கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிக்குள் வெளி

Page 1


Page 2


Page 3

வெளிக்குள் வெளி
கவிதைகள்
கல்லூரன்
வியூகம்வெளியீடு

Page 4
Velikku Veli
Collection of pomes bụ Hollooron
First Edition : December 1999
Type setting & Page Making : Microsoft Asian - Maruthamunai
Cover : S. Ruthra
Published by : VIEW - HUM
27/A Singar Shop Batticaloa Road Kalmunai
Sri Lanka
Printed by : llampirai Offset - Maruthamunai
Price : 75/-
 
 

"வெற்றுத்தாளின்
வெறுமைச்சித்திரமா நீ
இல்லை இல்லவே இல்லை
அசையாத கோடுகளினாலும்
கேட்காத குரல்களினாலும்
ஆனவன் நீ எனக்கு எப்போதும்’
என் தந்தை இ. ஐ. பொன்னையா அவர்களின் நினைவாக

Page 5

என்கவிதைகள் தொடங்கும் இடம்
5டவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னார்கள் நான் நம்பினேன். அவரின் மகிழ்ச்சியின் பொருட்டு மாமிசத்தை வெறுத்தேன். நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளவும் காதில் பூவைத்துக்கொள்ளவும் பழகினேன். ஒரு குறுகிய அறைக்குள் கற்பூரங்களுடன் ஊதுபத்திகள் மணத்துடன் அவர் எனது சிறையில் இருந்தார்.
அவரை விடுதலை செய்யுங்கள் அவரை விடுதலை செய்யுங்கள
கார்ல் மாக்ஸ் தனது தோழர்களுடனும், லெனின் தனது தோழர்களுடனும் என் வாசலை மறைத்தனர். எனது தேவர்கள் எனது கனவிலிருந்து துரத்தப்பட்டனர். நான் ஆகாயமும் நிலமும் இல்லாமல் இடைநடுவில் .
bT6öT uLITÍ நான் யார் எதற்குள் என் இருப்பு?
ஏழைகள் தெரிந்தார்கள், பாவாத்மக்களைக் காணவில்லை; ஏற்றுக்கொண்டேன். எனது கடவுளர்கள் யாவரும் பேசாத வெறும் சிலைகளாகினர். கோடுகளைத் தாண்டுதல் குதூகலம் தந்தது. வயல் காட்டு நண்பர்களுடன், வியட்நாம் வீரர்களுடன் இருந்தேன். கஸ்ரோ கழுத்தில் மாலையுடனும் தொப்பியுடனும், சேகுவரா கைகுலுக்கினார். நான் ஆகாயத்தில் மிதந்தேன்.
Ο1

Page 6
திடீர் என இதயம் நடுங்கிற்று எங்கும் தீச் சுவாலைகள் வீடுகள் பற்றி எரிந்தன புல் வெளிகள் எரிந்தன மனிதர்கள் எரிந்தனர்
மரக்திர்ே எரிந்தனர்
துப்பாக்கிக் குண்டு துளைத்த பிணங்களில் என்னோடு வயல்
காட்டில் இருந்தவனின் தம்பியும்
ஒருவன்.
அவனைப்பிடியுங்கள் அவனைப்பிடியுங்கள் கூக்குரலிட்ட கும்பலில் என் வயல் காட்டுத் தோழர்களும் இருந்தனர். பூட்டியிருந்த பெட்டிக்குள் அடுக்கியிருந்த அடையாளங்களை ஒவ்வொன்றாகச் செருகினார்கள் நான் நடுங்கினேன். தலை தெறிக்க ஓடினேன். அவனைப்பிடியுங்கள் அவனைப்பிடியுங்கள்
எனது அடையாளம் பொறித்த ஒருவன் தான் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறினார்
எனக்கு மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்தது. என் புதைகுழிகள் ஒவ்வொன்றாகத் திறந்துகொண்டன கண்ணை மெல்ல் விழித்தேன். அம்மனிதன் என்னை மெல்ல நிமிர்த்தி அணைத்து தண்ணிர் பருக்கினான் என் கண்கள் பனித்தன.
எங்கே என் சிவப்பு நிறத்தோழர்கள்?
நான் யார்
நான் யார்
O2

துப்பாக்கிகள் எங்கும் முளைத்தன துப்பாக்கிகள் எங்கும் வெடித்தன ஆகாயத்தை அளந்து நட்சேத்திரங்கள் கணக்கிடப்பட்டன.
தலைவர்கள் பலர் சுவரில் மாட்டப்பட்டனர் மலர் மாலைகளுடன். மீண்டும் நான் தொடங்கிய இடத்தில்
எப்புயலின் தாக்குதலிலும் பலம் பெறும் இனி என் பயணம். அது ஒரு சங்கீதத்தின் கர்ச்சனையுடன்; எவரும் அத்துமீறாத சமூகம் இருக்கும் இடம் நோக்கி
அது,
பாதைகள் இல்லாத காடுகளின் மகிழ்ச்சி, அதைவிடவும் ஆழமான கடலில் அந்தம் நோக்கி
ஆத்மா எனும் ஒரே அடையாளத்துடன்
நகர்கிறது என் பயணம்.
இப் பயணத்தில் நான் சிந்துகின்ற
நான் உரோமம் சிலிர்க்கின்ற
கண்ணிர் துளிகள்
இக் கவிதைகள் கல்லூரன்
ஆர்.கே.எம்.வீதி,
கல்முனை இலங்கை.
குறிப்பு :
1997ம் ஆண்டின் நடுப்பகுதியில் எனது கவிதைகளை தொகுப்பாக வெளியிட "ஆகவே"யின் சார்பில் கவிஞர் ஜபார் அவர்கள் முதலில் எடுத்த முயற்சி தவிர்க்க முடியாத காரணத்தால் தொடரமுடியாது போயிற்று. பின்பு எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்களின் அனுசரணையுடன் “வியூகம்" வெளியீடாக இப்போது வெளி வருகிறது. இதனால் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் மதிப்புரைக்கு உட்படாத பல கவிதைகளும்
இதில் இடம் பெறுகின்றன என்பதை திெரிவித்துக் கொள்கின்றேன்.
O3

Page 7
கல்லூரனின் கவிதைகள்
(1)2+ (1)? 2
மேலே உள்ளது ஒரு கணிதப் பின்னம் போலத் தோன்றும். அதன் தீர்வு 1 எனவும் நீங்கள் கூறக்கூடும.
அந்தக் கணிதப் பின்னத்தின் குறியீட்டில் நான் காண்பது கல்லூரனின் கவிதைப் பின்னம். அந்தக் கவிதைப் பின்னத்தின் தீர்வு என்னுடைய பார்வையில் முழுமை. முழுமையின் குறியீடு 1.
முதலாவதாக உள்ள (1) கல்லூரனின் சிருஷ்டித்துவ முறையை அல்லது கவிதை சினைக்கும் முறையைக் குறிக்கின்றது. கல்லூரனிடம் இரண்டு விதமான சிருஷ்டித்தல் முறை அல்லது கவிதை சினைக்கும் முறை உள்ளன. இரண்டும் ஒன்றுக்கொன்று சமனானது. ஒன்று மற்றொன்றால் பெருக்கம் பெறுவது. இரண்டும் சேர்ந்து தான் கல்லூரானின் சிருஷ்டித்துவ முழுமை.
இரண்டாவதாக உள்ள (1) கல்லூரனின் இரண்டு விதமான சாராம்சத்தை குறிக்கும் இரண்டு விதமான சாராம்சங்களாயினும் சாராம்சங்களின் சாராம்சம் ஒன்றே. அதுவும் கல்லூரனின் முழுமையே.
இந்த இரண்டினையும் ஒரு முழுமையாக தீர்க்கும் 2 எனும் உருவக் குறியீடு எது என்பதைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை உங்களுக்கு விட்டு விடுகிறேன். புரிதல் வாசகனின்/வாசகியின் பொறுப்பு அர்த்தம் கொள்வதும் அவர்களைப் பொறுத்தது.
கல்லூரனிடம் இரண்டு விதமான சிருஷ்டித்தல் முறை அல்லது கவிதைச் சினைக்கும் முறை உள்ளது, என மேலே கூறப்பட்டது.
(அ) பொதுவான அனுபவ மீட்டல் (ஆ) வாசிப்பில் இருந்து பெறும் சிந்தனைப் பொறிகளின் தீ மூட்டல்.
O4

அ) பொதுவான அனுபவமீட்டல்கள், உரையாடல்கள் பாணியிலும் உரைக்கும் பாணியிலும் அமைந்துள்ளன. குறியீடுகளும் உருவகங்களும் கவிதைகளில் ஆங்காங்கே விரவிக் கிடந்தாலும் குறியீட்டுருவமாகவோ உருவகித்தல்களாகவோ கவிதையை கருத்தரிப்பது கல்லூரனுடைய சினைப்புகளில் தீர்க்கமாக காணப்படாதது. இத்தொகுதியில் உள்ள துயர் கொணர்ந்த பறவை வெளிக்குள் வெளி’ "மூடப்படுவதற்கு முன்பாக ஆகியவற்றில் குறியீட்டு உருவத்தின் சாயல்கள் தென்படுகின்றன. மூன்றவது கட்டில் கனவு நிலைத்தளத்தையுடையது. நிகழ்ச்சிப்படுத்துதல் தமிழ் கவிதைகளில் அருகிவரும் பன்பு ஆயிற்று.
தொடர்ச்சியான செயல் சித்தரிப்புக்கள் மூலம் பொருளைப் தொனிக்கச் செய்வதே நிகழ்ச்சிப் படுத்துதல். இது கல்லாரனிடமும் காணப்படவில்லை. கனவுத்தளம் தோற்றங்களையும் தொடர்புள்ளதும் தொடர்பு இல்லாததுமான நிகழ்வுகளையும் கொண்டது. கல்லாரனின் மூன்றாவது கட்டில் நிகழ்வுகளாக அல்லாமல் நிகழ்வுகளின் நினைவாக வெளிப்படுத்தப் படுகின்றது. அனுபவங்களின் மீட்டல்களுடன் அனுபவங்களின் பொதுமைப்பாடாக மின்னும் சிந்தனைத் தெறிப்புகளும் கல்லூரனின் இவ்வகைக் கவிதைகளில் கலந்தே காணப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு கவிதைகளுடன் இத் தொகுதியிலுள்ள ஒரே முகம் மீண்டும் மீண்டும் 'இன்றும் எப்போதும் நினைவுத் தணல்கள் ‘புலப்படாத துயர் கடைசித் பனித்துளிக்கு எல்லாம் முடிந்த பின்பு 'இன்று நான் அடையாளம் ‘சூரியன் வந்து செல்லட்டும் முதலிய கவிதைகள் இவ்வகையில் சினைப்புற்றவை 305 D.
ஆ) வாசிப்புக்களிலிருந்து கிளறும் சிந்தனைப் பொறிகளினால் சினைப்ப் பெறும் கவிதைகளை வேறு சிலரும் எழுதியுள்ளார்கள். எனினும் கல்லூரனின் ரகம் சற்று வித்தியாசமானது.
பொதுவாக வாசிப்புக்களிலிருந்து பெறும் சிந்தனைத் தெறிப்புகள் அல்லது உணர்வு மூட்டங்கள் கவிஞசனின் சுயாதீனமான சொற்களிலும் படிமங்களிலும் ஆடை உடுத்தும் கல்லூரனோவெனில், மூலத்தின் சொற்களையும் படிமத்தையும் வரிகளை ப்ெயர்த்தெடுத்து விடுகிறார். ஆனால் அந்தப் பெயர்ப்புகளில் அவர் தமக்குரிய அர்த்தப்பாடுகளைப் பொதிகிறார்.
மூலக்கல்வி அந்தச் சொற்களையும் படிமங்களையும் எதற்குப் பயன்படுத்தினாரோ, அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதான தனது மூச்சை தனது உயிர்க்காற்றை அவைகளுக்குள் செலுத்தி விடுகிறார் கல்லூரன்.
உதாரணமாக இத்தொகுதியிலுள்ள “மரித்துப் போன இலை” என்னும் கவிதை G696b65uileir "Ode to the West Wind" 616örgjub soligoguist) Dead leaves Withered leaves என்ற தொடர்கள் இருக்கின்றன. ஷெல்லியின் பாஷையிலோ அல்லது வேறெந்த வகையிலோ DEADLEAVES என்பதற்கு தமிழில் சருகுகள் என்ற பதம் உள்ளது.
O5

Page 8
காய்ந்த இலைக்ள், உதிர்ந்த இலைகள் போன்ற தொடர்களும் உபயோகிக்கப்படலாம். ஆனால் கல்லூரன் ஒருமையில் “மரித்துப் போன இலை” என்ற பதம் சேர்த்து மரித்த இலையை தமக்கே உவமையாக்கி அதில் தன்னையே உருவகித்து GibsT6iraspTit. G696ü65u56óT Odes to the west windoi) seGO)6) F(b(556i seisigug) வெறும் சருகுகள் மேற்குக் காற்றில் அள்ளுண்டு போகின்ற சருகுகள். மேற்குக் காற்றில் அணைப்புண்டு, அள்ளுண்டு உயரக்கிளம்பும் அந்தச் சருகுகளாக தான் இல்லையே என்பது தான் ஷெல்லியின் ஆதங்கம். கலலூரனோவெனில், மரித்த இலையை தானேயாக உருவகிக்கிறார்.
"Drive my dead thoughts/ over the universe like withered leaves/to quicken a new birth" 6T6óris G696,065u56óT sig356flo) g 6irgiT new birth (Q(b. புதிய ஜனனம்) என்பதை பற்றிக் கொண்டு அதை மரித்த இலையுடன் தொடுத்து மரித்துப்போன இலையாகிய தான் ஒரு புதிய ஜனனத்தை உயிர்ப்பிக்கக்கூடுமோ 6TGOT 660DypÉgBrTit. G&LDub "Scattered as form an un existinguished hearth ashes and Sparks my words among mankind" 6T6öys sepas6fg}6itGIT ashes and sparks from an un existinguished hearth 61663 U9LDg556ò LD60Tub கொண்டு அணைந்த அடுப்பிலிருந்து நெருப்புத் துளிகள் ஒளிரக் கூடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்த முனைகிறார்.
T.S. g6Su JigGór The Love song of Alfred Purfrick S6óT floo Gg5ITLsitE6061Tub படிமங்களையும் அகம் புறமாக்கி தனக்குத் தோதான அரண்களாக மாற்றி அவற்றின் 26TLITE5 g5|Teisegb606) BL551-5BTit. That is not what I meant at all / that is not it at al “என்ற வரிகளை" நீ கருதியது இதுவல்ல அல்லது இதுவே எல்லாம் அல்ல என தன்மையை முன்னிலையாக்கி " Head brought in upon a platter" என்ற படிமத்தையும் மரணத்திலிருந்து மீண்ட லாசரசின் படிமத்தையும் g560Tds(85 (8g fig556) Bite off the matter with a smile 6T6óTu60)5 "do புன்னகையில் கடிபடும் உயிர்ப்பு” எனவும் பொருள் மாற்றியும் தன் உணர்வுகளைத் தாக்கமுடன் வெளிப்படுத்த முடிகின்றது இவருக்கு இது போலவே, பைரன், ரெனிசன் போன்றோர்களினதும் சிந்தனைகளையும் படிமங்களையும் தன் மனவியக்கத்துக்கேற்ப தன்மயமாக்கி தனக்கு வேண்டிய மூலக் கூற்றுக்களை சிருஷ்டித்துக்கொள்கிறார். இந்தச் சிருஷ்டித்துவத்தை வெறும் பிரதி என்றோ, தழுவல் என்றோ புறம் தள்ளிவிட முடியாது. இது தனது உணர்வை பிற சிந்தனை மூலத்தில் அடையாளம் கண்டு அவைகளை உள்ளிணைத்துக் கொண்ட ஒரு நிலையே. இந்த உள்ளிணைப்புக்களில் வெளிப்படுவது கல்லூரனின் சொந்த உணர்வும் பிரச்சினைகளுமே ஒழிய, மூலத்தினுடைய அல்ல. பிற படிமமூலங்களை உள்ளிழுத்து மீளமைப்புச் செய்கின்ற இவ்வகையான கவிதைகளை உள்ளிணைத்த கவிதைகள் என்றும் உள்ளிணைப்புக்களின் பாதிப்பு இல்லாத கவிதைகள் சுயம்புவான கவிதைகள் என்றும் பெயரிடலாம்.
O6

இந்தச் சந்தர்ப்பத்தில் கல்லூரனின் ஆங்கில மொழியாற்றலையும் குறிப்பிட வேண்டியுள்ளது. ஆங்கிலம் இவரை வசப்படுத்தியுள்ள அளவிற்கு இவரும் ஆங்கிலத்தை வசப்படுத்தியுள்ளார். ஆங்கிலத்தில் பல கவிதைகள் எழுதியுள்ளார். "Still love You", Under one sun", "I and my pot of rice" (p56 SuGOT பிரசுரம் பெற்ற இவருடைய ஆங்கிலக் கவிதைகள். Pon Ganesh என்ற பெயரில் இவற்றை எழுதியிருந்தார். இவருடைய பல தமிழ் கவிதைகள் ஆங்கிலத்தில் கருத்தரித்து தமிழில் விருத்தி பெற்றவை. இவருடைய சில (சுயவடிவான) கவிதைகளிலும் கூட காணப்படும் ஒரு வகை அந்நியத்தன்மையை நாம் இந்தப் பின்னணியில் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
முதலாவது குறியீட்டுச் சங்கேத மொழியாகிய (1) குறிக்கும் கல்லூரனின் சிருஷ்டித்துவ முறை அல்லது கவிதை சினைக்கும் முறை இவ்வாறாக அவருடைய கவிதைச் சாராம்சத்தைக் குறிக்கும்.
இரண்டாவது சங்கேதமாகிய (1) 2 என்பதற்கு வருகிறேன். கல்லாரனின் கவிதைச் சாராம்சத்தில் இனம் காணப்பட்ட இரண்டில் ஒன்று (a) வாழ்க்கையை கல்லூரன் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் விதம். மற்றது (b) கல்லூரனின் துன்பியல் (a) கல்லூரனின் வாழ்க்கை அர்த்தம் அல்லது வாழ்க்கையில் இறுதியானதும் உறுதியானதும் என போற்றும் இலட்சியங்கள், உண்மை, தனிமை, போலியின்மை என்ற தன்மைக்குள் அடங்கக் கூடியன. உண்மையை தரிசிக்கவும் எளிமையை ரசிக்கவும் போலிகளை இனம் காணவும் கல்லூரனுக்கு முடிகின்றது. தாராளமும் தன்னலைமின்மையும் கல்லூரனின் கூடப்பிறந்த குணங்கள். எந்த எதிர்பார்ப்பும் அற்ற அன்பிலும், சினேகத்திலுமே இவருடைய வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கின்றது. இன்னும் உன்னை நேசிக்கிறேன். (Stil l Love You) என்பது இவர் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றின் பெயர்.
கல்லூரன் ஆசிக்கும் உண்மையை "ஒரே முகம்” என்ற கவிதையில் இவ்வாறு சொல்கிறார்.
"சிரித்திருக்கும் மலர்களைப்
போல நான் யாருக்காகவும் சோடித்துக் கொள்வதில்லை இடு காட்டிலும்
பூத்துக் கிடப்பேன்
எனது
ஒரே ஒரு முகத்துடன்"
அவர் அல்லது அவருடைய ஒரு பாத்திரம் தான் உள்ளது போலவே தன்னை ஒப்புக் கொள்ளும் தன்மையை "மீண்டும் மீண்டும்” என்னும் கவிதையில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
O7

Page 9
“ என்னை கிண்டல் செய்யட்டும் எத்தனை விண் மீன்களாயினும் நான், வெட்கமின்றி மீண்டும் மீண்டும் தோன்றும் நிலவு தான்”
எளிமையின் மீது கல்லூரனுக்கு உள்ள இணக்கத்தை இந்த வரிகள் புலப்படுத்துகின்றன.
“என் முற்றத்தில் பூத்த மல்லிகை மலரின் புன்னகை எப்போதும் எனக்குப் பெரிது’
காலத்தையும் வெளியையும் கடந்து இதுவரை சூடியிருந்த அடையாளங்கள் கரைந்து புறப்படும் போது ஒரு புல்லின் நுனி ஒரு பூவின் இதழ் இவைகளுக்கு அப்பால் நான்,
வெளிக்குள் வெளி'
போலிகளை மிக இலகுவாக இனங்காணும் கல்லூரன் அவர்களை நைய்யப்பு டைக்கவும் தயங்கவில்லை.
"இதயத்தை எங்கு வைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள் ஓடிப் போய் ஒரு தடவை எடுத்து வையுங்கள் ஐயா அதன் இருப்பிடத்தில்”
என்று “சூரியன் வந்து செல்லட்டும்” என்ற கவிதையிலும்
"பாதம் பதிந்திருக்கும் இம் மண் உன்னுடையது அதன் கீழே எனக்குத் தெரிவது அழகிய நீரோடை .
O8

வேண்டுமானால் சிரித்துக் கொள் தலையில் கவிந்திருக்கும் நின் வெண் பஞ்சு மேகத்திரள் எனக்கு எப்போதும் CD|9ტ5 $ცb6)l60I
ஏனெனில் யாரும் கழிப்பறைக்குப் போவதை நான்,
கற்பனை செய்வதில்லை”
என்று "கடைசிப் பனித்துளிக்கு’ என்னும் கவிதையிலும் கல்லூரன் போலிகளைச்
சாடும் நளினம் கொடுப்புக்குள் சிரிப்பை வரவழைக்கக் கூடியது.
"வெகுமானங்கள் பற்றி
தொலைந்து போன வாழ்வு பற்றி நீ கவலைப்பட்டாயா ஆனந்தா”
அது அவர் தன்னையே வினவுதல் போன்றது தான்
“வெகுமானங்கள் பற்றி தொலைந்து போன வாழ்வு பற்றி நீ கவலைப்பட்டாயா கல்லூரா?
எந்தக் கவலையும் இல்லாது என்னையே நான் ஈந்தளிப்பேன்.”
என்பவை கல்லூரன் எழுதாத வரிகள். இதே எழுதாத வரிகள் தான் "சூரியன்
வந்து செல்லட்டும்' என்ற கவிதையில் கல்லூரன் எழுதிய வரிகள்.
"எதிர்பார்ப்புக்கள் இன்றித்தான் சிரிப்பன புல் வெளிகள் எப்போதாவது ஒரு மழையை நோக்கி எதிர்பார்ப்புகள் இன்றித்தான் அழுவன இதயங்கள் கொலையுண்டு கிடக்கும் ஒரு பிணத்தை நோக்கி”
ஷெல்லியின் உள்ளணைந்த வரிகள் கல்லூரனின் மிக உயர்ந்த இலட்சியங்களாக
DL6irstT60T.
O9

Page 10
“பின்பு உன்னை நான் சந்தித்துக் கேட்பேன் "அன்பே அன்புக்காக வைத்திருந்தாயா? என்று!
அன்பையும் எளிமையையும் உண்மையையும் நோக்கிய கல்லூரானின் இலட்சியத்தில் சமூக, அரசியல், தத்துவார்த்த சிந்தனைகள் குழப்பமட்ைகின்றன. "ஆழமானகடலின் அந்தம் நோக்கியும்” பாதைகள் இல்லாத காடுகளின் மகிழ்ச்சியை எதிர்நோக்கியும்’ எவரும் அத்து மீறாத ஒரு சமூகத்தை நோக்கியும் ஆத்மா என்ற ஒரே அடையாளத்துடன் தனது பயணம் தொடர்வதாக “தனது கவிதை தொடங்கும் இடம்” பற்றிய குறிப்பில் பிரகடனப்படுத்தும் கல்லூரன் தெளிவற்ற சமூக, அரசியல் தத்துவார்த்த குருட்டாட்டங்களின் பின் கல்லூரன் போன்றோர் புரட்சினதும் விடுதலைப் போரினதும் பச்சை யதார்த்தத்தில் பின் வாங்கி சரணாகதி நிலையடைவது சரித்திரத்தில் புதிதல்ல எனினும்,
"எனது இதயத்து வேர்களை
பிய்த்து எறிந்து பெறும்
விடுதலை எனக்கு எதற்கு? ” என்ற அவருடைய கதறல் (விடுதலையும் விரோதமும்) அனுதாபத்துடனும் அவதானத்துடனும் சிந்திக்கத்தக்கது.
(b) கல்லூரனின் இணைச்சாரம்சமாகிய துன்பியல் தமிழ்க் கவிதையை அதன் மொழியிலம் படிமத்திலும் சற்று ஆழப்படுத்துகின்றது என்றே கருதுகின்றேன். கல்லூரனின் துன்பியல் என்பது அவரது மனதின் அடி ஆழத்திலுள்ள சோகமும் தவிர்ப்பும் பச்சாத்தாபமும் துன்புறுத்தப்படுவதற்கான உணர்வுச்சிக்கலும் ஆகும்.
“மீண்டும் மீண்டும்” “நினைவுத் தணல்கள்’ "மூடப்படுவதற்கு முன்பாக” “அடையாளம்” “விறைத்துப் போனவை” எல்லாம் முடிந்த பின்பு’ ஆகிய கவிதைகளில் கல்லூரனின் துன்பியல் வெளிப்படுகின்றது. "மரித்துப்போன இலை” “இதுவே எல்லாம் அல்ல” ஆகிய உள்ளிணைந்த கவிதைகளின் சிந்தனைப் பொறியில் கல்லூரன் தீ மூட்டுவதும் இத்துன்பியல் நெருடல்களே.
“எத்தனை தடவை என் இதயத்தை நீ குப்பைக்குள் வீசுவதும் நான் மீண்டும் மீண்டும் எடுத்து மாட்டிக் கொள்வதும் மென்மையானதன்றோ இதயம்!”
1O

என்று "மீண்டும் மீண்டும்” இல் அங்கலாய்க்கும் கல்லூரன் வீணாய்ப்போகும் இரவுப் பொழுதுகளை எண்ணிச் சலித்துக் கொள்கிறார்.
"கிழிந்து தொங்குகின்றன என் இரவுப் பொழுதுகள்”
"நினைவுத் தணல்களில்" இந்த உறவின் முறண்பாடுகள் மேலும் அழுத்தங்களை சேர்க்கின்றன.
"ஓராயிரம் அற்பவிடயங்களில் என் விருப்புகளில். வெறுப்புகளில்
கிழிந்து அழுக்டைந்து தொங்குகிறேன்
"குரூர அழுத்துதல்களுக்கும் வெறுமை நோக்கி கரிய எதிர் முயற்சிக்குமிடையே என் இருட் திரை தடிக்கும் முனை மழுங்கிய ஒரு விசாரணைக்கு நீ என்னை அழைத்துச் செல்கையில் என் இருட் திரை தடிக்கும்.”
உறவுகளின் முறன்பாட்டிலா இந்தத்துன்பியல் என நாம் சந்தேகிக்கும் போது அதையும் கடந்த நிலைகள் சித்தரிக்கப்படுகின்றன.
"வெய்யிலில் ஒரு மனிதனை தூங்க வைக்க முடியுமா முடியுமெனில்
என்னை எப்போதும் கிடத்திப் பார்க்கும் இடம் அதுதான்”
என்ற வரிகளில் தெரியும் தகிப்பு.
"காற்றில்லாத ஒரு சிறு அறைக்குள் நான் ஆத்மாவை சிறைப் பிடிக்கவும் மரண வாழ்வில் வெறும் கனவுகளைக் காணவும் இன்னும் முயல்கிறேன்’
11

Page 11
என்ற வரிகள் விரக்தியாக மாறி.
"காக்கைகள் காத்திருக்கட்டும் என் கண்களைப் பிடுங்கிக் கொள்வதற்கு நாய்களும் தான்
புதைத்ததும் இழுத்துக் குதறுவதற்கு."
என்ற வரிகள் சினமாகி விடுகின்றது.
இந்தத் தவிப்பும் விரக்தியும் சினமும் கடைசியில் தன் இருத்தலையே நிராகரிக்கின்ற பச்சாத்தாபத்தின் எல்லைக்குப் போய் விடுகிறது. மரித்த இலையாக தன்னை உருவகிக்கும் கவிஞர். அடிக்கடி தமக்கு சமாதி கட்டி விடுகின்றார்.
“ இப்பொழுது மூடப்படாத சவக்கிடங்குள் எனது பிணம்
வெறும் ஊது பத்திகளில் மணத்துக் கொண்டிருக்கிறேன்” ("மூடப்படுவதற்கு முன்பாக”)
"சாமேள ஒலிகளிடை எழும் அழுகுரல்களின் மத்தியில் ஒரு பிற்பகல் நிறப் பொழுதில் அல்லது சடுதியில் ஒரு இளங்காலை நிறப் - பொழுதில் எனது சுவர்கள்
முத்திரை குத்தப்படும் எனது பிணப் பெட்டியில் ஆணி அறையப்படும்’
(வெளிக்குள் வெளி)
" நீட்டி நிமிர்ந்து கிடத்தப்பட்டிருக்கிறது எனது பிணம்’
(மூன்றாவது கட்டில்)
* நான் கிடப்பேன் ஒரு பிணத்தைப் போல ஒரு பல்லியைப் போல ஒரு கல்லைப் போல உயிரற்று”
(விறைத்துப் போனவை)
12

தான் உயிரற்றுப் போனவன் என்பது கல்லூரானின் உணர்வுமையங்களில் ஆழ்ந்து புதைந்தே விட்டது. கற்பனைகளையும் கழிவிரக்கத்தையும் அறவே ஒதுக்கி, பச்சை யதார்த்தத்தின், இயல்பு நிலைச் சிந்தனையில் கூட இந்த நிராகரிப்பு பளிச்சென்று
Olybá66TBg5).
" என் நெஞ்சுள் தீட்சண்யமான அக்கண்கள் கொழுத்த நினைத்தது எதனை எல்லாம் எரிந்து சாம்பலான பின்பு எல்லோரும் இங்கிருந்து புறப்பட்டு சென்ற பின்பு பாறையாகிப் போன பின்பு ஒரு மாரியின் குளிர்மையும் ஒன்றுதான் ஒரு கோடையின் தணலும் ஒன்றுதான்”
(எல்லாம் முடிந்த பின்பு)
இந்த துயரத்தின் விசும்பலில் கூட கல்லூரனுக்கு அவரது கவிதை கை கொடுக்கின்றது.
"ஆயினும் என்ன அதோ நிலாவிலிருந்து வடிகிறது என் துயரம் கடலுக்குள் அவற்றை காற்றோடு கலந்து கவிதைகளாக்கி ஆர்ப்பரிக்கின்றது எனது கடலலைகள் ”
(மூடப்படுவதற்கு முன்பாக)
இருத்தலை நிராகரிப்பதில் எழுகின்ற இன்பமே கல்லூரனின் துன்பியல் கவிதைகள், கல்லூரன் இருத்தலை நிராகரிப்பது தனது பச்சாத்தாபத்திற்கும் ஆற்றாமைக்கும் அவர் அளிக்கும் விலை தான். அந்த நிராகரிப்பிலேயே தனது ஈடேற்றமும் உண்டு என்பது அவரது நம்பிக்கையாகவும் உள்ளது. அந்த நம்பிக்கை ஒரு புத்துயிர்ப்புக்கான நம்பிக்கை.
" காய்ந்து
சருகாகிப் போன இந்த இலை
ஒரு புதிய ஜனனத்தை
உயிர்ப்பிக்கக் கூடும்.”
13

Page 12
அவிந்து போன அடுப்பிலிருந்து நெருப்புத் தெறிப்புகளும் ஒளிரக் கூடும்.”
ஓ. என் உயிர்க்காற்றே உறை பனிக்காலம் வந்தால் அவர்களைக் கேளுங்கள் வசந்தம் இன்னும் தூரத்திலா உள்ளது"
சண்முகம் சிவலிங்கம்
0.1-09-1997
"பிரகாஷ்த்தம்” பாண்டிருப்பு கல்முனை.
கல்முனைப் பிரதேசத்திலிருந்து வெளிவந்த "கீற்று சஞ்சிகை பற்றிய நினைவுகள் கவிஞர் ஆர். என். லோகேந்திரலிங்கத்துடன் இணைந்து செல்பட்ட கவிஞர் கல்லூரனை அறிமுகம் செய்து வைப்பதை அவசியமற்றதாக்கி விடுகின்றன. கல்லூரானின் கவிதைகள் தன்னிலிருந்து புறத்தையும், புறத்திலிருந்து தன்னையும் தேடுபவை கவிதைகளோடும் அனுபவங்களோடும் நுழைகிற நமக்கு வியப்பைத் தருபவை எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய இந்நூல் இப்புோதாவது வெளிவருவதில் "ஆகவே'க்கு அதீத மகிழ்ச்சி.
தனிநபர் அபிப்பிராயங்களை விமர்சனங்களாகவும், பேராசிரியர்களினதும் கலாநிதிகளினதும், முன்னுரைகளைச் சான்றிதழ்களாகவும் கருதும் மனோபாவம் நமது பண்பாட்டு அம்சங்களில் ஒன்றாகிவிட்டது. இவைகளை படைப்புகளுக்குள் நுழைவதற்கான முகவரி அட்டைகளாகவன்றி கட்டளைகளாக கருதுவதை தவிர்த்து இக் கவிதைகளுக்குள்ளும் நுழைய வேண்டும் என்பது "ஆகவே"யின் அபிப்பிராயம்.
ஆகவே சார்பாக
8gLITŤ 204 மின்சார நிலைய வீதி
திருகோணமலை.
14

*
A by
A
ஒரே முகம்
சிரித்திருக்கும் மலர்களைப் போல நான்
யாருக்காகவும் சோடித்துக் கொள்வதில்லை இடுகாட்டிலும் பூத்துக்கிடப்பேன்
எனது ஒரே ஒரு முகத்துடன்
15

Page 13
്ത(bി ീ(bി
எத்தனை தடவை என் இதயத்தை நீ குப்பைக்குள் வீசுவதும் நான் மீண்டும் மீண்டும் எடுத்து மாட்டிக் கொள்வதும் மென்மையானதன்றோ இதயம்!
தெருவில் வாகனங்களும் மனச்சாட்சியின்றி மிதித்துத் துவைக்கின்றது என் பகல் பொழுதுகளை நாய்கள் குரைத்துக் குரைத்து கிழிந்து தொங்குகிறது என் இரவுப் பொழுதுகள்
என் முற்றத்தில் பூத்த மல்லிகை மலரின் புன்னகைகள் எப்போதும் எனக்குப் பெரிது அழுதுகிடக்கும் என் இதயத்தின் காயங்களுக்கு அவைகளைப் பூசுவேன் மெது மெதுவாய் மரங்களில்-செடிகளில் இலைகளில் நிறந் தீட்டிச் செல்லும் அந்த அந்தி நேரத்துச் சுகம் போல
என்னைக் கிண்டல் செய்யட்டும் எத்தனை விண்மீன்களாயினும் நான் வெட்கமின்றி மீண்டும் மீண்டும் தோன்றும் நிலவுதான்.
16

அவள் அனுப்பியிருந்த நினைவு அலைகளில் ஒரு தனித்த குருவி என் எலும்புக் கிளையில் வந்துகுந்தியது.
நானும் பேசவில்லை. அதுவும் பேசவில்லை, நீண்ட நாட்களின் பின்பு அதன் வருகை
என் கிளைகளில் துருவித்துருவி துடித்துத் துடித்துத் கொத்தியது. நெஞ்சு நிரம்பியது. என் விழிகள் மூடிக்கொண்டன நெஞ்சு நிரம்பியது.
வார்த்தைகள் முட்ட முட்ட பாய்ந்து எறியும் அலைகள் வெறுமனே
தரையில் தலைம்ை முட்டிமுட்டி OrLorris செல்கின்றன.
17

Page 14
இOடு)டு)(Oடு)டு)டு) விரோதமும்
தென்றலில் கோர்த்து என்னிதயத்தில் வேர்விட்டு பூத்த ரோஜா மலர்களே, கிருபா, ரஞ்சா,
எனக்காக விமோசனம் தேடிப் புறப்பட்ட தபசிகளின் சாபங்களுக்கே பலியாகிப் போனிர்களே!
இதழ் இதழாகப் பிய்த்து விசப்பட்டிர்களா, அப்பாவிகள் நீங்கள். என்னிடம் எங்கு சாட்சியங்கள்! வெடித்துச் சிதறும் என் கண்ணிர்க் குழம்புகளைத் தவிர,
எந்தப் பூவின் கசக்குதல்களுக்கும் கண்ணிர் சிந்துதுபவன், உங்களை ஆணி அறைந்த சிலுவையின் முன் மாத்திரம் கல்லாக நிற்பது எவ்வாறு.
விமோசனம் எமக்குத் தேவைதான் சுத்தமான கரங்களுடன் அவர்கள் என் கதவுகளைத் தட்டட்டும். என் இதயத்து வேர்களைப் பிய்த்து எறிந்து பெறும் விமோசனம் எனக்கெதற்கு!
பித்துப் பிடித்தவர்கள் சப்பித் தின்னட்டும்
கானகம் செல்ல வழிவிடுங்கள். சிலுவையில் அறைபட்டு கிழிந்து கிடக்கும் எனது சின்னஞ் சிறு பூக்களை - நான் உயிர்ப்பிக்க வேண்டும்.

நான் ஒரு மரித்துப்போன இலை, உன்னை நோக்கிப் பறந்திருப்பேன; ஒரு துள்ளும் மேகமாக இருந்திருந்தால்,
எல்லாத் தோழர்களும் வந்து சேரட்டும். பின்பு உன்னை நான் சந்தித்துக் கேட்பேன் “அன்பை அன்புக்காக வைத்திருந்தாயா” என்று. நிமிடங்கள் கட்டிகளாக்கி பாரங்களாக்கி 8IIT என்னை சங்கிலியிட்டு விட்டன
நான், தலை குனிந்து கொள்கிறேன். என்னை உனது பினத்தில் ᏭᏛ60 எரியும் நெருப்பாக்கி வை. இறந்து போன நினைவுகளை மீண்டும் இப் பிரபஞ்சம் நோக்கிச்
செலுத்திப் பார்,
காய்ந்து சருகாகிப்போன இந்த இலை ஒரு புதிய ஜனனத்தை உயிர்ப்பிக்கக் கூடும், அவிந்து போன அடுப்பிலிருந்து நெருப்புத் தெறிப்புக்களும் ஒளிரக் கூடும்.
ஒரு மனித நேயத்துடன் அதுவும் இந்தப் பாடலுடன்,
ஒ என் உயிர்காற்றே! உறை பனிக்காலம் வந்தால் அவர்களைக் கேளுங்கள், வசந்தம் இன்னும் தூரத்திலா உள்ளது.
19

Page 15
விறைத்துப் போனவை
நீ உறுதியுடன் நீட்டிய கரம்; அக்கரத்தில், என்னை நோக்கி பிடித்திருந்த அப் பழுப்பு மஞ்சள் பழம்; வார்த்தையொன்றில்லாத கண்களில்
நானும் அத்தனை உறுதி.
என் இரவுகள் எதிலும் என் கனவுகள் எதிலும் தெரிவான அழிவுகள் மட்டுமே
நீயும் நானும் ஆறுதல் அளிக்கும் அக்கடல் விடுதியை நோக்கிய
பயனத்தில்,
நச்சுப் பாம்பின், ஆறுதல் அளிக்கும் பசுமை பயமுறுத்தும் விறைத்துப் போன புல் வெளிகள்,
நிசப்தமாக உருளும் சக்கரங்கள் பின அமைதி: கை தட்டி அழைக்கும் புதை குழிக் கற்கள்; தகரத்திலானது போல் தெரிகின்ற ஆகாயம்; செம்பின் நிறத்தில் புலர்கின்றது வசந்தம்,
2O

தடித்துக் கெட்டியாகிப் போன நரம்புகளாக
மரங்களும் செடிகளும் எலும்புகளையும் மண்டையோடுகளையும்
கொளுத்திச் செல்கிறது சூரியக் கதிர்
pÉ,
இதயத்துப் புண்னொன்றை மூடி மறைப்பது போல் இருக்கிறாய் பின்னர்,
காணாமல் போகிறாய்,
அறைகள் பற்றியும் புன்னகைகள் பற்றியும் அழகான செடிகள் பற்றியும் கடலைப் பற்றியும் இரக்கமற்ற விருந்தினர்கள்
பேசித் திருப்தி அடைந்து கொள்ளட்டும்
நான் இவைகளைத் தாங்கிக் கொள்கிறேன் ஒரு வகைத் தொண்டு போல, வெயிலில் ஒரு மனிதனைத் தூங்க வைக்க முடியுமா
முடியுமெனில்,
என்னை எப்போதும் கிடத்திப் பார்க்கும் இடமும் அதுதான்.
நான் கிடப்பேன் ஒரு பினத்தைப் போல ஒரு பல்லியைப் போல
ஒரு கல்லைப்போல - உயிரற்று என் இரவுகள் எதிலும் என்கனவுகள் எதிலும் தெரிவன அழிவுகள் மட்டுமே,
21

Page 16
வெளிக்குள் வெளி
இன்னும் முடிவுறாதிருக்கும் கனங்கள் சிலவற்றை என் கைகளில் திணித்து,
எல்லையற்ற வெளியின் மற்றுமொரு துண்டிை: என் கால்களில் அணிவித்து
எனக்குப் பெயரிட்டார்கள் நான் மனிதன்
சாமேள ஒலிகளிடிை. எழும் அழுகுரல்களின் மத்தியில்
ஒரு பிற்பகல் நிறப் - பொழுதில்,
அல்லது சடு தியில் 。
ஒரு இளங்காலை நிறப் - பொழுதில்
எனது சுவர்கs முத்திரை குத்தப்படும் எனது பினப் பெட்டியில்
ஆணி அறையப்படும்"
KER அதுவரை காற்றில்லாத ஒரு சிறு அறைக்குள் நான் ஆத்மாவைச் சிறைப்பிடிக்கவும்"
Ldg Goor snimyb6úlsö வெறும் கனவுகள் காணவும்
இன்னும் முயல்கிறேன்.
காலத்தையும் வெளியையும் கடந்து இதுவரை சூடியிருந்த அடையாளங்கள் கரைந்து புறப்படும் போது ஒரு புல்லின் நுனி ஒரு பூவின் இதழ் இவைகளுக்கு அப்பால் நான் வெளிக்குள் வெளி
22
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றும் எப்போதும்
கால எல்லைகளைக் கடந்து வெளியில் நீல நிறம்; மூச்சு விடும் இலைகளின் பசுமை என் முகத்தில் திரையிடும் வருட வரிகள்;
யாவும் மிகப் பழமை, கண்ணில் குதிக்கும் களிபேருவகை ஒப்பீடற்ற உண்மைகள்,
ஒரு மூச்சின் நிறுத்தலில் சரியும் நாட்கள் துயரில் தோயும் ஒரு நடுநிலைக்காய் அவை நகர, மகிழ்ச்சியான நாட்களும் வருகை தரும் துயரும் மகிழ்வும் கழன்று வரும் சில்லின் அச்சானி என மனம் ஆட்சி செய்யும்,
ஒவ்வொரு காலையும் புதிது. ஒவ்வொரு பனித்துளியும் புதிது, புதிது விண்வெளியே, நீ எப்போதும் நீல நிறந்தான் உயிர்க்கும் இலைகளே,

Page 17
நினைவுத் தணல்கள்
அள்ளிக் குவித்திருக்கும் என் பினத்தை இனி உன் இதழ்கள் முத்தமிடாது, மூலைக்குள் முடங்கிய
என்னை நோக்கி
நீ இனி முகம் சுழிக்கத் தேவையில்லை ീ !,ി
மீண்டும் மீண்டும்
நிகழ்ந்த நகர்வில்,
கால்களை இழந்த சோர்வு
ஓராயிரம் அற்ப விடயங்களில்
நின் விருப்புகளில்,
வெறுப்புகளில்,
கிழிந்து
அழுக்கடைந்து தொங்குகிறேன்.
24
 
 
 
 
 

கொடூரமான பிடிகளுக்குள் | இரவினுாடு உன் முன்னால் நான் நிறுத்தப் படுகையில், கிழிந்து நழுவும் துண்டுகளாவேன். நின் நிறைந்த சிந்தனைக்குள் திணிக்கும் சோம்பல் பயங்கரத்துள் நீ துயிலுகையில் மூடப்படாத இமைகளுடன்,
இருளை,
குளிரை
நின் காதல் உறுதியின் வெளிப் புள்ளிகளை நான் எதிர் கொள்கிறேன்.
எந்த நடமாட்டமும் இல்லாத ஒரு தெருவை மட்டும் எட்டிப் பார்ப்பேன் இவ்வுலகை கடலோடு சேர்த்து கைகளில் அடக்குதற்கு
எந்த வரமும் எனக்கில்லை
என் தலைக்குள் வெடித்துச் சிதறியிருக்கும் நினைவுத் தணல்கள்
எங்கோ ஒரு மூலையில் எரிவன, மொழி பெயர்க்க முடியாத ஒரு சிறு கவிதை வரிகளாக
குரூர அழுத்துதல்களுக்கும் வெறுமையை நோக்கிய கரிய எதிர்முயற்சிக்குமிடையே என் இருட்திரை தடிக்கும; முனை மழுங்கிய ஒரு விசாரணைக்கு நீ என்னை அழைத்துச் செல்லுகையில் என் இருட்திரை தடிக்கும்
25

Page 18
புலப்படாத துயரம்
நண்பா,
நான் சிறிது உன்னுடன் நடந்து செல்ல வேண்டும் மனிதர்களுன்
மலர்கள் கற்கள்
இவைகளுடனும்
மரணித்துப் போன நட்சேத்திரங்களுடனும் வாழ்ந்து - மறந்து விடப்பட்ட அத்தெரு ஒழுங்கை வழியாக
p5 600TLIT நாம் சறிது நடந்து செல்வோம்.
உனக்குள்ளாகவே பேசிக் கொண்டாயா? அல்லது யாருடனாவது பகிர்ந்து கொண்டாயா! உடைந்த நட்சேத்திர துகள்களிலிருந்தும், வெறும் களிமண் சேருவையிலிருந்தும், வார்த்தெடுக்கப்பட்ட நின் சத்தியங்களை நீ உனக்குள்ளாகவே பேசிக்கொண்டாயா அல்லது யாருடனாவது பகிர்ந்து கொண்டாயா,
26
t
ർൂ,
is
 
 
 
 
 
 

உன் சத்தியங்களை நான் வாசித்ததுண்டு. கொடும் துயரங்களை மறைத்து விறைத்துப் போன உன் கண் புருவங்களில் நான் அதனை வாசித்ததுண்டு.
விண் கலன்களிலிருந்து வேகிக்கும் தூரப்பிரகிருதிகளை எண்ணி தாக்குறாதே நவீன மூளைகளின் தந்திரங்களில் தாக்குறாதே இந்த வானத்தையும் பூமியையும் நோக்கி அகன்று விரிகின்ற ஓர் இதயத்தை நின் கண்களில் பதித்திரு.
புதிய தர்மத்தை நோக்கிய பயனத்தில் சிந்தனைச் சலனமற்ற ஒரு தேசத்தில், உணர்ச்சி பூர்வ மனிதர்கள் எழட்டும்; இந்த
இயந்திர மனிதர்களின் தசைகளை உலுக்கட்டும் - எப்போது,
நன்றி நண்பா, நாம் சிறிது நடந்தோம் மீண்டும் நாம் அந்தப் பழுத்துப்போன கோட்டுக்குள் கிடப்போம், புலப்படாத துயரங்களால் நான் இனியும் உன் இதயத்தை புண்படுத்த மாட்டேன்.
27

Page 19
ஓடு கடைசிப் பணித்துளிக்கு
கற்களை அளந்து அடுக்கும் கருவிகள் என்னிடம் இல்லை. கம்பிகளுடனும், சீமெந்து கலவைகளுடனும் வெறும் மண் மூடைகளுடனும் நான் பேசியதில்லை,
பேசினால் நிச்சயம் அவைகள் சிரித்துக் கொள்ளும் உன்னைப் போல,
பாதம் பதித்திருக்கும் இம் மண் உன்னுடையது. அதன் கீழே எனக்குத் தெரிவது, அழகிய நீரோடை மேலே உள்ளது அகன்ற விண்வெளி, யாருடையதும், அதற்கப்பால் எனக்குத் தெரிவன, நட்சத்திரங்களும் நிலவுகளும் இடையில் வெறும் வெட்ட வெளி,
ஒனது பொய்ப்பற்கள்
பொய்க் கால்கள் தலையில் நரைத்துள்ளன. கல்லும் மண்ணும் கம்பியும் கொண்ட நின் கொங்கிரீட் விருட்சங்கள் எனக்குப் பெரிதல்ல, இயந்திரங்கள் கூக்குரலிடும்,
புழுதிகளில் ஒரு கோனிக் கடைச் சிப்பந்திகளின் திலைகளில்
முகங்களில்
படிந்த துாசிகளில் முடிந்தும் முடியாததுமான ஒரு புதுக்கட்டிட விருட்சத்து மூலைகளில் அழுது கிடக்கும் அனாதைப் புற்களுடன் எனக்கு சினேகம் ஆயிரம் வார்த்தைகளில்;
வேண்டுமானர்ல் சிரித்துக்கொள் தலையில் கவிந்திருக்கும் நின் வெண் பஞ்சு மேகத்திரள் எனக்கு எப்போதும்
அழகு ஏனெனில், யாரும் கழிப்பறைக்குப் போவதை நான் கற்பனை செய்வதில்லை,
28
 

ஆனந்தன் நினைவாக
சிவப்பு நிற வெடிப்பிலிருந்து உயிர் ஒழுக ஒழுக சிரசு படிப்படியாக, அமிழந்து கவிழ்ந்து கொள்ள, ஒரு இடி முழக்கத்தின் முதலாவது மழைத்துளியாக ஒவ்வொன்றும் மிகப் பாரமுடன் அழுத்தமுடன் இதயத்துள் வீழ்கிறது மிகவும் வலிக்கிறது.
ஒரு புல்லின் நுனியிலும் குடியிருந்தான் ஆனந்தன் ஆண்மை பொருந்திய கவிதை நுழைந்திருந்த அவன் கண் புருவங்கள் எனக்குச் சொல்லிற்று, நீலச் சமுத்திரமே உருள்க நீ மீண்டும் உருள்க
29

Page 20
கொலைகள் குருதி நீராவியைத் சுவாசிக்கும் இடம் இஃது; ரீங்காரம் பாடும் தேசங்கள்
உறுமும் இடமும் இஃதே
அவனது கண்கள் அவனது இதயத்துடன் எங்கோ ஒரு மூலையில் கொழுத்தி இருக்கிறது.
தொலைந்து போன வாழ்வு பற்றி நீ கவலைப்பட்டாயா ஆனந்தா,
கரு நீலச் சமுத்திரமே உருள்க நீ மீண்டும் உருள்க
ஆனந்தா,
அரைவாசியில் உன் பயனம், துறைமுகத்திலிருந்து சிறிது துாரம் கசந்து போன மாம்பழத் தோப்பிலிருந்து சிறிது துாரம் யாருக்காகவோ எப்போதும் கருத்துப் போன ஆடைகளுடன் அழுது கொண்டு,
மனித நாசத்தை எம் மீது படரவிட்டவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும் போர் யானைகளுக்கு மத்தியில் ஒரு பூ நொருங்கிப் போனதென்று
3O

முடப்படுவதற்கு முன்பாக
பிடரியில் குதி அடிபட நான் இளைத்து இளைத்து துரத்திக்கொண்டு ஒடுவது எதனை? அவைகள் வெறும் நிழல்களாக என்னோடு இருந்து, என்னோடு சிரித்து, என்னோடு மகிழ்ந்தவர்கள்,
நான் அழும் பொழுது மட்டும் நடு உச்சியில் சூரியன் வந்து விடுகிறது. சரிந்து சூரியன் விழும்வரை நான் காத்திருக்க வேண்டுமாம்; மீண்டும் அந் நிழல்களை துரத்திக் கொண்டு ஓடுவதற்கு
31

Page 21
நாலு கைகளும் கால்களும் படைத்து வைத்திருக்கிறது, எனக்கு இந்த நகரத்து வனாந்தரம்,
யாரும் உழிந்து விட்டுப் போகட்டும்,
இப்பொழுது மூடப்படாத சவக்கிடங்குகள்
எனது பினம் வெறும் ஊதி பத்திகளில் மனத்துக் கொண்டிருக்கின்றேன் காகிதப் பூக்களில் அவ்வப்பொழுது அஞ்சலிகள் மரணத்தில் கதறி அழுவதற்கு மட்டும் உறவினர்கள்
காக்கைகள் காத்திருக்கட்டும் என் கண்களைப் பிடுங்கிக் கொள்வதற்கு
நாய்களும் தான்
புதைத்ததும் இழுத்துக் குதறுவதற்கு
ஆயினும் என்ன அதோ நிலாவிலிருந்து வடிகிறது என் துயரம் கடலுக்குள் அவற்றைக் காற்றோடு கலந்து கவிதைகளாக்கி ஆர்ப்பரிக்கின்றன கடலலைகள்,
32

எப்படி மறப்பது அத் தெருவை; அப் பூவரசு இன்னும் முகரும் எனது நினைவுகளை, பழுத்துப் போன இலைகளுடன்; உரோமம் சிலிர்க்க, ஒரு பெரும் பள்ளத்திலிருந்து நினைவுகள் உயிர்க்க நெஞ்சுகள் பெருவலி - எரிகிறது.
ஒட்டு விறாந்தையில் மடி மீது என் தலையைப் பிடித்து உலுப்புகிறது நிலவு
33

Page 22
இன்னும் நேசிக்கிறாயா இன்னும் நேசிக்கிறாயா? வாழ்வில் நான் ஒரு நிழல் மட்டுமா? சூரியனின் கீழ் மரங்கூடத் தருகிறதே நிழலை வெறும் மரமும் அதன் நிழலுமா வாழ்வு இல்லை அன்பே,
இல்லையெனில், அத் தெருவில் நான் பதித்த சுவடுகள் இன்னும் நெஞ்சுள் வலி எடுப்பதும் ஏன்? இல்லையெனில், அவ்வருடங்கள் என் கன்னத்தை ஓங்கி ஓங்கி அறைவதும் ஏன்? இல்லையெனில், இப் பேரண்டத்தை நோக்கி செடிகள் நிமிர்வதேன் வானத்தை நோக்கி மலர்கள் புன்னகைப்பது ஏன்?
ஒரு ஒளி வெள்ளத்தில் வாழ்வு மரணத்தின் நிழலாகவும் ஒளிர்கிறதே! வெறும் மரமல்ல வாழ்வு; வெறும் நிழல் அல்ல வாழ்வு,
மரம் வீழினும் நிழல் மறையினும் வாழ்வு பாடுகிறது இப்பேரண்டம் முழுவதும் a
34

ஒடு படை வீரனுடன்
அந்த நகரத்துச் சந்தியில் நின்றிருந்தான் ஒரு படை வீரன் சிலையாக
எந்தச் சூரியன் அனல் கக்கியென்ன? எந்தக் குளிர் காற்று வீசினும் என்ன? அவனைப் போல நீ எனக்கு ஒரு இளைஞன் மட்டுமே. காதல் பசும் புல் வெளிகளில் பனிப் புகார்களாய்
மிதந்து திரியவும் சிட்டுக் குருவிகளாய் தெருக்களில் சீட்டியடித்துத் திரியவும் உனக்கும் தெரியாமலா இருந்தது!
எங்கிருந்தோ வந்த போர்க் கழுகுகளின் மேய்ச்சலில் அவன் காணாமல் போனான்.
ஓ, சின்னஞ்சிறு படை வீரனே, எனக்குள் இன்னும் தகிக்கிறது நெருப்பாக அணையாத நெருப்பாக, நீ மட்டும் என் கண்ணெதிரே ஒரு சிலையாகவேனும் சிரிக்கிறாய்.
35

Page 23
முன்றாவது கட்டில்
வெளியில் நிலைமை சரியல்ல என்றார்கள் வீடு செல்ல முடியவில்லை, வேற்று மனிதர் சிலருடன் தான் கடைசி பஸ்போனது.
ஒரு கட்டிடத்துள் வந்தேன் குரல் மட்டும் கேட்டது
முகம் புலப்படவில்லை
தன் முகம் தனக்குத் தெரிவதெவ்வாறு
என் முகந்தானோ அது!
அது ஒரு பழைய வைத்தியசாலை கால்கள் நெளிந்து
இரு கட்டில்கள் மனமின்றி இணைந்த மனிதர்கள் போல, சற்று அப்பால் தனித்து மூன்றாவது கட்டில், அதில் நீட்டி நிமிர்ந்து கிடத்தப்பட்டிருக்கிறது
எனது பினம்,
ஒட்டமெடுக்கின்றேன் ஒட்டமெடுக்கின்றேன் தாளிட்ட கதவுகளில் ஒரு குருட்டு வெளவாலாக மோதி விழுகிறேன் அவ்விரு கட்டில்களிலும் கிடத்தப்பட்டிருப்பது எனது பினம் தானா எப்படிப் புதிதாக
கண் விழித்தேன் கைகள் அசைந்தன கால்கள் அசைந்தன சுவாசம் தெரிந்தது எனது பினம் உயிர்த்து சிலிர்க்கிறது நானாக
36

இன்று நான்
இன்று கடலலைகள் நேற்றுப்போல் குதுாகலமாய் இல்லை. இதே மாலை நேரம் இதே காற்றுத்தான் வீசியது, நிலவும் ஏன் குந்தியிருக்கிறது அதே சீருடையில்
வெறித்தேன் ஒரு வெறும் புன்னகை, எப்போதோ தைத்திருந்த கொப்புளம் பழுத்து சீழ் வடிந்து வலிக்கிறது
எப்போதோ இங்கு அரைகுறையாய் எரிந்து அனாதையாய் கிடந்த நண்பன் ஒருவனின் பினத்தை காகங்கள் கொத்தித் தின்கின்றன. இன்று மட்டும் ஏன் இக் கடலலைகள்
குதூகலமாய் இல்லை!
எப்போதும் இல்லை எதுவும் ஒரே விதமாய்! எனக்கென ஒரு கடலும் அலைகளும் உனக்கென ஒரு கடலும் அலைகளும் எவ்வித சமாதான அழைப்புகளையும் விடுத்து,
ஒன்றையொன்று விரோதிக்கின்றன எனக்கொரு வெயிலும் நிழலும் உனக்கொரு நிழலும் வெயிலும்,
மரங்களை விடுத்து இலைகளை விடுத்து குலுங்கிச் சிரித்துச் செல்கிறது காற்று ஒரு புளகாங்கிதத்துடன் என்னையும் எனது பார்வையையும் அப்படியே தனித்து விடுத்து அக் கடலுடனும் அலைகளுடனும் இன்று நான் 0
37

Page 24
( )LuIII GT5
களைந்து விட முடியாத எத்தனை போர்வைக்குள் நான் அவிந்து வியர்ப்பது சமயத்தில்
என்னுள் முகிழும் அழகிய மெல்லிய சிற்பங்களும் களவு போய் விடுகின்றன.
உடல் உறையும் பணியிலும் உயிர் பொசுங்கும் உஸ்ணத்திலும் நான்
எதையாவது உடுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.
அவ்வுறை பனியும் அவ்வுஸ்ணமும் தொட முடியாத இடத்தில் நான் சுவாசிப்பதும் எவ்வாறு?
38

எல்லாம் முடிந்த பின்பு
என் நெஞ்சுள்
தீட்சண்யமான
அக்கண்கள், கொழுத்த நினைத்தது எதனை?
எல்லாம் எரிந்து சாம்பலான பின்பு; எல்லோரும் இங்கிருந்து புறப்பட்டு
சென்ற பின்பு;
பாறையாகிப் போன பின். ஒரு மாரியின் குளிர்மையும் ஒன்றுதான் ஒரு கொடிய கோடையின் தனலும் ஒன்றுதான்.
என் நெஞ்சுள் தீட்சண்யமான அக்கண்கள்
கொழுத்த நினைத்தது எதனை?
39

Page 25
“TEACH ME TO CARE, NOT TO CARE
கரை ஒதுங்கிற்று மனிதப் பிண்டங்கள் தலைகளின்றி; என் தலையைப் பொருத்தி அதிர்ந்து கொள்வதும் நான், அழுது கண்ணிர் வடிப்பதும்;
பின்னர், நீயும் உன் தலையைப் பொருத்தி அதிர்ந்து கொள்வதும் கண்ணிர் சிந்தி நீ என்னை நொந்து கொள்வதும்;
எங்கு நான் கற்றுக்கொள்வது நண்பனே, என் பேரன்பைச் செலுத்தவும்
அல்லது அப் பேரன்பை மறைக்கவும் அல்லது அப்படியே ஒரு கல்லைப்போல கிடக்கவும்.
a ""V

A TRIBUTE TO A FEMINIST
எந்த ஏதன் தோட்டத்திலிருந்து L-ID LI LI L- L-GoT 6TT எமது ஆண்டவர் படைத்த இப் புதிய ஏவாள்
பெயரிடப்படாத நதிகளிலிருந்தும் பெயரிடப்படாத கடல் அலைகளிலிருந்தும் இவள் புறப்பட்டாளெனில்,
பிதாவே, இவளை மன்னித்தருள்க.
இவள் சேலை உடுத்தியிருந்ததுவும் பின் பொரு தடவை
கால்கள் தெரிய சட்டை அணிந்திருந்ததுவும் எனக்கு ஞாபகம்.
எனக்கு மட்டும் புலப்படும் ஒரு சூரியனின் உஸ்னத்தில் என் போர்வைகளும் வியர்த்துக் கொட்டுவனவே.
ஆயினும்
நின் பாதம் பதிந்திருக்கும் மன்ைனை இழிந்து எப் புதிய பனிப்புகார் நகர் நோக்கி நீயும் புறப்பட்டனை அதுவும் உடலில் ஒரு துணியுமின்றி,
என்னால் உமிழ முடிய வில்லை என்னால் உவக்க முடியவில்லை
41

Page 26
It , V, 4 A. ,!.
| || || || PKR ,:
வந்து செல்லட்டும்
1 A) rig
ni i \ W \ , yן \ }{ן וק'ון
* 。
மிக மிகச் சிறுத்துப் போனிர்கள் ஐயா, என்னுள் மிகத்துயர். கடல் சிறுத்து ஒரு சிரட்டைக்குள் ஓடி வற்றி விட்டது போல,
ஆகாயத்தை நிமிர்ந்து
தலையை உயர்த்தவும், ஆழமான பாதாளத்தில் கால்களை அழுத்திப் பதிக்கவும்,
தெரிந்திலீர், ஆகாயத்துக்கு அப்பால் எத்தனை நட்சத்திரங்கள் எனினும்,
அவை பற்றிப் பேசத் தெரிந்திலிர்,
42
 
 
 
 
 

வெறும் சலங்கைகள் கட்டி களம் எத்தனை ஆடினும் என்ன? மிஞ்சப் போவது ஒரு ஊதுபத்தியின் காய்ந்து போன கடைசி மனம்; அல்லது ஒரு தேங்காய் எண்ணெயின் தூர்ந்து போன கறுப்புத்திரி; மிகப் பழமைதான் - எனினும் எத்தனை அழுத்தம் பெறுவன என்னுள்ளும்; நம் எல்லோருள்ளும் இதயத்தை எங்கு வைத்து விட்டு வந்துள்ளிர்கள்! ஓடிப்போய் ஒரு தடவை எடுத்து வையுங்கள் ஐயா அதன் இருப்பிடத்தில்
எதிர்பார்ப்புகள் இன்றித்தான் சிரிப்பன புல் வெளிகள் எப்போதாவது ஒரு மழையை நோக்கி; எதிர்பார்ப்புகள் இன்றித்தான் அழுவன இதயங்கள் கொலையுண்டு கிடக்கும் ஒரு பினத்தை நோக்கி;
வெறும் ஊத்தை எண்ணெயை அப்பால் வையுங்கள் ஐயா, குப்பைகளைப் கூட்டி பெருக்கி அதில் ஊற்றி எரித்து விடுவோம். மீண்டும், நம் அறைகளுக்குள் சூரியன் வந்து செல்லட்டும்,
43

Page 27
g|fഖ (ബIി ീേ
நீ கருதிய எல்லாம் அதுவல்ல அதுவே எல்லாம் அல்ல
உன் இமைகள் இந்த இரவு வேளைகளில் எவ்வளவு அழகாகத் தூங்குகின்றன தூங்குகிறாயா? தூங்குவது போல பாசாங்கு செய்கிறாயா
நான் காதலில் கசிந்து கண்ணிர் மல்கி பிரார்த்தித்துக் கிடந்ததுவும் என் தலைமுடிகள் ஒவ்வொன்றாய் நரைத்துப் போவதும் என் தலையை வெட்டி
தட்டத்தில் வைத்து உனக்கு நீட்டுவதும் . . .
பின்பு நான் அதனை சப்பித் தின்று அழுததுவும் எனினும் என் தலையை வெட்டி குருதி சொட்ட சொட்ட அத் தாம்பாளத்தில் வைத்துனக்கு நீட்டியதை அறிவாயா?
44
 

நீ உன் இமைகளை மூடி அழகாகத் தூங்குகிறாயா அல்லது தூங்குவது போல பாசாங்கு செய்கிறாயா?
என் நம்பிக்கைகள் ஒவ்வொரு கனமும் நூர்ந்து தூர்ந்து எரிகின்றன சாம்பலில் உயிர்க்கிறது என் மூச்சு உன் சிறு புன்னகையில் கடிபட்டு விழுவதற்கு மாத்திரமா என் உயிர்ப்பு
இதோ மரணத்திலிருந்து வந்திருக்கிறேன் வழிவிடுங்கள்; யாவற்றையும் கூறிய பின் திரும்பிச் செல்வதற்கு மாத்திரமா என் உயிர்ப்பு!
இத்தனைக்கும் இது தானா உன் புரிதல் நீ இழுத்து மூடும் போர்வை மாத்திரமா நான்! உன் அக்குளில் அழுத்தும் கப்பை அகட்டிய
ஒரு கால் மாத்திரமா நான்!
இல்லையடி, அதுவே எல்லாம் அல்ல நீ கருதியது எல்லாம் அதுவல்ல
45

Page 28
அந்த ஆழச்சடுத்திர மேற்பரப்பில்
அந்த ஆழச் சமுத்திர மேற்பரப்பில் மிதப்பது நானா?
இல்லையெனில்,
எப்போதோ ஒரு தடவை இனிப்புகளால் செய்து வைத்த எனது நிலவின் பினமா! அசைவு நளினங்களினால் எனக்கான அழகினால் கோர்த்த பொன்னிற மணி முத்தங்களினால் புன்னகைகளினால் நான் ஆக்கி வைத்த நிலவின் பினமா? பின்னிய சடையுடனும் மெல்லிய பூங்கொத்து வார்த்தைகளுடனும்
46
: Š . 'ጼካፒ'>ቛቒቖ፰***÷ቋ&ኒ።.. '' '  ̈ :;፧
 

அந்த ஆழச் சமுத்திர மேல்பரப்பில் மிதப்பது
வெள்ளிப் பணிமணிகள் பெய்து இசைக்கும் மழைத்துளி வரிகளா! இல்லையெனில் ஒரே இடத்தை நோக்கி சமுத்திரத்தின் ஒரே கரையை நோக்கி பீறிட்டுப் பாய்வதுமேன் ஒரு நதியின் பாய்ச்சல் எப்பொழுதும்; எப்பொழுதும் எப்பொழுதும்,
அந்த ஆழச் சமுத்திர விழிப்பில் நான் மூழ்கி முடிவதில்லை நீயும்தான்,
நான் மிதப்பேன் நான் மிதப்பேன் அச் சமுத்திரமேல் பரப்பில், அது காதல் கொணரும் மற்றுமொரு நிலை எனக்கு.
அப்பயனத்தின் ஆழமான நீர்ச் சுழிகளுக்குள் என்னை அது அடித்து வீழ்த்துகையில் 3?Ob மின்னல் மட்டுமே
பின்னர்
அப்பழைய நாட்கள் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
எழுந்து
என்னைக் கடந்து நடப்பன.
47

Page 29
“9. எதிர் “(9) 99
ஒரு மரணம் சில வாழ்வு இலைகளுடன்; ஒரு வாழ்வு சில மரண முட்களுடன்; வெருளிகளை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது எனது வாழவும அவனது மரணமும்; அவனது மரணமும் எனது வாழ்வும்,
என்னை இழுத்துச் சென்றனர் ஒரு நீதிபதி முன்னிலையில் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை சுவாமி.
எமது இராணுவ வீரர்கள் போர்முனையில் கொல்லப்படுகையில், நீ மகிழ்ச்சியுற்ற குற்றம் உம்மேல் சுமத்தப்பட்டுள்ளது நீ குற்றவாளியா சுற்றவாளியா
அவனை இழுத்து வந்தனர் ஒரு நீதிபதி முன்னிலையில்
நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை சுவாமி,
எமது விடுதலை வீரர்கள் கொல்லப்படுகையில் நீ மகிழ்ச்சியுற்ற குற்றம் உம்மேல் சுமத்தப்பட்டுள்ளது நீ குற்றவாளியா, சுற்றவாளியா
48

நானே எரிந்து போன சாம்பலுக்குள். . .
எப்போதோ நான் எழுதியிருந்த சில கவிதைகளைப் பொதி செய்து இருண்ட ஒரு பெரும் சமுத்திரத்திலிருந்து யாரோ கொணர்ந்தான் பிண்டமான எனது முகவரிக்கு எனது பெயர் இல்லை, ஆயினும் எனது தெருதான்
எனது நகரந்தான்
பொதியைப் பிரித்தேன் தேய்ந்து போய் ஒரு தாளில் தொங்கியிருந்தது ஒரு கவிதை கல கலத்து வீழ்ந்து நொருங்கின சில
49

Page 30
எங்கு நான் தொலைத்தேன் எப்படித்தொலைத்தேன் இக் கவிதைகளை என் பெயரிட அருகதையற்றதா இக் கவிதைகள் பின், எப்படிக் கொணர்ந்தான் மீண்டும் பெரற்றுப் போன எனது முகவரிக்கு
அம் மனிதனைக் கேட்டேன் "யார் அனுப்பியது” அவன் பேசவில்லை எதோ பெயரை எழுதிவிட்டுச் சென்றான்
பிறகெதற்கு அவள் திருப்பியெறிந்த இக்கவிதைகள் ஒரு குழியில் புதைத்து விட வேண்டும் இல்லையெனில்,
எரித்துவிட வேண்டும் நெருப்பு வைத்தேன் கவிதைகள் அடம் பிடித்தன அவள் பெயரை காதுக்குள் உச்சரித்து உச்சரித்து அழுதன.
பின்பு இதயத்தில் பிடித்த தீச்சுவாலையாக எரிகிறது - எரிகிறது எரிந்து முடிகிறது.
மீண்டும் பார்த்தேன் அம் மனிதன் எழுதிச் சென்ற அப் பெயரின் எலும்புக் கூடு மட்டும்
எரியாது கிடந்து, நான் மட்டும் எரிந்து போன அச் சாம்பலுக்குள்.
5O

எங்கிருந்தோ வீழ்ந்த மழைத்துளி
ஒரு புளகாங்கித மதுரஸம் நிரம்பி வழிந்தது திடீரென -
வரண்டு வற்றிப் போன என் இதயத்து வெற்றுக்குவளை நிறைந்து ததும்பியது. எங்கிருந்தோ சொரிந்த மழைத்துளிகளில் - உயிர்த்துச் சிலிர்த்தது
ஓராயிரம் என் உயிர் நரம்புகள்.
51

Page 31
அத்தனை இராணுவக் காப்பரண்களில் கொடிய முள் வேலிகளைத் தாண்டி முகமற்ற துப்பாக்கிகளின் குண்டுகளுக்குத் தப்பி
காணாமல் போன
நம் காலங்களிலிருந்து எனது நினைவுக் கிளையில் எப்படி வந்தமர்ந்தது நீ அனுப்பியிருந்த எனது புத்தகத்தின் நாற்பத்தொன்பதாவது பக்கத்துச் சித்திரம்
குண்டு பொருத்தி சிதறிப் போன என் தலையை தைத்துத் தைத்துப் பொருத்திப் பார்ப்பினும் நான் எதுவும் பேசுவதற்கில்லை. எனது மரணத்தை மட்டும் எடுத்துப் பேச எத்தனை ஆயிரம் வார்த்தைகள் இருந்தன உன்னிடம்.
வெறும் நன்றி வணக்கமுடன் விடைபெறுவதல்ல எனது மரணமும், நான் சிதறியதும் ஒரு மனிதத் தலைதானடி எங்கிருந்தோ இருந்து நீ விழுத்திய ஒரு மழைத்துளியில் நான் மீண்டும் உயிர்த்திருக்கிறேன்.
52

மவுணத்தின் (ழ்லையில்
துப்பாக்கி உமிழ்ந்த ஒரு வெற்றுத் தோட்டாவா நீ.
பெயரிடப்படாத ஒரு பெரும் மலச்ைசிகரத்தின் உச்சியிலிருந்து முட் கம்பி வேலிகளை உடைத்து பீறிட்டுப் பாய்கிறதே என்னுள் ஒரு கண்ணிர் பிரவாகம்
துப்பாக்கிகளுக்கு துப்பாக்கி யானவனே வெடிகுண்டுகளுக்கு வெடிகுண்டு ஆனவனே.
53

Page 32
மரணத்தில் இப்பிரபஞ்சம் மறைந்து விடுமெனில் மீண்டும் மீண்டும் ஏனடா ம்லர்கள் பூக்கின்றன அதிகாலை வேளையிலும் அந்தி மாலையிலும் புதிது புதிதாய்ல அலைகள் ஏன்
எறிகின்றன. அதன் ப்ெதிகளை மீண்டும் மீண்டும்
உனது இருப்பு ஒரு மாரி காலத்து மின்னலின் வைரக் கோட்டில் தெரிகிறது உனது இருப்பு எனது மவுணத்தின் ரகசிய மூலையில் எரிகிறது உனது இருப்பு குண்டை வெடித்து தலைவேறு உடல் வேறு சிதறிய ஒரு இளங்கன்னியின் கோபத்தில் தகிக்கிறது
வாழ்வின் ஒரு அதிகாலை நேரத்து நுனியிலே உன் வாழ்வு கிள்ளப் பட்டுவிட்டதே அதிகாலைத் தென்றலை புதிது புதிதாய் பணித் திவலைகளில் கோர்க்கும் மலர்களைக் காணாமலா அவர்கள் கொடுத்த அம்பரா துளியுடனும் உடைவாளுடனும் புறப்பட்டாய்.
ஓ, என் விடுதலை மையத்தின் ஒரு விண்மீனே எனது மவுனத்தின் கோபுரத்தில் சுடருதடா உன் நினைவு
54

சில வேளைகளில் எனது மரணம்.
வாக்களித்தபடி அங்கே, உனக்காக் கொணர்தற்கு நிறையவே இருந்தன என் இதயக் குவளை ததும்பளு)
வந்திறங்கிய நாய் - களைப்பு அக்கடற்கரை உல்லாச விடுதியின் குளியலறையில் நனைந்ததில் நான் மீண்டும் உயிர்த்தேன்.
துரத்தே அழகாக வானத்தைக் கவ்வியிருந்தது அக் கடல் அலைகள் தமக்குள், என்னை விடுத்து எதை யெதையோ பின்னிப் பின்னிப் பார்க்கின்றன. நுரை மணிகள் கோர்த்து இழைக்கப்பட்ட அக்கடற்கரைக் கம்பளத்தில், குழந்தை நண்டுகள் தம் சின்னஞ் சிறிய கண்களை எறிந்து எறிந்து விளையாடின
அப் பொன்னிற மணற் பரப்பில் படம் ஒன்று வரைந்தேன்
தனித்திருந்த அம்மரக்கிளையில் திடீரென முளைத்துச் சிலிர்த்த அணில் பிள்ளையும், ஏதோ ஒரு செய்தியுடன் வந்திருந்தது அதனையும் எழுதினேன்
55

Page 33
பூஞ்சோலை நடுவே, வெள்ளை நிற உல்லாசக் கன்னிகளின் அரை நிர்வாணங்கள் அழகழகாய் வீழ்ந்து கிடந்த
நீச்சல் தடாகத்தில் நான் எடுத்து வைத்தவற்றுள் எப்படியோ அகப்பட்டுக் கொண்டன அவ்விதயக் குவளைக்குள்,
கைகளைப் பலாத்காரமாய் கரண்டிகளாக்கி உணவருந்திய எனது அவஸ்தைகளும் இதில் அடக்கம்,
யாவற்றையும் சேகரித்து இறுதியில் புறப்பட்டேன் நடுமதியச் சூரியன் கொளுத்தியிருந்த புழுதிச் சுவாலைத் தெருவழியே, ஒவ்வொரு இராணுவக் காப்பரண்களிலும் ஏறி இறங்கி
இறங்கி ஏறி வந்ததில் எங்கு விழுந்து காணாமல் போயின. இவைகள்?
ஆசையுடன் நான் கொணர்ந்த ஓர் அழகிய வெண்புறாக் குஞ்சு ஒரு நடு நிசிப் பூனையினால் காணாமல் போன சோகம்
வீடு திரும்பிய போது அரிசி ஆலைகளில் அலறலில் அதன் தீனக் குரலில் வெறும் உமி மூட்டைகளைச் சுமந்த பெரும் ராட்சத வாகன மிருகங்களின் உறுமலில்
நான் செத்துக் கிடந்தேன் எனது வாசலிலேயே -
56

THE HEART THROWNITO A DUSTBI
Why do you throw my heart away Into dustbin
Again and again And I am to pick it up Many a times.
Why do you throw my heart Into a dustbin? And break my hands That I stretch towards you.
I always love the flowers Blossomed in my garden Treasured and chiseled in my chest They are as large as this universe. If you are not loving me Tell me now, I'll go away But with the glory of love With the glories of love Of my beautiful flowers.
Do you listen the sorrow notes of my heart lying poor in the Dustbin. Do you hear my words of love Once I wisphered into your ears.
That which we existed That which we have been existing Are all in us. It is you throw my heart away into dustbin?
If you are not loving me Tell me I am gone And if I received a word of love From you - Any time even after my death I will raise from ashes And show you the citadel of my love Built in my chest for you.
57

Page 34
)Vs (a)
C2ク I heard, you too come Along with khakies Danced fiercely on borrowed cliches
And with arms and bombs Isn't it a shame.
For years and years We lived together Joying joys
I love a land of peace and justice You, my dear neighbour Not to fall prey at othershand.
Still I love you my neighbour Still I love you my neighbour My heart already pieced and In pain, You too, Not set fire to my heart again.
C )
I am as dead, my neighbour Come, see My house and garden And temple all in ashes The temple I visit every Friday Offering flowers and sweets Were thrown in fire And laid trodden on boot and feet My gods absconded Leaving their Vels and other weapons with us
I am as dead, Don't you feel sad for me My dear neighbour? You do I am sure My blood and tears Will melt this iron earth And why not yours.
Do you remember My neighbour My sand coloured cat The dog which wags his tail Whenever you come The green grass and moss Spread on the garden It is all burnt
It is all burnt to ashes
58

N A SAC. W.
Thrusting into my hands A little of the never ending time And a piece of boundless ether Into my feet I am named as human .
Amids cries and tears by kiths and My kinds Amids the funeral beating In the colour of an afternoon Or suddenly In the colour of a morning I am gone and my walls Are sealed
My coffin nailed.
Still ther
I carry loads of void
Dreams Arresting my at man in a small Room airless Playing with my usual toys Clay - made And journeying by false's shade.
Journeying beyond time and space Depriving of all my Identities crowned I am out in a space within All beyond the blade of a grass All beyond the blade of a flower.
59

Page 35
EO.P.
Built a house of mine With my tears and blood For a man to emerge,
Sang a song of mine With the flute made of my flash and bones For a man to listen ;
The sun came only to burn The man come only to tear My house and my song.
Yet, I, as a chanter of pains and joys Do believe, The sun has rays to shine The man has a heart to
e For me and those yet to born.
4
6O

I live in an alien land
With an alien tongue ای
No one understands.
A broom stick amids half-swept Debris, ط A lonely corpse in a coffin
With its front teeth Slightly projected, A plate of rice with curry On a broken table half eaten I live in an alien land My tongue, no one understands.
I am given an animals's name In a land of people For I am taught to see Only my fame In news papers, over radio And on Television
In kitchen
Even in toilet, I look for my name in vain.
Place my name In your plate of rice, Place my name In the book of your grievance And your triumphs as well.
Yet, I live in an alien land. With an alien tongue Let me live in a land of humans And for a heart I pray To read in my script, a name thine And you, in yours, mine Shall our stars in the sky shine Under one sun again?
61

Page 36
நன்றிக்குரியவர்கள்
என் கவிதைகள் நூலுருவம் பெற உதவி புரிந்த எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்களுக்கும். இதற்கான முன்முனைப்பை மேற்கொண்ட கவிஞர் எம்.ஏ.ஜபார்
அவர்களுக்கும்
அட்டைப்படம் வரைந்த ஓவியர் எஸ். உருத்திரா
அவர்களுக்கும் என் கவிதைகளைப் பிரசுரம் செய்த வீரகேசரி, களம், சரிநிகர், "மூன்றாவது மனிதன் சுபமங்களா, (இந்தியா) கணையாழி (இந்தியா) தாமரை (இந்தியா) ஆகிய சஞ்சிகைகளுக்கும் "Christian Workes' "Saturday Review”


Page 37


Page 38
Cover Printed By

: Unie Arts (Pvt) Ltd.