனப்பான்மை வேண்டும்.
என்று நான் வியந்தேன்.
"முதலாளி காரை எடுத்துக் கொண்டு மதவாச்சிக்கு அலுவலாய்ப் போயிருக்கிறார் சாதுவும் நானும் அனுராதபுரத்துக்குப் போகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். பத்து நிமிடங்களில் வந்தால் நாங்கள் எல்லோருமே போகலாம்.'
"எனக்காகக் கரைச்சல் படாதீங்க மல்லி சந்திக்குப் போனால், எக்ஸ் பிரஸ் பஸ் வண்டிகள் கிடைக் குந்தானே. எப்படியும் விடிவதற்குள் வீட்டில் நிற்க வேண்டும்.'
"நீங்க சமராவைப் பார்க்கப் பதட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது
%
முத்துப் பண்டா கடைப் பையனைக் கூப்பிட்டு சைக்கிளில்
- - கொண்டு போய் விடுமாறு பணித்தான். நான் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.
சந்திக்குப் போனதும் எதிர்பாராத விதமாக ஒரு பஸ் வந்து
நின்றது. ஒரு மணித்தியாலத்தில் அநுராதபுர ஸ டேசனைச்
சென்றடைந்தேன். சனத்திற்குக் குறைவிருக்கவில்லை. நிலையம் கலகலப்பாகத் தான் இருந்தது.
"நாம் பயணித்த புகைவ ைடி -C57)டிக்கட் எடுத்ததும் முன் பக்கம் சென்று காலியாகக் கிடந்த ஆசனத்தில் இருந்து புதினம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வழக்கத்திற்கு மாறாக எக்ஸ்பிரஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரேயே வந்து விட்டது.
சனக் கும்பலோடு பதறியடித்துக் கொண்டு சீற் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்லீப் ரெட்ஸ் புக் பண்ணி இருக்கையின் இலக்கத்தைப் பெற்று விட்டேனே!
நான் அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காகவோ என்னவோ. புகைவண்டி சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு ஓங்கார ஊதலுடன் நிதானமாகப் பயணத்தை ஆரம்பித்து. வேங்கையைப் போல் போய்க் கொண்டிருந்தது. அந்த வேகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு எனது நினைவலைகள் சமராவைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன.
முதன் முதல் சமராவைச் சந்தித்த நாள் எனக்கு ஞாபகம் வந்தது. அது மிகவும் ரம்மியமான கால கட்டம்
நிம்மதியாகப் பெருமூச்சு விடலாம். நினைத்ததும் எங்கு வேண்டுமானாலும் பிரயாணம் செய்யலாம். பிறந்த இடம் பிறந்த திகதி புகைப்பட அத்தாட்சி ஒன்றுமே தேவையில்லை.
நாட்டின் வரலாற்றில் அது பொற்காலம் தோட்டப் பாடசாலைக் கல்வி முடிந்ததும் நகரப் பகுதிகளிலுள்ள கல்லூரிகளில் கல்வியைத் தொடர இருபத்தைந்து மைல்களுக்கு அப்பால், ஒரு பெரிய ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. இங்கு கல்வியைத் தொடர வேண்டுமென்றால் சுற்று வட்டாரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது தான் பொருத்தமாக இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் தகப்பனாருக்கு கான்ட்டிராக்டர் அஸ்ஸின் உதவி கிடைத்தது. நகரின் மிகச் செழிப்பும் காற்றோட்டமும் உள்ள ஓர் அழகான பகுதியில் அவர் கட்டியிருந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்தார் விரும்பினால் எதிர்காலத்தில் சொந்தத்திற்கும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிபந்தனையில்
எங்கள் வாழ்க்கையின் அந்த ரம்மியமான நாட்கள் எஸ்டேட் குவார்ட்டஸிலும் இந்த அழகான வாடகை வீட்டிலும் ஓடிக் கொண்டிருந்த போதுதான்
தகப்பனாரும் தேயிலைத் தோட்டத்தில் தமது நாற்பது வருட கிளரிக்கல் சேவையிலிந்து ஒய்வு பெற்றுக் கொண்டார். நட்புக் காரணமாக அஸிஸ் கன்ட்டிராக்டர் வீட்டை மிகவும் குறைந்த விலைக்கே
கொடுத்திருந்தார்.
שש שש שש--------י"א-י"ח-י"ררחחר"־־"" - "אל-" つエリ புகைவணி டி


Page 43

விட் டின் முன் வாசலுக் கும் அறுபதடி துTரத் தரிலுள்ள ரோட்டுக்குமுள்ள நடுப்பகுதியான இடைவெளி ஒரு சிறு பள்ளத் தாக்கு படிகள் இறங்கி ஏறி ரோட்டுக்குச் செல்ல வேண்டிய அமைப்பு
இந்த அமைப்பை மாற்றலாம் என்று அஸிஸ் கன்ட்டிராடர் யோசனை கூறிக் கொண்டிருந்த போது தான் -
அவ் வழியே நாட் சம்பளத்திற்கு வேலை தேடிச் சென்று கொண்டிருந்த சமரா. ஒ. இந்த இடத்தில் வேலைத் திட்டம் ஒன்று உருவாகிறது என்பதை ஊகித்து வந்து நிற்கிறாரோ என்னவோ?
வந்தவரின் நோக்கத்தை அறிந்து அளவளாவி விட்டு அஸிஸ் கேட்டார் "இந்த அமைப்பை மாற்ற என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?"
சமரா நீண்ட நேரம் தனது ஆழ்ந்த பார்வையைத் தோட்டம் முழுக்கச் செலுத்திவிட்டுச் சொன்னார்.
"இதுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டி அவசியம் இல்லை. அதோ பின் புறம் தெரிகிற மேட்டை இடித்து முன்பக்கத்துக்கு ரோட்டுக்கு ஸ்லோப் வைத்து மண்ணை நிரப்பிவிட்டால் அழகாக இருக்கும்” என்றார் சமரா கான்ட்ரெக்டர் அஸிஸுக்குத் தூக்கிவாரிப் போட்டது. "வெரிகுட். அருமையான யோசனை. அதைத் தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த வேலையில் உங்களையும் சேர்த்துக் கொண்டால் வேலை செய்ய முடியுமா..?
"ஒ. மண் சுமக்கத்தான் வேண்டும். இது பசுமையான செம்மணன் மேட்டை இடித்து பள்ளத்தை மூடி. சமப்படுத்தி முன் பக்கத்தில் பல வண்ணப் பூக்கள் நிரம்பிய ஒரு பூந்தோட்டத்தை அமைக்கலாம் மிக அழகாக இருக்குமல்லவா?”
சமரா ஒரு திட்டத்தை வெளிப்படுத்தினார் நிறைய செலவாகுமா?" என்று தகப்பனார் கேட்டார்.
"அப்படி ஒன்றும் செலவாகாது என்னிடம் இரண்டு வீல்பெரோ கிடக்குது. வேலை செய்யும் ஒரு கூலி ஆளையும் மணன் சுமக்க இரண்டு பெண் பிள்ளைகளையும் தருகிறேன். அப்புறம் இவரை
மேஸ் திரியாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் மகன்மாரும்
தது (6lh (5
பொழுது போக்குக்காக உதவுவார்கள். மிகவிரைவில் மேடும் பள்ளமும் சமமாகிவிடும்” என்றார் அஸிஸ். கடைசியில் அவரின் இன்ஜினியரிங் மூளை வென்றது. மேமாதம் முதலாம் திகதி வேலையைத் தொடங்கத் திட்டமிட்டோம்.
"நாம் பயணித்த புகைவர்ை டி 一○"ஜம்பதுக்குப் பிந்திய வயதில் உங்களால் மண் வெட்ட முடியுமா..? மணன் சுமக்க முடியுமா. ?” என்று பரிதாபப் பட்டு நேரடியாகவே கேட்டு விட்டோம் சமராவிடம்
வாழ்க்கையில் நான் எத்தனையோ மேடு பள்ளங்களைக் கண்டவன்
என்று உள்ளூர நினைத்துக் கொண்டாரோ என்னவோ.
“ஒவ், மட்ட மேக்க அழுத்தெயக் நெமை." என்றார். சுட்டெரிக்கும் வறுமையே அப்படிச் சொல்ல வைத்ததென ஊகித்து மெளனமானேன். அஸிஸ் கன்ட்டிராக்டர் போனதும் சமரா பின்னால் அவுட்டோர் பக்கமாகச் சென்று படிக்கட்டில் இருந்து கொண்டார்.
எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று ஸ்தம்பித்து, மெல்லமாக நகர்ந்து ஒரு பெரிய ஸ்டேஷனில் நின்றது.
நான் மூன்றாவது முறையாகச் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று வந்து சற்று கண் அயரத் தொடங்கினேன். வண்டி மீண்டும் அசைந்து, வேகத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.
நான துTங்குவதும் , பதும் விழித் திருப்பதும் துரங்குவதுமாக.
வண்டி பிரயாணிகளையும் பொதிகளையும் மட்டுமல்ல. ஒவ்வொருவரது என ணச் சுமைகளையும் சுமந்து இழுத்துக் கொண்டிருந்தது. இரைச்சல்களுடன்
- மீண்டும் சமராவின் முகம் என் மகன் கண்களுக்கு முன்னால். ஒரேயொரு முறை அந்த முகத்தை நேரடியாகப் பார்த்து விட்டால் தான் என் மனப்பாரம் நீங்கும் சமராவைக் கவனிக்கும் பொறுப்பை என்னிடமே விட்டிருந்தார் தகப்பனார்.
நான் அவருடன் உரையாடினேன்.
... " ' )?" உங்கள் பெயர்.
- - "முதியான்சளாகே சமரா.'
"நீங்க வயசாளி, நாங்க எப்படி உங்களைப் பெயர் சொல்லி
அழைப்பது.?”
அவர் மெளனமாகச் சிரித்தார்.
- 29 லொககு உன னஹே எனறு gat I sll_6)|T...?
அவர் மீண்டும் சிரித்தார்.
つエ பயணித்த || ഞ + ഖങ്ങ് t ---
 


Page 44

"அப்ப சுருக்கமாக 'லொக்கா’ என்று. יילי
அதற்கும் விருப்பத்தைக் காணவில்லை.
மெளனம் நிலவியது. அவரே சொன்னார்.
"நீங்க இவ்வளவு அன்பாகப் பேசுறீங்களே! ஏன் சீயா என்று கூப்பிட்டால் என்ன..? அவ்வார்த்தை செவிகளுக்குச் சுவையாக இருந்தது.
சீயா அப்படி என்றால் பாட்டன். ஆம் ஓர் உன்னதமான உறவு
முறையும் வந்து விடுகிறதே. நாங்களும் அவ்வாறே அழைத்தோம். முதன் முதலில் நான் கேட்டேன்
"சீயா சாப்பிட்டீங்களா..?”
ஒரு பெரிய பேரனைக் கண்டுவிட்ட திருப்தி அவர் முகத்தில்.
"ஒவ் மம காலாய் ஆவே புத்தா.
சற்று நேரத்தில் ஒரு கிளாஸ் நிரம்ப பிளேன்டி கொடுத்தேன்.
சுடச் சுட எப்படித்தான் குடித்தாரோ, தாகமாக இருந்திருக்க வேண்டும் குடித்து விட்டு கிளாசை வெளிக் குழாயில் அலம்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.
மீண்டும் படியில் குந்தி இடுப்பில் செருகி வைத்திருந்த ஒமலை எடுத்து கையை விட்டுத் துழாவி பச்சைப் பாக்கொன்றை பாக்கு வெட்டியால் இரண்டாகப் பிளந்து உரித்துப் பக்குவமாக, சிறு துண்டுகளாக நறுக்கி வெற்றிலை மீது வைத்து, துண்டுப் புகையிலை, காசுக்கட்டி, சுண்ணாம்பு முதலியன சேர்த்துக் கொண்டார்.
அப்புறம் தான் அந்தப் புதினம் நிகழ்ந்தது. பையிலிருந்து ஒரு வினோதப் பொருளை இழுத்தெடுத்தார்.
என் கண்கள் இமையாமல் மிகுந்த ஆர்வத்துடன் அதனை நோக்கின.
பொன்னிறமாகப் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த அது ஒரு சிறு வெற்றிலை உரல், அழகாக பித்தளையினால் உருவாக்கப் பட்டிருந்தது. தயாராக வைத்திருந்த வெற்றிலைப் பாக்கையெல்லாம்
------------- "நாம் பயணித்த gasi – –C6Dஅதற்குள் திணித்து இடது கையால் தரையில் ஊன்றிப் பிடித்துக் கொண்டு அதன் மேல் புற மூடிப் பகுதியை வலது கையால் மேலும் கீழுமாக இழுத்திழுத்து இடிக்கத் தொடங்கினார். டங் டங் என்ற நாதம் கேட்பதற்கு ரசனையாக இருந்தது. இடித்த வெற்றிலையை உள்ளங்கையில் கொட்டிய போது, சிவப்பு நிறமாக மாறியிருந்தது. சற்று அண்ணாந்து வாயில் கொட்டி மெதுவாக மென்று கொண்டே என்னைப் பார்த்து முறுவலித்தார்.
முகமெல்லாம் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டே கோடரி இருக்கா என்று கேட்டார். 'கோடரி எதுக்கு' என்று நான் சற்றுத் தாமதித்து விட்டு, உள்ளே சென்று. கொண்டு வந்து கொடுத்தேன்.
"அவுட்டோரை ஒட்டி அடுக்கி வைக்கப் பட்டிருந்த விறகு கட்டைகளில் இருந்து சிலவற்றை எடுத்துப் பிளக்கத் தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் சிறு சிறு துண்டுகளாகக் குவிந்தன. சற்று ஒய்வெடுத்தபோது, கோடரியைப் பாராட்டினார். அடிக்கடி கல்லில் தேய்த்துப் பக்கங்களைக் கூராக்கிக் கொண்டார். ஆள் வேலைக்காரன் தான்!
எனக்கு ஒரேயொரு ஆசை அந்த மினுமினுப்பான பித்தளை உரலை எடுத்து மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது. அவர் மீண்டும் எப்பொழுது வெற்றிலை இடிப்பாரோ. காத்திருந்து படிகளில் இளைப்பாறிய போது எனது விருப்பத்தை வெளியிட்டேன்.
அவர் சப்தமிட்டுச் சிரித்தார். அப்புறம் உடனே பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். உற்று உற்றுப் பார்த்தேன். ஒரு விளையாட்டுப் பொருள் மாதிரியே எனக்கிருந்தது. மிக அழகான வேலைப்பாடு
அவர் செய்தது போல் முதலில் பாக்குத் துண்டை உரலில் போட்டு இடித்து. பின்பு மற்றவற்றையும் சேர்த்து இலேசாக இடித்தேன். பச்சை வெள்ளை. காவி நிறங்கள் எல்லாம் இடிபட்டதும் சிவப்பாக மாறுகிறதே. வாயில் உமிழ் நீர் கலந்ததும் இரத்தச் சிவப்பாக மாறிவிடுமோ..! என்ன அற்புதம்
"சீயா இது எப்படி.'
”புத்தா. எனக்கு விஞ்ஞானம் தெரியாது. ஆனால் என்
மனதிலே ஒரு கருத்து படுகிறது. இன்னொரு நாளக் கி சொல்றேன்." என்றார்.
சிறிது மெளனம். மீண்டும் சொன்னார். பல இல்லாதவர்கள்
"நா டம் பயணித்த புகைவர்ை டி - -C62 P
 


Page 45

தான் இப்படி இடித்துப் போடுவார்கள் பழக்கமில்லாதவர்கள் புகையிலை கலந்து போட்டால் தலை சுற்றும். நீங்கள் வெற்றிலை போட வேண்டாம். பற்களில் கறை படியும் கறைபடிஞ்சா எந்தப்
பொண்ணும் உங்களிட்ட வரமாட்டா. என்றார் நகைச்சுவையாக
நானும் சிரித்து விட்டேன்.
பல வருடங்களுக்கு முன் வெற்றிலை உரலை சந்தையில் வாங்கினாராம்.
“எனக்கு இப்படி ஒன்று வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றேன். சமராவுக்குச் சிரிப்பு அடங்க நீண்ட நேரமாயிற்று. 'கல்யாணம் கட்டுற வயசிலே உங்களுக்கு எதுக்கு?”
வேகமாகப் போய்க் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் வண்டி டங் என்ற பயங்கர இரைச்சலுடன் மெதுவாக ஊர்ந்து டப்' என்று அடங்கி விட்டது. பத்து நிமிட மெளனாஞ்சலிக்குப் பிறகு சிக்னல் விழுந்து விட்டது போல் தெரிகிறது. சோகமாகப் போய் கொண்டிருந்தது.
அன்று சமராவின் சிரிப்பு அடங்கிச் சற்று நேர ஓய்வு எடுத்துக் கொண்ட பின், நான் இடித்து வைத்திருந்த வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்து விட்டு மீண்டும் விறகு வெட்டத் தொடங்கினார்.
கணிசமான அளவு வெட்டிக் குவித்து விட்டிருந்தார். நீண்ட உழைப்பிற்கு பின், வேலை முடிந்து தேநீர் அருந்தி, இளைப்பாறி, மீண்டும் அந்தச் சதங்கை ஒலி.
சமராவை எங்களுக்குப் பிடித்திருந்தது. அவுட்டோர் அறையைத் தங்கக் கொடுத்து தொழிலாளியாக வைத்துக் கொள்ள விரும்பினோம். அன்றைய நாட் கூலியைக் கொடுத்து விட்டு எங்கள் தீர்மானத்தை வெளியிட்டோம்.
அப்படியே அசந்து போனார். அரசாங்க நியமனம் கிடைத்தது போல துள்ளி மகிழ்ந்தார்.
அவருடன் தொடர்பு கொள்வதிலிருந்து வேலைகளைக் கணன் காணிப்பது மாதச் சம்பள அடிப்படையில் பேசித் தீர்த்துக் கொள்வதிலிருந்து அனைத்துப் பொறுப்புக் களும் என்னிடமே ஒப்படைக்கப் பட்டது.
நான் அவருடன் விரிவாகப் பேசி அவுட்டோர் அறையை ஒழுங்கு செய்து கொடுத்தேன்.
"நாளைக்கு உடுப்புப் பெட்டியுடன் வருகிறேன்."
... --C63)
--------- நாம் பயணித்த புகைவணி டி"சரி வாங்க. வெற்றிலை உரலை மறந்து விடாதீங்க." என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே "உங்களுக்கு அந்த உரலில் தான் ஒரு கண். ஒரு நாளைக்கு சந்தைக்குப் போய் தேடிப்பார்க்கிறேன். ஆனால், நீங்கள் வெற்றிலை போடக் கூடாது. ஒரு ஞாபகப் பொருளாக வைத்துக் கொள்ளலாம். அதுதான் நல்லது' ஆழ்ந்த சிந்தனையுடன் அப்படிக் கூறினார்.
ஆனால் "புத்தா எனக்கு விஞ்ஞானம் தெரியா. ஆனால் என் மனதிலே ஒரு கருத்துப் படுகிறது. இன்னொரு நாளக்கி சொல்றேன்.' என்று சொன்னாரே! அது என்னவாக இருக்கும். ? தாம்பூலம் போட்டதும் உதடுகள் சிவப்பேறிப் போகும் அந்த அற்புதத்தைப் பற்றிச் சொல்ல நினைத்தாரோ.
சமரா வேலைக்குச் சேர்ந்த நாள் தொடக்கம். அவருக்குக் கொடுக்கப் பட்ட பொறுப்புக்களில் ஒரு புதுப் பொலிவு காணப்பட்டது. பின் புறத் தோட்டத்தை பளிச் சென்று கூட்டிப் பெருக் குவார். கண்ணுக்குத் தெரியும் சிறு சிறு புல பூண்டுகளை வேருடன் பிடுங்கிவிடுவார். பூச்செடிகளின் தாகத்தைத் தீர்த்து வைப் பார். கடைகளுக்குப் போய் வருவார். இப்படிப் பல பொறுப்புக்களைத் தாமே ஏற்றுச் சுமை தாங்கியானார்.
அதற்கிடையில் மணன் வெட்டும் வேலை தொடங்கியது. அஸிஸ் கன்ட்டிராக்டர் அனுப்பிய ஆட்கள் தள்ளுவண்டி கூடை மண்வெட்டி அலவாங்குகளுடன் வந்து இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். இடைக்கிடை சமராவும் உதவினார். சொல்லப் போனால் திட்டம் அவருடையது தான்.
செவ்வக வடிவப் பூந்தோட்டத்தின் இடது பக்கத்திற்கு. அடியிலிருந்து அத்திவாரம் போட்டு மணன் நிரப்பும் மட்டத்திற்கு மதில் சுவர் ஒன்றைக் கட்டி குரோட்டன் வேலி போட வேண்டும் என்பதில் சமரா மிகக் கவனமாக இருந்தார். அதிகாலையில் வெயில் ஏறுவதற்கு முன் கணிசமான அளவு மண்ணை இடித்துக் குவித்து வைத்திருப்பார்
அவுட்டோர் அறையில் ஒரு சாக்குக் கட்டில் போடப் பட்டிருந்தது. சுவரில் சிறு கண்ணாடி ஒரு சிறு மேசை அதில் சில பொருட்கள். ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு கேத்தல் இத்தியாதி. தேவையான நேரத்தில் தேநீர் தயாரித்துக் கொள்ளலாம். அப்போதும் அந்த உரலுக்குத் தான் மேசையில் முக்கிய இடம் ஞாயிற்றுக் கிழமை முழு நாள் லிவு காலையில் வீட்டுக்குப் போய் மாலை இரவாக மாறும் போது திரும்பி விடுவார் வந்ததும். எல்லோருக்கும் தேநீர் கித்துல் கருப்பட்டித் துண்டைக் கடித்து மிடறு மிடறுகளாகச் சாயத்தை உறிஞ்சுவார்.
-------──────────ལ།། --------- r^{5 ff Lỗ பயணித்த புகைவண டி
 


Page 46

விளையாட்டாகத் தொடங்கி நாட்கள் சுறுசுறுப்பாக ஒடி ஒரு மாதமும் பிந்தி மீண்டும் பதினைந்து நாட்கள்.
வீட்டின் முன்றில், ஓர் அழகிய நீள் சதுரமாகக் காட்சியளித்தது. மேடு இடிபட்டதும் பின் புறமும் பளிச்சென அமைந்திருந்தது.
பட் செய்யப் பட்ட சில கனிவர்க்கக் கன்றுகள். மா. பலா, வாழை என்று பல மரக் கன்றுகளை வேலியோரமாகக் குழிகளை வெட்டி நாட்டினார்.
எந்த வேலையைச் செய்தாலும் முறையாக பார்வைக்குக் கவர்ச்சியாகச் செய்து முடிப்பதில் சமர்த்தர் சமரா,
அஸிஸ் கன்ட்டிராக்டர் வந்து பார்வையிட்ட போது பிரமித்துப் போய்ச் சமராவைப் பாராட்டினார்.
முன்பக்கம் புற்றரையும் பூந்தோட்டமும் போட்ட பிறகு வந்து பார்க்கும் படி பணித்தார் சமரா.
எக்ஸ்பிரஸ் வண்டி இப்பொழுது எங்கே நின்று சுகதுக்கங்களை விசாரித்து. சுமைகளை இறக்கி ஏற்றிக் கொண்டிருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். அநுராதபுர வெப்பத்தில் வெம்பிப் போய் வரும் எனக்காக சுகந்தமான தென்றல் காற்று வீசியது. சந்தேகமில்லை
மலையகக் காற்றுத் தான்!
தூக்கக் கலக்கம் முற்றாகக் கலைந்து இனி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.
ரெயில் மீண்டும் புறப்பட்ட போது சமரா என் உள்ளத்தில் பதித்து வைத்திருக்கும் எண்ணச் சுவடுகளும் உயிர் பெற்றன.
இரண்டு வருடங்களுக்கு முன் அநுராதபுர மாவட்டத்தில் எனக்கு ஆசிரிய நியமனம் கிடைத்த போது எல்லோருடனும் சேர்ந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார் சமரா.
ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் பிரிவுத் துயர் "மேடு பள்ளங்களை நீக்கி கவர்ச்சியான தோட்டங்களை உருவாக்கிய சிற்பி நீங்கள். இனியும் இதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. தான்.' என்று முதற் பயணத்தின் போது சிங்கள மொழியில் சொன்ன ஞாபகம். அதற்குப் பின் ஒவ்வொரு மாதமும் விடுமுறையில் வந்து தங்கி விட்டுச் செல்வேன்.
பூந்தோட்டம் நாளுக்கு நாள் அபிவிருத்தியடைந்து எழில் தோற்றம்
-C65)
一ーマーエ "நாம் பயணித்த புகைவணி டிபெற்றுக் கொண்டிருந்தது. முற்றத்தில் குடை போன்ற ஒரு ஜேம் காய் மரம் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது.
புற்றரையைச் சரியாக நடுப்பகுதிக்கு மையப்படுத்தி ஓர் எழிற் கோலமாய் - பச்சைக் கம்பளம் விரித்தாற் போல உருவாக்குவதில் பலப் பல நுணுக் கங் களைக் கையாண் டுள் ளார். அவ் வாறே பூம் பாத்திகள், குரோட்டன் வரிசைகள், கனாஸ் செடிகள்...
இப்படியாகத் தாவரங்கள். நடுவதிலும் பராமரிப்பதிலும் அவருக்குரிய அனுபவங்கள் விசாலமானவைதான்.
சமரா ஒரு நாள் என்னை அழைத்து "......
புத்தா அங்க பாருங்க. வயசான காலத்தில் உங்கட அப்பா மிகவும் சந்தோஷமாக ஜேம்காய் மரத்தடியில் இருந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார். யார் எதைச் சொன் னாலும் பூந்தோட் டங் க ள் க ண் க ளு க் குக் குளிர்ச்சியாகவும்..... மனதிற்கு மகிழ்ச்சியையும் தான் தரும்...... பிரச்சினைகளையும் கவலைகளையும் மறந்திருக்க இது ஓர் அழகான சூ ழல்.
சமராவும் ஒவ்வொரு நாள் மாலையிலும் முகம் கை கால்கள் அலம்பி உடைமாற்றிக் கொண்டு பூந்தோட்டக் கேற்றில் அமர்ந்து ஓய் வெடுப்பார். இல்லாவிட்டால் தகப்பனாருடன் உரையாடிக் கொண்டிருப்பார். உதடுகளில் வெற்றிலைச் சிவப்பேறியிருக்கும். அவுட் டோரும். வீடும் தோட்டம் அவருக்குப் பிடித்துப் போய் விட்டிருந்தது. அவர் கையில் தஞ்சமடைந்திருக்கும் வெற்றிலை உரல் என்னைப் பார்த்துச் சிரிக்கும். சமரா எங்கள் வீட்டில் ஒருவராகி 'சீயா' என்னும் மகத்தான உறவை வித்திட்டு விருட்சமான பின் அவருக்கு இன்னின்ன வேலைகள் என்று பொறுப்பில் லை. எல்லாவற்றிலும் அவரது பங்களிப்பும், கண்காணிப்பும் மேற்பார்வையும் இருந்தது.
எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் துாரத்தில் 'கரஹன்துங்கல' என்னும் இடத்தில் சமராவுக்குச் சொந்தமாக ஒரு சிறு வீடு பரம்பரைச் சொத்து. மனைவியும் மகனும் மகளும் தான் அதில் குடியிருப்பாளர்கள். மகன் தச்சு வேலை. திருமணத்திற்குப் பின். தனி வீடும் வளவும் கிடைத்தது. அதனால், சமராவின் வீடு குடும்பமாக வாழும் மக்களுக்கே உரிமையாக்கப் பட்டது. சமராவுக்குக் குடும்பப் பிரச்சினைகள் இல்லை.
எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் வேகத்தைக் குறைத்த போது
கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு அடிக்கடி இடது கையை ஜன்னலினுாடாக வெளியே நீட்டினேன். எங் கே சாடை யாக
66
- நாம் பயணித்த புகைவ ண டி.


Page 47

மழைத்துளிகள் பட்டுத் தெறிக்கின்றனவா என்று பரீட் சித்துப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் மழைத்துளிகள் பட்டுத் தெறித்து ஊர்ந்து சென்று ஒரு நிலையத்தில் நின்றால் சந்தேகமில்லை. அது எங்கள் ஊர் ரயில்வே நகரம் தான்'
மழைக்குணம் விரவிக் கிடந்தது. குளிர் காற்று வேறு
வண்டி நின்றதும் ஸ்டேஷனை விட்டு வெளியேறி. கால் மணி நேரத்திற்குள் நடந்து விடலாம் தான் - ஆனால், வெளியில் பழக்கமான ஆட் டாக் கார பையனின் வரவேற் பை நிராகரிக்க முடியாது. பரவாயில்லை என்று ஆட்டாவில் ஏறினேன். தெருக்கள் சந்தடியின்றி வெறிச் சோடிக் கிடந்தன. வீட்டை அடைந்தபோது ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. அழைப்பு மணியின் விசையை அழுத்திய சில நிமிடங்களில் முன் வாசல் முன் விளக்கு எரிந்தது.
அந்த மின்னொளியில் பூந்தோட்டம் பளிச்சென்று சமராவின் கைவண்ணத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
உள்ளே சென்றதும் தான் அந்தச் சோகம் நெஞ்சை உலுக்கியது.
கடிதம் கிடைத்துத் தான் நான் புறப்பட்டேன். அதற்குப் பின் அனுப்பிய தந்தி? நான் லீவு முடிந்து கடமைக்குத் திரும்பிய பிறகுதான் கிடைக்குமோ?
இரண்டு நாட்களுக்கு முன் நகரத்தின் ஆதார மருத்து மனையின் அவசரப் பிரிவில் அனுமதித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் என்னை எதிர்பார்த்து நான் இல்லாத குறைபாட்டை நிறைவு செய்வதற்கு தகப்பனார் தான் ஒடியோடி ஆட்களைப் பிடித்து. ஒரு குறையும் இல்லாமல் சகலவற்றிற்கும் முன்னின்று கவனித்து. விதியோடு போராடி தோற்றுக் களைத்துப் போயிருந்தார்.
அவுட்டோர் இருள் சூழ்ந்து கிடந்தது.
சியா' என்ற அந்த உன் னதமான பாசத்தை விதைதது. விருட்சமாக்கி, அனைவரது உள்ளங்களையும் ஆக்கிரமித்திருந்தார். இருளடைந்து போயிருக்கும் அவுட்டோருக்கு ஒளியேற்ற இனி சீயா வரமாட்டார். அவர் உருவாக்கிய மகத்தான பூந்தோட்டம் முன் மாதிரியாக க் கடக கறது. எங் கிருந்தோ வந்த புதுப் புது விருந்தாளியாகப் பறவைகள் எல்லாம் சோகத்தில் மூழ்கி அந்த ஜேம் காய் மரத்தில் தஞ்சமடைந்து கீச் கீச் என்று சோக கீதம் இசைத்து கண்ணிர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றன.
காலை பத்து மணிக்கு சமராவின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
- 5 ir iš turcoń, புகைவணி டி 一○மகனும் மகளும் வந்து கண்கலங்கி நின்றார்கள். 'உங்களைத் தான் ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தார்.” என்றாள் மகள்
என் கண்களும் கண்ணிரால் நிரம்பின. சற்று நேரத்தில் உள்ளே சென்றவர் ஒரு சிறு பொட்டலத்தைக் கொண்டு வந்து -
"இதை உங்களிடம் ஒப்படைக்கும் படி கூறியிருந்தார்.” என்றாள்.
நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவசரமாக அந்த பார்சலைப் பிரித்தேன். உள்ளே கபில நிறத்தில் ஒரு பை கையை விட்டுத் துழாவி வெளியே இழுத்தெடுத்தேன்.
பளபளவென்று மின்னும் அந்தப் பித்தளை வெற்றிலை உரல் என் இதயத்தை குத்தியது. அத்துடன் ஒரு குறிப்பு
"புத்தா! வெற்றிலை உரலில் வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, புகையிலை என்று பல நிறப் பொருட்களைப் போட்டு இடிக்கும் போது இரத்தச் சிவப்பாக மாறுகிறதே. இது எதனைக் காட்டுகிறது.? நான் சற்று நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டு மீண்டும் தொடர்ந்தேன்.
மானுடப் பிறவி உலகமெங்கும் பரந்து கறுப்பு வெள்ளை நிறத்தவர்களாக. பல இனத்தவர்களாகப் பல தேசத்தவர்களாக வாழ்ந்தாலும். அவர்களது உடம்புகளில் ஒடும் இரத்தம் ஒரே சிவப்பு நிறம் என்பதைத் தானே இது உணர்த்துகிறது.”
சமராவின் இந்தக் குறிப்பைப் படித்ததும் வெறும் கவர்ச்சிப் பொருளாகக் காட்சியளித்த அந்த வெற்றிலை உரல் மீது எனக்கிருந்த மோகம் என்னும் இறுக ஆரம்பித்தது.
தினகரன்
1999
"நாம் பயணித்த புகைவர்ை டி 一○


Page 48

நாம் பயணித்த
புகைவண்டி
ய்ப் பார்த்துவிட்டுத் தான் வரணும்" என்று இறுதி "(3l IIT முடிவு எடுத் தாயிற்று ஒரு வருடத்திற்கு
முன்பிருந்தே மனதைக் குடையும் எண்ண அலைகள் தான். 'எல்லாத்துக்கும் ஒரு நேர காலம் வர வேணாமா..? செக் பொயின்ட்கள் இருக்கத்தான் செய்யும் நிலைமை சீரடைந்து சுதந்திரமாகப் பறந்து திரியும் காலம் வரும் வரைக்கும் காத்திருந்தா. அது எப்ப வரும்.?
நாட்டின் பல பாகங்களிலும் இரண்டு தஸாப்தங்களுக்கு மேலாக, கஷ்டப் பிரதேச சேவை செய்த பின் தான் அந்த மீனவக் கிராமத்திற்கு வர முடிந்தது. ரம்மியமான கடற்கரைச் சூழல் ஆயினும் ஒரு புதிய ஆசிரிய இடமாற்றத் திட்டம் அமுலுக்கு வந்த போது அவனுக்கு தலை நகருக்கு மாற்றம் கிடைத்தது.
கிராமத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் அதனை ஏற்றுக் கொம்பனித் தெருவுக்கு வந்து இரண்டு நீண்ட வருடங்களாகி விட்டன. இதற்கிடையில் ஒரேயொரு முறை தான் ஓர் இனிமையான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. -
மாறி வந்த புதிதில் சிறகில்லாத கடிதங்கள் பறந்தன. ரயில் பயணங்கள் அப்படி, ரயில் பயணங்கள் இப்படி என்றெல்லாம்
----------------------ص-----------بے "நாம் பயணித்த புகைவணி டிசெய்திகளைச் சுமந்த வண்ணம்! அதுவும் திடீரென்று நின்றுவிட்டது. ஆயினும் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரைக்கும் தண்டவாளங்கள் அன்று போல் இன்றும் சமாந்தரக் கோடுகளாகவே ஒடிக் கொண்டிருக்கின்றன.
சுதந்திரமாகப் பறந்து திரிந்து அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் கூடுகட்டிக் கொண்டிருந்த அந்த அற்புதமான சமாதான வெண்புறா அண்மையில் தன் அழகிய சிறகுகளை இழந்து கீழே விழுந்து விட்டது போல் அவன் ஒருகனவு கண்டான். அது கனவா..? பிரமையா..? அல்லது ஒர் உள்ளுணர்வா..?
சிந்தனையில் மூழ்கியிருந்த சில்மி அந்த முகவரியைத் தேடினான். சற்று நேரத்தில் புத்தகங்கள் - பைல்கள் எல்லாம் காடாகி விட்டன. இங்கிலிஸ் டீச்சிங் போரம்' சஞ்சிகைக் கட்டுடன் நசுங்கிப் போயிருந்த அந்தப் பைலை இழுத்தெடுத்தான். அவை அவன் கைககளில் பரிதாபமாகத் தவழ்ந்தன. மிக அவசரமாகத் தேடினான். அந்த ரயில் பயணங்கள் என்றென்றும் பசுமையாக இருக்கும். என்ற முத்து முத்தான எழுத்துக்கள் அடங்கிய அந்தக் கடிதத்தின் வலது மூலையில் அவன் தேடிய முகவரி நீல நிற எழுத்துக்களில் கசிந்து உருகிக் கொண்டிருந்தது.
ஆழ்ந்த அன்பின் ஊற்றுக்களாய், நட்புப் பாராட்டி அறிவுரை கூறி ஆயிரத்தொரு, முறையாக இனிய தண்டவாளப் பயணங்களை ஞாபகப்படுத்தின. புத்தாண்டு. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறி. குவிந்து கிடந்த மடல்கள் வாழ்த்தட்டைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை மனனம் செய்து. வெளியேறினான்.
கொம்பனி வீதி வழியாக நடந்து புறக்கோட்டை பஸ்ஸில் தாவி ஏறிக் கொண்டான். அங்கிருந்து தான் அவன் அந்தப் புனிதமான நீர்கொழும்பு நகரத்திற்கு பஸ் எடுக்க வேண்டும்.
நீர்கொழும்பு என்றாலே அவன் உள்ளத்தில் ஒரு கிளு கிளுப்பு
அது அவள் பிறந்த மணன். பிரபல பாடகி ருக்மணி தேவி ஞாபகார்த்த மண்டபம் அமைந்துள்ள அமைதியான சூழல்
ஆனால் அவன் கடமையாற்றியது இன்னும் இருபத்தைந்து கிலோ மீற்றர் தூரம் ஒரு கடலோரக் கிராமத்தில்,
எப்படிப் பார்த்தாலும் தலை நகரிலிருந்து கடலோரக் கிராமம் வரைக்கும் அன்புப் பாலம் கட்டியவள் அவள் தான். சந்தேகமில்லை. ஒரு சமாதான வெண்புறாவாக இருந்து.
一○
-----
一で一 --ཁཁ---──────────ས་པ་དང་། -- "நாம் பயணித்த புகைவணன் டி
 


Page 49

பேருந்து புறப்பட்டது.
சற்றுக் களைத்திருந்தாலும் மிக உற்சாகமாக் காணப்பட்டான்.
அவளைச் சந்திக்கும் ஆவலில் அவன் நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது.
அவனுக்குச் சட்டென்று ஒரு மின்சார அதிர்ச்சி
கொழும்பு கொம்பனித் தெருவுக்கு மாறி வந்த புதிதில் ஒரேயொரு முறை அந்த அழைப்பை ஏற்று ஒரு டிசம்பர் இருபத்தைந்தில் அவன் அவளைச் சந்தித்தான். சில மணித்தியாலங்கள் அளவளாவி கிறிஸ்மஸ் விருந்துண்டு, தமது ஆசிரிய சேவை மூலம் மாநிலம் சிறப்புறப் பிரார்த்தித்து வந்தது இன்றும் நெஞ்சத்தின் ஆழத்தில் பசுமையாகி நெகிழ வைக்கிறது.
அன்று போய் வந்த பிறகும் கடித உறவு நீடித்தது தான். அப்புறம் ஏனோ மறு பதில் வரையக் கூட மறுப்பு என்ன அப்படியொரு மெளன விரதம்? அது அவர்களது தடைக் கல்லாயிற்றே!
இந்த முப்பத்து நான்காவது வயதில் அவனுக்கு ஒரு புதுப் பழக்கம்.
அந்த ஆதர்சத் துணை மெளனமாகிப் போனதும் அலை அலையாக மனதை அரிக்கும் சஞ்சலங்களுக்கு மாற்று மருந்தாக சிகரட்டில் மோகம் பிறந்தது.
அன்றைய தினம் துயிலெழுந்ததிலிருந்து நான்காவதாக, பாக்கெட்டிலிலுந்து ஒன்றை உருவி உதடுகளில் செருகிப் பற்ற வைத்தான். அது எரிந்து புகை கக்கியது. சிந்தனை மீண்டும் தடம் புரண்டது.
அவனுக்கும் அவளுக்கும் நடந்த சந்திப்பே ஒரு ரம்மியமான நிகழ்வு தான். ஆசிரியப் பயிற்சி முடிந்ததும் சில்மி அந்த மீனவக் கடலோரக் கிராமத்திற்கு மாற்றம் பெற்று வந்தான்.
சிலாபம் (முத்து) நகரிலிருந்து ஐந்து மைல் துரததில் அமைந்திருக்கும் அந்தக் கடலோரக் கிராமப் பாடசாலையில் அவன் கடமையேற்றான். அது முற்றிலும் ஒரு புதிய அனுபவம்
நகரிலிருந்து ஒற்றை பஸ் போக்குவரத்து பிரயாணிகளையும் பொதிகளையும் ஏற்றிச் சென்று திரும்பவும் கிராமத்திலிருந்து நகருக்குப்
۔ بسح -----------------------سیس--سس۔---------------- つエ த த புகை வன டி 一○பிரயாணிகளைக் கொண்டு வரும். இரவு எட்டு மணி வரைக்கும் நாளொன்றுக்குப் பல தடவைகள் அதன் சேவை.
கிராமத்தில் அவனுக்குத் தங்கு வசதிகள் திருப்தியாக இல்லாததால் இந்த பஸ் சேவை தான் அவனுக்குத் தஞ்சம். நகரத்தில் ஒரு பிரதான வீதியில் வாடகைக்கு அறை எடுத்திருந்தான்.
விடியலில் முதல் பஸ் எடுத்துப் போய் பின்னேரம் திரும்பக் கூடியதாக அமைந்திருந்தது. சில மாதங்களில் அவனுக்கு அந்தக் கடலோரக் கிராமம் மிகவும் பிடித்துப் போய்விட்டிருந்தது.
இக் கால கட்டத்தில் தான் ஆங்கிலக் கல்வியதிகாரி வட்டாரத்திலுள்ள சகல ஆங்கில ஆசிரியர்களுக்கென. இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை நகரத்தின் பிரதான பாடசாலை ஒன்றில் ஒழுங்கு செய்திருந்தார். தமது வட்டாரத்தில் கடமை புரியும் சகலரையும் சந்திக்க வேண்டும் என்பதும், சகலரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இனங்கண்டு கொள்ள வேண்டும் என்பதும் அவரது நோக்கம். அத்துடன் கற்பித்தல் சம்பந்தமான விரிவுரைகள். 'ஒரு மாதிரி கற்பித்தல் வகுப்பு ....... இப்படி அவரது நிகழ்ச்சி நிரல் நீண்டது. பங்கு பற்றும் ஆசிரியர்களுக்கு 'கடமை லீவு'.
சில்மியைப் பொறுத்தவரையில் தனது அறையிலிருந்து கருத்தரங்கு மண்டபத்திற்குச் செல்லப் பத்து நிமிடப் பொடி நடை தான்!
முதல் நாள் காலை எட்டரை மணிக்கே சென்றுவிட்டான். அவன் தான் முதல் ஆள். நிகழ்வுகள் தொடங்க ஒன்பது மணியாகும் என்பதை ஊகித்துக் கொண்டு அன்றைய ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்து விட்டு, இன்னும் ஒருவரையும் காணவில்லையே... என்ற எண்ணம் தலை தூக்க, மண்டபத்திற்கு வெளியே வந்த போது தான்...
அவள் நின்று கொண்டிருந்தாள்.
முப்பதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளந்தோற்றம். மெல்லிய நீல நிறச் சேலை அவளது சிவந்த நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. இந்த எளிமையான உடை அலங்காரமும், தோளில் தொங்கும் கபில நிற 'ஹேண்ட் பேக்கும்' அவள் ஒரு ஆசிரியை என்பதை உரித்து வைத்தாற் போல் கோடி காட்டின.
சில்மியை உற்றுப் பார்த்ததும் அவளுக்கும் அந்த எண்ணம் முகிழ்ந்திருக்குமோ......!
- நா ம் பயணித்த புகைவண டி.
12


Page 50

அவள் இவனை நோட்டமிட்டாள். அவள் இதயத்தில் இவனைப் பற்றி ஒரு நல்லபிப்பிராயம் முதல் இம்ப்ரெஷன் மிக நன்றாக அமைந்திருக்க வேண்டும்.
அவளது சுபாவத்தில் துணிச்சலும் சுறுசுறுப்பும் இழையோடியது. மிகுந்த ஆர்வத்துடன் கேட்டாள்.
"எக்ஸ்கியூஸ் மி. ஹெப் யூ கம் போர் த செமினார்.?” குரலில் பிரதேசத்திற்கேயுரிய சங்கீத இனிமை முகத்தில் வசீகரமான முறுவல்,
"யெஸ் பிளிஸ்." என்று கூறியதோடு ஐ ஆம். சில்மி முஹமட். Աե........ ஆர்.?
"ஸ்டெல்லா ராணி”
இப்படித்தான் அந்த முதல் அறிமுகம்
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மண்டபத்துள் நுழைந்து இருக்கைகளில் அமர்ந்து உரையாடினர். கருத்தரங்கிலிருந்து கடமையாற்றும் பாடசாலைகள் வரை சுய விபரங்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கிடையில் ஒரு கும்பல் பிரவேசித்தது. புதிய முகங்கள் சற்று நேரத்தில் அவனும் அவளும் கன்ரீனில் தேநீர் அருந்த எழுந்து வெளியே உலா வந்தனர். மேலும் சில ஆசிரியைகள் இணைந்தனர்.
"ஸ்டெல்லா ராணி உங்கள் தாய் மொழி.? அவன் ஆங்கிலத்தில் கேட்டான்.
தமிழ்தான். ஏன் சந்தேகம்.? முதன் முதலில் தமிழில் மறுமொழி கூறினாள்.
அதைத் தொடர்ந்து அவர்கள் தமிழும் ஆங்கிலமும் கலந்து உரையாடினர். ஆங்கில மொழி மூலம் கற்றிருந்தாலும், தமிழ் நாவல்கள் சிறுகதைகள் படித்து விமர்சிக்கும் அளவுக்கு அவளது தமிழறிவு ஆழமாக இருந்தது.
பஸ் இருபத்தைந்து கிலோ மீற்றர் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. பஸ் தரிப்பிடங்களில் நின்று நின்று போகாமல் இருந்ததால் இன்னும் அரைமணி நேரத்திற்குள் நீர்கொழும்பை அடைந்து விடலாம்.
–5írű újság jogott, –G73)சிலிமியின் சிகரட் பக்கட் காலியாகிவிட்டிருந்தது.
அன்று அந்தக் கல்லூரியின் கன்ரீனில் தேநீர் அருந்திய பின் அவசரமாக மீண்டும் கருத்தரங்கு மண்டபத்துள் நுழைந்த போது, ஆங்கிலக் கல்வியதிகாரியைச் சூழ்ந்து கொண்டு பல ஆசிரியர்களும் வந்தனர். -
எல்லாமாக முப்பத்தைந்து ஆசிரியர்கள். கல்வியதிகாரிக்கு ஆசிரியர்களின் வருகை பூரண திருப்தி
நேரம் காலை ஒன்பது இருபது அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர் அமைதி நிலவியது.
நிகழ்ச்சி நிரலின் படி ஒவ்வொருவரும் எழுந்து நின்று தத்தமது பெயரையும், பாடசாலையையும், சொந்த ஊரையும் பகிரங்கப் படுத்திக் கொண்டனர்.
"நான் ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவன் தற்பொழுது கொழும்பில் வசிக்கிறேன். படிப்பிக்கும் பாடசாலைக் கடலோரக் கிராமத்தில் ஆர். éf), If) 6TLD"
சில்மி முஹம்மட் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
ஸ்டெல்லா ராணியின் சொந்த ஊரே நீர்கொழும்பு தான். வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் காலையில் புகைவண்டி மூலம் பிரயாணம் செய்கிறாள்.
ஆசிரிய அறிமுகத்தைத் தொடர்ந்து, கல்வியதிகாரி சிசில் பெர்னான்டோ ஆரம்ப உரை நிகழ்த்தும் போது குறிப்பிட்டார்.
”.நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களா..? கருத்தரங்குகளுக்கு ஆங்கில ஆசிரியர்கள் ஒன்று சேரும் போது, அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று எவ்வித வேறுபாடும் இல்லாமல் ஒன்றிணைந்து செயற்படுகிறோம். இது ஏனைய பாடநெறிகளுக்கு இல்லாத சிறப்பு அதுதான் எமது பாடநெறிக்குள்ள விஷேசம். கற்பித்தல் தொழிலில் சர்வதேச மொழியை மாணவர்களுக்குச் சரியான முறையில் கற்பித்து, எமது நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு அடிகோலுகிறோம். என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.” என்று அடுக்கிக் கொண்டே போனார்.
சில்மி முஹம்மதுவும். ஸ்டெல்லா ராணியும் மெய் சிலிர்த்துப்
போனார்கள்.
w /一高エリエー一 -C74)
நாம் பயணித்த புகைவணி டி **ܚܚܚܚܚܚܚܝܫܫܫܫܫ
 


Page 51

அவர்களது கற்பித்தல் கொள்கையும் அதுதானே! அவர்கள் இருவருக்குமே அது ஒர் இனிய சந்திப்பு அதிகாரியின் உரையைத் தொடர்ந்து, விரிவுரையும், கலந்துரையாடலும் இடம் பெற்றன.
சில் மி தனது கருத்துக்களை ஆங்கிலத்தில் சரளமாக வெளியிட்டான். பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஸ்டெல்லா ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றாள்.
இடைவேளை வந்ததும் கல்லூரி அதிபர் தேநீர் வழங்கினார்.
மீண்டும் மண்டபம் சலசலத்தது.
நிகழ்வுகள் தொடர்ந்தன.
மதிய போசனத்திற்கு அவன் வெளியே சென்றான். ஸ்டெல்லா பார்சல் கொண்டு வந்திருந்தாள்.
பஸ் வண்டி சனப் புழக்கமுள்ள ஒரு சிற்றுார் சந்தியில் நின்றதும்
அங்காடி வியாபாரிகள் ஏறினர். இதை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சில்மி சட்டென்று ஒரு சிகரட்டைக் கெளவிக் கொண்டான்.
பஸ் புறப்படுவதற்குள் புகைத் தாகம் தீர்ந்தது. புதிய உத்வேகத்துடன் அந்தப் பசுமையான அலைகள் உயிர் பெற்றுக் கொண்டிருந்தன.
சாயந்தர நிகழ்வுகளுக்குப் பின் அவள் அவனிடம் பவ்வியமாகக் கேட்டுக் கொண்டாள்.
"சில்மி, ஒரு உதவி செய்ய முடியுமா? தயவு செய்து பஸ் நிலையம் வரைக்கும் வந்து.'
"ஓ அதுக்கென்ன..? அவன் பரந்த மனப் பான்மையுடன் ஒப்புக் கொண்டான்.
அவர்கள் இருவரும் மண்டபத்தை விட்டு வெளியேறிய போது, சில்மிக்கு கல்வியதிகாரியின் அன்பான வேண்டுகோள் ஒன்று காத்திருந்தது.
". நீங்கள் நாளைக்கு ஒரு மொடல் கிளாஸ் செய்ய வேண்டும். இந்தக் கல்லூரியின் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு. ஆயத்தம் செய்து கொண்டு வாருங்கள்.”
கற்பித்தலுக்கான விடயத்தை அதிகாரி வழங்கினார். அது சம்பந்தமாக மீண்டும் அவனும் அவளும் சற்றுத் தாமதித்து,
-C75)
- "நாம் பயணித்த புகைவணி டிகலந்தாலோசித்து விட்டு தேவையான குறிப்புகளை எழுதிக்
கொண்டனர்.
நேரம் மாலை நான்கு மணி அவர்கள் உரையாடிக் கொண்டே பஸ் நிலையத்தை நோக்கி நடந்தனர்.
"ஸ்டெல்லா நீர்கொழும்பு என்றதும் இனி உங்கள் ஞாபகம் தான் வரும்.'
அவர்கள் சிரித்தனர்.
சில்மி வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக் கிழமை பிற்பகல் கொழும்புக்குச் சென்று ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலையில் சரியான நேரத்திற்குக் கடமைக்கு வந்துவிடுவான்.
ஸ்டெல்லா அதிர்ஷ்டசாலி ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பாடசாலைக்கு புகைவண்டிப் பயணம். சீசன் டிக்கட் ஒவ்வொரு நாளும் அந்தச் சிறிய புகை வண்டி நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் பாடசாலைக்கு நடப்பது காலைச் சூரியனில் ஒரு தேகப்பயிற்சி பின்னேரத்தில் திரும்புவதற்கு ஒரு ஸ்லோ கோச் மீன் வண்டி என்று அதற்கு ஒரு சிறப்புப் பெயர் எப்பொழுதும் மூன்றாவது பயணிகள் இணைப்பில் ஒரு வலது புற ஜன்னலோர இருக்கையில் தான் பிரயாணம் செய்வாள்.
சிந்தனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விடவும், புத்தகங்கள் படிப்பதற்கும் பல்லின மக்களுடன் இணைந்து பழகுவதற்கும் அது அவளுக்கு வசதியாகும். விரல் விட்டு எண்ணக் கூடிய பிரயாணிகள் ஒவ்வொரு தரிப்பிலும் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள்.
"சில்மி நீங்க என்னை சந்திப்பதாயிருந்தா இங்கிருந்து இரண்டு மணிக்கு புறப்படும் மீன் வண்டியில் வாங்க. அந்தச் சிறிய ஸ்டேஷனில் எனக்காகவும் இரண்டொரு மீனவர்களுக்காகவும் தான் அது நிற்கும்."
”அந்த ரயில் கொழும்புக்கு எத்தனை மணிக்குப் போகும்.?
“ஐந்து மணிக்குள் வீட்டுக்குப் போய்விடுவீங்க - - - - - - - - -
"அப்ப பஸ்ஸிலே போவது குவிக் ஜர்னி.”
இதைக் கேட்டதும் அவளது முகம் தொட்டாற் சுருங்கியாகிவிட்டது.
"சரி பஸ்ஸிலே போங்க."
அவள் குரலில் கோபம் தொனித்தது.
一○
--------—-i- "நாம் பயணித்த புகைவண டி


Page 52

"ஐ ஜஸ்ட் டீஸ்ட் யூ.” என்றான் அவன் அவள் மெளனம் சாதித்தாள்.
"சில்மி நீர்கொழும்பு பஸ் வருகுது.”
அவன் ஒடிச் சென்று ஏறி சீற்பிடித்தான். சற்று நேரத்தில் பஸ் புறப்பட ஆயத்தமாகியது.
பஸ் அசைந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டது. அவன் விடுதியை நோக்கி நடந்தான்.
அன்றைய அனுபவம் அவனுக்குப் புதுமையாக இருந்தது. அன்றைய இரவு அவன் கிரகித்துக் கொண்ட குறிப்புகளை அடிப்படையாக வைத்து நாற்பது நிமிட மாதிரி வகுப்பொன்றை படிப்பித்துக் காட்ட தயாரித்துக் கொண்டான். ஸ்டெல்லாவின் ஆலோசனைகள் பக்கத்துணையாகவும், உற்சாகமாகவும் இருந்தன.
இரண்டாம் நாள் கருத்தரங்கு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அவர்கள் மண்டபத்தில் சந்தித்தனர். மீண்டும் மாதரி வகுப் பு’ சம்பந்தமாக கருத்துக் கள் பரிமாறத் தொடங்கியிருந்தனர். இடைக்கிடை சுயவிபரங்கள் புரிந்துணர்வுகளுக்கு அடித்தளமிட்டு நெருக்கமான நட்பை மலரச் செய்தது.
கருத்தரங்கின் இறுதி அம்சமாக சிலிமியின் மொடல் கிளாஸ் ஒரு கலக்கு கலக்கியது. அதற்குச் சமமாக ஸ்டெல்லாவின் விமர்சனக் கருத்துக்கள் அல்லது மதிப்பீடு மனம் நிறைந்த பாராட்டுக்களாகவே அமைந்தன. அவன் புல்லரித்துப் போனான்.
அன்று தான் அவனுக்கு மறக்கவே முடியாத அந்தச் சம்பவம் இடம் பெற்றது.
அனைவரும் அவனது மாதிரி வகுப்பை பாராட்டிக் கொண்டிருந்த அவ்வேளையில் அவனது இருக்கைக்கு நேராக அமைந்த பக்கத்து வாசலில் ஒரு சிறுவன் சைக்கிளில் வந்து ஓயாது மணியோசை எழுப்பிக் கொண்டிருந்தான்.
அவசரமாக எவரும் எழுந்து செல்லாததால் சற்றுப் பொறுத்துச் சில்மி தான் விரைந்து சென்று. அந்தச் சிறுவன் நீட்டிக் கொண்டிருந்த ஒரு கடிதத்துண்டை பெற்றுக் கொண்டான். அது கல்வியதிகாரிக்கு
-- ----------------- "நாம் பயணித்த புகைவணி டி 一○முகவரியிடப் பட்டிருந்தது. அதன் உள்ளடக்கத்தைப் படித்த அதிகாரி ஸ்டெல்லா ராணியை அழைத்து
“உங்கள் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நீங்கள் உடனடியாகப் போய்ப் பாருங்கள்'
கலவரமடைந்த ஸ்டெல்லா பதறிப்போனாள் வாசலருகே சென்று தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அவள் நிலைமையைப் புரிந்து கொண்ட அதிகாரி மீண்டும் சில்மியை அழைத்து.
"மிஸ்டர் சில்மி. நீங்கள் தான் அவளுடன் சிநேகயூர்வமாகப் பழகுகிறீர்கள். இப் யூ டோன்ட் மைன்ட் பிளிஸ் ஹெல்ப்ஹேர். அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முடியுமா..?”
சில்மியும் ஸ்டெல்லாவும் பறந்தனர். அங்கே வாசலை ஒட்டிய படுக்கையைச் சுற்றி ஒரு சிறு கூட்டம்
பரபரப்பாக ஒடி வந்த ஸ்டெல்லா
"மொக த மேரி அக்கே. ரஞ்சி மல்லி அம்மாட்ட மொனவாத, உனே.?" என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தாள் பக்கத்திலிருந்த வயதான பெண்மணி. கரதர வென்ன தெயக் நே. LDLID மிஸித்தெக்க கத்தாகரா." என்ற பதில் அவளை ஓரளவு ஆசுவாசப் படுத்தியது. தாதிமார் இருவரும்
"தெங் ஒக்கொம கருனாகரலா எளியட்ட யன்ன.”
கூட்டம் விலகிச் செல்ல, ஸ்டெல்லா தாயின் பக்கம் நின்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.
குளியலறையில் விழுந்து தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தலையில் பலமான ஒரு கட்டுக் காணப்பட்டது.
வெளிறிய முகம் வாழ்க்கைக் கவலைகளால் நலிந்த வரிகள் இழையோடிய தோற்றம்
இதே வேளை தாயின் பக்கம் பார்வையைச் செலுத்திய சில்மி மறுகணம் வார்டுக்குப் பொறுப்பாயிருந்த வைத்தியரிடம் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தான்.
"பலவீனம் தான். சீரியஸாக ஒன்றும் இல்லை. இரண்டொரு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணி விடலாம் என்று டாக்டர் சொன்னார்."
என்றான் சில்மி
— "நாம் பயணித்த புகைவணர் டி
\
 


Page 53

அப்புறம் சில் மியும் ஸ்டெல்லாவும் விறாந்தையில் கூடி நின்றவர்களிடம் வந்தார்கள். ஸ்டெல்லா மீண்டும் ஒரு முறை வீட்டில் நடந்தவற்றை விசாரித்தறிந்து கொண்டாள். ஸ்டெல்லா பொறுப்பான ஒரு பெண்மணியை அம்மாவின் பக்கத்தில் துணையாக வைத்துவிட்டு தான் வீட்டிற்குச் சென்று மீண்டும் திரும்புவதாகக் கூறி விடை பெற்றுக்
கொண்டாள்.
அனைவரும் உரையாடிக் கொண்டே விறாந்தையை விட்டு
வெளியேறினர்.
ஸ்டெல்லா சில்மியை அறிமுகப் படுத்தினாள். ஜேன் நோனா ஆட்டாட்ட கியத.?' என்று கேட்டாள்.
”.ஏக்க மொனவாத நங்கி. மே வெலாவட்ட எஹெமத் நெத்தங் அபி மொக்கட்டத.?’ என்று மறுத்தாள்.
அவர்களிடையே காணப்பட்ட இன நெருக்கத்தைக் கண்டு சில்மியின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
"என்ன அற்புதமான மக்கள். இப்படியான ஒரு புரிந்துணர்வும் நெருக்கமும் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.! என்று அவன் மனம் அவாவியது.
வீட்டை அடைந்ததும் சில்மியும் ஸ்டெல்லாவும் பல்வேறு சிந்தனைகளுடன் முன் அறையில் அமர்ந்தனர்.
இனி ஆகவேண்டிய கருமங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா
'ஆ. புத்தே. பொண்ண. ஒரு சிங்களப் பெண்மணி தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து நீட்டினாள்.
துவெ. ஒயத் பொண்ண. தெங் இத்திங் கலபொல வென்ன தெயக் நே. அபித் இன்னவாதே மெஹே." என்று குறிப்பிட்டு உள்ளே சென்றாள்.
"ஸ்டெல்லா. இவள் உங்கள் உறவினரா?” என்ற அவன் கேட்டான்.
"எங்களுக்குச் சொந்தக்காரர் இங்கே ஒருவரும் இல்லை. இவர்கள் எல்லாம் அக்கம் பக்கத்தவர்கள்."
தனது வீடு மாதிரியே நினைத்து வீட்டினுள் நுழைந்து தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து வந்தவர்களை உபசரிக்கும் அளவுக்கு
'Y's っ一・リーエー。一ーで一 V", 7நாம் பயணித்த L| ಹಕ) 56.15ಕ್ಕàT Iಣ್ಣ - li l-C79Dஅந்த மக்களிடம் இருந்த அந்நியோன்ய உறவை எண்ணி அவன் உள்ளம் வியந்தது.
அன்று மாலை ஸ்டெல்லாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட சில்மி கல்வியதிகாரியை அவர் இல்லத்தில் சந்தித்த போது தகவல்கள் பரிமாறிக் கொண்டான்.
அதற்குப் பிறகு அவன் அந்த வெள்ளிக் கிழமை ரயிலில் சந்தித்து தாயின் சேமங்களை விசாரித்தறிந்தான். கருத்தரங்கில் எடுத்த
முடிவுகளைப் பற்றிக் கலந்துரையாடினான்.
ஆங்கிலம் கற்பித்தல் சம்பந்தமாக ஒரு வேலைத் திட்டம் உருவாக்கப் பட்டு குழுக்கள் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அவனும் அவளும் ஒரே குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அநுராதபுர மாவட்டத்தில் பயிற்றப்படாத புதிய நியமனம் பெற்ற ஆங்கில உதவி ஆசிரியர்களுக்கு நடைபெறவிருக்கும் பயிற்சிக் கருத்தரங்கில் ஒரு மாதிரி வகுப்பு நடத்திக் காட்டிக் கருத்துக்கள்
கூற அவனும் அவளும் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றனர்.
இப் படியான அவர் களு டைய சந்திப்புக் கள் கார ண காரியங்களுக்காக நீண்டு கொண்டே இருந்தன.
கல்வியதிகாரி ஒப்படைத்த பாரிய பொறுப்புக்களை கூட்டாக ஆற அமர இருந்து திட்டமிட்டு நிறைவேற்ற மட்டும் அவள் இல்லத்திற்கு அவன் ஐந்தாறு தடவைகளாவது போய்ப் பல மணித்தியாலங்களைச் செலவு செய்திருக்கிறான்.
அது ஒரு அழகான வீடு. எஸ்பஸ்டஸ் சீட் கூரை. மல்லிகை மணம் கமழும் சிறு பூந்தோட்டம். ஆங்காங்கே செவ்வரத்தம் பூஞ்செடிகள். சட்டிகளில் துளசிச் செடிகள்.
போனாலே போதும். பாச மேலீட்டால் ராஜ மரியாதை. நல்லுபசரணைகள்.
சில்மிக்கு ஒரு சந்தேகம், வெளிப்படையாகவே கேட்டு விட்டான்.
“ஸ்டெல்லா ப்ளீஸ் டோன்ட் மிஸ் அன்டர்ஸ்டான்ட்...... இந்தத் துளசியும், மல்லிகையும் செவ்வரத்தம் பூவும்...... இந்துக்கள் தானே அதிகம் விரும்புவார்கள்...?"
“நீங்க மிக நுணுக்கமாக அவதானிக்கிறீங்க..... யுவர் ஒப்சர்வேசன் பவர் இஸ் கிரேட், உண்மையை சொல்லட்டா.......?"
- நா ம் பயணித்த புகைவண டி
(8)


Page 54

"விரும்பினாச் சொல்லுங்க."
“எங்க அம்மா முந்தி. இந்து சமயம். இப்ப ஆர். சி. ஆனால், துளசியை முற்றத்தில் நட்டிருப்பதற்குக் காரணம் விஷ ஜந்துக்கள் வராதாம்.'
அவன் சிரித்து விட்டான்.
"ஏன்.? அவள் கேட்டாள்.
"ஒண்ணுமில்ல. விஷ மனிதர்களும் உட்படவா?” என்று.
அவர்கள் இருவருமே சிரித்தார்கள்.
“எப்படியோ அம்மாவிடமோ அக்கம் பக்கத்தவர்களிடமோ. இன வேற்றுமை இல்லை என்பதை நான் அன்றே புரிந்து கொண்டேன்." என்றான் சில்மி
"எங்களைப் போலவா..? என்றவள் சில்மியின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். ് .
"எங்களைப் போல். என்றால்.?
ஒரு நிமிடம் மெளனம் அவள் தொடர்ந்தாள்.
அவன் ஒரு கணம் அசந்து போனான். பிரபஞ்சத்தை ஒருமைப் படுத்தும் சர்வதேச மொழியை மாணவ சமுதாயத்திற்கு ஊட்டும் பாரிய பொறுப்பில் சில்மியும் ஸ்டெல்லாவும் கைகோர்த்து நின்றனர்.
கருத்தரங்கில் அவன் நடத்திக் காட்டிய மொடல் வகுப்புக்கு அவள் நிகழ்த்திய மதிப்பீட்டுரையை எண்ணியெண்ணி அடிக்க, அவன் உள்ளம் புளகாங்கித மடைந்தது. உண்மையில் பாராட்டுக்கள் உற்சாகம் தரும் ஒளடதம் என்பதில் ஐயமில்லை.
வெள்ளிக் கிழமை மீன் வண்டிச் சந்திப்புகள் அலாதியானவை. அடிக்கடி ஆங்கில தமிழ் சிங்கள நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் பரிமாற்றம் தவறாது வெள்ளிக் கிழமை புகைவண்டி சந்திப்புகள் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைபடும் போதும், நீண்ட விடுமுறை காலங்களிலும் கடிதங்கள் தொடரும் அவளது கையெழுத்து உருண்டையானது தமிழ் எழுத்துக்களில் தொடங்கி, ஆங்கிலம் கலந்து எழுதும் நீண்ட நிருபங்கள் விமர்சனங்களாகவும்
"நாம் பயணித்த புகைவணி டிதொழில் சம்பந்தப் பட்டவையாகவும், அடிமனதில் ஊறும் அன்பின் ஊற்றுக்களாகவும் தான் இருக்கும்.
சர்வதேச மொழியை மாணவர்களுக்குக் கற்பித்துச் சர்வதேச மட்டத்திற்கு அவர்களை வழிகாட்டும் இலட்சிய நோக்குடன் ஈடுபட்டு உழைக்கும் ஒருவருக்கு அதே மொழியில் ஊறிப் போய் பக்குவமடைந்த இன்னொருவரின் சந்திப்பும் ஆலோசனைகளும், கருத்துக்களும் அரவணைப்பும் தூண்டுகோலாய் அமைவது அபூர்வமானதொன்று.
வெள்ளிக் கிழமை மீன் வண்டியை அவர்கள் வீடு போல் நினைத்து உரையாடிக் களிப்பதை அந்தப் புகைவண்டிக்கே பிடிக்கவில்லையோ..? அல்லது பொறாமையோ? வழக்கத்திற்கு மாறாகச் சற்று வேகத்தைக் கூட்டி. ப்ரேக் போட்டபோது தடங்' என்றொரு பெரிய இரைச்சலுடன் குலுங்கி நின்றது. அதற்குள் பிளாஸ்கிலிருந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்க்ள ஆளுக்காள் மோதி அவளது கோப்பையிலிருந்து தேநீர் சிந்திச் சிதறி எதிரே இருந்து கொண்டிருந்த அவனது டிரெளசரின் வலது கால் பகுதியை நன்றாக நனைத்து விட்டிருந்தது.
அந்தத் தவறுதலுக்காக அவள் மிகவும் மனம் வருந்தினாள் அவளது முகம் வாட்டமுற்றிருந்தது.
'இது ஒரு சின்ன விசயம். தற்செயலாக நடந்தது. சின்ன விசயங்களை சீரியஸாக எடுக்க வேண்டாம்” என்று அவன் எவ்வளவு கூறியும் தனது கைக்குட்டையைக் குழாய் நீரில் நனைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் தேநீர்க் கறையை அழுத்தித் துடைத்துக்
கொண்டான்.
சில்மியுடன் நெருங்கிப் பழகிய பின்
திங்கள் தொடக்கம் வியாழன் வரைக்கும் தனித்துப் போக்குவரத்து செய்வது அவளுக்குப் பெரிய அலுப்பு
எவ்வளவு தான் நூல்களை வாசிப்பது? அவனுக்கும் அவளுக்குமாகத் தேவையான பாடத்திட்டம், பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் முதலியவற்றை மிகவும் அற்புதமாகத் தயாரிப்பதற்கும் இந்தப் புகை வண்டிப் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். உறுதியான அத்திவாரமில்லாமல் வீடு கட்ட முடியாதது போல, விரிவான பாடத் திட்டம் இல்லாமல் கற்பிக்க
----------------------سسسسسسح----------------
"நாம் பயணித்த புகைவணர் டி


Page 55

முடியாது என்று ஆணித்தரமாக வாதிப்பவள் ஸ்டெல்லா “யூ மஸ்ட் பிரிபேர் யுவர் லெசன் வெல்' என்பது அவளது படிப்பித்தல் கொள்கை
எப்படியோ வெள்ளிக்கிழமை நாட்கள் அவனுக்கும் அவளுக்கும் சுவாரஸ்யமான பயணங்கள் சாதாரண விடயங்களிலிருந்து சர்வதேச விவகாரங்கள் வரைக்கும் கருத்துக்கள் பரிமாறுவார்கள்.
ஒரு சமயம் "உங்களுக்கு நியுமொரொலொஜியில் நம்பிக்கை இருக்கிறதா.? என்று அவள் கேட்டு விட்டாள்.
'இல்லை.” என்றான் சில் மி அவனுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒன்றுவிருந்து ஒன்பது வரைக்கும் உள்ள எண்களின் தன்மைகளைப் பற்றி அவள் ஆற்றிய விரிவுரை சுவையாக இருந்தது.
பிறப்பெண் கூட்டெணன், பெயரெனன் என்று என்னென்னவோ, கூட்டிக் கழித்துப் பெருக்கிய போது -
அவளது முகத்தில் சோகம் இழையோடியது.
"... என்ன..” என்று அவன் கேட்டான். "எண் சோதிடக் கணிப்பின் படி எங்கள் சிநேகம் நீடிக்காது.” அவன் சிரித்தான். "அதுதான் எனக்கு நம்பிக்கை இல்லை என்று முதலிலேயே சொல்லி விட்டேனே. எல்லாமே விதிப்படி அல்லது தலையெழுத்துப்படி தான் நடக்கும். அதிலிருந்து தப்ப முடியாது.” என்று சில்மி வாதாடினான்.
சில்மி சென்று கொண்டிருந்த பேருந்து நீர்கொழும்பை அடைந்த போது நண்பகல். ஆனால், வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
நிலையத்திலிருந்து வலது பக்கம் திரும்பி நேராக நடந்தான். அந்தத் தெருவே அவனுக்குப் புதுவிதமாக இருந்தது. எதற்கும் ஒரு கடையின் பெயர் பலகையைப் பார்த்துத் தெருவின் பெயரை உறுதிப் படுத்திக் கொண்டான். நல்ல வேளை முகவரியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தது.
நீண்ட தூரம் நடந்து கடைகள் கட்டிடங்கள் இல்லாத ஒரு சந்தியில் திரும்பி மீண்டும் சஞ்சலப் பட்டான். அதிர்ஷ்ட வசமாக வந்த பாதசாரியிடம் விசாரித்துச் சரியான பாதையில் நடையைத் தொடர்ந்தான். இனி வீட்டின் இலக்கத்தைக் கண்டுபிடித்தால் சரி.எத்தனையோ முறை நடந்த பாதைதான். இருந்தும் இப்படி ஒரு சிக்கலா!
சற்று நேரத்தில் தெளிவடைந்து விட்டவன் போல் "இனி. வீடு தெரியும். தெரியும்.' என்று மகிழ்ச்சி பொங்க முணுமுணுத்தான்.
அவனுக்கு எல்லாமே ஞாபகத்திற்கு வந்தன. உற்சாகமாக முன்னேறினான்.
இலக்கத்தையும் உறுதிப் படுத்திக் கொண்டான்.
ஆம்! அவன் பார்த்து விழித்துக் கொண்டிருப்பது அந்த வீட்டைத் தான். சந்தேகமில்லை.
ஆனால், எஸ்பஸ்டஸ் கூரையைக் காணவில்லையே! முன் கதவு உடைபட்ட நிலையில் சிதிலமடைந்த சுவர்கள்
துளசியும் மல்லிகையும் பூந்தோட்டமும் தரை மட்டம் தூரத்தூர அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் யாரிடம் விசாரிப்பது.?
சே என்ன நடந்தது.? என்ன நடந்தது.? அவன் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் மிகுந்த அதிருப்தியுடனும், கவலையுடனும் திரும்பி நடந்தான். சற்று முன் தனக்கு வழிகாட்டிய வயது முதிர்ந்த மனிதர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த ஏரியா ஆள் தான்.
துணிச்சலை வரவழைத்துக் கொண்டு. அவன் மீண்டும் ஆங்கிலத்தில் கேட் டான். அந்த வீட்டைப் பற்றியும் , குடியிருந்தவர்களைப் பற்றியும்.
பெரியவர் வெறுப்புடன் நடந்து கொண்டிருந்தார். அவன் தளர்ந்து விடவில்லை. மீண்டும் கேட்டான்.
இனியும் அவன் எதையும் கேட்கக் கூடாது என்று நினைத்து விட்டாரோ.?
நடையில் சற்று வேகத்தைக் கூட்டி விறுவிறுவென்று நடந்து கொண்டே வார்த்தைகளை உதிர்த்தார்.
-C84D
-------------- "நாம் பயணித்த புகைவண டி


Page 56

"ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்று ஜூலை கலவரம்." - பெரியவர் கூறத் தொடங்கினார்.
அவனுக்குத் தலையைச் சுற்றியது. பயங்கர நினைவுகள் அவன் உடலை ஆட்டியது!
மீண்டும் கடைத் தெருவுக்கு எப்படி நடந்து வந்தானோ ஒரு தேநீர்க் கடைக்குள் புகுந்து சூடாகத் தேநீர் அருந்தினான். இரண்டு பக்கட் சிகரட்டுக்களை வாங்கிக் கொண்டு, பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான். நடைப்பிணமாய்.
மல்லிகை - 33-வது ஆண்டு மலர் ஜனவரி - 2000
"நாம் பயணித்தகாப்புக்காக.
மா. அதெல்லாம் எனக்குத் தெரியா இப்பவே வேங்கித்
இப்படித் தான் அவள் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
அவள் எழுப்பும் குரல் கெஞ்சுதலாகவும் இருந்தது. நியாயமான கோரிக்கையாகவும் தென்பட்டது.
அன்றைய தினம் நடுப்பகலை அண்மித்துக் கொண்டிருந்த நேரம்
புறக்கோட்டை பஸ் நிலையத்தைச் சுற்றி நடமாடிக் கொண்டிருந்த அப்பாவிச் சன நெரிசலைத் தன் கடுமையான வெப்பத்தால் துரத்திக் கொண்டிருந்தான் கதிரவன்.
ரூட் நேர அட்டவணைப் படி அந்த பஸ் வண்டி புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருந்தன. வண்டிக்குள் பிரயாணிகள் சேர்ந்தவண்ணம் இருந்தனர்.
ஆரிபின் தம்பதிகள் தமது புத்திரி சகீலாவுடன் கொழும்புக்கு வந்து, அலுவல்களையெல்லாம் முடித்துக் கொண்டு. ஊர் திரும்பும் நோக்கோடு அந்த பஸ் வண்டியைப் பிடிப்பதற்காகத் தான் விரைந்து கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி ஓட்டமும் நடையுமாக.
つエ பயணித்த புகைவணி டி


Page 57

பஸ்ஸில் சிற் பிடிக்க வேண்டுமே என்ற ஆதங்கம். நடைக்கு மேலும் ஒரு வேகத்தைக் கொடுத்தாலும், ஆளுக் காள் நீண்ட இடைவெளி தகப்பனுக்குப் பின்னால் தூரத்தில் தாய் சற்றுப் பின்னால் மகள். அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு குடும்பப் பிரச்சினை சாடை மாடையாகத் தெரிகிறது.
ஒரு பூகம்பம் வெடிப்பதற்கோ என்னவோ..? சகீலாவின் செக்கச் சிவந்த முகம் அழுதழுது வீங்கிக் கிடக்கிறது.
சூரியன் கொடுரமாகச் சுட்டெரித்து மனிதக் கும் பலைக் கலைத்தாலும் வந்த அலுவலகளை முடித்துக் கொள்ளாமல் எப்படி.
பஸ் தரிப்பு நெருங்க நெருங்க சகீலாவின் விசும்பல் விஸ்வ ரூப மெடுத்துக் கொண்டிருந்தது.
நேரகாலத்தோடு சீற். பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தாயும் தகப்பனும் வண்டிக்குள் ஏறி விட்டார்கள் செய்வதறியாமல் அவளும் அழுதழுது பின் தொடர்ந்தாள்.
அவள் எதற்காக அடம் பிடிக்கிறாள்? வர வர நிலைமை உச்சக் கட்டத்திற்கே போய் கொண்டிருக்கிறதே!
நேரம் செல்லச் செல்ல பஸ்ஸுக்குள்ளும் அந்தப் போராட்டம் வலுவடைந்து கொண்டிருந்தது.
"இதென்ன பெரிய கரச்சலா இருக்கு."
முன் வரிசையில் வசதியாக இருந்த ஒருவர் சலிப்புடன் தன் வெறுப்பைக் கொட்டுகிறார். அதற்கு மெருகேற்றுவது போல் பலரும் அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்க்கின்றனர்.
இப் படிப் பட்ட வங்க பயணம் போகப் படாது' என்ற தோரணையில் மற்றுமொரு குத்தல் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் போதும் சகீலாவின் தாய் தந்தையருக்குப் பெரிதும் அவமானமாகப் போய் விட்டது.
"எனத்துக்குத் தான் இந்தச் சனியன கூட்டிக் கொண்டாந்தயோ
தெரியா'
தாயும் தகப்பனும் குமுறுகிறார்கள் என்ன செய்வதென்றே தெரியாமல், பிரச்சினை அம்பலமாகி குடும்ப மானமும் பஸ் ஏறி விட்டது.
つエ பயணித்த புகைவணி டி .
,அவள் மீண்டும் சப்தமிட்டு அழுதாள். "மூதேவி வாயப் பொத்திக் கொண்டு வா”
பொறுக்க முடியாத தாய்க்காரி சடையைப் பிடித்து இழுத்துச் சாடினாள். தகப்பன் காதைத் திருகி நோவினை ஏற்படுத்தினான். ஒரு காது இரத்தச் சிவப் பாகி நொந்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.
அவள் சிறுமிதான். ஆனால் இங்கிதம் தெரிந்தவள் மெளனமாகவே அழுது ஏங்கினாள். அவளது ஆயுதம் அது ஒன்று தானே!
தனது கோரிக்கையைப் பகிரங்கமாகவே பிரகடனப் படுத்தி விட்டாள். இறுதி முயற்சியாகத்தான்!
"ம்மா எனக்கு இப்பவே வேங்கித் தாங்க. . ப்பா எனக்கு இண்டக்கே வேங்கித் தாங்க."
போராட்டத்தின் உச்சக் கட்ட சுலோகங்களை விட்டெறிந்தாள்.
அவர்களுடைய கைகளைப் பிடித்து இழுத்து இறங்குமாறு கெஞ்சினாள்.
மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண டிருந்த பஸ்
பிரயாணிகளுக்கு கருப் பொருள் கிடைத்து விட்டது.
'.புள்ள என்னதையோ ஆசெயா கேக்குது ஏன் வேங்கித் தராம இருக்கிறீங்க. புள்ள பாவம்.”
ஊசியேற்றினாள் ஒரு மாது. பிரச்சினை சூடு பிடிக்கிறது.
இப்பொழுது பிரயாணிகளுள் மற்றுமொரு தாய்க் காரிக்குத் திடீரென்று ஒரு தீர்வு பிறந்தது.
"புள்ளயப் போட்டு அடிக்காதீங்கம்மா பஸ் போவ இன்னம் எவ்வளவோ நேரமீக்கு எறங்கிப் பெய்த்து அது கேக்கிற எப்பிள் பழமோ. ஐஸ்கிறீமோ. வேங்கிக் கொடுங்கம்மா.
"பாவம். புள்ள அழுதழுது மொகமெல்லாம் வீங்கிப் பெய்த்து.'
இது தாய்மை உணர்வா? அனுதாபக் குரலா? தொந்தரவு சகிக்க முடியாமல் வெளியேற்றும் தந்திரமா?
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
"நாம் பயணித்த புகைவணி டி -C88 P


Page 58

வசதியாக இருக்கைகளில் உட் கார்ந்திருந்த பிரயாணிகள் அவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை எப்படி வெளியேற்றுவது. எதுவானாலும் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்படாது என்பது மட்டும் சர்வ நிச்சயமாகிவிட்ட சங்கதி
சோர்ந்து போய்விட்டிருந்த சிறுமி சகீலாவுக்கு பக்க பலம் கிடைத்துவிட்டது. மீண்டும் எங்கிருந்தோ ஓர் உற்சாகமும் உந்துதலும், மீண்டும் தன் பல்லவியை ஆரம்பித்து விடாப்பிடியாக, உச்சஸ்தாயியில் தொடர்ந்தாள். காலம் கடந்து போனால் ஒன்றும் கிடைக்காது என்ற கருத்து அவள் குரலில் தொனித்தது.
சற்று முன்னால் ஒலித்த தாய்ப்பாசம் மீண்டும் தலையெடுத்தது.
இறுதியில் விதியின் கை தான் ஓங்கியது. அதை மாற்றும் மனித முயற்சிகளுக்குப் படுதோல்வி எல்லாம் நன்மைக்கே’ என்ற நம்பிக்கை வலுவடைந்தது.
அவர்கள் இறங்கத் தீர்மானித்தார்கள். அப்பொழுது கூட அநுதாபக் குரல் எழுப்பிய பெண்ணிடம் "கோவிச்சுக் கொள்ளாதீங்க. இந்த பேக்க கொஞ்சம் வெச்சிட்டுப் போவா..?”
"அப்போவ். 6) I IT 600T IT LÊ)...... வானாம். கையோடகொண்டு
92
அவர்கள் சுமைகளோடு இறங்கினர்.
அந்தக் கணமே. அவர்களை அறியாமல் மகிழ்ச்சியான தென்றல் அவர்களைத் தழுவிச் சென்றது.
வெயிலுக்கு இதமாக இருந்தது.
சகீலாவின் ஆர்ப்பாட்டத்திற்குப் பூரண வெற்றியா?
தாயும் தந்தையும் மகளும் நடந்தார்கள்.
சூரியன் மீண்டும் அவர்களைத் துரிதப் படுத்துகிறது. அவர்களைத் தொடர்ந்து வேறு சிலரும் இறங்கி தேநீர்க் கடைக்கு நடந்தனர்.
வண்டி சற்று நெரிசல் குறைந்திருந்தது. சொகுசாகப் பிரயாணம் செய்ய விரும்பும் சீற்கார்களுக்கு இரைச்சல் எதுவுமின்றி ஆறுதலாக இருந்திருக்கும்.
இன்ரசிற்றியில் போக வேண்டியவர்கள் இதில் போய் ஏன் சிரமப்பட வேண்டுமோ..!
ா"T” மாவட.L C89) "நாம் பயணித்த புகைவணி டி . . .-C89)தாயும் தகப்பனும் பரபரவென்று முன்னால் நடக்க, புதல்வி gdoUT ஓடவும் முடியாமல நடக் கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
சகீலாவின் பிடிவாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் இனி அவள் கொழும்புக்கு எப்பொழுது வரப்போகிறாள். தாயும் வரப் போவதில்லை. தகப்பன் வரக் கூடும். ஆயிரம் சோலிகளைத் தலையில் சுமந்து கொண்டு அலைச்சல்களுக்கு மத்தியில் மகளைப் பக்குவமாக அழைத்துக் கொண்டு வந்து சிரமப்படுவாரா..? நாட்களைத் தள்ளிக் கொண்டே போனாலும் இது போல் மீண்டும் அத்தி பூக்கப் போவதில்லை.
அவளைக் கூட்டிக் கொண்டு வருவதாயிருந்தாலும் அவருக்குக் கொழும்பில் வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஆனால் அது நடக்கப் போவதில்லை.
இன்றைக்கு வந்ததே ஒரு நல்ல மூட் முழுக்குடும்பத்திற்கும் புதிய உடுப்பு வாங்குவதற்கும். மகள் 'ஸ்கொலர்சிப் பரீட்சையில் சித்தியடைந்து ஊரில் ஒரு பெரிய பாடசாலைக்கு அனுமதி கிடைத்துவிட்டதனால் மகளுக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும் தான் அந்த நாளை அவர்கள் ஒதுக்கியிருந்தார்கள் வகுப்பாசிரியை வேறு "கெட்டிக் காரி என்று நற் சான்று வழங்கியிருக்கிறாள். உண்மையில் அவள் புத்திசாலி தான். சந்தேகமில்லை.
அவளுக்கு அதொன்றும் பெரிதல்ல. வகுப்பில் அவளுக்கும் மிர்சானாவுக்கும் தான் கடுமையான போட்டி எல்லாப் பாடங்களிலும் கூடிய புள்ளிகளை எடுத்து முதலாம் ஆளாக வந்து மிர்சானாவை பின்னடையச் செய்தது கூட அவளுக்கு விண்வெளிச் சாதனையல்ல.
ஆனால் கொஞ்ச நாளாக டியூஷன் வகுப்புக்களுக்குப் போட்டுக் கொண்டு பெருமையடிக்கிறாளே ஒரு வகையான காப்புக்கள். அவை தான் அவளது கண்களுக்கு விருந்து சகலரையும் கவரும் அவை போன்ற காப்புகள் தானும் அணிய வேண்டும் என்பது தான் அவளது நீண்ட நாள் ஆசை. அதே வகையான காப்புக்களை கிடைக்கா விட்டாலும் அதற்கு நிகரான, உயர்வான பளபளப்பான காப்புகள் உடனடியாக வாங்கியாக வேணடும் அவற்றைக் கொழும்பில் வாங்காவிட்டால் ஊரில் உள்ள கடைகளில் கிடைக்கப் போவதில்லை. ஒரு சிறுமி காப்பு வாங்க ஆசைப்படுவதில் என்ன தவறு?
மிர்சானாவைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளது மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்து அன்பளிப்புச் செய்திருக்கிறார்.
~~~~--—ni-L - நாம் பயணித்த புகைவணர் டி


Page 59

“இந்தச் சந்தர்ப்பதை தவற விடக் கூடாது' என்று அவள் நடாத்திய போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. அவளது நடையில் ஒரு வகையான குதூகலிப்பும் தென்படுகிறது.
பாவம் வறுமைப்பட்ட குடும்பம்’ என்று அந்தப் பெண் கொடுத்த உந்து சக்தியும், பஸ் இன்னும் சுணங்கும்’ என்ற எண்ணமும் தான் அவர்களை இறங்கச் செய்து, காப்புகள் கிடைக்கும் இடம் தேடத் துரிதப் படுத்தியது. புறக்கோட்டை தெருக்கள் அவர்களுக்குப் புதிது தான். உயர் வகைக் காப்புக்கள் கிடைக்கும் இடம் எது.?
அவர்கள் ஆளுக்காள் மோதிக் கொள்ளும் புறக் கோட்டையின் குறுக்குத் தெருக்கள் எங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர்.
"மூதேவி. சனியன் சுருக்கா வந்து தொலையடி இனி எப்பிடியும் மத்த பஸ் தான். ஊருக்கு எப்ப தான் போய்ச் சேருவமோ. இதுக்கு ஒண்டும் வெளங்குதில்ல. காப்பு. காப்பு. காப்புண்டு உசுரே எடுக்குது.
தாய் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
".வகுப்பில அந்த மிர்சானா என்ன செய்யுதோ அததான் இதுவும் செய்யனும், அவங்க பணக்காரங்க இங்லன்ட்லருந்து வரும். சிங்கப்பூரிலிருந்து வரும். அவங்களுக்கு என்ன.'
அந்தப் புலம்பல் ஓயவில்லை. கால்கள் மட்டும் கணவனின் அடிகளைப் பின் பற்றி இழுபட்டன.
"இந்த வருஷத் தோட படிப்ப நிப்பாட்டத்தான் இருந்த. ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணிட்டாவே, ஸ்கூலுக்குச் சேக்காட்டி ஊரும் ஒலகமும் கதை சொல்லுமே. ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணின புள்ளங்களுக்கு டொனேஷன் கேக்க மாட்டாங்களாம். இவரும் (கணவன்) வாய் தொறந்து சொல் லிட்டாரே! அனுப்பத் தான்
பத்து நிமிடங்களுக்கு மேல் புறக் கோட்டை வீதிகளில் நடந்து திரிந்து, ஒரு வழியாக “இங்க வேங்கலாம்.” என்று நிச்சயித்துக் கொண்ட பின்னர் பெற்றவர்களுக்குக் கூட மகிழ்ச்சிதான். மகளின் பிடிவாதத்திலிருந்து விடு பட்டுவிடலாம். இனி இந்தக் கடையில அந்தக் காப்புக் கிடைக்கும்.
அந்தக் களிப்பின் பிரதிபலனாக - அவர்கள் ஒரு கூல் ஸ்பொட்டிற்குள் நுழைந்தனர். ஒரு சிறிய மேசையை வட்டமிட்ட
நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.
--- "நாம் பயணித்த புகைவணி டிமூவரும் குளிர்மை ஊட்டப் பட்ட பழச்சாறு அருந்தி அதன் இனிமையையும் சுவையையும் ருசித்தனர்.
தாய்க்கும் தகப்பனுக்கும் இப்பொழுது மற்றுமொரு கவலை. இந்த நேரத்துக்கு அந்தப் பஸ் போயிருக்குமே. இதுக்குப் பொறகு மத்த பஸ் எத்தன மணிக்கோ..? இது செஞ்ச வேலதான். காப்பு காப்புன்னு. இப்ப அது வேணுமா..?
"சரி சரி. வாய பொத்திட்டு வா. காப்ப வாங்கிட்டு சுருக்க போவம். ’ என்று அவர்கள் வெளியேற எத்தனித்த போதுதான்
அந்தப் பேரிரைச்சல் காதுகளைத் துளைத்து இயல்பு நிலையைச் சீர்குலைத்தது. அப்படியொரு பலமான இரைச்சல்,
புறக் கோட்டையிலிருந்துதான் மக்கள் கூட்டம் கண மண் தெரியாமல் சின்னாபின்னமாகிச் சிதறிக் கலைந்தனர் பாதுகாப்புத் தேடி
கூல் ஸ்பொட் கடையின் உள்ளேயும் தாழ்வாரத்திலும் ஒதுங்கிக் கொள்ள விரைந்து வருகிறது ஒரு கூட்டம் விதிகளில் நிலவிய ஒழுங்கும் அமைதியும் முற்றாகச் சீர் குலைந்து விட்டது.
அவர்கள் மூவரும் செய்வதறியாது ஒரு மூலையில் நெருக்குப் பட்டுக் கிடந்தனர்.
இனி என்ன நடக்கப் போகுதோ..? ஆரிபின் மனைவியிடம் மெள்ள முணுமுணுத்தான்.
"சல்மா இந்த சல்லிய லேஞ்சில முடிச்சி பத்திரமா வை புள்ளக்கி காப்பு வாங்குர சல்லி மதாவியன்க வருவாங்க கவனம் சல்லி. பஸ் டிக்கட் எடுக்க மட்டும் என்ட கையில இருக்கு. நீ பேசாம இருந்தா சரி.”
இந்த முணுமுணுப்பில் பொதிந்துள்ள உண்மை சகீலாவின் காதுக ளில் புகுந்து அவளுடைய மென்மையான உள்ளத்தை என்னவோ செய்தது. அது அவள் சிந்தனையைத் தூண்டி விட்டதன் விளைவு ஒரு பாரிய மாற்றத்தையே ஏற்படுத்தி விட்டது.
காப்பு மிர்சானாவை அழகு படுத்தும் அந்தக் காப்பு
தேவையில்லை.
"நாம் பயணித்த || 6ಕಾತಿ: 6)6೮೮ ||


Page 60

அவளுக்கு வளையல் அணிந்து அழகு பார்க்கும் அந்த இயல்பான ஆசை அவளை அறியாமலேயே அவளது மனதைவிட்டு அடியோடு மறைந்து விட்டது.
இப்பொழுது பயம் அவர்களைக் கெளவிப் பிடித்துக் கொண்டது.
சில மணித்தியாலங்களுக்குப் பிறகு மீண்டும் வீதிகளில் கசமுசவென்று சன நடமாட்டம் மக்கள் புற்றீசல் போல் வெளியேறிக் கொண்டிருந்தனர். அதற்கிடையில் கடைகளுக் கெல்லாம் பூட்டு விழுந்துவிட்டது.
அத்தோடு சற்று நேரத்திற்கு முன் வெற்றிக் களிப்பில் நடைபயின்று கொண்டு வந்த சகீலாவின் துள்ளலும் நம்பிக்கையும் அடங்கிப் போய் விட்டிருந்தன.
அவளது பிஞ்சு உள்ளத்தில் நியாயமான அச்சம் குடிகொண்டு விட்டது. தோல் விகள் அவளைப் போன்ற வறுமைப் பட்ட சிறுமிகளுக்குப் புதிதுமல்ல!
சன நெருக்கம் முற்றாகக் குறைந்ததும் அவர்கள் மீண்டும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். மூவருக்கிடையில் ஒரு பேச்சும் இல்லை.
அப்பொழுதுதான் அவர்களுடைய மெளனத்தை உடைக்க, அந்த அதிர்ச்சியான செய்தி அவர்களுடைய காதுகளுக்குள் நுழைந்து வயிற்றில் புளி கரைத்தது.
ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்துப் போய் சிலையாக நின்றார்கள்.
அவர்கள் பிரயாணம் செய்யவிருந்த அந்த பஸ் வண்டி குண்டு வெடியில் சிதறிவிட்டதாம்.
அவர்களுடைய உள்ளங்கள் அந்தப் பரபரப்பான சோகச் செய்தியை உள்வாங்கிச் சற்று நிதானித்து மீள் பரிசீலனை செய்து பார்த்தன.
அந்தக் கோரமான சம்பவத்தை நினைத்துக் கூடப் பார்க்க சக்தியற்றவர்களாய்
தாய் தந்தையரின் மனங்களில் பாச உணர்வு சுரந்து பெருகிப்
பிரவகித்தது.
அவள் மட்டும் அடம் பிடித்து. காப்பு. காப்பு என்று ஓயாது நச்சரித்திருக்காவிட்டால்.
L---~~~~-~~~~~~ "நாம் பயணித்தஅவர்களுடைய பார்வை முற்றிலும் மகளையே மொய்த்தது.
தாயும் தகப்பனும் மாறி மாறிப் பெருகி வரும் பாச உணர்வுகளை வெளியே கொட்டுகின்றனர்.
"ஊருக்குப் பெய்த்து கண்மணியின் கைகளுக்கு தங்கக் காப்பு செய்து போடுவம் என்ன. ?' ஆரிபின் நிறைந்த மனதோடு சொன்னான்.
தாய்க்காரியின் கண்களில் நீர் முட்டியது. ஆனந்தக் கண்ணீர்
ஏப்ரல் - 2001


Page 61

ஞானம்
டைவேளையோடு அவன் புறப்பட்டு விட்டான். இனி என்ன செய்வது எங்கே போவது என்று ஒரு திட்டமும் இல்லாமல்
கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். அடிபட்டுத் தளர்ந்து போய் என்பதைவிட, ஒரு வகைச் சித்திர வதைக்கு ஆளாக்கப் பட்டு நீண்ட நேரம் முழங்காலில் இருத்திவைக்கப் பட்டிருந்த போது தான் இடைவேளை மணி ஆறுதல் அளித்து தண்டனைகளுக்கும் சாவு மணி அடித்தது போலிருந்தது.
காலையில் எட்டு 'ஏ' வகுப்பில் அவன் சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டபோது வகுப்பில் "குய்யோ முறையோவென்று ஒரே அல்லோல கல்லோலமாகவும் ஆசிரியரில்லாத அயல் வகுப்புகள் வேடிக்கை பார்த்துக் கொண்டும் குழம்பிப் போயிருந்தன. 1 - 'பிரம்பு பாவிப்பதற்கும் ஒரு வரையறை இருக்கு. இவர் கோலாட்டக் கம்பை பெட்டன் பொல்லாக பாவித்திருக்கிறார். பொலிசில் இருக்க வேண்டியவர். ஏன் பாடசாலைக்கு வந்தாரோ. இது ஒரு கிரிமினல் குற்றச் சாட்டு.....
அடுத்த வகுப்பில் விஞ்ஞானம் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு ஆத்திரமும் கோபமும் பீறிட்டுக் கொண்டிருந்தது. மனம் குமுறிக் கொண்டிருந்தார். "எப்படி பாடம் நடத்துறது....
நIT ம் ப ய ணி த் த புகை வண்டிமாணவர்கள் காலையில் கோலாட்டப் பயிற்சி முடிந்ததும் அந்தக் களிம்புகளை ஏன்தான் அவசரத்தில் கதவு மூலையில் குவித்துவிட்டுப் போனார்கள்!
இத்தகைய ஒரு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்திருப்பான்?
விஞ்ஞான ஆசிரியருக்குப் புதிராகவே இருந்தது கணித ஆசிரியர் அடிக்கடி மாணவர்களுக்குச் சித்திரவதை செய்வது அவருக்குப் பிடிக்காது.
தண்டனையை நிறைவேற்றிக் களைத்துப் போன கணித ஆசிரியர் இளைப்பாறும் அறைக்குப் போனதும், விஞ்ஞான ஆசிரியர் மனம் நெகிழ்ந்து போய் வகுப்பில் விசாரணை நடத்தினார்.
'ரமீஸ் கிட்ட எப்பவும் கணிதக் கொப்பி இல்லே சேர். மத்தவங்க கிட்ட கொப்பித் தாள் கேட்டுத் தான் கணக்கு செய்வான். முதலில் செய்து காட்டுபவன் அவன் தான் சேர்.”
'ரமீஸ் கணித பாடத்தில் கெட்டிக்காரன் சேர்."
”அடிக்கடி அடிவாங்குவான் சேர்.”
"கணிதத்தில் திறமையான ஒரு மாணவன் கொப்பி வாங்காமல் இருக்கிறானா..? ஏன்?
"அவனுக்கு வசதி இல்ல சேர்.”
"அப்பா குப்பிலாம்பு செய்து விற்பவர்.”
"அவருக்கு சொகமில்லாமப் போன பொறகு ஒரு கால் இல்ல. சேர்.”
'உம்மாவும் இல்ல. சகோதரங்களும் இல்ல."
விஞ்ஞான ஆசிரியருக்குக் கிடைத்த தரவுகள் போதுமென்றாகி விட்டது.
மாணவர்கள் கல்வியில் பின் தங்கிப் போனதற்கான காரணங்களை நன்கு ஆராய வேண்டும். அதுபோலவே மாணவர்கள் கற்றலில் சிறந்து விளங்குவதற்கான பின்னணியையும் ஆய்வு செய்ய
வேண்டும்.
பிரச்சினைக்குரிய மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியை ஆய்ந்து பரிகாரம் காண வேண்டும் என்பதையெல்லாம் கணித ஆசிரியர் காற்றில் பறக்க விட்டு விட்டாரா..? இந்தப் பாடசாலையில் கொப்பி
"நாம் பயணித்த 高エー○
 


Page 62

இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அலுவலகத்தில் வறிய, வசதியற்ற மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு என்றே ஒரிரு ஸ்தாபனங்கள் அன்பளிப்புச் செய்த கொப்பி, பேனா, புத்தகங்கள்
இத்தியாதி ஒர் அலுமாரி நிரம்பி வழிகிறதே!
இதிலிருந்து ஒன்று தெட்டத் தெளிவு கணித ஆசிரியர், தனக்கு மாணவர்களின் சுயவிபரங்கள் ஒன்றும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டார்.
கணித ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கும் தண்டனை எல்லாம் மன்னிக்க முடியாத சிவியர் டோச்சர் நாளைக்கு அந்த மாணவனுக்கு ஒரு வருத்தம் வந்து விட்டால் அல்லது ஒரு விபரீதம் நடந்து விட்டால் நான் தான் முதலாவது சாட்சியாக இருப்பேன். அவர் வழங்கிய அந்தத் தண்டனைக் கோலத்தை கண்களால் கண்டவன் நான்.
விஞ்ஞான ஆசிரியர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
"ஆசிரியனின் தண்டனைக்கு மாணவன் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொட்டதற்கெல்லாம் தண்டனை. தண்டனை. என்று தண்டனையை மலினப் படுத்தக் கூடாது. பிறகு மாணவனின் உடம்பும் உள்ளமும் தண்டனைக்குப் பழக்கப் பட்டு விடும் பெறு பேறு பூஜ்யமாகத் தான் மிஞ்சும்.”
இடைவேளை முடிய இன்னும் சில நிமிடங்கள் காத்திருந்தன.
”டேய் ரமீஸ். நல்ல நேரம்டா ஒருத்தரும் பார்க்கல்ல. டிசிப்லின் சேர் முன் கேட்கிட்ட இருக்கார். பின் பக்க சிக்குரிட்டி கன்டீனில். நானும் சிபானும் அவரோட பேச்சு குடுத்துக்கிட்டு இருப்பம். நீ
பாஞ்சி போ. சுருக்காவா."
எதற்கும் பயப்படாத முஜாறிட் உற்சாகமூட்டினான்.
எப்படியோ இரண்டு சக மாணவர்களின் உதவியுடன் சிக்குரிட்டியின் கவனத்தைத் திசை திருப்பி விட்டுச் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினான். சிறையிலிருந்து தப்பிச் செல்லும் கைதியைப் போல் நடந்தான். புத்தகங்களோடு கனத்த அந்த பேக்கை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டிருந்தான். அதன் உள்ளே புத்தகங்களோடு கிடந்த தகரக் குப்பி விளக்குகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மண்ணெண்ணெய் ஊற்றித் திரியைப் போட்டு விட்டால் அவை பிரகாசமாக எரிந்து ஒளிவீசக் காத்திருந்தன.
L--------- "நாம் பயணித்த -همسل2ٹسخگسسسسسسسسسسسسسسسسسسسسسسسسس سے سஅவை மட்டும் இழை அறுந்துபோய், மெளசிழந்த மின்பல்ப் இல் செய்யப் பட்ட குப்பி விளக்குகளாய் இருந்தால் கோலாட்டக் கம்பின் ஆக்கினைக்கு ஆளாகி உடைந்து சிதறிப் போயிருக்கும். ஆனால் வழக்கம் போல் தண்டனையை அனுபவித்தது அவன் தான்.
"கணித பாடத்துக்கு இந்த வருஷத்துக்கே ஒரேயொரு நாற்பது தாள் கொப்பிதானா..? ஒரு கவனமும் இல்ல." என்று சொல்லச் சொல்லிப் போட்ட போடுகளில் கன்னங்கள் சிவந்திருந்தன. களிகம்பு தலையைப் பதம் பார்த்திருந்தது. தலையில் இரத்தக் கசிவு கால் கைகளில் எல்லாம் தழும்புகள் தலையும் முகமும் வியர்த்துக் கொட்டியது.
"அதென்ன அந்தப் பார்சல்.? எடுத்து வெளியே எறிந்தார். ஆனால் அந்தப் பொதிக்குள் இரண்டு அகல் விளக்குகள் எரியக் காத்திருக்கின்றன என்பது அவர் அறியாத விடயம்.
சில விடயங்கள் நன்கு பக்குவப் பட்ட மானுட நேயம் மிக்கவர்களுக்கே புரியும்.
அவன் போட்டிருந்த சேர்ட் ஏற்கெனவே தூய்மையாக இல்லை. இப்பொழுது அவன் குளத்தில் முழுகி எழுந்தவனைப் போல் தோற்றமளித்தான்.
நீண்ட நேரம் கடும் வெயிலில், அந்தக் கபில நிறப் பேப்பர் பேக்கைத் தலையில் பிடித்துக் கொண்டு முழங்காலில் இருந்ததன் விளைவு -
தொடர்ந்து நடக்க முடியாமல் தலையைச் சுற்ற ஆரம்பித்தது.
காலை உணவுக்காகக் கொண்டு வந்திருந்த நாணயங்கள் சேட் பொக்கட்டில் கிடந்தன. கண்டீனில் சாப்பிட்டு விட்டு வந்திருக்கலாம். இனிச் சந்திவரைக்கும் நடந்தால் தான் ஹோட்டல்
எப்படியோ தட்டுத்தடுமாறி நடந்து வந்து சந்தியைக் கடந்து வலது புறம் திரும்பினான்.
பழைய மதில் சுவரோடு ஒட்டி வைத்தால் போல் அந்தத் தள்ளு வண்டி, ஒரு பழைய புத்தகக் கடை போல் உருவம் மாறி காட்சியளிக்கிறது.
அந்தக் கடையின் சொந்தக்காரன் ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பது
இவன் கண்ணில் பட்டதும், சட்டென்று ஒரு யோசனை.
------- -C 98) "நாம் பயணித்த புகைவணன் டி "ப.
 


Page 63

கடைக்கு முன்னால் போய் நின்றான்.
தம்பி என்ன புத்தகம் வாங்கப் போறியா.?” கடைக்காரன் சம்பிரதாயத்திற்காகக் கேட்டான்.
"எல்லாம் வாங்கியாச்சி நானா, இனியும் வாங்க என்ன இருக்கு, குடுக்கத் தான் இருக்கு”
ரமீஸின் குரலில் தொனித்த சோர்வும் விரக்தியும், வெறுப்பும் புத்தகக் கடைக்காரனைச் சிந்திக்க வைத்தது.
"அப்படியா..? என்ன வைச்சிருக்கே. எடு பாப்பம்."
நெஞ்சோடு அணைத்து வைத்திருந்த புத்தகங்களை எடுத்துக் காட்டினான். அவை பொலிதீன் அட்டை போட்டு அழகாக இருந்தன.
'கொப்பி புத்தகங்களும், அரசாங்கப் புத்தகங்களும் எடுக்கிறதில்ல. இது தான் கண்டிஷன்”
கடைக்காரன் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்து, சிலவற்றைப் பொறுக்கி விலை சொன்னான் -
விலைகளில் அவனுக்குப் பிரச்சினை இல்லை இருந்தாலும்.
"விலையைப் பார்த்துக் குடுங்க நானா. இன்னம் கொஞ்சம் ஊட்லயும் இருக்கு."
“என்னமோ பேக்ல இருக்கே.?”
"அது குப்பிலாம்பு.' “என்னத்துக்கு.?
ஒ. அப்ப நீயும் பிஸ்னஸ்காரனா..?
"ஸ்கூல் விட்டு போற வழியில் தான் லாம்பு விக்கிறது. இது எந்த நாளும் போற பிஸ்னஸ் இல்ல. வாப்பாவுக்குத் தெரிஞ்ச கைத்தொழில் இது ஒண்டு தான் வீட்லயிருந்து செய்து கட்ைகளுக்கு சப்ளை செஞ்சி கொண்டிருந்தார். இப்ப கால் இல்லாம போன பிறகு, குறைவு பேவ்மெண்டில இருந்து கடலை யாவாரம் செய்ரார்."
"இதென்ன தலையில காயம். ஒடம்பெல்லாம் வீங்கின மாதிரி. யாரோடயும் அடிபிடிபட்டியா.?”
"நாம் பயணித்த புகைவணி டிமுதலில் ரமீஸ் சற்றுத் தயங்கினாலும், பிறகு நடந்த சம்பவத்தைச்
சொன்னான்.
புத்தகக் கடைக்காரனுக்குத் தெளிவாகப் புரிந்து கொண்டு,
பச்சாதாபப்பட்டான்.
"சரி இந்தா புடி. உன்ட புத்தக சல்லி. மேல்மிச்சமா சல்லி இருக்கு, முதல்ல போய் முன்னுக்கு இருக்கிற பிளவுஸ் ஒட்டல்ல
சாப்பிட்டு வா."
அவன் ஹோட்டலில் புகுந்து பராட்டாவும் இறைச்சிக் கறியும் சாப்பிட்டு, பால் டீ குடித்துச் சற்று இளைப்பாறினான். தெம்பாக இருந்தது.
மீண்டும் வந்து கடைக்காரன் முன் நின்றான்.
தம்பி. இந்தா இது பக்கத்துப் பாமசியில வாங்கின மருந்து.' என்று கூறி, பஞ்சைத் தண்ணிரில் நனைத்துத் தலைக் காயத்தை ஒற்றினான். அப்புறம் மருந்தை வைத்துப் பிளாஸ்டரை ஒட்டினாள்
"இந்த டெப்லட் ரெண்ட இரவிக்கு தூங்கும் போது குடி. காலமைக்கு பிட்டாக இருக்கும். ஒன்னும் யோசிக்காத. ஒரு மனிசன்ட தேவய கண்ணால கண்ட பிறகு செய்ற சின்ன சதக்கா."
கடைக்காரன் சற்று உணர்ச்சி வசப்பட்டுத் தொடர்ந்தான்.
“என்ன செய்றது. மொதல்ல இந்த மாதிரி மனிசனப் பத்தி பொலிசில மொறப்பாடு செஞ்சி, காயப் பட்ட நீ ஓடனே ஹொஸ்பிட்டல்ல அட்மிட்டாகியிருக்கணும் அடிகாயம், களி கம்புத் தழும்புகளுக்கெல்லாம் ரிப்போட் எடுக்கணும் வழக்குத் தாக்கல் செஞ்சி, கோட்டுக்கு இழுத்துத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும் எங்களுக்கும் சட்டம் தெரியும். என்ன இருந்தாலும் படிப்பிச்ச குரு. அது நசீப் எண்டு உட்டுப் போடு. பார்க்கப் போனாக்கா. இது ஒரு சின்ன சித்திரவதை தான். சின்ன சின்ன குத்தங்களுக்கெல்லாம் சில மாணவ ஹொஸ்டல்களில சோறு தண்ணி குடுக்காம பட்டினி போட்டு வதைப்பாங்க பெரிய தடிகளால அடித்து காயப்படுத்துவாங்க. கைகால்களில சூடு வைப்பாங்க. தாங்க முடியாம ஹொஸ்டல வுட்டுப் பாஞ்சி போயிருக்கிறாங்க. தேடப் போனா இப் படி எத்தனையோ.”
அவர்கள் சற்று நேரம் மெளனம் சாதித்தார்கள். கடைக்காரன் மீண்டும் மெளனத்தை உடைத்தான் நிதானமாக
- நாம் பயணித்த புகைவண் டி COO)
 


Page 64

'ரமிஸ். இனி நீ ஸ்கூலுக்குப் போக மாட்டன்ற, வேற பள்ளிக் கூடத்துக்கும் மாறிப் போக மாட்ட. இந்தக் குப்பிலாம்பு யாவாரம் வருமானத்துக்கு சரிவராது. ஒண்டு சரிவராங்காட்டியும், நீ வந்து எண்ட புத்தகக் கடையில வேல செய்யு புரியமா..?
அவன் சற்று யோசித்தான்.
வறுமை, கல்வியில் விரக்தி, தகப்பனின் நிலை இவை அவன் இள நெஞ்சை அழுத்தியது.
”படிப்பும் இல்லாம. வெறும் குப்பிலாம்ப தூக்கிதிரியிறதால என்ன கிடைக்கப் போகுது.”
அவன் எதைச் செய்யவும் தயார் தான். இருந்தாலும் 'வாப்பா கிட்ட ஒரு சொல்லு. சொல்லிவிட்டு.”
“ஒ. அது தான் சரி. இது உன்ட வாழ்க்க பிரச்சின யோசிச்சி முடிவெடு. நாள பின்னக்கி கஷ்டப்படாது.”
"அப்ப நா வாரன் நானா.'
அவன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான் களிகம்புத் தழும்புகள் அடிக் கடி வலியெடுத்தாலும், மனம் மட்டும் ஒரு வகைப் பூரிப்படைந்திருந்தது.
வழக்கமாக அவனை வாழ வைக்கும் அந்த போதி மரத்தடியில் வந்து நின்றான்.
நான்காக மடித்து மரத்தில் செருகி வைத்திருந்த மட்டையை இழுத்தெடுத்து விரித்தான் உருவம் இழந்த ஒரு காட் போட் பெட்டி
எங்கேயோ ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிந்த ஒர் அடிமைக் கடிகாரம் பிற்பகல் ஒரு மணியைப் பகிரங்கப் படுத்தியது.
குப்பி விளக்குகளைப் பரத்திவிட்டு களைப்பும் நித்திரையும் கண்களைச் சுழற்ற, இலேசாக முதுகையும் தலையையும் மரத்திற்கு முட்டுக் கொடுத்து அரைத் தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தான்
சரியாக ஒன்று முப்பதுக்கு சகபாடிகள் முஜாஹிதும் சிபானும் வந்த உசுப்பினார்கள்.
போட்டியா..?
L------ "நாம் பயணித்த -همسلحكللخگسسسسسسسسسسسسسسسسسسسسபுத்தகக் கடைக்காரன் செய்த உதவிகளைப் பெருமைப்படுத்தி சொன்னான். படிக்கிற வயதில் தொழிலுக்குப் போவதை அவர்கள் விரும்பவில்லை. அவனது நிலையில் வேறு மாற்று வழிகள் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
மாணவப் பருவமும் பாடசாலை வாழ்க்கையும் ஒருவனுக்கு ஒரு முறை தான் கிடைக்கும் என்பதை அவர்கள் ஞாபகப்படுத்திச் சென்றார்கள்.
“இதெல்லாம் மாணவ மன்றத்தில் பேசறதுக்கு நல்லா இருக்கும்.... ஆனா வாழ்க்க வேறு. ஞானம் பெறுகிறதுக்கும் தலையில எழுதியிருக்கணும்”
அவனது முணுமுணுப்பிலும் தெளிந்த தத்துவம் தான் தொனித்தது. மாலையானதும் வீட்டிற்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது, அதிர்ஷ்ட வசமாகப் பஸ்சை விட்டு இறங்கி, ஒரு நடுத்தர வயது கிராமத்துப் பெண் வந்து குப்பி விளக்கைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அதன் அழகும் பிரகாசமும் அவளுக்குத் தான் புரிந்தது.
"...மல்லி.. கீயத..?” விலை விசாரிப்பு.
அவனுக்கு மகிழ்ச்சி. விலையைக் குறைத்துச் சொன்னான்.
இரண்டு விளக்குகளையும் வாங்கிக் கொண்டாள். இனியும் அவை அவன் கைகளில் சிக்குப் பட்டு, சித்திர வதைக்கு உட்படுத்தப் பட்டால் நிச்சயமாகப் பிரகாசித்து ஒளி வீச அவற்றிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாமல்லவா....
அவை அவனுக்கு நன்றியுடன் பிரியா விடை கூறிப் பிரிந்தன.
ஓரிரு தினங்கள் மறைந்தன. ஒரு நாள் திடீரென்று இருளின் சித்திரவதைக்குப் பின் காலைப் பொழுது புலர்ந்தது விடியலுக்காக மேகங்கள் கூடி நின்று வானத்துத் தடைகளைத் துடைத்தெறிய, கதிரவன் வீறு கொண்டு எழும்ப ஆரம்பித்தான்.
காலை எட்டரை மணியிருக்கும். ரமீஸ் வந்து புத்தகக் கடைக்கு முன்னால் நின்றான். கடைக்காரனுக்குப் புரிந்து விட்டது.
பொருத்தமான உதவிக்கரம் கிடைத்ததில் மகிழ்ச்சிக் கால் பொங்கி வழிந்தது.
- நா ம் பயணித்த புகைவண டி
1)


Page 65

“ரமீஸ். நா சொன்னத்துக்கு ஒத்துக்கிட்டியா, வாப்பா என்ன சொன்னாரு.?”
கடைக்காரன் மெளனத்தைக் கலைத்தான்.
'ஒத்துக்கிறன். ஆனா. ஒண்ணு.”
"சொல்லேன் ரமீஸ்."
"வாப்பா சம்பாத்தியத்தில நா படிச்சன் வாப்பா படிக்கல்ல. அவர் எனக்குச் செய்த கடமய நான் அவருக்குச் செய்யோணும்,
வேலை இல்லாத நேரத்தில நா படிக்கணும். அப்ப தான் என் அறிவு வளரும், உடுவீங்களா..?
"என்ன பைத்தியமா! பொழுத வீணாக்காம படியேன்."
ரமீஸின் இதயம் நிறைந்தது.
முதல் நாளே டியூட்டியை வெற்றிகரமாக ஆரம்பித்தான்.
சாக்குகளிலிருந்தும், பெட்டிகளிலிருந்தும் புத்தகங்களைக் கொட்டினான். காட்சிக்கு வைப்பதற்கு வகைப்படுத்தினான். கச்சிதமாக இருந்தது.
சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், சஞ்சிகைகள், சினிமா, கலை, இலக்கியம், விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி, சோதிடம் எத்தனை ரகங்கள் எத்தனை தரங்கள்!
'விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்' நூலை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்தான்.
அது இங்கேயல்லவா ஊற்றெடுக்கப் போகிறது.
ரமீஸுக்குப் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு வந்து விட்டோமோ? என்ற ஓர் அருட்டுணர்வு மெள்ளக் கிளர்ந்து எழுந்தது.
மல்லிகை 379 ஆண்டு மலர் ஜனவரி - 2002
நாம் பயனித்த புகைவணி டி ட-003)குட்டிம்மா
மித் - அன்று வழக்கம் போல் இஷாத் தொழுகை 裂 முடிந்ததும் மீண்டும் வந்து அன்றைய ஆங்கிலப்
பத்திரிகையில் மூழ்கினார்.
அலுப்புத் தட்டியது. டீ.வியில் உலக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். இரவு பத்து முப்பது. குட்டிம்மா கிளாசில் பால் கொண்டு வந்து நீட்டினாள். பாலை அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்ல ஆயத்தமானார். வெளிவாசல் கேட்டில் சில் சில்லென்று தட்டும் ஒசை பயங்கரமாக இருந்தது.
அந்தச் சத்தத்திலே ஒரு வித்தியாசமான முரட்டுத் தன்மையும் தெரிந்தது.
இந்த அகால நேரத்தில் இது யார்? நிச்சயமாக நண்பர்களோ தெரிந்தவர்களோ அல்ல. அவர்கள் தட்டியிருந்தால் அதில் ஒரு இங்கிதமும், மரியாதையும் இழையோடும்.
-iä, aasi- –CI02)
 


Page 66

ஒருவேளை மலையகத்திலிருந்து உறவினர்கள் யாராவது
அமுலுக்கு வருவதால், இரவில் வந்து இறங்கும் பயணங்களை அவர்கள் தவிர்த்து விட்டார்கள். நடுநிசியில் வந்திறங்கிப் பட்ட அவலங்கள் போதுமான தண்டனை
இது கொள்ளையர் அல்லது பொலிஸ்! இல்லாவிட்டால் இராணுவம்! இப்படியான பட்டறிவை உமிழும் எழுபத்தொரு வயது நிரம்பிய ஆமித் அவர்களுக்குப் புரிந்து விட்டது.
அவரும் ஒரு காலத்தில் காக்கிச் சட்டைபோட்டு மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி அதிகாரம் பண்ணியவர் தான். ஆனால் அந்த அதிகாரத்தில் கடமையுணர்வும், வெளியில் அலட்டிக் கொள்ளாத மானுட நேயமும் பிணைந்திருந்தது. இன்னும் அவரைப் பற்றி ஆழமாகத் துருவிப் பார்த்தால் அவரது பரம்பரையும் பொலிஸ் உத்தியோகம் தான்.
ஆனால் இப்படி அசிங்கமாகக் கதவைத் தட்டியிருக்கமாட்டார்கள் அவரது முன்னோடிகள் என்பது நிச்சயம்.
மெல்ல எழுந்து சென்று ஜன்னல் திரைச் சீலையை இலேசாக அகற்றி வாசலைப் பார்த்தார். எவரும் இல்லை. எதற்கும் ஒரு பத்து நிமிடங்களுக்கு முகப்பு மின் விளக்கை எரியவிட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டார்.
நாங்கள் விழிப்படைந்து விட்டோம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம். என்ற சமிக்ஞை தான் அது!
இது ஒரு சோதனை மிகுந்த காலகட்டம் மனிதன் மனிதனாகவே வாழ முடியாது. அச்சுறுத்தல்கள் நிரம்பிய ஒரு சூழலில், நேர்க்கோட்டில் நடக்கும் ஒவ்வொரு நல்ல மனிதனும் தனது மானுடத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி அவன் சுழியோட வேண்டிய நிர்ப்பந்தத்தினால் தட்டுத் தடுமாறிப் போகிறான்.
பதட்டம் அடைந்த ஆமித்தும், செல்வி குட்டிம்மாவும் முன்னறைக்கு வந்து பவ்வியமாக எட்டிப் பார்த்தார்கள்
கேட்ல ஒருவரும் இல்லை. நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள். நான் இன்னும் கொஞ்ச நேரத்தில லைற் ஒப் பண்ணி உறங்கப் போவேன். அவர் டென்ஷன் அடையவில்லை.
அவருடைய குரலில் அந்தப் பழைய இளமையும், அச்சமின்மையும், கம்பீரமும் தொனித்தது.
"நாம் பயணித்த புகைவணி டி O05)அவர்கள் அவ்விடத்தைவிட்டு மறைந்தனர். சோபாவில் அமர்ந்த ஆமித் பக்கத்தில் சிறு மேசை மீதிருந்த போட்டோ அல்பத்தைப் புரட்டிப் பார்த்தார்.
வண்ணப் புகைப் படங்கள் மூலம் சிறை வைக்கப் பட்டிருந்த மலைக் காட்சிகள் உயிர்பெற்று அவர் உள்ளத்தை சிலிர்க்கவைத்து விட்டன.
மாலை நேரங்களில் பனி மூட்டங்கள் இல்லாத சாயங்காலங்கள். வானம் மப்பும் மந்தாரமும் இல்லாத பிரகாசமான காட்சிகள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தொலை நோக்குக் கருவியைக் கண்களோடு ஒட்டவைத்துக் கொண்டு இயற்கையை அவர் ரசிக்கும் காட்சி
அப்புறம்
ஒரு பக்கம் ராகலை மலைகள் மறுபக்கம் நமுனகுல மலைத் தொடர் நடுவிலே உலகப் புகழ் பெற்ற அழகிய துங்கிந்தை நீர்வீழ்ச்சி
இன்னும் மாணிக்கம் சிறுவயதில் குட்டிம்மாவைத் தூக்கி வைத்துக்கொண்டு ஒரு படம் ,
ஆமித்துக்கும் ஜினான் ஆமித்துக்கும் நடுவே குட்டிம்மா. இப்படி எத்தனை எத்தனையோ. கெமராவுக்குள் கிளிக் கிளிக் என்று அடிப்பது அந்தக் காலத்தில் அவரது பொழுது போக்கு.
ஆமித் அவர்களுக்கு மீண்டும் மடுல் சீமைக்குப் போக வேண்டும் போலிருந்தது.
அந்த எண்ணத்தில் மணன் சரிவு ஏற்பட்டு விட்டது போல் மீண்டும் வாசல் கேட்டில் முரட்டுச் சத்தம்
அதற்காகவே எதிர்பார்த்திருந்த ஆமித் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.
அவர் எதிர்பார்த்தது சரி பொலிஸ் அதிகாரிகள் எக்ஸ்கியூஸ் அஸ். தொழுகை அறையில் இருந்தோம் இப்படி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்த ஆமித். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் பாஷாபிமானத்தோடு அவர்களை வரவேற்றார்.
பிளிஸ் டேக் யுவர் சீட்.
"நாம் பயணித்த புகைவண்டி to - ... -CI06)
 
 


Page 67

ஒரு பெண் பொலிசும் இரண்டு அதிகாரிகளும் நுழைந்தனர்.
வீடும் எஸ்டேட் பங்களாவைப் போல் இருக்கிறதே என்று கூறிய அவர்களது கண்கள் அறைகளைத் துழாவின.
பரவாயில்லை. எதுவாயிருந்தாலும் இருந்து பேசிக் கொள்ளலாந் தானே. வரவேற்பது எங்கட கடமை. ஆமித் சிங்கள மொழியில் மிக அற்புதமாகக் கூறியதன் மூலம் அவரின் நற்பண்புகள் வெளிப்பட்டன.
சரி. வீட்டில எத்தனை பேர்.? ஐடென்டி கார்ட்களைக் கொண்டு வாங்க. பொலிஸார் விசாரணைகளை நேரடியாகவே ஆரம்பித்தனர்.
ஆமித் உள்ளே அலுவலக அறைக்குள் நழுவி, சில நிமிடங்களில் காட்டுக்களுடன் வந்தார்.
ஜினான் ஆமித்தும், குட்டிம்மாவும் கதவோரம் வந்து நின்றனர். ஜனாபா ஜினான் ஆமித் முந்தானையை இழுத்து தலையையும் உடம்பையும் போர்த்திக் கொண்டாள்.
அதிகாரிகள் தேசிய அடையாள அட்டைகளை மிகக் கவனமாகப்
பரிசீலித்தனர்.
துவான் ஆமித். ரிடயர்ட் பீல்ட் ஒபிசர். அது சரி நீங்கள் எங்க தொழில் செய்தீங்க.? இவ்வளவு பேர்தானா ஒங்கட குடும்பத்தில.?
வீ. ஆ. பூரீலங்கன்ஸ் பை டீசண்ட்' என்று சற்று அழுத்தமாகக் குரல் கொடுத்த ஆமித் தொடர்ந்தார்.
நான் பதுளை மடுல் சீமை குருப்பில் மூன்று தஸாப்தங்களுக்கு மேலாக பீல்ட் ஒபிசராக சேவை செய்திருக்கிறேன். இங்கு வந்து ஏழு வருடங்களாகின்றன. முதலில் வாடகைக்கு எடுத்த இந்த வீட்டை இப்பொழுது சொந்தமாக வாங்கித் திருத்தியிருக்கிறோம். நாங்கள் இலங்கையர்கள்
எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் மூத்தவன் புருனாய் நாட்டில் உயர் உத்தியோகம் அங்கு குடும்பமாக வசிக்கிறார். இரண்டாவது மகன் சிங்கப்பூரில் இன்ஜினியர். அவரும் திருமணத்திற்குப் பிறகு குடும்பம் அங்கே.
ஆமித் அவர்கள் சட்டென்று எழுந்து சென்று மகன்மார் அனுப்பிய போட்டோ அல்பங்களைக் கொண்டுவந்து காட்டி மகன்மாரின்
っエ一○குடும்பங்களையும் பேரப்பிள்ளைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
ஜினான் ஆமித் அவர்களின் அடையாள அட்டையைப் பரிசீலனை செய்த அதிகாரிகள் சற்றுப் பரபரப்படைந்து மிகுந்த ஆவலுடன் குட்டிம்மாவை எதிர்பார்த்தனர்.
பதினாறாவது வயதில் ஒரு பருவப் பெண்ணின் பொலிவுடன் வந்து நின்றாள் குட்டிம்மா.
வசீகரமான முகத்தோற்றத்தில் எந்தவிதமான கலவரமும் இல்லாமல் பாய்சூட் - ஹிஜாப் அணிகலன்களுடன் அவளது அழகிய தோற்றத்தைப் பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற சட்டத்தைப் பிரயோகித்து, ஒரு நாளைக்காவது ரிமாண்டில் வைத்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கம் பிழைத்துவிட்டதோ'
'இவள்தான் குட்டிம்மா’ என்று ஆமித் அறிமுகப்படுத்தியதை அவர்கள் நிராகரித்தனர்.
அவளையும் அடையாள அட்டையில் ஒட்டப் பட்டிருக்கும் புகைப் படத்தையும் மாறி மாறிப் பார்த்து, ஒரு சின் ன வித்தியாசத்தையாவது காண வில்லையே." என்று மனம் புழுங்கினர். இந்திய வம்சாவழியினருக்கு வேறு என்னமோ ஒரு பொருத்தமில்லாத ஒரு தோணியை இணைத்து உதிர்த்த வசனம் அநாகரிகமாக இருந்தது.
ஒரு தோட்டக்காட்டுத் தொழிலாளியின் மகள் இங்கு வேலைக்காரச் சிறுமியாக இருக்கிறாள் என்றுதானே எங்களுக்கு முறைப்பாடு வந்திருக்கு.
அவர்களது உள்ளங்கள் மானாக் காட்டுத் தியாய் எரிந்தன. குழம்பித் தவித்தார்கள்
தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து ஆயும் பெண்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியும் 'லயக் காட்டில் ஒடித் திரியும் சிறுமிகளை அவர்கள் கண்டிருக்கிறார்கள்.
இவள் சிவப்பு நிறம் மொங்கோலிய முகலாவண்யம் இல்லை. கறுப்புத் தோற்றத்தில் கந்தல் அணிந்த ஒரு சிறுமியைத் தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
"நாம் பயணித்த புகைவணி டி


Page 68

குட்டிம்மாவிடம் சில கேள்விகளைக் கேட்டு மடக்கிவிட முடியுமா? என்று ஒரு முயற்சி
'உன் பெயர்.?
வேறு பெயர்கள்.? செல் வின்னும் ஒரு பெயர் இருக்கு மென்மையான
உணர்வுகளுடன் அவள் மிகவும் நிதானமாகப் பதில் சொன்னாள்.
ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சில கேள்விகள் அவளுக்கு ஆங்கிலம், தமிழ், சிங்களம், மலாய் மொழிகளில்
சரளமாகப் பேச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினாள்.
பொலிஸ்காரர்களுக்கு பெரிய தலையிடி இவளை எந்த இனத்தில சேர்க்கிறது.? நீ. எந்த ரிலிஜன்.?
அதிகாரிகள் உள்ளூர வியந்தாலும், எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான். என்று நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்
மிஸ்டர் அமித், மலை நாட்டிலிருந்து ஒரு வேலைக்காரப் பிள்ளையக் கூட்டிக் கொண்டு வந்து மிக அற்புதமான பயிற்சியளித்து வைத்திருக்கிறீர்கள் பொலிசில் ஏன் பதிவு செய்யல்ல?
சேர் நீங்கள் தான் வேலைக்கார பிள்ள வேலைக்கார பிள்ள என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவ எங்களுக்கு மகள் குட்டிம்மா ஒன்பது வயதாக இருக்கும் போதே நாங்கள் பென்சனாகி கொழும்புக்கு குடியேறினோம். அப்போது பதிவு செய்ய வேணும்னு எனக்கு தோனல்ல.
குட்டிம்மா ஒனக்கு இங்க வேல கஷ்டம் மடுல் சீமைக்குப் போறதா.?
பெண் பொலிஸ் இங்கிதமாகக் கேட்டாள்.
"நாம் பயணித்த புகைவணர் டி 一○மெடம், நான் பொறந்த ஒடனே எங்க அம்மா செத்துப் போய்ட்டா. சின்ன வயசிலிருந்தே மடுல் சீமை ஐயா பங்களாவில தான் ஓடி விளையாடினேன். தாயின் முகத்தைக் கூடப் பாக்காத எனக்கு ஆமித்தம்மா தான் எல்லாமே. ஒன்பது வயசில ஐயாவங்களோட கொழும்புக்கு வளர்ப்பு மகளாகவே வந்துட்டேன். மடுல் சீமைக்கு நா ஏன் போகணும்? அது எனக்கு இப்ப தலைகீழாகத்தான் தெரிது.
எதற்கும் நீங்க நாளக்கி ஸ்டேஷனுக்கு வந்து பதிவு செய்து வைங்க. இல்லாட்டா ஒவ்வொரு முறையும் பிரச்சினதான். இண்டக்கி நாங்க வந்தோம். நாளக்கி வேறு யாரும் வருவாங்க. அதுக்குப் பெறகு.? பாவம் குட்டிம்மாதான் கஷ்டப்பட போறா. கடைசியில யாராவது ஒருவன் வந்து புள்ளய, ரிமான்ட் பண்ணி உரிய எஸ்டேட்டுக்கு அனுப்பவும் கூடும்."
அதிகாரிகள் மிகுந்த அதிருப்தியுடன் திரும்பினர்.
நாளக்கி பொலிசுக்கு வந்து ஸ்டேட்மன்ட் கொடுக்கட்டாம் நாளக்கி என்ன இப்பவும் ரெடிதான். எப்ப வந்தாலும் எங்கு வந்தாலும், உண்மைக்கு கைவசம் ஸ்டேட்மன்ட் இருக்கு. அத உரிய இடத்துக்க காட்ட நாங்க தயார். அத விட்டுட்டு இப்ப குட்டிம்மாவை கூட்டிக்கொண்டு போய் ரிமான்ட்ல வைச்சு வாக்குமூலம் எழுதி நாளக்கி விடுறது. இது ஏலாது ஒரு பதினாலு வயது பொம்பில் புள்ளக்கி அது பொருத்தமில்ல. வாழ வேண்டிய குமரிப்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி வேண்டாம் ஆமித்தின் கோபம் அடங்குவதற்கு நீண்ட நிமிடங்கள் கரைந்தன.
அந்த இரவிலும், அலுமாரியைத் திறந்து பைல்களைக் கிளறி உரிய பத்திரங்களைத் தேடி ஒழுங்கு படுத்தினார்.
அவருக்கு ஒன்று ஞாபகம் வந்தது. வாழ்க்கையில அந்தப் பசுமையான காலத்தில் ஒரு நாள் அந்தி சாயும் வேளை, அவரது மலை பங்களாவின் விறாந்தையின் ஜன்னலுாடாக தொலை நோக்குக் கருவியில் பார்வையை நாற்திசைகளுக்கும் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது
தொழிலாளி மாணிக்கம் ஒட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான்.
அவன் தனது பங்களாவுக்கு வர பத்து நிமிடங்களாவது எடுக்கும்.
... --CIO
"நாம் பயணித்த புகைவணி டி
 


Page 69

சரி வரட்டும் என்ன அவசரமோ..!"
ஆமித் விறாந்தைச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அவன் வந்து கதவைத் தட்டினான்.
எவ்வளவு ரம்மியமாக இருந்தது அந்தத் தட்டல்,
இந்த நாகரீகத்தை அவன் எங்கிருந்து கற்றுக் கொண்டான்.
அவரைப் பொறுத்தவரையில், இந்த நாகரீகம், பண்பாடு, கலாசாரம் எல்லாம் இரத்தத்தில் ஊறி வெளிப்பட வேண்டியவை.
'சம்சாரத்துக்குப் பிரசவ வலிங்க. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்னு டாக்டரையா சொல்லிட்டாருங்க.
அப்படியா. சரி. சரி. முதல்ல அத கவனி நாளக்கி வேலக்கி வரத் தேவல்ல.
அவன் அவசரமாக வெளியேறினான். சற்றுத் தூரம் நடந்திருப்பான். மாணிக்கம் அவர் உரத்த குரலில் அழைத்தார்.
கிடைக்கும் ஒய்வு நேரங்களை எல்லாம் தனது வீட்டு வேலைகளில் விசுவாசமாக உதவும் ஒருவனுக்கு இந்த இக்கட்டான நிலையில் வெறுங்கையோடு அனுப்ப அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
'ஏய் மாணிக்கம், செலவுக்கு சல்லி வச்சிருக்கியா?
அவன் பதிலை எதிர்பாராத அவர் வேகமாக உள்ளே சென்று பணம் கொண்டு வந்து கொடுத்தார்.
அவன் நன்றியுடன் ஓடினான். 'ஏய் தண்ணிகிண்ணி போட்டு வீண் விரயம் செய்யாதே அவர் மீண்டும் எச்சரித்தார். அவன் குறுக்குப் பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.
"நாம் பயணித்த januari -——————— ———-ClīDஅவன் அவரைச் சந்திக்க வந்த நோக்கமே அறிவித்தல் கொடுப்பதற்கும். ஐயாவின் பங்களா வேலைக்கு நாளைக்கு அந்திக்கு வர முடியாத காரணத்தைச் சொல்லிவிட்டுப் போவதற்காகத்தான். அவரது பங்களா வேலை அவனுக்குக் கட்டாயம் இல்லை அது ஓய்வு நேரங்களில் செய்வது
மனைவியின் பிரசவம் என்று ஒரு இக்கட்டான பொறுப்பிருந்தும், மெனக்கெட்டு வந்து சொல்லிவிட்டுப் போகிறானே! இந்தப் பண்பு அவனுக்கு எப்படி வந்தது.
இரண்டாம் நாள் மாணிக்கம் வந்து அழுது புலம்பினான். பொட்டச்சியை பெத்துட்டு அவ கண்ணை மூடிட்டா ஐயா.
மாணிக்கத்தின் சோகமும், அவனது பிள்ளையின் நிலைப்பாடும், ஆமித் தம்பதிகளின் நெஞ்சங்களை நெருடியது.
ஜினான் ஆமித்துக்கு அந்தப் பிள்ளையை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டது. ஆயினும் குழந்தைப் பருவத்தில் எடுத்து வளர்க்க அவளது உடல் நிலையும் இடம் தரவில்லை.
மாணிக்கம் நீ ஒன்றுக்கும் யோசிக்காத, ஒனக்கு விருப்பமிருந்தா சீக்கிரத்தில் உன் குழந்தையை எங்க கிட்ட கொண்டாந்து வுட்டுடு நாங்க வளர்ப்போம். என்று உறுதி மொழி கூறினார்.
அது அவனுக்கு ஆறுதலாக இருந்தது நடக்கும் பருவத்தில் செல்வியைக் கொண்டு வந்து பங்களாவில் விட்டபோது ஜினான் ஆமித்துக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
ஒரு மலையக மாணிக்கத்தின் புதல்வியை எடுத்து, குட்டிம்மா என்று செல்லமாகத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
மாணிக்கத்தின் கண்கள் கலங்கின. அவனது மனதில் நம்பிக்கை நட்ஷத்திரம் மின்னியது. தாயில்லா புள்ளக்கி தாய் கிடச்சிருச்சி. ஐயா குடும்பத்தோட சேர்ந்துட்டா அவளுக்கு இனி நல்ல காலந்தான்.
ஆமித் குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளை இல்லாத வெறுமையை அகற்றவும், ஜினான் ஆமித்துக்கு உதவியாகவும், துணையாகவும் ஒரு புத்திரியானாள் செல்வி குட்டிம்மா.
குட்டிம்மாவின் பிறப்பு அத்தாட்சி தொடக்கம் சகல விதமான
- 一エー・一・一・ イエ ளிைத்த புகைவர்ை டி S SH THSH SSSASASASJSAJJYYAASAAA -O2)
 


Page 70

ஆதாரப் பத்திரங்களையும் ஒன்று திரட்டி உள்ளடக்கிய கோவையை பூரணப்படுத்திய போது இரவு பன்னிரண்டு பிந்திவிட்டது.
மறுநாள் காலையில் அவர் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.
எதையுமே அவர் அலட்டிக் கொள்ளவில்லை. பொலிஸ் பதிவு தேவையா? இல்லையா? என்றெல்லாம் விவாதிக்கவில்லை.
ஆதாரங்களுடன் வருவோம். பரிசீலனை செய்து விட்டுப் பிறகு ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் என்று கூடச் சொல்லவில்லை.
சரி நாளைக்கு நாங்கள் வருகிறோம் என்றாவது ஒருவார்த்தை. காலை உணவிற்குப் பிறகு சரியாக ஒன்பது மணிக்கு, ஆமித், ஜினான் ஆமித், செல்வி குட்டிம்மா ஆகிய மூவரும் ஒரு பழக்கப் பட்ட 'ஆட்டோவில் ஏறினார்கள். அரை மணி நேர ஓட்டம் பிறகு ஆட்டோவிலிருந்து இறங்கி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்கள்.
நேற்றிரவு வந்த அதிகாரிகள் அவர்களை இனங்கண்டு ஒ. ஐ. சி யின் முன் இருத்தினர்.
உரையாடலும் பரிசீலனையும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தது. மடுல் சீமைத் தோட்டத் தொழிலாளி மாணிக்கத்தின் மகள்
செல்வியை அவளது மூன்றாவது வயதில் சட்டபூர்வமாக சுவீகாரம்
எடுத்ததற்கான உறுதிப் பத்திரத்தை இரு முறை வாசித்தார். ஒ. ஐ.
பொலிஸில் பதிவு தேவையில்லை இருந்தாலும் இனிமேலும் "செக்கிங்.'கு வராமல் இருக்க ஒரு ஸ்டேட்மன்ட்டை பதிவு செய்தால்
சுவீகார உறுதிப் பத்திரம் அந்த மூன்று அதிகாரிகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
மல்லிகை நவம்பர் - 2002
--سس-س----س-س---س--سص-----------------سسسسسسس--- "நாம் பயணித்த" L460) '56)J 6007 ts) - -Cl3)d5ITULII LII - I_ ani adi
பரத்திக் கிடந்த மாத்திரைகளை எடுத்து, போத்தலில் உள்ள தண்ணிரைக் கிளாசில் ஊற்றிக் குடிக்க அவன் பட்ட அவஸ்தைகள்!
(3 ற்றிரவு அவன் மிகவும் சிரமப் பட்டு விட்டான். மேசைமீது
இந்த இடத்தில் தான் மானுட உதவி தேவை. ஆனால், அது அவனுக்குக் கிடைக்காமல் தொலைந்து விட்டிருந்தது. அடுத்த அடுத்த அறைகளில் மனைவி மக்கள் என்னும் ஜடங்களின் குறட்டை ஒலிகள் உரத்துக் கேட்கின்றன.
மனைவி மக்களின் அனுசரணைகள் கிடைக்காமல் போனதற்கு ஒரு நியாயம் இல்லாமல் இல்லை. ஊர் உலகம் நம்பக் கூடிய விடயமா? அது இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி உதவி ஒத்தாசைகள் கிடைக்க வேண்டுமானால்.
அதற்கெல்லாம் ஒரு பக்குவப் பட்ட பரந்த உள்ளம் வேண்டுமே! பேசாமல் அரசாங்க மருத்துவ மனையில் படுத்துக் கிடக்கத்தான் முடிவு செய்துவிட்டான். வைத்திய சாலை ஊழியர்களின் கடமை சார்ந்த கவனிப்புகளும் நோயாளிகளைப் பார்க்க வந்து போவோரின் ஜனரஞ்சக ஆறுதல் பார்வைகளுமே மனதிற்கு இதமாக இருக்குந்
தானே!
-CI)
-------------------──────────────ང་ལས་ཐམ་མ་----- - நாம் பயணித்த புகைவண டி
"--—


Page 71

தனது கதையின் இறுதி அத்தியாயம் மருத்துவ வார்டில் முடிய வேண்டும் என்பது தான் அவன் விருப்பம் அப்பொழுது தான் சொந்த பந்தங்களுக்குக் காரியங்கள் மிகவும் இலகுவாக இருக்கும். தொலைந்து விட்டான் என்ற நிம்மதி அவர்களுக்குப் பிறக்கும். ஆனால், அதற்கு எவ்வளவு காலம் போகும். உடம்பு நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றாக இழந்த பின்பு தானே அது நடக்கும்.
அவனது ஆழ்ந்த சிந்தனை நித்திரையை முற்றாக எங்கோ துரத்தி விட்டாது.
மனம் குழம்பிப் போய் மணிக் கூட்டை அடிக்கடி பார்த்தான். அது அவனுக்காகத் தன் வேகத்தைக் கூட்டி விடியலை அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து விடுமா..?
வாழ்வு நியதியின் சோக வடிவங்களில் ஒன்றைத் தான் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
நியதியை அமானுஷ்யம் என்று வர்ணித்தார்கள். இறைவனின் சோதனை' என்றும் சொன்னார்கள் -
சோதனை என்ற பெயரில் இன்னும் கடுமையாகத தண்டித்திருந்தாலும் அதனை அவன் மனப்பூர்வமாக ஏற்கத் தயார். ஆனால், சமூகத்தில் தனக்கென இருந்த மரியாதையையும் அந்தஸ்தையும் கொடுரமாகப் பாதித்து ஒரு தலை குனிவை ஏற்படுத்தி விட்டதே! அந்த அளவுக்கு விதி அமையக் கூடாது. என்று தர்க்கித்தாலும் அதுதானே விதி அமானுஷ்யம்' என்றார்கள் விதியைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்றார்கள்.
அவன் ஒரு நல்ல ஒழுக்க சீலன் என்பதனாலோ - இப்படி ஒரு யோசனை.?
இப்படியெல்லாம் தத்தம் அறிவுக்கேற்ப அபிப்பிராயங்கள் மொழிந்தார்கள்.
ஒரு நல்லவனுக்கு விதி இப்படி அமைந்து தனது பொல்லாச்
சிறகைக் காட்டிவிட்டதே!
இப்படியெல்லாம் கேட்க அவனுக்குத் திருப்தி தான். ஆனால் - “யாருக்குத் தெரியும் நல்லவன்’ என்ற போர்வையில் வெளிநாட்டு மண்ணை மிதித்தவுடன் என்னென்ன கூத்து ஆடுகிறார்களோ?”
இது தான் அவனைக் கொல்ல வந்த வைரஸ் கிருமியை விட கொடியதாக இருந்தது.
"நாம் பயணித்த புகைவணி டி -Cl5)தீர விசாரித்து பகுத்ததறிவுக்கு எட்டிய மட்டும் ஆய்ந்து, 'இது இப்படித் தான் நடந்தது' என்ற நிரூபித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவப் பட்ட நல்ல உள்ளங்கள் இல்லாவிட்டால் என்ன செய்வது....?
மெளனித்து இருப்பது தான் மருந்தாகுமா? 'இருபதாம் நூற்றாண்டின் மருத்துவத் துறையையே கலங்க வைத்துள்ளது. இந்த நோய்...... என்று மருத்துவர்கள் மதிப்பிடுகின்றனர்.
கீழைத் தேய கலாசாரத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு பெரும் சவாலாகத் தான் பட்டது அவனுக்கு.
நியதியின் கொடூரத்தை எண்ணியெண்ணி அவன் மிகவும் மனச் சஞ்சலப் பட்டு விட்டான்.
ஓயாத சிந்தனையும், மனக்கிலேசமும் ஒழுங்கான நித்திரையின் விரோதிகளாயின. அவன் எடுத்த முடிவுதான் சரி. சமூகம் எப்படித்தான் தன்னை மதிப்பீடு செய்தாலும், அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.
'மௌனமாய் சும்மாயிரு
அவனைப் பொறுத்த வரையில் இது ஒரு சிறந்த தத்துவம். அதைத் தான் அவன் கடைப் பிடித்தான்.
இனி எதைப் பேசினாலும் பிரயோசனம் இல்லைத் தானே!
அவனுக்கு உண்மையில் இந்த நோயைப் பற்றிய ஆழமான அறிவு இருந்திருந்தால்? எல்லாம் கேள்விப்பட்டதோடு சரி. பொதுவாக ஒரு சராசரி மனிதனுக்குத் தெரிய வேண்டிய விபரங்களை மட்டுந்தானே அவனும் அறிந்திருந்தான். அதற்குமேல் ஆழமாக அறிய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை அவனுக்கு. ஆனால் -
அது தன்னைத் தேடி வந்து சுட்ட போது தான் இந்த நோயைப் பற்றி பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஞனோதயம் பிறந்தது.
அரை நூற்றாண்டை நிறைவு செய்யப் போகும் வயதில் இளமைத் துடிப்போடு இயங்கிய அந்த இனிமையான நாட்களை மீட்டி பூரித்துப் போகின்றான். ஒரு கெளரவமான தொழிலுடன், வாடகை வீட்டில் என்றாலும் வாழ்க்கையின் வசந்த காலம் அதுதான். -
காலம் கனிந்துவந்த போது, அவனுக்கும் புரோக்கர் மூலம் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அனைத்துக் கோணங்களில் இருந்தும் பொருளாதார வசதிகளை மட்டுந் தான் நச்சி அணுகினார்கள்.
நாம் பயணித்த புகைவண டி
டி


Page 72

வயது, கல்வி இவற்றைப் பற்றியும் அலசப் பட்டது. ஆனால், ஒரு சந்தர்ப்பத்திலும் மனப் பொருத்தங்கள், இலட்சியங்கள், விருப்பு வெறுப்புக்கள், குணவியல்புகள்... இவற்றைப் பற்றி சிறிதளவேனும் அக்கறை காட்டவில்லை.
சொல்லப் போனால் -
முன் பின் அறியாத ஒரு பெண்ணும் ஒரு ஆண் மகனும் திருமணம் என்னும் பந்தத்தால் இணைந்தார்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்கள். உண்மையில் அவன் அவளுடன் அல்லது அவள் அவனுடன் மனந்திறந்து கருத்துக்கள் பரிமாறக் கூட வாய்ப்புக் கிடைக்க வில்லையே! இந்நிலையில் -
அவர்களும் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். 'திருமணம் முடித்து வாழவேண்டும்' என்று வெறுமனே ஒரு சம்பிரதாயத்திற்காக ஒருவகை இயந்திர வாழ்க்கை தான் அது!
பெண் வீட்டாரைப் பொறுத்தவரையில் 'அப்பாடா' என்று குமரிப் பாரம் கழிகிறது.
அவனை முடித்த அவளது இலட்சியங்கள் எல்லாம் பணம், வசதி, சொத்து இவைதான் சொகுசான வாழ்க்கை.
கணவன் என்ற ஸ்தானத்திலிருந்து அவனும் ஒரு குறையும் வைக்கவில்லை. வாழ்க்கைப் பிரச்சினைகள் எதுவுமின்றிச் சுமுகமாகத் தான் ஓடிக் கொண்டிருந்தது. திருப்தியாக.
'டாம்பீகம் எதுவுமின்றிப் போதும் என்ற மனப்பாங்குடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே அதுதான் உன்னத வாழ்க்கை....
வாழ்க்கையைப் பற்றி அவனது வரைவிலக்கணம் அது. பெற்றெடுத்த குழந்தைச் செல்வங்கள் வளர வளர, அதனை ஒரு சாட்டாக தூக்கிப் பிடித்து அவள் பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கி வளர்த்துக் கொண்டதால் மெள்ள மெள்ள முரண்பாடுகள்
வளர்ந்தன.
"எவ்வளவு பேர் போறாங்க... ஒங்களுக்கு மட்டுந்தான் வெளிநாட்டு மண்ணில் வேலை இல்லை"
"எதையுமே மனசுக்கு எடுக்கணும்." "குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கணும்....
- நா ம் பயணித்த புகைவண டி.
17“முயற்சி இருக்கணும்.” மனைவியின் ஓயாத நச்சரிப்புகள் சக்தி வாய்ந்த ஏவுகணைகளாகின. அவற்றைத் தாங்கும் சக்தியை அவன் முற்றாக இழந்து விட்டான். முயற்சி என்ற பெயரில் அவன் இராப் பகலாக முகவர் நிலையங்களைச் சுற்றி வந்தான்.
வெளிநாட்டு மண்ணை மிதிக்கும் பாக்கியம் அவனுக்குக் கிட்டியது. அவனுக்கு அது ஒரு சர்வ சாதாரணமான விடயமாக இருந்தாலும்,
மனைவியின் ஏவுகணைகளிலிருந்து தப்பிவிட்டோம் என்ற மகிழ்வும் திருப்தியும் அவனில் இழையோடியது.
அவளுக்குத் தான் ஒரே குஷியாக இருந்தது. அவளில் பல மாற்றங்கள். அவளது இலட்சியம் நிறைவேறப் போகிறது.
காலச் சக்கரத்திற்கு எப்படி இந்த வேகம் வந்தது?
அவன் பயணமாகிப் போய் இவ்வளவு விரைவில் ஆண்டுகள் உருண்டோடி விட்டனவா..?
அவளுக்குப் புதினமாக இருந்தது. அவளுக்கு அதிர்ஷ்ட அலை!
வாடகை வீடு சொந்த வீடாக மாறி மாடி வீடாக உயர்ந்ததைப் பார்க்கும் போது, காலம் வேகமாகத் தான் ஒடியிருக்கு.
செல்வம் அது தேடினால் தான் வரும் மூன்று மக்கள் செல்வங்களுக்கும் பிக்ஸ் டிப்பொசிற்கள் போட்டாயிற்று கிட்டிய அவளது உறவினர்களுக்கு இப்படியும் அப்படியுமாகச் சில உதவிகள்
ஐந்து வருடங்களுக்குள் இவ்வளவு மாற்றமா..? அவள் மலைத்துப் போய் விட்டாள். கூடவே அவளுக்கு ஒரு வகைத் திமிரும் சேர்ந்து விட்டது. அதுவும் புதினமல்ல. அவளுக்கே உரிய குணாம்சத்திற்கு அது வரத்தான் வேண்டும்.
இறக்கத்திலிருந்து ஒரு ஏற்றம் ஏற்றத்திலிருந்து ஒர் உச்சக்கட்டம். உச்சக் கட்டத்திலிருந்து. இன்னும் மேலே. மேலே போகத் தாராளமாக இடமுண்டு. ஆனால் பரிதாபம் - அலை மாறிவிட்டது.
அவன் அப்பாவி பாதிக்கப் பட்டு விட்டான். வருடா வருடம் விடுமுறையில் தாய் நாடு வந்து விட்டுப்
போனவனுக்கு ஆறாம் வருடம் நடுப்பகுதியில் என்னவாயிற்று.? வெளி நாட்டில் ஒரேயொரு முறை தான் காய்ச்சலுக்கு ஒரு
-C18)
qSqS qSqqSSMSSSSSSS S - つエリ புகைவணி டி


Page 73

மருத்துவமனையில் இன்ஜெக்ஷன் போட்டார்கள். சில நாட்களில் குணமாகி நல்ல சுகதேகியாக வாழ்ந்து வந்த அவனது ஆரோக்கிய வாழ்விற்கு என்னவாயிற்று.?
ஆரம்பத்தில் உடல் உழைவு ஏற்பட்ட போது அது கடின வேலை நிமித்தம் என்று அவன் பொருட்படுத்தாது இருந்தான். ஓயாத தலையிடி, பசியின்மை, இரவில் வியர்வை இருமல். இப்படியாக ஒவ்வொன்றிற்கும் தானே ஒவ்வொரு காரணத்தைக் கற்பித்துக் கவனியாது இருந்து விட்டான்.
இருந்தாற் போல் அவனது எடை குறையத் தொடங்கியது அடிக்கடி தொடர்ச்சியான காய்ச்சல்,
வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இப்படி அசட்டையாக இருந்து விடக் கூடாது என்று ஒரு சகபாடி ஆலோசனை
கூறியதற்குப் பிறகு தான் அவனுக்கும் ஞானோதயம் பிறந்தது. உடனடியாக ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துப் பரிசோதித்தான்.
டாக்டருக்குச் சந்தேகம் வந்து விட்டது.
எதற்கும் இரத்தப் பரிசோதனை செய்து விட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். என்று அதற்கான ஒழுங்குகளைச் செய்தார்.
அவர் சந்தேகித்தது உண்மையாகிவிட்டது. இரத்தப் பரிசோதனைக் மிகத் தெளிவாகக் காட்டிவிட்டது.
“உங்கள் இரத்தத்தில் HIV வைரஸ் கிருமிகள் தொற்றியிருக்கு." "அப்படியென்றால்.” உண்மையில் அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
இந்தக் கிருமிகள் எப்படித் தொற்றுகிறது? என்பதற்கு டாக்டர் ஒரு நீண்ட விளக்கம் கூறிய போது அவனுக்குப் பொறி தட்டிவிட்டது. உடலும் உள்ளமும் வெலவெலத்துப் புல்லரித்து விட்டது.
'சத்தியமாகச் சொல்கிறேன் டாக்டர் எனக்கு இங்கே. எவ்விதமான பாலியல் தொடர்பும் இல்லையே..!"
அவன் கதிகலங்கிப் போய் நின்றான். "உங்களைப் பார்த்தால் எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. எச்சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு முன் பின் அறியாதவர்களிடமிருந்து இரத்த தானம் செய்யப் படவில்லை என்று சொல்கிறீர்கள்.
سسسسسسسسسسسس-------------بr-mسسسسسس۔--سسط-------س--سسجص---- -Të rriño y un coofijo, || 6ಕು (56) 6ಕT Iಣ್ಣ 一○அப்படியானால் கிருமிகள் அகற்றப் படாத ஊசி மூலம் மருந்து ஏற்றியிருக்க வேண்டும் சலூன்களில் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யப் படாத சவரக் கத்திகள் அல்லது பிளேடுகள் காயப்படுத்தியிருந்தாலும் உங்கள் இரத்தத்தில் கிருமிகள் தொற்ற வாய்ப்பிருக்கிறது. இப்படி ஏதாவது ஒரு வழியில்.
அவனுக்கு ஒன்றுமே ஞாபகத்திற்கு வரவில்லை.
அவசரம் காரணமாக அடிக்கடி பல சலுான்களில் ஷேவ்' பண்ணியிருக்கிறான். ஆனால் காயங்கள் ஏற்பட்டனவா..? அவனுக்கு ஞாபகம் இல்லை.
இந்த வைரஸ் கிருமிகள் மூலம் பரவும் நோய் சம்பந்தமாக மருத்துவர் கொடுத்த விளக்கக் குறிப்புகள் அடங்கிய ஒரு சிறு நூலை ஒரே மூச்சில் படித்துத் தெளிந்து மிகவும் சஞ்சலப் பட்டான். அறியப் படாத விடயங்கள் அனைத்தும் அவனுக்கு அதிர்ச்சியாகவும் புதினமாகவும் இருந்தது. கடைசியில் இந்த வைரஸ் கிருமிகளா கழுத்தறுக்க வேண்டும். ஆண்டிறுதியில் நிரந்தரமாகத் தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தவன் இப்பொழுது ஒரே மாத அவகாசத்தில் ராஜினாமாவைச் சமர்ப்பித்து எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது, மனைவி மக்கள் உறவினர்கள் அனைவருமே திகைத்துப் போய் நின்றனர்.
ஒரு வித அறிவித்தலுமின்றி என்ன இப்படித் திடீரென்று.? அவனைப் பொறுத்தவரையில் ஒரு சங்கடமான நிலை இந்த நோயைப் பற்றி எப்படிச் சொல்வது.? பரவாயில்லை.
அவனது மனசாட்சிக்கு விரோதமாக எதுவுமே நடக்காததால் மிகுந்த துணிச்சலுடன் தனக்கு ஏற்பட்டிருக்கிற நோயைப் பகிரங்கப் படுத்தினான். நீதிக்கு முன் அல்லது விசாரணைக்கு முன் அவன் நிரபராதி தானே! என்ற தைரியத்தில்
அவன் முற்றிலும் எதிர்பார்த்தது போல் - குடும்பத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது. அவனுடைய விளக்கங்கள் ஒன்றும் எடுபடவில்லை. அவர்களுடைய ஏகோபித்த முடிவு - அவன் ஒழுக்கம் தவறியவன்.
இப்படியான ஒரு கட்டத்தில் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள் போன்றவர்களின் உதவி தேவை. உதவி என்றால், அள்ளிக் கொடுப்பது மட்டுமா..? அன்புடன் பழகி உற்சாகம் தரும்
---------------____________--- "நாம் பயணித்த புகைவணி டி 一○


Page 74

நல்வார்த்தைகள் பேசி மிகவும் அந்நியோன்யமாக நடந்து கொள்ள வேண்டும். அவன் தன்னை ஒரு பயங்கர நோயாளி என்று எண்ணியெண்ணி மனம் வருந்தச் சந்தர்ப்பம் இல்லாமல் மிகக் கவனமாக அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், அது அவர்களால் முடியுமா. 2
அவள் அவசர அவசரமாக ஒடி இரத்தப் பரிசோதனை செய்து, தனக்கு 'ஒன்றுமில்லை என்று அறிந்த பிறகு தான் அப்பாடா என்று நிம்மதியாக மூச்சுவிட்டாள்.
அனைவரும் ஒன்று கூடி பேசித்தீர்த்து ஒரு முடிவு எடுத்தார்கள். அவனுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் முற்றிலும் தனிமைப் படுத்தி ஒதுக்கி விட்டார்கள். அள்ளிக் கொடுத்தவனுக்கு ஒரு சிற்றறை தஞ்சம்.
நோய்க் கிருமிகள் பெருகித் தன்னை மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்வதற்கு முன், இந்தப் பொல்லாத தனிமை தன்னைக் கொன்று விடுமோ என்று அஞ்சினான்.
ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்தான். வைத்தியர்களைச் சந்திப்பதிலும் ஆலோசனைகள் பெறுவதிலும் நாட்கள் தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தன.
இந்த ஒரங்கட்டிய நிலையில் தான்.
அன்று எப்படா விடியும் என்று காத்துக் கொண்டிருந்தான் எங்கோ நாயும் பூனையும் சண்டை பிடிக்கும் போர் உறுமல் காகங்கள் கரைதல், பறவை பட்சிகளின் விழிப்பு இரைச்சல், இவை அனைத்தையும் மீறிச் சாலையின் அமைதியைக் குலைக்கவென ஒரு வாகனம் அதைத் தொடர்ந்து ஆட்டா வண்டிகள் கிளம்பத் தொடங்கியிருந்தன. தேவையானவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். சிரமப் பட்டு வெற்று, முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து ஆங்கிலத்தில் ஹொஸ்பிட்டல்' என்று மட்டும் சிக்கனமான சில வாாத்தைகளை உதிர்த்து ஏறிக் கொண்டான்.
ஐந்து வருட காலம் கடுமையான உழைப்பு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து மீண்டும் பழைய மாதிரியே காலத்தை ஒட்டலாம் என்று தான் திட்டமிட்டிருந்தான். ஆனால், அவன் வாழ்வின் நியதி வேறுமாதிரியாக அமைந்து விட்டது.
நோயைச் சுமந்து வந்து, மருத்துவ மனையும் வீடுமாக ஒடியோடிக்
ーエーーーー一 "நாம் பயணித்த புகைவண டி 一○களைத்துப் போய். வீடும் கிட்டத்தட்ட கவனிப்பாரற்ற ஒரு மருத்துவ மனையாகி, கடைசியில் வீட்டை விட்டே கிளம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டாயிற்று.
அவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டான். அங்கே அவனுக்கு ஆரோக்கியமான மாற்றம்
வைத்திய சாலையில் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் அவனைத் தனிமைப் படுத்தி ஒதுக்காமல் வைத்தியர்கள், தாதிகள் முதல் அனைத்து ஊழியர்கள் வரைக்கும் அனைவருமே அன்புடன் பராமரித்தார்கள். அது அவனுக்குச் சொர்க்கமாக இருந்தது.
நோயாளரைப் பார்க்க வரும் பார்வையாளரின் புன் முறுவலும் ஓரிரு அன்பான விசாரிப்புகளும் அவன் உள்ளத்திற்கு எவ்வளவோ இதமாக இருந்தது.
அவனது இவ்வுலக வாழ்க்கை இன்னும் அவனால் நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனால் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவனால் ஊகித்துக் கொள்ள முடிகிறது.
அவனைப் போல் அறியாமை காரணமாக, பாலியல் தொடர்பற்ற முறையில் கிருமிகளால் பாதிக்கப் படுபவர்களுக்காகப் பரிதாபப் படுகிறான்.
இந்த நோய்க்கு எதிரா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று அவன் ஒவ்வொரு நாளும் பிரார்த்திக்கின்றான்.
கிடப்பது போல் ஓர் உணர்வு திடீரென்று விழிப்படைந்து சுற்று முற்றும் பார்த்து தான் ஐசி ரூமுக்கு இடமாற்றம் செய்யப் பட்டிருப்பதை இலேசாக உணர்ந்தான். உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந்தது. பார்வையாளருக்கு அழைப்பு மணி அடித்த நேரம் அவனுக்குத் தெரியாது. ஆனால், புதினமாக மனைவியும் மக்களும் இரண்டொரு உறவினருடன் வந்து தலைமாட்டில் நின்று கொண்டிருந்து விட்டுச் சற்று வெளியேறியது போல் அவனுக்குத் தோன்றியது. அந்தக் கட்டத்திலும் உயர்ந்த பண்பாடுகளை உள்ளடக்கிய கீழைத் தேய கலாசாரத்தின் பிரதி நிதிகளாக வெளிநாடுகள் செல்லும் ஒவ்வொரு நல்ல பண்பாளனையும் மானசீகமாக எண்ணிப் பார்க்கின்றான். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் அவன் கண்முன்னே தோற்றமளிக்கிறார்கள். அவன் கண்கள் கலங்குகின்றன.
っエーエ二エ・一
நாம் பயணித்த புகைவணி டி - ... --CI22)


Page 75

மது, மாமிசம், மங்கை ஆகிய மூன்றையும் தொடமாட்டேன். என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுச் சென்ற இந்தியாவின் மகாத்மாவைக் கூட அவன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கத் தவறவில்லை.
இதனைப் பின்பற்றி எத்தனை எத்தனை பேர் செல்வார்கள்.!
ஒருவகைப் பதட்டமும், பச்சாதாபமும், பரிதாபமும் அவனில் இழையோடுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு வகைப் புலம்பல்
வெளிநாடுகள் செல்லும் ஒவ்வொருவரும் இந்த எயிட்ஸ் நோயைப் பற்றி தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அறிவு நிச்சயமாக அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும்"
இது வெறுமனே புலம்பல் மட்டுமல்ல, அறியாமையால் காயப்பட்ட ஒருவனின் கடைசி விருப்பமாகும்.
ஜனவரி 2003
つエ பயணித்த .همسك2لخگسسسسسسسس سسسسسسسسسسسسسسسسسسسسسس

Page 76


Page 77
மலையகத்தைச் இவர் மல்லிகைத் நறுமணமிக்க பூக் கருதப்படுபவர்
Leo Mafija
சிறுகதைத் தொகு separa li
இந்தச் சிறுகதைத்
நியூ செஞ்சரி புத்
இரண்டாம் பதிப் இங்கு குறிப்பிடத்
இவருடைய எழுத்
தைக் கருவின் படைப்பின் எதார் கிருஷ்டிகளுக்கு நல்கி வருவதை கொள்ள வேண்டு
நாம் பயணித்த
சிறுகதைத் தொகு சிறுகதைத் தொகு தொகுதியும் மல் Gallis
ISBN 95.5825025-2
I
99 s 58.25 02:58
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 78

லராலும் பேசப்படக் களில் ஒருவர் ஆப்டின்
சார்ந்த எழுத்தாளரான
தோட்டத்தில் மலர்ந்த களில் நன்றாகக்
கொள்ளாத இவரது முதலாவது தி இரவின் ராகங்கள் 5 66յ6նոլոգ: 19375
தொகுதியை சென்னை தக நிறுவனம் ாக வெளியிட்டுள்ளது தக்க ஒன்றாகும்.
து நடை வாசிக்கச் இருக்கும். அதே சமயம் காத்திரமும் பாத்திரப் தமும் சேர்ந்து அந்தச் ரு தனித்துவத்தை
நாம் கவனத்தில்
கைவண்டி" என்ற இச் தி இவரது இரண்டாவது தி யாகும். இத்
கைப் பந்தல் வெளிவருகின்றது