கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையும், பெண்களும்

Page 1

হয়। গ্রীনগঞািগ্ন্যান্ত, MA -

Page 2
. |-
|-: , , , , |- |-· |-
·
·|- |- , ,
· * |-* |- |-
---- |- |-
· - - |- - -
|- s.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கறிறறிந்தாவங்கவிறறிறுறி நல்லிணக்கதிற்கானஇருணைக்குழு
ase faafiaõ M.A.

Page 3
தலைப்பு கற்றறிந்தபாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான
ஆனைக்குழு அறிக்கையும் ,பெண்களும்
ஆசிரியர் : J*(3ITIT88IT florarlbölJ6or M.A
வெளியீடு மகளிர்அபிவிருத்திநிலையம்,
இல:07, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
021222 4398.
அச்சிட்டோர் : தீபம்பிறிண்டேர்ஸ்
இல, 77 கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.
ISSN: 18003109
ISBN: 977-180-03100-0-2

முகவுரை
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்காக,இலங்கை சனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு 2011 நவம்பரில், தெளிவான பரந்தமைந்த ஆய்வுகளின் அடிப்படையிலான அறிக்கை யினை சமர்ப்பித்திருந்தது. ஆயினும் அவ்வறிக்கை சிபார்சு செய்துள்ள நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக் கப்படவில்லை என்ற குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரின் பாதிப்புக்களினால், இடம்பெயர்ந்து, காயமடைந்து, கணவன்மார், பிள்ளைகளை இழந்து, துயருறும் குடும்பங்கட்கு உரிய நிவாரணங்கள் சரியாக வழங்கப்படவில்லை. இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள் குடியேற்றம், இன்றும் தாமதமாகவே இடம்பெறுகின்றது. வீட்டுத்திட்டங் களும் நிறைவடைவதாகத் தெரியவில்லை. அரசிற்கு ஏற்படும் அழுத்த ங்கள் காரணமாக மேலோட்டமாக எடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்
கைகள், மக்களின் தேவைகளைப்பூர்த்திசெய்வதாக அமையவில்லை.
இவ்வாணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்ததாக இல்லை. பாதிப்புக் குள்ளாகிய மக்களில் பெரும்பான்மையினர் பெண்களும், சிறுவரும் என்பதை ஆணைக்குழு வலிதாகக் காட்டியுள்ளது. ஆயினும், ஏற்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெரும்பாலான பெண்கள் அவர்களின் பிரச்சினைகள் நழுவவிடப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது. போரின் காரணமாக இடம்பெயர்ந்து அல்லல்படும் பெண்கள், அவர்கள் குடும்பங்களின் தேவைகள், பாதுகாப்புதொடர்பாக ஐ.நா பாதுகாப்புசபை யின் 1325 விதப்புரை, மேற்கொள்ளப்பட வேண்டிய பல விடயங்களைக் கூறியிருந்த போதிலும், இவை கவனிக்கப்படுவதாக இல்லை. ஆகவே இங்கு இவ்வறிக்கையில், ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்
பட்டுள்ள பிரதான விடயங்களைச் சுருக்கமாக எடுத்துக் கூறி, பெண்கள்

Page 4
தொடர்பாக மேலும் கவனிக்கவேண்டிய விடயங்களையும் நாம் ஆராய்ந் துள்ளோம். இவ்வறிக்கை பெண்கள் தொடர்பாக அபிவிருத்தித் திட்டங் களைச் செயற்படுத்துவோருக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க் கிறோம்.
இவ்வறிக்கையினை தயாரிப்பதற்கு, உதவிய அலுவலக ஆய்வாள ர்கள் அனைவருக்கும் எமதுநன்றிகள் உரித்தாகுக.
சரோஜா சிவசந்திரன்

பொருளடக்கம்
> கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான
ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம்
அறிக்கையில் பெண்கள் தொடர்பாக கவனிக்க வேண்டிய
விடயங்கள்
Sèr பெண்களுக்கான உளவள ஆலோசனை
ெேபண்கள் பாதுகாப்பு
Sèr இராணுவத்தினரின் பிரசன்னமும் பாதுகாப்பும்
Iー இளவயது திருமணம்
Sè காணிதொடர்பான பெண்கள் உரிமைகள்
வீேட்டு உரிமையும் பெண்களும்
Iー வாழ்வாதார நடவழக்கைகளும் வேலைவாய்ப்பும்
நிேறுவனரீதியான கட்டமைப்புக்கள்
O
6O
6O
6
62
63
64
64
65
66

Page 5

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையும் பெண்களும்
அறிமுகம் -
இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்று வந்த போர் நடவடிக்கைகள் 2009 மே மாதத்தின் இறுதிச் சமரோடு ஓய்ந்தது. அரசாங்கம் போரின் வெற்றியை பெருமிதத்தோடு கொண்டாடிய போதிலும், போரினால் ஏற்பட்ட இழப்புக்கள், மக்கள் காணாமற்போயிருந்தமை, பெண்கள், சிறுமியர் பாலியல் வல்லுறவிற்காளானமை,அநாதையாக்கப்பட்ட சிறுவர் போன்ற எஞ்சிய சமூகப் பொறுப்புக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டில் உள்ளது. போர் நடத்தப்பட்ட முறைமை, பாரிய அழிவுகள், இடப்பெயர்வு, பாலியல் கொடுமைகள், சித்திரவதை போன்றவை போரின் இறுதிக் கட்டத்திலும், போர் முடிவடைந்த பின்னரும் இடம்பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மனித உரிமைகட்கான ஜெனிவா மாநாட்டில் ஐ.நா வின் மனித உரிமைகட்கான ஆணையாளர் முன்மொழிந்த சிபார்சுகள், சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண் காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் இலங்கை மீது, ஓர் சர்வதேச மட்டத்தில் விசாரணை இடம்பெற வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுத்தன. இவ்வழுத்தங்கள் பாரிய சிக்கல்களை உருவாக்கி விடும் மற்றும் பொறுப்புக் கூறுவதிலிருந்து விலகிவிட முடியாத நிலையில், அரசாங்கம் இவ்வாறாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டில் ஓர் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியது. இவ்வாறாக உள்நாட்டில் ஏற்பாடு செய்யப்படவிருந்த விசாரணையை, உள்நாடு மற்றும் சர்வதேச மட்டத்தில் பல மனித உரிமை அமைப்புக்கள் வரவேற்றதின் பயனாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்
O --O1-)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 6
திற்கான ஆணைக்குழு ஒன்று, மனித உரிமை மீறல்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புதல், பெண்களின் பாலியல் வல்லுறவு தொடர்பான விடயங்கள், காணி மீள அளிக்கப்படல் போன்ற விடயங்களை ஆராயும் முகமாக அமைக்கப்பட்டது. இவ்வாணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்கு பல உள்நாட்டு அமைப்புக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைத்ததோடு, தனிப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள், பெண்கள் உட்பட தமக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், பாதிப்புக்கள், இழப்புக்கள் தொடர்பாக சாட்சியமளிக்க இடமளிக்கப்பட்டது. இவ்வாணைக்குழு பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு சென்று இடம்பெற்ற சம்பவங்களை பதிவு செய்து, ஓர் அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தது. இவ்வறிக்கை ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தமையினால், பாதிக்கப்பட்ட மக்களில் பலர், இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அறிய முடியாதவர்களாகவும், பலர் இவ்வறிக்கை பற்றித் தெரியாதவர் களாகவும் உள்ளனர். இவ்வாணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக பலவாறான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தவறவிடப்பட்டுள்ள விடயங்கள், கவனத்தில் எடுக்கப்படாத விடயங்கள் பல பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் குறைபாடுகளாகவே தென்படுகின்றன. ஆயினும், இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் யாவை என்பதை அறிந்து கொள்வதோடு, இவ்வறிக்கை பெண்கள் தொடர்பாக குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டிய தேவை எமக்குண்டு.
O -O2-H
மகளிர் அபிவிருத்தி நிலையம்

( re. O -O3-)
அறிக்கையின் அறிமுகம்
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது (LLRC) சனாதிபதியின் ஆணைப்படி 2010 மே மாதம் 15ம் திகதி உருவாக்கப்பட்டது. இவ்வாணைக்குழு 2010 ஆகஸ்ட் 10ம் திகதி தனது விசாரணைகளை நிறைவேற்றி 2011 நவம்பர் 11ம் திகதி இறுதி அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தது. இவ்வாணைக குழுவின் தல்ைவராக முன்னாள் சட்டமா அதிபர் கடமையாற்றினார். இவ்வாணைக்குழு பொதுமக்கள், அமைப்புகளிடமிருந்து வாய்மூல, எழுத்து மூலமான வாக்குமூலங்களைப் பெற்றிருந்தது. இக்குழுவிற்கு 138 வாய்மூல முறைப்பாடுகளும், 266 எழுத்து மூலமான முறைப்பாடுகளும் கிடைத்திருந்தன. இவை தவிர அரச உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடமிருந்து 49 முறைப்பாடு களும் கிடைத்திருந்தன.
ஆனைக்குழுவின் அங்கத்தவர்கள் * சீ.ஆர்.டீ.சில்வா தலைவர் - சட்டமா அதிபர் (2007-2009) * ஏ. ரொகான் பெரேரா - முன்னாள் சட்ட ஆலோசகர்,
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, தற்போதைய அங்கத்தவர் - சர்வதேச சட்ட ஆணைக்குழு கருணாரத்ன கற்கவத்த குற்றவியல் நீதித்துறை திணைக்களத்தின் குற்றவியல் பேராசிரியர் (நெவாடா பல்கலைக்கழகம்)
0.
X
o
Ko
சந்திரபால் சண்முகம் - திறைசேரிசெயலர் (1987-88) * எச்.எம்.ஜி.எஸ். பல்லியகார முன்னாள் செயலர், வெளிவிவகார அமைச்சு, ஐ.நா வின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி. * மனோகரி இராமநாதன் - முன்னாள் பிரதி சட்டவரைஞர்,
முன்னாள் இலங்கையின் நிதிச்சபை அங்கத்தவர்.
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 7
* மக்ஸ்லல் பாாக்கிரம பாணகம (மன்னாள் உயர் மன்
J J J (UD
நீதிபதி. * எம்.ரீ.எம். பவீக் - சிரேஸ்ட சட்டத்தரணி, இலங்கை மனித
உரிமை ஆணைக்குழு அங்கத்தவர்.
ஆணைக்குழுவின் பொறுப்புக்கள் 2002 பெப்ரவரி 21 இற்கும் 2009 மே 19 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பின்வருவன தொடர்பாக நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தல். 9 2002 பெப் 21ல் இடம்பெற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கான காரணங்களும் அதனைத் தொடர்ந்து 2009 மே 19ம் திகதி வரை நடைபெற்ற சம்பவங்களும். 8 இவற்றிற்கு தனிநபரோ அன்றி ஓர் குழுவோ அல்லது ஏதாவது ஓர் நிறுவனமோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பைக் கொண்டுள்ளதா 9 இந்நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட நபருக்கோ அன்றி அவரில் தங்கி வாழ்பவருக்கோ நஸ்டஈடு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள். 9 எதிர்காலத்தில் இவ்வாறான் சம்பலங்கள் இடம்பெறாதவாறு, தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் சகல சமூகத்தினர். மத்தியில் ஏற்படுத்துவதற்கான நிர்வாக சட்ட ரீதியான அணுகுமுறைகள் மற்றும் சிபார்சுகள்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை, நல்லிணக்கத்தை சமூகங்கட் கிடையில் ஊக்குவிப்பதற்கான, முதற்கட்டமான ஒர் ஏற்பாடாக அமைந்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவானது இலங்கை
On -{-04一}-
மகளிர் அபிவிருத்தி நிலையம்

சனாதிபதியால் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இவ்வறிக்கையும் அரசாங்கத்தின் பின்புலத்தில், அரசின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாக புத்திஜீவிகள் பலர் இதனை விமர்சித்துள்ளனர். ஆயினும் இவ்வாணைக்குழுவின் அறிக்கை, அதில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் போரின் பின் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. 2012ம் ஆண்டிற்கு முன் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இவ்வாணைக்குழுவின் சிபார்சுகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்பதை அழுத்திக் காட்டியிருந்தன. மேலும் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் வேண்டிய விசாரணைகள் தொடர்பாக இவ்வறிக்கையில் மேலெழுந்தவாரியாகவே எழுதப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடுகளின் நெருக்கடிகள், அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபார்சுகளை செயற்படுத்துவதில் ஏற்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் என்பன மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக 2012ல் ஐ.நா பேரவை இலங்கைக்கு எதிராக இன்னோர் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா பேரவை மனித உரிமைகள் மாநாட்டில் இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் போர் நடத்தப்பட்ட முறையில் சர்வதேச சட்ட நியதிகள் மீறப்பட்டமை தொடர்பான விடயங்களுக்கு போதிய முக்கியம் காட்டப்படாமை கண்டறியப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா முன்வைத்த பிரேரணையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத் திற்கான ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபார்சுகளை மிக விரைவாகவும், பொறுப்புடனும் செயற்படுத்துதலை வலியுறுத்துதல், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகட்கமைய
O s-O5-)
V மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 8
இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுக்கப்படவுள்ள வேலைதிட்டங்கள் தொடர்பாக ஓர் நடைமுறை வேலை திட்ட வரைவினை இலங்கை அரசாங்கம் சமர்பிக்க வேண்டும் என கோருதல், போன்ற விடயங்கள் முன் வைக்கப்பட்டன, 2012 இல் ஐ அமெரிக்கா இத்தீர்மானத்தை ஜெனிவாவின் மனித உரிமைகள் மாநாட்டில் முன் வைத்தபோது இலங்கைக்கு ஆதரவாக 14 நாடுகளே வாக்களித்திருந்தன. இதன் சர்வதேச தாக்கத்தினை உணர்த்த இலங்கை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சாதகமான சிபார்சுகளை அமைச்சுக்களின் கட்டமைப்பு செயற்பாடு களினூடாக செயற்படுத்த முன்வைத்துள்ளமை நல்லிணக்கத் திற்கான முதற்படியாகக் கருதலாம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான அறிக்கை ஒன்பது அத்தியா யங்களை கொண்டது. மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முதலாவது பகுதி கடந்த காலத்தில் தோல்விகள், மீறல்கள் ஆகிவற்றிற்கான உண்மைகளை ஆராய்வதாக அமைந்துள்ளது.
அத்தியாயம்:
ஆணைக்குழுவிற்குரிய பொறுப்புக்கள், ஆய்வு முறைகள் பற்றியும் அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற உள்நாட்டு முரண்பாடுகள் 2002இல் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்துடன் ஆரம்பமாகி ஏழு வருட நீட்சியில் 2009 இல் விடுதலைப்புலிகளின் இறுதித்தோல்வி பற்றியதாக உள்ளது.
அத்தியாயம்: 2
சமாதான ஒப்பந்தம், அதன் முகாமை ஒப்பந்தம் தோல்விய டைந்ததற்கான நிகழ்வுகள் பற்றியதாக அமைந்துள்ளது.
OH -06-)
F மகளிர் அபிவிருத்தி நிலையம்

அத்தியாயம்:5
கிழக்குமாகாணத்திலும் வன்னிப் பகுதியிலும் 2006 இல் யூலையில் மாவிலாறு மீட்பு நடவடிக்கை தொடங்கி மே 2009 வரையிலான நிகழ்வுகள் பற்றியதாக உள்ளது. இங்கு தமிழீழ விடுதலைப் புலிகள்வசம் அகப்பட்டுக்கொண்ட மக்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர் என்பதும், இது மனிதத்துவத்திற்கெதிரான போர் குற்றமாகவும் காட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம்:4
அரசுக்கும் விடுதலைப் புலிகட்கும் இடையில் இடம் பெற்ற
முரண்பாட்டின் தன்மை இவை தொடர்பாக எழுந்துள்ள சர்வதேச
மனிதாபிமான சட்டப் பிரச்சினைகள், தொடர்பாக ஆராய்கிறது.
அறிக்கையின் இரண்டாவது பகுதி குடிமக்கள் மீதான போரின் தாக்கங்கள் தொடர்பாக விளக்குகிறது.
அத்தியாயம்:5
போர் நடைபெற்ற போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மீறல்கள் பற்றி கூறுகிறது.
அத்தியாயம்:6
போரின் பின் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறிப்பாக மீள்குடியேற்றம், காணி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்கிறது.
அத்தியாயம் 7
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்நிர்மாண வேலைகள், நட்டஈட்டுக் கொடுப்பானவுகள் பற்றியதாக அமைந் துள்ளது.
O (-O7-)
மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 9
அத்தியாயம்:8
போரின் பின்னைய சமாதான நல்லிணக்க செயற்பாடுகள் பற்றியதாக உள்ளது. இப் பிரிவு இரண்டு பகுதிகளை உள்ளடக் கியுள்ளது. -
முதலாவது பகுதி முன்னைய அத்தியாயங்களில் விபரங் களினூடான இனங்காணப்பட்ட பிரச்சினைகள் நல்லிணக்க செயற்பாட்டில் எவ்வாறு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன என ஆராய்கிறது. இவ்வாணைக்குழு முக்கியமானதாக இனங்கண்ட 23 விடயங்கள் குறிப்பாக பாதுகாப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்ற கொலைகள் காணாமல்போயிருத்தல், கடத்தல், மீள்குடியேற்றம், வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி நிலைப்பாடு பற்றியதாகவும் அமைந் துள்ளது. இப்பிரதான பிரச்சினைகளைத் தாங்கிய விடயங்களை முன்வைத்து இவ்வாணைக்குழு சிபார்சுகளை முன்வைத்துள்ளது.
இரண்டாவது பகுதி ஆணைக்குழு முன்வைக்கும் சிபார்சுகளை செயற்படுத்துவதற்கு ஏதுவான வழிகாட்டல் மற்றும் உபாயங்கள் அடங்கிய சட்டகம் பற்றியதாகும். இங்கு மூவின சமூகத்தவரின் தமிழ்,சிங்கள, முஸ்லீம் குறைபாடுகள் எவ்வாறு முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருந்தன பற்றி காட்டுவதுடன் இவர் களது குறைபாடுகளை தீர்பதற்கான முய்சிகளும் ஒருவற்கொருவர் புரிந்து கொள்ளும் மனப்பாங்கு மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
அத்தியாயம்:9
ஒவ்வோர் அத்தியாயத்திலும் சார்பான அவதானிப்புக்களை கொண்ட சிபார்சுகளை முன்வைப்பதாக அமைந்துள்ளது.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, விடயங்கள், சிபார்சுகள் யாவும் நல்லிணக்கத்தை சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
O -O8-)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

s rara N O -09
போர் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதஉரிமை மீறல்களும் நலிவடைந்தோர் மீதான தாக்கங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அத்தியாயம் 5 விரிவாக மேற்கூறப்பட்ட விடயங்களை ஆராய்கின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்கழுவின் முன் ஏராளமாக, முன்வைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங் - களை விரிவாக ஆராய்ந்தறிந்த ஆணைக்குழு, சர்வதேச மனித
உரிமைகள் தொடர்பான முக்கிய ஏழு பிரிவுகளை குறிப்பாக
குடிசார் அரசியல் உரிமைகள், பொருளாதார சமூக கலாசார , சிறுவர் உரிமைகள் பெண்கள் உரிமைகள் இடம்பெயர்ந்தோர் உரிமைகள், இனரீதியான பாரபட்சம், சித்திரவதை தொடர்பாக சிபார்சுகளை பதிவு செய்துள்ளது. மனித உரிமைகள்
சட்டகத்துக்குள் வேலை செய்வதாயின் சமூகங்களுக்கிடையே
நம்பிக்கையை கட்டியெழுப்பி நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்ககூடிய மனநிலை மாற்றங்கள் அவசியம் என்பதை இவ்வறிக்கை வலியுறுத்துகின்றது. நல்லிணக்க செயற்பாட்டிற்கு முக்கிய அத் திவாரமாக அமைந்துள்ளதும் அடிப்படை மனிதஉரிமைகள், அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றை மேலும் ஊக்குவிக்ககூடிய பலமான அத்திவாரம் அமைக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் அவர்களது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு பொறுப்பானவர்கள் மக்களின் உளரீதியான, ஆன்மீக ரீதியான தேவைகட்கு மதிப்பளித்து செயலாற்றவேண்டும்.
இவ்வாணைக்குழு கண்டறிந்த பிரதான பிரச்சினைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* காணாமற்போனோர், தவறவிடப்பட்டோர் கடத்தல் * தடுத்துவைக்கப்பட்டுள்ளோர். * சட்டத்திற்கு புறம்பான ஆயுதக்குழுக்கள் * சிறுவரை படையில் சேர்த்தல்
m) மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 10
* நலிவடைத்தோர் - பெண்கள் சிறுவர் முதியோர் * மாற்றுதிறனாளிகள் * உள்நாட்டில் இடம்பெயர்தோர் * முஸ்லீம் சமூகம் வடக்கு கிழக்கு * பேச்சு சுதந்திர தகவல் அறியும் உரிமை * மதரீதியான சுதந்திரம் ஒன்றுகூடல் சுதந்திரம் * கடந்தகால ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான
தொடர் செயற்பாடுகள்.
நீண்டகாலமாக காணாமற் போனோர் குறிப்பாக ஆண்கள், பெண்கள் சிறுவர் சிறுமியர் தொடர்பாக வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து பலர் வருகை தந்து ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளனர்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையின் பின் இணைப்பில் இவ்வாறு காணாமற்போனோர் தொடர்பான தரவுகளும் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளும் 3596 ஆகவும் பாதுகாப்பு படையினருக்கு எதிரான முறைப்பாடுகள் 1018 ஆகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 664 ஆகவும் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 1839 ஆகவும் விடுதலைப் புலிகளில் காணாமற்போனோர் 75 ஆகவும் காட்டப்பட்டுள்ளது. குற்றத்திற்காக கைது செய்யப்பட்டோர் அவர்கள் குடும்பத்தினர் குற்றத்திற்காக காரணத்தையும் அவர்கள் எங்கு உள்ளனர் என்பதையும் அறிய விரும்புகின்றனர்.
போரின் இறுதிகட்டத்தின் போது இராணுத்தினரிடம்
சரணடைந்து இதுவரை காணாமற்போனோர். இளம்
பையன்களும் பெண்களும் இவர்கள் விடுதலைப் புலிகளின்
(1 Y OH -O-
* மகளிர் அபிவிருத்தி நிலையம்

படையணியில் இருந்து காணாமற் போனோராவர், இதுவரை
இவர்களது விவரங்கள் தெரியப்படவில்லை.
ஆணைக்குழுமுன் சாட்சியமளித்த பொதுமக்கள் பலர் சட்டத்திற்குப் புறம்பான ஆயுதகுழுக்களின் நடமாட்டம், வெள்ளை வானில் ஆட்களைக் கடத்தல் போன்ற நடவடிக் கைகள் பற்றி குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடப்பட்டுள்ளது
சிபுரர்குகள்
காணாமற்போனோர் தொடர்பாக இவ்வாணைக்குழு அணுக
வேண்டிய முறைபற்றி சுருக்கமாக குறிப்பிடுகின்றது.
回
அரசு காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஓர் சிறப்பு விசாரணை ஆணையாளரை நியமித்தல் வேண்டும். சட்டமா அதிபருக்கு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறுபட்ட முகவர்களிடமுள்ள தரவுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஓர் உள்நாட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மனிதஉரிமைகள் கல்வித்திட்டம் ஒன்று பாடசாலை மாணவர், இளைஞர் பாதுகாப்பு அலுவலர், பொலிஸ் ஆகியவற்றை
உள்ளடக்கியதாக இலங்கை பூராகவும் நடத்த ஏற்பாடுகள்
செய்யப்பட வேண்டும் தடுத்துவைத்தல், கைதுகள் யாவும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழே இடம்பெறுகின்றன. இவை ஓர் சுயாதீன ஆலோசனை சபைமூலம் கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப் படவேண்டும். காணாமற்போனோர் விவரங்கள் தெரியாதவரை அது அக்குடும்பத்தினருக்கு தொடர்சியான மன உளைச்சளை கொடுப்பதாக அமையும் ஆகவே இவை பற்றிய தகவல்கள் அவர்கள் குடும்பத்தவர்கட்கு தெரியப்படுத்தல் அவசியம்.
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 11
இவ்வாறான தகவல் அறியவேண்டிய உரிமை அவர்கட்குண்டு. தகவல் தெரியும் பட்சத்தில் அவர்கள் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இவற்றை மூடிமறைத்தல் நல்லிணக்கத்தை தொடரும் பாதைக்கு சிக்கலாக அமையும். காணாமற்பேனோர் தொடர்பாக கண்டறிவதற்கு பொருத்த மான முகவர் நிலையங்கள் அதாவது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புக்களின் உதவியோடு காணாமற் போனோர் தகவல்கள் பெறுவதற்கு முயற்சித்தல். சம்பந்தப்பட்ட குடும்பங்கட்கு காணாமற்போனோர் தொடர் பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுவதோடு காணாமற்போனோரது குடும்பப் பொறுப்பை சுமப்பதனால் அவர்கட்கு நிதி உதவி அறிவிக்கப்படல் வேண்டும். இவ்விட்யத்தில் அவர்கட்கு இழப்புக்கட்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதோடு இறந்தமையை உறுதிப்படுத்தி மரணச்சான்று வழங்குதலுக்கும் முன்னுரிமை அளித்தல் வேண்டும். 2006 ஆம் ஆண்டின் மரணப்பதிவு திருத்த சட்டத்திற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படல் வேண்டும். எவ்வித உத்தியோகபூர்வ பதிவுகளுமின்றி பலர் தடுத்து வைப்பதற்காக கூட்டிச் சென்றமை பற்றி பலவித முறைப் பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. ஒருவரை கைது செய்த இடம், பெயர் என்பன தொடர்பான பற்றுச்சீட்டு வழங்கவேண்டும். கைது செய்யப்பட்ட நபர் முறையாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் மாற்றப்படின் அது தொடர்பான விபரங்கள் குடும்பத்தவருக்கும் மனிதஉரிமை ஆணைக் குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும். நீதிபதி ஒவ்வொரு மாதமும் தடுப்பு முகாம்களுக்கு சென்று பார்வை இட வேண்டும். விடுவிக்கப்படுவது நீதிமன்று மூலமாக இடம்பெற வேண்டும்.
(-12--
மகளிர் அபிவிருத்தி நிலையம்

O (-13-)
தடுத்து வைக்கப்பட்டவர் பதிவு, மாற்றம் அதற்கான பதிவுகள் செய்யப்படாமல் விடுவது குற்றமாகும். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
குருத்து வைக்கப்பட்டோரின் பராமரிப்பு ஆணைக்குழுவினர் பல புனர்வாழ்வு நிலையங்கட்கு சென்று பார்வையிட்டனர். விடுதலைப்புலிகளின் படையணியில் சுயமாக சரணடைந்தவர்கள் மற்றும் கைதுசெய் யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11594 ஆக காணப்பட்டது. இவர்களுள் 840 பேர் புனர் வாழ்வளித்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையிட்டு ஆணைக்குழுவினர் திருப்தி கொண்டுள்ளனர்.
தடுத்துவைக்கப்பட்ட பல இடங்களுக்கும் இவர்கள் சென்றிருந்தனர். இவர்களோடு பேசியிருந்ததோடு இவர்கள் தொடர்பாக குடும்பத்தவர் ஆணைக்குழுவிற்கு பல பிரச்சினை களை சுட்டிக்காட்டியிருந்தனர். அவையாவன. * தடுத்துவைக்கப்பட்டோர் விபரங்கள் குறிப்பாக சுயமாக சரணடைந்தோர் விபரங்கள் குடும்பத்தவர் பெற முடிய வில்லை. - * மிக தூர இடங்களிலிருந்து தடுப்பு முகாம்களில் தங்கியிருப் போரை பார்வையிட வரும் குடும்பத்தவர்கட்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அப்படி கிடைத்தாலும் அது ஓர் குறுகிய 10 அல்லது5 நிமிடங்களாகவே உள்ளது. * தடுத்துவைக்கப்பட்டோர் தமக்கெதிரான குற்றம் யாது என
தெரியாது உள்ளனர். * தடுத்துவைக்கப்பட்டோர் சிலர் க.பொ.த.சாதாரண, உயர்தர
பரீட்சைக்குதோற்றமுடியாது உள்ளனர். * குடும்ப தலைவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப பட்டுள்ளமையினால் குடும்ப வாழ்வாதார நிலை பாதிப்படைந்
மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 12
துள்ளது. ஆகவே அவர்கள் குற்றத்திற்காக தண்டனை விதிக்க ப்படவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமது வாழ்வாதார, மீள்கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு இது உதவியாக அமையும்.
சிபார்குகள்
தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்பாக ஆணைக்குழு பின்வரும் சிபார்சுகளை முன்வைத்துள்ளது.
தடுத்துவைக்கப்பட்டள்ள குடும்ப அங்கத்தவர்கள் எங்கு உள்ளனர் என்பதை அறியும் உரிமை அவர்கட்குண்டு. ஆகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விபரங்களை பெறக்கூடிய பெயர் விபரங்கள் அடங்கிய ஓர் மைய நிலையம் அமைக்கப்பட வேண்டும். அங்கு தடுத்து வைக்கப்பட்டவர் பெயர், தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம், மாற்றப்பட்ட இடங்களின் தகவலகள் பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
தடுத்துவைக்கப்பட்டவரின் அடுத்த நெருங்கிய உறவினருக்கு அவர்களைப் பார்க்கும் உரிமை உண்டு. ஆணைக்குழு, தடுத்துவைப்பவரை சென்று பார்ப்பதற்கு வசதியாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சமூக அமைப்புக்கள் வசதிகளை, அதாவது போக்குவதரத்து வசதிகளை அந்நபருக்கு செய்து கொடுக்க வேண்டும்.
தடுப்புக் காவலில் உள்ளவர்கள் அதற்கென அதிகார மளிக்கப்பட்ட இடங்களிலேயே தங்கவைக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய சட்ட ரீதியான வசதிகள் யாவும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் சிலர் சிறப்பு தேவைகள்
/エ) O 一直4一
மகளிர் அபிவிருத்தி நிலையம்

உடையவராக காணப்படுவர். குறிப்பாக சிறுவர், காயப்பட்டோர் மருத்துவ வசதி தேவைப்படுவோர், உள பாதிப்புக்குள்ளானோர் இவர்களுக்கான வசதிகள் செய்யப்படுவதோடு குடும்ப அங்கத்தவர்களை சந்திப்பதனால் அவர்களது உளபாதிப்புக்கள் குறைவடைய வழி ஏற்படும்.
விடுதலைப் புலிகளினால் சேர்க்கப்பட்ட சிறுவர் இவர்கட்கு கல்வி வசதிபாதிக்கப்பட்டமையினால் இவர்கட்கு கல்வி கற்க கூடிய வசதிகள் செய்யப்படவேண்டும்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைத்துக் கொள்வதற்கான சமூக நல திட்டங்களை செயற்படுத்துவதற்கு தன்னார்வ அமைப்புக்களுக்கு அரசு அதிகாரம் அளிக்கவேண்டும்.
தனியார் துறைகளில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய துறைகள் அறிமுகம் செய்யப்பட்டு இவ் இளைஞர் எதிர்காலம் வளம் பெற உதவவேண்டும்.
இவ் ஆணைக்குழு, தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி நல் அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு திட்டங்கள் தொழிற்பயிற்சிகள் என்பன சிறந்த நல்லிணக்கத்திற்கு உதவுதாக கருத்து தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் படையணியில் சேர்க்கப்பட்ட இளைஞர் சிலர் கல்வியை இடைநிறுத்தியவர்களாக உளர். இவர்கள் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆகவே இவ்வாறான இளைஞர்கட்கு தனிப்பட்ட ரீதியிலான விசாரணைகள் நடத்தப்பட்டு இவர்களது உரிமைகளை எவ்வாறு சிறந்த முறையில் பேணலாம் என ஆணைக்குழு உணர்கின்றது. ஆகவே தனித்தனியாக விசாரணை கள் மேற்கொண்டு இவர்கட்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். O G-15-0
HiO மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 13
8ே சட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்கள்: வடக்கு கிழக்கில்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சட்டத்திற்கு புறம்பான ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் தடையாக உள்ளதை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. இந்நடவடிக்கையை தடுப் பதற்கு அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஆணை க்குழு சிபார்சு செய்துள்ளது. 8ே சட்டத்திற்குப்புறம்பான ஆயுதக்குழுக்களின் நடவடிக்கை யினால் கடத்தல், நிதி சேகரித்தல், கொலை போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதும் இதனால் மக்கள் மத்தியில் பயங்கரமான சூழல் நிலவுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களால் கடத்தப்பட்டோர் எங்கே என்பது தெரியாதுள்ளது. சிலர் இறந்திருக்க கண்டறியப்பட்டுள்ளன. இச்செயற்பாடகள் மக்களின் அடிப்படை சுதந்திரம் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும். மக்கள் தமது பாதுகாப்பை அரசிடமிருந்தே எதிர்பார்கின்றனர். 8ே ஆணைக்குழுவானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியோரிடமிருந்து இவை தொடர்பான விபரங்களை கேட்டுள்ளது. 8ே மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக சரியான விசாரணைகள் மேற்கொண்டு இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான ஆயுதக்குழுக்களின் குற்ற செயற்பாடுகள் சான்றா தாரங்களுடன் நிரூபிக்கப்படல் வேண்டும். 8 இவ்வாறான ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்கள்
களையப்படவேண்டும். 8ே ஆணைக்குழுவானது இவ்வாறான குற்றசெயற்பாடுகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள், கருணா குழு ஆகியவர்களிடம் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். இக்குழுக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனால் ,
O Ola- mO
-16-- மகளிர் அபிவிருத்திநிலையம்

விசாரணைகள் முடக்கப்படுவதனால் உண்மை கண்டறிவதில்
தடங்கல் உள்ளதாக காட்டுகின்றது.
சிறுவரை படையில் சேர்த்தல்
இப்போரானது சிறுவர் உரிமைகளை பரந்தளவில் மீறி
யுள்ளதாக ஆணைக்குழு கருதுகின்றது.
விடுதலைப் புலிகள் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவரை போருக்காக இணைத்துக் கொள்வது அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. யூனிசெப் நிறுவனம் 6259 சிறுவர்களை பெப் 2002 மாாச் 31 2008 சமாதான ஒப்பந்த காலம் வரை படை யணியில் சேர்த்துள்ளதாக பதிவுசெய்துள்ளது.
பிரிந்து சென்ற கருணா குழுவினரும் கிழக்கில் சிறுவரை
படையில்சேர்த்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சமாதான ஒப்பந்த காலப்பகுதியில் ஐ.நா. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமதுமுயற்சியினால் இவ்வாறு சேர்க்கப்பட்ட சிறுவரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இம்முயற்சி தமிழீழ விடுதலைப்புலிகளின் கடும் போக்கினால் கைகூடவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் 12-13 வயது சிறுவரை பலாத்காரமாக படையணியில் சேர்த்துக் கொண்டு போரின் முன்னரங்குகளில் விட்டுள்ளனர். தப்பி ஓட முயன்ற சிறுவர் பலர் மீளவும் பிடிக்கப்பட்டனர். இவர்களது பெற்றோர் சுடப்பட்டு காயப்பட்டனர். அல்லது இறந்தனர். போரின் இறுதி கட்டத்தில் பாடசாலை மாணவர்கள் படையணியில் சேர்க்கப்பட்டு குறுங்கால ஆயுதப்பயிற்சியுடன்
போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.
sey TY
-17- HO -- மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 14
சிறுவர் புனர்வாழ்வு தொடர்பாக அரசின் திட்டங்கள் பல சிரமமான விடயங்களை உள்ளடக்கியிருந்தன.
&GOGUUGGO
உளநல புனர்வாழ்வு அவர்கள் பிரச்சினைகளை ஆன்மீக ரீதியில் அணுகுதல் சமூக ஒருங்கிணைப்பு மூலம் தமது குடும்பத்தினருடனும், சமூகத்துடன் இணைத்தல். தொழிற் பயிற்சிகள், கல்வியை இடைநிறுத்தியோருக்கு வழங்குதல். - புனர்வாழ்வளிக்கப்பட்ட 18 வயதை அடைந்த சிறுவர் பலர்
3
{
3
€
வேறு நாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
சிபார்சுகள்
சிறுவர்கள்படையணியில் சேர்க்கப்பட்டமை தொடர்பாக
விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கட்கு நீதி கிடைக்கும் வகையில்
சட்ட நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும்.
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மற்றும் யூனிசெப் இவர்கட்கிடையிலான செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறான சிறுவர்களை கண்டறியும் பல் செயற்பாட்டு செயலணி ஒன்று அரச சார்பில் ஏற்படுத்தப்பட்டு சிறுவர்களை கண்டறிதல் வேண்டும்.
அதேபோல மக்கள் பிரதிநிதிகள் யூனிசெப் உதவியுடன் குடும்ப அங்கத்தவர்களை கண்டறிந்து பிள்ளைகளை அவர்களோடு இணைக்ககூடிய மீள் இணைப்பு பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
O {-18-H
HO மகளிர் அபிவிருத்தி நிலையம்

கல்வியை இடைநிறுத்திய சிறுவர்கட்கு கல்வி, தொழில் பயிற்சிகள் ஏற்பாடு செய்தல வேண்டும்.
முக்கியமாக விடுதலைப்புலிகள் என சந்தேகப்படுபவர்களை ஒவ்வொருவராக விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்க முயற்சிப்பதோடு இல்லாவிடில் விடுதலை செய்தல் வேண்டும்.
நலிவுற்ற கவனிப்பு தேவைப்படும் குழுக்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுள் பல நலிவுற்ற குழுக்கள் சிறந்த பராமரிப்பு தேவைப்படுபவராக உள்ளமையை இவ்வாணை க்குழு இனங்கண்டுள்ளது. பெண்கள், சிறுவர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், இடம்பெயர்ந்தோர் ஆகியோர் இவர்களுள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இக்குழுக்கள் சமூகத்தில் நலிவடைந்தோராக காணப் படுவதனால் நல்லிணக்க செயற்பாடுகள் பரந்தளவில் முன்னி லைப்படுத்தப்படும் போது, இவர்கள் தவறவிடப்படுகின்றனர். இவர்கள் தமக்கு ஆதரவானவர்களை இழந்த நிலையில் தமது தேவைகட்காக குரல் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆகவே இவர்களுக்கு போரின் பின்னைய அபிவிருத்தியில் முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும்.
சிபார்சுகள்
ஓர் நிலையான தீர்வாக இந்நலிவுற்ற குழுக்களுக்கு முகவர்கள் இணைந்த ஓர் செயற்பாடு தேவை என்பதை ஆணைக்குழு சிபார்சு செய்வதோடு ஓர் உள்ளக முகவர் செயற்பாட்டு அணி உருவாக் கப்பட்டு இவர்களுக்குரிய பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் சிபார்சு செய்துள்ளது. O நலிவுற்றோர் தொடர்பாக செயற்படக் கூடிய திறமை வாய்ந்த
O (-19-)-
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 15
செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகத்திலிருந்தும், சர்வதேச அமைப்புக்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டு இவர்கட்கு உதவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இக்குழுக்கள் சமூகத்துடனும், குடும்பங்களோடும் இணையக் கூடிய வகையில் செயற்பாடுகள் அமையவேண்டும்.
பெண்கள்
சமூகத்தில் மறைக்கப்பட்ட பிரிவினராக, குரல் கொடுக்க முடியாத குழுக்களுக்கு குரல் கொடுக்க ஆணைக் குழு முன்வந்துள்ளது. குரல் கொடுக்க முடியாது அப்பாவிகளாக வாழ்ந்து வருபவர்கள் மத்தியில் வன்செயல்கள் பல துன்பங் களையும் துயரங்களையும் ஏற்படுத்துகின்றது. இவர்களது தேவைகள் அடிப்படை உணவு, இருப்பிடம், வருமானம் பெறும் செயற்பாடுகள் என்ற நிலைக்கு செல்கின்றது. போரின் பின்னைய பிரச்சினைகளாக ஆண்துணையற்ற பெண்களும், பெண்களாக தனியாக குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் குடும்பங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்குடும்பங்கள் தமது இளவயதினர், முதியோர், காயப்பட்டோரைக் கவனிப்பதற்குப் பெண்களையே நம்பியுள்ளனர். இவ்வாறான குடும்பங்கள் 59,501 உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
* வடக்கில் காணி உரிமைகள் முக்கியமானது. தேசவழமை சட்டமானது, ஆண்களுக்குரிய உரிமைகளை வலியுறுத்த கின்றது. ஆகவே இக்குடும்பங்களில் ஆண்கள் இல்லாத காரணத்தினால் காணி உரிமை தொடர்பில் தீர்மானங்களை பெண்களுக்கு எடுக்க முடியாத நிலை உள்ளது.பெண்கள் தமது உரிமைகளை நிலைநாட்டவதற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாமையினால், போரின் பின்னைய நிலைமைகளில் காணி தொடர்பாக பல சிக்கல்களை இவர்கள் எதிர்நோக்குகின்றனர். ஆண்களின் இழப்பு நம்பிக்கை தருவதாக இல்லை. இவர்கள் OH G-20)
Da56fjÜ SÐLîloî5ğögó Jól6OD6ou uLib

இறந்திருந்தால் மரண சான்றிதழ் வழங்குவதன் மூலம் காணி உரிமைகள் பெண்களுக்கு மாற்றுவதற்கு இடமுண்டு. பெண்கள் தமது சொந்த பாதுகாப்பு இன்மையால் பல சிரமங்கட்கு உள்ளாகின்றனர். மீள்குடியேற்ற பகுதிகளில். பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. கூடுதலாக கடத்தல் சம்பவங்கள், கைது செய்தல் சட்ட விரோதமாக ஆட்களை கைது செய்தல் இவை போன்ற சம்பவ ங்கள் பாதுகாப்பற்ற தன்மையை பெண்களுக்கு உருவாக் கியுள்ளது.
மன்னாரிலிருந்து பிரதிநிதிப்படுத்திய சமயத்தலைவரின் கூற்றுப்படி கணவனை இழந்தவர்களின் நிலை, போரின் தாக்கங்கள் சவால்களுக்கு உளப்பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் சார்பாக பிரதிநிதிப்படுத்தி அறிக்கைகள் கையளித்தோர், போர் நடைபெற்ற இடங்களில் பெண்களுக் கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டி யுள்ளதோடு இப்பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு அதிகமான பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் ஆணைக்குழுவினர் நல்லிணக்க மேம்பாட்டுச் செயற்பாடுகளில் பெண்களின் உள்ளாந்த சாதகமான பங்களிப்பின் அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் பெண்கள் ஆணைக்குழு முன் தமது முறைப்பாடு களை மிக வலிதாக எடுத்துக்காட்டியமையினை ஆணைக் குழு பாராட்டியுள்ளதோடு இவ்வாறான பெண்கள் மிக ஆழமான ஓர் பெண்கள் வலையமைப்பை உருவாக்கி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் காட்டியுள்ளனர். பல பெண்கள் தமது குடும்ப அங்கத்த
ー{-21-}
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 16
வர்களை இழந்த குடும்பங்கள் அவர்களது ஆன்மீக, சமய கடமைகளை ஆற்ற இடமளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிபார்சுகள்
பெண்கள் தொடர்பானசகல பிரச்சினைகளும் ஆராயக் கூடிய
உள்ளக முகவர் செயலணி ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
பிரஜைகள் குழுவினர் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து பெண்கள் சிறுவர் உடனடித் தேவைகள் கவனித்து வரு கின்றனர். இம்முயற்சி மேலும் வலுப்படுத்துவதோடு சமய நிறுவனங்கள் இக்குடும்பங்களின் ஆன்மீகத் தேவைகளை வலுப்படுத்தக் கூடிய வகையில் ஊக்குவித்தல் அவசியம். போர் காலங்களில் பெண்களின் கல்வி தடைப்பட்டிருந்தமை அறியப்பட்டு இதனை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
சிறுவர் இனங்காணப்பட்ட அவதானிப்புக்களும், சிபார்சுகளும்
ஆணைக்குழுவானது போரினால் பாதிக்கப்பட்ட சிறுவரின் முக்கிய தேவைகளை இனங்காணப்பட்டுள்ளதுடன் இவற்றுள் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களாக கல்வி சுகாதார சேவைகளை முக்கியப்படுத்தியுள்ளது. சிறுவர் போரின் பாதிப்புக்களினால் மனநிலை குன்றியவர் களாகவும் உளட்பாதிப்புக்குள்ளானவர்களாகவும் உள்ளனர். இவ்வாறான சிறுவரை சமூகமட்ட குழுக்கள் இனங்கண்டு அவர்கட்குரிய கல்வியை வழங்க உதவ வேண்டும். இவ்வாறான சிறுவர்கட்கு உதவுவதற்கு அரச நிறுவனங்கள் தயாராக இருந்த போதிலும் சமூகத்தில் இவர்களை இனங்கண்டு உதவுவதற்கு சமூக அமைப்புக்கள் மகளிர் அமைப்புக்கள் முன்வரவேண்டும்.
-22-)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

3 போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் வாழும் சூழலில் சிறுவர்
கட்கு ஏற்ற வகையிலான சூழலை உருவாக்குவதற்கு அரசு, உள்நாட்டு நிர்வாக அமைப்புக்கள் சமுதாய மட்ட, சமூக அமைப்புக்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
முதியோர் அவதானிப்புக்களும் சிபார்சுகளும்: வயது முதிர்ச்சி காரணமாக இயங்க முடியாத நிலையிலுள்ள முதியோர் போர் காலங்களில், கவலையீனமாக விடப்பட்டுள்ளனர். இவர்களது தேவைகள் கவனிக்கப்படுவது அவசியம்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் முதியோர்களது தேவைகள் அவர்கட்கு ஆதரவு வழங்குவதில் கவனம் தேவை. இம்முதியோர் இளையோரில் தங்கியிருப்பவராக இருந்து அவர்கள் போரினால் இழப்புக்களை சந்தித்த போது ஆதரவு அற்றவர்களான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் குடும்பங்களில் இளைய பெற்றோர் போரில் இறந்த நிலையில் அவர்களது சிறுபிள்ளைகளை பராமரிப்பும் பொறுப்பும் முதியோரைச் சேர்ந்தது.
சிவில் சமூக அமைப்புக்கள் இவர்கட்குரிய தேவைகளை இனம்கண்டு ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.
சமய நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகளிற்கு ஆன்மீக ரீதியான உதவிகளை வழங்க வேண்டிய பாரிய பொறுப் புண்டு.மாவட்ட ரீதியாக ஓர் வலையமைப்பை உருவாக்கி முதியோர் தேவைகளுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கு பராமரிப்பும் வழங்குதல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமற் போனோர் அவர்கள் குடும்பங்களிற்கு பொறுப்புடன் சேவையாற்றுவதற்கு சமூகமட்ட அமைப்புக்கள் முன்வர வேண்டும். அத்துடன் இவ்வாறான உதவிகளை அரசாங்கமும் இவர்கட்கு வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
O H-23
மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 17
மாற்றுத்திறனாளிகள்
அவதானிப்புக்களும் சிபார்சுகளும்
வடக்குக் கிழக்கில் பெருமளவில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்கள் குடும்பப் பராமரிப்பில் உள்ளனர். இவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதோடு இவர்கள் பிரதான உழைப்பாளிகளாக குடும்பப் பொறுப்பை சுமக்கும் நிலையில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சிலருக்கு பராமரிப்பிற்கு திறமை வாய்ந்தவர்களின் தேவை யுள்ளது. இவற்றை வழங்குவதற்கு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவ அழைக்கப்படலாம். கிளிநொச்சி பிரதேசத் திலிருந்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தவர்கள் இவ்வாறான மாற்றுத்திறனாளிகள் அரசசார்பற்ற உள்ளுர் சர்வதேச அமைப்புக்களின் உதவியை பெறமுடியாதுள்ளது. ஏனெனில் அவ்வாறான அமைப்புக்களை இயங்குவதற்கு இங்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.
ஆணைக்குழுவானது இவர்களது குடும்பங்கட்கும் மாற்றுத் திறனாளிகட்கும் அரசாங்கம் தேவையான பொருளாதார உதவிகள் வழங்குவதற்கு முன்வர வேண்டும் என குறிப்பிட்டு ள்ளனர். இவர்களது கலாசார ஆன்மீக தேவைகள் பிரதான மாக கவனிக்கப்படவேண்டியவையே. இவ்வகையில் சமூக. சமய அமைப்புக்கள் முக்கிய பங்கை ஆற்றமுடியும். இவர் களுக்கு உதவிகளை வழங்குவதற்கு சமூக அமைப்புக்கள் சர்வதேச அமைப்புக்களிடமிருந்து புலமை சார் ஆற்றல் உள் ளோரது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் தம்மை ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக் கக் கூடிய வகையிலும் சமூக அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளைப் பெறும் வகையிலும் சமூக
O -24
LD56fi &Leib55560)6OuJub

குழுக்களாக ஒழுங்குபடுத்துவதற்கு அதிகாரிகள் ஊக்கப் படுத்தல் வேண்டும். ஐ.நா தீர்மானங்கட்கேற்ப அரசாங்கம் தேசிய சட்டத்தை ஏற்படுத்துமாயின் மாற்றுத்திறனாளிகட்கு சமூக பலமும் சர்வதேச ஆதரவும் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.
உள்நாட்ழல் இடம் பெயர்ந்தோர்
கடந்த 20 வருட காலமாக போரின் பல்வேறு கட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் இடம் பெயர்ந்த மக்களின் வேறுபட்ட தேவைகள் குறிந்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது இவ்வறிக்கை எழுதும் போது போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும் பாலானோர் மீளக் குடியமர்த் தப்பட்டுள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பும் வகையில் கவனம் செலுத்த வேண்டும். விடுதலைப்புலிகளின் தலையீட்டினால் இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்களது தேவைகளும் இனம் காணப்பட்ட வேண்டும். தென் இந்தியாவிலிருந்து திரும்பி நாட்டிற்கு வருபவர்களது தேவைகளும் கவனிக்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 20 வருடங்கட்கு மேலாக இடத்திற்கிடம் இடம்பெயர்ந்து தமது சொந்தஇடத்தில் வாழமுடியாது உள்ளனர். அவர்கள் ஓர் நிலையான வாழ் விடத்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதும் என்ற நிலையில் உள்ளனர். காரணம் தமக்குச் சொந்தமாக ஓர் வீடு கிடைக்கும் என்று பல காலமாக காத்திருந்து ஏமாந்தவர் களாகவே உள்ளனர்.
இடம் பெயர்ந்துள்ள மக்கள் தாம் துன்பகரமான வாழ்க்கை வாழ்வதாகவும் நிரந்தரமற்ற வீடுகளில் நீண்ட காலம் தங்கியி ருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர். வீடு கிடைப்பதற்கு ஓர் திட்டவட்டமான காலக்கெடு எதுவும் இல்லை. அதிகாரி களும் அரசியல் வாதிகளும் இப்பிரச்சினைகளை அவர்களைப்
s er as `N
ー25ー HO {-25-リ மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 18
பார்க்க வரும்போது சாதரணமாகவே கருதுகின்றதோடு உலர் உணவு பொதிகள்தொடர்ந்து வழங்குவதற்கு உறுதி மட்டும் அளித்துச் செல்கின்றனர். இடம்பெயர்ந்த மக்களது பிரச்சினை போரின் பின்னைய கால நல்லிணக்க செயற்பாட்டில் முக்கிய சவாலாகவே உள்ளது. புத்தளம் பகுதிக்கு ஆணைக்குழுவினர் விஜயம் செய்த போது, வடக்கிலிருந்து சுமார் 75000 முஸ்லீம் மக்கள் விடுதலைப் புலிகளினால் மிக ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் 1990 ஒக்ரோபரில் இருவார காலத்துள் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
போர்கால வரலாற்றில் இவ்வாறு முஸ்லீம்கள் வெளியேற்றப் பட்டமை குறித்து முக்கியமாக கருதப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர். அத்துடன் விடுதலைப் புலிகளினால் இவ்வாறு திட்டமிட்ட முறையில் முஸ்லீம்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டமை குறித்து அரசும் போதிய கவனம் செலுத்தவில்லை. உதாரணமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் கள் ஓர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கும்படி அரசைக் கேட்டிருந்தும் அரசு அதனை நிறைவேற்றவில்லை.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சமூகத்தினர்
தமிழ் பேசுபவர்களாக இருந்த போதிலும் சிங்கள மொழி நிர்வாகத்தின் கீழ் வாழ வேண்டி ஏற்பட்டுள்ளது. ஓர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த 50,000 பேர் மிக வறிய நிலையிலும் வளங்களற்றும் உள்ளனர். 20 வருட காலமாக அரச உதவியுடன், உலர் உணவையே நம்பி வறியநிலையில் இவர்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் வடக்கு வாழ் மக்களாக பதிவு செய்துள்ளதனால் புத்தளம் மாவட்டத்தில் அரச சேவைகளை பெற முடியாது ள்ளது. வட மத்திய மாகாண சபை கட்டமைப்புள் அடங்கும். அரச பதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
s raze `N -26
மகளிர் அபிவிருத்தி நிலையம்

வன்முறைச் சம்பவங்கள் இல்லாதிருந்தபோதிலும் வடக்கு முஸ்லிம்களுக்கும் அங்கு வாழ் மக்களுக்குமிடையில் முறுகல் நிலை இருந்துகொண்டே உள்ளது. அங்கு வாழ் மக்கள் தமது வளங்களை பல காலத்திற்கு இவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. முஸ்லிம் சமூகத்தவருக்கு உலர் உணவுப் பொதிகள் கிடைப் பதனால் குறைந்த ஊதியத்திற்கும் வேலை செய்கின்றனர். இந் நிலை தொழிற் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வடமாகாண முஸ்லீம் மாணவர்கட்கு புத்தள மாவட்ட பல்கலைக்கழக ஒதுக்கீட்டில் கூடிய பங்கு வழங்கப்
பட்டதனால், அங்குள்ள மாணவர் மத்தியில் குழப்பநிலை
ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இல்லாது பெயர்ந்தவர்கள் தொடர்பாக அவர்களை மீள்குடியமர்த்துவதில் திட்டவட்டமான ஓர் கொள்கை காணப்படவில்லை. அண்மையில் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் சுயமாக தமது சொந்த இடத்திற்கு திரும்பிய போதிலும் பல அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சிமார்சுகள்
G)
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கட்கான மீள்குடியேற்றம் பெருமளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டவர்கட்கான சிறப்பான தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும். பல மீளக்குடியேறிய மக்கள் தற்காலிக குடிசைகளில் வாழ்வதனால் வீட்டு வசதிகட்கான திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.தன்னார்வ குழுக்கள், மற்றும் தனியார் உதவித் திட்டங்கள், சிரமதான முயற்சிகள் இதற்காக ஊக்குவிக்கப்பட வேண்டும்.
TYحسoےf
-27- O *- மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 19
காணி தொடர்பான சட்டரீதியான உரிமை தொடர்பாக சிக்கலான பிரச்சினை உள்ளது. இதனை அரசு தீர்ப்பதற்கு முயலவேண்டும். இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களது நடமாடும் சுதந்திரம் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில் மதிப்பளிக்கப்படுதல் வேண்டும். பாதுகாப்பு வலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், தற்போதை இராணுவ பிரசன்னம் ஆகியன மக்களுக்கு பீதியையும் அவநம்பிக்கையையும் அளிப்பதாக இருத்தல் கூடாது. பாதுகாப்ப தொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்பு வதன் மூலமே உண்மையான நல்லிணக்கத்திற்கான பாதை உருவாக்கப்படும். இந்தியாவில் இருந்து திரும்பி வரும் மக்கள் எந்தவித பாரபட்சமுமின்றி மக்களோடு ஒன்றிணைந்து வாழக்கூடிய வகையில் ஏற்படுத்தப்படவேண்டும். இந் நடவடிக்கை தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் ஓர் இரு நாடுகள் சார் ஆலோசனை செயற்பாட்டை முன்வைத்தல் அவசியமெனவும் ஆணைக்குழு சிபார்சு செய்கின்றது. இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களுக்கும் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசு ஓர் மாறாத கொள்ளையினை வகுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் குடியேறியுள்ள மக்களோடு இணைந்து வாழக் கூடிய வகையில் அவர்கள் தமக்கு ஏற்றதான தீர்மானங்களை எடுப்பதற்கு சுதந்திரம் வழங்க வேண்டும். முஸ்லீம் இடம்பெயர்ந்தோர் தொடர்பான அரச கொள்கை யில் அவர்கட்குரிய உதவிகள் தொடர்பாகவும் உள்ளடக்க ப்பட்டிருத்தல் வேண்டும். - இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கான ஓர் கருத்துக்கள் உள்ளட க்கிய அரச கொள்கை வகுக்கப்படுவதற்கும், இந்த பரிசீலித்து
-N-9 SQR- O
-28-) மகளிர் அபிவிருத்தி நிலையம்

நிரந்தர தீர்வு எடுக்கப்படுவதற்கும் ஏற்ப ஓர் சிற்ப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
நல்லிணக்கத்திற்கான அணுகுமுறைகளும் பெறுமானங்களும்
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்காக அமைக்கப் பட்ட இவ் ஆணைக்குழு தனது ஆய்வு அறிக்கையின் சகல பிரிவுகளிலும் நல்லிணக்கத்திற்கான சிறந்ததோர் அணுகுமுறை யை வரைந்துள்ளது. போரின் நடத்துகையில் நடந்த அசம்பாவித ங்களை விசாரணை செய்வதோடு மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் வழங்கல், மனவடுக்கள் ஆற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றோடு சமதாதனத்தை நோக்கி நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றிய நம்பிக்கையை இவ்வறிக்கை வலுவாகக் காட்டியுள்ளது.
அதிகார பரவலாக்கம் என்பது மக்களின் முழுமையான கருத்துச் சுதந்திரக்தோடு கூடிய செயற்பாடாக அமைய வேண்டுமே யன்றி அரசியல் வாதிகளின் அதிகார ஒழுங்கமைப்புள் முடித்து விடக் கூடாதென ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
போர் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளும் நல்லிணக்கச் செயற்பாட்டில் அவற்றின் தாக்கங்களும்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையின் எட்டாவது அத்தியாயம் நல்லிணக்கம் பற்றியதாகும். நல்லிணக்க செயற்பாட்டில் தாக்க த்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளாக 23 பிரச்சினைகளை இவ்வறிக் கையில் ஆணைக்குழு முன்வைத்துள்ளது. இப்பிரச்சினைகள் 3 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. போர் நடைபெற்ற போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், காணாமல் போதல் போன்ற குற்றங்கள் தொடர்பானவை.
s erra N O -29
-O மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 20
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகள். மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம், வாழ்வாதாரம், அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள்.
ஆணைக்குழுவின் அறிக்கையில் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.
01.
02.
03.
போர் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,
காணாமற் போனமை தொடர்பான முறையீடுகள்:
* பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மரணம், மக்கள் காயப்பட்டமை சொத்துக்கள் இடிபாடு தொடர்பான விபரங்கள்
* சரணடைந்த போது காணாமற் போன குடும்ப அங்கத்த
வர்கள் தொடர்பானவை
*போர் காலத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடு
போர் காலத்தில் சட்டம் ஒழுங்கு தொடஉபான மனித உரிமை மீறல்கள்: * வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கு தொடர்பான நிலமையும், இப்பகுதிகள் தொடர்ந்து ஆயுதக் குழுக்கள் வசம் இருந்தமை - * தற்போதைய பாதுகாப்பு படைகள் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தில் த9ைலயிடல், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடல், அரச கட்டடங்கள், தனியார் வசிப்படங்களில் தங்கியிருத்தல் *நஷ்டஈடு * நலிவடைந்த பகுதியினரான கணவனை இழந்த பெண்கள்,
மாற்றுத் திறனாளிகள், சிறுவர், முதியோர் பற்றியவை. மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம், வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் * மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினைகள்
for
-3O
- மகளிர் அபிவிருத்தி நிலையம்

* வதிவிடம், கல்வி வடக்குக் கிழக்கில் முறையான கல்வி பெறமுடியாத சிறுவர், குறிப்பாக கிராமப் புறங்களில் * கிராமப் பகுதிகளில் வைத்திய போக்குவரத்து
பிரச்சினைகள் * போர் காரணமாக எழுந்துள்ள காணிப்பிரச்சினைகள் * தற்போதைய உயர் பாதுகாப்பு வலையமும மீள்குடியேற்ற
த்தில் அதன் தாக்கமும் * கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பான பிரச்சினைகள் * வடக்கு கிழக்கு அபிவிருத்திநிலமை * நல்லாட்சியில் மக்கள் பங்களிப்பு * மாகாண அதிகாரிகளின் பங்கு * வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை மீள
ஆரம்பித்தல் * போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளோடு அருகிலமைந்த
சிங்கள கிராமங்களின் மக்கள் பிரச்சினை * இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் தொடர்பானவை * போரின் பின்னைய வெளிநாடுகளில் வசிப்போர் தொடர்
பான பிரச்சினைகள்
இங்கு காட்டப்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றி ற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆணைக்குழு விபரித்துள்ளது.
| இங்கு காட்டப்பட்ட பிரச்சினைகளிற்கு அப்பால் நல்லிணக் கத்திற்கான அடிப்படைத் தேவைகளையும் அவற்றை வழிநடத்து வதற்கு தேவையான இலக்குகள் பெறுமானங்களும் முக்கியம் என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளது.எடுக்கப்பட வேண்டிய
செயற்பாடுகள் ஒவ்வொன்றும் நம்பிக்கையை வளர்த்து காயப்பட்ட மனங்களை ஆற்றி சமூகத்தினரின் தொடர்புகளை மீளகட்டி யெழுப்புவதாக அமைய வேண்டும். காயப்பட்ட மனங்களை
TY O -3- HO
V மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 21
ஆற்றும் செயற்பாட்டில் பாதிக்கப்பட்டோர் மீது இரக்கம் காட்டுதல், பராமரிப்பு அரவணைப்பு என்பன அவர்கள் துன்பங்களைப் போக்குவதற்கு உறுதுணையாக அமையும்.
இவ்வறிக்கையின் பெறுமான சட்டகத்துள் உள்ளடங்கும் விடயங்களாவன
உணமைத்தன்மை:
நல்லிணக்கத்திற்கு முதற் தேவை விடயங்களை உண்மைத் தன்மையுடன் ஆராய்வது. போரின் மக்கள் பட்ட துன்பங்கள், மக்கள் மரணம், தவறவிடப்பட்டவர்கள், காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்படுவது முக்கியமாக தற்போது இருப்பவர்களது மனநிலையில் தெளிவான தன்மையை ஏற்படுத்தி தவறு செய்தவர்கள் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டிற்கு வழிவகுக்கும். -
வெளிப்படைத்தன்மை:
உண்மை அறிவதற்கு வெளிப்படைத் தன்மையும் அவசியம். ஆணைக்குழு தனது செயற்பாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட முறை களில் உண்மைத்தன்மை வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்களை சந்தித்தல், போர் நடைபெற்ற பகுதிகளில் விசாரணைகள் நடத்தியமை, தமது செயற்பாட்டில் சுதந்திரமான அணுகுமுறைகள் ஆகியனவாகும். சரியான தகவல்களை வழங்குவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க முடியுமென ஆணைக் குழு அறிக்கை கூறுகிறது. நீதியும் பொறுப்புக் கூறலும்:
ஆணைக்குழுவின் அறிக்கையானது பொறுப்புக் கூறல் தொடர்பாக மூன்று வேறுபட்ட அம்சங்களை முன்வைத்துள்ளது.
வி போர் தொடர்பாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை,
O -(-32-)
* மகளிர் அபிவிருத்தி நிலையம்

போர் காரணமாக இடம்பெற்ற குறிப்பிடத்தக்க குற்றச் செயல்கள் என்பன. மி போரின் பின்னைய நிலமையில் மனித உரிமைகளின்
அவதானிப்புக்கள் - மி போரின் மூலகாரணங்கள் மற்றும் போரை விரிவுபடுத்த ஏதுவான அரசியல் செயற்பாடுகளின் பொறுப்புக் கூறும் தன்மை
முதலாவது விடயம் தொடர்பாக அதாவது போர் தொடர்பாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஆணைக்குழு நடைமுறையிலுள்ள சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஆராய்ந்து அங்கு எழுந்த பிரச்சினைகளை பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் ஆராய்ந்துள்ளது. இவ்வரையறைக்குள் சில சிறப்பான விடயங்ளை ஆராய்ந்தறிந்ததன் மூலமாக விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அலுவலர்கள் பற்றியும் இக்குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படாமை குறித்தும் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கை சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
போரின் பின்னைய நிலை தொடர்பாக நீதி, பொறுப்புக் கூறல் என்பன காட்டப்படும் போது ஆணைக்குழு சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஏழு முக்கிய விதிகளையும் அவற்றின் பெறுமானங்களையும் ஆழமாக பின்பற்றுவதாக உள்ளது.
ஆணைக்குழுவானது அதன் அறிக்கை முழுவதிலும் திரும்பத்திரும்ப உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சிறுபான்மை யினர், மற்றும் ஏனைய நலிவடைந்தோர் பற்றியும் அவர்கட்கான பரிகாரங்கள் பற்றியும் கூறுகின்றது. மற்றும் சமூகத்தின் சகல பிரிவினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள்
s soos `N O -33
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 22
யாவற்றையும் மிக ஆழமாக அவதானித்து இவை யாவும் நல்லிணக் கத்திற்கான முயற்சிகளுக்கு ஓர் முழுமையான பங்களிப்பை வழங்கக்கூடியவை என காட்டுகிறது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவானது மனித உரிமைகளின் பெறுமானங்கள் இலங்கையின் பெளத்த மற்றும் ஏனைய மதங்களின் மூலப் பெறுமானங்களோடு இணைந்தது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.
ஆயுதப்போர் தொடர்பான உண்மை, நீதி, பொறுப்புக் கூறும் தன்மை:
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவானது போர்க் குற்றங்களை விசாரனை செய்வதோடு அன்றி சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு நேரடியாக குறிப்புக்கள் எதனையும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆணைக்குழுவிற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஏற்பாட்டின் பிரகாரம் சமாதான ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கான சூழல்க் காரணிகளையும் அதன் பின் 2009 மே 19 வரை நடைபெற்ற தொடர் நிகழ்வுகளையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாகும். அத்துடன் இவை தொடர்பாக கற்றறிய வேண்டிய விடயங்களையும் நல்லிணக்கத்திற்காக எதிர்காலத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டை ஊக்குவித்து நிறுவன, நிர்வாக, சட்டரீதியாக எடுக்கப்பட்வேண்டிய முறைகள் பற்றி அறிக்கை சமர்ப்பப்பதாகவும் உள்ளது. ஆயினும் ஆணைக்குழுவானது பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பாக மறைமுகமாக தனது கருத்துக்களை இலங்கை பொறுப்புக் கூறல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறவில்லை.
ஆணைக்குழுவின் அறிக்கையின் அத்தியாயம் 3இல் இராணுவம் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய பிரச்சினைகளை
O -(-34-)-
மகளிர் அபிவிருத்தி நிலையம்

ஆராய்கின்றது. இராணுவத்தினரின் பாதுகாப்பு படையணியின் ஜூலை 25-2006 இருந்து மே 18 2009 வரை நடத்திய இராணுவ நடவடிக்கைகளை அறிக்கை தெளிவாகக் காட்டியுள்ளது. இதன் முதலாவது பகுதி கிழக்கில் விடுதலைப்புலிகள் மாவிலாறு அணைக்கட்டை முடியதிலிருந்து பின்னர் 2007 ஜனவரியில் வாகரையை மீளக் கைப்பற்றியது வரை எடுத்துக்காட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நிலமை வாகரை வெற்றியுடன் நிறைவு பெறுகின்றது. அத்தியாயம் 3இன் இரண்டாவது பிரிவு வடமாகாணத்தின் வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தை முழுமையாக அழிப்பதன் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடடிக்கை பற்றிக் கூறுகின்றது. ஆணைக்குழுவானது பாதுகாப்புப் படையினரின் திட்டமிடப்பட்டு விடுதலைப்பலிகளுக்கு எதிராக மும்முனைகளில் எடுக்கப்பட்ட தாக்குதல் பற்றியும் விபரிக்கின்றது. 2007 பெப்பிரவரி மாத பிற்பகுதியில் A9 பாதையின் மேற்குப் புறமாக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் கிழக்காக முன்னேறி முல்லைத்தீவு, ஓமந்தை பகுதிகளில் நடந்த தாக்குதல்களோடு இணையாக நடத்தப்பட்டதன் முறைகளையும் அறிக்கை விளக்குகின்றது. இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கை விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் முன்னேறும் படையணிகளிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் வடக்குக் கிழக்குக் கரையோரமாக இடம்பெயரும் மக்கள் பற்றியும் அறிக்கை கூறுகின்றது. ஆணைக்குழுவிற்கு ஜூலை 2006 லிருந்து மே 2009 வரையான காலப்பகுதியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போரின் நடவடிக்கையின் போது 5,556 பேரை காயப்பட்டுள்ள தாகவும் 169பேர் காணாமற் போயுள்ளதாகவும் குறிப்படுகின்றது. விடுதலைப்புலிகள் 22,247 பேரை போரில் இழந்துள்ளதாகவும் இவர்களுள் 11812 பேரின் விபரங்கள் இனங்காணப்பட்டு ள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
AA Y
vir - 35ー
* மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 23
ஆணைக்குழுவின் ஆயப்வுமுறைமை:
ஆணைக்குழுவினர் சாட்சியங்களை சேர்த்துக்கொண்ட முறைமையில் வெளிப்படைத் தன்மை காணப்பட்டது. ஆணைக்குழுவினர் கொழும்பிற்கு வெளியே 30 பிரதேச செயலக பிரிவுகளிலும் 46 இடங்களில் தடுப்பு முகாம்கள் உட்பட சென்று ள்ளனர். இவர்கள் மேலும் 1000 வாய்மூலங்களையும் 5000 மேற்பட்ட எழுத்துமூல முறைப்பாடுகளையும் பெற்றிருந்தனர். ஆணைக்குழு இவ்வாறு பெற்றுக்கொண்ட ஆவணங்கள் யாவும் ஆணைக்குழு வின் http/WWW Irc.lk என்றும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும். ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலும் முக்கியமான முறைப்பாட்டு ஆவணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, காணாமற் போனோர் தொடர்பாக முறையாக விசாரிப்பதற்கு ஓர் சிறப்பு ஆணையாளர் நியமிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து 1000ற்கு மேற்பட்ட காணாமற் போனோர் தொடர்பான தரவுகள் இவர்கட்கு கிடைக்கப் பெற்றுள்ளதோடு படையினரிடம் சரணடைந்த 45 பேர் காணாமற் போயுள்ளதையும் பதிவாகியுள்ளது.
பக்கச்சார்பின்மை:
ஆணைக்குழு அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்ட முறைமை அரசாங்கத்திற்கு பக்கச்சார்பாக உள்ளதென்பதனை பலரும் விமர்சித்துள்ளனர். எப்படியிருந்த போதிலும் மாறாக பக்கச் சார்பான இவ் ஆணைக்குழு அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக ஓர் மேலோட்ட மான அறிக்கையினையே வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இவ் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையானது அரசாங்
O {-36-}
மகளிர் அபிவிருத்தி நிலையம்

கத்திற்கு பாரிய, முக்கியமான சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை, அவர்கட்கு அளிக்கப்பட்ட நிரலுக்கு அப்பால் தலையீடு செய்து வெளியிடப்பட்டள்ளதாக அரச தரப்பி னரும் அறிக்கையினை விமர்சித்துள்ளனர்.
ஆணைக்குழு சிபார்சு செய்துள்ள பல விடயங்கள் ஆக்கபூர்வ மானதாகவும், பரந்தளவில் பிரச்சினைகளை உள்வாங்கி வெளியிட ப்பட்டுள்ள அறிக்கை என சர்வதேச சமூகம் கருத்து வெளியிட்டு ள்ளன. ஐ.நா மனித உரிமை சபையானது அதன் தீர்மானத்தில் 192 (மார்ச் 22,2012) இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆக்கபூர்வமான சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசை கேட்டுள்ளது. ஆணைக்கழவின் இவ்வறிக்கையானது நியாயமான அளவு ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் அமைந்து ள்ளது. இவ் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கமுன் வந்தோர், பெரும்பாலும் போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளை நேரில் கண்டறிந்தார்கள் இடம்பெயர்ந்தவர்கள், காணாமற்போனோரின் குடும்பத்தவர், தடுப்புமுகாம்களில் உள்ளோரின் குடும்பத்தவர், இராணுவத்தினர், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினராக உள்ளனர். ஆணைக்குழுஇவ்வாறாக சமூகத்தின் பலதரப்பினரிட மிருந்து ஆக்கபூர்வமான தகவல்களை பெற்றிருந்தது. மேலும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடி குழு ஆகிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவிக்கபட்டிருந்த போதிலும் அந்நிறுவனங்கள் பங்குபற்றுதலை தவிர்த்துவிட்டன.
ல் சட்ட ரீதியான வெளிப்பபாடுகள்,
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லெண்ணத்திற்கான ஆணைக் குழு பல பிரச்சினைகளை கண்டறிந்துள்ளது. அவையாவன,
( e. Y O -37- HO
'- மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 24
பொதுமக்கள் இறப்புக்கள் 2. பொதுமக்களுக்கு உணவு, மருந்து, தங்குமிட வசதிகள் 3. தனிப்பட்ட ரீதியான உரிமை மீறல்களை விசாரித்தல்.
1. பொதுமக்கள் இழப்புக்கள்
ஆணைக்குழுவானது போரின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் இறப்புக்கள் பற்றிய விபரமான விளக்கத்தை கொடுத்துள்ளது. அறிக்கையில் ஆயுததாரிகள் அல்லாதவர்கள் பொதுமக்கள் ஆகியோர் இழப்புக்களை தவிர்ந்து, காப்பாற்றும் முகமாக நடத்தப்பட்ட போர் நடவடிக்கை பற்றி அறிக்கை வெளிக் காட்டியுள்ளது. ஆணைக்குழு முன் கிடைக்கப் பெற்ற சாட்சிகளின் அடிப்படையில், போரானது நடத்தப்பட்டபோது அரசாங்கம் மக் களை காப்பாற்றும் வகையில ஏதுவான் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. என அறிக்கை தெரிவிக்கின்றது.ஆயினும் ஐ.நா வின் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்த முடிவுகளின் பிரகாரம் அரசாங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டது எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2. உணவு மருந்து தொடர்பானவை
போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களுக்கு உணவு மருந்து போன்றவை வழங்குவதற்கு தங்கிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அரசாங்கம் எடுத்த முயற்சிகளை ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது. போர் முடிவடைந்த நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பான சிக்கலான பிரச்சினைகளையும் அறிக்கை குறிப்பிடுகின்றது. அரசாங்கம் வேண்டும் என்றே மக்களை கைதிகள் போல அடைத்து வைத்திருந்தது என்ற ஐ.நா ஆய்வுக் குழுவின் குற்றச் சாட்டுக்களை இவ்வறிக்கை மறுப்பதாக உள்ளது.
O mO
{-38-} மகளிர் அபிவிருத்தி நிலையம்

3.தனிநபர் உரிமை மீறல்கள்
தனிநபர் உரிமை மீறல சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் தனிநபர் உரிமை மீறல் சம்பவங் களுக்கு இடையேயான வேறுபாட்டினை இவ்வறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.
போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது. சமருக்கு இடையில் அகப்பட்டு இழப்புகள் நேர்ந்திருக்கலாம், மற்றும் பாதுகாப்புப் படைகள் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியிருக்கலாம். இச்சம்பவங்கள் அரசாங்கம் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து முரண்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையினது அலைவரிசை 4 காணொளி பற்றியும் அங்கு காட்டப்ப்ட்டுள்ள போாக்குற்ற செயற்பாடுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளது. ஆயினும் ஆணைக்குழுவில் இருவர் மட்டும் இக்காணொளியில் காட்டப்படுள்ள சம்பவங்கள் உண்மைக்குப் புறம்பானவை, நம்பகத்தன்மையற்றவை எனவும், காணொளி சம்பவங்கள் தொடர்பாக மேலும் சுதந்திரமான விசாரணைகள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் அரசாங்கம் வேண்டுமென்று சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறவில்லை என்றும், தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் சம்பவங்களாக அமைத்திருக் கலாம் எனத் தெரிவிக்கின்றது.
சிபுரர்குகள்:
ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் போது அவர்கள் முன் தெரிவிக்கப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டனவான தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சில சிபார்சுகளை முன்வைத்துள்ளது. O -(-39-)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 25
960)6) JUIT6) 60T:
・・
•¥•
co
م:ه
பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மரணம், காயப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளல். வைத்தியாசாலை ஏறிகணை தாக்குதல் நடத்தப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல். போரின் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு வைத்திய உதவி கிடைத்தலுக்கான சகல வசதிகளையும் மேற்பார்வை செய்தல. படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பாகவும், காணமற் போனோர் தொடர்பாக சம்பந்தப்பட்ட இராணுவத்திருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளல். பொதுமக்கள் மீது வேண்டும் என்றே நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுத்தல். அலைவரிசை 4 காணொளி தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களின் உண்மைதன்மை பற்றி சுதந்திரமான ஓர் விசாரணை நடத்துதல். இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை மேற் கொள்வதற்கு ஓர் சிறப்பு ஆணையாளரை நியமித்தல். சட்ட விரோதமான ஆயுதக்குழுக்கள் பற்றி விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பனவாகும்.
ஆணைக்குழுவானது காணாமற்போனோர் தொடர்பான
உண்மையான விபரங்கள் வழங்கப்படுவதன் மூலம் உண்மைத்
தன்மையின் புனிதத்துவத்தை பேண முடியும் எனக் கருதுகின்றது.
காணமற்போனோர் தொடர்பான விபரங்களை அவர்கள்
எங்குள்ளனர் போன்ற விபரங்களை அறிவதற்கு அவர்களது உறவினர்களுக்கு உரிமையுண்டு. அவர்களுக்கு என்ன நடத்தது என்பதன் உண்மைகளையும் அறிவதற்கு அவர்களுக்கு உரிமை
O
-40
மகளிர் அபிவிருத்தி நிலையம்

உண்டு. இதன் மூலம் நல்லிணக்கச் செயற்பாட்டின் நெருக்கத்தை அடைய முடியும். ஆயினும் இச்செயற்பாடானது ஓர் சிக்கலான பயணமாகும். இவர்கள் போர் மூலமாகப் பாதிக்கப்பட்வர்களா அல்லது விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்டவர்களா என்பதை அறிவது ஓர் பெரிய நீண்ட சிக்கலான பயணமாகும். இங்கேயே ஆணைக்குழுவானது பெண்களது உரிமைகளில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. காணாமற்போனோர், தடுத்துவைத்தல், நீண்டகாலமாகத் தடுப்பில் வைத்தல், கடத்தல் போன்ற சம்பங்கள் பெண்களுக்கு நேரடியான பாதிப்பை செயற்படுத்தியுள்ளன. பெண்கள் அவர்களது கணவன்மார், பிள்ளைகள், தகப்பன், சகோதரர்கள் காணாமற் போயுள்ளமையினால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நேரடியான தாக்கத்தை அறிக்கையில் காட்டியுள்ளனர். இப்பெண்கள் தமது காணமற்போன உறவுகள் எங்குள்ளனர் உன்ற உண்மையை அறிய வேண்டியது அவர்களது உரிமையாகும் எனவும் ஆணைக்குழு கருதுகின்றது.
தகவல் அளிக்கும், மற்றும் கருத்துக் கூறும் சுகுந்திரமும் ஆணைக்குழுவானது, ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவிய லாளர் மீது தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக பத்திரிகைகள் இணையத்தகங்களினூடாக வெளிவந்துள்ளமை கவலையளிப்ப தாக உள்ளது. இதற்கு காரணமானவர்கள் விசாரிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இவ்வாறான சம்பவங்கள் விசாரணைக் குட்படுத்தாது விடப்படுமேயானால் சட்டம் ஒழுங்கு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை பாதிப்பதாக அமையும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளது.
மேலும் ஆணைக்குழுவானது இவ்வாறான கடந்த கால சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட
O -41
VALU
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 26
வேண்டும். அரசாங்கம் ஊடகவியாலாளர்கள் வடக்கு கிழக்கிற்கு சென்றுவர அனுமதியளிப்பதோடு தகவல் பரிமாற்றத்திற்கு இடமளிக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் நல்லிணக் கத்தை தூண்டுவனவாக அமையும் அத்துடன் ஆணைக்குழுவானது தகவல் பெறுவதற்கான உரிமை தொடர்பான சட்டவாக்கம் ஒன்றை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அரசைக் கேட்டுள்ளது.
* மதம்,ஒன்றுகூடல், நடமாடும் சுதந்திரம்,
மன்னாரில் மதகுமார், இறந்தவர்கட்கும், காணாமற் போனோ ருக்கும், ஞாபகார்த்தமாக நடத்தப்படவிருந்த மதச்சடங்கு களை இராணுவம் நிறுத்தியது என சாட்சியமளிக்கப்பட்டமை, மற்றும் சமாதானமான முறையில் ஊர்வலங்களை நடத்து வதற்கு தடை விதிக்கப்பட்டமையும் ஆணைக்குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் சிவில் சமூகத்தினர் ஒழுங்கு செய்து நடத்திய கல்விசார் நிகழ்வுகளுக்கும் இராணு வத்தினர் தடைவிதித்திருந்தனர். இவற்றை முன்னுதாரண மாகக் கொண்டு ஆணைக்குழு பின்வரும் சிபார்சுகளை முன்வைத்துள்ளது.
* அரசாங்கம் மக்கள் சுதந்திரமாக தமது உரிமைகளான சமய சடங்குகள் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரத்தை நடத்துவதற்கு மதிப்பளித்து அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவை நல்லிணக்க செயற்பாட்டிற்கு முக்கியமானவை.
* அரசாங்கம் மதத்தலங்களுக்கு மக்கள் சென்றுவருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை, கண்ணிவெடிகள் உள்ள பகுதிகள் தவிர நீக்க வேண்டும். மக்கள் சுதந்திரமாக ஒன்றுகூடல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்த இடமளிக்கவேண்டும். வெளிநாட்டிலிருந்து தமது நண்பர்கள, உறவினர்களை மீள்குடியேற்றப்பகுதிகளில் சென்று பார்வையிட வருபவர் களுக்கு தடையின்றி அனுமதித்தல் வேண்டும்.
O G42.
மகளிர் அபிவிருத்தி நிலையம்

கடந்தகாலங்களின் நடைபெற்ர ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் தொடர்நடவழக்கை
ஆகஸ்ட் 2005இல் பாரிய மனித உரிமை மீறலகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு சிபார்சு செய்தவற்றை செயற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லபட்டதில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் மூதூரில் 17 உதவிப்பணியாளர் கொல்லப் பட்ட சம்பவங்கள் மேலதிக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என கடுமையாக ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. ஆணைக் குழுவின் அறிக்கையில் பெண்கள் சிறுவர் தொடர்பான விடயங்கள் பகுதியில் முகாம்கள் அரசாங்கத்தினால் வடிவமைக்கப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் மேலதிக விசாரணைகளுக்காக முகாம் களுள் முடக்கப்பட்டனர். இங்கு குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக இருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மனைவி ஓர் முகாமும் அவர்களது பிள்ளைகள, சகோதரர்கள் வேறு வேறு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டதனால், குடும்ப ஒருங்கிணைப்பு சிதறப்பட்டு தமது பிள்ளகைள் சகோதரர்கள், கணவர்மார் எங்கிருக்கின்றனர் என்ற தகவல் இல்லாது பெண்கள் மன அமைதியின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆணைக்குழுவின் அறிக்கையில் போரின் பின்னைய அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் தெளிவாக அறிக்கையிடப்பட்டிருந்த போதிலும், பெண்கள் எதிர் கொண்டுள்ள பிரத்தியேக பிரச்சினைகளும் இவற்றோடு இணைக் கப்பட்டே காணப்படுகின்றது.
ஆணைக்குழுவானது தனது நீண்ட விசாரணைகளின் பின் வெளியிட்ட அறிக்கையில் போரின் பின்னைய மீள்கட்டுமானம், அபிவிருத்திப் பணிகளை பல அம்சங்கள் இணைந்த ஒன்றாகவும் இவற்றிற்கான தீர்வு நல்லிணக்க செயற்பாடுகள், மனித அபிவிரு த்தி அம்சங்களோடு இணைந்ததாக அமைய வேண்டுமெனத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆணைக்குழுவானது இவ்வாறான ஓர்
O -(-43-)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 27
நிகழ்ச்சித்திட்டத்தை அரசு செயற்படுத்தும் போது பின்வரும் பொறுமானங்களை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும் என கருதுகின்றது.
锣
锣
锣
அரசின் சகல தரப்பினரும் பங்குபற்றலில் உள்ளடக்கப்பட்டு சமத்துவம் பேணப்படல் மீள் குடியேறிய மக்களின் மத்தியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது கவனித்தல். மீள்குடியேறிய மக்களின் பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் அவர்களை பலப்படுத்துவதற்குரிய நிறுவன அமைப்புக்கள் மற்றும் வழிவகைகள் அமைத்தல். அரசியல் ஒழுங்கமைப்பினுடாக தூரிய செயற்பாடுகளை மேற்கொள்ளல். மக்களுடைய நிர்வாகத்திற்கு பொறுப்பு கூறும் வகையில் அரசியல் பொது சேவைகள் செயற்பாடு அமைதல். மக்களுக்கு தவறான கருத்துக்களையும் மேலும் துன்பங் களைக் கொடுக்காத வகையில் அரசாங்க தீர்மானங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தல். அரசாங்க செயற்பாடுகளின் உண்மை வெளிப்படைத்தன்மை பேணப்படல்.
அசமத்துவம் பராபட்சத்திற்கு வழி ஏற்படுத்தாத வகையில்
அரச நிர்வாகம் கொள்கைகள், நிகழ்ச்சி திட்டங்களை அமைத்தல்.
業
மக்கள் எல்லோரும் ஓர் பல்லின சமுகத்தை உள்ளடக்கிய சமூக அங்கத்தவர்கள் என்ற உணர்வைக் கட்டியெழுப்பக் கூடிய வகையில் அமைதியான சகவாழ்வை மேற்கொண்டு இன முரண்பாடுகள் அற்ற வகையில் வாழ்வதற்கான ஒழுங்கமைப்பை ஏற்படுத்தவேண்டும்.
-44– மகளிர் அபிவிருத்தி நிலையம்

* இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்: ஆணைக்குழுவின்
அறிக்கை வெளியிடப்படும் போது இடம்பெயர்ந்தோரில் பெரும்பாலானோர் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், 6,647 பேர் மட்டும் மீதமாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றது ஆயினும் உயர் பாதுகாப்பு வலயத்திலியிருந்து இடம்பெயர்ந்தோர், மற்றும் ஆங்காங்கு பரவலாகக் காணப்படும் இராணுவ முகாம்கள் உட்பட்ட பல பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் அறிக்கை தெரியப்படுத்துகின்றது.
மீள்குடியேற்றம் இடம்பெறும் போது பெண்களுக்குரிய பாதுகாப்பு பின்வரும் ஐ.நா மரபொழுங்குகட்கு ஏற்றதாக இடம்பெற வேண்டும்.  ேசர்வதேச மனித உரிமைகள் சாசனம்
ஐ.நாவின் 1978 இன் பெண்களுக்கு கெதிரான சகல வகையான பாரட்சங்களையும் நீக்கும் மரபொழுங்கு.  ே1995 இன் பெஜ்ஜின் மாநாட்டு அறிக்கை  ேபெண்கள் சமாதானம் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா.
பாதுகாப்பு சபையின் 1325 மரபொழுங்கு.
மீள் கட்டுமானப் பணிகள், மீள்குடியேற்றம் இடம்பெறும் பொதுத் திட்டங்கள் வகுப்போர் தீர்மானங்கனை எடுப்போா, நிதி அளிப்போா, மற்றும் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக உள்ளோர் மேற் காட்டப்பட்ட ஜ. நா. மரபொழுங்குகளுக்கு முக்கியத்துவம் காட்டியதாகத் தெரியவில்லை.
மீள் குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பமாகியிருந்தபோதிலும் இவை பால் நிலை சமத்துவத்துடன் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை பெண்கள் எப்பொழுதும் பயன்பாடற்ற காட்டுப்பகுதிகளில் விறகு, கால்நடைகட்கு புல்வகை, நீர் மற்றும் தேவையான பொருட்கள்
eY O 45ー m)
* மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 28
பெற்றுக்கொள்வதற்கு சுதந்திரமாக சென்று வருவர். இவர்கள் வாழ்வாதார தேவைகட்காக ஆடு, மாடு, கோழி, வளர்த்தல் போன்ற சிறிய வீட்டுப் பொருளாதார தேவைகளை ஆற்றுவதுண்டு. ஆகவே கண்ணிவெடிகளின் அபாயம் பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைகள, பெண்களுக்கு வழங்குவதில் காட்டப்பட்ட பங்களிப்பு போதா மையாக உள்ளது.
ஆணைக்குழு அறிக்கை பொதுவாக இடம் பெயர்ந்தவர்கள் அவர்கள் எவ்வாறு மீளக் குடியமர்த்தப்படவேண்டும் என்பதை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
போர் இடம் பெற்றமை காரணமாகவே இலங்கையில் இவ்வா றான ஓர் பாரிய இடம்பெயர்வும், சமூகங்கள் வாழ்விடமின்றியும், காணிகளை இழந்தும் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகை யினால் காணி, மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத் திட்டம் அதிகாரபூர்வமான ஓர் கொள்கை, இவை தொடர்பாக காணப்படவில்லை. அரசாங்கம் மூன்று முக்கிய தத்துவங்களை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்ந்தேர் பிரச்சினைகளை அணுகுவதற்கு முயன்றுள்ளது.
ܐܐܠ
* பாதுகாப்பு * தமதுகாணிகளுக்கு சுயமாகத் திரும்புதல் ܐܠ
* தமது சொந்த காணிகளுக்கு திரும்பமுடியாதவர்களுக்கு அதே
பகுதிகளில் வேறு காணிகள் வழங்குதல்.
அரசாங்கம் மீள் குடியேற்றம் தொடர்பாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் இடம்பெயர்ந்த மக்களது காணி, வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகளை முழுமையாக அணுகுவதாக இல்லை எனவும் விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் காணிதொடர்பான மாற்றங்கள், நிர்வாகம் தொடர்பான பதிவுகள் யாவும் திருத்தப்பட்டு சட்டரீதியான முறைகளுக்குக் கீழ் கொண்டுவருதல் வேண்டும்.
O --46-)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

இடம்பெயர்ந்த குடும்பங்களில் பலர் தேசவழமைச்சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டிருப்பதனால் கணவனை இழந்த பெண்கள் தமது உரிமைகளை மாற்றிக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
ஆனைக்குழுவின் சிமார்சுகள் * இடம் பெயர்ந்த மக்கள் திரும்ப அவர்களது சொந்த இடத்திற்கு திரும்பும் போது தமது காணிக்கு உரிய ஆவணங்கள, சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஆவணங்களைக் கொண்டு உறுதிப்படுத்தல் வேண்டும். * இடம்பெயர்வு 1980 லிருந்து ஏற்பட்டிருப்பதனால் இடம்பெயர் வில் பழையவர்கள் என மீளக் குடியேற்றப்படும் போது பாரபட்சம் காட்டப்படல் தவிர்க்கப்படவேண்டும் * இடம்பெயர்ந்த வன்னி, யாழ்ப்பாணம் மக்களுக்கும் விவசாய நிலங்களை இழந்த மற்றும் கிழக்கு மாகாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணி மீளக்கையளித்தல் அல்லது இழப்பீடு வழங்குதல் அரசின் ஒர் தேசிய பிரச்சினையாகும். ஆகவே அரசு குறுகிய அரசியல் இலாபம் கருதி இடம்பெயர்ந்த மக்களின் காணி மீள வழங்குதல் தொடர்பாக பிரச்சினையினை அரசியல் பிரச்சினை யாக மாற்றாது, இருசாராரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அணுகுதல் அவசியம். இவ்வணுகுமுறை தேசிய நல்லிணக்க த்தினை ஊக்குவிப்பதற்கான அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கியதாகும். * நாட்டின் எப்பகுதியிலும், தமது விருப்பப்படி குடியேறும் உரிமை மக்களுக்கு உள்ளதாக காணிச்சட்டம், ஒழுங்கமைப்பு க்கள் அமைதல் வேண்டும். எப்படியாயினும் காணி அற்றோர் தொடர்பான அரசின் காணிக்கொள்கை தவிர்க்கமுடியாதபடி இனமுரண்பாட்டிற்கு வழி ஏற்படுத்தியுள்ளது. அரசின் காணி தொடர்பான கொள்கை, குறிப்பிட்ட மாகாணத்தின் குடியிய
O (-47
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 29
லில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையக் கூடாதுள்னவும் கூறுகின்றது. போரானது காணி உரித்து, வாழிடம் தொடர்பாக பல பிரச்சினைகள் தோற்றுவித்துள்ளது. ஆவணங்கள் தொலைந் துள்ளமை, சட்டரீதியற்ற ஆவணங்கள், அரச காணி பதிவேடுகளில் காணி தொடர்பான பதிவுகள் அழிந்துள்ளமை, இரண்டாந்தர உரிமை மாற்றங்கள் போன்றன பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. மேலும் பாதுகாப்பு வலயங்களில் பல ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். பலாலி மற்றும் சம்பூர் பாதுகாப்பு காரணமாக இராணுவத் தினரின் வசம் உள்ளன. இவற்றில் மேலும் சில பகுதிகளை மக்களுக்காக வழங்குதல் தொடர்பான மீளாய்வு அவசியம் எனவும் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. காணி தொடர்பான திட்டங்களைச் செயற்படுத்தும் சகல அரச அலுவலர்கள, சமூக தலைவர்கள் ஆகியோருக்கு செயற்பாடு கள் தொடர்பாக தகுந்த பயிற்சி அளிக்கப்படவேண்டும். இடம்பெயர்வு காரணமாக தமது காணிகளை இழந்த குறிப்பாக பாதுகாப்பு வலயம் மற்றும் இராணுவத்தினரின் தேவைக்காக ஆங்காங்கு பயன்படுத்தப்படும் காணிகள், வீடுகள் தொடர்பாக உரியவர்களுக்கு வேறு பொருத்தமான காணி வழங்கப்படுவதோடு, இவற்றிக்கான நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் என சிபார்சு செய்துள்ளது. இவை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைபெறவேண்டும். அரசாங்கம் 2011 யூலை மாதத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் காணி தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் வகையில், இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்து மீள்குடியேறும் வகையில் ஓர் காணி தொடர்பாக ஆவணங்கள் பிணக்குகள், உரிமை என்பன பரிசீலிக்கப்படு வதாகவும் அறிவித்தது. ஆனால் இவை தொடர்பான பிணக்குகள் தீர்க்கப்பட்டதாக இல்லை.
-48-) – மகளிர் அபிவிருத்தி நிலையம்

குறிப்பிட்ட மாகாணத்தில் குடிவரையியல் அமைப்பை இயற் கைக்கு மாறாக மாற்றவதற்கு ஏதுவான கருவியாக அர சரி ன காணிக் கொள்கை அமையக்கூடாது எனவும் ஆணைக்குழு கருதுகின்றது. அரசு திட்டமிட்டபடி மிகப் பலமான அரசியல் உறுதியினையும், அரசியல் அணுகுமுறையினையும், இச் செயற்பாடுகளைச் செயற்படுத்துவதற்கு கடைப்பிடிக்க வேண்டும். செயற்படுத்துவகையில் நீதியும், பராபட்சமும் இல்லாத வகையினை உறுதிப்படுத்தும் சிவில் நிர்வாக அமைப்பு தேவை என்பதனை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இம்பெயர்ந்தோர் அல்லாது வேறு எவரும் அரச காணிகளை விரும்பியவாறு பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டு கட்டுப் படுத்தப்படல் வேண்டும். காணிகள் அனுமதி அளிக்கப்பட்ட தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படல் வேண்டும். அரசு 2011 யூலையில் முன்வைத்துள்ள செயற்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு திட்டத்தின் சரியான விளக்கங்கள் மக்களுக்கு தெரியப் படுத்தப்படவேண்டும். சகல அதிகாரிகள், சமூகமட்ட தலைவர்களி, இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் யாவருக்கும் இத்திட்டத்தைத் திறம்பட செயற்படக்கூடியவாறு பயிற்சி வழங்கப்படவேண்டும். இத்திட்டத்தின் கீழ் உள்ள சேவைகள் தொடர்பாக அரசாங்கம் தமிழ்மொழியூடாகவும், தேவையாயின் சிங்கள மொழியிலும் தகவல்களை வழங்குவதற்கான தொடர்பாடல் உபாயங்களை செயற்படுத்த வேண்டும். விபரங்களை கண்டறியும் குழுக்களின் தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட காணிகள் தற்போது அக்காணியில் வசிப்பவர் களிடம் அல்லாது பெமிற் உண்மையில் சொந்தமானவர் களுக்கு வழங்கப்படவேண்டும்.
ー49ー >– மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 30
வாழ்வாதார உதவிகளும் அபிவிருத்தியும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் பெருமளவில் நிறைவேறியுள்ளது. ஆயினும் இவர்களது தேவைகள் தொடர்பாக மேலதிக கவனம் தேவையாக உள்ளது. குறிப்பாக, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின், வாழ்வாதாரம், வீட்டு வசதிகள், சிறுவர் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சேவைகள் என்ப வற்றில் கூடிய கவனம் தேவையாக உள்ளது. இடம்பெயரும் போது பலர் மூலஆவணங்களைத் தொலைத்து விட்டதனால் இவர்களுக்கு காணி தொடர்பாக சட்டரீதியான உரிமைப் பத்திரங்கள் வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக பெண்கள் சட்டரீதியான போதிய அறிவு போதாமை யினால் இவற்றைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர் நோக்குகின்றனர். பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் தற்காலிக குடிசை களிலேயே தங்கியுள்ளனர். இவர்கட்கு நிரந்தர வீட்டு வசதிகள் தேவை. வீடுகள் நிரந்தரமாக வழங்கப்படுவதற்கான வீட்டுத்திட்டங்கள், புள்ளிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப் படுவதனால் பெரும்பாலான பெண்கள் இத்திட்டங்களில்
உள்ளடக்கப்படுவதில்லை.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை வசதிகளோ, போதியளவு ஆசிரியர்களோ போதாதுள்ளது. சில மீன்பிடி தளங்கள் செல்லமுடியாததாகவும், கடற்படை யினரின் அனுமதியையும் வேண்டி நிற்கின்றன. நீர்பாசனக் குளங்கள் மீளமைக்கப்பட்டு விவசாய உற்பத்திக்கு உதவுதல் வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் ஆணைக்குழுவில் இனங்காணப் பட்ட போதிலும் பழைய, புதிய இடம்பெயர்ந்தவர்கள் தொடர் பில் வாழ்வாதார உதவிகள் வழங்குவதில் காட்டப்படும் பாரா பட்சத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளது.
(-5O-H m)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

சிபார்சுகள் * இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவது மிக இன்றியமையாதது. வாழ்வாதார உதவிகள் நிலையான ஓர் தீர்வை எட்டுவதற்கும் நல்லிணக்கம் மற்றும் தேசிய அமைதியை ஏற்படுத்துவதற்கும் தேவையாகும். மேலதிகமாக வாழ்வாதார பிரச்சினைகள் இடம்பெயர்ந்த மீள்குடியேறிய மக்களது நாளாந்த பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. * இடம்பெயர்ந்த மக்களுக்கு நிலையான தீர்வை வழங்கும் முகமாக ஓர் இறுக்கமான அரச கொள்கை ஒன்றை ஏற்படுத்து வதற்காக ஓர் குழு அமைக்கப்படவேண்டும். * மக்கள் மீள்குடியேறிய பகுதிகளுக்கு போதுமான அளவு உட்கட்டுமான வசதிகள் அதாவது தெருக்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் வழங்கப்படவேண்டும்.
* ஒவ்வொரு பகுதிகளாக, வாழ்வாதார உதவிகள் புதிதாக
மீள்குடியேறிய மக்களுக்கு விரிவாக்கம் செய்தல் வேண்டும். 兼 பழைய இடம்பெயர்ந்த மக்களுக்கு பராபட்சம் ஏற்படாத வகையில் வாழ்வாதார உதவிகள் சமமானதாக இருத்தல் வேண்டும். * வெவ்வேறு இன சமூகத்தவர்கள் வாழும் கிராமங்களில் வளங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பகிர்ந்தளிக்கப் படும் போதுபராபட்சமற்ற முறையில் வழங்கப்படவேண்டும். * அபிவிருத்திச் செயற்பாடுகள் உள்நாட்டு மக்களின் ஆலோசனையுடன் அவர்கள் தமக்கு இவற்றில் உரித்து உள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.
Om -51
மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 31
பாதிக்கப்பட்டவர்கட்கு நஷ்டஈடு வழங்குதல்
ஓர் சட்ட அடிப்படைத் தேவையாகும். இவ்வாறு நஷ்டஈடு வழங்கப்படுவது மீள்குடியேற்றத்தையும், நல்லிணக்கத்தையும் இலகுவாக்குவதாக அமையும் என ஆணைக்குழு கருதுகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் கொடுப்பனவிற்குத் தகுதியானவர்களில் கொடுப்பனவுகள் உறுதி செய்யப்பட்டு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அவை வழங்கப்படுவது அடிப்படைத் தேவையாகும். ரேப்பியா (மக்கள் புனர்வாழ்வு, உடமை கைத்தொழில்களுக்கான அதிகாரசபை) இவ்வாறான நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை வழங்குவதற்குப் பொறுப்பான நிறுவனமாகும். தற்போது ரேப்பியாவின் செயற்பாடு நிவாரணம் வழங்குவதோடு பலவகை நிவாரண, உள்கட்டுமானப் பணிகளையும் ஆற்றுவதாக உள்ளது. மேலதிகமாக இறந்தவர்கள், காயப்பட்டவர்கள், போரின் தாக்கத்தினால் வீடுகள் இழந்தவர்கள், பொருட்கள் இழந்தவர் களுக்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் உள்ளது. இவை தவிர வீட்டு வசதிகள், தொழில் முயற்சிகள், வாழ்வாதார உதவிகளும் இதனுள் அடங்கும்.
பிரச்சினைகள்
ஐரேப்பியா கொடுப்பனவுகள் வழங்குவதற்கு பொறுப்பான நிறுவனமாக இருந்தபோதிலும் அவற்றிற்கு போதிய நிதி இல்லாமை பிரச்சினையாக உள்ளது. ரேப்பியாவின் உதவித் திட்டத்திற்கான தகுதிகள் கொடுப்பனவுகள் தொகையாகவும் அரசாங்க சுற்றறிக்கைகள் மூலம் வகுக்கப்பட்டுள்ளது. ஐரேப்பியா வின் உதவித் திட்டம் சகல மாவட்டங்களுக்கும் சமமாக கிடைக்கக் கூடியதாக இருந்த போதிலும் தற்போது முன்னுரிமை கொடுக்கப் படவேண்டிய விண்ணப்பங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களி லேயே உள்ளது. ஆயினும் இத்திட்டத்தினுள் அடக்கப்பட்டுள்ளோர் மிகக்குறைவே.
O -52-) -
மகளிர் அபிவிருத்தி நிலையம்

ஐரேப்பியாவிற்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களும் மிகக்குறைவே. இதற்கு பல காரணங்கள் உண்டு முன் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் சரியாக பரிசீலிக்கப்படாமை, தேவையான ஆவணங்கள் இல்லாமை, விடுதலைப் புலிகளுடன் தொடர்பில்லை என்று கிராம அலுவலரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடிதம், இவை தேவையாக இருந்த போதிலும் இவற்றைச் சமர்ப்பிக்காத விண்ணப்பங்கள் பரிசீக்கப்படுவதில்லை. இதனால் அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வீட்டுத்திட்டங்ளிலும் இவர்கள் தவிர்க்கப்படுகின்றனர்.
சியர்குகள் * அரசு ரேப்பியாவின் பங்கு அதன் செயற்திறன் பற்றி மீளாய்வு செய்வதோடு போரின் பின்னைய தேவைகளை முன்நிறுத்தி அதன் பங்கு, வளங்கள் ஆகியவற்றை வரையறுத்தல் வேண்டும். நிதிபற்றாகுறை போக்குவதற்கு உடன் நடவடிக்கை தேவை. ஐரேப்பியா கொடுப்பனவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். தகுதிகளை பெற்றுக்கொள்வது தனிப்பட்டவர்களின் பொறுப்பல்ல.
* விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வதற்குப் போதிய கால அவகாசம் கொடுக்கப்படல்வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்குப் போதிய குறைந்த அல்லது கூடிய நேரம் ஒதுக்கப்படவேண்டும்.
* ஐரேப்பியாவின் முதலாது நடவடிக்கை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டு நிவாரணம் வழங்குவதாக இருக்க வேண்டும். ஏனைய நிவாரணத் திட்டங்கள் ஏனைய அரச அதிகாரிகள் இவர்களது இறப்பு, காயப்படல்,வீட்டு வசதிகள் தொடர்பான கொடுப்பனவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
es Y O (-53-) O
மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 32
அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் கொடுப் பனவுகளிலிருந்து தவிர்க்கப்படல் மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இறந்த அல்லது காயப்பட்டவர்களுக்கு நல்லிணக்க மேம்பாடு கருதி முன்னைய போராளிகள், அவர்களுக்கு அடுத்த உறவினர்கள் இவ்வாறான நிவாரணங்கட்கு உரித்துடையவர் என்பதற்குரிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். வீட்டு வசதிகள் அளிக்கப்படல, மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படைப் பிரச்சினையாக உள்ளதால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அப்பால் மேற்கொண்டு சிறப்பாக கவனம் செலுத்துவதற்கு ஐரேப்பியா முயலவேண்டும். சிவில் நிர்வாகத்தினை மீள ஏற்படுத்தல், ஆணைக்குழுவினர் நல்லிணக்கத்திற்கு அடிப்படைப் பிரச்சினையாக முதலாவதாக கருதிய விடயம், சிவில் நிர்வாக பொறுப்புக்களில் அவற்றை செயற்படுத்துவதில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
சிவில் நிர்வாகம் மீள கட்டியமைப்பதற்கு வடக்கு கிழக்கி லிருந்து நிர்வாகத்தோடு இணைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் நீக்கப்பட வேண்டும். அதே நேரம் பாதுகாப்புக் காரணமாக, அப்பகுதிகளில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரின் சேவையும் அவசியமாகும்.
9 அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸ் அதிகாரங்களை எடுப்பதுடன் தமிழ் பேசும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படல் வேண்டும். 9 போரைத் தொடர்ந்து சிவில் நிர்வாக ஒழுங்குகள் அமைத்தல் சில பகுதிகளில் இன்னும் இடம்பெறவில்லை. ஆணைக் குழுவிற்கு சாட்சியம் அளித்தவர்கள், பயனாளிகள் தெரிவு
O {-54-}
மகளிர் அபிவிருத்தி நிலையம்

இடம்பெறும் போதும் பாதுகாப்பு படையினரின் அனுமதி வேண்டப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சியூரர்சுகள்
黄
கொள்கை ரீதியில், பாதுகாப்பு படையின் சிவில் நிர்வாகம் தொடர்பான கடமைகளிலிருந்து விரைவாக விலகுதல் வேணடும் என ஆணைக்குழு வலிந்து கூறுகின்றது.
வடக்கு மாகாண சிவில் நிர்வாக முறைமைகள் மக்களுக்குரிய தாக அமைய வேண்டும். குறிப்பாக பொருளாதார
நடவடிக்கைகள் விவசாயம், மீன்பிடி, நிலம் சம்பந்தமானவை.
அங்கு இராணுவத்தினரின் இருப்பு, மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையையும், சமாதானத்தின் நன்மைகளை அடை வதற்குத் தடையாகவே அமையும்.
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் அலுவலக
செயற்பாடுகள் மக்களின் துன்பங்களைப் போக்குவதற்குப்
போதுமானதாக இல்லை. மக்களின் துயரங்களை போக்கு வதற்கு ஓர் சுதந்திரமான நிறுவன அமைப்பு தேவை. குறிப்பாக சிறுபான்மையினர், அரச அதிகாரிகளின் அதிகாரங்களினா லும் வேறு நாட்டின் ஆளுகையோடு ஈடுபாடு கொண்ட தனிநபர்களாகளாலும் பாதிக்கப்படாது இருத்தலுக்கு,
இந்நிறுவனத்தின் தேவை அவசியமாகின்றது. .
மொழிக் கொள்கை ஆணைக்குழு முன் பல தமிழ்மக்கள் தொடர்ந்தும் அரசாங்க
த்தின் மொழிக்கொள்கை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக பலவாறு ஒதுக்கப்படுவதாக சாட்சியமளித்துள்ளனர்.
-55ー >– மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 33
பிரச்சினைகள்
1958ல் அரச மொழிச் சட்டம் திருத்தப்பட்டு வடக்கு கிழக்கில் தமிழ்மொழி பாவனை அனுமதிக்கப்பட்டிருந்ததும், 1987ல் அரசியல் யாப்பின் 13 வது திருத்தத்தின் மூலம் சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும மொழிகளாக ஆக்கப்பட்டிருந்த போதிலும் அச் செயற்பாடு சரிவர இயங்காமையினால் தமிழ்மக்கள் பலவாறு ஒதுக்கப்பட்டனர். இத்தோற்றப்பாடு தமிழ்மக்கள் தமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர பிரஜைகள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியது. நாட்டின் பல பகுதிகளிலும் சிறுபான்மையினர் தமது மொழியில் வியாபார நடவடிக்கைகளை தமது மொழிமூலம் நடத்துவதுமுடியாதுள்ளது. > தமிழ் மொழியின் சரியான பாவனையின்மை, அரசகருமங்கள்
தமிழ்மொழி மூலம் இன்மை காரணமாக அநீதி ஏற்படுத்தப் படுவதோடு, இவைநல்லிணக்கத்திற்குத் தடையாக உள்ளது. > சட்டங்கள் மூலம் ஓர் ஒருங்கிணைந்த கல்வி முறை கொண்ட கல்விக் கொள்கையினை அரசு ஏற்படுத்தி பாடசாலைகள் ஒரே கூரையின் கீழ் சிங்கள, தமிழ் கற்பிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
சிமர்சுகள் * தமிழ்மொழிக் கொள்கை மற்றும் அதன் செயற்பாட்டைக் கண்காணிக்கும் அரச நிறுவனங்கள் தமிழ் பிரதேசங்களில் தமிழ் பேசும் நபர்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். - * பாடசாலை பாட விதானங்களில் ஒவ்வொரு மொழிகளையும் கற்றல் கட்டாயமாக்கப்பட்டு இரு சமூகத்தவர்களும் ஒவ்வொருவரின் கலை கலாசாரத்தை புரிந்து கொண்டு மனமாற்றத்தை ஏற்படுத்த இது வழிவகுக்கும். * அரசாங்கத்தின் மும்மொழிக் கொள்கை சரியான திசையில் Om -G-56)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

செல்வதன் முதல்படியாகும். இதற்குரியவளங்கள் முன்னுரி மை அடிப்படையில் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். * எந்த மாகாணமோ மாவட்டமோ மொழி அடிப்படையில் வகுக்கப்படக்கூடாது. நாட்டின் எப்பகுதியிலும் சேவையாற்றக் கூடிய வகையில் அரச அலுவலர்கள் திறமை கொண்டவராக இருத்தல் வேண்டும். பொலிஸ் நிலையங்களில் மக்கள் முறையிடக்கூடிய வகையில் இருமொழிகளில் முறைப்பாடு களை செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும். * அரச மொழி ஆணைக்குழு கொழும்பில் உள்ளது. இவ்வாணைக்குழு ஏனைய மாகாணங்களுக்கு மக்கள் இலகுவில் அணுகக்கூடிய வகையில் பரவலாக்கப்பட வேண்டும். * மொழியினால் ஏற்படும் தடையை நிவர்த்தி செய்யும் வகையில் தொழில்நுட்ப செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
குழமக்களது பொறுப்புக் கூறலை அதிகரித்தல் மக்கள் அவர்களது துன்பங்களை எடுத்துக் கூறும் வகையில் ஓர் புதிய சுதந்திரமான நிறுவனத்தின் தேவையை ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. சிறுபான்மையினர் என்ற ரீதியில் அரச அதிகாரிகள், மற்றும் தனிப்பட்டவர்களால் பாரபட்சத்திற் குள்ளாக் கப்படும் போது, இந்நிறுவனம் மூலமாக தமக்கு நியாயத்தைத் தேடிக்கொள்ள முடியும். * இனத்துவ, சமயங்களுக்கிடையே இவ்வாறான நிறுவனங்கள் அடிமட்டத்தில் இயங்கக்கூடிய வகையில் மாவட்டங்களிலும், மாகாணங்களிலும் மதங்களுக்கிடையிலான நம்பிக்கை யினுடான நல்லிணக்கம், மற்றும் சமாதானக்குழுக்களை ஏற்படுத்த வேண்டும். * ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளின் தலையீட்டினால் அரச நியமனங்கள், இடமாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது ஓர் OH G-57-)
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 34
பயங்கரமான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதனால், இவற்றை நியாயமாக அரசியல் யாப்பிற்கு ஏற்ப செயற்படுத்துவதற்கு ஓர் சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது.
* நல்லிணக்கம் நல்லாட்சிக்கான அரசியல் சட்டகம் போரின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் பரிமாணத்தில் செய்யப் பட்ட அரசியல் நிர்வாக ஆய்வின் பிரகாரம் ஆணைக்குழு நல்லிணக்க செயற்பாட்டிற்கு அடிப்படை அரசியல் தேவை களாகப் பின்வரும் தேவைப்பாடுகளை முன்வைக்கின்றது.
* அவ்வாறான நோக்கத்தை எதிர்கால அபிவிருத்தியை
நோக்கியதாக அமைக்க மக்களின் ஈடுபாடு.
எதிர்கால பங்காளிகளாக மாற்றத்தை வடிவமைப்பதற்கு பங்காளிகள், அரசஅலுவலகங்கள், அரசியல்கட்சிகள், சமூகத் தலைவர்களின் பங்குபற்றல். ஆணைக்குழுவின் முன் சாட்சிய மளித்த பலர், அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு அதிகார பரவலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் நல்லிணக்க செயற் பாட்டின் முக்கியத்துவத்தினையும் தெரியப்படுத்தியதாகக் கூறியுள் ளனர். இதனை ஆணைக்குழு, வலிதாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே அதிகாரப் பரவலாக்களின் அணுகுமுறைகள் பின்வருமாறு வலிதாக்கப்படலாம்.
பிரச்சினைகள்
விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், இவ்வா
றான ஓர் சிந்தனையை அடைவதற்கு நீண்ட காலமாக தடையாக
இருந்துள்ளது. தற்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளமையினால்,
அரசாங்கம் ஓர் அரசின் செயற்பாட்டைத் தேவையான நோக்கத்தை
நிறைவேற்ற ஏற்ற ஓர் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும்.
O
(-58-)
2S2—V uDa56m அபிவிருத்தி நிலையம்

6
(
ஒற்றுமைக்கான செயற்பாட்டைச் செயற்படுத்துவதற்கு சகல சமூகத்தினதும் உரிமைகள் பேணப்பட்டு, விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தோரும் உள்ளடக்கப்பட வேண்டும். ஆணைக்குழுவானது அரசியல் தீர்வு என்பது அதிகார பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைவதால் இனப்பிரச்சினையும் ஏனைய ஜனநாயக அடிப்படைக் காரணி களை அச்சுறுத்தும் பிரச்சினைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என கருதுகின்றது.
-59> மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 35
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையில் பெண்கள்/சிறுவர் தொடர்பாகக் கவனிக்க வேண்டிய விடயங்கள்
1.0 2009 மே மாதம், நடந்து முடிந்த போரின் பின்னைய விளைவுகள் பெரும்பாலும் பெண்கள், சிறுவர் மற்றும் பெண்கள் தனியாக தலைமை தாங்கும் குடும்பங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளமை பற்றி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அறிக்கையில் அத்தியாயம்3 இல் நலிவுற்றோர் தொடர்பாக பிரச்சினைகளை ஆராய்ந்துள்ள அறிக்கையின் பெரும் பகுதியில் பெண்கள், சிறுவர் குறிப்பாக மேலும் கவனிக்கப்பட வேண்டியவர் களை அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இவர்களுள் பெண்கள், வயதானோர், மாற்றுத் திறனாளிகள், இடம்பெயர்ந்தோர் என்ற வகையில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் காட்டப் பட்டுள்ளது. தங்களது குடும்ப அங்கத்தவர்களை இழந்த நிலையில் இப்பெண்கள், ஆதரவற்ற நிலையில் நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளிலிருந்து தவறவிடப்படுகின்றனர். அறிக்கையின் (5.100) இவர்களுக்கு நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என காட்டப்பட்டுள்ளது.
மேலும் நலிவடைந்த இத்தொகுதியினருக்கு, இவர்கள் பிரச்சினைகளை தாமதமின்றி அணுகுவதற்கு ஓர் உள்ளக முகவர் அமைப்பின் தேவையை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.(5.113)
1.1 பெண்களுக்கான உளவள ஆலோசனை
போரின் பாதிப்புக்குள்ளாகியவர்களுள் பெண்களே மிக மோச
மாக பாதிப்படைந்துள்ளனர். கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து
முள்ளிவாய்க்கால் வரை குடும்பம் குடும்பமாக கால்நடையாகச்
O -60
மகளிர் அபிவிருத்தி நிலையம்

சென்று தமது பாதுகாப்புக்காக தாமாகவே பதுங்கு குழிகளை அமைத்து பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர். இப்படியாக செல்லும் பாதைகளில் செல்லடிபட்ட குடும்பத்தில் கணவர், பிள்ளைகள் இறந்தமையை நேரில் பார்த்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் பெண்கள் இருந்துள்ளனர். போர் முடிந்த பின்பும் மீண்டும் திரும்பி வரும்போது தமது குடும்பத்தில் பலர் சூட்டுக் காயங்களுக்குள்ளாகி இருக்கின்றனர், இறந்துள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர். முகாம்களுள் தங்கியிருந்த போது குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக விடப்படவில்லை. பிள்ளைகள் வேறாகவும் சகோதரர்கள் வேறாகவும் விடப்பட்டு இருந்தமையால் தமது குடும்ப அங்கத்தவர் எங்கிருக்கிறார்கள் என்ற நிலை தெரியாது பெண்கள் மனவேதனைக்கு உள்ளாகி இருந்தனர்.
பல பெண்கள் நோய்வாய்ப்பட்டும் மனஅமைதியின்றியும் மீள்குடியேற்றப்பட்ட பின்பும் வாழ்ந்து வருகின்றனர். இப்படியான பெண்களுக்கு உளவள ஆலோசனை தேவை என்பதை ஆணைக்குழு அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. ஆயினும் வடமாகாணத்தில் அரசசார்பற்ற நிறவனங்கள் வேலைத்திட்டங் களை முன்னெடுக்கும் போது உளவள ஆலோசனைக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. இதனால் இவ்வாறான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு செயற்றிட்டங் களை முன்னெடுக்க வேண்டும். இதன்மூலம் பெண்கள் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
1.2 பெண்கள் பாதுகாப்பு
பெண்கள் அவர்களது மனித கெளரவம் பாதிக்கப்படாத பாதுகாப்பான சூழ்நிலையில் வாழும் தேவையை உணரக் கூடியவர் களாக இருத்தல் வேண்டும். இவ்வாறான ஓர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையை அரசாங்கம் பொறுப்புடன் ஏற்படுத்திக்
1. O -61
மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 36
கொடுக்க வேண்டும் என ஆணைக்குழு கருதுகின்றது. இந்நிலை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நல்லிணக்க செயற்பாட்டிற்கு மிக முக்கிய தேவைப்பாடாக உள்ளது. வன்முறையானது, பெண்கள் மத்தியில் பல வகையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இவை அடிப்படை உணவு தேடுவதிலிருந்து, பாதுகாப்பான வீட்டுவசதி மற்றும் வருமானம் தேடல், சமூக மற்றும் சுய பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கும். (5.107) போரின் காரணமாக கணவனை இழந்த பல பெண்கள் குடும்ப பாரத்தைத் தனியாக சுமக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் தமது குடும்பத்தில் சிறுவர், வயது முதிர்ந்தோர், காயப்பட்டோர் ஆகியோரை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளனர். கணவனை இழந்த பெண்களின் தொகை 59,501 (5.10, 5.111) என இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக செயற்படுத்துவதன் முலம் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தி சமத்துவம் அபிவிருத்தி சமாதானத்தை நோக்கி பெண்களை இட்டுச் செல்ல முடியும்.
1.1.1 இராணுவத்தினரின் பிரசன்னமும் பாதுகாப்பும்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு முன் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தமது குறைகளை முன்வைத்திருந்தனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் காரணமாக தனித்து வாழும் பெண்கள் சிறுமியர் தமது பாதுகாப்பு தொடர்பாக அச்சமடைவதாக கூறியிருந்தனர். (5.104) அத்துடன் இவ்வாறு மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதும் வெளிக்காட்டப் பட்டுள்ளது. பெண்கள் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கு பற்றாமை காரணமாக தமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சுட்டிக் காட்ட முடிவதில்லை எனவும் பெண்கள் தொடர்பாக சாட்சியங்
O -62-H
மகளிர் அபிவிருத்தி நிலையம்

களை முன்வைத்தோர் குறிப்பிட்டுள்ளனர். (5.105) இவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதில் அரச இயந்திரத்தோடு மகளிர் அமைப்புக்கள் இணைவாக ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபார்சுகளை செயற்படுத்துமாறு அரசிற்கு அழுத்தம் கொடுத்தல் அவசியமாகின்றது.
1.1.2 இளவயது திருமணம்
போரின் பின்னைய நிலமைகளில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் குடியேறிய குடும்பங்கள் பாரம்பரிய குடும்ப பாதுகாப்பு முறைகள் குலைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இத்தோற் றப்பாடு காரணமாக இளவயது திருமணங்கள, இளவயது கர்ப்பம் தரித்தல் என்பன குடும்பங்களில் அதிகரித்து காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லை கள் தொடர்பான தரவுகள் அரசமட்டத்தில் இல்லாமை இவ்வன் செயல்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு இயலாதுள்ளது. பெண்கள் தமக்கு ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புக்களை முறையீடு செய்தல் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்தல.
வைத்தியசாலைகளில் தரவுகளை பதிவு செய்தல் போன்ற
செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்படாததன் காரணமாக பெண்கள் எதிர் கொள்ளும் வன்செயல்களை அளவீடு செய்வதில் சிரமங்கள் உள்ளன. பெண்கள் தாம் எதிர் கொள்ளும் வன்செயல்களை இராணுவத்தினரின் அச்சம் காரணமாக முறையீடு செய்வதற்கு தாமதிக்கின்றனர். அல்லது தயங்குகின்றனர். பெண் பிள்ளைகளை இவ்வாறான அச்ச நிலையிலிருந்து காப்பாற்றுவதற்காக குடும்பங் களில் பெற்றோர் குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பெண்கள் தமது பெண்பிள்ளைகளுக்கு இளவய்திலேயே திருமணத்தை முடித்துவிடுகின்றனர். சேலைகள் வழங்குபவர்களின் திறனின்மை ஒழுங்கான நிறுவன ரீதியான கட்டமைப்புக்கள் இயலாமை காரணமாக அவர்களது உரிமைகளை காப்பாற்றக் கூடிய இயங்கியல் தன்மை இல்லாதுள்ளது.
( Y OH -63
மகளிர் அபிவிருத்தி நிலையம்

Page 37
2.0 காணி தொடர்பான பெண்கள் உரிமைகள்
போரின் பின்னைய காலப்பகுதியில் தமது காணிகளை மீண்டும் பெற்றக்கொள்வதில் பெண்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இடம்பெயர்ந்து சென்ற போது காணி உடைமை தொடர்பான ஆவணங்களை தொலைத்துவிட்ட காரணத்தினால் மீண்டும் தமது காணிகளை உரிமையாக்கி கொள் வதற்கு உரிய சட்டரீதியான ஆவணங்களை அத்தாட்சிப்படுத்த முடியாமையினால் தமது காணிகளை மீண்டும் பெற்றுக் கொள்வது பெண்களுக்கு சிரமமாக உள்ளது. மேலும் வடபகுதி மக்கள் தேசவழமை வழக்காற்று சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டவர்கள். ஆதலால் ஆண்களின் சட்ட ரீதியான அனுமதி காணிகளை மாற்றம் செய்யும் போது பெண்களுக்கு தேவையாக உள்ளது. ஆண்களை அதாவது கணவன்மார்களை இழந்த பெண்கள் காணி உரிமை மாற்றம் செய்து கொள்வதில் மேலும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் (5.132) மேலும் தமது கணவன்மார் இறந்தமை உறுதிப்படுத்தப்படாத நிலையில் மரணச்சான்றிதழை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். மரணச் சான்றிதழ் இல்லாமையினால் பெண்கள் அரசினால் வழங்கப்படும். பல சலுகைகளை இழக்க நேரிடுகின்றது. அத்துடன் தமது காணி உரிமை மாற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. (5.104) ஆணைக்குழுவின் அவதானிப்புக்களும் சிபார்சுகளின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கான தீர்வை எடுப்பதற்கு அரசு முயல வேண்டும்.
2.1 வீட்டு உரிமையும் பெண்களும்
வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் 20 வருடத்திற்கு மேலாக இடத்திற்கிடம் அலைந்து தமக்கென ஓர் நிரந்தர மான வாழிடத்தை அமைத்துக்கொள்ள முடியாது ள்ளனர்.(5.128) அரச சார்பற்ற நிறுவனங்களினால் அமைத்துக்
(TY OH -64
மகளிர் அபிவிருத்தி நிலையம்

கொடுக்கப்ப்டும் தற்காலிகக் கொட்டகைகள குறிப்பிட்ட சில காலப்பகுதிக்கே ஏற்புடையதாக உள்ளது. (5.129) தற்போது வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களில் பெரும்பாலான பெண் தலைமைத் துவக்குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தில் ஓர் பிள்ளை உள்ளவர்கள் தனித்து வாழும் பெண்கள் இவ்வீட்டுத்திட்ட புள்ளியிடும் சலுகைகளில் தவிர்க்கப்பட்டுள்ளனர். ஆகவே வீட்டுத்திட்டங்களில் பெண்களின் பாதுகாப்புக் கருதி சகல குடும்பங்களுக்கும் வீட்டு வசதிகள் வழங்குவதற்குரிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
3.Oவாழ்வாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும்
போர் காரணமாக பெண்கள் சிறுவர்களது கல்வி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு கல்வி வாய்ப்புக்களை இழந்த வர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. (5.115) மேலும் இளம்பெண்கள், இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்கள் எதிஉகாலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். போரில் ஈடுபட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண் போராளிகள், மீண்டும் சமூகத்துடன் இணைந்து கொள்வதற்கான சமூக ஒருங்கிணைப்பு திட்டங்களை அரசு ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். சமூக ஒருங்கிணைப்பு திட்டங்கள் நல்ல முறையில் ஒழுங்கமைக்கப்படாத தன் காரணமாக முன்னால் பெண் போராளிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவும், தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாதவர்களாகவும் உள்ளனர். முன்னால் போராளிகளுக்கு விடுபட்ட கல்வியை தொடர செயற்பாடுகள், மற்றும் தொழில்சார் பயிற்சிகள் மற்றம் அறிவூட்டல் திட்டங்கள் மூலம் அவர்களை சமூக நீரோட்டத்துள் இணைப்பதற்கான முயற்சிகள் தேவை. இம்முயற்சிகளில் பெண்கள் அமைப்புக்கள் தீவிரமாக ஈடுபடுதல் அவசியம். அத்துடன் வழங்கப்படும் செயற்பாடுகள் சமத்துவமான
O (一65一}一
மகளிர் அபிவிருத்திநிலையம்

Page 38
முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்கான அழுத்தங்களை அரசிற்கு பெண்கள் அமைப்புக்கள் வழங்க வேண்டும். போரின் பாதிப்பின் உடமைகளை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதும் உடனடித்தேவையாக உள்ளது.
4.Oநிறுவன ரீதியான கட்டமைப்புக்கள்
போர் காரணமாக நிறுவனரீதியான கட்டமைப்புகள் போர் இடம்பெற்ற பிரதேசங்களில் சீர்குலைந்துள்ளன. பெண்கள் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், கிராமிய மாதர் சங்கங்கள் போன்ற சமூக செயற்பாட்டு அமைப்புக்கள் மீள உருவா க்கப்பட்டு அவை துரிதமாக செயற்படும்போது பெண்ணின் பிரச்சினைகளுக்கான அழுத்தங்கள் அவ்வமைப்புக்கள் மூலம் முன்னெடுக்கப்படகூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்க இடமுண்டு. அபிவிருத்தியின் சகல மட்டத்திலும். அரச,அரசசார்பற்ற அமைப்புக் களின் திட்டமிடல், கொள்கை வகுப்பு, வீட்டுத் திட்டங்கள் , கட னுதவி, சமுர்த்தி கொடுப்பனவுகள் யாவற்றிலும் பெண்களின் பங்கு பற்றல் அதிகரிக்கப்படுவதன் மூலம் பெண்கள் அபிவிருத்தியின் முக்கிய பங்காளிகளாகின்றனர்.
உசாத்துணை நூல்கள் Pே கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்
குழு அறிக்கை-2010
O {-66
மகளிர் அபிவிருத்தி நிலையம்


Page 39
ണ്ണ
 

... uLITypůLUTEGOOTLİb, TP : O7725O6234