கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆனைவிழுந்தான் விநாயகர் ஆலய வரலாறு

Page 1
囊拿拿鷺
_
GÅGAD
ஆனவிழுந்தா 6 ܠܐ956NDULܢ .
号=凰
மட்டுவில் ܨܝܢ
 

*mmerme會會員會為書•
徽 Ĥ£
•實---+ § § →Ë 游후 E}£ € 彙动No響 需?響 需-|×|4露 。山山, !

Page 2


Page 3
ĝAGaj tp
ஆனேவிழுந்தா
3b sul
அஆஜ்:
மட்டுவில் அ
பதிப்பாளர் : திரு. சி.
 

ன் விநாயகர்
DJ GITA}
: 5t-fರ್o
சிவமகாராசா M. P.

Page 4
முதற் பதிப்பு :
சுக்கில ஆண்
விலே ரூபா 12-30
பதி

1990
பகம் : குகன் அச்சகம்
தெல்லிப்பழை

Page 5
Յl6չյլք:
ஆனவிழு விநாயகர்
SISTESY
ஆனே விழுந்தான் விநா ஏனே நினைவற்று ஏத்திஞ வெவ்வினைகள் தீர்த்து 6 திவ்வியமாம் முத்திதருங்
 

Lib
ந்தான்
துதி
SIN&>
மகனே யூன் போடு
அல் - ஏத்துவார்
விரும்பும் வரமளித்து
தான்.

Page 6
$ସିଦ୍ଧ
முக
கோல் இல்லா
என்னும் முதுமொழி, ஒல் அமைந்திருக்கவேண்டும் எ
'தரிசனத்தின் பொரு ம்ே இல்லாத இடங்களின் தேவாலயம் கட்டுவித்து பவைகளை விதிப்படி நடத் பது தருமம்' என்னுந் எழுதிய கட்டுரையில் இட
38) L - பூசைகள் விதி விதிப்படி செய்யப்படாதெ
பும்.
'முன்னவ னுர்கோயி மன்னர்க்குத் தீங்குள கன்னங் களவு மிகுத் க்ென்னரு ணந்தி யெ
*"தேவாலயங்களுள்ளு ளும் கிலமாயுள்ளவைகளை வேண்டும். அப்படிச் செ அவைகளைச் செய்தவர் ெ கதிகமாம்." என்பதும் ந

(L
ttpu Jlh
வுரை
ஊரிற் குடியிருத்தல் ஆகாது.
ப்வொரு ஊரிலும் ஆலயம் ன்பதை வலியுறுத்துகின்றது"
பட்டுச் சமீபத்திலே தேவால மாத்திரம் நூதனமாகத் இயன்றமட்டும் பூசை முதலி துவித்தல் வேண்டும்' என் தலைப்பில் நாவலர் அவர்கள் ம்பெறும் ஒரு வசனம்,
ப்படி செய்யப்படவேண்டும்; ாழியின் பல தீங்குகள் விளை
ற் பூசைகள் முட்டிடின்
வாரிவளங் குன்றுங் திடுங் காசினிக் . டுத்துரைத் தானே'
என்கின்றது திருமந்திரம்.
ம் புண்ணிய தீர்த்தங்களுள் முன்போலச் செய்வித்தல் ய்தவர் பெறும் பயன், முன் பற்ற பயனிலும் ஆயிரமடங் ாவலர் கூற்று.

Page 7
ஆனைவிழுந்தான் விநாய போர் பெறும் பயன், புதிய போர் பெறும் பயனிலும்
பழமை வாய்ந்ததெனக் லாறு இதுவரை விரிவாக
அதனுல், இவ்வாலய வ ருக்கு வேண்டிய சில செய் நோக்குடன் இச்சிறு நூலை எ வரலாறு பற்றிய செய்திகளை அணுகினேன். நான் எவர்க அனைவரும் தம்மால் ஆனவ எனக்கு உதவியவர்களின் இங்கு குறிப்பிடுவதாயின் அதனுல் எவரது பெயரை பு
இந்நூலில் ஆலயவரலாற்று திருப்பதிகமும் சேர்க்கப்பட்
நூல் ஒன்றை எழுதுவ இன்றைய சூழ்நிலையில் அன தான் என் போன்ருேருக்கு செயலைச் செய்துதவியவர் (பாராளுமன்ற உறுப்பினர்) வர்கள் குகன் அச்சகத்தார்
தமது பல்வேறு பணிகளு பிரதி முழுவதையும் பொ நூலுக்கு அணிந்துரை எழு பல்கலைக் கழக இந்துநாகரிக ப. கோபாலகிருஷ்ணன் அ

கர் ஆலயத்தை மீளமைப் ஆலயம் ஒன்றை அமைப் ஆயிரம் மடங்கு அதிகமாக
கருதப்படும் இவ்வாலய வர ஆய்வு செய்யப்படவில்லை.
ரலாற்றை ஆய்வுசெய்வோ திகளைத் தொகுத்தளிக்கும் 1ழுத ஆரம்பித்தேன். ஆலய ச் சேகரிப்பதற்காகப் பலரை ளை அணுகினேனுே அவர்கள் ரை எனக்கு உதவிஞர்கள். பெயர்கள் அனைத்தையும்
இம்முகவுரை நீளும். ம் நான் இங்கு குறிப்பிட
க்கு மேலதிகமாக விநாயகர் டிருக்கிறது.
து செயற்கருஞ் செயலல்ல. த அச்சிட்டு வெளியிடுவது ச் செயற்கருஞ் செயல் அச் திரு. சி. சிவமகாராசா, அவர்கள். நூலை அச்சிட்ட
நக்கிடையே, கையெழுத்துப் றுமையுடன் படித்து, இந் தி உதவியவர் யாழ்ப்பாணப் த் துறைத் தலைவர் கலாநிதி afi 5 Fir.

Page 8
இந்நூல் گیر سالگی க்கும் எனது நன்றி உரித்த
உதவி செய்தவர்களுக் கூறுவது இலகுவானது.
"உதவி வரைத்தன்று செயப்பட்டார் சால் பி
է5:Téal) எழுதுவதற்கும் அவன் எழுதுவதற்கும், அச்சிடுவத நின்றவன் அவனே. அதனும் விழுந்தான் விநாயகப் டெ அவனருள் அனைவருக்குங் பிரார்த்திப்போம்.
‘வஞ்சி" பத்தாவத்தை இளவாலை
990-0 - 02
 

தவிய பெருமக்கள் அனைவரு $fĩ (3535 -
க்குச் சொற்களால் நன்றி
உதவி உதவி பின் வரைத்து
என்கின்றது குறள்.
சையாது. ஆலய வரலாற்று னருள் வேண்டும். இந்நூலை ற்கும் தோன்றத் துணையாய் ஸ், அவனே தாணுகிய ஆனை ருமானைப் போற்றுவோம்.
கிடைக்கவேண்டுமெனப்
అత్తి 4-రోజ్ ,
3.

Page 9
t్న சிவம
பதிப்
தமிழ் மக்களுக்குச் - குள்ள பெருங்குறை சரியான கும். உள்ள வரலாறுகளும் புக்கும், விருப்பு வெறுப்புக் மையற்றனவாய் மக்களின் ந விடுகின்றன. இதனுல் வரலா, துணிந்து எழுதுவோர்களும்
எனினும் வரலாறு எமக் அதிலும் இன்றைய காலகட் மையங்களாகத் திகழும் சை பரந்த, ஆழமான, தூய்மை படுதல் அவசியமாகும். மக்க லாற்றைச் சரியாகத் தெரித் னம்பிக்கையுடனும் - பற்று ஆலயத்தைப் போற்றி வாழ்வி முன்னைய வரலாறுகள் சரிய இன்றைய நிலை எதிர்காலத்
படும் என்பதை மனங்கொள்
இச்சீரிய நோக்குடன் இ விநாயகர் ஆலய வரலாறு அவர்களால் எழுதப்பட்டுள்வி காலத் தேவையை நிறைவு இரியர்களோ - கர்ணபரம்பை யுள்ளவர்களோ - திருப்பணி களோ எவருமே குறைகான

பம்
b)
*ܫܡܩܒܒ
சிறப்பாகச் சைவமக்களுக் ா வரலாறு இல்லாமைய எழுதியவரின் மனச் சார் ளுக்கும் இடத்தந்து தூய் ம்பிக்கையைப் பெறத்தவறி. றுகளேப் போற்றுபவர்களும்
மிகக் குறைவு.
$கு மிக இன்றியமையாதது . டத்தில் எமது பண்பாட்டு: வாலயங்களின் வரலாறுகள் யான நோக்குடன் எழுதப் ள் தமது ஆலயத்தின் வர து கொண்டால்தான் தன் டனும் - குழப்பமின்றியும் பின் பயனைப்பெற முனைவர். பாகக் கிடைக்காவிடினும் துக்கு வரலாருகப் பயன் ள வேண்டும்.
ளவாலை ஆனேவிழுந்தான்
மட்டுவில் ஆ. நடராசா ாது. இந்நூல் ஒரு நீண்ட
செய்கின்றது. வரலாற்ரு ரக் கதைகளில் நம்பிக்கை செய்து வழிபடும் அடியார் 1ண முடியாவகையில் a யாவு

Page 10
ரும் ஏற்றுக் கொள்ளக் கூ ட்டிருப்பது ஒரு தனிச்சிற செய்யவல்ல வரலாற்ரு சிரிய களம் அமைத்துக் கொடுத்து
சைவ சித்தாந்தக் கோட் கொண்டு ஆங்காங்கு அறக் தரப்பட்டிருப்பதும் பெரும் தியில் இந்நூலாசிரியரால் . கம் இடம் பெற்றுள்ளது.விந ஒதியுணர்ந்து உய்திபெற இ யமைந்துளது.
எனது பிறந்த ஊரின் ந்தான் விநாயகரின் வரலா ய்ப்புக் கிடைத்தமையை விய அருள் யாவர்க்கும் கிடைக்
இதனை முன்னுேடியாக ங்களின் வரலாறுகளையும் ெ கள் முயற்சிப்பார்களாக,
கொல்லங்கலட்டி,
1989-12-06

டியதாக இந்நூல் எழுதப்ப ப்பு. எதிர்காலத்தில் ஆய்வு பர்களுக்கும் இந்நூல் நல்ல துள்ளது.
பாட்டை அடிப்படையாகத் கருத்துக்கள் அழுத்தமாகக் பயன் தருவதாகும். இறு பாடப்பட்ட விநாயகர் பதி ாயகர் வழிபாட்டை அறிந்து ப்பதிகம் மிகப்பொருத்தமா
குலதெய்வமாகிய ஆனைவிழு ற்று நூலைப் பதிப்பிக்க வா பந்து விநாயகப் பெருமான் கவேண்டித் துதிக்கின்றேன்.
க் கொண்டு ஏனைய ஆலய வளிவரச் செய்ய, வல்லவர்
சி. சிவமகாராசா,

Page 11
意。
g?FjLp.
யாழ்ப்பாணப் இந்து நாகரிகத்து கலாநிதி. ப. கோபாலக் Sj6fls
அணிந்
ஆ3இ
UG எமது பண். உணரப்பட்டதன் பயஞக, மாகப் பல ஆலயங்கள் எ இலங்கையிலும் எழுச்சி பெற்ற ஆய்வுசெய்யுமிடத்து அவை எ பாட்டை உருவாக்கியுள்ளன அப்பர் சுவாமிகள் இத்தகைய ஊருக்குப் புனிதத்துவத்தையு படுத்துவன என்பதை,
*திருக்கோவில் இல்லாத திருவெண்ணி றணியாத
அவையெல்லாம் ஊரல்ல

Jඟීර්ඝඨිණිජ්ජුදාගී 16ಠಾpತಿ ಆಶಿಖ®# Bg66CF6* శ్రీaf4*
၄ နှီး
துரை
பாட்டின் உறைவிடம் என ஊர்தோறும் காலங்கால ழந்தன: தென்னுட்டிலும் ற தலங்களின் வரலாற்றை rந்த அளவுக்கு எமது பண் என்பது தெளிவாகும். ஆலயங்கள் நாம் வாழும் ம் லக்ஷ்மீகரத்தையும் ஏற்
திருவிலூரும் திருவிலூரும்
雕事萎影游象酸、德意*蚤兹é蟹°漫演螺、
அடவிகாடே"

Page 12
ബ
என்ற குறிப்பின்மூலம் ! எனவே திருக்கோயில்கள் யோடு ஒன்றிணைந்து இரு லாற்றை நாம் அறிவது
சைவாலயங்களின் வ வரலாருகவே அமைந்து உள்ள ஆலயங்களின் வர பல முயற்சிகள் அன்பர் மேற்கொள்ளப்பட்டு வரு கிராம ரீதியில், தனி ஆ லாறு சுருக்கமாகவும் விரி வந்துள்ளன.
எமது பிரதேசத்தில் வரலாறு இன்னும் உரி வேண்டியுள்ளது. பல பற்றி எமது முன்னேர் காரணத்தால், இற்றைக் வரலாற்றை முறையாக நோக்கப்படும் பிரச்சினைச் யகர் ஆலய வரலாறு கிடைக்கக்கூடிய தகவ6 கதைகளையும், இலக்கிய ஆய்வுக் கண்ணுேட்டத்தி வில் ஆ. நடராசா அவர் தொகுத்தளிக்க முற்ப தாகும்.
கீரிமலை, மாவிட்டபு சமய வரலாற்றில் முக் விடங்களில் உள்ள தி மிக்கவை. இவற்றேடு .ெ விநாயகர் ஆலய கர்னட தொகுத்து, அவற்றின் ஆராய்கின்றமை குறிப்பி

-سس- 2
மறைமுகமாகச் சுட்டுகின்றர். எமது பண்பாட்டின் வளர்ச்சி }ப்பதால் அவை பற்றிய வர அவசியமாகின்றது.
ரலாறு எமது பண்பாட்டின் துவிடுகின்றது . இலங்கையில் லாற்றை உருவாக்குவதற்கான கள் பலரால் அவ்வப்போது ருகின்றன. பிரதேச ரீதியில், லயங்கள் என்ற ரீதியில் வர வாகவும் நூல்வடிவில் வெளி
உள்ள பல ஆலயங்களின் யவாறு வெளிக்கொணரப்பட ஆலயங்களின் வரலாறுகளைப் கள் சற்றேனும் சிந்திக்காத காலத்தில் அத்தகைய ஆலய அமைத்துக்கொள்வதில் எதிர் ளுக்கு ஆனைவிழுந்தான் விநா ஒரு சான்ருகும். எனினும் ல்களையும், கர்ணபரம்பரைக் மூலங்களையும் ஒப்பீடு செய்து ல் இந்நூலாசிரியரான மட்டு கள் இவ்வாலய வரலாற்றைத் ட்டுள்ளமை பாராட்டிற்குரிய
Fம் போன்ற இடங்கள் எமது கியத்துவம் பெறுபவை. இவ் 3த்தலங்கள் வரலாற்றுப்புகழ் ாடர்புடைய ஆனைவிழுந்தான் ரம்பரைக் கதைகளை ஆசிரியர் நம்பகத்தன்மையைச் சீர்தூக்கி டத்தக்கது.

Page 13
3 - سیسی
"ஆனைவிழுந்தான்’ என்! மைக்குரிய க T ர ண ம் ஆராயப்படுகிறது. ஐதிகங்க இறைப்பற்றுடையோர் பெ ணர்வை வருவிப்பதில் இத்தை துணைபுரிகின்றன. பலகால இ பேணப்பட்ட வரலாற்று ஆ இவ்வாலய வரலாற்றினை சற்றுக் கடினமாக்கியவிட முயன்று பல கருத்துக்களை
இவ்வாலயச் சூழலிலிருந்து களின் முயற்சியால் பெறப் களையும், ஆலய தல விருட்ச உள்ள மண்மேட்டின் பழை கொண்டு இவ்வாலயத்தின் தென ஒரளவு உறுதிப்படுத்த
இவ்வாலயம் ஏறக்குன முண்டுக்குரியது என்ற செய் முண்டுக்கு முற்பட்டதெனக் துறை கயாத்துறைப் பிள் மூலமூர்த்தியோடு இவ்வால விளங்கும் ஒத்த தன்மையை இ. பி. 6-10ஆம் நூற்றண் லாம் என்ற செய்தியும் நூ படுகின்றன. இக்கருத்துக்கள் முக்கியத்துவமுடையன. தொ மெனக் கருதப்படத்தக்க வை வரலாற்றுச் செய்திகளைத் முயன்றுள்ளமை பாராட்டிற் கள் இவ்வாலயம் பற்றி எ. பவர்களுக்குரிய அடிப்படைத்

ற சிறப்புப் பெயர் வந்த பல கோணங்களிலிருந்து ளாக வரும் செய்திகளை ரிதும் நம்புவர் பக்தியு கய ஐதிகங்களே பெரிதும் இடைவெளியும் ஒழுங்காகப் ஆதாரங்கள் இல்லாமையும் அமைக்கும் முயற்சியைச் த்தும் ஆசிரியர் பெரிதும் முன்வைக்கின்ருர்,
தொல்லியல் ஆய்வாளர் பட்ட சான்றுப் பொருட் மாகிய அரச மரத்தடியில் மையையும் சான்றுகளாகக் வரலாறு பழமிை வாய்ந்த
é
தப்படுகின்றது.
றய கி. பி. 6-10 நூற் - தியும், கி. பி. 8ஆம் நூற்
கருதப்படும் காங்கேசன் 2ளயார் கோவிலில் உள்ள ய மூலமூர்த்தி கொண்டு பக் கொண்டு இவ்வாலயம் டைச் சேர்ந்ததாக இருக்க லாசிரியனுல் முன்வைக்கப் இவ்வாலய வரலாற்றில் ான்மை வாய்ந்த ஒரு ஆலய கையில் ஆசிரியர் இவ்வாலய தொகுத்தளித்து நிறுவ குரியது. இவரது கருத்துக் திர்காலத்தில் ஆய்வு செப் தரவுகளாகவும், மேலும்

Page 14
சிந்தித்து ஆய்வு செய்ய வ! இவ்வாலய வரலாறு மே தொன்று.
"ஆனைவிழுந்தான் எ சைவசித்தாந்த விளக்கமு. இவ்வாலயத்தின் வளர்ச்சி கள் பற்றியும் விபரங்க3 வளர்ச்சியில் மக்களே ஈடு. இவை ஒழுங்காகத் தொ எமது மூதாதையரின் தி அறிய இத்தகவல்கள் உத இத்தலத்திற்குமுரிய தொ கின்றது.
ஆலயத்தின் பூசகர் பர் நிறைவேறிய காலங்கள், பரிவாரமூர்த்திகள் பற்றிய பெறும் நைமித்திகக் கிரிை விபரங்கள் இந்நூலில் எடு
மூர்த்தி, தலம் ஆகி லயம் தீர்த்தம் இன்றி இ ஆசிரியரால் சுட்டிக்காட்ட மென இதனை நிறைவேற்றி முன்வருவார்க்ள் என்பது
இவ்வாலயம் பற்றிய நூலாக இது அமையினும், அவர்களின் இம்முயற்சி , தொன்முகும். முன்னரும் ஆலய வரலாறும் திருப்பதி யிட்ட அனுபவமிக்க ஆசி
is .

绯 ۔ ۔ ۔ ۔
மி வகுப்பனவாகவும் உள்ளன. லும் விரிவான ஆய்வுக்குரிய
ன்ற பெயருக்கு ஆசிரியர் ம் அளிக்க முற்பட்டுள்ளார். பில் பங்குகொண்ட அடியார் தரப்படுகின்றன. ஆலய ட ஊக்குவிக்கும் வகையில் குத்துத் தரப்பட்டுள்ளன. திருப்பணிக் கைங்கரியங்களை வுகின்றன. தமிழ்நாட்டிற்கும் டர்பும் எடுத்துக் கூறப்படு
ரம்பரை, கும்பாபிஷேகங்கள் ஆலயக் கட்டிட வளர்ச்சி, விபரம், ஆலயத்தில் நடை பகள் போன்ற இன்னுேரன்ன த்துக் கூறப்பட்டுள்ளன.
ய சிறப்புப் பெற்ற இவ்வா ருக்கும் குறையும் இந்நூலில் ப்பட்டுள்ளது. சிவகைங்கரிய வைப்பதற்கு அடியார்கள் எமது நம்பிக்கை.
மிகச் சுருக்கமான ஒரு நூலாசிரியர் திரு. நடராசா அனைவரது பாராட்டிற்குரிய மட்டுவில் 'சந்திரமௌலீசர் திகமும்' என்ற நூலை வெளி ரியர் இவ்வாலயத்தின் வர

Page 15
5 حساسي
லாற்றுக் கருத்துக்களைத் தொ யில் எழுதி வெளியிடுவது கு ரது இம்முயற்சி ஈழத்து சைவ முயல்பவர்களுக்கு துணைபுரி3 மார்த்தமாக விநாயகப் பெரு திருப்பதிகமும் இந்நூலினை அ ரின் இப்பணி சைவ உலகு எனில் மிகையில்லை,
அன்பர் திரு. நடராசா கைங்கரியம் மேலும் பல ஆ அளவிற்கு விரிவு பெறவும் விநாயகப்பெருமானின் திருவ
இந்து நாகரிகத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திருநெல்வேலி === {5 & g g0 - 7حے 7
 

குத்துத் தெளிவான நடை றிப்பிடத்தக்கதாகும். இவ Tfa) li வரலாற்றை அறிய வதாகும். ஆசிரியர் ஆத் மான்மீது பாடிய விநாயகர் புணி செய்கின்றது. ஆசிரிய க்கு ஒரு வரப்பிரசாதம்
%
அவர்களின் இத்தகைய லய வரலாறுகளை எழுதும் சிறக்கவும் எல்லாம்வல்ல ாருள் துணை நிற்பதாகுக. -
ப. கோபாலகிருஷ்ணன்

Page 16
இை
ஆனேவிழுந்த
ஆலய
gestína
ീക്ഷ இவன்கோ தெற்கு நோக்கிச் செல் ஏறக்குறைய இரண்டு கி6ே ஆலடிச்சந்தியிலிருந்து ே ஒரு கிலோமீற்றர் தொலை அமைந்திருக்கிறது இளவா? ஆலயம். இளவாலைச் 8 கிழக்குத் திசையாக ஏறச் தூரம் பிரயான்னஞ் செய்து Ga) fTub. -
"குதிரைமுகம் போன் குன்மநோயும் நீங்கவேண்ட யாத்திரையுஞ் செய்துவந் திசையுக்கிர சோழனது 1 பொழுது சுழிபுரம் என இறங்கி, நகுலேஸ்வரத்துக் டத்தில் அவள் ஏறிக்சென் யது. அவ்விடத்தில் ஒரு 6 பட்டது. ஆனை விழுந்து 6 விநாயகப் பெருமான் ஆை அழைக்கப்பட்டார். ஆன ஆனைவிழுந்தான் என அை ஒரு கர்ணபரம்பரைக் கை

(6) -
ut Du JLD
ான் விநாயகர்
ᎧlᎫ6iᎢ !]
ജ്ജു
யிலுக்கு முற்பக்கத்திலிருந்து லும் நகுலேசுவரர் வீதியில் லாமீற்றர் தொலைவிலிருக்கும் மற்கே செல்லும் வீதியில் வில் வீதியின் தென்புறத்தில் லே ஆனைவிழுந்தான் விநாயகர் Pத்திரமேழிச் சந்தியிலிருந்து குறைய ஒரு கிலோமீற்றர் 1 ம் இவ்வாலயத்தை அடைய
ற விகாரமான தன்முகமும், டித் தலயாத்திரையுந் தீர்த்த த சோழ தேசாதிபதியாகிய கள் மாருதப்பிரவல்லி, இப் வழங்கும் சோழிபுரத்தில் குேச் செல்லும் வழியில் ஒரி ற யானை விழுந்து வணங்கி விநாயகர் விக்கிரகம் காணப் வணங்கிய காரணத்தால் அவ் னவிழுந்தான் விநாயகர் என விழுந்து வணங்கிய இடம் ழக்கப்படுகின்றது. என்பது
莎。

Page 17
- 7
"இளவாலை வடக்கு (ச் வீதியில் ஆனைவிழுந்தான் எ பிள்ளையார் கோயிலும் 2 சேந்தான்குளம் கிராமங்களை இப்பிரதேசங்களில் மாவிட்ட பற்றியும் மாருதப்பிரவீகவல்: பேசப்படுவதால் சோழ அ வல்லியின் யானை விழுந்து இ தான் என்ற இடம் எனக் கரு கலாநிதி. இ. பாலசுந்தரம்.
முன்னுெரு காலத்தில் சிலர் தென்னிந்தியாவுக்கு சென்றிருந்தனர். அவர்கள், அவளின் தோழிகளாக ந பின்பு தம்நாடு திரும்பிய மூ, சந்தித்து உரையாடினர்கள், அம்மூதாட்டிகள்.
*ஆனை விழுந்தானில் அ பொக்கலங் தம்பையிற் பு சத்துருக்கன் வாய்க்காலிற்
எனவும் விசாரித்தார்கள்
பரம்பரைக்கதை. இக்கை தோழிகள், நகுலேஸ்வரத்ை நன்கு அறிந்திருந்தார்கள் எ கிருந்த மக்களோடு கெ தொடர்பையும், ஆனைவிழுந் கள் கொண்டிருந்த பத்தி முன்பு கூறப்பட்ட கர் சான்று பகர்வதுபோல அ மாருதப்பிரவல்லியின் யா?

த்திரமேழி) - பன்னுலை ன்ற இடமும் ஆங்கொரு உள்ளன. இவை கீரிமலை அயலாகக் கொண்டன. புரம் கந்தசுவாமி கோயில் பி கதை பற்றியும் பெரிதும் ரசியான மாருதப்பிரவீக இறந்த இடமே ஆனைவிழுந் தப்படுகிறது' 1 என்கிருர்
இளவாலையைச் சேர்ந்த 鱼 தலயாத்திரைக்காகச் மாருதப்பிரவல்லியோடு குலேஸ்வரத்துக்கு வந்து, தாட்டிகள் சிலரை அங்குச் அவ்வுரையாடலின்போது
ரசமரம் நிற்கிறதா? ளியமரம் நிற்கிறதா? -
சவுக்கமரம் நிற்கிறதா?
என்பது இன்னுெரு கர்ண 5。 மாருதப்பிரவல்லியின் தச் சூழவுள்ள கிராமங்களே ன்பதையும், அவர்கள் இங் ாண்டிருந்த நெருக்கமான தான் விநாயகர்மீது அவர் யையும் எடுத்துக்காட்டி, ணபரம்பரைக் கதைக்குச்  ைம கி றது. ஒருநாள், ன பாகர்களுக்கடங்காமல்

Page 18
மதங்கொண்டோடி அட்ட
தொடர்ந்து சென்ற பாகர் குத்தியும், வேல், ஈட்டி மீது எறிந்தும் அதை களின் முயற்சி பயனற்று விற்றைத்த ஆயுதங்கள் களைப்போலத் தோன்ற, ே
ஒடித்திரிந்த யானை இறு இறந்தது. யானை முள்ளா முள்ளான எனவும், அது தான் எனவும் அழைக்கப்ட கர்ணபரம்பரைக் கதை
இக்கதையிலும், "ம விழுந்து இறந்த இடமே . மெனக் கருதப்படுகிறது." ரத்தின் கூற்றிலும் ஒருவித
இக்காரணங்களால் L விழுந்து இறந்த இடமே ஆ படுவதாகச் சிலர் கருதுகின், லாற்ருசிரியர்கள் இக்கூற்ை தெரியவில்லை.
"யாழ்ப்பாணத்து ஐதி புரவல்லி தனது யானையில் நோக்கிச் சென்றுகொண்டி இந்த இடத்தில் விழுந்து ெ இலத்தின் மகிமையறிந்து 1 யாரை வழிபட்டாளென்று விழுந்தான் எனப் பெயர் டது. 2' என்கிருர் யாழ் லாற்றுத்துறை விரிவுரையா6 அவர்கள்,

懿
காசஞ் செய்தது. அதைத் கள் தாற்றுக் கோல்களாற் முதலிய ஆயுதங்களை அதன் அடக்க முயன்றனர். அவர் ப்போனது. ஆனையின் உட அதனுடலில் முளைத்த முட் வதனை பொறுக்க முடியாமல் தியில் ஓரிடத்தில் விழுந்து னேபோல ஒடித்திரிந்த இடம் விழுந்த இடம் ஆனேவிழுந் டுகின்றன. இது இன்னுெரு
ாருதப்பிரவல்லியின் யானை ஆனைவிழுந்தான் என்ற இட
என்னும் கலாநிதி பாலசுந்த 5 ஒற்றுமை காணப்படுகிறது.
0ாருதப்பிரவல்லியின் யானை *ன விழுந்தான் என அழைக்கப் றனர். இருந்தபோதிலும் வர றை ஏற்றுக்கொள்வதாகத்
க இளவரசியாகிய மாருதப் இவ்வழியாக மாவிட்டபுரம் நந்தபொழுது, அந்த யானை பிட்டதாகவும் பின்னர் இத் மாருதப்புரவல்லி இப்பிள்ளை ம், இதனுல் இவ்விடம் ஆன
பெற்றதாகவும் கூறப்பட் ப்பாணப் பல்கலைக்கழக வர ார் கலாநிதி, பொ. இரகுபதி

Page 19
- 9
ஐதிகம்" என்னுஞ் சொல் வழங்கிவரும் கதை (உ+ம் இருக்கிறது) - கேள்வி வழக்(
சிவபெருமான் எல்லாம் 6 நகுலேஸ்வரப் பெருமானின் பிரவல்லியின், குதிரை முகப் மாறியிருக்கலாம் என நம்புகி பிரவல்லியின் கதையை ஒரு கருதுகிருர்கள்.
வரலாற்று ஆசிரியர்களை மாருதப்பிரவல்லியின் வரலாற் அவர்களுக்குச் சரித்திரச் சான் அவை கிடைக்காதவரை இளவரசியாகவே இருப்பாள். கர் ஆலயத்தை அமைத்து பதும் ஐதிகமாகவேயிருக்கும். ஆலயத்துக்கும் மாருதப்பிரவ வரலாற்றுத் தொடர்புடைய ஆய்வுகளின் மூலம் வரலா செய்யவேண்டும்.
ஆனலும் ஆனவிழுந்தான் களே இங்குக் குறிப்பிடுவது அ
1 மாருதப்பிரவல்லியின் மாக மாறியமை காரணமாக பெயர் பெற்ற தி ரு த் த 6 'அங்கசுந்தரி' * முனிவரது ப கரித்து இவ்வியாத்திரைக்கா த்ாள். காவிரிப்பூம் பட்டின. பட்டு இந்துசமுத்திரம் எனு குளித்து, தெற்கே ஏமகூடம் எ மணிய துவாதசாந்தத் தலம் சென்று, மாணிக்க கங்கையி

லுக்குத் தொன்றுதொட்டு இந்த மரத்தில் பேய் த என்பது பொருள், !
பல்லவர் என நம்புவோர், திருவருளினுல் மாருதப் அழகிய மனிதமுகமாக ரர்கள். அதனுல் மாருதப் வரலாற்று நிகழ்ச்சியாகக்
"ப் பொறுத் தவரையில், }றை உறுதி செய்வதற்கு, றுகள் கிடைக்கவேண்டும். மாருதப்பிரவல்வி ஐதிக
ஆனவிழுந்தான் விநாய அவள் வழிபட்டாள் என் அதனுல் ஆனைவிழுந்தான் 1ல்லிக்குமுள்ள தொடர்பு தா இல்லையா என்பதை, ற்ருய்வாளர்களே முடிவு
பற்றிய சில கருத்துக் வசியமாகும். ܬ
குதிரைமுகம் மனித முக 'மாவிட்டபுரம் எனப் த் தி ன் வரலாற்றில், ாதங்களில் வீழ்ந்து நமஸ் ன ஏற்பாடுகளைச் செய் த் துறையிலிருந்து புறப் ம் மகேந்திரக் கடலிற் னப் பெயர் பெற்ற சுப்பிர ாகிய கதிர்காமத்திற்குச் ற் றிர்த்தமாடிக் கதிரை

Page 20
வேற்பெருமான வணங்கி
* வடகோடியிலே கடற்க மொன்றுளது. ஆங்குச் டன் நினைந்து மூழ்குவை வுறும்’ என அசரீரி கூறி
அங்கசுந்தரியும் மகி யடைந்து கீரிமலைச் சாரல் எனும் இடத்திற் பாளை விரதத்தை அனுஷ்டிப்பா படுகிறது. இக்கூற்று மா லிறங்கி, யானை மேலேறி மாவிட்டபுரஞ் சென்ருெ பரைக் கதையுடன் முரண்
i, பண்டைக்காலத்தி யேற்றம் பழகியதாகவே ணம் செய்ததாகவோ க இல்லை. அதனல் மாருத சோழிபுரத்திலிருந்து மா எனக் கூறுவதை உண்மை கொள்ள முடியாது.
i. திசையுக்கிர கே யாத்திரை செய்ய அனு! சென்ற செய்தியை,
'.பார்த்திபன் மாய முற்ற L 6oT ġid சீல முற்றிடு சிங்தை
(uel) rá (5

10 =
வருவாளாயினள். அங்கேயும்
கரையில் திவ்விய தீர்த்த சென்று காங்கேயனை அன்பு யேல் நின் எண்ணம் நிறை ற்று. " .
ழ்ச்சியுற்று வடகடற்றுறை பில் வந்திறங்கி வளவர்கோன் யம் போட்டிருந்து தனது ளாயினுள், 3' எனக் கூறப் ருதப்பிரவல்லி சோழிபுரத்தி ஆனைவிழுந்தான் வழியாக ளனக் கூறப்படும் கர்ணபரம் படுவதாகவே அமைகின்றது.
தில் த மி ழ ர சி கள் யானே ா யானைமீதேறிப் பிரயா கூறுவதற்குரிய சான்றெதுவும் தப்பிரவல்லி யானைமீதேறிச் விட்டபுரத்துக்குச் சென்ருள் யானதென இலகுவில் ஒப்புக்
Fாழன் தன்மகளைத் தீர்த்த ப்ப, அவள் யாத்திரைக்குச்
Dess sir
கிற் கொலுவுறச் யி னேகினுள்'
-பல்லக்கு)

Page 21
11' =ے
எனவே நகுலகிரிப்புராணம் லும் மாருதப்பிரவல்லி என்னுங் கூற்று மறுக்கப்படுகி
iv. நகுலகிரிப் புராண திருத்தல வரலாற்றிலோ மா விழுந்தானுக்கும் உள்ள ே கூறப்படவில்லை.
இக்காரணங்களால் மீதேறி வந்தாள் என்பதும், வணங்கிய இடமே ஆனைவி என்பதும் சமயவிலக்கிய நே தெரியவில்லை.
அதனுல் யானை இறந்த வணங்கிய இடம் ஆனைவிழுந் கிறது எனக் கருதுவது பொ
நோய் நீங்கிக் குணமை குமாரியாக விளங்கிய மாரு காதலித்த உக்கிரசிங்கசேனன் மணஞ்செய்தான் என வரலாறு 5 கூறுகின்றது.
இந்த உக்கிரமசிங்கன் முண்டில் வாழ்ந்தவன் எனவு அரசுபுரிந்தவனெனவும், தொ பாரஞ்செய்ய உதவுவதற்கா வெட்ட அவனுக்கு அனுப் யாழ்ப்பாண வைபவமாலைய களால் அறியமுடிகின்றது.

4 கூறுகின்றது. இதன பானைமீதேறிச் சென்ருள்
றது.
த்திலோ, மாவிட்டபுரத் ருதப்பிரவல்லிக்கும் ஆன தொடர்புபற்றி எதுவுங்
ாருதப்பிரவல்லி tlift 255 அவளது யானை விழுந்து ழுந்தான் எனப்படுகிறது ாக்கிலும் சரியானதாகத்
இடம், அல்லது விழுந்து தான் என அழைக்கப்படு ருத்தமற்றதாகும்.
டந்து, அழகிய அரசிளங் தப்பிரவல்லியைக் கண்டு என்னும் அரசன் அவளே மாவிட்டபுரத் திருத்தல
கி. பி. ஒன்பதாம் நூற் பும்; கதிர்காமத்திலிருந்து ாண்டைமான் உப்பு வியா க தொண்டைமானுற்றை மதி கொடுத்தவனெனவும் பில் 6 தரப்படுத் தகவல்

Page 22
ஆணுலும் யாழ்ப்பாண களை வரலாற்றுச் சான்று: இல்லையா என்பதை வரல வேண்டும்.
சாபதீக்கம் பெற்ற
வரத்தின் சூழலில், முதலி விநாயகர் ஆலயத்தை அ5 விநாயகர் ஆலயங்களை அ ளொன்று ஆனைவிழுந்தான் கர்ணபரம்பரையாகக் கூற கூற்றை ஏற்றுக்கொள்வதி கிடைக்கவில்லை.
மாருதப்பிரவல்லிக்கும் ஆலயத்துக்கும் தொடர் கொண்டால், இவ்வாலய, டில் அல்லது அதற்குமுன் டும் எனக் கருதலாம். ஆ ஆலயத்தின் வரலாறு ஏ காலப் பழமை வாய்ந்ததா
இருந்தபோதிலும்,
சுற்றுமதில் அமைப்பதற் போது, அங்கு பழைய செ யும், ஆலயத்தின் தென்ம்ே வெளியே, பாழடைந்திரு மூடப்பட்ட கிணறும், ! பட்ட பழமை வாய்ந்த
களுக்கு முன்பு இங்கு சான்றுகளாக அமைகின்ற

!2 =
வைபவமாலை தருந் தகவல் 1ளாக ஏற்றுக்கொள்ளலாமா 1ற்ரு சிரியர்களே தீர்மானிக்க
மாருதப்பிரவல்லி நகுலேஸ் ற் கொல்லங்கலட்டி வீரகத்தி மைத்ததுடன், மேலும் ஆறு மைத்தாளெனவும், அவற்று விநாயகர் ஆலயமெனவும் ப்படுகின்றது. ஆணுலும் இக் 1ற்குரிய ஆதாரம் எதுவுங்
ஆணைவிழுந்தான் விநாயகர்
உண்டு என்பதை ஏற்றுக் ம் கி. பி. 9ஆம் நூற்ருண் அமைக்கப்பட்டிருக்க வேண் ல்ை, இன்று இங்கிருக்கும் rறக்குறைய எண்பதாண்டு கவே கருதப்படுகின்றது.
இன்றைய ஆலயத்துக்குக் கு அத்திவாரம் வெட்டிய ங்கட்டிகள் காணப்பட்டமை ற்குத் திசையில், உள்வீதிக்கு iந்து, அண்மைக்காலத்தில் ஆலய வளாகத்திற் காணப்
பொருட்களும் பல்லாண்டு ஆலயமெர்ன்றிருந்தமைக்கான 防。

Page 23
鑫
13 سے
ஆலய முன்றிலில் நிற். விருட்சமெனக் கருதப்படுவது பிலுள்ள மண்மேடு, இவ்வி பறைசாற்றும் இன்னுெரு சா
ஆலயத்தின் அயலிலுள்ள கியிருந்து ஸப்த கன்னிகைகள் கெளமாரி, வைஷ்ணவி, சாமுண்டி ) ஆனைவிழுந்தான் கள் என்பது ஐதிகம். இக்கா தில் இவ்வாலயத்தின் அய ஆரவர்கள் அஞ்சுகிருர்கள்.
ஆலயத்தின் தலவிருட் ஏழு கிடாரம் பொன் இரு தேவதை காவல் செய்வதாக களைப் பலியிட்டாலன்றி அை இன்னுெரு கதை கர்ணபரம் றது. இக்காரணத்தாலும் என்பதாலும், இவ்வாலயத்.ை தடையாகவிருந்தும் இவ்வர: வருகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன் லுள்ள புற்றுகளிற் பாம்புகள் ஆலய்த்துக்கு வழிபட வரும் தீங்குமிழைக்காத காரணத்த அவை காரணமான அச்சப்ெ வந்து சென்றர்கள். அரசமர குறுக்கே வெண்ணிற நாகப தைக் கூட்டுபவர் அவற்ை விட்டுவிட்டுக் கூட்டிஞர். இ நாகதம்பிரானின் புதுமை" எ

பதும், ஆலயத்தின் தல் |மான அரசமரத்தின் அடி பாலயத்தின் பழமையைப் ன்ருகும்.
கொன்றை மரத்திற்றங் i ( பிராமி, மகேசுவரி, வாராகி, இந்திராணி, விநாயகனை வழிபடுகிருர் ரணத்தால், இராக்காலத் லிற் செல்வதற்கும் இன்
சமான அரசமரத்தின்கீழ் ப்பதாகவும், அதை ஒரு பும், ஏழு கன்னிப் பெண் த எடுக்க முடியாதெனவும் பரையாகக் கூறப்படுகின் ஆலயத்தின் தலவிருட்சம் த அழகுற அமைப்பதற்குத் Fமரம் இன்றும் வாழ்ந்து
வரை இவ்வரசமரத்தடியி வாழ்ந்துவந்தன. அவை அடியார்களுக்கு எவ்வித ால், இங்கு வருவோர் துவுமின்றி, ஆலயத்துக்கு த்தடியைக் கூட்டும்போது , ாம்புகள் வரும். ஆலயத் த் தூக்கி வேறிடத்தில் து இங்கிருந்தருள்புரியும் ாகிருர்கள் முதியவர்கள்.

Page 24
1983ஆம் ஆண்டில் மேலாய்வை மேற்கொண் மன்றிப் பல்வேறு இரக வேண்டிய தன் பெருமைம் ஓங்காரப் பொருளான மோன முனிவரைப்போல லிருந்து, பழைய காலத பள்ளமிடப்பட்ட கூரையே தடித்த விளிம்புடைய ம துண்டுகளையும், யாழ்ப்பான துறை விரிவுரையாளர் க. டெடுத்தார்.
அவற்றை ஆய்வு செய் னில் கிடைத்த தடயங்கள் ளன. ஒன்று, அங்கு சு மற்றையது அது கி. பி. தாகலாம் என்பது 7' எ6
ஆனைவிழுந்தானில்
இருந்ததாகக் கூறப்படும் வழங்காமையாலும், இவ் நகுலேஸ்வரத்தின் சூழலில் ஆலயங்களை மாருதப்பிர கூறப்படுவதனுலும், மா யாழ்ப்பாண வைபவமா ஆலயச் சூழலில் மேற்கெ மேலாய்விலிருந்து இங்கி காலமெனக் கண்டறியப் மாயிருப்பதனலும், இங்கி தான் விநாயகர் ஆலய.ெ

14 一
ஒருநாள், தொல்லியல் டு, தன் கிளைகளை மாத்திர சியங்களையுந் தாங்கி, பேச குெ வரலாற்றைப் பேசாமல் கணபதியைக் கருத்திருத்தி, முன்னிற்கும் அரசமரத்தடியி ந்திற்குரிய, கைவிரல்களினுற் பாடுகளின் துண்டங்களையும், ட்பாண்டங்களின் உடைந்த னப் பல்கலைக்கழக வரலாற்றுத் லாநிதி பொ. இரகுபதி கண்
த கலாநிதி, 'ஆனைவிழுந்தா இரு தகவல்களைத் தந்துள் ட்டிடமொன்று இருந்தமை, 6-10 நூற்றண்டுக்கு உரித் ன்கிருர்,
வேறு ஏதாவது கட்டிடம் கர்ணபரம்பரைக் கதைகூட வாலயத்தை மாத்திரமன்றி ஸ் எல்லாமாக ஏழு விநாயகர் வல்லி அமைத்தாள் எனக் ருதப்பிரவல்லியின் காலமென லை குறிப்பிடும் காலமும், 5ாள்ளப்பட்ட தொல்பொருள் நந்த கட்டிடம் கட்டப்பட்ட பட்ட காலமும் ஒரே கால கிருந்த கட்டிடம் ஆனைவிழுந் மனத் துணியலாம்.

Page 25
15 ܝܢ
அன்னியர் ஆட்சிக்கால லயங்கள் அழிக்கப்பட்டதுபே கப்பட்டு, ஆலயச்சொத்துக்
அல்லது அபகரிக்கப்பட்டோ
தமது ஆலயம் அழிக்கப் அறிந்தவுடன், சைவாபிமான எமது மூதாதையர் தத்தமது
திருவுருவங்களையாவது
அவற்  ைற எ டு த் து ச் வைத்தார்கள். அவர்களால் திருவுருவங்கள் பல கண்ெ ஆலயங்களிற் பிரதிட்டை
எம் முன்னேர் தம் ஆலயங்க
கிருந்த விக்கிரகங்களை எடு திருந்தால் அவையும் அழி ஆலயங்களை மீளமைக்கும் வி திருக்காது.
ஆணைவிழுந்தான் விநாயக வரையில், அவ்விடத்தில் மு கப்பட்டமை பற்றியோ, அங் வங்கள் அகற்றப்பட்டமை ப கள் ஏதாவது, எங்கிருந்த டமை பற்றியோ எதையும் அ போதிலும் ஆனைவிழுந்தான் மைக்கப்பட்டிருக்கிறது.
"இருபதாம் நூற்ருண்ட தலவிருட்சமான அரசடியில் வந்த தெய்வத் திருவுருவே தின் மூலமூர்த்தியாயின் ஆ6 இத்திருவுருவம் அழிக்கப்படா னும் வினு எழுகின்றது. இ

த்தில் இங்கிருந்த சைவர ால இவ்வாலயமும் அழிக் க்களும் அழிக்கப்பட்டோ இருக்கலாம். -
படப்போகிறது என்பதை மும் இறைபக்தியும் மிக்க ஆலயத்திலுள்ள தெய்வத் ப்பாற்றும் நோக்குடன்  ெச ன் று ம  ைற த் து
ஒளித்து வைக்கப்பட்ட டடுக்கப்பட்டு, மீண்டும் செய்யப்பட்டிருக்கின்றன. 1ள் அழிக்கப்படமுன் அங் த்து மறைத்து வைக்கா க்கப்பட்டிருக்கும். பழைய ாய்ப்பு எமக்குக் கிடைத்
片 ஆலயத்தைப் பொறுத்த ன்பிருந்த ஆலயம் அழிக் கிருந்து தெய்வத்திருவுரு ற்றியோ, அத்திருவுருவங் ாவது கண்டெடுக்கப்பட் 1றிய முடியவில்லை. இருந்த
விநாயகர் ஆலயம் மீள
டின் முற்பகுதியிலிருந்து,
வைத்து வணங்கப்பட்டு அழிக்கப்பட்ட ஆலயத் லயம் அழிக்கப்பட்டபோது "மலிருந்தது எப்படி? என் வ்வினவுக்கு விடை காண்

Page 26
பது இலகுவானதல்ல. இ வந்த திருவுருவம் அழிக்கட் டின் ஆரம்பகாலத்திலிருந் திருவுரு வேமுென்ருகவே இ
அப்படியானல், இங்கு திருவுருவைத் தாபித்தவ தாபிக்கப்பட்டது? இவ்வி
அன்றைய சூழ்நிலையில் மாகச் சிவ வழிபாட்டையு :ம், அச்சத்துடனும் அந்த பிருந்தமையுமே இவ்வினு: யாமைக்குரிய காரணங்கள
இன்றைய ஆலயம் இருந்த இடத்திற்ருன் இ  ாேகக் கூற முடியாது. இ கத்தில், ஆலயத்தை அழ. யாகத் தலவிருட்சம் நிற்ப ஆலயம் இன்றைய ஆலயம் முடியாதெனப் பலர் கருது
இந்த நூற்ருண்டின் வைத்து வழிபாடு செய்ய ஆலயத்திற் காணப்படுவ குறைய ஒரு சிவலிங்கத்தி காணப்படுகின்றது. இவ்வ விநாயகப்பெருமானின் திரு பட்ட காலம் வரையும் மானின் உருவமெனக்கொ பூசனையும் புரிந்துவந்தா
தோடருகிறது

! 6 -
இங்கு வைத்து வணங்கப்பட்டு - பட்டிருந்தால், இந்நூற்ருண் து இங்கு வணங்கப்பட்டுவந்த இருக்கவேண்டும்.
நள்ள லிங்க வடிவிலமைந்த ர் யார்? இவ்வுரு எப்போது னுக்களுக்குரிய விடை தெரிய
தாக்குதலும், அது காரணி 'ம் சைவாலயத் தாபனத்தை நரங்கமாகவும் செய்யவேண்டி க்களுக்கு விடைகாண முடி ாகும்,
பண்டைய ஆலயக்கட்டிடம் ருக்கிறதெனவும் திட்டவட்ட ன்றைய ஆலயத்தின் முன்பக் காக அமைப்பதற்குத் தடை து காரணமாகப் பண்டைய ருக்குமிடத்தில் இருந்திருக்க கின்றனர்.
ஆரம்பத்திலிருந்து இங்கு பப்பட்டு வந்ததும், இன்றும் துமான திருவுருவம் ஏறக் ன் தோற்றமுடையதாகவே ாலயத்தின் மூலமூர்த்தியாக வுருவம் பிரதிட்டை செய்யப் இவ்வுருவை விநாயகப்பெரு ண்டே முன்னேர் வழிபாடும் கள் இ ன் று ம் அந்நிலை

Page 27
17 - ے
இ. பி. 8ஆம் நூற்ருண் கருதப்படும் காங்கேசன்துறை துறை) பிள்ளையார் கோயிலிற் யின் திருவுருவம் ஏறக்குறை மானின் தோற்றமுடையதாக
கயாத்துறை ஆனந்தப்
'ഉ: ഖഴ്ച ഖഥTിധ 695 ft உன்னைச் சரண் புகு உள்ளத்தில் உள்ளபடி : உயிர்த் தொகுதியா தீம்புனலிசைத்து வரும்
தெரிசனமளித்து கி வட இலங்கைக் கரைதணி
திருவருள் காட்டி அமைந்திருக்கிறது.
இந்த இரண்டு விநாய ஒரேவிதமாக அமைந்திருக்கும் திருவுருவங்களும் ஒரு காலட பிருக்கலாமெனக் கருத இ வாலயம் கி. பி. 6-10ஆம் அமைக்கப் பட்டிருக்கலாமென னுெரு சான்ருகும்.
ஆனைவிழுந்தானிலும் திருவுருவங்கள் சிவலிங்கப் டெ ருக்கின்றபோதிலும், இவ்விட இன்றுவரை இவ்வுருவங்களை வணங்கி வருகின்ருர்கள். இத தெனத் தெரியவில்லை.

枋色 முற்பட்டதெனக் க் கயாத்துறைப் (காசாத் காணப்படும் மூலமூர்த்தி ய ஒரு சிவலிங்கப் பெரு வே காணப்படுகின்றது. 3T 25T u ffir fi துதியும், ܗ ܝܓ
பகக் கடவுளே நந்தேன் உலகெலாம் உனே ய் உய்த்துணர்ந்தேன்
சிவபாதமலையெனத் ற்பாய்
லே லிங்கமாய் வந்து கின்ரூய்' 8 எ ன (3 Gj.
கர் ஆலய மூர்த்திகளும் b காரணத்தால், இவ்விரு ப்பகுதியில் அமைத்தனவா டமுண்டு. இதுவும் இவ் நூற்ருண்டுக் காலத்தில் சக் கருதுவதற்குரிய இன்
கயாத்துறையிலுமிருக்கும் பருமானின் வடிவிலமைந்தி உங்களில் வாழும் மக்கள் விநாயகரெனக் கருதி தற்குரிய காரணம் இன்ன

Page 28
= |
பிரபல வழிபாட்டுத்த கள், ஆங்காங்கு கோயி களின் பெயரால் அல்லது டைய பெயரால் அழைக்க உதாரணமாக நகுலேஸ் வல்லிபுரம், துர்க்காபுரம், வனக் கடவை முதலிய இட
வேறுசில கோயில்கள அமைந்திருக்கும் இடப்டெ அழைக்கப்படுகின்றன. நல் நயினுதீவு நாகபூஷணி அ பன்றித்தலைச்சிக் கண்ணசை புரம் கந்தசுவாமி கோயி தோன்றீஸ்வரர் கோயில் 6 கோயிலிருக்கும் இடப்டெ அழைக்கப்படுவதற்கு உதா
ஆனேவிழுந்து வணங்கி யகர் கோயிலிருக்கும் இட னும் பெயரால் அழைக்க ஆதாரம் எதுவும் இல்லா கொண்டெழுந்தருளி யிரு. னது திருநாமத்தின் தொ விழுந்தான்’ என அழைக்க மானதாகும்,
“ஆனைவிழுந்தான்’ என்ப ஆன் + ஐ+ விழும் + தான் ஆன் + விழும்+ஐ+ தான் ஆன்-உயிர்-பசு ஐ-இறைவன்
விழும்-பதியும்-சத்திநி

is -
லங்கள் சிலவற்றின் பெயர் ல்கொண்டிருக்கும் தெய்வங் அப்பெயரோடு தொடர்பு ப்படுவது வழக்கம். இதற்கு வரம், திருக்கேதீஸ்வரம், நாச்சிமார்கோயிலடி, கந்த உங்களைக் குறிப்பிடலாம்.
பின் பெயர்கள், கோயில் பயரோடு தொடர்புபடுத்தி லூர் க் கந்தசுவாமி கோயில், ம்மன் கோயில், மட்டுவில் 5 அம்மன் கோயில், மாவிட்ட ல், ஒட்டுசுட்டான் தான் என்பன, கோயிலின் பெயர், பயரோடு தொடர்புபடுத்தி ரணங்களாகும்.
ய காரணத்தால் இவ்விதா டம் 'ஆனைவிழுந்தான்’ என் கப்படுகிறது என்பதற்குரிய “மையால், இங்கு கோயில் க்கும் விநாயகப் பெருமா டர்பினுல் இவ்விடம் "ஆனே ப்படுகிறதென்பதே பொருத்த
திை ,
என்ப் பிரித்து எனக் கொண்டுகூட்டுவோம்.
பாதத்தை அருளும்.

Page 29
19
எனவே 'ஆனைவிழுந்தான் வி
வினே ஒப்பும் மலபரிபாகமும்
சத்திநிபாதத்தை அருளி, முத் வனே தானகிய விநாயகப்பெ அதனல் இத்தலத்தில் இருந் திருநாமங் காரணமாக இவ்
எனப் பெயர் பெற்றிருக்கவே
முருகன் பெருமையைச் 8 ருக்குக் கூறிய கூற்முகப் பாட
*ஆதலின் நமது சத்தி அ. பேதக மன்ருல் நம்போற் பிரி ஏதமில் குழவி போல்வான் யா போதமும் அழிவில் வீடும் ே
என்னும் கந்தபுராணச் டுச ஞாபகஞ்செய்வோம். இச்ெ மானைப் பொறுத்தவரையிலு
திருநாவுக்கரசு நாயனர் : பாடியபோது, βρ(ή L I (τι :
என அடியெடுத்து, "சிங்க
கின்றேன் திருப்புகலூர் .ே முடித்தருளினர். இப்பாடல்
சிங்க வடிவாக வந்து நாவுக்
னென ஒரு கற்பனைக்கதை உ பின்னணியாகக்கொண்டு, அ கள் செதுக்கப்பட்டுத் தி வைக்கப் பட்டிருக்கின்றன.
அப்பரைக்கடிக்க, அப்பர் 16 தாகவும் கூறப்படுகிறது. திரு
இக்கதையைக் கூறுகிறது. நாளில் இந்நிகழ்ச்சியைச் சி முன விழாவொன்றும் அங்
தெரிய வருகின்றது.

ബ=
நாயகர் என்பதற்கு, (இரு அடைந்த) உயிர்களுக்குச் தியைக் கொடுக்கும் இறை ருமான் என்பது பொருள். தருள்புரியும் இறைவனது விடம் ஆனைவிழுந்தான் |ண்டுமெனத் துணியலாம்.
வெருெமான் உமாதேவியா - U u L ul - L-,
றுமுகன் அவனும் யாமும் விலன் யாண்டும் நின்றன் வையு முனர்ந்தான் சீரும் :பாற்றினர்க் கருள
வல்லரின் 92
ய்யுளை இச்சந்தர்ப்பத்தில் 'சய்யுள் விநாயகப் பெரு ம் பொருத்தமானதாகும்.
திருப்புகலூரில் திருப்பதிகம் லே ‘அங்கமே பூண் டாய்" மே உன்னடிக்கே போது மவிய தேவ தேவே" என காரணமாக, இறைவன் கரசு நாயனுரை உண்டா உருவானது, அக்கதையைப் தைச் சித்திரிக்கும் உருவங் ருப்புகலூர் மதிற்கவரில் சிங்கமாகிய இறைவன் வலிக்கிறதே எனக் கூறிய ப்புகலூர்த் தலபுராணமும் அப்பர் குருபூசைத் திரு த்திரித்துக் காட்டும் தவ கே நடைபெறுகிறதெனத்

Page 30
அதுபோல "ஆனேவிழு
ருெடருக்கு விளக்கம் அ
வளம் நிறைந்த, மாருதப் கதை உருவாக்கப்பட்டிருக்
யிருக்கிறது.
ஸ்ப் த கன்னிகளும் பல்லாண்டுகாலம் அரசம. குடிலிலும் எழுந்தருளியிரு. இருபதாம் நூற்ருண்டின்
ஆலயம் இப்போதிருக்கும்
கல்லுங்கொண்டு lf) left ஆரம்பத்தில் ஒலையால்
அம்மடாலயத்தில், அ வழியாக வணங்கப்பட்டு :
திருவுருவம் பிரதிட்டை ெ
il UEFT Gağltaj Goo) l ıüı 11:FT Gör GTg சின்னத்தம்பி என்னும் சுற்றுமதிலும் மணிக்கோபு
1938ஆம் ஆண்டு ம தம்பர் சின்னத்தம்பி அவர் இளையதம்பி முகதாவில் 1
கங்களைக் கொண்ட இரண்
மேலே குறிப்பிட்ட 1 சோடக்கனிலுள்ள 12 பர விநாயகர் ஆலயத்துக்குச்

20 -
ந்தான்' என்னுஞ் சொற்
|ளிக்கும் வகையில், கற்பனை பிரவல்லியின் ஆனை விழுந்த கலாம் எனவே கருதவேண்டி
தம்மை வழிபாடு செய்ய, ரத்தடியிலும், பின்பு சிறு ந்த விநாயகப் பெருமானுக்கு இரண்டாம் தசாப்தத்தில்,
இடத்தில், சுண்ணும்புங் அமைக்கப்பட்டது.
வேயப்பட்ட இம்மடாலயம்
= l-Bilح۔
ரசமரத்தடியில் வைத்து வழி வந்த விநாயகப்பெருமானின் சய்யப்பட்டது.
୪t அழைக்கப்படும் தம்பர் பெரியார் ஆலயத்துக்குச் ரமும் அமைத்தார்.
ார்ச்சு மாதம் 6ஆம் நாள் கள் தொத்தாரிசு சீனிவாசகம் 286, 1287 என்னும் இலக் டு உறுதிகளை எழுதினர்.
1286ஆம் இலக்க உறுதிப்படி ப்புக் காணி ஆனவிழுந்தான் சொந்தமானது.

Page 31
21 ܝ
இரண்டாவது உறுதிமூ 24 பரப்புக் கா னி  ைய யு வீட்டையும் ஆலயத்துக்கு உரி தம்பி அவ்வுறுதியில் இரண்டு ளார். முதலாவது நிபந்தனே செய்பவருக்கு, அவர் ஆலயத் யாற்றுங் காலம் வரையும், காணியிலுள்ள வரும்படியை அளிக்கின்றது.
இரண்டாவது நிபந்தனை கீரிமலைக்கு யாத்திரிகர்களாக தங்குவதற்காக, அவர்கள் இ வீட்டிலுள்ள ஒரு அறையை அ வேண்டுமென்பது.
இதிலிருந்து இந்த நூற்ரு துச் சைவக் குருமார் கீரிமலை தார்கள் என்பதையும், அவர்க இடமாக ஆனைவிழுந்தானின் தெடுத்தார்கள் என்பதையும் சூழலில் சைவாசார சீலர்கள் என்பதையும் உணர முடிகின்
சிறந்த சிவபத்தரும் ஆ போற்றும் பண்பினருமான ܡ உபாத்தியாயர், ஆரம்பத்தி யகப் பெருமானுக்குப் பூசனை தொடர்ந்து வேலேயர் என வேலுப்பிள்ளைப் பண்டாரம் பூசை செய்தார்.

லம் சோடக்கனிலுள்ள ம் அதில் அமைந்துள்ள மையாக்கிய திரு, சின்னத் நிபந்தனைகளை விதித்துள் , ஆலயத்துக்குப் பூசை தின் பூசகராகக் கடமை அவ்வீட்டில் வசிக்கவும் எடுக்கவும் அதிகாரம்
வேதாரணியத்திலிருந்து வரும் சைவக்குருமார் ங்கு இருக்குங் காலம்வரை வர்களுக்குக் கொடுத்துதவ
ரண்டிலும் வேதாரணியத் க்கு யாத்திரிகர்களாக வந் 1ள் தாம் தங்குவதற்கேற்ற
அயலிடங்களைத் தேர்ந் அதனுல் இவ்வாலயச் வாழ்ந்து வந்தார்கள் )5.
ஆன்குலத்தை அரனெனப் தம்பர். கந்தப்பிள்ளே ல் ஆனைவிழுந்தான் விநா புரிந்துவந்தார். அவரைத் அழைக்கப்பட்ட வயிரவி. விநாயகப் பெருமானுக்குப்

Page 32
1935ஆம் ஆண்டளவி அமைப்பதற்கு ந ட வ பூரீ , தி. நடராச ஐயர் துக்குப் பூசை செய்யத் ெ அயலில் அமைக்கப்பட்டது மான பாலாலயத்தில் வி செய்யப்பட்டார். கருவண் மண்டபம் என்பவற்றின் றுக்கொண்டிருந்தன.
விக்கினேஸ்வரப் G பிஷேகம் செய்யவேண்டிய ருந்தது. கும்பாபிஷேகம் விழாக்களின்போது (விநா யாகவும் வெளிவீதி வழிய வேண்டும். அப்போது ஆ வில்லை. ஆலய மதிலின் நா சொந்தமான காணிகளே லிருந்த காணி புறமதத்தா தது. இதைக் கருத்திற்ெ சிறப்பாக நடத்துவதில் தவிர்ப்பதற்காகச் சைவட் பலம் கார்த்திகேசர், கந்தட் செல்லப்பா, வயிரமுத்து வரும், மணிக்கோபுரத்துக் நின்ற இத்திமரத்துக்கும் வ பரப்புக் காணியை, விலை விக்கினவிநாயகமூர்த்தி வாங்கினூர்கள்.
பிரசித்த நொத்தாரி தால் 1936 - 08 - 09ல் இலக்க அறுதி உறுதியில் கெல்லையாக வயிரமுத்து கும் உரிய ஆதனமும் விக் லாதனமும் குறிப்பிடப்பட

22 --
ல் ஆகமவிதிப்படி ஆலயத்தை டி க்  ைக எடுக்கப்பட்டது. என்னும் பிராமணர் ஆலயத் தாடங்கினர், மடாலயத்துக்கு ம், தகரத்தால் வேயப்பட்டது
கூற, அர்த்தமண்டபம், மகா கட்டிடவேலைகள் நடைபெற்
பருமானுக்கு மஹா கும்பா நேரம் நெருங்கிக்கொண்டி செய்தபின் நடைபெறும் யகப் பெருமான் உள்வீதி வழி ாகவும் ஆலயத்தை வலம்வர லயத்துக்கு வெளிவீதி இருக்க ற்புறங்களிலுந் தனியாருக்குச் இருந்தன. வடக்குப் பக்கத்தி ர் ஒருவரின் சொத்தாக இருந் காண்டு, ஆலய விழாக்களைச் ஏற்படக்கூடிய தடைகளைத் பெரியார்களான பொன்னம் பிள்ளை செல்லப்பா, நாகநாதர் கந்தையா என்னும் நால் $கும் ஆலயத்தின் வடமேற்கில் டக்குப் பக்கத்திலுள்ள நான்கு கொடுத்து ஆனைவிழுந்தான் ஆலயத்துக்கு அறுதியாக
சு ஆறுமுகம் பொன்னம்பலத் எழுதப்பட்ட 14980ஆம் மேற்படி காணியின் தெற் கந்தையாவுக்கும் பங்காளருக் கின விநாயகமூர்த்தி கோயி டிருக்கின்றன.

Page 33
23 ستہ
இதிற்குறிப்பிடப்படும் , கோயிலாதனம், மயிலங்கூடல் பிள்ளை என்னும் பெரியாரால் ஆ தாகும். இவ்வாதனத்தை அ யெழுதிக் கொடுக்கவில்லை. த அமைந்திருந்த பகுதிக்காணிை தாகக் கூறிவிட்டு, மிகுதிை 1913ஆம் ஆண்டு வைகாசிமா தாரிசு சி. சுப்பிரமணியத்தா இலக்க உறுதி இதற்குச் சான்
ஆலயவிழாவை நடத்துவ செய்யப்பட்டபின் அவ்வா6 குடமுழுக்குவிழா நடைபெற். ஆலய ஆதீனகருத்தாவும் சிவ தி. குமாரசுவாமிக்குருக்கள், விழுந்தான் விநாயகப்பெரு பிரதிட்டை செய்தார்.
பூரீ. நடராச ஐயருக்கு ஐயர் ஆலயத்தின் பூசகராகப் பின் அவரின் மகன் பூரீ பால யகப்பெருமானுக்குப் பூசைெ பட்டிருக்கிறது,
1936ஆம் ஆண்டிற் பிரதி திரு. நாகநாதர் செல்லப்பா மான விநாயகர் விக் கி ர காரணத்தால், விநாயகப்பெ பனம் செய்யப்பட்டார். ஆல நிருத்தமண்டபம், தம்பமண் பட்டன.

விக்கின விநாயகமூர்த்தி ) வேலுப்பிள்ளை வயிரவப் ஆலயத்துக்கு வழங்கப்பட்ட புவர் ஆலயத்துக்கு உறுதி னது ஆதனத்தில் ஆலயம் ப ஆலயத்துக்குக் கொடுப்ப ய அறுதியாக விற்ருர், தம் 14ஆம் திகதி நொத் ல் எழுதப்பட்ட 3759ஆம் எருக அமையும்.
பதற்கு வெளிவீதி ஒழுங்கு ண்டிலேயே ஆலயத்தின் றது. கீரிமலை நகுலேஸ்வரர் ாச்சாரியாருமான சிவபூரீ.
ஆகமவிதிப்படி ஆனை DIT &õT இவ்வாலயத்திற்
ப்பின் பூரீ. இராமச்சந்திர பணிபுரிந்தார். அவருக்குப் ஸ்ச்சந்திரசர்மாவிடம் விநா சய்யும் பணி ஒப்படைக்கப்
திட்டை செய்யப்பட்டதும், வினுல் உபகரிக்கப்பட்டது
கம் சேதப்படுத்தப்பட்ட ருமான் மீண்டும் பாலஸ்தா யத்தில் நந்தி, பலிபீடம், டபம் என்பன அமைக்கப்

Page 34
1976 - 09 - 10 ல் நகு ஆலய தருமகருத்தாவும், சிவ. பூரீ, கு. நகுலேஸ்வர் விநாயகரின் குடமுழுக்கு
திரு. கந்தப்பிள்ளை ( மூர்த்தியின் விக்கிரகத்ை சின்னத்தம்பு சண்டேசுர செய்வித்து ஆலயத்துக்கு
இவ்வாலயத்தின் பரில் கோபாலருக்குத் தலவிருட் லயமும், வள்ளி தெய்வ பெ ரு மா னு க் கு ஒரு திரு. இ. ஏழுர்நாயகம் கு( ஒரு திருமஞ்சனக் கிணற்ை
திரு. ஏழுர்நாயகம் லிருந்து பெறும் வருவாயை துக்கு உதவவேண்டும் என் குரிய 15 பரப்புக் காணி டம் ஒப்படைத்தார்.
ஆலயத்தின் ஆழமா லிருந்து நீரெடுப்பதிலுள் கொண்டு திருமதி. வேதநா "மோட்டார்" ஒன்றை ஆ
திரு. க. இரத்தினம்
கொட்டகை ஒன்றை அை
பிரசித்த நொத்தாரிசு 1984 - 11 = 39ல் 2353ஆ உறுதிமூலம் திருவாளர்க

24 =
தலாம்பிகாசமேத நகுலேசுவர பிரதம சிவாச்சாரியாருமான
ரக் குருக்கள் ஆணை விழுந்தான் விழாவை நிறைவேற்றினுர்,
செல்லப்பா ஆலய உற்சவ தயும் திருமதி. சரஸ்வதி நாயனூரின் திருவுருவையுஞ் உபகரித்தார்கள்.
பTர மூர்த்திகளான சந்தான சத்தின் அயலில் ஒரு சிற்ரு யானை சமேதரான முருகப் ஆ ல ய மு ம் அ  ைம த் த டும்பத்தினர் ஆலயத்துக்கென றையும் ஆக்கி அளித்தனர்.
தாம் உபகரிக்கும் காணியி . ப, முருகன் ஆலய நிருவாகத் ானும் நிபந்தனையுடன் தமக் யைத் தன் மகன் ஈஸ்வரத்தி
ன திருமஞ்சனக் கிணற்றி
ாள சிரமத்தைக் கருத்திற்
யகி அப்புத்துரை நீரிறைக்கும் லயத்துக்கு உதவிஞர்.
எழுந்தருளி வாசலிற் சிறிய மத்தார்." -
செ. புண்ணியமூர்த்தியால் ம் இலக்கத்தில் எழுதப்பட்ட ன் வல்லிபுரம் வயிரமுத்து,

Page 35
ہے. --سے
சின்னத்தம்பு கணேசலிங்கம்
விங்கம், க. சு சண்முகலிங்க காணியை ஆனைவிழுந்தான் தருமசாதனஞ் செய்தார்க்ள். வெளிவீதிகள் ஆலயக் கான திருக்கின்றன.
1987 - 03 - 20 ல் கரு தாபிக்கப்பட்டிருந்த இயந்தி திருடியதால் விநாயகப் பெரு பனஞ் செய்யப்பட்டார். அ புனரமைப்பு வேலைகள் ஆரம்
கருவறையும் அர்த்தம மிருந்து பெறப்பட்ட நிதியு பம் திரு. நா. சிவலிங்கம் கு ண்ேடபம் திரு. ஆ. தா. ராலும், முருகன் ஆலயம் ! தினராலும் புனரமைப்புச் ெ
வசந்தமண்டபத்தை தி குடும்பத்தினரும், நாகதம் சு. தில்லைநாதன் குடும்பத்தி ஆலயத்தை திரு. மு. SGLT, வயிரவப் பெருமானின் ஆ ராசா குடும்பத்தினரும் அமைத்திருக்கின்றனர். யாக அவர்களின் ஞாபகமாக அணி
வயிரவர் ஆலயத்தில் 8 யப்பட்டிருந்த சூலாயுதத்து பெருமானுடைய விக்கிரகம் ருக்கிறது. நந்திக்கும் பலிபீட

---
s சின்னத்தம்பு குமார ம் என்பவர்கள் 10 பரப்புக் விநாயகர் ஆலயத்துக்குத் அதனுல் இன்று ஆலயத்தின் சியிலேயே அழகாக அமைந்
வறையுட் புகுந்து அங்கு திரத் தகட்டை - tulu fir-G3tri நுமான் மீண்டும் பாலஸ்தா தைத் தொடர்ந்து ஆலயப்
ண்டபமும் அடியார்களிட தவிகொண்டும், மகாமண்ட தடும்பத்தினராலும், நிருத்த ஆறுமுகம் குடும்பத்தின திரு. ஏ. ஈஸ்வரம் குடும்பத் }சய்யப்பட்டன.
திரு. மு. சிவராசரத்தினம்
பிரான் ஆலயத்தை திரு.
நினரும், சந்தானகோபாலர் மதாசன் குடும்பத்தினரும், லயத்தை திரு. ம. தியாக
அவர்களது உறவினரும் சாலை அமரர் வி. நாகலிங்கம்
மைக்கப்பட்டிருக்கிறது. -
இதுவரை பிரதிட்டை செய் துக்குப் பதிலாக வயிரவப்
பிரதிட்டை செய்யப்பட்டி உத்துக்குமுரிய கட்டிடத்தை

Page 36
திரு. வ. தம்பியனும் (
கட்டுவித்தார்கள். சுற்றும
பொ. தருமலிங்கம் குடும் செய்வித்தார்கள்.
திரு. க. கதிர்காமத்தப் லிங்கமும் சித்திரமேழி LUGöIT துக்குச் செல்வதற்கான வீதி காணியை உதவினர்கள். தின் வளர்ச்சிக்காகத் த கிருர்கள். இருப்பினும் தாம் உதவியதை மறந்துவி
"நான் செய்தேன்" என்னு செயல் தன்முனைப்புடைய வித்தாய் அமையும். அது வகையில் இவ்வாலயத்துக்கு பெயர் குறிப்பிடப்படாதவ அவர்கள் மனம் வருந்தக்க gregar.
1975ஆம் ஆண்டு அை களைக் கொண்ட ஆலயப சிலருக்கு இடமளிக்கவேண் கூடிய கூட்டமொன்றில் எ கமைவாக, பரிபாலனசபை ருக்கிறது. இதுவும் இவ்வா வதற்குரிய காரணங்களில்
ஆலயத்தில் தைப்பொர உத்தரம், சித் திரைப் புத் நவராத்திரி, விளக்கீடு, கஜமுகசங்காரம், விநாய சதுர்த்தசி முதலிய விழாக் வும் சிறப்பாகக் கொண்ட காலத்தில் கந்தபுராணத்தி படலம் படித்துப் பயன் .ெ

ܚܗ 6.
வேலுப்பிள்ளை இலட்சுமியும் திலின் பெரும்பகுதியை திரு.
பத்தவர்கள் புனரமைப்புச்
பியும் திரு. க. சு. சண்முக ணுலை வீதியிலிருந்து ஆலயத் யை அமைப்பதற்குத் தமது இன்னும்பலர் இவ்வாலயத் ம்மாலானவரை உதவியிருக் இவ்வுதவிகளைச் செய்தோர்
டவேண்டும்.
ம் எண்ணத்தோடு செய்யுஞ் நாய், வினையாய், பிறவிக்கு சிவபுண்ணியமாகாது. இவ் ப் பேருதவி புரிந்தும் இங்கு ர்கள் யாராவது இருந்தால் டாது. அவர்கள் பாக்கிய
மக்கப்பட்ட ஏழு உறுப்பினர் ரிபாலன சபையில் மேலுஞ் டுமென 1977 - 03 - 13 g). டுக்கப்பட்ட தீர்மானத்துக் பில் மாற்றஞ் செய்யப்பட்டி லயம் வளர்ச்சியடைந்து வரு ஒன்ருகும்,
ங்கல், தைப்பூசம், பங்குனி தாண்டு, சித்திரா பூரணை, பிள்ளையார் கதை, ஏகாதசி, கசஷ்டி, திருவெம்பாவை, களும் அலங்காரத் திருவிழா
ாடப்படுகின்றன. கந்தசஷ்டி
லுள்ள சூரபன்மன்வதைப் சால்லப்பட்டு வருகிறது.

Page 37
- 27 ஆனைவிழுந்தான் விநாயக அருள்புரியும் வண்ணத்தைப் கதை கதையாகச் சொல்லு லாம் எழுதுவதானுல் அது : விடும். -
விநாயகப்பெருமான் சே யிருந்து வேண்டுவார்க்கு வே6 புரிவதால் இவ்வாலய மூர்த்தி கன்னிகைகள் தங்கியிருந்து வி பட, இறைவன் திருநாமத்தே ஆலயம் அமைந்திருக்கும் இ வதனுல் தல விசேடத்தையும்
மூர்த்தி தல விசேடமுை தீர்த்தமொன்றில்லாதது ெ படுகிறது. இக்குறையையும் ஆனைவிழுந்தான் விநாயகப் செய்வோம்.
இடப்பெயர் ஆய்வு
டாரம் - பக்கம் 38 2. அரங்கேசன் கல்விமவு 3. மாவிட்டபுரத் திருதி 4. மாருதப்புரவீகவல்லி
பக்கம் 6. 。 5. மாவிட்டபுரத் திருத்
6. யாழ்ப்பாணவைபவ. முதலியார் குலசபா 7. காங்கேசன் கல்விமன் 8. ஆனந்தக் கணபதி -
பிள்ளை அவர்களின் 9. உற்பத்திகாண்டம்.தி
அங்கசுந்தரி - மாரு

ப் பெருமான் அடியார்க்கு பலரும் பலவிதமாகக் கிருர்கள். அவற்றையெல் ஒரு பாரதமாய் அமைந்து
ாயில் கொண்டெழுந்தருளி ண்டுவன நல்கித் திருவருள் யின் சிறப்பையும், ஸப்த நாயகப் பெருமானை வழி ாடு தொடர்புடையதாய், டப்பெயர் அழைக்கப்படு b உணரலாம்.
டய இவ்வாலயத்துக்குத் பருங்குறையெனக் கருதப் நீக்கி அருள்புரியும்வண்ணம்
பெருமானை வேண்டுதல்
. காங்கேசன் கல்விவட்
}厅一 L彦5ff,置60。 தலவரலரறு - பக்கம் 11.
யாத்திரைப்படலம் -
தலவரலாறு - பக்கம் 23. மாஜல - பக்கம் 13 - 14. நாதன் பதிப்பு 1953. )斤一 L鲇占ü 及6夏。
திரு. ஆறுமுகம் கதிரிப் ஞாபகார்த்த வெளியீடு. ருவிளையாட்டுப்படலம் 19, தப்பிரவல்லி

Page 38
2.
器
ஒ
மட்டுவில் ஆ. நடர
விநாயகர்
ܘܗܕܐ -ܤܘܗܝ
அந்திவான் புரைதிரு
அழகிய முப்புரி
இந்துடன் அக்கினி
இருள்துரந் தருள் இந்துவின் இளம்பி.ை இலகுபொன் னே ஐந்தொழில் நாயகன்
ஐங்கர விநாயக
அங்குச பாசமுன் க
ஆருயி ருறுதுயர் தொங்குவா ரிருசெவி தந்தியின் முகங்ெ பொங்குவெஞ் சினத் பொய்ந்நெறி அ
தங்கிநீ பூர்ந்தருள்
ஐங்கர விநாயக
மாங்கனி தான்பெறச்
மயில்மிசை ஏறி பாங்கினி லிருந்த ப பொற்புறு மாங்
தாங்கு முலகமும் உ
தங்கிடு முந்தன் வீங்கு பேழைத் திரு
ஐங்கர விநாயக

$!.
հյԼԸն 1ւն
ாசா அவர்கள் பாடிய
திருப்பதிகம்
تو ssنتیجچھینچیمپینتالیf&$
செஞ்சடை தாங்கி நூலொளி விளங்க இரவிமுச் சுடரும் செயும் விழிகளாக் கொண்டு ற போன்மருப் போடு டை பொலிதிரு நுதலாய்
நீயென வுணர்த்தும் நின்னடி சரணம்.
ரங்களி லேந்தி,
துடைப்பது குறிக்கும் தாங்கிய தலைவர் கொடு வந்தருள் செய்வாய் தொடு பேரமர் புரிந்த ஈரன தெலியுரு வதன்மேல் செய்தமை கண்டோம்
நின்னடி சரணம்.
கருதிய வேலோன் p வுலகினைச் சுற்ற ரமனைச் சுற்றிப் னி தான் தரப் பெற்றநி பிர்களு மெல்லாந்
வியாபகத் தென்ன வயி றுணர்த்தும் நின்னடி சரணம்.

Page 39
21 ܚܢ
பிரணவ எழுத்ததை
பிடியுடன் களிறெ விரவியே யோரெழுத்
வந்தருள் மும்மத
- கரவுடை நெஞ்சினர்க்
கருதுவா ருறுதுயர்
அரனென நீயென வே
ஐங்கர விநாயக !
கயமுக லுரைத்திட அ கரங்களை முட்டியா வயங்குதஞ் சிரமதில்
வலமிட மாறியே பயத்துட னவைகொடு பணிந்தெழு வான
துயர்கெடுத் தவரதை
a? (HIFAT விநாயக
உன்கொம் பானுயிர்
னுடலி னுகுசெங்
அன்ருே டியயலி லொ
அக்காட் டைச்செ1 அன்பினுற் சிவபெரு பு அருத்தி யொடருச் அன்ருேர் கணப தீச்ச ஐங்கர விநாயக நீ
பொய்மொழிந் துமைய
பிம்பா கித்தவஞ் மெய்ஞ்ஞா னக்கொழுந் முன்னுரு வமுற்றும் மெய்யன் பாற்றன் ே
மதிவளர் சட்டியி உய்ய வருளுகெ னவள்
ஐங்கர விநாயக

நோக்கிட இறைவி னப் பிரிந்தது தோன்றி
தாகிய போது ஆறுபா யைய கறிவரும் பொருளே
தீர்த்தருள் செய்வாய் றறு பொருளே நின்னடி சரணம்.
அவன்சபை தன்னிற் ய்ப் பிடித்தவை கொண்டு மும்முறை குட்டி
கைகளை யெடுத்து
செவிதனைப் பற்றிப் வர் வேண்டுதல் செய்ய
உன்முன் செயவருள் நின்னடி சரணம்.
நீத்த கயமுக
குருதி நீத்தம் ருகா டடைந்து ங் காடாக் கவங்கு மானுருக் கோலி
சனைபுரிந் தங்கே ரந் தந்த நின்னடி சரணம். ாள் தன்சா பத்தாற் செய்த மாலோன்
தேயுன் னருளால் ன் னேயருச் சித்து பாலியா ருமார்கழி
லருச்சிக் கவவர் 1வா றருள்செய்
ជំនោរ ធ្នូ TTT.

Page 40
3 ۔
உமையாள் தன்மைந்
உயர்வு பெறுமா அமையுநற் சதுர்த்தி
அன்றுமால் துதித் உமைவேண் டியருள்
யுன்விர தம்விதி !
தமையணு குவிக்கினங்
ஐங்கர விநாயக
அப்பமோ டவல்பொரி
அருத்தி தருமோ
முப்பழ மும்பால் தே முன்வைத் துத் துர
அப்போ டுதும்பை .ெ
னறுகு வன்னி பி முப்போ துமர்ச்சிப் ப
ஐங்கர விநாயக
தென்பொதி கைசெல்
தமிழ்முனி தன்கம வன்சொண் டாற்கவிழ் வாடும் மலர்ச்சோ நன்னீர் சுரக்குநற் கா நம்பினர்க் கருள்சு குன்றே கணபதி யேெ
ஐங்கர விநாயக
●最

() =
தணுய்நீ புதித்த வணிவளர் பிறையில் யொடுசதுர்த் தியாவும் து மார்கழி மதியில் பெற்றசட் டிவெள்ளி பினலநுட் டிப்பார்
கள்போக் கியருள்
நின்னடி சரணம்.
யெள்ளு ருண்டை தகந்தீங் கரும்பும் ன்விளாங் கனியும் பதீபங் களேந்தி கான்றை யெருக்குட றவுங் கொண்டு ார்வினை தீர்க்கும்
நின்னடி சரணம்,
வான்கொங் குதங்கு ண் டலத்தைக் காகமாய் த் தந்நீ ருகுத்து லேயுய் வடைய விரி தந்த - ரக் கும்மெய் ஞானக் யமக் கருள்செய் நின்னடி சரணம்.
LÈ

Page 41


Page 42